மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

10.6.16

Astrology Quiz: ஜோதிடப் புதிர் எண்.111: கேள்வி பிறந்தது இன்று


Astrology Quiz: ஜோதிடப் புதிர் எண்.111: கேள்வி பிறந்தது இன்று

கீழே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்:



இது ஒரு அம்மணியின் ஜாதகம்.

ஜாதகியின் திருமண வாழ்க்கையைப் பற்றி உங்கள் கணிப்பை விபரமாக எழுதுங்கள்.

உப கேள்விகள் நிறைய உள்ளன. அவற்றையெல்லாம் கேட்டால் நானே உங்களுக்குக் க்ளூ கொடுத்தது போலாகிவிடும். ஆகவே இன்று ஒரே ஒரு பிரதான கேள்வி மட்டும்தான். நீங்கள் பதிலை விலாவரியாக எழுதுங்கள்

சரியான விடை. 12-6-2016 ஞாயிற்றுக் கிழமை மாலை 6 மணிக்கு மேல் வெளியாகும். உங்களுக்குப் போதிய அவகாசம் கொடுத்துள்ளேன். அதை மனதில் கொள்ளுங்கள்!

அன்புடன்
வாத்தியார்
==============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

21 comments:


  1. 02-செப்டம்பர்-1954 அன்று ஸ்வாதி நக்ஷத்திரத்தில் பிறந்தவர் - கடக லக்னம்.

    சுக்ரன் ஆட்சி பலத்துடனும், களத்திர ஸ்தானாதிபதி உச்சமாகவும் இருப்பதால் திருமணம் நடைபெற்றது.

    ஆனாலும், லக்ன-மாந்தியால் பிடிவாத குணம்; சயனபோக ஸ்தானத்தில் ஆறாம் அதிபன் கேதுவுடன்; யோககாரகன் ராஹுவுடன் ஆறில் மறைவு, பாக்கியஸ்தானாதிபதி மறைவு, புத்திர-பூர்வ புண்ணிய ஸ்தானம் கத்தரியில் மற்றும் புனர்பூ தோஷம் ஆகியவற்றால் 35 வயதில் விவாக ரத்து ஆகியிருக்கும்.

    ReplyDelete
  2. Sir,

    In Native Horoscope, There is Punarpoosa Dosam (Saniswaran + Chandran). So Marraige Life will be troubled. Also Delay marraige is possible, Still problem in Marriage life.

    Thanks,
    Sathishkumar GS

    ReplyDelete
  3. வணக்கம் ஆசிரியர் ஐயா.

    புதிர் 111.

    சாதகர் , செப்டம்ர் 2, 1954, காலை 5 மணிக்குப் பிறந்தவர்.

    சுவாதி நட்சத்திரம், துலாம் ராசி, கடக லக்கினம்.

    1. ராகு கொடிப்பிடித்துப் போகும் காலசர்ப்ப தோசம்.

    2. சந்திரனும் சனியும் இணைந்துள்ளதால் புனர்பு தோசம்.

    3. புதன் ஆதித்ய யோகம். குருசண்டாள யோகம்.

    4. சனி உச்சம். சுக்கிரன் ஆட்சி. சூரியன் ஆட்சி. சுக்கிரன் சூரியன் குரு வர்க்கோத்தமம்.

    6. லக்கினாதி சந்திரனும், களத்திரகாரகன் சுக்கிரனும், களத்திராதிபதி சனி பகவானும் சேர்க்கை. அதனாலும்

    7. ஆறாம்மிடத்தில் தைரிய ஸ்தானத்தில் அமர்ந்த செவ்வாய் ராகு சேர்க்கையினாலும்

    8. ஒன்பதாம் இடத்து அதிபன் குரு பன்னிரெண்டில் மறைந்ததினாலும், காதல் திருமணம் நடந்திருக்கும்.

    9. லக்கினத்தில் 25 பரல், எனவே 25ஆது வயதில் திருமணம் நடைபெற்றிருக்கும்.

    10. மனகாரகன், காதல்காரகன் இணைந்த நிலையில், தைரியகாரகன் செவ்வாயானது, தைரிய ஸ்தானதில் இருந்து ஊக்கப்படுத்த, அதற்கு ஏழாம் வீட்டில் அமர்ந்த குரு திசையில் சுக்கிர புத்தியில் தனது 25ஆவது வயதில், அதாவது 1979-80.ல் திருமணம் நடைபெற்றிருக்கும்.

    11.புனர்புதோசம் உள்ளதால் பெற்றவர்கள் எதிர்ப்பும் இருந்திருக்கும்.

    12. சனிபகவான் 10ஆம் பார்வையாலும், செவ்வாய் எட்டாம் பார்வையாலும் லக்கினத்தைப் பார்ப்பதால் தைரியம் கூடியிருந்து இருக்கும்.

    13. ஆட்சி பெற்ற சூரியன் புதனுடன் இரண்டாம் வீட்டில் இருப்பதாலும் (புதன் ஆதித்ய யோகம்), இரண்டாம் வீடாகிய குடும்ப ஸ்தானத்திற்கு 33 பரல்கள் இருப்பதாலும் குடும்ப வாழ்க்கை நல்லபடியாக அமைந்திருக்கும்.

    ஆக, காதல் திருமணம். குடும்ப வாழ்க்கை நல்லபடியாக இருக்கும்.

    ஒருவேளை காலசர்ப்ப தோசத்தினாலும், புனர்வு தோசத்தினாலும் திருமணம் தாமதம் ஆகவிருந்தால், களத்திராதிபதி சனி தசை, சனி புத்தி, சுக்கிர அந்தரத்தில், நடந்திருக்கும்

    விடை சரியா ஐயா.
    ஆவலுடன் உங்கள் பதிலை எதிர்பார்க்கும் அன்பு மாணவன்,
    ந.மோகனசுந்தரம், திருநெல்வேலி.


    ReplyDelete
  4. ஐயா, தலைப்பிற்கான படம் அருமை. எங்கிருந்தையா இவ்வளவு ரசனையோடு எடுக்கின்றீர்கள்.

    ReplyDelete
  5. For a girl to get married, 7th house lord and jupiter are very important. Jupiter dasa starts from age 17 yrs 4 months to age 33 yrs 4 months. And jupiter is hidden in 12th house and has no connection (vision) with 7th house but sees 6th house which is 12th house from house of marriage. Hence,jupiter would have delayed the natives marriage. Marriage would have happpened during saturn dasa who is the lord of 7 th house. He occupies thula along with lagnathipathi and 4th house lord.

    ReplyDelete
  6. 7th house lord is in association with lagnathi moon and 4th house lord sukran.. she would have got married to someone from her mother side relative

    ReplyDelete
  7. திருமணம் குறு திசையில் நடந்து இருக்கும் .
    குழந்தை இல்லாமை தெரிகிறது .
    கணவனுடன் பிரிந்து வாழ்வார் .
    கடல் கடந்து , வெளி நாட்டில் வாழ வாய்ப்பு உள்ளது.
    பொருளாதரத்திற்கு குறைவு இருக்காது.
    நிறைய ஆன்மீக பணியில் செய்பவர் . முக்கியமாக குழந்தைகள் நலனையொட்டிய பணிகளில் தன்னை ஈடுபடுத்தி கொண்டு வாழ்வார்.

    தந்தை சமூகத்தில் நல்ல நிலையில் இருப்பார் .

    ReplyDelete
  8. கடக லக்னம் , துலா ராசி , சுவாதி நட்சத்திரம். சூரியன் சிம்மத்தில், செவ்வாய் ராஹு ஆறாம் வீட்டில். எதற்கும் பயபடாதவர், அதிகார எண்ணம் உடையவர் ! சந்திரன் , சனி சேர்கை கணவனை மனதளவில் காயபடுத்தி கொண்டே இருத்தல் ! லக்னத்துக்கு எதிரான சனி நவாம்சத்தில் ஆட்சி . சனி திசையில் கணவர் பிரிந்து இருப்பார் ! 12இல் கேது , மீண்டும் இல்லற வாழ்கை அமையாமல் , கடைசி காலத்தில் , இறைவனை நினைத்து வாழ்ந்து இருப்பார் !

    ReplyDelete
  9. அன்புள்ளம் கொண்ட அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!
    புதிர் 111 க்கான பதில்.
    அம்மணிக்கு வெளிநாட்டில் துணையுடன் சுகமான சொகுசான வாழ்க்கை.2-9-1954ல் பிறந்த ஜாதக அம்மணிக்கு:
    1. காலசர்ப்ப யோகமான ஜாதகம்.
    2. லக்னாதிபதி சந்திரன், ஆட்சி பெற்ற களத்திரகாரகனாகிய சுக்கிரனுடனும்,உச்சம் பெற்ற களத்திர ஸ்தானாதிபதி சனியுடன் அம்ர்ந்துள்ளது சிறப்பு.
    3. சந் + சுக் 4ல் திக்பலம். ஆட்சி சுக் + உச்ச சனி சேர்க்கை மஹாலஷ்மி யோகம்!!.
    4.யோகாதிபதி செவ்வாய் நட்பு வீட்டில் அமர்ந்து லக்கினத்தை பார்வை செய்கிறார்.கூட்டு சேர்ந்த ராகு பகவான் யோகத்தை தீவிரப் படுத்துகின்றார்.
    5.7ம் பதி சனி லக்கினத்தை பார்வை செய்கிறார்.
    6.ராசி,ராசியாதிபதி,5மதிபதி மற்றும் 7மதிபதி இவர்களை குரு (வாத்தியார்?) பகவான் பார்வை செய்து ஆசிர்வதிக்கிறார்!!!.
    குரு தசை சந்திர புக்தியில் 1983ம் வருடம் தனது 29 வயதில் மணமாகியிருப்பார்.85ல் ராகு புக்தியில் கணவருடன் வெளிநாட்டு வாசம்!!!.
    அன்புடன்,
    பொன்னுசாமி.

    ReplyDelete
  10. வணக்கம் ஐயா,7ம் அதிபதி சனி 4ம் இடத்தில்+லக்னாதிபதி சந்திரன்+4ம்,11ம் அதிபதி சுக்கிரனுடன்.சனி பகவானுக்கு 7,மற்றும் 2ம் இட பார்வை.சனி சொந்த வீடான 7ம் வீட்டை பார்த்தாலும்,அவரே 8ம் வீட்டிற்க்கும் அதிபதி.எனவே தாமத திருமணம்.ராகு திசையை அடுத்து வந்த குரு 6,9க்கு அதிபதியாகி விரைய ஸ்தானத்தில் இருந்து 7 ம் அதிபதியை பார்ப்பதால்,அவருடைய திசையிலும் திருமணமில்லை.அடுத்து வந்த 7ம் அதிபதி சனி தசையில் 33வயதிற்க்கு மேல் திருமணம் நடந்திருக்கும்.நன்றி

    ReplyDelete
  11. 7th lord saturn is utcham and marraige karaka sukran also in own house morever guru aspecting
    7th lord saturn and sukran.2nd lord sun also in own house.these Led to good and happy married
    life

    ReplyDelete
  12. ஜோதிடப் புதிர் எண்.111:

    1. காலசர்ப தோஷம் உள்ள ஜாதகம். ராகு கொடி பிடித்து செல்லும் ஜாதகம்
    அதனால் இளமை பருவம் கஷ்டமாக இருக்கும்.

    2. சனியும் சந்திரனும் சேர்த்து இருப்பதால் புனர்பூ தோஷம் உள்ளது.அதனால்
    திருமணம் தாமதமாக குரு திசையில் நடைப்பெற்று இருக்கும்.

    3. 5 ஆம் அதிபதி செவ்வாய் 5 பரல் மற்றும் குரு 6 பரல் அதனால் குழந்தைகளும் இருக்கும்.

    4. இவருடைய 30 வயதிர்கு மேல் நன்றாக வாழ்த்து இருப்பார்.

    மு.சாந்தி

    ReplyDelete
  13. மிகவும் நேரம் செலவழிக்க வைத்த புதிர்.
    ஜாதகி 2 செப்டம்பர் 1954 காலை 4 50 க்கு சென்னையில் பிறந்தவர் என்று எடுத்துக் கொண்டேன்.
    ஜாதகத்தின் நெகடிவெ பாயிண்ட்ஸ்:
    1.லக்கினத்திலேயே மாந்தி.
    2.லக்கினம் கேது சூரியனால் சூழப்பட்டு பாபகர்த்தாரியில் மாட்டிக்கொண்டது
    3. 7,8 அதிபனான சனி,லக்கினத்திற்கு பார்வை.
    4. 7,8 அதிபர்களுடன் லக்கினாதிபதி சந்திரன் கூட்டணி.
    5. லக்கினத்திற்கு செவ்வாயின் பார்வை
    6.கேது கொடி பிடித்துக்கொண்டு முன் செல்லும் கால சர்ப தோஷம்.
    7. லக்கினத்திற்கு யோககாரகன் செவ்வாய் ராகுவால் பாதிக்கப்பட்டது.
    8.9ம் அதிபதியான குரு கேதுவுடன் கூட்டணி.
    9.களத்திரகாரகன் சுக்கிரன் எட்டாம் அதிபதியான சனியுடன் கூட்டணி.

    ஜாதகத்தின் பாசிடிவ் பாயிண்ட்ஸ்:
    1.களத்திரகார‌கன் சுக்கிரன் ஆட்சியில் இருப்பதுடன் கூட வர்கோத்தமம்.
    2.சூரியன் வர்கோத்தமம்.
    3. குரு வர்கோதமம்.
    4.ராசி நவாம்சம் இரண்டிலும் குருவின் பார்வை களத்திரகாரகன் சுக்கிரனுக்குக் கிடைக்கிறது.
    5.ராசி நவமசம் இரண்டிலும் சந்திரனுக்கு குருபார்வை கிடைகிறது.
    6. ஸ்வாதி நட்சத்திரம் ஒரு மகா நட்சத்திரம் .மகா நட்சத்திரக்காரர்கள் எந்த ஒரு சங்கடங்களில் இருந்தும் எளிதாக் சமாளித்து வெளியில் வருவார்கள்.

    முடிவு:ஜாதகிக்கு தாமதமாகக் கல்யாணம் ஆகி, நல்ல முறையில் வாழ்க்கையை நடத்டியிருப்பார்.







    ReplyDelete
  14. அன்புள்ள வாத்தியார் அவர்களிற்கு அன்பு வணக்கங்கள்
    1. ஜாதகி பிறந்த திகதி 3-9-1954
    2. 12ல் குரு மறைந்துவிட்டார் அதுமட்டுமல்ல கேதுவின் சேர்க்கையும் கூட. குரு, செவ்வாயின், ராகுவின் 7ம் பார்வையில், குருவிற்கு மிதுன வீடு பகை வீடு. ஆனால் வர்கோத்மம் அடைந்துள்ளதால் அஷ்டகவர்க்கத்தில் 6 புள்ளி எடுத்துள்ளார் (top mark).
    3. 3 கிரகங்கள் வர்கோத்மம் அடைந்துள்ளன முறையாக சுக்கிரனும், சூரியனும் ஆட்சி வீட்டில். மற்றையது குரு.
    4. சுக்கிரன் (களஸ்திரகாரன்) கேந்திரத்திலிருந்து மாளவ்ய யோகத்தை பெற்றிருக்கின்றார். அஷ்டகவர்க்கத்தில் 6 புள்ளி எடுத்துள்ளார் (top mark).
    5. லக்னாதிபதி சந்திரன் கேந்திரத்தில் with உச்சம் பெற்ற சனியும் ஆட்சிபெற்ற சுக்கிரனும்.
    6. 2ம் வீட்டில் – சூரியனும் புதனும் – (சூரியன் ஆட்யில் 16 பாகை, புதன் 27 பாகை) கிரகங்கள் அஸ்தமனமும் இல்லை, கிரக யுத்தமுமில்லை. ஆகவே புதஆதித்ய யோகமுண்டு, குடும்பஸ்தானம் intact.
    7. 4ம் வீட்டில் – லக்னாதிபதி, 7ம் வீட்டதிபதி, 4ம் வீட்டதிபதி.
    8. 5ம் வீட்டதிபதி செவ்வாய் 6ம் வீட்டில் ராகுவுடன்.
    9. 7ம் வீட்டதிபதி சனீஸ்வரன் உச்சம்பெற்று கேந்திரத்திலிருக்கின்றார்.
    10. 9ம் வீட்டதிபதி குரு 12ல் மறைந்துவிட்டார்.
    11. 10ம் வீட்டதிபதி செவ்வாய் 6ம் வீட்டில் ராகுவுடன்.
    12. 11ம் வீட்டதிபதி சுக்கிரன் ஆட்சிபெற்று கேந்திரத்தில் லக்னாதிபதியுடனும் 7ம் வீட்டதிபதி சனீஸ்வரன் உச்சம்பெற்றும் இருக்கின்றார்.
    13. தோசம் – காலசர்ப்ப தோசம் கேது முன்னிலையில்.

    கேள்விக்கு பதில்
    திருமணம் பிந்திவிடும் காரணம் காலசர்ப்ப தோசமும் குரு விரயஸ்தானத்தில் நிற்பதுவுமே. ஆனால் குரு, சுக்கிரன் (களஸ்திரகாரன்), சூரியன் வர்கோத்மம் அடைந்ததனாலும், முதலிரு கிரகங்களும் கேந்திரத்திலிருந்தமையும் ஜாதகிக்கு அவவின் 38ஆவது வயதினில் (சனி தசை, சுக்கிர புத்தியில்) திருமணத்தை நடத்திவைத்த்து.

    மாளவ்ய யோகத்தினால் மணவாழ்க்கை நன்கு அமைந்தது.
    நன்றி
    ராஜம் ஆனந்த்



    ReplyDelete
  15. QUIZ NO: 111
    02-09-1954 ஆம் அண்டு காலை 4.50 மணிக்கு சுவாதி நட்சத்திரத்தில் துலா ராசியில் கடக லக்கினத்தில் பிறந்தவர் இந்த ஜாதகி. (எடுத்து கொண்ட இடம்: சென்னை)
    கடக லக்கினம்: யோகக்காரர்கள் - குரு சந்திரன் செவ்வாய் யோகமில்லாதவர்கள்: சுக்கிரன் புதன்.
    சனி உச்சம் புதன் அஸ்தங்க்கம். வர்கோத்தமம் : சூரியன் சுக்கிரன் குரு
    லக்கினம்:
    ஜாதகி கடக லக்கினக்காரர். லக்கினம் பாபகர்த்தாரி யோகத்தில் ஒரு பக்கம் கேது. இன்னொரு பக்கம் சூரியன். சங்கடமான அமைப்பு. லக்கினம் (26 பரல்) அடிக்கடி நோய்வாய்ப்படுவார். விபத்துக்கள் நேரிடும். எப்போதும் ஏதாவது ஒரு மன அழுத்தம் இருக்கும்.லக்கினத்தில் மாந்தி இருப்பதால் முரட்டு குணம் உள்ளவர்.பிடிவாதக்காரர்.

    லக்கினாதிபதி சந்திரன் கேந்திரத்தில் உள்ளார். நல்ல அமைப்பு. 4ம் வீட்டு அதிபதி 4ம் வீட்டில் களத்திரகாரகன் சுக்கிரன் துலா ராசியில் கேந்திரத்தில் அமர்ந்துள்ளார்.
    7ம் வீட்டு அதிபதி சனி 4ம் வீட்டில் துலா ராசியில் உச்சம்.

    ஏழாம் வீட்டுக்காரன் சனீஷ்வரன் கேந்திரத்தில். அத்துடன் அவர் லக்கின வீட்டிற்கு 4ல் நல்ல நிலைமையில் உள்ளார்.

    பாக்கியஸ்தான அதிபதி குரு பகவான் 12ம் வீட்டில் அமர்ந்து 5ம் பார்வை சனி சந்திரன் மற்றும் சுக்கிரனின் மேல் விழுவதைப் பாருங்கள். அவர்தான் சந்திரனுடன் கை கோர்த்து ஜாதகிக்குத் திருமணத்தை நடத்தி வைத்தார். குரு தசை சந்திர புக்தியில் 29 வயதில் திருமணம் நடைபெற்றது இந்த கடக லக்கினத்தில் ஜாதகத்திற்கு சந்திரனும் குருவும் யோகக்காரர்கள்.

    2ம் வீடு: (குடும்பஸ்தானம்) :
    இரண்டில் சூரியன் அமர்ந்திருந்தால் - பொருள் சேதம்.
    12ம் வீட்டு அதிபதி இரண்டாம் வீட்டில் இருந்தால்: ஜாதகி பலமுறை பல இடங்களில் பண விரையம் ஏற்பட்டு அல்லல் படுவாள். கடன் தொல்லைகள் ஏற்பட்டு அவதிப்படுவாள். தேவையில்லாத சிக்கல்களில் மாட்டிக் கொள்வாள். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்காது.

    6ம் வீட்டு அதிபதி குரு பன்னிரெண்டாம் வீட்டில் அமர்ந்திருந்தால் வாழ்க்கை தொல்லைகளும் துயரங்களும் நிறைந்ததாக இருக்கும். ஜாதகியினால் மற்றவர்களுக்கு இடைஞ்சல்கள் ஏற்படும். இந்த அமைப்பு நல்ல பார்வை பெறாமல் தீய பார்வைகள் பெற்றிருப்பதால் வாழ்க்கை அவலமாகவும் கடினமாகவும் இருக்கும். செவ்வாய் ராகுவின் 7ம் பார்வை, 12ம் வீட்டின் மீது இருப்பதாலும் 12ம் வீட்டில் குருவுடன் கேது கூட்டு இருப்பதாலும் 12ம் வீடு பாதிக்க பட்டுள்ளது.

    சனியும் சந்திரனும் ஒன்று சேர்ந்து இருப்பதால் புணர்ப்பு தோஷம் ஏற்படும் . சனி தசை சந்திர புக்தியில் 45 வயதில் திருமணம் பிரிவில் முடியும்.

    குழந்தை பாக்கியம்: (ஜாதிக்கிக்கு குழந்தை பாக்கியம் இல்லை)
    5ம் வீடு பாபகர்த்தாரி தோஷம் ஒரு பக்கம் சனி மறு பக்கம் ராகு செவ்வாய் .5ம் வீட்டு அதிபதி செவ்வாய் 6ம் வீட்டில் அமர்ந்து ராகுவுடன் கூட்டு மேலும் கேதுவின் 7ம் பார்வையில் உள்ளார் . ஆகையால் 5ம் வீடு கடுமையாக பாதிக்க பட்டுள்ளது. ஆகையினால் ஜாதிக்கிக்கு குழந்தை பாக்கியம் இல்லை.

    சந்திர ராசியிலிருந்து 7ம் வீடு 10ம் வீடு ஆகும். அதன் அதிபதி செவ்வாய் 6ம் வீட்டில் .தீய கிரங்க்களினால் பாதிக்க பட்டுள்ளார்.

    எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு நான்கில் இருந்தால்:தாயுடனான உறவு சுமூகமாக இருக்காது. சிலருக்குத் தாய்ப்பாசம் கிடைக்காது. தாய்வழி உறவுகளின் மகிழ்ச்சியும் இருக்காது.குடும்ப வாழ்வில் சுகம் இருக்காது. தொல்லைகளே மிகுந்திருக்கும்.

    எட்டாம் வீட்டுச் சனியுடன் பதினொன்றாம் வீட்டுக்காரனும் ஒன்று சேர்ந்து இருந்தால், ஜாதகினுடைய அதிர்ஷ்டமும், வெற்றிகளும் கடுமையான பாதிப்புக்களுக்கு உள்ளாகும்.

    ReplyDelete
  16. Respected Sir,

    Happy morning, My answer for our Quiz No.111:-

    1. she has married and marriage life also good.

    REASONS:

    1. Seventh house is not affected.

    2. Seventh lord is exalted along with kalathra karaga and lagnathipathi.

    3. Second house lord is in second house.

    4. Jupiter is aspecting lagna lord,kathrakaraga and seventh place lord.

    Thanks & Regards,
    Ravi-avn

    ReplyDelete
  17. லக்னாதிபதி 4ல் திக்பலம் பெற்றாலும் சனியுடன் யுத்தம்..திருமண வாய்ப்பு சொற்பம்..லக்ன மாந்தியால் மன நிம்மதி இல்லை..7ஆம் அதிபதி சனி உச்சம்..சுக்ர சந்திர சம்பந்தம்..ஆன்மிகத்தை நோக்கி பயணம்...திருமண வாய்ப்பு இல்லை.. .சூரியன்-சுக்ரன் பாகை வித்யாசம் 45டிகிரி தாண்டியதால் தாமத திருமணத்துக்கும் வாய்ப்பு இல்லை

    ReplyDelete
  18. லக்னாதிபதி 4ல் திக்பலம் பெற்றாலும் சனியுடன் யுத்தம்..திருமண வாய்ப்பு சொற்பம்..லக்ன மாந்தியால் மன நிம்மதி இல்லை..7ஆம் அதிபதி சனி உச்சம்..சுக்ர சந்திர சம்பந்தம்..ஆன்மிகத்தை நோக்கி பயணம்...திருமண வாய்ப்பு இல்லை.. .சூரியன்-சுக்ரன் பாகை வித்யாசம் 45டிகிரி தாண்டியதால் தாமத திருமணத்துக்கும் வாய்ப்பு இல்லை

    ReplyDelete
  19. புதிர் எண் 111 க்கான அலசல்:
    கடக லக்கினம், துலா ராசி ஜாதகி. கால சர்ப்ப தோசமுள்ள ஜாதகம்.இவரின் திருமணம் 26 வயதிற்கு மேல் குரு தசை, சுக்கிர புத்தியில் நடந்தது. களத்திராதிபதி சனி 4ல் உச்சமடைந்து இலக்கினாதிபதி சந்திரன் மற்றும் சுக்கிரன் கூட்டணியுடன் குரு பகவானின் 5ம் தனிப்பார்வை பெற்றுள்ளார்
    குடும்ப ஸ்தானாதிபதி சூரியன் 2ம்டத்திலேயே அமர்ந்துள்ளார். இதனால் ஜாதகிக்கு நல்ல பணக்கார குடும்பத்திலேயே வாழ்க்கை அமைந்தது்.ஆனால் புத்திர பாக்கியம் கிடைப்பதில் தாமதம். 5ம் அதிபதியும் யோகாதிபதியுமான செவ்வாய் 6ல் மறைவு. கூடவே ராகு பகவானின கூட்டணி.5மிடம் கத்திரியின் பிடியில் மற்றும் புத்திர காரகன் குரு பகவான் 12ல் மறைவு.

    ReplyDelete
  20. Answer for Puthir 111:

    Vanakkam.

    Kadaga lagnam, Lagnathipathi Chandran in 4th house kendrathil. 7th house owner Sani in 4th house - Kendrathil Ucham. Kudumbasthanathipathi Suriyan in 2nd house - atchi, 9th house owner Gurn in 12th house - bogastanathil. All these helped her to get a family life.

    But Sani, Chandran, plus Sukran kootu Nallathalla. Also they are affecting the Aruda Lagnam. Sani, Sevvai parvai to Lagnam. Lganam is in Papa Karthari yogathil. Navamsathil lagnam is aflicted by Ketu with Rahu, sani parvai. Rasiyil Virayathipathi Budan in kudumbasthanathil.

    She could have had a decent family life till Guru Dasa i.e till the age of 34. During Sani dasa at the age of 35 problems would have started and she might have lived like a saint.

    Thanks,

    K R Ananthakrishnan - Chennai

    ReplyDelete
  21. வணக்கம் தங்கள் வினாவினை கண்டேன். இந்த ஜாதகிக்கு 33வது வயது முதல் திருமண வாழ்க்கை சுமுகமாக இல்லை .பொருளாதாரம் மற்றும் அசையும் அசைய சொத்துக்கள் அபரிமிதமாக சேரும் ஆனால் அவைகள் இவர்களுக்கு பிரயாஜநம் அற்றுபோகும்
    42வது வயதில் கணவருக்கு ஒருகண்டமும் பொருளாதார இழப்பையும் சந்தித்திருப்பார்கள். அனைவரோடும் சேர்ந்து இருந்தாலும் இந்தப்பெண் ஒரு சந்நியாசி போலவே வாழ்வாள்.

    காரணம்.
    7குடையவன் சனி 4ல் உச்சஸ்தானத்தில் சச யோகத்துடன் உள்ளார் .33வது வயதில் தனது திசையை ஆரம்பித்து உள்ளார் .7குடையவன் உச்சமானால் திருமண வாழ்க்கை கிடையாது. சிலருக்கு திருமணமே ஆகாது . வீடு கொடுத்த சுக்கிரன் தன பாவத்திலேயே இருப்பதால் திருமணம் நடந்தே தீரும் .ஆனால் சனியானவர் 7குடையவர் மட்டுமின்றி 8குடையவராகவும் உள்ளார். ஆகவே அவர் தனது திசை காலத்தில் இல்லறத்தை கெடுதலும் பொருளாதாரத்தை அதிகம் கெடுக்காமல் தனிமையில் வாழவைக்கிறார்.

    அம்பரீஷ் சாஸ்திரிகள்
    savithaastro.blogspot.in
    savithaastro@gmail.com

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com