மேட்டரில் எது முக்கியம் புரிதலா - தெளிதலா?
ஒருவர் தினமும் கோவிலுக்கு உபன்யாசம் கேட்பதற்காகச் சென்று வந்து கொண்டிருந்தார்.
அதனால் வீட்டுக்கு வர கொஞ்சம் லேட் ஆகவும் ஆனது.
அப்படி ஒரு இரவு அவர் வீட்டுக்குள் நுழைந்து கொண்டிருந்தபோது வெறுப்பாகிப் போன அவரது மனைவி, " அப்படி என்ன தான் உபன்யாசத்துலே கொட்டிக் கிடக்கு......??? ஒரு நாளை போல இவ்வளவு லேட் ஆக வீட்டுக்கு திரும்பி வரேங்களே. டெயிலி அங்க போயிட்டு வாறீங்களே, உங்களுக்கு என்ன புரிந்தது சொல்லுங்க " என்று கேட்டார்.
அதற்கு அந்த மனிதர்." எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ஆனா, போயிட்டு கேட்டு வருவது நன்றாகவே இருக்கு" என்றார்.
கோபமடைந்த மனைவி, " முதல்ல வீட்டில இருக்கிற சல்லடையில் கொஞ்சம் தண்ணீர் வீட்டுக் கொண்டு வாங்க" என்றார்.
அவரும் சல்லடையில் தண்ணீர் எடுத்துக்கொண்டு வீடு முழுதும் சிந்தியபடியே வந்தார்.
மனைவியிடம் வந்த போது தண்ணீர் இல்லாமல் வெறும் சல்லடை மட்டுமே இருந்தது.
உடனே மனைவி," தினமும் லேட்டா வரீங்க. கேட்டா, உபன்யாசத்துக்குப் போனேன் எங்கறீங்க...... என்ன சொன்னாங்கன்னு கேட்டா.....
ஒன்னும் தெரியல்லேன்னு சொல்லறீங்க.நீங்க உபன்யாசம் கேட்கப்போற லட்சணம் இதோ இந்த சல்லடையில் ஊத்தின தண்ணீ மாதிரித் தான்..எதுக்கும் பிரயோஜனம் கிடையாது", என்று கொட்டித் தீர்த்தாள்.
அதுக்கு அந்த மனிதர் சொன்ன பதில் தான் கதையின் நீதியாக அமைய போகிறது...
"நீ சொல்லறது சரிதான். சல்லடையில் தண்ணீ வேணா நிரப்ப முடியாம போகலாம். ஆனா, அழுக்கா இருந்த சல்லடை இப்போ பாரு.. நல்லா சுத்தமாயிடுச்சு. அதுபோல, உபன்யாசத்தில சொல்ற விஷயம் வேணா எனக்குப் புரியாமலிருக்கலாம். ஆனா, என்னோட மனசில இருக்கிற அழுக்கையெல்லாம் படிப் படியாக அது அகற்றுவதை என்னால் நன்கு உணர முடிகிறது", ன்னு சொன்னார்.
"புரிதலை விட தெளிதலே எப்பவும் முக்கியம்"
------------------------------------------------------
படித்தேன்.பகர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
=============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
Respected Sir,
ReplyDeletePleasant morning... Wonderful explanation...
Thanks for sharing.
With kind regards,
Ravi-avn
வணக்கம் குருவே!
ReplyDeleteஅட்டகாசம்!
நான் சிறிதும் எதிர்பார்க்காத முடிவு!
புரிதலுக்கு மனைவி செய்த யுக்தியும்,
தெரிதலுக்கு கணவன் சொன்ன பதிலும்
ஒன்றுக்கொன்று நெத்தியடி!
நகைச்சுவை கலந்த தேர்ந்த பகிர்ப்பு!
அருமை
ReplyDeleteVery Nice Sir.
ReplyDeleteவணக்கம் ஐயா,அசத்தல் பதிவு.புரியாமல் கேட்டதிற்க்கே இத்துனை பலன் என்றால்,புரிந்து கேட்டால்!.நன்றி.
ReplyDelete////Blogger ravichandran said...
ReplyDeleteRespected Sir,
Pleasant morning... Wonderful explanation...
Thanks for sharing.
With kind regards,
Ravi-avn/////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி அவனாசி ரவி!
////Blogger வரதராஜன் said...
ReplyDeleteவணக்கம் குருவே!
அட்டகாசம்!
நான் சிறிதும் எதிர்பார்க்காத முடிவு!
புரிதலுக்கு மனைவி செய்த யுக்தியும்,
தெரிதலுக்கு கணவன் சொன்ன பதிலும்
ஒன்றுக்கொன்று நெத்தியடி!
நகைச்சுவை கலந்த தேர்ந்த பகிர்ப்பு!////
நல்லது. உங்களின் பாராட்டிற்கு நன்றி வரதராஜன்!
///Blogger Nagendra Bharathi said...
ReplyDeleteஅருமை////
நல்லது. நன்றி நண்பரே!
///Blogger kmr.krishnan said...
ReplyDeleteVery Nice Sir.////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!!
////Blogger adithan said...
ReplyDeleteவணக்கம் ஐயா,அசத்தல் பதிவு.புரியாமல் கேட்டதிற்கே இத்துனை பலன் என்றால்,புரிந்து கேட்டால்!.நன்றி./////
உண்மைதான். உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி ஆதித்தன்
உங்கள் தளத்தை blogspot.com என்று மாற்றி விடுங்கள்...
ReplyDeleteஏன் என்பதை கீழே இணைப்பில் சென்று வாசிக்கவும்...
http://ponmalars.blogspot.com/2012/03/stop-blogger-redirecting-country-wise.html
உதவி தேவையென்றால் தொடர்பு கொள்ளுங்கள் ஐயா... நன்றி...
dindiguldhanabalan@yahoo.com
9944345233