மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

31.7.12

Astrology - Popcorn Post வம்பும், வழக்கும்!

Astrology - Popcorn Post  வம்பும், வழக்கும்!

பாப்கார்ன் பதிவுகள் - பகுதி பதினான்கு

வம்பு, வழக்கு என்றால் யாருக்குத்தான் பிடிக்கும்? வம்பு, வழக்கு என்று எதுவும் இல்லாத நிலைதான் நம்மதியான நிலை!

ஆனால் விதி விடுமா? சிலரை அவர்கள் விரும்பாவிட்டாலும் தேவையில்லாத விவகாரங்களில் சிக்க வைத்துவிடும். மனிதர் நீதிமன்றத்திற்கு அலைய நேரிடும்.

பெரும்பாலான வீடுகளில் சொத்துத் தகராறு இருக்கும். சொத்து என்றாலே சிக்கல்தான் என்கிறீர்களா? நம் பெயரில் இருக்கும் சொத்துக்களில் நாம் இருக்கும்வரை சிக்கல் இல்லை. ஆனால் முன்னோர்கள் வைத்து விட்டுப்போன சொத்துக்கள் என்றால் சிக்கல் ஏற்பட வாய்ப்பு உண்டு. உடன் பிறப்புக்கள், உறவினர்கள் என்று யார் மூலமாக வேண்டுமென்றாலும் சிக்கல் ஏற்பட வாய்ப்புண்டு. வம்பு, வழக்கு ஏற்படலாம்.

ஜாதகப்படி அதற்கு என்ன அமைப்பு - அதாவது வம்பு வழக்குகள் ஏற்பட என்ன அமைப்பு என்றும், ஒருவேளை அப்படி ஏற்பட்டால் அதில் நமக்கு வெற்றி கிடைக்க வழியுண்டா என்பதையும் இன்று பார்ப்போம்!
----------------------------------------------------------------------------------------
1. ஆறாம் வீடுதான் பிரச்சினைகளுக்கு உரிய வீடு
2. ஏழாம் வீடு (லக்கினத்திற்கு ஏழுதான்) எதிர்ப்பையும், முரண்பாடுகளையும் உண்டாக்கும்
3. எட்டாம் வீடுதான் சட்டச் சிக்கல்களால் நமக்கு ஏற்படும் மன உளைச்சல்களை அதிகப்படுத்தும். வருத்தங்களையும், அவமரியாதைகளையும் ஏற்படுத்தும்.
4. பன்னிரெண்டாம் வீடுதான் நமக்கு மேற்பட்ட சிக்கல்களால் ஏற்படும் நஷ்டங்களையும், விரையங்களையும் உண்டாக்கும்

ஆக அவைகள் உண்டாகட்டும். அதிலிருந்து நாம் மீண்டு வருவோமா அல்லது வெற்றி பெற்று எல்லாவற்றையும் தூளாக்குவோமா என்பதை பதினொன்றாம் வீடுதான் முடிவு செய்யும்.

பதினொன்றாம் வீடு ஆறிலிருந்து ஆறாம் வீடு. பன்னிரெண்டில் இருந்து பன்னிரெண்டாம் வீடு. இந்தப் பதினொன்றாம் வீடு அல்லது பதினொன்றாம் அதிபதி வலிமையாக இருந்தால், வழக்குகள் நம்மை ஒன்றும் செய்யாது. நம்மைக் காப்பாற்றும். நமக்கு வெற்றியைத் தேடித் தரும். அதை மனதில் கொள்க!

கிரகங்களில் செவ்வாயும், சனியும் வம்பு, வழக்கு ஏற்படும் காலங்களில் நமக்கு பாதகங்களை உண்டாக்கும் கிரகங்களாகும். புதன், சுக்கிரன், குரு ஆகிய கிரகங்கள் நமக்கு அந்நேரங்களில் கை கொடுக்கும் கிரகங்களாகும். அவைகளின் தசாபுத்திகள் அந்த நேரத்தில் நடக்கும் காலமென்றால் வழக்குகள் நமக்கு சாதகமாக முடியும்.

இவைகள் எல்லாம் பொது விதிகள் அதையும் மனதில் கொள்க!

அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

30.7.12

Astrology - Popcorn Post பேசுவது கிளியா பெண்ணரசி மொழியா?

உங்களுக்கு நன்றி என்னும் சொல் பல மொழிகளில் எழுதப்பெற்றுள்ளது!    

Astrology - Popcorn Post  பேசுவது கிளியா பெண்ணரசி மொழியா?

பாப்கார்ன் பதிவுகள் - பகுதி பதிமூன்று

மொழி என்பது நம் வாழ்க்கையோடு பிண்ணிப் பிணைந்துள்ளது. பேசுவதாகட்டும், படிப்பதாகட்டும் அல்லது எழுதுவதாகட்டும் சிலருக்கு
மட்டுமே மொழியில் ஆளுமை இருக்கும். சிலருக்கு ஒன்றிற்கு மேற்பட்ட மொழிகளில் அந்தத் திறமை இருக்கும்.

முதலில் நம் தாய்மொழி நமக்கு வசப்பட வேண்டும். அதற்கு அடுத்து உலக அளவில் அதிகம் பேசப்படும் அல்லது அதிகம் பேர்களுக்குத் தெரிந்த ஆங்கிலமும் வசப்பட வேண்டும். அதற்கு அடுத்து கூடுதலாக இன்னும் ஒரு மொழி தெரிந்திருந்தால், அவர்களால் சிறப்பாகச் செயல்படமுடியும். உதாரணத்திற்கு வட இந்திய மாநிலங்களில் பரவலாகப் பேசப்படும் இந்தி மொழியும் தெரிந்திருந்தால், அவர்களால் பிற மாநிலங்களுக்கும் சென்று பணியாற்ற முடியும்.

மொழியின் மேன்மை நாம் அடுத்த மாநிலங்களுக்குச் சென்று தங்கும்போதோ அல்லது அங்கே பயணிக்கும் போதே தெரியவரும்!

ஒருவர் பன்மொழிகளில் திறமை பெற்று விளங்க ஜாதகப்படி என்ன அமைப்பு வேண்டும்?

அதை இன்று பார்ப்போம்!
----------------------------------
1. குரு பகவான் லக்கினத்தில் இருந்தாலும் அல்லது ஜாதகனின் ஒன்பதாம் வீட்டைத் தன் பார்வையில் வைத்திருந்தாலும், ஜாதகனுக்குப் பன்மொழித் திறமை இருக்கும்.
2. வாக்கு ஸ்தானமான இரண்டாம் வீட்டில் கேது இருந்தாலும் ஜாதகனுக்கு மொழிகள் வசப்படும்.
3. இரண்டாம் வீட்டுக்காரன், தன்னுடைய வீட்டைத் தன் பார்வையில் வைத்திருந்தாலும் ஜாதகனுக்குப் பன்மொழித்திறமை இருக்கும்

மலேசியாவில் இருக்கும் தமிழர்களுக்கு மலேயா மொழியில் பேசத் தெரியும். அதுபோல இலங்கைத் தமிழர்களுக்கு சிங்கள மொழி தெரிந்திருக்கும். மும்பை, தில்லி போன்ற நகரகங்களில் இருக்கும் தமிழர்களுக்கு இந்தி மொழி தெரிந்திருக்கும். ஆனால் பிறருடன் பேசுவதற்கு மட்டுமே தெரிந்த நிலை என்பது, அடிப்படை நிலைதான். அந்த மொழிகளில் படிப்பதற்கும், தவறின்றி எழுதுவதற்கும் திறமை இருக்கும் நிலையில்தான் அந்த மொழி அவர்களுக்கு வசப்பட்டுள்ளதாக எடுத்துக்கொள்ள முடியும்.

ஆகவே ஒருவருக்குப் பன்மொழிகளில் பேசும் திறமை இருக்கலாம். எத்தனை மொழிகளில் ஆளுமை இருக்கிறது என்பதைத்தான் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆகவே உங்களுக்கு எத்தனை மொழிகளில் ஆளுமை இருக்கிறது. ஜாதகப்படி அது கிடைத்துள்ளதா என்று பார்த்துக்கொள்ளுங்கள்

பேசுவது கிளியா பெண்ணரசி மொழியா? என்று ஒரு கவிஞர் அசத்தலாக பல்லவியைத் துவக்கினார். இன்னொரு கவிஞர் பெண்ணின் பார்வை ஒருகோடி அது பேசிடும் வார்த்தை பலகோடி என்று எழுதினார். பெண்ணின் கண்கள் பேசும் மொழிக்கெல்லாம் கணக்குக் கிடையாது. ஜாதகமும் கிடையாது:-)))))

அன்புடன்
வாத்தியார்
----------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

27.7.12

கவிதைச் சோலை: தாசி இருந்த வீட்டில் குடியிருந்தால் என்ன ஆகும்?

கவிதைச் சோலை: தாசி இருந்த வீட்டில் குடியிருந்தால் என்ன ஆகும்?

நட்பு

நட்பு என்பது எப்படி இருக்க வேண்டும் என்பதைக் கவியரசர் கண்ணதாசன் ’நச்’ சென்று சொல்லியுள்ளார். படித்து மகிழுங்கள்!

தாசியுள வீட்டிலே தவறாத குலமகள்
     தான்போய்க் குடியி ருந்தால்
தட்டுகிற கை அங்கு தாசிஎன் றறியுமா?
     சம்சாரி என்றறி யுமா?
நீசரோடு கூடினால் நீதிமான் தன்னையும்
     நீசரென் றேயழைப் பார்;
நிகழ்கால நட்பிலே எதிர்காலம் ஒளிவிடும்
     நெருங்குமுன் அறிய வேண்டும்!
காசுபெரி தல்லநல் நண்பர் பெரி தாமென்று
     கருத்தினில் இருத்து வாயே!
கனிவுடைய சிறுகூடற் பட்டியில் வதிகின்ற
     கன்னிமலை யரசி துணையே!
               - கவியரசர் கண்ணதாசன்
----------------------------------------------------
27.7.2012

ஒலிம்பிக் விளையாட்டுக்கள் 2012

இன்று 30ஆவது ஒலிம்பிக் விளையாட்டுப்போட்டிகள் லண்டன் மாநகரில் துவங்குகிறது. விளையாட்டுப் போட்டிகள் அமைதியாக நடைபெற்று முழுமையடைய நம் வாழ்த்துக்களைத் தெரிவிப்போம். இறைவனையும் பிரார்த்திப்போம்!

அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

26.7.12

Astrology சுகங்களை எப்போது இழக்க நேரிடும்?

Astrology சுகங்களை எப்போது இழக்க நேரிடும்?

Key Points - பகுதி 3

பாபகர்த்தாரி யோகத்தால் பாதிக்கப்பெறும் வீடுகளுக்கான பொதுப்பலன்கள்

இது ஒரு அவயோகம். அதை முதலில் நினைவில் வையுங்கள்.

ஒரு வீட்டின் இருபுறமும் தீய கிரகங்கள் நின்றால் அதாவது இருந்தால், அந்த வீடு இந்த பாப கர்த்தாரி யோகத்தால் பாதிக்கப்படும்.

1
ஒன்றாம் வீடு - அதாவது லக்கினம் பாபகர்த்தாரி யோகத்தால் பாதிக்கப்பெற்றிருந்தால், அந்த ஜாதகன் அடிக்கடி நோய்வாய்ப்படுவான். விபத்துக்கள் நேரிடும். எப்போதும் ஏதாவது ஒரு மன அழுத்தம் (Tension) இருக்கும்.
2.
இரண்டாம் வீடு: இழப்புக்கள் ஏற்படும். அது பெரும்பாலும் பணம் சம்பந்தப்பட்டதாக இருக்கும். (2nd house is the house of finance and family affairs) குடும்ப வாழ்க்கையில் பிரச்சினைகள் உண்டாகும். குடும்பத்தைவிட்டுப் பிரிந்திருக்க நேரிடும். குடும்பத்தை வைத்து மன அழுத்தங்கள் உண்டாகும்
3.
மூன்றாம் வீடு: மரியாதைக்கு பங்கம் ஏற்படும். உடன்பிறப்புக்களை இழக்க நேரிடும் (Loss of siblings) உடன்பிறப்புக்கள், மற்றும் நண்பர்களுடன் தேவையில்லாத விரோதங்கள் ஏற்படும்.
4.
நான்காம் வீடு: பெற்றோர்களை இழக்க நேரிடும். வாழ்க்கையில் சுகங்களை இழக்க நேரிடும். அமைதியை இழக்க நேரிடும். தண்ணீரில் கண்டங்கள் ஏற்படும்.
5.
ஐந்தாம் வீடு: குழந்தைகளுக்கு, குழந்தைகளை வைத்து ஜாதகனுக்கு சிரமங்கள், கஷ்டங்கள், துன்பங்கள் ஏற்படும். எப்போதும் மன நிம்மதி இருக்காது.
6.
ஆறாம் வீடு: தொழிலில், வேலையில் கஷ்டங்கள் உண்டாகும். விரோதிகளால், விரோதங்களால் அடிக்கடி மனதில் பய உணர்வு மேலோங்கி இருக்கும்.
7.
ஏழாம் வீடு: மனைவி அல்லது கணவன் அடிக்கடி நோய்வாய்ப்படுவான். அவர்களால் சிரமப்பட நேரிடும். அவர்களால் விரையங்கள் ஏற்படும்.
8.
எட்டாம் வீடு: வறுமை நிலவும். கடன்கள் உண்டாகும். நோய்கள் உண்டாகும். சிரமமான வழ்க்கை வாழ நேரிடும். பயணங்கள் அலுப்பை ஏற்படுத்தும்.
9.
ஒன்பதாம் வீடு: தந்தையை இழக்க நேரிடும். வறுமையான சூழல்கள் உண்டாகும். வறுமை வாட்டி எடுக்கும்.
10.
பத்தாம் வீடு: வேலையில், தொழிலில் பல பின்னடைவுகள் ஏற்படும் (There will be set backs in career)
11.
பதினொன்றாம் வீடு: காதுகளில் பிரச்சினைகள் ஏற்படும். கேட்கும் தன்மையில் குறைபாடுகள் உண்டாகும். வீட்டு மாப்பிள்ளையைப் பறிகொடுக்க நேரிடும்.
12
பன்னிரெண்டாம் வீடு: தூக்கமின்மையால் அவதிப்பட நேரிடும். ஆரோக்கியம் கெட்டு மருத்துவமனைக்கு அலைய நேரிடும். பலவிதமான பணச் செலவுகள் ஏற்பட்டு படுத்தி எடுக்கும்.

எல்லாமே பொதுப்பலன்கள். அவரவர்களின் ஜாதகத்தின் தன்மையைப் பொறுத்து இது கூடலாம் அல்லது குறையலாம் அல்லது இல்லாமல் போகலாம். அதையும் மனதில் கொள்ளவும்

இது மேல்நிலை வகுப்பிற்காக எழுதப்பெற்ற பாடங்களில் ஒன்று, அனைவருக்கும் பயன்படட்டும் என்று அதை இன்று வகுப்பறையில் வலை ஏற்றியுள்ளேன்!

அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

25.7.12

கண்ணுக்குள் வாழ்கின்றாய்!

 கண்ணுக்குள் வாழ்கின்றாய்!

இன்று என் தாயாருக்கு ஆண்டுத் திதி. அவர்கள் இறைவனடி சேர்ந்து இன்றுடன் ஒரு ஆண்டு நிறைவுறுகிறது. அவர்களுக்கு ஆண்டுத் திதி கொடுப்பதற்கான ஏற்பாட்டில் இருந்ததால் நேற்று பதிவில் எழுதவில்லை

அவர்களுடைய நினைவைப் போற்றும் விதமாக வீட்டிற்கு வரும் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கொடுப்பதற்காக ஒரு சிறு புத்தகத்தை அச்சிட்டுள்ளேன். (1/16 demi size, 32 பக்கங்கள்). அதில் அவர்கள் அடிக்கடி பாடும் இறை வழிபாட்டுப் பாடல்களில் 12 பாடல்களைத் தொகுத்துக் கொடுத்துள்ளேன்.

இன்று வகுப்பிற்கு விடுமுறை! அடுத்த பதிவு நாளை வெளிவரும்!

அன்புடன்
வாத்தியார்
----------------------------------------------------------நன்மக்களைப் பெற்றெடுத்து
நாளும் வளர்த்தெடுத்து
உண்மையாய் வாழ்ந்திட்டாய்
ஒப்பற்ற தாயானாய்!

மண்ணைவிட்டுப் பிரிந்தாலும்
மலர்ந்தமுகம் மறைந்தாலும்
கண்ணுக்குள் வாழ்கின்றாய்
காலமெல்லாம் வணங்கிடுவோம்!
+++++++++++++++++++++++++++++++++++

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

23.7.12

பின்னூட்டப் பெட்டி மட்டுமே சாட்டிங் (Chatting) களமல்ல!

பின்னூட்டப்  பெட்டி மட்டுமே  சாட்டிங்  (Chatting) களமல்ல!

அன்புள்ள நெஞ்சங்களே!

நம் வகுப்பறை மாணவக் கண்மணிகள் இரண்டு பேர்களிடமிருந்து இன்று எனக்கு வந்த மின்னஞ்சல்களையும், நமது வகுப்பறையின் நண்பரும், நம் மதிப்பிற்குரிய பெரியவருமான தஞ்சை திரு.வெ,கோபாலன் அவர்களின் மின்னஞ்சலையும் உங்கள் பார்வைக்காகக் கீழே  கொடுத்துள்ளேன். அவர்கள் மூவருடைய கருத்துக்களுக்கும் மதிப்புக்கொடுத்து, பின்னூட்டப் பெட்டியைத் திறந்து விடுகிறேன்.

பிரச்சினைக்குரியவர்கள் (மொத்தம் 4 பேர்கள்) தங்கள் தவறை உணர்ந்து, இனி பதிவிற்கு சம்பந்தமான விமர்சனங்களையே  வெளியிடுவார்கள் என்று நம்புகிறேன். பின்னூட்டத்தை Chatting  களமாக மாற்றித் தங்கள் நண்பர்களைப் பாராட்டுவதற்கும், எதிரிகளைச்  சாடுவதற்கும் பயன்படுத்த மாட்டார்கள் என்றும் நம்புகிறேன். எதையும் சுழல விட வேண்டாம். சுற்ற விட வேண்டாம். மறைமுகத் தாக்குதல் வேண்டாம்! நேர்மையாகச் செயல்படுங்கள்!

என் வேண்டுகோளையும் மீறி அவர்கள் பின்னூட்டமிட்டால், அவர்களுடைய பின்னூட்டங்கள் இரக்கமின்றி, தயவு தாட்சண்யமின்றி  நீக்கப்படும். நீக்கப்படும் பின்னூட்டங்களுக்கான காரணத்தைச் சொல்லவேண்டிய அவசியமும் எனக்கு இல்லை! இதை அவர்கள் மனதில்  கொள்வார்களாக!

என்றும் அன்புடன்
வாத்தியார்
------------------------------------------
1
Gopalan Venkataraman, தஞ்சாவூர்
privarsh@gmail.com
   
to me

மரியாதைக்குரிய  ஆசிரியர் ஐயா  திரு சுப்பையா அவர்களுக்கு,

வணக்கம். சில காலமாக வகுப்பறையில் எனது கருத்துக்களை வெளியிடாமல் இருந்தேன். ஆனால் தினமும் ஒரு முறையாவது
'வகுப்பறை'யைத் திறந்து பார்க்காமல் இருந்ததில்லை. இப்போது வகுப்பறையின் கதவுகளும், பலகணிகளும் மூடப்பட்ட செய்தியறிந்து வருந்த மடைந்தேன். பலதரப்பட்ட மனிதர்கள், பலவகைக் கருத்துக்கள் அனைத்தும் சங்கமித்து வந்த அரியதொரு கூடமாக இருந்ததுவகுப்பறை. யார் 'த்ருஷ்டி' பட்டதோ, அதில் கலகம் நேர்ந்து விட்டது. கருத்துக்களை வெளியிடுவதும், பிறரது கருத்தை சில நேரங்களில்மறுப்பதும் சரிதான், ஆனால் அது எல்லை கடந்து போகும்போது தொல்லை தருகிறது. நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று வாதிடுவதோ, பிறரது கருத்துக்களுக்கு மறுப்பு மட்டுமில்லாமல் எதிர்ப்பும் காட்டுவதோ,மீறினால் மனக்கசப்பை சொல் வடிவில் வெளியிடு வதோ  நல்ல ஆரோக்கியமான செயல் அல்ல. இவற்றையெல்லாம் மனதில் கொண்டு நல்லதொரு ஆரோக்கியமான சூழ்நிலையில் வகுப்பறை யில் பங்கு பெற விருப்பத்தினை அனைவரும் தெரிவித்து, சில கட்டுப்பாடுகளை  வகுத்துக் கொண்டு, மீறினால் ஆசிரியரின் கத்திரியைப் பயன்படுத்தி, மீண்டும் 'வகுப்பறை'க்கு உயிரூட்டினால் மகிழ்ச்சியடைவேன்.

வகுப்பறையினால் நான் பயனடைந்தது உண்மை. அதுபோல பலரும் தங்கள் திறமை பளிச்சிட இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்பது என் விருப்பம். பூசல்களுக்கு வகுப்பறை இடமல்ல. தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளை நீக்கி  பள்ளி வகுப்பறையில் சீருடையணிவது போல ஒருமித்த‌கருத்துடை அணிந்து பங்கு பெறுங்கள் என்பது என் வேண்டுகோள். செவி சாய்ப்பார்களா? பொருத்திருந்து  பார்க்கலாம்.


தங்கள் அன்புள்ள,
தஞ்சை வெ.கோபாலன்
----------------------------------------
2
Uma S, தில்லி
umas1234@gmail.com   

to me
வணக்கம் ஐயா,

இன்று பின்னூட்டம் போடலாம் என்று வந்தால் இப்படி ஓர் அறிவிப்பு. அடுத்தடுத்து அதிர்ச்சி தரும் அறிவிப்புகளாக வெளியிட்டு  வருகிறீர்கள், ஆனால் நீங்கள் சொல்லும் காரணங்கள்தான் எனக்கு ஏற்புடையதாக இல்லை.

இது உங்கள் வலைப்பூ என்ன வேண்டுமானாலும் செய்ய உங்களுக்கு உரிமை உள்ளது.  இருப்பினும் முதலில் ................ கட்டுரையால்  வாரமலரை நிறுத்தினீர்கள், இப்போது என்ன காரணமோ பின்னூட்டப் பெட்டியையும் பூட்டிவிட்டீர்கள்.  நீங்கள் எழுதிய சுழல விடுவது  என்பதிலிருந்து ............ அவர்களின் பங்களிப்பு இருக்கிறது என உணர்ந்தேன்.  அப்படி அவர் என்ன எழுதினார் என்று தெரியவில்லை. 

இருப்பினும் அதற்காக நீங்கள் இப்படிச் செய்வதால் பாதிக்கப்படுவது மற்றவர்கள்தான்.  குறிப்பிட்ட நாலைந்து பேரைத் தவிர மற்ற
அனைவரும் சர்ச்சைக்கு இடமின்றியே பின்னூட்டம் இடுகிறார்கள்.  உங்களின் இந்த முடிவு அவர்களையும் வருத்தமடையச் செய்யும்.  யார்
மூலமாகப் பிரச்சனையோ, அவர்களிடமே இனி இதுபோல் மின்னஞ்சலோ / பின்னூட்டமோ அனுப்பவேண்டாம் என்று சொல்லிவிடலாமே? 

இருப்பினும் உங்களின் முடிவே இதில் இறுதியானது.  எனது கருத்தாக மட்டுமே இதைச் சொல்கிறேன். இன்னொன்றும் கேட்க விரும்பினேன்.  வாரமலரை திரும்ப ஆரம்பிக்கும் எண்ணமிருக்கிறதா ஐயா? 
நீங்கள் விரும்பினால் சர்ச்சைக்குரிய ................ அனுப்பிய கட்டுரையை எனக்கு அனுப்புங்கள், அப்படி என்னதான் எழுதியிருக்கிறார் எனப்  படிக்க விரும்புகிறேன்.  அவரிடம் கேட்டிருந்தேன், ஆனால் அவர் அனுப்பவில்லை.

அன்புடன்,
உமா
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
3
thanusu rasi
thanusurasi@gmail.com
   
to me
வணக்கம் அய்யா.

பின்னூட்டப்பெட்டியை பூட்டியது வருத்தமளிக்கிறது. முன்பு வாரமலரை நிறுத்ததுக்கு காரணம் பலரின் ஆக்கங்கள் அன்றைய தினம், அதனால் சிலரின் வருத்தங்கள் அதை நிறுத்தியது சரி . ஆனால் இப்போது உங்களின் ஆக்கம் மட்டும் வரும் போதும் பிரச்சினை அதனால்  பின்னூட்டப்பெட்டி நிறுத்தப்படுகிறது, தெரியபடுத்துவதை அஞ்சலில் அனுப்புங்கள் என்றால், நாளை மின் அஞ்சலும் பிரச்சினை ஆகவே  பதிவை நிறுத்துகிறேன் என்றால் என்ன ஆவது. எழுதுவதை நீங்களாக நிறுத்தினால் அது வேறு, இப்படி அடுத்தவருக்கு பயந்தது போல் ஓவ்வொன்றாக நிறுத்தினால் எப்படி?

தினமலர், தினகரன், என இல்லாமல் எத்தனை ஆயிரம் தளங்கள் உள்ளதோ அத்தனை தளங்களும் கருத்துக்களையும் கேட்கிறது. கருத்துகளில் பதிவு ஆவது அவரவரின் சொந்த கருத்து அதற்கு நாளிதழின் ஆசிரியரோ,தளமோ பொருப்பல்ல . அதைபோல் ஒரு அறிவிப்பை முகப்பில் வெளியிட்டால் போதுமானது.அதேபோல் அத்தனை கருத்துக்கும் நீங்கள் பதில் சொல்ல தேவையில்லை. அந்த  வலைத்தளம் உங்களுடையது. உங்களின் கருத்தான ஆக்கத்தை அங்கு வெளியிடுகிறீர்கள்.

நீங்கள் உங்கள் கருத்தை பதிவு செய்யும் போது பார்க்க வந்த நான் பார்த்துவிட்டோ படித்துவிட்டோ போகிறேன்,எனக்கு தோன்றியதை
பின்னூட்டமாக அனுப்பினால் அது அந்த ஆக்கத்திற்கு ஒத்ததாக உங்கள் தளத்தின் கொள்கைக்கு ஒத்ததாக இருந்தால் அனுமதியுங்கள்,

எதிர் மறையாக இருந்தால் 'தனுசு உங்களின் கருத்தும் வாக்கியமும் இந்த தளத்திற்கு ஒவ்வாதது என் வலைப்பூவை விட்டு வெளியேறுங்கள்,

என்று பின்னூட்டத்திலேயே மறைமுகம் இல்லாமல் நேரடியாக சொல்லி வெளியேற்றுங்கள். தாங்கள் வயதிலும் அனுபவத்திலும் மூத்தவர்.நேற்றைய முன் தினம் வந்த பதிவில் நீங்கள் குறிப்பிட்டிருந்த பாடல்

"மாபெரும் சபையில் நீ நடந்தால் உனக்கு
மாலைகள் விழவேண்டும்"

இது தலைவரின் படப்பாடல், இன்னுமொரு தலைவரின் படத்தில் வரும் பாடல்
"அச்சம் என்பது மடமையாடா"
என்பதை தயை கூர்ந்து நினைவுறுத்துகிறேன் அய்யா.

அன்புடன்
-தனுசு-                   
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++    
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

Astrology ஜாதகத்தில் எது முக்கியம்?

Astrology ஜாதகத்தில் எது முக்கியம்?

Key Points

சந்தேகமில்லாமல், லக்கின அதிபதிதான் முக்கியம். ஒரு படத்தில் கதாநாயகன் எப்படி முக்கியமோ அப்படி முக்கியம் என்று வைத்துக்கொள்ளுங்கள்.

லக்கினாதிபதியைப் பற்றி முன்பே சில முறை எழுதியிருந்தாலும், விரிவாக ஒரு பாடத்தை எழுதியுள்ளேன். சார், இது மீள் பதிவா என்று யாரும் கேட்காமல் பாடத்தில் உள்ள புதிய செய்திகளைப் படியுங்கள். இது மேல்நிலைப் பாட வகுப்பிற்காக முன்பு எழுதி, பதிவு செய்யப்பெற்ற பாடம். உங்களுக்கும் (அனைவருக்கும்) பயன்படட்டும் என்று வகுப்பறையில் பதிவிட்டுள்ளேன். படித்துப் பயன் பெறுங்கள்
--------------------------------------
மாபெரும் சபையினில் நீ நடந்தால் பல மாலைகள் விழவேண்டும் - ஒரு
மாற்றுக்குறையாத மன்னவன் இவனென்று பலர் போற்றிப் புகழவேண்டும்!
- கவியரசர் கண்ணதாசன்
----------------------------------------
லக்கின அதிபதி சென்று அமரும் இடங்களுக்கான பலன்கள்.

லக்கின அதிபதி லக்கினத்திலேயே இருந்தால் நன்று. உதாரணத்திற்கு நீங்கள் மேஷ லக்கினக்காரராக இருந்து அதன் அதிபதி செவ்வாய் மேஷத்திலேயே இருந்தால், அது அவருக்குச் சொந்த வீடு. ஆட்சி வீடு. அது நன்மை பயக்கும்.

இல்லை அந்த வீட்டை விட்டு வேறு இடங்களில் அமர்ந்திருந்தால் அதன் பலன்  மாறுபடும். அவர் சென்று அமரும் வீடு, அவருக்குப் பகை வீடு என்றால் பலன்கள் பாதியாகக் குறைந்துவிடும்.

அதேபோல அவர் சென்று அமரும் வீடு, லக்கினத்தில் இருந்து 6ஆம் வீடாகவோ அல்லது 8அம் வீடாகவோ அல்லது 12ஆம் வீடாகவோ இருந்தால் எதிர்மறையான  பலன்களே கிடைக்கும். வாழ்க்கை போராட்டம் மிகுந்ததாக இருக்கும். எதிர் நீச்சல் போட வேண்டியதிருக்கும்.

அப்படியிருந்தால், பார்த்துவிட்டுக் கவலைப் படாதீர்கள். கன்னத்தில் கையை முட்டுக்  கொடுத்துக்கொண்டு  உட்கார்ந்து விடாதீர்கள். அதற்கான நஷ்ட ஈடு வேறு இடங்களில் வழங்கப்பெற்றிருக்கும். ஏனென்றால் யாராக இருந்தாலும் ஜாதகத்தின் மொத்த மதிப்பெண் 337 மட்டுமே.அதை நினைவில் வையுங்கள்.

லக்கின நாதன் வேறு இடங்களில் அமர்ந்தாலும், அது லக்கினத்திற்கு கேந்திரம் அல்லது திரிகோண  இடங்களாக இருந்து, அங்கே அமர்பவர் அங்கிருந்து லக்கினத்தைப் பார்த்தாலும் நன்மையாக இருக்கும். லக்கினத்தைப் பகைக் கிரகங்களோ அல்லது நீசக் கிரகங்களோ பார்க்காமலும் லக்கினத்தில் இல்லாமலும், லக்கினாதிபதியுடன் சேராமல் இருந்தாலும் நன்மை உடையதாக இருக்கும்

அதேபோல லக்கினாதிபதி உச்சம் பெற்றிருந்தாலும் அதிக நன்மையான பலன்கள் கிடைக்கும். அதேபோல லக்கினம் சுபக் கிரகங்களின் பார்வையில் இருந்தாலும் நன்மைகள் உடையதாக இருக்கும்.

ஆகவே அனைத்தையும் அலசிப் பாருங்கள்
-------------------------------------------------------------
லக்கினாதிபதி 1ஆம் வீட்டில் அதாவது லக்கினத்தில் இருந்தால்:

ஜாதகன் சுதந்திர மனப்பான்மையுடன் தன்னிச்சையாக வாழ்பவனாக இருப்பான்.யார் சொன்னாலும், அவர்கள்  பேச்சைக் கேட்கமாட்டான். தன் எண்ணப்படி, நோக்கப்படி வாழ்பவனாக இருப்பான். ஜாதகன் தீர்க்க ஆயுளை  உடையவனாக இருப்பான். சொத்துக்களை உடையவனாக இருப்பான். பெருமைகள், புகழை உடையவனாக வளர்வான். வாழ்க்கையில் ஜீவனம் நல்லமுறையில் நடைபெறும். மகிழ்ச்சி நிறைந்தவனாக இருப்பான். தெய்வ நம்பிக்கை, தெய்வ வழிபாடுகள் மிகுந்தவனாக இருப்பான். உறவினர்களுடன் பிரச்சினைகள் இன்றி ஒற்றுமையுடன் வாழ்வான். தனது ஊரில், அல்லது தனது மாவட்டத்தில் அல்லது தனது இனத்தில் அல்லது தனது நாட்டில் செல்வாக்கும், புகழும் பெற்றவனாகத் திகழ்வான்.

மேற்கூறிய பலன்கள் எல்லாம் லக்கினமும், லக்கினாதிபதியும் நன்றாக இருந்தால் மட்டுமே. இல்லையென்றால்  அவற்றிற்கு நேர் மாறான பலன்களே நடைபெறும்
-------------------------------------------------------------
லக்கினாதிபதி 2ஆம் வீட்டில் வலிமையுடன் இருந்தால்:

ஜாதகன் உயர்ந்த பண்புகள் உள்ள குடும்பத்தில் பிறந்தவனாக இருப்பான். அவனுடைய குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும். வாக்கு வன்மை நிறந்தவனாக இருப்பான். அவன் சொற்கள் எல்லா இடங்களிலும்  எடுபடும். தனது குடும்பத்திற்காக பல தியாகங்களைச்  செய்பவனாக இருப்பான். தன் குடும்பத்திற்கான தன்னுடைய கடமைகளை நிறைவேற்றுபவனாக இருப்பான். செல்வமும், செல்வாக்கும் மிகுந்தவனாக இருப்பான். மன அமைதியும், மகிழ்ச்சியும் நிறைந்தவனாக இருப்பான்,
-------------------------------------------------------------
லக்கினாதிபதி 3ஆம் வீட்டில் வலிமையுடன் இருந்தால்:

ஜாதகன் அதீத துணிச்சல் உள்ளவனாக இருப்பான். அதிர்ஷ்டமுள்ளவனாக இருப்பான். எல்லா நலன்களும் அவனைத் தேடி வரும். மரியதைக்குரியவனாகவும், புத்திசாலியாகவும் இருப்பான். சிலருக்கு இரண்டு மனைவிகள் இருப்பார்கள். ஜாதகன் சகோதரர்கள், சகோதரிகளின் அன்பைப் பெற்றவனாக இருப்பான், அவர்களுடன் ஒற்றுமையாக வாழ்வான். நுண்கலைகளில் தேர்ச்சி பெற்றவனாக இருப்பான். செல்வம், செல்வாக்கு, அந்தஸ்துடன் வாழ்பவனாக இருப்பான்.
-------------------------------------------------------------
லக்கினாதிபதி 4ஆம் வீட்டில் வலிமையுடன் இருந்தால்:

ஜாதகன் தன் பெற்றோர்களால் மிகுந்த மகிழ்ச்சிக்கு ஆளாகுவான் அனேக உடன் பிறப்புக்கள் இருக்கும். அழகான தோற்றத்தை உடையவனாகவும், நற்பண்புகளை உடையவனாகவும் ஜாதகன் இருப்பான்.  ஜாதகன் நிலபுன்கள், வீடு வாசல்களைப் பெற்றவனாக இருப்பான். நல்ல குடும்ப உறுப்பினர்களைப் பெற்றவனாக இருப்பான். ரோட்டி, கப்டா, மக்கான் என்னும் உண்ண உணவு, உடுக்க உடைகள், இருக்க இடம் என்னும் அடிப்படைத் தேவைகளுக்குக்
குறைவில்லாத வாழ்க்கையைப் பெற்றவனாக இருப்பான். தாயின் அன்பையும், அரவணைப்பையும் பெற்றவனாக இருப்பான். தாய்வழி உறவினர்களின் அன்பைப் பெற்றவனாக இருப்பான். கல்வி கேள்விகளில் தேர்ச்சி பெற்றவனாக இருப்பான். சுகவாசியாக இருப்பான்.வண்டி, வாகனங்களை உடையவனாக இருப்பான். இத்துடன், ஜாதகத்தில் 4ஆம் வீட்டிற்கு உரிய கிரகமும்  வலிமை பெற்றிருந்தால் மேற்கூரிய பலன்கள் இரட்டிப்பாகக் கிடைக்கும்.
------------------------------------------------------------
லக்கினாதிபதி 5ஆம் வீட்டில் வலிமையுடன் இருந்தால்:

ஜாதகன் புத்திர பாக்கியங்களைப் பெற்றவனாக இருப்பான். அதாவது நிறைய மக்களைப் பெற்றவனாக இருப்பான். அதோடு தன்னுடைய குழந்தைகளின் அன்பையும், ஆதரவையும் பெற்றவனாக இருப்பான். ஜாதகன் பெருந்தன்மை உடையவனாகவும், சேவைமனப்பான்மை உடையவனாகவும் இருப்பான். மொத்தத்தில் வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். சிலருக்கு அரசியல் செல்வாக்கும்,  ஆட்சியாளர்களின் ஆதரவும் இருக்கும்
------------------------------------------------------------
லக்கினாதிபதி 6ஆம் வீட்டில் வலிமையுடன் இருந்தால்:

******** ஜாதகன் நோய் நொடிகள் நிறைந்து அவதிப்படுபவனாக இருப்பான். எதிரிகள் நிறைந்தவனாக  இருப்பான். பல அவதூறுகளுக்கு ஆளாக நேரிடும். பலவிதங்களில் கடன் ஏற்பட்டுப் படுத்தி எடுக்கும். மொத்தத்தில் மன அமைதி இல்லாத வாழ்க்கை வாழ நேரிடும். லக்கினாதிபதியின் தசை அல்லது புத்திக் காலங்களில் கடன் மற்றும் நோய்களுக்குத் தீர்வு கிடைக்கும். லக்கினாதிபதி வலுவாக உள்ளவர்கள் ராணுவத்தில் பணிபுரிந்து சிறப்பைப் பெறுவார்கள். சிலர் மருத்துவத்துறையில் பணிபுரிந்து பெருமையடைவார்கள்
-------------------------------------------------------------
லக்கினாதிபதி ஏழாம் வீட்டில் அமர்ந்தால் ஏற்படும் பலன்:

சிலருக்கு ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம் நடைபெறும். சிலர் வாழ்க்கையின் பின் பகுதியில் சந்நியாசியாகி விடுவார்கள். மற்ற கிரகங்களின் அமைப்பை வைத்து ஜாதகன் செல்வந்தனாக இருப்பான் அல்லது ஏழையாக இருப்பான். ஜாதகன் 'தான்' என்னும் குணமுடையவனாக இருப்பான். மனைவியால் சொத்துக்கள் கிடைக்கும். சிலருக்கு மனைவியின் வருமானத்தால் சொத்துக்கள் கிடைக்கும். சிலர் பெண்ணாசை மிகுந்தவர்களாக இருப்பார்கள். எப்போதும் பெண்களின் நினைவாகவே இருப்பார்கள். எந்தத் தொழிலிலும் அக்கறையில்லாமல் இருப்பார்கள். இந்த அமைப்பை சுபக்கிரகங்கள் பார்த்தால் ஜாதகன் வெளிநாடு சென்று, பெரும்பொருள் ஈட்டி  மகிழ்வுடன் வாழ்வான்.
===========================================
லக்கினாதிபதி எட்டாம் வீட்டில் அமர்ந்தால் ஏற்படும் பலன்:

ஜாதகன் கல்வியில் சிறந்தவனாக இருப்பான். சூதாட்ட மனப்பான்மை மிகுந்திருக்கும். ஒழுக்கக் குறைவு  ஏற்படும். சிலருக்கு மரணம் - அது வரும் நேரத்தில் அமைதியானதாகவும், ஒரு நொடியில் ஏற்படுவதாகவும் அமையும். இந்த அமைப்பை சுபகிரகம் பார்த்தால், ஜாதகன் நீண்ட ஆயுளை உடையவன். ஆனால் வாழ்க்கை சிரமத்துடன் நடக்கும். ஜாதகன் பலரின் மனக்கசப்பிற்கு ஆளாக நேரிடும். சிலருக்கு உடலில் அங்கக்குறைபாடுகள் இருக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் இருக்காது. தத்துப் பிள்ளையை எடுத்து வளர்க்க நேரிடும்.

இந்த அமைப்பை பாபக்கிரகம் பார்த்தால், ஜாதகன் மத்திம ஆயுளை உடையவன். வாழ்க்கையில் வறுமை ஏற்பட்டுப் படுத்தி எடுக்கும். சிலருக்குப் பலவிதங்களில் அவப்பெயர் உண்டாகும்.
=============================================
லக்கினாதிபதி ஒன்பதாம் வீட்டில் அமர்ந்தால் ஏற்படும் பலன்:

பொதுவாக இந்த அமைப்பு மிகவும் அதிர்ஷ்டகரமானதாகும். ஜாதகன் பலருக்கும் உதவுபவனாக இருப்பான்.நல்ல மனைவி, குழந்தைகள் கிடைக்கும் அமைப்பு இது. இது பாக்கியஸ்தானம் அதை மனதில் கொள்க!

ஜாதகனுக்கு எல்லா பாக்கியங்களும் கிடைக்கும். இந்த அமைப்பை சுபகிரகம் பார்த்தால், ஜாதகனுக்கு நல்ல தந்தை கிடைப்பார். அவரால் ஏற்படும் சகல பாக்கியங்களும் ஜாதகனுக்குக் கிடைக்கும். முன்னோர் சொத்துக்கள் கிடைக்கும். ஜாதகன் பெரியவர்களை மதிக்கும் குணம் உடையவனாக இருப்பான். சிறந்த பக்திமானாக விளங்குவான். தர்மத்தைக் கடைப்பிடிப்பவனாக இருப்பான், நேர்மையாளனாக இருப்பான். வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்து இருக்கும்.

இந்த அமைப்பை பாபக்கிரகம் பார்த்தால், மேற்சொன்ன பலன்கள் எதுவும் இருக்காது.
=================================================
லக்கினாதிபதி பத்தாம் வீட்டில் அமர்ந்தால் ஏற்படும் பலன்:

தொழிலில் அல்லது வேலையில் பல வெற்றிகளைப் பெறுவதற்கான அமைப்பு இது. பத்தாம் அதிபதிக்கும், லக்கின அதிபதிக்கும் சம்பந்தப்பட்ட தொழிலைச் ஜாதகன் செய்து அதில் மேன்மையடைவான். இந்த அமைப்பை சுபகிரகம் பார்த்தால், ஜாதகனுக்கு நல்ல தொழில் அல்லது நல்ல வேலை அமையும். கை நிறையச் சம்பாதிப்பான். நற்பெயரையும், செல்வாக்கையும் உடையவனாக இருப்பான். தொழிலில் மேன்மை அடைவான். அதிகாரமும், பதவிகளும் தேடிவரும். அரசியல் செல்வாக்கு அல்லது அரசாங்க செல்வாக்கு இருக்கும். சிலர் தலைமைப் பதவிவரை உயர்வார்கள். நிலபுலன்கள், பெரிய வீடு,  வண்டி, வாகன வசதிகளுடனான வாழ்க்கை ஏற்படும்.
==================================================
லக்கினாதிபதி பதினொன்றாம் வீட்டில் அமர்ந்தால் ஏற்படும் பலன்:

இந்த அமைப்பை சுபகிரகம் பார்த்தால், ஜாதகன் லாபகரமான தொழிலைச் செய்வான். நற்பெயரும்,  செல்வாக்கும் தேடிவரும். மூத்த சகோதர, சகோதரிகளின் ஆதரவு இருக்கும். இந்த அமைப்பை சுபக்கிரகங்கள் பார்த்தாலும், அல்லது இந்த பதினொன்றாம் இடத்து அதிபதி உச்சம் அல்லது ஆட்சி பெற்று இருந்தாலும், ஜாதகனுக்கு நீண்ட ஆயுள்.

ஜாதகனுக்கு, அவனுடைய 2ஆம் வீட்டினால் ஏற்படும் பயன்களுடன் இந்த அமைப்பும் சேர்ந்து மேலும் பலவிதமான நன்மைகளைச் செய்யும். Gains; Gains: Gains - அவ்வளவுதான். ஜாதகனுக்குப் பணக்கஷ்டமே  இல்லாத வாழ்க்கை அமையும்.

இந்த அமைப்பைப் பாபக்கிரகம் பார்த்தால், ஜாதகனுக்கு மேற்கூறிய நன்மைகள் இருக்காது. ஜாதகனுக்குப்  பலவிதமான கஷ்டங்கள், நஷ்டங்கள் உண்டாகும்
==================================================
லக்கினாதிபதி பன்னிரெண்டாம் வீட்டில் அமர்ந்தால் ஏற்படும் பலன்:

எவ்வளவு பணம் இருந்தாலும், அல்லது வந்தாலும் அது கரைந்து கொண்டே இருக்கும். எட்டாம் வீட்டினால் ஏற்படும் கஷ்டங்களுடன், இந்த அமைப்பின் கஷ்டங்களும் சேர்ந்து கொண்டு படுத்தி  எடுக்கும். வியாபாரம் செய்தால் லாபமே இருக்காது. நஷ்டம்தான் ஏற்படும். வாழ்க்கையில் நிறையப்
பொருள்  இழப்புக்களைச் சந்திக்க நேரிடும். இந்த அமைப்பே சரியில்லாதது. அதிலும் இந்த அமைப்பைத் தீய கிரகங்கள் பார்த்தால், ஜாதகன் வேளா வேளைக்குச் சரிவர போஜனம் செய்யாதவனாகவும், நித்திரை இல்லாதவனாகவும், மன அமைதி இல்லாதவனாகவும் இருப்பான். அலைச்சல் இருக்கும். குடும்பத்தை அடிக்கடி இடம் மாற்றம் அல்லது ஊர் மாற்றம் செய்ய நேரிடும். திறமையற்றவன், சோம்பேறி என்று அவப்பெயர் கிடைக்கும். வம்புகளும், வழக்குகளும் ஏற்பட்டுப் படுத்தி எடுக்கும்

சிலர் பொது சேவைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு மன நிறைவு, மன அமைதி பெறுவார்கள்
====================================================
அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மாணவக் கண்மணிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு! 

சில் தவிர்க்க முடியாத காரணங்களால் பின்னூட்டங்கள் (Comments) மொத்தமாகத் தடை செய்யப்பட்டுள்ளன. 

உங்கள் கருத்துக்களை நீங்கள் வாத்தியாருக்கு அறியத் தந்தால் மட்டும் போதும். ஆகவே பதிவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை, மின்னஞ்சலில் தெரியப் படுத்தும்படி கேட்டுக்கொள்கிறேன்.

உங்கள் பின்னூட்டங்களுக்கான தனி மின்னஞ்சல் முகவரி spvrsubbiah@gmail.com   Subject Boxல் சம்பந்தப்பட்ட பதிவின் தலைப்பையும், தேதியையும் மறக்காமல் குறிப்பிடுங்கள்.

 என் அரிய நேரத்தை செலவழித்து இந்த வகுப்பறையைத் தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கிறேன். உங்கள் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே தொடர்ந்து நடத்துவது சாத்தியம். அதை மனதில் கொள்க! என்றென்றும்

அன்புடன் 
வாத்தியார்

20.7.12

Devotional காலமெல்லாம் இருக்கும் காட்சி!

Devotional காலமெல்லாம் இருக்கும் காட்சி!

பக்தி மலர்!

ஒவ்வொருவருக்கும் ஒரு காட்சி காலமெல்லாம் அவர்கள் மனதில் நிற்கும்

ஆனால் முருகபக்தர்களுக்குக் காலமெல்லாம் மனதில் நிற்கும் காட்சி என்றால் அது வேலோடும், மயிலோடும், பேரழகோடும் - முருகன் அமர்ந்திருக்கும் காட்சிதான் என்பதில் எந்தவித ஐயப்பாடும் இல்லை!

அப்படிப்பட்ட காட்சி ஒன்றை மனதை நெகிழ்விக்கும் விதமாகக் கவிஞர் ஒருவர் பாடலாக்கிக் கொடுத்துள்ளார். பாடலைப் பதிவிட்டுள்ளேன். அனைவரையும் படித்துமகிழ  வேண்டுகிறேன்!
-----------------------------------------------

வேல்வந்து வினைதீர்க்க
மயில்வந்து வழிகாட்ட
கோயிலுக்குள் சென்றேனடி - குமரன்
கொலுவிருக்கக் கண்டேனடி

(வேல்வந்து)

பால்கொண்டு நீராட்டி
பழம்தந்து பாராட்டி
பூமாலை போட்டேனடி
திருப்புகழ்மாலை கேட்டேனடி

பங்குனியின் உத்திரத்தில்
பழனிமலை உச்சியினில் - கந்தன்
எனைக் கண்டானடி
சிந்தையில் நின்றானடி

வேலழகும் மயிலழகும்
வீற்றிருக்கும் பேரழகும்
காலமெல்லாம் இருக்குமடி - அந்தக்
காட்சியென்றும் இனிக்குமடி!

(வேல்வந்து)
--------------------------------------------------
பாடல் ஆக்கம்: கவிஞர்.திரு. உளுந்தூர்பேட்டை சண்முகம்
இசை: திரு.வைத்தியநாதன்
பாடியவர்கள்: சூலமங்கலம் சகோதரிகள்.

அன்புடன்,
வாத்தியார்
-----------------------------------------------------
Broad Band Server, Electricity & UPS - total failure என்ற மும்முனைத் தாக்குதலால், நேற்று பதிவு எதையும் வெளியிட முடியவில்லை. வருத்தம் மேலோங்கி யிருந்தது. அறிவிப்பு வெளியிடவும் முடியவில்லை. அடுத்த பாடம் 23.07.2012ம் தேதி, திங்களன்று வெளியாகும். சனி & ஞாயிறு உங்களுக்கு (வகுப்பறைக்கு) விடுமுறை!

வாழ்க வளமுடன்!

18.7.12

Astrology எது மேலானது ? கையா அல்லது காலா?


Astrology   எது மேலானது ? கையா அல்லது காலா?

ஜோதிடம், கைரேகை சாஸ்திரம் ஆகிய இரண்டிலும் எது மேலானது? எது நம்பகத்தன்மை மிகுந்தது? எது உயர்வானது?

இரண்டுமே மேலானதுதான். பிரித்துச் சொல்ல முடியாது!

கைகள், கால்களில் எது மேலானது? அல்லது எது முக்கியமானது? என்று கேட்டால் இரண்டுமே மேலானதுதான். இரண்டும் முக்கியமானதுதான். அவைகளில் ஒன்று இல்லாதவர்களை அல்லது ஒன்றில் குறைபாடு உள்ளவர்களைக்கேளுங்கள் அற்புதமாகப் பதில் தருவார்கள்.

மருத்துவத்தில் எது மேலானது அலோபதியா அல்லது ஹோமியோபதியா அல்லது ஆயுர்வேதமா அல்லது நாட்டு வைத்தியமா எது மேலானது
என்று கேட்டால் என்னத்தைச் சொல்வது? ஒவ்வொன்றும் ஒவ்வொரு வழியில் உயர்ந்ததுதான்! அந்தத்துறையில் உள்ள விற்பன்னர்களின்
(Experts) கையில் அவைகள் எல்லாமுமே மேலானதுதான்

பிறந்த நேரத்தில் தவறு இருந்தால், ஜாதகம் தவறாகப் போவதற்கு வாய்ப்பு உண்டு. ஆனால் கைரேகை தவறாகிப் போவதற்கு வாய்ப்பே  இல்லை. நோ சான்ஸ்!

ஆனால் ஜோதிடத்தின் பிரம்மாண்டம் கைரேகை சாஸ்திரத்தில் இல்லை. அது மட்டும் உண்மை!
-----------------------------------------------------------------------------------------------
கைரேகை சாஸ்திரத்தில் மேதை ஒருவர் இருந்தார். உலகம் அறிந்த, உலகமே போற்றிய மனிதர் அவர்

அவருடைய பெயர் ’சீரோ’ (Cheiro)

வில்லியம் ஜான் வார்னர் என்பது அவரது முழுப்பெயர்.
வாழ்ந்த காலம்: 1.11.1866 முதல் 8.10.1936 வரை
சுமார் 70 ஆண்டு காலம் வாழ்ந்திருக்கிறார். ஐரீஷ்காரர்.
கைரேகை சாஸ்திரம், ஜோதிடம் எண்கணிதம் என்று எல்லாவற்ரையும் ஒருகை பார்த்தவர்.

வாழ்ந்த காலத்தில் பல உலகப்பிரமுகர்கள் அவருடைய அபிமானிகளாகவும், வாடிக்கையாளராகவும் இருந்தார்கள். அதிரடியாக பலரது எதிர்காலத்தைக் கணித்து துல்லியமாகச் சொல்லியவர் அவர்.

இந்தக் கலைகளை எல்லாம் தான் கற்றுத் தேர்ந்தது இந்தியாவில்தான். இந்தியர்களுக்கு என்றும் கடைமைப்பட்டுள்ளேன் என்று  தன்னுடைய நூல்களில் குறிப்பிட்டுள்ளார்

இங்கிலாந்து மன்னர் குடும்பத்தின் பட்டத்து இளவரசின் கையைப் பார்த்துவிட்டு, இவன் அரியணை ஏறமாட்டான் என்று அதிரும்படியாகச்
சொன்னவர் அவர். அதுபோலவே நடந்தது. தன் காதலிக்காக நாட்டையே துறந்துவிட்டுச் சென்ற இளவரசன் அவன்.

அதுபோல தன் மரணத்தைத் துல்லியமாகச் சொன்னவர் அவர். தன் நண்பர்கள் அனைவரையும் அழைத்து வீட்டில் பெரிய விருந்து கொடுத்துவிட்டு, அனைவரிடமும் விடைபெற்றவர் அவர். அன்று இரவு தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்து விட்டது.

இதுபோன்று அவரைப்பற்றிப் பல செய்திகள் உள்ளன. பிறகு ஒரு நாள் அதை விரிவாக எழுதுகிறேன்.

அவரைப் பற்றி மேலும் படிப்பதற்கான சுட்டியைக் கீழே கொடுத்துள்ளேன்:
http://en.wikipedia.org/wiki/Cheiro
--------------------------------------
From Cheiro's writings:

Look at the following numbers and discover your significant ages for turning points and eventful highlights in your life: 

Those born on the 1st, 10th, 19th and 28th of any month will find the most important ages are:
1, 7, 10, 16, 19, 28, 34, 37, 43, 46, 52, 61, 70, 73, 79, and 82

Those born on the 2nd, 11th, 20th, and 29th of any month:
2, 7, 11, 16, 20, 25, 29, 34, 38, 43, 47, 52, 56, 70, 74, 79, and 83

Those born on the 3rd, 12th, 21st and 30th of any month:
3, 12, 21, 30, 39, 48, 57, 66, 75, and 84

Those born on the 4th, 13th, 22nd and 31st of any month:
1, 4, 10, 13, 19, 22, 28, 31, 37, 40, 46, 49, 55, 58, 64, 67, 73, and 76
 
Those born on the 5th, 14th and 23rd of any month:
5, 14, 23, 32, 41, 50, 59, 68, 77, and 86

Those born on the 6th, 15th and 24th of any month:
6, 15, 24, 33, 42, 51, 60, 69, 78 and 87

Those born on the 7th, 16th and 25th of any month:
2, 7, 11, 16, 20, 25, 29, 34, 38, 43, 47, 56, 61, 65, 70, 74, 79, and 83

Those born on the 8th, 17th or 26th of any month:
8, 17, 26, 35, 44, 53, 62, 71, 80, and 89

Those born on the 9th, 18th or 27th of any month:
9, 18, 27, 36, 45, 54, 63, 72, 81, and 90

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!

17.7.12

Astrology சந்திரனும் சட்னியும் - பகுதி 2


Astrology சந்திரனும் சட்னியும் - பகுதி 2

முன் பாடத்தைப் படித்திராதவர்கள் அதைப் படித்துவிட்டு வந்து இதைப் படிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
------------------------------------------ 
சட்னியில் தேங்காயின் முக்கியத்துவம்!

அதாவது சந்திரனின் முக்கியத்துவம்!

மனிதனுக்கு உடல் நிலை எத்தனை முக்கியமோ,  மன நிலையும் அத்தனை முக்கியமானது!

மனம் உற்சாகமாவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும்போது களத்தில் இறங்கினால் எதை வேண்டுமென்றாலும் சாதிக்கலாம்.

சிலர் எப்போதும் உற்சாகமாக இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். சிலர் எப்போதும் உற்சாகமில்லாது டல்லடித்து உட்கார்ந்திருப்பார்கள்.  அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. எல்லாம் ஜாதகக் கோளாறுகள்.

இன்றைய பாடத்தில் அதைப் பார்ப்போம்.

12 ராசிகளில் சந்திரன் அமர்ந்திருக்கும் ராசிக்கான பலனை முதலில் பார்ப்போம். எல்லாம் பொதுப்பலன்கள்

1. மேஷத்தில் சந்திரன் இருந்தால், ஜாதகன் மன உறுதி கொண்டவன். சிந்தனை வயப்படுபவன். உணர்ச்சி வேகம் உள்ளவன். உணர்ச்சிகள்
தூண்டப்படும்போது அதற்குத் தகுந்தாற்போல செயல் படக்கூடியவன். கள்ளம் கபடு இல்லாதவன். வெளிப்படையாகப் பேசுபவன்.

2. ரிஷபத்தில் சந்திரன் இருந்தால், நிலையான மனதை உடையவன். எந்த சூநிலையிலும் தன்னை, தனக்கு விருப்பமில்லாவிட்டால், மாற்றிக் கொள்ளாதவன். அதனால் வீண் பிடிவாதக்காரன் போன்ற தோற்றத்தை அளிக்கக்கூடியவன்.

3. மிதுனத்தில் சந்திரன் இருந்தால் ஜாதகன் அதிபுத்திசாலியாக இருப்பான். சிலர் வஞ்சனை உள்ளவர்களாக, இரட்டை வேடம்  போடுபவர்களாக இருப்பார்கள். அதையும் அடுத்தவர்கள் கண்டுபிடிக்க முடியாதபடி தங்கள் கட்டுக்குள் வைத்திருப்பார்கள். எப்போதும்  பாதுகாப்பாக இருப்பார்கள்.

4. கடகத்தில் சந்திரன் இருந்தால், ஜாதகன் மிகவும் உணர்ச்சி வசப்படுபவனாக இருப்பான். தன்னைச் சுற்றியுள்ளவர்கள் மேல் அக்கறை உள்ளவனாக இருப்பான்.

5. சிம்மத்தில் சந்திரன் இருந்தால், ஜாதகன் தன்முனைப்பு உள்ளவனாக, ஈகோ உள்ளவனாக இருப்பான். சிலரிடம் தான் என்னும்  மனப்பாங்கு மிகுந்து இருக்கும். அகம்பாவம் இருக்கும். தற்பெருமைக்காரனாகவும் இருப்பான். அதே நேரத்தில் மகிழ்ச்சி உடையனாகவும்,  பலருடைய கண்களில் படுபவனாகவும் இருப்பான்.

6. கன்னியில் சந்திரன் இருந்தால், ஜாதகன் யதார்த்தமாக இருப்பான். உலக இயல்புகளோடு ஒத்துப்போகும் தன்மையுடையவனாக இருப்பான். குறிப்பிட்டுச்சொன்னால், He will be practical. எல்லா விஷயங்களிலும் ஒரு கண்ணோட்டத்துடன் இருப்பான். அத்துடன் extremely sensitive ஆக இருப்பான்.

7. துலாம் ராசியில் சந்திரன் இருந்தால், ஜாதகன் அலைபாயும் மனதை உடையவன்.  swaying from one side to the other.swinging indecisively from one course of action or opinion to another. சட்டென்று முடிவு எடுக்க மாட்டார்கள். சிலர் சலன புத்திக்காரர்களாக இருப்பார்கள். ஆனாலும் அன்பு மற்றும் கருணை மிக்கவர்களாக இருப்பார்கள்.

8. விருச்சிகத்தில் சந்திரன் உள்ளவர்கள், மற்றவர்களை நேசிக்கும் மனதை உடையவர்கள். பக்தி, விசுவாசம் மிக்கவர்கள்.  மென்மையானவர்கள். அவர்களுடைய மனதைத் தொடும்படி பேசினால், மயங்கி விடக்கூடியவர்கள்.

9. தனுசில் ச்ந்திரன் இருக்கப்பிறந்தவர்கள், இறைவனின் ஆசி உள்ளவர்கள் (blessed people). பெருந்தன்மை மிக்கவர்கள். அதாவது பெரிய மனது உடையவர்கள். மற்றவர்களின் உணர்வை மதிக்கக்கூடியவர்கள்.

10. மகரத்தில் சந்திரன் இருந்தால், ஜாதகன், யாரிடமும் நட்புக் கொள்ளும் மனதை உடையவன். எதையும் சாதிகக்ககூடிய மன வலுவை  உடையவன். அட்சரசுத்தமாகச் செய்து முடிக்கக்கூடியவன்.செய்வதைத் திருந்தச் செய்யக்கூடியவன். முழுமையாகச் செய்யக்கூடியவன்.

11. கும்பத்தில் சந்திரன் இருந்தால் ஜாதகன் reserved  மற்றும் serious nature உடையவனாக இருப்பான். ஆனாலும் மனிதநேயம் மிக்கவனாக இருப்பான்.

12. மீனத்தில் சந்திரன் இருந்தால், ஜாதகன் நல்ல உள்ளம் கொண்டவனாக இருப்பான். அடுத்தவர்களை நேசிப்பவனாக இருப்பான். அத்துடன் மாற்றங்களை விரும்புபவனாக இருப்பான்.

இவைகள் எல்லாமுமே பொது விதிகள். சந்திரனுடன் கூட்டாக உள்ள மற்ற கிரகங்களை வைத்து இவைகள் மாறுபடும். சுபக்கிரகங்களின் கூட்டு என்றால் யதார்த்தம் மற்றும் நற்பலன்கள் அதிகமாகும்.  தீய கிரகங்களின் கூட்டு என்றால் இந்தக் குணங்கள் மைனசாகி விடும். அதாவது குறைந்துவிடும்

சந்திரன், சுக்கிரனோடு சேர்ந்திருந்தால், எந்த இடத்தில் இருந்தாலும், ஜாதகன் நட்பு பாராட்டக்கூடியவனாக இருப்பான். அத்துடன் இறைபக்தியுடைய வனாகவும், ரசனை உணர்வு மிக்கவனாகவும் இருப்பான். தனது மகிழ்ச்சியான தருணங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து  கொள்வான். உலகத்தாரோடு ஒத்து வாழ்பவனாக இருப்பான்.

சந்திரன் குருவோடு சேர்ந்திருந்தால், அது மேன்மையான அமைப்பாகும். ஜாதகன் நல்ல உள்ளம் கொண்டவனாகவும்,  பெருந்தன்மை  மிக்கவனாக வும்,  மற்றவர்களின் தவறுகளை எளிதில் மன்னிக்கக்கூடியவனாகவும் இருப்பான். இந்த இரு கிரகங்களும் எந்த ராசியில் சேர்ந்திருந்தாலும் இந்தப் பலன்கள் மாறாது. ஆனால் லக்கினத்திற்கு 6ஆம், 8ஆம், 12ஆம் இடங்களில் இந்த அமைப்பு இருந்தால் பலன்கள்  மாறுபடும்.

சந்திரன் லக்கினத்திற்கு 6ஆம், 8ஆம், 12ஆம் இடங்களில் இருந்தால் ஏற்படும் பாதகங்கள்.

6ல் (House of diseases)
8ல் (House of sins)
12ல் (House of losses & weakness)

ஆகிய இடங்களில் இருக்கும் சந்திரன் பலவீனமாகி ஜாதகனின் மனநிலையிலும், எண்ணங்களிலும் பாதகமான மாற்றங்களை உண்டாக்கும்.
அதே நேரத்தில் இந்த இடத்தில் இருக்கும் சந்திரன் சுபக்கிரகங்களான குரு அல்லது சுக்கிரனின் பார்வையைப் பெற்றிருந்தால், அந்தக் குறைகள் இருக்காது. அந்த இடங்களில் இருக்கும் சந்திரன் பலமாகி ஜாதகனுக்கு நன்மைகளையே செய்வார். அதை மனதில் கொள்க!

கீழ்க்கண்ட அமைப்பு ஜாதகனின் மனநிலையில் பாதகங்களை உண்டாக்கும்:

1. குரு லக்கினத்திலும் செவ்வாய் ஏழாம் வீட்டிலும் இருக்கும் அமைப்பு: உதாரணத்திற்கு மேஷ லக்கினம். ஜாதகனுக்கு கொடூரத்தன்மை இருக்கும். தன்னைச் சுற்றி இருப்பவர்களை எல்லாம் ஆட்டி வைப்பான்.

2. சனி லக்கினத்திலும், செவ்வாய் சனிக்கு 6, 8 அல்லது 12ல் இருக்கும் நிலைமையும் மோசமான மனநிலையைக் கொடுக்கும்.

3. சனி லக்கினத்திலும், சூரியன் 12லும், செவ்வாய் கோணங்களிலும் இருக்கும் அமைப்பும் மோசமான மனநிலையைக் கொடுக்கும்.

4. மூன்றாம் அதிபதி ராகு அல்லது கேதுவுடன் இருக்கும் நிலைமை ஜாதகனுக்கு பெரும் மன அழுத்தத்தைக் கொடுக்கும்

5. ஆறாம் வீடு ஒரு தீய கிரகத்தின் பார்வையுடன் இருந்தாலும் மன அழுத்தங்கள் உண்டாகும். மன அழுத்தம் (Depression) என்றால் என்ன
வென்று தெரியுமல்லவா?

6. தேய்பிறைச சந்திரனும், சனியும் கூட்டாக 12ல் இருந்தாலும் மன அழுத்தங்கள் உண்டாகும், ஜாதகனின் நடத்தையும் மாறுபடும்.

எல்லாம் பொதுப்பலன்கள். தனிப்பட்ட ஜாதத்திற்கு, ஜாதகத்தின் மற்ற அமைப்புக்களை வைத்துப் பலன்கள் மாறுபடும். ஆகவே கவலை
கொள்ளாமல், ஜாதகத்தை அலசுங்கள். அப்படியே ஒரு அவுன்ஸ் 337 டானிக்கை ஒரு குவளை தண்ணீரில் கலந்து அவ்வப்போது குடியுங்கள்

(இது மேல்நிலை classroom2012 வகுப்பிற்காக எழுதப்பெற்ற பாடங்களில் ஒன்று. உங்களுக்கும் பயன்படட்டும்  என்பதற்காக இங்கே பதிவிட்டுள்ளேன்.)

அன்புடன்
வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

16.7.12

Astrology சந்திரனும் சட்னியும்!

Astrology சந்திரனும்  சட்னியும்!

பயிற்சிப் பாடம்

இட்லியைக் கண்டுபிடித்தது மாண்புமிகு தமிழன்தான் என்று நமக்குத் தெரியும். அதுபோல இட்லிக்கான சாம்பாரைக் கண்டுபிடித்ததும் தமிழன்தான் அதிலும் சந்தேகமில்லை. ஆனால் சட்டினியைக் கண்டுபிடித்தது யார் என்று தெரியவில்லை! தெரிந்தவர்கள் சொல்லலாம்

சட்டினியில்தான் எத்தனை வகைகள்! எங்கள் பகுதி வீடுகளில் அசத்தலாகச் சட்னி செய்வார்கள். விதம் விதமாகச் செய்வார்கள். அதனால் தெரியும். இட்லிக்கான சாம்பாரையும் விதம் விதமாக்ச் செய்வார்கள். அதைப் பின் ஒரு நாளில் எழுதுகிறேன்.

சட்னியை வகைப்படுத்தியுள்ளேன் பாருங்கள்:

1. தேங்காய் சட்னி (இதில் 4 வகைகள் உள்ளன)
2. தக்காளி சட்னி (இதில் அரைத்துக் கொதிக்க வைக்கும் சட்னி, வதக்கி   அரைக்கும் சட்னி என்று இரண்டு வகைகள் உள்ளன)
3. சின்னவெங்காயம், புளிச் சட்னி
4. கொத்தமல்லிச் சட்னி
5. பொதினாச் சட்னி
6. கசகசாச் சட்னி
7. உளுத்தம் பருப்பு சட்னி
8. கத்தரிக்காய் சட்னி,
9. உருளைக்கிழங்கு சட்னி
10. பீர்க்கங்காய் (தோல்) சட்னி
11.  பலகாய்ச் சட்னி
12. எள்ளுச் சட்னி

முதலில் தேங்காய்ச் சட்னியை எடுத்துக்கொள்வோம். எங்களூர் (கோவையில்) அன்னபூர்ணா உணவங்களில் தேங்காய்ச் சட்னி சூப்பராக இருக்கும். பொங்கல் அதைவிட சூப்பராக இருக்கும். அந்த இரண்டையும் சேர்த்துச் சாப்பிடும்போது கிறங்கிப் போய்விடுவீர்கள்.

நீங்கள் உணவுக்காதலராக இருந்தால், இந்தப் பிறவி எடுத்ததன் பலன் கிடைத்துவிட்டதாக அப்போது உணர்வீர்கள்!

வீடுகளில் பொதுவாகத் தேங்காயுடன் பொட்டுக்கடலையைச்
சேர்த்து விடுவார்கள். சுவை மாறிவிடும். தமன்னா தனியாக ஆடினால்
பார்க்கமுடியும். கூட்டத்தோடு (பின்னணியில் 50ற்கும் மேற்பட்ட
நடனப் பெண்களுடன்) ஆடினால் எப்படிப் பார்க்க முடியும்?

அந்தத் தேங்காய், பொட்டுக்கடலையுடன் இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கும்போது ஒரு சுவை இருக்கும். வரமிளகாய் மட்டும் சேர்த்து அரைக்கும்போது சுவை வேறாக இருக்கும்.

ஒருமுறை எங்கள் பகுதி செல்வந்தர் வீட்டுத் திருமணம் ஒன்றில் காலைப் பலகாரம் சாப்பிடும்போது, தேங்காய்ச் சட்னி அற்புதமாக  இருந்தது. அதி சுவையாக இருந்தது. அத்தனை சுவையுடன் அதுவரை சாப்பிட்டதில்லை. தேங்காய் காரணமாக இருக்குமா? விடக்கூடாது  தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கோடு, சமையல் கட்டிற்குச் சென்று, சமையல் மேஸ்திரியை அணுகிப் பேச்சுக் கொடுத்தேன். தேங்காய் சட்னி சுவையாக இருப்பதன் ரகசியத்தைக் கேட்டேன்.

அவர் எனக்கு நன்கு பரீட்சயமானவர். சட்டென்று பதில் சொன்னார்:

”அதில் ரகசியம் ஒன்றும் இல்லை அப்பச்சி. தேங்காயுடன் முந்திரிப் பருப்பைப் போட்டு அரைத்திருக்கிறோம்.”

”முந்திரிப் பருப்பா?”

”ஆமாம். போடும் முன்பாக இளஞ்சூட்டில் நன்றாக வதக்கிவிடுவோம். ஆனால் சிவக்க விடாமல் வதக்க வேண்டும்”

”என்ன அளவு?”

”50 தேங்காய்க்கு இரண்டு கிலோ முந்திரிப்பருப்பு!”

முந்திரிப் பருப்பு விற்கிற விலையில் நமக்கெல்லாம் கட்டுபடியாகாது. ஆத்தாடி ...என்று பேசாமல் திரும்பி வந்து விட்டேன்!
--------------------------------------------------------------
’வாத்தி (யார்) இந்தச் சட்னி கதைக்கும் பாடத்திற்கும் என்ன சம்பந்தம்?”

“இருக்கிறது ராசா! சந்திரன் தான் தேங்காய். மற்ற கிரகங்களை எல்லாம் இஞ்சி, பச்சை மிளகாய், வர மிளாய், முந்திரிப் பருப்பாக்கி விதம்
விதமாகச் சட்னி அரைக்கபோகிறேன்”

“எப்போது?”

“அவசர வேலை இருக்கிறது. வெளியூர்ப் பயணம். அதனால் நாளைக்கு (17.7.2012) அரைத்துப் பறிமாறுகிறேன். பொறுத்திரு ராசா!
----------------------------------------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++
2

அறிவிப்பு

நமது வகுப்பறையின் மாணவர் திரு. கண்ணன் சீதாராமன்  திருப்பதி பாத யாத்திரை செல்கிறார். சக மாணவர்களையும் வந்து கலந்து கொள்ளுமாறு அழைப்பு அனுப்பியுள்ளார். திருப்பதி சென்று வந்தால் திருப்பம் நேருமென்று கவியரசர் கண்ணதாசன் சொல்லுவார். ஆகவே வாய்ப்பும் விருப்பமும் இருப்பவர்கள் அவருடன் சென்று திரும்பலாம்

பாதயாத்திரை 21.7.2012 சனிக்கிழமையன்று துவங்குகிறது. அதன் விவரம் கீழே உள்ளது. படித்துப்பாருங்கள்

அவ்ருடைய மின்னஞ்சல் முகவரி:   kseetharaman007@gmail.com
அலைபேசி எண்ணை அவர் கொடுக்கவில்லை. கொடுத்திருந்தால் அதையும் வெளியிட்டு இருப்பேன்


அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------------------------
" திருமலா திருப்பதி பாத யாத்திரை !:, 
பற்றிய ஸ்கேன் காப்பியை வகுப்பில் ஏற்றுங்கள் . 1000 நபர்கள் வந்தாலும் பரவாக இல்லை வெங்கட் உள்ளார் .மேலும் தங்களுடைய மாணவன் இந்த
'  கண்ணன் சீதாராமன் "!
 உள்ளான் .   ஒரே ஒரு தகுதி மற்றும்  பாத யாத்திரையாக வருபவரிடம் வேண்டும் . விரத
 " கட்டுபாடும் ",  
மற்றும் வேண்டும் என்று மிகவும் தெள்ள தெளிவாக எல்லோருடைய கண்ணில் படும் அளவிற்கு தலைப்பை தாருங்கள் ஐயா !
இதனை விட மிகவும் சிறப்பான வழி  இருப்பின் அதனை கூறுங்கள் . அந்த
கட்டு பாடு
" 41 நாட்கள் மனசு சுத்தம் மற்றும் உடல் சுத்தம் உள்ளவர்கள் மட்டுமே அனுமதி மற்ற வர்கள் அடுத்த வருடம் வாருங்கள் ",  என்று
அப்பொழுது அந்த  "  கண்ணனின் கருணை ",  இருப்பின் அனைவரையும்  அழைத்து செல்லுகின்றோம்  என்று " பாத யாத்திரை குருநாத  சுவாமி ",  கூறியதை கூறுங்கள்.
இதனை எழுதுவது விழுப்புரம் மற்றும் உளுந்தூர் பேட்டையை இடையில்
" திரு நாவலூர் "!
என்ற இடத்தில அங்கு உள்ள பெருமாளை அர்ச்சனை செய்து கும்பிட்டு வந்த உடன் திடீர் என்று எண்ணம் தோன்றியது அதனால் கூறுகின்றேன் வாழ்கையில் எவ்வளவோ  சந்திக்க  வேண்டிய உள்ளது நாம் நல்லது தானே ஐயா செய்கின்றோம் 
அன்புடன் மாணவன்.
கண்ணன் சீதாராமன்


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++