மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

30.12.17

Astrology: ஜோதிடம்: 29-12-2017ம் தேதி புதிருக்கான விடை!


Astrology: ஜோதிடம்: 29-12-2017ம் தேதி புதிருக்கான விடை!

அந்த ஜாதகத்திற்கு உரியவர் பிரபல தொழில் அதிபர் திரு. ரத்தன் டாடா அவர்கள்
பிறப்பு விபரம் 28-12-1937 - 6:30 காலை. சூரத் நகரம்

நான் எதிர்பார்த்தபடி நிறைய அன்பர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். சுமார் 19 பேர்கள் சரியான விடையை எழுதி உள்ளார்கள். அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்! அவர்களின் பெயர்கள் அவர்களுடைய பின்னூட்டங்களுடன் கீழே கொடுத்துள்ளேன். பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்

மீண்டும் ஒரு புதிருடன் அடுத்த வெள்ளிக்கிழமை (5-1-2018) சந்திப்போம்!

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------
1
Blogger Maheswari Bala said...
Ratan tata 
December 28,1937 Tuesday 
Time of birth:06:30:00
Place of birth:Mumbai 
Longitude:72 E 50
Latitude:18 N 58
Friday, December 29, 2017 7:14:00 AM 
------------------------------------------------
2
Blogger Thanga Mouly said...
புதிர் பிரபலம்: Mr. Ratan Tata DOB: 28 December 1937
Friday, December 29, 2017 7:16:00 AM
----------------------------------------------------
3
Blogger RAMVIDVISHAL said...
Ratan Tata
Friday, December 29, 2017 7:46:00 AM 
----------------------------------------------------------
4
Blogger angr said...
பெருந்தொழிலதிபர் திரு.ரத்தன் டாடா அவர்கள்
Friday, December 29, 2017 8:23:00 AM
----------------------------------------------------
5
Blogger thozhar pandian said...
இந்திய தொழிலதிபர்களில் மிக முக்கியமானவராக கருதப்படும் இரட்டன் டாட்டா அவர்கள். பிறந்த நாள் 28 டிசம்பர் 1937
Friday, December 29, 2017 8:34:00 AM
----------------------------------------------------
-------
/////Blogger thozhar pandian said...
இந்த ஜாதகத்தில் உள்ள யோகங்கள் என்ன. மேலோட்டமாக பார்த்தால் இலக்கினாதிபதி குரு 2ல் நீசம். ஆனால் குருவும் சனியும் பரிவர்த்தனை. 7, 9, 10, 11ம் வீடுகளின் அதிபர்கள் இலக்கினத்தில். ஆக தர்ம கர்மாதிபதி யோகம். 8ம் வீட்டு அதிபதி உபசயன ஸ்தானமான 11ல், அது தேய்பிறை சந்திரன் என்பது இந்த ஜாதகத்திற்கு நல்லதுதான் என்று நினைக்கிறேன். குருவும் சந்திரனும் ஒருவருக்கொருவர் கேந்திர வீடுகளில் இருப்பதும் நல்லது தான். ஆனால் ஜாதகர் இந்தியா, ஏன், உலகமே அறிந்த பெரும் பிரபலம். ஜாதகப்படி இவரது பெயருக்கும் புகழுக்கும் எந்த யோகம் காரனம் என்று விளக்குவீர்களா?
Friday, December 29, 2017 8:42:00 AM /////

செய்தால் போயிற்று. நேரம் கிடைக்கும்போது செய்கிறேன். பொறுத்திருங்கள் தோழரே!!!
-----------------------------------------------------------------
6
Blogger சர்மா said...
வணக்கம் புதிருக்கான விடை
திரு
இரத்தன் டாடா அவர்கள்
Name: Ratan Tata
Date of Birth: Tuesday, December 28, 1937
Time of Birth: 06:30:00
Place of Birth: Mumbai
Longitude: 72 E 50
Latitude: 18 N 58
Time Zone: 5.5
Friday, December 29, 2017 10:08:00 AM
----------------------------------------------------
7
Blogger Palani Shanmugam said...
மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,
இந்தப் புதிரில் உள்ள ஜாதகத்துக்கு சொந்தக்காரர் பிரபல தொழில் அதிபரும், மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்ஜியமாய் விளங்கும் டாடா குழுமத்தின் தலைவருமான திரு. ரத்தன் டாடா அவர்கள்.
எஸ். பழனிச்சாமி
Friday, December 29, 2017 11:05:00 AM
----------------------------------------------------
8
Blogger Bala subramanian said...
Sir
Shri Rathan Tata
DOB 28/12/1937
Balasubramanian
Friday, December 29, 2017 11:16:00 AM 
-----------------------------------------------------
9
Blogger Ananthakrishnan K R said...
Astorlogy Quiz: 
Mr Ratan Tata born on 28th December 1937 at 06.30 AM in Mumbai.
Regards,
K R Ananthakrishnan 
Chennai
Friday, December 29, 2017 11:46:00 AM 
------------------------------------------------------
10
Blogger Saravana Kumar said...
The famous Celebrity name is Ratan TATA, Date of Birth : 28.12.1937 at 1.00 am , Mumbai.
Friday, December 29, 2017 12:51:00 PM 
---------------------------------------------------
11
Blogger umajana said...
ஐயா,
இந்த ஜாதகத்துக்கு உரியவர் டாடா குழுமத் தலைவர் திரு ரத்தன் டாடா அவர்கள். அவரது பிறந்த தேதி 28/12/1937 காலை சுமார் 6:30 மணியளவில்.
நன்றி
Friday, December 29, 2017 2:06:00 PM
----------------------------------------------------
12
Blogger GOWDA PONNUSAMY said...
RATAN TATA
Date of Birth: 28-Dec-1937 @ 6-10 hrs
Place of Birth: Mumbai, Maharashtra, India
Profession: Businessperson, Entrepreneur
Nationality: India
- G C Ponnusamy
Friday, December 29, 2017 2:21:00 PM 
--------------------------------------------------------
13
Blogger csubramoniam said...
ஐயா
ஜாதகத்திற்கு உரியவர் டாடா குழும தலைவர் ரத்தன் டாடா அவர்கள்
தேதி :28 /12 /1937
நேரம் :காலை 6 .30 மணி
இடம்: சூரத் குஜராத்
நன்றி
Friday, December 29, 2017 2:30:00 PM
---------------------------------------------------
14
Blogger Shruthi Ramanath said...
Sir its a great business man RATAN TATA 
Date of birth : 28- december-1987
Place of birth: Mumbai
Time of birth: 6.30 AM
Friday, December 29, 2017 2:55:00 PM 
-------------------------------------------------------
------
/////Blogger Shruthi Ramanath said...
Sir if possible please stop even the public comments sir..many r posting wrong answers and giving some clues ...in today's quiz namakal sibi typed its m.g.r...instead of finding who really it is people may type m.g.r...so in future I think it will be helpful even if u close public comments.. I don't no whether its possible just a humble request from my side sir
Friday, December 29, 2017 3:14:00 PM /////

எந்த தேதியில் வெளியான புதிர் என்பதைச் சொன்னால் பார்ப்பதற்கு வசதியாக இருக்கும் சகோதரி!!!
------------------------------------------------------
..........
Blogger csubramoniam said...
ஐயா
ஜாதகத்திற்கு உரியவர் டாடா குழும தலைவர் ரத்தன் டாடா அவர்கள்
தேதி :28 /12 /1937
நேரம் :காலை 6 .30
பிறந்த இடம் :மும்பை
விக்கியில் தமிழ் ஆங்கில பதிப்பில் இடம் வேறுபடுகிறது
நன்றி
மேலும்த ங்களின் அடுத்த பதிவு அடுத்த வருடத்தில் என நினைக்கின்றேன்
Friday, December 29, 2017 3:36:00 PM
-------------------------------------------------------
15
Blogger kmr.krishnan said...
ஜாதகர் டாடா குழுமத்தின் தலைவர் உயர்திரு.ரத்த‌ன் டாடா.இந்தியாவின் தொழில் முன்னேற்றத்திற்கான குடும்பத்தின் தற்போதைய தலைவர்.பிறந்த தேதி 28 டிசம்பர் 1937.பிறந்த நேரம் காலை 6 மணி 30 நிமிடம் 15 வினாடி. பிறந்த ஊர் மும்பை. கஜகேசரி யோகம்; சனி குரு பரிவர்தனை; 9,10,11க்கு உடைய்வர்கள் சேர்ந்து லக்கின பாவத்திலேயே நின்றது.இவை அவருடைய வெற்றிக்கான காரணங்கள்.
Friday, December 29, 2017 3:41:00 PM
-------------------------------------------------------
16
Blogger bala said...
Vanakkam Iyya,
Ratan tata avargal :) 
28 Dec 1937, 6.30 am, Surat India
https://en.wikipedia.org/wiki/Ratan_Tata
nandri,
Bala
Friday, December 29, 2017 3:51:00 PM 
---------------------------------------------
17
Blogger C Jeevanantham said...
Dear Sir,
Dec 28, 1937
Ratan Tata born.
Thanking you,
C. Jeevanantham.
Friday, December 29, 2017 3:55:00 PM 
------------------------------------------
18
Blogger Saravanan Annamalai said...
Its Mr. Ratan Tata.
---A.Saravanan, Pondicherry
Friday, December 29, 2017 8:14:00 PM 
--------------------------------------------------
19
Blogger Sathish Kumar said...
Ratan Tata
Date of Birth : 28 – 12 – 1937
Time of Birth : 06 : 30
Place of Birth : Mumbai
Friday, December 29, 2017 10:16:00 PM 
============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

29.12.17

Astrology: Quiz. : ஜோதிடப் புதிர் 29-12-2017 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!

Astrology: Quiz. : ஜோதிடப் புதிர்  29-12-2017 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!

நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டு பிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும்
இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச்
சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும்  ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை
வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்?

எங்கே முயற்சி செய்யுங்கள்

சென்ற வாரம் நிறைய அன்பர்கள் கலந்து கொண்டதோடு சரியான விடையைச் சொல்லி அசத்திவிட்டார்கள்!

தேதியைக் கண்டு பிடித்து விடுங்கள், மற்றதற்கு கூகுள் ஆண்டவர் உதவி செய்வாரே!


க்ளூ வேண்டுமா? அகில இந்திய பிரபலம். எந்தத் துறையில் என்று சொன்னால் கோளாறாகிவிடும். ஆகவே சொல்லவில்லை!

சரியான விடை நாளை வெளியாகும்!

அன்புடன்
வாத்தியார்
--------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

28.12.17

நீங்கள் அவசியம் காண வேண்டிய காணொளிகளில் சில!!!!


நீங்கள் அவசியம் காண வேண்டிய காணொளிகளில் சில!!!!

1.
திருமதி அருணா சாய்ராம் அவர்களின் பாடலைக் கேளுங்கள். அற்புதமாகப் பாடி நம்மையும் மெய் மறக்கச் செய்கிறார்!!!


2.
இதுவும் அற்பதமான காணொளி. கடைசி டயலாக்க்கில் அசந்து போய்விடுவீர்கள். இடையில் நிறுத்தாமல் கடைசிவரை பாருங்கள். மிகச் சிறிய காணொளிதான்:


3.
திருவாளர் சுகி சிவம் அவர்களின் உரை. அசத்தலாக உள்ளது. அவசியம் பாருங்கள்:அன்புடன்
வாத்தியார்
====================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

27.12.17

செட்டிநாட்டு சமையல் கலையில் சில பதார்த்தங்கள் உங்களுக்காக!


பால் பணியாரம்
---------------------------------------------------------------------------------------------------------------
செட்டிநாட்டு சமையல் கலையில் சில பதார்த்தங்கள் உங்களுக்காக!

23 வகை செட்டிநாட்டு ரெசிபி

'செட்டிநாடு' என் றாலே... கலைநயம் மிளிரும் அழகழகான வீடுகளும், தனிச் சிறப்புமிக்க உணவு வகைகளும்தான் கண் முன்னே விரியும். கும்மாயம், இனிப்பு சீயம், ஐந்தரிசி பணியாரம், பால் கொழுக்கட்டை, கல்கண்டு வடை என்று இந்த  'செட்டிநாடு சமையல்  சாப்பிடுவதை சுகானுபவமாக மாற்றும் இந்த ஸ்பெஷல் அயிட்டங்களில்... சுண்டைக்காய் பச்சடி, சிவப்பரிசி புட்டு, கீரை மண்டி போன்றவை... உடல் நலத்தை உறுதிப்படுத்தும்.

1
மிளகாய் சட்னி

தேவையானவை: காய்ந்த மிளகாய் - 15 அல்லது 20, புளி - சிறிய எலுமிச்சையளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை - தாளிக்க தேவையான அளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, மிளகாயை நிறம் மாறாமல் வறுக்கவும். அடுப்பை அணைத்து விட்டு புளி, உப்பு சேர்த்து வறுக்கவும். ஆறவிட்டு நைஸாக அரைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி... கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, அரைத்து வைத்திருக்கும் சட்னியில் சேர்க்கவும்.

குறிப்பு: சட்னியின் மேலே எண்ணெய் நிற்குமாறு இருக்க வேண்டும். ரோஜாப்பூ நிறத்தில் இருக்கும் இதற்கு 'ரோஜாப்பூ சட்னி’ என்றே பெயர். பணியாரம், இட்லி, தோசைக்கு சிறந்த காம்பினேஷன்.
---------------------------------------------------
2
வெள்ளை பணியாரம்

தேவையானவை: பச்சரிசி - ஒரு கப், உளுந்து - 4 டேபிள்ஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், சர்க்கரை - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசி, உளுந்தை சேர்த்து சுத்தம் செய்து 2 மணி நேரம் ஊறவிடவும். பிறகு உப்பு, சர்க்கரை சேர்த்து நைஸாக அரைக்கவும் (தோசை மாவு பதத்தில் இருக்க வேண்டும்). வாணலியில் எண்ணெய், நெய் ஊற்றி, காய்ந்ததும் வட்ட வடிவ அகலக் கரண்டியால் மாவை ஊற்றவும். ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு வேகவிடவும். இதை ஒவ்வொன்றாகத்தான் செய்ய வேண்டும்.

குறிப்பு: மாவு புளிக்கக் கூடாது. அரைத்த 10 நிமிடத்தில் செய்யவும். இதற்கு கார சட்னி சூப்பர் காம்பினேஷன்!
-------------------------------------------------------
3
கல்கண்டு வடை

தேவையானவை: உளுந்து - ஒன்றரை கப், பச்சரிசி - 2 டேபிள்ஸ்பூன், கல்கண்டு - ஒரு கப், எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.
செய்முறை: பச்சரிசி, உளுந்தை ஒன்றாக சேர்த்து அரை மணி நேரம் ஊற வைத்து, கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். முக்கால் பதம் அரைத்தவுடன் பொடித்து வைத்த கல்கண்டை சேர்த்துக் கரைக்கவும் உளுந்தை அரைக்கும்போது, தண்ணீர் சிறிது கூட சேர்க்கக் கூடாது. அரைத்து முடித்ததும் மாவு நீர்க்க இருப்பது போல் தெரிந்தால், சிறிது அரிசி மாவு சேர்த்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, மாவை வடைகளாக தட்டிப் போட்டு, வேகவிட்டு எடுக்கவும் (தீயை மிதமாக எரிய விட வேண்டும்).

குறிப்பு: கல்கண்டு சேர்ப் பதால், தீ அதிகமாக எரிந்தால், வடை கறுத்து விடும்.
-------------------------------------------------------
4
கும்மாயம்

தேவையானவை: வெள்ளை முழு உளுந்து - ஒரு கப், பச்சரிசி - ஒரு டேபிள்ஸ்பூன், பாசிப்பருப்பு - கால் கப், கருப்பட்டி (அ) வெல்லம் - ஒன்றரை கப், நெய் - கால் கப்.

செய்முறை: உளுந்து, அரிசி, பாசிப்பருப்பை தனித்தனியே வெறும் வாணலியில் சிவக்க வறுக்கவும். இவற்றை ஒன்றுசேர்த்து மாவாக அரைக்கவும். கருப்பட்டி (அ) வெல்லத்தை கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். வடிகட்டிய தண்ணீரில் மாவைக் கொட்டி, கட்டி இல்லாமல் கரைத்துக் கொள்ளவும். அடி கனமான பாத்திரத்தில் பாதி நெய் விட்டு, சூடானதும், கரைத்து வைத்துள்ளதை கொட்டி, அடுப்பை சிறு தீயில் வைத்துக் கிளறவும். கைவிடாமல் கிளறிக் கொண்டே மீதி நெய்யைச் சேர்த்து, மாவு நன்கு வெந்து கையில் ஒட்டாமல் வரும்போது இறக்கவும்.
-------------------------------------------------------------
5
இனிப்பு சீயம்

தேவையானவை:

பச்சரிசி, உளுந்து - தலா ஒரு கப், உப்பு - ஒரு சிட்டிகை, எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.

பூரணம் செய்ய: தேங்காய் - ஒன்று, பொடித்த வெல்லம் - ஒன்றரை கப், ஏலக்காய்த்தூள் - 2 டீஸ்பூன், நெய் - 3 டீஸ்பூன்.

செய்முறை: தேங்காயைத் துருவிக் கொள்ளவும். வெல்லத்தை கரைத்து வடிகட்டவும். வாணலியில் நெய் விட்டு, தேங்காய் துருவல் சேர்த்து ஈரம் போக கிளறவும். அதனுடன் கரைத்த வெல்லம், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு சுருளக் கிளறி இறக்கி ஆறவிடவும். இதுதான் பூரணம்.

பச்சரிசி, உளுந்தை ஒன்றாக சேர்த்துக் களைந்து, ஒரு மணி நேரம் ஊறவிட்டு, பின் நைஸாக அரைத்து, உப்பு சேர்த்துக் கரைத்துக் கொள்ளவும். கிளறி வைத்துள்ள பூரணத்தை சிறு எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, பூரணத்தை அரைத்து வைத்துள்ள மாவில் தோய்த்து, எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்தால்.... சுவையான இனிப்பு சீயம் தயார்!
-----------------------------------------------------------------
6
ஜவ்வரிசி ஊத்தப்பம்

தேவையானவை: இட்லி அரிசி - 4 கப், உளுந்து - ஒரு கப், ஜவ்வரிசி - கால் கிலோ, வெங்காயம் - 2, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 4, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: அரிசி, உளுந்தை ஒன்றாக சேர்த்து ஊற வைத்து, தோசைக்கு அரைப்பது போல் அரைத்து, புளிக்கவிட்டு உப்பு சேர்க்கவும். மறுநாள் ஜவ்வரிசியை அரை மணி நேரம் ஊற வைத்து மாவில் சேர்க்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி... கடுகு, உளுத்தம்பருப்பு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் தாளித்து மாவில் சேர்க்கவும். தோசைக் கல்லைச் சூடாக்கி, மாவை கெட்டியாக ஊற்றி, எண்ணெய் விட்டு, இருபுறமும் வேகவிட்டு எடுத்து, காரச் சட்னியுடன் பரிமாறவும்.
குறிப்பு: விருப்பப்பட்டால், கேரட் துருவல் சேர்த்துக் கொள்ளலாம்.
-------------------------------------------------------------------
7
குழி பணியாரம்

தேவையானவை: பச்சரிசி, புழுங்கலரிசி - தலா ஒரு கப், உளுந்து - அரை கப், ஜவ்வரிசி - கால் கப், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், வெங்காயம் - ஒன்று, பச்சை மிளகாய் - 3, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் - 4 டேபிள்ஸ்பூன், கறி வேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பச்சரிசி மற்றும் புழுங்கலரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாக ஊற விடவும். 2 மணி நேரம் கழித்து நைஸாக அரைக்கவும். அரைக்கும்போது, 10 நிமிடம் ஊற வைத்த ஜவ்வரிசியை மாவுடன் சேர்த்து அரைக்கவும். உப்பு சேர்த்துக் கலக்கி, 5 - 6 மணி நேரம் புளிக்கவிடவும். வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும். வாணலி யில் எண்ணெய் சூடாக்கி... கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப் பிலை தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய், தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி மாவில் சேர்க்கவும். குழி பணியார சட்டியை சூடாக்கி, சிறிது எண்ணெய் விட்டு, மாவை குழிகளில் ஊற்றி, இரு புறமும் வேகவிட்டு எடுத்தால்.... சுவை யான குழி பணியாரம் ரெடி.
-----------------------------------------------------------------------
8
கருப்பட்டி பணியாரம்

தேவையானவை: பச்சரிசி மாவு - ஒரு கப், கருப்பட்டி, வெல்லம் - தலா கால் கப், நெய் - 2 டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: பாத்திரத்தில் வெல்லம், கருப்பட்டியை போட்டு, தேவையான நீர் ஊற்றி, அடுப்பில் வைத்து, கரைந்ததும் வடிகட்டி, மீண்டும் அடுப்பில் வைத்து கம்பிப்பாகு பதத்தில் பாகு காய்ச்சவும். இதை பச்சரிசி மாவில் ஊற்றி நன்கு கிளறவும். மேலே நெய் ஊற்றி, ஆறியதும் துணியினால் மூடி வைக்கவும். இந்த மாவை ஒரு வாரம் வரை வைத்திருக்கலாம். பணியாரம் செய்யும் முன், தேவைக்கேற்ப மாவில் தண்ணீர் சேர்த்து, தோசை மாவு பதத்துக்கு கரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, அகலக் கரண்டியில் மாவை எடுத்து, ஒவ்வொன்றாக ஊற்றி, இருபுறமும் வேகவிட்டு, பொன்னிறமானதும் எடுக்கவும். எண்ணெய் வடியவிட்டு எடுத்து வைத்தால், கருப்பட்டி பணியாரம் தயார்.
குறிப்பு: நகரத்தார் வீட்டு பிள்ளையார் நோன்பில் கட்டாயம் இந்த பணியாரம் இடம் பெறும்.
------------------------------------------------------------------------
9
கந்தரப்பம்

தேவையானவை: பச்சரிசி - 2 கப், உளுந்து - கால் கப், கடலைப் பருப்பு, பாசிப்பருப்பு - தலா ஒரு டேபிள்ஸ்பூன், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், பொடித்த வெல்லம் - இரண்டரை கப், தேங்காய் துருவல் - 4 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.

செய்முறை: வெல்லத்தை தண்ணீரில் கொதிக்கவிட்டு, வடிகட்டி ஆறவிடவும். அரிசி, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, வெந்தயம், உளுந்து ஆகியவற்றை சேர்த்துக் கலந்து, சுத்தம் செய்து ஊறவிடவும். ஊறியதும் தேங்காய் துருவல் சேர்த்து அரைக்கவும். மாவை எடுக்கும் முன் ஏலக்காய்த்தூள், வெல்லத் தண்ணீர் சேர்த்து, அரைத்து எடுக்கவும். மாவு ரொம்ப கெட்டியாக இல்லாமல் மிதமாக இருக்க வேண்டும். மாவை 4 மணி நேரம் புளிக்க வைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, அடுப்பை மிதமான தீயில் எரியவிடவும். அரைத்து வைத்துள்ள மாவில் ஒரு கரண்டி எடுத்து, மெதுவாக விடவும். ஒரு பக்கம் வெந்ததும், மறுபுறம் திருப்பி, சிவக்க விட்டு எடுக்கவும். இதை ஒவ்வொன்றாகத்தான் தயார் செய்ய வேண்டும்.
---------------------------------------------------------------------
10
ஐந்தரிசி பணியாரம்

தேவையானவை: பச்சரிசி, புழுங்கலரிசி, பாசிப்பருப்பு - தலா ஒரு கப், ஜவ்வரிசி, ரவை - தலா அரை கப், பொடித்த வெல்லம் - 2 கப், ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.

செய்முறை: பச்சரிசி, புழுங்கலரிசி, பருப்பு மூன்றையும் ஒன்றாகவும்... ரவை, ஜவ்வரிசியை தனித்தனியாகவும் ஊறவிடவும். ஒரு மணி நேரம் ஊறியதும் முதலில் அரிசிகள், பருப்பை அரைக்கவும். பாதி அரைத்தவுடன் ரவை, ஜவ்வரிசி, நீரில் கரைத்து வடிகட்டிய வெல்லம், ஏலக்காய்த்தூள் சேர்த்து அரைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, மாவை வட்டமாக ஊற்றி, ஒருபுறம் வெந்ததும் திருப்பிப் போட்டு, மறுபுறம் வேகவிடவும். ஒவ்வொன்றாக போட்டு, பொன்னிறமாகும் வரை வேகவிட்டு எடுக்கவும். தீயை மிதமாகத்தான் எரியவிட வேண்டும். பொறுமையாக செய்தால், சூப்பர் சுவையில் அசத்தும் இந்த ஐந்தரிசி பணியாரம்.
--------------------------------------------------------------------
11
பால் பணியாரம்

தேவையானவை: பச்சரிசி, உளுந்து - தலா ஒரு கப், பால் - ஒரு லிட்டர், சர்க்கரை - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், எண் ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு, உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை: பச்சிரிசி, உளுந்து இரண்டையும் சேர்த்து 2 மணி நேரம் ஊறவிட்டு, நைஸாக அரைத்து, உப்பு சேர்க்கவும். மாவு கெட்டியாக இருக்க வேண்டும். வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, அடுப்பை மிதமாக எரியவிடவும். மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டிப் போட்டு பொரித்தெடுத்து, எண்ணெயை வடியவிடவும். இதை குளிர்ந்த நீரில் போட்டு எடுக்கவும். பாலைக் காய்ச்சி, சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும் பொரித்து வைத்த பணியாரங்களை பாலில் சேர்த்துப் பரிமாறவும்.

குறிப்பு: மாவு புளிக்கக் கூடாது. அரைத்த சிறிது நேரத்திலேயே செய்துவிடவும். பணியாரத்தை பாலில் அதிக நேரம் ஊறவிடக் கூடாது. பரிமாறுவதற்கு 10 நிமிடம் முன்பு பாலில் சேர்க்கவும்.
-----------------------------------------------------------------------
12
பாசிப்பருப்பு புட்டு

தேவையானவை: பாசிப்பருப்பு - 2 கப், வெல்லம் - அரை கப், தேங்காய் துருவல் - கால் கப், ஏலக்காய்த்தூள், நெய், உப்பு - தலா ஒரு டீஸ்பூன்.

செய்முறை: பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவிடவும். நன்கு ஊறியதும், உப்பு சேர்த்து கெட்டியாக அரைக்கவும். அரைத்த மாவை இட்லித் தட்டில் ஊற்றி, இட்லிகளாக வேக வைத்து எடுக்கவும். வெந்த இட்லிகளை எடுத்து உதிர்த்துக் கொள்ளவும். வெல்லத்தை கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். உதிர்த்த மாவில் வெல்லக் கரைசலை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி, உதிர் உதிராக இருக்கும்படி கிளறவும். இதில் நெய், ஏலக்காய்த்தூள், தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறினால்... சத்தான பாசிப்பருப்பு புட்டு ரெடி!
-------------------------------------------------------------------
13
பருப்பு உருண்டைக் குழம்பு

தேவையானவை - உருண்டை செய்ய: கடலைப்பருப்பு - முக்கால் கப், துவரம்பருப்பு - கால் கப், சோம்பு, சீரகம், மிளகு - தலா கால் டீஸ்பூன், இஞ்சி - சிறிய துண்டு, வெங்காயம் - ஒன்று, உப்பு - தேவையான அளவு.

குழம்புக்கு: தேங்காய் துருவல் - 4 டேபிள்ஸ்பூன், சோம்பு, கசகசா - தலா அரை டீஸ்பூன், தக்காளி, வெங்காயம் - தலா ஒன்று, புளி - நெல்லிக்காய் அளவு, மிளகாய்த்தூள் - ஒன்றை டீஸ்பூன், மல்லித்தூள் - 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு, கறி வேப்பிலை - சிறிதளவு, சின்ன வெங்காயம் - 5.

செய்முறை: உருண்டை செய்ய கொடுக்கப்பட்டுள்ள பருப்பு வகைகளை ஒரு மணி நேரம் ஊற வைத்து, பிறகு (வெங்காயம் தவிர) மற்ற பொருட்களை சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்துப் பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டி, ஆவியில் வேகவைத்து எடுத்துக் வைத்துக் கொள்ளவும். தேங்காய் துருவல், சோம்பு, கசகசா, தக்காளி, வெங்காயத்தை அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, தாளிக்க கொடுத்துள்ளவற்றை தாளித்து, அரைத்த மசாலாவைப் போட்டு வதக்கவும். அதில் மஞ்சள்தூள், மல்லித்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி, தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். இதனுடன் புளித் தண்ணீர், உப்பு சேர்க்கவும். பச்சை வாசனை போக கொதித்ததும், வேக வைத்துள்ள உருண்டைகளைப் போட்டு, கரம் மசாலாத்தூள், கொத்தமல்லி சேர்த்துக் கிளறி இறக்கவும்.

குறிப்பு: உருண்டைகளை வேக வைக்காமலும் போடலாம். எண்ணெயில் பொரித்தும் போடலாம்.
----------------------------------------------------------------------
14
கத்திரிக்காய் மசாலா

தேவையானவை: கத்திரிக்காய் - கால் கிலோ, வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், மல்லித்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பட்டை - சிறிய துண்டு, பிரியாணி இலை - ஒன்று, சோம்பு - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கத்திரிக்காயை நான்காக நறுக்கி நீரில் போட்டு வைக்கவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி... பட்டை, சோம்பு, பிரியாணி இலை தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும். வதங்கியதும் தக்காளி சேர்க்கவும். பிறகு மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள் சேர்க்கவும். அதனுடன் கத்திரிக்காய் சேர்த்து வதக்கவும். வதங்கியதும் தேவையான உப்பு, நீர் சேர்த்து வேகவிடவும். வெந்து, நீர் சுண்டியதும் இறக்கி பரிமாறவும்.
------------------------------------------------------------
15
வெண்டைக்காய் மண்டி

தேவையானவை: வெண்டைக்காய் - கால் கிலோ, வேக வைத்த கொண்டைக்கடலை - ஒரு கப், அரிசி களைந்த நீர் - 2 கப், புளி - எலுமிச்சையளவில் பாதி, பச்சை மிளகாய் - 3, காய்ந்த மிளகாய் - 3, சின்ன வெங்காயம் - 15 (உரித்தது), கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம் - தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, பூண்டு பல் - 10, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வெண்டைக்காயை பெரிது பெரிதாக நறுக்கிக் கொள்ளவும். புளியை அரிசி களைந்த நீரில் ஊற வைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி... கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை, கீறிய பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், பூண்டு, சின்ன வெங்காயம் தாளித்து, நறுக்கிய வெண்டைக்காய் சேர்த்து வதக்கவும். வதங்கியதும், வேக வைத்த கொண்டைக்கடலை, புளித் தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். எல்லாம் சேர்ந்து வரும்போது இறக்கிப் பரிமாறவும்.
------------------------------------------------------------------
16
மாங்காய் வற்றல் ரசம்

தேவையானவை: துவரம்பருப்பு - கால் கப், மாங்காய் வற்றல் - 6, வெங்காயம் - ஒன்று, தக்காளி - ஒன்று, புளி - நெல்லிக்காய் அளவு, மிளகு - சீரகத்தூள் - தலா அரை டீஸ்பூன், பூண்டு - 6 பல், காய்ந்த மிளகாய் - 3, கடுகு, வெந்தயம், மஞ்சள்தூள் - தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: துவரம்பருப்பை குழையாமல் வேக வைக்கவும். மாங்காய் வற்றலை சுடுநீரில் 10 நிமிடம் ஊற வைக்கவும். புளியை அரை டம்ளர் தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும். வாணலியில் 2 டம்ளர் நீர் விட்டு வேக வைத்த பருப்பு, வெங்காயம், தக்காளி, மாவற்றல் சேர்த்து வேகவிடவும். வெந்ததும், புளித் தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிடவும். வேறொரு வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, வெந்தயம், மிளகு - சீரகத்தூள், தட்டிய பூண்டு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, ரசத்தில் சேர்க்கவும். கொத்தமல்லித் தழை தூவி இறக்கிப் பரிமாறவும்.
குறிப்பு: மாவற்றல் மிகவும் புளிப்பாக இருந்தால், புளியின் அளவைக் குறைக்கவும். வற்றலில் உப்பு இருப்பதால் உப்பையும் பார்த்து சேர்க்கவும்.
--------------------------------------------------------------
17
கத்திரிக்காய் திரக்கல்

தேவையானவை: கத்திரிக்காய் - 100 கிராம், உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
அரைக்க: பூண்டு - 5 பல், காய்ந்த மிளகாய் - 6, தேங்காய் துருவல் - கால் கப், கசகசா, சோம்பு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன்.

தாளிக்க: சோம்பு, சீரகம் - தலா கால் டீஸ்பூன்.
செய்முறை: கத்திரி, உருளை, வெங்காயம், தக்காளி ஆகியவற்றை துண்டுகளாக நறுக்கவும். அரைக்க கொடுத்துள்ளவற்றை ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி வறுத்து, அரைத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிதளவு எண்ணெயை சூடாக்கி... சோம்பு, சீரகம் தாளித்து, காய்களைச் சேர்த்து வதக்கவும். காய்கள் வெந்ததும் அரைத்த மசாலா, உப்பு சேர்த்துக் கிளறி, தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். சேர்ந்து வரும்போது இறக்கிப் பரிமாறவும்.
---------------------------------------------------------------
18
தண்ணிக் குழம்பு

தேவையானவை: துவரம்பருப்பு - கால் கப், பாசிப்பருப்பு - அரை கப், புளி - சிறிய எலுமிச்சையளவு, வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, உப்பு - தேவையான அளவு.
பொடி செய்ய: காய்ந்த மிளகாய் - 4, தனியா - 2 டேபிள்ஸ்பூன், சோம்பு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன்.
தாளிக்க: எண்ணெய் - சிறிதளவு, பட்டை - சிறிய துண்டு, காய்ந்த மிளகாய் - 4, பூண்டு - 4 பல், கடுகு, உளுத்தம்பருப்பு, சோம்பு - தலா ஒரு டீஸ்பூன்.

செய்முறை: பொடி செய்யக் கொடுத்துள்ளவற்றை வறுத்துப் அரைக்கவும். பாசிப்பருப்பை வெறும் வாணலியில் வாசனை வரும்வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும். துவரம்பருப்பை நிறைய தண்ணீர் விட்டு வேகவைத்து கரைத்துக் கொள்ளவும். இதில் பாசிப்பருப்பை சேர்த்து வேக விடவும். குழைய வெந்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, வறுத்து அரைத்த பொடி, உப்பு, புளித் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். மற் றொரு வாணலியில் எண்ணெயை சூடாக்கி, பட்டை, சோம்பு, கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், நசுக்கிய பூண்டு ஆகியவற்றை தாளித்து, குழம்பில் சேர்த்து இறக்கவும்.
-------------------------------------------------------------------
19
வறுத்துப் பொடித்த சாம்பார்

தேவையானவை: துவரம்பருப்பு - அரை கப், காய்ந்த மிளகாய் - 4, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் - தலா 2, புளி - நெல்லிக்காய் அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை - தாளிக்க தேவையான அளவு, கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: துவரம்பருப்பு, காய்ந்த மிளகாயை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து, ஆறவிட்டு பொடித்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து... நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். காய் வதங்கியதும் புளியைக் கரைத்து ஊற்றி, உப்பு சேர்க்கவும். வறுத்து பொடித்து வைத்திருக்கும் துவரம்பருப்பு - மிளகாய் பொடியை சேர்த்து தேவைக்கேற்ப நீர் சேர்த்து கொதிக்கவிடவும். கொதி வந்த வுடன் நறுக்கிய கொத்தமல்லி தழையைத் தூவி இறக்கவும். இது... இட்லி, தோசையுடன் பரிமாற ஏற்ற சாம்பார்.
------------------------------------------------------------------
20
செட்டிநாட்டு அவியல்

தேவையானவை: கத்திரிக்காய் - 100 கிராம், உருளைக்கிழங்கு - 2, வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, பட்டை - சிறிய துண்டு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

அரைக்க: தேங்காய் துருவல் - கால் கப், பச்சை மிளகாய் - 5, பூண்டு - 3 பல், சோம்பு - ஒரு டீஸ்பூன், பொட்டுக்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை: காய்கறிகளைப் பொடியாக நறுக்கவும். அரைக்க கொடுத்துள்ளவற்றை அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, பட்டை தாளித்து... வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். கத்திரிக்காய், உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கி, நீர் சேர்த்து வேகவிடவும். காய்கள் வெந்ததும், அரைத்து வைத்திருக்கும் மசாலா, உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்கினால்... ருசியான செட்டிநாட்டு அவியல் ரெடி! இட்லி, தோசை, இடியாப்பம், சப்பாத்தி என எல்லாவற்றுக்கும் ஏற்ற அவியல் இது.
-----------------------------------------------------------------
21
ஜவ்வரிசி பாயசம்

தேவையானவை: ஜவ்வரிசி - ஒரு கப், வெல்லம் - ஒன்றரை கப், தேங்காய் - ஒன்று (துருவி பால் எடுக்கவும்), முந்திரி - 10, ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை: அடுப்பில் பாத்திரத்தை வைத்து, தேவையான நீர் ஊற்றி ஜவ்வரிசியை வேகவிடவும் (கட்டி தட்டாமல பார்த்துக் கொள்ளவும்). வெல்லத்தைக் கரைத்து வடிகட்டி, ஜவ்வரிசியுடன் சேர்க்கவும். பிறகு, தேங்காய்ப்பால் சேர்த்து, ஏலக்காய்த்தூள் தூவி இறக்கவும். நெய்யில் முந்திரியை வறுத்து சேர்க்கவும்.

குறிப்பு: தேங்காய்ப் பால் சேர்த்த பிறகு கொதிக்க விடக் கூடாது. பொதுவாக பால், சர்க்கரை சேர்த்து ஜவ்வரிசி பாயசம் செய்வார்கள். செட்டிநாட்டில் வெல்லம் - தேங்காய்ப் பால் சேர்ப்பது ஸ்பெஷல்.
-----------------------------------------------------------------
22
சுண்டைக்காய் பச்சடி

தேவையானவை: சுண்டைக்காய் - ஒரு கப், துவரம்பருப்பு - அரை கப், வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, பச்சை மிளகாய் - 4, புளி - கோலி அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, சோம்பு - தலா டீஸ்பூன், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: சுண்டைக்காய்களை இரண்டாக நறுக்கி, தண்ணீரில் போடவும். துவரம்பருப்பை மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து வேகவிடவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை கீறிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, சோம்பு தாளித்து... வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். சுண்டைக்காய் சேர்த்து வதக்கி, புளித் தண்ணீர் உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். காய் வெந்ததும், துவரம்பருப்பை சேர்த்துக் கலந்து கொதி வந்ததும் இறக்கிப் பரிமாறவும்.
குறிப்பு: வயிற்றில் ஏற்படும் பூச்சி தொல்லையை நீக்கும் அருமருந்து இது.
-----------------------------------------------------------------
23
கீரை மண்டி

தேவையானவை: கீரை - ஒரு கட்டு (முளைக்கீரை, அரைக்கீரை, மணத்தக்காளிக்கீரை, அகத்திக்கீரை, சிறுகீரை இவற்றில் எதில் வேண்டுமானாலும் செய்யலாம்), சின்ன வெங்காயம் - 10, பூண்டு - 5 பல், பச்சை மிளகாய் - 2, அரிசி கழுவிய நீர் - 2 கப், தேங்காய்ப் பால் - கால் கப், கடுகு, வெந்தயம் - தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் எண்ணெயை சூடாக்கி கடுகு, வெந்தயம், கீறிய பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் (நறுக்கியது), பூண்டு, காய்ந்த மிளகாய், சேர்த்து வதக்கவும். அதனுடன் நறுக்கிய கீரையை சேர்த்து வதக்கி, அரிசி கழுவிய நீர் சேர்க்கவும். கொதி வந்ததும் உப்பு சேர்க்கவும். கீரை வெந்ததும் கடைசியாக தேங்காய்ப் பால் சேர்த்துக் கிளறி இறக்கவும் (தேங்காய்ப் பால் சேர்த்த பிறகு கொதிக்கவிடக் கூடாது).

குறிப்பு: வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாக உதவும் உணவு இது. 'மண்டி இருந்தால், உண்டி பெருக்கும்’ நீங்கள் கேட்ட பல காரங்கள் அனைத்தும் கொடுத்து இருக்கிறேன்.
=======================================================
அன்புடன்
வாத்தியார்
=================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

26.12.17

மகாபாரதப் போரை முழுமையாகப் பார்த்தவன் அவன்!!!!


மகாபாரதப் போரை முழுமையாகப் பார்த்தவன் அவன்!!!!

எல்லாம் மாதவன் செயலே.. ! தெரிந்த புராணம் தெரியாத கதை..!

பஞ்ச பாண்டவர்களில் பீமனுக்கும்,இடும்பிக்கும் பிறந்தவன் கடோத்கஜன்.

கடோத்கஜனுக்கும் கம்கன்கடவிற்கும் பிறந்தவன் பார்பாரிக்கா.

.தாய் கம்கன்கட,மகன் பார்பாரிக்காவிற்கு தானே பயிற்சி அளித்து சிறந்த வீரனாக தயார் செய்திருந்தாள்.

சிவ பெருமான் பார்பாரிக்காவிற்கு மூன்று அம்புகளை பரிசளித்திருந்தார்.

முதல் அம்பு, தான் அழிக்க நினைக்கும் இலக்குகளை குறியிட்டு விடும்.

இரண்டாவது அம்பு,தான் காப்பாற்ற நினைக்கும் இலக்குகளை குறியிட்டு ஒதுக்கிக் காப்பாற்றி விடும்.

மூன்றாவது அம்பு அழிக்கக் குறியிட்ட இலக்குகளை அழித்து விடும்.

மூன்று அம்புகளும் தத்தம் பணிகளைச் செய்து விட்டு பார்பாரிக்காவிடம் திரும்பி விடும்.

இது தவிர அக்னி பகவான் மூவுலகையும் வெல்லக்கூடிய வில் ஒன்றை பார்பாரிக்காவிற்கு பரிசளித்திருந்தார்.இதன் காரணமாக பார்பாரிக்கா மிகவும் பலம் பொருந்தியவனாக விளங்கினான்.

பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் இடையே யுத்தம் துவங்க இருந்ததை அறிந்த பார்பாரிக்கா போரைக் காண ஆவலுற்றான்.

தாயிடம் ஆசிப் பெற்று தன் நீலக் குதிரை மீதி புறப்பட்டான்.

புறப்படும் முன்,போரில் பலவீனமாக இருந்தவர்கள் பக்கம் சேர்ந்து அவர்களை வெற்றி பெறச்செய்வேன் என்று தாயிடம் சூளுரைத்தான்.

பார்பாரிக்காவின் திறமையை அறிந்திருந்த கிருஷ்ணன்,அவன் மனநிலையை நேரில் கண்டறிய விரும்பி ஒரு பிராமண வேடம் பூண்டுஅவனைக் காணச் சென்றார்.

வழியிலேயே அவனைப் பார்த்தும் விட்டார்.அவனைத் தடுத்து நிறுத்தினார்.

ஒரு பிராமணர் தன்னை நிறுத்துவது கண்டு பார்பாரிக்காவும் குதிரையை விட்டு இறங்கினான்.”

என்ன பிராமணரே என்னை ஏன் வழி மறித்தீர் “ என்று கேட்டான் பார்பாரிக்கா.

“ போர் உடையில் நீ வேகமாகச் செல்வது கண்டு ஏன் இந்த பரபரப்பு என்று தெரிந்து கொள்ளும் ஆவல் மிகுதியில் நிறுத்தி விட்டேன் “ என்றான் கிருஷ்ணன்.

“ பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் குருக்ஷேத்திரத்தில் போர் நடக்க உள்ளது,அதில் கலந்து கொள்ளப் போகிறேன்” என்றான் பார்பாரிக்கா.”

யார் பக்கம் சேர்ந்து போரிட போகிறாய் “ என்று வினவினான் கிருஷ்ணன்.”அங்கு போய் பார்ப்பேன்,யார் பக்கம் பலவீனமாக உள்ளதோ அவர்கள் பக்கம் சேர்ந்து அவர்களை ஜெயிக்க வைப்பேன்” என்றான் பார்பாரிக்கா.

” நீ அவ்வளவு பெரிய பராக்கிரமசாலியா” என்ற வினவினான் கிருஷ்ணன்.”

நீங்கள் வேண்டுமானால் என் பராக்கிரமத்தைச்சோதித்து பாருங்களேன்” என்றான் பார்பாரிக்கா.

”இதோ இந்த அரச மரத்தில் உள்ள இலைகளை ஒரே அம்பால் உன்னால் கோர்க்க முடிந்தால் உன்னை பராக்கிரமசாலி என்று ஒப்புக்கொள்கிறேன்” என்றான் கிருஷ்ணன்.

மரத்தின் ஒரு இலையை மட்டும் பிடுங்கி பார்பரிக்காவிற்கு தெரியாமல் தன் காலடியில் போட்டுக் கொண்டான்.

”இதோ ஒரு நொடியில் செய்து விடுகிறேன்” என்று ஒரு மந்திரத்தை உச்சரித்து அம்பை எய்தான் பார்பாரிக்கா.

அம்பு மரத்தில் இருந்த இலைகளையெல்லாம் கோர்த்துக் கொண்டு கடைசியாக கிருஷ்ணனின் பாதத்தை நோக்கிப் பாய்ந்தது.

”இது என்ன விபரீதம் அம்பு என் பாதத்தைத் துலைக்க முற்படுகிறதே” என்றான் கிருஷ்ணன்

”பிராமணரே உன் காலடியில் ஒரு இலை இருக்கும் என்று நினைக்கிறேன்,உடனே பாதத்தை எடுத்து விடும்” என்றான் பார்பாரிக்கா.

கிருஷ்ணர் பாதத்தை எடுத்தவுடன் பார்பாரிக்காவின் அம்பறாத்தூணியில் இருந்து புறப்பட்ட அம்பு ஒன்று எல்லா இலைகளையும் ஒன்றாகக் கோர்த்தது.

இந்த இடத்தில் ஒரு குட்டி கிளைக் கதை ஒன்று உள்ளது.

துருவாச முனிவர் கிருஷ்ணருக்கு ஒரு வரம் அளித்திருந்தார்.

கிருஷ்ணரின் பாதம் தவிர்த்த ஏனைய இடங்களில் எந்த ஆயுதத்தாலும் பாதிப்பு எற்படாது என்பதே அந்த வரம்.

மெளசால பர்வத்தில் ஜாரா என்னும் வேடன், மான் என்று எண்ணி கிருஷ்ணரின் பாதத்தில் அம்பு எய்து கிருஷ்ணரின் மரணத்திற்கு காரணமானதிற்கு முன் பார்பாரிக்காவின் அம்பு கிருஷ்ணரின் பாதத்தை பதம் பார்த்து பலவீனப்படுத்தியது, குறியிட்டு விட்டது முக்கிய காரணம் என்கிறது புராணம்.

ராமாவதாரத்தின் போது வாலியை   மறைந்திருந்து  தாக்கியதற்குவேதனையடைந்தவாலியிடம்,”கிருஷ்ணாவதாரத்தின் போது ஜரா என்னும் வேடனாக நீ பிறந்து நான் மரத்திலே மறைவாக அமர்ந்திருக்கும் போது உன்னால் கொல்லப்படுவேன்” என்று கூறியதாக புராணம் தெரிவிக்கிறது.

பார்ப்பாரிக்காவின் பராக்கிரமத்தை உணர்ந்து கொண்ட கிருஷ்ணர் பஞ்ச பாண்டவர்களை ஒளித்து வைத்தாலும் பார்பாரிக்காவின் அம்பு தேடிக் கண்டு பிடித்துக் கொன்று விடும் என்று உணர்ந்தார்.

”உன்னிடம் எனக்கு ஒரு யாசகம் வேண்டுமே” என்றான் கிருஷ்ணன்.

”எது வேண்டுமானாலும் தயங்காமல் கேளும் பிராமணரே !” என்றான் பார்பாரிக்கா.

”உன் தலையை கொய்து விட வேண்டும் என்று விரும்புகிறேன்” என்றான் கிருஷ்ணன்.

சற்றே திகைத்து விட்ட பார்பாரிக்கா,

” நீர் யார்,உண்மையை சொல்லும், நீங்கள் சாதாரண பிராமணரே அல்ல” என்றான்.

பகவான் கிருஷ்ணர் தன் சுய உருவத்தில் திவ்ய சொரூபனாகக் காட்சித் தந்தார்.”

கேசவா,நாராயணா,மாதவா,கோவிந்தா, மதுசூதனா...என்று பல்வேறு நாமங்களால் கிருஷ்ணரை துதித்தான்.

” பார்பாரிக்கா,நீ மாவீரன். உன் தாயிடம் நீ மேற்கொண்ட பிரத்திக்ஞையின் விளைவுகளை நீ அறியவில்லை. நீ பாண்டவர்களுக்கு 7 அக்ஷொனி படைகளும்,கெளரவர்களுக்கு 11 அக்ஷொனி படைகளும் இருப்பதைப் பார்த்து பாண்டவர்கள் பக்கம் சேர்வாய் ;உன் பராக்கிரமத்தால் கெளரவ படை தோற்கத் துவங்கும்.
 அது பலவீனமாவதை உணர்ந்து,உன் தாய்க்கு செய்து கொடுத்த சத்தியத்தின் காரணமாக நீ கெளரவர்கள் பக்கம் சேர்வாய்.

பாண்டவர்கள் தோற்க துவங்குவார்கள்.முடிவில் பாண்டவ,கெளரவ சேனைகள் முற்றிலும் அழிந்து நீ மட்டுமே மிஞ்சுவாய்.

இது தர்மத்திற்கு நல்லதல்ல.ஆகவே நீ போரில் பங்கேற்கக் கூடாது.

உன் தாய்க்குச் செய்து கொடுத்த சத்தியத்தின்ன் காரணமாக இது சாத்தியமல்ல. ஆகவே தர்மத்தின் பொருட்டு நீ உயிர் தியாகம் செய்து விடு”என்றான் கிருஷ்ணன்.

பார்பாரிக்காவும் இசைந்தான்.

பார்பாரிக்கா உண்மையில் நீ ஒரு யக்ஷன்.

முன் ஒரு சமயம்,பூமியில் அதர்ம சக்திகள் அட்டூழியம் நிகழ்த்தி வந்த நேரம்,பிரம்மாதி தேவர்கள் எல்லாம் என்னை வந்து பணிந்து தங்களைக் காபாற்றும்படி வேண்ட,நானும் தர்மத்தைக் காக்க அவதாரம் எடுப்பதாகக் கூறினேன்.

அதற்கு அங்கிருந்த நீ,அதற்கு நான் தேவையில்லை என்றும் நீ ஒருவனே போதும் என்றும் கூறினாய்.

இதை கேட்ட பிரம்மதேவன் கோபமுற்று, நீ பூமியில் மகத்தான சக்திகளுடன் பிறப்பாய் என்றும்,அதர்ம சக்திகளை ஒழிக்க முற்படும் போது நீயே என்னால் கொல்லப்பட்டு முதல் பலி ஆகி விடுவாய் என்றும் உன்னைச் சபித்தார்,அதன் காரணமாகவே, இன்று உனக்கு இந்த நிலை ஏற்பட்டு உள்ளது.

மேலும் போர் துவங்கும் முன் ஒரு மாவீரனை களபலி கொடுக்க வேண்டும்.

உன்னை மிஞ்சிய மாவீரன் இத்தரணியில் இல்லை” என்றான் கிருஷ்ணன்.

கிருஷ்ணனின் சக்ராயுதம் பார்பாரிக்காவின் தலையை கொய்தது.

பரந்தமனின் பரம் பதம் கிடைத்து விட்ட பிறகு வேறென்ன வேண்டும் என்று திருப்தி அடைந்த பார்பாரிக்கா”கிருஷ்ணா நான் போரினைக்காண  மட்டும் மிகவும் ஆவலுடன் இருக்கிறேன்” என்றான்.

பார்பாரிக்காவின் தலையைப் போர் பூமியைப் பார்த்து நின்ற ஒரு குன்றின் மீது வைத்தான் கிருஷ்ணன்.

போர் நடந்து முடிந்தவுடன்,பாண்டவர்களுக்குள் ஒரு வாக்குவாதம்.

தங்களில் யார் பராக்கிரமத்தால் போரில் வென்றோம் என்பதே அது.

கிருஷ்ணரிடம் வந்து “கிருஷ்ணா எங்களில் யார் பராக்கிரமத்தால் இந்த போரில் வென்றோம் என்று கூறு” என்றனர்.”

எனக்கு எப்படி தெரியும்,நானோ அர்ஜுனனின் ரதத்தை ஓட்டிக்கொண்டு அவன் சொன்னபடியெல்லாம் சென்று
கொண்டிருந்தேன். போதாக்குறைக்கு எதிரிகளின் அம்புக்கணைகள் வேறு என் உடம்பை பதம் பார்த்து கொண்டிருந்தன. இந்த நிலையில் என்னால் வேறு எதையும்
பார்க்க தோன்றுமா என்ன” என்றான் கிருஷ்ணன்.

”அப்படியென்றால் வேறு யாரைத்தான் கேட்பது”என்று திகைத்தனர் பாண்டவர்கள்.

”ஒரு ஆள் முழு போரையும் பார்த்திருக்கிறான். அவனை வேண்டுமானால் கேட்கலாம்” என்றான் கிருஷ்ணன்.

”யாரது” என்று வினவிய பாண்டவர்களை பார்பாரிக்காவிடம் அழைத்துச் சென்றார் கிருஷ்ணர்.

”என்ன பார்பாரிக்கா முழு போரையும் பார்த்தாயா?” கேட்டான் கிருஷ்ணன்.

”பார்த்தேன் கிருஷ்ணா”என்றான் பார்பாரிக்கா.

”பாண்டவர்களுக்கு ஒரு சந்தேகம், யார் பராக்கிரமத்தால் இந்த போரில் வென்றோம் என்று” என்று கேட்டான் கிருஷ்ணன்.

”எனக்கு என்ன தெரியும் கிருஷ்ணா,யுத்த பூமியிலே ஒவ்வொரு தலை விழும் போதும் அங்கு உன் சக்ராயுதம்தான் என் கண்ணுக்கு தெரிந்தது”என்றான் பார்பாரிக்கா.

பாண்டவர்கள் வெட்கித் தலை குனிந்தனர்.

!!ஸ்ர்வம் கிருஷ்ணார்ப்பணம்!!

மேலதிகத் தகவ்லுக்கு:
https://en.wikipedia.org/wiki/Barbarika
---------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்
==============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

25.12.17

நெஞ்சை நெகிழ வைத்த கதை!


நெஞ்சை நெகிழ வைத்த கதை!

அந்தப் பெண்ணைச் சமையல் வேலைக்கு வைத்துக் கொள்ளும்படியாக டாக்டரின் மனைவி வித்யா தான் சிபாரிசு செய்திருந்தாள். வித்யாவிற்கு அவளை எப்படி தெரியும் என தெரியவில்லை. வாசல்கதவை ஒட்டி நின்றிருந்த அந்தப் பெண்ணிற்கு ஐம்பது வயதிருக்கக் கூடும். ஆனால் தோற்றம் நடுத்தர வயது பெண்ணைப் போலவே இருந்தது. மெலிந்திருந்த போதும் களையான முகம். நீண்ட கூந்தல். கவலை படிந்த கண்கள். அந்தப் பெண்ணின் கையில் துணிப்பை ஒன்றிருந்தது.

உன் பேரு என்னம்மா எனக்கேட்டேன்

கோகிலம் என்றாள்

கோகிலாவா என மறுபடியும் கேட்டேன்.

இல்லை சார் கோகிலம்` என அழுத்தமாகச் சொன்னாள். இப்படி ஒரு பெயரை முதன்முறையாக இப்போதுதான் கேட்கிறேன்.

எந்த ஊர் எனக்கேட்டேன்.

தெக்கே சார். பிள்ளைகுட்டிகள் யாருமில்லை. புருஷன் செத்துப் போயிட்டார். இரண்டு வருசமா தாம்பரத்துல ஒரு வீட்ல வேலைக்கு இருந்தேன். அவங்க இப்போது துபாய்க்கு வேலை மாறிப்போயிட்டாங்க. என்றாள்

எவ்வளவு சம்பளம் எதிர்பார்க்குறே ?

நீங்க குடுக்குறதை குடுங்க. ஆனா தங்க இடமும் சாப்பாடும் தரணும்.

இதுவரை எந்த வேலைக்காரியையும் என் வீட்டோடு தங்கியதில்லை. அப்படித் தங்கிக் கொள்ளும்படியான தனியாக அறை எதுவும் எனது வீட்டில் இல்லை. வீடு சின்னது, இதுல நீ எங்கம்மா தங்குவே எனக்கேட்டேன்

கிச்சன்லயே படுத்துகிடுவேன். இந்தப் பையை வைக்க இடம் இருந்தா போதும் என்றாள்.

அவள் குரலில் இருந்த துயரம் அவளது இயலாமையைத் துல்லியமாக வெளிப்படுத்தியது.

என் மனைவியும் அவளிடம் ஏதேதோ கேள்விகள் கேட்டாள். முடிவில் அவளைச் சமையல் வேலைக்கு வைத்துக் கொள்வது என முடிவானது.

சாப்பாட்டின் ருசி என்பது வீட்டுக்கு ஒரு மாதிரியானது. அதுவும் பல ஆண்டுகளாக ருசித்துப் பழகிவிட்டால் வேற்று ஆளின் சமையலை சாப்பிட முடியாது. என் மனைவி மிகவும் நன்றாகச் சமைப்பாள். ஆகவே புதிய சமையற்காரியின் சாப்பாட்டினை எப்படிச் சாப்பிடுவது என யோசனையாக இருந்தது. ஆனால் என் மனைவி கால்முறிவு ஏற்பட்டுப் படுக்கையில் கிடந்து இப்போது தான் தேறி வருகிறாள். ஆகவே புதிதாகச் சமையலுக்கு ஆள் வைத்துக் கொள்ள வேண்டிய தேவை உருவாகியது

கோகிலம் சமைக்கத் துவங்கிய முதல்நாள் அவள் போட்டுக் கொடுத்த காபி. செய்து வைத்த சட்னி, சாம்பார் எதுவும் எனக்குப் பிடிக்கவில்லை. என் மனைவி அவளைக் கோபத்தில் திட்டவே செய்தாள்.

மறுநாள் கோகிலம் சமைத்த போது முட்டைக்கோஸ் வேகவைத்த வாணலி கருகிப்போய்விட்டது.

அடுப்பை கவனிக்காமல் என்னடி யோசனை என என் மனைவி அவளிடம் சண்டையிட்டாள்.

இல்லம்மா. என்னை அறியாமல் ஏதோ நினைப்பு வந்துருது. அந்த நினைப்பு வந்தவுடன் அழுகை அழுகையாக வருது என்றாள் கோகிலம்.

நீ ஒப்பாரி வைக்கிறதுக்கு என் வீடு தானா கிடைச்சது. கவனமா வேலை பாக்குறதா இருந்த இரு. இல்லே வேற வீடு பாத்துக்கோ என என் மனைவி அவளை விரட்டினாள்.

கோகிலம் சேலை முந்தானையால் அழுகையைத் துடைத்தபடியே சரிம்மா என்று கரிபிடித்த வாணலி கிழே இறக்கிவைத்தாள்.

கோகிலம் எப்போது சாப்பிடுவாள். எப்போது குளிப்பாள் என யாருக்கும் தெரியாது. நாங்கள் எழுந்து கொள்வதற்கு முன்பாக அவள் குளித்துத் தயராகிக் காபி டிக்காஷனை போட்டு வைத்திருப்பாள். சமையற்கட்டின் ஒரத்தில் எதையும் விரித்துக் கொள்ளாமல் வெறும் தரையில் தான் படுத்துக் கொள்வாள். சமையல் வேலையில்லாத நேரங்களில் டிவி பார்ப்பதோ, அரட்டை அடிப்பதோ எதுவும் கிடையாது. அவளாகவே கடைக்குச் சென்று காய்கறிகள் வாங்கி வருவாள். பைசா சுத்தமாகச் சில்லறை மீதம் தந்துவிடுவாள். சமையல் வேலைகள் தவிர்த்து வீட்டை சுத்தம் செய்வது. பூச்செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவது. படுக்கை விரிப்புகளைச் சுத்தம் செய்வது. செருப்பைக் கழுவி துடைத்து வைப்பது எனச் சகல காரியங்களையும் கர்ம சிரத்தையாகச் செய்து கொண்டிருந்தாள்.

பத்து நாளில் அவளது சாப்பாடு எங்களுக்குப் பிடித்துப் போகத் துவங்கியது. வீட்டில் நானும் என் மனைவியும் மட்டுமே இருந்தோம். மூத்தமகன் மும்பையில் தன் மனைவி பிள்ளைகளுடன் இருந்தான். இளைய மகள் டெல்லியில் வசித்து வந்தாள். அவர்கள் விடுமுறைக்கு வருவதோடு சரி. நான் வங்கிப்பணியில் ஒய்வு பெற்றவன் என்பதால் அடிக்கடி நண்பர்கள் என்னைப் பார்க்க வீடு தேடி வருவதுண்டு. அப்படி ஒருமுறை நாலைந்து நண்பர்கள் வந்திருந்த போது கோகிலம் கேரட் அல்வா செய்திருந்தாள்.

அப்படி ஒரு சுவையான அல்வாயை சாப்பிட்டதேயில்லை என நண்பர்கள் புகழாரம் செய்தார்கள். அல்வா எடுத்த ஸ்பூனை வழித்துத் தின்றான் ஒரு நண்பன்.

கோகிலம் அந்தப் பாராட்டுகளைக் கேட்டுக் கொண்டதோடு சரி. அதை நினைத்து பெருமைப்பட்டதாகவோ, சந்தோஷம் கொண்டதாகவே தெரியவில்லை. விதவிதமான சிற்றுண்டிகள், காய்கறி வகைகள், துவையல்கள், இனிப்பு வகைகள் எனச் செய்து கொடுத்தபடியே இருந்தாள். மாத சம்பளத்தை அவளிடம் தந்த போது நீங்களே வைத்துக் கொள்ளுங்கள், தேவைப்படும்போது வாங்கிக் கொள்கிறேன் என்றாள்

உண்மையில் அவள் வந்த ஒரு மாத காலத்தில் நானும் என் மனைவியும் ஒரு கிலோ எடை அதிகமாகியிருந்தோம். கோகிலம் என் மனைவியின் தங்கையைப் போலவே ஆகியிருந்தாள். ஒரு நாளில் ஆயிரம் முறை கோகிலம், கோகிலம் என என் மனைவி அவளை அழைத்தபடியே இருந்தாள். அவளும் சுணக்கமின்றி ஒடியோடி வந்து உதவிகள் செய்தாள்.

சில நேரம் நாங்கள் சினிமாவிற்குப் போகும்போது அவள் வீட்டில் தனியாக இருப்பாள். ஒருமுறை நாங்கள் திருப்பதி போய்வந்த போது இரண்டு நாட்கள் அவள் மட்டுமே வீட்டிலிருந்தாள். வீடே காலியாக இருந்தாலும் அவள் சமையற்கட்டில் தான் உறங்கினாள். ஒரு பைசாவை எடுத்து செலவழிக்கவில்லை. சுவையான எந்த உணவையும் சாப்பிடுவதில்லை.

ஒருமுறை கோகிலம் சாப்பிடும் போது மறைந்திருந்து பார்த்துக் கொண்டிருந்தேன்.

வெறும்சோறு. அதில் கொஞ்சம் தண்ணீர். தொட்டுக் கொள்ள ஊறுகாய்.

ஏன் இந்தப்பெண் இப்படிப் பிடிவாதமாகயிருக்கிறாள் என ஆத்திரமாக வந்தது. என் மனைவியிடம் சொல்லி அவள் விரும்பியதை சாப்பிடும்படியாகச் சொன்னேன். அதைக்கேட்டு என் மனைவி சொன்னாள்

நானும் சொல்லிப்பார்த்துட்டேன். அவ கேட்கமாட்டாள்.

மும்பையில் இருந்து என் மகனும் மருமகளும் பேரப்பிள்ளைகளும் வந்திருந்த போது கோகிலத்தின் விருந்தை சாப்பிட்டு மயங்கிப் போனார்கள். தன்னோடு அவளை மும்பைக்கு அழைத்துப் போய்விடுகிறேன் என மகன் சொல்லிக் கொண்டேயிருந்தான். மருமகளும் கூடக் கூப்பிட்டாள். ஆனால் கோகிலம் மறுத்துவிட்டாள். கோகிலம் எதற்கும் ஆசைப்படவில்லை. பூ வைத்துக் கொள்ளக் கூட அவள் விரும்பியதில்லை.

கோகிலத்திற்காக நாங்கள் வாங்கிக் கொடுத்த புடவைகள் எதையும் அவள் கட்டிக் கொள்ளவில்லை. அப்படியே ஒரு பையில் போட்டு வைத்திருந்தாள். ஒரு நாள் கூட உடல்நலமில்லாமல் ஒய்வெடுக்கவோ, சலித்துக் கொள்ளவோயில்லை.

கோகிலத்தின் வேலை பிடித்துப்போகவே அவளுக்கு மாத சம்பளம் ஆறாயிரத்திலிருந்து எட்டாயிரம் தரலாம் என்ற யோசனையை என் மனைவிதான் சொன்னாள். அதைப்பற்றி அவளிடம் சொன்ன போது உங்க இஷ்டம் என்று மட்டும் தான் சொன்னாள்

என்ன பெண்ணிவள். எதற்காக இப்படிப் பகலிரவாக வேலை செய்கிறாள். சம்பளத்தைப் பற்றிப் பெரிதாக நினைப்பதேயில்லை. யாரைப்பற்றியும் ஒரு வார்த்தை தவறாகப் பேசியதில்லை. தன் கஷ்டங்களைச் சொல்லி புலம்பியதில்லை. இவளைப் போல வேலையாள் கிடைப்பது கஷ்டம் என நினைத்துக் கொண்டேன்.

ஒரு நாள் கோகிலம் என்னிடம் தயக்கத்துடன் கேட்டாள்

நாளைக்குக் காலையில பூந்தமல்லி வரைக்குப் போயிட்டு வரணும். அரை நாள் லீவு வேணும் சார்.

என்ன வேலை என்று கேட்டேன்.

பதில் சொல்லவில்லை. பேசாமல் நின்று கொண்டிருந்தாள்.

சரி போயிட்டு வா என்றேன்.

டிபன் செஞ்சிடும் போதே மதிய சமையலும் சேத்து வச்சிட்டு போயிடுறேன். வர்றதுக்கு மூணு மணி ஆகிடும் என்றாள்.

அதையெல்லாம் நாங்க பாத்துகறோம். நீ போயிட்டு வா.

அம்மாவுக்குத் தைலம் தேய்ச்சி குளிக்க வைக்கணும். அதைச் சாயங்காலம் செய்துரலாம்.

அதெல்லாம் பிரச்சனையே இல்லை கோகிலம் என அனுப்பி வைத்தேன்.

அவள் மறுநாள் காலை எட்டுமணிக்கு வெளியே கிளம்பி போனாள். என் வீட்டிற்கு வந்த ஆறுமாதங்களில் முதன்முறையாக அப்போது தான் வெளியே கிளம்பி போயிருக்கிறாள்.

யாரைப்பார்க்க போகிறாள். என்ன வேலையாக இருக்கும். என யோசித்துக் கொண்டேயிருந்தேன்.

என் மனைவி, கோகிலம் சில சமயம் காசை முடிந்து வைத்து சாமி கும்பிடுவதைக் கண்டிருப்பதையும். ஒருவேளை கோவிலுக்குப் போய்வரக்கூடும் என்றும் சொன்னாள்.

கோவிலுக்குப் போவதற்குச் சொல்லிக் கொண்டு போகலாம் தானே என்று கேட்டேன்.

அது அவ சுபாவம். எதையும் யார்கிட்டயும் சொல்லமாட்டா எனச் சிரித்தாள் மனைவி.

அன்று மாலை கோகிலம் நாலு மணிக்கு திரும்பி வந்தாள். அவள் முகம் இறுகிப்போயிருந்தது. தன்னை நம்பியவர்களை அப்படியே விட்டுவிட்டு போய்விட்டோம் என்பது போல அவள் மன்னிப்பு கேட்டுக் கொண்டாள். வந்த வேகத்தில் அடுப்பை பற்றவைத்து சுவையான உளுந்துவடையும் காபியும் கொடுத்தாள். எங்கே போனாள் யாரை பார்த்து வந்தாள் என எதையும் சொல்லிக் கொள்ளவில்லை

மறுநாள் என் மனைவி சொன்னாள் கோகிலம் ராத்திரி பூரா அழுதுகிட்டே இருந்தா. கேட்டா ஒண்ணுமில்லேங்கிறா.

யாராவது செத்துப் போயிருப்பாங்களா எனக்கேட்டேன்.

தெரியலை. ஆனா அவளைப் பாக்க பாவமா இருக்கு.

கோகிலம் மறுநாள் முதல் இயல்பாகிப் போனாள். நாங்கள் எதையும் கேட்டுக் கொள்ளவில்லை. பத்துநாட்களுக்குப் பிறகு ஒரு மதியம் காலிங் பெல் அடிக்கும் சப்தம் கேட்டு நான் கதவை திறந்தேன். வாசலில் முப்பது வயதுள்ள ஒரு ஆள் நின்று கொண்டிருந்தான்

என்ன வேணும் எனக்கேட்டேன்.

எங்க அம்மாவை பாக்கணும் என்றான்.

உங்க அம்மாவா. யாரு எனக்கேட்டேன்.

கோகிலம் என்றான்

கோகிலத்திற்கு யாருமில்லை என்றாளே என்ற குழப்பத்துடன் சமையலறைக்குப் போய் அவளை அழைத்தேன். வெளியே வந்தவளின் முகம் அவனைப் பார்த்தவுடன் மாறியது.

இங்க எதுக்கு வந்தே எனக்கேட்டாள்.

உன்னை யாரு இங்க வந்து வீட்டுவேலை செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தினா. உன் தலைவிதியா எனக்கேட்டான் அந்தப் பையன்.

நான் உழைச்சி சாப்பிடுறேன். உன்னை என்னடா பண்ணுது. அதான் எல்லாத்தையும் குடுத்துட்டேனே. இன்னும் என்ன வேணும் என முறைத்தபடியே கேட்டாள்.

யம்மா. நான் செஞ்சது தப்பு தான். அதுக்காக நீ யாரோ வீட்ல வந்து எதுக்கு வேலை செய்ற. சும்மா உட்கார்ந்து சாப்பிட்டா கூட முப்பது வருஷம் சாப்பிடலாம். சொத்த வித்த பங்குல உனக்குச் சேர வேண்டியது இரண்டு கோடி வந்துருக்கு. அது உனக்குத் தான்.

அது ஒண்ணும் என் பணமில்லை. காசு காசுனு நீ தானே அலையுறே. நீயே வச்சி அனுபவி என்றாள் கோகிலம்.

உனக்கு வேணாம்னா போ. ஆனா நாளைக்கு உனக்கு ஏதாவது ஒண்ணுன்னா கொள்ளி போட நான் தான் வந்தாகணும். அதை மறந்துராத என்றான் மகன்.

ஏன் நான் செத்தா இவங்க எடுத்து போட மாட்டாங்களா எனக்கேட்டாள்.

அதைக் கேட்டதும் எனக்குச் சிலீர் என்றது. அந்தப் பையன் சொன்னான்.

உனக்குக் காசோட அருமை தெரியலை. இரண்டு கோடியை வேணாம்னு சொல்லுறே, பெத்த தாயேன்னு தான் திரும்ப வந்து நீயே வச்சிக்கோனு குடுக்குறேன். வேற யாராவது இருந்தா முழுங்கி ஏப்பம் விட்ருப்பான்.

நீயும் வேணாம். உன் கோடி ரூபாயும் வேணாம். கிளம்பு. இனிமே என்னைத் தேடிகிட்டு இங்க வந்தா செருப்பாலே அடிப்பேன். போடா எனச் சொல்லிவிட்டு சமையல் அறைக்குள் போய்விட்டாள்.

அந்தப் பையன் என்னை முறைத்தபடியே வெளியே போனான். கோகிலம் பேசியதை எல்லாம் கேட்டதும் எனக்குத் திகைப்பாக இருந்தது. கோகிலம் வெறும் வேலைக்காரியில்லை. இரண்டு கோடி பணமுள்ளவள். அதை விடவும் வசதியாக வாழ்ந்தவள். ஏதோ ஒரு பிடிவாதம் காரணமாக வீட்டை விட்டு வெளியேறி வந்து வேலைக்காரியாக இருக்கிறாள்.

கோகிலத்திடம் நாங்கள் எதையும் கேட்டுக் கொள்ளவில்லை. ஆனால் அன்றிரவு அவளாகவே வந்து சொன்னாள்

எங்க வீட்டுக்காரு பெரிய டிராவல்ஸ் வச்சிருந்தாரு. பூந்தமல்லியில பெரிய வீடு. நாலு கார் இருந்துச்சி. நல்லா சம்பாதிச்சி மெயின்ரோட்ல ஒரு கல்யாண மண்டபம் கட்டி வாடகைக்கு விட்டிருந்தாரு. பம்மல்ல இரண்டு ஏக்கர் விவசாய நிலமும் இருந்துச்சி.எங்க வீட்லயும் ரெண்டு பேரு வேலைக்காரிகள் இருந்தாங்க. எங்க வீட்டுக்காரருக்கு தினமும் சாப்பாடு ருசியா இருக்கணும். விதவிதமா ஆக்கி போடுவேன்.

திடீர்னு ஒரு நாள் பெங்களுர் போயிட்டு வந்துகிட்டு இருந்த என் புருஷன் ரோடு ஆக்சிடெண்டில் செத்துப்போயிட்டாரு. கண்ணைக் கட்டி காட்டுல விட்டது மாதிரி ஆகிருச்சி. என் மகனே என்னை ஏமாத்த ஆரம்பிச்சிட்டான். அவனுக்குச் சேர்க்கை சரியில்லை. ஒரு வருசத்துக்குள்ளே ஊர்பட்ட கடன். அவனுக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணி வச்சேன். வந்தவ இன்னும் மோசம். ரெண்டு பேரும் சேந்துகிட்டு என்னை வீட்டை விட்டு துரத்தி அடிச்சிட்டாங்க.

அப்புறம் வீட்டுவேலை செய்து பிழைச்சிகிட்டு இருக்கேன். எப்படி வாழ்ந்த நாம இப்படி ஆகிட்டோம்னு நினைச்சி தான் வெறும் சோத்தை சாப்பிடுறேன். அதுலயும் உப்புப் போடுறது கிடையாது.

பெத்து வளர்ந்த மகனேஅடிச்சி விரட்டிட்டான். ஆனாலும் மனசு கேட்க மாட்டேங்குது. அவன் நல்லா இருக்கணும்னு காசு முடிச்சி போட்டு சாமி கும்பிட்டுகிடுவேன். எனக்குன்னு யாருமேயில்லை. அதான் இருக்கிற காலத்தை உங்கள மாதிரி யார் வீட்லயாவது ஒடிட்டு முடிச்சிரலாம்னு நினைச்சிட்டு இருந்தேன். முந்தநாள் பஜார்ல என் மகனை பார்த்தேன். கல்யாண மண்டபத்தை விக்கப் போறேன். உன் கையெழுத்து வேணும். பத்திர ஆபீஸ்க்கு வந்துருனு சொன்னான். அதைப் போட தான் நேத்து போனேன். எட்டு கோடி ரூபாய் வந்துச்சி. அதுல என் பங்கு ரெண்டு கோடி வச்சிக்கோனு குடுத்தான். உன் பிச்ச காசு எனக்கு வேணாம் போனு உதறிட்டு வந்துட்டேன். நான் செஞ்சது சரி தானே சார்.

எனக்கு அவள் பேசியதை கேட்க கேட்க மனதில் பாரமேறியது. தொண்டை வலித்தது.

இதை முன்னாடியே சொல்லியிருக்கலாம்லே.

வசதியா இருந்த ஆளை யாரு வேலைக்கு வச்சிகிடுவா?

அதுக்கா ஏன் வீட்டுவேலை செய்து கஷ்டப்படுறே. அந்தப் பணத்தை வாங்கிப் பேங்கிலப் போட்டுட்டு காலாட்டிகிட்டு வாழலாம்லே எனக்கேட்டாள் என் மனைவி.

நம்மாலே அப்படி வாழ முடியாதும்மா. நமக்கெல்லாம் உழைச்சி சாப்பிடணும். அது அநாமத்தா வந்த பணம். அதை வச்சிருந்தா ஆயிரம் பிரச்சனை கூட வரும். அந்தக் கருமம் எனக்கு வேணாம். சோறு போடுறதுக்கு நீங்க இருக்கீங்க. படுக்க இடம் இருக்கு இது போதும்மா.

அவள் சொல்வது உண்மை. ஆனால் இவளை போன்ற துணிவும் மனவுறுதியும் எங்களுக்கு இருக்குமா என யோசனையாக இருந்தது. என் மனைவி அவளிடம் திரும்பத் திரும்பப் பணம் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தாள். கோகிலம் அது தன்னுடைய பணமில்லை. தன்னைப் பெற்ற மகனே ஏமாற்றியபிறகு யாரையும் நம்பத் தயாராகயில்லை“ என உறுதியாகச் சொல்லிக் கொண்டிருந்தாள்.

சரி அவள் இஷ்டம். எப்போதும் போல அவள் இந்த வீட்ல் இருக்கலாம். இனி அவளுக்கு எந்த ஆலோசனையும் சொல்ல மாட்டோம் என நாங்கள் முடிவு செய்தோம்.

மறுநாள் விடிகாலையில் நாங்கள் எழுந்து வந்த போது கோகிலம் சமையல் அறையில் இல்லை. சிறிய கடிதம் மட்டுமே இருந்தது.

அன்பு மிக்க நடராஜன் அய்யா, அம்மாவிற்கு,

இத்தனை நாட்கள் எனக்குச் சாப்பாடு போட்டு தங்க இடம் கொடுத்ததிற்கு நன்றி. நான் யார் என்று தெரிந்தபிறகு முன்பு போல என்னை வேலை சொல்ல உங்களுக்கு மனம் வராது. ஒவ்வொரு முறை என்னைப் பார்க்கும் போதும் இரண்டு கோடி ரூபாய் உங்கள் நினைவில் வந்து போகும். அது எனக்கும் சிரமம். உங்களுக்கும் சிரமம். ஆகவே வேறு ஊருக்கு வேலைக்குப் போகிறேன். இதுவரை நீங்கள் சேர்த்து வைத்துள்ள என் சம்பள பணத்தை அம்பத்தூரில் உள்ள அநாதை காப்பகத்திற்குக் கொடுத்துவிடவும். அம்மாவிற்குத் தைலம் தேய்த்துவிட முடியாமல் போய்விடுகிறதே என்று மட்டும் தான் எனக்குக் கவலை. என் சாப்பாடு உங்கள் இருவருக்கும் பிடிந்திருந்தது என்பது மகிழ்ச்சி. பலசரக்கு கடைக்காரன் 26 ரூபாய் பாக்கி தர வேண்டும். பால் பாக்கெட் ஒன்று கூடுதலாகப் போட வேண்டும். உங்கள் இருவரின் நினைவாக ஒரேயொரு டம்ளரை எடுத்துப் போகிறேன். அதில் தண்ணீர் குடிக்கும் போதெல்லாம் உங்களை நினைத்துக்கொள்வேன். இப்படிக்கு உங்கள் வேலைக்காரி கோகிலம் என எழுதியிருந்தாள்.

அந்தக் கடிதத்தைப் படித்து முடிந்தவுடன் வேதனை பீறிட்டது.

என் மனைவி படித்துவிட்டு வாய்விட்டு அரற்றினாள்.

நமக்கு தான் புத்தியில்லை. ஆள பாத்து தப்பா எடைபோட்டுட்டோம். விதவிதமா நமக்குச் சமைச்சி போட்டு கவனிச்சிட்டா. அவளுக்கு நாம ஒண்ணுமே பண்ணலே. இந்தப் பாவத்துக்கு என்ன பரிகாரம் பண்ணப்போறோம் சொல்லுங்க.

எனக்கும் என்ன செய்வதெனத் தெரியவில்லை

சமையல்கட்டின் ஒரம் நாங்கள் கொடுத்த புதுப்புடவைகள் அத்தனையும் ஒரு பையில் அப்படியே இருந்தன. அதைக் கையில் எடுத்துப் பார்த்தபோது என் மனைவி வெடித்து அழத் துவங்கியிருந்தாள்.

படித்து நெகிழ்ந்த கதை.
---------------------------------------
அன்புடன்
வாத்தியார்
=========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

23.12.17

Astrology: ஜோதிடம்: 22-12-2017ம் தேதி புதிருக்கான விடை!

Astrology: ஜோதிடம்: 22-12-2017ம் தேதி புதிருக்கான விடை!

அந்த ஜாதகத்திற்கு உரியவர் முன்னாள் பாரதப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள். பிறந்ததேதி 26-09-1932 நேரம் 2:00 PM
பிறந்த இடம் பிரிவினைக்கு முன் இருந்த மேற்கு பஞ்சாப் மாநிலத்தில் காஹ் என்னும் ஊர். அது பிரிவினைக்குப் பின்
பாகிஸ்தானுடன் இணைந்து விட்டது.

நான் எதிர்பார்த்தபடி நிறைய அன்பர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். சுமார் 22 பேர்கள் சரியான விடையை
எழுதி உள்ளார்கள்.

அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்! அவர்களின் பெயர்கள் அவர்களுடைய பின்னூட்டங்களுடன் கீழே
கொடுத்துள்ளேன். பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்

மீண்டும் ஒரு புதிருடன் அடுத்த வெள்ளிக்கிழமை (29-12-2017) சந்திப்போம்!

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------
1
Blogger sundinesh1 said...
Manmohan Singh
Friday, December 22, 2017 6:57:00 AM 
----------------------------------------------------
2
Blogger Maheswari Bala said...
Manmohan singh
Monday September 26,1932
Time of birth:14:00:00
Place of birth:jhelum 
Longitude:72 E 10
Latitude:31 N 50
Friday, December 22, 2017 7:50:00 AM 
--------------------------------------------------
3
Blogger Ananthakrishnan K R said...
வணக்கம் ஐய்யா,
ஜோதிடப்புதிர்: மன்மோகன் சிங்க், பிறந்த நாள்: செப்டம்பர் 26 1932 நேரம் பிற்பகல் 02.00 மணி. இடம்: ஜீலம், 72 E 10 (31 N 50)
நன்றியுடன்,
க இரா அனந்தகிருஷ்ணன்
சென்னை
Friday, December 22, 2017 8:38:00 AM
----------------------------------------------------------
4
Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
Good morning sir, the above horoscope corresponding to Respect Thiru Great Economist and Ex Prime Minister 

Manmohan Singh Born on 26/09/1932 time 1.30pm place Gah,Punjab
Friday, December 22, 2017 8:39:00 AM 
---------------------------------------------------
5
Blogger Bala subramanian said...
Dr.Manmohan singh
26the september 1932
Anbudan
Balasubramanian
Friday, December 22, 2017 10:01:00 AM 
----------------------------------------------------
6
Blogger Saravana Kumar said...
Saravanakumar.R, Bangalore,
Good morning Sir, the celebrity is Former Prime Minister Dr.Manmohan Singh,born on 26.09.1932, Time: 2.00 Pm. 

Thank you!
Friday, December 22, 2017 10:05:00 AM 
-----------------------------------------------------
7
Blogger Palani Shanmugam said...
மதிப்பிற்குரிய ஐயா,
இந்த ஜாதகத்துக்குச் சொந்தக்காரர் முன்னால் பாரதப் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்கள்.
எஸ். பழனிச்சாமி
Friday, December 22, 2017 10:48:00 AM
------------------------------------------------------
8
Blogger kmr.krishnan said...
இந்த ஜாதகம் முன்னாள் பாரதப்பிரதமர், பொருளதார வல்லுனர் உயர்திரு மன்மோஹன் சிங் அவர்களுடையது.பிறந்த ஊர் காஹ்

என்பதாகும். பிறந்த தேதி: 26 செப்டம்பர் 1932. பிறந்த நேரம் பகல் 1 மணி 40 நிமிடம் போல.
Friday, December 22, 2017 1:01:00 PM
--------------------------------------------------
9
Blogger umajana said...
ஐயா,
இந்த ஜாதகத்துக்கு உரியவர் முன்னாள் பாரதப் பிரதமர் திரு. மன்மோகன் சிங் அவர்கள். அவரது பிறந்த தேதி 26/09/1932 பகல்

12:50 மணியளவில் தோராயமாக.
Friday, December 22, 2017 2:21:00 PM
---------------------------------------------------
10
Blogger GOWDA PONNUSAMY said...
Ayyaa Vanakkangal!
Horoscope belongs to
Former Prime Minister of India,Dr.MANMOHAN SINGH
Date of Birth: 26-Sep-1932 @ 12-05 hrs.
Place of Birth: Gah, Punjab
Profession: Politician, Economist, Banker, Social work, Teacher, Professor, Statesman, Bureaucrat
Nationality: India
Friday, December 22, 2017 2:25:00 PM 
--------------------------------------------------
11
Blogger சர்மா said...
வணக்கம் ஐயா திரு மன்மோகன் சிங் அவர்களின் ஜாதகமே தங்களுடைய இன்றைய புதிருக்கான விடை நன்றி
சர்மா
vName: Manmohan Singh
Date of Birth: Monday, September 26, 1932
Time of Birth: 14:00:00
Place of Birth: Jhelum
Longitude: 72 E 10
Latitude: 31 N 50
Time Zone: 5.0
Friday, December 22, 2017 2:27:00 PM 
--------------------------------------------------
12
Blogger Shruthi Ramanath said...
Sir its the politician MANMOHAN SINGH
Date of birth : 26 - September-1932
Place of birth: Jhelum
Time of birth: 2.00 PM
Friday, December 22, 2017 2:56:00 PM 
---------------------------------------------------
13
Blogger guru said...
Person: Manmohan Singh
DOB: 26-Sep-1932
Friday, December 22, 2017 3:55:00 PM 
---------------------------------------------------
14
Blogger csubramoniam said...
ஐயா ஜாதகாதிற்கு உரியவர் நமது முன்னாள் பிரதம மந்திரி :டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள்
தேதி :26 /9 /1932
நரம் :பகல் 2 மணி
பிறந்த இடம் : Gah பாகிஸ்தான்
நன்றி
Friday, December 22, 2017 4:50:00 PM
---------------------------------------------------
15
Blogger Sathish Kumar said...
Manmohan Singh
Date of Birth : 26 – 09 – 1932
Time of Birth : 13 : 00
Place of Birth : Gah, Punjab
Friday, December 22, 2017 4:57:00 PM 
---------------------------------------------------------
16
Blogger Thanga Mouly said...
இந்திய முன்னாள் பிரதமர் திருவாளர் மன் மோகன் சிங் அவர்கள். பிறந்த திகதி: 26/09/1932
Friday, December 22, 2017 7:10:00 PM
----------------------------------------------------
17
Blogger angr said...
இது நமது அன்பிற்குரிய முன்னாள் பிரதமர் திரு மன்மோகன் சிங் அவர்களுடையது.தற்பொழுது குரு
மஹாதிசாவில் சனி புத்தி. 2019ல் துவங்கும் புதன் புத்தியில் மீண்டும் (9,10 சேர்க்கை) பிரதமர் ஆவார்களா என்பதை ஆசிரியர்

தான் சொல்லவேண்டும்.
Friday, December 22, 2017 7:11:00 PM
--------------------------------------------------
18
Blogger angr said...
இது நமது அன்பிற்குரிய முன்னாள் பிரதமர் திரு மன்மோகன் சிங் அவர்களுடையது.தற்பொழுது குரு
மஹாதிசாவில் சனி புத்தி. 2019ல் துவங்கும் புதன் புத்தியில் மீண்டும் (9,10 சேர்க்கை) பிரதமர் ஆவார்களா என்பதை ஆசிரியர்

தான் சொல்லவேண்டும்.
Friday, December 22, 2017 7:12:00 PM
-----------------------------------------------------
19
Blogger Sri Dharan said...
டாக்டர் மன்மோகன் சிங் 26-09-1932
Friday, December 22, 2017 7:28:00 PM
-------------------------------------------------------
20
Blogger Saravanan Annamalai said...
Sir,
It is our former prime minister Hon'ble Man Mohan Singh.....?
A.Saravanan, Ponndicherry
Friday, December 22, 2017 8:22:00 PM 
--------------------------------------------------
21
Blogger Ariyaputhiran Natarajan said...
ஐயா,
சுலபமான இவ்வாரக் கேள்விக்கான விடையை ஒரு வழியாகக் கண்டுபிடிதுவிட்டேன்.
செப்டம்பர் 26, 1932 க்கான ஜாதகம் முன்னாள் பிரதமர் மன்மோகனசிங ( Dr.Manmohan Singh ) அவர்களுடையுது.
நன்றி
Friday, December 22, 2017 10:52:00 PM
---------------------------------------------------------
22
Blogger thozhar pandian said...
26 செப்டம்பர் பிறந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்
Friday, December 22, 2017 11:14:00 PM
========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

22.12.17

Astrology: Quiz. : ஜோதிடப் புதிர் 22-12-2017 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!


Astrology: Quiz. : ஜோதிடப் புதிர்  22-12-2017 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!

நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டு பிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும்  ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்

சென்ற வாரம் நிறைய அன்பர்கள் கலந்து கொண்டதோடு சரியான விடையைச் சொல்லி அசத்திவிட்டார்கள்!

தேதியைக் கண்டு பிடித்து விடுங்கள், மற்றதற்கு கூகுள் ஆண்டவர் உதவி செய்வாரே!


க்ளூ வேண்டுமா? வட இந்திய பிரபலம். எந்தத் துறையில் என்று சொன்னால் கோளாறாகிவிடும். ஆகவே சொல்லவில்லை!

சரியான விடை நாளை வெளியாகும்!
அன்புடன்
வாத்தியார்
--------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

21.12.17

நீங்கள் அவசியம் காண வேண்டிய காணொளிகள்!


நீங்கள் அவசியம் காண வேண்டிய காணொளிகள்!

1
இரசனை  உணர்ச்சி எப்படி மாறிவிட்டது என்பதை பேராசிரியர் மோகன்சுந்தரம் அவர்கள் நகைச்சுவையுடன் சிறப்பாக விளக்குகிறார். அவசியம் இந்தக் காணொளியைப் பாருங்கள்:


2.
மன அழுத்தத்திற்கு பகவத் கீதைதான் சிறந்த மருந்து என்கிறார் சுவாமிஜி ஒருவர். காணொளியைப் பாருங்கள்:


3.  
ஆயிரம் ரூபாய்க்கு என்ன செய்யலாம்? செலவழிப்பதற்கும் வழி சொல்கிறார்கள். அதைச் சம்பாதிக்கும் வழியையும் சொல்கிறார்கள். காணொளியைப் பாருங்கள்:அன்புடன்
வாத்தியார்
======================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

20.12.17

ரத்தத்தில் சர்க்கரை என்பது கிடையாது

இரத்தம் உண்டு.சர்க்கரை உண்டு.ஆனால் ரத்தத்தில் சர்க்கரை என்பது கிடையாது

 அடித்துச் சொல்கிறார் அது பற்றி நன்கு ஆராய்ச்சிகள் செய்த மருத்துவர் ஒருவர்

 அவசியம் அவருடைய காணொளியைப் பாருங்கள்:

 மருத்துவரின் பெயர்: டாக்டர் பிஸ்வரரூப் ராய் செளத்ரி

20-11-2017 அன்று வெளியான காணொளி இது

================================================================


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

19.12.17

நகைச்சுவை: நவீன அவ்வையார் !


நகைச்சுவை: நவீன அவ்வையார் !

"முருகா, பூலோகத்திற்கா சென்றிருந்தாய்?"

"ஆம் அவ்வையே, பழைய நோட்டுகளை மாற்றச் சென்றிருந்தேன். நல்ல கூட்டம். கையில் மை வேறு வைத்துக் கொண்டிருந்தார்கள். பன்னிரு கைகளிருந்ததால் ஒரு வழியாக சமாளித்து வந்தேன். எவ்வளவு சிரமம்! கடவுள் அருள் இல்லார்க்கு இவ்வுலகமில்லை. கடன் அட்டை இல்லார்க்கு அவ்வுலகமில்லை."

"நல்லது வேலவா!"

"ஔவையே, கருப்பு, வெள்ளை - எளிய தமிழில் விளக்கு."

"ஐயனே, வரி கட்டியது வெள்ளை. கட்டாதது கருப்பு!"

"வரி கட்டியது எவ்வளவு? கட்டாதது எவ்வளவு?"

"கட்டியது கையளவு. கட்டாதது உலகளவு!"

"சுட்டது எது? சுட முடியாதது எது?"

"சுட்டது மக்கள் பணம். சுடமுடியாதது சுவிஸ் பணம்!"

"ஒழிக்க நினைத்தது எது? ஒழிந்தது எது?"

"ஒழிக்க நினைத்தது கருப்பு. ஒழிந்தது மக்கள் கையிருப்பு!"
 
"அம்பானி, அதானி போல செல்வந்தராக என் அத்தையார் லட்சுமி கடாட்சம் வேண்டுமல்லவா?"

"தேவையில்லை ஞான பண்டிதா, ஆள்பவர் கடாட்சம் இருந்தால் போதும்!"

"என் தந்தை ஈசனுக்கு அடுத்து எங்கெங்கும் நீக்கமற நிறைந்திருப்பது எது?"

"அறிந்தும் அறியாதது போல் ஏன் இந்த கேள்வி? கருப்புதான் வேலவா!"

"மானுடர் வாழ்வுக்கு உறு துணையாயிருக்கும் ஏதேனும் இரண்டு புத்தகங்களைக் கூறு."

"பேங்க் பாஸ் புத்தகம். செக் புத்தகம்."

"கேட்ட கேள்விகளுக்கு அழகாக விடை பகன்ற ஔவையே, உனக்கு வரம் ஒன்று தரச் சித்தமாயிருக்கிறேன். தயங்காமல் கேள்."

"ஐயனே, உன் கடன் அன்றி பிரிதொரு கடன் வாராதிருத்தல் வேண்டும். மேலும், அதியமான் என்னும் மன்னன், வேண்டாம்
என்று சொல்லியும் கேட்காமல் விலை மதிப்பில்லாத நெல்லிக்கனியொன்றை என் கையில் தள்ளி விட்டான். அதற்கு இன்கம்டாக்ஸ் நோட்டீஸ் வராமல் நீதான் அருள் புரிய வேண்டும்!"
-------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
=======================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

18.12.17

Astrology: நீங்களும், நானும், சனிப் பெயர்ச்சியும்!


Astrology: நீங்களும், நானும், சனிப் பெயர்ச்சியும்!

சனி பகவான் வாக்கிய பஞ்சாங்கப்படி 19-12-2017 செவ்வாய்க்கிழமை காலை 9:59 மணி அளவில் விருச்சிக ராசியில் இருந்து
தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இடம் பெயர்கிறார்.
வீட்டை மாற்றுகிறார். எப்படி வேண்டுமென்றாலும் வைத்துக்
கொள்ளுங்கள்.

எதற்காக வாக்கிய பஞ்சாங்கம்?

திருநள்ளாறு கோவிலில் அதைத்தான் வைத்து காரியங்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள் ஆகவே வாக்கிய பஞ்சாங்கம்!

சனி பகவான் இரண்டரை ஆண்டுகாலம் தனுசு ராசியில்
சஞ்சாரம் செய்வார். 12 ராசிகளுக்கான பலன்கள் சுருக்கமாக்
கீழே கொடுத்துள்ளேன்.

விரிவான, ராசிகள் வாரியான பலன்கள் வேண்டுமென்றால் எழுதுங்கள். ஏ4 சைசில் 9 பக்கங்கள் பி.டி.எஃப் (PDF) ஃபார்மாட்டில் உள்ளது. உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்.

எனது மின்னஞ்சல் முகவரி spvrsubbiah@gmail.com (இந்த முகவரிக்கு மட்டுமே எழுத வேண்டும்)

Subject boxல் மறக்காமல் ‘சனிப் பெயர்ச்சி’ என்று குறிப்பிடுங்கள்

அன்புடன்
வாத்தியார்
===================================
சுருக்கமான பலன்கள்:

----------------------------------------------------------------------------------------------------
மேலதிகத் தகவல்கள்!


காரைக்கால்:
திருநள்ளாறில் பிரசித்தி பெற்ற தெர்பாரண்யேஸ்வரர் கோயில்
(சனி பகவான் கோயில்) உள்ளது.

இங்கு வரும் 19ம் தேதி சனி பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது.

இதையொட்டி பக்தர்கள் வசதிக்காக போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தி தருவது குறித்த ஆலோசனை கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

கலெக்டர் கேசவன் பேசுகையில், ‘தமிழகம் மற்றும் புதுச்சேரியிலிருந்து பக்தர்களை திருநள்ளாறுக்கு அழைத்து வருவதுபோல் மீண்டும் அதே பகுதிக்கு பக்தர்களை கொண்டு செல்வதிலும் பேருந்து நிறுவனங்கள் கவனம் செலுத்த வேண்டும்
என்றார்!

சென்னை உள்ளிட்ட தொலைதூர பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் விழா முடியும் வரை சீர்காழி, சிதம்பரம், கும்பகோணம் போன்ற பகுதிகளில் ஏறி இறங்கும் பயணிகளை ஏற்ற மாட்டோம் என்று கூறக்கூடாது என்றும் கூறினார்.

பக்தர்கள் வசதிக்காக காரைக்கால்- கும்பகோணம் வழியாக 100 சிஆர்சி பேருந்துகள், காரைக்கால்- சென்னை வழியாக 100 சிஆர்சி பேருந்துகள், எஸ்இடிசி பேருந்துகள் 50, காரைக்கால்- புதுச்சேரி வழியாக 40 புதுச்சேரி சாலை போக்குவரத்து பேருந்துகள், 25 தனியார் பேருந்துகள் உள்ளிட்ட 350 பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

அதேபோல் திருநள்ளாறு யாத்ரிகா நிவாஸ் அருகில் ஒரு பேருந்து நிலையம், தேனூர் சுரக்குடி அருகில் ஒரு பேருந்து நிலையம் உட்பட 3 பேருந்து நிலையங்கள் மற்றும் வேன், கார், டூவீலர்கள் நிறுத்த தனி இடமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’ என்றார். 

கோயில்கள் நிர்வாக அதிகாரி  விக்ராந்தராஜா, போக்குவரத்துத்துறை ஆய்வாளர் பழனிச்சாமி  மற்றும்
புதுச்சேரி சாலை போக்குவரத்துக்கழக, தமிழக சாலை  போக்குவரத்துக்கழக அதிகாரிகள் பங்கேற்றனர்.
========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

16.12.17

Astrology: ஜோதிடம்: 15-12-2017ம் தேதி புதிருக்கான விடை!


Astrology: ஜோதிடம்: 15-12-2017ம் தேதி புதிருக்கான விடை!

அந்த ஜாதகத்திற்கு உரியவர் பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு
பிறந்த தேதி & நேரம்: 10-10-1960 12.01 PM  மதுரை

நான் எதிர்பார்த்தபடி நிறைய அன்பர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். சுமார் 19 பேர்கள் சரியான விடையை எழுதி உள்ளார்கள். அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்! அவர்களின் பெயர்கள் அவர்களுடைய பின்னூட்டங்களுடன் கீழே கொடுத்துள்ளேன். பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்

மீண்டும் ஒரு புதிருடன் அடுத்த வெள்ளிக்கிழமை (22-12-2017) சந்திப்போம்!

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------
1
Blogger kmr.krishnan said...
ஜாதகர் வைகைப்புயல் வடிவேலு. தமிழ்த் திரையுலக் நகைச்சுவை நாயகன்.
10 அக்டொபர் 1960 நண்பகல் 12 மணி 3 நிமிடம் 30 வினாடிகளில் பிறந்தவர். பிறந்த இடம் மதுரை என்று எடுத்துக்கொண்டேன்.
நன்றி ஐயா!
Friday, December 15, 2017 7:06:00 AM
-----------------------------------------------------
2
Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
Good morning sir, the above horoscope was famous comedian Vadivel born on 10/10/1960 at 12.00pm Place Madurai
Friday, December 15, 2017 7:12:00 AM 
------------------------------------------------------
3
Blogger sundinesh1 said...
Vadivelu
Friday, December 15, 2017 7:32:00 AM 
-------------------------------------------------
4
Blogger Shruthi Ramanath said...
Sir I think its the actor VADIVELU
Date of birth: 10- October-1960
Place of birth: madurai
Time of birth: 12.00 PM
Friday, December 15, 2017 7:59:00 AM 
--------------------------------------------------
5
Blogger Maheswari Bala said...
Actor vadivelu
October 10,1960
Time: 12:00:00
Place:Madurai 
Longitude:78 E 7
Latitude: 9 N 55
Friday, December 15, 2017 8:04:00 AM 
------------------------------------------------------
6
Blogger Thirumal Muthusamy said...
sir,
Actor vaigai puyal Vadivelu
M.Thirumal
Pavalathanur
Friday, December 15, 2017 8:30:00 AM 
---------------------------------------------------
7
Blogger Ananthakrishnan K R said...
Good Morning,
Actor Vadivelu born on 10th October 1960 at Madurai at 12.00 noon.
Regards,
K R Ananthakrishnan 
Chennai
Friday, December 15, 2017 8:32:00 AM
---------------------------------------------------
8
Blogger RAMVIDVISHAL said...
Actor Vadivelu
Friday, December 15, 2017 10:14:00 AM Delete
Blogger Bala subramanian said...
Tamil actor Vadivelu horoscope
Balasubramanian
Friday, December 15, 2017 12:10:00 PM 
--------------------------------------------------------
9
Blogger Bala subramanian said...
Tamil actor Vadivelu horoscope
Balasubramanian
Friday, December 15, 2017 12:10:00 PM 
---------------------------------------------------------
10
Blogger csubramoniam said...
ஐயா,
ஜாதத்திற்குஉரியவர் : நடிகர் வடிவேலு அவர்கள்
தேதி :10 /10 /1960
நேரம் :12 :௦௦
இடம் :மதுரை
நன்றி
Friday, December 15, 2017 1:35:00 PM
-----------------------------------------------------------
11
Blogger Sathish Kumar said...
Vadivelu (Actor)
Date of Birth : 10 – 10 – 1960
Time of Birth : 12 : 00
Place of Birth : Madurai
Friday, December 15, 2017 1:41:00 PM 
-------------------------------------------------------------
12
Blogger சர்மா said...
வணக்கம் ஐயா,
நடிகர் வடிவேலு பிறந்த திகதி 10/10/1960 மதுரை
நன்றி
sarma
Friday, December 15, 2017 2:20:00 PM
------------------------------------------------------
13
Blogger Palani Shanmugam said...
மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,
இந்த ஜாதகத்துக்கு சொந்தக்காரர் பிரபல திரைப்பட நடிகரும், பாடகருமான திரு. வடிவேலு அவர்கள்.
எஸ். பழனிச்சாமி
Friday, December 15, 2017 3:46:00 PM
-----------------------------------------------------
14
Blogger கதிரவன் said...
தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் வடிவேலு அவர்களுடைய ஜாதகம்,
பிறந்த தேதி - 10 அக்டோபர் 1960.
Friday, December 15, 2017 3:55:00 PM
-----------------------------------------------------
15
Blogger Thanga Mouly said...
நடிகர் வடிவேல் அவர்கள் DOB: 10 OCT 1960
Friday, December 15, 2017 4:46:00 PM
--------------------------------------------------------
16
Blogger GOWDA PONNUSAMY said...
Ayyaa vanakkangal!
Jaathakar Mr. Vadivelu (Tamil: வடிவேலு), often referred to as Vadivel, is a Tamil film actor, comedian and playback singer.
Date of Birth: 10-Oct-1960
Place of Birth: Madurai, Tamil Nadu, India
Profession: Actor, Comedian, Playback Singer
Nationality: India
-Ponnusamy.
Friday, December 15, 2017 5:45:00 PM 
-----------------------------------------------------
17
Blogger Saravanan Annamalai said...
Sir, Raasi chart is of actor Vadivelu. Born on 10th October 1960. Correct?
---A.Saravanan. Pondicherry
Friday, December 15, 2017 8:17:00 PM 
----------------------------------------------
18
Blogger umajana said...
ஐயா,
இந்த ஜாதகத்துக்கு உரியவர் நடிகர் வைகை புயல் வடிவேலு அவர்கள்.அவர் பிறந்தது
அக்டோபர் 10,1960 காலை 10:30 மணியளவில் தோராயமாக.
Friday, December 15, 2017 9:16:00 PM
-----------------------------------------------------------
19
Blogger thozhar pandian said...
10 அக்டோபர் 1960 பிறந்த நகைச்சுவை நடிகர் வடிவேலு
Friday, December 15, 2017 9:56:00 PM
---------------------------------------------
20
Blogger guru said...
Person : Actor Vadivelu
DOB: 10-Oct-1960
Friday, December 15, 2017 11:31:00 PM 
======================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!