எங்கள் பகுதி
மக்களெல்லாம் தமிழிலும், பக்தியிலும்
ஊறித் திளைத்தவர்கள்.
தமிழையும், சைவத்தையும் இரண்டு
கண்களாகப்
போற்றுபவர்கள்.
பெயர்கள் எல்லாம் தூய தமிழ்ப்
பெயர்களாக இருக்கும்
சிறு வய்தில் இருந்தே
வீட்டிலும் தமிழைச் சொல்லித்
தருவார்கள்.
வீட்டுப் பெரியவர்கள், சிறுவர்கள்
எழுதும்போது
திருத்தமாக
இருக்கிறதா என்று பார்ப்பார்கள்
க, கி, கீ, கோ, என்று எழுதும் போது
(மேற்கோடுகளுக்கு
கொம்பு என்ற பெயர்) அவைகள்
திருத்தமாக இல்லை
யென்றால் மறுபடி, மறுபடி எழுதச் சொல்லி
தண்டனை கிடைக்கும்
'கொம்பு சுழி கோணாமல், தம்பி நீ எழுதினால்தான்
சோறுண்டு' என்ற வரிகளைக்
கவிதையாகச் சொல்லிப்
பசியில் தவிக்க
வைத்து விடுவார்கள்
"பொழுதெப்ப விடியும்
பூவெப்ப
மலரும்
சிவனெப்ப
வருவார்
வரமெப்பத்
தருவார்"
என்று பாட்ல்களையும்
சொல்லிக்
கொடுப்பார்கள்.
"துள்ளாத மனமும் துள்ளும்
சொல்லாத
கதைகளைச் சொல்லும்"
போன்ற சினிமாப்
பாடல்களெல்லாம் வீட்டிற்கு
வெளியேதான்.
சற்றுப் பெரிய
குழந்தைகளுக்குக் கடிதங்கள்
எழுதச் சொல்லித்
த்ருவார்கள். அதே சாக்கில்
அவர்களுடைய
கடிதங்களுக்கும் dictation கொடுத்து
குழந்தைகளையே
எழுதவைத்து விடுவார்கள்
காகிதத்தைக் கையில்
எடுத்தவுடனேயே 'பிள்ளையார்
சுழி, சிவமயம் என்று
எழுதிவிட வேண்டும். இல்லையென்றால்
பளார் என்று முதுகில்
ஒன்று விழுந்துவிடும்
அதேபோல கடிதத்தை
முடிக்கும்போது,
வேணும், அண்ணாமலையார் துணை
என்று
எழுதித்தான்
முடிக்கவேண்டும்.
அன்புள்ள
மான்விழியே அல்லது அன்புள்ள மன்னவனே,
அன்புள்ள
நண்பனே என்றெல்லாம் கடிதம் எழுதும்
வழக்கம் உலகத்தில்
உள்ளது என்பது எனக்குப் பதினான்கு
வயதிற்குமேல்தான்
தெரிந்தது.
அண்ணாமலை என்பது திருவண்ணமலையில்
உறையும்
அண்ணாமலையாரைக்
குறிக்கும்
“பிறந்தால் சிதம்பரத்தில்
பிறக்க வேண்டும்,
வாழ்ந்தால்
ஆருரில் வாழவேண்டும்,
இறந்தால்
காசியில் இறக்கவேண்டும்.
இவை
மூன்றிற்கும் சாத்தியமில்லை என்பதால்
அண்ணாமலையாரை
நினைக்க வேண்டும்” என்பார்கள்.
சற்று வயதானவுடன், என் பெரியப்பாவிடம்
எதற்கு
இது என்றபோது
"அண்ணாமலையை நினைதாலே முக்தி !
ஆகவே பேசாமல்
எழுது!" என்று சொல்லி என்
வாயை
அடைத்துவிட்டார்.
ஓகோ அவருக்கு முக்தி
கிடைக்க அடுத்தவன்தான்
எழுத வேண்டுமா என்று
அறிவீனமாய் நினைக்காமல்
நல்லதுக்குத்தான்
சொல்கிறார் என்று அப்போது நினைப்பேன்
இப்போது உலகம், ஜெட் விமான வேகத்தில்
போய்க்
கொண்டிருக்கிறது.
யாருக்கும் எதற்கும் நேரமில்லை!
இந்தப்
பழங்கதைகளையெல்லாம் சொன்னால்
அடிக்க வருவார்கள்.
இன்னும் சிலர் இருக்கிறார்கள்
பகிரங்கமாகப்
பக்தியைப் பற்றியும், முக்தியைப் பற்றியும்
பேசினால் கத்தியை
காட்டுவார்கள்.
கடிதத்தில் தேதி
எழுதும் பொது, விய ஆண்டு
மாசித் திங்கள் 13ம்தேதி
ஞாயிற்றுக்கிழமை என்றுதான்
எழுத வேண்டும். 25.02.2007 என்று எழுதவிட
மாட்டார்கள்.
அதனால் எனக்குச்
சிறுவயதிலேயே தமிழ் மாதங்களின்
பெயர்களும், வருடங்களின்
பெயர்களும் சுத்தமாகத் தெரியும்.
(அப்பாடா, Subjectற்கு வந்து விட்டேன்)
"சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி.
புரட்டாசி
ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி"
என்று தமிழ்
மாதங்களின் பெயர்களைக் கடகட
வென்று சொல்வேன்
அதே போல தமிழ்
ஆண்டுகளின் பெயர்களும் தெரியும்
பிரபவ, விபவ, சுக்ல, பிரமோதூத, பிரஜோற்பத்தி,
ஆங்கிரஸ, ஸ்ரீமுக, பவ, யுவ, தாது, ஈஸ்வர, வெகுதான்ய,
பிரமாதி, விக்கிரம, விஷூ, சித்திரபானு, சுபானு, தாரண,
பார்த்திப, விய,
சர்வஜித், சர்வதாரி, விரோதி, விக்ருதி, கர, நந்தன, விஜய,
ஜய, மன்மத, துன்முகி, ஹேவிளம்பி, விளம்பி, விஹாரி,
சார்வரி, பிலவ, சுபகிருது, சோபகிருது, குரோதி, விசுவாசு,
பராபவ,
பிலவங்க, கீலக, செளமிய, சாதாரண, விரோதிகிருது,
பரிதாபி, பிரமாதீச, ஆனந்த, இராஷச, நள, பிங்கல, காளயுக்தி,
சித்தார்த்தி, ரெளத்திரி, துன்மதி, துந்துபி, ருத்ரோத்காரி,
ரக்தாஷி, குரோதன, அக்ஷ்ய
அப்பாடா, 60 ஆண்டுகளின் தமிழ்ப்
பெயர்களை ஒரே ஓட்டத்தில்
சொல்லிவிட்டேன்.
இந்த இரண்டும்தான்
இன்றைய பாடம். பாடங்கள்
எப்போதும் மருந்தைப்
போன்றது: மருந்தைத் தேனில்
குழைத்துக்
கொடுப்பார்கள்.
ஜொதிடப் பாடங்கள்
என்னும் மருந்தை, என் சொந்தக்
கதைகள் என்னும் தேனோடு
கலந்து, இன்று
முக்கியமான செய்திகள்
இரண்டை இன்று பாடமாக
நடத்திவிட்டேன்
ஒன்று மாத்ங்கள், மற்றொன்று வருடங்கள்.
இது கணினியுகம்.
இவற்றைத் தெரிந்துவைத்துக்
கொண்டால் போதும்.
மனனம் செய்ய வேண்டிய
அவசியமில்லை!
அடுதத பாடம்
மொத்தமும் மருந்துதான்.
அதுவும் வைத்திருந்து
அவ்வப்போது சாப்பிட வேண்டியது.
அதனால் தேன்
கலக்காமல் அப்படியே தருவேன்
சாப்பிடும்போது
தேவைப்பட்டால் நீங்கள் கலந்து கொள்ளலாம்:-)))
மாணவர் பதிவேடு (Enrolment Register)
என்னைப் பற்றி
Contact vaaththiyar
Please write to Vaaththiyar
திருமணப் பொருத்தம்
Marriage Matching
My Phone Number and whatsApp number
94430 56624
My email ID
எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624
வந்தவர்களின் எண்ணிக்கை
வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?
வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
13.12.23
ஜோதிடம் : மாதங்களும் வருடங்களும்
ஜோதிடம் : மாதங்களும் வருடங்களும்
நேரம் எப்படி மாறுகிறது?
நேரம் எப்படி மாறுகிறது?
நேரம்
என்னோட நேரம் சாமி, நான் என்ன செய்ய?' என்று
சொல்வோமே அந்த நேரத்தைப் பற்றியதல்ல
இந்தப் பதிவு
இது உண்மையிலேயே உள்ள நேரத்தைப் (Time)
பற்றிய பதிவு
நாள் ஒன்றிற்கு 24 மணி நேரம்
சென்னையில் காலை மணி 10.00 என்று வைத்துக்
கொள்வோம். அதே நேரத்தில் சிங்கப்பூரில் என்ன
மணி என்று கேட்டால் சட்டெனப் பதில் சொல்ல
வராது.
அப்போது சிங்கப்பூரில் மணி 12.30 PM
நம் பதிவர்களைக் கேட்டால் கூகுள் ஆண்டவரிடம்
கேட்டுச் சொல்லி விடுவார்கள்.
சரி அறிவியல் பூர்வமாக எப்படி மாறுபடுகிறது
என்று (கூகுள் ஆண்டவரிடம் கேட்காமல்) சொல்லுங்கள்
என்றால் விஷயமறிந்த சிலர் மட்டுமே சொல்லக்
கூடும்
எல்லோரும் அறிந்து கொள்வதற்காக இப்போது
அதைச் சொல்கிறேன். பூமியின் அச்சரேகை/தீர்கரேகை
வைத்து அது கணக்கிடப் படுகிறது
பூமியின் வட்டம் 360 பாகை (degree)
நாள் ஒன்றிற்கு 24 மணி x 60 நிமிடம் = 1,440 நிமிடங்கள்
1,440 நிமிடங்கள் வகுத்தல் 360 பாகை = ஒரு பாகைக்கு
4 நிமிடங்கள்
லண்டன் மாநகரத்தில் இருந்துதான் இந்த
(அச்சரேகை/தீர்கரேகை) Time Zone கணக்கிடப் படுகிறது
It is called as Greenwich Mean Time (GMT)
------------------------------------------------------------------
Coordinated Universal Time (UTC).
Longitude at a point may be determined by calculating
the time difference Since there are 24 hours in a day
and 360 degrees in a circle, the sun moves across the
sky at a rate of 15 degrees per hour
(360°/24 hours = 15° per hour). So if the time zone a
person is in is three hours ahead of UTC then that
person is near 45° longitude (3 hours × 15° per hour = 45°).
-------------------------------------------------------------
Standard time zone Singapore UTC/GMT +8 hours
Standard time zone India UTC/GMT + 5.5 hours
------------------------------------------------------------
இந்தியன் Time Zone என்பது பொது!
இந்தியாவில் அனைவரும் அதன்படி
Indian Standard Time (IST) ஐ த்தான் பயன் படுத்துகிறோம்
ஆனால் ஜோதிடத்திற்கு உள்ளூர் நேரம் அவசியம்
உதாரணத்திற்கு
கல்கத்தாவின் தீர்க்கரேகை 88.24
மும்பையின் தீர்க்கரேகை 72.50
இரண்டு இடங்களுக்கும் உள்ள
வித்தியாசம் 16 பாகை x 4 நிமிடங்கள் = 64 நிமிடங்கள்
இந்தியாவின் நேரம் கான்பூரை மையமாக வைத்து
அமைக்கப்பெற்றுள்ளது. கான்பூரின் தீர்க்கரேகை 80.20
கான்பூரிலிருந்து கல்கத்தா + 8 பாகை
கான்பூரிலிருந்து மும்பை Minus 8 பாகை
அதனால் இரண்டு நகரங்களின் உள்ளூர் நேரம்
(Local Time) 30 நிமிடங்கள் வித்தியாசப்படும்
இந்திய நேரம் காலை 10.00 மணி என்றால் அதே
நொடியில்
கலகத்தாவின் உள்ளுர் நேரம் 10.30
மும்பையின் உள்ளூர் நேரம் 9.30 மட்டுமே
இதுபோல அனைத்து இந்திய நகரங்களிலும்,
கிராமங்களிலும் உள்ளுர் நேரம் மாறுபடும்
---------------------------------------------------------------------
ஜோதிடத்தின் அடிப்படை விதிகளில் இந்த நேரமும் ஒன்று
அதனால்தான் (அந்த நேர வித்தியாசத்தால்) ஒரே IST யில்
இரண்டு இடங்களில் பிறக்கும் குழந்தைகளின் ஜாதகம்
வேறுபடும்.
அதற்கு உதாரண ஜாதகங்களைக் கணினியில் கணித்து
இந்தப் பதிவின் மேலே கொடுத்துள்ளேன் (In Screen Shot Format)
நன்றாகப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
--------------------------------------------------------------------
மருத்து மனைகளில் பிறந்த நேரத்தை இந்திய பொது
நேரத்தின்படிதான் (IST) எழுதி கொடுப்பர்கள்.
உள்ளூர் நேரத்தைப் பற்றி நாம் கவலைப் பட
வேண்டாம் ஜாதகம் எழுதும் ஜோதிடர் பார்த்துக்
கொள்வார்
அதுபோல கணினியும் தானகவே உள்ளூர் நேரத்திற்கு
மாற்றிக் கொண்டுதான் நம்முடைய ஜாதகத்தைக்
கணித்துக் காட்டும்
-----------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

9.9.23
Astrology: ஆர செளரி யோகம்! Ara Sauri Yoga
Astrology: ஆர செளரி யோகம்! Ara Sauri Yoga
யோகத்தைத் தெரிந்து கொள்ளும் முன் அதன் பெயர் விளக்கத்தைத் தெரிந்துகொள்வோம்.
ஆர என்னும் வட மொழிச் சொல்லிற்கு நேரடி விளக்கம் இல்லை. ஆரண்யம் (காடு)
என்பதன் சுருக்கம் என்கிறது ஒரு நூல்.
செளரி என்பதற்கு சனி என்று பொருளாம்.
சரி எப்படி எடுத்துக்கொள்வது?
எதெது எங்கே இருக்க வேண்டுமோ, அங்கே இருப்பது நல்லது. நம்மைக் கொண்டுபோய்க்
காட்டில் விட்டால் என்ன ஆகும்?
கிறுக்குப் பிடித்துவிடாதா?
அதுபோல காட்டில் இருக்க வேண்டிய ஒரு சிறுத்தையை வீட்டில் கொண்டு வந்து
விட்டால் என்ன ஆகும்?
சும்மா விடாமல் ஒரு கரடியுடன் சேர்த்துவிட்டால் என்ன ஆகும்?
அது போன்ற நிலைமைதான் ஆகும்போல உள்ளது, இந்த யோகத்தால்.
----------------------------------------------------------------
சனி மற்றும் செவ்வாய் ஆகிய இரண்டு கிரகங்களின் சேர்க்கையால் அல்லது
கூட்டணியால் எற்படுவதுதான் இந்த ஆர செளரி யோகம்!
பலன்: சொல்லும்படியாக இல்லை. ஜாதகனுக்குப் பலவிதமான கேடுகள் ஏற்படும்.
Planetary combination between Saturn and Mars. It produces serious afflictions.
-----------------------------------------------------------------
என்னவிதமான கேடுகள்?
சனி இரண்டு வீடுகளுக்கு உரியவன், செவ்வாயும் இரண்டு வீடுகளுக்கு உரியவன்.
இருவரும் மூன்று காரகத்துவங்களுக்கு அதிபதி (authorities for different portfolios).
அவை அத்தனையும் கெடும்.
என்னென்ன கெடும்? இது மேல் நிலைப் பாடம். ஆகவே அதை உங்கள் சிந்தனைக்கே
விட்டு விடுகிறேன்.
எல்லோருக்குமா?
இல்லை!
வழக்கம்போல, அவர்கள் மீது விழும் சுபக்கிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கை,
அதோடு அவர்களின் சுயவர்க்கப்பரல்கள், இருக்கும் இடத்தின் மொத்த வர்க்கப் பரல்கள்
ஆகியவற்றை வைத்து ஜாதகத்திற்கு ஜாதகம் அது வேறுபடும்.
உதாரணம்?
இது off the record உதாரணம். படித்துவிட்டு மறந்து விடுங்கள்.
ஐந்து அல்லது ஆறு லார்ஜ் விஸ்கியைக் கல்ப்’பாக அடிப்பதற்கும், தண்ணீர் அல்லது சோடா
கலந்து அடிப்பதற்கும் உள்ள வித்தியாசம். அல்லது விஸ்கியை ரம் அல்லது பிராந்தியுடன்
கலந்து அடிப்பதைப் போன்றது. விஸ்கி எப்படியும் கேடு செய்யும். கலக்காமல் அடித்தால்
அதிகக்கேட்டைச் செய்யாதா?
உங்களுக்கு உங்கள் மொழியில் சொன்னால் புரியும் என்பதனால் இதை எழுதியுள்ளேன்.
மற்றபடி எனக்கு அந்தப் பழக்கம் கிடையாது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்:-))))
இந்த அமைப்பு உள்ளவர்கள் கவலைப்பட வேண்டாம். நஷ்ட ஈடு வழங்கப்பெற்றிருக்கும்.
ஏனென்றால் ஆண்டி முதல் அரசன் வரை அல்லது ஆட்சியாளர்கள்வரை
அனைவருக்கும் 337தான் மதிப்பெண். அதை நினைவில் வையுங்கள்!
அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------
Subscribe to:
Posts (Atom)