மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

3.11.22

Lesson 70 Lesson on Adhi Yogam


✴️✴️✴️✴️✴️

Star Lessons

Lesson no 70

Date 30-9-2022

New Lessons

பாடம் எண் 70

யோகங்கள்

பாடம் ஆதி யோகம்! 

புதன், குரு, சுக்கிரன் ஆகிய மூன்று சுபக் கிரகங்களும், ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் இடத்திலிருந்து 6, 7, 8 ஆம் வீடுகளில் இருந்தால், தனித்தனியாகவோ அல்லது சேர்ந்து இருந்தாலோ, அது ஆதியோகம் எனப்படும். அந்த வீடுகள் ஒன்றில் அல்லது இரண்டில் அல்லது மூன்றிலுமே அவைகள் இருந்தாலும் அது இந்த யோகத்தைக் கொடுக்கும்! 

பலன்: ஜாதகன் செல்வாக்குடன் இருப்பான். ஆரோக்கியத்துடனும், செல்வங்களுடனும் இருப்பான். நோய், எதிரிகள், பயம் என்று எந்த அவலமும் அவனை அனுகாது! 

Adhi Yoga : This is caused if the benefic planets - Mercury, Jupiter and Venus - are situated in the 6th, 7th and 8th houses from the Moon. These planets should be present in any one, two or in all the above-mentioned houses. A native with this Yoga will be very influential, healthy and wealthy. He will possess no fear, disease or enemy.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++

”சார், அவற்றில் எனக்கு இரண்டு இருக்கிறது. பாதி யோகம் கிடக்குமா?” என்று யாரும் கேட்க வேண்டாம்! கிடைக்காது. 

யானை என்று எழுதுவதற்குப் பதிலாகப் பூனை என்று எழுதிவிட்டேன். இரண்டிலுமே ”னை” என்று இருப்பதால் பாதி மார்க் போடுங்கள் என்று சொல்வதைப் போன்றது அது! 

அன்புடன்,

வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

1.11.22

Lesson 69 Ara Souri Yogam

✴️✴️✴️✴️✴️

Star Lessons

Lesson no 69

Date 29-9-2022

New Lessons

பாடம் எண் 69

 யோகத்தைத் தெரிந்து கொள்ளும் முன் அதன் பெயர் விளக்கத்தைத் தெரிந்துகொள்வோம். ஆர என்னும் வட மொழிச் சொல்லிற்கு நேரடி விளக்கம் இல்லை. ஆரண்யம் (காடு) என்பதன் சுருக்கம் என்கிறது ஒரு நூல். 

செளரி என்பதற்கு சனி என்று பொருளாம். 

சரி எப்படி எடுத்துக்கொள்வது? 

எதெது எங்கே இருக்க வேண்டுமோ, அங்கே இருப்பது நல்லது. நம்மைக் கொண்டுபோய்க் காட்டில் விட்டால் என்ன ஆகும்? கிறுக்குப் பிடித்துவிடாதா? 

அதுபோல காட்டில் இருக்க வேண்டிய ஒரு சிறுத்தையை வீட்டில் கொண்டு வந்து விட்டால் என்ன ஆகும்? சும்மா விடாமல் ஒரு கரடியுடன் சேர்த்துவிட்டால் என்ன ஆகும்? 

அது போன்ற நிலைமைதான் ஆகும்போல உள்ளது, இந்த யோகத்தால்.

----------------------------------------------------------------

சனி மற்றும் செவ்வாய் ஆகிய இரண்டு கிரகங்களின் சேர்க்கையால் அல்லது கூட்டணியால் எற்படுவதுதான் இந்த ஆர செளரி யோகம்! 

பலன்: சொல்லும்படியாக இல்லை. ஜாதகனுக்குப் பலவிதமான கேடுகள் ஏற்படும். 

Planetary combination between Saturn and Mars. It produces serious afflictions.

-----------------------------------------------------------------

என்னவிதமான கேடுகள்? 

சனி இரண்டு வீடுகளுக்கு உரியவன், செவ்வாயும் இரண்டு வீடுகளுக்கு உரியவன். இருவரும் மூன்று காரகத்துவங்களுக்கு அதிபதி (authorities for different fortfolios). அவை அத்தனையும் கெடும். 

என்னென்ன கெடும்? இது மேல் நிலைப் பாடம். ஆகவே அதை உங்கள் சிந்தனைக்கே விட்டு விடுகிறேன். 

எல்லோருக்குமா? 

இல்லை! 

வழக்கம்போல, அவர்கள் மீது விழும் சுபக்கிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கை, அதோடு அவர்களின் சுயவர்க்கப்பரல்கள், இருக்கும் இடத்தின் மொத்த வர்க்கப் பரல்கள் ஆகியவற்றை வைத்து ஜாதகத்திற்கு ஜாதகம் அது வேறுபடும். 

உதாரணம்? 

இது off the record உதாரணம். படித்துவிட்டு மறந்து விடுங்கள். 

ஐந்து அல்லது ஆறு லார்ஜ் விஸ்கியைக் கல்ப்’பாக அடிப்பதற்கும், தண்ணீர் அல்லது சோடா கலந்து அடிப்பதற்கும் உள்ள வித்தியாசம். அல்லது விஸ்கியை ரம் அல்லது பிராந்தியுடன் கலந்து அடிப்பதைப் போன்றது. விஸ்கி எப்படியும் கேடு செய்யும். கலக்காமல் அடித்தால் அதிகக்கேட்டைச் செய்யாதா? 

உங்களுக்கு உங்கள் மொழியில் சொன்னால் புரியும் என்பதனால் இதை எழுதியுள்ளேன். மற்றபடி எனக்கு அந்தப் பழக்கம் கிடையாது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்:-)))) 

இந்த அமைப்பு உள்ளவர்கள் கவலைப்பட வேண்டாம். நஷ்ட ஈடு வழங்கப்பெற்றிருக்கும். ஏனென்றால் ஆண்டி முதல் அரசன் வரை அல்லது ஆட்சியாளர்கள்வரை அனைவருக்கும் 337தான் மதிப்பெண். அதை நினைவில் வையுங்கள்! 

அன்புடன்

வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

31.10.22

Lesson 68 Anabha Yogam


✴️✴️✴️✴️✴️

Star Lessons

Lesson no 68

Date 28-9-2022

New Lessons

பாடம் எண் 68 

யோகங்கள் 

பாடம்:அனபா யோகம் 

அனபா என்பதற்குத் தமிழில் அருஞ்சொற் பொருளைத் தேடாதீர்கள். அது வடமொழிச் சொல். அதை அப்படியே எடுத்துக்கொள்ளூங்கள் 

அனபா யோகம்:

சந்திரன் இருக்கும் வீட்டிலிருந்து அதற்குப் 12ஆம் வீட்டில் (அதாவது சந்திரனுக்குப் பின்புறம் உள்ள ராசியில்) செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ஆகிய ஐவரில் ஒருவர் இருந்தால் அது இந்த யோகம்

----------------------------------------------------------------

பொதுப்பலன்:

ஜாதகன் நல்ல தோற்றத்தை உடையவனாக இருப்பான். பெருந்தன்மை உடையவனாக இருப்பான். மென்மையானவனாக இருப்பான். சுயமரியாதை உடையவனாக இருப்பான். வயதான காலத்தில் ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொள்வான்

---------------------------------------------------------------

Anapha yoga: If there are planets in the twelfth from the moon, Anapha yoga is caused. A planet other than the Sun occupying

the 12th house from the Moon constitutes Anapha yoga. It indicates a person who is of good appearance, generous, polite,

self -respecting and moves into spiritual life at a later stage. One born in Anapha Yoga will be eloquent in speech, magnanimous,

virtuous, will enjoy food, drink, flowers, robes and females, will be famous, calm in disposition, happy, pleased and will possess a beautiful body.

-------------------------------------------------------------------

தனிப் பலன்கள் 

1.சந்திரனுக்குப் பன்னிரெண்டில் செவ்வாய் இருந்தால்: ஜாதகன் வலிமையானவன். அதிகாரமுள்ளவன். சுயகட்டுப்பாடு உள்ளவன். 

2.சந்திரனுக்குப் பன்னிரெண்டில் புதன் இருந்தால்: சிறந்த பேச்சாளனாக இருப்பான். கலைகளின் நுட்பம் தெரிந்தவனாக இருப்பான். 

3.சந்திரனுக்குப் பன்னிரெண்டில் குரு இருந்தால்: ஜாதகன் தீவிர சிந்தனை, செயல்களை உடையவனாக இருப்பான். தர்ம சிந்தனை மிக்கவனாக இருப்பான். தன்னுடைய செல்வத்தை அறவழிகளில் பயன்படுத்துவான். அதாவது பல தர்மங்களைச் செய்வான். 

4.சந்திரனுக்குப் பன்னிரெண்டில் சுக்கிரன் இருந்தால்: ஜாதகன் பெண்பித்தனாக இருப்பான். அதிகாரத்தில் இருப்பவர்களின் தொடர்பு உள்ளவனாக இருப்பான் 

5. சந்திரனுக்குப் பன்னிரெண்டில் சனி இருந்தால்: ஜாதகன் எதிலும் பிடிப்பு இல்லாதவனாக இருப்பான். பற்று இல்லாதவனாக இருப்பான். 

(ராகு அல்லது கேது இருந்தால்: ஜாதகன் இயற்கையான விஷயங்களுக்கு எதிராக நடப்பவனாக இருப்பான். அவற்றில் பற்று உள்ளவனாக இருப்பான்) 

எல்லாம் பொதுப்பலன்கள்! 

எல்லாக் கிரகங்களையும், தங்கள் ஜாதகத்துடன் சேர்த்துக் குழம்பு வைப்பதற்கு இதில் வேலை இல்லை. 

அதேபோல, நல்ல தோற்றம் என்று எழுதியுள்ளீர்களே? அரவிந்தசாமி மாதிரியா அல்லது அஜீத் மாதிரியா என்று யாரும் கேட்கவேண்டாம். அது அங்கே அமரும் கிரகத்தின் உச்சம், நீசம், பகை, பரல்கள் என்பது போன்ற மற்றவிஷயங்களுடன் சம்பந்தப்பட்டதாகும். 

அன்புடன்

வாத்தியார்

+++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!