மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

7.11.16

இன்றைய சூழ்நிலையில் வாழ்க்கை எப்படி இருக்கிறது?


இன்றைய சூழ்நிலையில் வாழ்க்கை எப்படி இருக்கிறது?

எல்லோரும் அதிவேகமாக ஓடுகிறார்கள்.

😔நவீனம் நடத்தும் பொருளாதார பந்தயத்தில் ஓடுவதற்கு சொந்த ஊர் சுமையாக இருந்தது அதை உதறி வீசினார்கள், வேகம் மேலும் கூடியது.

😔பந்தயம் மேலும் கடினமான போது தாய்மொழி சுமையாக இருந்தது அதையும் வீசினார்கள் இன்னும் வேகம் அதிகரித்தது.

😔பின்னர் அறச்சிந்தனைகள் பெறும் சுமையாயின அவை அனைத்தையும் உதறிவிட்டு ஓடினார்கள்.

😔இறுதியில் உறவுகள் யாவும் சுமையாகிப்போயின அவற்றையும் கழற்றி வீசிவிட்டு பொருளாதாரப்பந்தயத்தில் ஓடிக்கொண்டிருக்கிறார்கள் நவீன மனிதர்கள்.

😔இப்போது பொருளாதாரம் மற்றும் வெற்றிகரமான வாழ்க்கை என்ற வெறி மட்டும் எஞ்சி உள்ளது இனி வீசி எறிய எதுவுமில்லை.

😔குடும்பங்கள் யாவும் சிதறிக்கிடக்கின்றன மடிக்கணினி திரை வழியாக பேரப்பிள்ளைகளை கொஞ்சும் பெரியவர்கள் உருவாகி விட்டார்கள் பிறந்த பிள்ளையின் பசிக்கு பால் ஊட்டவும் மலத்தை கழுவவும் கூட நேரம் இல்லாத இளம் அம்மாக்கள் உருவாகி விட்டனர்.

😔மனைவி அடிவயிற்று  வலியால் துடித்தாலும் அரவணைத்து தட்டிக்கொடுக்கும் பக்குவம் இல்லாத இளம் கணவர்கள் உருவாகியிருக்கிறார்கள்.

😔பல பெரியவர்களுக்கு பிள்ளைகளை பார்க்காத ஏக்கத்திலேயே இதயம் வலிக்கிறது.
பிள்ளைகளால் மருத்துவ செலவுக்கு பணம் அனுப்ப முடிகிறது வந்து பார்க்க வழியில்லை.

😔எல்லோருடைய நேரத்தையும் நிறுவனங்கள் விழுங்கி விட்டன. நகரங்கள் விரிவடைந்து கொண்டே இருக்கின்றன மனித மாண்பு வெகுவாக சுருங்கி விட்டது.

😔மூன்றே வயது நிரம்பிய பிள்ளைகள் மழலைக்காப்பகத்துக்கு அனுப்பப்படுகிறார்கள். இந்த கால கல்வி முறையில் பிள்ளைகள் முழுமையாக வீட்டில் இருப்பதே ஐந்து வயது வரைக்கும் தான், அதன் பின்னர் ஓடத்தொடங்கும் அவர்கள் வாழ்நாள் முழுவதற்கும் நிற்பதற்கு வழியே இல்லை அந்த ஐந்து வயது வரைக்குமாவது பெற்றோருடனும் உறவினருடனும் வாழும் உரிமை குழந்தைகளுக்கு வழங்கப்படுவது இல்லை.

😔தொடக்கத்தில் கூட்டுக்குடும்பங்கள் தனிக்குடும்பங்களாக பிரிந்தன இப்போது தனிக்குடும்பங்களின் உறுப்பினர்கள் தனித்தனியாக பிரிந்து இயங்குகிறார்கள்.

😔பெற்ற பிள்ளைகளை ஐந்தே ஐந்து ஆண்டுகள் கூட பார்த்துக்கொள்ள முடியாத சமூகத்துக்கு மழையும் காற்றும் சீராக வழங்கப்படுமா என்ன..?

👉🏽ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி -இனி சொல்வதற்கு ஒன்றுமில்லை, மனித இனம் தனது அழிவுக்கான ஒரு வழிபாதையில் ஓடத்தொடங்கி விட்டது, இனி இதை தடுப்பதென்பது மிகவும் கடினமான ஒன்றாகும்.

🏹மாறுவோம்... மாற்றுவோம்... மாற்றத்தை நம்மிடமிருந்தே துவங்குவோம்.

நீங்கள் இவ்வாறு ஓடிக் கொண்டிருந்தால், ஓடுவதை சற்று நிறுத்திவிட்டு, ஒரு நிமிர்ந்து சிந்தித்துப் பாருங்கள்!

அன்புடன்
வாத்தியார்
-------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

14 comments:

 1. Respected sir,

  Rightly judged and told about the modern life and runners. Life is running with all speed leaving all problems in our day to day life. Really suitable solutions to be taken each and every individual to stablise the life properly.

  with kind regards,

  Visvanthan N

  ReplyDelete
 2. Respected Sir,

  Happy morning... Thanks for sharing. Everyone have social responsibility.

  Have a great day.

  Thanks & Regards,
  Ravi

  ReplyDelete
 3. வணக்கம் ஐயா,முற்றிலும் உண்மை.மனிதன் இயந்திரமாக மாறிப்போனான்.நன்றி.

  ReplyDelete
 4. மன்னிக்கவும் அய்யா. உங்கள் கருத்து எப்போதும் போல் உயரிய நோக்கத்தில் இருந்தாலும், இந்த நிலையை மாற்ற முடியாது என்றே தோன்றுகிறது. மனிதனின் பேராசைக்கு எந்த காலத்திலும் அளவிருந்ததில்லை. தங்களை போன்ற சிலரை தவிர, பெரும்பாலானோர் இன்னும் அதிகம் பொருள் ஈட்டவே இச்சை கொண்டுள்ளனர். இதற்கு வசதியாக வாழ்வது மட்டுமே ஒரு காரணமாக இருக்க முடியாது. எதிர்காலத்தை பற்றிய நம்பிக்கையின்மையும் ஒரு காரணம். அதிக பணம் ஈட்டினால் சமூகத்தில் அதிக மதிப்புடன் வாழ முடியும் என்ற எண்ணமும் ஒரு காரணம். அதிக பொருள் ஈட்ட ஒன்று இன்னும் வேகமாக ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். அல்லது மற்றவர்களை தள்ளிவிட்டு ஓட வேண்டும். எப்போது தனது வெற்றி மற்றொருவனின் தோல்வியில் அமைந்துள்ளது என்று மனிதன் எண்ணத் துவங்கினானோ, அன்றே இந்த பிரச்சனை உருவெடுத்துவிட்டது. நமது பிள்ளைகளையே எடுத்துக் கொள்ளுங்கள். போட்டி மனப்பான்மை என்ற பெயரில் இந்த கருத்தை பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் பிஞ்சு மனங்களில் விதைக்கிறார்கள். நீ நல்ல மதிப்பெண் எடுத்தால் பத்தாது. மற்றவர்களை விட அதிக மதிப்பெண் எடுத்து வகுப்பிலேயே முதல் மாணவராக வர வேண்டும் என்று கூறி இந்த வெறியை சிறு பிராயத்திலேயே விதைத்து விடுகிறார்கள். மகாபாரதத்தில் கண்ணன் கூறுகிறார். இன்னொருவரை விட சிறந்து விளங்க வேண்டும் என்ற எண்ணத்தோடு பயிலும் கல்வி உன்னதம் பெறாது. இதற்கு உதாரணம் கர்ணன். தான் கற்கும் கல்வியை முழுவதுமாக கற்றுத்தேற வேண்டும் என்ற எண்ணமே உன்னதம் பெறும். இதற்கு உதாரணம் பார்த்தன். இதை நமது பெற்றோர்கள் உணர்வார்களா? அனைவருக்கும் இந்த உலகில் இடமுண்டு என்ற எண்ணமே பலருக்கு மறந்துவிட்டது.

  இந்த நிலையில் இன்றைய மனிதர்கள் என்ன செய்ய இயலும். வேகமாக ஓடிக்கொண்டே இருக்கவேண்டியதுதான். இது வருத்தத்திற்கு உரிய நிலைமைதான். ஆனால் இதற்கு மாற்றம் நம்மிடம் இருந்துதான் வரவேண்டும்.

  ReplyDelete
 5. ////Blogger Visvanathan N said...
  Respected sir,
  Rightly judged and told about the modern life and runners. Life is running with all speed leaving all problems in our day to day life. Really suitable solutions to be taken each and every individual to stablise the life properly.
  with kind regards,
  Visvanthan N/////

  ஓடுபவர்கள் எவரும் தங்கள் காது கொடுத்து இதையெல்லாம் கேட்க மாட்டார்கள். வயதான பிறகு, உடல் ஒத்துழைக்க மறுத்து, மருத்துவ மனைகளுக்கு அலையும்போதுதான் இதை உணர்வார்கள். இது என்னுடைய அனுபவம். நன்றி விஸ்வநாதன்!

  ReplyDelete
 6. /////Blogger ravichandran said...
  Respected Sir,
  Happy morning... Thanks for sharing. Everyone have social responsibility.
  Have a great day.
  Thanks & Regards,
  Ravi////

  நல்லது. நன்றி அவனாசி ரவி!

  ReplyDelete
 7. /////Blogger balu krish krish said...
  True sir !//////

  உங்களுடைய பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி நண்பரே!

  ReplyDelete
 8. /////Blogger adithan said...
  வணக்கம் ஐயா,முற்றிலும் உண்மை.மனிதன் இயந்திரமாக மாறிப்போனான்.நன்றி.////

  ஆமாம். எரிபொருள் இன்றி தானாக இயங்கும் இயந்திரமாக மாறிவிட்டான். நன்றி ஆதித்தன்!

  ReplyDelete
 9. /////Blogger thozhar pandian said...
  மன்னிக்கவும் அய்யா. உங்கள் கருத்து எப்போதும் போல் உயரிய நோக்கத்தில் இருந்தாலும், இந்த நிலையை மாற்ற முடியாது என்றே தோன்றுகிறது. மனிதனின் பேராசைக்கு எந்த காலத்திலும் அளவிருந்ததில்லை. தங்களை போன்ற சிலரை தவிர, பெரும்பாலானோர் இன்னும் அதிகம் பொருள் ஈட்டவே இச்சை கொண்டுள்ளனர். இதற்கு வசதியாக வாழ்வது மட்டுமே ஒரு காரணமாக இருக்க முடியாது. எதிர்காலத்தை பற்றிய நம்பிக்கையின்மையும் ஒரு காரணம். அதிக பணம் ஈட்டினால் சமூகத்தில் அதிக மதிப்புடன் வாழ முடியும் என்ற எண்ணமும் ஒரு காரணம். அதிக பொருள் ஈட்ட ஒன்று இன்னும் வேகமாக ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். அல்லது மற்றவர்களை தள்ளிவிட்டு ஓட வேண்டும். எப்போது தனது வெற்றி மற்றொருவனின் தோல்வியில் அமைந்துள்ளது என்று மனிதன் எண்ணத் துவங்கினானோ, அன்றே இந்த பிரச்சனை உருவெடுத்துவிட்டது. நமது பிள்ளைகளையே எடுத்துக் கொள்ளுங்கள். போட்டி மனப்பான்மை என்ற பெயரில் இந்த கருத்தை பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் பிஞ்சு மனங்களில் விதைக்கிறார்கள். நீ நல்ல மதிப்பெண் எடுத்தால் பத்தாது. மற்றவர்களை விட அதிக மதிப்பெண் எடுத்து வகுப்பிலேயே முதல் மாணவராக வர வேண்டும் என்று கூறி இந்த வெறியை சிறு பிராயத்திலேயே விதைத்து விடுகிறார்கள். மகாபாரதத்தில் கண்ணன் கூறுகிறார். இன்னொருவரை விட சிறந்து விளங்க வேண்டும் என்ற எண்ணத்தோடு பயிலும் கல்வி உன்னதம் பெறாது. இதற்கு உதாரணம் கர்ணன். தான் கற்கும் கல்வியை முழுவதுமாக கற்றுத்தேற வேண்டும் என்ற எண்ணமே உன்னதம் பெறும். இதற்கு உதாரணம் பார்த்தன். இதை நமது பெற்றோர்கள் உணர்வார்களா? அனைவருக்கும் இந்த உலகில் இடமுண்டு என்ற எண்ணமே பலருக்கு மறந்துவிட்டது.
  இந்த நிலையில் இன்றைய மனிதர்கள் என்ன செய்ய இயலும். வேகமாக ஓடிக்கொண்டே இருக்கவேண்டியதுதான். இது வருத்தத்திற்கு உரிய நிலைமைதான். ஆனால் இதற்கு மாற்றம் நம்மிடம் இருந்துதான் வரவேண்டும்.//////

  ”நன்றிகெட்ட மாந்தரடா
  நானறிந்த பாடமடா”
  என்று 55 ஆண்டுகளுக்கு முன்பாகவே கவியரசர் கண்ணதாசன் தன்னுடைய பாடல் வரிகளில் மிக அற்புதமாகச் சொன்னார். ஒரு நாள், ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய மரணத்திற்கு முன்பு இதை உணர்வான். தான் ஓடி ஓடிப் பொருள் குவித்ததெல்லாம் பாழாய்ப் போன நன்றி, விசுவாசமில்லாத தன் மக்களுக்காக என்பதை உணர்வான். அதை உணர வைக்காமல் கர்மகாரகன் போர்டிங் பாஸை அவனுக்குத் தரமாட்டான். அதை, அந்த நிலைமையை இப்போதே உணர்ந்து இறை வழிபாட்டிலும், தான தர்மங்களிலும் தன் மிச்ச காலத்தை செலவு செய்பவன், அதாவது இந்த ஓட்டத்திலிருந்து விலகுபவன் மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் அடைவான். அதுவே யதார்த்தமான உண்மை. உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

  ReplyDelete
 10. //////Blogger kmr.krishnan said...
  Very much true.////

  உங்களுடைய பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி கிருஷ்ணன் சார்!

  ReplyDelete
 11. மிகமிக சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள். கடவுள் காப்பாற்றட்டும்!

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com