மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

27.4.22

அந்தக் காலத்தில் நாங்கள் வாங்கிய அடிகள்!


அந்தக் காலத்தில் நாங்கள் வாங்கிய அடிகள்!

அந்த காலத்தில எதுக்கெல்லாம் நாங்க அடி வாங்கி இருக்கோம்னு இப்போ பலருக்கு  தெரிய வாய்ப்பில்லை...*

ஆனால் வாங்கின ஒவ்வொரு அடியும் எங்களை புடம் போட்ட தங்கமா ஆக்கிடுச்சு என்பதுதான் இங்க மேட்டரே...

1. அடி வாங்கி ரொம்ப நேரம் அழுதுட்டு இருந்தா மறுபடியும் அடி!

2. அடி வாங்கிட்டு அமுக்கமா அழாமல் இருந்தால் மறுபடியும் அடி.

3. அடி வாங்காமலேயே அழுதா விழும் அடி.

4. பெரியவங்க உக்காந்திருக்கர இடத்ல நின்னுட்டு இருந்தா அடி

5.பெரியவங்க நின்னுட்டு இருக்கும் போது உக்கார்ந்திட்டே இருந்தா அடி.

6. பெரியவங்க உக்கார்ந்து இருக்கும் போது குறுக்காலும் நெடுக்காலும் நடந்தா அடி.

 7. விருந்தாளிக்கு சமைத்ததை முன்னதாக சாப்பிட்டா அடி

8. தட்ல சோத்தை வெச்ச பிறகு சாப்பிட மாட்டேன்னு அடம் பிடிச்சா அடி.

 9. சூரியன் மறைஞ்ச பிறகு லேட்டா வீட்டுக்கு வந்தா,எங்க சுத்திட்டு வர்ரன்னு ஒரு மொத்து.

10.அடுத்தவன் வீட்ல சாப்பிட்டு வந்தா அடி 

11. எப்போ பார்த்தாலும் மூஞ்சியை தூக்கி வெச்சுட்டு இருந்தா அடி.

 12. ரொம்பவும் துள்ளிக் குதிச்சாலும் அடி. 

13. மூத்தவங்களோட சண்டை போட்டு தோத்தா அடி

 14. சின்ன பசங்களோட சண்டை போட்டு ஜெயிச்சிட்டூன்னு கூவினா அடி.

 15.ரொம்பவும் மெதுவா சாப்பிட்டா அடி.
 
16.அவசர அவசரமா அள்ளி போட்டு சாப்பிட்டாளும் அடி. 

17. காணாது கண்டது போல கண்டமேனிக்கு சாப்பிட்டால் அடி.

 18. பூரணமா சப்பிடாம இருந்தால் அடி

19.சாப்பிட்ட பிறகும் தட்டை சுரண்டிட்டு இருந்தால் அடி,
 
20. பேசிட்டே சாப்பிட்டா அடி

21.பெரியவங்க எழுந்த பிறகும் தூங்கிட்டு இருந்தா அடி. 

22.விருந்தாளிங்க சாப்பிடுவதை பார்த்தால் அடி. 

23. தடுமாறி நடந்து விழுந்தா உதை.

24. பெரியவங்களை முறெச்சு பார்த்தா அடி

25. பெரியவங்க பேசும்போது முழிச்சா அடி

26. அவங்க பேசும்போது முழிக்காம வெறிச்சு பார்த்தா அடி

27. பெரியவங்களை ஓரக் கண்ணால பார்த்தால் அடி

28. நண்பர்கள் தெருவில் ஃபுட்பால் ஆடும்போது நாம அவங்களோட சேர்ந்தால் அடி.

 29. நண்பர்கள் விளையாடும் போது நாம உம்முன்னு வீட்ல உக்கந்திருந்தாலும் அடி.

 30. சாப்பிட்டபின் தட்ட அலம்பலேன்னா அடி.

 31. சாப்பிட்ட தட்டை சரியா கழுவலைன்னா அடி.

 32. சாப்பிட்ட தட்டை கீழே போட்டு நசுங்கல் ஏற்பட்டா அடி.

 33. கழுவின தட்டை ஒழுங்கா வைக்கலேன்னா அடி
34.நகத்தை கடிச்சா அடி

 34..குளிக்காட்ட அடி. 

35.காக்கா குளியலா குளிச்சு உடனே வந்தா முதுகுல பொளேர் 

36. உள்ள போயி ஒரு மாமாங்கம் ஆச்சுன்னா வெளில வந்தவுடன் அடி.

 37. ஸ்கூல்ல மிஸ்பிஹேவ் பண்ணினேன்னு தெரிஞ்சா வீட்ல அடி.

 38.தெருல போர கார் உறசிட்டு போச்சுன்னா அடி. 

39. கார் அடிச்சு குத்துயிரும் குலையுயிருமா இருந்தாலும் அஜாக்கைரதைக்கு நாலு அடி.

 40. கேட்ட கேள்விக்கு பதில் வரலைன்னா அடி

41. பெரியவங்க பேசும்போது பதில் சொன்னா அடி.

 42 லேட்டா கோவிலுக்கு போனா அடி.

 43ஃப்ரெண்ட்ஸ்ட்டேந்து ஓஸியா ஷூ வாங்கி போட்டுகிட்டா அடி. 

44.அம்மா செலெக்ட் பண்ணின சட்டை பிடிக்கலைன்னா அடி 

45. கடைசில அவங்க சூஸ் பண்னின ஷர்ட்டை செலெக்ட் பண்ணினா,இதுக்கு இம்புட்டு நேரமான்னு அடி

46. வாத்தி சொல்லிகுடுத்த ரெண்டுங்கெட்டான் பதிலை பரிஷைல எழுதினா அதே வாத்தி”சொந்தமா என்னடா gas விட்ர”ன்னு சொல்லி  அடிக்கும்.

 47டீச்சர் தப்பு தப்பா நோட்ஸ் கொடுத்தாலும் நாம கர்ரெக்ட் பதில் எழுதினா வாத்திட்ட”நீ பெரிய பிச்தாவா”ன்னு சொல்லி வாங்கும்  அடி.. 

48.வீட்ல பெற்றோர்கள் இடையில் அல்லது பெருசுங்க சண்டை மூட்ல இருந்தா நாம வாங்கும் அடி.

49 சொந்த காரங்கவீட்ல,நண்பர் வீட்ல பக்கிங்க மாதிரி சாப்பிட்டால், வீட்ல வந்து வாங்கும் அடி.

50 மூணு தோசை/பூரியை தாண்டி இன்னொண்ணுன்னா வாங்கும் அடி.

51 எல்லாத்துக்கும் நெய்யா கேக்குதுன்னு முதுகுல பளார்.

52.சாப்பிட்ட பிறகு தட்டை நக்கினால் அடி.

53) காரணமும் தாண்டி காரணமே இல்லாமல் வாங்கும் அடி. 

இன்னிக்கு பசங்களுக்கு இதெல்லாம் அபத்தமா தெரியலாம்.
ஆனால் கிட்டதட்ட கூட்டு குடும்பத்தில் பெரியோர்கள்- பங்காளிகளுடன் வாழ்ந்த அந்நாட்களில் *இந்த அடிகள்* வாங்கியது தான் எங்களுக்கு  வாழ்வில் முன்னேற உதவின.

வாழ்க  பெற்றோர்கள்
----------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
==================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

26.4.22

பிரச்சினைகள் வரும்போது என்ன செய்ய வேண்டும்?பிரச்சினைகள் வரும்போது என்ன செய்ய வேண்டும்?

உங்கள் வாழ்க்கையில் பிரச்சனைகள் வரும் போது
இந்த 21 வாக்கியங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். 

(1)போனது போச்சு, இனி ஆக
     வேண்டியதை யோசிப்போம்.

(2) நல்ல வேளை. இதோடு போச்சு.

(3)  உடைஞ்சா என்ன? வேற
       வாங்கிட்டா போச்சு.

(4) பஸ்ஸு போயிடுச்சா, அதனால
      என்ன? அடுத்த பஸ் இருக்குல்ல

(5) பணம் தான போச்சு. கை கால்
      இருக்குல்ல. மனசுல தெம்பு
      இருக்குல்ல.

(6) சொல்றவங்க ஆயிரம்
      சொல்வாங்க.... எல்லாமே சரின்னு
      எடுத்துக்க முடியுமா?

(7) இதெல்லாம் சப்ப மேட்டரு.
      இதுக்குப் போயா கவலைப்படறது.

(8)கஷ்டம் தான்… ஆனா முடியும்.

(9) நஷ்டம் தான்… ஆனா மீண்டு
      வந்திடலாம்.

(10) விழுந்தா என்ன? எழுந்திருக்க
         மாட்டனா?

(11) இவன் இல்லேன்னா என்ன?
        நமக்கு வேற ஆளே இல்லயா?

(12) இந்த வழி இல்லேன்னா வேற
        வழி இல்லியா?

(13) இப்பவும் முடியலியா? சரி.
        இன்னொரு வாட்டி ட்ரை பண்ணு.

(14) இது கஷ்டமே இல்லையே.
        கொஞ்சம் யோசிச்சா வழி
        தெரியுமே.

(15) முடியுமா…ன்னு நினைக்காதே.
        முடியணும்…னு நினை.

(16) கிடைக்கலியா, விடு. வெயிட்
        பண்ணு. இத விட நல்லதாகவே
        கிடைக்கும்.

(17) திருப்பித் திருப்பி அதயே
       பேசாதே. அது முடிஞ்சு போன  
       கதை.

(18) ஆகா, இவனும் அயோக்யன்
        தானா? சரி, சரி. இனிமே
        ஜாக்ரதையா தான் இருக்கணும்.

(19) கஷ்டம் இல்லாத வாழ்க்கை எது?
        அது பாட்டுக்கு அது.
        வேலைபாட்டுக்கு வேலை.

(20) எப்பவுமே ஜெயிக்க முடியுமா?
       அப்பப்ப தோத்தா அது என்ன
       பெரிய தப்பா?

(21) அடடே, தூங்கிட்டேனே,
        பரவாயில்ல. இனிமே
        முழிச்சிக்கலாம்.

வீழ்வது கேவலமல்ல நண்பர்களே
வீழ்ந்தே கிடப்பது தான் கேவலம்.

உங்கள் மனம் சக்தி பெறும்.
புதிய தெம்போடு நீங்கள் செயல்படுவீர்கள் .
----------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
==========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

25.4.22

குருவை அதிர வைத்த குதிரைக்காரன்!!!!


குருவை அதிர வைத்த குதிரைக்காரன்!!!!

முற்றும் துறந்த குரு ஒருவர் இருந்தார்.... 

ஒரு ஊரில் அவரைப் பிரசங்கம் செய்வதற்காகக் கூப்பிட்டிருந்தார்கள். 
அந்தக் கூட்டத்திற்கு ஆயிரம் பேர் வருவார்கள் என்றும் சொல்லியிருந்தார்கள். 

குறிப்பிட்ட தேதியில் குருவும் அவ்வூருக்கு வந்தார். 

அன்று நல்ல மழை. கூட்டத்திற்கு வந்தவர்களும் கலைந்து சென்று விட்டார்கள்.
குரு அங்கு வந்த போது யாருமில்லை.

 பேசுவதற்கு நிறைய தயார் பண்ணி வந்திருந்ததால் அவருக்கு ஏமாற்றம். 

அங்கு இருந்ததோ அவரை அழைத்து வந்த குதிரை வண்டிக்காரன் மட்டும் தான். என்ன செய்யலாம் என்று அவனையே கேட்டார். 

அவன் சொன்னான், 
             "ஐயா, நான் குதிரைக்காரன். எனக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் ஒன்றே ஒன்று மட்டும் தெரியும். 
நான் முப்பது குதிரைகளை வளர்க்கிறேன். புல்லு வைக்கப் போகும் போது, எல்லாக் குதிரைகளும் வெளியே சென்றிருந்து, ஒரே ஒரு குதிரை மட்டும் இருந்தாலும், நான் அந்தக் குதிரைக்குப் புல்லை வைத்து விட்டுத்தான் வருவேன்" என்றான்.

அந்தக் குருவுக்கு படாரென்று அறைந்தது போல் இருந்தது. 

அந்தக் குதிரைக்காரனைப் பாராட்டி விட்டு, அவனுக்கு மட்டும் தன் பிரசங்கத்தை ஆரம்பித்தார்..... 

தத்துவம், மந்திரம், பாவம், புண்ணியம், சொர்க்கம், நரகம் என்று சரமாரியாகப் பேசிப் பிரமாதப் படுத்தி விட்டார்.

பிரசங்கம் முடிந்ததும், எப்படி இருந்தது என்று அவனைப் பார்த்துப் பெருமையாகக் கேட்டார். 

அவன், 
        "ஐயா, நான் ஒரு குதிரைக்காரன். எனக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் தெரியும். 
நான் புல்லு வைக்கப் போன இடத்தில் ஒரே ஒரு குதிரை தான் இருந்தது என்றால், அதற்கு மட்டும் தான் புல் வைப்பேன்.
முப்பது குதிரைக்கான புல்லையும் அந்த ஒரு குதிரைக்கே கொட்டி விட்டு வர மாட்டேன்" என்றான் அவன்...... 

அவ்வளவு தான்! 
அந்தக் குரு அதிர்ந்து விட்டார்...
-----------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
==============================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

21.4.22

பகவத்கீதை கூறும் அற்புதமான வாழ்க்கை போதனை!பகவத்கீதை கூறும் அற்புதமான வாழ்க்கை போதனை.* 

43 அறிவுரைகள்! இதற்கு மேல் 
எவரும் அறிவுரை கூற இயலாது
1. வாழ்வென்பது உயிர் உள்ள வரை மட்டுமே!
2. தேவைக்கு செலவிடு.
3. அனுபவிக்க தகுந்தன அனுபவி.
4. இயன்ற வரை பிறருக்கு பொருளுதவி செய்.
5. மற்றும் ஜீவகாருண்யத்தை கடைபிடி.
6. இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை.
7. உயிர் போகும் போது, எதுவும் கொண்டு செல்ல போவதுமில்லை. ஆகவே, அதிகமான சிக்கனம் அவசியமில்லை.
8. மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே.
9. உயிர் பிரிய தான் வாழ்வு. ஒரு நாள் பிரியும். சுற்றம், நட்பு, செல்வம், எல்லாமே பிரிந்து விடும்.
10. உயிர் உள்ள வரை, ஆரோக்கியமாக இரு.
11. உடல் நலம் இழந்து பணம் சேர்க்காதே.
12. உன் குழந்தைகளை பேணு. அவர்களிடம் அன்பாய் இரு. 
13. அவ்வப்போது பரிசுகள் அளி. 
14. அவர்களிடம் அதிகம் எதிர்பாராதே. அடிமையாகவும் ஆகாதே.
15. பெற்றோர்களை மதிக்கும் குழந்தைகள் கூட, பாசமாய் இருந்தாலும், பணி காரணமாகவோ, சூழ்நிலை கட்டாயத்தாலோ, உன்னை கவனிக்க இயலாமல் தவிக்கலாம், புரிந்து கொள்!
16. அதைப்போல, பெற்றோரை மதிக்காத குழந்தைகள், உன் சொத்து பங்கீட்டுக்கு சண்டை போடலாம்.
17. உன் சொத்தை தான் அனுபவிக்க, நீ சீக்கிரம் சாக வேண்டுமென, வேண்டிக்கொள்ளலாம். பொறுத்துக்கொள்.
18. அவர்கள் உரிமையை மட்டும் அறிவர்; கடமை மற்றும் அன்பை அறியார்.
19. “அவரவர் வாழ்வு, அவரவர் விதிப்படி” என அறிந்து கொள்.
20. இருக்கும் போதே குழந்தைகளுக்கு கொடு.
21. ஆனால், நிலைமையை அறிந்து, அளவோடு கொடு. எல்லாவற்றையும் தந்து விட்டு, பின் கை ஏந்தாதே. 
22. “எல்லாமே நான் இறந்த பிறகு தான்” என, உயில் எழுதி வைத்திராதே. நீ எப்போது இறப்பாய் என எதிர் பார்த்து காத்திருப்பர்.
23. எனவே, கொடுப்பதை நினைப்பதை மட்டும் முதலில் கொடுத்து விடு; மேலும் தர வேண்டியதை, பிறகு கொடு.
24. மாற்ற முடியாததை, மாற்ற முனையாதே.
25. மற்றவர் குடும்ப நிலை கண்டு, பொறாமையால் வதங்காதே! 
26. அமைதியாக, மகிழ்ச்சியோடு இரு. 
27. பிறரிடம் உள்ள நற்குணங்களை கண்டு பாராட்டு.
28. நண்பர்களிடம் அளவளாவு.
29. நல்ல உணவு உண்டு, நடை பயிற்சி செய்து, உடல் நலம் பேணி, இறை பக்தி கொண்டு, குடும்பத்தினர், நண்பர்களோடு கலந்து உறவாடி, மன நிறைவோடு வாழ்.
30. இன்னும் இருபது, முப்பது, நாற்பது ஆண்டுகள், சுலபமாக ஓடி விடும்!
31. வாழ்வை கண்டு களி!
32. ரசனையோடு வாழ்!
33. வாழ்க்கை வாழ்வதற்கே!

34. நான்கு நபர்களை புறக்கணி!
🤗மடையன்
🤗சுயநலக்காரன்
🤗முட்டாள்
🤗ஓய்வாக இருப்பவன்

35. நான்கு நபர்களுடன் தோழமை கொள்ளாதே!
😏பொய்யன்
😏துரோகி
😏பொறாமைக்கைரன்
😏மமதை பிடித்தவன்

36. நான்கு நபர்களுடன் கடினமாக நடக்காதே!
😬அனாதை
😬ஏழை
😬முதியவர்
😬நோயாளி

37. நான்கு நபர்களுக்கு உனது கொடையை தடுக்காதே!
💑மனைவி
💑பிள்ளைகள்
💑குடும்பம்
💑 சேவகன்

38. நான்கு விசயங்களை ஆபரணமாக அணி!
🙋♂பொறுமை
🙋♂சாந்த குணம்
🙋♂அறிவு
🙋♂அன்பு

39. நான்கு நபர்களை வெறுக்காதே!
👳தந்தை
💆தாய்
👷சகோதரன்
🙅சகோதரி

40. நான்கு விசயங்களை குறை!
👎உணவு
👎தூக்கம்
👎சோம்பல்
👎பேச்சு

41. நான்கு விசயங்களை தூக்கிப்போடு!
🏃துக்கம்
🏃கவலை
🏃இயலாமை
🏃கஞ்சத்தனம்

42. நான்கு நபர்களுடன் சேர்ந்து இரு!
👬மனத்தூய்மை உள்ளவன்
👬வாக்கை நிறைவேற்றுபவன்
👬கண்ணியமானவன்
👬உண்மையாளன்

43. நான்கு விசயங்கள் செய்!
🌷 தியானம், யோகா
🌷 நூல் வாசிப்பு
🌷 உடற்பயிற்சி
🌷 சேவை செய்தல்
🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹

படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
=================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

20.4.22

வாருங்கள் அச்சமின்றி பயணிப்போம்!!


வாருங்கள் அச்சமின்றி பயணிப்போம்!!

விமான பைலட் யாரென்று தெரியாவிட்டாலும் கூட நாம் கவலையின்றி பயணிக்கிறோம்.*

*அவ்வாறே கப்பலின் மாலுமி இன்னாரென்று அறியாதிருந்தும் நாம் அச்சமின்றி பயணிக்கிறோம்.*

*அப்படியே இரயிலையும் , பேருந்தையும் முன்பின் தெரியாத ஒருவர் இயக்கினாலும் நாம் நிம்மதியாய் உறங்கிக்கொண்டு பயணிக்கிறோம்...*

*பிறகு ஏனோ, சர்வ வல்லமை படைத்தவன் நம்மோடு பயணித்துக் கொண்டிருந்தும் எல்லாவற்றுக்காகவும் நாம் கவலைப்பட்டு கலங்கிக் கொண்டிருக்கிறோம்!?.*

ஆகவே எதற்கும் கவலைப் படாதீர்கள்: கலங்காதீர்கள்!

எல்லாவற்றையும் அவர் - நம்மோடு பயணிக்கும் இறைவன் பார்த்துக்கொள்வார்
---------------------------------------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்
=========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

19.4.22

பயனற்ற வார்த்தைகளையும் வேண்டாத செயல்களையும் நீக்குவோம் வாருங்க்ள்!!!!பயனற்ற வார்த்தைகளையும் வேண்டாத செயல்களையும் நீக்குவோம் வாருங்க்ள்!!!!

18/03/2022, 07:56 - +91 73959 85927: சிற்பி ஒருவர் தான் சென்ற வழியில் ஒரு கடையருகே, பெரிய பாறாங்கல் ஒன்றைப் பார்த்தார். அதன் அமைப்பைக் கண்டதும் மகிழ்ந்த அவர், அந்தக் கடைக்காரரிடம் ஐயா, இந்தப் பாறாங்கல்லை நான் எடுத்துக் கொள்ளலாமா? என்று கேட்டார். 

தாராளமாய் எடுத்துச் செல்லுங்கள். இது இருப்பதால்தான் போவோர் வருவோரெல்லாம் தடுக்கி விழுகின்றனர்! என்றார்
கடைக்காரர். 

சந்தோஷமாக அதை எடுத்துச்சென்ற சிற்பி அதனை ஒரு கடவுள் சிலையாகச் செதுக்கினர். அதன் அழகில் மயங்கி பலரும் அதனை வாங்கப் போட்டியிட்டனர். அவர்களுள் கல்லைக் கொடுத்த கடைக்காரரும் இருக்கவே, சிற்பி அவருக்கே சிலையைக் கொடுத்தார்.

சிலையை வாங்கிய கடைக்காரர். இந்த அழகான சிலையை வடிக்க, எந்த மலையிலிருந்து கல் எடுத்து வந்தீர்கள்? என வினவினார். 

சிற்பி அமைதியாகச் சொன்னார். ஐயா, தங்கள் கடை வாசலில் இடையூறாக இருப்பதாகச் சொல்லி எனக்குத் தந்தீர்களே, அந்தக் கல்தான் இது!

உங்களுக்குத் தடைக் கல்லாய்த் தெரிந்த அது. என் பார்வையில் கடவுளாகத் தெரிந்தது. அதில் இருந்த வேண்டாத பகுதிகளைச் செதுக்கித் தன்ளினேன். உள்ளே இருந்து தெய்வத்தின் உருவம் வெளிப்பட்டது!

நாமும் நம் வாழ்வில் பயனற்ற வார்த்தைகளையும் வேண்டாத செயல்களையும் நீக்கினால், பலர் விரும்பும் வகையில் எல்லோரும் போற்றும் வண்ணம் வாழலாம்

-------------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
=======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

18.4.22

தோழர் நல்லகண்ணு அவரது மனைவியை பற்றி கூறியது.}தோழர் நல்லகண்ணு அவரது மனைவியை பற்றி கூறியது.}
 
என் மனைவிக்கு உடல் சொகமில்லாம போச்சு.
ஆஸ்பத்திரியில வெச்சி மருத்துவம் 
பாத்தோம். ஆனாலும் காப்பாத்த
முடியல. மாசங்கள்
உருண்டோடுனாலும் அவளோட
இழப்பை என்னால ஜீரணிக்க முடியல.
போராட்டம், பொதுக்கூட்டம்னு என்
உடல் எங்கெங்கயோ அலஞ்சுட்டு
இருந்தாலும், மனசு அவளை
நினைச்சுட்டேதான் இருக்கு. அந்த
வேதனையைச் சுமந்துட்டேதான்
திரியுறேன்.
என்னை, என்னைவிட முழுசா
புரிஞ்சிகிட்டவ என் மனைவி. என்
வாழ்க்கையில எல்லா வகையிலும்
அவளோட பங்களிப்பு இருந்துச்சு.
அவ அப்பாவும் கம்யூனிஸ்ட்
கட்சிகாரர்தான். அதனால என்னை
ஏத்துக்கிறது அவளுக்கு சுலபமா
இருந்திச்சி. டீச்சரா வேலை பாத்தா.
காசி பாரதி, ஆண்டாள்னு
எங்களோட ரெண்டு பொம்பளப்
புள்ளைகள வளர்த்து படிக்க
வெச்சது, ஆளாக்குனது
அவங்களோட எல்லா
தேவைகளையும் என்னை
எதிர்பார்க்காம அவளே
செஞ்சிருவா.
அரசியல் வாழ்க்கை, போராட்டம்,
காசு பணம் சேர்க்கத் துடிக்காத
மனசுனு என் போக்குக்கு என்னை
விட்டவ என் மனைவி. கட்சி
வேலைகள்ல திரிஞ்சிட்டு
வீட்டுக்குப் போகும்போது,
கூடடைஞ்ச திருப்தி கிடைக்குற
விதமா அந்த வீட்டை எனக்கானதா
வெச்சிருப்பா. இப்போ வீட்டுக்குப்
போனா, அவ இல்லாத அந்த
வெறுமையும் தனிமையும் ரொம்ப
கொல்லுது. தாங்கவே முடியாம
வருது. சுத்தி எத்தனையோ பேர்
இருந்தாலும், எனக்குனு யாரும்
இல்லைங்கிறதை உணரவெச்சிட்டே
இருக்கு அவளோட பிரிவு.

எந்த ராத்திரி வீட்டைக் விட்டுக்
கிளம்புவேன், எந்த ராத்திரி வீடு
திரும்புவேன்னு தெரியாத ஒரு
வாழ்க்கை என்னோடது.
உண்ணாவிரதம் இருக்கக்
கெளம்புனாலும், ஜெயில்ல இருக்க
வேண்டி வந்தாலும் ஒரு வார்த்தை
வருத்தமாவோ, மறுப்பாவோ
சொல்லாம அனுப்பிவைப்பா. என்
புள்ளைங்க, 'அப்பா உங்களுக்கு
வயசாயிருச்சு... அரசியல்
வேலைகளையெல்லாம் கொஞ்சம்
குறைச்சுக்கோங்கங்க'னு
சொன்னப்போகூட, என் மனைவி
அப்படி ஒருநாளும் எங்கிட்ட
சொன்னதே கிடையாது. ஏன்னா,
கட்சிப் பணிகள் இல்லாம என்னால
இருக்க முடியாதுனு அவளுக்குத்
தெரியும். ஆனா, 'நான்
இல்லாமயும் உங்களால இருக்க
முடியாது'ங்கிறதை இப்படிப்
பிரிவுல உணர்த்திட்டுப்
போயிட்டா.
எங்க கிளம்பினாலும், 'போய்
சேந்துட்டீங்களா?'னு ஒரு போன்
பண்ணுவா. 'சாப்புட்டீங்களா?'னு
கேட்பா. 'எங்க இருக்கீங்க?'னு ஒரு
போன் வரும். இப்போ எதுவுமே
இல்ல. கண்ண மூடுனா முழுக்க
ரஞ்சிதம் நெனப்பாதான் இருக்கு.
முன்னாடி நான் அசைவம்
சாப்பிடுவேன். இப்ப அஞ்சு வருசமா
சைவம்தான். அவ வைக்கிற மீன்
குழம்புல சோத்தை ஒரு பிடி
பிடிப்பேன். அவ வைக்கிற ரசம்
ரொம்ப நல்லா இருக்கும். எனக்குப்
பிடிக்கும்னு அடிக்கடி ரவா லட்டு
செய்வா. 'என்னை நீ எதிர்பார்த்து
இருக்கக் கூடாது, உனக்கு பசிச்சா
சாப்பிடு'னு என் கல்யாணத்தை
ஒட்டியே சொல்லிட்டேன். அதனால
நாங்க சேர்ந்து சாப்பிடுவதே
குறைவுதான். ஆனாலும் நான்
சாப்பிடும்போது கூட உட்கார்ந்து
பேசிட்டு இருப்பா.
ஒரு சுவாரசியம் என்னனா நான்
ஜெயில்ல இருந்து வந்த பிறகுதான்
எங்களுக்கு கல்யாணமே நடந்திச்சி.
புதுமணத் தம்பதியா நாங்க
பேசிக்கிட்ட விஷயங்கள்லாம்,
என்னோட ஜெயில்
அனுபவங்களாதான் இருந்துச்சு.
நிறைய கல்யாணத்தை தலைமை
தாங்கி நடத்திருக்கேன்.
அப்போவெல்லாம், 'மனைவியை
அதிகாரமா மிரட்டக் கூடாது.
அன்பா இருக்கணும், சமமா
நடத்தணும்'னு சொல்லித்தான்
ஆசிர்வதிப்பேன். என் வாழ்க்கையில
ரஞ்சிதத்துக்கு அப்படி ஒரு
சமத்துவத்தை நான் கொடுத்தாலும்,
அவ எனக்காக ரொம்ப
விட்டுக்கொடுத்து போயிருக்கா.
என்னைத் தேடி வர்றவங்களைப் பத்தி
அவளுக்குத் தெரியும். என் மனசு
நினைக்கிற மாதிரியே அவங்களை
உபசரிப்பா.
ரஞ்சிதம் நிறைய புத்தகங்க படிப்பா,
பேப்பர் படிப்பா. ஜெயகாந்தன்
சிறுகதைகள் பத்தி பேசுவா. நான்
எதையாவது படிக்காம
விட்டுட்டாலும், 'இதப் படிக்கலையா
நீங்க?'னு கேட்பா. திடீர்னு எதாவது
செய்தியைக் காட்டி, 'இதப்
பாத்தியளா?'னு கேட்பா.
'இல்லையே...'னு சொன்னா,
'இதக்கூடப் பாக்காம என்ன
படிக்கிய?'னு கேட்பா.
இப்போவெல்லாம் பேப்பர், புத்தகம்
படிக்கும்போது, 'எதையாச்சும்
படிக்காம விட்டுட்டா அதை
எடுத்துக்காட்ட அவ இல்லையே'னு
ரஞ்சிதத்தோட நினைவுகள் நான்
படிக்கிற ஒவ்வொரு எழுத்துலயும்
பின்னிக்குது.
நான் சம்பாதிச்சுது என்னனு
எல்லாருக்கும் தெரியும்.
வெளியே போகும்போது
செலவுக்கு அவகிட்டதான் காசு
வாங்கிட்டுப் போவேன். கொஞ்சம்
நிலம் இருந்து அதுல அரிசி வரும்.
மத்தபடி 'அது இல்ல இது இல்ல'னு
எதுவும் எங்கிட்ட சொல்லாம, அவளே
சமாளிச்சு குடும்பத்தக் கொண்டு
போனா. என் பிறந்தநாளுக்கு
துணிமணி எடுத்துக் கொடுப்பா.
அவளுக்கு, நான் வீட்டுல
இருந்தாலே பரிசுதான்னு
சொல்லுவா. எப்பவாச்சும்
டெல்லிக்குப் போனா அவளுக்கு
சேலை எடுத்துட்டு வருவேன்.
ரொம்ப சந்தோசப்படுவா. வெளிய
போயிட்டு நேரடியா வீட்டுக்கு
வர்றதா இருந்தா எதாவது பண்டம்
வாங்கிட்டு வந்து கொடுப்பேன்.
எங்க அப்பா, என் கூடப்
பொறந்தவங்களுக்கு எல்லாம்
அவங்கவங்க பேருல வீட்டை
எழுதிவெச்சாரு. என் பங்கு வீட்டை
மட்டும் என் மனைவி பேருலதான்
எழுதி வெச்சிருக்காரு. பொது
வாழ்க்கையில இருக்கேன்,
வீட்டையும் வித்து செலவு
பண்ணிடுவேனோனு பயம்
அவருக்கு என்கிறார் நல்லக்கண்ணு.
சிறிது நேரம் மெளனமாக
இருந்துவிட்டு தொடர்ந்தார்.
ரஞ்சிதம் கிறிஸ்டியன். அதனால
பைபிள் கதைகளை அடிக்கடி
சொல்லுவா. எல்லார்கிட்டயும்
அன்பா இருக்கணும், எல்லாரையும்
சமமா நடத்தணும்னு சொல்லுவா.
'நான் செத்துப் போயிட்டேன்னா,
நம்ம சொந்த ஊருலதான் அடக்கம்
பண்ணனும்னு'னு சொன்னா. அவ
ஆசைப்படியே செய்தேன். அவ
இறக்குறதுக்கு ஒரு மாசத்துக்கு
முன்னாடியே, அவ இனி
நாள்கணக்குலதான் என்கூட
இருக்கப்போறானு
தெரிஞ்சுபோச்சு. அந்த நாட்கள்ல
ஆஸ்பத்திரியும் வீடுமாதான்
இருந்தேன். அவ இறந்த அன்னைக்கு,
என்னுல இருந்து பாதி உசுரு
கழண்டுபோன மாதிரி இருந்துச்சு.
இப்பக்கூட அப்படியேதான்
இருக்கேன்.
வயசான காலத்துல, பொண்டாட்டி
போனதுக்கு அப்புறம் புருஷன்
இருக்குறது கொடுமையினு
சொல்லுவாங்க. இப்பதான் எனக்கும்
புரியுது இந்தப் பிரிவு எவ்வளவு
துயரமானதுனு. என் மனசு
அவளுக்குத் தெரியும்னாலும்,
'எனக்கு எல்லாமே நீதான்'ங்கிறதை
இருக்கும்போது அவகிட்ட எத்தனை
தடவை வார்த்தையில
சொல்லியிருக்கேன்னு தெரியல.
வருசா வருசம் காதலர் தினக்
கொண்டாட்டங்களை செய்தியாதான்
பேப்பர்ல படிப்பேன். இந்த வருஷம்
படிக்கும்போது, ரஞ்சிதம்
முகம்தான் வந்துபோகுது. 
அவ நெனப்பை என்ன செய்ய?""

 நான் படித்ததில் பிடித்தது.
 உங்கள் அனைவரின் பார்வைக்கும்.
--------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
===================================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

14.4.22

வாத்தியாரின் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!!!வாத்தியாரின் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!!!

இனிய தமிழ் புத்தாண்டு சுபகிருது வருட வாழ்த்துக்கள்.

சுபகிருது வருடம் 2022 முதல் 2023*

🍏இடைகாட்டு சித்தரின் சுபகிருது வருட வெண்பா:

🍒சுபகிருது தன்னிலே சோழதே சம்பாழ்
அவமரம் விலைகுறையு மான்சாம் - சுபமாகும்
நாடெங்கும் மாரிமிகு நல்விளை வுண்டாகுங்
கேடெங்கு மில்லையதிற் கேள்

🥝விளக்கம்: 
🍉சுபகிருது ஆண்டில் சோழ நாட்டில் பல பொருட்கள் வீணாகும். மண் பண்டங்கள் விலை குறைந்திடும். நல்ல மழை பெய்து விளைச்சல் பெருகும். மழையால் பாதிப்பு இவ்வாண்டு இருக்காது.

🌈சுபகிருது வருட பிறக்கும் நாள் விபரம்:
நாள் : 14.04.2022 வியாழக்கிழமை
நேரம் : காலை 08:48 (+5.30)

🍇🍐 சித்திரை பிறப்பிற்கு முதல் நாளன்று வீட்டை சுத்தம் செய்து, வாயில்களில் அழகாகக் கோலமிட வேண்டும். வீட்டு வாசலின் கதவுகளில் மஞ்சள் குங்குமம் இட்டு அலங்கரிக்க வேண்டும். 

🍏🍍சுவாமி அறையில் கண்ணாடி மற்றும் மங்கள பொருட்களும் பழங்கள் காய்கறிகளை வைத்து புத்தாண்டு பிறந்ததும் மங்கள பொருட்களில் கண் விழிக்க சிறந்த பலன்களை தரும். 

🍇🫒பின்னர், தாழம்பூ, தாமரைப்பூ, மாதுளம்பூ, துளசி, விஷ்ணுகிராந்தி, சீதேவியார் செங்கழுநீர், வில்வம், அறுகு, பீர்க்கு, பால், கோசலம், கோமயம், கோரோசனை, மஞ்சள், திப்பிலி, சுக்கு ஆகிய பதினாறு வகையான சமித்துகளால் காய்ச்சப்படும் மருத்து நீரை ஆலயங்களில் பெற்று தலையில் தேய்த்து நீராடினால் நல்ல பலன்களைப் பெறலாம் என்பது நம்பிக்கை. 

🌲🍒நீராடிய பின்பு புதிய ஆடைகளை அணிய வேண்டும்.

🥝🍉சித்திரை அன்று அறுவகையான சுவை கொண்ட உணவுகள் தயாரித்து பகிர்ந்து உண்பது இந்துக்களின் மரபாகின்றன.

🍐🍒 சுபகிருது_புதுவருட நவநாயகர்களை எவ்வாறு கணிப்பிடுவது என்று ஒரு விளக்கம்.

🥝🚩1.ராஜா - சனி
சுபகிருது சித்திரைக்கு முன்னர் வரும் பிலவ வருட பங்குனி மாதம் சுக்கில பட்ச பிரதமை வந்த வாராதிபதி ராஜா வாக கருதப்படுவார். பிலவ வருடத்தின் பங்குனி சுக்கில பிரதமை 2022.4.02 ம் திகதி சனிக்கிழமை வந்துள்ளது. இதனால் சனி பகவானே சுபகிருது வருடத்தின் ராஜாவாக கருதப்படுகிறார். சனி ஆட்சியாகி நிற்பதால் இவ்வாண்டு நீதி துறை, சட்டம் சிறக்கும். மக்களாட்சி உண்டாகும். அநீதிக்கு எதிரான வன்முறைகள் இடம்பெறும். 

🥝🍇2.மந்திரி - குரு
மேஷத்தில் சூரியன் புகும் போது அதாவது சித்திரை மாதம் உதயமாகும் நாளின் அதிபதி மந்திரி ஆவார். 2022.04.14ம் திகதி வியாழக்கிழமை காலை 8:48 மணியளவில் மேஷத்தில் சூரியன் புகுக உள்ளார். 

🍏🍋3.சேனாதிபதி - புதன்
சூரியன் என்று சிம்மத்திற்கு அதாவது ஆவணி மாதம் எந்த வாரத்தில் வருகிறதோ அதன் அதிபதி சேனாதிபதியாகும். ஆவணி மாதம் 17.8.2022 அன்று புதன்கிழமை சிம்மத்திற்கு பிரயாணிக்கிறார்.

🍒🥝4.அர்க்காதிபதி - புதன்
சூரியன் மிதுனத்தில் புகும் நாள் அதாவது ஆனி மாதம் பிறக்கும் வாரத்தின் அதிபதி அர்க்காதிபதி ஆகும். விலைவாசிகளை அறிய உதவும். 15.06.2022 புதன்கிழமை மிதுனத்தில் நுழைகிறார். 

🍍🍐5.ஸஸ்யாதிபதி - சனி
கடகத்திற்கு சூரியன் பிரவேசிக்கும் நாளின் அதிபதி அதாவது ஆடி மாதத்தின் ஆரம்ப நாளின் அதிபதி ஸஸ்யாதிபதி ஆவார். பயிர் விளைச்சலை சொல்லுவார். 16.07.2022 சனிக்கிழமை நள்ளிரவு 11:10க்கு சூரியன் கடகத்தை அடைகிறார். 

🍐🍒6.இராஸாதிபதி - சந்திரன்
சூரியன் துலாமை அடையும் நாள் அதாவது. ஐப்பசி மாதம் பிறக்கும் வாராதிபதி இராஸாதிபதி ஆவார். அறுவகை சுவை கொண்ட பொருட்களின் விளைச்சல் மற்றும் விலைவாசி பற்றி சொல்லும். 17.10.2022 திங்கட்கிழமை அன்று இரவு 7.30 க்கு மேல் சூரியன் துலாமை அடைகிறார். 

🥝🍒7.தான்யாதிபதி - சுக்கிரன்
சூரியன் தனுசில் பிரவேசிக்கும் மார்கழி பிறக்கும் நாளின் அதிபதி தான்யாதிபதி ஆகும். 16.12.2022 வெள்ளிக்கிழமை தனுசிற்கு பிரவேசிக்கிறார். 

🍒🥝8.மேகாதிபதி - புதன்
சூரியன் திருவாதிரை நட்சத்திரத்தில் பிரயாணிக்கும் நாளின் அதிபதி மேகாதிபதியாகும். திருவாதிரை மிதுன ராசியில் உள்ள நட்சத்திரம். அதாவது ஆனி மாதம் தான் சூரியன் திருவாதிரை நட்சத்திரத்திற்கு வருவார். 22.06.2022 புதன்கிழமை அதிகாலை 11:50க்கு மேல்  திருவாதிரை நட்சத்திரத்தை அடைகிறார். 

🍐🍒9.நீரஸாதிபதி - சனி 
சூரியன் மகரத்தில் நுழையும் நாளின் அதிபதி. தை மாதம் பிறக்கும் நாளின் அதிபதி நீரஸாதிபதி ஆகும். நவரத்தின பயன்பாட்டை சொல்லும். 14.01.2023 சனிக்கிழமை அன்று இரவு 8:50 மணிக்கு மேல் சூரியன் மகரத்தில் நுழைகிறார்.

🍉🫒10. பசுநாயக்கர் - கோபாலன்

இவ்வாண்டின் ராஜாவான சனி ஸாஸ்யதிபதி, நீராஸாதிபதி என மூன்று பதவிகளை வகின்றார்.

🍍மந்திரியாக குருவும்,

🍍சேனாதிபதி புதனே அர்க்காதிபதி மேகாதிபதியாகவும் உள்ளார்.

🍍இராஸாதிபதியாக சந்திரனும், 

🍍தான்யாதிபதியாக சுக்கிரனும் உள்ளார். 

🕉️சுபகிருது_வருடத்தின்_பலன்கள். 

✡️சித்திரை வருட லக்னமாக ரிஷபம் அமைந்து லக்னாதிபதி பத்தில் செவ்வாயுடன் நிற்பதால் சுய தொழில் விருத்தியாகும். விளைச்சல் நன்றாக இருக்கும். ஆபரணங்கள் சேர்க்கை உண்டாகும். தங்க சுரங்கம் மற்றும் புதையல்கள் வெளியே வரும். மக்களுக்கு வருமானம் உயர்வும் உண்டாகும். கலைஞர்கள் முன்னேற்றம் உண்டாகும். உஷ்ண நோய் உண்டாகும். குருதி சோகை சார்ந்த நோய் ஒருவகை வைரஸ் மூலம் பரவ வாய்ப்புள்ளது. 

✡️ராஜாவாக சனி இருப்பதால் அந்நிய நாட்டினரின் தலையீடுகள் உள்நாட்டில் உண்டாகும். கூலி உழைப்பாளர்கள், கீழ் நிலையில் உள்ள மக்கள், பணியாட்கள் சக்தி கூடும். அரசாங்கத்திற்கு எதிராக மக்களின் பலம் கூடும். மதமாற்றம் அடைவோருக்கு பாதிப்பு உண்டாகும். 
 
✡️மந்திரி குரு ஆவதால், தங்க புதையல் கிடைக்கும். ஆன்மீகம் விருத்தியாகும். நாடெங்கும் நீதியும் சட்டமும் விருத்தியாகும். போதை பொருட்கள் வியாபாரம் பண்ணுபவர்களுக்கு பெரும் பாதிப்பு உண்டாகும். உலக அமைதி உண்டாகும். புதிய மருந்துகள் கண்டுபிடிப்பார்கள். யாத்திரைகள் பெருகும்
---------------------------------------------
படித்தேன்: பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------------.
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

13.4.22

மகிழ்ச்சியாக வாழ சில வழிகள்!!!


மகிழ்ச்சியாக வாழ சில வழிகள்!!!

மகிழ்ச்சிகரமாக  வாழ 40  வழிகள்!!!😀👑✒️😀❤️🤝
1. தினமும் 10லிருந்து 30 நிமிடங்கள் நடந்து செல்லுங்கள். அவ்வாறு செல்லும் போது சிரித்த முகமாகச் செல்லுங்கள்.
2. தினமும் ஒரு 10 நிமிடங்களாவது, எந்த சிந்தனைகளும் இல்லாமல் அமைதியாக கண்ணை மூடி அமருங்கள்.
3. தினமும் ஏழு மணி நேரம் உறங்குங்கள்.
4. எப்போதும் இரக்கம், உற்சாகம், ஊக்கம், கருணை ஆகிய குணங்கள் மனத்தில் நிறைந்திருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
5. அதிக நேரம் ஏதாவது விளையாடுங்கள்.
6. அதிகமான ஆன்மீக மற்றும் விஞ்ஞான புத்தகங்களை படியுங்கள்.
7. உங்கள் தினசரி அலுவலில் தியானம், யோகம், வழிபாடு போன்றவற்றிற்கு இடம் கொடுங்கள். இவை உங்கள் வாழ்க்கைக்கு புத்துணர்ச்சி அளிக்கும்.
8. உங்கள் ஓய்வு நேரத்தை 70 வயது கடந்த முதியவர்களுடனும், ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளுடனும் செலவழியுங்கள்.
9. அடிக்கடி நிறைய கனவு காணுங்கள், விழித்திருக்கும் போது!
10. மரங்களிலும்,செடி கொடிகளிலும் விளையும் உணவுப்பொருட்களை பச்சையாக அப்படியே நிறைய உண்ணுங்கள்.
11. தினசரி மூன்று நபர்களையாவது மகிழ்ச்சிப்படுத்துங்கள்.
12. தினமும் நிறைய தண்ணீர் அருந்துங்கள்.
13. உங்களுக்குள் உன்னதமான ஆற்றல் மறைமுகமாக இருப்பதை உணருங்கள்,
14. நீங்கள் எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல் வானில் சுதந்திரமாக பறக்கும் பறவையாக உணருங்கள்.
15. பாசிட்டிவான எண்ணங்களை உங்களின் மனதில் தினமும் ஐந்துமுறை உருவாக்கும் வழக்கத்தை ஏற்படுத்தி வாழுங்கள்.
16. நீங்கள் வாழ்கின்ற வாழ்க்கையே உலகில் சிறப்பானது என்று உணருங்கள்.
17. உங்களின் காலை உணவை ஓர் அரசன் போல அருந்துங்கள்; மதிய உணவை ஓர் இளவரசன் போல உண்ணுங்கள்; இரவு உணவை ஒரு பிச்சைக்காரன் போல உண்ணுங்கள்.
18. நன்றாக வாய்விட்டு சிரியுங்கள்.
19. எல்லோரிடமும் அன்பு கொண்டு வாழ்ந்தால் இறைவனும் உங்களிடம் அன்பு செலுத்துவான் என்பதை புரிந்து கொள்ளுங்கள்,
20. வாழ்க்கையை டேக் இட் ஈஸி'யாக எடுத்துக் கொள்ளுங்கள்.
21. அனாவசியமான விவாதங்களில் கலந்து கொள்ளாதீர்கள்.
22. உங்களின் கடந்தகால வாழ்க்கையை மிகவும் சிறப்பான முறையில் இறைவன் நடத்தி வந்துள்ளார் என்பதை உணர்ந்து இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.
23. மற்றவர்களுடைய வாழ்க்கையுடன் உங்களுடைய வாழ்க்கையை ஒப்பிட்டு உங்களை உருவாக்கிய இறைவனை தயவுசெய்து கேவலப்படுத்தாதீர்கள்.
24. உங்களுடைய மகிழ்ச்சிக்கும், மன அமைதிக்கும் காரணம், கடவுள் உங்களிடம் காட்டும் கருணைதான் என்பதை என்றுமே மறவாதீர்கள்.
25. எவரையும், எதற்காகவும், எந்த சந்தர்ப்பத்திலும் மன்னிக்கத் தயாராக இருங்கள்.
26. ‘உங்களைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள்’ என்று யோசிப்பதை தவிருங்கள். உங்களைப் பற்றி என்றுமே உயர்வாக எண்ணும் பழக்கத்தை கைவிடாதீர்கள்.
27. இதுவரை உங்களை காப்பாற்றி வந்த கடவுள் இனியும் உங்களை என்றென்றும் காப்பாற்றுவார் என்பதை மனதார உணருங்கள்.
28. நல்லதே நடக்கும் என்று நம்புங்கள்.
29. உங்களுடைய இன்பத்தில் பங்கெடுத்துக் கொள்பவர் அனைவரையும் மிக அதிக அளவில் பாராட்டுங்கள். அவர்களிடம் நிரந்தரமாக தொடர்பு வைத்திருங்கள்.
30. உங்களுக்கு மகிழ்ச்சியளிக்காதவை எதுவாக இருந்தாலும் அவைகளிடம் இருந்து விலகி ஓடி விடுங்கள்.
31. உங்கள் தேவைக்கு அதிகமாகவே அனைத்தையும் உங்களுக்கு தந்து வருகிற இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.
32. வாழ்வின் 'உன்னதம்' என்பது ஏற்கெனவே உங்களுக்கு முழுவதுமாக நிச்சயம் வந்து விட்டது என்று நம்புங்கள்.
33. நீங்கள் எந்த மனநிலையில் இருந்தாலும் நன்றாகக் குளித்து, சுத்தமான ஆடையை அணிந்து கொள்ளுங்கள்.
34. உங்களுக்கு நன்மை என்று தோன்றும் செயல்களை உடனே செய்யுங்கள்.
35. எத்தனை 'பிஸி'யாக இருந்தாலும் குடும்பத்தினருடன் பேசி மகிழுங்கள்.
36. உங்களுக்கு உள்ளே இருக்கும் 'ஆன்மா' எப்போதும் ஆனந்தமாக இருப்பதை உணர்ந்து, நீங்களும் ஆனந்தமாக இருங்கள்.
37. தினசரி மற்றவருக்குப் பயனளிக்கும் வகையில் ஒரு சிறிய செயலையாவது செய்யுங்கள்.
38. நீங்கள் வரம்பே இல்லாத வலிமை பெற்றவர் என்பதை அறிந்து எந்தச் செயலிலும் துணிந்து இறங்குங்கள்.
39. நீங்கள் காலையில் கண் விழித்தவுடன் கடவுளுக்கு நன்றி தெரிவியுங்கள்!
40. நீங்கள் தூங்கும் முன்பு மகிழ்ச்சிகரமான தினத்தை தந்த இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.
-----------------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
===========================================================வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

12.4.22

பசுக்களின் மேல் பிரியம் வைப்போம்


பசுக்களின் மேல் பிரியம் வைப்போம்

கும்பகோணத்தை மையமாக வைத்து ஸ்ரீமடம்
செயல்பட்டுக் கொண்டிருந்த சமயம்.

மடத்தின் பின்புறம் பெரிய மாட்டுக் கொட்டில்,
மடத்துப் பசுமாடுகளுடன் கூட ஒரு புதிய பசுமாடு வந்து
வைக்கோல் தின்று கொண்டிருந்தது.தண்ணிர்
குடித்துக் கொண்டிருந்தது.

யாருடைய மாடு என்று தெரியவில்லை.
ஒருவரும் மாட்டைத் தேடிக்கொண்டும் வரவில்லை.
அக்கம் பக்கத்தில் தகவல் கொடுத்தும் பயனில்லை.

நாலைந்து நாட்கள் கடந்தன.

"அந்த மாட்டை வெளியே ஓட்டி விடலாமா?"
என்று பெரியவாளிடம் வந்து கேட்டார் கார்வார்.

"வெளிமாடு என்பதால் அந்தப் பசு மாட்டை வெளியே
துரத்தி விடுவதானால், நம்ம மடத்திலுள்ள பல வெளி
மனிதர்களையும் வெளியே அனுப்பி விட வேண்டும்!.."

(மடத்தில் எந்தக் காரியமும் செய்யாமல்,தான்
முக்கியமான பணி செய்வது போல் காட்டிக் கொண்டு
பலர் உண்டு, உறங்கி வந்தார்கள்)

"மாடு வாயில்லாப் பிராணி.அதனுடைய எஜமானன்
யார் என்று தெரியல்லே.நம்ம மாட்டுக் கொட்டகையிலேயே
இருக்கட்டும்.அதை ரட்சிக்க வேண்டியது நமது கடமை."
சில நாட்கள் கழிந்த பின் அந்தப் பசுமாடு சினைப்பட்டு
கன்றும் ஈன்றது.

கார்வார் மறுபடியும் வந்து நின்றார் பெரியவாள் முன்.
"சீயம்பால் காலம் முடிஞ்சு போச்சு...நல்ல ஜாதி மாடு...
புஷ்டியான தீனி....வேளைக்கு நாலு சேர் கறக்கிறது..."

"அந்த மாட்டுப் பாலை அப்படியே காளஹஸ்தீஸ்வரர்
கோயில் அபிஷேகத்துக்குக் கொடுத்து விடு.மாடு மடத்துக்குச்
சொந்தமானது இல்லை. பால் மடத்துக்கு வேண்டாம்."

இரண்டு நாட்கள் ஆயின.
"என்ன செய்கிறே அந்த மாட்டுப் பாலை?"
என்று கார்வாரிடம் கேள்வி.

அவர் அவசரம்,அவசரமாக, "தினந்தோறும் நாலு சேர்
பால் காளஹஸ்தீஸ்வரர் கோயிலுக்கு கொடுக்க
ஏற்பாடு செய்துட்டேன்..." என்றார்.

"என்றாலும் தவறுதலாக மடத்து உபயோகத்துக்கு
வந்துடலாம் இல்லையா?...மாட்டையும்,கன்றையும்
ஏதாவது ஒரு சிவன் கோயிலுக்குக் கொடுத்து விடு."
அப்படியே செய்தார் கார்வார்.

ஆனால், அந்தக் கோயிலில் ஏற்கனவே நாலைந்து
பசுமாடுகள் இருந்தன.நிர்வகிப்பது கஷ்டமாக இருந்தது.
பசு மாடுகளை கோயில் அதிகாரி ஏலத்துக்குக்
கொண்டு வந்து விட்டார்.

ஏலத்தில் விட்டால், அவையெல்லாம் நேரே கசாப்புக்
கடைக்குத் தான் போகும் என்ற அச்சம் பெரியவாளுக்கு.

செல்வந்தரான ஒரு பக்தரிடம் சொல்லி எல்லா
மாடுகளையும் ஏலத்தில் எடுக்கச் சொன்னார்கள்.

பின்னர், அக்கறையுடன் பராமரிக்கக் கூடியவர்களைப்
பார்த்து ஒவ்வொரு பசுமாடாகக் கொடுத்து விட்டார்கள்.
பசுக்களிடம் அவ்வளவு வாத்ஸல்யம் பெரியவாளுக்கு.
----------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

11.4.22

கவன ஈர்ப்பின் முக்கியத்துவம்கவன ஈர்ப்பின் முக்கியத்துவம்

தினமும் தன் இரு சக்கர வாகனத்தில் தன் மகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் ஒருவர் ஒரு வித்தியாசமான விசயத்தை தொடர்ந்து செய்து வந்தார்.

மகளுடன் சாலையில் செல்லும்போது ஏதாவது ஒரு கடையின் பெயர் பலகையை அவளை படிக்கச் சொல்வார்.

பின்னர் அந்தக் கடையைப் பற்றிய விவரங்களை அவளுக்கு விளக்குவார்.

அந்தக் கடையில் நடக்கும் வேலைகள், அதற்கான பொருள்கள், தயாரிக்கும் முறை என்று மகளுக்கு சொல்லிக்கொண்டே போவார். 

உதாரணமாக ஒரு டீ கடை என்றால்...

 "எனக்குத் தெரிஞ்சவர் இந்த கடைக்காரர்.

இங்கே 10 வருஷமாக டீ கடை வெச்சிருக்கார்.

தினமும் காலையில் 5 மணிக்கே கடையை திறந்து விடுவார். 

அதுக்காக, 

4 மணிக்கே எழுந்து விடுவார். 

ராத்திரி 10 மணி வரைக்கும் கடை இருக்கும். 

ஒரு நாளில் 17 மணி நேரம் வேலை செய்கிறார். 

அதில் முக்கால்வாசி நேரம் நின்றபடியேத்தான் இருப்பார்.

நீ கிளாஸ்ல உட்கார்ந்து பாடம் படிப்பாய். நானும் ஆபீஸ்ல உட்கார்ந்து வேலை செய்வேன். 

ஆனால், 

இவர் உட்கார்ந்து வேலை செய்ய முடியாது. 

நின்றபடியே வேலை செய்தால்தான் வேலை நடக்கும். 

ஒரு குறிப்பிட்ட நேரத்துல கூட்டம் அதிகமா இருக்கும். 

அந்த நேரத்துல யாரையும் அதிகம் காத்திருக்க வைக்க முடியாது.

சுறுசுறுப்பா டீ கொடுக்கணும். டேஸ்ட்டும் நல்லா இருக்கணும்.''

இப்படி ஆரம்பித்து, அதில் வரும் வருமானம், சவால்கள் எனச் சொல்வார். 

அவர் செல்ல மகளும் இடையிடையே நிறைய கேள்விகள் கேட்பாள். 

அவற்றுக்கெல்லாம் பதில் சொல்லியவாறு அழைத்துச் சென்று பள்ளியில் விடுவார் தன் மகளை.

ஒரு நாள் வகுப்பில் ஒரு பாடம் நடத்தும்போது நடந்த உரையாடலில், பூ விற்பவர் பற்றிய பேச்சு வந்தது.

உடனே எழுந்த அந்தப்பெண், அதுபற்றி தனக்குத் தெரிந்ததை எல்லாம் கோர்வையாக சொல்லிக்கொண்டே போனாள்.

அது மற்ற குழந்தைகளுக்கு மட்டுமல்ல அந்த வகுப்பு ஆசிரியைக்கும் தெரியாத பல செய்திகளை வெளிப்படுத்துவதுமான ஒரு நிகழ்வாக இருந்தது.

அந்தத் தகவல்களுக்குள் ஒரு மனிதரின் வாழ்வியல் முறை, சக மனிதருடன் நமக்குள்ள தொடர்பு, அவர்களின் முக்கியத்துவம், அவர்களின் பொருளாதார சூழல் ஆகியவை வெளிப்பட்டன.

அவள் வகுப்பு ஆசிரியை வியந்து கைதட்டினார். 

மற்ற குழந்தைகளும் கூட அவளை வியந்து பார்த்தது. 

தன் தந்தைக்கு மனதார நன்றி சொன்னாள் அந்தச் செல்ல மகள்.

பொதுவாக, பொருளாதார ரீதியாக எளிய பணிகளைச் செய்பவர்களை நம் குழந்தைகளுக்கு நாம் எப்படி அறிமுகம் செய்கிறோம் என்று யோசித்துப் பாருங்கள்..?!

"சரியா படிக்கலைன்னா இப்படித்தான் நீயும் கூலி வேலை செய்து கஷ்டப்படணும்'' என்கிறோம்.

அதாவது, நம் குழந்தைகளுக்குள் பயத்தைப் புகுத்தி அதன் மூலமாக புது பொறுப்பை உருவாக்க இதை ஓர் உத்தியாக நினைக்கிறோம். 

ஆனால், 

அப்படிச் சொல்வதால் அவர்களுக்குள் பயம் மட்டுமா உருவாகிறது? 
நிச்சயமாக இல்லை!

அந்தப் பணியைத் தாழ்வாகவும், அதைச் செய்பவர்கள் மீது இயல்பாகவே மதிப்பும் குறைகிறது.

இது சரியான வழிமுறையா?

இங்கே செய்யப்படும் எல்லாவிதமான பணிகளும் முக்கியமானவைகளே.

எல்லா மனிதர்களும் முக்கியமானவர்களே
என்பதை நாம் நம் குழந்தைகளுக்கு உணர்த்துவது மிக முக்கியம். 
 
எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே.             

பின் நல்லவராவதும் தீயவராவதும் பெற்றோர்கள் வளர்ப்பினிலே.
--------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
=======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

8.4.22

நமக்குள்ளே இருக்கும் அச்சம்


நமக்குள்ளே இருக்கும் அச்சம்

எனக்கும் அடிக்கடி தோன்றும் அச்சம்* .

#கணவன் 😢😢😢

கணவன் இறந்த பின் பெண்கள் எப்படியோ தான் பெற்ற மக்களை
அனுசரித்து வாழ்ந்து விடுகின்றனர்.

ஆனால் மனைவி போன பின் கணவன் படும் துயர் இருக்கிறதே

* 😴😴😴கொடுமை 😴😴😴*

தானாகவே காப்பி கூட போடத் தெரியாத கணவன், தண்ணீரைக்
கூடத் தானே மொண்டு குடிக்காத கணவன் மனைவியின் மறைவுக்குப்
பின் ஏனென்று கேட்க ஆளில்லாமல் போகிறான்.

ஒரு ஆணுக்கு நன்றாகவே சமைக்கத் தெரிந்தாலும் கூட மருமகளோ, 
மகளோ சமைலறையில் ஆளும் போது அங்கே இந்த ஆணால் 
தன்னிச்சையாக நுழைய முடியாது.

வேண்டுவனவற்றை தானே சமைத்துக் கொள்ளவோ எடுத்துக் கொள்ளவோ
கூசுகிறார்கள்.

என்ன கொடுத்தார்களோ எப்போது கொடுத்தார்களோ கொடுத்ததை
கொடுத்த போது சாப்பிட்டுக் கொள்ளணும்.

ரெண்டாவது காபி கூட கேட்க முடியாது.

தலைவலியில் ஆரம்பித்து எப்பேர்ப்பப்ட்ட சுகக்கேடு வந்தாலும் ஆதரவாகப்
பேசக் கூட ஆளிருக்காது.

இதெல்லாம் என் உறவுக்குள்ளே, நட்பு வட்டத்திற்குள்ளே கண்ட உண்மை.
துளியும் அதிகப்படியில்லை.

என் கணவர் காலை எட்டரை மணிப் போலசும்மா கிச்சனில் வந்து எதானும் பேச ஆரம்பித்தால் காபி வேணும்னு அர்த்தம். காபி குடித்தால் காலை உணவின் அளவு அவருக்குக் குறைவதால் கொடுக்க யோசிப்பார்கள்.

இப்போதெல்லாம் காலையில் என் கணவர் கேட்காமலேயே ரெண்டாவது
காபி கொடுத்துடுவேன்.

எனக்குப் பின் அவருக்கு யார் கொடுப்பாங்க?

இந்த நினைவு வந்தால் மனசு ரொம்ப பாரமாகிடுது.

மனைவி இல்லாத கணவன் உயிரற்ற உடல் போலே!!

சகோதரிகளே!!
யாருக்கு விதி எப்போன்னு தெரியாது!
உங்கள் கணவர் உங்களுக்குப் பின் வாயில்லாப் பூச்சிதான்!

முடிந்தவரை கணவனிடம் அனுசரணையாக இருங்கள்!!

ஒரு குடும்பத்தலைவியின் ஆதங்கம்.
-------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

7.4.22

Health Tips உடல் நலம்: தயிரின் மகத்துவம்!

Health Tips உடல் நலம்: தயிரின் மகத்துவம்!

தினமும் கொஞ்சம் தயிர் சாப்பிட்டு வந்தால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?

தயிரை தினமும் உணவின் ஒரு அங்கமாக சேர்த்துக்கொள்வதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்க பெறுகின்றது.

💥 தயிரில் வாழும் பாக்டீரியாக்கள் குடலுக்கு நல்லது. இதனால் 70% நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்துவிடும்.

💥 தயிரில் விட்டமின் B-12, கால்சியம் , பாஸ்பரஸ் , மெக்னீசியம் மற்றும் மினரல்கள் உள்ளன. இவை உடலுக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துகளாகும்.

💥 தயிரில் நிறைவாக உள்ள கால்சியம் சத்து எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு உதவும். மூட்டு வலி, எலும்பு தேய்மானம் போன்ற பிரச்னை இருப்போர் தினமும் ஒரு பவுல் தயிர் சாப்பிடலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

💥 தயிரில் இயற்கையான முறையில் ப்ரோபயோடிக்ஸ் என்னும் அமிலம் உள்ளது. இது தயிரில் வாழும் பாக்டீரியாக்களினால் சுரப்பதால் குடலுக்கு நல்லது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். குடல் ஆரோக்கியமா இருந்தாலே 70% நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்துவிடும்.

💥 தயிரில் புரோட்டீன் அதிகம் உள்ளதால் தோல் மற்றும் தலை முடி வளர்ச்சிக்கு நல்லது. தசைகள் இறுக்கமாகவும் தயிர் உதவும்.

💥 அசைவ உணவுக்காரர்களால் தயிரை பயன்ப்படுத்தாமல் இருக்க முடியாது. ஆனால்,சைவர்கள் அசைவம் உண்ணாமல் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாகவும் ஆனந்தமாகவும் வாழ தயிர்சாதம் 
முழுமையாக உதவுகிறது.🍁

💥 தயிர்சாதத்தை நோயுற்ற காலத்திலும் தொடர்ந்து பயன்ப்படுத்தி ஆரோக்கியம் பெறலாம்.🍁

💥 தயிர் சாதத்தை  மாங்காய்,எலுமிச்சை, நெல்லிக்காய் போன்றவற்றின் ஊறுகாய். அப்பளம்,மோர்மிளகு,வத்தக்குழம்பு, சாம்பார், ரசம், Poriyal போன்றவற்றோடு
மாற்றி மாற்றி சாப்பிடும் போது 
பல்வேறு சுவைகளை உணரலாம்.
திராட்சை,மாதுளை,ஆப்பிள்,கொய்யா சேர்த்தும் தயிர்சாதம் தயாரிக்கலாம்.🍁

💥 தயிர்சாதம் உடல் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு பணத்தையும் மிச்சப்படுத்துகிறது.

💥 உணவகங்களில் பிரியாணி சாப்பிட்டவர் வாந்தி பேதியில் மரணம்.சிக்கன் சாப்பிட்டவர் மரணம்,
புரோட்டா சாப்பிட்டவர் மரணம்,கேக் சாப்பிட்டகுழந்தைகள் மரணம் என்றெல்லாம் கேள்விப்பட்டிருப்போம்.
ஆனால், தயிர்சாதம் சாப்பிட்டவர் கவலைக்கிடம் என்று ஒரு செய்தியும்
இதுவரை உலகில் ஒரு மூலையிலும்
வந்ததில்லை இதற்கு காரணம். தயிர் தன்னோடு சேரும் பழைய சாதத்தை கூட அமிர்தமாக மாற்றும் தன்மை
கொண்டது என்பது தான்.🍁
--------------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

6.4.22

நகைச்சுவை: ஹார்டுவேருக்கும் சாஃடுவேருக்கும் என்ன வித்தியாசம்
நகைச்சுவை: ஹார்டுவேருக்கும் சாஃடுவேருக்கும் என்ன வித்தியாசம்

Just relax...*

😁😁😁😁😁😁😁😁😁

அவர்: ஏன்டா உங்க அப்பன் பேர பிரிஜ்ஜூக்குள்ள எழுதி வச்ச??

இவன்: என் பெயர் கெட்டுப் போகாம பாத்துக்கன்னு அவர்தான் சொன்னாரு..
😁😁😁😁😁

பேராசிரியர்: சாப்ட்வேர்னா என்னா, ஹாடுவேர்னா என்னா?

இவன்: செடியில உள்ளது சாப்ட்வேரு.. மரத்துல உள்ளது ஹார்டுவேரு.
😂😂😂😂

அவர்: ஜிம்முக்கு போற பசங்கள ஈசியா கண்டுபிடிச்சிடலாம்.

இவர்: எப்படி.?

அவர்: ரெண்டு கைலயும் சாம்பார் வாளிய தூக்கிட்டு போறமாதிரி நடப்பானுங்க.
😁😁😁😁

அவர்: ஆண்கள்ல 65% பேர் மனைவி சொல்றத கேப்பாங்க.

இவர்: அப்ப மீதி பேர்?

அவர்: இன்னும் கல்யாணம் ஆகல.
😂😂😂😂

சோமு: நாட்ல அநியாயம் நடக்குது..

பாபு: எப்புடி சொல்றீங்க.?

சோமு: வெயில் காலத்துல மோர் பந்தல் வைக்கிற மாதிரி, மழை காலத்துல டீபந்தல் வைக்கமாட்றாங்களே.!
😁😁😁😁

அவர்: அபராதத்திற்கும், வரிக்கும் வித்தியாசம் தெரியுமா?

இவர்: தெரியாது சொல்லுங்க.

அவர்: தவறான செயலுக்கு தண்டம் கட்டுனா அபராதம்..
சரியான செயலுக்கு தண்டம் கட்டுனாஅது வரி.!
😂😂😂

அவன்: இதோ போறானே அவனுக்கு பொது அறிவு சுத்தமா இல்ல.

இவன்: எப்டி சொல்றீங்க?

அவன்: பழமொழிக்கு இங்லீஸ்ல என்னன்னு கேட்டான். புரூட் லாங்வேஜ்னு சொன்னா ஒத்துக்க மாட்றான்.
😂😂😂😂

டாக்டர்: இந்த மருந்த காலைல வெறும் வயத்துல சாப்டுங்க..

வந்தவர்: ஒரு பனியன்கூட போட்ருக்ககூடாதா டாக்டர்.?
😂😂😂😂

கனவன்: என்ன சாம்பார்ல 2 காயின் கிடக்கு.?

மனைவி: நீங்கதானே சமையல்ல சேஞ்ச் வேனும்னு சொன்னீங்க.?!
😁😁😁😁

அவர்: அர்ச்சனை உங்க பேருக்கா.? சாமி பேருக்கா..?

இவர்: சாமி பேருக்கே பண்னுங்க.. எனக்கு தினம் வீட்டலயே அர்ச்சனை நடக்குது.
😁😁😁😁😁

அவர்: உங்க மனைவிய செல்லமா எப்டி கூப்புடுவிங்க.?

இவர்: கூகுள்னு.. எங்க இருந்தாலும் கண்டுபிடிச்சுடுவா..
😂😂😂😂😁

தீபாவளி எபக்ட்...

மனைவி: எனக்கு இதே டிசைன்ல வேற கலர்ல காட்டுங்க !!

கணவன்: அடியேய் ! துணி எல்லாம் எடுத்து முடிச்சு நாம இப்ப காய்கறி கடைல இருக்கறோம்!! 
😂😂😂😂

தாத்தா : அந்த காலத்துல உன் வயசுல நான் கடைக்கு இரண்டு ரூபாய் எடுத்துட்டு போனா  வீட்டுக்கு வரும்போது பால், பழம், ரொட்டி, மிட்டாய், சோப்பு, பவுடர் எல்லாம் கொண்டு வருவேன்.. தெரியுமா ?

பேரன் : இப்ப அப்படியெல்லாம் முடியாது தாத்தா.. எல்லா கடையிலயும் நிறைய C C TV கேமரா வச்சுருக்காங்க...!
😁😁😁
--------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

5.4.22

மரணத்தை விட கொடூரமான விஷயம் என்னவென்று தெரியுமா...?


மரணத்தை விட கொடூரமான விஷயம் என்னவென்று தெரியுமா...?

கவிஞர் வாலி  அசத்தலாகச் சொன்னது!

கீழுள்ளவை கவிஞர் வாலி பதிந்த சில சம்பவங்கள்.

"அடக்கமாகும் வரை அடக்கமாக இரு" என்று உணர்த்தும் நினைவுச் சின்னங்கள் .

 "இந்தக் கடிதம் கொண்டுவரும் பையனிடம் இருபதோ முப்பதோ கொடுத்து அனுப்பினால் நலமாயிருக்கும்..!’

இப்படி ஒரு கடிதத்துடன் என் வீட்டிற்கு ஒரு பையன் வரும் போதெல்லாம், எனக்கு வியர்த்துக் கொட்டும். எவ்வளவு பெரிய எழுத்தாளர்; எப்படியிருந்தவர்.. அவருக்கா இப்படிஒரு சிரமம்...?

ஒரு கம்பெனியில் பாட்டு 'கம்போஸிங்’. எம்.எஸ்.வி-யுடன் அமர்ந்திருக்கிறேன். கம்பெனி மாடியில் குடியிருக்கும் ஒருவர் 'ஹாய் வாலி ..!’ என்று இறங்கி வருகிறார்.

சிரிக்கச் சிரிக்க அளவளாவி விட்டு, ''வாலி..! உன் டிரைவரை விட்டு, ஒரு பாக்கெட் 'பர்க்லி’ சிகரெட் வாங்கிண்டு வரச் சொல்லேன். என்னோட பிராண்ட் 555 வாங்க இப்பெல்லாம் வசதியில்லே...!''

எவ்வளவு பெரிய நடிகர்..! எம்.ஜி.ஆர், சிவாஜி படங்களில் அவர்களை விட அதிகம் சம்பளம் வாங்கியவர்! படுக்கையறைக்கே கார் வருகிற மாதிரி பங்களா கட்டியவர்! எங்கே போனது அந்த வாழ்வும் வளமும்..?

என் வீட்டு வாசலில் ஒரு டாக்ஸி. ஒரு நடிகை. ஒரு காலத்தில் தமிழ்திரையுலகின் முடிசூடா அரசி. என்னைப் பார்க்க வந்தவர், 'வாலி சார்.. எனக்கு ஒரு நாடகம் எழுதிக் கொடுங்க; ஒரு ட்ரூப் வெச்சு, நடத்தலாம்னு இருக்கேன்' என்று மெல்லிய குரலில் சொன்னார்.

சென்னை எழும்பூர் ரயில் நிலையம். சிமென்ட் பெஞ்சில் ஒருவர் அமர்ந்திருக்கிறார். இன்றைய தலைமுறைக்கு அவரைத் தெரியவில்லை. நான் கவனித்து விட்டேன்.

ஓடிப் போய் அவரருகே சென்று, 'நமஸ்காரம் அண்ணா..! நானும் உங்க மாதிரி திருச்சிக்காரன் தான். இப்போ, சினிமாவில பாட்டு எழுதிண்டிருக்கேன். என் பேரு வாலி’ என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, அவரை வணங்குகிறேன்.

'ஓ நீங்கதான் அந்த வாலியா..?’ என்று என் கைகளைப் பற்றுகிறார். அவர் தொட மாட்டாரா என்று தமிழர்கள் ஏங்கித் தவமிருந்த காலம் ஒன்று உண்டு. இன்று அவர் என்னைத் தொடுகிறார். நான் சிலிர்த்துப் போகிறேன்.

அவர் தொட்டதால் அல்ல. எந்த ரயில்நிலையத்தில் அவர் ரயிலிருந்து இறங்கவிடாமல் மக்கள் அலை மோதினார்களோ அங்கே கவனிக்க ஆளில்லாமல் தனியாக அவர் அமர்த்திருந்த நிலையை பார்த்து.

காலம் எப்படியெல்லாம் தன் ஆளுமையை காட்டுகிறது. எண்ணிப் பார்க்கிறேன், அந்தப் பழைய நிகழ்வுகளை:-

கடிதம் அனுப்பிப் பணம் கேட்டவர், 'கண்ணகி’க்கு உயிர் கொடுத்த, உலகு புகழ் உரையாடல்களை எழுதிய திரு. இளங்கோவன்.

என்னிடம் சிகரெட் கேட்டவர் 'மாடி வீட்டு ஏழை’யான திரு.சந்திரபாபு அவர்கள்.

நாடகம் எழுதித் தரக் கேட்டவர் - நடிகையர் திலகம் திருமதி.சாவித்திரி அவர்கள்.

எழும்பூர் ரயில் நிலையத்தில் எவர் கவனத்தையும் ஈர்க்காமல் அமர்ந்திருந்தவர் - தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் டூப்பர் ஸ்டார் - திரு. எம்.கே. தியாகராஜ பாகவதர்.

இவர்களைவிடவா நான் மேலானவன்?

அன்று முதல் நான், 'நான்’ இல்லாமல் வாழப் பயின்றேன்.!

இதுதான் மனிதவாழ்க்கை.

இருந்தாலும் வாழ்ந்து கெட்டவர்களின் துயரம் மரணத்தை விட கொடூரமானது.

சமயங்களில் மரணம் தான் விடுதலையோ என்று ஏங்க வைத்து விடுமளவு குரூரமானது.
------------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
=============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

4.4.22

கர்நாடக சங்கீத விமர்சகர் சுப்புடு!!!!


கர்நாடக சங்கீத விமர்சகர் சுப்புடு!!!! 

சுப்புடு இந்த பெயர் அவருடைய வாழ்நாட்களில் இணைந்து பயணித்த கர்நாடக சங்கீத வித்வான்களுக்கு சிம்ம சொப்பனம்.தலைநகர் டில்லியை வாழ்விடமாக கொண்டிருந்த சுப்புடு அவர்கள் வருடந்தோறும் டிசம்பர் மாத சங்கீத சீசன் சமயம் சென்னை வாசி.இவரின் விமர்சனத்தை எதிர்கொள்ள முடியாத ஜாம்பவன்கள் மகாராஜபுரம் சந்தனம்,காருக்குறிச்சி அருணாச்சலம் போன்றவர்கள் சுப்புடு வந்தால் கச்சேரி செய்ய மறுத்தார்கள்.

சென்னை மியூசிக் அகாடமி வாசலில் சுப்புடு நுழைய தடை என போர்டு வைத்தனர்.

சமரசம் இல்லா விமர்சகரான சுப்புடு அவர்கள் முறையான சங்கீதம் கர்றவர் இல்லை.புகழ் பெற்ற கர்நாடக பாடகி T. K. பட்டம்மாளின்  தம்பி. சிறு வயதில் அக்கா வீட்டில் சாதகம் செய்யும் போது மேல் ஸ்தாயியில் குரல் பிசுறு தட்டும் போது 'பட்டு மேலேயே நின்னுட்டுயே இறக்கி விடனுமா?'என்பாராம்.

பலரின் விரோதத்தை சம்பாதித்த சுப்புடு அவர்கள் விமர்சன உலகின் முடி சூடா மன்னனாக வலம் வந்தவர்.

இவரின் மூத்த சகோதரர் டில்லி செயலகத்தில் செயலாளர் பணி செய்தவர்.அவர் ஒரு பேட்டியில் 'சுப்புடு வின் குடும்பம் என்றே நாங்கள் அறியப்பட்டோம்,அதில் தான் எங்களுக்கு பெருமை 'என்றார்.
அப்துல் கலாம் ஜனாதிபதி யாக இருந்த போது மிகவும் உடல் நலம் குன்றிய சுப்புடு அவர்களை மாலை நேரம் பார்க்க சென்றார்.சுப்புட்டுவிடம் "உங்களுக்கு நான் என்ன செய்யட்டும்"என்று கேட்டார்கள்.சுப்புடு அவர்கள் 'நான் இறந்த உடன் உங்கள் ஜனாதிபதி மாளிகையில் உள்ள மஞ்சள் ரோஜா மலர்களை என் மேல் வைக்க செய்யுங்கள் " என்றார்.

அன்று இரவு அவரின் மரண செய்தி ஜனாதிபதி மாளிகைக்கு தெரிவிக்க பட்டதும்.மஞ்சள் ரோஜாக்களை அனுப்பி வைத்தார் மறைந்த கலாம் அய்யா.

சுப்புடு அவர்கள் எப்போதும் சொல்வது"இசையை விமர்சிக்க மட்டுமே உரிமை உண்டு, இசைத்தவனின் தனி மனிதத்தை விமர்சிப்பது நம் மன நோய்"
ஆம் படைப்பை விமர்சிக்க மட்டுமே உரிமை உண்டு. படைத்தவனை விமர்சிப்பது நாம் அறிவிலிகள் என்பதன் ஒப்புதல் வாக்குமூலம்.

சேதுராமன் லக்ஷ்மணன்.

--------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

1.4.22

விநாயகர் கோவில்கள்!விநாயகர் கோவில்கள்!

தமிழ்நாட்டில் முதன் முதலாக தங்கத் தேரில் பவனி வந்த பிள்ளையார் என்ற பெருமையைப் பெற்றவர் கோவை ஈச்சனாரிப் பிள்ளையார். 

இங்குள்ள தேர், ஏழரை கிலோ தங்கம், 18 கிலோ வெள்ளியால் செய்யப்பட்டது.

எந்த ஒரு காரியமும் விநாயகரை வழிபட்டு தொடங்கினால் தடையின்றி முடிவடைந்து விடுவதால் 'முதற்கடவுள்" ஆகிறார்.

சிலருக்கு தொழிலில் இழப்பு ஏற்பட்டு இருக்கலாம். சிலருக்கு பதவி இழப்பு ஏற்பட்டிருக்கலாம். சிலருக்கு சொத்து இழப்புகள் ஏற்பட்டிருக்கலாம். இவர்கள், நடனமாடும் தோற்றத்தில் இருக்கும் நர்த்தன விநாயகரை அணுகி, அவருக்கு அபிஷேகம் செய்து, இனிப்பு நைவேத்யம் செய்து, வழிபட்டு வந்தால், இழந்தவைகளை மீண்டும் பெறலாம் என்பது ஐதீகம்.

விநாயகருக்கு விருப்பமான நைவேத்யம் மோதகம், அப்பம், பழம், பொரி கடலை, கரும்பு, மா, பலா, வாழை, நாகப்பழம், விளாம்பழம், தேங்காய், இளநீர், அவரை, துவரை, சுண்டல், கொய்யா, புட்டு, பொங்கல், எள் உருண்டை, வடை, பாயசம், தேன், கல்கண்டு, சர்க்கரை, தினை மாவு, அதிரசம் முதலியன.

பன்னிரெண்டு விநாயகர் வக்ரதுண்டர், சிந்தாமணி, கணபதி, கஜானை கணபதி, விக்ன கணபதி, மதுரேச கணபதி, துண்டு கணபதி, வல்லப கணபதி, தூப கணபதி, கணேசர், மதோத்கட கணபதி, ஹேரம்ப கணபதி, விநாயகர்.

மண்ணால் செய்த விநாயகரை வழிபட்டால், நற்பதவி கிடைக்கும். புற்று மண்ணில் உருவாக்கப்பட்ட விநாயகரை வணங்கினால், லாபம் கிட்டும்.  

உப்பால் உருவான விநாயகரை வணங்கிட எதிரிகள் அழிவர். கல்லால் அமைந்தவிநாயகரைவழிபட, சகல பாக்கியங்களும் பெறலாம்.

இந்து மக்களின் வழிபாட்டில், சிவன் கோயிலில் விநாயகரை வணங்கி, கோயிலின் உள்ளே செல்வது வழக்கம். 

காரணம், விநாயகர் சிந்தனை கூர்மையைக் கொடுத்து இறைவன் பால் பக்தியை அதிகரிக்கச் செய்பவர். இத்தகைய சிறப்புகளைக் கொண்ட விநாயகருக்கு பல திருப்பெயர்கள் உண்டு.

விநாயகரை முக்குறுணி விநாயகர், திருமுறை காட்டிய விநாயகர், பொல்லாப் பிள்ளையார், வல்லப கணபதி, மோகன கணபதி, கற்பக விநாயகர், நர்த்தன விநாயகர், திருமூல விநாயகர் ஆகியோர் தனிச் சன்னிதி கொண்டு அதற்கு ஏற்ப பலன்களை வாரி வழங்கி வருகின்றனர்.

ஸ்ரீ செவ்வந்தி விநாயகர் மிகவும் தொன்மை வாய்ந்த அனுக்கிரக மூர்த்தி. செம்பருத்தி போன்ற சிவப்பு நிற மலர் மாலை இவருக்கு அணிவித்து வழிபட்டால் கணவன்மார்களுடைய கடுமையான நோய்கள் விலகும். சுமங்கலிப் பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதம் செவ்வந்தி விநாயகர்
====================================================
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
===============================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!