மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label Music. Show all posts
Showing posts with label Music. Show all posts

4.4.22

கர்நாடக சங்கீத விமர்சகர் சுப்புடு!!!!


கர்நாடக சங்கீத விமர்சகர் சுப்புடு!!!! 

சுப்புடு இந்த பெயர் அவருடைய வாழ்நாட்களில் இணைந்து பயணித்த கர்நாடக சங்கீத வித்வான்களுக்கு சிம்ம சொப்பனம்.தலைநகர் டில்லியை வாழ்விடமாக கொண்டிருந்த சுப்புடு அவர்கள் வருடந்தோறும் டிசம்பர் மாத சங்கீத சீசன் சமயம் சென்னை வாசி.இவரின் விமர்சனத்தை எதிர்கொள்ள முடியாத ஜாம்பவன்கள் மகாராஜபுரம் சந்தனம்,காருக்குறிச்சி அருணாச்சலம் போன்றவர்கள் சுப்புடு வந்தால் கச்சேரி செய்ய மறுத்தார்கள்.

சென்னை மியூசிக் அகாடமி வாசலில் சுப்புடு நுழைய தடை என போர்டு வைத்தனர்.

சமரசம் இல்லா விமர்சகரான சுப்புடு அவர்கள் முறையான சங்கீதம் கர்றவர் இல்லை.புகழ் பெற்ற கர்நாடக பாடகி T. K. பட்டம்மாளின்  தம்பி. சிறு வயதில் அக்கா வீட்டில் சாதகம் செய்யும் போது மேல் ஸ்தாயியில் குரல் பிசுறு தட்டும் போது 'பட்டு மேலேயே நின்னுட்டுயே இறக்கி விடனுமா?'என்பாராம்.

பலரின் விரோதத்தை சம்பாதித்த சுப்புடு அவர்கள் விமர்சன உலகின் முடி சூடா மன்னனாக வலம் வந்தவர்.

இவரின் மூத்த சகோதரர் டில்லி செயலகத்தில் செயலாளர் பணி செய்தவர்.அவர் ஒரு பேட்டியில் 'சுப்புடு வின் குடும்பம் என்றே நாங்கள் அறியப்பட்டோம்,அதில் தான் எங்களுக்கு பெருமை 'என்றார்.
அப்துல் கலாம் ஜனாதிபதி யாக இருந்த போது மிகவும் உடல் நலம் குன்றிய சுப்புடு அவர்களை மாலை நேரம் பார்க்க சென்றார்.சுப்புட்டுவிடம் "உங்களுக்கு நான் என்ன செய்யட்டும்"என்று கேட்டார்கள்.சுப்புடு அவர்கள் 'நான் இறந்த உடன் உங்கள் ஜனாதிபதி மாளிகையில் உள்ள மஞ்சள் ரோஜா மலர்களை என் மேல் வைக்க செய்யுங்கள் " என்றார்.

அன்று இரவு அவரின் மரண செய்தி ஜனாதிபதி மாளிகைக்கு தெரிவிக்க பட்டதும்.மஞ்சள் ரோஜாக்களை அனுப்பி வைத்தார் மறைந்த கலாம் அய்யா.

சுப்புடு அவர்கள் எப்போதும் சொல்வது"இசையை விமர்சிக்க மட்டுமே உரிமை உண்டு, இசைத்தவனின் தனி மனிதத்தை விமர்சிப்பது நம் மன நோய்"
ஆம் படைப்பை விமர்சிக்க மட்டுமே உரிமை உண்டு. படைத்தவனை விமர்சிப்பது நாம் அறிவிலிகள் என்பதன் ஒப்புதல் வாக்குமூலம்.

சேதுராமன் லக்ஷ்மணன்.

--------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

26.2.19

நோய் தீர்க்கும் ராகங்கள்!!!!


நோய் தீர்க்கும் ராகங்கள்!!!!

இசையை ரசிக்காத மனிதர்களே இல்லை, இசைக்கு இறைவனும் மயங்குவான் எனக் கூறுவதைக் கேட்டிருக்கிறோம்.

சத்தத்தில் சங்கீதம் இருக்கு -  அதை கேட்கத்தான் நெஞ்சத்தில் இருக்கு.

என்ற கவிஞர் முகிலன் எழுதிய இவ்வரியில் இயற்கையின் ஒவ்வொரு படைப்பிலும் ஒரு சத்தம் ஒளி வடிவாகவும், இசை வடிவாகவும் இருக்கிறது. அதைக் கேட்காத நெஞ்சம் கிறுக்கு (மயக்கநிலை) ஆகிவிடும் எனக் கூறுகிறார்.

இயந்திர வாழ்வில் ஓய்வில்லாமல்,உறக்கமில்லாமல், நல்ல உணவுகளைக் கூட நேரத்திற்கு சாப்பிட முடியாமல் பலர் இருப்பதால் பல நோய்கள் மனிதர்களைத் தாக்கும் போது பெரும்பாலானவர்கள்  மருந்தை எடுத்துக் கொள்கின்றனர்.

இச்சூழலில் நோய்களை இசையின் மூலம் குணப்படுத்துவது பலருக்கும் தெரியாத ஒன்றாகவே உள்ளது. அதெப்படி இசை மூலம்
குணமாக்க முடியும்? இசைக்கு அப்படி ஒரு திறன் உண்டா? எனப் பல கேள்விகள் எழுவது இயற்கையே. ஆனால் அந்த இசையால்

பற்பல நோய்களைக் குணப்படுத்த முடியும் என்பதே உண்மையான ஒன்றாகும்.

!!நோய் தீர்க்கும்  ராகங்கள்!!

இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை
இசை மூலம் நம் முன்னோர்கள் சில அதிசயங்களை நிகழ்த்திக் காட்டியுள்ளனர்.

அகத்தியர் பாடியே ஒரு மலையை உருக வைத்தாராம். பேரரசர் அக்பர் அவையில் இருந்த சங்கீதச் சக்கரவர்த்தியான தான்சேன்
என்ற இசைக்கலைஞர் “தீபக்” என்ற ராகத்தைப் பாடி அணைந்த விளக்குகளை மீண்டும் எரிய வைத்தாராம்.

சுகமான, இதமான இசையைக் கேட்டதன் மூலம் நரம்பு சம்பந்தமான கோளாறுகள், நரம்பு தளர்ச்சி, சோகமான நிகழ்வில் ஏற்படும் அதிர்ச்சிகள் என இவைகளை இசை ஒரு கட்டுக்குள் கொண்டு வருகின்றன. ஒரு நபர் இசைக்கும் வயலின் இசையைக் கேட்டாலே கொடிய தலைவலியும் போய்விடும் என்கின்றனர். ஹிஸ்டீரியா  என்ற நோயை நரம்புக் கருவிகளின் இசை குணமாக்கி விடுகிறதாம்.

நல்ல இசை நம் மனதையும் எண்ணங்களையும் அமைதிப் படுத்துவதோடு, ரத்த அழுத்தம், மன அழுத்தம், மன இறுக்கம்,
தூக்கமின்மை, சீரற்ற இதயத்துடிப்பு போன்ற நோய்கள் இசையைக் கேட்பதமன் மூலம் குணப்படுத்தமுடியும் என்கின்றனர்

நம் நோய் தீர்க்கும் சில ராகங்களையும், அந்த ராகத்தில் அமைந்த திரைப் பாடல்களையும், இந்த ராகத்தில் அமைந்த பாடல்களைக்
கேட்டால் தீரும் நோய்களைப் பற்றியும் இங்கே இனி காணலாம்.

அதிகாலையில் கேட்க வேண்டிய ராகம் - பூபாளம்

* பாடல்  :      சலங்கயிட்டால் ஒரு மாது

   படம்     :      மைதிலி என்னைக் காதலி

* பாடல்  :      செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்

    படம்      :      முள்ளும் மலரும்

 அந்தி மாலையில் கேட்கவேண்டிய ராகம் - மலையமாருதம், சக்கரவாகம்

* பாடல்  :     கண்மணி நீ வர காத்திருந்தேன் – மலையமருதம்

    படம்    :     தென்றலே என்னைத் தொடு

* பாடல்  :     நீ பாதி நான் பாதி கண்ணே - சக்கரவாகம்

   படம்    :     கேளடி கண்மணி

* பாடல்  :     பூப்பூக்கும் மாசம் தை மாசம் - மலையமாருதம்

    படம்    :     வருசம் 16

 * பாடல்  :     உள்ளத்தில் நல்ல உள்ளம் - சக்கரவாகம்

    படம்    :     கர்ணன்

* பாடல்  :     ஓராறு முகமும் ஈராறு கரமும்

   படம்    :     டி.எம்.எஸ். பக்திப் பாடல்கள்

* பாடல்  :     நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு

    படம்    :     தியாகம்

சிறுநீரகப் பிரச்சனை தீரவும், மழை வேண்டியும்- அமிர்தவர்ஷினி

*பாடல்:  தூங்காத விழிகள் ரெண்டு.

படம் :   அக்னி நட்சத்திரம்

 கடின மனம் இளக கல்நெஞ்சம் கரைய - அரிகாம் போதி

*பாடல்:   கண்ணுக்கு மை அழகு

  படம் :    புதிய முகம்

*பாடல்:   உன்னை ஒன்று கேட்பேன்

  படம்  :   புதிய பறவை

*பாடல்:   ஒரே பாடல் உன்னை அழைக்கும்

  படம்  :   எங்கிருந்தோ வந்தாள்.

*பாடல்:   பழமுதிர்ச்சோலை எனக்காகத்தான்

  படம்  :   வருசம் பதினாறு.

மனதை வாட்டும் பல துன்பங்களின் தாக்கம் குறைந்து அமைதி ஏற்பட - ஆனந்த பைரவி, ஸ்ரீ ரஞ்சனி, கமாஸ், நாயகி,சகானா,

நீலாம்பரி

*பாடல்:     நாதம் எழுந்ததடி – ஸ்ரீ ரஞ்சனி

படம்  :     கோபுர வாசலிலே

*பாடல்:     வசந்த காலங்கள் இசைந்து -  ஸ்ரீ ரஞ்சனி

 படம் :     ரயில் பயணங்களில்

*பாடல்:    மெட்டுப்போடு மெட்டுப்போடு – ஆனந்த பைரவி

  படம்  :    டூயட்

*பாடல்:    கற்பகவள்ளி நின் பொற்பாதங்கள் - ஆனந்த பைரவி

  படம்  :    டி.எம்.எஸ். பக்திப்பாடல்கள்.

*பாடல்:    வரம் தந்த சாமிக்கு சுகமான லாலி - நீலாம்பரி

  படம்  :    சிப்பிக்குள் முத்து.

*பாடல்:  பூவே இளைய பூவே - நீலாம்பரி

  படம்  :  கோழி கூவுது

*பாடல்:  சித்திரம் பேசுதடி என் சிந்தை - கமாஸ்

  படம்  :  சபாஷ் மீனா

மனம் சார்ந்த பிரச்சனை தீர - அம்சத்வனி, பீம்பிளாஸ்

*பாடல் :  காலம் மாறலாம் நம் காதல்  - அம்சத்வனி

  படம்  :   வாழ்க்கை

*பாடல்:   சிந்து நதிக்கரையோரம் அந்தி நேரம் - பீம்பிளாஸ்

  படம்  :   நல்லதொரு குடும்பம்

*பாடல்:   தோகை இளமயில் ஆடி வருகுது - அம்சத்வனி

  படம்  :   பயணங்கள் முடிவதில்லை

*பாடல்:   வா…வா…வா… கண்ணா வா -அம்சத்வனி

   படம்  :   வேலைக்காரன்

*பாடல்:    இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை - பீம்பிளாஸ்

  படம்  :    திருவிளையாடல்

*பாடல்:    பன்னிரு விழிகளிலே பணிவுடன்

  படம்  :    சீர்காழி கோவிந்தராசன் பக்திப்பாடல்கள்

*பாடல்:   அழகென்ற சொல்லுக்கு முருகா

  படம்  :   டி.எம்.எஸ். பக்திப்பாடல்கள்

*பாடல்:   வாராய் நீ வாராய்

  படம்  :  மந்திரி குமாரி

இதய நோய் தீர கேட்க வேண்டிய ராகம் - சந்திரக கூன்ஸ்

நீரிழிவு நோய் தீர கேட்க வேண்டிய ராகம் -  பகாடி,  ஜகன் மோகினி

பெரும் உணர்ச்சிக்கும், உத்வேகம் வர கேட்க வேண்டிய ராகம் - அடான

*பாடல்:  யார் தருவார் இந்த அரியாசனம் - அடான

படம்  :  சரஸ்வதி சபதம்

*பாடல்:  வருகிறார் உனைத் தேடி - அடான

படம் :  அம்பிகாபதி

மனதை வசீகரிக்க, மயக்க -  ஆனந்த பைரவி , உசேனி, கரகரப்பிரியா

*பாடல் :  தானா வந்த சந்தனமே - கரகரப்பிரியா

படம்   : ஊருவிட்டு ஊரு வந்து

*பாடல் : கம்பன் எங்கே போனான் - கரகரப்பிரியா

படம்  :  ஜாதிமல்லி

*பாடல்:  மெட்டுப்போடு மெட்டுப்போடு - ஆனந்த பைரவி

படம்  :  டூயட்

*பாடல்:  சங்கீதஸ்வரங்கள் ஏழே கணக்கா - கரகரப்பிரியா

படம்  :  அழகன்

*பாடல்:  மாதவிப் பொன் மயிலாள் - கரகரப்பிரியா

படம் :  இருமலர்கள்

சோகத்தை சுகமாக்க - முகாரி , நாதநாமக்கிரியா

*பாடல்:  கனவு கண்டேன் நான் - முகாரி

படம்  :  பூம்புகார்

*பாடல்:  சொல்லடி அபிராமி

படம்  :  ஆதிபராசக்தி

பாடல்:  எந்தன் பொன் வண்ணமே அன்பு

படம்  :  நான் வாழவைப்பேன்

பாம்புகளை அடக்குவதற்கு - அசாவேரி ராகம்

வாயுத்தொல்லை தீர -ஜெயஜெயந்தி ராகம்

வயிற்றுவலி தீர - நாஜீவதாரா

 எந்த நேரத்தில் என்ன பாட்டு கேட்க வேண்டும் ?

திருவெண்காடு டி.தண்டபாணி தேசிகர் எந்த நேரத்தில் என்ன ராகத்தில் அமைந்த பாடல்களைக் கேட்கலாம் என்று ஒரு
வரையறை கூறுகிறார்.

நேரம் - ராகம்

5-6 மணி (காலை நேரம்)
பூபாளம்

6-7  மணிக்கு
பிலஹரி

7-8 மணிக்கு
தன்யாசி

8-10 மணிக்கு
ஆரபி, சாவேரி

10-11 மணிக்கு
மத்யமாவதி

11-12 மணிக்கு
மனிரங்கு

12-1 மணி (மதிய நேரம்)
ஸ்ரீராகம்

1-2 மணிக்கு
மாண்டு

2-3 மணிக்கு
பைரவி, கரகரப்பிரியா

3-4 மணிக்கு
கல்யாணி, யமுனா கல்யாணி

4-5 மணிக்கு (மாலை நேரம்)
காம்போதி, மோகனம், ஆனந்த பைரவி, நீலாம்பரி, பியாகடை, மலையமாருதம்

இப்படியான பல ராகங்கள், மனிதனுக்குள் இருக்கும் பல்வித நோய்களைக் குணப்படுத்துகிறது. . பாட்டைக் கேட்டல் நோய் தீரும்
என்பது கரும்பு தின்னக் கூலியா என்பது போல, நம் உடல் நலமும், மன நலமும் நம்மிடம் உள்ளது. நம் நோய்க்கான மருந்து இந்த
ராகங்களில் உள்ளது.

 இனிமை கூட்டும் பாடல்களையும், இசைகளையும்  ரசிப்போம்  அமைதி பெறுவோம்.

நன்றி....

ஆக்கம்:  *NTN சுந்தரமூர்த்தி கந்தன்குடில் நடேசன்*
--------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
=============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

12.2.19

தமிழை தாலாட்டிய வெண்கலம் !!!!


தமிழை தாலாட்டிய வெண்கலம்...

விநாயகனே வினை தீர்ப்பவனே..என்று கேட்க ஆரம்பித்தால் அந்த விடியற்காலைப்பொழுது அவ்வளவு பக்திமயமாகிவிடும்..

பக்தியில் திளைத்து, திரையில் குழைத்து, கடைசியில் அரசியல் மேடைகளிலெல்லாம் தவறாமல் ஒலிக்கும் சரித்திர குரலாகிவிட்டது

இவரின் குரல்

தொட்ட இடம் துலங்க வரும் தாயக்குலமே வருக..

நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்..

இரண்டு பாடல்களிலும் என்ன கம்பீரமான குரல்..

திரை, மேடை என இரண்டிலும் குரல் வளத்தால் ஒரே நேரத்தில் கலக்கும் இசை மேதைகள் மிகவும் குறைவு..

கர்நாடக இசைமேதைகள், பக்திப்பாடல்கள் என ஒரு பக்கம் ஈடுகொடுத் சாகசம் செய்துகொண்டே திரைப் பாடல்கள் மூலமும்
மக்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டவர். நடிப்பு அவதாரத்தையும் விடவில்லை

எம்.கே.டி, பி.யூ.சின்னப்பா, டி.ஆர் மகாலிங்கம், திருச்சி லோகநாதன், சி.எஸ்.ஜெயராமன் போன்றோர் குரல் வளத்தால் கொடி
கட்டிபறந்தவர்கள். என்றாலும் அட்சர சுத்தம் விஷயத்தில் பிசிறுகள் இருக்கவே செய்யும்..

ஆனால் பிசிறே இல்லாமல் தமிழை அப்படியொரு சுத்தமாக கணீர் குரலில் முதன் முதலாக கொடுத்தவர்.. ஆனானப்பட்ட
ஜாம்பவான் டிஎம்எஸ்கூட துல்லி யமான உச்சரிப்பில் இவருக்கு பின்னால்தான்

ஒரு புறம் பக்திப்பாடல் இவரின் குரலால் உருப்பெற்று சாகாவரத்துடன் இன்றளவும் ஒலிக்கின்றன. இன்னொரு புறம்
திரைப்பாடல்கள்..

உழைப்பதில்லா உழைப்பை .. என நாடோடி மன்னனில் மக்கள் திலகத்திற்காக உச்சத்தில் போன குரல், நாகேஷுக்காக நீர்
குமிழியில் ஆடி அடங்கும் வாழ்க்கை யடா.. என நேர்மாறான அடக்கத்தின் வடிவமாகிவிட்டது..

சந்திரோதயத்தில், டிஎம்எஸ்சுடன் இணைந்து பாடிய, காசிக்கு போகும் சன்யாசி..பாடல் இன்றளவும் குரல் வள மேதைகளின்
ரகளைக் கச்சேரி என்றே சொல்லலாம்..

நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே...
பட்டணந்தான் போகலாமடி,,,
அறுபடை வீடு கொண்டதிருமுருகா..
தேவன் கோவில் மணியோசை.
பணம் பந்தியிலே..குணம் குப்பையிலே
எங்கிருந்தோ வந்தான் இடைஞ்சாதி நான் என்றான்.
அமுதும் தேனும் எதற்கு...
இப்படி போய்க்கொண்டே இருக்கும் கானங்களின் பட்டியல்..

கேட்ட மாத்திரத்தில் உருக வைக்கும்.கர்ணன் படத்தின் ''உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது....'' பாடலின் கம்பீரக்குரல்.

புதிதாக கேட்கும் ஒவ்வொரு தலைமுறைக்கும் வியப்பின் குறீயிடாகவே இருக்கும்..

இசைக்காக எண்ணற்ற பட்டங்களை வென்று தமிழினத் தின் நிகரற்ற அடையாளமாகத் திகழும் மறைந்த பத்ம ஸ்ரீ சீர்காழி
கோவிந்தராசனின் 55 ஆண்டுகளே வாழ்ந்துள்ளார்.

Sirkazhi Govindarajan (19 January 1933 - 24 March 1988)

ஆக்கம்: எழுமலை வெங்கடேசன்
-----------------------------------------------
படித்ததில் பிடித்தது!!!!
அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!