உங்கள் பக்கத்தில் இருப்பவர்களின் முக்கியத்தும்!
உங்கள் பக்கத்தில் இருப்பவர் யார்?
நள்ளிரவில் 120 கி.மீ வேகத்தில் சென்று கொண்டிருந்த கார் திடிரென்று நின்றது. டிரைவர் சீட்டுக்கு பக்கத்து சீட்டில் உட்கார்ந்து தூங்கிக் கொண்டிருந்த என் நண்பரை டிரைவர் தட்டி எழுப்பினார், “சார் பின்னாடி போய் உட்காருங்க. நீங்க தூங்கி தூங்கி வழியறத பார்த்தா எனக்கும் தூக்கம் வருது”.
தூங்கிக்கொண்டிருந்த நண்பர் பின்னால் உட்கார்ந்து, விட்ட தூக்கத்தை தொடர ஆரம்பித்தார். என்னால் தான் தூங்க முடியவில்லை. டிரைவர் சொன்ன வார்த்தைகளைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன். பல நேரங்களில் நம் செயல்பாடுகள் கூட நம் பக்கத்தில் இருப்பவரை பொறுத்துத்தான் இருக்கிறது. சுறுசுறுப்பான மனிதர்கள் அருகில் இருக்கையில் மெள்ள அந்த சுறுசுறுப்பு நம்மையும் தொற்றிக் கொள்கிறது. சோம்பேறிகள் பக்கத்தில் இருக்கும்போது மெல்ல மெல்ல அந்த சோம்பேறித்தனம் ஒட்டிக்கொள்கிறது. இந்த லாஜிக்கால் தான் தூங்குபவரை பக்கத்தில் வைத்துக்கொள்ள டிரைவர் விரும்பவில்லை.
எனவே முன்னேற விரும்பினால் நீங்களும் யோசியுங்கள், உங்கள் பக்கத்தில் இருப்பது யார்? உற்சாகமானவரா? சுறுசுறுப்பானவரா? நம்பிக்கையானவரா? விரக்தி எண்ணம் உள்ளவரா? இடித்துரைக்க, எடுத்து சொல்ல நல்ல மனிதர்களை தன் அருகில் வைத்துக் கொள்ளாததாலேயே வீழ்ந்தவர்கள் பலர். மிகப் பெரிய வணிக சாம்ரஜ்யங்களை ஆண்டவர்கள் தங்கள் பக்கத்தில் இருந்த தவறான நபர்களால் வீழ்ந்திருக்கிறார்கள். எனவே உங்களுக்கும் உங்கள் வெற்றிக்கும் இருக்கும் தொடர்பை போலவே உங்கள் அருகில் இருப்பவருக்கும் கூட தொடர்பு இருக்கிறது.
லட்சியம் இல்லாதவர்களை நண்பர்களாக ஏற்காதீர்கள். லட்சியமும் அதை அடையவேண்டும் என்று எப்போதும் துடிப்பவர்களாக தேடி நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள். உங்கள் அருகில் உள்ளவர்களால் நீங்கள் உற்சாகம் பெருவதைப் போலவே உங்களைப்பார்த்து மற்றவர்களும் எழுச்சி பெற வேண்டும் என்று நினையுங்கள். எல்லோரையும் ஊக்கப்படுத்துங்கள். உங்கள் அருகில் இருக்கும் அனைவரும் உற்சாகம் அடைந்தால் உங்களின் அருகாமையினை அனைவரும் விரும்புவார்கள்.
கொஞ்சம் கண்ணைத்திறந்து பாருங்கள். உங்கள் பக்கத்தில் இருப்பது யார்? யாராக இருந்தாலும் ஒன்று உங்களை உற்சாகப்படுத்துபவராக இருக்க வேண்டும் அல்லது உங்களால் உற்சாகம் பெறுபவராக இருக்க வேண்டும்
--------------------------------------------------------------------------
2
*திரு கண்ணதாசன் அவர்களின் நெஞ்சுக்கு நிம்மதி என்ற புத்தகம் வாசித்திருக்கிறீர்களா..?*
#சுருக்கமாக..
தகராறு இல்லாத குடும்பம் இல்லை.. வீட்டுக்கு வீடு வாசப் படி..ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கவலை...
யானைக்கு தன் உடம்பைத் தூக்க முடியவில்லையே என்ற கவலை இருந்தால் அணிலுக்கு தன் உடம்பு இவ்வளவு சிறிதாக இருக்கிறதே என்ற கவலை..
ஏழைக்கு தொப்பையை நிறைப்பது கவலையென்றால், பணக்காரருக்கு தொப்பையைக் குறைப்பது கவலை..
காதலித்து கல்யாணம் செய்தவரும் பிரிந்து சென்றதுண்டு,பெற்றோர் நிச்சயித்த திருமணத்திலும் பேரன்பு பெருக்கெடுப்பதுண்டு..
அன்பிருந்தும், பணமிருந்தும் சந்ததி இல்லாத குடும்பங்களும் உண்டு.. சந்ததி இருக்கும் குடும்பங்கள் சாப்பாட்டுக்கே கஷ்டபடுவதுண்டு..
அமெரிக்காவில் பகல் என்றால் இந்தியாவில் இருட்டு.. பிரச்சனை இல்லாத வாழ்க்கை எவருக்குமே இல்லை..
ஆக அடுத்தவர் நன்றாக வாழ்வது போலவும் நாம் மட்டும் தான் கஷ்டப் படுவது போலவும் பிரமை வேண்டாம்..
கணவர் வீட்டுக்கு வரும் போதே பிர்ச்சனையோடு வரக் கூடாது..மனைவியும் அவரை கேள்விகுறிகளோடே வர வேற்க கூடாது..
கணவர் எதையும் அடித்து சொல்ல கூடாது, மனைவி எதையும் இடித்து பேச கூடாது.
"நீங்க வாங்கின காய்கறி மகா மட்டம் "என்று மனைவி சொன்னால்..
"எந்த நாய் சொன்னது?" என்று கணவன் பதில் சொன்னால் தான் பிரச்சனை..தன் தவறை ஒத்துக் கொண்டு... "சரி இனி பார்த்து வாங்குகிறேன்" என்று சொல்லி விட்டால் முடிந்தது..
"நீ செய்த சாப்பாடு சகிக்கலை" என்று கணவன் சொன்னால்.."எனக்கு தெரிந்த லட்சணம் இவ்ளோதான் ..நீங்க உங்க அம்மா வீட்டுக்கு போய் சாப்பிடுங்க" என்று மனைவி பதில் சொன்னால் தான் பூகம்பம் ஆரம்பம்...
"இன்னிக்கு உடம்பு முடில..நாளைக்கு நன்றாக சமைக்கிறேன்" என்று சொன்னால் அன்பு வெள்ளம் தான்...
தன் தாயை மனைவி நன்றாக நடத்தினால் கணவனுக்கு நிம்மதி.தன் தாய் வீட்டை கணவன் பெருமையாக கூறினால் மனைவிக்கு நிம்மதி.
இரண்டு கைத் தட்டினால் தான் ஓசை என்பார்கள்.. ஒருவர் கோபம் கொள்ளும் போது இன்னொருவர் விட்டு கொடுக்க வேண்டும்..
"பெண்டாட்டி தானே சொல்லிவிட்டு போகிறாள் ".என்றும்.."கணவன் தானே ..பேசட்டும்" என்றும் விட்டுக் கொடுத்து விட்டால் உள்ளம் துடிக்காது.. உடல் வலிக்காது..ஊர் சிரிக்காது..
*வாழ்க இல்லறம்.*
----------------------------------------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்
=================================================
வணக்கம் குருவே!
ReplyDelete"உங்கள் பக்கத்தில் இருப்பவரின் முக்கியத்துவம்" மற்றும் கவியரசரின்"நெஞ்சுக்கு நீதி" ஆகிய இரு பகிர்ப்புகளும் ஜோர்!
நன்றி குருநாதா!
Respected Sir,
ReplyDeletePleasant morning... Good article. Motivation is important.
Thanks for sharing.
Thanks & Regards,
Ravi-avn
வணக்கம் ஐயா,இன்றைய இரண்டு பதிவுகளுமே மிகவும் எதார்த்தம்.சின்ன சின்ன சம்பவங்களையும்,கதைகளையும் சொல்லி அத்துடன் மிகப் பெரிய நீதியை சொல்வதில் உங்களுக்கு நிகர் நீங்கள்தான்.நன்றி.
ReplyDelete////Blogger வரதராஜன் said...
ReplyDeleteவணக்கம் குருவே!
"உங்கள் பக்கத்தில் இருப்பவரின் முக்கியத்துவம்" மற்றும் கவியரசரின்"நெஞ்சுக்கு நீதி" ஆகிய இரு பகிர்ப்புகளும் ஜோர்!
நன்றி குருநாதா!/////
நல்லது.உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!!!
////Blogger ravichandran said...
ReplyDeleteRespected Sir,
Pleasant morning... Good article. Motivation is important.
Thanks for sharing.
Thanks & Regards,
Ravi-avn////
நல்லது.உங்களின் புரிந்துணர்விற்கு நன்றி ரவிச்சந்திரன்!!!
////Blogger adithan said...
ReplyDeleteவணக்கம் ஐயா,இன்றைய இரண்டு பதிவுகளுமே மிகவும் எதார்த்தம்.சின்ன சின்ன சம்பவங்களையும்,கதைகளையும் சொல்லி அத்துடன் மிகப் பெரிய நீதியை சொல்வதில் உங்களுக்கு நிகர் நீங்கள்தான்.நன்றி.////
உங்களின் பாராட்டிற்கு நன்றி ஆதித்தன்!
very nice morals.
ReplyDelete////Blogger kmr.krishnan said...
ReplyDeletevery nice morals.////
நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!
வாழ்வில் சாதிக்க நினைப்பவர்களுக்கும், சங்கடங்களை தவிர்க்க நினைப்பவர்களுக்கும் ஆதவனின் அருளொளி போல் வழிகாட்டும் பதிவு...
ReplyDelete