மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

29.2.16

Astrology: Quiz 103: பதில்: அக்கரையைக் காணும் வாய்ப்பு ஜாதகருக்குக் கிடைக்கவில்லை!


Astrology: Quiz 103: பதில்: அக்கரையைக் காணும் வாய்ப்பு ஜாதகருக்குக் கிடைக்கவில்லை!

கர்மவினையின்படி நமக்கு என்ன வேலை விதிக்கப்பட்டுள்ளதோ அதைத்தான் நாம் செய்ய வேண்டியதிருக்கும்.
அரசாங்க உத்தியோகம் என்றால் அதுதான் அமையும். இல்லை என்றால் என்ன கரணம் போட்டாலும் அமையாது.

சிலருக்குத் தாங்கள் செய்கின்ற வேலை பிடிக்கும். சிலருக்கு பிடித்தம் இல்லாமல் இருக்கும். வேலையில் இருப்பவர்களுக்குத் தொழில் செய்தால் பரவாயில்லை, நிறைய காசு பார்க்கலாமே, வேலைக்குச் செல்வதில், கைக்கும் வாய்க்குமாக இருக்கிறதே என்ற மன நிலை இருக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு, இதில் ஏற்ற இறக்கங்கள், ரிஸ்க் எல்லாம் உள்ளதே, வேலை என்றால் மாதாமாதம் வருமானம் இருக்குமே என்ற ஆதங்கம் இருக்கும்.

பொதுவாகப் பலரும் திருப்தியாக இல்லை. நிம்மதியாக இல்லை. இக்கரைக்கு அக்கரை பச்சை என்ற நிலைமை.

பலர் மனதிலும் உள்ள கேள்விகள் இவைதான்:

1. நமக்கு ஏற்ற தொழில் எது?
2. வெளி நாட்டில் வேலை கிடைக்குமா?

அது சம்பந்தமாக வெள்ளிக்கிழமையன்று ஒரு ஜாதகத்தை அலசக் கொடுத்திருந்தேன்.
-----------------------------------------------------------------------------------
அந்த ஜாதகத்தைப் பாருங்கள்.


இது மகர லக்கின ஜாதகம். யோககாரகன் சுக்கிரன் (அதாவது ஒரு திரிகோண வீடு & ஒரு கேந்திர வீடு ஆகியவற்றிற்கு உரியவன்) இந்த ஜாதகத்திற்கு அவன் யோகாரகன் என்பதோடு 10ஆம் வீட்டிற்கும் அதிபதி.அவன் எங்கே இருக்கிறான். அடடா, 12ல் மறைந்து விட்டான். ஜாதகருக்கு எந்தத் தொழிலும் அல்லது வியாபாரமும் அமையாது. வேலக்குச் செல்ல வேண்டிய ஜாதகம். அல்லது சுய தொழிலாக இருந்தால், பணமுதல்லீடு இல்லாமல் கமிஷன் அடிப்படையில் உள்ள தொழில்களைச் செய்யலாம்.

சுக்கிரனுக்கு, 9ஆம் அதிபதி மற்றும் 7ஆம் அதிபதியுடன் தொடர்பு இல்லை. ஆகவே வெளிநாடு சென்று வேலை செய்யும் அமைப்பு ஜாதகத்தில் இல்லை. ஆசாமி இங்கேயே வேலை செய்ய வேண்டியதுதான். அதைத்தான் அவரும் செய்தார்.
----------------------------------------------------
24 பேர்கள் போட்டியில் கலந்து கொண்டுள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். 5 பேர்கள் மட்டும் சரியான விடையை எழுதியுள்ளார்கள். அவர்களுக்கு எனது மனம் உவந்த பாராட்டுக்கள். அவர்கள் பெயருடன், அவர்கள் எழுதிய பதில்கள் உங்கள பார்வைக்காகக் கிழே கொடுத்துள்ளேன்

அன்புடன்
வாத்தியார்
==========================================
1
**********///////Blogger Srinivasa Rajulu.M said...
தொழில் காரகன் (லக்னாதிபதி) நாலில் நீச்சம்! தொழில் ஸ்தானாதிபதி பன்னிரண்டில் மறைவு! ஒன்பது மற்றும் பன்னிரண்டு ஆகிய ராசிகள் ஜல ராசிகளோ வாயு ராசிகளோ அல்ல! குருவுக்கும் ஒன்பதாம் இடத்துடன் சம்பந்தமில்லை! வேலை செய்யும் வயதில் வந்த சுக்கிர, சூரிய, மற்றும் (நீச்ச) சந்திர தசைகள் வலுவாக இல்லை!
ஆக, வெளிநாடு செல்லும் யோகமோ, சுயதொழில் யோகமோ இல்லாத ஜாதகர்.////////
------------------------------------------------------------------------
2
*********/////Blogger hamaragana said...
அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
புதிர் எண் 103..
1.,மகர லக்னம் லக்னாதிபதி கேந்த்ரத்தில் ஆனால் நீசம்
2.,சுபர் பார்வை இல்லை..
3..மகர லக்னத்திற்கு யோகாதிபதி சுக்ரன் 12ல் விரயம் ..மேலும் பாபகர்த்தாரி யோகத்தில் மாட்டி கொண்டான் .
4. வெளிநாடு வாய்ப்பு 9 மிடம் நன்றாக..மேலும் சூரியன் .நல்ல இடத்தில. இங்கு அப்படி இல்லை.
சூரியன் பகை வீட்டில் 8 ம்வீட்டுக்கரன் 2ல் தனத்தில் அமர்ந்து கெடுத்தான் .
5.,10ம் அதிபதி சுக்ரன் 12ல் .
7.,வெளிநாடு சென்று சம்பாத்தியம் செய்வதற்கு 7'&9 வீடதிபதிகள் தொடர்பு இருத்தல் வேண்டும் ஜாதகரிடம் 7 வீட்டதிபதி சந்தரன் 9ம் வீட்டதிபதி புதனுடன் எந்த விதமான பார்வை தொடர்பு இல்லை ..???
8., ஆரம்பகால திசைகள் அவ்வளவு விசேடமாக இல்லை.
9.முக்கியமாக தனதிபதியும் லாப ஷ்தாநிபதியும் 6/8 நிலைமை ..[செவ்வாய் 11ல் சனி 4ல் அமர்ந்து அந்த இடம் செவ்வாய்க்கு 8மிடமாக அமைந்தது..!!!
10..***,இந்த ஜாதகர் வெளி நாடு சென்று சம்பாத்தியம் செய்வதற்கு வாய்ப்பே இல்லை. !!!!**,
முன்பு இந்த ஜாதகத்தை பார்த்த ஞாபகம் ..சரிவர பிடி படவில்லை..
Friday, February 26, 2016 1:46:00 PM ////////
---------------------------------------------------
3
////////Blogger adithan said...
ஐயா வணக்கம். லக்னாதிபதி சனி நீச்சம்.ஒனபதாம் அதிபதி புதன் லக்னத்தில் உடன் ராகு மேலும் கேதுவின் பார்வை.இரண்டில் எட்டாம் அதிபதி சூரியன்,சனி பார்வையுடன்.பணம் சம்பாதிக்க வாய்ப்பில்லை.நவாம்சத்திலும் புதன் பகை ஸ்தானத்தில்,சனி பார்வையுடன்.வெளிநாடு போக வாய்ப்பல்லை.ஆரம்ப முயற்ச்சி. தவறிருந்தால் சுட்டவும். நன்றி.
Friday, February 26, 2016 7:48:00 PM //////
-----------------------------------------
4
*********///////Blogger Chandrasekaran Suryanarayana said...
ஆசிரியருக்கு வணக்கம். தாங்கள் நலமாக இருக்கிறீர்களா ?
ஜாதகருக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கவில்லை.
20.02.1971 ஆம் தேதி காலை 4.26.19 மணிக்கு அனுஷ நட்சத்திரத்தில் பிறந்த ஜாதகருக்கு மகர லக்கினம்(6 பரல்). (இடம் : சென்னை) .
லக்கினாதிபதி சனி நீசம். நவாம்சத்தில் லக்கினாதிபதி சனி துலா ராசியில் உச்சம். இருந்தும் லக்கினாதிபதி வலுவாக இல்லை. சுபக் கிரகங்களின் பார்வையும் இல்லை.
சுக்கிரனுக்கு 9ஆம் அதிபதி புதனுடன் எந்தத் தொடர்பும் இல்லாமல் போனது வெளிநாட்டு வாய்ப்புகளுக்குக் கேடானது. பாபகர்த்தாரி யோகத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறார். ஒரு பக்கம் செவ்வாய். மறுபக்கம் ராகு.
பணம் ஈட்டலுக்கு 2ஆம் வீட்டுக்காரனும், 11ஆம் வீட்டுக்காரனும் ஒருவருக்கொருவர் நன்றாக இருக்க வேண்டும். இந்த ஜாதகத்தில் அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் அஷ்ட்டமம் / சஷ்ட்டமம் நிலையில் உள்ளார்கள். அதாவது சனியும், செவ்வாயும் 6/8, 8/6 நிலையில் உள்ளார்கள்.
லக்கினத்தில் 6ஆம் வீட்டுக்காரன் புதன் வில்லன். லக்கினத்தில் அமர்ந்தது கேடு உண்டாகும். ராகுவும் கூட்டணியாக சேர்ந்தது சரியில்ல. 7ம் வீட்டுக்காரன் சந்திரனும் நீசம்.
யோககாரகன் சுக்கிரன். 5ஆம், 11ஆம் இடங்களுக்கு உரியவன். அவன் வந்து 12ல் (விரையத்தில்) அமர்ந்தது கேடானது.
பத்தாம் வீட்டுக்கு அதிபதியான சுக்கிரன் 12ல் மறைந்து விட்டார். சுக்கிரனுடன் மாந்தியும் கூட்டு. முயற்சிகள் அனைத்தும் செல்லாமல் போனது.
தசைகளும் சாதகமாக இல்லை. சனி - 6 ஆண்டுகள் , புதன் மகா திசை - 17 ஆண்டுகள் ,கேது மகா திசை - 7 ஆண்டுகள், சுக்கிர மகா திசை - 20 ஆண்டுகள் (12ஆம் வீட்டுக்காரனின் திசை).
லக்கினத்தில் புதனும், ராகுவும் சேர்ந்து இருந்தால், ஜாதகன் சுறுசுறுப்பானவன் . கெட்டிக்காரன். வெட்டிக் கொண்டு வா என்றால் வெட்டி எடுத்து கூரு போட்டு கட்டிக் கொண்டு வந்து விடுவான். விட்டால் வெட்டியதைக் காச்சாக்கிக்கொண்டும் வந்துவிடுவான். புதுப்புது விஷயங்களில், செயல்களில் ஆர்வம் உடையவனாக இருப்பான்.
ஆக மொத்தம் சரியில்லை வெளிநாடு செல்வதற்கு.
இருந்தாலும், (பூவா, தலையா போட்டு பார்த்ததில் தலை தான் விழுந்தது). அதனால் தான் வெளிநாட்டில் வேலை கிடைக்கவில்லை.
சந்திரசேகரன் சூரியநாராயணன்.
Saturday, February 27, 2016 12:13:00 AM ////////
----------------------------------------------
5
*********///////Blogger slmsanuma said...
ஏற்கனவே ஆய்வு செய்யப்பட்ட ஜாதகம்.
மகர லக்கின ஜாதகம்.
யோககாரகன் & 10ஆம் வீட்டிற்கு அதிபதி சுக்கிரன் 12ல் மறைந்து விட்டான்.
லக்கினாதிபதியும், தொழில்காரகனுமாகிய சனீஷ்வரன் நீசம்.
ஏழாம் அதிபதி சந்திரனும் நீசம்.
9ஆம் அதிபதி ராகுவோடு கூட்டு.
சுக்கிரனுக்கு, 9ஆம் அதிபதி மற்றும் 7ஆம் அதிபதியுடன் தொடர்பு இல்லை.
வெளிநாடு சென்று வேலை செய்யும் அமைப்பு ஜாதகத்தில் இல்லை.
ஜாதகருக்கு வெளிநாடு சென்று வேலை செய்து நிறைய பொருள் ஈட்ட வேண்டுமென்று ஆசை நிறைவேறாது.
SANTHANAM, SALEM
Saturday, February 27, 2016 11:48:00 AM ////////
>>>>>>>>>>>>>>>>>>>>>
ஏற்கனவே 4 ஆண்டுகளுக்கு முன்பு தனி வகுப்பில் ஆய்வு செய்யப்பட்ட ஜாதகம்தான். பொதுவகுப்பில் அனைவருக்கும் ஒரு வாய்ப்புக் கொடுப்பதற்காக வலையில் ஏற்றினேன்!
===============================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

26.2.16

Astrology: Quiz 103: புதிர் எண்.103 ஜாதகரின் ஆசை நிறைவேறியதா?


Astrology: Quiz 103: புதிர் எண்.103 ஜாதகரின் ஆசை நிறைவேறியதா?

கீழே கொடுத்துள்ள ஜாதகத்தைப் பாருங்கள்.

ஜாதகருக்கு வெளிநாடு சென்று வேலை செய்து நிறைய பொருள் ஈட்ட வேண்டுமென்று ஆசை!

அவருடைய ஆசை நிறைவேறியதா? ஜாதகத்தை நன்றாக அடித்துத் துவைத்து அலசி உங்கள் பதிலை எழுதுங்கள்.

Toss போட்டுப் பார்த்து ஒரு வார்த்தையில் விடையைச் சொல்லக்கூடாது. ஜாதக அமைப்பின்படி என்ன காரணம் என்பதைக் கணித்துக் கூற வேண்டும்!அன்புடன்
வாத்தியார்
===============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

25.2.16

நீங்களும் உங்கள் உணவும் !


நீங்களும் உங்கள் உணவும் !

“உணவு பழக்கம்" பழமொழி வடிவில்…

* காட்டுலே புலியும் , வீட்டுலே புளியும் ஆளைக் கொல்லும்.

* போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே

* பொங்குற காலத்தில் புளி.. மங்குற காலம் மாங்கா

* சீரகம் இல்லா உணவும் , சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது.

* எண்னை குடத்தை சுற்றிய எறும்பு போல

* தன் காயம் காக்க வெங்காயம் போதும்

* வாழை வாழ வைக்கும்

* அவசர சோறு ஆபத்து

* ஆறிய உணவு மூட்டு வலி உண்டாக்கும்

* இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு

* ரத்த கொதிப்புக்கு அகத்திக் கீரை

*இருமலை போக்கும் வெந்தயக் கீரை

* உண்ணா நோன்பு ஆயுளைக் கூட்டும்.

* உஷ்ணம் தவிர்க்க கம்பங் களி

* கல்லீரல் பலம் பெற கொய்யாப் பழம்

* குடல் புண் நலம் பெற அகத்திக்கீரை

* கொலஸ்ட்ரால் குறைக்க பன்னீர் திராச்சை

* சித்தம் தெளிய வில்வம்

* சிறுநீர் கடுப்புக்கு அன்னாசி

* சூட்டை தணிக்க கருணை கிழங்கு

* ஜீரண சக்திக்கு சுண்டக்காய்

* தலை வலி நீங்க முள்ளங்கி சாறு

* தேனுடன் இஞ்சி ரத்தத் தூய்மை

* பூண்டில் இருக்கு பென்சிலின் சக்தி

* மூல நோய் தீர வாழைப்பூ கூட்டு

* வாந்திக்கு மருந்து மணத்தக்காளி

* வாத நோய் தடுக்க அரைக் கீரை

* வாய் துர்நாற்றம் தீர்க்க ஏலக்காய்

* பருமன் குறைய முட்டைக்கோஸ்

* பித்தம் தணிக்க நெல்லிக்காய்

” உணவு மருந்தாக இருக்க வேண்டும்…. இல்லாவிட்டால் மருந்தே நமக்கு உணவாகும் நிலைமை உருவாகும் ”.

நலம் உடன் வாழ்வோம்.
----------------------------------------------------------
2
கல்யாணம் பண்ணப் போகும் மகனுக்கு ஒவ்வொரு #அம்மா கட்டாயம் சொல்லவேண்டிய  அறிவுரை.!

1. எந்த சமயத்திலும் மனைவியை அம்மா கூட ஒப்பிடவே கூடாது....!!
மகனே...மறந்து கூட என்னை உன் மனைவியோட ஒப்பிட்டுப்
பார்க்காதே...உன் அம்மாவுக்கு குடும்ப வாழ்க்கையில், 20 ஆண்டு கால அனுபவம் இருக்கு. ஆனா உன் மனைவி உன்னை மாதிரி தான். இந்த
வாழ்க்கைக்கு புதுசு. உன்னை நான் வளர்த்த மாதிரி தான். அவங்க அம்மாவும் அவளை பார்த்துப் பார்த்து வளர்த்து இங்க அனுப்பியிருக்காங்க.
அவளுக்கு கொஞ்சம் ஆண்டுகள் தேவைப்படும். அதுக்கப்புறம், உன் குழந்தைக்கு அருமையான அம்மாவாக அவள் இருப்பாள்.

2. மனைவி உனக்கு அம்மா இல்லை, தோழி..!!
மகனே, உன் மனைவி உன்னுடன் வாழ்க்கைய பகிர்ந்துகொள்ள வந்துள்ள தோழி. அம்மா இல்லை.
உன் அம்மாவுக்கு உன்னை கவனிக்கறது மட்டும் தான் வேலை. ஆனா உனக்கு, உன் மனைவிய கவனிக்கறது முக்கியம். நீங்க ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர்  கவனிச்சு அன்பு செலுத்தறது மிக மிக முக்கியம்!!!

3. மதிக்கப்படவேண்டியவள் மனைவி...!!
மகனே , உன் வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வுகள், நல்லது கெட்டது அனைத்திலும் உன் மனைவி உடனிருந்து பங்கு கொள்ளப்போகிறவள். அவளை மதிக்கவேண்டும். உன் ஒவ்வொரு முன்னேற்றப்படியிலும் அவள் பங்கு உள்ளது. அவள் கருத்துகளைக் கேட்டு, முன்னுரிமை கொடுத்து வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இரு.!

4. புகுந்த வீடு வந்த மனைவியை இயல்பாக உணர வைக்க உதவி செய்யணும்.
பிறந்து , வளர்ந்து மகிழ்ந்திருந்த பிறந்த வீட்டை விட்டு, நம் பொருட்டு புகுந்த வீட்டுக்கு வந்திருக்கா
உன் மனைவி... அவளை இயல்பா இருக்க வைக்க நீதான் உதவணும்.. சின்னச் சின்ன விஷயங்கள் கூட அவளுக்கு சங்கடத்தைத் தரலாம்.. அதை
நீதான் கவனிச்சு அவள் பிறந்த வீட்டில் இருப்பதைப் போல உணர வைக்கணும்...!

5. எப்பவும் மனைவிய காதலிக்கவேணும்
காதலிக்க வயசு ஒரு  விஷயமே இல்லடா.. எப்பவும் உன் மனைவியை..சந்தோஷமா வச்சுக்கோ.. சின்னச்சின்ன சர்ப்ரைஸிங்கான பரிசுகள், வெளிய அழைச்சுட்டுப்  போறது, அவள் டிரஸ்ஸிங்கை சிலாகிச்சுப் பேசறது, சந்தோஷமா வாய்விட்டு சிரிக்கறது மாதிரியான விஷயங்கள் உங்க
ரெண்டுபேரையும்...எப்பவும்இளமையா உணர வைக்கும்...!!
ஐந்து பாய்ண்ட்டுகளையும் சேர்த்து ஒரே பாய்ண்ட்டா சொல்றேன்.....!!
உங்க  அப்பா(நல்ல அப்பா மட்டும்) என்னை எப்படி நடத்தறாரோ....? அது போல நீயும் உன் மனைவியை...கௌரவமா மதிச்சுக் குடும்பம் நடத்து
மகனே..!!
.
என் மாமியார் இப்படி எல்லாம் சொல்லி இருப்பாங்களா என்ன!!!
------------------------------------------------------
3
தனியாக இருக்கும் போது மாரடைப்பு 😩

💒 வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி
காப்பாற்றிக்கொள்வது ❓

🏃 வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில 😨  பிரச்சனைகள் காரணமாக உங்கள் 😡 மனம் மிகவும்
அழுத்தத்துடன் உள்ளது,

👉 நீங்கள் மிகவும் 😳 படபடப்பாகவும், 😟 தொய்வாகவும் உள்ளீர்கள்.

👉 திடீரென்று உங்கள் 💗 இதயத்தில் அதிக "வலி"
ஏற்படுவதை உணர்கிறீர்கள்.

👆 அந்த வலியானது மேல் கை முதல்தோள்பட்டை வரைபரவுவதை உணருகிறீர்கள்.

👉 உங்கள் வீட்டில் இருந்து 🏥 மருத்துவமனை ஒரு ஐந்து மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம்.

👎 ஆனால் உங்களால் அந்த ஐந்து மையில் தூரத்தை கடக்க முடியாது என உங்கள் 💬 மூளை உங்களுக்கு சொல்கிறது

👌 இந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க என்ன செய்யலாம்...??

👎 துரதிஷ்ட  வசமாக 💔 மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக உள்ளனர்..!

✊ உங்கள் இதயம் தாறுமாறாக  துடிக்கிறது..

👆 நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது.

🙌 இப்போது நீங்கள் செய்ய வேண்டியது: "தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக 😲 இரும்ப வேண்டும்,

👌 ஒவ்வொரு முறை இரும்புவதர்க்கு முன்னரும் 👃 மூச்சை இழுத்து விட வேண்டும்,

👉 இருமல் மிக  ஆழமானதாக இருக்க வேண்டும்,

💚 இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையில அல்லது 🏃 வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ
ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இரும்பிக்கொண்டே இருக்க வேண்டும்.

👆 மூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு  ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது,

👆 இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும்,👉👈
இதனால் ரத்த ஓட்டம் சீரடையும்.

👆 இரும்புவதால் ஏற்படும் அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும்"..

👇 பின்னர் இருதயம் சீரடைந்ததும்,  அருகில் உள்ள 🏥 மருத்துவமனைக்கு செல்லலாம்..

👆 இந்த தகவலை 📝 குறைந்தது உங்களின் பத்து நண்பர்களுக்காவது பகிருங்கள்.
-----------------------
படித்ததில் பிடித்தவற்றை உங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன்

அன்புடன்
வாத்தியார்
===================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

24.2.16

எதிர்ப்பை எப்படி எதிர்கொள்வது?


எதிர்ப்பை எப்படி எதிர்கொள்வது?

ஒரு சமயம் ஸ்ரீகிருஷ்ணர், அவரது சகோதரர் பலராமர், அர்ஜுனன் இம்மூவரும் ஒரு அடர்ந்த வனத்தின் வழியாகச் சென்ற னர். இரவாகி விட்டது. மூவரும் ஒரிடத்தில் தங்கிவிட்டு விடிந்ததும் செல்லலாம் என்று எண்ணினர்.

வனத்தில் துஷ்ட மிருகங்கள் இருக்கும் என்பதால் மூவரும் ஒரு சேரத் தூங்கக்கூடாது என்றும், ஜாமத்திற்கு ஒருவராகத் காவல் இருக்க வேண்டும் என்றும் முடிவு செய்தனர்.

அதன்படி ஸ்ரீகிருஷ்ணரும், பலராமரும் தூங்கச்செல்ல, அர்ஜுனன் காவல் இருந்தான்.அப்போது திடீரென புகை மண்டலம் சூழ்ந்தது.

அதிலிருந்து ஒரு பயங்கர உருவம் வெளிப்பட்டது. அகன்ற நாசியும், தூக்கிய பற்களும், முட்டைக் கண்களுமாக இருந்தது அவ்வுருவம்.

மரத்தடியில் இருவர் தூங்குவதையும், ஒருவன் காவல் இருப்பதையும் கண்ட அவ்வுருவம் தூங்கும் இருவரின் அருகில் சென்றது. அதைக்கண்ட அர்ஜுனன் கோபத்துடன் அதைத் தடுத்தான்.

அப்போது அவ்வுருவம் அவ்விருவரையும் தான் கொல்லப் போவதாகவும் அதற்கு அர்ஜுனன் துணை செய்ய வேண்டும் என்றும் கேட்டது.

அதைக்கேட்டு கோபம் மிகக்கொண்டு அவ்வுருவத்தைத் தாக்கினான்.

அர்ஜுனனின் கோபம் அதிகமாக அதிகமாக அவ்வுருவத்தில் பலமும் அதன் வடிவமும் பெருகியது.

அர்ஜுனன் ஆக்ரோஷத்தோடு அதனுடன் போரிட அது பூதாகாரமாய் விளங்கியது. அர்ஜுனனை பலமாகத் தாக்கிவிட்டு மறைந்தது.

இரண்டாம் ஜாமம் தொடங்கவும் பலராமரை எழுப்பிவிட்டு அர்ஜூனன் தூங்கச் சென்றான்.பலராமர் காவல் இருந்தார்.

அப்போது மீண்டும் அவ்வுருவம் அங்கு தோன்றி அர்ஜுனனிடம் கூறியதுபோல பலராமரிடமும் கூறியது. அதைக்கேட்டு கோபம் கொண்ட பலராமர் அதனுடன் சண்டையிட்டார்.

அவ்வுருவம் அடிபணிவதாய் இல்லை.

பலராமரின் கோபம் அதிகமாக அதிகமாக அவ்வுருவத்தின் பலமும் அதன் வடிவமும் பெரிதானது.பின் பலராமரையும் பலமாகத் தாக்கிவிட்டு அவ்வுருவம் மறைந்துவிட்டது.

மூன்றாம் ஜாமம் தொடங்கவும் பலராமர் கிருஷ்ணரை காவலுக்கு எழுப்பிவிட்டு படுக்கச் சென்றார். அப்போதும் அப்பொல்லாத உருவம் தோன்றியது.

அதைப்பார்த்த கிருஷ்ணர் கடகடவெனச் சிரித்தார். ஏன் சிரிக்கிறாய்? என்றது அவ்வுருவம்.

உனது தூக்கிய பற்களும், அழகான முட்டைக் கண்களையும் கண்டுதான், என்றார் சிரிப்பை அடக்க முடியாமல். அவர் தன்னைக் கேலி செய்வதைக் கண்டு ஆக்ரோஷத்துடன் அது சண்டை போட்டது.

கிருஷ்ணரோ புன்னகையை மாற்றாமலே, சண்டை போட்டார்.

கிருஷ்ணர் சிரிக்கச் சிரிக்க அவ்வுருவத்தின் பலமும் அதன் வடிவமும் குறைந்துகொண்டே வந்தது.

கடைசியில் அவ்வுருவம் சின்னஞ்சிறு புழுவாக மாறி தரையில் நெளிந்தது.

ஸ்ரீகிருஷ்ணர் அப்புழுவை எடுத்து ஒரு துணியில் முடிந்து வைத்தார். பொழுது விடிந்தது. பலராமரும், அர்ஜுனனும் எழுந்தனர்.

இருவரும் இரவில் ஒரு பயங்கர உருவம் வந்ததும், அவர்களைத் தாக்கியதும் அவ்வுருவம் வளர்ந்து வளர்ந்து பெரிதாகியது பற்றியும் பேசினர்.

அப்போது கிருஷ்ணர் துணியில் முடிந்திருந்த புழுவைக் காட்டி, நீங்கள் இருவரும் சண்டை போட்ட உருவம் இதுதான்.

நீங்கள் அதனுடன் சண்டை போடும் போது கடுமையாகக் கோபப்பட்டீர்கள். உங்கள் கோபம் அதிகரிக்க அதிகரிக்க அதன் பலமும் வடிவமும் அதிகரித்தது.

நான் சிரித்துக்கொண்டே சண்டை போட்டதால் இதன் பலமும் வடிவமும் குறைந்து கொண்டே வந்து புழுவாக மாறிவிட்டது.

வம்பு சண்டைக்கு வருபவனை விட்டு புன்னகையோடு வெளியேறி விட்டால், அவன் புழுவுக்கு சமமாகி விடுவான்.

கோபத்தைக் குறைப்பவனே ஞானி, என்றார்

=============================================================
2
மின் கட்டணம் கணக்கிடும் முறை நாம் தெரிந்து கொள்ளவேண்டிய ஓன்று !!

வீட்டு இணைப்புகளுக்கானது:-

முதல் நிலை:-

1-100 யூனிட் வரை ரூபாய் 1.00, நிலைக்கட்டணம் இல்லை.
(நீங்கள் 100 யூனிட்டுக்குள் எவ்வளவு உபயோகித்தாலும்
ஒரு யூனிட்டுக்கு ஒரு ரூபாய் மட்டும் தான். கூடுதலாக
எந்த கட்டணமும் இல்லை.)

இரண்டாம் நிலை:-

1-200 யூனிட் வரை ரூபாய் 1.50. நிலைக்கட்டணம் ரூபாய் 20.00.
 (நீங்கள் 100 யூனிட்டுக்கு மேல் உபயோகிக்கும்
சமயம் இந்த இரண்டாம் நிலைக்கு வந்துவிடுவீர்கள்.
நீங்கள் 110 யூனிட் உபயோகித்தால் உங்களுக்கான
தொகை 165.00 + நிலைக்கட்டணம் ரூ.20.00 ஆகமொத்தம்
ரூபாய் 185.00 செலுத்தவேண்டும்.)

மூன்றாம் நிலை:-

1-200 யூனிட் வரை ரூபாய் 2.00.
201-500 யூனிட் வரை ரூபாய் 3.00.
நிலைக்கட்டணம் ரூபாய் 30.00. (நீங்கள் 200 யூனிட்டுக்கு மேல்
உபயோகிக்கும் சமயம் இந்த மூன்றாம் நிலைக்கு வந்துவிடுவீர்கள்.
நீங்கள் 210 யூனிட் உபயோகித்தால் உங்களுக்கான தொகை 200 யூனிட்
வரை 400.00+ 10 யூனிட்டுக்கு 3.00 வீதம் 30.00+ கூடுதல் கட்டணம் ரூ,30.00 ஆகமொத்தம்  ரூபாய் 460.00 செலுத்தவேண்டும்.)

நான்காம் நிலை:-

1-200 யூனிட் வரை ரூபாய் 3.00.
201-500 யூனிட் வரை ரூபாய் 4.00.
500 க்கு மேல் ரூபாய் 5.75
நிலைக்கட்டணம் ரூபாய் 40.00

(நீங்கள் 500 யூனிட்டுக்கு மேல் உபயோகிக்கும் சமயம்
இந்த நான்காம் நிலைக்கு வந்துவிடுவீர்கள். நீங்கள் 510 யூனிட் உபயோகித்தால் முதல் 200 யூனிட்டுக்கு 600.00+ அடுத்த 300 யூனிட்டுக்கு 4 ரூபாய் வீதம் 1200.00+ 10
யூனிட்டுக்கு 5.75 வீதம் ரூபாய் 57.50+கூடுதல் கட்டணம் ரூபாய் 40.00 ஆகமொத்தம் ரூ.1898.00 நீங்கள்
செலுத்தவேண்டும்)

அனைவரும் அறிய பகிருங்கள் நண்பர்களே..BY TNEB
============================================
அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

23.2.16

மகிழ்ச்சி என்பது எங்கே இருக்கிறது?


மகிழ்ச்சி என்பது எங்கே இருக்கிறது?

செல்வந்தர் ஒருவர் வசதிகள் பல இருந்தும் மன அமைதி இன்றி தவித்து வந்தார்.

அப்போது அந்த ஊருக்கு ஒரு துறவி வந்திருப்பதை கேள்விப்பட்டு அவரை சந்தித்து தன் மனக் குறையைச் சொன்னார். அந்த துறவி, “ நாளை
காலை பத்து லட்ச ரூபாய் பணத்துடன் என்னை வந்து பார். உன் பிரச்சனையைத் தீர்த்து வைக்கிறேன்.” என்று கூறுகிறார்.

மறு நாள் பத்து லட்ச ரூபாயுடன் அந்த துறவியை பணக்காரர் சந்தித்தார். பணத்தை முனிவரிடம் கொடுத்துவிட்டு அவர் முன் அமர்ந்தார்.

பணக்கார்ரை அந்த முனிவர் கண்மூடி அமருமாறு கூறிவிட்டு
பணப்பையுடன் அங்கிருந்து ஓடுகிறார். பணக்காரர் போலிச்
சாமியாரிடம் பணத்தை  கொடுத்து ஏமாந்து விட்டோம் என்று எண்ணி
மனம் துடித்துப் போனார். அந்த பணக்காரர் அந்த முனிவரைத்
துரத்தினார். முனிவரை பிடிக்க  முடியவில்லை.

இரண்டு, மூன்று தெருக்களில் ஓடி அலைந்து விட்டு வேறு வழி
தெரியாமல் வெறுங்கையுடன் திரும்பினார். நொந்து போன மனதுடன்
அந்த முனிவர் முதலில் உட்கார்ந்திருந்த இடத்திற்கே திரும்பி வந்தார்.

அங்கு அவருக்கு ஒரு அதிசயம் காத்திருந்தது. அவரை ஏமாற்றி விட்டு
ஓடிய அந்த முனிவர், அவருக்கு முன்னால் அங்கே திரும்பி வந்து
உட்கார்ந்திருந்தார். பணக்காரர் அங்கே போனதும் அவரது பணப்பையை அவரிடம் திரும்ப ஒப்படைத்தார். இப்போது பணக்காரருக்கு மிகுந்த
மகிழ்ச்சி ஏற்பட்ட்து. நிம்மதிப் பெருமூச்சு அவரிடம் இருந்து வந்தது.

இப்போது முனிவர் பணக்காரரிடம் கேள்வி கேட்கிறார்; “இந்தப் பணத்தை
நீ என்னிடம் தருவதற்கு முன்னால் அது உன்னிடம் தான் இருந்தது.
இப்போதும் அந்தப் பணம் உன்னிடம் தான் இருக்கிறது. இதே பணம்
முதலில் உன்னிடம் இருக்கும்போது நீ மன நிம்மதி இல்லாமல் இருந்தாய்.

இப்போதும் அதே பணம் தான் உன்னிடம் இருக்கிறது. ஆனால் நீ மன மகிழ்ச்சியோடு இருக்கிறாய். உன்னுடைய இந்த மன மகிழ்ச்சிக்கு
இந்தப் பணம் தான் காரணமென்றால், இந்தப் பணம் முதலில் உன்னிடம் இருக்கும்போதே இந்த மகிழ்ச்சியும் இருந்திருக்க வேண்டும். ஆனால்
அப்படி இருந்திருக்கவில்லை. இந்த மன மகிழ்ச்சி ஏற்கனவே உனக்குள்
தான் எங்கேயோ இருந்திருக்க வேண்டும். உனக்குள்ளே இருந்த மன
மகிழ்ச்சி ஏன்  இவ்வளவு நேரமும் தெரியாமல் இருந்தது” என்று கேட்டார்.

அப்போது தான் மகிழ்ச்சி என்பது பொருளில் இல்லை. நம் அகத்தில் இருக்கிறது என்பதை அவர் புரிந்து கொண்டார்

(நேற்று மகாமகம். முடிந்தவர்கள் கும்பகோணம் சென்று வந்திருப்பீர்கள். அவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். நேற்று மகாமகத்தை முன்னிட்டு
வகுப்பறைக்கு விடுமுறை. அதை அறிவிக்க முடியாமல் பிராட்பாண்ட் அலைவரிசை படுத்தி விட்டது. அதற்காக வருந்துகிறேன்)

அன்புடன்,
வாத்தியார்
-------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
 வளர்க நலமுடன்!

19.2.16

Astrology: நீங்களும் உங்கள் ஜாதகமும்!


Astrology: நீங்களும் உங்கள் ஜாதகமும்!

             அதுஇருந்தா இதுஇல்லே
                   இதுஇருந்தா அதுஇல்லே
              அதுவும்இதுவும் சேர்ந்திருந்தா
                  அவனுக்கிங்கே இடமில்லே!
                                  - கவியரசர் கண்ணதாசன்
--------------------------------------------------------------------------------------------------------------------------
ஜோதிடம் தெரிந்தோ அல்லது தெரியாமலோ கவியரசர் எழுதிய இந்த வரிகள்தான் ஜோதிடத்தின் முதல் பாடம்.

ஒரு மனிதக்கு அல்லது மங்கைக்கு எல்லா பாக்கியங்களுமிருக்காது! அப்படியிருந்தால் ஆயுள் பாவம் அடிபட்டிருக்கும். சின்ன வயசிலோ
அல்லது மத்திம வயசிலோ (32 to 50) போய்ச் சேர்ந்துவிடுவான்.

ஆகவே நமக்கு எல்லா பாக்கியங்களும் கிடைக்காது!

எங்கே சொத்து இருக்கிறதோ அங்கே சுகம் (நிம்மதி) இருக்காது; எங்கே சொத்து இல்லையோ அங்கே பிரச்சினை இருக்காது!

எங்கே ஹெல்த் (Health) இருக்கிறதோ அங்கே வெல்த் இருக்காது:
எங்கே வெல்த் (Wealth) இருக்கிறதோ அங்கே ஹெல்த் இருக்காது!

ஒரு கை வண்டி இழுக்கும் தொழிலாளி பத்து ஜிலேபி கொடுத்தாலும்
ஒரு வெட்டு வெட்டுவான்: பெரிய செல்வந்தரால் இரண்டு ஜிலேபிகளைச்
சேர்ந்தாற்போல விரும்பி உண்ண முடியாது.

இரத்த அழுத்தம் (Blood Pressure), சர்க்கரை (Sugar, Diabetic), உப்பு,
கசப்பு என்று எந்த நோயும் கைவண்டிக்காரனுக்கு இருக்காது.

இறைவனின் படைப்பு அப்படி!

உங்களுக்கு ஒன்று இல்லையென்றால், வேறு ஒன்று இருக்கும். இல்லாததற்குக் கவலைப் படாமல், இருப்பதற்குச் சந்தோஷப்படுங்கள்

அதற்கு உதாரணம்:  ஆடு, மாடு, மான் போன்றவற்றிற்குக் கொம்பைக் கொடுத்த இறைவன், குதிரைக்குக் கொம்பைக் கொடுக்கவில்லை!

கொடுத்திருந்தால் என்ன ஆகும்? யோசித்துப் பாருங்கள்!

இதைக் கேட்ட நண்பர் ஒருவர் சொன்னார், "கழுதைக்கும் கூடத்தான் கொம்பில்லை!"

நான் சொன்னேன், "கழுதையின் பலம் அதன் கால்களிலே உள்ளது. உதை வாங்கிப் பார் தெரியும்!"

பலம், பலவீனம் இரண்டும் கலந்துதான் இருக்கும்.

இரவு பகலைப் போல, இன்பம்,துன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை!

9 கிரகங்கள், 12 ராசிகள் என்று ஜாதகங்களும், அவற்றின் அமைப்பும், அதானால் கிடைக்கும் பலன்களும் விதம் விதமாக இருந்தாலும், மொத்த
மதிப்பெண், உலகில் அத்தனை பேர்களுக்கும் 337 தான். அஷ்டகவர்க்கக் கட்டத்தில் உள்ள எண்களைக் கூட்டிப் பாருங்கள் தெரியவரும்.

நரேந்திர மோடிக்கும் 337 தான். அவருடைய P.A விற்கும் 337 தான்
முகேஷ் அம்பானிக்கும் 337 தான். அவருடைய வாகன ஓட்டிக்கும் 337 தான்.

முகேஷ் அம்பானியின் பெண்ட்லி காரை ஓட்டி அனுபவிப்பவன்
அவருடைய வாகன ஓட்டிதான்!

பிரதமர் அலுவலகத்தில் உள்ள எல்லா வசதிகளையும் அனுபவிப்பவன் பிதமருடைய P.A தான்!

இந்த இருவருக்குமே மரண பயம், தீவிரவாதிகளின் தாக்குதல் பயம்
எதுவும் இருக்காது. வேலை முடிந்தால் ஹாயாகத் தெருவில் தனியாக
நடந்து
தங்கள் வீட்டிற்குப் போக அவர்களால் முடியும்.

ஆனால் அவர்களின் Boss களால் அப்படி செய்ய முடியாது.

பிரபலங்களுக்கு லக்கினம், ஒன்பது, பத்து, பதினொன்றாம் வீடுகள்
நன்றாக இருக்கும் அவர்களுடைய உதவியாளர்களுக்கு  நான்காம்
வீடும் நன்றாக இருக்கும்.

உங்களைவிடத் தாழ்ந்தவர்கள் யாருமில்லை;
உங்களைவிட உயர்ந்தவர்கள் யாருமில்லை!
அனைவரும் சமம்!
அதை மனதில் வையுங்கள்!
-------------------------------------------------
ஜோதிட விதிகளளைப் படிக்கும் போது, நமது மனம், அதன் படி நமது ஜாதகத்திலும் இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள முனையும்.
ஒவ்வொரு முறையும் ஜாதகத்தைக் கையில் அல்லது பையில்
வைத்துக் கொண்டு கிடைக்கும் செய்திகளுடன் ஒப்பிட்டுப் பார்க்க
முடியாது.

ஆகவே முதலில் உங்கள் ஜாதகத்தை நீங்கள் மனப்பாடம் செய்து
வையுங்கள். எப்படி மனப்பாடம் செய்ய வேண்டு மென்றால்,
தூக்கத்தில் எழுப்பிக் கேட்டால் கூட நீங்கள் தயக்கமின்றிப் பதில்
சொல்ல வேண்டும்

உடனே அதைச் செய்யுங்கள்.

லக்கினத்தின் பெயர், ராசியின் பெயர், நட்சத்திரம், ஒன்பது கிரகங்களும் உங்கள் ஜாதகத்தில் உட்கார்ந்து இருக்கும் ராசியின் பெயர், அது
லக்கினத்தில் இருந்து எண்ணிக்கையில் என்ன இடம்? அவன் எதற்குக்
காரகன் என்னும் அடிப்படை விஷயங்களை அடக்கி உங்கள் ஜாதகத்தை
நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். மனதில் ஆணித் தரமாகப் பதிவு
செய்து வைத்திருக்க வேண்டும்.

எனக்கு என் உறவினர்கள் பலருடைய ஜாதகங்கள் மனப்பாடம். நீங்கள் அட்லீஸ்ட் உங்கள் ஜாதகத்தையாவது  மனப்பாடம் செய்து வையுங்கள்.
மூன்று நாட்களுக்குள் நீங்கள் அதைச் செய்ய வேண்டும்!

செய்வீர்களா? முடியும் என்று நம்பிக்கை உள்ளவர்கள் பதில் சொல்லுங்கள்!

இது 5 ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலை வகுப்பில் பதிவிட்ட பழைய பாடம். இப்போது நிறைய புதியவர்கள் வந்துள்ளதால் அனைவரும் தெரிந்து

கொள்ளட்டும் என்று இங்கே பதிவிட்டுள்ளேன்.

என்ன சரிதானே?

அன்புடன்
வாத்தியார்
====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

18.2.16

உங்கள் கனவு நனவாகப்போகிறது!


உங்கள் கனவு நனவாகப்போகிறது!

என்ன என்கிறீர்களா? கீழே உள்ள நாளிதழ் செய்தியைப் படியுங்கள்

அன்புடன்
வாத்தியார்
---------------------------

படத்தின் மீது கர்சரை வைத்து அழுத்தினால் படம் பெரிதாகத் தெரியும். படிப்பதற்கு வசதியாக இருக்கும்
செய்தி: நன்றி தினமலர் 18-2-2016
===============================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

17.2.16

ஒவ்வொரு மனிதனும் அதிகமாக நேசிக்கக்கூடியது எது?

ஒவ்வொரு மனிதனும் அதிகமாக நேசிக்கக்கூடியது எது?

அர்த்தமுள்ள இந்து மதம் பதிவு ஒன்றில் கவியரசர் கண்ணதாசன் அவர்கள் எழுதியது!

தெய்வத்தை அணுகும் முறை

உலகத்திலேயே மனிதன் அதிகமாக நேசிக்கக் கூடியது அமைதியும், நிம்மதியுமே.

பணம் வரலாம்; போகலாம். பல தாரங்களை மணந்து கொள்ளலாம்; வீடு வாங்கலாம்; விற்கலாம்; நிலம் வாங்கலாம்; சொத்தைப் பெருக்கலாம்; எல்லாம் இருந்தும் கூட நிம்மதி இல்லை என்றால் அவன் வாழ்ந்து என்ன பயன்?

சேர்க்கின்ற சொத்து நிம்மதிக்காக.
கட்டுகிற மனைவி நிம்மதிக்காகவே.
தேடுகின்ற வீடும், நிலமும் நிம்மதிக்காக.
எப்போது அவன் நிம்மதியை நாடுகிறானோ, அப்போது அவனுக்கு அவஸ்தை வந்து சேருகிறது.

ஆரம்பத்தில் மனிதன் விரும்பியோ விரும்பாமலோ பல சிக்கல்களைத் தானே உண்டாக்கிக் கொள்கிறான்.
தானே கிணறு வெட்டுகிறான்; அதில் தானே விழுகிறான்.
தானே தொழில் தொடங்குகிறான்; தவியாய்த் தவிக்கிறான்.
தானே காதலிக்கிறான்; அதற்காக உருகுகிறான்.
தானே ஒரு பெண்ணை விரும்பிக் கல்யாணம் செய்து கொள்கிறான்; பிறகு இது பெண்ணா?, பேயா? என்று துடியாய்த் துடிக்கிறான்.
எந்தக் கோணத்தில் நின்று பார்த்தாலும் மனித வாழ்க்கை துன்பகரமாகவே காட்சியளிக்கிறது.

ஆகவேதான், மனிதன் ஏதாவது ஒரு புகலிடத்தை நாடுகிறான்.
தனக்கு அடைக்கலம் கொடுக்கக் கூடியவர்கள் யாராவது இருக்கிறார்களா? என்று தேடுகிறான்.
மனிதர்களோ அவதூறு பேசுகிறார்கள்; கேலி செய்கிறார்கள்.
ஆகவே, அவன் தெய்வத்தைச் சரணடைகிறான்.

அந்தத் தெய்வம் அவன் குறையைக் கேட் கிறதோ இல்லையோ, காட்சியிலேயே நிம்மதியைத் தருகிறது.
இந்தத் தெய்வ பக்தியில் மிக முக்கியமானது அணுகும் முறை.
எல்லோரையும் போல கோவிலுக்குப் போனோம்; ஒரு தேங்காய் உடைத்தோம்; இரண்டு பழங்களை வாங்கிச் சென்றோம் என்பதில் லாபமில்லை.
கோவிலில் பாடப்படும் `கோரஸ்’ அல்லது கோஷ்டி கானத்தில் பெரும் பயனடைவதில்லை.

ஏழை ஒருவன் வள்ளல் வீட்டுப் படிக்கட்டுகளில் நம்பிக்கையோடு ஏறுவது போல், இறைவனை அணுக வேண்டும்.
இறைவனை ஒரு உன்னதமான இடத்தில் வைத்து, அடிமையைப் போல் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
அவனைத் தோழனாகவே பாவிக்கலாம்.
தனியறையில் உட்கார்ந்து கொண்டு, ஒரு தெய்வப் பிரதிமையின் முன்னால் குறைகளைச் சொல்லி அழுவதில் பயனிருக்கிறது.

எங்கள் கிராமங்களில் ஒரு காரியம் நடக்குமா நடக்காதா என்பதற்குப் பூக்கட்டி வைத்துப் பார்ப்பார்கள். வெற்றிலைப் பாக்கு வைத்துக் கேட்பார்கள்.

சாமி அனுமதித்தால் மட்டுமே அந்தக் காரியத்தைச் செய்வார்கள்.

எல்லாவற்றிற்குமே தெய்வத்தை நம்பி, அதன் மூலம் அவர்கள் நிம்மதி அடைந்திருக்கிறார்கள்.

`திருவுளம்’ கேட்பது என்பது கிராமங்களில் இருக்கும் ஒருமுறை. `நான் மேற்கொண்ட காரியம் நடக்கும் என்றால் பல்லி சொல்ல வேண்டும்’ என்று
வேண்டிக் கொள்வார்கள்.கோவிலின் ஏதாவது ஒரு பகுதியில் பல்லி சொன்னால், இறைவனின் திருவுளம் இரங்கி விட்டதென மகிழ்வார்கள். அது
சொல்லவில்லை என்றால், அந்தக் காரியத்தில் ஈடுபடமாட்டார்கள்.

மனிதனின் மிகவும் குறைந்த பட்சத் தேவை நிம்மதி. அதைத் தெய்வத்திடம் இருந்து பெற்றுக் கொள்பவனுக்குப் பெயர் தான் இந்து.

தெய்வத்தை அணுகுவதில் திறமையுள்ளவர்கள் தங்கள் காரியங்களைக் கண் முன்னாலேயே சாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
`முருகா முருகா’ என்று எல்லோரும்தான் கூவுகிறோம்; சிலருக்கு மட்டும் தொட்டதெல்லாம் பலிக்கிறதே, ஏன்?
அவர்கள் தெய்வத்தை அணுகத் தெரிந்து கொண்டு விட்டார்கள் என்பதே, அதன் பொருள்.

கொல்கத்தா காளி கோவிலைப் பற்றி ஒரு கதை சொல்வார்கள்.
ஒரு ஏழை உழைப்பாளி. அந்தக் கோவில் வாசலில் போய்ப் படுத்துக் கொள்வானாம். காலையில் கண் விழிக்கும் போது சந்நிதானத்தில் தான் கண்
விழிப்பானாம். காளிதேவியிடம் வேண்டிக் கொண்டுதான் தொழிலுக்குப் புறப்படுவானாம். எப்படியும் அன்றைக்குப் பத்து ரூபாய் சம்பாதித்து
விடுவானாம். என்றைக்கு அவன் ஞாபக மறதியாகச் சந்நிதானத்தைப் பார்த்துக் கண் விழிக்காமல் தெருவைப் பார்த்து விழிக்கிறானோ, அன்றைக்கு
அவன் வாழ்க்கையில் சிரமம் ஏற்படுமாம்.

இதை எப்படிச் சொல்கிறார்கள் என்றால், `இன்றைக்கு இவனுக்கு லாபமில்லாத நாள் என்று தெரிந்து, ஈஸ்வரியே அவனை வேறு பக்கம்
விழிக்க வைக்கிறாள்’ என்கிறார்கள். இதுதான் உண்மை என்று நான் நம்புகிறேன். எனக்கும் இதில் ஒரு அனுபவம் உண்டு.

நான்கு ஆண்டுகளுக்கு முன் நான் என் கவிதா ஹோட்டல், தேவர் திருமண மண்டபத்தில் உட்கார்ந்திருந்த போது ஒரு கேரளத்து நண்பர் என்னைப்
பார்க்க வந்தார். வந்தவர் ஒரு சிறிய குருவாயூரப்பன் புகைப்படத்தைக் கொடுத்து விட்டுப் போனார்.

அதை நான் என் சட்டைப் பையிலே வைத்திருந்தேன்.
காலையில் சட்டை மாற்றும்போது எதை வைக்க மறந்தாலும், அந்தப் படத்தை வைக்க மறக்கமாட்டேன்.
அது `பெதடின்’ பழக்கத்தை விட்டு விட்ட நேரம். உடம்பிலே சில எதிரொலிகள் ஏற்பட்டு அடங்கிவிட்டன.
குருவாயூரப்பன் படம் வந்ததில் இருந்து உடம்பு மிக நன்றாக இருந்தது.
காலை குளித்துப் பலகாரம் சாப்பிட்டு விட்டு `இன்சுலின்’ போட்டுக் கொண்டால், மதியம் வரையிலே சுறுசுறுப்பாக இருக்கும்.
மதியம் நல்ல கீரையோடு சாப்பாடு சாப்பிட்டு விட்டுப் படுத்தால், மாத்திரை இல்லாமலே தூக்கம் வரும்.
சாயங்காலம் எழுந்து குளித்தால், உலகமே புதிதாகத் தோன்றும். உடனே மண்டபத்துக்கு வந்து மாலைப் பத்திரிகைகள் அனைத்தும் படித்து
முடிப்பேன். ஏதாவது எழுதுவேன். உடம்பு அவ்வளவு நன்றாக இருந்தது.

அப்போது எனக்கு மலேசியாவில் இருந்து அழைப்பு வந்தது. `உடம்பு தான் நன்றாக இருக்கிறதே, போய் வரலாம்’ என்று முடிவு கட்டினேன்.
புறப்படுவதற்கு முதல் நாள் இரவு நான் நீர் சாப்பிடும் கண்ணாடித் தம்பளர் விழுந்து உடைந்தது. என்னுடைய கைக்கடிகாரம் கழன்று விழுந்தது. `என்ன
துர்ச்சகுணங்களோ’ என்று எண்ணியபடி விட்டு விட்டேன்.

மறுநாள் காலை பத்தரை மணிக்கு விமானம். காலை இட்லி கொஞ்சம் அதிகமாகவே சாப்பிட்டு விட்டேன்.
`அதிகமாகச் சாப்பிட்டு விட்டோம்’ என்று நானே எண்ணிக் கொண்டு, `இன்சுலின்’ மருந்தை வழக்கத்துக்கு விரோதமாக அதிகம் போட்டுக் கொண்டு
விட்டேன். சற்று மயக்கமாக இருந்தது.

விமான தளத்துக்குப் போகும் போது பையைத் தடவிப் பார்த்தேன். குருவாயூரப்பன் படத்தைக் காணவில்லை. பழைய சட்டையில் தேடிப் பார்க்கச் சொன்னேன். அதிலும் இல்லை.

விமான நிலையத்துக்கு வந்த போது ஆட்களையே அடையாளம் தெரியாத நிலை ஏற்பட்டு விட்டது. என் குழந்தைகள், பேரன், பேத்திகளெல்லாம்
விமான நிலையத்துக்கு வந்திருந்தார்கள். யாரோடு பேசுகிறோம் என்ன பேசுகிறோம் என்பதே எனக்குப் புரியவில்லை. என்னோடு கனரா பாங்க்

நண்பர்களும் விமானத்தில் வந்தார்கள்.விமானத்தில் இனிப்பு வாங்கிச் சாப்பிட்டேன்; குடித்துப் பார்த்தேன்; மயக்கம் மயக்கம் தான்.

இது நடந்தது 1975 செப்டம்பர் 28ஆம் தேதி.

மலேசியாவில் நான் போய்க் கோலாலம்பூரில் இறங்கி அங்கிருந்து
250 மைல் தூரத்திலுள்ள சித்தியவான் என்ற ஊருக்குப் போய்விட்டேன்.
அந்தச் சித்தியவான் நகரில் எனக்கு ஒரு அற்புதமான நண்பர் உண்டு. அவர் சிவகங்கைப் பகுதியைச் சேர்ந்தவர். கிருஷ்ணன் என்று பெயர்.
கோலாலம்பூர் கூட்டங்களுக்குத் தப்பி, ஓய்வுக்காக நான் அங்கே சென்றேன்.

அங்கிருந்து மூன்றாவது மைலில் ஒரு கடற்கரை உண்டு. அதன் கரையில் ஒரு சிற்றூர் உண்டு. அதன் பெயர் `லுமுட்’. அங்கே ஒரு தென்னந்தோப்பில்
அழகான ஒரு காட்டேஜில் நான் தங்கி இருந்தேன். சரியாக மூன்றாவது நாள் அங்கிருந்து நான் சித்தியவான் நகருக்கு வந்தபோது,

தமிழர்களெல்லாம் சென்னை வானொலியைச் சிரமப்பட்டுத் திருப்பிக் கொண்டிருந்தார்கள்.

நான் கிருஷ்ணன் வீட்டுப் படியேறிப் போகும் சமயம், அங்கிருந்த கிருஷ்ணனின் குமாரர், `ஐயா, காமராஜ் இறந்து விட்டார்’ என்றார்.
மறுநாள் மதியம், சென்னையில் இருந்து எனக்கு டிரங்க் கால் வந்தது, `அதே அக்டோபர் இரண்டாம் தேதியில் என் உடன் பிறந்த சகோதரியும்
இறந்து விட்டதாக!’

நான் சென்னை வரமுடியவில்லை. மலேசியப் பயணத்தை ஒரு நாள்கூட ரசிக்க முடியவில்லை. ஒரே ரத்தக் கொதிப்பு; சர்க்கரைக் குறைவு; மயக்கம்;
மயக்கம்; மயக்கம்!

இந்த நிலையிலும், `நான் இந்தோனேஷியாவுக்கு வந்தேயாக வேண்டும்’ என்று வற்புறுத்தினார்கள். பினாங்கில் புறப்படும் விமானம் இருபது
நிமிஷத்தில் சுமத்திரா தீவுக்குப் போய் விடுகிறது.

நான் அங்கிருந்து கோலாலம்பூர் திரும்பியதும், சென்னையில் இருந்து டிரங்க்கால் வந்தது. என் சகோதரரை ஆஸ்பத்திரியில் சேர்த்திருப்பதாக.
உடனே நான் தங்கியிருந்த பசிபிக் ஹோட்டல் டிராவல் ஏஜெண்டிடம் டிக்கெட்டைக் கொடுத்து ஏர் இந்தியாவில் உறுதி செய்யச் சொன்னேன். அவர்
உறுதி செய்து விட்டார். ஆனால், என்னிடம் டிக்கெட்டைக் கொடுக்கவில்லை.

மறுநாள் ஞாயிற்றுக் கிழமை. காலை எட்டரை மணிக்கு விமானம். டிராவல் ஏஜெண்ட் வரவில்லை.

என்னை அழைத்துப் போயிருந்த துணை பப்ளிக் பிராஸிக்யூட்டர் நண்பர் சம்பந்தமூர்த்தி, விமான நிலையத்திலேயே டாலர் கட்டி எனக்கு டிக்கெட்
வாங்கிக் கொடுத்தார்.

எத்தனை துயரங்கள்! எத்தனை சோதனைகள்!

`இவற்றுக்கெல்லாம் நாம் ஏன் காரணமாக இருக்க வேண்டும்?’ என்று தானே, குருவாயூரப்பன் காணாமல் போனான்! விதி தவறாக இருக்குமானால்,
தெய்வம் கண்ணை மூடிக் கொள்ளும். அதற்காக அழுது பயனில்லை.

தெய்வத்தை அணுகும் முறையில் இருந்தே பல விஷயங்களை நாம் முன் கூட்டித் தெரிந்து கொள்ளலாம்.

தெய்வ நம்பிக்கை உள்ளவனுக்கு சகுனத் தடை ஏற்பட்டால், அதைத் தெய்வத்தின் கட்டளை என்றும், நமது கர்மா என்றும் கொள்ள
வேண்டும்.தடைதான் ஏற்படுமே தவிர, பெரும் கொடுமைகள் நிகழமாட்டா.

மலேஷியாவில் இருந்து திரும்பிய பிறகும் என் உடல்நிலை சரியாக இல்லை. உடம்பு இளைத்துக் கொண்டே வந்தது. முப்பது பவுண்டு இளைத்து
விட்டேன். இப்போது பார்க்கும் டாக்டர்கள் எல்லாம், இதுதான் சரியான எடை என்கிறார்கள். இதுவும் நான் விரும்பி நடந்ததல்ல.

பகவான் சில காலங்களில் சில காரியம் நடக்கும் என்று நிர்ணயிக்கிறான்; நம்முடைய பிரக்ஞை இல்லாமலே அவை நடந்து விடுகின்றன.
தெய்வத்தை அணுகினால் பலன்கிடைக்கும் என்பதற்காகக் கண்ட கோவிலுக்கெல்லாம் ஓடிக் கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை.
ஒரு தெய்வத்தை உளமாரப் பற்ற வேண்டும். பெரும்பாலும் சக்தி வணக்கம் உதவி செய்யக் கூடியது. புவனேஸ்வரி, ராஜ ராஜேஸ்வரி,
அகிலாண்டேஸ்வரி, கற்பகாம்பாள், மீனாட்சி, காமாட்சி, விசாலாட்சி எல்லாமே சக்தியின் பிம்பங்களாக இருப்பதால், சக்தி உபாசனை பலன் தரும்.

ஆண் தெய்வங்களில் அவரவர் விருப்பப்படி சிவ தத்துவத்தையோ, விஷ்ணு தத்துவத்தையோ ஏற்றுக் கொள்ளலாம்.
இரவில் படுக்கப் போகும் போது தூங்குவதற்கு முன் கடைசியாகச் சொல்லும் வார்த்தை, தெய்வத்தின் பெயராக இருக்க வேண்டும்.
அதன் பிறகும் யாருடனாவது பேச வேண்டி வந்தால் மீண்டும் தெய்வத்தின் பெயரைச் சொல்லி விட்டுத் தூங்க வேண்டும்.

சின்னப்பாத் தேவர் யாரைக் கண்டாலும், `வணக்கம் முருகா’ என்பார்.
எம்.ஜி.ஆர். யாரைக் கண்டாலும், `வணக்கம் ஆண்டவனே’ என்பார்.
ஐயப்ப பக்தர்கள், `சாமி சரணம்’ என்பார்கள்.

தெய்வத்தை நாம் நடு வீட்டில் நிற்க வைத்தால், அது உள் வீட்டிலேயே வந்து உட்கார்ந்து கொள்ளும்.

நன்றி கெட்டவன் மனிதன்; நன்றியுள்ளது தெய்வம்.

படித்ததில் பிடித்தது!
எனக்கு நண்பர் ஒருவர் அனுப்பியது.

அன்புடன், 
வாத்தியார்
======================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

16.2.16

எப்போது போராட்டங்கள் சுவாரசியமாகவும், சுவையாகவும் இருக்கும்?


எப்போது போராட்டங்கள் சுவாரசியமாகவும், சுவையாகவும் இருக்கும்?

சுவரைத் தட்டுங்கள், கதவு திறக்கும்

இருள் சூழ்ந்த இரவில், விளக்குகள் இல்லாத பொழுதில், தட்டுத் தடுமாறி, நண்பன் வீட்டுக்கு வந்த ஒருவன், வாசல் எங்கு என்று தெரியாமல் சுவரைத் தட்டினான். அது வாசலில்லை என்று தெரிந்ததும், சுவரைத் தட்டிக்கொண்டே நடந்தான், ஒரு வழியாய் வாசல் வந்தது. தட்டியவுடன் கதவு திறந்தது.

சுவரைத் தட்டுங்கள் கதவு திறக்கும்.
நண்பர்களே, என்னவொரு கவித்துவமான தலைப்பு, பார்த்தீர்களா.
   
நல்லவரை கெட்டவர் என்று கணக்கிட்டோ, கெட்டவரை நல்லவர் என்று மதிப்பிட்டோ, மற்றவர்கள் ஏமாந்து போகலாம். நம்மை மதிப்பிடுவதில் நாம் ஒரு நாளும் ஏமாந்து போகக் கூடாது.

வாழ்க்கை என்னும் தேர்வில், உங்களுக்குத் தரப்படுகிற, வினாத் தாளில், ஒரே ஒரு கேள்விதான் இருக்கிறது .....

நீங்கள் நல்லவரா? கெட்டவரா?

உங்கள் பயணத்தின் ஒரே துணை நீங்கள்தான். வருபவர்கள் எல்லோரும் துணை செய்தாலும், செய்யாவிட்டாலும், பயணம் உங்களுடையது.

 அவரை மலைபோல் நம்பினேன் கை கழுவி விட்டார். இவரை ஏகத்துக்கும் எதிர்பார்த்தேன், ஏமாற்றி விட்டார் என்ற வெற்றுப் புலம்பல்கள், தன்னிரக்கத்தைத் தவிர எதையும் தராது.

 உங்கள் பாதையில் உதவியவர்களுக்கு, மிகுந்த நன்றியுடன் இருங்கள். ஆனால் உதவாதவர்கள் பற்றிய சலிப்பை வளர்த்துக் கொள்ளாதீர்கள்.

உங்கள் பாதை. உங்கள் பயணம். உங்கள் இலக்கு. உங்கள் திட்டம். உலகம் உதவினால் மகிழ்ச்சி. இல்லையென்றாலும் முயற்சி எனத் தொடர்ந்தால் வளர்ச்சி.

 இருக்கும் நேரத்தில், இயன்ற உயரங்களை எட்ட முயல்வதே புத்திசாலித்தனம். அதற்கு வேண்டியது, மலையளவு மன உறுதி.
 உங்களை நீங்களே நம்புங்கள், இன்னும் தொடர்ந்து செல்லுங்கள்.

உங்கள் பயணத்தின் ஒரே துணை ............ நீங்கள்தான்.

உங்களை வீழ்த்த விரும்புகிறவர்கள், உங்கள் பலவீனம் என்னவென்று பார்க்கிறார்கள். அதைக் கண்டறிந்ததும், உங்களைக் காட்டிக் கொடுக்கவோ, போட்டுக் கொடுக்கவோ தயாராகிறார்கள்.

உங்களைத் தள்ளிவிட, அவர்கள் செய்த அதிரடி வேலைதான், உங்கள்
தகுதிக் குறைவை, உங்களுக்கே உணர்த்தி இருக்கும். அதைத் திருத்திக் கொள்ளவும் வழி படைக்கும்.

 உங்கள் பலவீனங்களை அறிந்து, பலங்களை உணர்ந்து, இன்னும் வலிவடைய உதவியவரை, வெறுத்து விடாதீர்கள். அதே நேரம், அவரை உங்கள் நண்பராகவும் ஆக்கிக் கொள்ளாதீர்கள்.

உலகமே உங்கள் பலங்களைப் பாராட்டும் போது, உங்கள் பலவீனங்களைச் சுட்டிக் காட்ட, அவர் அதே நிலையில், உங்கள் வாழ்க்கை முழுவதும் வேண்டும்.

காட்டிக் கொடுத்தவரைக் காப்பாற்றுங்கள்.........

பழகியவர்கள் எதிர்க்கும்போது, பதட்டம் வருவது இயற்கை. ஆனால் அந்தப் பதட்டம்தான் நம்மை வீழ்த்துமே தவிர, அவர்களின் பகைமை நம்மை வீழ்த்தாது.

 நண்பனே பகைவனானால் கூட, நம்மை வீழ்த்தும் வல்லமை அவனுக்கு இல்லை.

 எனவே கும்பிட்ட கைகள், குழி வெட்ட வந்தால், புன்னகையோடு பொறுத்திருங்கள். அவர்கள் வெட்டிய குழியில், உங்கள் அடுத்த வெற்றிக்கான விதைகளைப் போடுங்கள்.

கும்பிட்ட கைகளே, குழி வெட்ட வந்தால் .......

 சாமார்த்தியம் உள்ள மனிதர்கள், சதுரங்க விளையாட்டில் அமரும்போது, பார்ப்பவர்களுக்கும் பரபரப்பு, விளையாடுபவர்களுக்கும் விறுவிறுப்பு.

 வாழ்க்கை கூட, ஒவ்வொரு விடியலிலும், உங்களை விளையாட அழைக்கின்றது.

  அந்த அழைப்பை விளையாட்டாய் எதிர்கொள்ளாமல், விருப்பமுடன் எதிர் கொண்டால், வாழ்வின் சுவாரசியத்தை சுவைத்தவர் ஆவீர்கள்.

களம் எத்தனை கடிதாய் இருந்தாலும், கையில் இருக்கும் கருவியை, கையாளத் தெரிந்தவனுக்கு கவலையில்லை.

 வாழ்க்கை முன் வைக்கும் ஒவ்வொரு பேராட்டங்களும், உங்களை, முன்னைவிட, இன்னும் வலிமையாய் செதுக்கித்தரப் போகிறது.

 பேராட்டங்களை, விரும்பி எதிர் கொள்ளுங்கள். அவை சுகமானவை.
சுவாரசியமானவை!
-------------------------------------------------------
2

மருத்துவர் சொல்லி  அல்லது வீட்டிலுள்ள பெரியவர்கள் சொல்லி தினமும் கீரை சாப்பிடுகிறீர்களா? அப்ப்டியானால் கீழே உள்ள வீடியோ கிளிப்பிங் உங்களுக்காகத்தான். அவசியம் பாருங்கள்

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------

============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

15.2.16

தேவையில்லாததை வாங்கினால் என்ன ஆகும்?


தேவையில்லாததை வாங்கினால் என்ன ஆகும்?

உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான "வாரன் பஃபெட்" நமக்கு கூறும் அறிவுரை!
*
1. ஒரு சம்பாத்தியம் மட்டும் போதாது. இரண்டாவது வருமானம் வரும் வகையில் ஏதாவது ஏற்பாடு செய்து கொள்.
*
(ஒன்று நஷ்டமானாலும், மற்றொன்று நம்மை காப்பாற்றும்.)
*
2. தேவையில்லாத பொருள்களை வாங்கினால், விரைவிலேயே தேவையுள்ள அனைத்தையும் விற்க நேரிடும்.
*
(ஆடம்பரத்தை தவிர்த்திடுங்கள். தேவையில்லாத ஆடம்பரம் நமது சந்ததியை தெருவில் நிறுத்திவிடும்.)
*
3.சேமித்த பிறகு இருக்கும் மீதத்தை தான் செலவு செய்ய வேண்டும். செலவு செய்த பிறகு இருக்கும் மீதத்தை சேமிக்கக்கூடாது.
*
(சேமிப்பு என்பது மிக மிக முக்கியமானது.)
*
4. ஆற்றின் ஆழத்தை இரண்டு கால்களாலும் அளவிடக்கூடாது....
*
(எதிலும் முன்னெச்சரிக்கை அவசியம்.)
*
5. அனைத்து முட்டைகளையும் ஒரே கூடையில் வைக்காதே...
*
(நஷ்டம் ஏற்பட்டாலும், வாழ்க்கையை இழக்கும் அளவிற்கு இருக்ககூடாது என்பதற்கான சிந்தனை.)
*
6. நேர்மை ஒரு விலை மதிப்பற்றது. அது அனைவரிடமும் இருக்கும் என்று எதிர்பார்க்காதீர்கள்....
*
(மிக அவசியமான ஒன்று. எல்லோரையும் முழுமையாக நம்பிவிடக்கூடாது.)

அன்புடன்
வாத்தியார்
==========================================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

13.2.16

வழிபாடுகளில்தான் எத்தனை விதங்கள்!வழிபாடுகளில்தான் எத்தனை விதங்கள்!

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!இந்து மதத்தின் பெருமை!!!!!!

வேறு எந்த மதத்திலும் இல்லாத ஒரு பெருமை ஹிந்து மதக் கடவுளுக்கு உண்டு . ஏனெனில் கடவுளை எல்லா விதமாகவும் வழிபடும் தன்மை ஹிந்து மதத்தில் மட்டும் தான்.
..
1. தாயாக = அம்மன்
2. தந்தையாக = சிவன்
3. நண்பனாக = பிள்ளையார், கிருஷ்ணன்
4. குருவாக = தட்சிணாமூர்த்தி
5. படிப்பாக = சரஸ்வதி
6. செல்வமகளாக = லக்ஷ்மி
7. செல்வமகனாக = குபேரன்
8. மழையாக = வருணன்
9. நெருப்பாக = அக்னி
10. அறிவாக = குமரன்
11. ஒரு வழிகாட்டியாக = பார்த்தசாரதி
12. உயிர் மூச்சாக = வாயு
13. காதலாக = மன்மதன்
14. மருத்துவனாக = தன்வந்திரி
15. வீரத்திற்கு = மலைமகள்
16. ஆய கலைக்கு = மயன்
17. கோபத்திற்கு = திரிபுரம் எரித்த சிவன்
18. ஊர்க்காவலுக்கு = ஐயனார்
19. வீட்டு காவலுக்கு = பைரவர்
20. வீட்டு பாலுக்கு = காமதேனு
21. கற்புக்கு = சீதை
22. நன் நடத்தைகளுக்கு = ராமன்
23. பக்திக்கு = அனுமன்
24. குறைகளை கொட்ட = வெங்கடாசலபதி
25. நன் சகோதரனுக்கு = லக்ஷ்மணன், கும்பகர்ணன்
26. வீட்டிற்கு = வாஸ்த்து புருஷன்
27. மொழிக்கு = முருகன்
28. கூப்பிட்ட குரலுக்கு = ஆதி மூலமான சக்கரத்தாழ்வார், மாயக் கிருஷ்ணன்
29. தர்மத்திற்கு = கர்ணன்
30. போர்ப்படைகளுக்கு = வீரபாகு
31. பரதத்திற்கு = நடராசன்
32. தாய்மைக்கு = அம்பிகை
33. அன்னத்திற்கு = அன்ன பூரணி
34. மரணத்திற்கு = யமன்
35. பாவ கணக்கிற்கு = சித்திர குப்தன்
36. பிறப்பிற்கு = பிரம்மன்
37. சுகப் பிரசவத்திற்கு = கர்ப்ப ரட்சாம்பிகை

இன்னும் நிறையாக உள்ளது பெருமைப் பட்டுக் கொள்வோம் !!!!
--------------------------------------------
அன்புடன்
வாத்தியார்
===============================================

12.2.16

சனீஷ்வரனின் போர்டிங் பாஸ்!


சனீஷ்வரனின் போர்டிங் பாஸ்! 

(பயணத்தின் போது விமானத்தில் ஏறுவதற்கான அனுமதிச் சீட்டு)

எனது உடல் நலம் பற்றி பல மாணவக் கண்மணிகள் அன்புடன் கேட்கின்றார்கள். பலர் மின்னஞ்சல் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

அனைவருக்கும் விளக்கம் சொல்லும் விதமாக இந்தப் பதிவு.

உடல் நலம் அவ்வப்போது பாதிப்பிற்கு உள்ளாகிறது. புதன் திசையில்
புத்தி நாதன் கேது  அந்தத் திருப்பணியைத் துவக்கி வைத்தான். அவன்
துவக்கி வைத்து. ஆண்டுகள் மூன்றாகி விட்டன. இன்னும் முடிந்த
பாடாக இல்லை. பழைய தியாகராஜ பாகவதர் படம் போல ஏராளமான
பாடல்களுடன் நீண்டு கொண்டே போகின்றது..நீரழிவு நோய்.
டயாபெட்டிக்ஸ், சர்க்கரை வியாதி. அதுதான் பிள்ளையார் சுழியாக அமைந்தது.அது  மற்ற நோய்களையும் கூட்டிக்கொண்டு வருகிறது
கடந்த 3 மாதங்களாக அந்தப் பிரச்சினை சற்று அதிகரித்துள்ளது. அதன் பாதிப்பில்தான் கிட்னி ஸ்டோன். அறுவை சிகிச்சை. ஐந்து நாட்கள் மருத்துவமனை வாசம் இத்யாதிகள்.

பழநியப்பன் அருளாலும், மருத்துவர்கள் கொடுக்கும் மருந்து மாத்திரைகளாலும் அவ்வப்போது சரியாகிக் கொண்டிருக்கிறது. 3 ஆண்டுகளுக்கு முன்பு  மாத செலவாக 500 ரூபாய்களுக்கு
மாத்திரைகளை வாங்கிக் கொண்டிருந்த நிலையில் இப்போது அதீத முன்னேற்றம். இப்போது மாதம் 4,000  ரூபாய்களுக்கு மருந்துகளை
வாங்கிக் கொண்டிருக்கிறேன். காலையில் பத்து மாத்திரைகள். இரவில் படுக்கப் போகும் முன்பு 8 மாத்திரைகள்.

நான் மகர ராசிக்காரன். குரு பகவான் 8ல் இருந்து கொண்டு அவ்வப்போது கண்களை மூடிக்கொண்டு விடுகிறார். வரும் குரு பெயர்ச்சிக்குப் பிறகு
அவர் கண்னைத் திறப்பார். நிலைமை சீராகும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளேன்.

அடியவனுக்கு நண்பர்களாகிவிட்ட மருந்துகள்:
1. Glycomet 1 gram
2. Hupride (Bepride 4 mg)
3. Zita Plus - 20mg
4. Hopace 5 mg (excellent medicine for BP)
5. Amtas - 5 mg
6. Aquazide - 2.5 mg
7. Zincovit - Syrub
8  Niftran 100 mg capsules
9. Fosirol Trometarol powder 8 gm
10. Becasules - Vitamin

ஒரு அன்பர் நீங்கள் செய்யும் ஜோதிட சேவைக்கு நலம் பெற்று இன்னும் 100 ஆண்டுகள் வாழ வேண்டும் என்று  சொல்லியுள்ளார். அப்படி
ஆசைப்படுவது பேராசை ஆகிவிடாதா? எனக்கு அந்த ஆசை எல்லாம் இல்லை. ஆயுள்காரகன் சனீஷ்வரன் என்றைக்கு, எக்கணத்தில் போர்டிங்
பாஸ் கொடுக்கிறாரோ - அக்கணமே புறப்பட்டுச் செல்ல வேண்டியதுதான்

அதுவரை பழநிஅப்பன் துணை இருப்பான்
---------------------------------------------------------
நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு - அதை
நமக்காக நம் கையால் செய்வது நன்று

ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை - என்றும்
அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை
பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம் - அதில்
பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாபம்

நாளைப் பொழுது என்றும் நமக்கென வாழ்க - அதை
நடத்த ஒருவன் உண்டு கோவிலில் காண்க
வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க - எந்த
வேதனையும் மாறும் மேகத்தைப் போல
- கவியரசர் கண்ணதாசன் (படம்: அபூர்வ ராகங்கள்)
---------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்
----------------------------
அடிக்குறிப்பு:
இந்த மாதம் முதல் தேதியில் இருந்து இன்றுவரை சுமார் 11 நாட்களில்
வந்த பின்னூட்டங்கள் அனைத்திற்கும் இன்று பதில் எழுதியுள்ளேன்
படித்துப்பாருங்கள். தாமதத்திற்குக் காரணம் உடல் நலமின்மை!
ஆகவே பொறுதருள வேண்டுகிறேன்.
அன்புடன்
வாத்தியார்
12-2-2016
அதிகாலை 3.56 மணி
-------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

11.2.16

நீங்கள் உபயோகிக்கும் சமையல் எண்ணைய் பற்றி சில முக்கிய செய்திகள்!


நீங்கள் உபயோகிக்கும் சமையல் எண்ணைய் பற்றி சில முக்கிய செய்திகள்!

நீங்கள் உபயோகிக்கும் சமையல் எண்ணைய் பற்றி சில முக்கிய செய்திகள்! காணொளி வடிவில் உள்ளது. அனைவரும் பத்து மணித்துளிகள் ஒதுக்கி அதை அவசியம் பாருங்கள்

அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------

Our sincere thanks to the person who uploaded this video clipping on the net
============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

10.2.16

நவக்கிரக பரிகாரக் கோயில்களில் எப்படி வழிபடுவது..?


படத்தின் மீது கர்சரை வைத்து அழுத்தினால் 
படம் பெரிதாகத் தெரியும். 
பார்ப்பதற்கு வசதியாக இருக்கும்
-----------------------------------------------------------------------
நவக்கிரக பரிகாரக் கோயில்களில் எப்படி வழிபடுவது..?

1.சூரியன்; 
 சூரியனார்  கோவில்;
இங்கு வந்து  முதலில்  நவக்கிரகங்களுக்கு அருள்  புரிந்த  திருமங்கலங்குடி  ஸ்ரீ பிராண  நாதேஸ்வரரை  வழிபட்டு   பின்பு  சூரியனார்  கோவில்  சென்று   கருவறையில்  சூரிய  சக்கரம்  பிரதிஷ்டை  செய்யப்பட்டுள்ளது.  சூரியனை  வழிபடுவதாலும்  இங்குள்ள  நவக்கிரகங்கள்  வழிபடுவதாலும்  அனைத்து  தோஷங்களும்  நீங்கப்  பெறுவர்.  ஞாயிறு  வழிபாடு  சிறப்பு.
வழித் தடம்; கும்பகோணம்-  மயிலாடுதுறை  சாலையில்  ஆடுதுறையிலிருந்து  2 கி.மீ.   தூரத்தில் உள்ளது.
திருவலஞ்சுழி;
தஞ்சாவூர்  அருகிலுள்ள  திருவலஞ்சுழியில்   உள்ள  சுபர்தீஸ்வரர்  கோவிலில்   சூரியன்,  சனி  ஆகிய  இரண்டு  கிரகங்களும்  நேருக்கு நேர்  உள்ளன என்பது  குறிப்பிடத்தக்கது.   இங்கு  இருவரும்  நட்பு  நிலையில்  இருப்பதாக  சொல்கிறார்கள்   சூரியன்  மற்றும்  சனி   பகவானால்  ஜாதகத்தில்   தோஷம்  உள்ளவர்கள்  இத்திருக்கோவில்  சென்று  அர்ச்சனை  செய்தால்  தோஷம்   நிவர்த்தியாகும்.
சூரக்குடி;
சூரியனுக்கு  சாபம்  நீக்கி  அருள்  தந்த  சுந்தரேசர்  சன்னதி.  சூரிய,  சனி  தோஷங்களை  நீக்கும்  ஸ்தலம்.
வழித் தடம்; குன்றக்குடி  கிழக்கே 12 கி.மீ.  தொலைவில்  உள்ளது.

2. சந்திரன்; 
திங்களுர்;
தாய்க்குப்பீடை  நோய்,  மன நிலை  பாதிப்பு,  சந்திரன் ஜாதகத்தில்  நீசம்,  மறைவு,  பாப  கிரக  சேர்க்கை  உள்ளவர்  இங்குள்ள   கைலாச  நாதர்  கோவிலில்  உள்ள   சந்திரனை  வழிபடுவதால்  தோச  நிவர்த்தியாகும்.
வழித் தடம் ;  கும்பகோணம்-  திருவையாறு  சாலையில்  உள்ளது.

3.செவ்வாய்;
வைத்தீஸ்வரன்  கோவில்;
ஜாதகத்தில்  செவ்வாய்  பாதிப்பு,   திருமணத்தடை,  தொழில்  சிக்கல்,   வீடு,  மனை  வாங்க,  அடிக்கடி  விபத்து  போன்றவை  ஏற்பட்டாலும்,  செவ்வாய்  தெசை  நடைபெறும்   காலங்களிலும்   இங்கு  தனி  சன்னதியில்   உள்ள   செவ்வாய்க்கு  தீபம்  ஏற்றி  தரிசனம்  செய்ய   எத்தகைய  கடுமையான  செவ்வாய்   தோசமும்  நீங்கும்
வழித் தடம்; மயிலாடுதுறையிலிருந்து  14 கி.மீ.  தூரத்தில்  உள்ளது
பழநி-  திருவாவின்குடி;
செவ்வாய்க்கிழமை  மதியம்  உச்சிகால  பூஜையில் முருகனுக்குப்  பால்   அபிசேகம்  செய்து  வழிபட  தோசம்  நீங்கும்.
வழித் தடம்; திண்டுக்கல்லிருந்து   சுமார்  60 கி.மீ.  தூரத்திலுள்ள  பழனியில்  அடிவாரத்திலுள்ள  கோவில்.

4.  புதன்; 
திருவெண்காடு;
குழந்தைகளுக்கு  கல்வியில்  ஆர்வமின்மை,  தடங்கல்கள் ஏற்படும் போது  இங்குள்ள   புதன்  வழிபட்ட  ஸ்ரீ  ஸ்வேதா  ரண்யேஸ்வரரையும்   தரிசித்து  பின்பு  அங்கு  எழுந்தருளியுள்ள  புதனையும்  வழிபட்டால்  தோசங்கள்  நீங்கும்.
வழித் தடம்; மயிலாடுதுறையிலிருந்து    பூம்புகார்  சாலையிலுள்ளது.

5.குரு;  
 ஆலங்குடி;     திருமணத்தடை,  புத்ர  தோஷம்,  குடும்ப ஒற்றுமை  நிம்மதி  குறைவு,  ஜாதகத்தில்  குரு  தோஷம்  உள்ளவர்  வியாழக்கிழமை  இங்குள்ள  குரு  பகவானை  நெய் தீபம்  ஏற்றி,  வழிபடுவது  சிறந்த  பரிகாரமாகும்.
வழித் தடம்; கும்பகோணம்-  மன்னார்குடி  சாலையில்  உள்ளது.
தென்குடி  திட்டை;   அருள் மிகு  வசிஷ்டேஸ்வரர்  திருக்கோயிலில்  சுவாமிக்கும்,  அம்பாளுக்கும்  இடையில்  ராஜ  குருவாக   நின்ற  கோலத்தில்  தனி  சந்நிதியில்   அருள்  பாலித்து   வருகிறார்.  எனவே,  இத்தலமே   குரு  பரிகாரம்  செய்வதற்கு   சிறந்த   தலம்  என்பது  பெரியோர்  கருத்து.
வழித் தடம்;
தஞ்சாவூர்-  திருக்காவூர்  சாலையில்  பள்ளி   அக்ஹாரம்  வழியாக  மெலட்டூர்  செல்லும்   பாதையில்  உள்ளது.
தாருகாபுரம்;
இங்குள்ள   சிவன்  கோவிலில்  உள்ள  தட்சிணாமூர்த்தி  பாதத்தில்   சுற்றிலும்   ஒன்பது  நவகிரகங்கள்   உள்ளன.  இவரை  வழிபட்டால்  குரு   எந்த  ராசிக்கு  மாறினாலும்   நற்பலன்  கிடைக்கும்.
வழித் தடம்; ராஜபாளையம்  அருகிலுள்ள   வாசுதேவ-  நல்லூரிலிருந்து  பேருந்து வசதி  உண்டு.

6.  சுக்கிரன்; 
கஞ்சனூர்;
சுக்கிர  தோஷம்,  பலஹீன,  உள்ளவர்   இங்குள்ள   மூலவர்  சுக்ரீஸ்வரரை   சுக்கிர பகவானாக்  கருதி  வழிபட்டால்  தோஷம்  நீங்கும்.
வழித் தடம் சூரியனார் கோவிலுக்கு  அருகில்  உள்ளது.
திருநாவலூர்;
இங்குள்ள   பார்கவீஸ்வரரை  வழிபட  சுக்கிர   தோஷம்  நீங்கும். சுக்கிர  தெசை   பாதிப்புக்கும்  உரிய  ஸ்தலம்.
வழித் தடம்; விழுப்புரம்-  உளுந்தூர்  பேட்டை  சாலையில்  உள்ளது.

7.  சனி 
திருநள்ளாறு;
ஜாதகப்படி  7 1\2 சனி, அஷ்டம  சனி,  அர்த்தாஷடம் சனி  ஏற்படும்  காலங்களில்   இங்குள்ள  நள  தீர்த்தத்தில்   நீராடி  தர்ப்பாரண்யேஸ்வரரையும்  போக  மார்த்த  அம்மனையும்  வழிபட்ட   பிறகு   சனீஸ்வரர்  சன்னதி  சென்று  எள்  தீபம்  ஏற்றி  வழிபட  தோசம்  நீங்கும்.
வழித் தடம்;
மயிலாடுதுறையிலிருந்து  30 கி.மீ.  தூரத்திலுள்ளது.
குச்சனூர்;
7 1\2  சனி,  அஷ்டம சனி,  அர்த்தாஷடம  சனி ,  கண்டச்சனி  ஆரம்பிக்கும் பொழுது  இங்கு  சுயம்புவாய்  எழுந்தருளியுள்ள  சனீஸ்வர  பகவானை  சனிக்கிழமை   எள் தீபம்  ஏற்றி  வழிபட  வேண்டும்.  சனி  பகவானின்  பிரம்ம  ஹத்தி தோசம்  நீங்கிய  ஸ்தலம்.
வழித் தடம்;
தேனி  மாவட்டம்  சின்னமனூர் அருகில் உள்ளது.
சேந்தமங்கலம்;
சனி  நடைபெறும்  காலங்களிலும்சனி  தெசை, சனி புத்தி  நடைபெறும்   காலங்களிலும்  இங்குள்ள  தத்தகிரி  முருகன்  கோவிலில்  உள்ள  சனீஸ்வரரை   சனிக்கிழமை  வழிபட  வேண்டும்.
வழித் தடம்; சேலம்,  நாமக்கல்  அருகில்  கொல்லிமலை  செல்லும்  வழியில்  12 கி.மீ.  தூரத்தில் உள்ளது.
திருவாதவூர்; சனி  பாதிப்புள்ள்வர்  இங்குள்ள  சனீஸ்வரனை  சனிக்கிழமை  வழிபட  வேண்டும்.  சனி, ஈஸ்வரனைப்  பிடிக்க முயன்று,  கால்  முடமாகி,  கால்  சரியாக   ஈஸ்வரனை  நோக்கி   தவமிருந்த  இடம்.
வழித் தடம்; மதுரை  மேலூர்  சாலையில் உள்ளது.
ஸ்ரீ  வை குண்டம்; மனிதனின்   மன  நிம்மதியை  நிர்ணயிப்பவர்  சனி  பகவான்.  அவரவர்  செய்யும்   வினையைப்  பொறுத்து  நல்லதையும்  கெட்டதையும்  தருவார்.  சனிபகவானின்   அம்சத்துடன்  சிவ பெருமான்  இத்தலத்தில்  காட்சி  தருகிறார்.
 இத்தலத்தில்  சனி  திசையால்  பாதிக்கப்பட்டுள்ளவர்கள்   பரிகாரம்  செய்தால்  தடைபட்ட  திருமணங்கள்  நடக்கும்,  இழந்த  சொத்துக்களை  மீண்டும்  பெறலாம்.
திருநள்ளாறு  சனீஸ்வரன்  திருக்கோவிலுக்கு  ஈடானது  இக்கோவில்
வழித் தடம்; திரு நெல்வேலியிலிருந்து  திருச்செந்தூர்  செல்லும்  சாலையில்  1 கி.மீ.  தூரத்தில்   அமைந்துள்ளது.
திருநாரையூர்;
சனீஸ்வரர்  தனது  இரு  மனைவிகள்  மந்தா  தேவி.  ஜேஷ்டா  தேவி  ஆகியோருடன்  இவ்வாலயத்தில்  அருள்   பாலிக்கிறார்.  மூலவருக்கு   இல்லாத   கொடி மரம்  இங்கே  சனீஸ்வரருக்கு  உண்டு.  பலிபீடமும்,   காகவாகனமும்  கொண்ட்து  சனீஸ்வரரின்  தனிச்சிறப்பு.
தம்பதி  சமேதராய்  மட்டுமல்ல,  இவ்வாலயத்தில்  சனீஸ்வரர்  தனது   இரு  மகன்களுடன்  [குளிகன்,  மாந்தி]  குடும்ப   சமேதராய்  அருள்  புரிகிறார்.
வழித் தடம்; கும்பகோணத்துக்கு  அருகே  நாச்சியார்  கோவிலுக்கு   பக்கத்தில்  திருநாரையூர் உள்ளது.

8. ராகு 
திருநாகேஸ்வரம்;
ராகுவினால்  ஏற்படும்  அனைத்து   தோசங்களினால்   திருமணத்தடை,   புத்ர தோசம்,  மாங்கல்ய  தோசம்  ஏற்படும்..   இங்கு  வெள்ளிக்கிழமை   காலை  10.30 மணி  முதல்   12 மணி,  ஞாயிறு   மாலை  4.30  மணி முதல்  6 மணி  வரை   ராகுவிற்கு   பாலாபிசேகம்,  அர்ச்சனை  செய்து  வழிபட  நாக  தோசம்  நீங்கும்.
வழித் தடம்;கும்பகோணத்திலிருந்து  6 கி.மீ தூரத்தில் உள்ளது.
ஸ்ரீ பெரும் புதூர்;
ஆதிசேஷன்  அவதாரமான  ஸ்ரீ மத் ராமானுஜர்  எழுந்தருளியுள்ள  இத்தலம்  சென்று   நெய்  தீபம்  ஏற்றி,   ஸ்ரீ மத்  ராமானுஜரையும்,  ஸ்ரீ  ஆதி  கேசவப்  பெருமாள்  ஸ்ரீ  யதிராஜ  நாதவல்லித்  தாயாரையும்  திருவாதிரை  நட்சத்திரம்  வரும்  நாளில்  வழிபட   நாக  தோசம்  நீங்கும்.  கால  சர்ப்ப   தோஷம்  பரிகார  தோசம்.
வழித் தடம்; செங்கல்பட்டுக்கு  அருகில் உள்ளது.
கதிராமங்கலம்;
இங்குள்ள வன துர்க்கை  முன் பக்கம் பார்ப்பதற்கு  பெண்  உருவமாகவும் பின்பக்கம்  பார்ப்பதற்கு  நாகம்  படம்  எடுத்த்து  போன்றும்  தோன்றும்.  கம்பர்  வழிபட்ட  ஸ்தலம்.  ராகு,  கேது  தோசம்,  கால  சர்ப்ப  தோசம்  உள்ளவர்  துர்க்கைக்கு  அபிசேகம்  செய்து  வழிபட  கிரக  தோசம்  நீங்கும்.  இத்துர்க்கை  ல்லித   சகஸ்ர  நாமத்தில்  வரும்  வித்யா   வன  துர்க்கையாகும்.
வழித் தடம்; கும்பகோணம்- மயிலாடுதுறை  சாலையில்  குத்தாலத்திலிருந்து  3 கி.மீ.  தூரம்

9.கேது;
திருக்காளத்தி;
பஞ்ச  லிங்கங்களில்  வாயு  லிங்கம்  உள்ள  இடம்.  கண்ணப்பனுக்கு  காட்சி   தந்த   ஸ்தலம்.  இங்குள்ள   காளத்தீஸ்வரருக்கு  ருத்ரா பிசேகம்  செய்து  அர்ச்சனை  செய்ய  கேதுவினால்  ஏற்படும்  தோசம்  நீங்கும்.  கால  சர்ப்ப தோச  பரிகார  ஸ்தலம்.
வழித் தடம்; திருப்பதிக்கும்  சென்னைக்கும்  நடுவில்  உள்ளது.
கீழ்ப்பெரும் பள்ளம்;
இங்குள்ள  நாகநாத சாமி   கோவிலில்  தனி   சன்னதியில் உள்ள  கேதுவை  வழிபட   கேதுவினால்  ஏற்படும்  தோசம்  நீங்கும்.
வழித் தடம்;மயிலாடுதுறை- பூம்புகார்  சாலையில்   பூம்புகாரிலிருந்து  3 கி.மீ.  தூரத்திலுள்ளது.

அன்புடன்
வாத்தியார்
=========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

9.2.16

ஆலய அதிசயங்கள்!


ஆலய அதிசயங்கள்

1. திருவண்ணாமலை சுவாமி எப்போதுமே ராஜகோபுரம் வழியாக வராமல் பக்கத்து வாசல் வழியாகத்தான் வெளியே வருவார்.

2. மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் மொத்தம் 14 கோபுரங்கள் உள்ளன. வேறு எந்த கோவிலிலும் இவ்வளவு அதிகமான கோபுரங்கள் இல்லை.

3. கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோவிலில் தயாராகும் எந்த நைவேத்தியப் பண்டங்களுக்கும் உப்பு சேர்ப்பதில்லை.

4. ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் பெருமாள் கோவில்களில் கொடுப்பதுபோல் தீர்த்தம் கொடுக்கிறார்கள். வேறு எந்த சிவன் கோவிலிலும் இது போன்று தீர்த்தம் கொடுப்பது கிடையாது.

5. மூலவரே வீதிவலம் வருவது, சிதம்பரம் நடராஜர் மட்டுமே.

6. மதுரை அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள பொற்றாமரைக் குளத்தில் மீன்கள் வளராது.

7. கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகிலுள்ள கேரளபுரத்தில் சிவபெருமானுக்கு கோயில் உள்ளது. இங்கு அரச மரத்தடியில் நிறம் மாறும் அதிசய விநாயகர் இருக்கிறார். ஆவணி மாதத்திலிருந்து ஆறு மாதங்கள் வெள்ளை நிறமாகவும், மாசி மாதத்திலிருந்து ஆறு மாதங்கள் கறுப்பாகவும் மாறி விடுகிறார். சந்திர காந்தக் கல்லால் உருவாக்கப்பட்ட இந்தச் சிலைக்கு இப்படி ஒரு சக்தி இருக்கிறது.

8. சிதம்பரம் ஆலயத்தில் ஒரே இடத்தில் நின்றபடி, ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளையும், ஸ்ரீ நடராஜரையும் தரிசிக்கலாம்.

9. சைவர்களுக்குரிய திருவாதிரையும், வைணவர்களுக்குரிய வைகுண்ட ஏகாதசியும் ஒரே மாதத்தில் ஒரே திருக்கோயிலில் நடைபெறுவது சிதம்பரத்தில்.

10. எல்லாத் திருத்தலங்களிலும் பெருமாளின் இடது கையில் தான் சங்கு காணப்பெறும், திருக்கோவிலூரில் மட்டும் வலது கையில் சங்கு வைத்துள்ளார்.

11. இமயமலைச் சாரலில் இருக்கும் திருத்தலங்களில் ஒன்று பத்ரிநாத். மே மாதம் முதல் வாரம் நடைதிறப்பார்கள். நவம்பர் மாதம் முதல் வாரத்தில் மூடுவார்கள். நவம்பரில் கோயிலை மூடும் போது ஒரு தீபம் ஏற்றுவார்கள். அந்த தீபம் மீண்டும் கோயில் திறக்கப்படும்வரை அதாவது, ஆறுமாதம் எரிந்துகொண்டே இருக்கும்.

12. காசியில் பல்லிகள் இருந்தாலும் ஒலிப்பதில்லை.

13. காசி நகரைச் சுற்றி 45 கல் எல்லை வரை கருடன் பறப்பதில்லை.

14. குளித்தலை, மணப்பாறை வழியில் இருப்பது ஐவர் மலை என்ற ரத்தினகிரி மலை உள்ளது. இம்மலை மேல் காகங்கள் பறப்பதில்லை.

15. நவக்கிரகப் பிரதிஷ்டை கோவிலில் வடகிழக்குப் பகுதியில்தான் அமைய வேண்டும் என்று சிற்ப சாஸ்திரம் கூறுகிறது.

16. ஆழ்வார்குறிச்சியில் நடராஜர் சிலை ஒரே கல்லினால் ஆனது. தட்டினால் வெண்கல ஓசை வரும்.

17. சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் உட்கார்ந்த கோலத்தில் மிகப் பெரிய திருமேனி. இவ்வளவு பெரிய ரூபமுள்ள அம்பிகை வேறு எந்த கர்பகிரகத்திலும் இல்லை. இத்திருமேனி சில மூலிகைகளால் ஆக்கப்பட்டது.

18. தேனி மாவட்டம் கம்பம் அருகில் உள்ள சுருளிமலையில் குகையில் விபூதி அள்ள அள்ள வந்து கொண்டே இருக்கும். இந்தக் குகைக்குப் பெயர் திருநீர்குகை. திருநீறு தானாகவே விளையும் மற்ற திருத்தலங்கள், கதிர்காமம், மருதமலை, திருநீற்று மலை, கங்கை கரையில் உள்ள திருவருணை.

19. ரத்னகிரி மலையில் உள்ள முருகனுக்கு அபிஷேகம் செய்யும் பால் சிறிது நேரத்தில் தயிராக மாறும் அதிசயம் நடக்கிறது.

20. சென்னிமலை முருகனுக்கு அபிஷேகம் செய்யும் தயிர் புளிப்பதில்லை.

21.தேனி மாவட்டம் தெப்பம்பட்டியில் உள்ள வேலப்பர் கோவிலில் உள்ள மூலவர் சுயம்பு மூர்த்தி. இந்தக் கோவில் அருகில் உள்ள மாமரத்தின் அடியில் இருந்து ஊற்று நீர் பொங்கி வந்து கொண்டேயிருக்கிறது.

22. அம்மன் சந்நிதி இல்லாத கோயில் காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்.

அன்புடன்,
வாத்தியார்
--------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

8.2.16

தமிழா்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது

தமிழா்கள் அனைவரும்  தெரிந்து கொள்ள வேண்டியது"

1.தமிழ் வருடங்கள்(60)

2.அயணங்கள்(2)

3.ருதுக்கள்(6)

4.மாதங்கள்(12)

5.பக்ஷங்கள்(2)

6.திதிகள்(15)

7.வாரங்கள்(நாள்)(7)

8.நட்சத்திரங்கள்(27)

9.கிரகங்கள்(9)

10.இராசிகள் மற்றும் இராசிஅதிபதிகள்(12)

11.நவரத்தினங்கள்(9)

12.பூதங்கள்(5)

13.மஹா பதகங்கள்(5)

14.பேறுகள்(16)

15.புராணங்கள்(18)

16.இதிகாசங்கள்(3).

இவை அனைத்தையும் ஒவ்வொன்றாக பார்ப்போம்.

"தமிழ் வருடங்கள்"

தமிழ் வருடங்கள் மொத்தம் அறுபது அவை . . .

1.ப்ரபவ 2.விபவ 3.சுக்ல 4.ப்ரமோதூத 5.ப்ரஜோத்பத்தி 6.ஆங்கீரஸ 7.ஸ்ரீமுக 8.பவ 9.யுவ 10.தாது(தாத்ரு) 11.ஈச்வர 12.வெகுதான்ய 13.ப்ரமாதி 14.விக்ரம 15.விஷு 16.சித்ரபானு 17.ஸுபானு 18.தாரண 19.பார்த்திப 20.வ்யய 21.ஸர்வஜித் 22.ஸர்வதாரி 23.விரோதி 24.விக்ருதி 25.கர 26.நந்தன 27.விஜய 28.ஜய 29.மன்மத 30.துன்முகி 31.ஹேவிளம்பி 32.விளம்பி 33.விகாரி 34.சார்வாரி 35.ப்லவ 36.சுபக்ருது 37.சோபக்ருது 38.க்ரோதி 39.விச்வாவஸு 40.பராபவ 41.ப்லவங்க 42.கீலக 43.ஸெளம்ய 44.ஸாதாரண 45.விரோதிக்ருத் 46.பரிதாபி 47.பிரமாதீச 48.ஆனந்த 49.ராக்ஷஸ 50.நள 51.பிங்கள 52.காளயுக்தி 53.ஸித்தார்த்தி 54.ரெளத்ரி 55.துன்மதி 56.துந்துபி 57.ருத்தோத்காரி 58.ரக்தாக்ஷி 59.க்ரோதன 60.அக்ஷய.

"அயணங்கள்"

அயணங்கள் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
1.உத்தராயணம்
(தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உள்ள ஆறு மாத காலம்).
2.தக்ஷிணாயணம்
(ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை உள்ள ஆறு மாத காலம்).
இரண்டு அயணங்கள் சேர்ந்து ஒரு தமிழ் வருடமாகும்.

"ருதுக்கள்"

ருதுக்கள் மொத்தம் ஆறு வகைப்படும்
1.வஸந்தருது
(சித்திரை,வைகாசி)

2.க்ரீஷ்மருது
(ஆனி,ஆடி)

3.வர்ஷருது
(ஆவணி,புரட்டாசி)

4.ஸரத்ருது
(ஐப்பசி,கார்த்திகை)

5.ஹேமந்தருது
(மார்கழி,தை)

6.சிசிரருது
(மாசி,பங்குனி)
இரண்டு தமிழ் மாதங்கள் சேர்ந்தது ஒரு ருது ஆகும்.

"மாதங்கள்"

தமிழ் மாதங்கள் பண்னிரண்டு ஆகும்
1.சித்திரை(மேஷம்)
2.வைகாசி(ரிஷபம்)
3.ஆனி(மிதுனம்)
4.ஆடி(கடகம்) 5.ஆவணி(சிம்மம்)
6.புரட்டாசி(கன்னி) 7.ஐப்பசி(துலாம்)
8.கார்த்திகை(விருச்சிகம்)
9.மார்கழி(தனுர்)
10.தை(மகரம்)
11.மாசி(கும்பம்)
12.பங்குனி(மீனம்).

"பக்ஷங்கள்"

பக்ஷங்கள் இரண்டு வகைப்படும்
1.ஸுக்ல பக்ஷம்
(அமாவசை திதி முதல் சதுர்த்தசி திதி வரை)
2.க்ருஷ்ணபக்ஷம்
(பெளர்ணமி திதி முதல் சதுர்த்தசி திதி வரை)
சுக்ல பக்ஷத்தை பூர்வ பக்ஷம் என்றும் வளர்பிறை என்றும் கூறுவர்.
க்ருஷ்ண பக்ஷத்தை அமர பக்ஷம் என்றும் தேய்பிறை என்றும் கூறுவர்.
இரண்டு பக்ஷங்கள் சேர்ந்தது ஒரு தமிழ் மாதம் ஆகும்.

"திதிக்கள்"

திதிக்கள் மொத்தம் பதினைந்து வகைப்படும்

1.பிரதமை
2.துதியை
3.திருதியை
4.சதுர்த்தி
5.பஞ்சமி
6.ஷஷ்டி
7.சப்தமி
8.அஷ்டமி
9.நவமி
10.தசமி
11.ஏகாதசி
12.துவாதசி 13.திரையோதசி 14.சதுர்த்தசி 15பெளர்ணமி(அ)அமாவாசை.

"வாரங்கள்"

வாரங்கள்(நாழ்) ஏழு ஆகும்

1.ஆதித்யவாஸரம்
2.சோமவாஸரம்
3.மங்களவாஸரம்
4.ஸெளமியவாஸரம்
5.குருவாஸரம்
6.சுக்ரவாஸரம்
7.மந்தவாஸரம்(அ)ஸ்திரவாஸரம்

"நட்சத்திரங்கள்"

நட்சத்திரங்கள் மொத்தம் இறுபத்தி ஏழு ஆகும்.

1.அஸ்வினி 2.பரணி 3.கர்த்திகை 4.ரோகினி 5.மிருகசீரிஷம் 6.திருவாதிரை 7.புனர்பூசம் 8.பூசம் 9.ஆயில்யம் 10.மகம் 11.பூரம் 12.உத்திரம் 13.ஹஸ்த்தம் 14.சித்திரை 15.சுவாதி 16.விசாகம் 17.அனுஷம் 18.கேட்டை 19.மூலம் 20.பூராடம் 21.உத்ராடம் 22.திருவோணம் 23.அவிட்டம் 24.சதயம் 25.பூரட்டாதி 26.உத்திரட்டாதி 27.ரேவதி.

"கிரகங்கள்"

கிரகங்கள் ஒன்பது ஆகும்.

1.சூரியன்(SUN)
2.சந்திரன்(MOON)
3.அங்காரகன்(MARS)
4.புதன்(MERCURY)
5.குரு(JUPITER)
6.சுக்ரன்(VENUS)
7.சனி(SATURN)
8.இராகு(ASCENDING NODE)
9.கேது(DESCENDING NODE)

"இராசிகள் மற்றும் இராசிஅதிபதிகள்"

இராசிகள் பண்ணிரெண்டு ஆகும்
ஒவ்வொரு நட்சத்திரமும் நான்கு பகுதியாக(பாகங்கள்) பிரிக்கப்படும், .. .

நட்சத்திரங்களின் ஒன்பது பகுதிகள்(பாகங்கள்) சேர்ந்த்து ஒரு இராசி ஆகும்.

நட்சத்திரங்கள்
இராசி
இராசிஅதிபதி
அஸ்வினி,பரனி,கர்த்திகை முன் ¼
மேஷம்
செவ்வாய்
கர்த்திகை பின்3/4,ரோகினி,மிருகசீரிஷம் முன்1/2
ரிஷபம்
சுக்கிரன்
மிருகசீரிஷம்பின்1/2,திருவாதிரை,புனர்பூசம்முன்3/4
மிதுனம்
புதன்
புனர்பூசம் பின் ¼,பூசம்,ஆயில்யம்
கடகம்
சந்திரன்
மகம்,பூரம்,உத்திரம் முன் ¼
சிம்மம்
சூரியன்
உத்திரம் பின்3/4,ஹஸ்தம்,சித்திரை முன்1/2
கன்னி
புதன்
சித்திரை பின்1/2,சுவாதி,விசாகம் முன்3/4
துலாம்
சுக்கிரன்
விசாகம் பின்1/4,அனுஷம்,கேட்டை
விருச்சிகம்
செவ்வாய்
மூலம்,பூராடம்,உத்திராடம் முன்1/4
தனுசு
குரு
உத்திராடம்பின்3/4,திருவோணம்,அவிட்டம் முன்1/2
மகரம்
சனி
அவிட்டம் பின்1/2,சதயம்,பூரட்டாதி முன்3/4
கும்பம்
சனி
பூரட்டாதி பின்1/4,உத்திரட்டாதி,ரேவதி
மீனம்
குரு

"நவரத்தினங்கள்"

1.கோமேதகம்
2.நீலம்
3.பவளம்
4.புஷ்பராகம்
5.மரகதம்
6.மாணிக்கம்
7.முத்து
8.வைடூரியம்
9.வைரம்.

"பூதங்கள்"

பூதங்கள் ஐந்து வகைப்படும்
பூதங்கள்
தன்மாத்திரைகள்
 நுண்மூலங்கள்
1.ஆகாயம்-வானம்
சப்தம்
ஓசை
2.வாயு-காற்று
ஸ்பர்ஷம்
தொடு உணர்வு
3.அக்னி-நெருப்பு(தீ)
ரூபம்
ஒளி(பார்த்தல்)
4.ஜலம்-நீர்
ரஸம்
சுவை
5.பிருத்வி-நிலம்
கந்தம்
நாற்றம்(மணம்)

"மஹா பாதகங்கள்"

மஹா பாதகங்கள் ஐந்து வகைப்படும்

1.கொலை
2.பொய்
3.களவு
4.கள் அருந்துதல்
5.குரு நிந்தை.

"பேறுகள்"

பெறுகள் பதினாறு வகைப்படும்

1.புகழ்
2.கல்வி
3.வலிமை
4.வெற்றி
5.நன்மக்கள்
6.பொன்
7.நெல்
8.நல்ஊழ்
9.நுகர்ச்சி
10.அறிவு
11.அழகு
12.பொறுமை
13.இளமை
14.துனிவு
15.நோயின்மை
16.வாழ்நாள்.

"புராணங்கள்"

புராணங்கள் பதினெட்டு வகப்படும்,இவைகளை இயற்றியவர் வேத வியாசர் ஆவார்.

1.பிரம்ம புராணம்
2.பத்ம புராணம்
3.பிரம்மவைவர்த்த புராணம்
4.லிங்க புராணம்
5.விஷ்ணு புராணம்
6.கருட புராணம்
7.அக்னி புராணம்
8.மத்ஸ்ய புராணம்
9.நாரத புராணம்
10.வராக புராணம்
11.வாமன புராணம்
12.கூர்ம புராணம்
13.பாகவத புராணம்
14.ஸ்கந்த புராணம்
15.சிவ புராணம்
16.மார்க்கண்டேய புராணம்
17.பிரம்மாண்ட புராணம்
18.பவிஷ்ய புராணம்.

"இதிகாசங்கள்"

இதிகாசங்கள் முன்று வகைப்படும்.

1.சிவரகசியம் 2.இராமாயணம் 3.மஹாபாரதம்.

இவையாவும் நாம் அவசியமாக தெரிந்து கொள்ள வேண்டியது.

அன்புடன்
வாத்தியார்
==============================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

5.2.16

ஜோதிடம்: மனித முயற்சி என்பதற்குப் பலன் எதுவும் கிடையாதா?ஜோதிடம்: மனித முயற்சி என்பதற்குப் பலன் எதுவும் கிடையாதா?

ஏன் இல்லை? முயற்சிக்குப் பலன் உண்டு.
-------------------------------------------------
அதைத் தெளிவுபடுத்தத்தான் இன்றையப் பாடம்!

இன்று வரவேண்டிய புதிர் பாடம் அடுத்த வாரம் வரும். வாத்தியாரின் உடல்நிலை காரணமாக எழுதிப் பதிவிட முடியவில்லை. ஆகவே 
பொறுத்துக்கொள்ளுங்கள்.

இந்தப் பாடம் அஷ்டகவர்க்க வகுப்பில் வந்த பாடங்களில் ஒன்றுதான். முக்கியமான பாடம் என்பதால் மீள்பதிவாகக் கொடுத்துள்ளேன். முன்பே
படித்தவர்கள், படித்ததுதான் என்று பின்னூட்டம் இடாமல் மீண்டும்
ஒருமுறை படியுங்கள். படித்திராதவர்கள், நன்றாகப் படித்து மனதில் ஏற்றுங்கள்
=================================================
அஷ்டகவர்க்கப்பாடம் எண்.10
முக்கியமான விதிகள் - பகுதி 1

அடிப்படை விதிகள் - பகுதி ஒன்று

பரல்கள் என்றால் என்ன?

அஷ்டகவர்க்கத்தில் மொத்த மதிப்பெண் 337 என்பது அனைவருக்கும் தெரிந்தது. அந்த மதிப்பெண் 12 வீடுகளுக்கும் பொதுவானது என்னும்போது,
337 வகுத்தல் 12 = ஒரு வீட்டின் சராசரி மதிப்பெண் 28 அந்த சராசரி மதிப்பெண்ணிற்கு மேல் இருக்கும் வீடு நல்ல நிலைமையில் உள்ளது என்றாகிவிடும்.

அதேபோல ஒரு கிரகத்தின் தனி மதிப்பெண் எட்டு. சராசரி மதிப்பெண் நான்கு. நான்கிற்கு மேல் மதிப்பெண்களுடன் நிற்கும் கிரகம் வலுவானதாக
இருக்கும். அது தன்னுடைய கோச்சாரத்திலும் (Transit) தசா புக்தியிலும்
நல்ல பலன்களைத் தரும். இல்லையென்றால் தீமையான/சுமாரான
பலன்களே நடைபெறும்.

Timing of events ஐக் கணக்கிடுவதற்கும் இந்த அஷ்டவர்க்கம் பயன்படும்.
தமிழில் இந்த மதிப்பெண்களைப் பரல்கள் என்பார்கள்.

1.  25 பரல்களுக்குக் கீழே உள்ள வீடுகள் நல்லதல்ல. அவற்றிற்குரிய
பலன்கள் சாதகமாக இருக்காது.
2. 30 பரல்கள் உள்ள வீடுகள் நல்ல பலன்களைத் தரும்.
3. 30 பரல்களுக்கு மேலே இருந்தால் மிகச் சிறந்த பலன்களைத் தரும்
4. ஆட்சி, உச்ச பலன்களோடும் அல்லது கேந்திர, திரிகோண அமைப் போடும் ஜாதகத்தில் உள்ள கிரகங்கள்கூட தங்கள் சுய வர்க்கத்தில் குறைந்த
பரல்களோடு இருந்தால் அவைகள் நல்ல பலன்களைத் தராது

உதாரணத்திற்கு ஒரு ஜாதகனுடைய நான்காம் வீட்டில் 30 அல்லது
அதற்கு மேற்பட்ட பரல்கள் இருந்தால் ஜாதகன் நன்றாகப் படிப்பான்.

அதேபோல ஒருவனுடைய ஜாதகத்தில் ஏழாம் வீட்டில் 30ற்கும் மேற்பட்ட பரல்கள் இருந்தால் அவனுக்கு நல்ல மனைவி கிடைப்பாள். உரிய
காலத்தில் திருமணமாகும். பெண்ணாக இருந்தால் நல்ல அன்பான,
அவளைப் போற்றி வைத்துக் கொள்ளக் கூடிய கணவன் கிடைப்பான்.

இப்படி ஒவ்வொருவீட்டின் பலனையும் அதிகமான பரல்களை வைத்துச் சிறப்பாகச் சொல்லிக் கொண்டே போகலாம்.

அதுபோல ஒருவனுடைய லக்கினத்தில் நாற்பது அல்லது அதற்கு
மேற்பட்ட பரல்கள் இருந்தால், ஜாதகன் தலைவனாகி விடுவான்.
அவனுக்குத்  தலைமை தாங்கும் யோகம் தேடி வரும்.

சரி ஒரு இடத்தில் 40 என்னும்போது - அங்கே 12 பரல்கள் கூடிப்போய் விடுவதால் வேறு இடங்களில் அது குறைந்து விடுமல்லவா?
மொத்தம்  337தானே? எங்கே குறைந்து உள்ளது என்று பார்க்க வேண்டும்!

பொதுவாகப் பார்த்தீர்கள் என்றால் தலைமை ஸ்தானத்தில் அதிகம்
பரல்கள் உள்ள தலைவர்களுக்குக் குடும்பஸ்தானத்தில் பரல்கள்
குறைவாக  இருக்கும், அதனால் அவர்கள் தங்கள் குடும்பத்தை மறந்து
விட்டு தேசம், தேசம் என்று நாட்டுக்காகப் பாடு பட்டிருப்பார்கள்.

செய்யும் தொழிலுக்கு (10ஆம் வீட்டிற்கு) 30 பரல்களுக்கு மேல் இருந்தால் சிறப்பு. நல்ல வேலை கிடைக்கும் அல்லது நல்ல தொழில் அமையும்.
ஆனால் 36 ம் அதற்கு மேலும் இருந்தால் செய்யும் வேலையில் ஒரு சபீர் பாட்டியாகவோ, அல்லது நாராயண மூர்த்தியாகவோ அல்லது பில்
கேட்ஸாகவோ உச்சத்தைத் தொட முடியும்!

உங்கள் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும்?

இந்தக் கேள்வியைக் கேட்டால் ஒரே மாதிரியான பதில் சர்வ நிச்சயமாக வராது. ஒவ்வொருவரிடம் இருந்து ஒவ்வொரு மாதிரியான பதில் வரும்.

அன்புமிக்க தாய், அறிவுமிக்க தந்தை, பாசமிக்க சகோதரர்கள்,
சகோதரிகள், பரிவுமிக்க மனைவி, உள்ளத்தைக் கொடுக்கும்
குழந்தைகள், உயிரைக்கூட கொடுக்கும் நண்பர்கள், இவற்றோடு பாரதி
பாடிய காணி நிலம், வற்றாத கேணி, பத்துப்பதினைந்து தென்னை மரங்கள், கத்தும் குயிலோசை, அதோடு...!

என்ன அதோடு? இது போதாதா?

சற்றுப் பொறுங்கள் சொல்லி முடித்துவிடுகிறேன்.

அதோடு இணைப்பாக அசையா சொத்துக்கள், வற்றாத வங்கிக் கணக்கு இருப்பு, பிடித்தமான ஊரில் வசிக்கும் வசதி, போட்டியில்லாத தொழில்,
இன்னோவா, டாட்டா சுமோ அல்லது ஹோண்டா சிட்டி கார்கள், பாரத
ரத்னா வேண்டாம், அட்லீஸ்ட் பத்மபூஷன் பட்டம் கிடைக்கும் கெளரவம்.
 ஒரு வட்டம் அல்லது மாவட்டச் செயலாளர் பதவி, என்று பலரும்
பலவற்றை ஏக்கத்துடன் அல்லது ஆசையுடன் சொல்வார்கள்.

அவ்வளவும் கிடைத்து விடுமா என்ன?

கிடைக்காது!

அதெல்லாம் எப்படிக் கிடைக்கும். அதற்கு உரிய தகுதி நமக்கு இருக்கிறதா என்று பார்க்க வேண்டாமா?

ஆசையிருக்குத் தாசில் பண்ண; அதிர்ஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க'
என்று கிராமங்களில் சொல்வார்கள் 80% மக்களின் வாழ்க்கை அப்படித்தான் இருக்கும்! இருப்பதை வைத்துத் திருப்திப் பட்டுக்கொள்ள வேண்டியதுதான்.

சரி மனித முயற்சி என்பதற்குப் பலன் எதுவும் கிடையாதா?

ஏன் இல்லை? முயற்சிக்குப் பலன் உண்டு.

நீ மாட்டை வைத்துதான் பிழைப்பு நடத்த வேண்டுமென்பதுதான் விதியென்றால் நீ மாட்டை வைத்துத்தான் பிழைப்பை நடத்தியாக
வேண்டும். ஆனால் மாட்டின் எண்ணிக்கையை இறைவன் தீர்மானிப்பதில்லை.

அது உன் கையில்தான் உள்ளது. உன் முயற்சியில்தான் உள்ளது.
4 மாடுகளா அல்லது 40 மாடுகளா என்பது உன் முயற்சியால் நிர்ணயிக்கப்படும்.

ஒரு ஏழைப் பால் வியாபாரி இருந்தான். இரண்டு மாடுகளை வைத்துப்
பால் வியாபாரம் செய்து கொண்டிருந்தான். வருமானம் போதவில்லை.

பற்றாக்குறை. வீட்டில் அவன் மனைவி, பிள்ளைகளைச் சேர்த்து ஐந்து ஜீவன்கள் வீட்டு வாசல் திண்ணையில் கவலையோடு அவன் அமர்ந்திருந்தபோது, அந்த வழியாகச் சென்ற முனிவர் ஒருவர்,
அவனை நோக்கிக் கேட்டார்,

”தம்பி, சற்றுக் களைப்பாக இருக்கிறது, பசியாற ஏதாவது கிடைக்குமா?”

அவன் பதறிவிட்டான். பசியின் கொடுமை அறிந்தவனல்லவா? உடனே திண்ணையை விட்டுக் குதித்துக் கீழே வந்தவன், “அய்யா நல்ல மோர்
இருக்கிறது, தரட்டுமா?” என்று கேட்டான்.

அவர் சம்மதம் சொல்ல, ஒரு செம்பு நிறைய மோரைக் கொண்டு வந்து கொடுத்தான்.

வாங்கி அமைதியாகக் குடித்தார் முனிவர். குடித்தபிறகுதான் அவனை
உற்று நோக்கினார். அவன் முகத்தில் கவலை குடிகொண்டிருந்தது.

தன் ஞானக்கண்ணால் அவனுடைய நிலைமையை முழுதாக உணர்ந்தவர் சொன்னார்:

“நாளை அதிகாலை என்னை வந்துபார். உன் கவலைகளை ஓட்டும்
வழியைச் சொல்லித் தருகிறேன்”

அவன் அவருடைய இருப்பிடத்தை அறிந்து கொண்டு, அடுத்த நாள் உதயத்தில், நம்பிக்கையுடன், அவரைச் சென்று பார்த்தான்.

அவர் அவனுடன் அதிகமாகப் பேசவில்லை. ஆனால் தீர்க்கமாக
ஒன்றைச் சொன்னார் “உன்னிடம் இருக்கும் இரண்டு மாடுகளையும்
ஓட்டிக் கொண்டு  போய் பக்கத்து ஊர்ச் சந்தையில் விற்று விட்டு வந்து,
விற்ற பணத்தை உன் வீட்டில் பத்திரமாக வை.”

அவன் அதிர்ந்து போய் விட்டான்.

மாடுகள் இரண்டையும் விற்று விட்டால் வயிற்றுப் பிழைப்பிற்கு என்ன செய்வது என்று அவரிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளும் முனைப்பில்,
“அய்யா...” என்று இழுத்தான்.

அது தெரியாதா அவருக்கு? கையைக் உயர்த்திக் காட்டியதோடு, சொன்னார், “ சொன்னதைச் செய், மற்றது தானாக நடக்கும், மீண்டும் நீயே வந்து
என்னைப் பார்ப்பாய், இப்போது போ!”

அவன் அவர் சொன்னபடியே செய்தான். இரண்டு மாடுகளும் நல்ல விலைக்குப் போயிற்று. விற்ற பணத்தைக் கொண்டு வந்து, வீட்டுப்
பரணின் மேலிருந்த பானைக்குள் வைத்து மூடினான். பிறகு நன்றாகச் சாப்பிட்டுவிட்டு, பாயைப் போட்டு படுத்து உறங்கிவிட்டான்.

தூக்கம் என்றால் அப்படியொரு தூக்கம்.

மாலை ஆறு மணிக்குத்தான், ”அம்மா...” என்று தன் மாடுகள் கத்தும் ஒலி கேட்டுத் திடுக்கிட்டு எழுந்தவன், ஓடிப்போய் தன் வீட்டிற்குப் பின் புறம்

இருந்த தொழுவத்தில் பார்த்தான். அங்கே அவனுடைய மாடுகள் இரண்டும் நின்று கொண்டிருந்தன. மயக்கம் வராத குறை அவனுக்கு.

அதோடு அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. விற்று விட்டு வந்த மாடுகள் எப்படித் திரும்பி வந்தன?

இருட்டி விட்டதால் வீட்டிலேயே தங்கி விட்டு, அடுத்த நாள் காலையில் ஒட்டமும் நடையுமாகச் சென்று முனிவரைப் பார்த்தான்.

தியானத்தில் இருந்த அவர் இவன் உள்ளே வந்த ஒலி கேட்டு, கண்களைத் திறந்து பார்த்தார். பார்த்தவர் கேட்டார்,” என்ன உன்னுடைய மாடுகள்
இரண்டும் திரும்பி வந்து விட்டனவா?”

அவன் ஆச்சரியத்தின் எல்லைக்கே போய் விட்டான்.

சலனமற்று காட்சியளித்த அவர் சொன்னார்,”நேற்றுச் செய்ததுபோல
இன்றும் செய்; ஒன்றும் கேட்காதே, பிறகு சொல்கிறேன் இப்போது
போய் வா”

வந்த வேகத்திலேயே திரும்பியவன், அவர் சொல்லியபடியே அன்றும் செய்தான். மறுபடியும் கிட்டத்தட்ட அதே அளவு தொகை கிடைத்தது.

வீட்டிற்குக் கொண்டு வந்து, பானைக்குள் போட்டுப் பரணுக்குள் வைத்து
விட்டு, எப்போதும் போல சாப்பிட்டு விட்டுக் கண் அயர்ந்தான்.

நேற்று நடந்தது போலவே இன்றும் நடந்தது. அவன் அதிசயப்படும் விதமாக அவனுடைய இரண்டு மாடுகளும் இன்றும் திரும்பி வந்து தொழுவத்தில்
நின்று கொண்டிருந்தன!

இது தொடர்ந்தது. ஒரு நாள் அல்ல இரு நாள் அல்ல பத்து நாட்கள் தொடர்ந்தது. வழக்கப்படி பதினோறாம் நாள் காலையில் முனிவரைச்
சென்று  பார்த்தான்

அவர் சொன்னார், “இனிமேல் அந்த அதிசயம் தொடராது. உன்னிடம்
இப்போது 20 மாடுகளுக்கான தொகை இருக்கிறது. இன்று சந்தைக்குப்
போ; நல்ல மாடுகளாகக் கிடைக்கும் 20 மாடுகளை வாங்கி வந்து இன்று
முதல் உன் பால் வியாபாரத்தை நல்லபடியாகச் செய்!”

அவன் நெகிழ்ந்து விட்டான். கண்கள் பனிக்கக் கேட்டான், “அய்யா
உங்களுக்கு நான் மிகுந்த நன்றிக் கடன் பட்டவனாக இருப்பேன்.
இதுவரை அந்த அதியசம் எப்படி நடந்தது என்பதைச்சொன்னீர்கள்
என்றால் நான் சற்று மன நிம்மதியோடு போவேன்.”

“உன் தலையெழுத்து மாடுகளை வைத்து பிழைப்பதுதான். ஆனால்
 நீ முயற்சி எதுவும் செய்யாமல், இருப்பதை வைத்து இதுவரை உன் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டு வந்திருக்கிறாய். உனக்கு உதவும்
பொருட்டே, எனது சித்து வேலையால் நான் அப்படிச் செய்தேன்.
எதற்கும் ஒரு அளவு உண்டு. அது தெரிந்து நான் நேற்றோடு நிறுத்தி
விட்டேன். இனிமேல் நான் நினைத்தால்கூட உனக்கு உதவ முடியாது. இறைவனை வேண்டிக்கொள். உன்  பிரச்சினைகள் எல்லாம் தீரும்
அதோடு இனிச் சோம்பியிருக்காமல் முயற்சி செய்து கடுமையாக உழைத்தாய் என்றால் உன் மாடுகளின் எண்ணிக்கை  கூடிய சீக்கிரம்
100 ஆகும், பிறகு 200 ஆகும். போய்ப் பிழைத்துக் கொள்!” என்று முடித்தார்.

கதை அவ்வளவுதான். முயற்சி எப்படி வேலை செய்யும் என்பதற்குத்தான் இந்தக் கதை!

நமக்கும் ஒரு முனிவர் வருவாரா என்று யாரும் காத்துக் கொண்டிருக்க வேண்டாம். இது கலியுகம். முனிவரெல்லாம் வரமாட்டார்.
முனி வேண்டும்  என்றால் வரும்.

முனி என்றால் என்னவா? அதுதான் நட்பு என்ற பெயரில் வரும்
டாஸ்மார்க், சல்பேட்டா பார்ட்டிகள் அதாவது தண்ணியடிக்கும்
ஆசாமிகள்.சரி துவக்கத்திற்கு வருகிறேன். நல்ல வாழ்க்கைக்கு
ஜாதகம் எப்படியிருக்க வேண்டும்?

ஒன்று, ஒன்பது, பத்து, மற்றும் பதினோறாம் வீடுகளில் 30ற்கும்
மேற்பட்ட பரல்கள் இருக்க வேண்டும்.

அதவது First House (Lagna), Ninth House (House of gains), 10th House
(House of Profession) 11th House (House of Profit) ஆகிய நான்கு
இடங்களிலும் 30 பரல்களோ அல்லது 30ற்கு மேற்பட்ட
எண்ணிக்கையில் பரல்கள் இருக்க வேண்டும்.

மற்ற இடங்களெல்லாம் முக்கியமில்லையா? இல்லை!

அப்படியிருந்தால் வாழ்க்கை எப்படியிருக்கும்?

சூப்பராக இருக்கும்!

படிக்கும் வாசகர்கள் யாருக்காவது அப்படியிருக்கிறதா? இருந்தால் சொல்லுங்கள்

எனக்குத் தெரிந்து என்னுடைய உறவினர்கள் இரண்டு பேருக்கு இருக்கிறது. அவர்களது வாழ்க்கையும் சூப்பராக இருக்கிறது. அவர்களுடைய

ஜாதகத்தை நான் பர்த்திருக்கிறேன். அதனால்தான் அடித்துச் சொல்கிறேன்.

சொத்துக்கள் இரண்டு வகைப்படும்; கஷ்டங்களும் இரண்டு வகைப்படும்.

அசையாத சொத்து (Fixed asset) அசையும் சொத்து (Movable asset) என்று சொத்துக்களைப் பிரித்துப் பார்க்கலாம். இடம், வீடு, நிலம், தோட்டம்

எல்லாம் முதல் வகையில் சேரும். நகைகள், பணம், வைப்புநிதிச் சான்றிதழ்கள், பங்குப் பத்திரங்கள் எல்லாம் இரண்டாம் வகையில் சேரும்.

நம்மைப் பெற்ற அன்னையும் அசையும் சொத்துதான். அனால் சொத்துக்களில் எல்லாம் முதன்மையான சொத்து.

அதுபோல கஷ்டங்களும் இரண்டு வகைப்படும். நிரந்தரமான கஷ்டங்கள், தற்காலிகமான கஷ்டங்கள்.

நிரந்தரமான கஷ்டங்கள் எதெது? தற்காலிகமான கஷ்டங்கள் எதெது?

கஷ்டங்களைப் பட்டியலிடுவது கஷ்டமானது. கர்மகாரகன் சனியிடம் என்ன மென்பொருள் இருக்கிறதென்று தெரியவில்லை என்ன சர்வர்
இருக்கிறதென்று தெரியவில்லை இந்தியாவில் உள்ள 120 கோடி ஜனங்களுக்கும் 120 கோடி விதமான கஷ்டங்களைக் கொடுத்திருக்கிறான்.

எப்படி மனித முகம் வேறு படுகிறதோ, எப்படி வலது கை கட்டை விரல் ஆளாளுக்கு வேறு படுகிறதோ, அப்படி கஷ்டங்களும் ஒரே மாதிரி
இருப்பதில்லை.

அதுபோல கஷ்டங்களும் தீர்ந்த பாடில்லை. ஒரு கஷ்டம் போனால்
அடுத்த கஷ்டம் கதவைத் திறந்து கொண்டு வந்து விடுகிறது. கஷ்டம்
என்பதை எளிமைப் படுத்திப் பிரச்சினை என்று கொள்ளலாம்.

சிலருக்குப் பிரச்சினைகள் ஒவ்வொன்றாக வரும். சிலருக்கு ஒட்டு மொத்தமாக வரும். சிலருக்கு க்யூவில் நின்று அடுத்தடுத்து இடைவெளியில்லாமல்  வரும்.

அதனால் பிரச்சினை இல்லாதவர்களே கிடையாது. பிரச்சினைகளே இல்லாதவர் இவரென்று நீங்கள் ஒருவரையாவது காட்டுங்கள் - நான்
இந்தத்  தொடர் எழுதுவதையே நிறுத்தி விடுகிறேன்.

கவியரசர் கண்ணதாசன் சொல்வார்.

”தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே
முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே!”

என்னவொரு அற்புதமான வெளிப்பாடு பாருங்கள். இரண்டே வரிகளில் வாழ்க்கையைப் புரிந்து கொள்ளும்படி சொன்னார் பாருங்கள்.
அதனால்தான்  அவரைக் கவியரசர் என்கின்றோம்.

ஆகவே இங்கே கஷ்டங்கள் என்பதை நான் சற்று Fine Tuning செய்து, கட்டுரைக்கு வசதியான முறையில் உங்கள் அனுமதியுடன்
பிரச்சினைகள்  என்று மாற்றிக்கொள்கிறேன்.

உடல் ஊனம், மன நோய், வறுமை, தீராத பிணி இவைகள் ஜாதகத்தின்
வேறு பகுதியில் பார்க்கப் பட வேண்டியவை ஆகும். ஆகவே அவற்றை
இங்கே நான் எடுத்துக்கொள்ளவில்லை

பொதுவாக உள்ள பிரச்சினைகளை அல்லது கஷ்டங்களை மட்டுமே
நான் இங்கே வகைப் படுத்திப் பேச உள்ளேன்
------------------------------------------------------------------------------------------
1. வளர்கின்ற வயதில், தாய் அல்லது தந்தை இல்லாமல் வளர்வது

2. படிக்கவேண்டிய வயதில் சூழ்நிலை காரணமாக அல்லது சேர்க்கை காரணமாக படிக்க முடியாமல் போய்விடுவது.

3. வேலை கிடைக்க வேண்டிய வயதில் சரியான அல்லது தோதான வேலை கிடைக்காமல் அல்லாடுவது.

4. திருமணமாக வேண்டிய வயதில் ஏதாவதொரு காரணத்தினால் திருமணம் தள்ளிக் கொண்டே போவது.

5. திருமணம் ஆனாலும், அன்பு செலுத்தாத, அரவனைக்காத கணவன், கூட இருந்தும் உதவியாக இல்லாத மாமனார் மாமியார், மற்றும் இன் லாக்கள்.

6. வேலை கிடைத்தாலும் திருப்தியில்லாத வேலை, தகுதிக்கு ஒத்துவராத வேலை, நிறைவில்லாத சம்பளம்.

7. வாடகை வீடு - அதுவும் வீடு ஓரிடம், வேலை ஓரிடம், தினமும் 40 கிலோமீட்டர் தூரம் பயணிக்க வேண்டிய அலுப்பு

8. வாழ்க்கையில் நிலவும் கடுமையான போட்டியின் காரணமாகக் கவலைப்பட்டு, குழந்தைகளைப் படி, படி என்று அனுதினமும் விரட்டிப்
படிக்க  வைக்க வேண்டிய அவதி

9. பருவம் வந்த பெண் குழந்தையாக இருந்தால் அவளை வெளியே அனுப்பும்போது ஏற்படும் பரிதவிப்பு

10. அத்தியாவசியத் தேவைக்குக் கூட செலவு செய்ய முடையாமல் ஏற்பட்டு விடும் கடன் சுமைகள்

இப்படிப் பிரச்சினைகளைப் பட்டியல் இட்டுக்கொண்டே போகலாம்.

ஆகவே ஒன்றை மட்டும் மனதில் வையுங்கள் பிரச்சினை என்பது
உங்களுக்கு மட்டுமில்லை. ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.
பெரும்பாலான  பிரச்சினைகள் பணத்தைச் சார்ந்து இருக்கும்.

“பணம் இருந்தால் போதும் சார்! எல்லாப் பிரச்சினைகளையும் ஒரே
நொடியில் தீர்த்து விடுவேன்!” என்று சிலர் சொல்வதைக் கேட்கலாம்.

அது உண்மையல்ல! பணத்தால் சில பிரச்சினைகளைத் தீர்க்க முடியும். ஆனால் அது உருமாறி வேறு விதத்தில் நம்மிடமே திரும்பவும் வந்து
நிற்கும்.

இன்று பணம் இல்லாதவனை விட, பணக்காரனிடம்தான் அதிகமான பிரச்சினைகள் உள்ளன!

மெத்தையை வாங்கலாம், ஸ்பிளிட் ஏர்கண்டிஷன் இயந்திரத்தை வாங்கலாம் - ஆனால் தூக்கத்தை வாங்க முடியாது. பணம் கொடுத்துப் பசியை வாங்க
முடியாது! பணம் கொடுத்து அரண்மனையை வாங்கலாம். அன்பு செலுத்தும் இல்லாளை வாங்க முடியாது. சொன்னதைக் கேட்கும் குழந்தையை வாங்க

முடியாது. துரோகம் இல்லாத நட்பை வாங்க முடியாது. இப்படி முடியாதது எவ்வளவோ இருக்கின்றன!
-----------------------------------------------------------------------------
சரி, உங்களுக்குப் புரியும் படியாக ஒரே வரியில் சொல்கிறேன்.

பிரச்சினை தீரவே தீராது.

ஒன்றைத் தீர்க்க அடுத்தது வந்து நிற்கும். பிர்ச்சினை என்பது சீட்டாட்டத்தைப்போல! உங்கள் கையில் எப்போதுமே 13 சீட்டுக்கள்
இருந்து  கொண்டே இருக்கும். ஒன்றைக்கிழே கழற்றி விட்டால், அங்கேயிருந்து பதிலுக்கு நீங்கள் ஒரு கார்டை எடுத்துத்தான் ஆக
வேண்டும்.

கேஸ் ஸ்டவ், பிரஷ்சர் குக்கர், மிக்ஸி, வெட் கிரைண்டர், வாட்டர்
ஹீட்டர், வாஷிங்மெஷின், டெலிவிஷன், டி.வி.டி. பிளேயர்,
ஸ்டெபிலைசர், ஸ்பிளிட் ஏர்கண்டிஷனர் அல்லது மின் விசிறிகள்,
மோட்டார் சைக்கிள் அல்லது கார், கணினி, யு.பி.எஸ் என்று வீட்டிலுள்ள சாதனங்கள் ஒன்று மாற்றி ஒன்று ரிப்பேராகிக் கொண்டே இருக்கும்.

பணம் இருப்பவன் எல்லாவற்றையும் தூக்கிக் கடாசிவிட்டு ஒரே நாளில் அத்தனை சாதனங்களையும் புதிதாக மாற்றிவிட்டு, நிம்மதியாக இருப்போம்
என்று நினைத்தால், விதி அவனை விடாது. அவனேயே நோய்க்கு ஆளாக்கி அல்லது எங்காவது விபத்தில் புரட்டி எடுத்து மருத்துவமனையில்
கொண்டுபோய் படுக்க வைத்துவிடும். அவனையே ரிப்பேர் செய்ய
வேண்டிய நிலைமைக்கு ஆளாக்கி விடும்.

ஆகவே பிரச்சினை என்பது, நமது இரத்த ஓட்டம்போல, சுவாசம் போல
உடன் இருப்பது ஆகும்!
------------------------------------------------------------------------------------------------
இந்தக் கட்டுரையின் அவசியமென்ன?

இரண்டு வழிகளில் உங்களுக்குப் பதில் சொல்வதற்குத்தான் இந்தக்கட்டுரை!

1. பிரச்சினையைத் தாங்கக் கூடிய திறன் இருக்கிறதா?

2. அடுத்த பிரச்சினையை அப்போது பார்த்துக்கொள்வோம், இப்போதுள்ள பிரச்சினை எப்போது தீரும்?
---------------------------------------------------------------------------------------------------------------
ஜாதகத்தில் திரிகோண வீடுகளான ஒன்றாம் வீடு (லக்கினம்) ஐந்தாம் வீடு (House of Mind) ஒன்பதாம் வீடு (House of Gains - பாக்கிய ஸ்தானம்)

ஆகிய வீடுகள் நன்றாக - அதாவது வலுவாக இருந்தால் - உங்களுக்குப் பிரச்சினைகளைத் தாங்கக்கூடிய திறன் இருக்கிறது என்று கொள்ளலாம்.
அதுதான் முக்கியம் - தாங்கும் வல்லமை இருந்தால் போதாதா?

சரி, அதை எப்படித் தெரிந்து கொள்வது?

மூன்று வீடுகளும் ஒட்டு மொத்தமாக நன்றாக இருப்பது என்பது ஆயிரத்தில் ஒருவருக்குத்தான் இருக்கும். சராசரியாக, மனிதனுக்கு மூன்றில் ஒன்று
நன்றாக இருந்தாலும் போதும்!

முன்பே சொல்லியிருக்கிறேன் உலகில் அனைவருக்கும் உள்ள மொத்த பரல்கள் 337 மட்டுமே அதை 12 ஆல் (ராசிகளால்) வகுத்தால் சராசரியாக
28  வரும். சராசரிக்கும் மேலே கூடுதலாக இரண்டு பரல்களுடன் - அதாவது
30 பரல்கள் அந்த வீடுகளில் - அல்லது ஒன்றிலாவது இருத்தல் நல்லது.
அதோடு ஒரு கிரகத்தின் தனிப்பட்ட வலிமைக்குரிய பரல்கள் எட்டு. நான்கு என்பது சராசரி. 4ற்கு மேற்பட்ட பரல்களுடன் அந்த கிரகம் இருந்தால்
நல்லது

உதாரணம் சிம்ம லக்கின ஜாதகனுக்கு, சூரியன்தான் லக்கின அதிபதி. ஜாதகத்தில் சூரியன் அதன் சுய வர்க்கத்தில் 4ற்கு மேற்பட்ட பரல்களுடன்
இருக்க வேண்டும்.

அதே சிம்ம லக்கின ஜாதகனுக்கு ஐந்தாம் வீடு, தனுசு வீடாகும், தனுசிவின் அதிபதி குரு பகவானும் 4ற்கு மேற்பட்ட பரல்களுடன் இருக்க வேண்டும்.

அதே சிம்ம லக்கின ஜாதகனுக்கு ஒன்பதாம் வீடு, மேஷமாகும், மேஷத்தின் அதிபதி செவ்வாயும் 4ற்கு மேற்பட்ட பரல்களுடன் இருக்க வேண்டும்.

இவ்வாறு ஒவ்வொரு லக்கினக்காரர்களும் தங்களுக்குரிய லக்கினத்தை வைத்து அந்த மூன்று இடங்களையும் தாங்களே மதிப்பிட்டுக்கொள்ள
வேண்டுகிறேன்

இவ்வாறு ஒரு வீடும், வீட்டின் அதிபதியும் அமைந்து விட்டால் போதும். உங்களை ஒன்றும் சீண்ட முடியாது. எது வந்தாலும் தாங்கக்கூடிய உத்தம
மனிதர் அல்லது பெண்மணி நீங்கள். அந்த கிரகங்கள் உங்களுக்குக் கடைசிவரை கை கொடுக்கும்!

அன்புடன்
வாத்தியார்
==========================================================


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!