மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

3.1.11

கோள்களைப் பிழிவது எப்படி?

படங்களின்/பாடங்களின் மீது கர்சரை வைத்து 
Double Click  செய்யுங்கள். எழுத்துக்கள் பெரிதாகத் தெரியும். 
படிப்பதற்கு வசதியாக இருக்கும்


Page 2

------------------------------------------------------

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

2.1.11

எப்படி இருந்தவன் இப்படி ஆகிவிட்டேன் பாருங்கள்!


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இன்றைய வாரமலரை இரண்டு கட்டுரைகள் அலங்கரிக்கின்றன. மூத்த மாணவர்களில் ஒருவரின் கட்டுரையும், மாணவி ஒருவரின் கட்டுரையும் அலங்கரிக்கின்றன. படித்து மகிழுங்கள்

அன்புடன்,
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++
எப்படி இருந்தவன் இப்படி ஆகிவிட்டேன் பாருங்கள்!

சென்ற வாரமலரில், துறவியுடன் என்னுடைய பயண அனுபவத்தினை எழுதியிருந்தேன். அப்போது "ஒரு பணி நிமித்தம் என்னையும் அழைத்துச் சென்றார்கள்" என்று சொல்லியிருந்தேன்.

அது என்ன பணி, அதன் மூலம் என் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன என்பதை இப்போது சொல்கிறேன்.

தஞ்சை - திருச்சி நெடுஞ்சாலையில், செங்கிப்பட்டியில் இருந்து 3 கி.மி தூரத்தில் மனையேரிப்பட்டி என்ற குக்கிராமத்தில் அரசு மறுவாழ்வு இல்லம் ஒன்று உள்ளது. அதில் தொழு நோயாளிகளும் பிச்சைக்காரர்களும் அடைக்கலமாகி வாழ்ந்து வ‌ருகின்றனர். இன்றும் அந்த இல்லம் இயங்கி வருகிறது. அந்த இல்லத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான நபர்கள் நான் குறிப்பிட்ட துறவியின் மடத்து முகவரியைத் தெரிந்து கொண்டு,அவருக்கு உதவி கோரி அஞ்சல் அட்டை அனுப்பி விட்டனர்.

அவரும் அந்த அட்டைகளையெல்லாம், தஞ்சைக்கு மிக அருகில் உள்ள மடமான மதுரைக்கு அனுப்பி அந்த ஏழைகளுக்கு என்ன உதவி செய்யலாம் என ஆலோசனை கூறப் பணித்தார். மதுரை மடத்துத் துறவி எங்கள் குடும்பத்தை நன்கு அறிந்தவர் ஆதலால் மறு வாழ்வு இல்லத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்க எங்க‌ளைப் பணித்தார்.

என்னுடைய மூத்த சகோதரர் முனைவர் கண்ணன் அவர்கள் அப்பணிக்குப் பொறுப்பு ஏற்றுக் கொண்டு மனை யேரிப்பட்டிக்குச் சென்றார். அந்த நிறுவனம் அரசு நிறுவனம் என்பதை அறிந்தார். கட்டட வேலைகள் எல்லாம் முடிந்த நிலையில் இருந்தன. உணவுக்கு அது சிறைத்துறையுடன் இணைக்கப்பட்டு, அங்கிருந்து உணவுப் பண்டங்கள் எல்லாம் கிடைத்து வந்தன. எனவே நிர‌ந்த‌ரப் பணியாக எதுவும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அப்படியே ஏதும் செய்தாலும் அரசு இயந்திரத்தின் அனுமதி போன்ற நடைமுறைகள் தாமதத்தினை ஏற்படுத்தும். எனவே ஏதாவது தற்காலிக உதவி அளித்தால் போதுமானது என்று தன் ஆலோசனையை மதுரைக்கு எழுதினார்.

அது குளிர் காலமானதால் அனைவருக்கும் ஒரு போர்வை இலவசமாகக் கொடுக்கலாம் என்று  முடிவாயிற்று. அதற்கான பணத்தினை பெற்றுக்கொள்ள மதுரை வரச்சொல்லி கேட்டுக் கொண்டார்கள். அந்த மூத்த துறவியும் அச்சமயம் மதுரை வந்து இராஜபாளையம் செல்வார் என்று சொல்லப்பட்டது.

மதுரையிலேயே தானம் பெற்று தொகை அளிக்கப்படும். போதிய தானம் கிடைக்காவிடில் அவருடன் இராஜபாளையம் சென்றால் அங்கு தொகைக்கு ஏற்பாடு செய்து தரப்படும். பெற்று வந்து அந்த சேவையை மனையேரிப் பட்டியில் செய்ய வேண்டும். இதற்காக நான் மதுரை சென்று மூத்த துறவியைச் சந்தித்தேன். மதுரையில் கிடைக்கக்கூடிய தானம் பற்றாமல் இருந்ததால், தன்னுடன் இராஜபாளையம் வருமாறு பணித்தார். அப்படித்தான் அந்தப் பயண‌ம் அமைந்தது.

இராஜபாளையத்தில் சுழற்சங்க மகாநாட்டில் பேசும்போது இந்த வேண்டுகோளை வைத்தார். உடனே தேவையான தொகை சேர்ந்த்துவிட்டது. சுழற்சஙக அமைப்பாளர்கள் முறையாக வரவு வைத்து, என்னுடன் ஒரு நபரையும் அனுப்பி வைத்தார்கள். தஞ்சையில் போர்வைகளை வாங்கி மனையேரிப்பட்டியில் வினியோகம் செய்ய ஏற்பாடு செய்தோம்.

அப்போது, பல கடைகளில் ஏறி இறங்கிய போது, தஞ்சை சர்வோதய சங்கத்தில் புனித மூவரின் படங்களை வாங்கிச் சென்று  பயனாளிகளுக்குக் காண்பிப்போம் என்று நினைத்து படங்களை வாங்கினேன். படத்தினை தினமணி நாளிதழில் சுற்றிக் கொடுத்தார்கள். சுற்றியதாளைப் பிரித்தால் ஓர் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அந்த நாளிதழின் பக்கங்களில் 'ஸ்ரீ ராமகிருஷ்ணரின் வாழ்வும் வாக்கும்' என்ற கட்டுரை வெளியாகி இருந்தது.

அவருடைய செய்தியை எல்லோருக்கும் எடுத்துச் சொல்லப்பட்ட ஆணையாக ஏற்றுக் கொண்டு விட்டேன்.

மதுரைப் பயணத்தின் போது மூத்த துறவியுடன் பேசிய போது ஏற்பட்ட உணர்ச்சியின் வெளிப்பாடு, அதன் தொடர்ச்சியாக சற்றும் எதிர்பாராத தருணத்தில் 'வாழ்வும் வாக்கும்' கிடைத்தது எல்லாமுமாகச் சேர்ந்து என் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டன.

நரசேவையே நாரயணசேவை. மக்கள் சேவையே மகேசன் சேவை. சீவ சேவையே சிவன் சேவை என்பதெல்லாம் தாரக மந்திரமானது.

அலுவலகத்தில் பதவி உயர்வு வேண்டாம் என்றேன்.

வீட்டில் குழந்தைகள், மனைவி உறவினர்களுக்கு அளிக்க வேண்டிய நேரம் தானாகக் குறைந்தது.

சதாநேரமும் சேவை, சேவை என அலைய ஆரம்பித்தேன்.

ஒரு வெளி நோயாளிகளிக்கான மருந்தகத்தை ஆரம்பித்து 8 ஆண்டுகள் மாலைநேரத்தில் நடத்தினேன். ஒரு ரூபாய் ஆஸ்பத்திரி என்ற பெயர். மக்கள் அளித்தனர். வயிற்றுப் போக்கு, சொறி சிரங்கு, பருவகால சுரம் ஆகியவற்றினை எதிர்த்து 5 கிராமங்க‌ளின் குழந்தைகளைக் காத்தோம்.
 
அதே நேரத்தில் எங்கள் பகுதியில் ஒரு தரமான அர‌சு அங்கீகாரம் பெற்ற பள்ளியை நிறுவ ஒரு திட்டத்தை முன் வைத்து ராங்கியம் தெய்வத்திரு ஏ.சுப்ரமணியம் செட்டியார் அவர்களின் ஆதரவினைப் பெற்று  உயர்நிலைப் பள்ளியை நிறுவ ஆவன செய்தேன். 26 ஆண்டுகளுக்குப் பின்னர், அந்தப் பள்ளி இன்று மேல் நிலைப் பள்ளியாக விளங்குகிறது.

என் வாழ்வில் சுமார் 10 ஆண்டுகாலங்கள் இந்த சேவைப் "பைத்தியம்" பிடித்து பசி தூக்கம் இன்றி அலைந்தேன்
.
பின்னர் என்ன ஆயிற்று?

ஒரு வேளை என் மனதில் "நான்" என்ற எண்ணம் தலை தூக்கிவிட்டது போலும்! இறையருள் என்னைப் பல சூழல்களில் கொண்டு விட்டு, கொஞ்சம் கொஞ்சமாக எல்லா வேலைகளிலும் இருந்து என்னைப் பின் வாங்க வைத்தது. 'சட்டிசுட்டதா கை விட்டதடா' என்ற நிலை.

அதுவும் நன்மைக்கே என்று மனதைச் சமாதானப் படுத்திக்கொண்டேன்.

சொந்த வேலைகளில் கவனம் செலுத்தினேன். ஒவ்வொருவராகப் பெண்களுக்குத் திருமணம் போன்ற வேலைகள், வீட்டினை விரிவு படுத்திக் கட்டுவது, விட்டுப்போன‌ உறவுக‌ளைப் புதிப்பது என்று என் வாழ்க்கை திசை மாறி விட்டது.

ஆனால் இயற்கையாக என் மனதில் ஊறி விட்ட சேவை மனப்பான்மை மீண்டும், இப்போது, ஓய்வு பெற்ற பின்னர், தலை தூக்குகிறது.

என்ன செய்யலாம்?

இவ்வாக்கத்தைப் படிக்கும் உங்களின் மேலான ஆலோசனைகளை எதிர்பார்க்கிறேன்.

அன்புடன்,  
K. முத்துராமகிருஷ்ணன் (KMRK),
தஞ்சாவூர்
மின்னஞ்சல் முகவரி: kmrk1949@gmail.com


மடத்தில் எடுக்கப்பெற்ற படம். 
ஒலி வாங்கியில் பேசுவது கட்டுரையின் நாயகர்
K. முத்துராமகிருஷ்ணன் (KMRK)

கட்டுரையின் நாயகர்  K. முத்துராமகிருஷ்ணன் (KMRK)
அவர்கள் தன் குடும்பத்தாருடன்.
கட்டுரை சம்பந்தப்பட்ட காலத்தில் எடுக்கப்பெற்ற பழைய படம்! 

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++ 
2
கர்மவினை என்பது இதுதானா?

அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய ராமுவுக்கு செய்தி காத்துக் கொண்டிருந்தது. செய்தியுடன் காத்திருந்தது, அவனுடைய அன்பு மனைவி பிரியா. வள்ளுவர் போற்றி வகுத்தபடி குண நலன்களை எல்லாம் ஒரு சேரப் பெற்ற அருங்குணமான மனைவி பிரியா.

ராமு வீட்டிற்குவ‌ந்தவுட‌ன், ப்ரியாவின் வாடிய முக‌த்தைப் பார்த்து, “என்ன‌ ந‌ட‌ந்த‌து? ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறாய்? ந‌மது செல்வ‌ங்க‌ளுக்கு ஏதேனும் உடல்நல‌க் குறைவா?” என்று வின‌வினான்.

அந்த‌ அருங்குண ந‌ங்கை இல்லை என்று கூறினாள் பிற‌கு, "என்ன‌ ந‌ட‌ந்த‌து சொல்லு" என்று கட்டாயப் படுத்திக்கேட்டவுடன் சொன்னாள். “என்ன‌ங்க‌, எங்க‌ ஊர்க்கார‌ர், அதுதான் ப‌க்க‌த்துவீட்டுகார‌ர் வந்து க‌ல்யாண‌ ப‌த்திரிக்கை வைத்துவிட்டு, என்னை க‌ட்டாய‌மா வ‌ர‌ச் சொன்னார். நாம் இருவரும் கட்டாயம் போக வேண்டும்.  என்னுடைய சிறுவ‌யது முதலே அவர்கள் எனக்குத் தெரிந்த‌வ‌ர்க‌ள்”

“இன்னும் ஒருவாரம்தான் இடையில் உள்ளது. பிர‌யாண‌த்திற்கு ஏற்பாடு செய்யுங்கள். அப்ப‌டியே அம்மாவையும் அப்பாவையும் பார்த்த‌ மாத‌ரியும் இருக்கும்” என்றும் கூறினாள்.

“ந‌மது மூத்த‌ பைய‌னைப் ப‌ள்ளியில் சேர்க்க‌ வேண்டும். என‌க்கு அலுவ‌ல‌க‌த்தில் விடுமுறை கிடைக்காது. மேலும் ப‌ணத்தை வீண் செல‌வு செய்யாம‌ல், முக்கியமான செலவுகளை மட்டும் செய்வோம். நம் பிள்ளைகளின் ந‌ல‌னில் அக்க‌றை செலுத்துவோம். போன‌மாத‌ம்தான் ஒரு க‌ல்யாணத்திற்குச் சென்று வ‌ந்தோம் அம்மாவையும் பார்த்துவிட்டு வ‌ந்தோமில்லையா? அடுத்த‌முறை எதேனும் திரும‌ண‌ம் ந‌ட‌ந்தால் அழைத்து  செல்கிறேன்” என்று அவளுடைய கணவர் அன்பாகக் கூறினார்.

அந்த‌ புண்ணிய‌வ‌தி கேட்கவில்லை. வாதம் செய்யத் துவங்கிவிட்டாள். அருங்குணங்கள் எல்லாம் தளர்ந்துவிட்டது.

திரும‌ண‌ நாளும் வ‌ந்த‌து. ராமு வ‌ழ‌க்க‌ம்போலத் தன்னுடைய அலுவ‌லுக்குச் சென்று விட்டார்.

பிரியாவின் மனது குழப்பித்தில் ஆழ்ந்தது. வேத‌னைப் பட்டாள். ஏதோ இழக்கக் கூடாததை இழ‌ந்த‌ சோகத்தில் ஆழ்ந்து விட்டாள். தான் சொல்லியும் தன் கணவர் கேட்கவில்லையே என்ற கோபமும் ஏற்பட்டது. இனிமேல் வாழ்நாளில் திரும‌ண நிக‌ழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பே வராதோ என்றும் கவலை கொள்ளத் துவங்கினாள்.

“ச்சேய், என்ன வாழ்க்கை? இனி இவருடன் வாழ‌க்கூடாது. இப்ப‌டியொரு கணவன் தேவைதானா? பணம், பணம். சிக்கனம் என்கிறாரே ஒழிய மனைவியின் ச‌ந்தோஷ‌த்தைப் பற்றி யோசிக்க மாட்டேன் என்கிறாரே!” என்று எண்ணத் துவங்கினாள்.

“அந்தத் திருமணத்திற்கு எத்தனை பேர் வருவார்கள். அவர்களில் பாதி எனக்குத் தெரிந்தவர்களாக இருப்பார்கள். போக‌வில்லையென்றால் எவ்வ‌ளவு அவ‌மான‌ம்? நாளைக்கு அவர்களைச் சந்திக்க நேர்ந்தால் அவர்கள் என்னை ம‌திப்பார்களா? பேசுவவார்களா?” என்றெல்லாம் எண்ணி வேத‌னையின் உச்சத்திற்கும், குழப்பத்தின் சிகரத்திற்கும் சென்றாள்.

உணர்ச்சிப் பிரவாகத்தில் உடன் ஒரு முடிவிற்கும் வந்தாள். சாதாரண முடிவல்ல அது. அவள் வாழ்வையே சாய்க்கும் முடிவு அது!

தங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள‌ பாசி படிந்த‌, பாழ‌டைந்த‌, ச‌க‌தி நிறைந்த‌, கிணற்றில் தன் இரண்டு குழ‌ந்தைக‌ளையும் தூக்கி வீசிவிட்டுத் தானும் அதில் பாய்ந்தாள். யாராலும் காப்பாற்ற‌முடிய‌வில்லை. ஒரு வ‌ழியாகத் தேடிப் பார்த்துக் கண்டுபிடித்துத் தூக்கி வ‌ந்து மேலே போட்டாபோது, மூன்று ஜீவன்களின் உயிர் உடலைவிட்டுப் பிரிந்திருந்தது.

தன்னைத் தவிக்க விட்டு விட்டு, இறந்து கிடந்த ம‌னைவி, மற்றும் குழந்தைகளைப் பார்த்துக் கணவன் தரையில் விழுந்து புரண்டு அழுதான். க‌த‌றினான். சென்ற உயிர்கள் மீண்டு வரவா போகிறது?

இறுதிக் க‌ட‌ன்க‌ள் எல்லாம் முடிந்தன. ராமு மட்டும் இய‌ல்பு நிலைக்கு திரும்ப‌வில்லை. அவனுடைய பெற்றோர்கள், உற்றார், உறவினர்கள் ஒன்று கூடி ராமுவிற்குப் பலவிதங்களில் சமாதானம் சொன்னார்கள். கேட்கும் மன நிலையில் அவன் இல்லை.

அவனுடைய பெற்றோர்கள், எங்களுடன் வந்துவிடு என்று சொன்னதைக் கேட்கவில்லை. வாழ்க்கை இத்துடன் முடிந்து விடாது. இன்னொரு திருமணம் செய்து வைக்கிறோம் வா’ வென்று சொன்னதையும் அவன் தன் காதில் வாங்கிக் கொள்ளவில்லை.

தொடர்ந்து ஒருவாரம், இறந்தவர்களின் நினைவாகவே இருந்தான். மன அழுத்தம் அவனைச் சிந்திக்க விடவில்லை.

இறுதியில் என்ன ஆயிற்று?

அவனும் அதே பாழடைந்த கிணற்றில் தன் வாழ்க்கையை  முடித்துக் கொண்டான்.

இதை என்னவென்பது? முன் ஜென்மத்துப் பாவம் என்பதா?

அப்படிச் சொன்னால், இந்தப் பிறவியில் தன் அன்புக்கணவனுக்கு மாறாத துக்கத்தையும், மரணத்தையும் கொடுத்துவிட்டுச் சென்ற அந்த  இளம் மனைவிக்கு, அடுத்த ஜென்மம் எப்படி அமையும்?

நீங்களே சொல்லுங்கள்!
...............................................
ஆக்கம்: பெயரைக் குறிப்பிடாத, நமது வகுப்பறை மாணவிகளில் ஒருவர்! அவருக்கு வாழ்த்துக்கள்.

அன்புடன்
வாத்தியார்




வாழ்க வளமுடன்!

1.1.11

புத்தாண்டைப் புன்னகையுடன் துவங்குவோம்!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
புத்தாண்டைப் புன்னகையுடன் துவங்குவோம்!

இன்று புதிய ஆண்டு துவங்குகிறது. அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

“உலகில் எதுவுமே நிலையானதல்ல - நமது கஷ்டங்கள் உட்பட” (Nothing is permanent in this world, not even our troubles!) என்று சார்லி சாப்ளின் கூறுவாராம்.

ஆகவே இந்தப் புத்தாண்டில் எல்லாம் மாறும். மாறட்டும்.

வேலை கிடைக்காதவர்களுக்கு வேலை கிடைக்கட்டும்
வேலையில் மாற்றம் வேண்டும் என்பவர்களுக்கு மாற்றம் உண்டாகட்டும்.
பதவி உயர்விற்காகக் காத்திருப்பவர்களுக்கு, அந்த உயர்வு அளிக்கப்படட்டும்
கடன் தீர வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு கடன் தீரட்டும்
வங்கி இருப்பு ஏற வேண்டும் என்று ஆசைப்படுபவர்களுக்கு, அது நடக்கட்டும்.
திருமணம் நடக்க வேண்டிய நிலையில் இருப்பவர்களுக்கு, அது கூடிவரட்டும்.
குழந்தைச் செல்வத்திற்காகக் காத்திருப்பவர்களுக்கு, அச்செல்வம் கிடைக்கட்டும்
வீடு வாங்க வேண்டும் என்பவர்களுக்கு அது கைகூடட்டும்.
வெளிநாடு செல்லும் கனவில் இருப்பவர்களுக்கு அந்த வாய்ப்பு தேடி வரட்டும்.
இதில் குறிப்பிட விடுபட்டவைகள் எதுவாக இருந்தாலும், தேவைப் படுபவர்களுக்கு, அது கிடைக்கட்டும்!
--------------------------------------------------------------------------
“வாத்தியார், இது என்ன அருளாசியா?”

“இல்லையப்பா, நடக்கவிருக்கும் உண்மை!”

“எப்படிச் சொல்கிறீர்கள்?”

“அள்ளிக்கொடுக்கும் குணம் கொண்ட குரு பகவான் இப்போது மீனத்தில் இருக்கிறார். அது அவருடைய  பண்ணை வீடு. அங்கே இருக்கும்போது அவர் குஷியாக இருப்பார். மகா ஜனங்களுக்கு நன்மைகளை வாரி  வழங்குவார்”

“அப்போ, அவருடைய தனுசு வீடு?”

“நெரிசல் மிகுந்த நகரத்தின் மத்தியில் இருக்கும் குடியிருப்பு போன்ற வீடு அது”

“ஒன்று, மூன்று, ஆறு, எட்டு, பன்னிரெண்டு என்று கோள்சாரச் சீட்டைக் கையில் வைத்திருப்பவர்களும், அவர்  செய்வாரா?”

“ஐந்து, ஏழு, ஒன்பது என்று அவர் பார்வைகள் படும் சீட்டுக்கள் உள்ளன அல்லவா? அதை நீட்டிக் காண்பித்து  நீங்கள் கேட்க வேண்டாம். அவராக தனது மடிக் கணினியில் பார்த்து, உங்களுக்குச் செய்துவிடுவார்.”

“அப்படியா................?”

“அப்படித்தான்...........ஓக்கேயா?”

வாழ்த்துக்களுடன்
வாத்தியார்
----------------------------------------------------------------------------
புத்தாண்டு ஸ்பெஷல்: ஒருவரி நகைச்சுவைகள்!
இவைகள் சொந்த சரக்கல்ல; மின்னஞ்சலில் வந்தது. அப்படியே தண்ணீர் கலக்காமல் கொடுத்திருக்கிறேன். வேண்டியவர்கள் வேண்டிய அளவு சாப்பிடுங்கள். மொழி மாற்றம் செய்ய நேரமில்லை. தனித் தமிழ்
ஆர்வலர்கள் பொறுத்துக்கொள்ளவும்
++++++++++++++++++++++++++++++++++++++++++++
1. Having one child makes you a parent; having two you are a referee.

2. Marriage is a relationship in which one person is always right and the other is the husband!

3. I believe we should all pay our tax with a smile. I tried - but they wanted cash.

4. Regular naps prevent old age, especially if you take them while driving.

5. A child's greatest period of growth is the month after you've purchased new school uniforms.

6. Don't feel bad. A lot of people have no talent.

7. Don't marry the person you want to live with, marry the one you cannot live without, but whatever you do,

you'll regret it later.

8. You can't buy love, but you pay heavily for it.

9. Bad officials are elected by good citizens who do not vote.

10. Laziness is nothing more than the habit of resting before you get tired.

11. Marriage is give and take. You'd better give it to her or she'll take it anyway.

12. My wife and I always compromise. I admit I'm wrong and she agrees with me.

13. Those who can't laugh at themselves leave the job to others.

14. Ladies first. Pretty ladies sooner.

15. A successful marriage requires falling in love many times, always with the same person.

16. You're getting old when you enjoy remembering things more than doing them.

17. It doesn't matter how often a married man changes his job, he still ends up with the same boss.

18. Real friends are the ones who survive transitions between address books.

19. Saving is the best thing. Especially when your parents have done it for you.

20. Wise men talk because they have something to say; fools talk because they have to say something

21. They call our language the mother tongue because the father seldom gets to speak!

22.  Man: Is there any way for long life?
    Dr: Get married.
    Man: Will it help?
    Dr: No, but then the thought of long life will never come.

23. Why do couples hold hands during their wedding? It's a formality just like two boxers shaking hands before

the fight begins!

24. Wife: Darling today is our anniversary, what should we do?
    Husband: Let us stand in silence for 2 minutes.

25. It's funny when people discuss Love Marriage vs Arranged. It's like asking someone, if suicide is better or

being murdered.

26. There is only one perfect child in the world and every mother has it.

28. There is only one perfect wife in the world and every neighbor has it!

So Enjoy Life and Take it easy...
=======================================


வாழ்க வளமுடன்!