மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

31.8.12

Devotional உண்டு என்று எங்கே இருக்க வேண்டும்?

Devotional உண்டு என்று எங்கே இருக்க வேண்டும்?

பக்தி மலர்

ஒன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு
ஒன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு
செல்வமெல்லாம் அன்பென்றிரு - உயர்
செல்வமெல்லாம் அன்பென்றிரு
ஒன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு

பசித்தோர் முகம் பார் நல்லறமும் நட்பும் நன்றென்றிரு ஆ....
பசித்தோர் முகம் பார் நல்லறமும் நட்பும் நன்றென்றிரு
நடு நீங்காமலே நமக்கு இட்டபடி என்றென்றிரு
மனமே உனக்குபதேசம் இதே

நாட்டமென்றே இரு சற்குரு பாதத்தை நம்பு
நாட்டமென்றே இரு சற்குரு பாதத்தை நம்பு
பொம்மலாட்டமென்றே இரு பொல்லா உடலை ஆ...
பொம்மலாட்டமென்றே இரு பொல்லா உடலை
அடர்ந்த சந்தைக் கூட்டமென்றே இரு சுற்றத்தை
அடர்ந்த சந்தைக் கூட்டமென்றே இரு சுற்றத்தை
வாழ்வை வெங்கமிழ் நீர் ஓட்டமென்றே இரு
வாழ்வை வெங்கமிழ் நீர் ஓட்டமென்றே இரு
நெஞ்சே உனக்குபதேசம் இதே

ஒன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு
செல்வமெல்லாம் அன்பென்றிரு - உயர்
செல்வமெல்லாம் அன்பென்றிரு
_________________________
திரைப்படம்; பட்டினத்தார்
இயற்றியவர்: பட்டினத்தார்
இசை: ஜி. ராமநாதன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1962
-------------------------------
பாடலின் காணொளி
Our sincere thanks to the person who uploaded this video clippingவாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

30.8.12

Astrology சனீஷ்வரனிடம் இருக்கும் சூப்பர் கணினியும் (Super Computer) மென்பொருளும் (Software)! Astrology சனீஷ்வரனிடம் இருக்கும் சூப்பர் கணினியும் (Super Computer) மென்பொருளும் (Software)!

சொத்துக்கள் இரண்டு வகைப்படும்; கஷ்டங்களும் இரண்டு வகைப்படும்.

அசையாத சொத்து (Fixed asset) அசையும் சொத்து (Movable asset) என்று சொத்துக்களைப் பிரித்துப் பார்க்கலாம். இடம், வீடு, நிலம், தோட்டம் எல்லாம் முதல் வகையில் சேரும். நகைகள், பணம், வைப்புநிதிச் சான்றிதழ்கள், பங்குப் பத்திரங்கள் எல்லாம் இரண்டாம் வகையில் சேரும்.

நம்மைப் பெற்ற அன்னையும் அசையும் சொத்துதான். அனால் சொத்துக்களில் எல்லாம் முதன்மையான சொத்து.

அதுபோல கஷ்டங்களும் இரண்டு வகைப்படும். நிரந்தரமான கஷ்டங்கள், தற்காலிகமான கஷ்டங்கள்.

நிரந்தரமான கஷ்டங்கள் எதெது? தற்காலிகமான கஷ்டங்கள் எதெது?

கஷ்டங்களைப் பட்டியலிடுவது கஷ்டமானது. கர்மகாரகன் சனியிடம் என்ன மென்பொருள் இருக்கிறதென்று தெரியவில்லை என்ன சர்வர் இருக்கிறதென்று தெரியவில்லை இந்தியாவில் உள்ள 120 கோடி ஜனங்களுக்கும் 120 கோடி விதமான கஷ்டங்களைக் கொடுத்திருக்கிறான்.

எப்படி மனித முகம் வேறு படுகிறதோ, எப்படி வலது கை கட்டை விரல் ஆளாளுக்கு வேறு படுகிறதோ, அப்படி கஷ்டங்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை.

அதுபோல கஷ்டங்களும் தீர்ந்த பாடில்லை. ஒரு கஷ்டம் போனால் அடுத்த கஷ்டம் கதவைத் திறந்து கொண்டு வந்து விடுகிறது. கஷ்டம் என்பதை எளிமைப் படுத்திப் பிரச்சினை என்று கொள்ளலாம்.

சிலருக்குப் பிரச்சினைகள் ஒவ்வொன்றாக வரும். சிலருக்கு ஒட்டு மொத்தமாக வரும். சிலருக்கு க்யூவில் நின்று அடுத்தடுத்து இடைவெளியில்லாமல் வரும்.

அதனால் பிரச்சினை இல்லாதவர்களே கிடையாது. பிரச்சினைகளே இல்லாதவர் இவரென்று நீங்கள் ஒருவரையாவது காட்டுங்கள் - நான் இந்தத் தொடர் எழுதுவதையே நிறுத்தி விடுகிறேன்.

கவியரசர் கண்ணதாசன் சொல்வார்.

”தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே
முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே!”

என்னவொரு அற்புதமான வெளிப்பாடு பாருங்கள். இரண்டே வரிகளில் வாழ்க்கையைப் புரிந்து கொள்ளும்படி சொன்னார் பாருங்கள். அதனால்தான் அவரைக் கவியரசர் என்கின்றோம்.

ஆகவே இங்கே கஷ்டங்கள் என்பதை நான் சற்று Fine Tuning செய்து, கட்டுரைக்கு வசதியான முறையில் உங்கள் அனுமதியுடன் பிரச்சினைகள் என்று மாற்றிக்கொள்கிறேன்.

உடல் ஊனம், மன நோய், வறுமை, தீராத பிணி இவைகள் ஜாதகத்தின் வேறு பகுதியில் பார்க்கப் பட வேண்டியவை ஆகும். ஆகவே அவற்றை இங்கே நான் எடுத்துக்கொள்ளவில்லை

பொதுவாக உள்ள பிரச்சினைகளை அல்லது கஷ்டங்களை மட்டுமே நான் இங்கே வகைப் படுத்திப் பேச உள்ளேன்
------------------------------------------------------------------------------------------
1. வளர்கின்ற வயதில், தாய் அல்லது தந்தை இல்லாமல் வளர்வது

2. படிக்கவேண்டிய வயதில் சூழ்நிலை காரணமாக அல்லது சேர்க்கை காரணமாக படிக்க முடியாமல் போய்விடுவது.

3. வேலை கிடைக்க வேண்டிய வயதில் சரியான அல்லது தோதான வேலை கிடைக்காமல் அல்லாடுவது.

4. திருமணமாக வேண்டிய வயதில் ஏதாவதொரு காரணத்தினால் திருமணம் தள்ளிக் கொண்டே போவது.

5. திருமணம் ஆனாலும், அன்பு செலுத்தாத, அரவனைக்காத கணவன், கூட இருந்தும் உதவியாக இல்லாத மாமனார் மாமியார், மற்றும் இன் லாக்கள்.

6. வேலை கிடைத்தாலும் திருப்தியில்லாத வேலை, தகுதிக்கு ஒத்துவராத வேலை, நிறைவில்லாத சம்பளம்.

7. வாடகை வீடு - அதுவும் வீடு ஓரிடம், வேலை ஓரிடம், தினமும் 40 கிலோமீட்டர் தூரம் பயணிக்க வேண்டிய அலுப்பு

8. வாழ்க்கையில் நிலவும் கடுமையான போட்டியின் காரணமாகக் கவலைப்பட்டு, குழந்தைகளைப் படி, படி என்று அனுதினமும் விரட்டிப் படிக்க வைக்க வேண்டிய அவதி

9. பருவம் வந்த பெண் குழந்தையாக இருந்தால் அவளை வெளியே அனுப்பும்போது ஏற்படும் பரிதவிப்பு

10. அத்தியாவசியத் தேவைக்குக் கூட செலவு செய்ய முடியாமல் ஏற்பட்டு விடும் கடன் சுமைகள்

இப்படிப் பிரச்சினைகளைப் பட்டியல் இட்டுக்கொண்டே போகலாம்.

ஆகவே ஒன்றை மட்டும் மனதில் வையுங்கள் பிரச்சினை என்பது உங்களுக்கு மட்டுமில்லை. ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. பெரும்பாலான பிரச்சினைகள் பணத்தைச் சார்ந்து இருக்கும்.

“பணம் இருந்தால் போதும் சார்! எல்லாப் பிரச்சினைகளையும் ஒரே நொடியில் தீர்த்து விடுவேன்!” என்று சிலர் சொல்வதைக் கேட்கலாம்.

அது உண்மையல்ல! பணத்தால் சில பிரச்சினைகளைத் தீர்க்க முடியும். ஆனால் அது உருமாறி வேறு விதத்தில் நம்மிடமே திரும்பவும் வந்து நிற்கும்.

இன்று பணம் இல்லாதவனை விட, பணக்காரனிடம்தான் அதிகமான பிரச்சினைகள் உள்ளன!

மெத்தையை வாங்கலாம், ஸ்பிளிட் ஏர்கண்டிஷன் இயந்திரத்தை வாங்கலாம் - ஆனால் தூக்கத்தை வாங்க முடியாது. பணம் கொடுத்துப் பசியை வாங்க முடியாது! பணம் கொடுத்து அரண்மனையை வாங்கலாம். அன்பு செலுத்தும் இல்லாளை வாங்க முடியாது. சொன்னதைக் கேட்கும் குழந்தையை வாங்க முடியாது. துரோகம் இல்லாத நட்பை வாங்க முடியாது. இப்படி முடியாதது எவ்வளவோ இருக்கின்றன!
-----------------------------------------------------------------------------
சரி, உங்களுக்குப் புரியும் படியாக ஒரே வரியில் சொல்கிறேன்.

பிரச்சினை தீரவே தீராது.

ஒன்றைத் தீர்க்க அடுத்தது வந்து நிற்கும். பிர்ச்சினை என்பது சீட்டாட்டத்தைப்போல! உங்கள் கையில் எப்போதுமே 13 சீட்டுக்கள் இருந்து கொண்டே இருக்கும். ஒன்றைக்கிழே கழற்றி விட்டால், அங்கேயிருந்து பதிலுக்கு நீங்கள் ஒரு கார்டை எடுத்துத்தான் ஆகவேண்டும்.

கேஸ் ஸ்டவ், பிரஷ்சர் குக்கர், மிக்ஸி, வெட் கிரைண்டர், வாட்டர் ஹீட்டர், வாஷிங்மெஷின், டெலிவிஷன், டி.வி.டி. பிளேயர், ஸ்டெபிலைசர், ஸ்பிளிட் ஏர்கண்டிஷனர் அல்லது மின் விசிறிகள், மோட்டார் சைக்கிள் அல்லது கார், கணினி, யு.பி.எஸ் என்று வீட்டிலுள்ள சாதனங்கள் ஒன்று மாற்றி ஒன்று ரிப்பேராகிக் கொண்டே இருக்கும்.

பணம் இருப்பவன் எல்லாவற்றையும் தூக்கிக் கடாசிவிட்டு ஒரே நாளில் அத்தனை சாதனங்களையும் புதிதாக மாற்றிவிட்டு, நிம்மதியாக இருப்போம் என்று நினைத்தால், விதி அவனை விடாது. அவனேயே நோய்க்கு ஆளாக்கி அல்லது எங்காவது விபத்தில் புரட்டி எடுத்து மருத்துவமனையில் கொண்டுபோய் படுக்க வைத்துவிடும். அவனையே ரிப்பேர் செய்ய வேண்டிய நிலைமைக்கு ஆளாக்கி விடும்.

ஆகவே பிரச்சினை என்பது, நமது இரத்த ஓட்டம்போல, சுவாசம் போல உடன் இருப்பது ஆகும்!
------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்தக் கட்டுரையின் அவசியமென்ன?

இரண்டு வழிகளில் உங்களுக்குப் பதில் சொல்வதற்குத்தான் இந்தக்கட்டுரை!

1. பிரச்சினையைத் தாங்கக் கூடிய திறன் இருக்கிறதா?

2. அடுத்த பிரச்சினையை அப்போது பார்த்துக்கொள்வோம், இப்போதுள்ள பிரச்சினை எப்போது தீரும்?
---------------------------------------------------------------------------------------------------------------
ஜாதகத்தில் திரிகோண வீடுகளான ஒன்றாம் வீடு (லக்கினம்) ஐந்தாம் வீடு (House of Mind) ஒன்பதாம் வீடு (House of Gains - பாக்கிய ஸ்தானம்) ஆகிய வீடுகள் நன்றாக - அதாவது வலுவாக இருந்தால் - உங்களுக்குப் பிரச்சினைகளைத் தாங்கக்கூடிய திறன் இருக்கிறது என்று கொள்ளலாம். அதுதான் முக்கியம் - தாங்கும் வல்லமை இருந்தால் போதாதா?

சரி, அதை எப்படித் தெரிந்து கொள்வது?

அது விரிவான பாடம். இப்போது நேரமில்லை. இன்னொரு நாள எழுதுகிறேன். பொறுத்திருங்கள்

ஒரே ஒரு முக்கியமான செய்தியை மட்டும் சொல்லி, இன்றைய பாடத்தை நிறைவு செய்கிறேன்.

ஜாதகத்தில் லக்கினாதிபதியும், மனகாரகனும் வலுவாக இருப்பது முக்கியமாகும்!

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++

29.8.12

Astrology ஜோதிடமும், மனித முயற்சியும்!

Astrology ஜோதிடமும், மனித முயற்சியும்!

மனித முயற்சி என்பதற்குப் பலன் எதுவும் கிடையாதா?

ஏன் இல்லை? முயற்சிக்குப் பலன் உண்டு.

நீ மாட்டை வைத்துதான் பிழைப்பு நடத்த வேண்டுமென்பதுதான் விதியென்றால் நீ மாட்டை வைத்துத்தான் பிழைப்பை நடத்தியாக வேண்டும். ஆனால் மாட்டின் எண்ணிக்கையை இறைவன் தீர்மானிப்பதில்லை.

அது உன் கையில்தான் உள்ளது. உன் முயற்சியில்தான் உள்ளது. 4 மாடுகளா அல்லது 40 மாடுகளா என்பது உன் முயற்சியால் நிர்ணயிக்கப்படும்.
-----------------------------------------------------
ஒரு ஏழைப் பால் வியாபாரி இருந்தான். இரண்டு மாடுகளை வைத்துப் பால் வியாபாரம் செய்து கொண்டிருந்தான். வருமானம் போதவில்லை. பற்றாக்குறை. வீட்டில் அவன் மனைவி, பிள்ளைகளைச் சேர்த்து ஐந்து ஜீவன்கள்

வீட்டு வாசல் திண்ணையில் கவலையோடு அவன் அமர்ந்திருந்தபோது, அந்த வழியாகச் சென்ற முனிவர் ஒருவர், அவனை நோக்கிக் கேட்டார், ”தம்பி, சற்றுக் களைப்பாக இருக்கிறது, பசியாற ஏதாவது கிடைக்குமா?”

அவன் பதறிவிட்டான். பசியின் கொடுமை அறிந்தவனல்லவா? உடனே திண்ணையை விட்டுக் குதித்துக் கீழே வந்தவன், “அய்யா நல்ல மோர் இருக்கிறது, தரட்டுமா?” என்று கேட்டான்.

அவர் சம்மதம் சொல்ல, ஒரு செம்பு நிறைய மோரைக் கொண்டு வந்து கொடுத்தான்.

வாங்கி அமைதியாகக் குடித்தார் முனிவர். குடித்தபிறகுதான் அவனை உற்று நோக்கினார். அவன் முகத்தில் கவலை குடிகொண்டிருந்தது.

தன் ஞானக்கண்ணால் அவனுடைய நிலைமையை முழுதாக உணர்ந்தவர் சொன்னார்:

“நாளை அதிகாலை என்னை வந்துபார். உன் கவலைகளை ஓட்டும் வழியைச் சொல்லித் தருகிறேன்”

அவன் அவருடைய இருப்பிடத்தை அறிந்து கொண்டு, அடுத்த நாள் உதயத்தில், நம்பிக்கையுடன், அவரைச் சென்று பார்த்தான்.

அவர் அவனுடன் அதிகமாகப் பேசவில்லை. ஆனால் தீர்க்கமாக ஒன்றைச் சொன்னார் “உன்னிடம் இருக்கும் இரண்டு மாடுகளையும் ஓட்டிக் கொண்டு போய் பக்கத்து ஊர்ச் சந்தையில் விற்று விட்டு வந்து, விற்ற பணத்தை உன் வீட்டில் பத்திரமாக வை.”

அவன் அதிர்ந்து போய் விட்டான்.

மாடுகள் இரண்டையும் விற்று விட்டால் வயிற்றுப் பிழைப்பிற்கு என்ன செய்வது என்று அவரிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளும் முனைப்பில், “அய்யா...” என்று இழுத்தான்.

அது தெரியாதா அவருக்கு? கையைக் உயர்த்திக் காட்டியதோடு, சொன்னார், “ சொன்னதைச் செய், மற்றது தானாக நடக்கும், மீண்டும் நீயே வந்து என்னைப் பார்ப்பாய், இப்போது போ!”

அவன் அவர் சொன்னபடியே செய்தான். இரண்டு மாடுகளும் நல்ல விலைக்குப் போயிற்று. விற்ற பணத்தைக் கொண்டு வந்து, வீட்டுப் பரணின் மேலிருந்த பானைக்குள் வைத்து மூடினான். பிறகு நன்றாகச் சாப்பிட்டுவிட்டு, பாயைப் போட்டு படுத்து உறங்கிவிட்டான்.

தூக்கம் என்றால் அப்படியொரு தூக்கம்.

மாலை ஆறு மணிக்குத்தான், ”அம்மா...” என்று தன் மாடுகள் கத்தும் ஒலி கேட்டுத் திடுக்கிட்டு எழுந்தவன், ஓடிப்போய் தன் வீட்டிற்குப் பின் புறம் இருந்த தொழுவத்தில் பார்த்தான். அங்கே அவனுடைய மாடுகள் இரண்டும் நின்று கொண்டிருந்தன. மயக்கம் வராத குறை அவனுக்கு.

அதோடு அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. விற்று விட்டு வந்த மாடுகள் எப்படித் திரும்பி வந்தன?

இருட்டி விட்டதால் வீட்டிலேயே தங்கி விட்டு, அடுத்த நாள் காலையில் ஒட்டமும் நடையுமாகச் சென்று முனிவரைப் பார்த்தான்.

தியானத்தில் இருந்த அவர் இவன் உள்ளே வந்த ஒலி கேட்டு, கண்களைத் திறந்து பார்த்தார். பார்த்தவர் கேட்டார்,” என்ன உன்னுடைய மாடுகள் இரண்டும் திரும்பி வந்து விட்டனவா?”

அவன் ஆச்சரியத்தின் எல்லைக்கே போய் விட்டான்.

சலனமற்று காட்சியளித்த அவர் சொன்னார்,”நேற்றுச் செய்ததுபோல இன்றும் செய்; ஒன்றும் கேட்காதே, பிறகு சொல்கிறேன் இப்போது போய் வா”

வந்த வேகத்திலேயே திரும்பியவன், அவர் சொல்லியபடியே அன்றும் செய்தான். மறுபடியும் கிட்டத்தட்ட அதே அளவு தொகை கிடைத்தது. வீட்டிற்குக் கொண்டு வந்து, பானைக்குள் போட்டுப் பரணுக்குள் வைத்துவிட்டு, எப்போதும் போல சாப்பிட்டு விட்டுக் கண் அயர்ந்தான்.

நேற்று நடந்தது போலவே இன்றும் நடந்தது. அவன் அதிசயப்படும் விதமாக அவனுடைய இரண்டு மாடுகளும் இன்றும் திரும்பி வந்து தொழுவத்தில் நின்று கொண்டிருந்தன!

இது தொடர்ந்தது. ஒரு நாள் அல்ல இரு நாள் அல்ல பத்து நாட்கள் தொடர்ந்தது. வழக்கப்படி பதினோறாம் நாள் காலையில் முனிவரைச் சென்று பார்த்தான்

அவர் சொன்னார், “இனிமேல் அந்த அதிசயம் தொடராது. உன்னிடம் இப்போது 20 மாடுகளுக்கான தொகை இருக்கிறது. இன்று சந்தைக்குப்போ; நல்ல மாடுகளாகக் கிடைக்கும் 20 மாடுகளை வாங்கி வந்து இன்று முதல் உன் பால் வியாபாரத்தை நல்லபடியாகச் செய்!”

அவன் நெகிழ்ந்து விட்டான். கண்கள் பனிக்கக் கேட்டான், “அய்யா உங்களுக்கு நான் மிகுந்த நன்றிக் கடன் பட்டவனாக இருப்பேன். இதுவரை அந்த அதியசம் எப்படி நடந்தது என்பதைச்சொன்னீர்கள் என்றால் நான் சற்று மன நிம்மதியோடு போவேன்.”

“உன் தலையெழுத்து மாடுகளை வைத்து பிழைப்பதுதான். ஆனால் நீ முயற்சி எதுவும் செய்யாமல், இருப்பதை வைத்து இதுவரை உன் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டு வந்திருக்கிறாய். உனக்கு உதவும் பொருட்டே, எனது சித்து வேலையால் நான் அப்படிச் செய்தேன். எதற்கும் ஒரு அளவு உண்டு. அது தெரிந்து நான் நேற்றோடு நிறுத்திவிட்டேன். இனிமேல் நான் நினைத்தால்கூட உனக்கு உதவ முடியாது. இறைவனை வேண்டிக்கொள். உன் பிரச்சினைகள் எல்லாம் தீரும் அதோடு இனிச் சோம்பியிருக்காமல் முயற்சி செய்து கடுமையாக உழைத்தாய் என்றால் உன் மாடுகளின் எண்ணிக்கை கூடிய சீக்கிரம் 100 ஆகும், பிறகு 200 ஆகும். போய்ப் பிழைத்துக் கொள்!” என்று முடித்தார்.

கதை அவ்வளவுதான். முயற்சி எப்படி வேலை செய்யும் என்பதற்குத்தான் இந்தக் கதை!

நமக்கும் ஒரு முனிவர் வருவாரா என்று யாரும் காத்துக் கொண்டிருக்க வேண்டாம். இது கலியுகம். முனிவரெல்லாம் வரமாட்டார். முனி வேண்டும் என்றால் வரும்.

முனி என்றால் என்னவா? அதுதான் நட்பு என்ற பெயரில் வரும் டாஸ்மார்க், சல்பேட்டா பார்ட்டிகள் அதாவது தண்ணியடிக்கும் ஆசாமிகள்.
--------------------------------------------------------------
சரி துவக்கத்திற்கு வருகிறேன். நல்ல வாழ்க்கைக்கு ஜாதகம் எப்படியிருக்க வேண்டும்?

ஒன்று, ஒன்பது, பத்து, மற்றும் பதினோறாம் வீடுகளில் 30ற்கும் மேற்பட்ட பரல்கள் இருக்க வேண்டும்.

அதவது First House (Lagna), Ninth House (House of gains), 10th House (House of Profession) 11th House (House of Profit) ஆகிய நான்கு இடங்களிலும் 30 பரல்களோ அல்லது 30ற்கு மேற்பட்ட எண்ணிக்கையில் பரல்கள் இருக்க வேண்டும்.

அவைகளுக்கு மட்டும் முக்கியத்துவம் ஏன் ஏன் என்பதை இன்னொரு நாள் விரிவாகச் சொல்கிறேன்!

மற்ற இடங்களெல்லாம் முக்கியமில்லையா? இல்லை!

அப்படியிருந்தால் வாழ்க்கை எப்படியிருக்கும்?

சூப்பராக இருக்கும்!

படிக்கும் வாசகர்கள் யாருக்காவது அப்படியிருக்கிறதா? இருந்தால் சொல்லுங்கள்

எனக்குத் தெரிந்து என்னுடைய உறவினர்கள் இரண்டு பேருக்கு இருக்கிறது. அவர்களது வாழ்க்கையும் சூப்பராக இருக்கிறது. அவர்களுடைய ஜாதகத்தை நான் பர்த்திருக்கிறேன். அதனால்தான் அடித்துச் சொல்கிறேன்.

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
---------------------------------------------------------------

28.8.12

Astrology யாரைப் போட்டுத்தள்ள வேண்டும்?

Astrology யாரைப் போட்டுத்தள்ள வேண்டும்?

அஷ்டகவர்க்கப் பாடம்

ஆங்கில ஏகாதிபத்தியம் இந்தியாவை ஆட்சி செய்துகொண்டிருந்தபோது, இங்கே சுதந்திரப் போராட்ட எழுச்சி மக்களிடையே அதிகமாகி, நாடே கொந்தளிப்பில் இருந்த சமயம். (ஆண்டு ஆகஸ்ட் 1942)

காந்திஜி அவர்களின் வெள்ளையனே வெளியேறு' போராட்டம் உச்சகட்டத்தை எட்டியது. அத்துடன் அடுத்துவந்த ஐந்தாவது ஆண்டில் நமக்கு சுதந்திரமும் கிடைத்தது.

The Quit India Movement (Bharat Chhodo Andolan or the August Movement (August Kranti)) was a civil disobedience movement launched in India in August 1942 in response to Mohandas Gandhi's call for immediate independence. Gandhi hoped to bring the British government to the negotiating table. Almost the entire Indian National Congress leadership, and not just at the national level, was put into confinement less than twenty-four hours after Gandhi's speech, and the greater number of the Congress leaders were to spend the rest of World War II in jail.

அதுசமயம் (போராட்டம் உச்ச கட்டத்தில் இருந்த சமயம்), அப்போதைய பிரிட்டீஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் அவர்களிடம், அவருடைய நண்பர் சொன்னாராம்:

“காந்தி ஒரு பக்கிரியைப் போல காணப்படுகிறார். நமது அரசுக்குத் தீராத தலைவலியாக இருக்கிறார். என்ன தயக்கம்? ஆசாமியை என்கவுன்ட்டரில் போட்டுத் தள்ள வேண்டியதுதானே?”

அதற்கு சர்ச்சில் அசத்தலாக இப்படிப் பதில் சொன்னார். “அந்த மனிதனின் கையில் ஆயுதம் எதுவும் இல்லை. அஹிம்சை என்னும் கொள்கை மட்டுமே இருக்கிறது. ஆயுதம் ஏந்தாதவனை எப்படி ஆயுதத்தால் போட்டுத் தள்ளுவது? அதனால்தான் முழித்துக் கொண்டிருக்கிறோம்! ”

என்னவொரு தர்மமான பதில் பாருங்கள்.

அதைவிட, தர்மமான முறையில் ஒரு மிகப் பெரிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடிய நமது தேசத்தந்தை, காந்திஜி அவர்களின் துணைச்சலையும், மனவுறுதியையும் எண்ணிப்பாருங்கள்.

அதற்கு என்ன காரணம்? அவருடைய ஜாதகம் என்ன சொல்கிறது?

அஷ்டகவர்க்கத்தை வைத்து அதை இன்று அலசுவோம்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


1. அவருடைய ஜாதகத்தில், ஆறாம் வீட்டில் 33 பரல்களும், அதிலிருந்து ஆறாம் வீட்டில் 39 பரல்களும் இருப்பதைப் பாருங்கள். ஆறாம் வீடு எதிரிகளுக்கான இடம். அதில் இருந்த மிக அதிகப்படியான பரல்கள் எதிரிகளுடன் போராடும் சக்தியை அவருக்குக் கொடுத்தது. பதினொன்றாம் இடம் வெற்றிக்கான இடம். அதில் இருந்த அதிகப்படியான பரல்கள், அவருடைய போராட்டத்தில், அவருக்கு வெற்றியைத் தேடித்தந்தன!

2. அவருடைய ஜாதகத்தில் கர்மகாரகன் சனிக்கு அவனுடைய சுயவர்க்கத்தில் பரல்கள் எதுவும் இல்லை. சைபர். ஜீரோ. கோழி முட்டை. அதனால்தான் லண்டனில் தான் படித்த சட்டப் படிப்பை வைத்து வழக்குரைஞர் தொழிலை அவர் செய்யவில்லை. வேறு எந்தத் தொழிலையும் செய்யவில்லை. தேச நலனுக்காகப் போராடியதைத் தவிர.

3. அதே காரணத்தால்தான், தேசம் சுதந்திரம் அடைந்த பிறகும், அவர் எந்தப் பதவியிலும் அமரவில்லை. அவருக்கு அந்த மன நிலைமையையும் சனி கொடுக்கவில்லை.

4. தந்தைக்குக் காரகனான சூரியன் 12ஆம் வீட்டில் அமர்ந்ததால், அவர் தன்னுடைய தந்தையைச் சிறு வயதிலேயே இழக்க நேரிட்டாலும், அதே சூரியன் தன்னுடைய சுயவர்க்கத்தில் 7 பரல்களுடன் இருந்ததால் நல்ல ஆரோக்கியமான உடல் அமைப்பைக் கொடுத்தான்.

5. சூரியன் 12ல் இருந்தால் அரசுக்கு எதிரான வேலைகளைச் செய்ய நேரிடும். சிறை செல்ல நேரிடும். பரல்கள் இல்லாமல் இருந்தால் கிரிமினல் வேலையைச் செய்து விட்டுச் சிறை செல்ல நேரிடும். ஆனால் சுயவர்க்கத்தில் 7 பரல்களுடன் இருந்த சூரியன் ஒரு உன்னதமான காரியத்திற்காக அவரை அடிக்கடி சிறைக்குச் செல்ல வைத்தான்.

6. இரண்டாம் வீட்டில் 24 பரல்கள் மட்டுமே. 337 வகுத்தல் 12 வீடுகள் என்னும் போது வரும் சராசரி மதிப்பான 28 பரல்களை விட 4 பரல்கள் குறைவு. ஜாதகனுக்கு செல்வம் இருக்காது. வந்தாலும் தங்காது. ஓட்டை அண்டா.
11ஆம் வீட்டில் இருந்த 39 பரல்கள் அவருக்குப் பணத்தை அள்ளும் வாய்ப்பைக் கொடுத்தன. பணம் வரும் பைப் நன்றாக இருந்தது. ஆனால் கிஞ்சித்தும் காந்திஜிக்குப் பணத்தின் மேல் ஆசையில்லாமல் போய்விட்டது. 12ல் இருந்த சூரியனால் அவர் துறவியைப்போல வாழ்ந்தார்.

7. சுயவர்க்கத்தில் 7 பரல்களுடன் இருந்த சந்திரன், அதுவும் பத்தாம் வீட்டில் (முக்கிய கேந்திரம்) இருந்த சந்திரன், அவருக்கு மன உறுதியையும், நல்ல சிந்தனைகளையும், நல்ல கொள்கைகளையும் கொடுத்தது. அத்துடன் லட்சக்கணக்கான மக்களின் ஆதரவையும், செல்வாக்கையும் பெற்றுத்தந்தது. அதன் சிறப்பால்தான் அவர் தேசியத்தலைவரானர். மக்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தார்.

8. தனது சுயவர்க்கத்தில் 5 பரல்களுடன் இருக்கும் புதன், அதுவும் லக்கினத்திலேயே இருக்கும் புதன் அவருக்கு, நல்ல பேச்சுத்திறமையையும், ஏராளமான நண்பர்களையும் பெற்றுத்தந்தது. அத்துடன் அனைவரையும் புரிந்துகொள்ளும் தன்மையையும் தந்தது.

9. துலாலக்கினத்திற்கு 2 மற்றும் 7ஆம் இடங்களுக்கு அதிபதியான செவ்வாய், தனது சுயவர்க்கத்தில் 2 பரல்களுடன் சராசரி கீழான நிலைமையில் இருந்ததால்,  அவருடைய குடும்ப வாழ்வில் அவருக்கு நல்லதைவிடக் கெட்டதே அதிகமாக இருந்தது. பல சமயங்களில் அவர் தன் மனைவி, மக்களைப் பிரிந்தே இருக்கும்படியானது. அரசை எதிர்த்துப் போராட்டம்,  சிறை வாழ்க்கை, பொது மக்களைச் சந்திப்பதற்காக அதிகமான பயணம் என்று அவருக்கு வெளியுலகத் தொடர்பும், பொது வாழ்க்கையும்தான் மிகுந்திருந்தது.

10. லக்கினாதிபதி சுக்கிரன் தனது சுயவர்க்கத்தில் 3 பரல்களுடன் இருந்ததாலும், அவருடைய லக்கினத்திற்குப் பாபகர்த்தாரி யோகம் இருந்ததாலும் (லக்கினத்தின் இரு புறமும் தீய கிரகங்கள்) அவருடைய வாழ்க்கை அவருக்குப் பயன்படவில்லை. தேசமக்களுக்கு, அதுவும் ஒரு உயரிய செயலுக்குப் பயன்பட்டது.

11. சந்திர ராசியில் ராகு சென்று டென்ட் அடித்து அமர்ந்ததால் தனக்குக் கிடைத்த பெரும் செல்வாக்கை வைத்து அவர் செல்வம் சேர்க்கவில்லை. செல்வம் சேரவில்லை. அல்லது காசு பண்ணும் மனப்பான்மை அவருக்கு இல்லை. எப்படி வேண்டுமென்றாலும் வைத்துக்கொள்ளுங்கள்.
---------------------------------------------------------
அஷ்டகவர்க்கத்தை வைத்து ஒரு ஜாதகத்தை எப்படி அலசுவது என்பதை உங்களுக்குச் சொல்லித்தரும் முகமாக இன்று இந்தப் பதிவை வலை ஏற்றியுள்ளேன்.

இது பயிற்சி வகுப்பு மாணவர்களுக்காக எழுதப்பெற்ற பாடம். பயிற்சி வகுப்புப் பாடங்கள், வகுப்பறையில், சில காரணங்களுக்காக இடம் பெறாது. பல பொது மனிதர்களின் ஜாதகங்களை, அதுவும் அரசியல்வாதிகளின் ஜாதகங்களையும் சேர்த்து வைத்து அவைகள் எழுதப் படுவதால், இங்கே பதிவிடும்போது பல எதிர்வினைகளச் சந்திக்க நேரிடும். அவற்றைத் தவிர்க்கும் பொருட்டு பதிவில் அவைகள் வராது. பிரச்சினைகள் வேண்டாம் என்பதுதான் அதன் நோக்கம். அதையும் மனதில் கொள்க!

அஷ்டகவர்க்கத்தை வைத்துப் பலாபலன்களை அறியும் பாடங்களைத் தொடர்ந்து அஷ்டகவர்க்க வகுப்பில் எழுத உள்ளேன். அவைகள் பிறகு புத்தகமாக வரும்போது அனைவரும் படிக்கலாம். பயனடையலாம்.

அன்புடன்
வாத்தியார்
 வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

27.8.12

Astrology முதன்மை விதிகளும், உபவிதிகளும்!

 

Astrology  முதன்மை விதிகளும், உபவிதிகளும்!

Key Points - Part one
(Advanced Lessons)

எல்லா செயல்களுக்குமே சில அடிப்படை விதிகள் உண்டு.

நான்கு பேர்களுக்கு சமையல் செய்து பறிமாறுவதற்கு சில அடிப்படை விதிகள் உண்டு. முதலில் சமையல் செய்பவர் அதில் ஒரு முறையான அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும். சமையல் செய்வதற்கு உரிய அரிசி, பருப்பு, மளிகைச் சாமான்கள், காய்கறிகள், முக்கியமாக அடுப்பு, எரிபொருள் போன்ற சாமான்கள் மற்றும் தேவையான உபகரணங்கள், சாதனங்கள் வேண்டும்.

ஒரு ஜாதகத்தைப் பார்த்துப் பலன் சொல்வதற்கும் சில அடிப்படைவிதிகள் மற்றும் அடிப்படைத் தகுதிகள் உள்ளன!

ஒவ்வொரு ஜாதகமும், 12 ராசிகள், 12 வீடுகள், ஒன்பது கிரகங்கள், 27 நட்சத்திரங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை என்றாலும் அவைகள் எண்ணற்றை ஜாதகங்களை உருவாக்கிக் கொடுப்பவை. பிறந்த இடம், பிறந்த நேரம் ஆகியவற்றை வைத்து அவைகள் ஒன்றுக்கொன்று மாறுபட்டவை. மாறுபட்ட அம்சங்களைக் கொண்டவை. மாறுபட்ட பலன்களைக் கொடுக்கக் கூடியவை.

ஒரு ஜாதகத்தில் உள்ள மேன்மைகளையும், சிக்கல்களையும் அறிந்து சொல்வதற்கு ஜோதிட அறிவும், பல ஜாதகங்களைப் பார்த்துப் பலன்சொல்லிய அனுபவமும் முக்கியமானதாகும். அது ஒரு வாரத்திலோ அல்லது ஒரு மாதத்திலோ அல்லது ஒரு ஆண்டிலோ கிடைத்துவிடாது. பொறுமையாகத் தொடர்ந்து கற்றுக்கொள்வதன் மூலமே அது வசப்படும்.

எந்த ஒரு கலைக்குமே அது பொருந்தும். அதாவது அந்தத் தொடர் முயற்சியும், கற்றுத் தேரும் தன்மையும் அவசியமாகும்.

அந்த அடிப்படை விதிகளை இரண்டுவிதமாகப் பிரிக்கலாம்.

முதன்மை விதிகள். உபவிதிகள் என்று அவற்றைப் பிரித்துப் பார்க்க வேண்டும்.

ஐந்தாம் வீடு, ஐந்தாம் வீட்டின் அதிபதி, காரகன் குரு ஆகிய மூவரும் கெட்டிருந்தால், ஜாதகனுக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்பது அடிப்படை விதி.

அதே நேரத்தில் ஐந்தாம் வீட்டில் சுபகிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை, அத்துடன் ஐந்தாம் வீட்டில் 30ற்கும் மேற்பட்ட அஷ்டகவர்க்கப்பரல்கள் இருந்தால் ஜாதகனுக்குக் குழந்தை உண்டு, ஆகவே உப விதிகளையும் பார்த்துப் பலன் சொல்ல வேண்டும். ஜாதகம் பார்த்துப் பலன் சொல்வதில் உள்ள சிக்கல் அதுதான்.

உப விதிகளும் கை கொடுக்க வில்லை என்றால் மட்டுமே ஜாதகனுக்குக் குழந்தை இருக்காது.

வயிற்றில் வலி இருந்தால் அதை அப்பென்டிக்ஸ் என்று எப்படி நினைக்க முடியும்? அது சாதாரண வயிற்று உபாதையாகக்கூட இருக்கலாம். ஒரு ஸ்பூன் சீரகம் சாப்பிட்டால், நீங்கிவிடக்கூடிய சாதாரண gas trouble வலியாகக்கூட இருக்கலாம். ஒரு இடத்தில் ராகு இருப்பதை வைத்து மட்டும் எந்தவொரு முடிவிறகும் வரக்கூடாது. மற்ற கிரகங்களையும் அலச வேண்டும். அவற்றிற்கு ராகுவுடன் உள்ள தொடர்பையும் வைத்து சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இரண்டாம் வீட்டில் சனி இருந்தால், கையில் காசு தங்காது என்று எப்படிச் சொல்ல முடியும். சனி அமர்ந்திருக்கும் இடத்தின் அதிபதி நவாம்சத்தில் உச்சம் பெற்றிருந்தால் ஜாதகன் செல்வந்தனாக இருப்பான். உதாரணம் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் ஜாதகம்.

ஆகவே முதன்மை விதிகளை வைத்து மட்டும் முடிவிற்கு வராதீர்கள். உப விதிகளையும் பாருங்கள். பிறகு பலன்களைப் பற்றி யோசியுங்கள்.

முதன்மை விதிகளையும், உபவிதிகளையும் பற்றித் தொடர்ந்து பார்ப்போம். பொறுத்திருந்து படியுங்கள்.

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

24.8.12

கவிதைச் சோலை: வெற்றியும் தோல்வியும்!

1

சிவனாண்டி மகன் மலையாண்டி!

பக்திமலர்

வருவான்டி தருவான்டி மலையாண்டி
வருவான்டி தருவான்டி மலையாண்டி - அவன்
வரம் வேண்டி வருவோர்க்கு அருள்வான்டி
வரம் வேண்டி வருவோர்க்கு அருள்வான்டி - அவன் தான்டி
வருவான்டி தருவான்டி மலையாண்டி, பழனி மலையாண்டி!

சிவனாண்டி மகனாகப் பிறந்தான்டி - அன்று
சினம் கொண்டு மலை மீது அமர்ந்தான்டி
நவலோக மணியாக நின்றான்டி - என்றும்
நடமாடும் துணையாக அமைந்தான்டி - அவன் தான்டி,
வருவான்டி தருவான்டி மலையாண்டி, பழனி மலையாண்டி!

பாலபி ஷேகங்கள் கேட்பான்டி - சுவை
பஞ்சாமிர்தம் தன்னில் குளிப்பான்டி
காலாற மலை ஏற வைப்பான்டி
கந்தா என்றால் இங்கு வந்தேன் என்று - சொல்லி
வருவான்டி தருவான்டி மலையாண்டி, பழனி மலையாண்டி!

சித்தர்கள் சீடர்கள் பல கோடி - அவன்
செல்வாக்கு எவற்கேனும் வருமோடி
பக்தர்கள் தினந்தோறும் பலர் கூடி
திருப் புகழ் பாடி வருவார்கள் கொண்டாடி
வருவான்டி தருவான்டி மலையாண்டி, பழனி மலையாண்டி!

பாடலாக்கம் : கவியரசர் கண்ணதாசன்
பாடியவர்கள்: சூலமங்கலம் சகோதரிகள்
படம்:  தெய்வம்
வருடம்: 1972ம் ஆண்டு
-------------------------------------------
2
கவிதைச் சோலை: வெற்றியும் தோல்வியும்!

காடுசென் றேகொண்ட மனைவியைத் தோற்றவன்
    காகுத்தன் என்ற கதையும்
      காடுசெல் லாமலே களத்திலே தோற்றவன்
    கண்ணனால் வென்ற கதையும்
வீடுகண் டேபிறன் மனைவியைச் சேர்ந்தவன்
    மேனிப்புண் கொண்ட கதையும்
      வெற்றியும் தோல்வியும் தேவர்க்கும் உண்டென்ற
    வேதத்தைச் சொல்ல விலையோ!
மாடுவென்றா லென்ன மனிதன் வென்றா லென்ன
    வல்வினை வெற்றி மயிலே!
      மலர்கொண்ட கூந்தலைத் தென்றல்தா லாட்டிடும்
    மதுரைமீ னாட்சி உமையே!
                   - கவியரசர் கண்ணதாசன்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++=======

23.8.12

Astrology - Popcorn Post வரும்... ஆனாலும் வரும்!

Astrology - Popcorn Post வரும்... ஆனாலும் வரும்!

Popcorn Post No.24
பாப்கார்ன் பதிவுகள் - எண்.24

”செந்தமிழ் தேன் மொழியாள் 
நிலாவெனச் சிரிக்கும் மலர்க் கொடியாள்”

என்று பிரபலமான பாடல் ஒன்றின் பல்லவியில் எழுதிய கவியரசர், அதே பாடலின் சரணத்தில் இப்படி எழுதியிருப்பார்:

"கண்களில் நீலம் விளைத்தவளோ
அதைக் கடலினில் கொண்டு கரைத்தவளோ
பெண்ணுக்குப் பெண்ணே பேராசை கொள்ளும்
பேரழகெல்லாம் படைத்தவளோ!"

என்னவொரு வர்ணனை பாருங்கள்.

அதே வர்ணனை ஜோதிடம் தெரிந்தவர்களுக்கும் பொருந்தும். நன்கு ஜோதிடம் தெரிந்தவர்களைப் பலரும் விரும்புவார்கள். ஜோதிடத்தின் கவர்ச்சி அது!

உங்களுக்கு ஜோதிடம் தெரியும் என்றால், நண்பர்களும், உறவினர்களும், மற்றவர்களும் உங்களை விடமாட்டார்கள். மொய்த்து விடுவார்கள். பிய்த்து விடுவார்கள்.

அந்தக் காலத்தில் ஜோதிடம் என்பது குடும்பத் தொழிலாக இருந்தது. இப்போது அப்படியில்லை. பழைய புராதண நூல்கள், ஏடுகள் எல்லாம் வடமொழியில் இருந்து மொழிபெயர்க்கப்பெற்று நூல்களாக வந்துவிட்டன. ஆர்வம் உள்ளவர்கள் யார் வேண்டுமென்றாலும் கற்றுக் கொள்ளலாம்.

கற்றுக்கொள்வது முக்கியமில்லை. கற்றுக் கொண்டதை மனதில் தக்க வைப்பதுதான் முக்கியம். முயன்றால் அதுவும் சாத்தியமே! திரும்பத் திரும்பப் படித்தால் மனதில் தங்காதா என்ன?

தொழிலாகச் செய்யாவிட்டாலும், இன்று பலருக்கும் ஜோதிடம் தெரியும். பொழுதுபோக்காக அதைச் செய்பவர்கள் பலர் இருக்கிறார்கள்.

சரி, ஜோதிடம் யாருக்கு சுலபமாக வரும்? அல்லது சுலபமாக மனதில் குடிகொள்ளும்? அதற்கான கிரக அமைப்பு என்ன?

அதை இன்று பார்ப்போம்!
---------------------------------------------------------------
1. குரு 5ஆம் வீடு அல்லது 9ஆம் வீட்டில் இருப்பதோடு, அவைகளில் ஒன்று அவருடைய சொந்த வீடாக இருக்கும் நிலைமை.
2. 5ஆம் வீட்டு அதிபதி அல்லது 9ஆம் வீட்டு அதிபதி என்னும் நிலையில், குரு பகவான் லக்கினத்தில் அமர்ந்திருக்கும் நிலைமை.
3. 5ஆம் வீடு அதன் அதிபதியின் பார்வையில் இருக்கும் நிலைமை.
4. 5ஆம் வீடு குருவின் நேர் பார்வையில் இருக்கும் நிலைமை.
5. 5ஆம் வீடு ஒரு உச்ச கிரகத்தின் பார்வையில் இருக்கும் நிலைமை.
6. 5ஆம் வீட்டிலிருந்து, அதன் பன்னிரெண்டாம் வீட்டில் சனி இருக்கும் நிலைமை.
7. ராகு அல்லது கேது கோணங்களில் அமர்ந்திருப்பதோடு, குருவின் பார்வையைப் பெற்றிருக்கும் நிலைமை

இந்த அமைப்புக்களில் ஒன்று இருப்பவர்களுக்கு ஜோதிடம் கைகொடுக்கும்.
குரு நுண்ணறிவிற்கு (keen intelligence) அதிபதி. 5ஆம் வீடு நுண்ணறிவிற்கான வீடு. அதை மனதில் வையுங்கள்!

அதே போல புத்திநாதன் புதனுக்கும் ஜோதிடத்தில் முக்கிய பங்கு உண்டு. அதை இன்னொரு நாளில் பார்ப்போம்!

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++

22.8.12

Astrology - Popcorn Post வாலிபத்தில் காதலிக்க ஜாதகத்தில் வழியுண்டா?

Astrology - Popcorn Post வாலிபத்தில் காதலிக்க ஜாதகத்தில் வழியுண்டா?

Popcorn Post No.23
பாப்கார்ன் பதிவுகள் - எண்.23

”காதலிக்க நேரமில்லை காதலிப்பார் யாருமில்லை
வாலிபத்தில் காதலிக்க ஜாதகத்தில் வழியுமில்லை”

என்று, பிரபலமான பாடல் ஒன்றின் பல்லவியில் எழுதிய கவியரசர் கண்ணதாசன், பாடலின் முடிவில் இப்படி எழுதியிருப்பார்:

”காதலிக்க நேரமுண்டு கன்னியுண்டு காளையுண்டு!
வாலிபத்தில் காதலிக்க ஜாதகத்தில் வழியுமுண்டு!”

உண்மையிலேயே, காதலிக்கும் யோகத்தை, நல்ல காதலி கிடைக்கும் யோகத்தை ஜாதகத்தின் மூலம் தெரிந்து கொள்ள முடியுமா? அதற்கு
உரிய வீடுகள் என்ன? அதற்கு உரிய கிரக அமைப்புக்கள் என்ன?

அதை  இன்று பார்ப்போம்!
---------------------------------------------------------------------------
ஜோதிடப்படி லக்கினத்தில் இருந்து ஐந்தாம் வீடு, அன்பு, நேசம்,
காதல், மெல்லிய உணர்வுகளுக்கும் உரிய வீடாகும். ஏழாம் வீடு
கணவன்அல்லது மனைவிக்கு (spouse) உரிய வீடாகும். அந்த இரண்டு
வீட்டு அதிபதிகளின் மேன்மையான கூட்டணி (Association) காதலை
உண்டாக்கும். நல்ல காதலி கிடைப்பான் அல்லது பெண்ணாக இருந்தால் நல்ல காதலன் கிடைப்பான். கிறங்க வைக்கும் காதல் உணர்வில்
காதலர்கள் திகட்டும் வரை (திகட்டாது. காதல் திகட்டியதாக சரித்திரம் இல்லை) திளைப்பார்கள்.

அதாவது, அந்த இரண்டு வீட்டு அதிபதிகளும் பரிவர்த்தனையாகி இருக்க வேண்டும் அல்லது இருவரும் பார்வையால் ஒன்று பட்டிருக்க வேண்டும். அல்லது சேர்க்கையால் ஒன்று பட்டு, கேந்திர திரிகோணங்களில் அமர்ந்திருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் காதல் திருமணம்!

அந்த கிரகங்களின் தசா புத்திகளில் திருமணம் நடைபெறும்
------------------------------------------------------------------------
இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.

அப்படி நடைபெறும் திருமணம் நிலைத்து நிற்குமா? அல்லது ஊற்றிக்கொள்ளுமா? என்பதற்கு வேறு அமைப்புக்கள் உள்ளன.

அதைஇன்னொரு நாள் பார்ப்போம். பாப்கார்ன் பொட்டலத்தில்
இந்த அளவுதான் கொடுக்க முடியும் சாமிகளா!!!!

மேலும், இன்றே அதை எழுதி, காதலர்களைக் கலங்க அடிக்க வேண்டாம்!

அன்புடன்
வாத்தியார் 
பதிவின் கீழே இரண்டு செய்திகள் உள்ளன. அவற்றையும் படியுங்கள்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++

21.8.12

Astrology - Popcorn Post என்ன(டா) செய்யும் கோச்சாரம்?

Astrology - Popcorn Post என்ன(டா) செய்யும் கோச்சாரம்?

Popcorn Post No.22
பாப்கார்ன் பதிவுகள் - எண்.22

கோள்சாரம் அல்லது கோச்சாரம் என்பது இன்றைய தேதியில் கிரகங்கள் சுற்றி வரும் நிலையில் இருக்கும் இடத்தைக் குறிப்பிடுவது ஆகும்! சந்திரன் இருக்கும் இடத்தை வைத்து, அதாவது உங்களுடைய சந்திர ராசியை வைத்து அதைப் பார்க்க வேண்டும். எண்ணும்போது ராசியையும் சேர்த்து எண்ண வேண்டும்.

கோச்சார கிரகங்கள் என்ன செய்யும்? தீய கோள்சாரங்கள் தொல்லைகளைக் கொடுக்கும். சிரமங்களைக் கொடுக்கும். சனீஷ்வரன் கோச்சாரத்தில் 8ம் இடம், 12ம் இடம், 1ம் இடம் இரண்டாம் இடங்களில் இருக்கும் காலங்களில் (மொத்தம் 10 ஆண்டு காலம்) தீமையான பலன்களையே கொடுப்பார்.

அப்படி ஒவ்வொரு கிரகமும் கோச்சாரத்தில் அதிகமான தொல்லையைக் கொடுக்கும், அதாவது ஜாதகனுக்கு அதிக அளவில் தீமையான பலன்களைக் கொடுக்கும் இடத்தைப் பற்றி முனுசாமி அதாங்க நம்ம முனிவர், பாடல் ஒன்றின் மூலம் அழகாகச் சொல்லியுள்ளார்

அதை இன்று பார்ப்போம்!
-----------------------------------------------------
கேளப்பா குரு மூன்றில் கலைதானெட்டு
   கேடுசெய்யும் சனி ஜென்மம் புந்திநாலில்
சீளப்பா சேயேழு செங்கதிரோன் ஐந்தும்
   சீறிவரும் கரும்பாம்பு நிதியில் தோன்ற
ஆளப்பா அசுரகுரு ஆறிலேற
   அப்பனே திசையினுடைய வலுவைப்பாரு
மாளப்பாகுற்றம் வரும் கோசாரத்தாலே
   குழவிக்குதிரியாணங் கூர்ந்து சொல்லே!
              - புலிப்பாணி முனிவர்

குரு - 3ம் இடம்
கலை (சந்திரன்) 8ம் இடம்
சனி - 1ல்
புந்தி (புதன்) - 4ல்
சேய் (செவ்வாய்) - 7ல்
கதிரோன் (சூரியன்) 5ல்
கரும்பாம்பு - நிதியில் - 2ல்
அசுர குரு - சுக்கிரன் - 6ல்
இருக்கும் காலத்தில் அதிகமான தீமைகளைச் செய்வார்களாம்.

அக்காலத்தில் ஜாதகனுக்கு நல்ல தசா/புத்திகள் நடந்தால் ஜாதகனுக்கு இந்தத் தொல்லைகள் அதிகம் இருக்காது. தசா நாதர்கள்/புத்தி நாதர்கள் பார்த்துக்கொள்வார்கள்

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++

20.8.12

Astrology - Popcorn Post போனால் போகட்டும் போடா; புதிதாய் கிடைக்கும் வாடா!

Astrology - Popcorn Post போனால் போகட்டும் போடா; புதிதாய் கிடைக்கும் வாடா!

Popcorn Post No.21
பாப்கார்ன் பதிவுகள் - எண்.21

மனிதர்களுக்கு கிடைக்கும் வேலையில்தான் எத்தனை வகைகள்?

சிலர் சேரும் வேலையிலேயே, அது பிடிக்கிறதோ அல்லது பிடிக்கவில்லை யோ, கடைசிவரை அதிலேயே  உழன்று விடுவார்கள்.அதாவது இருந்து விடுவார்கள்.

சிலர் படித்து முடித்தவுடன் ஏதாவது ஒரு வங்கியில் சேர்ந்து பணியாற்றத் துவங்கிவிடுவார்கள். அதே வங்கியில் 35 வருடங்களோ அல்லது 38 வருடங்களோ தொடர்ந்து பணியாற்றிவிட்டு, பணி ஓய்வு பெறும் வரை அந்த வங்கியிலேயே பணியாற்றுவார்கள்.  எனக்குத் தெரிந்த ஒருவர் இந்தியன் ரயில்வேயில் தொடர்ந்து பணி செய்துவிட்டு இப்போதுதான் பணி ஓய்வு பெற்றார்.

ஆனால் சிலர் ஒரு வேலையில் நிரந்தரமாக இருக்க மாட்டார்கள். ஏதாவது ஒரு காரணத்திற்காக,  சட்டையை மாற்றுவதுபோல அடிக்கடி வேலையை மாற்றுவார்கள்.

ஆனாலும் அவர்களுக்குத் தொடர்ந்து வேலை கிடைக்கும்.

அதற்குக் காரணம் என்ன?

அதை இன்று பார்ப்போம்!
-----------------------------------------------------
பன்னிரண்டு ராசிகளும் சர, ஸ்திர, உபய ராசிகள் எனப் பிரிக்கப்பட்டுள்ளன. 
மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகியவை சர ராசிகளாகும்.
ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகியவை ஸ்திர ராசிகளாகும்.
மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகியவை உபய ராசிகளாகும்.
இவற்றை லக்னமாகப் பெற்ற ஜாதகர்களில் பலன்களைப் பார்ப்போம்

Mesha, Kataka, Thula and Makar are movable astrology signs,
Rishaba , Simha ,Vrischika and kumbha are fixed signs.
Mithuna, Kanya, Dhanu and Meena are known as common signs.
-------------------------------------------------------
1. பத்தாம் அதிபதி (10th Lord) உபய ராசியில் (common signs) அமர்ந்திருப்பதோடு,  சனி, அல்லது ராகு அல்லது கேது போன்ற தீய கிரகங்களுடன் கூட்டாக இருந்தால், வேலையில் மாற்றங்கள் இருக்கும்.

2. அதே போல 12ஆம் அதிபதி (12th lord) பத்தாம் வீட்டில் அமர்ந்திருந்தாலும் ஒரே வேலையில் இருக்க விடமாட்டான்.

மேலே கூறியுள்ள இரண்டு அமைப்புக்களும், சுப கிரகங்கள் ஏதாவது ஒன்றின் பார்வையைப் பெற்றிருந்தால், அது விதிவிலக்காகும்

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++=====

17.8.12

கவிதைச் சோலை: சோம்பேறியும் சொர்க்கமும்!

கவிதைச் சோலை: சோம்பேறியும் சொர்க்கமும்!

கவிதைச் சோலையும் பக்தி மலரும்!
--------------------------------------
1

பக்தி மலர்

முருகா நீ வரவேண்டும் - முருகா
நான் நினைத்தபோது நீ வரவேண்டும்

நினைத்தபோது நீ வரவேண்டும்
நீலஎழில் மயில் மேலமர் வேலா
(நினைத்தபோது)

உனையே நினைத்து உருகுகின்றேனே
உணர்ந்திடும் அடியார் உளம் உறைவோனே
(நினைத்தபோது)

கலியுக தெய்வம் கந்தா நீயே
கருணையின் விளக்கமும் கந்தா நீயே
மலையெனத் துயர்கள் வளர்ந்திடும் போதில்
மாயோன் மருகா முருகா என்றே
(நினைத்தபோது)

பாடலாக்கம்: கவிஞர். என்.எஸ்.சிதம்பரம்
பாடியவர்: டி.எம். செளந்தரராஜன்
------------------------------------------
2

துணிக!

நம்மால் முடியுமா என்றுநீ எண்ணினால்
   நண்டுகூ  டச்சி  ரிக்கும்!
நாளை விடியுமா என்றுநீ வாடினால்
   நாய  கன்தான் சிரிப்பான்!
சும்மா இருப்பவன் சோம்பேறி அவனிடம்
   சொர்க்கத்துக் கென்ன வேலை?
சுடுகின்ற கோடையில் வளைகின்ற ஏழையால்
   அமைந்ததே இன்ப சோலை!
அம்மையும் அப்பனும் செய்ததோர் தவறினால்
  அவனியில் வந்த மனமே!
அடியுலவ  விடுபிறகு கடைவிரிய வருமுடிவு
   ஆசிதரும் அந்தச் சிவமே!
              - கவியரசர் கண்ணதாசன்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++=====

16.8.12

Short story சம்பந்தி ஆச்சி

சிறுகதை:  சம்பந்தி ஆச்சி 
-----------------------------                           

“ஆச்சி, அமெரிக்கா போறியாமே?” என்று தன் தம்பி ஏகப்பன் கேட்டதும் கோமதி ஆச்சிக்கு வாயெல்லாம் பல்!

“எப்படீடா உனக்குத் தெரியும்?”

“சன் டிவி. .ஃப்ளாஷ் நியூஸில் பார்த்தேன்”

“விளையாடாமச் சொல்லுடா! யார் சொன்னாக - அயித்தான் சொன்னாகளா?”

“உன்னைக் கேட்காம அல்லது உனக்குத் தெரியாம அயித்தான் எப்படிச் சொல்வாக? உன் சின்ன மகள் உமாகுட்டியை ஸ்பென்சர் பிளாசாவில் பார்த்தேன். அவதான் சொன்னா!”

“ஆமான்டா, அடுத்த திங்கட்கிழமை ப்ளைட். நேற்றுத்தான் டிக்கெட் கன்ஃபர்ம் ஆச்சு! வாங்க வேண்டிய சாமான்லாம் நிறைய இருக்குடா?

நீ கொஞ்சம் ஹெல்ப் பண்றியா?

“உனக்கு கார் ஓட்டுறத்துக்கு ஆள் வேணும். அதானே!”

“ஏன் நான் சேது டிராவல்ஸ் ஆச்சிகிட்ட சொல்லி வண்டி எடுத்துக்க மாட்டேனா? நீ வந்தா செலக்சனுக்கு உதவியா இருக்கும்டா. அதான்
வா’ங்கிறேன்.”

“ஆகா, வந்தாப் போச்சு. அமெரிக்காவில இருந்து திரும்பி வரும்போது அங்கேயுள்ள சாக்கிலேட் குப்பைகளை எல்லாம் அள்ளிக்கிட்டு
வராம, ஏதாவது உருப்படியா வாங்கிக்கிட்டுவா. எனக்கு ஒரு ஐபேட். உன் கணக்கிலே! அதோட அமெரிக்கா போனா என்ன செய்யணும்  தெரியுமா? சாப்பிடற நேரத்தைத்தவிர மற்ற நேரத்தில வாயைத் திறக்காதே!”

“ஏன்டா?”

“நீ ஒன்னும் ஊர் சுத்திப் பாக்கப் போகலை. உன் மகளுக்குப் பிரசவம். உதவிக்காகப் போறே. வார்த்தைக்கு வார்த்தை இங்கே  அய்த்தான்கிட்ட பேசற மாதிரி அங்கே பேசினா, மாப்பிள்ளைக்கு மண்டை காய்ஞ்சு போயிடும். எந்த மாப்பிள்ளைக்கும் மாமியாரையும்,  மாமனாரையும் ஆரம்பத்தில் பிடித்துப்போனதா சரித்திரம் கிடையாது. அதனால வாயை மூடிக்கிட்டு இருக்கிறது நல்லது”

“எனக்கு ஏன்தான் இந்த கெட்ட பெயரோ? நான் வேணும்னா பேசறேன்? ஆனா, எதைப் பேசினாலும் தப்பாப் போகுதுடா? அது ஏன்?”

“ஆங்..அதுதான் பாயின்ட். உனக்கு சம்பந்தம் இல்லாத விஷயத்தில தலையிடாதே! இரண்டாவது யாரும் கேட்கிறதுக்கு முன்னடியே

யோசனை சொல்றேன்னு உனக்குத் தோணுறதை எல்லாம் சொல்லி வைக்காதே! அயித்தான் லூஸ் டாக்ஸே பேச மாட்டார் பார்த்தியா? அது
மாதிரி நீயும் பேசாம - அதாவது லூஸ் டாக் இல்லாமல் இருந்தால் எந்தப் பிரச்சினையும் இருக்காது”

“சந்தடி சாக்கில லூஸ்டாக்ன்னுட்டே...வருத்தமா இருக்குடா?”

“நமக்குள்ள வருத்தம் வந்தா உடனே போய்விடும். மாப்பிள்ளைகிட்டே அது வராம பார்த்துக்க..” என்று சொல்லிக்கொண்டே அவன்  நிற்காமல் கிளம்பிப் போய்விட்டான்.

                            +++++++++++++++++++++++++++++++++++++++++++++

அடுத்த நாள் காலை.

கேட்டுக்கொண்டபடி ஏகப்பன் வந்து நின்றான்.

"ஆச்சி, உங்க வீட்டுக் கார்ல நிறைய சாமானை ஏற்ற முடியாது. அதனால் என் ஃபிரண்டோட டவேரா வண்டியை எடுத்துக்கிட்டு  வந்திருக்கேன். சீக்கிரமா புறப்படு, போகலாம்."

"கொஞ்சம் பொறுடா, பயணத்தில ஒரு மாறுதல் இருக்கு. நான் போகலை. ப்ளேன் டிக்கெட்டைக் கான்சல் செய்ய வேண்டியதுதான்"

"ஏன், என்ன ஆச்சு?"

"நேத்து சாயங்காலம் சாலா வந்திருந்தா.."

"யாரு, வில்லிவாக்கம் விசாலாட்சியா?"

"ஆமா!"

"அந்த ஆச்சி வந்தா, கலக்கிவிட்டுட்டுப் போயிருமே!"

"என்னை மாதிரி எல்லோருக்கும் அவ நல்லதுதான் செய்வா! ஆனா கடைசியில கெட்ட பேருதான் மிஞ்சும்!"

"அந்த ஆச்சி உன் அமெரிக்கப் பயணத்தைப் பத்தி என்ன சொன்னாகன்னு சொல்லு. அதுக்கப்புறம், அது நல்லதா, கெட்டதான்னு நான்  சொல்றேன்"

"கோமதி நீ எதுக்காக இப்பப் போறே? அதான் உன் சம்பந்தி ஆச்சி அங்க போயி மூனு மாசமா டேரா போட்டிருக்கான்னு சொல்றியே,  அவளே பிரசவத்தையும் பார்க்கட்டும், அதுக்கப்புறமும் உக்காந்து பச்சைப் பிள்ளையையும் பாத்துக்கட்டும். இன்னும் மூனு மாசம் கழிச்சு  அவ வந்ததுக்கப்புறம் நீ போங்கிறா”

“ஏனாம்”

“இன்னும் பத்து நாள்ல குழந்தை பிறந்த கையோட மகாராணி மாதிரி அவ்க புறப்பட்டு வந்துட்டாகன்னா - பிறக்கிற பச்சைக் குழந்தையோட நீதான் அவதிப்படணும். அதோட பிரசவ லீவு முடிஞ்சு வேலைக்குப் போகிற உன் மகளுக்கும், மாப்பிள்ளைக்கும் நீதான்  சமைத்துப்போடனும் அப்படீங்கறா”

“அதுக என்ன ஊராவிட்டுப் பிள்ளைகளா? நம்ம வீட்டுப் பிள்ளைகள்தானே? உன் மகளும், மாபிள்ளையும்தானே?  பார்த்தா என்ன தப்பாம்?”

“கொள்ளுக்கு மட்டும் அவ வாயைக்காட்டுவா? கடிவாளத்துக்கு நீ வாயைக் காட்டணுமா? என்கிறாள். எனக்கும் நியாயமாத்தான் தோணுது!”

“எனக்கு ஒன்னும் புரியலை. உங்க மாதிரி வயசான சில ஆச்சிமார்களுக்கே தர்ம நியாயமெல்லாம் தனியா இருக்கு. உனக்குத் தோன்றபடி செய்” என்று சொன்னவன், புறப்பட்டுப் போய்விட்டான்

                         ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
                                  
தன் அலுவலக வேலையாக தில்லிக்குச் சென்றிருந்த கோமதி ஆச்சியின் கணவர் கிருஷ்ணன் செட்டியார், அன்று மாலை திரும்பிவிட்டார். அவர் வந்ததும் வராததுமாக வீட்டிற்குள் நுழைந்த சற்று நேரத்திற்கெல்லாம்,
ஆச்சி தன் முடிவைச் சொன்னவுடன், கோபமே வராத அவருக்குக் கோபம் வந்துவிட்டது.

“உன் முடிவு எனக்கு உசிதமாகப் படவில்லை. திட்டமிட்டபடி நீ புறப்பட்டுச் செல்வதுதான் நல்லது. நம் பெண்ணின் நிலைமையை  நினைத்துப்பார். அவளுக்குத் தர்ம சங்கடத்தை உண்டு பண்ணாதே!”

“இதில் தர்ம சங்கடத்திற்கு  என்ன இருக்கிறது?”

“அவர்கள் கேட்டால் என்ன சொல்லுவாய்?”

“வரமுடியாததற்கு என்ன சொல்ல வேண்டும்? என் உடல் நிலையைச் சொல்லுவேன். எனக்கு சர்க்கரை நோய் இருப்பது அனைவருக்கும்
தெரியும். இப்போது குறைந்த ரத்த அழுத்த நோயும் சேர்ந்து கோண்டுவிட்டது. இரண்டு முறை மயங்கி விழுந்து விட்டேன். டாக்டரிம் காட்டி வைத்தியம் செய்து கொண்டிருக்கிறேன் என்று சொல்லுவேன்”

“அது பொய்தானே? சொல்லும் பொய்க்கெல்லாம் தெய்வம் துணைக்கு வராது. அது அப்படியே நடந்துவிட்டால் என்ன செய்வாய்? யார் அவதிப்படுவது? நீ போகவில்லை என்றால், நான் போகிறேன். டிகெட்டை எனக்கு மாத்தி வாங்கச் சொல்லு!”

“நீங்கள் போய் என்ன செய்வீர்கள்? பொம்பிள்ளை செய்ற வேலையை எல்லாம் நீங்கள் செய்ய முடியுமா?”

“வேலையில் பொம்பிள்ளை வேலை, ஆம்பிள்ளை வேலை என்று எதுவும் கிடையாது. ஏன் இங்கே நான் செய்ததில்லையா? அங்கே போய்  என் மகளுக்காக அதைச் செய்கிறேன்”

“ஏன் இடக்காகப் பேசுகிறீர்கள்?”

“நான் ஒன்றும் இடக்காகப் பேசவில்லை. நீதான் எல்லாவற்றையும் புரியாமல் உன் மனம்போனபடி செய்கிறாய். முதலில் போகிறேன் என்று சொன்னாய். விசா, விமானப் பயணச் சீட்டு என்று எல்லாம் வந்த பிறகு, போகவில்லை என்கிறாய். அது இடக்கு இல்லையா? மகளுக்குத்  திருமணம் செய்து கொடுத்ததினால், சம்பந்தி ஆச்சியும் நம் வீட்டுப் பெண்தான். என் தங்கச்சி என்று வைத்துக்கொள். முதலில் உன் தன் முனைப்பை எல்லாம் விட்டொழி. எல்லோரையும் நேசிக்கக் கற்றுக்கொள். நேசமும், பாசமும் இருக்கும் இடத்தில், எந்தப் பிரச்சினையும்  தலை எடுக்காது. எடுத்தாலும் அது பெரிதாகத் தெரியாது. உனக்குப் பிறந்த இடத்தில் சகோதரிகள் இல்லை. வாழ்க்கைப்பட்டு வந்த இடத்தில் நாத்தினார்களும் இல்லை. தன்னிச்சையாக இதுவரை இருந்துவிட்டாய். இனிமேலும் இருக்காதே. உன்னை நீ மாற்றிக்கொள்.
அடி வாங்க வாங்கத்தான் இரும்பு வளைந்து கொடுக்கும். வளையும் இரும்புதான் எல்லா வேலைகளுக்கும் பயன்படும். வயசாக வயசாக
பக்குவம் வரவேண்டும். பக்குவம் வராத மனித வாழ்க்கை கடைசியில் பயன்படாது. உன் முடிவை மாற்றிக்கொள். புறப்பட்டுப்போகிற வழியைப் பார்” என்று முத்தாய்ப்பாய்ச் சொன்னவர் எழுந்து போய்விட்டார்.

ஆச்சிக்குச் செவிட்டில் அறைந்ததைப் போன்று இருந்தது. செட்டியார் சொல்லிவிட்டுச் சென்ற ஒவ்வொரு வார்த்தையும் காதில் திரும்பத்
திரும்ப ஒலித்துக்கொண்டிருந்தது. அதுவும் ’தன்னிச்சை’ என்று அவர் சொன்ன சொல் பலமாக ஒலித்தது.

கோமதி ஆச்சி தன்னிலைக்குவர அரை மணி நேரம் ஆயிற்று.

அதற்குள் வாங்கிய சொல்லடியால் மனம் பக்குவப்பட்டிருந்தது.

அப்புறம்?

அப்புறம் ஒன்றுமில்லை. வாங்கிய பயணச்சீட்டின்படி, ஆச்சி அமெரிக்காவிற்குப் புறப்பட்டுச் சென்றார்கள்.
-------------------------------------
அடிக்குறிப்பு: அடியவன் எழுதி, 20.7.2012ம் தேதியன்று மாத இதழ் ஒன்றில் வெளிவந்த சிறுகதை. நீங்கள் அனைவரும் படித்து மகிழ அதை  இன்று இங்கே பதிவிட்டுள்ளேன்.

அன்புடன்,
வாத்தியார்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++

15.8.12

Greetings வாத்தியாரின் சுதந்திரதின வாழ்த்துக்கள்!


Greetings வாத்தியாரின் சுதந்திரதின வாழ்த்துக்கள்!

இன்று சுதந்திர தினம்.
நம் வகுப்பறை கண்மணிகள், வகுப்பறை நண்பர்கள், பதிவுலக நண்பர்கள், தமிழ் ஆர்வலர்கள் அனைவருக்கும் வாத்தியாரின் சுதந்திரதின வாழ்த்துக்கள்!
அன்புடன்
வாத்தியார்
-----------------------------
வந்ததற்கு சும்மா போக வேண்டாம். 30 ஆண்டுகளுக்கு முன்பு படித்த கவிதைகளில் இரண்டை  என் சேகரிப்பு ஏடுகளில் இருந்து எடுத்து,
அவற்றை உங்கள் பார்வைக்காகக் கீழே கொடுத்துள்ளேன்
------------------------------------------------------------------------

1
சமர்ப்பணம்
கவிதையாக்கம்: கவிஞர். நா.காமராசன்
------------------------------
எனது கவிதை
சுதந்திரமாக இருக்கிறது.
ஆனால் -
எங்கள் சுதந்திரம்
கவிதையாக இல்லை!

ஒலிம்பிக் போட்டிகளில்
தங்கப் பதக்கம் பெறாமல்
அங்கே
அசோகச் சக்கரத்தை
அவமானப்படுத்தும்
விசித்திரமான
வீரர்கள் நாங்கள்....

அஸ்தமிக்காத
‘பிரிட்டிஷ் சூரியனை’
அஸ்தமிக்க வைத்தோம்
ஆனால்......
இப்போது எங்கள்
பெளர்ணமிகூட
அமாவாசை ஆகிவிட்டது!

எங்கள் தேசத்திற்கு
சுதந்திரம் வாங்குவதற்காகப்
பலபேர்
செத்துப் போனார்கள்!
சுதந்திரம் வந்தபிறகு
தேசமே
செத்துக் கொண்டிருக்கிறது!

ஒரு காவிய ஏடு.....
தேர்தல் காலங்களில் மட்டும்
விலாசம் எழுதப்படும்
வெள்ளைத் தாளாக
மாறிவிட்டது!

பல்கலைக்கழகங்கள்
வெறும் கனவுலகங்கள்!
படித்தவர்களுக்கு.....
சிறைச்சாலையில் மட்டுமே
மரியாதை கிடைக்கிறது!
அங்கே அவர்களுக்கு
’சிறப்பு வகுப்பு’ தரப்படுகிறது!

இருளிரவும் பனிமூட்டமும்
கனவுலக சஞ்சாரமும்
இங்கே சங்கமிக்கின்றன!
என்றாலும் எனது தேசத்தைநான் நேசிக்கிறேன்!

எத்தனையோ
முரண்பாடுகளுக்கு மேலாக
அசைக்க முடியாமல்
உறுதியாக நிற்கும்
எங்கள் தந்தையர் நாட்டிற்கு
கொடியில்லாமல்,
கொட்டு முரசில்லாமல்,
உணர்ச்சி வெறியின்றி
ஆழமான -
அமைதியான அன்பை
சமர்ப்பணம் செய்கிறேன்!
-- கவிஞர்.நா.சாமராசன்
----------------------------
2

கசக்கவில்லை!

அணைக்க ஒரு
அன்பில்லாத மனைவி,
வளர்க்க இரு
நோயுற்ற சேய்கள்,
வசிக்கச் சற்றும்
வசதியில்லாத வீடு,
உண்ண என்றும்
உருசியில்லா உணவு,
பிழைக்க ஒரு
பிடிப்பில்லாத் தொழில்,
எல்லாமாகியும்
ஏனோ உலகம்
கசக்கவில்லை!
    - சண்முகசுப்பையா
குங்குமம் இதழ் 31.1.1982
++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

14.8.12

Astrology - Popcorn Post மறைந்து நின்று பார்க்கும் மர்மம் என்ன?

Astrology - Popcorn Post  மறைந்து நின்று பார்க்கும் மர்மம் என்ன?

Popcorn Post No.20
பாப்கார்ன் பதிவுகள் - பகுதி இருபது

மறைந்து நின்று பார்க்கும் மர்மம் என்ன?

மறைந்து நின்று பார்க்கும் திரைப்பட நாயகிகளைப் பற்றி எழுத உள்ளேன் என்று நினைப்பவர்கள் எல்லாம் பதிவை விட்டு விலகவும். இது  ஜோதிடத் தில், முக்கிய மறைவிடங்களான ஆறாம் வீடு, 8ஆம் வீடு, மற்றும் 12ஆம் வீட்டைப் பற்றியது.

அவற்றிற்கு தீய இடங்கள் என்று பெயர் (inimical places)

இயற்கை சுபக்கிரகங்களான குரு, சந்திரன், சுக்கிரன், புதன் ஆகியோர் அங்கே சென்று அமரக்கூடாது. அமர்ந்தால் அவர்களால் கிடைக்க வேண்டிய நல்ல பலன்கள் உரிய விதத்தில், உரிய காலத்தில் ஜாதகனுக்குக் கிடைக்காமல் போய்விடும்!

அதைவிட முக்கியமாக அந்த இடங்களுக்கு வேறு சூட்சமங்களும், வேறு முக்கிய செயல்களும் உள்ளன.

அதை இன்று பார்ப்போம்!
---------------------------------------
மறைவிடங்களின் முக்கியத்துவம்!

1.எட்டாம் வீடு ஒரு மனிதன் வாழும் காலத்தையும், அவனுக்கு மரணம் ஏற்படும் விதத்தையும் சுட்டிக்காட்டும்.

2.ஆறாம் வீடு மற்றும் எட்டாம் வீட்டு அதிபதிகளின் (Owners) நிலைப்பாட்டை வைத்து மரணம் ஏற்படும் காலத்தையும் தெரிந்து  கொள்ளலாம்.

3. ஆறாம் வீட்டிலும், 8ஆம் வீட்டிலும் தீய கிரகங்கள் இருந்தாலும், அதாவது அங்கே சென்று அவர்கள் குடியிருந்தாலும், ஆறாம் வீட்டு  அதிபதியும், எட்டாம் வீட்டு அதிபதியும் தீயவர்களாக இருந்தாலும், அவர்களில் யார் வலுவாக இருக்கிறார்களோ அவர்களுடைய தசாபுத்திக் காலங்களில் ஜாதகன் போர்டிங் பாஸ் வாங்கிவிடுவான். மேலே போய்விடுவான். அதற்கு யாரும் விதிவிலக்கல்ல!

4. எட்டாம் வீட்டைப் பார்க்கும் கிரகங்கள் (That is the planets aspecting the eighth house) மரணம் இயற்கையாக இருக்குமா அல்லது  இயற்கையில்லாமால் துன்பம் நிறைந்ததாக இருக்குமா என்று தெரியவரும்.

5. எட்டாம் வீட்டைத் தங்கள் பார்வையில் வைத்திருக்கும் சுபக்கிரகங்கள் ஜாதகனுக்கு இயற்கையான மரணத்தைக் கொடுக்கும். இயற்கையான மரணம் என்பது உடற்கோளாறுகளை வைத்தோ அல்லது மூப்பின் காரணமாக (old age) உடல் உறுப்புக்கள் செயல்பாட்டை  இழந்தோ வருவதாகும்

மரணத்தில், சாலை விபத்து, தீ விபத்தில் துவங்கி 28ற்கும்
மேற்பட்ட மரணங்கள் இருக்கின்றன.  அவற்றை வைத்துப் பத்துப்  பக்கங் களுக்கு  விரிவாக எழுதலாம். தற்சமயம் நேரமில்லை. பிறகு ஒரு சமயம் எழுதுகிறேன்

பார்ப்கார்ன பொட்டலம் 200 கிராம் அளவுதான். அதில் இந்த அளவுதான் கொடுக்க முடியும். தலை வாழை இலை போட்டு, செட்டி நாட்டு சமையலாக ஏழு வகை வெஞ்சனங்களுடன் (காய்கறிகளுடன்) ஒரு நாள் விருந்து படைக்கிறேன். அதுவரை பொறுத்திருங்கள்.

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

13.8.12

Astrology - Popcorn Post தங்கமே உன் தயவை நான் பெறுவேனோ?


Astrology - Popcorn Post  தங்கமே உன் தயவை நான் பெறுவேனோ?

Popcorn Post No.19
பாப்கார்ன் பதிவுகள் - பகுதி பத்தொன்பது

தங்கமே தங்கமே தங்கமே உன் தயவை நான் பெறுவேனோ?" என்ற பழைய திரைப் படப் பாடல் ஒன்று உள்ளது. பாடல் அற்புதமாக இருக்கும். பாடலை என்.எஸ்.கிருஷ்ணன் பாடியவுடன், நாயகி டி.ஏ.மதுரம், கேட்பார்:

”இந்தாங்கய்யா, இப்போ தங்கமேன்னு சொன்னது என்னைத் தானே?”

 அதற்கு அவர் இப்படிப் பதில் சொல்வார்

”ஐயோ ஐயய்யோ ஐயய்யோ, இது என்னடா இது? இதோ பாரும்மா, இந்தப் பாட்டுப் பாடறேன் பாரு அதுல பித்தளைக் காசு, வெள்ளிக் காசு
வரைக்கும் வந்திருக்கு, தங்கம் கெடைக்கலே, அப்படி தங்கம் வந்திறுச்சுன்னா... தங்கமே அதான் என்று தான் பெறுவேனோ?”

தங்கத்தின் மேல் எல்லோருக்குமே ஒரு மோகம் உண்டு. இன்று வரைக்கும் ஒரு நம்பிக்கையான முதலீட்டு உலோகம் அதுதான்.

1931ஆம் ஆண்டு ஒரு பவுனின் விலை ரூ.13:00 மட்டுமே
இன்று அதனுடைய விலை ரூ.24,000/-
80 ஆண்டுகளில் சுமார் 1850 மடங்கு உயர்ந்துள்ளது.

19ஆம் ஆண்டில்  கொத்தனாரின் (Mason) ஒரு நாள் சம்பளம் 0.25 காசுகள் அதாவது மாதம் சுமார் ஏழு ரூபாய்கள்
இன்று சாதரண ஹோட்டலில் ஒரு கோப்பை காப்பியின் விலை ரூ.12
நல்ல ஹோட்டல்களில் ஒரு கோப்பை காப்பியின் விலை ரூ.20

அதைவிடுங்கள், இன்று கொத்தனாரின் ஒரு நாள் சம்பளம் ரூ.500/-
அதே விகித்ததில் பார்த்தால் சுமார் 2000 மடங்கு உயர்ந்துள்ளது

தங்கத்துடன் போட்டி போட்டுக் கொண்டு கூலியும் உயர்ந்து கொண்டுதான் இருக்கிறது

இன்று பணியில் புதிதாகச் சேரும் ஒரு மென்பொறியாளரின் சம்பளம் சுமார் 25,000:00 ரூபாய்கள். (இன்றைய சந்தை விலையில் சுமார் ஒரு  பவுன் காசு) கஷ்டப்பட்டுப் படித்து விட்டு, மாதச் சம்பளமாக ஒரு பவுன் காசிற்குத்தான் வேலை பார்க்க வேண்டியதுள்ளது

அன்று உங்கள் பாட்டனார் 1,300 ரூபாய் செலவில் 100 பவுன் காசுகளை வாங்கி வைத்துவிட்டுப் போயிருந்தார் என்றால், அதன் இன்றைய  மதிப்பு 24 லட்ச ரூபாய்கள்

எப்படி ஒரு ஏற்றம் பார்த்தீர்களா?
----------------------------------
சரி சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன்

தங்கத்தின் விலை திடீரென்று ஏறுகிறது அல்லது இறங்குகிறது. ஜோதிடப்படி அதற்கு என்ன காரணம்?

செவ்வாய், குரு, சனி ஆகிய 3 கிரகங்களும் வக்கிரகதியில் சுழலும் போது தங்கம் மற்றும் வெள்ளி போன்ற அரிய உலோகங்களின் விலை
சரியத் துவங்கும்

”சார், தங்கத்திற்கு அதிபதி குரு, வெள்ளிக்கு அதிபதி சுக்கிரன், அப்படியிருக்கும் போது, இங்கே சனிக்கும், செவ்வாய்க்கும் என்ன  வேலை?” என்று யாரும் குறுக்குக்கேள்வி கேட்க வேண்டாம்.

பழைய நூல்களில் தங்கம், வெள்ளி விலை சரிவிற்கு இந்த மூன்று கிரகங்களின் வக்கிரகதியைத்தான் குறிப்பிட்டுள்ளார்கள்

குரு தனகாரகன், சனி கர்மகாரகன், செவ்வாய் ஆற்றலுக்கு உரிய கிரகம். ஒருவரைப் பொருளாதர ரீதியாக (தலை எழுத்தை மாற்றும்  முகமாக) புரட்டிப்போடும் ஆற்றல் அந்த மூன்று கிரகங்களுக்கும் உண்டு. அந்த அடிப்படையில் இருக்கும் என்று வைத்துக்கொள்ளுங்கள்.

வக்கிரம் நிவர்த்தி ஆனவுடன் மீண்டும் ஏறத்துவங்கும்.

தங்கத்தை வாங்கி வைக்க (வீட்டில்தான்) விரும்புகிறவர்கள் அம்மூன்று கிரகங்களின் நிலைப்பாடுகளைக் கவனித்து, அரிய உலோகங்கள்
சரிவில் இருக்கும்போது வாங்க வேண்டும்!

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++

10.8.12

Devotional எல்லோரும் கொண்டாடுவோம்!

Devotional எல்லோரும் கொண்டாடுவோம்!

பக்தி மலர்

எல்லோரும் கொண்டாடுவோம்
எல்லோரும் கொண்டாடுவோம்
அல்லாவின் பெயரை சொல்லி
நல்லோர்கள் வாழ்வை எண்ணி

கல்லாகப் படுத்திருந்து
களித்தவர் யாருமில்லே
கைகால்கள் ஓய்ந்த பின்னே
துடிப்பதில் லாபம் இல்லே
வந்ததை வரவில் வைப்போம்
செய்வதை செலவில் வைப்போம்
இன்று போல் என்றும் இங்கே ஒன்றாய்க் கூடுவோம்
(எல்லோரும்)

நூறு வகைப் பறவை வரும்
கோடி வகைப் பூ மலரும்
ஆட வரும் அத்தனையும்
ஆண்டவனின் பிள்ளையடா...ஆ..

கறுப்பில்லை வெளுப்பும் இல்லை
கனவுக்கு உருவமில்லை
கடலுக்குள் பிரிவும் இல்லை
கடவுளில் பேதமில்லை
முதலுக்கு அன்னையென்போம்
முடிவுக்கு தந்தையென்போம்
மண்ணிலே விண்ணைக் கண்டு ஒன்றாய் கூடுவோம்
(எல்லோரும்)

ஆடையின்றி பிறந்தோமே
ஆசையின்றி பிறந்தோமா ?
ஆடி முடிக்கையிலே அள்ளிச் சென்றோர் யாருமுண்டோ?
ஓ..

படைத்தவன் சேர்த்து தந்தான்
மதத்தவன் பிரித்து வைத்தான்
எடுத்தவன் மறைத்துக் கொண்டான்
கொடுத்தவன் தெருவில் நின்றான்
எடுத்தவன் கொடுக்க வைப்போம்
கொடுத்தவன் எடுக்க வைப்போம்
இன்று போல் என்றும் இங்கே ஒன்றாய்க் கூடுவோம்

திரைப்படம்: பாவ மன்னிப்பு (1961)
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், நாகூர் ஹனிபா
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன், ராமமூர்த்தி
வரிகள் : கண்ணதாசன்
--------------------------------------------
பாடலின் காணொளி வடிவம்
Our sincere thanks to the person who uploaded the video clipping!

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++

9.8.12

Astrology - Popcorn Post பெண்களுக்கென்று ஜாதகத்தில் தனி அமைப்புக்கள் உள்ளனவா?

Astrology - Popcorn Post  பெண்களுக்கென்று ஜாதகத்தில் தனி அமைப்புக்கள் உள்ளனவா?

பாப்கார்ன் பதிவுகள் - பகுதி பதினெட்டு

ஏன் இல்லாமல்? பெண்களுக்கென்று உடல் அமைப்பு, கால் அமைப்புக்கள் மாறுபடும்போது, ஜாதகத்தில் மட்டும் சில தனி அமைப்புக்கள்  இல்லாமல் போகுமா என்ன?

அவை என்னென்ன?

விரிவாகக் குறைந்தது ஒரு பத்து பதிவுகளாவது எழுத வேண்டும். இங்கே எழுதினால் திருட்டுப்போகும் அபாயம் உள்ளது. ஆகவே மேல்  நிலைப் பாடத்தில் எழுதலாம் என்றுள்ளேன்.

ஒரே ஒரு மேட்டரை மட்டும் இங்கே பதிவிடுகிறேன்
-----------------------------------------------------
கைம்பெண்’ நிலைமையைப் பற்றி ஜோதிடம் என்ன சொல்கிறது?

கைம்பெண் என்றால் என்னவென்று தெரியுமல்லவா? கணவனை இழந்த பெண். விதவை. widow அதாவது கணவனை இழக்கும் நிலை ஒரு பெண்ணுக்கு எவ்வாறு ஏற்படுகிறது?

கணவனை இழக்கும் பெண்ணின் மன பாதிப்புக்களையும், அவளுடைய வாழ்வில் ஏற்படும் சமூக, மற்றும் பொருளாதார பாதிப்புக்களையும்
பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம். பதிவு திசை மாறிப்போய்விடும் என்பதாலும், இது பாப்கார்ன் பதிவு என்பதாலும் அதைப்பற்றி எழுதவில்லை. நேரடியாக விஷயத்திற்கு வருகிறேன்
------------------------------------------------------
1.  செவ்வாய் ஏழாம் வீட்டில் இருந்து, அது அவருக்குப் பகை வீடு என்னும் நிலைமை விதவையோகத்தைக் குறிக்கும்

2. அவ்வாறு ஏழில் அமர்ந்திருக்கும் கேதுவும் அதே காரியத்தைச் செய்யும்
.
3. வலுவிழந்து, பாபகர்த்தாரி யோகத்துடன் ஜாதகத்தில் இருக்கும் சுக்கிரனும் அந்த வேலையைச் செய்யும்

4. பிரசன்ன மார்க்கத்தை எழுதிய முனிவர் பெண்களுக்கு, சனிதான் கணவனுக்கான காரகன் என்கிறார். அத்துடன் பெண்ணின் ஜாதகத்தில்   
சனீஷ்வரன் செவ்வாய் அல்லது கேதுவுடன் சேர்ந்து ஏழில் இருந்தால், பெண் சீக்கிரம் விதவையாகிவிடுவாள் என்கிறார்.

5. பெண்களின் ஜாதகத்தில் எட்டாம் வீடு மாங்கல்ய ஸ்தானம். அந்த  ஸ்தானத்தை, அதாவது அந்த வீட்டை செவ்வாயோ அல்லது கேதுவோ
 பார்த்தால் பெண்ணிற்கு மாங்கல்ய தோஷம்.

இதெல்லாம் பொது விதி.

விதிவிலக்கு உண்டா?

உண்டு!

ஜாதகியின் இரண்டாம் வீட்டில் சுபக்கிரகங்கள் இருந்தால், அது அவளை விதவையாகாமல் காப்பாற்றிவிடும். அதுபோல மேற்கண்ட  வீடுகளை குரு பகவான் தன்னுடைய நேரடிப் பார்வையில் வைத்திருந்தாலும், அந்த அமைப்பு ஜாதகியைக் காப்பாற்றும்

விளக்கம் போதுமா?
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++

8.8.12

Astrology - Popcorn Post பரதேசம் போவது எப்படி?

Astrology - Popcorn Post  பரதேசம் போவது எப்படி?

பாப்கார்ன் பதிவுகள் - பகுதி பதினேழு

யாராவது பரதேசம் போக விரும்புவார்களா? என்னடா வாத்தியார் இப்படித் தலைப்பிட்டிருக்கிறார் என்று கேட்பவர்கள் எல்லாம் பதிவை விட்டு விலகவும்.

ஜாதகப்படி பரதேசம் போகும் அமைப்பு சிலருக்கு இருக்கும். நாம் போக விரும்பாவிட்டாலும், அல்லது அப்படிப்போகும் வாய்ப்பு நமக்குக்
கிடைக்காவிட்டாலும் அதைத் தெரிந்து கொள்வதில் என்ன தவறு இருக்கிறது?

நல்லதும் கெட்டதும் கலந்ததுதான் வாழ்க்கை. அவை இரண்டையும் சொல்வதுதான் ஜோதிடம். அதைத் தெரிந்து கொள்வதால் ஒன்றும்
கெட்டுப்போய் விடாது. ஆகவே தொடர்ந்து படியுங்கள்.

பரதேசிகள் அலைந்து திரியும் இடம்தான் பரதேசம். முதலில் பரதேசி என்றால் என்னவென்று தெரிந்துகொள்வோம்.

பரதேசி என்றால் ஊர் ஊராகச் சுற்றித்திரியும் பிச்சைக்காரன் என்று அகராதில் குறிப்பிடப்பெற்றுள்ளது. (wandering beggar). குடும்பத்தைத் துறந்து வெளியேறிய துறவிகளையும் அது குறிக்கும்

அந்தக் காலத்தில் பரதேசம் என்றால் நாடுவிட்டு நாடு போவதைக் குறிக்கும். இப்போது அப்படியெல்லாம் போக முடியாது. விசா பிரச்சினை குறுக்கே வந்து நிற்கும். ஆகவே உள் நாட்டிலேயே வேறு மாநிலங்களில் சுற்றித் திரிவது என்று பொருள் கொள்ளலாம்.

சரி, பரதேசம் போவதற்கான ஜாதக அமைப்பு என்ன?

அதை இன்று பார்ப்போம்!
----------------------------------------
பாரப்பா ஈராறோன் இரு நான்கோனும்
   பகருகின்ற செவ்வாயும் மூவர் சேர்ந்து
கூறப்பா எவ்விடத்தில் கூடிட்டாலும்
   கொற்றவனே பரதேசம் போவான் காளை
சீரே நீசசந்திரனும் கண்ணுற்றாலும்
   சிலகாலந் தங்கியிருந்து செம்பொன் தேடி
ஆறப்பா அவன் பதியில் வந்து வாழ்வான்
   அப்பனே புலிப்பாணி அறைந்திட்டேனே!
                       - புலிப்பாணி முனிவர்

ஈராறோன் என்றால் பன்னிரெண்டாம் அதிபதி (12th Lord)
இரு நான்கோன் என்றால் எட்டாம் வீட்டுக்காரன் (8th Lord)
செவ்வாய் என்றால் நம் அனைவருக்கும் தெரியும்

ஆக அம்மூவரும் கூட்டாக ஜாதகத்தில் எந்த இடத்தில் இருந்தாலும், ஜாதகன் ஒரு நாள் பரதேசம் போவானாம்.

சரி, விதிவிலக்குண்டா?

நீச சந்திரன், அதாவது பெளர்ணமிக்குப் பிறகு அமாவாசை வரை உள்ள தேய்பிறைச் சந்திரன், அம்மூவரையும் தன் பார்வையால் பார்த்தால்
சற்று விதிவிலக்கு உண்டு. அதாவது ஜாதகன் போவதை அது தடுத்து நிறுத்தாது. ஆனால் சிலகாலம் ஜாதகன் சுற்றித்திரிந்து தங்கம்
முதலான பொருட்களுடன் திரும்ப வீடு வந்து சேர்வானாம். பொருள் ஈட்டிக்கொண்டு வருவான். அல்லது உங்கள் மொழியில் சொன்னால்
எங்காவது ஆட்டையைப் போட்டுக்கொண்டு வருவான்.

வந்து, தன் நாயகி, தன் மக்களுடன் சேர்ந்தால் சரிதான்!

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

7.8.12

Astrology: ஜாதகப்படி வேலையா அல்லது வியாபாரமா?

Astrology:  ஜாதகப்படி வேலையா அல்லது வியாபாரமா?

அலசல் பாடம்

இன்றையப் பொருளாதார சூழ்நிலையில் வேலைக்குச் செல்கின்றவகளுக்கு, பெரிய அளவில் முன்னேற்றம் இருக்காது. வாங்குகிற  சம்பளத்தில் ஒன்றும் மிஞ்சாது. மிஞ்சினால் அல்லவா ஒரு சிறுவீடாக அம்பத்தூரிலோ அல்லது நங்கநல்லூர் பகுதியிலோ வாங்க முடியும்? சம்பளத்துடன் கிம்பளம் வாங்குகிறவர்களுக்குக் கவலை இல்லை. அது இல்லாதவர்கள் என்ன செய்வது?

சுயதொழில் அல்லது வியாபாரம் செய்து பொருள் ஈட்டும் ஆசை சிலருக்கு இருக்கும். ஆனால் ஜாதகப்படி அதற்கான அமைப்பு இருந்தால்தான் அதைச் செய்ய முடியும். அந்த அமைப்பு இல்லாவிட்டால், வேலைக்குச் செல்வது தான் உத்தமம். வேலைக்குச் செல்வதற்கு ஜாதகம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. அதுபோல வேலையில் ஏற்றத்தாழ்வும்  கிடையாது. சுய மரியாதையுடன் செய்யக்கூடிய எந்த வேலையையும் செய்யலாம்.

அதை மீறி வேலையை உதறிவிட்டு, சுயதொழில் செய்தால் என்ன ஆகும்?

ஒரு உதாரண ஜாதகத்தை வைத்து, இன்று அதைப் பார்ப்போம்!
---------------------------------------------------------------
மேலே உள்ள ஜாதகத்திற்குச் சொந்தக்காரன் தான் பார்த்து வந்த வேலையை உதறிவிட்டு, சொந்தமாக வியாபாரம் செய்தான். என்ன   ஆயிற்று?

மகர லக்கின ஜாதகம்.
லக்கினாதிபதி சனி எட்டில்
லக்கினத்தில் விரையாதிபதி (12ஆம் அதிபதி)குருவின் ஆதிக்கம்
நான்கில் (சுக ஸ்தானத்தில்) ராகு
பத்தில் (தொழில் ஸ்தானத்தில்) கேது.
தனகாரகன் குரு நீசம் பெற்றுள்ளான்

1. குருவும் சனியும் ஒருவருக்கொருவர் 6-8 அமைப்பில் உள்ளார்கள். ஜாதகன் குரு திசை சனி புக்தியில் வேலையை விட்டு விலகினான்.
2. கர்மகாரகன் சனியும், பத்தாம் இடத்து அதிபதி சுக்கிரனும் ஒருவருக்கொருவர்  6-8 அமைப்பில் உள்ளார்கள்.
3. வியாபாரத்திற்கான காரகன் (authority for business) புதன் எட்டாம் அதிபதி சூரியனுடன் கூட்டாக உள்ளான்.

எல்லா அமைப்புக்களுமே எதிரிடையாக இருந்ததால் ஜாதகன் வியாபாரத்தில் போட்ட பணத்தை இழந்து விட்டு, மீண்டும் வேலைக்கே  சென்றான்.

ஆகவே ஜாதகப்படி என்ன அமைப்பு உள்ளதோ அதையே செய்ய வேண்டும்!

மேல்நிலை வகுப்பிற்காக (classroom2012) எழுதப்பெற்ற பாடம். மற்றவர்களுக்கும் பயன்படட்டும் என்று அதை, இன்று, இங்கே பதிவிட்டுள்ளேன்!

அன்புடன்,
வாத்தியார்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++

6.8.12

Astrology நஷ்டமும் நஷ்டஈடும்!

Astrology நஷ்டமும் நஷ்டஈடும்!

பயிற்சிப் பாடம்

ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்துப் போகும்போது, மரம், மட்டை என்று கிடைத்தவை அனைத்தையும் ஆற்று வெள்ளம் புரட்டி

எடுத்துக்கொண்டு போகும். அதுபோல மனித வாழ்க்கையில் கெட்ட நேரம் பெருக்கெடுத்து ஓடும் போது, கிரகங்கள் ஜாதகனை, அவனுடைய

மதிப்பு, மரியாதை, நிம்மதி என்று அனைத்துடனும் சேர்த்துப் புரட்டி எடுத்துக்கொண்டு போகும்.

அந்த நிலையில் அவனால் ஒன்றும் செய்ய முடியாது. வெள்ளத்தோடும், கண்ணில் கண்ணீரோடும், அவனும் போக வேண்டியதுதான்.

அதில் (நடுவில்) ஒரு நல்ல தசாபுத்தி தலை காட்டினால் கரை ஒதுங்கி, மூச்சு விடலாம்.

ஒரு ஜாதகனைக் கிரகங்கள் எப்படி புரட்டி எடுத்தன என்பதை இன்று பார்ப்போம்.

கிரகங்களின் விளையாட்டு இப்படித்தான் இருக்கும் என்று எடுத்துக்கொள்ளுங்கள்.
-----------------------------------------
ஒரு உதாரண ஜாதகம்.

ஜாதகன் பிறந்தது ............(சில காரணங்களுக்காகப் பிறப்பு விவரத்தை இங்கே தரவில்லை)
ரேவதி நட்சத்திரம்
மீன லக்கின, மீன ராசி ராசி ஜாதகம்.

ஜாதகன் தான் வேலை செய்த நிறுவனத்தில், கள்ளக் கையெழுத்தைப் போட்டு, பணத்தைச் சுருட்டிய விவகாரத்தில் மாட்டிக்கொண்டு  விட்டான். பணி நிறுத்தம் செய்யப்பட்டதுடன், நீதிமன்ற வழக்கையும் எதிர்கொண்டு பெரும் அவதிக்கும், மன உளைச்சலுக்கும் ஆளானான்.

வீட்டிலும், வெளிவட்டாரங்களிலும், அவனுடைய மதிப்பும், மரியாதையும் போய்விட்டது.

இறுதியில் என்ன ஆயிற்று?

வாருங்கள் அதையும் பார்ப்போம்.

1. இரண்டாம் அதிபதி (Lord of the 2nd house - house of finance) செவ்வாய் நீசம் பெற்றுள்ளான். இயற்கையாகவே பணப் பற்றாக்குறையான ஜாதகம். அதனால்தான் பணத்தைக் கையாடல் செய்து தன் பணக் கஷ்டத்தைப் போக்கும் எண்ணம் அவனுக்கு  ஏற்பட்டது.

2. மூன்றாம் இடத்திற்கும், எட்டாம் இடத்திற்கும் அதிபதியான சுக்கிரன் உச்சம் பெற்று லக்கினத்தில் அமர்ந்ததாலும், உடன் ராகுவின்  சேர்க்கையாலும், அவனுக்கு அந்தக் குற்றத்தைப் புரியும் ஊக்கம் (துணிச்சல்) ஏற்பட்டது. அத்துடன் அவை இரண்டும் ஜாதகனுக்கு, அவன்  நொந்து போகும் அளவிற்குச் சிரமங்களை உண்டாக்கின.

3. ஆறாம் வீடும், 12ஆம் வீடும் அதீதமான பாபகர்த்தாரி யோகத்தில். இருபுறமும் தீய கிரகங்கள். ஆறாம் வீட்டின் ஒரு பக்கம் செவ்வாய்.
மறுபக்கம் கேது. 12ம் வீட்டின் ஒரு பக்கம் சனி. மறுபக்கம் ராகு. எப்படிக் கெட்டிருக்கின்றன பாருங்கள். இந்தக் கெடுதல் போதுமா? இன்னும் கொஞ்சம் வேண்டுமா?

4. எட்டாம் வீட்டின் மேல் செவ்வாய் (4ஆம் பார்வை), மற்றும் சனியின் பார்வை (10ஆம் பார்வை)

5. லக்கினம், மற்றும் எதிர்ப்பாளரின்  (opponent) கட்டங்களில் - அதாவது 1ல் மற்றும் 7ல் ( 1 & 7 axis) ராகு மற்றும் கேதுவின் ஆதிக்கம்

6. எல்லா தீய இடங்களும் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளன. எல்லாவிதமான உபத்திரவங்களையும், சிரமங்களையும்,  சோதனைகளையும் அவைகள் ஜாதகனுக்குக் கொடுத்து அவனை அலைக்கழித்தன!

அதே நேரத்தில் ஒரு கேள்வி எழும்.  ஜாதகத்தில் நஷ்டம் இருந்தால், நஷ்ட ஈடும் இருக்கும் என்பார்களே, ஜாதகனுக்கு ஜாதகத்தில்  நஷ்டஈடு உள்ளதா? அவன் மீண்டு வந்தானா? தப்பிப் பிழைத்தானா? என்பது போன்ற கேள்விகள் எழும்.

வாருங்கள் அதையும் பார்ப்போம்.

ஆசாமியின் ஜாதகத்தில், பல தீமைகள் இருந்ததைப் போலவே, அசத்தலாக சில நன்மை தரும் அமைப்புக்களும் இருந்தன.

1. முதல்நிலை சுபக்கிரகமான குரு பகவான் 5ஆம் பார்வையாக 8ஆம் வீட்டையும், 9ஆம் பார்வையாக 12ஆம் வீட்டையும் தனது கட்டுப்
பாட்டில் வைத்திருக்கிறார். மற்ற கிரகங்களை ஆடவிட்டுவிட்டு, உரிய நேரத்தில் ஓடி வந்து அவர் ஜாதகனுக்குக் கை கொடுத்தார்.

2. ஆறாம் அதிபதி சூரியன் இருபுறமும் சுபக்கிரகங்கள் நிற்க சுபகர்த்தாரி யோகத்தில் உள்ளார். அவர் ஜாதகனை மீட்டுக்கொண்டு வந்தார். ஒருபக்கம் புதன். மறுபக்கம் குரு.

3. எட்டாம் அதிபதி சுக்கிரன் உச்சம் பெற்று, கோணத்தில் அமர்ந்துள்ளார்.

4. அவருடன் 5ஆம் அதிபதி (பூர்வ புண்ணியாதிபதி) சந்திரனும் அமர்ந்துள்ளார்.

5. அவர்கள் இருவருமே, அதாவது சந்திரனும், சுக்கிரனும், லக்கின அதிபதி குருவிற்கு கேந்திரத்தில் உள்ளார்கள்.

6. 12ஆம் அதிபதி சனி லக்கினத்திற்குப் பதினொன்றில், தனது சொந்த வீட்டில் வலுவாக அமர்ந்துள்ளான்.

இந்த ஆறு அமைப்புக்களும், தீய கிரகங்கள் குழிக்குள் தள்ளிய ஜாதகனை, கை கொடுத்துத் தூக்கி, மேலே கொண்டு வந்தன. நீதி மன்ற  வழக்கில் அவனை வெற்றிபெறச் செய்தன.

7ல் கேது இருந்ததாலும், 7ஆம் அதிபதி புதன் அந்த வீட்டிற்கு எட்டில் இருந்ததாலும் அவன் வழக்கில் சிக்கிக் கொள்ள நேர்ந்தது. லக்கினமும், லக்கினாதிபதியும் வலுவாக இருந்ததால் அவன் மீண்டு வந்தான்

ஜாதகத்தில் நஷ்டங்களும் இருக்கும் நஷ்ட ஈடுகளும் இருக்கும். இல்லாவிட்டால் அனைவருக்கும் மதிப்பெண் 337தான் என்னும் ஜாதக
அமைப்பு எப்படி உண்டாகும்?

இறைவன் கருணை மிக்கவர். ஆகவே கஷ்டங்கள் வந்தால், அழுது புரள்வதை விட்டு விட்டு அல்லது அசந்துபோய் கவலையுடன் தரையில்  படுப்பதை விட்டுவிட்டு, அதில் இருந்து மீள்வது எப்படி என்று பாருங்கள்

இது மேல்நிலை வகுப்பிற்காக ( e class 2012) எழுதப்பெற்ற பாடம். அனைவரும் படிக்கட்டும் என்று இங்கே, இன்று பதிவிட்டுள்ளேன்

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++====

3.8.12

Poetry கவிதைச் சோலை: நாட்டை மாற்றிய தலைவர்கள்!

சமயபுரம் மாரியம்மன்
Devotional பொருளோடும் புகழோடும் வைப்பாய் எம்மை!

பக்திப்பாடல்

கற்பூர நாயகியே! கனகவல்லி!
கற்பூர நாயகியே! கனகவல்லி!
காளி மகமாயி! கருமாரி அம்மா!
பொற்கோவில் கொண்ட சிவகாமியம்மா!
பூவிருந்த வல்லி தெய்வானையம்மா!
விற்கால வேதவல்லி விசாலாட்சி!
விழிக்கோல மாமதுரை மீனாட்சி!
சொற்கோவில் நானமைத்தேன் இங்கு தாயே!
சுடராக வாழ்விப்பாய் என்னை நீயே!

(கற்பூர)

புவன முழுதாளுகின்ற புவனேஸ்வரி!
புரமெரித்தோன் புறமிருக்கும் பரமேஸ்வரி!
நவநவமாய் வடிவாகும் நாகேஸ்வரி!
நம்பினவர் கைவிளக்கே ஸர்வேஸ்வரி!
கவலைகளைத் தீர்த்துவிடும் காளீஸ்வரி!
காரிருளின் தீச்சுடரே ஜோதீஸ்வரி!
உவமான பரம்பொருளே ஜகதீஸ்வரி!
உன்னடிமைச் சிறியேனை நீயாதரி!

(கற்பூர)

உன்னிடத்தில் சொல்லாமல் வேறு எந்த
உறைவிடத்தில் முறையிடுவேன் தாயே! எந்தன்
அன்னையவள் நீயிருக்க உலகில் மற்ற
அன்னியரைக் கெஞ்சிடுதல் முறையோ அம்மா!
கண்ணீரைத் துடைத்துவிட ஓடி வாம்மா!
காத்திருக்க வைத்திடுதல் சரியோ அம்மா!
சின்னவளின் குரல்கேட்டுன் முகம் திருப்பு!
சிரித்தபடி என்னைத் தினம் வழி அனுப்பு!

(கற்பூர)

கண்ணிரண்டும் உன்னுருவே காண வேண்டும்!
காலிரண்டும் உன்னடியே நாட வேண்டும்!
பண்ணமைக்கும் நா உனையே பாட வேண்டும்!
பக்தியோடு கையுனையே கூடவேண்டும்!
எண்ணமெல்லாம் உன் நினைவே ஆக வேண்டும்!
இருப்பதெல்லாம் உன்னுடையதாக வேண்டும்!
மண்ணளக்கும் சமயபுர மாரியம்மா!
மகனுடைய குறைகளையும் தீருமம்மா!

(கற்பூர)

நெற்றியினுள் குங்குமமே நிறைய வேண்டும்!
நெஞ்சினுலும் உன் திருநாமம் வழியவேண்டும்!
கற்றதெல்லாம் மேன் மேலும் பெருக வேண்டும்!
கவிதையிலே உன் நாமம் வாழ வேண்டும்!
சுற்றமெல்லாம் நீடுழி வாழ வேண்டும்!
ஜோதியிலே நீயிருந்து ஆள வேண்டும்!
மற்றதெல்லாம் நானுனக்குச் சொல்லலாமா!
மடிமீது பிள்ளை என்னைத் தள்ளலாமா!

(கற்பூர)

அன்னைக்கு உபசாரம் செய்வதுண்டோ!
அருள் செய்ய இந்நேரம் ஆவதுண்டோ!
கண்ணுக்கு இமையின்றிக் காவலுண்டோ!
கன்றுக்கு பசுவின்றி சொந்தமுண்டோ!
முன்னைக்கும் பின்னைக்கும் பார்ப்பதுண்டோ!
முழுமைக்கும் நீ எந்தன் அன்னையன்றோ!
எண்ணெய்க்கும் விளக்குக்கும் பேதமுண்டோ!
என்றைக்கும் நானுந்தன் பிள்ளையன்றோ!

(கற்பூர)

அன்புக்கே நானடிமையாக வேண்டும்!
அறிவுக்கே என் காது கேட்க வேண்டும்!
வம்புக்கே போகாமல் இருக்க வேண்டும்!
வஞ்சத்தை என் நெஞ்சம் மறக்க வேண்டும்!
பண்புக்கே உயிர் வாழ ஆசை வேண்டும்!
பரிவுக்கே நானென்றும் பணிய வேண்டும்!
என்பக்கம் இவையெல்லாம் இருக்க வேண்டும்!
என்னோடு நீ என்றும் வாழ வேண்டும்!

(கற்பூர)

கும்பிடவோ கையிரண்டும் போதவில்லை!
கூப்பிடவோ நாவொன்றால் முடியவில்லை!
நம்பிடவோ மெய்தன்னில் சக்தியில்லை!
நடந்திடவோ காலிரண்டால் ஆகவில்லை!
செம்பவள வாயழகி உன்னெழிலோ!
சின்ன இரு கண்களுக்குள் அடங்கவில்லை!
அம்பளவு விழியாலே உன்னை என்றும்
அடிபணியும் ஆசைக்கோர் அளவுமில்லை!

(கற்பூர)

காற்றாகி கனலாகிக் கடலாகினாய்!
கயிறாகி உயிராகி உடலாகினாய்!
நேற்றாகி இன்றாகி நாளாகினாய்!
நிலமாகி பயிராகி உணவாகினாய்!
தோற்றாலும் ஜெயித்தாலும் வாழ்வாகினாய்!
தொழுதாலும் அழுதாலும் வடிவாகினாய்!
போற்றாத நாளில்லை தாயே உன்னை!
பொருளோடும் புகழோடும் வைப்பாய் எம்மை!!

(கற்பூர)
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
2

கவிதைச் சோலை:   நாட்டை மாற்றிய தலைவர்கள்!

தலைவர்கள்

மாடுதின் னாமலும் மனிதர்தொ டாமலும்
     வைக்கோலிற் படுத்த நாய்போல்
வையம் பெறாமலும் மண்ணில் விழாமலும்
     மாகடல் கொண்ட மழைபோல்
ஏடுகொள் ளாமலும் இசையில்நில் லாமலும்
     எழுதாது போன கவிபோல்
இலையில் இடாமலும் இருந்தேஉண் ணாமலும்
     இடம் மாறி விழுந்த கறிபோல்
நாடுகொள் ளாதஜன நாயகத் தலைவர்கள்
     நாட்டையே மாற்றி னாரே!
நலமுடைய சிறுகூடற் பட்டியில் வதிகின்ற
     மலயரசி நங்கை தாயே!
              - கவியரசர் கண்ணதாசன்
+++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!