மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

31.3.09

எப்போது பின்னிப் பெடல் எடுப்பான்?

எப்போது பின்னிப் பெடல் எடுப்பான்?

பதிவர்களில் சிலர், "சார், பின்னிப் பெடல் எடுத்து விட்டீர்கள்!" என்று
எழுதுவார்கள். அது என்னவென்பது இன்றுவரை எனக்கு முழுமையாகத்
தெரியவில்லை.

ஏனென்றால் அதை பாராட்டுவதற்கும் உபயோகிக்கிறார்கள். அதேபோல
ஒரு விஷயத்தைக் குடைவதற்கும் உபயோகிக்கிறார்கள்

அதைப் பற்றித் தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.

ஜோதிடரை ஒருவன் எப்போது பின்னிப் பெடல் எடுப்பான்?

கீழே எழுதியுள்ளேன். படித்துப்பாருங்கள்
----------------------------------------------------------------------------------------------

ஒரு ஜாதகத்தைக் கையில் எடுத்தவுடன், ஒரு ஜோதிடர் செய்ய வேண்டிய
சில முக்கியவேலைகளைக் கீழே பட்டியல் இட்டுள்ளேன்.

1. ஜாதகம் சரியாக உள்ளதா என்று பார்க்க வேண்டும். ஜாதகனின் பிறந்த நாள்
நேரத்துடன் கட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ள கிரக அமைப்புக்கள் சரியாக
உள்ளதா என்றும் பிறப்பு திசையின் இருப்பும் சரியாகக் குறிப்பிடப்பட்டுள்ளதா
என்று சோதித்துப் பார்க்க ('Check Up' செய்ய) வேண்டும்.

தன்னிடம் உள்ள பஞ்சாங்கங்களை வைத்து அதைப் பார்ப்பார். இப்போது
அதற்கு வேலை இல்லை. கணினி ஜாதகம் என்றால் துல்லியமாக இருக்கும்

2. லக்கின பாவம், பூர்வ புண்ணிய பாவம், பாக்கிய ஸ்தானம், லாப ஸ்தானம்
ஆகியவைகள் (That is the first house, fifth house, ninth house and eleventh
house) நன்றாக உள்ளனவா என்று பார்க்க வேண்டும். They are the primary
houses for the prosperity of the native of the horoscope

3. ஜாதகத்தில் எத்தனை கிரகங்கள் உச்சம் பெற்றுள்ளன. எத்தனை கிரகங்கள்
ஆட்சியில் உள்ளன. எத்தனை கிரகங்கள் நீசமாகி உள்ளன என்றும் அவைகள்
ஜாதகத்தில் எந்த வீட்டிற்கு சம்பந்தப்பட்டவை என்றும் குறித்துக் கொள்ள
வேண்டும்

4. அஷ்கவர்க்கம் தெரிந்த ஜோதிடராக இருந்தால், வீடுகளின் பரல்களையும்
கிரகங்களின் சுய வர்க்கப் பரல்களையும் குறித்துக் கொள்ள வேண்டும்

5. நடப்பு திசையையும், நடப்பு புத்தியையும் குறித்துக் கொள்ள வேண்டும்
(The detail of the present Dasa and present sub period in that dasa)

6. நடப்பு கோள்சாரம். இன்றைய கோள்சாரம் ஜாதகனின் சந்திர ராசியில்
இருந்து எந்தெந்த பாவங்களில் நடந்து கொண்டிருக்கிறது என்னும் விவரம்
அதாவது ஜாதகனுக்கு ஏழரைச் சனி அல்லது அஷ்டமச்சனி நடக்கிறதா?
குரு 1 அல்லது 3 ல் இருந்து தொல்லை கொடுக்கிறாரா என்பது போன்ற
விஷயங்களைக் குறித்துக் கொள்ள வேண்டும்.

7. ஜாதகத்தில் என்னென்ன யோகங்கள் உள்ளன என்று குறித்துக் கொள்ள
வேண்டும்.

இதையெல்லாம் குறித்துக் கொண்ட பிறகுதான் அவர் ஜாதகனுடன் பேசவே
செய்ய வேண்டும். அந்தக் காலத்தில் பிரபல ஜோதிடர்கள் தங்கள் உடன்
இருக்கும் சிஷ்யனை வைத்து, அல்லது அதற்கென்று அமர்த்தியிருக்கும்
பணியாளரை வைத்து இதையெல்லாம் செய்து கொள்வார்கள்

இப்போது அப்படி யாரும் செய்வதாகத் தெரியவில்லை. அதுதான் சோகம்

யாருக்கும் நேரமில்லை. பார்ப்பவருக்கும் நேரமில்லை. பார்க்க வருபவனுக்கும்
நேரமில்லை. எல்லாம் அவசரகதி அல்லது ஓட்டம்!
------------------------------------------------------------------------------------------------------
இவையெல்லாவற்றையும் விட முக்கியமானது ஒன்று இருக்கிறது.

அதுதான் ஆயுள் பாவம்!

ஆயுள் பாவத்தைப் பார்க்காமல், பலன் சொல்வது எப்படிச் சரியாக இருக்கும்?

ஒரு மாதத்தில் விபத்தில் இறக்க இருப்பவனுக்கு, ஆறு மாதங்களில் திருமணம்
நடக்கும் என்று சொல்வது எப்படி சரியாக இருக்கும்?

ஜாதகத்தைக் கொண்டு வந்தவன் (அதாவது இறந்து போனவனின் நண்பன்)
இரண்டாவது மாதமே வந்து ஜோதிடரைச் செம்மி விட மாட்டானா?
அல்லது பின்னிப் பெடல் எடுத்து விடமாட்டானா?

அந்தக் காலத்தில் ஜோதிடர்கள், ஜாதகத்தைக் கொண்டு வந்தவனுடன் பேசும்
முன்பாக, இது யாருடைய ஜாதகம் என்று கொண்டு வந்தவனையே கேட்டுத்
தெரிந்து கொள்வார்கள். அவன் தன்னுடையது என்று சொன்னால், சில
விஷயங்களை, குறிப்பாக ஆயுள் பாவத்தைப் பற்றி அவனுடன் பேச
மாட்டார்கள்
-----------------------------------------------------------------------------------------------------
நான்காம் வீட்டுப் பாடத்தின் அடுத்த பகுதி

நான்காம் வீட்டில் வந்தமரும் கிரகங்களுக்கான பலன்கள்

1. சூரியன்

நன்மையல்ல! ஜாதகன் மனக்கவலைகள் மிகுந்தவன். மகிழ்ச்சி இராது.
ஒரு இடத்தில் இருக்க மாட்டான். சிலர் தத்துவங்கள், சாஸ்திரங்களில்
ஈடுபட்டுத் தங்களை மறந்திருப்பார்கள்.

இந்த அமைப்புள்ளவன் அரசியலில் ஈடுபட்டல் வெற்றி பெற முடியாது.
இங்கே இருக்கும் சூரியன், சனி அல்லது செவ்வாயின் பார்வை பெற்றால்
ஜாதகன் பல இடையூறுகளையும் தடைகளையும் சந்திக்க நேரிடும்.

Sun: mental anxiety, enmity with relatives and bad effects to mother
--------------------------------------------------------------
2. சந்திரன்.

ஜாதகனுக்கு சொந்த வீடு இருக்கும். உறவினர்களால் மகிழ்ச்சி இருக்கும்.
ஜாதகன் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பான். தன்னிறைவுடன் இருப்பான்.
சிலர் ஆட்சி பீடத்தில் அமர்வார்கள்.

இங்கே இருக்கும் சந்திரனைத் தீய கிரகங்கள் பார்த்தால், ஜாதகன் சிறு
வயதிலேயே தாயைப் பிரிய நேரிடும். அல்லது இழக்க நேரிடும்.

இங்கே இருக்கும் சந்திரனைச் சுக்கிரன் பார்த்தால், ஜாதகன் தன்னுடைய
மன மகிழ்ச்சிக்காக எதையும் செய்வான். எதையும் என்பதற்குப் பல
அர்த்தங்கள் உண்டு. புரிந்து கொள்ளுங்கள்.

இங்கே இருக்கும் சந்திரனைக் குரு பார்த்தால், ஜாதகன் மிகவும்
நேர்மையானவன். தன்னுடைய செயல்களால் பலரது பாராட்டையும்
பெறுவான்.
----------------------------------------------------------------
3. செவ்வாய்

இது மோசமான நிலை. விரும்பத்தக்கது அல்ல! ஜாதகனுக்கு அவனது
அன்னை, உற்வினர்கள், மற்றும் நண்பர்களால் மகிழ்ச்சி இராது.

அரசியலுக்குச் சென்றால் வெற்றி பெறுவான். தாயாருடனும் மற்றும்
குடும்ப உறவினர்களுடனும் அடிக்கடி சச்சரவுகளில் ஈடுபட நேரிடும்.

ஜாதகனுக்கு வீடு வாசல் இருக்கும். ஆனால் அவற்றால் மகிழ்ச்சி
இருக்காது.

செவ்வாயுடன் ராகு அல்லது கேது சேர்ந்து இந்த இடத்தில் இருந்தால்
ஜாதகனுக்கு வாழ்க்கை வெறுத்துவிடும். சிலர் தங்கள் உயிரை மாய்த்துக்
கொள்ளும் எண்ணத்துடன் இருப்பார்கள்.

Mars - bad for mother but acquisition of property and vehicles
will be there.
-----------------------------------------------------------------
4. புதன்

ஜாதகன் சிறந்த கல்வியாளனாக இருப்பான். சிலருக்குக் கெளரவப் பதவிகள்
வந்து சேரும். பலராலும் போற்றப்படுவான். பாராட்டப்படுவான். நல்ல
சொத்துக்கள் வாகன வசதிகளை உடையவனாக இருப்பான். அல்லது அவைகள்
வந்து சேரும்.

சிலர் இசையில் ஞானம் உடையவர்களாக இருப்பார்கள். சிலர் இசையில்
ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள். பல கலைகளிலும் ஆர்வம் இருக்கும்
அதன் காரணமாக பல நாடுகளுக்கும் அல்லது பல இடங்களுக்கும் சென்றுவரும்
வாய்ப்புக்கள் கிடைக்கும்.

நகைச்சுவை உணர்வு நிரம்பியவர்களாக இருப்பார்கள். வாழ்த்தெரிந்தவர்கள்

Mercury - Intelligent, clever in speech, good education
and acquisition of property.
-----------------------------------------------------------------------------
5. குரு

அதிகம் படித்தவர்கள். மகிழ்ச்சி நிரம்பியவர்கள், ஆட்சியாளர்களின்
நன்மதிப்பைப் பெற்றவர்கள். தத்துவங்களில் ஈடுபாடு கொண்டவர்கள்
ஆன்மீகத்தில் பற்று மிக்கவர்கள். பலராலும் மதிக்கப் படுபவர்கள்
எதிரிகள் இருக்க மாட்டார்கள். இருந்தாலும் இவர்களிடம் வாலாட்ட
மாட்டார்கள்.

இந்த அமைப்புள்ள பலருக்கும் அமைதியான குடும்பச் சூழ்நிலை இருக்கும்.

மொத்தத்தில் அதிர்ஷ்டமானவர்கள்

Jupiter - Good for mother, Good education, good home and good vehicles.
----------------------------------------------------------------------------------
6. சுக்கிரன்

யோகமான அமைப்பு. தாயின் மேல் மிகுந்த பாசம் கொண்டிருப்பார்கள்.
சொத்து, சுகங்கள் இருக்கும் அல்லது வந்து சேரும். நல்ல குணமுடையவர்கள்
ஏராளமான நண்பர்களை உடையவர்கள். சிலர் இசையில் நாட்டமுடையவர்
களாக இருப்பார்கள். ஆன்மீகத்தில் ஈடுபாடு உடையவர்கள்.

இவர்களுடைய விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.
வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

Venus - Good for mother, Wealth, property, acquisition of jewels, vehicles etc.
If in his own house or the house of exaltation he causes Maalavya yoga
which is one of the Pancha Maha purusha yogas in astrology.
-----------------------------------------------------------------------------------
7. சனி

இளம் வயதில் நோஞ்சானக அல்லது நோயுற்றவனாக இருப்பார்கள்.
இளம் வயதில், தாய் மற்றும் தாயன்பு இல்லாமல் போயிருக்கும்.
கடுகடுப்பான மன நிலை இருக்கும். சொத்துக்கள் இருக்காது.
இருந்தாலும் அது கையில் கிடைப்பதற்கு பல அவஸ்தைகளைச்
சந்திக்க நேரிடும்.

சிலர் சுற்றத்தாரின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். வாழ்க்கை
தனிமைப் பட்டுப் போகும். மகிழ்ச்சி இருக்காது.

சுபக்கிரகங்களின் பார்வை இல்லையென்றால் மேற்கூறியவைகள்
அனைத்தும் நடக்கும்

Saturn: Saturn in 4th other than his good houses is not good.
Will be interrupted or prolonged beyond reasonable age of completion.
Bad for mother also.
----------------------------------------------------------------------------------
8. ராகு

மோசமான அமைப்பு. சுகக் கேடுகள் நிறைந்த வாழ்க்கை.
சிலரின் செய்கைகள் முட்டாள்தனமாக இருக்கும்.

மோசடிகளுக்கு ஆளாக நேரிடும். சிலர் மோசடிகளைச் செய்து
விட்டு அதனால் மன நிம்மதியில்லாமல் இருப்பார்கள்

Rahu - bad on the whole except when Rahu is exalted
---------------------------------------------------------------------------------
9. கேது

தாயன்பு, சொத்துக்கள், சுகங்கள் இல்லாத வாழ்க்கை.
சிலர் தூர தேசங்களில் வாழ நேரிடும்.

வாழ்க்கையில் பல அதிரடியான கஷ்டங்களை அல்லது அனுபவங்களைச்
சந்திக்க நேரிடும். பல திருப்புமுனைகளையும், பல மாற்றங்களையும்,
பல இழப்புக்களையும் சந்திக்க நேரிடும்.

பொதுவாக இது நன்மைதரும் அமைப்பு அல்ல!

Ketu: good for education but Mother will suffer great anxiety on account
of one child
---------------------------------------------------------------------------------------
நான்காம் வீட்டைப் பற்றிய பாடம் முற்றிற்று!

அடுத்த பாடம் மூன்றாம் வீட்டைப் பற்றியது!

அன்புடன்
வகுப்பறை வாத்தியார்

வாழ்க வளமுடன்!

27.3.09

ஆசைப்பட்டதை வாங்குவது எப்படி?

ஆசைப்பட்டதை வாங்குவது எப்படி?

என்ன கேள்வி இது? ஆசைப்பட்டது எதுவாக இருந்தாலும் வாங்கிவிடலாம்
கையில் தேவையான பணம் இருந்தால் போதும்.

ஆனால் ஒன்றை மட்டும் எந்தக் கொம்பனாலும், எத்தனை கோடி பணம்
இருந்தாலும் வாங்க முடியாது

அது என்ன?

அனைவருக்கும் தெரிந்ததுதான்.

அது அன்பே வடிவான தாய்!

தாயன்பைப் பற்றி தாயை இழந்து தவிக்கிறவர்களிடம் கேட்டால் தெரியும்.
தாயன்பைப்பற்றித் தாய் இருக்கிற பலபேர்கள் உணர்வதில்லை.

அதுதான் மனித சோகம்!

ஒரு குழந்தை வளர்ந்து ஆளாகின்ற வரை, அதாவது பதினான்கு வயதுவரை
தாய் முக்கியம். பெண் குழந்தையாக இருந்தால் அதி முக்கியம்.

அதனால்தான் முதல் கேந்திர வீடாக தாய் வீடு அமைந்துள்ளது.
தாய்க்குப் பிறகுதான் தாரம். அதனால்தான் கேந்திர வரிசையில் ஏழாம் வீடு
இரண்டாவதாக அமைந்துள்ளது.

குழந்தைப் பருவம் அவலமில்லாமல் நன்றாக இருக்க வேண்டும் என்றால்
நான்காம் வீடு நன்றாக இருக்க வேண்டும்.
------------------------------------------------------------------------------------------------
ஒரு சினிமாக் கவிஞர் அதைப் பாட்டில் வைத்தார். அவரை மனமுவந்து
பாராட்டுகிறேன் இந்த இடத்தில் அந்தப் பாடலின் துவக்க வரிகளையும்
கொடுத்து மகிழ்கிறேன்

''ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்
அம்மாவை வாங்க முடியுமா..... ஓ....ஓ....
அம்மாவை வாங்க முடியுமா...
உன்னையும் என்னையும் படைச்சதிங்கே யாருடா
அது ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் அந்த தாயடா...

ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்
அம்மாவை வாங்க முடியுமா..... ஓ....ஓ....
அம்மாவை வாங்க முடியுமா..."
-----------------------------------------------------------------------------------------------
4th House (முன் பாடத் தொடர்ச்சி)
பொதுப் பலன்கள்.

1
நான்கில் குரு வந்தமர்ந்தும், நான்காம் அதிபதி வேறு சுபக் கிரகங்களுடன்
கூட்டணி போட்டும் இருந்தால் ஜாதகனுக்கு நல்ல உறவுகளும்,
நண்பர்களும் மிகுந்திருப்பார்கள். ஜாதகனின் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக
இருக்கும்.

2
நான்கில் தீய கிரகங்கள் வந்தமர்ந்தும், நான்காம் அதிபதி வேறு தீய
கிரகங்களுடன் கூட்டணி போட்டும் இருந்தால் ஜாதகனுக்கு நல்ல
உறவுகளும், நண்பர்களும் இருக்கமாட்டார்கள். ஜாதகனின் வாழ்க்கை
பிரச்சினைகள் உரியதாக இருக்கும்.

3
நான்காம் அதிபதி லக்கினத்தில் இருந்தாலும், அல்லது 7லில் அமர்ந்து
லக்கினத்தைப் பார்த்தாலும் ஜாதகனுக்கு சிரமங்களின்றி வீடு அமையும்.

4
நான்காம் அதிபதி 6ம் வீடு அல்லது 8ஆம் வீடு அல்லது 12ஆம் வீடுகளில்
சென்றமர்ந்தும், சுபக்கிரகங்களின் பார்வையைப் பெறாமலும் இருந்தால்
ஜாதகனின் தாயார் அவனுடைய சிறுவயது அல்லது இளம் வயதிலேயே
மரணமாகி விடுவாள்.

5
நான்காம் அதிபதி லக்கினத்திலும், நான்கில் சுக்கிரனும் இருந்தால் ஜாதகன்
செல்வந்தனாக இருப்பான். அல்லது செல்வந்தனாக உயர்வடைவான்.

6
நான்காம் அதிபதி பகை வீடுகளில் சென்றமர்ந்தும், நான்காம் வீட்டில்
சனி அல்லது செவ்வாய் வந்து அமர்ந்தும் இருந்தால், ஜாதகன் சொத்து
செல்வம் எதுவும் இல்லாமல் இருப்பான். இருந்தால் அனைத்தும் அவனை
வீட்டு நீங்கும் அல்லது தொலைந்து போகும்.

7
நான்காம் அதிபதி எட்டில் அமர்ந்தாலும் அல்லது நீசமடைந்திருந்தலும்
அல்லது தீய கிரகங்களுடன் சேர்ந்திருந்தாலும், அல்லது அஸ்தமணமாகி
இருந்தாலும் ஜாதகனுக்கு வீடு வாசல் சொத்து சுகம் இருக்காது.
இருந்தாலும் விரைவில் அவனை விட்டு அவைகள் நீங்கிவிடும் அல்லது
தொலைந்து விடும் அல்லது கரைந்து விடும். எப்படி வேண்டுமென்றாலும்
வைத்துக் கொள்ளுங்கள்.

8
நான்காம் அதிபதியும், பத்தாம் அதிபதியும் பரிவர்த்தனையாகியிருந்தால்
ஜாதகனுக்கு நிறைய இடங்களையும், நிலங்களையும் வாங்கிச் சேர்க்கும்
யோகம் உண்டு!

9
அப்படிப் பரிவத்தனை பெறும் கிரகங்கள் வலுவாகவும் அல்லது சுய
வர்க்கத்தில் அதிக பரல்களுடனும் இருந்தால் ஜாதகன் அரசனுக்கு
நிகரான சொத்துக்களுடன் இருப்பான். சிலர் ஆட்சிபீடத்திலும்
அமர்வார்கள்.

10
நான்காம் வீட்டு அதிபதியும் ஆறாம் வீட்டு அதிபதியும் பர்வர்த்தனை
ஆகியிருந்தால் ஜாதகன், சிக்கலிருக்கும் தன் முன்னோர் சொத்துக்களை
மீட்கும் வேலையில் வெற்றி பெறுவான். அவைகள் உரிய காலத்தில்
அவனிடம் வந்து சேரும்.

11
நான்கில் இருக்கும் குரு பலமில்லாமல் இருந்தால், ஜாதகனுக்கு
சொத்து இருந்தாலும் மகிழ்ச்சி இருக்காது.

12
நான்காம் அதிபதி நீசம் பெற்று சூரியனுடன் சேர்ந்திருந்தால், ஜாதகனின்
சொத்துக்கள் அரச தண்டனையில் பறிபோகும். அல்லது நீதிமன்ற
வழக்குகளில் பறி போகும்.

13
நான்காம் வீட்டில் ஒன்றிற்கு மேற்பட்ட தீய கிரகங்கள் இருந்து, நான்காம்
அதிபதியும் பகை வீட்டில் இருந்தால், ஜாதகன் தயக்கமில்லாமல் பல
பாவச் செயல்களைச் செய்பவனாக இருப்பான்.

14
அதே நிலை ஒரு பெண்ணின் ஜாதகத்தில் இருந்தால், ஜாதகி ஒழுக்கம்
தவறி பல ஆடவர்களைக் கூடி மகிழ்பவளாக இருப்பாள்.

15
நான்கில் சந்திரன் இருக்க, அந்த வீட்டைத் தீய கிரகங்கள் பார்த்தால்
ஜாதகன் தன் தாயைச் சின்ன வயதில் பறிகொடுக்க நேரிடும்.

16
நான்காம் வீட்டைக் குரு பார்த்தால், ஜாதகன் நேர்மையானவனாக
இருப்பான்.

17
நான்காம் வீட்டை ராகு பார்த்தால் அல்லது நான்கில் இருந்தால்
ஜாதகன் கல்மிஷம் பிடித்த மனதுக்காரனாக இருப்பான்.

18
நான்காம் வீடு இதயத்திற்கான் வீடு. இந்தவீட்டில் ராகு அமர்வது
சுகக்கேடு. சிலருக்கு இதய நோய்ஏற்படும். The heart may be afflicted
if rahu is posited in the fourth. (As the Fourth House rules the heart).

19
If rahu is in the 4th house, the native will be devoid of happiness,
landed properties, relatives and conveyances and all relatives will become
enemies. This position of the Rahu is detrimental in getting affection
from mother.

20
நான்காம் அதிபதி லக்கினத்திற்கு எட்டில் இருந்தாலும் அல்லது
லக்கினாதிபதிக்கு எட்டில் இருந்தாலும், ஜாதகனுக்குத் தன் தாயுடன்
சுமூகமான, அன்பான உறவு இருக்காது.

21
நான்காம் வீட்டில் இருக்கும் சுக்கிரனும், பத்தாம் அதிபதியும் வலுவாக
இருந்தால் ஜாதகன் இசையில் பெரிய ஆளாக வருவான்.

22
நான்காம் வீட்டில் இருக்கும் குருவும், பத்தாம் அதிபதியும் வலுவாக
இருந்தால் ஜாதகன் சிறந்த கல்வியாளனாக விளங்குவான்.அத்துறையில்
புகழ் பெறுவான்.

23
சூரியனும், புதனும் ஒன்று சேர்ந்து நான்கில் இருந்தாலும் அல்லது
நான்காம் வீட்டைப் பார்த்தாலும், ஜாதகன் கணிதப் பாடத்தில் உயர்
கல்விவரை படிப்பான்.

24
நான்காம் அதிபதியும் புதனும் கூட்டாகவும் வலுவாகவும் இருந்தால் ஜாதகன்
பெரிய சிந்தனையாளனாக வருவான்

25
நான்காம் அதிபதியும் சூரியன் கூட்டாகவும் வலுவாகவும் இருந்தால் ஜாதகன்
தலைவனாக வருவான் அல்லது தலைமைப் பதவிக்கு உயர்வான்.

26
நான்காம் அதிபதியும் செவ்வாயும் கூட்டாகவும் வலுவாகவும் இருந்தால்
ஜாதகன் படைத்தளபதி உயர்வான்.

27
நான்காம் அதிபதியும் குருவும் கூட்டாகவும் வலுவாகவும் இருந்தால்
ஜாதகன் நீதிபதியாக உயர்வான்

28
4th lord + சுக்கிரன் வலுவாக இருந்தால் ஜாதகன் = கவிஞன் தத்துவஞானி

29
4th lord + சனி வலுவாக இருந்தால் ஜாதகன் = statesman and leader

30
4th lord + ராகு வலுவாக இருந்தால் ஜாதகன் = diplomat

31
4th lord + கேது வலுவாக இருந்தால் ஜாதகன் = spiritualist, seer, prophet

32
நான்காம் அதிபதி, லக்கின அதிபதி, குரு, புதன் ஆகிய நான்கு
அம்சங்களும் சேர்ந்துதான் ஒரு ஜாதகனின் கல்வியையை நிர்ணயம்
செய்யும். இவற்றுள் லக்கின அதிபதி மிகவும் 'வீக'காக இருந்தால்
மற்ற மூன்றும் பலனற்றதாகிவிடும்

இவற்றையெல்லாம் அலசித்தான் ஒரு ஜோதிடர் பலனைச் சொல்ல வேண்டும்
இல்லையென்றால் அவர் சொல்லும் பலன் பலனற்றதாகிவிடும்

(அலசல் தொடரும்)


வாழ்க வளமுடன்!

25.3.09

எந்த ஊர்க்காரர்களுக்கு வருமானம் அதிகம்?


எந்த ஊர்க்காரர்களுக்கு வருமானம் அதிகம்?

அது என்ன வருமானத்தையும், ஊரையும் இணைத்துச்
சொல்கிறீர்கள் என்கிறீர்களா?

இரண்டிற்கும் சம்பந்தம் உள்ளது சாமிகளா!

தஞ்சை மாவட்டத்தில் இருக்கும் விவசாயத் தொழிலாளியைவிட,
திருப்பூரில் இருக்கும் சாயத் தொழிலாளிக்கு இரண்டு மடங்கு
சம்பளம் கிடைக்கும்.

சேலத்தில் இருக்கும் கூலித் தொழிலாளியைவிட நாமக்கல்லில்
இருக்கும் கூலித் தொழிலாளியின் வருமானம் அதிகம்.
அதுபோல சிவகாசியில் இருக்கும் உழைப்பாளிகளுக்குத் தனி
மதிப்பு உண்டு

அதற்குக் காரணம், அங்கே உள்ள அசுரத் தொழில் வளர்ச்சியும்,
அதனால் உண்டாகும் பொருளாதார மாற்றங்களுமே காரணம்.

அந்த அசுரத் தொழில் வளர்ச்சிக்கு யார் காரணம்?

அரசா? இல்லை!

யார் காரணம் என்பதைக் கீழே கொடுத்துள்ளேன். தொடர்ந்து
படியுங்கள்
=======================================================
பாடம்: நான்காம் வீடு

நான்காம் வீடு முக்கியமான வீடுகளில் ஒன்று.

நான்காம் வீட்டைவைத்துத்தான் ஜாதகனின் தாய், கல்வி,
வாழ்க்கை வசதிகள் (Comforts in life) ஆகிய மூன்றையும்
சொல்வார்கள்

கல்விக்கு உரிய வீடு நான்காம் வீடுதான்.

ஒரு வேடிக்கை பாருங்கள். கல்விக்கு உரிய வீடு நான்காம் வீடு.
அறிவிற்கு (keen intelligence) உரிய வீடு ஐந்தாம் வீடு.

கல்வி, அறிவு இரண்டையும் ஒரே வீட்டில் இறைவன் வைக்கவில்லை.

வைத்திருந்தால் என்ன ஆகியிருக்கும்?

அந்த வீடு கெட்டுப்போயிருந்தால் மனிதனுக்கு கல்வி, அறிவு இரண்டும்
இல்லாமல் போய்விடும். ஆகவே வைக்கவில்லை. அப்படி ஒரு சகாயம்!

அதனால்தான் படிக்காத மேதைகளும் உண்டு. படித்த முட்டாள்களும் உண்டு

ஜாதகத்தில் ஒன்று நன்றாக இல்லாவிட்டாலும் ஒன்று நன்றாக இருக்கும்!

கல்வி அடிபட்டிருந்தாலும், அறிவு தூக்கலாக இருக்கும். இல்லை
அறிவு அடிபட்டிருந்தால், கல்வியாவது நன்றாக இருக்கும்.

இரண்டு வீடுகளும் நன்றாக அல்லது சரியாக இருந்தால், படித்த
அறிவாளியாக இருப்பான்.

இன்று தமிழ் நாட்டிலேயே அதிக தொழில் முனைவோர்கள் நிறைந்த
இடங்கள் மூன்று

1.திருப்பூர்
2.நாமக்கல்
3.சிவகாசி

இந்த மூன்று ஊர் மக்களுமே நன்றாகத் தொழில் செய்கிறார்கள்.
உற்சாகமாக இருக்கிறார்கள். அதிகம் சம்பாத்தித்துக்
கொண்டிருக்கிறார்கள்

அவர்களில் பெரும்பான்மையோர் அதிகம் படிக்காதவர்கள். அதை மனதில்
வையுங்கள்.

படித்தவன் பாட்டைக் கெடுத்தான். எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான் என்று
அவர்கள் எதையும் கெடுப்பதில்லை!
--------------------------------------------------------------------------------------------------
நான்காம் வீட்டு அதிபதி (அவர்தான் முக்கியம். அவர்தான் அந்த வீட்டின்
நாயகன்) நன்றாக இருந்தால், அந்த வீட்டின் அம்சங்கள் அனைத்தும்
ஜாதகனுக்குக் கிடைக்கும்.

நன்றாக இருப்பது என்பது என்ன? சோப்புப் போட்டுக் குளித்து, படிய தலை
வாரி, ஜோவன் மஸ்க் சென்ட் அடித்துக் கொண்டு, வான் ஹுஸைய்ன் ஆயத்த
அடைகளை அனிந்து கொண்டு, அரவிந்தசாமி லுக்கில் இருப்பதா? இல்லை!

நாயகன், கேந்திர வீடுகளில் அல்லது திரிகோண வீடுகளில் இருப்பதும்,
ஆட்சி, உச்சம் பெற்று இருப்பதும், அதோடு சுயவர்க்கத்தில் நல்ல
பரல்களைப் பெற்று இருப்பதுமே ஆகும். அதோடு சுப கிரகங்களுடன்
கூடி இருத்தல் கூடுதலான விஷேசம். அதைவிடச் சிறப்பு பத்தாம் வீட்டில்
அமர்ந்து தனது வீட்டை நேரடியான பார்வையில் வைத்திருத்தல்.

இப்படிப் பலவற்றையும் அலசித்தான் ஒரு வீட்டின் பலனைப் பார்க்க வேண்டும்
---------------------------------------------------------------------------------------------------
நான்காம் வீட்டு அதிபதி நன்றாக இருந்தால் அம்மூன்றும் அசத்தாலாகக்
கிடைக்குமா?

கிடைக்கும். அவ்வளவுதான்.

அசத்தலாகக் கிடைப்பதற்கு மேலும் சில விதிமுறைகள் உள்ளன!

ஒரு வீட்டிற்கு மூன்று ஃபோர்ட்போலியோ எனும் போது. அது சம்பந்தப்பட்ட
கிரகங்களும் நன்றாக இருக்க வேண்டும்.

நிதி அமைச்சகம் பல திட்டங்களுக்கு நிதியை ஒதுக்கும். ஆனால் அதை
நல்ல முறையில் பயன் படுத்திச் செயல் படுத்துவது சம்பந்தப்பட்ட துறையின்
அமைச்சரைச் சார்ந்தது. அது போலத்தான் இதுவும்

தாய்க்கு உள்ள கிரகம் (authority for mother) சந்திரன்
கல்விக்கு உரிய கிரகம் (authority for education) புதன்
சுகங்களுக்கு உரிய கிரகம் (authority for comforts)சுக்கிரன்

நான்காம் வீட்டுக்காரன் ஒதுக்கும் நிதியை அல்லது வளமையை இவர்கள்
நின்று மேம்படுத்துவார்கள்.

ஆகவே ஜாதகத்தில் அவர்களும் நன்றாக இருக்க வேண்டும்.

அரவிந்தசாமி உதாரணத்தை நினைத்துக் கொள்ளுங்கள்

என்ன தலை சுற்றுகிறதா?

அதற்குப் பெயர்தான் ஜோதிடம்!

தலையைச் சுற்ற விடாதீர்கள். ஒரு கையால் தலையை அழுத்திப் பிடித்துக்
கொண்டு ஜோதிடத்தைக் கற்றுக் கொள்ளுங்கள்.

பிறகு கிரகங்கள் எல்லாம் உங்களுக்கு வசப்படும். அவற்றை நீங்கள்
சுற்ற விடலாம்
-------------------------------------------------------------------------------------------------------------
நான்காம் வீட்டு அதிபன் ஜாதகத்தில் சென்று அமர்ந்த இடத்தை வைத்துப்
பொதுப் பலன்கள்.

1ல் அதாவது லக்கினத்தில் இருந்தால்

ஜாதகன் வீடு, வாகனம், நிலபுலன்கள், மாடு கன்றுகள் உடையவனாக
இருப்பான்.

மாடு கன்றுகள் வேண்டாமா? அந்தக் காலத்தில் இருந்தவன்
அப்படித்தான் எழுதி வைத்து விட்டு போயிருக்கிறான்.
நீங்கள் அவற்றை மைனஸ் செய்து கொள்ளுங்கள்.
கிராமத்தில் இருப்பவன் டிராக்டர்கள் வைத்திருப்பான்.
நகரத்து ஆசாமி குவாலிஸ் வண்டி வைத்திருப்பான்.

வேளா வேளைக்கு விதம் விதமாய் சாப்பாடு கிடைக்கும் அல்லது
ஜாதகன் வேளாவேளைக்கு 'மேரி பிரவுன்' அல்லது 'சரவண பவன்'
டேஸ்ட்டில் சாப்பிட்டுக் கொண்டிருப்பான்.

மனையாள் சுகம் மிக்கவனாக இருப்பான். மனையாள் சுகம்
என்ன வென்று தெரியாதவர்கள் பதிவை விட்டு விலகவும்:-))))

பலராலும் போற்றப்படுபவனாகவும், விரும்பப்படுபவனாகவும் இருப்பான்.

தாய்வழிச் சொந்தங்கள் அவனைக் கொண்டாடி மகிழ்வார்கள்.

கல்வியில் மேம்பட்டவனாக இருப்பான்.

நான்காம் அதிபதி ஆட்சி அல்லது உச்சம் பெற்று இருந்தால், ஜாதகன்
அந்தஸ்து, பெரிய பதவிகள் என்று சிறப்பாக வாழ்வான்.

நான்காம் அதிபதி பகை வீட்டிலோ அல்லது நீசமாகவோ இருந்தால்,
மேலோ சொன்ன பலன்களை மறந்துவிட வேண்டியதுதான்.

அதற்கு எதிர்மாறான பலன்களையே ஜாதகன் அனுபவிக்க நேரிடும்

If the 4th lord is in the ascendant, the native will have all sorts
of domestic comforts, houses & conveyances.
They are outspoken, independent, clever and intelligent.
Their mother will be affectionate!
They will be appreciated in the field of education.
They will have the help of many friends and uncles.
--------------------------------------------------------------------------------------
2ல் அதாவது இரண்டாம் வீட்டில் இருந்தால்

தாயாருக்குப் பிடித்த மகனாக இருப்பான். தாயாரின் அன்பும் ஆதரவும்
ஜாதகனுக்குப் பரிபூரணமாகக் கிடைக்கும்

அதைவிட முக்கியமமாக தாய் வழிச் சொத்துக்கள் கிடைக்கும். இன்றைய
காலகட்டத்தில் நாம் சம்பாதிக்காமல் வரும் சொத்துக்கள் முக்கியம்தானே?
குடும்ப வாழ்க்கை, ஏஆர் ரஹ்மான் இசை பின்னணியில் ஒலிக்க, மிகவும்
ரம்மியமாக இருக்கும்.

If the 4th lord is in the 2nd the native will inherit much from their
mother or maternal relatives

நான்காம் அதிபதி பகை வீட்டிலோ அல்லது நீசமாகவோ இருந்தால்,
மேலே சொன்ன பலன்கள் இருக்காது.

அதற்கு எதிர்மாறான பலன்களையே ஜாதகன் அனுபவிக்க நேரிடும்
----------------------------------------------------------------------------------------
3ல் இருந்தால்

ஜாதகனின் உடன்பிறப்புக்கள் பெயர் சொல்லும்படியாக இருப்பார்கள்.
அதாவது நல்ல நிலைமையில் (position) இருப்பார்கள். ஜாதகனைவிட
அவர்கள் சிறந்து விளங்குவார்கள்.

ஜாதகனின் தாயார் நோயால் அவதியுற நேரிடும்

கஷ்டங்களும் நஷ்டங்களும் அதிகமாகும்.

வருமானத்தைவிட செலவுகள் அதிகமாகி அதனால் வாழ்க்கை சுகப்படாமல்
இருக்கும்

நான்காம் அதிபதி பகை வீட்டிலோ அல்லது நீசமாகவோ இருந்தால்,
மேற்கண்ட பலன்கள் இரட்டிப்பாகிவிடும்

தாய்வழி உறவுகள் பகையாக மாறிவிடும். வாழ்க்கை வசதிகள் நீங்கிவிடும்
அல்லது இல்லாமல் போய்விடும்.

இது நான்காம் வீட்டிற்கு, அதிலிருந்து பன்னிரெண்டாம் வீடு. அதை மனதில்
கொள்க!
-----------------------------------------------------------------------------------------------
4ல் இருந்தால்

நான்காம் வீட்டு அதிபதி நான்கிலேயே இருந்தால், ஜாதகன், வீடு, வாகனம்
என்று வசதியுடன் வாழ்வான். அதிகாரத்தில் உள்ளவர்களின் தொடர்பு
கிடைக்கும்

மற்றவர்களுடைய தொடர்பை, தங்களுக்குச் சாதகமாக மாற்றும் வல்லமை
பெற்றிருப்பர்கள். கறையில்லாத பெயரைப் பெற்றிருப்பார்கள்.

ஆன்மிகத்திலும், தத்துவ விசாரங்களிலும் ஈடுபாடுகொண்டிருப்பார்கள்.

அன்பு என்பது கொடுத்துப் பெறவேண்டியது என்பதை உணர்ந்தவர்களாக
இருப்பார்கள்.

கல்வியில் மேன்மை பெற்றிருப்பார்கள். உறவினர்கள் பலரும் ஜாதகனிடம்
விசுவாசமாக இருப்பார்கள்.

பணியாட்கள், உதவியாளர்கள் என்று அரசனுக்குச் சமமான வாழ்க்கை
ஜாதகனுக்கு அமையும்.

பெண்சுகம் திளைக்கும்படியாகக் கிடைக்கும். அத்துடன் பெண் வழிச்
சொத்துக்களும் கிடைக்கும் (ஆகா, இதல்லவா டபுள் அதிர்ஷ்டம்:-)))
------------------------------------------------------------------------------------------
5ல் இருந்தால்

நான்கிற்கு உரியவன் ஐந்தில் இருந்தால், ஜாதகனுக்கு அவனுடைய
குழந்தைகளால் மகிழ்ச்சியும், மதிப்பும் உண்டாகும்.

ஐந்திற்கும், பதினொன்றாம் இடமான லாப ஸ்தானத்திற்கும் தொடர்பு
இருப்பதால் ஜாதகன், வரவு மிகுந்தவனாக இருப்பான்.

வீடு, வண்டி வாகனம் என்று வசதிகள் மிகுந்தவனாக இருப்பான்.

தனது வீட்டிலும், சுற்றியுள்ள சமூகத்திலும் செல்வாக்கு உடையவனாக இருப்பான்.

சிலர் பங்கு வணிகத்தில் ஈடுபட்டு அதிக அளவில் பொருள் ஈட்டுவார்கள்

நான்காம் அதிபதி பகை வீட்டிலோ அல்லது நீசமாகவோ இருந்தால்,
மேலோ சொன்ன பலன்களை மறந்துவிட வேண்டியதுதான்.

அதற்கு எதிர்மாறான பலன்களையே ஜாதகன் அனுபவிக்க நேரிடும்
--------------------------------------------------------------------------------------------
6ல் இருந்தால்

நான்காம் அதிபதி லக்கினத்திற்கு ஆறில் இருந்தால், ஜாதகனுக்கு எந்த சுகமும் இருக்காது. மாறாக அவஸ்தை நிரம்பி இருக்கும். தாயுடன் நல்ல பரிவு இருக்காது. தாய்வழி உறவுகளுடன் சண்டை, சச்சரவுகள் விரோதங்கள் இருக்கும். தாய் வழிச் சொத்துக்கள் சிக்கலில் மாட்டிக் கொள்ளும். அவ்வப்போது நோய், நொடிகள் வேறு வந்து நின்று வாட்டியெடுக்கும். நான்காம் அதிபதி வந்து நிற்கும் ஆறாம் வீட்டை சுபக்கிரகங்கள் பார்த்தால் மேற்சொன்ன பலன்கள் நீங்கும் அல்லது குறையும்

They may not get much happiness from mother & conveyances
They are basically careless and indifferent.
Their mother's health may be affected.
They are short tempered. Some of their friends may turn enemies.
Uncles and aunts also turn enemies. ---------------------------------------------------------------------------------------------------
7ல் இருந்தால்

ஜாதகன் கல்வித்துறையில் இருந்தால், தன் துறையில் புகழ் பெறுவான். சிறந்த கல்விமானாக இருப்பான். அதிகம் படித்தவனாக இருப்பான். நான்காம் வீடு
கல்விக்கும் உரிய வீடு, அதன் அதிபதி ஏழில் இருந்து லக்கினத்தைப்
பார்ப்பதால் இந்தப் பலன்கள். அதை மனதில் வையுங்கள்.

ஜாதகனுக்கு நல்ல தாய் கிடைப்பாள். வாழ்க்கை சொத்துக்கள், சுகங்கள்
மிகுந்திருக்கும். சிலர் நிறைய வீட்டு மனைகளை வளைத்துப் போடுவார்கள்.
நிறைய வீடுகளைக் கட்டுவார்கள். எல்லோரிடமும் இன்முகத்துடன்
பழகுவார்கள். நிறைய நண்பர்கள் கிடைப்பார்கள்.

மொத்தத்தில் உதாரண மனிதர்களாகத் திகழ்வார்கள்.

இந்த இடம், திருமணத்திற்கு உரிய இடம் (7th House, house of marriage)
வந்திருக்கும் கிரகம் தாய் வீட்டைச் சேர்ந்தது.

ஆகவே இந்த அமைப்புள்ளவர் களுக்கு தாய்வழி உறவில் இருந்து
மனைவி கிடைப்பாள்.

சிலர் மனைவி சொல்லே மந்திரம் என்று இருப்பார்கள்.

அதுபோல சிலர் மனைவியைத் தவிர மற்ற அனைத்தையும் மாற்றிக்
கொண்டிருப்பார்கள். அதாவது வீடு வாகனங்களை அடிக்கடி
மாற்றுவார்கள்.

நான்காம் அதிபதி பகை வீட்டிலோ அல்லது நீசமாகவோ இருந்தால்,
மேலே சொன்ன பலன்கள் இருக்காது. அதற்காக வருத்தப் பட வேண்டாம்.
அதற்கு நஷ்ட ஈடு ஜாதகத்தில் வேறு வழியில் கொடுக்கப்பட்டிருக்கும்! --------------------------------------------------------------------------------------------
8ல் இருந்தால்.

எட்டாம் வீடு என்பது ஆயுள் ஸ்தானம் மட்டுமல்ல, வாழ்க்கையில்
சந்திக்கப்போகும் சிரமங்கள் மற்றும் அவஸ்தைகளுக்கான வீடும்
அதுதான்.

It is also house of difficulties.

சிறு வயதில் ஜாதகன் படிப்பதற்கு மிகவும் சிரமப்பட்டிருப்பான்.
அவனை ஒழுங்காக பள்ளிக்கு அனுப்பும் சூழ்நிலை இருந்திருக்காது.
தாயன்பு கிடைத்திருக்காது. தாயார், வறுமையான சூழ்நிலையில்
பிறந்து வளர்ந்தவளாக இருப்பாள்.

சில தாய்களுக்கு அந்த வறுமையான சூழல் தொடரும். அதனால அவள் ஆசைப்பட்டாலும் தன் குழந்தைகளுக்கு அவளால் உரிய கல்வியைத்
தரமுடியாது.

ஜாதகன் வறுமைக்கும், அவமானத்திற்கும் ஆளாகி வளர்ந்திருப்பான்.
வீடு, வாகனங்கள், சொத்துக்கள் என்று எதுவும் சொல்லும்படியாகக்
கிடைக்காது.

உறவுகளும் நண்பர்களும் பொய்யாகிப் போகும் அல்லது போவார்கள்.
இந்த நிலைமை கொடுமையானது. அதாவது இந்தப் பொய்யாகிப்
போகும் நிலைமை! என்ன செய்வது? விதி என்று நொந்து கொள்ளலாம்
அவ்வளவுதான்.

நம்மால் வேறு என்ன செய்ய முடியும்?

இந்த அமைப்பை சுபக்கிரகங்கள் பார்த்தால் மேற்சொன்ன பலன்கள்
நீங்கும் அல்லது குறையும் =================================================

9ல் இருந்தால்

ஒன்பதாம் வீடு பாக்கியஸ்தானம். அங்கே நான்காம் அதிபதி வந்து
அமர்ந்தால் கேட்கவா வேண்டும்? பழம் நழுவித் தேனில் விழுந்து
அது நழுவி வாயில் விழுந்தது போல இருக்கும் அற்புதமான
அமைப்பு இது.

ஒரு கேந்திர அதிபதி திரிகோணத்தில் வந்து அமர்வது அற்புதம் இல்லையா?

சரி, ரெம்பவும் நெகிழ்ந்து, கதை விடாமல் பலனைச் சொல்லுங்கள்.

இதோ பலன்கள்:

The native will be blessed by a loving and compassionate mother
அதோடு நல்ல அன்பான தந்தை கிடைப்பார்.

ஜாதகன் அவருடைய முழு அன்பையும் பெற்றவனாக இருப்பான்.
நிலபுலன்கள், வீடுவாசல்கள், வண்டிவாகனங்கள், சுகங்கள்,
செளகரியங்கள் என்று அனைத்தும் ஜாதகனுக்குக் கிடைக்கும்.

ஜாதகன் பெரியவர்களை மதிப்பவனாகவும், தெய்வபக்தி மிகுந்தவனாகவும்
இருப்பான்.

ஜாதகனுக்கு ஆழ்ந்த ஆறிவு, நல்ல சிந்தனைகள், நகைச்சுவை உணர்வு
மிகுந்து இருக்கும்

நல்ல தந்தைக்கும், தந்தை வழிச் சொத்துக்களுக்கும் இது ஒரு உன்னத
அமைப்பாகும்.

நான்காம் அதிபதி பகை வீட்டிலோ அல்லது நீசமாகவோ இருந்தால்,
மேலே சொன்ன பலன்கள் கிடைக்காது.

அதற்கு எதிர்மாறான பலன்களையே ஜாதகன் அனுபவிக்க நேரிடும் -------------------------------------------------------------------------------------------

10ல் இருந்தால்

ஒரு கேந்திர அதிபதி இன்னொரு கேந்திரத்தில் அமரும் அமைப்பு இது.
நன்மைதரும் அமைப்பு!

ஜாதகனுக்கு தொழில் அல்லது வேலையில் அபரிதமான முன்னேற்றம்
கிடைக்கும்.

தன்னுடைய வேலையில் அனைத்து நுட்பங்களையும் அறிந்தவனாக
இருப்பான். சிலருக்கு அரசியல் தொடர்பு கிடைக்கும்.

அதில் வெற்றியும் கிடைக்கும். சிலர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து
பெரும்பொருள் ஈட்டுவார்கள்

ஜாதகன் எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் திறமை பெற்றிருப்பான்.
எந்த இடத்திலும் அவனுடைய வரவை அல்லது இருப்பைப் பலரும்
உணரும்படி செய்யக்கூடியவன்.

வீடு, வாகனம் என்று என்று எல்லா செளகரியங்களும் உடையவனாக
இருப்பான். நல்ல நண்பர்களைப் பெற்றிருப்பான். அவர்களும் அவனுக்கு
உதவுபவர்களாக இருப்பார்கள்

நான்காம் அதிபதி பகை வீட்டிலோ அல்லது நீசமாகவோ இருந்தால்,
மேலே சொன்ன பலன்களை மறந்துவிட வேண்டியதுதான்.
அதற்கு எதிர்மாறான பலன்களையே ஜாதகன் அனுபவிக்க நேரிடும் ------------------------------------------------------------------------------------------
11ல் இருந்தால்

இந்த அமைப்பால் ஜாதகன் செளகரியங்கள், சுகங்கள் நிறைந்தவனாக
இருப்பான். தொழிலில் ஈடுபட்டுப் பெரும் பொருளை லாபமாகப் பெறுவான்.

சிலர் சிறு வயதிலேயே தங்கள் தாயாரை இழக்க நேரிடும்.

இந்த வீடு நான்காம் வீட்டிற்கு அதிலிருந்து எட்டாம் வீடு.
அதை மனதில் கொள்க!
If the 4th lord is in the 11th the native will be wealthy.
The native will have a lot of good friends.
They will have lots of gains as 11th house rules gains and
the fulfillment of all desires.
A good house and conveyances are guaranteed.
He will have lot of mental tensions also as 11th is 8th to the fourth.
Lack of mental peace and bliss can result. -------------------------------------------------------------------------------
12ல் இருந்தால்
நன்மை எதுவும் இல்லாத அமைப்பு.
சுகங்கள், செளகரியங்கள் குறைந்து இருக்கும்.
நண்பர்கள் உறவினர்களின் ஆதரவு இருக்காது.
வாழ்க்கை வறுமையும், கஷ்டங்களும், நஷ்டங்களும்,
வேதனைகளும் நிறைந்ததாக இருக்கும்.
பூர்வீக சொத்துக்கள் இருந்தால் அனைத்தும் விரையமாகிக்
காணாமல் போய்விடும்.
மொத்தத்தில் சிரமமோ சிரமம்.

The native will have to face many ills & unhappy situations in life.
The lord of 4th house in this house of loss shows loss of comforts.
Regarding house they may have to face many problems.
They may have to encounter litigation and problems regarding house.
They may not be happy with regard to mother.
Uncles and aunts will become enemies
Some friends also go against them.
They will be beset by many problems and difficulties.
Expenditure rises and they may have to spend much money on house
and conveyances.
They may have to face losses in speculation.

சுபக் கிரகங்களின் பார்வை இந்த அமைப்பின் மேல் பட்டால் அவை
குறையும் அல்லது நீங்கும். இல்லாவிட்டால் நோ சான்ஸ்! --------------------------------------------------------------------------------------------

(தொடரும்)

இந்தப் பாடத்தின் அடுத்த பகுதி வெள்ளிக் கிழமையன்று வெளியாகும்
ஸ்கிரீன் சைசில் 13 பக்கங்கள் உள்ள பாடம் இது. உங்களுக்காக
விவரமாகக் கொடுத்துள்ளேன். அனைவரையும் பொறுமையாகப்
படித்து
உணர வேண்டுகிறேன்.

அப்போதுதான் எழுதிய எனது நோக்கம் நிறைவேறும்!


நன்றி வணக்கத்துடன்
வகுப்பறை
வாத்தியார்வாழ்க வளமுடன்!

23.3.09

பெட்டி போனால் என்ன? சாவி இருக்கிறது!

பெட்டி போனால் என்ன? சாவி இருக்கிறது!

தந்தையும், பதினைந்து வயது மகனும் ரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்தார்கள்.
அவர்கள் பயணிக்க வேண்டிய ரயில் வருவதற்கு இன்னும் ஒரு மணி நேரம்
அவகாசம் இருந்தது.

பையன் பொறுப்பில்லாதவன். விளயாட்டுப்பிள்ளை. அம்மா செல்லம். சொல்வதைக்
கேட்கமாட்டான்.

ஆகவே, தந்தை தன்னுடைய டிராவல் பேக்கை எடுத்துத் தோளில் மாட்டிக்கொண்டு,
"டேய், முதல் பிளாட்பாரத்தில் ரயில்வே கேன்டீன் இருக்கிறது. போய்க் காப்பி
சாப்பிட்டுவிட்டு, ரயிலில் சாப்பிடுவதற்கு ஏதாவது பார்த்து வாங்கிக்கொண்டு
வருகிறேன். நீ இங்கேயே இரு. உன் சூட்கேசைப் பார்த்துக் கொள். எம்ப்டி
சூட்கேஸ் மட்டுமே 1,500 ரூபாய் விலை. ஜாக்கிரதை!" என்று சொல்லிவிட்டுப் போனார்.

பையன் சுவாரசியமில்லாமல் மண்டையை அசைத்து அவரை அனுப்பி வைத்தான்

++++++++++++++++++++++++++++++++++++

சென்றவர் அரை மணி நேரம் கழித்துத் திரும்பி வந்தார்

பையனையும் காணவில்லை அவனுடைய பெட்டியையும் காணவில்லை.

பதற்றமாகிவிட்டது.

அந்த பிளாட்பாரத்தின் வலதுபுறம் சற்றுத் தள்ளி ஒரு குளிர்பானக் கடை
இருப்பதும், பையன் அங்கே வெறுமனே நிற்பதும் தெரிந்தது.

விரைந்தார்.

பையன் கண்களை மூடியவாறு பெப்சியை உறிஞ்சிக் குடித்துக் கொண்டிருந்தான்.

"டேய் ராசா, நான் வர்றதுக்குள்ளே என்னடா அவசரம்?"

"தாகமா இருந்துச்சு நைனா, அதான் பெப்சி குடிக்க வந்தேன்"

"பெட்டி எங்கேடா ராசா?"

"அதை நாம நின்ன இடத்துல வச்சுட்டுத்தான், இங்க வந்தேன்"

சட்டென்று தந்தையின் ப்ளட் பிரஷர் எகிறி விட்டது. காட்டுக் கத்தலாகக் கத்தினார்

"டேய் அறிவு கெட்டவனே, உன் மேம்போக்குத்தனத்துக்கு அளவே இல்லையா?"

"இப்ப என்ன ஆச்சுன்னு நைனா இப்படிக் கத்தறே?"

"பெட்டி அங்கே இல்லை. யாரோ லவட்டிக் கொண்டு போய் விட்டான். நான்
நினைத்தபடியே ஆகிவிட்டது."

பையன் கூலாகச் சொன்னான்,"பெட்டியை எடுத்துக் கொண்டு போனவன்
திரும்ப நம்மகிட்டதான் வருவான்"

"எப்படிடா அறிவுகெட்டவனே?"

"சாவி எங்கிட்டயில்ல இருக்கு!"
-------------------------------------------------------------------------------------------------------------------
இணையத்தில் எழுதுகிற அத்தனை பேர்களின் நிலையும், அந்தப் பையனின்
நிலைதான்.

அத்தனை பேர்களும் அப்பாவிகள். சாவி நம்மிடம் இருக்கிறது என்று நினைத்துக்
கொண்டிருப்பவர்கள். அதாவது வலைப்பூ நம்மிடம், நம் பெயரில் இருக்கிறது
என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள்.

எழுதும் ஆக்கங்கள் எல்லாம் எப்படி எப்படித் திருடப்படுகிறதோ, யாருக்குத் தெரியும்?
-------------------------------------------------------------------------------------------------
திருட்டைப் பற்றி நான் கவலைப் படவில்லை. அதை மலைமேல் இருக்கும்
போலீஸ்காரர் (தமிழ்க் கடவுள்) பார்த்துக் கொள்வார்.

அதற்குப் பெயர்தான் இறை நம்பிக்கை!
----------------------------------------------------------------------------------------
பாடத்தில் இன்னும் எழுத வேண்டிய பகுதிகள் மூன்றாம் வீடு, நான்காம் வீடு,
எட்டாம் வீடு. அவைகளை முழுமையாக எழுத வேண்டும். அத்துடன் லக்கினம்
இரண்டாம் வீடு ஆகியவைகளில் இன்னும் சரிபாதியை எழுத வேண்டும்

யோகங்களைப் பற்றி முழுமையாக எழுத வேண்டும்.

அஷ்டவர்க்கத்தில் இன்னும் சரிபாதியை எழுத வேண்டும்

எல்லாவற்றையும் இன்னும் நான்கு மாதங்களுக்குள் முடித்துவிட எண்ணியுள்ளேன்.

அதற்குப் பிறகு, பாடங்கள் முடிந்தாலும், உங்கள் விருப்பத்தைப் பொறுத்து,
வேறு ஒரு தலைப்பில் ஜோதிடக்கட்டுரைகள் தொடரும்
-------------------------------------------------------------------------------------------------
நான்கு மாதங்களில் பாடங்கள் முடிந்தவுடன், எழுதிய ஆக்கங்களை இரண்டு
(Volume) நூல்களாக வெளியிட உள்ளேன்.

முதல் பதிப்பு வகுப்பறை மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.
நூலிலும் அது சமர்ப்பணம் என்று குறிப்பிடப்படும்

அப்போது உங்கள் ஆதரவைத் (Support) தாருங்கள்.

புத்தகத்தில் பாடங்கள் வரிசைப்படுத்தப்பட்டு, முறைப்படுத்தப்பட்டு, அட்டவனைகள்
ஒழுங்கு படுத்தப்பட்டு, படிப்பதற்கு வசதியாக, அசத்தலாக இருக்கும்.

அதைப் பற்றிய அறிவிப்பை, பாடங்கள் முடிந்த பிறகு வெளிப்படுத்துகிறேன்
--------------------------------------------------------------------------------------------------
அடுத்த பாடம் தாய், கல்வி, சுகம் ஆகியவற்றைத் தரும் நான்காம் வீட்டைப்
பற்றியது.

அது நாளை வெளிவரும்!

அன்புடன்
வகுப்பறை வாத்தியார்

வாழ்க வளமுடன்!

21.3.09

கேளேன்டா மாமூ இது indoor gameமு!

கேளேண்டா மாமூ இது indoor gameமு!

காலம் மாறிவிட்டது. காட்சிகளும் மாறிவிட்டன.

முன்பெல்லாம் பெண்களிடம் நாணம் நிறைந்து இருக்கும். இப்போது
பல பெண்களிடம் அது பெருமளவு குறைந்து விட்டது.

நாணமும், நளினமும் பெண்மைக்குரிய முக்கிய அம்சங்கள்!

இதை மகிழ்ச்சியுடன் எழுதவில்லை; வருத்தத்துடன் எழுதுகிறேன்.

எப்படி நீ இதைப் பதிவில் எழுதலாம் என்று சிலர் என்னிடம் சண்டை பிடிக்க
வரக்கூடும். முன் ஜாமீன் மாதிரி அவர்களிடம் இப்போதே முன் மன்னிப்புக்
கேட்டுக்கொண்டு விடுகிறேன்.

அய்யா, இந்தப் பதிவை நீங்கள் தவித்திருக்கலாம் என்று சிங்கைக்காரர் வந்து
சொல்வார். அவருக்கும் முன் வருத்தத்தை இப்போதே தெரிவித்துக் கொள்கிறேன்

என் ஆசான் கவியரசர் கண்ணதாசன் சொல்வார்.,"உண்மையை எங்கே
வேண்டுமென்றாலும் சொல்லலாம்".

ஆகவே எழுதுவதில் உண்மை இருக்கிறதா என்று மட்டும் பாருங்கள்

எங்கள் பாட்டி காலத்தில் எல்லாம் முன்பின் தெரியாத ஆடவர்களுடன் பெண்கள்
அறவே பேச மாட்டார்கள்.

வீட்டுக் கதவைத் தட்டினால் கூட, யாரென்று கேட்டுவிட்டுத்தான் திறப்பார்கள்
அப்படித் திறந்தால்கூட, நேருக்கு நேர் எதிரில் நின்று பேச மாட்டார்கள்.
கதவிற்குப் பின் உடம்பை மறைத்துக் கொண்டு, தலையை மட்டும்
நீட்டிப் பேசுவார்கள்

இப்போது அப்படிப்பட்ட காட்சிகளைக் காண முடியாது.

இப்போது போட்டிருக்கும் இரவு உடையுடன் (Nighty) வந்து நின்று பேசுகிறார்கள்.
பால்காரன், பேப்பர்காரன், காய்கறி வண்டிக்காரன், பழைய சாமான் வியாபாரி
என்று யார் எந்த நேரத்தில் வந்தாலும், அதே இரவு உடையுடன் வெளியில் நின்று
பேசுவதற்குத் தயங்குவதில்லை. எதிரில் உட்கார்ந்து பேரம் பேசுவதற்குத் தயங்குவதில்லை.

சிலர் தங்கள் குழந்தைகளை ஸ்கூல் பஸ்சில் ஏற்றிவிடுவதற்குக் கூட அதே
நைட்டியுடன் பஸ் நிறுத்தம் வரை வந்து திரும்புவார்கள்.

ஒரே ஒரு வித்தியாசம். யாராவது மிகவும் தெரிந்தவர்கள் வந்து விட்டால் மட்டும்
ஓடிச் சென்று ஒரு துண்டை எடுத்து, மார்பின் குறுக்கே மறைக்கும்படி தோள்களின்
மீது போட்டுக் கொள்வார்கள்.

பால்காரனுக்கும், பழைய சாமான் வியாபாரிக்கும் கிடைக்கும் தரிசனம், தெரிந்த
ஆசாமிக்குக் கிடைக்காது:-)))))

என்ன புதுக் கலாச்சாரமோ அல்லது வளர்ந்து வரும் பண்பாடோ?

இன்றைய கலாச்சாரத்தைக் கொடிப்பிடித்துக் காட்டும் திரைப்படப் பாடல் ஒன்றைக்
கீழே கொடுத்துள்ளேன். பண்பலைகளில் அடிக்கடி ஒலிக்கும் பாடல்.

நாயகி:
டாடி மம்மி வீட்டில் இல்லை
தடை போட யாருமில்லை
விளையாடுவோமா உள்ளே வில்லாளா

ஹேய் மைதானம் தேவை இல்லை
Umpire-ம் தேவை இல்லை
யாருக்கும் தோல்வி இல்லை வில்லாளா

ஏய் கேளேன்டா மாமூ இது indoor game-ம்மு
தெரியாம நின்னா அது ரொம்ப shame-மு
விளையாட்டு rule-லு நீ மீறாட்டி foul-லு
எல்லைகள் தாண்டு அது தாண்டா goal-லு

டாடி மம்மி வீட்டில் இல்லை
தடை போட யாருமில்லை
விளையாடுவோமா உள்ளே வில்லாளா

Taxi-காரன் தான் நான் ஏறும்போதெல்லாம்
அட meter-க்கு மேல தந்து பல்லிளிச்சானே
Bus-லேறித்தான் ஒரு seat கேட்டேனே
தன் seat-ஐ driver தந்து விட்டு ஓரம் நின்னானே

நாயகன்:
ஏ அளவான உடம்புக்காரி அளவில்லா கொழுப்புக்காரி
அளவான உடம்புக்காரி அளவில்லா கொழுப்புக்காரி
இருக்குது இருக்குது வாடி உனக்கு ராத்திரி கச்சேரி

டாடி மம்மி வீட்டில் இல்லை
தடை போட யாருமில்லை
விளையாடுவோமா உள்ளே வில்லாளா

வைர வியாபாரி என் பல்லை பார்த்தானே
தான் விற்கும் வைரம் போலி என்று தூக்கிப்போட்டானே
தங்க வியாபாரி என் அங்கம் பார்த்தானே
அவன் தங்கம் எல்லாம் மட்டம் என்று தொழிலை விட்டானே

நாயகன்:
ஏய் அழகான சின்ன பாப்பு ஆ..வைக்காதே எனக்கு ஆப்பு
அழகான சின்ன பாப்பு வைக்காதே எனக்கு ஆப்பு
கொப்பும் கொலையா இருக்கும் உனக்கு நான் தாண்டி மாப்பு

டாடி மம்மி.. ட..டா..டி மம்மீ..
டாடி மம்மி வீட்டில் இல்லை
தடை போட யாருமில்லை
விளையாடுவோமா உள்ளே வில்லாளா

படம் : வில்லு

பாடலின் அர்த்தத்தை அல்லது அனர்த்தத்தைப் பதிவில் எழுத முடியாது.
இரண்டு அல்லது மூன்று தடவைகள் படித்து நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்
-----------------------------------------------------------------------------------------------------------------
அந்தக் காலத்தில் எல்லோரும் ஆட்டுக்கல், அம்மி என்று உணவுபொருட்களை
அரைப்பதற்குப் பயன் படுத்துவார்கள். இனி அவைகளையெல்லாம் மியூஸியத்தில்தான்
பார்க்கவேண்டும்.

Wet Grinder, Mixie என்று எல்லாம் இயந்திரமயமாகிவிட்டது.

ஆட்டுகல்லில் கல் அப்படியே (fixedஆக) இருக்கும். குழவியைச் சுற்றுவோம்
வெட் கிரைண்டரில் குழவி அப்படியே இருக்கும். கல் பகுதி சுற்றும்.
எல்லாம் உல்டா!
-------------------------------------------------------------------------------------------------------------------
அந்தக் காலத்தில் மண்டபம் எல்லாம் கிடையாது. திருமணங்களை வீட்டிலேயே
செய்வார்கள். வீடு சிறியதாக உள்ளவர்கள் கோவில் மண்டபங்களில் செய்வார்கள்.

இப்போது நிலைமை மாறிவிட்டது. எல்லாத் திருமணங்களும் திருமண மண்டபங்களில்

அதனால் சில கலகலப்பான நிகழ்வுகள் நின்றுபோய்விட்டன.

வீடுகளில் செய்யும் காலங்களில், மாப்பிள்ளை அழைப்பு, பெண் அழைப்பு என்று
நாதஸ்வரம், மேளதாளங்கள் முழங்க ஊர்வலங்கள் இருக்கும்.

இப்போது அதெல்லாம் இல்லை!
---------------------------------------------------------------------------------------------------------
இந்த ஊர்வலங்களில் முன்னால் செல்லும் நாதஸ்வரக் கோஷ்டி, ஊர்வலத்தில்
வருபவர்களை அனுசரித்துக் கொண்டு செல்வதற்காக இடையிடையே சற்று நின்று
செல்வார்கள்.

அதுபோல கிரகங்களும் மற்ற கிரகங்களை அனுசரித்துச் செல்ல வக்கிரத்தைக் கடைப்
பிடிக்கும். அதைத்தான் வக்கிரகதி என்பார்கள். ஆங்கிலத்தில் retrogation என்பார்கள்

வக்கிரம் என்றால் என்ன?

வக்கிரம் என்பது ஒருவருடைய மனப்போக்கு, சிந்தனை, உணர்ச்சி
முதலியவை சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒழுங்கு, நியாயம், நியதி
முதலியவற்றிலிருந்து திரிந்த நிலை அல்லது மாறுப்பட்ட அல்லது
வேறுபட்ட நிலை!

அதேபோல ஒரு கிரகத்தின் வக்கிர நிலை என்பது மாறுபட்ட நிலை

செவ்வாய், புதன்,சுக்கிரன் ஆகிய கிரகங்கள் எப்போதும் 90 பாகைக்குள்ளாகவே
(90 degrees) இருக்கும். இதை நீங்கள் உங்கள் ஜாதகத்தில் பார்த்தால் தெரியும்.

ஒன்றை ஒன்று இந்த அளவை விட்டுத் தாண்டிச் செல்லாது. தாண்டிச் செல்லும்
நிலையில் இந்த வக்கிரகதியைப் பயன்படுத்திக் கொள்ளும்.

யாராக இருந்தாலும் இந்த மூன்று கிரகங்களும் அடுத்தடுத்த கட்டங்களில்,
அதாவது 90 பாகைக்குள் மட்டுமே இருக்கும். அப்படியில்லையென்றால்
ஜாதகம் தவறு!
----------------------------------------------------------------------------------------------------
வக்கிரகதி கிரக அமைப்பு உள்ள ஜாதகனுக்குச் சிரமங்கள் அதிகம். சுபக்கிரகம்
வக்கிரகதியில் இருந்தால் பலன்கள் கிடைப்பது தாமதமாகும்.

7ற்கு உரிய கிரகம் (அதிபதி) வக்கிரகதியில் இருந்தால் திருமணம் தாமதமாகும்
10ற்குரிய கிரகம் (அதிபதி) வக்கிரகதியில் இருந்தால் வேலை கிடைப்பது அல்லது
கிடைத்த வேலையில் உயர்வு எல்லாம் தாமதப்படும்.

Planets like mars, jupitor, venus ,saturn retrogrates for certain time,
you can refer this in panchang , the dates and time will be given in particular
year when the planetrs go in retrogation and they will come to their original
place, this is called vakra gathi and vakra nivarthi

Retrograde motion is when an object (typically a planet) appears
to go backward in its orbit.

Basically, all the planets of the solar system turn around their axes
clockwise, except for Venus which goes counter - clockwise.

Retrograde motion is motion in the opposite direction.
(Counter-clockwise so to speak).

Retrogration of planets:
Mars retrogrades for 72 days every 25.6 months.
Jupiter for 121 days every 13.1 months.
Saturn for 138 days every 12.4 months.
Uranus for 151 days every 12.15 months and
Neptune for 158 days every 12.07 months.

Retrograde motion simply means that a planet ONLY appears to be moving
backwards in its orbit. This is only because planets orbit the sun
at different speeds.

More info about retograde motion in Wikipedia:

http://en.wikipedia.org/wiki/Retrograde_motion
-----------------------------------------------------------------------------------------

வாழ்க வளமுடன்!

20.3.09

அறிவியலும் அழுக்குள்ள சமுதாயமும்!


அறிவியலும் அழுக்குள்ள சமுதாயமும்!

கனவுகள் கண்டு கண்டு
கண்களும் சலிச்சுப் போச்சு!
தினம் தினம் சபையில் நின்று
தேகமும் அலுத்துப் போச்சு!
உணவினில் ருசி பேதங்கள்
உணர்விலும் மறந்து போச்சு!
இனியென்ன, இளமைக் காலம்
இரூட்டுக்கே பலியாய் ஆச்சு!

++++++
அரசாங்க வேலைக்காரர்
'அரைலட்சம் கொண்டா' என்றார்!
மருத்துவ நிபுணர் வந்து
'மாடிவீ(டு) உண்டா' என்றார்
பொறியியற் பட்டதாரி
புதிய 'கார்' போதுமென்றார்!
அறிவியல் வளர்ந்து என்ன?
அழுக்குள்ள சமுதாயத்தில்!

++++++

ஜாதகம் பொருந்தினாலோ
ஜாதிகள் பொருந்தவில்லை!
ஜாதியில் பொருத்தமென்றால்
சம்மதம் பணத்தில் இல்லை!
தேதிகள் கிழித்தாற் போல
தினசரி கிழிந்தாயிற்று!
வீதியில் ஒளிவெள்ளங்கள்
வீட்டில்தான் வெளிச்சம் இல்லை!
- ஆக்கம்: குமரி அமுதன்

(முப்பது ஆண்டுகளுக்கு முன்பு படித்தது.
-from my hard disc)

வாழ்க வளமுடன்!

18.3.09

My India - எனது தேசம்!

எனது தேசம் என்று இந்தியர்கள் அனைவரும்
பெருமைப்பட எவ்வளவோ விஷயங்கள் நமது நாட்டில் உள்ளன!
ஒன்றைத் தவிர (அது இந்திய அரசியல்)!

சிலவற்றைப் படமாகக் கொடுத்துள்ளேன்
பார்த்து ரசியுங்கள்
படங்கள் மின்னஞ்சலில் வந்தவை!
அனுப்பிய நண்பருக்கு நன்றி!


1.வழிபாடு

2.காதலுக்கு ஒரு சின்னம்

3. கடல் வாழ்க்கை

4. மதங்கள்

5.கலை

6. கங்கையில் ஒரு ஆனந்தக் குளியல்

7. அசோகர்

8. நிமிர்ந்து நிற்கும் கோபுரங்கள்

9. பசியைப் போக்கும் உழைப்பாளி

10. கலகலக்கும் சந்தை

11. வாரணாசி

12. இலக்கியம்

13. சிறு நகரங்கள்

14. அலகாபாத்

15 .படேபூர் சிக்ரி

16 யோகா

17 தில்லி

18 அமிர்தசரஸ்

19. கிராமியக் கலைகள்

20. உலகின் மிகப் பெரிய போக்குவரத்து வசதி

21. குதூகலமான பண்டிகைகள்

22 அஹிம்சை

23. பாரம்பரியச் சின்னங்கள்
-------------------------------------------------------------------------------------------
எந்தப் படம் மிகவும் நன்றாக உள்ளது?

17.3.09

உண்மையான அழகும் பொய்யான அழகும்!

ஞானி ஒருவர் இருந்தார். அவரிடம் ஒருவன் கேட்டான்.

"அழகு ஏன் மயக்குகிறது?"

அவர் பதில் சொன்னார்.

"அது எங்கே மயக்குகிறது? நீயல்லவா மயங்குகிறாய்?"

"சரி, அழகானது - அழகில்லாதது என்ற இரண்டு நிலைப்பாடுகள் ஏன்?

"அது படைப்பின் ரகசியம். எல்லாமே அழகானதுதான் என்றால் - நீ எங்கே
அதை உணரப் போகிறாய்? அதனால்தான் இரண்டு நிலைப்பாடுகள்.

"உண்மையான அழகிற்கும் - பொய்யான அழகிற்கும் என்ன வித்தியாசம்?"

"பொய்யான அழகு தற்காலிகமானது. அழிந்துவிடும். உண்மையான அழகு
காலத்தாலும் நிற்கும் பலராலும் போற்றப்படும். பெருமை வாய்ந்ததாக இருக்கும்!"

"உதாரணம் சொல்லுங்கள்"

"மீனாட்சி அம்மன் கோவில், ஸ்ரீரங்கநாதர் கோவில், ராமேஸ்வரம் கோவில்"

"அவைகள் தெய்வங்களின் உறைவிடம் - அதனால் அழகாகத்தோன்றலாம்.
வேறு இடங்களைச் சொல்லுங்கள்"

"எல்லா இடங்களிலும்தான் ஆண்டவன் இருக்கிறார். நான் சொன்ன அந்த
இடங்கள் மனிதனால் கட்டப்பட்டவைதான்.மேலும் சில இடங்களைச்
சொல்கிறேன் பார்.
திருவாரூர் தேரழகு
மன்னார்குடி மதில் அழகு
வேதாரண்யம் விளக்கழகு
கண்ணதாசன் பாட்டழகு
காளையார்கோவில் குளம் அழகு
சரி, உனக்குப் புரியும்படியாக ஒரு இடத்தைச் சொல்கிறேன். தாஜ்மகால்."

அதற்குப் பிறகு அவன் கேள்வி கேட்கவில்லை. போய்விட்டான்.

அதுபோல பதவிக்கும் ஒரு அழகு உண்டு. அது அதில் வந்து உட்காருபவரால்
ஏற்படுவது!

ஜவஹர்லால் நேறு அவர்களால் பிரதமர் பதவி அழகு பெற்றது!
டாக்டர் அப்துல் கலாம் அவர்களால் குடியரசுத்தலைவர் பதவி அழகு பெற்றது!
கவியரசர் கண்ணதாசன் அவர்களால் அரசவைக் கவிஞர் பதவி அழகு பெற்றது!

வாழ்க வளமுடன்!

16.3.09

கண்ணாடியும் முகச் சவரமும்!

கண்ணாடியும் முகச் சவரமும்!

ஒரு ஆசிரமம். அது மிகவும் புகழ்பெற்ற மகான் வசித்த இடம்.
நாட்டின் பிரதமாராக இருந்த அன்னை இந்திரா காந்தி அவர்கள்
மன அமைதி வேண்டி, பல சமயம், அந்த ஆசிரமத்திற்கு வந்து
சென்றிருக்கிறார்.

இப்போது தெரிந்து கொள்ளுங்கள் அந்த மகான் எவ்வளவு
பிரபலமானவர் என்று!

அந்த ஆசிரமம் எங்கே இருக்கிறது என்று சொன்னால், அவர்
யாரென்று உங்களால ஊகிக்க முடியும்.

ஊகம் செய்து சொல்லுங்கள்

அந்த ஆசிரமம் இருப்பது திருவண்ணாமலையில்!

அவர் வாழ்ந்த காலம் : December 30th, 1879 to 14 April 1950
(சுமார் 70 ஆண்டுகள்)

59 ஆண்டுகள் சென்று விட்டன. ஆனாலும் அந்த ஆசிரமத்திற்கு
வந்து செல்வோர்கள் எண்ணிக்கை மட்டும் குறையவில்லை!
--------------------------------------------------------------------
சரி, சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன்.

அந்த மகான் இருந்த சமயம், ஒரு நாள், பல வேதவிற்பன்னர்கள்
கூட்டாகப் படையெடுத்து வந்தார்கள். அவர் முன்னிலையில்
வேத பாடங்களை மனனமாகச் சொன்னார்கள்.

உபநிடதங்களைப் பற்றி விவாதித்தார்கள்.

மகானும் அதில் கலந்து கொண்டார்.

அவருக்குப் பணிவிடைகள் செய்யும் பக்தன் ஒருவனும் அங்கே
சற்றுத் தள்ளி அமர்ந்து அவற்றைக் கேட்டுக் கொண்டிருந்தான்.
அந்தப் பக்தன் அதிகம் படிக்காதவன்.அவன் மனதில் ஒரு ஏக்கம்.
"நாமும் இவர்களைப் போல வேதங்களையும், உபநிடதங்களையும்
படித்திருந்தால், மகானுடன் நெருங்கி உரையாடும் பாக்கியம்
நமக்கும் கிடைத்திருக்குமே! படிக்காததால் அது கிடைக்காமல்
போய்விட்டதே. வெறும் பார்வையாளராக மட்டுமே அமர்ந்திருக்க
வேண்டியதிருக்கிறதே!" என்று பலவாறாக வருந்தினான். ஏங்கினான்.

அவனுடைய ஏக்கத்தைக் கண்ணுற்றார் அந்த மகான்.

வந்த பண்டிதர்கள் அனைவரும் சென்ற பிறகு, தனக்குப் பணிவிடை
செய்யத் துவங்கிவனை, அருகில் அழைத்த மகான் கேட்டார்.

"இன்று முகச் சவரம் செய்து கொண்டாயா?"

"ஆமாம், செய்து கொண்டேன் சுவாமி!" இது அவன்.

"எதிரே உள்ள கண்ணாடியில் முகத்தைப் பார்த்து சவரம் செய்து
கொண்டாய் இல்லையா?"

அவனுக்கு ஒன்றும் புரியவில்லை."ஆமாம் சுவாமி" என்று பணிவுடன்
பதில் அளித்தான்.

"கண்ணாடி வழிகாட்டுகிறது. அதைப் பார்த்து முகச் சவரம் செய்து
கொள்கிறாய்! அந்தப் பணி முடியும் வரையில் உனக்குக் கண்ணாடி
உதவுகிறது. அந்தக் கண்ணாடியால், உனக்காக, தானாக அது உன்
முகத்தைச் சவரம் செய்துவிட முடியுமா?"

"முடியாது சுவாமி!"

"வேதங்களும், உபநிடதங்களும், சாஸ்திரங்களும் அப்படிப்பட்டவைதான்.
நீ சிரமம் கொள்ளாமல், காயம் அடையாமல் முக்தி அடைய அவைகள்
உதவும். அவ்வளவுதான். அவற்றால் உனக்கு முக்தியை வாங்கித்தர
முடியாது. தீவிர பக்தியும், இறை வழிபாடும் மட்டுமே உனக்கு முக்தியைக்
கொடுக்கும். உன்னை இறைவனடி சேர்க்கும். கவலை கொள்ளாமல்
அதை மட்டும் நீ செய்தால் போதும்.

பக்தனின் கண்கள் பனித்து விட்டன!
-------------------------------------------------------------------------------
"Bhakthi, Karma, Jnana and (Raja) Yoga, all these paths are one.
You cannot love God without knowing Him nor know him without loving
him. Love manifests itself in everything you do and that is Karma.
The development of mental perception (Yoga), is the necessary preliminary
before you can know or love God..."

"Peace can reign only when there is no disturbance by thought.
When the mind has been annihilated there will be perfect peace."
வாழ்க வளமுடன்!

14.3.09

பெண் ஜென்மம் எடுத்திருக்கின்ற கண்மணிகள்!

பெண் ஜென்மம் எடுத்திருக்கின்ற கண்மணிகள்!

பதிவுலகத்திற்கு வந்தவுடன் எனக்கு வாத்தியார் பதவி கிடைத்தது.

அது எப்படிக்கிடைத்தது என்பதைப் பலமுறை சொல்லியிருக்கிறேன்.

உண்மையில் நான் வாத்தியார் அல்ல! வாத்தியார் வேலைக்குச் செல்ல
ஆசைப்பட்டவன். அவ்வளவுதான்.

முதலில் 'பல்சுவை'ப் பதிவு ஒன்றை மட்டும் துவங்கி சுமார் ஓராண்டு காலம்
எழுதியவன், இந்த வாத்தியார் பதவிக்காகவே, வகுப்பறை எனும் இரண்டாவது
பதிவைத் துவங்கினேன். இரண்டாண்டு காலம் இதில் ஓடிவிட்டது.

வகுப்பறைப் பதிவில் ஆன்மிகத்தைப் பற்றியும், வாழ்க்கைத் தத்துவத்தைப்
பற்றியும் எழுத வேண்டும் என்றுதான் துவங்கினேன். ஆனால் வெறும்
ஆன்மிகத்தை மட்டும் எழுதினால் யார் வந்து படிப்பார்கள்?

இணையத்தில் உலவுபவர்களின் சராசரி வயது 32

அவர்களையெல்லாம் பிடித்து இழுத்துக்கொண்டு வரவேண்டும் என்று நினைத்த
நான், ஜோதிடத்தை எழுதினால், ஓரளவிற்கு படிக்க வருவார்கள் என்று நினைத்து
அதை எழுத ஆரம்பித்தேன்.

இப்போது அது என்னைப் பிடித்துக் கொண்டு விட்டது!
---------------------------------------------------------------------------------------
எனக்கு நிறைய மின்னஞ்சல்கள் வருகின்றன. சராசரியாக தினமும்
5 மின்னஞ்சல்கள் வருகின்றன.

ஒவ்வொன்றிலும் தங்கள் பிறப்பு விவரத்துடன் பத்துக் கேள்விகள் இருக்கும்.

ஒரு ஜாதகத்தைக் கணித்துப் பார்த்து, அலசி ஒரு கேள்விக்குப் பதில் சொல்ல
அரை மணி நேரம் ஆகும். மற்றதை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள்

++++++எனக்கு அதற்கெல்லாம் நேரமில்லை!

நேரமில்லை என்று சொன்னாலும் திரும்பத் திரும்ப வேண்டுகோள்களுடன்
மின்னஞ்சல்கள் வரும்

பத்துக் கேள்விகள் கேட்டு எழுதிய ஒருவரிடம், இரக்கம் கொண்டு ஒரே ஒரு
கேள்வி மட்டும் கேளுங்கள் என்று எழுதினேன்.

உடனே அவர் அந்தப் பத்துக் கேள்விகளையும் சுருக்கி ஒரே கேள்வியாக
இப்படி எழுதியுள்ளார்:

"என் எதிர்கால வாழ்க்கை எப்படி இருக்கும்?"

அதாவது அவருக்கு இப்போது 25 வயது. இன்னும் 50 ஆண்டுகால வாழ்க்கை
எப்படி இருக்கும் என்று கேட்டுள்ளார்.

அடுத்து வரும் 50 ஆண்டுகளுக்கான தசா புத்திகள், அத்தனை கோள்சாரங்களையும்
குறித்துக் கொண்டு, அவருடைய ஜாதகத்தையும் வைத்துக் கொண்டு வாழ்க்கையின்
ஒவ்வொரு கட்டமாக அலசி பத்துப் பக்கங்களுக்குப் பலன் எழுதி தட்டச்சு செய்து
அவருக்கு நான் அனுப்பி வைக்க வேண்டிய சூழ்நிலை!

நடக்கிற காரியமா?
---------------------------------------------------------------------------------
நிறைய பெண் வாசகிகளிடம் இருந்து வரும் கடிதங்கள் இப்படி இருக்கும்:

"அய்யா, நான் யாரையும் தற்சமயம் காதலிக்க வில்லை! ஆனாலும் தெரிந்து
கொள்ள ஆசை. என் திருமணம் காதல் திருமணமா? அல்லது பெற்றோர்கள்
செய்துவைக்கும் திருமணமா?"

இதற்கு நான் என்ன பதில் எழுதுவது?

பெண் ஜென்மம் எடுத்திருக்கின்ற கண்மணிகள். பாவம் பார்த்துச் சொல்வோம்
என்று பரிதாபத்துடன் ஜாதகத்தைப் பார்த்தால் அவர்களுடைய ஏழாம் பாவம்
நிறையப் பேர்களுக்கு நன்றாக இருப்பதில்லை. சின்ன வயதிலேயே கை நிறையச்
சம்பளத்தையும், அசத்தலான வேலையையும் கொடுத்த காலதேவன், அவர்களுடைய
ஏழாம் வீட்டில் சுமையை வைத்திருக்கிறான். ஒரு கதவு திறந்திருந்தால் ஒரு
கதவு மூடியிருக்கும் என்பது அதுதான்.

அதைச் சொல்லி, அவர்களைக் கலங்க அடிக்கலாமா?

விதிவிட்ட வழி என்று அதையெல்லாம் புறந்தள்ளிவிடுவேன். என்ன செய்வது?
இது போன்ற சங்கடங்கள் பல உள்ளன!
---------------------------------------------------------------------------------
சரி, வாருங்கள், பாடத்தைப் படிக்கலாம்.

சனி மகா திசை மொத்தம் 19 ஆண்டுகள்

1
சனி மகா திசையில் சனி புத்தி (சுய புத்தி)- 3 வருடங்களும் 3 மாதங்களும்

உடல் உபாதைகள் அதாவது உடல் நலமின்மை, மன அழுத்தங்கள்,
மனையாள், குழந்தைகள் மற்றும் உறவினர்களால் கவலைகள், பிரச்சினைகள்.
ஏற்படும். சிலருக்கு பண நஷ்டங்கள் ஏற்படும்
----------------------------------------------------------------------------
2
சனி மகா திசையில் புதன் புத்தி - 2 வருடங்களும் 8 மாதங்களும் 9 நாட்களும்

++++++கல்வியில், அறிவில் உயர்வு ஏற்படும். நிதிநிலை மேம்படும். திருமணம்
ஆகாதவர்களுக்குத் திருமணம் நடைபெறும். குழந்தை பிறந்து குடும்பத்தில்
மகிழ்ச்சி உண்டாகும். வேலையில் உயர்வு. குடும்பத்தில் சுபகாரியங்கள்
நடைபெறும். பொதுவாக நன்மையான காலம்.
-------------------------------------------------------------------------
3
சனி மகா திசையில் கேது புத்தி - 1 வருடமும் 1 மாதமும் 9 நாட்களும்

உடலில் உள்ள இணைப்புக்களில் (joints, especially knee joints) உபாதைகள்
உண்டாகும். வீக்கம், வலி போன்றவைகள் வந்து படுத்தி எடுக்கும். பணம்
விரையமாகும். மகனுடன் அல்லது தந்தையுடன் பேதம் உண்டாகும்.

சிலருக்குப் பெண்களால் பிரச்சினைகள், துன்பங்கள் உண்டாகும்
--------------------------------------------------------------------------

4
சனி மகா திசையில் சுக்கிர புத்தி - 3 வருடங்களும் 2 மாதங்களும்

++++++இது நன்மை தரும் காலம். வளமாக, செழிப்பாக இருக்கும்.
வேலையில் அல்லது செய்யும் தொழிலில் உயர்வு இருக்கும் Promotion in job.
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எடுத்த செய்ல்கள் வெற்றிகரமாக முடியும்.
சிலருக்கு மனைவி வழிச் சொத்துக்கள் கிடைக்கும். வம்பு, வழக்கு கேஸ்
போன்றவற்றில் வெற்றி கிடைக்கும்.
-------------------------------------------------------------------------------
5
சனி மகா திசையில் சூரிய புத்தி - 9 மாதங்களும் 18 நாட்களும்

நோய்களால் அவதிப்பட நேரிடும். இன்னவிதமான நோய் என்று சொல்ல
முடியாதபடி நோய்கள் வந்து விட்டுப்போகும். கண்கள் பாதிப்பு அடையும்
பொருட்கள், பணம், நகைகள் திருட்டுப்போகும். குடும்பத்தில் மனைவி,
மக்கள் என்று பாதிப்புக்கள் ஏற்படும். அதனால் ஜாதகன் அவதிப்பட நேரிடும்.
மன உளைச்சல் இருக்கும்.
-------------------------------------------------------------------------------
6
சனி மகா திசையில் சந்திர புத்தி - 1 வருடமும் 7 மாதங்களும்

சொத்து சுகங்களை இழந்து வாட நேரிடும். கடன் உண்டாகும். வீடு மாற
நேரிடும். சிலர் ஊர் மாறிச் செல்வார்கள். வீண் தகராறுகள் ஏற்படும்.
உறவினர்களிடையே விரோதம் உண்டாகும். சிலர் குடும்ப உறுப்பினரை
இழக்க நேரிடும்.
-------------------------------------------------------------------------------
7
சனி மகா திசையில் செவ்வாய் புத்தி - 1 வருடமும் 1 மாதமும் 9 நாட்களும்

கெட்ட பெயர் உண்டாகும். வேலை அல்லது தொழிலில் இட மாற்றம்
அல்லது ஊர் மாற்றம் ஏற்படும். படுக்கையில் படுக்க வைக்கும் அளவிற்கு
நோய் நொடிகள் உண்டாகும். திருட்டுக்களில் பொருள்கள் மற்றும் பணத்தை
இழக்க நேரிடும்
------------------------------------------------------------------------------
8
சனி மகா திசையில் ராகு புத்தி - 2 வருடமும் 10 மாதங்களும் 6 நாட்களும்

எரிகிற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றியது போல இந்தக் கால கட்டத்தில்
இருக்கின்ற உபத்திரவங்கள் மற்றும் பிரச்சினைகள் அதிகமாகும். கணுக்கால்
மற்றும் பாதங்களில் நோய்கள் உண்டாகும். பூச்சிக் கடிகள் உண்டாகும்
எந்தப்பக்கம் சென்றாலும் துயரம் மற்றும் தொல்லைகள் நிறைந்திருக்கும்
----------------------------------------------------------------------------------
சனி மகா திசையில் குரு புத்தி - 2 வருடமும் 6 மாதங்களும் 12 நாட்களும்

++++++ சொல்லப்போனால் இது நன்மைகளை அள்ளித் தரும் காலம். இது
நாள் வரை படுத்தி எடுத்ததற்கு சனிபகவான் ஒத்தடம் கொடுத்துவிட்டுப் போவார்
சிலருக்குப் புதிய வாகனங்கள், வசதிகள் கிடைக்கும். நகைகள் வாங்குவார்கள்.
எதிர்பார்க்கும் விஷயங்களில் வெற்றி கிடைக்கும். புதிய நட்புகளும், தொழிலில்
அல்லது வேலையில் புதிய உயர்வுகளும் கிடைக்கும். ஆறுதலான காலம்.
---------------------------------------------------------------------------------
கோள்சாரச் சனி (Transit Saturn)

பொதுவாகக் கோச்சாரச் சனீஷ்வரன் நன்மை செய்யக்கூடியவர் அல்ல!

நான் முன்பு சில ஆத்தியாயங்களில் சொல்லியபடி, அவருடைய சொந்த
வீடான மகரம் மற்றும் கும்பம் ஆகிய வீடுகளில் பயணிக்கும் காலங்களில்
நன்மைகளைச் செய்வார். அல்லது தீமைகள் அதிகம் இருக்காது.

அதேபோல 30 பாரல்களுக்கு மேற்பட்ட வீடுகளில் பயணிக்கும் காலங்களிலும்
உபத்திரவம் இருக்காது. பிடுங்கல் இருக்காது!

சனி எதையும் தாமதப்படுத்துவதில் வல்லவன். சிரமம் கொடுக்க வேண்டிய
நேரத்தில், ஜாதகனுக்கு எல்லாமே தாமதப்படும். நொந்து போகும்
அளவிற்குத் தாமதப்படும்.

கோள்சாரத்தில் 3ஆம் இடம், 6ஆம் இடம், 11ஆம் இடம் ஆகிய
இடங்களில் அவர் சஞ்சரிக்கும் காலங்களில் உபத்திரவம் இல்லாமல்
இருக்கும்

அதிக உபத்திரவ காலங்கள் - ஏழரைச் சனி, மற்றும் அஷ்டமச்சனி
காலங்கள் அவைகள் மொத்தம் பத்து ஆண்டுகள்.
------------------------------------------------------------------------------------
சேர்க்கையில் சனி மற்ற கிரகங்களுடன் சேராமல் தனித்து இருப்பதே
நல்லது.

செவ்வாய், சூரியன், ராகு, கேது ஆகிய நான்கு கிரகங்களுடன் சனி ஜாதகத்தில்
சேர்ந்திருப்பது மகிழக்கூடிய விஷயம் அல்ல. தொல்லையானது.

அதேபோல சந்திரன், குரு, சுக்கிரன் ஆகிய கிரகங்களுடன் அவர் சேர்வதும்
நன்மை அளிக்கக்கூடிய விஷயம் அல்ல!

சனியும் புதனும் மட்டும் சேர்ந்திருக்கலாம். (சனி சேர்க்கையில் விதிவிலக்கு)
நன்மையளிக்கும்

Mercury is an auspicious planet but it is basically a neutral planet.
It adopts the nature of the planets placed in the same house and acts
like them. The combination in between Saturn and Mercury is of
benefic nature. The house in which this combination takes place receives
positive results.
--------------------------------------------------------------------------------
சனியால் பாதிப்பிற்கு உள்ளாக வேண்டும் என்றால், பாதிப்பு உண்டாகியே
தீரும். யாரும் தப்பிக்க முடியாது.

இறைவழிபாடு பயனளிக்கும்.

எப்படிப் பயனளிக்கும்?

தாக்குப் பிடிக்கும் சக்தி கிடைக்கும்.

எந்த சூழ்நிலைக்கும் அதுதான் முக்கியம்!

சரியா?

சனியைப் பற்றிய கட்டுரைத் தொடர் நிறைவு பெறுகிறது!
--------------------------------------------------------------------------
"அய்யா, ஒன்று பாக்கியுள்ளது?"

"என்ன ராஜா?"

"மேலே உள்ள படத்திற்கும், பாடத்திற்கும் என்ன சம்பந்தம்?"

"அந்தப் பெண்மணி எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்? சனியைப் பற்றிய
பாடத்தை முடித்துவிட்ட மகிழ்ச்சியில் நானும் இருக்கிறேன். Okayயா?"
------------------------------------------------------------------------------

நன்றி, வணக்கத்துடன்
வகுப்பறை வாத்தியார்

வாழ்க வளமுடன்!

12.3.09

Evidence for the existence of God இறைவனுக்குச் சான்று கேட்டவர்கள்!

Evidence for the existence of God இறைவனுக்குச் சான்று கேட்டவர்கள்!

ஆன்மீகத்தில் திளைப்பவர்களுக்கு அன்னை எனும் மூன்று சொல் எழுத்து
ஒருவரைத்தான் சுட்டிக் காட்டும். அது பிரான்ஸ் நாட்டிலிருந்து இந்தியாவிற்கு
வந்து பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் தங்கியிருந்து தனது இறுதி
மூச்சுவரை ஆன்மிகப் பணி செய்த அன்னையையே குறிக்கும்

"மலர்போல மலர்கின்ற மனம்வேண்டும் தாயே
பலர்போற்றிப் பாராட்டும் குணம்வேண்டும் தாயே!
வரம்தரும் அன்னையே வணங்கினோம் உன்னையே
வரம்தரும் அன்னையே வணங்கினோம் உன்னையே"

என்று கங்கைஅமரன் அவர்களின் அற்புதமான பாடல் அன்னைக்காகவே எழுதப்
பெற்றது. முன்பு, விஜய் தொலைக்காட்சியின் அதிகாலைத் துவக்கப் பாடலாக
ஒலித்து, தமிழ்கூறும் நல்லுலகத்தில் மிகவும் பிரபலமான பாடலானது.

இந்தியாவின் ஆன்மிக செல்வத்தை எப்போதும் சிலாகித்துப் பேசும் அன்னை
அவர்கள், இந்திய மக்களை எப்போதும் கேட்டுக்கொண்டது இதுதான்:

"எதற்காகவும் உங்கள் இறையுணர்வை விட்டுக் கொடுக்காதீர்கள்"

ஒருமுறை மூன்று அமெரிக்க விஞ்ஞானிகள் அன்னையை சந்தித்துப் பேசிக்
கொண்டிருக்கும்போது கேட்டார்கள்.

"தாயே, நாங்கள் எல்லாம் விஞ்ஞானிகள். எல்லாவற்றிற்கும் சான்று கேட்பவர்கள்.
இறைவன் இருப்பதற்கு தாங்கள் ஒரு சான்றாவது கொடுத்து உதவ வேண்டும்"

புன்னகைத்த அன்னை, அதற்குப் பதில் உரைத்தார்.

"ஆகா, தருகிறேன்.அதற்கு முன்னால் நீங்கள் என் கேள்வி ஒன்றிற்குப் பதில்
சொல்ல வேண்டும்"

"சொல்கிறோம், கேளுங்கள்"

"ஒரே நேரத்தில் இடத்திற்கு இடம் சீதோஷ்ண நிலை ஏன் வேறுபடுகிறது?"

(ஒரு குறிப்பபிட்ட நேரத்தில் சென்னையில் 40 டிகிரி சீதோஷ்ணம் என்றால்,
கோவையில் 36ம் ஊட்டியில் 22ம் இருக்கும் நிலை)

அதற்கு அவர்கள் பதில் சொன்னார்கள்.

"ஒரு இடத்தில் இருக்கும் காற்றின் அடர்த்தியை வைத்தும், சம வெளிகளில்
இருந்து ஒரு இடம் இருக்கும் உயரத்தை வைத்தும் சீதோஷ்ண நிலை மாறுபடும்"

Weather occurs due to density (temperature and moisture) differences between
one place and another. These differences can occur due to the sun angle at any
particular spot, which varies by latitude from the tropics.

அன்னை அவர்களைத் திருப்பிக் கேட்டார்,"அதே காற்றின் அடர்த்தியை
வைத்து காற்றில் உள்ள ஆக்சிஜனின் அளவு மட்டும் ஏன் மாறுபடுவதில்லை?"

Does the percentage of oxygen in air change as altitude increases? Or is it still
around 21% at say, the top of a hill?

அவர்கள் சொன்ன பதில் என்ன தெரியுமா?

"தெரியவில்லை" என்று சொன்னார்கள்

அன்னை அவர்கள் சொன்னார்கள்:

"அதுதான் இறை சக்தி. தான் படைத்த ஜீவராசிகள் சுவாசிக்க வேண்டும்
என்பதற்காக காற்றில் உள்ள பிராணவாயுவின் அளவை மாறாமல்
வைத்திருப்பவரின் பெயர்தான் இறைவன்"

++++++++++++++++++++
சென்னையாகட்டும் அல்லது அமைதிப் பள்ளதாக்குப் போன்ற அடர்ந்த மலைப்
பிரதேமாகட்டும் அல்லது ராஜஸ்தானின் தார் பாலைவனமாகட்டும் அல்லது
வங்கக் கடலாகட்டும் எங்கும் காற்றில் உள்ள பிராணவாயுவின் அளவு மட்டும்
மாறாமல் இருக்கும்

அதுபோல தான் படைத்த ஜீவராசிகள் அனைத்திற்கும் உரிய உணவையும்
இறைவன் குறைவில்லாமல் அளித்திருக்கிறார். எந்தப் பறவையாவது உணவின்றி
மடிந்திருக்கிறதா? கல்லிற்குள் இருக்கும் தேரைக்கும் அரவணைப்பு அளிக்கும்
கருணை மிக்கவர் இறைவன்.

+++++++++++++++++++++

The circumference of the Earth at the equator is 25,000 miles.
The Earth rotates in about 24 hours. Therefore, if you were to hang above the
surface of the Earth at the equator without moving, you would see 25,000 miles
pass by in 24 hours, at a speed of 25000/24 or just over 1000 miles per hour.

160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் காரில் இருந்து தலையை நீட்டிப் பாருங்கள்.
எதிர்கொள்ளும் காற்றின் வேகத்தில் மூச்சுத் திணரும்.

ஆனால் அதே நேரத்தில் இந்தப் பூமி தன்னைத்தானே மணிக்கு 1600 கிலோ மீட்டர்
வேகத்தில் சுற்றிக் கொள்கிறது. அதன் வேகம் உங்களைப் பாதிக்கிறதா?
இல்லையே? அதுதான் இறைசக்தி!

உலகின் நிலப்பரப்பில் 3ல் 2பங்கு தண்ணீர். இந்தச் சுழற்சியில் ஒரு சொட்டுத்
தண்ணீராவது, பூமியிலிருந்து பிரிந்து அண்டத்தில் விழுகிறதா? கேட்டால் புவியீர்ப்பு
என்பார்கள். அந்த ஈர்ப்புதான் இறைசக்தி!

Space, time and earth மூன்றுமே ஒன்றுதான். ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்க
முடியாது. மூன்றுமே இறைசக்தி

புரிகிறவனுக்குப் புரியட்டும். புரியாதவனுக்குப் புரியாமலே போகட்டும்.

It is his problem!

++++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!

10.3.09

டிரைவரும் கண்டக்டரும்!

வாகன ஓட்டுனர், நடத்துனர் என்று எழுதுவதைவிட டிரைவர், கண்டக்டர்
க்ளீனர் என்று எழுதினால் நமக்கு அந்த நடைமுறை அல்லது வழக்குச் சொற்களால்
சொல்வது எளிதில் விளங்கும்.

சிலசமயங்களில் நடைமுறைத் தமிழே பலரையும் சென்றடையும்..

சரி, இப்போது சொல்ல வந்ததைச் சொல்கிறேன்.

ஒவ்வொருவரும் அவரவரது வேலைகளை அவரவர் இடத்தில் இருந்து செய்தால்
போதும் பிரச்சினைகள் வராது. குழப்பங்கள் இருக்காது.

டிரைவர் டிரைவர் வேலையையும், கண்டக்டர் வேலையையும் மட்டுமே செய்ய
வேண்டும். க்ளீனர் க்ளீனிங் வேலையை மட்டுமே செய்ய வேண்டும்.

மாற்றிச் செய்தால் என்ன ஆகும்?

யோசித்துப் பாருங்கள். க்ளீனர் அல்லது நடத்துனர் வண்டியை ஓட்டினால்
என்ன ஆகும். விபத்து ஏற்படும் அபாயம் உண்டு.

அதுபோல கிரகங்கள் அதனதன் இடத்தில் இருந்து அதனதன் பணியைச்
செய்தால் மட்டுமே ஜாதகன் எந்தவித விபத்தும் அல்லது பிரச்சினையும் இன்றி
மகிழ்ச்சியோடு இருக்க முடியும்.

சனிக்கும் அப்படித்தான். அவர் இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால்
ஜாதகனுக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது.

அவர் சொந்தவீட்டில் இருந்தால் மிகவும் நல்லது.

மகரம், மற்றும் கும்ப ராசிகள் சனீஷ்வரனுக்குச் சொந்த இடங்கள்
அங்கே அவர் இருப்பது, அது என்ன பாவமாக அல்லது என்ன வீடாக
இருந்தாலும் ஜாதகனுக்கு அவர் நன்மைகளையே அதிகமாகச் செய்வார்.

சரி, அவர் மற்ற இடங்களில் (ராசிகளில்) இருந்தால் என்ன செய்வார்?

அதுதான் இன்றைய பாடம். பாடத்தைப் பாருங்கள்:
===========================================================

வெவ்வேறு ராசிகளில் சனீஷ்வரன் இருப்பதால் உண்டாகக்கூடிய பொதுப்பலன்கள்

மேஷத்தில் சனி:

இங்கே சனி நீசம்.
ஆசாமி முட்டாள்தனமானவன். பேச்சும் அப்படித்தான் இருக்கும். ஊர்சுற்றி
வாய்ப்புக்கிடைத்தால் நடத்தை தவறுபவன். நேர்மையற்றவன். புரிந்துகொள்ள
முடியாதவன். சிலர் கொடூரமானவர்களாக இருப்பார்கள். சிலர் சட்டத்திற்கும்
இயற்கைக்கும் எதிரான வேலைகளைச் செய்யக்கூடியவர்கள்.
-----------------------------------------------------------------------------
ரிஷபத்தில் சனி

இது சுக்கிரனின் வீடு. இங்கே சனி இருந்தால்
உணர்வுகளையும் எண்ணங்களையும் கட்டுப்படுத்திக்கொள்ளக் கூடியவர்.
The keeping of one's thoughts and emotions to oneself: கறுப்பான
தோற்றத்தை உடையவர். சூதுவாது நிறைந்தவர். சம்பிரதாயங்களுக்கு
எதிரானவர்.

எடுத்த காரியத்தை நிறைவேற்றக்கூடியவர்கள். அதிகாரம் மிக்கவர்கள்
தந்திரமிக்கவர்கள்

சிலருக்கு இரு மனைவிகள் அமையும். சிலர் எப்போதும் கவலையோடு
இருப்பார்கள்
--------------------------------------------------------------------------
மிதுனத்தில் சனி

இது புதனின் வீடு. இங்கே சனியிருந்தால்
ஜாதகன் ஒரு இடத்தில் இருக்க மாட்டான். Restlessஆக இருப்பான்.
ஒழுங்கில்லாதவன். துன்பங்கள் சூழ்ந்தவன்.ஒல்லியான தேகமுடையவன்.
யாராலும் புரிந்துகொள்ள முடியாதவன் அல்லது முடியாதவள்.

சிலர் திட்டமிட்டு செயலாற்றுபவர்கள். குறுகியமனப்பான்மை மிக்கவர்கள்
இரசாயனம், இயந்திரங்கள் சம்பந்தட்ட துறையில் சிலர் ஆர்வம்
கொண்டிருப்பார்கள். சூதாட்டங்களில் விருப்பமுள்ளவர்கள்
-------------------------------------------------------------------------------
கடகத்தில் சனி

இது சந்திரனின் வீடு
சிலரை ஏழ்மை வாட்டும். மன சந்தோஷத்திற்காக அலைபவர்கள்.
மெதுவாகச் செயல்படுபவர்கள். டல்லாக இருப்பார்கள். சிலர் சூதுவாது
நிறைந்தவர்கள். சுயநலமிக்கவர்கள். பிடிவாதமுடையவர்கள்.
சந்திரன் அன்னைக்கு உரிய கிரகம். அந்த வீட்டில் சனியின் அமர்வு
சிலருக்கு அனனையின் அரவனைப்பு கிடைக்காமல் போய்விடும்
வாழ்க்கை ஏமாற்றங்கள் நிறைந்ததாக இருக்கும்.
-------------------------------------------------------------------------------
சிம்மத்தில் சனி

பிடிவாதமுடையவர்கள். எதற்கும் வளைந்து போகாதவர்கள் (firmly or stubbornly
adhering to one's purpose, opinion, etc.; not yielding to argument, persuasion,
or entreaty) அதிர்ஷ்டமில்லாதவர்கள். முரண்பாடுகள் மிக்கவர்கள். மாறுபட்ட
ஒவ்வாத சிந்தனையுடையவர்கள்

சிலர் கடின உழைப்பாளிகள். சிலர் எழுத்தில் பரிணமளிப்பார்கள், அதாவது
எழுத்தாளர்களாக இருந்து சிறப்படைவார்கள்
-----------------------------------------------------------------------------
கன்னியில் சனி

கறுப்பான தோற்றமுடையவர்கள். வாக்குவாதங்கள் செய்பவர்கள். மாறுபட்ட
சிந்தனை உடையவர்கள். நிலைப்பாடுகள் இல்லாதவர்கள். குறுகிய மனப்பான்மை
மிக்கவர்கள். அதிரடியானவர்கள். பழமைவாதிகள். உடல் நலக் குறைபாடுகள்
இருக்கக்கூடியவர்கள்
---------------------------------------------------------------------------------
துலா ராசியில் சனி

++++++இது சனீஷ்வரனின் உச்ச வீடு. இங்கே சனி இருப்பது நன்மையைத் தரும்.
ஜாதகனை அவன் இருக்கும் துறையில் புகழ் பெற வைக்கும். ஜாதகன்
அறநிலைகளை உருவாக்குபவனாக விளங்குவான் அல்லது தலைமை ஏற்பான்.
செல்வந்தனாக இருப்பான். உயரமாகவும் அழகுள்ளவனாகவும் விளங்குவான்
(இது இயற்கையில் சுக்கிரனுடைய வீடு - அதனால் அந்த அம்சங்கள் ஜாதகனுக்கு
ஏற்படும்) அப்படி இல்லாதவர்கள் ஏன் எனக்கு அப்படி இல்லை என்று கேட்க
வேண்டாம். இருந்தால் மகிழ்வு கொள்ளுங்கள். இல்லை என்றால் ஜாதகத்தின்
வேறு சில அம்சங்களை வைத்து அப்படி இல்லை என்று தெரிந்து கொள்ளுங்கள்.
ஜாதகன் தற்பெருமை உடையவனாக இருப்பான் (இருக்காதா பின்னே?)
அதிகாரம் உள்ளவன். மதிப்பும், மரியாதையையும் உடையவன். சாமர்த்தியசாலி
எதையும் தீர்மானிக்ககூடியவன். சுதந்திரமனப்பான்மை மிக்கவன்
சிலர் பெண்களுக்கு சேவகம் செய்வதில் ஆர்வம் கொண்டிருப்பார்கள்
-----------------------------------------------------------------------------------
விருச்சிகத்தில் சனி

இது செவ்வாயின் வீடு. இது சனி அமர்வதற்கு உகந்த இடம் அல்ல!
ஜாதகன் அவசரக்காரன். படபடப்பானவன். கடினமானவன் (அதாவது கடினமான
மனதையுடையவன்) மகிழ்ச்சியில்லாதவன். உடல்நலமில்லாதவன்.

சிலருக்கு நெருப்பு, விஷம், விபத்து போன்றவற்றால் தீமைகள் நிகழலாம்.
சிலர் கட்டுப்பெட்டித்தனமாக தான் என்று தனிமையாக வாழ்வார்கள்
சிலருக்கு வாழ்க்கை மொத்தமும் பயனில்லாமல் போய்விடும்
------------------------------------------------------------------------------------
தனுசு ராசியில் சனி!

++++++இது குருவின் வீடு. இங்கே சனி இருப்பது நல்லது. இயற்கையில் ஒரு
சுபக்கிரகத்தின் வீடாகையால் இங்கே அமரும் சனி அடக்கி வாசிப்பார்.

ஜாதகன் பெருந்தன்மை உடையவனாக இருப்பான். அவன் இருக்கும் துறையில்
புகழ் பெறுவான். கடமை உணர்வுள்ள குழந்தைகள் அவனுக்கு இருக்கும்.
வயதான காலத்தில் அவைகள் அவனை அரவனைத்துக் காப்பாற்றவும் செய்யும்.
அவனுடைய வாழ்க்கை மகிழ்ச்சி நிரம்பியதாக இருக்கும்
----------------------------------------------------------------------------------
மகரத்தில் சனி

++++++.இது சனியின் சொந்த வீடு. ஜாதகனின் குடும்ப வாழ்க்கை செழிப்பாகவும்
மகிழ்ச்சி நிரம்பியதாகவும் இருக்கும். ஜாதகன் புத்திசாலியாகவும், சாமர்த்தியம்
மிக்கவனாகவும் திகழ்வான்

சிலர் சுயநலம் மிக்கவர்களாக இருப்பார்கள். சிலர் சந்தேக மனப்பான்மை
கொண்டவர்களாகவும், பழிவாங்கும் எண்ணம் மிக்கவர்களாகவும் இருப்பார்கள்.
சிலர் அதிகம் கற்றவர்களாகவும் இருப்பார்கள்
----------------------------------------------------------------------------------
கும்பத்தில் சனி

++++++இதுவும் சனியின் சொந்தவீடு. வாழ்க்கைத் தத்துவத்தை அறிந்தவர்களாக
இருப்பார்கள். யதார்த்த அனுகுமுறைகளைக் கொண்டவர்களாக இருப்பார்கள்
மகிழ்ச்சியோடு இருப்பார்கள்.வாழ்க்கை நிறைகுடமாக இருக்கும்.
---------------------------------------------------------------------------------
மீனத்தில் சனி

++++++இதுவும் குருவின் வீடு. இங்கே சனியின் அமர்வு நன்மைகளை உடையதாக
இருக்கும். ஜாதகன் சாமர்த்தியசாலியாக இருப்பான். அதிர்ஷ்டமுள்ளவனாக
இருப்பான். எல்லோரும் விரும்பும் வண்ணம் நடந்துகொள்வான்.

நல்ல விசுவாசமான மனைவி கிடைப்பாள். வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
மற்றவர்களுக்கும் ஜாதகன் உதவியாக இருப்பான்,
------------------------------------------------------------------------------------
இங்கே சொல்லப்பட்டுள்ளவைகள் அனைத்தும் பொதுப்பலன்கள்.
தனிப்பட்ட ஜாதகங்களுக்கு, ஜாதகத்தின் மற்ற அமைப்புக்களை
வைத்து இப்பலன்கள் கூடலாம் அல்லது குறையலாம் அல்லது
இல்லாமலும் போகலாம். ஆகவே பொறுமையாக அலசுங்கள்

(தொடரும்)

வாழ்க வளமுடன்!