மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

30.6.16

கலியுகத்தைப் பற்றி என்ன சொன்னார் கண்ணபரமாத்மா?

கலியுகத்தைப் பற்றி என்ன சொன்னார் கண்ணபரமாத்மா?

*"கலியுகம் எப்படி இருக்கும்...?"*

பகவான் கிருஷ்ணரிடம் பீமன், அர்ஜூனன், நகுலன், சகாதேவன் ஆகியோர் மேற்கண்ட கேள்வியை கேட்டனர்...

அதற்கு மாதவன், "சொல்வதென்ன? எப்படி இருக்கும் என்றே காண்பிக்கிறேன்..." என்று கூறி...நான்கு அம்புகளை நான்கு திசைகளிலும் செலுத்தி அவற்றை எடுத்துக் கொண்டு வருமாறு கூறினார்.

கோவிந்தனின் ஆணைப்படி நால்வரும் நான்கு திசைகளில் சென்றனர்.

முதலில் பீமன், அம்பை எடுத்த இடத்தில் ஒரு காட்சியை கண்டான்... அங்கு ஐந்து கிணறுகள் இருநதன. மத்தியில் ஒரு கிணறு, அதைச் சுற்றி நான்கு கிணறுகள்.சுற்றியுள்ள நான்கு கிணறுகளில் சுவை மிகுந்த தண்ணீர் நிரம்பி வழிந்து கொண்டே இருந்தது. ஆனால் நடுவில் உள்ள கிணறு மட்டும் நீர் வற்றி இருந்தது...

இதனால் பீமன் சற்று குழம்பி, அதை யோசித்தபடியே அந்த இடத்தை விட்டு கிருஷ்ணரை நோக்கி நடந்தான்.

அர்ஜூனன், அம்பை மீட்ட இடத்தில் ஒரு குயிலின் அற்புதமான குரலைக் கேட்டான். பாடல் கேட்ட திசையில் திரும்பிப் பார்த்தான் அர்ஜூனன், அங்கு ஒரு கோரமான காட்சியை கண்டான்...அந்தக் குயில் ஒரு வெண்முயலை கொத்தித் தின்று கொண்டிருந்தது. அந்த முயலோ வலியால் துடித்துக் கொண்டிருந்தது. மெல்லிசை கொண்டு மனதை மயக்கும் குயிலுக்கு இவ்வளவு கொடிய மனம் உள்ளதே என்று எண்ணியபடி, குழப்பத்தோடு அங்கிருந்து நகர்ந்தான்.

சகாதேவன், கிருஷ்ணரின் அம்பை எடுத்துக் கொண்டு திரும்பி வரும் வழியில் ஒரு காட்சி கண்டான்...

பசு ஒன்று அழகிய கன்றுகுட்டியை ஈன்றெடுத்து, அதனைத் தன் நாவால் வருடி சுத்தம் செய்து கொண்டிருந்தது. கன்று முழுமையாக சுத்தம் ஆகியும் தாய்ப் பசு நாவால் வருடுவதை நிறுத்தவில்லை. சுற்றியிருந்த பலர் கன்றை பசுவிடம் இருந்து மிகவும் சிரமப்பட்டு பிரித்தனர். அதனால் அந்தக் கன்றுக்கு பலத்த காயங்கள் உண்டானது.'தாய் எப்படி பிள்ளையை காயப்படுத்த முடியும்?' என்ற குழப்பத்தோடு அவனும் கிருஷ்ணரை நோக்கி நடந்தான்.

அடுத்ததாக நகுலன், கண்ணனின் அம்பு ஒரு பெரிய மலையின் அருகில் இருப்பதைக் கண்டு எடுத்துக் கொண்டு திரும்பினான்.

அப்போது...மலை மேலிருந்து பெரிய பாறை ஒன்று கீழே உருண்டு வந்தது. வழியில் இருந்த அனைத்து மரங்களையும் தடைகளையும் இடித்துத் தள்ளி, வேகமாக உருண்டு வந்தது. அவ்வாறு வேகமாக வந்த அந்த பாறை, ஒரு சிறிய செடியில் மோதி அப்படியே நின்றுவிட்டது.

ஆச்சர்யத்தோடு அதைக் கண்ட நகுலன் தெளிவு பெற பகவானை நோக்கி புறப்பட்டான்.

இவ்வாறு பாண்டவர்கள் நால்வரும் கிருஷ்ணரிடம் வந்து சேர்ந்தனர்.

அவரவர் தாங்கள் கண்ட காட்சியையும், மனதில் உள்ள குழப்பத்தையும் ஞானக்கடலான கிருஷ்ணரிடம் கூறி, அதற்கான விளக்கத்தை கேட்டனர்.

கிருஷ்ணரோ வழக்கமான தன் மெல்லிய சிரிப்புடன் விளக்கினார்...

"பீமா...! கலியுகத்தில் செல்வந்தர்களும், ஏழைகளும் அருகருகே தான் வாழ்வார்கள்... ஆனால், செல்வந்தர்கள் மிகவும் செழிப்பாக இருந்தாலும்,  தம்மிடம் உள்ளதில் ஒரு சிறு பகுதியைக் கூட ஏழைகளுக்குக் கொடுத்து உதவ மாட்டார்கள்... ஒரு பக்கம் செல்வந்தர்கள் நாளுக்குநாள் செல்வந்தர்களாகவே ஆக, மற்றொரு பக்கம் ஏழைகள் ஏழ்மையில் வாடி வருந்துவார்கள்...நிரம்பி வழியும் நான்கு  கிணறுகளுக்கு நடுவில் உள்ள வற்றிய கிணற்றை போல்..." என்றார்.

பின்னர் அர்ஜூனனிடம் திரும்பி, கிருஷ்ணர், "அர்ஜூனா! கலியுகத்தில் போலி ஆசிரியர்கள், மத குருக்கள்,  போன்றவர்கள் இனிமையாகப் பேசும் இயல்பும், அகன்ற அறிவும் கொண்டவர்களாக இருப்பார்கள்...இருப்பினும் இவர்கள் மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் கயவர்களாகவே இருப்பார்கள்...
இனிய குரலில் பாடிக்கொண்டே, முயலை கொத்தித் தின்ற குயிலைப்போல...!" என்றார்.

தொடர்ந்து சகாதேவனிடம் கிருஷ்ணர், "சகாதேவா! கலியுகத்தில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் மீதுள்ள கண்மூடித்தனமான பாசத்தால் அவர்கள் தவறு செய்தாலும் அதைப் பொருட்படுத்தாமல், பிள்ளைகளின் நெறி தவறிய வாழ்விற்கு தாங்களே காரணமாக இருப்பார்கள்...
இதனால் பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கை துன்பப்பிடியில் சிக்கிக் கொள்ளும் என்பதை கூட மறந்து விடுவார்கள்... இதையடுத்து, பிள்ளைகளும் வருங்காலத்தில் தீய வினைகளால் துன்பத்தை அனுபவிப்பார்கள்.இவ்வாறு, பிள்ளைகளின் அழிவிற்கு பெற்றோர்களே காரணமாவார்கள்...
கன்று குட்டியை நாவால் நக்கியே காயப்படுத்திய பசுவைப் போல்..."

அடுத்ததாக, நகுலனை பார்த்த கிருஷ்ணர், "நகுலா...! கலியுகத்தில் மக்கள் சான்றோர்களின் நற்சொற்களைப் கேளாமல், நாளுக்கு நாள் ஒழுக்கத்தினின்றும், நற்குணத்தினின்றும், நன்னெறிகளிலிருந்தும் நீங்குவார்கள்...யார் நன்மைகளை எடுத்துக் கூறினாலும் அதை அவர்கள் பொருட்படுத்த மாட்டார்கள்...எந்தவொரு கட்டுப்பாடும் இன்றி செயல்படுவார்கள்...இத்தகையவர்களை இறைவனால் மட்டுமே தடுத்து நிறுத்தி, நிதானப்படுத்தி நன்னெறியுடன் செயல்படுத்த முடியும்...மரங்களாலே தடுத்து நிறுத்த முடியாத பெரிய பாறையை...தடுத்து நிறுத்திய சிறு செடியைப் போல...!" என்று கூறி முடித்தார் பகவான் கிருஷ்ணர்...🙏🏻

ஆகவே, கலியுகத்தில் கவனமுடன் நம் வாழ்வைக் கழித்திடுவோம்...

நன்னெறியில் வாழ்ந்து... பாவங்களிலிருந்து நம்மை காத்திடுவோம்...

அன்பே சிவம்...அதை அடைவதே நமது தவம்...
இதை உணர்ந்தால் தானே நமது வாழ்க்கை சுபம்...🙏🏻

ஆகவே, உண்மையை நாம்  உணர்வோம்...

நன்மையை உலகிற்கு சொல்வோம்...

நாம் அனைவரும் நலமுடன் வாழ்வோம்!!!!
=======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

29.6.16

இணையத்தில் இலவசமாகக் கிடைக்கும் சித்தர் நூல்கள்!


இணையத்தில் இலவசமாகக் கிடைக்கும் சித்தர் நூல்கள்!

சித்தர் நூல்கள்:

அன்புள்ள நண்பர்களே,

கீழே கொடுத்துள்ள இணைய தளங்களில்  நிறைய சித்தர் நூல்கள் உள்ளது. அங்கு சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். இந்த தகவலை தந்த நண்பருக்கு நிறைய நன்றிகள்.  இப்படியான இணையத் தளங்கள் உங்களுக்குத் தெரிந்தால் தயவு செய்து அந்த தகவல்களை அடியேனுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே!. அந்த நூல்களை அடியேன் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

தயவு செய்து இந்த நூல்களை பதிவிறக்கம் செய்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். எல்லோரும் சேர்ந்து பயணிப்போம்.

http://www.tknsiddha.com/siddha-books.htm

http://www.tamilnavarasam.in/siddhamedicine.aspx

http://www.tamilnavarasam.in/illakkiyam.aspx

http://www.tamilnavarasam.in/grammar.aspx

http://www.tamilnavarasam.in/tamil-navarasam-thirukikural.aspx

http://www.tamilnavarasam.in/nattudamai.aspx

http://www.tamilnavarasam.in/panniru-thirumuraikal-tamil-
navarasam.aspx

http://www.tamilnavarasam.in/kathai-kavithai.aspx

http://www.tamilnavarasam.in/tamil-dictionary-tamil-navarasam.aspx

http://www.tamilnavarasam.in/siddhamedicine.aspx

http://www.tamilnavarasam.in/Spiritual.aspx

http://www.tamilnavarasam.in/morebooks.aspx

http://www.tamilnavarasam.in/kuzhanthaipadal.aspx

http://www.tamilnavarasam.in/studymaterial.aspx

http://www.tamilnavarasam.in/pothuarivu.aspx;
================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

28.6.16

Story: kuttik kathai: படித்து ரசித்த ஒரு அருமையான கதை

Story: kuttik kathai: படித்து ரசித்த ஒரு அருமையான கதை

ஒரு ஆசிரியர் இருந்தார். அவரிடத்தில் பல மாணவர்கள் படித்து வந்தனர். ஒவ்வொருவருமே நல்ல அறிவாளிகளாக இருந்தனர் .

அதில் ஒரு மாணவன் எல்லோரையும்விட மிருந்த புத்திசாலியாக விளங்கினான். ஓயாத ஆர்வத்தோடு ஒவ்வொரு நாளிலும் புதிய புதிய காரியங்களைக் கற்றுக் கொண்டான் . இதனால் அங்கிருந்த அனைத்து மாணவர்களிலும் அவனே சிறந்தவனாகத் திகழ்ந்தான் .

ஆசிரியரும் அவனிடம் தனிப்பட்ட அன்பும் , கவனமும் செலுத்தினார்.

சிறிது காலம் சென்றது. அவனிடம் பல மாறுதல்கள் தெரிய ஆரம்பித்தன. அவன் எல்லோரையும் ஏளனமாக நோக்க ஆரம்பித்தான். தன்னை விட மூத்த மாணவர்களைக் கூட மதிப்பதில்லை . பலருக்கு மத்தியில் மூத்த மாணவர்களிடம் கடினமாகக் கேள்வி கேட்டு, அவர்கள் விடை தெரியாமல் விழிப்பதைப் பார்த்து கைகொட்டிச் சிரித்து, அவர்கள் அவமானத்தில் அழும்வரை கேலி செய்யத் தொடங்கினான்.

ஆசிரியரின் காதுகளுக்கு இந்த விஷயம் எட்டிவிட்டது. இந்த அகம்பாவம் அவனை அழித்து விடும் என்பதை உணர்ந்தார்.ஒரு நல்ல மாணவன் நாசமாவதை அவர் விரும்பவில்லை.

அவனது பிழையை அவனுக்கு உணர்த்த விரும்பினார். நேரடியாக அறிவுரை சொன்னால் அவன் கண்ணை மறைக்கும் அகம்பாவத்தில் அவரையே கூட எதிர்த்துப் பேசக் கூடும்.

வேறொரு வழியை யோசித்தார்.மறுநாள் அவனை அழைத்தார்.

"மகனே ! இன்று அதிகாலையில், பக்கத்து கிராமத்தில் உள்ள என் நண்பர் ஒருவர் இறந்து விட்டார். அவர் தர்க்க சாஸ்திரத்தை கரைத்துக் குடித்தவர். இரு நூறுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியவர். பத்து முறை அரசாங்கத்தால் சிறந்த அறிஞருக்கான விருதினைப் பெற்றவர். பல அயல் நாடுகளிலும் கூட இவரது மாணவர்கள் உண்டு. நீ போய் பக்கத்துத் தெருவிலுள்ள தச்சு ஆசாரியிடம் போய் விவரத்தைச் சொல்லி ஒரு தரமான சவப்பெட்டியை செய்து வைக்கச் சொல். இன்று மதியம் அவரது அடக்கத்திற்குத் தேவைப் படுகிறது. இதை உன்னால் மட்டுமே சிறப்பாகச் செய்ய முடியும் " என்றார் . கடைசியாக அவர் அவனை உயர்த்திச் சொன்ன வார்த்தைகள் அவனை மிகவும் உற்சாகப்படுத்தி விட்டன.

''இதோ உடனே செய்து முடிக்கிறேன் ஐயா" என்று சொல்லிவிட்டு ஆசாரி வீட்டுக்கு விரைந்தான்.

ஆசாரி அவனை வரவேற்று அவன் வந்த விஷயத்தைக் கேட்டார். அவனும் மதியத்திற்குள் ஒரு தரமான சவப்பெட்டி வேண்டுமென்ற விஷயத்தை சொன்னான்.

ஆசாரி இறந்து போனவரைக் குறித்த விபரங்களைக் கேட்டார்.

அவனும் ஆசிரியர் சொன்னபடியே " அவர் தர்க்க சாஸ்'திரத்தை கரைத்துக் குடித்தவர். இரு நூறுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியவர். பத்து முறை அரசாங்கத்தால் சிறந்த அறிஞருக்கான விருதினைப் பெற்றவர். பல அயல் நாடுகளிலும் கூட இவரது மாணவர்கள் உண்டு."

அவன் சொல்லி முடிப்பதற்குள் ஆசாரி சூடாகி விட்டார். "ஏன்டா ! இன்னிக்கு நீ பொழுது போக்க நான்தான் கிடைச்சேனா ? செத்த பிணத்தோட விவரம் சொல்லாம வேறென்னமோ உளர்றியே! நீ படிச்சவன்தானா ? " என்றார்.

இந்தக் கேள்வி அவனை ஆத்திர மூட்டியது " அவரைப் பத்தி இவ்வளவு சொல்லியும் புரியலைன்னு சொன்னா நீங்கதான் ஒரு அடி முட்டாள் " என்றான்.

ஆசாரி "அடேய் அறிவு கெட்டவனே ! என்னதான் படிச்சிருந்தாலும், விருதெல்லாம் வாங்கி இருந்தாலும் எனக்கு அது பிணந்தான். எனக்கு வேண்டியது அதோட உயர, அகலந்தான். நீங்க படிக்கிற படிப்பெல்லாம் உடம்புல உசிரு இருக்கிற வரைக்கும் தான். உனக்குப் பெட்டி வேணும்னா மரியாதையா போய் அளவெடுத்துக் கிட்டு வா" என்றார்.

எங்கோ பளீரென்று அடி விழுந்தது அவனுக்கு. "மனித அறிவு இவ்வளவுதானா ? இதுக்காகவா இத்தனை பேரை அவமானப்படுத்தினேன் ? "

அவமானம் பொங்கியது .

கூனிக் குறுகியபடியே ஆசியரின் முன்னால் போய் நின்றான் .

ஆசிரியர் சிரித்துக் கொண்டே கேட்டார், " என்னப்பா ! சவப்பெட்டி அடிச்சாச்சா " .

அவன் பதில் சொன்னான்.

"அடிச்சாச்சு. என்னோட தலை கனத்துக்கு ".

ஆசிரியர் சொன்னார்: செல்லமே ! என்னதான் படித்தாலும் இது அழியப் போகிற சரீரந்தான். இதை உணர்ந்து மனத்தாழ்மையாய் நடப்பதே உண்மையான ஞானம்...!

இதை அறியாமல் / உணராமல் பலபேர்கள் அப்படித்தான் திரிகின்றார்கள்!
-----------------------------------------------------------------------
படித்து ரசித்த ஒரு அருமையான கதை: உங்களுக்கு அறியத் தந்துள்ளேன். கதை எப்படி இருக்கிறது சாமிகளா?

அன்புடன்
வாத்தியார்
=================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

27.6.16

Humour: நகைச்சுவை: வயிறு வலிக்க சிரிங்க மக்களே!


Humour: நகைச்சுவை: வயிறு வலிக்க சிரிங்க மக்களே!

<><><><><><><><><><><>

Lady : மே ஐ கமின் டாக்டர்

Dr : வந்துட்டீங்களே உட்காருங்க!

Lady : தேங்க் யூ!

Dr : சொல்லுங்க!

Lady : என்னது?

Dr : என்ன பிரச்னைன்னு சொல்ல சொன்னேன்!

Lady : ஓ! பையனுக்கு ஒடம்பு சரியில்லை!

Dr: பேர் என்னம்மா?

Lady : மஞ்சுளா!

Dr : என்னது ஆம்பளப் பிள்ளைக்கு மஞ்சுளான்னு பேர் வெச்சிருக்கீங்க?

Lady : டாக்டர் அது என் பேரு!

Dr : பையன் பேர சொல்லுங்கம்மா!

Lady : குஞ்சு!

Dr: மொத்தமே அதுதான் பேரா?

Lady : இல்லை. அது நாங்க வீட்டுல கூப்பிடுற பேர்!

Dr : படுத்தாதீங்கம்மா! பையனுக்கு என்ன?

Lady : லூஸ் மோஷன்!

Dr : எப்படிப் போறான்?

Lady : மஞ்சளா!

Dr : அதான் மொதல்லயே சொல்லிட்டீங்களே பையனப் பத்தி சொல்லுங்கம்மா!
பையன் எப்படி வெளியே போறான்னு கேட்டேன்!

lady : அது, கதவத் தொறந்து வெச்சா போதும் டாக்டர், உடனேஓடிப்போயிடுவான்!

Dr : அம்மா நீங்க எப்போவுமே இப்படித்தானா!

Lady : இல்ல டாக்டர், சுடிதாரும் போடுவேன்! இன்னைக்கு சாரி கட்டிருக்கேன்!

Dr : கடவுளே! அம்மா, பையன் ஆய், ஆய்… அது எந்தக் கலர்ல போறான்னு கேட்டேன்! புரிஞ்சுதா!

Lady : அதுதான் சொன்னேனே, மஞ்சளா!

Dr : ஐயோ, அது உங்க பேருன்னு சொன்னீங்க?

Lady : இல்ல டாக்டர், என் பேரு இல்ல, இவன் மஞ்சளாப் போறான்னு சொன்னேன்!

Dr : ஓ! சாரி! சாப்ட்டானா?

Lady : இல்லடாக்டர், நல்லவேளை, அதுக்குள்ளே கையைக் கழுவி விட்டுட்டேன்!

Dr : அம்மா, நான் அதக் கேட்கலம்மா!
இப்படிப் படுத்தறீங்களே!

Dr : உங்க வீட்டுல வேற யாரும் இல்லையா?

Lady : இல்லைங்க அவரு துபாய் போய் அஞ்சு வருஷம் ஆச்சு!

Dr: என்னம்மா இது பையனுக்கு ரெண்டு வயசு! அவர் ஊருக்குப் போய் அஞ்சு வருஷம்! எப்படி இது? ஸ்கைப்லயேவா !

lady : சீ! அவர் நடுவுல ஒரு ரெண்டுநாள் வந்திருந்தார்! ஒரு பிரச்னைக்கு!

Dr : வந்தபோது பிரச்னை பண்ணிட்டார் போல!
சரி, சொல்லுங்க, என்ன பிரச்னை!

Lady : அது ஒரு சொத்துப் பிரச்னை டாக்டர்!

Dr : அதுக்கு நீங்க வக்கீல்கிட்டதானே போகணும்? இங்க ஏன் வந்தீங்க?
 நான் பையனுக்கு என்ன பிரச்னைன்னு கேட்டேன்!

Lady : அதுதான் சொன்னேனே, லூஸ் மோஷன்!

Dr : ஓ சாரி!

Lady : அதுதான் சரி பண்ணிடுவீங்களே,அப்புறம் எதுக்கு சாரி?

Dr : ஐயோ ஆண்டவா! பையன் சாப்பிட்டானான்னு கேட்டேன்!

Lady : இல்லை டாக்டர், காலைல ரெண்டு தடவை பால்தான் குடிச்சான்!

Dr : சர்க்கரை எவ்வளவு போட்டீங்க?

Lady : தாய்ப்பாலுக்கு எப்படி சர்க்கரை போடறது டாக்டர்?

Dr : ரெண்டு வயசுப் பையனாச்சே, தாய்ப்பால் இன்னும் கொடுக்கறீங்களா?

Lady : ஆமாம் டாக்டர்! அவன் அவங்க அப்பா மாதிரி!

Dr : என்னம்மா இவ்வளவு பச்சையா ...

Lady :இல்ல டாக்டர், மஞ்சளாப் போறான்!

Dr: அம்மா! நீங்க பச்சையா பேசறீங்கன்னு சொல்லவந்தேன்!

Lady : டாக்டர், நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க!
அவங்க அப்பா அஞ்சு வயசு வரைக்கும் தாய்ப்பால் குடிச்சாறாம். நான் அதைச் சொன்னேன்.

Dr : ம்க்கும் எனக்கு இந்த இன்பர்மேஷன் ரொம்பத் தேவை!
பையன் ஆவின் பால் ஏதும் குடிச்சானா?

Lady : இல்லை டாக்டர் நான் ஆரோக்யாதான் வாங்கறேன்.

Dr : முருகா! ஏம்மா இப்படி! உங்க வீட்டுக்காரர் எப்பம்மா வருவார்?

Lady : அவர் இன்னும் அஞ்சு வருஷம்கழிச்சுத்தான் வருவார்!

Dr : ம் ...கொடுத்து வெச்சவன்!
சரி, நீங்க என்ன சாப்பிட்டீங்க?

Lady : வர்ற வழியில தலப்பாக்கட்டி பிரியாணி!

Dr : ஏம்மா, பையனுக்கு லூஸ் மோஷன், தாய்ப்பால் வேற கொடுக்குறீங்க, பிரியாணி சாப்பிடலாமா?

Lady : ஏன் டாக்டர், புல்லு சாப்பிடுற மாட்டுப் பாலே தர்றோம்! அது மட்டும் பரவாயில்லையா?

Dr : அம்மா! நான் உங்கள மாதிரி மாட்டையெல்லாம் உட்கார வெச்சு அட்வைஸ் பண்ண முடியாது. புரிஞ்சுதா?

சரி, எத்தனை தடவை போனான்?

Lady : எங்க டாக்டர்?

Dr : ம்! என் தலை மேல!
லூஸ் மோஷன் எத்தனை தடவைம்மா போனான்?

Lady : அப்படிக் கேட்கலாம்ல்ல, என்ன டாக்டரோ!

நாலுதடவை!

Dr : தண்ணி மாதிரி போனானா?

Lady : இல்ல டாக்டர், சாம்பார் மாதிரி மஞ்சளா!

Dr : அம்மா, மஞ்சுளா, உங்க சாம்பார் பத்தி நான் கேட்கலம்மா!

(சாம்பார் எப்படியிருக்குன்னு கேட்டா என்ன சொல்லுவீங்கன்னு நெனைச்சாலே திக்குங்குது!)

Dr : இதுக்குமேல நீங்க பேசவே வேண்டாம்!

இந்த மாத்திரைய மூணு வேலை தண்ணீல கரைச்சுக் குடுங்க!

அப்புறம் இந்த பௌடர,

Lady : பூசிவிடவா டாக்டர்?

Dr : ம். ஆமாம், அதுக்கு முன்னால, அந்த எடத்துல fair and lovely கொஞ்சம் பூசிவிடுங்க!

சாவடிக்கறீங்களே! நான் என்ன மேக் அப் கிளாசாம்மா நடத்துறேன்?

சுடுதண்ணீல கரைச்சுக் குடுங்கம்மா!

ரெண்டு நாள்ல மோஷன் நிக்கலைன்னா, வந்து காட்டுங்க!

Lady : டப்பாவுல போட்டு எடுத்துக்கிட்டுவரவா டாக்டர்?

Dr : அம்மா பரதேவதே,

Lady : என் பேர் மஞ்சுளா டாக்டர்!

Dr : உங்க பையன் குஞ்சக் கொண்டாந்து காமிங்க! புரிஞ்சுதா?

Lady : மோஷன் பின்னாடிதான போகும்,அப்புறம் ஏன் குஞ்ச...?

Dr : அம்மா, உங்க பையன் பேர் அதுதானே!

Lady : இல்ல டாக்டர், அது வீட்டுல கூப்பிடுறது! வெளியில ஹ்ரிதிக் ரோஷன்ன்னு கூப்பிடுவோம்!

Dr : நீங்க லூஸ் மோஷன்னே கூப்பிடுங்க! எனக்கென்ன போச்சு!

Lady : டாக்டர், டயட் சொல்லலியே!

Dr : என்ன எங்கம்மா பேச விட்டே நீ!

Dr : காலைல மூணு இட்லி, மதியம் ஒரு கப் தயிர் சாதம், ராத்திரி ரெண்டு தோசை அல்லது மூணு இட்லி!

Lady : அவன் அவ்வளவு சாப்பிட மாட்டான் டாக்டர்!

Dr : தாயே, அது உங்களுக்கு! ரோஷனுக்கு மோஷன் நிக்கற வரைக்கும்!

Lady : அப்போ, நைட்டுக்கு வாங்கிட்டு வந்த பார்சல் சிக்கனை என்ன செய்ய?

Dr : உங்க வீட்டுல நாய் இல்லைன்னா, வெளியில நர்ஸ் இருக்கும், அதுக்குக் கொடுத்துடுங்க!

Lady : ஏன், அவங்க உங்க செட் அப்பா?

Dr : கடவுளே, கிளம்பும்மா ப்ளீஸ்!

Lady : டாக்டர் பீஸ்?

Dr : நர்ஸ்கிட்ட கொடுத்துட்டுப் போம்மா!

Lady : அப்போ செட் அப்புதான்!
நான் வரேன் டாக்டர்!

Dr : வராதம்மா! தயவு செஞ்சு அப்படியே போய்டு!

(நர்ஸ்.. லைட் லாம் ஆஃப் பண்ணுங்க.. HOSPITAL ஒருவாரம் லீவு..)
😄😬😀😀😀😀
===================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

25.6.16

பழநிஅப்பனும் நானும்!

பழநிஅப்பனும் நானும்!

முருக பக்தி !!

கந்தா போற்றி!
கடம்பா போற்றி!
கதிர்வேலா போற்றி!

பழநிஅப்பன் இருக்கிறான் !
எனக்கு அது போதும் . . .

கஷ்டங்கள் வரட்டும் !

பழநிஅப்பன் இருக்கிறான் !
எனக்கு அது போதும் . . .

பிரச்சனைகள் படுத்தட்டும் !

பழநிஅப்பன் இருக்கிறான் !
எனக்கு அது போதும் . . .

வியாதிகள் நோகடிக்கட்டும் !

பழநிஅப்பன் இருக்கிறான் !
எனக்கு அது போதும் . . .

துன்பங்கள் விளையாடட்டும் !

பழநிஅப்பன் இருக்கிறான் !
எனக்கு அது போதும் . . .

எது எப்படி வேண்டுமானாலும்
நடக்கட்டும் . . .

பழநிஅப்பன் இருக்கிறான் !
எனக்கு அது போதும் . . .

நான் பழநிஅப்பனிடம் பணம்
கேட்கமாட்டேன் . . .

நான் பழநிஅப்பனிடம் நிம்மதி
கேட்கமாட்டேன் . . .

நான் பழநிஅப்பனிடம் தைரியம்
கேட்கமாட்டேன் . . .

நான் பழநிஅப்பனிடம் ஆனந்தம்
கேட்கமாட்டேன் . . .

நான் பழநிஅப்பனிடம் ஆரோக்கியம்
கேட்கமாட்டேன் . . .

நான் பழநிஅப்பனிடம் வெற்றியைக்
கேட்கமாட்டேன் . . .

நான் பழநிஅப்பனிடம் ராஜபதவி
கேட்கமாட்டேன் . . .

நான் பழநிஅப்பனிடம் உலகில் பெருமை
கேட்கமாட்டேன் . . .

நான் பழநிஅப்பனிடம் சொத்து
கேட்கமாட்டேன் . . .

நான் பழநிஅப்பனிடம் மோட்சம்
கேட்கமாட்டேன் . . .

நான் பழநிஅப்பனிடம் ஒன்றுமே
கேட்கமாட்டேன் . . .

எனக்கு பழநிஅப்பனிடமிருந்து
ஒன்றுமே வேண்டாம் . . .

பழநிஅப்பன் என்னோடு இருக்கிறான்
என்பதே எனக்குப் போதும் . . .

பழநிஅப்பன் என்னை விட்டு நீங்கவே
மாட்டான் என்பதே எனக்குப் போதும் . . .

பழநிஅப்பன் என் மீது அளவு கடந்த
அன்பை வைத்திருக்கிறான் என்பதே
எனக்குப் போதும் . . .

என் பக்திக்கு எனக்கு ஒன்றுமே
பழநிஅப்பனிடமிருந்து வேண்டாம் . . .

எனக்குப் பக்தியே போதும் . . .
முருக பக்தியே போதும் . . .

எல்லாப் பிறவியிலும் இது போதும் . . .

இதைத் தவிர எதுவும் சுகமில்லை . . .

இதை விட்டு எதைக் கேட்டு என்ன சுகம் ???

அதனால் எனக்கு முருக பக்தியே பக்தி போதும் . . .

அப்பா போற்றி - பழநி
அப்பா போற்றி!
ஆண்டவா போற்றி - பழநி
ஆண்டவா போற்றி!

அன்புடன்
வாத்தியார்
*****************************
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

24.6.16

கவிதை: கவியரசர் கண்ணதாசன் அவர்களின் பிறந்த தினத்தில் அவரை நினைவு கூறுவோம்!!

கவியரசர் கண்ணதாசன் அவர்களின் பிறந்த தினத்தில் 
அவரை நினைவு கூறுவோம்!!

ஜூன் மாதம் 24ம் தேதி கவியரசர் கண்ணதாசன் அவர்களின் பிறந்த தினம்!

எண்ணற்ற தமிழர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர் கவியரசர் கண்ணதாசன்.

அறிமுகம் தேவையில்லாத தமிழர்களில் அவரும் ஒருவர்!

அவரைத் தெரியாது என்று சொல்பவன் தமிழனே அல்ல!

தான் படித்ததையெல்லாம் பாட்டாக்கியவர் அவர்

தன் அனுபவத்தையெல்லாம் எழுத்தாக்கியவர் அவர்!

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு, ஒரு கோல மயில் என் துணையிருப்பு என்று தன்னைப் பற்றிய உண்மைகளை வெளிப்படையாகச் சொன்னவர் அவர்

என்னைப்போல் வாழாதீர்கள். என் எழுத்துக்களைப்போல் வாழுங்கள் என்று தன்மையாகச் சொல்லிவிட்டுப் போனவர் அவர்!

உலகம் பிறந்தது எனக்காக, ஓடும் நதிகளும் எனக்காக' என்று சொல்லி உற்சாகப் படுத்திவிட்டுப்போனவர் அவர்!

சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு, தென்றலே உனக்கேது சொந்தவீடு' என்று சுதந்திர உணர்வை உண்டாக்கியவர் அவர்!

ஆலயமணியின் ஓசையைக் கேட்க வைத்தவர் அவர்!

வண்ண வண்ணப் பூவில் காயை வைத்தவனைக் காட்டியவர் அவர்!

ஆறுவது சினம் கூறுவது தமிழ் அறியாத முருகனா நீ' என்று ஆண்டியின் கதைக்குப் பாட்டெழுதி அசரவைத்தவர் அவர்.

ஆறு மனமே ஆறு, அந்த ஆண்டவன் கட்டளை ஆறு என்று ஆண்டவனின் கட்டளையைச் சொன்னவர் அவர்!

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது, வல்லவன் வகுத்ததடா' என்று சொல்லி விட்டுச் சென்றவர் அவர்.

அவனைக் கண்டால் வரச் சொல்லடி, அன்றைக்குத் தந்ததைத் தரச் சொல்லடி' என்று கண்ணனை நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தியவர் அவர்!

ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நானறிவேன்' என்று காதலுக்கு பொருள் சொல்லி விட்டுப் போனவர் அவர்!

மண்பார்த்து விளைவதில்லை, மரம் பார்த்துப் படர்வதில்லை என்று கன்னியரைப் பூங்கொடிகளுக்கு உவமையாகச் சொன்னவர் அவர்.

சொல்லலெல்லாம் தூய தமிழ்ச் சொல்லாகுமா? சுவையெல்லாம் இதழ் சிந்தும் சுவையாகுமா என்று மங்கையரின் மேன்மையைச் சொன்னவர் அவர்!

பெண்ணாகப் பிறந்து விட்டால் கண்ணுறக்கம் இரண்டு முறை' என்று பெண்களின் துயரத்தை விளங்க வைத்தவர் அவர்

மனிதன் மாறிவிட்டான், மதத்தில் ஏறிவிட்டான், என்று இன்றைய மனிதனின் நிலைப்பாட்டைச் சொல்லி விட்டுப் போனவர் அவர்!

சின்ன மனிதன், பெரிய மனிதனின் செயலைப் பார்த்து சிரித்துவிட்டுப் போனவர் அவர்!

ஒன்று எங்கள் ஜாதியே, ஒன்று எங்கள் நீதியே, உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களேயென்று உழைப்பை மேன்மைப் படுத்தியவர் அவர்!

மாபெரும் சபையினில் நீ நடந்தால் மாலைகள் விழ வேண்டும், ஒரு மாற்றுக் குறையாத மன்னவன் இவனென்று பலர் போற்றிப் புகழ வேண்டும் என்று தனிமனித உயர்விற்கும் நேர்மையான வாழ்விற்கும் வழி சொல்லிவிட்டுப்போனவர் அவர்.

வீடுவரை உறவு, வீதிவரை மனைவி' என்று நிலையாமைத் தத்துவத்தைச் சொன்னவர் அவர்.

போனால் போகட்டும் போடா, இந்தப் பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா என்று வாழ்க்கையை வரிகளாக்கியவர் அவர்!

"இது நமக்காக எழுதிய பாடல்" என்று பலரையும் மகிழ்வு கொள்ளும்படி அல்லது உருகிப்போகும்படி எண்ணற்ற அற்புதமான பாடல்களை எழுதியவர் அவர்!

அவருடைய புகழ் வாழ்க! அவரைப்பற்றிய நினைவுகள் வளர்க!
---------------------------------------------------------------
பிறந்த நாளிற்கு வந்தவர்களை சும்மா அனுப்பலாமா? இனிப்பைப் பாட்டாகக் கொடுத்திருக்கிறேன். பாடல் வரிகள்

ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது
இந்த உலகம் பாடும் பாடல் ஓசை காதில் விழுகிறது

(ஒளிமயமான)

நால்வகை மதமும் நாற்பது கோடி மாந்தரும் வருகின்றார் - அந்த
நாயகன் தானும் வானிலிருந்தே பூமழை பொழிகின்றார்
நால்வகை மதமும் நாற்பது கோடி மாந்தரும் வருகின்றார் - அந்த
நாயகன் தானும் வானிலிருந்தே பூமழை பொழிகின்றார்
மாலை சூடி எங்கள் செல்வி ஊர்வலம் வருகின்றால்
வாழ்க வாழ்க கலைமகள் வாழ்க என்றவர் பாடுகின்றார்

(ஒளிமயமான)

குங்குமச் சிலையே குடும்பத்து விளக்கே குலமகளே வருக - எங்கள்
கோவிலில் வாழும் காவல் தெய்வம் கண்ணகியே வருக
குங்குமச் சிலையே குடும்பத்து விளக்கே குலமகளே வருக - எங்கள்
கோவிலில் வாழும் காவல் தெய்வம் கண்ணகியே வருக
மங்கலச் செல்வி அங்கயர்க்கண்ணி திருமகளே வருக
வாழும் நாடும் வளரும் வீடும் மணம்பெறவே வருக

(ஒளிமயமான)
====================================================================
2
நாத்திகம், பகுத்தறிவு பற்றி கவிஞர் கண்ணதாசன்.

ஈ வே ரா சேலத்தில் நடத்தியது போல் சென்னையிலும் ஒரு ஆபாச ஊர்வலம் நடத்த முயன்ற போது கண்ணதாசன் அவர்களால்
எழுதப்பட்ட கட்டுரை இது.  இதைத் தொடர்ந்து அந்த ஆபாச ஊர்வலம் கைவிடப்பட்டது.

(கவிஞர் கண்ணதாசனின் எண்ணங்கள் ஆயிரம் என்ற நூலிலிருந்து!)

நான் ஒரு இந்து. இந்து என்பதில் நான் பெருமைப்படுகிறேன்.

நான் எல்லா மதத்தினரையும் மனமார நேசிக்கிறேன்; ஆனால் இந்துவாகவே வாழ விரும்புகிறேன்.

நான் கடவுளை நம்புகிறேன்; அவனைக் காட்டியவனைப் போற்றுகிறேன்;

அந்தக் கடவுளைக் கல்லிலும், கருத்திலும் கண்டு வணங்குகிறேன்.

ஆன்மா இறைவனோடு ஒன்றிவிடும்போது, அமைதி இருதயத்தை ஆட்சி செய்கிறது.

நாணயம், சத்தியம், தர்மம் இவற்றின் மீது நம்பிக்கை பிறக்கிறது.

நேரான வாழ்க்கையை இருதயம் அவாவுகிறது. பாதகங்களை, பாவங்களை கண்டு அஞ்சுகிறது.

குறிப்பாக ஒரு இந்துவுக்குத் தன் மத அமைப்பின் மூலம் கிடைக்கும் நிம்மதி, வேறு யாருக்கும் கிடைப்பதில்லை.

கடைசி நாத்திகனையும், அது ஆத்திகன் என்றே அரவணைத்துக் கொள்கிறது.

என்னை திட்டுகிறவன்தான் அடிக்கடி நினைத்துக் கொள்கிறான்; ஆகவே அவன்தான் முதல் பக்தன்” என்பது இறைவனின் வாக்கு.

இந்து மதத்தைப்போல் சகிப்புத்தன்மை வாய்ந்த மதம் உலகில் வேறு எதுவும் இல்லை .

நீ பிள்ளையாரை உடைக்கலாம்;
பெருமாள் நாமத்தை அழிக்கலாம்;
மதச்சின்னங்களை கேலி செய்யலாம்;
எதைச் செய்தாலும் இந்து சகித்துக் கொள்கிறான்.

ஏதோ பரம்பரையாகவே பகுத்தறிவாளனாகப் பிறந்தது போல் எண்ணிக் கொண்டு, பாத்திரத்தை நிரப்புவதற்காகவே சாஸ்திரத்தைக் கேலி செய்யும் பகுத்தறிவுத் தந்தைகள் இஸ்லாத்தின் மீதோ, கிறிஸ்துவத்தின் மீதோ கை வைக்கட்டும் பார்க்கலாம்.

கடந்த நாற்பது வருசங்களில் ஒரு நாளாவது அதற்கான துணிவு ஏற்பட்டதாக தெரியவில்லையே!

பாவப்பட்ட இந்து மதத்தை மட்டுமே தாக்கித் தாக்கி, அதை நம்புகிற அப்பாவிகளிடம் ‘ரேட்டு ‘ வாங்கிச் சொத்துச் சேர்க்கும் ‘பெரிய ‘ மனிதர்களைத்தான் நான் பார்த்திருக்கிறேன்.

அவர்கள் பேசுகிற நாத்திக வாதம், அவர்கள் ‘குடும்பம் நடத்தும் வியாபாரம்’ என்பதை அறியாமல், வாழ்கையையே இழந்து நிற்கும் பல பேரை நான் அறிவேன்.

பருவ காலத்தில் சருமத்தின் அழகு மினுமினுப்பதைப் போல், ஆரம்ப காலத்தில் இந்த வாதத்தைக் கேட்டு ஏமாந்தவர்களில் நானும் ஒருவன்.

நடிகையின் ‘மேக் அப்’ பைக் கண்டு ஏமாறுகிற சராசரி மனிதனைப்போல், அன்று இந்த வாதத்தைக் கேட்டு ஏமாந்தவர்களில் நானும் ஒருவன்.

அந்த கவர்ச்சி எனக்கு குறுகிய காலக் கவர்ச்சியாகவே இருந்தது இறைவனின் கருணையே!

என்னை அடிமை கொண்ட கண்ணனும், ராமனும் இன்று சந்திர மண்டலத்துக்குப் பயணம் போகும் அமெரிக்காவையே அடிமைக்கொண்டு, ஆன்மீக நெறியில் திளைக்க வைத்திருக்கிறார்கள்.

அமெரிக்காவை விடவா ஈரோடு பகுத்தறிவில் முன்னேறிவிட்டது?

வேண்டுமானால்  ‘பணத்தறிவில்' முன்னேறிவிட்டது என்று சொல்லலாம்.

ஆளுங் கட்சியாக எது வந்தாலும் ஆதரித்துக் கொண்டு, தன் கட்சியும் உயிரோடிருப்பதாகக் காட்டிக் கொண்டு, எது கொடுத்தாலும் வாங்கிக் கொண்டு வாழ்கையை சுகமாக நடத்துவதற்கு, இந்த நாத்திக போலிகள் போட்டிருக்கும் திரை, பகுத்தறிவு!

உலகத்தில் நாத்திகம் பேசியவன் தோற்றதாக வரலாறு உண்டே தவிர,வென்றதாக இல்லை.

இதை உலகமெங்கும் இறைவன் நிரூபித்துக் கொண்டு வருகிறான்.

அவர்கள் எப்படியோ போகட்டும்.

இந்த சீசனில் வாழ்ந்து கொண்டிருக்கும் சில மனிதர்கள் கோவில்களுக்கு முன்னால் பகுத்தறிவு விளையாட்டு விளையாடிப் பார்க்கலாம் என்று கருதுகிறார்கள். இதை அனுமதித்தால், விளைவு மோசமாக இருக்கும்.

நம்பிக்கை இல்லாதவன் கோவிலுக்கு போக வேண்டாம். நம்புகிறவனை தடுப்பதற்கு அவன் யார்?

அப்பாவி இந்துக்கள் பேசாமல் இருக்க இருக்கச் சமுதாய வியாபாரிகள் கோவிலுக்கு முன் கடை வைக்க தொடங்குகிறார்கள்
.
வெள்ளைக்காரனின் கால்களை கட்டிப்பிடித்துக் கொண்டு ‘போகாதே போகாதே என் கணவா ‘ என்று பாடியவர்களுக்கு நாட்டுப் பற்று எங்கிருந்து வரும்?

நாட்டு பற்று இல்லாதவர்களுக்கு தெய்வப் பற்று எங்கிருந்து வரும்?

தெய்வப் பற்று இல்லாதவர்களுக்கு நாணயம், நேர்மை இவற்றின் மீது நம்பிக்கை எங்கிருந்து வரும்?

இந்த நாலரை கோடி (அன்று) மக்களில் நீங்கள் சலித்துச் சலித்து எடுத்தாலும், நாலாயிரம் நாத்திகர்களைக் கூட காண முடியாது.

பழைய நாத்திகர்களை எல்லாம் நான் பழனியிலும், திருப்பதியிலும் சந்தித்துக் கொண்டிருக்கிறேன்! ஆகவே இந்த காரியங்களுக்கு யாரும் துணை வர மாட்டார்கள்.ஆனால் இதை அனுமதித்தால் விளைவுகள் மோசமாக இருக்கும்

ஆக்கம்: கவியரசர் கண்ணதாசன்
=========================================
அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

23.6.16

Humour: நகைச்சுவை: மனைவியின் படத்தைக் காட்டி மருந்து கேட்டவர்!

Humour: நகைச்சுவை: மனைவியின் படத்தைக் காட்டி மருந்து கேட்டவர்!

சிரிக்க மட்டுமே! படித்துப் பாருங்கள். சிரிப்பு வரவில்லை என்றால் நான் பொறுப்பல்ல!
-----------------------------------------------------------------
Pharmacist to customer:
Sir please understand, to buy an anti depression pill you need a proper prescription... Simply showing  marriage certificate and wife's picture is not enough
-----------------------------------
ஆசிரியர் : பிள்ளைகளே.. இன்னைக்கு கணக்குப் பாடம்.. 1,2,3 கத்துத் தரப்போறேன்..
.
சிறுவன் : எனக்கு தெரியும் சார்.. எங்கப்பா கத்துக் குடுத்திருக்காங்க..!
.
ஆசிரியர் : வெரி குட்.. 3 க்கு அப்புறம் என்ன சொல்லு..?
.
சிறுவன் : 4 சார்.
.
ஆசிரியர் : 8 க்கு முன் என்ன வரும்..?
.
சிறுவன் : 7 சார்.. எங்கப்பா கத்துக் கொடுத்திருக்காங்க..!
.
ஆசிரியர் : எல்லா அப்பாவும் இப்படி இருந்தா எங்களுக்கு வேலையே இல்லே..
10 க்கு மேலே சொல்லு பார்ப்போம்..
.
சிறுவன் : ஜாக், குயின், கிங், ஆஸ்..😁😁😁
--------------------------------------------
😀ஜோக்.. 😜 ஜோக்..
1) "நாய்க்கு கோபம் வந்தால் என்ன செய்யும் ?
"நாய்கிட்டதான் கேக்கணும் "
"அதாண்டா கேட்கிறேன் பதில் சொல்லு!!"

2) "எறும்பு நினைச்சா யார் காதையும் கடிக்கலாம்"
"யார் நினைச்சாலும் "எறும்பு காதைக் கடிக்க முடியுமா?😀

3) "நேற்று ஒரு கல்யாணத்துக்கு போயிருந்தேன், ஜோடின்னா அப்படி ஒரு ஜோடி, என் லைப்ஃ லே பார்த்ததேயில்லை. அப்படி ஒரு அழகு.
"அப்புறம்"
அப்புறம் என்ன........காலிலே மாட்டிட்டு வந்திட்டேன் !!

4) "சார், என்ன இது ?"
"கொஸ்சன் பேப்பர்"
"சார், இது என்ன?"
"ஆன்சர் பேப்பர்"
"என்ன ஒரு அக்கிரமம் சார்,
கொஸ்சன் பேப்பர்லே கொஸ்சன் இருக்கு,
ஆன்சர் பேப்பர்லே ஒண்ணுமே காணுமே !!

5) "எண்டா உன் மனைவி கரண்டி, தட்டு எல்லாம் தூக்கி வீசரா ?"
"நான்தான் சொன்னேனே, அவளுக்கு 'வீசிங்' ப்ராப்ளம் இருக்குன்னு.!!"

6) ""என்னப்பா...எக்ஸாம்க்கு ப்ளம்பரை கூட்டிக்கிட்டு வந்திருக்க?"
"கொஸ்சன் பேப்பர் "லீக்" ஆகுதுன்னு சொன்னங்க, அதான் !!"

7) "வாங்க ... வாங்க, இந்தத் துணி கிழியவே கிழியாது .... வாங்கிப் பாருங்க"
"அப்போ எனக்கு இரண்டு மீட்டர் துணி வேணுமே .... எப்படி கிழிப்பே ?"

8) "நம்ம டீச்சருக்கு என்ன ஆச்சு ?"
"ஏன் கேக்கறே"
"திருக்குறளை போர்டுலே எழுதிட்டு, அவங்களே இதை எழுதினது யார்'னு கேக்கறாங்க !!"
----------------------------------------------
Fantastic lesson in English grammar

Teacher:
1) He washed utensils
2) He was made to wash utensils

What is the difference between these two sentences?

Student:
In 1st sentence, the subject is unmarried and in second, subject is married.

Teacher gave 100% marks to the student. 😂
--------------------------------------------------
இவற்றுள் எது மிகவும் நன்றாக உள்ளது?

அன்புடன்
வாத்தியார்
--------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

22.6.16

எத்தனை முடிச்சு (Twist) இந்தக் கதையில்!


எத்தனை முடிச்சு (Twist) இந்தக் கதையில்!

ஒரு ஊரில் ஒரு செல்வந்தன் இருந்தான். அவன் வியாபார நிமித்தமாக வெளியூர் சென்று திரும்பிய போது அவனது அழகான பெரிய பண்ணை வீடு தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. அந்த ஊரிலேயே மிகவும் அழகான வீடு அவனுடையது தான். அந்த வீட்டை இரண்டு மடங்கு விலை கொடுத்து வாங்க பலரும் தயாராக இருந்தனர். ஆனால் இவன் விற்கவில்லை. இப்போது அந்த வீடு அவன் கண் முன்னே எரிந்துகொண்டிருந்தது. ஆயிரம் நபர்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார்கள். தீ முழுவதுமாக பரவிவிட்டதால் அதை அணைத்தும் பிரயோஜனம் இல்லை என்று எந்த முயற்சியும் எடுக்கவில்லை. வணிகனோ செய்வதறியாமல் கண்ணில் நீரோடு புலம்பிகொண்டிருந்தான். ஐயோ என் வீடு..!!! என் வீடு...!! என்று அலறினான்.

                                              அப்போது அவனின் மூத்த மகன் ஓடிவந்து ஒரு விஷயத்தை சொல்கிறான் “தந்தையே ஏன் அழுகிறீர்கள்? இந்த வீட்டை நான் நேற்றே மூன்று மடங்கு லாபத்திற்கு விற்றுவிட்டேன். இதனால் நமக்கு நஷ்டம் இல்லை  என்று கூறினான். இதை கேட்ட வணிகனுக்கு ஏக மகிழ்ச்சி. அவனது சோகம் அனைத்தும் மறைந்து மகிழ்ச்சி உண்டானது. இப்போது வணிகனும் கூடி இருந்த கூட்டத்தில் ஒருவனாக நின்று வேடிக்கை பார்க்க தொடங்கினான். அதே வீடு தான், அதே நெருப்பு தான் ஆனால் சில வினாடிகளுக்கு முன் இருந்த தவிப்பும் சோகமும் இப்போது அவனிடம் இல்லை.

               சிறிது நேரத்தில் வணிகனின் இரண்டாவது மகன் ஓடி வந்து “தந்தையே ஏன் இப்படி கவலையில்லாமல் சிரிக்கிறீர்கள்? நாங்கள் விற்ற இந்த வீட்டிற்கு முன்பணம் மட்டுமே வாங்கியுள்ளோம். முழு தொகை இன்னும் வரவில்லை. வீட்டை வாங்கியவன் இப்போது மீதி பணத்தை தருவானா என்பது சந்தேகமே” என்றான். இதை கேட்ட வணிகன் அதிர்ச்சி அடைந்தான். மீண்டும் சோகத்தில் ஆழ்ந்தான். கண்ணீரோடு மீண்டும் புலம்ப ஆரம்பித்தான். தனது உடமை எரிகிறதே என்ற எண்ணம் மீண்டும் அவனை வாட்டியது.
 
                     சில மணித்துளிகள் பின்பு வணிகனின் மூன்றாவது மகன் ஓடி வருகிறான். “தந்தையே கவலை வேண்டாம். இந்த வீட்டை வாங்கிய மனிதன் மிகவும் நல்லவன் போலும். இந்த வீட்டை வாங்க அவன் முடிவு செய்தபோது வீடு தீ பிடிக்கும் என்று உங்களுக்கும் தெரியாது எனக்கும் தெரியாது. ஆகையால் நான் பேசியபடி முழு தொகையை கொடுப்பது தான் நியாயம் என்று என்னிடம் இப்போது தான் சொல்லி அனுப்பினான்” என்று மகிழ்ச்சியோடு தெரிவித்தான். இதை கேட்ட வணிகனுக்கோ ஏக சந்தோஷம். கடவுளுக்கு நன்றி சொல்லி ஆடிப்பாடி மகிழ்ந்தான். கண்ணீரும் சோகமும் மீண்டும் காணாமல் போய்விட்டது. மீண்டும் கூட்டத்தில் ஒருவனாக நின்று வேடிக்கை பார்க்க தொடங்கினான்.

                           இங்கு எதுவுமே மாறவில்லை. அதே வீடு, அதே நெருப்பு, அதே இழப்பு. இது என்னுடையது என்று நினைக்கும் போது அந்த இழப்பு உங்களை சோகத்தில் ஆழ்த்துகிறது. இது என்னுடையது அல்ல என்று நினைக்கும் போது உங்களை சோகம் தாக்குவது இல்லை. நான், என்னுடையது, எனக்கு சொந்தமானது என்ற எண்ணம் தான் பற்று. உலகில் எதுவுமே நிரந்தரமானது இல்லை. ஒருவனுக்கு மட்டுமே சொந்தமானது இல்லை. அனைத்துமே அழிய கூடியது. நான் உட்பட எல்லாமே ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் அழியக்கூடியது அல்லது வேறு ஒருவனுக்கு சொந்தமாக கூடியது என்பதை நாம் நினைவில் நிறுத்தினாலே போதும்.

மனவளக் கதை
===========================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

21.6.16

பாரத யுத்தத்தில் கொல்லப்பட்ட அந்த மிகமிக நல்லவன் யார்?


பாரத யுத்தத்தில் கொல்லப்பட்ட அந்த மிகமிக நல்லவன் யார்?

பதினெட்டு நாட்கள் நடைபெற்றது குருட்க்ஷேத்திரப் போர். அந்தப் போரில் அது பதினான்காவது நாள்.அன்று அதிக எண்ணிக்கையில்
கௌரவர்களைக் கொன்று குவிப்போம் என்று உறுதி எடுத்துக் கொண்டபின் பாண்டவர்களின் கால்கள் பாசறையை விட்டு வெளிநடந்தன.அவர்களை வீரத் திலகமிட்டு வழியனுப்பி வைத்தாள் பாஞ்சாலி வெற்றி கிட்டியபின் தான் தலைமுடிவேன் என்ற சபதத்தின்படி, தலைவிரி கோலமாக இருந்த பாஞ்சாலி.

பாஞ்சாலி பார்த்துக் கொண்டிருக்கும் போதே வழிபடுகிற கண்ணன், அர்ச்சுனனின் தேரில் சாரதியாகத் தாவி ஏறி அமர்ந்தான். புல்லாங்குழல் வாசிக்கும் கண்ணனின் தாமரைப் பூங்கரங்கள், நல்லவர்களை வாழ வைத்து அல்லவர்களை அழிப்பதற்காக, தேர்க் குதிரைகளின் லகானைச் சடாரென்று கையில் பற்றிக் கொண்டன.

மற்றவர்களும் அவரவர் தேரில் அமர்ந்து போர்க்களம் நோக்கிப் புறப்பட்டார்கள். அந்தத் தருணத்தில்தான் பாஞ்சாலியிடமிருந்து அந்த விசித்திரமான வினா கண்ணனை நோக்கிப் புறப்பட்டது

‘‘கண்ணா! எல்லாம் தெரிந்த எம்பெருமானே! அனைத்துச் செயல்களையும் நடத்தும் ஆதிநாயகனே! இந்த யுத்தம் முழுவதையும் நீயே நடத்துகிறாய் என்பதை நான் அறிவேன். கொல்பவனும் நீ. கொல்லப்படுபவனும் நீ. வெல்பவனும் நீ. வெல்லப்படுபவனும் நீ. சொல். இன்று யார் யாரால்
கொல்லப்படுவார்கள்?”

(பாஞ்சாலியின் இந்தக் கேள்வியைக் கேட்டதும் பாண்டவர்கள் அனைவரும் கண்ணன் முகத்தை ஆவலோடு நோக்கினார்கள். இன்றைய போரின் நிலவரத்தை முன்கூட்டியே தெரிந்துகொள்ளும் ஆர்வம் அனைவர் விழிகளிலும்)

எதனாலும் எவ்விதத்திலும் பாதிக்கப்படாத கண்ணன், கலகலவென நகைத்தவாறே சொன்னான்: ‘‘பாஞ்சாலி! உனக்கு ஆனாலும் எல்லாவற்றையும் முன்கூட்டியே தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல். நல்லது. சொல்கிறேன். இன்று இரு தரப்பினராகப் பிரிந்து போரிடும் அனைவரிலும் மிகமிக நல்லவன் ஒருவன் கொல்லப்படுவான். இப்போது உலகில் வாழ்பவர்களில் அவனைவிட நல்லவர்கள் யாருமில்லை. அவன் இறக்கவிருப்பதை எண்ணி
என் மனம் இப்போதே வருந்துகிறது!”

இந்த விந்தையான பதிலால் கடும் அதிர்ச்சியடைந்த அர்ச்சுனன், பீமன், நகுலன், சகாதேவன் நால்வரும் தங்கள் அண்ணனான தர்மபுத்திரரைக் கவலையோடு பார்த்தார்கள். தர்மபுத்திரரை விட நல்லவர்கள் யாரிருக்க முடியும்? தர்மபுத்திரர்தான் இப்போது உலகில் வாழும் மிக நல்லவர் என்பது மக்கள் அனைவரும அறிந்த விஷயம் தானே? தர்மநெறி ஒருசிறிதும் தவறாத அவரது கதை இன்றோடு முடியப் போகிறதா? போர் என்று வந்துவிட்டால் இருதரப்பிலும் இழப்புகள் நேரும் என்பது எல்லோரும் அறிந்ததுதான். ஆனால், மூத்தவனையே போர் காவு கொள்ளப் போகிறதா? என்று...

பாஞ்சாலி கண்களில் நீர்வழிய யுதிஷ்டிரரைப் பார்த்தாள். இதயத்தைப் பிடித்துக்கொண்டு அப்படியே தரையில் அமர்ந்தாள். ஒவ்வொரு நாளும் பாண்டவர்கள் ஐவரும் போர் முடிந்து நல்லபடியாகத் திரும்ப வேண்டும் என்று கண்ணனைப் பிரார்த்தித்தவாறே பதற்றத்தோடு காத்திருப்பாளே இன்று
மாலை ஐவரும் திரும்புவார்களா, இல்லை நால்வர் மட்டும் தானா? என்று. கண்ணன் தன் பதிலால் ஏற்பட்ட பின்விளைவு எதையும் பொருட்படுத்தாத கண்ணன் அர்ச்சுனனின் தேரில் சாரதியாக போர்க்களம் நோக்கிப் பாய்ந்தது. யுதிஷ்டிரர் தேர் மற்றும் அனைவரின் தேர்களுக்கும் அடுத்து அடுத்து நகர்ந்தது...

போர்க்களத்தில் கையில் கதாயுதத்தோடு களத்தில் இறங்கிய பீமன் தன்னுடன் போர்த் தொடுக்க முன்வந்து நின்ற விகர்ணனைப் பார்த்துக் கடுமையாக எச்சரித்தார்

‘‘விகர்ணா! என்முன் வராதே! தள்ளிப் போ. நான் உன்னைக் கொல்வதற்காகக் களத்தில் இறங்கவில்லை. உன் இரு அண்ணன்களான துரியோதனன், துச்சாதனன் இருவரையும் வதம் செய்ய வந்திருக்கிறேன்.

அவர்கள் இருவரின் குருதியையும் கலந்து கூந்தலில் பூசிக் குளிப்பேன் எனச் சபதம் செய்திருக்கிறாள் பாஞ்சாலி. மேகம் போல் அடர்ந்த அவள் கூந்தல் முடியப்படாமல் இருப்பதை எத்தனை நாட்கள் நான் பார்த்துக் கொண்டிருப்பது! இன்று என் கையில் உள்ள கதையால், உன் அண்ணன்கள் இருவரின் கதை முடியவேண்டும். பாஞ்சாலி தன் கூந்தலை முடியவேண்டும். குறுக்கே வராதே! வழிவிடு!”

பீமனின் வீராவேசப் பேச்சைக் கேட்டு விகர்ணன் கடகடவென நகைத்தார் ‘‘ஏன் பீமா? என்னை வென்றுவிட்டு அவர்களை வெல்ல இயலாதா?

என்னை வெல்ல முடியாதென்ற பயமா?" என்றார்...

"பயமா? எனக்கா? அதுவும் உன்னைப் பார்த்தா? நல்ல வேடிக்கை. அச்சத்தால் அல்ல, உன்மேல் கொண்ட அன்பால் உன்னைக் கொல்ல என் கதாயுதம் விரும்பவில்லை நான் உன்னைக் கொல்ல முயன்றாலும் கூட என் கதாயுதம் என்னைத் தடுத்துவிடுமோ எனத்தான் அஞ்சுகிறேன். அன்று நீ நடந்துகொண்ட முறையை என்னோடு என் கதாயுதமும் அல்லவா பார்த்துக் கொண்டிருந்தது? என்னைப் போலவே அதற்கும் உன்மேல் அன்பும் மரியாதையும் உண்டு. தப்பிப் பிழைத்துப் போ" என்றார் பீமன்...

விகர்ணன் மீண்டும் நகைத்தார் ‘‘பீமா! என்று என்ன நடந்தது? எதைப் பற்றிப் பேசுகிறாய் நீ? உன் கதாயுதம் என்மேல் அன்பு செலுத்த வேண்டிய அவசியம் என்ன?” என்றார்.

"விகர்ணா மீண்டும் மீண்டும் சொல்கிறேன். வீண் வாதத்தில் இறங்காதே! கௌரவர்கள் நூறு பேரில் நீ மட்டும் தப்பிப் பிறந்தவன். அன்று கௌரவர் சபையில் பாஞ்சாலியை உன் அண்ணன் துச்சாதனன் துகிலுரிய எத்தனித்தானே, அப்போது மெய்ஞ்ஞானியான பீஷ்மர் கூட வாய்மூடி மௌனியாகத்தானே இருந்தார்?

அதர்மம் தலைவிரித்தாடிய அந்த சந்தர்ப்பத்தில் தர்மத்தின் பக்கம் நின்று குரல்கொடுத்தவன் நீ மட்டும்தான். ‘அநியாயம் நடக்கிறது, நிறுத்துங்கள்‘ என்று அறைகூவியவன் நீ ஒருவன்தான். கண்ணன் மட்டும் பாஞ்சாலிக்கு அருள் புரியாதிருந்தால் அன்று அவள் நிலை என்னவாகி இருக்கும்?

பெண்ணை மானபங்கம் செய்ய முயல்வது கண்டு பதைபதைத்த உள்ளம் உன் உள்ளம். நாங்கள் ஐவரும் கையாலாகாதவர்களாக இருந்தோம்.

பாஞ்சாலியின் பொருட்டாக நீ குரல்கொடுத்தால் அது உன் அண்ணன் துரியோதனனுக்கு உகப்பாக இராது என்பதையும் நீ யோசிக்கவில்லை.

அறத்தின் பக்கமே நின்றது உன் மனம். ஒரு பெண்ணுக்கு நேரும் அவமானம் கண்டு துடித்தது உன் நெஞ்சம். அந்த உயர்ந்த நெஞ்சை என் கதாயுதம் பிளப்பதை நான் விரும்பவில்லை. தயவுசெய்து தள்ளிப்போ அல்லது இன்னோர் யோசனை சொல்கிறேன். அதைக் கேள்!”

"அதென்னப்பா இன்னோர் யோசனை? அதையும் தான் சொல்லேன் கேட்போம்" என்றார் விகர்ணன்.

"நீ எங்களுடன் சேர்ந்துவிடு. பாண்டவர்கள் உன்னையும் சேர்த்து ஆறுபேராக இருப்போம். உனக்கும் அரசு வழங்கி முடி சூட்டுகிறோம். பாஞ்சாலியின் மானத்தைக் காக்கக் குரல்கொடுத்த உன் தலையில் முடிசூட்டிப் பார்க்க விழைகிறது என் மனம். என் விருப்பத்தை நிறைவேற்று" என்றார் பீமன்.

விகர்ணன் நகைத்தார் ‘‘பீமா நான் அற வழியில் நிற்பவன் என்று சொன்னாயே, அது உண்மைதான் அன்று மட்டுமல்ல எப்போதும் அறத்தின் வழியில்தான் நிற்பேன். அன்று பெண்ணின் மானம் சூறையாடப்படும் நிலையில் அதன் பொருட்டு எதிர்த்துக் குரல் கொடுப்பது அறம். எனவே எதிர்த்துக் குரல் கொடுத்தேன். இன்று யார் தரப்பில் நியாயம் இருந்தாலும், நான் சார்ந்திருக்கும் என் அண்ணண் தரப்புக்காக நான் போரிடுவதே நியாயம்.

வெறும் மகுட ஆசைக்காக என் அண்ணனை விட்டு விலகி விடுவேன் என்றா நினைத்தாய்? என்னைத் தாண்டித்தான் நீ துரியோதனனை அடைய முடியும். இயலுமானால் என்னை நோக்கி உன் கதாயுதத்தைப் பிரயோகித்துப் பார். வீண்பேச்சை வீரர்கள் விரும்புவதில்லை. அவர்கள் செயல்படுபவர்கள். நீ வீரனென்றே நான் நம்புகிறேன்.”

விகர்ணனின் துடுக்கான பேச்சு பீமனுக்குக் கடும் சீற்றம் விளைவித்தது. தேரிலிருந்து குதித்துப் பாய்ந்து சென்று விகர்ணனைத் தாக்கலானான் பீமன்.

உக்கிரமான போர் நெடுநேரம் நடைபெற்றது. ஒரு மாபெரும் வீரனுடன் போர் புரிகிறோம் என்பதை பீமனின் மனம் உணர்ந்தது. அதுமட்டுமல்ல, அறத்தின் வழியே வாழ்பவர்களை வெல்வது சுலபமல்ல என்பதையும் அவன் மனம் புரிந்துகொண்டது.

மனமே இல்லாமல் தன் கதாயுதத்தால் ஓங்கி விகர்ணனை அறைந்தான் பீமன். தர்மத்தின் வழியிலேயே நின்ற அவன் முகத்தில் புன்முறுவல் படர்வதையும் சிரித்துக் கொண்டே அவன் மரணத்தை வரவேற்பதையும் பார்த்து வியந்தது பீமன் மனம். விகர்ணனின் உயிர்ப் பறவை விண்ணில் பறந்தபோது பீமன் உள்ளம் இனம் தெரியாத சோகத்தில் ஆழ்ந்தது.

மாலை சூரியாஸ்தமனத்திற்குப் பிறகு யுத்தம் நிறுத்தப்பட்டது. பாண்டவர்கள் பாசறைக்குத் திரும்பினார்கள். அனைவரிலும் நல்லவன் அன்று கொல்லப்படுவான் என்று கண்ணன் சொன்னானே? பதற்றத்தோடு காத்திருந்த பாஞ்சாலி யுதிஷ்டிரர் உள்ளிட்ட எல்லோரும் நலமாகத் திரும்பி வருவதைப் பார்த்து நிம்மதிப் பெருமூச்சு விட்டாள்.

பாஞ்சாலி கண்ணனிடம் கேட்டாள் ‘‘கண்ணா! அனைவரிலும் நல்லவன் சாவான் என்றாயே? அப்படியானால் இறந்தது யார்? என் கணவர் ஐவரிலும் மூத்தவரைத் தானே உலகம் மிக நல்லவர் எனப் புகழ்கிறது? அவரின் நலத்திற்காக நான் இன்று முழுவதும் உன்னைப் பிரார்த்தித்தவாறே காலம் கழித்தேன். கண்ணா! அவரை விடவும் நல்லவர்கள் உண்டா என்ன?”

புல்லாங்குழலைக் கையில் தட்டியவாறே நகைத்த கண்ணன் சொன்னார் "பாஞ்சாலி! நல்லவர்களிடையே நல்லவனாக இருப்பதில் என்ன சிரமம்? அப்படி இல்லாதிருப்பதுதான் கஷ்டம். ஆனால் விகர்ணன் கெட்டவர்களிடையே நல்லவனாக இருந்தான். உன் மானத்தைக் காப்பதற்காக எதிரணியில் இருந்து குரல்கொடுத்தான். இப்போது தன் அண்ணன் கெட்டவனே ஆனாலும், தன் அண்ணனுக்காக உயிரையே கொடுத்திருக்கிறான். மகுட ஆசை கூட அவன் மனத்தை மாற்ற முடியவில்லை. தான் இறப்போம் என்று தெரிந்தே இறந்திருக்கிறான். தர்மம் எந்த அணியில் இருக்கிறதோ
அந்த அணியில் தான் நான் இருப்பேன் என்பதும் நான் இருக்கும் அணிதான் வெல்லும் என்பதும் அவன் அறிந்தவைதான். ஆனாலும் தன் உயிர் போவதை அவன் ஒரு பொருட்டாய்க் கருதவில்லை. தனது அண்ணனுக்காக உயிரை விடுவதே தனது தர்மம் எனக் கருதியிருக்கிறான்.

அவன் இருந்தவரை கௌரவர்கள் அத்தனை பேரையும் அந்த நல்லவனின் தர்மசக்தி கவசமாய்க் காத்திருந்தது. அவன் இருக்கும்வரை கௌரவர்களை அழிப்பது இயலாத செயல். இன்று உன் கணவன் பீமன் அந்த நல்லவனை வதம் செய்துவிட்டான். இனி கெட்டவர்களான மற்ற கௌரவர்களை அழிப்பது கடினமல்ல. சொல் பாஞ்சாலி. சேற்றில் பூத்த செந்தாமரை போல, கெட்டவர்களிடையே நல்லவனாக வாழ்ந்தானே, இவனைவிட நல்லவர் உலகில் வேறு யார்?”

இதற்கு தர்மபுத்திரர் ‘‘ஆமாம், விகர்ணன் எல்லோரிலும் நல்லவன்! என்னை நல்லவன் என்கிறார்கள். அது உண்மையோ இல்லையோ, விகர்ணன் என்னை விடவும் நல்லவன் என்பது மட்டும் உண்மை. இந்தப் பாழும் போரால் அந்த உத்தமனையும் கொல்ல நேர்ந்ததே பீமா!” என்ற அவர் தன் விழிநீரை விரல்களால் துடைத்துக் கொண்டார்.

பீமன் இருகரம் கூப்பி வணங்கியபோது, பீமனின் கரத்திலிருந்த கதாயுதம் வெட்கத்தோடு கீழே சாய்ந்தது.
---------------------------------------------------
படித்ததில் பிடித்தது. உங்களுக்கு அறியத் தந்துள்ளேன்!

அன்புடன்,
வாத்தியார்
---------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

20.6.16

கவிதை: நம்மைத் திக்குமுக்காட வைக்கும் கவியரசரின் பாடல்!

கவிதை: நம்மைத் திக்குமுக்காட வைக்கும் கவியரசரின் பாடல்!

புனித ரமதான் நோன்பு துவங்கி சில நாட்கள்  ...

"பாவமன்னிப்பு" படத்தில் "நடிகர் திலகம்" சிவாஜி கணேசன் அவர்கள் முதன்முதலாக படத்தில் தோன்றும் காட்சியில் ஒரு அற்புதமான பாடலை வைத்தால் நன்றாக இருக்கும் என்று விரும்பினார் படத்தின் இயக்குனர் ஏ.பீம்சிங்.

"மெல்லிசை மன்னர்கள்" விஸ்வநாதன் - ராமமூர்த்தி, "கவியரசு" கண்ணதாசன் ஆகியோரோடு அந்த அற்புதமான சூழ்நிலைக்கு அமர்ந்தார்கள்.

படத்தின் கதைப்படி சிவாஜி கணேசன் அவர்கள் முஸ்லீமாக இருந்தாலும், பிறப்பால் ஒரு இந்து வீட்டில் எம்.ஆர். ராதாவுக்கு மகனாக பிறந்திருப்பார். அதன்படி, அந்த நுட்பத்தை வெளிப்படுத்தும் விதமாக பாட்டு அமைய வேண்டும் என்று விரும்பி இயக்குனர் ஏ.பீம்சிங் இதை கண்ணதாசன், விஸ்வநாதன் - ராமமூர்த்தி அவர்களிடம் தெரிவித்தார். வழக்கம்போல், "மெல்லிசை மன்னர்கள்" மெட்டமைக்க, கண்ணதாசன் பாட்டு எழுதிக் கொடுத்தார்.

பாடலை படித்துப் பார்த்த ஏ.பீம்சிங்கிற்கும், விஸ்வநாதனுக்கும் முதலில் ஒன்றும் விளங்கவில்லை. "இதில் என்ன புதுமை இருக்கிறது, நுட்பம் உள்ளது" என குழம்பினார்கள். திரும்ப, திரும்ப படித்துப் பார்த்துவிட்டு கண்ணதாசனிடம் தயங்கிக் கேட்டார்கள்.

கண்ணதாசன் வழக்கமான தன்னுடைய குழந்தைப் புன்னகையை உதிர்த்துக் கொண்டே "பாடலைப் படித்துக் காட்டுங்கள்" என்றார்.

எம்.எஸ்.வி. உடனே,

" எல்லோரும் கொண்டாடுவோம்... எல்லோரும் கொண்டாடுவோம். அல்லாவின் பெயரைச் சொல்லி நல்லோர்கள் வாழ்வை எண்ணி எல்லோரும் கொண்டாடுவோம்" என்று மெட்டில் பாடினார்.

கண்ணதாசன், "இன்னுமா புரியலை, பிறப்பால் இந்துவாக பிறந்து வாலிப வயதை எட்டிப் பிடித்தவன் ஒரு முஸ்லீமாக வளர்ந்திருந்தாலும், அவனை அறியாமல் இந்து மத தத்துவமான "ஓம்" என்ற நாத மந்திரம் அவன் வாயினில் இருந்து வருவதுபோல் பாடலை அமைத்துள்ளேன். இப்பொழுது பாருங்கள்" என்று பாடிக் காட்டினார்.

"எல்லோரும் கொண்டாடு'வோம்' (ஓம்)... எல்லோரும் கொண்டாடு'வோம்' (ஓம்)...vஅல்லாவின் பெயரைச் சொல்லி, நல்லோர்கள் வாழ்வை எண்ணி எல்லோரும் கொண்டாடு'வோம்' (ஓம்).. என்று முடித்ததுமே, "மெல்லிசை மன்னர்" அவரைக் கட்டிப்பிடித்து "கவிஞரே... இந்த உலகத்தில் உம்மை
ஜெயிக்க யாரய்யா இருக்கிறார்" என்று உச்சி முகர்ந்தார்.. கூடவே இயக்குனர் ஏ.பீம்சிங்கும் தமக்கு வேண்டியது கிடைத்து விட்டது என்று சந்தோஷக் கடலில் ஆழ்ந்தார்.

அதே போல இந்தப் பாடல் முழுக்க "முதலுக்கு அன்னை என்போம்(ஓம்), முடிவுக்கு தந்தை என்போம்(ஓம்)"  என வார்த்தை விளையாட்டு தொடர்ந்து நிகழ்ந்து நம்மை திக்கு முக்காட வைக்கும் அந்தப் பாடல்.
--------------------------------------
அந்தப் பாடலை முழுமையாக, உங்களுக்காக் கீழே கொடுத்துள்ளேன்:

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------
எல்லோரும் கொண்டாடுவோம்;
அல்லாவின் பெயரைச் சொல்லி
நல்லோர்கள் வாழ்வை எண்ணி

(எல்லோரும்)

கல்லாகப் படுத்திருந்து களித்தவர் யாருமில்லே
கைகால்கள் ஓய்ந்த பின்னே துடிப்பதில் லாபமில்லே
வந்ததை வரவில் வைப்போம் செய்வதைச் செலவில் வைப்போம்
இன்றுபோல் என்றும் இங்கே ஒன்றாய்க் கூடுவோம்!

(எல்லோரும்)

நூறுவகைப் பறவை வரும், கோடிவகைப் பூமலரும்
ஆடவரும் அத்தனையும் ஆண்டவனின் பிள்ளையடா
கறுப்புமில்லே வெளுப்புமில்லே, கனவுக்கு உருவமில்லே
கடலுக்குள் பிரிவுமில்லே, கடவுளில் பேதமில்லே
முதலுக்கு அன்னை என்போம் முடிவுக்குத் தந்தை என்போம்
மண்ணிலே விண்ணைக் கண்டு ஒன்றாய்க்கூடுவோம்

(எல்லோரும்)

ஆடையின்றிப் பிறந்தோமே ஆசையின்றிப் பிறந்தோமா
ஆடிமுடிக்கையிலே அள்ளிச் சென்றோர் யாருமுண்டோ?
படைத்தவன் சேர்த்துத் தந்தான் வளர்த்தவன் பிரித்து வைத்தான்

எடுத்தவன் மறைத்துக் கொண்டான்
கொடுத்தவன் தெருவில் நின்றான்
எடுத்தவன் கொடுக்க வைப்போம்
கொடுத்தவன் எடுக்க வைப்போம்

இன்றுபோல் என்றும் இங்கே ஒன்றாய்க் கூடுவோம்"

(எல்லோரும்)

படம்: பாவ மன்னிப்பு (வருடம் 1961)

கருத்துக்களோடு, என்னதொரு சொல் விளையாட்டையும் நடத்தியிருக்கிறார் பாருங்கள்!

”நூறுவகைப் பறவை வரும், கோடிவகைப் பூமலரும், ஆடவரும் அத்தனையும் ஆண்டவனின் பிள்ளையடா” என்று எழுதினார் பாருங்கள் - அதுதான் இந்தப் பாடலின் முத்தாய்ப்பான வரி!
-----------------------


வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

18.6.16

வாழ்வில் நிம்மதி எப்போது கிடைக்கும்?

வாழ்வில் நிம்மதி எப்போது கிடைக்கும்?

இதற்கான  விடையை சீன தத்துவ ஞானியான லா வோ த் ஸவின் ஒரு கதை மூலம் பார்க்கலாம்.

'என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை' என்றான் ஒரு அரசன் ஞானியிடம்.

'உன் கடமையை நீ சரியாக செய்கிறாயா' என்று ஞானி கேட்டார்.

'என் நாட்டிற்கு அன்னியர் பகை இல்லை. கள்வர் பயம் இல்லை. அதிக வரிகள் விதிப்பதில்லை. முறையாக நீதி செலுத்தப்படுகிறது. நாட்டு மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள். ஆனால் என் மனத்தில் மட்டும் அமைதி இல்லை. இந்த அரச பதவியில் எனக்கு நிம்மதி கிடைக்கவில்லை' என்றான்.

'அப்படியானால் ஒன்று செய். உன் நாட்டை என்னிடம் கொடுத்து விடு' என்றார் ஞானி.

'எடுத்துக் கொள்ளுங்கள்'என்றான் மன்னன்.

'நீ என்ன செய்வாய்' என்றார் ஞானி.

'நான் எங்காவது போய் ஏதாவது வேலை செய்து பிழைத்துக் கொள்கிறேன்' என்றான் அரசன்.

'எங்கோ போய் தெரியாத வேலையை செய்வதை விட என்னிடமே வேலை செய். உனக்கு தெரிந்தது நாட்டை ஆட்சி செய்வது. அதையே செய். என் பிரதிநிதியாக மட்டும் நீ நாட்டை ஆண்டு வா. நான் பிறகு வந்து கணக்கு, வழக்குகளை பார்க்கிறேன்.' என்றார். ”சரி” என்றான் மன்னன்.

ஒரு ஆண்டு கழிந்த பின் ஞானி அரசனைக் காண வந்தார். அரசன் இப்போது மகிழ்ச்சியாக காணப்பட்டான். அவரை வரவேற்று உபசரித்தவன் நாட்டின் கணக்கு வழக்குகளை எல்லாம் எடுத்து நீட்டினான்.

'அது கிடக்கட்டும்' என்ற ஞானி 'நீ இப்போது எப்படி இருக்கிறாய்' என்று கேட்டார்.

'நிம்மதியாக சந்தோஷமாக இருக்கிறேன்'

'முன்பு நீ செய்த பணிகளுக்கும், இப்போது செய்த பணிகளுக்கும் ஏதாவது வேறுபாடு உண்டா?'

'இல்லை'

'அப்போது ஏன் மன அழுத்தத்துடன் இருந்தாய்? இப்போது எப்படி நிம்மதியாக இருக்கிறாய்?' விழித்தான் அரசன். ஞானி சொன்னார்.

'அப்போது நீ இது என்னுடையது என்று எண்ணினாய். இப்போது இது எனதில்லை. நான் இங்கு வெறும் பிரதிநிதி தான் என்று எண்ணுகிறாய். அந்த மனம் தான் அனைத்திற்கும் அடிப்படையே. நான் என்ற எண்ணம் வரும் போது அத்தனை துயரங்களும் உன்னை சூழ்ந்து கொண்டு விடும். இந்த உலகம் எனதல்ல. இந்த உடல் எனதல்ல. எனக்கு அளிக்கப்பட்டது. இந்த உயிர் எனதல்ல. எனக்கு கொடுக்கப்பட்டது என்று உணர்ந்தால் துன்பங்கள் அத்தனையும் ஓடிவிடும். இதே மனநிலையுடன் நீ இந்த நாட்டை நீயே ஆட்சி செய்' என்று கூறி விடைபெற்றார் ஞானி.

ஐம்புலன்களையும் இடைவிடாமல் நெறிப்படுத்துபவன் மனம் ஒருமித்தவன் ஆகிறான். அவனிடம் சலனங்கள் ஏற்படுவதில்லை .

இன்று எது
உன்னுடையதோ
அது நாளை
வேறு ஒருவருடையது.
எங்கிருந்து
பெறப்பட்டதோ
அது அங்கேயே
திரும்பப்பெறப்படும்.
சந்தேகம் என்பது
கொடிய நோய்.
மரணமே முடிவு.

நம்பிக்கை என்பது
உயிரைப் போன்றது.
அதுவே நிரந்தரமான
மகிழ்ச்சியாகும்.

நம்பிக்கையோடு
வாழ்வோம்.
மகிழ்ச்சியைப்
பெறுவோம்.
---------------------------
படித்ததில் பிடித்தது. உங்களுக்கு அறியத் தந்துள்ளேன்

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------
வாழ்க்கைத் தத்துவம்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

17.6.16

மதமாற்றங்கள் எப்படி நடக்கின்றன?


மதமாற்றங்கள் எப்படி நடக்கின்றன?

ஒரு அடர்ந்த காட்டுக்குள்ள ஒரு நரிக்கூட்டம் வாழ்ந்து வந்தது.

அதில் ஒரு நரி ஒரு நாள் காட்டை ஒட்டி இருந்த திராட்சை தோட்டத்திற்குள் புகுந்து திராட்சை பழங்களை சாப்பிட்டுக் கொண்டிருந்தது.

அப்பொழுது அங்கு வந்த தோட்டக்காரன் நரியைப் பிடித்து அதன் வாலை வெட்டி விட்டான்.

வாலில்லாமல் நரிக்கு மிகவும் அவமானமாக இருந்தது. "அடடா இனிமே நம்மை நம்ம கூட்டத்தில் சேர்க்க மாட்டாங்களே. என்ன செய்யலாம்.....???" என்று யோசித்து கொண்ருக்கும் போது எதிரில் அதோட கூட்டத்தை சேர்ந்த நரி ஒன்று வந்தது.

அது வால் இல்லாத நரியைப் பார்த்ததும் அடக்க முடியாம விழுந்து விழுந்து சிரித்தது.

என்னடா இது அசிங்கமா போச்சேன்னு யோசித்த முதல் நரிக்கு ஒரு யோசனை வந்தது.

உடனே பதிலுக்கு அதுவும் விழுந்து புரண்டு சிரித்தது.

உடனே இரண்டாவது நரி "ஏன்டா நீ என்ன லூசா" என்று கேட்டது.

உடனே இது "அடேய் முட்டாப்பயலே என் வாலை வெட்டினவுடனே கடவுள் எனக்கு தரிசனம் தந்தாரு. ஆனா அது தெரியாம நீ என்னை கிண்டல் பண்ற" என்று சொல்லியது.

இரண்டாவது நரி "அது எப்படின்னு?" என்று கேட்க, வால் அறுபட்டிருந்த நரி, "உன் வாலையும் வெட்டினா கடவுள் தெரிவார்” என்றது.

”ஆனால் நீயா வெட்டக்கூடாது. அதோ அந்த திராட்சை தோட்டத்தில போய் திராட்சையை சாப்பிட்டின்னா அந்த தோட்டக்காரன் பிடிச்சி
உன் வாலை வெட்டி விடுவான். அப்ப உன் முன்னாடி கடவுள் தோன்றுவார்" என்று கூறியது.

உடனே இரண்டாவது நரி அதே மாதிரி செய்யப் போய் தோட்டக்காரன் வாலை வெட்டி விட்டுவிட்டான்.

ஆனால் கடவுள் வரவில்லை. ஏமாந்த நரி கடும் கோபத்துடன் முதல் நரியோடு சண்டை போட்டது.

ஆனால் முதல் நரி அமைதியாக "இங்க பாரு இப்ப உனக்கும் வால் இல்லை. எனக்கும் வால் இல்லை. இரண்டு பேரையும் கூட்டத்துல சேர்க்க மாட்டாங்க. அதனால நம்மாள முடிஞ்ச அளவுக்கு வால் இல்லாத நரிக்கூட்டத்தை உருவாக்குவோம்" என்று சொன்னது.

இப்படித்தான் மதவாதிகள் பிறர் வழிபடுவதை சாத்தான் என்றும், தாங்கள் கும்பிடுவதுதான் கடவுள் என்றும் சொல்லி மதம் மாத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

நம்பிப் போன மக்களும் திரும்பி வந்தால் அவமானப்பட்டு விடுவோம் என்று அவங்களால் முடிந்த அளவிற்குக் கூட்டத்தைச் சேர்க்க ஆரம்பித்து விடுகிறார்கள்.

அந்த வேலைதான்  பல நாடுகளில், பல ஊர்களில் வெகு விமரிசையாக நடந்தேறிக் கொண்டு இருக்கிறது ஆன்மீக மார்க்கதில்.......!!!

படித்ததில் பிடித்தது. உங்களுக்கு அறியத் தந்துள்ளேன்

அன்புடன்,
வாத்தியார்
---------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

16.6.16

புற்று நோயை விரட்ட ஒரு அற்புதமான மருந்து!


புற்று நோயை விரட்ட ஒரு அற்புதமான மருந்து!     
-------------------------
*இந்தப் பதிவை படிக்கப் படிக்க ஆச்சரியம் காத்திருக்கிறது. கண்டிப்பாக நீங்களும் படியுங்கள். ஆனந்தம் உங்களையும் தொற்றிக் கொள்வது உறுதி.*

*மக்கள் பயப்படும் நோய்களில் ஒன்றான கேன்சர் ( புற்றுநோய் ) மருத்துவத்துறையில்  மிகப்பெரிய சவாலான ஒரு நோயாகவே இருக்கிறது, ஏழை, பணக்காரன் , உயர்ந்தவர் ,  தாழ்ந்தவர், நல்லவர் , கெட்டவர் என்ற பாகுபாடு இல்லாமல் உலக மக்களில் 8 மில்லியன்  பேர் இந்த கேன்சர் நோயால் பாதிக்கப்படுள்ளனர், இன்றளவும் முழுமையான மருந்து கண்டுபிடிக்கப்படவே இல்லை. இந்தப்பதிவு வெளிவந்த பின் அந்த நிலை மாறும். அரிய பல விஷயங்களை பகிர்ந்துகொள்ள இருக்கிறோம். அதனால்  முழுமையாக இந்தப்பதிவை படிக்கவும்.*

*எல்லாம் வல்ல நம் விநாயகப் பெருமானுக்கும் நம் குருநாதர் அகத்தியர் பெருமானுக்கும் முதலில் எல்லையில்லாத நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.*

*கேன்சர் நோய் பற்றி பலரும் கேள்விபட்டு இருக்கலாம் இது ஒரு கொடிய நோய்  ஒருமுறை வந்துவிட்டால் வேகமாக பரவும், இரத்தத்தில் வரலாம் , கட்டியாக வரலாம், எலும்புகளில் வரலாம் என பல விதமாக வரும் இந்த நோய் உண்மையில் பயப்படக்கூடிய நோய் அல்ல. இது ஒரு  வகையான பூஞ்சை காளான் நோயாகும்.*

*சரியாக 6 வருடங்களுக்கு முன் ஒருவர் கேன்சர் நோய்க்கு மருந்து கேட்டு இமெயில் அனுப்பி இருந்தார். ஆரம்ப நிலையில் இருக்கும் கட்டி என்று தெரிவித்திருந்தார். அப்போது அவருக்கு அகத்தியர் நூலில் இருந்து ஒரு பதிலைத் தெரியப்படுத்தி இருந்தோம். 48 நாட்களில் குணம் கிடைத்தது.*

*அதன் பின் அதே மாதத்தில் இன்னொரு நபர் இமெயிலில் கேன்சருக்கு மருந்து கேட்டிருந்தார் ஆனால் அவருக்கு இந்த மூலிகை மருந்து வேலை செய்யவில்லை. கேன்சர் செல்களின் அசுர வளர்ச்சியை குறைக்க முடியவே இல்லை. அகத்தியரின் நூல்களில் ஆயூர்வேத முறைப்படி கூறியுள்ள அனைத்து மூலிகைகளை  பயன்படுத்தியும் எள்ளவும் குறையவே இல்லை.*

*இதன் பின் தான் இதற்கான மருந்து  தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிகமானது. இந்த நோயிலிருந்து மக்களை காப்பாற்ற முடியவில்லையே என்று குருநாதரின் மேல் கோபம் கூட வந்தது,*

*அதன் பின் சில மாதங்கள் கழித்து ஒரு  வயதான பெண்மனி நான்கே நான்கு ஓலைச்சுவடிகளை மட்டும் எடுத்துக் கொண்டு வந்து நம்மிடம் கொடுத்து இது எங்க அய்யா காலத்தில் பெட்டியில் வைத்திருந்தார் இதில் என்ன இருக்கிறது என்று படித்து சொல்லலாமா என்றார்.  இதில் ஏதோ மருத்துவ குறிப்பு இருக்கிறது என்று கூறினோம், உடனே அந்த பெண்மணி இது உங்களிடம் இருக்கட்டும் என்று கூறி சென்றுவிட்டார். அதன் பின் அந்த ஓலைச்சுவடியில் ஒரு பாட்டு இருந்தது அதை இங்கு பகிந்து கொள்கிறோம்.*

வினையான வினையது அதிகமானால் பொல்லா சூது வரும்
விட்டொழியும் பொய்யும் பிரட்டும் உலகில் வலம் வரும்.
பூஞ்சையும் நஞ்சும் இடமறியாமல் உடலில் பொங்கி வரும்
பூவுலகில் மருந்தில்லை என்று ஒடுவான் பொய் வைத்தியன்
நோயறிந்த பின் வழி தெரியாமல் அழியும் மக்கள் கோடா கோடி
நல்வேளையும் நாகதாளியும் முறைப்படி எடுத்து
உப்பாக்கினால் உனக்கு நிகர் வைத்தியன்
பூமியில் இல்லை என்பார்கள் சான்றோர்
பூஞ்சையும் நஞ்சும் பூண்டோடு விட்டு விலகும் தானே !                                                              
       *– அகத்தியர் ஏட்டுகுறிப்பு 17*

கேன்சர் என்பது நம் உடலுக்கு நஞ்சை விளைவிக்கும் ஒரு வகையான பூஞ்சை காளான்  என்பதை அகத்தியர் தம் ஏட்டு குறிப்பில் உணர்த்தியதோடு அதற்கான மருந்தையும் தன் பாட்டிலே தெரியப்படுத்தியுள்ளார்

இதில் நல்வேளை என்ற மூலிகை என்பது தைவேளை செடியை குறிக்கும். நாகதாளி என்பது ஒரு வகையான கொடி, இதன் பூ பாம்பு சீறிக்கொண்டு இருப்பதை போல் தோன்றும். இந்த இரண்டையும் எடுத்து உப்பாக்கி கொடுத்தால் நோய் தீரும் என்று பாட்டில் இருக்கிறது.

நாகதாளி மூலிகையை கண்டுபிடிக்கவே இரண்டு ஆண்டுகள் சென்றுவிட்டது. குறிப்பிட்ட மாதங்களில் மட்டுமே இந்த கொடி வளரும் என்பதையும் பனி அதிகமாக இருக்கும் காலங்களில் தான் இதை கண்டறிந்து பறிக்க முடியும் என்பதையும் இங்கு தெரிவிக்கிறோம். குறிப்பிட்ட காலத்தில் இரண்டையும் பறித்து முப்புக்கான அடிப்படை முறையில் இதை உப்பாக்கி வைத்து சூரிய ஒளியில் காயவைத்து எடுத்துக்கொண்டோம்.

அதன் பின் இந்த உப்பை நன்றாக  பொடியாக்கி மருத்துவ துறையில் வேலை செய்யும் ஒரு ஆராய்ச்சி மாணவரிடம் கொடுத்து இதில் என்னென்ன சத்துக்கள் இருக்கிறது என்று பார்த்து சொல்லுங்கள் என்று கொடுத்து அனுப்பினோம். அவரும் மூன்று நாட்கள் கழித்து எங்களை ஏன் இப்படி சோதிக்கிறீர்கள் என்று  கேட்டார்,நமக்கு ஒன்றும் புரியவில்லை என்றோம்.

*அவர் கூறினார் நீங்கள் என்னிடம் கொடுத்தது சோடியம் பை கார்பனேட் உப்பு தானே என்றார்.*

*இல்லை  என்று கூறி மறுபடியும் நன்றாக சோதித்து சொல்லுங்கள் என்று நம்மிடம் உள்ள உப்பில் இன்னொரு பகுதியை
எடுத்துக்கொடுத்தோம்.*

*இரண்டு நாட்கள் கழித்து மறுபடியும் கூறினார் அதில் இருப்பது சோடியம் பை கார்பனேட் ( sodium bicarbonate
(NaHCO3) )  தான் என்றார்.*

*நாமும் புரியாமல் இதைப்பற்றிச் சொல்லுங்கள் என்றோம்*
*உடனடியாக  அவர் கூறினார் இதுதான் ”சமையல் சோடா “ அல்லது சோடா உப்பு என்று சொல்வார்களே அது தான் இது என்று கூறினார்.*
*அதுமட்டுமல்ல, இது நுண்கிருமிகளை அழிக்கும், துணியில் இருக்கும் அழுக்கைக்கூட இந்த நீரில் ஊறவைத்தாலே சுத்தமாகிவிடும், வயிற்று உப்புசத்திற்கு, அஜீரணக்கோளாறுகளை சரிபடுத்துவதற்கு,*
*இதில் 1/4 ஸ்பூன் தண்ணீரில் கலக்கி குடிப்பார்கள்  என்றார் அவர்.*

*அதன் பின் சோடியம் பை கார்பனேட் (Sodium bicarbonate) தொடர்பாக இணையத்தில் தேடி பார்த்தபோது பல ஆச்சர்யமான உண்மைகள் கிடைத்தது.*

*2008 – ஆம் ஆண்டு சிமோன்சினி  (Simoncini) என்ற இத்தாலி நாட்டு மருத்துவர் சோடியம் பை கார்பனேட் என்ற உப்பை கொண்டு கேன்சர் நோயை குணப்படுத்தி தன் வலைப்பூவில் வெளியீட்டுள்ளார்.*

*இதன் முகவரி http://www.curenaturalicancro.com/en/*

*பல கேன்சர் நோயாளிகளுக்கு இந்த மருந்தை கொடுத்து குணம் அடைந்ததை ஆதாரத்துடன் தன் வலைப்பூவில்  வெளியிட்டுள்ளார்.  இதுவரை கேன்சர் தொடர்பான  ஆராய்ச்சிகள் என்னென்ன என்பதையும் ஒவ்வொரு விஞ்ஞானிகள் என்னென்ன  கண்டுபிடித்துள்ளார்கள் என்பதையும் இங்கு வீடியோவாக கொடுத்துள்ளோம்.*

*ஈவு இரக்கமே இல்லாமல் கேன்சர் நோயை வைத்து பணம் பறிக்கும் கூட்டம்  இவரின் மேல் பல புகார்களை கூறி வழக்குகள் பல தொடர்ந்தும் இவரின் உண்மை தன்மையால் வெளிவந்ததோடு அறிவுடைய மக்களிடையே இந்த மருத்துவ முறை  சென்றடைந்துள்ளது.*

*மருத்துவரால் கைவிடப்பட்ட சில கேன்சர் நோயாளிகளுக்கு இந்த மருந்தைப்பற்றிக் கூறி இருந்தோம் இதில் மூளைப்புற்று நோயால் பாதிக்கப்ப்பட்டவர்களைத் தவிர மற்ற கேன்சர்  நோயாளிகளுக்கு இம்மருந்து நன்றாக வேலை செய்தது. மூளைப்புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மார்பகப்புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவர் சிமோன்சினி நேரடியாக ஊசி மூலம் சோடியம் பை கார்பனேட் – ஐ செலுத்தி  குணப்படுத்தியுள்ளார் என்பதையும் அவரது தளத்தில் தெரியப்படுத்தியுள்ளார்.*

*வலி தாங்கமுடியாத மார்பகப் புற்று நோய் முற்றிய ஒரு பெண்மணிக்கு இந்த சிகிச்சைப்பற்றி தெரியப்படுத்தி தினமும் அந்த பெண்மணி இந்த சோடியம் பை கார்பனேட் தண்ணீரில் கலக்கி துணியில் வைத்து மார்பகத்திற்கு ஒத்தடம் மட்டுமே கொடுத்து குணமடைந்துள்ளார். அதன் பின் மருந்துவரிடம் சென்று காட்டியதற்கு இது கேன்சர் கட்டியே இல்லை அதனால் தான் குணமாகிவிட்டது என்றும் தெரிவித்திருக்கிறார்.*

*இதில் வேடிக்கை என்னவென்றால் அகத்தியர் தம் பாடலில் குறிப்பிட்டபடி இது  ஒருவகையான பூஞ்சை காளான் நோய் என்றே சிமோன்சினி மருத்துவரும் தெரிவிக்கிறார். சோடியம் பை கார்பனேட் எந்தவிதமான பாதிப்பும் பக்கவிளைவுகளும் இல்லாத மருந்து  என்று தெரிவிக்கிறார். அளவோடு இந்த மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டும். முதலில்  தினமும் காலை 1 ஸ்பூன் சோடியம் பை கார்பனேட் மருந்தை 1 டம்ளர் தண்ணீரில்  நன்றாக கலக்கி 1 வாரத்திற்கு எடுக்க வேண்டும் அதன் பின் இரண்டாவது வாரத்தில்  இருந்து காலை 1  ஸ்பூன் மருந்தும், இரவு 1/2 ஸ்பூன் மருந்தாக சோடியம் பை கார்பனேட் மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டும். மூன்று மாதம் இவ்வாறு தொடர்ந்து சாப்பிட்டாலே நோய் குணமாகும்.*
*முக்கியமாக சில கேன்சர் நோயாளியின் உடல் நிலை  கருதி சில நேரங்களில்அவர் மருந்து எடுக்கும் நாட்களில் சோர்வாக காணப்பட்டால் 1 நாள் அல்லது இரண்டு நாள் மருந்தை நிறுத்தி அதன் பின் மூன்றாவது நாளில் இருந்து மருந்தை மறுபடியும்  கொடுக்கலாம் என்கிறார்.*

*இந்த கேன்சர் மருந்தைப்பற்றியும் சித்தர்களின் பாடல்கள் பற்றி முழுமையாக ஆய்வு செய்து மக்களுக்கு இம்மருத்துவ முறையை கொண்டு சேருங்கள் என்று இந்திய மருத்துவ கவுன்சிலிற்கு நாம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தகவல் அனுப்பியும் இன்று வரை எந்தப் பதிலும் இல்லை.*

*நாகதாளி என்ற மூலிகையை நமக்கு எடுத்து கொடுப்பதற்காக இரண்டுஆண்டுகளாக காட்டில் ஒருபகுதி கூட விடாமல் சளைக்காமல் தேடி எடுத்து கொடுத்த அன்பர்கள் , இதற்கு வாகன உதவி செய்த நண்பர்கள், உணவு , இருப்பிடம் என அனைத்தும் செய்து கொடுத்த மலைவாழ் மக்கள் என உங்கள் ஒவ்வொருவருக்கும் எம் சிரம் தாழ்ந்த நன்றியை காணிக்கையாக்குகிறோம்.*

*எத்தனை நாட்கள் எங்களுக்காக உங்கள் தூக்கத்தை தொலைத்திருப்பீர்கள், பசியோடு இரவு பகல் பாராமல் எத்தனை நாட்கள் காடுகளில் அலைந்திருப்பீர்கள், தானும் தம் குடும்பமும் மட்டுமே வாழவேண்டும் என்ற சுயநலமுள்ள மக்கள் மத்தியில் எந்த நம்பிக்கையில் நீங்கள் எங்களை நம்பி இந்த உதவி செய்தீர்கள் என்று தெரியவில்லை. இந்த வெற்றி உங்களால் தான் சாத்தியம் ஆகி இருக்கிறது. கண்ணீருடன் மறுபடியும் ஒருமுறை நன்றியை தெரிவிக்கிறோம்.*

*வலைப்பூ வாயிலாக அன்பையும் ஆதரவையும் தெரிவித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி...! நன்றி...!! நன்றி...!!!*

*நம் குருநாதரின் ஆசியோடு இந்த மருத்துவ முறையை ஒளிவு மறைவு இல்லாமல் நேரடியாக உள்ளபடியே நம் தமிழ் உறவுகளுக்கு தெரியப்படுத்தியுள்ளோம்.*

*இதைப்படிக்கும் ஒவ்வொரு நபரும் மறக்காமல் இந்தப்பதிவை எல்லா தமிழ்மக்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்று
கேட்டுக்கொள்கிறோம்.*

*இயற்கை மருத்துவத்தை ஆராய்ச்சி செய்யும் மாணவர்கள் இது தொடர்பாக மேலும் பல ஆராய்ச்சி செய்து இம்மருந்தை திறமாக மக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும் என்பது நம் எண்ணம்.*

*கட்செவி : சித்த மருத்துவம்*
===================================
படித்ததில் மிகவும் பிடித்தது. அதை உங்களூக்கு அறியத் தந்துள்ளேன்

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

15.6.16

ஸ்டீவ் ஜாபின் இறுதி வரிகள்.


ஸ்டீவ் ஜாபின் இறுதி வரிகள்.

நான் வணிக உலகில் வெற்றியின் உச்சத்தை அடைந்திருக்கிறேன். பிறரின் பார்வையில் என் வாழ்க்கை வெற்றிகரமானது.

 எப்படியிருந்தாலும் என் பணிச்சுமைகள்  எல்லாம் தாண்டி நானும் வாழ்க்கையில் சிறிது சந்தோசங்களை அனுபவித்திருக்கிறேன்.

பணமும் வசதிகளும் மட்டுமே வாழ்க்கையில்லை என்பதை இறுதியில் தான் அறிந்து கொண்டேன்.

இதோ இந்த மரணத்தருவாயில், நோய் படுக்கையில் படுத்து கொண்டு என் முழு வாழ்க்கையையும் திரும்பி பார்க்கும் இந்த தருணத்தில் வாழ்க்கையில் எனக்கு கிடைத்த அங்கீகாரங்கள், பணம் , புகழ் எல்லாம் செல்லா காசாக , அர்தமற்றதாக மரணத்தின் முன் தோற்று போய் நிற்பதை உணர்கிறேன்.

இந்த இருளில் என் உயிரை தக்க வைக்க போராடிக் கொண்டிருக்கும் மருத்துவ இயந்திரங்களின் மெல்லிய சத்தங்கள் மட்டுமே காதுகளில் ரீங்கரிக்கிறது. கடவுளின் மூச்சுக்காற்றையும் மரணத்தையும் மிக அருகில் உணர்கிறேன்.

வாழ்க்கையில் நாம் வாழ்வதற்கு போதுமான பணம் சம்பாரித்த பின், பணத்திற்கு சம்மந்தமில்லாத விஷயங்களையும் சம்பாரிக்க தொடங்க வேண்டும்

என்பது இப்போது புரிகிறது. அது உறவாகவோ, இல்லை எதாவது கலை வடிவமாகமாவோ , நம் இளமையின் கனவாகவோ இருக்கலாம். அது தான் வாழ்வில் மிக முக்கியமானது.

அதைவிட்டு பணத்தை மட்டுமே நோக்கமாக கொண்டு ஓடும் மனிதனின் வாழ்க்கை முற்றிலும் வேறு திசையில் திரும்பிவிடுகிறது என் வாழ்க்கையை  போல.

கடவுள் நம் புலன்களின் மூலம் அனைவரின் மனதில் இருக்கும் அன்பை உணரசெய்யும் சக்தியை கொடுத்திருக்கிறார், பணத்தால் நாம் உண்டாக்கியிருக்கும் எல்லா சந்தோசங்களும் வெறும் பிரமைகள் தான்.

நான் சம்பாரித்த பணம் எதையும் இங்கு கொண்டுவர முடியாது. நான் மகிழ்ந்திருந்த என் நினைவுகள் மட்டுமே இப்போது என்னுடன் இருக்கிறது.

அன்பும் காதலும் பல மைல்கள் உங்களுடன் பயணிக்கும். வாழ்க்கைக்கு எந்த எல்லைகளுமில்லை. எங்கு செல்ல ஆசைப்படுகிறீர்களோ அங்கு செல்லுங்கள். தொட நினைக்கும் உயரத்தை தொட முயற்சியுங்கள். நீங்கள் வெற்றியடைவது உங்கள் எண்ணத்திலும் கைகளிலும் தான் உள்ளது.

உங்கள் பணத்தை வைத்து நீங்கள் என்ன வேண்டுமானாலும் வாங்கலாம், ஆனால் அந்த பணத்தின் மூலம் உங்கள் வலியை, உங்கள் துயரை யாரும் வாங்கிகொள்ளுமாறு செய்ய முடியாது.

பணத்தின் மூலம் வாங்கும் பொருட்கள் தொலைந்துவிட்டால் மீண்டும் வாங்கிவிடலாம். ஆனால் நீங்கள் தொலைத்து அதை பணத்தால் வாங்க முடியாது என்ற ஒன்று உண்டென்றால் அது உங்கள் வாழ்க்கை தான்.

வாழ்க்கையில் எந்த கட்டத்தில் நீங்கள் இருந்தாலும் பரவாயில்லை , இப்போது வாழ்க்கையை வாழ ஆரம்பியுங்கள். நாம் நடித்து கொண்டிருக்கும்

வாழ்க்கை எனும் நாடகத்தின் திரை எப்போது வேண்டுமானாலும் இறக்கப்படலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

உங்கள் குடும்பத்தினருக்கு, மனைவிக்கு, நண்பர்களுக்கு, அன்பை வாரி வழங்குங்கள்.

உங்களை நீங்கள் சந்தோசமாக வைத்து கொள்ளுங்கள். அனைவரையும் மனமார நேசியுங்கள்.!

(ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் கம்பெனி நிறுவனர். ஸ்மார்ட் போன்களை வடிவமைத்தவர்)

💖💖💖🌷💖💖💖
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

14.6.16

Humour: நகைச்சுவை: முடிந்தவரை சிரித்து வைப்போம் வாருங்கள்!!


Humour: நகைச்சுவை: முடிந்தவரை சிரித்து வைப்போம் வாருங்கள்!!

1
ஹமாம் சோப்பு போட்டா  பத்து ஸ்கின் ப்ராப்ளம் வராது
மெடிமிக்ஸ் சோப்பு போட்டா மொத்த ஸ்கின் ப்ராப்ளம் வராது
டெட்டால்,லைஃப்பாய் சோப்பு போட்டா
கிருமிகளால் ப்ராப்ளம் வராது
.ஆனால். .....

உங்களுக்கு  ஒண்ணு  தெரியுமா?
மனைவிக்கு சோப்பு போட்டு வாழ்ந்தா வாழ்க்கை ல எந்த ப்ராப்ளமும் வராது
----------------------------------------------------------------
2
பயம் ஒரு பெரிய நோய். நிறைய பேர்களுக்கு வியாதி வர காரணம், தங்களுக்கு  வந்துவிடுமோ என்ற பயம்தான்.

அக்பரிடம் ஒருவர் சவால் விட்டார். என் வேலைக்காரன் நல்லா சாப்பிடுவான் . அவனை ஒரு மாதம் வைத்திருந்து நிறைய நல்ல உணவுகளைக் கொடுங்கள். அவன் வேலையோ உடற்பயிற்சியோ செய்யக்கூடாது. ஆனால் ஒரு கிலோகூட எடை கூடக் கூடாது.

அக்பா் யோசிச்சார். பீர்பாலை பார்த்தார். பீர்பால், அரசர் சார்பாக அந்த சவாலை ஏற்றார். மூன்று வேளைகளும் மகத்தான விருந்து படைக்கப்பட்டது.

மாதக்கடைசியில் எடையும் அப்படியே இருந்தது. அக்பருக்கு ஆச்சரியம். பீர்பால் சொன்னார்.

அவனுடைய இரவுப்படுக்கையை சிங்கக்கூண்டுக்கு அருகே அமைத்தேன்.

கூண்டின் கதவு சரியாக இல்லை என்று சொன்னேன். அச்சம் காரணமாய் சத்து உடலில் ஒட்டவில்லை.
அச்சமின்மையே ஆரோக்கியம்!

💥 *பின்குறிப்பு* 💥

இந்த கதையை எனக்கு நெருங்கிய நண்பர் ஒருவர் சொன்னார்.

சொன்ன நண்பரை மேலும் கீழும் பார்த்தேன். அவர் கல்யாணத்துக்கு முன் எப்படி இருந்தாரோ அப்படியேதான் இப்போதும் இருந்தார்.சரிதான். சிங்கத்துடன் வாழ்க்கை நடத்துகிறார் என்று நினைத்துக் கொண்டேன்!!!
--------------------------------------------------------------------
3
A lawyer was asked 'What is your opinion on Mahabharath and Ramayan?'

He replied
'One is land dispute case and the other is  Kidnap case
-------------------------------------------------------
4
All husbands can enjoy!

🔴
Wife : Shall I prepare Sambar or Rasam today . 
Husband : First make it, we will name it later 

🔴
A frustrated husband in front of his laptop:
dear google, please do not behave like my wife...
Please allow me to complete my sentence before you start guessing & suggestin

🔴
A married man's prayer;
Dear God, u gave me childhood, u took it away
U gave me youth, u took it away.
U gave me a wife.......... Its been years now,
just reminding u......!!!!

🔴
A man brings his best buddy home for dinner unannounced at 5:30 after work.
His wife begins screaming at him and his friend just sits and listens in.

"My hair & makeup are not done, the house is a mess, the dishes are not done, 
I'm still in my pajamas and I can't be bothered with cooking tonight ! 
Why the hell did you bring him home for?"

Husband answers "Because he's thinking of getting married"

🔴
Husband: I found Aladin's lamp today.
Wife: wow, what did u ask for darling??
Husband: I asked him to increase your brain ten times..
Wife: oh..jaan..luv u so much.. Did he do that??
Husband: He laughed and said multiplication doesn't apply on zero.

🔴
Employee: Sir You are like a lion in the office! What about at home??
Boss: I am a lion at home too, But Goddess Durga sits on the lion there !

🔴
A man gifted his wife a diamond necklace for their anniversary 
and wife didn't speak to him for 6 months.
Was the necklace FAKE?
Nooooo! That was the deal :)

🔴
A couple was having dinner at a fancy restaurant.
As the food was served, the husband said, "the food looks delicious, let's eat."
Wife: honey.....you say prayer before eating at home.
Husband: that's at home sweetheart......here the chef knows how to cook.

LAST BUT THE BEST
🔴
Best Slogan on a
MAN's T-Shirt :
"Please Do Not Disturb me,
I am Married and already very Disturbed"
=================================================
இவற்றுள் எது மிகவும் நன்றாக உள்ளது?

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

13.6.16

என்னைக் கவர்ந்த வாசகங்கள்!

என்னைக் கவர்ந்த வாசகங்கள்!!!

*பேசி தீருங்கள்.
         பேசியே வளர்க்காதீர்கள்.

*உரியவர்களிடம்  சொல்லுங்கள்.
     ஊரெல்லாம் சொல்லாதீர்கள்.

*நடப்பதைப் பாருங்கள்.
     நடந்ததைக்  கிளறாதீர்கள்.

*உறுதி காட்டுங்கள்.
  பிடிவாதம்  காட்டாதீர்கள்.

*விவரங்கள் சொல்லுங்கள்.
     வீண்வார்த்தை சொல்லாதீர்கள்.

*தீர்வை விரும்புங்கள்.
      தர்க்கம் விரும்பாதீர்கள்.

*விவாதம்  செய்யுங்கள்.
     விவகாரம் செய்யாதீர்கள்.

*விளக்கம் பெறுங்கள்.
      விரோதம் பெறாதீர்கள்.

*பரிசீலனை செய்யுங்கள்.
     பணிந்து போகாதீர்கள்.

*சங்கடமாய் இருந்தாலும்
     சத்தியமே பேசுங்கள்.

*செல்வாக்கு இருந்தாலும்
    சரியானதைச் செய்யுங்கள்.

*எதிர் தரப்பும் பேசட்டும்.
  என்னவென்று கேளுங்கள்.
  எவ்வளவு சீக்கிரம் தீர்வு வரும் பாருங்கள்.

*நேரம் வீணாகாமல்
    விரைவாக முடியுங்கள்.

*தானாய்த்தான் முடியுமென்றால்,
     வேறு வேலை பாருங்கள்.

*யாரோடும் பகையில்லை என்பது போல் வாழுங்கள்....

மின்னஞ்சலில் வந்தது. உங்களுக்கு அறியத் தந்துள்ளேன்
அன்புடன்
வாத்தியார்
---------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

12.6.16

Quiz: புதிர் எண்.111 புதிருக்கான பதில்


Quiz: புதிர் எண்.111 புதிருக்கான பதில்

நேற்றைய புதிருக்கான பதில்:

ஜாதகிக்குத் திருமணம் ஆனது. ஆன கையோடு விவாகமும் ரத்தானது. இதுதான் சரியான விடை
---------------------------------------------------------------------------------
ஜாதகி கடக லக்கினக்காரர்.
காலசர்ப்ப தோஷ ஜாதகம்.
லக்கினத்தில் மாந்தி - குணக்கேடானவர்.
பாக்கியாதிபதி குரு 12ல், விரையத்தில் மறைந்துவிட்டார். பெண்களின் ஜாதகத்தில் பாக்கியாதிபதி முக்கியம். இந்த ஜாதகிக்கு அது இல்லை.
கடக லக்கினத்திற்கு யோககாரகனான செவ்வாய் 6ல் மறைந்து விட்டார். யோகங்களும் அடிபட்டுவிட்டது.
லக்கினாதிபதி சந்திரன் கேந்திரத்தில், 4ல் அமர்ந்தாலும் சனியின் பிடியில் சிக்கியுள்ளார். கிரகயுத்தம்
இவை எல்லாம் சேர்ந்து ஜாதகியை அதிர்ஷ்டமில்லாதவராகச் செய்துவிட்டன.
----------------------------------------
குரு கெட்டிருந்தாலும் முடிந்தவரை நன்மைகளைச் செய்யக்கூடியவர். களத்திரகாரகன் சுக்கிரன் மேல் குருவின் 5ம் பார்வை விழுவதைப் பாருங்கள்.

இருவரும் சேர்ந்து குரு மகாதிசை சுக்கிர புத்தியில் ஜாதகிக்குத் திருமணத்தை நடத்தி வைத்தார்கள்.

ஜாதகத்தில் கடுமையான புனர்பூ தோஷம் இருக்கிறது. புனர்பூ தோஷம் தன்னுடைய வேலையைக் காட்டியது. ஜாதகி, திருமணமான மூன்றாவது மாதமே கணவனைப் பிரிந்து தன் தாய் வீட்டிற்கு வந்து விட்டாள். கணவனைப் பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டாள். அத்துடன் ஜாதகியின் திருமணவாழ்க்கை முடிவிற்கு வந்துவிட்டது.

குடும்ப ஸ்தானத்தில் விரையாதிபதி புதனின் ஆதிக்கமும் சேர்ந்து ஜாதகிக்குக் குடும்ப வாழ்க்கை இல்லாமல் செய்து விட்டது.
ஜாதகியின் பூர்வபுண்ணிய மற்றும் குழந்தை பாக்கியத்திற்கான 5ம் வீடு பாபகர்த்தாரி யோகத்தில் சிக்கிக் கெட்டுள்ளது. ஒரு பக்கம் சனி மறு பக்கம் ராகு. அதனால் ஜாதகிக்குக் குழந்தையும் இல்லை. குணக்கேட்டால் மறுமணமும் செய்து கொள்ளவில்லை.

விளக்கம் போதுமா?
--------------------------------
புதிர்ப் போட்டியில் மொத்தம் 20 பேர்கள் கலந்து கொண்டார்கள். கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள். சரியான விடையையோ அல்லது அதை ஒட்டிய விடையையோ 7 பேர்கள் எழுதியிருக்கிறார்கள். அவர்களுக்கு எனது மனம் உவந்த பாராட்டுக்கள்.

அவர்களின் பதில்கள் கீழே உள்ளன.
அன்புடன்
வாத்தியார்
---------------------------------------
1
/////Blogger Srinivasa Rajulu.M said...
02-செப்டம்பர்-1954 அன்று ஸ்வாதி நக்ஷத்திரத்தில் பிறந்தவர் - கடக லக்னம்.
சுக்ரன் ஆட்சி பலத்துடனும், களத்திர ஸ்தானாதிபதி உச்சமாகவும் இருப்பதால் திருமணம் நடைபெற்றது.
ஆனாலும், லக்ன-மாந்தியால் பிடிவாத குணம்; சயனபோக ஸ்தானத்தில் ஆறாம் அதிபன் கேதுவுடன்; யோககாரகன் ராஹுவுடன் ஆறில் மறைவு,
பாக்கியஸ்தானாதிபதி மறைவு, புத்திர-பூர்வ புண்ணிய ஸ்தானம் கத்தரியில் மற்றும் புனர்பூ தோஷம் ஆகியவற்றால் 35 வயதில் விவாக ரத்து ஆகியிருக்கும்.
Friday, June 10, 2016 9:24:00 AM /.////////
------------------------------------------
2
///Blogger KJ said...
Sir,
In Native Horoscope, There is Punarpoosa Dosam (Saniswaran + Chandran). So Marraige Life will be troubled. Also Delay marraige is possible, Still problem in Marriage life.
Thanks,
Sathishkumar GS
Friday, June 10, 2016 5:11:00 PM/////
--------------------------------------
////Blogger mohan said...
ஐயா, தலைப்பிற்கான படம் அருமை. எங்கிருந்தையா இவ்வளவு ரசனையோடு எடுக்கின்றீர்கள்./////

கூகுள் அண்டவரிடம் இருந்துதான் சாமி!
-----------------------------------------------
3
///////Blogger கலையரசி said...
திருமணம் குரு திசையில் நடந்து இருக்கும் .
குழந்தை இல்லாமை தெரிகிறது .
கணவனுடன் பிரிந்து வாழ்வார் .
கடல் கடந்து , வெளி நாட்டில் வாழ வாய்ப்பு உள்ளது.
பொருளாதரத்திற்கு குறைவு இருக்காது.
நிறைய ஆன்மீக பணியில் செய்பவர் . முக்கியமாக குழந்தைகள் நலனையொட்டிய பணிகளில் தன்னை ஈடுபடுத்தி கொண்டு வாழ்வார்.
தந்தை சமூகத்தில் நல்ல நிலையில் இருப்பார் .
Saturday, June 11, 2016 2:21:00 AM////
------------------------------------------
4
///////Blogger Raja C said...
கடக லக்னம் , துலா ராசி , சுவாதி நட்சத்திரம். சூரியன் சிம்மத்தில், செவ்வாய் ராஹு ஆறாம் வீட்டில். எதற்கும் பயபடாதவர், அதிகார எண்ணம் உடையவர் ! சந்திரன் , சனி சேர்கை கணவனை மனதளவில் காயபடுத்தி கொண்டே இருத்தல் ! லக்னத்துக்கு எதிரான சனி நவாம்சத்தில் ஆட்சி .

சனி திசையில் கணவர் பிரிந்து இருப்பார் ! 12இல் கேது , மீண்டும் இல்லற வாழ்கை அமையாமல் , கடைசி காலத்தில் , இறைவனை நினைத்து வாழ்ந்து இருப்பார் !
Saturday, June 11, 2016 9:24:00 AM //////
-----------------------------------------------
5
/////Blogger Chandrasekaran Suryanarayana said...
QUIZ NO: 111
02-09-1954 ஆம் அண்டு காலை 4.50 மணிக்கு சுவாதி நட்சத்திரத்தில் துலா ராசியில் கடக லக்கினத்தில் பிறந்தவர் இந்த ஜாதகி. (எடுத்து கொண்ட இடம்: சென்னை)
கடக லக்கினம்: யோகக்காரர்கள் - குரு சந்திரன் செவ்வாய் யோகமில்லாதவர்கள்: சுக்கிரன் புதன்.
சனி உச்சம் புதன் அஸ்தங்க்கம். வர்கோத்தமம் : சூரியன் சுக்கிரன் குரு
லக்கினம்:
ஜாதகி கடக லக்கினக்காரர். லக்கினம் பாபகர்த்தாரி யோகத்தில் ஒரு பக்கம் கேது. இன்னொரு பக்கம் சூரியன். சங்கடமான அமைப்பு. லக்கினம் (26 பரல்) அடிக்கடி நோய்வாய்ப்படுவார். விபத்துக்கள் நேரிடும். எப்போதும் ஏதாவது ஒரு மன அழுத்தம் இருக்கும்.லக்கினத்தில் மாந்தி இருப்பதால்

முரட்டு குணம் உள்ளவர்.பிடிவாதக்காரர்.
லக்கினாதிபதி சந்திரன் கேந்திரத்தில் உள்ளார். நல்ல அமைப்பு. 4ம் வீட்டு அதிபதி 4ம் வீட்டில் களத்திரகாரகன் சுக்கிரன் துலா ராசியில்
கேந்திரத்தில் அமர்ந்துள்ளார்.
7ம் வீட்டு அதிபதி சனி 4ம் வீட்டில் துலா ராசியில் உச்சம்.
ஏழாம் வீட்டுக்காரன் சனீஷ்வரன் கேந்திரத்தில். அத்துடன் அவர் லக்கின வீட்டிற்கு 4ல் நல்ல நிலைமையில் உள்ளார்.
பாக்கியஸ்தான அதிபதி குரு பகவான் 12ம் வீட்டில் அமர்ந்து 5ம் பார்வை சனி சந்திரன் மற்றும் சுக்கிரனின் மேல் விழுவதைப் பாருங்கள். அவர்தான் சந்திரனுடன் கை கோர்த்து ஜாதகிக்குத் திருமணத்தை நடத்தி வைத்தார். குரு தசை சந்திர புக்தியில் 29 வயதில் திருமணம் நடைபெற்றது இந்த கடக லக்கினத்தில் ஜாதகத்திற்கு சந்திரனும் குருவும் யோகக்காரர்கள்.
2ம் வீடு: (குடும்பஸ்தானம்) :
இரண்டில் சூரியன் அமர்ந்திருந்தால் - பொருள் சேதம்.
12ம் வீட்டு அதிபதி இரண்டாம் வீட்டில் இருந்தால்: ஜாதகி பலமுறை பல இடங்களில் பண விரையம் ஏற்பட்டு அல்லல் படுவாள். கடன் தொல்லைகள்

ஏற்பட்டு அவதிப்படுவாள். தேவையில்லாத சிக்கல்களில் மாட்டிக் கொள்வாள். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்காது.
6ம் வீட்டு அதிபதி குரு பன்னிரெண்டாம் வீட்டில் அமர்ந்திருந்தால் வாழ்க்கை தொல்லைகளும் துயரங்களும் நிறைந்ததாக இருக்கும். ஜாதகியினால் மற்றவர்களுக்கு இடைஞ்சல்கள் ஏற்படும். இந்த அமைப்பு நல்ல பார்வை பெறாமல் தீய பார்வைகள் பெற்றிருப்பதால் வாழ்க்கை அவலமாகவும் கடினமாகவும் இருக்கும். செவ்வாய் ராகுவின் 7ம் பார்வை, 12ம் வீட்டின் மீது இருப்பதாலும் 12ம் வீட்டில் குருவுடன் கேது கூட்டு இருப்பதாலும் 12ம் வீடு
பாதிக்க பட்டுள்ளது.
சனியும் சந்திரனும் ஒன்று சேர்ந்து இருப்பதால் புணர்ப்பு தோஷம் ஏற்படும் . சனி தசை சந்திர புக்தியில் 45 வயதில் திருமணம் பிரிவில் முடியும்.
குழந்தை பாக்கியம்: (ஜாதிக்கிக்கு குழந்தை பாக்கியம் இல்லை)
5ம் வீடு பாபகர்த்தாரி தோஷம் ஒரு பக்கம் சனி மறு பக்கம் ராகு செவ்வாய் .5ம் வீட்டு அதிபதி செவ்வாய் 6ம் வீட்டில் அமர்ந்து ராகுவுடன் கூட்டு மேலும் கேதுவின் 7ம் பார்வையில் உள்ளார் . ஆகையால் 5ம் வீடு கடுமையாக பாதிக்க பட்டுள்ளது. ஆகையினால் ஜாதிக்கிக்கு குழந்தை பாக்கியம் இல்லை.
சந்திர ராசியிலிருந்து 7ம் வீடு 10ம் வீடு ஆகும். அதன் அதிபதி செவ்வாய் 6ம் வீட்டில் .தீய கிரங்க்களினால் பாதிக்க பட்டுள்ளார்.
எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு நான்கில் இருந்தால்:தாயுடனான உறவு சுமூகமாக இருக்காது. சிலருக்குத் தாய்ப்பாசம் கிடைக்காது. தாய்வழி
உறவுகளின் மகிழ்ச்சியும் இருக்காது.குடும்ப வாழ்வில் சுகம் இருக்காது. தொல்லைகளே மிகுந்திருக்கும்.
எட்டாம் வீட்டுச் சனியுடன் பதினொன்றாம் வீட்டுக்காரனும் ஒன்று சேர்ந்து இருந்தால், ஜாதகினுடைய அதிர்ஷ்டமும், வெற்றிகளும் கடுமையான
பாதிப்புக்களுக்கு உள்ளாகும்.
Sunday, June 12, 2016 7:06:00 AM//////
-----------------------------------------
6
////Blogger asbvsri said...
Answer for Puthir 111:
Vanakkam.
Kadaga lagnam, Lagnathipathi Chandran in 4th house kendrathil. 7th house owner Sani in 4th house - Kendrathil Ucham. Kudumbasthanathipathi
Suriyan in 2nd house - atchi, 9th house owner Gurn in 12th house - bogastanathil. All these helped her to get a family life.
But Sani, Chandran, plus Sukran kootu Nallathalla. Also they are affecting the Aruda Lagnam. Sani, Sevvai parvai to Lagnam. Lganam is in Papa
Karthari yogathil. Navamsathil lagnam is aflicted by Ketu with Rahu, sani parvai. Rasiyil Virayathipathi Budan in kudumbasthanathil.
She could have had a decent family life till Guru Dasa i.e till the age of 34. During Sani dasa at the age of 35 problems would have started and
she might have lived like a saint.
Thanks,
K R Ananthakrishnan - Chennai
Sunday, June 12, 2016 12:39:00 PM//////
--------------------------------------------
7
//////Blogger ambharish said...
வணக்கம் தங்கள் வினாவினை கண்டேன். இந்த ஜாதகிக்கு 33வது வயது முதல் திருமண வாழ்க்கை சுமுகமாக இல்லை .பொருளாதாரம் மற்றும் அசையும் அசைய சொத்துக்கள் அபரிமிதமாக சேரும் ஆனால் அவைகள் இவர்களுக்கு பிரயாஜநம் அற்றுபோகும் 42வது வயதில் கணவருக்கு ஒருகண்டமும் பொருளாதார இழப்பையும் சந்தித்திருப்பார்கள். அனைவரோடும் சேர்ந்து இருந்தாலும் இந்தப்பெண் ஒரு சந்நியாசி போலவே வாழ்வாள்.
காரணம்.
7குடையவன் சனி 4ல் உச்சஸ்தானத்தில் சச யோகத்துடன் உள்ளார் .33வது வயதில் தனது திசையை ஆரம்பித்து உள்ளார் .7குடையவன்
உச்சமானால் திருமண வாழ்க்கை கிடையாது. சிலருக்கு திருமணமே ஆகாது . வீடு கொடுத்த சுக்கிரன் தன பாவத்திலேயே இருப்பதால் திருமணம் நடந்தே தீரும் .ஆனால் சனியானவர் 7குடையவர் மட்டுமின்றி 8குடையவராகவும் உள்ளார். ஆகவே அவர் தனது திசை காலத்தில் இல்லறத்தை கெடுதலும் பொருளாதாரத்தை அதிகம் கெடுக்காமல் தனிமையில் வாழவைக்கிறார்.
அம்பரீஷ் சாஸ்திரிகள்
============================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!