மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

28.11.14

வாழ்வில் இடரேதும் எப்போதும் வாராது இருக்க என்ன செய்ய வேண்டும்?


வாழ்வில் இடரேதும் எப்போதும் வாராது இருக்க என்ன செய்ய வேண்டும்? 

பக்தி மலர்

இன்றைய பக்தி மலரை 'பத்மஸ்ரீ' சீர்காழி கோவிந்தராஜன் பாடிய
'பன்னிரு விழிகளிலே'’ என்னும்  முருகப் பெருமானின் பாடல் வரிகள் அலங்கரிக்கின்றன.  படித்து/பாடி மகிழுங்கள்.

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------
பன்னிரு விழிகளிலே ...
பன்னிரு விழிகளிலே ... பரிவுடன் ஒரு விழியால்
என்னை நீ பார்த்தாலும் போதும்
முருகா ...
பன்னிரு விழிகளிலே
வாழ்வில் இடரேதும் வாராது எப்போதும் 

ஷண்முகா ...

(பன்னிரு விழிகளிலே)

உன்னிரு பதம் நினைந்து ... அன்புடன் தினம் பணிந்து
முருகா ... முருகா ...
உன்னிரு பதம் நினைந்து ... அன்புடன் தினம் பணிந்து
திண்ணமாய் போற்றும் என்பால்
நின் திரு உள்ளம் கனிந்து 

(பன்னிரு விழிகளிலே)

பன்னக சயனன் மகிழ்ந்திடும் மருகா
பாரோர் புகழ்ந்து போற்றிடும் குமரா 
வண்ணமயில் ஏறும் வடிவேல் அழகா 
வள்ளி தெய்வானையுடன் காட்சி தரும் முருகா
வள்ளி தெய்வானையுடன் காட்சி தரும் ஆறுமுகா
(பன்னிரு விழிகளிலே)

வாழ்வில் இடரேதும் வாராது எப்போதும்
முருகா ...
பன்னிரு விழிகளிலே ... பரிவுடன் ஒரு விழியால்
என்னை நீ பார்த்தாலும் போதும்.

பாடலைப் பாடியவர்: 'பத்மஸ்ரீ' சீர்காழி கோவிந்தராஜன்
=============================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

27.11.14

அடடே கைச் சொடுக்கிலேயே இத்தனை தொடர்புகளை வைத்துக்கொள்ளலாமா?அடடே கைச் சொடுக்கிலேயே இத்தனை தொடர்புகளை வைத்துக்கொள்ளலாமா?

ஆமாம்!

உங்கள் மொபைல் போனில் சேமித்து வைத்திருக்க வேண்டிய  
முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள் !!

பேருந்துகள் சரியான நேரத்திற்கு வராதது, நடத்துநர் மீதி
சில்லரையைக் கொடுக்காதது அல்லது குடித்து விட்டோ,
செல்போன் பேசிக்கொண்டோ ஓட்டுநர் பேருந்தை ஓட்டுவது
போன்ற புகார்களுக்கு :— 93833 37639

பொருட்கள் வாங்கும் கடைகளில் ஏமாற்றப்படுகிறீர்கள்
என்றால் மாநில நுகர்வோர்க்கு:- Toll Free No :-
180011400,, 94454 64748,, 72999 98002,, 72000 18001,, 044- 28592828

மனரீதியாக பாதிக்கப்பட்ட,ஆதரவற்ற பெண்களைப்
பாதுகாக்க:- 044 – 26530504 / 26530599

வாடகைத் தாய்களாகப் போய், புரோக்கர்களிடம்
ஏமாறும் பெண்கள்– 044- 26184392 / 9171313424

ரயில் பயணங்களின்போது பெண்களுக்கு ஆபத்து
ஏற்பட்டால்: 044- 25353999 / 90031 61710 / 99625 00500

ஆட்டோவில் அளவுக்கதிகமான குழந்தைகளை
ஏற்றிச்சென்றால் —044-24749002 / 26744445

சென்னைக் கல்லூரிகளில் ராக்கிங் என்ற 95000 99100 ( SMS )
மனிதஉரிமைகள் ஆணையம் ————-––044-22410377
மாநகரபேருந்தில அத்துமீறல்————–—-09383337639
போலீஸ் SMS :- —————————————-9500099100
போலீஸ் மீது ஊழல் புகாருக்கு SMS :—-—-9840983832
போக்குவரத்து விதிமீறல் SMS : ———-—–98400 00103
வங்கித் திருட்டு உதவிக்கு ———————-9840814100
வன்கொடுமை, பாலியல் ரீதியாக ———-044-28551155
பெண்களுக்கான உதவி : ——-—-–———- 044-23452365
தமிழ்நாடு மகளிர் ஆணையம் ————— 044-25264568
விலங்குகள் பாதுகாப்பு ———————— 044 – 22354959 / 22300666
போலீஸ் : —————————————–——100
தீயணைப்புத்துறை :————————-—– 101
ஆம்புலன்ஸ் : —————————————-102, 108
போக்குவரத்து விதிமீறல———————–103
விபத்து :———————————————-– 100, 103
பெண்களுக்கான அவசர உதவி : ——-—-–1091
குழந்தைகளுக்கான அவசர உதவி :——-–1098
அவசர காலம் மற்றும் விபத்து : ———-—1099
முதியோர்களுக்கான அவசர உதவி:—-—1253
தேசியநெடுஞ்சாலையில் அவசர உதவி:1033
கடலோர பகுதி அவசர உதவி : ———-—–1093
ரத்த வங்கி அவசர உதவி : —————-—–1910
கண் வங்கி அவசர உதவி : —————-—–1919

நமது அலைபேசியில் 911 என்ற எண் மட்டும் எந்த நிலையிலும்
எப்போதுமே, எல்லா மாநிலம், எல்லா தேசத்திலும் இயங்கும்
.
நமது அலைபேசி லாக்கில் இருந்தாலும், இந்த எண்கள் மட்டும்
இயங்கும்.இது அனைத்திற்குமான அவசர உதவி எண்.

THANKS TO VOICE OF PEOPLE
---------------------------------
WhatsAppல் வந்தது. உங்களுக்கு அவற்றை இன்று அறியத் தந்துள்ளேன்
.
அன்புடன்
வாத்தியார்
================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

25.11.14

மனதைத் தட்டும் மருத்துவக் கவிதை!


மனதைத் தட்டும் மருத்துவக் கவிதை...

 மருத்துவமுறையை மாற்றுங்கள்...டாக்டர்...

வாயைத்திற என்பீர்கள்!
வயிறு தெரியும்படி வாய்திறப்போம்!

நாக்கைநீட்டு என்பீர்கள்!
கல்கத்தா காளியாய் நாக்கை நீட்டுவோம்!

முதுகைத்திருப்பி மூச்சிழு என்பீர்கள்!
அப்போதுதான் உண்மையாய் சுவாசிப்போம்!

அவ்வளவுதான்!
அஞ்சேல் என்று அருள்வாக்கு சொல்வீர்கள்!

வாசிக்கமுடியாத கையெழுத்தில்
வாயில்வராத பெயரெழுதி காகிதங்கிழிப்பீர்கள்!

மூன்றுவேளை... என்னும் தேசியகீதத்தை
இரண்டேவார்த்தையில் பாடி முடிப்பீர்கள்!

போதாது டாக்டர்!
எங்கள்தேவை இதில்லை டாக்டர்!

நோயாளி, பாமரன்! சொல்லிக்கொடுங்கள்!
நோயாளி, மாணவன்! கற்றுக்கொடுங்கள்!

வாய்வழி சுவாசிக்காதே!
காற்றை வடிகட்டும் ஏற்பாடு
வாயிலில்லையென்று சொல்லுங்கள்!


சுவாசிக்கவும்
எத்துணை பாமரர் இஃதறிவார்?
சுவாசிக்கப்படும் சுத்தக்காற்று
நுரையீரலின் தரைதொடவேண்டும்!
தரையெங்கேதொடுகிறது?
தலைதானேதொடுகிறது!
சொல்லிக்கொடுங்கள்!

சாராயம் என்னும் திரவத்தீயைத்தீண்டாதே!
கல்லீரல் எரிந்துவிடும்!
கல்லீரல் என்பது கழுதை!
பாரஞ்சுமக்கும்
படுத்தால் எழாது!
பயமுறுத்துங்கள்!

ஒருகால்வீக்கம்?
உடனேகவனி!
யானைக்காலின் அறிகுறி!
இருகால்வீக்கம்?
இப்போதேகவனி!
சிறுநீரகத்தில் சிக்கலிருக்கலாம்!

வாயிலென்ன ஆறாதப்புண்ணா?
மார்பகப்பரப்பில் கரையாதக்கட்டியா?

ஐம்பதுதொட்டதும் பசியேயில்லையா?
சோதிக்கச்சொல்லுங்கள்!

அறியாத புற்றுநோய்
ஆனா ஆவன்னாவெழுதியிருக்கலாம்!

நோயாளியை துக்கத்திலிருந்து
துரத்துங்கள் டாக்டர்!

நோயொன்றும் துக்கமல்ல!
அந்நியக்கசடு வெளியேற
உடம்புக்குள் நிகழும்
உள்நாட்டு யுத்தமது!

சர்க்கரையென்பது வியாதியல்ல!
குறைபாடென்று கூறுங்கள்!

செரிக்காதவுணவும்
எரிக்காதசக்தியும்
சுடுகாட்டுத்தேரின்
சக்கரங்களென்று
சொல்லுங்கள் டாக்டர்!

ஊமை ஜனங்களிவர்
உள்ளொளியற்றவர்!
பிணிவந்து இறப்பினும்
முனிவந்து இறந்ததாய் முணங்குவர்!


சொல்லிக்கொடுங்கள்!
யோகம் என்பது வியாதி தீர்க்கும்
வித்தையென்று சொல்லுங்கள்!

உயிர்த்தீயை உருட்டியுருட்டி
நெற்றிப்பொட்டில் நிறுத்தச்சொல்லுங்கள்!

உணவுமுறை திருத்துங்கள்!
தட்டில்மிச்சம் வைக்காதே!
வயிற்றில்மிச்சம்வை!

பசியோடு உட்கார்!
பசியோடு எழுந்திரு!
சொல்லுங்கள் டாக்டர்!

அவிக்காத காய்களே
அமிர்தமென்று சொல்லுங்கள்!
பச்சையுணவுக்கு
பாடம் நடத்துங்கள்!

மருந்தையுணவாக்காதே!
உணவை மருந்தாக்கு!

மாத்திரைச்சிறைவிட்டு
மனிதனே வெளியேவா!

கோணாத ஒருவன்
கூனனானான்! ஏனாம்?
அவன் டப்பாவுணவுகளையே
உட்கொண்டதுதானாம்!

ஒருவனுக்கு
விஷப்பாம்பு கடித்தும்
விஷமில்லை! ஏனாம்?
அவன் உப்பில்லாவுணவுகளையே
உட்கொண்டதுதானாம்!

ஆரோக்கிய மனிதனுக்குத்தேவை
அரைகிராம் உப்புதானே!

மனிதா...
உப்பைக் கொட்டிக்கொட்டியே
உயிர் வளர்க்கிறாயே!

செடிகொடியா நீ?
சிந்திக்கச்சொல்லுங்கள்!

உண்மை இதுதான்!

மனிதனைத்தேடி மரணம்வருவதில்லை!
மரணத்தைத்தேடியே மனிதன் போகிறான்!

டாக்டர்...
எல்லாமனிதரையும்
இருகேள்விகேளுங்கள்!
"பொழுது மலச்சிக்கலில்லாமல் விடிகிறதா?
மனச்சிக்கலில்லாமல் முடிகிறதா?"
-கவிஞர் வைரமுத்து

#இந்தப்பூக்கள் விற்பனைக்கல்ல
இணையத்தில் படித்தது.
நன்றாக இருந்ததால் நீங்கள் அறியத் தந்துள்ளேன்!

அன்புடன்,
வாத்தியார்
==========================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

24.11.14

திரையிசை: சந்திரனையும் சூரியனையும் அஞ்சல்காரர்களாக்கிய கவிஞர்


திரையிசை: சந்திரனையும் சூரியனையும் அஞ்சல்காரர்களாக்கிய கவிஞர்

ரசித்த திரையிசைப் பாடல்

காதல் பாடல்களை எத்தனை எத்தனை ரசனையுடனும்,
கற்பனையுடனும் கவிஞர்கள் எழுதிக் கலக்கியுள்ளார்கள்.
அப்படி நல்ல வளமான கற்பனையுடனும், எளிமையான
வரிகளுடனும் அமைந்த பாடல் ஒன்றின் வரிகளையும்,
காணொளியையும் இன்று பதிவிட்டுள்ளேன். கச்சிதமான
இசையமைப்புடன் கண்ணையும் உள்ளத்தையும் கவரும்
விதமாகப் பாடல் படமாக்கப்பட்டுள்ளது,

அனைவரும், கேட்டு, பார்த்து மகிழுங்கள்,

அன்புடன்,
வாத்தியார்
-----------------------------------
காதல் கடிதம் தீட்டவே
மேகம் எல்லாம் காகிதம்
வானின் நீலம் கொண்டு வா
பேனா மையோ தீர்ந்திடும்

சந்திரனும் சூரியனும்
அஞ்சல் காரார்கள்
இரவு பகல் எப்பொழுதும்
அஞ்சல் உன்னை சேர்ந்திடும்

காதல்…

கடிதத்தின் வாரத்தைகளில்
கண்ணா நான் வாழ்கின்றேன்
பேனாவில் ஊற்றி வைத்தது
எந்தன் உயிரல்லோ ?

பொன்னே உன் கடிதத்தை
பூவாலே திறக்கின்றேன்
விரல் பட்டால் உந்தன்
ஜீவன் காயம் படுமல்லோ

அன்பே உந்தன் அன்பில்
ஆடிப் போகின்றேன்
செம்பூக்கள் தீண்டும் போது
செத்துச் செத்து பூப்பூக்கின்றேன்

காதல்…

கண்ணே உன் கால் கொலுசில்
மணியாக மாட்டேனா?
மஞ்சத்தில் உறங்கும் போது
சிணுங்க மாட்டேனா?

காலோடு கொலுசல்ல
கண்ணோடு உயிரரானாய்
உயிரே நான் உறங்கும்போது
உறங்க மாட்டாயா?

தப்பு செய்ய பார்த்தால்
ஒப்புக் கொள்வாயா?
மேலாடை நீங்கும் போது
வெட்கம் என்ன முந்தானையா ?

காதல்…
----------------------------------------
"கண்ணே உன் கால் கொலுசில்
மணியாக மாட்டேனா?
மஞ்சத்தில் உறங்கும் போது
சிணுங்க மாட்டேனா?"  என்ற வரிகள் பாடலின் முத்தாய்ப்பான வரிகள்
-----------------------------
படம் : ஜோடி (1999)
பாடல் : காதல் கடிதம் தீட்டவே
பாடலாசிரியர் : வைரமுத்து
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
பாடியவர்கள் : எஸ் ஜானகி, உன்னி மேனன்
நடிப்பு: பிரசாந்த், சிம்ரன்
-------------------------------------
பாடலின் காணொளி வடிவம்:


our sincere thanks to the person who uploaded the clipping in the net
======================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

Astrology: உடற்குறைபாடுகள்


Astrology: உடற்குறைபாடுகள்

எல்லா ஜாதகங்களிலுமே யோகங்கள் இருக்கும். ராஜயோகம்,
அவயோகம் என்று அவற்றை வகைப்படுத்தலாம். அதிர்ஷ்டத்தைத்
தரும் யோகம் என்றால் மனம் துள்ளும். மகிழும். அதே நேரத்தில்
அவயோகம் என்றால் மனம் துவளும். துன்பம் கொள்ளும்,
இரண்டையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும்.

இந்த உடற்குறைபாடுகள் அவயோகக் கணக்கில் வரும்.

சிலருக்குப் பிறக்கும்போதே உடற்குறைபாடுகள் இருக்கும்.
சிலருக்கு வாழ்க்கையின் நடப்பில் அல்லது போக்கில் உண்டாகும். விபத்துக்களால் உண்டாகும்.

1. சந்திரன் 10ல், செவ்வாய் 7ல் சூரியன் 2ல் இருக்கும் ஜாதகனுக்கு உடற்குறைபாடு இருக்கும்

2. செவ்வாய் லக்கினத்தில் இருப்பதுடன் அவர் சனி, மற்றும் செவ்வாயின் பார்வையும் பெற்று இருந்தால், ஜாதகனுக்கு உடற்குறைபாடு இருக்கும்.

3 சந்திரன் 10ல், செவ்வாய் 7ல், சூரியன் இருக்கும் வீட்டிற்கு 2ல் சனி
இருக்கப் பிறந்த ஜாதகனுக்கு  உடற்குறைபாடு இருக்கும்.

4. கேந்திரங்களில் தீய கிரகங்கள் இருந்தால், ஜாதகனுக்கு உடற்
குறைபாடு இருக்கும்

5. சனி 7ல் இருக்க, செவ்வாயுடன் ராகு சேர்க்கை பெற்றிருந்தாலோ
அல்லது செவ்வாய் நீசம் பெற்று பல வீனமாக இருந்தாலோ,
ஜாதகனுக்கு உடற்குறைபாடு இருக்கும்.

6. செவ்வாய் 5 அல்லது 9ஆம் இடத்தில் இருந்து தீய கிரகங்களின்
பார்வை பெற்றிருந்தால், ஜாதகனுக்கு உடற்குறைபாடு இருக்கும்

7. சுக்கிரனும், சூரியனும் ஒன்றாக 5 அல்லது 7 அல்லது 9ல் இருக்கும் அமைப்புள்ள ஜாதகனின் மனைவி உடற்குறைபாடு உள்ளவளாக
இருப்பாள்.

8. ஆறாம் வீடு பாதிக்கப்பெற்று ஆறில் அமர்ந்திருக்கும் கிரகமும் பாதிக்கப்பெற்றிருந்தால் ஜாதகனுக்கு உடற்குறைபாடு இருக்கும்

இவை அனைத்தும் பொது விதிகள். ஜாதகத்தில் உள்ள மற்ற
கிரகங்கள், அதாவது சுபக்கிரகங்களின் அமைப்பை வைத்து,
இந்தக் குறைபாடு இல்லாமலும் போகலாம். ஆகவே அதையும்
மனதில் கொள்ளுங்கள்
-----------------------------------------------------------
சென்ற வாரம் உடல் நலமின்மை காரணமாக இரண்டு நாட்கள்
வகுப்பறை நடைபெறவில்லை. அந்த 2 நாட்களுக்குரிய பாடங்கள்
இந்தவாரம் சேர்த்துப் பதிவிடப் பெறும். ஆகவே பொறுத்திருந்திருந்து படியுங்கள்

அன்புடன்
வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

20.11.14

Astrology: நோய்கள் மற்றும் பிணிகள்


Astrology: நோய்கள் மற்றும் பிணிகள்

(நேற்று வகுப்பறைக்கு வாத்தியாரால் வரமுடியவில்லை. உடல் நலமின்மை காரணம். நேற்றுக்கு முன் தினம் நிறைய இடங்களில் விருந்து. அதில் கலந்து கொண்டதில் எங்கோ ஒரு இடத்தில் Food poison ஆகிவிட்டது. மூன்று நான்கு முறை பலமான vomit ஆகி படுக்கையில் இருக்கும்படியாகிவிட்டது. வைத்தியம் செய்து இப்போது பூரண நலம். ஆகவே வாத்தியார் சொல்லாமல் விடுப்பு எடுத்தமைக்கு அனைவரிடமும் மன்னிப்புக் கோருகிறேன்)

நோய் என்பது மாத்திரை மருந்துகளால், மருத்துவத்தால், தீர்க்கக்கூடியது. பிணி என்பது தொடர்ந்து நம்மை உபத்திரவங்களுக்கு உள்ளாக்குவது. உதாரணம், ஆஸ்த்மா, இரத்தக்கொதிப்பு, மற்றும் சர்க்கரை நோய். Chronic Diceseas  என்று வைத்துக்கொள்ளுங்கள்

உடல் அமைப்பில் ஒவ்வொரு கிரகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகள்

1. சூரியன் - தலைப் பகுதி
2. சந்திரன் - முகம், கண்கள்
3. செவ்வாய் - கழுத்து, கால்கள்
4. புதன் - காதுகள், தோல்கள்
5. குரு - மூக்கின் உட்பகுதி மற்றும் சுவாசக் குழாய்கள், வயிறு
6. சுக்கிரன் - பிறப்பு உறுப்புகள்
7. சனி - கைகள்
8. லக்கினாதிபதி - உடல் மொத்தமும் (whole body)

லக்கினம், சந்திரன், மற்றும் புதன் ஆகிய மூவரும் சனி & ராகுவால் பாதிக்கப்பெற்றிருந்தால், ஜாதகனுக்கு இரத்தம் மற்றும் தோல் சம்பந்தமான நோய்கள் உண்டாகலாம்.

இன்னும் சற்று விவரமாகப் பார்க்கலாம்.

உடல் உறுப்புக்களைக் கட்டுப் படுத்தும் ராசிகள்

மேஷம் - தலை
ரிஷபம் - முகம்
மிதுனம் - மார்பு
கடகம் - இதயம்
சிம்மம் - வயிறு
கன்னி - இடுப்பு
துலாம் - அடி வயிறு
விருச்சிகம் - பிறப்பு உறுப்புக்கள்
தனுசு - தொடைகள்
மகரம் - மூட்டுகள்
கும்பம் - Buttocks
மீனம் - கணுக்கால், பாதங்கள்

அதுபோல ஒவ்வொரு வீடுகளுக்கான உடற்பகுதிகள்

லக்கினம் - தலை, மூளை
இரண்டாம் வீடு - முகம், கண்கள், காதுகள், மூக்கு, பற்கள், நகங்கள்
மூன்றாம் வீடு - கழுத்து, தொண்டை, கழுத்து எழும்புகள், கைகள், சுவாசம்.
நான்காம் வீடு - இதயம், நுரையீரல், மார்பு, இரத்தம்.
ஐந்தாம் வீடு - மேல்வயிறு, Mind
ஆறாம் வீடு - அடிவயிறு, தொடைக்கும் இடுப்பிற்கும் இடைபட்ட பகுதிகள் (Navel),  எழும்புகள், சதை
ஏழாம் வீடு - விந்து, இனப் பெருக்க உறுப்புகள்
எட்டாம் வீடு - மலம், மூத்திரம்.
ஒன்பதாம் வீடு - தொடைகள், இணைப்பு எழும்புகள்
பத்தாம் வீடு - கணுக்கால், பாதம், எழும்புகள், சதைகள்
பதினொன்றாம் வீடு - சுவாசம்
பனிரெண்டாம் வீடு - கால்கள்

இரண்டாம் வீட்டில் இருந்து ஆறாம்வீடு வரை உள்ள பகுதி உடலின் வலது பக்கத்தையும், 12ல் இருந்து 8 ஆம் வீடு வரை (பின் நோக்கிப் பார்க்கவும்) உள்ள பகுதிகள் உடலின் இடது பக்கத்தையும் ஆளுகின்றன!

அந்தந்த கிரகங்களுக்கான அல்லது வீட்டு அதிபதிகளுக்கான தசாபுத்தி நடைபெரும் போது நன்மையான அல்லது தீமையான பலன்கள் நடைபெறும்

அன்புடன்
வாத்தியார்
=======================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

18.11.14

Astrology: ஜாதகங்களில் உள்ள சிக்கல் என்ன?


Astrology: ஜாதகங்களில் உள்ள சிக்கல் என்ன? 

அடிப்படை விதிகள்

எல்லா செயல்களுக்குமே சில அடிப்படை விதிகள் உண்டு.

நான்கு பேர்களுக்கு சமையல் செய்து பறிமாறுவதற்கு சில அடிப்படை விதிகள் உண்டு. முதலில் சமையல் செய்பவர் அதில் ஒரு முறையான அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும். சமையல் செய்வதற்கு உரிய அரிசி, பருப்பு, மளிகைச் சாமான்கள், காய்கறிகள், முக்கியமாக அடுப்பு, எரிபொருள் போன்ற சாமான்கள் மற்றும் தேவையான உபகரணங்கள், சாதனங்கள் வேண்டும்.

ஒரு ஜாதகத்தைப் பார்த்துப் பலன் சொல்வதற்கும் சில அடிப்படைவிதிகள் மற்றும் அடிப்படைத் தகுதிகள் உள்ளன!

ஒவ்வொரு ஜாதகமும், 12 ராசிகள், 12 வீடுகள், ஒன்பது கிரகங்கள், 27 நட்சத்திரங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை என்றாலும் அவைகள் எண்ணற்றை ஜாதகங்களை உருவாக்கிக் கொடுப்பவை. பிறந்த இடம், பிறந்த நேரம் ஆகியவற்றை வைத்து அவைகள் ஒன்றுக்கொன்று மாறுபட்டவை. மாறுபட்ட அம்சங்களைக் கொண்டவை. மாறுபட்ட பலன்களைக் கொடுக்கக் கூடியவை.

ஒரு ஜாதகத்தில் உள்ள மேன்மைகளையும், சிக்கல்களையும் அறிந்து சொல்வதற்கு ஜோதிட அறிவும், பல ஜாதகங்களைப் பார்த்துப் பலன்சொல்லிய அனுபவமும் முக்கியமானதாகும். அது ஒரு வாரத்திலோ அல்லது ஒரு மாதத்திலோ அல்லது ஒரு ஆண்டிலோ கிடைத்துவிடாது. பொறுமையாகத் தொடர்ந்து கற்றுக்கொள்வதன் மூலமே அது வசப்படும்.

எந்த ஒரு கலைக்குமே அது பொருந்தும். அதாவது அந்தத் தொடர் முயற்சியும், கற்றுத் தேரும் தன்மையும் அவசியமாகும்.

அந்த அடிப்படை விதிகளை இரண்டுவிதமாகப் பிரிக்கலாம்.

முதன்மை விதிகள். உபவிதிகள் என்று அவற்றைப் பிரித்துப் பார்க்க வேண்டும்.

ஐந்தாம் வீடு, ஐந்தாம் வீட்டின் அதிபதி, காரகன் குரு ஆகிய மூவரும் கெட்டிருந்தால், ஜாதகனுக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்பது அடிப்படை விதி.

அதே நேரத்தில் ஐந்தாம் வீட்டில் சுபகிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை, அத்துடன் ஐந்தாம் வீட்டில் 30ற்கும் மேற்பட்ட அஷ்டகவர்க்கப்பரல்கள் இருந்தால் ஜாதகனுக்குக் குழந்தை உண்டு, ஆகவே உப விதிகளையும் பார்த்துப் பலன் சொல்ல வேண்டும். ஜாதகம் பார்த்துப் பலன் சொல்வதில் உள்ள சிக்கல் அதுதான்.

உப விதிகளும் கை கொடுக்க வில்லை என்றால் மட்டுமே ஜாதகனுக்குக் குழந்தை இருக்காது.

வயிற்றில் வலி இருந்தால் அதை அப்பென்டிக்ஸ் என்று எப்படி நினைக்க முடியும்? அது சாதாரண வயிற்று உபாதையாகக்கூட இருக்கலாம். ஒரு ஸ்பூன் சீரகம் சாப்பிட்டால், நீங்கிவிடக்கூடிய சாதாரண gas trouble வலியாகக்கூட இருக்கலாம். ஒரு இடத்தில் ராகு இருப்பதை வைத்து மட்டும் எந்தவொரு முடிவிறகும் வரக்கூடாது. மற்ற கிரகங்களையும் அலச வேண்டும். அவற்றிற்கு ராகுவுடன் உள்ள தொடர்பையும் வைத்து சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இரண்டாம் வீட்டில் சனி இருந்தால், கையில் காசு தங்காது என்று எப்படிச் சொல்ல முடியும். சனி அமர்ந்திருக்கும் இடத்தின் அதிபதி நவாம்சத்தில் உச்சம் பெற்றிருந்தால் ஜாதகன் செல்வந்தனாக இருப்பான். உதாரணம் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் ஜாதகம்.

ஆகவே முதன்மை விதிகளை வைத்து மட்டும் முடிவிற்கு வராதீர்கள். உப விதிகளையும் பாருங்கள். பிறகு பலன்களைப் பற்றி யோசியுங்கள்

அன்புடன்
வாத்தியார்
====================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

14.11.14

வஞ்சத்தை வெல்லும் வழி!


வஞ்சத்தை வெல்லும் வழி!

பக்தி மலர்

இன்றைய பக்தி மலரை திருமதி. பி.சுசீலா அவர்கள் பாடிய முருகப் பெருமானின் பாடல் வரிகள் நிறைக்கின்றன. அனைவரும் படித்து மகிழுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்
--------------------------------------------------
ஆறெழுத்தில் ஒரு மந்திரமாம்
அனுதினம் ஓதிடும் மந்திரமாம் 
ஆறுதல் தந்திடும் மந்திரமாம்
சரவணபவ எனும் மந்திரமாம்

ஆறெழுத்தில் ஒரு மந்திரமாம்
ஆறுமுகம் தரும் மந்திரமாம் 
நல்ல ... அறிவை வளர்க்கும் மந்திரமாம்
ஆறுபடையின் திரு மந்திரமாம் 

நல்ல ... அன்பை வளர்க்கும் மந்திரமாம்
ஆறெழுத்தில் ஒரு மந்திரமாம்
நெஞ்சில் நினைக்கும் மந்திரமாம்
நல்ல ... நீதியைக் காக்கும் மந்திரமாம்

அஞ்செழுத்தால் பெற்ற மந்திரமாம் 
நல்ல ... அறநெறி காட்டும் மந்திரமாம்
ஆறெழுத்தில் ஒரு மந்திரமாம்

வஞ்சத்தை வெல்லும் மந்திரமாம்
நல்ல ... வாழ்வை தந்திடும் மந்திரமாம்
வேலும் மயிலும் தொழும் மந்திரமாம் 
நல்ல ... வெற்றிகள் தந்திடும் மந்திரமாம்

ஆறெழுத்தில் ஒரு மந்திரமாம்
அனுதினம் ஓதிடும் மந்திரமாம்
ஆறுதல் தந்திடும் மந்திரமாம்
சரவணபவ எனும் மந்திரமாம்

(ஆறெழுத்தில் ஒரு மந்திரமாம்.)
-------------------------------------
பாடியவர்: திருமதி P. சுசீலா  அவர்கள்
பாடல் வரிகள்:  பாரதிசாமி
இசை:  குன்னக்குடி வைத்தியநாதன்

===========================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

13.11.14

எங்கே போனாலும் உருப்படுவதற்கு என்ன வழி?


கவியரசர் கண்ணதாசனும் இசையமைப்பாளர்  M.S.V யும்

எங்கே போனாலும் உருப்படுவதற்கு என்ன வழி?

கடைசி பெஞ்ச் மாணவன் என்று,  எனக்குக் கடிதம் எழுதும்போது சிலர் குறிப்பிடுகிறார்கள்

கடைசி பெஞ்சுன்னா என்ன? அதனால ஒன்னும் தப்பில்லை! எங்கள் ஊரில் இருக்கும் பள்ளிக்கூடத்தில்தான் கண்ணதாசன் படித்தார். அதாவது எங்கள் ஊரான தேவகோட்டையில் இருந்து காரைக்குடி செல்லும் பிராதான சாலையில் 9 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் அமராவதிபுதூர் சுப்பிரமணியன் செட்டியார் குருகுல பள்ளிக்கூடத்தில்தான் கவியரசர் கண்ணதாசன் படித்தார். உடை, தங்கும் இடம், உணவு, படிப்புக் கட்டணம் என்று எல்லாவற்றிற்கும் சேர்த்து பதிமுன்று ரூபாய்தான் கட்டணம்.

இப்போது, அதாவது இன்றைய விலைவாசியில், அந்தப் பதிமூன்று ரூபாய்க்கு ஒரு காப்பிகூட சாப்பிடமுடியாது. 70 ஆண்டுகளுக்கு முற்பட்ட நிலைமை அது. எங்கள் ஊர் அன்னபூர்ணா ஹோட்டலில் காப்பியின் விலை ரூ.25:00

படிக்கின்ற காலத்தில் அவரும் கடைசி பெஞ்சு மாணவன்தான். எட்டாம் வகுப்பு வரை படித்ததோடு நின்றுவிட்டார் (வருடம் 1943). அதாவது பள்ளியில் படிக்கின்ற காலத்தில் இரவு நேரங்களில் விடுதியில் இருந்து வெளிவந்து, சுவர் ஏறிக்குதித்து, நண்பர்களுடன் சேர்ந்து சினிமாவிற்குச் செல்லும் ஆசையினால் அவ்வாறு செய்தார். பள்ளியில் இருந்து 7 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் காரைக்குடிக்குச் செல்ல வேண்டும். சினிமா பார்ப்பதற்காக பலமுறை அவர் அப்படிச் சென்றிருக்கிறார். விடுதி காப்பாளாரிடம் மாட்டியும் இருக்கிறார். பலமுறை எச்சரித்திருக்கிறார்கள். கடைசியில் ஒருநாள் பள்ளியை விட்டே வலுக்கட்டாயமாக அனுப்பி விட்டார்கள். அப்போது கவிஞருக்கு வயது 15.

பள்ளியைவிட்டு வரும்போது அங்கேயிருந்த வாத்தியாரும் மேலாளருமான சுப்பிரமணியன் என்பவர், கண்ணதாசனுக்குக் கொடுத்த சர்ட்டிஃபிகேட்
என்ன தெரியுமா? "நீ எங்கு போனாலும் உருப்படமாட்டே!" என்பதேயாகும்.

கண்ணதாசனுக்கு பள்ளியில் கிடைத்த சான்றிதழ் விவரம் அவருடைய மனவாசம் புத்தகத்தில் உள்ளது. முடிந்தால் அந்த நூலை வாங்கிப் படித்துப் பாருங்கள். அசத்தலாக இருக்கும். அது அவருடைய சுயசரித நூல்.

பல வாத்தியார்களுக்கு சொல்பலிதம் இல்லை. கண்ணதாசன் பின்நாளில் நாடேபோற்றும் கவிஞரானார்.


சரி சொல்லவந்த விஷயத்திற்கு வருகிறேன்

கவியரசர் பலே பாண்டியா திரைப்படத்திற்கு எழுதிய ‘ வாழநினைத்தால் வாழலாம்’ பாடலைக் கேட்டுவிட்டு, ரசிகர் ஒருவருக்கு ஒரு சந்தேகம் வந்தது. அதாவது நெனைக்குறபடி எல்லாம் நடந்தாத்தான் வாழலாமா? இல்லேன்னா செத்துவிட வேண்டுமா?’ என்ற சந்தேகம்.

கவியரசர் எப்பொழுதுமே படத்தில் வரும் காட்சி களுக்குரிய சூழ்நிலைக்குத்தான் பாட்டை எழுதுவார்

படத்தில் என்ன சூழ்நிலை?

வண்ணப்பறவை போன்ற கதாநாயகி, நாயகனைப் பார்த்துச்சொல்கின்றார்:

"பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்
பார்த்து நடந்தால் பயணம் தொடரும்
பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்
கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்"

உடனே நாயகன் பார்க்கச் சொன்னவளையே பார்க்கிறான். உடனே நினைக்கிறான் இந்த வண்ணப் பறவையே கிடைத்தால் போதுமே என்று நினைத்து உடனே அவளிடமே ஒரு மனுவைக் கொடுக்கும் முகமாக தன் பாடல் வரிகளில் சொல்கிறான்

"கண்ணில் தெரியும் வண்ணப் பறவை
கையில் கிடைத்தால் வாழலாம்
கருத்தில் வளரும் காதல் எண்ணம்
கனிந்து வந்தால் வாழலாம்
கன்னி இளமை என்னை அணைத்தால்
தன்னை மறந்தே வாழலாம்"

ஆமாம் அவள் கிடைத்தாள் போதாதோ? வாழ்க்கையில் உள்ள சோகங்களையெல்லாம் மறந்துவிட்டு வாழலாம் என்று நினைத்தான் போலும்.

அதைத்தான் கவியரசர் அந்த சுழ்நிலைக்குச் சொல்லியிருக்கிறார்.

இல்லாவிட்டால், செத்துவிடு என்று கண்ணதாசன் சொல்லவில்லையே?

சொந்த வாழ்க்கையில் கண்ணதாசன் ஒரு பெண்ணைக் காதலித்துக் காதல் கைகூடாமல் போனவர். அதற்காக அவர் கவலைபட்டு நொடிந்து போகவில்லையே?

அவர் எழுதிய அத்தனை பாட்டுக்களுமே படத்தின் சூழ்நிலைக்கு மட்டுமே எழுதப்படடதாகும். சில பாடல்கள் படத்தின் சூழ்நிலையையும், அவருடைய சொந்த வாழ்க்கையின் அனுபவத்தையும் பிரதிபலிப்பதாக இருக்கும். அது இயற்கையே!

இதை நான் என்னுடைய பல பதிவுகளில் மாய்ந்து மாய்ந்து விளக்கி எழுதியுள்ளேன்
----------------------------------------------
காதலைப் பற்றி இன்னொரு படத்தில் கவியரசர் இப்படியெழுதினார்:

"பருவம் வந்த அனைவருமே காதல் கொள்வதில்லை
காதல் கொண்ட் அனைவருமே மணம் முடிப்பதில்லை
மணம் முடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை
சேர்ந்து வாழ்ந்த அனைவருமே சேர்ந்து போவதில்லை!"

இது அந்தப் படத்திற்காக எழுதியது.

கவிஞர்கள் எப்பொழுதுமே இப்படித்தான். சூழ்நிலைக்கு, உணர்வு வயப்பட்டு அப்போது தங்கள் மனதில் தோன்றுவதை எழுதிவிடுவார்கள்!

ஒரு கவிஞன் எழுதினான்

"மாடு (wealth) மனை (house) போனாலென்ன
மக்கள் சுற்றம் போனாலென்ன
கோடி செம்பொன் போனாலென்ன - உன்
குறுநகை ஒன்று போதும்!"

என்று தன் காதலிக்கு அவன் எழுதிக் கொடுத்தானாம். குறுநகை மட்டும் இருந்தால் போதுமா? Roti, Kapata, makanற்கு என்ன செய்வதாம்?

செத்துவிடு என்று எந்தக் கவிஞனுமே சொல்ல மாட்டான். சொன்னால் அவன் கவிஞனல்ல!

வேறு ஒரு கவிஞன் எழுதினான்

"அனைக்க - ஒரு 
அன்பில்லாத மனைவி
வளர்க்க - இரு 
நோயுற்ற சேய்கள்
பிழைக்க - ஒரு 
பிடிப்பில்லாத தொழில் - ஆனாலும்
ஏனோ இன்னும் உலகம் கசக்கவில்லை!"

அதுதான் வாழ்க்கை!

கண்ணதானும் வாழ்க்கையைப் பற்றி நான்கே வரிகளில் அற்புதமாக எழுதியுள்ளார்.

"இரவும்வரும் பகலும்வரும் உலகம் ஒன்றுதான்
உறவும்வரும் பகையும்வரும் இதயம் ஒன்றுதான்
பெருமைவரும் சிறுமைவரும் பிறவி ஒன்றுதான்
வறுமைவரும் செழுமைவரும் வாழ்க்கை ஒன்றுதான்"

சரி, தலைப்பிற்கு வருகிறேன். எங்கே போனாலும் உருப்படுவதற்கு என்ன வழி? அதைப் பற்றியெல்லாம் நீங்கள் கவலைப் படாதீர்கள். கர்மகாரகன் பார்த்துக் கொள்வான். இறைவன் கை கொடுப்பார். ஆகவே இறை நம்பிக்கையோடு இருங்கள். நடப்பது எல்லாம் நல்லபடியாகவே நடக்கும்!

அன்புடன்,
வாத்தியார்
========================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

12.11.14

மனதைப் புரட்டிப் போடக்கூடிய அற்புதமான கடிதம்


மனதைப் புரட்டிப் போடக்கூடிய அற்புதமான கடிதம்

உளவியல் கடிதம். உண்மைக் கடிதம். அனைவரையும்
கடைசிவரி வரை படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
-------------------------------------------------------------------
ஒரு தந்தை தன் மகனுக்கு எழுதிய கடிதம்
- மகளுக்கும் கூட இது பொருந்தும்!!

(எனக்கு மின் அஞ்சலில் ஆங்கிலத்தில் வந்த கடிதத்தைத் தமிழுக்கு
மொழி மாற்றம் செய்து இங்கு கொடுத்திருக்கிறேன்.
அனைவருக்கும் பயன் உள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

அனுபவ அறிவு வாய்ந்த ஒரு தந்தை தன் மகனுக்கு எழுதிய கடிதம்

நம் அனைவருக்கும் இது பயனுள்ளதாக இருக்கும்.

ஒரு தந்தை தன் மகனுக்கு எழுதிய அழகிய / அருமையான கடிதம்

இக்கடிதம் புகழ் பெற்ற ஹாங்காங் தொலைக் காட்சி ஒலிபரப்பாளர்
 / குழந்தை உளவியல் நிபுணரால் அவருடைய மகனுக்கு எழுதப்பட்டது.
இக் கடிதத்தில் உள்ள வார்த்தைகள் / கருத்துக்கள் உண்மையிலேயே
நம் அனைவருக்கும் பயனளிப்பதாகும்.

இளமையானவர்கள், முதியவர்கள், குழந்தைகள் அல்லது பெற்றோர்கள்
அனைவருக்கும் இது பயனளிக்கும். அனைத்து பெற்றோர்களும்
தங்களுடைய குழந்தைகளுக்கு இதனை படிப்பினையாக கற்பிக்கலாம்.
-------------------------------------------------------
அன்புள்ள மகனுக்கு,

மூன்று காரணங்களுக்காக நான் இதை உனக்கு எழுதுகிறேன்:

1. வாழ்க்கை, அதிர்ஷ்டம்/நல்ல வாய்ப்பு, இடையூறுகள் ஆகிய
அனைத்தும் முன் மதிப்பிட்டு அறிய(கணிக்க) முடியாதவை.
தாம் எவ்வளவு காலம் வாழ்வோம் என்று எவரும் அறிவதில்லை.
சில கருத்துக்களை / அறிவுரைகளை சரியான நேரத்தில்
(முன் கூட்டியே) கூறிவிடுவது நல்லது.

2. நான் உன்னுடைய தந்தை. நான் உனக்கு இதனை கூறாவிடில்
உனக்கு இதனை யாரும் கூறப் போவதில்லை.

3. நான் உனக்கு எழுதுவது யாதெனின், எனக்கேற்பட்ட
சிறு அளவிலான சொந்த அனுபவங்களேயாகும்.
இது ஒரு வேளை தேவையற்ற அதிகப்படியான
இதய வலிகளிலிருந்து உன்னைக் காக்க இயலும்.
கீழ்க் கண்டவற்றை நீ உன் வாழ்க்கை
முழுவதும் கவனத்தில் கொள்ள வேண்டும்:

1. உன்னிடத்தில் நல்லவர்களாக நடந்து கொள்ளாதவரிடம் நீ
உன் வன்மத்தை / பொல்லாங்கை காட்டாதே.
உன் அம்மாவையும் என்னையும் தவிர உன்னை நல்லவிதமாக
நடத்தி செல்லும் பொறுப்பு எவருக்குமில்லை.
உனக்கு யாராவது நல்லவர்களாக இருப்பின் அது
உனக்கு கிடைத்த புதையல் / பொக்கிஷம் போன்றதாகும்.
அவர்களுக்கு நீ நன்றி உடையவனாக இரு.
மேலும் நீ அவர்களிடத்தில் கவனமாக நடந்து கொள்ளுதல் அவசியம்.
ஏன்  எனில், ஒவ்வொருவரின் அணுகுமுறையும் ஏதேனும்
ஒரு நோக்கத்துடனேயே இருக்கிறது.
உன்னிடத்தில் ஒரு மனிதன் நல்லவனாக நடந்து கொள்கிறான்
என்றால், உன்னை அவன் உண்மையாக நேசிக்கிறான் என்று
அர்த்தம் இல்லை. நீ விழிப்புடன் இருக்க வேண்டும்.
அவனை நீ ஆய்ந்தறியாமல், மதிப்பிடாமல்
உண்மையான நண்பன் என்று கொள்ளாதே.

2. இந்த உலகில் இன்றியமையாதது என்று ஒன்று இல்லை.
உனக்கு உடமையானது என்று எதுவும் இந்த உலகில் இல்லை.
இந்தக் கூற்றினை நீ புரிந்து கொண்டாய் என்றால், உன்னை சுற்றி
மனிதர்கள் சூழ்ந்திருந்தாலும், எவரும் தேவை இல்லை என்றாலும்
அல்லது நீ அதிகமாக விரும்பிய ஒன்றையோ/ ஒருவரையோ
நீ இழக்க நேர்ந்தாலும் உன் வாழ்க்கையை
நீ எளிதில் வழி நடத்திச் செல்ல இயலும்.

3. வாழ்கை என்பது மிகவும் குறுகிய காலத்திற்கு உட்பட்டது.
இன்றைய வாழ்க்கையை நீ வீணடித்தாய் என்றால் உன் வாழ்க்கை
உன்னைவிட்டு சென்றுவிட்டதை நாளை நீ கண்டுகொள்வாய்.
வாழ்க்கையின் மதிப்பினை நீ எவ்வளவு விரைவில் உணர்ந்து
கொள்கிறாயோ ஓரளவாகிலும் நீ வாழ்வினை அனுபவிப்பாய்.

4. அன்புதான் என்றாலும் அது உறுதியற்ற ஒரு உணர்வே ஆகும்.
காலத்தை பொருத்தும் ஒருவரின் மனநிலையை பொருத்தும் இந்த
உணர்வு மங்கி / குறைந்து விடுகிறது. உன்னை மிகவும் நேசித்தவர்
உன்னை விட்டு விலகிச் செல்லும் பொழுது நீ அமைதியாக இரு.
காலம் உன் வலிகளையும் கவலைகளையும் துடைத்தழித்துக்
கொண்டு போய்விடும். இனிமையான அன்பையும், அழகையும் நீ
மிகையாக எண்ணாதே. அன்பில்லாமல் போகின்ற தருணத்தில்
ஏற்படும் கவலைகளையும் நீ பெரிதாகக் கொள்ளாதே.

5. வெற்றி பெற்ற நிறைய மனிதர்கள் நல்ல கல்வியறிவு பெற்றவர்கள்
இல்லை. நீ சிரமப்பட்டு கல்வி பயிலாவிடினும் வெற்றி பெற இயலும்
என்பது இதன் பொருள் இல்லை. என்னென்ன அறிவுத் திறனைப் நீ
பெற்றிருக்கின்றாயோ அது வாழ்க்கையில் உனக்கான ஆயுதங்களாகும்.
ஒரு சிலர் வாழ்க்கையில் உயர்கின்ற தருணத்தில் இன்னல்களை
அனுபவிக்கின்றனர். ஒரு சிலர் துவக்கத்திலேயே இன்னல்களை
சந்திக்க நேரிடுகிறது.

6. என்னுடைய வயதான காலத்தில், உன்னுடைய வருமானத்தை
சார்ந்து வாழ வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எனக்கில்லை.
அதே போன்று உன்னுடைய வாழ்க்கை முழுதும் நான் உனக்கு
நிதி ஆதாரங்களை அளிக்க இயலாது. உன்னை வளர்த்து ஆளாக்கும்
வரையில் தான் என்னுடைய ஆதரவும் பொறுப்பும்;
நீ வளர்ந்து விட்ட பிறகு இந்த பொறுப்பு முடிவடைந்து விடுகிறது.
அதன் பிறகு நீ தான் முடிவு செய்ய வேண்டும்.
நீ பயணிக்கப் போவது பொது போக்குவரத்திலா அல்லது உன்
சொந்த வாகனத்திலா / இரதத்திலா; வசதி படைத்தவனாக
அல்லது ஏழையாக.

7. நீ கூறும் வார்த்தைகளுக்கு நீ மதிப்பளிக்க வேண்டும். ஆனால்
பிறர் அவ்வாறு இருத்தல் வேண்டும் என்று நீ எதிர்பார்க்கக் கூடாது.
நீ அனைவருக்கும் நல்லவனாக இரு. ஆனால் உனக்கு அனைவரும்
நல்லவர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பாராதே.
நீ இதனை புரிந்து கொள்ளாமல் போனால் உன் வாழ்க்கை
தேவையற்ற பிரச்சினைகளில் உழல வேண்டி இருக்கும்.

8. நான் பல வருடங்களாக பரிசு சீட்டுகளை வாங்கி இருக்கிறேன்.
ஆனால் எந்த பரிசும் எனக்கு அடித்ததில்லை / கிடைக்கவில்லை.
நீ வசதி படைத்தவனாக வேண்டுமென்றால் நீ கடினமாக உழைக்க
வேண்டும் என்பதையே இது காட்டுகிறது! இலவசமாக உணவு கிடைக்காது!

9. நான் உன்னுடன் எவ்வளவு அதிகப்படியான நேரம் இருக்கிறேன்
என்பது ஒரு பொருட்டல்ல. நாம் ஒன்றாக இணைந்திருக்கும்
அந்த நேரத்தை பெரும் பாக்கியமாகக் (பொக்கிஷம்) கருதுவோம்.

நமக்கு தெரியாது நாம் மறுபடியும் நம்முடைய அடுத்த பிறவியில் சந்திப்போம்

அன்புடன்
அப்பா
============================================================
இணையத்தில் படித்த உளவியல் கட்டுரை, உண்மைக் கட்டுரை.
சிறப்பாக இருந்ததால், உங்களுக்கு அறியத் தந்திருக்கிறேன்.

அன்புடன்,
வாத்தியார்
-------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

10.11.14

கண் குறைபாடுகளை நீக்குவதில் அமைதியாய் ஒரு புரட்சி


கண் குறைபாடுகளை நீக்குவதில் அமைதியாய் ஒரு புரட்சி

கண் குறைபாடுகள், கண்ணாடி அணிவதிலிருந்து விடுதலை!

அமைதியாய் ஒரு புரட்சி!

(வாசகர் ஒருவரின் கடிதம்.பொறுமையாகப் படிக்கவும். முக்கியமான, உங்களுக்குப் பயன்படக்கூடிய செய்தி உள்ளது)
-----------------------------------------------------------
என் 9 வயது குழந்தைக்கு இடது கண்ணில் பார்வை குறைபாடு இருப்பது சமீபத்தில் தான் தெரிய வந்தது. வலது கண்ணை கைகளால் மூடிக் கொண்டு மற்றொரு கண்ணால் 10 அடி தூரத்தில் இருக்கும் எழுத்துக்களை படிக்கவைத்துப் பார்த்த போது அவனால் படிக்கமுடியவில்லை.

ஆனால் அதே இடது கண்ணை கைகளால் மூடிக் கொண்டு வலது கண்ணால் 20 அடி தூரத்தில் இருக்கும் எழுத்துக்களை படிக்க முடிகிறது.
இரண்டு கண்களாலும் பார்க்கும் போது இந்த குறைபாடு தெரியவதில்லை.

ஆனால் பள்ளியிலே கரும்பலகையில் எழுதும் வரிகளைப் படிக்கும்போது சிரமப்படுகின்றனர். ஆனால் அதை அவர்கள் சொல்வதில்லை. எல்லோருக்கும் இப்படித்தான் இருக்கும் என்று நினைத்துவிடுகின்றனர்.

ஈரோட்டில் உள்ள மிகப் பெரிய கண் மருத்துவமணையில் பரிசோதித்த போது, நிரந்தரமாக கண்ணாடி அணியவேண்டும் என்று சொல்லிவிட்டனர். கண்ணாடியும் வாங்கி கொடுத்துவிட்டேன்.

அடுத்த சில நாட்களில், என்னுடைய பள்ளித் தோழர்.ஒருவரை சந்தித்தேன். பள்ளி நாட்களிலேயே பெரிய சோடாபுட்டிக் கண்ணாடி அணிந்திருந்தார். -6 என்ற அளவில் கண் பார்வைக் குறை அவருக்கு இருந்தது. ஆனால் நான் சந்தித்த அன்று கண் கண்ணாடி அணியாமல், பைக் ஓட்டிவந்ததை பார்த்தவுடன் மிகவும் ஆச்சரியமடைந்தேன்.

“என்னப்பா, கண்ணாடி போடாத உன்னை அடையாளமே தெரியவில்லை…கண்களுக்கான அறுவைசிகிச்சை செய்து கொண்டாயா? அல்லது காண்டாக்ட் லென்ஸ்ஸா? என்று கேட்டேன்.

பாண்டிச்சேரி  அரவிந்தர் ஆசிரமத்தில் கண்பார்வை குறை பாடுகளை நீக்க பயிற்சி அளிக்கின்றனர். அதில் போய் பயிற்சி பெற்று வந்தேன். கடந்த இரண்டு மூன்று வருடங்களாக கண்ணாடி அணிவதில்லை என்றதை கேட்டதும் ஆச்சரியப்பட்டுப் போனேன்.

அவரிடம் மேலும் தகவல்களை வாங்கிக் கொண்டு இளவலை அழைத்துக் கொண்டு பாண்டிச்சேரி வந்து சேர்ந்தேன்.

பாண்டிச்சேரி, கடற்கரை சாலையின், வடக்கு மூலையில், வட்டாட்சியர் அலுவலகத்திற்கு எதிரில் இந்த பள்ளி அமைந்திருக்கிறது.

திங்கட்கிழமை மதியம் 12 மணியளவில் அந்த பள்ளிக்குச் சென்றேன். அப்பள்ளிக்கு ஒவ்வொரு திங்கட்கிழமையும் விடுமுறை. ஞாயிற்றுக் கிழமை வேலை செய்கிறார்கள். எனவே மறுநாள் காலை 8 மணிக்கு வரச்சொன்னார்கள்.

இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயிற்சி பெற எந்த கட்டணமும் வசூலிப்பதில்லை, நாம் விருப்பப்பட்டு கொடுக்கும் நன்கொடையை மட்டும் ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவிக்கப் பட்டது.

விடுமுறை தினமாக இருந்த போதும், அங்கிருந்த ஒரு உதவியாளர், எங்கே தங்கியிருக்கிறீர்கள்? என்று கேட்டார். இனிதான், ஏதாவது ஹோட்டலில் அறை எடுக்க வேண்டும் என்றேன். அவசியமில்லை, ஆசிரமத்தின் விடுதியில் தங்கிக் கொள்ளுங்கள் என்று கூறி ஆசிரம விடுதியின் தொலைபேசி எண்ணை கொடுத்தார்.

அழகான தனியறை. குளியலறை இணைந்த, இரண்டு படுக்கைகள், கொண்ட அந்த அறைக்கு வாடகை நாள் ஒன்றுக்கு ரூ.70/- மட்டுமே.

செவ்வாய்கிழமை காலை 8 மணிக்கு அங்கு சென்றேன். ஆரம்ப கட்ட பெயர் பதிவு, பரிசோதனை ஆகியவற்றை முடித்து, பயிற்சி தொடங்கப் பட்டது.
சுமார் 2 மணி நேரம் பயிற்சி அளித்தனர்.

கிட்டப் பார்வை, தூரப்பார்வை, போன்ற அனைத்து கண் குறைபாடுகளுக்கும் பயிற்சி  அளிக்கின்றனர்.

நான் சென்ற போது ஹைதராபாத்திலிருந்து ஒரு தம்பதியினர் தங்கள் இரண்டு பெண்குழந்தைகளை அழைத்து வந்திருந்தனர். 8, 4 வயதுடைய அந்த இரண்டு குழந்தைகளும் கண்ணாடி அணிந்திருந்தனர். அக் குழந்தைகளின் தந்தையும் கண்ணாடி அணிந்திருந்தார்.

அவரின் நண்பரின் ஆலோசனையின் பேரில் குழந்தைகளை அழைத்துவந்திருப்பதாக சொன்னார். நேரம் ஆக ஆக, பல குழந்தைகள், நடுத்தரவயதினர், வயதானவர்கள் என்று சுமார் 30 அல்லது 40 பேர்கள் பயிற்ச்சிக்கு வந்திருந்ததை பார்க்க முடிந்தது. இதில் பல வெளிநாட்டவர்களும் அடக்கம்.

செய்வாய் முதல் ஞாயிறுவரை 6 நாட்கள் இப்பயிற்சியை நடத்துகின்றனர். காலை 8 மணிமுதல் 10 மணிவரை, மாலை 3 மணிமுதல் 5 மணிவரை. நாள் ஒன்றுக்கு 4 மணிநேரம் பயிற்சி கொடுக்கின்றனர். முறையான கண் சிமிட்டுதல், தூரத்தில் இருப்பதை படிப்பது, இருட்டு அறையில் மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் சிறு எழுத்துக்களை படிப்பது போன்ற பல பயிற்சிகள்…..

ஆச்சரியப்படும் விதமாக, பயிற்சி முடிந்த ஆறாவது நாள் அங்கேயே கண் பரிசோதனை செய்து பார்த்ததில் பார்வையில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது. தொடர்ந்து ஆறுமாதம் பயிற்சியை தொடருங்கள் பின் கண் பரிசோதனை செய்து பாருங்கள்…..கண்ணாடி அணிய வேண்டிய அவசியமே வராது என்று பயிற்சியாளர் சொன்னார்.

கடந்த 40 ஆண்டுகளாக இந்த பள்ளி நடப்பதாகவும், இதுவரை ஆயிரக்கணக்கானோர் பயன் பெற்றிருப்பதாகவும் அறிந்து கொண்டேன். முன்கூட்டியே பதிவு செய்து கொண்டு செல்வது நல்லது. மார்ச் முதல் வாரம் முதல் ஜூன் முதல்வாரம் வரையிலான பள்ளிக்கூட விடுமுறை நாட்களில், அதிகமான கூட்டம் வருவதால் அந்த காலகட்டத்தில் செல்ல விரும்புபவர்கள் முன் கூட்டியே பதிவு செய்தால் தான் இடம் கிடைக்கும்.

பயிற்சிகள் முடிந்து வெளியே செல்லும் வாயிலின் மேல்புறத்தில் இருந்த “மதர் மிரா” வின் இந்த வாசகம் பல அர்த்தங்களை எனக்குச் சொன்னது……………

தங்கும் விடுதி குறித்த தகவல்கள்:
http://www.sriaurobindoashram.org/vis…/guesthouse/ghlist.php

மேலும் அதிக தகவல்களுக்கு:
http://www.motherandsriaurobindo.org/Content.aspx…

பயிற்சி  குறித்த மேலும் விவரங்கள்:
SCHOOL FOR PERFECT SIGHT
PONDICHERRY

PHONE: 0413-2233659
EMAIL: auroeyesight@yahoo.com
auroeyesight@vsnl.ne
---------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்
============================================================


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

Humour: நகைச்சுவை: ஆண்களின் அருமையை அவர்கள் எப்போது அறிவார்கள்?Humour: நகைச்சுவை: ஆண்களின் அருமையை அவர்கள் எப்போது அறிவார்கள்?

மனைவிகளே, காதல் துணைவிகளே,

தாலி கட்டிய நாள் முதலாய் எங்கள் சந்தோஷத்துக்கு
வேலிகட்டிய மாமியார் பெத்த மகள்களே,
கடவுளின் துகள்களே!

தந்திரத்தால்,
தலையணை மந்திரத்தால்,
தொட்டுத் தாலி கட்டிய எங்களை
எந்திரமாகச் சுழலவிடும் திரிபுரசுந்தரிகளே!

கல்யாணத்துக்கு முன்னால இனிக்க இனிக்கப் பேசினீங்க... ஆனா,
கல்யாணம் ஆனதில் இருந்து தட்டு டம்ளர்களை எடுத்து வீசுறீங்க!

சத்தியமா நினைச்சுப் பார்க்கலை இப்படி ஒரு மாறுதலை;
அதனாலதான் அரசாங்க பாருக்குத் தேடிப் போறோம் ஆறுதலை.

கொஞ்சிப் பேசிய குரல் எங்கே,
கிள்ளி விளையாடிய விரல் எங்கே,
எங்க காதுல பாடின 'சிநேகிதனே... சிநேகிதனே...பாட்டு எங்கே,
ரிஷப்சனுக்கு வாங்கின ரேமண்ட்ஸ் கோட் எங்கே...
ஆமா, நேத்து சட்டையில வெச்சிருந்த 100 ரூபாய் நோட்டு எங்கே?

உங்களை கரெக்ட் பண்ணி, கல்யாணம் பண்ண உதவின
ஃப்ரெண்ட்ஸ்களையே கட் பண்ணச் சொல்லி ஊட்ட ஆரம்பிக்கிறீங்க
பொங்கச்சோறு...
கடைசில எங்க நெருங்கிய நட்பு வட்டாரத்தைச்
சுருங்கிய நட்பு வட்டாரம் ஆக்கிட்டுத்தான் போடுறீங்க
மத்தியான சோறு.

நட்புன்னா என்ன தெரியுமா?
சின்ன பிரச்னைக்குக்கூட செவுத்துல காலைவெச்சு
உதைக்கிற குங்ஃபூ இல்லம்மா...
சுமாரா ஆடினாக்கூட 'சூப்பர்’னு மார்க் போடுற குஷ்பூம்மா... குஷ்பூ!

காபி குடிச்சுட்டா 'கப்’பைத் தூக்கி எறியலாம்...
ஆனா, கல்யாணம் பண்ணிட்டோம்னு நட்பைத் தூக்கி எறிய முடியுமா?

ஜனவரி மாசம் ரெடி பண்ணின சாம்பாரை,
பிப்ரவரி வரைக்கும் ஃப்ரிட்ஜ் என்ற மார்ச்சுவரியில்
பாதுகாப்பா வைக்கிறீங்க.

டி.வி, டேப் ரிக்கார்டரைத் தவிர மத்த எல்லாத்தையும்
அதுக்குள்ளே திணிக்கிறீங்க.
ஷாப்பிங் போயி லேட்டானாலோ,
சீரியல் சென்ட்டிமென்ட்டுக்கு எமோட் ஆகிட்டாலோ,
உடனே உப்புமா கிண்டிக் குடுக்கிறீங்க பாருங்க...

மக்களே, வாரம் ஒரு தடவை கிண்டுனாதான்
அது உப்புமா... வருஷம் முழுக்க அதையே கிண்டுறது
ரொம்பத் தப்பும்மா!

போருக்குப் போனவன்கூடப் பொழைச்சு வந்திருக்கான், ஆனா
பொண்ணுங்ககூட புடவை எடுக்கப் போனவன்,
கூடாரம் கவிழ்ந்து சேதாரமாகிப்போனதாதான்
பலப் பல வரலாற்று ஆதாரங்கள் சொல்லுது.

பொண்டாட்டிகூட துணியெடுக்க 'அமர்க்களம்’ அஜித் போல
போன பல பேரு, 'ஆரம்பம்’ அஜித் போல தலை நரைச்சு
வந்த தமாஸு ஊரு முழுக்க நிறையவே இருக்கு.

அரசமரம் போல இருக்கும் புருஷ மரங்களின் தேக்கு
உடம்பையே உதறவைக்கிற அளவு,
புருஷனை அதட்டுறதுல பிஹெச்.டி., முடிச்ச நீங்க,
கிச்சன்ல கரப்பான்பூச்சியையும், பாத்ரூம்ல பல்லியையும்
பார்த்துட்டுப் போடுவீங்க பாருங்க ஒரு சத்தம்....
அதைக் கேக்கிற எங்களுக்கு, ஏதோ விட்டலாச்சார்யா
வீட்டுக்குள்ளயே பேய் வந்த மாதிரி தலைக்கு ஏறும் பித்தம்!

ஒரு தக்குனூண்டு கரப்பான்பூச்சிக்கே பயந்து கணவனைத்
துணைக்குக் கூப்பிடுறீங்களே,
நாங்களும்தான் பொண்டாட்டிக்குப் பயப்படுறோம்.
ஆனா, என்னைக்காவது அப்படில்லாம் கத்திக் கூப்பாடு
போட்டிருக்கோமா!?

எண்ணெயை விட்டு செஞ்ச பன்னு மேல கொஞ்சம்
வெண்ணையைத் தடவுன மாதிரி, லைட்டா தொப்பை வந்தாலே,
'உடம்பைக் குறை, வயித்தை மறை’னு,
காவடி சிந்து முதல் கண்ணீர் சிந்து வரை பேச்சா
பேசிக் கொல்றீங்க.

இல்ல தெரியாமத்தான் கேட்கிறேன்... இது என்னம்மா நியாயம்?
டயட்டாவும் புருஷன்தான் இருக்கணும்,
கொயட்டாவும் புருஷன்தான் இருக்கணுமா?

ஐ டோன்ட் நோ ஒய்... ஆல் ஹஸ்பண்ட்ஸ் சொல்லிங் பொய்.

இது எதுனாலனு உங்களுக்குப் புரியணுமா?
நாங்க சொல்ற எல்லா பதில்களுக்கும், நீங்க திருப்பிக்
கேள்விகளா கேட்டா, நாங்க பதிலா சொல்லுவோம்..?
பொய்தான் சொல்லுவோம்!

வீட்டுக்கு வந்த மனுஷன், பசி ஏப்பம்விட்டாக்கூட
பீர் ஏப்பம்னு நினைச்சு மோப்பம் புடிக்கிறது,
'சாப்பாடு போடும்மா’னு கெஞ்சிக் கேட்டாலும்,
ரிமோட்டைத் தூக்கி தலையில அடிக்கிறது,
வாய் திறந்து பேசினாலே நெருப்பா முறைக்கிறது.
வேண்டாம் பேபிம்மா கோவம்,
ஆம்பளைங்க ஆல்வேஸ் பாவம்!

கல்யாணமோ, காதுகுத்தோ, சீமந்தமோ,
சினிமாவோ என்னைக்காவது சீக்கிரமா கிளம்பி இருக்கீங்களா?
எட்டு முழம் ஸாரியை நீங்க பாடில சுத்தறதுக்குள்ள,
அசோக் லேலண்டு லாரிக்கே பாடி கட்டிடலாம்.

நீங்க மேக்கப் முடிக்கிறதுக்குள்ள,
'இதுவரைக்கும் நீ மந்திரி, இந்த நிமிஷத்துல இருந்து நீ எந்திரி’னு
அம்மா மினிஸ்ட்ரியையே மாத்திடுறாங்க.

கிளியோபாட்ராவுக்கு எதுக்கும்மா த்ரெட்டிங்கு,
மோனலிசாவுக்கு எதுக்கும்மா ப்ளீச்சிங்கு?
தகரத்துக்கு ரப்பிங் பாலிஷ் போடுறது லாஜிக்...
தங்கத்துக்கு டால்கம் பவுடர் போடுறதுல என்ன மேஜிக்?

நீங்கள்லாம் தங்கம்மா... தங்கம்!

மனைவிங்க ஊருக்குப் போற அன்னைக்குத்தான்
பல கணவர்கள் பாருக்குப் போறாங்க. அதைப் புரிஞ்சுக்காம, '
கதவைத் தொறந்து போட்டுத் தூங்காதீங்க...
கைலியைத் தொறந்து போட்டுத் தூங்காதீங்க...
சிலிண்டரை ஆஃப் பண்ணுங்க,
டி.வி சுவிட்சை ஆஃப் பண்ணுங்க’னு
மொபைல்லயே குடும்பம் நடத்துறீங்களே... முடியலைம்மா!

எதையாவது புரியிற மாதிரி பேசுறீங்களா?
'அஞ்சு நிமிஷம் சும்மா இருக்குதா...
அப்படியே அப்பன்போல’னு நீங்க சொன்னா,
லேப்டாப்பை மூடிவெச்சுட்டு நாங்க குழந்தையைப்
பார்த்துக்கணும்னு அர்த்தம். '
ஆபீஸுக்கு சீக்கிரம் போகணுமா?’னு நீங்க கேட்டா, '
பாத்திரம் நிறைய சேர்ந்திடுச்சு...
கொஞ்சம் வெளக்கித் தர்றீங்களா?’னு அர்த்தம். '
தலை வலிக்குது’னு சொன்னா,
ஈவ்னிங் வரப்பவே டிபன் வாங்கிட்டு வரணும்னு அர்த்தம்...
இதையெல்லாம் புரிஞ்சுக்கவே கோனார் நோட்ஸ் ஒண்ணு போடணும்!

கல்யாணமான நாளுல இருந்து வீட்டுக்குள்ள
முணுமுணுப்பும், தொணதொணப்பும்தான் இருக்கே தவிர,
என்னைக்காவது ஒரு கிளுகிளுப்பு இருக்குதா?

வருஷத்துல 365 நாள் இருக்கு...
அதுல ஒரு நாள் உங்க பொறந்தநாளு.
அதை மறந்தா என்னமோ,
அம்மாவைச் சந்திச்சுட்டு வந்த அதிருப்தி எம்.எல்.ஏ-வை
கேப்டன் முறைக்கிறதுபோல பாக்கிறீங்க.
சரி பொறந்த நாளுகூட ஓ.கே...
சோஷியல் மேட்டர் பண்ணிக்கலாம்.
ஒவ்வொரு கணவனும், தன் சந்தோஷத்தின் நினைவு நாளா
நினைக்கிற கல்யாண நாளை, நினைவிலேயே வைக்கசொன்னா
எப்படிம்மா?

வீட்டுக்கு வந்தவுடனே 'வாயை ஊது’னு சொல்றீங்க.
அதுவே விவரமா ஏதாவது பேசுனா 'வாயை மூடு’னு சொல்றீங்க.
இதைத்தான் 'எகனைக்கு மொகனை’னு சொல்வாங்க.

எங்க மேல ஏன் இவ்வளவு குரோதம்?
மனைவிகளே... மனைவிகளே,
நீங்கள் எங்களை வீட்டுக்கு வெளியே தூக்கியெறிந்தாலும்,
நாங்கள் வீட்டு வாசலில் செருப்பாகக் கிடப்போம்.
துணைவிகளே, துணைவிகளே,
நீங்கள் எங்களைக் கோபத்தில் கும்மியெடுத்தாலும்,
குழம்புச் சட்டியில் பருப்பாகக் கொதிப்போம்!

'கேம் விளையாடிட்டுத் தர்றேன்...
செல்போனைக் குடு’னு கேட்கிறப்பவே,
அதுல பாம் செட் பண்ணுவீங்கனு எங்களுக்குத் தெரியாதா?

பொம்பளைங்கன்னா கடுகு டப்பா, மொளகு டப்பால காசை
ஒளிச்சுவைக்கிறதும்...
ஆம்பளைங்கன்னா கால் லிஸ்ட், கான்டாக்ட் லிஸ்ட்ல
ரிஸ்க் நம்பரை அழிச்சுவைக்கிறதும் சகஜம்தானே!

ஃபேஸ்புக்ல எங்களோட நடமாட்டத்தை உளவுபார்க்க
ஃப்ரெண்ட்ஸ் ஐடி, ஃபேக் ஐடினு வர்றீங்க.
ஆட்டோட தாடியைப் பார்த்தே,
அது இளங்கறியா, கடுங்கறியானு
கணிச்சுச் சொல்ற நாங்க, எங்ககூட சாட்டிங் போடுறது
லேடியா இல்ல கேடியானு கண்டுபிடிக்கவா மாட்டோம்!?

ஆல் மனைவீஸ் நல்லா கேட்டுக்கங்க...
நைட்டிக்குத் துப்பட்டாவா துண்டு செட்டாகாது,
ஃபேஸ்புக்ல உங்க துப்பறியும் படம் ஹிட்டாகாது!

பக்கத்து வீட்டு பாட்டில இருந்து நீங்க போற
பியூட்டி பார்லர் ஆன்ட்டி வரை எங்களை
'அண்ணா’னு கூப்பிடச் சொல்லிவெச்சிருக்கீங்களே...
அதுதான் வன்கொடுமைகளுக்கு மத்தியில் பெண்கொடுமை!

ஒரு புருஷனோட பிரச்னைகளைப்  புரிஞ்சுக்கணும்னா,
ஒரு மாசம், வேணாம் ஒரு வாரம் நீங்க புருஷனா இருந்து பாருங்க...
ஓ சயின்ஸ், பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி அதுக்கு அனுமதிக்காதா?

அப்போ ஆண்டவனாப் பார்த்து பொண்டாட்டிங்களுக்கு
ஒரு பொண்டாட்டி அனுப்பிவெச்சாதான்,
பொண்டாட்டிங்களுக்கு,
ஆண்வர்க்கத்தோட அருமை தெரியும்!
=================================================
வாட்ஸப்பில் வந்தது. படிக்கச் சுவையாக இருந்ததால் உங்களுக்கு
அறியத் தந்துள்ளேன்.

அன்புடன்,
வாத்தியார்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

7.11.14

பயிர் வளர்க்கும் மழைபோல் வந்தவன் அவன்!


சென்னிமலை முருகன்

பயிர் வளர்க்கும் மழைபோல் வந்தவன் அவன்!

பக்திப்பாடல்

இன்றைய பக்திப் பாடல் மலரை பத்மஸ்ரீ' சீர்காழி கோவிந்தராஜன் பாடிய   -  'உயிர் கொடுத்த நாள் முதலாய்'’ என்னும் முருகப்பெருமானின் பாடல் வரிகள் அலங்கரிக்கின்றன! அனைவரும் படித்து மகிழுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்
-------------------------------------------------------
உயிர் கொடுத்த நாள் முதலாய் ... 
நினைவை ஊட்டினை 
என் உடல் படைத்த நாள் முதலாய் ... 
வணங்க வைத்தனை 

உயிர் கொடுத்த நாள் முதலாய் ... 
நினைவை ஊட்டினை
என் உடல் படைத்த நாள் முதலாய் ... 
வணங்க வைத்தனை

பயிர் வளர்க்கும் மழையது போல் ... 
அருளவந்தனை
நான் பட்ட துன்பம் எட்ட ஓட ... 
பார்வை தந்தனை 

முருகா ... முருகா ... முருகா ... முருகா ...

பழநி மலையில் வீற்றிருக்கும் ... 
தண்டபாணியே
ஞானப் பழமாக இனித்திருக்கும் ... 
அழகு தெய்வமே 

மழலையாக தவழ்ந்து வந்த ... 
குழந்தை வேலனே 
என் மனத்திலென்றும் நிலைத்து நின்ற ... 
சுவாமிநாதனே 

முருகா ... முருகா ... முருகா ... முருகா ...

காட்டுகின்றக் காட்சியெல்லாம் ... 
கண்டுகொள்கிறேன்
உன் கருணை ஒன்றை நம்பியன்றோ ... 
காத்திருக்கிறேன் 

ஆட்டுகின்றக் கோலை நோக்கி ... 
ஆடிவருகிறேன்  - உன் 
அன்பு என்னும் கோயில் நோக்கி ... 
ஓடி வருகிறேன் 

உயிர் கொடுத்த நாள் முதலாய் ... 
நினைவை ஊட்டினை
என் உடல் படைத்த நாள் முதலாய் ... 
வணங்க வைத்தனை

முருகா ... முருகா ... முருகா ... முருகா ... .
---------------------------------
பாடியவர்: 'பத்மஸ்ரீ' சீர்காழி கோவிந்தராஜன் 

வாழ்க வளமுடன்! 
வளர்க நலமுடன்!

6.11.14

Astrology: Transit Saturn: கோள்சாரச் சனி


Astrology: Transit Saturn: கோள்சாரச் சனி

கோள்சாரச் சனி (Transit Saturn) தன்னுடைய ஒரு சுற்றை முடித்துக்கொள்ள எடுத்துக்கொள்ளும் காலம் சுமார் 30 ஆண்டுகள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே! ஒரு ராசியில் இரண்டரை ஆண்டு காலம் தங்கிச் செல்லும்.

அவ்வாறு தங்கிச் செல்லும் காலத்தில் எந்த ராசியில் தங்கியிருக்கும்போது சனி அதிகமான கெடுதல்களைச் செய்யும்?

மேஷத்தில் இருக்கும்போதுதான் அதிகமான தீமைகளைச் செய்யும். சனி அங்கே நீசமடைந்துவிடும். அதை மனதில் கொள்க! நீசமடைந்த நிலையில் சனியால் அதிகமான கெடுதல்களே ஏற்படும்.

அந்தச் சமயத்தில் விரையச் சனிக்காரர்கள் (ரிஷப ராசிக்காரர்கள்) அஷ்டமச் சனிக்காரர்கள் (கன்னி ராசிக்காரர்கள்) ஆகியோர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இடமாற்றம், வேலை மாற்றம், தொழில் மாற்றம் ஆகிய எதையும் செய்யக்கூடாது. உள்ளதும் போச்சுடா........ளைக் கண்ணா கதையாகிவிடும். உள்ளதும் போய்விடும்! ஆகவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

அதுபோல ஜாதகத்தில் சனி நீசமடைந்திருந்தால், சனி மகா திசையில் மற்றும், மற்ற கிரகங்களின் மகாதிசையில் சனி புத்தியில் ஜாதகன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

கோள்சாரத்தில் சனி தனது உச்ச வீட்டில் சஞ்சாரிக்கும் காலத்தில், அதாவது துலா ராசியில் சஞ்சாரம் செய்யும் நாட்களில் நல்ல (நன்மையான) பலன்களை எதிர்பார்க்கலாம். அதுவும் சனி வேறு தீய கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை பெறாமல் இருக்கும் காலங்களில்/ சமயங்களில்தான் அவ்வாறான பலன்களை எதிர் பார்க்கலாம்!

நமது ஜாதகத்தின் பத்தாம் வீட்டை லக்கினமாக மனதில் வைத்துக்கொண்டு அன்றையத் தேதியில் கோள்சாரச் சனி எங்கே இருக்கிறது என்று பாருங்கள். அந்த கோள்சாரச் சனி எட்டி இருந்தால், அதாவது உங்களுடைய பத்தாம் வீட்டிற்கு எட்டில் இருந்தால், அந்த இரண்டரை ஆண்டு காலம் உங்களுடைய வேலையில் அல்லது தொழிலில் பிரச்சினைகள் உண்டாகும். சறுக்கல் ஏற்படும். downfall என்று வைத்துக்கொள்ளுங்களேன். ஆகவே அந்தச் சமயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!

சரி, அடுத்த சனிப் பெயர்ச்சி எப்போது?

நமக்கு திருநள்ளாறு கோயில்காரர்கள் சொல்வதுதான் வேதவாக்கு! அவர்கள் வரும் டிசம்பர் மாதம் 16ஆம் தேதியன்று (16.12.2014) சனீஷ்வரன் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு இடம் மாறுகின்றார் என்று சொல்லியிருக்கிறார்கள். அன்றைய தினம்தான் அத்திருக்கோயிலில் அபிஷேகம், ஆராதனை என்று விசேட பூஜைகள் நடைபெற உள்ளன.ராசிவாரியாக அதற்கான பலன்கள் என்ன? அதை இப்போதே பார்த்து மனதைக் குழப்பிக் கொள்ளாமல், பொறுமையாக இருங்கள். 15.12.2014 திங்கட்கிழமையன்று பலாபலன்களுடன் கூடிய அந்தக் கட்டுரை வெளியாகும்.

அன்புடன்
வாத்தியார்
===============================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

5.11.14

பழநிமலையில் இருக்கும் வேல்முருகா - நாங்கள் பல்லாண்டு ஏங்கிவிட்டோம் வா முருகா!


பழநிமலையில் இருக்கும் வேல்முருகா - நாங்கள்
பல்லாண்டு ஏங்கிவிட்டோம் வா முருகா!

மனவளக் கட்டுரை

”உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டால் பலருக்கும் சட்டென்று சொல்லத் தெரியாது. ஏனென்றால் பலருக்கும் அதீதமாக, பலவிதமான தேவைகள் உள்ளன. கேட்டால் பட்டியல் போட்டு அவர்கள் எழுதித் தரவே
பல மணித்துளிகளாகும்.

அனால் ஒரு கவிஞனைக் கேட்டபோது சட்டென்று இரண்டே வரிகளில்
அவன் பதில் சொன்னான்.

கேட்கப்பெற்ற  கேள்வி: மனிதனுக்கு என்ன தேவை? அவன் சொன்ன
பதில்:

காலையில் மலச்சிக்கலும்
இரவில் மனச்சிக்கலும் 
இல்லாத வாழ்க்கை வேண்டும்!”

என்னவொரு அசத்தலான பதில் பாருங்கள்.

ஆமாம். காலை எழுந்தவுடன், வயிற்றின் அடிப்பகுதியில் உள்ள Bowl விரிவடைந்து மலம் வெளியேறி விடவேண்டும். அப்போதுதான் மற்ற காலைக் கடன்களை எல்லாம் சுறுசுறுப்பாகச் செய்து, அன்றைய
வேலைக்கு நம்மை நாம் தயார் செய்துகொள்ள முடியும். அதுபோல
இரவில் மனச் சிக்கல் இல்லாமல் இருந்தால்தான் நித்திராதேவி
நம்மை சீக்கிரம் அணைத்துக் கொள்வாள். இல்லை என்றால் அவள் போய்விடுவாள். நம்பாடு திண்டாட்டம்தான்!

இப்போதெல்லாம், பூவன் வாழைப்பழம், விளக்கெண்ணெய் போன்ற
இயற்கை மருந்துகளுடன், Acelac, Dulcolax, போன்ற அலோபதி
மருந்துகளும் உள்ளன. வயதானவர்களுக்கு மட்டுமே அவைகள்
சரியாக இருக்கும்.

சிக்கன் மஞ்சூரியா, மட்டன் கிரேவி. பரோட்டா என்று இரவில் வெட்டி
விட்டு காலை எட்டு மணி வரை தூங்கும் இளைஞர்களுக்கும், மத்திய வயதினருக்கும், அந்த மருந்துகள் எல்லாம் தேவைப்படாது.

சரி, சொல்லவந்த மேட்டருக்கு வருகிறேன்:

மனிதனுக்கு முதலில் என்ன வேண்டும்?

சின்ன வயதில் அரவணைத்து வளர்க்ககூடிய நல்ல தாய் வேண்டும்.

இளைஞனாக, நன்றாகப் படித்து, வேலையில் சேர்ந்த பிறகு, நல்ல வாழ்க்கைத் துணை வேண்டும். அதாவது அன்பான மனைவி வேண்டும்.
நல்ல மனைவி அமைந்துவிட்டால் வாழ்க்கையில் பாதிப் பிரச்சினைகள் தானாகச் சரியாகி விடும்.

நல்ல மனைவிக்கு அளவுகோள் என்ன? அதற்கு அளவுகோள், ஸ்கேல், அவுன்ஸ்கிளாஸ் எல்லாம் கிடையாது.

ஒரே வரியில் சொன்னால், அவனைப் புரிந்து நடந்து கொள்ளக்கூடிய
மனைவி வேண்டும். அவனுடைய நிலைமை தெரிந்த மனைவி
வேண்டும்.

”உங்களைக் கல்யாணம் செய்துகொண்டு என்ன சுகத்தைக் கண்டேன்?”
என்று அவள் ஒருநாளும் புலம்பக்கூடாது.

மாதம் 20,000 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறவனுக்குக்கூட,
இன்றைய விலைவாசிப் பேயால் பல உபத்திரவங்கள் உண்டு.
அதை உணராமல் பண்டிகை விசேடங்களுக்குப் பத்தாயிரம்
ரூபாயில் பட்டுப் புடவை கேட்டு நச்சரிக்கும் மனைவி கூடாது.

அதைத்தான் ஞானி ஒருவன் பாட்டில் வைத்தான். பாடலைப்
பாருங்கள்!

ஆபத்துக்கு உதவாப் பிள்ளை
அரும்பசிக்கு உதவா அன்னம்
தாகத்தைத் தீராத் தண்ணீர்
தரித்திரம் அறியாப் பெண்டிர்
கோபத்தை அடக்கா வேந்தன்
குரு மொழி கொள்ளாச் சீடன்
பாபத்தை தீராத் தீர்த்தம்
பயனில்லை, ஏழும் தானே!
           - விவேக சிந்தாமணி

தரித்திரம் அறியாப் பெண்டிர்’ என்று சொன்னான் பாருங்கள்.
அதுதான் சத்தியமான வார்த்தை. கணவனின் பொருளாதார
நிலைமை தெரியாத மனைவி என்று பொருள். சூழ்நிலை தெரியாத
பெண். அவளை வைத்துக்கொண்டு அவன் எப்படி அல்லல்பட
வேண்டும். சற்று யோசித்துப் பாருங்கள்!

தரித்திரம் அறியாத பெண் மனைவியாக வந்தால், கணவனின்
டெபாஸிட் காலியாகிவிடும்.

எந்த உணவாக இருந்தாலும் தொண்டைவரைதான் ருசி. அது
பாசுமதி அரிசி சாதமாகட்டும் அல்லது ஐ.ஆர் எட்டில் வடித்த
சாதமாகட்டும், கிடைப்பதை உண்ணப் பழகிக்கொள்ள வேண்டும். பசிக்குத்தான் உணவு: ருசிக்கு அல்ல!

தூக்கம்தான் முக்கியம். ஏ.ஸி அறையிலும், பஞ்சு மெத்தையிலும்
படுத்துப் பழகக்கூடாது. பாயில் படுத்துப் பழக வேண்டும். எங்கே
போனாலும் பாய் கிடைக்கும்.

உண்ண உணவு, உடுக்க உடை, வசிக்க சிறு வீடு இது மட்டும்தான்
அன்றாட வாழ்விற்குத் தேவை. ரோட்டி கப்டா மக்கான் என்று வட
இந்தியர்கள் சொல்வார்கள் அதுதான் முக்கியம். அதில் வசிதிக்கும்  ஆடம்பரத்திற்கும்  ஆசைப் படக்கூடாது.

பட்டினத்தடிகளைவிடவா பெரிய செல்வந்தர் இருக்க முடியும்.
கடைசியில் இறைவனின் பெருமையறிந்து, துறவறம் பூண்டு,
இறைவனைத் தேடியதோடு, எளிய வாழ்க்கையும் அவர்
மேற்கொண்டார்.

அந்தத் துறவு நிலையிலும், அவர் மகிழ்ச்சியாக இருந்தார்.
பாடலைப் பாருங்கள்

உடைகோ வணம் உண்டு, உறங்கப் புறந்திண்ணையுண்டு, உணவிங்கு
அடைகாய் இலையுண்டு, அருந்தத் தண்ணீர் உண்டு, அருந்துணைக்கே
விடையேறும் ஈசர் திருநாமம்உண்டு இந்தமேதினியில்
வடகோடு உயர்ந்தென்ன தென்கோடு சாய்ந்தென்ன வான்பிறைக்கே?

எத்தனை அருமையாகச் சொல்லியிருக்கிறார் பாருங்கள்!

மனித வாழ்க்கையில் என்ன மிச்சமாகும்?

தாசியின் மார்பிலும் தவுல்கொண்ட தோளிலும்
       தழும்புதான் மிச்ச மாகும்
சன்யாசி பையிலும் சாவுண்ட மெய்யிலும் 
       சாம்பல்தான் மீத மாகும்
                          - கவியரசர் கண்ணதாசன் 

என்று கவியரசர் மீதத்திற்குக் கணக்குச் சொன்னார்!

அது இறக்கும் போது வரும் கணக்கு: இருக்கும்போது என்ன இருக்கும்? எப்போதும் ஏக்கம்தான் மேலோங்கி இருக்கும். அதுதான் முடிவில் மிச்சமுமாகும். நிறைவேறாத ஆசைகளால் ஏற்படும் ஏக்கம்தான்
அதிகமாக இருக்கும். ஆசைகளையும் அதனால் ஏற்படும்
ஏக்கங்களையும் விட்டொழியுங்கள். எளிய வாழ்க்கையில் அது சாத்தியமாகும். இருப்பது போதும் என்ற மனதில் ஏக்கத்திற்கு
இடமே இருக்காது.

ஆகவே எளிய வாழ்க்கை வாழ வேண்டும். அதில்தான் நிமதியும் சந்தோஷமும் இருக்கும்

அது இல்லாதவர்கள், தலைப்பில் உள்ள பாடல் வரியையைத்தினமும்
பாடி முருகப் பெருமானைப் பிரார்த்தனை செய்யுங்கள்.

பழநிமலையில் இருக்கும் வேல்முருகா - நான்
பல்லாண்டு ஏங்கிவிட்டேன் வா முருகா!

கண்டிப்பாக அவர் உங்களுடைய வாழ்க்கையை சீராக்குவார்.
செம்மைப் படுத்துவார்.

அன்புடன்,
வாத்தியார்
-----------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

4.11.14

உங்களுக்காகத் தனியாக மின்சாரம்!


உங்களுக்காகத் தனியாக மின்சாரம்!

ஒவ்வொருவருக்கும் தனியாக சம்சாரம் இருப்பதைப்போல மின்சாரத்தையும் தனியாக வைத்துக்கொள்ளலாம். ஆச்சரியமாக இருக்கிறதா?
செய்தி கீழே உள்ளது. படித்துப் பாருங்கள்!

அன்புடன்,
வாத்தியார்
----------------------------------------------------
கே.ஆர். ஸ்ரீதர் - இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர். அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்?

திருச்சியில் உள்ள ரீஜினல் என்ஜினீயரிங் காலேஜில் (தற்போது என்.ஐ.டி.) மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்தவுடன் அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நியூக்ளியர் என்ஜினீயரிங் படித்து விட்டு, அதே பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டமும் பெற்றார் ஸ்ரீதர்.

மிகப் பெரிய புத்திசாலியாக இருந்த இவரை நாசா அமைப்பு உடனடியாக வேலைக்கு எடுத்துக் கொண்டது. அரிசோனா பல்கலைக் கழகத்தில் உள்ள ஸ்பேஸ் டெக்னாலஜீஸ் லேபரட்டரியின் இயக்குநராக அவரை நியமித்தது.
முழுவதும் படிக்க..

செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் வாழ முடியுமா? அதற்குத் தேவையான சாத்தியக்கூறுகளைக் கண்டுபிடிப்பது எப்படி? என்பது பற்றி ஆராய்ச்சி செய்வதே ஸ்ரீதரின் வேலை. முக்கியமாக செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் சுவாசிக்கத் தேவையான ஆக்ஸிஜனை தயார் செய்ய முடியுமா என்கிற ஆராய்ச்சியை மேற்கொண்டார்.

இந்த ஆராய்ச்சியில் மிகப் பெரிய வெற்றியும் பெற்றார். ஆனால் அமெரிக்க அரசாங்கமோ திடீரென அந்த ஆராய்ச்சியை ஓரங்கட்டிவிட்டது. என்றாலும் தான் கஷ்டப்பட்டுகண்டுபிடித்த விஷயத்தை ஸ்ரீதர் அப்படியே விட்டு விடவில்லை. அந்த ஆராய்ச்சியை அப்படியே ரிவர்ஸில் செய்து பார்த்தார் ஸ்ரீதர்.

அதாவது, ஏதோ ஒன்றிலிருந்து ஆக்ஸிஜனை உருவாக்கி வெளியே எடுப்பதற்குப் பதிலாக அதை ஒரு இயந்திரத்துக்குள் அனுப்பி,அதனோடு இயற்கையாகக் கிடைக்கும் எரிசக்தியை சேர்த்தால் என்ன நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தார். அட, என்ன ஆச்சரியம்! மின்சாரம் தயாராகி வெளியே வந்தது.

இனி அவரவர்கள் அவரவருக்குத் தேவையான மின்சாரத்தை இந்த இயந்திரம் மூலம் தயார் செய்து கொள்ளலாம் என்கிற நிலையை ஸ்ரீதர் உருவாக்கி இருக்கிறார். தான் கண்டுபிடித்த இந்தத் தொழில் நுட்பத்தை அமெரிக்காவில் செய்து காட்டிய போது அத்தனை விஞ்ஞானிகளும் அதிசயித்துப் போனார்கள். ஆனால் இந்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வர்த்தக ரீதியில் மின்சாரம் தயாரிக்க வேண்டுமெனில் அதற்கான இயந்திரங்களை உருவாக்க வேண்டும். இதற்கு பெரிய அளவில் பணம் வேண்டும்.

இப்படிப்பட்ட தொழில் நுட்பத்தைப் உருவாக்கும் பிஸினஸ் பிளான்களுக்கு வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள்தான் பணத்தை முதலீடு செய்யும். ஸ்ரீதருக்கும் அப்படி ஒருவர் கிடைத்தார். அவர் பெயர், ஜான் டூயர். சிலிக்கன் பள்ளத்தாக்கில் பிரபலமாக இருக்கும் மிகப் பெரிய வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனமான கிளீனர் பெர்க்கின்ஸை சேர்ந்தவர் இந்த ஜான் டூயர்.
அமெரிக்காவில் மிகப் பெரும் வெற்றி கண்ட நெட்ஸ்கேப், அமேசான், கூகுள் போன்ற நிறுவனங்கள் இன்று பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கக் காரணம், ஜான் டூயர் ஆரம்பத்தில் போட்ட முதலீடுதான்.

கூகுள் நிறுவனத்தை ஆரம்பிக்க ஜான் டூயர் தொடக்கத்தில் போட்ட முதலீடு வெறும் 25 மில்லியன் டாலர்தான். ஆனால், ஸ்ரீதரின் தொழில் நுட்பத்தை வர்த்தக ரீதியில் செயல்படுத்த ஜான் டூயர் போட்ட முதலீடு 100 மில்லியன் டாலர். இது மிகப் பெரும் தொகை. என்றாலும் துணிந்து முதலீடு செய்தார் ஜான். காரணம், ஸ்ரீதர் கண்டு பிடித்த தொழில் நுட்பம் சுற்றுச்சூழலுக்கு உகந்தது. பொதுவாக மின் உற்பத்தி செய்யும் போது சுற்றுச்சூழல் பிரச்னைகள் நிறையவே எழும். அது நீர் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி, அனல் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி.

எனவே சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் பங்கம் வராத மின் உற்பத்தித் தொழில் நுட்பத்துக்கு மிகப் பெரிய வரவேற்பு இருக்கும் என்று நினைத்தார் அவர். தவிர, ஸ்ரீதரின் தொழில் நுட்பத்தைக் கொண்டு குறைவான செலவில் மின்சாரம் தயார் செய்ய முடியும். இந்த பாக்ஸிலிருந்து உருவாகும் மின்சாரம் குறைந்த தூரத்திலேயே பயன்படுவதால் மின் இழப்பு என்கிற பேச்சுக்கே இடமில்லை. இது மாதிரி பல நல்ல விஷயங்கள் ஸ்ரீதரின் கண்டுபிடிப்பில் இருப்பதை உணர்ந்ததால் அவர் அவ்வளவு பெரிய தொகையை முதலீடு செய்தார்.

நல்லவேளையாக, ஜான் டூயரின் எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை. கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் கஷ்டப்பட்டு பலரும் உழைத்ததன் விளைவு இன்று 'ப்ளூம் பாக்ஸ்' என்கிற மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸ் தயார் செய்துள்ளார். சுமார் 10 முதல் 12 அடி உயரமுள்ள இரும்புப் பெட்டிதான் ஸ்ரீதர் உருவாக்கியுள்ள இயந்திரம். இதற்கு உள்ளே ஆக்ஸிஜனையும் இயற்கை எரிவாயுவையும் செலுத்தினால் அடுத்த நிமிடம் உங்களுக்குத் தேவையான மின்சாரம் தயார். இயற்கை எரிவாயுவுக்குப் பதிலாக மாட்டுச்சாண வாயுவையும் செலுத்தலாம். அல்லது சூரிய ஒளியைக் கூட பயன்படுத்தலாமாம். இந்த பாக்ஸ்களை கட்டடத்துக் குள்ளும் வைத்துக் கொள்ளலாம். வெட்ட வெளியிலும் வைத்துக் கொள்ளலாம் என்பது சிறப்பான விஷயம்.

உலகம் முழுக்க 2.5 பில்லியன் மக்கள் மின் இணைப்புப் பெறாமல் இருக்கிறார்கள் ஆப்பிரிக்காவில் ஏதோ ஒரு காட்டில் இருக்கும் கிராம மக்களுக்கு மின்சாரம் கொடுத்தால், அதனால் அரசாங்கத்துக்கு எந்த லாபமும் இல்லை என்பதால் அவர்கள் மின் இணைப்புக் கொடுப்பதில்லை. கிராமத்தை விட்டு வந்தால் மட்டுமே பொருளாதார ரீதியில் முன்னேற முடியும் என்கிற நிலை அந்த கிராம மக்களுக்கு. ஆனால் இந்த 'ப்ளூம் பாக்ஸ்' மட்டும் இருந்தால் உலகத்தின் எந்த மூலையிலும் மின்சாரம் தயார் செய்யலாம்''என்கிறார் ஸ்ரீதர்.

ஒரு 'ப்ளூம் பாக்ஸ்' உங்களிடம் இருந்தால் இரண்டு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். இதே பாக்ஸ் இந்தியாவில் இருந்தால் நான்கு முதல் ஆறு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். அமெரிக்க வீடுகளில் அதிக மின்சாரம் பயன்படுத்தப்படுவதே அங்கு வீடுகளின் எண்ணிக்கை குறையக் காரணம். இன்றைய தேதியில் அமெரிக்காவின் 20 பெரிய நிறுவனங்கள் ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன. கூகுள் நிறுவனம்தான் முதன் முதலாக இந்தத் தொழில்நுட்பத்தை வாங்குவதற்கான கான்ட்ராக்ட்டில் கையெழுத்திட்டது. 'ப்ளூ பாக்ஸ்' மூலம் கூகுள் உற்பத்தி செய்யும் 400 கிலோ வாட் மின்சாரமும் அதன் ஒரு பிரிவுக்கே சரியாகப் போகிறது.

வால் மார்ட் நிறுவனமும் 400கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸை வாங்கி இருக்கிறது. இப்போது Fedex, E bay, கோக்கா கோலா, அடோப் சிஸ்டம், சான் பிரான்சிஸ்கோ ஏர்போர்ட் போன்ற பல நிறுவனங்களும் இந்த புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன. 100 கிலோ வாட் மின்சாரம் தயார் செய்யும் ஒரு பாக்ஸின் விலை 7முதல் 8 லட்சம் டாலர்! அட,  அவ்வளவு பணம் கொடுத்து வாங்க வேண்டுமா? என நீங்கள் நினைக்கலாம். ஆனால் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் E bay நிறுவனம் கடந்த ஆண்டு ஸ்ரீதரிடமிருந்து ஐந்து பாக்ஸ்களை வாங்கியது.

தனக்குத் தேவையான 500 கிலோ வாட் மின்சாரத்தை இந்த பாக்ஸின் மூலமே தயார் செய்துவிடுகிறது. இந்த பாக்ஸ்களை வாங்கிய ஒன்பதே மாதத்துக்குள் 1 லட்சம் டாலர் வரை மின் கட்டணத்தைசேமித்திருக்கிறதாம் E bay. இன்னும் ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் அமெரிக்காவின் பல வீடுகளில் இந்த 'ப்ளூம் பாக்ஸ்' இருக்கும். சாதாரண மனிதர்களும் இந்த பாக்ஸை வாங்கி பயன்படுத்துகிற அளவுக்கு அதன் விலை 3,000 டாலருக்குள் இருக்கும்'' என்கிறார் ஸ்ரீதர். அந்த அளவுக்கு விலை குறையுமா என்று கேட்டால், ஒரு காலத்தில் லட்சத்தில் விற்ற கம்ப்யூட்டர் இன்று ஆயிரங்களுக்குள் கிடைக்கிறதே என்கிறார்கள் ஸ்ரீதரின் ஆதரவாளர்கள். ஸ்ரீதரின் இந்த தொழில்நுட்பம் எதிர்காலத்தில் நிஜமாகும் பட்சத்தில் உலகம் முழுக்க மக்கள் அந்தத் தமிழரின் பெயரை உச்சரிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லலை.

Source: http://www.sinthikkavum.net/2011/09/blog-post_1763.html 
----------------------------------------------
இணையத்தில் படித்தது. செய்தி முக்கியமானதாகவும், மகிழ்வைத் தரக்கூடியதாகவும் இருந்தால், உங்களுக்கு அறியத் தந்துள்ளேன்
-----------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

3.11.14

Short Story: சிறுகதை: அப்பத்தாவின் அணுகுமுறை!


Short Story: சிறுகதை: அப்பத்தாவின் அணுகுமுறை!

Approach means a way of dealing with a situation or problem.
Appaththa means Grand mother from father's side
----------------------------------------------------------
அடியவனால் எழுதப்பெற்று, மாத இதழ் ஒன்றில் வெளியாகி. பலரது பாராட்டுக்களையும் பெற்ற சிறுகதை இது. அதை  இன்று உங்களுக்கு
அறியத்தரும் முகமாக பதிவில் ஏற்றியுள்ளேன். அனைவரையும்
படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்

அன்புடன்,
வாத்தியார்
-----------------------------------------------------------
கதையின் தலைப்பு: அப்பத்தாவின் அணுகுமுறை!

“ஆணை அடக்கி வள; பெண்ணைப் பொசுக்கி வள, என்று சொல்லி, எங்க காலத்தில் பிள்ளைகளை வளர்த்தார்கள். இப்போது அப்படியா நடக்கிறது?
பிள்ளைகள்தான் பெற்றோர்களைப் பொசுக்கி வைத்துள்ளன” என்று தன்னுடைய அப்பத்தா உமையாள் ஆச்சி சொல்லியவுடன், ஆச்சியின்
பேரன் முத்தப்பன் மெல்லிய குரலில் சொன்னார்.

“அப்பத்தா, உங்க காலத்தில் வீட்டில் எட்டுப் பிள்ளைகள், பத்துப் பிள்ளைகள் என்று நிறையப் பிள்ளைகள். கண்டிப்புடன் வளர்த்தார்கள். ஒன்று
அப்பச்சி கண்டிப்புடன் இருப்பார். இல்லையென்றால் ஆத்தா கண்டிப்பு மிக்கவராக இருந்தார். செல்வந்தர் வீடாக இருந்தாலும் எளிமையான
வாழ்க்கை. இப்போது அப்படி இல்லை. வீட்டிற்கு ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள்தான். செல்லமாக வளர்க்கிறார்கள். அவர்கள் சொன்னது
கேட்பதில்லை. அதுதான் குறை!”

“கேட்டதை உடனே வாங்கிக் கொடுக்கிறார்கள். அதுவும் குறைதான். படிக்கும் காலத்தில் செல்போன் எதற்கு?”

“பெண் குழந்தைகளுக்கு அது அவசியம் அப்பத்தா. ஒரு பாதுகாப்பிற் காகத்தான்.”

“பேசுவதற்குத்தானே - சாதாரண போன் பத்தாதா? பதினைந்தாயிரம்
ரூபாயில் ஸ்மார்ட்போனாமே - அது எதற்கு? அத்துடன் இணைய
இணைப்பு, டாப் அப் என்று பிள்ளைகள் மாதம் ஐநூறு ரூபாய்களைக்
கறந்து விடுகின்றன. அதெல்லாம் தேவையா? அதனால் படிக்கின்ற
காலத்தில் எத்தனை கேடுகள் தெரியுமா? பணத்தின் அருமை
இப்போது பிள்ளைகளுக்கு எங்கே தெரிகிறது?

“உண்மைதான். கண்ணைக் கசக்குகிறார்களே என்று வாங்கிக்
கொடுக்க வேண்டியதாக உள்ளது”

“கண்ணைக் கசக்கினால் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பாமல் விட்டு வைப்போமா? உரிய மதிப்பெண்களை வாங்கவில்லை - அதனால் பொறியியல் படிப்பு உனக்குக் கிடையாது. என்னால் லட்சக்கணக்கில்
பணம் கொடுத்து சீட் வாங்க முடியாது என்று சொல்கிறோமா? பணம் செலவழித்து ஏற்பாடு செய்கிறோமா இல்லையா?”

“அவர்களுடைய எதிர்காலத்திற்காக அதை எல்லாம் செய்ய
வேண்டியதாக உள்ளது!”

“செய்ய வேண்டியதை, செய்யக்கூடியததைத்தான் செய்ய வேண்டும்.
நேற்று உன் அண்ணன் முருகப்பன் வந்து கலங்கி விட்டுப் போனான். என்னையும் கலக்கிவிட்டுப் போனான். என்னவென்று தெரியுமா
உனக்கு?”

“தெரியாது அப்பத்தா! நீங்கள் சொன்னால்தான் தெரியும்? அண்ணனும் அண்ணமிண்டியும் கசடுகள். அடுத்தவன் வீட்டு விஷயத்தை
ஆர்வத்துடன் விசாரிப்பார்கள். ஆனால் அவர்கள் வீட்டு விஷயத்தை அப்படியே அமுக்கிவிடுவார்கள். அத்துடன் கோபப்படுவார்கள்.
அதனால் அவர்கள் வீட்டு விஷயத்தில் நான் தலையிடுவதில்லை”

“எல்லாவற்றையும் எப்படி அமுக்க முடியும்? அவனுடைய மகள் நீலா
உடன் வேலை பார்க்கும் பையனைக் காதலிக்கிறாளாம். அவனைத்தான் மணம் செய்து கொள்வேன் என்று ஒற்றைக் காலில் நிற்கிறாளாம்.
உங்கள் சம்மதம் தேவை. நீங்கள் சம்மதித்தால் மட்டுமே திருமணம்.
இல்லை என்றால் நான் திருமணம் செய்து கொள்ளாமல் உங்களு
டனேயே இருந்து விடுகிறேன் என்கிறாளாம். என்ன செய்யலாம் என்று கேட்டார்கள்?”

“அடடா, என்ன சொன்னீர்கள்?”

“சொல்வதற்கு என்ன இருக்கிறது? குடும்ப கெளரவத்தைக் கெடுக்கப் பிறந்ததுகள். போனால் போகட்டும் என்று விட்டு விடுங்கள் என்று சொன்னேன்.”

“அதற்கு அவர்கள் என்ன சொன்னார்கள்?”

“என்ன நீ? கதை கேட்பது போல ஒவ்வொன்றாகக் கேட்டுக் கொண்டிருக்கிறாய்? என்ன செய்தால் நல்லது என்று நீ சொல்!”

“காதலித்தவளுக்குக் கல்யாணம் பண்ணிக்கொள்ளத் தெரியாதா?"

"நானும் அதைத்தான் சொன்னேன். அவளையே வீட்டை விட்டுப்போய் கல்யாணம் செய்துகொள்ளச் சொல்லுங்கள் என்றேன். அதற்கு அவர்கள்.
இருபத்திநான்கு ஆண்டுகள் வளர்த்த பெண்ணை ஒரே நாளில் எப்படித்
தலை முழுக முடியும்? ஆகவே. நாங்கள் முன்னின்று அவளுடைய
திருமணத்தை நடத்தி வைப்பதாக உள்ளோம். வீட்டிற்குப் பெரியவர்கள் நீங்கள், உங்கள் ஆசீர்வாதம் வேண்டும் என்பதற்காகத்தான் முதன்
முதலில் உங்களிடம் சொல்கிறோம் என்றார்கள். நான் ஆசீர்வதிப்பதற்கு அதில் என்ன இருக்கிறது? எல்லாம் தலை எழுத்து. உங்கள் இஷ்டப்படி
செய்யுங்கள். என்னை இழுக்காதீர்கள் என்று சொல்லிவிட்டேன்.
நம்முடைய பண்பாடு, பாரம்பரியம், கலாச்சாரம் இவற்றையெல்லாம் சொல்லி வளர்க்காததினால் ஏற்படும் அவலம் என்று சொன்னேன்.
அத்துடன் இன்னொன்றையும் சொன்னேன். சின்னத்தா மகன் சிவநேசன்  முன்பு செய்தானே - அது போல பங்காளிகள், தாய பிள்ளைகள் என்று எல்லோரையும் அழைத்து, பஸ் வைத்துக் கூட்டிக்கொண்டுபோய்,
நீங்கள் செய்வதை ஊர் அறிய நியாயப் படுத்தாதீர்கள். நகரத்தார்களின்
நீண்ட வரலாற்றிற்கும், பாரம்பரியத்திற்கும், கலாச்சாரத்திற்கும் இது ஒவ்வாதது. அத்துடன் இதை நியாயப்படுத்தி மற்றவர்களுக்கும் முன்னுதாரணமாகத் திகழாதீர்கள். அது சமூகக் கேடாகும். காதலிப்பவன்
ஒரு காஷ்மீர்க்காரன் என்றால் நீங்கள் அங்கே சென்று அவளுடைய திருமணத்தை நடத்தி வைப்பீர்களா? அல்லது அவன்தான் தன்னுடைய உறவினர்களுடன் சென்னைக்கு வந்து உங்களுடைய பெண்ணைத்
திருமணம் செய்து கொள்வானா? இதை எல்லாம் சொல்வதனால் நான் காதலுக்கு எதிரியல்ல. காதல் வேண்டியதுதான். ஆனால் அது திருமணத்திற்குப் பிறகுதான் வரவேண்டும். கணவன் மனைவியையும், மனைவி கணவனையும் காதலிக்க வேண்டும். அதானால்தான்
கவியரசர் கண்ணதாசன் தன்னுடைய பாடல் ஒன்றில் அதை நன்றாக வெளிப்படுத்தினார். இளைஞர்களுக்கும், இளம் பெண்களுக்கும் அறிவுரையாகச் சொன்னார்.

“காதலைக் காவியத்திற்கு விட்டுவிடுங்கள்
கல்யாணத்தை பெற்றோர்களிடம் விட்டுவிடுங்கள்”

என்றார்”

”உண்மைதான் அப்பத்தா! நீங்கள் சொன்னால் சரிதான்” என்று முத்தப்பன் அத்துடன் முடித்துக் கொண்டான்.

                                          ***************************

பிரச்சினைகள் வரத்தான் செய்யும். அதை நாற்காலி போட்டு உட்கார வைக்காதீர்கள். அவ்வப்போது, என்ன, ஏதென்று பார்த்து அனுப்பி
விடுங்கள். அப்போதுதான் நீங்கள் நிம்மதியாக இருக்க முடியும் என்று அப்பத்தா அடிக்கடி சொல்வார்.

முருகப்பனும் அதைத்தான் செய்தார்.

பையனின் பெற்றோர்கள் பொள்ளாச்சியில் இருந்தார்கள்.
 பொள்ளாச்சியில் இருந்து பாலக்காடு செல்லும் சாலையில் உள்ள
ஜமீன் முத்தூர் என்னும் கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள்.
பெரிய தென்னந்தோப்பு இருந்தது. வசதியான குடும்பமாக இருந்தது.

அவர்களுடைய முதல் கேள்வியே அதிரடியாக இருந்தது.

“பெண்ணிற்கு என்ன சீர் செய்வீர்கள்?” என்று கேட்டார்கள். உடன்
சென்ற முருகப்பனின் மனைவி வள்ளி ஆச்சிக்கு அது அதிர்ச்சியாக
இருந்தது.

காதல் திருமணம்தானே? கொடுப்பதை வாங்கிக் கொள்ள வேண்டியது
தானே? இதை எல்லாம் எதற்குக் கேட்கிறார்கள் என்று நினைத்தார்.

ஆனால் முருகப்பன் நிலைமையை உணர்ந்து நிதானமாகப் பேசினார்.

”ரொக்கமாகப் பத்து லட்சமும், இரண்டு வைர நகைகளையும்
கொடுப்பதாக உள்ளோம்.”

பையனின் தந்தை தொடர்ந்து கேட்டார்: “பூமியாக எத்தனை ஏக்கர் கொடுப்பீர்கள்?”

பூமியா? முருகப்பன் திகைத்துப்போய் விட்டார். ஏன்டா பேசப்
போனோம் என்று ஆகிவிட்டது!

”எங்கள் பகுதியில் பூமியைச் சீராகக் கொடுக்கும் வழக்கமில்லை”
என்று மெதுவாகச் சொன்னார்.

அதுவுமில்லாமல் பெண்ணிற்காக எடுத்துவைத்துள்ள பணத்தில்,
அதுவும் இன்று உள்ள விலைவாசி நிலவரத்தில் ஒரு ஏக்கர் நிலத்தைக்
கூட வாங்க முடியாது.

”உங்களுக்காக நானும் இறங்கி வருகிறேன். பெண்ணிற்குச் சீராக நான்கு
ஏக்கர் நிலத்தை வாங்கிக் கொடுங்கள். தமிழ்நாட்டில் எந்தப் பகுதியில்
வேண்டுமென்றாலும் வாங்கிக் கொடுங்கள். அத்துடன் வைர நகைகள் எல்லாம் எங்களுக்கு ஆகாது. எல்லாவற்றையும் தங்கமாகவே
கொடுத்து விடுங்கள். நூறு பவுனிற்கு நகைகளைக் கொடுங்கள்”

முருகப்பன் சட்டென்று மனதிற்குள்ளேயே  கணக்குப் போட்டார். மன்னார்குடிக்கு அருகே பூர்வீகச் சொத்தாக வந்த நிலம் இருக்கிறது.
பத்து ஏக்கர். அதில் நான்கு ஏக்கர்களைக் கொடுத்துவிடலாம் என்று
முடிவு செய்தார். அத்துடன் வைரத்திற்குப் பதிலாகத் தங்கம் எனும்
போது அதில் பெரிய பிரச்சினை ஒன்றும் இல்லை!

சரி என்று சொன்னவர். சட்டென்று கேட்டார்.”பையனுக்கு நீங்கள்
என்ன செய்வீர்கள்?”

பையபின் தந்தை கடகடவென்று சிரித்தார்.” எங்களுக்கு அவன் ஒரே
பையன். ஆகவே எங்கள் சொத்துக்கள் எல்லாம் அவனுக்குத்தான்!”

பிறகு மெதுவாகத் தனக்குள்ள ஆஸ்திகளைப் பட்டியலிட்டார். ஜமீன் முத்தூரில் இருக்கும் நூறு ஏக்கர் தென்னந்தோப்பு, அங்கே உள்ள
பெரிய வீடு, பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் இருக்கும் பங்களா, மனைவியிடம் இருக்கும் இருநூறு பவுன் நகைகள், பழநி ரோட்டில்
இருக்கும் தேங்காய் நார்த் தொழிற்சாலை.

முருகப்பனுக்கும் ஒரளவிற்குத் திருப்தியாக இருந்தது. தன்னுடைய மனப்பூர்வ சம்மதத்தைத் தெரிவித்தார்.

பிறகு நடந்ததெல்லாம் முக்கியமில்லை. அடுத்த மாதம் வந்த ஒரு
வளர்றை முகூர்த்த நாளில், பழநி தண்டாயுதபாணி சந்நிதியில்
நீலாவின் திருமணம் நடந்தேறியது.

                                  **********************************************

"எங்கே வாழ்க்கை தொடங்கும் -  அது 
எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இதுதான் பயணம் 
என்பது யாருக்கும் தெரியாது"

என்று கவியரசர் கண்ணதாசன் வாழ்க்கையின் போக்கை இரண்டே
வரிகளில் அற்புதமாக எழுதி வைத்தார்.

பிரம்மாண்டமான தேசிய நெடுஞ்சாலையில் ஆரம்பித்த நீலாவின்
திருமண வாழ்க்கை ஒரு முட்டுச் சந்தில் போய் முடிந்துவிட்டது.
ஆமாம், கணவனுடன் பிணக்கமாகி மூன்றே மாதங்களில் தாய்
வீட்டிற்கே திரும்பி வந்துவிட்டாள்.

எதைக்கேட்டாலும் ஓ வென்று அழுகை. இரண்டு நாட்கள் விட்டுப்
பிடித்த முருகப்பன் அவளைத் தேற்றி, நடந்ததைத் தெரிந்துகொள்ள முயன்றார்.

தன்னுடைய கணவனைப் பிடிக்கவில்லை. அவனுடன் வாழ முடியாது
என்று திரும்பத் திரும்பச் சொன்னாள்.

முருகப்பன் பேச்சுக் கொடுத்தார்:

”குடிக்கிறானா....?”

”இல்லை!”

”போதைப் பொருள் பழக்கம் இருக்கிறதா....?”

”இல்லை!”

”உறவுகள் நார்மலாக உள்ளதா? அல்லது இரவு நேரங்களில் முரட்டுத்
தனமாக நடந்து கொள்கிறானா....?”

”அதிலெல்லாம் பிரச்சினை இல்லை!”

”பின்னே என்ன பிரச்சினை?”

”என்னை அநியாயத்திற்குக் கட்டுப் படுத்துகிறார். எனது சுதந்திர
உணர்வுகளை மதிப்பதில்லை. அடிமைபோல் நடத்துகிறார்

”அப்படி என்ன செய்கிறார்?”

“ஒரு வாரத்திற்கு முன்பு என் மேக்கப் சாமான்களை எல்லாம் கொண்டு
போய்த் தெருவில் உள்ள குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு வந்து
விட்டார். அவைகள் மொத்தம் பத்தாயிரத்திற்கு மேல் விலை
உள்ளவை. கேட்டால் திருமணத்திற்கு முன்புதான் அவைகள் எல்லாம்
ஒரு பெண்ணிற்குத் தேவைப்படும். இப்போது தேவை இல்லை
என்கிறார்”

முருகப்பனுக்குப் புரிந்தது. படிக்கிற காலத்திலேயே அவள் மாதம்
ஐயாயிரம் ரூபாய்க்கு மேக்கப் சாமான்களை வாங்குவாள். குளிக்கு
முன்பாகப் பூசிக் கொள்வது. குளித்த பிறகு பூசிக்கொள்வது என்று வகைவகையாக இருக்கும். எல்லாம் ஸ்ப்ரேயருடன் உள்ளவை.
கண்ணிற்குப் போடும் கண்மை செட்டே பிரமாதமாக இருக்கும்.
கண்ணிற்கு ஒன்று. இமைக்கு ஒன்று.புருவத்திற்கு ஒன்று. எல்லாம் பிராண்டட் அயிட்டங்கள். கண்ணிற்கு மட்டுமே மாதம் ஆயிரம் ரூபாய் செலவாகும்.

“பியூட்டி பார்லருக்கு சென்று முடியை வெட்டக்கூடாது என்கிறார்.
எங்கள் அம்மாவைப் போல முடியை நன்றாக வளர்த்து சடை
போட்டுக்கொள் என்கிறார். நடக்கிறகாரியமா?”

முருகப்பன் மனதிற்குள் நினைத்துக்கொண்டார். “ஆஹா..இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ஆயிரம்  ரூபாய்மிச்சமாகுமே!”

“இவ்வளவுதானா?”

“என்ன இவ்வளவுதானா என்கிறீர்கள்? ஜீன்ஸ் பேண்ட், ஸ்டாக்கிங்ஸ்,
 டி’ சர்ட் எல்லாம் அணியக்கூடாது என்கிறார். சூடிதார் அல்லது சேலை
மட்டும்தான் உடை என்கிறார்.”

“இரண்டு பேரும் ஒரே நிறுவனத்தில், ஒரே இடத்தில்தானே வேலை பார்க்கிறீர்கள். அதனால் மற்றவர்களின் பார்வைகளை வைத்து அப்படிச்
சொல்கிறார். நல்லதுதானே! குடும்பம் என்று வந்துவிட்ட பிறகு, குடும்பப்பெண் என்று வந்துவிட்ட பிறகு அதெல்லாம் தேவைதானே
ஆத்தா?”

”திருமணத்திற்கு முன்பு நான் அப்படித்தானே இருந்தேன். அப்போது
ஒன்றும் சொல்லாமல் உருகி உருகிக் காதலித்தவருக்கு இப்போது
என்ன ஆயிற்று? இப்போது ஏன் இந்த வக்கிரம்? கட்டுப் படுத்தும்
ஆணாதிக்கக் குணம்?”

"ஆணாதிக்கம் என்று சொல்லாதே ஆத்தா! அது தனக்கு என்று வரும் பொசஸிவ்னெஸ் - தனக்கு மட்டும் உரியது என்ற சுயகுணம் என்றும்

சொல்லலாம். அது இயற்கையானதுதான். தன் மனைவியை
மற்றவர்கள் ரசிக்கக்கூடாது என்ற ஆதங்கமாகவும் எடுத்துக்
கொள்ளலாம்!”

“நீங்கள் சப்பைக் கட்டுக் கட்டாதீர்கள் அப்பா! என்னைச் சற்றுத் தனியாக இருக்க விடுங்கள்” என்றாள்.

அத்துடன் தங்களுடைய பேச்சிற்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்துவிட்டு,
பிறகு இதைப் பார்த்துக்கொள்ளலாம் என்று அவளுடைய தந்தையும்
எழுந்து சென்று விட்டார்.

                                  ************************************

எங்கே சுற்றினாலும் கடைசியில் அம்பாளைத்தான் சேவிக்க
வரவேண்டும் என்பார்கள் மதுரைக்காரர்கள். மேற்படி செய்திகள்
எல்லாம் இரண்டே நாளில் அப்பத்தாவின் காதுகளுக்கு எட்டியது.

தொலைபேசியில் தன் பேரன் முருகப்பனோடு பேசியவர், நீலாவை அழைத்துக்கொண்டு ஊருக்கு வந்து சேர். நான் அவளைச் சமாதானப்
படுத்துகிறேன் என்றார்.

முருகப்பனும் அடுத்த நாள் காலையிலையே தன் மகள் நீலாவுடன்
வந்து சேர்ந்தார்.

வந்த கொள்ளுப் பேத்தியைக் கட்டியணைத்து உச்சி முகர்ந்து, அப்பத்தா
தன் அன்பை வெளிப் படுத்தியவுடன், அவள் கண் கலங்கியதோடு, குரல்
கொடுத்து அழுக ஆரம்பித்து விட்டாள்.

அப்பத்தா, சமாதானப் படுத்தியோடு சொன்னார்கள்: ”அழுகாதே!
அழுவதற்காக இந்தப் பிறவியை யாரும் எடுக்கவில்லை. எது
வந்தாலும் நின்று  சாதிக்க வேண்டும்! என்ன பெரிதாக நடந்துவிட்டது இப்போது?”

”உங்கள் பேச்சை எல்லாம் கேட்காமல் போய்விட்டதற்கு இப்போது வருந்துகிறேன்”

”என்ன செய்வதாக உத்தேசம்?”

”என்னுடைய குணத்திற்கும் அவருடைய குணத்திற்கும் ஒத்து வராது.
ஆகவே பிரிந்து வந்துவிடலாம் என்றுள்ளேன்!”

“எடுத்தேன்; கவிழ்த்தேன் என்று எதையும் செய்யக்கூடாது. ரத்து செய்யக்கூடிய அளவிற்கு அவர் ஒன்றும் குணக்கேடான ஆளாகத் தெரியவில்லை.

வெற்றிகரமான வாழ்க்கை என்பது உடன் இருப்பவர்களை ஒருவருக்கொருவர் அனுசரித்துக் கொண்டு போவதில்தான்
இருக்கிறது! ஆகவே நன்றாக யோசித்துப்பார். சரி, ரத்து செய்வதாகவே வைத்துக்கொள்வோம். அதனால் உனக்கு ஏற்படப்போகும் இழப்புக்களை நீ நினைத்துப் பார்த்தாயா?”

“இழப்பு என்று எதைச் சொல்கிறீர்கள்?”

”ஒரு கார்  விற்பனை நிலையத்தில் இருக்கும்வரைதான் புதுக்கார். 
ஒருவர் ஒரு காரை வாங்கிக்கொண்டுபோய்விட்டு ஒரு மாதம் 
கழித்துத் திருப்பிக் கொண்டுவந்தால் அது புதுக்கார் கணக்கில் வராது. 
அதை செகண்ட் கார் என்றுதான் சொல்வார்கள். திருமணமான பெண், திரும்பக் கன்னிப் பெண் என்ற நிலைக்குத் திரும்பி வரமுடியாது. 
கன்னிப் பெண்ணிற்கு உள்ள திருமண வாய்ப்புக்கள், இரண்டாவது திருமணத்திற்குக் கிடைக்காது. அது தெரியுமா? காம்ப்ரமைஸ் 
அதாவது சமரசம் செய்து கொள்ள வேண்டும். அதையும் யோசித்துப்பார்!”

தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அவளுக்கு அறிவுரை சொன்னார்கள். அவர்கள் காலத்தில் பெண்கள் எப்படி பல கசப்பான

நிகழ்வுகளையும் சகித்துக் கொண்டு குடும்பம் நடத்தினார்கள்
என்பதையும் விபரமாகச் சொன்னார்கள். கதையின் நீளம் கருதி
அதை நான் விவரிக்கவில்லை.

சொல்லச் சொல்ல புடம் போட்ட தங்கம் போல, ஒரு தெளிவான
சூழ்நிலைக்கு வந்த நீலா, தன் கசப்புக்களை மறந்ததோடு, தன்
குணத்தை மாற்றிக்கொண்டு தன் கணவனிடமே போய்
அடைக்கலமானாள். நாகரீகம் என்று தான் நினைத்துக்
கொண்டிருந்ததை எல்லாம் விட்டொழித்தாள்.

எல்லாவற்றையும் கேள்விப்பட்ட அவளுடைய கணவனும் தன்
மனைவி நீலாவுடன் செட்டிநாட்டிலுள்ள ஊருக்கு வந்து
அப்பத்தாவையும் வணங்கி ஆசீர்வாதம் பெற்றுச் சென்றான்.
நல்லதொரு விருந்தை அவர்களுக்கு நல்கிய அப்பத்தா, அவர்கள்
புறப்படும் சமயம் தன் கணவர் பயன் படுத்திய
அந்தக் காலத்தில் பிரபலமான ஷெஃபர்ஸ் (Sheaffer) பேனா
ஒன்றையும் பரிசாகக் கொடுத்தார். 1928ம் ஆண்டில் வாங்கப்
பட்டதாகும் அது முழுவதும் தங்கத்தினால் ஆனது. இரண்டு லட்ச
ரூபாய் கொடுத்தால் கூட அதுபோன்ற பேனா இப்போது கிடைக்காது.

நீலாவின் கணவனுக்கும் மிக்க மகிழ்ச்சியாகிவிட்டது. அதற்காக
மீண்டும் ஒருமுறை அப்பத்தாவின் காலில் விழுந்து வணங்கினான்.
அத்துடன்  சென்னைக்கு வந்து தங்கள் வீட்டில் ஒரு பத்து நாட்களாவது
தங்கிச் செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டான்.

”நல்ல பெண் குழந்தை ஒன்றைப் பெற்றுக்கொடுங்கள். அந்தக்
குழந்தை பிறக்கும் சமயத்தில் சென்னைக்கு வந்து ஆறுமாத காலம் உங்களுடனேயே தங்கி விடுகிறேன்”

நீலாவின் கண்கள் கலங்கிவிட்டன!

தன் மனதிற்குள் நினைத்துக் கொண்டாள். அப்பத்தாவின் அணுகுறைக்கு 
ஈடு இணையே கிடையாது. முதலில் தன்னுடைய திருமணத்திற்கு, 
பண்பாடு, கலாச்சாரம் என்று சம்மதத்தைத் தெரிவிக்காதவர்கள், 
பிரச்சினை என்று தெரிந்தவுடன் தானாகவே தலையைக் கொடுத்து, பிரச்சினையை எப்படித் தீர்த்தார்கள் என்பதை நினைக்கும்போது 
வியப்பாக இருந்தது.

எல்லோருக்கும் அனுபவங்கள் இருக்கின்றன. சரியான அணுகுமுறைகள் இருக்கின்றனவா? இருந்தால் இந்த உலகத்தில் பிரச்சினைகளுக்கு 
இடமேது? அதை இறையருள் என்றும் சொல்லலாம்! இறையருள்
இருந்தால் எதுதான் சரியாக இருக்காது? எல்லாமே சரியாக இருக்கும்!!!
=========================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!