மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

28.2.18

எதை எப்படிச் சொன்னார் நாடி ஜோதிடர்?


எதை எப்படிச் சொன்னார் நாடி ஜோதிடர்?

அரசனுக்கு அவனுடைய எல்லா பற்களும் விழுந்து பொக்கை வாயுடன் இருப்பதாக ஒரு கனவு வந்தது. இதனால் காலையில்
பீதியுடன் எழுந்த அவன், அந்தக் கனவால் என்ன விளைவுகள் நேருமோ என்று பயந்துபோய் முதல் வேலையாக ஒரு நாடி
ஜோதிடரை வரவழைத்தான்.

அந்த நாடி ஜோதிடர் தனது ஓலைச்சுவடியை எடுத்து, அதில் பொக்கை வாய் கனவு பற்றி விளக்கியிருந்த ஒரு ஓலையை
வாசித்துவிட்டு, ‘அரசே! உங்கள் மனைவி, குழந்தைகள், சொந்த பந்தங்கள் எல்லாம் உங்களுக்கு முன்பே இறந்து விடுவார்கள்’
என்று பலன் சொன்னார். உடனே அந்த அரசன் மிகவும்
கோபமுற்று, ‘இவனைப் பிடித்து சிறையில் தள்ளுங்கள்!’
என்று உத்தரவிட்டான்.

அதன் பிறகும் மன்னனின் மனம் சமாதானமடையவில்லை. இன்னொரு நாடி ஜோதிடரை வரவழைத்து, அவரிடம் தன்
பொக்கை வாய் கனவின் அர்த்தம் என்ன என்று வினவினான்.
அந்த ஜோதிடரும் அதே மாதிரியான ஓலைச்சுவடியைத்தான் வைத்திருந்தார்.

அவரும் அதைப் பார்த்துவிட்டு, ‘மன்னா! உங்கள் சொந்த, பந்தங்களையெல்லாம் விட நீங்கள் நீண்ட காலம் நீடூடி
வாழ்வீர்கள்’ என்று பலன் கூறினார். இதனால் மனம் குளிர்ந்த அரசன், அந்த ஜோதிடருக்கு தகுந்த பரிசுகள் வழங்கி அனுப்பி வைத்தான்.

இருவரும் அதே ஓலையைத்தான் படித்தார்கள், அதே விஷயத்தைதான் சொன்னார்கள். ஒருவர் எல்லோரும் இறந்துவிடுவார்கள் என்றார், இன்னொருவர் எல்லோரையும்
கடந்து வாழ்வீர்கள் என்றார், அவ்வளவுதான் வித்தியாசம்.

பேசும் வார்த்தைகள் கவனமுடன் உபயோகித்தால் வாழ்வில் ஜெயிக்கலாம்.! நாம் பேசும் வார்த்தைகள் மற்றவரை சந்தோஷம் படுத்த வேண்டுமே தவிர எந்த விதமனகசப்பும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

படித்தேன்; பகிர்ந்தேன்!!!   

அன்புடன்
வாத்தியார் 
=============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

27.2.18

உங்கள் துயரங்களுக்கெல்லாம் மூல காரணம் எது?


உங்கள் துயரங்களுக்கெல்லாம் மூல காரணம் எது?

*ஆசை*

வாழ்க்கை எதிலே ஓடிக் கொண்டிருக்கிறது?

ஆசையிலும் நம்பிக்கையிலுமே ஓடிக் கொண்டிருக்கிறது.

சராசரி மனிதனை ஆசை தான் இழுத்துச் செல்கிறது.

அவன் துக்கத்துக்கெல்லாம் அதுவே காரணமாகிறது. ‘வேண்டும் என்கிற உள்ளம் விரிவடைந்து கொண்டே போகிறது. ‘போதும்’ என்ற மனம் சாகும் வரை வருவதில்லை.

ஐநூறு ரூபாய் நோட்டு பூமியில் கிடந்து, ஒருவன் கைக்கு அது கிடைத்து விட்டால், வழி நெடுக பணம் கிடைக்கும் என்று தேடிக் கொண்டே போகிறான்.

ஒரு விஷயம் கைக்குக் கிடைத்து விட்டால் நூறு விஷயங்களை மனது வளர்த்துக் கொள்கிறது.

ஆசை எந்தக் கட்டத்தில் நின்று விடுகிறதோ, அந்தக் கட்டத்தில் மகிழ்ச்சி ஆரம்பமாகிறது.

சுயதரிசனம் பூர்த்தியானவுடன், ஆண்டவன் தரிசனம் கண்ணுக்கு தெரிகிறது.

ஆனால் எல்லோராலும் அது முடிகிறதா?

லட்சத்தில் ஒருவருக்கே ஆசையை அடக்கும் அல்லது ஒழிக்கும் மனப் பக்குவம் இருக்கிறது.

என் ஆசை எப்படி வளர்ந்தது என்று எனக்கே நன்றாகத் தெரிகிறது.

சிறுவயதில் வேலையின்றி அலைந்த போது “மாதம் ஐயாயிரம் ரூபாயாவது கிடைக்கக் கூடிய வேலை கிடைக்காதா” என்று ஏங்கினேன்.

கொஞ்ச நாளில் கிடைத்தது.

மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பளத்திலே ஒரு பத்திரிகையில் வேலை கிடைத்தது.

ஆறு மாதம் தான் அந்த நிம்மதி.

“மாதம் இருபதாயிரம் ரூபாய் கிடைக்காதா?” என்று மனம் ஏங்கிற்று.

அதுவும் கிடைத்தது. வேறொரு பத்திரிக்கையில். பிறகு மாதம் முப்பதாயிரம் ரூபாய் வேலைக்கு ஏங்கியது!!!!

அதுவும் கிடைத்தது. மனது ஐம்பதாயிரம் ரூபாய்க்கு தாவிற்று. அது  வளர்ந்தது. பெருகிற்று. யாவும் கிடைத்தன.

இப்பொழுது நோட்டடிக்கும் உரிமையையே மனது கேட்கும் போலிருக்கிறது!

எந்தக் கட்டத்திலும் ஆசை பூர்த்தி அடையவில்லை.

‘இவ்வளவு போதும்’ என்று எண்ணுகின்ற நெஞ்சு, ‘அவ்வளவு’ கிடைத்ததும், அடுத்த கட்டத்திற்குத் தாண்டுகிறதே, ஏன்?

அது தான் இறைவனின் லீலை!

ஆசைகள் அற்ற இடத்தில், குற்றங்கள் அற்றுப் போகின்றன.

குற்றங்களும், பாபங்களும் அற்றுப்போய் விட்டால் மனிதனுக்கு அனுபவங்கள் இல்லாமற் போய் விடுகின்றன.

அனுபவங்கள் இல்லையென்றால், நன்மை தீமைகளைக் கண்டு பிடிக்க முடியாது.

ஆகவே தவறுகளின் மூலமே மனிதன் உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, இறைவன் ஆசையைத் தூண்டி விடுகிறான்.

ஆசையை மூன்று விதமாகப் பிரிக்கிறது இந்து மதம்.

மண்ணாசை!
பொன்னாசை!
பெண்ணாசை!

மண்ணாசை வளர்ந்து விட்டால், கொலை விழுகிறது.

பொன்னாசை வளர்ந்து விட்டால், களவு நடக்கிறது.

பெண்ணாசை வளர்ந்து விட்டால், பாபம் நிகழ்கிறது.

இந்த மூன்றில் ஓர் ஆசை கூட இல்லாத மனிதர்கள் மிகவும் குறைவு.

ஆகவே தான், பற்றற்ற வாழ்க்கையை இந்து மதம் போதித்தது.

பற்றற்று வாழ்வதென்றால், எல்லாவற்றையும் விட்டு விட்டு ஓடிப் போய் சந்நியாசி ஆவதல்ல!

“இருப்பது போதும்; வருவது வரட்டும்: போவது போகட்டும்: மிஞ்சுவது மிஞ்சட்டும்” என்று சலனங்களுக்கு ஆட் படாமலிருப்பதே பற்றற்ற வாழ்க்கையாகும்.

ஆசை, தீமைக்கு அடிப்படையாக இல்லாதவரை, அந்த ஆசை வாழ்வில் இருக்கலாம் என்கிறது இந்து மதம்.

நான் சிறைச்சாலையில் இருந்த போது கவனித்தேன்.

அங்கே இருந்த குற்றவாளிகளில் பெரும்பாலோர் ஆசைக் குற்றாளிகளே.

மூன்று ஆசைகளில் ஒன்று அவனைக் குற்றவாளியாக்கி இருக்கிறது.

சிறைச்சாலையில் இருந்து கொண்டு, அவன் “முருகா, முருகா!” என்று கதறுகிறான்.

ஆம், அவன் அனுபவம் அவனுக்கு உண்மையை உணர்த்துகிறது.

அதனால் தான் “பரம் பொருள் மீது பற்று வை: நிலையற்ற பொருள்களின் மீது ஆசை வராது” என்கிறது இந்துமதம்.

“பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பறைப்
பற்றுக பற்று விடற்கு” - என்பது திருக்குறள்.

ஆசைகளை அறவே ஒழிக்க வேண்டியதில்லை. அப்படி ஒழித்து விட்டால் வாழ்க்கையில் என்ன சுகம்?

அதனால் தான் ‘தாமரை இலைத் தண்ணீர் போல் இரு” என்று போதித்தது இந்து மதம்.

நேரிய வழியில் ஆசைகள் வளரலாம்.

ஆனால் அதில் லாபமும் குறைவு. பாபமும் குறைவு.

ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்று எதிர்பார்த்து ஐநூறு ரூபாய் மட்டுமே கிடைத்தால், நிம்மதி வந்து விடுகிறது.

எதிர் பார்ப்பதைக் குறைத்துக் கொள்: வருவது மனதை நிறைய வைக்கிறது” என்பதே இந்துக்கள் தத்துவம்.

எவ்வளவு அழகான மனைவியைப் பெற்றவனும், இன்னொரு பெண்ணை ஆசையோடு பார்க்கிறானே, ஏன்?

லட்சக்கணக்கான ரூபாய் சொத்துக்களைப் பெற்றவன் மேலும் ஓர் ஆயிரம் ரூபாய் கிடைக்கிற தென்றால் ஓடுகிறானே, ஏன்?

அது ஆசை போட்ட சாலை.

அவன் பயணம் அவன் கையில் இல்லை; ஆசையின் கையில் இருக்கிறது.

போகின்ற வேகத்தில் அடி விழுந்தால் நின்று யோசிக்கிறான் அப்போது அவனுக்கு தெய்வ ஞாபகம் வருகிறது.

அனுபவங்கள் இல்லாமல, அறிவின் மூலமே, தெய்வத்தைக் கண்டு கொள்ளும் படி போதிப்பது தான் இந்து மதத் தத்துவம்.

‘பொறாமை, கோபம்’ எல்லாமே ஆசை பெற்றெடுத்த குழந்தைகள் தான்.

வாழ்க்கைத் துயரங்களுக்கெல்லாம் மூல காரணம் எது வென்று தேடிப் பார்.

ஆசை தான் என்பது உனக்குப் புரிய வரும்!!!!
---------------------------------------------
படித்தேன்: பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
===================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

26.2.18

தானத்திற்கும் தர்மத்திற்கும் என்ன வித்தியாசம்?


தானத்திற்கும் தர்மத்திற்கும் என்ன வித்தியாசம்?

தானம்,தர்மம்,தானம், தர்மம் என்கிறார்களே. அப்படியென்றால் என்ன?

இந்த இறைக் கதையை படியுங்கள்.

மகாபாரதத்தில் உடலைப் பிரிந்த கர்ணனின் உயிரானது தன் தந்தை சூரிய தேவனுடன் பரம்பொருள் ஈசனை வணங்கி மகிழ்ந்து சுவர்க்க பேறு பெற்றது.

சூரிய தேவனுக்கோ மனதில் மிகப் பெரிய ஐயம் கலந்த வேதனை. எவரிடம் கேட்பது.? எவர் தெளிவாகக் கூறுவார்கள் ? குழப்பத்திலும் கோபத்திலும் சூரியனின் வெம்மை அதிகரித்தது.

இதை உணர்ந்த ஈசன், அவர் முன் எழுந்தருளினார்.

சூரியனே, என்ன தடுமாற்றம் உன் மனதில் ? கேட்டவர் ஈசன்.

பரம்பொருளே..பலவிதமான தான தருமங்கள் செய்து புண்ணியங்களை சேர்த்து வைத்த என் மகன் கர்ணனை போரில் கொன்றது விதி என்று ஏற்றுக் கொண்டேன். ஆனால், எல்லா புண்ணியங்களையும் கிருஷ்ணருக்கு தானமாகத் தந்தபடியால் அவன் இன்னும் மிகப் பெரிய புண்ணியவான் ஆகிவிடுகிறானே. பிறகு எப்படி அவனுக்கு மரணம் ஏற்பட்டது? இது அநீதி அல்லவா? என கேட்டார் சூரிய தேவன்.

இறை சிரித்தது.

சூரியனே... நிறைய மனிதர்களுக்குள் ஏற்படும் சலனமே உன்னை இந்தக் கேள்வியை எழுப்ப வைத்ததுள்ளது சொல்கிறேன் கேள்.. என்றது.

தானம் என்பது பிறருக்குத் தேவையானவற்றை அவர் கேட்டோ அல்லது அடுத்தவர் அவர் நிலை கூறி அறிந்தபின்னோ தருவது. இதுதான் தானம். புண்ணியக் கணக்கில் சேராது.

ஏனெனில்.. இல்லாதவர் மற்றும் இயலாதவர் கேட்டபின் கொடையளிப்பது ஒரு மன்னனின் கடமை. ஒவ்வொரு மனிதனின் கடமையும் கூட.. ஆனால், தர்மம் என்பது எவரும் கேட்காமல் அவரே அறியாமல் அவர் நிலை அறிந்து கொடுப்பது. இதுதான் புண்ணியம் தரும். பசித்திருக்கும் ஒருவர் கேட்டபின் ஏதாவது தருவது தானம். அவர் கேட்காமலேயே அவர் பசியாற்றுவது தர்மம்.

கர்ணன் தர்மங்கள் செய்து புண்ணியங்களை ஈட்டியவன்தான். ஆனால், மொத்த புண்ணியத்தையும் கிருஷ்ணர் தானமாகக் கேட்டுத்தான் வாங்கினாரே தவிர தர்மமாகப் பெறவில்லை.

எல்லா புண்ணியங்களையும் தானமாகத் தாரை வார்த்து தந்த பிறகு கர்ணனும் ஒரு சாதாரண மனிதனானான்.

அதனாலேயே மரணம் அவனை எளிதாய் நெருங்கியது. இப்போது புரிந்ததா? என கேட்க,
ஈசனை வணங்கி நின்ற சூரிய தேவன்.

தானமும்
தர்மமும்
பாவமும்
புண்ணியமும்
எல்லாமும் நீயே
என்பதும் புரிந்தது என்கிறார்.
நாமும் புரிந்துகொள்வோம்.

கேட்டு கொடுப்பது தானம்.கேட்காமல் அளிப்பது தர்மம்.

படித்ததில் பிடித்தது,
அன்புடன்
வாத்தியார்
===============================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

24.2.18

Astrology: ஜோதிடம்: 23-2-2018ம் தேதி புதிருக்கான விடை!


Astrology: ஜோதிடம்: 23-2-2018ம் தேதி புதிருக்கான விடை!

அந்த ஜாதகத்திற்கு உரியவர் ஆச்சார்யா ரஜினீஷ் என்னும் ஓஷோ!
பிறப்பு விபரம்: 11-12-1931 குச்வாடா (மத்தியப் பிரதேசம்) - 5-45 மாலை

நான் எதிர்பார்த்தபடி நிறைய அன்பர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். சுமார் 23 பேர்கள் சரியான விடையை எழுதி உள்ளார்கள். அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்! அவர்களின் பெயர்கள் அவர்களுடைய பின்னூட்டங்களுடன் கீழே கொடுத்துள்ளேன். பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்

மீண்டும் ஒரு புதிருடன் அடுத்த வெள்ளிக்கிழமை (2-3-2018) சந்திப்போம்!

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------
1
Blogger sundinesh1 said...
Rajneesh Osho
Friday, February 23, 2018 4:41:00 AM
-------------------------------------------------
2
Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
The famous celebrity was indian spiritual guru Osho was born on 11/12/1931 in madhyapradesh at 5.45pm
Friday, February 23, 2018 4:58:00 AM
------------------------------------------------
3
Blogger thozhar pandian said...
11 டிசம்பர் 1931 பிறன்ஹ ஓஷோ என்ற ஆச்சார்யா இரஜனீஷ்
Friday, February 23, 2018 5:04:00 AM
------------------------------------------------
4
Blogger Maheswari Bala said...
Name: Osho Rajneesh
Date of Birth: Friday, December 11, 1931
Time of Birth: 17:45:00
Place of Birth: kuchwada(mp)
Longitude: 78 E 34
Latitude: 23 N 14
Friday, February 23, 2018 7:35:00 AM
------------------------------------------------
5
Blogger angr said...
ஓசோ என்று அன்புடன் அழைக்கப்பட்ட ஆச்சாரிய ரஜ்னீஸ் அவர்கள்
Friday, February 23, 2018 7:53:00 AM
------------------------------------------------
6
Blogger RAMVIDVISHAL said...
Answer- Rajneesh
Friday, February 23, 2018 9:27:00 AM
------------------------------------------------
7
Blogger bg said...
Osho Rajneesh born on Dec 11 1931
Friday, February 23, 2018 10:00:00 AM
------------------------------------------------
8
Blogger Unknown said...
This horoscope is of Acharya Rajaneesh @ Osho. Born on 11 December 1931 at Kuchwada Madya pradesh, India . time of birth 5.45 pm .
Friday, February 23, 2018 10:10:00 AM

உங்கள் பெயர் என்ன? அதை ஏன் எழுதவில்லை?
---------------------------------------------------------
9
Blogger Narayanan V said...
ஐயா
23.02.2018 ல் கொடுக்கப்பட்டுள்ள ஜாதகம் திரு.ஒஷோ / ரஜனிஸ். 11 டிசம்ப்ர் 1931 - 4.45 மாலை ரைசென் மாவட்டம் - மத்திய பிரதேசம்
நன்றி.
வெ.நாராயணன்
புதுச்சேரி
Friday, February 23, 2018 10:16:00 AM
------------------------------------------------
10
Blogger Savitha said...
Osho Rajneesh is the answer
he born on 11 December 1931
time: 17:45:00
Sir you must be remember me
I am trying to contact you through email.
-Savitha
Friday, February 23, 2018 10:30:00 AM
-------------------------------------------------
11
Blogger anand tamil said...
இவர் இந்தியாவின் மத்தியப்பிரதேச மாநிலத்தின் குச்வாடா என்ற நகரில் 1931-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11-ம் நாள் பிறந்தார். ஓஷோவின் உண்மையான பெயர் சந்திரமோகன் ஜெயின் என்பதே. இவர் 1970-களில் பகவான் ரஜினீஷ் என்ற பெயரால் வளர்ச்சியடைந்த தியான முறைகளை கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார். எதையுமே துறக்க வேண்டியதில்லை, மனதை மட்டும் கட்டுப்படுத்தினால் போதுமானது என்ற இவரது புதிய முறையிலான தத்துவங்கள் உலகெங்கும் பரவி பல சீடர்களை உருவாக்கியது.
ஓஷோ பிறக்கவும் இல்லை, இறக்கவும் இல்லை, பூமிக்கு வருகை தந்தார்' என்றே அவரது நினைவிடத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. உலகின் தலைசிறந்த தத்துவ ஞானிகளில் ஒருவர் என்று புகழப்படும் ஓஷோ தனது பொன்மொழிகளாலும், தத்துவக் கதைகளாலும் புகழப்படுபவர். ' நீ நீதான், உன்னுடன் ஒப்பிடக்கூடியவர் யாருமில்லை' என்று மனிதர்களிடையே நம்பிக்கைகளை விதைத்தவர் ஓஷோ.
Friday, February 23, 2018 10:31:00 AM
------------------------------------------------
12
Blogger umajana said...
ஐயா,
இந்த ஜாதகத்துக்கு உரியவர் ஓஷோ என்று அழைக்கப் படும் திரு.ரஜனீஷ் அவர்கள். அவர் பிறந்தது 11/12/1931 மாலை சுமார் 5:13 மணியளவில்.
Friday, February 23, 2018 11:14:00 AM
--------------------------------------------------
13
Blogger Ananthakrishnan K R said...
வணக்கம்,
ஜாதகர்: ஆச்சார்ய ரஜனீஷ்
பிறந்த நாள்: 11/12/1931 @ 5.13 PM
பிறந்த ஊர்: குச்சுவாடா, மத்யபிரதேஷ்
நன்றியுடன்,
க இரா அனந்தகிருஷ்ணன்
சென்னை
Friday, February 23, 2018 11:16:00 AM
-------------------------------------------------
14
Blogger Palani Shanmugam said...
மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,
மாணவர்கள் மேல் உள்ள அன்பினால் மிக எளிதாக கண்டுபிடிக்ககூடிய அளவில் க்ளூவை கொடுத்ததற்கு மிகவும் நன்றி! இந்த வாரப்புதிரில் உள்ள ஜாதகம் பகவான் ஸ்ரீ ரஜனீஷ் என்று அழைக்கப்பட்டு ஓஷோ என்ற பெயரில் உலகப் புகழ் பெற்ற ஞானி திரு. ரஜ்னிஷ் சந்திர மோகன் அவர்களுடையது என்று கண்டுபிடிக்க இரண்டு நிமிடம்கூட ஆகவில்லை.
எஸ். பழனிச்சாமி
Friday, February 23, 2018 11:35:00 AM
-----------------------------------------------------
15
Blogger vijay said...
"Osho Rajneesh" dec 11th 1931
Friday, February 23, 2018 11:38:00 AM
-------------------------------------------------
16
Blogger GOWDA PONNUSAMY said...
Ayyaa vanakkangal!
Given Horoscope native of OSHO Rajneesh
Date of Birth: 11-Dec-1931 at 5-45pm
Place of Birth: Madhya Pradesh, India
Date of Death: 19-Jan-1990
Profession: Writer, Philosopher.
Thanks to Classs room ref Q-14 on 7-10-2013.
Regards
Ponnusamy
Nationality: India
Friday, February 23, 2018 11:40:00 AM
--------------------------------------------------
17
Blogger venkatesh r said...
"Astrology: Quiz. : ஜோதிடப் புதிர் 23-2-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!"
மறைந்த பிரபல "செக்ஸ் சாமியார்" சந்திர மோகன் ஜெயின் (எ) "ஓஷோ" ரஜனீஷ் அவர்கள்.
பிறந்த தேதி : டிசம்பர் மாதம் 11, 1931.
நேரம் : மாலை 5 மணி, 55 நிமிடம்.
இடம் : குச்வாரா கிராமம், பரேலி(தா),ரெய்சன் மாவட்டம்.
மத்திய பிரதேச மாநிலம்.
Friday, February 23, 2018 11:52:00 AM
----------------------------------------------------
18
Blogger Suresh said...
Name: Osho Rajneesh
Date of Birth: Friday, December 11, 1931
Time of Birth: 17:45:00
Place of Birth: kuchwada(mp)
Friday, February 23, 2018 1:00:00 PM
---------------------------------------------
19
Blogger G.Ramesh said...
Name of the personality: Bhagwan Shree Rajneesh (Osho) – Indian Spiritual Guru
Date of birth: 11 December 1931
Time of Birth: 5.16 PM
Place of Birth: Kutchwada, Near Bhopal, Madhya Pradesh
Regards
Ramesh Ganapathy
Nigeria.
Friday, February 23, 2018 3:34:00 PM
---------------------------------------------------
20
Blogger Thanga Mouly said...
!!! Osho Rajneesh; Date of Birth: 11 Dec 1931. Kuchwada mp.
Friday, February 23, 2018 7:12:00 PM
-----------------------------------------------
21
Blogger gowri radhakrishnan said...
அந்த பிரபலர் ஆச்சார்ய ரஜனீஷ் அவர்கள்.1931, டிசம்பர் 11ம் தேதி மாலை 5.30 மணி அளவில் மத்திய பிரதேசம் குச்வாடா கிராமத்தில் சுபஜனனம்.
Friday, February 23, 2018 7:14:00 PM
----------------------------------------------------
22
Blogger Sathish Kumar said...
Osho
Date of Birth : 11 – 12 – 1931
Time of Birth : 17 : 15
Place of Birth : Kuchwada
Friday, February 23, 2018 8:21:00 PM
---------------------------------------------
23
Blogger Rajam Anand said...
Dear Sir
The answer to the quiz is Osho, Acharya Rajneesh, or Rajneesh, Bhagwan Shree Rajneesh. He was born on December 11th 1931 in Madhya Pradesh and the name given to him was Chandra Mohan Jain.
Kind Regards
Rajam Anand
Friday, February 23, 2018 10:52:00 PM
=====================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

23.2.18

Astrology: Quiz. : ஜோதிடப் புதிர் 23-2-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!


Astrology: Quiz. : ஜோதிடப் புதிர்  23-2-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!

நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டு பிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும்  ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்

சென்ற வாரம் நிறைய அன்பர்கள் கலந்து கொண்டதோடு சரியான விடையைச் சொல்லி அசத்திவிட்டார்கள்!

தேதியைக் கண்டு பிடித்து விடுங்கள், மற்றதற்கு கூகுள் ஆண்டவர் உதவி செய்வாரே!


க்ளூ வேண்டுமா?  தாடிக்காரர். இந்தியர். ஆனால் அகில உலகப் பிரபலம்!!!!

சரியான விடை நாளை வெளியாகும்!
அன்புடன்
வாத்தியார்
--------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

22.2.18

அன்னையின் ஈமச் சடங்கில் பட்டினத்தடிகள் என்ன செய்தார்?


அன்னையின் ஈமச் சடங்கில் பட்டினத்தடிகள் என்ன செய்தார்?

பட்டினத்தடிகள் துறவியாக ஊர் ஊராகத் திரிந்து கொண்டிருந்த காலத்தில் அவருடைய அன்னையார் மரணமடைந்தார். அவருடைய ஈமச்சடங்கை எங்கிருந்தாலும் வந்து செய்து தருவேன் என்று வாக்களித்திருந்த பட்டினத்தடிகள் சரியான நேரத்தில் சுடுகாட்டினை அடைந்தார். அவருடைய தாயின் சிதைக்காக உறவினர்கள் அடுக்கியிருந்த காய்ந்த விறகுகளை அகற்றிவிட்டு பச்சை வாழைமட்டைகளையும் இலைகளையும் கொண்டு சிதை அடுக்கி பத்துபாடல்கள் பாடி சிதையைப் பற்றச் செய்தார். அந்தப் பாடல்கள் மிகப் புகழ்பெற்றவை.

1
ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய இரு
கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி
2
முந்தித் தவம் கிடந்து முன்னூறு நாள்சுமந்தே
அந்திபகலாய்ச் சிவனை ஆதரித்துத் தொந்தி
சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ
எரியத் தழல் மூட்டுவேன்
3
வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்
கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து முட்டச்
சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டிய தாய்க்கோ
விறகிலிட்டுத் தீமூட்டு வேன்
4
நொந்து சுமந்து பெற்று நோவாமல் ஏந்திமுலை
தந்து வளர்த்தெடுத்துத் தாழாமே அந்திபகல்
கையிலே கொண்டென்னைக் காப்பாற்றிய தாய்தனக்கோ
மெய்யிலே தீமூட்டு வேன்
5
அரிசியோ நானிடுவேன் ஆத்தாள் தனக்கு
வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் உருசியுள்ள
தேனே திரவியமே செல்வத் திரவியப்பூ
மானே எனஅழைத்த வாய்க்கு
6
அள்ளி இடுவது அரிசியோ தாய்தலைமேல்
கொள்ளிதனை வைப்பேனோ கூசாமல் மெள்ள
முகமேல் முகம்வைத்து முத்தாடி என்றன்
மகனே எனஅழைத்த வாய்க்கு
7
முன்னை இட்ட தீ முப்புறத்திலே
பின்னை இட்ட தீ தென்இலங்கையில்
அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே
யானும் இட்ட தீ மூள்கமூள்கவே
8
வேகுதே தீயதனில் வெந்து பொடிசாம்பல்
ஆகுதே பாவியேன் ஐயகோ மாகக்
குருவி பறவாமல் கோதாட்டி என்னைக்
கருதி வளர்த்தெடுத்த கை
9
வெந்தாளோ சோணகிரி வித்தகா நின்பதத்தில்
வந்தாளோ என்னை மறந்தாளோ சந்ததமும்
உன்னையே நோக்கி உகந்து வரம் கிடந்து என்
தன்னையே ஈன்றெடுத்த தாய்
10
வீட்டிருந்தாள் அன்னை வீதிதனில் இருந்தாள்
நேற்றிருந்தாள் இன்றுவெந்து நீறானாள் பால்தெளிக்க
எல்லோரும் வாருங்கள் ஏதென்று இரங்காமல்
எல்லாம் சிவமயமே யாம்

அன்புடன்
வாத்தியார்
=========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

21.2.18

திருவல்லம் கோவிலைத் தெரியுமா?


திருவல்லம் கோவிலைத் தெரியுமா?

திருவலம் அருள்மிகு தனுமத்யம்பாள் சமேத ஸ்ரீ வில்வநாதீஸ்வரர் திருக்கோயில்

இறைவர் திருப்பெயர்   :  வில்வநாதீஸ்வரர், வல்லநாதர்.

இறைவியார் திருப்பெயர் :  தனுமத்யாம்பாள், வல்லாம்பிகை.

தல மரம் :  வில்வம்.

தீர்த்தம் :  கௌரி தீர்த்தம்.

வழிபட்டோர் :  கௌரி, மஹாவிஷ்ணு, சனகமுனிவர் முதலியோர்.

தேவாரப் பாடல்கள் :  சம்பந்தர் - எரித்தவன் முப்புரம்.

சிறப்புகள்:

நிவா நதி வடக்கிலிருந்து தெற்காக ஓடிச்சென்று, பாலாற்றில் ஒன்றாகிறது.

பழைய கல்வெட்டில் இத்தலப் பெயர் 'தீக்காலி வல்லம்' என்று குறிப்பிடப்பட்டிருப்பதாகச் (சீர்காழிக்குப் பக்கத்தில் 'வல்லம்'
என்றொரு ஊர் இருப்பதால் அதனின் வேறாக இதை அறிவதற்காக) சொல்லப்படுகிறது.

ஞானசம்பந்தர் பாடலில் 'திருவல்லம்' என்றும்; அருணகிரிநாதரின் திருப்புகழில் 'திருவலம்' என்றும் இத்தலம் குறிக்கப்படுகின்றது.

கௌரி, மஹாவிஷ்ணு, சனக முனிவர் முதலியோர் வழிபட்ட சிவலிங்கங்கள் கோயிலுள் உள்ளன.

கோயிலுள் நாகலிங்கப் பூக்கள் பூக்கும் நாகலிங்க மரம் உள்ளது; காணத்தக்கது.

மூன்று நிலைகளையுடைய உள் கோபுரம் கல் மண்டபத்தின் மீது கட்டப்பட்டதாகும்.

ஆதிவில்வநாதேஸ்வரர் சந்நிதி" - தனிக் கோயிலாக உள்ளது;
இதன் எதிரில் நெடுங்காலமாக இருந்து வரும் பலாமரம் ஒன்று
உள்ளது.

இங்கு வழிபட்ட சனக முனிவரின் 'திருவோடு ' சுவாமிக்கு நேரே வெளியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

மூலவர் - சிவலிங்கத் திருமேனி, சுயம்பு; சதுரபீட ஆவுடையார்.

மூலவர் கருவறை அகழி அமைப்புடையது; கருவறைச் சுவர்களில் கல்வெட்டுக்கள் நிரம்ப உள்ளன.

கோயிலில் அறுபத்து மூவரின் உற்சவ, மூலத் திருமேனிகள் மேலும் கீழுமாக இருவரிசைகளில் வைக்கப்பட்டுள்ளன.

இடதுபுறம் பள்ளத்தில் 'பாதாளேஸ்வரர் ' சந்நிதி உள்ளது; பஞ்சம் நேரில், இப்பெருமானுக்கு ஒரு மண்டலகாலம் அபிஷேகம்
செய்யின் மழை பெய்யும் என்று சொல்லப்படுகிறது.

கஞ்சனுக்கு இறைவன் முத்தி தந்த ஐதீகம், திருவிழாவாக இன்றும் நடைபெறுகிறது; இதற்காக தை மாதம் பொங்கல் கழித்து 10-ம்
நாள் சுவாமி இங்கிருந்து புறப்பட்டுக் காஞ்சனகிரிக்கு எழுந்தருளுகிறார். இம்மலையில் (காஞ்சனகிரியில்) சித்ரா பௌர்ணமியில் குளக்கரையிலிருந்து பார்த்தால் ஜோதியொன்று தோன்றிப் பின் மறைகின்றதாம்.

தல வரலாறு:

மக்கள் வழக்கில் 'திருவலம்' என்று அழைக்கப்படுகிறது.

ஊருக்குள் 'நிவா' நதி ஓடுகிறது; நதியின் கரையிலேயே கோயில் உள்ளது. இறைவன், தீர்த்தத்தின் பொருட்டு, 'நீ, வா' என்றழைக்க,
இந்நதி அருகில் ஓடிவந்து பாய்ந்ததால் இப்பெயர் பெற்றது. 'நீ வா ' நதி நாளடைவில் 'நிவா ' நதியாயிற்று என்கின்றனர். இன்று
'பொன்னை' ஆறு என்னும் பெயரும் கொண்டுள்ளது. இந்நதியிலிருந்து தான் பண்டை நாளில் சுவாமிக்குத் தீர்த்தம்

கொண்டுவரப்பட்டது. (இப்போது கோயிலுள் கௌரி தீர்த்தமும் தீர்த்த கிணறும் உள்ளது.)

ஒரு காலத்தில் வில்வக்காடாக இப்பகுதி இருந்தமையால் இத்தலம் 'வில்வவனம்' - 'வில்வாரண்யம்' எனப்படுகிறது. அக்காட்டில்
ஒரு பாம்புப் புற்றில் சிவலிங்கம் இருந்தது. நாடொறும் பசு ஒன்று வந்து, அச்சிவலிங்கத்தின்மீது பாலைச் சொரிந்து வழிபட்டது.

அதனால் புற்றி சிறிது சிறிதாக கரைந்து நாளடைவில் சிவலிங்கம் வெளிப்படலாயிற்று என்று சொல்லப்படுகிறது.

இங்குள்ள அம்பாளுக்கு ஆதியில் 'தீக்காலி அம்பாள்' (ஜடாகலாபாம்பாள்) என்றே பெயரிருந்ததாகவும்; உக்கிர வடிவிலிருந்த இந்த அம்பாளை, ஆதி சங்கரர் சாந்தப்படுத்தினார் என்றும் சொல்லப்படுகிறது.

இங்குள்ள பெருமானை விஷ்ணு வழிபட்டதால், விஷ்ணுவின் பாதம் பத்மபீடத்தில் கொடிமரத்தின் முன்பு உள்ளது.

கொடிமரத்தின் பின்னால் உள்ள நந்தியும், மூலவர் சந்நிதியில் உள்ள நந்தியும் சுவாமியை நோக்கியிராமல் கிழக்கு நோக்கியுள்ளது.

இதன் வரலாறு - இத்தலத்திலிருந்து 4 கி. மீ. தொலைவில் கஞ்சன்கிரி என்றொரு மலையுள்ளது. (அது தற்போது 'காஞ்சனகிரி'
என்று வழங்குகின்றது.) இம்மலையில் கஞ்சன் என்னும் அசுரன் இருந்து வந்தான். இம்மலையிலிருந்துதான் மிகப்பழங்காலத்தில்
சுவாமிக்கு தீர்த்தம் கொண்டுவரப்பட்டது. அவ்வாறு கொண்டுவருவதை 'கஞ்சன்' தடுத்தான். செய்வதறியாது உரியோர்
இறைவனிடம் முறையிட, நந்தியம்பெருமான் சென்று கஞ்சனுடன் போரிட்டு அவனை அழித்தார். அவ்வாறு அழித்தபோது
அவ்வசுரனின்; லலாடம் வீழ்ந்த இடம் தற்போது "லாலாபேட்டை" என்றும், சிரசு வீழ்ந்த இடம் "சீகராஜபுரம்" என்றும், வலக்கால்
அறுபட்டு வீழ்ந்த இடம் "வடகால்" என்றும், தென்கால் (இடது கால்; - தென்கால் என்பது அவ்வசுரன் நின்று போரிட்ட
திக்கிலிருந்து கையாளப்பட்ட வார்த்தையாக தெரிகிறது) வீழ்ந்த இடம் "தென்கால்" என்றும், மணிக்கட்டு வீழ்ந்த இடம்
"மணியம்பட்டு" என்றும், மார்பு வீழ்ந்த இடம் "குகையநல்லூர் " என்றும் வழங்கப்படுகிறது. (இவ்வூர்களெல்லாம் திருவலத்திற்கு
3 கி.மீ. தொலைவில் உள்ளன.) இந்நிகழ்ச்சியை யொட்டியே நந்தி, காவலுக்காக கிழக்கு நோக்கியுள்ளார்.

காஞ்சனகிரியில் அசுரனின் குருதி பட்ட இடத்திலெல்லாம் இறைவனருளால் அவ்விடத்தைப் புனிதப்படுத்த சிவலிங்கங்கள்
உண்டாயின. (இன்றும் இம்மலையில், குளக்கரையில் எண்ணற்ற சிவலிங்கங்கள் இருப்பதையும் தோண்டினால் கிடைப்பதையும்
நேரில் பார்க்கலாம்.)

அமைவிடம்: காட்பாடிக்கு அண்மையிலுள்ள இருப்புப்பாதை நிலையம். ஆற்காட்டிலிருந்து ராணிப்பேட்டை வழியாக காட்பாடி
செல்லும் சாலையில் இத்தலம் உள்ளது. நகரப் பேருந்துகள் அடிக்கடி செல்கின்றன.

மேலும் விபரங்களுக்கு{
http://www.shaivam.org/siddhanta/sp/spt_p_vallam.htm
--------------------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

20.2.18

வெந்தய டீ!

வெந்தய டீ!

சூடா வெந்தய டீ குடிச்சா என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

வெந்தயம் மிக எளிதாக கிடைக்கும் பொருள். எளிதாக கிடைக்கும் எதன் பலனையும் நாம் கண்டுகொள்வதிலை. அப்படித்தான் வெந்தயத்தின் மகிமையும் நாம் உதாசீனப்படுத்துகிறோம். அதிக நார்ச்சத்து, இரும்புச்சத்து, புரதச் சத்து(46%) மற்றும் இதயத்தை பாதுகாக்கத் தேவையான முக்கிய மினரல் பொட்டாசியமென பல சத்துக்களை அந்த சின்ன வெந்தய விதை பெற்றிருக்கிறது.

அது குணப்படுத்தும் நோய்கள் கணக்கில் சொல்ல முடியாதது. சர்க்கரை வியாதி, உடல் பருமன், பித்த நோய்கள், ரத்த அழுத்தம், இதய நோய்கள் என பல பெரும் நோய்களை தன் கட்டுக்குள் வைத்திருக்கும் ஆச்சரியங்கள் நிறைந்தது இந்த வெந்தயம்.

அந்த வெந்தயத்தை ஊற வைத்து குடிப்பதையும், மற்றும் வெந்தயப்பொடியை நீரில் கலந்து குடிப்பது மற்றும் அதிகமாக உனவில் சேர்ப்பது என நீங்கல் செய்திருப்பீர்கள். வெந்தய தே நீரை குடித்திருக்கிறீர்களா? அப்படி குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? இதோ உங்களுக்காக அதனை செய்யும் முறையும், அதன் அற்புத நன்மைகளையும் இந்த கட்டுரையில் காணலாம்.

தயாரிக்கும் முறை :

ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அதில் வெந்தயத்தை சிறிது சேர்த்து, மூடி வைத்து 3 நிமிடங்கள் நன்றாக கொதிக்க வைத்து இறக்க வேண்டும். பின்னர் சூடு குறைந்து வெதுவெதுப்பாக ஆனவுடன் அதனை வடிகட்டி, தேன் சிறிது கலந்து குடிக்க வேண்டும்.

வெந்தய டீ குடிப்பதால் வரும் நன்மைகள் :

குடலை சுத்தமாக்க :

குடல் மற்றும் சிறுநீரகங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும். குடல் மற்றும் உணவுக்குழாய்களில் தங்கும் கழிவுகளை உடலில் இருந்து எளிதில் வெளியேற்றும். நச்சுக்களை உடலில் தங்க விடாது.

ரத்த சோகை :

இளம் வயதினர் மற்றும் முதியவர்கள் பெரும்பாலோனோர் ரத்த சோகையால பாதிக்கபப்டுகிறார்கள். மன அழுத்தம் காரணமாக அவர்களுக்கு ரத்த சோகையால் பாதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு இந்த வெந்தய டீ அருமருந்தாகிறது.

மாதவிடாய் வலிக்கு :

மாதவிடாய் காலத்தில் பெண்கள் வயிற்று வலி மற்றும் உடல் வலிகள் தோன்றும். அதோடு சிலருக்கு தசைப் பிடிப்பும் உருவாகும். இந்த சமயத்தில் வெந்தய டீயைக் குடித்தால், வலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

டீன் ஏஜ் பெண்கள் :

பூப்படையும் வயதில் உள்ள சிறுமிகள் வெந்தய டீயைக் குடிப்பது நல்லது. இது வளர்ச்சி ஹார்மோன்களையும் ஊக்குவிக்கும். பிற்காலத்தில் மாதவிடாய் கோளாறுகள் வராமல் தடுக்கும்.

தாய்ப்பால் அதிகரிக்க :

முற்றிலும் ஆராய்ச்சிகளால் நிரூபிக்கப்பட்ட உண்மை இது. தினமும் வெந்தய டீ குடித்து வந்தால் தாய்ப்பால் சரிவர சுரக்காத தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பது அதிகரிக்கும்.

கொழுப்பு கரைய :கொலஸ்ட்ரால் பிரச்சனையைத் தவிர்க்க தினமும் வெந்தய டீ குடியுங்கள். இதனால் உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனை கட்டுக்குள் வரும். மேலும் இதனால் உண்டாகும் கல்லீரல், இதயம் மற்றும் ரத்த பாதிப்புகளை வராமல் தவிர்க்கப்படுகிறது.

மலச்சிக்கல் :

வெந்தய டீ மிகச்சிறந்த மலமிளக்கியாக செயல்படும். நீங்கள் மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தால், அதனை குணப்படுத்த, தினமும் ஒரு டம்ளர் வெந்தய டீயைக் குடியுங்கள்.

உடல் எடைக்கு :

வெந்தய டீ உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களை கரைப்பதோடு, அடிக்கடி பசி ஏற்படுவதையும் தடுக்கிறது. உடலில் அவசியமற்று தங்கி கேடு விளைவிக்கும் கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்கச் செய்கிறது. அதோடு மேலும் உடல் எடையை தக்க வைக்கவும் உதவுகிறது.

இதய நோய்கள் :

தினமும் ஒரு கப் வெந்தய டீ குடிப்பதால், இதயத்தை பத்திரமாய் பாதுகாக்கலாம். இதிலுள்ள பொட்டாசியம், ரத்தத்தில் சோடியம் அளவை குறைப்பதால் இதயத்தை பாதிக்கும் அபாயம் இல்லை.

அசிடிட்டி :

அதிக அமிலம் எதுக்களிப்பு நோய்களால் நிறைய பேர் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு இந்த டீ ஒரு அருமருந்தாகிறது. இது அசிடிட்டி, நெஞ்செரிச்சல், மற்றும் உடலில் சுரக்கும் அதிகப்படியான அமிலத்தை தடுக்கிறது. இதனால் அல்சர் போன்ற நோய்கள் தடுக்கபப்டுகிறது.

சர்க்கரை வியாதி :

தினமும் வெந்தய டீயை குடித்து வந்தால், இந்த காலத்தில் பெரும்பாலோனோரைத் தாக்குகின்ற டைப்- 2 சர்க்கரை வியாதியை வாராமல் தடுக்கலாம். அவ்வாறு சர்க்கரை வியாதி வந்தவர்கள் இதனை குடித்தால் சர்க்கரை நோய்க்கு மாத்திரை சாப்பிட தேவையிருக்காது. சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.

கூந்தல் வளர்ச்சி :

இந்த காலத்தில் அனைவருக்கும் இருக்கும் பெரிய பாதிப்புகளில் ஒன்று முடி உதிர்வு. தினமும் இந்த வெந்தய தேனீர் குடித்து வாருங்கள். முடி அடர்த்தியாவை நீங்களே காண்பீர்கள். இது முடி வளற்ச்சியை வெகு வேகமாக ஊக்குவிக்கின்றது.

பித்த நோய்கள் :

நிறைய பேருக்கு உடல் சூட்டினால் அசிடிட்டி, நெஞ்செரிச்சல் என பலவித பாதிப்புகளில் ஆளாகிறார்கள். இந்த தேனீர் உடலை குளிர்ச்சி செய்வதால் பித்தம் சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கிறது.

அனைவருக்கும் பகிருங்கள்
படித்தேன்: பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
==================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

19.2.18

உங்களின் செயல்பாடுகளை எப்படி மேம்படுத்துவது?


உங்களின் செயல்பாடுகளை எப்படி மேம்படுத்துவது?

Random Access Memory என்பதற்கான நேரடி மொழிபெயர்ப்பு: நேரடி அணுகு நினைவகம்

செயல்களுக்கான நேரடி நினைவகம் என்று வைத்துக்கொள்ளுங்கள்

RAM (Random Access Memory) is storage used for a place to hold data. Think of it as a big filing cabinet that keeps things ready for the CPU in your phone to present it to your eyes and ears. It's infinitely (almost) re-writable, very fast, and used differently by different operating systems.

கடின உழைப்பு என்பது வேறு, புத்திசாலித்தனமான செயல்பாடு என்பது வேறு!

Q: Sir I respectfully disagree with what you said about *hard work and smart work*. Because mind can only focus one thing at a time. 

Ans: Yes.. Mind can focus only one thing at a time. But it has the ability to defocus from one thing and to focus on other thing within a fraction of a second. 

In India, multitasking has been practicing as an art called Avadana Kalai. 

A person who performs eight tasks at a time is called as Astavadani. If he performs ten tasks, he is Dasavadani. 

Like that up to two hundred tasks have been performed simultaneously. 

Moreover, everybody is performing multiple tasks in day to day life. 

e.g. When you drive a car, you listen to music, you talk to the people who are in the car, you talk over phone and at the same time you focus on the road, steering, accelerator, gear and break. 

When you prepare food, while idli is getting ready, you will be arranging for sambar, while sambar is getting ready, 

you will be preparing chutney at the same time you will be observing your kids also. 

So, multiple tasks are there not only in corporate field but also in personal life. 

You may say that if we focus on many things, we won't achieve anything. 

Let's take an example of mobile phones. Basic model phones can perform only one task at a time. 

Smart phones can perform multiple tasks simultaneously. But if the tasks are more, the speed will become slow and sometimes will hang. 

Here, whether you should reduce the tasks or increase the RAM capacity? 

If you increase the RAM capacity, it's progress. 

By meditation you can increase your RAM capacity tremendously. 

Without increasing your RAM capacity, if you focus on many things, definitely you will fail in everything. 

*Increase your RAM capacity*..

மொழிபெயர்ப்பால் சொல்ல வந்ததை முழுமையாக்ச் சொல்ல முடியாமல் போகலாம்  ஆகவே படித்ததை அப்படியே கொடுத்துள்ளேன். படித்துப் பயனுறவும்

அன்புடன்
வாத்தியார்
============================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

17.2.18

Astrology: ஜோதிடம்: 16-2-2018ம் தேதி புதிருக்கான விடை!


Astrology: ஜோதிடம்: 16-2-2018ம் தேதி புதிருக்கான விடை!

அந்த ஜாதகத்திற்கு உரியவர் பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த டாக்டர் திரு.சுப்பிரமணியன் சுவாமி
பிறந்ததேதி: 15-9-1939 காலை 4:30 மணி சென்னை

நான் எதிர்பார்த்தபடி நிறைய அன்பர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். சுமார் 28 பேர்கள் சரியான விடையை எழுதி உள்ளார்கள்.

அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்! அவர்களின் பெயர்கள் அவர்களுடைய பின்னூட்டங்களுடன் கீழே
கொடுத்துள்ளேன். பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்

மீண்டும் ஒரு புதிருடன் அடுத்த வெள்ளிக்கிழமை (23-2-2018) சந்திப்போம்!

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------
1
Blogger sundinesh1 said...
Subramanian Swamy.
Friday, February 16, 2018 5:31:00 AM
---------------------------------------------------
2
Blogger gowri radhakrishnan said...
அந்த பிரபலர் திரு.சுப்பிரமணிய சுவாமி அவர்கள். 15-9-1939 ஆம் வருடம், காலை 4.22 மணி அளவில், சென்னை மயிலாப்பூரில்

பிறந்தவர்
Friday, February 16, 2018 6:01:00 AM
-----------------------------------------------
3
Blogger Maheswari Bala said...
Name: Dr. Subramaniam Swamy
Date of Birth: Friday, September 15, 1939
Time of Birth: 04:30:00
Place of Birth: Chennai
Longitude: 80 E 18
Latitude: 13 N 5
Friday, February 16, 2018 7:34:00 AM
---------------------------------------------------
4
Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
Good morning sir the celebrity was Subramani Swamy, politician, born on 15/09/1939 on 4.30am,Mylapore
Friday, February 16, 2018 7:41:00 AM
-----------------------------------------------
5
Blogger arki77 said...
Subramanian Swamy
Friday, February 16, 2018 8:45:00 AM
----------------------------------------------------
6
Blogger Narayanan V said...
ஜோதிட புதிர் 16.02.2018 க்கான விடை
திரு . சுப்ரமணிய ஸ்வாமி அவர்கள் 15-09-1939 - 4.30 அதிகாலை
வெ.நாராயணன்
புதுச்சேரி
Friday, February 16, 2018 9:17:00 AM
-----------------------------------------------------------
7
Blogger anand tamil said...
15-செப்டம்பர்-1939 இல் பிறந்த அந்த தமிழ்நாட்டுக்காரர் திரு .சுப்பிரமணிய சாமி
Friday, February 16, 2018 9:41:00 AM
------------------------------------------------------
8
Blogger kmr.krishnan said...
இந்த ஜாதகம் முன்னாள் மத்திய அமைச்சர் உயர்திரு சுப்ரமணியம் சுவாமி அவர்கள். பிறந்த தேதி 15 செப்டம்பர் 1939 நேரம்

காலை 4 .30 அளவில் . பிறந்த ஊர் வத்தலகுண்டு.
Friday, February 16, 2018 9:52:00 AM
-------------------------------------------------------
9
Blogger Palani Shanmugam said...
மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,
இந்த வாரம் இடம் பெற்ற ஜாதகத்துக்குச் சொந்தக்காரர் டாக்டர் திரு. சுப்ரமணியன் சுவாமி அவர்கள்.இது ஏற்கெனவே Astrology:

Quiz 20. தெரிந்தால் சொல்லுங்கள் என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட ஜாதகம்தான்.
எஸ். பழனிச்சாமி
Friday, February 16, 2018 10:09:00 AM
------------------------------------------------------
10
Blogger bg said...
Subramanian Swamy born in Mylapore Chennai sep 15 1939
Friday, February 16, 2018 10:15:00 AM
--------------------------------------------------
11
Blogger RAMVIDVISHAL said...
Answer - SUBRAMANIAN SWAMY
Friday, February 16, 2018 10:16:00 AM
-----------------------------------------------
12
Blogger venkatesh r said...
ஜோதிடப் புதிர் 16-2-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!"
திரு.சுப்பிரமணியன் சுவாமி
பிறந்த தேதி: 15 செப்டம்பர், 1939, 4.30 AM (appx)
பிறந்த இடம்: மயிலாப்பூர்.
Friday, February 16, 2018 11:18:00 AM
-------------------------------------------------------
13
Blogger umajana said...
ஐயா,
இந்த ஜாதகத்துக்கு உரிய பிரபலம் பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் திரு சுப்பிரமணியன் சாமி அவர்கள். அவர் பிறந்தது 15/09/1939

அதிகாலை சுமார் 5:00 மணியளவில்.
நன்றி
Friday, February 16, 2018 11:46:00 AM
----------------------------------------------------
14
Blogger csubramoniam said...
ஐயா, ஜாதகத்திற்கு உரியவர் :டாக்டர் சுப்ரமணிய ஸ்வாமி அவர்கள்
பிறந்த நாள் :15/9/1939
நேரம் : 4.30 AM
இடம் :மயிலாப்பூர்
நன்றி
Friday, February 16, 2018 12:01:00 PM
--------------------------------------------------------
15
Blogger Shruthi Ramanath said...
Sir its subramaniya swamy
Friday, February 16, 2018 12:20:00 PM
--------------------------------------------------
16
Blogger GOWDA PONNUSAMY said...
Ayya Vanakkangal!
Subramanian Swamy who born 15 September 1939 at 5-30 hrs,in Mylapore, Chennai, is an Indian economist,

mathematician and politician who serves as a Member of Parliament in Rajya sabha etc.
EXTRA ORDINARY BRILLIANT WITH CRIMINAL MIND!!!
-Ponnusamy
Friday, February 16, 2018 12:40:00 PM
-----------------------------------------------------
17
Blogger Suresh said...
Name: Subramanian Swamy
Date of Birth: Friday, September 15, 1939
Time of Birth: 05:00:00
Place of Birth: Madras
Longitude: 80 E 18
Latitude: 13 N 5
Time Zone: 5.5
Friday, February 16, 2018 1:28:00 PM
-------------------------------------------------
18
Blogger Ananthakrishnan K R said...
வணக்கம்,
ஜாதகர்: சுப்ரமணிய சுவாமி
பிறந்த நாள்: 15/09/1939 @ 05.00 AM
பிறந்த ஊர்: சென்னை
நன்றியுடன்,
க இரா அனந்தகிருஷ்ணன்
சென்னை
Friday, February 16, 2018 2:19:00 PM
-----------------------------------------------------
19
Blogger G.Ramesh said...
Name of the personality: Subramaniyan Swamy
DOB: 15 September 1939
TOM: 04.15 AM
POB: Mylapore, Chennai
Ramesh Ganapathy
Nigeria
Friday, February 16, 2018 2:52:00 PM
-------------------------------------------------------
20
Blogger Ariyaputhiran Natarajan said...ஐயா,
16-2-2018 அன்று கொடுக்கப்பட்ட ஜாதகத்துக்குரியவர் முன்னாள் மத்திய அமைச்சர் Dr. சுப்ரமண்ய ஸ்வாமி அவர்கள். பிறந்த

தேதி 15-9-1939. நேரம் 04.30 A.M.
அ.நடராஜன்,
சிதம்பரம்.
Friday, February 16, 2018 3:07:00 PM
------------------------------------------------
21
Blogger Thanga Mouly said...
Qyiz 16-2-2018: Dr.சுப்ரமணிய சுவாமி, பிறந்த திகதி 15 SEP 1939
Friday, February 16, 2018 3:41:00 PM
--------------------------------------------------
22
Blogger Sathish Kumar said...
Subramaniam Swamy
Date of Birth : 15 – 09 – 1939
Time of Birth : 04 : 30
Place of Birth : Chennai
Friday, February 16, 2018 4:33:00 PM
----------------------------------------------------
23
Blogger Rajam Anand said...
Dear Sir
The answer to the quiz is Mr Subramanian Swamy who was born on September 15th 1939 in Mylapore India.
Kind Regards
Rajam Anand
Friday, February 16, 2018 4:42:00 PM
---------------------------------------------------
24
Blogger suresh radhakrishnan said...
sir the horoscope belongs to Mr. Subramania swamy DOB 15-09-1939
Friday, February 16, 2018 6:07:00 PM
-------------------------------------------------
25
Blogger Sinavar said...
சுப்ரமணியன் 15 -09 -1939 .
Friday, February 16, 2018 6:41:00 PM
---------------------------------------------------
26
Blogger angr said...
திருவாளர் சுப்பிரமணியன் சுவாமி அவர்கள்
Friday, February 16, 2018 8:00:00 PM
--------------------------------------------------
27
Blogger sundari said...
Dear sir,
Vanakkam he is Mr subramani swamy sir
Friday, February 16, 2018 9:42:00 PM
------------------------------------------------------------
28
Blogger thozhar pandian said...
பாரதிய ஜனதா கட்சி தலைவர் சர்ச்சைகளுக்கு பேர் போன செப்டம்பர் 15 1939 பிறந்த முனைவர் சுப்பிரமனியன் சுவாமி அவர்கள்
Friday, February 16, 2018 10:46:00 PM
============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

16.2.18

Astrology: Quiz. : ஜோதிடப் புதிர் 16-2-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!


Astrology: Quiz. : ஜோதிடப் புதிர்  16-2-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!

நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டு பிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும்  ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்

சென்ற வாரம் நிறைய அன்பர்கள் கலந்து கொண்டதோடு சரியான விடையைச் சொல்லி அசத்திவிட்டார்கள்!

தேதியைக் கண்டு பிடித்து விடுங்கள், மற்றதற்கு கூகுள் ஆண்டவர் உதவி செய்வாரே!


க்ளூ வேண்டுமா? தமிழ்நாட்டுக்காரர். நீண்ட நாட்களாக தில்லியில் வாசம். அகில இந்தியப் பிரபலம்!!!!

சரியான விடை நாளை வெளியாகும்!
அன்புடன்
வாத்தியார்
--------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

15.2.18

நீங்கள் அவசியம் காண வேண்டிய காணொளிகள்!


நீங்கள் அவசியம் காண வேண்டிய காணொளிகள்!

1. கர்மயோகத்தைப் பற்றி சுகி சிவம் அவர்களின் உரை:



2. மொழிவாரி மாநிலங்கள் பிரிவினையில், சென்னையைக் காப்பாற்றி தமிழகத்துடன் அது இருக்கும்படி போராடிச் செய்தவர்:



3. ஆறு நிமிடங்கள் ஓடக் கூடிய அருமையான குறும்படம். அவசியம் பாருங்கள்: படத்தின் பெயர் Piper



அன்புடன்
வாத்தியார்
==================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

14.2.18

மனம் கலங்காதிருக்க...என்ன செய்ய வேண்டும்?


மனம் கலங்காதிருக்க...என்ன செய்ய வேண்டும்?

இன்று மகாசிவராத்திரி. நேற்று இரவு துவங்கி இன்று காலை 9 மணிவரை மகாசிவராத்திரி. அனைவரும் இன்று சிவபெருமானை
வழிபடுவது. மிகுந்த நன்மைகளைத் தரும்! அனைவருக்கும் மகாசிவராத்திரி வாழ்த்துக்கள்!!!

அன்புடன்
வாத்தியார்
----------------------------------------------------
மனம் கலங்காதிருக்க...என்ன செய்ய வேண்டும்?

❗தகப்பனே கொலை செய்ய முயற்சித்த போதும் *ப்ரஹ்லாதன்* மனம் கலங்கவில்லை...

❗சுடுகாட்டு வெட்டியானுக்கு அடிமையாக்கிய போதும் *ராஜா அரிச்சந்திரன்* மனம் கலங்கவில்லை...

❗பெற்ற பிள்ளையே கேவலப்படுத்திய போதிலும் *கைகேயி* மனம் கலங்கவில்லை...

❗உறவினர்களே சபை நடுவே அசிங்கப்படுத்திய போதும் *விதுரர்* மனம் கலங்கவில்லை...

❗அம்புப்படுக்கையில் வீழ்ந்த போதிலும் *பீஷ்மர்* மனம் கலங்கவில்லை...

❗இளம் விதவையான சமயத்திலும் *குந்திதேவி* மனம் கலங்கவில்லை...

❗தரித்ரனாக வாழ்ந்த சமயத்திலும் *குசேலர்* மனம் கலங்கவில்லை...

❗ஊனமாகப் பிறந்து ஊர்ந்த போதிலும் *கூர்மதாஸர்* மனம் கலங்கவில்லை...

❗பிறவிக் குருடனாக இருந்தபோதிலும் *சூர்தாஸர்* மனம் கலங்கவில்லை...

❗மனைவி அவமானப்படுத்திய போதிலும் *சந்த் துகாராம்* மனம் கலங்கவில்லை...

❗கணவன் கஷ்டப்படுத்திய போதும் *குணவதிபாய்* மனம் கலங்கவில்லை...

❗இருகைகளையும் வெட்டிய நிலையிலும் *சாருகாதாஸர்* மனம் கலங்கவில்லை...

❗கைகால்களை வெட்டிப் பாழுங்கிணற்றில் தள்ளியபோதும் *ஜயதேவர்* மனம் கலங்கவில்லை...

❗மஹா பாபியினிடத்தில் வேலை செய்த போதும்*சஞ்சயன்* மனம் கலங்கவில்லை...

❗பெற்ற பிள்ளையை பறிகொடுத்த போதும் *பூந்தானம்* மனம் கலங்கவில்லை...

❗கூடப்பிறந்த சகோதரனே படாதபாடு படுத்தியபோதும் *தியாகராஜர்* மனம் கலங்கவில்லை...

❗நரசிம்மர் சன்னிதியில் விஷ தீர்த்தம் தந்த போதும் *மஹாராஜா ஸ்வாதித் திருநாள்* மனம் கலங்கவில்லை...

❗சோழ ராஜனின் சபையில் கண்ணை இழந்த பின்பும் *கூரத்தாழ்வான்* மனம் கலங்கவில்லை...

*எப்படி முடிந்தது இவர்களால்..?*

ரகசியம்...

*தங்களோடு இறைவன் எப்பொழுதும் இருக்கின்றான் என்று உணர்ந்ததால்...*🙏🏻

கடவுள் எப்பொழுதும் கூடவே இருக்கிறான் என்று உணர வழி?

*ஆழ்ந்த நம்பிக்கை...*

அந்த நம்பிக்கை ஏற்பட வழி..?

*முதல் வழி...* (சொல்லறிவு)

அறிஞர்கள், ஞானிகள் மற்றும் சான்றோர்களின் கூற்றை மனபூர்வமாக ஏற்று கொள்ளுதல்...

*இரண்டாம் வழி...* (சுய அறிவு)

மன அமைதியுடன், நடுநிலை உணர்வுடன், ஆழ்ந்த சிந்தனையில் புத்தி பல வகைகளில் ஆய்வு செய்து, உண்மை விளங்கும் போது

மனம் தெளிவடைந்து... அப்போது ஏற்படுவது...

நம்பிக்கை ஏற்பட்ட பின்...

மனம் செல்ல வேண்டிய பாதையில் சரியாக சென்று, உடல் மற்றும் மன ஆற்றலை பெருக்கி கொள்ளும் பயிற்சியாக...தொடந்து

செய்யப்படும் பிரார்த்தனை முறைகள்...

அந்த பிரார்த்தனைகள்...

*மந்திரமாக இருக்கலாம்...*

*ஜபமாக இருக்கலாம்...*

*தொழுகையாக இருக்கலாம்...*

*கீர்த்தனைகளாக இருக்கலாம்...*

மேலும், அனைத்திற்கும் அடிப்படையாக விளங்கும் *"அன்பும், அறநெறியும், உண்மையும், சத்தியமும், நியாய தர்மங்களை காக்கும்

பண்புகளாகவும்..."* இருக்கலாம்.

இவற்றை மாறாமல் கடைபிடித்தால்...வாழ்வில் தோன்றும் எந்த சங்கடங்களையும் எளிதில் கடக்கலாம்...

என்ன நடத்தாலும்,
எதை இழந்தாலும்,
*"ஆத்ம திருப்தியுடன் செய்யும் செயல்களே ஆத்ம பலத்தை தரும்..."*

அந்த ஆத்ம பலமே...எதையும் தாங்கும் சக்தி...

ஆதலால் ...

*விடாது நாம ஜபம் செய்வோம்...*

*தொடந்து தொழுகை செய்வோம்...*

*திடமாக பகவானை வழிபடுவோம்...*

*அன்பே கடவுள் என போற்றுவோம்...*

*உறுதியுடன் உண்மையாக இருப்போம்...*

இதனால் பெற்றிடுவோம்...மனஅமைதியும், அர்த்தமுள்ள வாழ்க்கையையும்...

*இந்த நாள் இனிய நாளாக நல்வாழ்த்துக்கள்...

படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

13.2.18

Astrology: எனக்கு ஜோதிடம் வருமா? (அதாவது மண்டையில் ஏறுமா?)


Astrology: எனக்கு ஜோதிடம் வருமா? (அதாவது மண்டையில் ஏறுமா?)

கல்வி, வைத்தியம், ஜோதிடம் ஆகிய மூன்றும் தர்மப் பணிகள். அதெல்லாம் முற்காலத்தில். அத்தொழிலைச் செய்பவர்களுக்கெல்லாம் மன்னர் மானியம் தருவார். அதனால் அன்றைய காலகட்டத்தில் அது சாத்தியப்பட்டது.

இப்போது மன்னர்களையும் ஒழித்துவிட்டார்கள். அதோடு அவர்களுக்குக் கொடுத்துவந்த மானியத்தையும் ஒழித்துவிட்டார்கள். எல்லாம் கலியுகம். கலி முற்றிக்கொண்டு வருகிறது.

இப்போது அவை மூன்றும்தான் காசு கொழிக்கும் தொழில்!

சரி, போகட்டும் சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன். வகுப்பறைக்கு வருபவர்களில் சிலர் (தனி மின்னஞ்சல் மூலமாக) கேட்கும் முக்கியமான கேள்விகள் இரண்டு உண்டு!

1. சார், எனக்கு ஜோதிடம் வருமா? (அதாவது மண்டையில் ஏறுமா?)
2. சார், நான் ஜோதிடராகப் பணி புரிய ஆசைப் படுகிறேன். அதற்கான வாய்ப்பு (என் ஜாதகப்படி) எனக்கு உண்டா?

ஜோதிடம் கற்றுக்கொள்வதற்கு ஆர்வமும், முயற்சியும் இருந்தால் போதும். யார் வேண்டுமென்றாலும் கற்றுக்கொள்ளலாம்! அத்துடன் கற்றுக்கொண்டவை அவ்வப்போது மறந்து போகாமல் இருப்பதற்கு, நினைவாற்றல் முக்கியம். முக்கியமான விதிகளைத் திரும்பத் திரும்பவும் படிக்க வேண்டும்.

புரிதலுக்கும், நினைவாற்றலுக்கும், ஜாதகப்படி (அதைச் சொல்லாவிட்டால் கடைசி பெஞ்ச் கண்மணி விடமாட்டாரே) புதன் ஜாதகத்தில் வலுவாக இருக்க வேண்டும். வலு என்றால் என்ன என்பதைப் பலமுறை சொல்லித்தந்திருக்கிறேன். புதன் ஆட்சி அல்லது உச்சம் பெற்றிருக்க வேண்டும் அல்லது கேந்திரங்கள் அல்லது திரிகோணங்களில் இருந்தால் நல்லது.

விளக்கம் போதுமா?

போதாது!

இரண்டாவது கேள்வி பாக்கியுள்ளது.

நீங்கள் ஜோதிடத்தைக் கற்றுக்கொள்வதுடன், பலரது ஜாதகத்தைப் பார்த்து, அலசி, பலன் சொல்லி, அவர்கள் அதைக்கேட்டு முகம் மலர்ந்த அனுபவம் வேண்டும். ஜோதிடத் தொழில் முதலில் டல்’ லடிக்கும். நீங்கள் பிரபலமான பிறகு, உங்களிடம் வந்தவர்களே மீண்டும் மீண்டும் வருவார்கள். பலரையும் கூட்டிக் கொண்டு வருவார்கள். அல்லது பலரையும் அனுப்பி வைப்பார்கள். அப்போதுதான் நீங்கள் சம்பாதிக்க முடியும்!

“அந்தக் கதை எல்லாம் வேண்டாம். ஜாதகப்படி என்ன அமைப்பு வேண்டும்? அதைச் சொல்லுங்கள்”

புதன் (Planet for Astrology) வர்கோத்தமம் பெற்றிருக்க வேண்டும். அதாவது இராசியிலும், நவாம்சத்திலும் ஒரே வீட்டில் இருக்க வேண்டும்.

ஐந்தாம் அதிபதியும், பத்தாம் வீட்டுக்காரனும் ஒருவருக்கொருவர் பார்வையில் இருக்க வேண்டும்.

அதைவிட முக்கியமாக நீங்கள் அட்டை (Board) மாட்டி ஜோதிடம் சொல்லத் துவங்குவதற்கு உங்களுக்கு நல்ல தசா புத்தி நடைபெறவேண்டும்

அதெல்லாம் எதற்கு?

எதையும் கற்று அறிவதில் தவறில்லை. ஆகவே இந்தக் கட்டுரையின் ஏழாம் பத்தியை மீண்டும் ஒருமுறை தருகிறேன். அதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஜோதிடம் கற்றுக்கொள்வதற்கு ஆர்வமும், முயற்சியும் இருந்தால் போதும். யார் வேண்டுமென்றாலும் கற்றுக்கொள்ளலாம்! இறையருளால் நமக்கு வேறு தொழில் இருக்கிறது. ஆகவே கற்றுக்கொள்வதுடன், அதைவைத்து நமது நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் உதவி செய்வதுடன் நிறுத்திக்கொள்வோம்.

அன்புடன்
வாத்தியார்
====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

12.2.18

short Story: சிறுகதை: பங்குதாரர்


short Story: சிறுகதை: பங்குதாரர்

சென்ற மாதம் மாத இதழ் ஒன்றில் அடியவன் எழுதி,  பலரது பாராட்டுக்களையும் பெற்ற சிறுகதை ஒன்றை நீங்கள் படித்து மகிழ இன்று வலை ஏற்றியுள்ளேன். அனைவரையும் படிக்க வேண்டுகிறேன்.

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------------
பங்குதாரர்

சொக்கலிங்க அண்ணனுக்கு பழநி தண்டாயுதபாணி மேல் அளவில்லாத பக்தி உண்டு. அதற்குக் காரணம், அவர் இளைஞனாக இருந்த காலத்தில் பழநிக்குப் பாதயாத்திரை செல்வது வழக்கம். அவ்வாறு செல்கையில் மூன்றாம் ஆண்டு நடைப் பயணத்தின்போதுதான் மீனாட்சியைச் சந்திக்க நேர்ந்தது.

அவர் பயணமாகச் சென்ற குழுவில்தான் அவளும், அவளுடைய தாயாரும், மற்றும் இரண்டு உறவினர்களும் ஒன்றாக வந்தார்கள். மருதுப் பட்டி தோப்பில் துளிர் விட்ட நட்பு, நத்தம், சானார்பட்டி, கோபால்பட்டி, திண்டுக்கல், செம்மடைப்பட்டி, குழந்தை வேலன் சந்நதி, பழநி என்று தைப்பூச நன்னாள்வரை தொடர்ந்தது.

இவர் விழுந்து, விழுந்து அவர்களுக்கும், மற்றவர்களுக்கும் பணிவிடைகள் செய்ய அவர்களுக்கு இவரை மிகவும் பிடித்துப் போய்விட்டது.

எப்போதும் சுறுசுறுப்பாகவும், உற்சாகமாகவும் இருப்பார். தோற்றத்தில் அந்தக் காலத்து அன்னக்கிளி திரைப்பட நாயகன் சிவகுமார் போல இருப்பார். மீனாட்சியும் உயர்ந்த மனிதன் திரைப் படத்தில் சிவகுமாருக்கு ஜோடியாக நடித்த நாயகி பாரதியைப் போலவே இருப்பார்.

”என் கேள்விக்கென்ன பதில்
உன் பார்வைக்கென்ன பொருள்
மணமாலைக்கென்ன வழி
உன் மௌனம் என்ன மொழி”

என்று பாடாமலேயே இருவருக்கும் காதல் மலர்ந்தது, அந்தக் காதல் அடுத்து வந்த வைகாசி மாதத்தில், ஒரு வளர்பிறை முகூர்த்தத்தில் திருமணத்தில் முடிந்தது.

அப்போது சொக்கலிங்கம் அண்ணனுக்கு இருபத்தைந்து வயது. மீனாட்சிக்கு இருபத்தோரு வயது.

நல்ல மனையாளை அடையாளம் காட்டியதோடு, கைபிடிக்கவும் வழி செய்த, பழனியாண்டவர் மேல் அவருக்கு மேலும் தீராத பக்தி  உண்டானது.

கோவை பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிகத்தில் பட்டம் பெற்றிருந்த சொக்கலிங்கம் அண்ணனை அவருடைய தந்தையார், இரும்பு வணிகம் செய்து கொண்டிருந்த தன்னுடைய நண்பர் ஒருவரின் கடையில் அனுபவம் பெற வேண்டும் என்பதற்காக வேலைக்குச் சேர்த்து விட்டிருந்தார்.  நான்கு ஆண்டுகள் அங்கே கடுமையாக உழைத்து, வியாபாரத்தில் உள்ள நெளிவு சுழிவுகளை எல்லாம் நன்கு கற்றுத் தேறியிருந்தார் நமது நாயகன்.

திருமணம் ஆன கையோடு, அவருடைய தந்தையார் பத்து லட்ச ரூபாய் முதலீட்டில் தனியாகக் கடை ஒன்றையும் வைத்துக் கொடுத்தார். கோவை என்.ஹெச் ரோட்டில் கடை. அருகில் இருந்த சந்தில் கிட்டங்கி. வியாபாரம் துவக்கத்தில் இருந்தே சூடு பிடித்து வளரத் துவங்கியது.

பழனியாண்டவர் மேல் இருந்த அதீத பக்தியால் தன் கடைக்கு பழநியப்பா ஸ்டீல்ஸ் என்ற பெயரையும் சூட்டியிருந்தார் சொக்கலிங்கம் அண்ணன். அத்துடன் பழனியாண்டவரையும் கூட்டாக சேர்த்துக் கொண்டிருந்தார். ஆண்டவருக்கு லாபத்தில் 20 சதவிகிதம் பங்கு என்பது எழுதாத ஒப்பந்தம்!

ஒவ்வொரு ஆண்டும் கணக்கை முடித்தவுடன், பங்குதாரர் பழநியாண்டவருக்கு உள்ள பங்கை பணவோலை மூலம் பழநி கோவிலில் செலுத்திவிடுவார். அதுபோல ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் பழநிக்குப் பாத யாத்திரையும் மேற்கொள்வார்.
தொடர்ந்து இருபது ஆண்டுகள் சென்று வந்தவர், அதற்குப் பிறகு உடல்நிலை காரணமாக பாதயாத்திரை செல்லாமல் தைப்பூச சமயத்தில் காரில் பழநிக்குச் சென்று பழநியில் மூன்று நாட்கள் தங்கி பழநியப்பனை தரிசனம் செய்துவிட்டு வருவார்.

தெளிந்த நீரோடைபோல வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது.

ஆசைக்கு பெண்ணொன்றும் ஆஸ்திக்கு ஆண் என்றும் இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையானார்.

ப்ரூக்பாண்ட் ரோட்டின் மையப் பகுதியில் இருந்து குருத்வாரா சங்கம் செல்லும் தெருவில் 20 செண்ட் இடம் ஒன்றை விலைக்குவாங்கி சொந்தமாகக் கட்டிடம் ஒன்றையும் கட்டி, அங்கே இருந்து நிர்வாகம் செய்தவாறு வியாபரத்தைத் தொடர்ந்தார், வியாபாரமும் சிறப்பாக நடைபெற்றது.

காலச் சக்கரம் சுழன்றதில் எல்லா மாற்றங்களும் நிகழ்ந்தன!

நல்லவை மட்டுமல்ல அல்லவை ஒன்றும் நடந்தது.

வியாபாரம் ஒன்றை மட்டுமே முனைப்போடு கவனித்து தனது ஆரோக்கியத்தைக் கவனிக்காமல் விட்டதால், வயதாகும்போது வரும் வியாதிகள் எல்லாம் ஒவ்வோன்றாக வந்து விட்டன. இரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய், முழங்கால் வலி என்று எல்லாம் வந்து உடம்பில் குடியேறிவிட்டன.

செட்டியாருக்கு மட்டுமல்ல, அவருடைய அன்பு மனைவிக்கும் அவை எல்லாம் வந்துவிட்டன. மருந்து மாத்திரைகளால் அவை கட்டுக்குள் இருந்தன.

அதுபற்றி யாராவது கேட்டால், சொக்கலிங்கம் அண்ணன் நகைச்சுவையாகச் சொல்வார்: “ கார் பெட்ரோலில் ஓடுகிறது: என் உடம்பு மருந்தில் ஓடுகிறது!”

சொக்கலிங்கம் அண்ணனுக்கும் அறுபது வயதாகிவிட்டது. சஷ்டியப்த பூர்த்தி சாந்தி பண்ணிக் கொள்ளவில்லை. அதற்காக வைத்திருந்த பணத்தில் ஊரில் ஏழ்மையில் உழன்ற இரண்டு நகரத்தார் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கு மொத்த செலவையும் ஏற்றுக் கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார்.

அத்துடன் தனது ஊரில் சிவன்கோவிலுக்குச் சொந்தமான இடத்தில் திருமண மண்டபம் ஒன்றையும் கட்டிக் கொடுத்தார். அதன் நிர்வாகத்தை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள், வருகின்ற வருமானத்தையும் கோவில் கணக்கில் வரவு வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி மண்டபத்தை அவர்களிடமே கொடுத்துவிட்டார்

சொக்கலிங்கம் அண்ணனின் ஊர், நகரத்தார் ஊர்களில் பெரிய ஊராகும். பங்காளிகள், தாய பிள்ளைகள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என்று ஏராளமான தொடர்புகள். அத்துடன் நெடுநாட்களாக கோவையில் இருப்பதால் மற்ற ஊர் நகரத்தார்களிடமும் பழக்கம் அதிகம். 59வது, 60வது, 70வது சாந்திக் கல்யாணங்கள், திருமணங்கள் என்று சராசரியாக மாதம் பதினைந்து அழைப்புக்க்களுக்கு மேல் வரும். எல்லோரும் வீடு தேடி வந்து கூப்பிட்டுவிட்டுப் போவார்கள்.

போகாமல் இருக்க முடியுமா?

காரில்தான் போவார் என்றாலும் சிரமமாக இருந்தது. செட்டிநாட்டு ஊர்களுக்குப் போக ஆறு மணி நேரம், திரும்பிவர ஆறு மணி நேரம் என்று பயணம் சள்ளையாக இருந்தது

அதனால், சம்பாதித்து போதும். இருப்பதை வைத்துக் கொண்டு நிம்மதியாக இருப்போம் என்று தன் சொந்த ஊருக்கே வந்து விட்டார். வியாபாரத்தை மொத்தமாகத் தன் மகனிடமே கொடுத்து, பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டார்.  இவரிடம் சுமார் எட்டு ஆண்டு காலம் பணி செய்து பயின்ற அனுபவத்தால் அவனும் அதைச் சிறப்பாகப் பார்த்துக்கொண்டான்.

கதை இப்படியே சென்று கொண்டிருந்தால் என்ன சுவாரசியம் இருக்கும்? கதை என்றால் திருப்பங்கள், டிவிஸ்ட்டுகள், முடிச்சுகள்
என்று ஏதாவது ஒன்று வேண்டாமா?

சொக்கலிங்கம் செட்டியார் வாழ்க்கையிலும் முடிச்சு ஒன்று விழுந்தது. ஆண்டு தோறும் பங்குதாரார் பழணியாண்டவரின் பங்கை அவர் செலுத்தி வந்தது போல, அவர் மகன் ஒழுங்காக செலுத்தாமல் காலம் தாழ்த்தி செலுத்தத் துவங்கினான். இந்த ஆண்டு அதையும் அவன் செய்யாததால், பழநியாண்டவருக்கு உரிய பணம் போய்ச் சேரவில்லை,

அதை அறிந்தவுடன் அண்ணன் துடித்துப் போய் விட்டார்.

நெருங்கிய உறவுகளுடன் தர்க்கம் செய்யக்கூடாது, வாக்குவாதம் செய்யக்கூடாது - உறவுகளில் கீறல் விழுந்து விடும் என்பதால் அதை அவர் ஒரு போதும் செய்ய மாட்டார். மகனுடன் நேரடியாகப் பேசி காரணத்தை அறிந்து கொள்ள அவர் விரும்பவில்லை. ஆகவே தன் அன்பு மனைவியை அழைத்து விஷயத்தைச் சொல்லி விசாரிக்கச் சொன்னார். மேலும் பழநியாண்டவருக்கு ஒரு வாரத்திற்குள் பணம் போய்ச் சேர வேண்டும். அதற்கு நீதான் பொறுப்பு என்றும் சொல்லிவிட்டார்.

ஆச்சி அவர்களும் அவரைச் சமாதானப் படுத்தி, நான் ஏற்பாடு செய்கிறேன். கவலைப் படாதீர்கள் என்று சொல்லி விட்டு ஊரிலிருந்து தங்களுடைய காரில் புறப்பட்டு கோவைக்குச் சென்றார்கள்.

என்ன நடந்தது? பணம் ஏன் போகவில்லை. ஆச்சி சொன்னபிறகாவது போய்ச் சேர்ந்ததா?

வாருங்கள், அதைத் தெரிந்து கொள்வோம்!

                 ****************************************************************

மீனாட்சி ஆச்சி கோவைக்கு வந்ததும் மகன் சுப்பிரமணியனை அழைத்து உட்காரவைத்து சரமாரியாகக் கேள்விகள் கேட்க ஆரம்பித்தார்.

      “மணி, சென்ற நிதியாண்டுக் கணக்கை முடித்து வருமான  வரியை எல்லாம் கட்டிவிட்டாயா?”

      “மார்ச் முபத்தொன்றாம் தேதி அட்வான்ஸ் டாக்ஸ் கட்டிய போதே அதெல்லாம் முடிந்துவிட்டது ஆத்தா! பாக்கி ஒன்றும் இல்லை”

      “நிகர லாபம் எவ்வளவு?”

      “ஐம்பது லட்ச ரூபாய். ஆடிட்டட் பேலன்ஸ் ஷீட்டை அப்பச்சிக்கு அனுப்பியிருக்கிறேனே ஆத்தா”

      “அதை நான் பார்க்கவில்லை! பழநி கோவிலுக்கு நாம் எவ்வளவு பணம் அனுப்ப வேண்டும்? அதை அனுப்பி விட்டாயா?”

      “பத்து லட்சம் அனுப்ப வேண்டும். அதில் ஒரு சின்ன மாற்றம். அந்தப் பணத்தை வேறு சில காரியங்களுக்கு தர்மமாகக் கொடுத்துவிட்டேன். பழநி கோவிலுக்கு அடுத்த ஆண்டுதான் பணம் அனுப்ப முடியும்”

      “என்ன காரியங்களுக்குக் கொடுத்தாய்?”

      “என் பெரிய மைத்துனன் மகன் அமெரிக்காவிற்கு எம்.எஸ் படிக்கப் போயிருக்கிறான். அவனை அனுப்பும் சமயத்தில் பணம் பற்ற வில்லை என்றார். அந்தப் பையனின் கல்விக்கு உதவுவதற்காக அந்தப் பணத்தைக் கொடுத்தேன்.”

      “உறவுகளுக்கு உதவுவது உதவிக் கணக்கில்தான் வரும். தர்மக் கணக்கில் எப்படி வரும்?’

      “இப்போது அவன் படிப்பதற்குப் பணம் கொடுத்தேன். அதைக் கல்விநிதி என்று வைத்துக் கொள்ளலாம் அல்லவா? கல்விக்கு உதவுவது தர்மமாகாதா?”

      “ஆகாது. முன்பின் தெரியாதவர்களுக்குக் கொடுப்பதுதான் தர்மக் கணக்கில் வரும். நீ கொடுத்துள்ள பணம் வராது. வியாபாரத்தில் கிடைக்கும் லாபத்தில் 40 சதவிகித்தை நீ எடுத்துக் கொள்ளலாம் என்று சொல்லியிருக்கிறோமே. அந்தப் பணம் அதாவது இருபது லட்ச ரூபாய் என்ன ஆயிற்று? அந்தப் பணத்தில் நீ அந்தப் பையனுக்குக் கொடுத்திருக்கலாமே?”

      “பாலக்காட்டில் பழைய இரும்பை உருக்கி கட்டுமான பணிகளுக்கான கம்பிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்று விலைக்கு வருகிறது. என் நண்பன் ஒருவனுடன் கூட்டாகச் சேர்ந்து அதை வாங்கி நடத்தலாம் என்று உள்ளோம். என் பங்குப் பணமாக ஐம்பது லட்ச ரூபாய் கொடுக்க வேண்டும். அதற்காக என் இருப்பை அப்படியே வைத்திருக்கிறேன்.”

      “கொள்ளைக்குப் போனாலும் போகலாம் கூட்டுத் தொழிலுக்குப் போகக்கூடாது என்று எங்கள் அப்பச்சி கூறுவார். புதுத் தொழிலெல்லாம் வேண்டாம். கையில் இருக்கிற இந்தத் தொழிலையே நீ அக்கறையுடன் செய்தால் போதும். பாலக்காட்டில் தொழிற்சாலை ஆரம்பித்தால் அதை யார் பார்த்துக் கொள்வது?”

       “என் நண்பன் பார்த்துக் கொள்வான். நானும் வாரத்திற்கு இரண்டு நாட்கள் அங்கே சென்று நடப்பைப் பார்த்துவிட்டுத் திரும்பலாம் என்று உள்ளேன்”

      “அதெல்லாம் நமக்கு சாத்தியப்படாது. ஒரே நேரத்தில் இரண்டு குதிரைகளை ஓட்டிச் செல்ல முடியாது. ஆகவே அந்த நினைப்பை விட்டுவிடு. இதையெல்லாம் உன் அப்பச்சியிடம் ஏன் சொல்லவில்லை?

      “போனில் சொன்னால் சத்தம் போடுவார். டென்சனாகி விடுவார். ஆகவே நேரில் சந்திக்கும்போது சொல்லலாம் என்றுள்ளேன்”

       “நீ ஒன்றையும் சொல்ல வேண்டாம். சொன்னால் அவர் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு படுத்து விடுவார். நீ அதைச் செய்யாமல் இரு. மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன். இன்னும் ஒரே ஒரு கேள்வி பாக்கியுள்ளது. பழனியாண்டவரைப் பற்றி நீ என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய்?

      “அப்பச்சி அடிக்கடி சொல்வதுபோல அவர் நம் குலதெய்வம். நம்மைக் காக்கும் குலதெய்வம்”

       “அதைவிட மேலானது ஒன்று இருக்கிறது. அவர் நம் கடைக்கு, நம் வியாபாரத்திற்குப் பங்குதாரர். அது தெரியுமல்லவா உனக்கு?”

       “தெரியும்”

       “பங்குதாரரின் பங்கை அவரிடம் கொடுப்பதைவிட்டு விட்டு நீ எப்படி உன் நோக்கத்திற்கு செலவு செய்யலாம். அவர் ஸ்லீப்பிங் பார்ட்னர். நேரில் வந்து கேட்க மாட்டார் என்ற நினைப்பா?”

        “--------------”

       “பழனியாண்டவர் பங்குதாரராக இருப்பதனால்தான் இத்தனை ஆண்டுகளாக வியாபாரம் நல்ல முறையில் நடந்திருக்கிறது. நஷ்டமே வந்ததில்லை. கொடுத்த சரக்குகளுக்கு வராத பாக்கி என்று எதுவும் இல்லை.  நாமும் நல்ல வளர்ச்சியைப் பெற்றிருக்கிறோம். நம் வாழ்க்கையும் செழிப்பாக இருக்கிறது. ஆகவே அவரை ஏமாற்ற நினைப்பது நம் தலையில் நாமே மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்வதைப் போன்றது. அதை மட்டும் செய்யாதே. செய்தால் உருப்படாமல் போய் விடுவோம். அதை மனதில் வை.

ஆத்தாளின் இந்த சொற்கள் அனைத்தும் சுப்பிரமணியனை செவிட்டில் அறைவதைப் போன்று இருந்தது.

அவன் கலங்கிப் போய் விட்டான். கண்களில் நீர் கோர்த்துக் கொண்டுவிட்டது

      “ஆத்தா என்னை மன்னித்துவிடுங்கள். என் தவறை நான் உணர்ந்துவிட்டேன். இப்போது என்ன செய்ய வேண்டும் என்பதை மட்டும் சொல்லுங்கள்.”

      “பங்குதாரருக்கு உரிய பங்கிற்கு பண ஓலை ஒன்றை எடுத்துக் கொடு. நான் ஊருக்குக் கிளம்புகிறேன். உன் அப்பச்சி அங்கே தனியாக இருப்பார். போகிறபோது தாராபுரம் வழியாகப் போகாமல் பழனி வழியாகச் சென்று கோவில் நிர்வாகத்தினரிடம் பண ஓலையைச் சேர்த்துவிட்டு, பழநியாண்டவரையும் தரிசித்து விட்டு நான் ஊருக்குப் போய்ச் சேருகிறேன்.

அடுத்த நாள் காலை ஆச்சி தான் ஊரிலிருந்து வந்த காரிலேயே திரும்பிச் சென்று விட்டார்கள்.

சுப்பிரமணியன் தான் செய்த தவறுக்குப் பிராயச் சித்தமாக பத்து லட்சத்திற்குப் பதிலாக தன் பணத்தையும் சேர்த்து பதினைந்து லட்சத்திற்கு பண ஓலை எடுத்து வந்திருந்தான். தன் தாயாரிடமும் அதைக் கொடுத்துவிட்டான்

அதைப் பார்த்தவுடன் ஆச்சியின் கண்கள் பனித்து விட்டன!

                           *******************************************************
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

10.2.18

Astrology: ஜோதிடம்: 9-2-2018ம் தேதி புதிருக்கான விடை!


Astrology: ஜோதிடம்: 9-2-2018ம் தேதி புதிருக்கான விடை!

அந்த ஜாதகத்திற்கு உரியவர் முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் அவர்கள்.

பிறந்த தேதி: 16-9-1945  காலை11.47 மணி, காரைக்குடி

நான் எதிர்பார்த்தபடி நிறைய அன்பர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். சுமார் 22 பேர்கள் சரியான விடையை எழுதி உள்ளார்கள். அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்! அவர்களின் பெயர்கள் அவர்களுடைய பின்னூட்டங்களுடன் கீழே கொடுத்துள்ளேன். பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்

மீண்டும் ஒரு புதிருடன் அடுத்த வெள்ளிக்கிழமை (16-2-2018) சந்திப்போம்!

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------
1
Blogger Maheswari Bala said...
Name: P. Chidambaram
Date of Birth: Sunday, September 16, 1945
Time of Birth: 11:47:21
Place of Birth: Karaikkudi
Longitude: 78 E 47
Latitude: 10 N 4
Friday, February 09, 2018 7:28:00 AM
--------------------------------------------------------
2
Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
Good morning sir the celebrity was famous politicians Thiru.Respected Pa. Chidambaram Former Home Minister of India, Born on 16/09/1945 time 11.47am place Kandanur Tamilnadu
Friday, February 09, 2018 7:54:00 AM
------------------------------------------------
3
Blogger Sathish Kumar said...
P Chidambaram
Date of Birth : 16 – 09 – 1945
Time of Birth : 11 : 47
Place of Birth : Kandanur
Friday, February 09, 2018 7:59:00 AM
----------------------------------------------------
4
Blogger Ananthakrishnan K R said...
வணக்கம்,
ஜாதகர்: பி சிதம்பரம்
பிறந்த நாள்: 16/09/1945 @ 11.47 மணி
பிறந்த ஊர்: காரைக்குடி
நன்றியுடன்,
க இரா அனந்தகிருஷ்ணன்
சென்னை
Friday, February 09, 2018 8:41:00 AM
-------------------------------------------------
5
Blogger kmr.krishnan said...
இந்த ஜாதகர் முன்னாள் நிதி அமைச்சர் திரு ப.சிதம்பரம் அவர்கள்.
16 செப்டம்பர் 1945 காலை 11 மணி 46 நிமிடம் 45 வினாடிகளுக்குப் பிறந்தவர்.
கண்டனூரில் பிறந்தவர்.
முன்னர் அளித்த பதிலில் தேதி 26 என்று குறிப்பிட்டுவிட்டேன் .மன்னிக்கவும் சரியான் தேதி 16 செப் 1945
Friday, February 09, 2018 9:29:00 AM
--------------------------------------------------
6
Blogger anand tamil said...
16 - செப்டெம்பர் -1945 இல் பிறந்த அந்த தமிழ்நாட்டுகாரர் முன்னாள் நிதியமைச்சர் பா.சிதம்பரம் அவர்கள்
இப்படிக்கு
தங்கள் உண்மையுள்ள
ஆனந்த்
Friday, February 09, 2018 9:43:00 AM
---------------------------------------------------
7
Blogger bg said...
P.Chidambaram
Friday, February 09, 2018 10:11:00 AM
------------------------------------------------
8
Blogger RAMVIDVISHAL said...
Answer P.CHIDAMBARAM
Friday, February 09, 2018 10:17:00 AM
---------------------------------------------------
9
Blogger csubramoniam said...
ஐயா,
ஜாதகத்திற்கு உரியவர் : காங்கிரஸ் ஆட்சியின் நிதி அமைச்சர் :திரு P.சிதம்பரம் அவர்கள்
பிறந்த தினம் : 16/9/1945
நேரம் : காலை 11.47
இடம் :காரைக்குடி
நன்றி
Friday, February 09, 2018 11:46:00 AM
-------------------------------------------------
10
Blogger umajana said...
ஐயா,
இந்த ஜாதகத்துக்கு உரிய பிரபலம் முன்னாள் பாரத நிதி அமைச்சர் திரு.ப. சிதம்பரம் அவர்கள். அவர் பிறந்தது 16/09/1945 சுமார் 11 ;47 மணியளவில்
Friday, February 09, 2018 11:49:00 AM
---------------------------------------------------
11
Blogger Palani Shanmugam said...
மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,
இந்த வார ஜாதகம், தமிழ்நாட்டைச்சேர்ந்த அரசியல்வாதியும்
இந்தியாவின் முன்னாள் நிதி மற்றும் உள்துறை அமைச்சருமான திரு. ப. சிதம்பரம் அவர்களுடையது ஆகும்.
எஸ். பழனிச்சாமி
Friday, February 09, 2018 12:32:00 PM
---------------------------------------------------
12
Blogger Shruthi Ramanath said...
It's chidambaram sir
Friday, February 09, 2018 3:08:00 PM
-----------------------------------------------------
13
Blogger Ariyaputhiran Natarajan said...
ஐயா,
கொடுக்கப்பட்ட ஜாதகத்துக்குரியவர் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் P. சிதம்பரம் அவர்கள். பிறந்த தேதி 16-9-1945. நேரம் 11.47 A.M.
அ.நடராஜன்,
சிதம்பரம்.
Friday, February 09, 2018 4:10:00 PM
---------------------------------------------------
14
Blogger Sinavar said...
திகதியை கண்டுபிடிக்க வகுப்பறையின் எந்த பதிவை படிக்க வேண்டும்
Friday, February 09, 2018 4:57:00 PM
----------------------------------------------------
15
Blogger Thanga Mouly said...
புதிர் விடை: திருவாளர் P. சிதம்பரம் பிறந்த திகதி: 16 SEP 1945
Friday, February 09, 2018 5:26:00 PM
-------------------------------------------------
16
Blogger Narayanan V said...
09.02.2018 புதிருக்கான விடை
திரு. ப. சிதம்பரம் அவர்கள்
வெ நாராயணன்
புதுச்சேரி
Friday, February 09, 2018 6:02:00 PM
-----------------------------------------------
17
Blogger G.Ramesh said...
Name of the personality: P.Chidambaram
(Earlier Finance Minister of Congress Government)
Date of Birth: 16 September 1945
Time of Birth: 11.35 AM
Place of Birth: Kannadukathan, Karaikudi.
Ramesh
Nigeria
Friday, February 09, 2018 7:59:00 PM
------------------------------------------------
18
Blogger sundinesh1 said...
P chidambaram
Friday, February 09, 2018 10:20:00 PM
-------------------------------------------------
19
Blogger thozhar pandian said...
முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள். பிறந்த தேதி 16 செப்டம்பர் 1945. இந்த ஜாதகத்தை மேலோட்டமாக பார்த்தால் மிகவும் சிரமமான வாழ்க்கை நடத்தும் ஜாதகம் போல் தெரிந்தாலும் நமக்கு தெரியும் இவர் ஒரு அகில உலக பிரபலம். பிறந்ததும் செல்வச்செழிப்பான குடும்பத்தில். அண்ணாமலை பல்கலை கழகத்தின் அண்ணாமலை செட்டியாரின் மகள் வழிப்பேரன் இவர். எம்.ஏ.எம்.இராமசாமி, எம்.ஏ.சிதம்பரம், ஏ.சி.முத்தையா போன்ற தொழிலதிபர்கள் இவரது உறவினர்கள். இந்திய நாட்டின் உயர்ந்த பதவி, மனைவி பிரபலமான வக்கீல், மாமனார் பெரிய நீதியரசர் கைலாசம், மாமியார் சவுந்தரா கைலாசமும் பிரபலமே. மருமகள் ஸ்ரீநிதி மருத்துவர் மற்றும் நாட்டிய பிரபலம்.
8ம் வீட்டில் 3 தீய கிரகங்கள், இலக்கினாதிபதி செவ்வாய் 8ம் வீட்டில் மறைவு, சூரியன் மட்டும் சொந்த வீட்டில், மனகாரகன் சந்திரன் கேதுவுடன் கூட்டணி. குருவும் சந்திரனும் கோந்திர வீட்டில் இருப்பது மட்டுமே சிறப்பாக தெரிகிறது. இலக்கினத்திகோ சந்திரனுக்கோ எந்த சுப கிரக பார்வையும் இல்லை. ஆனால் செவ்வாய் மற்றும் சனியின் பார்வை சந்திரன் மேல். சுக்கிரன் 9ம் வீட்டிலும் குரு 11ம் வீட்டிலும் இருப்பதா இந்த ஜாதகத்துக்கு இவ்வளவு ஆற்றலை அளித்தது?
அப்படி என்னதான் இந்த ஜாதகத்தில் சிறப்பு? நேரம் கிட்டும்போது தயவு செய்து அலசவும்.
Friday, February 09, 2018 10:20:00 PM
-----------------------------------------------------
20
Blogger Suresh said...
Real Name: P. Chidambaram
Birth Date: Sunday, September 16, 1945
Birth Place: Karaikkudi
Birth Time: 11:47:21
Saturday, February 10, 2018 1:31:00 AM
--------------------------------------------------
21
Blogger Ajith M S said...
16 செப்டம்பர் 1945 - ப. சிதம்பரம்
Saturday, February 10, 2018 1:37:00 AM
---------------------------------------------------
22
Blogger Rajam Anand said...
Dear Sir
The answer to the quiz is Mr Palaniappan Chidambaram who was born on the 16th September 1945 in Tamil Nadu in India.
Regards
Rajam Anand
Saturday, February 10, 2018 2:26:00 AM
-----------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

9.2.18

Astrology: Quiz. : ஜோதிடப் புதிர் 9-2-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!


Astrology: Quiz. : ஜோதிடப் புதிர்  9-2-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!

நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டு பிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும்  ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்

சென்ற வாரம் நிறைய அன்பர்கள் கலந்து கொண்டதோடு சரியான விடையைச் சொல்லி அசத்திவிட்டார்கள்!

தேதியைக் கண்டு பிடித்து விடுங்கள், மற்றதற்கு கூகுள் ஆண்டவர் உதவி செய்வாரே!


க்ளூ வேண்டுமா? தமிழ்நாட்டுக்காரர். அகில இந்தியப் பிரபலம்!!!!

சரியான விடை நாளை வெளியாகும்!
அன்புடன்
வாத்தியார்
--------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

8.2.18

Astrology: ஜாதகம்: உங்களுக்குப் பொருத்தமான துணை வேண்டுமா?


Astrology: ஜாதகம்: உங்களுக்குப் பொருத்தமான துணை வேண்டுமா?

திருமணத்திற்குப் பெண் பார்க்கும்போது, முக்கியமாக எதைப் பார்க்க வேண்டும்? இருவருக்கும் ஜாதகம் பொருந்தியுள்ளதா என்பதைத்தான் முதலில் பார்க்க வேண்டும்!!!

தோற்றம், கல்வி, வேலை, வருமானம், பெற்றோர்கள், குடும்ப மேன்மை, போன்றவற்றை எல்லாம் பிறகுதான் பார்க்க வேண்டும்.

1.நட்சத்திரப் பொருத்தம்
(1. நட்சத்திரப் பொருத்தம், 2. கணப் பொருத்தம், 3. மகேந்திரப் பொருத்தம், 4. ஸ்திரி தீர்க்கப் பொருத்தம், 5.யோனிப் பொருத்தம், 6. ராசிப் பொருத்தம், 7. ராசி அதிபதிப் பொருத்தம், 8. வசியப் பொருத்தம், 9. ரஜ்ஜுப் பொருத்தம் (இது முக்கியமானது) 10, வேதைப் பொருத்தம், ஆகிய பத்துப் பொருத்தங்கள் இதில் அடங்கும்)

2.செவ்வாய் தோஷம்
3. பாவசாம்யம்
4. தசா சந்திப்பு
ஆகிய நான்கையும் அலச வேண்டும்!!!!
---------------------------------------------------
ஒருவரின் பிறந்த நக்ஷத்திரத்திற்கு, எந்த நக்ஷத்திரங்கள் பொருந்தும் என்று தெரிந்து கொண்டு ஆண், பெண் ஜாதகங்களை எடுக்க வேண்டும். நமக்குக் கிடைத்திருக்கும் ஜாதகம் சரியாக இருக்கிறதா என்று தெரிந்துகொள்வது அவசியம். கையால் எழுதும் ஜாதகத்தில் சில சமயம் தவறு ஏற்பட வாய்ப்பு உள்ளது. பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த ஊர் கிடைத்தால், ஜாதகங்களைக் கணித்துச் சரிபார்க்க முடியும். ஒரே பஞ்சாங்கத்தில் கொண்டு வந்து பொருத்தம் பார்ப்பது திருப்திகரமாக இருக்கும். நக்ஷத்திரப் பொருத்தம், செவ்வாய் தோஷப் பொருத்தம், பாவசாம்யம், தசா சந்திப்பு என்ற 4 அம்சங்களையும் கவனமாகப் பார்க்க வேண்டும்.

1. யோனிப் பொருத்தம் தம்பதிகளின் அன்யோன்னிய உறவிற்கு அவசியம்.

2. ரஜ்ஜூ தட்டினால் அடிக்கடி இடம் மாறவேண்டி வரலாம், நோய்வாய்ப்பட்டு, திருமண வாழ்க்கை பாதிக்கப்படலாம், பிறக்கும் குழந்தைக்கு தோஷமும் கணவன் அல்லது மனைவி ஆயுளுக்குப் பாதிப்பும் வரலாம்.

3. ஷஷ்டாகமாக ராசி அமைந்தால் கணவன், மனைவி ஒற்றுமை பாதிக்கப்படும்.

4. செவ்வாய் தோஷம் சரியாகப் பொருந்தாவிட்டால், குடும்பத்தில் சண்டை சச்சரவு, பணக்கஷ்டம்.

5. குடும்ப நலன், உடல் நலம், மனநிலை, ஒழுக்கம், ஆயுள், இன்ப துன்பம், மாங்கல்ய பலம், தாம்பத்ய உறவு, படுக்கை சுகம் முதலியவை பாதிக்கப்படலாம்.

6. பாவசாம்யம் அல்லது தோஷசாம்யம் பார்க்காவிட்டால் ஒருவரின் தோஷத்தால் மற்றவர் பாதிக்கப்பட்டு, திருமண வாழ்க்கையில் பல கஷ்டங்கள் வர வாய்ப்பு உள்ளது.

7. தசா சந்திப்பு ஏற்பட்டால் எதிர்காலத்தில் சிரமமான காலகட்டங்களைச் சந்திக்க நேரிடும்.

இப்போது ஜாதகப் பொருத்தத்தின் விவரங்களைப் பார்ப்போம்.

நக்ஷத்திரப் பொருத்தம்

10 நக்ஷத்திரப் பொருத்தங்கள். தினம், கணம், ராசி, யோனி, ரஜ்ஜூ முக்கியமானவை. மற்ற ஐந்து, ராசி அதிபதி, வேதை, ஸ்த்ரீ தீர்க்கம், வசியம், மாகேந்திரம என்பன. தம்பதிகளின் உடலுறவிற்கு யோனிப் பொருத்தம் அவசியம்.

ரஜ்ஜூவில் சிரோ ரஜ்ஜூ, கண்ட ரஜ்ஜூ, ஊரு ரஜ்ஜூ, உதர ரஜ்ஜூ, பாத ரஜ்ஜூ என்று 5 வகை உள்ளது. ஒரே ரஜ்ஜூ அமையக் கூடாது. ரஜ்ஜூவும், யோனிப் பொருத்தமும் அமையாத ஜாதகங்களை ஒதுக்கிவிட வேண்டும். நக்ஷத்திரப் பொருத்தத்தை மட்டும் பார்த்துத் திருமணப் பொருத்தம் முடிவு செய்யக் கூடாது

செவ்வாய் தோஷம்

லக்னத்திலிருந்து 1-2-4-7-8-12ஆம் இடங்களில் செவ்வாய் இருப்பது செவ்வாய் தோஷம், லக்னம், சந்திரன், சுக்கிரன் 3இலிருந்தும், செவ்வாய் தோஷத்தைப் பார்க்க வேண்டும். செவ்வாய் தோஷத்திற்குப் பல விதிவிலக்குகள் உள்ளன. செவ்வாய் எந்த வீட்டில் இருக்கிறார் என்பதைப் பொருத்தும் இந்த விதிவிலக்குகளை அனுசரித்தும் கவனமாகப பொருத்த வேண்டும். செவ்வாய் தோஷம் இரத்த சம்பந்தப்பட்டது. செவ்வாய் தோஷம் இல்லாத ஜாதகத்தை செவ்வாய் தோஷம் உள்ள ஜாதகத்துடன் சேர்த்தால் திருமண வாழ்க்கை கண்டிப்பாகப் பாதிக்கப்படும். நோய்வாய்ப்பட்டு உயிருக்கு ஆபத்து வரக்கூடிய வாய்ப்புகூட உள்ளது.

பாவசாம்யம்

இதனை தோஷசாம்யம் எனவும் சொல்லலாம். பொதுவாக ஒரு ஜாதகத்தில் தோஷத்தை தரக்கூடியவர்கள் சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது. இவர்களால் ஏற்படும் தோஷங்களை, லக்னம், சந்திரன், சுக்கிரன் என்ற மூன்றிலிருந்தும் ஒரு கணக்குப்போட்டு, பெண்ணிற்கு எவ்வளவு தோஷம், ஆணுக்கு எவ்வளவு தோஷம். பொருத்தலாமா, கூடாதா என்று தீர்மானிக்கும் மிக முக்கியமான அம்சம் பாவசாம்யம். தம்பதிகளின் நல்வாழ்விற்கு மிகவும் அவசியமானது. பாவசாம்யத்தில் பெண்ணின் தோஷம் ஆணின் தோஷத்தை விடக் குறைவாக இருப்பது நல்லது. இருவருக்கும் சமமாகவும் இருக்கலாம். பாவசாம்ய நிர்ணயத்திற்குச் சில விதி முறைகள் உள்ளன. அவற்றை அனுசரித்து பாவசாம்யத்தை முடிவுசெய்ய வேண்டும்.

தசா சந்திப்பு

எல்லா ஜாதகங்களிலும் ஜனனகால தசா இருப்பு குறிப்பிடப்பட்டு இருக்கும். உதாரணமாகக் சுக்ர தசை 8 வருஷம் 10 மாதம், 12 நாள் என்பது போல இருக்கும். இதிலிருந்து ஆண், பெண் இருவருக்கும் எந்தத் தசை எப்போது மாறுகிறது என்று 70 / 75 வயது வரை பார்க்க வேண்டும். ஒரு வருஷ காலத்திற்குள் ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ தசை மாறினால் பொருத்தம் இல்லை என்று தீர்மானிக்கப்படும்.

சில ஜோதிடர்கள் இருபாலருக்கும் ஒரே தசை (சமதசை) நடக்கிறதா என்று பார்ப்பார்கள். தசா சந்திப்பு, அல்லது சமதசை வந்தால், பிற்காலத்தில் சிரமமான கால கட்டங்களை கடக்க வேண்டிவரும். மேலும் களத்திர தோஷம், புத்திர தோஷம், நாடிப் பொருத்தம், ஆயுள் பாவம், சமசப்தமம், லக்ன பொருத்தம், ஷஷ்டாஷ்டகம், காலசர்ப்பதோஷம், நாகதோஷம், எப்படி இருக்கிறது என்று கவனிக்க வேண்டும். இவ்விதம் சரியான முறையில் ஜாதகப் பொருத்தம் பார்க்க அரைமணி நேரமாவது தேவைப்படும். சில நிமிடங்களில் பொருத்தம் பார்த்தால் சரியாகப் பார்க்க முடியுமா? எனது அனுபவத்தில் பொருத்தம் பார்க்காமல் திருமணம் செய்தவர்கள் ஏதாவது ஒரு காலகட்டத்தில் பொருத்தம் பார்க்கிறார்கள். சிலர் காதலித்துவிட்டுப் பொருத்தம் பார்க்கிறார்கள். பொருத்தம் இல்லை என்றால் மனவேதனைப்படுகிறார்கள். தம்பதிகளுக்குள் மனக்கசப்பு ஏற்படுகிறது. பெற்றோர் துயரப்படுகின்றனர். பரிகாரம் தேடுகிறார்கள். திருமாங்கல்யத்தை மாற்றிக்கொள்கிறார்கள். திருமணப் பொருத்தம் பார்த்தும் கஷ்டங்கள் வருகின்றனவே என்று கேட்கலாம். அதற்கு வேறு எவ்வளவோ காரணங்கள் சொல்லலாம். வாழ்க்கையைச் சந்தோஷமாக நடத்துவது தம்பதிகளின் கையில்.

பொருத்தம் பார்க்கலாமா வேண்டாமா என்பது பெற்றோர் கையில்.

பொருத்தம் பார்த்துத் திருமணம் செய்வது தான் நல்லது. முடிவு உங்கள் கையில்.
---------------------------------------------------------------------------------------------

சரி, இவற்றை எல்லாம் எங்கே பார்ப்பது? என்னிடம் மென்பொருள் உள்ளது. பெண் மற்றும் பையனின் பிறப்பு விபரங்களைக் கொடுத்தால், அந்த மென் பொருள் இரண்டு ஜாதகங்களையும் அலசி பொருத்தம் உள்ளதா? அல்லது இல்லையா என்று சொல்லிவிடும். ஏ4 அளவில் 2 பக்கங்கள் விபரங்களைக் கொடுப்பதுடன். பொருத்தம் உள்ளது விவாகம் செய்யலாம் என்றோ அல்லது பொருத்தம் இல்லை விவாகம் செய்ய வேண்டாம் என்றோ சொல்லிவிடும்.

அது பணம் கொடுத்து நான் வாங்கி வைத்துள்ள மென்பொருள். ஆகவே பொருத்தம் பார்ப்பதற்கு நீங்கள் சிறிது கட்டணம் செலுத்த வேண்டியதிருக்கும்.

திருமணத்திற்குக் காத்து இருப்பவர்களும் எழுதலாம். திருமணம் ஆனவர்களும் எழுதலாம். சரியான துணையோடுதான் வாழ்ந்துகொண்டிருக்கும் என்று திருப்தியடையலாம். அல்லது ரிசல்ட் வேறு மாதிரி இருந்தால், தெரிந்து கொண்டு அணுசரித்துக் கொண்டு போகலாம்.

என்ன சரிதானே?

விருப்பம் உள்ளவர்கள் எழுதுங்கள். என்னுடைய மின்னஞ்சல் முகவரி: spvrsubbiah@gmail.com
Subject Boxல்  Matching என்பதை மறக்காமல் குறிப்பிடுங்கள்!!!

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!