அன்பு நிறைந்த என் பதிவுலக நண்பர்களுக்கு,வணக்கம்!
இந்த வகுப்பில் ஆசான், மாணாக்கன் என்ற பேதம் கிடையாது!
நிறையக் கற்றுக் கொள்ள வேண்டியதிருக்கிறது, ஆகவே
வகுப்பைத் துவங்கி விட்டேன்.
இணையப் பதிவுலகிற்கு வந்த பிறகு அடியவன் கற்றுக்
கொண்டது ஒரு கை மண் அளவுதான்.
இன்னுமொரு கை அளவிற்கு மண்ணைத்தேடி
வந்துவிட்டேன்.
திருவாளர்கள் விக்கிப்பசங்க, மயூரேசன், பி.கே.பி, ஞானவெட்டியான், செல்லா, கோவியார், எஸ்.கே, வெட்டிப்பயல், லக்கியார், செந்தழல்ரவி, செந்தில் குமரன், நாமக்கல் சிபி, கே.ஆர்.எஸ், வடுவூர் குமார், யோகன் பாரிஸ், எஸ்.பாலபாரதி, செல்வன், குமரன், ஜி.ராகவன் போன்றவர்களிடமிருந்தும், இன்னும் பலரிடமிருந்து (பல பெயர்கள் உள்ளன. அடக்கம் கருதிச் சொல்லவில்லை) பல பாடங்களைக் கற்றுக் கொண்டேன்.
பதிவுகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை இவர்களிடமிருந்துதான் கற்றுக் கொண்டேன். அதை என்னுடைய பல்சுவைப் பதிவின் நூறாவது பதிவிலும் குறிப்பிட்டுள்ளேன்.
பல தொழில் நுட்ப விஷயங்களையும் இவ்ர்களிடமிருந்துதான் கற்றுக்கொண்டேன். அதற்குத் துணை புரிந்த அனைவருக்கும் என் நன்றி!
அது தொடர வேண்டுமென்பதற்காக இந்தப் புதிய பதிவு.
அடியவன் கற்கவேண்டியதும், கற்றுக் கொண்டதும் தொடர்ந்து இந்தப் பதிவில் வரும்!
என்னுடைய 'பலசுவை' ப் பதிவும் தொடரும் (http://devakottai.blogspot.com)
அதில் தொடர்கள் மட்டும்தான்.
அன்புடன்,
SP.VR. சுப்பையா
