மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label Notable Persons. Show all posts
Showing posts with label Notable Persons. Show all posts

5.4.22

மரணத்தை விட கொடூரமான விஷயம் என்னவென்று தெரியுமா...?


மரணத்தை விட கொடூரமான விஷயம் என்னவென்று தெரியுமா...?

கவிஞர் வாலி  அசத்தலாகச் சொன்னது!

கீழுள்ளவை கவிஞர் வாலி பதிந்த சில சம்பவங்கள்.

"அடக்கமாகும் வரை அடக்கமாக இரு" என்று உணர்த்தும் நினைவுச் சின்னங்கள் .

 "இந்தக் கடிதம் கொண்டுவரும் பையனிடம் இருபதோ முப்பதோ கொடுத்து அனுப்பினால் நலமாயிருக்கும்..!’

இப்படி ஒரு கடிதத்துடன் என் வீட்டிற்கு ஒரு பையன் வரும் போதெல்லாம், எனக்கு வியர்த்துக் கொட்டும். எவ்வளவு பெரிய எழுத்தாளர்; எப்படியிருந்தவர்.. அவருக்கா இப்படிஒரு சிரமம்...?

ஒரு கம்பெனியில் பாட்டு 'கம்போஸிங்’. எம்.எஸ்.வி-யுடன் அமர்ந்திருக்கிறேன். கம்பெனி மாடியில் குடியிருக்கும் ஒருவர் 'ஹாய் வாலி ..!’ என்று இறங்கி வருகிறார்.

சிரிக்கச் சிரிக்க அளவளாவி விட்டு, ''வாலி..! உன் டிரைவரை விட்டு, ஒரு பாக்கெட் 'பர்க்லி’ சிகரெட் வாங்கிண்டு வரச் சொல்லேன். என்னோட பிராண்ட் 555 வாங்க இப்பெல்லாம் வசதியில்லே...!''

எவ்வளவு பெரிய நடிகர்..! எம்.ஜி.ஆர், சிவாஜி படங்களில் அவர்களை விட அதிகம் சம்பளம் வாங்கியவர்! படுக்கையறைக்கே கார் வருகிற மாதிரி பங்களா கட்டியவர்! எங்கே போனது அந்த வாழ்வும் வளமும்..?

என் வீட்டு வாசலில் ஒரு டாக்ஸி. ஒரு நடிகை. ஒரு காலத்தில் தமிழ்திரையுலகின் முடிசூடா அரசி. என்னைப் பார்க்க வந்தவர், 'வாலி சார்.. எனக்கு ஒரு நாடகம் எழுதிக் கொடுங்க; ஒரு ட்ரூப் வெச்சு, நடத்தலாம்னு இருக்கேன்' என்று மெல்லிய குரலில் சொன்னார்.

சென்னை எழும்பூர் ரயில் நிலையம். சிமென்ட் பெஞ்சில் ஒருவர் அமர்ந்திருக்கிறார். இன்றைய தலைமுறைக்கு அவரைத் தெரியவில்லை. நான் கவனித்து விட்டேன்.

ஓடிப் போய் அவரருகே சென்று, 'நமஸ்காரம் அண்ணா..! நானும் உங்க மாதிரி திருச்சிக்காரன் தான். இப்போ, சினிமாவில பாட்டு எழுதிண்டிருக்கேன். என் பேரு வாலி’ என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, அவரை வணங்குகிறேன்.

'ஓ நீங்கதான் அந்த வாலியா..?’ என்று என் கைகளைப் பற்றுகிறார். அவர் தொட மாட்டாரா என்று தமிழர்கள் ஏங்கித் தவமிருந்த காலம் ஒன்று உண்டு. இன்று அவர் என்னைத் தொடுகிறார். நான் சிலிர்த்துப் போகிறேன்.

அவர் தொட்டதால் அல்ல. எந்த ரயில்நிலையத்தில் அவர் ரயிலிருந்து இறங்கவிடாமல் மக்கள் அலை மோதினார்களோ அங்கே கவனிக்க ஆளில்லாமல் தனியாக அவர் அமர்த்திருந்த நிலையை பார்த்து.

காலம் எப்படியெல்லாம் தன் ஆளுமையை காட்டுகிறது. எண்ணிப் பார்க்கிறேன், அந்தப் பழைய நிகழ்வுகளை:-

கடிதம் அனுப்பிப் பணம் கேட்டவர், 'கண்ணகி’க்கு உயிர் கொடுத்த, உலகு புகழ் உரையாடல்களை எழுதிய திரு. இளங்கோவன்.

என்னிடம் சிகரெட் கேட்டவர் 'மாடி வீட்டு ஏழை’யான திரு.சந்திரபாபு அவர்கள்.

நாடகம் எழுதித் தரக் கேட்டவர் - நடிகையர் திலகம் திருமதி.சாவித்திரி அவர்கள்.

எழும்பூர் ரயில் நிலையத்தில் எவர் கவனத்தையும் ஈர்க்காமல் அமர்ந்திருந்தவர் - தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் டூப்பர் ஸ்டார் - திரு. எம்.கே. தியாகராஜ பாகவதர்.

இவர்களைவிடவா நான் மேலானவன்?

அன்று முதல் நான், 'நான்’ இல்லாமல் வாழப் பயின்றேன்.!

இதுதான் மனிதவாழ்க்கை.

இருந்தாலும் வாழ்ந்து கெட்டவர்களின் துயரம் மரணத்தை விட கொடூரமானது.

சமயங்களில் மரணம் தான் விடுதலையோ என்று ஏங்க வைத்து விடுமளவு குரூரமானது.
------------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
=============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

29.4.21

நகைச்சுவை நடிகரும் ஓவியருமான பாண்டு!!!



நகைச்சுவை நடிகரும் ஓவியருமான பாண்டு!!!

அதிமுககொடி இரட்டை இலை உருவான விதம்*

 *பாண்டு இவர் சினிமா நடிகர்மட்டுமல்ல,சிறந்த ஓவியரும் கூட.*

*தமிழ்நாட்டில் ஓவியத் துறையில் phd பட்டம் பெற்ற முதல் நபர் இவர்தான்.*

*தமிழக அரசின் சுற்றுலாத் துறை* *சின்னத்தை வரைந்து கொடுத்தவர்* *இவர் தான்.*

*நகைச்சுவை நடிகர் பாண்டு என்றாலே, அவரின் விசித்திரமான உச்சரிப்பும், வாயசைவும்தான் நினைவுக்கு வரும்.*

*அ.தி.மு.க. கொடியை வடிவமைத்தவரும், இரட்டை இலைச் சின்னத்தை வரைந்து கொடுத்தவரும் இவர்தான்.*

 *இது இந்தத் தலைமுறையினருக்குத் தெரியுமா என்பது சந்தேகமே. தனது அனுபவங்களைப் பற்றி அவர் நினைவு கூர்ந்த அதிமுக தொடங்கப்பட்ட 1972-ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 17-ஆம் தேதி இரவு 10 மணிக்கு தன்னைச் சந்திக்க வருமாறு அழைத்தார்  எம்.ஜி.ஆர்.(MGR)   கட்சி தொடங்கி இருக்கிறேன் தெரியுமா... என்றார். தெரியும் பத்திரிகையில் பார்த்தேன் என்றேன் நான். கட்சிக்கு பேர் என்ன எனக் கேட்டார். அதிமுக என்றேன். கட்சிக்கான கொடியை நீங்கள்தான் வரைய வேண்டும். இன்றிரவே இங்கேயே தங்கி வரைய வேண்டும் என்றார். அங்கே இருந்த அறைக்குள் என்னை அனுப்பிவிட்டு, வெளியில் பூட்டி சாவியை எடுத்துக் கொண்டு போய்விட்டனர். அதிமுக ஆரம்பிக்கப்பட்டதால் பரபரப்பான சூழ்நிலை அப்போது தமிழகத்தில் இருந்தது. எம்.ஜி.ஆரின் வீடு இருந்த இடத்தை திரைப்பட சண்டைக் கலைஞர்கள்தான் காவல் காத்தனர்.*

*அப்போதுதான் சென்னை ஓவியக் கல்லூரியில் படித்து முடித்திருந்தேன். எனது சகோதரர் இடிச்சபுளி செல்வராஜ், எம்.ஜி.ஆருக்கு மிகவும் நெருக்கமாக இருந்தார். அவர் மூலமாக என்னைப் பற்றி தெரிந்து கொண்டே என்னை அழைத்திருந்தார் எம்ஜிஆர்.*

*இரவு 10 மணிக்கு அறைக்குள் சென்ற நான் 10.30-க்குள் கருப்பு- சிவப்பு நிறங்களில், நடுவில் அண்ணா சிரிப்பது போல ஒரு கொடியை வரைந்து கொடுத்தேன். அதைப் பார்த்த எம்.ஜி.ஆர் தொண்டர்களை உசுப்பிவிடுவது போல இந்தக் கொடி இல்லையே.*

 *சிரிப்பில் போர்க்குணம் இருக்காது. கட்சியின் போர்க் குணத்தை வெளிக்காட்டும் விதத்தில் கொடியை வடிவமைத்துத் தர வேண்டும் என்றார்.*

*அண்ணா சாலையில் உள்ள அண்ணாவின் சிலையை மனதில் வைத்து, அவர் கை நீட்டிப் பேசுவது போல கொடிக்கான படத்தை வரைந்து கொடுத்தேன். அதைப் பார்த்த அவர் இந்தப் படத்தைக் கொடியாக மாற்றும்போதும் கை வெட்டுப்பட்டுவிடும் என்றார். கையைச் சுருக்கி நேராக இருப்பது போல வரைந்து கொடுத்தேன். அது பார்ப்பதற்கு, அண்ணாவின் கையில் துப்பாக்கி இருப்பது போல இருந்தது. அதைப் பார்த்தவர். ஏன் எம்.ஆர்.ராதா என்னை சுட்டது போதாதா என்றார். உடனே கையை சிறிது மேலே இருப்பது போன்ற இப்போதைய கொடியை வரைந்து கொடுத்தேன். கட்டித் தழுவி, மிகவும் மகிழ்ச்சியுடன் அதை ஏற்றுக் கொண்டார்.*

*அதேபோல, இரட்டை இலைச் சின்னத்தையும் நான்தான் வரைந்து கொடுத்தேன். அதிமுக ஆட்சியைக் கைப்பற்றியவுடன் நடைபெற்ற வெற்றிக் கூட்டத்தில் என்னை அறிமுகப்படுத்தி, 5 பவுன் தங்கச் சங்கிலியும், ரூ.10,000 ரொக்கப் பரிசும் கொடுத்தார் எம்ஜிஆர்.*

*தமிழகம் முழுவதும் நான் வடிவமைத்த கொடி பட்டொளி வீசிப் பறப்பதைப் பார்க்கும் வேளைகளில் எல்லாம் மிகவும் சந்தோஷமாக இருக்கும். ஒரு கலைஞனுக்கு இதைத் தவிர வேறு என்ன வேண்டும் என்றார் அவர்.*
=======================================
Pandu is a Born: (February 19, 1947) Tamil film actor who has appeared in many comedy roles. His brother Idichapuli Selvaraj had also previously appeared in films as a comedian.Native Place Komarapalayam

Career
After finishing his schooling, Pandu entered the College of Arts and Crafts in Chennai and nurtured an interest in creative art. Pandu made his acting debut in Karaiyellam Shenbagapoo joining his brother Idichapuli Selvaraj who had appeared in several films a comedian. He played a supporting role in Agathiyan's Kadhal Kottai portraying Ramasamy who accompanies Ajith Kumar in Rajasthan.

In 2013, he starred in Vellachi, which featured his son Pintu Pandu in a leading role. He designed Tamil Nadu Tourism Logo Umbrella and got prize and appreciation. He designed the Two Leaves Party Logo under the instruction and supervision of AIADMK founder leader MGR

Away from films, in 1975 he started a brass and aluminium business in Chennai called Prapanj Unlimited. He runs it as a family business, with son Prabhu Panju in charge. In 2014, he held an art exhibition alongside another son Panju Pandu.
------------------------------------------------------------------------------
படித்தேன்; பகிர்ந்தேன்!
அன்புடன்
வாத்தியார்
================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

26.4.21

திரைப்படத்தைப் போட்டுக் காட்டிய முதல் தமிழர்!


திரைப்படத்தைப் போட்டுக் காட்டிய முதல் தமிழர்!

தமிழகத்தில் தமிழர்களில் முதல்முறையாக
திரைப்படம் காண்பித்த,  திரைப்பட வெளியீட்டாளர்,
தயாரிப்பாளர், தொழிலதிபர்
கோயம்புத்தூரைச் சேர்ந்த
சாமிக்கண்ணு வின்சென்ட்
பிறந்த தினம் இன்று
( 18 ஏப்ரல்  1883 )

இவர் திருச்சி பொன்மலை ரயில்நிலையத்தில் டிராப்ட்ஸ்மேனாகப் பணியாற்றியவர். 1905 ம் ஆண்டு Dupond என்ற பிரஞ்சுக்காரரின் சினிமா டென்ட் (நகரும் சினிமா கொட்டகை) விலைக்கு வந்தது அதை ரூ.2,000 க்கு வாங்கி முதன்முதலாக திருச்சி செயின்ட் ஜோசப் கல்லுாரிக்கு அருகிலிருந்த ஒரு வெட்டவெளி மைதானத்தில் 1905 ம் ஆண்டின் மத்தியில் பொதுமக்களுக்கு திரைப்படம் காண்பித்தார்.

பின்னாளில் 1914 ல் கோவையில் Variety Hall என்ற பெயரில் இவர் தியேட்டர் கட்டினார். Variety Hall  தற்போது  Delite Theatre என்ற பெயரில் இயங்குகிறது. 
-------------------------------------------------------
மேலதிகத் தகவல்கள்!
https://en.wikipedia.org/wiki/Samikannu_Vincent

Samikannu Vincent (18 April 1883 – 22 April 1942) was a cinema exhibitor turned theatre owner. His first theatre was Variety Hall (now Delite theatre) in Coimbatore in 1914. He was a pioneer in making movies, popular in Madras presidency and contributing to growth of it by buying new equipment from abroad, as well as establishing the concept of modern day theatres that exist today.
Early Days
Samikannu Vincent was born on April 18, 1883. He was born in Coimbatore. He was working in South Indian Railway as a draftsman-clerk. He happened to see some short films exhibited by French film exhibitor named DuPont. Vincent befriended him and by the time when DuPont wanted to return home, Samikannu Vincent raised enough money with difficulty to buy the Frenchman's projector, accessories and films. At the age of 22, he resigned his desk job and set up business as film exhibitor. He travelled to villages to exhibit the films he had. The film "Life of Jesus" became a huge hit in the "tent cinema" where he projected his films. Vincent usually screened his films in a tent, which was erected on a stretch of open land close to a town or village. The “tent cinema” concept became very popular.
Family
Samikannu Vincent had 4 wives with whom he had four sons and two daughters. As per his family members, vincent married 4 wives as each one died in quick succession due to illness. He was lovable father his among all children. He never took his children along for Long trips. one of his son Selvaraj, who studied both at St. Michaels in coimbatore and St. Joseph's College in Tiruchi, stopped with intermediate (Class XII now), because his father wanted them look after his business. According to his family, his father was a good magician, for which he was dubbed evil, and refused communion by the church. “So, he had to perform in front of the church members, to prove that those were only tricks that came from his robe with innumerable pockets” 
Development
Variety Hall ( Delite Theatre) Coimbatore
During 1905, electric carbons were used in motion picture projector. During the same year Samikannu Vincent established his first tent cinema at Madras called Edison's Grand Cinemamegaphone on Esplanade. At that time it was a novelty to watch films in this tent theatre. The electrically lit tent drew large crowds. He travelled with his tent cinema to different parts of the world like Malaysia and Singapore. Aware of the advantages of brick and mortar cinema house, he built one in his home town in 1914 called Variety Hall.
Association with Cinema
In 1933, Pioneer film company Calcutta and Samikannu Vincent co-produced "Valli". Since there was also a similar production was in progress in Bombay, the Calcutta version was named as Valli Thirumanam. It had T.P. Rajalakshmi playing the lead role and went on to become a huge hit. He also later co-produced "Sampoorna Harichandra" and "Subhadra Parinayam". When the historic Central Studios was inaugurated in 1935, Samikannu Vincent joined the team as one of the directors. Besides production he was also involved in equipment distribution and theatre management. He was also known for first introducing talkie equipment for his theatre in Coimbatore beating madras
Other Notable Works
By 1919, he established the first power-driven Rice and Flour Mill in the heart of the town. He managed all this by working as long as nine hours a day, until his sons took over. In 1922, the then Government of Madras gave him permission to supply electric power to the famous Stanes European High School. With the encouragement of Sir C.P. Ramaswamy Aiyer, member of the Governor's Executive Council in charge of the Electricity portfolio, he was given enough support by the government. His application was approved and the licence to set up a power house was granted. The streets of Coimbatore and the residential buildings in the heart of the city had electric lights.
Realising the need for a printing press to produce quality handbills and other materials, he promoted the printing press (around 1916) that was located in a house near his theatre. He expanded the activities of the press by installing additional machinery, types and printing accessories in another building. Called Electric Printing Works, he used the cinema house's electric power plant to run the printing press too and created history of sorts.
Death
Samikannu Vincent died in 22 April 1942.
Association with J. P. Chandrababu
Leading Comedian J. P. Chandrababu married grand daughter of Samikannu Vincent later which ended in Divorce.
Legacy
His birthday is celebrated as Cinema theatre day.
A Tamil Documentary on Vincent's life, Pezhamozi (silent language) was also released. 
-------------------------------------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
=======================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

1.2.21

அரசியல் தூது!!!


அரசியல் தூது!!! 

அரசியல் தூது என்பது ஒரு கலை, வெளியுறவு அரசியல் என்பதை நிர்ணயிப்பதே அதுதான் . தூது என்றால் அண்டை நாட்டுக்கு சென்று விருந்து உண்டுவிட்டு படம் எடுத்து வருவது அல்ல 

அங்கு தன் சொந்த நாட்டு நலனை பாதுகாத்து எதிரிக்கு அவர்கள் பலவீனம் மற்றும் எதிரி நாடுகளின் நிலைப்பாடு இன்னும் பலவற்றை சொல்லி அவர்களை ஒருமாதிரி சிந்திக்க வைத்து வழிக்கு கொண்டுவருவது அல்லது நாடகமாடி அவர்கள் வலுவினை குலைத்துவிடுவது குழப்பிவிடுவது என்பது ஒரு கலை 

இதற்கு எக்காலமும் மிகபெரும் சான்று கண்ணன் பாரதத்தில் சென்ற தூது, ஆம் தூது செல்கின்றேன் என சென்று விதுரரை களத்தில் இருந்து அகற்றி பீஷ்மரையும் கர்ணனையும் மோதவிட்டு அஸ்வத்தாமனை துரியனால் ஒதுங்க வைத்து மிகபெரிய விஷயத்தை செய்து வந்தான் கண்ணன், கவுரவரின் தோல்வி அதில்தான் தொடங்கிற்று 

அனுமன் ராமாயணத்தில் சென்ற தூதும் அப்படியேராமனை வளைத்து வாலியினை ஒழித்தது, லங்காபுரியில் அனுமன் செய்த சாதனை விபீஷ்ணனை அழகாக கழற்றி வந்து ராமனிடம் சேர்த்து ராவணனின் பல ரகசியங்களை வாங்கி கொண்டது

கந்தபுராணத்தில் வீரபாகு சென்ற தூதும் சுவாரஸ்யமானது

அதியமான் காலத்திலும் மூவேந்தர் காலத்திலும் ஓளவை அதை அழகாக செய்தார் 

நம் காலத்தில் பாரத நாட்டுக்கு ஒரு அற்புத தூதர் கிடைத்திருக்கின்றார், அதுவும் தமிழனாக கிடைத்திருகின்றார், உலகம் உற்று கவனிக்கும் மாபெரும் ராஜதந்திரி அவர் 

சீன யுத்தம் அவராலே இப்பொழுது தடுக்கபட்டது, கொதித்தெழுந்த சீனாவினை தன் ராஜதந்திரங்களால் கட்டி போட்ட மாபெரும் வித்தைக்காரர் அவர் 

பாகிஸ்தானை சக இஸ்லாமிய நாடுகளில் இருந்தே பிரித்து அந்நாடுகளை இந்தியாவுடன் நெருங்க செய்தவர் அவர் 

சீனா வாலாட்டினால் தைவான் ஹாங்காங்க் வியட்நாம் என ஜாடை காட்டுவது, துருக்கி வாலாட்டினால் கிரிஸுடன் கைகுலுக்குவது என அவரின் சாதனைகள் ஏராளம் 

அவர் ஓய்ந்து ஒருநாள் கூட பார்த்ததில்லை இந்திய நலனுக்காய் ஒவ்வொரு நாடாக ஓடி கொண்டே இருக்கின்றார் 

ரஷ்யாவுடன் பேச்சு என்றால் வரும் வழியில் ஈரானில் ஒரு சந்திப்பு அத்தோடு துபாயில் சில நடவடிக்கை என செல்லும் இடமெல்லாம் ராஜதந்திரம் 

செஷல்ஸ் தீவோ ஜப்பானின் டோக்கியொவோ எங்கெல்லாம் இந்தியா நிற்க வேண்டுமோ அங்கெல்லாம் ஓடி ஓடி வழி செய்யும் உழைப்பு 

டிரம்பருக்கு அடுத்து வரும் பிடன் என்ன செய்வார் என எதிர்பார்த்து இபபொழுதே பல நடவடிக்கைகளை எடுக்கும் அந்த சாதுர்யம் என அம்மனிதனின் தேசசேவை பெரிது

ஆம், இன்றைய உலகின் மிகபெரும் ராஜதந்திரி என மதிக்கபடும் அந்த தமிழன், இந்திய வெளியுறவுதுறை அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் என்பவரே அந்த பெருமகன் 

இந்திய பாதுகாப்பு துறைகளில் ராணுவம் உளவுக்கு அடுத்து மாபெரும் சவாலான விஷயம் வெளிநாட்டு தூதரக பணியும் அதை முறையாக ராஜதந்திரமாக கையாள்வது 

காரணம் ஒவ்வொரு நாடும் இன்னொரு நாட்டு தூதரகத்தையும் தூதரையும் அவ்வளவு கவனிக்கும், இவர் என்ன செய்கின்றார்? யாரை சந்திக்கின்றார்? என்ன பேசுகின்றார்? தம் நாட்டுக்கு எதிராக ஏதும் செய்கின்றாரா? என சந்தேகத்தோடே நோக்கும் 

அவர் தன் நாட்டுக்கு எதிரி என அறியபட்டால் உடனே வெளிதள்ளும் சில முரட்டு நாடுகள் உடனே கொன்றுவிடும், கொமேனி அதை செய்தார், இன்னும் பல நாடுகளில் அமெரிக்க தூதர்களே அப்படி கொல்லபட்டனர் 

எதிரி நாடுகள் என அறியபட்டாலும் அவற்றை சமாதானபடுத்தி தன் நாட்டு நலத்தை பேணி காப்பது ஒருவகையான ராஜதந்திரம். இந்த பரந்த உலகில் ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு நிலைப்பாடு உண்டு, தன் சுயநலமும் உண்டு, எதிரியும் உண்டு 

ஒரு பக்கம் நெருப்பு, ஒரு பக்கம் பனி ஒரு பக்கம் பள்ளம் ஒரு பக்கம் நாகம் என சுற்றும் உலகில் தேச நலன் எனும் எண்ணெய் கலயத்தை மெல்லிய கம்பியில் நடந்து மிக கவனமாக கொண்டு செல்ல வேண்டியது அப்பணி 

கடும் ஆபத்திலும் சிக்கலிலும் சுயநலம் தேடும் உலகிலும் பிராந்திய நலம், கண்டத்தின் நலம் இன்னும் பலவகையான நலன் என இழுத்துவிட்டு அவைகளின் நம்பிக்கையினை பெற்று அதே நேரம் எதிர்தரப்பினையும் பகைக்காமல் லாவகமாக நடந்து தன் நாட்டின் நலனை காப்பது பெரும் திறமை, அப்படி ஒரு ராஜதந்திரி கிடைப்பது வரம் 

இந்தியாவுக்கு கண்ணனின் அவதாரமாக கிடைத்திருக்கின்றார் அந்த ஜெய்சங்கர் 

இந்தியாவில் யாருக்கும் இல்லாத பெரும் வரலாறு அந்த தமிழனுக்கு உண்டு , அவரின் சாதனை பக்கங்கள் நீண்டு கொண்டே போகும் அளவு பெரியவை, கொஞ்சம் சில பக்கங்களை மட்டும் காணலாம்

இன்று 66 வயதை எட்டும் அவரின் வெளியுறவு துறை பணி அவருக்கு 22 வயதான பொழுது 1977ல் தொடங்குகின்றது, முதல் பணியாக இரு வருடங்கள் மாஸ்கோவில் அன்றைய சோவியத் யூனியனில் இருந்தார். அது இந்திய சோவியத் உறவு உச்சத்தில் இருந்த காலம், உலக அரசியலை அந்த சிகப்பு பூமியில்தான் கற்க தொடங்கினார் கூடவே நிறைய கற்றார் ஜெய்சங்கர்

அவர் அதன் பின் ஜி.பார்த்தசாரதியின் கீழ் பணியாற்ற சொன்னது இந்திய அரசு, ஆம் அந்த பார்த்தசாரதி அமெரிக்காவுக்கான ராஜதந்திரியாக இருந்தார், அவரின் கீழ் அமெரிக்காவுகான இந்திய தூதரகத்தில் பணியாற்றினார் ஜெய்சங்கர் 

(இரு ஜி.பார்த்தசாரதிகள் இந்தியாவில் பிரசித்தி, ஒருவர் இந்த ஜி.பார்த்தசாரதி இவர் அமெரிக்க விஷயங்களை கையாண்ட ராஜதந்திரி. இவர் இன்று இல்லை 

இன்னொரு ஜி.பார்த்தசாரதி ராணுவத்தில் இருந்தார், பின் தெற்காசிய ராஜதந்திரியானார், இலங்கை விவகாரத்தை கையாளும் பொறுப்பை இந்திரா அவருக்கே வழங்கினார், இவர் காலத்தில்தான் போராளிகளுக்கு பயிற்சி கொடுக்கபட்டது, அந்த பார்த்தசாரதி காங்கிரஸ் காலத்தில் டம்மியாக்கபட்டார், இன்று மோடி இலங்கை விவகாரங்களுக்கு அவரையே அமர்த்தியிருக்கின்றார், இந்தியா இலங்கையில் அசத்துகின்றது 

இந்த இரு பார்த்தசாரதிகளுமே தமிழர்கள்

அமெரிக்காவில் 1985களில் ஜெய்சங்கர் இருந்தபொழுது செய்த மிகபெரும் சாதனை தாராப்பூர் அணுவுலை சிக்கலை தீர்த்தது. அன்று இந்தியா அணுகுண்டு செய்திருந்ததால் இன்றைய ஈரானுக்குள்ள நெருக்கடிகளை அமெரிக்கா கொடுத்தது அதை ராஜதந்திரமாக சமாளித்து அந்த ஆலை மீண்டும் இயங்க முழு உழைப்பை கொடுத்தார் ஜெய்சங்கர் 

அமெரிக்காவில் இருந்து மீட்கபட்டு இலங்கைக்கு அனுப்பபட்டார், அங்கு இன்னொரு ஜி.பார்த்தசாரதி பார்த்தோம் அல்லவா அவரோடு இணைந்துதான் இலங்கையின் 1987 காலங்களை எதிர்கொண்டார், அன்று அவர் கீழ்நிலை அதிகாரி 

ஜெய்சங்கர் காலத்தில்தான் இந்திய அமைதிபடை உள்ளே சென்றது, ஜெய்சங்கரும் பார்த்தசாரதியும் நல்ல முயற்சி எடுத்தார்கள் ஆனால் இந்திய தூதரான பெயர் ஜே.என் தீட்சித் என்பவர் ராஜிவின் அனுபவமின்மையால் அவரை ஆட்டிவைத்தார் 

ராஜிவின் சாவுக்கு தீட்சித் என்பவர்தான் முதல் காரணம் , மிக சிறிய குழு என  புலிகளை அவர் நடத்தியதுதான் ஈழ அழிவு 

ஆனாலும் புலிகளின் அடாவடியினை நேரில் பார்த்தவர் ஜெய்சங்கர் 

அதன் பின் டெல்லியில் பணிவழங்கபட்டது, 1996ல் ஜப்பானிய துணை தூதுவராக டோக்கியோவுக்கு அனுப்பபட்டார், ஜெய்சங்கரின் மனைவியும் ஜப்பானிய பெண்மணியே 

1998ல் இந்தியா அணுகுண்டு சோதனையினை செய்ய, அணு ஆயுததுக்கு எதிரான ஜப்பான் பொங்கி எழ அதை சமாளித்து ஜப்பானிய உறவை மேம்படுத்தியதி ஜெய்சங்கரின் பங்களிப்பு மறக்க முடியாதது 

அதன் பின் செக்நாட்டு தூதரனார் , செக்நாடு சிறியது என்றாலும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஐரோப்பிய நாடு என்பதால் இந்தியாவுக்கான காரியங்களை சிறப்பாக செய்தார் 

2004ல் அமெரிக்க தூதரனார் அந்த காலகட்டம் இந்தியா அணுஆயுத ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என அமெரிக்கா அடம்பிடித்த காலம் மிக கடுமையாக மிரட்டிய காலம், அதில் இந்திய நலன்களை காத்து, அமெரிக்க பொருளாதார தடையில் இருந்து மீட்டவர் அவர்தான் 

2004ல் இந்தியாவினை சுனாமி தாக்கியபொழுது உலகெல்லாம் இருந்து மீட்புகுழு வரவும் ஜெய்சங்கர் முக்கிய காரணம் அவரின் தொடர்பு அப்படி இருந்தது 

ஒரு கட்டத்தில் வெளியுறவு துறையின் பெரும் அதிகாரியனார், காங்கிரஸ் அரசு அவரை அதிகாரியாகவே வைத்து சிங்கப்பூரின் தூதராக அனுப்பியது, அங்கு ஓசைபடாமல் ஒரு காரியம் செய்தார், ஆம் சிங்கப்பூரில் இந்தியாவுக்கான அவசரகால ராணுவ விஷயம் சில உண்டு 

அட்டகாசமாக அதை சாதித்தார் ஜெய்சங்கர் அதன் பின் சீனாவுக்கான தூதரனார் 

அது சிக்கலான காலகட்டம் சீனா ஒருமாதிரி அடம்பிடித்து கைலாச யாத்திரைக்கு விடமாட்டோம், அருணாசல பிரதேசம் தெற்கு திபெத் என அடம்பிடித்த காலத்தில் சீன தூதராக இருந்தும் திபெத்துக்குள் வந்தார் ஜெய்சங்கர், அவரின் ராஜதந்திர அணுகுமுறையால் கைலாச யாத்திரை திறக்கபட்டது 

திபெத்தில் கால் வைத்த அல்லது வைக்க அனுமதிக்கபட்ட முதல் இந்திய தூதர் அவர்தான் 

சீனா பொதுவாக யாரையும் நம்பாது, அந்த சீனாவினையே இந்தியா சீனாவுக்கு எதிரி அல்ல என அன்று ஓரளவு தெளிவினை கொடுத்தவர் ஜெய்சங்கர், அவரின் சாதனை அது 

அதன்பின் மறுபடி அமெரிக்க தூதரனார், அப்பொழுது பல ராஜதந்திர சர்ச்சைகளும் தேவயாணி கோப்ரகடே என்ற அதிகாரி சிக்கி கொண்ட விஷயமும் நடந்தது அதை எல்லாம் சமாளித்தது ஜெய்சங்கரே 

நிச்சயம் நீண்ட அனுபவம் கொண்டவர் ஜெய்சங்கர், உலகில் அவர் கால் படா நாடு இல்லை, அவரை அறியாத வெளிநாட்டு துறைகள் இல்லை. எல்லா இடத்திலும் அவருக்கு நற்பெயரே 

இதைத்தான் மோடி குறித்துகொண்டார் 

ஹிட்லரை போன்றவர் மோடி என்பார் சிலர், ஹிட்லரின் முதல்பாதி வாழ்க்கை ஏற்றுகொள்ள கூடியதே. அந்த ஹிட்லரிடம் இருந்த சிறப்பான குணங்களில் ஒன்று எவன் மகா திறமைசாலியோ எவனால் குறிப்பிட்ட காரியத்தை திறம்பட நடத்தமுடியுமோ அவனிடம் பொறுப்பை ஒப்படைப்பது 

அவன் கண்டெடுத்த ஒவ்வொருவரும் ரத்தினங்கள் விஞ்ஞானி உட்பட, அமைச்சர்கள் தளபதிகள் உட்பட, அவனின் வெற்றிக்கு அதுதான் காரணம் 

மோடி தன் இரண்டாம் ஆட்சியில் பெரும் திட்டங்களை வைத்திருந்தார், அவை உலகை உலுக்கபோகும் விஷயம் எனவும், தேர்ந்த ராஜதந்திரியின்றி அவை சாத்தியமில்லை என்பதையும் நன்றாக உணர்ந்தபொழுது அவர் கண்முன் வந்தவர்தான் ஜெய்சங்கர் 

கொஞ்சமும் யோசிக்காமல் அவரிடம் வெளியுறவு துறை அமைச்சர் பதவியினை கொடுத்தார் மோடி 

அதன் தாக்கம் காஷ்மீர் விவகாரத்தில் 370 ரத்து செய்யபடும் பொழுது தெரிந்தது, தன் தேர்ந்த அனுபவத்தாலும் தன் அகில உலக தொடர்பாலும் உலகில் ஒரு குரல் ஒலிக்காமல் பார்த்துகொண்டார் 

அரபு நாடுகளையே அசால்ட்டாக கட்டிபோட்டார் ஜெய்சங்கர் 

பாகிஸ்தானை அடுத்து முணுமுணுத்த நாடு சீனா, அவ்வளவுதான் ஜின்பெங்கை மாமல்லபுரத்துக்கு இழுத்து வந்து அசத்தினார் ஜெய்சங்கர் 

அதன்பின் துருக்கி முணுமுணுத்தது அதுவும் ஓரிருநாளில் அமைதியாயிற்று

இதெல்லாம் மாபெரும் சாதனைகள், ஒரு வரியில் விளக்கமுடியாதவை 

ஆம் பொதுவாக இருநாட்டு தலைவர்கள் சந்திக்கும்பொழுது சம்பிரதாயமே இருக்கும் அதற்கு முன் திரைமறைவில் இருநாட்டு ராஜதந்திரிகளும் பேசி பல ஒப்பந்தம் முடிவு எல்லாம் எட்டபட்டே காட்சிகள் நடக்கும், அவர்கள் காட்சிக்கு வரமாட்டார்கள் தலைவர்கள்தான் வருவார்கள் 

பின்னணி இயக்கம் எல்லாம் வெளியுறவு துறையே 

ஒவ்வொரு நாட்டின் வெளியுறவு துறையும் கவனிக்கதக்கது, உலகில் அந்நாட்டு முகமாக அறியபடுபவை, அமெரிக்காவில் அதிபரை அடுத்து சக்தி மிக்கவர் வெளியுறவு துறை அமைச்சர், இன்னும் பல நாடுகளில் அப்படியே 

இந்தியாவுக்கு அந்த தேர்ந்த அமைச்சரை மோடி நியமித்தது மிக பெரும் நல்ல விஷயம், மோடிக்கு ஏன் சில இடங்களில் கைதட்டுகின்றோம் என்றால் இதற்காகத்தான் 

கிட்டதட்ட 22 வயதில் இருந்து 43 வருடமாக இந்தியாவுக்கு உழைத்து வருபவர் ஜெய்சங்கர், அவர் ரஷ்யாவிலும் அமெரிக்காவிலும் சீனாவிலும் எடுத்த பயிற்சியே இன்று காஷ்மீர் சிக்கலை உலக தலையீடு இன்றி தீர்க்க முடிந்தது 

இன்றும் சீனா இந்தியாவோடு இனி உரசல் இல்லை என சொல்லிவிட்டது, அமெரிக்கா இந்தியாவினை தேடுகின்றது, ஈரான் தேடுகின்றது, ஜெர்மன் தேடுகின்றது இன்னும் ஏகபட்ட நாடுகள் நட்புறவில் இருக்கின்றன என்றால் காரணம் ஜெய்சங்கர் 

இலங்கையில் இந்தியா இன்று கால்பதிகின்றது என்றால் அன்று பார்த்தசாரதி எனும் தமிழனிடம் தமிழன் ஜெய்சங்கர் பெற்ற அனுபவமும் மகா முக்கிய காரணம் 

மோடி ஊர்சுற்றுவார் என சொல்பவன் சொல்லிகொண்டுதான் இருப்பான், அவரின் ஒவ்வொரு பயணத்தின்பொழுதும் ஒரு நாட்டு நலன் இருக்கும் அதை ஜெய்சங்கர் திட்டமிட்டு வைப்பார் மோடி சென்று கையெழுத்திடுவார் 

அந்த அளவு உலக அரங்கில் தனி இடம் பெற்றிருக்கின்றார் ஜெய்சங்கர் எனும் தமிழர் 

"கனகவிசயரின் முடிதனை எரித்து கல்லினை வைத்தான் சேரமகன், இமயவரம்பினில் மீன்கொடி ஏற்றி இசைபட வாழ்ந்தான் பாண்டியனே" என்ற வரிக்கு ஏற்ப காஷ்மீரை இந்தியாவோடு முழுக்க சேர்த்த தமிழன் அவர் 

ஆம் அவர் கொஞ்சம் சொதப்பியிருந்தாலும் காஷ்மீர் விவகாரம் உலக விஷயமாகி இந்திய மானம் சந்தி சிரித்து காட்சிகளே மாறியிருக்கும் 

பண்டைய சேர, பாண்டிய மன்னன் வரிசையில் அந்த இமயமலையினை மீட்டெடுத்தவர் ஜெய்சங்கர் 

இந்த தமிழரை பற்றி இங்கு யாராவது பேசுவார்களா?, இந்த மாபெரும் ராஜதந்திர் தமிழன், உலகில் இந்தியாவுக்கு தனி இடம் பெற்றுகொடுத்திருக்கும் தமிழன் பற்றி தமிழக ஊடகமோ டிவியோ பேசுமா என்றால் பேசாது 

நடிகர் ஜெய்சங்கர் தெரிந்த அளவு இந்த மாபெரும் சாதனையாளர் தமிழர் தேசிய ஜெய்சங்கர் தமிழனுக்கு தெரியாது 

அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் அரைவேக்காடு அரசியல்வாதிகளும் அவர்களின் அறிவே இல்லா அடிப்பொடிகள் மட்டுமே, தமிழகத்தின் சாபக்கேடு அப்படி 

10க்கும் மேற்பட்ட மொழிகளை சரளமாக பேசுவார் ஜெய்சங்கர், ஆங்கிலம் மாண்டரின் ஜப்பானிய மொழி , ரஷ்ய மொழி என எல்லாமே அவருக்கு சரளம், இந்தியும் உண்டு 

பன்மொழி படித்தாலே ஒரு தமிழன் உருப்படுவான் என்பதற்கு மிகபெரும் அடையாளம் அவர்

நாம் அந்த அற்புத தமிழனை எப்பொழுதும் நன்றியோடு நினைப்போம், தகுதியான தமிழனுக்கு பொருத்தமான பொறுப்பை கொடுத்த மோடியினையும் நினைப்போம் 

இன்று அந்த மாபெரும் ராஜதந்திரி சுப்பிரமணியம் ஜெய்சங்கருக்கு ஜனவரி 9ம் நாள் பிறந்த நாள் 

சுப்பிரமணி என்பது தமிழ்கடவுளின் பெயர், தமிழர்களின் அடையாளம் 

ஆம் அந்த சுப்பிரமணிய ஜெயசங்கரும் தமிழக அடையாளம் 

இந்த ஜெய்சங்கரும் டெல்லி நேரு பல்கலைகழகத்தில்தான் படித்தார், ஆனால் நாட்டுக்கு எப்படி நல்ல பொறுப்பான ராஜதந்திரியாக உருவாகிவிட்டார் பார்த்தீர்களா

அந்த பெருமைமிக்க நிறுவணத்தின் இன்றைய நிலை என்ன? இன்று தேசவிரோதிகளால் நிறைந்து குட்டிசுவராயிற்று 

இன்று ஜெய்சங்கரின் பிறந்த நாள், 66ம் பிறந்த நாள் 

நாம் முன்பே குறிப்பிட்டபடி ராணுவ தளபதி போல வெளியுறவு துறை பணியும் சவால்மிக்கது பொறுப்பும் உயிர் ஆபத்தும் மிக்கது 

அந்த வரிசையில் இந்த தமிழனும் மாபெரும் சவால் எடுத்து தேசம் காக்கின்றார் 

ரஷ்யாவினையும் அமெரிக்காவினையும் பதமாக கையாண்டு, இஸ்ரேலையும் அரபு நாடுகளையும் ஒருசேர கையாண்டு, சீனாவினையும் ஜப்பானையும் ஒருசேர கையாண்டு, ஐரோப்பாவினையும் லத்தீன் அமெரிக்காவினையும் ஒருசேர கொண்டுவந்து, ஆப்ரிக்க நாடுகள் முழுக்க இந்திய சார்பு எடுக்க வைத்து.. 

நினைத்தாலே மயக்கம் போட வைக்கும் விஷயம் இது, இவ்வளவையும் செய்துதான் .நாவில் காஷ்மீர் இந்தியாவின் பகுதி என நிரூபித்திருக்கின்றார் ஜெய்சங்கர் 

எவ்வளவு பெரும் ராஜதந்திரம் இது, பெரும் வீரமும் கூட

அந்த நகர்வுதான் அயோத்தி தீர்ப்பு உலக சலசலப்பு ஆகாமலும் பார்த்து கொண்டது, அது ஜெயசங்கர் தவிர யாருக்கும் சாத்தியமில்லை 

"வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி, மக்களின் மனதில் நிற்பவர் யார்? மாபெரும் வீரர் மானம் காப்போர் சரித்திரம் தனிலே நிற்கின்றார்" என்றார் கண்ணதாசன் 

அப்படி நாட்டின் மானம் காத்து நிற்கும் ஜெய்சங்கர் சரித்திரமாகிவிட்டார், அவர் ஆயிரம் பிறை காண இந்நாட்டின் எல்லா தெய்வங்களும் அருள்புரியட்டும் எல்லா ஆலயத்திலும் அவருக்காய் பிரார்த்தனை நடக்கட்டும்

 சீனாவினை சமாளித்து, அதனால் அமெரிக்காவுடன் நெருங்கி அந்த கோபத்தில் எழும்பிய ரஷ்யாவினை கட்டம் கட்டி ஜெய்சங்கரின் சாகசம் தொடர்ந்த நிலையில் இனி ஜோ பிடனின் இந்திய அணுகுமுறையில் இருந்து இந்தியாவினை காக்க களம் காண்கின்றார் ஜெய்சங்கர்

 ஜோ பிடனும் கமலா ஹாரிசும் அடாவடி வகையறா, அப்பட்டமான இந்திய வெறுப்பும் பாகிஸ்தான் ஆதரவு மனப்பான்மையும் கொண்டவர்கள், அவர்களை சமாளித்து தேசத்தை வழிநடத்தும் மிகபெரிய பணி ஜெய்சங்கர் மேல் சுமத்தபட்டிருகின்றது 

ஆனால் மிக எளிதாக அதை அவர் செய்வார் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை அவரின் மிகபெரிய அனுபவம் தேசத்துக்கு நன்மை கொண்டுவரும் 

நாட்டுக்காய் ஓயாமல் ஓடி கொண்டிருக்கும் அந்த ராஜதந்திரிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

வாழிய நீ எம்மான், வாழிய வாழியவே 

அவர் ஒரு புத்தகமும் எழுதியிருக்கின்றார் அதன் பெயர்  "The India Way" 

ஆம் இந்தியாவுக்கு உலகளவில் வழிகாட்டும் அந்த தேசபக்தனின் அறிவான புத்தகம் அது, படித்தால் உலக அரசியல் நிலைபற்றி மாபெரும் தெளிவும் அறிவும் கிடைக்கும். ஆக சிறந்த களஞ்சியம் அது

(மோடி திடீரென தமிழ் பேசுவதும் ராஜராஜ சோழன் முதல் திருகுறள், பாரதி வரை பேசுவதும் யாரால் என்று நினைக்கின்றீர்கள்

கவனியுங்கள் நிர்மலாவும் ஜெய்சங்கரும் மத்திய அமைச்சரவைக்கு வந்தபின்பே இந்த மாற்றம் நிகழ்ந்திருக்கின்றது 

இந்த தமிழர்கள் அந்த நல்லவிஷயத்தை செய்து தமிழை அகில உலகுக்கு எடுத்து சென்று கொண்டிருக்கின்றார்கள் 

நல்ல தமிழர்களின் திறன் அறிந்து, அவகளின் நாட்டுபற்றின் உண்மைதன்மை அறிந்து அவர்களுக்கு மிகபெரிய கவுரவம் கொடுத்திருக்கின்றார் மோடி, அதில்தான் சீனமிரட்டல், உலகளாவிய குழப்பகாலம், கொரொனா காலத்திலும் தேசம் தலைநிமிர்ந்து நிற்கின்றது)

====== 

 படித்ததில் பிடித்தது

அன்புடன்

வாத்தியார்

====================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!