மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

31.8.10

ப்ளெண்டிங் என்றால் என்னவென்று தெரியுமல்லவா?

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ப்ளெண்டிங் என்றால் என்னவென்று தெரியுமல்லவா?

கேள்வி - பதில்கள் (இரண்டாவது சீஸன்) பகுதி.14
உங்களின் கேள்விகள் - வாத்தியாரின் பதில்கள்
++++++++++++++++++++++++++++++++++++++===========
மின்னஞ்சல் எண்.43
பெயர்: மணிவண்ணன்
பிறந்த ஊர்: ராசிபுரம்
வசிக்கும் ஊர்: ஹைதராபாத்
வயது: 29

என் கேள்விகள்:

கேள்வி 1. ஒரே அமைப்பு நல்ல யோகமாகவும் அதே நேரத்தில் அவயோகமாகவும் அமைந்தால் என்ன பலன்? உதாரணமாக, 9 -ஆம் 
அதிபதி சனியும் 10 -ஆம் அதிபதி குருவும் சேர்ந்து 4 -ஆம் வீட்டில் 
இருப்பது  தர்மகர்மாதிபதி யோகம். ஆனால் சனியும் குருவும் சேர்ந்து 
4 -ஆம் வீட்டில் இருப்பது குரு சண்டாள யோகம்.

என்ன குழப்புகிறீர்கள்? குருவும், ராகுவும் ஒரே ராசியில் ஒன்றாக இருப்பதல்லவா குரு சண்டாள யோகம்!

இருவரும் ஒன்று சேரும்போது, ராகுவின் தன்மைகளும் குருவின் தன்மைகளும் ஒன்றாகக் கலந்துவிடும். உங்கள் மொழியில் சொன்னால் ஒன்றாக Blend ஆகிவிடும். ப்ளெண்டிங் (கலக்கல்) என்றால் என்னவென்று தெரியுமல்லவா?

சரக்கடிப்பவர்களுக்கு அது நன்றாகத் தெரியும். மாற்றி அடிக்க மாட்டார்கள்

அதைப்பற்றிக் கவியரசர் கண்ணதாசன் கூட ஒரு பாடல் எழுதிவைத்துள்ளார். அன்னைத் தமிழுக்கு அவப்பெயர்  வரக்கூடாது என்று, அந்த மாகவிஞன் அதை ஆங்கிலத்தில் எழுதிவைத்துள்ளார்

பாடலைப் பாருங்கள்:

Whisky with water
Brandy with soda
Rum with cola
Gin with lemon
Men with women

குருவும், ராகுவும் ஒரே ராசியில் ஒன்று சேரும்போது அதற்குப் பெயர் குரு சண்டாள யோகம். இது அவயோகம்.அது குருவுடன் கலந்து ஜாதகன் வாழ்க்கையின் போக்கை அடிக்கடி மாற்றிவிடும். ஜாதகனின் நற்சிந்தனை மற்றும்  நல்ல குணங்களை மாற்றி அவனைத் தீய செயல்களைச் செயத்தூண்டும். நடைமுறைகளுக்கு எதிரான செயல்களை அவன் செய்ய நேரிடும். சிலரை நல்ல செயல்களையும் செய்ய வைக்கும். அது ஜாதகனின் ஆதிபத்தியத்தில் குரு  எந்த வீட்டிற்கு உரியவர் என்பதைவைத்து மாறுபடும். ஜாதகத்தில் குரு 6, 8, 12ஆம் வீடுகளுக்கு உரியவர்  என்றால் தீய செயல்கள். கேந்திர கோணங்களுக்கு அதிபதி என்றால் நற்செயல்கள். இந்த இருவருடன் சேரும் அல்லது இந்த இருவரின் சேர்க்கையைப் பார்க்கும் சுப அல்லது தீய கிரகங்களாலும் பலன்கள் மாறுபடும்.

கேள்வி 2 . அனைவருக்கும் 337 பரல்கள் தான். அப்ப ஒரு தோஷம் இருந்தால் கண்டிப்பாக ஒரு யோகமோ  அல்லது ஒரு யோகம் இருந்தால் கண்டிப்பாக ஒரு தோஷமோ இருக்கும் என்று வைத்துக் கொள்ளலாமா?

அப்படிக் கொள்ள முடியாது. இரண்டு ப்ளஸ் பாயிண்ட்ஸ் இருந்தால்
இரண்டு மைனஸ் பாயிண்ட்ஸ்களும் இருக்கும் என்று கொள்ள
வேண்டும். இரண்டு வீடுகள் கெட்டிருந்தால், வேறு இரண்டு வீடுகள்
நன்றாக இருக்கும். நஷ்டங்களூம் இருக்கும். நஷ்ட ஈடுகளும் இருக்கும். அனைவரும் சமம். அனைத்துப் பிறப்புக்களும் சமம். அதனால்தான் அனைவருக்கும் அந்த 337 பரல்கள்

கேள்வி 3 . ஒரே கிரகத்தின் புத்தி வெவ்வேறு தசையில் வெவ்வேறு பலன்களைத் தருமா? உதாரணமாக, சூரியதசை ராகு புத்தி, செவ்வாய்
தசை ராகு புத்தி.

நல்ல கேள்வி!

இரண்டிலுமே தீய பலன்கள்தான். ஆனால் வெவ்வேறாக இருக்கும். உங்கள் மொழியில் சொன்னால், சூரிய தசை  ராகு புத்தியில் 2 விக்கெட்டுக்கள் விழுந்தால், செவ்வாய் தசை ராகு புத்தியில் வேறு இரண்டு விக்கெட்டுக்கள் விழுகும்.

உங்களுக்காக தசாபுத்திப்பலன்களை ஒரு மாமுனி எழுதிய பாடல்களில் இருந்து எடுத்துக்கொடுத்துள்ளேன்.

இரண்டுமே எளிய தமிழில் புரியும்படி இருக்கும். ரவிதிசை ராகு புத்தியில் “நலமில்லா வியாதியது பீடிப்பாகும்” என்று பலன் சொல்லியவர், செவ்வாய் தசை ராகு புத்தியில் “சுரதோஷம் வாத பீடை” என்று பலன் சொல்லியுள்ளார். வியாதிகளில்தான் நூறுவகைகள் இருக்கின்றனவே. அதில் இரண்டுவந்தால், இதில் உங்களுக்குப்  போரடிக்காமல் இருப்பதற்காக வேறு இரண்டு வியாதில்கள் வரும். ஒன்றில் மூட்டு வலி என்றால், அடுத்ததில்
சிக்கன்குனியா போன்ற காய்ச்சல் வரும். காய்ச்சல் என்றால் என்னவென்று தெரியுமல்லவா - Fever

1. சூரிய தசை ராகு புத்திக்கான பாடல்:

    “ஆமென்ற ரவிதிசையில் ராகு புத்தி
       ஆகாத மாதம் பத்து நாள் மூவெட்டாகும்
    போமென்ற அதன் பலனைப் புகழக்கேளு
       பொன்னோடு பெண்ணதுவும் நாசமாகும்
    நாமென்ற சத்துருவால் சண்டையுண்டாம்
       நலமில்லா வியாதியது பீடிப்பாகும்
    தாமென்ற மனைவியரைப் பிரித்து வைக்கும்
       தகமை இல்லாத நாளென்று தணித்து நில்லே!”

2. செவ்வாய் தசை ராகு புத்திக்கான பாடல்:

    ”பகையான சேய் திசை ராகுபுத்தி
       பாங்கில்லா நாளதுவும் வருஷம் ஒன்று
    துகையில்லாத நாளதுவும் பதினெட்டாகும்
       துன்பங்கள் சுரதோஷம் வாத பீடை
    வகையில்லா சத்துருவும் அக்கினியுண்டாம்
       வளங்கொடியாள் விரோதமது வகையுடனே காட்டும்
    நகையுடனே பூஷணங்கள் நலமில்லாசிலவாம்
       நன்மையில்லா நிலைவிட்டு நடப்பான் காணே!”

கேள்வி 4 . ஷேர் மார்க்கெட் எந்த கிரகத்தின் கட்டுப்பாட்டில் வரும்?

Money on speculative transaction என்பார்கள். ஷேர் மார்க்கெட் என்றில்லை. சீட்டாட்டம், குதிரை ரேஸ்,  கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்களில் பெட்டிங் என்று அனைத்துவிதமான வருமானத்திற்கும் ஐந்தாம் வீடு,  அதன் அதிபதி, பதினொன்றாம் வீடு, அதன் அதிபதி, மற்றும் குருபகவான் ஆகியோரின் கூட்டணி நல்ல  பலனைத்தரும்.

ஆனால் ஒன்று அது உழைப்பில்லாமல் வரும் பணமாகும். உழைக்காமல் வரும் பணம் கடைசியில் உபத்திரவத்தைத் தரும் அதை மனதில் வையுங்கள்.
------------------------------------------------------------------------
மின்னஞ்சல் எண்.44
B.N.Sivakumar
சிவகுமார்

Dear Sir,
“ராசிச் சக்கரத்தில் ஏழாம் அதிபதி 12ல் போய் (அதாவது விரைய ஸ்தானத்தில்) உட்கார்ந்திருந்தால், முதல் திருமணம் பெரும்பாலும் ஊற்றிக்கொண்டுவிடும்.”

The above said thing which I got from your blog. Please clear my my doubt in my horoscope lagna: simmam Rasi: katagam star: poosam 3rd patham 7th lord sani associated with sun, mercury and moon in the 12place, Ragu in 2nd and Kethu in 8th, guru, sukran and chevvai in 10th. please clear me will my marriage will face trouble according to ur blog note. my dob is 17-07-1977, time: 9.30 am place of birth Kallakuruchi.
Thanks & Regards
B.N.Sivakumar

தங்கள் பெண்ணின் திருமணத்திற்கு, மாப்பிள்ளையைத் தேர்வு செய்யும் போது, பெண் வீட்டார் பல விஷயங்களையும் பார்ப்பார்கள். அதைப் பட்டியல் இட்டுள்ளேன். பாருங்கள்

1.பையனின் தோற்றம்,
2.வயது (32 தாண்டிய பையன் என்றால் ஜூட் விட்டு விடுவார்கள்)
3.படிப்பு, (இன்றைய மார்கெட் நிலவரம். பொறியாளர் மாப்பிள்ளை)
4.வேலை செய்யும் இடம், (Multinational Companyயில் வேலை)
5.வாங்கும் ஊதியம், (மாதம் ஐம்பதாயிரத்திற்குக் குறையக்கூடாது)
6.அவனுடைய ஜாதகம் (சுத்த ஜாதகமாக இருப்பது நல்லது)
7.பெற்றவர்களின் நிலைமை (உடன் இருக்கிறார்களா? தள்ளி இருக்கிறார்களா?)
8. குடும்ப நிலைமை (கல்யாணமாகாத நாத்தினார்கள் இருக்கிறார்களா?)
9. செல்வ நிலைமை. (குடும்பத்தினருக்கு, வண்டி, வாகனம் சொந்த வீடு நிலம் நீச்சு இருக்கிறதா? அல்லது அன்றாடம் காய்ச்சிகளா? மாப்பிள்ளையின் வருமானத்தில்  குடும்பம் நடத்துபவர்களா?)

அதுபோல ஜாதகத்தில் திருமணத்திற்குப் பலவிதிமுறைகள் உள்ளன? நீங்கள் ஒன்றை மட்டும் பிடித்துக்கொண்டு  தொங்குவது ஏன்?  மற்ற விஷயங்களையும் பாருங்கள். பழைய பாடங்களில் அது விவரமாக உள்ளது.

சரி உங்கள் ஜதகத்திற்கு வருவோம். நீங்கள் பூச நட்சத்திரம் (கடக ராசி) சிம்ம லக்கினம் லக்கினாதிபதி சூரியன், ஏழாம் அதிபதி சூரியன், இரண்டாம் அதிபதி புதன், விரையாதிபதி சந்திரன் ஆகிய  நால்வரும் ஒன்றாக 12ஆம் வீட்டில் இருக்கிறார்கள்.

அத்துடன் உங்களுக்கு இதுவரை நடந்த தசைகளையும் தசா நாதகர்களையும் பாருங்கள்:

பிறப்பில் இருப்பு: சனி தசை 7வருடம் ஒரு மாதம் 26 நாட்கள். (சனி 12ல்)
அடுத்துவந்த புதன் தசை 17 ஆண்டுகள் (அவரும் 12ல்)
அதற்கு அடுத்து வந்த கேது தசை 7 ஆண்டுகள்

ஆக மொத்தம் 31 ஆண்டுகள் இருட்டிற்குள்ளேயே உங்களைக் கிரகங்கள் அமுக்கி வைத்திருந்திருக்கின்றன.

இப்போது உங்களுக்கு சுக்கிரதசை சுயபுத்தி நடக்கிறது. வெளிச்சத்திற்கு வந்து விட்டீர்கள்

அவன் களத்திரகாரகன். அவன் உங்கள் ஜாதகத்தில் கேந்திரத்தில் (10ஆம் இடத்தில்) யோககாரகன் செவ்வாயுடன்  ஒன்றாக இருக்கிறான். இருவரும் சேர்ந்து உங்களுக்கு மணம் செய்துவைப்பார்கள்.

நீள அகலங்களை உங்கள் விருப்பப்படி பார்த்துக்கொண்டிருக்காமல், கிடைக்கிற ஒரு பெண்ணைத் திருமணம்  செய்துகொள்ளூங்கள்.

பழநியப்பனை மனமுருகத் தினமும் பிரார்த்தனை செய்யுங்கள். அவன் கைகொடுப்பான்.

சொந்த ஜாதகங்களுக்கு இந்தப் பகுதியில் இடமில்லை என்றாலும், உங்கள் வயது கருதி இடமளித்தேன்

திருமணம் நிச்சயமானவுடன் பத்திரிக்கை அனுப்புங்கள். வந்து கலந்து கொள்கிறேன்!

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மின்னஞ்சல் எண்.45
சம்பத்குமார்
கோயம்புத்தூர்
   
Dear sir
Its common questions for tamil people. When sri lankan tamil people get TAMIL ELLEM Based on his astro.I am waiting for your valuable feedback  
Your student

அரசியலில் எனக்கு ஆர்வம் இல்லை. இலங்கைத்  தமிழர்களுக்குத்
தனி ஈழம் கிடைக்க வேண்டும் என்பதில்  அனைத்துத் தமிழர்களுக்கும்
ஒரே மாதிரி எண்ணம் உள்ளது. ஆனால் அது எப்போது கிடைக்கும்?
எப்படிக் கிடைக்கும் என்பதுதான் இன்றுவரை புதிராக உள்ளது.

கிடைக்க வாழ்த்துவோம். இறைவனைப் பிரார்த்திப்போம்.

ஜாதகப்படி ஏதாவது சொல்லலாம் என்றால், அந்த நாட்டின் ஜாதகம் என்வசம் இல்லை!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மின்னஞ்சல் எண்.46
M.பாரதிதாசன்.
   
அய்யா, இத்துடன் என்னுடைய ஜாதகம் அனுப்பி உள்ளேன்.
நிலையான வேலை இல்லை, என்னுடைய  வேலையை பற்றி
தெரிந்து கொள்ள விரும்புகிறேன். பத்தாம் அச்திபதி புதன் வக்ரம்,
அதனால் நிலையான வேலை அமையாது என்று கூறுகிறார்கள்
தயவு செய்து விளக்கம் தரவும்.

நான் ஏற்கனவே இந்த விபரம் பற்றி தங்களிடம் கேட்டு இருக்கிறேன்,
தாங்கள், தங்கள் வேலை பளு காரணமாக, ஒரு இரண்டு மாதம் காத்து இருக்குமாறு கூறினீர்கள். அதனால்தான் தற்போது மறுபடியும்
அனுப்பி உள்ளேன்.
தயவு செய்து விளக்கம் தரவும். ப்ளீஸ்....

“வேலையே கிடைக்கவில்லை. சும்மா இருக்கிறேன்” என்று சொன்னால் வருத்தப்படலாம். ஆனால் நீங்கள்  வேலையில் இருக்கிறீர்கள். அது பிடிக்காமல் இருக்கலாம் அல்லது நிரந்தர ஊழியர்கள் லிஸ்ட்டில் பெயரில்லாத  வேலையாக இருக்கலாம்.

அதற்கு ஏன் கவலைப் படுகிறீர்கள்?

கொத்தனார், சித்தாள், மரவேலை செய்பவர், மூட்டை தூக்கும் ஹமாலி வேலை செய்பவர், வயல்களில் வேலை  செய்யும் கூலித் தொழிலாளிகள் என்று இந்திய ஜனத்தொகையில் சுமார் 25% பேர்கள் அன்றாடம்
கிடைக்கும் வேலையை உற்சாகமாகச் செய்பவர்கள்தான். மாதத்தில் 20 நாட்கள் வேலை கிடைத்தாலே பெரிய விஷயம். தினமும் இரண்டு வேளை உணவு கிடைப்பதே தெய்வச் செயல். அவர்கள் கவலைப் பட்டு வீட்டில் படுத்தால் என்ன  ஆகும்?

முதலில் உங்களின் வருத்ததை விட்டொழியுங்கள்!

நிலையான வேலை என்று எதைக்குறிப்பிடுகிறீர்கள். ஒரு வேலையில் சேர்ந்து, கடைசிவரை (அதாவது ஓய்வு  பெறும்வரை) அதே வேலையில் இருப்பதைக் குறிப்பிடுகிறீர்களா? அப்படியிருந்தால் போரடிக்காதா? 
அதில் த்ரில்  இருக்குமா?

உதாரணத்திற்கு உங்களுக்கு இரயில்வேயில் வேலை கிடைக்கிறது என்று வைத்துக்கொள்வோம். Guard வேலை முதல் பத்துவருடம் Goods Trainல் வேலை. அடுத்த பத்துவருடம் Passenger Trainல் வேலை. அடுத்த  8ஆண்டுகள் Express Trainல் வேலை அடுத்த 8ஆண்டுகள் Sperfast Trainல் வேலை. 24 வயதில் சேருகிறீர்கள். 36 ஆண்டுகள் சர்வீஸ். 60 வயதில் வீட்டுக்கு அனுப்பி விடுகிறார்கள் என்று வைத்துக்கொள்ளூங்கள். அது   நிரந்தமான வேலைதான். சுவாரசியமான வேலையா?

வேலையில் இரண்டுவிதம் இருக்கிறது. creative work. Non creative work

எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள், திரைப்பட நடிகர்கள், இயக்குனர்கள், சிற்பிகள், ஓவியர்கள்,  போன்றவர்கள் எல்லாம் க்ரியேடிவ் சைடில் வருவார்கள் (ஆக்கமான வேலைகள்)

பேருந்து ஓட்டுனர்கள், ஆட்டோ, டாக்ஸி ஓட்டுனர்கள், நடத்துனர்கள், தொழிற்சாலைகளில் மெஷின் இயக்கிகள், லோட் மேன்கள், வயல்களில், பொதுப்பணித்துரைகளில் கூலி வேலை செய்பவர்கள் எல்லாம் Non creative work என்ற கணக்கில் வருவார்கள்.

உங்கள் தனித் திறமையை வளர்த்துக்கொண்டு, ஆக்கமான வேலைக்கு முயற்சி செய்யுங்கள். பின்னாளில்  பணத்துடன் பிரபலமும் ஆகிவிடுவீர்கள்.

உங்கள் ஜாதகத்திற்கு வருவோம். உங்கள் ஜாதகத்தில் பத்தாம் அதிபதி புதன் லாபாதிபதி சுக்கிரனுடன் சேர்ந்து  இரண்டில் உள்ளார். தொழில்காரகன் சனி உச்சமாகி பதினொன்றில் உள்ளார். ஆகவே உங்களுக்கு நல்ல வேலை
கிடைக்கும். தற்சமயம் அஷ்டமாதிபதி சந்திரனின் தசை நடந்து கொண்டிருக்கிறது. அது முடிந்தவுடன் கிடைக்கும்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
(தொடரும்)

அன்புடன்,
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

30.8.10

எல்லா வேலைகளுக்கும் லாயக்கானவன் எவன்?

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எல்லா வேலைகளுக்கும் லாயக்கானவன் எவன்?

கேள்வி - பதில்கள் (இரண்டாவது சீஸன்) பகுதி.13
உங்களின் கேள்விகள் - வாத்தியாரின் பதில்கள்
++++++++++++++++++++++++++++++++++++++===========
மின்னஞ்சல் எண்.40
S. தினேஷ் மாதவன்
S.Dinesh
பொறியாளர்
சென்னை
வயது 21

Question 1 :
Why Guru,Sani, Sevvai have three aspects (Paarvai)?

அவைகள் ஜோதிடத்தின் அடிப்படை விதிகளின்படி உள்ளதாகும். அதை நமக்கு வகுத்துக்கொடுத்தவர்கள் வராஹிமிஹிரர், பராசுரர் போன்ற முனிவர்கள். ரிஷிகள். அந்த மூன்று கிரகங்களுக்கு மட்டும் பார்வையில் அதிகப் படியான சலுகைகள் ஏன் என்பதற்கு யாரைக் கேட்க முடியும்? அந்த முனிவர்கள், ரிஷிகள் எல்லாம் ஐந்தாம் மற்றும் ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்கள்.

இந்திய அரசியல் சட்டப்படி ஜனாதிபதிதான் நாட்டின் முதல் குடிமகன் என்றாலும், அவரைவிட, அதிகமான அதிகாரங்களுடன், சக்தியுடன் (power) விளங்குபவர் நாட்டின் பிரதமர். அவருக்கு ஏன் அந்த அதிகப்படியான (அதாவது முதல் குடிமகனைவிட) சலுகைகள் என்று நீங்கள் கேட்டால் என்ன பதில் சொல்லமுடியும்? இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கியவர்களைத்தான் கேட்க முடியும்? நம்மால் அது முடியுமா? அதுபோலத்தான் இதுவும்!

Question 2 :
To calculate Bukthi,Antharang is there any formula?

தசையையும், புக்தியையும் கணிப்பதற்கு சூத்திரங்கள் உள்ளன. அந்தரங்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. பஞ்சாங்கங்களைப் பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டும்.

Question 3 :
what are the planetary positions to possess "intuition power"?

இந்திய ஜோதிடத்தில் பல மேன்மைகள் உள்ளன. அதன் ரகசியங்களை அல்லது அதிசயங்களை முழுமையாகத் தெரிந்து கொள்ள முடியாது அல்லது விளக்க முடியாது. அவற்றில் நீங்கள் குறிப்பிடும் அந்த "intuition power"ம் ஒன்று. அதைத் தெய்வ சக்தி அல்லது தெய்வ அருள் என்று எடுத்துக்கொள்ளலாம். தெய்வபக்தி நிறைந்த சிலருக்கு அபூர்வமாக அந்த சக்தி கிடைக்கும்.

ஜோதிடத்தில் ஆழ்ந்த அறிவும் இந்த தெய்வசக்தியையும் கொண்ட மனிதர் ஜாதகப் பலன்களைச் சிறப்பாகச் சொல்வார். பொட்டில் அடித்த மாதிரி சரியாகச் சொல்வார். பழசைச் சொல்லும்போது கேட்பவன் மிரண்டு போவான். தொடர்ந்து எதிர்காலத்தைச் சொல்லும்போது. அசந்து போவான். விதிக்கப்பட்டுள்ளது எல்லாம் முன்பே எழுதப்பட்டுள்ளது (தலை எழுத்து) ஜாதகத்தின் மூலம் அதைச் சொல்ல முடியும் என்பதற்குச் சான்றாக விளங்குபவர்களே அவர்கள்தான்.

அவர்களுக்கு அந்த சக்தி எப்படிக்கிடைத்தது?

கண்டுபிடிக்க முடியாது?

அள்ளிக்கொண்டுபோய் கட்டித் தொங்கவிட்டு, அடித்துக் கேட்டாலும் அதைக் கண்டுபிடிக்க முடியாது (உங்கள் வயதிற்காக இதைச் சொல்கிறேன்)

விளக்கம் போதுமா?

Question 4 :
How to find whether Love Marriage will be Success or not?

திருமணத்தை ஏன் பிரிக்கிறீர்கள்? காதல் திருமணம் என்றாலும் பெற்றோர் செய்துவைத்த திருமணம் என்றாலும் திருமணம் திருமணம்தான்! திருமணங்கள் வெற்றியில் முடிவதற்கு ஒரு காரணம்தான். தம்பதிகளுக்குள் எல்லாம் ஒத்துப்போய் விட்டது. அதைப்பற்றி யாரும் கேள்விகள் கேட்கமாட்டார்கள். அல்லது கவலைப்பட மாட்டார்கள். தோல்வியில் முடிவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. அதை மட்டும் தெரிந்து கொள்ள அல்லது அதுபோல் நடந்துவிடக்கூடாதே என்கின்ற எச்சரிக்கை உணர்வு மேலிடும்போது ஜாதகங்களை ஆராய வேண்டும்.

ஆண், பெண் இருவரின் ஜாதகங்களையும் ஆராய வேண்டும். இருவரின் ஏழாம் வீடு, குடும்ப ஸ்தானம், லக்கினம் ஆகிய மூன்றையும் அலச வேண்டும். தோஷங்களை அலச வேண்டும் இருவருக்கும் அல்லது இருவரில் ஒருவருக்கு புனர்பூ தோஷம் இருக்கக்கூடாது. இரண்டாம் அதிபதி எட்டில் அமர்ந்துள்ள பெண் கணவனுடன் குடும்பம் நடத்தமாட்டாள் (பொது விதி) அவளுடைய திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடியும். இது போன்று பல அமைப்புக்கள் உள்ளன. ஜோதிடம் என்பது கடல். அதைக் குடத்தில் அடைக்க முடியாது. அதாவது ஒருவரியில் பதில் சொல்ல முடியாது.

அதைப்பற்றி 50 பக்கங்களுக்கு எழுதலாம். இதுவரை நிறைய  எழுதியுள்ளேன். பழைய பாடங்களைப் படியுங்கள்.
-----------------------------------------------------------------------------------------------------
மின்னஞ்சல் எண்.41
ஸ்ரீஸ்தன்

அன்புள்ள ஆசிரியருக்கு  வணக்கம்
தங்கள் வேலை அல்லது தொழில் சம்பந்தமாக எழுதிய பாடங்கள் மிக சிறப்பாக இருந்து. சிலர் தங்கள் வேலைகளில் அல்லது தொழில்களில் மிக கண்ணும் கருத்துமாக இருகின்றனர். சிறு சுகவீனம் வந்தால் என்ன அல்லது வேறு அவசிய விடயங்கள் இருந்தால் என்ன தங்கள் வேலைக்கு அல்லது தொழிலுக்கு செல்வதை எக்காரணம் கொண்டும் தவிர்ப்பதில்லை. இதற்கு எந்த அமைப்பு காரணம் என்று தயவு செய்து தங்களுக்கு வசதிப்படும் பொழுது விளக்க முடியுமா என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்
நன்றி
தங்கள் வகுப்பு  மாணவன்
ஸ்ரீ

சிலபேர் சோம்பேறிகளாக இருப்பார்கள். சிலர் சுறுசுறுப்பாக இருப்பார்கள். சிலபேர் பிடிவாதம் நிறைந்தவர்களாக இருப்பார்கள். சிலர் எதையும் அனுசரித்துப் போகக்கூடியவர்களாக இருப்பார்கள். சில பேர்கள் முன் கோபக்காரர்களாக இருப்பார்கள். சிலர் சாந்த சொரூபியாக இருப்பார்கள். சிலர் சிடுமூஞ்சியாக இருப்பார்கள். சிலர் சிரித்தமுகமாக இருப்பார்கள் இப்படி எழுதிக்கொண்டே போகலாம்.

காரணம் என்ன?

எல்லாம் வாங்கிவந்த வரம்!

ஜாதகப்படி சொன்னால், இவை எல்லாம் குணம் சம்பந்தப்பட்ட விஷயங்கள். “இவன் ரெம்ப நல்லவன்டா. எப்படி அடிச்சாலும் தாங்கிக்கிட்டுச் சும்மா இருக்கான்டா” என்று சொல்கிறார்கள் இல்லையா? அதுவும் குணம் சம்பந்தப்பட்ட விஷயம்தான்.

லக்கினம், லக்கினாதிபதி & லக்கினத்தில் அமரும் கிரகங்களை வைத்து அவைகள் ஆளாளுக்கு வேறுபடும்
உதாரணத்திற்கு லக்கினாதிபதியுடன் சனி சேர்ந்தால் ஆசாமி சோம்பேறியாக வழுவட்டையாக இருப்பான். லக்கினாதிபதியுடன் செவ்வாய் கை கோர்த்தால் ஆசாமி படு சுறுசுறுப்பாக இருப்பான். லக்கினாதிபதியுடன் சுக்கிரன் சேர்ந்தால் ஆசாமி எல்லா வேலைக்கும் லாயக்கான ஆளாக இருப்பான் (எல்லா வேலைகளும் என்றால் அர்த்தம் தெரியுமல்லவா?)
--------------------------------------------------------------------------------------------------------------
மின்னஞ்சல் எண்.42
செ.பழனிமுருகன்

வணக்கம்,

1. லக்னாதிபதி நன்றாக இருக்க வேண்டும் என்று பல முறை கூறியுள்ளீர்கள்,ஆனால் ராசியாதிபதி, நட்சத்திராதி பதியை பொருத்து ஒரு சந்தேகம்., ராசியாதிபதி, நட்சத்திராதிபதி ஒரு ஜாதகத்தில் சுபராக வந்தால் நற்பலன்கள் கூடுமா மற்றும் பாபராக வரும்போது தீமைகள் குறையுமா, அவற்றிற்கான தசா-புத்தி பலன்களையும் தருக?

பள்ளிக்கூடத்தில் கோடிட்ட இடங்களை நிரப்புக என்று கேள்விகளைத் தருவார்கள். அதுபோல உள்ளது உங்கள் கேள்வி

சூப்பர் டீலக்ஸ் - வோல்வா - Air suspension with air condition - பேருந்தாக இருந்தால் பயணத்தின் சுகம் கூடுமா? அல்லது அதே பேருந்து இவை ஒன்றுமே இல்லாமல் அறுதப் பழசாக - சீட்டெல்லாம் கிழிந்து குஷன் இல்லாமல் - FC பண்ணாத வண்டியாக - 15 வருடம் பழசான வண்டியாக இருந்து, பயணித்தால் சுகம் குறைந்து அவதிகள் அதிகமாகுமா என்று கேட்பதுபோல உள்ளது.

இல்லாள் (மனைவி) குணவதியாக வந்தால் வாழ்க்கை என்பது டீலக்ஸ் பஸ் பயணம் போன்று சுகமாக இருக்கும். இல்லாள் சண்டாளியாக வந்தால் வாழ்க்கை ஓட்டை பஸ்ஸில் பயணம் செய்வதைப்போன்று இருக்கும்.

ராசியாதிபதி, நட்சத்திராதிபதி சுபராக வந்தால் வாழ்க்கை டீலக்ஸ் பஸ் பயணம். ராசியாதிபதி, நட்சத்திராதிபதி பாபக்கிரகமாக வந்தால் வாழ்க்கை ஓட்டை பஸ் பயணம்

தப்பிக்க முடியாது. பஸ்சை விட்டுக் குதிக்க முடியாது. கூடுதல் குறைவுகள் எல்லாம் பார்க்க முடியாது. பயணித்தே ஆகவேண்டும்

"பாதை வகுத்த பின்னே பயந்தென்ன லாபம்
பயணம் நடத்திடு முடிந்திடும் பாபம்!"

----- கவியரசர் கண்ணதாசன்.

நல்ல மனையாள் கிடைத்தால் உங்களைப் பிடிக்கமுடியாது. மோசமான துணைவி என்றால் நீங்கள் தத்துவ ஞானியாகிவிடுவிர்ர்கள். அதைத்தான் ஆங்கிலத்தில் Better half, Bitter half என்று பிரித்துச் சொல்வார்கள்.
நீங்கள் அனுசரித்துப்போனால் Bitter halfகூட Better halfஆக மாறிவிடும்.

விளக்கம் போதுமா?

2. பிறந்த எண்ணிற்கான ஆதிக்க கிரகம், ஜாதகத்தில் பாவியாக வந்தால் மோதிரம் அணியலாமா?

நீங்கள் மோதிரம் போட்டுக்கொள்வதால் பாவியாக உள்ள சனி அல்லது ராகு அல்லது கேது அல்லது செவ்வாய் எல்லாம் கல்லால் ஏற்படவிருக்கும் encounter shots களுக்குப் பயந்து நல்லவர்களாக மாறிவிடுவார்களா என்ன?
அதெல்லாம் மாறமாட்டார்கள். எல்லாம் விதிப்படிதான் நடக்கும். விதித்தபடிதான் அவர்களும் தங்களுடைய சேஷ்டைகளைச் செய்வார்கள்.

பிறகு கற்களால் ஏற்படும் பயன் என்ன?

குறிப்பிட்ட கற்கள் அதற்குரிய கிரகத்தின் magnetic rays களைக் குவித்து ஜாதகனுக்கு ஏற்படவுள்ள நன்மைகளைக் கூட்டித்தரும். சுலபமாக்கும் enhancement என்று வைத்துக்கொள்லுங்களேன். தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கு booster என்னும் கருவி இருக்கிறது இல்லையா? அதைப்போல என்று வைத்துக்கொள்ளூங்கள்

3. லக்னாதிபதி பாதக ஸ்தானத்திற்கும் அதிபதியாக வரும்போது , 
(எ.கா) விருச்சிக லக்னத்திற்கு செவ்வாய் 1&6க்கு அதிபதி., 
செவ்வாய் (6,8,12)ல் மறைந்தால் '' கெட்டவன் கெட்டிடில் நன்று '' 
என்று கொள்வதா இல்லை லக்னாதிபதி (6,8,12)ல் மறைந்து  
விட்டது தீமை எனக் கொள்வதா?

லக்கினாதிபதியை எப்படிக் கெட்டவன் என்று சொல்கிறீர்கள்? உங்கள் படத்தின் (ஜாதகத்தின்) நாயகன் அவர்தான். உங்கள் மொழியில் சொன்னால் அவர்தான் ஹீரோ.அவரைப்போய்க் கெட்டவன் என்று சொல்கிறீர்களே? உங்கள் படம் எப்படி Box Office Hit ஆகும்? அல்லது நூறு நாட்கள் ஓடும்?

நாயகன் 6 அல்லது 8 அல்லது 12ஆம் வீடுகளில் அமர்ந்தால், கதையில் அதிகமான முடிச்சுகளையும் (knots) திருப்பங்களையும் (turns)  எதிர்பார்ப்புக்களையும் (supense) கொடுப்பார். திரைக்கதை சுவாரசியம் மிகுந்ததாக இருக்கும். கடைசி ரீல் வரை படம் தொய்வில்லாமல் இருக்கும். வாழ்க்கையில் எதிர் நீச்சல் போடலாம். சீக்கிரம்  ஞானியாகிவிடலாம்.

4. விபரீத-ராஜயோகத்தில் உள்ள கிரகங்கள் உச்சம், ஆட்சி, நட்பு பெறுவதற்கும், பகை, நீசம் பெறுவதற்குமான பலன்கள் என்ன?

என்ன வேறுபாடு என்று கேட்கிறீர்கள் இல்லையா? 

Multinational Banks like Bank of America, Citi Bank (மேல்நாட்டு வங்கிகள்) Nationalised Banks in India (தேசிய வங்கிகள்), Private Banks in India (தனியார் வங்கிகள்), Co-operative Banks, (கூட்டுறவு வங்கிகள்) Village Banks (கிராம வங்கிகள்) என்றுள்ள வங்கிகளில் வேலை பார்ப்பவர்களுக்கு கிடைக்கும் சம்பளமும் (Salary), வேலைபார்க்கும் சூழ்நிலையும் (working conditions) ஒரே மாதிரி இல்லாமல், மலைக்கும் மடுவிற்கும் உள்ள வித்தியாசங்களுடன் இருக்குமில்லையா? அதுபோலத்தான் நீங்கள் கேட்டுள்ளதும் இருக்கும்.

விளக்கம் போதுமா?

பத்தாது என்றால் சொல்லுங்கள். மீண்டும் வருகிறேன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
(தொடரும்)

அன்புடன்,
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

29.8.10

நகைச்சுவை: பல் இருக்கிறவன் பக்கோடா சாப்பிடுவான்!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நகைச்சுவை: பல் இருக்கிறவன் பக்கோடா சாப்பிடுவான்!

இன்றைய வார மலரை இறக்குமதிச் சரக்கு ஒன்று அலங்கரிக்கிறது
படித்து இன்புறுங்கள்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
"அப்படி என்னதான் வேலைபார்ப்பீங்க ?"

நியாயமான ஒரு கேள்வி

"ஏம்பா  இந்த  கம்ப்யூட்டர்  படிச்சவங்க  எல்லாம்  நிறைய  சம்பளம் வாங்கிட்டு,  பந்தா  பண்ணிட்டு  ஒரு  தினுசாவே  அலையுறீங்களே?  அப்படி என்னதான்  வேலை  பார்ப்பீங்க ?" –ன்று  நியாயமான  ஒரு  கேள்வியை  கேட்டார்  எனது  அப்பா.

நானும்  விவரிக்க  ஆரம்பிதேன்..

"வெள்ளைகாரனுக்கு  எல்லா  வேலையும்  சீக்கிரமா முடியனும். அதே  மாதிரி  எல்லா  வேலையும் அவனோட வீட்டுல இருந்தே  செய்யணும். இதுக்காக  எவ்வளவு  பணம்  வேணுமானாலும்  செலவு செய்ய தயாரா  இருக்கான்."

"அது சரி பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான்".

"இந்த  மாதிரி  அமெரிக்கால்-ல,  இங்கிலாந்து-ல  இருக்குற Bank, இல்ல எதாவது  கம்பெனி, நான்  செலவு  செய்ய  தயாரா இருக்கேன். எனக்கு இத  செய்து கொடுங்க  கேப்பாங்க. இவங்கள  நாங்க  "Client"னு  சொல்லுவோம்”

"சரி"

“இந்த  மாதிரி Client-அ  மோப்பம்  பிடிக்குறதுக்காகவே  எங்க பங்காளிக  கொஞ்ச  பேர  அந்த  அந்த  ஊருல  உக்கார  வச்சி இருப்போம். இவங்க பேரு "Sales  Consultants, Pre-Sales Consultants. . ..அவங்க போய் Client  கிட்ட பேச்சுவார்த்தை  நடத்துவாங்க. காசு  கொடுகுறவன் சும்மாவா கொடுப்பான்? ஆயிரத்தெட்டு கேள்வி கேப்பான். உங்களால  இத பண்ண  முடியுமா? அத பண்ண முடியுமான்னு  அவங்க கேக்குற  எல்லாம்  கேள்விக்கும், "முடியும்"னு பதில்  சொல்றது  இவங்க வேலை”

"இவங்க  எல்லாம்  என்னப்பா  படிச்சுருபாங்க"?

"MBA, MSனு  பெரிய  பெரிய  படிபெல்லாம் படிச்சி  இருப்பாங்க."

"முடியும்னு ஒரே  வார்த்தைய திரும்ப  திரும்ப  சொல்றதுக்கு எதுக்கு MBA  படிக்கணும்?" –ன் அப்பாவின் கேள்வியில்  நியாயம்  இருந்தது.

"சரி  இவங்க  போய்  பேசின  உடனே client  projectஐக் கொடுத்துடுவானா?"

"அது எப்படி?  இந்த  மாதிரி  பங்காளிக  எல்லா கம்பெனிளையும் இருப்பாங்க. 500  நாள்ல முடிக்க  வேண்டிய வேலைய 60  நாள்ள முடிச்சு தரோம், 50  நாள்ல  முடிச்சு  தரோம்னு பேரம்  பேசுவாங்க..இதுல யாரு  குறைஞ்ச  நாள  சொல்றாங்களோ  அவங்களுக்கு ப்ராஜெக்ட் கிடைக்கும்"

"500  நாள்ல  முடிக்க வேண்டிய  வேலைய 50 நாள்ல எப்படி முடிக்க  முடியும்?  ராத்திரி பகலா வேலை பார்த்தாலும் முடிக்க  முடியாதே?"

"இங்க தான்  நம்ம  புத்திசாலித்தனத்த நீங்க புரிஞ்சிக்கணும். 50  நாள்னு சொன்ன  உடனே client  சரின்னு சொல்லிடுவான். ஆனா அந்த 50  நாள்ல  அவனுக்கு  என்ன வேணும்னு அவனுக்கும் தெரியாது,  என்ன  செய்யனும்னு நமக்கும்  தெரியாது. இருந்தாலும் 50 நாள்  முடிஞ்ச பிறகு  ப்ரோஜெக்ட்னு  ஒன்ன  நாங்க deliver பண்ணுவோம். அத பாத்துட்டு "ஐய்யோ நாங்க  கேட்டது  இதுல்ல, எங்களுக்கு இது  வேணும்,  அது  வேணும்னு" புலம்ப ஆரம்பிப்பான்.

"அப்புறம்?" அப்பா  ஆர்வமானார்.

"இப்போ தான் நாங்க  நம்பியார்  மாதிரி  கைய  பிசஞ்சிகிட்டே "இதுக்கு நாங்க CR raise பண்ணுவோம்"னு சொல்லுவோம்”

"CR-னா?"

"Change Request. இது வரைக்கும் நீ கொடுத்த  பணத்துக்கு  நாங்க வேலை பார்த்துட்டோம். இனிமேல் எதாவது பண்ணனும்னா எக்ஸ்ட்ரா பணம் கொடுக்கணும்"னு சொல்லுவோம். இப்படியே 50  நாள்  வேலைய 500  நாள்  ஆக்கிடுவோம்."

அப்பாவின் முகத்தில் லேசான பயம் தெரிந்தது.

"இதுக்கு அவன்  ஒத்துபானா?"

"ஒத்துகிட்டு தான் ஆகணும். முடி வெட்ட போய்ட்டு, பாதி  வெட்டிட்டு வர  முடியுமா?"

"சரி ப்ராஜெக்ட் உங்க  கைல வந்த உடனே என்ன  பண்ணுவீங்க?"

"முதல்ல ஒரு டீம்  உருவாக்குவோம். இதுல ப்ராஜக்ட் மேனேஜர்னு ஒருத்தர் இருப்பாரு. இவரது தான் பெரிய  தலை. ப்ராஜெக்ட் சக்சஸ் ஆனாலும், ஃபெயிலியர் ஆனாலும் இவரு தான்  பொறுப்பு."

"அப்போ இவருக்கு  நீங்க எல்லாரும் பண்ற வேலை எல்லாம் தெரியும்னு சொல்லு."

"அதான்  கிடையாது.இவருக்கு நாங்க பண்ற  எதுவும்யே  தெரியாது."

"அப்போ இவருக்கு என்னதான் வேலை?" –ன அப்பா  குழம்பினார்.

"நாங்க  என்ன தப்பு பண்ணினாலும் இவர பார்த்து  கைய  நீட்டுவோம். எப்போ எவன்  குழி பறிப்பானு  டென்ஷன் ஆகி  டயர்ட் ஆகி டென்ஷன் ஆகுறது தான் இவரு வேலை."

"பாவம்பா"

"ஆனா  இவரு ரொம்ப  நல்லவரு. எங்களுக்கு எந்த பிரச்னை வந்தாலும்  இவரு  கிட்ட  போய் சொல்லலாம்."

"எல்லா பிரச்னையும்  தீர்த்து  வச்சிடுவார?"

"ஒரு  பிரச்சனைய  கூட  தீர்க்க மாட்டாரு. நாங்க என்ன சொன்னாலும்  தலையாட்டிகிட்டே  உன்னோட பிரச்னை எனக்கு  புரியுதுனு சொல்றது மட்டும்  தான் இவரோட  வேலை."

"நான் உன்னோட  அம்மா  கிட்ட  பண்றத மாதிரி?!"

"இவருக்கு கீழ டெக் லீட்,  மோடுல் லீட்,  டெவலப்பர், டெஸ்டர்னு நிறைய அடி  பொடிங்க இருப்பாங்க."

"இத்தனை பேரு இருந்து,  எல்லாரும் ஒழுங்கா  வேலை செஞ்சா வேலை ஈஸியா முடிஞ்சிடுமே?"

"வேலை செஞ்சா தானே?” நான் கடைசியா சொன்னேன் பாருங்க...

  “டெவலப்பர், டெஸ்டர்னு,  அவங்க மட்டும் தான்  எல்லா  வேலையும் செய்வாங்க. அதுலையும் இந்த  டெவலப்பர்,வேலைக்கு  சேரும் போதே  "இந்த  குடும்பத்தோட மானம்,  மரியாதை உன்கிட்ட தான்  இருக்குனு"
சொல்லி, நெத்தில திருநீறு  பூசி அனுப்பி வச்ச  என்னைய மாதிரி தமிழ்  பசங்க  தான் அதிகம்  இருப்பாங்க."

"அந்த டெஸ்டர்னு எதோ  சொன்னியே? அவங்களுக்கு என்னப்பா  வேலை?"

"இந்த டெவலப்பர்  பண்ற வேலைல  குறை  கண்டு  பிடிக்கறது இவனோட வேலை.

“புடிக்காத  மருமக  கை பட்டா  குத்தம், கால்  பட்டா  குத்தம்  இங்குறது  மாதிரி."

"ஒருத்தன் பண்ற  வேலைல  குறை  கண்டு பிடிகுறதுக்கு சம்பளமா? புதுசா தான் இருக்கு. சரி  இவங்களாவது வேலை செய்யுறாங்களா? சொன்ன தேதிக்கு  வேலைய  முடிச்சு கொடுத்துடுவீங்கள்ள?"

"அது  எப்படி..?  சொன்ன தேதிக்கு ப்ராஜக்டை முடிச்சி கொடுத்தா, அந்தக் குற்ற உணர்ச்சி  எங்க வாழ்கை முழுவதும் உறுத்திக்கிட்டு இருக்கும். நிறைய பேரு  அந்த  அவமானத்துக்கு  பதிலா  தற்கொலை
செய்துக்கலாம்னு சொல்லுவாங்க"

"கிளையன்ட் சும்மாவா விடுவான்? ஏன் லேட்னு  கேள்வி  கேக்க  மாட்டான்?"

"கேக்கத்தான் செய்வான்.  இது  வரைக்கும் டீமுக்குள்ளையே காலை வாரி  விட்டுக்கிட்டு இருந்த நாங்க  எல்லாரும்  சேர்ந்து அவன் காலை வார  ஆரம்பிப்போம்."

"எப்படி?"

"நீ  கொடுத்த  கம்ப்யூட்டர்-ல ஒரே  தூசியா  இருந்துச்சு. அன்னைக்கு டீம்  மீட்டிங்ல வச்சி  நீ  இருமின, உன்னோட ஹேர்  ஸ்டைல் எனக்கு  புடிக்கலை." இப்படி எதாவது  சொல்லி அவன  குழப்புவோம். அவனும் சரி சனியன  எடுத்து  தோள்ல  போட்டாச்சு,இன்னும் கொஞ்ச நாள்  தூங்கிட்டு  போகட்டும்னு  விட்டுருவான்".

"சரி  முன்ன  பின்ன ஆனாலும்  முடிச்சி  கொடுத்துட்டு கைய கழுவிட்டு  வந்துடுவீங்க அப்படித்தான?"

"அப்படி பண்ணினா,  நம்ம  நாட்டுல பாதி  பேரு  வேலை இல்லாமதான்  இருக்கணும்."

"அப்புறம்?"

"ப்ராஜக்டை முடிய போற சமயத்துல நாங்க எதோ  பயங்கரமான ஒன்ன பண்ணி இருக்குறமாதிரியும்,  அவனால  அத  புரிஞ்சிக்க கூட  முடியாதுங்கற  மாதிரியும் நடிக்க  ஆரம்பிப்போம்."

"அப்புறம்?"

"அவனே பயந்து  போய், "எங்கள தனியா  விட்டுடாதீங்க.  உங்க  டீம்-ல  ஒரு ஒன்னு,  ரெண்டுபேர  உங்க  ப்ரொஜெக்ட பார்த்துக்க  சொல்லுங்கன்னு" புது பொண்ணு  மாதிரி  புலம்ப  ஆரம்பிச்சிடுவாங்க. இதுக்கு பேரு "Maintenance and  Support". இந்த வேலை  வருஷ கணக்கா  போகும்.”

"ப்ராஜக்ட் அப்படிங்கறது  ஒரு  பொண்ண  கல்யாணம்  பண்ணி  வீட்டுக்கு கூட்டிட்டு  வர்றது  மாதிரி. தாலி கட்டினா மட்டும்  போதாது,  வருஷ  கணக்கா  நிறைய  செலவு செஞ்சு பராமரிக்க வேண்டிய  விசயம்னு" இப்போ  தான்  கிளைன்டுக்கு புரிய ஆரம்பிக்கும்.

"எனக்கும் எல்லாம்  புரிஞ்சிடுப்பா."
---------------------------------------------------------------------
இதை எழுதிய பெருந்தகையாளர்:
S. Balasubramanian
Dy. General Manager - Electronics
THE HINDU
Chennai

--------------------------------------------------------------------
மின்னஞ்சலில் அனுப்பி வைத்தவர்
நமது வகுப்பறை மாணவர்:
V.Prasana kumar

இருவருக்கும் நம் நன்றி உரித்தாகுக!

அன்புடன்
வாத்தியார்வாழ்க வளமுடன்!

28.8.10

வணங்கிடும் கைகளின் வடிவம் எதைப்போல் இருக்கிறது?

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 வணங்கிடும் கைகளின் வடிவம் எதைப்போல் இருக்கிறது?

புகழ் பெற்ற பாடல்கள் - பகுதி 16

புகழ் பெற்ற பாடல் என்றால் என்ன?
இறைவனின் புகழைப் பாடும் பாடல்கள் எல்லாம்
புகழ் பெற்ற பாடல்கள்தான்!
-------------------------------------------------------------------
வணங்கிடும் கைகளில் வடிவத்தைப் பார்த்தால்
வேல்போல் இருக்குதடி
வேல்கொண்டு நின்றவன் திருமுகம் பர்த்தால்
பால்போல் தெரியுதடி

கூவிடும் சேவல் கொடிமே லிருந்து
விழித்திடச் சொல்லுதடி
விழித்ததும் என்னை நினைத்திரு என்றவன்
சொல்வது தெரியுதடி

கந்தனின் கருணை மழைவரும் என்றே
மாமயில் ஆடுதடி!
மாமயில் விரித்த தோகையின் கண்கள்
வேலனைத் தேடுதடி!

முதன்முதல் இறைவன் திருவாய் திறந்தான்
முத்தமிழ் பிறந்ததடி!
முத்தமிழ் இன்பம் அனைத்திலும் முருகன்
திருமுகம் தோன்றுதடி

எப்போது பார்த்தாலும் சிரித்திருக்கும் - அது
ஆறு முகங்களடி!
எப்படித் தொழுதாலும் அருள் கொடுக்கும் - அது
பன்னிரு கைகளடி

பாடல் ஆக்கம்: கவிஞர் திரு. பூவை செங்குட்டுவன்
இசை: திரு. ராமச்சந்திரன்
பாடியவர்கள்: சூலமங்கலம் சகோதரிகள்
++++++++++++++++++++++++++++++++++++++++++++
இந்தப் பாட்டின் முத்தாய்ப்பான வரி:
முதன்முதல் இறைவன் திருவாய் திறந்தான் முத்தமிழ் பிறந்ததடி!

அன்புடன்,
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

25.8.10

நகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று?

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நகைச்சுவை:  இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று?

இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று என்று என்றைக்காவது கவலைப் பட்டிருக்கிறீர்களா? கவலையை  விட்டொழியுங்கள். உங்களுக்காகவே சிரித்து மகிழக்கூடிய சில விஷயங்களை இன்று பதிவிட்டுள்ளேன்.

சிரித்து மகிழுங்கள். நகைச்சுவை உணர்வு அறவே இல்லாத சீரியசான ஆசாமிகள் பதிவை விட்டு விலகலாம்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அனைத்தும் இறக்குமதிச் சரக்கு. மின்னஞ்சலில் வந்தவை. மொழிமாற்றம் செய்ய நேரமில்லை. தனித்தமிழ்  ஆர்வலர்கள் மன்னிக்கவும்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
1
See what would happen to the Famous Advertising punch lines of all the big Multinational and National Companies if they start marketing condoms. Also, their product's famous Advertisement lines would fit so very perfectly for their Condoms too, in fact much better than for their existing products.

AMUL Condoms :
"The taste of India"

LUX Condoms :
"The choice of Indian Film Stars for over 50 years"

PEPSODENT Condoms :
"Raat Bhar Dhishum Dhishum"

COLGATE Condoms :
"Yeh Hai Hamara Suraksha Chakra"

NOKIA Condoms:
"Connecting People"

MRF Condoms:
"Extra Rubber - Extra Mileage"

KFC Condoms:
"Finger Licking Good"

Moov Condoms:
"Aah Se Aahaa Tak"

MIRINDA Condoms:
"Zor Ka Jhatka Dhire Se Lage"

MAGGI Condoms:
" Sirf Do Minute aur READY"

DABUR {CHAWANPARASH} Condoms:
"Immunity & Strenght"

GODREJ {Hair Dye} Condoms:
"Kaato, Kholo, Lagaao"

SPRITE Condoms:
"Bujhaye only Pyaas..Baaki all Bakwaas"

TATA SKY Condoms:
"Isko laga dala to life Jhingalala"

THUMBS UP Condoms:
"Taste The Thunder"

COCA COLA Condoms:
"Live Condoms,Sleep Condoms, Dream Condoms but Only Coca Cola Condoms"

ROTOMAC Condoms:
"Sabkuch Dikhta Hai"

CADBURY Condoms:
"Asli Swad Jindagi Ka"

TAJ Condoms:
" Wah Taj, Wah "

MARUTI SUZUKI Condoms:
" The people's Condom "

RELIANCE Condoms:
"Think bigger " (What??)

NESTLE Condoms:
"Everyday"

INDIAN OIL Condoms:
"Extra power - extra mileage"

…and the last but not the least amusing:

POLO CONDOMS:
"The Condom with a HOLE "
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
2

Poor Husbands
    
    Position of a Husband Is just like a Split AC
     No matter however Loud he is in the Outdoor
     He is designed to remain Silent indoor...
    
    "Husband is one who is the head of the family,
     but his wife is the neck, and whichever way she turns, he goes."
    
    A man in Hell asked Devil:
     Can I make a call to my Wife?
     After making call he asked how much to pay.
     Devil : Nothing, Hell to hell is Free.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
3.
Once a Smoker was smoking at the airport..... .... 

A gentleman came & asked him, "How much do you smoke a day?"


Smoker: "Why are you asking such a question?" 
Gentleman replied: "If you had collected that money instead of smoking, the plane which is in front of you, would have been yours."
Smoker asked that gentleman: "Do you smoke?"
Gentleman: "No."
Smoker asked: "Does that plane belong to you?"
Gentleman replied: "No."
Smoker: "Thanks for your kind advice, but that plane is mine."

[Smoker's Name-Vijay Mallya].
Moral of the Story:- Unnecessary advice is injurious to health
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
4.
SEVEN FUNDAMENTALS OF LIFE FOR TODAY.
1. Money is not everything. There's also Master card & Visa.
2. One should love animals.They are tasty too.
3. Save water. Drink beer.
4. Studying is healthy, So leave it for the sick.
5. Books are holy. So don't touch them.
6. Love your neighbour but never get caught.
7. Everyone should marry because happiness is not the only thing in life.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
5.
THE POSITIVE SIDE OF LIFE 

Living on Earth is expensive,
But it does include a free trip
Around the sun every year.

How long a minute is
Depends on what side of the

Bathroom door you're on.

Birthdays are good for you;
The more you have,
The longer you live.

Happiness comes through doors you
Didn't even know you left open.

Ever notice that the people who are late
Are often much jollier
Than the people who have to wait for them?

Most of us go to our grave
With our music still inside of us.

If Wall-Mart is lowering prices every day,
How come nothing is free yet?

You may be only one person in the world,
But you may also be the world to one person.

Some mistakes are too much fun
To only make once.

Don't cry because it's over;
Smile because it happened.

We could learn a lot from crayons:
Some are sharp, some are pretty,
Some are dull, some have weird names,
And all are different colors....but
They all exist very nicely in the same box.

A truly happy person is one who
Can enjoy the scenery on a detour.

Have an awesome day, and
Know that someone
Who thinks you're great
Has thought about you today!..
--------------------------------------------------------------------------
ஐந்தில் எது மிகவும் நன்றாக உள்ளது?
ஒரு வார்த்தை சொல்லுங்கள்

வாத்தியார் வெளியூர்ப் பயணம். இரண்டு நாட்கள் வகுப்பிற்கு 
விடுமுறை. அடுத்த வகுப்பு 28.8.2010 சனிக்கிழமையன்று!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

24.8.10

வேகப்பந்து வீச்சாளர் எதை மட்டும் பார்ப்பார்?

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வேகப்பந்து வீச்சாளர் எதை மட்டும் பார்ப்பார்?

கேள்வி - பதில்கள் (இரண்டாவது சீஸன்) பகுதி 12
உங்களின் கேள்விகள் - வாத்தியாரின் பதில்கள்
++++++++++++++++++++++++++++++++++++++===========
மின்னஞ்சல் எண்: 37
V கிருஷ்ணர்
வைகுந்தன் கிருஷ்ணர்
பிறந்த ஊர்: ஜாஃப்னா,
வசிக்கும் ஊர்: மெல்போர்ன், ஆஸ்திரேலியா
வயது: 63

வணக்கம்,
எனது வினா. கிரகம் ஒன்று நவாம்சத்தில் பலவீனமாயும், பரல்களில் வலிமையாகவும் இருப்பின் சற்று கேள்வி பிறக்கின்றது. ஒருவரின் கேள்விக்கு சுடிதாரையும் சேலையையும் குறிப்பிட்டீர்கள்.கேள்வியில் கிரகத்தின் உடன்(Positive) எதிர்மறை(Negative) அம்சத்தை கவனித்தால் சுடிதார், சேலை உடன்படும் அம்சத்தில் வருகின்றன. சேலையை நவாம்ச (பலவீனமாயுள்ளது)மாகக் கொண்டால் உடன்படும் அம்சமான சேலை உடலுக்கு பொருந்தாதா?

ஏன் பொருந்தாது? பொருந்தும். என் அப்போதைய விளக்கம் (இப்பொதும் அதே விளக்கம்தான்) சேலையைக் கட்டிக்கொள்ளூங்கள். அல்லது சுடிதாரைப் போட்டுக்கொள்ளுங்கள். ஏதாவது ஒன்றை ஒரு நேரத்தில் போட்டுக் கொள்ளுங்கள். ஒன்றின்மேல் ஒன்றைப் போட்டுக்கொள்ளாதீர்கள். புரிந்ததா?

அம்சத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அல்லது அஷ்டகவர்கத்தை எடுத்துக்கொள்ளுங்கள். இரண்டையும் ஒன்றாக ஒரே நேரத்தில் எடுத்துக்கொண்டு, நீங்களும் குழம்பி, அடுத்தவனையும் குழப்பாதீர்கள்.

ராசியின் விரிவாக்கம்தான் அம்சம். அம்சத்தில் கிரகம் வீக்காக இருந்தால், தலையைப் பிடித்துக்கொண்டு, சரி நமக்கு வாய்த்தது அவ்வளவுதான் என்று சும்மா உட்கார வேண்டியதுதானே? எதற்காகப் பரல்களைப் பார்க்கிறீர்கள்? யார் பார்க்கச் சொன்னது? பார்த்ததால்தானே இந்த சந்தேகம்?

வீக்காக உள்ளது என்று நீங்கள் வருத்தப்படும் கிரகத்திற்கு அஷ்டகவர்க்கத்தில் எப்படி அதிகமான பரல்கள் கிடைத்தது? அதற்குக் காரணம் என்ன? அதை என்றாவது யோசித்திருக்கிறீர்களா?

ராசியின் 1/9வது பாகம் அம்சம். அதில் கிரகத்தின் உண்மையான நிலைமை மட்டும் தெரியும். அது உச்சமா, நீசமா, பகைவீட்டில் உள்ளதா என்று மட்டுமே தெரியும்.

அஷ்டகவர்க்கதில் கிரகத்தின் இருப்பிடம், அதன் மேல் விழுகும் பார்வை, சேர்க்கை, அந்த இடத்தில் அது அமர்ந்திருப்பதால், மற்ற இடங்களில் இருந்து அது பெறும் நன்மைகள் என்று எட்டுவிதமான மதிப்பெண் அட்டவனைகளைக் கூட்டி வரும் மொத்த நன்மைகள் தெரியும். இப்போது சொல்லுங்கள் எது உண்மையில் உகந்தது?

ஒருவனுக்கு, ஒரு பெண்ணை மட்டும் கட்டி வைப்பதாகச் சொன்னால் சும்மா இருப்பான். இரண்டு பெண்களைக் கட்டி வைக்க முடியும். கட்டி வைக்கிறோம் என்றால் என்ன ஆகும்?

நோண்டுவான். தோண்டுவான். துடிப்பான். புரள்வான். கடைசியில் குழம்பி நிற்பான்.

இருவரில் எவள் அழகு? எவள் அறிவு மிக்கவள்? எவள் படித்தவள்? எவள் திறமைசாலி? எவள் குணவதி? எவள் தைரியம் மிக்கவள்? எவள் பணக்கார வீட்டில் இருந்து வந்தவள்? எவள் பின்புலம் மிக்கவள் (சொந்த பந்தம் உள்ள பின்புலம். நீங்கள் வேறு எதையாவது நினைத்துக்கொள்ளாதீர்கள்) என்று எல்லாவற்றையும் எடைபோட ஆரம்பித்துவிடுவான்.

இப்போது சொல்லுங்கள். அழகு மட்டும் அம்சமாக உள்ளவளுடன் உறவா? அல்லது மற்ற அனைத்தையும் கொண்ட வலுவானவளுடன் உறவா?

யாரை அவன் மணந்து கொள்வது நல்லது?
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மின்னஞ்சல் எண்: 38
ஜீவானந்தன்
கோயம்புத்தூர்

Hi sir good morning have a great day,

1) You told that if kethu in 8th place, that person will die by accident or an diseases . If that persons rasi or laginam is magaram or kumbam they also have the same issues?. Am asking this question because SANI is ayul karagan.

கிரிக்கெட் ஆட்டத்தில் மட்டையைப் பிடித்து அடித்து ஆடுபவர் அந்த அணியின் தலைவர் (captain) என்பதற்காக, எதிர் அணியின் வேகப் பந்துவீச்சாளர் (fast bowler), பயந்து அல்லது மரியாதை கொடுத்துப் பந்து வீசுவாரா என்ன? பந்து வீசுபவருக்கு, அணியின் துவக்க ஆட்டாக்காரரும் (opening batsman) ஒன்றுதான் பத்தாவதாகக் களம் இறங்கும் ஆட்டக்காரரும் ஒன்றுதான், அணியின் தலைவரும் ஒன்றுதான். அணியின் ஸ்டார் பேட்ஸ்மேனும் ஒன்றுதான். அதை நினைவில் வையுங்கள்.

ஆயுள்காரகர் சனியின் வீட்டைச் சேர்ந்த மகர, மற்றும் கும்ப லக்கினக்காரகளுக்கு என்று தனிச் சலுகைகள் எதுவும் கிடையாது. நேரம், காலம் வந்தால், அவர்களுடைய மிடில் ஸ்டம்ப் பறந்துவிடும். மட்டையைத் தலைகீழாகப் பிடித்துக்கொண்டு பெவிலியனுக்குத் திரும்ப வேண்டியதுதான். அதாவது மேலே போய்ச் சேர வேண்டியதுதான்.

வேகப்பந்து வீச்சாளர் எதை மட்டும் பார்ப்பார்? விக்கட்டை வீழ்த்துவதை மட்டும் பார்ப்பார். மற்ற எதைப் பற்றியும் அவர் கவலைப்பட மாட்டார். அர்த்தமாயிந்தா ஜீவானந்தன் காரு?

2) Small doubt sir, You told that we should not see jadhagam for a child until that child attains age 12. I studied this issue in an astrology book in that they mentioned to split that 12 years in to 3.
   0 - 3
   4 - 7
   8 - 11.
If the child died in age 0-3 they mentioned bcoz of their MUNORGAL pavapunniam.
4-7 they mentioned bcoz of that childs father(THANDHAI vali) pavapunniam
from 8-11 means mothers(AMMA vali) pavapunniam.?? Is it true sir.

எனக்குத் தெரிந்தவரை குழந்தைகளுக்கு ஏழு வயதுவரை தாயின் ஜாதகமும், அதற்குப் பிறகு 12 வயது வரை தந்தையின் ஜாதகமும் ஆதிக்கம் செலுத்தும்!

3) By seeing ones jadakam how to find out that they has a luxury life or a struggling life?

சுகமான வாழ்க்கைக்கு நான்காம் வீடு நன்றாக இருக்க வேண்டும்.
நான்காம் வீடு கெட்டிருந்தால் சுகமில்லாத வாழ்க்கை. சுகம் என்பது
வீடு, வண்டி, வாகனம், வேலையாட்கள், நிலம் நீச்சு, ஸ்பிளிட் ஏர்கண்டிஷனர்கள் என்று செளகரியங்களைக் குறிக்கும். சந்தோஷம்
என்பது ஐந்தாம் வீட்டின் வேலை (House of mind) அத்துடன் மனகாரகன்  
(Lord for mind) சந்திரனின் வேலை.

  “பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காது
   பஞ்சனையில் காற்று வரும் தூக்கம் வராது”


என்ற கவியரசரின் பாடலைக் கேட்டிருக்கிறீர்களா? கேளுங்கள் அப்போது புரியும் - செளகரியத்திற்கும் சந்தோஷத்திற்கும் உள்ள வேறுபாடு.

சந்தோஷத்திற்கு நீங்கள் சொல்லும் luxury life தேவையில்லை. மாடமாளிகையில் படுத்திருப்பவனைவிட, அரசமரத்தடியில் தூங்கும்
ஏழை சந்தோஷமாகத் தூங்குவான். பென்ஸ் காரில் செல்லும்
பெண்ணைவிட, ஹீரோ ஹோண்டா மோட்டார் சைக்கிளில்
கணவனைக் கட்டிப்பிடித்தவாறு செல்லும் பெண் மகிழ்ச்சியாக
இருப்பாள். வங்கி இருப்பு பத்துக் கோடி இருப்பவனைவிட,
மனைவியின் மடியில் படுத்திருக்கும் ஏழைக் கூலித் தொழிலாளி சந்தோஷமாக இருப்பான்.

இப்போது சொல்லுங்கள் எது முக்கியம்?

4) By seeing ones jadakam how to find that he/she was a thief or a lier?

திருட்டில் பலவிதம் இருக்கிறது. பிக்பாக்கெட்டில் இருந்து, வீடு புகுந்து கொள்ளையடிப்பதுவரை பல விதங்கள் உள்ளது. ஆகவே அதற்கும் பலவிதமான கிரக அமைப்புக்கள் உள்ளன.

பொதுவாக திருட்டு எண்ணம் உடையவர்களுக்கான கிரக அமைப்பு இதுதான். கேந்திரங்கள் மூன்றிலும் தீயசக்திகள் இருப்பதுடன், அவைகள் சுபக்கிரகங்களின் பார்வையின்றி இருந்தால் ஜாதகன் திருட்டு எண்ணம் உடையவன் என்று கொள்ளலாம் (பொதுவிதி)

It is called as Dala Sarpa Yoga All malefics in three Kendras and no benefic in Kendra. The person might be scheming, wicked, miserable, destitute and dependent upon others for subsistence.
மேலும் சில அமைப்புக்கள்: 1.Saturn occupies the 12th house from Moon. associating with wicked women, inclined towards forbidden pursuits. 2.Durudhara Yoga Any planets, other than Sun, occupy the 2nd and the 12th house from Moon. 3. A malefic, other than Moon, occupies the 2nd house from Sun.This variety of Veshi Yoga shows that the person is a destitute and associates with wicked people.4.Saturn occupies the 2nd house from Sun. This variety of Veshi Yoga shows that the person is interested in business, inclined to cheat others of their wealth, and has malice towards his/her preceptors.5. If Rahu is present in the fourth house of the horoscope of a person, he is wretched and lives in poverty, bereft of brothers and friends, leads a solitary life among mean people, is a cause for quarrels and fights and is engaged in sinful activities.

பொய் சொல்வதை விட்டுவிடுங்கள். யார்தான் பொய் சொல்லவில்லை? 99% அனைவரும் ஒரு சந்தர்ப்பத்தில் பொய் சொல்லியிருப்போம். சொல்லுவோம். ஆகவே அதைப் புறந்தள்ளுங்கள்!
------------------------------------------------------------------------------------------
மின்னஞ்சல் எண்: 39
தினகர் திருமலை
T. தினகர்
பெங்களூர்

Hello sir,
Vanakkam,
I'm Dinakar, I came to know about you thru one of my friend who is following your lesson's. I have some queries if you feel my questions make sense and when you find time please reply, Kindly apologize me if u feel these questions doesn't make sense.

In terms of astorlogy what is a marriage?
1.Is marriage a  maritial relationship between a Boy and a girl living together?.
 or
2.Is marriage relation considered only after tieing the mangalsutra?. What is the relationship between  marriage & astrology & mangalsutra(Thali)?
or
3. Is it just two stars (boy & girl) living in same home?
The reason why I ask this is, I heard from astorlogers  there are some stars (for girls) like moolam1st patham, visakam4th patham that brings ill fate to the  boy's family members.(I came to know abt this thru My cousin, proper match is not able to be found for her) Is it true?
If yes, why is that these stars influence the fate of other's in the boy's family?

திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர். ஒரு புதிய பரம்பரியின் / பாரம்பரியத்தின் துவக்கம்!

மூலம், ஆயில்யம், கேட்டை என்று சில நட்சத்திரங்களை மக்கள் தவிர்ப்பது என்னவோ உண்மை. அதுவே அவர்கள் வீட்டுக் குழந்தைகள் என்றால் கத்தியைக் கையில் எடுத்துவிடுவார்கள். நட்சத்திரங்களில் கேடுகள் எதுவும் இல்லை. மூலம் மாமியாரை மூலையில் உட்காரவைத்துவிடும் என்று சிலர் மூல நட்சத்திரங்களை ஒதுக்குவார்கள். மாமனாரின் ஆயுள் அவர் பிறக்கும்போதே தீர்மானிக்கப்பட்டுள்ளது. மருமகள் வந்து அவரைத் தூக்குவாள் (வைகுண்டத்திற்கு அனுப்பி வைப்பாள் என்றால்) எந்த நட்சத்திரப் பெண் வந்தாலும் அது நடக்கும். மூல நட்சத்திர மருமகள் மட்டும்தான் அதைச் செய்வாள் என்பது பேதமை (பைத்தியக்காரத்தனம்)

மூல நட்சத்திரப் பெண்ணாக இருந்தாலும், ஒதுக்காமல், அவள் தங்கள் மகனுக்கு ஏற்ற பெண்ணாக இருந்தால், ஜாதகத்தில் எல்லா அம்சங்களும் பொருந்தி வந்தால், துணிந்து அவளை மருமகளாக ஏற்றுக்கொள்ளலாம். ஒன்றும் ஆகிவிடாது.
---------------------------------------------------------------------------------------------------------
(தொடரும்)

அன்புடன்,
வாத்தியார்
வாழ்க வளமுடன்!

23.8.10

குழந்தைப் பேறுக்கு அதி முக்கியமானது எது?

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
குழந்தைப் பேறுக்கு அதி முக்கியமானது எது?
கேள்வி - பதில்கள் (இரண்டாவது சீஸன்) பகுதி 11
உங்களின் கேள்விகள் - வாத்தியாரின் பதில்கள்
++++++++++++++++++++++++++++++++++++++===========
மின்னஞ்சல் எண்: 33
சதீஷ் பாண்டியன்
   
வணக்கம்,
நான் நீங்கள் எழுதி வரும் பதிவுகளை படித்து வருகிறேன்.
என்னுடைய ஜாதகத்தையும் உங்களுடைய பதிவுகளையும் தொடர்பு 
படுத்திப் பார்க்க வேண்டாம் என்று நினைத்தாலும் மனது கேட்கவில்லை.

1. ஐந்தில் ராகு இருப்பதால் குழந்தை பெரும் பாக்கியம் இல்லையா?

முதலில் திருமணம் செய்து கொள்ளுங்கள். குழந்தைப் பேற்றிற்கு அதி முக்கியமானது அதுதான்! மற்றதெல்லாம் உபரியான மேட்டர்கள். குழந்தைப்பேறு என்பது டீம் ஒர்க். ராகு என்னும் ஸ்பின் பெளலரை
மட்டும்  வைத்து வெற்றி தோல்விகளை நிர்ணயம் செய்ய முடியாது.
குழுவின் மற்ற ஆட்டக்காரர்களை வைத்து முடிவு செய்ய வேண்டும்.
மனைவி வந்த பிறகுதான் பேட்ஸ்மேன்கள் யார் யாரென்பது
தெரியவரும். அதுவரை பொறுத்திருங்கள்.

2. நான் முழு நேரமும் தெளிவற்றவனாக இருக்கிறேன்?

அதை நீங்கள் சொல்லவே வேண்டாம். ஐந்தில் (house of mind) ராகுவும், 12ல் சந்திரனும் (Lord for mind) இருந்தால் அப்படித்தான் இருக்கும். தீர்த்தம் குடிக்க வேண்டும் (துளசி கலந்த தீர்த்தம். நீங்கள் வேறு தீர்த்தத்தை நினைத்துக் கொண்டால் நான் அதற்குப் பொறுப்பல்ல!)

3. என் திருமணமும் பிரச்சினையில் இருக்கிறது. இதுவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதா?

உங்கள் ஜாதகத்தில் 6ம் & 8ம் அதிபதிகளான சந்திரனும், புதனும், களத்திரகாரகனான சுக்கிரனுடன் சேர்ந்து  12ஆம் வீட்டில்
இருக்கிறார்கள். அதனால்தான் தாமதம். 29 வயதில் ராகு தசை முடிகிறது. அதற்குப் பிறகுதிருமணம் நடக்கும். வாழ்க்கை நன்றாக இருக்கும்.
நீங்கள் திருவோண நட்சத்திரக்காரர். மகர ராசி. சனிக்கிழமை தோறும் சனீஷ்வரனைப் பிரார்த்தனை செய்யுங்கள்.

4. ஜாதகத்தையும் பதிவுகளையும் தொடர்பு படுத்தி கேள்விகேட்டமைக்கு மன்னிக்கவும்.
இப்படிக்கு உங்கள் மாணவன்,
சதீஷ் பாண்டியன்

இது பழகிப்போன / கேட்டுப் புளித்துப்போன ஒன்று. மன்னித்துவிட்டேன். அதற்காக, உடனே, உங்கள் ஜாதகத்தை வைத்து இன்னும் மூன்று கேள்விகளை அனுப்பிவைக்காதீர்கள்.திருவோண நட்சத்திரம் - சதீஷ் பாண்டியன் என்ற பெயரை மறக்க மாட்டேன்.
--------------------------------------------------------------------------------------------------------------
மின்னஞ்சல் எண்.34
இளையராஜா குமாரவேல்
K. இளையராஜா
பிறந்த ஊர்: ஆரணி
வசிக்குமிடம்: கோயம்புத்தூர்
வயது. 26

கேள்வி ஒன்று
Dear Sir,
             This is Ilayaraja from Coimbatore Ratnapuri. Last week only i visited your web page. i wish to join in your classroom. Please accept my request and give guidance to Learn.
Thanks & Regards
K.ILAYARAJA

கேள்வி இரண்டு
Please tell me my Horoscope is eligible for Learning and i wish to see Horoscope for other peoples also. kindly tell me it is possible in my horoscope.

கேள்வி மூன்று   
yes i want to know it is possible to do Astrology as my profession. it is possible for me. please tell me.now i finished 30 lessons. i ll complete my remaining lessons as soon as possible.

ஐந்து நாட்களில் மூன்று கேள்விகளைக் கேட்டுள்ளீர்கள். உங்களின்
ஜோதிட ஆர்வத்திற்குப் பாராட்டுக்கள்.30 நாட்களில் ஆங்கிலம்,
30 நாட்களில் ஹிந்தி போன்று 30 நாட்களில் ஜோதிடராகும் வழிகள்
என்ற நூல்கள் கிடையாது. 30 நாட்களில் கற்றுக்கொள்ளவும் முடியாது.ஜோதிடம் படிப்பதற்கு ஆர்வமும், முயற்சியும் இருந்தால்
போதும். வேறு எதுவும் (உங்கள் மொழியில் சொன்னால் வேறு
எந்தப் புண்ணாக்கும்) வேண்டாம்.

விதி உங்களைப் பொறியாளராக்கி, நல்ல வேலையிலும் அமர்த்தியிருக்கிறது. எதற்கு வீண் ஆசை?

நல்ல விற்பனைப் பிரதிநிதிக்கு அடையாளமாக இதைச் சொல்வார்கள்:
A good marketing man is one who sells refrigerators to Eskimos!

நல்ல ஜோதிடருக்கான அடையாளத்தைத் தேடிப்பெற முடியாது. அதுவாகவே கிடைக்கும். பாடங்களில் நல்ல தேர்ச்சி, நீண்ட அனுபவம், தெய்வ அருள்  (intuition power) ஆகிய மூன்றும் சேர்ந்து அதைக்  கொடுக்கும்

ஆகவே பொறுத்திருங்கள். முதலில் பாடங்களை முழுமையாகக் கற்றுக்கொள்ளுங்கள். உறவினர்கள், நண்பர்களின்  ஜாதகங்களைப் பார்த்துப்பலன் சொல்லிப் பழகிக்கொள்ளுங்கள். பிறகு வாய்ப்புக்
கிடைத்தால், பகுதி நேரத் தொழிலாக அதைச் செய்யுங்கள். அதில்
வருமானம் வரத்துவங்கினால், பிறகு முழு நேரத்தொழிலாக அதைச்
செய்யுங்கள்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மின்னஞ்சல் எண்.35
சிவசுப்பிரமணியன்
சென்னை
வயது 30
   
Hello Sir
Thanks for answering previous questions.. and today's story is also good...


I have a general question... for some of the questions you have answered
like the  kids born in 8 seconds difference will have different kind of life
and i too agree with you.. but in that you explained about the Nadi.
is it  related with Nadi Jodidam. As far as i have researched Lagna
charts dont change for 90 mins and Navamsha charts does not change
for 15 mins and i am not sure about the parals. have not looked into it
deeply. So could you please let us know where can we find this
difference in the horoscope... 8 seconds difference.. and also the
applicability of horoscope for the kids born through Caesarian.
Please note that this question is not to question your expertise
or existence of Horoscope.. it is only a general question
Regards
Sivasubramaniam
Chennai


நாடி ஜோதிடம் பற்றி இன்னும் எழுதவில்லை. அது மேல் நிலைப்பாடம். தனித்தொடராக எழுதவுள்ளேன். பின்னால் வரும். பொறுத்திருந்து
படியுங்கள் நண்பரே! உங்களின் மேலான ஆர்வத்திற்கு நன்றி!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மின்னஞ்சல் எண்.36
R.பரமசிவம்
சென்னிமலை
   
சார்,  நான் உங்களுடைய மாணவர்களில் ஒருவன் உங்களுடைய
வகுப்பு மிகவும் எளிமையாகவும் தெளிவாகவும் உள்ளது எனது
நன்றிகள். தங்களது சேவை மென்மேலும் தொடர வேண்டுமாய்
கேட்டுக்கொள்கிறேன்.

கேள்வி .  இரண்டாம் வீடு தனம் , குடும்பம். இரண்டாம் வீட்டில், 
இரண்டு, அஞ்சு, ஆறு, ஏழு, எட்டு, பதினொன்று , பன்னிரண்டு
ஆகிய அதிபதிகள் புதன், குரு , சனி ,சந்திரன் நின்றால் பணம்
நெறைய வருமா? வராதா? (வரும் ஆனால் வராது என்ற பதிலை
தவிர்த்து சொல்லவும்) வரும் என்றால் எந்த திசை புக்தியல்
வருவதற்கான வாய்ப்புக்கள் அதிகம்?


இரண்டாம் வீட்டில் நிறைய கிரகங்கள் இருந்தால் நிறையப்பணம் வரும் என்ற எண்ணம் இருந்தால் அதை விட்டொழியுங்கள். முதலில் நீங்கள் கொடுத்துள்ள விவரங்களில் உள்ள இமாலயத் தவறைப் பாருங்கள்.

இரண்டாம் வீட்டில்,  இரண்டு, அஞ்சு, ஆறு, ஏழு, எட்டு, பதினொன்று , பன்னிரண்டு ஆகிய அதிபதிகள் (ஏழு கிரகங்கள்) உள்ளதாகச் சொல்லி, இருப்பவர்களின் பெயரைக் குறிப்பிடும்போது புதன், குரு, சனி,
சந்திரன் என்று நான்கு கிரகங்களை மட்டுமே குறிப்பிட்டு உள்ளீர்கள். உண்மையில் ஒரே இடத்தில் ஏழு கிரகங்கள் உள்ளனவா?
அல்லது தவறான தகவலா? லக்கினத்தைச் சொல்லாமல்  விட்டு
விட்டீர்கள். அதைச் சொல்லுங்கள். அதைச் சொன்னால் இரட்டை ஆதிபத்தியத்தைவைத்து 4 கிரகங்களுக்குள் நீங்கள் குறிப்பிடும்
கிரகங்கள் வந்துள்ளனவா என்று ஒத்துப்பார்த்துக்கொள்ளலாம்.

மிஸ்ஸாகும் மூன்று கிரகங்களும் சென்னிமலை முருகனை வணங்கி
வரப் போயிருந்தால், அவர்கள் திரும்பிவந்தவுடன், இரண்டாம் வீட்டில் உட்காரவைத்து, தாகத்திற்கு தம்ஸ் அப்ஸ், செவன் அப்ஸ் என்று
எதையாவது கொடுத்துவிட்டு, எனக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.
அதுவரை பொறுமையாகக் காத்திருக்கிறேன்

மேலும் தங்களிடம் ஒரு கேள்வி ..தங்கள் சில இடங்களில் பாடங்களை
படித்து சுய ஜாதகத்தை பார்த்துகொள்ளுங்கள் என்று சொல்லிருகிறீர்கள் அப்படி பார்க்கும் பொது சுயஜாதகத்தில் தானே சந்தேகம் வரும்? 
தயவு செய்து இந்த கேள்வியைத் தவறாக எடுத்துகொள்ள  வேண்டாம், அதற்காகப் பதில் தராமலும் விட்டுவிடாதீர்கள் மதிப்பிற்குரிய ஆசிரியர்  அவர்களே!

இதை நான் ஒப்புக்கொண்டால், ஒவ்வொருவரும் தங்கள் ஜாதகத்தை
வைத்து 360 கேள்விகளைக் கேட்கத் துவங்கிவிடுவார்கள்.
360 கேள்விகள் எப்படிக் கேட்க முடியும் என்று மலைப்பாக
இருந்தால், மின்னஞ்சலில் கேளுங்கள், அதற்குச் சரியான
பதிலைத் தருகிறேன். இங்கே சொன்னால் எல்லோரையும் எழுப்பிவிட்டதாகிவிடும் அல்லது உசுப்பி விட்டதாகும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
(தொடரும்)

அன்புடன்,
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

22.8.10

ஆயிரம் ரூபாய் யாருக்குக் கிடைத்தது?

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஆயிரம் ரூபாய் யாருக்குக் கிடைத்தது?

நீங்காத நினைவுகள் - பகுதி 5

வகுப்பறையின் வார மலர். ஒவ்வொரு ஞாயிறன்றும் வெளியாகும். ஆக்கங்கள் உங்களுடையது. படித்து ரசித்தவர்கள், தங்கள்
கருத்துக்களை பின்னூட்டத்தில் பதிவிடலாம். பங்கு கொள்ள
விரும்புபவர்கள் தங்கள்ஆக்கங்களை அனுப்பிவைக்கலாம்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஏழாம் வகுப்பில் படித்த பெரும் பாலும் அத்தனை மாணவர்களும் தேர்ச்சி பெற்று எட்டாம் வகுப்பிற்கு வந்துவிட்டோம்.

எட்டாம் நிலை "அ" பிரிவு,

முதல் நாள் வகுப்பிற்கு கொஞ்சம் சீக்கிரமே சென்று விடுவது வழக்கம், என்ன.. வெகுநாட்கள் விடுமுறையில்  வீட்டில் இருந்தது மாத்திரம் அல்ல, முதல் நாள் விரைவில் சென்று முதல் பெஞ்சில் இடம் போடுவது, மேலும் நமக்கு பிடித்தவர்களையும் அருகில் அமரச் செய்து கொள்வதற்காகவும் கூட.

நான் பள்ளிக்கு கிளம்பி வீதிக்கு வரும் போது, எனக்குப் பின்புறமாக ஓடிவந்த, சொக்கலிங்கம் வாத்தியார் மகன் சரவணனும் வந்து என்னோடு சேர்ந்துகொண்டான் இருவருமாக பள்ளியை அடைந்தோம்.

அங்கு எங்களுக்கு முன்பே வகுப்பில் ஒரு மாணவி உட்கார்ந்து இருந்தாள். அவள் பாவாடை தாவணியில் வந்திருந்தாள், பார்ப்பதற்கு பெரிய பிள்ளையாக இருந்ததாலும்,  எங்கள் வகுப்பில் அவள் இருந்தமையால் சற்றுக்  குழப்பத்தோடு உள்ளே சென்றோம்.

சரவணன் கொஞ்சம் வாய் துடுக்கானவன்,   “ஏய்! இந்தா புள்ள நீ எப்படி இங்கே?” என்றான், உடனே அவள்,   “டேய்! என்னடா சொன்னே?” என்று
எங்கள் அருகில் வந்தவள் தொடர்ந்து சொன்னாள், “.. ஒரு அரை
விட்டேன்னா, அப்புறம் தெரியும் நான் யாருன்னு!” என்று சொன்னாள்.

உடனே நான் இடைமறித்து,   “அக்கா!”  என்றேன், அதற்கு அவள் 
“இல்லை, ஹாலாஸ்யம், நீ அக்காவென்று  எல்லாம் சொல்ல
வேண்டாம் என்னை சுந்தராம்பாள் என்றே கூப்பிடலாம், நானும் உங்களோடுதான் படிக்கப் போகிறேன் போனவருடம் தேர்ச்சி
பெறவில்லை!” என்றாள்.

அவளை நான் முன்பே சரியாக அறிந்து இருக்கவில்லை, இருந்தும்
அவள் என் பெயரைச் சொன்னதிலும் ஆச்சரியம் இல்லை. ஆம்,
பெருமை இல்லை, உண்மை. எனது, இந்த அரிதான பெயரைக்
கேள்விப் பட்ட யாரும்எழுதில் ஞாபகம் வைத்துக் கொள்வார்கள்.

எனக்குத் தெரிந்து, இப்பெயரில் எனது தாய் வழிப் பாட்டனார் பர்மாவில் ராஜாசர் அண்ணாமலை செட்டியார் வர்த்தகத்தில் கணக்காளராக இருந்தார். அவர் ஒருவரைத்தான் அந்தப் பெயருடன் எனக்கு தெரியும்.
பின்நாளில்நான் வேலைப் பார்த்த கம்பெனியில் எனக்கு மேல்
அதிகாரியாக ஒருவர் இருந்தார் அதற்கு அடுத்தபடியாக ஸ்ரீரங்கத்தில் (கிருஷ்ணாபள்ளியில்) என்.ஹாலாஸ்யம் ஐயர்  என்றொரு வக்கீல் இருந்ததாகக் கேள்வி பட்டேன்.

அவ்வளவுதான் வேறு யாரையும் கேள்விப்படவில்லை.

அதோடு இந்தத் தமிழும் எனக்கு பள்ளியில் ஒரு அங்கீகாரத்தைத் தந்து இருந்தது. . சரி, சொல்ல வந்ததை சொல்லுகிறேன்.... 

சுந்தராம்பாள் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்தவள். அவளின் பேச்சு சொல்லியது, அவளின் தைரியத்தை!

அதன் பிறகு, பின்னாளில்,  மற்றொரு சமயத்தில், இரண்டாண்டு கழித்து.
நான் மஞ்சள் காமாலைக்கு நாட்டு  மருந்து குடிக்க அவளின்
கிராமத்திற்கு சென்றபோது  பார்த்துவிட்டு அவள் அடைந்த
மகிழ்ச்சியை  அளவிடவே முடியாது.. கிராமத்தில் பிறந்து வளர்ந்த
பெண்களின் அணுகுமுறை, நடத்தை, பாசம் அலாதியானது!

மீண்டும் சொல்ல வந்ததை விட்டு பாதை மாறுகிறேன்....... 

சரி விசயத்திற்கு வருவோம்... வகுப்பறைக்கு பெரும்பாலும் அனைவரும் வந்து விட்டார்கள், வகுப்பாசிரியர் யார்  என்ற எதிபார்ப்பில் இருந்தோம். அவர் புது மாணிக்கம். அவரும் வந்து விட்டார்.

அதென்ன, புது மாணிக்கம்? ஆமாம் அவருக்கு முன்பே பழைய மாணிக்கம் என்றொருவர் இருக்கிறார்.

சற்று நேரத்தில் பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியர்
திரு. ரெங்கராஜன் அவர்கள் ஒரு பெண்ணை அழைத்துக்
கொண்டு வந்தார். அழகு நிறைந்த அப்பெண் யாராக இருக்கும்
என்று சிந்தனையில் இருக்கும் நேரத்தில் வகுப்பாசிரியரும்,
“ வாங்க சார், உள்ளே வாங்க, நீயும் வாம்மா!” என்றார்.
வந்தவர் அந்தப் பெண்ணை வகுப்பில் விட்டுவிட்டுச் சென்று
விட்டார். அவளும் வந்து அமர்ந்து கொண்டாள்.

வருகைப் பதிவேடு எடுத்தார் ஆசிரியர்.

மாணவிகளை எல்லாம் கூப்பிட்டாச்சு, மாணவர்களையும் கூப்பிட்டாச்சு... ஆனால் அந்தப் புதுப் பெண்ணின் பெயர் இன்னும் கூப்பிடப்பட வில்லை? ஒருவழியாக ஆசிரியர்   “அனுராதா!”  என்றார் கடைசியாக!

புதிதாக வந்தவள் செந்தாமரையைப் போன்று அழகாக இருந்தாள்.

அவளின் பெயர், மேலும் அவளுக்கு அழகு சேர்த்தது!

இந்நேரம் நரை தட்டிப் போயிருக்கும்!.... அதெல்லாம் பழைய கதை..... என்னது?  சரி, சரி வடிவதை துடைத்துக் கொள்கிறேன்!

பாடம் ஆரம்பம் ஆனது, முதல் நாள் முதல் வகுப்பு வேகமாகச் சென்றது. வகுப்பு முடியும் முன் ஆசிரியர்  ஜோடிப் புறாக்களிடம் வந்தார்!

வகுப்பாசிரியர் புது மாணிக்கம் சென்ற வருடம் எங்களுடைய நீதிபோதனை ஆசிரியர். எங்களை நன்கு அறிந்தவர் அவர்.

ஜோடிப் புறாக்களா...... யாரது?. நானும் எனது நண்பன் பூனைக்கண்ணனும் தான். எங்கு சென்றாலும் ஒன்றாகவே  செல்வோம் அதைப் பல நேரம் பார்த்து விட்டு இந்தப் பெயரை எங்களுக்கு வைத்திருந்தார் அவர்.

  “என்னடா? எல்லாம் உங்களுக்குப் போட்டியாகதான், புதிதாக இரண்டு பேர் வந்திருக்கிறார்கள்” என்று சொல்லி  விட்டு நகர்ந்து விட்டார்.

ஒருத்தி தானே? வந்திருக்கிறாள்!, இன்னொரு ஆள் யார்? அதோடு என்ன போட்டி? ஒன்றும் புரியாமல் நாங்கள்  நுனிவிரல்களால் தலை மயிரின் அடியை வருடிக்கொண்டு அமர்ந்திருந்தோம்.

அடுத்ததாக கணக்கு வகுப்பு, சுப்பையா வாத்தியார் வந்தார். இவர்
சென்ற ஆண்டு வகுப்பு வாத்தியார், இவர்  எனக்கு வைத்தப் பெயர் பாலசுப்ரமணியன், காரணம் தெரியாது  அப்படிதான் பல
நேரங்களில் அழைப்பார் நானும்பதில் பேசிவிடுவேன்.

ம்.. சரி, நாம் இன்று பொதுவாக பேசுவோம், என்று வகுப்பை ஆரம்பித்தவர் பேசும்போதுதான், நாங்கள் புரிந்துக்  கொண்டோம் அது என்ன போட்டியென்று..

கிராம பள்ளிகளில் எட்டாம் வகுப்பில் படிக்கும் மாணவர்களில் பள்ளி
இறுதித் தேர்வில்  ஒன்றியத்திலே முதல் மாணவனாக வருபவருக்கு
ஆயிரம் ரூபாய் பரிசாக ஒன்றியம் வழங்கும் என்றும், அதற்காகத்தான் புதுக்கோட்டை நகரில் இருந்து, தான் வேலை செய்யும் கிராமப்புற மேல்நிலைப் பள்ளிக்கே தன் மகளை எட்டாம் வகுப்பில்  படிக்க கூட்டி
வந்து விட்டார் AHM என்பதும் எங்களுக்குத் தெளிவானது.

அட!,  இதையும் விடமாட்டீர்களா? என்று எங்களுக்குள் பேசிக் கொண்டோம். இருந்தாலும் ஒரு கை பார்ப்போம்  என்றே இருந்தோம். பள்ளி இடைவேளையும் விட்டது. நானும், இளங்கோவும் வேகமாக வெளியில் சென்றோம்,

எட்டாம் வகுப்பில் படிக்கும் செல்வ குமாரை பார்ப்பதற்காக.

அவனும் எங்களைப் பார்க்க வேகமாக ஓடிவந்தான் கூடவே வேறு ஒரு மாணவனும் வந்தான், செல்வகுமாரும்,  எங்களுக்கு அவனை அறிமுகப் படுத்தி வைத்தான்.

அவன் பெயர் சங்கரநாராயணன், திருக்கோகர்ணத்தில் இருந்து வருகிறான் மேலும் நமது பழைய மாணிக்கம் ஆசிரியரின் மகன் என்பதும் தெரிய வந்தது. ஒருவழியாக அனைத்தும் புரிந்தது.

ஒருபுறம் நான், இளங்கோ, செல்வக்குமார் மறு புறம் அனுராதா, சங்கர நாராயணன் கடுமையான போட்டி.

பள்ளி காலாண்டு பரீட்சை முடிந்தது, மதிப் பெண்களை பெற்றோம், வழக்கம் போல் எங்கள் அணி முந்தி  இருந்தாலும் ஆங்கிலத்தில் அவர்களை ஜெயிக்க முடியவில்லை. என் தமிழ் என்னை முன்னுக்கு கொண்டு வந்து இருந்தும், அந்நிய ஆங்கிலம் என்னை அதல பாதாளத்தில் தள்ளி விடுமோ? என்ற பயமும் கூடவே இருந்தது.

அரைப் பரீட்சையிலும் இதே நிலைமையா என்றால்? இல்லை. நல்லவேளை இம்முறை செல்வகுமார் அடித்து  நொறுக்கித் தூள் கிளப்பிவிட்டான். இருந்தும் மற்ற நால்வரும் ஓரிரு மதிப்பெண் வித்தியாசத்திலே இருந்தோம். 

அரைப்பரீட்சை விடுமுறை முடிந்து, பள்ளி துவங்கியது, பாடம் ஒருபக்கம் இருக்க எனக்கு வேறொரு வேலையும்  காத்திருந்தது.

ஆம், பள்ளி இலக்கிய மன்றப் போட்டிகள் தான் அவை. அரைக்கால் சட்டை போட்ட இலக்கிய மன்றச் செயலாளர். தமிழாசிரியர்கள் எல்லோரும் சேர்ந்து எனக்கு தந்த பெருமையாக அதைக் கருதிக் கொண்டு உற்சாகத்துடன் அடியவன் செய்த பணி அது!

மேல்நிலை படிப்பவர்களுக்கு கிடைக்காத அங்கீகாரம் எனக்கு கிடைத்தது. இருந்தும் அதில் எனக்கு பெருமை  தந்ததோ இல்லையோ? என்னை அப்பதவி சிறுமையான செயல்களில் இருந்து காத்திருந்தது என்பது தான்  உண்மை.

ஆம், சிறுவயதிலே வீட்டில் இருக்கும் பிள்ளைகளுக்குச் சில பொறுப்புகளைத் தந்து அவர்களை மேற்பார்வையில் விட்டால் அவர்களின் மேம்பட்ட திறன், பண்பாடு, ஒழுக்கம் உயர்வடையும். இது என் அனுபவம்.

அறிவு என்பது கத்தி. அது அனுபவம் என்னும் உரை கல்லில் உரைபடும் போது இன்னும் கூறாகிறது.

இன்றும், சில வீடுகளில் பார்க்கலாம். வீட்டில் முக்கிய விசயங்களைப் பேசும் போது தம்பி நீ வெளியே போய்  விளையாடு என்பார்கள். நாம் என்ன செய்கிறோம் என்பதையே பார்த்து வளராத பிள்ளை எப்படிப் பொறுப் புள்ளவனாக வருவான்?

“வருமானத்தை சொன்னால் நம்பிக்கை பிறக்கும்
கடன்களைச் சொன்னால் பொறுப்பு பிறக்கும்
சொத்து, பத்துகளை சொன்னால் தைரியம் பிறக்கும்
நம்பிக்கை, பொறுப்பு, தைரியம் இம்மூன்றும் கொண்ட
பிள்ளையின் வாழ்வும் சிறக்கும்.”


அன்றும், இன்றும், செட்டியார் வீடுகளில் இந்த வழக்கம் உண்டு எவ்வளவு பெரிய பணக்காரர் ஆனாலும்,  செட்டியார் மகனை மைத்துனன் கடையிலும், மைத்துனன் மகனைச் செட்டியார் கடையிலும், வேலை பார்க்க வைப்பார்கள். அப்போது தான் அவர்களுக்கு பொறுப்பு வரும் என்று. அதுதான் உண்மையும்கூட!.

சிறுவயதில் பொறுப்புகளைக் கொடுத்துக் கண்காணித்தால் அது சிறுவயதிலே வாழ்வின் சரியான பாதையைக்  காட்டும்.    

மீண்டும் பாதை மாறுகிறேனோ?

தவிர்க்க முடியாமல் கொஞ்சம் சுயபுராணம்....!

பள்ளியில் பிரபலம், ஊரில் இலக்கியக் கூட்டங்களில் பேசி  பிரபலம்,  சிறு வயதிலே சுக்கிரதிசை நடந்தது  எனக்கு. இருந்தும், ஊரறிந்த சிறுவன் நான் என்பதும், என்னை யாரோ கவனித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்ற எனது எண்ணமும், மேடைகளில் பேசும் நான் முதலில் சரியாக நடந்து கொள்ளவேண்டும் என்ற காந்திய எண்ணமும் என்னை இளமைக்கால தவறுகளுக்கு நெருப்பு வேலி போட்டுத் காத்தது எனலாம் .

மற்றவர்கள் நம்மை அங்கீகரிக்க வேண்டும், கெளரவப் படுத்தவேண்டும் என்றதொரு நினைப்பு என்னுள் மேலோங்கியே  இருந்தது!

இலக்கிய மன்றப் போட்டிகள் இனிதே முடிவுற்றது.

பள்ளி இறுதித் தேர்வும் வந்தது! நாங்கள் அனைவரும் நன்றாகவே செய்து இருந்தோம். ஒன்று இரண்டு வாரத்தில்  மதிப்பெண்  விபரங்கள் தெரிய வரும் என்றுக் காத்திருந்தோம்.

மதிப்பெண் பட்டியல் மட்டும் அல்ல! அதோடு பெரிய அதிர்ச்சியும் சேர்ந்தே வந்தது.

கடைசியில் நாங்கள் ஐவரும் வெற்றிப் பட்டியலில் இல்லை, ஜோதி என்றொரு எங்கள் வகுப்பு மாணவி  முதலாவதாக வந்து விட்டாள்.

அவள் முதலாவதாக வந்ததன் ரகசியம் சில நாட்களில், எங்கள் வீதியில் வசிக்கும் எங்கள் வகுப்பு வரலாறு, புவியியல் ஆசிரியரின் மனைவியின் மூலம் தெரிய வந்தது! என் அம்மாவிடம் கூறியிருக்கிறார்கள்.

எனன ரகசியம் அது?

உள்ளூர் பாண்டியன் வாத்தியார் தனது மகளுக்கு மதிப்பெண்களைக் கேட்டு வாங்கிக் கொடுத்து, ஆயிரம் ரூபாயை தட்டிசென்று இருக்கிறார்!

இந்த ஐவரில் ஏழ்மையானவன் நான். என்னைவிட மிகவும் வறுமையானவன் எனது வீதிக்கு பின் வீதியில் இருப்பவனும், எனது நண்பனுமான செல்வகுமார். அவனுக்குத்தான் இந்த பரிசுத்தொகை கிடைத்திருக்க வேண்டும்.

கிடைத்திருந்தால்?  நல்ல சாதம், சாம்பார், ரசம், காய்கறிகள், பாயாசம்
வைத்து நாலு நாளைக்கு அவர்கள் குடும்பமே சாப்பிட்டிருக்கும்.
தலைக்கு  நல்லெண்ணெய் தேய்க்க, ஒரு வழி பிறந்திருக்கும்,
அவனது கிழிந்த  ஆடைகளுக்கு விடுதலை கொடுத்து புதிய ஆடை
அவன் உடம்பில் புதிதாய்ப் பூத்திருக்கும்.  இதற்கெல்லாம் மேலே ஊர்
ஊராய் சென்று பருத்திப் பால் விற்றுவரும் அவனின் அப்பத்தாவிற்கு
ஒரு நாலு  நாளாவது வேலையிலிருந்து  ஓய்வு கிடைத்திருக்கும்.

ம்ம்ம்... என்ன செய்வது, சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி கொடுக்காது என்பார்கள் அதைப் போல.  சில பணப்பிசாசுகளின் ஓரங்க நாடகத்தின் உச்சக்கட்ட அரங்கேற்றம் அது.

இதில், ஒரு வருடம், நகர்புறத்திலிருந்து கிராமத்திற்கு  வந்து படித்தவர்களுக்கு அலைச்சல் தான் மிச்சம். 

ஆனால், ஒன்று இப்படித்தான் வாழவேண்டும் என்று நல்லவர்களிடம் மட்டும் அல்ல, இப்படி வாழக் கூடாது  என்று, சில மாக்களிடமும் நாம் கற்றுக் கொள்ள முடியும்.

சரி இவர்கள் எல்லாம் எங்கு இருக்கிறார்கள்,

அனுராதா தெரியவில்லை....

சங்கர நாராயணனும் நானும் கல்லூரி படிப்பு முடிந்தவுடன் ஒரே கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தோம். ஒரே  தட்டில் சாப்பிடும் அளவிற்கு நெருங்கிய நண்பர்களானோம், அவன் இப்போது சென்னையில் இருக்கிறான்.

ஜோதி (இடைநிலை ஆசிரியை) கணவனின் துரோகத்தால் தற்கொலை செய்து கொண்டாளாம்.

நான், இளங்கோ, செல்வகுமார், மூவரும் இங்கே சிங்கப்பூரில் நல்ல நிலையில் உள்ளோம் என்பது மகிழ்ச்சியான  செய்தி.

உங்கள் பொறுமையை சோதிக்காமல், கடைசியாக ஒன்றே ஒன்றை கூறிக்கொள்கிறேன்....

எனக்கு, ஏதோ கொஞ்சம் எழுத்தும் பேச்சும் வரும்.... ஆனால் செல்வகுமார் எழுதும் கவிதை அவனோடு கை கோர்த்து நிற்கும். ஒரே ஒரு உதாரணம், நாங்கள் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது செல்வகுமார்
வடித்த கவிதையைப் பாருங்கள்..

"கண்டபல பூநாடி காவடைந்த வண்டே - நீ
உண்டபல பூவின் சுண்ணப் பொடியினும்
தாயன்பினும் மேலாகச் சுவைத்தது எதுவோ?"


கவிதை வடிக்க, வீட்டில் சோறு வடிக்க வழியிருக்கக் கூடாது.

கலைவாணி எங்களது வாழ்வில் முழுமையாக வியாபித்து விட்டதால் லக்ஷ்மிக்கு அப்போது இடமில்லாமல்  போய்விட்டது!

லக்ஷ்மி இப்போது அருளிவிட்டாள்  லக்ஷ்மி தனியாக அல்ல அன்னை சக்தியையும் அழைத்து வந்து விட்டாள்.. முப்பெரும் தேவிகளும்
இப்போது எங்களுடன் இருக்கிறார்கள்.

நன்றி!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஆக்கம்:
ஆலாசியம் கோவிந்தசாமி,
சிங்கப்பூர்.

 ஆலாசியம் கோவிந்தசாமியின் எழ்ல்மிகு தோற்றம்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இந்த ஆக்கத்தைப் படித்தவர்கள், பிடித்திருந்தால், பின்னூட்டத்தில் ஒருவரி அதைப்பற்றிச் சொல்லிவிட்டுச் செல்லுங்கள். உங்களின் பாராட்டுக்கள்தான் எழுதுபவர்களுக்கு ஊக்க மருந்து!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

19.8.10

மாலை யாருக்கு? மாப்பிள்ளைக்கா அல்லது மாப்பிள்ளைத் தோழனுக்கா?

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மாலை யாருக்கு? மாப்பிள்ளைக்கா அல்லது மாப்பிள்ளைத் தோழனுக்கா?

கேள்வி - பதில்கள் (இரண்டாவது சீஸன்) பகுதி 10
உங்களின் கேள்விகள் - வாத்தியாரின் பதில்கள்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கண்ணன் சீதாராமன். 29
கத்தார்
வயது 32

கேள்வி:
ஐயா வணக்கம்,
நாஸ்டர்டாமஸைப் பற்றி 1999 வருடத்திற்கு முன்னர் படித்தது ஐயா. மேலும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்  உள்ள தமிழ் மன்றத்தில் கேட்டது ஐயா. முற்கடல்கள் சங்கமிக்கும் இடத்தில் தோன்றும் ஒருவர் உலகையே ஒரு மதம் ஆக்கும் நபர் ஒருவர்  வருவார். அதன் பின்னர் குறிப்பாக இந்தியாவும்  அதன் பக்கத்துக்கு நாடும் மிகவும் சிறப்பாக விளங்கும் என்பது மேற்கண்ட கூற்று உண்மையானால் நமது நாடும் மற்றும்  இந்து மதம் தானே சிறந்து விளங்கும் ஐயா?

வாத்தியாரின் பதில்

மதத்தைப் பற்றி இப்போது எழுதினால் பலருக்கும் மதம் பிடித்துவிடும். அதைப் பிறகு பார்ப்போம். இந்தியா உலகையே ஆளப்போவது என்னவோ உண்மை!
அதை இன்று சொன்னால், மக்கள் நம்ப மாட்டார்கள்.

மக்களுக்கெல்லாம் இரண்டு கவலைகள்தான்:

வயதானவர்களுக்கு (50 வயதிற்கு மேல் - 70 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு): விலைவாசி உயர்வு. சொன்னது கேட்காத மனைவி, மற்றும் பிள்ளைகளை வழிக்குக்கொண்டு வருவது.

இளசுகளுக்கு: (18 -25 வயதுக்காரர்கள்) பல்சர் மோட்டார் சைக்கிள், பஃபிற்கு அழைத்துச் செல்ல வயசிலும் தோற்றத்திலும் தமன்னாவை ஒத்த தோழி! அதாவது அது போன்ற தோழி

நடுத்தர வயதுக்காரர்களுக்கு (26 வயதிற்கு மேல் 49 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு):: இப்போது இருக்கும் வேலையை உதறிவிட்டு, அதிக சம்பளம் வரும் வேலைக்குத் தாவிச் செல்வது. 2,000 சதுர அடியில் சொந்த வீடு வாங்குவது. வாங்கியிருந்தால் மேலும் ஒரு வீடு பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக வாங்குவது.

எழுபது வயதிற்கு மேற்பட்ட பெரிசுகளுக்கு: காலையில் மலச் சிக்கல். இரவில் மனச் சிக்கல் (மருந்து உண்டா?  (நஹீ ஹை!)

நாஸ்ட்ரடாமஸ் நிறைய நம்பிக்கை கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார். மூன்று கடல் சூழ்ந்த நாட்டில், தோன்றும் ஒரு அவதாரபுருசன் 21ஆம் நூற்றாண்டில் உலகையே ஆள்வான் என்று எழுதிவைத்துள்ளார். இந்தியாவின் விரிவடையப்போகும் எல்லைகள் பற்றியும், பாகிஸ்தான் பற்றியும், காஷ்மீர் பிரச்சினை பற்றியும் நிறைய எழுதியுள்ளார். அவை பற்றிய செய்திகள், புத்தகங்கள், பேப்பர் க்ளிப்பிங்குகள் என்னுடைய சேகரிப்பில் உள்ளன. அதை எல்லாம் பதிவில் கொடுத்துப் புயலைக் கிளப்ப விருப்பமில்லை. நேரம் வரும்பொது அவற்றைத் தருகிறேன்.

நீங்கள் கேட்டதால் மாதிரிக்கு ஒன்றே ஒன்றை மட்டும் இன்று பதிவிட்டுள்ளேன். பார்த்துத் தெரிந்துகொள்ளூங்கள்
இது 24 ஆண்டுகளுக்கு முன்னால் Probe India என்னும் மாத இதழில் வந்த கட்டுரை ஒன்றின் பகுதியாகும்

படங்களின் மீது கர்சரை வைத்துக் கிளிக்கினால், படங்கள் பெரிதாகத் தெரியும்.
-----------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------

மூன்று வருடங்களுக்கு முன்பு ESPஐ பற்றி எழுதிய பதிவுகள்
1
http://classroom2007.blogspot.com/2007/03/esp-9.html
2
http://classroom2007.blogspot.com/2007/03/blog-post_08.html

மூன்று வருடங்களுக்கு முன்பு நாஸ்ட்ரடாமஸைப் பற்றி எழுதிய பதிவுகள்
3
http://classroom2007.blogspot.com/2007/03/11.html
4
http://classroom2007.blogspot.com/2007/03/12.html
5
http://classroom2007.blogspot.com/2007/03/13.htmlபடித்துப்பாருங்கள்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மின்னஞ்சல் எண்.30
கணபதி நடராஜா.
   
///////அன்புடன் வணக்கம்
தங்களின் வகுப்பறையில் வெளியில் நின்று படிப்பவன்.//////

(யாரப்பா அங்கே? நம் வகுப்பறையின் வெளியில் நின்று கொண்டிருப்பவர்களை உள்ளே தள்ளிக்கொண்டு  வந்து உட்காரவை)

சுமார் 15  வருடங்களுக்கு முன்பு நெல்லை வந்த எனது குருதேவரிடம் ஒரு இலங்கை அடியார் ஞான உபதேசம் பற்றி சாங்கோபாங்கமாக சொல்லி அருள வேண்டும் என்று கேட்டார் .. அழைத்து வந்தவர் மதுரை அன்பர்!!! குருதேவர் (காசி வாசி ஆடூர் ஸ்ரீ வைத்தியநாத சிவாசாரியார் ) சற்று சிந்தித்து விட்டு... தனிமையில்....ஞானம் எவ்வாறானது என்பது பற்றி விளக்கி கூறினார்கள் .. என்ன கூறினார்கள் என்பது எங்களுக்கு தெரியாது .!!!( குருவுக்கும் சிஷ்யனுக்கும் உள்ள ரகசியம் )அடியாரும் கண்ணீர் ததும்ப கேட்டிருந்து மதுரை திரும்பினார் .சின்னாட்கள் கழித்து குருதேவர் மீண்டும் நெல்லை வந்தபோது அந்த இலங்கை அன்பரை பற்றி கேட்டார்கள் .. அடியார் மதுரையில் ஒரு வாரத்திலே  காலமாகி விட்டார்கள் என்று கூறினார்கள் .குருதேவர் கூறிய வார்த்தை!!!! “அந்த ஜீவன் முக்தியடைய உபதேசம் செய் என்று எனக்கு இறைவன் அருள் பாலிதிருக்கிறார்!!!” என்ன இறைவனின் திரு விளையாடல்.!!!!!!!!!!!!.

சரி கேள்வி??? :- இது போன்ற ஞான உபதேசம் ஒருவருக்கு எந்த மாதிரியான கிரக அமைப்பு இருந்தால் கிடைக்கும் ?எந்த திசை.? எந்த புக்தியல் அருள் கிடைக்கும்? சாதரணாமாக பெரும்பாலானவர்களுக்கு சமய தீட்சை, விஷேட தீட்சை , சிவ பூஜை, ஆச்சாரிய அபிஷேகம், சந்நியாசம் (நிர்வாண தீட்சை என்றும் சொல்வார்கள் முற்றும் துறந்த நிலை.. (not nude ) (இங்குதான் இல்லறத்தானுக்கு ஞான உபதேசம்) உபதேசத்தில் இன்னும் விளக்கங்கள் உண்டு பின்னர் பார்க்கலாம் !!!..
தயவு செய்து விளக்கலாமா??. நன்றி ..///////

இன்னும் விளக்கங்கள் உண்டு பின்னர் பார்க்கலாம் !!!.. என்று கூறிவிட்டு, அடுத்த வரியிலேயே “தயவு செய்து விளக்கலாமா??” என்று என்னைக் கேட்கிறீர்களே? என்ன நியாயம்? உங்களுக்குத் தெரிந்ததை நான் எப்படி விளக்க முடியும்?  இதற்கு நீங்கள் என்னை இரண்டு அடி அடித்திருக்கலாம்:-)))))

லட்சத்தில் ஒருவர் நீங்கள் சொல்லும் ஞான உபதேசம் கேட்கும்
மன நிலைக்கு வரலாம். கேது தசையில் அவ்வாறான நிலைமை
ஏற்பட வாய்ப்பு உண்டு. இல்வாழ்க்கை போதும் என்கின்ற மன
நிலைமை வேண்டும். எட்டாம்  வீட்டிலும், பன்னிரெண்டாம்
வீட்டிலும் ஒன்றிற்கு மேற்பட்ட தீயசக்தி இருக்கும் ஜாதகனுக்கு
அந்த  மனநிலைமை உண்டாகலாம். 

எங்கள் பகுதியில், குன்றக்குடிக்கு அருகில் பாதரக்குடி என்னும் ஊரில் குரு ஒருவர் இருக்கிறார். விருப்பம் உள்ளவர்கள், அவரிடம் சென்று உபதேசம் கேட்டுக் கொள்வார்கள். உபதேசம் கேட்ட பிறகு, அதைக் கடைப் பிடிக்க வேண்டும்.

பொகிற வழிக்குப் புண்ணியம் என்று பலர் உபதேசம் கேட்டுக் கொள்வார்கள்.

தினமும் காலையிலும் மாலையிலும் குளித்து, உடலைச் சுத்தம் செய்து கொண்டு சந்தியாவந்தனம் செய்ய வேண்டும். சிவமந்திரத்தை 108 முறைகள் கவனத்தோடு இரண்டு வேளையும் உச்சரிக்க வேண்டும். எனக்கு அதற்கெல்லாம் பொறுமை இல்லை. நேரமும் இல்லை! அத்துடன் போகிற வழிக்கு பழநிஅப்பன் துணைக்கு வருவான் என்னும் அசாத்திய நம்பிக்கை எனக்கு உண்டு. ஆகவே அதைக் கேட்டுக் கொள்ளவும் இல்லை!

இது மட்டுமே - அதாவது இந்த அளவு மட்டுமே என்னுடைய உபதேச அறிவு.

நீங்கள் குறிப்பிட்டுள்ள சமய தீட்சை, விஷேட தீட்சை, சிவ பூஜை, ஆச்சாரிய அபிஷேகம், சந்நியாசம் (நிர்வாண தீட்சை என்றும் சொல்வார்கள் முற்றும் துறந்த நிலை.. (not nude ) எல்லாம் என்னுடைய எல்லைக்கு அப்பாற்பட்ட மேட்டர்கள். அவை பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது.

புலவுசாதம், புளியோதரை, அப்பளம், தயிர்சாதம், ஊறுகாய், தமன்னா,
“அடடா மழைடா அடைமழைடா பாடல்,” வலைப் பதிவு, சிறுகதைகள், மனவளக்கட்டுரைகள், ஜோதிடம், பின்னூட்டம் என்று இப்போது உள்ள வாழ்க்கைக்கு ஒரு முடிவு கட்டிவிட்டால், நீங்கள் சொல்லும் உலகத்தை எட்டிப் பார்க்கலாம். அதற்குப் பழநிஅப்பன் அனுமதி கொடுக்க வேண்டும். கொடுத்தால் பார்க்கிறேன். தெரிந்தால் பிறகு சொல்கிறேன். இப்போதைக்கு நோ சான்ஸ். மன்னிக்கவும் நண்பரே!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
மின்னஞ்சல் எண்.31
M.நித்தியானந்தம். 
கரையாம்பாளையம்
பல்லடம்
வயது 49
   
குருவுக்கு வணக்கம்

1. ராசிக்கட்டத்தில் பனிரெண்டாம் வீடு ரிஷபம் அம்சத்தில் ரிஷபத்தில் சந்திரனும் ராகுவும் நீசபங்கம் இந்த அமைப்பு சந்திரனுக்குவலிமையைத் தருமா?அல்லது ராகுவுக்கா? மேலும் அந்த இடம் விரையஸ்தானமாக இருப்பதால் விரையத்தை அதிகப்படுத்துமா ? அல்லது வேறு பலன்களா?

வரதட்சனை யாருக்குக் கிடைக்கும்? மாப்பிள்ளைக்கா அல்லது
மாப்பிள்ளைத் தோழனுக்கா?
மாலை யாருக்கு? மாப்பிள்ளைக்கா அல்லது மாப்பிள்ளைத்
தோழனுக்கா?
வலிமை யாருக்குக் கிடைக்கும் ரிஷபத்தில் உச்சம் பெற்ற சந்திரனுக்கா அல்லது சந்திரனின் தோழனாக - நீச பங்கத்திற்குக் காரணமான ராகுவிற்கா? ராகு அங்கே நீசம்தான். விரைய ஸ்தானம் என்பதால் வரதட்சனை வராமல் போகாது.மாலை கிடைக்காமல் போகாது. யோகத்தின் பலன் கிடைக்கும். குறைவாகக் கிடைக்கும். (எவ்வளவு குறையும் என்று அடுத்த சந்தேகத்தைக் கேட்காதீர்கள்)

2. அனுஷம் முதலான சில நட்சத்திரங்களுக்கு திருமணப் பொருத்தம் தேவையில்லை என்று ஜோதிடர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். அவை எந்தெந்த நட்சத்திரங்கள்? என்ன காரணம்?

மதுரையில் நடந்த அடிதடி சண்டைக்கு, திருச்சிக்கு வந்து போலீஸில் புகார் கொடுத்தால் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். புகாரை நீங்கள் மதுரையில்தான் கொடுக்க வேண்டும்.

அதைப்போல அனுஷம் முதலான சில நட்சத்திரங்களுக்கு திருமணப் பொருத்தம் தேவையில்லை என்று ஜோதிடர்கள் சொல்லக் கேட்டதை, நீங்கள் கேட்ட இடத்திலேயே தெளிவு படுத்திக் கொள்வதுதான் நல்லது.
அது பற்றி எனக்கு தெரியாது. நான் கேள்விப்படவில்லை!
=====================================================
மின்னஞ்சல் எண். 32
S.R Iyer
முழுப்பெயர்: சிவராமச்சந்திர ஐயர்
மும்பை
வயது 60
   
ANBULLA AYYAH,
JOTHIDATHIL 36 KARAGATWAM PATTRI EZHUTHI IRUKKIREERKAL.  AVAI ENNA ENPATHU KURITTHU VIVARAMAI KURIPPIDUNGAL.
Nanri
Ramachandran

முன்பே குறிப்பிட்டு எழுதியிருக்கிறேன். நீங்கள் பழைய பாடங்களை வரிசையாகப் படித்திருந்தால் உங்கள் கண்ணில் பட்டிருக்கும். இப்போது அதைத தேடி எடுப்பது சற்றுச் சிரமம். ஆகவே உங்களுக்காக அதை மீண்டும் கொடுத்துள்ளேன்: கீழே உள்ளது.


 +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
(தொடரும்)

வாத்தியார் வெளியூர்ப் பயணம். இரண்டு நாட்கள் வகுப்பறைக்கு விடுமுறை! அடுத்த வகுப்பு 23.8.2010 திங்களன்று. இடையில் ஞாயிறன்று வழக்கம்போல வாரமலர் உண்டு. வாரமலரை அலங்கரிக்கப்போவது யார்?
அது சஸ்பென்ஸ்!

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!