மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

31.1.13

Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 15

 Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 15

ஜோதிடத் தொடர் - பகுதி 15

இதற்கு முன் பகுதியைப் படித்திராதவர்கள் அதைப் படித்துவிட்டு வரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
------------------------------------------------------------------------------------------------
உத்திர நட்சத்திரம் 1ஆம் பாதம் மட்டும் (சிம்ம ராசி)

இது சூரியனின் நட்சத்திரம்.

1. அஸ்விணி
2. பரணி
3. ரோஹிணி
4. மிருகசீரிஷம்
5. திருவாதிரை
6. பூசம்
7. ஆயில்யம்
8. மகம்
9. பூரம்
10. ஹஸ்தம்
11. சுவாதி
12. அனுஷம்
13. கேட்டை
14. மூலம்
15. பூராடம்
16. திருவோணம்
17. சதயம்
18. உத்திரட்டாதி
19. ரேவதி

ஆகிய 19 நட்சத்திரங்களும் பொருந்தக்கூடிய் நட்சத்திரங்களாகும்.

இவற்றுள் திருவோண நட்சத்திரம் மகர ராசிக்கு உரியதாகும். ஜோதிடர்கள் சிம்மத்திற்கு ஆறாம் இடம் மகரம். மகரத்திற்கு எட்டாம் இடம் சிம்மம். அஷ்டம சஷ்டம நிலைப்பாடு (6/8 position to each rasi) வேண்டாம் என்பார்கள். ஆகவே அதை விலக்கிவிடுவது நல்லது.

மீன ராசிக்கு உரிய நட்சத்திரங்களில், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய இரண்டு நட்சத்திரங்களுக்கும் 8/6 நிலைப்பாடு வரும். ஆகவே அவற்றை விலக்கிவிடுவது நல்லது.

பூசமும், ஆயில்யமும் கடக் ராசிக்கு உரிய நட்சத்திரங்களாகும். சிம்மத்திற்குக் கடகம் பன்னிரெண்டாம் வீடு.  (12/1 position to each rasi) வேண்டாம் என்பார்கள். ஆகவே அந்த நட்சத்திரங்களையும் விலக்கிவிடுவது நல்லது.

அஷ்டம சஷ்டமக் கணக்கை பார்த்தால் 14 நட்சத்திரங்கள் மட்டுமே சிறப்பாகப் பொருந்தும்

கார்த்திகை, புனர்பூசம், விசாகம், உத்திராடம், பூரட்டாதி ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும். அவற்றை விலக்கி விடுவது நல்லது.

பெண்ணிற்கும், பையனுக்கும் ஏக நட்சத்திரமாக இருந்தால் மத்திம பொருத்தம் (average) உண்டு.  என்ன ஒரே நட்சத்திரத்தில் தம்பதிகள் இருந்தால், ஏழரைச் சனி பிடிக்கும்போதும், அஷ்டமச்சனி (எட்டில் சனி) வரும்போதும், சனீஷ்வரன் இருவரையும் ஒன்றாகப் பிடித்து ஆட்டி வைப்பார்.. அதனால் பொதுவாக ஒரே நட்சத்திரம் அல்லது ஒரே ராசியைத் தவிர்ப்பது நல்லது.

சித்திரை, அவிட்டம் பொருந்தாது!
-------------------------------------------------------------------------------
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்

++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

30.1.13

Astrology.Popcorn Post: பிரதோஷமும் பில் கேட்ஸும் !


Astrology.Popcorn Post: பிரதோஷமும் பில் கேட்ஸும் !

“வாத்தி (யார்), அப்துல்காதரும் அமாவாசையும் என்று சொல்வதைப்போல, பிரதோஷமும் பில் கேட்ஸும்! என்று தலைப்பைப் போட்டிருக்கிறீர்களே - பில் கேட்ஸாவது, பிரதோஷமாவது?” என்று கேட்பவர்கள் எல்லாம் பதிவை விட்டு விலகவும். மற்றவர்கள் தொடரலாம்!

Bill Gates யாரென்று தெரியாதவர்களும் பதிவை விட்டு விலகவும்!

பிரதோஷத்தைப் பற்றித் தெரியுமா உங்களுக்கு? சரி, சுருக்கமாகச் சொல்லிவிடுகிறேன். பிரதோஷம் என்பது திதிகளில் 13ஆவது திதியாகும். அதன் பெயர் திரயோதசி. (அதாவது அஷ்டமி, நவமி, தசமி என்பதைப்போல) அன்றைய தினத்தில் (மாலை 4.30 மணி முதல் 6 மணிவரை உள்ள காலத்தில் அல்லது நேரத்தில்) , சிவனாரை வழிபட்டால் செய்த பாவங்கள் எல்லாம் விலகும் என்பது நம்பிக்கை.

அதுவும் வளர்பிறை திரயோதசித் திதி மிகவும் விஷேசமானது. (வயதான) பெண்களைக் கேளுங்கள் சொல்வார்கள்.

விவரமாகத் தெரிந்துகொள்ள இந்த சுட்டியைக் கிளிக்கிப் பாருங்கள்:
 http://www.shaivam.org/siddhanta/Pradhosham.html
----------------------------------------------------------------------------------
சரி சொல்ல வந்த மேட்டருக்கு வருகிறேன்!

சரி வளர்பிறை திரயோதசித் திதிக்கு இத்தனை வலிமை உண்டு என்றால், அதாவது அன்றைய தினம் சிவனாரை வழிபட்டால் மேன்மை எனும்போது, அன்றைய தினம் பிறக்கும் குழந்தைக்கு என்ன மேன்மை?

உன்னதனமான பிறவி அக்குழந்தை. முன் கர்ம வினைகள் எல்லாம் துடைக்கப்பெற்று க்ளீன் ஸ்லேட்டாகப் பிற்க்கும் குழந்தை அது.

நமது பில் கேட்ஸூம் ஒரு வளர்பிறைத் திதியன்று பிறந்தவர்தான்?

என்ன ஆதாரம்?

அது இல்லாமல் வருவேனா?

கீழே கொடுத்துள்ளேன்அதனால் அவர் அடைந்த நன்மைகள் என்னென்ன? அதற்கு அவருடைய ஜாதகத்தை அலச வேண்டும். அலசுவோம். பொறுத்திருங்கள்

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++==

29.1.13

Astrology.Popcorn Post. உச்சத்தை தொடுவது எப்படியடா ?

Astrology.Popcorn Post. உச்சத்தை தொடுவது எப்படியடா ?
Popcorn Post No.33
பாப்கார்ன் பதிவுகள் - எண்.33


தேதி 29.1.2013 செவ்வாய்க் கிழமை
-----------------------------------------------
இதற்கு முன்னால் Popcorn Post No.32 23.1.2013 வியாழக்கிழமை அன்று வெளியானது. அதன் தொடர்ச்சி இது.. பாப்கார்ன் போஸ்ட் என்பது ஒரு குறிப்பிட்ட செய்தியை விளங்கச் சொல்லி உங்களுக்குத் தெரியப்படுத்துவது. சுருக்கமாக இருந்தாலும் விளக்கமாக இருக்கும். பாப்கார்ன் பொட்டலம் எந்த அளவு இருக்குமோ அந்த அளவுதான் பதிவும் இருக்கும்.

சனீஷ்வரனைப் பற்றி நமக்கெல்லம் நன்கு தெரியும். அவரைப்போல் கொடுப்பாரும் இல்லை. கெடுப்பாரும் இல்லை. அவர்தான் ஆயுள்காரகர். நம் ஆயுளுக்கான காரகர். அடுத்து அவர்தான் கரமகாரகர். Authority for work. உங்கள் மொழியில் சொன்னால் பூவாவிற்கு அதாவது ஜீவனத்திற்கு (Employment) வழி அமைத்துக் கொடுப்பவர் அவர்தான்.

அவனவன் ஜாதகத்திற்கு தகுந்த மாதிரி அமைத்துக் கொடுப்பார். ஜாதகனை பணத்தில் புரளவைக்கும் வேலையிலும் அமர்த்துவார். அல்லது பணம் புரளும் இடத்தில் (வங்கிகளில்) வேலையிலும்  அமர்த்துவார்.

வங்கி என்றவுடன் நினைவிற்கு வருகிறது. எனது நண்பர் ஒருவர் தேசிய வங்கி ஒன்றில் அதிகாரியாகச் சேர்ந்து, பல பதவி உயர்வுகளைப் பெற்றுக் கடைசியில், அவ்வங்கியின் தலைமைச் செயலகத்தில்  மேலாளர் பதிவியையையும் பிடித்து, அதையும் அலங்கரித்தார்.

அதுபோல ஒரு ஜாதகன் தான் அமரும் பணியில் உச்சத்தைத் தொடுவதற்கு என்ன காரணம்? அதாவது ஜாதகப்படி என்ன காரணம்?

சனி பத்தாம் வீட்டில் அமர்ந்தால், ஜாதகன் தான் பார்க்கும் வேலையில் உச்சத்தைத் தொடுவான்

அதுபோல லக்கினாதிபதி, நான்காம் வீட்டில் அமர்ந்து, தன் நேரடிப் பார்வையால், பத்தாம் வீட்டைப் பார்க்கும் அமைப்புள்ள ஜாதகனும் உச்சத்தைத் தொடுவான்.

இது இரண்டும்தான் முக்கியமான விதிகள் (Rules)

இன்னும் பல விதிகள் உள்ளன. விரிவாக எழுதலாம். இன்னொரு சந்தர்ப்பத்தில் அதை எழுதுகிறேன். அது பாப்கார்ன் கண்க்கில் வராமல் விருந்துச் சாப்பாட்டுக் கணக்கில் வரும். பொறுத்திருங்கள்!
---------------------------
அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++

27.1.13

வாருங்கள், பிரார்த்தனை செய்வோம்!

வாருங்கள், பிரார்த்தனை செய்வோம்!

முதலில் பதிவில் உள்ள தகவல்களைப் படியுங்கள்! மற்றவை தானாகத் தெரியவரும்!
------------------------------------------------------------------------------------------------
நமது வகுப்பறை மாணவர் திரு. புவனேஷ்வரன் அவர்களின் மின்னஞ்சல் கடிதம்:

Bhuvan Vellore
  
23 Jan' 2013

Dear Sir,

My friend Mrs. Uma Dasharathi's father has gone missing from their home in Trivandrum from Nov. 8 2011. All possible efforts have been made from her side with assistance from Kerala, TN, Karnataka Police and Air force (Her husband is a Captain in Indian Airforce). IG south zone in Madurai has been informed and also the CM of Kerala is taking personal interest in this case.

I have attached a message below, with her father's photographs. This is the message we published in Tamil Dailies. I and my  friend Mrs. Uma Dasharathi request you to kindly publish this in your blog and classroom, so that people who follow your blog  and classroom may be able to help out if and when they spot this gentleman. He is 80 years old and suffering from Dementia, undergoing medication. He has lost his memory. That is the problem.

Regards,
Bhuvanesh

-------------------------------------------------------------------
அன்புள்ள வாசகர்களே, வணக்கங்கள்.

திருவனந்தபுரத்தில் RLNRA-41, Planning Board Lane, Rajalakshmi Nagar, Pattom என்னும் முகவரியில் எங்களுடன் வசித்து வந்த எண்பது வயதான எமது தந்தையார் திரு. நாராயணன் அவர்களை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் எட்டாம் தேதி முதல் காணவில்லை. அவர் தனது ஞாபக சக்தியை இழந்துள்ளார். அதன்
காரணமாக மருந்துகளும் தினசரி உட்கொள்ளுகிறார். நவம்பர் எட்டாம் தேதி மதியம் ஒரு மணி வாக்கில் வெளியே நடந்து வருவதாகக்கூறி சென்றவர், இன்றளவும்  திரும்பவில்லை.

நவம்பர் ஒன்பதாம் தேதி அன்று பேரூர்க்கடா காவல் நிலையத்தில் FIR தாக்கல் செய்யப்பெற்றது. இதைத்தொடர்ந்து நவம்பர் பத்தாம் தேதி இவரைப்பற்றிய விவரங்கள்  மலையாள மனோரமாவில் வெளியிடப் பெற்றது. தூர்தர்ஷன் மற்றும் உள்ளூர்த்தொலைக்காட்சி அலை வரிசையிலும் அடுத்தடுத்து அறிவிப்புக்கள் வெளிவந்தன. நண்பர்கள்,  உறவினர்கள் மற்றும் விமானப்படை வீரர்கள் மூலம், வயது முதிர்ந்த எங்கள் தந்தையாரை கண்டு பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகின்றது.

திருவனந்தபுரம் நகர் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பெற்றுள்ளன.

தந்தை காணாமல் போன நவம்பர் எட்டாம் தேதி முதல் நிகழ்ந்த சம்பவங்கள் கீழ்வருமாறு:

8 Nov 12 : 3-30 pm:
பட்டம் மற்றும் கேசவதாசபுரம் பகுதிகளில் தேடினோம். எமது தந்தை ஒரு இதய நோயாளி என்பதால் ஒரு வேளை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவசர  சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பெற்று உள்ளாரா என தேடினோம். அவர் அங்கு இல்லை என எங்களுக்கு தெரிய வந்தது. மருத்துவக்கல்லூரி காவல் நிலையம்,  காவல் துறைக் கட்டுப் பாட்டறைக்கு இந்த செய்தியை அனுப்பியது. நாங்கள் அதே சமயத்தில் எங்கள் குடியிருப்புப்பகுதியில் தேடினோம். பேரூர்க்கடா காவல் நிலையத்தில்
எங்கள் தந்தையாரை தேடுமாறு வேண்டுகோள் விடுத்தோம்,

9 Nov 12:
பேரூர்க்கடா காவல் நிலையத்தில் FIR தாக்கல் செய்தோம். அன்றே, தூரதர்ஷனிலும் உள்ளூர் தொலைகாட்சி அலைவரிசையிலும் அறிவிப்புகள் வெளிவந்தன.

10 Nov 12:
காணாமல் போன எமது தந்தையாரை பற்றி மலையாள மனோரமாவில் செய்தி அறிவிப்பு வெளியானது.

11 Nov 12:
திருன்வனந்தபுரம் முழுவதும் காணாமல் போன எமது தந்தையாரைப்பற்றி போஸ்டர்கள் அச்சிட்டு ஓட்டப்பெற்றன.

12 Nov 12 to 25 Nov 12:
எமது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் விமானப்படையினர் உதவியுடன் திருவனந்தபுரம் நகரின் எல்லா மூலைகளிலும் தேடல் நடைபெற்றது. ரயில்வே காவல் துறையும் உஷார்படுத்தப்பெற்றது. தந்தையாருடைய சொந்த ஊர் பாலக்காடு என்பதால் அங்கும் சென்று ஊர் முழுவதும் தேடினோம். அவர் பணிபுரிந்த பெங்களூர் HAL பகுதியிலும் அந்த பகுதி தபால் துறையினர் உதவியுடன் தேடினோம். விமானப்படையினர் உதவியுடன் கேரள – தமிழக எல்லைப்பகுதிகளான கன்னியாகுமரி, சுசீந்தரம், திருச்செந்தூர்
மற்றும் திருநெல்வேலியில் தேடினோம். பலனில்லை.

26 Nov 12:
மதிப்பிற்குரிய கேரள முதல்வர் திரு. ஊம்மன் சாண்டி அவர்களை சந்தித்து, இந்த விஷயத்தில் அவருடைய உதவியை கோரி மனு கொடுத்தோம். அவர், ADGP  அதிகாரியான திரு ஹேமச்சந்திரன் அவர்களுடன் தொடர்பு கொண்டு அவரை சந்திக்குமாறு சொன்னார். அவரையும் பேரூர்க்கடா வட்ட ஆய்வாளர் அவர்களையும் தொடர்பு  கொண்டோம். அவர்கள் எல்லா உதவியும் செய்வதாக வாக்களித்தனர்.

29 Nov 12:
பேரூர்க்கடா வட்ட ஆய்வாளர் திரு. பிரதாபன் அவர்கள் எங்கள் தந்தையை பற்றிய குறிப்புகளை சேகரிக்க வேண்டி எங்களைத்தொடர்பு கொண்டார். அப்போது அங்கிருந்த  ஒரு ஆட்டோ ஓட்டுனர், எங்கள் காரில் ஒட்டி இருந்த போஸ்டரை பார்த்து இந்த பெரியவருக்கும் எங்களுக்கும் என்ன உறவு என்று கேட்டார். நாங்கள் இவர் எமது  தந்தையார் சொன்னதும், அந்த ஆட்டோ ஓட்டுனர், எங்கள் தந்தையார் அன்று மாலை ஐந்து அல்லது ஐந்தரை மணிக்கு சாலையை கடக்க முயன்று கொண்டிருந்ததாக கூறினார். இதை வட்ட ஆய்வாளர் திரு பிரதாபன் அவர்களிடம் வாக்குமூலமாக தந்தார்.. அன்றே, ஏசியாநெட் நிருபர் வந்து தகவல்களை சேகரித்தார். ADGP, CCTV
ஆவணப்படத்தை கட்டுப்பாட்டறையில் இருந்து நாங்கள் காண ஏற்பாடு பண்ணினார். அப்போது, அந்த ஆவணப்படத்தை கண்ட பொழுது, சாலையை கடந்தது எங்கள் தந்தைதான் என்று உறுதி ஆனது. இதனை அவர் சாலையை கடக்க உதவிய போக்குவரத்துக்காவல் துறை அதிகாரியும் உறுதிப் படுத்தினார்.

30 Nov 2012:
ஏசியாநெட் தொலைகாட்சி எனது பேட்டியுடன் கூடிய அறிவிப்பை செய்திகளுக்குப்பின் ஒவ்வொரு மணி நேர இடைவெளியில் ஒளிபரப்பியது. போக்குவரத்து துறையினரும் உஷார் நிலையில் வைக்கப்பெறுவர் என ADGP உறுதி கொடுத்தார்.

1 Dec 2012 – 4 Dec 2012:
எங்கள் தந்தை இறை வழிபாட்டில் ஈடுபாடுள்ளவர் என்பதால், கோயில்களிலும் வழிபாட்டு தளங்களிலும் தேடுதல் தொடர்ந்தது. டிசம்பர் இரண்டாம் தேதி, காவல்  துறையிடம் ஐம்பது போஸ்டர்களை தருமாறு அவர்களால் அறிவுறுத்தப்பட்டோம். CCTV ஆவணமும் எங்களுக்கு வழங்கப்பட்டது.

5 Dec 2012:
மதிப்பிற்குரிய கேரள முதல்வர் திரு. ஊம்மன் சாண்டி அவர்களை மீண்டும் இவ்விஷயத்தில் உதவி கோரி அணுகினோம். அவரது உதவியாளரை அணுகுமாறு அவர் கூறினார். அவரது உதவியாளர் ADGPயிடம் பேசி, அவர்களால் முடிந்த அளவு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன என்று உறுதி கூறினார். பாதுகாப்புத்துறை அதிகாரியான  திரு. அனில் காந்த் IPS அவர்களை சந்தித்து பேசினோம்.

7 Dec 2012:
நெடுமாங்காடு பகுதிகளில் பல்வேறு அநாதை இல்லங்களில் தேடினோம்.

12 Dec 2012:
திருநெல்வேலி, நாகர்கோவில் பகுதி தினமலர் செய்த்திதாளில் தந்தை காணவில்லை என அவருடைய படத்துடன் அறிவிப்பு வெளியிட்டோம்.

20 Dec 2012:
கேரளாவில் உள்ள அனைத்து பொது சேவை NGO அமைப்புகள் கூட்டம் டிசம்பர் இருபதாம் தேதி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கேரளத்தின் பலவேறு  பகுதிகளில் உள்ள முதியோர் இல்லங்களின் சார்பில்  வந்தவர்களுக்கு, காணாமல் போன தந்தையாரின் விபரங்கள் அடங்கிய படத்துடன் கூடிய போஸ்டர்கள்  அளிக்கப்பெற்றன.

4 & 5th Jan 2013:
தந்தையார் இறை வழிபாடுகளில் ஈடுபாடு உள்ளவர் என்பதால் குமரியில் இருந்து மதுரை வரை கோயில் குளங்களில் தேடினோம்.

15 Jan 2013:
பேரூர்க்கடா காவல் துறையினருடன் வள்ளியூர் மற்றும் திருச்செந்தூர் பகுதிகளில் தேடினோம். இருப்பினும் இன்றளவும் எங்கள் தந்தையார் கிடைக்கவில்லை.


-----------------------------------------------------------------------------------------------------------
மாணவக் கண்மணிகளே,

மனித நேயத்துடன் இந்தச் செய்தியைப் பதிவிட்டுள்ளேன். பெரியவரின் பிரிவால் துயர் உற்றிருக்கும் குடும்பத்தார்க்கு நம்து ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்வோம். பெரியவர் வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனையும் பிரார்த்திப்போம். படத்தில் உள்ள பெரியவரைப் பற்றிய தகவல் தெரிந்தால் மின்னஞ்சல்  மூலம் உடனடியாகத் தெரியப்படுத்த வேண்டுகிறேன்!


திருமதி உமா அவர்களின் தொலைபேசி நம்பர்: 09567739646

அன்புடன்
வாத்தியார்

++++++++++++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

25.1.13

Devotional: அடிமுடி காட்டாத அண்ணாமலை!

Devotional: அடிமுடி காட்டாத அண்ணாமலை!

பக்தி மலர்

இன்றைய பக்திமலரை திரு.உன்னிகிருஷ்ணன் அவர்கள் பாடிய பக்திப்பாடல் ஒன்று அலங்கரிக்கிறது. கேட்டு மகிழுங்கள்

http://www.youtube.com/watch?v=3nHAOYIOH_U
Our sincere thanks to the person who uploaded the song in the netஅன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

24.1.13

Astrology சித்திரமே சொல்லடி முத்தமிட்டால் என்னடி?


 Astrology சித்திரமே சொல்லடி முததமிட்டால் என்னடி?

1965ஆம் ஆண்டு வெளிவந்த வெண்ணிற ஆடை திரைப்படத்திற்குப் பல சிறப்புக்கள் உண்டு! டைரக்டர் ஸ்ரீதரின் கைவண்ணத்தில் வெளிவந்த படம் அது. தமிழ்க முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களின் முதல் படம் அது. அதில் கவியரசர் கண்ணதாசன் எழுதிய பாடல்கள் அனைத்துமே நன்றாக இருக்கும். அதில் ஒரு பாடல் கீழ்க்கண்ட பல்லவியுடன் துவங்கும்.

நாயகன்:
சித்திரமே சொல்லடி..... முத்தமிட்டால் என்னடி?
நித்தம்நித்தம் தென்றல் உன்னைத் தொட்டதில்லையோ?
தொட்டுத்தொட்டு நெஞ்சில் இன்பம் பட்டதில்லையோ?


நாயகி:
கன்னிஇதழ் மீது தென்றல்படும்போது அதில் இல்லாத சுவை இருக்கும்
அந்தசுகம் வேறு சொந்தம்கொள்ளும் போது அதில் பொல்லாத பயம் இருக்கும்!
சித்திரமே நில்லடி....... முததமில்லை சொல்லடி!


பாடியவர்கள் பி.பி.ஸ்ரீனிவாஸ், ஜானகி

பாடலைப் பாருங்கள்:
பாடலின் காணொளி வடிவம்
Our sincere thanks to the person who uploaded the video


http://www.youtube.com/watch?v=8-731jd4xH4
-------------------------------------------------------------------------------------------
வாத்தி (யார்) பாடலுக்கும் பதிவிற்கும் என்ன சம்பந்தம்?

இருக்கிறது! ஸ்க்ரோல் டவுன் செய்து.....கீழே பார் ராசா!
-------------------------------------------------------------------------
எச்சரிக்கை:

ஜோதிடத்திற்கும், (அதாவது ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும்) முத்தங்களுக்கும் உள்ள தொடர்பை ஒருவர் விவரித்திருக்கிறார். அதை அப்படியே கொடுத்துள்ளேன்.மின்னஞ்சலில் வந்தது. மொழியாக்கம் செய்ய நேரமில்லை!

வயதான டிக்கெட் எல்லாம் பதிவை விட்டு விலகவும். படித்துவிட்டு என்னைத் திட்ட வேண்டாம்!

இளைஞர்களும், மனதால் இன்னும் இளைமையாக இருக்கும் பெரிசுகளும் தொடரவும்

V
V
V
V
V
V
V
V
V
V
V
V

Astro Kissing
Aries (மேஷ ராசிக்காரர்கள்)
Aries, your kisses are quick and passionate; fits of lustful pleasure that are there and then gone!

Taurus (ரிஷப் ராசிக்காரர்கள்)
Taureans, your kisses linger; they are deliberate, heartfelt and they can go on and on and on!

Gemini (மிதுன ராசிக்காரர்கள்)
Gemini, your kisses are interrupted by spasms of giggles, smiles and funny anecdotes!

Cancer (கடக ராசிக்காரர்கள்)
Cancer, your kisses are warm and tender, and you never want to let them go!

Leo (சிம்ம ராசிக்காரர்கள்)
Leo, your kisses are wild and uninhibited, biting and clawing; you expect applause for your performance!

Virgo (கன்னி ராசிக்காரர்கள்)
Virgo, your kisses are so subtle and tidy, your lover only notices them once you've finished!

Libra (துலா ராசிக்காரர்கள்)
Libra, you kiss with an ardent passion and then like to linger for a while and begin again!

Scorpio (விருச்சிக ராசிக்காரர்கள்)
Scorpio, you are so passionate, you skip the kiss and get to straight whatever comes next for you!

Sagittarius (தனுசு ராசிக்காரர்கள்)
Sagittarius, your kisses are surprising, spontaneous affairs that leave the kissed wanting more!

Capricorn (மகர ராசிக்காரர்கள்)
Capricorn, your kisses are intense moments of sublime pleasure that is slow and lasting!

Aquarius (கும்ப ராசிக்காரர்கள்)
Aquarius, your kisses tend to be wet and messy; till you perfect them; and then no one can French kiss like you!

Pisces (மீன ராசிக்காரர்கள்)
Pisces, your kisses are starry-eyed, amorous and long-lasting. You end one kiss, only to start on another!
------------------------
ஒரு ஆராய்ச்சியாளரின் கணிப்பு இவைகள். ஆதாரம் கேட்டு என்னை யாரும் பிறாண்ட வேண்டாம். உங்கள் ராசிக்குரிய கணிப்பு சரியாக இருந்தால் மட்டும் எனக்கு அறியத் தாருங்கள்!!!!
-----------------------------------------------------------------------------------
வாத்தி (யார்) முத்தத்தைப் பற்றிய பதிவைப் போட்டுவிட்டு படத்தைப் போடாமல் விட்டுவிட்டீர்களே?

அது இல்லாமலா? ஒரு தம்பதிகள் முத்தமிட்டுக் கொள்ளூம் அசத்தலான படம் கீழே உள்ளது ராசா!

ஸ்க்ரோல் டவுன் செய்து....பார்த்து சந்தோஷப்படு ராசா! (எல்லாம் உனக்காகத்தான்)
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V

                                              
அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

23.1.13

Astrology.Popcorn Post உறவால் என்ன கிடைக்கும், சொத்தில் பங்கா அல்லது வக்கீல் நோட்டிஸா?Astrology.Popcorn Post  உறவால் என்ன கிடைக்கும், சொத்தில் பங்கா அல்லது வக்கீல் நோட்டிஸா?

Popcorn Post.32
23.1.2013 வியாழக்கிழமை

கிரகங்களுக்கும் உறவு உண்டு. நமக்கு சித்தப்பு, பெரியப்பு, மாமன், மச்சான் உறவுகள் இருப்பதைப்போல கிரகங்களுக்கும் உறவுகள் உண்டு.

எப்படி?

கிரகங்களுக்கு ஐந்து வகையான உறவுகள் உண்டு

1. முதல் உறவு: ஒரே ராசியில் இருக்கும் கிரகங்கள் ஒன்றுக்கொன்று உறவாகும்
2. இரண்டாவது உறவு: பார்வையால் ஏற்படும் உறவு
3. மூன்றாவது உறவு: பரிவர்த்தனையால் ஏற்படும் உறவு
4. நான்காவது உறவு: கேந்திர வீடுகளால் ஏற்படும் உறவு
5. ஐந்தாவது உறவு: திரிகோண வீடுகளால் ஏற்படும் உறவு

இதை விரிவுபடுத்தி, இந்த உறவுகளால் ஏற்படும் நன்மைகளையும், தீமைகளையும், கிடைக்கும் செல்வங்களையும் அல்லது கிடைக்கும் வக்கீல் நோட்டிசுகள், வம்புகள் வழக்குகளையும் எழுதலாம் என்றுள்ளேன். அது சற்று விரிவான, பெரிய பாடம், அத்துடன் அது மேல்நிலைப் பாடம். பொறுத்திருந்து படியுங்கள்

பாப்கார்ன 200கிராம் பொட்டலத்திற்கு இதுதான் அளவு. அடுதத பொட்டலம் விநியோகம் ஆகும் வரை பொறுத்திருங்கள்

அன்புடன்
வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

22.1.13

நம்புங்கள், ஓவியங்கள்தான் இவைகள்!


மேலே உள்ள இளம் பெண்ணின் படம் புகைப்படம் போல உள்ளதல்லவா? ஆனால் அதுதான் இல்லை. அது கையால் வரையப்பெற்ற ஓவியம்! சான்றாக இன்னும் சில படங்களைக் கீழே கொடுத்துள்ளேன். பாருங்கள்!
Photo realistic Pencil Drawings by Diego Fazio

நம்புங்கள், ஓவியங்கள்தான் இவைகள்!

இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஓவியர் டீகோ ஃபாஸியோ (வயது 23) வரைந்த, பென்சிலால் வரைந்த, ஓவியங்கள்தான் இவைகள். ஒரு ஓவியத்தை வரைந்து முடிக்க சுமார் 200 மணி நேரம் பிடிக்கும் என்பது உபரிச் செய்தி (அம்மாடியோவ்!)

மின்னஞ்சலில் வந்தது. அற்புதமாக இருந்ததால் உங்களுக்கு அறியத் தந்திருக்கிறேன்

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++==

Astrology.Popcorn Post. எட்டாம் வீட்டில் அமர்ந்தவன் என்னடா செய்வான்?

 Astrology.Popcorn Post. எட்டாம் வீட்டில் அமர்ந்தவன் என்னடா செய்வான்?

Popcorn Post No.31
பாப்கார்ன் பதிவுகள் - எண்.31

தேதி 22.1.2013 செவ்வாய்க் கிழமை
-----------------------------------------------
இதற்கு முன்னால் Popcorn Post No.30 6.11.2012 செவ்வாய்க் கிழமை அன்று வெளியானது. இடையில் 76 நாட்கள் கழித்து இன்றுதான் அதன் தொடர்ச்சி
வெளியாகிறது. பாப்கார்ன் போஸ்ட் என்பது ஒரு குறிப்பிட்ட செய்தியை விளங்கச் சொல்லி உங்களுக்குத் தெரியப்படுத்துவது. சுருக்கமாக இருந்தாலும் விளக்கமாக இருக்கும். பாப்கார்ன் பொட்டலம் எந்த அளவு இருக்குமோ அந்த அளவுதான் பதிவும் இருக்கும்.

ஒரு கிரகம் எட்டில் அமர்ந்தால் என்ன ஆகும்? அந்த கிரகத்தால் நன்மை இருக்காது. அவரே எட்டில் போய் மாட்டிக்கொண்டு உள்ளார். மாட்டிக்கொண்டு உள்ளவர் என்ன நன்மையைச் செய்ய்ப்போகிறார்?

சரி, குரு எட்டில் அமர்ந்தால் என்ன ஆகும்? அவருக்கும் அதே விதிதானா?

இல்லை. குரு நம்பர் ஒன் சுபக்கிரகம். அவர் எங்கே இருந்தாலும் நன்மையைச் செய்வார்.

உதாரணமாகக் குரு துலா லக்கின ஜாதகிக்கு (நன்றாகக் கவனிக்கவும்) 3 மற்றும் 6ஆம் இடத்திற்கு அதிபதி. இரண்டு தீய இடங்களுக்கு அதிபதி. அவர் எட்டில் அமர்ந்தால், அதுவும் ஜாதகியின் மாங்கல்ய ஸ்தானத்தில் அமர்ந்தால், மாங்கல்ய் அதோஷம் உண்டா? அவரின் ஆதிபத்யததை வைத்து இந்தக் கேள்வி.

தோஷம் இல்லை. ஏன்?

குரு முதல்நிலை சுபக்கிரகம். அவர் எட்டில் அமர்ந்தாலும், அங்கே தன்னுடைய ஆதிப்பத்யத்தைக் கைவிட்டு விட்டு (அதாவது 3 & 6ஆ இடங்களுக்கு உரியவன் என்னும் நிலையை விட்டுவிட்டு, நன்மையையே செய்வார். மாங்கல்ய தோஷத்தைக் கொடுக்க மாட்டார்.

பெண் தீர்க்க சுமங்கலி!!!!
---------------------------
அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++==

21.1.13

Astrology: பண்டிட் ஜவஹர்லால் நேருவின் ஜாதகம்! Astrology: பண்டிட் ஜவஹர்லால் நேருவின் ஜாதகம்!

அலசல் பாடம்

நமது முன்னாள் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேருவின் ஜாதகத்தை இன்று அலசுவோம். எல்லாம் ஒரு பயிற்சிக்காகத்தான் சாமிகளா!

பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்கள்
பிறந்தது 14 நவம்பர் 1889ஆம் ஆண்டு
இயற்கை எய்தியது 27 மே 1964ஆம் ஆண்டு
வாழ்ந்த காலம் சுமார் 74 ஆண்டுகள்
மனைவியின் பெயர்: திருமதி கமலா நேரு
மகளின் பெயர்: திருமதி இந்திரா காந்தி
மேல் படிப்புப் படித்தது. இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில். வழக்குரைஞர் பட்டம்
இந்தியாவின் முதல் பிரதமர் என்னும் பெருமைக்கு உரியவர் அவர். அந்தப் பதவியில் இந்தியா சுதந்திரம் அடைந்த நாளில் இருந்து, அதாவது 15 ஆகஸ்ட் 1947ஆம் ஆண்டில் இருந்து, காலமாகும் வரை, அதாவது 27 மே 1964ஆம் ஆண்டு வரை, சுமார் 17 ஆண்டுகள் அந்தப் பதவிக்குப் பெருமை சேர்த்தவர்.
----------------------------------
அவரைப் பற்றிய மேலதிகத்தகவல்கள் விக்கி மகாராஜவிடம் கிடைக்கும். அதற்கான சுட்டி:
http://en.wikipedia.org/wiki/Jawaharlal_Nehru
--------------------------------------------


---------------------------------------------------------------------------------------------
 பிறப்பு விவரம்
1889ஆம் ஆண்டு நவம்பர்மாதம் 14ம் தேதி
நேரம் இரவு 11.20 மணி
பிறந்த ஊர்: அலஹாபாத்
Allahabad: Latitude 25.28' N Longitude    81.54' E
கர்ப்பச்செல் இருப்பு புதன் திசையில் 13 ஆண்டுகள் 4 மாதங்கள் 20 நாட்கள்
பெற்றோர்கள்: மோதிலால் நேரு - ஸ்வரூபராணி
----------------------------------------------------
1. சுபக் கிரகங்களான சந்திரன், சுக்கிரன், குரு ஆகிய மூன்றும் தங்களுடைய சொந்த வீட்டில் அமர்ந்து, ஜாதகருக்கு ராஜ யோகத்தைக் கொடுத்தன. ஜாதகர்
பிறந்தது மிகப் பெரிய செல்வந்தர் வீட்டில்.

2. லக்கினத்தில் இருக்கும் சந்திரன் அவருக்கு அழகான தோற்றத்தைக் கொடுத்தது.

3. நான்காம் வீட்டில் ஆட்சி பலத்துடன் இருக்கும் சுக்கிரன், அவருக்கு வாழ்க்கையில் எல்லா வசதிகளையும், வீடு வாசல், பங்களா, சொத்து, சுகம் என்று எல்லாவற்றையும் வாரி வழங்கியது. அத்துடன் அது கேந்திர ஸ்தானம் அதையும் மனதில் கொள்க!

4. மற்றும் ஒரு கேந்திர ஸ்தானமான பத்தாம் வீட்டை, அதன் அதிபதி செவ்வாய் தனது விஷேசப் பார்வையில் வைத்திருப்பதைப் பாருங்கள். அது அவரை நாட்டின் பிரதமர் பதவியில் கொண்டுபோய் அமரவைத்தது.

5. காலசர்ப்பயோக ஜாதகம். அதுவும் கேது கொடிபிடிக்கும் காலசர்ப்பயோகம். சின்ன வயதிலும், மத்திய வயதிலும் அது அவரைப் பல சிரமங்களுக்கு
ஆளாக்கியது. அரசை எதிர்த்துப் போராட்டம், சிறை வாழ்க்கை என்று அனுபவிக்காத துயரங்களே இல்லை!

6. ஐந்தாம் வீட்டில் இருக்கும் சூரியன் சுப கர்த்தாரி யோகத்துடன் இருப்பதைப் பாருங்கள். ஒரு பக்கம் சுக்கிரனும், புதனும். மறுபக்கம் குரு. சுபயோகத்துடன்
இருக்கும் சூரியன் அவரை மக்களிடையே பிரபலப் படுத்தியதுடன், அவரைத் தேசியத் தலைவராக்கியதுடன், பிரதமராகவும் ஆக்கி, உலகப் புகழ் பெற் வைத்தது.

7. இரண்டில் இருக்கும் சனி, அவரைச் சிறந்த பேச்சாளராக்கியது. அது வாக்கு ஸ்தானம். சனி கர்மகாரகன்.

8. 4ஆம் வீடும், 5ஆம் வீடும் சிறப்பாக அமைந்ததால் அவர் உயர் கல்வி பெற்றார். லண்டனில் படித்தார். தனது 23ஆவது வயதில் பாரிஸ்டர் பட்டம் பெற்று வழக்குரைஞரானார்.

9. சூரியனின் சுயவர்க்கப் பரல்கள் 2 மட்டுமே. சூரியன் பலவீனமாக இருந்ததால் அவருக்கு அன்றைய அரசுடன் சுமூகமான உறவு இல்லை. 35 ஆண்டுகள்  தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். அத்துடன் தந்தையிடமும் சுமூகமான உறவு இல்லை. அவர் சொல்லைக்கேட்டு வக்கீல் வேலை பார்க்காமல் அரசியலில் தீவிர ஈடுபாட்டுடன் இருந்தார். சுருக்கமாகச் சொன்னால் இரண்டு பரல்களுடன் பலவீனமாக இருந்த சூரியன் அதைச் செய்தது.

10. லக்கினாதிபதி சந்திரன் லக்கினத்தில் இருந்ததுடன், தன் சுயவர்க்கத்தில் 5 பரல்களுடன் பலமாக இருந்து அவருக்கு மன வலிமையையும், நியாயத்திற்குப் போராடும் துணிச்சலையும் கொடுத்தது.

11. அதே சந்திரன்தான், தன்னுடைய மகாதிசையில், அவருடைய வாழ்க்கை மேன்மையடையச் செய்ததுடன், அவரைப் பிரதமர் பதவியிலும் அமர வைத்து அழகு  பார்த்தது. (சந்திர திசை 4.4.1946 முதல் 4.4.1956 வரை)

12. அடுத்து வந்த செவ்வாய் திசையும் அவருக்குத் தன் வலிமையான அமைப்பினால் (சுயவர்க்கத்தில் 6 பரல்கள்) அவரைத் தொடர்ந்து பிரதமர் பதவியில் நீடிக்க வைத்தது.

13. செவ்வாய் மூன்றாம் வீட்டில் 6 பரல்களுடன் வலிமையாக இருந்தது. கடக லக்கினத்திற்கு செவ்வாய் யோககாரகன். யோககாரகன் செவ்வாய் அவருக்கு
கட்சியிலும் சரி, கடைசியாக இருந்த ஆங்கில வைஸ்ராய் மவுண்ட்பேட்டன் பிரபுவிடமும் சரி நல்ல உறவுகளை ஏற்படுத்திக்கொடுத்தது. செல்வாக்கும், புகழும் பெற்றார். அத்துடன் பிரதமர் பதவியிலும் அமர்ந்து உலகப் புகழ் பெற்றார். காந்தீஜியின் அதீத அன்பை அவர் பெற்றதற்குக் காரணம் இந்த யோகக்காரகன்தான்.

14. செவ்வாய் திசை 4.4.1956 முதல் 4.4.1963 வரை. அந்தக் காலகட்டத்தில் அவர் இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்தினார். அத்துடன் அரசு சார்பில் பல
பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கி ஏராளமான பேர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்து மக்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடிததார். வலுவாக இருந்த யோககாரகன் அதைச் செவ்வனே செய்தான்.

15. புதன் 7 பரல்களுடன் கேந்திர வீட்டில் வலுவாக இருப்பதைக் கவனியுங்கள். அவர் எடுத்துச் செய்த அத்தனை செயல்களிலும் வெற்றியைத் தேடிக்
கொடுத்ததும் உயர் கல்வியைக் கொடுத்ததும் அந்த புதன்தான்.

16. குரு 5 பரல்களுடன் ஆறாம் வீட்டில் இருந்ததால், அவருக்கு உண்டான எதிர்ப்புக்களையும், எதிரிகளையும் அவரால் துவம்சம் செய்ய முடிந்தது.

17. 4ல் இருக்கும் சுக்கிரன் 6 பரல்களுடன் வலிமையாக உள்ளார். நேருவிற்கு ரசனை உணர்வுகளையும், கலைகளில் ஆர்வத்தையும் அவர் ஏற்படுத்தினார்.
அத்துடன் அவரைச் சிறந்த எழுத்தாளராகவும், பேச்சாளாரகவும் அவர் ஆக்கினார்.

18. 12ஆம் வீட்டில் (விரைய ஸ்தானத்தில்) ராகு இருப்பது மோசமான அமைப்பே! காத்திருந்த ராகு தன் திசை துவங்கியவுடன், அவருக்கு நோயை உண்டாக்கி, மரணத்தையும் கொடுத்தான். ராகு சனியைப் போல செயல்படுவான். 2 அல்லது 7ஆம் அதிபதிதான் மரணத்தைத் தருவார் என்பது ஜோதிட விதி. ஏழாம் அதிபதி சனியின் வேலையை விரைய ராகு செய்து முடித்தான். 27.5.1964 அன்று அவர் காலமானார். அவர் இறந்த தேதியன்று கோச்சார சனி எட்டில். லக்கினாதிபதி சந்திரன் அந்தத் தேதியில் நீசமாக இருந்தான்.

அலசல் போதுமா?

அன்புடன்
வாத்தியார்

--------------------------------------------------------------------------

குழந்தைப் பருவத்தில் நேரு தன் பெற்றோர்களுடன்

சிறுவனாக இருந்தபோது எடுத்த படம்

வழக்குரைஞராக இருந்த காலத்த்யில் எடுக்கப்பெற்ற படம்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

18.1.13

ஆறுமோ ஆவல்? தீருமோ ஆசை?

ஆறுமோ ஆவல்? தீருமோ ஆசை?

பக்தி மலர்

இன்றையப் பக்தி மலரை 'பத்மஸ்ரீ' சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடிய பாடலின் வரிகள் அலங்கரிக்கின்றன. அனைவரும் படித்து இன்புறுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்

--------------------------------------------------------
ஆயிரம் போற்றி பாடினும் ஆவல் ஆறுமோ முருகா
ஆயிரம் போற்றி பாடினும் ஆவல் ஆறுமோ முருகா
ஆறுமுகா ...
(ஆயிரம் ... )

தாயினும் இனித்தாய் தந்தையாய் வளர்த்தாய்
வாழ்வெல்லாம் வகுத்தாய் வரம் எனக்களித்தாய்
(ஆயிரம் ... )

நீயே எளியேன் நெஞ்சினில் நின்றாய்
நிம்மதி தந்தே அஞ்சேல் என்றாய்
நாயேன் பிழைகள் நாளும் பொருத்தாய்
நண்பனாய் வந்தே துன்பம் தவிர்த்தாய்
(ஆயிரம் ... )

ஆறுமுகா
(ஆயிரம் ... ).

- பாடலைப் பாடியவர் 'பத்மஸ்ரீ' சீர்காழி கோவிந்தராஜன்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

17.1.13

Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 14


Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 14

ஜோதிடத் தொடர் - பகுதி 14

இதற்கு முன் பகுதியைப் படித்திராதவர்கள் அதைப் படித்துவிட்டு வரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
------------------------------------------------------------------------------------------------
பூர நட்சத்திரம் (சிம்ம ராசி)

இது சுக்கிரனின் நட்சத்திரம்.

1. அஸ்விணி
2. கார்த்திகை
3. திருவாதிரை
4. மகம்
5. உத்திரம்
6. சித்திரை
7. விசாகம்
8. கேட்டை
9. மூலம்
10. உத்திராடம்
11. அவிட்டம்
12. சதயம்
13. பூரட்டாதி
14. ரேவதி

ஆகிய 14 நட்சத்திரங்களும் பொருந்தக்கூடிய நட்சத்திரங்களாகும்.

இவற்றுள் உத்திராடம் 2, 3 4 ஆம் பாதங்கள், அவிட்டம் 1, 2ஆம் பாதங்கள் ஆகிய நட்சத்திரங்கள் மகர ராசிக்கு உரியனவாகும். ஜோதிடர்கள் சிம்மத்திற்கு ஆறாம் இடம் மகரம். மகரத்திற்கு எட்டாம் இடம் சிம்மம். அஷ்டம சஷ்டம நிலைப்பாடு (6/8 position to each rasi) வேண்டாம் என்பார்கள். ஆகவே அவற்றை விலக்கிவிடுவது நல்லது.

மீன ராசிக்கு உரிய நட்சத்திரங்களில் ரேவதி நட்சத்திரம் மகத்திற்குப் பொருத்தமான நட்சத்திரம் இல்லை. 8/6 நிலைப்பாடு வரும். ஆகவே அதை விலக்கிவிடுவது நல்லது..

கடக ராசிக்குரிய நட்சத்திரங்களில், சிம்மத்திற்கு உரிய நட்சத்திரங்களில் எதுவும் பொருத்தமான நட்சத்திரம் இல்லை. 12/1 position to each rasi என்பது இல்லை!.

அஷ்டம சஷ்டமக் கணக்கை பார்த்தால் 11 நட்சத்திரங்கள் மட்டுமே சிறப்பாகப் பொருந்தும்

பரணி, பூசம், அனுஷம், பூராடம், உத்திரட்டாதி ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும். அவற்றை விலக்கி விடுவது நல்லது.

பெண்ணிற்கும், பையனுக்கும் பூரம் ஒரே நட்சத்திரமாக இருந்தால் மத்திம பொருத்தம் உண்டு. என்ன ஒரே நட்சத்திரத்தில் தம்பதிகள் இருந்தால், ஏழரைச் சனி பிடிக்கும்போதும், அஷ்டமச்சனி (எட்டில் சனி) வரும்போதும், சனீஷ்வரன் இருவரையும் ஒன்றாகப் பிடித்து ஆட்டி வைப்பார்.. அதனால் பொதுவாக ஒரே நட்சத்திரம் அல்லது ஒரே ராசியைத் தவிர்ப்பது நல்லது.

ரோஹிணி பொருந்தாது!

மிருகசீரிஷம், புனர்பூசம், ஆயில்யம், ஹஸ்தம், சுவாதி, திருவோணம் ஆகிய நட்சத்திரங்கள் மத்தியமான பொருத்தம் உள்ள நட்சத்திரங்களாகும் மத்திய பொருத்தம். என்றால் சராசரி! அதாவது average. வரன் கிடைக்காமல் அல்லாடுபவர்கள் இவற்றுள் ஒன்றைத் தெரிவு செய்து கொள்ளலாம். தவறில்லை!
 -------------------------------------------------------------------------------
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

16.1.13

Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 13


Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 13

ஜோதிடத் தொடர் - பகுதி 13

இதற்கு முன் பகுதியைப் படித்திராதவர்கள் அதைப் படித்துவிட்டு வரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
------------------------------------------------------------------------------------------------
மக நட்சத்திரம் (சிம்ம ராசி)

இது கேதுவின் நட்சத்திரம்.

1. கார்த்திகை
2. பூசம்
3. ஹஸ்தம்
4. சுவாதி
5. விசாகம்
6. அனுஷம்
7. திருவோணம்
8. சதயம்

ஆகிய 8 நட்சத்திரங்களும் பொருந்தக்கூடிய் நட்சத்திரங்களாகும்.

இவற்றுள் திருவோண நட்சத்திரம் மகர ராசிக்கு உரியதாகும். ஜோதிடர்கள் சிம்மத்திற்கு ஆறாம் இடம் மகரம். மகரத்திற்கு எட்டாம் இடம் சிம்மம். அஷ்டம சஷ்டம நிலைப்பாடு (6/8 position to each rasi) வேண்டாம் என்பார்கள். ஆகவே அதை விலக்கிவிடுவது நல்லது.

மீன ராசிக்கு உரிய நட்சத்திரங்களில் மகத்திற்குப் பொருத்தமான நட்சத்திரம் எதுவும் இல்லை. ஆகவே இந்த 8/6 நிலைப்பாடு வராது. வரவே வராது. கவலை வேண்டாம்.

பூச நட்சத்திரம் கடக் ராசிக்கு உரிய நட்சத்திரமாகும். சிம்மத்திற்குக் கடகம் பன்னிரெண்டாம் வீடு.  (12/1 position to each rasi) வேண்டாம் என்பார்கள். ஆகவே அந்த நட்சத்திரத்தையும் விலக்கிவிடுவது நல்லது.

அஷ்டம சஷ்டமக் கணக்கை பார்த்தால் 6 நட்சத்திரங்கள் மட்டுமே சிறப்பாகப் பொருந்தும்

அஸ்விணி, மூலம், ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும். அவற்றை விலக்கி விடுவது நல்லது.

பெண்ணிற்கும், பையனுக்கும் மகம் ஒரே நட்சத்திரமாக இருந்தால் பொருத்தம் உண்டு. என்ன ஒரே நட்சத்திரத்தில் தம்பதிகள் இருந்தால், ஏழரைச் சனி பிடிக்கும்போதும், அஷ்டமச்சனி (எட்டில் சனி) வரும்போதும், சனீஷ்வரன் இருவரையும் ஒன்றாகப் பிடித்து ஆட்டி வைப்பார்.. அதனால் பொதுவாக ஒரே நட்சத்திரம் அல்லது ஒரே ராசியைத் தவிர்ப்பது நல்லது.

உத்திராடம் பொருந்தாது!

பரணி, ரோஹிணி, மிருகசீரிஷம், திருவாதிரை, புனர்பூசம், பூரம், உத்திரம், சித்திரை, பூராடம், அவிட்டம், பூரட்டாதி, உத்திரட்டாதி பூராடம் முதல் பாதம் (மட்டும்) மத்தியமான பொருத்தம் உள்ள நட்சத்திரங்களாகும் மத்திய பொருத்தம். என்றால் சராசரி! அதாவது average. வரன் கிடைக்காமல் அல்லாடுபவர்கள் இவற்றுள் ஒன்றைத் தெரிவு செய்து கொள்ளலாம். தவறில்லை!
 -------------------------------------------------------------------------------
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

14.1.13

சேர்ந்து வாழ்வதைச் சிறப்பாகச் சொல்லும் பொங்கல்!


 14.1.2013

ஸ்ரீநந்தன ஆண்டு தைத்திங்கள் முதல் தேதி

பொங்கல்: சேர்ந்து வாழ்வதைச் சிறப்பாகச் சொல்லும் பொங்கல்!

அனைவருக்கும் நம்து வகுப்பறையின் சார்பில் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பொங்கலைச் சிற்ப்பித்துக் கவியரசர் கண்ணதாசன் அவர்கள் எழுதிய கவிதை ஒன்றை மகிழ்ச்சியுடன் கீழே தந்துள்ளேன். அனைவரும் படித்து மகிழுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்

-------------------------------------------------------------------

அறவழி வாழ்க்கை பண்பு
   அகம்புறந் தூய்மை வாய்மை
உறவுபார்த் துண்ணல், கையில்
   உளவரை பகிர்ந்து வாழ்தல்
குரவரைப் பணிதல், கொண்ட
   குல்மகள் இதயங் காத்தல்
நெறியெனப் பொங்க்ல் நாளை
   நிறைவுறத் தமிழர் வைத்தார்!

எவ்வழி மனமோ வாழ்வும்
   அவ்வழி யேதான் போகும்
எவ்வழி அறிவோ நெஞ்சும்
   அவ்வழி யேதான் செல்லும்
செல்வழி சிறந்த நெஞ்சு
   சேர்ந்துவாழ் கின்ற வாழ்வு
நல்வழி தோன்றும், தோன்றி
   நலமுறப் பொங்கல் நாளே!

    - கவியாக்கம் கவியரசர் கண்ணதாசன் 


----------------------------------------------------------------------------------------------------------
பொங்கலை முன்னிட்டு, உங்களுக்கு (வகுப்பறைக்கு)  ஒரு நாள் விடுமுறை. அடுத்த வகுப்பு 16.1.2013 புதன்கிழமை அன்று நடைபெறும்!
  ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ 

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

11.1.13

வினைகள் எப்போதடா தீரும்?

வினைகள் எப்போதடா தீரும்?
பக்தி மலர்

இன்றையப் பக்தி மலரை 'பத்மஸ்ரீ' டி. எம். செளந்தரராஜன் அவர்கள் பாடிய பாடலின் வரிகள் அலங்கரிக்கின்றன. அனைவரும் படித்து இன்புறுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்

--------------------------------------------------------
வேல் வேல் வெற்றிவேல்
வேல் வேல் ஞானவேல்
வேல் வேல் வெற்றிவேல்
வேல் வேல் சக்திவேல்

ஊரப்பா பழநியப்பா கந்தப்பா - அங்கு
பக்தர் கூட்டம் பெருகுதப்பா
(ஊரப்பா ... )

உன் பேரப்பா பழநியப்பா
காவடிகள் கூடுதப்பா
பாரப்பா பழநியப்பா
கண்திறந்து பாருமப்பா

ஆண்டியாய் வந்தவா
ஆறுமுக வேலவா

வேல் வேல் வெற்றிவேல்
வேல் வேல் ஞானவேல்
வேல் வேல் வெற்றிவேல்
வேல் வேல் சக்திவேல்

பங்குனி உத்திரக் காவடிகள்
ஆடியே கூடுதப்பா
பொங்கிவரும் பாலுடன் - உன்
சேவடி சேருதப்பா

பழநிமலை சன்னிதியில்
தங்கத் தேரய்யா
உன்னைப் பாடிவரும் பக்தருக்கு
வினைகள் தீருதய்யா
(ஊரப்பா ... )

கந்தனுக்கு அரோகரா
வேலனுக்கு அரோகரா

வேல் வேல் வெற்றிவேல்
வேல் வேல் ஞானவேல்
வேல் வேல் வெற்றிவேல்
வேல் வேல் சக்திவேல்

பால்காவடி பன்னீர்க்காவடி புஷ்பக்காவடி
சேவற்காவடி மச்சக்காவடி வேல்காவடி
முருகனுக்கு ... அரோகரா

தாங்கிவரும் அடியார்கள்
ஆயிரம் கோடியப்பா
சேர்ந்துவரும் காவடிகள்
சன்னிதி சேருதப்பா

வேண்டிவரும் அன்பர்களின்
குறைகள் நீங்குமே
நம்மை நாடிவரும் துன்பங்கள்
வேலும் தாங்குமே
வடிவேலும் தாங்குமே
(ஊரப்பா ... )

கந்தனுக்கு அரோகரா
வேலனுக்கு அரோகரா

நவலோக மாமணியே
சிவனாரின் கண்மணியே
அவனியும் போற்றுதடா
ஆதி சக்தி மைந்தன் உனை

பாலும் தேனும் பஞ்சாமிர்தம்
குடம் குடமாய் கோயிலில்
நாளும் இங்கே வழியுதடா
உந்தன் தங்க மேனியில்

என்றும் உந்தன் சன்னிதியில்
கோடி சரண தோஷமே
அல்லல் நீங்குதே
முருகா ஆசை பெருகுதே

கந்தனுக்கு அரோகரா
வேலனுக்கு அரோகரா

வேல் வேல் வெற்றிவேல்
வேல் வேல் ஞானவேல்
வேல் வேல் வெற்றிவேல்
வேல் வேல் சக்திவேல்

வெற்றிவேல் முருகனுக்கு ஆரோகரா

- பாடலைப் பாடியவர் 'பத்மஸ்ரீ' டி. எம். செளந்தரராஜன்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

10.1.13

கவிதைச் சோலை: இனிக் காண்பதெல்லாம் இன்பமப்பா!


கவிதைச் சோலை: இனிக் காண்பதெல்லாம் இன்பமப்பா!

இன்றையக் கவிதைச் சோலையைப் பட்டுக்கோட்டையாரின் பாடல்கள் அலங்கரிக்கின்றன. படித்து மகிழுங்கள்

அன்புடன்
வாத்தியார்

----------------------------------------------------------------------
1
தலைப்பு: காண்பதெல்லாம் இன்பமப்பா!

விதியென்னும் குழந்தை கையில் உலகந்தன்னை
விளையாடக் கொடுத்துவிட்டாள் இயற்கையன்னை - அது
விட்டெறியும் உருட்டிவிடும் மனிதர் வாழ்வை
மேல்கீழாய்ப் புரட்டிவிடும் வியந்திடாதே!

மதியுண்டு கற்புடைய மனைவியுண்டு
வலிமையுண்டு வெற்றி தரும் வருந்திடாதே
எதிர்த்துவரும் துன்பத்தை மிதிக்கும் தன்மை
எய்திவிட்டால் காண்பதெல்லாம் இன்பமப்பா!


- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
-------------------------------------------------
2
தலைப்பு: இதுதான் உலகமடா!

இதுதான் உலகமடா - மனிதா
இதுதான் உலகமடா - பொருள்
இருந்தால் வந்து கூடும் - அதை
இழந்தால் விலகி ஓடும்!

உதைத்தவன் காலை முத்தமிடும்
உத்தமர் வாழ்வைக் கொத்திவிடும்
உதட்டில் உறவும் உள்ளத்தில் பகையும்
வளர்த்தே அறிவை மாய்த்துவிடும் - பொருள்
இருந்தால் வந்து கூடும் - அதை
இழந்தால் விலகி ஓடும்!

உழைப்பவன் கையில் ஓடு தரும்
உணவுக்குப் பதிலாய் நஞ்சைத் தரும்
பழியே புரியும் கொடியோன் புசிக்கப்
பாலும் பழமும் தேடித் தரும் - பொருள்
இருந்தால் வந்து கூடும் - அதை
இழந்தால் விலகி ஓடும்!

மெய்யைப் பொய்யாய் மாற்றிவிடும்
வீணே சிறையில் பூட்டிவிடும்
பொய்யும் புரட்டும் நிறைந்தவன் தன்னைப்
புகழ்ந்தே பாடல் புனைந்துவிடும் - பொருள்
இருந்தால் வந்து கூடும் - அதை
இழந்தால் விலகி ஓடும்!

- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

9.1.13

Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 12


 Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 12

ஜோதிடத் தொடர் - பகுதி 12

இதற்கு முன் பகுதியைப் படித்திராதவர்கள் அதைப் படித்துவிட்டு வரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
------------------------------------------------------------------------------------------------
ஆயில்ய நட்சத்திரம் (கடக ராசி)

இது புதனின் நட்சத்திரம்.

1. கார்த்திகை
2. மிருகசீரிஷம்
3. புனர்பூசம்
4. பூரம்
5. சித்திரை
6. சுவாதி
7. விசாகம்
8. அனுஷம்
9. திருவோணம்
10. அவிட்டம்
11. சதயம்

ஆகிய 11 நட்சத்திரங்களும் பொருந்தக்கூடிய நட்சத்திரங்களாகும்.

மூலம், பூராடம், உத்திராடம் (1ஆம் பாதம்) ஆகியவை தனுசு ராசிக்கு உரியதாகும். ஜோதிடர்கள் கடகத்திற்கு ஆறாம் இடம் தனுசு.. தனுசு ராசிக்கு எட்டாம் வீடு கடகம். அஷ்டம சஷ்டம நிலைப்பாடு (6/8 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். ஆகவே அவற்றை விலக்கிவிடுவது நல்லது.

அதே நிலைப்பாடு சதய நட்சத்திரம், அவிட்டம் 3 & 4, பூரட்டாதி 1, 2 &3 ஆம் பாதங்களுக்கும் உள்ளது. அவைகள்  கும்ப ராசிக்கு உரிய நட்சத்திரங்களாகும்.கடகத்திற்கு கும்பம் எட்டாம் வீடு. கும்பத்திற்கு கடகம் ஆறாம் வீடு. (8/6 position to each rasi) வேண்டாம் என்பார்கள். ஆகவே அவற்றையும் விலக்கிவிடுவது நல்லது. இவற்றுள் சதயமும், அவிட்டம் 3 & 4, மட்டும் பொருத்தக் கணக்கில் வருவதால், கவனத்தில் கொண்டு, அவற்றை விலக்கி விடுவது நல்லது.

அதே நிலைப்பாடு திருவாதிரை, மிருகசீரிஷம் 3 & 4ஆம் பாதங்கள், புனர்பூசம் 1, 2 & 3ஆம் பாதங்களுக்கும் உண்டு. அவைகள் மிதுன ராசிக்கு உரிய நட்சத்திரங்களாகும். கடகத்திற்கு மிதுனம் பன்னிரெண்டாம் வீடு. மிதுனத்திற்கு கடகம் இரண்டாம் வீடு. (12/1 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். ஆகவே அவற்றையும் விலக்கிவிடுவது நல்லது. இவற்றுள் மிருகசீரிஷம், புனர்பூசம்  பொருத்தக் கணக்கில் வருவதால், கவனத்தில் கொண்டு, அவற்றை விலக்கி விடுவது நல்லது.

அஷ்டம சஷ்டமக் கணக்கை பார்த்தால் 7 நட்சத்திரங்கள் மட்டுமே சிறப்பாகப் பொருந்தும்

அஸ்விணி, மகம், மூலம், கேட்டை, ரேவதி ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும். அவற்றை விலக்கி விடுவது நல்லது.

பெண்ணிற்கும், பையனுக்கும் ஆயில்யம் ஒரே நட்சத்திரமாக இருந்தால் பொருந்தாது. பொருந்தவே பொருந்தாது!

திருவாதிரை, பூரம் ஆகிய இரண்டு நட்சத்திரங்களும் பொருந்தாது!

பரணி, ரோஹிணி, உத்திரம், ஹஸ்தம், பூராடம், உத்திராடம், பூரட்டாதி, உத்திரட்டாதி ஆகிய 8 நட்சத்திரங்களும் மத்திய பொருத்தம். சராசரி பொருத்தம் உள்ளவையாகும்!
-------------------------------------------------------------------------------
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++

8.1.13

Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 11


Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 11

ஜோதிடத் தொடர் - பகுதி 11

இதற்கு முன் பகுதியைப் படித்திராதவர்கள் அதைப் படித்துவிட்டு வரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
------------------------------------------------------------------------------------------------
பூச நட்சத்திரம் (கடக ராசி)

இது சனீஷ்வரனின் நட்சத்திரம்.

1. அஸ்விணி
2. கார்த்திகை
3. ரோஹிணி
4. மிருகசீரிஷம்
5. திருவாதிரை
6. புனர்பூசம்
7. ஆயில்யம்
8. ஹஸ்தம்
9. சுவாதி
10. கேட்டை
11. மூலம்
12. உத்திராடம்
13. சதயம்
14. ரேவதி

ஆகிய 14 நட்சத்திரங்களும் பொருந்தக்கூடிய் நட்சத்திரங்களாகும்.

இதில் மூலம், உத்திராடம் ஆகியவை தனுசு ராசிக்கு உரியதாகும். ஜோதிடர்கள் கடகத்திற்கு ஆறாம் இடம் தனுசு.. தனுசு ராசிக்கு எட்டாம் வீடு கடகம். அஷ்டம சஷ்டம நிலைப்பாடு (6/8 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். ஆகவே அவற்றை விலக்கிவிடுவது நல்லது.

அதே நிலைப்பாடு  சதய நட்சத்திரத்திற்கும் உண்டு. அது  கும்ப ராசிக்கு உரிய நட்சத்திரமாகும்..கடகத்திற்கு கும்பம் எட்டாம் வீடு. கும்பத்திற்கு கடகம் ஆறாம் வீடு. (8/6 position to each rasi) வேண்டாம் என்பார்கள். ஆகவே அவற்றையும் விலக்கிவிடுவது நல்லது.

அதே நிலைப்பாடு மிருகசீரிஷம் மற்றும் திருவாதிரை, புனர்பூசம் 1, 2 & 3ஆம் பாதங்களுக்கும் உண்டு. அவைகள் மிதுன ராசிக்கு உரிய நட்சத்திரங்களாகும். கடகத்திற்கு மிதுனம் பன்னிரெண்டாம் வீடு. மிதுனத்திற்கு கடகம் இரண்டாம் வீடு. (12/1 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். ஆகவே அவற்றையும் விலக்கிவிடுவது நல்லது.

ஆக மொத்தத்தில் 9 நட்சத்திரங்கள் மட்டுமே சிறப்பாகத் தேரும்.

பரணி, பூரம், அனுஷம், பூராடம், உத்திரட்டாதி ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும். அவற்றை விலக்கி விடுவது நல்லது.

பெண்ணிற்கும், பையனுக்கும் பூச நட்சத்திரம் ஒன்றாக இருந்தால், மத்திம பொருத்தம்,. சராசரி!

சித்திரை நட்சத்திரம் பொருந்தாது!

மகம், உத்திரம், விசாகம், திருவோணம், அவிட்டம், பூரட்டாதி  ஆகிய 6 நட்சத்திரங்களும் மத்திய பொருத்தம். சராசரி!
-------------------------------------------------------------------------------
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

7.1.13

Astrology ஏன்டா ஆதாரம் இல்லை ஆறுதல் சொல்ல?

Astrology ஏன்டா ஆதாரம் இல்லை ஆறுதல் சொல்ல?

அலசல் பாடம்

கஷ்டங்களுக்கு ஒரு உதாரண ஜாதகம்! Example horoscope for Difficulties

பிரச்சினை இல்லாத மனிதனே கிடையாது. வாழ்க்கை என்பது சீட்டாடத்தைப் போன்றது. கையில் 13 கார்டுகளுடன் நீங்கள் ஆடித்தான் ஆகவேண்டும். ஒரு கார்டை நீங்கள் கீழே இறக்கினால், பதிலுக்குக் கீழே இருந்து ஒரு கார்டை எடுத்துக்கொள்ள வேண்டும். சீட்டாடுபவர்களுக்கு அல்லது முன்பு ஆடியவர்களுக்கு அது நன்றாகத் தெரியும்.

அத்துடன் சிலருக்கு ஒரு பிரச்சினைதான் இருக்கும். அதைத் தீர்த்தவுடன் அடுத்த பிரச்சினை வரும். ஆனால் சிலருக்குக் ஒரே நேரத்தில் நான்கைந்து பிரச்சினைகள் இருக்கும். அதாவது ரம்மி சேராமல், கையில் சில ஜோக்கர்க்ளும் பல பெரிய கார்டுகளும் கையில் இருப்பது போன்ற நிலைமை!

அதுபோல ஒரு அன்பருக்கு ஒரே நேரத்தில் பல பிரச்சினைகள். செய்யும் தொழில் சீராக இல்லை. அதில் நஷ்டம். திருமண வாழ்க்கையில் பிரச்சினை. மனைவியுடன் சுமூகமான உறவு இல்லை. கடும் பணப் பிரச்சினை. உடல் நலமின்மை. இப்படி எல்லாமுமாகச் சேர்ந்து படுத்தி எடுத்தன!

ஆளை விட்டால் போதும் எங்காவது ஓடிப் போய்விடலாம் என்னும் நிலைமை!

அது எப்படி ஓடிப்போக முடியும்? விதி விடுமா?

நீ திருடித்தான் \பிழைக்க வேண்டுமென்றால், திருடித்தான் பிழைக்க வேண்டும். திருடித்தான் மகிழ வேண்டுமென்றால், அப்படித்தான் மகிழ முடியும் (இந்த வரி பதிவுத் திருடர்களுக்காக!)

என்ன ஆயிற்று அவருக்கு?

வாருங்கள் அவருடைய ஜாதகத்தை அலசுவோம்? அவருக்கு நாம் என்ன உதவியா செய்யப் போகிறோம்? இல்லை! நமது பயிற்சிக்காக அதை இன்று அலசுவோம்
--------------------------------------------------------------
கீழே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்:

ஜாதகத்தில் உள்ள பெரிய குறை கேமதுருமா யோகத்தின் பிடியில் ஜாதகம் உள்ளது.  கேமதுருமா யோகம் என்பது மோசமான அவ யோகம். உங்கள் மொழியில் சொன்னால் தரித்திர யோகம். அந்தஅவயோகம் உள்ள ஜாதகன் வறுமையில் வாடும்படியாகிவிடும். Kema Druma Yoga is said to occur when there is no planet positioned in either second house or in the twelfth house from Moon; சந்திரனுக்கு இரண்டுபக்கமும் எந்த கிரகமும் இல்லாமலும், உடன் எந்த கிரகமும் இல்லாமலும், சந்திரன் தனித்து இருக்கும் நிலைமை!

2. யோககாரகனான செவ்வாய் சூரியனுக்கு அருகில் சென்று அஸ்தமித்துவிட்டான். அவனால் பயனில்லாமல் போய்விட்டது.

3. அதே போல 2ஆம் மற்றும் 11ஆம் இடத்திற்கு உரிய புதனும் சூரியனுக்கு அருகில் சென்று அஸ்தமித்துவிட்டான். இரண்டாம் வீடு பணத்திற்கான வீடு. பதினொன்றாம் வீடு லாபத்திற்கான வீடு.

4. லக்கினத்திற்கு எட்டாம் வீட்டுக்காரன் (அஷ்டமாதிபதி) குரு அந்த வீட்டிற்கு 12ல், அதாவது லக்கினத்திற்கு ஏழில் அமர்ந்து திருமண வாழ்க்கையில் கஷ்டங்களைக் கொடுத்தான். எட்டாம் அதிபதிஎன்றாலே கஷ்டங்களைக் கொடுப்பவன். அதை மனதில் வையுங்கள்.

5. அத்துடன் ஜாதகனுக்குக் குரு திசை நடந்த போது, எட்டாம் அதிபதி லக்கினத்தையும் சூரியனையும் பார்த்ததால் ஜாதகனுக்கு உடல் நலம் இல்லாமலும் போய் விட்டது.

ஜாதகன் கடைசிவரை எந்த நன்மையையும் அடையவில்லை. சிம்ம லக்கின ஜாதகன் என்பதால், பல்லைக் கடித்துக்கொண்டு, எல்லாத் துன்பங்களையும் தாங்கிக் கொண்டு வாழ்க்கையை ஓட்டினான்.

ஆதாரம் இல்லையம்மா ஆறுதல் சொல்ல - நான்
அவதாரமில்லையம்மா தத்துவம் சொல்ல
பரிகாரம் தேடீ நான் எவ்விடம் செல்ல - எனக்கு
அதிகாரமில்லையம்மா வானகம் செல்ல


என்ற கவியரசர் கண்ணதாசனின் வரிகளை மனதில் பாடிக்கொண்டே காலத்தை ஓட்டினான்!

மேல்நிலை வகுப்பிற்காக முன்பு எழுதப்பெற்ற பாடம். அனைவருக்கும் பயன்படட்டும் என்று அதை இன்று இங்கே பதிவிட்டுள்ளேன்!

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மாணவக் கண்மணிகள் பலர் யோசனை சொல்லியுள்ளார்கள். ”சார், பாடங்களை Text Format ல் பதிவிடாமல் image formatல் பதிவிடுங்கள். திருட்டுப் போவதைத் தவிர்க்கலாம்”

உங்கள் விருப்பத்தை நிறைவேற்றியுள்ளேன். இன்றையப் பாடத்தை image formatல் கீழே பதிவிட்டுள்ளேன். இந்த முறையில் பதிவிடுவதில் எனக்கு வேலைப் பளு அதிகரிக்கும். அதை விட முக்கியமாக உங்களுக்குப் படிப்பதற்கு இடையூறு இல்லாமல் இருக்க வேண்டும்.

இரண்டில் (Text Format  &  image format) எது படிப்பதற்கு ஏற்றதாக இருக்கிறது? பின்னூட்டத்தில் சொல்லுங்கள்

அன்புடன்
வாத்தியார்
 ---------------------------------------------------------------------------------------------
 ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

4.1.13

உள்ளத்திலே கட்டிய கோயிலும், வைத்த குடியும்!உள்ளத்திலே கட்டிய கோயிலும், வைத்த குடியும்!

பக்தி மலர்

இன்றையப் பக்தி மலரை திருமதி 'பெங்களூர்' ரமணியம்மாள்  அவர்கள் பாடிய பாடலின் வரிகள் அலங்கரிக்கின்றன. அனைவரும் படித்து இன்புறுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்

--------------------------------------------------------
உள்ளத்திலே கோயில் கட்டி
உன்னை அங்கு குடிவைத்தேன்
எண்ணத்திலே தொட்டில் கட்டி
என்னரசே தாலாட்டினேன்
(உள்ளத்திலே)

கள்ளமில்லாத பிள்ளையப்பா
கருணையுள்ள தெய்வமப்பா
வாழ்வுதரும் கந்தப்பா
வந்தருள்வாய் வேலப்பா
(உள்ளத்திலே)

உன் புகழைப் பாடி வந்தேன்
உனதருளை நாடி நின்றேன்
ஓம்கார குருவே வா வா
உயர் ஞான குருவே வா வா
(உள்ளத்திலே)

தத்திமி தோம் என்று ஆடிவரும் வீரவேல்
தத்திமித்தோம் என்று ஆடிவரும் வீரவேல்
தஞ்சமென்றோர்க்கருள் தருமமிகு சக்திவேல்
தகதகிட தகதகிட என்றாடும் வெற்றிவேல்

தயவுடன் அன்பர்க்கு அருள்தரும் ஞானவேல்
தச்சதம் தகிடஜம் என்றாடும் வைரவேல்
தத்துவப் புகழ்பாடும் ஷண்முகன் கைவேல்
வெற்றிவேல் ... வீரவேல் ... சக்திவேல் ... ஷண்முகன் கைவேல்.

- பாடலைப் பாடியவர் 'பெங்களூர்' ரமணியம்மாள்வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

3.1.13

கவிதைச் சோலை: இனமேது சொல்லடா!

கவிதைச் சோலை: இனமேது சொல்லடா!

இன்றைய கவிதைச் சோலையை கவியரச்ர் கண்ணதாசனின் கவிதைகளில் இரண்டு அலங்கரிக்கின்றன. படித்து மகிழுங்கள்

அன்புடன்
வாத்தியார்

+++++++++++++++++++++++++++++++++++++

                              1

சுடுகாட் டெலும்புகளைச்
சோதித்து பார்த்ததிலே
வடநாட் டெலும்பென்று
வந்த எலும் பில்லையடி!
எந்நாட் டெலும்பென்றும்
எழுதிவைக்க வில்லையடி!
ஒருநாட்டு மக்களுக்குள்
ஓராயிரம் பிரிவை
எரியூட்ட வில்லையெனில்
எந்நாளும் துன்பமடி!


                              2

போகந் திரண்டு வரும்போது
புத்தி மயக்கம் சுகமென்பான்
மேகந் திரண்டு வரும்போதோ
மெய்ஞ் ஞானந்தான் பெரிதென்பான்
யோகந் திரண்ட சன்யாசி
யோனிப் பையை நஞ்சென்பான்
நாகந் திரண்ட கலையென்னும்
நஞ்சை நவில்வதுவோ?


- கவியரசர் கண்ணதாசன்

------------------------------------------

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

2.1.13

Short Story: கிளிக்குக் கிடைத்த வரம்!


 Short Story: கிளிக்குக் கிடைத்த வரம்!

மாத இதழ் ஒன்றிற்காக அடியேன் எழுதிய சிறுகதை ஒன்றை நீங்கள் அனைவரும் படித்து மகிழ, அதை இன்று இங்கே பதிவிட்டுள்ளேன்!

அன்புடன்,
வாத்தியார்

----------------------------------------------
வனாந்திரக் காட்டுப் பகுதி அது. மரம், செடி,கொடி என்று செழிப்பாக இருந்தது. சில இடங்களில் சூரிய ஒளியே தெரியாத அளவிற்கு அடர்த்தியான மரங்கள்.
எல்லாவகையான மரங்களும் இருந்தன. மா, பலா, கொய்யா என்று கனி தரும் மரங்களுக்கும் குறைவில்லாத பிரதேசம். அருகே ஒரு பெரிய நீர் நிலையும் இருந்தது.

ஏராளமான பறைவைகள் அங்கே இருந்தன. அதுதான் குறிப்பிடத்தகுந்த செயதி.

வனத்தின் மத்தியப் பகுதியில் பிரம்மாண்டமான ஆலமரம் ஒன்றும் இருந்தது. அதன் வயது 200 ஆண்டுகளுக்கு மேற்பட்டதாக இருக்கலாம். அத்தனை பெரிய மரம்.

அந்த மரத்தின் பொந்து ஒன்றில் கிளியொன்று குடியிருந்தது. அதற்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து அது அங்கேதான் குடியிருந்தது. ஆலமரத்தின் கனிகளை உண்டுவிட்டு  அல்லது பக்கத்தில் உள்ள நாவல், கொய்யா மரங்களில் இருக்கும் கனிகளை உண்டுவிட்டு, அருகில் இருக்கும் நீர் நிலையில் தேவையான தண்ணீரைக் குடித்துவிட்டு, தன் பொந்திற்கே வந்து அடைந்துவிடும். மைனா போன்ற மற்ற பறவைகளும் கூடு கட்டிக்கொண்டு அந்த மரத்திலே தங்கியிருந்தன. ஒன்றுக்கொன்று போட்டியில்லாமல் அவை
அனைத்தும் ஒற்றுமையாக இருந்தன. காலம் சுவையாக  ஓடிக் கொண்டி ருந்தது.

அப்படியே ஓடிக்கொண்டிருந்தால் கதையில் என்ன சுவாரசியம் இருக்கப்போகிறது?

ஒரு திருப்பம் ஏற்பட்டது.

ஒருமுறை கடுமையான வறட்சி ஏற்பட்டு, ஆறு மாத காலம் மழையே பெய்யவில்லை. பகலில் சூரிய வெப்பத்தால், வெட்கையும் அதிகமாக இருந்தது. அத்தனை மரங்கள் இருந்தும் காற்று வீசாததால் ஜீவிப்பதே கஷ்டம் என்ற சூழ்நிலை உண்டானது. அருகில் இருந்த நீர் நிலை சுத்தமாக வற்றிப்போய் விட்டது. கட்டாந்தரையாகிவிட்டது.

நிலத்தடி நீரும் இல்லாமல் போய்விட்டது. ஒவ்வொரு மரமாக பட்டுக் கொண்டே வந்தது. கடைசியில் அது ஆலமரத்தையும் தொற்றிக் கொண்டது. கொஞ்சம் கொஞ்சமாக  புற்று நோயைப் போல மரத்தின் ஒவ்வொரு பகுதியும் பாதிப்பிற்கு உள்ளானது. இலைகள் அனைத்தும் உதிர்நது விட்டன. கிளைகள் எல்லாம் காய்ந்து விறகுக்கு மட்டுமே  பயன்படக் கூடிய நிலைக்கு ஆளாயின.

நம் நாயகன் கிளியைத் தவிர அதில் வசித்துவந்த மற்ற பறவைகள் அனைத்தும் இடம் பெயர்ந்து வனத்தின் வேறு பகுதிக்கு தங்களைக் காப்பாற்றிக் கொள்ளப் போய் விட்டன.

சரியான ஆகாரம் மற்றும் தண்ணீர் இன்றி கிளியும் வாட்டமுற்றுத் தன் பொலிவை இழந்து, இன்றோ அல்லது நாளையோ உயிரைவிடும் நிலைமைக்கு ஆளாகி விட்டது.

உடல் மெலிந்து, செயல் இழந்து, சிறகுகள் உதிர்ந்து, காண்பதற்குப் பரிதாபமான நிலைக்கு வந்து விட்டது. ஆனாலும் அது தன் மன உறுதியை விடாமலும், வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்து செல்வதற்கு விருப்பமில்லாமலும், அந்த பொந்திலேயே இருந்தது.

கண்ண பரத்மாத்மாவின் கவனத்திற்கு இது வந்தது. பறவைகளுக்கு உள்ள நியதிகளை மறந்து, அங்கேயே பிடிவாதமாக இருக்கும் கிளியின் மன நிலையை அறிந்து கொள்வதற்கும், அதற்கு உதவி செய்வதற்கும் அவர் அங்கே காட்சி கொடுத்தார்.

வந்தவர், தன் அன்புக் கரங்கரங்களால், கிளியைப் பிடித்துத் தடவிக் கொடுத்துவிட்டுக் கேட்டார்:

”ஏன் இந்த முட்டாள்தனம்? வேறு இடங்களுக்குப் பறந்து போகாமல், ஏன் இங்கேயே இருந்து உயிரை மாய்த்துக் கொள்ளப் பார்க்கிறாய்? உனக்கு இன்னும் வயது  இருக்கிறது. காலம் இருக்கிறது. உடனடியாக வேறு ஒரு பசுமையான இடத்திற்குப் பறந்து செல்!

கிளி வந்தவர் கடவுள் என்பதை உணர்ந்து அடக்கமாகப் பதில் சொன்னது:

”இல்லை பகவானே என் தாயை விட்டுவிட்டு வேறு இடத்திற்குச் செல்ல எனக்கு மனமில்லை. அவளுக்கு ஏற்படும் முடிவு எனக்கும் ஏற்படட்டும் என்றுதான் என்  தாயோடு நான் இருக்கிறேன்.

”தாயா? யார் உன் தாய்?”

”இந்த மரம்தான் பகவானே!”

”எப்படிச் சொல்கிறாய்?”

”நான் ஒரு மாதக் குஞ்சாக இருக்கும்போதே என்னைப் பெற்ற தாய் என்னைவிட்டுப் போய் விட்டாள். என் தாயின் முகம் கூட எனக்கு நினைவில் இல்லை. இந்த மரம்தான் எனக்குத் தாயாக அடைக்கலம் கொடுத்தது. உணவைக் கொடுத்தது. வெய்யிலிலும், மழையிலும் நான் பாதுகாப்பாகத் தங்க ஒரு பொந்தையும் கொடுத்து என்னை  அரவணைத்தது. இந்த மரம்தான் என் தாய். என் தாய் நலிவுற்றிருக்கும் சமயத்தில் என் தாயைக் கைவிட்டு விட்டுப்போக என் மனம் ஒப்பவில்லை. அதனாலதான்  இங்கேயே இருக்கிறேன். என் தாய்க்கு நேரவிருக்கும் முடிவு எனக்கும் ஏற்படட்டும்”

நெகிழ்வுற்ற பகவான், புன்னகையோடு சொன்னார்

“உன் நல்ல மனதை நான் பாராட்டுகிறேன். உனக்கு வரம் ஒன்றைத் தருகிறேன். என்ன வேண்டும் கேள்”

கிளி என்ன கேட்டிருக்கும், சொல்லுங்கள்!

தனக்கும், தன் தாய்போன்ற மரத்திற்கும் மட்டும் பலனைக் கேட்காமல் ஒட்டு மொத்த வனாந்திரத்திற்கும் சேர்த்துப் பலனைக் கேட்டது.

“பகவானே! இந்த வனாந்திரம் பழைய நிலைமைக்குத் திரும்ப வர வேண்டும். பழைய பொலிவிற்கு வர வேண்டும். அருள் செய்யுங்கள்!”

கிளியின் விசுவாசத்தையும், பெருந்தன்மையையும் எண்ணி வியந்த பகவான், “அப்படியே ஆகட்டும்!” என்றார்

என்னவொரு அதிசயம்!. ஒரே நொடியில் வனாந்திரம் முழுவதும் முன்னிருந்த நிலைமைக்குத் திரும்பியது! பகவானின் அருள் இருந்தால், அவருடைய கடைக்கண் பட்டால் என்னதான் நடக்காது?

“நன்றாக இரு” என்று கிளியை வாழ்த்திவிட்டுப் பகவான் மறைந்தார்.

கிளியும் பழைய பொலிவிற்குத் திரும்பி வந்திருந்தது. அள்வில்லாத மகிழ்ச்சி கொண்ட கிளி, தன் சிறகுகளை விரித்து அந்த ஆலமரத்தைச் சுற்றிப் பலமுறைகள் வலம் வந்தது.

தாயைப் போன்று தனக்கு அடைக்கலம் கொடுத்த அந்த மரத்திற்கு நன்றி சொல்லவும், வணங்கவும், அந்தக் கிளி அவ்வாறு பறந்து வலம் வந்தது என்று அதை நாம்  எடுத்துக்கொள்வோம்

 ++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

1.1.13

புத்தாண்டைப் புன்னகையுடன் துவங்குவோம்!


வகுப்பறைக் கண்மணிகள், நண்பர்கள், சகபதிவர்கள், சகோதரிகள் அனைவருக்கும் வாத்தியாரின் மனம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!
இறையருளால், இந்த ஆண்டில் உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்!

அன்புடன்,
மற்றும் இனிய, மனம் நிறைந்த வாழ்த்துக்களுடன்
வாத்தியார்
--------------------------------------------------------------------------------------------------------------

என்ன குறைச்சல்?  இந்தக் கணத்தில் உலகம் ந்ன்றாகத்தான் இருக்கிறது!

 கடவுள் கொடுத்த முதல் வரம் தூக்கம்! இப்ப்டியொரு தூக்கம் போடுங்கள்!
கவலைகள் காணாமல் போய்விடும்

உங்களுக்கு மட்டுமா  பூவோடு புத்தாண்டு வாழ்த்துக்களைச் சொல்லத் தெரியும்? நாங்களும் சொல்லுவோம்!


 தொழில்நுட்ப வல்லுனர்; புத்தாண்டு விருந்திற்காக சமையல் செய்கிறார்!

 புத்தாண்டுச் செய்தி: அடிக்கடி மாற்ற் வேண்டிய இரண்டு
-------------------------------------------------------------------------------------------- 
புத்தாண்டுப் பொன்மொழி!
 V
V
V
V
V
V

The best part of life is when family members become your friends and friends become family.

 ------------------------------------------------------------------------------------------------------------------
 நாற்பது வயதிற்குக் கீழே உள்ளவர்கள் மட்டும் ஸ்க்ரோல் டவுன் செய்து  கீழே உள்ள படத்துடன் கூடிய செய்தியைப் பாருங்கள். 
மற்றவர்கள்  
மேலே உள்ள பொன்மொழியை மீண்டும் ஒருமுறை படித்து விட்டுப் 
புன்னகையுடன்,  பதிவை விட்டு விலகவும்!
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V

இரண்டுமே மருந்துதான். ஒன்று வெளிக் காயங்களுக்கு : மற்றொன்று உள் காயங்களுக்கு!
நகைச்சுவையாக எடுத்துக் கொள்ளுங்கள். சீரியஸ் ஆகிவிடாதீர்கள்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!