மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label Lessons 991 - 1000. Show all posts
Showing posts with label Lessons 991 - 1000. Show all posts

11.8.17

Astrology: ஜோதிடம்: பரிவர்த்தனை யோகம்

Astrology: ஜோதிடம்: பரிவர்த்தனை யோகம்

யோகங்களைப் பற்றிய பாடம்!

இரண்டு கிரகங்கள் இடம் மாறி ஒன்றின் வீட்டில் மற்றொன்று அமர்வது (interchange of places) பரிவர்த்தனை யோகம் ஆகும்!

"Parivartthanai means Planet A occupies the sign of Planet B while simultaneously Planet B occupies the sign of Planet A.
Example: Moon occupies Jupiter's (குரு) house and Jupiter (குரு) occupies moon's house
---------------------------------------------------------------------------
இந்த யோகத்தால் இடம் மாறி அமர்ந்த கிரகங்களின் சக்தியும், வலிமையும் அதிகமாகும். அதேபோல இடம் மாறிய ராசிகளின் சக்தியும், வலிமையும் அதிகமாகும். அந்தப் பரிவர்த்தனை ஜாதகனின் வாழ்க்கையில் பல வெற்றிகள் ஏற்பட வழிவகுக்கும்.

Parivartthanai yoga will always increase the power of the two houses involved. It will also increase the power of the two grahas involved. Increasing the power of the two bhavas and the two grahas may be helpful for the success of the native.

அது பொது விதி. சில பரிவர்த்தனைகளால் தீமைகள் அதிகமாக ஏற்படும் நிலைமையும் உண்டாகும்

எப்படி?

வாருங்கள். அதையும் பார்ப்போம்.
------------------------------------
அந்த மாற்றத்திற்குக் காரணமான கிரகங்கள் தீய கிரகங்களாக இருந்தாலும், மாறிய இடங்கள் தீய இடங்களாக (inimical places) இருந்தாலும், அதாவது 6, 8, 12ஆம் வீடுகளாக இருந்தாலும், ஜாதகனுக்குத் தீய பலன்கள்தான் அதிகமாகக் கிடைக்கும்

ஆகவே பரிவர்த்தனை யோகம் உள்ளது என்றவுடன், யாரும் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ள வேண்டாம்.

If the bhava or the graha are inauspicious, the parivartthanai yoga may increase negative results.
-------------------------------------------------------------------------------------
பரிவத்தனைக்கு உள்ளான கிரகங்கள், சுபக்கிரகங்களாக இருந்தால், (benefics) ஜாதகனுக்கு அதீத நன்மைகள் கிடைக்கும்.

பரிவத்தனைக்கு உள்ளான கிரகங்கள், அசுபக்கிரகங்களாக இருந்தால், (melefics) ஜாதகன் அதீத தீமைகளையே சந்திக்க நேரிடும்.

If the graha involved are natural benefics; the benefits will be more for which those grahas are concerned.If the exchanged graha are natural malefics; results may be more difficult than the graha might separately produce.
++++++++++++++++++++++++++++++++++++++++++++
இந்தப் பரிவர்த்தனை யோகத்தின் மூன்று விதமான உட்பிரிவுகள்.

1.தைன்ய பரிவர்த்தனை.

தீய இடங்களான 6,8, 12ஆம் வீடுகளுக்கு ஆட்சிக் கிரகம் (Ruler of 6,8, or 12th houses) பரிவர்த்தனை பெற்றால், பரிவர்த்தனையான அடுத்த கிரகம் பாதிப்பிற்கு உள்ளாகும்.

This parivarththanai leads to a wicked nature, persistent trouble from opponents and ill health. The dushthana lord will be strengthened by its
interaction with the other non-dushthana partner.
________________________________________
2. கஹல பரிவர்த்தனை!

மூன்றாம் இடத்து அதிபதி பரிவர்த்தனைக்கு உள்ளாவது. பரிவர்த்தனைக்கு உள்ளாகும் கிரகம், 1,2,4,5,7,9,10, 11 ஆம் இடத்து அதிபதியானால் இந்த யோகம் நன்மை பயக்கும்.
மூன்றாம் இட அதிபதியின் துணிச்சலை மாறி அமரும் கிரகம் பெறும். தன்னுடைய செயல்களை நிறைவேற்றிக் கொள்ளும் துணிச்சல் ஜாதகனுக்குக் கிடைக்கும்.

Kahala yoga will energize the talking, scheming, competing mind to go out and get stuff done.
---------------------------------------------
3. மஹா பரிவர்த்தனை யோகம்.Maha Parivartamsha Yoga

1, 2, 4, 5, 7, 9, 10, 11 ஆம் இடத்து அதிபதிகளில் எவரேனும் இருவர் அல்லது இருவருக்கு மேற்பட்டவர்கள் இடம் மாறி அமரும்போது இந்த யோகம் உண்டாகும். ஜாதகனுக்கு, சொத்து, சுகம், அஸ்தஸ்து, மரியாதை, உடல் நலம், பதவி, அதிகாரம் என்று சம்பந்தப் பட்ட வீடுகளுக்கு ஏற்பக் கிடைக்கும்.

When the lords of 1, 2, 4, 5, 7, 9, 10, or 11 get exchange of signs, then it is called as Maha Parivarththanai Yoga
Result: This yoga promises wealth, status, and physical enjoyments, plus beneficial influences from the houses involved.
++++++++++++++++++++++++++++++++++++++
பரிவர்த்தனைக்கும், பார்வைக்கும் உள்ள வேறுபாடு.

தீய கிரகங்கள் ஒன்றை ஒன்று பார்க்கும்போது தீமைகள் அதிகமாகும். நல்ல கிரகங்கள் ஒன்றை ஒன்று பார்க்கும்போது நன்மைகள் அதிகமாகும்.

உதாரணத்திற்கு சனியையும், செவ்வாயையும் எடுத்துக் கொள்வோம்.

இரண்டும், 180 பாகைகள், 90/270 பாகைகளில் (4/10 கோணங்களில்) ஒன்றை ஒன்று பார்க்கும். அதாவது ஜாதகத்தில் ஒன்றின் பார்வையில் மற்றொன்று இருக்கும். அதனால் ஜாதகனுக்கு, அதீத கோப உணர்வும், மூர்க்கத்தனமும் இருக்கும். ஜாதகன் தன்னுடைய வாழ்வின் பாதி நன்மைகளை அந்தக் குணத்தாலாயே இழக்க நேரிடும்.

ஆனால் அதே நேரத்தில் சனியும், செவ்வாயும் ஒன்றிற்கொன்று பரிவர்த்தனையாகி நின்றால் சனியால் ஒரு ஒழுங்குமுறையும், செவ்வாயால் சாதிக்கும் தன்மையும் உண்டாகும்.
---------------------------------------------------------------------
2ஆம் அதிபதியும், 11ஆம் அதிபதியும் பரிவர்த்தனையானால், ஜாதகனுக்குப் பணம் கொட்டும். செல்வங்கள் சேரும். பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று குழம்பும் நிலை ஏற்படும். வாழ்க்கை, வசதிகளும், மகிழ்ச்சியும் நிறைந்ததாக இருக்கும்.

6ஆம் அதிபதியும், 11ஆம் அதிபதியும் பரிவர்த்தனையானால், ஜாதகன் தன் சொத்துக்களை, செல்வங்களை இழக்க நேரிடும்.

2ஆம் அதிபதியும், 9ஆம் அதிபதியும் பரிவர்த்தனையானால், ஜாதகன் மகிழ்ச்சி உள்ளவனாகவும், அதிர்ஷ்டம் உள்ளவனாகவும் இருப்பான். சொத்துக்களை உடையவனாகவும் இருப்பான். வேதங்களைக் கற்றவனாகவும், அதிபுத்திசாலியாகவும் விளங்குவான்

1ஆம் அதிபதியும், 5ஆம் அதிபதியும் பரிவர்த்தனையானால், ஜாதகன் புகழ்பெற்று விளங்குவான். மகிழ்ச்சி நிரம்பியவனாக இருப்பான்.

1ஆம் அதிபதியும், 10ஆம் அதிபதியும் பரிவர்த்தனையானால், ஜாதகன் அரசில், அல்லது அரசியலில், உயர் பதவியைப் பெற்று உயர்வான நிலைக்கு வருவான்.

9ஆம் அதிபதியும், 10ஆம் அதிபதியும் பரிவர்த்தனையானால், ஜாதகனுக்கு அந்தஸ்து, அதிகாரம், புகழ், என்று எல்லாமும் தேடிவரும். மிகவும் உயர்ந்த
அமைப்பு இது. இதற்கு தர்ம கர்மாதிபதி யோகம் என்கின்ற பெயரும் உண்டு!

This type of parivarththanai yoga will confer high position, reputation,
fame and power.

Shukra-Kuja exchange
If Venus and Mars exchange their divisions, the female will go after other males. If the Moon be simultaneously in the 7th house, she will join others with consent of her husband. 
(எச்சரிக்கை: இது பொது விதி)

அக்கிரமம். பெண்களுக்கு மட்டும்தான் மேலே குறிப்பிட்டுள்ள விதியா? ஆண்களுக்கு இல்லையா?

எந்த விதிகளும் இல்லாமலேயே, ஆண்களில் பலர், காமுகர்கள்தான்:-)))))

பல கடுமையான நோய்கள் வந்துவிட்டால் (இருதய நோய்கள், மார்புப்புற்று நோய்கள்) இந்தப் பரிவர்த்தனை யோகம் இருந்தால், அவர்களுக்கு வந்த வேகத்தில் அந்த நோய்கள் குணமாகிவிடும்.
________________________________________
இந்தப் பரிவர்த்தனை யோகத்திற்கு உதாரணமாகச் சொல்லப்படும் ஜாதகம் மறைந்த முன்னாள் பாரதப் பிரதமர் திருமதி இந்திரா காந்தி அம்மையார் அவர்களின் ஜாதகம். அவர்களுடைய ஜாதகத்தில் ஆறு கிரகங்கள் பரிவர்த்தனையாகி உள்ளன. அதைப் பற்றி விரிவாக பதிவில் முன்பு எழுதியுள்ளேன்

ஒரு ஜோடி பரிவர்த்தனை என்பது இரண்டு உச்சங்களுக்குச் சமம். 3ஜோடி பரிவர்த்தனை என்பது ஆறு கிரகங்கள் உச்சமானதற்குச் சமம் என்று எடுத்துக்கொள்ளலாம். இந்த பரிவர்த்தனைகளால் அவர் பல நன்மைகளையும் பெற்றார். பல தீமைகளையும் பெற்றார்.

இளம் வயதில் விதவையானதும், இளம் வயது மகனை, விமான விபத்தில் பறி கொடுத்ததும் (1980) தீமைகளில் முக்கியமானவை

அன்புடன்
வாத்தியார்
=============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

4.8.17

Astrology: ஜோதிடம்: சரஸ்வதி யோகம்


Astrology: ஜோதிடம்: சரஸ்வதி யோகம்

யோகங்களைப் பற்றிய பாடம்!

சரஸ்வதி யோகம் என்றவுடன், வெள்ளைத்தாமரைப் பூவில் இருக்கும், வீணை செய்யும் ஒலியில் இருக்கும் சரஸ்வதியைப் போல ஜாதகனும் இருப்பான் என்று நினைத்துவிடாதீர்கள். இது அதீதப் படிப்பிற்கான, படித்ததை மனதில் வைப்பதற்கான யோகத்தைக் குறிக்கும்.

ஜாதகன், வேதங்களையும், உபநிடதங்களையும், புராணங்களையும், இன்னும் பல நூல்களையும் கற்றுத் தேர்ந்தவனாக இருப்பான்.

இன்றைய நிலையில் அதை எல்லாம் கற்றுத் தேர்ந்தால், வேலை எங்கே கிடைக்கும்? பூவா’விற்கு என்ன செய்வது? ஆகவே இன்றைய நிலையில் வாழ்க்கையின் உயர்விற்குத் தேவையான பல நூல்களையும் ஜாதகன் கற்றுத் தேர்ந்திருப்பான் என்று வைத்துக் கொள்ளுங்கள். வங்கி மேலான்மை என்றால் அதற்குத் தேவையான நூல்கள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்திருப்பான். கணினி மேலான்மை என்றால் அதற்குத் தேவையான நூல்கள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்திருப்பான். திரைத்துறை என்றால், அதற்குத் தேவையான அத்தனை விஷயங்கள் அனைத்தையும் கற்று வைத்திருப்பான் என்று வைத்துக்கொள்ளுங்கள்.
+++++++++++++++++++++++++++++++++++++++++
யோகத்தின் வடமொழிப் பெயர்: வைரின்ச்ச யோகா (Vairincha Yoga)
Vairinchi means Saraswathi and this is a yoga for learning.

யோகத்தின் அமைப்பு: குருவும், சனீஷ்வரனும் திரிகோணத்தில் இருக்க வேண்டும். லக்கினாதிபதியும் திரிகோணத்தில் இருக்கவேண்டும். அதோடு மூவரும் வலிமையோடு இருக்க வேண்டும்.

இந்த வலிமை (strength) பற்றிப் பலமுறைகள் சொல்லியிருக்கிறேன். ஆகவே அதை மீண்டும் சொல்லி பிளேடு போட விரும்பவில்லை!
+++++++++++++++++++++++++++++++++++++++++
இந்த யோகத்தால் ஜாதகனுக்குக் கிடைக்கக்கூடிய நன்மைகள்

ஜாதகன் அறிவு ஜீவியாக இருப்பான். உங்கள் மொழியில் சொன்னால் மேதையாக இருப்பான். நகைச்சுவை உணர்வு மிக்கவனாக இருப்பான். அற வழியில் நடப்பவனாக இருப்பான். எண்ணற்ற சீடர்கள் இருப்பார்கள். தெய்வ அருள் இருக்கும். எல்லோரும் வணங்கும் நிலையில் இருப்பான். நீண்ட ஆயுளைப் பெற்றிருப்பான். செல்வத்துடன் இருப்பான்.
-------------------------------------------------------
இருப்பதே மூன்று திரிகோணம். அதில் அந்த மூவரும் இருக்க வேண்டுமாம். கொஞ்சம் கஷ்டம்தான். அதாவது நம்மைப் போன்று ப்ளாக்குகளில் எழுதும் அல்லது ப்ளாக்குகளைப் படிக்கும் சாமான்யர்களுக்கு இந்த அமைப்பு இருக்கும் வாய்ப்பு இல்லை.

அந்தக் காலத்தில் ரிஷிகளுக்கும், முனிவர்களுக்கும் இந்த அமைப்பு இருந்திருக்கலாம்.

உங்களில் யாருக்காவது இருந்தால் சொல்லுங்கள். நம் வகுப்பறை சார்பில் சென்னை மெரீனாவில் ஒரு பாராட்டுவிழா நடத்திவிடலாம்!

அன்புடன்,
வாத்தியார்
========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

28.7.17

Astrology: ஜோதிடம்: வர்கோத்தம யோகம்!!!


Astrology: ஜோதிடம்: வர்கோத்தம யோகம்!!!

யோகங்களைப் பற்றிய பாடம்

வர்கோத்தமம் என்பது ஒரு கிரகம் ராசிச் சக்கரத்திலும், நவாம்ச சக்கரத்திலும் ஒரே இடத்தில் இருப்பதைக் குறிக்கும்!

ராசி, மற்றும் நவாம்சத்தில் ஒரே இடத்தில் லக்கினம் இருந்தால் இருந்தால் அது வர்கோத்தம லக்கினம் எனப்படும்!

ராசி கட்டத்தில் சிம்மத்தில் செவ்வாய் இருந்து, அம்சத்திலும் சிம்மத்தில் செவ்வாய் இருந்தால் அதற்கு வர்கோத்தம செவ்வாய் என்று பெயர்!

சிம்மத்திற்கு செவ்வாய் யோககாரகன். அவன் வர்கோத்தமமும் பெற்றால் ஜாதகனுக்கு இரட்டிப்பு யோகங்களைக் கொடுப்பார். நல்ல பலன்களைக் கொடுப்பார்

உங்கள் மொழியில் சொன்னால், சாதாரணப் பேருந்து, மாடிப் பேருந்தாக மாறிவிடும்! An ordinary bus will become a double Decker bus!

பலன்: அப்படி வர்கோத்தமம் பெறும் கிரகம் வலிமை உடையதாக ஆகிவிடும். அந்த அமைப்பு ஜாதகனுக்கு அதிகமான அளவு நன்மையான பலனைக் கொடுக்கும்! இயற்கையில் தீய கிரகமாக இருந்தாலும், வர்கோத்தமம் பெறும்போது நன்மைகளைக் கொடுக்கும். கீழே பட்டியல் உள்ளது!

++++++++++++++++++++++++++++++++++++++
லக்கினம் வர்கோத்தமம் பெற்றால், ஜாதகன் நீண்ட ஆயுளூடன் இருப்பான்!

மற்ற பலன்கள்:

சூரியன் வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்குத் தலைமை ஏற்கும் தகுதியைக் கொடுக்கும்.

சந்திரன் வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீத மன வலிமையைக் கொடுக்கும். எதையும் சட்’டென்று புரிந்து கொள்ளும் தன்மையைக் கொடுக்கும்

செவ்வாய் வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீத ஆற்றலை, செயல் திறனைக் கொடுக்கும்

புதன் வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீத பேச்சுத் திறமையைக் கொடுக்கும்.

குரு வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீத புத்திசாலித்தனத்தைக் கொடுக்கும்

சுக்கிரன் வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அழகையும், கவரும் தன்மையையும் கொடுக்கும்

சனி வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீதப் பொறுமையையும், சகிப்புத்தன்மையையும் கொடுக்கும்

ராகு வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீதத் துணிச்சலைக் கொடுக்கும்

கேது வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீத ஞானத்தைக் கொடுக்கும்
---------------------------------------------
இது தவிர, வர்கோத்தமம் பெறும் கிரகம், ஜாதகத்தில் அது எந்த பாவத்திற்கு/வீட்டிற்கு உரியதோ, அந்த வீட்டிற்கான பலன்களை உரிய நேரத்தில் வாரி  வழங்கும்

இவை எல்லாமே பொதுப்பலன்கள்.

தனிப்பட்ட ஜாதகங்களுக்கு இந்தப் பலன்கள், மற்ற கிரகங்களின் பார்வை, சேர்க்கை, வக்கிர நிலைமை, அஸ்தமனம், போன்ற இதர விஷயங்களை வைத்துக் கூடலாம், அல்லது குறையலாம், அல்லது இல்லாமலும் போகலாம்.

அது அவரவர் வாங்கி வந்த வரத்தைப் பொறுத்தது.
------------------------------------------------------------
ஏழாம் வீட்டு அதிபதி, ராசி மற்றும் நவாம்சம் இரண்டிலும் ஒரே இடத்தில் வர்கோத்தமம் பெற்றிருந்தால், ஜாதகனுக்கு, அசத்தலான மனைவி  கிடைப்பாள். ஜாதகியாக இருந்தால் அசத்தலான கணவன் கிடைப்பான்.

இதே பலன், பத்தாம் வீட்டிற்கு எனும் போது, ராசியிலும், தசாம்ச சக்கரத்திலும், பத்தாம் வீட்டு அதிபதி வர்கோத்தமம் பெற்றிருக்க வேண்டும். பெற்றிருந்தால், ஜாதகனுக்கு அசத்தலான வேலை கிடைக்கும் அல்லது அசத்தலான தொழில் அமையும்!

இதைப்போலவே மற்ற கிரகங்களுக்கும் பலனை ஊகித்துக் கொள்ளுங்கள். வாத்தியாரை ஊகித்துச் சொல்லும்படி உங்கள் ஜாதகத்தை எடுத்து நீட்டாதீர்கள். பாவம் வாத்தியார். அவருக்கு நேரம் இல்லை!

அன்புடன்
வாத்தியார்
======================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

21.7.17

Astrology: ஜோதிடம்: துஷ்கிரிதி யோகம்



Astrology: ஜோதிடம்:  துஷ்கிரிதி யோகம்

யோகங்களைப் பற்றிய பாடம்

களத்திர ஸ்தானமான ஏழாம் வீட்டின் அதிபதி, லக்கினத்தில் இருந்து 6 அல்லது 8 அல்லது 12ஆம் வீட்டில் இருக்கும் அமைப்பிற்கு துஷ்கிரிதி யோகம் என்று பெயர். அதாவது 7ஆம் வீட்டுக்காரன் 6 அல்லது 8 அல்லது 12ஆம் வீட்டில் இருக்கும் நிலைமை என்று எடுத்துக்கொள்ளுங்கள்!

இந்த யோகம் மோசமான யோகம். அவ யோகம். இந்த யோகம் இல்லாமல் இருப்பது நல்லது.

பலன்:

ஜாதகனின் நடத்தையால், ஜாதகனின் மனைவிக்கு, ஜாதகனிடம் சுமூகமான, அன்பான உறவு இருக்காது!. அதைப் பற்றிக் கவலைப்படாமல் ஜாதகன், பிறன் மனைகளின் மேல் கண்ணாக இருப்பான். அதாவது சட்டத்திற்குப் புறம்பான பெண் உறவுகளூக்காக அலைந்து திரிந்து கொண்டிருப்பான்.

ஊர் சுற்றியாக இருப்பான். அவனுக்குப் பால்வினை நோய்கள் இருக்கும். உறவினர்களால் வெறுக்கப்பட்டவனாக இருப்பான். எப்போதும் மகிழ்ச்சியற்றவனாக இருப்பான்.

ஜாதகத்தின் மற்ற அமைப்புக்களோடு இந்த அமைப்பால், சிலர் அரச தண்டனைக்கும் ஆளாக நேரிடும்

ஜாதகத்தின் வேறு சுப கிரகங்களின் அமைப்பால் இந்த அவ யோகம் இல்லாமலும் போய்விடும். ஆகவே பயப்பட வேண்டாம்!!

அன்புடன்
வாத்தியார்
==============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

14.7.17

Astrology:ஜோதிடம்: வஞ்சன சோர பீதி யோகம்!


Astrology:ஜோதிடம்: வஞ்சன சோர பீதி யோகம்!

யோகங்களைப் பற்றிய பாடம்

பயந்து விடாதீர்கள். எல்லாம் வடமொழிச் சொற்கள்.

Vanchana Chora Bheethi Yoga
vañchana — cheating
chora' - thief
bheethi - fear

ஏமாற்றுவேலைகளுக்கு ஆளாகிவிடுவோமோ, இருப்பதை
திருட்டுக் கொடுத்துவிடுவோமோ என்று ஜாதகன் ஒருவித பய உணர்வுடனேயே வாழும் நிலைமை இருப்பதைக் குறிக்கும் யோகம் இந்த யோகம்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
யாருக்கு இது இருக்கும்?

இன்றைய உலகத்தில் பாதிப்பேர்கள் ஏமாற்றுப் பேர்வழிகள். வாய்ப்புக் கிடைத்தால் திருட்டுத்தனம் செய்யக்கூடியவர்கள்.
ஆள் கிடைத்தால் மொட்டை போடக்கூடியவர்கள். அதனால் அவர்களைத் தவிர்த்து, மற்றுள்ளவர் பலருக்கு இந்த அமைப்பு
இருக்கும். அதே போல ஏமாற்றுப் பேர்வழிகள், அடுத்தவனை எப்போதுமே சந்தேகத்துடனேயே பார்ப்பவர்கள். ஆகவே
அவர்களுக்கும் இந்த அமைப்பு இருக்கும்.

The combinations pertaining to this Yoga are found in almost all horoscopes, so that we are all guilty of cheating and being cheated one another in some form or the other. It is a tragedy of our social life that a merchant minting millions at the cost of the poor is left scot-free while the poor, committing theft in the face of poverty and want, are booked by law. Cheating is practiced in a variety of ways. Fertile brains find countless methods to cheat their associates. The merchants have various ways of cheating their clients. The lawyer is equally successful. The medical man commands many ways to defraud his patients.
-------------------------------------------------------------
லக்கின அதிபதி, ராகு, சனி அல்லது கேதுவோடு சேர்ந்து ஜாதகத்தில் எந்த இடத்தில் இருந்தாலும் இந்த அவயோகம்
உண்டு! உண்டு! உண்டு!

அதேபோல லக்கினத்தில் தீய கிரகம் இருந்து கேந்திரத்தில் மாந்தி இருந்தாலும் அல்லது மாந்தி, கேந்திர அதிபர்களுடன்
கூட்டணி போட்டு இருந்தாலும் ஜாதகனுக்கு இந்த அவயோகம் இருக்கும்

பலன்: ஜாதகன் எப்பொதுமே ஒருவித பய உணர்வுடன் இருப்பான்.
--------------------------------------------------------
The Lagna lord is with Rahu, Saturn or Ketu

Result : The person will be constantly suspicious of people around him, afraid of being taken advantage of, swindled or stolen from. The native will always entertain feelings of suspicion towards others around him. He is afraid of being cheated, swindled and robbed.

அதே போல ஜாதகன் பல வழிகளிலும் தன் செல்வத்தை இழந்தவனாகவும் இருப்பான்.

In all these cases, the person will not only have fears from cheats, rogues and thieves but he will also have huge material losses.

அன்புடன்,
வாத்தியார்
=================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

7.7.17

Astrology: ஜோதிடம்: Dur Yoga: Bad yoga: கெட்ட யோகம்!


Astrology: ஜோதிடம்: Dur Yoga: Bad yoga: கெட்ட யோகம்!

Lessons on Yogas:

”சார், உப்பு விற்கப்போனால் மழை பெய்கிறது; மாவு விற்கப்போனால் காற்று அடிக்கிறது.இரண்டையும் விட்டு விட்டு, குடை விற்கப்போனல், அங்கே எனக்குப் போட்டியாக பத்துப் பேர்கள் நின்று கொண்டிருக்கிறார்கள். என்ன செய்வது? நான் ஜென்மம் எடுத்த நேரம் அப்படி! எல்லாம் என் தலை எழுத்து!” என்று தீராத மனக் குறை உள்ளவர்களைப் பார்க்கிறோம்.

ஒரு மனிதன் எதை வேண்டுமென்றாலும் சமாளிப்பான், தாங்கிக் கொள்வான். ஆனால் இன்றைய பொருளாதார சூழ்நிலையில்
பணம் இன்மையை (வருமானம் இல்லாத நிலைமை அல்லது தேவையான அளவிற்குப் பணம் கிடைக்காத நிலைமை) மட்டும் தாங்கிக் கொள்ள முடியாது.

பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லாவிட்டால், யாருக்கும் உன்னைத் தெரியாது என்பார்கள். யாருக்கும் தெரியாவிட்டால் போகிறது. அன்றாட செலவிற்கு
எங்கே போவது?

இன்றைய சூழ்நிலையில், மனிதர்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்

1. பணத்திற்கு என்ன செய்வது என்று தெரியாமல்
அல்லாடுபவர்கள் முதல் வகை!
2. பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று
தெரியாமல் குழம்புபவர்கள் இரண்டாவது வகை!

பணத்தை வைத்திருப்பவனுக்குப் பய உணர்வு மிகுந்திருக்கும். அதை எப்படிக் காப்பாற்றுவது எனும் பய உணர்வு. அல்லது
தன்னை எப்படிக் காப்பாற்றிக் கொள்வது எனும் பய உணர்வு. தீவிரவாதிகள் அல்லது தாதாக்கள் கடத்திக் கொண்டு போய்விடாமல் இருக்க வேண்டுமே எனும் பய உணர்வு.

அது இல்லாதவனுக்குக் கவலை. ஒரே ஒரு கவலை. அது இல்லையே எனும் கவலை. அன்றாடத் தேவைகளை எப்படி சமாளிப்பது எனும் கவலை!

ஏன் இந்த நிலைமை? ஜாதகப்படி அதை அறிந்து கொள்ளும்
வாய்ப்பு இருக்கிறதா?

இருக்கிறது! அதுதான் இன்றையப் பாடம்!
++++++++++++++++++++++++++++++++++
ஒரு மனிதனுக்கு, நல்ல மனைவி வேண்டும். கை நிறையச் சம்பளத்துடன் நல்ல வேலை, அல்லது தொழில் வேண்டும்.

அந்த இரண்டில், நல்ல வேலைதான் முக்கியம். பிரதானம். நல்ல மனைவி இரண்டாவது சாய்ஸ்! அல்லது நல்ல கணவன்
இரண்டாவது சாய்ஸ்!

எல்லோருக்கும், நல்ல வேலை அல்லது நல்ல தொழில் அமைந்து விடுகிறதாவென்றால், பாதிப்பேர்களுக்கு அந்த அமைப்பு இருக்காது.

ஒரு கவிஞன் எழுதினான்.

”அணைக்க 
ஒரு அன்பில்லாத மனைவி;
பிழைக்க
ஒரு பிடிப்பில்லாத தொழில்
வளர்க்க
இரு நோயுற்ற சேய்கள்
ஆனாலும், 
எனோ இன்னும்
வாழ்க்கை கசக்கவில்லை!”

இந்த நிலைமையில்தான் பாதிப்பேர்களின் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது!

பத்தாம் வீட்டு அதிபதி(Lord of the 1oth House) லக்கினத்திற்கு 6,8 12ஆம் வீடுகளில் உட்கார்ந்திருந்தால் அந்த அவல நிலைமை ஏற்படும். அதுவும் விரைய வீடான 12ல் அமர்ந்திருந்தால், ஜாதகனுக்கு, அவன் திறமைக்கு ஏற்ப, விருப்பத்திற்கேற்ப, தேவைக்கு ஏற்ப நல்ல வேலையோ அல்லது தொழிலோ கிடைக்காது. உங்கள் மொழியில் சொன்னால் சிக்காது. சிக்கினால்தான் அமுக்கிப் பிடித்துக்கொண்டு விடலாமே!

அந்த நிலைக்குப் பெயர் துர் யோகம். துர் எனும் வடமொழிச் சொல்லிற்கு கெட்ட என்று பெயர்.

(நான் எனக்குத் தெரிந்த வழியில் மொழியாக்கம் செய்திருக்கிறேன். நமது வகுப்பறை மாணவர் திலகம் தஞ்சாவூர் கிருஷ்ணன் சார் வந்து என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்!)

Duryoga - This results when the 10th lord is in the 12th. The native becomes unlucky as afar as profession is concerned.

பத்தாம் வீட்டதிபதி 12ல் இருந்தால், ஜாதகன் வேலை அல்லது தொழிலைப் பொறுத்தவரை அதிர்ஷ்டமில்லாதவன்.

அதைப்போல பத்தாம் வீட்டு அதிபதி 6 & 8 ஆம் வீடுகளில் அமர்ந்திருந்தாலும் இந்த நிலைமைதான். ஜாதகனின் வேலைகளில், பல தடைகள், கஷ்டங்கள், சிரமங்கள் உண்டாகும். உங்கள் மொழியில் சொன்னால் சும்மா சுமைப்பதை, அவன் நனைத்துச் சுமப்பான்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
யோகம் என்பது கிரக்கூட்டு அல்லது சேர்க்கை அல்லது சேரும் இடத்தைப் பொறுத்து வருவது. நல்ல யோகங்கள் ஜாதகத்திற்கு வலுவைச் சேர்க்கும். எதிர்மறையான யோகங்கள் ஜாதகத்தின் வலிமையைக் குறைக்கும். ஒன்றை வைத்து, ஒன்றை முடிவு செய்ய முடியாது.

இந்த அமைப்பைப் பெற்றிருப்பவர்கள், எதற்கும் கவலைப் பட வேண்டாம். கவலைப் பட்டு என்ன ஆகிவிடப்போகிறது? நஷ்ட ஈடு வழங்கப்பெற்றிருக்கும். ஆகவே கவலைப் படாதீர்கள்.

சாவியில்லாத பூட்டை, இறைவன் தயாரிப்பதில்லை!

உங்கள் பிரச்சினைகளுக்கான சாவியை, இறைவன் உங்களுக்குக் கொடுத்திருப்பார். இல்லை என்றால் ஒவ்வொரு ஜாதகத்திற்கும் உரிய மதிப்பெண் 337 என்று எப்படி வரும்.

இங்கே தேர்வு எழுதியவனுக்கும் 337தான். தேர்வில் எதையும் எழுதாமல் வெறும் வெள்ளைத்தாளை மடக்கிக் கொடுத்துவிட்டு வந்தவனுக்கும் மதிப்பெண் 337தான்!

ஆகவே சாவி உங்களிடம்தான் இருக்கும் .அதைத் தேடி எடுங்கள். பத்தாம் வீடு கெட்டிருந்தால் தொலையட்டும், பண வரவிற்கான வேறு அமைப்பு நன்றாக இருக்கும். இல்லாவிட்டால் ஜீவனம் எப்படி நடக்கும்?

கர்மகாரகன் சனீஸ்வரனும், தனகாரகன் குரு பகவானும் அந்த அவலத்திற்கான மாற்று ஏற்பாட்டைச் செய்து கொடுத்திருப்பர்கள். அல்லது சுகாதிபதி சுக்கிரன், உங்களுக்கு ஒரு மங்கை நல்லாள் மூலம் ஜீவனத்திற்குக் கொடி காட்டியிருப்பான். ஆகவே கவலை இன்றி இருங்கள். நடப்பது நடக்கட்டும். அது நல்லதாகவே நடக்கட்டும்

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

1.7.17

Astrology: எப்போது ஞானம் வரும்?


Astrology: எப்போது ஞானம் வரும்?

ஆசை இல்லாத மனிதனே கிடையாது. சிலருக்கு நியாயமான ஆசைகள் இருக்கும். சிலருக்கு நியாமில்லாத ஆசைகள் இருக்கும்.

(ஆசை = Desire = a strong feeling of wanting to have something or wishing for something to happen)

நியாயமான ஆசைகள் எவையென்று எழுதினால் அறுவையாக இருக்கும். நியாயமில்லாத ஆசைகளை எழுதினால் சுவையாக இருக்கும்.

அந்த சுவையான ஆசைகளைப் பதிவில் எழுத முடியாது. வகுப்பறைக்கு வரும் பெண் வாசகர்களின் கண்டனத்திற்கு நான் ஆளாக நேரிடும்.

ஆகவே எழுதவில்லை. யாரும் பின்னூட்டத்தில் வேண்டுகோள்களை வைக்க வேண்டாம் நோ சான்ஸ். எழுதப்போவதில்லை!

ஒன்று மட்டும் நிச்சயம். ஆசைதான் அத்தனை துன்பங்களுக்கும் காரணம்!

ஆசையால் துன்பங்கள் ஏற்படும். துன்பங்களால் அனுபவங்கள் ஏற்படும்

அனுபவங்களால் ஞானம் ஏற்படும்

உள் மனதின் ஆசைகளைத் தூண்டிவிட்டு, துன்பங்களைக் கொடுப்பவன் ராகு,

ஏற்பட்ட அத்துன்பங்களில் இருந்து அனுபவத்தைக் கொடுத்து, நமக்கு ஞானத்தைக் கொடுப்பவன் கேது.

இரண்டு கோள்களும் தத்தம் வேலைகளைச் செவ்வனே செய்யும்! அதை மனதில் வையுங்கள்.

ஆகவே உங்கள் ஆசைகள் நியாயத்துடன் இருக்கட்டும்! நியாயமில்லாத மேட்டர்களுக்கு ஆசைப்படாதீர்கள்!

அன்புடன்,
வாத்தியார்
========================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

30.6.17

நீங்களும் உங்களுடைய அணியும் - You and your team mates


நீங்களும் உங்களுடைய அணியும்
You and your team mates

ஜோதிடப் பாடங்களைப் படிக்கும்போது, எந்தவொரு புதிய ஜோதிட விதியை படித்தாலும், முதலில் அதைத் தங்கள் ஜாதகத்துடன் பொருத்திப் பார்ப்பது ஒவ்வொருவரும் செய்யக்கூடியதாகும். அதில் தவறில்லை. அடியவனும் படிக்கின்ற காலத்தில் அதைச் செய்திருக்கிறேன்.

இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் படித்த பின்பு, ஓரளவு கற்றுக்கொண்ட பிறகு தங்கள் ஜாதகத்தை தாங்களே அலசிப் பார்க்கும் அளவிற்குப் பலருக்கும் திறமை உண்டாகிவிடும்.

ஆகவே கற்றுக் கொள்வதில் பொறுமைதான் முக்கியம். எழுதும் பாடங்களை மட்டும் படியுங்கள்.உங்கள் ஜாதகத்தைவைத்தோ அல்லது உங்கள் நண்பர்கள், உறவினர்களின் ஜாதகங்களை வைத்தோ கேள்விகளைக் கேட்காதீர்கள்.பலனைக் கேட்காதீர்கள்

நீங்கள் உதிரியாகக் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்வது சிரமம். பலன் சொல்வதும் கஷ்டம். அத்துடன் ஜாதகத்தை முழுமையாகப் பார்க்காமல் உதிரியான கேள்விகளுக்குப் பதில் சொல்வது, ஜோதிட விதிகளுக்கு எதிரானது.

உதாரணத்திற்கு எனக்கு வந்த கேள்வி ஒன்றைக் கொடுத்துள்ளேன்:

//////my doubt is what is the benefit of exchange between  mars and mercury 
in kanni and viruchagam.////  

செவ்வாய்க்கு சொந்த வீடுகள் மேஷம், மற்றும் விருச்சிகம். புதனுக்கு சொந்த வீடுகள் கன்னியும், மிதுனமும். அந்த 4 இடங்களுக்குள்தான் அவர்கள் பரிவர்த்தனையாகமுடியும். அவைகள் பரிவர்த்தனையானால் என்ன பலன் என்பதைப் பாடத்திலேயெ சொல்லியுள்ளேனே? அதில் doubtற்கு எங்கே இடம் இருக்கிறது?

பரிவர்த்தனையில் சம்பந்தப்படும் கிரகம் இயற்கையில் சுபக்கிரகமாகவோ அல்லது ஜாதகத்திற்கு யோககாரகனாகவோ இருந்தால், அக்கிரகம் சம்பந்தப்பட்ட காரகங்களுக்கு (செயல்களுக்கு) உரிய பலன்கள் எளிதாக வந்து சேரும். உங்கள் மொழியில் சொன்னால் அவைகள் உங்களைத் தேடிவரும். பரிவர்த்தனைக்கு உள்ளான வீடுகளின் பலன்களும் நன்மை சேர்ப்பதாக இருக்கும். அதே நேரத்தில் பரிவர்த்தனையில் சம்பந்தப்படும் கிரகம் தீய கிரகம் என்றால், அக்கிரகம் தனித்துக் கொடுப்பதைவிடத் தீயபலன்களை அதிகமாகக் கொடுக்கும். அவைகள் அதிக சிரமத்தைக் கொடுப்பதாக இருக்கும்.

செவ்வாயும், சனியும் தீய கிரகங்கள், அவைகள் ஜாதகத்தில் பரிவர்த்தனையானதால் என்னென்ன வழியில் சிரமங்கள் உண்டாகும் என்பதை அவர் தெரிந்து கொள்ள விரும்புகிறார். அதுதான் மேட்டர்.

அதைத் தெரிந்து கொள்ள மற்ற ஆட்டக்காரர்களையும் பார்க்க வேண்டாமா? பெளலர்களையும், பேட்ஸ்மேன்களையும் பார்க்க வேண்டாமா? முக்கியமாகக் கேப்டனைப் பார்க்க வேண்டாமா? அதாவது லக்கினாதிபதியைப் பார்க்க வேண்டாமா? எதிர் அணியைச் (விதியை - Destiny) சமாளித்து ஆடி வெற்றி பெறுவதற்கும், ஒரு வேளை வேற்றி பெறாவிட்டால் தன்னுடைய அணியின் ஸ்கோரை மதிப்பு உடைய அளவிற்கு ஏற்றுவதற்கும் அவர் வேண்டாமா?

ஆகவே உதிரியான கிரக நிலைகளை வைத்துக்கொண்டு (Question with scattered planetary position) கேள்விகளைக் கேட்காதீர்கள். யாரிடமும் கேட்காதீர்கள்.

உதிரியான கிரக நிலைகளை வைத்துக்கொண்டு நீங்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்வது  தவறாகும். நீங்கள் முழு ஜாதகத்தைக் கொடுத்துக் கேள்வியை முறையாகக் (specific questions) கேட்கவேண்டும். பதில் சொல்பவரும் ஜாதகத்தை அலசி முறையாகப் பதில் சொல்ல வேண்டும். அதுதான் முறையானதாகும்!

உங்களுக்கு உங்களுடைய ஜாதகத்தை வைத்துக் குறிப்பிட்ட ஒன்று அல்லது இரண்டு பலன்களைத் தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது ,

அதாவது இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, மற்றும் திருமணம் எப்போது நடைபெறும் என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருக்கும், நடுத்தர வயதுக்காரர்களுக்கு, சொந்த வீடு எப்போது அமையும், இருக்கும் வேலையில் வருமானம் போதவில்லை சொந்தத் தொழில் செய்யலாமா என்ற கேள்விகள் இருக்கும், ஐம்பது வயதைத் தாண்டியவர்களுக்கு கடன் பிரச்சினை, உடல்/நோய் சம்பந்தப்பட்ட கேள்விகள் இருக்கும்.

அதெல்லாம் உண்மைதான். நல்ல ஜோதிடராகப் பார்த்துக் கேட்டீர்கள் என்றால் உரிய பதில் கிடைக்கும். இல்லை நீங்கள்தான் சொல்ல வேண்டும் என்றால் இரண்டு மாதங்கள் பொறுத்துக் கொள்ளுங்கள். கையில் வகுப்பறை ஜோதிடத்தின் பாகம் இரண்டு மற்றும் பாகம் மூன்றை தொகுத்து வெளியிடும் முயற்சியில் இறங்கியுள்ளேன். அவை அச்சில் ஏறிவிட்டால் எனது வேலைப்பளு சற்றுக் குறைந்துவிடும். அதற்குப் பிறகு உங்களுக்கு உதவ நான் முன் வருகிறேன்

என்ன சரிதானே?

அன்புடன்
வாத்தியார்
===========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

23.6.17

பாரிஜாத யோகம்.


பாரிஜாத யோகம்.

யோகங்களைப் பற்றிய பாடங்கள்

பாரிஜாத மலர் என்றால் தெரியுமா? பலருக்கும் தெரியாது. ஆனால் பவளமல்லி மலர் என்றால் அனைவருக்கும் தெரியும்.
வெண்மையான இதழ்களைக் கொண்டதும் ஆரஞ்சு நிற காம்புகளைக் கொண்டதுமான மலர் பவளமல்லிகை.
தேவலோக மரமான பாரிஜாதமே பூலோகத்தில் பவளமல்லிகையாக வளர்ந்துள்ளது என்கின்றன புராணங்கள்.
இரவில் மலர்ந்து காலையில் உதிர்ந்து விடும் இந்த பூக்கள் இரவு முழுவதும் நல்ல வாசனையைப்  பரப்பும் தன்மை கொண்டது.

திருமாலுக்கு உகந்த மலர் இது. இந்த மலரின் பெயரில் ஒரு யோகம் உள்ளது. அது என்ன யோகம் என்று பார்ப்போம் வாருங்கள்!
--------------------------------------------------------
சுபக்கிரகங்கள் 11ஆம் வீட்டில் இருந்தாலும், அல்லது 11ஆம் வீட்டைப் பார்த்தாலும், அத்துடன் 11ஆம் வீட்டதிபதி அஸ்தமனம் பெறாமல் தன் சொந்த

வீட்டிலோ அல்லது உச்ச வீட்டிலோ இருக்கும் நிலையில் இந்த யோகம் ஜாதகனுக்குக் கிடைக்கும். அதாவது பாரிஜாத யோகம் கிடைக்கும்.

பலன்: ஜாதகன் செல்வம் மிக்கவனாகவும், செல்வாக்கு மிக்கவனாகவும் இருப்பான். கற்றவனாக இருப்பான். எப்போதும் விதம் விதமான நல்ல நிகழ்வுகளை அரங்கேற்றுபவனாக இருப்பான். மனைவி மக்கள் என்று பெரிய குடும்பத்தைப் பெற்றவனாக இருப்பான்.

அன்புடன்,
வாத்தியார்
===========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

22.6.17

Astrology வைத்தீஸ்வரன் என்ற மருத்துவர்!!!!


Astrology வைத்தீஸ்வரன் என்ற மருத்துவர்!!!!

வைத்தீஸ்வரன் என்ற "God of medicine"

ஆன்மிகம் cum ஜோதிடக் கட்டுரை!
---------------------------------------------------------
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. ஒருவித துணிச்சல் உண்டு.

பணம் வைத்திருப்பவன் பணம் நம்மைக் காப்பாற்றும் என்று எதற்கும் கவலைப் படாமல் தெனாவெட்டாக இருப்பான். பணம் இல்லாதவன் நம்மைப் படைத்தவன் இருக்கிறான். அவன் பார்த்துக்கொள்வான் என்ற நம்பிக்கையோடு துணிச்சலாக இருப்பான். மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான் என்பான்.

அதெல்லாம் பொது நம்பிக்கை. மனித குணம்.

ஆனால் ஜாதகப்படி நேரம் சரியில்லாத போது எது நடக்கும் எப்படி நடக்கும் என்றே சொல்ல முடியாது.

நீங்கள் நெடுஞ்சாலையில் பயணிக்கும் போது, உங்களுடைய வாகனத்தை, எதிரில் வரும் டிப்பர் லாரிக்காரன் முத்தமிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? யோசித்துப் பாருங்கள். கண நேரத்தில் உங்கள் உதட்டைச் சிவக்க வைத்துவிடுவான்.

‘spot out' என்றால் பிரச்சினை இல்லை. சிவலோகம் அல்லது வைகுண்டம் போய்விடலாம். குற்றுயிரும் குலை உயிருமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டால் என்ன செய்ய முடியும்?

இன்றையத் தேதியில் சாதாரண சிகிச்சை என்றால், வங்கி இருப்பை வழித்துக் கொடுக்க வேண்டும். சீரியசான சிகிச்சை என்றால் சொத்தை எழுதிக் கொடுக்க வேண்டும்!

அதிர்ஷ்டம் வாசல் வழியாகத்தான் வரும். ஆனால் துன்பம் எப்படி வேண்டுமென்றாலும் வரும். கதவைச் சாத்தி வைத்திருந்தாலும், கதவு இடுக்கின் வழியாக வரும். சாவித் துவாரத்தின் வழியாக வரும். சாரளத்தின் வளியாக வரும். எப்படி வேண்டுமென்றாலும் வரும். எப்படி செக்யூரிட்டி போட்டிருந்தாலும் வரும். செக்யூரிட்டியைத் தட்டிப் படுக்க வைத்துவிட்டு வரும்.

“அதிர்ஷ்டம் தபாலில் வரும். தரித்திரம் தந்தியில் வரும்” என்று என் தந்தையார் சொல்வார்.

அதுதான் கிரகங்களின் விளையாட்டு. சனி, ராகுவெல்லாம் பெளலிங் போட்டால் ‘மிடில் ஸ்டம்ப்’ பறக்கும். இரண்டாக ஒடிந்து பதினைந்தடி தூரத்தில் இருக்கும் விக்கெட் கீப்பரின் கைக்குப் போய்ச் சேரும்.

தீய கிரகங்கள் என்றில்லை. நல்ல கிரகங்களே ஒரு ஜாதகத்தின் ஆறாம் அதிபதியாக இருக்கும்போது, தன்னுடைய தசா புத்தியில் ஜாதகனைப் போட்டுப் பார்த்துவிடுவான். புரட்டி எடுத்துவிடுவான். அதற்கு யாரும் விதிவிலக்காக முடியாது.

ஆறாம் இடத்தானின் (அவன்தான் ஜாதகத்தின் நம்பர் ஒன் வில்லன்) மகாதிசை அல்லது வேறு திசையில் அவனுடைய புத்தி உங்களுக்கு நடந்தால் எச்சரிக்கையாக இருங்கள். தினமும் இறைவனை வழிபடுங்கள். குறிப்பாக விநாயகப் பெருமானை வழிபடுங்கள். அவர்தான் அங்கிங்கெனாதபடி எங்கும் - குளக்கரை, அரசமரத்தடி என்று எங்கும் இருக்கிறார். 27 நாட்களுக்கு ஒருமுறை உங்கள் ஜன்ம நட்சத்திர நாள் அன்று சிவன் கோவிலுக்குச் சென்று சிவபெருமானை அர்ச்சித்து வழிபடுங்கள். நம்பிக்கையோடு மனம் உருக வழிபடுங்கள்.

அந்த நம்பிக்கைதான் வழிபாட்டில் முக்கியம்!
----------------------------------------------------------------------
சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோவில் என்னும் சிவஸ்தலம், இரண்டு விதங்களில் முக்கியமானது.

பார்த்தால் அசரவைக்ககூடிய பிரம்மாண்டமான கோவில் உள்ளது.

அங்கே உறைகின்ற சிவனாருக்கு, வைத்தியநாதர் என்று பெயர். நோயால் அவதிப்பட்டு, தன்னிடம் அடைக்கலமாக வரும் பக்தர்களுக்கு வைத்தியம் பார்க்கும் வைத்தியர் அவர்! Fees எதுவும் வாங்காத மருத்துவர் அவர். இந்திய மருத்துவக் கழகத்தின் (Medical Council of India) அனுமதியைப் பற்றிக் கவலைப் படாமல் வைத்தியம் பார்க்கின்றவர். Blood Test, Urine Test, ECG Test, CT Scan என்று நம்மிடம் பணம் பிடுங்கும் மருத்துவ பரிசோதனைகளுக்கெல்லாம் அவரிடம் வேலை இல்லை!

நம்பிக்கையுடன் அவரைப் பார்த்து, மனம் உருகப் பிரார்த்தனை செய்தால் போதும். நோய்கள் ஓடிவிடும்.

இரண்டு அந்த ஊரில் உறையும் செவ்வாய் பகவானுக்கு தனி சன்னதி உண்டு. அங்கார தோஷம் உள்ளவர்கள் அங்கே சென்று வழிபட வேண்டும்.

முருகப்பெருமான் முத்துக்குமாரசாமி என்ற பெயரில் அங்கே இருக்கிறார். அவரை வழிபட்டால் கிரகக் கோளாறுகளை எல்லாம் அவர் நீக்குவார்!

வைத்தீஸ்வரன் கோவில் எங்கே உள்ளது? எத்தனை தூரத்தில் உள்ளது? அதன் தலபுராணம் என்ன? அதன் முழுச் சிறப்பு என்ன? என்று

தெரிந்துகொள்ள விரும்புகிறவர்களுக்கான பக்கம் இணையத்தில் உள்ளது. அதன் சுட்டியைக் கொடுத்துள்ளேன். இங்கே க்ளிக்கிப் பாருங்கள் http://en.wikipedia.org/wiki/Vaitheeswaran_Koil

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!