மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

31.12.14

Quiz.no.72 Answer: கிடைத்ததை வைத்துக் கொண்டாடுவோம்: கிடைக்காததைக் கிடப்பில் போடுவோம்!


Quiz.no.72 Answer: கிடைத்ததை வைத்துக் கொண்டாடுவோம்: கிடைக்காததைக் கிடப்பில் போடுவோம்!

புதிர் எண் 72ற்கான விடை

கிடைத்ததை வைத்துக் கொண்டாடுவோம்: கிடைக்காததைக் கிடப்பில் போடுவோம்! அதாவது அறவே மறந்து விடுவோம்!

31.12.2014
--------------------------------------
நேற்றையப் பதிவில், அன்பர் ஒருவரின் ஜாதகத்தைக் கொடுத்து ஒரு கேள்வியைக் கேட்டிருந்தேன்.

கேட்கப்பெற்றிருந்த கேள்வி:

ஜாதகரின் கல்வி நிலைப்பாட்டைப் பற்றி எழுதுங்கள். அதாவது ஜாதகர் படித்தவரா? பட்டம் பெற்றவரா? அல்லது படிக்காதவரா? என்பது பற்றி அலசி உங்கள் பதிலை எழுதுங்கள். ஜாதகப்படி அதற்கு உரிய காரணத்தையும்
எழுதுங்கள்” என்று கேட்டிருந்தேன்

சரியான பதில்:

ஜாதகருக்குப் படிப்பு ஏறவில்லை. படிப்பைப் பாதியில் விட்டவர் (School drop out)

என்ன காரணம்?

1.மிதுன லக்கினம். 4ஆம் வீடான கன்னிக்கு அதிபதியான புதன் அந்த வீட்டிற்கு எட்டில்.அதுவும் சனியுடன் கூட்டணி.
2.கூட்டணி சேர்ந்துள்ள சனி ஜாதகத்தில் எட்டாம் வீட்டிற்கு உரியவன்.
3.ஆறாம் அதிபதியின் பார்வை கேடானது. ஜாதகத்தில் ஆறாம் அதிபதியான செவ்வாய் எட்டில் அமர்ந்து,  தனது நான்காம் பார்வையால் புதனைத் தன் பார்வையில் வைத்திருப்பதைக் கவனிக்கவும்.
4.நான்காம் அதிபதி பூரணமாகக் கெட்டிருக்கிறார். அதனால்தான் ஜாதகனுக்குப் படிப்பு ஏறவில்லை.
5.ஆறாம் அதிபதியின் சேர்க்கை அல்லது பார்வை மிகவும் தீங்கானது.
எதையும் அலசும்போது அதை மனதில் வைத்துக்கொள்ளவேண்டும்!
6.அத்துடன் இந்த ஜாதகத்திற்கு 4ஆம் அதிபதியும், கல்விகாரகனுமான புதன் கல்வி ஸ்தானத்திற்கு எட்டில் அமர்ந்தது மிகவும் கேடானது.
ஆகவே ஜாதகனுக்கு படிப்பு ஏறவில்லை. ஜாதகன் School drop out
-----------------------------------------------------------
சின்ன வயதில் சிலருக்கு படிப்பு வராது. படிக்கும் சூழ்நிலை இருந்தாலும் படிப்பு ஏறாது. எட்டாம் வகுப்பைக்கூடத் தாண்ட மாட்டார்கள். வீட்டில் பெற்றோர்கள் கண்டித்து, அடித்தால் பையன் வீட்டை விட்டு ஓடி
விடுவான். பிறகு பல சிரமங்களுக்கிடையே தேடிப்பிடித்துக் கூட்டிக்
கொண்டு வருவார்கள். வந்தாலும் திரும்பவும் படிக்கச் சொல்லி
வற்புறுத்த மாட்டார்கள். ஒரு ஸ்கூட்டர் ஒர்க் ஷாப்பிலோ அல்லது
ஒரு மளிகை/ ஜவுளிக்கடையிலோ அல்லது ஒரு அச்சகத்திலோ
அல்லது அதுபோன்ற சிறு தொழில் செய்பவர்களிடம் வேலைக்குச் சேர்த்துவிடுவார்கள்.

அதில் ஒரு ஐந்து அல்லது ஆறு ஆண்டுகள் பயிற்சி பெற்றதும், தங்கள் சொத்தில் எதையாவது விற்று அல்லது எங்காவது பணத்தைப் புரட்டி சம்பந்தப்பட்டவனுக்கு ஒரு சொந்தத் தொழிலை வைத்துக்
கொடுப்பார்கள். அவன் தன்னுடைய பிழைப்பை அதன் மூலம் செய்ய வேண்டியதாயிருக்கும்

அவனுடன் ஒன்றாகப் படித்தவன், பின்னால் சிரத்தையாகப் படித்துப் பொறியியல் பட்டம் பெற்று எங்காவது பெரிய தொழிற்சாலையில்
மாதம் ரூபாய் முப்பதாயிரம் சம்பாதித்துக்கொண்டிருப்பான். நம்மாளும் பின்னால் பெரிய மெக்கானிக்காகி கார் அல்லது மோட்டார்
சைக்கிள்களைப் பழுது பார்க்கும் தொழிலைச் செய்து, பலரையும்
வேலைக்கு வைத்துத் தன் நண்பனைவிட அதிகமாகச் சம்பாதிப்பான்.
 2, 10, & 11ஆம் வீடுகளைவைத்து  அவையெல்லாம் அவனுக்கு ஒரு
உயர்வைக் கொடுக்கும். ஆனால் படிப்பு போனது போனதுதான்.

என்ன காரணம்? எல்லாம் ஜாதகக் கோளாறுதான்!

அது போன்ற ஜாதகம்தான் இது
--------------------------------
போட்டில் 25 பேர்கள் கலந்து கொண்டார்கள். கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்.

அவர்களில் 11 பேர்கள் மட்டுமே சரியான பதிலை அல்லது ஒட்டிய பதிலை எழுதியுள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்!

அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
1
**********//////Blogger Chandrasekaran Suryanarayana said...
    வணக்கம்.
    இந்த கேள்வி எற்கனவே கேள்வி பகுதி 33ல் 31‍/12/2013 அன்று கேட்கபட்டுள்ளது.
    பழைய பாடம். நினைவு படுத்தினதற்க்கு மிக்க நன்றி.
    கேள்வி பகுதி 72க்கு ஆன பதில்.
    1.ஜாதகர் படிக்கவில்லை. படிப்பு ஏறவில்லை. கல்வி மறுக்கப்பெற்ற ஜாதகம்.
    2.4ம் அதிபதி பூரணமாக கெட்டு இருக்கிறார்.
    3.4ஆம் வீடான கன்னிக்கு அதிபதியான புதன் அந்த வீட்டிற்கு எட்டில். அதுவும் சனியுடன் கூட்டணி.
    4. கூட்டணி சேர்ந்துள்ள சனி ஜாதகத்தில் எட்டாம் வீட்டிற்கு அதிபதி.
    5. ஆறாம் அதிபதியின் பார்வை கேடு ஆனது.
    6. ஜாதகத்தில் ஆறாம் அதிபதியான செவ்வாய் எட்டில் அமர்ந்து,
    தனது நான்காம் பார்வையால் புதனைத் தன் பார்வையில் வைத்திருக்கிறார்.
    சந்திரசேகரன் சூரியநாராயணன்.
    Tuesday, December 30, 2014 6:54:00 AM///////
--------------------------------------------------------
2
**********//////Blogger trmprakaash@gmail.com said...
    ayya, midhuna lagna jathagam. Lagnathipathy lagnathirkku 11-il neesabangam adaindha sani matrum suriyanudan. Aanal, 4m veettirkku 8m veettil 4m adhipathy Budhan 6-8 positionil. 2il kethu. Andhaveettu adhipathy chandiran neesabangam adaindhu guruvudan ullar. Idhu nalla amaippu (kaja kesariyogam) endralum lagnathirkku 6-m veedu enbadhal muzhu palanai adaiya vaippu kuraivu. 4m adhipathy budhan 4m veettirkku 8il 6m adhipathyana ucha sevvayin parvayil. 4m veetin athypathikku subar parvai illai. Aanal,4m veettirkku poorvapunniyadhiayana ucha sukkiranin paarvai irundhalum 4m adhipathiyum ucha sukkiranum 12-1 positionil.
    Aadhalal, ivar 10m vaguppu thandiyirukka maattaar.
    Anbudan,
    Mu.Prakaash.
    Tuesday, December 30, 2014 11:00:00 AM////////
----------------------------------------------------------
3
***********//////Blogger sundari said...
    வணக்கம் சார்.
    ஜாதகர் படிக்காதவர் காரணம் 2ல் கேது 4ஆம் அதிபதி புதன் அந்த வீட்டிற்கு 8ல்3ஆமஅதிபதிசூரியன் 8ஆம் அதிபதி சனியோடு கூட்டாயிருகிறார் அப்புறம் 2ஆமதிபதி சந்திரன் நீசம் பெற்று 6ல் இருக்கிறார் 5ஆமதிபதி
சுக்கிரன் உச்சம் ெற்று 5ஆம் வீட்டிற்கு 6ல் இருக்கிறார்.6ஆமதிபதி செவ்வாயின் பார்வையை வேற புதன் பெற்றுவிட்டார்.
    Tuesday, December 30, 2014 11:21:00 AM/////
------------------------------------------------
4
//////Blogger Govindasamy said...
    5க்கு உரிய சுக்கிரன் 10ல் குருவின் வீட்டில் 10க்கு உரிய குரு 6ல் நீச சந்திரனுடன். ஜாதகர் பள்ளிக் கல்வியை முடித்திருக்கமாட்டார்.
    9க்கு உரிய சனி 11ல் செவ்வாயின் வீட்டில். 11க்கு உரிய செவ்வாய் 8ல் சனியின் வீட்டில். பரிவர்த்தனை யோகம். கூடவே சூரியனும் புதனும் 11ல் புத ஆதித்ய யோகம்.
    ஜாதகர் தன் சொந்த புத்தியில் சற்று தெளிந்தவராக காணப்பட்டாலும்,இரண்டில் கேது இருப்பதால் தன்
எண்ணத்தை தெளிவாக வெளிப்படுத்த இயலாதவராகவோ அல்லது சற்று திக்கும் இடர் கொண்டவராகவோ இருப்பார்.
    Tuesday, December 30, 2014 12:45:00 PM//////
---------------------------------------------------
5
**********//////Blogger venkatesh r said...
    மிதுன லக்னம், விருச்சிக ராசி ஜாதகர். அவர் பள்ளி இறுதி வரை மட்டும் படித்து இருப்பார்.
    காரணங்கள் :
    லக்னாதிபதி 11ல். ல‌க்னத்திற்கு 2ல் கேது கல்விக்கு தடை. தவிர 2ம் அதிபதி 6ல் மறைவு, நீசம். 2மிடத்திற்கு குரு பார்வை இருந்தாலும், வில்லன் செவ்வாயின் நேர் பார்வை. ஆரம்பக் கல்வியை கஷ்டப்பட்டு படித்து இருப்பார். 
உயர் கல்விக்கான 4மிட அதிபதி புதன் அதற்கு 8மிடமான 11ல். கூடவே 8ம் அதிபதி சனி. என்னதான் நீசம் பங்கமானாலும் ஜாதகருக்கு கல்வியில் உதவியிருக்க மாட்டார்.
    Tuesday, December 30, 2014 2:58:00 PM//////
--------------------------------------------------
6
///////Blogger Chandrasekharan said...
    மதிப்பிற்குரிய ஐயா வணக்கம்,
    1.) 4-ம் அதிபதி புதன் 11-இல் அமர்வு, உடன் 3-ம் அதிபதி சூரியன் உச்சம் பெற்று 11-இல் அமர்வு.
    2.) 8-ம் அதிபதி சனி நீசபங்கம் அடைந்து 11-இல் அமர்ந்து 3-ம் பார்வையாக லக்னத்தை பார்கிறார்.
    3.) சனி & செவ்வாய் பரிவர்தனை.
    4.) சனி & செவ்வாய் பரஸ்பர பார்வை. 4-ம் அதிபதி முற்றிலும் பலவீனமக உள்ளார்.
    5.) 10-இல் உச்ச சுக்கிரன் 4-ம் வீட்டை பார்கிறார் ஆனால் சுக்ரனை 6-இல் அமர்ந்த குரு 5-ம் பார்வையாக பார்த்து பலவீனப்படுத்துகிறார். இந்த காரணத்தினால் படிப்பு சொல்லும்படியக இல்லை. 10-ம் வகுப்பு 
படித்திருந்தாலே பெரிய விஷயம்.
    நன்றி.
    Tuesday, December 30, 2014 5:06:00 PM//////
------------------------------------------------
7
//////Blogger hamaragana said...
    அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
    புதிர் எண் .72,
    1.கொடுக்கப்பட்ட ஜாதகம்.மிதுன இலக்கணம் .லக்னாதிபதிபுதன் 11 ல் உடன் உச்சம் பெற்ற சூரியன் +சனி ..
    2.கல்விகதிபதியான புதன் 11 ல் இருந்தாலும் மனகாரகன் சந்திர 6ல் நீசமாக போனான் உடன் குரு இருந்தாலும் வீடு 6ம வீடு .ஆகவே மன நோயாளி போன்று
    3.வசதி வாய்ப்புகள் உண்டு சுக்கிரன் உச்சம் செவ்வாய் உச்சம் உடன் ராகு இவர்கள் இருவரும் 2 மிடத்தை
பார்வை வாக்குஸ்தானம் .2ல் கேது .
    4.சூரியனுடன் புதன் சேர்ந்தாலும் உடன் சனியின் கூட்டு .மிகவும் டெண்ஷான ஜதாகர்.
    5.*** படிப்பு பள்ளி தாண்டி இருக்க மாட்டார். ....****???
    Tuesday, December 30, 2014 6:06:00 PM/////
------------------------------------------------
8
/////Blogger Prasanna said...
    Dear Sir,
    NAMASTHEY,
    ANS: Native is not a formally educated person (Padikadhavar)
    Vidya is seen from the fourth house in the horoscope.The natural käraka of the fourth house is the Moon and rightly its the first knowledge that comes is the mother tongue, or the language of ones parents. The fourth house is responsible for our attainment of knowledge.It’s apparent that the formal education revolves around the principles of the fourth house and Moon, and from these we can derive some principles to approach the charts.
    The nature of the education is seen from the planets in the particular house, the lord and the aspects (Graha

DRUSHTI).
    The first formal education is seen from the fourth house - this is the primary education encompassing

primary school and high school. The ninth, second and seventh houses are the
    following three stages of College/Bachelors,Masters and Doctorate respectively.
    Fourth – primary
    Ninth – college/bachelors/diploma
    Second – masters
    Seventh – doctorate/Ph.D
    The placement of the lord of the fourth house will show the aspiration of the native in their education. If it is

badly placed then education may not be important to the native, whilst if the
    fourth lord is placed in the second house, then the aspiration is to attain a master’s degree..
    The GIVEN NATIVITY BELONGS TO MITHUNA LAGNA. We see , LAGNA LORD PLUS 4TH LORD MERCURY IS

PLACED IN 11 TH HOUSE WITH 3RD LORD SUN and the 8TH LORD SHANI HERE. So his 4th house is corrupted

and 4th lord is corrupted which says , there is no formal education possible.
    Moon and Guru co-joined and placed in 6th house which tells karakas of vidya and sukha) (4th house karaka as well as vidya karaka ) , Moon and Guru are afflicted which strengthens my point telling he is not formally educated.
    Second house kethu indicates there is no master degree and it is also aspect ed by both the high rated malefic s , Rahu and Mars (samasapthama) over second house which confirms there is no scope for Masters degree.
    9th lord, the lord of Bhagya is placed in 11 th, (shani here is 8th lord too for Mithuna Lagna native which should be kept in mind always ) and so , though there seems Budha adhitya yoga, co joining of shani there as well as the exalted malefic aspect of Mars over these planets spoiled the Budha Adhithya yoga which substantiates my answer telling he is not formally educated. He can be intelligent, that doesn't mean he must be educated or a degree holder.
    One more important point to be noted here is, venus. For the Gemini Ascendant Venus will be lord of the 5th and the 12th house. Being the lord of the 5th, a trine, Venus is an auspicious planet for this ascendant,

Moreover, Venus is a friend of Mercury- the lord of this ascendant.( Consequently wearing of a Diamond in the major and sub-periods of Venus will bless the native with children, happiness, intelligence, name, fame and good fortunes). 12 TH LORD SHOULD NOT BE WELL PLACED IS THE GROUND RULE . ASPECT OF SUCH LORD OVER

4 TH HOUSE . spoiled the goodness of 4th house, simply put. Due to the .ownership of 12 th house, Venus has become functional malefic and her aspect over 4th house corrupted the fourth house matters , which we must understand here. Hence he could not have even had basic education too , which I am sure . .
    Last but not the least if we see 7th house , 7th lord guru is in 6th house, with has neecha moon, so there is no possibility for him to be a doctorate. (guru chandra yogam nullified) .
    So my conclusion here is the native is not a formally educated person.
    P.S.
    In this given chart we see many good yogas like Gaja keasari , Budh Adhithya, exalted venus( malavya
Yoga) one of the Puncha Mahapurusha yoga.Exalted mars too. WHEN THE BENEFICE GURU GOES TO 6TH HOUSE THE TOTAL CHART BECOMES WEAK IS MY VIEW POINT. Moreover, all used ignore the placement of yoga where its occurring Aspect of Shani over Rahu tells me that Pithru dosha in this chart is also high. Seeing guru's placement co joining neecha Moon, in the 6th house.
    Thanks and Regards,
    Prasanna
    Tuesday, December 30, 2014 6:15:00 PM//////
------------------------------------------------
9  
***********//////Blogger ravichandran said...
    Respected Sir,
    My answer for our Quiz No.72:
    1. The Native of the horoscope not completed his schooling.
    Reasons:
    1. Second house lord is debilitated and Kedhu is sitting in second house and Mars aspecting.
    2. Fourth house lord is sitting 8th place from his own house along with sun and saturn. It's worst.
    3. Twelfth house lord is aspecting 4th house.
    4. Dasa's are also not supported.
    5. Vidyakaraga is sitting in Mars house and aspected by Mars also.As per rule, It's not good sign for education.
    Hence, he dropped out from school.
    He may engaged in art field.
    With kind regards,
    Ravichandran M.
    Tuesday, December 30, 2014 6:32:00 PM/////
-------------------------------------------------
10
/////Blogger Ariyaputhiran Natarajan said...
    ஐயா,
    மிதுன லக்னம். 6ல் குரு. அதுவும் சந்திரனுடன். ஆனால் குரு மிதுன லக்னத்துக்கு
    என்ன நன்மையைச் செய்து விடுவார். அதெல்லாம் சரி. செவ்வாய் எட்டில். அதுவும் உச்சம்.
    இந்த செவ்வாய் உச்சமாய் தன் வீட்டில் உச்சமாய் இருக்கும் சூரியனைப் பார்க்கிரார்.
    புதனும் சனியும் அஸ்தங்கதம் அடைந்துள்ளதால் கல்விக்கும், செல்வத்துக்கும் தடையாய்
    இருக்கிறார்கள்.
    ஜாதகர் பள்ளி இறுதி வரை மட்டுமே படித்தவர்.
    அ.நடராஜன்
    Tuesday, December 30, 2014 8:47:00 PM//////
------------------------------------------------
11
***********/////Blogger Venkat Lakshmi said...
    உயர்திரு ஐயா,வணக்கம்.
    புதிர் 72க்கு எனது பதில்;லக்கணாதிபதி,4ம் வீட்டு அதிபதி,மற்றும் கல்விக்கு அதிபதி மூவரும் ஒருவரே,4ம் வீட்டு அதிபதி அந்த வீட்டீற்க்கு 8ல் அதனால் 8ம் வகுப்பு வரை படித்திருப்பார்.
    Tuesday, December 30, 2014 11:41:00 PM/////
------------------------------------------------
/////Blogger Kirupanandan A said...
    //திருமணத்தை வைத்தே கேள்விகள் எதற்கு? என்று மாணவர் ஒருவர் கேட்டுக்கொண்டே இருந்தார்.//
    அது சரி. இதைக் கேட்ட அவர் இதில் கலந்துக் கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கிறாரா என்று சொல்லவில்லையே.
    Tuesday, December 30, 2014 8:11:00 PM/////

இல்லை. அவர் கலந்து கொள்வதில்லை!
----------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

30.12.14

Astrology: quiz number.72 யூகம் வேண்டாம். ஆணித்தரமாகச் சொல்லுங்கள்!


Astrology: quiz number.72  யூகம் வேண்டாம். ஆணித்தரமாகச் சொல்லுங்கள்!

Quiz No. 72

புதிர் போட்டி எண்.72 விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

30.12.2014

Write your answer to the queries: கேள்விகளுக்குரிய உங்கள் பதிலை எழுதுங்கள்!

இன்றைப் பாடத்திற்கு ஒரே ஒரு கேள்வி. அந்தக் கேள்விக்கு மட்டும் பதில் எழுதுங்கள் போதும்!
------------------------------------
இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் ஒரு அன்பரின் ஜாதகம்.

ஜாதகரின் கல்வி நிலைப்பாட்டைப் பற்றி எழுதுங்கள். அதாவது ஜாதகர் படித்தவரா? பட்டம் பெற்றவரா? அல்லது படிக்காதவரா? என்பது பற்றி
அலசி உங்கள் பதிலை எழுதுங்கள். ஜாதகப்படி அதற்கு உரிய
காரணத்தையும் எழுதுங்கள்திருமணத்தை வைத்தே கேள்விகள் எதற்கு? என்று மாணவர் ஒருவர் கேட்டுக்கொண்டே இருந்தார். அவருக்காக இன்றும் அலசலை வேறு பக்கம்
திருப்பியிருக்கிறேன்.

அலசலை விரிவாகவும் (எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பை விரிவாகவும்) விடையைச் சுருக்கமாகவும் எழுதுங்கள்!

விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

ஆணித்தரமாக எழுதினால்தான் பாஸ்மார்க்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!
-------------------------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்
===================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

29.12.14

நகைச்சுவை: அமெரிக்காவை கண்டுபிடிக்கும்முன் கொலம்பசுக்கு திருமணமாகியிருந்தால்.....?


நகைச்சுவை: அமெரிக்காவை கண்டுபிடிக்கும்முன் கொலம்பசுக்கு திருமணமாகியிருந்தால்.....?
------------------------------------
1
Superb Family Introduction!!!

A man is introducing his family:

1. This is my wife..... Google Raani... if u ask one question she wud give many relevant and irrelevant answers ...!!!

2. This is our son.. Facebook Kumar... he makes sure that our personal matters reaches the whole colony...!!!

3. This is our daughter .... Twitter Kumari... whole colony folow her...!!!

4. This is my Whatsapp mother- she buzzes all day commenting on everything..!

5. And i am, Orkut Kumar... i had become irrevelant..!!!
-------------------------------------
2
படித்துவிட்டு யாரும் கோபப் பட ஏண்டாம். நகைச்சுவையாக எடுத்துக்கொள்ளுங்கள்:

உண்மையில் ஆண்கள் ரெம்ப.. நல்லவர்கள்..!

ஏனென்றால்....
1 ) சொத்தை எல்லாம் தன் மனைவி பெயரில் வாங்கி விட்டு.. LIC மட்டும் தன் பெயரில் போட்டுக் கொள்வதால்..!

2 )ஆயாவா இருந்தாலும்..ஆன்ட்டியா இருந்தாலும்.. எத்தனை பேர் வந்து லவ் சொன்னாலும்.. சட்டுனு கோப படாமல் செருப்பை கழற்றாமல்.. பிடிக்கலை'னா.. பிடிக்கலை'னு.. பொறுமையா சொல்லிடுவோம்..!

3 ) பஸ்ல.. ஆண்கள் சீட்டுல.. பொண்ணுங்க உட்கார்ந்தா.. கண்டக்டர் கிட்ட கம்ப்ளைன்ட் பண்ண மாட்டோம்..!

4 ) மனைவி எம்புட்டு அடிச்சாலும்.. எந்த ஒரு ஆணும் வெளியே காட்டிக்க மாட்டோம்..!

5 ) லிப்ட் கேட்கிற பொண்ணுங்களை நாங்க திட்டினதே கிடையாது..!

6 ) எந்த ஒரு அப்பனும்.. மகனை தனியாக அழைத்து.. " மருமகள் உன்னை நல்லா பாத்துகிறாளாப்பா.." என்று சந்தேகமாய் கேட்டதில்லை..!

7 ) படித்து முடித்தவுடன்.. வெளிநாட்டு வாழ் பெண்களை மணமுடிக்கத் தேடுவதில்லை..!

8 ) சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது.. அடுத்த தோசைக்கு.. சீரியல் முடியும் வரை பொறுமையாக காத்திருப்போம்..!

9 ) காதலியை லூசு'னு.. விளையாட்டுக்கு கூட சொன்னது கிடையாது..!

10 ) தன் மொபைலுக்கு.. தானே ரீசார்ச் செய்து கொள்வோம்..!

11 ) முக்கியமா.. எங்க கிட்ட இருக்கும் எல்லா கெட்ட பழக்கங்களை.. ஒருத்திகாக நிப்பாட்டி விடுவோம்..!

12 ) பெண்கள் மிஸ்டு கால்.. கொடுத்தவுடன் மேனேஜர் கிட்ட.. திட்டு வாங்கினாலும் பரவாயில்லை'னு.. எந்த ஒரு வேலையாய் இருந்தாலும்.. உடனே ஃபோன் பண்ணி விடுவோம்..!

13 ) பெண்கள் சீரியல் பார்கிறதுக்காக இந்தியா.. பாகிஸ்தான் கிரிக்கெட் இறுதி ஆட்டத்தை கூட பார்க்காமல்.. விட்டு கொடுத்து விடுவோம்..!

14 ) அமேசான் காடு வரை.. போய் பெண்களுக்கு முடி வளர.. மூலிகை எடுத்து வந்து தருவோம்..!

அதனால் தான் ஆண்கள் ரெம்ப நல்லவங்க..!!!!
------------------------------------------------
3
அமெரிக்காவை கண்டுபிடிக்கும்முன் கொலம்பசுக்கு திருமணமாகியிருந்தால்.....?

ஒரு கற்பனை:

அமெரிக்காவை கண்டுபிடிக்கும்முன் கொலம்பசுக்கு திருமணமாகியிருந்தால்.....?

1 ஏங்க எங்க போறீங்க?
2 யார்கூடப் போறீங்க?
3 ஏன் போறீங்க?
4 எப்படி போறீங்க?
5 என்ன கண்டுபிடிக்கப போறீங்க?
6 ஏன் நீங்க மட்டும் போறீங்க?
7 நீங்க இல்லாம நான் என்ன பண்றது?
8 நானும் உங்ககூட வரட்டுமா?
9 எப்ப திரும்ப வருவீங்க?
10 எங்க சாப்பிடுவீஙக?
11 எனக்கு என்ன வாங்கிட்டு வருவீங்க?
12 இப்படி பண்ணணும்னு எனக்குத்தெரியாம எத்தனை நாளா பிளான் பண்ணிட்டுருந்தீங்க?
13 இன்னும் வேற என்னெல்லாம் பிளான் இருக்கு?
14 பதில் சொல்லுங்க ஏன்?
15 நான் எங்க அம்மா வீட்டுக்கு போகட்டுமா?
16 நீங்க என்னை அம்மா வீட்டுல கொண்டுபோய் விடுவீங்களா?
17 நான் இனி திரும்ப வரமாட்டேன்
18 ஏன் பேசாம இருக்கீங்க ?
19 என்ன தடுத்த நிறுத்த மாட்டீஙகளா?
20 இதுக்கு முன்னாடியும் எனக்குத்தெரியாம இந்த மாதிரி பண்ணிருக்கீங்களா?
21 எத்தின கேள்வி கேட்கிறன் ஏன் மரமண்டமாதிரி நிக்கிறீங்க ?
22 இப்ப பதில் சொல்றீங்களா இல்லையா???

இதுக்கு அப்புறமும் அவர் அமெரிக்காவைகண்டுபிடிக்க கிளம்பியிருப்பாருன்னு நினைக்கிறீங்களா????
================================================
4
இளமையில் வருவது நட்பு
வாலிப வயதில் வருவது காதல்
முதுமையில் வருவது பக்தி !

நட்பு, காதல், பக்தி இந்த மூன்றையும் இணைக்கும் வகையில்
ஒரு சொற்றொடரை சொல்லுங்கள் பார்ப்போம் ?

Bar லே உட்கார்ந்து சுண்டல்
சாப்பிட்டா நட்பு !
Beach லே உட்கார்ந்து சுண்டல்
சாப்பிட்டா காதல் !
கோயில்லே உட்கார்ந்து சுண்டல்
சாப்பிட்டா பக்தி !

சரியா நண்பர்களே ?
=====================================
5
Show to Create d Biggest Doubt in your Wife's Mind for you ?

Just Suddenly send her SMS Saying..
"I Love you too" (GAME OVER!)

When do you know you are in love ?

Ans : When you start searching for the cheapest mobile plan

What is the Difference between Young Age and Old Age?

Simple : In Young Age Phone Is Full Of Darlings Numbers.
In Old Age : Its Full of Doctors Number

"Why is Facebook such a hit ?
It works on the principle that 'People are more interested in others life than their own.

A Question Asked In A Talent Test: 

If You Are Married To 1 Of The Twin Sisters, How would You Recognize Your WIFE?
The Best Answer : Why the Hell Should I recognize ?

We Pronounce 22 as Twenty Two, 
33 as Thirty Three,
44 as Forty Four, 
55 as Fifty Five, 
Why not 11 as Onety One?
Doubt By last bench association.

What is the difference between "GHAZAL" and "LECTURE" ?
Every word spoken by the girlfriend is "GHAZAL" and 
Every word spoken by wife is "LECTURE"
===========================================
6
Difference Between HIMAMI and TSUNAMI ?

Pappu : HIMAMI is Face Wash, TSUNAMI is Total Wash.!

When you are in love, 
Wonders happen.
But once you get married, 
You wonder, what happened. 

Philosophy of marriage :
At the beginning, every wife treats her husband as GOD..
Later, somehow don't know why..alphabets get reversed..

Secret formula for married couples...
"Love One Another"
And if it doesn't work, bring the last word in the middle.!!!! 

Dont laugh alone pass it on !!!btwn Pongal n idly?
think...think..think...
Ans : U ll get a holiday for pongal but not for idly.
============================================================
7
ஆவி 1: விஷம் குடிச்சு சாகப் போனேன். விஷத்திலே கலப்படம் பிழைச்சிக்கிட்டேன்!

ஆவி 2: அப்புறம் எப்படி செத்தே?

ஆவி 1: காப்பாத்த மருந்து கொடுத்தாங்க. மருந்திலே கலப்படம். செத்திட்டேன்!
==============================================================
8
நானும் என் நண்பனும் பாரில் ஆர்டர் செய்துவிட்டுக் காத்திருந்தோம் அப்போது அருகில் ஒருவர் ஃபோனில் பேசிக்கொண்டு இருந்தார். ஸ்பீக்கர் ஆனில் இருந்த்தால் மறுமுனையில் பேசிய அவர் மனைவியின் குரல் தெளிவாக கேட்டது.

"ஏங்க…நான் இப்ப ஷாப்பிங் மால் உள்ளே இருக்கேன். நான் சொன்னேனே.. டிஜிட்டல் கேமரா.. இங்க இருக்குங்க... இருபதாயிரம்தான் விலை.
வாங்கிகட்டுமா...?"

"வாங்கிக்க...!"

"அப்புறம்... நான் கேட்டேனே ஒரு வைர நெக்லஸ்... அதுவும் இங்க இருக்குங்க... விலைதான் ஒண்ணரை லட்சம் சொல்றான்..."

"ஒண்ணரை லட்சம்தான... உனக்கு பிடிச்சிருந்தா வாங்கிக்க...!"

“அப்புறம் ஒரு புடவை பார்த்தேன் ரொம்ப காஸ்ட்லியா சொல்றான்”

“ரேட்ட பார்க்காதேமா உனக்கு புடிச்சி இருந்தா வாங்கிறுமா”

"ஏங்க... அப்புறம் நாம பார்த்தமே ஒரு கார்... இப்ப  ஆஃபர் போட்டிருக்காங்க... விலை பதினெட்டு லட்சம் சொல்லறான்... உங்க செக் இருக்கு குடுத்துறவா..?"

"ஓகேமா…… இதுலாம் கேக்கலாமா உனக்கு புடிச்சிருந்தா போதும்"

"ஓகேங்க... சீக்கிரம் விட்டுக்கு வாங்கன்னு ..." என்று கொஞ்சலாய்ச் சொல்லிவிட்டு மறுமுனையில் ஃபோனை வைத்தாள் மனைவி.

இவரும் ஃபோனைச் சிரித்தபடியே வைத்துவிட்டுத் திரும்பினார்.

ஒரே நாளில் இவ்வளவு பர்ச்சேஸா... நாங்கள் மிரண்டு போய்ப் பார்த்துகொண்டிருக்க, எங்களை பார்த்து சிரித்தபடியே கேட்டாரே ஒரு கேள்வி….

"யாரோட மொபைல்ங்க இது..?".
===========================================
எல்லாமுமே இணையத்தில் படித்தவை. அவற்றை உங்களுக்கு இன்று அறியத் தந்திருக்கிறேன்!

எட்டில் எது மிகவும் நன்றாக உள்ளது?

அன்புடன்,
வாத்தியார்
===================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

26.12.14

குறைகள் எப்போது நீங்கும்?


குறைகள் எப்போது நீங்கும்?

பக்தி மலர்

இன்றையப் பக்தி மலரை 'பத்மஸ்ரீ' டி. எம். செளந்தரராஜன் அவர்கள் பாடிய  பாடல் ஒன்று நிறைக்கிறது. அனைவரும் பாடித்து/பாடி மகிழுங்கள்!

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------------
வேல் வேல் வெற்றிவேல் ... வேல் வேல் ஞான வேல்
வேல் வேல் வெற்றிவேல் ... வேல் வேல் சக்தி வேல்

ஊரப்பா பழநியப்பா கந்தப்பா
அங்கு பக்தர் கூட்டம் பெருகுதப்பா வேலப்பா
(ஊரப்பா ... )

உன் பேரப்பா பழநியப்பா ... காவடிகள் கூடுதப்பா
பாரப்பா பழநியப்பா ... கண்திறந்து பாருமப்பா
ஆண்டியாய் வந்தவா ... ஆறுமுக வேலவா 

வேல் வேல் வெற்றிவேல் ... வேல் வேல் ஞான வேல்
வேல் வேல் வெற்றிவேல் ... வேல் வேல் சக்தி வேல்

வேல் வேல் வெற்றிவேல் ... வேல் வேல் ஞான வேல்
வேல் வேல் வீரவேல் ... வெற்றி வேல் சக்தி வேல்

பங்குனி உத்திரக் காவடிகள் ஆடியே கூடுதப்பா
பொங்கிவரும் பாலுடன் உன் சேவடி சேருதப்பா 

பழநிமலை சன்னிதியில் தங்கத் தேரய்யா - உன்னைப் 
பாடி வரும் பக்தருக்கு வினைகள் தீருதய்யா
(ஊரப்பா ... )

கந்தனுக்கு அரோகரா ... வேலனுக்கு அரோகரா 

வேல் வேல் வெற்றிவேல் ... வேல் வேல் ஞான வேல்
வேல் வேல் வீரவேல் ... வேல் வேல் சக்தி வேல்
வெற்றிவேல் ... வீரவேல்

பால் காவடி பன்னீர்க் காவடி புஷ்பக் காவடி
சேவற் காவடி மச்சக் காவடி வேல் காவடி
முருகனுக்கு ... அரோகரா

தாங்கிவரும் அடியார்கள் ஆயிரம் கோடியப்பா
சேர்ந்து வரும் காவடிகள் சன்னிதி சேருதப்பா 

வேண்டிவரும் அன்பர்களின் குறைகள் நீங்குமே 
நம்மை நாடிவரும் துன்பங்கள் வேலும் தாங்குமே
வடிவேலும் தாங்குமே
(ஊரப்பா ... )

கந்தனுக்கு அரோகரா ... வேலனுக்கு அரோகரா 

நவலோக மாமணியே சிவனாரின் கண்மணியே
அவனியும் போற்றுதடா ஆதி சக்தி மைந்தன் உனை

பாலும் தேனும் பஞ்சாமிர்தம் குடம் குடமாய் கோயிலில்
நாளும் இங்கே வழியுதடா உந்தன் தங்க மேனியில் 

என்றும் உந்தன் சன்னிதியில் கோடி சரண தோஷமே
அல்லல் நீங்குதே ... முருகா ஆசை பெருகுதே 

கந்தனுக்கு அரோகரா ... வேலனுக்கு அரோகரா 

வேல் வேல் வெற்றிவேல் ... வேல் வேல் ஞான வேல்
வேல் வேல் வீரவேல் ... வேல் வேல் சக்தி வேல் (2)

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 

பாடலைப் பாடியவர்: 'பத்மஸ்ரீ' டி. எம். செளந்தரராஜன் 
---------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

25.12.14

மனித ஆற்றலால் அறிய முடியாதது எது?


மனித ஆற்றலால் அறிய முடியாதது எது?

சில விஷயங்கள் மனித ஆற்றலுக்கு மேலானது. மனித ஆற்றலால் அறிய முடியாதது, அதை நாம் இறை சக்தி அல்லது இறையருள்  என்கிறோம்.

ஆங்கிலத்தில் ஒரே ஒரு சொல்தான் GOD - அத்துடன் முடிந்து விடும்.
தமிழில் பல சொற்கள் உள்ளன. இறைவன், ஆண்டவன், கடவுள், தெய்வம் என்ற சொற்கள் உள்ளன. எல்லாம் இறைவனையே குறிப்பதாகும். உங்களுக்கு சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக அச்சொற்களுக்கான பொருளை அகராதியில் இருந்து எடுத்துக் கீழே கொடுத்துள்ளேன்.

1. இறை (இறைவன்): கடவுள் -GOD

2. ஆண்டவன்: இறைவன் (Male God) உதாரணம். பழனியாண்டவர்

3. கடவுள்: உலகம், உயிர் ஆகியவற்றின் தோற்றத்திற்குக் காரணமாகக் கருதப்படும், மனித ஆற்றலால் அறிய முடியாதபடி இருப்பதாக நம்பப்படும் மேலான சக்தி - GOD

4. தெய்வம்: கடவுள், இறைவன் (God, Deity)
------------------------------------------------
இறையருள் இருந்தால் என்ன நடக்கும் என்பதைக் குறிப்பிட்டுக் காட்டும் காணொளி ஒன்றை உங்களுக்கு அறியத் தந்துள்ளேன்.
அத்துடன் வாழ்க்கை என்பது என்ன என்பதை அற்புதமாக விளக்கும் அன்பர் ஒருவர் கலந்துகொண்ட நிகழ்ச்சியொன்றின் காணொளியையும் கொடுத்துள்ளேன்.பார்த்து மகிழுங்கள்!

அன்புடன்
வாத்தியார்
==============================================================
1.God is Great

2 What is Life?

Our sincere thanks to the persons who uploaded these videos 
in the net
======================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

24.12.14

நகைச்சுவை: உங்களைச் சிரிக்க வைக்காமல் விடப் போவதில்லை!


நகைச்சுவை: உங்களைச் சிரிக்க வைக்காமல் விடப் போவதில்லை!

1.
”உன் மாமனாருக்கு அனுமார் மேல ரொம்ப பக்தியாமே! அனுமாருக்கு தன் சொத்தை எல்லாம் எழுதி வச்சுட்டாராமே!”

”இது என்ன பெரிய விஷயம்? உன் மாமனார்கூடத்தான் அனுமாருக்குத் தன் பொண்ணையே கல்யாணம் பண்ணிக் கொடுத்திருக்கிறார். அவர்தான் பெரிய பக்திமான்!”
---------------------------------
2.
”ஏன்னா, புடவைக்குப் போடறுதுக்காக கஞ்சி காய்ச்சி வச்சிருந்தேனே - எங்கே அது?”

”எனக்கு சாதம்தான் பிசைஞ்சு வச்சிருக்கேன்னு நினைச்சு சாப்பிட்டுட்டேனே!”
----------------------------------
3.
”பையனுக்கு என்ன சார் பேர் வெச்சிருக்கீங்க..?”

”லோராண்டி – னு வச்சிருக்கேன்…!”

”என்னய்யா பேர் இது, கேள்விப்பட்டதே இல்லையே..?”

”என்ன இப்படிச் சொல்லிட்டீங்க, சித்தர் பாடல்களில் இடம் பெற்ற பேர் சார் இது…!”

”என்ன பாடல் அது?”

”நந்தவனத்தி லோராண்டி..!”
----------------------------------------------
4
கணவன்: ”கசப்பான மருந்து கூட உன் கையால கொடுக்கறப்போ ஸ்வீட்டா இருக்கு செல்லம்…!”

மனைவி: ”கர்மம்… கர்மம்… நான் உண்மையிலேயே ஸ்வீட்தான் கொடுத்தேன்…இன்னைக்கு எனக்கு பர்த்டே..!”

கணவன்: ”............!!!!
----------------------------------------------------------
5
”மன்னா,நமது நாட்டு ராணுவ ரகசியத்தை ஒற்றன் எதிரி நாட்டு மன்னனிடம் சொல்லி விட்டான்".

"அமைச்சரே,நம்மிடம் தான் ராணுவமே கிடையாதே".

"அதைதான் சொல்லி விட்டான் மன்னா".
----------------------------------------------------
6
ரெண்டு மணிக்கு வீட்டில் நுழைந்த திருடனை அடித்து உதைத்துப் படுக்க வைத்துவிட்டாள் மனைவி. திருடனும் வாங்கிய அடியில் மயங்கிக் கிடந்தான்.

இன்ஸ்பெக்டர் : வெரிகுட்மா ..எப்படி உங்களால முடிஞ்சது..?”

மனைவியின் பதில்: “லேட்டா வந்த எம்புருசன்னு நெனச்சு சாத்திப் புட்டேனுங்க..”
------------------------------------------------------
7
”தினமும் ஆறு லிட்டர் தண்ணி குடிக்கணும்..!”

”அதெப்பிடி டாக்டர்? முன்னூறு மில்லி அடிக்கும்போதே தள்ளாடுதே..?”
------------------------------------------------------
8
ஒரு சாமியாரின் உண்மைக்கதை.

சிஷ்யன் : “குருவே! நீங்கள் சொன்னபடி ஐம்புலன்களையும் அடக்கப் பழகி விட்டேன். ஆனால், என் மனைவியை மட்டும் அடக்க முடியவில்லையே ...?”

குரு : “சிஷ்யா! அது முடியாமல்தானே நானே சாமியார் ஆனேன்?

( இப்படித்தான் சாமியார்கள் உருவாகிறார்களாம்..! )
---------------------------------------
இந்த எட்டில் எது மிகவும் நன்றாக உள்ளது?
(தொடரும்)

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

23.12.14

Quiz.no.71 Answer: எல்லாம் வாங்கி வந்த வரம் - வேறேன்ன?

Quiz.no.71 Answer: எல்லாம் வாங்கி வந்த வரம் - வேறேன்ன?

புதிர் எண் 71ற்கான விடை

23.12.2014
--------------------------------------
நேற்றையப் பதிவில், அன்பர் ஒருவரின் ஜாதகத்தைக் கொடுத்து
2 கேள்விகளைக் கேட்டிருந்தேன்.

கேட்கப்பெற்றிருந்த கேள்விகள்:

ஜாதகர் அதி புத்திசாலி. ஆனால் பேச வரவில்லை. அதாவது பிறந்ததில் இருந்தே பேச்சு வரவில்லை.ஜாதகப்படி அவை இரண்டிற்கும்
என்ன காரணம்?

சரியான பதில்:

இரண்டாம் வீடுதான் வாக்கு ஸ்தானம் (House of Speech) இந்த ஜாதகத்திற்கு செவ்வாய் யோககாரகன் என்றாலும் அவர் இயற்கையில் தீய கிரகம்.
(Mars though yogakaraka is a natural malefic) இரண்டாம் வீட்டில் அவருடைய
அமர்வு விரும்பத்தக்கதல்ல. அத்துடன் எட்டில் அமர்ந்த எட்டாம்
வீட்டுக்காரன் சனியின் பார்வையும் இரண்டாம் வீட்டின் மேலும், அங்கே அமர்ந்திருக்கும் செவ்வாயின் மேலும் விழுந்து கடுமையான பாதிப்பை உண்டாக்கின.அத்துடன் இரண்டாம் வீட்டு அதிபதி சூரியன்
லக்கினத்திற்குப் பன்னிரெண்டில். உடன் பன்னிரெண்டாம் வீட்டுக்காரன் புதனுடன் சேர்க்கை.

அத்துடன் சந்திரன் அமர்ந்திருக்கும் வீட்டிற்கு இரண்டாம் வீட்டில் கேது. (அதையும் பார்க்க வேண்டும் சாமிகளா)

இவைகள் எல்லாம் சேர்ந்து ஜாதகரை ஊமையாக்கிவிட்டன, பேச
முடியாமல் செய்து விட்டன.

சூரியன், புதன் கூட்டணி, 5ஆம் வீட்டு அதிபதி செவ்வாயின் பார்வை
ஐந்தாம் வீட்டின் மேல் (House of keen intelligence)  மனகாரகன் சந்திரனுடன், சுக்கிரனின் சேர்க்கை, கடக லக்கினதிபதி சந்திரன் முக்கிய கேந்திர ஸ்தானமான 10ம் வீட்டில் சுப கிரகமான சுக்கிரனுடன் அமர்ந்தது.புதன்
ஆட்சி பலத்துடன் இருப்பது போன்ற காரணங்களால் ஜாதகன் புத்திசாலி..

என்ன புத்திசாலித்தனம் இருந்து என்ன பயன்? பேச வரவில்லை என்னும் போது, புத்திசாலித்தனத்தை எங்கே காட்டுவது? எல்லாம் வாங்கி வந்த வரம். வேறென்ன சொல்ல முடியும்.

இன்றையப் புதிரில் மொத்தம் 21 பேர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள். மேலே நான் குறிப்பிட்டுள்ள பலன்களை அப்படியே எழுதுவது என்பது சாத்தியமாகாது. ஆனால் ஒட்டிய பதிலை எழுதியுள்ளவர்கள் (மொத்தம்
21 பேர்கள்) அனைவரையும் தெரிவு செய்து கீழே கொடுத்துள்ளேன்.
அவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்!!! ஜாதகனுக்கு பேசவராது என்பதற்கான காரணம்தான் முக்கியமான கேள்வி. அதற்கு மட்டும் பதிலை எழுதியவர்களையும் தெரிவில் சேர்த்துள்ளேன். அவர்களுக்கும் எனது பாராட்டுக்கள்!

வாழ்க வளமுடன்
அன்புடன்,
வாத்தியார்
======================================================================
1
/////Blogger slmsanuma said...
    The owner of the second house (Suryan) is associated with Budhan and in 12 house. This is the reason for the dumpness of the Native. Since the owner of the second house associated with the Budhan and has the place in 6,8 or 12 will cause dumpness of the native. Budhan and saturn is in their own house and saturn is in 8th house. These are the reason for the brilliance of the Native.
    Monday, December 22, 2014 7:49:00 AM/////
-----------------------------------------------
2
/////Blogger kmr.krishnan said...
    1.இரண்டாம் வீட்டு அதிபதி(வாக்கு ஸ்தானதிபதி) சூரியன் லக்கினத்திற்கு 12ல் மறைந்தது.2. இரண்டாம் வீட்டில் யோககாரகன் செவ்வாய் அமர்ந்தாலும், பகைவனான சனி தன் ஆட்சிஸ்தானத்திலிருந்து இரண்டைப் பார்த்தது.3.காது சம்பந்தமுடைய மூன்றாம் இடத்தில் மாந்தி இருந்து குருவின் ஆற்றலை குறைத்தது.ஆகவே பிறவியிலேயே கேட்கும் திறன் குறைந்ததால் பேச்சு வரவில்லை 4.ஐந்தாம் இடத்திற்கு சனி, செவ்வாய் பார்வை.அங்கே ராகுவும் நின்ற‌து.
    இவையெல்லாம் பேச்சுத்திறனை இல்லாமல் ஆக்கியது.
    ஆட்சி பெற்ற புதன் அறிவாளியாக்கியது.
    Monday, December 22, 2014 8:40:00 AM/////
------------------------------------------------
3
/////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...
    Quiz No.71 க்கான பதில்.
    1. கடக லக்னம். 3,12க்கு அதிபதி புதன் 12ல் சொந்த வீட்டில், உடன் இரண்டிற்கு அதிபதி சூரியனுடன் கூட்டு. ஜாதகர் அதி புத்திசாலி.
    புத்திக்கு புதன் தானே அய்யா சொல்லிக்கொடுத்தீர்கள்!!!
    2. வாக்கு ஸ்தானமான சிம்ம ராசியதிபதி சூரியன் 12ல் மறைந்து விட்டார். அத்துடன் பேச்சு திறனை கொடுக்க வேண்டிய புதன் 12ல் மறைந்து விட்டார். அதனால் பேச்சு திறன் வரவே இல்லை.
    அன்புள்ள மாணவன்,
    பா. லக்ஷ்மி நாராயணன்
    தூத்துக்குடி
    Monday, December 22, 2014 10:47:00 AM/////
------------------------------------------------
4
/////Blogger Narayanan V said...
    இரண்டாம் அதிபன் (சூரியனும்) புதனும் 12ல் (6,8,12 எங்கு இருந்தாலும்) ஊமையாக்கிவிடும். எல்லாம் தங்கள் பாடம் தானே சார்
    V.நாராயணன், புதுச்சேரி
    Monday, December 22, 2014 11:32:00 AM//////
-----------------------------------------------
5
/////Blogger hamaragana said...
    அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
    புதிர் என் 71.
    கொடுக்க பட்ட ஜாதகம் கடக்க லக்னம்
    1..லக்னத்திற்கு 2ல் செவ்வாய் ..2மிடத்து அதிபதி சூரியன் கெட்டு போய்ட்டான் ..
    2..12ம் இடமாக இருந்தாலும் சூரியனுடன் ஆட்சி பெற்ற புதன் .ஆதலால் புத ஆதித்யா யோகம் ஆகவே நுண்ணறிவு.
    3.. 5 மிடத்தில் ராஹு பூர்வ புண்ணியம் இல்லை. !!!
    4. ஆட்சி பெற்ற .சனி 7ம் மிடம்இருந்து 2 மிடத்தை வாக்கு ஸ்தானத்தை பார்கிறான் செவ்வாய் தன வீடான விருசிகத்தை 5ம் வீ ட்டை 4ம் பார்வை .பார்கிறான் 5ல் ராஹு ..
    ஆதலால் ஜாதகருக்கு நுண்ணறிவு இருந்தாலும் வாக்கு ஸ்தானம் சரி இல்லாத காரணத்தால் பேச்சு இல்லை.
    Monday, December 22, 2014 11:59:00 AM//////
------------------------------------------------
6
/////Blogger Ravichandran said...
    Ayya,
    Below are the reasons for not getting speech.
    1. His Second house owner(Vakkusthanam) owner sun is sitting in 12th house(Virayasthanam) .
    2. Chevvai is sitting in 2nd house and he is charam of Magha Nakshtra(Ketu is owner for this Nakshtra). Ketu is neecham in this horoscope.
    Below are the reasons for getting good intelligence,
    1. Guru is aspecting his own 9th house.
    2. Rahu is in Uccham position at 5th house. So that he can remember lot.
    3. Sun and Bhudhan together. This Bhudha Aditya gives good intelligence.
    Your Student,
    Trichy Ravi
    Monday, December 22, 2014 12:31:00 PM//////
-------------------------------------------------
7
//////Blogger Hari Haran said...
    dear subbiah sir,
    1) 2nd house lord is in 12th house along with 12th house lord. may be 2nd house lord must be ashtangam.
    2) eventhough kethu in 11th house, he was debilerated neesam
    3) mars is a 5th house lord placed in 2nd house and he get aspected by 8th house lord sani. both mars and saturn pays mutual aspection with each other.
    BY ALL THESE FINAL CONCLUSION IS NATIVE WILL HAVE ENRICHED WISDOM THROUGH VIMALA YOGAM (12TH LORD IS IN 12TH PLACE), BUDHA-ADITIYA YOGAM(SUN AND MERCURY WERE CO-JUNCTION)
    NATIVE WILL GET ILL IN ANY OF HIS/HER FACIAL PART(8TH LORD AND 5TH LORD WERE MUTUAL ASPECTION )
    AND 2ND LORD IS IN WEAK POSITION.
    ADDITIONAL THING IS NATIVE MUST BE BENEFICIAL THROUGH OTHER WEALTH.
    Some what i have tired through your lessons....
    Monday, December 22, 2014 1:44:00 PM//////
----------------------------------------------
8
//////Blogger Arul Murugan. S said...
    First, Mars & Saturn(8'th lord) are related to 2'nd house, by mutual aspect. i.e.. Mars in 2'nd house and aspected by saturn. Secondly, 2'nd house lord sun is in inauspicious 12'th house and the karaka for speech(mercury) is also hidden in 12'th house.
    Monday, December 22, 2014 1:52:00 PM//////
-----------------------------------------------
9
//////Blogger Sakthivel K said...
    வணக்கம் சார்........
    1.லக்னாதிபதி பாதகாதிபதியுடன் சேர்க்கை!
    2. 2ஆம் அதிபதி விரையத்தில் வீழ்ந்தான்!
    3. 2ல் செவ்வாய். அட்சிபெட்ற சனியின்
    நெரடி பார்வையில் கிளீன்போல்டு ஆனான்!!
    இதைவைத்து ஜாதகன் பேசமாட்டான்
    என்றூ சொல்லமுடியாது....
    பூர்வஜென்ம சாபம்,தோசம், பாவம்
    இதில் ஏதோஒன்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம்.....
    Monday, December 22, 2014 3:21:00 PM/////
----------------------------------------------
10
//////Blogger ponnusamy gowda said...
    அய்யா வணக்கம்.”பேச மாட்டாயா ராசா” விற்கு ஒரு விளக்கம்.
    1)லக்னம் கடகம்.லக்னம் பாப கர்த்தாரி யோகத்தில். ஜாதகருக்கு ஏதேனும் ஒரு குறை இருந்தாக வேண்டும்.
    2)லக்னாதிபதி தேய்பிறை சந்திரன், எட்டாம் அதிபதி வக்கிரச்சனியின் 3ம் பார்வை பெற்றுள்ளார்.
    3)லக்னாதிபதிக்கு வீடு கொடுத்த பத்தாம் அதிபதி செவ்வாய் 2ல் அமர்ந்து எட்டாமதிபதி வக்கிரச்சனியின் 7ம் பார்வை பெறுவதால் கெட்டுவிட்டார்.
    4)இரண்டாமாதி சூரியன் 12ல் அமர்ந்து கெட்டுவிட்டார்.
    ஆக லக்னாதிபதியும் வாக்குஸ்தானாதிபதியும் கெட்டதால் ஜாதகர் பேசும் திறன் இழந்தார்.
    அடுத்து,
    1)லக்னாதிபதி சந்திரன் அமர்ந்த நட்சத்திரம் அஸ்வினி,ஞானகாரகனின் சாரம் பெறுவதாலும்,நட்சத்திராதிபதி கேது லக்கினாதிபதிக்கு 2ல் அமர்ந்து, 5ம் இடத்தை தன் பார்வையிலும் வைத்துள்ளார்.
    2)5ம் ஆதி செவ்வாய் 2ம் இடத்தில்,ஞானகாரகன் கேதுவின் மகம் நட்சத்திரத்தில்.
    3)5ல் அமர்ந்த ராகு உச்சம் பெற்று, புத்திகாரகன் புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தின் சாரம் பெற்றுள்ளார்.
    4)சிறப்பு என்னவெனில், 2ம்மாதி சூரியன் 5ம் ஆதி செவ்வாயின் மிருகசீரிடம் நட்சத்திர சாரம் பெற்று 12மிடத்தில்,ஆட்சி பெற்ற புதனுடன் கூட்டணி.
    மொத்தத்தில், 2மிடம்,அதன் அதிபதி கெட்டதால் பேச்சு போச்சு.5மிடம்,அதன் அதிபதியும்,காரகனும் வலுத்ததால் அதிபுத்திசாலித்தனம் வந்தமைந்தது.
    நன்றியுடன்,
    -பொன்னுசாமி.
    Monday, December 22, 2014 4:25:00 PM/////
-----------------------------------------------
11
/////Blogger Chandrasekharan said...
    மதிப்பிற்குரிய ஐயா வணக்கம்,
    சிம்ம ராசி வரண்ட ராசி. வரண்ட ராசி 2ம் பாவமாக வந்து, இரணடாம் அதிபதி சூரியன் 12 இல் மறைவு. 2ம் வீட்டிற்கு சனி (அஷ்டமாதிபதி) பார்வை. லக்னாதிபதியையும் சனி 3ம் பார்வையாக பார்கிறார். 2ம் வீட்டிற்கு சுபரின் பார்வை இல்லை அதனல் பேச்சு வராமல் போனது.
    5ல் உச்சம் பெற்ற ராகு, 5ம் அதிபதி செவ்வாய் 4ம் பார்வையாக தன் சொந்த வீட்டை பார்கிறார் (5ம் அதிபதி 5ம் வீட்டை பார்பதால் நுன்னறிவு மிகுதியக இருக்கும்), புதன் ஆட்சி பெற்று சூரியனுடன் இனைவு அதனல் அவருடைய 5ம் பாவம் பலம் பெற்று அதி புத்திசாலி ஆனார்.
    நன்றி.
    Monday, December 22, 2014 4:49:00 PM///////
------------------------------------------------
12
//////Blogger Palani Shanmugam said...
    மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,
    கடக லக்ன ஜாதகரான இவருக்கு, 2ம் இடமாகிய வாக்கு ஸ்தான அதிபதி சூரியன், புதனுடன் சேர்ந்து மறைவு ஸ்தானமான 12ல் அமர்ந்து விட்டதால் ஜாதகருக்கு பேச்சு வரவில்லை. ஆனால் சூரியனும் புதனும் ஒன்றாக சேர்ந்து நிபுண யோகத்தைக் கொடுப்பதால் ஜாதகர் அதி புத்திசாலி.
    Monday, December 22, 2014 5:38:00 PM//////
------------------------------------------------
13
//////Blogger ravichandran said...
    Respected Sir,
    My answer for our Quiz No. 71:
    I)Reason for Dumbness:
    i) Karaga for hearing and speech Mercury is in twelfth place along with second house lord from lagna.
    ii) Second house,Mars and 5th house aspected by Saturn from 8th place. It's worst. As well as Mars aspects Saturn.
    iii) There is no good aspect to Second house and Mercury.
    II) Reasons for Intelligent:
    i) Lagna lord along with forth lord Venus sitting in tenth house and aspecting 4th house. It's good sign.
    ii) Sun and Mercury jointly with Gemini house. It has given intelligent.
    iii) Fifth house lord Mars sitting in second house and aspects it's own house as it's fourth special aspect.
    iv) Jupiter is aspects 9th house and sitting in 3rd house.
    Hence, He/she is brilliant.
    With kind regards,
    Ravichandran M.
    Monday, December 22, 2014 6:05:00 PM//////
------------------------------------------------
14
/////Blogger Dallas Kannan said...
    Respected Sir
    I am not sure if it is a trick question or you want to test us if we remember the rules.
    Reasons for his inteligence:
    1. Budathya yogam, even if it is in 12th place.
    2. 5th lord Mars in kenthram from 5th place and in friends house.
    3. Butha is in own house
    4. Rahu is in 5th house, but he is uccham.
    5. Laknathipathi is in kentram, friends place and with subha sukran.
    Reason for his inablity to talk:
    1. 2nd lord is in 12th place
    2. Mars is in 2nd place
    3. Sani also looks at 2nd place.
    4. No benific planets look at 2nd place.
    Monday, December 22, 2014 6:49:00 PM//////
-----------------------------------------------
15
/////Blogger sorna sekar said...
    3.rentil(2)sevvai(mars) sani(satun) parvaiyudan.
    Monday, December 22, 2014 7:54:00 PM//////
-----------------------------------------------
16
//////Blogger Chandrasekaran Suryanarayana said...
    Quiz no.71.
    15/6/1993 ஆம் ஆண்டு செவ்வாய் கிழமை காலை 8.20.40 மணிக்கு அஸ்வனி நட்சத்திரத்தில் கடக லக்கினத்தில் ஜாதகர் பிறந்தார். (சென்னை)
    லக்கினாதிபதி சந்திரன் (7பரல்) கேந்திரத்தில் 10ம் வீட்டில் சுக்கிரனுடன் (7 பரல்) கூட்டு. மிகவும் பலத்துடலன்.
    முதல் விதி: இரண்டாம் வீட்டு அதிபதியும்,புதனும் கூடி 8 அல்லது 12ல் இருந்தால் ஜாதகன் ஊமையாக இருப்பான்.
    2ம் வீடு வாக்கு ஸ்தானம். இந்த ஜாதகத்தில் 2ம் வீட்டு அதிபதி சூரியன் புதனுடன் 12ல் கூட்டு.
    மேலும் எந்த சுப கிரங்களின் பார்வையும் 12ம் வீட்டின் மீது இல்லை. சனியின் 7ம் பார்வை 2ம் வீட்டின் மீது இருப்பதும் ஒரு காரணம்.
    உப விதி: அஷ்டவர்க்கத்தில் சூரியன் 4 பரல், புதன் 3 பரல் இருப்பதால் பலவீனம் தெளிவாக தெரிகிறது. நாவாம்சத்தில் சூரியன் நீசம் அடைந்துள்ளார். நாவாம்சத்தில் புதன் பாபகர்த்தாரி தோஷம் (ஒரு பக்கம் கேது, மறு பக்கம் செவ்வாய் மாந்தி).
    ஜாதகர் அதி புத்திசாலி.
    முதல் விதி: 4ம் வீட்டு அதிபதி சுக்கிரன் (7 பரல்) பலமாக இருந்து, பலமான லக்கினாதிபதி சந்திரனுடன் 10ல் கூட்டு சேர்ந்துள்ளார்.
    பொதுவாக கடக ராசியில் பிறந்தவர்கள் புத்தி சாலிகள் என்று கூறுவார்கள்.
    ராசியிலும் நவாம்சத்திலும் சந்திரன் மேஷ ராசியில் உள்ளார். ஆகையினால் சந்திரன் வர்க்கோத்தம் அடைந்துள்ளார். வர்க்கோதம் அடைந்த கிரகம் முழுபலனை கொடுக்கும்.
    சுக்கிரன், சந்திரன் இருவரின் 7ம் பார்வை 4ம் வீட்டின் மீது இருப்பதால் புத்திசாலியாக இருப்பதற்க்கு காரணம்.
    5ம் வீடு நுண்ணறிவுக்கான வீடு. 5ம் வீட்டு அதிபதி செவ்வாய் நவாம்சத்தில் பலமான, வர்க்கோத்தமான லக்கினாதி சந்திரனுடன் கூட்டு. செவ்வாய் 5ம் வீட்டை தன்னுடைய 4ம் பார்வையால் வைத்துள்ளார்.
    உப விதி: அஷ்டவர்கத்தில் செவ்வாய் 5 பரல்கள்.
    சந்திரசேகரன் சூரியநாராயணன்.
    Monday, December 22, 2014 9:14:00 PM///////
------------------------------------------------
17
//////Blogger lrk said...
    ஐயா வணக்கம் .
    புதிர். 71க்கு பதில்கள் .
    2 க்கு அதிபதி சூரியன் 12 ல் ( மறைந்து ) உள்ளார் .
    அவர் புதனோடு சேர்ந்து உள்ளதால் பிறவி ஊமை யாக உள்ளார் .
    2 ம் இடத்தில் உள்ள செவ்வாயை சனி நேர் பார்வை .
    5 ம். இடத்தில் ராகு உச்சம் , அங்கே குரு 3ஆம் பார்வை - புத்திசாலி யாக உள்ளார் .
    4 ஆம் இடத்தை அதன் அதிபதி + சந்திரன் நேர் பார்வை யாக பார்ப்பது - நல்ல கல்வியை கொடுத்திருப்பார்
    புத்திகாரகன் புதன் ஆட்சி யில் உள்ளார் . புதாத்திய யோகம் உள்ளது .
    பாஸ்மார்க் வாங்கி இருக்கிறேனா ஐயா .
    நன்றி
    கண்ணன் .
    Monday, December 22, 2014 9:54:00 PM/////
-----------------------------------------------
18
/////Blogger selvam velusamy said...
    வணக்கம் குரு,
    பேச்சு வராமைக்கு காரணங்கள்.
    1. வாக்கு ஸ்தானாதிபதி சூரியனும் வாக்கு காரகன் புதனும் பன்னிரண்டாமிடத்தில் மறைவு.
    2. இரண்டாமிடத்தில் செவ்வாய் மற்றும் அட்டமாதிபதி சனியின் பார்வை வேறு.
    புதிசாலிதனதிர்க்கான காரணங்கள்.
    1. புத ஆதித்ய யோகம்.
    2. நான்கமிடதிர்க்கு லக்னாதிபதி மற்றும் நான்கமிடத்து அதிபதி சுக்ரனின் பார்வை.
    3. 5மிடத்து அதிபதி செவ்வாய் லகினதிர்க்கு இரண்டில் அத்துடன் 5இல் உச்ச ராகு.
    4. ஒன்படாமிடதிர்ற்கு அந்த இடத்து அதிபதி குருவின் பார்வை.
    5. முயற்சி ஸ்தானத்தில் குரு மற்றும் மாந்தி.
    நன்றி
    செல்வம்
    Monday, December 22, 2014 10:12:00 PM/////
-----------------------------------------------
19
/////Blogger MS RAJU said...
    வணக்கம்.
    1 ஜாதகர் கேது பகவானின் நக்ஷதிரமாகிய அஸ்வினி நக்ஷதிரத்தில் பிறந்த்திருக்கிறார். ஞான காரகனாகிய கேது பகவான் இலக்னத்திற்கு 11ல் உள்ளார். இது நல்ல அமைப்பு இதனால் மிகுந்த ஞானம் கிடைக்க பெற்று இருக்கும். மேலும் புதன் ஆட்சி மற்றும் சூரியனுடன் இனைந்து புத ஆதித்ய யோகம் உள்ளதால் சிரந்த புத்திசாலி ஜாதகர்.
    2. வாக்கு வன்மை பெற புதனின் நிலை முக்கியம் புதன் ஆட்சி பெற்றாலும் இலக்னத்திற்கு 12ல் மறைந்தார். வாக்கு ஸ்தானத்தில் செவ்வாய் அவர் மீது சனியின் பார்வை எனவே பேச இயலாத நிலை.
    தங்கள் மாணவன்
    செல்வராஜ்
    Monday, December 22, 2014 10:15:00 PM////
-----------------------------------------------
20
//////Blogger Prasanna said...
    Dear Sir,
    Namasthey,
    The 2nd house and sign Taurus (the 2nd house of natural zodiac) is connected with organs of speech (Larynx and Vocal Cords etc). The planet Mercury is karaka of expression and communication. Any affliction to the planets Jupiter and Mercury, 2nd and 3rd house of the nativity and Gemini and Taurus cause the problem of hearing and speech. Mercury governs the nervous system and nerves. Damage to speech and hearing is due to sensory loss or afflicted nerves responsible for these functions. And finally, Lagna and Lagna-lord should be associated with these afflictions.( its well known fact that dumb person will be always deaf too )
    Given nativity mercury is co joined with second lord surya and placed in 12 th house (which is Gemini.) Though mercury is in his own house he being 3 rd and 12TH lord placed in 12 th house made him dumb fully (Piravi Umai) Sign Taurus is afflicted because of aspect of Rahu. Zodiac second house TAURUS IS AFFLICTED DUE TO KETHU 'S SINGLE PLACEMENT too
    Mars or Saturn in watery sign, Cancer, Scorpio and Pisces, also known as Mute sign, the native will suffer from impediments in speech.Here Mars is placed in second house which is also an affliction to second house. Lagna it self is watery sign cancer.
    Mercury depicts Intelligence. People with a strong placement of Mercury in their Birth Chart are business minded, have better grasping power, can think logically, good in math, are agile and alert. It also represents speech and other business related to it.
    Given nativity is intelligent because mercury is in his own house placed with surya, which gives him Budh Adhithya yoga . From Rasi too mercury is 3 rd lord placed in 3 rd house which is his own sign. So there is no doubt he must be intelligent.
    Thanks and regards,
    Prasanna.
    Dubai.
    Monday, December 22, 2014 11:54:00 PM/////
---------------------------------------------------
21
/////Blogger praba karan said...
    சூரியன் பன்னிரெண்டாமிடத்தில் இருந்தால், உடல் உறுப்புக்களில் ஒன்று ஊனமாக அல்லது சேதமாக இருக்கும் அது தெரியும்படியும் இருக்கும் அல்லது தெரியாதவிதமாக உடல் உள்ளேயும் இருக்கலாம். இரண்டாம் அதிபனும், புதனும் கூடி எட்டிலோ அல்லது பன்னி ரெண்டிலோ இருந்தாலும் ஜாதகன் ஊமையகிவிடுவான். 2ஆம் வீட்டின் மீது, எதையும் குறைத்துக் கொடுக்கும் எட்டாமித்தில் இருக்கும் சனியின் 7ஆம் பார்வை. இவையெல்லாம் ஜாதகனை ஊமையாக்கிவிட்டது. சூரியமும், புதனும் சேர்ந்திருப்பது ஆதித்த யோகம். இந்த யோகம் அதி புத்திசாலித்தனத்தைக் கொடுத்தாலும் பன்னிரெண்டாமிடத்தில் அமைந்து ஜாதகனை ஊமையாக்கிவிட்டது.
    Tuesday, December 23, 2014 12:46:00 AM/////
===============================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

22.12.14

Astrology: quiz number.71 : பேச மாட்டாயா ராசா?

Astrology: quiz number.71 : பேச மாட்டாயா ராசா?

Quiz No.71

புதிர் போட்டி எண்.71 விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று
யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

22.12.2014

Write your answer to the queries: கேள்விகளுக்குரிய உங்கள் பதிலை எழுதுங்கள்!

இன்றைப் பாடத்திற்கு இரண்டு கேள்விகள். அந்தக் கேள்விகளுக்கு மட்டும் பதில் எழுதுங்கள் போதும்!
------------------------------------
இன்றைய கேள்விகள்:

கீழே உள்ள ஜாதகம் ஒரு அன்பரின் ஜாதகம்.

ஜாதகர் அதி புத்திசாலி. ஆனால் பேச வரவில்லை. அதாவது பிறந்ததில் இருந்தே பேச்சு வரவில்லை.

கேள்வி:
ஜாதகப்படி அவை இரண்டிற்கும் என்ன காரணம்?

திருமணத்தை வைத்தே கேள்விகள் எதற்கு? என்று மாணவர் ஒருவர் கேட்டுக்கொண்டே இருந்தார். அவருக்காக இன்றும் அலசலை வேறு பக்கம் திருப்பியிருக்கிறேன்.

அலசலை விரிவாகவும் (எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பை விரிவாகவும்) விடையைச் சுருக்கமாகவும் எழுதுங்கள்! விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

ஆணித்தரமாக எழுதினால்தான் பாஸ்மார்க்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!
-------------------------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்
===================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

19.12.14

மலை இருக்கும் இடமெல்லாம் குடி கொண்டவன் அவன்!

குன்றக்குடி முருகன் கோயில்
மலை இருக்கும் இடமெல்லாம் குடி கொண்டவன் அவன்!

பக்தி மலர்

இன்றைய பக்தி மலரை சூலமங்கலம் சகோதரிகள் பாடிய பக்திப் பாடல் ஒன்று நிறைவு செய்கிறது. படித்து மகிழுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்
-------------------------------------------------
ஒருமுகமாய் நின்று ... பலமுகம் பார்த்தாலும்
திருமுகம் போலாகுமா ... முருகா உன்
அறுமுகம் போலாகுமா
(ஒருமுகமாய் ... )

இனிக்கும் மதுவை வைத்த விழிகளிலே -  அன்பு ... 
இன்பமெல்லாம் உதிக்கும் கருணையிலே
இனிக்கும் மதுவை வைத்த விழிகளிலே -  அன்பு ... 
இன்பமெல்லாம் உதிக்கும் கருணையிலே

பனிக்குக் கதிரவன்போல் இருக்கும் கந்தனே 
பாதம் தொட்டால் மணக்கும்
படைப்பு அதில் சிரிக்கும் 
திருமுகம் போலாகுமா ... முருகா  - உன்
அறுமுகம் போலாகுமா

கருவாகி உருவாகி ... காக்கும் அருளாகி
பொதுவாகி நலமாகி ... போற்றும் பொருளாகி 
மலைகண்ட இடமெல்லாம் குடிகொண்ட வேலவனே 
வணக்கம் என்றால் இரங்கி
வரங்கொடுக்கும் சீலனே 

உன் திருமுகம் போலாகுமா ... முருகா  - உன்
அறுமுகம் போலாகுமா
(ஒருமுகமாய் ... ).

பாடியவர்கள் - 'சூலமங்கலம்' சகோதரிகள்
=======================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

18.12.14

வாட்ஸ்அப் வைத்தியம்!


வாட்ஸ்அப் வைத்தியம்!

வாட்ஸ் அப், பேஃஸ்புக், டிவிட்டர், வலைப்பதிவுகள் (Blogs) எல்லாம் நம் வாழ்க்கையில் நுழைந்து, நம்மைப் புரட்டிப் போட்டு விட்டது. அத்துடன் நமது நேரம் மற்றும் ஆரோக்கியத்திற்கு வேட்டும் வைக்கின்றன.

மேலும் உட்கார்ந்தே அனைத்து வேலைகளையும் செய்கிறோம். அதனால் நாம் பலவிதமான உடல் பாதிப்புக்களுக்கு உள்ளாகின்றோம். அவ்விதமாக  ஏற்படும் உபாதைகளுக்கான எளிய மருத்துவக் குறிப்புக்களைக் கீழே கொடுத்துள்ளேன். படித்துப் பயன் பெறுங்கள். வீட்டிலுள்ள மளிகைப் பொருட்களையும் காய்,கனிகளையும் வைத்தே அந்த வைத்தியத்தை நீங்கள் செய்து கொள்ளலாம்

Over to Medical tips
------------------------------------------------------------
எளிய இயற்கை வைத்தியம் - 46 மருத்துவ குறிப்புகள்

நோய் வந்துவிட்டாலே உடனே மருத்துவரிடம் ஓடுவதை விட, வீட்டிலுள்ள பொருட்களை கொண்டே எளிதாக குணப்படுத்தலாம்.

1. நெஞ்சு சளி
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ  சளி குணமாகும்.

2. தலைவலி
ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

3. தொண்டை கரகரப்பு
சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில்
கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

4. தொடர் விக்கல்
நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர்
விக்கல் தீரும்.

5. அஜீரணம்
ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க ஜீரணம் சரியாகும். அல்லது கறிவேப்பிலை, சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும். அல்லது வெற்றிலை,4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜுரணக்கோளாறு சரியாகும். சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக் குடித்து
வர நன்கு ஜுரணமாவதோடு,உடல் குளிர்ச்சியடையும்.அல்லது 1தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன்,சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி  அதிகரிக்கும்.

6. வாயு தொல்லை
வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

7. வயிற்று வலி
வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

8. சரும நோய்
கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.

9. மூக்கடைப்பு
ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

10. கண் எரிச்சல், உடல் சூடு
வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.

11. வயிற்றுக் கடுப்பு
வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.

12. பற் கூச்சம்
புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும். அல்லது புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்.

13. வாய்ப் புண்
வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும். அல்லது கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும்.

14. தலைவலி
பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.

15. வயிற்றுப் பொருமல்
வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.

16. அஜீரணம்
ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க
வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும். அல்லது சிறிது சுக்குடன் கருப்பட்டி,4 மிளகு சேர்த்து நன்கு பொடித்து 2 வேளை சாப்பிட்டால் அஜுரணம் குணமாகி பசி ஏற்படும்.
ஒமம்,கருப்பட்டி இட்டு கசாயம் செய்து பருகினால் அஜுரணம் சரியாகும்.

17. இடுப்புவலி
சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.

18. வியர்வை நாற்றம்
படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும்.

19. உடம்புவலி 
சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து
பருகினால் உடம்புவலி தீரும்.

20. ஆறாத புண்
விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.

21. கண் நோய்கள்
பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண் தாமரை  மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.

22. மலச்சிக்கல்
தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம்.
தேவைப் பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், அல்லது இரவில் இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம். அதிகாலையில் இலேசான சுடுநீரில் அரை டீஸ்பூன் கடுக்காய்ப் பொடி சேர்த்துக் குடித்து விட்டால் பதினைந்து நிமிடங்களில் குடல் சுத்தமாகி விடும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்கச் சுவையாக இருக்கும்

23. கபம்
வால்மிளகின் தூளை சீசாவில் பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட கபம் நீங்கும்.

24. நினைவாற்றல்
வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.

25. சீதபேதி
சீதபேதி கடுமையாக உள்ளதா? ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும்.

26. ஏப்பம்
அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.

27.
பூச்சிக்கடிவலி
எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும்.

28. உடல் மெலிய
கொழு கொழுவென குண்டாக இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு (Horsegram) கொடுக்க வேண்டும்.

29. வயிற்றுப்புண்
பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.

30. வயிற்றுப் போக்கு
கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.

31. வேனல் கட்டி
வேனல் கட்டியாக இருந்தால் வலி அதிகமாக இருக்கும். அதற்குச் சிறிதளவு
சுண்ணாம்பும் சிறிது தேன் அல்லது வெல்லம் குழைத்தால் சூடு பறக்க ஒரு கலவையாக வரும் அதை அந்தக் கட்டியின் மீது போட்டு ஒரு வெற்றிலையை அதன் மீது ஒட்டி விடவும்.

32. வேர்க்குரு
தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம்.

33. உடல் தளர்ச்சி
முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.

34. நீர்ச்சுருக்கு/நீர்க்கடுப்பு
நீர்ச்சுருக்கு வெயில் காலத்தில் முக்கியமாக பெண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் வெயில் காலத்தில் அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நீர்ச்சுருக்கு ஏற்படும். தாராளமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். பார்லி அரிசி ஒரு கைப்பிடி எடுத்து 8 தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிப்பது நல்லது. இளநீரில் வெந்தயப் பொடி கலந்து குடிக்கலாம்.

35. தாய்ப்பால் சுரக்க
அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.

36. குழந்தை வெளுப்பாகப் பிறக்க
கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி இளநீர், தர்ப்பூசணி பழம் ஆகியவை சாப்பிட்டால் குழந்தை வெளுப்பாகப் பிறக்கும். அழகாகவும் இருக்கும்.

37. எரிச்சல் கொப்பளம்
நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.

38. பித்த நோய்கள்
கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.

39. கபக்கட்டு 
நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வர இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும்.

40. நெற்றிப்புண்
நெற்றியில் குங்குமம் வைத்துப் புண்ணாகி உள்ள இடத்தில் வில்வமரத்துக் கட்டையுடன் சந்தனமும் சேர்த்து இழைத்துத் தடவி வந்தால், புண் குணமாகி விடும்.

41. மூக்கடைப்பு
இரவில் மூக்கடைப்புக்கு மின் விசிறியின் நேர் கீழே படுக்க வேண்டாம். சற்று உயரமான தலையணை பயன்படுத்தவும்.மல்லாந்து படுக்கும் போது
மூக்கடைப்பு அதிகமாகும். பக்கவாட்டில் படுக்கவும். காலையில் பல் தேய்க்கும் போது நாக்கு வழித்து விட்டு மூன்று முறை மாறி மாறி மூக்கைச் சிந்தவும். சுவாசப் பாதையைச் சுத்தப் படுத்த நமது முன்னோர் காட்டிய வழி இது.

42. ஞாபக சக்தி
வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.

43. மாரடைப்பு
சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்

44. ரத்தக்கொதிப்புகொலஸ்ட்ரால் தலைசுற்றல்
வெள்ளைப் பூசனிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பூசணிக்காய் ரத்தக்கொதிப்புகொலஸ்ட்ரால் தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும்.

45. கை சுளுக்கு
கை சுளுக்கு உள்ளவர்கள் நீரில் மிளகுத் தூளும், கற்பூரத்தையும் போட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைத் துணியில் நனைத்துச் சுளுக்கு உள்ள இடத்தின் மீது போடுங்கள்.அல்லது டர்ப்பன்டைன் எண்ணெயைத் தடவினாலும் சுளுக்கு விட்டு விடும்.

46. நீரிழிவு
அருகம்புல் சாறை மோருடன் குடித்தால் நீரிழிவு குறையும்.

வாத்தி (யார்) எதற்காக இந்தத் தலைப்பு?

வாத்தியார்: பாட்டி வைத்தியம் என்றோ அல்லது இயற்கை வைத்தியம் என்றோ தலைப்பிட்டிருந்தால் எத்தனை பேர் உள்ளே வந்து படித்திருக்கபோகிறீர்கள்?
அதனால்தான் இந்தத் தலைப்பு. அத்துடன், இந்தக் குறிப்புக்கள் எனக்கு வாட்ஸ் அப்பில் வந்ததாகும். அதனால் தலைப்பு சரிதான் கண்மணிகளே!

ஜோதிடப் பாடங்கள் அடுத்த வாரம் வெளியாகும்!

அன்புடன்
வாத்தியார்
===================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!