மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

30.11.16

Health Tips: அனைத்து நோய்களுக்கும் மாதுளை மருந்து!!

Health Tips: அனைத்து நோய்களுக்கும் மாதுளை மருந்து!!

எல்லா சீசனிலும் கிடைக்கிற மாதுளம்பழத்தில் இருப்பது அத்தனையும் சத்து! சிலருக்கு தலையில் புழுவெட்டு இருந்தால் முடி ஏராளமாக உதிரும். இதைச் சரி செய்யும் தன்மை மாதுளைக்கு உண்டு.

புளிப்பு ரக மாதுளம்பழத்திலிருந்து 3 டீஸ்பூன் சாறு எடுத்து, அதை தலை முழுவதும் எண்ணெய் தடவுவது போல பரவலாக தடவ வேண்டும். 3 டீஸ்பூன் வெந்தயம், 2 டீஸ்பூன் துவரம் பருப்பு இரண்டையும் முந்தைய நாள் இரவே வெந்நீரில் ஊறவைத்து, மறுநாள் அரைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த விழுதை வைத்து தலையை அலச வேண்டும். இப்படி தொடர்ந்து 10 நாட்கள் குளித்து வந்தால், முடி உதிர்வது நின்று வளர ஆரம்பிக்கும்.

வியர்வையால் உடல் துர்நாற்றம் வீசுகிறதா? மாதுளம்பழத்தின் தோல் பகுதியை நன்றாகக் காய வைத்து பவுடராக்க வேண்டும். இதனுடன் பயத்தம்பருப்பு பவுடரை சம அளவு கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். தினமும் குளித்த பிறகு, உடலில் இந்த பவுடரை பூசி கழுவ வேண்டும். துர்நாற்றம் நீங்குவதுடன் உடலும் குளிர்ச்சியாகி விடும்.

ஒரு டீஸ்பூன் மாதுளை ஜூஸ், அரை டீஸ்பூன் சந்தனம் இரண்டையும் கலந்து முகத்தில் பூசி, 10 நிமிடம் கழித்து கழுவினால் முகத்தில் பளபளப்பு கூடும். சிலருக்கு திறக்கவே முடியாத அளவுக்கு கண் பொங்கிவிடும்.. இமைகளும் உதிர்ந்து விடும்.இதற்கு ஒரு மாதுளம்பழத்தை நான்காக வெட்டி, அதில் ஒரு துண்டை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு, ஆற வைத்துக் கிடைக்கிற தண்ணீரால் கண்களை கழுவினால், கண் பொங்குவது உடனே நிற்கும்.

சருமத்தின் சுருக்கத்தைப் போக்குவதிலும் மாதுளைக்கு முக்கிய பங்குண்டு! மாதுளம்பழ விழுதையும் வெண்ணெயையும் தலா ஒரு டீஸ்பூன் எடுத்து நன்றாகக் குழைக்க வேண்டும். தோலில் தொய்வு ஏற்பட்டிருக்கும் இடத்தில் இந்த பேஸ்ட்டைத் தடவி, பத்து நிமிடம் கழித்து கழுவ வேண்டும். தினமும் இப்படிச் செய்தால் தோல் சுருக்கம் நீங்கும்.

பருக்களை மறைய வைப்பதில் மாதுளைக்கு நிகர் மாதுளையேதான். மாதுளம்பழத்தை உதிர்த்து ப்ரீசரில் வைத்துவிடுங்கள். பத்து நாட்கள் கழித்து அதை எடுத்தால் நன்றாக விறைத்துப்போய் உடைக்க சுலபமாக இருக்கும். இதை பவுடராக்க வேண்டும். ஒரு டீஸ்பூன் இந்த பவுடருடன் ஒரு டீஸ்பூன் பயத்த மாவு, அரை டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு சேர்த்து கலக்க வேண்டும். குளிப்பதற்கு முன் இதை முகத்தில் பூசி, காய்ந்த பிறகு கழுவ வேண்டும். வாரம் இரண்டு அல்லது மூன்று முறை இப்படி செய்து வந்தால், பருக்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.

கடுமையான சீத பேதியால் அவதிப்படுகிறவர்களுக்கு அருமருந்து மாதுளைதான். மாதுளம்பழத்தின் தோல், விதை அல்லது பிஞ்சு, இதில் ஏதாவது ஒன்றை மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும். இதில் எலுமிச்சை அளவுக்கு எடுத்து எருமை தயிரை மோராக்கி கலந்து குடித்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

மாதுளம்பழச் சாறையும் அருகம்புல் சாறையும் சம அளவு கலந்து குடித்து வந்தால் சூட்டினால் மூக்கிலிருந்து ரத்தம் வடிவது நிற்கும். இது உடலுக்குக்கு குளிர்ச்சியையும் தரும்.

மாதுளம் பழத்திற்கு மாதுளங்கம் என்ற பெயரும் உண்டு. மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன. இதில் இனிப்பு, புளிப்பு இரண்டு ரக மாதுளையும் சக்தியளிக்கும் பழத்தில் சிறந்தது.

மாதுளம்பழத்தைச் சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகிறது. உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை மிகத் துரிதமாகவும், அதிக அளவிலும் அழித்து விடுகிறது. அதனால் நோய் நீங்கி ஆரோக்கியமும் சக்தியும் அளிப்பதில் மாதுளை சிறந்த பலனைத் தருகிறது.

இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. பித்தத்தைப் போக்குகிறது இருமலை நிறுத்துகிறது.

புளிப்பு மாதுளையைப் பயன்படுத்தினால் வயிற்றுக் கடுப்பு நீங்குகிறது. ரத்த பேதிக்குச் சிறந்த மருந்தாகிறது. தடைபட்ட சிறுநீரை வெளியேற்றுகிறது. பித்தநோய்களை நிவர்த்தி செய்கிறது. குடற்புண்களை ஆற்றுகிறது. பெப்டிக் அல்சர், டியோடினல் அல்சர், கேஸ்ட்ரிக் அல்சர் முதலிய எந்த வகையான அல்சரையும்குணமாக்குகிறது.

உலர்த்திய மாதுளம் பூக்கள் 10 கிராமுக்கு மாதுளம் மரப்பட்டை 20 கிராம் சேர்த்துக் கொதிக்க வைத்து, சிறிது படிகாரத்தைக் கலந்து வாய் கொப்பளிக்க வேண்டும். கொப்பளிப்பது தொண்டை வரை செல்ல வேண்டும். இவ்வாறு கொப்பளித்தால்தொண்டைப்புண், தொண்டைவலி, வாய்ப்புண் குணமாகும். அனைத்து நோய்களுக்கும் மாதுளை மருந்து!!

===================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

29.11.16

தென்னிந்தியாவிலுள்ள முருகன் கோவில் ஸ்தலங்கள் ஓம் என்ற வடிவில் அமைந்திருக்கும் விந்தை!

தென்னிந்தியாவிலுள்ள முருகன் கோவில் ஸ்தலங்கள் ஓம் என்ற வடிவில் அமைந்திருக்கும் விந்தை!

அறுபடை வீடுகளும் மற்றுமுள்ள 11 முக்கியமான முருகன் கோவில்களும் அமைந்திருக்கும் ஊர்களை ஒன்று சேர்த்தால் ஓம் என்ற வடிவம் கிடைக்கும். படத்தைப் பாருங்கள்.

ஊர்கள்: முதலில் அறுபடை வீடுகள்: 1.திருப்பரங்குன்றம், 2.திருச்செந்தூர், 3.பழநி, 4.சுவாமிமலை, 5.திருத்தணி, 6.பழமுதிர்ச்சோலை.
7. மருதமலை, 8.குக்கே சுப்பிரமணியர் கோயில் (தக்‌ஷிண கர்நாடகா), 9.சென்னை வடபழநி முருகன் கோயில், 10.வைத்தீஸ்வரன் கோயில் - முத்துகுமாரசாமி, 11.சிக்கல் சிங்கார வேலன் கோயில், 12.கட்டி சுப்பிரமணிய சுவாமி கோயில், தொட்டபல்லார்பூர் - பெங்களூருக்கு அருகில், 13.வயலூர் முருகன் கோயில், 14. சென்னிமலை முருகன் கோயில்,
15.பச்சை மலை முருகன் கோயில், 16.வெண்ணெய்மலை முருகன் கோயில், கரூர், 17.ஹரிபாடு முருகன் கோயில் ஆழப்புழா, கேரளா

வெற்றிவேல் முருகனுக்கு அரோஹரா!
--------------------------------------
இணையத்தில் கிடைத்ததை மொழிமாற்றம் செய்து, பகிர்ந்துள்ளேன்அன்புடன்
வாத்தியார்
============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

28.11.16

எது உலக அதிசயம் ?


எது உலக அதிசயம் ?

நான் தாஜ் மஹாலை பார்க்க சென்று இருந்தேன். பார்த்து திரும்பி பஸ்ஸில் வரும் பொழுது தாஜ் மஹாலை விட அழகான ஒரு கட்டிடம் உலகில் வேறு எதுவுமே இல்லை என்பதை போல் என்னுடன் பஸ்ஸில் பயணம் செய்தவர்கள் பேசி கொண்டார்கள். தாஜ் மஹால் மிக அழகான கட்டிடம் தான். அதை யாரும் மறுக்க முடியாது. ஆனால்?

தாஜ் மஹால் மட்டும் தான் உலகில் அழகான கட்டிடமா. அதை விட அழகான ஒரு கட்டிடம் உலகில் வேறு எதுவும் இல்லையா. ஏன்? இல்லை. நிறையவே இருக்கிறது.

சரி உலக அதிசயம் என்றால் என்ன? ஒன்று உருவான பின் அதே போல் ஒன்றை உருவாக்க முடியாது என்பது தான் உலக அதிசயம்.

நெல்லையப்பர் கோவிலில் கல் தூனை தட்டினால் ச, ரி, க, ம, ப, த, நி என்கிற ஏழு இசை ஸ்வரங்கள் ஒலிக்கும். கல்லுக்குள் 7 ஸ்வரங்களை வைத்தார்களே. அது உலக அதிசயம்.

திருப்பூரில் உள்ள குண்டடம் வடுக நாத பைரவர் கோவிலில். குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் பொழுது. குழந்தை இந்த, இந்த மாதத்தில் இந்த, இந்த வடிவத்தில். இவ்ளவு விதமான Positions ல இருக்கும் என்பதை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கல்லில் சிற்பங்களாக வடித்து வைத்துள்ளார்கள் என் முன்னோர்கள். அது உலக அதிசயம்.

அன்னியர் படை எடுப்பின் பொழுது கூட. இந்த அதிசய சிற்பங்களை அவர்களால் சிதைக்க முடியவில்லை.

இன்றும் நிறைய கோவில்களில் சூரிய ஒளி குறிப்பிட்ட ஒரு தேதி, நேரத்தில் மாலை போல் வந்து சிவலிங்கத்தின் மீது விழும்.  எவ்வளவு துல்லியமாக Measure செய்து ஆலயங்களை கட்டி இருப்பார்கள் என்று பாருங்கள். சில கோவில்களில் தினமுமே சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது மாலை போல் வந்து விழும். வட சென்னையில் உள்ள வியாசர்பாடி ரவீஸ்வரர் சிவன் கோவிலில் 3 வேளையும் சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது மாலை போல் வந்து விழும். இந்த கோவிலில் உள்ள சிவலிங்கம் எவ்ளவு ஆண்டுகள் பழமையான லிங்கம் தெரியுமா? ஐயாயிரம் ஆண்டுகள். இது உலக அதிசயம். மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில், தஞ்சை பெரிய கோவில் சிற்ப்ப, கட்டிட வேலைபாடுகளில் உள்ள அதிசயங்களை பற்றி சொல்வதென்றால். அதற்கு எனக்கு இந்த ஒரு பிறவி பத்தாது.

ஓசோன் 20 ம் நூற்றாண்டில் கண்டு பிடிக்கப்பட்ட படலம். 700 ஆண்டுகளுக்கு முன்பே மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலில் ஓசோன் படலத்தின் படம், அதன் முக்கியத்துவம், அதை நாம் எவ்வாறு பாதுக்காக்க வேண்டும் அனைத்தும் அங்கே வைக்கப்பட்டு உள்ளது. அது உலக அதிசயம். யாழி என்கிற மிருகத்தின் சிலை. பல பழங்கால கோவில்களில் இருக்கும். டைனோசர் போல். அதுவும் உலகில் வாழ்ந்து அழிந்த மிருகம் என்று சொல்கிறார்கள். சில பழம்கால கோவில்களில் உள்ள யாழி சிலையின் வாயில் ஒரு உருண்டை இருக்கும். அந்த உருண்டையை நாம் உருட்டலாம். ஆனால் ஆயிரம் குன்பூ வீரர்கள் ஒன்று சேர்ந்து முயற்சித்தாலும். யாழி வாயில் உள்ள உருண்டையை வெளியே உருவ முடியாது. அது உலக அதிசயம்.

இன்று தாஜ் மஹாலை விட மிகப்பெரிய மார்பிள் கட்டிடங்கள் உலகில் உருவாகி விட்டது. இன்று ஒரு வல்லரசு நாடு நினைத்தால். ஆயிரம் தாஜ் மஹாலை உருவாக்க முடியும். ஆனால் கல்லுக்குள் 7 ஸ்வரங்களை வைக்கும் அந்த வித்தையை. எந்த வல்லரசாலும் செய்ய முடியாது. வாயில் உள்ள உருண்டையை உருட்டலாம். ஆனால் உருவ முடியாது. இந்த வித்தையை இன்று எந்த வல்லரசாலும் செய்ய முடியாது. மிகப்பெரிய பிரும்மாண்ட கற் கோவில்களை. அழகிய கலை வேலைபாடுகளோடு உருவாக்குவது. இதை எந்த உலக வல்லரசாலும் செய்ய முடியாதது.

அது போல் ஜெயங்கொண்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரம் கோவில் ஒரு வரலாற்று சிறப்பு மிக்கது. அக்கோவிலில் உள்ள கிணற்றிற்கு அருகில் ஒரு சிங்கத்தின் சிற்பம் இருக்கும். சிங்கத்தின் வாயில் ஒரு கதவு தென்படும். அதன் மூலம் கீழே இறங்கினால் கிணற்றில் குளிக்கலாம். ஆனால் மேலேயிருந்து பார்த்தால் நாம் குளிப்பது தெரியாது.அன்றைய ராணிகளுக்காகவே கட்டப்பட்ட கிணறு அது.

அது போல் அக்கோவிலில் உள்ள கருவறையில் சுவர்களில் மரகதகற்கள் பதித்துள்ளனர். அதனால் வெளியே வெயில் அடித்தால் உள்ளே குளிரும். வெளியே மழை பெய்தால் உள்ளே கதகதப்பாக இருக்கும்.

அது போல் கோவில் மேற்கூரையில் ஒரு ஆள் பதுங்கும் உயரத்தில் பாதுகாப்பு பெட்டகம் உள்ளது. போர் காலத்தில் ஆயுதங்களும் படைவீரர்களும் பதுங்கும் வகையில் கட்டியுள்ளார் நமது ராஜேந்திர சோழர். மறத்தமிழரின் கட்டிடகலையை வாழ்த்துவோம்.
தமிழர் பண்பாட்டை போற்றி பாதுகாப்போம்.

முன்னோா்களின் திறமையையும், கலைநயத்தையும் போற்றித் தலை வணங்குவோம்

இம்மண்ணில் பிறந்தமைக்கு பெருமிதம் கொள்வோம்.
------------------------------------------------
படித்ததைப் பகிர்ந்துள்ளேன்

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

25.11.16

Astrology: ஜோதிடம்: அலசல் பாடம்: தாமதமாக நடக்கும் திருமணங்கள்!


Astrology: ஜோதிடம்: அலசல் பாடம்: தாமதமாக நடக்கும் திருமணங்கள்!
தாமதமாகத் திருமணம் நடைபெற்றதற்கு ஒரு உதாரண ஜாதகம்!

திருமணம் உரிய காலத்தில் நடைபெற வேண்டும். அந்தக் காலத்தில், அதாவது ஐம்பது, அறுபதுகளில், பெண்ணிற்கு 18 வயதிலும், பையனுக்கு 21 வயதிலும் திருமணத்தைச் செய்து வைத்துவிடுவார்கள்.

இப்போது அப்படியல்ல, படிப்பு, வேலை வாய்ப்பு காரணமாக, திருமணம் செய்து கொள்வதில் இளைஞர்களும், கன்னிகளும் முனைப்பாக இருப்பதில்லை. பெற்றோரும் அக்கறையில்லாமல், அல்லது வேறு வழியில்லாமல் இருக்கிறார்கள்.

இப்போதும், படிப்பு, வேலை வாய்ப்பு என்று எப்படிக் கண்க்கிட்டாலும் பெண்ணிற்கு 23 வயதிலும், பையனுக்கு 25 வயதிலும் திருமணத்தைச் செய்து விட வேண்டும்.

நடக்கிறதா? செய்கிறார்களா? பெரும்பாலும் இல்லை என்றே சொல்ல வேண்டும். எல்லோரும் ஜாதக்த்தைக் குற்றம் சாட்டுவார்கள். உரிய நேரம் வரவில்லை, உரிய வரன் கிடைக்கவில்லை என்பார்கள்.

80 சதவிகிதம் அதெல்லாம் கிடையாது. கிடைக்கும் வரனைப் போதும் என்று முன்வந்து மணந்து கொள்ள வேண்டாமா? இதைவிட நல்லது கிடைக்குமா? என்று கிடைப்பதை எல்லாம் ஒதுக்கும் சம்பவங்கள் நிறைய உள்ளன. அனுபவத்தில் பார்த்திருக்கிறேன்

சரி, அதெல்லாம் போகட்டும். உண்மையிலே ஜாதகப்படி திருமணம் தாமதமாகுமா? ஆகும்

ஏழாம் வீட்டுக்காரனும், களத்திரகாரனும் ஜாதகத்தில் வலிமையாக இல்லாவிட்டால், திருமணம் தாமதமாவதற்கோ அல்லது திருமணம் மறுக்கப் படுவதற்கோ வாய்ப்பு உண்டு (That is delay or denial of marriage)

உங்களுடைய பயிற்சிக்காக ஒரு உதாரண ஜாதகத்தைக் கீழே கொடுத்துள்ளேன்
----------------------------------------------------------------------------------


மீன லக்கின ஜாதகம்.
லக்கினாதிப்தி குரு எட்டில் இருக்கிறார்.
ஆறாம் வீட்டுக்காரன் சூரியன் லக்கினத்தில் இருக்கிறான்
பூர்வபுண்ணியாதிபதி சந்திரன் பன்னிரெண்டில் அமர்ந்திருக்கிறார்.
இரண்டாம் வீட்டில், புதன், சுக்கிரன், செவ்வாய், சனி ஆகியோருடன் மாந்தியும் இருக்கிறார்.
சந்திரனுடன், ராகுவும் கூட்டாக உள்ளார்
இதுதான் ஜாதக அமைப்பு
---------------------------------
1. சனியின் பிடியில் ஏழாம் அதிபதி புதன் இருக்கிறார்.
2. அதே சனியின் பிடியில் களத்திரகாரகன் சுக்கிரனும் இருக்கிறார்.

அதனால் ஜாதகனுக்கு 32 வயதுவரை எத்தனையோ முயற்சிகளை அவனுடைய பெற்றோர்கள் மேற்கொண்டும் திருமணம் நடக்கவில்லை!
குரு பகவான் தன்னுடைய நேரடிப்பார்வையால், இரண்டாம் வீட்டையும், அதில் அமர்ந்திருக்கும் நான்கு கிரகங்களையும் பார்ப்பதால், அத்துடன் அவர் லக்கினாதிபதியாகவும் இருப்பதால், ஜாதகனுக்கு, ஏழாம் இடத்ததிபதியின் புதன் திசை துவங்கியவுடன், தன்னுடைய கோச்சாரப்படி, இரண்டாம் வீட்டிற்கு வந்தவுடன், திருமண்த்தை நடத்தி வைத்தார்.

அன்புடன்
வாத்தியார்

================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

24.11.16

ஒரு நிமிடம் ஒதுக்கி இதை படிக்கலாமே!

 
ஒரு நிமிடம் ஒதுக்கி இதை படிக்கலாமே!

மோடி மோடி மோடி மோடி மோடி
இனி காகித பணதிற்கு வேலையில்லை இனி எல்லாம் E payments தான் வாழைக்காய் வியாபரிக்கும் வெங்காய வியாபரிக்கும் சேர்த்தே

இனி மேல் இந்தியாவில் பணதிற்காக

1.ஆள் கடத்தல் இருக்காது,மணல் கடத்தல் இருக்காது பெரிய தொகையாக காகித பணம் இனி யார் கையிலும் இருக்காது
 2.அரிசி கடத்தல் இருக்காது
3.கஞ்சா அபின் கடத்தல் இருக்காது
4.தீவிரவாதிகளுக்கு பணம் சப்ளை இருக்காது
5.அரசியல்வாதிகளுக்கு அலக்கைகள் இருக்காது
6.கருப்பு பணத்தில் அரசியல் மாநாடு இருக்காது
7.மதமாற்றம் இருக்காது
8.தினம் தினம் அரசியல் கட்சி போராட்டங்கள் இருக்காது
9.கந்துவட்டி இருக்காது 2 பில் புக் இருக்காது
10.ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் இருக்காது
11.அரசு அதிகாரிகள் லஞ்சம் இருக்காது
12.ஹவாலா பண பறிமாற்றம் இருக்காது
13.பணதிற்கு அரசு அதிகாரிகள் வளையமாட்டார்கள்
14.நிலத்தின் அரசு கைடுலைன் வேல்யூஸ் ஒன்று மார்கெட் விலை ஒன்று இருக்காது
15.பிளாட் விலை 1 கோடி 50 லட்சம் என இருக்காது
16.ரியல் எஸ்டேட் விலை கன்னாபின்ன என இருக்காது
18.மீட்டர் வட்டி கந்து வட்டி கொடுமை இருக்காது
19.இனி கருப்பு பணத்தை வைத்து வெட்டி அரசியல் இருக்காது
20.பணக்காரங்க  ஏழை வித்தியாசம் இருக்காது
21.வரவு செலவை பொய்யாக கணக்குகாட்டும் ஆடிட்டர் தொழிலே இருக்காது எல்லாம் ஆன் லைனில் வருமான வரி கண்காணிப்பாளர் இருப்பர்
23.இனி அனைவருக்கும் வீடு சாத்தியமாகும்
24.அரசில் கட்சிக்கு தொண்டர் படையே இருக்காது
25. அரசியலுக்கு பணதிற்கு வராமல் உண்மையான தேச பணியாற்ற வருபவர்களுக்கு வழி பிறக்கும்
26. பொருளாதார குற்றங்கள் இருக்காது
27. காவல் நிலையத்தில் திருட்டு வழிப்பறி குற்றங்கள் இருக்காது
28.செயற்கையாக விலையேற்றம் செய்யும் பதுக்கல்கார்கள் இருக்கமாட்டார்கள்
29. கன்டெய்னர் பணம் கடத்தல் இருக்காது அதை பிடிக்க தேர்தல் பறக்கும் படை இருக்காது
30. பணதிற்கு நாடு ஆண்ட அரசியல்வாதி இனி இருக்கமாட்டார்கள் ஓட்டுக்கு பணம் வழங்க முடியாது
31.பள்ளியில் கட்டணங்கள் இனி டொனேசனாக லட்சம் கருப்பாக வாங்க முடியாது
32.கல்வி கட்டணம் குறையும் எல்லாம் வங்கி மூலமே பீஸ் கட்ட வேண்டும்
33.கருப்பு பணத்தில் கோடிகளுக்கு விற்கப்படும் மெடிக்கல் மற்றும் இன்ஞினியர் படிப்பு சீட்டுகள் இனி அரசு விலையில் ஏழைக்கு படிக்க வாய்ப்பு கிடைக்கும்
34.தனியார் மருத்துவ மனைகளில் டாக்டர்கள் போடுவது தான் பில் இது மாறும்
35.இனி யார் கைகளிலும் பெரிய தொகையாக பணம் பணம் இருக்காது இனி அனைத்தும் வங்கி பறிமாற்றம் மூலமே அரசு அனுமதி அளிக்க இருக்கிறது.
36.சாமானிய மக்கள் இதை வரவேற்க வங்கியியல் வரிசையில் நிற்கிறார்கள் நல்ல அறிகுறி
37.பணக்காரன் வங்கிக்குள் நுழைய முடியவில்லை  மக்கள் கூட்டம் . வரிசையில் நிற்க கர்வம் தடுக்கிறது. இன்னும் 45 நாட்களில் அவர்கள் கருப்பு பணம் காலி
38.இனி உள்ளாட்சி தேர்தலில் இவ்வளவு போட்டி இருக்காது
39. அரசு பதவி புரமோசன் விலை பேசப்பட்டது
40. அரசு மருத்துவமனை சிறப்பாக செயல்படும்
41. வெட்டியாக பேசி கொண்டிருந்தவர் வேலை தேட வேண்டும்
42. வீட்டுக்கு வாடகை குறையும்
43. திருமண மண்டபத்தில் வாடகை கருப்பாக லட்ச கணக்கில் வசூலிக்க முடியாது
44.விவசாயிக்கு உண்மையான விலை கிடைக்கும்
45.ரேசன் கடையில் ஏழைக்கு குடும்பத்துக்கு ஒதுக்கப்பட்ட பொருள் கள்ள சந்தையில் விற்க முடியாது
46இனி அரசியல் சாக்கடை புனிதமாகும்
47.அனைத்து நிலங்களும் அரசு நிர்ணயம் செய்த விலைக்கு மக்களுக்கு கிடைக்கும்
48.அரசியல் ஒரு சாக்கடை என ஒதுங்கிய நல்லவர்கள் இனி அரசியலுக்கு வந்து மக்களுக்காக சேவையாற்றும் வாய்ப்பு வந்துள்ளது

டிசம்பர் 30 க்கு பிறகு மொத்தத்தில் மக்களின் கையில் பெரிய தொகை பணமாக இருக்காது

பிறகு எப்படி DD , செக் , டெபிட் கார்டு , கிரெடிட் கார்டு Neft / RTGS என லட்சம்  எல்லாம் வங்கிகள் பரிவர்த்தனைகளின் மூலம் மட்டுமே இருக்கும் நமக்கு பணமாக பாக்கட் மணி மட்டுமே குறைந்த அளவு வழங்கப்படும்

அதற்காகவே ₹500 ,₹1000 என்ற மெயின் பீசு முதலில் பிடிங்கியாச்சு இனி தூய்மையான பெரிய பணம் பரிமாற்றம் எல்லாம் வருமான வரி வளைத்தில் ஆன் லைனிலும் சுமார்ட் போனிலும டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மக்களுக்கு கிடைக்கும்

மக்களின் ஒவ்வொரு பண பரிவர்தனையும் வருமான வரி துறையின் கண்காப்பு வளையத்திலிருந்து தப்பாது

அடுத்து பினாமி சட்டம் வருகிறது சொத்துகளை காட்டி வரி கட்ட வாய்ப்பு கொடுத்தும் ஏமாற்றிய பணக்காரனுக்கு நிச்சயமாக சவுக்கடி கொடுக்கப்படும்

GST மசோதா நடைமுறைக்கு வரும்போது அனைத்து பொருள்கள் விலை பாதியாக குறைந்து மக்களுக்கு தரமான பொருள்கள் கருப்பு பணம் இன்றி ஞாயமான விலைக்கு கிடைக்கும்

இது போல இன்னும் கணக்கில் வராத லட்சம் பிரச்சனைகளுக்கான தீர்வு ஒரே நாளில் வர இருக்கிறது

இன்னும் டிசம்பர் 30 வரை காத்திருங்கள், 2020 ல் இந்தியா வல்லரசு ஆக மாற மிகப்பெரும் மாற்றதிற்கு தன்னை தயார் படுத்திவிட்டது...

இப்போது எதிர்பவர்களின் குரல் மெல்ல அடங்கி பாஜக மோடி பாஜக மோடி மோடி மோடி என்ற கோசம் அடுத்த தேர்தலில் மிக பலமாக ஒலிக்கும்

காந்தி கண்ட கனவு காங்கிரஸ் கலைந்து போகும் இப்போது அழிவது கருப்பு பணம் மட்டும் இல்லை கருப்பு அரசியல்வாதியும் தான்

இதை விட பலமாக தேச பக்த RSS யையும் பாஜகவையும் எதிர்க்க இன்று ஒரு அமைப்பு தொடங்கினாலும் இன்னும் அது வளர 100 ஆண்டுகள் ஆகும்

இதை அதிகம் பகிருங்கள் நாமும் மோடியின் கரத்தை வலுப்படுத்துவோம்

பாரத் மாதாகீ ஜெ!
---------------------------------------------------
பத்திரிக்கை செய்தி ஒன்றைக் கீழே கொடுத்துள்ளேன். அதில் இரண்டாம் பத்தியைப் படியுங்கள். இந்தப் பண ஒழிப்பு விவகாரத்தை முன்பே கணித்துச் சொல்லியுள்ளார்கள். அதையும் படியுங்கள். இந்த பேப்பர் கட்டிங் எனக்கு இணையத்தின் மூலமாக வந்தது. அதையும் இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்செய்தியை க்ளிக் செய்து பாருங்கள். பெரிதாக, படிப்பதற்கு வசதியாகத் தெரியும்!
படித்தேன்.பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்

===========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

23.11.16

அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய சேவை இது!


அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய சேவை இது!

அரசாங்க அமைப்புகளில் அனைவருக்குமே பயன்படும் வகையில் சில நல்ல நிகழ்வுகள் அவ்வப்போது நடந்துக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால் நம்மில் பலருக்கு இது போய் சேரவே இந்த பதிவு. முடிந்தவரை இதைப் பகிருங்கள். அனைவருக்கும் போய் சேரவேண்டும் என்பதே இதன் நோக்கம்.

சமீபத்தில் சென்னையில் நெருங்கிய நண்பர் ஒருவரது தந்தையார் புற்றுநோயால் காலமானார். உடலை சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டைக்கு எடுத்துக்கொண்டு போய் இறுதிச் சடங்குகள் செய்ய திட்டமிட்டிருந்தனர்.

அவர் சென்னை அரசு பொது மருத்துவமனையில் அதிகாலை சுமார் 2.30 மணி அளவில் காலமானார். அவரது உடலை அன்றே சொந்த ஊரில் தகனம் செய்ய திட்டமிட்டிருந்தனர்.

3.00 மணிக்கு நண்பர் மருத்துவமனையை அடைகிறார். அங்குள்ள மருத்துவர்கள் அவரின் தகனம் செய்யும் திட்டத்தைப் பற்றி அறிந்து கொள்கின்றனர். நண்பருக்கு ஒன்றுமே புரியவில்லை. ஒரு புறம் தந்தை இறந்த துக்கம். மறுபுறம் எப்படி எடுத்து அன்றே தகனம் செய்வது என்ற நெருக்கடி.

மருத்துவர்கள் அவரை ஆசுவாசப் படுத்தி. உங்களுக்கு 2 வழிகள் உள்ளன. ஒன்று அரசாங்க வாகனம் மற்றொன்று தனியார் வாகனம் . நீங்கள் அரசாங்க வாகனத்தை உபயோகித்தால். உங்களுக்கு ஒரு ரூபாய் கூட செலவு இல்லை. நீங்கள் தனியார் வாகனம் உபயோகித்தால் சுமார் 8000 முதல் 15000 வரைக் கேட்பார்கள் என்று கூறினார்கள். நண்பரோ தனியார் தான் சிறந்தது என்றெண்ணி அவர்களை தொடர்புக் கொண்டார். அவர்கள் சுமார் 8000 ரூபாய் செலவு ஆகும் என்றனர். மீண்டும் மருத்துவர்களைப் பார்த்து பேசிய நண்பர் அவர்களின் அறிவுரைப்படி அரசாங்க ஊர்தியின் விலைல்லா கட்டண தொலைபேசியை *155377*ஐ அழைத்து விசாரித்திருக்கிறார்.

அவர்கள், நீங்கள் எங்கே உடலை எடுத்துச் செல்லவேண்டும் என்று கேட்டுள்ளார்கள். நண்பர் விவரம்  சொல்லவே, நிச்சயம் நாங்கள் சிறந்த முறையில் உங்களின் பயணத்தை அமைத்து தருகிறோம் நீங்கள் ஆக வேண்டியதை முடிக்க சுமார் 3 மணி நேரமாகும் முதலில் அதை கவனியுங்கள் மற்றவை என்ன என்பதை நாங்கள் கவனித்துக் கொள்கிறோம் என்றனர்.

அவர்கள் சொன்னபடி சுமார் 7.30 மணிக்கு மற்றவேலைகளை முடித்துக் கொண்டு நண்பரை மீண்டும் தொடர்பு கொண்டுள்ளனர். அவர்கள் நண்பரிடம் சார் எங்களால் 100 கி.மீ வரைதான் இலவசமாக செல்ல இயலும். நாங்கள் உங்களுக்காக ஒரு மாற்று ஏற்பாடு செய்துள்ளோம். அதன்படி காலையில் குருவாயூர் விரைவு இரயிலில் உங்களுக்கு போதிய வசதிகள் செய்துள்ளோம். உடலோடு ஒருவர் இலவசமாக செல்லலாம் என்று கூறி ரயிலில் இஞ்சின் பெட்டிக்கு அடுத்த பெட்டியில் உடலை ஏற்றி விட்டார்கள். *கவனிக்க* இதுவரை அப்படி ஒரு வசதி ரயிலில் இருப்பது நம்மில் பல பேருக்கு தெரிய வாய்ப்பில்லை. அனைத்து ரயிலிலும் இந்த வசதி உள்ளது.

திருச்சியை நெருங்கும் வேளையில் நண்பருக்கு ஒரு அழைப்பு அலைபேசியில், அவர்கள் அரசாங்க ஊர்தியின் பணியாட்கள். நீங்கள் திருச்சி சந்திப்புக்கு வந்ததும் தொடர்பு கொள்ளுங்கள் மற்றவற்றை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்றனர். நண்பர்  சொன்னபடி தொடர்வண்டி திருச்சி வந்ததும் அந்த எண்ணை அழைத்துள்ளார். ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் அவர்கள் நடைமேடையிலேயே அவர்களின் வருகைக்காக காத்திருந்தனர். வந்தவர்கள் இரண்டே நிமிடங்களில் உடலைத் தூக்கிகொண்டு ஊர்தியில் வைத்து சொன்ன நேரத்திற்க்கெல்லாம் அங்கிருந்து கிளம்பி ஊருக்கு உரிய நேரத்தில் எடுத்துச் சேர்த்துள்ளனர். நண்பரும் அவர் குடும்பத்தாரும் திட்டமிட்டபடி இறுதிச் சடங்குகளை குறித்த நேரத்திற்க்கெல்லாம் முடித்துள்ளார்கள்.

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரிவார்.

உதவி என்பது, செய்யப்படும் அளவைப் பொருத்துச் சிறப்படைவதில்லை; அந்த உதவியைப் பெறுபவரின் பண்பைப் பொருத்தே அதன் அளவு மதிப்பிடப்படும்.

பொது மருத்துவமனையிலிருந்து இறுதி வரை அவர்கள் ஒரு ரூபாய் கூட வாங்காதது மட்டுமல்லாமல். அவர்கள் எழும்பூரில் நண்பர் எடுத்த பயணச்சீட்டின் 100 ரூபாய் காசையும் திரும்ப கொடுத்து விட்டார்கள்.

எனவே இந்த சேவையைப் பற்றி நண்பர் சொன்னபடி இங்கு பதிந்துள்ளேன். அனைவரும் பகிரவும். இந்த செய்தி யாருக்காவது நன்மை அளிக்கட்டும்.

*விலையில்லா சேவையிலும் நேர்மை உண்டு*.

*விலைல்லா அமரர் ஊர்தி எண்ணிற்கு 155377*
===================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

22.11.16

கந்தசஷ்டி கவசம் அபூர்வ தகவல்கள்

 
 கந்தசஷ்டி கவசம் அபூர்வ தகவல்கள்

கந்த சஷ்டி கவசம் என்பது பால தேவராய சுவாமிகளால் முருகப் பெருமான் மீது இயற்றப்பட்ட பாடலாகும்.

'காக்க' என இறைவனை வேண்டிக்கொள்ளும் பாடல்களைக் கவசம் என்பர். பிற்காலத்தில் தமிழில் அச்சிடப்பட்டு வழங்கும் கவச நூல்கள் ஆறு. அவற்றில் இந்த நூல்தான் பெரிதும் போற்றப்படுகிறது. இதில் எழுத்து மந்திர உச்சாடணங்கள் உள்ளன. பலர் இதன் பாடல்களை மனப்பாடம் செய்து போற்றி வழிபடுகின்றனர். பழனி முருகன்மீது பாடப்பட்டது. பாடல் வரிகளில் யாருக்காக, யாரைக்குறித்து, யாரால், அல்லது பாடுபவர் பெயரை பாடல் வரிகளில் எழுதுவது அக்கால மரபு என்கின்றனர்.

நூலின் காலம் 16ஆம் நூற்றாண்டு.

கந்த சஷ்டி கவசத்தை பால தேவராய சுவாமிகள் அரங்கேற்றிய தலம் ஈரோடு அருகில் உள்ள சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்.கந்த சஷ்டி கவசத்தில் வரும் ’சிரகிரி வேலவன்’ எனும் வரிகள் சென்னிமலை இறைவனைக் குறிப்பவை.

இந்தப் பாடலின் இசை வடிவம் பலரால் பாடப்பட்டுள்ளது. இதற்கு ஒளிக் காட்சி எதுவும் இல்லை, அதனால் முருகப் பெருமான் அலங்காரம், திருக்கல்யாணம் உள்ளிட்ட நிகழ்வுகளை இசையுடன் இணைத்துப் பல தொலைக்காட்சியில் காலையிலும் மாலையிலும் ஒளிபரப்புகின்றனர்.

முருகப்பெருமான் புகழ்பாடும் பாடல்கள் எத்தனையோ நூறாயிரம் இருந்தாலும், தனது தனித்தன்மையால் உயர்ந்து நிற்கிறது இந்த சஷ்டி கவசம். இதை இயற்றியவரான பாலதேவராய சுவாமிகள் மிகச்சிறந்த முருக அடியார் என்பதுதான் தெரியுமே தவிர, அவர் எங்கு, யாருக்கு மகனாக பிறந்தார்? எப்படியெல்லாம் வாழ்ந்தார்? என்பதற்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.

எனினும், கந்த சஷ்டி கவசப் பாடல்களில் காணப்படும் சில சொல்லாடல்களை வைத்துப் பார்க்கும்போது அவர் பாண்டிய நாட்டைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று கணிக்க மட்டுமே முடிகிறது. கந்த சஷ்டி கவசத்தில் நிறைய சொற்கள் வடமொழியில் இருந்து எடுத்தாளப்பட்டு இருப்பதால் பாலதேவராய சுவாமிகள் வடமொழியில் சிறந்த புலமை பெற்றவராக திகழ்ந்ததும் தெளிவாகிறது. மேலும், சஷ்டி கவசப் பாடல்களின் வயது சுமார் 250 ஆண்டுகள் இருக்கலாம் என்றும் கணிக்கப்படுகிறது. பாலதேவராய சுவாமிகள் முருகப்பெருமானின் 6 அறுபடை வீடுகளுக்கும் சஷ்டி கவசங்களை இயற்றினாலும், அவை அனைத்துமே முருகப்பெருமானின் புகழ் பாடுவதால் கந்தர் சஷ்டி கவசம் என்று அழைக்கப்படுகின்றன. ஆனாலும் இப்போது அதிகம் பாடப்படுவது திருச்செந்தூர் தலத்திற்கு அவர் இயற்றிய, சஷ்டியை நோக்க சரவண பவனார்.. என்று ஆரம்பிக்கும் 270 வரிகளைக் கொண்ட கவசம்தான்.

சஷ்டி கவசம் பிறந்த கதை: பாலதேவராய சுவாமிகள் கந்த சஷ்டி கவசத்தை உருவாக்கிய சூழ்நிலை உணர்ச்சிப்பூர்வமானது.

ஒருசமயம் அவர் கடும் வயிற்றுவலியால் அவதிப்பட்டார். எவ்வளவோ சிகிச்சைகள் மேற்கொண்டும் அவரது வயிற்றுவலி குணமாகவில்லை. வாழ்க்கையே வெறுத்துப் போனவர் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளும் முடிவோடு திருச்செந்தூருக்கு வந்தார். அவர் அங்கு வந்த நேரம் கந்த சஷ்டி விழா ஆரம்பித்திருந்தது. ஏற்கனவே பாலதேவராய சுவாமிகள் தீவிர முருக பக்தர் என்பதால் அந்த திருவிழாக் காட்சிகளைப் பார்த்து சற்று மனம் மாறினார். திருவிழா முடிந்த பிறகு தற்கொலை முடிவை எடுத்துக்கொள்ளலாமே.. என்று எண்ணியவர், முருகப் பெருமானை வேண்டி சஷ்டி விரதம் இருக்கத் தொடங்கினார். முதல் நாள் செந்தூர் கடலில் புனித நீராடி முருகனை வழிபட்ட பிறகு, கோயில் மண்டபத்தில் கண்களை மூடி தியானத்தில் அமர்ந்தார். அவருக்கு முருகப்பெருமான் காட்சி தந்து அருள் புரிந்ததோடு தனக்காக சஷ்டி கவசம் பாடும் திறனையும் அவருக்கு அளித்தார்.

அடுத்த நிமிடமே பாலதேவராய சுவாமிகள் மனதில் பக்தி வெள்ளமானது பிரவாகம் எடுத்து ஓடியது.

சஷ்டியை நோக்க சரவண பவனர்சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்... என்று துவங்கும் திருச்செந்தூர் திருத்தலத்திற்கான சஷ்டி கவசத்தை முதன் முதலாக எழுதி முடித்தார்.

அதற்கு அடுத்த 5 நாட்களுக்கு, முருகப்பெருமானின் பிற அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை திருத்தலங்களுக்கான சஷ்டி கவசங்களை இயற்றி முடித்தார். 6 சஷ்டி கவசங்களையும் பாலதேவராய சுவாமிகள் இயற்றி முடிந்தபோது, அவரை வாட்டி வந்த வயிற்றுவலி முற்றிலும் காணாமல் போய் இருந்தது. கந்த சஷ்டி கவசம் இயற்றுவதற்காகவே தன்னை முருகப்பெருமான் சோதித்து திருவிளையாடல் புரிந்துள்ளார் என்பதை அறிந்த சுவாமிகள் மிகுந்த பரவசம் ஆனார். அழகன் முருகப்பெருமானை ஆனந்தக் கூத்தாடி தொழுதார். திருவாசகத்திற்கு மனம் உருகாதவர்கள் யாரும் இல்லை என்றால், சஷ்டி கவசத்திற்கு தங்கள் மனதை பறிகொடுக்காதவர்கள் யாரும் கிடையாது. அவ்வளவு சக்திமிக்க வரிகள் கொண்டது சஷ்டி கவசம்.

பாம்பன் சுவாமிகள்: பாம்பன் சுவாமிகள் அடிக்கடி மனம் உருகி கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்து கொண்டிருப்பார். அப்படி ஒரு முறை பாராயணம் செய்தபோது தானும் இதேபோல் ஒரு கவசநூலை முருகன் மீது பாட வேண்டும் என்று ஆசைப்பட்டார். அவ்வாறு அவர் பாடியதுதான் சண்முக கவசம். இந்த சண்முக கவசமும் கந்த சஷ்டி கவசம் போன்று 6 கவசங்களை உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது. முருகனுக்கு உகந்த விரதம் சஷ்டி. இது 6 நாட்கள் மேற்கொள்ளப்படுகிறது. அதாவது, ஐப்பசித் திங்கள் பூர்வபட்ச பிரதமை திதியில் தொடங்கி, ஆறாம் நாளான சஷ்டி திதியில் இந்த விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

இதேபோல், முருகப்பெருமானுக்கு முகங்களும் 6. முருகனின் படை வீடுகளும் 6. முருகனை வளர்த்த கார்த்திகைப் பெண்களும் 6 பேர், சரவணபவ என்ற முருகப்பெருமானின் திருமந்திரமும் 6 எழுத்து. ஜாதகத்தின் ஆறாம் இடம் பொதுவாக விரோதம், கடன், ரோகம், சத்ரு போன்றவற்றை குறிக்கும். இந்த தோஷங்கள் அனைத்தையும் போக்கும் வல்லமை கொண்டவரும் முருகப்பெருமான்தான். அதனால், நாம் வழக்கமாக பாடும் திருச்செந்தூர் திருத்தலத்துக்கான சஷ்டி கவசத்தோடு, மற்ற 5 அறுபடை வீடுகளுக்கும் சேர்த்து பாலதேவராய சுவாமிகள் இயற்றிய சஷ்டி கவசங்களையும் பாராயணம் செய்வது நல்லது.

கந்த சஷ்டியில் வரும் அதி சூட்சும முருக மந்திரம் :
ஐயும் கிலியும் அடைவுடன் சௌவும்
உய்யொளி சௌவும் உயிரையுங் கிலியும்
கிலியும் சௌவும் கிளரொளியையும்
நிலைபெற் றென்முன் நித்தமு மொளிரும்
சண்முகன் ரீயும் தனியொளி யொவ்வும்
குண்டலி யாஞ்சிவ குகன்தினம் வருக
கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்வதின் பலன்கள்

சஷ்டி அன்றும் செவ்வாய்க்கிழமையிலும் கந்த சஷ்டி கவசம் படிக்க பலன் அதிகமாகும். வம்ச விருத்தி, காரிய வெற்றிக்கு, சஷ்டியன்று காலையிலும், நோய் நிவர்த்தி, கிரகதோஷ நிவர்த்திக்கு செவ்வாய்க்கிழமை மாலையிலும் படிக்க விரைவில் பலன் கிடைக்கும்.

இது சமஷ்டிக் கோலப் பாராயணமானதால் அறிவு, செல்வம், வம்ச விருத்தி, வெற்றித் திறன் ஆகியவை படிப்பவர் விரும்பிக் கேட்டாலும் கேளாது இருந்தாலும் தானே அருளும் அரிய கவசம் ஆகும்.

சஷ்டிக் கவசத்தை கந்தசஷ்டி விரத நாட்களில் ஒருநாளைக்கு 36 தடவை வீதம் ஆறு நாட்களில் 216 தடவை கூறினால் குழந்தை பாக்கியம் நிச்சயம் கிடைக்கும் என்பதும், நினைத்த காரியம் நடக்கும் என்பதும் ஐதீகம். இதைத் தான் சட்(ஷ்)டியில் இருந்தால் அகப்பை(கருப்பை) யில் தானே வரும் என்று பழமொழியாக கூறுகிறார்கள்.

படித்ததைப் பகிர்ந்தேன்!

அன்புடன்
வாத்தியார்

==========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

21.11.16

Humour: நகைச்சுவை: பணத் தட்டுப்பாட்டை மறந்துவிட்டு சிரித்து வைப்போம் வாங்க!

 
Humour: நகைச்சுவை: பணத் தட்டுப்பாட்டை மறந்துவிட்டு சிரித்து வைப்போம் வாங்க!
பதிவிட்டுள்ளவை எல்லாம் சிரிக்க மட்டுமே: வேறு விவகாரம் வேண்டாம்!
-----------------------------------------------------------------------
1
ஒரு புடவை வாங்க முன்னூறு புடவைகளைப் புரட்டிப் பார்த்த மனைவியிடம் எரிச்சலுடன் கணவன் சொன்னான்:

"ஆதிகாலத்தில் ஏவாள் வெறும் இலையை மட்டுமே உடுத்தி இருந்தாள். இது போன்ற தொல்லைகள் நல்ல வேளை ஆதாமுக்கு இல்லை."

இதற்கு மனைவி சொன்ன பதில்:

"அதுக்கு அவன் எத்தனை மரம் ஏறி இறங்கினானோ?"
--------------------------------------------------
2
தாய் - ஜோசியரே, எவ்வளவு பரிகாரம் செய்தும், என் பையன் வெளிநாடு செல்வது தடைபட்டே வருதே..?

ஜோசியர் - பெயரை மோடின்னு மாத்திப் பாருங்களேன்..
--------------------------------------------------
3
 ( தொலைபேசியில் ஒரு பதற்றமான குரல்...)  

"டேய் மச்சான்... எங்கடா இருக்க?"  

"வீட்லதான்டா இருக்கேன்..."  

"அப்பாடா... இப்பதான்டா நிம்மதியா இருக்கு...!!"  

"ஏன்டா? என்ன விஷயம்??"

"அதில்லடா..... காலையில பேப்பரை பார்த்தேன். அதுல, உங்க தெருவுல வெட்டியா சுத்திகிட்டிருந்த நாய்களை எல்லாம் கார்பரேசன்-காரங்க புடிச்சுட்டு போனதா செய்தி போட்டிருந்துச்சு. அதான்... எங்க நீ மாட்டிகிட்டீயோன்னு பயந்தோ போயிட்டேன்....."
--------------------------------------------
4
அம்மா: என்னடி உன் புருஷன் தினமும் இப்படி குடிச்சுட்டு வராரே
நல்லாவா இருக்கு

மகள் : தெரியலை அம்மா நான் இன்னும் டேஸ்ட் பண்ணி பார்க்கலை!!
-------------------------------------------------------
5
நீ என் தங்கக் குட்டியாம்… தாத்தா சொல்றதைக் கேப்பியாம்…
நான் உன் புத்தகப் பையைத் தூக்கிட்டு வருவேனாம்…. பாப்பா நடந்து வருவியாம்.

வேண்டாம் தாத்தா… என் பையைத் தூக்கி நீ கஷ்டப்பட வேணாம். நானே என் பையைத் தூக்கிக்கிறேன். நீ என்னைத் தூக்கிக்கிட்டு வந்தாப் போதும்…
------------------------------------------
6
“ஏன் ஸ்கூட்டரை திருடினே…?”

“டிராபிக் போலீஸ்காரர்தாங்க சீக்கிரம் வண்டிய எடு, வண்டிய எடுன்னு அவசரப்படுத்தினாரு எசமான்..!”
------------------------------------------------
7
 பகல்ல உங்களுக்குக் கண் தெரியாதா டாக்டர்….?”

“தெரியுமே…ஏன் கேட்கறீங்க….. ?”

“இல்ல…பார்வை நேரம் மாலை ஆறிலிருந்து எட்டுவரைன்னு போர்டு வெச்சிருக்கீங்களே… அதான் கேட்டேன்.!”
--------------------------------------------------
8
 முதலாளி: டேய் முனியா, நான் கொஞ்சம் வீட்டுக்குப்போய் ஓய்வு எடுத்துக்கிட்டு வர்றேன்… நீ கடையைப் பார்த்துக்க…

முனியன்: உங்களுக்கு எதுக்கு சிரமம் முதலாளி? நானே போய் ஓய்வை எடுத்துக்கிட்டு வந்துடறேனே!
----------------------------------------------------
9
"என் ஒய்ஃபு என்னைய ₹2000/- நோட்டு மாதிரி பாத்துக்கறா..!"

"அவ்ளோ மரியாதையாவா?"

"ம்க்கும்... 'உங்கள மாத்தவும் முடில...தூக்கிப் போடவும் முடில'ன்னு திட்றாய்யா!"
----------------------------------------------------
10
மனைவி :- நான் ஷாப்பிங் போறேன், உங்களுக்கு எதாவது வேணுமா?

கணவன் :- எனக்கு அறிவுக்கான விளக்கமும் என் வாழ்வில் அதற்கான தேவையைப் பற்றியும் தெரியவேண்டும். என் மனம் நிறைவடைந்திருப்பதை உணரவேண்டும், கடவுளுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு என்னைச்சுற்றியுள்ள தெய்வீக சக்தியை உணரவேண்டும்

மனைவி_:- குவாட்டரா, ஆப்பா ரெண்டுல எதுவேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க...!!!
---------------------------------------------------------------
இந்தப் பத்தில் எது மிகவும் நன்றாக உள்ளது?

அன்புடன்
வாத்தியார்

==========================================


வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

18.11.16

Astrology: ஜோதிடம்: அலசல் பாடம்: குழந்தையின்மைக்கு ஒரு உதாரண ஜாதகம்

Astrology: ஜோதிடம்: அலசல் பாடம்: குழந்தையின்மைக்கு ஒரு உதாரண ஜாதகம்

குழந்தை இன்மை என்பது ஒரு சாபம்தான். சாபம் என்றாலும் குழந்தை இல்லாதவர்கள் வருந்தாதீர்கள். காலதேவன் கொடுக்கும் சாபங்களுக்கெல்லாம், இறைவன் நஷ்ட ஈட்டையும் கொடுத்துத்தான் மனிதர்களைப் படைக்கிறார். இல்லை என்றால் அனைவருக்கும் 337 என்ற மந்திரம் எப்படி வரும்?

தங்கள் குழந்தைகளைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்து, தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து, அவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படாமல் பாதுகாத்து வளர்த்த பெற்றோர்களை எத்தனை பிள்ளைகள உதாசீனப் படுத்துகின்றன தெரியுமா? எத்தனை பெற்றோர்கள் உரிய அன்பு பாசம் அரவணைப்பு கிடைக்காமல் முதியோர் இல்லங்களில் வாடிக்கொண்டிருக்கிறார்கள் தெரியுமா?

அவர்களைப் பார்க்கும் போது, குழந்தை இல்லாதவர்களின் நிலைமை எவ்வளவோ மேல்!

என்ன, சமூகம் அவர்களைச் சீண்டும். அது ஒன்றுதான் வருத்தத்திற்கு உரியது! உறவினர்களோ அல்லது நண்பர்களோ திடீரென்று உங்கள் குழந்தைகள் என்ன செய்கின்றன என்று கேட்டு அவர்களைச் சங்கடத்திற்கு ஆளாக்குவார்கள்

லைசென்ஸ் இல்லாத வாகன ஓட்டியைப் போலீஸ்காரன் மடக்கிக் கேள்வி கேட்பதைப் போல கேள்வி கேட்பார்கள்!

கேட்டால் என்ன? அடக்கமாகப் பதில் சொல்லுங்கள்

“I do not have a child. I don't know whether it is a curse or boon. But i accepted the out come of the life destined to me, happily!”

“எனக்குக் குழந்தை இல்லை. அது சாபமா அல்லது வரமா என்று தெரியவில்லை. விதிக்கப்பெற்றதை ஏற்றுக்கொண்டு வாழும் மனப்பக்குவம் எனக்கு உள்ளது. அதனால் நான் குழந்தையின்மைக்காக வருந்தவில்லை”. என்று சொல்லுங்கள்!

குழந்தை இருப்பவனுக்கு அவன் குழந்தைகள் மட்டுமே குழந்தைகளாக இருக்கும். குழந்தை இல்லாதவனுக்கு, அவன் செலுத்தும் அன்பினால் உறவினர்கள், நண்பர்கள் என்று மற்ற வீட்டுக் குழந்தைகளும் அவனுடைய குழந்தைகள்தான் என்ற பெருந்தன்மையால் நிறையக் குழந்தைகள். ஆகவே குழந்தையின்மை சாபமல்ல ஒரு வித்ததில் அது வரம்தான்!
----------------------------------------------------------------
சரி சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன்!

கீழே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்


கடக லக்கின ஜாதகம். லக்கினாதிபதி சந்திரன் லக்கினத்திலேயே இருக்கிறார்.

குடும்ப ஸ்தான அதிபதி (Lord of the 2nd house) சூரியன் பாக்கியத்தில் (9ஆம் வீட்டில்) ஆகவே நல்ல குடும்ப வாழ்க்கை அமைந்தது

குழந்தையின்மைக்கான காரணங்கள் என்ன என்பதைக் கீழே பட்டியலிட்டுள்ளேன்.

1
குழந்தை பாக்கியத்திற்கான வீட்டில் (ஐந்தில்) ராகு,
2
அந்த (ஐந்தாம்) வீட்டு அதிபதி செவ்வாய் கேதுவுடன் சேர்ந்து கெட்டிருக்கிறார். வீக்காக உள்ளார்
3
குழந்தைக்குக் காரகன் குரு  (authority for children) அஷ்டமத்தில் மறைந்துவிட்டார் அதாவது எட்டாம் இடத்தில் அமர்ந்து விட்டார். அத்துடன் விரையாதிபதி அத்துடன் அவர் விரையாதிபதி. செல்லாக் காசாகிவிட்டார்.
4
அத்துடன் அதே குரு பகவான்தான் இந்த ஜாதகத்திற்கு பாக்கியாதிபதி அதாவது Ninth Lord அவர் தன்னுடைய இடத்திற்குப் பன்னிரெண்டில் அமர்ந்திருக்கிறார். அது மோசமான இடமாகும் (It is the most melefic place for a house lord)
5
மேலும் இயற்கையாகவே சுபக்கிரகங்களான சுக்கிரன், குரு, மற்றும் புதன் ஆகிய மூவரும் எட்டில் அமர்ந்ததால் எந்தப் பயனும் இல்லாமல் போய்விட்டது!

விளக்கம் போதுமா?

அன்புடன்
வாத்தியார்
----------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

17.11.16

என்ன செய்தார் மோடி?


என்ன செய்தார் மோடி?

😀😀நரேந்திர மோடி யை 21ஆம் ஆண்டு சாணக்கியன் என்று சொல்கிறார்களே ஏன்?

இந்த குறுஞ்செய்தியையை படிக்கும் போது ஆசியா வரைபடத்தைக் கையில் வைத்து கொண்டு படிக்கவும்.

நமது பாரதத்தின் பரம்பரை எதிரிகள் பாகிஸ்தான் மற்றும் சைனா மற்றும் தற்போது நேபாளில் உள்ள Prachant  கம்யூனிஸ்ட் Government
இதை தவிர இஸ்லாமிய நாடுகளில் தாமும் இஸ்லாமியன் என்று பாகிஸ்தான் கட்சி சேர்க்க பார்க்கிறது. இவைகள் அத்தனைகளிலிருந்தும் நம்மை   காப்பாற்றுவதற்கு திரு மோடி  என்ன செய்து இருக்கிறார்?

சைனா நமது பாரதத்தை நான்கு பக்கமும் சூழ்ந்து கொள்ள முயற்சி செய்து கொண்டு இருக்கிறது. அதே மாதிரி அதற்கு பதிலாக திரு மோடி முதலில் பூடான் நாட்டை தன் பக்கம் சேர்த்து கொண்டார். பிறகு சைனாவின் வடக்கே இருக்கும் மங்கோலியா என்ற ஏழை நாட்டுடன் நட்புறவு கொண்டார். மங்கோலியா நாடு சீனாவின் பயங்கர எதிரி. மங்கோலியா நாட்டிற்கு பல மறைமுகமான உதவிகளை செய்து இருக்கிறார். அதை தவிர பாரதத்தின் பரம் சூப்பர் கம்ப்யூட்டர் யை அன்பளிப்பாக கொடுத்திருக்கிறார். பிறகு பாரதத்தின்  line of control சர்ச்சை கூறியதாக உள்ளது. ஆதலால் திரு மோடி  சொல்கிறார் BSF (Boarder Security Fource) நமது படையினருக்கு சரியான பயிற்சி கிடைப்பது இல்லை.

அப்போது மங்கோலியாவின் பெருமளவு எல்லை சைனாவுடன் ஒட்டிக் கொண்டு இருக்கிறது. ஆதலால் திரு  மோடி  பத்தாயிரத்துக்கும் மேலே ஜவான்களை மங்கோலியாவிற்கு பயிற்சி பெறுவதற்க்காக அனுப்பி இருக்கிறார்.

🍇🍇இந்த விஷயம் எத்தனை பேருக்கு தெரியும் ?
                 
சைனாவின் கிழக்கே அவர்களுடைய பரம்பரை எதிரி ஜப்பான். அந்த ஜப்பானின் Prime Minister Shinjo Abe உடன் திரு மோடி  நட்புறவு கொண்டார். அவர்களிடம் இருந்து பல விதமான உதவிகளை பெற்று கொண்டு இருக்கிறோம் என்று எல்லோருக்கும் தெரிந்ததே.

🎉🎉சைனாவின் தெற்கே வியட்னாம் உள்ளது. வியட்னாமிற்கும் சைனாவிற்கும் ஆகாது.பரம்பரை எதிரிகள். திரு மோடி  வியட்னாமிற்கு சென்றார். வியட்னாமிற்கு திரு மோடி  உதவிகள் செய்து உள்ளார் எப்படி? அம்பானி குரூப் கம்பெனியையும் ESSAR குரூப் கம்பெனியையும் அங்கே எண்ணெய் பதார்த்தங்களை பூமியிலிருந்து எடுப்பதற்கு உதவி செய்ய அனுப்பி இருக்கிறார். அதை தவிர நமது ராணுவத்தை அங்கே இந்தியாவின் பிரம்மோஸ் மிசைல்களை அங்கே செட் செய்து இருக்கிறார்கள்.

💛💛பர்மாவிடம் இருந்து சைனா இந்தியன் பாரதிய  வங்க கடலில் உள்ள சில தீவுகளை மிரட்டி வாங்கிவிட்டது. அதை develop (வளர்ச்சி அடைய) பண்ணுகிறோம் என்று என்று கோக்கோ தீவு என்று பெயரை வைத்து இந்தியாவிக்கு அபாயகரமாக இருக்கும் வகையில் செய்திருக்கிறார்கள் .

💓💓அப்போது திரு மோடி  ஆசியா பசுபிக் நாட்டின்  மாநாட்டின் பொது திரு மோடி பர்மா சென்று இருந்தார். அவர் பர்மாவிடம் இருந்து நாங்களும் தீவுகளை develop (வளர்ச்சி அடைய ) பண்ணி கொடுக்கிறோம் என்று மூன்று தீவுகளை விலைக்கு வாங்கி விட்டார். இந்த மூன்று தீவுகளும் அந்த கோக்கோ வை சுற்றியுள்ளது.

🏵🏵குறிப்பு:   திரு மோடி  அந்த மூன்று தீவுகளையும் பாரத நாட்டின் பெயரில் வாங்கி இருக்கிறார். தன் குடும்பத்தின் பெயரிலோ  அல்லது கட்சியின் பெயரிலோ வாங்கவில்லை🍇🍇🍇

சைனாவின் தெற்கே உள்ள நாடுகள் கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் என்ற நாடுகளுக்கும் திரு மோடி சென்று வந்தார். அந்த மூன்று  நாடுகளும் முன் காலத்தில் ரஷ்யாவின் அங்கங்களாக இருந்தன. தற்பொழுது சுதந்திரமாக இருந்து கொண்டிருக்கின்றன. இவைகள் ஏழை நாடுகள் . அந்த மூன்று நாடுகளுடன் ஆப்கானிஸ்தானையும் சேர்த்து ஒரு எண்ணெய் கேஸ் பைப் லைன் கட்டி தருவதற்கு ஒப்பந்தம் பண்ணி விட்டார். இதனால் ஒரு தந்திரமான நட்புறவு  பண்ணி விட்டார்.

சைனா பாகிஸ்தானுடன் ஒப்பந்தம் பண்ணி கொண்டு விட்டது. பாரதத்தின் தெற்கு பக்கம் இந்தியன் கடல் வழியாக நுழைந்து வருவதற்கு வழி பண்ணி கொண்டிருக்கிறது. எப்படி?

பாகிஸ்தானின் தெற்கே உள்ள பகுதி பலூசிஸ்தான். அந்த பலூசிஸ்தானில் Gwadar என்ற துறைமுகத்திற்கு செல்ல ரோடு ஒன்றை கட்டி கொடுத்திருக்கிறார். Gwadar துறைமுகத்தை வளர்ச்சி அடைய செய்கிறோம் என்று சொல்லி விட்டு சீனா தன் கடற்படை (NAVY BASE) அங்கு அமர்த்தி விட்டது.

திரு மோடி  ஈரானுக்கு சென்று அங்குள்ள தலைவர்களை சந்தித்து ஒரு தந்திரமான வேலை செய்து இருக்கிறார். அது என்ன?

Gwadar துறைமுகத்திலிருந்து கடல் மார்கமாக 75 மைல் சென்றால் வடக்கே ஈரானின் துறைமுகம் CHABHAR உள்ளது. அங்கே அந்த துறைமுகத்தை வளர்ச்சி பண்ண ஒப்பந்தம் இந்தியா எடுத்து கொண்டது. அதனுடன் கூடவே ரஷ்யாவிலிருந்து  கிளம்பி கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான்,  & ஆப்கானிஸ்தான் வழியாக  CHABHAR துறைமுகத்திற்கு செல்வதற்கு ஒரு  8 line Highway கட்டி தருவதாக ஒப்பந்தம் பண்ணி இருக்கிறார். அந்த 8 line Highway ஒப்பந்தம் இந்தியன் கம்பெனிக்கு வாங்கி கொடுத்திருக்கிறார்.

குறிப்பு: நெடுஞ்சாலையின் ஒப்பந்தங்கள் திரு மோடி யின் சொந்தக்காரர்களோ அல்லது நண்பர்களோ கிடையாது

இப்படி ரஷ்யாவை இந்தியன் கடல்  வரையிலும் செல்வதற்கு வழி பண்ணி கொடுத்து விட்டார். CHABHAR துறைமுகத்தில் ரஷ்யாவும் GWADAR துறைமுதத்தில் சைனாவையும் ஒருவருக்கொருவர் மோத விட்டார். அதே மாதிரி பாரதத்தின் ஏடன் கடலில் வலுவான வழியை ஏற்படுத்தி கொடுத்து விட்டார். அந்த வழியில் தான் சூயஸ் கால்வாய் இருக்கிறது. அதன் வழியாக தான் ஐரோப்பிய நாடுகளுக்கு பாரதத்திலிருந்து போகும் பொருட்கள் அந்த வழியாக தான் செல்கின்றன.

இதை தவிர பலூசிஸ்தானில் பாக்கிஸ்தான் செய்யும் அட்டூழியங்களையும், ராட்சஸிய கொடுமைகளையும் உலகத்தின் உள்ள எல்லா நாடுகளின் முன்னே சமர்ப்பித்து விட்டார். ஆதலால் இப்பொழுது பாகிஸ்தான் மனசில் பலூசிஸ்தானும் நம்மளை விட்டு போய்விடும் என்ற பயத்தை ஏற்படுத்தி விட்டார். சைனா அந்த ஏரியாவில் பயங்கரமான செலவு செய்தது வீணாகி போய்விடும் என்ற பயத்தை ஏற்படுத்தி விட்டார். இப்பொழுது அதே விஷயத்தில் அந்த இரு நாடுகளும் வாயை பொத்தி விட்டு வீட்டில் உட்கார்ந்து விட்டனர்.

போன வருடம்  இலங்கையில் நமது RAW (INDIAN SECRET SERVICE) அங்கிருக்கும் தலைவரை விலைக்கு வாங்கி ஆளுங்கட்சியினரை தோல்வி அடைய செய்து திரு. மஹிந்த ராஜபக்ஷசாவை வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள். செய்து திரு. மஹிந்த ராஜபக்ஷசை சைனாவுடன் ஒப்பந்தம் பண்ணி பாரதத்திற்கு விரோதமான பல செயல்களை செய்து கொண்டு இருந்தார். புது ஆட்சி வந்தவுடன் அந்த பாரதத்தின் எதிரே உள்ள நிர்ணயங்களை புது ஆட்சி அடித்து நொறுக்கி விட்டது. வெகு தூரம் உள்ள சைனாவால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

பக்கத்தில் இருக்கும் நாடுகள் நேபாள் பூடான், பர்மா, பங்களாதேஷ், இவர்கள் எல்லோருடனும் FREE TRADE ECONOMIC CORRIDOR என்ற வர்த்தகத்தை இலாபம் அடைய சூழ்நிலையை ஏற்படுத்தி விட்டார். எல்லா விதத்திலையும் இந்த நாடுகளை பாரதத்தின் நண்பர்களாக மாற்றி விட்டார். பங்களாதேஷனுடன் பல வருடங்களாக இருக்கும் எல்லை பிரச்னையை அடியோடு ஒழித்து விட்டார்.

ஆப்கானிஸ்தான் என்ற நாடு பல வருடங்களாக தாலிபான் என்ற இயக்கத்தினால் துன்பம் அடைந்து கொண்டு இருக்கிறது. அதே துன்பத்தை அவர்களுக்கு கொடுப்பதில் பாகிஸ்தானும் பெரும் பங்கு வகிக்கிறது. நமது பாரதம் பல விதத்தில் அவர்களுக்கு பண உதவியும், பொருள் உதவியும் செய்து கொண்டு இருக்கிறது. அதை தவிர ஆப்கானிஸ்தானிற்கு நமது பாரத படைகள் உதவிகள் செய்து கொண்டிருக்கின்றன. நீண்ட காலமாக ஆப்கானிஸ்தானும், பாரதமும் நட்புறவு வைத்து கொண்டிருக்கிறது. கடந்த சார்க் கமிட்டி நாடுகளின் கூட்டத்தில்   ஆப்கானிஸ்தான் பிரதம மந்திரி திரு மோடி உடன் வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தார்.

சைனா தன்னுடைய இலாபத்தை தான் பார்க்கும். சைனாவின் பல சரக்குகள் பாரதத்தில் பெரும் அளவில் விற்கப்படுகின்றன. பாரதமும் பாகிஸ்தானும் அவர்களுடைய அந்தரங்க சண்டையில் சைனா  தலையிடுவதற்கு இஷ்டம் இல்லை .

ஜம்முகாஷ்மீர், சிந்து நதி பிரச்சனை,  Terrarium, எல்லை பிரச்சனைகள் இந்த மாதிரி பலவித பிரச்சனைகளில் சைனா தலையிட தயாராக இல்லை . சைனா பாகிஸ்தானை போன்ற பிச்சைக்கார  நாடுகளை ஆதரவு செய்து தன்னுடைய பாரதத்தில் இருக்கும் வியாபாரத்தை விட தயாராக இல்லை
சவூதி அரேபியா நாட்டிற்கு எல்லா விதமான PUBLIC PROJECT களில் இந்திய தொழிலாளர்கள் பெருமளவில் இருக்கிறார்கள். செப்டம்பர்  9 2011-இல் சில அரபிக்  Terrorist  அமெரிக்காவில் பாம் வைத்த விஷயம் எல்லோருக்கும் தெரியும், அப்போதிலிருந்து அமெரிக்காவும் சவூதி அரேபியாவிற்கும் இடையே உள்ள Relationship கெட்டு விட்டது. ஆதலால் சவூதி அரேபியாவிற்கு வெள்ளைக்காரர்கள் வேலை செய்ய தயாராக இல்லை. சவூதி அரேபியாவிற்கு மூல ஆதாரமான பூமியிலிருந்து வரும் எண்ணையும் , அதற்கு உதவிகரமாக இருக்கின்ற இன்ஜினீயர்களும் தேவை. இதற்கு இந்தியர்கள் தானே குறைவான சம்பளத்திற்கு வேலை செய்கிறார்கள்.

திரு மோடி  சவூதி அரேபிய போய் இருந்த  பொழுது இந்த குறிப்பிகளை அவர்களின் ராஜாவிடம் சொல்லி பல சலுகைகளை வாங்கி கொடுத்திருக்கிறார்.  சவுதிஅரேபியா பாகிஸ்தானுக்கு SUPPORT பண்றதையே விட்டு விட்டார்கள்.

திரு மோடி  யும் அமெரிக்காவின் PRESIDENT ஒபாமா வும் நல்ல நட்புறவு கொண்டு இருக்கிறார்கள். ஆதலால் அமெரிக்கா நாடு பாரதத்திற்கு விரோதமான காரியங்களை செய்வதை கைவிட்டு விட்டது .அமெரிக்காவின் பெரிய  பெரிய கம்பெனிகளில் உயர் அதிகாரிகள் பலர் இந்தியர்களாக இருக்கின்றார்கள். பாரதத்தின் software export-  யும் பாரதத்தின் திடகாத்திரமான பொருளாதாரத்தையும் தற்பொழுது அமெரிக்காவில் நல்ல விதத்தில் எதிரொலிக்கிறது.

United national- லில் உயர்ந்த கமிட்டி அதன் பெயர்   (UN Security Council) அதில் ஐந்து நாடுகள்  உறுப்பினர்கள் அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ், அதில் மேலும் ஒரு  நாடு சுழற்சி முறையில்  உறுப்பினர் ஆக்கப்படுவார்கள்.  அந்த Security  Council  லில் உறுப்பினர் ஆவதற்கு பாரதம் முயற்சி செய்து தோற்று விட்டது. ஏனென்றால் பிரான்ஸ் என்ற நாடு நாம் வருவதை தடுத்து கொண்டு இருந்தது. அந்த பிரான்சின் வாயை அடக்கி விட்டார். பாரதத்தின் பக்கம் அவர்களை திருப்பி விட்டார் எப்படி ? பிரான்ஸ் தயாரிக்கும் Rafael என்ற ஆயுத விமானத்தை பெருமளவில் வாங்கி பிரான்சின் வாயை அடைத்து விட்டார்.

குறிப்பு: Rafael விமானத்தை வாங்கியதில் திரு மோடி  தனக்கும் தன் உறவினர்களுக்கும் கமிஷன் பேசவில்லை

திரு மோடி   ஆப் பிரிக்க கண்டத்தில் உள்ள எல்லா நாடுகளையும் டெல்லிக்கு அழைத்தார். அவர்களுக்கு மாநாடு  வைத்து பாரதத்தின் உதவியும் வலிமையும் காண்பித்தார். எல்லா ஆப்ரிக்க நாடுகளுக்கும் அவரவர்களுடைய தேவைக்கு தகுந்தாற் போல் உதவி செய்ய ஒப்பந்தம் பண்ணி விட்டார் ஆதலால் இப்பொழுது பாரதத்திற்கு அரபிக் கடலில் எந்த ஆப்ரிக்க நாடுகளும் தொந்தரவு பண்ணாது.

தற்பொழுது பாகிஸ்தானில் நடக்க போகும் மாநாட்டை திரு மோடி செய்த புது புது தோழர்கள் (பூடான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான்) அவர்களின் உதவியால் அந்த மாநாட்டை ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிட்டார்.

இவ்வளவு காரியங்களையும் இரண்டு வருட காலத்தில் செய்து விட்டார்

இப்பொழுது புரிகிறதா?

பாகிஸ்தான் பாரதம் காஷ்மீரில் பாரத ராணுவம் தாக்கிய பொழுது பாகிஸ்தான் ஏன் எதிர்ப்பு செய்யவில்லை. ஆம் பாரதம் தாக்கி இருக்கிறது என்று சொன்னால் அவர்களிடத்தில் Terrorist இருக்கிறார்கள் என்று ஒத்துக் கொள்வதாய் ஆகிவிடும் இல்லை என்றால் பாகிஸ்தான் ராணுவத்தின் மனோதைரியம் உடைந்து விடும்.

இந்த மாதிரி காரியங்களை செய்வதற்கு அறிவு வேண்டும் , சக்தி வேண்டும் விடா முயற்சி  வேண்டும் , நாட்டு பற்று வேண்டும், கடினமான உழைப்பு வேண்டும் மனோதைரியம் வேண்டும் & character சுத்தமாக இருக்க வேண்டும். இந்த குணங்கள் வேறு எந்த தலைவர்களிடம் இருக்கிறது?

ஏ. சி ரூமில் படுத்து கொண்டு வெற்றிலை,பாக்கு தின்று கொண்டு பெரிய வயிற்றை தடவி கொண்டிருக்கும் வீரர்களுக்கு இவ்வளவு திறமை கிடையாது.

இந்த நாட்டை காப்பாற்றுவதற்கு ஒரு சாதாரண நல்ல தாயின் பிள்ளை திருமதி ஹீராவின் பிள்ளை மாவீரன் திரு மோடி  அவர்களே போதும். இப்பேற்பட்ட பாரதத்தின் பிள்ளையை வணங்குங்கள் ,

இப்பேற்பட்ட உயர்ந்த மனிதனுக்கு கை கொடுங்கள். எதுவுமே முடியாவிட்டால் பரவாயில்லை அவரை மட்டும் கேவலப் படுத்தாதீர்கள்!!!!
---------------------------------
படித்தேன்.பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
===================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

16.11.16

இன்னும் 10 ஆண்டுகளில் திருமணங்களின் நிலைமை என்ன ஆகும்?


இன்னும் 10 ஆண்டுகளில் திருமணங்களின் நிலைமை என்ன ஆகும்?

பொறுமையாக, கடைசிவரை படித்துப் பாருங்கள்

பையனின் பெற்றோர் பெண்ணின் பெற்றோரை வீட்டில் வந்து பார்க்கின்றனர்.

பை.பெ:  "இந்தாங்க பையனோட ஃபோட்டோ.. நீங்க கேட்டா மாதிரி வெறும் ஜட்டி போட்டு full உடம்பு நல்லா தெரியிறா மாதிரி..!  இது medical certificates- complete Medical Check-up, AIDS, Diabetes, Fertility Test, எல்லாம் இருக்குங்க..!  No Alcoholic Tendency Certificate இருக்கு..! அப்புறம் அவனோட resume, லாஸ்ட் 6 வருஷம் Income Tax Returns, Bank Statements, Credit Card Statements எல்லாம் இருக்கு...! நாங்க அவன் மேல dependent  இல்லன்னு ப்ரூவ் பண்றதுக்கு என்னோட பெர்சனல் Balance Sheet, Bank Deposits  டீடெய்ல்ஸ் எல்லாம் கூட இருக்குங்க...”

பெண்ணின் பெற்றோர்:   “சரி... நாங்க இத எல்லாத்தையும் செக் பண்ணிட்டு உங்களுக்கு ரெண்டு மாசத்துல மெயில் அனுப்றோம்..!  அப்புறம் பையனுக்கு Interviews வெச்சிக்கலாம்... முதல் ரவுண்டு நாங்க பண்ணுவோம், ரெண்டாவது, பொண்ணொட ஃப்ரெண்ட்ஸெல்லாம் பண்ணுவாங்க.. கடைசியா பொண்ணு பண்ணுவா.. 'எல்ல்ல்லாம்'  நல்லபடியா முடிஞ்சா அப்புறம் மாரேஜ்தான்...!!”

“சார்... தயவு செய்து ஃப்ரெண்ட்ஸ் ரவுண்டல ரொம்ப கலாய்க்காம பாத்துக்க சொல்லுங்க சார் பிளீஸ்..!. பையன் கொஞ்ஞ்ஞம் கூச்ச சுபாவம்...!”

“அத பாத்துக்கலாம்.. அப்புறம், மேரேஜ் காண்ட்ராக்ட் அக்ரிமெண்ட்ஸ் தெரியும்லியா..? ‘Agreement to Mary’ , ‘Marriage Deed’, அப்புறம் ‘ Pre-Divorce Agreement’..."

“Pre-Divorce Agreement-ட்டா...? அது எதுக்குங்க..?”

பெண்ணின் பெற்றோர்:  “அட.. டிவோர்ஸ் ஆகும்போது லீகலா சண்டை போட்டு டைம் வேஸ்ட் பண்ணிக்கிட்டு இருக்க வேண்டாம்ல..?  அப்புறம், Financial terms தெரியும்லியா..? எங்களுக்கு செலவுக்கு கேஷ்  1  கோடி குடுத்துடணும்..! Of course, மேரேஜ் மொத்த செலவு, பொறுப்பு உங்களுது.. அப்புறம், கல்யாணம் ஆன உடனே பையன் 5 கோடி ரூவா FDல போட்டு வர monthly வட்டி, பாதி பொண்ணோட அக்கவுண்ட்டுக்கு போணும், பாதி எங்களோட  அக்கவுண்ட்டுக்கு வந்துடணும்...!”

“பாதி உங்க அக்கவுண்ட்டுக்கா..? அது எதுக்குங்க..? உங்க பொண்ணுட்டேயிருந்து நீங்களே வாங்கிக்கீங்க...?”

“சார்... நாங்க யாருட்டயும் போய் நிக்க மாட்டோம்..!  'பொண்ணு' பெத்தவங்க சார் நாங்க..! ஆமா....!!”

இந்த ஸ்டேடஸ் ஏன் என்று மண்டை பிய்த்துக் கொள்கிறீர்களா..?

News: Against 5.63 crore men in the 20s, there are only 2.07 crore females present -- indicating towards a gap of 3.55 crore brides. Put together, there are only 2.38 crore brides for 6.50 crore grooms. In other words, three out of five men of marriageable age will eventually not be able to find a bride. Therefore, a forced brahmacharya is the only option most men have.The conclusion has been derived from census data on marital status of Indian population released recently- - Times of India.

படித்தேன்.பகர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
==================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

15.11.16

நகைச்சுவை: Twinkle Twinkle Little Star

நகைச்சுவை: Twinkle Twinkle Little Star

Twinkle Twinkle Little Star ஐ சுருதி பிசகாமல் பாடுவது எப்படி?
அது மட்டுமா? தமிழ், மலையாளம், பஞ்சாபிக் காரர்கள் போலவும் பாடுவது எப்படி?
கீழே உள்ள காணொளியைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்!

அன்புடன் 
வாத்தியார்
--------------------------------------------
1.இன்றைய கலக்கல்: 

":பசங்க என்ன பண்றாங்க,  சார்.."

"பெரியவன் ஸ்டேட் பேங்க்.. மருமக ஐஓபி.."

"ஓ..."

"அடுத்தவன் கனரா பேங்கு.. அவன் சம்சாரம் ஐசிஐசிஐ.."

"பொண்ணுதான் கடைக்குட்டி.. அவ  இண்டியன் பேங்க்.."

"பரவாயில்லை சார்.. எல்லாம் செட்டிலாயிட்டாங்க.."

"கடுப்பைக் கிளப்பாதீங்க.. ஏடிஎம் வரிசையில நிக்கறாங்க."
-----------------------------------------------------------
2.இன்றைய காணொளி:


====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

14.11.16

திரைப்படம்: புதியது எது?


திரைப்படம்: புதியது எது?

கந்தன் கருணை திரைப்படத்தில் முருகனைச் சந்திக்கும் ஒளவையார், அவரை வணங்கி மகிழ்கிறார். தமிழ்க் கடவுள் முருகன் அவரிடம் சில கேள்விகளைக் கேட்க, ஒளவைப் பிராட்டியார் அதற்கு அற்புதமாகப் பதில் உரைக்கிறார். பாடல் வரிகளைப் பாருங்கள். அத்துடன் பாடலின் காணொளி வடிவமும் உள்ளது. அதையும் பாருங்கள். பார்த்து மகிழுங்கள்!
-----------------------------------------------
ஒளவையே, உலகில் அரியது என்ன?

அரியது கேட்கின் வரிவடி வேலோய்
அரிது அரிது மானிடர் ஆதல் அரிது!
மானிடராயினும்....கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது!
கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறந்த காலையும்...ஞானமும் கல்வியும் நயத்தல் அறிது!
ஞானமும் கல்வியும் நயந்த காலையும்...தானமும் தவமும் தான் செய்தல் அறிது!
தானமும் தவமும் தான் செய்தலாயினும்...வானவர் நாடு வழி திறந்திடுமே!

கொடியது என்ன?

கொடியது கேட்கின் வரிவடி வேலோய்
கொடிது கொடிது வறுமை கொடிது
அதனினும் கொடிது; இளமையில் வறுமை
அதனினும் கொடிது; ஆற்றொணாக் கொடு நோய்
அதனினும் கொடிது; அன்பு இல்லாப் பெண்டிர்
அதனினும் கொடிது; அவர் கையால் இன்புற உண்பது தானே!

பெரியது என்ன?

பெரியது கேட்கின் நெறிதமிழ் வேலோய்
பெரிது பெரிது புவனம் பெரிது
புவனமோ நான்முகன் படைப்பு
நான்முகன் கரியமால் உந்தியில் வந்தோன்
கரியமாலோ அலைகடல் துயின்றோன்

அலைகடலோ குறுமுனி அங்கையில் அடக்கம்
குறுமுனியோ கலசத்திற் பிறந்தோன்
கலசமோ புவியிற் சிறுமண்
புவியோ அரவினுக்கு ஒருதலைப் பாரம்
அரவோ உமையவள் சிறுவிரல் மோதிரம்
உமையோ இறையவர் பாகத்து ஒடுக்கம்
இறைவனோ தொண்டர் உள்ளத்து ஒடுக்கம்
தொண்டர் தம் பெருமையைச் சொல்லவும் பெரிதே.....!

ஒளவையே, இனியது என்ன? 

இனியது கேட்கின் தனிநெடு வேலோய்
இனிது இனிது ஏகாந்தம் இனிது
அதனினும் இனிது ஆதியைத் தொழுதல்
அதனினும் இனிது அறிவினர்ச் சேர்தல்
அதனினும் இனிது அறிவுள்ளாரைக் கனவினும் நனவினும் காண்பது தானே.

அரியது கொடியது பெரியது இனியது - அனைத்துக்கும் முறையோடு விடை பகன்ற ஒளவையே....புதியது என்ன?

(அடுத்துள்ள பாடல் வரிகள்: கவியரசர் கண்ணதாசன்)

என்றும் புதியது
பாடல் - என்றும் புதியது
பொருள் நிறைந்த - பாடல் என்றும் புதியது
முருகா உனைப் பாடும் - பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது

அருள் நிறைந்த புலவர் நெஞ்சில்
அமுதம் என்னும் தமிழ் கொடுத்த
பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது...

முருகன் என்ற - பெயரில் வந்த - அழகே என்றும் புதியது
முறுவல் காட்டும் - குமரன் கொண்ட - இளமை என்றும் புதியது

உனைப்பெற்ற அன்னையர்க்கு உனது லீலை புதியது
உனது தந்தை இறைவனுக்கோ வேலும் மயிலும் புதியது
முருகா உனைப் பாடும் பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது

திங்களுக்கும் ஞாயிறுக்கும் கந்தன் மேனி புதியது
சேர்ந்தவர்க்கு வழங்கும் கந்தன் கருணை புதியது
அறிவில் அரியது...அருளில் பெரியது
அள்ளி அள்ளி உண்ண உண்ண உனது தமிழ் இனியது

முதலில் முடிவு அது
முடிவில் முதல் அது
மூன்று காலம் உணர்ந்த பேர்க்கு ஆறுமுகம் புதியது!

மூன்று காலம் உணர்ந்த பேர்க்கு ஆறுமுகம் புதியது என்று கவியரசர் முடித்தார் பாருங்கள். அதுதான் இந்தப் பாடலின் முத்தாய்ப்பான வரி!

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------

=========================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

11.11.16

Astrology: ஜோதிடம்: அலசல் பாடம்: இருதய நோயால் (Heart Disease) அவதிப்பட்ட ஜாதகர், என்ன செய்தார்?


Astrology: ஜோதிடம்: அலசல் பாடம்: இருதய நோயால் (Heart Disease) அவதிப்பட்ட ஜாதகர், என்ன செய்தார்?

ஜாதகருக்கு இருதய நோய். ஆயுளைப் பற்றிக் கவலை. அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள்
பரிந்துரைக்க, ஜாதகருக்கு அதில் விருப்பம் இல்லை. என்ன நடந்தது?

ஜாதகர் 1939ஆம் ஆண்டில் பிறந்தவர். 62 வயதில் கடுமையான இருதய நோய் ஏற்பட்டது. குரு திசை முடியும் தருவாயில் இது நடந்தது.

Chart

கன்னி லக்கின ஜாதகர். லக்கினாதிபதி புதன் 12ல். ஆறாம் வீட்டுக்காரன் சனி நீசம் பெற்றுள்ளான். குருவின் நேரடிப் பார்வையில் லக்கினம். சூரியன், சந்திரன், புதன், சுக்கிரன் ஆகிய 4ல்வரும் சேர்ந்துள்ளார்கள்

இருதயத்திற்கு உரிய வீடு நான்காம் வீடு. இந்த ஜாதகத்தில் தனுசு நான்காம் வீடு. அதன் அதிபதி குரு வக்கிரம் பெற்றிருந்தாலும் தனது சொந்த வீட்டில் ஆச்சி பலத்துடன் இருக்கிறார். அத்துடன் லக்கினத்தைத் தன் நேரடிப்பார்வையில் வைத்துள்ளார்.

முதல் நிலை சுபக்கிரகமான் குருவின் லக்கினப் பார்வையால் ஜாதகருக்கு நீண்ட ஆயுள் உண்டு. இந்த அமைப்பு உள்ளவர்கள் கவலைப் படத்தேவையில்லை.

சந்திரனில் இருந்து (சந்திர ராசியில் இருந்து) நான்காம் வீடு விருச்சிகம். அதன் அதிபதி செவ்வாய் மகர வீட்டில். மகர வீட்டின் நாதன் சனீஸ்வரனின் பார்வை (பத்தாம் பார்வை) அவரின் மேல் அழுத்தமாகப் பதிகின்றது. சனி லக்கினத்தில் இருந்து ஐந்து மற்றும் ஆறுக்குரியவன்

உடல்காரகன் சூரியன் 12ல். ஆனால் அது அவருக்கு சொந்தவீடாகையால் ஆட்சி பலத்துடன் உள்ளார். ஆனால் சூரியனின் மீது செவ்வாயின் பார்வை உள்ளது (8ஆம் பார்வை) ஆகவே ஜாதகர் சர்ஜெரி செய்யும் நிலைமைக்குத் தள்ளப்பட்டார். ஜாதகத்தில் சனி திசை சனி புத்தியில் (சுய புத்தியில்) இந்தப் பிரச்சினை ஏற்பட்டது. சனியின் மீது செவ்வாயின் பார்வை விழுகிறது (4ஆம் பார்வை)

மருத்துவர்கள் சர்ஜெரி’க்குப் பரிந்துரைத்தார்கள். ஆனால் அவர் துணிச்சலுடன் செய்துகொள்ளவில்லை. (செய்து கொள்ளாமல் இருப்பதற்கும் துணிச்சல் வேண்டும்)

ஆனால் அந்தக் குறிப்பிட்ட தசா புத்தி முடிந்ததும், அவர் சற்று உடல் நலம் தேறினார். மருந்துகளின் உதவியினால் காலத்தை ஓட்டினார். நீண்ட நாட்கள் வாழ்ந்தார். எல்லாம் குரு பகவானின் கருணை!

நீண்ட ஆயுள் கொண்டவர்கள் அறுவை சிகிச்சை செய்துகொண்டாலும் சரிதான். அறுவை சிகிச்சை செய்து கொள்ளா விட்டாலும் சரிதான். ஆயுள் காலத்தில் மாற்றம் ஏற்படாது.

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

10.11.16

பிரச்சினைகளை சாவால்களாக மாற்றுங்கள்! வெற்றி காணலாம்!


பிரச்சினைகளை சாவால்களாக மாற்றுங்கள்! வெற்றி காணலாம்!

“எனக்கு ஒரு பிரச்சினை..”என்று ஒருபோதும் சொல்லாதீர்கள்...பிரச்சினை என்று சொன்னாலே  கவலையும் , பயமும் கட்டாயம் வரும்....
"எனக்கு ஒரு சவால் “என்று சொல்லிப் பாருங்கள் ...தைரியமும் ,தன்னம்பிக்கையும் தானாகவே வரும்..”

ஆம்..நிஜம்தானே..!

“காவல்காரன்” என்று ஒரு  படம்.. எம்.ஆர்.ராதாவால் சுடப்பட்ட பின் எம்.ஜி.ஆர்.நடித்த படம்.... ஷூட்டிங் ஆரம்பமானது..

வசனம் பேசி நடித்தபோது , எம்.ஜி.ஆரின் குரலில் குறை தெரிந்தது..முன்னர் பேசியது போல் தெளிவாகப்  பேச முடியவில்லை..

“பொருத்தமான குரல் உடையவர்களைக் கொண்டு டப்பிங்  கொடுத்து இந்தப் பிரச்சினையை சரி செய்து விடலாம் ” என்று சிலர் யோசனை சொல்லியிருக்கிறார்கள்...

ஆனால், எம்.ஜி.ஆர். இதை ஏற்க மறுத்து விட்டாராம்... “இது பிரச்சினை இல்லை..எனக்கு ஏற்பட்டிருக்கும் சவால்...
நானே என் சொந்தக் குரலில் பேசுகிறேன். மக்கள் ஏற்றுக் கொண்டால்  தொடர்ந்து நடிக்கிறேன். ஒருவேளை என் குரலை ஏற்றுக் கொள்ளாவிட்டால்  , சினிமாவில் நடிப்பதையே விட்டு விடுகிறேன்” என்று சவால் விட்டுக் கூறி , அதன்படியே, எம்.ஜி.ஆர். சொந்தக் குரலில் பேசினார்...

பலத்த எதிர்பார்ப்போடு வந்தான் காவல்காரன்...

படத்தின்   சில இடங்களில்  எம்.ஜி.ஆரின் குரல் தெளிவாக இல்லாவிட்டாலும், ரசிகர்கள் அதைப் பெரிய பிரச்சினை ஆக்காமல் ஏற்றுக் கொண்டார்கள்..!.

“காவல்காரன்” ...சூப்பர்ஹிட்..!!.

"வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்
மாபெரும் வீரர் மானம் காப்போர்
சரித்திரம் தனிலே நிற்கின்றார்"

ஆம்...பிரச்சினைகள் என்று நினைப்பவர்கள் ,பின்தங்கி விடுகிறார்கள்...!!!
சவால்களை சந்திப்பவர்களே சரித்திரம் தன்னிலே நிற்கின்றார்கள் ...!!!

சந்திக்கத் தயாராவோம்..சவால்களை!

படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
----------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

9.11.16

வேலை தேடுகிறீர்களா? அப்படியென்றால் இந்தப் பதிவைப் படியுங்கள்!!


வேலை தேடுகிறீர்களா? அப்படியென்றால் இந்தப் பதிவைப் படியுங்கள்!!

வேலை தேடும் நண்பர்களுக்கு உபயோகமான தகவல்கள் !!

வேலை தேடுவதற்கு உதவும் இணையதளங்கள் கீழே தொகுத்துக் கொடுக்கப்பெற்றுள்ளது!!!

இந்த தளங்களில் உங்கள் தகவல்களை பதிவு செய்து, உங்கள் தகுதிக்கும் திறமைக்கும் உரிய வேலையை பெற்று, வாழ்வில் வெற்றி பெற
வாழ்த்துகள்!!!!

www.careerbuilder.co.in
www.clickjobs.com
www.placementpoint.com
www.careerpointplacement.com
www.glassdoor.co.in
www.indtherightjob.com
www.employmentguide.com
www.JOBSTREET.com
www.JOBSDB.COM
www.AE.TIMESJOBS.COM
www.NAUKRIGULF.COM
www.NAUKRI.COM
www.GULFTALENT.COM
www.BAYAT.COM
www.MONSTER.COM
www.VELAI.NET
www.CAREESMA.COM
www.SHINE.COM
www.fresherslive.com
www.jobsahead.com
www.BABAJOBS.com
www.WISDOM.COM
www.indeed.co.in
www.sarkarinaukriblog.com
www.jobsindubai.com
www.jobswitch.in
www.jobs.oneindia.com
www.freshersworld.com
www.freejobalert.com
www.recruitmentnews.in
www.firstnaukri.com
www.freshnaukri.com
www.mysarkarinaukri.com
www.freshindiajobs.com
www.freshersopenings.in
www.freshersrecruitment.in
www.chennaifreshersjobs.com

அரசு வேலைகள் பற்றி அறிந்துகொள்ள::
www.govtjobs.allindiajobs.in
www.timesjobs.com
www.naukri.com
www.tngovernmentjobs.in
www.sarkariexam.co.in
www.govtjobs.net.in
www.indgovtjobs.in

இந்த பதிவை வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து உதவுங்கள்..🏹

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
================================================

8.11.16

உங்களுக்கு எப்போது வயதாகும்?


உங்களுக்கு எப்போது வயதாகும்?

1
விசேஷங்களில்
அழகான இளம்
பெண்களைக் கண்டால்
அடடா அவசரப்பட்டுட்டோமே
என்று நினைப்பது போய்…
சித்தி பையன் சிவாவுக்கு
இந்தப் பெண்ணைக் கேட்கலாமே
எனத் தோன்றுகிறதா.??
2        
சண்டை போட்ட
உறவினர்களின் மேல்
காழ்ப்பணர்ச்சி விகிதம்
கரைய ஆரமபித்திருக்கிறதா???
3
உறவுகளில் சம வயதினர்
அமெரிக்காவில் செட்டில் ஆனால்
பொறாமைப்படுவது நின்று
நம்ம பையனுக்கு பின்னாடி பிரச்சினையில்லை…
REFER பண்ண ஆளிருக்கு
என மனது சாந்தப்படுகிறதா. ??
4            
மனைவியை_
கவனிக்க_ _தவறிவிட்டதாக_
உள் மனது ஒப்பாரி இடுகிறதா??_
5
திரைப்படங்களின்
முதல் நாள் முதல் காட்சி
பார்க்கும் எண்ணம் போய்விட்டதா??
6
வெள்ளை முடி கவலை
அப்பிக் கொள்ள
ஆரம்பித்துவிட்டதா???
7
மியூசிக் சேனல் பார்ப்பது
குறைந்து
செய்தி சேனல் பார்ப்பது
அதிகரித்திருக்கிறதா??
8
ஞாயிற்றுக்கிழமை
யார் வற்புறுத்தலும் இன்றி
காலையில் WALKING
போகிறீர்களா??
9
இன்னிக்கு அமாவாசை,
ஏகாதசி,
சஷ்டி என்று
ஏதேனும் இருக்கிறதா என்று
மனசு பார்க்க வைக்கிறதா?
10
பாலிஸி DUE DATE
பார்க்க
ஆரம்பித்து விட்டீர்களா??
11          
ஒரு மருந்துக் கடைக்காரர்,
ஒரு சிறு உணவக முதலாளியின்
நட்பு
நிச்சயம் ஏற்பட்டிருக்கிறதா??
12
கவலையை மறக்க
காமெடி சானல் பார்ப்பது
சிறந்த சாய்ஸ்
எனத்தோன்றுகிறதா??
13            
வண்ணத்திரை, சினிக்கூத்து
வாங்கிய கடைகளில்
சக்தி விகடனும்,
நாணயம் விகடனும்
வாங்க வைக்கிறதா??
14
பல் விளக்க,
சேவிங் செய்ய,
குளிக்க
வழக்கத்தை விட
அதிக நேரம் ஆகிறதா?
15
பிள்ளைகளின் ஆசை,
சோம்பல் மீதான கோபம்
வடிந்து
`இப்பொழுது அனுபவிக்காவிட்டால்
எப்பொழுது,
போய்விட்டுப் போகிறார்கள்
என்ற எண்ணம் வருகிறதா??
16      
அலுவலகத்தில் சனி,ஞாயிறு அன்று
நண்பர்கள் ஏதாவது அவுட்டிங்
பிளான் செய்தால்
தகுந்த காரணமின்றி
ஜகா வாங்க வைக்கிறதா??
17
சாலை கடக்க பயப்படத் தொடங்கி
PEAK HOURS அவாய்ட் பண்ணினால் என்ன
என்று மனைவியிடம்
தர்க்கம் பண்ண தொடங்கி விட்டீர்களா??
18
பேருந்து வழக்கமாக வரும் நேரத்திற்கு
ஒரு நிமிடம் தாமதமாய் போய் ஓடிச்சென்று ஏறுவது நின்று,
ஐந்து நிமிடம் முன்னரே
பஸ் ஸ்டாண்டில் காக்க முடிகிறதா??
19
என்னால் எல்லாம் முடியும்,
யார் தயவும் தேவையில்லை
என்ற எண்ணம் போய்„
உலக மக்கள் அனைவரின்
கூட்டு உழைப்பால் தான்
நமக்கு இந்த வாழ்க்கை
சாத்தியமாயிற்று என்ற எண்ணம் வருகிறதா??
20
அப்ப நீங்க
*"UNCLE"*
ஆகிவிட்டீர்கள்!!!!
அதற்கான அறிகுறிகள்தான் இவைகள்!
உங்கள் மொழியில் சொன்னால்
உங்களுக்கு வயதாகி விட்டது,
மனம் பக்குபவம் பெற்று விட்டது என்று அர்த்தம்!

அன்புடன்
வாத்தியார்
================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

7.11.16

இன்றைய சூழ்நிலையில் வாழ்க்கை எப்படி இருக்கிறது?


இன்றைய சூழ்நிலையில் வாழ்க்கை எப்படி இருக்கிறது?

எல்லோரும் அதிவேகமாக ஓடுகிறார்கள்.

😔நவீனம் நடத்தும் பொருளாதார பந்தயத்தில் ஓடுவதற்கு சொந்த ஊர் சுமையாக இருந்தது அதை உதறி வீசினார்கள், வேகம் மேலும் கூடியது.

😔பந்தயம் மேலும் கடினமான போது தாய்மொழி சுமையாக இருந்தது அதையும் வீசினார்கள் இன்னும் வேகம் அதிகரித்தது.

😔பின்னர் அறச்சிந்தனைகள் பெறும் சுமையாயின அவை அனைத்தையும் உதறிவிட்டு ஓடினார்கள்.

😔இறுதியில் உறவுகள் யாவும் சுமையாகிப்போயின அவற்றையும் கழற்றி வீசிவிட்டு பொருளாதாரப்பந்தயத்தில் ஓடிக்கொண்டிருக்கிறார்கள் நவீன மனிதர்கள்.

😔இப்போது பொருளாதாரம் மற்றும் வெற்றிகரமான வாழ்க்கை என்ற வெறி மட்டும் எஞ்சி உள்ளது இனி வீசி எறிய எதுவுமில்லை.

😔குடும்பங்கள் யாவும் சிதறிக்கிடக்கின்றன மடிக்கணினி திரை வழியாக பேரப்பிள்ளைகளை கொஞ்சும் பெரியவர்கள் உருவாகி விட்டார்கள் பிறந்த பிள்ளையின் பசிக்கு பால் ஊட்டவும் மலத்தை கழுவவும் கூட நேரம் இல்லாத இளம் அம்மாக்கள் உருவாகி விட்டனர்.

😔மனைவி அடிவயிற்று  வலியால் துடித்தாலும் அரவணைத்து தட்டிக்கொடுக்கும் பக்குவம் இல்லாத இளம் கணவர்கள் உருவாகியிருக்கிறார்கள்.

😔பல பெரியவர்களுக்கு பிள்ளைகளை பார்க்காத ஏக்கத்திலேயே இதயம் வலிக்கிறது.
பிள்ளைகளால் மருத்துவ செலவுக்கு பணம் அனுப்ப முடிகிறது வந்து பார்க்க வழியில்லை.

😔எல்லோருடைய நேரத்தையும் நிறுவனங்கள் விழுங்கி விட்டன. நகரங்கள் விரிவடைந்து கொண்டே இருக்கின்றன மனித மாண்பு வெகுவாக சுருங்கி விட்டது.

😔மூன்றே வயது நிரம்பிய பிள்ளைகள் மழலைக்காப்பகத்துக்கு அனுப்பப்படுகிறார்கள். இந்த கால கல்வி முறையில் பிள்ளைகள் முழுமையாக வீட்டில் இருப்பதே ஐந்து வயது வரைக்கும் தான், அதன் பின்னர் ஓடத்தொடங்கும் அவர்கள் வாழ்நாள் முழுவதற்கும் நிற்பதற்கு வழியே இல்லை அந்த ஐந்து வயது வரைக்குமாவது பெற்றோருடனும் உறவினருடனும் வாழும் உரிமை குழந்தைகளுக்கு வழங்கப்படுவது இல்லை.

😔தொடக்கத்தில் கூட்டுக்குடும்பங்கள் தனிக்குடும்பங்களாக பிரிந்தன இப்போது தனிக்குடும்பங்களின் உறுப்பினர்கள் தனித்தனியாக பிரிந்து இயங்குகிறார்கள்.

😔பெற்ற பிள்ளைகளை ஐந்தே ஐந்து ஆண்டுகள் கூட பார்த்துக்கொள்ள முடியாத சமூகத்துக்கு மழையும் காற்றும் சீராக வழங்கப்படுமா என்ன..?

👉🏽ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி -இனி சொல்வதற்கு ஒன்றுமில்லை, மனித இனம் தனது அழிவுக்கான ஒரு வழிபாதையில் ஓடத்தொடங்கி விட்டது, இனி இதை தடுப்பதென்பது மிகவும் கடினமான ஒன்றாகும்.

🏹மாறுவோம்... மாற்றுவோம்... மாற்றத்தை நம்மிடமிருந்தே துவங்குவோம்.

நீங்கள் இவ்வாறு ஓடிக் கொண்டிருந்தால், ஓடுவதை சற்று நிறுத்திவிட்டு, ஒரு நிமிர்ந்து சிந்தித்துப் பாருங்கள்!

அன்புடன்
வாத்தியார்
-------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

4.11.16

Astrology: ஜாதகத்தைத் துவைப்போம் வாருங்கள் - பகுதி 5


Astrology: ஜாதகத்தைத் துவைப்போம் வாருங்கள் - பகுதி 5

ஆளையே அள்ளிக்கொண்டு போகும் நோய்!

நோய் யாருக்கு வேண்டுமென்றாலும் எப்பொது வேண்டுமென்றாலும் வரலாம். வரட்டும்.

ஆனால் அதிகம் தொந்தரவு இன்றி அதிகம் செலவின்றித் தீர்ந்துவிட்டால் பரவாயில்லை. அதற்கு மாறாக அதிகம் செலவாகி, அதிகமான உபத்திரவத்தைக் கொடுத்து, இறுதியில் ஆளையே அள்ளிக்கொண்டு போனால் என்ன செய்வது?

நம் கையில் ஒன்றும் இல்லை.

நோயிலேயே புற்று (cancer) நோய்தான் அதிகம் கொடூரமானது.

எனக்கு சமீபத்தில் ஏற்பட்ட அனுபவம் வடுவாக மனதில் பதிந்து விட்டது.

என் தங்கையின் கணவருக்கு புற்றுநோய் வந்து 4 ஆண்டுகள் போராட்ட்டத்திற்குப் பிறகும், தீவிர சிகிச்சையளித்தும், பலனில்லாமல் சென்ற பிப்ரவரித் திங்கள் 17ஆம் தேதியன்று (2011) அவர் உயிர் நீத்துவிட்டார். அந்த 4 ஆண்டுகளில் புற்று நோயின் தீவிரத்தை அருகில் இருந்து பார்க்கும்படியாகிவிட்டது. இறக்கும் போது அவரின் வயது 52

ஒரு ஆண்டு கழித்து, என் புத்தகப் பணிகள் முடிந்த பிறகு, நோய்கள் குறித்து, பல ஜாதகங்களை வைத்து ஆய்வு செய்யலாம் என்றுள்ளேன். இறைவன் அதற்கு எனக்கு அருள் செய்ய வேண்டும்

அது சம்பந்தமாக இப்பொது ஒரு ஜாதகத்தை அலசுவோம். இது அவருடைய ஜாதகம் அல்ல! வேறு ஒருவருடைய ஜாதகம்!
-----------------------------------------------------


---------------------------------------------------------------------------------------------------
மேலே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்.

ராகு, செவ்வாய், சனி ஆகிய மூன்று கிரகங்கள்தான் புற்று நோயை உண்டாக்கும் என்பார்கள்.

மிதுன லக்கின ஜாதகம். ஆறாம் வீடு செவ்வாய்க்கு உரியது. அந்த வீட்டை செவ்வாய் அதற்கு ஏழில் இருந்து நேராகப் பார்க்கிறார். ஆறாம் வீட்டில் எட்டாம் அதிபதி சனியின் ஆதிக்கம். உடல்காரகன் சூரியனுடன், சந்திரன், புதன், சுக்கிரன் ஆகிய 3 கிரகங்கள் கிரக யுத்தத்தில். அத்துடன் அங்கே உள்ள சுக்கிரன் 12ஆம் வீட்டிற்கு உரியவர். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகுவின் ஆதிக்கம்.

12ல் உள்ள (விரையத்தில் உள்ள) செவ்வாய் தசையில் புற்று நோய் ஏற்பட்டது. செவ்வாயை 6ல் இருந்து நேரடியாகப் பார்க்கும் சனி நோயைத் தீவிரப் படுத்தினார். அதே தசையில் வந்த சனி புத்தியில் ஜாதகருக்கு மரணம் ஏற்பட்டது.

ஆறாம் வீடு, மற்றும் 12ஆம் வீடுகளில் அமரும் கிரகங்கள் தங்கள் தசா புத்திகளில் நோயை உண்டாக்கும். அமர்ந்திருக்கும் கிரகங்கள் சுபக்கிரகங்களின் சேர்க்கை பெற்றால் ஜாதகன் பிழைத்துவிடுவான். இல்லை என்றால் கஷ்டம்தான்!

அன்புடன்
வாத்தியார்
----------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

3.11.16

சார்லி சாப்ளினின் நெஞ்சைத் தொட்ட வாசகங்கள்!சார்லி சாப்ளினின் நெஞ்சைத் தொட்ட வாசகங்கள்!

*Charlie Chaplin's* 125th birthday -

A Good Day to Recollect his 3 Heart Touching Statements:

(1) Nothing is Permanent in this World, not even our Troubles.
(2) I like Walking in the Rain, because  No Body can see my Tears.
(3) The Most Wasted  Day in Life is the Day in which we have not Laughed.

LIFE is to Enjoy with Whatever you have with You, Keep Smiling...!

If you feel STRESSED,Give yourself A Break.

Enjoy Some..Icecream/ Choclates/Candy/ Cake...
Why...?
B'Coz...
STRESSED
backwards spelling is
DESSERTS...!!
Enjoy...!

Very Beautiful lines
Pls Store it.
-----------------------------------
2
ONE Good FRIEND
is equal to ONE
Good Medicine...!
Likewise ONE Good
Group is equal to ONE
Full medical store...!!

Six Best Doctors
in the World....
1.Sunlight,
2.Rest,
3.Exercise,
4.Diet,
5.Self Confidence &
6.Friends.

Maintain them in all
stages of Life and
enjoy healthy life...!

If you see the Moon...
You see the Beauty of
God.....!
If you see the Sun...!
You see the power of
God....
And....
If you see the Mirror,
You see the Best
Creation of GOD...!

So,
Believe in YOURSELF.
We all are Tourists & God is our Travel Agent
Who has already fixed
all our Routes, Reservations
& Destinations
So....
Trust him & Enjoy the
"Trip" called LIFE...!!

Our Aim in Life
should be....


*9 8 7 6 5 4 3 2 1 0*

🔹9-Glass Drinking Water.
🔹8-Hrs Sound Sleep.
🔹7-Wonders Tour With Family.
🔹6-Days Work A Week.
🔹5-Digit Income.
🔹4-Wheeler.
🔹3-Bedroom Flat Or House.
🔹2-Best Friends.
🔹1-Sweetheart.
🔹0-Tension...!

Life will never
come Again.!!
Live Today..!
Share to all People who
are Important to You..!!
----------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

2.11.16

கண்களைப் பனிக்க வைத்த கவியரசர் கண்ணதாசனின் உரை!

கண்களைப் பனிக்க வைத்த கவியரசர் கண்ணதாசனின் உரை!
----------------------------------------------------------
நான் ஒரு இந்து. இந்து என்பதில் நான் பெருமைப்படுகிறேன்.

நான் எல்லா மதத்தினரையும் மனமார நேசிக்கிறேன்; ஆனால் இந்துவாகவே வாழ விரும்புகிறேன்.

நான் கடவுளை நம்புகிறேன்; அவனைக் காட்டியவனைப் போற்றுகிறேன்;

அந்தக் கடவுளைக் கல்லிலும், கருத்திலும் கண்டு வணங்குகிறேன்.

ஆன்மா இறைவனோடு ஒன்றிவிடும்போது, அமைதி இருதயத்தை ஆட்சி செய்கிறது.

நாணயம், சத்தியம், தர்மம் இவற்றின் மீது நம்பிக்கை பிறக்கிறது.

நேரான வாழ்க்கையை இருதயம் அவாவுகிறது. பாதகங்களை, பாவங்களை கண்டு அஞ்சுகிறது.

குறிப்பாக ஒரு இந்துவுக்குத் தன் மத அமைப்பின் மூலம் கிடைக்கும் நிம்மதி, வேறு யாருக்கும் கிடைப்பதில்லை.

கடைசி நாத்திகனையும், அது ஆத்திகன் என்றே அரவணைத்துக் கொள்கிறது.

என்னை திட்டுகிறவன்தான் அடிக்கடி நினைத்துக் கொள்கிறான்; ஆகவே அவன்தான் முதல் பக்தன்” என்பது இறைவனின் வாக்கு.

இந்து மதத்தைப்போல் சகிப்புத்தன்மை வாய்ந்த மதம் உலகில் வேறு எதுவும் இல்லை .

நீ பிள்ளையாரை உடைக்கலாம்; பெருமாள் நாமத்தை அழிக்கலாம்; மதச்சின்னங்களை கேலி செய்யலாம்; எதைச் செய்தாலும் இந்து
சகித்துக் கொள்கிறான்.

ஏதோ பரம்பரையாகவே பகுத்தறிவாளனாகப் பிறந்தது போல் எண்ணிக் கொண்டு, பாத்திரத்தை நிரப்புவதற்காகவே சாஸ்திரத்தைக் கேலி செய்யும்
பகுத்தறிவுத் தந்தைகள் இஸ்லாத்தின் மீதோ, கிறிஸ்துவத்தின் மீதோ கை வைக்கட்டும் பார்க்கலாம்.

கடந்த நாற்பது வருசங்களில் ஒரு நாளாவது அதற்கான துணிவு ஏற்பட்டதாக தெரியவில்லையே!

பாவப்பட்ட இந்து மதத்தை மட்டுமே தாக்கித் தாக்கி, அதை நம்புகிற அப்பாவிகளிடம் ‘ரேட்டு ‘ வாங்கிச் சொத்துச் சேர்க்கும் ‘பெரிய ‘ மனிதர்களைத்தான் நான் பார்த்திருக்கிறேன்.

அவர்கள் பேசுகிற நாத்திக வாதம், அவர்கள் ‘குடும்பம் நடத்தும் வியாபாரம்’ என்பதை அறியாமல், வாழ்கையையே இழந்து நிற்கும்
பல பேரை நான் அறிவேன்.

பருவ காலத்தில் சருமத்தின் அழகு மினுமினுப்பதைப் போல், ஆரம்ப காலத்தில் இந்த வாதத்தைக் கேட்டு ஏமாந்தவர்களில் நானும் ஒருவன்.

நடிகையின் ‘மேக் அப்’ பைக் கண்டு ஏமாறுகிற சராசரி மனிதனைப்போல், அன்று இந்த வாதத்தைக் கேட்டு ஏமாந்தவர்களில் நானும் ஒருவன்.

அந்த கவர்ச்சி எனக்கு குறுகிய காலக் கவர்ச்சியாகவே இருந்தது இறைவனின் கருணையே!

என்னை அடிமை கொண்ட கண்ணனும், ராமனும் இன்று சந்திர மண்டலத்துக்குப் பயணம் போகும் அமெரிக்காவையே அடிமைக்கொண்டு,
ஆன்மீக நெறியில் திளைக்க வைத்திருக்கிறார்கள்.

அமெரிக்காவை விடவா ஈரோடு பகுத்தறிவில் முன்னேறிவிட்டது?

வேண்டுமானால்  ‘பணத்தறிவில்' முன்னேறிவிட்டது என்று சொல்லலாம்.

ஆளுங் கட்சியாக எது வந்தாலும் ஆதரித்துக் கொண்டு, தன் கட்சியும் உயிரோடிருப்பதாகக் காட்டிக் கொண்டு, எது கொடுத்தாலும் வாங்கிக்
கொண்டு வாழ்கையை சுகமாக நடத்துவதற்கு, இந்த நாத்திக போலிகள் போட்டிருக்கும் திரை, பகுத்தறிவு!

உலகத்தில் நாத்திகம் பேசியவன் தோற்றதாக வரலாறு உண்டே தவிர, வென்றதாக இல்லை.

இதை உலகமெங்கும் இறைவன் நிரூபித்துக் கொண்டு வருகிறான்.

அவர்கள் எப்படியோ போகட்டும்.

இந்த சீசனில் வாழ்ந்து கொண்டிருக்கும் சில மனிதர்கள் கோவில்களுக்கு முன்னால் பகுத்தறிவு விளையாட்டு விளையாடிப் பார்க்கலாம்
என்று கருதுகிறார்கள். இதை அனுமதித்தால், விளைவு மோசமாக இருக்கும்.

நம்பிக்கை இல்லாதவன் கோவிலுக்கு போக வேண்டாம்.நம்புகிறவனை தடுப்பதற்கு அவன் யார்?

அப்பாவி இந்துக்கள் பேசாமல் இருக்க இருக்கச் சமுதாய வியாபாரிகள் கோவிலுக்கு முன் கடை வைக்க தொடங்குகிறார்கள்
.
வெள்ளைக்காரனின் கால்களை கட்டிப்பிடித்துக் கொண்டு ‘போகாதே போகாதே என் கணவா ‘ என்று பாடியவர்களுக்கு நாட்டுப் பற்று எங்கிருந்து வரும்?

நாட்டு பற்று இல்லாதவர்களுக்கு தெய்வப் பற்று எங்கிருந்து வரும்?

தெய்வப் பற்று இல்லாதவர்களுக்கு நாணயம், நேர்மை இவற்றின் மீது நம்பிக்கை எங்கிருந்து வரும்?

இந்த நாலரை கோடி (அன்று) மக்களில் நீங்கள் சலித்துச் சலித்து எடுத்தாலும், நாலாயிரம் நாத்திகர்களைக் கூட காண முடியாது.

பழைய நாத்திகர்களை எல்லாம் நான் பழனியிலும், திருப்பதியிலும் சந்தித்துக் கொண்டிருக்கிறேன்!
ஆகவே இந்த காரியங்களுக்கு யாரும் துணை வர மாட்டார்கள்.
===================================================================
படித்ததில் பிடித்தது. உங்களுக்கு அறியத் தந்திருக்கிறேன்

அன்புடன்
வாத்தியார்
=============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

1.11.16

இப்படியும் ஒரு அற்புதமான மனிதர்!


இப்படியும் ஒரு அற்புதமான மனிதர்!

பாரீஸ் நகரில்...ரயில் நிலையம் அருகில் ஒருமுறை ஒரு பயங்கர வெடிகுண்டு சம்பவம் நடந்தது.....

தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் அனைவரும் தப்பித்தனர்....ஆனால் அவர்களுடன்....இந்த செயலுக்கு  மிகவும் உறுதுணையாக இருந்த ஒரு பயிற்சி...நாய் மட்டும் போலீசார் வசம் சிக்கி கொண்டது...

ஆனால் அந்த நாயை வைத்துக்கொண்டு போலீசாரால் துப்புத்துலக்க முடியவில்லை....

காரணம் அது எந்த முறையில்....எந்த மொழியில் பயிற்சி கொடுக்கப்பட்டது என்ற விபரம் அங்கிருந்த யாருக்கும் தெரியவில்லை.....!

(உதாரணத்திற்க்கு..... யானைக்கு ..சமஸ்க்கிருத மொழி விளங்கும்  என்று பலரும் சொல்ல கேட்டதுன்டு அதைப்போல....

ஒரு ஹிந்திகாரன் வீட்டில் வளரும் நாய் பைட்டோ பைட்டோ என்றால் உட்கார்ந்து கொள்ளுமாம்....இதைப்போல...)

எப்படியாவது இந்த நாயை வைத்தே குற்றவாளிகளின் இருப்பிடத்தை கண்டறிந்து...அவர்களை கைது செய்ய முடிவெடுத்தனர்

எல்லாரும் முயற்சி செய்து ஒரு வழியாக...ஒரு பன்மொழி கலைஞரை அழைத்தனர்.....அவருக்கு...60 மொழிகள் வரை அத்துப்படி...... அவர் ஒரு புரஃபெஸரும் கூட....

அவரும் வந்து.... வித விதமான மொழிகளை பேசி முயற்சி செய்தும் பயன் இல்லை...அந்த நாயிக்கும் ஒன்றும் புரியவே இல்லை....

கடைசியில்.... பழம்பெரும் மொழிகளில் ஒன்றான ஹிப்ரு என்ற மொழியில்...அவர் பயிற்சியை துவக்கியதும் ...நாய்க்கு புரிய ஆரம்பித்தது.....உடன் அதை வைத்து குற்றவாளிகளின் இருப்பிடம் கண்டு....உடன் கைது செய்தது பாரீஸ் போலீஸ்......

அந்த புரஃபெஸருக்கு பாராட்டுக்கள் குவிந்தது.....

அவருக்கு பாரீஸ் அரசாங்கம் ஏகப்பட்ட விருதுகளை அள்ளித்தர முடிவு செய்தது... பெரிய விருந்து ஒன்றையும் ஏற்பாடு செய்தது

விருந்தில் அவரிடம் கேட்க்கப்பட்டது

உங்களால் பாரீஸ் பெருமை அடைந்தது... ...

உங்களுக்கு என்ன வேண்டும்  கேளுங்கள் வழங்கபடும் என்றனர்....

பணம் வேண்டுமா.....?

விலை கூடிய கார்கள் வேண்டுமா..?
மாளிகை வேண்டுமா....?
அரசாங்க பணிகள் வேண்டுமா...?
என்று...

அவர் மறுத்துவிட்டார்...

எனக்கு உதவியாக இருந்த அந்த...நாயை மட்டும் தயவு செய்து எனக்கு வழங்கிவிடுங்கள்...என்றார்...

அதை கேட்டு அங்கிருந்த  அனைவருக்கும் ஆச்சர்யம்....சிலர் இவருக்கு பைத்தியம் என்றனர்....

ஒரு அதிகாரி கேட்டார்..... ஏன் அந்த நாயை வைத்து நீங்கள் என்ன செய்ய முடியும்..... என்று ஆச்சரியத்துடன் கேட்டார்....

அதற்கு அவர்...சொன்னார்....

இந்த நாயை என் வீட்டிற்க்கு கொண்டு போய்....என் மனைவி முன் நிறுத்தவேண்டும்..... ஏன் என்றால்  நான் கஷ்டப்பட்டு இந்த பல மொழிகள் படிக்க முயலும்போதெல்லாம்....அவள் சொல்வாள்....

"எந்த நாய் கேட்க்க போகுதுன்னு...இதையெல்லாம் படிக்கிறீங்கன்னு.."...

அதுக்காக தான் இதை கொண்டுபோகணும்னு சொன்னவுடன்

அரங்கம் சிரிப்பொலியில் நிறைந்தது..

ஹாஹாஹாஹா......

என்னவொரு அற்புதமான மனிதர் சாமி அவர்!!!!
------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!