மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

31.3.16

குட்டிக் கதை: மனம் திருந்திய மன்னன்!

குட்டிக் கதை: மனம் திருந்திய மன்னன்!

தன்னைத்தானே கவனித்தலே வாழும் கலை !!!

காசி அரசனின் ரதம் இமயமலையை நோக்கி வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. வாழ்க்கை மேல் மிகவும் வெறுப்புக் கொண்டிருந்த அம்மன்னன்
தற்கொலை செய்துகொள்ளும் மனநிலையில் இருந்தான். எல்லாம்
இருந்தும் மனநிம்மதி இல்லை. குழப்பமான சிந்தனைகளுடன் பயணத்தைத்
தொடர்ந்தபோது, ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்த மனிதரைப் பார்த்தான். எளிமையான உடைகளுடன் இருந்த அந்த மனிதரின் முகத்தில்
பேரானந்தம் தாண்டவமாடுவதை ஆச்சரியத்துடன் நோக்கினான்.

தனது மரணத்திற்கு முன்பு இந்த மனிதரிடம் ஆசுவாசமாகப் பேசிக்கொண்டிருக்கலாம் என்று நினைத்து ரதத்தை நிறுத்தி இறங்கினான். தனது மூடிய விழிகளைத் திறந்தார் அந்த மாமனிதர். தன் முன் நின்ற மன்னனைப் பார்த்து என்ன வேண்டும் என்று கேட்டார்.

"நான் ஒரு அரசன். எல்லாம் இருந்தும், ஏதும் இல்லாத எண்ணமே
என்னை வதைத்துக்கொண்டிருக்கிறது. என் பிரச்னையை என்னால்
தெரிந்துகொள்ள முடியவில்லை. உங்கள் ஒளியுடைய முகம் என்னை ஈர்த்தது. நான் சாவதற்கு முடிவு எடுத்துள்ளேன். என் பிரச்னை என்னவென்று
அதற்கு முன்னர் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்" என்றான் மன்னன்.

மன்னன் சொல்வதையேல்லாம் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தாலும், அந்த மனிதரின் பார்வை மன்னனின் கால்களையே உற்றுப் பார்த்துக்
கொண்டிருந்தது. மன்னனுக்குச் சிறு வயது முதலே காலாட்டுகிற பழக்கம் உண்டு. அந்த மனிதர் தன் கால்களைப் பார்க்கிறார் என்பதை அறிந்த
மன்னன் சட்டென்று காலாட்டுவதை நிறுத்திவிட்டான்.

" மன்னனே உனக்கு எவ்வளவு காலமாக காலாட்டுகிற பழக்கம் உள்ளது?" என்று கேட்டார்.

தனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் காலாட்டுவதாக மன்னன் பதில் கூறினான்.

"இப்போது நீ ஏன் காலாட்டுவதை நிறுத்திவிட்டாய்?" என்று கேட்டார்
அந்த மனிதர்.

" நீங்கள் என் கால்களையே கவனித்தீர்கள்" என்று பதிலளித்தான் மன்னன்.

" நான் உன் கால்களையே கவனித்ததால் உன் நீண்ட நாள் பழக்கத்தை நிறுத்திவிட்டேன் என்கிறாய். இனிமேல் நீயே உன்னைக் கவனி.
எதையெல்லாம் நிறுத்த வேண்டும் என்பது உனக்கே தெரியவரும்."

மன்னனின் இருண்ட மனதில் ஓர் ஒளிக்கீற்று தெரியத் தொடங்கியது.

மிகுந்த பணிவோடு, "நீங்கள் யார்?" என்று கேட்டான் மன்னன்.

"புத்தர்" என்று பதில் வந்தது.

மன்னன் அவர் காலில் விழுந்து வணங்கினான். தன்னைத்தானே கவனித்தலே வாழும் கலை என்பதை அறிந்த மன்னனின் தேர் இப்போது அரண்மனை
நோக்கி ஓடத் தொடங்கியது.

படித்ததில் பிடித்தது.
அன்புடன்
வாத்தியார்
================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

30.3.16

மனதைத் தொட்ட செய்திகள். அறிவுரைகள்!


மனதைத் தொட்ட செய்திகள். அறிவுரைகள்!

1

தந்தைக்கும் கடவுளுக்கும் சிறு வித்தியாசம் தான்...!
ஒருத்தர் இருக்கும்வரை கண்ணுக்குத் தெரியமாட்டார்...!
இன்னொருத்தர் எப்பவுமே தெரியமாட்டார்...!
--------------------------------------------
2
-----------------------------------------------------
3
----------------------------------------------------
4
-----------------------------------------------------------------------------------------------
5
------------------------------------------------------------------
6

============================================================
இந்த 6ல் எது மிகவும் நன்றாக உள்ளது?

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

29.3.16

மனவளம்: கோபத்தை அடக்க சுலபமான வழிகள்❗

மனவளம்: கோபத்தை அடக்க சுலபமான வழிகள்❗

1. பொருட்படுத்தாதீர்கள்.
(Objects do not)

உங்களைப் பற்றி அவதூறாகவோ, மிக மட்டமாகவோ யார் பேசினாலும் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாதீர்கள். அதைக் கண்டு கொள்ளாமல்

விட்டுவிடுங்கள். எதிரிகள் ஏமாந்து விடுவார்கள்.

2. எதையும் யாரிடமும் எதிர்பார்க்காதீர்கள்.
(Do not expect anything to anyone)

ஒருவரிடம் நாம் ஒன்றை எதிர்பார்த்து அது கிடைக்கவில்லையென்றால், அவர் மீது கோபம் நமக்கு வருவது இயற்கைதான். எனவே , யாரிடமும்

எதையும் எதிர்பார்க்காதீர்கள்.

3. எதிரிகளை அலட்சியம் செய்யுங்கள்.
(Please disregard opponents)

தனக்குப் பிடிக்காத மனிதர்களைப் பற்றி நினைத்துக்கூடப் பார்க்கக்கூடாது. அதனால் நமக்கு ஆத்திரமும், கோபமும் அடிக்கடி ஏற்படுவதை

தவிர்க்கலாம். தன்னம்பிக்கை உள்ளவனை ஒரு போதும் அவதூறுகளும், ஏச்சு பேச்சுகளும் பாதிப்பதில்லை.

4. தேவையற்ற எண்ணங்களை நிறுத்தி விடுங்கள்.
(Please stop unwanted thoughts)

பிடிக்காத நபர்கள் மற்றும் செயல்களைப் பற்றி எண்ணம் வரும்போது, அந்த எண்ணங்களுக்கு பெரிய பூட்டு போட்டுவிடுங்கள்.

எனவே நாம் வாழ்க்கையில் வெற்றி பெற , முதலில் நம்முடைய கோபத்தை ஆட்சி செய்ய வேண்டும்.

அதாவது தேவைப்படும் இடத்தில் அளவான கோபம் மட்டுமே கொள்ளலாம்.
====================================================
2
*பேசி தீருங்கள். பேசியே வளர்க்காதீர்கள்.

*உரியவர்களிடம் சொல்லுங்கள். ஊரெல்லாம் சொல்லாதீர்கள்.

*நடப்பதைப் பாருங்கள். நடந்ததைக் கிளறாதீர்கள்.

*உறுதி காட்டுங்கள். பிடிவாதம் காட்டாதீர்கள்.

*விவரங்கள் சொல்லுங்கள். வீண்வார்த்தை சொல்லாதீர்கள்.

*தீர்வை விரும்புங்கள். தர்க்கம் விரும்பாதீர்கள்.

*விவாதம் செய்யுங்கள்.விவகாரம் செய்யாதீர்கள்.

*விளக்கம் பெறுங்கள். விரோதம் பெறாதீர்கள்.

*பரிசீலனை செய்யுங்கள். பணிந்து போகாதீர்கள்.

*சங்கடமாய் இருந்தாலும் சத்தியமே பேசுங்கள்.

*செல்வாக்கு இருந்தாலும்  சரியானதைச் செய்யுங்கள்.

*எதிர் தரப்பும் பேசட்டும். என்னவென்று கேளுங்கள்.  எவ்வளவு சீக்கிரம் தீர்வு வரும் பாருங்கள்.

*நேரம் வீணாகாமல் விரைவாக முடியுங்கள்.

*தானாய்த்தான் முடியுமென்றால் வேறு வேலை பாருங்கள்.

*யாரோடும் பகையில்லை என்பது  போல் வாழுங்கள்.
👍👍👍👍👍
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

28.3.16

ஆன்மிகம்: இறைவனைக் கும்பிட ஒரு எளிய வழி!


ஆன்மிகம்: இறைவனைக் கும்பிட ஒரு எளிய வழி!

இன்றைய அவசர உலகத்தில் கடவுளை, கையெடுத்துக் கும்பிடக்கூட நேரமில்லாத நிலையில் தினமும் அவனை பாட்டுப் பாடி கும்பிடுவதா?
அது எப்படி முடியும்? என்கிறீர்களா? முடியும். அதற்கான எளிய வழி இதோ இருக்கிறது.

கிருபானந்த வாரியார் சுவாமிகள் அதற்காகவே வாரத்தின் ஏழு நாட்களும் சொல்ல ஏழு சின்னச் சின்னத் துதிகளை இயற்றியுள்ளார். திருப்பரங்குன்றம் முதல் வயலூர் வரையான ஏழு திருத்தலங்களில் உறையும் முருகனைப் போற்றிப் பாடப்பட்ட அந்தத் துதிகள், பலன் அதிகம் தரும் படைவீட்டு வாரப்பாடல்கள் என்றே போற்றப்படுகின்றன. உயர்வான அவை இதோ இங்கே தரப்பட்டுள்ளன.ஞாயிறு தொடங்கி சனிக்கிழமை வரை தினம்தினம் சொல்லுங்கள். கந்தவேள் கருணையால், எல்லா நாட்களும் ஏற்றமானதாகவே இருக்கும்.

#ஞாயிற்றுக்கிழமை

தாயினும் இனிமையாகத் தண்ணருள் செய்வாய் போற்றி!
சேயென ஆள்வாய் ஞானத் திருமுருகேச போற்றி!
மீயுயள் பரங்குன்றில் மேவிய வேலா போற்றி!
ஞாயிறு வாரம் வந்து நலமெலாம் அருள்வாய் போற்றி!

#திங்கட்கிழமை

தங்கத்தமிழால் உனைத் தொழுவோர்க்கு அருள் வேலவ போற்றி!
சிங்க முகனை வதைத்த அருட்செல்வத் திருநாயக போற்றி!
சங்கப்புலவோர் தமக்கென்றும் தலைவா சிவதேசிக போற்றி!
திங்கட்கிழமை வந்தருள்வாய் செந்தில்பதி நின்பதன் போற்றி!

#செவ்வாய்க்கிழமை

செவ்வான் அனைய திருமேனிச் சேயே நாயேன் துயர் தீராய்
எவ்வானவரும் ஏத்துகின்ற இறைவா இளம் பூரண போற்றி!
தெய்வாதனை இல்லாத பரயோகியர் சிவதேசிக போற்றி!
செவ்வாய்க்கிழமை வந்தருள்வாய் செல்வப் பழநிகுக போற்றி!

#புதன்கிழமை

மதவாரணமுகத்தோன் பின் வந்த கந்தா சிவயோகப்
பதவாழ்வு அருள்வாய் பரனே அரனார் பாலகனே
உதவாக்கரையாம் அடியேற்கு உண்மைப் பொருளை உரைத்திடவே
புதவாரமதில் வந்தருள்வாய் பொருவில் திருஏரக போற்றி!

#வியாழக்கிழமை

மயானம் உறையும் இறையான மகேசன் பெற்ற குகேசன் எனத்
தியானப் பொருளாம் திருமுருகா தேவே மாவேதிய போற்றி!
தயாளசீலா தணிகை முதல தவர்வாழ் குன்றுதொறும் வாழ்வாய்
வியாழக்கிழமை வந்தருள்வாய் வேலா கோலாகலா போற்றி!

#வெள்ளிக்கிழமை

அள்ளி வழங்கும் ஆறுமுகுத்தரசே விரைசேர் கடம்பணிந்த
வள்ளிக் கணவா வடிவேலா வரதச் சரதப் பெருவாழ்வே!
வெள்ளிமலைதேர் வியன் ஞானம் மேவு பழமார் சோலையனே
வெள்ளிக்கிழமை வந்தருள்வாய் வேத நாத பதம் போற்றி!

#சனிக்கிழமை

கனிவாய் வள்ளி தெய்வானைக் கணவா உணர்வோர் கதிர்வேலா
முனிவாய் எனில் நான் எங்கடைவேன் முத்தா அருணை முனிக்கு அரசே
இனிவாதனையால் அடிநாயேன் என்றும் குன்றா வணம் வாழ்
சனிவாரமதில் வந்தருள்வாய் தயவார் வயலூர்ப்பதி போற்றி!

====================================================================

2

கோலம் போடும்போது கடைபிடிக்க வேண்டிய விதிகள் !

சில விதிகள் ஏற்ப கோலமிட்டால் வாழ்க்கையில் வளம் சேரும்.

சூரியன் உதிப்பதற்கு முன்பு பசுஞ்சாணம் தெளித்து கோலம்போட வேண்டும்.

வீட்டு வாசலில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம் எனவே புதுத் தண்ணீரே தெளிக்க வேண்டும்.

தெற்கு பார்த்தோ, தெற்கில் முடியும்படியோ கோலம்போடக்கூடாது.

கோலம் போட்டதும் காவி இடுவது மும்மூர்த்திகளை குறிக்கும்.

கோலத்தின் நடுவில் செம்பருத்தி, பூசணி பூ வைத்தால் செல்வம் சேரும்.

பவுர்ணமி தினத்தன்று தாமரைப்பூ கோலம்

ஞாயிற்றுக்கிழமை செந்தாமரை கோலம்,

திங்கட்கிழமை அல்லி மலர்க் கோலம்

செவ்வாய்க்கிழமை வில்வ இலைக் கோலம்,

புதன் மாவிலைக் கோலம்

வியாழக்கிழமை துளசி மாடக் கோலம்,

வெள்ளிக்கிழமை எட்டு இதழ் தாமரைக் கோலம்

சனிக்கிழமை பவளமல்லி கோலம்

ஞாயிற்றுக்கிழமை சூரிய கோலம் போடுதல் நல்லது.

வீட்டுச்சுவரையொட்டி போடும் பார்டர் கோலம் தீய சக்திகளை உள்ளே விடாது.

அமாவாசை மற்றும் இறந்தவர்களுக்கு திதி தரும் நாட்களில் வாசலில் கோலம் போடக் கூடாது.

அந்த ஆத்மாக்களை வீட்டினுள் அனுமதிக்காமல் கோலங்கள் தடுக்கும்.

அதனால் நம் முன்னோர்கள் நம்மை தேடி வருகிற திதி தரும் நாளில் வாசலில் கோலங்கள் போடாமல் இருந்து, அவர்களை வீட்டினுள் அனுமதித்து
ஆசி பெறுவது நல்லது.

இடது கையால் கோலம் போடக்கூடாது. பெண்கள் குனிந்து நின்றே கோலம் போட வேண்டும். உட்கார்ந்து போட்டால் செல்வம் குறையும்.

கணவர் வெளியில் செல்லும் முன்பே கோலம் போட்டுவிடவேண்டும். கோலம் போட்ட பிறகே அடுப்பு பற்றவைக்க வேண்டும்.

ஆள்காட்டி விரலை நீக்கியே கோலம் போட வேண்டும்.

கிழமைக்கு ஏற்ப வாசலில் கோலமிட்டால் கெட்ட ஆவிகள் நம் வீட்டை நெருங்காது.
========================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

27.3.16

Astrology: quiz: புதிர் எண்.106 புதிருக்கான விடை


Astrology: quiz: புதிர் எண்.106 புதிருக்கான விடை

படித்து முடித்தவுடன் வேலை கிடைத்தால் நல்லது. அதிலும் ஸ்திரமான வேலை கிடைத்தால் மிகவும் நல்லது.

எல்லோருக்கும் அப்படிக்கிடைத்துவிடுகிறதா என்ன?

ஸ்திரமான வேலை கிடைக்காமல் எத்தனை பேர் அவதிப் படுகிறார்கள்?

அதற்குக் காரணம் என்ன? நிவர்த்தி என்ன?

அது சம்பந்தமாக நேற்று ஒரு ஜாதகத்தைக் கொடுத்து அலசச் சொல்லியிருந்தேன்.

அதில் 3 கேள்விகள் கேட்டிருந்தேன். அதில் முதல் கேள்வி கொஞ்சம் கடினமானது. ஜாதகத்தைப் பார்க்கும்போது ஒவ்வொருக்கும் ஒவ்வொன்று
முக்கியமானதாகத் தோன்றும். ஆகவே அதை விட்டுவிட்டு அடுத்த 2 கேள்விகளுக்கு வந்த பதிலை மட்டும் பார்ப்போம்.

அந்த முதல் கேள்விக்கான பதில் பதில் லக்கினநாதன் திரிகோண வீட்டில் (5ல்) அமர்ந்திருப்பது. அதுவே ஜாதகனின் ஜாதகத்தில் முக்கியமான
அமைப்பாகும். அத்துடன் சனீஷ்வரன் பரிவர்த்தனை யோகத்திலும் உள்ளார். இந்தக் கருத்தை நமது மூத்த மாணவர்களில் ஒருவரான யு.எஸ்.ஏ 
சந்திரசேகரன் சூரியநாராயணா அவர்களும் சுட்டிக் காட்டியுள்ளார் (பதில் எண்.12ஐ பார்க்கவும்) அவருக்கு ஒரு விஷேசமான பாராட்டு.

போட்டியில் மொத்தம் 13 பேர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். அவர்களின் 12 பேர்கள் சரியான பதிலை அல்லது ஒட்டிய பதிலை எழுதி, தேர்ச்சி
பெற்றுள்ளர்கள், அவர்கள் அனைவருக்கும் எனது மனம் உவந்த பாராட்டுக்கள். உங்களுடைய பர்வைக்காக அவர்களுடைய பதிலைக் கீழே
கொடுத்துள்ளேன்.
-----------------------------------------------------------------------------------

ஜாதகத்தைப் பாருங்கள்.கும்ப லக்கின ஜாதகம். கும்பலக்கினத்திற்கு லக்கினாதிபதியும், 12ஆம் அதிபதியும் ஒருவரே. அதாவது சனீஷ்வரன். இந்த லக்கினத்திற்கு மட்டும்

அப்படியொரு அவஸ்தையான அமைப்பு. இந்த லக்கினக்காரர்களுக்கு லக்கினாதிபதி சனீஷ்வரன் கேந்திரம் அல்லது திரிகோணங்களில்
அமர்ந்திருந்தால் வெற்றிகரமான வாழ்க்கை

இல்லையென்றால் தோல்விகள் நிறைந்த வாழ்க்கை. கும்ப லக்கினத்திற்கு லக்கினநாதன் சனீஷ்வரன் 3, 6, 8  &12 ஆம் இடங்களில் மறையக்கூடாது!

ஜாதத்தில் சனி ஐந்தாம் வீட்டில் அமர்ந்துள்ளது. அது நட்பு வீடும் கூட. அதானால் ஜாதகனின் வாழ்க்கை வெற்றிகரமான வாழ்க்கைதான்.

ஜாதகன் பொறியியல் படித்தவன்.

ஆனால் துவக்கத்தில் ஜாதகனுக்கு நிரந்தரமான வேலை கிடைக்கவில்லை. 10 ஆண்டுகளில் 9 வேலைகளுக்கு  மாறியுள்ளான்.

ஏன் அப்படி?

பத்தாம் வீட்டில் ஆறாம் அதிபதி சந்திரன் அமர்ந்துள்ளான். அது விரும்பத்தக்கதல்ல! அத்துடன் 3ல் உள்ள  செவ்வாயின் பார்வையும் (பத்தாம்
வீட்டின்மேல் உள்ளது) உள்ளது, அத்துடன் கேது திசையும் நுழைந்து ஜாதகரைப் படுத்தி விட்டது.

28 வயதிற்குப் பிறகு யோககாரகன் சுக்கிரனின் திசையில் ஜாதகனுக்கு ஸ்திரமான நல்ல வேலை கிடைத்தது.

சுக்கிரன் ஜாதகத்தில் 12ல் இருந்தாலும் நவாம்சத்தில் அதே மகரத்தில் அமர்ந்து வர்கோத்தமம் பெற்றிருப்பதால் அவர் சரி செய்து ஜாதகனின்
வாழ்க்கையை சீரமைத்தார். அத்துடன் அவர் பத்தாம் வீட்டின் அதிபதி அவர் 12ல் மறைந்தாலும் தன்னுடைய வர்கோத்தம பலத்தால் சரி செய்தார்.

விளக்கம் போதுமா?

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------
வந்த பதில்கள்:
1
//////Blogger kmr.krishnan said...
ஜாதகர் 14 மார்ச் 1974 அன்று பிறதவர். காலை 6 மணி என்றால் லக்கினம் சரியாக அமைகிறது.ஆனால் தசா இருப்பை, நேரத்தை சரி செய்து
கொடுத்துள்ள தசா இருப்புடன் பொருத்த முடியவில்லை.அப்படி தசா இருப்பை சரி செய்தால் லக்கினம் மாறிப் போகிறது.
1. கஜ கேசரி யோகம் இந்த ஜாதகத்தின் சிறப்பு.மேலும் சந்திரன் மற்றும் சுக்கிரன் ராசி நவாம்சத்தில் ஒரே இடங்களில் இருப்பது சிறப்பு.சந்திரன் நீச பங்கம் பெற்றது மேலும் சிறப்பு.
2. 6க்கு உடைய சந்திரன் பத்தில் அமர்ந்தது, 10க்கு உடைய செவ்வாய் 3லும் மேலும் தன் வீட்டுக்கு ஆறிலும், அமர்ந்தது, காரகன் சனி கேதுவுடன்
உறவு வைத்தது, பூர்வ புண்ணியத்தில் சனி கேது நின்றது ஆகியவையும், வேலைக்கு வரும் பருவமான 20 வயது போல கேதுதசா நடந்தது ஆகியவை
வேலையில் ஸ்திரத்தன்மையை கொடுக்காமல் அடிக்கடி வேலை மாறியது.
3.சுக்கிர தசா சுக்கிர புக்தி அல்லது சுக்கிர தசா சூரிய புக்தியில் நல்ல வேலையில் நிரந்தரமாக அமர்ந்தார். சுக்கிரன் இவருக்கு யோக காரகன்.
12ல் இருந்தாலும் ராசி நவாம்சத்தில் மகரத்தில் இருந்து வலிமை பெற்றதால் சுக்கிரதசாவில் நிரந்தர வேலையைக் கொடுத்து இருப்பார்.
Friday, March 25, 2016 8:57:00 AM//////
-----------------------------------------
2
//////Blogger daya nidhi said...
வணக்கம் குருஜி ,
1. கும்ப லக்னத்திற்கு யோககாரகன் சுக்ரனும் vrgotthamam .
, சந்திரனும் வர்கோத்தமம் பெற்றது மற்றும் கெஜ கேசரி யோகம் உள்ள ஜாதகம்.
2. கேது தசா , சுகர தசா சுயபுத்தி வரை நிலையான வேலை இல்லை
3. யோகாதிபதி சுகர தசையில் பத்தாம் இடத்தில உள்ள சந்திரன் புத்தியில் (சந்திரன் சுய வர்க்கம் 7 பரல்கள் ) நிலையான வலை கிடைத்தது
சு. தயாநிதி அவியனுர்
Friday, March 25, 2016 12:26:00 PM///////
-----------------------------------------
3
/////Blogger Gopal Krishnan said...
வாத்தியார் அவர்களுக்கு எனது பணிவான நமஸ்காரங்கள்.
"Astrology: Quiz: புதிர் 106: கேள்விக்கென்ன பதில்!"
எதோ எனக்கு தெரிந்த சில விவரங்களை வரிசைப்படுத்தி எழுதியிருக்கிறேன்... தவறு இருந்தால் எனது தலையில் உங்களின் மோதிர விரல் அணிந்த கையால் குட்டி... எனக்கு புரியும்படி தெளிவு படுத்துங்கள்.
# நீங்கள் குறிப்பிட்டிருந்த ஜாதகருக்கு கால சர்ப தோஷம் இருக்கிறது. 33 வயதிற்குப் பிறகுதான் சிறப்புநிலையை எட்ட முடியும்.
# கும்ப லக்கினத்தில் சனியின் வீட்டில் சூரியனோடு மற்ற இரு கிரகங்களும் கிரக யுத்தத்தில் (சூரியனுக்கு 7 பாகைக்குள் இருப்பின்) குரு , புதன்
நீசமாகும் வாய்ப்பு உள்ளது. புதன் பரிவர்த்தனை என்று பார்த்தால் சனியும் சூரியனும் எதிரிகள் ஆகவே பரிவர்த்தனை பெற்றும் பலனில்லை.
# புதன் பரிவர்த்தனை பெறுவதால், புத-ஆதித்ய யோகம் முழுமையாக கிடைக்காமல் போகிறது. பரிவர்த்தனையால் குரு சனி இணைவு சண்டாள
யோகமாக மாறும் நிலை.
# தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் குருவின் வீட்டில் மாந்தன் (குளிகன்) இருப்பது விதண்டா வாதம் செய்பவராகவும், பிடிவாத குணமுடையவராகவும் இருப்பார் அதுவே அவரது செயல் திறனை கெடுக்கும்.
# எத்தனை படித்திருந்தாலும் சனியும் புதனும் பரிவர்த்தனை பெற்று, பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேதுவோடு சனி அல்லது பரிவர்த்தனை பெற்ற
புதன் அவரது வேலை வாய்ப்பை கெடுப்பார், அதோடு கேது அவரை பதப்படுத்தி எதிலும் நிலைத்தன்மை அற்ற நிலையில் நல்ல அனுபவத்தை
தருவார்.
# திரிகோணத்தில், தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய் தனது சொந்த வீட்டில் உச்சம் பெற்று ஜாதகருக்கு எதையும் தாங்கும் மன தைரியத்தை
தருகிறார்.
# கேந்திரிய மாத்துரு ஸ்தான சுக்கிரன் 12இல் மறைவு.
# சுக்கிரன் வர்கோத்தமம் பெற்று, சுப பார்வை பெறாமலும் ஜாதகரின் விரய ஸ்தானத்தை உறுதிபடுத்தியுள்ளார். ஆகவே ஜாதகரின் கையில் காசு
தங்காது. இருப்பினும் சூரியனுக்கு 12 இல் சுக்கிர- சுபகிரகம் அமைந்ததால் "சுபாவாசி யோகம்" ஏற்ப்படுவதால், வேலை சம்பாத்தியம் இல்லை
என்றாலும் ஜாதகர் சுபவாசியாக இருப்பார். மேலும் இவருக்கு இருக்கும், பரிவர்த்தனையால் நீசபங்க ராஜ யோகமும், மேலும் கஜ கேசரி யோகமும்
இதை உறுதி செய்கிறது. ஆகவே ஜாதகர் கால சர்ப தோஷம் இருக்கிற -33 வயதிற்கு பிறகு நல்ல நிலையை பெறுவார்.
# கும்ப, ஸ்திர லக்ன காரரான இவருக்கு சுக்கிரன் பாதகாதிபதியாக அமைகிறார் ஆகவே "காசு பணம் துட்டு- கோவிந்தா கோவிந்தா என"
உறுதியாகிறது
# தொழில் மற்றும் லாபஸ்தானமான குருவின் வீட்டில் ராகு இருப்பதும் தொழில் வாய்ப்புக்கள் இல்லை என்பது தெரிகிறது
# 6வது மறைவு வீட்டின் ரண, ரூன, ரோக ஸ்தான அதிபதி சந்திரன், 10வது வீட்டில் கர்ம ஸ்தானத்தில் செவ்வாயின் வீட்டில் நீச சந்திரனாக அமர்ந்து
கஷ்டங்களை தருகிறார். (விருசிக ராசிக்கு நீச சந்திரன் பிறந்த வீட்டின் பெருமை கிடைக்காமல் போகும் )
அன்புடன் கோகி என்கிற கோபால கிருஷ்ணன்- ரேடியோ மார்கோனி.
Friday, March 25, 2016 12:55:00 PM//////
-----------------------------------------
------
///////Blogger சேனா said...
கோவிலில் விளக்கு ஏற்றி அதை எடுத்து வைக்கும் போது அது கைதவறி கீழே விழுந்துள்ளது, அதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? தயவு
செய்து கூறவும்.///////

கை தவறித்தானே விழுந்தது. அதற்கு ஏன் கவலைப் படுகிறீர்கள்? மீண்டும் விளக்கை ஏற்றி வையுங்கள்!
-----------------------------------------------
4
///////Blogger asbvsri said...
புதிர் 106:
ஜாதகத்தின் சிறப்புகள்: ஜாதகர் 15 / 02 / 1974 ல் காலை பிறந்தவர்.
கும்ப லக்னம். லக்னாதிபதி திரிகோணத்தில் 5 ஆம் இடத்தில் வக்ரம். குருவின் பார்வையில்.
ஐந்தாம் அதிபதி புதன் (8 ஆம் அதிபதியும் கூட) லக்னாதிபதியுடன் பரிமாற்றம்.
இரண்டுக்கும் 11க்கும் அதிபதியான குரு, ஏழாம் அதிபதி சூரியன், 5 & 8 ஆம் அதிபதி புதன் மூவரும் லக்னத்தில். குரு அஸ்தமனம்.
யோகாதிபதி சுக்ரன் 12 ல்.
சந்த்ரன் 10 ஆம் இடத்தில் நீச்ச வர்க்கோத்தமம்.
சந்த்ரன், குரு, சூரியன், புதனுக்கு கேந்த்ரத்தில்.
ராஹு 11 ஆம் வீட்டில் தனுசுவில் குருவின் வீட்டில். சனியின் பார்வையில்.
மாந்தி இரண்டாம் வீட்டில். சனியின் பார்வை.
அஷ்டவர்க பரல் – 1, 3, 5, 6, 8, 10, 11, 12 க்கு 25க்கு மேல். (10 ஆம் வீட்டிற்கு 35, 11 ஆம் வீடு 40). வீடுகள் 2 மற்றும் 7 க்கு பரல்கள் 20.
கேள்வி 2: ஜாதகர் 20 ஆவது வயது வரை புதன் தசையில் படித்து முடித்தார். பின்னர் வந்த கேது தசை அவரை ஒரு நிரந்தர வேலையை
கொடுக்காமல் 27 வயது வரை படுத்தியது. பின்னர் வந்த சுக்ர தசை சுக்ர புக்தி அவர் யோகாதிபதியாக இருந்தும் 12ல் இருந்ததாலும், சூரியன் புக்தி
லக்னாதிபதிக்கு பகையானதாலும், சந்த்ர புக்தி அவர் நீச்ச வர்கோத்தமமாயிருப்பதாலும் பெரிதும் வேலையில் படித்த பின்னர் 10 வருடங்களுக்கு உதவவில்லை.
கேள்வி 3: செவ்வாய் புக்தியில் அவர் 10 ஆம் அதிபதியாவதால் மேஷத்தில் அவர் வீட்டில் இருப்பதால் ஒரு நிரந்தர வேலையை கொடுத்தார்.
நன்றியுடன்,
க இரா அனந்தகிருஷ்ணன்
Friday, March 25, 2016 3:33:00 PM//////
-------------------------------------------
5
/////Blogger thozhar pandian said...
இலக்கினாதிபதியும் கர்மகாரகருமான சனி பகவான், 10ம் வீட்டிற்கு 8ல் மறைந்தார். உடன் கேது. 10ம் வீட்டு அதிபதியான செவ்வாய் ஆட்சி பலம்
பெற்றும் 10ம் வீட்டிற்கு 6ல் மறைந்தார். 10ம் வீட்டிற்கோ 10ம் வீட்டு அதிபதிக்கோ சுபர் பார்வை இல்லை. 10ம் வீட்டில் தேய்பிறை சந்திரன் நீசத்தில். படித்து முடித்தவுடன் இவருக்கு கேது தசை தொடங்கி இருக்கும். அதன் பின்னர் நடந்த சுக்கிர தசையில் செவ்வாய் புக்தியில் ஜாதகருக்கு நிரந்தர வேலை கிடைத்திருக்கும்.
Saturday, March 26, 2016 2:22:00 AM///////
---------------------------------------------
6
Blogger lrk said...
ஐயா வணக்கம்
புதிரின் 106 பதில்
1......ஜாதகத்தின் முக்கியமான சிறப்பு என்ன?
கும்ப லக்ன யோக்காரகன் சுக்கிரன் வர்கோத்தம்ம் அதிக வலிமை.
செயல் வீரர் செவ்வாய் ஆட்சி,
11 ல் ராகு உகந்த இடம் ,
மனக்காரகன் சந்திரன் வர்கோத்தம்
2.....ஜாதகருக்கு படித்து முடித்தவுடன் 10 ஆண்டுகளுக்கு மேல் நிரந்தமான வேலை கிடைக்கவில்லை. ஆண்டுக்கு ஒரு வேலை என்று மாறிக்
கொண்டே இருந்தார். அதற்கு என்ன காரணம்?
தசாபுத்தி யும் கர்மகாரகன் சனி கேது கூட்டணி, அம்சத்தில் சனி பகை வீட்டில், மாந்தி கூட்டணிதான் காரணம் ஐயா
சனி , புதன் ( நீசமாகியுள்ளார் ), கேது திசை வரை அலைச்சல் தான்
3......சுக்கிர திசை சுயபுக்தியில் வேலை நிரந்த மாகியுள்ளது.
நன்றி
கண்ணன்
Saturday, March 26, 2016 9:51:00 AM//////
------------------------------------------
7
///////Blogger J Sudarsan Kumar said...
வாத்தியார் அவர்களுக்கு வணக்கம்
1) ஜாதகம் கால சர்ப்ப தோஷம் அமைந்த ஜாதகம் .
சந்திரன் தவிர அனைத்து கிரகங்களும் ராஹு கேது பிடியில் .
ஆனால் கிரகங்கள் கேதுவை நோக்கி செல்கின்றன .
அதனால் 32 வயதுக்கு மேல் யோகமாக மாறும் . (அ) லக்ன பரல்கள் எத்தனையோ அத்தனை வயதுக்கு மேல் யோகமாக மாறும் .
2) 6 க்குடைய வில்லன் சந்திரன் 10ம் இடத்தில அமர்ந்ததனால் வேலையில் நிரந்தரமின்மை . ஆனால் 10 க்குடைய செவ்வாயே 10 ம் இடத்தை
பார்ப்பது பிளஸ் பாயிண்ட்
3)சுக்ரன் 12 ல் மறைந்தாலும் வர்கோத்தமம் .
அவர் 4க்கும் 9க்கும் (ஒரு கேந்திரத்துக்கும் த்ரிகோணத்துக்கும் )அதிபதியான ராஜயோகாதிபதி
மேலும் தன்னுடைய சுகஸ்தானத்துக்கு(4 ம் வீட்டிற்கு ) பாக்கியத்திலும்(9 லிலும் ) தன்னுடைய பாக்கிய ஸ்தானத்துக்கு(9 ம் வீட்டிற்கு )
சுகஸ்தானத்திலும்(4 லிலும் ) உள்ளார்
10 க்குடையவரான செவ்வாய் தன்னுடைய 10 ம் வீட்டை 8 ம் பார்வையாக பார்க்கிறார் ஆகையால் சுக்ரனின் தசையில் செவ்வாய் புத்தியில் வேலை
நிரந்திரம் ஆகியிருக்கும்
ஜெ.சுதர்சன் குமார் , செங்கல்பட்டு
Saturday, March 26, 2016 10:26:00 AM//////
-----------------------------------------
8
///////Blogger seenivasan said...
Dear sir,
1. good points are
i) lord of second,eleventh house guru is sitting in lagnam
ii)lagna lord is placed fifth house 
iii) lagna lord and fifth house lords are exchanged their house
iv) seventh lord is sitting in lagna along with mercury which gives putha adipathiya yogam
v) Ragu is sitting in eleventh house
Vi) Third place lord mars is sitting in his own sign and it gives lot of confident
2.Answer for second question
i) he must have completed his education during the start of kethu dasa ,Kethu dasa never gives good result during his period hence he got temporary job
ii) Next period venus has given some trouble during his own sub period and after that sun sub period or moon sub period would have good permanent job.
Saturday, March 26, 2016 1:43:00 PM///////
-----------------------------------------
9
////////Blogger venkatesh r said...
புதிர் எண் 106 கேள்விக்கென்ன பதிலுக்கான‌ அலசல்:
வணக்கம் அய்யா!
கும்ப லக்கினம், விருச்சிக ராசி ஜாதகர்.
1) ஜாதகத்தின் முக்கியமான அம்சம் என்ன?
ஐந்தாம் அதிபதி புதனும் 7ம் அதிபதி சூரியனும் லக்கினத்தில் அமர்ந்து வலுவான ராஜயோகத்தை கொடுக்கின்றனர்.அது அவருக்கு நல்ல படிப்பை

கொடுத்தது.லக்கினாதிபதி சனி ஐந்தில் அமர்ந்து, அதன் அதிபதி புதனுடன் பரிவர்த்தனையிலுள்ளார்.
2)ஜாதகருக்கு படித்து முடித்தவுடன் 10 ஆண்டுகள் நிரந்தரமான வேலை கிடைக்கவில்லை.அதற்கு என்ன காரணம்?
1.ஆறாம் அதிபதி சந்திரன் நீசமாகி 10மிடத்தில் அமர்ந்தது.
2.ஜாதகரின் படிப்பு முடிந்த போது அவருக்கு கேது தசை நடப்பில் இருந்தது. பிறகு வந்த‌ சுக்கிர தசை,சந்திர‌ புத்தி முடியும் வரையில் (13

வருடங்கள்)அவருக்கு நிரந்தரமான வேலை அமையவில்லை. தவிர யோககாரகனும் தசா நாயகனுமான‌ சுக்கிரன் லக்கினத்திற்கு 12ல் மறைந்தது.
3) பிற்காலத்தில் அவருக்கு நிரந்தரமான வேலை கிடைத்தது. அது எப்போது?
சுக்கிர தசை, செவ்வாய் புத்தியில் 33 வயதிற்கு மேல் வேலை நிரந்தரமானது. 10ம் அதிபதி செவ்வாய் 3ல் அமர்ந்து தன் 8ம் தனிப்பார்வையில்

10மிடத்தை பார்ப்பது ஒரு காரணம்.
ஒரு சந்தேகம். அவருக்கு திருமணமாயிற்றா?ஜாதகரின் குடும்ப வாழ்க்கை எப்படி உள்ளது? தெரிந்திருந்தால் பதில் சொல்லவும்.
Over to Vaathiyaar!
Saturday, March 26, 2016 1:53:00 PM///////
-------------------------------------------
10
/////////Blogger Sudharsan Dhamu said...
சுதர்சன்,
காஞ்சிபுரம்.
1. லக்னாதிபதியும் 5ஆம் அதிபதியும் பரிவர்தனையில் உள்ளது.செவ்வாய் ஆட்சி வீட்டில் உள்ளது.லக்கனத்தில் குரு.(venus and moon in same rasi at

both amsam and rasichakram).
2. சனி ஆரம்ப தசை(3yr), அடுத்து முறையே புதன் தசை(17yrs), அடுத்து வந்த கேது தசை(7yrs) காரணமாக வேலையில் தடுமாற்றம் இருந்திருக்கும்.
3.பிறகு வந்த சுக்கிர தசையினால் வேலை மாற்றம் நின்றிருக்கும். சுக்கிரன் ஜாதகத்தில் 12ஆம் அதிபதி. ஆகவே சுக்கிர தசையில் சந்திர (அ)

செவ்வாய் புக்தியில் வேலை மாற்றம் நின்றிருக்கும்.
Saturday, March 26, 2016 5:50:00 PM ///////
---------------------------------------------
11
//////Blogger slmsanuma said...
DOB 15.02.1974 Place of Birth Chennai Time 7 AM
In fifth place Kethu. Sanniyasi Yokam or Raja Yokam.
Mars is in Own house.
Mercury and Saturn are in Parivarthanai yokum.
Jupiter is in Lakna. So this Native is a blessed One.
Venus and Moon is in Varkothamam.
Moon is in Neecham and in 10th place. Jupiter is also in Asthankatham. 
Though the 10th place owner Mars is in his own house but the neecha Moon spoiled his opportunity to get the standard job in time. 
Karmakaragan Saturn is also in Vakkiram. 
10th Bhavgam got 34 Parals.
So delay in getting good job.
But got permanent job during sukkira Thisa Moon Bukthi
Santhanam, Salem
Saturday, March 26, 2016 10:52:00 PM//////
-------------------------------------------------
12
////Blogger Chandrasekaran Suryanarayana said...
வணக்கம் QUIZ 106 ; (முதலில் பதிவு இட்டதை நீக்கவும். கை தவறுதலாக ஏற்பட்டது மன்னிக்கவும்)
ஜாதகர் கும்ப லக்கினம், அனுஷ நட்சத்திரம் , விருச்சிக ராசி.
லக்கினாதிபதி சனி , கும்ப லக்கின யோக காரர்கள் ; சுக்கிரன்
1. முக்கியமான சிறப்பு ;
1ம் வீட்டு அதிபதியும் (சனி) , 5ம் வீட்டு திருகோண அதிபதியும் (புதன்) பரிவர்த்தனை . பலன்; ஜாதகர் புகழ் பெற்று விளங்குவார் , மகிழ்ச்சியுடன்

இருப்பார்.
[ வாத்தியார் குறிப்பு: - ஒரு வீட்டின் பலம், வீட்டு அதிபதிகள் பரிவர்த்தனை பெற்று இருத்தல். இந்த விதிதான் இருக்கும் விதிகளில் அதீத பவரானது.

உங்கள் மொழியில் சொன்னால் சூப்பர் பவரானது. மற்றதெல்லாம் அதற்கு அடுத்ததுதான். ]
அடுத்த சிறப்பு : லக்கினத்தில் குரு அமர்ந்து 9ம் பார்வையால் பாக்கியஸ்தான வீட்டை பார்ப்பது . 5ம் பார்வையால் புத்திர ஸ்தான வீட்டையும், 7ம்

பார்வையால் களத்திரஸ்தானத்தையும் பார்ப்பது விசேஷம் .
ஜாதகத்தில் புதனும், சூரியனும், இருவரில் ஒருவர், 6, 8, 12 ஆம் வீடுகளில் ஏதாவது ஒன்றிற்கு அதிபதி என்றால், யோக பலன்கள் இருக்காது.

ஆகையால் சிறப்பு கிடையாது. (இந்த ஜாதகத்தில் புதன் 8ம் வீட்டு அதிபதி)
2. நிரந்திர வேலை கிடைக்கவில்லை காரணம்:
ஜாதகருக்கு 3 வயதில் புதன் தசை ஆரம்பம் , 20 வயதில் கேது தசை ஆரம்பம் , 27 வயதில் சுக்கிரதசை ஆரம்பம்.47 வயதில் சூரிய தசை ஆரம்பம்.
1. 6ம் வீட்டு அதிபதி சந்திரன் 10ம் வீட்டில் அமர்ந்தது தான் முக்கிய காரணம் .
2. 10ம் வீடு விருச்சிகம் . அதில் சந்திரன் நீசம். நவாம்சத்திலும் சந்திரன் நீசம்.
3. 27 வயது முதல் 47 வயது வரை சுக்கிர தசை. சுக்கிரன் 12ல் விரய ஸ்தானத்தில் அமர்ந்துள்ளார் . அவர் பாக்கிய ஸ்தானத்தின் அதிபதி. 12ம் வீடு

பாப கர்தாரி தோஷம் (ஒரு பக்கம் ராகு, மறு பக்கம் சூரியன் )
4. 5ம் வீட்டில் சனி இருப்பதால் அதிர்ஷ்டமும் துரதிஷ்டமும் மாறி மாறி வரும்.
சனியும் கேதும் கூட்டு 5ம் வீட்டில் இருப்பதால் துறவு மன பான்மை ஏற்படும் . சன்யாச யோகம்.
3. நிரந்திரமான வேலை கிடைத்தது :
சுக்கிர தசை ராகு புக்தியில் .
11ம் வீட்டில் ராகு - பலம் பொருந்திய வீடு. (41 பரல்) வளம் உடைய வாழ்க்கை கிடைக்கும் , சுகங்களையும் சௌகரியங்களையும் அனுபவிப்பான்.

தொழில் காரகன் சனியின் பார்வை ராகுவின் மீது உள்ளது.
அல்லது
சுக்கிர தசை குரு புக்தியில்:
லக்கினத்தில் குரு அமர்ந்து 9ம் பார்வையால் பாக்கியஸ்தான வீட்டை பார்ப்பதால் . குருவின் 5ம் பார்வை தொழில் காரகன் சனியின் மீது உள்ளது.
யோகங்கள்: சங்க யோகம், பர்வத யோகம்,, பாச யோகம்
ஜாதகத்தில் செவ்வாய் மேஷ ராசியில் உள்ளது கம்ப்யுட்டரில் செவ்வாய் ரிஷப ராசியில் உள்ளது. (14 march 1974 5.45.02 காலை இடம்: Chennai)
மற்ற எல்லா ராசியும் சரியாக உள்ளது.
வாத்தியார் தவறு செய்யமாட்டார் என்ற அடிபடையில் கம்புயுட்டர் ஜாதகத்தை எடுத்துக்கொள்ளவில்லை .
Sunday, March 27, 2016 12:58:00 AM ///////
==========================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

25.3.16

Astrology: Quiz: புதிர் 106: கேள்விக்கென்ன பதில்!

Astrology: Quiz: புதிர் 106: கேள்விக்கென்ன பதில்!


மேலே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்.

இந்த ஜாதகத்தை வைத்து இன்றைய கேள்விகள்:

1. ஜாதகத்தின் முக்கியமான சிறப்பு என்ன?
2. ஜாதகருக்கு படித்து முடித்தவுடன் 10 ஆண்டுகளுக்கு மேல் நிரந்தமான வேலை கிடைக்கவில்லை. ஆண்டுக்கு ஒரு வேலை என்று மாறிக் கொண்டே இருந்தார். அதற்கு என்ன காரணம்?
3. பிற்காலத்தில் ஜாதகருக்கு ஒரு நிரந்தமான வேலை கிடைத்தது. அது எப்போது?

ஜாதகத்தை நன்றாக அலசி உங்கள் பதிலை எழுதுங்கள்!

அன்புடன்
வாத்தியார்
===========================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

24.3.16

மருத்துவம்: வெங்காயம் என்னும் அரு மருந்து!


மருத்துவம்: வெங்காயம் என்னும் அரு மருந்து!

வெங்காயத்தை எதனுடன் சேர்த்தால் நோய் நீக்கும் மருந்தாக மாறும் - தீரும் நோய்கள் என்னென்ன?

இங்கே கூறியுள்ள மருத்துவம் சின்ன வெங்காயத்தை வைத்து. அதை மனதில் கொள்க!

1. நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.

2. சமஅளவு வெங்காயச் சாறு, வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட காதுவலி, குறையும்.

3. வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட, காது இரைச்சல் மறையும்.

4. வெங்காயத்தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத்தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து, அனைத்தையும் பாலுடன் சேர்த்து சிறிது சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும்.

5. வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்

6. வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.

7. வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.

8. வெங்காயச் சாற்றையும், வெந் நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.

9. வெங்காயத்தை சமைத்து உண்ண உடல் வெப்பநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு தணியும்.
10. வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும்.

11. வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

12. வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும்.

13. படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை சிவர மறைந்துவிடும்.

14. திடீரென மூர்ச்சையானால் வெங்காயத்தை கசக்கி முகரவைத்தால் மூர்ச்சை தெளியும்.

15. வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும்,குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும்.

16. வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.

17.பனைமர பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சூடுபடுத்தி குடித்து வர மேகநோய் நீங்கும்.

18. வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட மேகநோய் குறையும்.

19. வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.

20. பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.

21. வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது.

22. வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும்.

23. தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.

24. வெங்காயச் சாற்றுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில்ஏற்படும் வலி நேரத்தில் தடவிவர வலி குணமாகும்.

25. நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.

26. வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும்.

27. வெங்காயச் சாறையும், தேனையும் சம அளவு கலந்து கண்வலிக்கு ஒரு சொட்டுவிட கண்வலி, கண் தளர்ச்சி நீங்கும்.

28. ஜலதோஷ நேரத்தில் வெங்காயத்தை முகர்ந்தால் பலன் கிட்டும்.

29. வெங்காயத்தை அரைத்து தொண்டையில் பற்றுப்போட ஏற்படும் தொண்டை வலி குறையும்.

30. பாம்பு கடித்துவிட்டால் நிறைய வெங்காயத்தைத் தின்னவேண்டும். இதனால் விஷம் இறங்கும்.

31 ஆறு வெங்காயத்தை ஐநூறு மில்லி நீரிலிட்டு, கலக்கிப் பருக சிறுநீர் கடுப்பு, எரிச்சல் நீங்கும்.

32. வெங்காயம் சோடா உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து நாய் கடித்த இடத்தில் தடவி, வெங்காய சாறை குடிக்க நாய் விஷம் இறங்கும். பிறகு டாக்டரிடம் செல்லலாம்.

33. வெங்காயச் சாறோடு சர்க்கரை சேர்த்துக்குடிக்க மூலநோய் குணமாகும்.

34. காலரா பரவியுள்ள நேரத்தில் பச்சை வெங்காயத்தை மென்றுதின்ன காலரா தாக்காது.

35. ஒரு பிடி சோற்றுடன் சிறிது உப்பு, நான்கு வெங்காயம் இவற்றை சேர்த்து அரைத்து, ஒரு வெற்றிலையில் வைத்து நகச்சுற்றுள்ள விரலில் காலை, மாலை வைத்துக்கட்ட நோய் குறையும்.

36. சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம்.

37. தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால் சிறு வெங்காயத்தை இரு துண்டாக நறுக்கி தேய்த்துவர முடிவளரும்.

38. காக்காய் வலிப்பு நோய் உள்ள வர்கள் தினசரி ஓர் அவுன்ஸ் வெங்காயச் சாறு சாப்பிட்டுவர வலிப்பு குறையும்.

39. வெங்காயத்தை தினமும் சாப்பிட்டுவர டி.பி.நோய் குறையும்.

40. வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும்.

41. தேள்கொட்டிய இடத்தில் வெங்காயத்தை நசுக்கித் தேய்க்க விஷம் இறங்கும்.

42. வெங்காயத்தை பசும் தயிருடன் சேர்த்து சாப்பிட்டுவர தாது பலமாகும்.

43. வெங்காயம் சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கி குரல் வளமாகும்.

44. தினமும் மூன்று வெங்காயம் சாப்பிட்டுவர பெண்களுக்கு ஏற்படும் உதிரச் சிக்கல் நீங்கும்

45. வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட, மலச்சிக்கல் குறையும்.

46. வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும்.

47. மாரடைப்பு நோயாளிகள், ரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.

48. சின்ன வெங்காயச் சாறு கொழுப்பை உடனே கரைக்கும்.

49. வெங்காயத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சி யும், மூளை பலமும் உண்டாகும்.

50. வெங்காயத்தை வதக்கிக் கொடுத்தால் பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவர். ஊட்டச்சத்து கிடைக்கும்.
=====================================================
முக்கிய வேண்டுகோள்:

மாதம் ஒன்றிற்கு 20 ல் இருந்து 25 பதிவுகள் வரை பதிவு செய்து வருகிறேன். இங்கே சராசரியாக தினமும் 5,000 பேர்கள் வந்து படித்துவிட்டுச் செல்கிறார்கள். அத்தனை பேர்களும் விரும்புகிற மாதிரி அல்லது அத்தனை பேர்களுக்கும் பிடிக்கின்ற மாதிரி பதிவுகளை வெளியிடுவது கடினம்.
5ல் இருந்து 10 சதவிகிதம் பேர்களுக்கு சில பதிவுகள் பிடிக்காமல் போகலாம். அல்லது கருத்து வேறு பாடுகள் ஏற்படலாம். அவர்கள் எல்லாம் பின்னூட்டங்கள் மூலம் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம், நான் மட்டுறுத்தல் செய்வதில்லை. வரும் பின்னூட்டங்களை அப்படியே வெளியிடுவதுடன். அவற்றிற்கு எனது பதில்களையும் எழுதுகிறேன். ஆகவே பதிவுகளைப் படிப்பவர்கள், பின்னூட்டங்களையும் படிக்க வேண்டுகிறேன்

அன்புடன்,
வாத்தியார்
--------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

23.3.16

Humour: நகைச்சுவை: பெற்ற பெண்ணிற்கும், எக்ஸாம் பேப்பருக்கும் உள்ள ஒற்றுமை என்ன தெரியுமா?

Humour: நகைச்சுவை: பெற்ற பெண்ணிற்கும், எக்ஸாம் பேப்பருக்கும் உள்ள ஒற்றுமை என்ன தெரியுமா?

நகைச்சுவைகளை நகைச்சுவையாக மட்டும் பாருங்கள். வேறு கருத்து வேறுபாடுகள் வேண்டாம்!

அன்புடன்,
வாத்தியார்
-----------------------------
# பாஸ் மூவி டயலாக்:

படிக்கனும்….படிக்கனும்….5 யூனிட்டும் படிக்கனும்…ஒரு டாபிக் விடாம படிக்கனும்….ஒரே நாளில் படிக்கனும்

சந்தானம்: அதுக்கு நீ “INDEX” தான் படிக்கனும்
----------------------
# PROFESSOR: YOU HAVE PASSED ALL THE PAPERS IN THIS SEM.. HA HA HA

STUDENT: என்னைக் கலாய்ச்சிட்டாராமா…
----------------------------

அவனவன் டிரெயின் டிக்கெட் ,பஸ் டிக்கெட் ஃப்ளைட் டிக்கெட்,சினிமா டிக்கெட் ஏன் லாட்டரி டிக்கெட் கூட வாங்கி சந்தோசமா இருக்கான் ...

ஒரே ஒரு ஹால் டிக்கெட் வாங்கிட்டு நான் படுற அவஸ்தை இருக்கே..அய்யய்யோ..
---------------------------------
# EXAM CENTRE:

BOY told GIRL “All the Best”

GIRL replied “All the Best”

RESULT:

GIRL – 80 Marks

BOY – 08 Marks

MORAL: நல்லவங்க வாக்கு மட்டும் தான் பலிக்கும்
----------------------------------------------
# பெத்த பொண்ணுக்கும் எக்ஸாம் பேப்பருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு என்ன தெரியுமா?

ரெண்டையுமே கட்டிக் கொடுக்குற வரைக்கும் ஒரே தலைவலி தான்!
----------------------------------------------
# பெத்த பையனுக்கும் எக்ஸாம் பேப்பருக்கும் உள்ள ஒற்றுமை என்ன தெரியுமா?

ரெண்டையும் திருத்தவே முடியாது! :-)
-----------------------------------------
# நீ என்ன அவ்வளவு அழகா?
உன்னைப்
பார்த்தவுடனே
அனைத்தும்
மறந்து விடுகிறதே!!

By EXAM HALL-ல் கொஸ்டீன் பேப்பர் பார்த்துக் கவிதை எழுதுவோர் சங்கம்.
------------------------------------------
# GIRLS: எக்ஸாம் டைம்ல நாங்க டிவி, கம்பியூட்டர், செல் எதையும்
தொடமாட்டோம். உங்களால முடியுமா?

BOYS: ஹா..ஹா..ஹா.. நாங்களாம் ”புக்”கயே தொடமாட்டோம். அது உங்களால முடியுமா?
----------------------------------------------
# படிக்கும் போது தூக்கம் வந்தா என்ன செய்யனும்?

நமக்குப் படிப்பு தான் வரல.. தூக்கமாவது வருதேனு தூங்கிடனும்
------------------------------------------------
A married man saved his girlfriend's phone number on his mobile as 
"LOW BATTERY"  
with no ringtone.

Whenever she calls him in his absence, 
his wife takes the phone and plugs it to the charger..

The guy was nominated for Nobel prize for "Innovation and Peace"

---------------------------------------------------------------------
 📮 கோயிலை இடித்துவிட்டு பள்ளிக்கூடம் அமைப்போம் என்றார்கள்... ஆனால் உண்டியலை அகற்ற மறந்துவிட்டார்கள்...!!!

💜🌀💜🌀💜🌀💜🌀💜

📮ஓடும் ஓட்டமெல்லாம் மரணத்துக்காத்தான் எனும் போது, கொஞ்சம் நிதானமாகவும் நடக்கலாம்...!!!

💜🌀💜🌀💜🌀💜🌀💜

📮நான் உங்களை பற்றி நினைப்பதை எல்லாம் சொல்லி விட வேண்டுமானால், நீங்கள் என் எதிரியாக இருக்க வேண்டும்...!!!

💜🌀💜🌀💜🌀💜🌀💜

📮ஏசி என்பது நாம் இருக்கும் சின்ன அறையை குளிராகவும் இந்த பெரிய பூமியை சூடாகவும் மாற்றுகிறது...!!!

💜🌀💜🌀💜🌀💜🌀💜

📮முடி வளர்க்கிறதுக்கு எடுக்குற முயற்சி, செடி வளர்ப்பதற்கு யாரும் எடுக்கிறதில்லை...!!!

💜🌀💜🌀💜🌀💜🌀💜

📮அனைவரும் ஆவேசத்துடன், முன்னேறிச் சென்று கொண்டு இருக்கிறார்கள். கொஞ்சம் அசந்தால், நம்மையும் மிதித்துத் தாண்டிச் சென்று விடுவார்கள்...!!!

💜🌀💜🌀💜🌀💜🌀💜

📮தன்னைப் புலி என்று நினைக்கும் எல்லா ஆண்களும் தம் மனைவியிடம்"மியாவ்" என்றே கர்ஜிக்கிறார்கள்...!!!

💜🌀💜🌀💜🌀💜🌀💜

📮எல்லோரையும் திட்டிக்கொண்டே இருப்பவனுக்கு நிஜ வாழ்வில் நண்பர்கள் இல்லாமல் இருப்பதும் இணைய வாழ்வில் நிறைந்து இருப்பதும் விசித்திர முரண்...!!!

💜🌀💜🌀💜🌀💜🌀💜

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

22.3.16

உலகம் போற்றும் படைப்பு - நீங்கள் அவசியம் படிக்க வேண்டியது!

உலகம் போற்றும் படைப்பு - நீங்கள் அவசியம் படிக்க வேண்டியது!

உலகம் போற்றும் அருளாளர்களில் "ஆதிசங்கரர்" முதன்மையானவர்.

கேள்வி -- பதில் பாணியில் இவர் அருளிய "பிரஸ்னோத்தர ரத்ன மாலிகா" என்ற படைப்பு மிகவும் புகழ் பெற்றது.அதில் இடம் பெற்றுள்ள கேள்வி -- பதில்களிருந்து சில... :

கேள்வி (1)
எது இதமானது ?

பதில் (*) தர்மம்.

(2)  நஞ்சு எது ?

(*)  பெரியவர்களின் அறிவுரையை அவதிப்பது.

(3)  மதுவைப் போல மயக்கத்தை உண்டு பண்ணுவது எது ?

(*)  பற்றுதல்.

(4)  கள்வர்கள் யார் ?

(*)  புலன்களை இழுத்துக் கொண்டு போகும் விஷயங்கள்.

(5)  எதிரி யார் ?

(*)  சோம்பல்.

(6)  எல்லோரும் பயப்படுவது எதற்கு ?

(*)  இறப்புக்கு.

(7)  குருடனை விட குருடன் யார் ?

(*)  ஆசைகள் உள்ளவன்.

(8)  சூரன் யார் ?

(*)  கெட்ட வழியில் மனம் செல்லாமல், அதை அடக்குபவன்.

(9)  மதிப்புக்கு மூலம் எது ?

(*)  எதையும் யாரிடமும் கேட்காமல் இருப்பது.

(10)  எது துக்கம் ?

(*)  மன நிறைவு இல்லாமல் இருப்பது.

(11)  உயர்ந்த வாழ்வென்று எதைச் சொல்லலாம் ?

(*)  குற்றங்கள் புரியாமல் வாழ்வதை.

(12)  தாமரையிலை மேல் தண்ணீரைப் போல நிலையில்லாதவை எவை ?

(*)  இளமை, செல்வம், ஆயுள்.... ஆகியவை.

(13)  சந்திரனுடைய கிரணங்களைப் போல் மற்றவர்களுக்கு இன்பம் தருபவர்கள் யார் ?

(*)  நல்லவர்கள்.

(14)  எது சுகமானது ?

(*)  அனைத்தையும் தியாகம் செய்துவிட்டு பற்றின்றி வாழ்வது.

(15)  எது இன்பம் தரும் ?

(*)  நல்ல மனதுடையோர்களின் சிநேகிதம்.

(16)  எது மரணத்துக்கு இணையானது ?

(*)  அசட்டுத்தனம்.

(17)  விலை மதிப்பற்றதென எதைக்  குறிப்பிடலாம் ?

(*)  காலமறிந்து செய்யும் உதவி.

(18)  இறக்கும் வரை உறுத்துவது எது ?

(*)  ரகசியமாகச் செய்த பாவம்.

(19)  எவரை நல்வழிப்படுத்துவது கடினம் ?

(*)  துஷ்டர்கள், எப்போதும் சந்தேகத்திலேயே இருப்பவர்கள், சோகத்திலேயே சுழல்பவர்கள், நன்றி கெட்டவர்கள்... ஆகியோர் !

(20)  சாது என்பவர் யார் ?

(*)  ஒழுக்கமான நடத்தை உள்ளவர்.

(21)  உலகத்தை யாரால் வெல்ல முடியும் ?

(*)  சத்தியமும், பொறுமையும் உள்ளவரால்.

(22)  யாரைத் தேவர்களும் வணங்குகின்றனர் ?

(*)  எல்லாவற்றின் மீதும் கருணை உள்ளவனை.

(23)  செவிடன் யார் ?

(*)  நல்லதைக் கேட்காதவன்.

(24)  ஊமை யார் ?

(*)  சரியான சந்தர்ப்பங்களில் தகுந்த இனிமையான சொற்களைச் சொல்லத் தெரியாதவன்.

(25)  நண்பன் யார் ?

(*)  பாவ வழியில் போகாமல் தடுப்பவன்.

(26)  யாரை விபத்துகள் அணுகாது ?

(*)  மூத்தோர் சொல் கேட்டு நடப்பவனையும், அடக்கமுள்ளவனையும்.

படித்ததில் பிடித்தது!
அன்புடன்,
வாத்தியார்
===================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

21.3.16

தர்மம் எது? தானம் எது?

தர்மம் எது? தானம் எது?

மகாபாரதத்தில் உடலைப் பிரிந்த கர்ணனின் உயிரானது தன் தந்தை சூரிய தேவனை வணங்கி  சுவர்க்க பேறு பெற்றது.

சூரிய தேவனுக்கோ மனதில் மிகப் பெரிய ஐயம் கலந்த வேதனை. எவரிடம் கேட்பது.? எவர் தெளிவாகக் கூறுவார்கள் ? குழப்பத்திலும் கோபத்திலும் சூரியனின் வெம்மை அதிகரித்தது.

இதை உணர்ந்த ஈசன், அவர் முன் எழுந்தருளினார்.

சூரியனே, என்ன தடுமாற்றம் உன் மனதில் ?

பலவிதமான தான தருமங்கள் செய்து புண்ணியங்களை சேர்த்து வைத்த என் மகன் கர்ணனை போரில் கொன்றது விதி என்று ஏற்றுக் கொண்டேன்.
ஆனால், எல்லா புண்ணியங்களையும் கிருஷ்ணருக்கு தானமாகத் தந்தபடியால் அவன் இன்னும் மிகப் பெரிய புண்ணியவான் ஆகிவிடுகிறானே. பிறகு எப்படி அவனுக்கு மரணம் ஏற்பட்டது? இது அநீதி அல்லவா? என கேட்டார் சூரியத் தேவன்.

சூரியனே...நிறைய மனிதர்களுக்குள் ஏற்படும் சலனமே உன்னை இந்தக் கேள்வியை எழுப்ப வைத்ததுள்ளது, சொல்கிறேன் கேள்...

தானம் என்பது பிறருக்குத் தேவையானவற்றை அவர் கேட்டோ, அடுத்தவர் அவர் நிலை கூறி அறிந்தபின்னோ தருவது. இதுதான் தானம். புண்ணியக் கணக்கில் சேராது. ஏனெனில்.. இல்லாதவர் மற்றும் இயலாதவர் கேட்டபின் கொடையளிப்பது ஒரு மன்னனின் கடமை. ஒவ்வொரு மனிதனின் கடமையும் கூட....

ஆனால்,  தர்மம் என்பது எவரும் கேட்காமல் அவரே அறியாமல் அவர் நிலை அறிந்து கொடுப்பது. இதுதான் புண்ணியம் தரும். பசித்திருக்கும் ஒருவர் கேட்டபின் ஏதாவது தருவது தானம். அவர் கேட்காமலேயே அவர் பசியாற்றுவது தர்மம்.

கர்ணன் தர்மங்கள் செய்து புண்ணியங்களை ஈட்டியவன்தான். ஆனால், மொத்த புண்ணியத்தையும் கிருஷ்ணர் தானமாகக் கேட்டுத்தான் வாங்கினாரே தவிர  தர்மமாகப் பெறவில்லை. எல்லா புண்ணியங்களையும் தானமாகத் தாரை வார்த்து தந்த பிறகு கர்ணனும் ஒரு சாதாரண மனிதனானான்.
அதனாலேயே மரணம் அவனை எளிதாய் நெருங்கியது.

கேட்டு கொடுப்பது தானம் !
கேட்காமல் அளிப்பது தர்மம் !
=================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

20.3.16

Astrology: புதிர் எண்.Q.105 புதிருக்கான பதில்!

Astrology: புதிர் எண்.Q.105 புதிருக்கான பதில்

20-3-2016

கொடுக்கப்பெற்றிருந்த ஜாதகம் குழந்தையின்மைக்கு ஒரு உதாரண ஜாதகம்

குழந்தை இன்மை என்பது ஒரு சாபம்தான். சாபம் என்றாலும் குழந்தை இல்லாதவர்கள் வருந்தாதீர்கள். காலதேவன் கொடுக்கும் சாபங்களுக்கெல்லாம், இறைவன் நஷ்ட ஈட்டையும் கொடுத்துத்தான் மனிதர்களைப் படைக்கிறார். இல்லை என்றால் அனைவருக்கும் 337 என்ற மந்திரம் எப்படி வரும்?

தங்கள் குழந்தைகளைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்து, தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து, அவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படாமல் பாதுகாத்து வளர்த்த பெற்றோர்களை எத்தனை பிள்ளைகள உதாசீனப் படுத்துகின்றன தெரியுமா? எத்தனை பெற்றோர்கள் உரிய அன்பு பாசம் அரவணைப்பு கிடைக்காமல் முதியோர் இல்லங்களில் வாடிக்கொண்டிருக்கிறார்கள் தெரியுமா?

அவர்களைப் பார்க்கும் போது, குழந்தை இல்லாதவர்களின் நிலைமை எவ்வளவோ மேல்!

என்ன, சமூகம் அவர்களைச் சீண்டும். அது ஒன்றுதான் வருத்தத்திற்கு உரியது! உறவினர்களோ அல்லது நண்பர்களோ திடீரென்று உங்கள் குழந்தைகள் என்ன செய்கின்றன என்று கேட்டு அவர்களைச் சங்கடத்திற்கு ஆளாக்குவார்கள்

லைசென்ஸ் இல்லாத வாகன ஓட்டியைப் போலீஸ்காரன் மடக்கிக் கேள்வி கேட்பதைப் போல கேள்வி கேட்பார்கள்!

கேட்டால் என்ன? அடக்கமாகப் பதில் சொல்லுங்கள்

“I do not have a child. I don't know whether it is a curse or boon. But i accepted the out come of the life destined to me, happily!”

“எனக்குக் குழந்தை இல்லை. அது சாபமா அல்லது வரமா என்று தெரியவில்லை. விதிக்கப்பெற்றதை ஏற்றுக்கொண்டு வாழும் மனப்பக்குவம் எனக்கு உள்ளது. அதனால் நான் குழந்தையின்மைக்காக வருந்தவில்லை”. என்று சொல்லுங்கள்!

குழந்தை இருப்பவனுக்கு அவன் குழந்தைகள் மட்டுமே குழந்தைகளாக இருக்கும். குழந்தை இல்லாதவனுக்கு, அவன் செலுத்தும் அன்பினால் உறவினர்கள், நண்பர்கள் என்று மற்ற வீட்டுக் குழந்தைகளும் அவனுடைய குழந்தைகள்தான் என்ற பெருந்தன்மையால் நிறையக் குழந்தைகள். ஆகவே குழந்தையின்மை சாபமல்ல ஒரு விதத்தில் அது வரம்தான்!
----------------------------------------------------------------
சரி சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன்!

கொடுக்கப்பட்டுள்ள ஜாதகத்தைப் பாருங்கள்கடக லக்கின ஜாதகம். லக்கினாதிபதி சந்திரன் லக்கினத்திலேயே இருக்கிறார்.

குடும்ப ஸ்தான அதிபதி (Lord of the 2nd house) சூரியன் பாக்கியத்தில் (9ஆம் வீட்டில்) ஆகவே நல்ல குடும்ப வாழ்க்கை அமைந்தது

குழந்தையின்மைக்கான காரணங்கள் என்ன என்பதைக் கீழே பட்டியலிட்டுள்ளேன்.

1
குழந்தை பாக்கியத்திற்கான வீட்டில் (ஐந்தில்) ராகு,
2
அந்த (ஐந்தாம்) வீட்டு அதிபதி செவ்வாய் கேதுவுடன் சேர்ந்து கெட்டிருக்கிறார். வீக்காக உள்ளார்
3
குழந்தைக்குக் காரகன் குரு  (authority for children) அஷ்டமத்தில் மறைந்துவிட்டார் அதாவது எட்டாம் இடத்தில் அமர்ந்து விட்டார். அத்துடன் விரையாதிபதி புதனுடன் சேர்ந்து செல்லாக் காசாகிவிட்டார்.
4
அத்துடன் அதே குரு பகவான்தான் இந்த ஜாதகத்திற்கு பாக்கியாதிபதி அதாவது Ninth Lord அவர் தன்னுடைய இடத்திற்குப் பன்னிரெண்டில் அமர்ந்திருக்கிறார். அது மோசமான இடமாகும் (It is the most melefic place for a house lord)
5
மேலும் இயற்கையாகவே சுபக்கிரகங்களான சுக்கிரன், குரு, மற்றும் புதன் ஆகிய மூவரும் எட்டில் அமர்ந்ததால் எந்தப் பயனும் இல்லாமல் போய்விட்டது!

விளக்கம் போதுமா?
-------------------------------
இன்றைய போட்டியில் 30 அன்பர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். பதிலையும் சரியாக எழுதியுள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்.
ஆனால் முக்கியமான காரணம்: இயற்கையாகவே சுபக்கிரகங்களான சுக்கிரன், குரு, மற்றும் புதன் ஆகிய மூவரும் எட்டில் அமர்ந்ததால் எந்தப் பயனும் இல்லாமல் போய்விட்டது!

இதைக் குறிப்பிட்டு எழுதியவர்கள் இரண்டு பேர்கள். அவர்களுடைய பதில்கள் கீழே உள்ளன. அவர்களுக்கு எனது விஷேச பாராட்டுக்கள்!

அன்புடன்
வாத்தியார்
---------------------
1
///////Blogger Sivachandran Balasubramaniam said...
மதிப்பிற்குரிய ஐயா !!!
புதிர் எண்: 105 இற்கான பதில் !!!
ஜாதகி கடக ராசி, ஆயில்யம் நட்சத்திரம், கடக லக்கினத்தில் பிறந்தவர். லக்கினாதிபதி சந்திரன் லக்கினத்தில். ஐந்தாம்அதிபதி செவ்வாய் லாபம் மற்றும் பாதகஸ்தானமான 11 இல் உடன் கேது. கிரகயுத்தம். ஐந்தில் ராகு. ஐந்தாம் வீடு 26 பரல். குழந்தைகாரகன் குரு எட்டில் மறைவு. குரு அம்சத்தில் நீசம்.ராசிக்கு பன்னிரெண்டில். குருவின் பரல்கள் 3. ஐந்தாம் வீட்டிற்கு சுபகிரக பார்வை இல்லாமல் போனதும், குரு,சுக்கிரன்,புதன் ஆகிய சுபகிரகங்கள் எட்டில் மறைந்ததாலும் 40 வயது வரை எட்டாம் வீடு சம்பந்தப்பட்ட திசைகள் நடந்ததால் குழந்தை பாக்கியம் இல்லை. இப்பொழுது சூரியன் திசை நடப்பதால் குழந்தை பாக்கியம் கிடைக்கலாம் !!!!
இப்படிக்கு
சிவச்சந்திரன். பா
Friday, March 18, 2016 4:54:00 PM//////
------------------------------------
2
//////////Blogger siva kumar said...
வணங்குகிறேன் குருவே
105 புதிர்: கான விடைகள்
1.ஜாதகிக்கு ஏன் குழந்தை இல்லை?
பதில்: கடக லக்கினம், கடக ராசி லக்கின அதிபதி சந்திரன் லக்கினத்தில் இருப்பதால் ஜாதகி அழகிய தோற்றம் உடையவர்.
கடக லக்கினத்திற்கு யோககாரர் செவ்வாய் மற்றும் பூர்வபுன்னிய அதிபதியும் அவறே. அவர் ராகு மற்றும் கேது அகியோர் பார்வை மற்றும் சேர்க்கையால் பலம் இழந்து கெட்டுபோய் உள்ளார்.
ஐந்தாம் இடத்தில் ராகு வந்து அமர்ந்து அதுவும் உச்சம்பெற்று அந்த ஐந்தாம் வீட்டை கெடுத்தான்.
குழந்தைக்கு காரகர் குரு பகவான் அந்த வீட்டிற்கு 4ல் அமர்ந்தாலும் அவர் லக்கினத்திற்கு 8ல் மறைந்ததும் 12ம் இடத்து காரர் புதனுடன்சேர்ந்து கெட்டுள்ளார்.
2ம் இடமான குடும்ப வாழ்க்கைக்கு உரிய இடத்திற்கு மிகவும் கேடான செவ்வாய் மற்றும் சனி பகவானின் பரஸ்பர பார்வை வேற உள்ளது. இது குடும்ப வாழ்க்கைக்கு ஏற்ற அமைப்பு இல்லை. ஜாதகி விவாகரத்து பெற்றோ அல்லது கனவரை இழந்தோ இருப்பார்.
ஆகிய காரனங்கலால் ஜாதகிக்கு குழந்தை கிடையாது சார்.
2 ஜாதகத்தில் பல கிரஹக் கோளாறுகள் உள்ளன. அவைகள் என்னென்ன?
ஜாதகத்தில் சுபகிரகங்கள் குரு சுக்கிரன் புதன் ஆகியவை கெட்டுவிட்டது
யோககாரர் செவ்வாய் ராகு கேது உடன் சேர்ந்து கெட்டார்
7,8ம் அதிபதி சனி பகவான் 12,3ம் அதிபதி புதனுடன் பரிவர்தனை ஆகியுள்ளார்
மனகாரன் சந்திரனுடன் மாந்தி சேர்ந்து ஜாதகிக்கு பிடிவாத குனத்தை கொடுத்தது.
2ம் வீட்டதிபதி அந்த வீட்டிற்கு 6ல் மறைந்ததும்.
Sunday, March 20, 2016 7:06:00 AM //////
================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

18.3.16

Astrology Q.105 புதிர்: ஜாதகிக்கு ஏன் குழந்தை இல்லை?


Astrology Q.105 புதிர்: ஜாதகிக்கு ஏன் குழந்தை இல்லை?

18-3-2016

காசைச் சுண்டிப் போட்டு பதில் சொல்ல முடியாதபடி சற்று சிக்கலான கேள்வி.

கீழே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்.ஜாதகிக்குக் குழந்தை இல்லை. ஏன் குழந்தை இல்லை? ஜாதகத்தில் பல கிரஹக் கோளாறுகள் உள்ளன. அவைகள் என்னென்ன? சரியாகச்
சொன்னால்தான் மதிப்பெண் கிடைக்கும்.

ஜாதகத்தை அடித்து துவைத்து, நன்றாக அலசி உங்கள் பதிலைச் சொல்லுங்கள்!

அன்புடன்
வாத்தியார்
=============================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

17.3.16

கசக்கும் எட்டிக் காயை இனிக்கும் மாம்பழமாக மாற்றுவது எப்படி?

கசக்கும் எட்டிக் காயை இனிக்கும் மாம்பழமாக மாற்றுவது எப்படி?

ஒரு பள்ளிக்கூட ஆசிரியர் தன் அனுபவங்களைச் சுவையாகச் சொல்லியுள்ளார். அனைவரும் படித்து மகிழுங்கள்

அன்புடன், 
வாத்தியார்
------------------------------------------
எனது நீண்ட ஆசிரிய அனுபவத்தில் கண்டுணர்ந்த உண்மை இது: மாணவர்கள் இடையே இலக்கிய வகுப்பிற்குக் கிடைக்கும் வரவேற்பு, இலக்கணத்திற்கு கிடைப்பதில்லை. இலக்கணம் என்றதுமே முகத்தைச் சுளிப்பதும், எட்டிக் காயாய் நினைப்பதும் மாணவர்களின் பொதுவான இயல்பு. என்றாலும், ஆசிரியர் முயன்றால் இலக்கண வகுப்பையும் இலக்கிய வகுப்பினைப் போல் சுவையாக மாற்றிவிட முடியும்.

எளிய, இனிய, புதிய, நடைமுறை சார்ந்த உதாரணங்களைக் காட்டி, இலக்கணத்தை மாணவர்கள் ஆர்வத்துடன் கேட்க வைக்க முடியும்; வகுப்பறையில் பதுமைகளைப் போல் வெறுமனே உட்கார்ந்தே இருக்காமல், உயிரோட்டமாகவும் மகிழ்ச்சியாகவும் மாணவர்களைப் பங்கேற்கச் செய்ய இயலும்.இலக்கணத்தை இனிமையாகவும், எளிமையாகவும் கற்பிப்பதற்கு கண்ணதாசனும், பட்டுக்கோட்டையாரும், மருதகாசியும் வாலியும் வைரமுத்துவும், பெரிதும் கை கொடுப்பர்.'பசியட நிற்றல்' (பசி வருத்தவும் உண்ணாது இருத்தல்), 'கண்துயில் மறுத்தல்' (கண்கள் உறங்க மறுத்தல்) எனத் தொல்காப்பியம் கூறும் களவுக்காலக் காதலை கூட, கவிஞர் கண்ணதாசனின் திரைப்பாடல் வரிகளைக் கொண்டு மாணவர்கள் புரிந்து கொள்ளுமாறு விளக்கலாம்:

'பாலிருக்கும் பழமிருக்கும் பசி இருக்காது!
பஞ்சணையில் காற்று வரும் துாக்கம் வராது!'

அந்தாதி :

அந்தம் ஆதியாக - ஓர் அடியின் முடிவே அடுத்த அடியின் தொடக்கமாக - தொடுப்பது 'அந்தாதி'. 'அந்தம்' என்றால் முடிவு; 'ஆதி'; என்றால் தொடக்கம். 'வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில்' எனத் தொடங்கி 'பலே பாண்டியா' படத்திற்காக கண்ணதாசன் எழுதியிருக்கும் பாடலில் இடம்பெற்றிருக்கும் பின்வரும் வரிகள் அந்தாதி நலம் பொருந்தியவை:

'பார்த்து நடந்தால் பயணம் தொடரும்
பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்
கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்
காட்சி கிடைத்தால் கவலை தீரும்
கவலை தீர்ந்தால் வாழலாம்!'

'மூன்று முடிச்சு' படத்திற்காகக் கவிஞர் கண்ணதாசன் எழுதிய
'வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள், 
நீரலைகள் மீதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள்,
நினைவலைகள் தொடர்ந்து வந்தால் நேரமெல்லாம் கனவலைகள்'
என்ற முத்திரைப் பாடல் முழுக்க அந்தாதியில் அமைந்த அற்புதமான பாடல்.

அடுக்குத் தொடரும் இரட்டைக் கிளவியும்:

'பாம்பு பாம்பு' என்பது அடுக்குத் தொடர்; 'பாம்பு' எனப் பிரித்தாலும் இது பொருள் தரும். 'சலசல' என்பது இரட்டைக் கிளவி; 'சல' என்று பிரித்தால் இது பொருள் தராது. இதுதான் அடுக்குத் தொடருக்கும் இரட்டைக் கிளவிக்கும் இடையிலான முக்கியமான வேறுபாடு. இதனைக் கவிஞர் வைரமுத்து 'ஜீன்ஸ்' படத்திற்காக எழுதிய பாடல் ஒன்றில் தமக்கே உரிய தனித்தன்மை துலங்க நயமாகப் புலப்படுத்தியுள்ளார்:

'சலசல சலசல இரட்டைக்கிளவி
தகதக தகதக இரட்டைக்கிளவி
உண்டல்லோ... தமிழில் உண்டல்லோ?
பிரித்து வைத்தல் நியாயம் இல்லை
பிரித்துப் பார்த்தால் பொருளும் இல்லை
ஒன்றல்லோ... ரெண்டும் ஒன்றல்லோ?'

உவமை அணி :
உவமை என்பது ஒரு பொருளோடு ஒரு பொருளினை ஒப்புமை கூறுதல். தெரிந்த ஒன்றைக் கொண்டு, தெரியாத ஒன்றை விளக்கித் தெளிவு-
படுத்துவதற்கும், அழகுணர்ச்சி தோன்ற ஒன்றை எடுத்துரைப்பதற்கும் இலக்கியங்களில் உவமைகள் கையாளப்படுகின்றன.'குடும்பத் தலைவன்' திரைப்படத்திற்காக கண்ணதாசன் எழுதிய அற்புதமான பாடல்:

திருமணமாம், திருமணமாம்! தெருவெங்கும் ஊர்வலமாம்!
ஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம்!... அவள் 
கூரை நாட்டுப் புடவை கட்டிக் குனிந்திருப்பாளாம்! ஒரு 
கூடை நிறையப் பூவைத் தலையில் சுமந்திருப்பாளாம்!

மாலை சூடும் அந்த மணமகளின் பருவ அழகினை ஐந்து அருமையான உவமைகளை அடுக்கிக் கையாண்டு படம்பிடித்துக் காட்டுவார் கண்ணதாசன்:

'சேர நாட்டு யானைத் தந்தம்போல் இருப்பாளாம்! -
நல்லசீரகச் சம்பா அரிசி போல சிரித்திருப்பாளாம்!..
செம்பருத்திப் பூவைப் போலக் காற்றில்அசைந்திருப்பாளாம்!
செம்புச் சிலை போல உருண்டுதிரண்டிருப்பாளாம்! -
நல்லசேலம் ஜில்லா மாம்பழம் போல்கனிந்திருப்பாளாம்!'.

தற்குறிப்பேற்ற அணி:

இயல்பாக நடைபெறும் நிகழ்ச்சியில் கவிஞர் கற்பனையை ஏற்றிப் பாடுவது தற்குறிப்பேற்ற அணி. சிலப்பதிகாரத்திலும், கம்ப ராமாயணத்திலும் இதனை காணலாம். 'தாயைக் காத்த தனயன்' படத்திற்காகக் கண்ணதாசன் படைத்திருக்கும் பாடலின் தொடக்க வரிகள்...

'மூடித்திறந்த இமையிரண்டும் 'பார் பார்!' என்றன!
முந்தானை காற்றில் ஆடி 'வா வா!' என்றது!'

இமை இரண்டும் மூடித் திறப்பது இயல்பு. இது காதலனைப் 'பார், பார்' என்பது போல் இருக்கின்றதாம். இதே போல் முந்தானை காற்றில் ஆடுவது என்பதும் இயல்பாக நிகழ்வதுதான். இது 'வா வா' என்று காதலியை நோக்கி அழைப்பது போல் உள்ளது எனக் கவிஞர் தன் குறிப்பினை ஏற்றிக்கூறுவதால் இது தற்குறிப்பேற்ற அணி.

ஐய அணி :கவிஞர் கருதிய ஒரு பொருளின் அழகினை மகிழ்வுடன் எடுத்துரைக்கும் போது, அதனைக் கற்போர் அதிசயிக்கும் வண்ணம் சொல்லுவது அதிசய அணி. 'ஐய அணி' என்பது அதிசய அணியின் ஒரு வகை. 'தெய்வப் பெண்ணோ? மயிலோ? கனமான குழை அணிந்த மனிதப் பெண்ணோ? என் நெஞ்சம் மயங்குகின்றதே!' என்னும் பொருளைத் தரும் திருக்குறள் காமத்துப் பாலின் முதல் குறட்பா, ஐய அணியில் அமைந்தது.

'மாஞ்சோலைக் கிளிதானோ? மான்தானோ?
வேப்பந் தோப்புக் குயிலும் நீதானோ? - 
இவள்ஆவாரம் பூதானோ? நடை தேர்தானோ?
சலங்கைகள் தரும் இசை தேன்தானோ?'

எனக் 'கிழக்கே போகும் ரயில்' படத்திற்காக கவிஞர் முத்துலிங்கம் பாடி இருக்கும் பாடல் ஐய அணிக்கு நல்ல உதாரணம்.

ஒரு சொல்லை ஒரே பொருளில் பல முறை கையாளுவது சொற்பின்வரு நிலை அணி. 'பாசம்' என்னும் படத்திற்காகக் கண்ணதாசன் எழுதிய பாடலில் இவ்வணி நயமாக இடம்பெற்றிருக்கிறது.

ஆண்:
பால் வண்ணம் பருவம் கண்டுவேல் வண்ணம் விழிகள் கண்டு
மான் வண்ணம் நான் கண்டுவாடுகிறேன்!...
பெண்:
கண் வண்ணம் அங்கே கண்டேன்
கை வண்ணம் இங்கே கண்டேன்
பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்!...

முரண் அணி :ஒன்றுக்கொன்று மாறுபட்ட சொல்லும், பொருளும் வருவது முரண் அணி.

இது குழந்தை பாடும் தாலாட்டு
இது இரவு நேர பூபாளம்
இது மேற்கில் தோன்றும் உதயம்
இது நதியில்லாத ஓடம்'

என 'ஒருதலை ராகம்' படத்திற்காக டி.ராஜேந்தர் எழுதிய பாடலில் முரண் அணி இடம் பெற்றது. தாய் குழந்தைக்காகப் பாடுவது தாலாட்டு; கவிஞரோ 'இது குழந்தை பாடும் தாலாட்டு' என்கிறார். பூபாளம் காலையில் பாடப்பெறுவது; கவிஞரோ, 'இது இரவு நேர பூபாளம்' என்கிறார். இதே போல 'இது மேற்கில் தோன்றும் உதயம்' என்றும், 'நதியில்லாத ஓடம்' என்றும் பாடுவது அழகிய முரண்கள் ஆகும்.இப்படி கருத்து வாய்ந்த திரைப்பாடல்களைக் கையாண்டு, தமிழ் இலக்கணத்தைக் கற்பித்தால், நம் வகுப்பறைகளில் மகிழ்ச்சி நிலவும்.
===============================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

16.3.16

திருவிடைமருதூர் மஹாலிங்க ஸ்வாமி

திருவிடைமருதூர் மஹாலிங்க ஸ்வாமி

திருவிடைமருதூர் தஞ்சாவூர் மாவட்டத்தில் 2000 வருடங்களுக்கு முன் சோழர்களால்  கட்டப்பட்டக் கோயில். இத்திருத்தலத்தின் மூலவர் ஸ்ரீ மஹாலிங்க ஸ்வாமி, தாயார்  பெருமுலையாள். இத்தல இறைவன்
சுயம்பு மூர்த்தியாவார்.

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 93 வது தேவாரத்தலம் ஆகும். தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்
தலங்களில் இது 30வது தலம்.

" பொங்குநூல் மார்பினீர் பூதப்படையீர் பூங்கங்கை தங்குசெஞ்
சடையினீர் சாமவேதம் ஓதினீர் எங்கும் எழிலா
மறையோர்கள் முறையால் ஏத்த இடைமருதில் மங்குல்தோய்
கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே "
-திருஞானசம்பந்தர்

தல வரலாறு:

உமாதேவியை நினைத்து தவம் செய்ய அகத்தியர் முனிவர்களோடு இடைமருதூர் வந்தார்.  உமயவளும் அகத்திய முனிவருக்கு காட்சி
அளித்தார். முனிவர்கள் அனைவரும் தேவியிடம் சிவபெருமானையும்
காண வேண்டும் எனக்கூறினர். முனிவர்களுக்காக  இறைவனை எண்ணி உமாதேவி தவமிருக்கிறார். இறைவன் உமையின் தவத்திற்கு இரங்கி உமைக்கும்முனிவர்களுக்கும் இவ்விடத்தில் காட்சி தந்தார்.  காட்சி தந்து விட்டு ஜோதி லிங்கத்தை இறைவனே வழிபடலானார். வியப்பு  கொண்டு அம்பாள் " இறைவா, பிரம்மன்முதலானோரே தங்களை வழிபடுவதுதான் முறை. தாங்கள் தங்களையே வழிபடுகிறீர்களே!" என்று வினவ "உமையே பூசித்தோனும் பூசையை ஏற்றுக் கொண்ட பரம்பொருளும் நாமே".  நம்மை நாமே பூசிப்பதற்கு காரணம் இம்முனிவர்கள் நம்மைப் பூசிக்க மறந்துவிட்டனர்.  அதனாலே பூசிக்கிறேன் என்றார்.முனிவர்களும் அன்று தொடங்கி இப்பெருமானை காமிகாவிதிப்படி பூஜை செய்து பெரும் பேறு பெற்றனர் என்று தலவரலாறுகூறுகிறது.

ஸ்ரீ மூகாம்பிகை -
கர்நாடக மாநிலத்தில் உள்ள கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகையைப் போலவே  இத்தலத்திலும் மூகாம்பிகைக்கு தனி சன்னதி அமைந்துள்ளது.  இந்தியாவிலேயே கொல்லூரிலும், திருவிடைமருதூரிலும் மட்டுமே  மூகாம்பிகைக்குத் தனி சந்நிதி உள்ளது. இக்கோயிலில் அம்பாள்
சன்னதிக்குத்  தெற்குபக்கம் மூகாம்பிகை சன்னதி உள்ளது. இக்கோயிலின் கர்ப்பகிரகம் வட இந்திய கோயிற்கோபுர அமைப்பில் அமைந்துள்ளது. இந்த சன்னதியில்  மிகவும் சக்தி வாய்ந்த மகா மேரு ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.  இந்த அம்பிகையை மனமுருக பிரார்த்தனை செய்யும் திருமணம் ஆன பெண்கள் கர்ப்பம் தரிக்கவும் சுக பிரசவம் அடைவதற்காகவும் வேண்டுகின்றனர்.

இத்திருக்கோயிலின் பெரிய பிரகாரத்தை முறையாக வலம்வந்து மூலவரை  வழிபட்டால் சித்த சுவாதீனமின்மை, மனநோய் பீடிக்கப்பட்டவர்கள்,  பைத்தியம்  முதலிய பெருநோய்முதலியவை நீங்கி, நலன்களெல்லாம் பெற்று இன்புற்று வாழ்வர். இத்தலத்து ஈசனை வணங்குவோர்களுக்கு மனஅமைதி கிடைக்கும்.  மேலும் வேலை வாய்ப்பு , தொழில் விருத்தி ,உத்தியோகஉயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை  நிச்சயம் நிறைவேற்றிகொடுப்பார்.

ஆண்ட விநாயகர் -

கோயிலின் உட்பிராகாரத்தில் சுவாமி சன்னதிக்கு தெற்குப் புறம் ஆண்ட விநாயகர்  சன்னதி அமைந்துள்ளது. இந்த விநாயகக்கடவுள் பஞ்சாட்சர விதிப்படி மகாலிங்கப் பெருமானை சிறப்பாகப் பூஜித்து வருகிறார். தேவ கணங்கள் குறையாமல்  கொண்டுவந்து அளிக்கும் பூஜைப் பொருட்களைக் கொண்டு மிகவும் விசேஷமாக  இறைவனை வழிபடுகிறார், மனித சஞ்சாரம் இல்லாத இந்த இடத்தில், தமது  அருட்சக்தியால் விநாயகர் உலகத்தை ஆண்டு வருவதால் இவருக்கு ஆண்ட விநாயகர் என்ற காரணப்பெயர் உண்டு.

அசுவமேதப் பிரதட்சிணம் : திருவிடைமருதூரில் மருதப் பெருமானை  வழிபடுவதற்குக் கோயிலையடைந்து முதல் மதிலின் உட்புறத்தில் வலம்  வருதலை அசுவமேதப் பிரதட்சிணம் என்பர். இந்த அசுவமேதப் பிரதட்சிணம்  செய்வோர் எல்லா நலன்களும்பெறுவர். தொடங்குங்கால் முருகப் பெருமானை வழிபட்டுத் தொடங்க வேண்டும். ஒரு மண்டலம், அரை மண்டலம், கால்மண்டலம் என்று வரையறை செய்து கொண்டு வலம் வருதல் வேண்டும். வலம் வருவதும்  நூற்றி எட்டு, இருபத்து நான்கு,பன்னிரண்டு, ஏழு என்ற அளவில் அமைய வேண்டும்.

திருக்கார்த்திகை தீபம் மற்றும் தை மாத விழாவில் வலம் வருவோர்பெரும் பயன்  அடைவர். இதனை அடுத்துள்ளது கொடுமுடிப்பிரகாரம். கயிலாய மலையை வலம் வருவதால்கிடைக்கும் பேறு இப்பிரகாரத்தை வலம் வருதலால் கிடைக்கும்.

அனைத்துப் பாவங்களையும் நீக்கும் காருணியாமிர்தத் தீர்த்தம்,

காவிரிப் பூசத் தீர்த்தம் என 32 தீர்த்தங்கள் உள்ளன. 27நட்சத்திரத்திற்கும் 27 லிங்கங்கள் உள்ளன. இத்தலத்தின் நான்கு திசைகளிலும் விசுவநாதர், ஆன்மநாதர், ரிஷிபுரீசுவரர், சொக்கநாதர்  ஆகிய மூர்த்திகளுக்கு கோயில்கள் அமைந்து பஞ்சலிங்கத் தலம்  என்றும் அழைக்கப்படுகிறது.

வரகுணபாண்டியன் இத்தலத்தை அடைந்து  தன்னைப் பற்றியிருந்த பிரம்மஹத்தி தோஷம் நீங்கப்பெற்றான். பட்டினத்தார், பத்திரகிரியார், வரகுணபாண்டியன், அருணகிரிநாதர், கருவூர்தேவர் ஆகியோர்  வழிபட்டு பெரும்பேறு பெற்றபெருமையுடையது. அனுஷ நட்சத்திரத்திற்கு இது பரிகார தலம்.

ஒரு முறை சென்று மகாலிங்க ஸ்வாமியை வணங்கி, அருள் பெற்று வாருங்கள்!

அன்புடன்,
வாத்தியார்
============================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

14.3.16

காயகல்பம் வேண்டுமா?காயகல்பம் வேண்டுமா?

கண்ணதாசன் மகளிரை பற்றி பெருமைப்பட பாடிய பாடல்...எத்தனை கருத்து செரிவுடையது பாருங்கள்!!!

இளமை கொலுவிருக்கும்
இனிமை சுவை இருக்கும்
இயற்கை மணம் இருக்கும் பருவத்திலே
பெண் இல்லாமல் சுகம் இல்லை உலகத்திலே!!!!!!

அனைத்து வளர்ப்பவளும் தாய் அல்லவோ!!
அணைப்பில் அடங்குவதும் அவள் அல்லவோ!!
கவிஞர் பாடுவதும் கலைஞர் நாடுவதும்
இளைஞர் தேடுவதும் பெண் அல்லவோ!!!!!
பெண் இயற்கையின் சீதன பரிசல்லவோ!!!!!!!

பொன்னும் பொருளும் வந்து மொழி சொல்லுமா
ஒரு பூவைக்கு மாலையிடும் மணம் வருமா!!
இன்று தேடி வரும் நாளை ஓடி விடும் செல்வம் சிரித்தபடி
எந்த செல்வமும் பெண்மையின் சுகம் தருமா!!!!!!!
============================================
2
சிவக்குமாரின் ஆரோக்கிய ஆசனங்கள்

சிவக்குமாரின் ஆரோக்கிய ஆசனங்கள்.

'சிந்து பைரவி’ வந்து கால் நூற்றாண்டு ஆகிவிட்டது. ஆனால், தோற்றத்தில் இன்னமும் அந்தக் காலகட்டத்தைத் தாண்டவில்லை சிவக்குமார். நடிப்பு, ஓவியத்தைத் தாண்டி சமீப காலமாக இலக்கிய மேடைகளிலும் சிவக்குமாரின் கம்பீரக் குரல் ஒலிக்கிறது. சுறுசுறுப்பான சிவக்குமாரின் ஆரோக்கிய ரகசியம் என்ன? அவரே சொல்கிறார்.

''என் உடலாகிய வண்டிக்கு நான்தான் டிரைவர். கரடுமுரடான பாதைகளில் வண்டியை ஓட்ட நேரிடலாம். எப்படிச் சாமர்த்தியமாக ஓட்டுகிறோம் என்பதில்தான் இருக்கிறது சூட்சமம். இதற்குத் திறமையும் பக்குவமும் முக்கியம். படித்தவை, கேட்டவை, கற்றுக்கொண்டவை, கற்பனை, ஆர்வம் எல்லாவற்றுக்கும் ஒரு ஈடுபாட்டுடன் தீனி போட்டேன். உடலும் மூளையும் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கிற சூத்திரம் எனக்கு இப்படித்தான் கிடைத்தது.

விடிந்தும் விடியாத காலை நாலரை மணிக்கு எழுந்துவிடுவேன். பிரஷால் பல் துலக்கிய பிறகும், விரலால் ஒரு முறை தேய்ப்பேன். இதனால், பற்கள் ஒரே சீராக இருக்கும். பிறகு காலைக் கடன்களை முடித்துவிட்டு, இரண்டு டம்ளர் தண்ணீர் குடிப்பேன்.

அமைதியான, பசுமை நிறைந்த போட் கிளப் சாலையில் வாக்கிங் போவதே பேரானந்தமாக இருக்கும். 50 நிமிடங்கள் நல்ல காற்றை சுவாசித்துவிட்டு வரும்போது, உடம்பில் ஒருவித புத்துணர்வு கிடைக்கும். அது நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க உதவும். விழிகள் எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்க வேண்டும். காலையில் பத்திரிகைகள் படிப்பதுகூட கண்களைக் களைப்பாக்கும்... நீங்கள் கண்களைப் பராமரிக்காமல் இருந்தால்!

விழிகளை இட வலமாக 20 முறையும், மேலும் கீழுமாக 40 முறையும் நன்றாகச் சுழற்றுவேன். பிறகு குளிர்ந்த தண்ணீரில் கழுவுவேன். கண் சோர்வில்லாமல், பார்க்கும் பொருட்கள் 'பளிச்’சென தெரியும். டிவி, கம்ப்யூட்டரில் மூழ்கி இருக்கும் இந்தக் காலப் பிள்ளைகளுக்கு இந்தப் பயிற்சி ரொம்பவே நல்லது.

உடல் சுத்தம் உற்சாகத்தைத் தரும். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை ஆலிவ் ஆயில் தேய்த்துக் குளிப்பதையும், இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தலைக்கு விளக்கெண்ணெய் தேய்த்துக் குளிப்பதையும் வழக்கமாகவே வைத்திருக்கிறேன். இன்றும் என் தலைமுடி கருமையாக இருப்பதுடன் வெயிலில் சென்றாலும், உடல் குளிர்ச்சியாக இருப்பதையும் உணர முடிகிறது. 14 வயதில் எனக்குத் தொப்பை இருந்தது. சென்னைக்கு வந்தபோது, 'இந்த மாதிரி தொப்பை இருந்தால் வியாதிதான்’ என்றார் ஒரு பெரியவர். அதனால், யோகா பயில ஆரம்பித்தேன். ஆறே மாதங்களில் 38 வகையான ஆசனங்களைக் கற்றுக்கொண்டேன். 16 வயதில் ஒட்டியானா என்கிற ஆசனத்தைச் செய்து, தொப்பையைக் குறைத்தேன். இந்த ஆசனம் செய்யும்போது வயிறு நன்றாக ஒட்டிவிடும்.

என்றைக்கு நம்மால் குனிய முடியாமல்போகிறதோ, அப்போதே வயதாகிவிட்டது என்று அர்த்தம். வயோதிகம் வந்தால் கணுக்கால், முழங்கால்களில் வலியும் தானாகவே வந்துவிடும். வஜ்ராசனம் செய்வதன் மூலம் வலி இல்லாமல் இருக்கலாம். குனிந்து ஷூவுக்கு லேஸ்கூட கட்ட முடியாமல் போகும் இந்தக் காலப் பிள்ளைகள் வஜ்ராசனம் செய்வது நல்ல பயனைத் தரும். வாரியார் சுவாமிகள் 90 வயது வரை 'வஜ்ராசனம்’ செய்து உடலைக் கம்பீரமாக வைத்திருந்தார்.

சிரசாசனம் செய்வதன் மூலம் மூளை வரை ரத்தம் பாய்வதை உணர முடியும். ஞாபக சக்தி அதிகரிக்கும். இந்த ஆசனம் செய்வதால் மூளை அதிவேகமாகச் செயல்படும். முதுகை வளைத்து செய்யக்கூடிய புஜங்காசனம் செய்வதால், எலும்புகள் உறுதியாக இருக்கும். இப்படி உடல் உறுப்புகளுக்கான ஆசனங்கள் ஏராளமாக இருக்கின்றன. அத்தனை ஆசனங்களும் எனக்கு அத்துப்படி என்றாலும், தற்போது 8 ஆசனங்கள் மட்டுமே செய்துவருகிறேன். ஒரு நாள் யோகா செய்தால், மறுநாள் வாக்கிங் என்று மாறி மாறி செய்வேன்.

பழம்பெருமை பேசுவது எனக்குப் பிடிக்கவே பிடிக்காது. பாராட்டு விழா நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது இல்லை. 'கற்றது கையளவு கல்லாதது உலகளவு’ என்ற நினைப்பு இருந்தால், எல்லாத் துறைகளிலும் சாதிக்க முடியும் என்பது என் அசராத நம்பிக்கை. எதிலும் தாமரை இலைத் தண்ணீர்போல்தான் இருப்பேன். அதற்காக, உறவுகளிடமும் நண்பர்களிடமும் பாசத்தை வெளிப்படுத்துவதில் வஞ்சனை காட்ட மாட்டேன்.

இந்தக் காலப் படிப்புகள் பெரும்பாலும் சம்பாதிக்கத்தான் வழிவகுக்கின்றன. பல பள்ளிகளில் விளையாட்டு மைதானமே இல்லை என்பது வருத்தப்பட வேண்டிய விஷயம். ஒழுக்கம் ஆரோக்கியத்தையும் கோட்டை விட்டுவிடுகிறது இன்றையக் கல்விமுறை. படித்து முடித்து கை நிறையப் பணத்தைப் பார்த்ததும் கஷ்டப்பட்டக் காலத்தை மறந்து, பணத்தைத் தண்ணீராகச் செலவு செய்கின்றனர். உடல் ஆரோக்கியத்தின் மீதும் அலட்சியமாக இருக்கிறார்கள். வயது ஏறும்போது, வியாதிகள் வாட்டும்போதுதான் உடலின் மீதான அக்கறையும் ஆரோக்கியத்தின் மீதான பயமும் நம்மை ஆட்டிப்படைக்கும். மது, புகை, மாது போன்ற எந்தப் பழக்கமும் எனக்கு இல்லை. தொழிலுக்காகப் பல பெண்களுடன் நெருக்கமாக நான் நடித்திருந்தாலும், யாருடனும் நான் தவறான உறவு வைத்திருந்தது இல்லை. இதில் எனக்குப் பெருமையும் உண்டு. தவறுகளுக்கான சந்தர்ப்பங்கள் வாய்த்தாலும் அதில் சிக்காமல் மீண்டுவரக் கூடிய மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

5 பாதாம், 15 உலர் திராட்சை, 2 பேரீச்சம்பழம், 1 அத்திப்பழம், 1 வால் நட் இவைதான் என் காலை உணவு. அவ்வப்போது நாக்கு கேட்கும் ருசிக்காக இரண்டு இட்லி - பச்சை சட்னி அல்லது பொங்கல் அல்லது ஆசைக்கு ஒரு தோசை - சட்னி சாப்பிடுவேன். மதியம் சாதம்  , கூட்டு, பொரியல், பச்சடி, கீரையுடன் சப்பாத்தியும் இருக்கும். மாலை 4 மணிக்கு ஜூஸ், இளநீர் குடிப்பேன். எப்போதாவது டீ, பிஸ்கட். இரவு நேரத்தில் வெஜ் சாலட் - சட்னி. நாக்கு கேட்டால் மட்டும் அரிதாக நளபாக விருந்து. அதிலும் எண்ணெய் உணவுகள் அளவோடுதான் இருக்கும். அசைவ உணவுகள் சாப்பிடுவதை நிறுத்தி 40 வருடங்களுக்கு மேல் ஆகிறது. வயது ஏற ஏற ஜீரண சக்தி குறையும். 50 வயதை நெருங்குபவர்கள் சைவத்துக்கு மாறுவதுதான் நல்லது. சைவம் சாப்பிடுவதால் உடம்பில் தேஜஸ் கூடுவதை நன்றாக உணர முடிகிறது.

சில வருடங்களுக்கு முன்பு ஒரு சம்பவம்... ஐந்து கம்பெனிகளுக்கு முதலாளியான ஒரு குஜராத் இளைஞன் திடீரென இறந்துவிட்டான். ஆராய்ந்ததில் அவனுக்கு ஓய்வே இல்லை என்பது தெரியவந்தது. ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம்தான் தூங்குவானாம். ஒரு மனிதனுக்கு நாள் ஒன்றுக்கு ஏழு மணி நேரத் தூக்கம் அவசியம். நான்கு மணி நேரம் மட்டுமே தூங்குபவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு 40 சதவிகிதம். மூன்று மணி நேரம் மட்டுமே தூங்குபவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் 70 சதவிகிதம் என்கிறது மருத்துவ உலகம். தூக்கத்தைத் தொலைத்தால் ஆயுள் குறையும். 9.30 மணிக்குள் படுக்கைக்குச் சென்றுவிடுவேன். படுக்கும்போது, தியானம் செய்வது என் வழக்கம். இதனால் மனம் ஒருநிலைப்பட்டு, நிம்மதியான நித்திரை கிடைக்கும். இப்படி வரைமுறைக்குள் என் வாழ்க்கையை வகுத்துக்கொள்வதால் உடலும் மனமும் எப்போதும் உற்சாகமாகவே இருக்கிறது.

வாழ்வில் எவ்வளவுதான் சம்பாதித்தாலும் தேவைகளைக் குறைத்துக்கொள்கிறவனே உண்மையான செல்வந்தன். அதிகம் நான் ஆசைப்படுவது இல்லை. சம்பாத்தியத்தில் ஒரு சிறு பங்கை ஏழைகளுக்கு உதவுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறேன். பாகுபாடு இல்லாமல் பாசத்தைப் பகிர்ந்துகொள்வதே பேரின்பம். இதுவே என் வாழ்வில் நான் கடைப்பிடிக்கும் காயகல்பம்'' என்கிறார் உற்சாகமாக மார்க்கண்டேயன் சிவக்குமார்!
----------------------------------------------------------------------------------
நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஜோதிடப் புதிர்ப் பாடம் 18-3-2016 
வெள்ளிக் கிழமையன்று வெளியாகும்
===============================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

12.3.16

எதற்காக பெருந்தலைவர் தோளில் துண்டை மாற்றிப் போட்டார்?


எதற்காக பெருந்தலைவர் தோளில் துண்டை மாற்றிப் போட்டார்?

தமிழக முதல்வராக இருந்த காமராஜர் அவர்கள், ஒரு நாள் தன் தோளில் வலது பக்கத்தில் துண்டு போடுவதற்கு பதில்,இடது பக்கத்தில் போட்டு
இருந்தார்.

இதைக் கண்ட பத்திரிக்கையாளர்கள் எப்போதும் வலதுபுறம் தானே துண்டை போடுவீர்கள்?? இன்று இடதுபுறத்தில் மாற்றி போட்டுள்ளீர்கள்??
எதுவும் விஷேசமா? என்று கேட்டனர்.

காமராஜர் அவர்கள் அப்படிலாம் ஒன்னும் இல்ல னே..சும்மாதான் போட்டுள்ளேன் என்று சொன்னார்.

பத்திரிகையாளர்கள் காமராஜரை விடவில்லை.ஏதோ காரணம் உள்ளது,
அந்த காரணத்தை தெரிந்தே ஆகவேண்டும் என்று காமராஜரிடம் மீண்டும்
மீண்டும் காரணத்தை கேட்டனர்..

காமராஜரும் காரணம் ஒன்னும் இல்ல னே..சும்மாதான் போட்டுள்ளேன்
என்று கூறினார்...ஆனால் பத்திரிக்கையாளர்கள் காமராஜரை
விட்டபாடில்லை.. துண்டு மாற்றி போட்டதற்கு காரணம் என்ன என்று
மீண்டும் மீண்டும் கேள்விகேட்டு துளைக்க ஆரம்பித்து விட்டனர் .

இதைக்கண்டு கோபம் அடைந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்கள்,
காரணம் ஒண்ணும் இல்லைய்யா.,எனது சட்டை இடது பக்கம் லேசா
கிழிந்துள்ளது. அதை மறைக்கத்தான் இடது பக்கம் துண்டை மாற்றிப் போட்டுள்ளேன். வேணும்ன்னா பாருங்கள் என்று துண்டை எடுத்து
விட்டு, தனது கிழிந்த சட்டையை காண்பித்தாராம்.

இவர்தான் சாமி உன்மையான முதல்வர்..முதலமைச்சர் பதவியால்
இவருக்கு பெருமையல்ல...இவறால் தான் முதலமைச்சர் பதவிக்கே பெருமை உண்டானது...!!!
================================
2


கொடூர நோய்களை பரப்பும் தனி ரக வாழைப்பழம்!

ஓர் அதிர்ச்சி தகவல்.

முன்பெல்லாம் டாக்டர்கள் தினமும் ஓரு வாழைப்பழமாவது சாப்பிடுங்கள், உடம்புக்கு ரொம்ப நல்லது என்பார்கள்.

ஆனால் தற்போது மரபணு மாற்று பெரிய மஞ்சள் வாழைபழத்தை சாப்பிடவே வேண்டாம் என்று எச்சரிக்கிறார்கள்.

இந்த மஞ்சள் வாழை பழம் பார்பதற்க்கு பச்சை வாழைபழம் போன்றே சிறிது நீண்டு காணப்படும்,

நிறம் மட்டும் மஞ்சள் நிறமாக இருக்கும் காரணம் தற்போது சென்னை வாசிகள் பெரும்பாலோர் உடலில் – தொண்டையில் அலர்ஜி, சைனஸ், தும்மல்,

வயிற்றுக் கோளாறு, வயிற்றுவலி, சிறுநீரக கற்கள், அடிக்கடி தலைவலி, புட் பாய்சன், என்று கடுமையாக அவதிப்படுகிறார்கள்.

இவர்களை நோயாளிகளாக மாற்றியது இந்த மரபணு மாற்று மஞ்சள் வாழைப்பழங்கள் தான்.

இயற்கையான வாழைப்பழம் பழுத்தால் இரண்டொரு நாளில் அழுகிவிடும்.

இயற்கையான மஞ்சள், பச்சை வாடன், ரஸ்தாளி, மலைபழம், தேன்கதளி, நாட்டுப்பழம், நாட்டுச்சக்கைப்பழம், கற்பூர வள்ளி, ஏலக்கி ஆகிய வாழைப்
பழங்கள் மணமாகவும், நல்ல ருசியாகவும் இருக்கும்.

இந்த பழங்கள் உடம்புக்கு சத்தாகவும், மற்ற உணவை செரிமானமாக்கவும் பயன்படும்.

மலச்சிக்கலால் பாதிக்கப்படுவோரும் தினமும் இரவில் வாழைப்பழம் சாப்பிடுவார்கள்.

பொதுவாக இயற்கையான வாழை ரகங்களில் நோய் தொற்று ஏற்படும்.

இவற்றை பூச்சுக் கொல்லிகளை பயன்படுத்தி நோயை கட்டுப்படுத்த வேண்டும். இந்த ரகங்களை பழுத்த உடன் நாம் சாப்பிடுவது வழக்கம்.

பூச்சிக்கொல்லிகளை அழிப்பதற்கு பதிலாக பூச்சிகளை கொல்லும் விஷச்சத்தை வாழைமரத்தின் மரபணுவில் செலுத்தி அமெரிக்க விஞ்ஞானிகள் வெற்றி கண்டுள்ளனர்.

இதைத் தான் நாம் பி. டி.வாழை என்று அழைக்கிறோம்.

கேவின் டிஷ் என்ற பெயருடன் இந்த மரபணு மாற்று வாழைப்பழம் நம்மூரில் கள்ளத்தனமாக விற்கப்படுகிறது.

இப்பழங்களில் விஷத்தன்மை மிக அதிகமாக இருப்பதால் அமெரிக்காவில் இந்த வாழைப்பழம் பயிரிடவோ விற்கவோ அனுமதிக்கப்படவில்லை

ஏழ்மையிலும் பசிபட்டினியிலும் வாடும் ஆப்பிரிக்க நாடு உகாண்டா.
இங்குதான் முதன் முதலில் 2007 -ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் உகாண்டா அதிபரை மிரட்டி அந்நாட்டின் பாராளுமன்றத்தில் சட்டம்
கொண்டு வர செய்து பி.டி. வாழை எனப்படும் கேவின் டிஷ் வாழைப்பழத்தை முதன் முதலில் பயிரிடச் செய்தார்.

நோய்களை பரப்பும்:

உகாண்டாவில் பயிரிடுவதற்கு முன்பாகவே இந்தியாவில் சர்வதேச கம்பெனிகள் இந்திய நிறுவனங்களின் துணையுடன் கள்ளத்தனமாக இவ்வகை மரபணு மாற்று பி.டி. கேவின்டிஷ் வாழைப் பழத்தை பயிரிடவும் விற்பனை செய்யவும் ஆரம்பித்து விட்டனர்.

இந்த கேவின்டிஷ் மரபணு மாற்று மஞ்சள் வாழைப்பழம் பெங்களூர் வாழைப்பழம் என்ற பெயரில் சென்னை உள்பட தமிழகம் முழுவதும்
விற்கப்படுகிறது.

முதலில் சென்னையில் சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையத்தில் பெங்களூர் வாழைப்பழம் என்ற பெயரில் இந்த பி.டி. வாழைப்பழம் விற்கப்பட்டது.

மக்களுக்கோ, வியாபாரிகளுக்கோ இதன் கொடூரத்தன்மை பற்றி எதுவும் தெரியாததால் சென்னை முழுவதும் இந்த வாழைப்பழ விற்பனை விரிவு
படுத்தப்பட்டது.

மாதக்கணக்கில் வைத்திருந்து விற்றாலும் கெட்டுபோகாது என்ற ஆசை வார்த்தை கூறி வியாபாரிகள் இந்த மரபணுமாற்று கேவின் டிஷ்
வாழைப்பழத்தை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.

இதனால் சென்னையில் முக்கிய கம்பெனிகளின் சூப்பர் மார்க்கெட்டுகளில் வாழைப்பழம் மட்டுமே விற்கும் நிலை உள்ளது.

மதுரை, சேலம், கோவை, நெல்லை போன்ற நகரங்களில் இந்த பி.டி.
 மரபணு மாற்று வாழைப்பழம் அறிமுகப்படுத்தப்பட்டாலும் இதற்குப்
போதிய வரவேற்பு இல்லை.

இந்த மரபணு மாற்று வாழைப்பழம் இயற்கை வாழைப்பழம் போல்
ருசியாக இருக்காது.

இதனால் மற்ற நகரங்களில் இதனை யாரும் வாங்கவில்லை.

எனவே சென்னையில் அறிவிக்கப்படாத தடைபோல வேறு இயற்கையான வாழைப்பழமே விற்காத வண்ணம், சர்வதேச நிறுவனங்கள் கேவின்டிஷ்
வாழைப்பழம் மட்டுமே விற்கும் வண்ணம் ரகசியமாக சதி செய்துவிட்டன.

இதற்கு கார்ப்பரேட் கம்பெனிகள் பெரிதும் உதவியாக உள்ளன.

பி.டி. கத்தரிக்காய்க்கே இன்னும் இந்திய அரசு முழுமையான அனுமதி வழங்கவில்லை.

பி.டி.ரக மரபணு காய்கறி, பழங்கள், உயிரை மெல்லமெல்ல கொல்லும் விஷமாகும். ஒருமுறை மட்டும் காய்த்து கனியாகும்.

செயற்கையாக மலட்டுத்தன்மை ஆக்கப்பட்ட மரபணு மாற்று காய்கறி பழங்களை தொடர்ந்து சாப்பிட்டால் மலட்டுத்தன்மை ஏற்படுவதோடு,
கேன்சர், செரிமான கோளாறு, தோல்நோய், சிறு நீரக நோய்கள், அலர்ஜி போன்றவை உண்டாகும்.

இந்நிலையில் இந்திய அரசிடமோ, விவசாயத்துறையிடமோ, பல்கலை கழகங்கள், ஆராய்ச்சி சாலைகளிலோ எந்தவித அனுமதியும் பெறாமல்
கேவின்டிஷ் மஞ்சள் வாழைப்பழம் பெங்களூர் வாழைப்பழம் என்ற
பெயரால் விற்பனை செய்யப்படுகிறது.

ஆகவே எச்சரிக்கையாக இருங்கள். வாழைப்பழம் வாங்கும்போது பார்த்து வாங்குங்கள்!

அன்புடன்,
வாத்தியார்
--------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!