மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

30.6.10

Which is the greatest of all human blessings? ஜென்மம் எடுத்ததற்கான உன்னத வரம் எது?


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Which is the greatest of all human blessings?  
ஜென்மம் எடுத்ததற்கான உன்னத வரம் எது?

எல்லோரும் வாழ்க்கையைப் பயணம் என்பார்கள். பயணத்திற்கு ஒரு துவக்கம் இருப்பதுபோல ஒரு முடிவும் இருக்கும். மரணம்தான் வாழ்க்கைப் பயணத்தின் முடிவு.

கவியரசர் கண்ணதாசன் வாழ்க்கையை வேறு கண்ணோட்டத்தில் பார்த்தார். வாழ்க்கையை வியாபாரம் என்றார். வியாபாரத்தில் வரவும் இருக்கும்; செலவும் இருக்கும்.ஜனனத்தை அவர் வரவு வைக்கச் சொன்னார். மரணத்தைச் செலவு எழுதச்சொன்னார்.

பாடலைப் பாருங்கள்:

போனால் போகட்டும் போடா! - இந்த
பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
(போனால்)

வந்தது தெரியும், போவது எங்கே?
வாசல் நமக்கே தெரியாது!
வந்தவரெல்லாம் தங்கி விட்டால் இந்த
மண்ணில் நமக்கே இடமேது?

வாழ்க்கை என்பது வியாபாரம் - அதில்
ஜனனம் என்பது வரவாகும் - வரும்
மரணம் என்பது செலவாகும்
போனால் போகட்டும் போடா...!
(போனால்)


இரவல் தந்தவன் கேட்கின்றான் அதை
இல்லையென்றால் அவன் விடுவானா?
உறவைச் சொல்லி அழுவதனாலே
உயிரை மீண்டும் தருவானா?

கூக்குரலாலே கிடைக்காது - இது
கோர்ட்டுக்குப் போனால் ஜெயிக்காது - அந்தக்
கோட்டையில் நுழைந்தால் திரும்பாது
போனால் போகட்டும் போடா...!
(போனால்)

நமக்கும் மேலே ஒருவனடா - அவன்
நாலும் தெரிந்த தலைவனடா - தினம்
நாடகம் ஆடும் கலைஞனடா
போனால் போகட்டும் போடா...!
(போனால்)

போனால் போகட்டும் போடா, என்று சர்வ அலட்சியத்துடன் பாடலைத் துவக்கியவர்,  கூக்குரலாலே உயிர்  திரும்பக் கிடைக்காது, கோர்ட்டுக்குப் போய் ரிட் பெட்டிஷன் போட்டாலும் ஜெயிக்காது, எமனின் கோட்டையில்
நுழைந்தவர்கள் யாரும் திரும்ப முடியாது என்று யதார்த்த உண்மைகளைச் சொன்னவர், முத்தாய்ப்பாய், ஆறுதலாய், நமக்கும் மேலே ஒருவனடா என்று சொல்லிப் பாடலை நிறைவு செய்தார்!

அதோடு கட்டுரை ஒன்றில் அவர் எழுதியிருந்தார்: “எமன் வந்து கூப்பிட்டால் அவனுடன் செல்வதற்கு நீ தயாராக  இருக்கிறாயா? இருந்தால், நீ அதிர்ஷ்டசாலி!” என்றார்.

அப்படி எத்தனை பேர்கள் இருக்கப்போகிறார்கள்?

நூற்றுக்கு ஒருவர் இருந்தால் ஆச்சரியமே!

எமனிடம் தாவா செய்ய முடியுமா?

எமன் வந்தவுடன், நம்மால் அவனிடம் இப்படிக் கேட்க முடியுமா?

“அப்பனே சற்று இரு; எல்லாவற்றையும் ஒழுங்கு பண்ணிவிட்டு வருகிறேன். என் மனைவி அப்பாவி. வீட்டுச் சாவிகளை எல்லாம் எங்கே வைத்திருக்கி றேன், ரேசன் கார்டை எங்கே வைத்திருக்கிறேன் என்கின்ற சிறு
விஷயங்கள்  கூட அவளுக்குத் தெரியாது. கொடுக்கல், வாங்கலில் யாராரிடம், எவ்வளவு பணம் வாங்கியிருக்கிறேன், யாராருக்கு எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என்பது போன்ற சிக்கலான விஷயங்களும் அவளுக்குத் தெரியாது. எனக்குப் பின்னால் என்னுடைய மகனும், மருமகளும் சேர்ந்து, அவளுக்கு
உதவ மாட்டார்கள். அவள் தெருவில் நிற்கும்படியாகிவிடலாம்! அதனால் உயில் எழுதிப் பதிய வேண்டும். அதையும் செய்து விடுகிறேன். எனக்கு ஒருவாரம் அவகாசம் கொடு!”

இல்லை. கேட்டவுடன், அவர் கொடுக்கத்தான் போகிறாரா?

கண் இமைக்கும் நேரத்தில் எல்லாம் முடிந்துவிடும்!

மரணப் படுக்கையில் படுத்திருப்பவன்கூட, வைத்தியர் நம்மைக் காப்பாற்றி விடுவார், சிகிச்சை முடிந்து வீட்டிற்குத் திரும்பிவிடலாம் என்கின்ற நம்பிக்கையோடுதான் படுத்திருப்பான்.

என்ன காரணம்?

எந்த மனிதனுமே மரணத்தை எதிர்கொள்ள விரும்புவதில்லை! அதுதான் காரணம்
-------------------------------------------------------------------------------------------
ஒரு குழந்தை பிறப்பதில் இரண்டு வகைகள் இருக்கின்றன. சுகப்பிரசவம். தாயின் வயிற்றைச் சற்றுக் கிழித்துக்கொண்டு சிசேரியன் செய்யப்பட்டுப் பிறக்கும் குழந்தை.

மேலோட்டமாகப் பார்த்தால் மரணத்திலும் இரண்டுவகைதான். இயற்கையான மரணம் அல்லது துர் மரணம் (அகால மரணம்)

என்ன வேண்டுமென்றாலும் சொல்லுங்கள் மரணம் மரணம்தான். இழப்பு இழப்புத்தான். சாதாரண இழப்பல்ல. ஒரு உயிரின் இழப்பு.

தமிழில் மரணத்தை நாசுக்காகச் சொல்லும்போது, இறைவனடி சேர்ந்து விட்டார் என்போம். எங்கள் பகுதியில் சிவபதவி அடைந்துவிட்டார் என்று சொல்வார்கள். இயற்கை எய்திவிட்டார் என்றும் சொல்வார்கள். சிலர்
மரணத்தை வைகுண்டப் பிராப்தி அடைந்துவிட்டார் என்பார்கள்!
------------------------------------------------------------------------------------------
இதய‌ம் துடி‌ப்பது ‌‌நி‌ன்று‌வி‌ட்டா‌ல் அதை‌த்தா‌ன் மரண‌‌ம் எ‌ன்று நா‌ம் கு‌றி‌ப்‌பிடுவோ‌ம். ஆனா‌ல் மருத்துவ உலக‌ம்  எ‌ன்ன சொ‌ல்‌கிறது?

உட‌ல் செ‌ல்க‌ளி‌ன் இய‌க்க‌ம் ‌நி‌ன்று போவதுதா‌ன் மரண‌ம் எ‌ன்‌கிறது மரு‌த்துவ‌ம்.
இதய‌ம் செய‌ல்படாம‌ல் ‌நி‌ன்று ‌வி‌ட்ட ‌பிறகு‌ம், மூளையானது இய‌ங்‌கி‌க் கொ‌ண்டிரு‌க்கு‌ம். ‌சில நேர‌ங்க‌ளி‌ல் 2 ம‌ணி நேர‌ம் வரை கூட மூளை இய‌ங்‌கி‌க் கொ‌ண்டிரு‌ப்பது உ‌ண்டு. இது ‌கி‌ளி‌னி‌க்க‌ல் டெ‌த் எ‌ன்று அழை‌க்க‌ப்படு‌கிறது.
‌பி‌ன்ன‌ர்தா‌ன் மூளை‌யி‌ன் இய‌க்கமு‌ம் ‌நி‌ன்று போ‌கிறது. இதை செ‌ரிபர‌ல் டெ‌த் எ‌ன்று கு‌றி‌ப்‌பிடு‌கிறா‌ர்கள‌்.

இ‌ப்போதுதா‌ன் ஒருவ‌ர் உ‌ண்மை‌யிலேயே மரண‌ம் அடை‌ந்ததாக கருத‌ப்படு‌கிறது.

‌விப‌த்‌தி‌ல் ‌சி‌க்‌கி தலை‌யி‌ல் காய‌ம் அடை‌ந்தவ‌ர்களு‌க்கு ‌சில சமய‌ங்க‌ளி‌ல் மூளை தனது இய‌க்க‌த்தை ‌நிறு‌த்‌தி‌யிரு‌க்கு‌ம். ஆனா‌ல் இதய‌ம் இய‌ங்‌கி‌க் கொ‌ண்டிரு‌க்கு‌ம். இ‌ப்படி‌ப்ப‌ட்டவ‌ர்களது உட‌ல்க‌ள்தா‌ன் தானமாக
அ‌ளி‌க்க‌ப்படு‌கிறது. எனவே, மூளையு‌ம், இதயமு‌ம் த‌ங்களது இய‌க்க‌த்தை ‌நிறு‌த்துவதே மரணமாகு‌ம்.

Death is the termination of the biological functions that define a living organism. The word refers both to a particular process and to the condition that results thereby.
----------------------------------------------------------------------------------------------
மரணத்தை விரிவாகச் சொல்வதற்குத்தான் எத்தனை சொற்கள் இருக்கின்றன?

Died - சாவு, மரணம்

Expired - காலாவதியாகுதல். இறந்து போதல்

killed - put to death - கொல்லப்படுதல். பொதுவாக விபத்தில் இறப்பவர்களுக்கு இந்தச் சொல்லைப் பயன்படுத்துவார்கள்

Murdered - The unlawful killing of one human by another - கொலை செய்யப்பட்டு இறப்பதைக் குறிக்கும் சொல்

Assassination - An assassination is the targeted killing of a public figure, usually for political purposes. பிரபலங்கள், தலைவர்கள் கொல்லப்பட்டு இறக்கும்போது இந்தச் சொல்லைப் பயன்படுத்துவார்கள்

Strangled to death - To kill by squeezing the throat so as to choke or suffocate; throttle. கழுத்தை நெறித்துக் கொல்லப்படும் நிலைமை

Suffocated to death - To kill or destroy by preventing access of air or oxygen. மூச்சுத்திணறி இறக்கும் நிலைமை

Drowned to death - To kill by submerging and suffocating in water or another liquid. தண்ணீரில் மூழ்கி இறத்தல்

Killed in a stampede - A sudden headlong rush or flight of a crowd of people. கூட்ட நெரிசலில் சிக்கி இறத்தல்

Deceased - a more formal word for dead  - செத்துப்போனவரைக் குறிக்கும் யதார்த்தமான சொல்

Died in the fire accident - தீ விபத்தில் இறத்தல்

Shot dead - சுடப்பட்டு இறத்தல்

Hanged - தூக்கில் இடப்பட்டு இறத்தல் அல்லது தூக்கில் தொங்கி இறத்தல்

Suicide - The act or an instance of intentionally killing oneself. உயிரை மாய்த்துக்கொள்ளுதல். தற்கொலை

Poisoned to death -  விஷம் வைத்து அல்லது கொடுத்துக் கொல்லப்படுதல்

Electocuted - killed by an electric current - மின்சாரம் தாக்கி இறத்தல்

இன்னும் பல சொற்கள் உள்ளன: homicide, infanticide, fratricide, sororicide, matricide,patricide, parricide regicide.

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.

இத்தனை வகைவகையான, விரிவான சொற்கள் பிறப்பிற்குக் கிடையாது. அதை மனதில் கொள்க!
=====================================================
சரி, சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன்.

Which is the greatest of all human blessings?

மரணம்தான் அது.

உரிய காலத்தில் வலியில்லாமல், நாம் அறியாமல் உயிர் நம்மைவிட்டுப் பிரியும் நிலை இருக்கிறதே, அதுதான் உன்னதமான வரம். ஒவ்வொரு மனிதனுக்கும் அந்த வரம் கிடைக்க வேண்டும். அந்த வரம் கிடைத்திருக் கிறதா?  அல்லது இல்லையா என்பதைச் சொல்லும் இடம்தான் எட்டாம் வீடு!

“சாவை, வரம் என்கிறீர்களா? என்ன சொல்ல வருகிறீர்கள்?”

நான் சொல்லவில்லை சுவாமி! அதைச் சொன்ன ஞானியின் பெயருடனே அந்த வைர வரிகளைக் கீழே  கொடுத்துள்ளேன்

அதை நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்:

Death may be the greatest of all human blessings.  ~ Socrates

மரணம்தான் மனிதனுக்குக் கிடைத்த உன்னதமான வரம்!
--சாக்ரட்டீஸ்

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!

28.6.10

எதற்காகக் கலங்கினார் கிருஷ்ண பரமாத்மா?

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எதற்காகக் கலங்கினார் கிருஷ்ண பரமாத்மா?

“இரு விழிப்பு நிலைகளுக்கு இடையே நிலவுவது தூக்கம். அவ்வாறே, இரு பிறவிகளுக்கிடையே நிகழ்வது இறப்பு. இரண்டும் தற்காலிகமே!”
------ரமண மகரிஷி

“உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு”

------திருவள்ளுவர்
-----------------------------------------------------------------------------
குருஷேத்திர யுத்தம் கடுமையாக நடந்துகொண்டிருந்த காலம்.

14ஆம் நாள் அதிகாலை

பகவான் கிருஷ்ணர் தன் மனதிற்கு இனிய அர்ஜுனனை அமரவைத்து மரணத்தின் தன்மையை, மேன்மையை எடுத்துச் சொல்லிக்கொண்டிருந்தார்.

“என் இனிய அர்ஜுனா, மரணம் அனைவருக்கும் பொதுவானது. ஒருவன் பிறந்த அன்றே அவனுடைய இறக்கும் நாளும் நிச்சயிக்கப்பட்டு விடுகிறது. ஒவ்வொருவருவனும், ஒவ்வொரு நாளும் மரணத்தை நோக்கித்தான் அடியெடுத்து வைத்துக்கொண்டிருக்கிறான் (நடந்து கொண்டிருக்கிறான்) மரணத்தை யாராலும் தவிர்க்க முடியாது. மரணத்தை யாராலும் வெல்ல முடியாது. உடம்பிற்குத்தான் மரணம். ஆன்மாவிற்கு அல்ல! மரணத்திற்காக வருத்தம் கொள்வதில் பயனில்லை.”

என்று சொல்லிப் பல உதாரணங்களுடன் விளக்கியவர், இறுதியில் கேட்டார், “இன்றையப் பாடத்தில் என்ன தெரிந்துகொண்டாய்?”

அர்ஜுனன் சொன்னான். “மரணத்தைக் கண்டு பயப்படக்கூடாது, வருத்தப்படக்கூடாது என்று தெரிந்து கொண்டேன்!”

“சரி, வா, யுத்தகளத்திற்குப் புறப்படலாம்” என்று சொன்ன கிருஷ்ணர், சங்கை எடுத்து ஊதினார்.
------------------------------------------------------------------------
அர்ஜுனன் ஏறிக்கொள்ள சாரதியாகச் செயல்பட்ட கிருஷ்ணர் தேரைச் செலுத்தினார்.

பொழுது புலர்ந்தும் புலராத அதிகாலை நேரம். ஓடு பாதை மங்கலான வெளிச்சத்தில் கீற்றாகத் தெரிந்தது.

சற்று தூரம் சென்றவுடன், ஓடு பாதையில் கிடக்கும் சடலம் ஒன்றைப் பார்த்தவுடன், கிருஷ்ணர் தேரை நிறுத்தினார்.

அர்ஜுனனும் அதைக் கண்ணுற்றான். தேரைவிட்டுக் கீழே குதித்தவன், இறந்து கிடப்பவன் யாரென்று தெரிந்து கொள்ளும் நோக்குடன், அருகே சென்று பார்த்தான்.

அவனுடைய இதயம் சுக்கு நூறாக உடைந்தது. துக்கத்தை அவனால் கட்டுப் படுத்த முடியவில்லை!

ஆமாம், இறந்து கிடந்தது அவனுடைய தவப்புதல்வன் அபிமன்யு.

மகனின் பூத உடலைத்தூக்கித் தன் மடிமீது கிடத்திக்கொண்டவன், துக்கத்தை அடக்க முடியாமல் கண்ணீர்விட்டு அழுதான்.

ஐந்து நிமிடங்கள் கழிந்திருக்கும்.

அப்போதுதான் அது நிகழ்ந்தது.

பரந்து விரிந்த அவன் தோள்களின் மீது இரண்டு சொட்டுக் கண்ணீர் விழுந்தது.

திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தான்.

கிருஷ்ண பகவான் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர்தான் தன் தோள்களின் மீது விழுந்ததை அவன் உணர்ந்தான்.

தன் மகனின் சடலத்தைக் கிடத்தியவன், எழுந்து நின்று கேட்டான்:

“நான் என் மகன் என்பதற்காக அழுதேன். உங்கள் கண்களில் கண்ணீர் எதற்கு? எதற்காகக் கலங்குகிறீர்கள்?”

பகவான் சலனமற்றுப் பொறுமையாகச் சொன்னார்:

“உன் மகனுக்காக நான் கலங்கவில்லை! இப்படி நடக்கும் என்று தெரிந்துதான், இன்று அதிகாலை உனக்கு நான் மரணத்தைப் பற்றிப் போதித்தேன். என் போதனைகள் வீணாகி விட்டது பார்த்தாயா? அதற்காகக்தான் வருந்துகிறேன்!
------------------------------------------------------------------------------------------------------
“வாத்தி (யார்), எதற்காக இந்தக் கதை?”

“இன்னுமா தெரியவில்லை? அடுத்த தொடர் பாடத்திற்கான முன்னோட்டம் தான் இது? ஆமாம், அடுத்த பாடம், நீங்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் எட்டாம் வீட்டைப் பற்றிய பாடம். விரிவாக எழுதிப் பதிவிட உள்ளேன். அது ஜூலைத் திங்கள் முதல் தேதியில் இருந்து துவங்கும்!”

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!

26.6.10

எப்போது மூத்தவள் வழிபார்த்துப் போவாள்?

--------------------------------------------------------------------------------
எப்போது மூத்தவள் வழிபார்த்துப் போவாள்?

புகழ் பெற்ற பாடல்கள் - பகுதி 9

Òகழ் பெற்ற பாடல் என்றால் என்ன? இறைவனின் புகழைப் பாடும் பாடல்கள் எல்லாம் புகழ் பெற்ற பாடல்கள்தான்!
------------------------------------------------------------------------
பாடியவர் : டி எம் சௌந்தரராஜன்
ஆக்கம்: எம்.பி. சிவம்
இராகம்: மஹேஸ்வரி

கந்தன் திருநீறணிந்தால் கண்டபிணி ஓடிவிடும்
குந்தகங்கள் மாறி இன்பம் குடும்பத்தை நாடி வரும்
கந்தன் திருநீறணிந்தால் கண்டபிணி ஓடிவிடும்
குந்தகங்கள் மாறி இன்பம் குடும்பத்தை நாடி வரும்
கந்தன் திருநீறணிந்தால் கண்டபிணி ஓடிவிடும்

சுந்தரவேல் அபிஷேக சுத்தத் திருநீறணிந்தால்
சுந்தரவேல் அபிஷேக சுத்தத் திருநீறணிந்தால்
வந்தமர்ந்த மூத்தவளும் வழிபார்த்துப் போய்விடுவாள்
அந்த நேரம் பார்த்திருந்த அன்னை செல்வம் ஓடிவந்து
அந்த நேரம் பார்த்திருந்த அன்னை செல்வம் ஓடிவந்து
சிந்தையைக் குளிரவைக்க சொந்தம் கொண்டாடிடுவாள்

கந்தன் திருநீறணிந்தால் கண்டபிணி ஓடிவிடும்
குந்தகங்கள் மாறி இன்பம் குடும்பத்தை நாடி வரும்

மணம் மிகுந்த சாம்பலிலே மகிமை இருக்குதடா
மணம் மிகுந்த சாம்பலிலே மகிமை இருக்குதடா
மனமுடன் அணிவோர்க்கு மகிழ்ச்சியைப் பெருக்குதடா
தினம்தினம் நெற்றியிலே திருநீறு அணிந்திடடா
தினம்தினம் நெற்றியிலே திருநீறு அணிந்திடடா
தீர்ந்திடும் அச்சம் எல்லாம் தெய்வம் துணை காக்குமடா

கந்தன் திருநீறணிந்தால் கண்டபிணி ஓடிவிடும்
குந்தகங்கள் மாறி இன்பம் குடும்பத்தை நாடி வரும்
கந்தன் திருநீறணிந்தால் கண்டபிணி ஓடிவிடும்
குந்தகங்கள் மாறி இன்பம் குடும்பத்தை நாடி வரும்

-------------------------------
அருஞ்சொற்பொருள்;

குந்தகங்கள் - ஒரு ஒழுங்கில் இருப்பதைக் குலைத்துவிடக்கூடிய கேடு; கெடுதல்!
மூத்தவள் -  மூத்தவள் மூதேவி (இளையவள் ஸ்ரீதேவி)
மணம் மிகுந்த சாம்பல் - திருநீறு
-------------------------------
மேலதிகத்தகவல்

பகவான் கிருஷ்ணரிடம், ஸ்ரீதேவியும், அவள் சகோதரி மூதேவியும் சென்று கேட்டார்கள்

“கிருஷ்ணா, எங்கள் இருவரில் யார் அழகு?”

புன்னகைத்த பகவான் சொன்னார், “இருவருமே அழகு!”

விடவில்லை. தொடர்ந்து கேட்டார்கள்

“நீங்கள் ஒருவரை மட்டும்தான் குறிப்பிடவேண்டும். இருவரில் யார் அதிகமான அழகு?”

பகவான் அற்புதமாகப் பதில் சொன்னார்:

”ஸ்ரீதேவி, நீ வரும்போது அழகு: மூதேவி நீ போகும்போது அழகு!”
--------------------------------------------------------------------------------------------
இதைவைத்துக் கவியரசர் கண்ணதாசன் ஒரு குட்டிக்கதை சொல்வார். உங்களுக்காக அதைக் கீழே  கொடுத்துள்ளேன்

ஒரு செல்வந்தர் இருந்தார். ஊருக்கு வெளியில் - அதாவது நுழைவாயிலில் ஒரு கோடி ரூபாய் செலவில் புதிதாக வீடு ஒன்றைக் கட்டினார். வெள்ளிக்கிழமை அதிகாலையில் கணபதி ஹோமம், புதுமனை புகுவிழா, காலைச் சிற்றுண்டி, மதிய விருந்து என்று எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்தார்.

அதற்கு முந்தைய வியாழக்கிழமையும் முகூர்த்த நாள்தான். அன்று அதிகாலை, பிரம்ம முகூர்த்தத்தில் தன் புதுவீட்டில் மங்கலகரமான சொல் ஒலிக்க வேண்டும் என்பதற்காக, தன் வீட்டு வேலைக்காரப் பெண்ணை  (அவள்  பெயர் ஸ்ரீதேவி)  புதன்கிழமை இரவு அங்கே போய்த் தங்கியிருக்கச் சொல்லிவிட்டார்.

குறிப்பிட்ட அந்த நேரத்தில், அவர் தன் நண்பருடன், அங்கே சென்று கதவைத் தட்டி உள்ளே யார்? என்று  கேட்க, வேலைக்காரப் பெண், அய்யா,  நான்தான் (உங்கள்)  ஸ்ரீதேவி என்று மங்கலகரமாகச் சொல்வாள் என்று  எதிர்பார்த்தார்.

விதி யாரை விட்டது?

அவளுக்கு இந்த விவரம் முழுமையகத் தெரியாது. செல்வந்தர், அந்த வீட்டில் தன்னைக் காவலுக்காகப்  படுத்துக்கொள்ளச் சொல்கிறார்  என்று  நினைத்து விட்டாள்.

அவள் பச்சைப் பிள்ளைக்காரி. அதாவது கைப்பிள்ளைக்காரி. குழந்தையை வீட்டில் தன் மூத்த சகோதரியிடம்  விட்டு விட்டுவந்துதான் செல்வந்தர் வீட்டில் அவள் வேலை செய்வது வழக்கம்.  அன்றும்  அப்படித்தான்
செய்திருந்தாள்..

அன்று  இரவு அவளைக் காணாமல், குழந்தை விடாது அழுது கூக்குரல் கொடுக்க, சகோதரி, அவளைத் தேடிவந்துவிட்டாள். வந்ததோடு மட்டு மல்லாமல்,  “நம் வீட்டிற்குப் போய் குழந்தையை நீ பார்த்துக்கொள். புதுவீட்டிற்குக் காவலாக நான் படுத்துக் கொள்கிறேன்.” என்று சொல்லித் தங்கையை  அனுப்பியும் வைத்துவிட்டாள்
-----------------------------------------
பொழுது புலர்ந்தது. தன் நண்பருடன் அங்கே ஆர்வமுடன் வந்த செல்வந்தர், கதவைத் தட்டியதோடு, அதே  வேகத்தில் கேட்டார்:

”வீட்டிற்குள்ளே யார்?”

சட்டென்று பதில் வந்தது.

“அய்யா, நான் தான் லெட்சுமியின் அக்கா!”
-----------------------------------------------------------------------------------------------
எப்படி இருக்கிறது கவியரசரின் கதை?

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!

24.6.10

வரலாற்றுச் சிறப்புமிக்க விழாவும், வரலாறு காணாத குழப்பங்களும்!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++                
வரலாற்றுச் சிறப்புமிக்க விழாவும், வரலாறு காணாத குழப்பங்களும்!

செம்மொழி மாநாட்டில் பிரதான அரங்கம் தவிர சிறப்பு அழைப்பாளர்களுக்கென 5 அரங்கங்கள். ஏற்பாடுகள் எல்லாம் அருமையாக இருந்தது. ஆனால் இட, மற்றும் நேர நெருக்கடியால் தொழில் நுட்ப வல்லுனர்களின் ஆய்வரிக்கை களுக்கும், கலந்துரையாடல்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து, எங்களைப் போன்ற (வெட்டிப்) பதிவர்களுக்கு உரிய இடமில்லாமல் செய்துவிட்டார்கள். பேசுவதற்கு ஆர்வத்துடன் சென்றவர்கள் பேசமுடியாமல் திரும்பிவிட்டோம்.

நடந்ததை விவரிக்க விரும்பவில்லை. எங்களை அழைத்தவர்களுக்கு அது மன உளைச்சலைக் கொடுக்கலாம். ஆகவே அதை விவரிக்கவில்லை!

இருந்தாலும், எனது பேச்சிற்காக எடுத்துச் சென்ற குறிப்பை முன்பே சொன்னபடி உங்களூக்குச் சமர்ப்பிக்கிறேன். இன்று ஒருநாள் மட்டும் நம் வகுப்பறையை செம்மொழி மாநாட்டு அரங்கமாக மனதில் வரித்துக்  கொண்டு எனது உரையைக் கேட்டு......ஸாரி .....படித்து (முடிந்தால்) மகிழவும்

அன்புடன்
வாத்தியார்

அங்கே உரை நிகழ்த்தமுடியாமல் போனதில் எனக்கு எந்தவித  நஷ்டமுமில்லை. எந்தவித  லாபமுமில்லை. எந்தவித வருத்தமுமில்லை! அதை மனதில் கொள்க!
---------------------------------------------------------------------------------------------------------------------------

                                              இனியது, இனியது  இணையம்!
                                             ----------------------------------------------                   

இந்த இனிய பிற்பகல் பொழுதில் அரங்கில் திரளாகக் கூடியிருக்கும் உங்கள் அனைவரையும்  வணங்கி மகிழ்கிறேன்!

இலட்சக்கணக்கான மக்கள் கலந்துகொள்கின்ற இந்தப் பிரம்மாண்ட தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்குச் சிறப்பாக ஏற்பாடு செய்து கொடுத்திருக்கும் தமிழக முதல்வர், மாண்புமிகு கலைஞர் அய்யா அவர்களை வணங்கி மகிழ்கிறேன். அவரின் இளவல், துணை முதல்வர், திரு.மு.க.ஸ்டாலின் அவர்களையும் வணங்கி மகிழ்கிறேன்.

''யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவ தெங்குங் காணோம்
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்.''


என்று கூறினார் முண்டாசுக் கவிஞர் பாரதியார்!

நம் அன்னைத் தமிழுக்கு நம்மாலான சேவையைச் செய்ய  வேண்டும்! செய்வோம்!

தாய் மொழியில் பேசும்போது, அல்லது கேட்கும்போது அல்லது எழுதும்போதுதான் மனதிற்கு ஒரு நிறைவு கிடைக்கிறது. அந்த நிறைவை, அந்த மகிழ்வை, எந்த வேற்று மொழியும் தராது. நீங்கள் எத்தனைதான் அதில் பாண்டித்யம் அல்லது மேன்மை பெற்றிருந்தாலும் அது தராது.

தாய்க்கு எப்படி மாற்று இல்லையோ, அப்படித் தாய்மொழிக்கும் இணையான மாற்றுக் கிடையாது.

இசைஞானி இளையராஜா அவர்கள் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பிய அமெரிக்க நாடுகளுக்குச் சுற்றுலாச் சென்றிருந்தார். அவர் திரும்பியவுடன், முன்னனித் தமிழ் வார இதழ் ஒன்று, அவருடைய பயண அனுபவத்தைக் கட்டுரையாக எழுதிக் கேட்க, அதை அவர் ஒரு  தொடர் கட்டுரையாக எழுதினார். முதல் அத்தியாயத்தின் முதல் பத்தியே அசத்தலாக இருக்கும்.

இளையராஜா இப்படி எழுதியிருந்தார்:

”நியூயார்க் விமான நிலையத்தைச் சென்றடைந்தேன். விமானத்தைவிட்டுக் கீழே இறங்கினேன்.வானத்தைப் பார்த்தேன். நம்மூரில் தெரியும் அதே சூரியன்தான் அங்கே தெரிந்தது. செல்வச் சீமானின் பூமி என்பதற்காக சூரியன் அங்கே மேக்கப் போட்டுக் கொண்டுவரவில்லை. நம்மூரில்  தெரியும் அதே சூரியன்தான் அங்கேயும் தெரிந்தது!”

என்னவொரு கண்ணோட்டம் பார்த்தீர்களா?

அந்தக் கண்ணோட்டம்தான் அவரை ஞானியாக்கியது.   

“சொர்க்கமே என்றாலும், அது நம்மூரு போலாகுமா?” என்று காலத்தால் நிலைத்து நிற்கும் பாடல் ஒன்றையும் பதிவு செய்து கொடுத்தவர் அவர்!

நமது மண், நமது மொழி தருகின்ற இனிமையை வேறு எதுவும் தராது!

வெறும் சோற்றைத் திங்க முடியாது. சோற்றின் மீது கெட்டித் தயிர் ஊற்றி, சிறிது உப்புப்போட்டு பிசைந்து, சுள்ளென்ற கார மாங்காய் ஊருகாயுடன் கொடுத்தால், ஒரு வெட்டு வெட்டலாம். அதன் சுவையே அலாதியானது. அதனால்தான் 'மாதா ஊட்டாத சோற்றை மாங்காய் ஊட்டும்'  என்று நம் கிராமங்களில் சொல்வார்கள்.

அப்படி சும்மா இருந்த இணையத்திற்கு, தயிர், உப்பு, ஊறுகாய் சேர்த்தது போல, ஒருங்குறியீடு (uni code), மற்றும் regional language settings போன்ற தொழில் நுட்பங்களை எல்லாம் சேர்த்து பிசைந்து, அன்னைத் தமிழில் தந்தவுடன், அது நமக்கு இனியதாகி விட்டது.

அத்துடன் இ - கலப்பை, NHM writer போன்ற இணையத்தமிழ் எழுதிகள் பலவும் நமக்குக் கிடைத்தன. பொறியாளரும், மூத்த தமிழ்வலைப் பதிவருமான திரு.முகுந்தன் அவர்கள்தான் அந்த இ-கலப்பை என்னும் எளிய தமிழ் எழுதியை வடிவமைத்தவராவார். அவரை இங்கு நினைவுகூற வேண்டும். அதேபோல தமிழ் எழுத்தாளர்கள் அனைவரையும் ஒன்றினைக்கும் தமிழ்த் திரட்டியை வடிவமைத்தவர், எங்கள் கோவையைச் சேர்ந்த பொறியாளரும், மூத்த
தமிழ்வலைப் பதிவருமான திரு. காசி ஆறுமுகம் அவர்கள். அவருக்கும் நாம் நன்றியைத் தெரிவித்தல் அவசியமாகும். இல்லை என்றால்,

”என்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு” 


எனும் அய்யன் வள்ளுவரின் வாக்கு நம் முன்னே வந்து நிற்கும்

ஆமாம், அன்னைத் தமிழில் எழுத முடியும், வாசிக்க முடியும் என்றவுடன்தான் இணையம் நமக்கு இனியதாகி விட்டது!.

அத்துடன் இணையம் நம் வாழ்க்கையையே தலைகீழாகப் புரட்டிப் போட்டுள்ளது.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு,  நம் சட்டைப் பையில் தொலைபேசியை வைக்க முடியும் என்று நாம் யாரும் நினைத்திருக்க மாட்டோம். இப்போது வைக்க முடிகிறது. பத்து  ஆண்டுகளுக்கு முன்பு இணையத்தால் இத்தனை நன்மைகள் கிடைக்கப்போகிறது என்று  யாரும் கற்பனை செய்து கூடப் பார்த்திருக்க மாட்டோம். இன்று அத்தனை நன்மைகளையும்  அனுபவித்துக்  கொண்டிருக்கிறோம்.

தொழில்நுட்பத்தின் மூலம், தொழில் நுட்ப வல்லுனர்கள் அதைச் சாத்தியப்படுத்தியிருக்கிறார்கள். சாதித்துக் காட்டியிருக்கிறார்கள். அவர்களுக்கு நாம் என்றென்றும் கடைமைப்பட்டிருக்கிறோம்
நன்றிக் கடன் பட்டிருக்கிறோம்.

Telegram, Teleprinter, Fax என்று தொழிற்சாலைகளும், வர்த்தக நிறுவனங்களும், வணிகர்களும் ஊடகங்களும் பயன்படுத்திக் கொண்டிருந்த தகவல் தொழில்நுட்பச் சாதனங்கள் எல்லாம் இன்று  குப்பைக் கூடைக்குப் போய்விட்டன. அந்த வேலைகள் அனைத்தையும், கணினி மற்றும் இணைய
இணைப்புக்களின் மூலம் சர்வசாதரணமாக நம்மால் செய்ய முடிகிறது.

கணினிதான் சென்ற நூற்றாண்டின் அரிய கண்டுபிடிப்பு. கணினிக்கு, இணையம் என்ற அழகான மற்றும் அறிவான, பெண்ணைக் கண்டுபிடித்துத் திருமணம் செய்து வைத்தார்கள். அவர்கள் இருவரும் - அதாவது,
கணினியும், இணையமும், எந்தவிதப் பிணக்கமும் இல்லாமல், ஒற்றுமையுடன்அன்பாகக் குடும்பம் நடத்தி, 10 மாதக் கணக்கு என்று எந்தக் கணக்கும் இல்லாமல், மாதா மாதம்  நிறையக் குழந்தைகளைப் பெற்றுத் தருகிறார்கள். அத்துடன் அசுர வேகத்தில் அக்குழந்தைகளை வளர்த்து, நமக்கு சேவகம் செய்ய அவர்களைப் பணித்துக் கொண்டிருக்கிறார்கள். அவைகளும்
கைகட்டி நமக்குச் சேவகம் செய்து கொண்டிருக்கின்றன!

Hotmail, gmail, yahoo mail, wikipedia, youtube, bolgger, orkut, Facebook, piccaso, tecnocarti 
போன்று நமக்கு சேவகம் செய்துகொண்டிருக்கும் குழந்தைகள்
எல்லாம், கணினி -இணையத் தம்பதிகள் பெற்ற குழந்தைகள்தான்!

நாம் சம்பளம் எதுவும் கொடுக்காமல் அவர்களை வேலை வாங்கிக் கொண்டிருக்கிறோம். குழந்தைத்தொழிலாளர்கள் தடுப்புச் சட்டமெல்லாம் அவர்களிடம் செல்லாது. இந்த விஷயத்தில் நம்மிடமும் செல்லாது.

மனதிற்கு நிறைவைத் தருகின்ற அல்லது மகிழ்ச்சியைத் தருகின்ற இணையச் செயல்பாடுகள் அனைத்துமே இனியதுதான்!

network of networks எனப்படும் இந்த இணைய வலை முழுமையாக வடிவமைக்கப் பெற்று  40 ஆண்டுகள் ஆகிவிட்டன என்றாலும், கடந்த பத்து ஆண்டு களாகத்தான் அது இனிமையைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. ஆமாம்,
நமது அன்னைத் தமிழில் எதையும் எழுத முடிகிறது. சக நண்பர்கள் எழுதியுள்ளவற்றைப் படிக்க முடிகிறது. ஒரு மகிழ்ச்சி கிடைக்கிறது. தமிழில்
மின்னஞ்சல் அனுப்ப முடிகிறது. தமிழில் எழுதி வலையில் ஏற்ற முடிகிறது. கடந்த  10 ஆண்டுகளில்தான் இந்த அசுர வளர்ச்சி.

ஒருங்குக் குறியீடு எனப்படும் unicode tamil எழுத்துருக்கள் கிடைத்த பிறகுதான், அத்தனையும்  சாத்தியமாயிற்று!

தற்போது இணையத்தில் கிடைக்காத தமிழ் இலக்கியங்களே இல்லை என்னும் நிலமை உள்ளது. Project Madurai - மதுரை தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம்’ என்னும் பெயரில் உலகளாவிய  தமிழர்கள் ஒன்று கூடி அதைச் சாத்தித்திருக்கிறார்கள். அவர்களுக்குத் தமிழர்கள் அனைவரும்
நன்றிக் கடன் பட்டிருக்கிறோம்.

சரி, எத்தனை இணையதளங்கள் உள்ளன? இன்றையத் தேதியில் 15 கோடி இணைய தளங்கள் உள்ளதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. அரசன் இல்லாத உலகம் இணைய உலகம்.  DNS registrars எனப்படும் பெயர்ப் பதிவாளர்கள் மட்டுமே இணையத்தில் உள்ளார்கள்.  இணைப்புக் கொடுக்கும் மூலவிக்கிரகம் என்னும் சர்வர் எதுவும் இல்லை. அத்தனையும் குல  தெய்வங்கள்தான்.

சரி ஆண்டவர் இல்லையா? ஏன் இல்லை? நாங்கள் அவரைக் கூகுள் ஆண்டவர் என்போம். எது கேட்டாலும், காத்திருத்தல் இன்றி உடனே கிடைக்கும். எது கேட்டாலும் - அதாவது எந்தத் தகவலைக் கேட்டாலும், அவரிடம் இருந்து பதில் கிடைக்கும். அந்த அளவிற்கு, அவர் மற்ற அனைத்துக் குல தெய்வங்களுடன், தொடர்பு வைத்திருக்கிறார். நமக்குப் பிடித்துத் தருவதற்கான
தொழில் நுட்பத்தையும் வைத்திருக்கிறார்.

தொழில் முனைவோருக்கு இணையம் ஒரு வரப் பிரசாதம். தொழில் சம்பந்தமாக அல்லது  வியாபாரம் அல்லது ஏற்றுமதி, இறக்குமதி சம்பந்தமாக எந்த விவரம் கேட்டாலும் இணையத்தில் கிடைக்கும். அத்துடன் வகை வகையான வணிகர்கள், ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்களின்
முகவரிகள், அவர்களுடைய தொலைபேசி எண்கள் எல்லாம் கிடைக்கும். அது எந்தத் துறையானாலும் சரி கிடைக்கும். உதாரணத்திற்கு indiamart என்னும் இணைய தளத்தில் எட்டு  லட்சம் முகவரிகள் வகைப் படுத்தி வைக்கப் பட்டுள்ளன. எல்லாம் உங்கள் பயன் பாட்டிற்காக!

அதுபோல ஏகப்பட்ட இணைய தளங்கள் உள்ளன.

உதாரணத்திற்கு நீங்கள் ஜவுளித்துறை (Textile) என்னும் சொல்லில் தேடினீர்கள் என்றால், அந்த இந்தியாமார்ட் வலைத்தளத்தில் 26 துணைப் பிரிவுகளில் (அதாவது sub-category யில்) மொத்தம்  60,000 முகவரிகள் கிடைக்கும். அதுபோல ஒவ்வொரு துறைக்கும் உங்களுக்கு நொடியில் தகவல்கள்  கிடைக்கும்

இரயில் பயணத்திற்கு நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தே முன்பதிவு செய்து, பயணச் சீட்டை நீங்களே அச்சிட்டு எடுத்துக்கொள்ளலாம்.

வங்கிக் கணக்குகளை வீட்டில் இருந்தே நீங்கள் நிர்வகிக்கலாம், வரவு செலவு செய்துகொள்ளலாம்

இந்தியாவில் உள்ள அத்தனை இடங்களிலும் இருக்கும் BSNL தரைவழித் தொடர்பு  இணைப்புக்களுக்கான எண்களை - அது எந்த ஊரில் இருந்தாலும், யார் பெயரில் இருந்தாலும்,  சில நிமிடங்களில் தேடிப் பிடித்துவிடலாம். BSNL Telephone Directory அந்த அளவிற்கு வகைப் படுத்தப்பெற்று இணையத்தில் கொடுக்கப்பெற்றுள்ளது.

படங்களா? பாடல்களா? அல்லது பாடல் வரிகளா? எதுவாக இருந்தாலும் கேட்டவுடன் கிடைக்கும்.

MKT பாகவதரின் "மன்மத லீலையை வென்றார் உண்டோ’ பாடலில் இருந்து, இன்றைய  ‘டாடி மம்மி வீட்டில் இல்லை, தடைபோட யாரும் இல்லை’ பாடல்வரை  எந்தப் பாடலாக இருந்தாலும் நொடிகளில் கிடைக்கும்

சரி, அதே பாடல்,  காட்சி வடிவில் வேண்டுமா? யூ டியூப் தளத்தில் கிடைக்கும்!

உங்கள் குழந்தைக்கு அன்னை தெரசாவைப் பற்றிய கட்டுரை வேண்டுமா? அல்லது ஆர்யபட்டாவைப் பற்றிய செய்தி வேண்டுமா? அல்லது அண்ணாமலையார் கோவிலைப் பற்றிய தகவல் வேண்டுமா?
அத்தனையும் கிடைக்கும்.

கூகுள் ஆண்டவர் கருணை மிக்கவர். உங்களுக்கு அவர் உடனே உதவுவார். நீங்கள் விரதம்  எதுவும் இருக்க வேண்டாம். தேங்காய் உடைத்து அர்ச்சனை எதுவும் செய்ய வேண்டாம்.  அதுதான் முக்கியமான விஷயம்!

இணையம் நம்மை எப்படி மாற்றியிருக்கிறது என்று ஒரு குட்டிக்கதை மூலம் சொல்கிறேன்.

சின்ன வயதில் கதை கேட்டு வளர்ந்தவன். கதை சொல்வதில்  ஆர்வ முள்ளவன். கையில் மைக் கிடைத்தால் கதை சொல்லாமல் இறங்குவதில்லை என்ற வைராக்கியம் உள்ளவன்.

ஆகவே வேறு வழியில்லை. நீங்கள் கதையைக் கேட்டுத்தான் ஆகவேண்டும்!

இப்போது கதை:

கதை

இணையம் நம்மை எப்படி மாற்றியிருக்கிறது பார்த்தீர்களா? எல்லாம் இனிய மாற்றங்கள்தான். அந்த மாற்றங்கள் தொடரட்டும்.

இணையத்தின் இனிமை நாளுக்கு நாள் கூடட்டும்!

இணையத்தில் குறையே இல்லையா? இருக்கிறது. அது இணையத்தின் குற்றமல்ல. ஆபாசத் தளங்களையும், வைரஸ்களையும் இணையத்தில்
உலவ விட்டது. சக மனிதர்களின் குற்றமே. அதை மறந்துவிட்டு நல்லதை மட்டுமே  நாம்  எடுத்துக் கொள்வோம்.

இணையம் என்றுமே இனிமையானது.
மனதை மயக்கக்கூடியது.
சமூகத்திற்கு உதவக்கூடியது.

அதைப் போற்றி வளர்ப்போம்!

என்னுடைய உரையை இத்துடன் நிறைவு செய்கிறேன்

வாய்ப்பிற்கு நன்றி! இந்த மேடையில் பேச வாய்ப்பளித்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி. அத்துடன் இதுவரை பொறுமையாக என் உரையைக் கேட்ட உங்கள் அனைவருக்கும் என் நன்றி

வணக்கம்!
----------------------------------------------------------------------------------------------------------------------------------

வாழ்க வளமுடன்!

23.6.10

செம்மொழித் தமிழ் மாநாட்டில் வாத்தியாரின் உரை கேட்க வருக! வருக!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
செம்மொழித் தமிழ் மாநாட்டில் வாத்தியாரின் உரை கேட்க வருக! வருக!

செம்மொழித் தமிழ் மாநாட்டில் வாத்தியார் உரையாற்றும் விவரம்!
--------------------------------------------------------------------------------
1

தேதி:  24.06.2010 வியாழக்கிழமை
நேரம்: பிற்பகல் 2:15 முதல் 2:45 வரை

இடம்: முரசொலி மாறன் அரங்கம்
தலைப்பு:
‘இனியது, இனியது, இணையம்!
2.

தேதி:  26.06.2010 சனிக்கிழமை
நேரம்: பிற்பகல் 3:15 முதல் 3:45 வரை

இடம்: முரசொலி மாறன் அரங்கம்
தலைப்பு:
‘எங்கே இணையம்? எங்கே இணையம்?
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்!’


------------------------------------------------------------------------------------
கோவையிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள நமது வகுப்பறை மாணவர்களையும், மற்றும் இணைய நண்பர்களையும் வந்து கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறேன்!

நன்றி, வணக்கத்துடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

தமிழ் வளர்த்த அறிஞர்கள்!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
தமிழ் வளர்த்த அறிஞர்கள்
இன்று கோவையில் செம்மொழித் தமிழ் மாநாடு துவங்குகிறது. தமிழை வளர்க்க அரும் பாடுபட்ட தமிழறிஞர்கள் சிலரை நினைவுகூர்வோம்!
   
1. கடலூர் பலராம அய்யர்   
2. பி.ஸ்ரீ ஆச்சார்யா   
3. நரசிம்மலு நாயுடு  
4. சொக்கலிங்க அய்யா ( 1856 - 1931 )  
5. பா.வே.மாணிக்க நாயக்கர்   
6. சுவாமி ஞானப்பிரகாசர்   
7. சி.வை.தாமோதரம் பிள்ளை   
8. ஆறு.அழகப்பனார்    
9. ச.மெய்யப்பனார்  
10. சுப்பிரமணிய முதலியார்  
11. பத்மநாபய்யர்    
12. க.த.திருநாவுக்கரசு   
13. ச.அகத்தியலிங்கனார்   
14. ரா.இளங்குமரனார்    
15. ச.வே. சுப்பிரமணியனார்   
16. தமிழண்ணல்    
17. கல்கி  
18. வ.அய்.சுப்பிரமணியம்  
19. ரா.சசாரங்கபாணியார்   
20. வ.சுப.மாணிக்கனார்   
21. ஞானசம்பந்தனார்   
22. ராமநாதன் செட்டியார்    ..
23. சித்பவானந்தர்   
24. ஏந்தல் மங்கலங்கிழார்   .
25. சிவஞான பாலைய அடிகளார்   
26. கா.பொ.ரத்தினம்   
27. மு.வரதராசனார்   
28. சி.இலக்குவனார்     :
29. அ.சிதம்பரநாதனார்   
30. தமிழ்க்கடல் ராய.செசாக்கலிங்கனார்  
31. பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார்   
32. மகாவித்துவான் மே.வீ.வேணுகோபால் பிள்ளை (1896 - 1985)    
33. ரா.பி.சேதுப்பிள்ளை   
34. பண்டிதர் அருணகிரிநாதர்    
35. ந.சி.கந்தையாபிள்ளை    .
36. திரிசிரபுரம் ரா.பஞ்சநதம்பிள்ளை  
37. பேராசிரியர் வேங்கடராஜூலு ரெட்டியார்  
38. சொ.முருகப்பா   
39. பூதலப்பட்டு ஸ்ரீராமுலு ரெட்டி   
40. சதாசிவப் பண்டாரத்தார்   
41. பேராசிரியர் மயிலை சிவமுத்து  
42. சாமி சிதம்பரனார்   
43. அவ்வை.சு.துரைசாமிப் பிள்ளை    
44. ஞா.தேவநேயப் பாவாணர்  
45. கி.ஆ.பெ.விசுவநாதனார்   
46. அண்ணாமலை செட்டியார்   
47. கோவிந்தசாமி    
48. தமிழ்ச் செம்மல் கா.நமச்சிவாய முதலியார்   
49. பாண்டித்துரைத் தேவர்   
50. மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை   
51. கா. சுப்பிரமணியபிள்ளை  
52. வேங்கடசாமி நாட்டார்   
53. உமாமகேசுவரன் பிள்ளை   
54. செல்வ கேசவராய முதலியார்   
55. தஞ்சை ஆபிரகாம் பண்டிதர்   
56. தண்டபாணி தேசிகர்  
57. தணிகை மணி   
58. பா.வே.மாணிக்க நாயக்கர்   
59. பூரணலிங்கம் பிள்ளை   
60. சுவாமி ஞானப்பிரகாசர்   
61. மயிலை சீனி வேங்டசாமி*
62. சுத்தானந்த பாரதியார் 
63. சாமிநாத சர்மா   
64. கந்தையாபிள்ளை
65. ஆர்.கே.சண்முகம் செட்டியார் 
66. பெ.நா.அப்புஸ்வாமி  
67. பொ.திருகூட சுந்தரம் பிள்ளை
68. பாவேந்தர் பாரதிதாசன்
69. சுத்தானந்த பாரதியார்  
70. பாபநாசம் சிவன்  
71. அறிஞர் வ.ரா.,  
72. கோவைக்கிழார் ராமச்சந்திரன் செட்டியார்  
73. ராமலிங்கம் பிள்ளை    
74. திரு.வி.க.,   
75. மகாகவி பாரதியார்    .
76. வ.வே.சு. ஐயர்  
77. நாவலர் சோமசுந்தர பாரதியார்   
78. ராஜாஜி   
79. சாயுபு மரைக்காயர்    
80. மு.ராகவையங்கார்   
81. மறைமலை அடிகள்   
82. தேசிக விநாயகம் பிள்ளை   
83. சதாவதானி செய்குத்தம்பி பாவலர்   
84. பம்மல் சம்பந்த முதலியார்  
85. வ.உ.சிதம்பரனார்   
86. நா.கதிரைவேற்பிள்ளை   .
87. பாம்பன் சுவாமிகள்  
88. பரிதிமாற் கலைஞர்   
89. சங்கரதாஸ் சுவாமிகள்    
90. சோழவந்தான் அரசஞ் சண்முகனார்    ..
91. உ.வே.சா.,
92. சுவாமி விபுலானந்தர்   
93. ஆறுமுக நாவலர்  
94 . வீரமாமுனிவர்
---------------------------------------------------------------------------
நன்றி: தினமலர்

இது முழுமையான பட்டியல் அல்ல! சிலருடைய பெயர்கள் விடுபட்டிருக்கலாம். நினைவிற்கு வருபவர்களை நீங்கள் உங்களின் பின்னூட்டம் மூலம் எழுதலாம்.

அன்புடன்
வாத்தியார்.
   
   வாழ்க வளமுடன்!

21.6.10

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு!

======================================================
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு!
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு எங்களூரில் - கோவையில் நடைபெறுவதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் விதமாக மாநாடு நடைபெறும் 5 தினங்களிலும் (23.6.2010 முதல் 27.6.2010 வரை) வகுப்பறைக்கு விடுமுறை.

தொலைக்காட்சிகளில் எல்லா நிகழ்ச்சிகளும் நேரடியாக ஒலிபரப்பப் படவுள்ளன! பிரம்மாண்டாக ஏற்பாடுகள் செய்யப்பெற்றுள்ளன. அனைத்து நிகழ்ச்சிகளையும் கண்டுகளியுங்கள்!

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுத் தகவல்களுக்காக தினமலர் நாளிதழ் தனி இணைய தளம் துவங்கியுள்ளது. அதில் அத்தனை விவரங்களும் காணக்கிடைக்கும். அதன் முகவரி http://tamil.dinamalar.com/

கோவையில் நடைபெறும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டோடு இணைந்து நடைபெறும் தமிழிணைய மாநாடு 2010ல் வலைப் பதிவர்களுக்கான நிகழ்வில் உங்கள் வகுப்பறை வாத்தியாரும் உரை நிகழ்த்தவுள்ளார். அழைப்பு வந்தது. ஏற்றுக்கொண்டுள்ளார். பேசும் நாள், பேசும் நேரம், பேசவுள்ள அரங்கத்தின் பெயர், பேசவுள்ள உரையின் தலைப்பு பற்றிய விவரங்கள் 23.6.2010 அன்று காலை உங்களுக்குத் தெரிவிக்கப்படும். முடிந்தவர்கள் வந்து நேரில் கலந்து கொள்ளலாம்.

அன்புடன்,
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

19.6.10

யான் பெற்ற இன்பம்!

---------------------------------------------------------------------------------
யான் பெற்ற இன்பம்!

புகழ் பெற்ற பாடல்கள் - பகுதி 8

புகழ் பெற்ற பாடல் என்றால் என்ன? இறைவனின் புகழைப் பாடும் பாடல்கள் எல்லாம் புகழ் பெற்ற  பாடல்கள்தான்!
------------------------------------------------------------------------------------------------
பாடல்: நீயல்லால் தெய்வமில்லை
குரல்: சீர்காழி கோவிந்தராஜன்

நீயல்லால் தெய்வமில்லை - எனது 
நெஞ்சே நீவாழும் எல்லை -  முருகா

(நீயல்லால்)

தாயாகி அன்புப் பாலூட்டி வளர்த்தாய்
தந்தையாய் நின்றே சிந்தை கவர்ந்தாய்
குருவாகி எனக்கு நல்லிசை தந்தாய்
திருவே நீயென்றும் என் உள்ளம் நிறைந்தாய்
நாயேனை நாளும் நல்லவனாக்க
ஒயாமல் ஒளியானே உன்னருள் தந்தாய்

(நீயல்லால்)

வாயாரப் பாடி மனமார நினைந்து
வணங்கிடலே எந்தன் வாழ்னாளின் இன்பம்
தூயா முருகா மாயோன் மருகா
உன்னைத் தொழுதிடலே
இங்கு யான் பெற்ற இன்பம்

(நீயல்லால்)

-----------------------------------------------------------------
அன்புடன்,
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

17.6.10

அடுத்த தலைமுறைக்கு அந்த வாய்ப்புக் கிடையாது!

அடுத்த தலைமுறைக்கு அந்த வாய்ப்புக் கிடையாது!

எந்த வாய்ப்பு?

அதை நீங்களே பாருங்கள்!

V
V
V
V
V
V
பக்கத்தைக் கீழே இறக்குங்கள்
V
V
V
V
V
V


================================================
அடுத்த தலைமுறையினர் என்றில்லை, கூ...சிக்கு .சிக்கு... என்று நீராவி இஞ்சின் பூட்டப்பெற்ற புகைவண்டியில்

பயணிக்கும் இனிய வாய்ப்பு இனி யாருக்குமே கிடைக்காது!

உண்மைதானே?
-------------------------------------------
வாத்தியார் வெளியூர்ப் பயணம். அடுத்த வகுப்பு சனிக்கிழமையன்று! அனைவரும் பழைய பாடங்களைப் புரட்டிப் படியுங்கள்!

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

16.6.10

இருமடங்கு உயர்வு கிடைத்தால் எப்படி இருக்கும்?


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இருமடங்கு உயர்வு கிடைத்தால் எப்படி இருக்கும்?

ஜோதிட அருஞ்சொற்கள் - பகுதி மூன்று
---------------------------------------------------------
இதன் துவக்கப் பகுதியும், அதற்கு அடுத்த பகுதியும்,  இதற்கு முன் உள்ள இடுகைகளில் உள்ளன. அவற்றைப்  படித்திராதவர்கள் அவற்றைப் படித்துவிட்டுப் பிறகு இதைப் படிக்கவும்!
-----------------------------------------------------------

32
வர்கோத்தமம்: ஒரு கிரகம் இராசியிலும் அம்சத்திலும் ஒரே இராசியில் காணப்படுதல் வர்கோத்தமம் எனப்படும். அது ஒருவருக்கு இருமடங்கு உயர்வு கிடைத்ததற்குச் சமமாகும்.

கிரகத்திற்கு மட்டுமல்ல, லக்கினத்திற்கும் அந்த வாய்ப்பு உண்டு. அதற்கு வர்கோத்தம லக்கினம் என்று பெயர்.
-------------------------------------------------

33
வக்கிரம் - Retrogression: ஒரு கிரகம் பின் நோக்கிச் செல்வது வக்கிரம் எனப்படும்.The backward motion of a planet.  “அவன் வக்கிரம் பிடித்தவனடா, அவனிடம் எதுவும் வைத்துக்கொள்ளாதே” என்று சொல்வதைக் கேட்டிருக்கிறீகள் அல்லவா? அதுபோல ஜாதகத்தில் கிரகம் வக்கிரகதியில் இருப்பது நன்மையானதல்ல. வக்கிரமான கிரகம் ஜாதகனுக்கு முழுப்பயனையும் தராது. 4 கிரகங்கள் வக்கிரமடைந்திருந்தால், ஜாதகன் பல தகாத செயல்களைச் செய்து கொண்டிருப்பான். பின்லேடனின் ஜாதகத்தில் 4 கிரகங்கள் வக்கிரம் அடைந்துள்ளதாகச் செய்தி ஒன்றைப் படித்துள்ளேன்.
------------------------------------------------

34
அஷ்டம ராசி: எட்டாம் வீட்டைக்குறிக்கும். ஆயுள் ஸ்தானம். அத்துடன் வாழ்க்கையில் காத்துக்கொண்டிருக்கும் கஷ்டங்களையும் துன்பங்களையும் குறிக்கும் வீடு. அதனால் முக்கியத்துவம் பெறுகிறது.
--------------------------------------------------------------------

35
முகூர்த்தம்: சுபகாரியங்களைச் செய்வதற்கு உகந்த நேரம். - auspecious time

நிகழும் சுபஸ்ரீ விக்ருதி வருடம் ஆனி மாதம் 31ஆம் நாள் (15-7.2010) வியாழக்கிழமை மக நட்சத்திரமும் அமிர்தயோகமும் சிம்ம லக்கினமும் கூடிய சுபயோக சுப தினத்தில் உதயாதி நாழிகை 8 3/4 மேல் 111/4 நாழிகைக்குள் காலை 9:30 மணிக்கு மேல் 10:30 மணிக்குள் துலா லக்கின சுப முகூர்த்தத்தில் செல்வன்
சுந்தரத்திற்கும் செல்வி சுந்தரிக்கும் திருமணம் செய்வதாக நிச்சயிக்கப் பெற்று......” என்று திருமண அழைப்பிதழ்களில் பார்த்திருப்பீர்களே... அந்த சுபமுகூர்த்தம் இதுதான்.

விளக்கம் போதுமா?
---------------------------------------------------------------------

36
ஜன்ம ராசி:Janma Rasi:

ஜாதகன் பிறந்த நேரத்தில் சந்திரன் குடியிருக்கும் ராசிக்கு ஜன்ம ராசி என்று பெயர்.Sign occupied by the moon at birth இந்த ஜன்ம ராசியை வைத்துத்தான் கோள்சாராப் பலன்களை அலச வேண்டும். இன்றையத் தேதியில் வானில் சுற்றிக்கொண்டிருக்கும் கிரகங்களின் நிலையைச் சொல்வதுதான் கோச்சாரம் அல்லது கோள்சாரம். அவற்றால் ஏற்படும் நன்மை தீமைகளைச் சொன்னால் அதற்குப்பெயர் கோச்சாரப் பலன்.    ஏழரைச்சனி, அஷ்டமச்சனி போன்ற தீய பலன்களும், குரு பர்வை உள்ளது போன்ற நல்ல பலன்களும் இந்த முறையில்தான் சொல்லப்படுகிறது.
--------------------------------------------------------------------
37
தசா Dasa -  Period  of  Directional  Influence.

கிரகங்கள் தங்களுடைய பங்கை ஜாதகனுக்கு வழங்கும் காலம்.
உங்களுடைய மொழியில் சொன்னால், பலர்காணப்  பெருமையுடன், நீங்கள், பல்லக்கில் செல்லும் காலம் அல்லது தோள் மற்றும் இடுப்பு எழும்பு ஒடிய பல்லக்கை நீங்கள் தூக்கிச் செல்ல வேண்டிய காலம்.

சூரியனுக்கு 6 ஆண்டுகள்
சந்திரனுக்கு 10 ஆண்டுகள்
செவ்வாய்க்கு 7 ஆண்டுகள்
ராகுவிற்கு 18 ஆண்டுகள்
குருவிற்கு 16 ஆண்டுகள்
சனிக்கு 19 ஆண்டுகள்
புதனுக்கு 17 ஆண்டுகள்
கேதுவிற்கு 7 ஆண்டுகள்
சுக்கிரனுக்கு 20 ஆண்டுகள்
---------------------------------------
ஆக மொத்தம் 120 ஆண்டுகள்
-----------------------------------------------
மொத்தம் 120 ஆண்டுகள்தானா? என்று யாரும் கேட்க வேண்டாம். அதுவரை வாழ்ந்தால் போதாதா? அவதிப்பட்டால் போதாதா? எத்தனை கோடி பணம் இருந்தாலும், 90 வயதிற்குமேல் உடம்பும் சொன்ன பேச்சைக் கேட்காது. கூட இருப்பவர்களும் சொன்ன பேச்சைக் கேட்கமாட்டார்கள்.

”சார், நான் கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவன். எனக்கு துவக்க திசை சூரிய தசை. எனக்குக் சுக்கிர மகா தசை வராதா?” என்று யாரும் வருத்தமாகக் கேட்க வேண்டாம். அதுபோல  “நான் குருவின் நட்சத்திரத்தில் பிறந்தவன், ஆகவே எனக்கு ராகுதசை வருவதற்கு வாய்ப்பில்லை” என்று யாரும் துள்ளிக் குதிக்கவும் வேண்டாம். எல்லோருக்கும் எல்லா கிரகங்களின் தசைகளும் புக்தி (Sub -periods) வடிவில் வந்து விடும். ஒவ்வொரு கிரகத்தின் புக்தி நாட்களும், மகாதசை நாட்களும் அளவில் ஒன்றானதே! அதை மனதில் கொள்க!

உங்களுக்காக தசா & தசா புக்திக் காலங்களின் அட்டவணையைக் கொடுத்துள்ளேன். உதாரணத்திற்கு சுக்கிரனை எடுத்துக் கொள்ளுங்கள். சுக்கிர மகா தசையின் அளவு 7,200 நாட்கள். அதேபோல மற்ற கிரகங்களின் தசைகளில் வரும் சுக்கிர புக்தியின் (Sub -periods) அளவும் 7,200 நாட்களே. இதுபோல அனைத்துக் கிரகங்களூக்கான கால அளவையும். அதாவது மகா தசையின் அளவையும், புக்திகளின் அளவையும் நீங்கள் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். படத்தின் மீது கர்சரை வைத்து அழுத்தினால் படம் பெரிதாகத் தெரியும்.++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

மேலும் எழுத நேரமின்மையால், இன்று, இத்துடன் நிறைவு செய்கிறேன். பாடத்தின் அடுத்த பகுதிகள் தொடர்ந்து வெளிவரும்!

(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!

15.6.10

கிரகங்களுக்கும் கோட்டா உண்டு!


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கிரகங்களுக்கும் கோட்டா உண்டு!

கிரகங்களுக்கும் கோட்டா உண்டு! அதாவது ஒதுக்கீடு உண்டு!

வாத்தியார், என்ன புதிதாகவும், புதிராகவும்  இருக்கிறதே என்று சொல்லாமல் இன்றைய பதிவு முழுவதையும் படியுங்கள். உங்களுக்கே தெரியவரும்!

ஜோதிட அருஞ்சொற்கள் - பகுதி இரண்டு!

இதன் துவக்கப் பகுதி, இதற்கு முன் உள்ள இடுகையில் உள்ளது. அதைப் படித்திராதவர்கள் அதைப் படித்துவிட்டுப் பிறகு இதைப் படிக்கவும்!
------------------------------------------------------------

12
அசுபயோகம்-Asubhayoga: தீய கிரகம் அல்லது தீய கிரகங்களின் கூட்டால் ஏற்படும் தீமையான பலன்கள்.
A Combination caused by evil planets

13
அசுரயோகம்-Asurayoga: தீய கிரகங்கள் ஆட்சி, ஆதிபத்யம், காரகம் ஆகியவற்றால், ஜாதகனுக்குக் கொடுக்கும் நன்மையான பலன்கள் A Combination for tyrannical and demoniacal characteristics tyrannical - characteristic of an absolute ruler or absolute rule; having absolute sovereignty!
---------------------------------------------------------
14.
அதிபதி (Owner): உரியவன். சொந்தக்காரன். கிரகங்களைப் பொறுத்தவரை ராசிக்கு உரியவன். வீட்டிற்கு உரியவன் ஆட்சிக்கு உரியவன் எப்படி வேண்டுமென்றாலும் வைத்துக்கொள்ளுங்கள்.
    
15
ஆதிபத்யம் (Ownership) இடங்களுக்கு, ராசிகளுக்கு, வீடுகளுக்கு உரிமையாளர்கள். பட்டா போட்டுக் கொடுக்கப்பெற்றுள்ளது:

மேஷத்திற்கும், விருச்சிகத்திற்கும் அதிபதி - செவ்வாய்
ரிஷபத்திற்கும், துலாமிற்கும் அதிபதி - சுக்கிரன்
மிதுனத்திற்கும், கன்னிக்கும் அதிபதி - புதன்
தனுசுவிற்கும், மீனத்திற்கும் அதிபதி - குரு
மகரத்திற்கும், கும்பத்திற்கும் அதிபதி - சனி

இவர்கள் ஐவருக்கும் இரண்டு இடங்களுக்கான பட்டா கிடைத்துள்ளது

சூரியனுக்கு ஒரு இடம்தான் - அது சிம்மம்
சந்திரனுக்கும் ஒரு இடம்தான் - அது கடகம்

ராகுவிற்கும், கேதுவிற்கும் சொந்த இடம் இல்லை. வாடகை வீடுதான். ஆனால் அவைகள் குரல் கொடுத்து ஒதுக்கீடு பெற்றுள்ளன. தினசரி 90 நிமிடங்கள் ராகுவிற்கும் 90 நிமிடங்கள் கேதுவிற்கும் கொடுக்கப்பெற்றுள்ளது. அதைத்தான் ராகுகாலம், எமகண்டம் என்பார்கள்!
-----------------------------------------------
16
அஷ்டகவர்க்கம் - Ashtagavarga: எட்டு விதமான வழிகளில் கிரகங்களுக்குக் கிடைக்கும் சக்தி -    Eight sources of energy of the planets. அவைகள் பரல்கள் எனப்படும் மதிப்பெண்கள் மூலம் ஜாதகத்தில் கொடுக்கப்பெற்றிருக்கும்

17
ஆரோஹணம் -Arohana: கடிகாரச் சுற்று    Ascending directions

18
அவரோஹணம் -Avarohana: கடிகாரச் சுற்றுக்கு எதிரான வழியில் சுற்றுவது -Descending direction

19
உச்சபலம்    - occhabala: உச்சமான கிரகத்தின் வலிமை -Exaltation strength

20
கதி -Ghati: 24 நிமிடங்களுக்குச் சமமான நேரத்தைக் குறிப்பது. ஒரு நாளில் 1/60 பாகம்   

21
சத்பலம் - Shadbala: ஆறுவிதமான நிலைகளில் கிரகங்களுக்குக் கிடைக்கும் வலிமை சத்பலம் எனப்படும். Six sources of planetary and house strengths Shad Bal consists of the following strengths
1. ஸ்தானபலம் Sthan Bal (Positional strength)
2. திக்பலம் Dig Bal (Directional strength)
3. காலபலம் Kaal Bal (Temporal strength),
4. சேஷ்டபலம்Chesht Bal சுழற்சியால் கிடைக்கும் பலம் (Motional strength)
5. நைசர்கிகபலம் Naisargika Bal - இயற்கையான வலிமை (Natural strength)
6. த்ரிக்பலம் Drik Bal - பார்வையால் கிடைக்கும் பலம் (Aspectual strength)

These strengths are computed for the seven Grahas from Sun to Saturn. The nodes (Rahu & Ketu) are not considered.
--------------------------------------------------------------------
22
சத்ரு-Satru: எதிரி-Enemy

23
சஷ்டக அஷ்டகம்    (அல்லது அஷ்டக சஷ்டகம், அல்லது அஷ்டமம்,
சஷ்டமம் ): ஒருவருக்கொருவர் 6ஆம் மற்றும் 8ஆம் இடத்தில் கிரகங்கள் இருக்கும் நிலைமை!

24
திரிசாம்சம் - ராசியில் 1/30 பாகம்.1/30th division of a sign

25
தீய இடம்    Dusthana: தீய இடங்கள் அல்லது மறைவிடங்கள் - அவைகள் முறையே 6, 8, 12ஆம் வீடுகளைக் குறிக்கும் An evil place, namely, the 6th, 8th and 12th houses

26
துவதசாம்சம் - Dwadasamsa: ராசியில் 1/12 பாகம் 1/12th division of a sign

27
தோஷம்    Dosha: கெட்டுவிட்ட நிலைமை Affliction

28
நவாம்சம் - Navamsa: ராசியில் 1/9 பாகம் 1/9th division of a sign. ராசியின் விரிவாக்கம்தான் நவாம்சம். அதை மனதில் கொள்க! Navamsam is the magnified version of a Rasi Chart!

29
நீசம்-Neecha: ஒருகிரகத்தின் செயல் இழந்த நிலைமை. உங்கள் மொழியில் சொன்னால் செல்லாக் காசாகிப்போன நிலைமை    Debilitated

30
நீசபங்கம்    Neechabhanga: நீசம் நிவர்த்தியாகும் அல்லது நிவர்த்தியாகிவிட்ட நிலைமை-Cancellation of Debility

31
பரிவர்த்தனை - Parivartana: உன் வீட்டில் நான், என் வீட்டில் நீ என்று கிரகங்கள் வீடு மாறி அமர்ந்திருக்கும் நிலைமை -mutual exchange of signs
-----------------------------------------------------
விடுபட்டவை:

நேற்றைய பதிவில் விடுபட்டவை:
தலைப்பு: பஞ்சாங்கம்

நாட்கள் அல்லது வாரம்: ஒருநாள் சூரிய உதயத்தில் இருந்து அடுத்த நாள் சூரிய உதயம் வரை உள்ள காலம் அல்லது நேரம் ஒரு நாள் எனப்படும்

சூரியனுக்கான நாள் - ஞாயிற்றுக்கிழமை. சந்திரனுக்கு - திங்கட்கிழமை, செவ்வாய்க்கு - செவ்வாய்க்கிழமை, புதன் கிரகத்திற்கு புதன் கிழமை, குருவிற்கு வியாழக்கிழமை, சுக்கிரனுக்கு வெள்ளிக்கிழமை, சனீஷ்வரனுக்கு சனிக்கிழமை. அன்றைய நாட்களின் ஆதிக்க நாயகர்கள் அவர்கள்தான்!
----------------------------------------------------
யோகம்:

இரு வகையான யோகங்கள் உள்ளன. முதலாவது சூரியனும், சந்திரனும் சம்பந்தப்பட்டது. வானமண்டலதில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து சூரியனுக்கும், சந்திரனுக்கும் உள்ள மொத்த தூரத்தை வைத்துக் கணக்கிடப் படுகிறது. சூரியன் மற்றும் சந்திரனின் பாகைகளைக் கூட்டினால் வருவதே இந்த யோகம். அவைகள் மொத்தம் 27 ஆகும். கீழே கொடுக்கப்பெற்றுள்ளன:

1.விஷ்கும்பம்,   2.ப்ரீத்தி,  3. ஆயுஷ்மான்,  4. சௌபாக்யம்,   5. சோபனம்,  6.அதிகண்டம்,  7. சுகர்மம்,   8. திருதி, 9.சூலம், 10.கண்டம்,  11.விருதி, 12.துருவம், 13. வியாகாதம்,  4. ஹர்ஷணம், 15. வஜ்ரம், 16. சித்தி, 17.வியதிபாதம், 18. வரீயான்,  19.பரீகம்,  20. சிவம், 21. சித்தம்,  22. சாத்தீயம், 23. சுபம்,  24.சுப்ரம், 25.பிராம்யம்,  26.ஐந்திரம்,  27. வைதிருதி.

மற்றைய யோகம் சுபா சுப யோகம்; சித்த யோகமும் அமிர்த யோகமும் சுபகருமங்களுக்கு உரிய சுப யோகங்களாகும். மரண யோகம், நாச யோகம், உற்பாத யோகம், பிரபலா நிஷ்ட யோகம், திரிபுஷ்கர யோகம் எனபன சுப கருமங்களுக்கு விலக்கப்படும் அசுப யோகங்களாகும்.

நட்சத்திரத்தையும், கிழமையையும் வைத்தும் யோகம் கணக்கிடப்படுகிறது. இன்ன இன்ன கிழமைகளில் இந்த இந்த நக்ஷ்த்திரங்கள் வந்தால் இன்ன யோகம் என வகுத்து அதன்படி கணக்கிடப்படுகிறது.

உதாரணமாக திங்கள் கிழமை அன்று அஸ்வனி, பரணி, திருவாதிரை, பூசம், ஆயில்யம் பூரம், உத்திரம், ஹஸ்தம், அனுஷம், கேட்டை, மூலம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய 15 நக்ஷ்த்திரங்கள் வருமேயாகில் அன்று சித்தயோகம் வரும்.

ரோகிணி மிருகசீரிஷம், புனர்பூசம், ஸ்வாதி, திருவோணம் ஆகிய 5 நக்ஷ்த்திரங்கள் வந்தால் அமிர்த யோகம் வரும்.

மரண யோகத்தில் அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளக்கூடாது. அதுபோல முதன் முதலாக சிகிச்சைக்குச் செல்பவர்களும் மரணயோகத்தில் செல்லக்கூடாது
-------------------------------------------------------------------------
கரணம்:

கரணம் என்பது திதியில் பாதியாகும். அதாவது 6-டிகிரி கொண்டது ஒரு கரணம் ஆகும். கரணங்கள் மொத்தம் 11-ஆகும். அவையாவன:1. பவ,  2. பாலவ,  3. கெலவ,  4. தைதூலை,  5. கரசை,  6. வணிசை,  7. பத்தரை,  8. சகுனி,  9. சதுஷ்பாதம்,   10.  நாகவம்,  11. கிம்ஸ்துக்னம்.

கரணத்தின் பலன் என்ன என்பது பஞ்சாங்கத்தில் கொடுக்கப்படவில்லை. தஞ்சாவூர்ப் பெருந்தகையாளர் திருவாளர் கிருஷ்ணன் அவர்கள் வந்து சொல்வார். பொறுமை காக்கவும்
------------------------------------------------------------------------------------------------------------
பதிவின் நீளம் கருதியும், உங்களின் பொறுமை கருதியும் இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன். பாடத்தின் அடுத்த பகுதி தொடர்ந்து வெளிவரும்!

(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!

14.6.10

தஹி வடா என்றால் தெரியுமா?

-----------------------------------------------------------------------------
தஹி வடா என்றால் தெரியுமா?

ஜோதிட அருஞ்சொற்கள் - பகுதி ஒன்று

தஹி வடா என்றால் என்ன?

நமக்குத் தெரியாது. அது வடமொழிச் சொல் அதனால் தெரியாது.

தயிர்வடை என்றால் தெரியும். அதற்குப் பொருள் அதுதான். அதுபோல ஜோதிடத்தில் நமக்குத் தெரியாத பல சொற்கள் உள்ளன. முடிந்தவரை அவற்றைத்  தொகுத்து, சொல் விளக்கத்துடன் தருவதற்கான முயற்சியில் இறங்கியிருக்கிறேன். இன்று முதல் பகுதி. படித்து மகிழுங்கள். பயனடையுங்கள். முடிந்தவர்கள் மனனம் செய்து வையுங்கள். அது உங்களின் ஜோதிட அறிவை மேம்படுத்தும்!
-----------------------------------------------------------------------------------------
பஞ்சாங்கம்:

நாள்(திகதி அல்லது தேதி, கிழமை), நட்சத்திரம், திதி, யோகம், கரணம் ஆகிய ஐந்து அங்கங்களை உள்ளடக்கியது பஞ்சாங்கம் ஆகும். பஞ்ச + அங்கம் (ஐந்து பகுதிகள் - Five Parts) = பஞ்சாங்கம்!

1.
நட்சத்திரம்

நமக்கு வேண்டிய ஒருவரின் பிறந்த தினத்தை நினைவில் வைத்துக்கொள்ள அவர் பிறந்த தமிழ் மாதத்தின் பெயர் மற்றும் நட்சத்திரத்துடன் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். பிறந்த தேதியை (Date of birth)வைத்துக் கொண்டாடுவது சரியாக வராது. கேக் வெட்டுவதற்கு வேண்டுமென்றால் சரியாக இருக்கும். அது வெள்ளைக்காரன் சொல்லிக் கொடுத்து விட்டுப்போனது. நாம் கோவிலுக்குச் சென்று இறைவனை வணங்கி, முடிந்தால் அர்ச்சனை செய்து மகிழ்வதற்கு நட்சத்திரம்தான் முக்கியம். அதுதான் சரியான பிறந்த நாள்.

நீங்கள் மாசி மகத்தன்று பிறந்தவர் என்றால் ஒவ்வொரு ஆண்டும் அந்த நட்சத்திரத்தன்று பிறந்த நாளைக் கொண்டாடுங்கள். பிறந்த தேதி என்றால் மாசி மகம் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு தேதியில் வரும். நீங்கள் பிறந்த ஆங்கிலத் தேதியில் வராது. அதை நினைவில் கொள்ளுங்கள்.

(எதற்காக வாத்தியார் மகம் நட்சத்திரம்? தவத்துப்பிள்ளை மகத்தில் பிறக்கும். மகத்தில் பிறந்தவர்கள் தவம் செய்து பெறப்பட்டவர்கள் என்று பொருள்)
---------------------------------------------------------------------------------
2.
திதி

திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட தூரத்தைக் குறிப்பது.

மாதம் 30 திதிகள்.

ஒவ்வொரு மாதமும் - அதாவது 30 தினங்களுக்கு ஒருமுறை சூரியனும், சந்திரனும் ஒரே நேர்கோட்டில் வரும். 0 பாகையில் இரண்டும் இருக்கும். அன்று அமாவாசை. அமாவாசையில் இருந்து பதினைந்தாம் நாள் அவ்விரண்டு கிரகங்களும் எதிர் எதிராக இருக்கும். 180 பாகை வித்தியாசத்தில் இருக்கும். (ஒரு சுற்று வட்டத்திற்கு 360 பாகைகள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே!)

அமாவாசையில் இருந்து பெளர்ணமி வரை 15 திதிகள் (அவற்றை வளர்பிறைத் திதிகள் என்பார்கள். சிலர் வளர் பிறைத் தேதிகளில் வரும் முகூர்த்த நாட்களில் மட்டுமே சுபகாரியங்களைச் செய்வார்கள். சுபகாரியம் என்றால் திருமணம். புதுமனை புகுவிழா, புதுத் தொழில் துவங்கும் நன்னாள் போன்றவை)

பெளர்ணமியில் இருந்து அமாவாசை வரை 15 திதிகள்(அவைகள் தேய்பிறைத் திதிகள் எனப்படும்)

1. பிரதமை, 2. துவிதியை, 3. திரிதியை, 4. சதுர்த்தி, 5. பஞ்சமி, 6. சஷ்டி, 7. சப்தமி, 8. அஷ்டமி, 9. நவமி, 10. தசமி, 11. ஏகாதசி, 12. துவாதசி, 13, திரயோதசி, 14. சதுர்த்தசி

அமாவாசை + வளர்பிறைத் திதிகள் 14 + பெளர்ணமி + தேய்பிறைத் திதிகள் 14 = ஆக மொத்தம் 30 திதிகள். கணக்கு சரியாகிவிட்டதா?

ஒவ்வொரு திதிக்கும் ஒரு சிறப்பு உண்டு.

அது என்ன?

அமாவாசை அன்று நம் முன்னோர்களை வழிபட வேண்டும். தந்தையார் அல்லது தாயார் மேல் உலகம் சென்றிருந்தால், அவர்களுக்காக ஒரு சிறப்பு வழிபாடு செய்தல் வேண்டும். திதி கொடுக்க வேண்டும்.

சதுர்த்தி, விநாயகப் பெருமானை வணங்குதற்கு ஏற்ற திதியாகும்
பஞ்சமி, உலக நாயகி அன்னை பராசக்தியை வணங்குதற்கு ஏற்ற திதியாகும்
சஷ்டி, சேவற்கொடியோனை, (அதாங்க நம்ம வேலுச்சாமி), முருகப் பெருமானை வணங்குதற்கு ஏற்ற திதியாகும்
அஷ்டமி, கோகுலக் கிருஷ்ணனை வணங்குதற்கு ஏற்ற திதியாகும்
நவமி, ராம அவதாரத்தை வணங்குதற்கு ஏற்ற திதியாகும்
ஏகாதசி, துவாதசி, ஆகிய இரண்டு திதிகளும் செல்வத்தை அள்ளித்தரும் பள்ளிகொண்ட பெருமாளை வணங்குதற்கு ஏற்ற திதிகளாகும்.
திரயோதசி, எம்பெருமான் ஈசனை வணங்குதற்கு ஏற்ற திதியாகும்
சதுர்த்தசி, சிவனையும், கணபதியையும் ஒரு சேர வணங்குதற்கு ஏற்ற திதியாகும்

விநாயகரில் துவங்கி, விநாயகரிலேயே முடிவதைக் கவனியுங்கள்

பெளர்ணமி, அண்ணாமலையில் குடிகொண்டிருக்கும் அருணாச்சலரை வணங்குதற்கு ஏற்ற திதியாகும். அத்துடன் எல்லா தெய்வங்களையும் வணங்கி மகிழ ஏற்ற திதியாகும்.

திதிகளின் பயன் அவ்வளவுதானா?

இல்லை! அதி முக்கியமான பயன் ஒன்று இருக்கிறது. ஒருவரின் தந்தை அல்லது தாயார் இறந்துவிட்டால் அவர்களுடைய இறந்த நாளைத் திதியை வைத்துத்தான் நினைவில் கொள்ள வேண்டும். அவர்களுக்கு ஆண்டுதோறும் அந்த நாளில் ஆண்டுத்திதி (வருஷாப்தி) கொடுக்க வேண்டும். மேலும் இரண்டு ஏழைகளுக்கு அன்னதானம் செய்யலாம். அல்லது தட்டில் பத்துப் பத்து டாலராக இரண்டு பேருக்குக் கொடுக்கலாம் (இது தூர தேசங்களில் இருப்பவர்களுக்கு)

எந்தத் தமிழ் மாதம், வளர்பிறை அல்லது தேய்பிறையில் இன்ன திதி என்பதைக் குறித்து வைத்துக்கொள்வது நல்லது.

முதலில் வந்த பின்னூட்டங்களில் வாரம், யோகம் மற்றும் கரணம் பற்றி எழுதும்படி கேட்டுள்ளார்கள். நாளை அதை எழுதுகிறேன்
--------------------------------------------------------------------------------------------
3
கேந்திரம்: 1, 4, 7 மற்றும் 10 வீடுகள் கேந்திர வீடுகள் எனப்படும்.

4
கேந்திர அதிபதி: 1, 4, 7 மற்றும் 10 வீடுகளுக்கு உரிய கிரகங்களைக் குறிக்கும்.

5
திரிகோணம்: 1, 5 மற்றும் 9 ஆம் வீடுகள் திரிகோண வீடுகள் எனப்படும்.

6
திரிகோண அதிபதி 1, 5 மற்றும் 9 ஆம் வீடுகளுக்கு உரிய கிரகங்களைக் குறிக்கும்.

கேந்திரம் மற்றும் திரிகோண வீடுகளுடன் சம்பந்தப்பட்டுள்ள கிரகங்களால் நன்மையான பலன்கள் கிடைக்கும். அவைகள் தீய கிரகங்கள் என்றாலும் கிடைத்த கேந்திர அல்லது திரிகோணப் பதவியால் நன்மைகளையே அதிகமாகச் செய்யும்.
----------------------------------------------------------

7 பார்வை:
(Aspect, look, glance) கிரகத்தின் பார்வையைக் குறிக்கும். கிரகங்களுக்கு ஏழாம் பார்வை உண்டு. குரு, செவ்வாய், சனி ஆகிய கிரகங்களுக்கு மட்டும் கூடிதலாக மேலும் 2 பார்வைகள் உண்டு. குருவிற்கு - 5, 9, செவ்வாய்க்கு 4, 8, சனிக்கு 3, 10ஆம் பார்வை கூடுதலாக உண்டு.

நன்மையான கிரகங்களின் பார்வையால், நன்மைகள் கிடைக்கும். தீய கிரகங்களின் பார்வையால் தீமைகளே அதிகம் இருக்கும்
------------------------------------------------------

8
கெட்டுப்போன நிலைமை (Affliction): சாம்பாரில் மறந்து இரண்டுமுறை உப்பைப் போட்டால் என்ன ஆகும்? கெட்டுப்போய்விடும். ரசித்துச் சாப்பிட முடியாது. நன்றாகப் படிக்கும் பையன், ஒரு போக்கிரியுடன் சேர்ந்து சுற்றினால் என்ன ஆகும்? கவனம் சிதறும். பெயர் கெடும். ஒழுங்காகப் படித்துத் தேர முடியாது. அப்படித்தான் ஒரு சுப கிரகம் அல்லது நன்மையைச் செய்யக்கூடிய கிரகம், ஒரு தீய கிரகத்துடன் சேர்ந்து ஜாதகத்தில் இருப்பது நன்மை பயக்க்ஊடியது அல்ல! அதைத்தான் கெட்டுப்போய்விட்டது என்பார்கள். சேர்ந்தால் மட்டும் அல்ல பார்த்தாலும் அதே நிலைமைதான்.

Affliction - A planet that is aspected by or is associated with malefics is said to be afflicted.
Affliction - Affliction refers to a condition or cause of suffering. A planet that is aspected by or is associated with malefics is said to be afflicted.
---------------------------------------------

9
அஸ்தமனம். (Combustion)

அஸ்தமனமாகும் கிரகம் அடிபட்டுப்போகும். அதனால் உரிய பலன்களை ஜாதகனுக்குத் தரமுடியாது.

சூரியனுக்கு அருகில் பத்து பாகைக்குள் வரும் கிரகம் அந்தமனமாகிவிடும்.

Combustion means a planet losing its strength, so if a chart has 3 planets combust, means the person really loses the major fruits of life.
---------------------------------------

10
சங்கமம்: (Conjunction) சங்ககமாகுதல், சங்கமித்தல். உங்களுக்கும் புரியும்படி சொன்னால் ஈறுடல் ஓருடலாக இருக்கும் நிலைமை அதாவது இரண்டு கிரகங்கள் 0 பாகையில் இருக்கும் நிலைமை.

Two planets having the same longitude are said to be in conjunction.

சங்கமித்தால் சங்கமித்ததோடு சரி. ஜாதகனுக்கு நன்மைகள் இருக்காது.
--------------------------------------

11
சேர்க்கை (Association): இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் கூட்டாக ஒரு ராசியில் இருக்கும் நிலைமை. உங்களுக்கும் புரியும்படி சொன்னால் ஒருவர் மேல் ஒருவர் படாமல் தள்ளி நிற்கும் நிலைமை.

அப்படித் தள்ளி நின்று சேர்க்கையாக இருந்தால், ஜாதகனுக்கு அவர்கள் இருவரும் கூட்டாக பல நன்மைகளைச் செய்வார்கள். யோகத்தைத் தருவார்கள். சச்சினும், தோனியும் சேர்ந்து அதிரடி ஆட்டம் ஆடினால் எப்படி இருக்கும்? பலன்கள் அப்படியிருக்கும்!


பதிவின் நீளம் கருதியும், உங்களின் பொறுமை கருதியும் இன்று இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன். பாடத்தின் அடுத்த பகுதி தொடர்ந்து வெளிவரும்!

(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

12.6.10

துன்பம் வாராத நிலை!

----------------------------------------------------------------------------------
துன்பம் வாராத நிலை!

புகழ் பெற்ற பாடல்கள் - பகுதி 7

புகழ் பெற்ற பாடல் என்றால் என்ன? இறைவனின் புகழைப் பாடும் பாடல்கள் எல்லாம் புகழ் பெற்ற  பாடல்கள்தான்!
------------------------------------------------------------------------------------------------
பாடியவர்: டி.எம்.சௌந்திரராஜன்
இயற்றியவர்: வாலி

ஓராறு முகமும் ஈராறு கரமும்
தீராத வினைதன்னைத் தீர்க்கும் - துன்பம்
வாராத நிலைதன்னைச் சேர்க்கும் - ஐயன்

ஓராறு முகமும் ஈராறு கரமும்
தீராத வினைதன்னைத் தீர்க்கும்

ஆராவமுதென அருள்மழை பெய்யும்
ஆராவமுதென அருள்மழை பெய்யும்
கூரான வேல் கொண்டு கொடுமைகளைக் கொய்யும்

ஓராறு முகமும் ஈராறு கரமும்
தீராத வினைதன்னைத் தீர்க்கும்

சுவாமி மலையில் சிவகுருவென்று
சுவாமி மலையில் சிவகுருவென்று திரு
சீரலைவாயினில் சூரனை வென்று
தேமதுர மொழியாள் ஆ...
தேமதுர மொழியாள் தேவானையை மணந்த
திருப்பரங்குன்றில் தரிசனம் தந்த - அந்த

ஓராறு முகமும் ஈராறு கரமும்
தீராத வினைதன்னைத் தீர்க்கும்

மாமனைப்போல் இரு மாதுடன் கூடி
மாமனைப்போல் இரு மாதுடன் கூடி
மாலையில் பழமுதிர்ச் சோலையிலாடி
மாமயிலேறிட திருத்தணியைத் தேடி
மாமயிலேறிட திருத்தணியைத் தேடி
மோகமெல்லாம் தீர்ந்து ஆவினன்குடி சேர்ந்த

ஓராறு முகமும் ஈராறு கரமும்
தீராத வினைதன்னைத் தீர்க்கும் - துன்பம்
வாராத நிலைதன்னைச் சேர்க்கும்

--------------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

11.6.10

தேவதையா அல்லது பிசாசா? யாரைக் காதலிக்கிறீர்கள்?

-----------------------------------------------------------------------
தேவதையா அல்லது பிசாசா? யாரைக் காதலிக்கிறீர்கள்?

யாரைக் காதலிக்கிறீர்கள்? தேவதையையா அல்லது பிசாசையா? ஹீரோவையா அல்லது வில்லனையா?
----------------------------------------------------------------------------------------------------------

”நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்
நாளோடும் பொழுதோடும் உறவாடவேண்டும்....உறவாட வேண்டும்

நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும்... நீ காண வேண்டும்
நீ காணும் பொருள்யாவும் நானாக வேண்டும்...நானாக வேண்டும்”
------கவியரசர் கண்ணதாசன்
----------------------------------------------------------------------------------
எனக்கு வரும் மின்னஞ்சல்களில் சராசரியாகத் தினமும் 2 மின்னஞ்சலாவது தங்களுடைய காதலைப் பற்றி வாசகர்கள் எழுதியதாக இருக்கும். அதாவது தங்கள் ஜாதகத்தை அனுப்பினால், தங்களுடைய காதல் நிறைவேறுமா? பார்த்துச் சொல்ல முடியுமா? என்று கேட்டு எழுதப்பெற்றதாக இருக்கும்.

சில அஞ்சல்கள் வரும்போதே இணைப்பில் ஜாதகங்களுடனும், கடிதத்தில் பல please களுடனும் அவசியம் பார்த்துச் சொல்லும்படியான வேண்டுகோள்களுடன் வரும்.

தங்கள் காதல் வரலாற்றையும் சிலர் விவரித்து எழுதியிருப்பார்கள். பெரும்பாலும் வீட்டிலுள்ள பெருசுகளைத்தான் வில்லனாகச் சித்தரித்திருப்பார்கள். அவர்களை ஓரம்கட்டிவிட்டுக் கல்யாணம் செய்துகொள்ளலாமா? பின்னால் காதல் வாழ்வில் பிரச்சினை ஏதாவது வந்தால், அவர்களுடைய உதவியின்றித் தானே அதைச் சமாளிக்கமுடியுமா என்றும் கேட்டு எழுதியிருப்பார்கள்.

வரும் அஞ்சல்களில் 70% அஞ்சல்கள் இளம் பெண்களிடம் இருந்துதான் வரும்!

எல்லாம் காலக் கோளாறு. அதீதப் படிப்பு, பன்னாட்டு நிறுவனத்தில் அற்புதமான வேலை, கைநிறையச் சம்பளம். கட்டற்ற பொருளாதாரச் சுதந்திரம், வெளியுலகை முழுமையாகத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு, நாகரீகத்தின் தாக்கம் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

உடன் வேலை பார்க்கும் இளைஞனெல்லாம் சூர்யாவாகவும், அஜீத்தாகவும், சமீர்கானாகவும், ஷாருக்கானாகவும் தெரிகிறார்கள். அதேபோல இளைஞர்களுக்கு உடன் வேலைபார்க்கும் சிட்டுக்கள் எல்லாம், அனுஷ்கா சர்மாவாகவும், தீபிகா படுகோனேவாகவும், ஷமீரா ரெட்டியாகவும், நயந்தாராவாகவும், திரிஷாவாகவும் தெரிகிறார்கள்.

தெரியட்டும். தவறில்லை!

ஆனால் பெற்று வளர்த்து ஆளாக்கியவர்கள் தெரியாமல் போய்விடுகிறார்கள். அதுதான் சோகம். காதலுக்குக் கண் இல்லை என்பார்கள். அத்துடன் இன்று நன்றி, விசுவாசமும் இல்லை!

பெற்று, வளர்த்து ஆளாக்கிய அவர்களுடைய நம்பிக்கைகளை, எதிர்பார்ப்புக்களை வீணாக்கிவிடுகிறார்கள். அவர்களுடைய கனவுகளை எல்லாம் கானல்களாக மாற்றிவிடுகிறார்கள். அத்துடன் அவர்களுக்குத் தலை குனிவை ஏற்படுத்திவிடுகிறார்கள்.

தங்களுடைய பிள்ளைகளுக்கு எந்தமாதிரி வாழ்க்கை அமைய வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியாதா?

இதில் பையன்களைவிடப் பெண்ணைப் பெற்றவர்கள்தான் மிகவும் நொடித்துப்போய்விடுகிறார்கள். நொந்துபோய் விடுகிறார்கள்.

ஒவ்வொருவருக்கும் இரண்டு முகங்கள் உண்டு. காதலனின் உண்மையான முகம், திருமணத்திற்குப்பின்தான் தெரியவரும். அதுபோல காதலியின் உண்மையான முகமும் திருமணத்திற்குப்பின்தான் தெரியவரும்.

“பாதிமனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடா
மீதி மனதில் மிருகம் இருந்து ஆட்டிவைத்ததடா”

என்று கவியரசர் தன் பாட்டில் எழுதிவைத்ததைப்போல காதலனின் மிருக குணம் திருமணத்திற்குப்பின்தான் தெரியவரும். அதுபோல காதலித்தபோது தேவதையாகத் தெரிந்தவள், திருமனத்திற்குப் பிறகு பிசாசாகத் தெரிவாள்.

பெற்றோர்கள் பார்த்துச் செய்துவைக்கும் திருமணத்திலும் இந்தப் பிரச்சினை உண்டு என்றாலும், அதில் வித்தியாசம் இருக்கிறது. அவர்களும், மற்ற நெருங்கிய உறவினர்களும் கைகொடுக்க வருவார்கள். காதல் திருமணத்தில் யாரும் வரமாட்டார்கள். கண்ணீர் விடும்போது இரக்கப்பட்டு வந்தால் மட்டுமே உண்டு.

அதனால்தான் கவியரசர் இப்படி எழுதினார்:

“காதலைக் காவியத்திற்கு விட்டுவிடுங்கள்
கல்யாணத்தைப் பெற்றோர்களிடம் விட்டுவிடுங்கள்
பெற்றோர்கள் பார்ப்பதினால் என்ன நன்மையா - அவர்கள்
மற்றதையும் பார்ப்பதினால் வரும் நன்மையே!”

உருகி, உருகி எத்தனை காதல் பாட்டுக்களைத் திரைப்படங்களுக்காக எழுதியவர் அவர். தன் அனுபவங்களை வைத்துத்தான் இதையும் எழுதினார்.

நல்ல விஷயங்களை நாம் கேட்க மாட்டோம். அல்லது விதி நம்மைக் கேட்கவிடாது. பலரும் கெட்ட பின்னேதான் ஞானியாவர்கள். அதாவது ஞானம் பிறக்கும்.

சரி போகட்டும், அது அவர்களுடைய (பெற்றவர்களுடைய) தலை எழுத்து, வயதான காலத்தில் பிள்ளைகளால் அவதிப்பட வேண்டும் என்பது அவர்களுடைய விதி என்று, அதை ஒதுக்கிவைத்துவிட்டு சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன்.

பெற்றவர்கள் ஏதாவது சொன்னால், “சும்மா மொக்கை போடாதே!” என்று அவர்களின் வாயை அடைத்து விடும் பிள்ளைகள்தான் இப்போது அதிகம் என்பது வேதனையான விஷயம்!.
----------------------------------------------------------------------------------------------------
அந்த மாதிரித் தங்கள் காதலை சிலாகித்து எழுதப்பெற்று வரும் மின்னஞ்சல்களுக்கு நான் முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

நான் காதலுக்கு எதிரியில்லை. முறையற்ற காதலுக்கு மட்டும் எதிரி. முறையற்ற காதல் என்பது என்ன என்று என்னால் 50 பக்கங்களுக்கு எழுதமுடியும். ஆனால் எழுத விரும்பவில்லை. அதற்கு எழுத்தில் சொல்லமுடியாத சில காரணங்கள் இருக்கின்றது.

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். காதல் புனிதமானது. அந்த உணர்விற்கு நிகராக சுகம் தரும் உணர்வு எதுவுமில்லை!

காதலர்கள், தங்கள் காதலை வெற்றிபெறச் செய்து, இல்வாழ்விலும் வெற்றி பெற்று வாழ்ந்தார்கள் என்றால் அதற்கு நிகரான வாழ்க்கை வேறு இல்லை!

காதல் வெற்றி பெற்று, இல் வாழ்க்கை வெற்றி பெறவில்லை என்றால் எப்படி இருக்கும்? சற்று யோசித்துப் பாருங்கள்

ஆகவே, என்னுடைய பதில் பொதுவாக இப்படி இருக்கும்:

“காதல் புனிதமானது. காதலிப்பவனையே நீ மணந்துகொள். இந்த ஜோதிடக் கருமத்தை எல்லாம் பார்க்காதே. என்ன பிரச்சினை வந்தாலும் ஏற்றுக்கொள். மூன்று வருடமாகக் காதலிக்கிறேன் என்கிறாய். ஜாதகம் பொருந்தவில்லை என்று தெரிந்தால் என்ன செய்வாய்? அவனை உதறி விடுவாயா? உன்னால் முடியுமா பெண்ணே? இல்லை அவன்தான் உன்னை லேசில் விட்டுவிடுவானா? காதலிப்பவனை மணந்துகொள். ஒருநாள் வாழ்ந்தாலும் போதும். அதுதான் உண்மையான காதல். உண்மை தோற்கக்கூடாது. உன் காதலைப் பொய்யாக்கி விடாதே!”

அதற்கு உடனே பதில் வரும்.

“சார், என் காதலனை நான் பார்த்துக்கொள்கிறேன். என் பெற்றோர்களிடம், விஷயத்தைச் சொல்லி, அவர்களுடைய சம்மதத்தை எப்படிப் பெறுவது? என் ஜாதகத்தில் அதற்கு வழி உள்ளதா? ப்ளீஸ் பார்த்துச் சொல்லுங்களேன்!”

(தொடரும்)

கட்டுரையின் நீளம் கருதி இத்துடன் நிறுத்தியுள்ளேன். இதன் அடுத்த பகுதி 14.6.2010 திங்களன்று வெளிவரும்!

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!

10.6.10

Social Networking Sites - ஒரு பார்வை!

-----------------------------------------------------------------------------
Social Networking Sites - ஒரு பார்வை!

சமூக ஒருங்கிணைப்பு என்னும் பெயரில் நிறைய இணைய தளங்கள் உள்ளன.

அவற்றில் சிலவற்றைக் கீழே குறிப்பிட்டுள்ளேன்:

Yaari.com
Jhoos.com
Flikker
Face Book
Hi5
Linkedin
Orkut
Tagged
Twitter

இதுபோன்ற தளங்களில் உறுப்பினர்களாக உள்ள நண்பர்கள் மற்றும் நமது வகுப்பறை மாணவர்கள் பலரிடம் இருந்து என்னையும் அவர்களுடைய தளத்தில் சேரச்சொல்லி எனக்குத் தினமும் குறைந்தது 10 அழைப்புக்களாவது வருகின்றன. நான் யாருடைய அழைப்பையும் ஏற்றுக்கொள்வதில்லை.

எனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவமே அதற்குக் காரணம்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, யாரி டாட் காம் என்னும் தளத்தில் என்னையும் சேரச்சொல்லி நண்பர் ஒருவரிடம் இருந்து அழைப்பு வந்தது. என்ன? ஏது? என்று எதையும் தெரிந்து கொள்ளாமலேயே வந்த அழைப்பை, அதில் சொல்லியிருந்த இணைப்பைக் கிளிக் செய்து அதில் சேர்ந்துவிட்டேன்.

அதற்குப் பிறகுதான் துயரமாகிவிட்டது. தொல்லையாகிவிட்டது.

நான் ஆன்லைனில் எனது மின்னஞ்சல் பெட்டியைத் திறந்து வைத்திருந்த சமயம், எனது Contact Folderல் இருந்த அத்தனை மின்னஞ்சல் முகவரிகளையும் (அதுசமயம் சுமார் 600 முகவரிகள்) யாரி’யின் சர்வர் எனக்குத் தெரியாமலேயே - என் அனுமதியில்லாமலேயே அள்ளிக் கொண்டுபோய் விட்டது. அத்தனை பேர்களுக்கும் நான் அனுப்பியதுபோலவே தங்கள் தளத்தில் சேரச்சொல்லி அழைப்பு அனுப்பிவிட்டது. எத்தனைபேர்கள் சேர்ந்தார்களோ தெரியாது.

ஆனால், தில்லியில் மிக உயர் பதவியில் இருக்கும் ஒரு வி.வி,ஐ.பி’க்கும் அந்த அழைப்பு செல்ல, அவர்கள் அலுவலகத்தில், அவருடைய முதன்மை உதவியாளர் டென்சனாகிவிட்டார்.

”நீ யார்? இந்த யாரி தளம் யாருடையது? எதற்காக ‘இவரை’ அதில் சேரச் சொல்கிறாய்? உனக்கு இவருடைய மின்னனஞ்சல் முகவரி எப்படிக் கிடைத்தது? 24 மணி நேரத்திற்குள் தகுந்த பதில அனுப்பவும். இல்லை என்றால், இந்த அழைப்புக் குறித்து, உன் பெயரில் சைபர் க்ரைமில் புகார் செய்ய நேரிடும்” என்று நீண்டதொரு மின்னஞ்சல் எனக்கு வந்தது.

நான் அவர்களுக்கு, என்னுடைய முழு முகவரி, தொலைபேசி எண்களுடன் தகுந்த பதில் அளித்ததோடு, சம்பந்தப்பட்ட அந்தப் பெரியவருடன் (V.V.I.P) தொலை பேசியில் பேசி மீண்டு வந்தேன். அது பெரிய கதை.

ஆகவே, இன்றும் பல முக்கியமான முகவரிகள் என்னுடைய Contact Folderல் இருப்பதால், நான் இதுபோன்று வரும் எந்த அழைப்பையும் ஏற்றுக் கொள்வதில்லை. அதேபோல அழைப்பை நினைவுறுத்தி அடுத்தடுத்து வரும் தொடர் மின்னஞ்சல்களையும் கண்டுகொள்வதில்லை!

நல்ல மாட்டிற்கு ஒரு சூடு. ஒரு முறை ஏற்பட்ட கசப்பான அனுபவமே போதும்!

ஆகவே, யாரும் எனக்கு இதுபோன்ற அனாமதேயத் தளங்களில் சேரச்சொல்லி எனக்கு அழைப்பு அனுப்பவேண்டாம். அழைப்பை நீங்கள் அனுப்பியிருந்தாலும் சரி, வாத்தியாரிடம் இருந்து பதிலைக் காணவில்லையே என்று நினைக்க வேண்டாம்.

இதை ஒரு தன்னிலை விளக்கமாக நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------------------------------------
மேலதிகத்தகவல்கள்
Social networking sites are not only for you to communicate or interact with other people globally but, this is also one effective way for business promotion. A lot of business minded people these days are now doing business online and use these social networking sites to respond to customer queries. It isn't just a social media site used to socialize with your friends but also, represents a huge pool of information from day to day living.

A social network service focuses on building and reflecting of social networks or social relations among people, e.g., who share interests and/or activities. A social network service essentially consists of a representation of each user (often a profile), his/her social links, and a variety of additional services. Most social network services are web based and provide means for users to interact over the internet, such as e-mail and instant messaging. Although online community services are sometimes considered as a social network service in a broader sense, social network service usually means an individual-centered service whereas online community services are group-centered. Social networking sites allow users to share ideas, activities, events, and interests within their individual networks.

The main types of social networking services are those which contain category places (such as former school-year or classmates), means to connect with friends (usually with self-description pages) and a recommendation system linked to trust. Popular methods now combine many of these, with Facebook, Bebo and Twitter widely used worldwide; MySpace and LinkedIn being the most widely used in North America;[1] Nexopia (mostly in Canada);[2] Bebo,[3] Hi5, Hyves (mostly in The Netherlands), StudiVZ (mostly in Germany), iWiW (mostly in Hungary), Tuenti (mostly in Spain), Decayenne, Tagged, XING,[4] Badoo[5] and Skyrock in parts of Europe;[6] Orkut and Hi5 in South America and Central America;[7] and Friendster, Mixi, Multiply, Orkut, Wretch, renren and Cyworld in Asia and the Pacific Islands and Orkut and Facebook in India.

There have been some attempts to standardize these services to avoid the need to duplicate entries of friends and interests (see the FOAF standard and the Open Source Initiative), but this has led to some concerns about privacy.

Although some of the largest social networks were founded on the notion of digitizing real world connections, many other networks as seen in the List of social networking websites focus on categories from books and music to non-profit business to motherhood as ways to provide both services and community to individuals with shared interests.

வாழ்க வளமுடன்!

9.6.10

சனைச்சரணைத் தெரியுமா உங்களுக்கு?


திருநள்ளாறு கோவிலின் கோபுரத் தோற்றம்


சனீஷ்வர பகவான்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
சனைச் சரணைத் தெரியுமா உங்களுக்கு?

உங்களுக்கு அவனைத் தெரியாவிட்டாலும், அவனுக்கு உங்களைத் தெரியும். நீங்கள் அவனை நம்பாவிட்டாலும், அவன் உங்களை நம்பவைப்பான். அவனை உணராமல் நீங்கள் இந்த உலகைவிட்டுச் செல்ல முடியாது. அவன் தன்னை அடையாளம் காட்டிவிட்டுத்தான் உங்களுக்குப் Boarding Pass தருவான். அதை மனதில் கொள்க!

சனைச்சரண் என்றால் வடமொழியில் மெதுவாகச் செல்பவன் என்று பொருள். அந்தச் சனைச்சரண் என்ற சொல்தான் மறுவி சனீஷ்வரன் என்றாகி விட்டது.
சனீஷ்வரன் எழுந்தருளி அனைவருக்கும் அருள்பாலிக்கும் இடம் திருநள்ளாறு ஆகும்

நவக்கிரகங்களின் கோயில்களிலேயே மிகவும் பிரபலமான கோயில் சனீஷ்வர பகவான் எழுந்தருளியிருக்கும் திருநள்ளாறு கோவில் ஆகும்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த கோயில், தற்பொழுது புதுச்சேரி மாநிலத்தில் காரைக்காலுக்கு அருகில் உள்ளது. காரைக்காலில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரம்.

இங்கே வழக்கம்போல சிவனாரும், திருமதி சிவனாரும்தான் பிரதான தெய்வங்கள். அவர்கள் இல்லாமல் உலகம் ஏது? கிரகங்கள் ஏது? நாம் ஏது?

ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் என்ற பெயரில் சிவபெருமானும், பிராணாம்பிகையாக அம்பாளும் இங்கே குடிகொண்டிருக்கிறார்கள். அவர்களிருவருக்கும் நடுவே சனீஷ்வரனின் சன்னதி உள்ளது. வணங்குபவர்களுக்கு அபயமளிக்கும் தோற்றத்துடன் சனீஷ்வரன் இங்கே வீற்றிருப்பது, இக்கோவிலின் சிறப்பாகும்.

இக்கோவில் ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பெற்றதாகும். 7-ஆவது நூற்றாண்டில் கட்டப்பெற்றதாகக் கருதப்படும் தர்பாரண்யேசுவரர் திருக்கோயில் காரைக்காலிலிருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சனைச்சரரின் பார்வையால் பாதிக்கப்பட்ட நள சக்கிரவர்த்தி பல இன்னல்களை அனுபவித்து கடைசியாக இக்கோயிலுக்கு வந்து "நள தீர்த்தம்" என இன்றும் பிரபலமாக விளங்கும் இக்கோயிலின் புஷ்கரிணியில் முங்கி எழுந்து, தர்பாரண்யேசுவரரை பிரார்த்தனை செய்து சனி தோஷம் நீங்கி நலமுற்றதாகக் கோவிலின் வரலாறு கூறுகிறது. ஆகவே சுமார் இரண்டரை வருடங்களுக்கு ஒருமுறை சனிப்பெயர்ச்சி நடைபெறும் நாளன்று இக்கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

ஜாதகத்தில், சனி பகவான் நீசம் பெற்றுள்ளவர்களும், வக்கிரகதி அடைந்துள்ளவர்களும், சனீஷ்வரன் மறைவிடங்களில் அமர்ந்துள்ளவர்களும், மேலும் கோள்சாரப்படி, ஏழரைச்சனி, மற்றும் அஷ்டமச்சனி நடைபெறும் நிலையில் உள்ளவர்களும், இங்கே வந்து வணங்கிச் செல்வது நலன் பயக்கும். சனிஷ்வரனால ஏற்படும் உபாதைகள் குறையும்.

இங்கே வந்து திரும்ப முடியாத தூரத்தில் இருப்பவர்கள், வீட்டில் இருந்தவாறும், அல்லது உள்ளூரில் உள்ள கோவில்களில் இருக்கும் சனீஷ்வரனை சனிக்கிழமையன்று தவறாமல் வழிபட்டு வருவதும் நன்மை பயக்கும்! கோளறு திருப்பதிகம் படிக்கலாம்

சனீஷ்வரன் வசம் முக்கியமான இரண்டு துறைகள் உள்ளன. அவன்தான் கர்மகாரகன். செயல்காரகன். செயல்களுக்குக்காரகன். நமக்கு வேலை போட்டுக்கொடுப்பவன். Taskmaster அத்துடன் ஆயுள்காரகன். நம் ஆயுளை நிர்ணயிப்பவன். இறுதியாக நமக்குப் போர்டிங்க் பாஸ் கொடுத்து இறைவனடிக்கு அனுப்பிவைப்பவன்.

அவனைப்போல கொடுப்பவனும் இல்லை. கெடுப்பவனும் இல்லை! மனிதனை ஒருவழிக்குக் கொண்டு வருபவன் அவன்தான். அதாவது மனிதனுக்கு எல்லாத் துன்பங்களையும் (அனுபவங்களையும்) கொடுத்து நெறிப்படுத்துபவனும் அவனே!

தல வரலாறு:

நளன் பூஜித்ததால் நள்ளாறு எனப்படுகிறது. இறைவனருளால், நளன் சனியின் இடர் நீங்கப்பெற்றான்.

திருஞானசம்பந்தர், திருஆலவாயில் (அதுதாங்க மதுரையில்) சமணர்களோடு நடத்திய அனல் வாதத்தின்போது, இத்தலப் பதிகமான போகமார்த்த பூண்முலையாள் என்ற பதிகத்தை (ஓலைச் சுவடியை) தீயில் இட, அது தீப்பற்றாமல், பச்சைப் பதிகமாய் நின்று, சிவன் மற்றும் சனீஷ்வரனின் பெருமையை நிலைநாட்டியது.

முசுகுந்தச் சக்கரவர்த்தி தோற்றுவித்த சப்தவிடங்கத் தலங்களுள் இத்தலமும் ஒன்றாகும். இங்கே உள்ள சனிபகவான் சன்னதி சிறப்புடையதாகும்.

இங்கே செல்பவர்கள் முதலில் இங்கே உறையும் சிவபெருமானை வழிபட்ட பின்னரே சனிஸ்வரன் சன்னிதிக்குச் செல்ல வேண்டும். இத்தலத்தில் போகமார்த்த பூண்முலையாள் என்ற பதிகத்தைப் பாடி சிவபெருமானை வழிபட சனி தோஷம் விலகும். இது தருமபுரம் ஆதீனத்தின் பராமரிப்பில் உள்ள கோவிலாகும். சோழர்காலக் கல்வெட்டுக்களும் இக்கோவில் உள்ளன. அவைகள் இக்கோவிலின் தொன்மையைக்குறிக்கும்!

இறைவரின் திருப்பெயர்கள்: தர்ப்பாரண்யேஸ்வரர், திருநள்ளாற்றீசர். அம்பாளின் திருப்பெயர்கள் போகமார்த்த பூண்முலையாள், பிராணாம்பிகை. ஸ்தலமரம்: தர்ப்பை. தீர்த்தம்: நளதீர்த்தம், சிவகங்கை

திருமால், பிரம்மன், இந்திரன், அகத்தியர், புலஸ்தியர், அர்ச்சுனர், நளச் சக்கரவர்த்தி, திக்குப் பாலகர்கள், வசுக்கள், போஜன், முசுகுந்தச் சக்கரவர்த்தி போன்ற பலர் வழிபட்ட பெருமைகளை உடையது இத்தலம்.

சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோரால் பாடல் பெற்ற தலமும் இது. அதையும் நினைவில் கொள்க!

பேரளம்-காரைக்கால் புகை வண்டிப்பாதையில் இவ்வூர் உள்ளது. புகைவண்டி நிலையத்திற்கு அருகிலேயே திருக்கோவில் உள்ளது. காரைக்கால், நாகைப்பட்டிணம், மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய இடங்களிலிருந்து பேருந்து வசதி உள்ளது.

அமைதியான, இயற்கை எழில் கொஞ்சும் இடமாகும் இது.

திருவாரூர், திருக்குவளை, திருக்காரைவாசல், திருமறைக்காடு, திருநாகை, திருநள்ளாறு, திருவாய்மூர் ஆகிய ஏழு தலங்களில் உள்ள மூர்த்திகளும், சோழ அரசன் முசுகுந்த சக்கரவர்த்திக்கு இந்திரனால் பரிசாகக் கொடுக்கப்பெற்றதாகக் கருதப்படுகிறது. அந்த ஏழு தலங்களுக்கும் சப்தவிடத்தலங்கள் என்ற பெயர் உண்டு. அந்த ஏழு ஸ்தலங்களிலும் நீங்கள் சோழர்காலச் சிறபக்கலையின் சிறப்பைக் காணலாம்.

ஐந்துகாலப் பூஜைகள் அனுதினமும் உண்டு. அத்துடன் ஆண்டு முழுவதும் சிறப்புப் பூஜைகள் பலவுண்டு. சூரியபகவான் மேஷத்தில் காலடி எடுத்து வைக்கும், சித்திரை முதல் தேதியன்று இங்கே சிறப்புப் பூஜை உண்டு.
வைகாசிமாதம் 18 நாட்கள் கோவிலில் விழாவும் சிறப்புப் பூஜைகளும் உண்டு. ஆனி மாதம் நடராஜருக்காகவும், ஆடி மாதம் சுந்தரமூர்த்தி நாயனாருக்காகவும் விசேஷ பூஜைகள் உண்டு. புரட்டாசி மாதம் நவராத்திரி பூஜையும், ஐப்பசி மாதம் சுப்பிரமணியருக்காகவும் சிறப்புப் பூஜைகள் உண்டு. மார்கழி மாதம் நடராஜருக்காக 10 நாட்களும், பிறகு பங்குனி உத்திரத்தன்று பெரும் விழாவும் இக்கோவிலில் உண்டு,

சனி பகவானுக்கு உகந்தவைகள்:

நிறம்: கறுப்பு
வஸ்திரம்: கறுப்புத் துணி
உகந்த நாள்: சனிக்கிழமை
தான்யம்: எள்
வாகனம்: காகம்
மலர்: கருங்குவளை
உலோகம்: இரும்பு
இரத்தினம்: நீலம்
பலன்: வியாதி, கடன், துன்பங்கள் நீங்கும்!

சனீஷ்வரனுக்கான மந்திரம்:

"Om Hlim Sham Shanaye Namah"

The word 'Hlim' in above mantra denotes Stambhana Shakti, the power of delaying, stopping, holding, and terminating.

The following mantras are also considered very good for planet Saturn. You may opt to recite one of the following mantra if you find it comparatively easy to remember.

"Om praam preem praum sah shanayishraya namah"

"Om sham shanayisharaaye namah"

சனீஷ்வரனுக்கான காயத்ரி மந்திரம்:

ஓம் சனைச்சராய வித்மஹே
சூர்யபுத்ராய தீமஹி
நந்நோ மந்த ப்ரசோதயாத்!

("Om Sanaischaraya vidhamhe,
Sooryaputraya dhimahi,
tanno manda prachodayat")

அதீதமான வறுமை, துன்பம், ஏறுக்குமாறான வாழ்க்கை நிலைமை ஆகியவற்றால் வாடும் அன்பர்கள் இங்கே சென்று வழிபட்டு வருவது நன்மை பயக்கும்! இதுவரை சென்றிராதவர்கள் ஒருமுறை சென்றுவாருங்கள். சனீஷ்வரனின் அருளை வென்று வாருங்கள்!

கோவிலின் நடை திறந்திருக்கும் நேரம்:
காலை 6 மணிமுதல் மதியம் 1 மணி வரை. பிறகு மாலை 4 மணி முதல் இரவு 9 மணிவரை!

அன்புடன்
வாத்தியார்

மேலதிகத்தகவல்கள்:

Saturn is the planet of responsibility, and symbolizes the ethic of hard work.
Under its influence a person's character is strengthened through trial and difficulty.
Saturn disciplines us until we can learn to discipline ourselves. Saturn is the planet of diligence, self-control and limitation. Its domain is patience, stability, maturity and realism.
Saturn teaches us the lessons we must learn in life. In the grand plan of the universe,
Saturn does not give us more than we can handle.
Under Saturn's influence we achieve by overcoming obstacles and hardship. Sometimes the effort itself is the reward, for effort is what builds character.
In the end, what we learn under Saturn's influence we keep for the rest of our lives.
Saturn's position in your chart indicates how well you accept responsibility, whether you are self-disciplined, and what delays and opposition you can expect to encounter.

As a negative influence, Saturn can make a person overly ambitious, calculating and selfish, solitary, inhibited and unhappy.
Its negative influence is associated with inflexibility, cruelty, humorlessness and pessimism.
Saturn also represents illness, handicaps and misfortune.
Saturn is our destiny. It rules fate, the things we cannot escape

Favorable effect of Saneeshwaran will result in many fortunes and benefits like good health, success in all endeavors, peace of mind, proper respect from members of family and relations, prosperity, interest and enthusiasm in life.


வாழ்க வளமுடன்!