மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

28.8.08

ஜோதிட நூல் அறிமுகம் : அலெக்ஸாண்டர் முதல் ஜியா-உல் ஹக் வரை!


வித்தியாசமாக ஒரு இடுகையைத் தரும் பொருட்டு, ஜோதிட நூல் ஒன்றை
உங்களுக்கு இன்று அறிமுகம் செய்கிறேன்.

திரு.ரேவன சித்தப்பா என்னும் கல்லூரிப் பேராசியர் சரித்திரப்பாடங்களில் விற்பன்னர்
அந்தத் துறையில் கரைகண்டு சரித்திரப் பாடங்களைப் போதிக்கும் ஆசிரியராகப் பல
ஆண்டுகள் கல்லூரியில் பணியாற்றியவர். அதே நேரத்தில் ஜோதிடத்தில் மிகுந்த
நம்பிக்கை உடையவர்.

உலகப் புகழ் பெற்ற 60 பிரபலங்களின் சரித்திரத்தை ஆராய்ந்து அவர்களைப் பற்றி,
அவர்களுடைய காலத்துத்துச் ஜோதிடர்கள் சொன்னது என்ன? அதன்படி நடந்ததா?
என்று அசத்தலாக எழுதியுள்ளார்.

Blitz (Mumbai) , Sadhane (Bangalaore University), Sidda Ganga போன்ற சஞ்சிகை
களிலும், வார இதழ்களிலும் அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல்.

1. அலெக்ஸாண்டர், 2 ஜூலியஸ் சீசர், 3.புத்தர், 4 ராணி மேரி 5. ராணி எலிஸபெத்
6. ஐந்தாம் ஜார்ஜ் மன்னர், 7 எட்வர்டு மன்னர், 8 .நெப்போலியன், 9 ஜவஹர்லால் நேரு.
10. ப்ரொஃபட் முகமது.11 அக்பர். 12, மர்லின் மன்ரோ 13. ஷேக் முஜிபிர் ரெஹ்மான்
14. ஜியா உல் ஹக் என்று 60 பிரபலங்கள் மற்றும் பிரெஞ்சுப் புரட்சி போன்ற பல
சம்பவங்களை, ஜோதிடம் மற்றும் சரித்திரப் பின்னணியில் அவர் எழுதியுள்ளார்.

அதாவது ஜோதிடன் சொன்னது என்ன? அதன்படி நடந்தது என்ன? என்பவற்றை
ஆதாரங்களோடு எழுதியுள்ளார்

நாம் எல்லாம் பகுத்து அறிபவர்கள் அதானால் நமக்கு சம்பவங்களைவிட ஆதாரங்கள்
முக்கியம்.

ஆதாரம் இல்லாமல் எழுதினால் நம்மைக் கிழித்துத் தொங்க விட்டு விடுவார்கள்.

இந்தப் புத்தகங்களில் நிறைய ஆதாரங்களோடு பேராசிரியர் மாய்ந்து மாய்ந்து எழுதியுள்ளார்

ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் படித்தால் மிகவும் சந்தோஷமடைவார்கள்.
அதனால் இதை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்.

விரும்பியவர்கள் தேடிப் பிடித்து, வாங்கிப் படியுங்கள்.

எங்கே தேடுவதா?

ஸிம்ப்பிள்: அந்தப் பதிப்பகத்திற்கே கடிதம் எழுதுங்கள் கிடைக்காமலா போய்விடும்?

இந்தப் புத்தகத்தை நான் வாங்கிய ஆண்டு 1992. (ஹைதராபாத் சென்றிருந்த சமயம்,
அங்கே விமான நிலையத்தில் இருந்த ஹிக்கின்பாதம்ஸ் புத்தகக் கடையில் இதை
வாங்கியதாக நினைவு.

பக்கங்கள் 92
அன்றைய விலை: ரூ.18:00

புத்தகத்தின் பெயர்: Alexander to Zia -Ul- Hag

ஆசிரியர்: H. Revanasiddappa (Reader in History, Siddaganga College, Tumkur, Karnataka)

பதிப்பகத்தின் பெயரும், முகவரியும்:

Shashi Prakashana,
Third Main,
K.R.Extension,
Tiptur - 572 202
Karnataka

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!

25.8.08

எப்போது நல்ல காலம்?


கடவுள் உங்கள் கண்முன்னே தோன்றி (ஒரு பேச்சுக்குத்தான் சாமி!),
"உனக்கு ஒரு வரம் தருகிறேன் - என்ன வேண்டும் கேள்" என்றால்
என்ன கேட்பீர்கள்? (விருப்பமுள்ளவர்கள் பின்னூட்டத்தில்
தெரியப்படுத்துங்கள்)

முருகப்பெருமானின் தீவிர பக்தரான வீரபாகுவிடம், முருகன் நேரில்
காட்சி கொடுத்துக் கேட்டபோது, வீரபாகு சொன்னாராம்: "அப்பனே!
என் வாழ்நாள் முழுவதும் உன்னைத் துதிக்கின்ற பாக்கியம் வேண்டும்"

"அதைத் தந்தேன்; இன்னொன்றும் தருகிறேன், அடுத்ததைக் கேள்"
என்று முருகப்பெருமான் சொன்னபோது, வீரபாகு அடுத்ததாக என்ன
கேட்டார் தெரியுமா?

"உன்னைத் துதிக்கின்ற பாக்கியம் தவிர வேறு சிந்தனை இல்லாத
மனம் வேண்டும்!"
------------------------------------------------------------------------------------
நாம் அப்படிக் கேட்டிருப்போமா என்றால் - நிச்சயம் கேட்டிருக்க மாட்டோம்.

இன்றைய 13% inflation லெவலில் அது சாத்தியமில்லாதது.
அரசு சொல்வது 13%. ஆனால் உண்மையில் 20% இருக்கும்போல் உள்ளது!

சரி, விஷயத்திற்கு வருகிறேன். நம்ம ஆசாமி ஒருவனிடம் - அதாவது
நம்ம காலத்து ஆசாமி ஒருவனிடம் - இன்னும் விளக்கமாகச் சொன்னால்
நமீதாயுகத்து ஆசாமி ஒருவனின் கண்முன்னே இறைவன் தோன்றி,
அதே போன்று சொல்ல, அவன் என்ன வரம் கேட்டான் தெரியுமா?

"ஆண்டவனே, நான் என்னுடைய நூறாவது வயதில், அழகான என்
மனைவியோடு, என்னுடைய ஆயிரம் ஏக்கர் பண்ணைத் தோட்டத்தில்
உள்ள, பத்து மாடி மாளிகையில், சுயமாக படிகளில் கடகடவென்று
நானே ஏறி உச்சி மாடத்திற்குச் சென்று, கண்ணாடி அணியாத என்
கண்களால், கீழே தோட்டத்தில் அமர்ந்து தங்கத்தட்டில் சாப்பிட்டுக்
கொண்டிருக்கும் என்னுடைய கொள்ளுப் பேரனை, மனங்குளிரப்
பார்த்து மகிழும் பாக்கியம் வேண்டும்."

ஜாதகத்தின் 36 பாக்கியங்களும் இதில் அடங்கியிருக்கும்.அப்படியொரு
வரனைக் கேட்டான் அந்தக் கில்லாடி. அவன் கேட்கும்போது வயது 25

ஒரு வரம் கேள் என்று சொன்னால் எப்படிக் கேட்பதாம்.
இப்படித்தான் கேட்க முடியும்!:-))))
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நம் வகுப்பறை வாசகர் ஒருவர் தன்னுடைய ஜாதகத்தை அனுப்பினால்
பார்த்துச் சொல்ல முடியுமா? என்று கேட்டு எழுதியிருந்தார்.

நான் தொழில்முறை ஜோதிடன் அல்ல! ஜோதிடத்தைப் படித்தவன்
அவ்வளவுதான். ஆர்வக் கோளாரினால் பதிவில் எழுதிகொண்டிருக்கிறேன்.
அல்லது ஜாதகப்படி எனது கெட்ட நேரத்தினால் பதிவுகளில் எழுதிக்
கொண்டிருக்கிறேன் (போதாத காலம்). அதை இன்னும் சிறப்பாக எழுத
வேண்டும் என்று ஆசை. நிறையப் பேர்களுக்கு அது பயன்படும்.
அதற்கே எனக்கு நேரம் பற்றவில்லை.அதோடு என் சொந்தத் தொழிலையும்
நான் பார்க்க வேண்டும். ஆகவே, மன்னிக்கவும் பார்க்க இயலாது'
என்று பதில் எழுதியிருந்தேன்.

அவர் விடவில்லை. அடுத்தடுத்து ஏழு மின்னஞ்சல்களில் கெஞ்சி
எழுதியிருந்தார். சரி போனால் போகிறது இவர் ஒருவருக்கு மட்டும்
நமது விதுமுறைகளைத் தளர்த்துவோம் என்று எண்ணி, சரி உங்கள்
Horoscope or Full Bith details with one important query அனுப்பி
வையுங்கள் என்று எழுதியிருந்தேன்.

அவர் ஒரே ஒரு கேள்விதான் கேட்டிருந்தார். அது மேலே அந்தக்
கில்லாடி கேட்ட வரம் போல அவ்வளவு விஷயங்களையும்
உள்ளடக்கியிருந்தது. அந்தக் கேள்வியைக் கீழே கொடுத்துள்ளேன்.

அவருக்கு வயது 28. அதை மனதில் வைத்துக் கொண்டு அவருடைய
கேள்வியைப் படிக்கவும்.

"என் திருமணம், மனைவி, குழந்தைகள், வேலை, வீடு, கார் வாங்கும்
யோகம், ஆயுள் ஆகிய விஷயங்களில் என்னுடைய எதிர்காலம்
எப்படி இருக்கும்?"
------------------------------------------------------------------------------
ஒரே ஒரு கேள்வி கேளுங்கள் என்று சொல்லும்போது கேள்வி எப்படி
இருக்க வேண்டும்?

உதாரணத்திற்கு இரண்டைக் கொடுத்துள்ளேன்.

1. எனக்கும் என் மனைவிக்கும் அடிக்கடி வாக்கு வாதம் ஏற்பட்டு
பெரிய பிரச்சினையாகிவிடுகிறது. அடிக்கடி மன நிம்மதி இழந்து
தவிக்கிறேன். இதற்கு என் ஜாதகப்படி என்ன காரணம்?

பதில்: உங்களுக்கு இரண்டில் - வாக்கு ஸ்தானத்தில் ராகு. ஆகவே
மனைவி என்றில்லை , எவருடனும் நீங்கள் வாயைத் திறந்தால்
சண்டையில்தான் போய் முடியும். ஆகவே விவாதங்களைத் தவிருங்கள்!

2. எனக்கு தற்சமயம் வேலையில் பெரும் பிரச்சினையாக உள்ளது.
பிரச்சினைகள் எப்போது குறையும்?

பதில்: உங்கள் ஜாதகத்தில் பத்தாம் வீட்டிற்கு எட்டாம் இடத்தில்
கோச்சாரச் சனி இருக்கிறார். அவர் இன்னும் பதினான்கு மாதங்கள்
அங்கே இருப்பார். அதுவரை அப்படித்தான் இருக்கும். எச்சரிக்கையாக
இருங்கள். சக ஊழியர்களுடன் மல்லுக் கட்டாதீர்கள். அனுசரித்துப்
போங்கள்.
-------------------------------------------------------------------------------
ஆனால் வேறு சிலரது மின்னஞ்சல்கள் சிம்ப்பிளாக இருக்கும் - ஆனால்
சிக்கலாக இருக்கும். கேள்வியைப் பாருங்கள். "சார், நான் மிகவும்
துன்பத்தில் இருக்கிறேன். எனக்கு எப்போது நல்ல காலம் பிறக்கும்?"

முதலில் நான் ஆராய்ச்சியில் இறங்க வேண்டும். மனிதர் துன்பத்தில்
இருக்கிறேன் என்று எழுதியிருக்கிறாரே என்னவிதமான துன்பம்.
அந்தத் துன்பம் எந்த பாவத்தை வைத்து இவருக்கு ஏற்பட்டிருக்கும்.
அதுவும் இந்த வயதில். நான்காம் வீட்டை வைத்தா? அல்லது ஏழாம்
வீட்டை வைத்தா?, அல்லது பத்தாவது வீட்டை வைத்தா? அல்லது
எதை வைத்து?

துன்பம் எதைவைத்து வேண்டுமென்றாலும் ஏற்படலாமில்லையா?

அதை அவர் எழுத மாட்டார். நானே அதையும் NASA வேலை செய்து
கண்டுபிடித்து, அவருக்குத் தீர்வும் சொல்ல வேண்டும்.

எப்படி இருக்கிறது கதை?
---------------------------------------------------------------------------------
சரி, பொதுவாகப் பேசுவோம்!

நல்ல காலம் என்றால் என்ன?

1. வேலையின்றித் தவிப்பவருக்கு வேலை கிடைத்தால் அது நல்ல காலம்!

2. வேலையில் இருப்பவருக்கு, அதை விட பெட்டர் சான்ஸ் (நல்ல
நிறுவனம் அல்லது நல்ல ஊதியம்) கிடைத்தால் அது நல்ல காலம்!

3. திருமணம் ஆகாமல் தள்ளிக்கொண்டே போகிறவருக்குத் திருமணம்
முடிந்தால் அது நல்ல காலம்!

4. திருமணம் முடிந்து சில ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாதவர்
களுக்குக் குழந்தை பிறந்தால் அது நல்ல காலம்!

5. குழந்தை இருப்பவருக்கு அது அடிக்கடி நோய்வாய்ப்பட்டுப் படுத்தாமல்
இருந்தால் அது நல்ல காலம்!

6. குடும்பஸ்தர்களுக்கு, வாடகை வீட்டில் குடியிருக்காமல் சொந்த வீடு
வாங்கினால் அல்லது ஃப்ளாட் வாங்கினால் அது நல்ல காலம்.

7. சொந்த வீட்டில் குடியிருப்பவர்களுக்கு, அந்த வீட்டிற்காக வாங்கிய
கடனைத் தீர்க்கும் நிலை ஏற்பட்டால் அது நல்ல காலம்.

8. கிரிடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு அதை ஜீரோ லெவலுக்கு
கொண்டு வரும் நிலை ஏற்பட்டால் அது நல்ல காலம்.

இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்!
---------------------------------------------------------------------------------
ஜாதகத்தை வைத்து நல்ல காலம் எப்போது என்பதை எப்படிப் பார்ப்பது?

நடப்பது எந்தக் கிரகத்தின் திசை, எந்தக் கிரகத்தின் புத்தி என்பதை முதலில்
குறித்துக் கொள்ளுங்கள். ஜாதகத்தில் அந்த தசா நாதனும், அந்த
புத்திநாதனும் ஒருவருக்கொருவர் 6/8 பொஸிசனில் இருக்கக்கூடாது.
அல்லது 1/12 பொஸிசனிலும் இருக்கக்கூடாது. இருந்தால் அந்த திசையில்
அந்த புத்தி நன்மையைச் செய்யாது. இதுதான் குறுக்குவழி ஃபார்முலா!

இதை வைத்து அதாவது இந்த ஃபார்முலாவை வைத்து, அடுத்தடுத்து
வரப்போகும் புத்திகளுக்கும் குறித்துக் கொண்டே வாருங்கள், உங்களுக்கு
நல்ல நேரமும், கெட்ட நேரமும் பிடிபட்டு விடும்.

முன் பதிவில் புலிப்பாணி முனிவரின் தசாபுத்திப் பலன்களைக்
கொடுத்துள்ளேன். அதை வைத்தும் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

1ம் வீடு, 5ம் வீடு, 9ஆம் வீடு, 4ஆம் வீடு, 7ஆம் வீடு, 10ஆம் வீடு
ஆகிய வீட்டு அதிபதிகளின் தசா அல்லது புத்தி நடைபெற்றாலும்,
அவர்கள் ஜாதகத்தில் வலுவாக இருந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

எல்லாவற்றையும் விட, 11ஆம் வீட்டு அதிபரின் தசா அல்லது புத்தி
நடைபெற்றால், அவர் ஜாதகத்தில் வலுவாக இருந்தால் மிக நல்ல பலன்கள்
கிடைக்கும்.

ஜாதகத்தில் உச்சமாக உள்ள கிரகங்களின் தசா அல்லது புத்தி
நடைபெற்றாலும் நல்ல பலன்கள் கிடைக்கும்.

நீசமாக உள்ள கிரகங்களின் தசா அல்லது புத்தி நடைபெற்றால்
நல்ல பலன்கள் கிடைக்காது.

தசாபுக்திதான் முக்கியம். அதற்கடுத்தபடிதான் கோச்சாரப் பலன்கள்.
----------------------------------------------------------------------------------
கோச்சாரத்தில் (in transit) குரு பகவானின் சஞ்சாரம் முக்கியமானது.
குருவானவர் சந்திர ராசிக்கு 5ஆம் இடம், 7ஆம் இடம், 9ஆம் இடம்,
11ஆம் இடம் ஆகிய இடங்களில் வாசம் செய்யும் காலங்களில் நல்ல
பலன்களைத் தருவார்.

1ஆம் இடம், 3ஆம் இடம், 6ஆம் இடம் 4ஆம் இடம் 8ஆம் இடம்,
10ஆம் இடம் 12ஆம் இடம் ஆகிய இடங்களில் சஞ்சாரம் செய்யும்
காலங்களில் குரு பகவான் நன்மை செய்ய மாட்டார்.

மூன்றாம் இடச் சஞ்சாரத்தில் குரு பகவான் தீமையான பலன்களைத்தான்
நல்குவார்.

குருவின் 3ஆம் இட சஞ்சாரத்தின் தன்மையை விளக்கும் பாடல்

"கேளப்பா குருபதியும் மூன்றிலேறக்
கெடுதிமெத்த செய்வானடா வேந்தன்தானும்
ஆளப்பா அகத்திலே களவுபோகும்
அப்பனே அரிட்டமடா சிசுவுக்குத் தான்
கூளப்பா குவலயங்க ளெல்லாம் ஆண்ட
குற்றமிலாகாந்தாரி மகனும் தானும்
வீளப்பா வீமன் கை கதையினாலே
விழுந்தானே மலைபோல சாய்ந்தான் சொல்லே!"
- புலிப்பாணி பாடல்

இந்த ஒரு பாடலே படித்து விளங்கிக் கொள்வதற்கு எவ்வளவு சிரமமாக
இருக்கிறது பாருங்கள். அந்தக் காலத்தில் ஜோதிடம் கற்றவர்கள் எல்லாம்
பாடல்களை வைத்துத்தான் பாடங்களைக் கற்றார்கள். உரை நடைப்பாட
மெல்லாம் இப்போது ஐம்பது ஆண்டுகளாகத்தான் புழக்கத்தில் இருக்கின்றன
அதற்கு முன்னால் நஹி சாமி, நஹி!

"குமாரசுவாமியம்" என்னும் தமிழ் ஜோதிட நூல் இன்னும் இதைவிடக்
கடினமான தமிழ்ப் பாடல்களால் எழுதப்பெற்றிருக்கும்.

அதைக் கையில் கொடுத்தால், இன்றைய இளைஞன் ஜோதிடமே வேண்டாம்
என்று ஓடிப்போவிடுவான்.
--------------------------------------------------------------------------------
மிக மிக மோசமான காலம் எது?

மாந்தி (குளிகன்) அமர்ந்திருக்கும் ராசிநாதனின் தசாபுத்தி மிகவும்
மோசமானதாக இருக்கும்.
------------------------------------------------------------------------------
மிகவும் சூப்பரான நல்ல காலம் எது?

சந்தேகமில்லாமல் பதினோராம் இடத்து நாயகனின் புத்திதான்!
------------------------------------------------------------------------------
பதிவின் நீளம் கருதியும், உங்களின் பொறுமை கருதியும், என்னுடைய
எழுதும் நேரம் கருதியும், இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன்.

மற்றவை அடுத்த வகுப்பில்!

அன்புடன்,
வகுப்பறை வாத்தியார்

வாழ்க வளமுடன்!

20.8.08

ஏழரைச் சனி என்ன செய்யும்?


ஏழரைச் சனி என்ன செய்யும்? என்ன வேண்டுமென்றாலும் செய்யும்!

ஏழை, பணக்காரன், படித்தவன், படிக்காதவன், பதவியில் இருப்பவன், பதவியில்
இல்லாதவன், புத்திசாலி, முட்டாள் என்ற வித்தியாசம் எதுவும் சனிக்குக் கிடையாது!
துவைக்க வேண்டிய ஆளைத் துவைத்துக் காயப்போட்டு, அயர்ன் பண்ணி மடித்து
அலமாரியில் வைத்து விட்டுப் போய்விடுவார் சனீஸ்வரன்.

பல காரியங்கள் கண் இமைக்கும் நேரத்தில் நடந்து விடும்.

இதற்கு உதாரணமாக பல விபத்துக்களைச் சொல்லலாம். எத்தனை விபத்துக்களில்
எத்தனை பேர் உருவம் தெரியாமல் போயிருக்கிறார்கள்?

நீங்கள் அற்புதமாகக் கார் ஓட்டக்கூடியவர்தான், உங்கள் காரும் புதிதாக
அவ்வளவு சேஃப்டி வசதிகளையும் கொண்ட கார்தான் என்றாலும் எதிரில்
வருகிறவன் தவறு செய்தால் நீங்கள் என்ன செய்ய முடியும்? அல்லது
பின்னால் வருகிறவன் தவறு செய்தால் நீங்கள் எப்படித் தப்பிக்க முடியும்?

மெக்காஃபி, ஏ.வி.ஜி என்று ஸ்கேனர் வைத்தெல்லாம் சனியைத் தடுத்து நிறுத்த
முடியாது. அதே போல எவ்வளவு பெரிய ஆள் என்றாலும் அதற்குரிய நேரம்
வந்து விட்டால் என்ன நடந்தது என்று நினைக்கு முன்பே எல்லாம் நடந்து
முடிந்திருக்கும்.

எல்லைக் காவல் படைகளை ஏ.கே47 உடன் வாசலில் வைத்துத் தடுக்கவும்
முடியாது. நேரம் வந்தால் யார் யாரை எப்படிப் போட வேண்டுமோ அப்படிப்
போட்டு விடுவார்.

விபத்து என்றில்லை. வாழ்க்கையில் பலவித இன்பங்களையும், துன்பங்களையும்
நமது ஜாதகப்படி அளந்து கொடுத்துவிட்டுப்போகிறவர் அவர்தான்.

ஏழரைச் சனி என்றால் என்ன?

ஒருவரின் சந்திர ராசிக்கு, முன் ராசியிலும், சந்திர ராசியிலும், அதற்கு அடுத்த
ராசியிலும் சனீஷ்வரன் சஞ்சாரம் செய்யும் காலமே ஏழரைச் சனியாகும்!

உங்களுக்குப் புரியும்படி உங்கள் மொழியில் சொன்னால், அந்த மூன்று வீடுகளில்
தலா இரண்டரை வருடங்கள் வீதம் மொத்தம் ஏழரை ஆண்டுகள் அவர் வந்து
(அழைக்காத) விருந்தாளியாகத் தங்கிவிட்டுப் போகும் கால கட்டமே ஏழரைச்
சனியாகும்.

அதென்ன இரண்டரை வருடக் கணக்கு?

அவர் வானவெளியில் எல்லா ராசிகளிலும் ஒரு ரவுண்டு அடித்துக் ஹாயாக
சுற்றிவரும் மொத்த காலம் 30 ஆண்டுகள் ஆகும். அதை ராசிக் கணக்கிற்குக்
கொண்டு வர 30 வருடங்கள் வகுத்தல் 12 ராசிகள் = இரண்டரை ஆண்டுகள்.

அவருடைய தொல்லைகளில் இருந்து தப்பிக்கும் யோகம் உண்டா?

உண்டு!

அந்த மூன்று ராசிகளிலும் அஷ்டவர்க்கப் பரல்கள் 30ற்குமேல் இருந்தால்,
அவருடைய தொல்லைகள் தடுக்கப்பெற்றுவிடும். ஜாதகன் தப்பித்துவிடுவான்.
அந்த மூன்று ராசிகள் என்றில்லை. அவற்றில் ஒன்றில் 30 பரல்கள் இருந்தால்
கூட அந்தப் பகுதிக்கு உரிய இரண்டரை வருடங்கள் ஜாதகன் நிம்மதியாக
இருக்கலாம்.

அப்படி எத்தனை முறை அவர் வலம் வருவார்?

80 அல்லது 90 வயதுவரை ஒருவருக்கு ஆயுள் என்றால், மூன்று முறை அவர்
விருந்தினராகத் தங்கிவிட்டுப்போவார்.

தொல்லைகள் ஒரே மாதிரியாகவா இருக்கும்?

இல்லை! வேறுபடும்!

முதல் சுற்று: மங்கு சனி.மங்கு என்பதற்கு மங்கிப் போகுதல் என்று பொருள்
அடுத்த சுற்று: பொங்கு(ம்) சனி
மூன்றாவது சுற்று: அந்திம காலச் சனி!

அந்திம காலம் என்றால் என்ன வென்று தெரியாதவர்கள் பின்னூட்டத்தில்
கேளுங்கள் சொல்கிறேன்.

இவற்றுள் முதல் சுற்றுதான் மிகவும் மோசமானது!

சிலர் பிறக்கும்போதே ஏழரைச் சனியுடன் பிறப்பார்கள். உதாரணத்திற்கு பூசம்,
ஆயில்யம், மகம், பூரம், உத்திரம், ஹஸ்தம், சித்திரை முதல் 2 பாதங்களில்
இன்றைக்குப் பிறக்கும் குழந்தைகள் ஏழரைச் சனியுடன் பிறந்துள்ளன என்று
வைத்துக் கொள்ளுங்கள்.

குழந்தைகளின் ஜாதகம் 12 வயதுவரை வேலை செய்யாது. அவர்களுக்கு
அவர்களுடைய பெற்றோர்களின் ஜாதகப்படிதான் பலன்கள்.

ஒரு குழந்தை அந்த வயதிற்குள் ஏழரைச் சனியின் பிடியில் அகப்பட்டால்,
அந்தக் குழந்தைக்கு எதுவும் தெரியாது. அதனுடைய அவதிகளைப் பெற்றோர்கள்
தான் அனுபவிக்க நேரிடும்.

அதற்கு அடிக்கடி உடல் நலம் குன்றி பெற்றோர்களை அவதிப்பட வைக்கும்.

பன்னிரெண்டு வயதிற்கு மேல் சனிப்பிடித்தால் குழந்தையின் கவனம் சிதறும்.
சரியான கவனத்தைப் படிப்பில் செலுத்தாது. Drop out from School கேசாகிவிடும்.
பத்து, ப்ளஸ் டூ வகுப்பில் பெயிலாகும் குழந்தைகளில் பெரும்பாலோனருக்கு
ஏழரைச் சனி நடந்து கொண்டிருக்கும்.

அதென்ன சார், பெரும்பாலோர்கள் என்று சொல்லித் தப்பிக்கின்றீர்கள்
என்று கேட்கதீர்கள். சிலருக்கு படிப்பு, மற்றும் வித்தைக்குரிய கிரகமான புதன்
ஜாதகத்தில் பலவீனமாக இருந்து அதனால் அவர்கள் தோல்வியுற நேரலாம்.
அவை விதிவிலக்கு.

ஏழரைச் சனியின் முதல் பகுதியை (முதல் இரண்டரை வருடங்களை) விரையச்
சனி என்பார்கள் கோச்சாரப்படி சந்திர ராசிக்கு அது 12ஆம் இடம். ஆகவே
அது விரையச் சனி காலம். பண நஷ்டம், காரிய நஷ்டம், உடல் உபாதைகளால்
நாள் கணக்குகள் நஷ்டம் என்று நஷ்டமாகவே அக்காலம் கழியும்.

அடுத்த பகுதியை (அடுத்த இரண்டரை வருடங்களை) ஜென்மச் சனி என்பார்கள்.
அதாவது ராசியைக் கடந்து செல்லும் காலம். அந்தக் கால கட்டங்களில் ஏகத்துக்கும்
மனப் போராட்டமாக இருக்கும். மன உளைச்சல்களாக இருக்கும்.

அடுத்த பகுதியை (அடுத்த இரண்டரை வருடங்களை) கழிவுச் சனி என்பார்கள்.
அந்தக் காலகட்டம், கடந்து போன ஐந்தாண்டுகளை விடச் சற்று தொல்லைகள்
குறைந்ததாக இருக்கும்.

அப்பாடா சாமி என்று நிம்மதிப் பெரு மூச்சை ஏழரை வருடங்கள் கழிந்த பிறகுதான்
விட முடியும்.

அந்த முதல் பகுதியான விரையச் சனி நடக்கும் காலத்தில் நடக்கும் திருமணங்கள்
சோபிப்பதில்லை. தம்பதிகளுக்குள், பிரிவு, பிரச்சினை என்று போராட்டமாக
இருக்கும். விவரம் தெரிந்தவர்கள் தங்கள் குழந்தையின் திருமணத்தை விரையச்
சனியின் காலத்தில் நடத்தி வைக்க மாட்டார்கள்.

இரண்டாவது சுற்றில் (அதாவது பொங்கு சனியில்) ஜாதகனைச் சனீஷ்வரன்
கைதூக்கிவிடுவான். The native of the horoscope will be elevated to a good
position.
It level will be according to the strength of the horoscope.

அதுவும் மேளம் அடித்துத் தூக்கிவிட மாட்டான். பல கஷ்டமான அனுபவங்களைக்
கொடுத்த பிறகுதான் தூக்கி உட்காரவைப்பான்.

மூன்றாவது சுற்று அந்திம காலம். ஜாதகனின் ஆயுள் முடியும் நேரம் என்றால் சனி
ஜாதகனுக்குப் போர்டிங் பாஸ் கொடுத்து மேலே அனுப்பி வைத்து விடுவார்.
மேலே என்றால் எங்கே என்று தெரியுமல்லவா?

அதனால் கடைசி சுற்றுச் சனி என்றால் எல்லோரும் பயம் கொள்வார்கள். ஆனால்
அது எல்லோருக்கும் பொதுவானதல்ல! ஒருவனின் ஆயுள் எப்போது முடியும்,
எந்த தசா புத்தியில் அது வரும் என்பது எட்டாம் பாவப் பாடத்தில் வரும்.
அப்போது அதைத் தெரிந்து கொள்ளுங்கள். அதன்படிதான் மூன்றாவது சுற்றில் வரும்
சனி அனுப்பிவைப்பார். இல்லையென்றால இல்லை! மூன்று சுற்றுக்களையும்
கடந்து வாழ்ந்தவர்கள், வாழ்கின்றவர்கள் நிறைய உண்டு!

இன்றைக்குத் தேதியில் சனி எங்கே இருக்கிறார்?

சைடுபரில் உள்ள ஜகன்நாதஹோரா மென்பொருளை திறந்தீர்கள் என்றால்
அது அன்றைய தேதியில் உள்ள கிரக நிலைகளைக் காட்டும். அதில் சனி,
இன்றையத் தேதியில் சனி சிம்மத்தின் 16.06 வது பாகையில் உள்ளதை அது
காட்டும். அதுபோல எந்தத் தேதிக்கு வேண்டுமென்றாலும் காட்டும்.

ஒரு ராசியில் சனீஷ்வரன் 30 மாதங்கள் தங்கிச் செல்வதால் 30 பாகைகள்
வகுத்தல் 30 மாதங்கள் ஒரு மாதத்திற்கு ஒரு பாகை. சனி பதினாறு பாகையில்
இருக்கிறார் என்றால் சிம்மத்திற்கு அவர் வந்து பதினாறு மாதங்கள் ஆகிவிட்டன
என்பது பொருள். இன்னும் மீதமுள்ள 14 மதங்கள் அங்கே இருந்துவிட்டுப்
பிறகு பெட்டி படுக்கையுடன் அவர் அதற்கு அடுத்த வீடான கன்னி ராசிக்கு
நடையைக் கட்டிவிடுவார்.

இன்றையத் தேதிக்குக் கன்னிராசிக்காரனுக்கு அவர் விரையச் சனி. மாறியவுடன்
ஜென்மச்சனி. சிம்ம ராசிக்காரனுக்கு அவர் இன்றையத் தேதிக்கு ஜென்மச் சனி.
மாறியவுடன் அவர் கழிவுச் சனி. கடக ராசிக்காரனுக்கு அவர் இப்போது கழிவுச்
சனி, மாறியவுடன் அவர்கள்(அதாவது கடக ராசிக்காரர்கள்) ஏழரைச் சனியின்
பிடியில் இருந்து முற்றிலும் விடுபடுவார்கள்.

ஏழரைச் சனியைப் பற்றிய தகவல்களை உங்களுக்கு விவரமாகக் கொடுத்துள்ளேன்
அனைவருக்கும் புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். புரியாதவர்கள், புரியவில்லை
என்று சொல்லுங்கள், தனியாகக் கச்சேரி வைக்கிறேன் (பாடம் எடுக்கிறேன்)
============================================================

எனது இனிய நண்பரும், சக பதிவருமான வடுவூர் குமார் அவர்கள் நமது வகுப்புக்
கண்மணிகளுக்காக ஒரு வீடியோ க்ளிப்பிங்கைத் தனிப் பதிவாக வலையேற்றி
யிருக்கிறார். அனைவரையும் சென்று பார்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்

அதன் சுட்டி இங்கே உள்ளது!
=============================================================

நன்றி,
அன்புடன்,
வகுப்பறை வாத்தியார்

வாழ்க வளமுடன்!

17.8.08

வர்க்கம் எத்தனை வர்க்கமடி?


வர்க்கம் என்பது இரண்டு விதமாகப் பொருள்படும். வருமானம், தொழில்,
அதிகார உரிமை இவற்றின் அடிப்படையில் பிரிக்கப்பெற்ற பிரிவு என்று
ஒருவிதமாகவும், குறிப்பிட்ட ஓர் எண்ணை அதே எண்ணால் பெருக்கிக்
கிடைக்கும் எண் என்று மறுவிதமாகவும் பொருள் படும்.

மொத்தத்தில் பிரிவுதான் வர்க்கம்.

இன்று ஜோதிடச் சக்கரங்களில் உள்ள பல பிரிவுகளை அல்லது வர்க்கங்களை
உங்களுக்குச் சொல்லித் தரவுள்ளேன்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வானவெளியில் சூரியனைச் சுற்றி, சந்திரன், உட்பட அத்தனை கிரகங்களும்
எந்நேரமும் சுழற்சியில் உள்ளன. பூமியும் சுழற்சியில் உள்ளது. அதனால்
ஒவ்வொரு நிமிடமும் பூமிக்கும் கிரகங்களுக்கும் உள்ள தொடர்பு மாறுபட்டுக்
கொண்டே இருக்கிறது.

அந்த கிரகங்களில் இருந்து வெளிப்படும் காந்த அலைகளும் மாறுபடுகின்றன.

அதனால்தான் பூமியில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் அல்லது மனுஷிக்கும்
நிமிடங்களில் ஜாதகங்கள் வேறுபடுகின்றன.

வானவெளியில் பிரிக்கப்பட்டுள்ள ராசிகளும், நட்சத்திரங்களும் மாறுபடுகின்றன.

ஒவ்வொரு நட்சத்திரத்தையும் சந்திரன் கடக்கும் கால அளவு சரியாக 24 மணி
நேரம் என்று கிடையாது. அவற்றிற்கு - அதாவது நட்சத்திரங்களுக்கு இடையே
உள்ள இடைவெளியை (தூரத்தை) வைத்து நட்சத்திரங்களைச் சந்திரன் கடந்து
செல்லும் கால அளவும் மாறுபடும். சில நட்சத்திரங்களை 23 மணி நேரத்திலும்,
சில நட்சத்திரங்களை 25 மணி நேரத்திலும் கடக்கும்.

முதலில் லக்கினத்தை எடுத்துக் கொள்ளுவோம். லக்கினம் என்பது என்னவென்று
முன்பாடத்தில் சொல்லிக் கொடுத்துள்ளேன். புதியவர்கள் அதைப் படித்து அறிந்து
கொள்ள வேண்டுகிறேன்.

நாள் ஒன்றிற்குப் பன்னிரெண்டு லக்கினங்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

ஒரு லக்கினத்தின் கால அளவு இரண்டு மணி நேரம். அதாவது 24 மணி நேரம்
வகுத்தல் 12 ராசிகள் = 2 மணி நேரத்திற்கு ஒரு ராசி = அந்த ராசியை
நோக்கியவாறு ஜனிக்கும் குழந்தைக்கு, அந்த ராசிதான் லக்கினம்.

சித்திரை மாதம் முதல் தேதியன்று சூரிய உதயம் காலை 6.06 நிமிடங்களில்
ஏற்படும் அந்தத் தேதியில் காலை 6.06 மணி முதல் 8.06 மணிவரை பிறக்கும்
குழந்தைகளுக்கு மேஷ ராசிதான் லக்கினம். அதற்கு அடுத்து, அன்றைய தேதியில்
ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் அடுத்தடுத்து ரிஷபம், மிதுனம், கடகம்
என்று லக்கினங்கள் மாறிக்கொண்டே இருக்கும்.

இரண்டு மணி நேரம் (120 நிமிடங்கள்) வகுத்தல் (மாதத்திற்கு) 30 நாட்கள் என்ற
கணக்கில் அடுத்தடுத்து ஒவ்வொரு நாளும் 4 நிமிடங்கள் குறைந்து கொண்டே
வரும். சித்திரை மாதம் 30ஆம் தேதியன்று மேஷ லக்கினத்தில் பிறப்பு லக்கினம்
4 நிமிடங்கள் மட்டுமே பாக்கியிருக்கும். அன்று சூரிய உதய நேரத்திலும்
மாற்றம் இருப்பதால் (அன்று சூரிய உதயம் 5.55) காலை 5.59 வரைதான் மேஷ
லக்கினம். 6.00 மணிக்கு ரிஷப லக்கினம் வந்து விடும்.

வைகாசி மாதம் சூரிய உதயம் காலை 5.53 மணிக்கு. அதை வைத்து இதே
கணக்கில்தான் லக்கினங்கள் குறிக்கப்படும்.

அந்தக் காலத்தில் ஜோதிடன் தன் மண்டையைக் குடைந்து இதைக் கணக்கிடுவான்
இப்போது அந்தக் குடைச்சல்கள் எதுவும் உங்களுக்கு இல்லாமல் கணினி மென்
பொருட்கள் கைகொடுக்கின்றன.

சூரிய உதய அட்டவணையை உங்களுக்காகக் கீழே கொடுத்துள்ளேன். இந்த
அட்டவணை கோட்டு சூட்டுப் போட்டுகொண்டு, கைநிறையச் சம்பளம், பஞ்சப்படி
கள் வாங்கும் அதிகம் படித்த ஒரு விஞ்ஞானி கணித்து எழுதியதல்ல!
பல நூறு வருடங்களுக்கு முன்பு ஜோதிடக் கலை அறிந்த முனிவர்கள் எழுதியது.
இன்றளவும் எந்த விஞ்ஞானியும் இதனுடன் முரண்படவில்லை என்பதே அல்லது
இந்த உதய நேரம் தவறு என்று சொல்லாமல் இருப்பதே ஜோதிடக் கலையின்
மேன்மைக்கு ஒரு சான்று ஆகும். அதையும் நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்

சூரிய உதய அட்டவணையைப் பதிவின் இறுதியில் கொடுத்துள்ளேன்.
அது முன் பதிவில் ஒருமுறை கொடுத்திருந்தாலும், அதைத் தேடி நீங்கள்
களைப்படைய வேண்டாம் என்று மீண்டும் ஒருமுறை கொடுத்துள்ளேன்!
-----------------------------------------------------------------------------------------------
ஒரு லக்கின கட்டத்திற்கு 30 பாகைகள் (degrees)
அதாவது 360 பாகைகள் வகுத்தல் 12 = 30 பாகைகள்
ஒரு லக்கினத்தின் கால அளவு 2 மணி நேரம்.

அப்படியென்றால் ஒரு பாகையின் நேரம் என்ன?

ஸிம்ப்பிள்:
2 x 60 நிமிடங்கள் = 120 நிமிடங்கள் வகுத்தல் 30 பாகைகள் = 4 நிமிடங்கள்

ஆகவே ஒரு டிகிரி மாறினாலும் ஜாதகம் மாறும். பொதுவாக 4 நிமிடங்களுக்கு
ஒரு ஜாதகம் மறுபடும். துல்லியமாக ஒரு நிமிடத்திற்கு ஒரு ஜாதகம் மாறுபடும்.

ஒரு நிமிடத்தில் என்னய்யா ஆகிவிடப்போகிறது?' என்று கேட்காதீர்கள்.
ஒரு நிமிடத்தில் ரயிலை விட்டவன் கதை தெரியுமல்லவா? அதுபோலத்தான் இதுவும்!

ஒரு நிமிடத்தில் இரண்டு கிரகங்கள் 5 டிகிரிக்குள் ஒரு இடத்தில் - அதாவது
ஒரு ஜாதகத்தின் ஒரு ராசியில் அமர்ந்துவிடுவதுண்டு. அந்த ஆசாமி ஒரு நிமிடம்
முன்னதாகப் பிறந்திருந்தால் 6 டிகிரி வித்தியாசத்தில் அதே கிரக அமைப்பில்
பிறந்திருப்பான்.

5 டிகிரிக்குள் இருக்கும் இரண்டு கிரகங்களில் இரண்டாவதாக இருக்கும் கிரகம்
அஸ்தமனமாகி விடும் என்பது தெரியுமல்லவா? அஸ்தமனம் என்பது combust

combust என்பது என்ன? அடிபட்டுப்போவது. வலிமை இழந்து போவது.

அப்படி வலிமை இழக்கும் கிரகம் லக்கினாதிபதியாக இருந்தால் ஜாதகனின்
நிலைமை என்ன ஆகும்?

ஒரு நிமிடம் முன்னால் பிறந்தவன் நன்றாக இருப்பான். அடுத்துப் பிறந்தவன்
நன்றாக இருக்க மாட்டான்.

இரட்டைப் பிறவிகள் (Twin Births) மாறுபடுவது இப்படித்தான்.

ஒரே நிமிடத்திற்குள் ஒரே இடத்தில் இருவர் பிறந்தால் அவர்கள் இணைப்
பிறவிகள் (Parrellel Births). இணைப் பிறவிகளின் ஜாதகமும் வாழ்க்கையும்
ஒரே மாதிரியாக இருக்கும்.
--------------------------------------------------------------------------------
என் உறவினர் ஒருவருக்கு இரட்டைப் பிறவிகளாகப் பிறந்த இரண்டு மகன்
களில் ஒருவன் எப்போதுமே ஆரோக்கியமாக இருந்தான். ஒருவன் எப்போதுமே
நோய் வாய்ப்பட்டிருந்தான். அடிக்கடி காய்ச்சல், வலிப்பு, என்று அவதிப்பட்டுக்
கொண்டே இருப்பான்.

இருவருடைய ஜாதகத்திலும் ராசிச் சக்கரமும், அம்சச் சக்கரமும் அச்சு அசலாக
ஒரே மாதிரியாக இருக்கும். பாவச் சக்கரம் மட்டும் மாறி இருக்கும்.

சாதாரண அல்லது அறைகுறை ஜோதிடர்களால் ஒன்றையும் கண்டு பிடித்து
அந்த நிலைப்பாடிற்கான காரணத்தைச் சொல்ல இயலாது.

ஆனால் அறிவும், அனுபமும் உள்ள ஜோதிடர்கள் வியக்கும்படி சொல்லி
விடுவார்கள்

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு கோவை யூனியன் ஹை ஸ்கூல் எதிரே
திரு.கிருஷ்ணமூர்த்தி என்ற ஜோதிட வல்லுனர் இருந்தார். அவரிடம்
அன்றைய தேதியில் அதாவது இருவருக்கும் பத்து வயது இருக்கும்போது,
அவர்களுடைய ஜாதககங்களைக் கொண்டுபோய்க் காட்டியபோது, அசத்தலாக
அவரே அதைச் சொன்னார்.

அதோடு இருபத்தியோரு வயதுவரை அப்படித்தான் இருக்கும் என்றும்
சொன்னார். அதற்குப் பரிகாரம் ஏதாவது உண்டா என்று கேட்டபொது,
பரிகாரம் ஒன்றும் இல்லை. இருவரும் தனித்தனி இடங்களில் வளர்ந்தால்
உபாதைகள் குறையும் என்றார். அதன்படி ஒருவனை அவனுடைய பாட்டி
வீட்டில் விட்டு வைத்தார்கள்.

ஆனால் அவர் சொல்லியபடி 21வது வயதில் இயற்கையாகவே அதற்குத்
தீர்வு கிடைத்தது.

வேறு என்ன? நோய்வாய்ப்பாடுச் சிரமப் பட்டுக்கொண்டிருந்த பையன்
இறந்துபோய் விட்டான். அந்த இரட்டையர்களில் ஒருவன் மட்டுமே
இப்போது உள்ளான்.
----------------------------------------------------------------------------------------------------
நான்கு நிமிடங்களில் லக்கின பாவங்கள் மாறுபடுவதையும், ஒரு பாகையில்
(degree) கிரகங்கள் உரசிக்கொள்வதையும் எடுத்துச் சொல்லியிருக்கிறேன்.

ஆகவே இரண்டு மணி நேரத்திற்குப் பொதுவான ராசிச் சக்கரத்தை மட்டும்
அல்லது ராசிக் கட்டங்களை மட்டும் எப்படிப் பலன் சொல்வது?

அந்த இரண்டு மணி நேரத்தில் பிறந்த அனைவருக்குமே ஒரே பலனா?

இல்லையே!

ஆகவே ஒவ்வொருவருடைய ராசிச் சக்கரங்களையும் அக்கு வேறாக ஆணி
வேறாகப் பிரித்துப் போட்டுப் பார்க்க உதவுவதுதான் வர்க்கங்கள் என்னும்
உபகட்டங்கள் (divisional charts)

எதற்காகப் பிரித்துப் போட்டுப் பார்க்க வேண்டும்?

பிரித்துப் பார்த்தால்தான் உண்மையான நிலவரம் தெரியும். உண்மையான பலன்
தெரியவரும்.

அதாவது தங்கத்தை உரசிப் பார்ப்பதைப்போல! 24 காரெட்டா, 22 காரெட்டா
அல்லது பதினெட்டு காரெட்டா என்று தெரியுமல்லவா - அதைப்போல!

ராசியை ஒன்பது பிரிவாகப் பிரித்து, நவாம்சச் சக்கரமாக முன் பதிவில் பாடம்
நடத்தினேன். நிறையப் பேருக்கு அது புரியவில்லை.

ஒரு பெரிய ஊர் இருக்கிறது. அதை அப்படியே படத்தில் பார்த்தால் என்ன
தெரியும்? உதாரணத்திற்கு சென்னையை எடுத்துக் கொள்ளுங்கள்.

சென்னையை ஒன்பது பகுதிகளாகப் பிரித்து, ஒவ்வொன்றாகக் காட்டினால்
உங்களுக்கு முழு விவரம் தெரியவரும் அல்லவா?

1. பாரீஸ் கார்னர் பகுதி (வட சென்னை)
2. மெரினா, கோட்டை பகுதிகள் (கிழக்குப் பகுதி)
3. அண்ணாசாலைப் பகுதி (மத்திய பகுதி)
4. நுங்கம் பாக்கம், கோடம்பாக்கம், வடபழனி பகுதிகள்,
5. மீனம்பாக்கம், தாம்பரம் பகுதிகள், (தென் பகுதி)
6. அடையாறு, கோட்டுர்புரம் பகுதிகள்,
7. வில்லிவாக்கம் அம்பத்தூர் பகுதிகள்
8. தி.நகர், சைதைப்பகுதிகள்
9. தேனாம் பேட்டை, போயஸ் கார்டன்பகுதிகள்

இப்படிப் பிரித்துக் காட்டி, ஒருவருக்கு எந்தப் பகுதியில் பெரிய வீடு
அல்லது சொத்து இருக்கிறது என்று சொல்லும் போதே அவருடைய ஸ்டேட்டஸ்
தெரிய வந்துவிடும். அதுபோல ஒரு ஜாதகத்தின் ஸ்டேட்டசைப் பார்க்க
உதவுவதுதான் நவாம்சம்.

அந்த இடங்களில் உள்ள நிலத்தின் விலை ஒரே மாதிரியாகவா இருக்கிறது
அம்பத்தூரில் சென்ட் ( 40அடிக்கு x 60 அடி உள்ள ஒரு கிரவுண்டிற்கு 5.5
சென்ட்டுகள்) பத்து லட்சம் என்றால் அடையாறில் ஒருகோடியும்,
அண்ணா சாலையில் ஐந்து கோடியும் (உத்தேசமான மதிப்புதான்)
இருக்குமல்லவா?

அதுபோல ஒரு இடத்தின் அதிபதி அந்தவீட்டின் எந்த நவாம்சப் பகுதியில்
இருக்கிறானோ அதை வைத்துத்தான் அவருடைய மதிப்பும் ஜாதகனுக்கு
அவர் தரும் பலனும்!

அண்ணாசாலையில், ஒரு எக்கரில், அதுவும் ஜெமினி மேம்பாலம் அருகே
ஒருவனுக்குச் சொத்து இருந்தால் அவன் இன்றைய தேதியில் எவ்வளவு பெரிய
செல்வந்தன் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

அதுபோல ஒன்பதிற்கு உரியவன் நவாம்சத்தில் ஏழாம் வீட்டில் லக்கினாதிபதி
லாபதியோடு சேர்ந்து அமர்ந்திருந்தால், ஜாதகன் வெளிநாடு சென்று அல்லது
வெளி நாட்டு வியாபாரத்தால் (Exports) கொடிக்கணக்கில் பொருள் ஈட்டுவான்
(இதை ஒரு உதாரணத்திற்காகச் சொல்லியுள்ளேன்)

இது போன்ற விவரங்களைத் தெரிந்து கொள்ள உதவுவதே உபகட்டங்கள்
அல்லது வர்க்கங்கள் (divisional charts) எனப்படும்

இப்போதாவது புரிந்ததா சுவாமிகளா?
--------------------------------------------------------------------------------------------------
ஒரு பத்து ஏக்கர் நிலத்தை எப்படி வேண்டுமென்றாலும் பிரித்து ஸைட்
போடலாமில்லையா? அதுபோல ஒரு ஜாதகத்தைப் பலவாறாகப் பிரித்துப்
பார்ப்பதுதான் உபகட்டங்கள் (divisional charts)

அந்த divisional Charts எத்தனை வகைப்படும். எந்த அளவில் பிரிக்கப்
படுகிறது. எதெது எதற்காகப் பிரிக்கப் படுகிறது. அதன் பயன் என்ன
என்பதுதான் இன்றையப் பாடம்!
--------------------------------------------------------------------------------------------------------
நவாம்சச் சக்கரம்
Rasi divided by nine parts.
முன் பாடத்தில் சொல்லப்பட்டுவிட்டது.
-------------------------------------------------------------------------------------------
மற்ற வர்க்கங்கள்

(The Varga charts, also known as the divisional charts, are a unique method
employed by the ancient seers to study various aspects of life.
Each rasi of 30 degrees is further subdivided and by employing a series
rules new additional charts are made. There are 16 divisional charts and they
are studied to analyze the finer conditions, strengths and effects of the planets.
These charts are also employed to study certain specific aspects of life like
spouse, children, parents etc. The following are the varga divisions.)
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

1
Rashi or the Lagna chart as it is of 30 degrees to study all aspects of life.

ராசிச் சக்கரம் 30 டிகிரிகள் கொண்ட 12 கட்டங்களாக ஜாதகத்தைப் பிரிப்பது.
எல்லாப் பொதுப்பலன்களையும் பார்ப்பதற்காக உள்ளதாகும் இது!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
2
Hora Chart (one-half of a sign or raasi) is the varga to study wealth.

ஒவ்வொரு ராசியையும் இரண்டாகப் பிரித்துப் பார்ப்பது.
(செல்வ நிலையைப் பார்ப்பதற்காக உள்ளது இது)
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
3.
Drekkana Chart (one-third of a sign or raasi) is the varga to study siblings.

ஒவ்வொரு ராசியையும் மூன்று சம பகுதிகளாகப் பிரித்துப் பார்ப்பது.
(உடன் பிறப்புக்களை அறிந்து கொள்ள உதவுவது இது)
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
4.
Chaturthamsha Chart (one-fourth of a sign or raasi) is the varga to
study destiny and house.

ஒவ்வொரு ராசியையும் நான்கு சம பகுதிகளாகப் பிரித்துப் பார்ப்பது.
(விதியின் போக்கைப் பார்ப்பதற்கு உதவுவது இது)
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
5.
Saptamsha Chart (one-seventh of a sign or raasi) is the varga to study
progeny.

ஒவ்வொரு ராசியையும் ஏழு சம பகுதிகளாகப் பிரித்துப் பார்ப்பது.
(குழந்தைப் பேற்றைப் பற்றித் தெரிந்து கொள்ள உதவுவது இது)
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
6.
Navamsha Chart (one-ninth of a sign or raasi) is the varga for spouse
and many other things.

ஒவ்வொரு ராசியையும் ஒன்பது சம பகுதிகளாகப் பிரித்துப் பார்ப்பது.
(குறிப்பாக கணவன் அல்லது மனைவியைப் பற்றி அறிய உதவுவதோடு,
மேலும் பல அறிய தகவல்களைத் தருவது இது)
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
7.
Dashamsha Chart (one-tenth of a sign or raasi) is the varga to study
ones profession.

ஒவ்வொரு ராசியையும் பத்து சம பகுதிகளாகப் பிரித்துப் பார்ப்பது.
(ஒருவருடைய தொழில், வேலை, வியாபாரம் மொத்தத்தில் ஜீவனத்திற்
கான வழியைத் தெரிந்து கொள்ள உதவுவது இது)
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
8.
Dwadashamsha Chart (one-twelfth of a sign or raasi) is the varga
to study parents.

ஒவ்வொரு ராசியையும் பன்னிரெண்டு சம பகுதிகளாகப் பிரித்துப் பார்ப்பது.
(ஒருவருடைய பெற்றோர்களைப் பற்றிய அறிய உதவும் கட்டம் இது
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
9.
Shodashamsha Chart (one-sixteenth of a sign or raasi) is the varga
to study conveyance.

ஒவ்வொரு ராசியையும் பதினாறு சம பகுதிகளாகப் பிரித்துப் பார்ப்பது.
(வண்டி, வாகனங்கள், இதர செளகரியங்களை அறிய உதவுவது இது)
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
10.
Vimshamsha Chart (one-twentieth of a sign or raasi) is the varga to
study spiritual progress.

ஒவ்வொரு ராசியையும் இருபது சம பகுதிகளாகப் பிரித்துப் பார்ப்பது.
(ஒருவருடைய பக்தி நெறி அல்லது அது இல்லாமையை அறிந்து கொள்ள
உதவும் கட்டம் இது)
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
11.
Chaturvimshamsha Chart (one-twenty fourth of a sign or raasi) is to
study knowledge.

ஒவ்வொரு ராசியையும் இருபத்திநான்கு சம பகுதிகளாகப் பிரித்துப்
பார்ப்பது.(அறிவு, ஞானத்தின் தன்மையை அறிய உதவுவது)
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
12.
Saptavimshamsha Chart (one-twenty seventh of a sign or raasi) is to
study the strength.

ஒவ்வொரு ராசியையும் இருபத்தியேழு சம பகுதிகளாகப் பிரித்துப்
பார்ப்பது. ஜாதகரின் பொது வலிமையை அறிய உதவுவது.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
13.
Trimshamsha Chart (one-thirtieth of a sign or raasi) is foor assertaining
misfortunes and nature.

ஒவ்வொரு ராசியையும் முப்பது சம பகுதிகளாகப் பிரித்துப் பார்ப்பது.
ஜாதகரின் துரதிர்ஷ்டங்களை அறிந்து கொள்ள உதவுவது
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
14.
Khavedamsha Chart (one-fortieth of a sign or raasi) is for auspicious &
inauspicious effects.

ஒவ்வொரு ராசியையும் நாற்பது சம பகுதிகளாகப் பிரித்துப் பார்ப்பது.
ஜாதகத்தில் உள்ள நல்ல விளைவுகளையும், தீய விளைவுகளையும் அறிய
உதவுவது.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
15.
Akshavedamsha Chart (one-forty fifth of a sign or raasi) is for all areas
of life.

ஒவ்வொரு ராசியையும் நாற்பதைதைந்து சம பகுதிகளாகப் பிரித்துப்
பார்ப்பது. வாழ்க்கையின் எல்லா நிலைகளையும் பொதுவாக அறிந்து
கொள்ள உதவுவது
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
16.
Shashtyamsha Chart (one-sixtieth of a sign or raasi) is for all general
effects.

ஒவ்வொரு ராசியையும் ஆறுபது சம பகுதிகளாகப் பிரித்துப் பார்ப்பது.
ஜாதகருக்கு ஏற்பட இருக்கும் பொது விளைவுகளை அறிந்து கொள்ள
உதவுவது!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இந்தப் பதினாறு வர்க்க கட்டங்களிலும் நவாம்சம் மட்டுமே அதி
முக்கியமானது.

மற்றவற்றையெல்லாம் நீங்கள் தெரிந்து கொள்வதற்காகவே கொடுத்துள்ளேன்.

நவாம்சம் என்பது வாழ்க்கைத் துணையை மட்டுமல்ல, ஒருவரின் ஜாகத்தில்
உள்ள கிரகங்களின் வலிமைகளையும்.அல்லது வலிமையின்மைகளையும்
அதனால் ஏற்பட இருக்கும் பலாபலன்களையும் தெள்ளத் தெளிவாகக்
காட்டுவதாகும்.

ஜாதகத்தின் ராசியில் பலவீனமாக உள்ள கிரகம், அம்சத்தில் பலத்தோடு
இருக்கலாம். அதுபோல ராசியில் உச்சமாக இருக்கும் கிரகம், அம்சத்தில்
நீசமாகி இருக்கலாம். அம்சத்தைப் பார்க்கும்போதுதான் ஒரு கிரகத்தின்
உண்மையான வலிமை தெரிய வரும். ஆகவே ராசியைவிட அம்சம் அதிக
முக்கியமானதாகும்.

இன்றையக் குழந்தைப் பிறப்பு விகிதத்தில் இரண்டு மணி நேரத்தில்
எத்தனையோ குழந்தைகள் பிறக்கலாம். அவ்வளவு பேருக்கும் ராசிச் சக்கரம்
ஒன்றாக இருந்தாலும் அம்சம், மற்றும் பாவச்சக்கரங்கள் பல விதமாக
வேறுபடும். அதன்படி அந்த இரண்டு மணி நேரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில்
பிறந்தவர்கள் அனைவருக்கும் தலை எழுத்தும், விதியும் வேறுபடும்.
அதை அறிந்து கொள்ள உதவுவதுதான் இந்தச் சக்கரங்கள்.

நீங்கள் பிறந்த நேரம் சரியாகக் குறிக்கப்பட்டிருந்தால்தான், இந்தச் சக்கரங்களின்
படியான பலன்கள் உங்களுக்குக் கிடைக்கும். இல்லையென்றால் இல்லை.

பார்த்துச்சொல்பவனின் கணிப்புக்கள் பொய்யாகிவிடும்.

ஜோதிடம் பொய்யல்ல!

The lagna, hora, drekkana, navamsa, dwadasamsa and trimamsa ஆகிய ஆறு
பிரிவுகளில் உள்ள சக்கரங்களை மட்டும் நீங்கள் முழுமையாகத் தெரிந்துகொண்டால்
போதும். மற்றவற்றைச் சாய்சில் விட்டுவிடலாம்.ஸீரியசாக ஜோதிடம் படிப்பவர்கள்
மட்டும் படிக்கலாம்.

பலன் சொல்வதற்கு ராசி மற்றும் அம்சம் ஆகிய இரண்டும் போதும்

பின் எதற்காக எழுதினீர்கள்?

கூடுதுறையார் மாதிரி மிகவும் ஆர்வமுள்ளவர்களின் வருத்தத்திற்கு ஆளாகக்
கூடாது என்பதற்காக அறியத் தந்துள்ளேன்.

All these, except the navamsa are only for information and not for serious
study!

இந்த வர்க்கக் கட்டங்களையெல்லாம் எப்படித் தயாரிப்பது அல்லது எப்படி
எழுதுவது?

அன்பர் கரூர் தியாகராஜன் அவர்கள் கொடுத்த மென்பொருள் - சைடுபாரில்
உள்ளது. அது உங்களுக்கு, சில வினாடிகளுக்குள் அடித்துக் கொடுத்துவிடும்!

பலன் எப்படிப் பார்ப்பது?

முன் பாடத்தில் சொல்லியுள்ள அதே விதிமுறைகள்தான் அத்தனை
கட்டங்களுக்கும்!

Placement, association, aspect என்று அதே ஜடைபோட்டு, பூவைத்து, பொட்டு
வைக்கும் வேலைதான்.

முயன்று பாருங்கள். சந்தேகமிருந்தால் பின்னூட்டத்தில் கேளுங்கள்.

இன்றைய பாடம் எழுதித் தட்டச்சிட அதிகமான நேரத்தை எடுத்துக் கொண்டு
விட்டது. பொறுமையோடு, செய்வன திருந்தச் செய்' என்ற முதுமொழிக்கிணங்க
எழுதியுள்ளேன். ஸ்கிரீன் சைசில் மொத்தம் 14 பக்கங்கள்.

இரண்டு பகுதிகளாக தனித்தனியாக இரண்டு தினங்களில் பதிவிடலாம் என்று
நினைத்தேன். ஆனால் பாடத்தின் தன்மை கருதி ஒரே பதிவாகக் கொடுத்துள்ளேன்

ஒலிம்பிக்கில் ஓடுவது போல ஒரே ஒட்டத்தில் படித்துவிட்டு, சார், அடுத்த பாடம்
எப்பொது என்று யாரும் கேட்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

இதை முழுமையாகப் படித்து மனதில் ஏற்றுங்கள்.

அடுத்த பாடம் இரண்டு அல்லது மூன்று தினங்களில் தானாக நடக்கும்!

நன்றி,
வணக்கத்துடன்
வகுப்பறை வாத்தியார்.
=========================================================
Rotation of Planets and rotation time for planets


வாழ்க வளமுடன்!

12.8.08

பலாப்பழமும், ஜோதிடமும்!

சில நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட காலம். மன்னர் ஆட்சி நடைபெற்றுகொண்டிருந்தது.
தண்டோராக்காரன் மேடை ஒன்றில் நின்று கத்திக்கொண்டிருந்தான்.

அவனைப் பார்த்தவுடன் ஏதோ முக்கிய அறிவிப்பாக இருந்து தொலைக்கப்போகிறது
என்று கூட்டம் கூடிவிட்டது.

ஐந்தாவது முறையாக எல்லோருக்கும் கேட்கும்படி அவன் உரத்த குரலில் சொன்னான்.

"நமது மன்னர் மன்னருக்கு, என்ன பழம் மிகவும் பிடிக்குமோ அதைக் கொண்டுவந்து
கொடுப்பவருக்கு, ஆயிரம் பொற்காசுகள் பரிசாகக் கிடைக்கும்"

கூட்டத்திலிருந்து இதைக்கேட்ட ஒருவன்," மன்னருக்கு என்ன பழம் பிடிக்கும் என்று
நமக்கு எப்படியப்பா தெரியும்?"என்றான்.

அருகில் இருந்தவன் உடனே கேட்டான்,"நீ என்ன ஊருக்குப் புதுசா?"

"ஏன் கேட்கிறாய்?"

"மன்னர் மன்னன் என்று சொல்வதை வைத்தே நீ தெரிந்து கொள்ள வேண்டாமா?
நமது மன்னன் ஒரு சரியான கோமாளிப் பண்டாரம். வேலை வெட்டி இல்லாத பயல்
அவன் அறிவிப்பும், சொறிவிப்பும் எப்படி இருக்கும்? போய் உருப்படுகிற வழியைப்
பார்" என்று சொல்லிவிட்டு, அவன் போய்விட்டான்.

கேட்டவனுக்கு நைப்பாசை. அடுத்த நாளே, அதிகாலையில், ஊகமாகக் கையில் ஒரு
பழத்தோடு அரண்மனைக்குப் போய்ச் சேர்ந்தான். அங்கே அவனுக்கு முன்னால்
இரண்டு பேர்கள் வரிசையில் காத்திருந்தார்கள். இவனும் போய் நின்றான். அதற்குப்
பின்னால் நான்கைந்து பேர்கள் வந்து வரிசையில் சேர்ந்து கொண்டார்கள்.

சூரிய உதயத்தில் இருந்து சரியாகப் பத்தாவது நாழிகையில் (அதாவது காலை மணி
பத்து அளவில்) அரண்மனையின் வாசல் கதவு திறக்கப்பட்டது.

முதன் மந்திரியார் வந்து எச்சரித்துவிட்டுப்போனார்.

"நீங்கள் கொண்டுவந்திருக்கும் பழத்தைப் பார்த்து - மன்னர் மன்னர், அது தனக்கு
மிகவும் பிடித்த பழம்தான் என்று ஒப்புக்கொண்டால், பரிசுப் பணம் கிடைக்கும்.
இல்லையென்றால் மன்னர் என்ன சொல்வாரோ அது நடக்கும். ஆகவே துணிச்சல்
உள்ளவர்கள் மட்டும் உள்ளே வாருங்கள்!"

நம்ம ஆள் மிகவும் தைரியமானவன். என்ன ஆகிவிடப்போகிறது பார்த்துவிடலாம்
என்று தைரியமாக நின்றான்.

வரிசையில் முதலில் நின்ற மூன்று நபர்களை மட்டும் உள்ளே அனுப்பி வைத்தார்கள்.

வரிசைப்படி முதலில் வந்த ஆசாமி, சபையின் நடுவில் நின்று, தான் கொண்டு
வந்திருந்த பழத்தைத் தன் சட்டைப் பையில் இருந்து எடுத்துக் காட்டினான்.

அது நாவல் பழம்!

மன்னர் மன்னன், அது தனக்கு மிகவும் பிடித்த பழம் அல்ல, என்று கூறி, அதை
அப்படியே கொட்டையோடு விழுங்க உத்தரவிட்டார். அவனும் வாயில் போட்டு
அந்தப் பழத்தை விழுங்கி விட்டு ஏமாற்றத்தோடு நகர்ந்தான்.

அடுத்தவன் கொண்டுவந்திருந்தது கறுப்புத் திராட்சை. மன்னர் மன்னன் இல்லை
என்று தலையசைக்க அவனுக்கும் அதே கதி.

மூன்றாவதாக இருந்த நம்ம ஆள் கொண்டுவந்திருந்தது. பெரிய கொய்யாப்பழம்.
பழநியில் கிடைக்குமே அதுபோன்ற பெரிய கொய்யாப்பழம். சபையில் இருந்தவர்கள்
எல்லாம் திகைத்துப்போய் இருந்தார்கள் - என்ன நடக்கப்போகிறதோவென்று!

ஒரு வேளை, மன்னர் தனக்கு மிகவும் பிடித்தபழம் இதுவல்ல என்று கூறி, அப்படியே
விழுங்கு என்று சொன்னால் இவன் என்ன செய்வான்? எல்லோரும் ஆவலோடு
மன்னரின் முகத்தைப் பார்த்தார்கள்.

மன்னர் சொன்னார்." எனக்குப் பிடித்த பழம்தான் இது. ஆனால் மிகவும் பிடித்த பழம்
அல்ல! ஆகவே இதை நீ அப்படியே விழுங்க வேண்டும் இல்லை என்றால் தவறான
பழத்தோடு வந்ததால் பத்துக் கசையடி வாங்கிக்கொள்ள வேண்டும். எது விருப்பமோ
அதைச் செய்!"

சபையில் இருந்த அத்தனை பேரும் சட்டென்று அவன் பக்கம் திரும்பி,
பரிதாபத்தோடு அவனைப் பார்த்தார்கள்.

ஆனால் அவனோ கவலைப்பாடாமல், "ஹஹ், ஹஹ், ஹா" என்று வாய்விட்டுப்
பலமாச் சிரிக்க ஆரம்பித்தான்.

மன்னர் மன்னனுக்குக் கடுங்கோபமாகி விட்டது.

"நிறுத்து. எதற்குச் சிரிக்கிறாய் இப்போது?"

நம்ம ஆள் உடனே பவ்வியமாகப் பதில் சொன்னான்."மன்னர் மன்னா, மன்னிக்கவும்
நான் வெளியே, வாசலில் எனக்குப் பின்னால் வரிசையில் நின்று கொண்டிருந்தவனை
நினைத்தேன் உடனே சிரிப்பு வந்துவிட்டது."

"சிரிப்பதற்கு அதில் என்ன இருக்கிறது?"

"அவன் கொண்டுவந்திருக்கும் பழத்தை நினைத்தேன் சிரிப்பு வந்து விட்டது. அந்தப்
பழம் உங்களுக்கு மிகவும் பிடித்த பழமில்லை என்றால் அவன் கதி என்னவாகும்
என்று நினைத்தேன் சிரிப்பு வந்து விட்டது."

இப்போது மன்னர் மன்னனே ஆர்வமாகி, அவனைப் பார்த்துக் கேட்டார்," என்ன
பழம் அது?"

நம்ம ஆள் உரக்கச் சொன்னான்,"பலாப்பழம் மன்னா!"

சபை மொத்தமும் கொல்'லென்று சிரிப்பில் அதிர்ந்து விட்டது. அடக்க முடியாமல்
அததனை பேர்களும் சிரித்து விட்டார்கள் - அரசனைத் தவிர!
---------------------------------------------------------------------------------------
"வாத்தியாரே எதற்காக இந்தக் கதை? தலைப்புப்படி பலாப்பழம் வந்துவிட்டது!
ஜோதிடத்திற்கும் இந்தக் கதைக்கும் என்ன சம்பந்தம்?

"நவாம்சத்தைப் பற்றிய முன் பாடத்திற்கே எல்லோரும் அயர்ந்து விட்டீர்களே -
அடுத்த பாடத்தை நினைத்தேன். அடுத்த பாடத்தை எப்படி நீங்கள் எதிர்
கொள்ளப் போகிறீர்களோ என்று நினைத்தேன். எனக்கு உடனே இந்தக் கதைதான்
ஞாபகத்திற்கு வந்தது!"

"அவ்வளவு கஷ்டமா அந்தப் பாடம்?"

"ஆமாம், நீங்கள் பிடிக்கவில்லை என்றால் அங்கே பலாப்பழத்தோடு நிற்பவன்
கதிதான் என்கதியும்!"

"சரி, பதிவைப் போடுங்கள் பார்ப்போம்!"

"பதிவு வெள்ளிக்கிழமையன்று!"
-------------------------------------------------------------------------------------------------------------------
பலாப்பழம் பார்க்க முரடாக இருக்கும். உரித்தால் உள்ளே இனிப்பான பல
சுளைகள் இருக்கும். ஜோதிடமும் அப்படித்தான். உரிக்காமல் அப்படியே
திங்க (திண்ண) முடியாது. பிரித்து, ஆழ்ந்து படிக்காமல் ஜோதிடத்தைத் தெரிந்து
கொள்ள முடியாது!

அன்புடன்
வகுப்பறை வாத்தியார்

வாழ்க வளமுடன்!

10.8.08

அம்சம் பெண்ணிற்கு மட்டுமல்ல ஜாதகத்திற்கும் உண்டு!


ஒரு பெண்ணைப் பார்த்து அவள் அம்சமாக இருக்கிறாள் என்று சொன்னால்
அவள் எல்லா லட்சணங்களும் பொருந்திப் பார்க்க ரம்மியமாக இருக்கிறாள்
என்று பொருள். அது போல ஒரு வீட்டைப் பார்த்து வீடு அம்சமாக இருக்கிறது
என்று சொன்னாலும் அதுதான் அர்த்தம்!

அம்சம்' என்ற தமிழ்ச் சொல்லை இப்படி வகைப் படுத்தலாம்.
1. பல பகுதிகளாக அல்லது பன்முகமாக உள்ள திட்டம் (aspect of an affair, idea,
plan etc)
2. எடுத்துக்கூறும்படியாக இருக்கும் கூறு அல்லது தன்மை (a typical of noticeable)
3. ஒருவர் அல்லது ஒன்றின் அமைப்பிற்கு வேண்டிய அளவான லட்சணம். கச்சிதம்
(compactness)

ஒரு பெண்ணையும் அம்சமாக இருக்கிறாள் என்று சொல்லலாம் அல்லது ஒரு
வீட்டையும் அம்சமாக இருக்கிறது என்று சொல்லலாம்.

இதே அம்சம் ஜாதகத்திற்கும் உண்டு. அதுதான் நவாம்சம். அதாவது ஒன்பது
கிரகங்களின் அம்சம். கிரகங்களுக்கு ஏது அம்சம் (லட்சணம்) என்று குறுக்குக்
கேள்வி கேட்பவர்கள் பதிவை விட்டு விலகவும்.

நவக்கிரகங்கள் அம்சமாக இருக்கின்றனவா அல்லது இல்லையா என்று தெரிந்து
கொள்ள உதவுவதுதான் நவாம்சச் சக்கரம்


உங்கள் மொழியில் புரியும்படியாகச் சொல்கிறேன். ஒரு நடிகையை அல்லது
நடிகரை ஒப்பனையுடன் (மேக்கப்புடன்) பார்க்கும்போது ஒருவிதமாகக் காட்சி
அளிப்பார்கள், அவர்களையே ஒப்பனை எதுவுமின்றிப் பார்க்கும் போது
உண்மையான தோற்றம் கிடைக்கும்.

ஒரு ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் வலுவை ராசியில் பார்ப்பதற்கும், அம்சத்தில்
பார்ப்பதற்கும் உள்ள வேறுபாடு மேற்கூறிய உதாரணத்தில் உள்ளது போலத்தான்
இருக்கும்.

ராசியில் உச்சமாக இருக்கும் கிரகம், அம்சத்தில் நீசம் பெற்று இருக்கலாம்
அல்லது ராசியில் நீசம் பெற்று இருக்கும் கிரகம் அம்சத்தில் ஆட்சி பலம் பெற்று
இருக்கலாம்

ஏன் இந்த வேறு பாடு? எப்படி இந்த வேறு பாடு என்பதுதான் இன்றைய பாடம்!
-------------------------------------------------------------------------------------
ராசிச் சக்கரத்திற்கும் (Rasi Chart) அம்ச சக்கரத்திற்கும் (Navamsa Chart) என்ன
வித்தியாசம்?

ஒரு ராசியை ஒன்பது சமபாகங்களாகப் பிரித்து, ராசியில் உள்ள கிரகம்
அதன்
எந்தப் பகுதியில் உள்ளது என்பதைக் காட்டுவதுதான் நவாம்சம்.

(It is magnified version of Rasi Chart)

ஒரு முழு வட்டம் வகுத்தல் 12 ராசிகள் = 360 வகுத்தல் 12 = 30 பாகைகள்
அல்லது 30 டிகிரிகள். ஒரு ராசிக்கு 30 பாகைகள் என்பதை நீங்கள் அறிவீர்கள்
அதை மீண்டும் ஒன்பது பாகங்களகப் பிரிக்கும் போது, 30 வகுத்தல் 9 = 3.33
பாகைகள் என்பது ஒரு பகுதி. இதைப்போல ஒவ்வொரு ராசியையும் பிரித்தால்
மொத்தம் 108 பகுதிகள் வரும். அதை அட்டவணையாகக் கொடுத்துள்ளேன்.
-------------------------------------------------------------------------------------
அட்டவணை
இந்த அட்டவணை முக்கியமானது. உங்களுக்குச் சுலபமாக நவாம்சத்தைப்
புரிய வைப்பது.
படத்தின் மீது கர்சரை வைத்துக் கிளிக்கினால் படம் பெரிதாகத் தெரியும்!


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஒருவரது ராசியில் மேஷத்தில் செவ்வாய் இருக்கிறது என்றால், அது அந்த
ராசியின் எந்தப் பாகையில் இருக்கிறதோ - அது அந்த ராசியின் எந்தப் பகுதியில்
வருகிறதோ, அதுதான் அந்தக் கிரகத்தின் அம்சம்.

என்ன தலை சுற்றுகிறதா? இந்தப் பகுதியை ஒரு தகவலுக்காக அல்லது
அறிதலுக்காக
மட்டும் நீங்கள் படித்தால் போதும். பிரித்துக் கணக்கிட்டுப்
பார்க்கும் வேலையை
நீங்கள் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
அதை இப்பொது உள்ள ஜாதகம்
கணிக்கும் மென்பொருட்கள்
கண்ணிமைக்கும் நேரத்தில் செய்து கொடுத்துவிடும்.


அம்சத்தின் பயன்பாட்டை மட்டும் நீங்கள் அறிந்து கொண்டால் போதும்!

ராசியில் ஒரு நிலையில் உள்ள கிரகம், அம்சத்தில் வேறுபட்ட - நல்ல அல்லது
தீய நிலையில் இருக்கலாம். அதுதான் அம்சத்தில் தெரிய வரும்!

வேறு பட்டால் என்ன ஆகும்? இது சரியான கேள்வி!

வேறுபட்டால் உரிய பலனை விட அதிகமான பலன் கிடைக்கலாம் அல்லது
உரியபலனும் கிடைக்காமல் போகலாம்.


உதாரணத்திற்கு நடிகர் ரஜினி அவர்களின் ஜாதகத்தைக் கொடுத்துள்ளேன்
பாருங்கள். அவருடைய ஜாதகத்தில் இரண்டில் சனி. இரண்டில் சனி என்றால்
கையில் காசு தங்காது என்பது பொதுப்பலன். சரி, ரஜினியிடம் இல்லாத காசா?
அல்லது சேர்ந்திருக்காத பணமா? அதற்குக் காரணம் இரண்டிற்கு உரிய
அதிபதி
புதன் அம்சத்தில் உச்சம் பெற்றுள்ளார் பாருங்கள்.
--------------------------------------------------------------------------------------------------------------
நடிகர் ரஜினி அவர்களின் ஜாதகம்;

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஆகவே ராசியை மட்டும் பார்த்துப் பலன் சொன்னால் 'தாவு' தீர்ந்துவிடும்.
அம்சத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டுமென்பதை மனதில் வையுங்கள்.

ராசியில் கிரகங்கள் எவ்வளவு வலுவாக இருந்தாலும், அம்சத்திலும் வலுவாக
இல்லாவிட்டால், அவற்றிடமிருந்து எந்த நன்மைகளையும் எதிர்பார்க்க முடியாது.
ஆகவே கிரகங்களின் பலம் அறியவும், பலன்களை அறியவும் நவாம்சம்
முக்கியமாகும். மனைவியின் நிலையை அல்லது கணவனின் நிலையை அறிய
நவாம்சம் முக்கியமானதாகும்.

1. இராசி அதிபதியும் (Owner of the rasi) நவாம்ச அதிபதியும் இயற்கை
நட்பென்றால் நல்ல பலன்கள் கிடைக்கும்
2. இராசி அதிபதியும் (Owner of the rasi) நவாம்ச அதிபதியும் சமம் என்றால்
மத்தியமான பலன்கள் (average) கிடைக்கும்.
3. இராசி அதிபர் நல்ல பலன்களைக் கொடுக்கக் கூடிய கிரகமாக இருந்து,
அம்சத்தில் அவர் பகை வீட்டில் இருந்தால் மத்தியமான பலன்களையே
கொடுப்பார். பகை என்றால் சில அமைப்புக்களில் எதிர்மாறான பலன்களே
கிடைக்கும்.
4. ராசி ரீதியாகக் கெட்டிருக்கும் கிரகம், அம்சத்தில் சுபக்கிரகத்தின் வீட்டில்
இருந்தால், கெட்ட பலன்கள் ஏற்படாமல் தடுத்துவிடுவார். அல்லது கெட்ட
பலன்களைத்தர மாட்டார்.

ராசி ரீதியாக ஒருவருக்கு அல்லது ஒருத்திக்குச் செவ்வாய் தோஷமிருந்து
அம்சத்தில் செவ்வாய் சுபக் கிரகத்தின் இடத்தில் இருந்தால் செவ்வாய்
தோஷம் இல்லை. ரத்தாகிவிடும். இந்த விதி எல்லாக் கிரகங்களுக்கும் பொருந்தும்!

ராசி ரீதியாக ஏழாம் வீட்டிற்கு உரியவன், அம்சத்தில் பாவி வீட்டில் இருந்தால்
அல்லது பகை வீட்டில் இருந்தால் அந்த ஜாதகனுக்கு அல்லது ஜாதகிக்குத்
திருமணமாவதில் தாமதம் அல்லது தடைகள் ஏற்படும். இதே விதி மற்ற
வீடுகளுக்கும் பொருந்தும். உதாரணம் குழந்தை பிறுப்பு, வேலை கிடைப்பது
போன்றவற்றையும் சொல்லலாம்!
-----------------------------------------------------------------------------------------
ராசியில் இருந்து அம்சம் எப்படிக் கணக்கிடப் படுகிறது, பலன்கள் எப்படிக்
கணக்கிடப்படுகிறது என்பதை உங்களுக்கு அறியத்தரும் முகமாக
ஒரு ஜாதகத்தைக்
கொடுத்து விளக்கியுள்ளேன்.

முதலில் ஜாதகத்தைப் பாருங்கள். பிறகு விளக்கங்களைப் பாருங்கள்.
இந்த ஜாதகம் என் உறவினர் ஒருவரின் ஜாதகம். என் சேமிப்புக் கிடங்கில்
இருந்து
எடுக்கப்பெற்றது.

(Print out taken on 27.1.2002. It is also mentioned in the bottom of the page.Please note it!)
------------------------------------------------------------------------------------------------------------
Horoscope:++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
உதாரண ஜாதகத்தில் ராசியில் இருந்து அம்சம் எப்படி ஏற்பட்டுள்ளது என்பதை
இப்போது பார்ப்போம்.

1.
சூரியன்
116.5 பாகையில் கடக ராசியில் உள்ளது.
அமர்ந்திருக்கும் நட்சத்திரம் ஆயில்யம் 3ம் பாதம்
ராசிநாதன் சந்திரன். நட்சத்திர நாதன் புதன்
அம்சம் = 116.5 கழித்தல் முன் சென்ற 3 ராசிகளின் 90 பாகைகள் போக மீதி
26.5 பாகைகள். 26.5 வகுத்தல் 3.33 = 8 வது பகுதி.
அதாவது கடகத்தின் 8வது பகுதி. கடகத்தின்
எட்டாவது பகுதி கும்பச் சனியின் வீடு (அட்டவணையில் உள்ளது. பார்க்கவும்)
சூரியன் ராசியில் தன் நட்பு வீடான கடகத்தின் வீட்டில் இருந்தாலும் அம்சத்தில்
பகை வீடான சனியின் வீட்டில் உள்ளார்.

ஐந்தாம் வீட்டிற்குரிய சூரியன் ராசியில் அந்த வீட்டிற்கு 12ல் மறைந்துவிட்டாலும்
அம்சத்தில் ஐந்தாம் வீட்டை அதன் 7ம் இடத்தில் இருந்து அற்புதமாகப் பார்ப்பதால்
ராசியில் இருந்த குறை போய்விடுகிறது. அதனால் ஐந்தாம் வீட்டிற்குரிய பலன்களை
எல்லாம் அவர் வழங்கிவிடுவார்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------
2.
சந்திரன்
46.1 பாகையில் ரிஷப ராசியில் உள்ளது.
அமர்ந்திருக்கும் நட்சத்திரம் ரோகிணி 2ம் பாதம்
ராசி நாதன் சுக்கிரன். நட்சத்திர நாதன் சந்திரன்
அம்சம் = 46.1 கழித்தல் முன் சென்ற ஒரு ராசியின் 30 பாகைகள் போக மீதி
16.1 பாகைகள் 16.1 வகுத்தல் 3.33 = ரிஷபத்தின் 5வது பகுதி.
சுக்கிரனின் பகுதியில் உள்ளார்.
(அட்டவணையில் உள்ளது)
ராசியிலும் அம்சத்திலும் ஒரே வீட்டில் வலுவாக உள்ளார்.
அதுவும் உச்சம் பெற்றுள்ளார்.

இந்த ஜாதகருக்கு 4ம் வீட்டிற்கு அதிபதியான சந்திரன் உச்சம் பெற்று, 2ம் இடத்தில்
அதுவும் ராசியிலும் அம்சத்திலும் ஒரே இடத்தில் வர்கோத்தமம் பெற்று அட்டகாசமாக
அமர்ந்திருப்பதால் ஜாதகருக்கு 4ம் வீட்டிற்கு உரிய பலன்களை வாரி வழங்கி உள்ளார்
ஜாதகருக்கு நல்ல அன்பான தாய். அதோடு சுக ஸ்தானத்திற்கு அதிபதியும் அவரே
என்பதால் ஜாதகருக்கு நல்ல வசதியான வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.
ஜாதகர் அமெரிக்காவில் மிகவும் வசதியாக சொந்த வீடு, வாகன வசதிகளோடு
வாழ்ந்து கொண்டு இருக்கிறார்
---------------------------------------------------------------------------------------------------------------------
3.
செவ்வாய்
136.38 பாகையில் சிம்ம ராசியில்
அமர்ந்திருக்கும் நட்சத்திரம் பூரம் 1ம் பாதம்
அமர்ந்திருக்கும் ராசிநாதன் சூரியன். நட்சத்திர நாதன் சுக்கிரன்.
அம்சம் = 136.38 கழித்தல் முன் சென்ற நான்கு ராசிகளின் 120 பாகைகள் போக
மீதி 16.38 பாகைகள்
16.38 வகுத்தல் 3.33 = சிம்மத்தின் 5வது பகுதி. சூரியனின் அம்சத்தில்
சிம்மத்திலேயே உள்ளார்.

அதாவது ராசியிலும், அம்சத்திலும் ஒரே இடத்தில் வர்கோத்தமும், திரிகோணமும்
பெற்றுள்ளார். மிகவும் சிறப்பான அமைப்பாகும் இது!
லக்கினாதிபதிக்கு இந்த அமைப்புக் கிடைப்பதற்குத் தவம் இருந்திருக்க வேண்டும்.
மிகப் பெரிய வரம். வாங்கிவந்த வரம் இது!
ஜாதகர் நல்ல தோற்றத்துடன், யாரையும் கவரும் விதமாகப் பொலிவுடன் இருப்பார்.
உண்மையைப் பேசுவார். அதுவும் அடித்துப் பேசுவார். ஆதென்டிக்காகப் பேசுவார்.
ஸ்டாண்டிங் பவர் உள்ளவர். உறவினர்களின் அன்பையும், ஆதரவையும் பெற்றுள்ளார்.
இதற்கெல்லாம் காரணம் ஜாதகத்தில் லக்கினாதிபதியின் இந்த நிலைப்பாடுதான் காரணம்.
------------------------------------------------------------------------------------------------------------------------
4.
புதன்.
111.1 பாகையில் கடக ராசியில் 1 உள்ளது
அமர்ந்திருக்கும் நட்சத்திரம் ஆயில்யம் 2ம் பாதம்
அமர்ந்திருக்கும் கடக ராசிநாதன் சந்திரன். நட்சத்திர நாதன் புதன்.
அம்சம் = 111.1 கழித்தல் முன் சென்ற மூன்று ராசிகளின் 90 பாகைகள் போக
மீதி 21.1 பாகைகள். 21.1 வகுத்தல் 3.33 = கடகத்தின் 7வது பகுதி.
சனியின் அம்சத்தில் மகரத்தில் உள்ளார்.
ராசியில் பகை வீட்டில். ஆனால் அம்சத்தில் சமம் பெற்றுள்ளதைக் கவனிக்கவும்

ஜாதகரின் மூன்று, ஆறு ஆகிய தீங்கிடங்களுக்கு உரியவர். ஆறாம் இடத்திற்குப்
பதினொன்றில் அமர்ந்திருப்பதையும், அம்சத்தில் சமன் பெற்று இருப்பதையும்
கவனியுங்கள். ஜாதகருக்கு நோய், கடன் என்று இதுவரை எந்தத் தொல்லையும்
ஏற்பட்டதில்லை!
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
5.
குரு
322.19 பாகையில் கும்ப ராசியில் உள்ளது
அமர்ந்திருக்கும் நட்சத்திரம் பூரட்டாதி 1ம் பாதம்
அமர்ந்திருக்கும் ராசிநாதன் சனி. நட்சத்திர நாதன் குரு (சுய நட்சத்திரம்)
அம்சம் = 322.19 கழித்தல் முன் சென்ற பத்து ராசிகளின் 300 பாகைகள் போக
மீதி 22.19 பாகைகள்.
22.19 வகுத்தல் 3.33 = கும்பத்தின் 7வது பகுதி. செவ்வாயின் அம்சத்தில் மேஷத்தில்
உள்ளார். ராசியில் இருக்கும் இடம் சம வீடு.ஆனால் அம்சத்தில் நட்பு வீடு.

பாக்கிய் ஸ்தானத்திற்கு அதிபதியான குரு திரிகோணம் பெற்று லக்கினத்தில்
நட்பு வீட்டில் இருப்பதைக் கவனிக்கவும். அவரே விரையத்திற்கு அதிபதியும்
ஆவார். ஜாதகருக்கு ஒரு விரையம் ஏற்பட்டாலும், தன் திரிகோண அமைப்பால்
அதைச் சரி செய்து விடும் வல்லமையுடன் பாக்கியாதிபதி குரு உள்ளார்.

லக்கினாதிபதியும், பாக்கியாதிபதியும் திரிகோண பதவி பெற்றுத் திகழ்கிறார்கள்.
ஜாதகத்தின் மேன்மைக்கு வேறு என்ன வேண்டும்?
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
6.
சுக்கிரன்
93.43 பாகையில் கடக ராசியில் உள்ளது.
அமர்ந்திருக்கும் நட்சத்திரம் பூசம் 1ம் பாதம்
அமர்ந்திருக்கும் ராசிநாதன் சந்திரன். நட்சத்திரநாதன் சனி
அம்சம் = 93.43 கழித்தல் முன் சென்ற மூன்று ராசிகளின் 90 பாகைகள் போக
மீதி 3.43 பாகைகள்.
3.43 வகுத்தல் 3.33 = கடகத்தின் 2வது பகுதி சூரியனின் சிம்ம வீடு.
சுக்கிரனிற்கு இரண்டுமெ பகை வீடுகள்தான். பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை!

இரண்டு ஏழுக்குரிய சுக்கிரன் ராசியில் நான்கிலும், அம்சத்தில் ஐந்திலும் அமர்ந்து
கேந்திர ஆதிபத்யம் பெற்றதால் நல்ல கணவரையும், குடும்பவாழ்க்கையையும்
ஏற்படுத்திக் கொடுத்துள்ளான்.

அதோடு அம்சத்தில் லக்கினாதிபது செவ்வாயுடன் கூட்டணி போட்டுள்ளதால் குடும்ப
வாழ்க்கையில் பல ஏற்றங்களையும் கொடுத்துள்ளான். மேலும் கொடுப்பான்.
------------------------------------------------------------------------------------------------------------------------
7.
சனி
80.12 பாகையில் சனி மிதுன ராசியில் உள்ளது.
அமர்ந்திருக்கும் நட்சத்திரம் புனர்பூசம் 1ம் பாதம்.
அமர்ந்திருக்கும் ராசிநாதன் புதன். நட்சத்திர நாதன் குரு
அம்சம் = 80.12 கழித்தல் முன் சென்ற இரண்டு ராசிகளின் 60 பாகைகள் போக
மீதி 20.12 பாகைகள்
20.12 வகுத்தல் 3.33 = மிதுனத்தின் 7 வது பகுதி. அது செவ்வாயின் வீடான மேஷம்.
அட்டவணையை ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளுங்கள்.ராசியில் நட்பு வீட்டில்
இருக்கும் சனி அம்சத்தில் நீசமாக இருக்கிறார் (மேஷத்தில் சனி நீசமல்லவா?)

என்ன பலன் சொல்வீர்கள்? 10 ஆம் இடத்திற்குரிய சனி ஆறாம் வீட்டிலும்,
அம்சத்தில் நீசமாகியிருந்தால் ஜாதகருக்கு வேலை எப்படிக் கிடைக்கும். ஜாதகர்
படித்திருந்தும் வேலை இல்லாமல் இருக்கிறார்.( ஜாதகர் பெண்மணி. அதனால்
தற்சமயம் வேலை இல்லையென்றால் பரவாயில்லை. கணவர் சம்பாத்தியம் போதாதா?)
ஜாதகருக்கு குரு திசை சனி புத்தி நடைபெறுகிறது. குரு அம்சத்தில் சனியோடு
சேர்ந்திருப்பதால் ஜாதகருக்குக் கூடிய விரைவில் வேலை கிடைக்கும்!)
-------------------------------------------------------------------------------------------------------------------
8.
ராகு
232.33 பாகைகளில் விருச்சிக ராசியில் உள்ளது.
அமர்ந்திருக்கும் நட்சத்திரம் கேட்டை 2ம் பாதம்.
அமர்ந்திருக்கும் ராசிநாதன் செவ்வாய். நட்சத்திர நாதன் புதன்.
அம்சம் = 232.33 கழித்தல் முன் சென்ற ஏழு ராசிகளின் 210 பாகைகள் போக
மீதி 22.33 பாகைகள்
22.33 வகுத்தல் 3.33 விருச்சிகத்தின் 7 வது பகுதி. அது சனியின் மகர அம்சம்
ராசியில் உச்சம் பெற்ற ராகு, அம்சத்தில் பகையில் அமர்ந்துள்ளது.

அதனால் உச்சம் பெற்ற பலனை அவரால் ஜாதகருக்கு அளிக்க முடியவில்லை!
ஜாதகர் ராகு திசையில் சில ஆண்டுகள் சிரமங்களை அனுபவித்தார். அதை
நான் அறிவேன்.
----------------------------------------------------------------------------------------------------------------------------
9
கேது
52.33 பாகைகளில் ரிஷப ராசியில் உள்ளது.
அமர்ந்திருக்கும் நட்சத்திரம் ரோகிணி 4ம் பாதம்.
அமர்ந்திருக்கும் ராசிநாதன் சுக்கிரன். நட்சத்திர நாதன் சந்திரன்.
அம்சம் = 52.33 கழித்தல் முன் சென்ற ஒரு ராசியின் 30 பாகைகள் போக
மீதி 22.33 பாகைகள்
22.33 வகுத்தல் 3.33 விருச்சிகத்தின் 7 வது பகுதி. அது சந்திரனின் அம்சம்.
கடகம். ராசியில் நீசம் பெற்ற கேகு, அம்சத்தில் பகையில் அமர்ந்துள்ளது.
நீசத்தன்மை குறைந்துள்ளது.

நாலில் உள்ள கேது அவ்வப்போது சில சுகக் கேடுகளை ஏற்படுத்தும்.
ஏற்படுத்திக் கொண்டுதான் உள்ளது. (ஜாதகர் சொல்லக் கேள்வி)
------------------------------------------------------------------------------------------------------------------------------
10.
லக்கினம்.
3.12 பாகைகளில் மேஷ ராசியில் உள்ளது.
அமர்ந்திருக்கும் நட்சத்திரம் அஸ்விணி 1ம் பாதம்.
அமர்ந்திருக்கும் ராசி நாதன் செவ்வாய். நட்சத்திர நாதன் கேது.
இங்கே கழிக்கும் வேலை இல்லை. ராசியின் முதல் அம்சமான செவ்வாயின் அம்சம்
ராசியும் அம்சமும் ஒரே இடம். ஆட்சி பலத்துடன், வர்கோத்தம பலனும் பெற்றுள்ளார்.
ஜாதகத்தின் லக்கினம் படு ஸ்திரம் (very strong) ஜாதகத்தின் மேன்மைக்கு
முதன்மையான காரணம் இதுதான்!
------------------------------------------------------------------------------------------
ராசியிலிருந்து அம்சம் எப்படிப் பிரிபடுகிறது என்பதைத் தெள்ளத் தெளிவாக
விவரித்து
எழுதியுள்ளேன். அதோடு பலன் அறிவது எப்படி என்றும் குறிப்பாகச்
சொல்லியுள்ளேன்.


இன்றைய பாடம் அனைவருக்கும் புரியும்படியாக இருக்கும் என்று நம்புகிறேன்!

கடைசிப் பெஞ்சுக் கண்மணிகள் என்ன சொல்வார்களோ தெரியவில்லை!

பார்க்கலாம்!

இதற்கு முன் நடத்திய பாடத்தின் (9ஆம் வீடு) மீதிப்பகுதி அடுத்த வகுப்பில் நடத்தப்படும்.

ஒரு மாறுதலுக்காக நடுவில் இதை - அதாவது அம்சத்தின் சிறப்பைப் பாடமாக நடத்தினேன்

உங்கள் புரிதலைப் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்

நன்றி,
வணக்கத்துடன்,
வகுப்பறை வாத்தியார்

வாழ்க வளமுடன்!

4.8.08

கடல் கடக்கும் யோகம்!


நினைத்தவர்கள் எல்லாம் அல்லது ஆசைப்படுகிறவர்கள் எல்லாம் கடலைக்
கடந்து விட முடியாது.

நான் கடல்களைப் பார்த்திருக்கிறேன். சின்ன வயதில் தொண்டியில் இருந்து,
பிறகு சென்னையில் இருந்து வங்கக் கடலைப் பார்த்திருக்கிறேன், கொச்சியில்
இருந்தும், மும்பையில் இருந்தும் அரபிக் கடலையும், கன்னியாகுமரியில் இருந்து
இந்து மகா சமுத்திரத்தையும் பார்த்திருக்கிறேன். Ferry Serviceல் கடலில்
மூன்று கிலோ மீட்டர் தூரம் வரை பயணித்து விட்டுத் திரும்பி இருக்கிறேன்.

ஆனால் இதுவரை கடலைக் கடக்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. தூர
தேசங்களுக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. எனக்கு அந்த யோகம்
இல்லை. பலர் அழைக்கின்றனர். இப்போது விருப்பமும் இல்லாமல் போய்விட்டது.

ஜாதகத்தில் அதற்குரிய கொடுப்பினை இருந்தால்தான் அது நடக்கும்.

கடலைக் கடந்து செல்வதில் மூன்று விதமான அமைப்புக்கள் உள்ளன.

1. படிப்பிற்காகச் செல்வது அல்லது ஊர் சுற்றிப் பார்க்கச் செல்வது.
2. வேலைக்காகச் செல்வது, சென்று குடியுரிமை பெற்று அங்கேயே தங்கி விடுவது.
3. சிகிச்சைக்காகச் செல்வது.

என்ன முக்கினாலும், அந்த மூன்று பிரிவுகளில் எந்தப் பிரிவிற்கு ஜாதகத்தில்
அம்சம் இருக்கிறதோ அதன்படிதான் நடக்கும்.

அதைத் தெரிந்து கொள்ள முடியுமா?

முடியும்!

நீண்ட பயணங்களுக்கான அமைப்பும், கடல் கடந்து செல்லும் அமைப்பும்
ஜாதகத்தின் ஒன்பதாம் வீட்டை வைத்துத் தெரியவரும்!

"எனக்கு வெளி நாட்டில் வேலை கிடைக்குமா?" என்று ஜாதகன் ஒருவன் கேட்டால்,
ஒன்பதாம் பாவாதிபதி (The lord of the ninth house) நல்ல நிலையில் இருந்தால்
கிடைக்கும் என்று சொல்லலாம். இல்லையென்றால் இல்லை!

நல்ல நிலைமை என்பது, நான் கரடியாகக் கத்தி அல்லது எழுதிச் சொல்லிக்
கொடுப்பதைப் போல, அதிபதி, கேந்திர, திரிகோணங்களில் சென்று அமர்வதும்,
பார்வை அல்லது சேர்க்கை இவற்றால் நல்ல கிரகங்களோடு சேர்வதும் ஆகும்.
முக்கியமாக அவன் தீய கிரகங்களோடு யுத்தத்தில் இருக்கக் கூடாது. அதாவது
மோதலில் இருக்கக்கூடாது.

இதை ஆராய்ந்து பார்க்கும் முகமாக ஒரு ஆராய்ச்சியாளர், வெளிநாட்டில்
இருப்பவர்கள், வெளிநாட்டிற்குச் சென்று வந்தவர்களென்று, பலருடைய
ஜாதகங்களைச் சேகரித்து, மிகுந்த நேரம் செலவழித்து ஆராய்ந்து பல
கட்டுரைகளை எழுதினார். சிகிச்சைக்காகச் சென்ற பல பெரிய தலைவர்களின்
ஜாதகங்களும் அவற்றில் அடக்கம்.

உதாரணம். புரட்சித்தலவர் எம்.ஜிஆர். முன்னாள் ஆந்திர முதல்வரும், பிரபல
நடிகருமான என்.டி.ராமராவ் போன்றவர்கள்.

சிகிச்சைக்குப்போன அத்தனை பேர் ஜாதகங்களிலும், ஒன்பதாம் வீட்டு
அதிபதி
12ம் வீட்டில் இருந்ததுதான் ஆச்சரியமான விஷயம்.
(That is ninth lord from the
lagna had occupied the 12th house from the lagna)

In short, if the ninth lord is placed in the 12th house, the native of the horoscope
will go to a foreign country only for treatment!


கட்டுரையின் நீளம் கருதிக் கதைப்பதை இத்துடன் நிறுத்திக் கொண்டு,
பாடத்திற்கு வருகிறேன்.
-------------------------------------------------------------
பாடம்: ஒன்பதாம் வீடு.

தந்தை, தந்தை வழி உறவுகள், பூர்வீகச் சொத்துக்கள், தான, தர்ம குணங்கள்,
வெளி நாட்டுப் பயணங்கள், முயற்சி இன்றிக் கிடைக்கக்கூடிய ஆதாயங்கள்,
இவை அனைத்தையும் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள உதவும் இடம்
ஒன்பதாம் வீடு.

அதைப் பாக்கிய ஸ்தானம் என்று சொல்வார்கள். It is called as house of gains!

ஒன்பதாம் வீடு, அதன் அதிபதி, அவர் சென்று அமரும் இடம், காரகன் சூரியன்
அவர் இருக்கும் இடம், இருவருடனும் சேரும் கிரகங்கள், பார்க்கும் கிரகங்கள்,
ஒன்பதாம் வீட்டில் வந்து அமரும் கிரகம், அதன் தன்மை - இதைப்போன்ற பல
தலை சுற்றும் விஷயங்களை வைத்துத்தான் ஒன்பதாம் வீட்டின் பலன்கள்
அறியக் கிடைக்கும் அல்லது தெரிய வரும்! இதை மனதில் கொள்ளவும்!

நன்றாக அலசிப்பார்க்க வேண்டும். டிட்டெர்ஜெண்ட் பவுடர், ஆலா ஒயிட்டனர்,
டெட்டால் முதலிவைகளை வைத்துத் துணிகளை அலசிப் பிழிவதைப்போல
அவற்றையும் பிழிந்து எடுக்க வேண்டும். இதையும் மனதில் கொள்க!


Don't jump to any conclusion without assessing all the factors concerning with the ninth house!
-----------------------------------------------------------------------------------------------------------------
முதல் பகுதி!

ஒன்பதாம் வீட்டு அதிபன் அமர்ந்த இடங்களுக்கான பலன்கள்
(Results of the ninth lord occupying various houses in the horoscope!)

1.
ஒன்றாம் வீட்டில் இருந்தால் (That is when the ninth lord is placed in the lagna)

நன்றாக இருந்தால்(If well placed)

நட்பு வீடாக இருந்து நல்ல கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை கிடைத்தால்:
நல்ல தந்தை அமைந்திருப்பார். பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்கும். ஜாதகன்
தான தருமங்கள் செய்வான். சாஸ்திரங்கள், புராணங்களில் ஈடுபாடு இருக்கும்.
சமூகத்தில் பெரிய பதவி அல்லது அந்தஸ்து கிடைக்கும்! தெய்வபக்தி உள்ளவனாக
இருப்பான். இறைவனின் அருள் முழுமையாக இருக்கும் (பக்தி இருந்தால், அருள்
இருக்காதா என்ன?) தன் தந்தை, பெரியவர்கள், குரு (வாத்தியார்) ஆகியோரின்
மேல் விசுவாசமுள்ளவனாக இருப்பான். கடந்து வந்த பாதையை ஒரு நாளும்
மறக்க மாட்டான்.

மொத்தத்தில் எப்போதும் எந்தச் சூழ்நிலையிலும் சந்தோஷமாக இருப்பான்.
உதாரண மனிதனாக இருப்பான். பெண்ணாக இருந்தால் உதாரண மனுஷியாக
இருப்பாள். தங்கள் வேலைகளைத் தாங்களே முடிக்கும் வல்லமை பெற்றவர்களாக
இருப்பார்கள்.

ஒன்பதாம் வீட்டுக்காரனும், லக்கினாதிபதியும் கூட்டணி போட்டு, லக்கினத்திலோ
அல்லது வேறு நல்ல இடங்களிலோ (except in 6th, 8th & 12th places)
அமர்ந்திருந்தால் ஜாதகன் மிகுந்த அதிர்ஷ்டசாலியாக இருப்பான். செல்வாக்கும்
அந்தஸ்தும் உள்ளவனாக இருப்பான்.

நன்றாக இல்லாவிட்டால் (it not well placed)

மேலே சொன்னவற்றிற்கு எதிரான பலன்கள் நடைபெறும் அல்லது கிடைக்கும்
----------------------------------------------------------------------------------------------------
2.
இரண்டாம் வீட்டில் இருந்தால் (That is when the ninth lord is placed in second
house from the lagna)

நன்றாக இருந்தால் (If well placed):
ஜாதகனின் தந்தை செல்வந்தராகவும், செல்வாக்கு மிகுந்தவராகவும் இருப்பார்.
தந்தையின் சொத்துக்கள் அப்படியே ஜாதகனுக்குக் கிடைக்கும். அவனும் தன்
தந்தையைப்போலவே வசதிகள் உடையவனாகவும் சமுதாயத்தில் செல்வாக்கு
உடையவனாகவும் இருப்பான். அவர்கள் குடும்பம் உயர்வான நிலமையில்
இருக்கும்.

நன்றாக இல்லாவிட்டால் (it not well placed)

பூர்வீகச் சொத்துக்களை இழக்க நேரிடும். அல்லது அழிக்க நேரிடும். அவனுடைய
குடும்பம் பல இன்னல்களைச் சந்திக்க நேரிடும்.
---------------------------------------------------------------------------------------------------------------
3.
மூன்றாம் வீட்டில் இருந்தால் (That is when the ninth lord is placed in the third
house from the lagna)

நன்றாக இருந்தால் (If well placed):

நன்றாக எழுதக்கூடியவன். நன்றாக மேடைகளில் பேசக்கூடியவன். எழுத்தால்
பெரும் பொருளை ஈட்டக்கூடியவன். பேசப்படுபவானக உயர்வான். பூர்வீகச்
சொத்துக்கள் கிடைக்காது. அவனே நிறைய சம்பாதிப்பான். சகோதரன்,
சகோதரிகளின் அன்பும், ஆதரவும் உள்ளவனாக இருப்பான்.

நன்றாக இல்லாவிட்டால் (it not well placed)

அப்போதும் எழுதுவான். ஆனால் வேண்டாததை எழுதுபவனாக இருப்பான்.
வேண்டாதது என்பது என்னவென்று நீங்களே ஊகம் செய்து கொள்ளுங்கள்.
பேசியும், எழுதியும் சிக்கல்களில் மாட்டிக்கொள்வான். ஜாதகத்தில் கிரகங்கள்
எந்த அளவிற்குக் கெட்டிருக்கிறதோ அந்த அளவிற்குச் சிக்கல்கள் ஏற்படும்.
வம்பு, வழக்கு, நீதிமன்ற விசாரணைகள் என்று அலைந்து சொத்துக்களை
விற்றுக் கடைசியில் ஒன்றும் இல்லாத நிலைக்குத் தள்ளப்படுவான்.
---------------------------------------------------------------------------------------------------------
4.
நான்காம் வீட்டில் இருந்தால் (That is when the ninth lord is placed in the fourth
house from the lagna)

நன்றாக இருந்தால் (If well placed):
பெற்றோர்களின் முழு அன்பையும், ஆதரவையும் பெற்றவனாக இருப்பான்.
நிலம், வீடு, வண்டி, வாகனம், வேலையாட்கள் என்று அரச வாழ்க்கை வாழ்வான்.
உறவினர்களின் ஏகோபித்த ஆதரவு இருக்கும்.(அதில் என்ன ஆச்சரியம்?)

நிலம், பூமி ஆகியவை பிறப்பில் இல்லாவிட்டாலும், ஜாதகன் தன் முயற்சியால்
அதாவது ரியல் எஸ்டேட் பிஸினெஸ் செய்து, அவற்றை ஈட்டுவான் அல்லது
தேடிப் பிடித்துவிடுவான். மகிழ்ச்சியாக இருப்பான். வாழ்வான்.

நன்றாக இல்லாவிட்டால் (it not well placed)

வீட்டு வாழ்க்கை நன்றாக இருக்காது. பல பிரச்சினைகள் தலைவிரித்தாடும்.
இறுகிய மனம் படைத்த அல்லது அன்பில்லாத தந்தையால் சிறு வயதில் பல
இன்னல்களுக்கு ஆளாகியிருப்பான். அல்லது கருத்து வேற்றுமை மிக்க
பெற்றோர்களால் சிறு வயது வாழ்க்கை அவலமாக இருந்திருக்கும்.

ஒன்பதாம் வீட்டுக்காரன், நான்காம் அதிபதி ஆகியோருடன் ராகுவும் வந்து
ஒட்டிக்கொண்டிருந்தால், அல்லது அவர்கள் இருவரும் ராகுவின் பார்வை
பெற்றிருந்தால், ஜாதகனின் தாய் கணவனைப் பிரிந்து வாழ்பவளாக இருப்பாள்
அல்லது விவாகரத்து பெற்றவளாக இருப்பாள்.
---------------------------------------------------------------------------------------------------------------
5.
ஐந்தாம் வீட்டில் இருந்தால் (That is when the ninth lord is placed in the fifth
house from the lagna)

நன்றாக இருந்தால் (If well placed):
ஜாதகனின் குழந்தைகள் அம்சமாக இருப்பார்கள். உங்கள் மொழியில் சொன்னால்
சூப்பராக இருப்பார்கள். திறமைசாலிகளாகவும், நுண்ணறிவுடையவர்களாகவும்
இருந்து ஜாதகனுக்கு நல்ல பெயரை வாங்கிக்கொடுப்பார்கள்.

ஜாதகன் அரசுப் பணிகளில் இருந்தால், பல உயர்வுகளைப் பெற்றுப் பிரபலமாக
வலம் வருவான். எல்லாச் செல்வங்களும் கிடைக்கும். குடும்பம் சிறந்து விளங்கும்.
ஜாதகனின் தந்தையும் புகழ் பெற்றவராக, செல்வாக்கு உடையவராக இருப்பார்.

மொத்தத்தில் ஜாதகன் அதிர்ஷ்டகரமான, வெற்றிகளை உடைய, மதிப்புடைய
வாழ்க்கை வாழ்வான்.

நன்றாக இல்லாவிட்டால் (it not well placed)
முன் பத்திகளில் கூறியவற்றிற்கு எதிரான வாழ்க்கை அமையும்.
--------------------------------------------------------------------------------------------------------
6
ஆறாம் வீட்டில் இருந்தால் (That is when the ninth lord is placed in the sixth
house from the lagna)

நன்றாக இருந்தால் (If well placed):
ஜாதகன் போராடி, வழக்குத் தொடுத்துதான் தன் தந்தையாரின் சொத்துக்களை
அடையமுடியும்.

நன்றாக இல்லாவிட்டால் (it not well placed):
தந்தாயின் சொத்துக்களை அடையமுடியாது. அல்லது கிடைக்காது. மேற்கொண்டு
தந்தையார் நிலுவையில் வைத்துவிட்டுப்போன கடன்களைத் தன் கைக்காசைக்
கொண்டு தீர்க்க வேண்டியதாயிருக்கும்.

பொதுவாக இந்த இடம் ஒன்பதாம் வீட்டு அதிபதி அமர்வதற்கு ஏற்ற இடமல்ல!
எது எப்படி இருந்தாலும் பொது அமைப்பில் ஜாதகனுடைய தந்தை நோய்களை
உடையவாரகவும், பிரச்சினைகளை உடையவராகவும் இருப்பார்.

அப்படியே சொத்துக்கள் கிடைத்தாலும், பல வழிகளிலும் அவற்றை இழக்க
நேரிடும். ஜாதகனுக்கு வயதான காலத்தில் உடல் உபாதைகள் ஏற்படும்!
---------------------------------------------------------------------------------------------------------------
7.
ஏழாம் வீட்டில் இருந்தால் (That is when the ninth lord is placed in the seventh
house from the lagna)

நன்றாக இருந்தால் (If well placed):
அடக்கம், அமைதி, அழகு என்று எல்லாம் அமைந்த மனைவி ஜாதகனுக்குக்
கிடைப்பாள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். தந்தையின்
சொத்துக்களாலும், பிற்காலத்தில் தன் பிள்ளைகளின் சம்பாத்தியத்தாலும்
ஜாதகனின் வாழ்க்கை மகிழ்ச்சி உள்ளதாக இருக்கும்.
(The native will get a good and fortunate wife!)

ஜாதகன் வெளிநாடு சென்று, பெரும் பொருள் ஈட்டுவான். சிலர் அங்கேயே
செட்டிலாகி செளகரியமாக வாழ்வார்கள்.

நன்றாக இல்லாவிட்டால் (it not well placed):

ஜாதகனுக்கு வெளி நாட்டு வேலையும், அங்கேயே தங்கும் வாய்ப்பும் கிடைக்கும்.
ஆனால் மனதில் மகிழ்ச்சி இருக்காது.
---------------------------------------------------------------------------------------------------------------------
8.
எட்டாம் வீட்டில் இருந்தால் (That is when the ninth lord is placed in the eighth
house from the lagna)

நன்றாக இருந்தால் (If well placed):
ஜாதகன் தன் தந்தையைச் சிறு வயதிலேயே இழந்திருப்பான். தந்தையின்
சொத்துக்களை மற்றவர்கள் அபகரித்திருப்பார்கள். விதிவிலக்காகச் சிலருக்கு
மட்டும் போரட்டத்திற்குப் பிறகு தந்தையின் சொத்துக்கள் கிடைக்கும்.

நன்றாக இல்லாவிட்டால் (it not well placed):
ஜாதகன் வறுமையில் உழல்வான். அன்றாடம் காய்ச்சியாக வாழ நேரிடும்.
(Poverty also will live with him). வாழ்க்கையின் நடைமுறைகளைக் காற்றில்
பறக்க விட்டுவிடுவான்.
தன் முன்னோர்கள் சேர்த்துவைத்திருந்த நாணயம், நம்பிக்கை, நல்ல பெயர்கள்
ஆகியவற்றை ஒழித்துக் கட்டிவிடுவான். தந்தையின் உடல் நிலை கெட்டிருக்கும்.
இவனுக்கும் புத்திர தோஷம் உண்டாகும்.
------------------------------------------------------------------------------------------------------------------------------
9.
ஒன்பதாம் வீட்டில் இருந்தால் (That is when the ninth lord is placed in the ninth
house from the lagna)

நன்றாக இருந்தால் (If well placed):
ஒன்பதாம் வீட்டு அதிபதி தன் சொந்த வீட்டில் அதாவது ஒன்பதிலேயே, ஆட்சி
பலத்துடன் இருந்தால், ஜாதகனின் தந்தை தீர்க்க ஆயுள் உடையவராக இருப்பார்.
தான, தர்மங்கள் நிறைந்த குடும்பம் அமையும். தந்தையின் சொத்துக்கள் தானாக
வந்து சேரும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் பெற்று உன்னத நிலையில்
வாழ்வான். அனைவரின் ஆதரவும் கிடைக்கும். மகிழ்ச்சியாக இருப்பான்.

அடிக்கடி வெளி நாடுகளுக்குச் செல்வான். பெரும்பொருள் ஈட்டுவான். பலர்
அங்கேயே சென்று தங்கி விடுவார்கள். பெரும் பொருள் ஈட்டி உன்னத நிலையில்
வாழ்வார்கள்.

நன்றாக இல்லாவிட்டால் (it not well placed):
ஒன்பதாம் அதிபதி கெட்டிருந்தால் அல்லது 6, 8, 12 ஆம் வீடுகளில் அமர்ந்திருந்தால்
ஜாதகன் தன்னுடைய சின்ன வயதிலேயே தந்தையை இழக்க நேரிடும்.
-------------------------------------------------------------------------------------------------------
10.
பத்தாம் வீட்டில் இருந்தால் (That is when the ninth lord is placed in the tenth
house from the lagna)

நன்றாக இருந்தால் (If well placed):
ஜாதகன் பெரும் புகழையும், வலிமைகளையும் பெற்றுத் திகழ்வான்.(The native will
become famous and powerful!) அதீதமான பொருள் ஈட்டுவான். வசதியான ராஜ
வாழ்க்கை வாழ்வான். தர்ம சிந்தனைகளையுடைய வாழ்க்கை அமையும்.சட்டத்திற்குக்
கட்டுப்பட்ட குடிமகனாகத் திகழ்வான். செல்வாக்கு உள்ள குடும்பமாக இருக்கும்.

ஒன்பதாம் அதிபதியும் பத்தாம் அதிபதியும் கூட்டணி போட்டு நல்ல கிரகங்களின்
பார்வை பெற்றிருந்தால், ஜாதகனுக்கு அரசில் உயர் பதவிகள் கிடைக்கும். சிலர்
அமைச்சராகக்கூட ஆவதுண்டு!

தந்தையின் சொத்துக்கள் விருத்தியடையும். தான தர்மம், தெய்வ வழிபாடு
மிகுந்தவர்களாக இருப்பார்கள். உறவினர்கள், நண்பர்கள், பெரிய மனிதர்களின்
தொடர்பு என்று ஜாதகன் சிற்ப்பான வாழ்க்கை வாழ்வான்.

நன்றாக இல்லாவிட்டால் (it not well placed):
மேற்கூறிய பலன்கள் இருக்காது!
----------------------------------------------------------------------------------------------------------
11.
பதினொன்றாம் வீட்டில் இருந்தால் (That is when the ninth lord is placed in the
eleventh house from the lagna)

நன்றாக இருந்தால் (If well placed):
ஜாதகன் அதீத செல்வமுடையவனாக இருப்பான். செல்வாக்கும், அதிகாரமுமுள்ள
பல நண்பர்களை உடையவனாக இருப்பான். அவனுடைய தந்தையும் அப்படியே
இருப்பார்

நன்றாக இல்லாவிட்டால் (it not well placed):
நன்றி, விசுவாசமில்லாத நட்புக்களாலும், உறவினர்களாலும், சொத்து சுகங்களை
இழக்க நேரிடும். மோசடிகளையும், துரோகங்களையும் சந்திக்க நேரிடும். அதனாலும்
சொத்துக்களை இழக்க நேறிடும். ஜாதகனுடைய தந்தையார் ஆரம்ப காலங்களில்
செல்வாக்கு உடையவராக இருந்தாலும், பின்னாட்களில் தாழ்வான நிலையை
அடைவார். அவருடைய சொத்துக்களும் நில்லாது போய்விடும்
--------------------------------------------------------------------------------------------------------------
12.
பன்னிரெண்டாம் வீட்டில் இருந்தால் (That is when the ninth lord is placed in the
twelfth house from the lagna)

நன்றாக இருந்தால் (If well placed):
பூர்வீகச் சொத்துக்கள் நிலைக்காது. வம்பு வழக்குகளில் அனைத்தையும் இழக்க
நேறிடும். சிற்றின்ப வேட்டைகளில் ஈடுபட்டு, அதன் மூலமும் சொத்துக்களை
இழக்க நேரிடும்.

நன்றாக இல்லாவிட்டால் (it not well placed):
ஏழ்மையான சூழல் நிலவும். வாழ்க்கையே போராட்டமாக இருக்கும். கடினமாக
உழைக்க வேண்டும். பல சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும். சில அமைப்பு
உள்ளவர்களுக்குத் தந்தை சிறுவயதிலேயே இறந்திருப்பார். ஜாதகனுக்கு ஒரு பைசாக்
கூட பணம் இல்லாத நிலைக்கு ஆளாக்கிவிட்டுச் சென்றிருப்பார்.

எது எப்படியோ இந்த ஒன்பதாம் அதிபதி என்று மட்டுமில்லை - எந்த வீட்டு
அதிபதியும் லக்கினத்திற்குப் பன்னிரெண்டாம் வீட்டில் அமர்வது உசிதமல்ல!
பிரச்சினைதான். அது அங்கே வந்து அமரும் கிரகத்திற்கு உரிய வீட்டை முற்றிலும்
பாதிக்கும்.
----------------------------------------------------------------------------------------------------------------
இந்தப் பதிவில் சொல்லப்பட்டுள்லது அனைத்துமே பொதுவிதிகள்தான்.
காரகனின்
நிலைமை இது அனைத்தையும் மாற்றிவிடும். புரட்டிப்போட்டுவிடும்.
அதையும்
கணக்கிட்டுத்தான் முடிவிற்கு வரவேண்டும்.

காரகன் சூரியன், ஜாதகத்தில் உச்சமாகி, 6, 8, 12ல் இருந்தாலும், நல்ல
பலன்களையே தருவான். அதே நேரத்தில் அவன் நல்ல இடத்தில் அமர்ந்திருந்தாலும்
நீசமாக இருந்தால் நல்ல பலன்களைத் தர முடியாது. ஆகவே காரகனின்
நிலைமைதான் இங்கே சாவியைப் போன்றது. அதைவைத்துத்தான் இந்த
வீட்டைத் திறந்து பார்க்க முடியும். இதையும் கவனத்தில் கொள்க!

இருவரின் விளையாட்டுக்களையும் கணக்கிட்டு முடிவிற்கு வருவது எளிதல்ல!
அதற்குப் பொறுமையும், அனுபவமும், யோசிக்கும் திறமையும் வேண்டும்.

அதனால்தான் பல ஜோதிடர்கள் (குறிப்பாக அனுபவம் இல்லாதவர்கள்)
இங்கே
அலசுவதில் சறுக்கிவிடுவார்கள். அவர்கள் சொல்வது பொய்யாகிவிடும்.
ஆனால் ஜோதிடம் பொய்யல்ல!


பதிவின் நீளம் கருதி (இன்று அதிக பக்கங்கள் - இரண்டு நாள் பதிவை ஒரே
பதிவாகக் கொடுத்திருக்கிறேன்.)இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன்.

இதன் அடுத்த பகுதி, அடுத்த பதிவில்!

நன்றி, வணக்கத்துடன்,
வகுப்பறை வாத்தியார்

(தொடரும்)

வாழ்க வளமுடன்!

1.8.08

எதுவுமே என்றைக்கும் சொந்தமில்லை!

Every relationship has an expiry date! என்று ஆங்கிலத்தில் ஒரு சொல்லடை உண்டு!
எல்லா உறவுகளுமே ஒரு நாள் காலாவதியாகிவிடும். சுருக்கமாகச் சொன்னால் காணாமல் போய்விடும்!

அன்பு, பரிவு, பாசம், காதல், மயக்கம், கிறக்கம் என்று உருகிப் போகக்கூடிய
உறவுகள் அல்லது நட்புகள் பல நமக்கு இருக்கலாம். ஆனால் அத்தனையுமே
ஒரு நாள் காலாவதி ஆகிவிடும்!

அல்லது அவற்றை விட்டு நானும், நீங்களும் ஒரு நாள் காணாமல் போய்விடுவோம்.

அதுதான் வாழ்க்கை!

இங்கே எதுவுமே சாசுவதம் இல்லை!

நிரந்தரமாக இருக்கப் போவதில்லை!

அதைத்தான் நமது வேதங்களும், புராணங்களும், காலம் காலமாகச் சொல்லிக்
கொண்டிருக்கின்றன!

உறவுகளே காணாமல் போகும்போது, உடமைகள்?

அவைகளும் நில்லாது போய்விடும்.

உங்களுக்குக் கெட்ட நேரம் வரும்போது அவைகள் போய்விடும்! அல்லது அவற்றை
அப்படியே பொட்டது பொட்டபடி நீங்கள் போய்விடுவீர்கள்!

அந்த அவலத்தை ஞானி ஒருவர் அசத்தலாகச் சுட்டிக் கட்டினார்:

(25 வரிகள் உள்ளன. இது முன் பதிவு ஒன்றில் எழுதியதுதான். மீண்டும் ஒருமுறை
படிப்பதில் தவறில்லை. படிக்க வேண்டுகிறேன்.)

எல்லாம் இருக்கிறது; நீ மட்டும் எங்கே போனாய்?

”நீ பிறந்த வீடு இருக்கிறது. நீ பொருள் சேர்த்துக் கட்டிய வீடு இருக்கிறது
உன்னைப்பெற்றவள் இருக்கிறாள், உன் கரம் பிடித்தவளும் இருக்கிறாள்
நீ பெற்ற பிள்ளைகளும் இருக்கின்றன
நீ பெற்ற விருதுகளும், ஊர் பேசிய பெருமைகளும் இருக்கின்றன
உற்றார் உறவினர்களும் இருக்கிறார்கள், சேர்த்த பொருள்களும் இருக்கின்றன
உணக்கு அடுத்த வேளை உணவும் தயாராக இருக்கிறது. இத்தனை காலமும்
உனக்கு உருவமளித்த உடலும் இங்கே இருக்கிறது -உயிரற்ற நிலையில்!
உன்னை மட்டும் காணவில்லையே - எங்கே போனாய்?”

என்று மனித வாழ்வு, ஒருநாள் முடிந்து, ஒன்றுமில்லாமல் போய் விடும்
அவலத்தை, ஒரு ஞானி நான்கே வரிகளில் நெத்தியடியாகப் பாட்டில்
சொன்னார்

அதை உங்களுக்காக மீண்டும் இன்று கொடுத்துள்ளேன்

”வீடிருக்கத் தாயிருக்க வேண்டுமனை யாளிருக்கப்
பீடிருக்க வூணிருக்கப் பிள்ளைகளும் தாமிருக்க
மாடிருக்கக் கன்றிருக்க வைத்த பொருளிருக்கக்
கூடிருக்க நீபோன கோலமென்ன கோலமே!”
- பட்டினத்தார்

பீடு = பெருமை (Honour)
ஊண் = உணவு (food)

இந்தப் பாட்டிலுள்ள கருத்தைக் கவியரசர் கண்ணதாசன் அவர்கள் எளிமைப்
படுத்தி இப்படிச்சொன்னார்:

ஆடிய ஆட்டமென்ன?
தேடிய செல்வமென்ன?
பேசிய வார்த்தையென்ன?
திரண்டதோர் சுற்றமென்ன?
கூடுவிட்டு ஆவிபோனால்
கூடவே வருவதென்ன?
---------------------------------------------------------------------------------------
"இதெல்லாம் கவைக்கு ஆகாது வாத்தியார்! ஆவி போன பிறகு என்ன நடந்தால்
என்ன? இன்றைக்கு அதெல்லாம் வேண்டாமா? நடப்பைப் பற்றிப் பேசுங்கள்;
எதிர்காலத்தில் உயிர் பிரியும் வரை உள்ள தேவைகளைப் பற்றிப் பேசுங்கள்!
மற்றதைப் பேசுங்கள்; பயனுள்ளதை மட்டும் பேசுங்கள்"

அதைத்தான் சொல்ல வருகிறேன்!

ஆசைப் படுவது வேறு. தேவைகள் வேறு.

ஒவ்வொரு மனிதனுக்கும் அடிப்படைத் தேவைகள் கிடைக்க வேண்டும்.
இருக்க இடம், உடுக்க உடை, உண்ண உணவு இம்மூன்றும் அடிப்படைத் தேவைகள்!

இருக்க வீடு வேண்டும். அது ஓட்டு வீடாக இருந்தால் என்ன? அல்லது
பிளாட்டாக இருந்தால் என்ன? அல்லது பெரிய பங்களாவாக இருந்தால்
என்ன? வாடகை வீடாக இருந்தால் என்ன? அல்லது சொந்த வீடாக இருந்தால்
என்ன?

நம் உடம்பே நமக்குச் சொந்தமில்லை! அது இரவல் வீடு. வாடகை இல்லை!
நம் ஆன்மா அதில் குடியிருக்கிறது.

அதைத்தான் கவியரசர் இரண்டு வரிகளில் சொன்னார்

"இரவல் தந்தவன் கேட்கின்றால்
இல்லையென்றால் அவன் விடுவானா?"

(பாடலின் முதல் வரி ஞாபகம் இருக்கிறதா?)

அதனால் இருப்பதை வைத்து மகிழ்ச்சியாக இருங்கள்! இல்லாததற்கு ஏங்காதீர்கள்!
போராடாதீர்கள் (முயற்சி செய்யலாம் அதில் தவறில்லை)

1.
Some people are born genius
Some people are made genius
Some people become genius

2.
Some people are born rich
Some people are made rich
Some people become rich

3.
Some people are born poor
Some people are made poor
Some people become poor

மேலே குறிப்பிட்டுள்ள நிலைப்பாடுகளில் பிறப்பிலேயே ஞானம் உள்ளவன்
பிறப்பிலேயே செல்வந்தன், பிறப்பிலேயே ஏழை என்பதெல்லாம் யார் கையிலும்
இல்லை! யார் விரும்பினாலும் அல்லது விரும்பாவிட்டாலும் அப்படிப் பிறக்க
முடியாது.

அதெல்லாம் கொடுப்பினை!

நாம் பிறக்கும்போதே அதீதமான செலவந்தர் வீட்டில் - அதுவும் தவமிருந்து பெற்ற
ஒரே பிள்ளையாக இருந்துவிட்டால் எவ்வளவு அற்புதமாக இருக்கும். வாழ்க்கையில்
எந்தத் தேடலும் இல்லாத நிலை இருந்து விட்டால் எப்படி இருக்கும்?

கற்பனை செய்து பாருங்கள் ; கற்பனைக்கென்ன காசா? பணமா?
கற்பனை செய்து பாருங்கள்.

சென்னை அடையாறில் இரண்டு ஏக்கர் தோட்டத்துடன் பங்களா, அண்ணா சாலையில்
ஸ்பென்சர் பிளாசா அளவிற்குக் கட்டடம், நுங்கம்பாகத்தில் ஒரு ஃபைவ் ஸ்டார்
ஹோட்டல்,
வளசரவாக்கத்தில் 25 வீட்டு மனைகள், கோடம்பாக்கத்தில் ஒரு ஸ்டுடியோ,
திருவான்மியூரில் 50 ஏக்கர் பூமி, ஊட்டியில் 200 எக்கர் தேயிலைத் தோட்டம்,
ஸ்ரீபெரும்புதூரில் ஒரு பிரம்மாண்டமான - நம் குடும்பத்திற்குச் சொந்தமான
பொறியியற் கல்லூரி, 500 கோடி ரூபாய் அளவிற்குப் ப்ளூ சிப் பங்குப் பத்திரங்கள்
வீட்டில் 2 ரோல்ஸ்ராய்ஸ், மற்றும் 4 பென்ஸ் கார்கள் அதோடு நம்மை மணம்
செய்துகொள்ளப் போட்டி போடும் நிலையில் சினேகா போன்ற அத்தை மகள்
அல்லது நயன்தாரா போன்ற மாமா மகள்........இப்படியெல்லாம் by birth நமக்கு
இருந்தால் எப்படியிருக்கும்?

(நன்றாக இருக்காது. சுவையில்லாமல் போய்விடும். தேடிப் பிடிப்பதில் உள்ள
த்ரில் இருக்கிறதே அதற்கு நிகரானது எதுவுமே இல்லை. அது புரிபவர்களுக்கு
மட்டுமே புரியும்)

அதெல்லாம் முயற்சியின்றி வருவது. அதற்கு ஜோதிடத்தில் பாக்கியம் (gains)
என்று பெயர்.

அந்த பாக்கியம் ஒருவனுக்கு எந்த அளவு இருக்கிறது என்பதைக் காட்டுவதுதான்
ஒன்பதாம் வீடு. தமிழில் அதைப் பாக்கிய ஸ்தானம் என்பார்கள். ஆங்கிலத்தில்
It is called as House of Gains!

அந்த வீடுதான் ஒருவனுக்கு அமையும் தந்தையைப் பற்றிய வீடு. பூர்விகச் சொத்துக்
களுக்கான வீடு. தந்தைவழி உறவுகளுக்கான வீடு.

ஜோதிடத்தின் மேன்மை அதன் வீடுகளின் பிரிவில்தான் இருக்கிறது. ஒருவனுக்குத்
தாய்தான் முதன்மையான உறவு. தாய்க்கு 4ஆம் வீடு. அடுத்து தந்தை. அதற்கு
9ஆம் வீடு.

கல்வி முக்கியம். கல்விக்கு 4ஆம் வீடு. கல்வியைவிட அறிவு முக்கியம். அதற்கு
5ஆம் வீடு.

வேலை முக்கியம். ஆதற்கு 10ஆம் வீடு. வேலையைவிட அதனால் நமக்குக்
கிடைக்கும் ஆதாயங்கள் முக்கியம். அதற்கு 11ஆம் வீடு.

எல்லாவற்றையும் விட நாம் முக்கியம் அதற்கு ஒன்றாம் வீடு. அதைவிட நமது
உயிர் முக்கியம். இங்கே வாழப்போகும் நாட்கள் முக்கியம். அதற்கு 8ஆம் வீடு.

எல்லாக் காலத்திலேயும் நம்மை அரவணைக்க குடும்பச் சூழல் முக்கியம். அதற்கு
2ஆம் வீடு. கையில் காசு முக்கியம் அதற்கும் அதே 2ஆம் வீடு.

எதுவந்தாலும் தாங்கக்கூடிய துணிச்சல் முக்கியம். அதற்கு மூன்றாம் வீடு.

நோய்களையும், எதிரிகளையும், இழப்புக்களையும், வாழ்க்கையில் சந்தித்தாக
வேண்டும். அதற்கான வீடுகள் 6ம் 12ம் ஆகும்!

ஒரு கவிஞன் சொன்னான்:

"அணைக்க ஒரு அன்பில்லாத மனைவி
பிழைக்க ஒரு பிடிப்பில்லாத தொழில்
வளர்க்க இரு நோயுற்ற சேய்கள் - ஆனாலும்
இன்னும் உலகம் கசக்கவில்லை!"

என்ன ஒரு அசத்தலான மனம் பாருங்கள் அவனுக்கு!
------------------------------------------------------------------------------
அடுத்த பாடம் ஒன்பதாம் வீட்டைப் பற்றியது. அதைப் பற்றிய செய்திகளை
உங்களுக்கு விவரமாகத் தரவுள்ளேன்.

பதிவின் நீளம் கருதி இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன்.

நன்றி, வணக்கத்துடன்,
வகுப்பறை வாத்தியார்

வாழ்க வளமுடன்!