Evidence for the existence of God இறைவனுக்குச் சான்று கேட்டவர்கள்!ஆன்மீகத்தில் திளைப்பவர்களுக்கு அன்னை எனும் மூன்று சொல் எழுத்து
ஒருவரைத்தான் சுட்டிக் காட்டும். அது பிரான்ஸ் நாட்டிலிருந்து இந்தியாவிற்கு
வந்து பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் தங்கியிருந்து தனது இறுதி
மூச்சுவரை ஆன்மிகப் பணி செய்த அன்னையையே குறிக்கும்
"மலர்போல மலர்கின்ற மனம்வேண்டும் தாயேபலர்போற்றிப் பாராட்டும் குணம்வேண்டும் தாயே!வரம்தரும் அன்னையே வணங்கினோம் உன்னையேவரம்தரும் அன்னையே வணங்கினோம் உன்னையே"என்று கங்கைஅமரன் அவர்களின் அற்புதமான பாடல் அன்னைக்காகவே எழுதப்
பெற்றது. முன்பு, விஜய் தொலைக்காட்சியின் அதிகாலைத் துவக்கப் பாடலாக
ஒலித்து, தமிழ்கூறும் நல்லுலகத்தில் மிகவும் பிரபலமான பாடலானது.
இந்தியாவின் ஆன்மிக செல்வத்தை எப்போதும் சிலாகித்துப் பேசும் அன்னை
அவர்கள், இந்திய மக்களை எப்போதும் கேட்டுக்கொண்டது இதுதான்:
"எதற்காகவும் உங்கள் இறையுணர்வை விட்டுக் கொடுக்காதீர்கள்"
ஒருமுறை மூன்று அமெரிக்க விஞ்ஞானிகள் அன்னையை சந்தித்துப் பேசிக்
கொண்டிருக்கும்போது கேட்டார்கள்.
"தாயே, நாங்கள் எல்லாம் விஞ்ஞானிகள். எல்லாவற்றிற்கும் சான்று கேட்பவர்கள்.
இறைவன் இருப்பதற்கு தாங்கள் ஒரு சான்றாவது கொடுத்து உதவ வேண்டும்"
புன்னகைத்த அன்னை, அதற்குப் பதில் உரைத்தார்.
"ஆகா, தருகிறேன்.அதற்கு முன்னால் நீங்கள் என் கேள்வி ஒன்றிற்குப் பதில்
சொல்ல வேண்டும்"
"சொல்கிறோம், கேளுங்கள்"
"ஒரே நேரத்தில் இடத்திற்கு இடம் சீதோஷ்ண நிலை ஏன் வேறுபடுகிறது?"(ஒரு குறிப்பபிட்ட நேரத்தில் சென்னையில் 40 டிகிரி சீதோஷ்ணம் என்றால்,
கோவையில் 36ம் ஊட்டியில் 22ம் இருக்கும் நிலை)
அதற்கு அவர்கள் பதில் சொன்னார்கள்.
"ஒரு இடத்தில் இருக்கும் காற்றின் அடர்த்தியை வைத்தும், சம வெளிகளில் இருந்து ஒரு இடம் இருக்கும் உயரத்தை வைத்தும் சீதோஷ்ண நிலை மாறுபடும்"Weather occurs due to density (temperature and moisture) differences between
one place and another. These differences can occur due to the sun angle at any
particular spot, which varies by latitude from the tropics.
அன்னை அவர்களைத் திருப்பிக் கேட்டார்,
"அதே காற்றின் அடர்த்தியை வைத்து காற்றில் உள்ள ஆக்சிஜனின் அளவு மட்டும் ஏன் மாறுபடுவதில்லை?"Does the percentage of oxygen in air change as altitude increases? Or is it still
around 21% at say, the top of a hill?
அவர்கள் சொன்ன பதில் என்ன தெரியுமா?
"தெரியவில்லை" என்று சொன்னார்கள்
அன்னை அவர்கள் சொன்னார்கள்:
"அதுதான் இறை சக்தி. தான் படைத்த ஜீவராசிகள் சுவாசிக்க வேண்டும் என்பதற்காக காற்றில் உள்ள பிராணவாயுவின் அளவை மாறாமல் வைத்திருப்பவரின் பெயர்தான் இறைவன்" ++++++++++++++++++++
சென்னையாகட்டும் அல்லது அமைதிப் பள்ளதாக்குப் போன்ற அடர்ந்த மலைப்
பிரதேமாகட்டும் அல்லது ராஜஸ்தானின் தார் பாலைவனமாகட்டும் அல்லது
வங்கக் கடலாகட்டும் எங்கும் காற்றில் உள்ள பிராணவாயுவின் அளவு மட்டும்
மாறாமல் இருக்கும்
அதுபோல தான் படைத்த ஜீவராசிகள் அனைத்திற்கும் உரிய உணவையும்
இறைவன் குறைவில்லாமல் அளித்திருக்கிறார். எந்தப் பறவையாவது உணவின்றி
மடிந்திருக்கிறதா? கல்லிற்குள் இருக்கும் தேரைக்கும் அரவணைப்பு அளிக்கும்
கருணை மிக்கவர் இறைவன்.
+++++++++++++++++++++
The circumference of the Earth at the equator is 25,000 miles.
The Earth rotates in about 24 hours. Therefore, if you were to hang above the
surface of the Earth at the equator without moving, you would see 25,000 miles
pass by in 24 hours, at a speed of 25000/24 or just over 1000 miles per hour.
160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் காரில் இருந்து தலையை நீட்டிப் பாருங்கள்.
எதிர்கொள்ளும் காற்றின் வேகத்தில் மூச்சுத் திணரும்.
ஆனால் அதே நேரத்தில் இந்தப் பூமி தன்னைத்தானே மணிக்கு 1600 கிலோ மீட்டர்
வேகத்தில் சுற்றிக் கொள்கிறது. அதன் வேகம் உங்களைப் பாதிக்கிறதா?
இல்லையே? அதுதான் இறைசக்தி!
உலகின் நிலப்பரப்பில் 3ல் 2பங்கு தண்ணீர். இந்தச் சுழற்சியில் ஒரு சொட்டுத்
தண்ணீராவது, பூமியிலிருந்து பிரிந்து அண்டத்தில் விழுகிறதா? கேட்டால் புவியீர்ப்பு
என்பார்கள். அந்த ஈர்ப்புதான் இறைசக்தி!
Space, time and earth மூன்றுமே ஒன்றுதான். ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்க
முடியாது. மூன்றுமே இறைசக்தி
புரிகிறவனுக்குப் புரியட்டும். புரியாதவனுக்குப் புரியாமலே போகட்டும்.It is his problem! ++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!