மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

18.12.13

Astrology: Quiz result: அடித்த அடியில் துணியைக் கிழிக்காமல் துவைத்தவர்கள்!

 

Astrology: Quiz result: அடித்த அடியில் துணியைக் கிழிக்காமல் துவைத்தவர்கள்!

நேற்றுக் கொடுத்திருந்த புதிருக்கு இதுவரை 24 பேர்கள் பதில் எழுதியிருக்கிறார்கள். கலந்து கொண்ட அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.
அடித்த அடியில் துணியைக் கிழிக்காமல் துவைத்தவர்கள் மொத்தம் 5 பேர்கள் மட்டுமே! அவர்களுக்கு எனது மனமுவந்த பாராட்டுக்கள்! அவர்களின் பெயர்களைக் கீழே கொடுத்துள்ளேன்.

சரியான விடை:

ஜாதகி மிகவும் அழகானவர். நன்கு படித்தவர். நல்ல வேலையில் இருப்பவர். ஆனால் திருமணம் செய்துகொள்ளவில்லை. அதாவது ஜாதகிக்குத் திருமணமே நடக்கவில்லை!

The native of the horoscope has no married life. That is the important point

1
1ம் வீடு லக்னத்தில் குரு ஜாதகர் அழகிய தோற்றம் லக்னாதிபதி 12ல் மறைவு அவரால் மற்றவர்களுக்கு லாபம் 2ம் வீடு அதிபதி லக்னத்தில் (2க்கு 12ல்) குடும்பம் இருக்க வாய்பில்லை 5ம் வீடு 6ம் வீடு பரிவர்தனை குழந்தை வாய்ப்பு இல்லை 7ம் வீடு அதிபதி 6ல் மறைவு கல்யாண பாக்யம் இருக்காது நன்றி ஜவஹர் on Astrology: அடித்துத் துவைப்போம் வாருங்கள்!   
JAWAHAR P
---------------------------------------------------
2
1. லக்னாதிபதி சனி 12ல் மறைவு கேதுவுடன் ஆனால் ஆட்சி. லக்னத்தில் குரு. லக்னத்திற்கு சுக்ரன் பார்வை. நல்ல தோற்றமுடையவர். லக்னத்தில் 27 பரல். 2. 2ம் அதிபதி மற்றும் தனகாரகன் குரு அந்த வீட்டிற்கு 12ல். 2ம் வீட்டிற்கு லக்னாதிபதி சனியின் 3ம் பார்வை. 3. 5ம் வீட்டில் செவ்வாய். 5ம் அதிபதி புதன் 6ல் சூரியனுடன் அஸ்தமனம். 5ம் வீடு 6ம் வீட்டிற்கு உரிய புதன் சந்திரன் பரிவர்த்தனை. 4. 7ம் வீட்டில் களத்திரகாரகன் சுக்ரன். 7ம் வீட்டிற்கு குரு, செவ்வாய் பார்வை. 7ம் அதிபதி அந்த வீட்டிற்கு 12ல். 7ம் வீட்டில் 23 பரல். திருமண வாழ்க்கைக்கு கொடுப்பினை இல்லை. on Astrology: அடித்துத் துவைப்போம் வாருங்கள்!   
sellaprasad
---------------------------------------------------
3
ஒன்றில்- சனி வீட்டில் குரு- நல்ல நேர்மையான பன்பான ஜாதகர், லகினாதிபதி ஆட்சியானாலும் லக்கினத்திற்கு பணிரண்டில் மறைவு. அவர் / அவரின் நான் எடுபடாது. இரண்டாம் இடத்தான் குரு தனகாரகன் தனக்கு பணிரண்டில் மறைவு. அதுவும் சனியின் வீட்டில். - பெரிதாக சொல்ல ஒன்றும் இல்லை ஐந்தாம் வீட்டின் புதன் ஆறில் சூரியனை முழுங்கிய இராகுவுடன் அதில் நண்பனாக இருக்கப்பெற்ற சந்திரன் பாபகர்த்தாரி யோகமுடன் குழந்தை பாக்கியத்தை கெடுத்தான். ஏழாம் வீட்டின் சூரியன் இராகுவால் பாதிப்படைந்து அதற்க்கு பணிரண்டில் காணோம். அங்கு வந்த சுபமான வில்லன் சுக்க்ரன் பாவக காரக நாஸ்தி - திருமணம் நடைபெறாது / பெற்றாலும் வாழ்க்கை இல்லை. on Astrology: அடித்துத் துவைப்போம் வாருங்கள்!   
Thanga raj
--------------------------------------------------------
4
Respected Sir, 1.) Lagnatipathi sani aatchi petru 12-il valuvaga amarndhullar udan kethu. Lagnathil 2-m adhipathy guru avar avaradhu sondha veetirku 12-il.Kastangal niraindha penmanidhan. 2.) 2-m veetirku 12-m adhipathyin paarvai. kudumbam sthanam badippu. Thirumanam nadaipetru irukkadhu  appadi nadandhu irundhalum, kanavari parikoduthu iruppar kaaranam 7-m veetirku 8-m adhipathy avar veetirku 12-il amarvu. 3.) 5m veetirku guru paarvai irundhalum, 6-m adhipathy 5il amarvu kulandhaigal illamal irukkum. 4.) 7-m veetil sukran adhanal kaaragobhava naasthi and sooriyan lagnathirku 6-il and avar veetirku 12-il. Kudumba vaalkai illadha aanmiga maargathil ivargaladhu vaazhkai sendrirukkum. Thank You. on Astrology: அடித்துத் துவைப்போம் வாருங்கள்!   
Chandrasekharan
-----------------------------------------------------------
5
Sir, The native has no married life. Below are the reasons from the horoscope. 1) Except sukran all planets are within raagu& ketu. 2) Lagna lord and seventh lord are in their twelth houses. 2nd lord & 6th lord are also in 12th houses from their houses. 3) Seventh house is aspected by mars. 4) 7th lord is associated with 8th lord and raagu. Also aspected by saturn. The native may suffer from heart diseases and nerves problems. I wish, Guru in lagna and sukran in 7th house balanced the life with standing power. on Astrology: அடித்துத் துவைப்போம் வாருங்கள்!   
Ramasamy
--------------------------------------------------------------
ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்? முக்கியமான காரணத்தை மட்டும் இங்கே சொல்கிறேன். முழு அலசல் கேலக்கிசி2007 வகுப்பில் இன்று பதிவிட
வுள்ளேன்.
ஏழாம் வீட்டு அதிபதி அந்த வீட்டிற்குப் பன்னிரெண்டில் மறைவு. உடன் ஐந்து மற்றும் எட்டாம் வீட்டுக்காரன் புதன். அத்துடன் கேடு செய்யும் ராகுவின் கூட்டணி. மேலும் லக்கினாதிபதி சனீஷ்வரன் 12ல் மறைவு. உடன் கேடு செய்யும் கேதுவின் கூட்டணி. அவர்கள் இருவரின் பார்வையும் ஏழாம் வீட்டுக்காரனின் மேல்.அதனால் ஏழாம் வீட்டுக்காரன் முற்றிலுமாகக் கெட்டதுடன் ஜாதகிக்கும் திருமணத்தை நடத்தி வைக்காமல் படுத்துக் கொண்டு விட்டான்.

அன்புடன்
வாத்தியார்
==================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

2 comments:

  1. ////Blogger karuppiah Sakthi said...
    Sir
    Thank you for your reply////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com