வகுப்பறைக் கண்மணிகள், நண்பர்கள், மேலும், வந்து எட்டிப் பார்த்துவிட்டு போகிறவர்கள் என்று அனைவருக்கும் வாத்தியாரின் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த ஆண்டு வளம் மிக்கதாக, மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கட்டும். உங்கள் கனவெல்லாம் நனவாகட்டும்.
------------------------------------------------------------------------------------------------------------------
Astrology: புது உற்சாகத்துடன் பிறக்கும் புத்தாண்டு!
இந்த ஆண்டு நான்கு பெரிய கிரகங்கள் தங்கள் பெட்டி படுக்கைகளுடன் வேறு ஊருக்கு (வேறு ராசிக்கு) குடிபோக இருக்கிறார்கள். வாருங்கள்,
அந்தந்த சமயங்களில் அவர்களின் தட்டு முட்டுச் சாமான்களைக் கட்டிக் கொடுத்து, அவர்களை வழியனுப்பி வைப்போம். அதாவது பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் வேலையை நாம் செய்வோம் என்கிறேன்.
(Packers and Movers are the people who help us to pack and move our belongings)
1.குரு பகவான்.
இந்த ஆண்டு ஜூன் 21ஆம் தேதியன்று மிதுன ராசியில் உள்ள செக்போஸ்ட்டைக் கடந்து, கடக ராசிக்குப் பயணமாகிறார். அங்கே உள்ள ரிசார்ட்டில் அவர் ஒரு வருட காலம் தங்கி இருப்பார். மிதுனராசிக்காரகள் நிம்மதியாகப் பெருமூச்சு விட்டுக் கொள்ளலாம். தங்கள் வீட்டை சுத்தம் செய்துகொள்ளலாம். ஒருவருடமாக பட்ட அவஸ்தைகள் இனி இருக்காது. அதுபோல மீன ராசிக்காரர்களும், மகர ராசிக்காரர்களும், விருச்சிக ராசிக்காரர்களும், கன்னி ராசிக்காரர்களும் மகிழ்ச்சி கொள்ளலாம். ஆண்டு முழுவதும் இரவில் வீட்டில் தோசை அல்லது உப்புமா என்று வருத்தப் பட்டுக்கொண்டே சாப்பிடாமல், அன்னபூர்ணா, சரவண பவன், அடையார்ஆனந்த பவன், ரெஸிடென்சி, மெரிடியன் என்று வசதிக்குத் தகுந்தபடி குடும்பத்துடன் அல்லது நண்பர்களுடன் சென்று, தினமும் இரவில் டின்னர் சாப்பிடலாம். குரு பகவானால் இந்தக் குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு எந்த உபத்திரவமும் ஒரு ஆண்டு காலத்திற்கு இருக்காது. மொத்ததில் மகிழ்ச்சியுடன் இருக்கலாம்.
2.ராகு மற்றும் கேது.
இந்த ஆண்டு ஜூலை 15ஆம் தேதி இடம் மாறுகிறார்கள். வேறு ஊரில் உள்ள கிரவுண்டுக்குச் சென்று அங்கே தங்கள் ஆட்டத்தைத் துவங்க இருக்கிறார்கள்.
3.சனீஷ்வரன்.
இந்த ஆண்டு நவம்பர் 3ஆம் தேதி முதல் சுமார் இரண்டரை ஆண்டு காலம் அவர் உங்களை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கவிருக்கிறார். திரைகதை, வசனம், இயக்கம், படப்பிடிப்பு, இசை, எடிட்டிங், என்று எல்லாவற்றையும் அவரே பார்த்துக்கொள்வார். படம் எப்படி அமையும் என்பது உங்களுடைய கதையைப் பொறுத்தது. அதாவது உங்களுடைய ஜாதகத்தைப் பொறுத்தது.
உலக மக்கள் தொகை சுமார் 700 கோடி. அத்தனை பேர்களையும் வைத்துத் தனித்தனியாகப் படங்களை அவரால் இயக்க முடியுமா?
ஏன் முடியாது?
அவருக்கு சாத்தியமில்லாதது ஒன்றுமே இல்லை!
எத்தனை கோடி மக்களுக்கு பல வசதிகளுடன் மின்னஞ்சல்கள்,கூகுள் டிரைவ்கள், ப்ளாக்குகள், லட்சக்கணக்கான நிறுவனங்களுக்கு விளம்பர வசதிகள், தேடு பொறிகளில் தேடிப் பல தகவல்களை எடுத்துப் படிக்கும் வசதிகள் என்று கூகுள் ஆண்டவர் செய்து இன்று நம்மை அசத்திக் கொண்டி ருக்கும்போது, அவரைவிட கோடிக்கணக்கான அளவில் வலிமையுடைய சனீஷ்வரரால் அதைச் செய்ய முடியாதா?
கற்பனை செய்து பாருங்கள்.
ஆனால் ஒன்று, சனீஷ்வரனிடம் என்ன சூப்பர் கணினி இருக்கிறது? அதற்கு எத்தனை லட்சம் சர்வர்கள் இருக்கின்றன என்ற விபரம் மட்டும் தெரியவில்லை.
தெரிந்தால் என்ன செய்ய முடியும்?
”அதைப் போல நாமும் ஒன்றை நிறுவி அவரைக் கண்காணிக்கலாமே?”
”ஒரே நொடியில், அதைப் பஸ்பமாக்க அவராலும் அவருடைய தோழர்கள் ராகு மற்றும் கேதுவாலும் முடியாதா என்ன?”
முதல் இரண்டு ஓவர்களிலேயே ஒரு ரன் கூட எடுக்காத நிலையில் பதினோரு விக்கெட்டுகளையும் சாய்த்து நம்மை ஆட விடாமல் செய்து விடமாட்டார் களா என்ன?
விரிவான பலன்களை அவரவர் இடம் மாறும் சமயத்தில் பார்த்துக் கொள்ளலாம். விரிவாக எழுதுகிறேன். இங்கே அல்ல!
Galaxy2007 வகுப்பில்.
அன்புடன்,
வாத்தியார்
------------------------------------------
”வாத்தி (யார்), தலைப்புக்கும் பதிவிற்கும் என்ன சம்பந்தம் (என்ன விளக்கம்)?”
”இருக்கு ராசா! புத்தாண்டு புதனில், அதாவது புதன் கிழமையில் பிறக்கிறது. பொன் கிடைத்தாலும், புதனில் கிடைக்க வேண்டும் என்பார்கள். அதுதான் உற்சாகம் ராசா!”
==============================================
2
நேற்றைய புதிருக்கான விடை!
ஜாதகர் படிக்கவில்லை. படிப்பு ஏறவில்லை. கல்வி மறுக்கப்பெற்ற ஜாதகம்!
மிதுன லக்கினம். 4ஆம் வீடான கன்னிக்கு அதிபதியான புதன் அந்த வீட்டிற்கு எட்டில். அதுவும் சனியுடன் கூட்டணி. கூட்டணி சேர்ந்துள்ள சனி
ஜாதகத்தில் எட்டாம் வீட்டிற்கு உரியவன். ஆறாம் அதிபதியின் பார்வை கேடானது. ஜாதகத்தில் ஆறாம் அதிபதியான செவ்வாய் எட்டில் அமர்ந்து,
தனது நான்காம் பார்வையால் புதனைத் தன் பார்வையில் வைத்திருப்பதைக் கவனிக்கவும்.
நான்காம் அதிபதி பூரணமாகக் கெட்டிருக்கிறார். அதனால்தான் ஜாதகனுக்குப் படிப்பு ஏறவில்லை. ஆறாம் அதிபதியின் சேர்க்கை அல்லது பார்வை
மிகவும் தீங்கானது. எதையும் அலசும்போது அதை மனதில் வைத்துக் கொள்ளவேண்டும்!
மொத்தம் போட்டியில் கலந்து கொண்டவர்கள்
35 பேர்கள். அவர்களில்
13 பேர்கள் சரியான விடையை எழுதியுள்ளார்கள். சரியான விடையை எழுதிய
அத்தனை பேர்களுக்கும் எனது மனம் உவந்த பாராட்டுக்கள். அத்துடன் போட்டில் கலந்து கொண்ட மற்றவர்களுக்கும் எனது பாராட்டுக்கள்.
சிறப்பான பதிலை எழுதியவர்களின் பெயர்களை, அவர்கள் எழுதிய கணிப்புடன் தொகுத்துக் கீழே கொடுத்துள்ளேன். அனைவரும் படித்துப்
பாருங்கள்.
அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------------------------------
1
Blogger kmr.krishnan said...
லக்னாபதியும், கல்வி ஸ்தானதிபதியுமான புதன் 11ல் நின்றாலும், எட்டாம் அதிபதி சனி, மூன்றாம் அதிபதி சூரியனுடன் இருப்பதாலும், சூரியன் சனி
கிரஹயுத்தத்தில் இருப்பதாலும், புதன் சூரியனால் அஸ்தங்கதம் அடைந்திருக்க வாய்ப்பு இருப்பதாலும்
ஜாதகருக்கு படிப்பு கட்டைதான்.வாக்கு
ஸ்தானதிபதியும் மனோகாரகனுமான சந்திரன் நீச மடைந்து ஆறாம் விட்டுக்காரனான குருவுடன் நின்றதால் பேச்சு பாதிப்போ, அல்லது
மாற்றுத்திறனாளியாக இருக்க வாய்ப்புள்ளது. சகோதரர்கள் தயவில் வாழும் நபராக இருப்பார்.
அதிக பட்ச படிப்பு எட்டாவதுவரைதான் இருக்கும்.
----------------------------------------------
2
Blogger jagvettri@gmail.com said..
.
அறிவு மிக்கவர்
ஆனால் படிப்பு வராது .4ஆம் அதிபதி புதன் 4க்கு எட்டாம் இடதிலும் புத ஆதித்ய யோகம் பெட்ராலும் எட்டாம் அதிபதி சனி
கூட்டு சரி வராது அதொடு அல்லாமல் நீச்ச சனி செவ்வாய் பரிவர்தனை மற்றும் பார்வை அவர்கள் முறையே எட்டுக்கும் ஆறுக்கும் அதிபதி.9பதாம்
இடதுக்கும் அதே நிலமை தான்.படித்திருந்தால் +2 வரை படிதிருக்கலாம்.
------------------------------------------------
3
Blogger JAWAHAR P said...
Sir
ஜாதகர் 7 அல்லது 8ம் வகுப்புவறை தான் படித்திருப்பார் (12 வயது வரை அவர் ஜாதகம் பலன் அவருக்கு இல்லை)
3ம் அதிபதி 11ல் உச்சம் உடன் சனி உச்சம் பெற்ற செவ்வாய் பரிவர்தனை (நல்லவர்கள் ஆன குரு சந்திர யோகத்துடன் 6ல் மறைவு)லக்னாதி 4ம்
இட அதிபதி இவர்களுடன். ஜாதகர் பெரிய தாதா வெட்டு குத்துக்கு அஞ்சாதவர்
நன்றி
ஜவஹர்
-----------------------------------------------------
4
Blogger thozhar pandian said...
நான்காம் வீட்டுக்காரரும் கல்விகாரகனுமான புதன் 4ம் வீட்டிற்கு எட்டாம் வீட்டில். கூடவே உச்ச சூரியனும் நீச சனியும். செவ்வாயின் பார்வையும்
புதன் மேல். செவ்வாய் இந்த இலக்கினத்திற்கு 6 (வில்லன்) மற்றும் 11ம் அதிபதி. வேறு எந்த சுப கிரக பார்வையும் இல்லை. குருவும் புதனும் அஷ்டக
சஷ்டக நிலையில் உள்ளனர். ஆதலால் ஜாதகரின் படிப்பு பள்ளியோடு முடிந்திருக்கும்.
பள்ளிப் படிப்பை கூட முடித்திருக்க மாட்டார்.
------------------------------------------------------
5
Blogger karuppiah Sakthi said...
வாத்தியார் அவர்களுக்கும், நமது வகுப்பறை மாணவர்களுக்கும், என் இனிய புத்தாண்டு நல் வாழ்துக்கள்.
கொடுக்கப்பட்டுள்ள ஜாதகம்
உயர் கல்வி மறுக்கப்பட்ட ஜாதகம்.
4ஆம் அதிபதி புதன் தன்னுடைய இருப்பிடத்துக்கு 8இல் பகை வீட்டில் உள்ளார்.அத்துடன் செவ்வாயின் பார்வையில் உள்ளார்.உடன் சனியின்
கூட்டனி வேறு.
--------------------------------------------------------
6
Blogger Saravanan J said...
dear sir,
in this chart the second house chandran is neecha, and in the second house kethu was present.so he can,t cross his lower level studies.
4th house is budha, but budha present in mesha, it is the 8th place from the kanni, so we can sure that he can't crossed his lower studies,
kethu represnts the long time duration,
------------------------------
7
Blogger C Jeevanantham said...
Dear Sir,
1. The given horoscope person's mercury is joint with sun. So he must be having good knowledge naturally. But closeness of saturn and neecha saturn does not allow him to study well.
2. The 4th lord for studies is in placed 11th place along with sun and saturn. Saturn made him not to study proper.
3. Exalted sukran aspect 4th place. So he is rich and spent his life by material enjoyment. Not got interest in studies. He enjoyed the wealthy
life.
4. Guru does not aspect 4th lord or 4th place. So he had studied only upto the basic level. may be upto 8th or 9th standard.
5. Also guru placed in 6th place,not favorable.
-------------------------------------------
8
Blogger ravichandran said...
Respected Sir,
My answer for our today's Quiz No.33:-
Education is denied to this Native.
Even he has not completed his schooling.
Reasons for not getting education are as follows:
1. Fourth house authority (Mercury) is sitting eighth house from its own house. It's bad.
2. The authority for education (Mercury) is associated with Saturn. It's worse.
3. Vidyakaraga (Mercury) is getting sixth house authority (Mars) aspects. It's worst.
Hence, The native wasn't blessed to study according to his horoscope.
With kind regards,
Ravichandran M.
-------------------------------------------------------------
9
Blogger Subamohan Subbu said...
Respected Sir
My observations of this horoscope are as follows:
I) PLANETS POSITION:
a) Lagnathipathi & 4th LordMERCURY at 11th House in association with Saturn which is deblitated.
b) Lagnum is Aspected by Saturn which is deblitated
c) Mars at 8th Position is aspecting lagnathipathi
d) Mercury in association with Sun ( combusted)
Lagnum is made weak by Saturn and also lagathipahi because of Mars
Moon is debilitated & Mars exalted
PLANETARY ASSOCIATION:
a) Association of Sun+Mercury –Budha Aditya yoghum
b) Exchange of house between two malefic – Saturn & Mars
c) Sun + Saturn – Neesa bangaum yogum
d) Jupiter and Moon - 6 th house – bad position
e) Jupiter aspecting Venus
f) Venus aspecting 4th house
Fourth house
The lord of fourth house is at 8th Position from it along with Saturn and aspected by Mars. But the Fourth house is aspected by Venus which is at Kendra position but has Kendrathipathya doshum
Results:
1) Since the fourth lord is weak the person would have done School study and lost the opportunity to go to college.
2) But he will be a skilful and intelligent man. His analytical capacity will be excellent.
3) He will have easy gain and money in his life as the Lagnathipathi is at 11th house
4) He will be interested in fine arts – May be Movie placback singer or Artist.
5) Since the Karaga – Jupiter is at 6 th house he would have lost the opportunity to go for higher studies though he is very intelligent.
6) All the yogas will give him fame and money – May be a politician also
Dr.Mohan
Brunei
------------------------------------------------------------
10
Blogger dhana lakshmi said...
ஐயா அவர்களுக்கு
ஜாதகர் பள்ளிபடிப்பை பாதியில் விட்டவராக இருப்பார். 2மிடம் கேது இதனை செய்திருப்பார்.
(தைன்ய பரிவர்த்தனை) 8மிடம் மற்றும் 11மிடம்.
(3 கிரகம் உச்சம் 2 கிரகம் நீசம் )(உச்சமான செவ்வாய் பார்வை உச்சமான சுரியனி்ன் மேல்) சரியான குழப்பம்.
பதிலை ஆவலுடன் எதிர்பார்கிறேன்.
புத்தாண்டு வாழ்த்துக்கள்
----------------------------------------------------------------
11
Blogger Ramasamy said...
The native couldn't study beyond middle school level. The reasons are as below.
1) For education, we should see the lagna lord, 2nd lord, 4th lord and 5th lord (higher education), mercury and guru's positions. Here both lagna lord and 4th lord is mercury, also he is karaga for education. Mercury is in 11th house with 8th lord saturn. This is 8th house from 4th house. Also
mercury is aspected badly by mars. So he is very weak.
2) Guru is in 6th house.
3) 2nd lord moon is neecham in 6th house.
5th lord sukran is ucham. So the native will settle in life using his intelligence during his sukra dhasa period.
Thanks,
Ramasamy.
----------------------------------------------------
12
Blogger Raja Murugan said...
அய்யா, வணக்கம்.
தங்கள் கொடுத்துள்ள ஜாதகம் மிகவும் ராஜயோகம் உள்ள ஜாதகம்.
மிதுன லக்கனம்
1.மேஷத்தில் சூரியன் சனி - நீசபங்க ராஜயோகம்
2. விருச்சிகத்தில் குருசந்திர யோகம்
3. செவ்வாய் மகரத்தில் உச்சம்
4. மீனத்தில் சுக்கிரன் உச்சம்
5. சனி செவ்வாய் பரிவர்த்தனை.
அரசாளக் கூடிய ஜாதகம்
இவை எல்லாம் இவரை வசதிகள், சொத்து, பணம், புகழ், இவற்றில் உச்சத்திற்கு கொண்டு சென்றிருக்கும் சந்தேகம் இல்லை.
லக்கினத்திற்கு 6 ல் குரு மறைவதாலும்,
கல்வி ஸ்தானத்தை எந்த சுப கிரக பார்வையும் இல்லாததாலும்,
கல்வி ஸ்தானாதிபதியும், வித்தியகரகனும், லக்க்னதிபதியும் ஆன புதன் தன் கல்வி ஸ்தானத்திற்கு 8 ல் மறைவதலும்,
கல்வி ஸ்தானத்திற்கு கல்வி ஸ்தானமான தனுசு ராசியை எந்த சுப கிரக பார்வை இல்லாததாலும்
இவர் ஆரம்ப பாடசாலையுடன் படிப்பு முடிந்து இருக்கும்.
நன்றியுடன் ராஜமுருகன்
------------------------------------------------------
13
Blogger Chandrasekaran Suryanarayana said...
Quiz No: 33
வணக்கம்.
ஜாதகர் படிக்காதவர்.
பள்ளிக்கூட படிப்புடன் நிறுத்தியவர்.
ஜாதகர் புத்திசாலியானவர்.
மிதுன லக்கினத்திற்க்கு யோக காரன் சுக்கிரன். உச்சமான சுக்கிரனின் 7ம் பார்வை 4ம் வீட்டின் மீது இருந்தும், 4ம் வீட்டு அதிபதி புதன் 11ம்
வீட்டில் சனியுடன் அமர்ந்த்ள்ளார். லக்னாதிபதி புதனும், 4ம் வீட்டு அதிபதி புதனும், 11ம் வீட்டில் சனியுடன் கூட்டு சேர்ந்து புதன் அசுப கிரகமாக
மாறியது. அதனால், படிப்பில் தடங்கல்.
11ம் வீடு 4ம் வீட்டிலிருந்து 8வது வீடு. அதனால், புத்தி அமைதியில்லாமல் இருக்கும். புத்தி எப்பொழுதும் தடுமாற்றத்துடன் இருக்கும்.
வித்தியாகாரகன் குரு 6ம் வீட்டில் வக்கிரமாக அமர்ந்துள்ளார். அவருடைய பார்வை லக்கினத்தையோ, 4ம் வீட்டையோ, 4ம் வீட்டு அதிபதியையோ பார்க்கவில்லை. துரதிருஷ்ட்டம். படிக்கமுடியாமல் போனதர்க்கு இது ஒரு முக்கியமான காரணம். மேலும், 6ம் வீட்டில், நீச மான சந்திரனுடன் வக்கிரமான குரு சேர்ந்ததால் ஒரு பயனும் இல்லை.
2ம் வீட்டில் கேது இருப்பதால், படிப்பை பாதியில் விட்டு விடும் நிலைமை, விரும்பிய வண்ணம் படிப்பை அடையமுடியாது. மேலும், நாவன்மை பங்கு
எற்படும். சனியின் 4ம் பார்வை (அர்த்தாஷ்ஷடம சனி) கேதுவை பார்ப்பதால் மேலும் படிப்பிற்க்கு தடங்கல். 16 வயதில் கேது மகா தசை
ஆரம்பித்ததால், பள்ளி படிப்பிற்க்கு மேல் கல்வி தடங்கல்.
குருவின் 9ம் பார்வை 2ம் வீட்டினில் உள்ள கேதுவை பார்ப்பதால் குரு சண்டால யோகம் எற்பட்டது. மேலும் குரு வக்கிரமாக இருப்பதால்
படிப்பிற்க்கு ஒன்றும் செய்ய முடியாத நிலைமை.
11ம் வீட்டிலுள்ள புதனுடன் சூரியன் சேர்ந்து புத-ஆதித்திய யோகம் உண்டாக்கி ஜாதகருக்கு நல்ல புத்தியை வழங்கினார். (Sun-Mercury
combination favours proficiency in mathematics)
மேலும், 11ம் வீட்டிலுள்ள சூரியனுடன் சனி சேர்ந்து நீச பங்க ராஜ யோகத்தை உண்டாக்கி இரண்டு பங்கு செல்வத்தை வழங்கினார்.
சந்திரசேகரன் சூரியநாராயணன்.
---------------------------------------
அத்தனை பேர்களுக்கும் எனது மனம் உவந்த பாராட்டுக்கள்!
அன்புடன்
வாத்தியார்
===========================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!