மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label Dharma. Show all posts
Showing posts with label Dharma. Show all posts

2.2.22

தர்மத்தின் அளவுகோல் எது..?


தர்மத்தின் அளவுகோல் எது..?

தர்ம குணம் படைத்த மாமன்னன் போஜன்.

மகளின் திருமணத்திற்காக மன்னரிடம் பணம் பெற எண்ணிய ஒரு விவசாயி மன்னரை காண தலைநகர் புறப்பட்டார்.

வழியில் பசித்தால் உதவும் என்று சில ரொட்டிகளை பொட்டலம் கட்டிக் கொண்டார்.

வழி நெடுக.,

திருமணத்திற்கு வேண்டிய அளவு பணம் தர மன்னர் சம்மதிக்க வேண்டுமே என்று கடவுளை வேண்டிக் கொண்டே வந்தார்.

பசி எடுக்கவே,

ஒரு குளக்கரையில் அமர்ந்து., எடுத்து வந்த ரொட்டியை சாப்பிட கையில் எடுத்தார்.

மனதிற்குள் இந்த உணவைக் கொடுத்த கடவுளுக்கு விவசாயி நன்றி சொன்னார்.

அப்போது நாய் ஒன்று அவர் எதிரில் எலும்பும் தோலுமாக வந்து நின்றது.

இரக்கப்பட்ட விவசாயி ஒரு ரொட்டியை அதனிடம் வீசினார்.

ஒரே விழுங்காக உள்ளே தள்ளிய நாய்., மீண்டும் ஆவலுடன்பார்த்தது.

இரக்கப்பட்ட விவசாயி அத்தனை ரொட்டியையும் கொடுத்து விட்டார்.

ஒரு நாள் சாப்பிடாவிட்டால் உயிரா போய்விடும்... என்று நினைத்து.

அரசர் அவர் தகுதிக்கு தானம் கொடுத்தால்., பிரஜையான நாமும்., நம்மால் முடிந்ததை செய்வதுதானே முறை., என தனக்கு தானே சமாதானம் சொல்லிக் கொண்டார்.

பசியை பொறுத்துக் கொண்டு தலைநகரை அடைந்தார்.

அங்கிருந்த தர்மசத்திரத்தில் சாப்பிட்டார்.

பிறகு மன்னனை சந்தித்து தான் வந்த விஷயத்தைச் சொன்னார்.

மன்னர் போஜன் விவசாயியிடம்., "என்னிடம் தர்மம் கேட்டு வந்துள்ளீர்களே., நீங்கள் ஏதாவது தர்மம் செய்திருந்தால் சொல்லுங்கள்.

அதை நிறுக்கும் தராசு என்னிடம் இருக்கிறது.

அது எந்த அளவு எடை காட்டுகிறதோ., அந்த அளவுக்கு தங்கம் வாங்கிக் கொள்ளுங்கள்" என்றார் மன்னர்.

"தர்மம் செய்யும் அளவு பணம் என்னிடம் இருந்தால்., பணம் வேண்டி உங்களிடம் ஏன் நான் வரப் போகிறேன்..?

வழியில் பசித்திருந்த நாய்க்கு உணவளித்தேன்

அதற்கு ஈடாகத்தான் உங்கள் சத்திரத்தில் நான் சாப்பிட்டு விட்டேன்.

எனவே நான் ஏதும் பெரிதாக தர்மம் செய்ததில்லை." என்று அடக்கமாக சொன்னார் விவசாயி.

"உங்கள் பசியை பொறுத்து கொண்டு நாய்க்கு உணவிட்டதும் புண்ணியமே." என்று போஜன் தராசை கையில் எடுத்தார்.

ஒரு தட்டில் விவசாயி செய்த தர்மத்தையும்., மறுதட்டில் தங்கத்தையும் வைத்து நிறுத்தார் மன்னர்.

கஜனாவில் இருந்த தங்கம் முழுதும் வைத்தும் கூட தராசுத்தட்டு சமமாகவில்லை.

வியந்த மன்னன், "உங்களை பார்த்தால் சாதாரணமானவராக தெரியவில்லை. என்னைச் சோதிக்க வந்திருக்கும் தாங்கள் யார்..?" என்றார்.

"மன்னா நான் ஒரு விவசாயி. என்னைப் பற்றி சொல்லுமளவு வேறு ஏதுமில்லை." என்றார் பணிவுடன்.

அப்போது தர்ம தேவதை அங்கு தோன்றினாள்.

"போஜனே..! தராசில் நிறுத்துப் பார்ப்பது அல்ல தர்மம்.

கொடுத்தவரின் மனமே அதனது அளவுகோல்.

இவர் மனம் மிகப் பெரியது.

பகட்டுக்காக தர்மம் செய்யாமல்., ஆத்மார்த்தமாக., வேண்டிய உயிருக்கு தன்னிடம் இருப்பதையெல்லாம்., அதுவும் உணவை கொடுத்து விட்டார்.

அதனால் நீ எவ்வளவு பொன் வைத்தாலும்., தராசு முள்  அப்படியேதான் இருக்கும்.

ஆகவே அவர் என்ன கேட்டு வந்துள்ளாரோ., அதை கேட்டு., கொடுத்தால் போதுமானது." என்றாள்.

இதை ஏற்ற மன்னன் விவசாயிக்கு வேண்டிய அளவு தங்கம் கொடுத்து வழி அனுப்பினார்.

விவசாயி மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்தினார்.

ஆத்மார்த்த மனதுடன் உன் தர்மத்தை/கடமையைச் செய்.

பலன்தானாக வரும்.

அதுவே உலகின் மிகச் சிறந்த தர்மமாகும்.
-----------------------------------------------------
படித்தேன்:பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
=======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

22.9.20

இதல்லவா தியாகம்!!!!!


இதல்லவா தியாகம்!!!!!

1877ம் ஆண்டு.. நம் நாட்டில் கடுமையான பஞ்சம்.. பட்டினிச்சாவு மட்டும் 50 லட்சத்தை தாண்டியது. பசியால் எலும்பும் தோலுமாக மாறிவிட்ட குழந்தைகளுக்கு ஒருவேளை கூட சாப்பாடு இல்லாத நிலை!! 

அதனால், அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்தவ அமைப்புகள் இந்தியாவுக்கு மருத்துவ சிகிச்சை, உணவு தருவதற்காக இந்தியா வந்தது. அப்படி ராணிப்பேட்டைக்கு வந்தவர்தான் டாக்டர் ஜான்.. இவரது மகள் ஐடா ஸ்கடர்!"

ஒரு நள்ளிரவு கதவு தட்டப்படுகிறது.. 14 வயது சிறுமி ஐடா கதவை திறக்கிறாள்.. ஒரு பிராமணர் நின்று கொண்டிருந்தார். "அம்மா, என் மனைவி பிரசவ வலியால் துடிக்கிறாள்... உடனே வாருங்கள்" என்றார். ஐடாவோ,  "நான் டாக்டரல்ல, என் அப்பாதான் டாக்டர், கொஞ்சம்  இருங்கள் அவரை எழுப்பறேன்" என்கிறார்.

"இல்லையம்மா.. என் மனைவிக்கு 14 வயசு தான். நாங்கள் பிராமணர்கள். பெண்ணை ஒரு ஆண் தொட அனுமதி இல்லை" என்று சொல்லிவிட்டு தலையை தொங்க போட்டுக் கொண்டு நகர்ந்துவிடுகிறார். சிறிது நேரத்தில் மற்றொருவர் கதவை தட்டுகிறார்.. அவர் ஒரு முஸ்லிம்.. மனைவிக்கு பிரவச வலி என்பதால் உடனே வருமாறு அழைத்தார். ஐடா தன் தந்தையை பற்றிக்கூற, "வேண்டாம்மா... நாங்கள் இஸ்லாமியர்கள்... எங்கள் பெண்ணை ஆண்கள் பார்க்கவே கூடாது" என்று அவரும் சோகத்துடன் திரும்பிவிட்டார். 

அந்த பெண்களுக்கு என்ன ஆச்சோ என்று இரவெல்லாம் பதட்டத்துடன் நடமாடுகிறாள் ஐடா... மறுநாள் காலை அந்த கர்ப்பிணிகளின் சடலம் கொண்டு செல்லப்படுவதை பார்த்து தேம்பி தேம்பி அழுகிறாள்.. "என்ன தேசமிது? பெண்களை படிக்க வைக்கவும் மாட்டார்களாம், ஆனால் பெண்ணுக்குப் பெண்தான் பிரசவம் பார்க்க வேண்டுமாம்? இந்த நாட்டில் பெண்களை படிக்கவிடவில்லை என்றால் என்ன, நான் படித்துவிட்டு வந்து இந்த பெண்களைக் காப்பாற்றுவேன்" என சபதமேற்கிறாள்!

திரும்பவும் அமெரிக்கா சென்று மருத்துவம் படிக்கிறார்.. இளம்வயது ஐடாவின் அழகையும், அறிவையும், சக தோழர் ஒருவர் விரும்பி கல்யாணம் செய்ய ஆசைப்படுகிறார்.. ஆனால் ஐடா அந்த காதலை நிராகரிக்கிறார்.. மருத்துவம் படித்து முடித்ததும் அமெரிக்காவிலேயே வேலை வாய்ப்புகள் வந்தன.. ஐடா அதையும் நிராகரிக்கிறார்.. தமிழகத்தில் இறந்து போன அந்த பெண்களின் சடலங்கள் மட்டுமே கண்முன் வந்து வந்து போயின!!

ஆனால், வெறும் படிப்பை மட்டும் வைத்துக் கொண்டு எவ்வளவு பேரை தமிழ்நாட்டில் காப்பாற்ற முடியும் என்று நினைத்து, ஒரு ஆஸ்பத்திரி தேவை என்பதை உணர்கிறார்.. பல நாடுகளில் இந்தியாவின் அவலத்தை சொல்லி உதவி கேட்கிறார்.. அதன்படி நிதி சேர்கிறது... இனி ஒரு கர்ப்பிணியைகூட சாக விடமாட்டேன் என்ற உறுதியுடன் 20-ம் நூற்றாண்டின் முதல் நாளில் தமிழகத்தில் கால் பதிக்கிறார் ஐடா.

மருத்துவமனை கட்டும் பணி ஒரு பக்கம் துவங்குகிறது.. மற்றொரு பக்கம், சோதனைகூடம், கருவிகள் எதுவும் இல்லாமல் காடுகள், மேடுகள், குடிசைகள், கூடாரங்கள் என ஊர் ஊராக ஓடி மருத்துவம் பார்க்கிறார்.. இறுதியில்,  40 படுக்கை வசதி, நோயாளிகளுக்கு இலவச கூடங்களுடன் அந்த மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டது.

பெண்ணுரிமை என்ற பேச்சுக்கே இடமில்லாத நேரத்தில், பெண்களுக்கென அந்த மருத்துவமனையை கட்டி முடித்தார் ஐடா! அதுதான் ஆசியாவிலேயே தனிப்பெருமை வாய்ந்து, கம்பீரமாய் உயர்ந்து.. நூற்றாண்டை கடந்து இன்றும் பிரம்மாண்டமாய் நிற்கும்  "சிஎம்சி" ஆஸ்பத்திரி!!

இந்த பெண் யார்? இவர் ஏன் நமக்காக அழுதார்? இவர் ஏன் நமக்காகவே வாழ்ந்தார்? எங்கேயோ பிறந்து, எங்கேயோ வளர்ந்து, நம்ம நாட்டுக்கு தன் வாழ்க்கையையே மொத்தமாக அர்ப்பணித்த ஐடா, அன்னை தெரசாவுக்கே வழிக்காட்டி என்று சொன்னால் நம்ப முடிகிறதா?!! 

ஒரு பெண் தனி ஆளாக நின்று ஏற்றிய மெழுகுவர்த்தி, இன்று பிரகாசமாக, உலகத் தரத்தோடு, வேலூரில் இன்னமும் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது.. லட்சக்கணக்கான மக்களுக்கு உயிர் தந்து கொண்டுமிருக்கிறது.. தேசிய மருத்துவர் தினமான இன்றைய நாளில், இந்த வெள்ளுடை தாய்க்கு மட்டுமில்லை.. உயிரை பணயம் வைத்து சிகிச்சை தந்து வரும் அனைத்து மனித தெய்வங்களுக்கு என் கோடி நன்றிகள்!!
---------------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

21.9.20

நமது வாழ்வியல் முறை!!!!


நமது வாழ்வியல் முறை!!!!          

புதுமனைப் புகுவிழா போன்ற பல நேரங்களில், வீட்டின் முன் சாம்பல் பூசணிக்காயைக் கட்டித் தொங்கவிடும் பழக்கம் நமது கலாசாரத்தில் இருக்கிறது.

*பூசணிக்காயை ஏன் கட்டுகிறார்கள், அந்தக் காய்க்கு மட்டும் அப்படி என்ன சிறப்பு?*

உணவுகளில் மிகவும் அதிக பிராண சக்தி கொண்ட சில உணவுகள் உள்ளன. அந்த உணவுகளிலும் மஹா பிராண சக்தி கொண்டது சாம்பல் பூசணி.

அந்தக் காய் மிக அதிகமான நேர்மறை பிராண சக்தி கொண்டது. எனவேதான் அதை வீட்டு முன் கட்டித் தொங்க விடுகிறோம்.

புதிய வீட்டில் குடியேறும் போது, சில தீய சக்திகள் அங்கே இருக்கலாம். எனவே, ஒரு பூசணிக் காயை நம் வீட்டின் முன் கட்டும் போதே,

அந்த இடத்தில் உண்டாகும் நேர்மறை அதிர்வுகள் அந்த இடத்தில் உள்ள எதிர்மறைச் சக்திகளை அகற்றி விடுகின்றன.

நாம் அதைச் சாப்பிடும் போது, அது நமக்கு மிகவும் நல்லது செய்கிறது. ஆனால், நம் கலாசாரத்தில் ஒரு வழக்கம் இருந்தது.

நம் வீட்டிலேயே ஒரு பூசணிக்காயை வளர்த்தாலும் அதை அந்தணருக்குத் தானமாகக் கொடுத்துவிடும் பழக்கம் இருந்தது.

நீங்கள் அதைத் தானமாகக் கொடுக்கும்போது உங்களுக்கு புண்ணியம் கிடைக்கும் என்று சொல்லி இருக்கிறார்கள். 
வாங்குபவருக்கோ இங்கேயே நல்ல உணவு கிடைத்துவிடுகிறது.

பூசணிக்காயைத் தொடர்ந்து சாப்பிடும்போது நம் மனம் மிகுந்த விழிப்புணர்வை அடைகிறது. புத்தி கூர்மையும் புத்துணர்வும் சமநிலையும் அதிகரிக்கிறது.

இவ்வளவு பிராண சக்தியுடன் இருப்பதால் தான் வீடு கட்டி புதிதாகக் குடியேறும்போது அனைத்து எதிர்மறைச் சக்திகளையும் களைவதற்கான ஒரு வாய்ப்பாக பூசணிக்காயைப் பயன்படுத்துகிறார்கள்! 

*பூஜைக்கு எது அவசியம்.?*

மகா பாரதத்தில் ஒரு கதை வரும். 
அர்ஜுனனுக்கு தான்தான் பெரிய சிவ பக்தன் என்ற கர்வம். ஒருநாள் அவன் கண்ணனுடன் கைலாயத்தை நோக்கி நடந்து போய்க் கொண்டிருந்த போது சிவ கணங்கள் மலை மலையாய் பூக்களை அள்ளிக் கொண்டு ஒரு இடத்தில கொட்டிக் கொண்டிருந்ததை கண்டான்.

அதைக் கண்ட அர்ஜுனன் யார் இவ்வளவு மலர்களை சிவபெருமானுக்கு அர்ச்சிக்கிறார்கள் என்று அவர்களிடம் கேட்டான்.

யாரோ பூலோகத்தில் பீமனாம் அவன் செய்யும் பூஜையில்தான் இவ்வளவு மலர்கள் குவிகின்றன , இன்னும் நிறைய குவிந்துள்ளதை அப்புறப்படுத்தவேண்டும் , உங்களிடம் பேசக்கூட நேரமில்லை நாங்கள் வருகிறோம்.

என்று அவன் பதிலுக்குக் கூட காத்திராமல் சென்றுவிட்டனர். அவனுக்கு தெரிந்து பீமன் என்றும் சிவ பூஜை செய்து பார்த்ததே கிடையாது.

வயிறு முட்டத் தின்றுவிட்டு உறங்குவதைத்தான் பார்த்திருக்கிறான். அர்ஜுனன்.

உடனே அவன் கண்ணனை இது எப்படி சாத்தியம் என்று கேட்டான். 
அது மிக எளிது.

பீமன் மனதினாலேயே இந்த அகிலத்தில் பூக்கும் அத்தனை மலர்களையும் சிவனுக்கு அர்ப்பணித்துவிடுகிறான்.

அவை முழுவதும் சிவனின் திருவடிகளில் போய் விழுந்துவிடுகின்றன என்றான் 
அத்துடன் அர்ஜுனன் கர்வம் அகன்றது.

இறைவனை பூஜிக்கும்போது அர்ப்பணிப்புத்தான் முக்கியமே அன்றி. 
கர்வம் கொள்ளுதல் கூடாது என்பதை உணர்ந்தான்..

*சூலாயுதங்களில் எலுமிச்சை ஏன் குத்தப்படுகிறது?*

குத்தப்படுவதற்கு காரணம் எலுமிச்சை தேவ கனி என்பதால் ஆகும்.

முக்கனிகளான மாம்பழத்தில் வண்டு குற்றம் உண்டு. பலாவில் வியர்வை குற்றம் உண்டு. வாழையில் புள்ளி குற்றம் உண்டு. ...

ஆனால் எலுமிச்சையில் மட்டும் இவ்வித குற்றங்கள் இல்லை.

மனிதனுடைய எண்ணங்களை ஈர்க்கும் சக்தி மற்ற கனிகளைக் காட்டிலும் எலுமிச்சைக்கு அதிகம் உண்டு.

அதனால் தான் சூலாயுதத்தில் எலுமிச்சை குத்தப்படுகிறது . 


*திருமண அழைப்பிதழில் மஞ்சள் பூசுவது ஏன் ?*

மஞ்சள் என்பது மங்களத்தின் அடையாளம். சுப நிகழ்ச்சிகள் துவங்கும் போது பிள்ளையார் பிடிப்பதிலிருந்தே மஞ்சளின் உபயோகம் ஆரம்பித்து விடுகிறது.

மஞ்சள் பயன்பாடு இவைகளுக்காக மட்டுமில்லை. மஞ்சள் நல்ல கிருமி நாசினி. அது இருக்கும் இடத்தில் பூச்சி பொட்டுகள் அவ்வளவு சீக்கிரம் அண்டாது.

அதனால் தான் திருமணம் போன்ற சுப நிகழ்வுகளுக்கு வைக்கப்படும் அழைப்பிதழ்களின் ஓரங்களில் மஞ்சள் பூசப்படும்.

திருமண பத்திரிக்கைகள் சம்பிரதாயங்களுக்காக உள்ளது மட்டுமல்ல. அதில் மனிதனின் நிகழ்வுகளும் மறைந்து கிடக்கிறது.

ஐம்பது வருடத்திற்கு முன்பு நடந்த திருமணத்தை அன்று அச்சடித்த அழைப்பிதழ்களை தொட்டு பார்த்தவுடனே நேராக அனுபவிப்பது போன்ற சுகம் கிடைக்கும்.

கறுப்பு இருட்டு அண்டிய இடங்கள் விரைவில் அழிந்து விடும். ஒரு அறையை வெகுநாட்களாக பயன்படுத்தாமல் வைத்திருந்தோமேயானால் அங்கே இருள் இருபத்தி நான்கு மணி நேரமும் மண்டியிட்டு உட்கார்ந்திருக்கும்.

சிறிது சிறிதாக சுவர்கள் ஈரமாகி கரையான்கள் அரித்து அறை யாருக்கும் பயன்படாதவாறு ஆகிவிடும்.

மரணம் என்பது மறக்கபட வேண்டிய நிகழ்வு. இறந்து போனவனையே நினைத்து கொண்டிருந்தால் வாழ்பவன் பிணமாகி விடுவான்.

உயிர்கள் அணைத்து வாழ்விலும் சாவு என்பது தவிர்க்க முடியாதது என்றால் அதை எப்போதுமே நினைத்து கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.

அதனால் தான் மரணம் சம்மந்தப்பட்ட பொருட்கள்0 அனைத்தையும் விரைவில் அழிந்து போகுமாறு உருவாக்குகிறோம்.

கருமாதி பத்திரிக்கையில் பூசப்படுகின்ற கறுப்பும் அந்த காகிதத்தை விரைவில் செல்லரிக்க வைத்துவிடும். 


*சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்.?*

முன்பெல்லாம் வாழை இலையில் தரையில் பரிமாறுவதுதான் கெளரவம்..ஆனால் இப்போது உணவு உண்ணும் மேசை (dining table)....

இது சரியா தவறா ?!!

*முதலில் முன்னோர்கள் இப்படி சம்மணமிட்டு சாப்பிட்டதின் நோக்கமென்ன?*

சாப்பிடும் பொழுதாவது நாம் காலை மடக்கி அமர்ந்து தான் சாப்பிட வேண்டும். சாப்பிடும் பொழுது காலைத்தொங்க வைத்து அமர்வதனால் ரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாகச் செல்கிறது.

எனவே செரிமானம் தாமதமாகிறது. காலை மடக்கி சுக ஆசனத்தில் அமர்ந்து சாப்பிட்டால் சாப்பிட, சாப்பிட, சாப்பாடு செரிமானமாகிவிடும்.

ஏனென்றால் கீழே ரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும் பொழுது நமக்கு செரிமானம் நன்றாக நடைபெறுகிறது.

எனவே தான் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடும் படி வலியுறுத்த பட்டது. 
------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
=============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

14.9.20

கற்றுக் கொடுக்கும் தொழிலின் மேன்மை!!!


கற்றுக் கொடுக்கும் தொழிலின் மேன்மை!!!

ஒரு விழாவில் இளைஞர் ஒருவர் தன்னுடைய பழைய ஆசிரியரை சந்திக்கின்றார். அப்போது அந்த முன்னாள் மாணவ இளைஞர் "தன்னை தெரிகின்றதா ? " என்று அந்த ஆசிரியரிடம் கேட்கின்றார். ஆசிரியரோ "எனக்கு நினைவில் இல்லை எனவே நீங்களே யார் என்று அறிமுகம் செய்து கொள்ளுங்களேன் " என்றார்.

இளைஞர் கூறினார், "நான் உங்கள் முன்னாள் மாணவன் " என்றார். அதற்கு அந்த ஆசிரியர் "மிக்க மகிழ்ச்சி, எங்கு உள்ளீர்கள், வாழ்க்கை எப்படி உள்ளது , என்ன செய்கிறீர்கள் " எனக் கேட்டார். இளைஞர், "நான் ஆசிரியராக உள்ளேன் ". என்றார். "அவ்வாறு ஆசிரியர் ஆக வேண்டும் என்று எது உங்களைத் தூண்டியது " என வினவினார் அந்த ஆசிரியர் . "உங்களால் தான் தூண்டப்பட்டேன். உங்களைப் பார்த்துத் தான் நானும் ஆசிரியனாக வேண்டும் என்ற உணர்வு மேலோங்கியது " என்றார். மேலும் "உங்களுடைய செயல்களின் தாக்கத்தினால் தான் நானும் கற்றுக் கொடுக்கும் தொழிலில் உள்ளேன் " என்றார். " எப்படி என்ன தாக்கம் உங்களிடததிலே உண்டாக்கினேன் " எனக் கேட்டார் ஆசிரியர்.

" நான் உங்களுக்கு ஒரு கதை கூறட்டுமா? " என்று கூறி சொல்ல ஆரம்பித்தார் அந்த இளைஞர். _ " ஒரு நாள் என்னுடைய வகுப்புத் தோழர் மிகவும் விலையுயர்ந்த கடிகாரத்தை அணிந்து வந்தார். அப்படிப்பட்ட ஒரு கைக்கடிகாரம் வாங்குவது என்னுடைய சக்திக்கு அப்பாற்ப்பட்டது. எனவே அதனை திருட நினைத்து அவர் கடிகாரத்தை பாக்கெட்டில் வைத்திருந்த போது எடுத்து விட்டேன். அவர் வகுப்பறைக்குள் வந்தவுடன் தன்னுடைய கடிகாரம் காணவில்லை என்று ஆசிரியரிடம் புகார் செய்தார். ஆசிரியர் அவர்களும் இவருடைய கடிகாரத்தை எவர் எடுத்து இருந்தாலும் அதனை திரும்பக் கொடுத்து விடுங்கள் என அறிவித்தார். நான் எப்படி கடிகாரத்தை திருப்பித் தருவேன் என நினைத்து எனக்கு மிகவும் சங்கடமாக போய்விட்டது.

ஆசிரியர் வகுப்பறையின் கதவை மூடச் செய்தார். எல்லோரையும் எழுந்து வரிசையாக நிற்கச் சொன்னார். எனக்கு மிகவும் அவமானமாக போய்விட்டது. அவர் கூறினார், மாணவர்களே வரிசையாக நில்லுங்கள் , ஆனால் எல்லோரும் கண்ணை மூடிக் கொண்டு தான் நிற்க வேண்டும் என்றார். அவர் ஒவ்வொருவரின் பாக்கெட்டுகளிலும் கையை விட்டு பார்த்துக் கொண்டே சென்றார். என்னுடைய பாக்கெட்டுக்குள்ளும் கையை விட்டார் கடிகாரத்தையும் எடுத்துக் கொண்டார். ஆனால் எல்லோரும் கண்களை மூடி இருந்ததால் எவரும் எதையும் பார்க்க இயலவில்லை.

பின்னர் அந்த கடிகாரத்தை உரியவரிடம் கொடுத்து விட்டார். ஆனால் இது பற்றி ஒரு வார்த்தை கூட என்னிடம் கேட்கவில்லை. வேறு எவரிடமும் இது பற்றி கூறவோ, சம்பவத்தை விவரிக்கவோ இல்லை. அந்நாளிலே நீங்கள் என்னுடைய மானத்தை காபாற்றினீர்கள் என்னை திருடன், மோசடிக்காரன், என்றெல்லாம் திட்டாமல் ஒன்றுமே பேசாமல் இருந்தீர்கள் என்னுடைய கவுரத்தையும், மானத்தையும் காபாற்றினீர்கள். என்னிடமும் எதுவும் கூறவில்லை. அது மட்டுமின்றி கடிகாரத்தின் உரிமையாளரிடமும் இது பற்றி எதுவும் கூறவில்லை. இது எனக்கு ஒரு செய்தியை கற்றுத் தந்தது. அது ஆசிரியர் என்பவர் இப்படி தான். கற்பித்தல் என்பது எவ்வளவு அற்புதம். இதைத் தான் என் வாழ்க்கையிலும் மேற்கொள்ள வேண்டும் என்றும் , கற்பித்தலை செய்ய வேண்டும் என விரும்பினேன்" இதனைக் கேட்ட அந்த ஆசிரியர் "அற்புதம்" என்றார்.

மீண்டும் அந்த இளைஞர் கேட்டார் , "இப்பொழுதாவது என்னை தெரிகின்றதா" எனக் கேட்டார். அதற்கு மீண்டும் "எனக்கு எதுவும் நினைவில் இல்லை, யார் என்பதும் தெரியவில்லை" ? என்றார். "ஏன் தெரியவில்லை " என்று கேட்டார் அந்த இளைஞர். *ஆசிரியர் கூறினார்,* "நானும் அந்த சமயத்தில் கண்ணை மூடிக் கொண்டிருந்தேன்" என்றார்.!
==========================================================
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
===================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

18.8.20

நீதிக் கதை: நாம் எப்படியிருக்க வேண்டும்?


நீதிக் கதை: நாம் எப்படியிருக்க வேண்டும்?

ஒரு முறை மகாகவி காளிதாசர் வயல்வெளியே வெயிலில் நடந்து சென்ற போது தாகம் எடுத்தது! சற்று தூரத்தில் ஒரு கிராமப்பெண் கிணற்றில் தண்ணீர் சேந்தி குடத்தில் எடுத்து வந்துக்கொண்டிருந்தாள்! காளிதாசர் அவரைப் பார்த்து அம்மா தாகமாகஇருக்கு கொஞ்சம் தண்ணீர் தருவீர்களா? என்று கேட்டார்!

அந்த கிராமத்துப்பெண்ணும், தருகிறேன் உ௩்களை அறிமுகப்படுத்தி க்கொள்ளு௩்கள் என்றாள்! உடனே காளிதாசருக்கு ஒரு உயர்வு மனப்பான்மை ஏற்பட்டு, இந்த பெண்ணிடம் நாம் யார் என்று சொல்ல வேண்டுமா என நினைத்து நான் ஒரு பயணி அம்மா என்றார்! உடன் அந்த பெண், உலகில் இரண்டு பயணிகள் தான்! ஒருவர் சந்திரன்! ஒருவர் சூரியன்! இவர்கள் தான் இரவு பகலென பயணிப்பவர்கள் என்றாள்!

சரி என்னை விருந்தினர் என்று வைத்துக் கொள் என்றார் காளிதாசர்! உடனே அந்த பெண், உலகில் இரண்டு விருந்தினர் தான்! ஒன்று செல்வம், இரண்டு இளமை! இவை இரண்டும் தான் விருந்தினராக வந்து உடனே போய் விடும் என்றாள்!

சற்று எரிச்சலான காளிதாசர் தான் ஒரு பொறுமைசாலி என்றார்! உடனே அந்த பெண் அதுவும் இரண்டு பேர்தான்! ஒன்று பூமி! எவ்வளவு மிதித்தாலும், எவர் மிதித்தாலும் தா௩்கும்! மற்றொன்று மரம்! யார் கல்லால் அடித்தாலும் பொறுத்துக்கொண்டு காய்களைக் கொடுக்கும் என்றாள்!

சற்று கோபமடைந்த காளிதாசர் நான் ஒரு பிடிவாதக்காரன் என்றார்! அதற்கும் அந்த பெண் உலகிலேயே பிடிவாதக்காரர்கள் இரண்டு பேர் தான்! ஒன்று முடி! மற்றொன்று நகம்! இரண்டும் எத்தனை முறை வேண்டாம் என்று வெட்டினாலும் பிடிவாதமாக வளரும் என்றாள் சிரித்தபடி!

தாகம் அதிகரிக்கவே நான் ஒரு முட்டாள் என்று தன்னை கூறிக்கொண்டார்! உடனே அந்த பெண், உலகிலேயே இரண்டு முட்டாள்கள் தான்! ஒருவன் நாட்டை ஆளத்தெரியாத அரசன்! மற்றவன் அவனுக்கு துதிபாடும் அமைச்சன்! என்றாள்!

காளிதாசர் செய்வதறியாது, அந்த பெண்ணின் காலில் விழுந்தார்! உடனே அந்த பெண் மகனே எழுந்திரு என்றதும் நிமிர்ந்து பார்த்த காளிதாசர் மலைத்துப்போனார்! சாட்சாத் சரஸ்வதி தேவியே அவர் முன் நின்றாள்! காளிதாசர் கைகூப்பி வண௩்கியதும், தேவி தாசரைப்பார்த்து காளிதாசா! எவன் ஒருவன் தன்னை மனிதன் என்று உணர்கின்றானோ, அவனே மனிதப்பிறவியின் உச்சத்தை அடைகிறான்! நீ மனிதனாகவே இரு என்று தண்ணீர் குடத்தை காளிதாசர் கையில் கொடுத்து சரஸ்வதி தேவி மறைந்தாள்!

           இதுபோலத்தான் குழந்தைகள் எதிர் காலத்தில் பணம் சம்பாதிக்கவும், வசதியாக வாழவும் பெற்றோர்கள் கற்றுக்கொடுக்கிறார்களே தவிர, மனிதனாக, தாய், தந்தை, மனைவி, மக்கள், உற்றார் உறவினருக்கு, நம் தாய் நாட்டிற்கு, நமக்கு உணவு தரும் பூமிக்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை கற்றுத்தரவேண்டும்! பெற்றோரை தாய்நாட்டை , உறவுகளை பிரிந்து, ஏசி அறையே உலகம், தொலைபேசியே உறவு, பணம் சம்பாதிப்பதே வாழ்க்கை யென வாழ்க்கையை இயந்திரமயமாக்கி மனித நேயமில்லா வாழ்க்கை வாழக் கூடாது!

அதனால்தான் ஒருமா௩்கனிக்காக பெற்றோரை விட்டு பிரிந்த முருகனை ஈசனும், பார்வதியும் பிள்ளையாரும் சேர்ந்து அழைத்து வந்து அவர் செய்ய வேண்டிய கடமையை உணர்த்கியதாக புராணங்கள் கூறுகின்றன!

நீ நீயாகவே (மனிதனாகவே ) இரு! 
-------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
===========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

6.8.20

நேர்மையான நீதிபதிகள்!!!!


நேர்மையான நீதிபதிகள்!!!!

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த மெகர் சந்த் மகாஜன் டார்ஜிலிங் சுற்றுலா போனார். அங்கே அவர் கார் ஓட்டிச் சென்றபோது போக்குவரத்து விதியை மீறினார்.

தவறை ஏற்று அபராதம் கட்டுவதாகச் சொன்ன மகாஜன், மறுநாள் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் போய் நின்றார்.

``உங்கள் பெயர் என்ன?'' என்று மாஜிஸ்திரேட் கேட்க... ``மகாஜன்'' என்றார்.

'``என்ன வேலை பார்க்கிறீர்கள்?'' என்று கேட்டபோது, ``சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக இருக்கிறேன்'' என்று தயங்காமல் சொன்னார்.

உடனே அந்த மாஜிஸ்திரேட் ``மை லார்டு'' எனப் பதறி எழுந்து மகாஜனை வணங்கினார்.

``உட்காருங்கள். உங்கள் டூட்டியைச் செய்யுங்கள்'' என்றார் மகாஜன்.

``முதல்முறை தவறு செய்கிறவர்களை விடுதலை செய்யும் அதிகாரம் எனக்கு உண்டு. அதனால், உங்களை விடுவிக்கிறேன்'' என்றார் அந்த மாஜிஸ்திரேட்.
மகாஜன் வெளியில் வந்தார்!

மெகர் சந்த் மகாஜன்
------------------------------------------------------------------------
* சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த டி.சத்தியதேவ் ஒரு நாள்கூட விடுமுறை எடுத்ததே இல்லை.

அவர் மகனுக்கு வீட்டில் வைத்துத்தான் பதிவுத் திருமணம் நடத்தப்பட்டது.

அந்தத் திருமணத்துக்காக வந்த, சக நீதிபதிகள் எல்லாம் அரை நாள் விடுமுறை போட்டுவிட்டு வந்தார்கள். ஆனால், சத்தியதேவ் தன் மகனின் திருமணம் முடிந்த கையோடு கோர்ட்டுக்குக் கிளம்பிப் போனார்.

அவருக்குத் தலைமை நீதிபதியாகும் வாய்ப்பு வாய்க்கவில்லை.

தலைமை நீதிபதி 6 வாரத்துக்கு மேல் விடுமுறை எடுத்தால்
 `பொறுப்பு தலைமை நீதிபதி’ நியமிக்கப்படுவது வழக்கம்.

அப்போது தலைமை நீதிபதியாக இருந்த ஆனந்த், பொறுப்பு தலைமை நீதிபதியாக சத்தியதேவ் சில காலம் இருக்க வேண்டும் என்பதற்காகவே
6 வாரம் விடுமுறை எடுத்தார்.

அந்த அளவுக்கு மதிக்கப்பட்டவர் சத்தியதேவ்!
-----------------------------------------------------------------------------------------
* குரு பிரசன்ன சிங். மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்தவர்.
 ``பள்ளி ஆவணத்தில் சொல்லப்பட்ட வயதுக்கும் உண்மையான வயதுக்கும் வித்தியாசம் இருக்கிறது. உண்மையான வயது அடிப்படையில் எனக்கு ரிட்டையர்மென்ட் தேதி வந்துவிட்டது. அதனால், ஓய்வு பெறுகிறேன்'' எனச் சொல்லிக் கிளம்பிவிட்டார்.

குரு பிரசன்ன சிங் உண்மையை மறைத்திருந்தால் கூடுதலாக ஒன்றரை ஆண்டு இருந்து, பிறகு உச்சநீதிமன்ற நீதிபதியாகி இருப்பார். மனசாட்சிக்குப் பயந்து நேர்மையோடு நடந்துகொண்ட புண்ணியவான்!

* ஐ.ஏ.எஸ் அதிகாரி மீது ஆசிட் அடித்தது,
நீதிபதி மருமகன் மீது கஞ்சா வழக்கு, வழக்குப் போட்ட வழக்கறிஞர்களுக்கு வெட்டு, நீதிபதி வீட்டுக்குக் குடிநீர் கட் என 1991-1996 ஜெயலலிதா ஆட்சியில் நடந்த திகில் விஷயங்கள் அனைத்தும் நீதிபதி குன்ஹாவுக்கு நன்றாகவே தெரியும்.

 அப்படியான சூழலில் சுதந்திர இந்திய வரலாற்றில் பதவியில் இருக்கும் ஒரு முதல்வரை, ஜெயலலிதாவை ஊழல் வழக்கில் சிறைக்கு அனுப்புகிறார் என்றால் குன்ஹா எவ்வளவு பெரிய நீதிமான்

* நீதிபதி கே.பி.சுப்பிரமணியம் கவுண்டரின் தந்தை கே.எஸ்.பழனிசாமி கவுண்டர் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தார்.

சென்னை சென்ட்ரல் அருகே அவர் ஓட்டி வந்த கார் சிக்னலைத் தாண்டி வந்துவிட்டது.

அந்தக் காரை மடக்கி அருகில் இருந்த நடமாடும் நீதிமன்றத்தில் பழனிசாமியை நிறுத்தினார்கள்.

இவரைப் பார்த்ததும் மாஜிஸ்திரேட் அரண்டு போனார். ``அபராதம் கட்டத் தேவையில்லை'' என மாஜிஸ்திரேட் சொல்லியும்

பத்து ரூபாய் அபராதத்தைக் கட்டிவிட்டுத்தான் போனார் நீதிபதி பழனிசாமி.
----------------------------------------------------------------------------------------------
* மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஒரு நீதிபதியின் தியாகம் இது!

ஒரு வழக்குக்குத் தீர்ப்பு தேதி குறித்துவிட்டார் அந்த நீதிபதி.
அன்றைய தினம் கோர்ட்டுக்கு வந்த நீதிபதியின் முன் இரு தரப்பு வழக்கறிஞர்களும் தயாராக நின்று கொண்டிருந்தார்கள். `

`என்ன விவரம்?'' என்று அவர் கேட்க... ``இன்று எங்களது வழக்குக்குத் தீர்ப்புச் சொல்வதாகச் சொல்லி இருந்தீர்கள்'' என்று வழக்கறிஞர்கள் சொன்னார்கள்.

உடனே கேஸ் கட்டை எடுத்துப் பார்த்தவர். ``இதோ வருகிறேன்'' எனச் சொல்லி அறைக்குப் போனார். தன் மறதிக்கான தண்டனையாக,
ராஜினாமா கடிதத்தை எழுதித் தந்துவிட்டு வீட்டுக்குப் போய்விட்டார்.

* சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்தவர் சுப்பிரமணிய ஐயர். அவர் முன்பு வழக்கு ஒன்று நடந்து கொண்டிருந்தது. அந்த வழக்கின் ஆவணங்களை அவரிடம் நீட்டியபோது அதைப் படிக்கச் சிரமப்பட்டார்
சுப்பிரமணிய ஐயர்.

இன்னொரு கண்ணாடியை மாற்றிப் போட்டுப் படிக்க முயன்றும் முடியவில்லை.
பெஞ்ச் கிளார்க்கிடம் கொடுத்துப் படிக்கச் சொன்னார். படித்துக் காட்டப்பட்டது. வழக்கறிஞரும் அதைப் படித்தார்.

என்ன நினைத்தாரோ உடனே சேம்பருக்குப் போன சுப்பிரமணிய ஐயர்,
ஆளுநருக்குத் தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பிவிட்டு வீட்டுக்குக் கிளம்பிவிட்டார். ஆம். `கண் பார்வை மங்கிய பிறகு பணியில் இருப்பதில் அர்த்தம் இல்லை’ எனப் பதவியை உதறியவர் சுப்பிரமணிய ஐயர்.

- இப்படி தியாக வாழ்க்கை வாழ்ந்த நீதிமான்கள் நிறைய பேர் நீதித்துறையில் நிரம்பியிருக்கிறார்கள்.

அன்றும் இருந்தார்கள்.
இன்றும் இருக்கிறார்கள்.   
ஜனாதிபதிக்கே பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டிய பதவி... **நீதிபதி**

படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

28.7.20

இந்து - முஸ்லீம் மத நல்லிணக்கம்!!!


இந்து - முஸ்லீம் மத நல்லிணக்கம்!!!

மராட்டிய வீர சிவாஜியின் படைகளில் இருந்த 1,50,000 படை வீரர்களில் 60,000 பேர் இஸ்லாமியர்கள். சிவாஜியின் அந்தரங்க காரியதரிசி மவுலி பஷீர்கான்.

* சிவாஜியை எதிர்த்துப் போராடிய பாமினி சுல்தான்களின் படைகளில் பெரும் பான்மையினர் இந்துக்கள்.

* 1857 இல் நடந்த முதல் விடுதலைப் போரில் வீர காவியம் படைத்த ஜான்சி ராணி லட்சுமி பாயின் காலாட் படைத் தளபதி குதாபாகஸ், படைத்தளபதி கவுஸ்கான், அவரது தனிப்பாதுகாப்பு அதிகாரி மன்ஸர் ஆகியோர் இஸ்லாமியர்.

* நாகூர் தர்காவின் கோபு ரத்தைக் கட்டியது சரபோஜி மன்னன்.

* சிதம்பரம் அருகில் உள்ள கிள்ளை தர்கா நிர்வாகம் - திருமுட்டத்திலிருந்து வரும் பூவராகவர் சாமிக்குத் திரு விழா நடத்த, திருவிழா நாள் தோப்பு என்று 15 ஏக்கர் புஞ்சை நிலத்தை அளித்தது. அந்த சாமியின் வருமானத் திற்கு 40 ஏக்கருக்கும் மேற் பட்ட நிலத்தை சாசுவத தானமாக 1891 ஆம் ஆண்டு வழங்கி உள்ளனர். இப் போதும் கிள்ளைக்கு அந்த சாமி வரும்போது, இஸ்லாமியர்கள் வந்து வரவேற்பார்கள்.

* எட்டுக்குடி முருகன் கோவில் திருவிழாக்களில் மின் விளக்குகளைக் கட்டுவது முஸ்லீம்கள்.

* ஆத்தூர் வண்டிக் காளியம்மன் சிகப்பு உடை அணியும்போது காளி, பச்சை உடை அணியும்போது முத்தாளம்மன். கடவுள் புறப்படும் போது நான்கு பக்கங்களில் ஒரு பக்கம் தூக்கும் உரிமை முஸ்லீம் மக்களுக்கும், இன்னொரு பக்கம் தூக்கும் உரிமை கிறிஸ்தவர்களுக்கும்; மீதமுள்ள இரண்டு பக்கங்கள் இந்துக்களுக்கும் உண்டு. சாமி வரும்போது முஸ்லீம் தெருக்களில் முறைப்படி தேங்காய் உடைப்பார்கள்; ஆரத்தித் தட்டை வீட்டுத் திரையிலிருந்து கைநீட்டுவார்கள். பூசாரி வாங்கிச் சென்று, அர்ச்சனை செய்து பிரசாதத்தைத் தருவார்.

* வைணவத்தின் தலைமையிடமான ஸ்ரீரங்கத்தில் நம்பெருமாளுக்கு கைலி சாத்தப்படுகிறது. துலுக்க நாச்சியார் சன்னதியும் அங்குண்டு.

* பாண்டிச்சேரி மக்களால் பாய் முருகர் என்று அழைக் கப்படுபவர் 1940 இல் பிறந்த முகம்மது கவுஸ் என்ற இஸ்லாமியர். துளசி முத்துமாரியம்மன் ஆலயத்தையும், கௌசிக பாலசுப்பிரமணியர் கோவிலையும் கட்டியது அந்த இஸ்லாமியரே! அந்த முருகன் ஆலயத்தில் முகமது கவுசின் திருவுருவப்படம் உள்ளது.

எடுத்துக்காட்டுகளுக்குச் சிலவே என்று - இவ்வளவையும் எழுதி இருப்பவர் - இந்து அறநிலையத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரி எஸ்.ஜி.ரமேஷ்பாபு! நூலின் பெயர் ‘யார் கைகளில் இந்து ஆலயங்கள்?' என்ப தாகும். (2019, வெளியீடு பாரதி புத்தகாலயம்).

இப்படி இந்துக்களும் - முஸ்லீம்களும் சகோதரர் களாகப் பழகியும், பாவித்தும் வந்த தமிழ்நாட்டில் - இந்து - முஸ்லீம் கலவரங்களை உருவாக்கும் வெறியர்களை அடையாளம் கண்டு ஒதுக்கிட வேண்டாமா?

- மயிலாடன் முகநூல் பதிவு.
-----------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

13.5.20

மரங்களை வெட்டினால் என்ன ஆகும்?


மரங்களை வெட்டினால் என்ன ஆகும்?

மதுரையின் மிகப் பிரபலமான மரக்கடை குடும்பத்தாரின் மகன் எனது பள்ளிக் காலத்து நண்பன். அவரை பல ஆண்டுகளுக்குப் பிறகு சமீபத்தில் சந்தித்தேன். பள்ளியில் படிக்கும் போதே அவர் எங்களை விட இரண்டு வயது பெரியவர். எல்லோரும் அவரை பெருசு என்றே அழைப்போம். படிப்பு சரியாக வராது. கடுமையாக மனப்பாடம் செய்தாலும் பரிட்சையில் கோட்டை விட்டு விடுவார். ஆசிரியர்கள் அவரை மரமண்டை ... பேசாம போய் மரக்கடையிலேயே உக்காரு என்றும் திட்டுவார்கள். பள்ளிக் காலம் முடிந்து ஆளுக்கு ஒரு திசையில் சென்றுவிட்டோம். நமது நண்பர் தனது தந்தையின் மரக்கடையிலேயே பொறுப்பெடுத்துக் கொண்டார். பின்னர் ஆறேழு வருடங்கள் கழித்து அவரை ஒரு முறை சந்திக்கும் போது சொந்த அத்தை மகளை திருமணம் எல்லாம் முடித்து கைக் குழந்தையுடன் இருந்தார். 28 வயதுக்குள் தனி வீடு, சொந்தமாக ஒரு புதிய மரக்கடை, கார், வேலையாட்கள், வெளிநாட்டுப் பயணம் என சகல வசதிகளுடன் இருந்தார். யார் வாழ்க்கையில் உருப்படமாட்டார், மரமண்டை என்று இகழப்பட்டாரோ அவரே எங்கள் அனைவரையும் விட உச்சத்தில் இருந்தார்.

கிட்டத்தட்ட இருபது ஆண்டு இடைவெளியில் மீண்டும் அவரை சந்தித்தேன். என் கண்களை நம்ப முடியவில்லை. ஆள், மிகவும் தளர்ந்து சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு ஒரு வித மன நோயாளியைப் போல இருந்தார். ஆதரவாக கொஞ்ச நேரம் பேசிக் கொண்டு இருந்தேன். அவருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள். மிகச் சிறிய வயதிலேயே திருமணம் முடித்த காரணத்தால் பிள்ளைகள் எல்லாம் இப்போதே பெரியவர்களாக இருந்தார்கள். ஆனால், குடும்பம் பல வேறு சிக்கல்களில். ஐந்து வருடம் முன்பு சிறுநீரக கோளாறில் மனைவி இறந்து விட்டார். மூத்த மகன் கல்லூரியில் படிக்கும் போது சாலை விபத்தில் ஒரு காலை இழந்து விட்டார். இரண்டாம் மகனுக்கு பிறவியிலேயே கொஞ்சம் மன நல கோளாறு, மகள் அமெரிக்க மாப்பிளைக்கு மணமுடிக்கப் பட்டு, இரண்டே வருடத்தில் விவாகரத்தை பெற்று வீட்டில் குழந்தையுடன் இருக்கிறார். இப்போது நண்பரோ, கோடிகளின் அதிபதி என்றாலும் ஜாதக புத்தகத்தை கையில் தூக்கிக் கொண்டு கோவில் கோவிலாக பரிகார பூஜைகள் செய்து வருகிறார்.

எங்கள் சந்திப்பில் அவரைப் பற்றிய பல விஷயங்கள் பேசிய பின் என்னை பற்றிய பேச்சு வந்தது. ஒரு கால கட்டத்தில் மனதுக்கு ஒவ்வாத வேலையை விட்டு விலகியதை பற்றி பேசியதும், அவரால் அதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. இரவி, இந்த மரக்கடை தொழில் எனக்கும் ரொம்ப நாளாகவே பிடிக்கவில்லை. கடை முழுசும் மரங்கள் வெட்டி வெட்டி அடுக்கி இருக்கிறதை பார்க்கும் போது எல்லாம் ஒரு பிணக்குவியலுக்கு நடுவே இருக்கிறதை போலவே தோணும். ஆனாலும், எனக்கு இதை தவிர வேறு எதுவும் தெரியாதே... இத்தனை மரத்தை வெட்டி அழிச்சி வயிறு வளர்த்த பாவமோ என்னவோ என் குடும்பம் இப்படி சீரழிஞ்சி கிடக்கு என்று அழுது விட்டார். அவரை ஆறுதல் படுத்தவே சில மணி நேரம் ஆனது. பின்னர், அருகில் இருந்த இன்மையில் நன்மை தருவார் கோவிலுக்குப் போனோம். மிகச் சிறிய வயதில் இருந்தே எல்லாவற்றையும் வியாபாரமாகவே பார்த்துப் பழகிய அவருக்கு என்ன சொல்வது என்று யோசித்தேன். மரம் என்னும் உயிர்களை வெட்டி வெட்டி அதையே வியாபாரமாக பார்த்த காரணத்தாலேயே குடும்பம் பல இன்னல்களில் இருப்பதாக உணரும் மனிதர் எந்த கோவில் போய் எப்படி பாவங்களை தொலைக்க முடியும். மனதின் பிரச்சனை ஆரம்பித்த இடத்திலேயே முடிவையும் தேட வேண்டும். எனவே நண்பருக்கு மர நாற்றுக்களை உற்பத்தி செய்யும் பண்ணை ஒன்றை ஆரம்பிக்கச் சொல்லி அறிவுறுத்தினேன். உற்பத்தி செலவு என்னவோ அதை தாண்டி பெரிய லாபம் இல்லாமல் அனைவருக்கும் மரகன்றுகளை கொடுங்கள் என்றேன். என்னுடைய இந்த கருத்து அவருக்கு மிகவும் பிடித்துப் போனது. இன்னும் ஓரிரு மாதங்களில் இதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுப்பதாக உறுதி சொன்னார். எதோ என் மூலமாக ஒரு தெய்வ வாக்கு கிடைத்த சந்தோசத்தில் அவர் என்னை பிரிந்து சென்றார். விரைவில் அவர் மூலமாகவும் இந்த இயற்கைக்கு சில நன்மைகள் நடக்கட்டும் என்று வேண்டிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.

நண்பரைப் பற்றி மறந்தாலும் அவரின் வேதனைகளின் ஊற்றாக இருந்த மரம் வெட்டி செய்யும்  வியாபாரம் அத்தனை பாவமானதாக இருக்குமா என்று வழக்கம் போல கூகுளை அலசினேன். எனக்கு கிடைத்த பதில்கள் .....

பச்சை மரத்தை வெட்டுபவருக்கு வந்து சேரும் பாவங்கள்:-
அரச மரம் = அற்ப ஆயுள்,விபத்தில் மரணம்,
ஆல மரம்= வம்சம் அழியும்
இலந்தை மரம்=செல்வம் கொள்ளை போகும்
ஈச்ச மரம்= மாரடைப்பு,நாவரட்ச்சியால் மரணம்
உதிய மரம்= தலையில் அடிபட்டு மரணம்
ஊஞ்ச மரம்= மருத்துவம் பலன் தராமல் மரணம்(தவறான மருத்துவம்)
எலுமிச்சை மரம்=இடி விழுந்து மரணம்
புளிய மரம்= ரத்த கொதிப்பு,மாரடைப்பால் மரணம்
வேப்ப மரம்=காமாலை,உடம்பில் புண் ஏற்பட்டு மரணம்
பனைமரம்= வம்சம் அழியும்
தென்னை மரம்= வளர்ந்த குழந்தைகள் கண்முன்னே இறக்கும்
புங்க மரம் = தீராத நோய் வரும்
... ... ...
ஆக மொத்தம் எந்த மரத்தை வெட்டினாலும் பாவம் நிச்சயமாம். இதை படிக்கும் போது நண்பர் காளிமுத்து தங்களாச்சேரி கிராமத்தில் சாலை ஓரங்களில் இருந்த பனை மரங்களை விழுங்கிய சில குடும்பங்களில் நிகழ்ந்த துர்மரணங்கள் பற்றி சொன்ன செய்திகள் உண்மையாக இருக்குமோ என்று கருதத் தோணுகிறது. நண்பர் கிருஷ்ணமூர்த்தி கூட இது போன்ற சில மர முழுங்கிகளைப் பற்றி பேசி உள்ளார். அவர்களின் குடும்பங்களும் நாசமானது தெரிந்ததே. இப்படி சில நூறு மரங்களை வெட்டி சாய்த்து வயிறு வளர்த்தவர்கள் நிலையே இப்படி என்றால் சாலையோரங்களில் இருக்கும் ஆயிரம் ஆயிரம் மரங்களை அழிக்கும் திட்டங்களை இடுபவர்கள் என்ன நிலைக்குப் போவார்கள். வாழ்வின் தேவைகளுக்காக   மரங்களை வெட்டுவதற்கும், அதையே வியாபாரமாகச் செய்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.

மரங்களை வெட்டினால் பாவம் வரும் என்று சொல்வது எல்லாம் உண்மையோ, பொய்யோ எனக்குத் தெரியாது. எனக்குத் தெரிந்த ஒரு செவ்விந்திய பழமொழிஎன்ன என்றால் "உயிர் வாழ்விற்காக இயற்கையில் இருந்து நீங்கள் ஒன்றைப் பெறலாம்... ஆனால், உங்கள் குழந்தைகள் உயிர் வாழ அங்கே இயற்கையை மிச்சம் வையுங்கள். ஏன் என்றால் இயற்கை என்பது அடுத்த தலைமுறைகளுக்கான சொத்து. அதை அனுபவிக்க மட்டுமே உங்களுக்கு உரிமை உள்ளது... அழிக்க அல்ல".  எந்த சிந்தனையும் இல்லாமல் இயற்கையின் மீது மனிதர்கள்  பேராசை கொண்டு நடத்தும் வெறியாட்டம், அடுத்த தலைமுறையை   சவக்குழிகளில் நிரந்தரமாக தள்ளிவிடும்.
----------------------------------------------------------
படித்து அதிர்ந்தது!!!!
அன்புடன்
வாத்தியார்
=======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

21.4.20

தன்மானச் சிங்கங்கள் வாழ்கின்ற பூமி!


தன்மானச் சிங்கங்கள் வாழ்கின்ற பூமி!

#சுப்ரமணியஸ்வாமி ஒருமுறை இப்படி #பேசினார் ...

இஸ்லாமியர்கள் #மெசபடோமியாவை 50 வருடங்களில் பிராந்தியத்தையே இஸ்லாம் மயமாக்கினார்கள்

கிறிஸ்தவர்கள்  200 ஆண்டுகளில் #ஐரோப்பா முழுவதையும் கிறிஸ்தவ நாடுகளாக்கினார்கள்

ஆசியாவின் முகப்பான #ஆப்கானிஸ்தானையும் சடுதியில் இஸ்லாம் நாடாக்கினார்கள்

#அமெரிக்கா கூட பழம் #செவ்விந்திய வழக்கங்களை விட்டு 100 ஆண்டுகளுக்குள் முழு கிறிஸ்தவமானது

ஆனால் #இந்தியா ...

2 ம் நூற்றாண்டிலிருந்து அவ்வப்போதும்,
14ம் நூற்றாண்டிலிருந்து 350 ஆண்டுகள் மொகலாயர்களாலும்
பின் 300 ஆண்டுகள் ஆங்கிலயே கிறிஸ்தவர்களாலும்
#பிரும்ம #பிரயத்தனம்  செய்யப்பட்டும்  இன்றுவரை 85% மக்கள் #இந்துக்களாகவே இருக்கிறார்கள்

#காரணம் ..? 
இந்துமகா சமுத்திரம் ...#அழிக்க முடியாது #என்றார் ✨

நான் கூட இந்துமதமும் இந்துக்களும் அமைதியானவர்கள் .எல்லா  #தத்துவங்களையும் தன்னகத்தே கொண்டவர்கள் . அதனாலால் தான் அழிவில்லை என்று நம்பினேன் ஆனால் உண்மை அதுவல்ல

உண்மையான காரணம் .....#போர் ✨

இந்துக்கள் இந்திய அரசர்கள் ஒருநாளும் தங்கள் இந்து #மதத்தையும் #கலாச்சாரத்தை விட்டுக்கொடுக்கவே  இல்லை .அதற்காக  போரிடுவதை நிறுத்தவே இல்லை.

4ம் நூற்றாண்டில் #ராஜபுத்திர பிதாமகர் பாப்பா ராவல் முகம்மது காசிமை வென்று சிந்துநதிக்கு அப்பால் துரத்தியத்தில் ஆரம்பித்து

#மேவார் மார்வார் சௌகான்கள் என்று பெரும் வீரர்கள் வாளை உருவிக்கொண்டே தான் இருந்தார்கள்

அங்கங்கே சமாதனம் செய்தாலும் மதத்தையும் கலாச்சாரத்தையும் காயப்படுத்தினால் வீறுகொண்டு எழுவார்கள் என்ற பயத்திலே இஸ்லாம் மன்னர்கள் இருந்தார்கள்

சாதாரண ஏழை குடிமகன் கூட #ஜஸியா  வரி கட்டினானே தவிர மதம் மாறவில்லை. #கங்கையில் குளிக்க விளக்கு எரிக்க கூட வரி  விதிக்கப்பட்டது

வரி  கட்டி கஜானாவை நிரப்பினார்களே  தவிர குளிப்பதை யாரும் நிறுத்தவில்லை

அடுத்தது வந்த மாவீரன் #சிவாஜி உயிர் ஒன்றுமே இல்லை என்று நிரூபித்து மதத்தை காத்ததோடு தன் எண்ணங்களையும் விதைத்துவிட்டே விண்ணுலகம்  சென்றார்

அடுத்தடுத்து ராஜாராம் தாராபாய் என்று தோன்றிக்கொண்டே இருந்தார்கள் கலாச்சாரத்தை காக்க  வியாபாரம் பண்ணவந்த வெள்ளையர்களும்  அறிந்திருந்தார்கள் அவர்களது எல்லை எதுவென்று மொத்தத்தில் பார்த்தால் இந்திய மக்களின் மன்னர்களின் போர்தான் நமது கலாச்சாரத்தை காத்திருக்கிறது

தாய்மார்கள் தாலாட்டுக்கு பாடுவார்களாம் இப்படி

"தன்மான சிங்கங்கள் வாழ்கின்ற பூமியில் வில்லேந்தும் வீரர் தோன்றுவார் !"

ஒவொரு பகுதியிலும், நாட்டிலும் வீர்கள் தோன்றிக்கொண்டேதான் இருந்திருக்கிறார்கள்

என்ன ...#கடந்த அறுபதுவருடங்கள் #அடிமைகளால் ஆளப்பட்டோம் ......

 இப்போது மறுபடியும் #பாரத #தேசம் காக்க, #இறையாண்மை காக்க, கலாச்சாரம் காக்க  ஒரு #வில்லேந்திய #வீரன் வந்து விட்டார் ...

இனி எல்லாம் #ஜெயமே.

வாழ்க பாரதம் 🇮🇳
------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
=======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

18.4.20

அசைவ உணவு வேண்டுமா அல்லது வேண்டாமா?


அசைவ உணவு வேண்டுமா அல்லது வேண்டாமா?

*தர்ம நெறி *

*அசைவம் சாப்பிடலாமா?*
*ஓஷோ அவர்களின் விளக்கம்*
 
இறை நம்பிக்கை உள்ளவர்கள்- அசைவம் சாப்பிடலாமா கூடாதா ????                           

இந்த கேள்வியை கேட்காத மனிதர்கள் இல்லை. இதற்கு பதில் தராத குருவும் இல்லை ஆயினும் கேள்வி தொடர்கிறது .

*இதோ ஓஷோ அவர்களின் பதில்.*

உணவுக்கும் இறைவனுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை..

உணவுக்கும் *கடவுள் கோபிப்பார்* என்பதற்கும்எந்த சம்மந்தமும் இல்லை.

உணவுக்கு *கடவுள் தண்டிப்பார்* என்பதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை.

*உணவுக்கும் உடலுக்கும்* சம்மந்தம் உண்டு

*உணவுக்கும் கர்மாவிற்கும்* சம்மந்தம் உண்டு

*உணவுக்கும் குணத்திற்கும்* சம்மந்தம் உண்டு*

*உணவுக்கும் மனிதன் வாழ்விற்கும்* சம்மந்தம் உண்டு.

*உணவுக்கும் மனிதன் ஆயுளுக்கும்* சம்மந்தம் உண்டு.

*உணவுக்கும் மனித மனதிற்கும்* சம்மந்தம் உண்டு.

*மனதிற்கும் இயற்கைக்கும், இறைவனுக்கும் சம்மந்தம் உண்டு..*
------------
1. *கர்மாவின்* காரணமாக பிறவி எடுத்தவன் மனிதன்..

அந்த கார்மாவை கரைக்கவே *மனித பிறவி.*

2. தாவர உயிரினங்களுக்கு *கர்ம பதிவுகள் குறைவு.*

மாமிச உயிரினங்களுக்கு *கர்ம பதிவுகள் அதிகம்.*

3. எந்த உணவை மனிதன் உண்டாலும் அந்த உணவான உயிர்களின்  *பாவ கணக்கை* அந்த மனிதனே அடைக்க வேண்டும்.

4. அம்மாவை தேடி அலையும் தாயில்லாத குஞ்சுகள் மற்றும் குட்டிகள்  *தாயின் மனம்* மற்றும் அந்த *குட்டியின் மனம்* எவ்வாறு தேடி தவித்து இருக்கும்?

அதன் தாயை கொன்று தின்னும் மனிதன் உணர வேண்டியது இதுதான்.

5. அதிக பாசம் உள்ள ஆடு கோழி மீன் இவைகளை மனிதன் உண்பது *பாச தோஷம்* ஆகும்.

அந்த தோஷத்தை மனிதன் அடைந்தே தீருவான்.

அந்த கர்மாவையும் சேர்த்து கரைக்க ஒருவன் தைரியமாக முன்வந்தால் அவன் தாராளமாக அசைவம் உண்ணலாம்.

*இதில் கடவுளுக்கு என்ன பிரச்சனை ???*
------------------ --------------
ஒருவர் வங்கியில் ஒரு லட்சம் கடன் வாங்குகிறார். மற்ற ஒருவர் ஒரு கோடி வாங்குகிறார்.

இதில் மேனேஜருக்கு என்ன பிரச்சனை. கடன் வாங்கியவனே கடனை கட்ட வேண்டும்.

6. சில நேரங்களில் விரதம் இருப்பது உடலுக்கு மட்டும் நல்லதல்ல ...

பிறந்த பிறவிக்கும் நல்லதே காரணம் அந்த விரத நாளில் மனிதனால் எந்த உயிரும் பாதிக்காததால் ...

7. காட்டில் கூட ஆடு மாடு யானை குதிரை ஒட்டகம் இவைகளை மிருகம் என்று யாரும் கூறுவது இல்லை.

புலி சிங்கம் போன்ற அசைவ உணவு உண்ணியே மிருகம் என்று கூறுகின்றோம்.

ஆக, சைவ உண்ணிகளுக்கு *மிருகம்* என்ற பெயர் காட்டில் கூட இல்லை.

8. *உடலால் மனித பிறவி சைவம்.*
*உயிரால் மனித பிறவி சைவம்.*
குணத்தால் மனித பிறவி அசைவம் மற்றும் சைவம்.

9.ஆடு, மாடு, மான், யானை போன்றவை *உடலால் சைவம். உயிரால் சைவம். மனதாலும் சைவம்.*

*ஆகவே, மனித பிறவியின் உணவு சைவமாக இருத்தலே மனிதனின் தர்மமாகிறது.*

என்பதால் *அறிவில் சிறந்த நம் முன்னோர்கள் மனித பிறவிக்கு சிறந்தது சைவம் என வழிகாட்டி சென்றார்கள்.*
------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
===============================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

24.2.20

தகப்பன் சாமிகள்!!!!


தகப்பன் சாமிகள்!!!!

கோவை போகும் வழியில், மதிய உணவுக்காக பஸ்ஸை ஒரு ஹோட்டலில் நிறுத்திய போது தான், அவரை கவனித்தேன்,

அந்த பெரியவருக்கு சுமார் அறுபது வயதிருக்கும்...

கையில் சிக்னல் ஸ்டிக்கர் லைட்டும், வாயில் விசிலுமாய்,

ஹைவேஸில் போகின்ற வண்டிகளை எல்லாம் சாப்பிட அழைத்துக் கொண்டிருந்தார்...

வயோதிகம் காரணமாகவோ,  நின்று கொண்டே இருப்பதன் காரணமாகவோ, 
தனது கால்களை வலி தாளாமல், கால் மாற்றி தவித்துக் கொண்டே இருந்தார்...

டீ சாப்பிட்டு வந்த பிறகு கவனித்தேன், அவர் இடம் மாறவேயில்லை.

அந்த இடத்தின் என் மனைவியோடு சில செல்பிகளை எடுத்துக் கொண்டே மீண்டும் அவரை கவனித்த போதும், அவர் அமரவே இல்லை.

இது போன்ற எளிய மனிதர்களை கண்டால், இயன்றதை தருவது, என் வழக்கம்.

அருகே சென்று, தோளைத் தொட்டு திருப்பி, நூறு ரூபாய் பண நோட்டை நீட்டினேன், பணத்தை கவனித்தவர்,  மெல்ல புன்னகைத்தே, வேணாம் சார் என மறுத்தார்.

அவர் மறுத்தது, எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.           

ஏனெனில் எப்படியும் அது, அவரது ஒரு நாள் சம்பளமாகத்தான் நிச்சயமிருக்கும்.

ஏன் எனக் கேட்டேன்.

அவங்க கொடுத்திட்டாங்க..

" யாரு " திரும்பி, பஸ் அருகே நின்று கொண்டிருந்த என் மனைவியை காண்பித்தார்.

நிச்சயமாய் நான் கொடுத்ததை போல, அவள் கொடுத்திருக்க வாய்ப்பேயில்லை.

பணம் கண்டு பேராசை படாத அவரின் உண்மையும், உண்மையை சொல்லி வேண்டாமென மறுத்த அவரின் நேர்மையும், எனக்கு மிகவும் பிடித்திருந்தது...

மெல்ல மெல்ல பேச்சு கொடுத்தேன்.

" பேரென்னங்க ஐயா "

"முருகேசனுங்க "

" ஊருல என்ன வேல "

" விவசாயமுங்க "

" எத்தனை வருசமா இங்கே வேலை செய்யறீங்க "

" நாலு வருசமா செய்றேங்க "

" ஏன் விவசாயத்த விட்டீங்க "

மெல்ல மௌனமானார்.

தொண்டை அடைத்த துக்கத்தை, மெல்ல மெல்ல முழுங்கினார்.         

கம்மிய குரலோட பேச துவங்கினார்.

ஆனால், என்னோடு பேசிக் கொண்டிருந்த போதும்,

அவரின் முழு கவனமும், சாலையில் செல்லும் வண்டிகளை, அவ்வப்போது அழைப்பதிலேயே குறிக்கோளாகவே இருந்தது.

" எனக்கு திருநெல்வேலி பக்கம் கிராமமுங்க,

ஒரு பொண்ணு,ஒரு பையன், விவசாயந்தான் முழு நேர பொழப்பே நமக்கு.
ஆனா, மழை இல்லாம, விவசாயமெல்லாம் பாழா போச்சு சார்.

நானும் முடிஞ்சவரை கடன, உடன வாங்கி, என்னென்னமோ பண்ணி பார்த்தேன், ஒண்ணுமே விளங்கலே,

கடைசிவரை கடவுளும் கண்ணே தொறக்கலை.

இதுக்கு மேல தாளாதுன்னு, இருக்கிற நிலத்த வித்து, கடனெல்லாம் அடைச்சுட்டு, மிச்ச மீதிய வச்சு, ஒரு வழியா பொண்ணுக்கு கல்யாணத்த பண்ணினேன்.

பையன் இருக்கானே, அவனைப் படிக்க வைக்கணுமே, அதுக்காக, நாலு வருசத்துக்கு முன்னாடி தான் இங்கே வந்து வேலைக்கு  சேர்ந்தேன்.
மூணு வேளை சாப்பாடு. தங்க இடம், மாசம் 7500/- ரூபா சம்பளம்.
இந்த வேலைய பாத்துகிட்டே, பையனை என்ஜினியருக்கு படிக்க
வைச்சேன். படிச்சி முடிச்சிட்டு, போன மாசம் தான், பையன்
கோயம்புத்தூருல வேலைக்கு சேர்ந்தான்.

அப்படியா, உங்க பையன் என்ஜுனியரா, சூப்பர்.

சரி, அதான் பையன் வேலைக்கு போறான்ல,

நீங்க ஊரோட போக வேண்டியது தானே பெரியவரே,

நிச்சயமா போவேன் சார்,

பையனே "நீ கஷ்டப் பட்டது போதும்ப்பா, வந்துடு, எல்லாம் நான் பாத்துக்கிறேன்னு" தான் சொல்லுறான், ஆனா,இன்னும் கொஞ்சம் கடன் இருக்கு, அதையும் அடைச்சிட்டா ஊருக்கு போயிடுவேன் சார் "

" எப்போ "

" இன்னும் ஒரு அஞ்சு மாசம் ஆவும் சார் "

" சரி, கடவுள் இருக்கார் பெரியவரே,

இனி எல்லாமே நல்லதாவே நடக்கும் ".

பெரியவர் சிரித்தார்.

நாங்கள் பேசிக் கொண்டிருந்த போது,

ஹோட்டலிலிருந்து ஒரு பையன் வந்து, அவரிடம் காதில் ஏதோ சொன்னான்,

பெரியவர் முகம் மலர்ந்தார்.

" கொஞ்ச நேரம் உட்கார சொல்லிருக்காங்க" என்றார்.

"என்ன சொன்னீங்க சார்.

கடவுளா !!!

கடவுள் என்ன சார் கடவுளு,

அவன் ரொம்ப ரொம்பக் கொடுமைகாரன் சார்.

இல்லன்னா, ஊருக்கே சோறு போட்ட என்னைய, கடனாளியாக்கி இப்பிடி நடு ரோட்டுல நின்னு, சாப்பிட வாங்கன்னு கூப்பிட வைப்பானா,

" மனுஷங்க தான் ஸார் கடவுள் " முகம் தெரியாத, என்னை நம்பி இந்த வேலையை தந்து, நான் வேலைகாரன் தானேன்னு கூட பாக்காம, இதோ இந்த  வயசானவனுக்கு கால் வலிக்கும்ன்னு உட்காற சொல்ற, *என் முதலாளி
ஒரு கடவுள்*,

"உங்கப்பா ஏன் இப்படி கஷ்டப் படனும், பேசாம நம்ம கூட வந்திருக்க சொல்லு, கூழோ, கஞ்சோ இருக்கிறத பகிர்ந்து சாப்பிடலாம்னு " சொன்ன, எம் பொண்ண சந்தோஷமா வச்சிருக்கிற, *என் மாப்பிள்ளை ஒரு கடவுள்*.

கஷ்டப் பட்டு அப்பா படிக்க வச்சதை கொஞ்சம் கூட மறக்காம, " நீ வேலைக்கு போவாதப்பா,எல்லாம் நான் பாத்துகிறேன்ன்னு சொன்ன  *என் புள்ள* *ஒரு கடவுள்*

நான் கடனை அடைச்சுடுவேன்னு என்னை நம்பி, தொந்தரவு பண்ணாத,*எனக்கு கடன் கொடுத்தவங்க எல்லாருமே ஒரு
கடவுள்*.

இங்கே வந்து என்னையும் சக மனுசனா மதிச்சிஅப்பப்ப ஆதரவா
பேசுற, *உங்களை மாதிரியே இங்கே வர்ற, ஆளுங்க எல்லாருமே
தான் சார் கடவுள்*.

" மனுசங்க தான் சார் கடவுள் "

எனக்கு அந்த பெரியவரை அப்படியே கட்டி அணைக்கவே தோன்றியது,

இருக பற்றி அணைத்துக் கொண்டேன்.

வேண்டாமென மறுத்த போதும்,

பாக்கெட்டில் பல வந்தமாய் பணம் திணித்தேன்.

பஸ் கிளம்பும் போது, மெல்ல புன்னகைத்த,

முருகேசன் என்கிற அந்த பெரியவரை பார்த்து,
தலை வணங்கியே, கும்பிட்டேன்.

ஒவ்வொரு வீட்டுக்குமே, இது போன்ற *தகப்பன் சாமிகள்*, நிறைய பேர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

நமக்குத்தான் எப்போதுமே *கும்பிடவோ, நினைத்துப் பார்க்கவோ மனம் வருவதே இல்லை*, 🤝

படித்ததில் பிடித்தது
----------------------------------------
அன்புடன்
வாத்தியார்
======================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

11.2.20

சாக்ரட்டீஸ் சொன்ன அறிவுரை!!!!


சாக்ரட்டீஸ் சொன்ன அறிவுரை!!!!

நல்ல, நட்பை இழந்து விடாதீர்கள்... !!!*💐

ஒருமுறை சாக்ரட்டீஸ் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும் போது ஒருவர் வந்து அவருடைய நண்பரைப் பற்றி ஏதோ கூற முயன்றார்.

உடனே சாக்ரட்டீஸ் அவரிடம் , "என் நண்பரைப் பற்றி என்னிடம் கூற விரும்பினால் அதற்கு முன் 3 கேள்விகளை கேட்பேன்.
மூன்று கேள்விக்கும் ஆம் என பதில் இருந்தால் மட்டுமே நீங்கள்
அவரைப் பற்றி கூறலாம்"என்றார்.

சாக்ரட்டீஸ் முதல் கேள்வியை கேட்டார்

1). "அவர் செய்த செயலை நேரடியாகப் பார்த்துவிட்டு தான் அவரைப் பற்றி கூறுகிறாயா...???" என்று கேட்டார்.

👉 *இல்லை என பதில் சொன்னார்.*

2). "அவரைப் பற்றிய நல்ல விஷயத்தை கூறப்போகிறாயா...??? " என்று இரண்டாவது கேள்வியைக் கேட்டார்.

👉 *இல்லை என பதில் சொன்னார்.*

3). "அந்த நண்பரைப் பற்றி கூறினால் யாராவது பயனடைவார்களா......???" என்ற மூன்றாவது கேள்வியைக் கேட்டார்.

👉 *இதற்கும் இல்லை என்றே பதில் வந்தது.*

👉 *"யாருக்கும் பயனில்லாத,*

👉 *நல்ல விஷயமுமில்லாத,*

👉 *நேரடியாக நீங்கள் பார்க்காத,*

*என் நண்பரைப் பற்றிய சம்பவத்தை தயவு செய்து என்னிடம் கூறாதீர்கள்" என்றார்.*

நல்ல நட்பு ஆரோக்கியமான விவாதங்களையே மேற்கொள்ளும்.

நண்பர்கள் ஹைட்ரஜன் வாயுவினால் நிரப்பப் பட்ட பலூன் போன்றவர்கள்.

*நீங்கள் விட்டு விட்டால் எங்கோ பறந்து சென்று விடுவார்கள்.*

👉 *பத்திரமாக பிடித்துக் கொள்ளுங்கள்.....!!!*

உலகில் சிறு தவறு கூட, செய்யாதவர்களே இல்லை.

மேலும் மன்னிக்க முடியாத குற்றம் என்றும் ஏதுமில்லை........!!!

எனவே,

வார்த்தைகளால் யாரையும் பழிக்காதீர்கள்......!!!

வசவுகளால் இதயங்களை கிழிக்காதீர்கள்.......!!!

நல்லுறவை வன்முறையால் இழக்காதீர்கள்.......!!!

நட்புறவை இழி மொழியால் துளைக்காதீர்கள்.......!!!

மனிதர்கள் ரத்தமும், சதையும், உணர்ச்சிகளாலும் உருவாக்கப்பட்டவர்கள்.

*நீங்கள் யாரையும் இழந்து விடாதீர்கள்.......!!* 

நானும்  இழக்க மாட்டேன்.....
-------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!!!
அன்புடன்
வாத்தியார்
==============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

26.12.19

நீங்கள் அவசியம் காண வேண்டிய காணொளிகள்!


நீங்கள் அவசியம் காண வேண்டிய காணொளிகள்!

1. 2500 ஆண்டுகள் பழமையும் பெருமையும் வாய்ந்த வீட்டைப் பற்றி ஒருவர் விவரிக்கிறார். பார்த்து மகிழுங்கள்!



2. இறைவனைப் பற்றி அற்புதமாகப் பேசுகிறார் ஒரு அன்பர். கேட்டு மகிழுங்கள்!



3. ஆண் ஒரு சக்தி: பெண் ஒரு சக்தி. அருமையாக விவரித்துப் பேசுகிறார் அன்பர் கோபிநாத், கேட்டு மகிழுங்கள்



4. உன்னைப் பாதுகாக்கக்கூடியது எது? விடையளிக்கிறார் ஒரு அன்பர். கேட்டு மகிழுங்கள்!



அன்புடன்
வாத்தியார்
========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

30.10.19

கவியரசர் கண்ணதாசனின் கீதை!!!!


கவியரசர் கண்ணதாசனின் கீதை!!!!

*எதைச் சார்ந்து நிற்கிறோமோ, அதன் வடிவத்தை அடைந்து விடுகிறோம்*

`பன்றியோடு சேர்ந்த கன்றும் மலம் தின்னும் என்பார்கள்.

பழமொழி கேட்பதற்கு எப்படியோ இருக்கிறதா? நல்லது. ஆனால் உண்மைதான்.

யாரோடு, நீ பேசுகிறாயோ அவனுடைய நடத்தையைப் பொறுத்தே உன் புத்தி செயல்படுகிறது. ஏன், வர்ணங்களிலேகூட ஒரு மனோதத்துவம் உண்டு.

கறுப்பு வர்ணத்தையே பார்த்துக் கொண்டிருப்பவனுக்குக் கல்மனம்; வெள்ளை நிறத்தைப் பார்த்தால் தூய்மை; பச்சை தயாள சிந்தை; மஞ்சள் மங்கலமுடையது.

வாசனையிலும் அந்தப் பேதம் உண்டு.

நறுமண மலர்களை முகரும் போது உன் மனமும், முகமும் பிரகாசிக்கின்றன.

நாற்றத்தை முகரும் போது உனக்கே அருவருப்பு.

அதுவே உனக்குப் பழக்கமாகி விட்டால், உன்னைப் பார்க்கும்போதெல்லாம் எதிரிகளுக்கு அருவருப்பு.

சகவாச தோஷமும் இதுதான்.

நான் பன்னிரண்டு வயதில் தமிழ் வித்துவான் பரீட்சையில் புகுமுக வகுப்பு எழுதினேன். அப்போது அமராவதி புதூர் குருகுலத்தில் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அங்கேயே வித்துவான் பட்டப்படிப்புத் தொடங்கினார்கள். அப்போது வித்துவான் பட்டப்படிப்புக்கு இவ்வளவு ஆங்கிலப்படிப்பு வேண்டும் என்ற விதிமுறை இல்லை.

முதல் வருடம் `என்ட்ரன்ஸ்’ பாஸ் செய்தேன். அப்போது எனக்குத் தமிழ் கற்றுக் கொடுத்த ஆசிரியர் ராமநாதபுரம் வித்துவான் ராமசாமிப் பிள்ளை. அவரது எளிய தோற்றம் என்னைக் கவர்ந்தது.

அத்தோடு நான் கிராமத்துக்கு வந்துவிட்டேன்.

வித்துவான் படிப்பைத் தொடர வேண்டும் போல் தோன்றிற்று.

பக்கத்து ஊரான கீழ்ச்செவல்பட்டியில் இருந்த வித்துவான் முத்துகிருஷ்ண ஐயரிடம், தினமும் நான்கு மைல்கள் நடந்து போய்த் தமிழ் இலக்கியம் கற்றுக் கொண்டேன்.

அதையும் முழுமையாகக் கற்கவில்லை.

குருகுலத்திலும், பிறகு சென்னைக்கு வந்ததும், பன்மொழிப் புலவர் அப்பாத்துரையார் அவர்களிடம் தான் பல விஷயங்களைத் தெரிந்து கொண்டேன்.

குருகுலத்தில் நான் படித்த போது அவர்தான் தலைமை ஆசிரியர்.

அவர்களிடம் நான் பாடம் கற்றுக் கொண்டேன்; பழகியும் வந்தேன்.

அந்தப் பழக்கத்தில் தான், எனக்குப் பணிவு ஏற்பட்டது.

புதுக்கோட்டை, ராயவரத்தில் ஒரு பத்திரிகையில் நான் ஆசிரியராக இருந்த போது, சில நண்பர்களின் தொடர்பு எனக்கு ஏற்பட்டது. அந்தத் தொடர்பில்தான் மதுப்பழக்கம் ஆரம்பமாயிற்று.

பன்னிரண்டு வருஷங்களுக்கு முன் திருமுருக கிருபானந்த வாரியாரின் தொடர்பு ஏற்பட்டது.

திடீரென்று அவர் எனக்கு ஒருநாள் டெலிபோன் செய்து, ஒரு திருக்குளத் திருப்பணிக்காக என்னைப் பார்க்க வருவதாகச் சொன்னார்.

நான் உடனே, `சுவாமி நீங்கள் வரவேண்டாம்; நானே வருகிறேன்’ என்று கூறி ஒரு நண்பரிடம் ரூபாய் ஐயாயிரம் கடன் வாங்கிக் கொண்டு, நேரே சிந்தாதிரிப் பேட்டையிலுள்ள அவரது இல்லத்திற்குச் சென்றேன்.

அவர் காலைத் தொட்டு வணங்கி, அந்தப் பணத்தைக் கொடுத்தேன்.

பிறகு அவர் சொற்பொழிவுகளைக் கேட்க ஆரம்பித்தேன். அதிலிருந்து என் போக்கே மாறி விட்டது.

1949 இல் நாத்திக நண்பர்களின் சகவாசத்தால் நாத்திகனானவன், வாரியார் சுவாமிகளின் சகவாசத்தால் `அர்த்தமுள்ள இந்துமதம்’ எழுதத் தொடங்கினேன்.

பஜகோவிந்தத்தில் ஸ்ரீ ஆதிசங்கரர் மிக அழகாகச் சொன்னார்:

இன்று எனக்கே நான் சிறந்தவனாகக் காட்சியளிக்கிறேன்.

ஸத்ஸங்கதேவே நிஸ்ஸங்கத்வம்
நிஸ்ஸங்கத்வே நிர்மோஹத்வம்
நிர்மோஹத்வே நிஸ்சலத்வம்
நிஸ்சலதத்வே ஜீவன்முக்தி

நல்ல ஞானிகளுடைய தொடர்பு ஏற்பட்டால், சொந்தம் பந்தம், மயக்கம் விலகிவிடும்.

அது விலகினால், காசு பணத்தின் ஆசை விலகிவிடும்.

அந்த ஆசை விலகிவிட்டால், மனதுக்கு நிம்மதி வந்துவிடும்.

அந்த நிம்மதி வந்துவிட்டால், ஆத்மா சாந்தியடையும்.

நல்ல சகவாசத்தில் எவ்வளவு பெரிய வாழ்க்கை அடங்கிக் கிடக்கிறது!

காஞ்சிப் பெரியவர்களைப் பார்க்கும் போதெல்லாம், `நாமும் அவரது மடத்தில் ஊழியம் பார்க்கக் கூடாதா?’ என்று எனக்குத் தோன்றுகிறது.

கட்டுப்பாடற்ற வாழ்க்கை நடத்தும் நண்பர்களோடு சேர்ந்து விட்டாலோ, `இதல்லவோ வாழ்க்கை’ என்று தோன்றுகிறது.

எதைச் சார்ந்து நிற்கிறோமோ, அதன் வடிவத்தை அடைந்து விடுகிறோம்.

அதனால்தான் நான் இப்போதெல்லாம் வேடிக்கை விளையாட்டுக் கூட்டத்தில் இருந்து விலகியே நிற்கிறேன். சார்ந்தால் மேதைகளைச் சாருகிறேன்; இல்லையேல் தனிமையை விரும்புகிறேன்.

லண்டனில் இருக்கும் வரை கீழ்த்தரமானவன் என்று பெயர் வாங்கிய கிளைவ், இந்திய மண்ணுக்கு வந்ததும் வீரனாகி விட்டான்.

கணிகையாகத் தொழில் நடத்திய ஒருத்தி, புத்தபிரானைச் சந்தித்ததும் ஞான தீட்சை பெற்று விட்டாள்.

திருமாலை வணங்கிய சேர மன்னன், முடி துறந்து குலசேகர ஆழ்வாரானான்.

கண்ணனை நம்பிய குசேலன் குபேரனானான்.

துரியோதனன் சோற்றைத் தின்று விட்டதால் தான், சூரகர்ணன் அநியாயத்திற்கே துணை போக வேண்டி வந்தது.

சகுனியைச் சார்ந்த கெளரவர்கள் அழிந்தார்கள்; கண்ணனைச் சார்ந்த பாண்டவர்கள் வாழ்ந்தார்கள்.

அண்ணனைத் துறந்து ராமனைச் சார்ந்த விபீஷணன் அரசுரிமை பெற்றான்.

இராவணனை அண்டி நின்றார், அவனது முடிவையே பெற்றார்கள்.

ராமனைச் சார்ந்து நின்றதால், ஒரு குரங்குக்குக் கூட நாட்டிலே கோயில் தோன்றிற்று.

`சிறிய இனங்களைக் கண்டு அஞ்சுங்கள்; சேராதீர்கள்’ என்றான் வள்ளுவன்.

செம்மண்ணில் மழை விழுந்தால், தண்ணீரின் நிறம் சிவப்பு; கரிசல் காட்டில் விழுந்தால் கருப்பு.

மனிதனின் சேர்க்கையைப் பொறுத்தே மதிப்பு இதுவும் வள்ளுவன் சொன்னதே.

`உன் மனதைப் பொறுத்து உனக்கு உணர்ச்சிகள் எழலாம்; நீ சேரும் இனத்தைப் பொறுத்தே உன் யோக்கியதை தீர்மானிக்கப்படும்’ என்பது வள்ளுவன் சொல்லே.

நல்ல கூட்டத்தில் சேர்ந்தால், எல்லாப் பொருள்களும் கிடைக்கும்.

திருடர்களுடனே சேர்ந்தால், நீ சிறைச்சாலைக்குத் தப்ப முடியாது திருடாவிட்டாலும் கூட.

நல்லோர் உறவைப் போல் துணையும் இல்லை; தீயோர் உறவைப் போல துன்பமும் இல்லை. நல்லது. இவன் நல்லவன், இவன் கெட்டவன் என்று எப்படித் தெரிந்து கொள்வது?

அவனோடு ஒட்டாமலேயே பல நாட்கள் ஆராய்வது, ஆராய்ந்து தெளிந்த பின் உறவு கொள்வது.

'ஆராயாமல் ஒருவனை நல்லவன் என்று முடிவு கட்டுவதும் தப்பு, நல்லவன் என்று தெரிந்த பிற்பாடு அவன் மீது சந்தேகப்படுவதும் துன்பம்’ என்றான் வள்ளுவன்.

மனைவியைத் தேர்ந்தெடுக்கும் போது இருக்கும் புத்தி, மற்ற சகவாசங்களைத் தேர்ந்தெடுக்கும் போதும் இருக்க வேண்டும்.

அதற்கு எதிர்மறை என்ன?

`தீயவர் என்றால் தீயைப் போன்றவன் என்று அர்த்தம்.

`நல்லவர்’ என்பார்கள்; அது தவறு.

தீயைப் போன்றவர் என்பதற்கு எதிர்மறை தண்ணீரைப் போன்றவர் என்பதாகும்.

அதை `நீரவர்’ என்றான் வள்ளுவன்.

தீ சுடும்; தண்ணீர் குளிரும்.

குளிர்ச்சியான உறவுகளே, குதூகலமான உறவுகள்.

நம்பிப் பணத்தைக் கொடுத்தால் ஏமாற்றுகின்றவன், நம்பி வீட்டுக்குள் விட்டால் நடத்தை தவறுகிறவன், நம்பித் தொழிற் பங்காளியாக்கினால் மோசம் செய்கிறவன், நம்பிப் பின் பற்றினால் நட்டாற்றில் விடுகிற தலைவன்- இவர்களால்தான் பெரும் நஷ்டங்களும், துன்பங்களும் வருகின்றன.

ஆகவே, இளம்பருவத்தில் இருந்தே ஆட்களை அடையாளம் கண்டு பழகத் துவங்கினால், பல வகையான துன்பங்கள் அடிபட்டுப் போகும்.

அது மட்டுமல்ல, நீ நஷ்டப்படும் போது மளமளவென்று உதவிகளும் கிடைக்கும்.

சாதாரணமாக வழித்துணைக்குக் கூட ஒரு அயோக்கியனை நம்பக்கூடாது; ஆனால் மரண பரியந்தம் ஒரு உத்தமனை அவன் பரம ஏழையாக இருந்தாலும் நம்பலாம்.

தான்கூடச் சாப்பிடாமல், உனக்குப் பரிமாறும் ஏழைகளும் உண்டு.

உன் மேலாடையைத் திருடி வைத்துக் கொள்ளும் பணக்காரர்களும் உண்டு.

இனமும் குணமும் தான் முக்கியமே தவிரப் பணம் அல்ல இதில் முதலிடம் வகிப்பது.

முதலாளி நொடித்துப் போனபோது, அவரைத் தன் வீட்டிலேயே வைத்துச் சோறு போட்ட வேலைக்காரனைக் கண்டிருக்கிறேன்.

அவராலே பணக்காரரானவர்கள் எல்லாம், அவரைக் கைவிட்டதையும் பார்த்திருக்கிறேன்.

`இனம்’ என்பது ஜாதியைக் குறிப்பதல்ல; குணத்தைக் குறிப்பது.

`சிற்றினம்’ என்பது குணத்தால் கீழ் மக்களைக் குறிப்பது.

அவர்களிடமிருந்து அறவே விலகி, ஒவ்வொரு துறையிலும் உத்தமர்களையே சார்ந்து நின்று பாருங்கள்; பெருமளவு துன்பத்திலிருந்து விடுபடுவீர்கள்.

* கண்ணதாசன்*
----------------------------------------------
படித்தேன்; பகிர்ந்தேன்!!!
அன்புடன்
வாத்தியார்
===========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

22.10.19

நம் சேமிப்பை இழக்காமல் சிகிச்சை பெற சிறந்த இடம்!!!!!


நம் சேமிப்பை இழக்காமல் சிகிச்சை பெற சிறந்த இடம்!!!!!

அன்பு நண்பர்களே...!!!

நான் சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள்...

4-5 நாட்களுக்கு முன் நன்றாக இருந்த ஒரு அன்பரின் அத்தை ( வயது 51) திடீர் என்று மயக்கம் போட, கோவையில் உள்ள பிரபல கல்லுரியின் மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். 

மூளையில் ரத்தக்கசிவு,உடனே அறுவை சிகிச்சை, 8ல் இருந்து 10 லட்சம் ஆகும் என அறிவித்தனர். 

மிரண்டுப் போன நண்பனின் மாமா செய்வதறியாமல் திகைத்த நிலையில்...

அங்கேயே இருந்த ஒரு நல்லிதயம் கொண்ட மருத்துவர் ஒரு நல்ல ஆலோசனை வழங்கினார்.

"மிகச்சிக்கலான இந்த அறுவைச் சிகிச்சை இங்கே மாதம் ஒன்றோ இரண்டோ நடக்கும் நிலையில், தினமும் ஐந்து -பத்து சாதாரணமாக நடக்கும் திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு ( Thirvendram Medical college Hospital) உடனே எடுத்துச்செல்லுங்கள்", எனக்கூறினார். 

உடன், ஒரு கடிதமும் வாங்கிக்கொண்டு ஆம்புலன்ஸில் விரைந்து காலையில் அட்மிட் செய்துள்ளனர். 

உடனே, அட்மிஷன் செய்து நோயாளியின் தன்மைக்கேற்ப பரிசோதனைகள் செய்து, அறுவைச் சிகிச்சைக்குத் தேவையான மருந்துகள் மட்டும் வாங்கித் தரச்சொல்கின்றனர்.( ஒரு 40000 to 60000 ஆகலாம்). 

டாக்டர் ஃபீஸ் இல்லை. சரியாகி வீடு திரும்பும்வரை அட்மிஷன் தருகிறார்கள். உணவு,மருந்து மாத்திரைகள் நாமே வாங்கிக் கொள்ளவேண்டும்.

நண்பர்களே, ஏதோ நம் ஊர் அரசு மருத்துவமனையை மனதில் நினைத்துக்கொண்டு அசிரத்தையாக இருக்காதீர்கள். 

உலகத்தரம் வாய்ந்த, இராணுவக் கட்டுப்பாடுடன் கூடிய மருத்துவமனை அது. 

இதயம்,நரம்பு, மூளை போன்ற மிகச்செலவுப் பிடிக்கும் வியாதிகளுக்கு மிக மிகச் சிறப்பான , செலவு மிக மிகக் குறைவாக ஆகும் மருத்துவமனை. அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். 

ரேஷன் அட்டை, ஆதார் அட்டை கொண்டு செல்லுங்கள். 

நகை நட்டை விற்று, வீடு தோட்டம் விற்று, நீண்ட நாள் சேமிப்பை இழக்காமல் சிறந்தச் சிகிச்சையைப் பெறலாம். பயன்படுத்திக்கொள்ளுங்கள். 

Trivandrum Medical College Hospital
Casualty Enquiry Number
0471 - 2528300

Important Telephone Numbers...
Superintendent 2442234
RMO 2528246
Casualty 2528300
Blood Bank 2528230
Cath Lab (ICCU) 2528499
CT Scan 2528232
Nursing Superintendent 2528231
Mortuary 2528236
Security officer 2528398
Paying counter 2528461
Anasthaesiaology 2528233
Anatomy 2528371
Applied Nutririon 2528391
Biochemistry 2528399
Cardiology 2528267
Cardiothoracic surgery 2528293
Community Medicine 2528379
Dematology and Venerology 2528213
Forensic Medicine 2528373
Gasroentrology 2528241
Gastro Entrology Surgical 2528295
General Medicine 2528234
General Surgery 2528325
Infectious diseases 2528296
Micro Biology 2528372
Nephrology 2528268
Neurology 2528260
Neuro Surgery 2528224
Gynaecology 2528365
Orthopaedics 2528242
ENT 2528277
Paediatrics 2528331
Paediatric surgery 2528312
Pathology 2528376
Peed Cell 2528369
Pharmacology 2528379
Physical Medicine and Rehabilitation 2528237
Physiology 2528377
Plastic and Reconstructive surgery 2528299
Psychatry 2528222
Radio diagnosis 2528211
Radio therapy 2528232
Respiratory medicine 2448484
Urology 2528282

பிடித்திருந்தால் அதிகம் பகிருங்கள்...

#உடல்நலக்குறைவால்_அவதிப்படுவோருக்கு உதவக்கூடும்...

#Address:
Trivandrum Medical College, Medical College PO, Thiruvananthapuram,
Kerala State. India PIN - 695 011
----------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

8.8.19

எது கெடும் ? நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை!!!!!


எது கெடும் ? நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை!!!!!

01) பாராத பயிரும் கெடும்.
02) பாசத்தினால் பிள்ளை கெடும்.
03) கேளாத கடனும் கெடும்.
04) கேட்கும்போது உறவு கெடும்.
05) தேடாத செல்வம் கெடும்.
06) திகட்டினால் விருந்து கெடும்.
07) ஓதாத கல்வி கெடும்.
08) ஒழுக்கமில்லாத வாழ்வு கெடும்.
09) சேராத உறவும் கெடும்.
10) சிற்றின்பம் பெயரும் கெடும்.

11) நாடாத நட்பும் கெடும்.
12) நயமில்லா சொல்லும் கெடும்.
13) கண்டிக்காத பிள்ளை கெடும்.
14) கடன்பட்டால் வாழ்வு கெடும்.
15) பிரிவால் இன்பம் கெடும்.
16) பணத்தால் அமைதி கெடும்.
17) சினமிகுந்தால் அறமும் கெடும்.
18) சிந்திக்காத செயலும் கெடும்.
19) சோம்பினால் வளர்ச்சி கெடும்.
20) சுயமில்லா வேலை கெடும்.

21) மோகித்தால் முறைமை கெடும்.
22) முறையற்ற உறவும் கெடும்.
23) அச்சத்தால் வீரம் கெடும்.
24) அறியாமையால் முடிவு கெடும்.
25) உழுவாத நிலமும் கெடும்.
26)உழைக்காத உடலும்  கெடும்.
27) இறைக்காத கிணறும் கெடும்.
28) இயற்கையழிக்கும் நாடும் கெடும்.
29) இல்லாலில்லா வம்சம் கெடும்.
30) இரக்கமில்லா மனிதம் கெடும்.

31) தோகையினால் துறவு கெடும்.
32) துணையில்லா வாழ்வு கெடும்.
33) ஓய்வில்லா முதுமை கெடும்.
34) ஒழுக்கமில்லா பெண்டிர் கெடும்.
35) அளவில்லா ஆசை கெடும்.
36) அச்சப்படும் கோழை கெடும்.
37) இலக்கில்லா பயணம் கெடும்.
38) இச்சையினால் உள்ளம் கெடும்.
39) உண்மையில்லா காதல் கெடும்.
40) உணர்வில்லாத இனமும் கெடும்.

41) செல்வம்போனால் சிறப்பு கெடும்.
42) சொல்பிறழ்ந்தால் பெயரும் கெடும்.
43) தூண்டாத திரியும் கெடும்.
44) தூற்றிப்பேசும் உரையும் கெடும்.
45) காய்க்காத மரமும் கெடும்.
46) காடழிந்தால் மழையும் கெடும்.
47) குறிபிறழ்ந்தால் வேட்டை கெடும்.
48) குற்றம்பார்த்தால் சுற்றம் கெடும்.
49) வசிக்காத வீடும் கெடும்.
50) வறுமைவந்தால் எல்லாம் கெடும்.

51) குளிக்காத மேனி கெடும்.
52) குளிர்ந்துபோனால் உணவு கெடும்.
53) பொய்யான அழகும் கெடும்.
54) பொய்யுரைத்தால் புகழும் கெடும்.
55) துடிப்பில்லா இளமை கெடும்.
56) துவண்டிட்டால் வெற்றி கெடும்.
57) தூங்காத இரவு கெடும்.
58) தூங்கினால் பகலும் கெடும்.
59) கவனமில்லா செயலும் கெடும்.
60) கருத்தில்லா எழுத்தும் கெடும்.

கெடாமல் பாதுகாக்க வேண்டியது அவரவர் பொறுப்பு

படித்ததில் அசந்தது....☝
அன்புடன்
வாத்தியார்
===============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

28.3.19

அவரவர் வினைக்கேற்பவே அவரவர் வாழ்வு அமையும்!!!


அவரவர் வினைக்கேற்பவே அவரவர் வாழ்வு அமையும்!!!

*முற்பிறவியில் செய்த பாவம் இந்த பிறவியில் தொடருமா?! பெற்றவர் செய்த பாவம் பிள்ளையாய் பிறக்குமா?!*

திருத்ராஷ்ட்ரனுக்கு ஏன் கண் குருடானது?!, ஏன் அவனுடைய நூறு குழந்தைகள் இறந்துபோனார்கள்?!.

குருசேஷத்திர போர் முடிந்து, தர்மருக்கு முடிசூட்டுவிழா நடந்துகொண்டிருந்தது.

அப்போது திருதராஷ்டிரன், கிருஷ்ணரிடம், கிருஷ்ணா நான் குருடனாய் இருந்தபோதிலும், விதுரர் சொல்கேட்டு தர்ம நியாயங்களுடன் அரசாட்சி செய்தேன்.

அப்படியிருக்க ஒருவர்கூட மீதமில்லாமல் எனது நூறு மைந்தர்களும் இறந்ததற்குக் காரணம் என்ன?! என்றார்.

அதற்கு நேரடியாக பதில் சொல்லாமல், உனக்கு நான் ஒரு கதை கூறுகிறேன். அதன் பின் ஒரு கேள்வி கேட்கிறேன். நீ அதற்கு பதில் சொன்னால், நான் உனக்கு பதில் தருகிறேன்! என்ற பகவான், கதையைக் கூறினார்.

நீதி தவறாது ஆட்சி செய்த ஓர் அரசனிடம் மிகவும் பிரபலமான முனிவரான வசிஷ்டரின் சீடன் ஒருவன் சமையற்காரனாகச் சேர்ந்தான்.

மிகச் சுவையாக சமைப்பது, அரசரை பிரத்யேகமாகக் கவனிப்பது என அவன் எடுத்துக் கொண்ட முயற்சிகளினால் வெகு சீக்கிரமே தலைமை சமையல் கலைஞனாக உயர்த்தப்பட்டான்.

அரசருக்கு வித்தியாசமான சுவையை அறிமுகப்படுத்தி பரிசு பெறும் நோக்கில், அவனுக்கு விபரீதமான யோசனை தோன்றியது.

அதன்படி, அரண்மனைக் குளத்தில் இருந்த அன்னப்பறவையின் குஞ்சு ஒன்றினைப் பிடித்து ரகசியமாய் சமைத்து, அரசருக்குப் பரிமாறினான்.

தான் சாப்பிடுவது இன்னதென்று தெரியாமல் அப்பதார்த்தத்தின் சுவையில் மயங்கிய மன்னர், அதை மிகவும் விரும்பிச் சாப்பிட்டதோடு அடிக்கடி அதை சமைக்கவும் கட்டளை இட்டு, சமையற்காரனுக்கு பெரும் பரிசும் அளித்தார்.

திருதராஷ்டிரா, இப்போது சொல்! அரசன், சமையல் கலைஞன் இருவரில் அதிகம் தவறிழைத்தவர் யார்? என்று பகவான் கேட்டார்.

அதற்கு வசிஷ்டரின்  சமையற்காரன் தான் அறியாமலே புலால் கலந்த உணவை அவருக்கு வைத்து விட்டார். ஆயினும் வசிஷ்டர் அதைக் கண்டுபிடித்து, அவனுக்கு சாபமிட்டார்.

அந்த விவேகமும் எச்சரிக்கையும் இந்த அரசனிடம் இல்லையே! சமையற்காரன் பணம், பரிசுகளுக்கு ஆசைப்பட்டிருப்பான். அதனால் அவன் செய்த தவறு சிறியது.

ஆனால் பல நாட்கள் அசைவம் உண்டும் அதைக் கண்டுபிடிக்காத அரசன்தான் அதிக தவறிழைத்தவன் ஆகிறான்! என்றார், திருதராஷ்டிரன்.

புன்னகைத்த கண்ணன், திருதராஷ்டிரா! நீயும் ஓர் அரசனாக இருந்தும், நியாயம் தவறாது, மன்னவன் செய்ததே தவறு! என கூறினாய்.

அத்தகைய நீதி  பரிபாலனம்தான் பீஷ்மர், துரோணர் போன்ற சான்றோர் சபையில் உன்னை அமர்த்தியது. நல்ல மனைவி,
நூறு குழந்தைகள் என  நல்வாழ்க்கையைத் தந்தது.

ஆனால், நான் சொன்ன கதை உன்னைப் பற்றியதுதான். சென்ற பிறவியில் நீயே உன் தவறால் நூறு அன்னப்பறவையின் குஞ்சுகளை  உணவாகச் சாப்பிட்டிருக்கிறாய்.

அந்த அன்னங்கள், அதன் தாய் பறவை எத்தகைய துயரும், வேதனையும் அடைந்திருக்கும் என்பதை உன் நூறு  பிள்ளைகளை இழந்து நீ அறிந்துகொள்கிறாய்.!...

ஆனால் தினம்தினம் பார்த்தும் உனக்கு சைவ, அசைவ உணவுகளுக்கிடையே வேறுபாடு தெரியவில்லை. பிறகு உனக்கு, கண் எதற்கு?!, அதனாலேயே நீ குருடனானாய்.!.

தெய்வத்தின் சன்னிதானத்தில் ஒரு போதும் நீதி தவறாது.!.அவரவர் வினைக்கேற்பவே அவரவர் வாழ்வு அமையும்! என்றார். 

தன்வினையே தன்னைச் சுட்டதென்பதை உணர்ந்த திருதராஷ்டிரன் வாயடைத்து போய் நின்றான்.!.

            - வியாச பாரதத்தில் இருந்து......
-----------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

27.3.19

இதல்லவோ பெருந்தன்மை!!!!


இதல்லவோ பெருந்தன்மை!!!!

மிச்சிகன் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் தலைமை மருத்துவரான டாக்டர்.தாமஸ் பிரான்சிஸ் மேடையில் ஏறி மைக்கின் முன் வந்து நிற்கிறார்.அவர் பேசப்போகும் வார்த்தைகளை எதிர் நோக்கி ஒட்டு மொத்த உலகமே எதிர்பார்ப்பில் அப்படியே உறைந்து நிற்கிறது,

"நீண்ட காலமாக மனித குலம்-நடத்தி வந்த யுத்தம் இதோ இன்றோடு முடிவுக்கு வருகிறது.ஆராய்ச்சி முடிவுகள் மிகச் சாதகாமான
விளைவுகளைத் தந்துள்ளன.இந்த வேக்சின் அருமையான முடிவுகளைத் தந்துள்ளது.பலதரப்பட்ட சோதனைகளைச் செய்து
பார்த்து விட்டோம்.அனைத்து சோதனைகளிலும் சாதகமான பலன்களே வந்துள்ளது.இந்த வேக்சின் முழுப் பாதுகாப்பானது.

இந்த வேக்சின் இன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்படுகிறது.

இதை கண்டுபிடித்த நம் பல்கலைக்கழகத்தின் "அந்த மருத்துவர்" தனக்கு எந்தக் காப்புரிமையும் வேண்டாமென மறுத்து விட்டார்.

எனவே இன்றில் இருந்து இந்த மருந்து முழுக்க முழுக்க இலவசமாகத் தரப்படுகிறது"

---என்று பரபரப்பாக அறிவிக்கிறார்.

அவர் அறிவித்து முடித்து மேடையை விட்டு இறங்கிய அடுத்த நொடி,பெருத்த ஆரவாரம் எழுந்தது.

மக்கள் ஒருவரையொருவர் ஆரத் தழுவிக் கொண்டு கண்ணீர் விடுகின்றனர்.

அமெரிக்க நாடு முழுவதுமுள்ள தேவாலயங்களின் மணிகள் ஒலிக்கப்படுகின்றன, பிரார்த்தனைகள் நடக்கிறது.

தொழிற்சாலைகளின் இயந்திரங்கள் கூட ஓரிரு நிமிடங்கள் நிறுத்தப்பட்டு--மௌன மரியாதை தரப்படுகிறது.

எதற்காக?

"அந்த ஒரு மனிதருக்காக.."

பத்திரிக்கைகளும்,புகப்படக்காரர்களும் அந்த மனிதரை--அந்த மருத்துவரை மொய்த்துக் கொண்டு,பல கேள்விகளைக்
கேட்டார்கள்.அனைத்திலும் பிரதானமாக அமைந்த கேள்வி

"நீங்கள் ஏன் இந்த வேக்சினுக்கு காப்புரிமையைப் பெறவில்லை,பெற்றிருந்தால் ட்ரில்லியன்களில் பணம் வந்திருக்குமே?" என்பது தான்.

இப்படிபட்ட ஒரு மாமருந்தை கண்டுபிடித்துவிட்டு,அதை காப்புரிமை செய்யாமல் இலவசமாகத் தந்துள்ளாரே.இதை
மட்டும் இவர் காப்புரிமை செய்து இருந்தால் இந்த மனித இனம் உள்ள மட்டும் இவருக்கு பணம் கொட்டிக் கொண்டிருக்குமே...
இவர் ஏன் அப்படி செய்யவில்லை....என்பதை அவர்களால்
நம்பவே முடியவில்லை.

எனவே ஒருமித்த குரலில் அந்த ஒரே ஒரு கேள்வியை மட்டுமே கேட்டனர்.

அமைதியான சிறு புன்னகையுடன் அவர்களைப் பார்த்த அந்த மருத்துவர்,

"காப்புரிமையா?இதற்கா?எனக்கா? உலகத்திற்கு ஆற்றலைத்
தரும் சூரியன் அதற்காக காப்புரிமையைப் பெற்றுள்ளதா?"
---என்று மட்டும் சொல்லிவிட்டு தனது அடுத்த பணிக்கு சென்றுவிட்டார்.

விக்கித்து திகைத்து அதிசயித்து நின்றது உலகம்.

அதுமட்டுமல்லலல,அக்காலகட்டத்தில்வைரஸ் கிருமியால்
பரவும் நோய்களுக்கு லைவ் வைரஸ்களைக் கொண்டு
அதாவது உயிருடன் இருக்கும் வைரஸ்களைக் கொண்டு தான் வேக்சின்களைத் தயாரிப்பார்கள்.

அதாவது உயிருள்ள ஆனால் பலவீனமாக்கப்பட்ட வைரஸை உடலில் செலுத்தி--உடலின் நோயெதிர்ப்பு சக்தி--அந்த வைரசிற்கு
எதிராக போராடும் வல்லமையை,ஆண்டிபாடிகள் வடிவில் உடலைப் பெற வைப்பார்கள்.எனவே பிற்காலத்தில் நிஜமான வைரஸ் தாக்குதல் வந்தால்,இவனைத் தான் நாம ஏற்கனவே அடிச்சுருக்கோமே என்று உடலின் இயற்கையான நோய்
எதிர்ப்புத் திறன் அந்த நோயை விரட்டி விடும்.

ஆனால் அந்த மருத்துவர் பயன்படுத்தியது இறந்த வைரஸ்களை.வைரஸ்களை ஆய்வகத்தில் வளர வைத்து-
பின் அதில் பார்மால்டிஹைடு வேதிபொருளை செலுத்த,அந்த வைரஸ்கள் முற்றிலும் செயலிழந்து போகும்.பின் அந்த
செயலழிந்த வைரஸ்களை உடலின் செலுத்தினால்--உடல்
வழக்கம் போல ஆண்டிபாடிகளை உருவாக்கும்.இதையும் அவர் காப்புரிமை செய்யவில்லை.

இப்படி மருத்துவ உலகின் மாபெரும் புரட்சிகளை செய்து விட்டு,அதை இலவசமாக மனித குலத்திற்கு அர்ப்பணித்துவிட்டு
அமைதியாகத் தன் அடுத்த பணியைப் பார்க்க சென்ற, அவர் மருத்துவர் தான் "ஜோன்ஸ் சால்க்."

அவரால் இரண்டே இரண்டு சொட்டில் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்ட அந்த நோய்--"போலியோ"...

போட்டோவில் இருப்பவர் தான் டாக்டர் ஜோன்ஸ் சால்க்.
-----------------------------------------------------------------------
படித்து வியந்தது, பகிர்ந்தது!!!!
அன்புடன்
வாத்தியார்
=============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

21.3.19

மரணத்திற்குப் பிறகு உங்களுக்கு என்ன நேரும்?


மரணத்திற்குப் பிறகு உங்களுக்கு என்ன நேரும்?

உன்னுடைய மரண நேரத்தில் சஞ்சலப்படாதே....!!

உலகம் உன்னுடைய இறந்துபோன உடம்பிற்கு எந்த.  முக்கியத்துவமும் கொடுக்காது....!!

உற்றார் உறவினர்கள் உனக்கு செய்ய வேண்டிய கடமைகளைச் செய்வர்.....!
1.உனது ஆடைகளை களைவர்.
2.குளிப்பாட்டுவர்.
3.புது துணி அணிவிப்பர்.
4.உன்னுடைய வீட்டை விட்டு வெளியாக்குவர்.
5.சுடுகாடு என்ற புதிய வீட்டிற்கு எடுத்துச் செல்வர்.
6.உனது கூட வரும் பலர் உன்னை அடக்கம் செய்வதில் அல்லது எரிக்க குறியாக இருப்பர்.
7.உன்னுடைய பொருட்கள் உன்னை விட்டும் உன் வீட்டை விட்டும் பிரிக்கப்படும்.

* உன்னுடைய உடமைகள்
*புத்தகங்கள்
*பைகள்
*செருப்புகள்
எல்லாம் வெளியேற்றப்படும்.

A.உறுதியாக விளங்கிக்கொள்,
* உனது பிரிவால் உலகம் கவலைப் படாது
*பொருளாதாரம் தடைப்படாது
*உன்னுடைய உத்தியோகத்தின் வேலைக்கு வேறொருவர் சந்தோசமாக வருவார்
* உனது சொத்து வாரிசுக்குப் போய்விடும்
* இவ்வளவு சொத்து சொகத்தோடு வாழ்ந்தும் வெறும் கையுடன் படுத்திருப்பதை இருப்பதை உணர மாட்டாய்.

நீ மரணித்தவுடன் முதலில் மறைவது உனது பெயரே!!!!!
(பாடி எப்ப வரும் ????) உன் உறவுகளே இப்படித்தான் அழைப்பார்கள்

எனவே உனது குடும்ப கெளரவம்,பட்டம், பதவி என்று வாழும் போதே *வாழாமல்* உன்னை நீயே ஏமாற்றி விட வேண்டாம்

உன்னைப்_பற்றிய_கவலை -3 பங்காக்கப்படும்

1.உன்னை அறிந்தவர்கள் சொல்வார்கள்....பாவம் என்று.
2.நண்பர்கள் சில தினங்களுக்கு உன்னை நினைப்பர்.
3.உன் குடும்பத்தினர் சில மாதங்கள் கவலைபடுவர்.
4.மக்களுடன் உன்னுடைய தொடர்பு முடிந்து விட்டது.
5.உண்மையான உனது வாழ்க்கை இப்போது தான் ஆரம்பம்.

#உன்னை_விட்டு_நீங்குவது
1.உடம்பு மற்றும் அழகு
2.சொத்து
3.ஆரோக்கியம்
4.பிள்ளைகள்
5.மாளிகை
6.மனைவி/கணவன்.

உனது ஜீவனுக்கென்று எதனை தயாரித்து வைத்துள்ளாய்.....

 எனவே, இவ்விஷயங்களில்_ஆசை_வை.

1. தவறாது கோவிலுக்கு செல்.

2. வேதத்தை பாராயணம் செய், தியானம் செய்.

3. பிறர் அறியா தர்மம் செய்

4. கடவுளை பற்றிய நல்லதை சொல்.

5. ஆத்மாவுக்கு உரியதை பற்றி சிந்தனை செய்.

6. கடவுள் பாராட்ட நல்ல செயல்கள் செய்.

7.யாருக்கும் கெடுதல் செய்யாதே.

உலகில் ஏதோ ஒன்றை தேடுகிறாய்...
தேடிக் கொண்டிருக்கிறாய்
ஆனால்,
மேற்கூறியது மட்டுமே உண்மை!!!
-------------------------------------------
படித்ததில் உணர்ந்தது: பகிர்ந்தது!!!!

அன்புடன்
வாத்தியார்
======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

7.2.19

வாழ்க்கையின் நான்கு நிலைகள்!!!!


வாழ்க்கையின் நான்கு நிலைகள்!!!!

நான்கு நிலை வாழ்க்கை

1.பிரம்மச்சரியம்

முதலில் பிரம்மம், பிரம்மா, பிரம்மச்சாரி, பிரம்மசர்யம் எனும் நான்கும் வெவ்வேறு பொருள் கொண்டவைகள் என்பதனை புரிந்து கொள்ளல் வேண்டும்.

ப்ரம்மம் என்பது நமது கண்கள், புலன்கள், அறிவுக்கு எட்டாதது , எங்கும் நீக்கமற வியாபித்து நிறைந்திருப்பது.

பிரம்மா என்பது படைப்பு தொழில் புரிபவரை சுட்டும் சொல்.

பிரம்மச்சாரி, பிரம்மச்சாரினி என்பது திருமணமாகாத , எந்த ஒரு பெண்ணையோ , ஆணையோ மோகம் கொள்ளாதவர்களை குறிக்கும் சொல்.

பிரம்மசர்யம் எனும் சொல்லின் பொருள் உணர்தல் மிக அவசியமாகின்றது.

பெண்ணாசையை விடுவதற்கு பிரம்மசர்யம் என்பது பெயரல்ல .

பிரம்மச்சாரி என்பதே பெண்ணின் துணையை தேடாதவரை குறிக்கும்.

ஆனால் ப்ரம்மச்சர்யம் என்பது ப்ரம்மத்தை உணர்தலுக்கு தயாராவதை குறிக்கும் சொல்லாகும். 

ப்ரம்மத்தை உணர்தலுக்கு உட்படும் மனிதனுக்கு பலவித கடுமையான பரீட்சைகள் இயற்கையால் தரப்படுகிறது. இவைகளில் தேர்ச்சி பெற மனிதன் பலபடிகளை தேர்ச்சி பெற்று கடப்பது அவசியமாகின்றது.

புற ஒழுக்கம், அக ஒழுக்கம் மட்டுமல்லாமல் , கண்களாலும், சொல்லினாலும், கேட்பதாலும் , உடலாலும் முழுமையாக ஒழுக்கம் காக்கப்பட வேண்டும்.

வேதம் உணர்தலும் , அதன்படி சிந்தித்தலும், நடப்பதுவும் முக்கியமான பங்காகும்.

நான் , எனது எனும் மமகாரம் , அகந்தை அறவே அழிக்கப் படவேண்டும். சொல்லால் மட்டுமல்லாமல் செயலாலும் ஒழுக்கம் காத்தல் வேண்டும்.

ப்ரம்மத்தை அறிதலுக்கான முயற்சி என்பது எளிதான ஒன்றல்ல .

சரியை எனப்படும் வைராக்கிய நெறிகொள்ளல் மிக அவசியம் .

இவ்விரண்டு சொற்றொடர்களின் இணைப்புதான் ப்ரம்மசரியம்.

ப்ரம்மம் : எங்கும் வியாபித்துள்ள பரம்பொருள் .
சரியை : பரம்பொருளை கண்டடைவேன் எனும் வைராக்கிய உறுதி.

பிரம்மசர்யை எனும் பதம் மருவுதல் கண்டு பிரம்மசர்யமாய் மேவி நின்றதுவாம்.

இந்திரியங்களை அடக்கி , காமத்தை துறந்து , அகந்தையை அழித்து , கோப , தாபங்களற்று எனது பிறப்பின் காரணம் ,பரம்பொருளை அடைவது ஒன்றே எனும் வைராக்கிய சிந்தையோடு அதற்கான வழிதேடி, அந்த வழி சென்று , வழிபட்டு பரம்பொருளின் திருவடி அடையும் பல வித மார்க்கங்களில் பிரம்மசர்ய மார்க்கமும் ஒன்று .
     
2, கிரஹஸ்தாஸ்ரமம்

கொடுமையின்மை, நன்றியுணர்வு, பிதுர் கார்யங்களில் ஈடுபாடு, எல்லா வர்ணங்களைச் சார்ந்தவங்களுக்கும் உணவளிப்பது, விருந்தாளிகளைத் தெய்வம் எனக் கருதுவது, உரிய காலத்தில்
மட்டும் மனைவியை அடைந்து சந்ததிகளைப் பெருக்குவது, தெய்வ காரியங்களைச் செய்வது –போன்றவை இல்லற நிலையின் தர்மமாகும்.

3, வானப்ரஸ்தம்

இல்லற தர்மத்தை முழுமையாக முடித்த பின், சடைமுடி தரிப்பதற்கான விதிகளைப் பின்பற்றுவது; முயற்சியினால் இந்திரியங்களை அடக்குவது, உள்ளத்தை தூய்மைப்படுத்துவது - ஆகியவற்றைச் செய்து கொண்டு, மனைவியுடனோ, மனைவியில்லாமலோ வனம் சென்று, அங்கு கிடைத்ததை உண்டு வாழும் தர்மம் வானப்ரஸ்தம்.

4, சந்யாசம்

வீட்டையும், சுற்றத்தையும் துறந்து, சுற்றித் திரியும்போது, கிடைத்த இடத்தில் படுத்து, தானமாகக் கிடைப்பதை உண்டு, இந்திரியங்களை அடக்கி, ஆசைகளையும், பற்றுக்களையும் அறுத்து, எல்லா ஜீவராசிகளையும் சமமாகப் பாவித்து, எதையும் விரும்பாமல், எதையும் வெறுக்காமல் வாழும் நிலை சந்யாசம்.

ஓம் நமசிவாய 🙏
-----------------------------------------------
படித்ததில் பிடித்தது!!!!
அன்புடன்
வாத்தியார்
=========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!