மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

16.1.17

கவிதை: உண்டியலில் பணத்தைப் போட்டாமல், பாட்டெழுதிப் போட்ட கவிஞர்!கவிதை: உண்டியலில் பணத்தைப் போட்டாமல், பாட்டெழுதிப் போட்ட கவிஞர்!

திருப்பத் உண்டியலில் எல்லோரும் பணத்தை, தங்கத்தைப் போடுவார்கள். ஆனால் கவியரசர் கண்ணதாசன் பாட்டு ஒன்றை எழுதிப் போட்டுவிட்டு வந்தார்

“என் கடனைத் தீர்ப்பாய் இறைவா! திருமலைவாழ்
வெங்கடேசு ரப்பெருமாள் வேந்தனே - மங்காத 
செல்வத்தை அள்ளித் தினமும் தருவாயேல்
நல்வழியில் வாழ்ந்திருப்பேன் நான்

அந்த நிகழ்வுக்குப் பிறகு அவருக்குப் பணத்திலும் வறுமை இல்லை. ஓடிப்போய்விட்டது. பாட்டிலும் வறுமை இல்லை. எண்ணற்ற பாடல்களை எழுதிக்குவித்தார்.

இதிலிருந்து என்ன தெரிகிறது? திருப்பதி உண்டியலில் பணம் போட்டால் பணம் பெருகும். பாட்டெழுதிப் போட்டால் புலமை பெருகும். துன்பங்களை எழுதிப்போட்டல், நமது துன்பங்கள் நீங்கும். மொத்தத்தில் பட்ட கடன் தீரும். அடுத்து முறை திருமலைக்குச் செல்லும்போது முயன்று பாருங்கள்

“வேங்கடம் ஏறக் கால்வலு வில்லை
   வீட்டிலே இருந்துனைக் கேட்டேன்
பாங்குடன் எனக்குப் பைந்தமிழ் அளித்த
   பாட்டையே காணிக்கை போட்டேன்
தீங்குடன் நலமும் சேர்த்துவைக் கின்றாய்
   சிறிது அதைப் பிரித்துவைப் பாயே
ஓங்குமால் நிலையே உயர்பெரும் மலையே
   உன்பதம் என்சிரம் தாயே

என்று தான் பாட்டு எழுதிப்போட்டு விட்டு வந்ததையும் கவிதையாக்கிச் சொன்னார் கவியரசர் கண்ணதாசன்

எப்படி இருக்கிறது சாமிகளா?
அன்புடன்
வாத்தியார்
------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

8 comments:

 1. வணக்கம் குருவே!
  கவியரசரின் முத்தான சிந்தனையில் அங்ஙனம் ஒரு எண்ணம் தோன்றக் காரணமாக அந்த வேங்கடமலையான்
  இருந்திருப்பான்!"நீ என்னிடம் என்ன கேட்கிக்றாயோ அதைத் தருகிறேன்"
  என்று சொனதற்கிணங்க ஏழுமலையானின் சன்னதி உண்டியலீல்
  கவிதை எழுதிக் தந்திருப்பார்!
  கேட்டதைக் தருபவன் அல்லவா வேங்கடவன்!
  ஆழ்ந்த பக்தியோடு அவனிடம் வேண்டினால் திருமலைவாசன் எல்லோரையும் அனுக்ரஹிப்பான் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை!
  ஐயன் மீன் கூரியவண்ணம் நாங்களும்
  அடுத்தமுறை திருமலை செல்லுங்கால்
  எங்கள் வேண்டுதலை சமர்ப்பிக்கின்றோம்!

  ReplyDelete
 2. வணக்கம் ஐயா,அடுத்த முறை முயற்ச்சித்து பார்ப்போம்.நன்றி.

  ReplyDelete
 3. /////Blogger வரதராஜன் said...
  வணக்கம் குருவே!
  கவியரசரின் முத்தான சிந்தனையில் அங்ஙனம் ஒரு எண்ணம் தோன்றக் காரணமாக அந்த வேங்கடமலையான்
  இருந்திருப்பான்!"நீ என்னிடம் என்ன கேட்கிக்றாயோ அதைத் தருகிறேன்"
  என்று சொனதற்கிணங்க ஏழுமலையானின் சன்னதி உண்டியலீல்
  கவிதை எழுதிக் தந்திருப்பார்!
  கேட்டதைக் தருபவன் அல்லவா வேங்கடவன்!
  ஆழ்ந்த பக்தியோடு அவனிடம் வேண்டினால் திருமலைவாசன் எல்லோரையும் அனுக்ரஹிப்பான் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை!
  ஐயன் மீன் கூரியவண்ணம் நாங்களும்
  அடுத்தமுறை திருமலை செல்லுங்கால்
  எங்கள் வேண்டுதலை சமர்ப்பிக்கின்றோம்!//////

  ReplyDelete
 4. /////Blogger வரதராஜன் said...
  வணக்கம் குருவே!
  கவியரசரின் முத்தான சிந்தனையில் அங்ஙனம் ஒரு எண்ணம் தோன்றக் காரணமாக அந்த வேங்கடமலையான்
  இருந்திருப்பான்!"நீ என்னிடம் என்ன கேட்கிக்றாயோ அதைத் தருகிறேன்"
  என்று சொனதற்கிணங்க ஏழுமலையானின் சன்னதி உண்டியலீல்
  கவிதை எழுதிக் தந்திருப்பார்!
  கேட்டதைக் தருபவன் அல்லவா வேங்கடவன்!
  ஆழ்ந்த பக்தியோடு அவனிடம் வேண்டினால் திருமலைவாசன் எல்லோரையும் அனுக்ரஹிப்பான் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை!
  ஐயன் மீன் கூரியவண்ணம் நாங்களும்
  அடுத்தமுறை திருமலை செல்லுங்கால்
  எங்கள் வேண்டுதலை சமர்ப்பிக்கின்றோம்!//////

  நல்லது. அப்படியே செய்யுங்கள். நன்றி வரதராஜன்!

  ReplyDelete
 5. ////Blogger kmr.krishnan said...
  Very nice Sir////

  உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!

  ReplyDelete
 6. Monday, January 16, 2017 6:53:00 AM Delete
  ////Blogger வேப்பிலை said...
  கொலை பழி போகுமா?/////

  நமக்கு அரசியல் வேண்டாம் வேப்பிலையாரே!

  ReplyDelete
 7. ////Blogger adithan said...
  வணக்கம் ஐயா,அடுத்த முறை முயற்ச்சித்து பார்ப்போம்.நன்றி./////

  நல்லது. அப்படியே முயற்சி செய்யுங்கள். நன்றி!

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com