மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

30.4.13

Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 25Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 25

ஜோதிடத் தொடர் பாடம். பகுதி 25

இந்தத் தொடரில் இதற்கு முன் உள்ள பாடங்களைப் படித்திராதவர்கள், அவற்றைப் படிக்கவும்!
-------------------------------------------------------
பெண்ணின் நட்சத்திரத்தை வைத்து, பொருத்தமான நட்சத்திரத்தைத் தேரிவு செய்வது நல்லது! ஆனால் அதே பொருத்தம் இரு பாலருக்குமே பொதுவானது தான். அதை மனதில் வையுங்கள்.

நட்சத்திரப் பொருத்தம் மட்டும் போதுமா?

மற்ற பொருத்தங்கள் முக்கியமில்லையா?

தசா சந்திப்பு இன்றி இருப்பது. தோஷ்ங்கள் இல்லாமல் இருப்பது, தோஷங்கள் இருந்தால் ஆணைவிட பெண்ணிற்குக் சற்றுக் குறைவாக இருப்பது பொன்ற மற்ற விஷயங்களும் உள்ளன. ஆகவே முதலில் நட்சத்திரப் பொருத்தத்தை மட்டும் தொடர்ந்து பார்ப்போம். பிறகு மற்றவற்றைப் பார்ப்போம்!! 
-----------------------------------------------------
24. மூலம்

இது தனுசு ராசிக்கு உரிய நட்சத்திரம். அத்துடன் கேதுவிற்கு உரிய நட்சத்திரம்!

இந்த நட்சத்திரத்திற்கு
1. பூசம்
2. ஹஸ்தம்
3. சித்திரை
4. சுவாதி
5. விசாகம்
6. திருவோணம்
7. சதயம்
ஆகிய 7 நட்சத்திரங்களும் பொருந்தக்கூடிய் நட்சத்திரங்களாகும்.

அஷ்டம சஷ்டம நிலைப்பாடு (8/6 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். தனுசு ராசிக்குக் கடகம் எட்டாம் வீடு. கடகத்திற்கு தனுசு ஆறாம் வீடு.. பூச நட்சத்திரம் கடகத்திற்கு உரியது. ஆகவே அதை விலக்கி விடுவது நல்லது.

தனுசு ராசிக்கு விருச்சிகம் 12ம் வீடு. விருச்சிகத்திற்கு இரண்டாம் வீடு. ( 1/12 & 12/1 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். ஆகவே விருச்சிக ராசிக்கு உரிய அனுஷ நட்சத்திரத்தை விலக்கிவிடுவது நல்லது.

ஆக மொத்தத்தில் 5 நட்சத்திரங்கள் மட்டுமே சிறப்பாகத் தேரும்.

அஸ்விணி, ஆயில்யம், மகம், கேட்டை, மூலம், ரேவதி ஆகிய 6 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும். அவற்றை விலக்கி விடுவது  நல்லது.

பெண்ணிற்கும், பையனுக்கும் மூலம் ஒரே நட்சத்திரமாக இருந்தால் பொருத்தம் கிடையாது!.

உத்திராட நட்சத்திரம் பொருந்தாது.

பரணி, கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிஷம், திருவாதிரை, புனர்பூசம், பூரம், உத்திரம், அனுஷம், பூராடம், அவிட்டம், பூரட்டாதி, உத்திரட்டாதி ஆகிய 13 நடச்த்திரங்களும் மத்திம பொருத்தம் (average) உள்ளவை. அவற்றையும் தெரிவு செய்து கொள்ளலாம்!
----------------------------------------------------------------------------
காதல் திருமணங்களுக்கு இந்தப் பொருத்தம் பார்க்க வேண்டுமா?

வேண்டாம். பார்த்து என்ன ஆகிறப்போகிறது? காதலைக் கைவிட முடியுமா? ஆகவே பார்க்காமல் வருவது வரட்டும். நடப்பது நடக்கட்டும் என்று வாளாவிருப்பது நல்லது!

(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

29.4.13

Astrology: நமது சட்டங்கள் அங்கே செல்லாது!

 

Astrology: நமது சட்டங்கள் அங்கே செல்லாது!

உதாரண் ஜாதகம்

சிலருக்கு இருக்கும் வேலையில் முன்னேற்றம் எதுவும் இன்றி அப்படியே தேமே என்று இருப்பார்கள். உடல் தோற்றத்தில் ஆரோக்கியத்தில் அப்படியே
இருந்தால் மார்க்கண்டேயன் என்று பெருமையாகச் சொல்லலாம். வேலை யில் அப்படியே இருந்தால், எப்படிப் பெருமையாகச் சொல்ல முடியும்? அல்லது மகிழ்ச்சி கொள்ள முடியும்?

ஒருவர் அவரது 24 வது வயதில் வேலைக்குச் சேர்ந்தார். சுமார் இருபது ஆண்டு காலம் அவருக்கு அவர் பார்த்த வேலையில் உயர்வு (promotion) எதுவும்
கிடைக்க வில்லை. அவர் பார்த்தது அரசாங்க வேலை. சட்டப் படியான உயர்வு கூட அவருக்குக் கிடைக்க வில்லை. கிரகங்களின் முன்னால் நமது சட்டங்கள்
என்ன செய்ய முடியும்?

அதற்கு என்ன காரணம்? அவருக்கு எப்போது உயர்வு கிடைத்தது என்பதை ஜாதக ரீதியாக அலசுவோம். உங்கள் பயிற்சிக்காக இந்தப் பாடத்தை
நடத்துகிறேன்.பாடத்தை மட்டும் படியுங்கள். நவாம்சம் எங்கே? அஷ்டகவர்க்கம் எங்கே என்று கேட்டு தொல்லை செய்ய வேண்டாம். அலசியதை மட்டும் பாருங்கள். இது மேல் நிலைப் பாடம். உங்களுக்கும் (அனைவருக்கும்) பயன் பட்டட்டும் என்று அதை இன்று இங்கே பதிவிட்டுள்ளேன்


கடக லக்கின ஜாதகம். பூர நட்சத்திரம்

1. பத்தாம் அதிபதி செவ்வாய் அந்த வீட்டிற்கு எட்டில் போய் அமர்ந்துள்ளார்

2. அத்துடன் அவர் சனி மற்றும் ராகுவின் பிடியில் சிக்கி அவதியில் (பலவீனமாக) உள்ளார்

3. ஏழு மற்றும் எட்டாம் அதிபதி சனியின் சேர்க்கை வேலை உயர்விற்குத் தடையாக இருந்தது. ஜாதகனின் 43ம் வயதுவரை அதே நிலைமைதான்! (அதாவது 18 வருட காலம் ராகுதிசையின் பிடியிலும் இருந்தார்)

4. அதற்குப் பிறகு குரு திசை ஆரம்பமானவுடன். மாற்றங்கள் ஏற்பட்டன. குரு தன்னுடைய ஒன்பதாம் (விஷேச) பார்வையால் பத்தாம் வீட்டைப் பார்ப்பதால்,
அந்த மாறுதல் ஏற்பட்டது. நல்ல காலம் வந்தது

5. குருவுடன் லக்கினாதிபதி சந்திரனும் சேர்ந்திருப்பதால், அதுவும் இரண்டாம் வீட்டில் அவர்கள் இருவரும் இருப்பதால், உத்தியோகம் மற்றும் பண வரவில்
ம்ற்றத்தை ஏற்படுத்தினார்கள். உயர்வைக் கொடுத்தார்கள்

6. சனி மற்றும் ராகுவின் பிடியில் சிக்கியிருந்த பத்தாம் அதிபதிக்கு, குரு பகவான் தன்னுடைய தசாபுத்தியில் கை கொடுத்துத் தூக்கிவிட்டார்

7. குருவின் விஷேசப் பார்வையால், அதன் பார்வை பெறும் வீட்டை வைத்து, அதன் திசையில் (குரு திசையில்) ஜாதகனுக்கு ந்ன்மையான பலன்கள்
உண்டாகும். அதை மனதில் கொள்க அதை வலியுறுத்திச் சொல்லவே இந்தப் பாடம்!

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++===

26.4.13

பூமி குளிர்ந்திட என்ன செய்ய வேண்டும்?


பூமி குளிர்ந்திட என்ன செய்ய வேண்டும்?

பக்தி மலர்

   "கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி - நம்ம
         குமரன் பேரைச் சொல்லி கொட்டுங்கடி
    தட்டுங்கடி தாளம் தட்டுங்கடி - கந்த

        வேலன் செவிகளை எட்டும்படி!"

என்ற் பல்லவியுடன் திருமதி சசிரேகா அவர்கள் அசத்தலாகப் பாடிய கும்மி பாட்டு ஒன்று இன்றைய பக்தி மலரை அலங்கரிக்கின்றது. அனைவரும் கேட்டு மகிழுங்கள்!

அன்புடன்
வாத்தியார்

-------------------------------------------------
பாடலின் காணொளி வடிவம்
Kottungadi kummi kottungadi
Our sincere thanks to the person who uploaded the video clipping in the net
http://youtu.be/EENLH6swq0M
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

25.4.13

Astrology: என்ன(டா) விஷேசம் இன்று?Astrology: என்ன(டா) விஷேசம் இன்று?

என்ன(டா) விஷேசம் இன்று? அதாவது இன்றைய நாளின் சிறப்பு என்ன சாமி?

இன்று சித்ரா பெளர்ணமி! சூரியன் உச்சம் பெற்று மேஷராசியில் இருக்கும் நிலையில் ஏற்படும் பெள்ர்ணமி நாள் இன்று. திருவண்ணாமலை
அருணாசலேஷ்வரரை வண்ங்கும் நாள். கிரிவலம் வந்தால் மிகவும் நன்மை பயக்கும். இன்று திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையை சுமார் பத்து லட்சம் என்று உத்தேசமாகக் கணக்கிட்டு அதற்கு வேண்டிய ஏற்பாடுகளைக் கோவில் நிர்வாகமும், அரசும் செய்துள்ளது

அத்துடன் இன்று சித்ரகுப்தனின் பிறந்த நாள். பார்வதி தேவி தன் திருக்கரங்களால் ஒரு குழந்தையின் படத்தை வரைய, அந்தச் சித்திரத்தைப் பார்த்து வியந்த சிவபெருமான, அச்சித்திரத்திற்கு உயிர் கொடுக்க அவதரித்த குழந்தைதான் சித்திரகுப்தன். பிறகு எமதர்மனின் வேண்டுகோளின்படி சித்ரகுப்தனுக்கு மனிதரகளின் பாவ புண்ணியக் கணக்கிடும் வேலை கிடைத்தது. அவர்தான் அந்த வேலைக்கு லீட் மானேஜர். பிரம்மாண்டமான சர்வர் எல்லாம் வைத்து அந்த வேலையை அவர் செய்வார் போலிருக்கிறது!:-)))

திருவண்ணாமலைக்குப் போக முடியாதவர்கள் என்ன செய்வதாம்?

உள்ளூரில் உள்ள சிவன் கோவிலுக்குச் சென்று அங்கே உறையும் சிவனாரை வழிபட்டு வரலாம்!..அதற்கும் வழியில்லாமல் வெளிநாட்டில் வாழ்பவர்கள்
இருக்கும் இடத்தில் இருந்தே ஒரு ஐந்து நிமிடங்கள் இறை வழிபாட்டைச் செய்யலாம். அதற்காக அண்ணாமலையார் ஒன்றும் கோபித்துக் கொள்ளமாடார்.

கருணையின் வடிவானவர் அவர். அதனால்தான் அவரை நினைத்தாலே முக்தி என்று நம் முனோர்கள் சொல்லி வைத்தார்கள்

மாதம் ஒருமுறை பெள்ர்ணமி வருகிறது. ஒவ்வொரு பெளர்ணமியும் சிறப்பானதுதான். சித்ரா பெள்ர்ணமி ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரதத்தன்று வரும். அன்று சூரியனும் சந்திரனும் ஒருவருக்கொருவர் நேரடிப் பார்வையில் இருப்பார்கள். வைகாசி மாதம் விசாக நட்சத்திரன்று வரும். ஆனி மாதம் மூல நட்சத்திரத்திலும், கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தன்றும், தை மாதம் பூச நட்சத்திரத்தன்றும், பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்றும் அந்த இனிய நாள் வரும். நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்

பெளர்ணமியைப்போல அமாவாசைத் திதிகளும் முக்கியமானவைதான். பெள்ர்ணமி நாட்களில் இறைவனை வணங்க வேண்டும் அமாவாசை நாட்களில் நம் முன்னோர்களை வணங்க வேண்டும். அமாவசையில் முக்கியமான அமாவாசை தை அமாவாசை தினமாகும். அன்று இராமேஸ்வரத்திற்குச் சென்று கடலில் நீராடி, இராமநாதசாமியை வணங்கி வருவது மிக்க நன்மை பயக்கும்

தக்‌ஷினாயண புண்ணியகாலம் என்பது சூரிய்ன் தென் திசையில் பயணிக்கும் ஆறு மாதகாலத்தைக் குறிக்கும். ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை உள்ள ஆறு மாத காலம் அது ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை மார்கழி ஆகிய ஆறு மாத காலங்களே அவைகள். நமக்கு ஆங்கிலக் காலெண்டரின்படி சொன்னால்தான் புரியும். இந்த ஆண்டு ஜூலை 17ஆம் தேதி முதல் 13.1.2014 வரை என்று வைத்துக்கொள்ளுங்கள். கடக ராசியில் தனது பயணத்தைத் துவங்கி மகரராசியில் பொங்கலுக்கு முதல் நாள் வரை சூரியனின் பயணத்தை அது குறிக்கும். அதர்குப் பிறகு உள்ள ஆறு மாத காலம் உத்ராயண காலம் ஆகும்

இது ஒரு முக்கியமான தகவல் அதனால் அதை இன்று பதிவு செய்துள்ளேன்

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

24.4.13

அழுக்காகிப்போன சமுதாயம்!


அழுக்காகிப்போன சமுதாயம்!
கவிதை நயம்:

படித்தால், மனதை நிறைக்க வேண்டும். அட என்று சொல்ல வைக்க வேண்டும். அப்படிப்பட்ட நறுக்குத் தெறித்த், நயம் மிக்க கவிதைகள் இப்பகுதியில் தொடர்ந்து வரும்!

உணவில் மட்டும்தான் வெரைட்டி வேண்டுமா? வாசிப்பிலும் வெரைட்டி வேண்டுமல்லவா?

பிடித்திருந்தால் ஒரு வார்த்தை பின்னூட்டத்தில் சொல்லுங்கள்!

அன்புடன்
வாத்தியார்

-------------------------------------------------------------------------------
அழுக்குள்ள சமுதாயம்!

“கனவுகள் கண்டு கண்டு
கண்களும் சலித்துப் போச்சு!
தினம் தினம் சபையில் நின்று
தேகமும் அலுத்துப்போச்சு!
உணவினில் ருசி பேதங்கள்
உணர்வதும் மறந்து போச்சு!
இனியென்ன, இளமைக் காலம்
இருட்டுக்கே பலியாய் ஆச்சு

                  **********
அரசாங்க வேலைக்காரர்
‘அரைல்ட்சம் கொண்டா’ என்றார்
மருத்துவ நிபுனர் வந்து
‘மாடி வீடு உண்டா’ என்றார்
பொறியியல் பட்டதாரி
புதிய ‘கார்’ போதுமென்றார்
அறிவியல் வளர்ந்து என்ன?
அழுக்குள்ள சமுதாயத்தில்!

                  **********
ஜாதகம் பொருந்தினாலோ
ஜாதிகள் பொருந்தவில்லை!
ஜாதியில் பொருத்தமென்றால்
சம்மதம் பணத்தில் இல்லை!
தேதிகள் கிழிந்தாற் போல
தினசரி கிழிந்தாயிற்று!
வீதியில் ஒளி வெள்ளங்கள்
வீட்டில்தான் வெளிச்சம் இல்லை!

                  -- ஆக்கம்: குமரி அமுதன்
(முப்ப்து ஆண்டுகளுக்கு முன்பு வார இதழ் ஒன்றில் படித்தது. என் சேகரிப்பில் இருந்து தந்துள்ளேன்)

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

23.4.13

Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 24


 Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 24

ஜோதிடத் தொடர் பாடம். பகுதி 24

இதற்கு முன் பாடங்களைப் படித்திராதவர்கள், அதைப் படித்துவிட்டு வரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
-------------------------------------------------------
ஒரு திருமண பந்தத்தில், பெண்ணிற்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்பெற்றுள்ளது. பெண்ணின் நட்சத்திரத்தை வைத்து, அதற்குப் பொருத்தமான நட்சத்திரத்தைத் தேரிவு செய்வதுதான் வழக்கத்தில் உள்ளது. அதே பொருத்தம் இரு பாலருக்குமே பொதுவானதுதான். அதை மனதில் வையுங்கள்.

நட்சத்திரப் பொருத்தம் மட்டும் போதுமா?

மற்ற பொருத்தங்கள் முக்கியமில்லையா?

தசா சந்திப்பு இன்றி இருப்பது. தோஷ்ங்கள் இல்லாமல் இருப்பது, இருந்தால் இருவருக்கும் இருப்பதுப்பொன்ற மற்ற விஷயங்களும் உள்ளன. ஆகவே முதலில் நட்சத்திரப் பொருத்தத்தை மட்டும் தொடர்ந்து பார்ப்போம். பிறகு மற்ற கதைகளுக்கு வருவோம்!
-----------------------------------------------------
24. கேட்டை

இது விருச்சிக ராசிக்கு உரிய நட்சத்திரம். அத்துடன் புதனுக்கு உரிய நட்சத்திரம்!

இந்த நட்சத்திரத்திற்கு

1. கார்த்திகை
2. மிருகசீரிஷம்
3. புனர்பூச்ம்
4. பூசம்
5. உத்திரம்
6. ஹஸ்தம்
7. சுவாதி
8. அனுஷம்
9. சதயம்

ஆகிய 9 நட்சத்திரங்களும் பொருந்தக்கூடிய் நட்சத்திரங்களாகும்.

அஷ்டம சஷ்டம நிலைப்பாடு (8/6 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். விருச்சிக ராசிக்கு மிதுனம் எட்டாம் வீடு. மிதுனத்திற்கு விருச்சிகம் ஆறாம் வீடு.. மிருகசீரிஷம் 3 & 4ம் பாதங்கள், மற்றும் புனர்பூசம் 1, 2 & 3ம் பாதங்கள் மிதுன ராசிக்கு உரியவை ஆகவே அவற்றை விலக்கி விடுவது நல்லது.

விருச்சிக ராசிக்கு துலாம் ராசி 12ம் வீடு. துலாம் ராசிக்கு விருச்சிகம் இரண்டாம் வீடு. ( 1/12 & 12/1 position to each rasi)  வேண்டாம் என்பார்கள்.  சித்திரை 3 & 4ம் பாதங்கள். மற்றும் சுவாதி  துலாம் ராசிக்கு உரிய நட்சத்திரங்களாகும் ஆகவே அவற்றையும் விலக்கிவிடுவது நல்லது.

ஆக மொத்தத்தில் 6 நட்சத்திரங்கள் மட்டுமே சிறப்பாகத் தேரும்.

அஸ்விணி, ஆயில்யம், மகம், மூலம், ரேவதி ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும். அவற்றை விலக்கி விடுவது நல்லது.

பெண்ணிற்கும், பையனுக்கும் கேட்டை ஒரே நட்சத்திரமாக இருந்தால் பொருத்தம் கிடையாது!.

திருவாதிரை, சித்திரை, பூராடம், அவிட்டம், பூரட்டாதிஆகிய 5 நட்சத்திரங்களும் பொருந்தாது.

பரணி, ரோகிணி, பூரம், விசாகம், உத்திராடம்,  திருவோணம், உத்திரட்டாதி ஆகிய 7 நடச்த்திரங்களும் மத்திம பொருத்தம் (average) உள்ளவை. அவற்றையும் தெரிவு செய்து கொள்ளலாம்!
----------------------------------------------------------------------------
காதல் திருமணங்களுக்கு இந்தப் பொருத்தம் பார்க்க வேண்டுமா?

எதற்காகப் பார்க்க வேண்டும்? 3 அல்லது 4 வருடங்கள் உருகி உருகிக் காதலித்துவிட்டு, மகாபலிபுரம் போன்ற் இடங்களில் காட்டேஜ் போட்டு ஒருவருடன் ஒருவர் முழுமையாகக் கலந்து விட்டு, இந்தக் கருமத்தை எல்லாம் எதற்காகப் பார்க்க வேண்டும்? இதைப் பார்த்துவிட்டு, பொருத்தம் இல்லை என்று அவனை விட்டுவிட முடியுமா? ருசி கண்ட பூனை சும்மா விடுமா? ஆகவே காதலர்கள், காதல் தோற்கக்கூடாது என்ற உலகப் பொது மறையின்ப்டி திருமணம் செய்துகொள்ள வேண்டியதுதான். திருமணத்திற்குப் பிறகு காதலன் ஒத்துவந்தால் சரி! இல்லை என்றால் குடும்ப நீதி மன்றம் உள்ளது. மகளிர் காவல் நிலையங்களும் உள்ளன! அதைவிட மேலாக இருவருக்கும் வேலை, கை நிறையச் சம்பளம், உலகக் கண்ணோட்டம், பொருளாதார சுதந்திரம் என்று எல்லா ஆயுதங்களும் உள்ளன ஆகவே அவர்கள் இதை எல்லாம் பார்க்க வேண்டாம்  அவர்களுக்கு இதிலிருந்து முழுமையான விதிவிலக்கு உண்டு:-)))) அவர்களுக்கான ஜாதக அமைப்புக்களை விரிவாக, ஒரு தொடராகப் பின்னால் அலசுவோம்!!!!

(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

22.4.13

எத்தனை சொத்து இருந்தாலும் இறுதியில் உன்னை எரிக்கத்தான் போகிறார்கள்!எத்தனை சொத்து இருந்தாலும் இறுதியில் உன்னை எரிக்கத்தான் போகிறார்கள்!

மனவளக் கட்டுரை!

எனக்கு எத்தனை சொத்து இருக்கிறது தெரியுமா? என்று எகத்தாளம் பேசுகிறவர்களை நான் பார்த்திருக்கிறேன்

வாயைக் கிளறினால் விவரம் சொல்லுவார்கள்.

அண்ணா நகரில் ஐந்து கிரவுண்டில் வீடு. அம்பத்தூரில் 20 வீடுகளைக் கொண்ட ஒரு குடியிருப்பு வளாகம். கோயம்பேடு அருகே ஒரு அடுக்குமாடி சொகுசுக் குடியிருப்பில் தலா இரண்டாயிரம் சதுர அடிகளைக் கொண்ட இரண்டு ப்ளாட்டுகள். வேளாச்சேரியில் இரண்டு வீடுகள். தி.நகர் பனகல் பார்க் அருகே ஒரு கமர்சியல் காம்ப்ளெக்ஸ். செள்கார் பேட்டை கோவிந்தப்ப நாயக்கன் தெருவில் ஒரு கமர்சியல் காம்ப்ளெக்ஸ். கர்நாடகா மாநிலம் கூர்க்கில் 150 ஏக்கர் காஃபி எஸ்டேட். சேலத்தில் ஏற்காடு சாலையில் 25 ஏக்கரில் பெரிய மாந்தோப்பு....இப்படி அடுக்கிக் கொண்டே செல்வார்கள்.

எல்லாம் எப்படி வந்தன? பாதி பூர்வீகச் சொத்து. மீதி பலரை ஆட்டைபோட்டு சம்பாதித்தது. கலப்படம் செய்து கல்லாக் கட்டியது. ஊழல் செய்து உருவாக்கியது. கையூட்டு வாங்கிக் குவித்தது. கந்து வட்டியில் சேர்ந்த்து. அடுத்தவன் வயிற்றில் அடித்துச் சேர்த்தது. பங்குதாரனை படுக்கப்போட்டு ஏறிமிதித்து ஏற்றம் பாரத்தது என்று எப்படி வேண்டுமென்றாலும் வைத்துக்கொள்ளுங்கள்

கையில் ஆயிரக் கணக்கில் பணம் புரளும். உட்கார நேரம் இருக்காது. ஆசாமி பறந்து கொண்டே இருப்பார்.

நெப்போலியனைத் தெரியும். ஆனால் திருமூலரைத் தெரியாது. நெப்போலியன் என்பது பிரெஞ்சு மன்னனின் பெயர் அல்ல. ஆசாமி அனு தினமும் சாப்பிடும் சரக்கின் பெயர்.

திருமூலரின் ஒரு பாட்டை மட்டும் அவருக்கு விளங்கும்படி சொன்னால் போதும். ஆசாமி எகத்தாளம் பேசமாட்டார். ஆனால் சொல்வதற்கும் ஆள் இல்லை. சொன்னால் கேட்டுக் கொள்ளும் மனநிலையிலும் அவர் இல்லை

என்ன சொன்னார் திருமூலர்?

   "ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
        பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்
   சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
        நீரினில் மூழ்கி நினைப்பு ஒழிந்தார்களே!"


ஒரு குழந்தை பிறந்தால் அதற்கு உடனே வைப்பது பெயர். அதே போல ஒருவன் இறந்து விட்டால் முதலில் நீக்கி விடுவது அவனுடைய பெயரைத்தான். வீட்டிற்குக் கேதம் கேட்க வருகிறவன், கதிரேசன் செட்டியாரை எப்பொழுது எடுக்கிறீர்ர்கள்? என்று கேட்க மாட்டான் - பாடியை (Body) எப்பொழுது எடுக்கிறீர்கள்? என்றுதான் கேட்பான். பிணத்தை எப்பொழுது எடுப்பீர்கள்? எங்கே கொண்டுபோய் எரிக்கப்போகிறீர்கள்? என்று பச்சையாகக் கேட்காமல், பாலீஷாக பாடியை எப்போது எடுக்கிறீர்கள் என்றுதான் கேட்பான். அதைத்தான் திருமூலர் பேரினை நீக்கிப் பிணமென்று கூப்பிடுவார்கள் என்று ‘நச்’ சென்று சொல்லியுள்ளார். சூரையங்காடு என்பது சுடுகாடு. அவனை எரிக்கும் இடம். இப்பொழுதெல்லாம் மின்மாயானங்கள் உள்ளன. சுடுகாட்டில் அஸ்தி வாங்குவதற்கு பத்து மணி நேரம் காத்திருக்க வேண்டும். ஆனால் மின்மாயனங்களில் இரண்டு மணி நேரத்தில் கொடுத்து விடுவார்கள்.

உற்றார், உறவினர் என்று கேதத்திற்கு வந்த சொந்தக்காரன் எல்லாம் உரக்க அழுதுவிட்டு என்ன செய்வானாம்? வீட்டிற்குத் திரும்பியவுடன், நான்கு வாளி தண்ணீரை தலைக்கு ஊற்றிக் குளித்து விட்டு அவனை மறக்க ஆரம்பித்துவிடுவானாம். அதைத்தான் நினைப்பு ஒழிந்தார்களே என்று சொல்கிறார் திருமூலர்

“நீரில் மூழ்கி என்று சொல்லியிருக்கிறாரே” அது என்ன என்கிறீர்களா? அந்தக் காலத்தில் பல ஊர்களில், சுடுகாட்டுக்குப் பக்கத்தில் நீர் நிலைகள், ஆறு, குளம், ஊருணி போன்றவை இருந்தன. இறந்தவனுக்கு இறுதிக் காரியம் பார்த்தபின் அங்கே மூழ்கிக் குளித்துவிட்டுத்தான் வீட்டிற்குத் திரும்புவார்கள். அதைத்தான் அவர் அப்படிச் சொல்லியுள்ளார்.

யாக்கை நிலையாமை த்த்துவத்தைக் கவியரசர் கண்ணதாசன் இன்னும் அழுத்தமாகச் சொல்லியுள்ளார்

“ஆடிய ஆட்டம் என்ன பேசிய வார்த்தை என்ன?
தேடிய செல்வம் என்ன திரண்டதோர் சுற்றம் என்ன?
கூடு விட்டு ஆவி போனால் கூடவே வருவதென்ன??:”


எதுவுமே கூட வராது! வெறுங்கையுடன்தான் போக வேண்டும்!

வார்த்தைக்கு வார்த்தை ‘அய்த்தான்’ என்றோ அல்லது  ‘அத்தான்’ என்றோ அல்லது ‘என்னங்க... என்னங்க’ என்று அன்பொழுக அழைத்த மனைவி வரமாட்டாள். கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கிய பிள்ளைகள் வராது. முதலாளி, முதலாளி என்று வளைய வந்த வேலைக்காரன் வரமாட்டான். தலைவரே, தலைவரே என்று பணிவாக வந்த தொண்டன் வரமாட்டான். மாப்ளே அல்லது மச்சி என்று சொல்லி சரக்கடிக்கும் இடத்திற்கு ஒவ்வொரு முறையும் உடன் வந்த உற்ற நணப்னும் வரமாட்டான். மொத்தத்தில் யாருமே வரமாட்டார்கள். உன் ஆத்மா தனியாகத்தான் பயணிக்க வேண்டும்!

அதையும் கவியரசர் கண்ணதாசன் தன்னுடைய பாடலில் அழுத்தமாகப் பதிவு செய்தார்

“ஆடும்வரை ஆட்டம் ஆயிரத்தில் நாட்டம்
கூடிவரும் கூட்டம் கொள்ளிவரை வருமா?”


வருகிறவன் சுடுகாடு வரைதான் வருவான். வாய்க்கரிசி போட்டவுடன், அங்கே வைக்கப்பெற்றிருக்கும் பானைக்குள் கயை நனைத்து சுத்த்ம் செய்து கொண்டுவிட்டுக் கிளம்பிப் போய்விடுவான். நம்ம கதிரேசன் தனியாகப் போகிறான்டா, அவன் எவ்வளவு நல்லவன். அவன் தனியாகப் போகக் கூடாது. துணைக்கு நானும் போகிறேன்டா என்று சொல்லி எரிகின்ற சிதையில் எவனும் ஏறிப் படுத்துக்கொள்ளமாட்டான்.

அதைத்தான் கவியரசர் கூடிவரும் கூட்டம் கொள்ளிவரை வருமா என்று கேட்டார்

சரி, ஒன்றுமே வராதா?

நீ செய்த பாவ புண்ணியங்கள் வரும்! அதை வைத்துத்தான் உனக்கு அடுத்த பிறவிக்கான விசா கிடைக்கும். வரம் கிடைக்கும். அடுத்த பிறவியில் ஒரு வேளை மீண்டும் உனக்கு மனிதப் பிறவியே அமைந்தால், அந்தப் பிறவியில் உன் ஜாதகத்தின் ஐந்தாம் வீட்டில் அந்தக் கணக்கு பதிவாகி இருக்கும்!

அதைத்தான் “பற்றித்தொடரும் இருவினைப் பாவமும் புண்ணியமுமே” என்று பட்டினத்தார் சொன்னார்

ஆகவே தெரிந்து பாவச் செயல்களைச் செய்யாதீர்கள். தெரியாமல் செய்வது நம் கையில் இல்லை. நம் காலில் ஒரு எறும்பு மிதி பட்டுச் செத்தால்கூட அது பாவம்தான்!  நாம் என்ன செய்ய முடியும்?

உங்களால் முடிந்த தர்மங்களை நிறையச் செய்யுங்கள்! பணம் இருப்பவர்கள் பணத்தால் தர்மங்களைச் செய்யுங்கள். பணம் இல்லாதவர்கள் மனதால், உடலால் தர்மங்களைச் செய்யுங்கள். சேவைகளைச் செய்யுங்கள். அப்போதுதான் எடுத்துள்ள பிறவி மேன்மையுறும்!

சரி, பதிவின் தலைப்பிற்கு வருகிறேன். எத்தனை சொத்துக்கள் இருந்தாலும், இறுதியில், செத்தவனை இருக்கின்ற சொத்துக்கள் ஒன்றில் வைத்துப் புதைக்க மாட்டார்கள். கண்ணம்மாபேட்டை சுடுகாட்டிலோ அல்லது பெஸ்ன்ட்நகர் மின் மாயானத்திலோ எரித்துவிடுவார்கள்.

பிறகு, செத்தவனின் நினைப்பைவிட வீட்டில் சொத்துச் சண்டைகள்தான் பெரிதாக இருக்கும். காப்பாற்றி வைத்துவிட்டுப் போன சொத்திற்காக செத்தவன் படத்தை வைத்து எவனும் பூப்போட்டுக் கும்பிடமாட்டான். ஏழைகள் வீட்டிலாவது, அதாவது ஒன்றும் இல்லாத வீட்டிலாவது கும்பிடுவார்கள். ஆனால் பணக்கார வீட்டில் அத்ற்கெல்லாம் நேரமிருக்காது.

அதுதான் வாழ்க்கை! அதனால் உங்களுடைய சொத்துக்களைப் பற்றி எகத்தாளம் கொள்ளாதீர்கள்.

நல்ல மனம் ஒன்றுதான் உண்மையான சொத்து. அதைப் பற்றி ஒன்னொரு நாள் விரிவாக எழுதுகிறேன்

அன்புடன்
வாத்தியார்

------------------------------------------
18.4.2013ம் தேதியிட்ட பதிவிற்கு வந்த பின்னூட்டத்தை உங்கள் பார்வைக்குக் கொடுத்துள்ளேன்!

/////Blogger Ramkumar KG said...
    enadhu panivaana vendugol.
    punithamana paadamagiya jothidathil, idai sorugalaaga, asaiva jokugal vendame.
    Please don't publish sex jokes here guruji. this diminishes your fame which you have gained from 1000 good astrological lessons and devotional postings and devotional songs. this really hurts me sir.////


அன்பரின் வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. வகுப்பறையில் இனி, அசைவ நகைச்சுவைகள் வெளிவராது.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

20.4.13

டாஸ்மாக் பதிவுகள்: இட்லி வடையுடன் என்ன கிடைக்கிறது அங்கே?


டாஸ்மாக் பதிவுகள்: இட்லி வடையுடன் என்ன கிடைக்கிறது அங்கே?

கலக்கலான  செய்திகள் பல உள்ளன.  கடைசிவரை பொறுமையாகப் படியுங்கள்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++

நீங்கள் பார்க்க வேண்டிய, படிக்க வேண்டிய பதிவுகளை பட்டியலிட்டுள்ளேன்

1

பன்முகத் திறமை உள்ளவரின் வலைப்பூ இது. பாரதியின் மேல் அவருக்குத் தான் எத்தனை பிரியம்! கலைகளின் மேல் எத்தனை காதல்? அவர் வயதுக்கு, பதிவுகளைப் படிப்பதே பெரிய விஷயம். ஆனால் அவர் பதிவுகளை எழுதி நம்மை ஆச்சரியத்திற்கு உள்ளாக்குகிறார். படித்துப் பாருங்கள்
http://www.bharathipayilagam.blogspot.in/
-----------------
2
இட்லி வடையுடன் என்ன கிடைக்கிறது அங்கே?

எல்லாம் கிடைக்கும் அங்கே!
அரசியல், உலகச் செய்திகள் இவற்றை நகைச்சுவை கலந்து தருகிறார். அத்துடன் தன்னைப்பற்றிய செய்தியையும் நகைச்சுவையுடனேயே தந்துள்ளார். சென்று பாருங்கள்
http://idlyvadai.blogspot.in/
----------------------
3
தான் பணிமாற்றம் பெற்று மீண்டும் சென்னைக்கே வந்துவிட்டதைக் கவிதை மொழியில் சொல்லியுள்ளார். படித்துப்பாருங்கள்
(தன் பெயருக்கு முன் உள்ள கவியாழி’ என்ற சொல்லிற்கு என்ன பொருள் என்பதை அவர்தான் சொல்ல வேண்டும்!)
http://kaviyazhi.blogspot.in/2013/04/blog-post_18.html
------------------------------------------
4
படிக்கும் பழக்கம் குறைந்துவிட்டது. Face Book, Twitter, Cell Phone SMS, Chatting என்று எல்லாம் மாறிவிட்ட நிலையில் படிக்கும் பழக்கத்தின் அவசியத்தை சொல்லின் செல்வர் சிறப்பாகக் கூறியுள்ளார். அவர் சொல்வதைக் கேட்டுப் பாருங்கள்
Reading Habit - Speech by Suki Sivam
http://youtu.be/-2SGmuIiBa4
-----------------------------------------
5
நடிகர் சத்யராஜும், இயக்குனர் மணிவண்ணனும் சேர்ந்து கலக்கிய படம் அமைதிப்படை.(ஆண்டு 1994) அதில் ஒரு காட்சியின் காணொளி உள்ளது. பார்த்துத்  ரசியுங்கள்!
http://youtu.be/t_pxN1QGj3E----------------------------------------------
6.
இன்று மக்களைக் கவர்ந்திருக்கும் யதார்த்தமான காமெடிக்கு ஒரு சிறிய காட்சி காணொளி வடிவில் உள்ளது. பார்த்து மகிழுங்கள்
Paruthiveeran Comedy
http://youtu.be/ogvTus6FuyA
-----------------------------------------------
7
இந்தவாரப் பாடல்! (கவிஞர் தனுசுவிற்கு சமர்ப்பணம்)
படம்: வத்திக்குச்சி. நடிப்பு திலீபன் & அஞ்சலி
http://youtu.be/VBI2qrGcCDE


----------------------------
8
க்யூவில் நிற்பதற்கான யோசனை! (இது நல்லாயிருக்கே!)-----------------------------
9

இந்தவாரப் படம்!எந்த இடம் என்று முடிந்தால் சொல்லுங்கள்!

இந்த ஒன்பதில் எது மிகவும் நன்றாக உள்ளது? ஒரு வார்த்தை சொல்லுங்கள் சாமிகளா!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

19.4.13

என்ன பாட்டுடா சாமி! என்ன குரல்வளம்டா சாமி!

 
 
என்ன பாட்டுடா சாமி! என்ன குரல்வளம்டா சாமி!

பக்தி மலர்!

நாரதகான சபாவில் சின்னப்பெண் ஒருத்தி பாடிய பக்திப் பாடல் இன்றைய பக்தி மலரை அலங்கரிக்கிறது. இறையருளால அந்தப் பெண்ணிற்கு நல்ல குரல் வளம் இருக்கிறது. அனைவரும் பாடலைக் கேட்டு மகிழுங்கள்

அன்புடன்
வாத்தியார்

-----------------------------------------------
மனமே முருகனின் மயில்வாகனம்
பாடலின் காணொளி
http://youtu.be/updLYfoeORI
Our sincere thanks to the person who uploaded the video clipping in the net
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

18.4.13

Humour, நகைச்சுவை: என்னடா சொன்னாள் அந்த பிரெஞ்சுப் பெண்மணி?

 
Humour, நகைச்சுவை: என்னடா சொன்னாள் அந்த பிரெஞ்சுப் பெண்மணி?

பதிவை, நகைச்சுவைக் கண்ணோட்டத்துடன் மட்டுமே பாருங்கள். வேறு வில்லங்கம் எதுவும் வேண்டாம்!
--------------------------------------------------------
1.
மனநிலை சரியில்லாத இளைஞன் ஒருவன், தெருவோரம் இருந்த பெரிய கிணற்றின் கைப்பிடிச் சுவரின் மீது உட்கார்ந்து கொண்டிருந்தான். கிணறு பாழடைந்த, ஆழமான கிணறு. உட்கார்ந்து கொண்டிருந்தவன் சுமமா இல்லாமல், “ட்டொண்டி எய்ட்......ட்டொண்டி எய்ட்.......ட்டொண்டி எய்ட்.....”என்று கத்திக்கொண்டிருந்தான்.

இளைஞன் வாட்டசாட்டமாக இருப்பான். பார்வைக்கு பைத்தியக்காரன் போல தெரியமாட்டான்.

அந்தப் பக்கமாகச் சென்று கொண்டிருந்த வழிப்போக்கன் ஒருவன் அதைப் பார்த்தான். பரிதாபம் மேலிட, பாதையை விட்டு இறங்கி, அவனருகே வந்தவன், கண்டிப்பான குரலில் கொன்னான்:

“டேய் முதலில் கத்துவதை நிறுத்து. தொண்டை வற்றிப்போய் விடும். .ட்டொண்டி எய்ட்டிற்குப் பிறகு உனக்கு என்னவென்று தெரியுமா? தெரியாதா?”

சட்டென்று கைப்பிடிச்சுவரை விட்டு இறங்கிய அவன், டக்கென்று, வந்தவனைக் கெட்டியாகப் பிடித்து, தலைக்கு மேலே தூக்கி ஒரு சுற்று சுற்றி, கிணற்ருக்குள் வீசியவன், மீண்டும் கைப்பிடிச் சுவற்றின் மீது உட்காரந்து இப்படிச் சொல்ல ஆரம்பித்தான்:

“ட்டொண்டி நைன்.........ட்டொண்டி நைன்.........ட்டொண்டி நைன்...................”

(எண்ணிக்கையில் அவன் தெளிவாகத்தான் இருந்தான். இதுவரை அவன் உள்ளே வீசியவர்களின் எண்ணிக்கை அது!)
-------------------------------------------------------------------------------------
2

----------------------------------------------------------------------------
3

---------------------------------------------------------------------------------------------
4

 தன்னுடைய 13 வயதுப் பெண்  ‘தம்’ அடித்துக்கொண்டிருப்பதைப் பார்த்தவுடன், அவளுடைய தந்தைக்குப் பெரும் அதிர்ச்சி

“அடக் கடவுளே! எப்போதிருந்து இந்தப் பழக்கம்?” தந்தை கேட்டார்

“என் கன்னித் தன்மை போனதிலிருந்து!”

“அடிப்பாவி, கன்னித் தன்மை போய்விட்டதா? அந்தக் கயவாளித்தனம் எப்போது நடந்தது? யார் அந்த அயோக்கியப் பயல்?”

“எனக்கு ஞாபகமில்லை. நான் அப்போது குடித்துவிட்டு, முழு போதையில் இருந்தேன்"

டமார் என்ற் சத்தம் கேட்டது. தந்தை மயங்கிக் கீழே விழுந்திருந்தார்!
--------------------------------------------------------------------
5

அடுத்து வருவது அசைவப் பதிவு. அதாவது அசைவமான நகைச்சுவை. அசைவம் பிடிக்காதவர்கள் பதிவை விட்டு விலகிவிடலாம்
                                                                         V
                                                                         V
                                                                         V
                                                                         V
                                                                         V
                                                                         V
                                                                         V
                                                                         V
                                                                         V
                                                                         V
                                                                         V
                                                                         V

லண்டன் மாநகரத்தில் ஒரு செல்வந்தன் இருந்தான். அவனுக்கு அசாத்திய சொத்துக்கள் இருந்தன. எல்லாம் குடும்பச் சொத்துக்கள். பல நாடுகளில் தோட்டங்களும், பண்ணைகளும் இருந்தன. மொத்தம் ஒரு லட்சம் ஏக்கர்களுக்குமேல் சொத்து என்றால் பார்த்துக்கொள்ளூங்கள். அத்தனையும் விளை நிலங்கள். அத்துடன் இரண்டாயிரம் மாடுகளைக் கொண்ட இரண்டு மாட்டுப் பண்ணைகளும் இருந்தன. ஒரு மாட்டுப்பண்னை ஆஸ்திரேலியா விலும், மற்றொன்று நியூஜிலாந்திலும் இருந்தன. அங்கே உற்பத்தியாகும் பாலை மூன்று பன்னாட்டு சாக்லேட் செய்யும் நிறுவனங்கள் போட்டிபோட்டுக் கொண்டு நல்ல விலை கொடுத்து வாங்கிக் கொண்டிருந்தன.

அவனுக்கு வயது நாற்பது. லட்சக்கணக்கான டாலர் பணம் கையில் புரண்டு கொண்டிருந்தாலும், அவனுடைய சொந்த வாழ்க்கை மகிழ்ச்சியாக இல்லை. அவன் செக்ஸில் ஆதீத வேட்கை, அதாவது ஆர்வம் உடையவன். அவன் மனைவி அவ்வளவாக ஈடுபாடு இல்லாதவள். அவளை விவாகரத்து செய்துவிட்டு வேறு ஒருத்தியை மணந்து கொள்ளலாம் என்றால் அதில் ஒரு சிக்கல் இருந்தது. ஜீவனாம்சம் என்ற பெயரில் கணிசமான சொத்தை நீங்கள் இழக்க நேரிடும் என்று அவனுடைய வக்கீல் எச்சரித்திருந்தார். அதனால் அவனும் அவளுடன் உரசல் இல்லாமல் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தான்.

வேற்று நாடுகளுக்குச் செல்லும்போது, விலைமகளிர் மூலம் தனது இச்சைகளைத் தீர்த்துக்கொண்டு விடுவான். யாருக்கும் அது தெரியாமல் பார்த்துக்கொள்வான்

ஆனால் அவனுக்கு மனதில் ஒரு பெரும் ஆசை இருந்தது

தன்னுடைய மாட்டுப் பண்னையில் மாடுகளை Mating செய்யும் காலங்களில் அவன் இங்கே இருப்பது வழக்கம். அவ்வாறு இருக்கும் காலங்களில் காளைமாடு ஒரு லாகவத்துடனும், வேகத்துடனும் பசு மாடுகளுடன் உறவு கொள்ளும் காட்சிகளைப் பார்த்து விட்டு, அவன் மனதிலும் ஒரு வேட்கை உண்டானது.

அடடா, மாட்டிற்கு இருக்கும் மகிழ்ச்சிகூட நமக்கு இல்லையே என்ற ஏக்கமும் உண்டாயிற்று!

தனது வேட்கையைத் தனிக்கும் வேலையில் இறங்கினான்

ஒரு ஏஜண்ட் மூலம் பாரிஸில் ஒரு வாட்டசாட்டமான, பொங்கி நிற்கும் அழகுடன் கூடிய இருபது வயதுப் பெண்னைப் பிடித்தான். ஒரு மாத ஒப்பந்தம். நாளொன்றுக்கு அவளுக்கு இரண்டாயிரம் டாலர் சம்பளம் என்று முடிவாயிற்று. முக்கியமான கண்டிஷன், இவன் என்ன சொன்னாலும் அவள் கேட்க வேண்டும். அவள் சம்மத்த்து இவனுடன் கிளம்பினாள்.

அவளுடன் பயணித்து, அடுத்த நாளே சிட்னி நகருக்கு வந்து, அங்கிருந்து தன்னுடைய மாட்டுப் பண்ணைக்கும் வந்து சேர்ந்தான்.

தன்னுடைய பண்னை வீட்டில் அவளைத் தங்க வைத்தான்.

அடுத்த நாள் காலை, அவளைத் தன்னுடைய மாட்டுப்பண்ணைக்கு  அழைத்துகொண்டு  சென்றான்.

அங்கே நடந்தது என்ன?
-------------------------------------------------------------
அதை இங்கே சொல்ல முடியாது.  உங்களுக்கு அதைத் தெரிந்து கொள்ள ஆவல் என்றால், வகுப்பறையை விட்டு வெளியே வாருங்கள். அதாவது என் மின்னஞ்சல் முகவரிக்கு வாருங்கள்.

இதற்கான மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com மின்னஞ்சல் அனுப்புங்கள். பதில் கிடைக்கும் Subject boxல் மறக்காமல் Post dated 18.4.2013 என்று குறிப்பிடுங்கள்

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++========

17.4.13

Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 23

 
Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 23

ஜோதிடத் தொடர் பாடம். பகுதி 23

இதற்கு முன் பாடங்களைப் படித்திராதவர்கள், அதைப் படித்துவிட்டு வரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
-------------------------------------------------------
ஒரு திருமண பந்தத்தில், பெண்ணிற்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்பெற்றுள்ளது. பெண்ணின் நட்சத்திரத்தை வைத்து, அதற்குப் பொருத்தமான நட்சத்திரத்தைத் தேரிவு செய்வதுதான் வழக்கத்தில் உள்ளது. அதே பொருத்தம் இரு பாலருக்குமே பொதுவானதுதான். அதை மனதில் வையுங்கள்.

நட்சத்திரப் பொருத்தம் மட்டும் போதுமா?

மற்ற பொருத்தங்கள் முக்கியமில்லையா?

தசா சந்திப்பு இன்றி இருப்பது. தோஷ்ங்கள் இல்லாமல் இருப்பது, இருந்தால் இருவருக்கும் இருப்பதுப்பொன்ற மற்ற விஷயங்களும் உள்ளன. ஆகவே முதலில் நட்சத்திரப் பொருத்தத்தை மட்டும் தொடர்ந்து பார்ப்போம். பிறகு மற்ற கதைகளுக்கு வருவோம்! 
-----------------------------------------------------
23. அனுஷம்

இது விருச்சிக ராசிக்கு உரிய நட்சத்திரம். அத்துடன் சனீஷ்வரனுக்கு உரிய நட்சத்திரம்!

இந்த நட்சத்திரத்திற்கு
1. அஸ்விணி
2. கார்த்திகை
3. ரோஹிணி
4. மிருகசீரிஷம்
5. புனர்பூச்ம்
6. ஆயில்யம்
7. மகம்
8. உத்திரம்
9. ஹஸ்தம்
10. சித்திரை
11. சுவாதி
12. கேட்டை
13. திருவோணம்
14. சதயம்
15. ரேவதி
ஆகிய 15 நட்சத்திரங்களும் பொருந்தக்கூடிய் நட்சத்திரங்களாகும்.

அஷ்டம சஷ்டம நிலைப்பாடு (8/6 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். விருச்சிக ராசிக்கு மிதுனம் எட்டாம் வீடு. மிதுனத்திற்கு விருச்சிகம் ஆறாம் வீடு.. மிருகசீரிஷம் 3 & 4ம் பாதங்கள், மற்றும் புனர்பூசம் 1, 2 & 3ம் பாதங்கள் மிதுன ராசிக்கு உரியவை ஆகவே அவற்றை விலக்கி விடுவது நல்லது.

விருச்சிக ராசிக்கு துலாம் ராசி 12ம் வீடு. துலாம் ராசிக்கு விருச்சிகம் இரண்டாம் வீடு. ( 1/12 & 12/1 position to each rasi)  வேண்டாம் என்பார்கள்.  சித்திரை 3 & 4ம் பாதங்கள். மற்றும் சுவாதி  துலாம் ராசிக்கு உரிய நட்சத்திரங்களாகும் ஆகவே அவற்றையும் விலக்கிவிடுவது நல்லது.

ஆக மொத்தத்தில் 11 நட்சத்திரங்கள் மட்டுமே சிறப்பாகத் தேரும்.

பரணி, பூசம், பூரம், பூராடம், உத்திரட்டாதி ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும். அவற்றை விலக்கி விடுவது நல்லது.

பெண்ணிற்கும், பையனுக்கும் அனுஷம் ஒரே நட்சத்திரமாக இருந்தால், மத்திம பொருத்தம் உண்டு. ஆகவே அதைக் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம்.

திருவாதிரை, மூலம், அவிட்டம் ஆகிய 3 நட்சத்திரங்களும் பொருந்தாது.

விசாகம், உத்திராடம், பூரட்டாதி ஆகிய 3 நடச்த்திரங்களும் மத்திம பொருத்தம் (average) உள்ளவை. அவறையும் தெரிவு செய்து எடுத்துக் கொள்ளலாம்!
----------------------------------------------------------------------------
காதல் திருமணங்களுக்கு இந்தப் பொருத்தம் பார்க்க வேண்டுமா?

எதற்காகப் பார்க்க வேண்டும்? 3 அல்லது 4 வருடங்கள் உருகி உருகிக் காதலித்துவிட்டு, மகாபலிபுரம் போன்ற் இடங்களில் காட்டேஜ் போட்டு ஒருவருடன் ஒருவர் முழுமையாகக் கலந்து விட்டு, இந்தக் கருமத்தை எல்லாம் எதற்காகப் பார்க்க வேண்டும்? இதைப் பார்த்துவிட்டு, பொருத்தம் இல்லை என்று அவனை விட்டுவிட முடியுமா? ருசி கண்ட பூனை சும்மா விடுமா? ஆகவே காதலர்கள், காதல் தோற்கக்கூடாது என்ற உலகப் பொது மறையின்ப்டி திருமணம் செய்துகொள்ள வேண்டியதுதான். திருமணத்திற்குப் பிறகு காதலன் ஒத்துவந்தால் சரி! இல்லை என்றால் குடும்ப நீதி மன்றம் உள்ளது. மகளிர் காவல் நிலையங்களும் உள்ளன! அதைவிட மேலாக இருவருக்கும் வேலை, கை நிறையச் சம்பளம், உலகக் கண்ணோட்டம், பொருளாதார சுதந்திரம் என்று எல்லா ஆயுதங்களும் உள்ளன ஆகவே அவர்கள் இதை எல்லாம் பார்க்க வேண்டாம்  அவர்களுக்கு இதிலிருந்து முழுமையான விதிவிலக்கு உண்டு:-)))) அவர்களுக்கான ஜாதக அமைப்புக்களை விரிவாக, ஒரு தொடராகப் பின்னால் அலசுவோம்!!!!

(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

16.4.13

Astrology: நீங்களும் உங்கள் ஜாதகமும் - பகுதி 2

 

 Astrology: நீங்களும் உங்கள் ஜாதகமும் - பகுதி 2

அகண்ட வரிசை இணைய இணைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இன்றைய பதிவை வலையில் ஏற்றுவது தாமதப்ப்ட்டுவிட்டது. பொறுத்துக்கொள்ளவும்
---------------------------------------------------------------------------------
“வருடம் என்னும் பெயருக்கு வேறு ஒரு காரணம் இருக்க வேண்டும் என்று தெரிகிறது. வருடை என்னும் சொல், வருடம் என்று மருவியிருக்க வேண்டும்.
வருடை என்பது மேட ராசியின் பெயர். பாவை நோன்பை விளக்கும் பரிபாடல் 11-ஆம் பாடலில் வானத்தில் கோள்கள் இருக்கும் நிலையை விவரிக்கையில், ‘வருடையைப் படி மகன் வைப்ப’ என்று வருகிறது. செவ்வாய் கிரகம், வருடை என்னும் மேட ராசியை அடைந்தது என்று பொருள்.வருடை என்பது ஒரு ஆடு. அது மலையாடு. மலைப்பகுதிகளில் மட்டுமே வசிக்கக் கூடியது. வருடையைக் குறிக்கும் ராசி மேட ராசி. அது குறிக்கும் மாதம் சித்திரை மாதம். அம்மாதம் தான் வருடத்தின் முதல் மாதம் என்று காட்டும் வகையில், நெடுநல் வாடையில்,
திண்ணிலை மருப்பின் ஆடு தலையாக
விண்ணூர்பு திரிதரும் வீங்குசெலல் மண்டிலத்து
என்று ஆட்டினைத் தலையாகக் கொண்டு, சூரியன் இந்த உலகத்தைச் சுற்றி விண்ணில் ஊர்ந்து வருகிறான் என்று கூறப்பட்டுள்ளது!”

இணையத்தில் படித்தேன்.
-----------------------------------
அதை எல்லாம் விட்டு விட்டு முக்கியமான செய்தியை மட்டும் பார்ப்போம்

1. சூரியன் வானத்தில் தன்னுடைய புதிய சுழற்சியை அல்லது சுற்றை மேஷத்தில் துவங்குகிறது. 30 பாகைகளை அது நாளொன்றுக்கு ஒரு பாகை வீதம் கடந்து, அடுத்த ராசிக்குள் (ரிஷபத்தில்) நுழைகிறது. அவ்வாறாக வானமண்டத்தில் உள்ள 12 ராசிகளையும் (மொத்தம் 360 பாகைகள்) கடந்து மீண்டும் மேஷத்திற்கு வருவதற்குள் ஒரு ஆண்டு காலம் முடிந்திருக்கும்.

இந்த சுழற்சியை எல்லாம் நமது மகா முனிவர்கள் நான்காம் நூற்றாண்டிலேயே (அதாவது 1,600 ஆண்டுகளுக்கு முன்பாகவே) கணித்து எழுதிவைத் திருக்கிறார்கள். அவர்களுடைய காலத்தில் அவர்களுக்கு எந்த விதமான உபகரணங்களும் (equipments) கிடையாது. Computer, satelite, telescopes, planetorium போன்றவைகள் கிடையாது.

இன்றைய விஞ்ஞானம் சொல்லும் கணக்குகளும், அவர்களுடைய கணக்குகளும் ஒன்றாகவே உள்ளன. அவர்களுக்கு அது எப்படி சாத்தியமாயிற்று? தெய்வ சக்தி, தெய்வ அருள், ஞானம் என்று எப்படி வேண்டுமென்றாலும் வைத்துக்கொள்ளுங்கள்.

வானமண்டலத்தை எப்படி 12 ராசிகளாகப் பிரித்தார்கள்? எப்படி பெயர் சூட்டினார்கள்? எப்படி அடையாளச் சின்னங்களைக் கொடுத்தார்கள்? என்பதற்கெல்லாம் நாம் பலவிதமான கேள்விகளைக் கேட்கலாம். ஆனால் பதில் சொல்வதற்கு அவர்களில் யாரும் இப்போது உயிருடன் இல்லை. ஆகவே கேள்வி கேட்காமல் அவற்றை அப்படியே நாம் எடுத்துக்கொள்ள வேண்டியதுதான் அதுதான் நமக்கு நல்லது
----------------------------------------------------------
இதில் இன்னொரு முக்கிய செய்தியும் உள்ளது. சுற்றுக்கு 360 பாகைகள். 360 நாட்கள் என்னும் கணக்குப்படி வாக்கியப் பஞ்சாங்கம் 360 நாட்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது. திருக்கணிதப் பஞ்சாங்கம் 365 நாட்களைக் கொண்டது. இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை அதனதன் அயனாம்சம் தன்னிச்சையாகச் சரி செய்துகொள்ளும். அயனாம்சம் என்பது வடமொழிச் சொல் (Movement of planets)

அயனாம்சத்தில் 3 விதமான அயனாம்சங்கள் உள்ளன. லஹரி அயனாம்சம்! ராமன் அயனாம்சம், கே.பி அயானாம்சம் என்று மூன்று வகை அயனாம்சங்கள் உள்ளன.
------------------------------------------------
கால்சந்திப்பில் பிறந்தவர்களுக்கு இரண்டு விதமான ஜாதகங்கள் இருக்கும். நட்சத்திர சந்திப்பில் பிறந்தவர்களூக்கும் இரண்டு விதமான ஜாதகங்கள் இருக்கும்.
ஜாதகமே மாறும் பொழுது, லக்கினமே மாறும் பொழுது பலன்களும் மாறாதா?

உதாரணத்திற்கு இரண்டு ஜாதகங்களைக் கீழே கொடுத்துள்ளேன்

இரண்டுமே ஒரே தேதிக்கு, ஒரே பிறந்த நேரத்திற்கு, ஒரே ஊர் பிறப்பிற்கு உரியதுதான். நன்றாகக் கவனித்துப்பாருங்கள்

அயனாம்சத்தில் (பஞ்சாங்கத்தில்) உள்ள குழப்பம் இது! இரண்டிற்கும் லக்கினமும் மாறுகிறது. நட்சத்திரமும் மாறுகிறது. தசாபுத்தியும் மாறுகிறது. முதலில் உள்ளது லஹரி பஞ்சாங்கத்தை அடிப்படையாகக் கொண்டது. இரண்டாவதாக உள்ளது ராமன் பஞ்சாங்கத்தை அடிப்படையாகக் கொண்டது
-------------------------------------------------------
அதே போல ஒரே தேதிக்கு, ஒரே பிறந்த நேரத்திற்கு, ஒரே ஊர் பிறப்பிற்கு, ஒரே அயனாம்சத்திற்கு ஐந்து நிமிட இடைவெளியில் இரண்டு விதமான ஜாதகங்கள் உள்ளன. (இரண்டிலும் ஐந்து நிமிட இடைவெளியில்) லக்கினம் மாறிவிடுவதைக் கவனியுங்கள்! இந்த ஜாதகம் கால சந்திப்பில் பிறந்தவர்களின் கணக்கில் வரும்
-------------------------------------------------------
http://www.mysticscripts.com/astrology/vedic-astrology/ayanamsa-calculator/


 --------------------------------------------------------------------------------------------
ஆகவே முதலில் உங்கள் பிறந்த நேரம் சரியானதுதான் என்று தெரிந்து கொள்ளுங்கள். ஒரே வீட்டில் நான்கு பேர்களுடைய கைக்கடிகாரங்களும் ஒரே நேரத்தைக் காட்டுவதில்லை)

உங்கள் ஜாதகம் சரியாகக் கணிக்கப்பட்டுள்ளதா என்று தெரிந்துகொள்ளுங்கள்
----------------------------------------------------------
சர்வ நிச்சயாமக் இது மட்டும் உண்மை

ஜோதிடம் உண்மை
உங்களுக்கென்று ஒரு ஜாதகம் இருக்கும்
அதுவும் உண்மை!
அதற்கு உரிய பலன்களின் படிதான் உங்கள் வாழ்க்கை நடக்கும்.
அதுவும் உண்மை!
அனைவருக்கும் 337பரல்கள் தான். அதன்படி பலன்கள் சரிசமமாக இருக்கும் அதுவும் உண்மை!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

15.4.13

Astrology நீங்களும் உங்கள் ஜாதகமும்!புத்தாண்டு பொதுப் பலன்!

ஏப்.13 சனிக்கிழமை வளர்பிறை சதுர்த்தி, கார்த்திகை நட்சத்திரம் அமிர்தயோக வேளையில் இரவு 11.52 தனுசு லக்னத்தில் புத்தாண்டு பிறந்திருக்கிறது . 

வகுப்பறையின் சார்பில் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!.

புத்தாண்டைப் பற்றி பஞ்சாங்கம் என்ன சொல்கிறது? பாடலைக் கீழே கொடுத்துள்ளேன்.

தமிழ் ஆண்டுகள் அறுபதில் விஜய 27வது ஆண்டாகும். தனுசு லக்கினத்தில் ஆண்டு பிறந்துள்ளதால் சுபகிரகமான குரு, லக்கினாதிபதியாகி இந்த ஆண்டின்
அரசனாக இருக்கிறார். குருவும், சந்திரனும் பலத்துடன் இருப்பதால் அனைவருக்கும் இந்த ஆண்டில் பலவிதமான நன்மைகள் உண்டாகும்!.

மண்ணில் விசய வருடமழை மிகுதி
எண்ணுசிறு தானியங் களெங்கே நண்ணும்
பயம்பெருகி நொந்த பரிவாரமெல்லாம்
ந்யங்களின்றி வாடுமென் நாட்டு!

- இடைக்காடர் சித்தரின் பாடல்

சித்தரின் பாடலின் படி இந்த ஆண்டு மழை மிகுதியாக இருக்கும். எல்லா பயிர்களும் நன்கு விளையும். ஆனால், மக்கள் சொந்தங்களை விடுத்து விலகி
நிற்பார்கள். மக்களுடைய மனதில் பய உணர்வு இருக்கும் என்று அறிய வருகிறோம்!

சித்தர் பாடல் பலிக்குமா என்று தெரியவில்லை. எத்தர்கள் நிறைந்த காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதனால்தான் இந்த சந்தேகம்!

பாடலின் கடைசி வரியைப் பற்றி நாம் கவலை கொள்ளத் தேவையில்லை. மக்கள் சொந்தங்களை விட்டு விலகி ரொம்ப நாளாகிவிட்டது. கூட்டுக் குடும்பங்கள் எல்லாம் இப்போது ஏது? எல்லாம் மைக்ரோ ஃபாமிலி களாகிவிட்டன!

பெண்களும் நிறைய மாறி விட்டார்கள். பி.இ,, எம்.பி.ஏ என்று படித்து பல நிறுவனங்களில் இன்று பணி புரிகிறார்கள். கை நிறையச் சம்பாதிக்கிறார்கள். தலை நிறைய பூ வைத்துக்கொள்கிறார்கள். மாலையில் சாட் ஐட்டங்கள் உண்வாகிறது. கையில் கேலக்ஸி போன்கள். கண்ணில் வண்ணக் கனவுகள்  இளம் வயதில் ரம்மியமாகத்தான் இருக்கிறார்கள். ஆனல் பலருக்கு குணம்தான் சரியாக இல்லை!.

தன்னைவிட அதிகம் படித்த, அதிகம் சம்பாதிக்கும் கண்வன் வேணும் என்கிறார்கள். நெருக்கிப் பேசினால், அவன் வீட்டில் எத்தனை லக்கேஜ்? என்கிறார்கள்.அதாவது பைய்னின் பெற்றோர்கள் மற்றும் உடன் பிறப்புக்கள் எல்லாம் சுமக்க வேண்டிய லக்கேஜாம். எப்ப்டி இருக்கிறது?

பையன் தனியாக இருக்க வேண்டும் என்கிறார்கள். அதைப் பற்றி இன்னொரு நாள் பார்ப்போம்.
--------------------------------------------------------------------------------------------------
இப்போது சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன்.

முதலில் நீங்கள் பிறந்த ஆண்டின் தமிழ்ப் பெயரைத் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

வருடங்களின் பெயர்களை தமிழில் கீழே பட்டியலிட்டுள்ளேன். 1987 - 1988 ஆம் ஆண்டில் இருந்து விவரம் உள்ளது. அதற்கு முந்தைய ஆண்டு வேண்டுபவர்கள்.

அறுபது ஆண்டுகளைக் கழித்து விட்டுப் பின் நோக்கிப் பார்க்கலாம்.;

தமிழ் வருட ங்கள வரிசையில் ஸ்ரீவிஜய வருடம். இது இந்த வ்ருட வரிசையில் 27வது வருடமாகும். வருடம் என்பது வர்ஷா என்னும் வடமொழிச்சொல்லின் நேரடிச் சொல். வர்ஷா என்றால் பொழிவது என்று பொருள். (வருடம் முழுவதும் நன்மைகளைப் பொழிய வேண்டும் என்பதற்காக அப்படி வைத்திருப்பார்களோ?

வருடத்திற்கு உரிய சரியான தமிழ்(ற்) சொல் ஆண்டு என்பது ஆகும். அதை நினைவில் வையுங்கள்

எண் - பெயர் - Name, வருடம்
1 ப ரபவ Prabhava  1987 - 1988
2 விபவ Vibhava 1988 - 1989
3 சுக்ல Sukla 1989 - 1990
4 ப ரேமா தூத Pramodhudha 1990 - 1991
5 பிரசோர்பதி Prajorpati 1991 - 1992
6 ஆங் கீரச Angirasa 1992 - 1993
7 ஸ்ரீமுக Srimukha 1993 - 1994
8 பவ Bhava 1994 - 1995
9 யுவ Yuva 1995 - 1996
10 தாது Dhatu 1996 - 1997
11 ஈ ஸ்வர Esvara 1997 - 1998
12 வெகுதான்ய Vehudhaniya 1998 - 1999
13 பிரமாதி Pramathi 1999 - 2000
14 விக்கிரம Vikrama 2000 - 2001
15 வி ஷூ Vishu 2001 - 2002
16 சி த்திரபானு Chitrabanu 2002 - 2003
17 சுபானு Subanu 2003 - 2004
18 தாரண Tarana 2004 - 2005
19 பா ர்த்திப Parthiba 2005 - 2006
20 வி ய Viya 2006 - 2007
21 சர் வசி த்து Sarvasithu 2007 - 2008
22 ச ர்வதாரி Sarvadhari 2008 - 2009
23 விரோதி Virodhi 2009 - 2010
24 விக்ருதி Vikruthi 2010 - 2011
25 கர Kara 2011 - 2012
26 நந்தன Nandhana 2012 - 2013
27 விஜய Vijaya 2013-2014
28 ஜய Jaya 2014 - 2015
29 மன்மத Manmatha 2015 - 2016
30 , துன்முகி Dhunmuki 2016 - 2017
31 ஹேவிளம்பி Hevilambi 2017 - 2018
32 விளம்பி Vilambi 2018 - 2019
33 விகாரி Vikari 2019 - 2020
34 சா ர்வரி Sarvari 2020 - 2021
35 பிலவ Pilava 2021 - 2022
36 சுபகிருது Subakrithu 2022 - 2023
37 சோபகிருது Sobakrithu 2023 - 2024
38 குரோதி Krodhi 2024 - 2025
39 விசுவாசுவ Visuvaasuva 2025 - 2026
40 பிரபாவ Parabhaava 2026 - 2027
41 பிலவங்க Plavanga 2027 - 2028
42 கீலக Keelaka 2028 - 2029
43 செளமிய Saumya 2029 - 2030
44 சாதாரண Sadharana 2030 - 2031
45 விரோதிகிருது Virodhikrithu 2031 - 2032
46 பரிதாபி Paridhaabi 2032 - 2033
47 பி ரமாதீச Pramaadhisa 2033 - 2034
48 ஆனந்த Aanandha 2034 - 2035
49 ராட்சச Rakshasa 2035 - 2036
50 நள Nala 2036 - 2037
51 பிங் கள Pingala 2037 - 2038
52 காளயுக் தி Kalayukthi 2038 - 2039
53 சி த்தா ர்த்தி Siddharthi 2039 - 2040
54 ரெள்த்திரி' Raudhri 2040 - 2041
55 துன்மதி Thunmathi 2041 - 2042
56  துந்துபி Dhundubhi 2042 - 2043
57 ருத்ரோத்காரி Rudhrodhgaari 2043 - 2044
58 ர க்தாட்சி Raktakshi 2044 - 2045
59  குரோதன Krodhana 2045 - 2046
60 அட்சய Akshaya 2046 - 2047
-------------------------------------------------------------
புத்தாண்டு துவக்கத்திற்கும் சித்திரை முதல் தேதிக்கும், மேஷ ராசிக்கும் என்ன தொடர்பு? அதை நாளை விரிவாகப் பார்ப்போம். அத்துடன் தலைப்பில் உள்ள நீங்களும் உங்கள் ஜாதகமும் பற்றியும் விவரமாகப் பார்ப்போம்
பொறுத்திருங்கள்

(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

13.4.13

டாஸ்மாக் பதிவுகள்: ச்கலகலா வல்லவர் சுப்புத் தாத்தா!

 
டாஸ்மாக் பதிவுகள்: ச்கலகலா வல்லவர் சுப்புத் தாத்தா!

கலக்கலான பல செய்திகள் உள்ளன. பொறுமையாக கடைசிவரை படியுங்கள்
நீங்கள் பார்க்க வேண்டிய, படிக்க வேண்டிய பதிவுகளை பட்டியலிட்டுள்ளேன்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
1.
சகலகலாவல்லவர் திருவாளர் சூரி (சுப்புத் தாத்தா) அவர்களின் வலைப் பதிவு இது. உடலால் அவருக்கு 75 வயதாகிறது. மனதால் அவர் இளைஞர்தான். மனதை மயக்கும் இசைப்பாடல்கள் பற்றி நிறைய எழுதி வருகிறார். கேட்டு மகிழுங்கள்
http://www.subbuthatha.blogspot.in/
--------------------------------------------
2
எண்ணத்தை மேமபடுத்தும் பாடல்கள்
ஆக்கம்: திண்டுக்கல் தனபாலன்
http://dindiguldhanabalan.blogspot.com/2012/07/blog-post.html
அவருடைய மின்னஞ்சல் முகவரி:
திண்டுக்கல் தனபாலன்
-------------------------------------------------------
3
கற்போம். கற்பதற்கு நிறைய விஷயங்கள் இந்த வலைப்பூவில் உள்ளது!
ஒருமுறை பாருங்கள்!
http://www.karpom.com/2013/04/5-android-smartphones-below-rs-10000.html
--------------------------
4
சாப்பாட்டுக் கடை அம்மா உண்வகம் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்
ச்க பதிவர் கேபிள் சங்கரின் வலைத்தளம்:
http://www.cablesankaronline.com/2013/04/blog-post_11.html
-------------------------
5
அழியும் தருவாயில் தமிழ் எண்கள் : ஒரு எச்சரிக்கை அலசல்
http://nadikavithai.blogspot.in/2013/04/tamil-numbers.html
--------------------------------
6.
படிப்பைப் பாதியில் விட்டவர்கள். ஆனாலும் சாதனையில் முதலிடத்தில் இருப்பவர்கள். மொத்தம் 15 பேர்களைப் பற்றிய விவரம் உள்ளது. பாருங்கள்
College drop outs who made it big
http://in.finance.yahoo.com/photos/15-college-dropouts-who-made-it-big-slideshow/
----------------------------
7
150 முறை பாம்பிடம் கடிவாங்கிய பெண்மணி
வடஇந்திய ந்கரமான சோனிப்பெட்டில் வசிக்கும் ரஜவந்தி தேவி என்னும் இந்தப் பெண்மணியை கடந்த 40ஆண்டுகளீள் இதுவரை 150 முறைகள் பாம்பு தீண்டியிருக்கிறது. ஆனாலும் இன்னும் உயிருடன் இருக்கிறார். சுவாரசியமான செய்தி. படித்துப் பாருங்கள்
http://in.news.yahoo.com/video/snake-bites-woman-150-times-152500232.html
--------------------------------------
8
இந்தவாரப் பாடல் (இது விசுவநாதருக்கு)
http://youtu.be/7lWgc7Xwpiw
-------------------------------------------------------------------------
9
இந்தவாரப் பாடல் (இது லால்குடியாருக்கு)
http://youtu.be/90JPFjyfIis--------------------------------------------------------------------------------
10
இந்த வாரப் படம்என்ன, எல்லாம் பிடித்திருக்கிறதா?

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++

12.4.13

பட்டுக்கோட்டையார் அதையும் எழுதியிருக்கிறாரா?


பட்டுக்கோட்டையார் அதையும் எழுதியிருக்கிறாரா?

காதல் பாடல்களையும், தத்துவப் பாடல்களையும் மட்டுமே பட்டுக்கோட்டையார் எழுதியுள்ளதாக பலர் நினைத்துக்கொண்டிருப்பார்கள். இல்லை, அவர் பக்திப் பாடல்களையும் எழுதியுள்ளார்

இன்றைய பக்தி மலரை, கவிஞர் பட்டுகோட்டை திரு. கல்யாணசுந்தரம் அவர்கள் எழுதிய பாடல் ஒன்று அலங்கரிக்கின்றது. அனைவரும் கேட்டு மகிழுங்கள்

அன்புடன்
வாத்தியார்

-----------------------------------------------------------------------
கங்கை அணிந்தவா! கண்டோர் தொழும் விலாசா!
சதங்கை ஆடும் பாத விநோதா! லிங்கேஸ்வரா!
நின் தாள் துணை நீ தா!

தில்லை அம்பல நடராஜா
செழுமை நாதனே பரமேசா
அல்லல் தீர்த்தாண்டவா வா வா
அமிழ்தானவா வா 


(தில்லை)

எங்கும் இன்பம் விளங்கவே
அருள் உமாபதே
எளிமை அகல வரம் தா வா வா
வளம் பொங்க வா 


(தில்லை)

பலவித நாடும் கலையேடும்
பணிவுடன் உனையே துதிபாடும்
கலையலங்கார பாண்டிய ராணி நேசா
மலை வாசா! மங்கா மதியானவா 


(தில்லை) -
பாடலாக்கம்: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
படம்: சௌபாக்கியவதி (1957)
இசை: பி. நாகேஸ்வரராவ்

------------------------------------------------------
பாடலின் காணொளி வடிவம்
http://youtu.be/qUORRGYe1y4
Our sincre thanks to the person who uploaded the song in the net!
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++

11.4.13

Humour,நகைச்சுவை: படுக்கையின் கீழே என்னடா பார்த்தாள் அவள்?Humour,நகைச்சுவை: படுக்கையின் கீழே என்னடா பார்த்தாள் அவள்?

பதிவை, நகைச்சுவைக் கண்ணோட்டத்துடன் மட்டுமே பாருங்கள். வேறு வில்லங்கம் எதுவும் வேண்டாம்!
--------------------------------------------------------
1
அறிவிப்புப் பலகைகள்:

A
பாட்னா ரயில் நிலையத்தில் உள்ள அறிவிப்புப் பலகை

போவதும் இலவசம். வருவதும் இலவசம்
மாட்டிக் கொண்டால் உணவும் இலவசம்!

(பயணச் சீட்டு இல்லாமல் பயணிப்பவர்களுக்காக எழுதப்பெற்றது)

B
மும்பையில் பிரபலமாக உள்ள beauty parlorல் உள்ள வாசகம்
இங்கேயிருந்து வெளியே செல்லும் பெண்ணைப் பார்த்து விசில் அடிக்காதீர்கள். அது உங்கள் பாட்டியாகக் கூட இருக்கலாம்!

C
மும்பை ஜூஹு பகுதியில் உள்ள சிகை அலங்காரக் கடையில் உள்ள வாசகம்
தலைவா, உங்கள் தலையை நம்பித்தான் எங்கள் வியாபாரம் உள்ளது!.
------------------------------------------------------
2
கடைசி வேண்டுகோள்

ஒரு தம்பதியருக்கு 4 பையன்கள். அவர்களில் முதலில் பிறந்த மூன்று பேர்களும், முகத்தோற்றம், நிறம், தலை முடி, உயரம் என்று ஏறக்குறைய ஒன்றாக இருப்பார்கள்.

கடைசிப்பையன் மட்டும் வித்தியாசமாக இருப்பான். வேறுபட்டு இருப்பான்.

அவன் பிறப்பில் அவனுடைய தந்தைக்கு சிறு சந்தேகம் இருந்தது. அத்துடன் பத்து ஆண்டுகளுக்கு மேலாக அது மனதை அரித்துக்கொண்டிருந்தது.

ஒரு நாள் தந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு, சீரியசாகி மருத்துவ மனையில் சேர்த்திருந்தார்கள். ஒரு மாதம் சிகிச்சை அளித்தும் பயனில்லை.

மருத்துவர்கள் கையை விரித்துவிட்டார்கள். இன்னும் இரண்டு தினங்களுக்கு மேல் தாங்காது என்றும் சொல்லிவிட்டார்கள். அது அவருக்கும் தெரிந்து விட்டது.

மனைவியை அருகே அழைத்து மெல்லிய குரலில் பேசியவர், கடைசியாகத் தன் வேண்டுகோளை முன்வைத்தார்!:

“அன்பே, நான் ஒன்றைத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். நீயும் பெரிய மனது பண்ணி, மறைக்காமல் என்னிடம் உண்மையைச் சொல்ல வேண்டும், சரியா?”

“கேளுங்கள்”

“நம்முடைய கடைசிப் பையன் நமக்குப் பிறந்தவன்தானா?”

“நான் இறைவன் மேல் ஆணையிட்டுச் சொல்கிறேன். சத்தியமாக அவன் நமக்குப் பிறந்தவன்தான்! அவன் உங்களுடைய குழந்தைதான். நம்புங்கள்!”

அந்த ஷணமே நிம்மதியோடு கணவனின் உயிர் பிரிந்துவிட்டது

பத்தாம் நாள், காரியங்கள் செய்தபோது, மனைவி இறைவனைப் பிரார்த்தனை செய்து கொண்டாள் “மற்ற மூவரைப் பற்றியும், அவர் கேட்காமல் விட்டதற்கு
நன்றி உனக்குக் கடவுளே, கேட்டிருந்தால், நான் பொய்ச் சத்தியம் பண்ணும்படி ஆகியிருக்கும்!”
------------------------------------------------------------------------------------------------
3
அடுத்து வருவது அசைவப் பதிவு. அதாவது அசைவமான நகைச்சுவை. அசைவம் பிடிக்காதவர்கள் பதிவை விட்டு விலகிவிடலாம்
V
V
V
V
V
V
V
V
V
V
V
V

படுக்கையின் கீழே என்னடா பார்த்தாள் அவள்?

ஆரோக்கியசாமியும், அனுராதாவும் ஆதர்சனமான தம்பதியர். முப்பது ஆண்டு மணவாழ்க்கை ரம்மியமாகக் கழிந்து விட்டது.

ஒரே ஒரு குறை. ஆரோக்கியசாமி, தினமும் இரண்டு அல்லது மூன்று லார்ஜ் அடிக்காமல் இரவுப் பொழுதைக் கழிக்க மாட்டான். அனுராதாவும் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. போனால் போகிறான் பகல் முழுவதும் கடுமையாக உழைக்கிறான். நிறையச் சம்பாதிக்கிறான் என்று விட்டு விடுவாள். ஆனால் தண்ணி அடித்தபின்தான் படுக்கையில் அவனுடைய வேகம் அதிகரிக்கும். அதனாலும், அவள் கண்டு கொள்ள மாட்டாள்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, தங்கள் திருமணத்தன்று ஆரோக்கியசாமி, தன் மனைவிடம் சொன்னான். “நம் படுக்கையின் கீழே ஒரு மரப்பெட்டி உள்ளது.
அதை மட்டும் நீ எக்காரணத்தைக் கொண்டும் திறந்து பார்க்கக்கூடாது. பிராமிஸ் பண்ணு” என்று சொல்லி உறுதிமொழி வாங்கிக் கொண்டான்.

அவளும் சத்தியத்திற்குக் கட்டுப்பட்ட பெண் ஆதலால், கடந்த 30 ஆண்டுகளாகப் பெட்டியைத் திறந்து பார்க்கவில்லை.

தங்களின் முப்பதாம் ஆண்டு திருமண நாளன்று,  தன் கணவன் அன்பாக வாங்கிக் கொடுத்திருந்த பட்டுப் புடைவையைக் கட்டிக் கொண்டவள், குறுகுறுப்புத் தாங்காமல் இன்று அந்தப் பெட்டி ரகசியத்தைத் தெரிந்து கொள்வது என்று முடிவு செய்தாள்.

அன்று மாலை, தன் கணவன் வெளியே சென்றிருந்த சமயம், பெட்டியைத் திறந்து பார்த்தவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. அதில் குறிப்பிடும்படி பெரிதாக ஒன்றும் இல்லை. மூன்று காலி பீர் கேன்களும், கொஞ்சம் பணமும் இருந்தது. பணத்தை எண்ணிப்பார்த்தாள். கிட்டத்தட்ட பதினைந்தாயிரம் ரூபாய்கள் இருந்தன

பெட்டியை மூடியவள். அது இருந்த இடத்திலேயே வைத்துவிட்டாள்..

இப்போது அவளுடைய குறுகுறுப்பு அதிகமாகிவிட்டது. யோசித்துப் பார்த்தாள். ஒன்றும் பிடிபடவில்லை.

அன்று இரவு, ஒரு பெரிய ஸ்டார் ஹோட்டலில் டின்னருக்குச் சென்று அமர்ந்தபோது, அவள் மெல்லிய குரலில், தன்னுடைய கணவனிடம் சொன்னாள்:

“அன்பே, என்னை மன்னித்து விடுங்கள். உங்களுக்குக் கொடுத்திருந்த வாக்குறுதியின் காரணமாக மனதைக் கட்டுப்படுத்துக்கொண்டிருந்தவள், அதீத மன உந்துதலின் காரணமாக இன்று அதை மீறும்படி ஆகிவிட்டது.”

“என்ன சொல்கிறாய்?”

“கட்டிலுக்குக் கீழே உள்ள பெட்டியைத் திறந்து பார்த்துவிட்டேன். பெட்டிக்குள் 3 காலி பீர் கேன்களும், கொஞ்சம் பணமும் இருந்தது. எத்றகாக அதை
வைத்திருக்கிறீர்கள்?”

"உன்னிடம் சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. நானும் உன்னிடம் உண்மையை மறைக்க விரும்பவில்லை. விசுவாசமில்லாமல், உனக்குத் துரோகமாக ஒரு பெண்ணுடன் படுத்து விட்டு வரும்போது, அதுபோல மீண்டும் ஒருமுறை செய்யக்கூடாது என்று எனக்கு நானே அறிவுறுத்துக் கொள்ளும் விதமாக ஒரு காலி பீர் கேனைப் போட்டுவைப்பது வழக்கம்!”

பெட்டியில் 3 பீர் கேன்கள்தான் உள்ளன. மூன்று முறைகள்தான் தவறு இழைத்துள்ளான். ஆண்டுகளின் எண்ணிக்கையைப் பார்க்கும்போது, அது ஒன்றும் அவளுக்குப் பெரிதாகத் தெரியவில்லை. ஆகவே இப்படிச் சொன்னாள்

“எனக்கு மிகுந்த ஏமாற்றமாக உள்ளது. ஆண்கள் சலன புத்தி உள்ளவர்கள் என்பதை நான் அறிவேன். இனிமேல் அப்படிச் செய்யாதீர்கள். உங்களை நான்
மன்னித்து விடுகிறேன்.”

அவள் அவ்வாறு சொல்லவும், அவன் உற்சாகமாகி, உற்சாக பானத்தை வரவழைத்து ஆனந்தமாகக் குடிக்க ஆரம்பித்தான். மனைவிக்குக் கோக் வாங்கிக் கொடுத்தான்.

சற்று நேரம் சென்றவுடன், மனதில் மின்னலாகத் தோன்றிய சந்தேகத்தால், அவனிடம் அவள் கேட்டாள்

“இறைவன் மீது ஆணையாகச் சொல்லுங்கள். பெட்டியில் இருக்கும் பணத்திற்கு என்ன கணக்கு?”

அவனும் மறைக்காமல் உண்மையைச் சொன்னான்.

பெரும் அதிர்ச்சிக்கு ஆளான அவள், தலை கிறுகிறுக்கத் தடால் என்று மயங்கிக் கீழே விழுந்து விட்டாள்

ஆரோக்கியசாமி என்ன சொன்னான் அப்படி?
---------------------------------------------------
அதை இங்கே சொல்ல முடியாது.  உங்களுக்கு அதைத் தெரிந்து கொள்ள ஆவல் என்றால், வகுப்பறையை விட்டு வெளியே வாருங்கள். அதாவது என்
மின்னஞ்சல் முகவரிக்கு வாருங்கள். அங்கே உபரியாக இன்னொரு ப்ளேட் அசைவமும் கிடைக்கும் இதற்கான மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com மின்னஞ்சல் அனுப்புங்கள். பதில் கிடைக்கும் Subject boxல் மறக்காமல் Post dated 11.4.2013 என்று குறிப்பிடுங்கள்

அன்புடன்
வாத்தியார்

-----------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

10.4.13

Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 22 Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 22

ஜோதிடத் தொடர் பாடம். பகுதி 22

இதற்கு முன் பாடங்கலைப் படித்திராதவர்கள், அதைப் படித்துவிட்டு வரும்படி
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
-------------------------------------------------------
ஒரு திருமண பந்தத்தில், பெண்ணிற்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப் பெற்றுள்ளது. பெண்ணின்  நட்சத்திரத்தை வைத்து, அதற்குப் பொருத்தமான நட்சத்திரத்தைத் தேரிவு செய்வதுதான் வழக்கத்தில் உள்ளது. அதே பொருத்தம் இரு பாலருக்குமே பொதுவானதுதான். அதை மனதில்
வையுங்கள்.

நட்சத்திரப் பொருத்தம் மட்டும் போதுமா?

மற்ற பொருத்தங்கள் முக்கியமில்லையா?

தசா சந்திப்பு இன்றி இருப்பது. தோஷ்ங்கள் இல்லாமல் இருப்பது, இருந்தால் இருவருக்கும் இருப்பதுப்பொன்ற மற்ற விஷயங்களும் உள்ளன. ஆகவே முதலில் நட்சத்திரப் பொருத்தத்தை  மட்டும் தொடர்ந்து பார்ப்போம். பிறகு மற்ற கதைகளுக்கு வருவோம்! 
-----------------------------------------------------
22. விசாகம் 4ஆம் பாதம் மட்டும்

இது விருச்சிக ராசிக்கு உரிய நட்சத்திரம். அத்துடன் குரு பகவானின் நட்சத்திரம்!

இந்த நட்சத்திரத்திற்கு
1. மிருகசீரிஷம்
2. ஆயில்யம்
3. மகம்
4. சித்திரை
5. விசாகம் (ஏக நட்சத்திரம்)
6. மூலம்
7. திருவோணம்
8. அவிட்டம்
ஆகிய 8 நட்சத்திரங்களும் பொருந்தக்கூடிய் நட்சத்திரங்களாகும்.

அஷ்டம சஷ்டம நிலைப்பாடு (8/6 position to each rasi)  வேண்டாம் என்பார்கள்.
விருச்சிக ராசிக்கு மிதுனம் எட்டாம் வீடு. மிதுனத்திற்கு விருச்சிகம் ஆறாம் வீடு.. மிருகசீரிஷம் 3 & 4ம் பாதங்கள் மிதுன ராசிக்கு உரியவை ஆகவே அவற்றை விலக்கி விடுவது நல்லது.

விருச்சிக ராசிக்கு துலாம் ராசி 12ம் வீடு. துலாம் ராசிக்கு விருச்சிகம் இரண்டாம் வீடு. ( 1/12 & 12/1 position to each rasi)  வேண்டாம் என்பார்கள்.  சித்திரை 3 & 4ம் பாதங்கள் துலாம் ராசிக்கு உரிய நட்சத்திரங்களாகும் ஆகவே அவற்றையும் விலக்கிவிடுவது நல்லது.

ஆக மொத்தத்தில் 6 நட்சத்திரங்கள் மட்டுமே சிறப்பாகத் தேரும்.

கார்த்திகை, புனர்பூசம், உத்திரம், உத்திராடம், பூரட்டாதி ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும். அவற்றை விலக்கி விடுவது நல்லது.

பெண்ணிற்கும், பையனுக்கும் விசாகம் ஒரே நட்சத்திரமாக இருந்தால், ஏக நட்சத்திரப் பொருத்தம் உண்டு. ஆகவே அதைக் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம்.

பரணி, கார்த்திகை, திருவாதிரை, புனர்பூசம், ஹஸ்தம், அனுஷம், கேட்டை, சதயம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய 10 நட்சத்திரங்களும் பொருந்தாது.

அஸ்விணி, ரோஹிணி, பூசம், சுவாதி, ஆகிய 4 நடச்த்திரங்களும் மத்திம பொருத்தம் (average) உள்ளவை. அவறையும் தெரிவு செய்து எடுத்துக் கொள்ளலாம்!
----------------------------------------------------------------------------
காதல் திருமணங்களுக்கு இந்தப் பொருத்தம் பார்க்க வேண்டுமா?

எதற்காகப் பார்க்க வேண்டும்? 3 அல்லது 4 வருடங்கள் உருகி உருகிக் காதலித்துவிட்டு, மகாபலிபுரம் போன்ற் இடங்களில் காட்டேஜ் போட்டு ஒருவருடன் ஒருவர் முழுமையாகக் கலந்து  விட்டு, இந்தக் கருமத்தை எல்லாம் எதற்காகப் பார்க்க வேண்டும்? இதைப் பார்த்துவிட்டு, பொருத்தம் இல்லை என்று அவனை விட்டுவிட முடியுமா? ருசி கண்ட பூனை சும்மா விடுமா?  ஆகவே காதலர்கள், காதல் தோற்கக்கூடாது என்ற உலகப் பொது மறையின்ப்டி திருமணம்  செய்துகொள்ள வேண்டியதுதான். திருமணத்திற்குப் பிறகு காதலன் ஒத்துவந்தால் சரி! இல்லை என்றால் குடும்ப நீதி மன்றம் உள்ளது. மகளிர் காவல் நிலையங்களும் உள்ளன! அதைவிட  மேலாக இருவருக்கும் வேலை, கை நிறையச் சம்பளம், உலகக் கண்ணோட்டம், பொருளாதார சுதந்திரம் என்று எல்லா ஆய்தங்களும் உள்ளன ஆகவே அவர்கள் இதை எல்லாம் பார்க்க  வேண்டாம்  அவர்களுக்கு இதிலிருந்து முழுமையான விதிவிலக்கு உண்டு:-)))) அவர்களுக்கான ஜாதக அமைப்புக்களை விரிவாக, ஒரு தொடராகப் பின்னால் அலசுவோம்!!!!

(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++=

9.4.13

Astrology.Popcorn Post பொன்மகள் எப்போதுடா வருவாள்?


Astrology.Popcorn Post பொன்மகள் எப்போதுடா வருவாள்?
 
Popcorn Post No.42


1970ஆம் ஆண்டு திரைக்கு வந்த சொர்க்கம் படத்தில் கவியரசர் கண்ணதாசன் எழுதிய பிரபலமான பாடல் ஒன்று கீழே உள்ள வரிகளைக்கொண்ட பல்லவியுடன் துவங்கும்:

“பொன்மகள் வந்தாள்
பொருள்கோடி தந்தாள்
பூமேடை வாசல் பொங்கும் தேனாக
கண்மலர் கொஞ்சும் கனிவோடு என்னை
ஆளாக்கினாள் அன்பிலே!”


அதே பாடலின் சரணத்தின் கடைசி பத்தியில் இப்படி எழுதியிருப்பார்:

“செல்வத்தின் அனைப்பில் கிடப்பேன்
வெல்வெட்டின் விரிப்பில் நடப்பேன்
இன்பத்தின் மனதிலே குளிப்பேன்
என்றென்றும் சுகத்தில் மிதப்பேன்”

-------------------------------------------
செல்வத்தின் அனைப்பில் கிடக்க அனைவருக்கும் ஆசைதான். ஆனால் நடக்க வேண்டுமே? செல்வத்தின் அனைப்பில் இருப்பவன் கூட வெல்வெட்டின் விரிப்பில் நடப்பதும் கிடையாது. சுகத்தில் மிதப்பதும் கிடையாது. வந்த செல்வத்தை விடாமல் தக்க வைத்துக்கொள்ளும் அவதியில் பலர் இருக்கிறார்கள்

சாதாரண மனிதனுக்குக் கிடைக்கும் சுகம் கூட பெரிய செல்வந்தனுக்குக் கிடைப்பதில்லை. செல்வம் வந்தவுடன் கூடவே கஞ்சத்தனமும் வந்துவிடும்!
ஸ்ரீதேவி வந்தால் கூடவே அவளுடைய அக்கா மூதேவியும் வந்துவிடுவாள். அக்காவை உள்ளே விடக்கூடாது. அப்போதுதான் வந்த செல்வத்தால் பயன்பெற முடியும். சுகப்பட முடியும்!

அதை இன்னொரு நாள் விரிவாக எழுதுகிறேன்.

இப்போது பாடத்தைப் பார்ப்போம்!
-------------------------------------------------
சொகுசான வாழ்க்கைக்கான கிரக அமைப்பு: (Planetary position for luxurious life)

1
சுகாதிபதியும், பாக்யாதிபதியும் ஒன்று சேர்ந்து லக்கினத்தில் குடியிருந்தால், ஜாதகன் செள்கரியமான சொகுசான் வாழ்க்கை வாழ்வான். அதாவது 4ஆம் அதிப்தியும், ஒன்பதாம் அதிபதியும் ஒன்று சேர்ந்து லக்கினத்தில் இருக்க வேண்டும் (This combination will confer a luxurious life)

2
குரு பகவான் 4ஆம் வீட்டில் அமர்ந்திருக்க வேண்டும். அல்லது 4ஆம் வீட்டை நேரடியாகப் பார்க்க வேண்டும். அல்லது 4ஆம் வீட்டு அதிபதியுடன் கூட்டாக கேந்திரத்திலோ அல்லது திரிகோண வீட்டிலோ அமர்ந்திருந்தால் ஜாதகன் வாழ்க்கை செல்வமும் மகிழ்ச்சியும் நிறைந்ததாக இருக்கும்

3.
நான்காம் அதிபதியும், ஒன்பதாம் அதிபதியும் பரிவர்த்தனையாகி, ஒருவர் வீட்டில் மற்றவர் அமர்ந்திருந்தாலும், வாழ்க்கை செல்வமும், மகிழ்ச்சியும் நிறைந்ததாக இருக்கும்.

அவ்வளவுதானா?

இல்லை! முக்கியமானதை மட்டும் கூறியுள்ளேன். இன்னும் பல விதிமுறைகள் உள்ளன. அவற்றை விரிவாக இன்னொரு நாள் பார்ப்போம்!

பாப்கார்ன் பொட்டலத்தில் இவ்வளவுதான் தரமுடியும் சாமிகளா!

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++

8.4.13

Astrology: அவன் தூங்கவுமில்லை: நாம் அகப்படவுமில்லை!Astrology: அவன் தூங்கவுமில்லை: நாம் அகப்படவுமில்லை!

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது ஜோதிடத்தின் மேன்மையை நான் அறிந்து கொள்வதற்கு முன்பு கவியரசர் கண்ணதாசனின் வரிகளைத்தான் அடிக்கடி நினைத்துக்கொண்டிருப்பேன். இறைவன் மேல அப்படி ஒரு குறை என்னக்கிருந்தது.

“அவனுக்கென்ன தூங்கிவிட்டான்
அகப்பட்டது நான அல்லவா”


ஜோதிடத்தை ஓரளவு அறிந்த பிறகுதான் உண்மை தெரிந்தது.

“அவன் தூங்கவுமில்லை - நாம்
அகப்படவும் இல்லை!”


வாருங்கள், சற்று விரிவாக அதைப் பார்ப்போம்!
------------------------------------------------------
இறைவன் கருணை வடிவானவர். உலகில் உள்ள ஜீவராசிகள் அனைத்தும் - மனிதன் உட்பட - அனைத்துமே அவருக்குச்  சமமானவை தான்.

அவருக்கு வேண்டியது - வேண்டாதவை என்று எதுவும் கிடையாது.

தன்னை நம்புகிறவனும் அல்லது நம்பாதவனும், மேலும் தன்னை நம்புகிறவனை முட்டாள் என்று சொல்கிறவனும் அவருக்கு ஒன்றுதான்.

தன்னை மறுத்துப் பேசுகிறவனையும் அவர் முகம் மலர்ந்து ஏற்றுக் கொள்கிறார். அவனுக்கும் கருணை காட்டுகிறார். அவனுக்கும் நல்லதொரு வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கிறார்.

இல்லையென்றால் அவர்  எப்படி இறைவனாக இருக்க முடியும்?

நம்பினாலும் அல்லது நம்பாவிட்டாலும் பாதிப்பு ஒன்றும் அவருக்கில்லை.

சரி, அப்படியென்றால் இருவருக்கும் (நம்புகிறவன் - நம்பாதவன்) என்ன வித்தியாசம்?

நம்புகிறவன், ஒரு பிரச்சினை வரும்போது - அதை இறைவன் பார்த்துக் கொள்வார் என்று கவலைப் படுவதை விட்டுவிட்டு நிம்மதியாக இருப்பான். நம்பாதவன் பிரச்சினையோடு, கவலையையும் கை பிடித்துக்கொண்டு அல்லல் படுவான்

"வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல"


"விருப்பும், வெறுப்பும் இல்லாத இறைவனின் அடிகளை இடைவிடாமல் நினைப்பவர்க்கு, எவ்விடத்திலும், எக்காலத்திலும் துன்பம் இல்லை" என்று வள்ளுவப் பெருந்தகை எழுதிவைத்தார்.

வள்ளுவர் எழுதியதில் விருப்பு வெறுப்பு இல்லதவர் இறைவன் என்ற முதல்வரி முக்கியம்

இறைவன் விருப்பு, வெறுப்பின்றி எல்லா மனிதர்ளையும் சமமாகப் படைத்தார்.

நீங்கள் கேட்கலாம் - அப்படியென்றால் வாழ்க்கையில் ஏன் பலவிதமான ஏற்றத்தாழ்வுகள்?

ஒரு குழந்தை ஏன் செல்வந்தர் வீட்டில் பிறக்கிறது?
ஒரு குழந்தை ஏன் அன்றாடம் வயிற்றுப்பசிக்கு அல்லல் படும் ஏழைவீட்டில் பிறக்கிறது?
ஒரு குழந்தை பார்ப்பவர்கள் மகிழும் விதமாக அழாகாக பிறக்கிறது.
ஒரு குழந்தை ஏன் உடல் ஊனத்துடன் பிறக்கிறது

ஏன் அப்படி?

அதைத்தான் நம் முன்னோர்கள் வாங்கி வந்த வரம் என்று ஒரே வரியில் சொல்லியுள்ளார்கள். நாம் முன் ஜென்மத்தில் செய்த நல் வினைகள், தீவினைகளுக்குத் தகுந்த மாதிரி இந்தப் பிறவி அமைகிறது.

முன் பிறவியில் தான தர்மங்கள், சேவைகள் செய்தவனுக்கு இந்தப்பிறவி அற்புதமாக அமைகிறது. அல்லாதவனுக்கு வாழ்க்கை அல்லல் படும் விதமாக அமைகிறது.

பிறந்த மூன்றாவது நாளே, ஒரு குழந்தை தன் பெற்ற தாயாரால் குப்பைத் தொட்டியில் போடப்படும் நிலைக்கு ஆளாகிறது என்றால், முன் பிறவியில் அந்தக்குழந்தை தன் தாய் தந்தையரை உதாசீனப்படுத்திய பாவத்தைச் செய்திருக்கும். இந்தப் பிறவியில் அந்தப் பாவத்தைக் கழிக்க அதனுடைய பிறப்பு அப்படி அமையும்.

எல்லாமே முன் ஜென்மப் பாவ புண்ணியங்களின்படிதான் என்றால், இங்கே, அதாவது இந்தப் பிறவியில் இறைவனின் பங்காற்றல் என்ன?

He will give you standing power to face any situation
இறைவனின் பங்காற்றல் இல்லையென்றால் ஒருவன் மனிதனாகவே பிறந்திருக்க முடியாது. ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும் அதைத்தாங்கும் விதமாக நஷ்ட ஈட்டைக் கொடுத்துத்தான் அவர் நம்மைப் படைத்திருக்கிறார்

அந்த நஷ்ட ஈடும் சேரும் போதுதான் அனைவருக்கும் 337 பரல்கள் என்ற சம நிலைப்பாடு கிடைத்திருக்கிறது.

எப்போதும் நான் சொல்வதைப்போல:

மன்மோகன் சிங்கிற்கும் 337 பரல்கள்தான்.
அவருடைய வாகன் ஒட்டிக்கும் 337 பரல்கள்தான்.
முகேஷ் அம்பானிக்கும் 337 பரல்கள்தான்.
அவருடைய உதவியாள்ருக்கும் 337பரல்கள்தான்
அனுஷ்கா சர்மாவிற்கும் 337 பரல்கள்தான்.
அவருடைய வீட்டில் பாத்திரம் கழுவும் முனியம்மாவிற்கும் 337 பரல்கள்தான்
மாவட்ட ஆட்சியாளருக்கும் 337 பரல்கள்தான்.
அவருடைய கார் கதவைத் திறந்துவிடும் டவாலிக்கும் 337 பரல்கள்தான்

ஒருவனுக்குப் பத்தாம் வீட்டில் - அதாவது ஜீவன ஸ்தானத்தில் தேவையான பரல்கள் இன்றி அந்தவீடு அடிபட்டுபோய் இருந்தால், நல்ல உத்தி யோகம் கிடைக்காமல் அவதிப்பட்டுக் கொண்டிருப்பான். அதே நேரத்தில் அவனுக்கு நான்காம் வீடு (சுக ஸ்தானம்) நன்றாக அமைந்திருக்கும்  அவனுக்கு ஒரு ஊறவினர்களோ அல்லது நண்பர்களோ உதவி செய்து அடிப்படைத் தேவைகளுக்கு கேடு இல்லாமல் பார்த்துக் கொள்வார்கள்

ஆகவே அஷ்டகவர்க்கம் கற்றுக்கொண்டபின் உங்களுக்குத் தெரியவரும் - யாருக்கும் நீங்கள் தாழ்ந்தவரில்லை - அதேபோல யாருக்கும் நீங்கள் உயர்ந்தவருமில்லை

உங்களுக்கு எதெது மறுக்கப்பட்டிருக்கிறதோ அதற்கு ஈடாகவேறொன்றும் கொடுக்கப்பட்டிருக்கும்.

ஜாதகத்தின் 12 வீடுகளும், 36 பாக்கியங்களும் மிக நன்றாக அமைவதற்கு வாய்ப்பே கிடையாது. சரி பாதி நன்றாக அமையும். இருப்பதை வைத்துத் திருப்திப் பட்டுக்கொள்ள வேண்டியதுதான்.

கைவண்டி இழுப்பவன், இரண்டாள் சாப்பாட்டைக் கொடுத்தால் ஒரு வெட்டு வெட்டிவிட்டு கட்டாந்தரையில் படுத்து நன்றாகத் தூங்குவான்.அதே சாப்பாட்டில் கால் பகுதியைக் கூட ஒரு செல்வந்தனால் ரசித்துச் சாப்பிடமுடியாது. கேட்டால் Blood Pressure, Sugar, என்று தனக்கிருக்கும் வியாதிகளின் பெயர்களையும், விழுங்கும் மாத்திரைகளின் பெயர்களையும் அடுக்கிச் சொல்வான்.

Health இருக்கும் இடத்தி;ல் Wealth இருக்காது. Wealth இருக்கும் இடத்தில் Health இருக்காது. இரண்டும் நன்றாக இருக்க வேண்டு மென்றால் 1, 2, 6, 8, 9, 11, 12 ஆகிய வீடுகளில் 30 பரல்களுக்கு  மேல் அமைந்திருக்க வேண்டும். அப்படியெல்லாம் கோடியில் ஒருவருக்குக்கூட அமையாது!

அதைத்தான் கவியரசர் கண்ணதாசன் இரண்டே வரிகளில் சுருக்கிச் சொன்னார்.

"அது இருந்தால் இது இல்லை, இது இருந்தால் அது இல்லை
அதுவும் இதுவும் சேர்ந்திருந்தால்,அவனுக்கு இங்கே இடமில்லை!"


ஆமாம் எல்லாம் சேர்ந்து கிடைக்கப் பெற்றவனுக்கு ஆயுள் அதிகம் இருக்காது.மேலே போய்விடுவான்.

இதையெல்லாம் உணர்ந்து நம்மை நாமே சமதானப் படுத்திக் கொண்டு சந்தோசமாகவும் நிம்மதியாகவும் வாழ்வதுதான் உண்மையான வாழ்க்கை!

கிராமத்தில் பெரியவர்கள் சொல்வார்கள், " டேய் சோற்றைக் கீழே சிந்தாதே - சிந்தினால் அடுத்த ஜென்மத்தில் நீ ஈயாகப் பிறப்பாய்"

ஈயாகப் பிறந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்யும்  சிறுவன் நிச்சயமாக அடுத்து சோற்றைச் சிந்தாமல் உண்ணப் பழகிவிடுவான்.

"டேய் சாமி இல்லேன்னு சொல்லாதே - சொன்னா, இப்போ வெள்ளி, சனிக்கிழமைகள்ல கோவில் வாசல்ல தாட்டோட உக்காந்திருக்கானுங்கள்ல அவனுங்க மாதிரி அடுத்த பிறவியில் நீயும் தட்டோட உக்கார வேண்டியதிருக்கும்" இப்படியும் சொல்லிக் கிராமத்துப் பெரியவர்கள் தங்கள் குழந்தைகளை நெறிப்படுத்துவார்கள்.

அந்த நெறிப்படும் மனது தான் முக்கியம். அது எத்தனை வயதில் உங்களுக்கு நெறிப்படுகிறது என்பது அதை விட முக்கியம்.

முப்பது அல்லது நாற்பது வயதிற்குள் மனது நெறிப்பட வேண்டும். எழுபதுவயதில் நெறிப்படுவதால் ஒன்றும் பயனில்லை!

இருபது வயதில் நண்பன் சொல்கிறான் என்பதற்காக இரண்டு பெக் சீவாஸ் ரீகல் விஸ்கி அடித்துப் பார்ப்பது இயற்கை. அதையே எழுபது வயது வரை செய்வதை எப்படி ஒப்புக்கொள்ள முடியும்? நல்லது என்று எடுத்துக் கொள்ளமுடியும்? எல்லாவற்றிற்கும் ஒரு காலகட்டம், வரைமுறை  உண்டல்லவா?

சரி, மனது எதற்காக நெறிப்பட வேண்டும்?

நல்லது, கெட்டது, இன்பம், துன்பம், ஏற்றம், இறக்கம், வறுமை, செழுமை, பெறுமை, சிறுமை என்று வாழ்க்கையின் ஒவ்வொரு பக்கத்தையும் சமமாக எடுத்துக் கொள்ளும் பக்குவம் இருந்தால் அல்லவா வாழ்க்கை சீராக இருக்கும். மனது எந்த்ச் சூழ்நிலையிலும் சந்தோஷமாக இருக்கும். அதைவிட முக்கியமாக நிம்மதியாக இருக்கும். அதற்குத்தான் நெறிப்படுத்தப் பெற்ற மனது வேண்டும் Like a seasoned wood!

அதைச் சொல்லித்தருவதுதான் எனது வகுப்பறைப் பாடங்களின் முக்கிய நோக்கமாகும்
--------------------------------------------------------------.
சரி, சொல்லவந்த விஷயத்திற்கு வருகிறேன்.

அஷ்டகவர்க்கம் என்பது உங்களுடைய பிறப்பின் மதிப்பெண் சான்றிதழ் என்று நீங்கள் வைத்துக் கொள்ளலாம். அந்தச் சான்றிதழ் பிறந்த ஷணத்திலேயே உங்களுக்குக் கொடுக்கப்பட்டு விடுகிறது. அதை மாற்றி எழுத யாரலும் முடியாது. எந்தக் கொம்பனுக்கும் அதிகாரமில்லை.

உங்களுடைய ஜாதகத்தின் 12 பாவங்களுக்கும் அல்லது வீடுகளுக்கும் அந்த வீடுகளுக்கு அதிபதிகளான 7 கிரகங்களுக்கும், அவை அமைந்துள்ள அமைப்பின்படி கணக்கிட்டு வருவதாகும். அதன் முக்கியமான சிறப்பு யாராயிருந்தாலும் மொத்த மதிப்பெண் 337 மட்டுமே.

அதாவது எல்லோருக்குமே 337/337 தான். கூடுதல் குறைச்சலுக்கெல்லாம் இடமில்லை.

337 வகுத்தல் 12 என்னும்போது ஒரு வீட்டின் சராசரி மதிப்பெண் 28 அந்த சராசரி மதிப்பெண்ணிற்கு மேல் இருக்கும் வீடு நல்ல நிலைமையில் உள்ளது என்றாகிவிடும். அதேபோல ஒரு கிரகத்தின் தனி மதிப்பெண் எட்டு. சராசரி மதிப்பெண் நான்கு. நான்கிற்கு மேல் மதிப்பெண்களுடன் நிற்கும் கிரகம் வலுவானதாக இருக்கும். அது தன்னுடைய கோச்சாரத் திலும் (Transit)  தசா புக்தியிலும் நல்ல பலன்களைத் தரும். இல்லை யென்றால் தீமையான பலன்களே நடைபெறும்.

Timing of events ஐக் கணக்கிடுவதற்கு இந்த அஷ்டவர்க்கம் பயன்படும் தமிழில் இந்த மதிப்பெண்களைப் பரல்கள் என்பார்கள்.

1. 25  பரல்களுக்குக் கீழே உள்ள வீடுகள் நல்லதல்ல. அவற்றிற்குரிய பலன்கள் சாதகமாக இருக்காது.

2. 30 பரல்கள் உள்ள வீடுகள் நல்ல பலன்களைத் தரும்.

3. 30 பரல்களுக்கு மெலே இருந்தால் மிகச் சிறந்த பலன்களைத் தரும்

4. ஆட்சி, உச்ச பலன்களோடும் அல்லது கேந்திர, திரிகோண அமைப்போடும் ஜாதகத்தில் உள்ள கிரகங்கள்கூட தங்கள் சுய வர்க்கத்தில் குறைந்த பரல்களோடு இருந்தால் அவைகள் நல்ல பலன்களைத்  தராது

உதாரணத்திற்கு ஒரு ஜாதகனுடைய நான்காம் வீட்டில் 30 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்கள் இருந்தால் ஜாதகன் நன்றாகப் படிப்பான்.

அதேபோல ஒருவனுடைய ஜாதகத்தில் ஏழாம் வீட்டில் 30ற்கும் மேற்பட்ட பரல்கள் இருந்தால் அவனுக்கு நல்ல மனைவி கிடைப்பாள். அல்லது நல்ல கணவன் கிடைப்பான். அவளைப் போற்றி வைத்துக்கொள்ளக்கூடிய கணவன் கிடைப்பான்.  உரிய காலத்தில் திருமணமாகும்.

இப்படி ஒவ்வொருவீட்டின் பலனையும் அதிகமான பரல்களை வைத்துச் சிறப்பாகச் சொல்லிக் கொண்டே போகலாம்.

அதுபோல ஒருவனுடைய லக்கினத்தில் நாற்பது அல்லது அதற்கு மேற்பட்ட பரல்கள் இருந்தால், தலைவனாகி விடுவான். அவனுக்குத் தலைமை தாங்கும் யோகம் தேடி வரும்.

சரி ஒரு இடத்தில் 40 என்னும்போது - அங்கே 12 பரல்கள் கூடிப் போய் விடுவதால் வேறு இடங்களில் அது குறைந்து விடுமல்லவா? மொத்தம் 337தானே? எங்கே குறைந்து உள்ளது என்று பார்க்க வேண்டும்!

பொதுவாகப் பார்த்தீர்கள் என்றால் தலைமை ஸ்தானத்தில் அதிகம் பரல்கள் உள்ள தலைவர்களுக்குக் குடும்பஸ்தானத்தில் பரல்கள் குறைவாக இருக்கும், அதனால் அவர்கள் தங்கள் குடும்பத்தை மறந்து  விட்டு தேசம, தேசம் என்று நாட்டுக்காகப் பாடு பட்டிருப்பார்கள்.

குறைந்த அளவு ஒவ்வொரு வீட்டிலும் எவ்வளவு பரல்கள் இருக்க வேண்டும்?

முன்பு அட்டவனையாக அதைக் கொடுத்துள்ளேன் அதைப் பாருங்கள்.

செய்யும் தொழிலுக்கு (10ஆம் வீட்டிற்கு) 30 பரல்களுக்கு மேல் இருந்தால் சிறப்பு. நல்ல வேலை கிடைக்கும் அல்லது நல்ல தொழில் அமையும். ஆனால் 36 ம் அதற்கு மேலும் இருந்தால் செய்யும் வேலையில் ஒரு சபீர் பாட்டியாகவோ, அல்லது நாராயண மூர்த்தியாகவோ அல்லது பில் கேட்ஸாகவோ உச்சத்தைத் தொட முடியும்!

ஒவ்வொரு வீட்டிற்கும் என்னென்ன பணிகள் என்பதை முன்பே பதிவிட்டிருக்கிறேன். பழைய பாடங்களைப் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

மேல்நிலைப் பாடங்களும், அஷ்டகவர்க்கப் பாடங்களும், பின்னால் புத்தகங்களாக வரவுள்ளன. அப்போது உங்களுக்கு ஜோதிடத்தின் மற்ற பகுதிகளும் தெரியவரும்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++=