மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

31.10.22

Lesson 68 Anabha Yogam


Star Lessons

Lesson no 68

Date 28-9-2022

New Lessons

பாடம் எண் 68 

யோகங்கள் 

பாடம்:அனபா யோகம் 

அனபா என்பதற்குத் தமிழில் அருஞ்சொற் பொருளைத் தேடாதீர்கள். அது வடமொழிச் சொல். அதை அப்படியே எடுத்துக்கொள்ளூங்கள் 

அனபா யோகம்:

சந்திரன் இருக்கும் வீட்டிலிருந்து அதற்குப் 12ஆம் வீட்டில் (அதாவது சந்திரனுக்குப் பின்புறம் உள்ள ராசியில்) செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ஆகிய ஐவரில் ஒருவர் இருந்தால் அது இந்த யோகம்

----------------------------------------------------------------

பொதுப்பலன்:

ஜாதகன் நல்ல தோற்றத்தை உடையவனாக இருப்பான். பெருந்தன்மை உடையவனாக இருப்பான். மென்மையானவனாக இருப்பான். சுயமரியாதை உடையவனாக இருப்பான். வயதான காலத்தில் ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொள்வான்

---------------------------------------------------------------

Anapha yoga: If there are planets in the twelfth from the moon, Anapha yoga is caused. A planet other than the Sun occupying

the 12th house from the Moon constitutes Anapha yoga. It indicates a person who is of good appearance, generous, polite,

self -respecting and moves into spiritual life at a later stage. One born in Anapha Yoga will be eloquent in speech, magnanimous,

virtuous, will enjoy food, drink, flowers, robes and females, will be famous, calm in disposition, happy, pleased and will possess a beautiful body.

-------------------------------------------------------------------

தனிப் பலன்கள் 

1.சந்திரனுக்குப் பன்னிரெண்டில் செவ்வாய் இருந்தால்: ஜாதகன் வலிமையானவன். அதிகாரமுள்ளவன். சுயகட்டுப்பாடு உள்ளவன். 

2.சந்திரனுக்குப் பன்னிரெண்டில் புதன் இருந்தால்: சிறந்த பேச்சாளனாக இருப்பான். கலைகளின் நுட்பம் தெரிந்தவனாக இருப்பான். 

3.சந்திரனுக்குப் பன்னிரெண்டில் குரு இருந்தால்: ஜாதகன் தீவிர சிந்தனை, செயல்களை உடையவனாக இருப்பான். தர்ம சிந்தனை மிக்கவனாக இருப்பான். தன்னுடைய செல்வத்தை அறவழிகளில் பயன்படுத்துவான். அதாவது பல தர்மங்களைச் செய்வான். 

4.சந்திரனுக்குப் பன்னிரெண்டில் சுக்கிரன் இருந்தால்: ஜாதகன் பெண்பித்தனாக இருப்பான். அதிகாரத்தில் இருப்பவர்களின் தொடர்பு உள்ளவனாக இருப்பான் 

5. சந்திரனுக்குப் பன்னிரெண்டில் சனி இருந்தால்: ஜாதகன் எதிலும் பிடிப்பு இல்லாதவனாக இருப்பான். பற்று இல்லாதவனாக இருப்பான். 

(ராகு அல்லது கேது இருந்தால்: ஜாதகன் இயற்கையான விஷயங்களுக்கு எதிராக நடப்பவனாக இருப்பான். அவற்றில் பற்று உள்ளவனாக இருப்பான்) 

எல்லாம் பொதுப்பலன்கள்! 

எல்லாக் கிரகங்களையும், தங்கள் ஜாதகத்துடன் சேர்த்துக் குழம்பு வைப்பதற்கு இதில் வேலை இல்லை. 

அதேபோல, நல்ல தோற்றம் என்று எழுதியுள்ளீர்களே? அரவிந்தசாமி மாதிரியா அல்லது அஜீத் மாதிரியா என்று யாரும் கேட்கவேண்டாம். அது அங்கே அமரும் கிரகத்தின் உச்சம், நீசம், பகை, பரல்கள் என்பது போன்ற மற்றவிஷயங்களுடன் சம்பந்தப்பட்டதாகும். 

அன்புடன்

வாத்தியார்

+++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

28.10.22

Lesson 67 Bhudha Aditya Yoga

Star Lessons

Lesson no 67

Date 27-9-2022

New Lessons

பாடம் எண் 67 

யோகங்கள்

புத ஆதித்ய யோகம்

புதனும், சூரியனும் ஒரு ராசியில் சேர்ந்திருந்தால் அது யோகத்தைக் கொடுக்கும். இந்த யோகத்தின் பெயர் புத ஆதித்ய யோகம்!

-------------------------------

பலன்:

ஜாதகன் அல்லது ஜாதகிக்கு இந்த யோகம் அதீத திறமைகளைக் கொடுக்கும். எடுத்த காரியங்களில் வெற்றியைக் கொடுக்கும்.

சமூகத்தில்/நட்பு வட்டாரங்களில் மதிப்பையும், மரியாதையையும் கொடுக்கும்.

This yoga will give lots of talent, success, honour and fame in society.

-------------------------------

எல்லோருக்கும் கொடுக்குமா? 

கொடுக்காது. 

ஏன் கொடுக்காது? 

சூரிய வட்டத்தில், சூரியனுக்கு மிக அருகில், தொடர்ந்து சூரியனைக் கும்மியடிக்கும் கிரகம் புதன். ஆகவே பலருடைய ஜாதகத்தில் இந்த யோகம் இருக்கும். 

Mercury is the first planet in the Solar System and is very close to the Sun. It cannot be more than one sign away from the Sun in the rasi chart. This yoga, therefore, appears in a lot of charts, but not all the charts can have the benefits of this yoga. 

யோகத்தைக் கொடுக்க வேண்டிய கிரகங்கள் வலுவாக இருந்தால் மட்டுமே யோகத்திற்கான பலன்கள் கிடைக்கும். 

ஜாதகத்தில் புதனும், சூரியனும், இருவரில் ஒருவர், 6, 8, 12ஆம் வீடுகளில் ஏதாவது ஒன்றிற்கு அதிபதி என்றால், யோக பலன்கள் இருக்காது. அதுபோல அவர்கள் அமரும் வீடு, அவர்களுக்குப் பகை வீடு அல்லது நீச வீடு என்றாலும் பலன் இருக்காது. அவர்களுடன், சனி, ராகு, கேது போன்ற வில்லன்களில் ஒருவர் கூட்டாக இருந்தாலும் யோக பலன் இருக்காது. 

The Sun and Mercury should be placed well in a chart and also should not themselves be badhakas for the chart

---------------------------------------------------------------------

சிம்மம் (சூரியனின் ஆட்சி வீடு)

மேஷம் (சூரியனின் உச்ச வீடு)

மிதுனம் (புதனின் ஆட்சி வீடு)

கன்னி (புதனின் ஆட்சி மற்றும் உச்ச வீடு)

ஆகிய 4 வீடுகளில் இந்த யோகம் அமைந்திருந்தால் அது பலனளிக்கும்!

மற்ற வீடுகளில்/ராசிகளில் இந்த யோகம் கலவையான (mixed result) பலனைக் கொடுக்கும். அதாவது தண்ணீர் ஊற்றிய பால்

------------------------------------------------------------------------

மேஷ லக்கினக்காரர்களுக்குப் புதன் 3 மற்றும் 6ஆம் வீட்டிற்கு அதிபதி. அந்த லக்கினக்காரர்களுக்கு இந்த யோகம் சொல்லும்படியாகப் பலனளிக்காது 

ரிஷப, சிம்ம, துலா மற்றும் மகர லக்கினக்காரர்களுக்கு, இந்த யோகம் இருந்தால் பலன் கிடைக்கும். தனுசு லக்கினக்காரர்களுக்கும் பலன் கிடைக்கும்------------------------------------------------------------------------

புதன் சூரியனுடன் 6 பாகைக்குள் சேர்ந்திருந்தால் அஸ்தமனமாகிவிடும். அப்போது இந்த யோகம் கிடைக்காது. அதுபோல புதன் வக்கிரகதியில் இருந்தாலும் இந்த யோகம் இல்லை! 

சிலர் புதனுக்கு அஸ்தமனம் இல்லை என்பார்கள். அவர்களுக்கு இந்த யோகம் கிடைக்கப் பிரார்த்திப்போம்! 

அன்புடன்

வாத்தியார்

++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

27.10.22

Lesson No.65 Chandra Mangala Yoga


Star Lessons

Lesson no 65

Date 24-9-2022

New Lessons

பாடம் எண் 65 

சந்திரமங்களயோகம்

 ஒரு ராசியில் சந்திரனும், செவ்வாயும் கூட்டணி போட்டு ஒன்றாக இருந்தால் நன்றாகக் கவனியுங்கள் - ஒன்றாக இருந்தால் அது சந்திரமங்களயோகம் எனப்படும். 

சிலர் அதைச் சசிமங்களயோகம் என்றும் சொல்வார்கள். இரண்டும் ஒன்றுதான் 

If Mars conjoins the Moon, this yoga is formed.

Sasi Mangala Yoga:  When mars and moon placed in same house.

The native's finance never gets drain. He will get finance help when ever he needs. 

யோகத்தின் பலன் என்ன? 

இந்த யோகத்திற்குப் பலனும் உண்டு. பக்க விளைவும் உண்டு. 

பலன் எந்த அளவிற்குக் கிடைக்குமோ, அந்த அளவிற்குப் பக்க விளைவும் உண்டு. 

ஜாதகனின் நிதி நிலைமை என்றும் வற்றாமல் இருக்கும். எந்த வழியிலாவது பண வரவு இருக்கும். ஜாதகன் வசதியானவன். செல்வந்தன். 

அதே நேரத்தில் மனகாரகன் சந்திரனுடன், தீய கிரகமான செவ்வாய் சேருவதால் ஜாதகனுக்குப் பலவிதமான மனப்போராட்டங்களும் கூடவே இருக்கும். அதுதான் பக்க விளைவு. That is called as the side effects of this yoga 

Chandra Mangala Yoga acts as a powerful factor in establishing one's financial worth and at the same time the native will suffer with mentaworries 

The combination is good if it occurs in the 2nd, 9th, 10th or 11th house.

அன்புடன்,

வாத்தியார்


வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

24.10.22

வாத்தியாரின் வாழ்த்துக்கள்வகுப்பறைக் கண்மணிகள் அனைவருக்கும் வாத்தியாரின் தீபாவளி வாழ்த்துக்கள்19.10.22

Lesson64 Aryabhatta

Star Lessons

Lesson no 64

Date 23-9-2022

New Lessons

பாடம் எண் 64

 ஆர்யபட்டா 

மைக்ரோசாஃப்ட், நோக்கியா, சாம்சங், பெப்சி எல்லாம் இல்லாத காலம்! 

இடம். நாளந்தா பல்கலைகழகம். 

தெரியாத பெயராக இருக்கிறதா? 

ஆண்டைச் சொன்னால் நினைவிற்கு வரும். 

ஆமாம், அது கி.பி.499 ஆம் ஆண்டு. 

அம்மாடியோவ்...இன்றைக்கு 1,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலமா? 

ஆமாம், மைக்ரோசாஃப்ட், நோக்கியா, சாம்சங், பெப்சி, பானிபூரி, பேல்பூரி, ஏ.கே 47கள் எல்லாம் இல்லாத காலம்

 இயேசு கிறிஸ்துவின் பிறப்பிற்குப் பிறகு சுமார் 500 ஆண்டுகள் முடிந்துவிட்ட காலம். பாட்னா அருகே குசுமபுரா என்னும் ஊரில் இருந்த நளந்தா பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமான கோளரங்கம். அங்கேதான் அந்த அரிய நிகழ்ச்சி நடைபெற்றது. 

அந்த ஆண்டில் மார்ச் மாதம் 21ஆம் தேதி மதியம் சரியாகப் பன்னிரெண்டு மணி. 

பல்கலைகழகத்தின் மணி ஒலிக்கிறது. மாணவர்களின் வேத பாடல்கள் ஓங்கி ஒலித்து காற்றை நிரப்புகின்றன. சாஸ்திர விற்பன்னர்களின் பிரார்த்தனை துவங்கி சற்று நேரத்தில் முடிவடைகின்றன. 

23 வயது இளைஞன் மேடையில் ஏறுகிறான், அவன்தான் அன்றைய நாயகன். அவன் பலகலைக்கழகத்தில் வானவியல் துறையில் பயின்று படிப்பை முடித்துவிட்ட மாணவன். கணிதத் துறையிலும் மேதை அவன் 

எங்கும் அமைதி நிலவுகிறது. அங்கே மேடையின் மேல் இருக்கும் மேஜையின் மீதும், ஓலைகள், எழுத்தாணிகள் மீதும் கும்ப நீரைத் தெளிக்கிறான். தன் தலையை உயர்த்தி வானத்தில் இருக்கும் சூரியனையும் அவன் வணங்குகிறான். பிறகு தான் எழுதவிருக்கும் தொடர் ஆராய்ச்சிக் கட்டுரையின் முதல் சொல்லை ஒரு ஓலையின் மீது பக்தியுடன் எழுதுகிறான். அருகில் இருக்கும் அந்த பல்கலைக்கழகத்தின் பேராசான்கள் அவன் மீது மலர்களைச் சொறிகின்றார்கள். 

அந்த வானவியல் வல்லுனன், இளைஞன் வேறு யாருமில்லை. அவன்தான் ஆர்யபட்டா! அவன் அன்று துவங்கி எழுதிய நூலின் பெயர் ஆர்யபட்டியா! 

ஆர்யபட்டா கி.பி 476 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தவர். துவக்கத்தில் தனது மாநிலத்தில் படித்தவர், மேல் படிப்பிற்காக நளந்தா பல்கலைக் கழகத்தில் சேர்ந்து படித்தார். அன்றைய காலகட்டத்தில் அதுதான் நாட்டின் உயர்ந்த கல்விக்கூடம். அவன் எழுதிய அந்த ஒப்பற்ற நூலை, அனைவரும் பாராட்டினார்கள். அதன் அருமை, பெருமைகளை உணர்ந்த புத்தகுப்தா என்னும் அன்றைய மன்னன், அவனை, அப்பல்கலைகழகத்தின் தலைமைப் பதவியில் அமர வைத்தான் 

உலகம் உருண்டை. அது தன்னுடைய சொந்த அச்சிலேயே, ஒரு ஒழுங்கு முறையிலேயே சுழல்கிறது என்று உலகிற்கு முதன் முதலில் சொன்னவர் ஆர்யபட்டா! சுழலும் பூமியினால்தான் இரவு, பகல் உண்டாகிறது என்றும் முதன் முதலில் சொன்னவரும் அவர்தான். சந்திரன் இருளானது. சூரிய ஒளியால்தான் அது ஒளிர்கிறது என்று சொன்னவரும் அவர்தான். 

வானவியலிலும், கணிதத்ததிலும் எண்ணற்ற சாதனைகளைச் செய்து அனைத்திற்கும் முன்னோடியாக இருந்தவர் அவர் 

ஆர்யபாட்டவின் வானவியல் குறிப்புக்களையும், கணக்குகளையும், சூத்திரங்களையும் வைத்துத்தான் பஞ்சாங்கங்கள் எழுதப்பெறுகின்றன. இந்துக்களின் நாட்காட்டிக்கும் (Hindu calendars) அவர்தான் தந்தை! 

Motions of the solar system: 

Aryabhata correctly insisted that the earth rotates about its axis daily, and that the apparent movement of the stars is a relative motion caused by the rotation of the earth, contrary to the then-prevailing view, that the sky rotated. This is indicated in the first chapter of the Aryabhatiya, where he gives the number of rotations of the earth in a yuga and made more explicit in his gola chapter 

India\'s first satellite was named after Aryabhata 

Algebra, Trigonometry என்று கணிதத்தின் பல பரிமானங்களை வடிவமைத்தவர் அவர்தான். உலகிற்குச் சொல்லித்தந்துவிட்டுப்போனது அவர்தான 

அந்த மகானைப் பற்றிய மேலதிகத் தகவல்களுக்கு இங்கே க்ளிக்கிப் பாருங்கள்! 

http://en.wikipedia.org/wiki/Aryabhata 

அன்புடன்,

வாத்தியார்

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++=

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

18.10.22

Lesson 62 Paribvarthanai Yogam

Star Lessons

Lesson no 62

Date 21-9-2022

New Lessons

பாடம் எண் 62

யோகங்கள் 

பாடம்: பரிவர்த்தனை யோகம் 

இரண்டு கிரகங்கள் இடம் மாறி ஒன்றின் வீட்டில் மற்றொன்று அமர்வது (interchange of places) பரிவர்த்தனை யோகம் ஆகும்! 

"Parivartthanai means Planet A occupies the sign of Planet B while simultaneously Planet B occupies the sign of Planet A.

Example: Moon occupies Jupiter's (குரு) house and Jupiter (குரு) occupies moon's house

---------------------------------------------------------------------------

இந்த யோகத்தால் இடம் மாறி அமர்ந்த கிரகங்களின் சக்தியும், வலிமையும் அதிகமாகும். அதேபோல இடம் மாறிய ராசிகளின் சக்தியும், வலிமையும்

அதிகமாகும். அந்தப் பரிவர்த்தனை ஜாதகனின் வாழ்க்கையில் பல வெற்றிகள் ஏற்பட வழிவகுக்கும்.

 Parivartthanai yoga will always increase the power of the two houses involved. It will also increase the power of the two grahas involved.

Increasing the power of the two bhavas and the two grahas may be helpful for the success of the native.

 அது பொது விதி. சில பரிவர்த்தனைகளால் தீமைகள் அதிகமாக ஏற்படும் நிலைமையும் உண்டாகும்

 எப்படி?

 வாருங்கள். அதையும் பார்ப்போம்.------------------------------------

அந்த மாற்றத்திற்குக் காரணமான கிரகங்கள் தீய கிரகங்களாக இருந்தாலும், மாறிய இடங்கள் தீய இடங்களாக (inimical places) இருந்தாலும்,

அதாவது 6, 8, 12ஆம் வீடுகளாக இருந்தாலும், ஜாதகனுக்குத் தீய பலன்கள்தான் அதிகமாகக் கிடைக்கும்

 ஆகவே பரிவர்த்தனை யோகம் உள்ளது என்றவுடன், யாரும் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ள வேண்டாம்.-------------------------------------------------------------------------------------

பரிவத்தனைக்கு உள்ளான கிரகங்கள், சுபக்கிரகங்களாக இருந்தால், (benefics) ஜாதகனுக்கு அதீத நன்மைகள் கிடைக்கும். 

பரிவத்தனைக்கு உள்ளான கிரகங்கள், அசுபக்கிரகங்களாக இருந்தால், (melefics) ஜாதகன் அதீத தீமைகளையே சந்திக்க நேரிடும்.I

++++++++++++++++++++++++++++++++++++++++++++

அன்புடன்

வாத்தியார்

+++++++++++++++++++++++++++++++++++++++++++

 

 

 

 

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

13.10.22

Lesson No 61 Sashya Yogam


Star Lessons

Lesson no 61

யோகங்கள் 

பாடம்: சஷ்ய யோகம் 

சனி - சனீஷ்வரனை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம்.

சனீஷ்வரன் தனது சொந்த வீடுகளில் இருந்தாலும் அல்லது ஜாதகத்தில் உச்சம் பெற்று துலா ராசியில் இருந்தாலும் அல்லது ஜாதகனின் கேந்திர வீடுகளில் இருந்தாலும் இந்த யோகம் உண்டு.------------------------------------------------------

வகுப்பறை புத்திசிகாமணி!:

சார், சனி நீசம் பெற்று, அது கேந்திரமாக இருந்தாலும் பலன் உண்டா?”

இல்லை! நீசம் பெற்றால் totally out.ஆகவே இல்லை!

-------------------------------------------------------

என்ன பலன்?

ஜாதகன் சக்தியுள்ளவன். வலிமையுள்ளவன். எல்லாவிதத்திலும் வலிமையுள்ளவன். கண்டிப்பானவன். எதற்கும் வளைந்து கொடுக்காமல் தன் கொள்கைகளில், செயல்களில் கண்டிப்பாக இருப்பவன். அதிகாரம் மிக்கவன். தன் குடும்பத்தில், தொழிலில், செயல்களில் அதிகாரம் மிக்கவன் 

சுருக்கமாக ஆங்கிலத்தில்:

Shasya yoga: Saturn in its own sign or in exaltation, and in a kendra house the native will be powerful, strict and will be in a position of authority. 

அன்புடன்,

வாத்தியார்.

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!