மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

31.8.16

Useful Tips: என்னென்ன காய்கறி எப்படிப் பார்த்து வாங்க வேண்டும்?

Useful Tips: என்னென்ன காய்கறி எப்படிப் பார்த்து வாங்க வேண்டும்?

1. வாழை தண்டு: மேல் பகுதி நார் அதிகம் இல்லாமலும் உள்ளிருக்கும் தண்டுப்பகுதி சிறுத்தும் இருப்பதாகப் பார்த்து வாங்க வேண்டும்.
2. வெள்ளை வெங்காயம்: நசுக்கினாலே சாறு வரும்படி இருக்க வேண்டும்
3. முருங்கைக்காய் : முருங்கைக் காயை கட்டை மற்றும் ஆட்காட்டி விரல்களை பயன்படுத்தி சிறிது முறுக்கினால், எளிதாக வளைந்தால் அது நல்ல முருங்கை காய்
4. சர்க்கரை வள்ளிகிழங்கு: உறுதியான கிழங்கு இனிக்கும், அடி பட்டு கருப்பாக இருந்தால் கசக்கும்
5. மக்கா சோளம்: இளசாகவும் இல்லாமல் ரொம்பவும் முற்றாமல் மணிகளை அழுத்தி பார்த்தால் உள்ளே இறங்காமல் இருந்தால் அதுநல்ல மக்காச்சோளம்.
6.தக்காளி: தக்காளி நல்ல சிவப்பில் தக்காளி இருந்தால் அதை வாங்கலாம் (குறிப்பு பெங்களூர் தக்காளி ஒரு வாரம் ஆனாலும் கெடாது இருக்கும்).
7. கோவைக்காய் : முழுக்க பச்சையாக வாங்க வேண்டும். சிவப்பு லேசாக இருந்தாலும் வாங்க வேண்டாம். பழுத்து ருசி இல்லாமல் இருக்கும்
8. சின்ன வெங்காயம்: பழைய வெங்காயம் வாங்குவதே நல்லது. இரண்டு பல் இருப்பதாக, முத்து முத்தாக தெளிவாக இருப்பதை வாங்கவும்
9. குடை மிளகாய் : தோல் சுருங்காமல் ஃப்ரெஷாக இருப்பதை வாங்கவும். கரும்பச்சையில் வாங்கவேண்டாம். அடிபட்டிருக்கும். எல்லா நிறக் குடை மிளகாய்களும் ஒரே சுவையில் தான் இருக்கும்
10. காலிபிளவர்: பூக்களுக்கிடையே இடைவெளி இல்லாமல் அடர்த்தியாக காம்பு தடினமனாக இல்லாமல் வாங்கவும்
11. மாங்காய்- தேங்காயை காதருகே வைத்து தட்டி பார்ப்பது போல மாங்காயும் தட்டிப் பார்க்கவும். சத்தம் வரும். அத்தகைய மாங்காயில் கொட்டைச் சிறிதாக இருக்கும்
12. பீர்க்கங்காய் ( நார்ச்சத்து உள்ள மிக நல்ல காய் இது ) : அடிப் பகுதி குண்டாக இல்லாமல் காய் முழுதும் ஒரே சைசில் இருக்குமாறு பார்த்து வாங்குவது நல்லது
13. பரங்கிக்காய் கொட்டைகள் முற்றியதாக வாங்கவும்
14. புடலங்காய் : கெட்டியாக வாங்கவும். அப்போதுதான் விதைப்பகுதி குறைவாக, சதைப்பகுதி அதிகமாக இருக்கும்
15. உருளை கிழங்கு: முளை விடாமல் பச்சை நரம்பு ஓடாமல் கீறினாலே தோல் உதிர்ந்து பெயர்ந்து வர வேண்டும்
16. கருணை கிழங்கு: முழுதாக வாங்கும் போது பெரியதாக பார்த்து வாங்குவது நல்லது. வெட்டிய கிழங்கை விற்றால், உள் புறம் இளம் சிவப்பு நிறத்தில் இருக்குமாறு பார்த்து வாங்கவும்
17. சேப்பங்கிழங்கு : முளை விட்டது போல் ஒரு முனை நீண்டிருக் கும் கிழங்கு சமையலுக்கு சுவை சேர்க்காது. உருண்டையாகப் பார்த்து வாங்கவும்
18. பெரிய வெங்காயம் மேல் (குடுமி) பகுதியில் தண்டு பெரிதாக இல்லாமல் பார்த்து வாங்கவும்
19. இஞ்சி: லேசாக கீறி பார்க்கும் போது தோல் பெயர்ந்து வருவது நல்லது. நார் பகுதி குறைவாக இருக்கும்
20. கத்திரிக்காய்: தோல் softஆக இருப்பதுபோல் பார்த்து வாங்கவும்
21. சுரைக்காய் : நகத்தால் அழுத்தினால் நகம் உள்ளே இறங்க வேண்டும். அப்போது தான் இளசு என்று அர்த்தம்
22. பூண்டு: பல் பல்லாக வெளியே தெரிவது நல்லது. வாங்கலாம்
23. பீன்ஸ் பிரன்ச் பீன்ஸில் நார் அதிகம். புஷ் பீன்ஸில் நார் இருக் காது. தோல் soft-ஆக இருந்தால் சுவை அதிகமாய் இருக்கும்
24. அவரை: தொட்டுப் பார்த்து விதைகள் பெரிதாக இருக்கும் காய்கள் தவிர்ப்பது நல்லது. இளசாக வாங்கினால் நார் அதிகம் இருக்காது
25. பாகற்காய்: பெரிய பாகற்காயில் உருண்டையை விட, தட்டையான நீண்ட காய் நல்லது
26. வாழைப்பூ : மேல் இதழை விரித்து பூக்கள் கருப்பாகாமல் வெளிர் நிறத்தில் இருக்கிறதா என பார்க்கவும். அப்படி இருந்தால் பிரெஷ் காய் என்று அர்த்தம்
27. மொச்சை :கொட்டை பெரிதாக தெரியும் காய் பார்த்து வாங்கவும்
28. சௌசௌ : வாய் போன்ற பகுதி விரிசல் பெரிதாக இல்லாத படி பார்த்து வாங்கவும். விரிசல் இருந்தால் முற்றிய காய்
29. முள்ளங்கி: லேசாக கீறினால் தோல் மென்மையாக இருந்தால் அது இளசு - நல்ல காய்
30. வெள்ளரி மேல் நகத்தால் குத்தி பார்த்தால் நகம் உள்ளே இறங்கி னால், நல்ல காய். விதைகள் குறைவாக இருக்கும்
31. பச்சை மிளகாய் :நீளமானது சற்று காரம் குறைவாக இருக்கும். சற்றே குண்டானது தான் காரம் தூக்கலாக வாசனையும் பிரமாதமாக இருக்கும்.
===================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

30.8.16

மனவளம்: வாழ்வென்பது எது வரை?

மனவளம்: வாழ்வென்பது எது வரை?

சீன அறிஞர் எழுதியது, அது தமிழாக்கத்தில்.......!!!

வாழ்வென்பது உயிர் உள்ளவரை.........!!!

தேவைக்கு செலவிடு........

அனுபவிக்க தகுந்தன அனுபவி......

இயன்ற வரை பிறருக்கு பொருளுதவி செய்......

இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை......

போகும்போது எதுவும் கொண்டு செல்லப்போவதுமில்லை......

ஆகவே.......அதிகமான சிக்கனம் அவசியமில்லை.

மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே,

உயிர் பிரிய-வாழ்வு......

சுற்றம்,நட்பு,செல்வம் எல்லாமே பிரிந்து விடும்.

உயிர் உள்ளவரை,ஆரோக்கியமாக இரு......

உடல்நலம் இழந்து பணம் சேர்க்காதே.....

உன் குழந்தைகளை பேணு......

அவர்களிடம் அன்பாய் இரு.......

அவ்வப்போது பரிசுகள் அளி......

அவர்களிடம் அதிகம் எதிர்பாராதே........

அடிமையாகவும் ஆகாதே.........

பெற்றோர்களை மதிக்கும் குழந்தைகள் கூட
 பாசமாய் இருந்தாலும், பணி காரணமாகவோ,சூழ்நிலை கட்டாயத்தாலோ, உன்னை கவனிக்க
 இயலாமல் தவிக்கலாம், புரிந்து கொள்.......!!!

பெற்றோரை மதிக்காத குழந்தைகள்
 உன் சொத்து பங்கீட்டுக்கு-சண்டை போடலாம்......

உன் சொத்தை தான் அனுபவிக்க,
நீ சீக்கிரம் சாக வேண்டுமென,
வேண்டிக்கொள்ளலாம்-பொறு
 உரிமை அறிவர்,கடமை அறியார்

 அவரவர் வாழ்வு, அவரவர் விதிப்படி-அறிந்துகொள்.

இருக்கும்போதே குழந்தைகளுக்கு கொடு,

ஆனால்......

எல்லாவற்றையும் தந்துவிட்டு,பின் கை
 ஏந்தாதே,

எல்லாமே இறந்த பிறகு என,உயில் எழுதி
 வைத்திருந்தால்,

எப்போது சாவாய் என-எதிர்பார்த்து
 காத்திருப்பர்.

மாற்ற முடியாத தை மாற்ற முனையாதே,

மற்றவர் குடும்ப நிலை கண்டு, பொறாமையால்
 வதங்காதே.....!!!

அமைதியாக மகிழ்ச்சியோடு இரு.......

பிறரிடம் உள்ள நற்குணங்களை கண்டு
 பாராட்டு-நண்பர்களிடம் அளவளாவு.

நல்ல உணவு உண்டு.....

நடை பயிற்சி செய்து.....

உடல் நலம் பேணி......

இறை பக்தி கொண்டு......

குடும்பத்தினர்-நண்பர்களோடு கலந்து உறவாடி
 மனநிறைவோடு வாழ்-இன்னும்......

இருபது,முப்பது,நாற்பது ஆண்டுகள்.
சுலபமாக ஓடிவிடும்......!!!

அதற்கு தயாராகு......!!!

படித்ததில் பிடித்தது......!!!
=====================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

29.8.16

Short Story: சிறுகதை: எது பெரிய பதவி?


Short Story: சிறுகதை: எது பெரிய பதவி?

மாத இதழ் ஒன்றிற்காக அடியவன் எழுதி இந்த மாதம் 20-8-2016 அன்று அந்த இதழில் வெளிவந்த சிறுகதை. நீங்கள் படித்துப் பார்ப்பதற்காக இங்கே பதிவிட்டுள்ளேன்
அன்புடன்,
SP.VR. சுப்பையா.

--------------------------------------------------------------------------------
சிவநேசன் செட்டியார் எதிர்பார்க்கவில்லை. அது நடந்து விட்டது. அவசர சிகிச்சைக்காக மதுரையில் உள்ள மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் ஆச்சியின், அதாவது அவரது மனைவி அன்னபூரணி ஆச்சியின் உயிர் பிரிந்து விட்டது.

செட்டி நாட்டிலுள்ள தங்கள் ஊரில் இருந்து காரைக்குடியில் உள்ள மருத்துவ மனைக்குத்தான் முதலில் சென்றார்கள். மூச்சுத் தினறல் இருக்கிறது என்று சொல்லி அதற்கு மருந்து கொடுத்து விட்டு, நாடித் துடிப்பும் சீராக இல்லை. நீங்கள் மதுரைக்குச் செல்லுங்கள். அங்கேதான் வைத்தியம் செய்ய முடியும் என்று சொல்லி அனுப்பி வைத்து விட்டார்கள்.

ஆச்சியின் உயிர் பிரிந்த அதிர்ச்சியைவிட, காரில் செல்லும்போது ஆச்சி அவர்கள் பேசிய பேச்சுத்தான், அவருக்கு பெரும் அதிர்ச்சியாகி, பலமுறை அவர் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது.

“ என் காலம் முடியப் போகிறது. சிகிச்சை செய்கிறேன் என்று என்னை அவதிப்பட வைக்காதீர்கள். உங்களிடம் ஒன்றே ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன். சொல்லட்டுமா?”

“சரி சொல்லடி அன்னம்....” என்று செட்டியார் வாஞ்சையுடன் சொல்ல, ஆச்சி அவர்கள் மெல்லிய குரலில் சொன்னார்கள்.

“பதவி, பதவி என்று இனிமேல் அலையாதீர்கள். உலகத்திலேயே பெரிய பதவி எது தெரியுமா?”

“என்னைவிட நீதான் கெட்டிக்காரி. நீயே சொல்”

“சிவபதவிதான் பெரிய பதவி. அந்தப் பதவி கிடைக்க இனிமேல் பாடுபடுங்கள்.”

“உனக்கு வேண்டுமென்றால் சிவபதவி கிடைக்கும். நீ சிவபக்தை. எனக்கு எப்படிக் கிடைக்கும்?”

“கருணையே வடிவானவர் சிவபெருமான். வேண்டுதல், வேண்டாமை இல்லாதவர். தன் பக்தர்கள் அனைவருக்கும் சிவபதவியை கொடுத்து அருளக்கூடியவர் அவர். சிவபதவி கிடைத்தால் முக்தியடையலாம். முக்தியடைந்தால் அடுத்த பிறவி இல்லை. அடுத்தடுத்துப் பிறந்து பிறவிப் பெருங்கடலில் நீந்திக் கஷ்டங்களையும், துயரங்களையும் அனுபவிக்காமல் இறைவனோடு இருந்துவிடலாம்.”

“அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்? அதையும் சொல்!”

“ தினமும் காலையிலும், மாலையிலும் சிவன் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்துவிட்டு வாருங்கள். திருவாசகத்தைப் பாராயணம் செய்யுங்கள். இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க! என்று தினமும் 108 முறை சொல்லுங்கள்.தினமும் ஐந்து எளியவர்களுக்கு அன்னதானம் செய்யுங்கள். உங்களால் முடியும். செய்யுங்கள். முதலில் உங்களுடைய கொடுக்கல் வாங்கல் தொழிலை நிறுத்துங்கள். இருக்கிற செல்வம் போதும். என்ன செய்வீர்களா? எனக்காக செய்வீர்களா?”

“உனக்காகச் செய்கிறேனடி அன்னம்....” என்று சொல்லச் சொல்ல, ஆச்சி அவர்கள் புன்னகையுடன் அவர் கையைப் பிடிக்க முயன்று, அது முடியாமல் போய், செட்டியாரின் மடியிலேயே சாய்ந்துவிட்டார்கள். உயிர் பிரிந்து விட்டது. செட்டியாரிடம் வாக்குறுதி வாங்கிய மனத் திருப்தியோடு ஆச்சியின் காலம் முடிந்துவிட்டது.

******************************************

சிவநேசன் செட்டியாருக்கு பதவிகள் மேல் அப்படியொரு ஈடுபாடு. ஆர்வம். எந்த அமைப்பு என்றாலும், துண்டைத் தோளில் போட்டுக் கொண்டு, நான் என்று முதல் ஆளாகப் போய் நின்று விடுவார். சுமார் ஆயிரம் புள்ளிகளைக் கொண்ட செட்டிநாட்டு ஊர் அவருடைய ஊர். ஊருக்குள் அவரைத் தெரியாதவர்களே இருக்க முடியாது. இத்தனைக்கும் அவருக்கு 55 வயதுதான். அதற்குள் பிரபலமாகிவிட்டார்.

தங்கள் ஊருக்குள் உள்ள சிவன் கோயில், மற்றும் உள்ள ஏழு கோயில்கள், அவற்றின் நிர்வாக அமைப்புக்கள், பொது நல அமைப்புக்கள், சஷ்டி அபிஷேகக் குழு, பாதயாத்திரைக்குழு,  அந்த வட்டகையைச் சேர்ந்த சுழற்சங்கம் என்று எங்கே பதவி இருந்தாலும், அது தலைவர் பதவி அல்லது செயலாளர் பதவி என்று எந்தப் பதவியாக இருந்தாலும், அதில் இடம் பிடிக்காமல் விட மாட்டார்.

ஊருக்குள் அவர் செல்வந்தர். அத்துடன் கொடுக்கல், வாங்கல் தொழிலையும் செய்து கொண்டிருக்கிறார். ஆகவே தனக்கு வேண்டியவர்கள், வேண்டியவர்கள் என்றால் அவரிடம் பற்று வழி உள்ளவர்கள்தான், பத்து அல்லது இருபது பேரை கூட்டிக் கொண்டு போய் விடுவார்.
அவர் பெயரை முன் மொழிவதற்கும், வழி மொழிவதற்கும் அவர்கள் உதவுவார்கள். மற்றதை அவர் பார்த்துக்கொள்வார்.

இருபது வருடங்களாக எல்லாப் பதவிகளிலும் இருந்து விட்டார். தான் இதுவரை வகித்த பதவிகளை முன்னாள் என்ற அடைமொழியுடன் தனது அடையாள அட்டையில் அதாவது விசிட்டிங் கார்டில் பட்டியல் இட்டும் வைத்துள்ளார்.

ஆனால் அவர் மனைவி அன்னபூரணி ஆச்சிக்கு, அவருடைய பதவி சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள் எதுவுமே பிடிக்காது. செட்டியாருக்கு மூளை வறண்டு விட்டது. பதவிப் பித்து தலைக்கேறி அங்கேயே குடியிருக்கிறது. நாம் சொன்னால் எங்கே கேட்கப் போகிறார் என்று எதுவும் சொல்லாமல் மெளனியாக இருந்து விடுவார்.

“ரேசன் கார்டில்தான் தலைவர் என்ற பெயரில் உங்கள் பெயர் இருக்கிறதே! அது போதாதா? எதற்காக இந்தப் பதவி மோகம்?” என்று ஒருமுறை ஆச்சி அவர்கள் கேட்டபோது, செட்டியார் கோபமாகக் கத்தித் தீர்த்துவிட்டார்.

அதற்குப் பிறகு ஆச்சி அவர்கள் பதவி விஷயமாக அவருடன் பேசுவதை நிறுத்திக் கொண்டு விட்டார்கள். இப்போது இறக்கும் முன்பாக தன் ஆதங்கத்தைத் தீர்த்துக் கொள்வதற்காகப் பேசினார்கள்.

அந்தப் பேச்சு செட்டியாரிடம் பெரிய மாற்றத்தை உண்டாக்கியது. பார்ப்பவர்கள் வியக்கும் வண்ணம் ஆளே தலை கீழாக மாறிவிட்டார்.

முதலில் தனது கொடுக்கல் வாங்கல் தொழிலை முடிவிற்குக் கொண்டு வந்தார். தன்னிடம் வைப்புத் தொகை போட்டிருந்தவர்களை எல்லாம் அழைத்து, அவர்களுடைய பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டார். தன்னிடம் கடன் வாங்கியிருந்தவர்களின் பட்டியலைத் தயார் செய்து, பிராமிசரி பேப்பர்களுடன், உள்ளூரில் இருந்த தன் நெருங்கிய நண்பர் ஒருவரிடம் கொடுத்து, ”மொத்தம் ஒரு கோடி ரூபாய் நிலுவையில் இருக்கிறது. எல்லாவற்றையும் நீயே பார்த்து வசூல் செய். வசூலாக வசூலாக பத்து பெர்சண்ட் கமிஷனை நீ எடுத்துக் கொண்டு மீதியை என் வங்கிக் கணக்கில் கட்டிவிடு. முடியாதவர்களை அழைத்து வங்கிகளில் செய்வதுபோல வட்டியைத் தள்ளுபடி செய்து ஒன் டைம் செட்டில்மெண்ட்டாக பணத்தை வாங்கு.வந்தவரை போதும். மூன்று மாதங்களுக்குள் இதைச் செய்து கொடு. பெரும் உதவியாக இருக்கும். அந்தப் பணம் எனக்கு வேண்டாம். நம்ம ஊர் சிவன் கோயிலுக்குத்தான் கொடுப்பதாக உள்ளேன். திருப்பணிக் கணக்கில் வரவு வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி விடுவேன்” என்றார்

நண்பரும் கோயில் காரியம் என்பதால் ஒப்புக்கொண்டு அந்தப் பணியைச் செய்யத் துவங்கினார்.

அடுத்ததாக தான் தலைவர் பதவியில் இருந்த இரண்டு அமைப்புக்களுக்கும், தன்னுடைய பதவி விலகல் கடிதத்தைக் கொடுத்து, அந்தப் பதவிகளில் இருந்து விலகிக் கொண்டார்.

ஆச்சியின் கேதத்திற்காக அமெரிக்காவில் இருந்து தன் மனைவியுடன் வந்திருந்த தன் மகனை அழைத்து, ஆச்சியின் தங்க,வைர நகைகளைக் கொடுத்துவிட்டார். எல்லாம் ஐம்பது லட்ச ரூபாய் பெறுமானமுடையவை. காரைக்குடியில் உள்ள லாக்கரில் பத்திரமாக வையுங்கள் என்றார். கேத்ததிற்கு வந்திருந்த தன் இளைய சகோதரியிடம் ஆச்சியின் வெள்ளிப் பாத்திரங்கள் அனைத்தையும் கொடுத்துவிட்டார். அவை மொத்தம் 25 கிலோ அளவில் இருக்கும். உன் மகள் திருமணத்திற்கு இவற்றைக் காசாக்கிப் பயன் படுத்திக்கொள் என்று சொல்லிவிட்டார்.

வந்த பத்தாவது நாளே அவருடைய மகன் அமெரிக்காவிற்குத் திரும்பிப் போய்விட்டான். மருமகள் இவருடைய ஆச்சி மகள். அவள் அத்தை இறந்த அதிர்ச்சி மாமாவிற்குத் தீரட்டும் நான் இரண்டு மாதம் மாமாவுடன் இருந்துவிட்டுப் பிறகு வருகிறேன் என்று சொல்லி இங்கேயே இருந்து விட்டாள்.

ஆச்சி இறந்து 21 நாட்களுக்குப் பிறகு செட்டியார் முன்பு செய்து, விட்டுப்போன சந்தியா வந்தனத்தைத் தினமும் இரண்டு வேளைகள் செய்யத் துவங்கினார். அதுபோல வீட்டுக்கு எதிரில் இருந்த சிவன் கோயிலுக்குத் தினமும் இரண்டு வேளைகள் சிரத்தையாகச் சென்று வந்தார்.

சொ.சொ.மீ அவர்கள் எழுதிய திருவாசகம் நூல் ஒன்றை வைத்திருந்தவர், அதை எடுத்துப் பாராயணம் செய்யத் துவங்கினார்.

காலம் யாருக்காகவும் காத்திருக்காது அல்லவா? ஒரு மாதம் போனதே தெரியவில்லை.

ஒரு நாள் காலை, அவருடைய மருமகள் அவருடன் பேச்சுக் கொடுத்தாள்.

“மாமா, எனக்கு எல்லாமே வியப்பாக இருக்கிறது. நீங்கள் இப்படி நெற்றி நிறைய விபூதி பூசி முழு சிவபக்தராக ஆவீர்கள் என்று யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள். இந்த மாற்றம் உங்களுக்கு எப்படி சாத்தியமாயிற்று?”

“இறந்து போன உங்கள் அத்தைதான் காரணம்”

“அத்தை கடைசியாகச் சொன்னதைவைத்தா இத்தனை மாற்றங்கள்?”

“உங்கள் அத்தையின் உடல்தான் எரிந்து சாம்பலாகிவிட்டது. ஆனால் ஆத்மா இங்கே என்னுடன்தான் இருக்கிறது. நான் சந்தியாவந்தனம் பண்ணும் போதும், உணவு உண்ணும்போதும் உன் அத்தை வளவு பட்டியக் கல்லிலேயே உட்கார்ந்து என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறாள். என் மீது அவளுக்கு அத்தனை அன்பு. அதனால் அவளுடைய ஆத்மா என்னை விட்டுப் பிரிய மறுக்கிறது. நான் செய்த புண்ணியம் எனக்கு நல்ல மனைவி அமைந்தாள். பராசக்தி போன்ற தோற்றமும் செயலும் உடையவள் அவள்! அவள் என் மீது கொண்டிருக்கும் அன்பிற்கு எதுவும் ஈடாகாது.இன்னும் மூன்று மாதத்தில் நாம் போகலாம் என்றும் சொல்லிக் கொண்டிருக்கிறாள்”

“எல்லாம் பிரம்மையாக இருக்கும் மாமா”

“பிரம்மை அல்ல. உண்மை.பொறுத்திருந்து பார்! கவியரசர் கண்ணதாசன் சொல்வார், உண்டு என்றால் அது உண்டு. இல்லை என்றால் அது இல்லை
உங்களுக்கெல்லாம் அது இல்லாமலிருக்கலாம். ஆனால் எனக்கு அது உண்டு”

அத்துடன் மருமகள் தன் உரையை முடித்துக் கொண்டாள்

****************************************

அன்று சிவராத்திரி. அதற்கு முதல்நாள் தான், செட்டியார், கடன்காரர்களிடம் இருந்து அதுவரை வசூலாகி இருந்த முப்பது ல்ட்ச ரூபாய் பணத்துடன், ஊருக்குச் செல்லும்போது தன் மகன் கொடுத்துவிட்டுப்போன இருபது லட்ச ரூபாயையும் சேர்த்து, கோயிலுக்கு மொத்தமாக ஐம்பது லட்ச ரூபாய்க்கான காசோலையை, அதன் காரியக் காரர்களிடம் கொடுத்திருந்தார்.

நாளை மாலை சிவராத்திரியை முன்னிட்டு கோயிலில் விஷேச அபிஷேகம், அலங்காரம் பூஜை எல்லாம் உண்டு, வாருங்கள் என்று அவருக்கு அழைப்புக் கொடுத்திருந்தார்கள்.

அடுத்த நாள் மாலை, கண் குளிர சிவனாரை வணங்கியவர் கோயில் அமைப்பாளர்கள் கொடுத்த காளாஞ்சி, பிரசாதம் எல்லாவற்றையும் வாங்கித் தன் மருமகளிடம் கொடுத்ததோடு, ”நீ முன்னால் வீட்டிற்குச் செல் ஆத்தா, நான் அரை மணி நேரம் கழித்து வருகிறேன்” என்று சொல்லி அவளை அனுப்பி வைத்தார்

கோயிலை விட்டு வந்தவர், எதிரில் இருந்த ஊரணியைப் பார்த்த போது, அதன் சுற்றுச் சுவரில் தன் மனைவி அன்னபூரணி அமர்ந்திருப்பதைப் பார்த்தார். அவருக்கு அப்படித்தான் தெரிந்தது. வாருங்கள் இங்கே என்று கூப்பிடுவதைப் போல் இருந்தது.

சின்னைபிள்ளைகளைப் போல ஓட்டமும் நடையுமாக அங்கே விரைந்தவர், குறுக்கே வந்த கோயில் மாட்டைக் கவனிக்கவில்லை. மாடும் ஒட்டமும் நடையுமாகத்தான் வந்து கொண்டிருந்தது. வந்த வேகத்தில் மாடு இவரை இடித்து விட்டது. தடால் என்று கீழே விழுந்தார்.விழுந்த வேகத்தில் தலையில், நெற்றிப் பொட்டில் அடிபட உயிர் பிரிந்துவிட்டது.

ஊருக்குள் அத்தனை பேரும் அன்று இரவு அதைத்தான் பேசிக் கொண்டிருந்தார்கள். ’பெரிய மனுஷன்னா பெரிய மனுஷந்தானய்யா, சிவன் கோயிலுக்கு தர்மமா ஐம்பது லட்ச ரூபாய் கொடுத்தவர், சிவராத்திரி அன்னைக்கு சிவன் கோயில் வாசலிலேயே இறந்து போனாரய்யா - நிச்சயம் அவருக்கு சிவபதவி கிடைக்கும்.”

கிடைக்கட்டும். கிடைக்கட்டும்.  அப்போதுதானே அன்ன பூரணி ஆச்சியின் ஆத்மாவும் சாந்தியடையும்!

*************************************
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

25.8.16

Quiz: புதிர் எண்.115: பதில்: ஒரு தலைவன் இருக்கிறான். மயங்காதே!

Quiz: புதிர் எண்.115: பதில்: ஒரு தலைவன் இருக்கிறான். மயங்காதே!

எந்தப் பிரச்சினையாக இருந்தாலும், இறைவன் இருக்கிறார். அவர் உதவுவார் என்ற நம்பிக்கையோடு இருந்தால், தலைவலி இல்லை அல்லவா?

நேற்று ஒரு ஜாதகத்தைக் கொடுத்து, அலசச் சொல்லியிருந்தேன்!

1. நிரந்தர வேலை இல்லை. கையில் போதிய அளவு வருமானம் இல்லை!.
ஜாதகத்தை அலசி என்ன காரணம் என்பதையும் - தீர்வு உண்டா இல்லையா என்பதையும் எழுதுங்கள் என்று சொல்லியிருந்தேன்
-------------------------
இதே ஜாதகத்தை 27-3-2016 (quiz: புதிர் எண்.106) அன்று நாம் அலசிவிட்டதாக நமது வகுப்பறை மாணவர் திலகம் ஸ்ரீனிவாஸ ராஜுலு தெரிவித்திருந்தார். அவருடைய நினைவாற்றலுக்குப் பாராட்டுக்கள்.

சரி விஷயத்திற்கு வருகிறேன்!

படித்து முடித்தவுடன் வேலை கிடைத்தால் நல்லது. அதிலும் ஸ்திரமான வேலை கிடைத்தால் மிகவும் நல்லது.எல்லோருக்கும் அப்படிக்கிடைத்துவிடுகிறதா என்ன? ஸ்திரமான வேலை கிடைக்காமல் எத்தனை பேர் அவதிப் படுகிறார்கள்?

அதற்குக் காரணம் என்ன? நிவர்த்தி என்ன? ஜாதகக் கோளாறுகள்தான் காரணம்!! ஜாதகத்தில் நிவர்த்தி இருந்தால் நிவர்த்தியாகிவிடும்!
-----------------------------------------------------------------------------------


ஜாதகத்தைப் பாருங்கள்.
கும்ப லக்கின ஜாதகம். கும்பலக்கினத்திற்கு லக்கினாதிபதியும், 12ஆம் அதிபதியும் ஒருவரே. அதாவது சனீஷ்வரன். இந்த லக்கினத்திற்கு மட்டும்
அப்படியொரு அவஸ்தையான அமைப்பு. இந்த லக்கினக்காரர்களுக்கு லக்கினாதிபதி சனீஷ்வரன் கேந்திரம் அல்லது திரிகோணங்களில்
அமர்ந்திருந்தால் வெற்றிகரமான வாழ்க்கை. இல்லையென்றால் தோல்விகள் நிறைந்த வாழ்க்கை. கும்ப லக்கினத்திற்கு லக்கினநாதன் சனீஷ்வரன் 3, 6, 8  &12 ஆம் இடங்களில் மறையக்கூடாது!

ஜாதத்தில் சனி ஐந்தாம் வீட்டில் அமர்ந்துள்ளது. அது நட்பு வீடும் கூட. அதானால் ஜாதகனின் வாழ்க்கை வெற்றிகரமான வாழ்க்கைதான்.

லக்கினநாதன் திரிகோண வீட்டில் (5ல்) அமர்ந்திருப்பது. அதுவே ஜாதகனின் ஜாதகத்தில் முக்கியமான அமைப்பாகும். அத்துடன் சனீஷ்வரன் பரிவர்த்தனை யோகத்திலும் உள்ளார். இந்தக் கருத்தை நமது மூத்த மாணவர்களில் ஒருவரான யு.எஸ்.ஏ சந்திரசேகரன் சூரியநாராயணா அவர்களும் சுட்டிக் காட்டியுள்ளார் (பதில் எண்.12ஐ பார்க்கவும்) அவருக்கு ஒரு விஷேசமான பாராட்டு.

ஜாதகன் பொறியியல் படித்தவன்.
ஆனால் துவக்கத்தில் ஜாதகனுக்கு நிரந்தரமான வேலை கிடைக்கவில்லை. 10 ஆண்டுகளில் 9 வேலைகளுக்கு  மாறியுள்ளான்.
ஏன் அப்படி?
பத்தாம் வீட்டில் ஆறாம் அதிபதி சந்திரன் அமர்ந்துள்ளான். அது விரும்பத்தக்கதல்ல! அத்துடன் 3ல் உள்ள  செவ்வாயின் பார்வையும் (பத்தாம்
வீட்டின்மேல் உள்ளது) உள்ளது, அத்துடன் கேது திசையும் நுழைந்து ஜாதகரைப் படுத்தி விட்டது.
28 வயதிற்குப் பிறகு யோககாரகன் சுக்கிரனின் திசையில் ஜாதகனுக்கு ஸ்திரமான நல்ல வேலை கிடைத்தது.
சுக்கிரன் ஜாதகத்தில் 12ல் இருந்தாலும் நவாம்சத்தில் அதே மகரத்தில் அமர்ந்து வர்கோத்தமம் பெற்றிருப்பதால் அவர் சரி செய்து ஜாதகனின்
வாழ்க்கையை சீரமைத்தார். அத்துடன் அவர் பத்தாம் வீட்டின் அதிபதி அவர் 12ல் மறைந்தாலும் தன்னுடைய வர்கோத்தம பலத்தால் சரி செய்தார்.

விளக்கம் போதுமா?

கலந்துகொண்டவர்களில் 8 பேர்கள் பாதிக் கிணறைத் தாண்டியுள்ளார்கள். முழுக்கிணறையும் தாண்டியவர்கள் 5 பேர்கள்தான்! அவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள். 13 பேர்களின் பெயர்களையும் உங்களின் பார்வைக்காகக் கீழே கொடுத்துள்ளேன்.

எந்து உடல்நிலை காரணமாக பதிவை உரிய நேரத்தில் பதிவிட முடியவில்லை. வருந்துகிறேன். அனைவரும் பொறுத்துக் கொள்ளுங்கள்.

1. Blogger Ramanathan said... பாதி விடை சரி. தீர்வை சரியாகச் சொல்ல வில்லை!
2.Blogger kmr.krishnan said... இரண்டையும் சரியாக எழுதியுள்ளார். பாராட்டுக்கள்
3.Blogger amuthavel murugesan said...பாதி விடை சரி. தீர்வை சரியாகச் சொல்ல வில்லை!
4.Blogger Sathish Kumar said...இரண்டையும் சரியாக எழுதியுள்ளார். பாராட்டுக்கள்
5.க இரா அனந்தகிருஷ்ணன் - சென்னை. இரண்டையும் சரியாக எழுதியுள்ளார். பாராட்டுக்கள்
6.Blogger venkatesh r said...பாதி விடை சரி. தீர்வை சரியாகச் சொல்ல வில்லை!
7.Blogger mohan said...பாதி விடை சரி. தீர்வை சரியாகச் சொல்ல வில்லை!
8.Blogger adithan said...பாதி விடை சரி. தீர்வை சரியாகச் சொல்ல வில்லை!
9.Blogger Gajapathi Sha said...இரண்டையும் சரியாக எழுதியுள்ளார். பாராட்டுக்கள்
10.Blogger Chandrasekaran Suryanarayana said...பாதி விடை சரி. தீர்வை சரியாகச் சொல்ல வில்லை!
11.Blogger seenivasan said...பாதி விடை சரி. தீர்வை சரியாகச் சொல்ல வில்லை!
12.Blogger Ravichandran said...இரண்டையும் சரியாக எழுதியுள்ளார். பாராட்டுக்கள்
13.Blogger Kondal Vannan said...பாதி விடை சரி. தீர்வை சரியாகச் சொல்ல வில்லை!

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

24.8.16

Health சில உணவுகளை அதிகமாக உண்ணும்போது ஏற்படும் நோய்கள்!


Health: சில உணவுகளை அதிகமாக உண்ணும்போது ஏற்படும் நோய்கள்!

எந்த உணவுகள் அதிகமானால் எந்த நோய் தோன்றும்

⭕️ பச்சரிசி அதிகமானால்- சோகை நோய்

⭕️ அச்சுவெல்லம் அதிகமானால் _ அஜீரணம்

⭕️ பலகாரம் அதிகமானால் - வயிற்று வலி

⭕️ இஞ்சி அதிகமானால் - மென் குரலும் இறுக்கமாகும்

⭕️பழைய சோறு, கஞ்சி அதிகமானால் - வாயு, வயிற்று பொறுமல் ஏற்பட்டு கை கால்வலிக்கும்

⭕️ தேங்காய் அதிகமானால் - சளி, பித்தம், வறட்டு இருமல் உண்டாகும்

⭕️ மாங்காய் அதிகமானால் - வயிறு கட்டும் சளி வளரும், இடுப்புவலிவரும். பித்தம் அதிகமாகும்.

⭕️ கோதுமையைசூட்டு உடம்புள்ளவர்கள் அதிகம உண்டால் - வயிறு வீங்கும், குடல் இரையும், பித்தம் அதிகமாகும்

⭕️ பாதாம் பருப்பு அதிகமானால் - வாய் சுவை மாறும் பித்த அதிகமாகும். வயிறு மந்தமாகும்.

 ⭕️ முற்றிய முருங்கை சாப்பிட - வாயு சளி உண்டாகும்

⭕️ எருமைப்பால் அதிகம் குடிக்க - கிட்னி கல், அறிவு மங்கும்

⭕️ மிளகு -  உடம்பில் சக்தி இல்லாதவர்கள். அதிகம் உண்டால் வெப்பம் உண்டாகும்.

 ⭕️ மிளகாய் அதிகமானால் -வெப்பமுண்டாகும், சளி அதிகரிக்கும், விந்து கெடும்.

⭕️ காபி அதிகமானால் - கை நடுங்கும் பித்தம் அதிகமாகும். கண்ணெரியும், நெஞ்சு உலரும் ஆண்மை கெடும்.

 ⭕️ டீ அதிகமானால் - உடல் நடுங்கும் கை கால் வீக்கமாகும், காய்ச்சல், வீக்கம், பசியின்மை, விந்து அழியும்

⭕️ எலுமிச்சை அதிகமானால் - பாண்டு நோய், இதயம் ஆகியவை பாதிக்கும்.

⭕️ எள்ளு அதிகமானால் - பித்தம் செரியாமை உண்டாகும்.

⭕️ உப்பு அதிகமானால் - எலும்பு உருக்கும், உயிர் விந்தை குறைக்கும்

⭕️ வெங்காயம் அதிகமானால் - தலைவலிக்கும், அறிவழிக்கும், சளி பெருகும்

⭕️ குங்குமப்பூ அதிகமானால் - மதியழக்கும், ரத்தம் வெளுக்கும், கருவில் இருக்கும் குழந்தைஉறுப்புகளை கோணலாக்கும்.

 ⭕️ வெள்ளை பூண்டு அதிகமானால்- ரத்தம்
கொதித்து பொங்கும், கரு அழிக்கும். குடல் எரிக்கும், ஆண் தன்மை இழக்கும்

அளவுக்கு மீறீனால் அமிர்தமும் நஞ்சு.
======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

23.8.16

அன்பு மகன் எப்போது பொய் சொல்லி நடிப்பான்?


அன்பு மகன் எப்போது பொய் சொல்லி நடிப்பான்?

அம்மாவிற்கும், மனைவிக்கும் உரசல் வரும்போது மகன் பொய் சொல்லி நடிப்பான் என்பது உண்மையா? கீழே உள்ள காணொளியைப் பார்த்துவிட்டு உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்

அத்துடன் மாமியார் மருமகள் சண்டை, சச்சரவு வராமல் தடுப்பது எப்படி? என்பதை, ஆன்மிக உபன்யாசகி திருமதி தேசமங்கை மங்கையற்கரசி சிறப்பான வழி ஒன்றைச் சொல்கிறார். அதுவும் இந்தக் கணொளியில் உள்ளது.  எட்டு நிமிடங்கள் மட்டுமே ஓடக் கூடிய காணொளி. அனைவரும் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

அன்புடன்
வாத்தியார்
=========================================

---------------------------------------------------------------------------------
Quotes==============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

22.8.16

Astrology Quiz: ஜோதிடப் புதிர் எண்.115: என்னதான் நடக்கும் நடக்கட்டுமே!!!!


Astrology Quiz: ஜோதிடப் புதிர் எண்.115: என்னதான் நடக்கும் நடக்கட்டுமே!!!!

22-8-2016

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே! என்று எல்லோராலும் இருக்க முடியுமா? அதுவும் ஒரு நிரந்தர வேலை இல்லாத போது. கையில் போதிய அளவு வருமானம் இல்லாதபோது. 99% நிம்மதியாக இருக்கமுடியாது.  ஒரு ஜாதகருக்கு நிரந்தமான நல்ல வேலை கிடைக்கவில்லை. வருமானமும் போதவில்லை. என்ன செய்வார் பாவம்! கீழே ஒரு ஜாதகத்தைக் கொடுத்துள்ளேன்.


படத்தின் மீது கர்சரை வைத்து அழுத்தினால் - அதாவது க்ளிக்கினால் படம் முழுமையாகத் தெரியும்!

ஜாதகத்தைப் பாருங்கள்:

ஜாதகத்தை அலசி என்ன காரணம் என்பதையும் - தீர்வு உண்டா இல்லையா என்பதையும் எழுதுங்கள்

சரியான விடையை நாளை 24-8-2016 புதன்கிழமை மாலை 6 மணிக்குள் எழுதுங்கள். உங்களுக்குப் போதிய அவகாசம் கொடுத்துள்ளேன். அதை மனதில் கொள்ளுங்கள்!

அன்புடன்
வாத்தியார்
===============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

19.8.16

Short Story: சிறுகதை: ஆத்தாவின் அஸ்தி


Short Story: சிறுகதை: ஆத்தாவின் அஸ்தி
--------------------------------------------
சென்ற மாதம், மாத இதழ் ஒன்றிற்காக அடியவன் எழுதிய சிறுகதை ஒன்றை நீங்கள் படித்து இரசிப்பதற்காக இன்று பதிவில் ஏற்றியுள்ளேன். அனைவரும் படித்துப் பாருங்கள்!

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------
சிறுகதை: ஆத்தாவின் அஸ்தி

கங்கையில் கரைப்பதற்காக தான் கொண்டு செல்லும் தன்னுடைய ஆத்தாவின் அஸ்தி செல்லும் வழியில் காணாமல் போய்விடும் என்பதை அறியாமல் அப்பாவியாக கங்கா காவேரி ரயிலில் அமர்ந்திருந்தார் கருப்பையா. இடம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம். ரயில் புறப்பட இன்னும் பத்து நிமிடங்கள் இருந்தன.

அவரை வழியனுப்ப வந்திருந்த அவருடைய மூத்த சகோதரி சிகப்பி ஆச்சி, நான்காவது முறையாக சொன்னதையே திருப்பிச் சொன்னார்,” டேய் தம்பி, உனக்கு பயணத்திற்கு வேண்டிய முழு உணவும் நான் கொடுத்த கட்டைப் பையில் இருக்கிறது. மூன்று வேளைகளுக்குரிய புளியோதரை உள்ளது. இரண்டு வேளைகளுக்குரிய சப்பாத்தி இருக்கிறது. இன்று இரவிற்கு இட்லி, கொதிக்க வைத்த தக்காளிச் சட்னி இருக்கிறது. வழியில் நீ எதுவும் வாங்க வேண்டாம். இரண்டு லிட்டர் பாட்டிலில் தண்ணீரும் வைத்திருக்கிறேன்”

“சரி, ஆச்சி.மிக்க நன்றி” என்றும் மட்டும் கருப்பையா பதில் சொன்னார்.

சிகப்பி ஆச்சி தம்பி கருப்பையாவை விட பத்து வயது மூத்தவர். வங்கியில் மேலாளராக இருந்து, தற்போது பணி ஓய்வில் இருப்பவர். அவருடைய கணவருக்கு உடல் நலமின்மை. அதனால் அவர் தம்பியுடன் காசிக்குச் செல்லவில்லை. இல்லையென்றால் வந்திருப்பார்.

கருப்பையாவின் தாயார் இறந்து போய் இருபது நாள்தான் ஆகிறது. “அப்பச்சி நான் காசிக்குப் போனதில்லை. வாய்ப்புக் கிடைக்கவில்லை. ஆனால் நான் இறந்து போனால், என் அஸ்தியை நீயே காசிக்குக் கொண்டுபோய் கங்கையில் கரைத்துவிட்டு வரவேண்டும்” என்று தன் தாயார் அடிக்கடி சொல்வதை நினைவில் வைத்துக் கொண்டு, அவரும் அஸ்தியுடன் உடனே காசிக்குப் புறப்பட்டு விட்டார்.

நான்கு சகோதரிகளுக்குப் பிறகு, ஐந்தாவதாகப் பிறந்தவர் கருப்பையா. தவமிருந்து உன்னைப் பெற்றேன் என்று அவரிடம் சொல்வார் அவருடைய தாயார். ராங்கியம் கருப்பரின் தீவிர பக்தை அவர். அதனால்தான் தன் மகனுக்குக் கருப்பையா என்ற பெயரைச் சூட்டினார்.

கருப்பையாவிற்கு அவருடைய அப்பச்சி காலத்தில் இருந்தே ஈரோட்டில் வாசம். படித்ததெல்லாம் ஈரோட்டில்தான். படித்து முடித்தவுடன் அப்பச்சியுடன் சேர்ந்து தங்களுடைய வீட்டுத் தொழிலான டெக்ஸ்டைல்ஸ் கெமிக்கல்ஸ் மற்றும் சாயங்கள் வியாபாரத்தையே செய்து வருகிறார்.
கருப்பரின் அருளால் வியாபாரமும் நன்றாக நடந்து கொண்டிருக்கிறது. அவர் ஊருக்குச் செல்லும் காலங்களில் ஆச்சி, அதாவது அவருடைய மனைவி கடையைப் பார்த்துக் கொள்வார். ஈஸ்வரன் கோயில் தெருவில் சொந்தக் கட்டடத்தில் கடை மற்றும் கிட்டங்கி எல்லாம் உள்ளது.

அந்தக் காலத்தில் வாங்கிப் போட்ட இடங்களெல்லாம் பன்மடங்கு விலை பெருகி, அவ்வப்போது பணம் வந்து கொண்டிருந்தது. பிரப் ரோட்டில் இருந்த இருபது சென்ட் இடத்துடன் கூடிய பழைய வீடு ஒன்றை, பெரிய ஜவுளி நிறுவனம் ஒன்று வாங்கிக் கொண்டு நான்கு கோடி ரூபாய்கள் பணம் கொடுத்தார்கள். கரைச்சல் இல்லாமல் இருக்க வேண்டுமென்பதற்காக தன்னுடைய நான்கு சகோதரிகளுக்கும் ஆளுக்கு ஐம்பது லட்ச ரூபாய் கொடுத்து, மீதப் பணத்தை இவர் வைத்துக் கொண்டார்.

சிதம்பரம் செட்டியார் காலனியில் பெரிய வீடு உள்ளது. அந்தப் பகுதியிலேயே இன்னும் இரண்டு காலி மனைகள் உள்ளன. நல்ல விலை கிடைத்தால் விற்கலாம் என்று உள்ளார். வியாபாரத்தில் கிடைக்கும் பணத்தைவிட இந்த மாதிரி இடம் விற்று வரும் பணம் அதிகமாக இருந்தது. அப்பச்சி இல்லை. எல்லாம் ஆத்தாவின் அதிர்ஷ்டம் என்று நினைத்துக் கொள்வார்.

ஆத்தா இறந்த அன்று குரல் கொடுத்து ஓ’வென்று அழுது தீர்த்து விட்டார். சகோதரிகள்தான் சமாதானப் படுத்தினார்கள்.”ஆத்தாவிற்கு 82 வயதாகிறது. இந்நாள் வரை கிடக்காமல், படுக்காமல் ஆரோக்கியமாக உன்னோடு இருந்ததற்காக சந்தோஷப்படு. காலம் முடிந்தது. அவர்கள் இறைவனடி சேர்ந்து விட்டார்கள். அவ்வளவுதான். முதலில் அழுவதை, கலங்குவதை நிறுத்து” என்று கூறிவிட்டார்கள்.

எல்லோரும் வாரணாசிக்கு விமானத்தில் போய் வா என்ற போது மறுத்துவிட்டார். ஆறு நாட்களில் திரும்பி விடலாம் நான் ரயிலிலேயே சென்று வருகிறேன் என்று முன் பதிவு எல்லாம் செய்துவிட்டார். முதல் வகுப்பு டிக்கெட் கூட வாங்கவில்லை இரண்டாம் வகுப்பு டிக்கெட்தான். கேட்டால் சிக்கனம் என்பார். அனாவசியமான ஆடம்பரம் கூடாது என்பார். அந்தப் பணத்தை தர்ம காரியங்களுக்குக் கொடுத்து உதவலாம் என்பார். ஆண்டிற்கு இருபது லட்ச ரூபாய்களுக்கு மேல் கோயில் திருப்பணிகளுக்கும், கல்வி நிதிகளுக்கும் கொடுத்து வருகிறார்.

ரயில் புறப்பட்டது. கையை அசைத்து தன் ஆச்சியிடம் விடை பெற்றுக் கொண்டார்.

                           **********************************

இரண்டாம் நாள் காலை. ரயில் அலகாபாத்தைக் கடந்து வாரணாசியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தது. காலை மணி எட்டு. கழிப்பறைக்குச் சென்று கை, கால்களை சுத்தம் செய்து கொண்டு வந்து, அமர்ந்து காலைச் சிற்றுண்டியாக மூன்று சப்பாத்திகளைச் சாப்பிட்டு முடித்தார். வண்டியில் சாயா விற்றுக்கொண்டிருந்த கேன்டீன் ஊழியரிடம் டீ’ யை வாங்கிக் குடித்தார்.

கட்டைப் பையை அடிப்பகுதியில் வைக்கும்போது தான் கவனித்தார். அஸ்தி டப்பா வைத்திருந்த பையைக் காணவில்லை. தூக்கி வாரிபோட்டது. பரக்கப் பரக்கத் தேடினார். கீழ் பகுதி முழுவதற்கும் தேடினார். பை இல்லை. அது போத்தீஸ் ஜவுளிக்கடையில் கிடைத்த அழகான பை. மேல் பகுதியில் ஜி’ப்புடன் அம்சமாக இருக்கும். அதில்தான் அஸ்தி டப்பாவும் இருந்தது.

தன்னுடன் பயணித்து, அலகாபாத்தில் இறங்கிய குடும்பத்தார்கள், நிறைய குழந்தைகளுகளுடன், ஏராளமான லக்கேஜ்களும் வைத்திருந்தார்கள். அவர்கள்தான் தங்களுடைய சாமான்களுடன் அந்தப் பையையும் சேர்த்து எடுத்துக் கொண்டு இறங்கியிருக்க வேண்டும்.

இப்போது என்ன செய்வது? ஒன்றும் புரியவில்லை. மனம் நொந்து போய்விட்டது. துணிமணிகள், பணம் எல்லாம் இருந்த சூட் கேஸ் பெட்டி மட்டும் பத்திரமாக இருந்தது. அதில் அஸ்தியை வைத்துக் கொண்டு வந்திருக்கலாம். அதில் வைக்கக்கூடாது என்பதாலும், அஸ்தி டப்பா சற்றுப் பெரியதாக இருந்ததாலும், தனிப் பையில் வைத்திருந்தார். இப்போது பையைக் காணவில்லை.

எடுத்தவர்கள், நல்ல மனிதர்களாக இருந்தால், கவனிக்கும்போது, அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, அலகாபத்தில், கங்கையில் கரைத்தாலும் கரைப்பார்கள். இல்லையென்றால், யாருடைய அஸ்தியோ என்னமோ, அந்த வேலை நமக்கெதற்கு என்று குப்பைத் தொட்டியில் போட்டாலும் போட்டு விடலாம்.

நினைக்க நினைக்க பலவிதமான குழப்பங்கள் ஏற்பட்டது. வேண்டாத தெய்வம் இல்லை. ராங்கியம் கருப்பரையும் வேண்டிக் கொண்டார். கருப்பரே இந்தப் பிரச்சினை தீர நீங்கள் உதவ வேண்டும் என்று பலமாக வேண்டிக்கொண்டார். தாயாரின் ஆன்மாவையும் வேண்டிக் கொண்டார்.

கருப்பர் உதவினாரா? உதவாமல் இருப்பாரா?

எப்படி உதவினார் என்பதைத் தெரிந்து கொள்ள, தொடர்ந்து படியுங்கள்!

                              *****************************

ரயில் ஒன்பதரை மணிக்கு வாராணாசிக்கு வந்து சேர்ந்தது. ரயிலை விட்டு இறங்கி ஸ்டேசனை விட்டு வெளியே வந்தவர், ஒரு ஆட்டோவை வைத்துக் கொண்டு, காசி நாட்டுக் கோட்டை நகர விடுதிக்கு வந்து சேர்ந்தார்.

அங்கே தனி அறை ஒன்றைக் கேட்டு வாங்கிக் கொண்டு வந்தவர், உடமைகளை அறையின் உள்ளே வைத்துவிட்டுக் கட்டிலில் சற்று நேரம் கண் அயரலாம் என்று படுத்தவர், மன உளைச்சளிலும், அசதியிலும் நன்றாக உறங்கி விட்டார்.

கதவை யாரோ, பட படவென்று தட்டும் சத்தம் கேட்டுக் கண்விழித்தவர், மணியைப் பார்த்தார் - மணி மதியம் மூன்று, அடடா, இத்தனை நேரமா உறங்கியிருக்கிறோம் என்று நினைத்தவாறே, கதவைத் திறந்து பார்த்தார். விடுதி ஊழியர் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.

“அண்ணே, உங்களைத் தேடி ஒருவர் வந்திருக்கிறார். விடுதி அலுவலகத்தில் உட்கார வைத்திருக்கிறேன். வாருங்கள்” என்றார்

யாரடா, நம்மைத் தேடி வந்துள்ளது என்று நினைத்தவாறே, சட்டை ஒன்றை எடுத்து அணிந்து கொண்டு, கதைவைப் பூட்டிக் கொண்டு, அந்த ஊழியருடன் நடந்தார்.

அங்கே சென்றால், ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. ரயிலில் தன்னுடன் அலகாபாத்வரை பயணித்த வயதான பெரியவர், அங்கே அமர்ந்திருந்தார்.

அவர் ”சுவாமி, மன்னிக்க வேண்டும். எங்கள் பேரக் குழந்தைகள், உங்கள் பையையும் தெரியாமல் எடுத்துக் கொண்டு வந்து விட்டன. வீட்டிற்குச் சென்றபிறகுதான் கவனத்திற்கு வந்தது. உள்ளே அஸ்தி இருப்பது தெரிந்து, அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, அதை உங்களிடம் கொடுத்து விட்டுப் போவதற்காக அடுத்த ரயிலேயே புறப்பட்டு வந்தேன்”  என்றார்.

கருப்பையாவிற்கு இன்ப அதிர்ச்சி, அளவிடமுடியாத மகிழ்ச்சி. அவர் கைகளைப் பிடித்து கண்களில் ஒற்றிக் கொண்டவர், அஸ்திப் பையைப் பெற்றுக் கொண்டார்.

அவருக்கு, விடுதியில் சொல்லி டீ வாங்கிக் கொடுத்தவர், தன்னுடைய அறைக்கு அவரை அழைத்துச் சென்று, பையில் இருந்து ஆயிரம் ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து அவரிடம் நீட்ட, அவர் வாங்க மறுத்து விட்டார்.

”இந்தப் பையைக் காணவில்லை என்பது தெரிந்தவுடன், நீங்கள் எவ்வளவு துக்கம் அடைந்திருப்பீர்கள் என்பதை என்னால் உணர முடிந்தது. அதனால்தான் உடனே ஓடி வந்தேன். ஆகவே பணம் எல்லாம் ஒன்றும் வேண்டாம்” என்றார்.

”என் பெயர், நான் தங்கவிருக்கும் இடம் எல்லாவற்ரையும் எப்படிக் கண்டு பிடித்தீர்கள்?” என்று இவர் அப்பாவித்தனமாகக் கேட்டபோது, அவர் சொன்னார்.

பைக்குள் ஒரு சுயமுகவரி இட்ட கடிதமும், கவரும் இருந்தது. அதில் உங்கள் சகோதரியின் சென்னை முகவரியும், தொலைபேசி எண்ணும் இருந்தது. விபூதி பிரசாதம் அனுப்பச் சொல்லி அவர்கள் எழுதிய கடிதமும் இருந்தது. அத்துடன் பின் பக்கம் அனுப்புனர் என்னும் இடத்தில், கருப்பையா, கேம்ப்: வாரணாசி என்று எழுதியிருந்தது. உங்கள் சகோதரியுடன் போனில் தொடர்பு கொண்டு இந்த விடுதியின் முகவரியை வாங்கினேன்” என்றார்.

இப்போதுதான் கருப்பையாவிற்கு ஞாபகம் வந்தது. ஆச்சி அவர்கள் சென்னை ரயில் நிலையத்தில் கொடுத்த கவரும், அதைத்தான் அஸ்தி
இருந்த பையில் வைத்ததும் பளிச் சென்று நினைவிற்கு வந்தது.

எப்படியோ ராங்கியம் கருப்பர், தன் பக்தையின் அஸ்திக்குக் கேடு வராமல் காபாற்றிவிட்டார். அத்துடன் கருப்பையாவின் பிரார்த்தனைக்கும் செவி சாய்த்து உதவி செய்துவிட்டார்.

வந்த பெரியவரை வழியனுப்பி வைத்துவிட்டு, ஒரு எஸ்.டி.டி பூத்தில் இருந்து போன்போட்டுத் தன் ஆச்சியுடன் பேசினார். ஆச்சியின் கடிதம் மூலம் கிடைத்த அதிசய நிகழ்வையும் மறக்காமல் குறிப்பிட்டார்.

                                            ****************************

அடுத்தநாள் காலை சூரிய உதயத்தின்போது, கங்கைக் கரையில் அமர்ந்து, விஸ்வநாத சாஸ்திரி மந்திரங்களைச் சொல்லி, கருப்பையாவின் தாயாருக்குக் திதியைச் செய்து வைக்க, சிரத்தையோடு கருப்பையாவும் திதி கொடுத்தார். பிறகு சாஸ்திரி ஏற்பாடு செய்து கொடுத்த படகில்  கங்கைப் பிரவாகத்தின் நடுப்பகுதிவரை சென்று, தாயாரின் அஸ்தியைக் கங்கையில் கரைத்தார்.

கண்கள் பனித்துவிட்டன. காணாமல்போன அஸ்தி திரும்பக்கிடைத்ததற்கு மனமார காசி விஸ்வநாதரை வணங்கியதோடு, ராங்கியம் கருப்பரையும் பிரார்த்தனை செய்து வணங்கினார். இறையருள் இருந்தால் எல்லாம் நடக்கும் என்பதற்கு இதுவே உதாரணம் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டார்.

உண்மைதான்! இறையருள் இருந்தால் எல்லாம் நடக்கும்!

                                         ***************************************
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

18.8.16

படித்து முடித்ததும் என்னவாகப் போகிறீர்கள்?


படித்து முடித்ததும் என்னவாகப் போகிறீர்கள்? 

ஐந்தாம் வகுப்பு
-----------------------------
'அ' பிரிவு  
-----------------
மழை பெய்யா நாட்களிலும்
மஞ்சள் குடையோடு வரும்
ரோஜாப்பூ மிஸ்
வகுப்பின் முதல் நாளன்று
முன்பொரு முறை
எங்களிடம் கேட்டார்
"படிச்சு முடிச்சதும்
என்ன ஆகப் போறங்க?"
_____________________
முதல் பெஞ்சை
யாருக்கும் விட்டுத் தராத
கவிதாவும் வனிதாவும்
"டாக்டர்" என்றார்கள்
கோரஸாக
இன்று
கல்யாணம் முடிந்து
குழந்தைகள் பெற்று
ரேஷன் கடை
வரிசையில்
கவிதாவையும்;

கூந்தலில் செருகிய
சீப்புடன்
குழந்தைகளை
பள்ளிக்கு வழியனுப்பும்
வனிதாவையும்
எப்போதாவது
பார்க்க நேர்கிறது.
____________________
"இன்ஜினியர் ஆகப்போகிறேன்"
என்ற எல்.சுரேஷ்குமார்
பாதியில் கோட்டடித்து
பட்டுத் தறி
நெய்யப் போய்விட்டான்.
_____________________
"எங்க அப்பாவுடைய
இரும்புக் கடையைப்
பாத்துப்பேன்"
கடைசி பென்ச்
சி.என்.ராஜேஷ்
சொன்னபோது
எல்லோரும் சிரித்தார்கள்.

இன்றவன்
நியூஜெர்சியில்
மருத்துவராகப்
பணியாற்றிக்கொண்டே
நுண் உயிரியலை
ஆராய்கிறான்.
_____________________
"பிளைட்  ஓட்டுவேன்"
என்று சொல்லி
ஆச்சரியங்களில்
எங்களைத் தள்ளிய
அகஸ்டின் செல்லபாபு
டி.ன்.பி.ஸ்.சி. எழுதி
கடைநிலை
ஊழியனானான்.
____________-______
"அணுசக்தி
விஞ்ஞானியாவேன்"
என்ற நான்
திரைப் பாடல்கள்
எழுதிக் கொண்டிருக்கிறேன்.
__________________
வாழ்க்கையின் காற்று
எல்லாரையும்
திசைமாற்றிப் போட,

"வாத்தியாராவேன்"
என்று சொன்ன
குண்டு சுரேஷ் மட்டும்
நாங்கள் படித்த
அதே பள்ளியில்
ஆசிரியராகப்
பணியாற்றுகிறான்.

"நெனைச்ச வேலையே
செய்யற,
எப்படியிருக்கு மாப்ளே?"
என்றேன்.

சாக்பீஸ் துகள்
படிந்த விரல்களால்
என் கையைப்
பிடித்துக்கொண்டு
"படிச்சு முடிச்சதும்
என்ன ஆகப் போறீங்க?
என்று மட்டும்
என் மாணவர்களிடம்
நான் கேட்பதே இல்லை! "
என்றான்.

-கவிஞர் நா. முத்துக்குமார்
===================================
மனதைத் தொட்ட வாசகங்கள்!
================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

17.8.16

Humour: நகைச்சுவை: பெண்களை அலறும்படி செய்த சாணக்கியர்!


Humour: நகைச்சுவை: பெண்களை அலறும்படி செய்த சாணக்கியர்!

நகைச்சுவைகளை நகைச்சுவையாக மட்டும் பாருங்கள். வேறு விவகாரம் வேண்டாம்
---------------------------------------------------------------
1
சித்திரகுப்தனின் பிரச்சினை!

ஒரு நாள் சித்திரகுப்தன் வருத்தமாக பிரம்மனிடம் சொன்னார்:

“பெண்கள் தொடர்ந்து ஆண்டு தோறும் வரலெட்சுமி பூஜை செய்தால், அதே கணவன் தான் அடுத்தடுத்த ஏழு பிறவிகளுக்கும் கணவனாக அவர்களுக்குக் கிடைப்பான். ஆனால் அதில் ஒரு சிக்கல் இருக்கிறது!

”என்ன சிக்கல்?” பிரம்மா வினவினார்

"பெண்கள் அதே கணவன்தான் வேண்டும் என்கிறார்கள். ஆனால் ஆண்கள் புதிதாக ஒரு பெண் மனைவியாக வர வேண்டும் என்கிறார்கள். அதுதான் சிக்கல். இருவரையும் திருப்தி செய்ய என்ன செய்ய வேண்டும்?”

இடையில் குறுக்கிட்ட நாரதர் சொன்னார்:

”பூமியில் எல்லாம் அறிந்த ஞானி ஒருவர் இருக்கிறார். அவர் பெயர் சாணக்கியர். அவரைப் பாருங்கள். இதற்குத் தீர்வு கிடைக்கும்!”

சித்ரகுப்தர் சாணக்கியரைச் சென்று பார்த்தார்.

சாணக்கியர் சொன்னார்: ”அதே கணவந்தான் வேண்டும் என்னும் பெண்களிடம் சொல்லுங்கள். இப்போது இருக்கும் உங்கள் மாமியார்தான் அடுத்தடுத்த ஏழு பிறவிகளுக்கும் மாமியாராக வருவார் சம்மதமா?” என்று கேளுங்கள்

பெண்கள் அலறிவிட்டார்கள்.

பிரச்சினை சுமூகமாகத் தீர்ந்தது.
-------------------------------------------------------
2
இந்தியர்கள் அதிக தங்கம் வாங்கினால் அது அக்ஷய திருதியை.
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
அமெரிக்கர்கள் அதிக தங்கம் வாங்கினால் அது ஒலிம்பிக்...!
---------------------------------------------------------
3
Once a banker was travelling in a train in A/c class.He was alone in the coach. After some time, a lady came and sit in front of him. 

After that she went to banker and told to give her money,mobile everything , Otherwise she will shout and tell everybody that he is harrasing and misbehaving with me. 

The banker takenout a paper and a pen from his bag and wrote that he can not hear or speak. You write on this paper whatever you want to say..That lady wrote everything what she said earlier and gave it to that man. 

Then banker told her now u can shout..and do whatever you want. I have a documentary proof now.
-------------------------------------------------------------
4
What is "GENERATION GAP"?

**Father used to walk 20 Minutes to save 20 Rs.
Son spends 20 Rs. to save 20 Minutes.
(Surprisingly both are correct...!!!)  
**Cultural Gap***
If electricity goes in America they call the power house.
In Japan, they test the fuse,
But In India, they check neighbour's house, "power gone there too....then ok!"

**Sense of Responsibility...
A man goes to library n asks for a book on Suicide.....
Librarian looks at him n says: "hello.. who will return the book ????"

**GRANDFATHER TO GRANDSON:
Go hide! Your teacher is coming as you bunked school today!
GRANDSON: YOU go hide.. I told her YOU PASSED AWAY!!

**Sister to brother: What r u going to gift grandma on her b'day?
Brother: A football
Sister: But grandma does not play!
Brother: On my b'day she gave me bhagavat gita!!!!

---------------------------------------------------------- 
5
Question: 
In India, why do the
 bride's parents generally bear all marriage expenses? 


CA student's Brilliant answer......

 "Because as per Indian law, excise duty on production is payable by the manufacturer at the time of dispatch of goods." 

------------------------------------------------------------------
6
ஆசிரியர் பேசுறது புரியலைன்னா வாயை திறந்து
சந்தேகத்தை கேட்டுடணும்.!
மனைவி பேசுறது புரியலைன்னா வாயை மூடிகிட்டு
சத்தமில்லாம போயிடணும்.
# வாழ்க்கைல நல்லா வருவீங்க #

---------------------------------------------------
இவற்றில் எது மிகவும் நன்றாக உள்ளது?
அன்புடன்
வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

16.8.16

உடல் நலம்: நீரழிவு நோயும் அரிசி உணவும்!


உடல் நலம்: நீரழிவு நோயும் அரிசி உணவும்!

அரிசி தமிழர் உணவுகளின் தவிர்க்கமுடியாத முக்கிய உணவு. உடல் பருமனோ, நீரிழிவோ வந்துவிட்டால் மருத்துவர்கள், டயட்டீசியன்கள் முதலில் நம் உணவில் குறைக்கச் சொல்வது அரிசியால் செய்யப் படும் உணவுகளைத்தான்! குறிப்பாக, அரிசிச் சோறு!

பசுமைப் புரட்சிக்கு முன்பான நெட்டை ரக அரிசிகள், இன்றைக்குப் பெரும்பாலும் வழக்கொழிந்து போய் குறுகிய கால குட்டை அரிசி ரகங்களே
பெரும்பாலும் நமக்கு உண்ணக் கிடைக்கின்றன. பெரும்பாலும் பரிசோதனைக் கூடங்களில் தயாராகும் இந்த ரகங்களைத் தான் நாம் அன்றாடப் பயன் பாட்டுக்குப் பயன்படுத்துகிறோம்.

பெரும்பாலும் நவீன கால அரிசிகள் பாலீஷ் செய்யப் படுவதால் அதில் முழுவதுமாக நார்ச்சத்து இல்லாமல் போகிறது. கூடவே சிறிதளவு இருக்கக்கூடிய மற்ற சத்துகளும் துடைத்தெறியப் பட்டு ஒரு மாவுச்சத்து நிரம்பிய (கார்போஹைட்ரேட்) வெடிகுண்டாகத்தான் அது நமக்கு உணவாக வந்து சேர்கிறது.

சரி, அதனால் என்ன பிரச்னை?

கார்போஹைட்ரேட் எனும் மாவுச்சத்து நிரம்பிய இந்த அரிசி சார்ந்த உணவை இட்லி, பிரியாணி, தோசை, பனியாரம், தயிர்சாதம், சாம்பார்சாதம், இடியாப்பம் என்று நாம் பல பெயரிட்டு அழைத்து மூன்று வேளையும் வயிறு நிரம்பச் சாப்பிடுகிறோம். பெரிய உடல் உழைப்பு இன்றி இவ்வாறு தொடர்ந்து அதிக கார்போ ஹைட்ரேட் உணவை நாம் உண்ணும்போது, இந்த மாவுச் சத்தால் உடலில் அபரிமிதமாக ஏறக்கூடிய ரத்த சர்க்கரை அளவால், கணையத்திற்கு அதிக வேலை தரப்பட்டு நாளடைவில் இன்சுலின் ரெஸிஸ்டன்ஸுக்குத் தள்ளப்பட்டு நீரிழிவு குறைபாட்டுக்கு ஆளாகிறோம்.

ஆசிய மக்களின் உணவில் பெரும்பங்கு வகிக்கும் இந்த அரிசி உணவில் அதிகப்படியாக இருக்கும் மாவுச்சத்தைப் பாதியாகக் குறைக்கும் வழிகளை தேடிய ஆராய்ச்சியாளர்கள் இப்போது அதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமும் அடைந்திருப்பதாகச் சொல்கிறார்கள். அவர்கள் ஆய்வுப்படி,  அரிசி யில் கிடைக்கக்கூடிய கலோரி களை பாதியாகக் குறைப்பது எப்படி என்று பார்ப்போம்.

அரிசியை சமைக்கும் முறை:

முதலில், அரிசியை பலமுறை நீர்விட்டுக் கழுவவேண்டும்.

அதன்பின்னர் அதை குக்கரில் சமைக்கக்கூடாது.

வாயகன்ற பாத்திரத்தில் நீர் விட்டுக் கொதிக்கவைத்து, அதில் அரிசியைப் போட்டு, கூடவே ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி வேகவைத்து, சாதம் தேவையான அளவு வெந்ததும், பின்னர் முழுவதுமாக கஞ்சியை வடித்து எடுத்து, அந்த சாதம் சூடு ஆறிய பிறகு ரெப்ரிஜிரேட் டரில் வைத்துவிட வேண்டும்.

சுமார் 12 மணி நேரத்திற்குப் பிறகு இந்த சாதத்தை மீண்டும் சூடுபடுத்தி உண்ணும்போது அதன் கலோரி அளவுகள் பாதியாகக் குறைந்திருக்கும் என்கின்றன ஆய்வு முடிவுகள்!

இன்றைக்கு இதை வெளிநாட்டினர் ஆராய்ச்சி செய்தாலும், 30 ஆண்டுகளுக்கு முன்பு நம் வீட்டில் இப்படித்தான் அரிசிச் சோறு சமைத்தார்கள். அதை உண்டு, பல இடங்களுக்கு நடந்து, ஓடி ஆடி வேலை செய்து, சைக்கிள் மிதித்து ஆரோக்கியமாக இருந்தார்கள். சாதம் வடித்து எடுத்த பின்பு ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் விடும் வழக்கமும் இருந்தது.

இப்படி சமைக்கவும், குட்டை ரக அரிசிகளைவிட நெட்டை ரக அரிசிகள்.. குறிப்பாக, பாரம்பரிய அரிசி ரகங்களே ஏற்றவை. இந்த நெட்டை ரக அரிசி வகைகளில் எளிதில் கிடைக்கக்கூடிய ஒன்று பாஸ்மதி.

ஆக, குட்டை ரக அரிசிகளை தவிர்த்து, பாரம்பரிய அரிசி, கைக்குத்தல் அரிசி, பாஸ்மதி, கேரளா சிகப்பு மட்ட ரக அரிசி போன்ற வகைகள் வாங்கி, பலமுறை நீர் விட்டுக் கழுவி, அதைக் குக்கரில் வடிக்காமல், பாத்திரத்தில் வேகவைத்து, கஞ்சி வடித்து உண்பதும், சாதத்தின் அளவைக் குறைவாவும், கிழங்கில்லாத காய்கறி மற்றும் தினம் ஒரு கீரையை அதிகம் சேர்த்து உண்பதும் ரத்த சர்க்கரை அளவுகளை அதிகம் பாதிக்காமல் நீரிழிவினைத் தள்ளிப் போடும்.

‘நல்ல சாப்பாடு & 11’ இதழில் ஷங்கர் ஜி (பேலியோ குரூப்) எழுதிய கட்டுரை..!~அவருக்கு நம் நன்றியைத் தெரிவித்துக்கொள்வோம்

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

15.8.16

வாத்தியாரின் வாழ்த்துக்கள்!


வாத்தியாரின் வாழ்த்துக்கள்!

சுதந்திரதின வாழ்த்துக்கள்!

நம் வகுப்பறைக் கண்மணிகள், வகுப்பறைக்கு வந்து போகும் நண்பர்கள், மற்றும் சக பதிவாளர்கள் அனைவருக்கும் வாத்தியாரின் இனிய சுதந்திரதின வாழ்த்துக்கள்!

சுதந்திர தினத்தை முன்னிட்டு வகுப்பறைக்கு இன்று ஒரு நாள் விடுமுறை!

அன்புடன்
வாத்தியார்
==================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

13.8.16

Quiz: புதிர் எண்.114: பதில்: மலர்கள் மலர்ந்தன; ஆனால் மனம் லயிக்கவில்லை!Quiz: புதிர் எண்.114: பதில்: மலர்கள் மலர்ந்தன; ஆனால் மனம் லயிக்கவில்லை!

13-8-2016

நேற்று ஒரு ஜாதகத்தைக் கொடுத்து, ஒரு அம்மணியின் திருமணம் மற்றும் குடும்ப வாழ்க்கையை அலசிப் பதில் எழுதும்படி கேட்டுக்கொண்டிருந்தேன்.

பதில்:

அம்மணிக்குத் திருமணம் நடைபெறவில்லை. திருமணம் நடைபெறாதபோது குடும்ப வாழ்க்கை ஏது? ஆகவே குடும்பவாழ்க்கையும் இல்லை. புதனும், சுக்கிரனும் சேர்ந்துள்ளதால் அம்மணி அதிபுத்திசாலியாக இருந்தார். கல்லூரி ஒன்றில் பேராசிரியையாக வேலை செய்து கை நிறைய சம்பளம் வாங்கித் தன் பெற்றோர்களுடன் அன்பாக வாழ்ந்தார். தன் வரையில் எப்போதும் மகிழ்ச்சியாகவே இருந்தார்.

இதுதான் சரியான விடை!

காரணம் என்ன? வாருங்கள் ஜாதகத்தைப் பார்ப்போம்!
--------------------------------------------------


அம்மணி கும்ப லக்கின ஜாதகக்காரர். கும்ப லக்கினம் நல்ல லக்கினம். அதுவும் பெண்களுக்கு உயரிய லக்கினம். கும்ப லக்கினப் பெண் என்றால் கண்னை மூடிக்கொண்டு திருமணம் செய்யலாம் என்று நான் அடிக்கடி கூறுவேன். ஆனாலும் அம்மணிக்குத் திருமணம் கூடி வரவில்லை.

லக்கினாதிபதி சனி 11ல். ஆனாலும் செவ்வாயின் பார்வையில் மற்றும் மாந்தியின் கூட்டுடன். அது நல்ல அமைப்பு அல்ல!

ஏழாம் வீட்டில் அதன் அதிபதி சூரியனுடன் ராகு. லக்கினத்தில் கேது. ஆக மொத்தம் லக்கினமும் கெட்டுள்ளது. ஏழாம் வீடும் கெட்டுள்ளது,

பெண்களுக்கு பாக்கியஸ்தானமான ஒன்பதாம் வீடு முக்கியம். அம்மணியின் ஜாதகத்தில் ஒன்பதாம் வீட்டுக்காரன் அந்த வீட்டிற்குப் பன்னிரெண்டில் போய் உட்கார்ந்து கொண்டுவிட்டான். அத்துடன் எட்டாம் அதிபதி புதனுடன் கூட்டணியில் உள்ளான். சுகமில்லை. பாக்கிய ஸ்தானமும் கெட்டுள்ளது. ஆகவே அம்மணிக்குத் திருமணம் கூடிவரவில்லை.

சந்திரன் அமர்ந்திருக்கும் இடத்தை வைத்துப்பார்த்தால், 7ல் சனி அத்துடன் சனியின் மீது செவ்வாயின் நேரடிப்பார்வை. கடுமையான புனர்பூ தோஷம். ஆகவே திருமணம் நடைபெற்றிருந்தால் கூட கணவனைப் பிரிந்து, விவாகத்தை ரத்து செய்து வாழவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கும் அப்படிப்பட்ட சிரமங்களுக்கு ஜாதகியை ஆளாக்க விடாமல் மற்ற கிரகங்கள் காப்பாற்றியுள்ளன. குறிப்பாக 11ல் இருக்கும் லக்கினாதிபதி காப்பாற்றியுள்ளார்!

திருமணம் மறுக்கப்பெற்ற ஜாதகம் இது. ஆகவே அம்மணிக்கு கடைசிவரை திருமணம் நடைபெறவில்லை! திருமணம் என்பது வாழ்க்கையின் ஒரு பகுதிதான். அது நடைபெறவில்லை என்பதால் உயிரைவிட முடியுமா என்ன? மற்ற சந்தோஷங்களுடன் வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க வேண்டியதுதான்.

விளக்கம் போதுமா?
------------------------
போட்டியில் 19 பேர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள். சரியான விடையை நெற்றியில் அடித்தாற்போல இருவர் மட்டுமே எழுதியுள்ளார்கள். ஒருவர் திரு. சந்திரசேகரன் சூர்யநாராயணா, இன்னொருவர் திரு. சதீஷ்குமார். இருவருக்கும் எனது மனம் உவந்த பாராட்டுக்கள். அவர்களின் பதிலை/ கணிப்பைக் கீழே கொடுத்துள்ளேன். பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்

அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------------------------
******/////Blogger Chandrasekaran Suryanarayana said...
திருமணம் மறுக்கப்பெற்ற ஜாதகம்
7ஆம் வீடு, 7ஆம் அதிபதி, பாக்கியாதிபதி ஆகிய மூன்றும் கெட்டிருந்தால் திருமணம் ஆவது மிகவும் கடினம்.It will be called as denial of marriage.
Friday, August 12, 2016 7:06:00 AM//////

--------------------------------------------------------
****//////////Blogger Sathish Kumar said...
ஜாதகர் பிறந்த தேதி : 13 – 09 – 1960
கும்ப லக்னம். லக்கினாதிபதி சனியுடன் மாந்தி
லக்கினாதிபதி சனி வக்கிரம். லக்கினத்தில் கேது. லக்னம் வர்கோத்தமம்
சனி பார்வையில் சந்திரன், புனர்பூ தோஷம்
சனி குரு சேர்க்கை, பிரம்மஹத்தி தோஷம்
பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ஆறாம் அதிபதி சந்திரன். அத்துடன் சந்திரன் தேய்பிறைச் சந்திரன்.
பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி புதன் நவாம்சத்தில் நீச்சம்
பாக்கியஸ்தான அதிபதி சுக்கிரன் நீச்சம். மேலும் பாக்கியஸ்தான அதிபதி சுக்கிரன் தன் வீட்டிற்கு பன்னிரெண்டாம் வீட்டில் உள்ள கெட்ட அமைப்பு.
களத்திரகாரன் சுக்கிரன் எட்டாம் வீட்டில் மறைவு
ஏழில் சூரியன் களத்திர தோஷம்
ஏழாம் அதிபதி சூரியன் ஆட்சி பலத்துடன் இருந்தாலும் ராகுவின் பிடியில்
கேதுவின் பார்வையில் ஏழாம் வீடு
இரண்டாம் வீடு அதிபதி குரு ஆட்சி பலத்துடன் இருந்தாலும் சனி & மாந்தியின் பிடியில்
பாக்கிய ஸ்தான அதிபதி சுக்கிரன், ஏழாம் அதிபதி & ஏழாம் வீடு ஆகிய மூன்றும் கெட்டு இருப்பதால் இது திருமண தடை ஜாதகம்.
கன்னியில் உச்ச புதன் & நீச சுக்கிரன் இணைவு. நீசபங்க ராஜயோகம்.
குரு தனது ஒன்பதாம் பார்வையால் ஏழாம் வீட்டை பார்க்கின்றார். குரு பார்வையால் தாமத திருமணம் நடந்து இருந்தாலும் பிரிவை தந்து இருக்கும்.
லக்கினாதிபதி சனியுடன் தனக்காரன் குரு லாபஸ்தானத்தில் உள்ளதால் வருமானத்திற்கு குறைவில்லை.
Saturday, August 13, 2016 2:10:00 PM//////
-----------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

12.8.16

Astrology Quiz: ஜோதிடப் புதிர் எண்.114: உலகம் பிறந்தது உங்களுக்காக!!!!


Astrology Quiz: ஜோதிடப் புதிர் எண்.114: உலகம் பிறந்தது உங்களுக்காக!!!!

12-8-2016

கீழே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்:


கட்டத்தின் மீது கர்சரை வைத்துக் கிளிக்கினால் படம் முழுமையாகத் தெரியும்

இது ஒரு அம்மணியின் ஜாதகம். அம்மணியின் திருமண வாழ்க்கையையும், குடும்ப வாழ்க்கையையும் பற்றிய உங்கள் கணிப்பை விபரமாக எழுதுங்கள்.

சரியான விடையை நாளை 13-8-2016 சனிக்கிழமை மாலை 6 மணிக்குள் எழுதுங்கள். உங்களுக்குப் போதிய அவகாசம் கொடுத்துள்ளேன். அதை மனதில் கொள்ளுங்கள்!

அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

11.8.16

இனிமேல் எச்சரிக்கையா இருங்கள்!

இனிமேல் எச்சரிக்கையா இருங்கள்!

தெருக்களில் செல்லும் மக்களின் பாதுகாப்பிற்காகவும், வாகனங்களில் செல்வோரை முறைதவறாமல் வாகனங்களை செலுத்துவதற்காகவும், அபராதச் சட்டங்கள் திருத்தியமைக்கப்பெற்றுள்ளது.

சிலவற்றைக் கீழே கொடுத்துள்ளேன்

ஆகவே எச்சரிக்கையாக இருங்கள்

அன்புடன்
வாத்தியார்
===================================================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

10.8.16

நல்ல பாடல் ஒன்றைப் பதிவிட்டுள்ளேன் நீங்களும் கேளுங்கள்!


நல்ல பாடல் ஒன்றைப் பதிவிட்டுள்ளேன் நீங்களும் கேளுங்கள்!

பாடலை எழுதியவரும் சரி, இசை அமைத்தவரும் சரி, பாடியவரும் சரி கூட்டாகச் சேர்ந்து ஒரு நல்ல பாடலைக் கொடுத்திருக்கிறார்கள். பாடலின் காணொளியைக் கீழே கொடுத்துள்ளேன். அவசியம் பாருங்கள். பாட்டையும் கேளுங்கள்

படம்: லிங்கா (வெளியான தேதி 14-12-2014)
நடிப்பு: சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்!
பாடலாக்கம்: கவிஞர் வைரமுத்து
இசை: ஏ.ஆர். ரஹ்மான்
பாடியவர்: ஹரிச்சரண்


--------------------------------------
பாடல் வரிகள்:

உண்மை ஒருநாள் வெல்லும் - இந்த 
உலகம் உன்பேர் சொல்லும் - அன்று 
ஊரே போற்றும் மனிதன் 
நீயே நீயடா நீயடா 

பொய்கள் புயல்போல் வீசும் - ஆனால் 
உண்மை மெதுவாய்ப் பேசும் - அன்று நீயே 
வாழ்வில் வெல்வாய் 
கலங்காதே 
கலங்காதே 
கரையாதே 

ராமனும் அழுதான் 
தர்மனும் அழுதான் 
நீயோ அழவில்லை 
உனக்கோ அழிவில்லை 

ஆணியாகப் பிறந்தாய் - உனக்கு 
அடிகள் புதிதில்லை 
கலங்காதே 
கலங்காதே 
கரையாதே 

சிரித்துவரும் சிங்கமுண்டு 
புன்னகைக்கும் புலிகளுண்டு 
உரையாடி உயிர்குடிக்கும் ஓநாய்கள் உண்டு 
பொன்னாடை போர்த்திவிட்டு 
உன்னாடை அவிழ்ப்பதுண்டு 

பூச்செண்டில் ஒளிந்திருக்கும் 
பூநாகம் உண்டு 
பள்ளத்தில் ஓர் யானை வீழ்ந்தாலும் - அதன் 
உள்ளத்தை வீழ்த்திவிட முடியாது 

சுட்டாலும் சங்கு நிறம் 
எப்போதும் வெள்ளையடா 
மேன்மக்கள் எந்நாளும் 
மேன்மக்கள் தானே 
கெட்டாலும் நம்தலைவன் 
இப்போதும் ராஜனடா 
வீழ்ந்தாலும் வள்ளல் கரம் 
வீழாது தானே! 

பொன்னோடு மண்ணெல்லாம் போனாலும் - அவன் 
புன்னகையைக் கொள்ளையிட முடியாது 
===============================================================================================================
2

Talgo Trains 

High Speed Talgo Trains Coming to India. Last Trial 14th August.Test Speed 150kmph to 180kmph. In the long run 250kmph.Luxury of Spanish Coaches on the Rajdhani & Shatabdi Express Trains.

1


2


3


4

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!வளர்க நலமுடன்!

9.8.16

Humour: நகைச்சுவை: மனைவியின் அசத்தல் கட்டளைகள்!

Humour: நகைச்சுவை: மனைவியின் அசத்தல் கட்டளைகள்!

நகைச்சுவையை நகைச்சுவையாக மட்டும் பாருங்கள். வேறு விவகாரம் வேண்டாம்!
---------------------------------------------------------
மனைவியின் குறிப்பு கணவனுக்கு ....

நான் எங்க அம்மா வீட்டுக்கு போறேன். குழந்தைகளையும் அழைச்சிட்டு போறேன். திரும்பி வர ஒரு வாரமாகும்.

 1.நண்பர்களை அழைத்து கொட்டமடிக்க வேண்டாம். போனமுறை சோஃபா பின்னாலிருந்து நாலு ஓட்டல் பில் எடுத்தேன்.

2.பாத்ரூம் சோப் கேசில மொபைல மறந்து வச்சிராதீங்க. போன முறை தேடி அலைஞ்சப்ப நான் கண்டு எடுத்தேன்..

3.மூக்குக்கண்ணாடியை அதன் பாக்சில் வைக்கவும். போன முறை ஃப்ரீட்ஜில் இருந்தது.

4.வேலைக்காரிக்கு சம்பளம் தந்தாச்சு.உங்க தாராள மனப்பான்மையை காட்ட வேண்டாம்.

5.காலைல பக்கத்து வீட்டுக்கு பேப்பர் போட்டாச்சான்னு அவங்களை தொந்தரவு செய்ய வேண்டாம்.
நம்ம பேப்பர்காரன் வேற மாதிரி. பால்காரரும் சலவை செய்பவரும் அப்படியே.

6.உங்க உள்ளாடைகள் பீரோவில் வலது புறமும் குழந்தைகளோடது இடது புறமும் இருக்கு. மாத்தி போட்டுட்டு அன்கம்ஃபர்டபிளா இருந்தது  ஆஃபீசுலன்னு புலம்பாதீங்க.

7.உங்க மருத்துவ ரிப்போர்ட் பர்பெக்டா இருக்கு. அந்த லேடி டாக்டரை பாக்கவேண்டிய அவசியமில்லை.

8.என் தங்கையின் பிறந்தநாள் போன மாசமே நாம அட்டன்ட் பண்ணியாச்சு. முடிஞ்சிடிச்சி. நடு ராத்திரில விஷ் பண்றேன்னு போய் தொல்லை பண்ணாதீங்க.

9.பத்து நாள் Wi-fy.  கட் பண்ணிட்டு நிம்மதியா தூங்குங்க.

10.அப்புறம் என் தோழிகள் எல்லாமே Out of station. .

11. கட்டக்கடேசியா ஒண்ணு.ரொம்ப புத்திசாலித்தனமா நடந்துக்கறதா நினச்சி ஏதும் பண்ண வேண்டாம். நான் எப்ப வேணாலும்  திரும்பி வந்துருவேன்.முன்னறிவிப்பில்லாம. !!!
----------------------------------------
கணவன்: என்ன வில்லத்தனம்டா சாமி!...😭😭😭
====================================================
2
HOW TO TAKE MAJOR DECISIONS IN LIFE :-
.
.
.
First think from your heart...
.
then think from your mind...
.
discuss with your friends ... !.
.
.
Then do as your wife says.............!!😆
---------------------------------------------------
3.

*ஒருமருந்தாளுநரின் புலம்பல்*
கண்ட எண்ணைலயும் பொரிச்ச வடையையும், சமோசவையும் சாப்பிடறானுவ..!
சாக்கடைக்கு பக்கத்தில உள்ள குழாயிலிருந்து எடுத்த தண்ணில முக்கிக் கொடுக்கற பானிபூரியை சாப்பிடறானுவ..!
பூச்சிக்கொல்லி மருந்துகள் மூலமே வளர்க்கப்பட்ட காய்கறிகளையும், பழங்களையும் சாப்பிடறானுவ..!
டாய்லட் நல்லா கிளீன் பண்ணும்னு நிரூபிக்கப்பட்ட கோக்கையும், பெப்ஸியையும் குடிக்கறானுவ..!
தண்ணியடிக்கறானுவ..!,
சிகரட் குடிக்கறானுவ..!,
குட்கா.., பான்னு புகையிலையைப் போட்டு மெல்றானுவ..!
ரோட்டில புகைக்கு நடுவே ரெண்டு மணிநேரம் காத்தை சுவாசிச்சு வீட்டுக்கு வரானுவ..!
இவ்வளவும் பண்ணிட்டு, உடம்பு சரியிலலைன்னு இங்க வந்து நான் ஒரு மருந்து எடுத்துக்கொடுத்தா,
இந்த மருந்தாலே ஏதாவது SIDE EFFECT இருக்கா”ன்னு கேக்கிறார்கள்.முடியல.....சாமி!

------------------------------------------------------------------
4
தீவிர நாத்திகர் ஒருவர் தன் மகனுக்கு வைத்த பெயர் "கடவுள் இல்லை".

பள்ளியில் தமிழ் ஆசிரியர் " வருகைப்பதிவேடு" பதிவிற்காக அவன் பெயர் சொல்லி அழைக்கும் போது வகுப்பறையில் லேசான சிரிப்பலை வந்து போகும்.

ஆசிரியர்: " கடவுள் இல்லை "

மாணவன்:  " உள்ளேன்  ஐயா ."
--------------------------------------------------------------------
5
He wrote this about the situation during his lifetime:
1. The poor - work & work.
2. The rich - exploit the poor.
3. The soldier - protects both.
4. The taxpayer - pays for all three.
5. The wanderer - rests for all four.
6. The drunk - drinks for all five.
7. The banker - robs all six.
8. The lawyer - misleads all seven.
9. The doctor - bills all eight.
10. The undertaker - buries all nine.
11. The Politician - lives happily on account of all ten.
Written in 43 B.C. (ie. 2059 years ago), but valid even today.

இந்த 5ல் எது மிகவும் நன்றாக உள்ளது?
அன்புடன்
வாத்தியார்
==============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

8.8.16

Quiz: புதிர் எண்.113 புதிருக்கான பதில்


Quiz: புதிர் எண்.113 புதிருக்கான பதில்

வெள்ளிக்கிழமை (5-8-2016) புதிருக்கான பதில்:

பணிச் சுமை காரணமாக நேற்று இந்தப் பதிலை வெளியிட முடியவில்லை. காத்திருந்த அனைவரும் மன்னிக்கவும்!

ஒரு அன்பரின் ஜாதகத்தைக் கொடுத்து, அவர் பிறந்தது 1962ம் வருடம் என்றும், ஜாதகருக்கு அவருடைய 34வது வயதில் கடுமையான பணக் கஷ்டம் ஏற்பட்டது என்றும் ஜாதகப்படி 1.பணக் கஷ்டம் எதனால் ஏற்பட்டது? என்ற கேள்வியையும், 2.அது தீர்ந்து ஜாதகர் பிரச்சினையில் இருந்து மீண்டாரா - அல்லது மீளவில்லையா? என்ற கேள்வியையும் கேட்டிருந்தேன்.

வித்தியாசமாக ஜாதகர் பிறந்த வருடத்தையும், கஷ்டம் ஏற்பட்ட காலத்தையும் கொடுத்தன் காரணமே நீங்கள் அன்றைய தேதியில் கோள்சாரச் சனியை உற்று நோக்குவீர்கள் என்ற எண்ணத்தில்தான். ஆமாம், அது சமயம் ஜாதகருக்கு ஏழரைச் சனி நடந்து கொண்டிருந்தது. ஏழரைச் சனி தொழில், மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நெருக்கடியை உண்டாக்கும். அது ஜாதகருக்கும் அத்தகைய நெருக்கடியை உண்டாக்கியது. 1996ம் ஆண்டு ஜாதகரின் ராசியில் சனி. இப்போதாவது அதைக் கவனியுங்கள். அது முக்கிய காரணம்.

1.மேஷ லக்கின ஜாதகர். லக்கினாதிபதி செவ்வாய் 11ல்
2.கஷ்டம் ஏற்பட்டபோது ஆறாம் வீட்டுக்காரன் புதனின் மகாதிசை.
3.புதன் சனி மற்றும் கேதுவோடு மாட்டிக்கொண்டு உள்ளார். அவரும் கூடுதலான கெடுதல்களைச் செய்தார்.

ஆனால்
4. 2 மற்றும் 7க்குரிய சுக்கிரன் உச்சமாகியுள்ளார். 12ல் இருந்தாலும் உச்சமானதன் பலனை அவர் தராமல் விடமாட்டார். அவருடன் இன்னொரு சுபக்கிரகமான (4ம் அதிபதி) சந்திரனும் உள்ளார். அத்துடன் இருவர் மீதும் கர்மகாரகன் சனியின் பார்வை உள்ளது (3ம் பார்வை). ஆகவே ஜாதகர் சுக்கிர திசையில் பணப்பிரச்சினையில் இருந்து மீண்டுவந்தார். பத்து ஆண்டுகள் கழித்து ஜாதகரின் 44வது வயதில் இருந்து பிரச்சினைகள் படிப்படியாகக் குறைந்து அவரை சுக்கிர திசை மீள வைத்தது.

விளக்கம் போதுமா?
--------------------------------
போட்டியில் எட்டு பேர்கள் சரியான விடையை எழுதியுள்ளார்கள். அவர்களுக்கு பாராட்டுக்கள்.
அவர்களில் ஐந்து பேர்கள் மட்டும் மிகச்சரியான விடையை எழுதியுள்ளார்கள். அதாவது கோள்சார  ஏழரை
சனியின் சேட்டையையும் கவனித்து எழுதியுள்ளார்கள். அவர்களின் பெயருக்கு முன்னால் ****** போட்டு விஷேசமாக அவர்களைப் பாராட்டியுள்ளேன். பின்னூட்டங்கள் கீழே உள்ளன. பார்த்துத் தெரிந்து கொள்ளூங்கள். அவர்களுக்கு எனது மனம் உவந்த பராட்டுக்கள்!!!

அன்புடன்,
வாத்தியார்
=================================================
1
******/////Blogger Sathish Kumar said...
ஜாதகர் பிறந்த தேதி : 07 – 03 – 1962
மேஷ லக்னம். திரிகோண அதிபதிகள் மூவரும் லாப ஸ்தானத்தில் உள்ள நல்ல அமைப்பு.
தனஸ்தானத்தில் மாந்தி
ஆறாம் அதிபதி புதன், கேது & பாதகாதிபதி சனி மூவரும் தொழில் ஸ்தானத்தில் அமர்ந்து ஜாதகருக்கு தொழிலில் கடுமையான பிரச்னை கொடுத்து இருப்பார்கள்.
பாதகாதிபதி சனி ஆட்சி பலத்துடன் உள்ளது நல்ல அமைப்பு இல்லை.
ஜாதகருடைய 34வது வயதில் ஆறாம் அதிபதி புதன் தசை மற்றும் ஏழரைசனி நடந்தாலும் கடனில் மூழ்கி இருப்பார். கேது திசையிலும் சிரமப்பட்டு இருப்பார்.
45வது வயதில் வந்த சுக்கிர திசையில் கடனில் இருந்து மீண்டு இருப்பார். (தனஸ்தான அதிபதி சுக்கிரன் உச்சம்)
காலசர்ப்ப தோஷம் உள்ள ஜாதகம். இளமையில் சிரமப்பட்டு மத்திய வயதில் முன்னுக்கு வரும் அமைப்பு.
--------------------------------------------------------------------
2
******///////Blogger Chandrasekaran Suryanarayana said...
1. ஆறாம் வீட்டு அதிபதியின் தசை நடந்தாலும், ஏழரைசனி நடந்தாலும் பணப் பிரச்சினைகள் தலை தூக்கும்.
2. ஜாதகர் தனது மத்திய வயதில் பணத்தட்டுப்பாட்டிற்கு ஆளாகி, கடனில் மூழ்கி, பிறகு மீண்டு வந்தவர்.
மேஷ லக்கினம். லக்கினாதிபதி 11ல்
இரண்டாம் வீட்டிற்கு உரிய (தனஸ்தானத்திற்கு அதிபதி) சுக்கிரன் உச்சம், ஆனாலும் 12ல் அமர்ந்திருக்கிறார்.
11ஆம் அதிபதி சனி தன் வீட்டில் ஆட்சி பலத்துடன் லக்கினத்திற்கு அது 10ஆம் வீடு. ஆனாலும் 11ஆம் இடத்திற்கு அது 12ஆம் இடம்.
ஜாதகரின் ஆறாம் அதிபதி புதன் 10ல் பலத்த பாதிப்புடன் அமர்ந்துள்ளார். உடன் சனியும், கேதுவும் இருப்பதைப் பாருங்கள். 1996 - 2001 காலகட்டத்தில் அவருக்கு ஆறாம் அதிபதியின் தசை நடந்ததோடு, ஏழரைச் சனியும் சேர்ந்து கொண்டு, ஆசாமியைத் தெற்கு வடக்காகப் புரட்டிப் போட்டு விட்டது.அடுத்து வந்த கேது தசையிலும் அது தொடர்ந்தது. பிறகு சுக்கிரதிசை நடந்த காலகட்டத்தில் அவர் மீண்டு வந்துள்ளார்.
Saturday, August 06, 2016 6:41:00 AM//////
-----------------------------------------------------
3
//////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...
வணக்கம் வாத்தியாரே!
Quiz 113 க்கான பதில்.
கடன் தீர்ந்து, ஜாதகர் பிரச்சினையில் இருந்து சுக்கிர திசையில் மீண்டார்
ஜாதகர் பிறந்த தேதி : 07/Mar/1962 , 09.00 am
நட்சத்திரம் : பூரட்டாதி 4ம் பாதம்.
மேஷ லக்கினம், மீன ராசி.
6ம் அதிபதி புதனின் திசையில்; புதன், கேது மற்றும் சனியுடன்
கூடி 10ல் நின்று ஜாதகரை தொழிலுக்காக கடன் வாங்க வைத்தார்.
கேந்திரத்தில் இருக்கும் புதன் கடன் வாங்க வைக்கும்.
சனியுடன் கூடிய கேதுவால் பண வரவில் சிக்கல் ஏற்பட்டு கேது திசை முழுவதும் அவமான பட்டிருப்பார்.
அடுத்து வந்த சுக்கிர திசை ஆறாம் இடத்தை பார்ப்பதால் ஜாதகர் வியக்கும் விதத்தில் கடனிலிருந்து மீண்டிருப்பார்.
அன்புள்ள மாணவன்,
பா. லெக்ஷ்மி நாராயணன்.
தூத்துக்குடி.
Saturday, August 06, 2016 12:28:00 PM///////
--------------------------------------------------
4
******/////Blogger asbvsri said...
Astrology Quiz: 113 Answer
ஜாதகர் மேஷலக்னம். லக்னாதிபதியும் 8 ஆம் அதிபதியுமான செவ்வாய், 12 ஆம் அதிபதி மற்றும் 9 ஆம் அதிபதியான குரு மற்றும் யோகாதிபதி சூரியனுடன் 11 ஆம் இடத்தில்.
இரண்டுக்கும் 7 க்கும் அதிபதியான சுக்ரன் உச்சமாகி அவருடய பகைவர் சந்த்ரனுடன் ( 4ஆம் அதிபதி) 12 ஆம் இடத்தில்.
சனியும் புதனும் கேதுவுடன் கூடி 10 ஆம் வீட்டில். சனி நவாம்சத்தில் 12 ஆம் வீட்டில்.
34 வயதில் 1996 ல் அவருக்கு புதன் தசையில் சனி புக்தி ஆரம்பமானது. இருவரும் பகைவர்களாதலால் கேதுவுடன் கூடி நஷ்டத்தை ஏற்படுத்தினார்கள். கோள்சாரத்தில் சனி 1996 ல் 12 ஆம் இடத்திற்கு வந்து கேதுவுடன் மிகுந்த விரையங்களை ஏற்படுத்தினார். பின்னர் வந்த கேது தசையும் அவருக்கு நன்மை விளைவிக்கவில்லை. 1996 லிருது 2005 வரை சனி கோள்சாரத்தில் 12, லக்னம் மற்றும் 2 ஆம் வீட்டிலிருப்பதால் அவருடைய பணக்கஷ்டம் தீர்ந்திருக்காது.
கேது தசை 2005 ல் முடிந்தபிறகு வந்த சுக்ர தசையில் 2 க்கும் 7க்கும் அதிபதியாதலால் உச்சமாகியிருப்பதாலும் அவருடைய தசையில் பணக்கஷ்டத்திலிருந்து மீளும் வாய்ப்பை ஏற்படுத்தியிருப்பார். சூரியன் புக்தியில் யோகாதிபதியாதலால் கஷ்டத்திலிருந்து முழுவதும் மீண்டுருப்பார்.
நன்றியுடன்,
க இரா அனந்தகிருஷ்ணன் - சென்னை
Saturday, August 06, 2016 1:10:00 PM//////
----------------------------------------------------
5
/////Blogger Srinivasa Rajulu.M said...
1962 - மார்ச் மாதம் 7-ஆம் தேதி பிறந்த அன்பர், நல்ல உழைப்பாளி. சொந்த உழைப்பில் முன்னுக்கு வந்தவர். புத தசை சனி புக்திக்கு முன் வரை நன்றாகப் போய்க் கொண்டிருந்தது.
1. தன ஸ்தானாதிபதி விரைய ஸ்தானத்தில் (சுக்கிரன்) என்ற ரீதியில் பார்க்கும்போது, பெரிய சொத்து ஒன்றும் கிடையாது. ருண ஸ்தானாதிபதி புதன் திசையில் வாங்கிய கடன் சனி புக்தியில் திருப்ப முடியாமல் பெரிய கஷ்டத்தில் மாட்டிக் கொண்டார். லாப ஸ்தானாதிபதி சனி அவ்விடத்திற்குப் பன்னிரண்டில் மறைந்ததால் இந்த நிலைமை.
பின் தொடர்ந்து வந்த கேதுவின் ஏழு வருடங்களும் கஷ்டங்களும் தொடர்ந்தன.
௨. ஆனால் உச்சனான சுக்கிரன் தசை வந்தபோது நிலைமையில் முன்னேற்றம். சுக்கிரனுக்குப் பன்னிரண்டாம் இடம் மறைவு கிடையாது. மேலும் தனஸ்தானத்திற்குப் பதினொன்றில் சுபரான சந்திரனுடன் நிற்பது பண வரவைக் கொடுத்தது. 2012-ஆம் வருடம் வந்த லக்னாதிபன் புக்தி நல்லதாக அமைந்து இப்போது நன்றாக இருக்கிறார்.
Saturday, August 06, 2016 1:27:00 PM/////
---------------------------------------------------------
6
******/////Blogger Rajam Anand said...
அன்புள்ள வாத்தியாரிற்கு அன்பு வணக்கங்கள்,
ஜாதகர் 07-03-1962 பூரட்டாதி 4ம் பாதத்தில் மீன ராசியில் ஜனனம் ஆனார்.
தோசங்கள் – யோகங்கள்,
1. கால சர்ப்ப தோசம்
2. எல்லா சுபர்களும் பாபகார்த்திரி யோகத்தினிலுள்ளனர்
3. சனி, ஆட்சியில் 10ம் வீட்டிலுள்ளார் கேந்திரத்திலுள்ளார் – சஷ்ய யோகம்
4. ஏழரை சனி – கும்பத்தில் 5-3-93ல் தொடங்கி 6-6-2000ல் ரிசபத்தில் போகும்போது முடிவடைந்த்து. 36ம் வயது இந்தக்காலகட்டத்தில் வரும்.
5. புதன் திசை முடிய கேது திசை ஆரம்பமாகின்றது. அது 2005 ஆவணி மாதத்தில் முடியும்.
6. 2006 ஐப்பசி மாதம் குரு விருச்சிக ராசிக்கு வருகிறார், 7ல் குரு.
புதிரிற்கு விடை
பணக் கஷ்டம் ஜாதகப்படி எதனால் ஏற்பட்டது?
மேற்கொண்ட காரணங்களினால்
அது தீர்ந்து ஜாதகர் பிரச்சினையில் இருந்து மீண்டாரா - அல்லது மீளவில்லையா?
2005ம ஆண்டிற்கு பின் எல்லாம் நல்லபடியாக நடக்கும்
நன்றி
அன்புடன்
ராஜம் ஆனந்த்
Sunday, August 07, 2016 2:47:00 AM//////
------------------------------------------------
7
******/////Blogger venkatesh r said...
முதலில் வாத்தியார் அவர்களுக்கு "10000" பேர்கள் தினமும் அவரின் பதிவை பார்வையிட்டதற்கான வாழ்த்துக்கள். அது மேலும் பெருகி ஒரு லட்சம், ஒரு கோடி பேர் என்று வளர‌, பழனி முருகப் பெருமானை வேண்டுகிறேன்.

புதிர் எண் 113க்கான அலசல்:
மேச லக்கினம், மீன ராசி ஜாதகர். கால சர்ப்ப தோசமுள்ள ஜாதகம். லக்கினாதிபதி செவ்வாய் 11ல் அமர்ந்து குருவுடன் கிரகயுத்ததிலுள்ளார். 5ம் அதிபதி சூரியனும் அவருடன் கூட்டணியில் இருக்கிறார். தனாதிபதி சுக்கிரன் 12ல் மறைந்தாலும் உச்சமடைந்துள்ளார்.
இப்ப வாத்தியாரின் கேள்விக்கு வருவோம். ஜாதகரின் 34 வயதில் மிகக் கடுமையான பணக்கஷ்டம் ஏன் ஏற்பட்டது? ஜாதகப்படி அதன் காரணம் என்ன?
ஜாதகரின் 34 வயதில் புதன் மகாதசை, சனி அந்தரம் நடைபெற்ற நேரம். கர்மாதிபதி சனி 6ம் அதிபதி வில்லன் புதன் மற்றும் கேதுவுடன் கூட்டணியில் 10மிடத்தில் தன் சொந்த வீட்டில் உள்ளார்.
அதே சமயம் கோச்சார ஜன்ம சனி வேறு ஜாதகரை புரட்டிப் போட்டது. ஜாதகருக்கு மேற்கண்ட காரணங்களால் இருந்த வேலையும் போய், கடுமையான பண நெருக்கடி, கடன் சுமை ஏற்பட்டது.
ஜாதகர் பணப் பிரச்சனையில் இருந்து மீண்டு வந்தாரா?
புதன் மகாதசை முடிந்து, கேதுவின் தசை 7 வருடம் வரை ஜாதகருக்கு அந்த பணப்பிரச்சினை இருந்தது. பிறகு வந்த சுக்கிர தசையில் அதாவது ஜாதகரின் 46 வயதில் எல்லாக் கஷ்டங்களும் தீர்ந்து மீண்டு வந்தார்.
Sunday, August 07, 2016 2:39:00 PM//////
----------------------------------------------------
8
/////Blogger bala said...
Vanakkam Iyya,
Mesha lagna kaarar. Pooratadhi natchathram paadham 4.
Lagnathipathi sevvai 11il + 5 aam athipathi + 9 aam athipathi guru vudan
Jaathagarin 34 aam vayathil Budhan (3&6 - Villan) dasa sukra bukthi nadai petru ullathu
Sukran 2 aam veetirku uriyavan, lagnathirku 12il + uchaam+ chandran udan graha yudhham.
11 aam veetilum graha yuddham.
Chandra rasi yil irundhu paarthalum, irandam veetiruku uriyavan (sevvai) antha veetirku 11il, aana chandra rasi ku 12il..
Ivaye jaathagarin pana kastathirku kaaranam.
Pana Prachanayil irundhu meendar. Sukra dasai chandra bukthiyil.
Sukranum chandranum sernthu kaapatrinar. sukkran (2&7 irku uriyavan, chandran 4iruku uriyavan)
nandri,
Bala
Sunday, August 07, 2016 2:47:00 PM/////
------------------------------------------
பாராட்டி வந்த கடிதங்களுக்கான பதில்

/////Blogger mohan said...
ஆசிரியர் ஐயா வணக்கம்.
மெஞ்ஞானமும், விஞ்ஞானமும்
தங்களுக்கு ஒன்று சேர்ந்ததுடன்
எழுத்தாற்றலும், நகைச்சுவை உணர்வும்
சமவிகிதத்தில் உள்ளதாலும்
நல்ல எண்ணத்தாலும் , உழைப்பாலும்
இலவச சேவையினாலும் தினசரி பார்வையிடுவோர்
எண்ணிக்கை பத்தாயிரத்தைத் தாண்டி உள்ளது.
வாழ்க நீ எம்மான்./////

நல்லது. உங்களின் மேலான விளக்கத்திற்கும் அன்பிற்கும் நன்றி மோகன்!
-------------------------------------------------
/////Blogger kittuswamy palaniappan said...
Ayya vanakkam, as the viewers increased the responsibilities increase but this is not a days job, your efforts made you to have this numbers. we all pray you a better health and the best of everything,. let LORD PALANIAPPAN showers bleesings regards,/////

உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!
-------------------------------------------------
/////Blogger ARASU said...
ஆசிரியருக்கு வணக்கம் .
இன்னும் பத்து பத்தாயிரம் பேர் படித்து பயனடையும் வண்ணம் பழனி முருகனின் அருள் தங்களை
வழி நடத்தி செல்ல வேண்டுகிறேன் .
அன்புடன்
அரசு//////

உங்களின் பிரார்த்தனைக்கு நன்றி நண்பரே!
---------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!