மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label Lessons 301 - 310. Show all posts
Showing posts with label Lessons 301 - 310. Show all posts

9.2.10

இச்சைகளின் அளவு என்ன?

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இச்சைகளின் அளவு என்ன?

கேள்வியும் நானே - பதிலும் நானே! பகுதி 2
-------------------------------------------------------
3. ஒழுக்கமின்மைக்கு உள்ள ஜாதக அமைப்பு என்ன? (What is the planetary position for immorality?)

ஒழுக்கம் = தனி மனிதன் கடைப்பிடிக்கும் நெறி. உரிய முறையில் நடந்து கொள்ளுதல். High moral standard discipline, good conduct.

ஒழுக்கமின்மை என்பது மேற்சொன்னவைகள் இல்லாத நிலைமை.

immoral என்னும் ஆங்கிலச் சொல்லிற்கு என்ன பொருள்? ஒழுக்கமின்மை என்று பொருள்.

1. not in conformity with accepted principles of right and wrong behaviour
2. not in conformity with the accepted standards of proper sexual behaviour; unchaste
3. wicked

இதைத்தமிழில் விவரித்துச் சொன்னால்: முறை தவறி நடப்பவன். ஒழுங்கீனமானவன். தவறாக நடப்பவன். முறையற்ற புணர்ச்சியில் ஈடுபாடு கொண்டவன். உங்கள் மொழியில் சொன்னால், எல்லோருக்கும் அல்வாக் கொடுப்பவன். குறிப்பாக வலையில் சிக்கும் பெண்களுக்கு அல்வாக் கொடுப்பவன் என்று கொள்ளலாம்.

சுருக்கமாகச் சொன்னால் சிதறிய நியாயங்களை, நியதிகளை ( Loose morals) உடையவன்.

Planetary combination for loose morals

1. சுக்கிரனும், புதனும் சேர்ந்து அல்லது கூட்டணி போட்டு ஜாதகத்தில் 7ஆம் வீடு, அல்லது 8ஆம் வீடு அல்லது 10ஆம் வீட்டில் இருப்பது.

2.செவ்வாயும், சுக்கிரனும் சேர்ந்து அல்லது கூட்டணி போட்டு ஜாதகத்தில் 7ஆம் வீடு அல்லது 10ஆம் வீட்டில் இருப்பது.

3. சந்திரனுக்குப் பத்தாம் வீட்டில் சுக்கிரனும் அல்லது சுக்கிரனுக்குப் பத்தாம் வீட்டில் சனியும் இருந்தாலும் ஆசாமி பெண்களுக்கு அல்வா கொடுப்பவன்தான்.

4. ஆறாம் அதிபதி, ஆறு அல்லது எட்டு அல்லது பன்னிரெண்டாம் வீட்டில் இருக்கும் நிலைமை!

5. இரண்டு, ஏழு, பத்தாம் வீட்டு அதிபதிகள் ஒன்று சேர்ந்து பத்தாம் வீட்டில் அமர்ந்திருக்கும் நிலைமை!

6. ஏழாம் வீட்டதிபதி ராகு அல்லது கேதுவுடன் சேர்ந்து, வேறு ஒரு தீய கிரகத்தின் பார்வையுடன் இருக்கும் நிலைமை!

7.சுக்கிரன் சனியின் வீட்டில் இருப்பதுடன், சனியின் பார்வையோடு இருக்கும் நிலைமை. அல்லது சுக்கிரன் செவ்வாயின் வீட்டில் இருப்பதுடன், செவ்வாயின் பார்வையோடு இருக்கும் நிலைமை!

8.ஏழாம் வீட்டதிபதி லக்கினத்தில் இருந்தாலும் அல்லது ஏழிலேயே குடியிருந்தாலும் அதே நிலைப்பாடுதான்

9.ஏழாம் அதிபதி லக்கினத்திற்குப் பன்னிரெண்டாம் வீட்டில் இருக்கும் நிலைமை

10.லக்கினத்தில் இருந்து ஏழாம் வீட்டில் சூரியன் இருக்கும் நிலைமை!

11.லக்கினாதிபதியும், ஆறாம் அதிபதியும் ஒன்றாக வேறு ஒரு தீயகிரகத்துடன் சேர்ந்திருக்கும் நிலைமை

12.தேய்பிறைச் சந்திரனும், ஒரு தீய கிரகமும் ஒன்றாக ஏழாம் வீட்டில் இருக்கும் நிலைப்பாடு

13.ஏழாம் அதிபதியும், ஒரு தீயகிரகமும் கூட்டாக ஜாதகத்தில் எங்கே இருந்தாலும் அந்த நிலைப்பாடு!

14.சந்திரன், செவ்வாய், சனி ஆகிய கிரகங்கள் கூட்டணி ஒரு இடத்தில் இருக்கும் நிலைமை!

15.ஏழில் புதன் இருந்து அது அதன் சொந்த வீடாகவோ அல்லது உச்ச வீடாகவோ இல்லாது இருக்கும் நிலைமை!

16.சுக்கிரனும், ஏழாம் வீட்டதிபனும் ஒன்றாக செவ்வாய்க்கு உரிய இடத்தில் (அதாவது மேஷம் அல்லது விருச்சிகத்தில்) இருக்கும் நிலைமை!
++++++++++++++++++++++++++++++++++++++++++++
என்ன தலையைச் சுற்றுகிறதா?

இதைப் படித்தவுடன், சிலருக்கு சந்தேகம் வரலாம். இந்த அமைப்பில்லாத ஜாதகம் இருக்குமா,என்ன?

75% சதவிகித ஜாதகங்களில் இந்த அமைப்புக்களில் ஒன்றாவது இருக்கும்.

சைட் அடிக்காத அல்லது லுக் விடாத மனிதன் உண்டா? ஒரு அழகான பெண்ணைக் கண்டவுடன், அவளை அடைய வேண்டுமென்று ஆசைப்படாத அல்லது ஏக்கம் கொள்ளாத மனம் உண்டா?

நான் அப்படியில்லை என்று ஒரு இளைஞன் சொன்னால் அவன் பொய் சொல்கிறான் என்று அர்த்தம்

அது இயற்கை: பெண்ணின் மேல் ஆணிற்கு ஒரு ஈர்ப்பு இருக்க வேண்டும் என்பதற்காகக் காலன் செய்து வைத்துள்ள சதி!

சரி,அங்கே ஒழுக்கமின்மை எங்கே வருகிறது?

ஒன்றிற்கும் மேற்பட்ட பெண்ணுடன் தொடர்பு வைக்கும்போதும், அல்லது தொட்டுப்பார்க்கும் போதும், அல்லது சாய்க்கும் போதும், பிறன் மனை நோக்கா பேராண்மை தவறும்போதும் அங்கே ஒழுக்கமின்மை வந்து நின்றுவிடும்.

மனிதர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் மோசமானவர்கள். அதீத இச்சைகளை உடையவர்கள். சிலர் தங்கள் சாமர்த்தியத்தால், அது வெளியே தெரியாமல் பார்த்துக்கொள்வார்கள்.

மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும். Everyone wants to sleep with other man's wife என்னும் பழமொழிகள் உலவுவதை யாரும் மறக்க வேண்டாம்.

அந்த இச்சைகளின் (ஒழுக்கமின்மையின்) அளவு ஆளாளுக்கு வேறுபடும். ஜாதகத்தின் மற்ற தன்மைகளை வைத்து வேறுபடும். சாரசரிக்கு கூடவோ அல்லது குறைவாகவோ பலருக்கும் இருக்கும்.

சிலர் 14 அல்லது 18 வயது முதல் டண்டணக்கா டணக்குணக்கா அடிக்கும் கடைசி நிமிடம் வரை ஒழுக்கம் இல்லாமல் இருந்துவிட்டுப் போய்ச் சேர்வார்கள். சிலர் ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு திருந்தி ஒழுக்க சீலர்களாக வாழ்ந்து,பெயரெடுத்துவிட்டுப் போவார்கள். அது அவரவர்கள் வாங்கி வந்த வரம்

”பெண்களுக்கும் இதே விதிகள் பொருந்துமா?” என்று கடைசிப் பெஞ்ச் கண்மணிகள் யாரேனும் பின்னூட்டம் இட வேண்டாம். பெண்களுக்குக் கால் செருப்பின் அளவு வேறுபடுவதைப்போல - உங்கள் மொழியில் சொன்னால் உடலில் வளைவு நெளிவுகள் வேறு படுவதைப்போல பல விதிகள் வேறுபடும். அவை ஏன்? எதனால் என்பதைப் பற்றி பெண்களுக்கான விஷேச ஜாதக அமைப்புக்கள் என்கின்ற பாடத்தை நடத்தும் போது விவரிக்கிறேன். அதுவரை பொறுத்துக்கொள்ளுங்கள்.

பாடம் ஓக்கேயா?
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

8.2.10

கேள்வியும் நானே - பதிலும் நானே!

------------------------------------------------------------------------
கேள்வியும் நானே - பதிலும் நானே!

பகுதி 1
-------------------------------------------------------
1.இரட்டைப் பிறவிகளின் ஜாதகம் எப்படி வேறுபடுகிறது?

கால சந்திப்பைத் தவிர்த்து மற்ற நேரங்களில் பிறக்கும் இரட்டைக் குழந்தைகளின் ஜாதகங்கள் பார்வைக்கு ஒன்றாக இருக்கும். ராசி & நவாம்சம் இரண்டும் அச்சர சுத்தமாக ஒன்றுபோல இருக்கும்.

ஆனால் நாடிச் சக்கரம் வேறுபடும். ஒவ்வொரு ராசிக்கும் 150 நாடிகள் உண்டு. ஒரு ராசியின் பாகைகள் 30 என்னும்போது 30 வகுத்தல் 150 பிரிவுகள் நாடியில் வரும். அதாவது 120 நிமிடங்கள் வகுத்தல் 150 நாடிகள்.48 விநாடிகளுக்கு ஒரு நாடி என்றாகும். உதய லக்கினத்தை வைத்து, அதில் இருக்கும் முதல் நாடியின் அளவு 8 முதல் 115 வினாடிகள் வரை வரலாம். அதனால் இரட்டைப் பிறவிகளின் ஜாதகங்கள் வேறுபடும்.அவர்களின் தலை எழுத்தும் வேறுபடும். வடமொழி நூல்களில் இந்த நாடியைப் பற்றிய குறிப்புக்கள் உள்ளது என்பார்கள். ஆனால் ஆங்கில் மொழிபெயர்ப்புக்களில் படிக்கக் கிடைக்கவில்லை. தேடினால் கிடைக்கலாம். KP Stellar System of Astrology
யில் இரட்டைப் பிறவிகளுக்கான ஜாதகத்தைக் கணிக்கும் முறை கொடுக்கப்பட்டுள்ளது என்பார்கள். நம் வகுப்பிற்கு ஜோதிடத்தை நன்கு அறிந்தவர்கள் பலர் வருகிறார்கள். அவர்களில் ஒருவர் இந்தக் கேபி முறையைப் பற்றிய செய்தியைக் கொடுத்தால், அது அனைவருக்கும் பயன்படும்.

புதன் இரட்டைப் பிறவிகளுக்கான கிரகம். உபய ராசிகள் (Dual signs) மிதுனம் (Gemini), கன்னி (Virgo), தனுசு (Sagittarius), மீனம் (Pisces) போன்ற ராசிகளும் இரட்டைப் பிறவிகளுக்கான ராசிகள். இந்த ராசிகளின் அதிக பட்ச ஆதிக்கத்தில் பிறந்த குழந்தைகள் இரட்டை பிறவிகளாக இருக்கும் என்பார்கள்.

அதேபோல பெற்றோர்களின் ஜாதகத்தில், ஐந்தாம் வீட்டின் மேல் உபய ராசிகளின் (Dual signs) ஆதிக்கம் இருந்தாலும் அவர்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு இருக்கும்
++++++++++++++++++++++++++++++++++++++++++++
2. ஒரு ஜாதகனுடைய கல்வித் தகுதியை எப்படி நிர்ணயம் செய்வது?

நான்காம் வீடு கல்விக்கான இடம். ஐந்தாம்வீடு மனம் மற்றும் நுண்ணறிவிற்கான இடம். இரண்டாம் வீடு வாக்கு ஸ்தானம். ஆகவே இந்த மூன்று வீடுகளையும் அலசினால், ஜாதகனின் கல்வியைப் பற்றி அறிந்துகொள்ளலாம். அதோடு அந்த வீட்டு அதிபர்கள், காரகன் புதனின் நிலைமைகளையும் நன்கு அலச வேண்டும்.
சூரியன் - தத்துவப் பாடங்கள், நிர்வாகப் படிப்புக்களுக்கு அதிபதி
சந்திரன் - மருந்துகள்
செவ்வாய் - அறுவை சிகிச்சைகள், விவசாயம்
புதன் - கணிதம்
குரு - இலக்கியம், வானவியல்
சனி - சரித்திரம், அரசியல் என்று கிரகங்களையும், அதன் கூட்டணிகளையும் வைத்து, ஜாதகன் படிக்கும் துறையை அல்லது என்ன படிப்பு அவனுக்கு ஒத்து வரும் என்பதையும் அலசலாம்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
(தொடரும்)

இதன் அடுத்த பகுதி, அடுத்த திங்கட்கிழமையன்று வரும்.

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

5.2.10

வாத்தியாரின் வேண்டுகோள்!

+++++++++++++++++++++++++++++++++++++++++
வாத்தியாரின் வேண்டுகோள்!

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும், ஜோதிடப் பத்தகத்தின் முதல்கட்ட வேலை முடிந்துவிட்டது. அடுத்து இரண்டு கட்ட வேலைகளும் இரண்டு மாதங்களுக்குள் முடிந்துவிடும்.

புத்தகம் ஏப்ரல் மாதம் முதல் வாரம் அல்லது இரண்டாவது மாதம் முடிந்து, வெளியீட்டுற்குத் தயாராகி விடும். வகுப்பறை மாணவர்களுக்குத்தான் முன்னுரிமை. அவர்களுக்குக் கொடுத்தது/ அனுப்பியது போக மீதம் உள்ள பிரதிகள்தான் எனது நண்பர்கள்/ மற்றும் உறவினர்களுக்கு! அனேகமாக வெளி விற்பனை (Book Stand Copies) இருக்காது. அப்படி வெளிவிற்பனைக்கு யாரேனும் கேட்டு வந்தால், அது இரண்டாம் பதிப்பு வெளியிட்டால் மட்டுமே சாத்தியப்படும்.

பதிவுகள் எழுதத்துவங்கிய சமயத்தில் என்னுடைய நண்பர் ஒருவர் என்னை எச்சரித்தார் (அவர் ஒரு பிரபலமான எழுத்தாளர். தமிழ்நாடறிந்த எழுத்தாளர். இதுவரைக்கும் இருபதிற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் அவருடைய நூல்கள் வெளிவந்து அமோகமாக விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன என்பது கூடுதல் செய்தி). இணையப் பதிவுகளில் பாதுகாப்பு இல்லை. உங்கள் ஆக்கங்கள் திருடப்படலாம் என்றார்.

யாரும் பிறக்கும்போதே முழு ஜோதிட ஞானத்துடன் பிறப்பதில்லை. ஜோதிடக் குடும்பங்களில் பிறந்தவர்கள் தங்கள் தந்தையார் மூலமாகவும், மற்றவர்கள் காலப்பிரகாசிகா, சரவளி, ஜோதிட சிந்தாமணி, குமார சுவாமியம், புலிப்பாணி ஜோதிடம் போன்று பல நூல்களைப் படித்துதான் ஜோதிட அறிவைப் பெறுகின்றார்கள். நானும் பல நூல்களைப் படித்துத்தான் ஜோதிடத்தில் ஒரளவு தேர்ச்சி பெற்றேன். ஜோதிடம் என்பது கடல். அதில் முழுத் தேர்ச்சி பெறுவது என்பது சுலபமல்ல.

நானும், நான் கற்றவைகள், என் அனுபவங்கள் மற்றவர்களுக்கும் பயன்படட்டும், குறிப்பாக அடுத்த தலைமுறையினருக்குப் பயன் படட்டும் என்றுதான் பதிவில் எழுதி வருகிறேன். எனது ஜோதிட ஆக்கங்களில் ஜோதிடக் குறிப்புக்களை மட்டும் ஒருவர் திருடமுடியுமே தவிர, என்னுடைய நடையில் எழுதப் பெற்றுள்ள மொத்த எழுத்துக்களையும், சொந்த அனுபவச் செய்திகளையும் ஒருவரால் வேறு வழிகளில் பயன்படுத்த முடியாது. அது எனக்கு நன்றாகத் தெரியும்.

அதோடு, சிலவற்றைத் திருடி என்னால் ஒருவர் பயனடைய முடியும் என்றால், பயனடைந்துவிட்டுப் போகட்டும் என்னும் மாறுபட்ட சிந்தனையுடன்தான் பதிவில் கடந்த 3 ஆண்டுகளாக நான் எழுதி வருகிறேன். இப்போது பல மாணவர்களின் வேண்டுகோளூக்கு இணங்கப் பத்தகமாக வெளியிடும் முயற்சியில் இறங்கியுள்ளேன்.

ஜோதிடம் என் தொழில் அல்ல! பதிப்பித்துப் புத்தகங்களை வெளியிடுவதும் என் தொழில் அல்ல! இறையருளால் எனக்கு வேறு ஒரு நல்ல தொழில் இருக்கிறது. ஒரு ஆர்வக்கோளாறால் இவற்றைச் செய்து கொண்டிருக்கிறேன். என்னுடைய அரிய நேரம் அதில் செலவாகிறது என்பதும் எனக்குத் தெரியும். இருந்தாலும் ஒரு மனத்திருப்திக்காக அந்தப் பணியைச் செய்து கொண்டிருக்கிறேன்.

2,000ற்கும் மேற்பட்ட வாகர்களையும், இன்றையத் தேதியில் சுமார் 1249 பின் தொடர்பவர்களையும் (Followers) நான் பெற்றுள்ளேன். அதுவே எனக்குக் கிடைத்த முதல் பிரதிபலனாக நான் எண்ணுகிறேன். உங்களின் அன்பைவிட உயர்ந்த பிரதிபலன் வேறு எதுவும் கிடையாது.

என்னுடைய ஜோதிடப் புத்தகங்களை, விருப்பமுள்ளவர்கள் மட்டும் வாங்கிக் கொள்ளலாம். மற்றவர்கள் பதிவில் இருந்து தாங்கள் பிரதி எடுத்து வைத்திருக்கும் பக்கங்களையே பயன் படுத்திக்கொள்ளலாம்.

ஜோதிடப் புத்தகத்திற்கும், பதிவில் உள்ள ஆக்கங்களுக்கும் என்ன வித்தியாசம்?

90% பதிவில் உள்ளவைகள்தான் புத்தகத்தில் வரப்போகின்றன. எல்லாப் பாடங்களும் முறைப்படுத்தப் பெற்று, பகுதிகள் பிரிக்கப் பெற்றுப் படிப்பதற்கு வசதியான முறையில், பொருளடக்கம், குறிச்சொற்களுடன் புத்தகத்தில் வரப்போகின்றன.

முதலில் பத்தகங்களைப் பெரிய அளவில் ஒவ்வொன்றும் சுமார் 480 பக்கங்கள் இருக்கும்படியாக இரண்டு அல்லது மூன்று தொகுதிகள் வெளியிட எண்ணி யிருந்தேன். இப்போது அவ்வெண்ணத்தை மாற்றிக்கொண்டு, எனது மானசீக ஆசான் கவியரசர் கண்ணதாசன் அவர்களின் அர்த்தமுள்ள இந்துமதம் நூல்களின் பத்து பாகங்களைப் போல என்னுடைய ஜோதிட நூல்களையும் பத்து பாகங்களாக வெளியிட எண்ணியுள்ளேன்.

ஒவ்வொரு பாகமும், சுமார் 100 பக்கங்களில் இருந்து 160 பக்கங்கள் வரை மட்டுமே இருக்கும் படியாக வெளியிட எண்ணியுள்ளேன்.

அறிமுகம், ஜோதிடம் வந்தவழி, ஜோதிட ஆதாரங்கள், அடிப்படைப் பாடங்கள், நவக்கிரகங்கள், (பன்னிரண்டு) வீடுகள், தசாபுத்திப் பலன்கள், அஷ்டகவர்க்கம், யோகங்கள், ஜோதிடநுட்பங்கள் மற்றும் அலசல்கள், கேள்வி பதில்கள் என்பது போன்ற தலைப்பில் புத்தகங்கள் இருக்கும். படிப்பவர்களுக்கு அது வசதியாகவும் இருக்கும்.

முதலில் ஐந்து பாகங்களும், இரண்டு மாத இடைவெளியில் மீதமுள்ள பாகங்களும் வெளியாகும். புத்தகங்கள் அனைத்தும் படிப்பதற்கு எளிமையாகவும், சுவாரசியம் குறையாமலும் இருக்கும்.

புத்தகங்கள் அச்சாகி முடிந்தவுடன், ஒவ்வொன்றின் பக்கங்களும், விலையும் பதிவில் முறையாக வெளிடப்படும். விருப்பமுள்ளவர்கள் மட்டும் வாங்கிக் கொள்ளலாம். வாங்குபவர்களுக்கு, அவர்கள் எந்த நாட்டில் இருந்தாலும், பதிவு அஞ்சலில் (by registered post) அவைகள் வந்து சேரும். அஞ்சலில் அனுப்பியவுடன், அதற்காக ரசீது scan செய்ப்பட்டு, அவர்களுக்கு அனுப்பிய தேதியுடன் மின்னஞ்சல் மூலமாகத் தெரிவிக்கப்படும்.

பத்தகங்களில் சில ஆச்சரியங்கள் இருக்கும். அது இப்போதைக்கு சஸ்பென்ஸாக இருக்கட்டும். புத்தகங்கள் உங்கள் கைக்கு வந்தவுடன், அதைப் பார்த்து நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்.

புத்தகத்தில் உங்கள் பங்களிப்பும் இருக்க வேண்டும். அதனால் புத்தகங்களில் வகுப்பறையைப் பற்றியும், (இதுவரை நடத்திய) பாடங்களைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும் வெளியிட விரும்புகிறேன். விருப்பம் உள்ளவர்கள் எழுதி, மின்னஞ்சலில் அனுப்புங்கள். இரண்டு பக்கங்களுக்குமிகாமல் (1/8 sizeல் 2 பக்கங்கள் A4 sizeல் ஒருபக்கம் - புரியும்படியாகச் சொன்னால் Computer Screen Shot சைஸில் இரண்டு பக்கங்கள்) எழுதியனுப்புங்கள்.

வகுப்பறையில் ஆறு மாதங்களாக அல்லது அதற்கு முன்னதாகச் சேர்ந்து படிப்பவர்கள் மட்டுமே எழுதுங்கள். உங்கள் கருத்துக்கள், உங்கள் புகைப்படம், புனைப்பெயர், வயது, வசிக்கும் ஊர், மற்றும் உங்கள் மின்னஞ்சல் முகவரியுடன் வெள்ளியிடப்படும். ஒரு புத்தகத்திற்கு, 6 பேர்களின் கடிதம் வீதம், மொத்தம் 60 அன்பர்களின் கடிதங்கள் வெளியிடப்படும்.

MRK சார், உண்மைத்தமிழன், நாமக்கல் சிபி, ஆனந்த், ஆலாசியம்கோ, துபாய் டி.கண்ணன், தில்லி உமா, கனடா தனுஜா, போன்ற சீனியர் வாசகர் களிடமிருந்தும் அக்கடிதங்களை எதிர்பார்க்கிறேன். பத்து தினக்களுக்குள் எழுதியனுப்புங்கள்.

எனக்கு, வாத்தியார் பட்டத்தைக் கொடுத்து, அதன் காரணமாக வகுப்பறையைத் துவங்குவதற்குக் காரணமாக இருந்த இருவரின் கடிதகங்களும் வெளியிடப்படும். அவர்களையும் எழுதி அனுப்ப வேண்டுகிறேன்.

நன்றி, வணக்கத்துடன்
வாத்தியார்.
++++++++++++++++++++++++++++++++++++
முன்பதிவின் அடுத்த பகுதி!

அதைப்படிக்காதவர்கள் அதைப் படித்துவிட்டுப் பிறகு கீழே உள்ளதைப் படிக்கும்படி கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். அதற்கான சுட்டி இங்கே உள்ளது!
___________________________________________

அடுத்து நடந்தது என்ன?

அடுத்த நாள் காலையில், அதே நண்பன் திரும்பி வந்தான். வந்தவன் நம் ஆசாமியிடம் சொன்னான்:

“பெண்களை ஏற்றிக் கொண்டுவரும் கப்பல், இன்று மாலை வந்துவிடும். நீ உன் கணக்கிற்கு முந்நூறு ரூபாய்கள் தர வேண்டும்”

முந்நூறு என்பது பெரிய தொகை (ஒரு பவுன் பதின்மூன்று ரூபாயாக இருந்த காலம்) நம்ம ஆள் முதல் நாளே யோசித்து வைத்திருந்தான். முற்றிலும் இலவசம் என்றால் பரவாயில்லை. உள்ளடி வேலையாக இருந்தால்
என்ன பதில் சொல்வது என்று யோசித்து வைத்திருந்தான்.

உடனே பதில் சொன்னான்.

“பெண்களெல்லாம் இலவசமில்லையா?”

”இலவசம்தான். ஆனால் அவர்களை ஏற்றிக் கொண்டுவந்த கப்பல் கட்டணம் - தலைக்கு நூறு ரூபாய் வீதம் மூன்று பெண்களுக்கு வீதம் முந்நூறு ரூபாய் செலுத்த வேண்டும்”

“எனக்கு வேண்டாம். ஆர்டரைக் கேன்சல் செய்துவிடு.”

“ஏன் பணத்திற்காக வேண்டாம் என்கிறாயா?”

“பணத்திற்காக இல்லை. இரவு யோசித்துப் பார்த்தேன். வேண்டாமென்று இரவே முடிவு செய்து வைத்திருக்கிறேன். அதனால்தான் சொல்கிறேன்”

”இதுக்கு என்ன கணக்கு?”

“புண்ணாகுக் கணக்கு! பெரிதாகக் கணக்கு ஒன்றுமில்லை. நீயும் யோசித்தாயென்றால், உனக்கும் விளங்கும்”

“உன் வாயால் நீயே சொல்.நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்”

“எனக்குத் திருமணம் ஆகிவிட்டது. என் அப்பாவிற்கு வயதாகிவிட்டது. என் தம்பி சின்னப் பயல். அதனால் சரிப்பட்டுவராது என்றுதான் வேண்டாம் என்கிறேன்”

வந்த நண்பன் ஒரு நமுட்டுச் சிரிப்பை உதிர்த்துவிட்டுச் சென்றுவிட்டான்.

தன் நண்பனின் வரக் கஞ்சத்தனத்தைப் பற்றி அவனுக்குத் தெரியாதா என்ன?
-------------------------------------------------------------------------
அதென்ன வரக் கஞ்சத்தனம்.

வரக்காப்பி என்று பால் இல்லாத காப்பியைக் கிராமங்களில் குடிப்பார்கள். அதுபோல வரக் கஞ்சத்தனம் என்பது.....காசிற்காக எதையும் பறிகொடுக்கும் அல்லது அனுபவிக்காமல் கடாசிவிடும் அல்லது நன்மை தீமைகளை நினைத்துப் பார்க்க மறுக்கும் கஞ்சத்தனம்

(தொடரும்)
------------------------------------------------
அவசர வேலையாக வேலையாக வெளியூர் சென்றமையால், நேற்று வகுப்பறைக்கு வரமுடியாமல் போய்விட்டது.


வாழ்க வளமுடன்!

2.2.10

Doubt: தென்காசி செல்லும் பஸ்ஸில் ஏறி, பழநிக்கு டிக்கெட் கேட்டால் என்ன ஆகும்?

+++++++++++++++++++++++++++++++++++++++++++++
Doubt: தென்காசி செல்லும் பஸ்ஸில் ஏறி, பழநிக்கு டிக்கெட் கேட்டால் என்ன ஆகும்?

Doubts: கேள்வி பதில் பகுதி 24

நீங்களும் உங்கள் சந்தேகங்களும் - பாடம் எண் இருபத்திநான்கு!

Question & answer session
கேள்வி பதில் வகுப்பு
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
email.No.96
அருள் முருகன்

Sir
I humbly request you to clarify my doubts.

1) Generally speaking suyabukthi will not do good to a person. The same would be the
case with Guru dasa Guru bukthi. In such a case how long will Guru dasa Sani bukti take in its 2 1/2 periodto provide relief to a person if generally speaking the person had suffered a lot in Rahu dasa ?

குரு தசையில் சனி புத்தி 30 மாதங்கள், 12 நாட்கள். அதுவும் சுமாராகத்தான் இருக்கும். அதற்கு அடுத்துவரும் குரு தசை புதன் புத்தி நன்மைகளை உடையதாக இருக்கும்! ராகு தசையில் கஷ்டப்பட்டீர்கள் என்பதற்காக அடுத்துவரும் தசா புத்திகள் தங்கள் விதிகளை மீறி செயல் படாது!

2) Generally speaking if a persons maternal uncle (mothers brother) plays an important role
in a persons upbringing(right from childhood days of the kid), will it be possible to find it
from the kids horoscope ?

தாய்வழி உறவுகளைப் பற்றியும், அவர்களுடன் உள்ள சுமூக உறவுகளைப் பற்றியும் 4ஆம் வீட்டை வைத்து ஒரளவிற்குத் தெரியும். தாய் மாமா, பாசமலர் சிவாஜி போல இருப்பாரா? கை வீசம்மா கை வீசு, என்று கையைப் பிடித்துக் கொண்டு பாடுவாரா என்பதெல்லாம் ஜாதகத்தில் தெரியாது!

3) If in a females horoscope 7 planets in drekkanam divisional chart occupy the same
raasi as they are seen in raasi chart, dharmakarmathipathi yoga found in 3'rd house, 10'th house getting 39 points in ashtavarga, 11'th house - 41 points, does that indicate the females brother will be a VIP in the society ?

என்ன சுவாமி குழப்புகிறீரே? திரேக்கணத்தை பற்றிய கேள்வியில் எதற்கு தர்மகர்மாதிபதி யோகத்தையும், 10 & 11 ஆம் வீட்டுப் பரல்களையும் கொண்டு வந்து கொக்கி போட்டு மாட்டுகிறீர்கள்? Drekkana is used to study the prospects of siblings. உடன் பிறப்புக்களைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம்.
VIP in the societyயாக இருப்பார்களா என்பதெல்லாம் (எனக்குத்) தெரியாது
------------------------------------------
email.No.97
P.பாலசுப்பிரமணியன் புள்ளிகாட், ரியாத்.

Dear Sir,
I have few more doubts.

1. Mandhi – you have mentioned that it will affect one aspect (out of multiple functions of
the house) of the house where it is sitting. Will this affect permanently? In one horoscope,
it is sitting in second house, Cancer, and affected the jathakan in his speech ie. he was
"Thikku Vai" in his child hood. Now he has over come that to grow up in career, though
this affects him very rarely and sometimes only. Does that mean Manthi will not affect
him further, or it will continue to affect in other areas like "Vakku" or "Speech" or other
functions of second house.

நீங்களே, அரிதாக, சிலசமயங்களில் மட்டுமே அந்தக்குறை உள்ளது என்று
எழுதியுள்ளீர்கள். இறைவழிபாடு செய்யச் சொல்லுங்கள். முற்றிலும் நீங்கிவிடும்!

2. If good planet becomes ucham, it means it has more power to do good.
In the same way if bad planet becomes ucham, does it mean it will do more harm?

தீயகிரகம் என்று ஒரே கண்ணோட்டத்தில் பார்க்காதீர்கள். சனி தீயகிரகம்தான். அதே நேரத்தில் அவன் ஆயுள்காரகன், கரம் காரகன் (authority for profession) உச்சம் பெற்ற சனி, ஜாதகனுக்கு (மற்ற அம்சங்களையும் வைத்து) நீண்ட ஆயுளையும், தொழிலில்/வேலையில் மேன்மையையும் தருவார்

3.Similarly if negative planet has more parals, does it mean it will affect the jathagan or it
will benefit the jathagan. Should the negative planets get lower suya parals to do less
harm to the jathagan.

எதிர்மறையான கிரகம் என்பது, 6,8,12 ஆம் வீட்டு அதிபதிகளைக் குறிக்கும். அந்த வீட்டு அதிபதிகளுக்கு சுயவர்க்கப்பரல்கள் அதிகம் இருந்தால், அவர்கள் ஜாதகனுக்கு நன்மைகளைச் செய்யாவிட்டாலும் கஷ்டங்களிலிலும், துன்பங்களிலும், தாக்குப் பிடிக்கும் சக்தியைக் கொடுப்பார்கள்

4.How to see the houses and planets in Navamsa Chart. Is it to be done from the position
of lagna in navamsa, which is different from lagna in main chart or the lagna position in
the main chart to be applied to the same house in navamsa.

மின்னஞ்சல் கேள்வி எண்.71 தேதி 25.1.2010க்கான பதிலைப் பாருங்கள். அதே பதில்தான் உங்களுக்கும்!

5.In many manual horoscopes, I find the main chart would be correct, but navamsa would
be wrong. Sometimes I could not arrive at the manually developed Navamsa chart even
using a good software. Same is the case with the remaining portion of Dasa period at
birth. That could not be arrived to match with the manual workings. This indicates the
chart requires BTR. In some cases I tried with both Lahiri and Raman Ayanamsa. As you
have been familiar with manually constructing horoscope and you know people who do it,
can you please tell me why this happens and what could be the reason for them not
matching with computerised horoscope. What are the possible mistakes, those
astrologers would have committed.
Is there any tool for BTR or short cuts to rectify the same.
I look forward to your response at the earliest.

நல்ல சிற்பி செய்த சிலை நன்றாக இருக்கும். நல்ல பொறியாளர் வடிவமைத்த இயந்திரம் நன்றாக இயங்கும்.நல்ல இயக்குனர் இயக்கிய படம் அருமையாக இருக்கும். அதுபோலத்தான் இதுவும். ஜோதிடத்தில் நல்ல பாண்டியத்யம் பெற்ற ஜோதிடர்கள் எழுதிக் கொடுக்கும் ஜாதகத்தில் குறைகள் இருக்காது. அந்தக் காலத்தில் இருந்தார்கள். இப்போது இல்லை. சர்வமும் கணினி மயம். கணினி போற்றி, கணினி போற்றி, கணினி போற்றி, என்று மூன்றுமுறை
சொல்லிவிட்டுக் கணினியிலே கணித்து விடுங்கள்
----------------------------------------
email.No.98
திரு அரசு

மதிப்பிற்குரிய அய்யா வணக்கம்.

லேட் அட்மிஷனாக வகுப்பில் சேர்ந்த எனக்கு தாங்கள் அனுப்பிய பழைய பாடங்களின் தொகுப்பினை படித்துப் பார்த்துப் புரிந்து கொண்டதில் எனக்கு ஏற்பட்டுள்ள கீழ்க்கண்ட இரண்டு ஐயங்களை தீர்த்து வைக்குமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.

1 . அஷ்டவர்க்கம் மற்றும் சுயவர்கப் பரல்களைக் கணக்கிடும் வழிமுறை என்ன என்பதை உதாரண ஜாதகத்துடன் சற்று விளக்கமாக தெரிவிக்க வேண்டுகிறேன்.ஜாதகம் கணிக்கும் மென்பொருள் மூலம் பரல்கள் கணக்கிடப்பட்டு விட்டாலும் அதன் வழிமுறை குறித்து தெரிந்து கொள்ளவே இதனைக் கோருகிறேன்.

வழிமுறைகள்தானே? அது பெரிய பாடம். நீங்கள் கேட்டதற்காக நேரம் கிடைக்கும்போது எழுதுகிறேன். பொறுத்திருங்கள். உங்கள் ஆர்வம் வாழ்க! நாளும் வளர்க!

2. பரிவர்த்தனை தொடர்பாக ஒரு ஐயம்: சில ஜாதகங்களில் மூன்று கிரகங்கள் கூட்டாக பரிவர்த்தனை ஆகி இருப்பதை கண்டிருக்கிறேன் , உதாரணமாக ஐந்துக்குரிய கிரகம் எழில், எழுக்குரிய கிரகம் ஒன்பதில் ஒன்பதுக்குரிய கிரகம் ஐந்திலும் பரிவர்த்தனை ஆகி இருப்பின் இதையும் யோகதுக்குரிய பரிவர்த்தனை ஆக கொள்ளலாமா? இதற்கான பழங்கள் எப்படி இருக்கும் அய்யா?
வணக்கத்துடன், அரசு.

அது முக்கோணப்பரிவர்த்தனை என்று பெயர்.பரிவர்த்தனையில் சம்பந்தப்பட்ட அந்த 3 கிரகங்களுமே நன்மைகளைச் செய்வார்கள்
-----------------------------------
email.No.99
பழனிசெந்தில்

அன்புள்ள ஆசிரியர் அவர்களூக்கு,
குழ‌ந்தை இல்லாதவர்கள் தத்து எடுக்கும் குழந்தை ஜாதகம் மூலம் பலன் அல்லது பாதிப்பு அடைவார்களா? நன்றி.
செந்தில்.மதுரை.

உங்கள் கேள்வி சரியில்லை. பேருந்தில் பயணிக்கிறவன், அது எந்த ஊர் செல்லும் பேருந்து என்று பார்த்து ஏறமாட்டானா? பார்க்காமல் ஏறினால் என்ன ஆகும்? தென்காசி செல்லும் பஸ்ஸில் ஏறி, பழநிக்கு டிக்கெட் கேட்டால் என்ன ஆகும்? அதுவும் பஸ் புறப்பட்டு, 10 கிலோமீட்டர் தூரம் சென்ற பிறகு கேட்டால், நடத்துனரிடம் டோஸ் வாங்கிக் கொண்டு பஸ்சைவிட்டு இறங்க நேரிடும். அதுபோலத்தான் இதுவும். தத்து எடுக்கிறவன், தத்து எடுக்கப்போகும் குழந்தையின் ஜாதகத்தைப் பரிசீலிக்காமல் தத்து எடுப்பானா?
பார்க்காமல் எடுத்தால், வருவதை அனுபவிக்க வேண்டியதுதான்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
email.No.100
லக்ஷ்மணன், சென்னை

வாத்தியார் அவர்களுக்கு வணக்கம்.

தாங்கள் கேள்வி பதில் பகுதி மிக்க உபயோகமாகஇருக்கிறது
அதிலும் தாங்கள் பதிலுக்கு அசத்தலாக தலைப்பு கொடுப்பது, அது என்ன என்று ஆவலாக முதலில் படிக்க தோன்றும் அளவுக்கு உள்ளது. படங்களை வேறு போட்டு அசத்துவது இன்னும் தூக்கலாக இருக்கிறது ( எங்கே இருந்து சாமி படங்களை சேகரிக்கிறீர்கள்)

கூகுள் ஆண்டவர் சந்நிதியில் இல்லாத படமா? அங்கே இருந்துதான் எடுக்கிறேன் சார்!

என்னுடைய கேள்வி.
1. Md என்பது மாந்தியா Gl என்பது மாந்தியா ?
தாங்கள் ஒரு பாடத்தில் Md தான் மாந்தி என்று ஜகன்நாத் ஹோரா படம் போட்டு இப்படி சொன்னீர்கள்.
" உடனே சடாரென்று சொன்னேன்,” Native of the horsocope should be amentally retarded person" (இந்த ஜாதகன் ஒரு மனநோயாளி)
இன்னொரு இடத்தில் Gl தான் மாந்தி என்று குறிப்பிட்டீர்கள்
/ஜகந்நாத ஹோரா மென்பொருளில் வரும். அதில் Gள் (குளிகன்) என்று போட்டிருக்கும் அதுதான் மாந்தி// என்றுஅதற்க்கு ஒரு வாசகர் எழுதிய பதில்:
நல்ல வேளை வாத்தியாரையா. "Md" என்று போட்டிருப்பது மாந்தி என்று நினைத்தேன். = என்பதாகும்.
ஆக இதில் எது மாந்தி?

”சிங்காரிதான் காவேரி
காவேரிதான் சிங்காரி” என்று புரட்சித் தலைவர் படத்தில் ஒரு பாடல் வரும்.
அதைப்போல மாந்திதான் குளிகன்; குளிகன்தான் மாந்தி என்று வைத்துக்கொள்ளுங்கள். இரண்டும் ஒன்றுதான். ஜகந்நாத ஹோரையில் இரண்டும் வெவ்வேறு என்பார்கள். அவர்களுடைய மென்பொருளை
உபயோகிப்பவர்கள் "Md" என்று போட்டிருப்பதை எடுத்துக்கொள்ளுங்கள். மாந்தியை மட்டும் ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள். குளிகனைப் பெவிலியனுக்கு அனுப்பிவிடுங்கள். குழப்பம் இருக்காது!

2. ஜாதகத்தில் 4 வகைகள் மட்டுமே உண்டு: என்று சொல்லியது பற்றிய கேள்வி.

1. தர்ம ஜாதகம் (1,5,9 ஆம் வீடுகள் சிறப்பாக இருப்பது)
2. தன ஜாதகம் (2,6,10 ஆம் வீடுகள் சிறப்பாக இருப்பது)
3. காம ஜாதகம் (3,7,11 ஆம் வீடுகள் சிறப்பாக இருப்பது)
4, ஞான ஜாதகம் (4,8,12 ஆம் வீடுகள் சிறப்பாக இருப்பது)
என்னுடைய ஜாதக த்தில் முப்பது பரல்கள் மேல் இருந்தால் சரி என்றால் ஒன்றில் கூட சரியாக வரவில்லையே. இந்த செட் கணக்குப்படி முப்பது பரல்கள் எல்லாவற்றிலும் வரவில்லை . சரி இரண்டு இடங்களில் இருந்தால் போதும் என்றால் மேற் கூறிய இரண்டு

வகைக்கு ஒத்து வருகிறது.
1 – 5 - 9 இல் முறையே 31 – 25 – 25 பரல்கள்
2 – 6 – 10 இல் முறையே 31 - 24 – 34 பரல்கள்
3 – 7 – 11 இல் முறையே 34 – 19 – 33 பரல்கள்
4 – 8 – 12 இல் முறையே 34 – 26 – 26 பரல்கள்
1 – 2 – 3 – 4 – 10 – 11 இடங்கள் மட்டுமே 30 பரல்களுக்கு மேல் இருக்கிறது. இது எந்த வகை ஜாதகம் எப்படி பார்ப்பது என்று தயவு செய்து சொல்லி புரிய வைக்கவும்.
இப்படிக்கு
லக்ஷ்மணன் /////

அந்த நான்கு வகைகளிலும் வராத கலவையான ஜாதகம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த 4 வகைகளுக்குள் அடங்க வேண்டும் என்று அவசியம் ஒன்றும் இல்லை!
++++++++++++++++++++++++++++++++++++++++++++
கேள்வி பதில் பகுதியில் இதுவரை 100 மின்னஞ்சல்களுக்குப் பதில் அளித்துள்ளேன். சற்று இடைவெளி விட்டுவிடுவோம். தொடர்ந்து எழுதினால், படித்தால் கசந்துவிடும். வெரைட்டி வேண்டாமா? படத்தில் சண்டைக் காட்சியையே எவ்வளவு நேரம் பார்க்க முடியும்? கேள்வி, பதிலின் அடுத்த பகுதிகள் பிப்ரவரி 15ஆம் தேதிக்குப் பிறகு மீண்டும் வரும்.
பொறுத்திருங்கள். இடையில் வேறு ஏதாவது சுவாரசியமான விஷயத்தைப் பார்ப்போம்
=========================================================
அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

31.1.10

Doubt: வீண் வம்பிற்கு எப்போது போகக் கூடாது?

++++++++++++++++++++++++++++++++++++++++++
Doubt: வீண் வம்பிற்கு எப்போது போகக் கூடாது?

Doubts: கேள்வி பதில் பகுதி 23

நீங்களும் உங்கள் சந்தேகங்களும் - பாடம் எண் இருபத்திமூன்று!

Question & answer session
கேள்வி பதில் வகுப்பு
----------------------------------------------------
email.No.91
சரவண குமார்

Dear Sir,

1. Rishabathil Raghu Neesam, mithuna lagnathukku 12th place il Raghu ullar. Avar dhisai evaru irukkum?

தீய கிரகங்கள் நீசமானால் தீமைகள் சற்று அதிகமாகவே இருக்கும் (அதுவும் 12ல் இருப்பதால், அவருடைய தசைகளில் சற்று எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும். வீண் வம்பிற்குப்போகக் கூடாது. கொடுக்கல், வாங்கல் கூடாது. only routine work!

2.In general, how is neesa grahas dhisai?

பொதுவாக நீச கிரகங்களின் தசை மகிழ்ச்சிகரமாக இருக்காது!

3 Oru graham neesamaga irunthalum, avar than suyavargathil 5 paral & 26 paral irunthal, avar balamaga ullar enru eduthu kollalama sir?

ஐந்து பரல்களைப் பெற்றுள்ளார் என்றாலே அவர் ஆட்டத்திற்கு செலக்ட் ஆகிவிட்டார் என்று அர்த்தம். ஆகவே அவர் ஓரளவிற்கு நன்றாக ஆடுவார். கவலை வேண்டாம்.

4. Pathaga isthanam, athan athipathi & athan dhasi patriya paadam vendum sir?

பழைய பாடங்களில் உள்ளது. தேடிப்பிடித்துப் படியுங்கள்
---------------------------------------------------------------------
email.No.92
சந்திரசேகரன் கருணாகரன்

Respected sir,
For Meena rasi Midhuna lagnam, Raghu is in Midhunam and keethu is in dhanusu and it is vargothamam. what will be effect of this for the persons on his married life during keedhu desai. waiting for your positive reply.
chandrasekaran

ஏழாம் அதிபதி குரு பகவானை ஏன் ஒளித்துவைத்திருக்கிறீர்கள். திருமண வாழ்விற்கு அவர் முக்கியமில்லையா? கேது தசை என்பது பிரேக் இல்லாத வண்டியில் போவதைப் போன்றது. உங்களுக்குக் கேது குருவின் வீட்டில் இருப்பதால், அவருடைய தசையில் அதிக பாதிப்புக்கள் இருக்காது!
------------------------------------------------------
email.No.93
சரஸ்வதி கல்யாணம், சென்னை

மதிப்பிற்கு உரிய ஐயா

தயவு செய்து எனது சந்தேகத்தைத் தீர்த்து வைக்கவும்

1.கடக லக்னத்துக்கு மூன்றாம் அதிபதி புதன்.பன்னிரெண்டாம் அதிபதியும் புதன்.இந்த நிலை விபரீத ராஜா யோகமா?

நிச்சயமாக இல்லை!

2.ரிஷப லக்னத்துக்கு ஒன்பது பத்து அதிபதி சனி. அதனால் பிறப்பிலேயே தர்மகர்மாதி யோகம் என்று சொல்லக் கேட்டு இருக்கின்றேன் . விபரீத ராஜா யோகமும் அதேபோலவா?

ஒரு துஷ்ட ஸ்தானத்தின் அதிபதி, மற்றொரு துஷ்ட ஸ்தானத்தில், ஒரு துஷ்டனுடன் அமர்ந்திருந்தால் அது விபரீத ராஜயோகம்!

3.கடக லக்னத்துக்கு கன்னியில் கேது , மிதுனத்தில் புதன் செவ்வாய் சூரியன் சுக்கிரன் இந்த நிலை பலன் என்ன?தயவு செய்து விளக்கவும்

முக்கியமான 4 கிரகங்கள் 12ஆம் வீட்டில் போய் உட்கார்ந்து கொண்டுள்ளன. அவைகள் கிரகயுத்ததில் உள்ளனவா, அஸ்தமனம் பெற்றுள்ளனவா, சுயவர்க்கத்தில் எத்தனை பரல்களுடன் உள்ளன, அம்சத்தில் அவற்றின் நிலை என்ன, இது போன்று பல என்ன, என்ன கேள்விகளை வைத்து, முழு ஜாதகத்தையும் அலசினால்தான் பதில் சொல்ல முடியும்! ஆகவே எனது பாடங்களை முழுமையாகப் படியுங்கள். உங்களுக்கே அலசும் தன்மை/திறமை கிடைக்கும்.
------------------------------------------------------------------
email.No.94
சோழி கணேசன்

வணக்கம் அய்யா

1.சனியின் சஞ்சாரத்தின் போது பரல்கள் குறைவாக இருக்கும் போது சிரமமான பலன்கள் ஏற்படும் என்று சொல்லியுள்ளீர்கள் ,இப்பொது எனக்கு சனி தசையில் சனி புக்தி நடக்கிறது .எட்டாம் இடத்தில சனி கோச்சாரத்தில் உள்ளார் அங்கு பரல்கள் 35 சனியின் சுயவர்க்க பரல்கள் 2 இதை எப்படி எடுத்துக்கொள்வது? பலன்கள் நன்றாக இருக்குமா அல்லது குறையுமா, அடுத்த சஞ்சரத்தின் போது 29பரல்கள் இருக்கும் இடத்திற்கு செல்லும் போது பலன்கள் குறையுமா( because the house which has lesser than the previous one ,but normal is 25 isnt it?)

அடுத்த மாற்றத்தை அது நிகழும்போது பார்த்துக்கொள்வோம். இப்போது சனி சஞ்சாரம் செய்யும் இடத்தில் 35 பரல்கள் இருப்பதால், ஏற்றமான காலம். வாழ்க்கையின் அடுத்த லெவலுக்கு சனீஷ்வரன் உங்களை உயர்த்தி
விடுவான். அஷ்டமச் சனியும் சேர்ந்திருப்பதால், அந்த உயற்சி உங்கள் கடும் உழைப்பால் மட்டுமே கிடைக்கும்.

(கோள்சாரச்சனி 35 பரல்கள் உள்ள ராசியில் சஞ்சாரம் செய்யும் காலங்களில் ஜாதகனுக்குப் பல நன்மைகளைச் செய்வார். தன்னுடைய சுயவர்க்கத்தில் அவர் வலிமை இழந்து காணப்படுவதால், அந்த நன்மையின் அளவுகள் குறையலாம். மற்றபடி பெரிய பதிப்பு ஒன்றும் இருக்காது. அடுத்த பெயர்ச்சியில் இருப்பதைவிட 6 பரல்கள் குறைவாக உள்ளதால், அங்கே சஞ்சரிக்கும் காலத்தில் பொருள்/பண விரையத்தை ஏற்படுத்துவார். அப்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். முக்கியமாகக் கொடுக்கல் வாங்கல் மற்றும் நண்பர்களுக்கு ஜாமீன் கையெழுத்துப்போடும் விவகாரங்கள், கூட்டுத்தொழில் போன்ற செயல்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!)

2. இரண்டாவது சந்தேகம் பொதுவானது ,ராசியில் கிரகங்களின்
அமைப்பை வைத்து பார்க்கும் போது சில கிரகங்கள் நன்மையான
இடத்திலும் சில கிரகங்கள் பகை வீட்டிலும் இருந்தாலும் ,அம்சத்தில்
அவை நல்ல அமைப்பில் மாறிஇருக்கும் பட்சத்தில் மொத்தத்தில்
எல்லாமே நல்ல அமைப்பில் உள்ளதுபோல தோன்றுமே இதை
எப்படி எடுத்துக்கொள்வது (ie ; the four planet is in good positin in rasi
other five are good in amsa means is it worth to take this kind of consideration
which seems to be good for the person )
தங்கள் மாணவன்
கணேசன்

அம்சத்தில் நன்றாக இருந்தால் நல்லதுதானே? எதற்காகத் தோன்ற வேண்டும்? நல்லது நடக்கும். நன்மைகள் கிடைக்கும். அருகில் சோழீஸ்வரர் இருக்கையில் கவலை எதற்கு?
--------------------------------------------------------
email.No.95
ஜெய்

வணக்கம் வாத்தியரே
1.ஒரு ஜாதகத்தில் எதனை குழந்தைகள் என்று எப்படி கண்டு பிடிப்பது?

25.1.2010 அன்று, பாடம் எண் 18ல் மின்னஞ்சல் எண் 75ற்கான பதில்தான் உங்களுக்கும் உரிய பதில். அதைப் படித்து அறிந்து கொள்ளுங்கள்!

2.ஜாதகத்தில் மறுமணம் செய்ய செய்யகூடிய வருடத்தை எப்படி கணிப்பது?
அன்பு மாணவன்
ஜெய்

வருடத்தை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தால் வயதாகிவிடும். முதல் மணம் முறிந்து போனதற்கு சம்பந்தப்பட்ட ஆசாமி, நீதிமன்றத்தில் விவாகரத்துத் தீர்ப்பை வாங்கி வைத்துள்ளாரா என்று கேளுங்கள்.
வாங்கி வைத்திருக்கிறார் என்றால், மறுமணம் செய்துகொள்ள ஒரு பெண்ணைத் தேடிப் பிடிக்கச் சொல்லுங்கள் (இன்றைய சூழ்நிலையில் மறுமணத்திற்குப் புதுப்பெண் கிடைப்பது கஷ்டம். ஆகவே அவரைப் போலவே
விவாகரத்தான ஒரு பெண்ணை மணந்து கொள்வாரா என்று கேளுங்கள்). அவர் சம்மதம் என்று சொன்னால், அந்த அம்மணியும் சரியென்று சொன்னால், எதையும் பார்க்க வேண்டாம். உடனே திருமணத்தை நடத்திவிடுங்கள்!.

ராசிச் சக்கரத்தில் ஏழாம் அதிபதி 12ல் போய் (அதாவது விரைய ஸ்தானத்தில்) உட்கார்ந்திருந்தால், முதல் திருமணம் பெரும்பாலும் ஊற்றிக்கொண்டுவிடும். நவாம்சத்தில் ஏழாம் அதிபதி நன்றாக இருந்தால் (That is free from afflictions) மறுமண வாய்ப்பு உண்டு!
++++++++++++++++++++++++++++++++++++++++++++
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்



வாழ்க வளமுடன்!

29.1.10

Doubt: அடித்துத் துவைத்து அலசுவது எப்படி?

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Doubt: அடித்துத் துவைத்து அலசுவது எப்படி?

Doubts: கேள்வி பதில் பகுதி 22

நீங்களும் உங்கள் சந்தேகங்களும் - பாடம் எண் இருபத்திரெண்டு!

Question & answer session
கேள்வி பதில் வகுப்பு
----------------------------------------------------
email.No.86
செந்தில் குமார்

Dear Sir,
I thank you for teaching astrology lessons for all. I have some basic astrology knowledge now. I have some doubts kindly clear the doubts.

1. Sir, when a graha utcham in amsam that graham has full power even that is in enemy house in rasi right sir.

செவ்வாய் சனிவீட்டில்தான் உச்சமடைகிறார். அது அவருக்குப் பகை வீடுதான். இருந்தாலும் உச்சமானதற்கான பலனைத் தன் தசா/புத்திகளில் ஜாதகனுக்கு அவர் தருவார். அதுபோல உச்சமான மற் கிரகங்களும் தரும். கவலை எதற்கு?

2. My doubt is when graham has parivarthanai yogam only in amsam that is 3 and 11th graham that is sevvai in 3rd house and suriyan in 11th house and 4th and 7th graham that is guru in 4th house and bhutan in sevanth house in amsam for muthunam lagnam is it has power sir and will they do good things in their dasas.Kindly clear my doubts.
Best Regards,
R.Senthilkumar.

அம்சம் என்றால் என்ன என்று நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள். Navamsam is the magnified version of a Rasi Chart பரிவர்த்தனை பெற்றதற்கான பலன்கள் சம்பந்தப்பட்ட கிரகங்களின் தசா புத்திகளில் நிச்சயம் கிடைக்கும்!
---------------------------------------------------------------------
email.No.87
சரவண குமார்
Dear Sir,

1. I read in our lessons if Mandhi present in 11th place, That is good. If Guru also Joined with Madhi in 11th, is that good for the native?(11=Kumbam)
Thanks
Saravana

இரண்டு லாட்டரிகள் ஒரே சமயத்தில் அடித்தது என்று வைத்துக் கொள்ளுங்கள். 11ஆம் வீடு கும்பம் என்றால் லக்கினம் மேஷம்.
மேஷத்திற்கு குரு பாக்கியாதிபதி. அவர் 11ல் (லாபத்தில்) அமர்வது நல்லதுதான்!
------------------------------------------------------
email.No.88
ரவிச்சந்திரன்

Respected Sir,

I humbly request u to calarify one of my doubt.
Both Bride and Bridegroom are affected by Kala Sharpa Dhosa in their own
horoscope each and finished that period as per Lagna Astawarga paral.(Age 27
bride and 31 bride groom) before marriage. In Both horoscope, Ragu is in 5th
house. Can both do marry or not?
will ragu not affect puthra dhosa when kala sarpa dhosa period completed?
I am awaiting for ur precious answer.

இருவருக்கும் ஐந்தில் ராகு இருப்பதால், நட்சத்திரங்களை வைத்து
மகேந்திரப் பொருத்தம் உள்ளதா என்று பாருங்கள். அதோடு இருவருக்கும், ஐந்தாம் வீடு, அதன் அதிபதி இருக்கும் வீடு, காரகன் குரு இருக்கும் வீடு
ஆகிய வீடுகளில் அஷ்டகவர்க்கப்பரல்கள் 28ற்குமேல் இருக்கிறதா
என்றும் பாருங்கள்
------------------------------------------------------------------
email.No.89
சந்திரசேகரன் கருணாகரன்

Respected sir,

I have one doubt, For kumba lagnam simma rasi, if Bhudhan is in kanni with suriyan.
But bhudhan is in vakram and vargothamam, If it is so what will be effect for the person in studies and carrier development. waiting for your positive reply
chandrasekarn

கல்விக்குப் பார்க்க வேண்டிய இடம் 4ஆம் வீடு. 4ஆம் வீட்டின் வலிமை,
அதன் அஷ்டகவர்க்கப்பரல்கள், அதன் அதிபதியின் வலிமை, அந்த வீடு
பெறும் பார்வைகள், அதன் அதிபதியுடன் சேர்ந்திருக்கும் கிரகங்கள், அம்சத்தில் அவருடைய நிலைமை, அஷ்டகவர்க்கத்தில் அவருடைய சுய வர்க்கப்பரல்கள் என்பதோடு, வித்யா காரகன் புதனையும் பார்க்க வேண்டும். புதன் எட்டில் இருந்தாலும், உச்சமாக இருப்பதுடன், வர்கோத்தமும் பெற்றிருக்கிறார். புதன் வக்கிரம் அடைந்ததை மட்டும் பார்த்திருக்கிறீர்கள். அவருடைய சுயவர்க்கப் பரல்களையும் பாருங்கள். சும்மா அலசினால், போதாது. நன்றாகக் கல்லில் அடித்துத் துவைத்து அலச வேண்டும்.
அடித்துத் துவைத்து அலசுவது எப்படி என்று முன்பே சொல்லிக் கொடுத்திருக்கிறேன். முதலில் பழைய பாடங்களை நன்றாகப் படியுங்கள்.
--------------------------------------------------------
email.No.90
R.ஹரிகரன்

ஐயா,
அய்யா லக்னத்தில் மாந்தி உடன் சந்திரன் உள்ளது. இதன் பலன் என்ன தயவு செய்து விளக்கவும்.

என்னுடன் என் மாமா இருக்கிறார். என்ன நடக்கும் சொல்லுங்கள் என்பதைப் போல உள்ளது உங்கள் கேள்வி. மாமா என்றால் தாய் மாமாவா. பெண்ணைக் கொடுத்தவகையில் மாமாவா அல்லது வேறு வகையில் மாமாவா?
உங்களுக்கும் அவருக்கும் எந்த விதத்தில் உறவு? ஏதாவது கொடுக்கல் வாங்கள் உள்ளதா? உங்களின் பெற்றோர்கள் எங்கே இருக்கிறார்கள்? உங்களின் தகுதி என்ன? என்று பல விஷயங்கள் தெரிய வேண்டாமா?
தெரியாமல் எதைச் சொல்வது?

லக்கினம் என்று எழுதினீர்களே? என்ன லக்கினம்? லக்கினாதிபதி எங்கே இருக்கிறார்? சந்திரன் உச்சமான நிலையில் உள்ளாரா? அல்லது நீசமாகிப் படுத்திருக்கிறா? என்பதை எல்லாம் சொன்னீர்களா? சொல்ல வேண்டாமா?

பொதுப்பலனாகச் சொன்னால், சந்திரன் மனகாரகன் (authority for mind) அவருடன், தீய கிரகங்கள் ஒன்றாக இருப்பது நல்லதல்ல! மன உளைச்சல் இருக்கும். எந்த அளவு அந்த உளைச்சல் இருக்கும் என்பது ஜாதகத்தின்
மற்ற அம்சங்களை வைத்து மாறுபடும்.

நீதிமன்றத்தில் ஒரு வழக்கைப் பதிவு செய்யும் முன்பு, வழக்கு
சம்பந்தப்பட்ட ஆதாரங்கள் (supporting documents) எல்லாம் சரியாக
உள்ளதா என்று பார்க்காமல் இருப்போமா? அதுபோல ஒரு
கேள்வியைக் கேட்குமுன்பு, அது சம்பந்தப்பட்ட விஷயங்களைச்
சொல்லிக் கேள்வியைக் கேட்பதுதான் முறையான செயல் ஆகும்!
புரிகிறதா நண்பரே?
++++++++++++++++++++++++++++++++++++++++++++
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்



வாழ்க வளமுடன்!

28.1.10

Doubt: அனுஷ்காசர்மா போன்ற பெண் அமைய என்ன வேண்டும்?

+++++++++++++++++++++++++++++++++++++++++++++
Doubt: அனுஷ்காசர்மா போன்ற பெண் அமைய என்ன வேண்டும்?

Doubts: கேள்வி பதில் பகுதி 21

நீங்களும் உங்கள் சந்தேகங்களும் - பாடம் எண் இருபத்தொன்று!

Question & answer session
கேள்வி பதில் வகுப்பு
----------------------------------------------------
email.No.82
R.விஜய். ஈரோடு

ஐயா கேள்வி பதில் பதிவிற்கு நன்றி..
ஷட் பலனின்படி புதன் பலஹீனமாக உள்ளது.. புதனின் அருளை பெற என்ன வழிகள்? புதனுகென்று சிறப்பு வழிபாடு ஏதேனும் உள்ளதா?
நன்றி,
vijay,Erode.

புதன் என்று இல்லை, எந்தக் கிரகம் வலிமை இழந்து இருந்தாலும், நன்மைபெற கோளறு திருப்பதிகத்தைப் பாராயணம் செய்ய வேண்டும்.
அதை பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, திருஞானசம்பந்த சுவாமிகள் அருளினார். அந்தப் பாடலுக்கான சுட்டி (Link) இங்கே உள்ளது
---------------------------------------------------------------------
email.No.83
அருள் பிரகாஷ் முத்து

ஆசிரியர் அவர்களுக்கு,

1.கணவன்,மனைவி பிரிந்து வாழும் காலத்தையும் திரும்ப சேர்ந்து வாழும் காலத்தையும் எவ்வாறு கண்டறிவது?

இருவரின் ஜாதகத்திலும் இரண்டாம் வீட்டில் (அதாவது குடும்ப ஸ்தானத்தில்) தீய கிரகங்கள் டென்ட் அடித்து அமர்ந்திருந்தால், அந்த கிரகத்தின் தசா/புத்தியில், வேலை காரணமாக அல்லது மன உளைச்சல் காரணமாக
ஒருவரை ஒருவர் பிரிந்திருக்க நேரிடும். அல்லது ஒரே வீட்டில் இருவரும் இருந்தாலும், அந்நியோன்யம் அல்லது பேச்சு வார்த்தை இல்லாமலிருக்க நேரிடும்.

2.தசாநாதன்/புத்திநாதன் ராகு அல்லது கேது ஆக இருந்தால் நல்ல தசை புத்தியை எவ்வாறு அட்டவணை இல்லாமல் சுலபமாக கண்டறிவது?

குழப்புகிறீர்களே சுவாமி! தசாநாதன்/புத்திநாதன் ராகு அல்லது கேது என்று சொல்லிவிட்டு, நல்ல தசை என்று எதைக் கேட்கிறீர்கள்? சுலபமாகக் கண்டறிவதற்கு ஒருவழிதான் உள்ளது. உள்ளூரில் நல்ல ஜோதிடராகப்
பார்த்துக் கேட்க வேண்டியதைக் கேளுங்கள்
--------------------------------------------------------
email.No.84
அருள் முருகன்

Sir

Generally speaking for a person with dhanus lagna having guru and mandhi in lagnam, sani in 11'th house, will the person be egoistic, get angry for silly reasons, expect lots of respect(than normal human being) eventhough he may be a very honest, kind and principled person due to sani's aspect(paarvai) on lagnam ?
with regards,
Arul Murugan

சனி பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. லக்கினத்தில் மாந்தி இருந்தாலே குணக் கேட்டைக் கொடுப்பான்.
------------------------------------------------------------------
email.No.85
சு.தேவராஜன்

ஐயா அவர்களுக்கு,
வணக்கம்.
எனக்கு ஒரு ஐயம்.

1. எனது நண்பன் ஜாதகத்தில் திருக்கணித முறைப்படி ஏழாம் வீட்டு அதிபதி செவ்வாய்.வாக்கிய முறைப்படி ஏழாம் வீட்டு அதிபதி குரு.இவர்கள் இருவரும் ராகுவுடன் சேர்ந்து சிம்ம வீட்டில் இருகின்றார்கள்.சிம்ம வீட்டை கேது பார்க்கிறான் . மகரம் வீட்டில் சுக்கிரன் இருக்கிறான். இந்த ஜாதகருக்கு திருமணம் நடைபெறுமா?.மனைவி எப்படி அமையும். அவர் மீன ராசி. எனக்கு விளக்கம் கூறுங்கள் ஐயா.
உங்கள் அன்பு மாணவன்
சு.தேவராஜன்

”இரட்டை மாட்டு வண்டி. இரண்டு மாடுகளையும் இடது, வலது என்று பூட்டாமல், ஒரு பக்கமாகவே கட்டியிருக்கிறார்கள். இரண்டும் சம வலிமையுள்ள மாடுகள் அல்ல. இரண்டில் ஒன்று மாடு, மற்றொன்று
கன்றுக்குட்டி. வண்டியில் உள்ள இரண்டு சக்கரங்களில் ஒரு சக்கரத்திற்கு அச்சாணி இல்லை. மாட்டிற்குத் தீவனம் வைத்து இரண்டு நாட்களாகிறது. கன்றுக்குட்டியின் பசியளவு தெரியவில்லை. வண்டியோட்டி புது ரெக்ரூட். வண்டியில் அமரும் இடமெல்லாம் ஆட்டம் கண்டதால் கயிறுபோட்டுக் கட்டப்பட்டுள்ளது. பயணத்தின் தூரம் 100 கிலோ மீட்டர். பயணம் எப்படி இருக்கும்? எப்போது ஊருக்குப் போய்ச் சேருவோம்?” என்று கேட்பதைப் போல உள்ளது உங்கள் கேள்வி.

திருமணத்தைப்பற்றித் தெரிந்து கொள்ள முறைப்படி ஜாதகத்தை அலச வேண்டும். அதற்கு முழு ஜாதகம் வேண்டும். அல்லது முழுப் பிறப்பு விவரங்கள் வேண்டும்.

ஜாதகன் 32 வயதைத் தாண்டியவன் என்றால், ஏன் அதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை என்பதும் அவன் தகுதியும் தெரிய வேண்டும் (அதையும் ஜாதகத்தில் அலசலாமே என்றால், ஜாதகத்தின் 12 வீடுகளையும்
அலச வேண்டும். அதற்கு ஜோதிடருக்கு நேரம் இருக்காது. அதனால், அதற்கு உரிய கதைச் சுருக்கத்தை நாம்தான் அவரிடம் கொடுக்க வேண்டும்)

அஜீத் போன்ற தோற்றத்தையும், அண்ணா நகரில் பெரிய பங்களாவையும், முதுகலைப் பட்டத்தையும், மாதம் இரண்டு லட்ச ரூபாய் வருமானத்தையும் உடைய ஜாதகன், அனுஷ்கா சர்மா போன்ற பெண்ணைத் தேடி மணந்து
கொள்ளலாம். தி.நகரில் பெட்டிக்கடை வைத்திருக்கும் இளைஞன், தன் தகுதிக்குக் காந்திமதி போன்ற பெண்ணைத்தான் தேடவேண்டும். எல்லா அம்சமும் பொருந்திய மனைவி கிடைக்க ஜாதகனுக்குத் தகுதி வேண்டாமா?.

லக்கினத்தை விட ஏழாம் வீட்டில் அதிகப் பரல்களும், ஏழாம் அதிபதி மற்றும் சுக்கிரனின் சுயவர்க்கப்பரல்கள் 5 அல்லது அதற்கு மேற்பட்டும் இருந்தால், விரும்பியபடி மனைவி அமைவாள். அது மூன்றும் இல்லாவிட்டால் கிடைக்கிற பெண்ண மணந்து கொண்டு, மனதையும் தேற்றிக் கொண்டு, வருகிறவளுக்கு அல்லது கிடைக்கிறவளுக்குத் தகுதியான கணவனாக நாம்தான் இருக்கவேண்டும்! புரிகிறதா நண்பரே?
--------------------------------------------------------
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்



வாழ்க வளமுடன்!

27.1.10

Doubt: எது நம்பிக்கைக்கு உரியது - வாக்கியமா? திருக்கணிதமா?

அங்கும் இங்கும் அலைபோலே - தினம்
ஆடிடும் மானிட வாழ்விலே
எங்கே நடக்கும் எது நடக்கும் - அது
எங்கே முடியும் யாரறிவார்!
-- கவியரசர் கண்ணதாசன்!
============================================
Doubt: எது நம்பிக்கைக்கு உரியது - வாக்கியமா? திருக்கணிதமா?

Doubts: கேள்வி பதில் பகுதி 20

நீங்களும் உங்கள் சந்தேகங்களும் - பாடம் எண் இருபது!

Question & answer session
கேள்வி பதில் வகுப்பு
----------------------------------------------------
email.No.81

அருள் முருகன்,
தஞ்சையில் உள்ள சாஸ்த்ரா பல்கலைகழகத்தில்
ஜோதிடம் பயின்று கொண்டிருக்கும் மாணவர்
(ஒரு நல்ல கேள்வியைக் கேட்டு, என்னை விரிவாகப் பதில் எழுத வைத்தமைக்கு, அவருக்கு முதற்கண் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்!)

கேள்வி:
Sir, why so many conflicts and changes in your opinion within two years?
In the beggining stages of lessons, you told that thirukanitha panchanga is the right one by citing an example of horoscope of a child born in chennai. Later on you said to cast horoscopes by both the methods, and take vakiya panchanga if the lagna changes or else take thirukanitha. To my surprise in an answer given three days ago, you have told that for casting horoscopes vaakiya is only right one, thirukanitha is suitable only for mathematical calculations, why so many contradictions? As I am going to seriously pursue diploma course offered by Sastra University, Tanjore in Astrology I am really confused and surprised by the statements. My intention is not to blame you or find fault. But I tell openly what I feel, as in my horoscope Guru is in dhanus lagna. ( 15.07.1984, 5:20 pm, madurai).

நீங்கள் சொல்வது உண்மை. துவக்க காலங்களில், வகுப்பறையில், மாணவக் கண்மணிகளுக்கு, திருக்கணிதத்தைப் பயன்படுத்த அறிவுரை சொல்லியிருக்கிறேன். பிறகு, மாணவர்கள் எண்ணிக்கை
அதிகமாகி, உள்ளே நுழைந்தவர்களில் பலபேர்கள், தங்கள் வீடுகளில்
தங்கள் பெற்றோர்கள் எழுதிவைத்திருக்கும் ஜாதகத்திற்கும்,
கணினியில் கணிக்கும் ஜாதகத்திற்கும் லக்கினம் வித்தியாசமாக
இருக்கிறதே என்று கூறிய போது, நிலைமையை உணர்ந்தேன்.

அதாவது 1990ஆம் ஆண்டிற்கு முன்பாக எழுதப்பெற்ற ஜாதகங்கள் அனைத்தும் பொதுவாக வாக்கியமுறைப்படிதான் எழுதப்பெற்றிருக்கும். தமிழ்நாட்டு ஜோதிடர்கள் தங்களுக்கு வழிவழியாக வந்த வாக்கியப் பஞ்சாங்கத்தை வைத்துக் கணித்துத்தான் எழுதியிருப்பார்கள். இன்றும் எழுதுவார்கள்.
அதனால் கணினியில் கணிக்கும்போது சிலருக்கு (எல்லோருக்கும் அல்ல) லக்கினம் வித்தியாசப்படும்

யார் அந்த சிலர்?

ஒரு லக்கினத்திற்கு 30 பாகைகள் - காலம் சுமார் 120 நிமிடங்கள் - 2.25 நட்சத்திரங்கள் - 9 நட்சத்திரப்பாகைகள்.

லக்கினத்தின் கடைசி நட்சத்திரப்பாகையின் பின் பகுதியில், அதாவது அந்த லக்கினத்தின் முடிவில் பிறக்கும் ஜாதகக் காரர்களுக்கு, லக்கினம் மாறிவிடும். திருக்கணிதத்தில் கடக லக்கினம் என்பது, வாக்கியத்தில் சிம்ம லக்கினம் என்று மாறிக்காட்சியளிக்கும்.

அதற்குக் காரணம் திருக்கணிதத்திற்கும், வாக்கியத்திற்கும் உள்ள பாகை வித்தியாசம் 1 பாகை 57 விநாடிகள். மணியில் சொல்வதென்றால் 6 நிமிடமும் 28 விநாடிகளும் ஆகும். நட்சத்திரத்தின் அளவு 13.3 பாகைகள் அதை 4ஆல் வகுத்தால் ஒரு பாகையின் அளவு 3.33 பாகைகள். மணியில் சொன்னால் 120 நிமிடங்கள் வகுத்தல் 9 பாதங்கள் = 13.33 நிமிடங்கள்.

அதனால் கடைசிப் பாதத்தின் பின் பகுதியில் (அதாவது காலசந்தியில்) பிறந்த ஜாதகனுக்கு, இரண்டு முறைகளிலும் கணித்துப் பார்த்தால் மேலே கூறியுள்ளபடி லக்கினம் மாறியிருக்கும். இது எல்லாக் கால சந்திப் பிறப்புக்களுக்கும் உள்ள பிரச்சினை!

அதற்கு என்ன தீர்வு?

காலசந்திப்புப் பிறப்புக்களுக்கு, இரண்டு லக்கினங்களின் குணங்களும் இருக்கும். கேரளா - தமிழ்நாடு எல்லையில் உள்ள மக்கள் இரண்டு மாநில மொழிகளையும் சரளமாகப் பேசுவார்கள். இரண்டு மாநிலக் கலாச்சாரங்களும் அவர்கள் வாழ்க்கையில் கலந்திருக்கும். அதுபோலத்தான் இதுவும்.

அதனால் காலசந்திப்பில் பிறந்தவர்கள், அந்த இரண்டில் எந்த முறையை வேண்டுமென்றாலும் பின்பற்றலாம். பெரிய வித்தியாசம் இருக்காது.
-------------------------------------------------------------------
சரி, எந்தமுறை சரியானது?

அது பற்றி பெரிய யுத்தம் நடத்தும் அளவிற்கு இரண்டு முறைகளுக்குமே ஆதரவாளர்கள் இருக்கிறார்கள்.

முதலில் திருக்கணிதத்திற்கும் (Lahiri Ayanamsa), வாக்கியத்திற்கும் (Raman's Ayanamsa) உள்ள வேறுபாட்டைப் பார்ப்போம்

Lahiri Ayanamsa.its value is 23 degrees, 51 minutes, 10 seconds.
Raman's Ayanamsa its value is 22 degrees, 24 minutes, 44 seconds.
Diffrence 1 degree, 27 minutes

இந்த வித்தியாசத்தின் காரணமாக நட்சத்திரத்தின் ஒரு பாதத்தில் பதிப்பாகம் வித்தியாசம் இருக்கும். ஒரு ராசியில் உள்ள ஒன்பது பாதங்களில் கடைசி பாதத்தில் பிறந்த ஜாதகனின் நட்சத்திரப்பாதம் (உதாரணத்திற்கு) லஹிரியில் சிம்ம லக்கினம் (உத்திரம் ஒன்றாம் பாதம்) என்றும், ராமன் முறையில் கன்னி லக்கினம் (உத்திரம் 2ம் பாதமாகவும்) என்றும் இருக்கும்.

ஜாதகன் குழம்பிப்போவான். தான் சிம்ம லக்கின ஜாதகனா? அல்லது கன்னி லக்கின ஜாதகனா என்று குழம்பிப்போவான். கால சந்திப்பில் (அதாவது லக்கின சந்திப்பில்) பிறந்த ஜாதகர்களுக்கு இந்தக் குழப்பம் இருக்கும்.

அதேபோல ராசி சந்திப்பில் உள்ள, புதன், சுக்கிரன் போன்ற கிரகங்களும் இடம் மாறி (ராசி மாறி) உட்கார்ந்து நம் கழுத்தை அறுக்கும்!

என்னுடைய ஜாதகத்தில் அந்தக் குழப்பம் உண்டு. நான் காலசந்திப்பில் பிறந்தவன். லஹிரி (திருக்கணித) முறையில் என்னுடைய லக்கினம் கடகம் என்று வரும். வாக்கிய முறையில் (ராமன் அயனாம்சப்படி) சிம்மம் என்று வரும்.

என் அன்னைவழிப் பாட்டனார், அந்தக் காலத்தில் மிகவும் பிரபலமான அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் என்னும் பிரபல ஜோதிடரிடம், எங்கள் ஜாதகத்தை எல்லாம் கணித்து எழுதிவைத்துள்ளார். அதில் சிம்ம லக்கினம் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. 1982ஆம் ஆண்டு பெங்களூர் வெங்கட்ராமன் (அவர்தான் இந்த ராமன் அயனாம்சத்தின் நந்தை என்று பகழப்படுபவர். இந்தியாவின் முதல் நிலை ஜோதிடராகத் திகழ்ந்தவர்) அவர்களுக்கு என்னுடைய பிறப்பு விவரங்களை அனுப்பி ஜாதகத்தை எழுதி வாங்கினேன்.(பணம் அனுப்பித்தான் சுவாமி)

அதுவும் என்னுடைய பாட்டனார் எழுதி வைத்துள்ள ஜாதகமும் (மிகத் துள்ளியமாகச்) சரியாக இருந்தது. பின்னால்தான் தெரிந்தது. அவர் இந்தியாவின் புராதன ஜோதிட முறையான வாக்கியப் பஞ்சாங்கத்தைத்தான் உபயோகிக்கிறார் என்று! அதனால் முழு நம்பிக்கையுடன் நானும் அதைத்தான் உபயோகித்து வருகிறேன். எனக்கு என்னுடைய லக்கினத்தின்படி பலன்களும் சரியாக உள்ளன! (அதானால் அந்த நம்பிக்கை பலமடங்கு கூடிவிட்டது)

என்னைப் பொறுத்தவரை, அவர்தான் அற்புதமான ஜோதிட ஞானம் உடைவராகத் திகழ்ந்தவர். விற்பன்னர். ஜோதிடத்தின் காரகராகப் போற்றப்பெற்றவர் (authority of vedic astrology). எனக்குத் தெரிந்து, தமிழ் நாட்டிலுள்ள அத்தனை ஜோதிடர்களும் வாக்கியப் பஞ்சாங்கத்தைத்தான் உபயோகிக்கின்றார்கள்.

இந்தக் கணினியில் ஜோதிடம் கணிக்கும் முறைகள் எல்லாம் 1990ஆம் ஆண்டிற்குப் பிறகுதான் நமது பிரதேசத்திற்குள் அடியெடுத்து வைத்தது.

ஆகவே அதற்கு முன்பாகப் (அதாவது 1990ற்கு முன்பாகப்) பிறந்தவர்கள் அனைவருடைய ஜாதகங்களும் வாக்கிய முறையிலேயே கணிக்கப் பெற்றதாக இருக்கும்.

கணினி ஜாதகத்தில் உள்ள option தெரியாமல், திருக்கணிதத்தில் கணித்துவிட்டு, பல இளைஞர்கள் என்னிடம் லக்கினம் மற்றும் கிரக அமைப்புக்கள், தங்கள் பெற்றோர்கள் கணித்து அல்லது எழுதி வைத்துள்ளதுபோல இல்லையே எனும்போது, நான் அவர்களுக்கு, உங்கள் பெற்றோர் எழுதிவைத்துள்ளதையே உபயோகியுங்கள் என்று சொல்வேன்.

ஆனால், தற்சமயம் உள்ள கணினி மென்பொருட்களில், வாக்கிய முறைகளிலும் கணிக்கும் வசதி வந்துவிட்டதால், அனைவருக்கும் அதன்படியே கணிக்கும்படி பரிந்துரைக்கிறேன்.

வாக்கிய முறைப் பஞ்சாங்கம் நூற்றுக் கணக்கான ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. முனிவர்களால் உருவாக்கப்பெற்றது. அதை நீங்கள் அனைவரும் நம்பலாம். திருக்கணிதத்தை மறந்துவிட்டு, நீங்கள் அனைவரும், வாக்கிய முறையில் உங்கள் ஜாதகத்தைக் கணித்து/எழுதி வைத்துக் கொள்வது நல்லது!

இந்த இரண்டு முறைகளுக்கும் உள்ள வித்தியாசம் சுமார் ஆறரை நிமிடங்கள் மட்டுமே எனும்போதும், நமது வீடுகளில் அந்தக் காலத்தில் இருந்த கடிகாரங்களை நம்பி அவர்கள் பிறந்த நேரத்தைக் குறித்துவைத்தார்கள் - அது 5 நிமிடங்கள் முன் பின்னாக நேரத்தைக் காட்டவில்லை என்பதற்கு ஆதாரம் இல்லாததாலும், நான் அலட்டிக்கொள்ளாமல், இரண்டு முறைகளுக்குமே கொடிகாட்டி வருகிறேன்.

ஆகவே பழைய பிறப்புக்களுக்கு, அவரவர் விருப்பப்படி எதை வேண்டு மென்றாலும் உபயோகியுங்கள். சராசரியாக 9 பேர்களில் ஒருவர்தான் காலசந்திப்பில் பிறந்திருப்பார். அவருக்கு மட்டும்
இரண்டு மனைவிகள். அதாவது இரண்டு லக்கினங்கள்:-))))))
-----------------------------------------------------------
சில இடங்களில் வேஷ்டியுடன் செல்வது உபயோகமாக இருக்கும். சில இடங்களில் கால்சட்டையுடன் (pant)செல்வது உபயோகமாக இருக்கும். நீங்கள் ஒரு சமயம் வேஷ்டி அணிந்து கொள்கிறீர்கள், ஒரு சமயம் கால் சட்டை அணிந்து கொள்கிறீர்கள் என்று கேட்டால் நான் என்ன சொல்ல முடியும்? ஒரே வரியில், என் வசதிக்காக அணிந்து கொள்கிறேன் என்றுதான் சொல்ல முடியும். தேவகோட்டையில் வேஷ்டிதான் செளகரியமான ஆடை. கோவையில் கால்சட்டைதான் செளகரியமான ஆடை.

இந்த இரட்டைமுறை கணிக்கும் வசதி ஆரம்பகால மென்பொருட்களில் இல்லாததால், நான் கணினி ஜாதகங்களுக்கு திருக்கணிதத்தை சிபாரிசு செய்தேன். இப்போது வந்துவிட்டதால், குழப்பம் இல்லாமல் இருக்க வாக்கியமுறையையைச் சிபாரிசு செய்கிறேன்.

விளக்கம் போதுமா அன்பரே?
----------------------------------------------------------------------
உபரித் தகவல்கள்:

கணிதம், வானவியல், ஜோதிடம் ஆகிய மூன்றும் இந்தியாவில் இருந்துதான் மற்ற நாடுகளுக்குப் பரவியது. நமது நாட்டிற்கு முற்காலத்தில் வணிகத்திற்காக வந்த கிரேக்கர்கள் மற்றும் சீனர்கள் மூலமாகப் பரவியது.

நமது ஜோதிடம் வேதகாலத்தில் உருவானது. அதை Indian Vedic Astrology என்பார்கள். நமது ஜோதிடமுறை சந்திரனையும், அதன் சுற்றுப்பாதையில் உள்ள நட்சத்திரங்களையும் அடிப்படையாகக் கொண்டது. நமது முறைக்கு Sidereal astrology என்று பெயர்.

மேலை நாட்டவர்களின் ஜோதிடம் சூரியனின் எழுச்சியை அடைப்படையாகக் கொண்டது. அதை அவர்கள் Sun Signs என்பார்கள். அவர்களுடைய முறைக்கு Tropical astrology என்று பெயர்.

The difference between the Tropical ( Western ) & The Sidereal ( Indian ) Zodiacs is round about 23 degrees this year. Sidereal Astrology is based on the immovable Zodiac- the Sidereal Zodiac - and Western Tropical Astrology is based on the Tropical Zodiac which is movable.

Jyotish (Sanskrit meaning “Science of Light”), is based on the Sidereal, or Nirayana, zodiac, which is fixed in relation to the stars, as opposed to the symbolic Tropical, or Sayana, zodiac, which is based on the Vernal, or Spring, Equinox. The difference between the two zodiacs lies in the ayanamsa, the difference in degrees and minutes between 0° Aries in the sidereal zodiac, and the Vernal Equinox. Since the earth's rotational axis moves slowly in a circular, or “precessional,” motion, the Vernal Equinox, the point where the Sun crosses the celestial equator each year, moving from south declination to north declination, never quite returns to its starting place.
---------------------------------------------------------------------------------------------

Unlike Western astrology that is based on the Tropical zodiac, the Vedic system of astrology (jyotish) employs the Sidereal (or true) position of the planets. The difference between the two, due to the precession of equinox, is called the "Ayanamsa".

However the apparent position of the planets (including Sun) in relation to the constellations is subject to this precession of the equinox which, basically, is the earth's slight backward movement through the constellations (aprox. 50.25 seconds per year) as it wobbles on it's axis.

There are several different Ayanamsa in use today but the one most widely used by traditional astrologers is the Lahiri ayanamsa which is sanctioned by the Indian government. This puts the degree of precession for (Oct) 2002 at approximately 23:53:26.

இந்த லஹிரி அயனாம்சம் என்பதைத்தான் நாம் திருக்கணிதம் என்கிறோம். கணினிகளில் இதன் முறைப்படி கணிப்பதற்கு option கொடுக்கப்பட்டிருக்கும். வாக்கியம் என்பது இதற்கெல்லாம் முற்பட்டது. காலம் காலமாக நாம் பாவிப்பது (உபயோகிப்பது)
---------------------------------------------------------------------------------
URL for ayanamsa calculation
---------------------------------------------------------------------
கணினி மென் பொருட்களில் இரண்டு முறைகளுக்கும் உள்ள வசதியைக் (option) காட்டும் படங்கள் கீழே உள்ளன. படஙகளின் மீது கர்சரை வைத்து அழுத்தினால், படங்கள் பெரிதாகத் தெரியும்!


1. லஹரி முறை (அதாவது திருக்கணித முறை)

2. ராமன் அயனாம்ச முறை (வாக்கிய முறை)

3. அயனாம்சத்தைக் கண்க்கிட உதவும் தளம்

4. ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பிறந்த ஜாதகத்திற்கு லஹரி மற்றும் வாக்கிய முறையில் கணிக்கப்பெற்ற ஜாதகத்தின் கிரக பாதாச்சாரங்கள் (லக்கினத்தைக் கவனியுங்கள்) இரண்டு முறைகளுக்கும் உள்ள , கிரக பாகைகளைக் கவனியுங்கள்

அதே குறிப்பிட்ட நேரத்தில் பிறந்த ஜாதகத்திற்கு லஹரி முறையில் கணிக்கப்பெற்ற ஜாதகத்தின் ராசிச் சக்கரம் (லக்கினத்தைக் கவனியுங்கள்)

அதே குறிப்பிட்ட நேரத்தில் பிறந்த ஜாதகத்திற்கு வாக்கிய முறையில் கணிக்கப்பெற்ற ஜாதகத்தின் ராசிச் சக்கரம் (லக்கினத்தைக் கவனியுங்கள்)

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

26.1.10

Doubt: யார் உசத்தி - மனைவியா? எதிர் வீட்டுக்காரியா?


++++++++++++++++++++++++++++++++++++++++++++
Doubt: யார் உசத்தி - மனைவியா? எதிர் வீட்டுக்காரியா?

Doubts: கேள்வி பதில் பகுதி 19

நீங்களும் உங்கள் சந்தேகங்களும் - பாடம் எண் பத்தொன்பது!

Question & answer session
கேள்வி பதில் வகுப்பு
----------------------------------------------------
email.No.76
செந்தில் குமார்

Respected sir,
Sir I having one doubt kindly clear my doubt: planets : 27 Avasthas
In a day each planet does 27 avasthas. But i want to know how it can be calculated
like waking, seeing sleeping But i know it is calculated by using agasu something like that.
If you answer this question it would be great . I will we very happy
I am waiting your reply
Regards
Senthil.

நாம் இன்னும் ப்ளஸ் டூ வையே தாண்டவில்லை. அதற்குள் நீங்கள் முனைவர் பட்டம் பெறுவதற்கான பாடத்தைப் பற்றிக் கேட்டால் என்ன சொல்வது?

கிரக அவஸ்தை (condition of Planets) என்பது, கிரக வக்கிரம், கிரக யுத்தம் போன்று ஒரு தனிப்பட்ட கிரக நிலைப்பாட்டையும், அதனால் ஏற்படும் பலன்களையும் குறிக்கக்கூடிய பாடம்!.

உதாரணத்திற்கு Shayanadi Avasthasல் இருக்கும் கேது, சிலராசிகளில் செல்வத்தை அள்ளி அள்ளிக் கொடுக்கும். சில ராசிகளில், நோய் நொடிகளால் ஜாதகனை இருப்புச் சட்டியில் போட்டு வறுத்து எடுத்துவிடும்.
அதைத் துள்ளியமாகத் தெரிந்து கொள்வதற்குத்தான் அந்த கிரக அவஸ்தைகள் பயன்படும்.

1.Jagradadi Avasthas, 2 Baladi Avasthas, 3 Lajjitadi Avasthas, 4 Deeptadi Avasthas, 5 Shayanadi Avasthas என்று கிரக அவஸ்தைகள் பலவகைப்படும். அதிலும் பல உட்பிரிவுகள் உண்டு. அவற்றைப் படித்தால் தலை சுற்றல், வாந்தி, பேதி எல்லாம் வரும் (அதாவது புதிதாகப் படிப்பவர்களுக்கு)

சொல்லப்போனால், அது மேலான மேல் நிலைப் பாடம். 40 அல்லது 50 பக்கங்களுக்கு மேல் அதைப் பற்றி எழுதலாம். இப்போது நேரமில்லை. அதோடு நமது லெவலுக்கு அது தேவையுமில்லை. ஆகவே பொறுத்திருங்கள். பின்னால் சமயம் வரும்போது அது பற்றி எழுதுகிறேன்.
-------------------------------------------
email.No.77
கார்மேக ராஜா

ஐயா!
கேள்வி பதில் ஆரம்பித்ததற்கு நன்றி. என்னுடைய கேள்வி என்னவென்றால்:

1.கேந்திராதிபத்திய தோஷம் பற்றி ஒரு பாடத்தில் சிறு குறிப்பு மட்டும் கூறினீர்கள். அதனைப்பற்றி தெளிவுபடித்தவும் ஐயா! கேந்திராதிபத்திய தோஷம் எத்தனையாண்டுகள் நீடிக்கும்?

ஒரு நன்மையளிக்கும் கிரகம், கேந்திர அதிபதியாகிவிடும் நிலையில், நன்மையளிக்கும் கிரகமாக இல்லாமல் தன் நிலை மாறிவிடுவார். சுக்கிரன், குரு, புதன், தேய்பிறைச் சந்திரன் ஆகிய கிரகங்களுக்கு இத்தன்மை
உண்டு. ஒரு சுபக்கிரகம் இரண்டு கேந்திரங்களுக்கு அதிபதியாகும் நிலையில் மிகவும் தீயவர் ஆகிவிடுவார். அதைத்தான் கேந்திராதிபத்திய தோஷம் என்பார்கள். தோஷத்திற்கு உள்ளாகும் கிரகத்தின் தசா/புத்தி காலம்வரை அந்த தோஷம் நீடிக்கும்!
When a naturally benefic planet becomes the lord of a Kendra, it does not remain benefic but turns a malefic. Venus, Jupiter, mercury and waxing moon get afflicted with this Dosha in that order. When a naturally benefic planet becomes the lord of a two Kendras, it turns out to be very malefic and gets afflicted with what is known as Kendra Adhipati Dosha. If this planet is lord of the ascendant as well it will be rendered neutral and will not be a malefic as ascendant lord can never be malefic for the native. However its overall effects will depend upon its position in the horoscope.A natural benefic becoming the lord of two Kendras is possible only in four ascendants; Gemini, Virgo, Sagittarius and Pisces. In case Gemini and Virgo, mercury, the ascendant lord turns out to be a neutral while Jupiter becomes a malefic planet. In case ofSagittarius and Pisces, Jupiter becomes neutral and mercury is a malefic.However Kendra Adhipati Dosha is neutralized if the planet afflicted with it is posited in the Kendra of which it is the lord. For example, if Jupiter in Gemini is posited in the 7th house, it becomes free from this Dosha.

2.மற்றுமொரு கேள்வி: குரு இருக்கும் வீட்டுக்கு பலன் இல்லை, பார்வை பெறும் இடங்கள் மட்டுமே பலன் பெறும் என சிலர் சொல்லக் கேட்கிறேன். நிஜமா ஐயா?

கணவனால் மனைவிக்கு (வீட்டுக்குப்) பலன் இருக்காது. எதிர்த்த வீட்டுக்காரிக்குத்தான் பலன் என்று சொல்வதைப்போல உங்களது கூற்று. First benefit will come from the placement of a planet to the house where he is placed.

யார் உசத்தி - மனைவியா? எதிர் வீட்டுக்காரியா? நீங்களே சொல்லுங்கள்:-))))
------------------------------------------------
email.No.78
சந்திரசேகரம் சஞ்சீவ்காந்த்!

vanakkam sir
ragu, kethu pontra shadowy planets i ean mattra kirakankaludan serthu mukkiyathuvam tarukirarkal? athu eppothu nadaimurayil vantathu? ean avatrayum sertharkal? please itharku sariyana pathilai sollavum.
what about ragu,ketu? why astrologists give them important?

நவக்கிரகங்கள் என்பது காலம் காலமாக உள்ளது ராசா! ராகு & கேது ஆகிய இரண்டும் சாயா (நிழல்) கிரகங்கள் ஆயிற்றே - அவற்றை எப்படிச் சேர்க்கலாம்? ஏன் சேர்த்தார்கள்? என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தால் எப்படி பதில் சொல்வது? அதுவும் நீங்கள் கேட்கும் விதத்தில் சரியாக எப்படிப் பதில் சொல்வது?

நல்ல வேளை ஜோதிடத்தை யார் உருவாக்கியது? எப்படி உருவாக்கினார்கள்? உருவாக்குவதற்கு அவர்களுக்கு என்னென்ன தகுதி இருந்தது? அதைக் காலம் காலமாக மக்கள் ஏன் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்? என்றெல்லாம் கேட்காமல் விட்டீர்கள். தப்பித்தேன். நன்றி முருகா!

உச்ச நீதி மன்றத்தில் ஒரு ரிட் போட்டால், சரியான பதில் கிடைக்கலாம்! ஜோதிடத்தில் பாண்டித்யம் உள்ளவர்கள் யாராவது உதவிக்கு வந்து பதில் சொல்லலாம். என் அறிவிற்குத் தெரியவில்லை ராசா!:-)))))
------------------------------------------------------------
email.No.79
R.பிரபு

Dear Sir,

Doubt 1: For example, for Thanusu Lagna mars is paavathi pathi for 5th and 12th house. Sani is paavathi pathi for 2nd and 3rd house. If they are jointly in 8th place, can we say it is Vibareetha Raja Yogam? Both the planets having one good house and another bad house. Sorry sir. In my previous email it was written as Neesa Banga Raja Yogam.

ஒரு துஷ்ட ஸ்தானத்தின் அதிபதி, மற்றொரு துஷ்ட ஸ்தானத்தில், ஒரு துஷ்டனுடன் அமர்ந்திருந்தால் இந்த யோகம் (Vibareetha Raja Yogam) உண்டாகும். நீங்கள் சொல்லும் அமைப்பிற்கு விபரீத ராஜ யோகம் உண்டு. அதற்கான பலன்களை அவர்கள் தங்கள் தசா/புத்திகளில் தருவார்கள்!

Doubt 2: If the paavathi pathis of 9th and 10th place are jointly in 6,8 or 12 th place, is it Tharma Karmathi Pathi Yogam?


ஒன்பதாம் அதிபதி பத்தாம் வீட்டிலும், பத்தாம் அதிபதி ஒன்பதாம் வீட்டிலும் மாறி அமர்வதுதான் முதல் நிலை தர்மகர்மாதிபதி யோகம்! மற்ற அமைப்பெல்லாம் (அதாவது அந்த அதிபதிகள் இருவரும் சேர்ந்து ஜாதகத்தில் வேறு வீடுகளில் அமர்ந்திருப்பது) அதற்கு அடுத்த நிலைதான். 6,8,12 ஆம் வீடுகளில் அமர்ந்தால் அந்த யோகம் கடைசி நிலைக்கு வந்துவிடும். அதிகப் பயன் இல்லை. First Prize, Second Prize, Third Prize, Consolation Prize என்று பரிசுகளில் பலநிலைகள் உள்ளன இல்லையா? அதைப்போல என்று வைத்துக்கொள்ளுங்கள்.

The tenth house in the horoscope stands for what we do in life, and the ninth house shows what we should do in life. When the lords of these two houses meet by conjunction, mutual exchange (பரிவர்த்தனை), or mutual aspect, that planetary combination is called as Dharma Karma Adhipati Yoga.
----------------------------------------------
email.No.80
ஆதிராஜ்

வணக்கம் அய்யா,

செவ்வாய் பற்றி விளக்கத்தில் ஒரு சந்தேகம் அய்யா, செவ்வாய் ஒரு லக்னத்திற்கு யோககாரகனாக இருந்து தான் இருக்கும் இடத்தில் இருந்து தன் உச்ச வீட்டை (அந்த உச்ச வீடு லக்னதுக்கு நல்ல இடமாக இருக்கும் பட்சதில்)பார்த்தால் அந்த அமைப்பு எந்த அளவிற்கு பலன் தரும் .அது 2 ம் வீடாக இருப்பின் அந்த ஜாதகன் செல்வம் ஈட்டுவதில் செவ்வாய் சிறப்பு செய்வாரா?
நன்றி வணக்கம்...

குழப்புகிறீர்களே சுவாமி! ஒரு லக்கினம் என்று சொல்லி விடுகதை போடாமல், என்ன லக்கினம் என்று சொல்லுங்கள். அத்துடன் செவ்வாய் எங்கே இருந்து உச்ச வீட்டைப் பார்க்கிறார் என்பதையும் சொல்லுங்கள்.

எல்லோரும் செல்வத்தை ஈட்டுவதிலும், சொத்தைக் கூட்டுவதிலுமே கண்ணாக இருக்கிறீர்கள். அன்பு மிகுதியால், உங்கள் தோளில் சாய்ந்துகொள்ளும் மனைவியும், உங்களைக் கட்டித் தழுவி, உங்கள் கன்னத்தில் முத்தமிட்டுக் கொஞ்சும் குழந்தையும் அரிய செல்வங்கள்தான். அது கிடைக்க வழி இருக்கிறதா என்று பாருங்கள்! அவைதான் உண்மையான செல்வம்! உண்மையான சொத்து!

பணம் வருவது மட்டும்தான் யோகமா? அதற்கு யோககாரனைப் பார்க்காமல், 2ஆம் மற்றும் 11ஆம் அதிபதிகளையும், அந்த வீடுகளையும் பாருங்கள்..

அத்தோடு ஈட்டும் செல்வத்தை அனுபவிப்பதற்கு உரிய கிரகங்கள் ஜாதகத்தில் ஒழுங்காக இருக்கிறார்களா என்றும் பாருங்கள்.(சம்பாதித்த பணத்தைக் கொஞ்சமேனும் நாமும் அனுபவிக்காமல் முழுதாக வைத்துவிட்டு, வைகுண்டம் போவதில் என்ன இருக்கிறது சொல்லுங்கள்?):-))))))
---------------------------------------------------------------------
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்



வாழ்க வளமுடன்!

25.1.10

Doubt: நாட்டாமையின் மகனுக்கு எதற்காகப் பயப்பட வேண்டும்?

+++++++++++++++++++++++++++++++++++++++++++
Doubt: நாட்டாமையின் மகனுக்கு எதற்காகப் பயப்பட வேண்டும்?

Doubts: கேள்வி பதில் பகுதி 18

நீங்களும் உங்கள் சந்தேகங்களும் - பாடம் எண் பதினெட்டு!

Question & answer session
கேள்வி பதில் வகுப்பு
----------------------------------------------------
email No.71
வெண்மதி, மலேசியா
1
ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். தங்களின் கேள்வி பதில் வகுப்புக்கு நன்றி.
என்னுடைய கேள்விகளுக்கும் பதில் தர வேண்டுகிறேன்.
என்னுடைய கேள்விகள் இதோ.

1. குரு 8‍‍ம் இடத்தில் (மறைவிடம்)இருந்து அந்த வீட்டின் பரல்களும் மிக குறைவாக (23) இருக்கின்றபோது குருவின் நன்மைகளை பெற நவக்கிரகத்தில் உள்ள குருவை வணங்குவதா அல்லது சிவனின் அம்சமாக(குருவான நிலை) உள்ள தெட்சிணாமூர்த்தியை வணங்குவதா? இருவருக்கும் என்ன வேறுபாடு
விளக்கமாக கூறங்கள்.

தெட்சிணாமூர்த்தி என்பது சிவனின் வடிவம்தான். எந்தவடிவத்தை வேண்டுமென்றாலும் நீங்கள் வணங்கலாம்! (Dakshinamurthy is one form of Lord Shiva, where Lord Shiva is the Guru or teacher of all types of knowledge.)

2. இதேபோல் சனிபகவான் மறைவிடத்திலோ அல்லது வக்கிரமாகி இருந்தாலோ சனிபகவானின் (சுய பரல்கள் 2) நன்மைகளை பெற நவக்கிரகத்தில் உள்ள சனிபகவானை வணங்குவதா அல்லது ஆஞ்சனேயரை
வணங்குவதா? இருவருக்கும் என்ன வேறுபாடு விளக்கமாக கூறங்கள்.

சனிக்கும், ஆஞ்சனேயருக்கும் புராணங்களின்படி ஒரு தொடர்பு உண்டு. அதை எழுதினால், இன்றைய இளைஞர்கள், நம்பாமல், அதற்கும் சான்று கேட்பார்கள். எல்லாவற்றிற்குமே நம்பிக்கைதான் அடிப்படை. ஆகவே சனியின் உபாதைகளில் இருந்து மீள்வதற்கு, ஆஞ்சனேயர் உதவுவார் என்ற நம்பிக்கையோடு, அவரையே வணங்குங்கள். குறிப்பாக ஏழைரைச் சனி மற்றும் அஷ்டமச் சனி ஆட்டிவைக்கும்போது, ஆஞ்சனேயரை வழிபடலாம்! மற்ற காலங்களில் சனீஷ்வரனை வழிபடலாம்.

3. விருச்சிக லக்கினத்திற்கு செவ்வாய் லக்கினாதிபதி மற்றும் 6ம் வீட்டதிபதியும் கூட. செவ்வாய் கடகத்தில் நீச்சமாகி இருக்கின்றபோது செவ்வாய் நன்மை செய்வாரா? தீமை செய்வாரா? லக்கினாதிபதியின் அருளைப்பெற வழி (பரிகாரம்) உண்டா? விளக்க வேண்டுகிறேன்.

நீசமானவரிடமிருந்து எப்படி நன்மைகளை எதிர்பார்க்கிறீர்கள்? அதற்கு ஜாதகத்தில் வேறு இடத்தில் நஷ்டநீடு வழங்கப்பெற்றிருக்கும். ஆகவே கவலையை விடுங்கள். செவ்வாயின் பாதிப்புக்களில் இருந்து விடுபட
குமரக்கடவுளை வழிபடுங்கள் (Mars is ruled by Muruga also called Subramanya or Karthikeya. Propitiation of Muruga controls the bad results from Mars)

4. 9 கிரகங்களின் ஓரப்பார்வை எவை? விளக்க வேண்டுகிறேன் (நேர்ப்பார்வை 7ம் பார்வை என்பதை அறிவேன்)

ஓரப்பார்வை என்பது நகைச்சுவைக்காகச் சொல்லப்பட்டது. அதற்கு உண்மையான பெயர் விஷேசப் பார்வை (special aspect) குரு, செவ்வாய், சனி ஆகிய மூன்று கிரகங்களுக்கு மட்டுமே விஷேசப் பார்வைகள் உண்டு.
குருவிற்கு விஷேசப் பார்வை (அவர் இருக்கும் இடத்தையும் சேர்த்து எண்ண வேண்டும்) 5ஆம் இடம், 9ஆம் இடம். செவ்வாய்க்கு விஷேசப் பார்வை (அவர் இருக்கும் இடத்தையும் சேர்த்து எண்ண வேண்டும்) 4ஆம் இடம், 8ஆம் இடம். சனிக்கு விஷேசப் பார்வை (அவர் இருக்கும் இடத்தையும் சேர்த்து எண்ண வேண்டும்) 3ஆம் இடம், 10ஆம் இடம்

5. ராசி கட்டத்திலும் நவம்ச கட்டத்திலும் லக்கணம் மாறியிருக்கிறபோது, நவம்சத்தில் கிரகங்களின் வீடுகளைக் கணக்கிடுகின்றபோது (1ம் வீடு, 2ம் வீடு,...) ராசி கட்டத்தில் லக்கணம் வீட்டிலிருந்து எண்ணுவதா அல்லது
நவம்ச கட்டத்தில் லக்கணம் வீட்டிலிருந்து எண்ணுவதா? உதாரணத்திற்கு ராசி கட்டத்தில் லக்கணத்தின் வீடு ரிசபம், நவம்ச கட்டத்தில் லக்கணத்தின் வீடு மேசம், ஒவ்வொரு கிரகமும் எத்தனையாவது வீட்டில் உள்ளது
என்று பார்க்க ரிசபத்திலிருந்து துவங்குவதா அல்லது மேசத்திலிருந்து துவங்குவதா?. மேசத்திலிருந்து துவங்கினால் மகரம் 10ம் விடு. மகரம் விட்டில் கிரக நிலை, கிரகங்களின் பார்வை வைத்து தொழில் பற்றி அலசலாமா? விளக்கமாக கூறவும்.

குழப்பிக்கொள்கிறீர்களே? நவாம்சம் என்பது ராசியைப் பூதக்கண்ணாடியால் காட்டும் படம். Navamsam is the magnified version of a Rasi Chart) பாண்டி ஆட்டத்தை ராசியில் மட்டும் வைத்துக் கொள்ளுங்கள். நவாம்சத்தில் வேண்டாம். நீங்கள் பெண்ணாக இருப்பதால் பாண்டி ஆட்டம் பற்றி நன்கு அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். அதாவது லக்கினத்தில் இருந்து கட்ட எண்ணிக்கைகளை ராசியில் மட்டும் வைத்துக்கொள்ளுங்கள்.

விளக்கங்கள் போதுமா சகோதரி?
--------------------------------------------------------
email.72
ரமேஷ் வேலுச்சாமி

Sir,
This Question is Regarding Parents
9th house & 10 th house are in Parivartna [10 th lord exchange in exaltion [sukran - kanni & Budhan - Thulam]]. and in thasmsa three planets are utcham[i,e sevvai, bhudan, ketu ] and two planets are in their own house [i,e guru & sani]. chandran in thasmsa lagna and sukran in 2nd house]. My question is :
i had gone through horoscope of my friend's daughter. before her birth their parents are not well settled after her birth they are continously in positive node. is it because of her chart. because you had told that a child horoscope will work after 12 years but the child is only 5 yrs old.

பொதுவாக 12 வயதுவரை குழந்தையின் ஜாதகம் பெற்றோர்களை வைத்துத்தான். அக்குழந்தை செல்வச் செழிப்புடன் வளர வேண்டும் என்றால், அந்தக் குழந்தையை வைத்துப் பெற்றோர்களுக்கு அதற்குத் தேவையான பணம் வரும்!
------------------------------------------------------
email.73
சேகர் வெங்கடேசன்

அன்புள்ள அய்யா,

கேள்வி பதில் பகுதி மிகவும் சுவை. அதிலும் உங்கள் பதில்கள் சில கொஞ்சுகிறது. சிலவற்றில் உரிமையுடன் கண்டிப்பும் தெரிகிறது. அதுதான் சிறப்பு என்று நினைக்கின்றேன். என் சந்தேகங்கள்.

1 அயனாம்சம் சித்ர பக்க்ஷ (365 .25 days ) முறையில் துலாமில் சனி உச்சம். மகரத்தில் குரு நீச்சம். குறிப்பு. நீச்ச பங்க பலன்( பிறந்த போது கொடுக்கப்பட்ட ஜாதக கட்டம் இந்த முறை ) ராமன் (360 days ) முறையில் லக்னத்தில் சனி. மகரத்தில் குரு நீச்சம். நீச்ச பங்க பலன் என்று குறிப்பு.
சனி விசேஷ மூன்றாம் பார்வையால் நீச்ச பங்கமா என்பது என் சந்தேகம். பிறந்த தேதி 05-06-1985 நேரம் 18- 22 இடம் சென்னை] 2. இரு முறையிலும் அம்சங்கள் மாறுகிறது. எது சரி?

கால சந்திப்பில் பிறந்தவர்களுக்கு சமயத்தில் லக்கினமும் மாறும். ராசி சந்திப்பில் உள்ள கிரகங்களும் மாறும். நீங்கள் ராமன் அயனாம்சத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அது சரியான ஜாதகத்தைக் கொடுக்கும்!

3. விருச்சிக லக்னம் லக்னாதிபதி செவ்வாய் எட்டில் தோஷமா? தோஷம் என்று குறிப்பு உள்ளது.

லக்கினாதிபதி எட்டில் இருப்பது ஜாதகனுக்கு நன்மையைச் செய்யாது. போராட்டம் மிகுந்த வாழ்க்கை. எதையும் போராடித்தான் பெற வேண்டும். விருச்சிக லக்கினத்திற்கு செவ்வாய் அதிபதி. அதிபதி தனக்குத்தானே தோஷத்தைச் செய்துகொள்ள மாட்டான். அதனால் தோஷம் இல்லை!
--------------------------------------------------------------
email.74
சரவணகுமார்

அன்புள்ள ஐயா,

1.ஜாதகருக்கு, பஞ்சமகாயோகத்தில் எதாவது ஒரு யோகம் இருந்தால் அவயோகம் எல்லாம் தடைப்படுமா? உதாரணமாக, மாளவ்யா யோகம் உள்ளவர்களுக்கு மற்ற அவயோகம் எல்லாம் செயல் இழக்குமா?

ஒரு யோகத்தை வைத்து மற்ற அவயோகங்கள் எப்படி நீங்கும்? நல்ல யோகங்களும், அவயோகங்களும் கலந்ததுதான் ஜாதகம். ஒன்றிற்குப் பயந்து மற்றொன்று எப்படிப் போகும் அல்லது நீங்கும்? நாட்டாமையின் மகன் என்பதற்காக ஊரில் உள்ள அத்தனை பேரும் பயப்படுவானா என்ன?

2.யோகம் ராசியில் இருந்தால் பலன் உண்டா? அல்லது அம்சதில் சுக்ரன் நிலையும் பொறுத்து உண்டாகுமா?
அன்புடன்
சரவண்

அம்சத்தை இன்னும் நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. அம்சப் பாடத்தை மீண்டும் மீண்டும் புரிகின்றவரை படியுங்கள். சுக்கிரனைப் பொறுத்து என்றால் பிடிபடவிலை ஸ்வாமி. என்ன சொல்ல வருகிறீர்கள்? சுக்கிரன் என்ன நம் மாமானாரா? அவரைப் பொறுத்து எதற்காக எதன் நிலை மாறும் என்று
எதிர்பார்க்கிறீர்கள்?
-------------------------------------------
email No.75
சுந்தரி பரமசிவம், சென்னை

சார் வணக்கம்,

1.நீங்க குழந்தை இருக்கா? இல்லையா? என்று தெரிந்து கொள்வதைப் பற்றி சொல்லிதந்திங்க அதுல 5ம் வீட்டின் அஷ்ட வ்ர்கம் அதில் இருக்கிற கிரகத்தின் சுய வர்கம்,5ம் வீட்டின் அதிபதி சொன்று அமர்ந்திருக்கும்
வீட்டின் அஷ்ட்வர்கம் அதன் சுய வர்க ப்ரல் ம்ற்றும் புத்திரகாரன் குரு அமர்ந்திருக்கும் வீட்டின் அஷ்டவர்கம் அதன் சுயவர்கம் இந்த மூன்றையும் பார்த்துதான் குழந்தை இருக்கிறதா இல்லையா என்று சொல்லமுடியும்
என்று எடுத்துகாட்டுட‌ன் விளக்கினீர்கள் மேலும் குருவின் பார்வை 5ஆம் வீட்டில் விழுந்திருந்தாலும் நிச்சயமா இருக்கும் சொன்னீங்க ஆனால் எத்தனை குழந்தைங்க அதுல பொண்ணு பையன் எத்தனை என்று கண்டு
பிடிக்க கற்றுத் தாருங்கள். மேலும் 5ம்வீட்டை 9ம் வீட்டை பார்க்கணும் என்று ரொம்ப பேரு சொல்றங்க நீங்க இதைப்ப்ற்றி சொல்லி தாங்க எல்லோருக்கும் ரொம்ப பயனாக இருக்கும்.

மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்குக் குழந்தைப்பேறு முக்கியமானது. ஒரு ஜாதகனுக்கு அல்லது ஜாதகிக்கு எத்தனை குழந்தைகள் என்று பார்ப்பதைவிட அவர்களுக்கு ஒரு குழந்தையாவது பிறக்குமா? என்று பார்க்க வேண்டும்! அதைவிட முக்கியம் ஜாதகனுக்கு அல்லது ஜாதகிக்குத் திருமணம் ஆகுமா? அல்லது ஆகாதா? என்று பார்க்கவேண்டும்!

சரி திருமணம் ஆகிவிட்டது. குழந்தைப்பேறு இருக்கிறதா? என்று தம்பதிகள் இருவரில் ஒருவர் ஜாதகத்தை மட்டும் பார்த்துப் பயன் இல்லை. அந்த பாக்கியம் இருவர் ஜாதகத்திலும் இருக்க வேண்டும்.

குழந்தைப்பேறு என்பது கூட்டு முயற்சி:-))))

1. குழந்தை உண்டு
2. குழந்தை இருக்காது
3. ஒரு குழந்தை மட்டுமே இருக்கும்
4. ஆண் விந்தில் உயிர் அணுக்கள் என்னிக்கையில் குறைபாடு
5. பெண்ணிற்குக் கர்ப்பப்பை அல்லது கர்ப்பப்பையில் குறைபாடு
6. கர்ப்பச் சிதைவுகள். அல்லது குழந்தை இறந்தே பிறக்கும் தன்மை
என்று தலையைக் கிறுகிறுக்க வைக்கும் விஷயங்கள் ஐந்தாம் பாவத்திற்கு உண்டு!

சுருக்கமாகச் சொன்னால் பெண் என்பவள் நிலம். ஆண் என்பவன் விதை. இரண்டுமே நன்றாக இருக்க வேண்டும். இருந்தால்தான் செடி முளைக்கும். இல்லை என்றால் நர்சரியில் இருந்து செடியை வாங்கி வளர்க்க வேண்டியது தான். அதற்குப் பெயர் தத்து எடுத்தல், சுவீகாரம்

Progeny = descendants எனும் ஆங்கிலச் சொல், சந்ததி, வம்சம் என்று பொருள் படும்

இதை அறிந்துகொள்ள குறுக்கு வழி ஒன்றை முன்பு சொல்லிக்கொடுத்தேன். ஐந்தாம் வீடு.ஐந்தாம் வீட்டு அதிபதி அமர்ந்திருக்கும் வீடு, புத்திரகாரகன் குரு அமர்ந்திருக்கும் வீடு, ஆகிய 3 வீடுகளிலும் 28 பரல்களுக்குமேல் இருக்க வேண்டும். இருவர் ஜாதகத்திலும் இருக்க வேண்டும்.

கணவன் மனைவி இருவரில் ஒருவர் ஜாதகத்தில் சரியான அளவில் பரல்கள் இருந்து, இன்னொருவர் ஜாதகத்தில் பரல்கள் சரியாக இல்லை என்றால், குழந்தை பிறப்பது தாமதமாகும்.

இருவர் ஜாதகத்திலுமே பரல்கள் மிகக்குறைவாக இருந்தால், குழந்தை இருக்காது!

ஜாதகத்தில் குழந்தை பாக்கியத்திற்கான முக்கிய அமைப்புக்கள்:

1. நல்ல நிலையில் உள்ள குரு பகவான்
2. நல்ல நிலையில் உள்ள ஐந்தாம் வீடும், அதன் அதிபதியும்
3. Saptamsa chart
4. பெண்கள் ஜாதகத்தில் ஒன்பதாம் வீடு
5. நன்மை தரக்கூடிய நடப்பு தசை/புத்திகள்

மேலே உள்ளவற்றில் கோளாறு இருப்பின், அது குழந்தை பாக்கியத்திற்குத் தடையை உண்டாக்கும். பொதுவாக சனி, செவ்வாய் மற்றும் 6 & 8ஆம் இட அதிபதிகள் சம்பந்தப்பட்டாலும், தாமதங்கள் தடைகள் உண்டாகும். குரு பகவான் 6 அல்லது 8ல் போய் சுகமாக உட்கார்ந்து கொண்டுவிட்டாலும் சிக்கல்தான்!

குழந்தைகளின் எண்ணிக்கை சப்தாம்ச சக்கரத்தின் மூலம் தெரியும். அதை அலசுவதிலும் பல சிக்கல்கள் உள்ளன. (problems like miscarriages and difficulty in conception) அதைப் பிறகு நேரம் இருக்கும்போது அலசுவோம். இப்போது அஷ்டகவர்க்கத்தை மட்டும் உபயோகித்துப் பலனை அறிந்து கொள்ளுங்கள்.

2. ராகு, கேது குருவின் பார்வை பெற்றால் அவங்க எந்த வீட்டிலிருந்தாலும் அவங்க மகா தசையில சும்மாயிருப்பங்களா?
சுந்தரி

ராகு & கேது சுபக்கிரகங்களின் பார்வையைப் பெற்றிருந்தாலும் அல்லது திரிகோணங்கள் அல்லது கேந்திரங்களில் இருந்தாலும் தங்களுடைய தசா/புத்திகளில் ஜாதகனுக்குப் பல நன்மைகளைச் செய்வார்கள்.நீங்கள் சொல்வதுபோல சும்மா இருக்க மாட்டார்கள்:-))))
--------------------------------------------------------
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!