Quiz.no.79 Answer: கனவு கலைந்தது! நிறைவேறிய ஆசை நிலைக்கவில்லை!
புதிர் எண் 79 ற்கான விடை
4.3.2015
--------------------------------------
நேற்றையப் பதிவில், அன்பர் ஒருவரின் ஜாதகத்தைக் கொடுத்து 2 கேள்விகளைக் கேட்டிருந்தேன்.
கேட்கப்பெற்றிருந்த கேள்விகள்:
1. ஜாதகருக்குப் பிறப்பிலேயே சொத்துக்கள் (immovabale properties) உண்டா? அல்லது இல்லையா? உண்டு என்றால் எதனால் உண்டு? இல்லை
என்றால் எதனால் இல்லை?
2. மேலும் ஜாதகர் தன் சொந்தப் பணத்தில் வீடு ஒன்றைக் கட்டுவதற்கு ஆசைப்பட்டார். அது நிறைவேறியதா? அல்லது இல்லையா? நிறைவேறியது
என்றால் எந்த வயதில் நிறைவேறியது? நிறைவேறவில்லை என்றால் எதனால் நிறைவேறவில்லை?
சரியான பதில்:
1. 4ம் வீட்டில் கிரகயுத்தம். 9ல் ராகு. ஆகவே ஜாதகருக்கு பூர்வீக சொத்து இல்லை.
2. ஜாதகரின் ஆசை நிறைவேறியது. வீட்டைக் கட்டினார். ஆனால் வீடு நிலைக்கவில்லை. 31 வயதில் கட்டினார். 35 வயதில் வீட்டை
விற்கும்படியாகிவிட்டது. நிறைவேறிய ஆசை நிலைக்கவில்லை!
ஜாதகப்படி என்ன காரணம்? வாருங்கள், பார்ப்போம்!
விருச்சிக லக்கின ஜாதகம்.
லக்கினாதிபதி செவ்வாய் உச்சம் பெற்றுள்ளார். ஆனால் சனீஷ்வரன் மற்றும் கேதுவுடன் சேர்ந்து கிரக யுத்தத்தில் மாட்டிக்கொண்டுள்ளார்.
ஜாதகருக்கு அவருடைய
23வது வயதிலிருந்து 43வது வயது வரை சுக்கிர மகா திசை. சுக்கிரன் அஸ்தனமாகியுள்ளார்.
அவர் (சுக்கிரன்) சொத்து சுகங்களுக்கான காரகன். அவர் அஸ்தமனம் பெற்றுள்ளார்.
மேலும் அவர் 12ம் இடத்திற்கும் அதிபதி அதை நினைவில் வையுங்கள்.
அவர் 4ல் அமர்ந்து அசையாத சொத்தான வீட்டைக் கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியிருக்கிறார்.
ஆனால் 4ம் வீட்டிற்கு அதிபதியான சனீஷ்வரன் அந்த வீட்டிற்குப் பன்னிரெண்டில் உள்ளார்.
அத்துடன் அவர் (சனீஷ்வரன்) கேதுவுடன் சேர்ந்து கெட்டுப் போனதுடன் ராகுவின் பார்வையைப் பெற்று மேலும் வலுவிழந்து உள்ளார்.
அவருடன் எட்டாம் வீட்டுக்காரன் புதனும் உடன் உள்ளார்.
ஜாதகர் தனது முயற்சியில் பல சிரமங்களுக்கிடையே மிகவும் கஷ்டப்பட்டு தனது 31வ்து வயதில் வீடு ஒன்றைக் கட்டினார். ஆனால் அந்த வீட்டிற்கு
அவர் குடி போகவில்லை. மேலும் ஏற்பட்ட கஷ்டங்களினால் கட்டிய 4 ஆண்டுகளிலேயே வீட்டை விற்று விட்டார்.
காரகன் பாவநாசம் என்பது முழு வேலை செய்தது. அத்துடன் மேற்கூரிய காரணங்களால் கட்டிய வீட்டையும் இழக்க நேர்ந்தது.
அலசல் போதுமா?
-----------------------------------------
போட்டியில் 25 பேர்கள் கலந்து கொண்டார்கள். கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். அவர்களில் ஒருவர் மட்டுமே இரண்டு
கேள்விகளுக்கும் சரியான பதிலை/
ஒட்டிய பதிலை எழுதி 100/100 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார். அவருக்கு மிகுந்த பாராட்டுக்கள்.
16. பேர்கள் 2ல் ஒரு கேள்விக்கு மட்டும் சரியான சரியான பதிலை எழுதி
50/100 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார்கள் அவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்!
சொந்த வீடு கட்டினாலும் அது நிலைக்காது. கையை விட்டுப் போய்
விடும் என்பதுதான் key answer
அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
1
50 marks /////Blogger Chandrasekaran Suryanarayana said...
QUIZ NO.79 வணக்கம்
01/03/1962 ஆம் ஆண்டு புதன் கிழமை காலை 1.30.01 மணிக்கு கேட்டை நட்சத்திரத்தில் விருச்சிக லக்கினத்தில் ஜாதகர் பிறந்தார். (இடம்:
சென்னை)
1. பிறப்பிலேயே சொத்துக்கள் இல்லை. 4ம் வீட்டு அதிபதி சனி 3ம் வீட்டில் அமர்ந்து இருப்பதால் சுய முயற்ச்சியால் தான் சொத்துக்கள் பெற
முடியும். 4ம் வீட்டில் 22 பரல்கள்.4ம் வீட்டில் வந்து அமர்ந்துள்ள சுக்கிரனும் அஸ்தங்கம் ஆகி விட்டது.//////
--------------------------------------------------
2
100 marks ///////Blogger slmsanuma said...
Laknathipathi Sevvai Ucham. Chandran is neecha Pangam in Laknam. Kethu look Laknam.
Ancestral Asset ---
Karagan Guru is in 12 place to 5th house which is for ancestral asset. 5th house looked by Sannesswaran and Kethu. Hence no ancestral asset to
the native.
Father’s Asset ---
Karagan Suriyan is in 8th place to 9th house which is for father’s asset. Though the owner of the house chandran is in Neecha Pangam, in laknam
and 5th place to the 9th house, Raghu is in 9th house with the Sevvai, Bhudhan, Saneeswaran parvai. Hence no father’s asset to the native.
House Construction ---
Karagan Bhudhan is in 12th place to 4th house which is for house construction. 4th house owner Saneeswaran is in 12th place to the 4th house. No
other planets looks 4th house. So he cannot construct his own house.///////
---------------------------------------------------------------------------
3
50 marks /////Blogger Kirupanandan A said...
பிறப்பிலேயே சொத்துக்கள் என்றால் பரம்பரை சொத்தைப் பற்றி கேட்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.
1) பிறப்பிலேயே சொத்துகள் இல்லை.
காரணம். பரம்பரைச் சொத்துக்கான இடம் 9ம் வீடு. அங்கு ராகு இருக்கிறார். அந்த இடம் பாப கிரக பார்வையாலும் பாதிக்கப்பட்டிருக்கிறது. 9ம்
அதிபதி சந்திரன் நீசம் (நீச பங்கமா இல்லையா என்ற சர்ச்சைக்குள் செல்ல விரும்பவில்லை). 9க்கு 9ம் இடமான 5ம் வீட்டின் அதிபதி குரு அந்த
வீட்டிற்கு 12ல் இருக்கிறார். //////
--------------------------------------------
4
50 marks //////Blogger Gpbarathi P said...
1.the native has no ancestral property. because the ninet place chandran is debilated//////
Barathi//////
------------------------------------------
5
50 marks ///////Blogger SSS CONSTRUCTION said...
The person have not any assets belonging to his father because the fourth house lord is in 3rd place and the 9th house lord is in lakna and he is
neecha //////
------------------------------------------
6
50 marks /////Blogger hamaragana said...
அன்புடன் வாத்தியார் அய்யவுக்கு வணக்கம் .
புதிர் எண் 79.
லக்னம் விரிச்சிகம் ராசி விரிச்சிகம்..
1.பூர்வீக சொத்து இருக்காது .
1.a பூர்வ புண்ணிய ஸ்தானம் 5.வீட்டுக்காரன் *குரு *4ல் அமர்ந்துள்ளான் ..அதாவது தன வீட்டுக்கு 12ல் ஆனாலும் அது கேந்திரம்
..b பாகியஸ்தானமான 9ம் வீட்டில் ராஹு அமர்ந்து கெடுத்துள்ளான் ...அது ராசியாதிபதி வீடாகிறது ..ராசியாதிபதி நீசமாகிபோனான் .. .
c .பூர்வ புண்ணிய காரகன் குருவும் ,சூரியனும் [சுக்கிரன்] சேர்ந்து .. ..அமர்ந்துள்ளனர்.அவர்களின் பார்வை .9ம் மிடத்தை பார்கவில்லை.
..d .உச்சம் பெற்ற செவ்வாய்,ஆட்சி பெற்ற சனி கேது இவர்களது கூரிய பார்வை 9ம் மிடத்தை
இந்த 4.. a b,c,d, காரணத்தால் பூர்வீக சொத்து இருக்க வாய்ப்பு இல்லை...!!//////
----------------------------------------------------------
7
50 marks ///////Blogger valli rajan said...
Dear Guruji,
1. 9th lord is neecham.
2.9th place is aspected by sani, ketu and rahu in 9th place.
3. Guru, venus in 4th house is good.
4. sun in 4th house in kumba rasi is bad.
5. Mars lord of land is exalted.
By birth he won't have immovable property /////
-----------------------------------------------------
8
50 marks ///////Blogger Govindasamy said...
1. ஜாதகருக்கு பிறப்பிலேயே சொத்துக்கள் இல்லை. 9ம் இடத்தில் ராகு. 9க்குரிய சந்திரன் லக்கினத்தில் நீசம். மேலும் ஆறு எட்டுக்குரிய
கிரகங்களின் பார்வை 9ம் இடத்தில்.//////
-------------------------------------------------------
9
50 marks ///////Blogger saravanakumar k Kumar said...
1. பூர்வீக சொத்துக்கள் இல்லை.
1. பூர்வீக சொத்துக்கள் இல்லை.
பூர்வீக 5ம் பாவகாதிபதி 5ம் பாவகத்திற்கு 12ல் மறைவு. மற்றும் 9ம் பாக்கியஸ்தானாதிபதி சந்திரன் விருச்சிகத்தில் நீசம்//////
------------------------------------------
10
50 marks //////Blogger kumar.S said...
1) ஒன்பதில் ராகு . ஒன்பதிற்கு அதிபதி நீசம். பரம்பரை சொத்து இருக்க வாய்ப்பு இல்லை சார் .
நன்றி ,
குமார் . S//////
------------------------------------------------
11
50 marks ////////Blogger Palani Shanmugam said...
மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,
லக்னாதிபதி செவ்வாய் 3ல் உச்சம். அவரை ராகு 7ம் பார்வையாக பார்க்கிறார். அதனால் மகா கோபக்கார்ர். 4ம் வீட்டு அதிபதி சனி பகவான் 3ல்
இருப்பது நல்லதல்ல. இவருக்கு சகோதர்ர்களுடன் சண்டை ச்ச்சரவு ஏற்பட்டு பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்காமல் போயிருக்கும்.//////
--------------------------------------------------
12
50 marks ///////Blogger S.Namasu said...
மதிப்பிற்குரிய அய்யா, ஜோதிட புதிர் எண் 79 க்கான எனது கணிப்பு:
1. ஜாதகருக்கு பூர்வீக சொத்து இருக்கும் ஆனால் கிடைக்காது
விருச்சிக லக்கினம், ராசி அதிபதி செவ்வாய் மகர ராசியில் (3ம் இடம் மறைவு ஸ்தானம்) உச்சம்.
பூர்வீக சொத்துக்கு காரகனான சூரியன் பகை வீடான கும்பத்தில், 9ம் வீட்டு அதிபதியான சந்திரன் நீசம் பெற்று லக்கினத்தில், 9ல் ராகு பகை
வீட்டில், 5 க்கு உரிய குரு 12ல் உள்ளதனால் ஜாதகருக்கு பூர்வீக சொத்து இருந்தும் கிடைக்காது.///////
-----------------------------------------------
13
50 marks ////////Blogger siva kumar said...
வணக்கம் ஐயா
Quiz no 79 திற்கான விடை
ஜாதகர் விருச்சக லக்கணம்
விருச்சக ராசி
லக்கண அதிபதி செவ்வாய்
1.ஜாதகருக்கு பிறப்பிலேயே சொத்துக்கள் இல்லை
ஜாதகபடி காரனங்கள்:
ஐயா விருச்சக லக்கணத்திற்கு யோககாரன் சந்திரன் நீச்சமாகி லக்கனத்தில் உல்லார்.மற்றும் பூர்வ புண்ணியதிபதி குருவும் தன் வீட்டிற்கு 12ல்
மறைவு.பாக்கியஸ்தானமான 9ம் வீட்டில் ராகு அமர்ந்து உள்ளார். மற்றும் பாவ கிரகங்களான சனி,கேது,புதன் ஆகியோரின் நேரடி பார்வை 9ம்
வீட்டிற்கு./////
-------------------------------------
14
50 marks ///////Blogger ravichandran said...
Respected Sir,
My answer for our today's Quiz No. 79:-
1. He is not blessed to get immovable properties (ancestral properties) by birth.
REASONS:
I. Properties by birth:
i) In nineth house, rahu is sitting and nineth house lord is debilitated as well as Saturn, Mars, Kethu and Mercury is aspecting nineth house. It is
worst.
ii) There is no benefic planets aspect either nineth house or nienth house lord.
iii) Fourth house lord is sitting in twelfth house from its own house.
iv) In navamsa also, there is no good sign for having properties by birth.
v) No favorable yogas.
Hence, 9th house, 9th house lord as well as fourth house lord is affected, He is not blessed to get properties by birth.//////
-------------------------------------------------------------
15
50 marks ///////Blogger kmr.krishnan said...
ஜாதகர் 28 பிப்ரவரி 1962ல் காலை 1.30 மணிக்குப் பிறந்தவர். சென்னையைப்பிறந்த இடமாக் எடுத்துக்கொண்டேன்.
1.ஜாதகருக்கு பிறப்பிலேயே அசையாச் சொத்துக்கள் இல்லை.
நான்காம் அதிபன் சனைச்சரன் தன் வீட்டுக்கு 12ல் மறைந்தார். ஜன்மப் பகையாளர் செவ்வாயுடன் 3ல் கூட்டணியால் 4ம் அதிபன் சனி வலுவிழந்தார்.
மேலும் 8ம் அதிபன் புதனுடன் இருந்ததாலும் நான்காம் அதிபன் வலுவிழந்தார்.
கார்கன் செவ்வாயின் நிலையும் இதுவே. இவர்களுடன் கேதுவும் இருந்து சொத்துக்கள் இல்லாமல் செய்தார்.பாக்கிய ஸ்தான ராகு, 6ம் அதிபன்
செவ்வாய் 3ல், 4ம் அதிபன் சனியுடன் இருப்பது ஆகியவை பூர்வீகச்சொத்து இல்லாமல் செய்தது.//////
-------------------------------------------------------
16
50 marks //////Blogger lrk said...
ஐயா. வணக்கம்
புதிர். 79 க்கு. பதில்கள்
1) அன்பருக்கு பிறப்பிலேயே சொத்து கிடையாது .
காரணங்கள் ;
9க்கு அதிபதி நீசம்
9ஆம் இடத்தில் ராகு .பூர்வ புண்ணிய ஸ்தானம் பாதிக்கப்பட்டு உள்ளது .
நன்றி ஐயா .
கண்ணன் .//////
------------------------------------------
17
50 marks //////Blogger Manikandan said...
௧. பூர்வீக சொத்து கிடைக்காது. பாக்கியாதிபதி நீசம் + லக்கினாதிபதி செவ்வாய் சனி மற்றும் ராகு கேதுஉடன் சேர்க்கை.//////
--------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!