மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

31.10.09

Week end posting: தர்மருக்கு ஏன் தெரியவில்லை?

++++++++++++++++++++++++++++++++++++++++++++
Week end posting: தர்மருக்கு ஏன் தெரியவில்லை?

”அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான் கீதையிலே கண்ணன்
பார்ப்பவர் கண்களில் தெரிவேன் என்றான் பாரதத்தில் கண்ணன்”
என்று கவியரசர் கண்ணதாசன் எப்போதும் சிலாகித்துச் சொல்லும் கண்ணன் எனும் மன்னன், ஒரு நாள், தர்மரை அழைத்துச் சொன்னார்:

“தர்மா, தீயவன் என்று நீ நினைக்கும் அல்லது பார்க்கும் ஒருவனைத் தேடிப் பிடித்து, இங்கே அழைத்துக் கொண்டு வா!”

அதை உடனே செய்து, கண்ணனை மகிழ்விக்க அவர் விரைந்தார்.

அதே போல துரியோதனனையும் அழைத்த கண்ணன் சொன்னார்:

“துரியோதனா, நல்லவன் என்று நீ நினைக்கும் அல்லது பார்க்கும் ஒருவனைத் தேடிப் பிடித்து, இங்கே அழைத்துக் கொண்டு வா!”

துரியோதனனும் அவ்வாறே செய்வதற்கு விரைந்தான்.

பரந்தாமன் சொன்னது காலை நேரத்தில். அன்று மாலை, விளக்கு வைக்கும்
நேரத்திற்குத் திரும்பி வந்த தர்மர் சொன்னார்:

“மாமா, தெரிந்த அத்தனை பேர்களையும் நினைத்துப் பார்த்துவிட்டேன். அதோடு
வெளியில் தேடியும் பார்த்து விட்டேன். ஒரு தீயவன் கூட என் கண்ணில் படவில்லை. நெஞ்சில் நினைவிற்கும் வரவில்லை”

புன்னகைத்த கண்ணன், அவரைப் பிறகு வரச் சொல்லி அனுப்பி விட்டார்.

சற்று நேரத்தில் அங்கே வந்த துரியோதனனும், அதையே சொன்னான். ஒரு நல்லவன் கூடக் கண்ணில் படவில்லை என்றான்.

புன்னகைத்த கண்ணன் மெல்லிய குரலில் சொன்னார்,”துரியோதனா, உன் தாய் மாமன் சகுனி, உனக்கு எவ்வளவு நல்ல காரியங்களைச் செய்திருக்கிறார். அவர்கூட உனக்கு நல்லவராகத் தெரியவில்லையா?”

துரியோதனன் வெட்கித் தலைகுனிந்தான்.

அடுத்து, தர்மரை அழைத்த பரந்தாமன் சொன்னார்,” உங்களுக்குப் பல தீங்குகளைச் செய்த துரியோதனன், உனக்குத் தீயவனாகத் தெரியவில்லையா? உங்கள் அன்பிற்குப் பாத்திரமான பாஞ்சாலியின் துகிலை உரிய முற்பட்ட துச்சாதனன் உனக்குத் தீயவனாகத் தெரியவில்லையா?”

தர்மர் ஒன்றும் சொல்லாமல் திகைத்துப்போய் நின்றார்.

நடந்ததை முழுவதுமாகத் தர்மரிடம் சொன்ன பரந்தாமன், முத்தாய்ப்பாக இப்படிச்
சொன்னார்.

“நல்லவர்களுக்கு எல்லாமுமே நல்லதாகத்தான் தெரியும். தீயவர்களுக்கு எல்லாமுமே தீயதாகத்தான் தெரியும்!”

+++++++++++++++++++++++++++++++++++++++++++
வாத்தியார் ஒரு நாள் விடுப்பில் ஊருக்குச் செல்வதால், திங்கட்கிழமை வகுப்பறைக்கு விடுமுறை!

அடுத்த வகுப்பு 3.11.2009 செவ்வாயன்று!

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

30.10.09

Lesson on yoga: Amarak Yoga: அமரக் யோகம்!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Lesson No.15 

This yoga lesson is shifted to the yoga class for obvious reason.
Sorry for the inconvenience.
Please contact Vaaththiyar for further information about this lesson.
mail ID classroom2007@gmail.com

++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

29.10.09

Lesson on yogas: Bhaskara Yoga: பாஸ்கரா யோகம்


சிறு அதிர்வுகள், குலுக்கல்களுக்கெல்லாம் மனமொடிந்து போகாதீர்கள். வாழ்க்கை என்பது சாலை என்றால், எதிர்ப்படும் பிரச்சினைகள், நமது வேகத்தை மட்டுப் படுத்தி, விபத்து ஏற்படாமல் காக்கும் வேகக் குறைப்பான்கள் Speed Breakers

இன்றையப் பொழுது இனியதாகட்டும்!

(மின்னஞ்சலில் வந்தது! மொழிமாற்றம் மட்டும் அடியேனுடையது!)
++++++++++++++++++++++++++++++++++++++++++++++

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Yoga Lesson No.14

This yoga lesson is shifted to the yoga class for obvious reason.
Sorry for the inconvenience.
Please contact Vaaththiyar for further information about this lesson.
mail ID classroom2007@gmail.com

+++++++++++++++++++++++++++++++++++++++++


வாழ்க வளமுடன்!

28.10.09

Lesson on transit Rahu & Ketu: ராகு கேது பெயர்ச்சி!

+++++++++++++++++++++++++++++++++++++++++
Lesson on transit Rahu & Ketu: ராகு கேது பெயர்ச்சி!

ராகு மாதிரி அடிப்பவரும் இல்லை; கேது மாதிரி ஞானத்தைக் கெடுப்பவரும் இல்லை என்பார்கள்.

ராகு என்ன நம் விரோதியா? பேட்டை தாதாவா? அவராக வந்து அடிப்பதற்கு? பூர்வ புண்ணியப் பலன்களின் படி, எதைத் தரவேண்டுமோ, அதைத் தருவார். எங்கே அடிக்க வேண்டுமோ, அங்கே அடிப்பார். சிலரை அடிக்காமலும் விட்டுவிடுவார்.

சிலரைச் சும்மா தட்டுவார். சிலரை லத்தி வைத்துத் தட்டுவார். சிலரை நனைய வைத்து அடிப்பார். சிலரைத் தொங்க விட்டு அடிப்பார். அது அவரவர் வாங்கி வந்த வரத்தைப் பொறுத்து மாறுபடும்.ஜாதகத்தில் உள்ள பல நல்ல அம்சங்கள், நம்மை அடி வாங்காமல் பாதுகாக்கும். அல்லது வாங்கிய அடிகளுக்கு ஒத்தடம் கொடுத்து நம்மைத் தேற்றும்.

நம் ஜாதகத்தின் படி என்னென்ன பலாபலன்கள் உள்ளதோ - அதாவது நம் கர்மவினைப்படி என்ன பலன்கள் store ஆகியுள்ளதோ - அதைக் கொடுப்பது கிரகங்களின் பணி! அவ்வளவுதான். ஆகவே கிரகங்களின் பெயர்ச்சியைக் கண்டு பயப்பட வேண்டாம்.
+++++++++++++++++++++++++++++++++++++++++
ஒரு ரயில்வே ஸ்டேசனுக்குத் தினமும் பல ரயில்கள் வந்து செல்லும். இரண்டு அல்லது மூன்று திசைகளில் இருந்து வந்து செல்லும். அப்படி வரும் ரயில்களில் விரைவு ரயில்களும் இருக்கும், சாதாரணப் பயணிகள் ரயிலும் இருக்கும், சரக்கு ரயில்களும் இருக்கும். அந்த நிலைய மேலாளருக்கு அவற்றால் வேலைப் பளு இருந்தாலும், பழகிப்போயிருக்கும். கவலைப் பட மாட்டார். அவருக்கு அத்தனை வண்டிகளும் ஒன்றுதான். அவருடைய நிலைய எல்லையைத் தாண்டி அவற்றை அனுப்பி விட்டால் போதும், அவருடைய வேலை முடிந்து விடும். அவருக்கு பல நவீன சாதனங்களின் உதவிகள் இருக்கும், சில நிலையங்களில் இரு வழிப்பாதைக்கான தண்டவாளங்கள் இருக்கும். அப்படி இருப்பவைகள் அவருடைய வேலையை எளிமைப் படுத்திவிடும்.

அதுபோல நமது ஜாதகத்தில் அடிப்படை விஷயங்கள் வலுவாக இருந்தாலும், நல்ல தசா புத்தி என்னும் இருவழிப் பாதைகள் இருந்தாலும், இந்த வந்துபோகும் ரயில்களுக்காக (அதாவது பெயர்ச்சியில் வரும் கிரகங்களுக்காக) நாம் கவலைப்படத் தேவையில்லை!
++++++++++++++++++++++++++++++++++++++++++
அக்டோபர் மாதம் 27ஆ‌ம் தே‌தி செவ்வாய்க்கிழமை, காலை 9:15 மணிக்கு ராகு பகவான் மகர ராசியில் இருந்து தனுசு ராசிக்கும், கேது பகவான் கடக ராசியில் இருந்து மிதுன ராசிக்கும் இடம் பெயர்கிறார்கள். சுமார் ஒன்றரை ஆண்டு காலம் அந்த ராசிகளில் சஞ்சரிப்பார்கள். அதாவது இருப்பார்கள். அதை ஒட்டி 12 ராசிக்காரர்களுக்கும் ஏற்படும் பலா பலன்களைச் சுருக்கமாகக் கீழே கொடுத்துள்ளேன்.
++++++++++++++++++++++++++++++++++++++++++
மற்ற கிரகங்கள் எல்லாம் கடிகாரச் சுற்றில் வலம் வரும். ராகுவும் கேதுவும் கடிகாரச் சுற்றிற்கு எதிர்ச் சுற்றில் வலம் வரும். இரண்டும் ஒரு முழுச்சுற்றைச் சுற்றி முடிக்க 18 ஆண்டு காலம் ஆகும்!

ராகு கேது பெயர்ச்சியால் நன்மை அடையவிருக்கும் ராசிகள்:
மேஷம், கடகம், சிம்மம் , துலாம், மகரம், கும்பம்

சற்று சிரமங்களை அனுபவிக்க இருக்கும் ராசிகள்:
ரிஷபம், மிதுனம், கன்னி, விருச்சிகம், தனுசு, மீனம்
-------------------------------------------------------
சிரமங்கள் என்பது, பண வரவு குறையலாம், செலவுகள் எகிறலாம். செய்யும் வேலையில் தடைகள் எதிர்ப்படலாம். அலைச்சல்கள் இருக்கலாம். தாமதங்கள் ஏற்பட்டு நம்முடைய பொறுமையைச் சோதிக்கலாம். உடல் உபாதைகள் ஏற்படலாம். மனைவி, உற்றார் உறனருடன் கருத்து வேறுபாடுகள் உண்டாகலாம். வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். வம்பு வழக்குக்கள் உண்டாகலாம். நிலுவையில் இருக்கும் வழக்குகளில், தோல்விகள் ஏற்படலாம். இப்படிப் பலருக்கும் பலவிதமான வழிகளில் உபத்திரவங்கள் ஏற்படலாம்.

பரிகாரம்:
ராகு, கேது பகவானைத் துதிப்பதுதான் பரிகாரம்.

ராகுவிற்கான பரிகாரப் பாடல்:

அரவெனும் ராகு ஐயனே போற்றி
கரவாது அருள்வாய் கடும் துயர் போற்றி
இறவா இன்பம் எதிலும் வெற்றி
ராகு தேவே இறைவா போற்றி!

கேதுவிற்கான பரிகாரப் பாடல்:

கேது தேவே கீர்த்தி திருவே
பாதம் போற்றிபாவம் தீர்ப்பாய்
வாதம் வம்பு வழக்குகளின்றி
கேது தேவா கேண்மையாய் ரட்சி

(பரிகாரப் பாடல் உபயம்: நன்றி தினமலர் நாளிதழ்)

இ‌ந்த ராகு, கேது பெயர்ச்சியினால் ஒவ்வொரு ராசிதாரரின் வாழ்விலும் ஏற்படக்கூடிய மாற்றங்கள், பாதிப்புகள் அதற்கான பரிகாரங்கள் ஆகியன ராசி வாரியாக தொகுத்து கீழே உள்ள தளங்களில் கொடுக்கப்பெற்றுள்ளது! விரிவான பெயர்ச்சிப் பொதுப்பலன்களுக்கான தளங்கள் அவைகள்! உங்கள் ராசிக்கான பகுதியைக் க்ளிக் செய்து, படித்து முழு விவரங்களையும் அறிந்து கொள்ளுங்கள். அதற்கான சுட்டி கீழே உள்ளது.
----------------------------------------------------
இந்தப் பொதுப்பலன்களைப் பற்றி ஒரு விஷயம். அவைகள் பொதுவானவை அவ்வளவுதான். அவர்கள், பத்திரிக்கைகள் தங்கள் வாசகர்களுக்காகப் பொதுப் பலன்களை எழுதுகிறார்கள். நாமும் மாய்ந்து மாய்ந்து படிக்கிறோம். அது எப்படி நமக்குப் பொருந்தும்?

ராகுல் காந்திக்கும், நடிகை ரகசியாவிற்கும், கே.எஸ், ரவிகுமாருக்கும், நடிகர் சூரியாவிற்கும் அய்யம்பேட்டை ஆரோக்கியசாமிக்கும், தஞ்சாவூர் தமிழரசனுக்கும் ஒரே ராசி என்று வைத்துக் கொள்ளூங்கள், இந்தப் பொதுப் பலன்களின்படியா, அவர்கள் அனைவருக்கும் இன்ப, துன்பங்கள் வரப் போகின்றன. இல்லை!

110 கோடி மக்கள் வகுத்தல் 12 ராசிகள் = 9.16 கோடி மக்கள்
இந்த 9.16 கோடி மக்களுக்கும் எப்படிப் பலன் ஒருவிதமாகப் பொருந்தும்?

அவரவர்களின் ஜாதகப்படிதான் பலன்கள் அமையும்.
++++++++++++++++++++++++++++++++++++++++
1. உங்கள் ஜாதகத்தில் ஏகப்பட்ட யோகங்கள் இருந்து, அதற்கான தசாபுத்தி நடந்து
கொண்டிருந்தால், இந்தக் கோச்சாரங்கள் வழிவிட்டு விடும்.

2. நல்ல தசை அல்லது புத்தி நடந்து கொண்டிருந்தாலும் கோள்சாரங்கள்
பாதிப்பை ஏற்படுத்தாது.

சுருங்கச் சொன்னால், கோள்சாரத்தைவிட, தசை/புத்தி முக்கியம்.

இன்னொரு முக்கியமான விஷ்யம். அக்கிரகங்கள் இடம் மாறியுள்ள உங்கள் ராசியில் 30ம் அதற்கு மேற்பட்ட பரல்களும் இருக்குமாயின், இந்த மாற்றங்களால் உங்களுக்கு பாதிப்புக்கள் இருக்காது!

ஒரு சாலையில் முதலமைச்சர் வருகிறார். அவருக்கு முன், அவருடைய பைலட் மற்றும் பாதுகாப்பு வாகனங்கள் வருகின்றன என்றால் மொத்த சாலையும் துடைக்கப்பட்டு, வழி ஏற்படுத்தப் பட்டிருக்கும் இல்லையா? ஏன் தப்பித்தவறி நீங்கள் சென்றாலும், வழி விட்டு ஒதுங்கி நிற்ப்பீர்கள் இல்லையா?
அதுபோலத்தான் இதுவும்.
------------------------------------------------------------------
முழு பொதுப்பலன்களுக்கான சுட்டிகள் இங்கே!

1. தினமலர்:

2. தினத்தந்தி:
=============================================
அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

27.10.09

Lessons on yogas: ஆதி யோகம்!

+++++++++++++++++++++++++++++++++++++++++
Lessons on yogas:No. 13

This yoga lesson is shifted to the yoga class for obvious reason.
Sorry for the inconvenience.
Please contact Vaaththiyar for further information about this lesson.
mail ID classroom2007@gmail.com

+++++++++++++++++++++++++++++++++++++=

26.10.09

Lessons on yogas: Pancha Mahapurusha Yoga மாமனித யோகம்!


++++++++++++++++++++++++++++++++++++++++++++
Yoga Lesson No.12
This yoga lesson is shifted to the yoga class for obvious reason.
Sorry for the inconvenience.
Please contact Vaaththiyar for further information about this lesson.
mail ID classroom2007@gmail.com

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

24.10.09

நகைச்சுவை: கண்ணாளன் vs கண்மணி

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நகைச்சுவை: கண்ணாளன் vs கண்மணி

இது நகைச்சுவைக்காகவே எழுதப்பெற்றுள்ளது!
சீரியஸ் பேர்வழிகளும், உம்மன்னா மூஞ்சி ஆசாமிகளும்
பதிவை விட்டு விலகவும்!
------------------------------------------------------------

1
கணவன்: மனைவி என்பதற்காக அர்த்தம் தெரியுமா உனக்கு?
Do you know the meaning of W I F E? It means,
Without Information, Fighting Everytime!

மனைவி: இல்லை, கண்ணாளா! அதன் அர்த்தம் -
With Idiot For Ever
---------------------------------------------
2
செய்தித்தாளை, விழுந்து விழுந்து படிக்கும் கணவனிடம் மனைவி
சொன்னாள்:

மனைவி: நான் ஒரு செய்தித்தாளாக இருந்திருக்க வேண்டும்.
உங்கள் கரங்களில் தவழும் பாக்கியம் தினமும் கிடைக்கும்.

கணவன்: நானும் அதைத்தான் விரும்புகிறேன். எனக்கும் ஒவ்வொரு
நாளும் புதிது புதிதாக செய்தித்தாள்கள் கிடைத்துக் கொண்டிருக்கும்!
---------------------------------------------
3
மருத்துவர்:” அம்மணி, உங்கள் கணவருக்கு மன அமைதியும் ஓய்வும்
தேவை. ஆகவே இந்தாருங்கள் தூக்க மாத்திரைகள்

மனைவி: இவற்றை, அவருக்கு நான் எப்போது கொடுக்க வேண்டும்?

மருத்துவர்: மாத்திரைகள் அவருக்கல்ல: உங்களுக்கு!
--------------------------------------------------------
4
மனைவி: நீங்கள் இப்படியொரு ஏமாளி என்று தெரிந்துகொள்ள
உங்களை நான் திருமணம் செய்துகொள்ள வேண்டியதாயிருந்திருக்கிறது!

கணவன்: ’என்னைத் திருமணம் செய்து கொள்கிறாயா?’ என்று நான்
உன்னைக் கேட்ட மறுநிமிடமே அதை நீ உணர்ந்திருக்க வேண்டும்!
-------------------------------------------------------
5
கணவன்: இன்று ஞாயிற்றுக்கிழமை. அதை நான் கொண்டாட வேண்டும்.
தியேட்டருக்குச் சென்று படம் பார்ப்பதற்காக மூன்று டிக்கெட்டுகளை
வாங்கிக் கொண்டு வந்துள்ளேன்.

மனைவி: இரண்டு போதுமே? மூன்று எதற்கு?

கணவன்: ஒன்று உனக்கு, இரண்டு, உன் பெற்றோர்களுக்கு!
-------------------------------------------------------------
6

“என் மனைவியின் பிறந்த தினத்தை நினைவில் வைத்துக்கொள்ள,
மறக்கமுடியாத வழி ஏதாவது இருக்கிறதா?

“ஸிம்ப்பிள். ஒரு தடவை மறந்துவிடு. ஏற்படுகிற யுத்தத்தில், நீ
வாழ்நாள் முழுவதும் அதை நீ மறக்கவே மாட்டாய்!
-------------------------------------------------------------
இறக்குமதிச் சரக்கு. மின்னஞ்சலில் வந்தது.
மொழியாக்கம் மட்டும் அடியேனுடையது.

இருக்கும் ஆறில் எது மிகவும் நன்றாக உள்ளது?

++++++++++++++++++++++++++++++++++++++++++
வாரத்தின் கடைசி நாள். ஜோதிடத்தை மறந்துவிட்டு, மகிழ்ச்சியுடன்
இருப்பதற்காக இந்தப் பதிவு

அன்புடன்,
வாத்தியார்
வாழ்க வளமுடன்!

23.10.09

Lessons on Astrology: வர்கோத்தமம்!

+++++++++++++++++++++++++++++++++++++++++++
Lessons on Astrology: வர்கோத்தமம்!
Yogam No.11
-----------------------------------
This yoga lesson is shifted to the yoga class for obvious reason.
Sorry for the inconvenience.
Please contact Vaaththiyar for further information about this lesson.
mail ID classroom2007@gmail.com

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++==

22.10.09

Lessons on yogas: பாப கர்த்தாரி யோகம்!

++++++++++++++++++++++++++++++++++++++++++++
Lesson on Yoga No.10

This yoga lesson is shifted to the yoga class for obvious reason.
Sorry for the inconvenience.
Please contact Vaaththiyar for further information about this lesson.
mail ID classroom2007@gmail.com

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++வாழ்க வளமுடன்!

21.10.09

Lessons on Yogas: அஷ்டலெட்சுமி யோகம்!

++++++++++++++++++++++++++++++++++++++++++
Lesson No.9
 
This yoga lesson is shifted to the yoga class for obvious reason.
Sorry for the inconvenience.
Please contact Vaaththiyar for further information about this lesson.
mail ID classroom2007@gmail.com

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

16.10.09

தீபாவளி சிறப்புச் சிறுகதை: சொத்தும், சொந்தமும்!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++
வகுப்பறைக் கண்மணிகள் அனைவருக்கும்
தீபாவளி நல் வாழ்த்துக்கள்!!!!!!!!!
+++++++++++++++++++++++++++++++++++++

தீபாவளி சிறப்புச் சிறுகதை: சொத்தும், சொந்தமும்!

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த சம்பவம் என்றாலும்,
சாத்தப்பனின் மனதில் இன்றைக்கும் அது பசுமையாக இருக்கிறது.

பெண் பார்த்துத் திருமணம் செய்து கொண்ட நிகழ்வுகளை மறக்க
முடியுமா என்ன?

பார்த்த முதல் பார்வையிலேயே, சாலாவைப் பிடித்துப் போய்விட,
தன் தாயாரின் எதிர்ப்பிற்கிடையே, பிடிவாதமாக இருந்து, அவளையே
மணந்து கொண்டான் சாத்தப்பன்.

“அப்பச்சி, பெண் அழகாகத்தான் இருக்கிறாள். ஆனால் அவளுடைய
நட்சத்திரம்தான் எனக்கு இசைவாக இல்லை” என்று தன் தாயார்
விருப்பமில்லாமல் பேசியபோது, அவர்களைச் சம்மதிக்க வைத்தது
பெரும்பாடாகப் போய்விட்டது.

“பூராடம் நூலாடாது. அதாவது பெண்ணின் கழுத்தில் அதிக நாள்
தாலி தங்காது” என்று எந்தப் பாவி சொன்னானோ, அதை அவன் தாயார்
கெட்டியாகப் பிடித்துக் கொண்டு கண்ணைக் கசக்கினார்கள்.

சாத்தப்பன் அப்போது உறுதியாகச் சொல்லிவிட்டான்.” ஆத்தா, அவள்
மகாலெட்சுமி மாதிரி இருக்கிறாள். அவளோடு ஒரு வாரம் வாழ்ந்தாலும்
போதும். அதுதான் வாழ்க்கை. எனக்கு அவளையே பேசி முடியுங்கள்.
மணம் செய்து வையுங்கள். மற்றதையெல்லாம் நீங்கள் வணங்கும்
குன்றக்குடி முருகன் பார்த்துக் கொள்வான்.”

அப்படியே நடந்தது. அதற்கு அவனுடைய அப்பச்சி சிங்காரம்
செட்டியாரும் உடந்தையாக இருந்தார்.

“இஞ்சே, நாட்டு நடப்புத் தெரியாம பேசாதே! நம்ம சமூகம் சின்ன சமூகம்,
அதுல உன் விருப்பத்துக்கும், அவன் விருப்பத்துக்கும் சேர்த்துப் பொண்ணு
பாக்கிறதுன்ன அது நடக்கிற காரியமா? அவன் நோக்கப்படியே விட்டுவிடு”
என்று சொல்லி , ஆச்சியைச் சம்மதிக்க வைத்தது அவர்தான்!

சாலாவின் கழுத்தில் இன்றுவரை நூல் ஆடிக்கொண்டுதான் இருக்கிறது.
அதோடு மட்டுமல்ல, சாத்தப்பன் - சாலா தம்பதியருக்கு இன்று 23 வயதில்
ஒரு பெண் இருக்கிறாள். அவளுக்கும் அதே நட்சத்திரம். அதுதான்
காலதேவனின் திருவிளையாடல்!

பேத்தி பிறந்த சமயத்தில், சாத்தப்பனின் தாயார்தான் அதிகம் கவலைப்
பட்டார்கள். பிறந்த பிள்ளையின் நட்சத்திரம் பூராடமாக இருக்கிறதே
என்று கண் கலங்கினார்கள்.

அப்போது சாத்தப்பன் தன் தாயாரிடம் இப்படிச் சொன்னான்.”ஆத்தா,
சாலாவின் அப்பச்சிக்கு ஒரு மாப்பிள்ளை கிடைத்ததைப்போல,
பிற்காலத்தில் எனக்கும் ஒரு மாப்பிள்ளை கிடைப்பான். அதற்கு நீ
இப்போதிருந்தே கவலைப்படாதே!”

சாத்தப்பன் மகள் மீனாட்சிக்குத் தகுந்த வரன் கிடைத்ததா?

தொடர்ந்து படியுங்கள்!

*****************************************************

சாத்தப்பனுக்குத் திருச்சி கன்டோன்மென்ட் பகுதியில், வில்லியம்ஸ்
ரோட்டில் பெரிய வீடு. பூர்வீகச்சொத்து. சத்திரம் பேருந்து நிலையம்
அருகே பெரிய வணிக வளாகம். மாதம் நான்கு லட்ச ரூபாய் வாடகையாக
வந்து கொண்டிருக்கிறது. ஹோலி கிராஸ் பெண்கள் கல்லூரி அருகேயும்
ஒரு பெரிய கட்டடம். அதிலிருந்தும் பெரும் தொகை வாடகையாக வந்து
கொண்டிருக்கிறது. பணம் இருக்கிறது என்பதற்காகச் சாத்தப்பனும்
சும்மா இருக்காமல், இந்தியாவின் தலை சிறந்த, மருந்து உற்பத்தி
செய்யும் பத்துக் கம்பெனிகளுக்கு சி & எஃப் ஏஜென்ட்டாக
வணிகம் செய்து கொண்டிருக்கிறான்.

தன்னுடைய பெற்றோர்களையும் கூடவே வைத்திருக்கிறான்.
வைத்திருக்கிறான் என்று சொல்வதைவிட, தனக்குத் திருமணமாகி
25 ஆண்டுகளாகியும், தனிக்குடித்தனம் போகாமல், பெற்றோர்கள்,
மனைவி, மக்கள் என்று கூட்டுக் குடும்பமாகவே அவன் இருந்து
கொண்டிருக்கிறான். வீடு எப்போதும் கலகலப்பாக இருக்கும்.

அவனுக்கு முன்பாகப் பிறந்த சகோதரிகள் மூவரின் குடும்பங்களும்,
மணப்பாறை, குளித்தலை, தொட்டியம் என்று திருச்சியைச் சுற்றியுள்ள
பகுதிகளிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களும் பத்து
நாட்களுக்கு ஒருமுறை அல்லது மாதம் ஒருமுறை என்று பெரிய
வீட்டிற்கு வந்து போவார்கள். உறவு முறைகள் எந்தப் பிரச்சினையும்
இல்லாமல் அன்பு மழையில் வளமாக இருந்தது.

ஆனால், அவர்கள் வீடுகளில் மீனாட்சிக்குத் தோதாக பையன்கள்
இல்லாததால், சாத்தப்பனுக்கு வெளியே வரன் தேடும் நிலைமை
ஏற்பட்டுள்ளது. அவனும் பணத்தைப் பற்றிக் கவலைப் படாமல், நல்ல
தோதில் ஒரு வரனைத் தேடிக் கொண்டிருக்கிறான்.

உடனே கிடைத்தால்தானே? ஒன்றிருந்தால் ஒன்றில்லை. சொந்த
ஊரில் தேடி ஒன்றும் அமையவில்லை. வெளியூர் என்றாலும் பரவாயில்லை
என்று தேடிக் கொண்டிருக்கிறான்.

”ஊருக்குக் கடைசி உலகம்பட்டி.காருக்குக் கடைசி கடியாபட்டி,
கோட்டைக்குக் கடைசி நாட்டரசன் கோட்டை,குடிகளில் கடைசி
கீழப்பூங்குடி என்று எல்லாம் தள்ளித் தள்ளியே வரன் வருகிறதே,
சாத்தப்பா, நம்மூருக்குப் பக்கமாக ஒன்றும் இல்லையே” என்று பெரிய
ஆச்சி சொல்வார்கள்.

அப்போது சாத்தப்பன், இப்படிப் பதில் சொல்வான்: “ஆத்தா, செட்டி
நாட்டில் உள்ள 75 ஊர்களும் ஒன்றுதான். ஊரில் என்ன இருக்கிறது?
திருச்சி நகரத்தார், சென்னை நகரத்தார், கோவை நகரத்தார் என்று
இப்போது இருக்கும் ஊர்களை வைத்தும் நகரத்தார்கள் அறியப்
படுகிறார்கள். நமக்கு நல்ல மாப்பிள்ளை கிடைத்தால் போதும்!”

அப்படியே தேடவும் செய்தான்.

****************************************************************

திருமணத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கும் இளைஞர்களைப்
பொறுத்தவரை, முதல் நிபந்தனை, பெண் சிவந்த நிறமாக, அழகான
தோற்றத்துடன் இருக்க வேண்டும். மாநிறம் அல்லது கறுப்பாக
இருந்தாலும் களையான முகத்தோற்றத்துடன் இருக்க வேண்டும்.
ஆனால் தோற்றம் நன்றாக இருக்க வேண்டும். கவர்ச்சிகரமாக
இருக்க வேண்டும். இளம் பெண்களுக்கும் அதே நிபந்தனைதான்.

அடுத்து இருசாராரும் படித்த படிப்புகளுக்கு முக்கியத்துவம்
கொடுப்பார்கள். பொறியியல் படித்த பெண்கள், பொறியியல் படித்த
மாப்பிள்ளைகளுக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதே போல,
இரட்டை இஞ்சின் இழுக்கும் வாழ்க்கையை (அதாவது கணவன்,
மனைவி இருவரும் சம்பாதிக்கும் வாழ்க்கையை) விரும்பும் இளைஞர்கள்,
படித்து வேலைக்குச் செல்லும் பெண்களை விரும்புவார்கள்.

யாரும் குணத்திற்கு, முக்கியத்துவம் கொடுப்பதில்லை. கேட்டால்,
திருமணத்திற்குப் பிறகு அல்லவா அது தெரியவரும் என்பார்கள்.

தாய்மார்களைப் பொறுத்தவரை, எங்களுக்குப் பணத்தின் மேல் ஆசை
இல்லை. ஆனாலும் ஊர்ப்பெருமைக்காக, நல்ல தோதுடன் வரும்
பெண்தான் வேண்டும் என்பார்கள்.

தந்தைமார்களைப் பொறுத்தவரை, நல்ல குடும்பமாக இருக்க வேண்டும்
என்பார்கள். பாரம்பரியத்தில், பெயரில் சிறந்த குடும்பமாக இருக்க
வேண்டும் என்பார்கள். சொத்துள்ளவர்கள், சொத்துள்ள குடும்பமாகத்
தேடுவார்கள். கேட்டால் எங்கள் பெண்ணையும், நாங்கள் கொடுக்கும்
தோதையும் -அதாவது நகைகளையும் ஸ்ரீதனப் பணத்தையும் வைத்துக்
காப்பாற்றக் கூடிய குடும்பமாக வேண்டும் என்பார்கள்.

அப்படித்தான் சில நிபந்தனைகளை மனதில் வைத்துக் கொண்டு,
சாத்தப்பனும் தன் மகளுக்கு ஒரு மாப்பிள்ளையைத் தேடிக்கொண்டிருந்தான்.

ஒரு சமயம், அவனுடைய நண்பர் ஒருவர், இரண்டு வரன்களைப்
பற்றிய தகவல்களைக் கொடுத்ததோடு, உன் மனத்திருப்திக்கு,
அவர்களைப் பற்றி நன்கு விசாரித்துவிட்டு ஒரு முடிவிற்கு வா’
வென்றார்.

எப்படி விசாரிப்பது என்று இவன் கேட்டபோது, அவர் நல்ல யோசனை
ஒன்றைச் சொன்னார்.

“நீ அவர்களுடைய செட்டிநாட்டுக் கிராமத்திற்குப் போ. அவர்கள்
வீடு இருக்கும் தெருவில், அக்கம் பக்கத்தில், எதிரில் இருக்கும்
வீடுகளில் அவர்களைப் பற்றி விசாரி. பெண்ணைப் பெற்றவன்
அக்கறையுடன் வந்து விசாரிக்கிறான் என்கின்ற அனுதாபத்தில்
அனைவரும் உதவி செய்வார்கள். உனக்கும் ஒரு தெளிவு கிடைக்கும்.”

அப்படியே செய்தான். ஆனால் அந்த இரண்டு இடங்களுமே
பிடிக்காமல் போய்விட்டது.

முகவரிகளைக் கொடுத்த நண்பர் கேட்டபோது, சாத்தப்பன்
இப்படிச் சொன்னான்.

”நீ கொடுத்த முதல் இடம் பிடிக்கவில்லை. அந்தப் பையனின்
அப்பச்சிக்குத் தொடுப்பு இருக்கிறதாம்.”

“அப்பச்சி சீட்டாடுவார் என்பதற்காகப் பையனும் ஆடுவான் என்று
சொல்ல முடியாது. அப்பச்சிக்குத் தொடுப்பு இருப்பதால், பையனும்,
அப்படியே ஆசா பாசங்களுடன் வளர்ந்திருப்பான் என்று சொல்ல
முடியாது.”

“இல்லை எனக்கு நெருடலாக இருந்தது. அதை விட்டு விட்டேன்”

“சரி, அடுத்தது என்ன ஆயிற்று?”

“அவர்கள் வீட்டின் கழிப்பறைகளைப் பூட்டி வைத்திருக்கிறார்கள்.
முகப்பு, பெட்டக சாலையில் இருக்கும் மின்சார ஸ்விட்ச் போர்டுகளுக்
கெல்லாம் மரப் பெட்டியடித்துப் பூட்டி வைத்திருக்கிறார்கள்.”

“சில வீடுகளில் அப்படி இருக்கும். அதற்குக் காரணம் இருக்கிறது.
கழிப்பறையை உபயோகிப்பவர்கள், வேண்டும் அளவு தண்ணீர் ஊற்றி
சுத்தம் செய்துவிட்டுப் போவதில்லை. உடையவர்கள் உபயோகிப்பதற்கு,
அது தகுதியில்லாமல் போய்விடும் அபாயம் இருக்கிறது. அதனால்
பூட்டி வைத்திருப்பார்கள். அதனால் ஒன்றும் தவறில்லை. அதுபோல
பவர் கட் ஆகும் சமயத்தில் அதைக் கவனத்தில் கொண்டு, மின்
சாதனங்களை உபயோகிப்பவர்கள், சுவிட்சை அணைத்து விட்டுச்
செல்வதில்லை. அவர்கள் போன பிறகு - கரண்ட் வந்தவுடன் அவைகள்
மீண்டும் இயங்க ஆரம்பித்துவிடும். அதைத் தவிர்க்க உடையவர்கள்
பெட்டியடித்து, பூட்டுப் போட்டு வைத்திருப்பார்கள். அதிலும்
தவறில்லை. அதிலெல்லாம் குறை கண்டால் எப்படி சாத்தப்பா?”

“இல்லை. அதைக்கூட நான் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை.
அதைவிடப் பெரிய கரைச்சல் ஒன்று இருக்கிறது.

“என்ன அது?”

“பொது வீட்டில் அவர்களுடைய பங்குப் பகுதிகள் மட்டும் பராமரிக்
கப்படமல், பல்லை இளித்துக்கொண்டு இருக்கிறது. மற்ற பகுதிகள்
பராமரிக்கப்பட்டு, பளபளப்புடன் இருக்கின்றன. இவர்கள் ஒத்து வந்து
அவர்களுடன் சேர்ந்து பராமரிப்பதில்லையாம். அதோடு, ஊருக்கு
வந்து போனால், ஊருக்கு வெளியே இருக்கும், தங்கள் தனி
பங்களாவில் தங்கி விட்டுப் போய் விடுவார்களாம். பொது வீட்டிற்கு
வந்து போவதில்லையாம். யாருடனும் சுமூகமான உறவு இல்லையாம்.
அந்த வீட்டிற்குள்ளேயே போய், வளவில் எதிர்ப்பங்கில் இருக்கும் பெரிய
ஆச்சியைக் கேட்டு விட்டேன். அடுத்தடுத்த வீடுகளிலும் கேட்டுவிட்டேன்.
அவர்களும் அதைத்தான் சொல்கிறார்கள். அவர்கள் வீட்டில் என்
பெண்ணைக் கொடுத்தால், என் பெண்ணிற்கு, கணவன் வழி சொத்துக்கள்
இருக்கும். ஆனால் சொந்தங்கள் இருக்காது. எது முக்கியம்
- நீயே சொல் - சொத்தா? சொந்தங்களா?”

"என்னைக் கேட்டால் இரண்டும் வேண்டும். சொத்தில்லாமல்
சொந்தங்களும் பயன்படாது. சொந்தங்களில்லா சொத்தும் பயன்படாது.
கவியரசர் அதைத்தான் இப்படிப் பாடிவைத்து விட்டுப்போனார்.
பானையிலே சோறிருந்தா, பூனைகளும் சொந்தமடா: சோதனையைப்
பங்கு வச்சா சொந்தமில்லலே, பந்தமில்லே!”

"இல்லை, வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வில், எதை எதிர்கொள்ள
நேரிடும் என்பதற்காகக் கவியரசர், அதை எழுதினார். ஆனால் உண்மையில்
பெண்ணிற்கு என்ன வேண்டும் என்பதை இன்னொரு பாட்டில் எழுதிவைத்தார்.
தாயாரின் சீதனமும், தம்பிமார் பெரும் பொருளும் மாமியார் வீடு வந்தால்
போதுமா? அது மான அபிமானங்களைக் காக்குமா? என்றார். பெண்ணிற்கு
அவளுடைய மான அபிமானங்களைக் காக்கக்கூடிய கணவனும்,
புகுந்த வீடும் அமைய வேண்டும். அதற்குத்தான் நானும் பாடுபட்டுத் தேடிக்
கொண்டிருக்கிறேன். எனக்கு நம்பிக்கை இருக்கிறது. பழநிஅப்பன்
உதவி செய்வான்.”

” ஆகா, உன் நம்பிக்கை வாழ்க! வளர்க!” என்று சொல்லிவிட்டு நண்பர்
போய்விட்டார்.

*****************************************************************
நேரம் வந்து விட்டால், “நான் வாரேன் தடுக்குப் போட, எங்க ஆத்தா
வர்றா பிள்ளையை எடுக்கிக் கொள்ள” என்று எல்லாம் கூடி வரும்
என்பார்கள்.

அப்படி சாத்தப்பனுக்கு எல்லாமே ஒரே வாரத்தில் கூடி வந்தது. ஒரு நல்ல
மாப்பிள்ளை அமைந்தது. அடுத்து வந்த மாதத்திலேயே திருமணமும்
சிறப்பாக நடந்து முடிந்தது.

மாப்பிள்ளை வீட்டாருக்கு பங்காளிகள் 370 புள்ளிகள். அப்பச்சி வழி,
ஆத்தாவழித் தாயபிள்ளைகள் 200 புள்ளிகள். நட்பு வட்டத்தில் 100க்கும்
மேற்பட்ட குடும்பங்கள் என்று மொத்தம் 1,000 பேர்களுக்கு மேல்
திருமணத்திற்கு வந்திருந்தார்கள். மாப்பிள்ளை வீட்டார் ஏற்பாடு செய்திருந்த
வாழ்த்தரங்கத்தில் பலரும் சிறப்பாகப் பேசினார்கள். அவர்கள் குடும்பத்தின்
பாச உணர்வை எடுத்துக்கூறிப் பாராட்டிப் பேசினார்கள்.

மாப்பிள்ளையுடன் பிறந்த சகோதரிகள் மூவர், மாப்பிள்ளையின்
அப்பச்சியுடன் பிறந்த சகோதரிகள் மூவர். ஆக மொத்தம் ஆறு பேர்களுக்கும்,
மாப்பிள்ளையின் தந்தையார்தான் முன்னின்று அவர்கள் அனைவரின்
திருமணத்தை நடத்தி வைத்ததைச் சொன்னார்கள். பந்த பாசங்களுக்கு
அவர்களுடைய குடும்பம் ஒரு உதாரணக் குடும்பம் என்று புகழ்ந்து பேசினார்கள்.

கதையின் நடுவில் வந்தாரே சாத்தப்பனின் நண்பர், அவருக்கு மிகவும்
மகிழ்ச்சி. மாப்பிள்ளையும், பெண்ணும் கும்பிட்டுக் கட்டிக்கொள்ளும்போது,
சொந்தங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டவர், மாலை, பெண் அழைப்பு
நிகழ்ச்சிக்குக் காரில் செல்லும்போது, சாத்தப்பனிடம் மெல்லிய குரலில்
சொன்னார்.

“உன் முயற்சி வீண் போகவில்லை, சாத்தப்பா, இறையருளால், அற்புதமான
குடும்பம் உனக்கு சம்பந்தப்புரமாக அமைந்துள்ளது! இத்தனை சொந்தங்களை
இதுவரை நான் பார்த்ததில்லை. அது ஒரு காரணத்திற்காகத்தான் இவர்களை
நீ தெரிவு செய்தாயா?”

”இல்லை. இன்னொரு முக்கிய காரணம் இருக்கிறது!” இது சாத்தப்பன்.

“என்ன அது?”

“கல்யாணம் பேசும்போது, என் மகளின் புகைப் படத்துடன், ஜாதகத்தையும்
கொடுத்தேன். படத்தை மட்டும் வாங்கிக் கொண்டவர்கள், ஜாதகத்தை வேண்டாம்
என்று சொல்லி விட்டார்கள். மனப் பொருத்தம் இருந்தால் போதும். மற்ற
பொருத்தங்கள் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். ஜோதிடத்தைவிடப்
பெரியது ஒன்று இருக்கிறது. அதுதான் இறையருள். இறைவனின் மேல் முழு
நம்பிக்கை வைத்திருக்கும்போது, ஜோதிடம் எதற்கு? இறையருளை மீறி
ஜோதிடம் என்ன செய்துவிடப்போகிறது? என்றார்கள். நான் அசந்து போய்
விட்டேன். அவர்களுடைய அசாத்திய இறை நம்பிக்கைக்குத் தலை
வணங்குவத்தவிர வேறொன்றும் செய்யத் தெரியவில்லை எனக்கு. ஆகவே
என் மகளை அவர்கள் வீட்டில் கட்டுவதற்கு எந்தவிதத் தயக்கமுமின்றி
ஒப்புக்கொண்டேன்!”

தீவிர பக்தரான நண்பரின் கண்கள், உணர்ச்சிப் பிரவாகத்தில், பனித்துவிட்டன!

********************************************************************

நமது வகுப்பறை முதல் பெஞ்ச் மாணவர் ஆனந்த் அவர்களின் வேண்டுகோள்
ஏற்கப்பட்டு, வகுப்பறைக்கு 4 தினங்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது.

அடுத்த வகுப்பு 21.10.2009 புதன் அன்று நடைபெறும்!

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

15.10.09

ஆர்வக்கோளாறு!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஆர்வக்கோளாறு!

ஜோதிடம் கடலைவிட ஆழமானது. கற்பவர்களுக்குப் பல சிரமங்களை
அல்லது சிக்கல்களைக் கொடுக்ககூடியது.
Astrology is a deep and complicated science.
(difficult to analyze or understand)

ஜாதகத்தைப் பார்க்கும்போது நிறைய யோகங்கள் இருப்பதைப் போன்று
தோன்றும். ஆனால் ஜாதகனைப் பார்த்தால், களை இழந்து காணப்படுவான்.
அவன் ஜாதகத்தில் உள்ள முக்கியமான யோகங்கள் செல்லாமல் அதாவது
பயன் தராமல் போயிருக்கும்.

இருந்தால் பலன் தரவேண்டும்!

ஏன் தரவில்லை?

இருப்பதால், தரவேண்டும் என்பதில்லை. அதைத் தரவிடாமல் பல தடைகள்
ஜாதகத்திலேயே இருக்கலாம்.

ஆளைப் பார்த்தால் ஜம்மென்று ஜவான் போல இருப்பான். ஆனால் அவனை
மருத்துவ சோதனைக்கு உள்ளாக்கினால் தெரியும். அவன் உடம்பில் எத்தனை
ஓட்டைகள் இருக்கின்றன - எத்தனை வியாதிகள் இருக்கின்றன என்று
தெரியவரும்.

அதுபோல ஜாதகத்தையும் அலசினால், உள்ள குறைகள் தெரியும். அந்தக்
குறைகளை வைத்து, ஜாதகத்தில் முடங்கிப்போன கிரகங்களைத் தெரிந்து
கொள்ளலாம்.

முடங்கிப் போன அவைகளால் உரிய பலனை எப்படித் தரமுடியும்?

இன்றைய மின்னஞ்சல் பாடம் அதைப் பற்றியதுதான். அதாவது கிரகங்களின்
முடக்கடியைப் பற்றியது.

குறிப்பாக நீங்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த கிரக யுத்தத்தைப்
பற்றியும் அதில் எழுதியுள்ளேன். விரிவான பாடம் அது!

அது மேல்நிலைப் பாடம். ஆகவே மின்னஞ்சலில் அனுப்பபெற்றுள்ளது!

அனைவரும் படித்துப் பயன் பெறுங்கள்.
499 பேர்களுக்கு இன்று மின்னஞ்சலில் பாடத்தை அனுப்பிவிட்டேன்.
இன்னும் சிலருக்கு ஒரு நாள் கழித்து - அதாவது நாளைதான் வரும்
கூகுள் சர்வர் பிரச்சினை. ஒரு நாள் கோட்டா 500 மின்னஞ்சல்கள்
மட்டுமே. அதைப் புரிந்து கொண்டு இன்று கிடைக்காதவர்கள் ஒரு நாள்
பொறுமை காக்கவும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++
செப்டம்பர் மாதம் - 29 இடுகைகள்
அக்டோபர் மாதம் 14 தேதிவரை - 13 இடுகைகள்
ஆக மொத்தம் தொடர்ந்து 42 இடுகைகள். அதற்கு வந்த பின்னூட்டங்கள்
அடியேன் எழுதிய பதில்கள். வகுப்பறை சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது.
அதற்கு சந்தோஷப்படாமல், நிறைய கண்மணிகள் மின்னஞ்சல் பாடத்தைப்
பற்றிய கவலையிலேயே இருக்கிறார்கள். எங்கே? எங்கே? என்று எனக்கு
விடாது கேள்விக் கனைகள் - கடிதங்கள் மூலமாக!

பாடங்கள் விடுபட்டு விடக்கூடாதே என்பது அவர்களுடைய கவலை!

கவலைப் படாதீர்கள். அங்கே பாடத்தை அனுப்பினால், இங்கே வகுப்பறையில்
அறிவித்து விடுகிறேன்.

இரண்டு இடங்களிலும் ஒரே நேரத்தில் எழுதிக் கொண்டிருக்க முடியாது.
அதைத்தான் இரண்டு குதிரைகளில் ஒரே நேரத்தில் சவாரி செய்ய முடியாது
என்று எழுதுகிறேன்.

அதை உணருங்கள்!

யோகங்களைப் பற்றிய பாடங்கள் அனைத்தும் மேல்நிலைப் பாடங்கள்.
முதலில் அவற்றை மின்னஞ்சலில் நடத்தலாம் என்றிருந்தேன்.
வகுப்பறையில் நடத்தினால் பலரும் பயன்பெறுவார்கள் என்றுதான்
அதை மாற்றி, இங்கே எழுதுகிறேன்.

ஜோதிட நுட்பங்களும், அலசல்களும் மட்டுமே இனி மின்னஞ்சலில் வரும்!
மற்ற பாடங்கள் எல்லாம் இங்கேயே தொடரும்.

நான் முழு நேர எழுத்தாளனும் அல்ல!
முழு நேர ஜோதிடஆராய்ச்சியாலனும் அல்ல!
தொழில்முறை ஜோதிடனும் அல்ல!

பதிவுகளில் எழுதுவது ஒரு ஆர்வக்கோளாறில்!
அதையும் உணர வேண்டுகிறேன்!

அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++


வாழ்க வளமுடன்!

14.10.09

வாழ்க்கை எனும் சதிராட்டம்!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க்கை எனும் சதிராட்டம்!

வாழ்க்கையின் சதிராட்டத்தில் நமக்குக் கிடைக்கும் மூன்று நிலைப் பாடுகள்.
We have 3 stupid stages of life.....!!!

இளம் வயதில் (Teen age):
நேரம் இருக்கும் + தெம்பு இருக்கும் - ஆனால் கையில் காசு இருக்காது!
Have Time + Energy …but No Money

நடு வயதில் (Working Age)
கையில் காசு இருக்கும் + உடம்பில் தெம்பு இருக்கும் - ஆனால் நேரம் இருக்காது.
Have Money + Energy …but No Time

முதியவரான நிலையில் (Old age)
நேரம் இருக்கும் + பணம் இருக்கும் - ஆனால் உடம்பில் தெம்பு இருக்காது
Have Time + Money …but no Energy

---------------------------------------------
”என்ன சார், அவ்வளவுதானா? இன்று பாடம் இல்லையா?”

“ஏன் இது பாடமாகத் தெரியவில்லையா?”

”ஜோதிடப்பாடம் இல்லையா?”

”இல்லாமலா? மின்னஞ்சல் பாடமாக உள்ளது. அது மேல் நிலைப் பாடம்.
இங்கே வெளியிட்டால், பலரும், தங்கள் ஜாதகத்தை வைத்து,
அதோடு சம்பந்தப் படுத்திக் கேள்விகள் கேட்டு என்னைப் பிறாண்டி
எடுத்து விடுவார்கள்.அதனால்தான் இன்றைய பாடம் அங்கே!
ஜிமெயில் சர்வர் நாளொன்றிற்கு 500 மெயில்களுக்கு மேல் ஒத்துக் கொள்வதில்லை. அதனால் பாடம் முதல் க்ரூப்பிற்கு இன்றும், அடுத்த க்ரூப்பிற்கு நாளையும் வரும். பொறுத்திருந்து படிக்க வேண்டுகிறேன்”

அன்புடன்,
வாத்தியார்வாழ்க வளமுடன்!

13.10.09

படுக்கவைக்கும் யோகம்!

++++++++++++++++++++++++++++++++++++++
This yoga lesson is shifted to the yoga class for obvious reason.
Sorry for the inconvenience.
Please contact Vaaththiyar for further information about this lesson.
mail ID classroom2007@gmail.com

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

12.10.09

வேட்டு வைக்கும் யோகங்கள்!

+++++++++++++++++++++++++++++++++++++++++++
This yoga lesson is shifted to the yoga class for obvious reason.
Sorry for the inconvenience.
Please contact Vaaththiyar for further information about this lesson.
mail ID classroom2007@gmail.com

 ++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

11.10.09

கண்களால் பார்க்கமுடியாதது எது?

++++++++++++++++++++++++++++++++++++++++++++
கண்களால் பார்க்கமுடியாதது எது?

பிராத்தனை செய்யும்போது ஏன் கண்களை மூடிக் கொள்கிறோம்?

பிரார்த்தனை என்று அல்ல, அதீத மகிழ்ச்சியுடன் இருக்கும்போது,
கனவு காணும்போதும் கூட கண்களை மூடிக் கொள்வோம்

ஏன்?

வாழ்வின் அற்புதமான தருணங்களை கண்களால் பார்க்க முடியாது.
மனதால் மட்டுமே உணர முடியும்!
-----------------------------------------------
உலக மக்களிடம் உள்ள பிரச்சினை என்ன வென்றால்,
அறிவில்லாதவர்கள் எதிலும் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.
அறிவுள்ள புத்திசாலிகள் மட்டும் எப்போதும் சந்தேகக் கண்ணுடன்
வாழ்கிறார்கள்.
-தத்துவஞானி பெட்ராண்ட் ரஸ்ஸல்

(The trouble with the world is that the stupid are sure and the
intelligent are full of doubt.
--Bertrand Russell)
--------------------------------------------
அனுபவத்தினால் மட்டுமே நல்ல முடிவுகளை எடுக்க முடியும்.
மோசமாக எடுத்த முடிவுகளால்தான் அனுபவம் கிடைக்கிறது.
-ப்ரெட் ப்ரூக்ஸ்

(Good judgement comes from experience, and experience comes
from bad judgement..
--Fred Brooks)
-------------------------------------------
அன்புடன்
வாத்தியார்வாழ்க வளமுடன்!

10.10.09

Quiz-புதிர்: இனிய குரலால் இடம் பிடித்த இவர்கள் யார்?

+++++++++++++++++++++++++++++++++++++
Quiz-புதிர்: இனிய குரலால் இடம் பிடித்த இவர்கள் யார்?

கீழே 10 பெண் இசை அரசிகளைப் பற்றிய சிறு குறிப்புக்களைக்
கொடுத்துள்ளேன்.

அவர்கள் அனைவரும் தங்களுடைய இனிய குரலால் தமிழ்
மக்களின் மனதில் இடம் பிடித்தவர்கள்!

குறிப்பை வைத்து அவர்களைக் கண்டு பிடியுங்கள்.

1. பெயரைச் சுருக்கிக் குயில் என்பார்கள் இவரை. யார் இவர்?

2. மறக்கத் தெரியாத மனங்களைப் பாடி, பலர் மனதில்
மறக்க முடியாத இடத்தைப் பிடித்தவர் இவர். யார் இவர்?

3. வேலனை சிங்காரப் படுத்திப் பாடியவர் இவர்.யார் இவர்?

4. இவர் பாடலைக் கேட்டுத்தான் பெருமாளே பள்ளி எழுவார். யார் இவர்?

5. மாரியம்மனைப் பாட வேண்டுமென்றால், இவரைத்தான்
கூப்பிடுவார்கள். யார் இவர்?

6. தன் பாட்டால் ரெங்கனாதனுக்கு அனைவரையும் வந்தனம்
சொல்ல வைத்தவர் இவர். யார் இவர்?

7. மும்பை, வெற்றி, திரு ஆகிய மூன்றையும் சேர்த்தால்
இந்தப் பாடகியின் பெயர் கிடைக்கும். யார் இவர்?

8. கையில் வேலோடு இருக்கும் முருகனையே, என்ன, என்ன?
என்று கேள்வி கேட்டவர் இவர். யார் இவர்?

9. ஊத்துக்காடு சுப்பையரின் பாடலை இவர் பாடினால் கேட்பதற்கு
ரகுவும் வந்து விடுவார். நாதனும் வந்து விடுவார். யார் இவர்?

10. பிரபலமான குரல் தேடல் நிகழ்ச்சியில் முதல் அறிவிப்பாளராக
வந்தவர் இவர்.யார் இவர்?

யார் இவர்கள்? தெரிந்தவர்கள் எழுதுங்கள்.

பத்துக்குப் பத்து சரியாகச் சொன்னால், நீங்கள் சிறந்த இசை ரசிகர்.
அதில் சந்தேகமில்லை!

எத்தனை பேர்கள் சரியாகச் சொல்கிறீர்கள் என்று பார்க்க
ஆவலாக உள்ளேன்
+++++++++++++++++++++++++++++++++++
அன்புடன்,
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

8.10.09

வஞ்சன சோர பீதி யோகம்!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வஞ்சன சோர பீதி யோகம்!

பயந்து விடாதீர்கள். எல்லாம் வடமொழிச் சொற்கள்.

Vanchana Chora Bheethi Yoga
vañchana — cheating
chora' - thief
bheethi - fear

ஏமாற்றுவேலைகளுக்கு ஆளாகிவிடுவோமோ, இருப்பதை
திருட்டுக் கொடுத்துவிடுவோமோ என்று ஜாதகன் ஒருவித
பய உணர்வுடனேயே வாழும் நிலைமை இருப்பதைக் குறிக்கும்
யோகம் இந்த யோகம்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
யாருக்கு இது இருக்கும்?

This yoga lesson is shifted to the yoga class for obvious reason.
Sorry for the inconvenience.
Please contact Vaaththiyar for further information about this lesson.
mail ID classroom2007@gmail.com


++++++++++++++++++++++++++++++++++++++வாழ்க வளமுடன்!

7.10.09

அவயோகம் - பகுதி 2

+++++++++++++++++++++++++++++++++++++++++++
அவயோகம் - பகுதி 2

இது தொடர் பதிவு. இதற்கு முன் பகுதியைப் படித்திராதவர்கள்,
அதைப் படித்துவிட்டு வரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

This yoga lesson is shifted to the yoga class for obvious reason.
Sorry for the inconvenience.
Please contact Vaaththiyar for further information about this lesson.
mail ID classroom2007@gmail.com


---------------------------------------------------------------

6.10.09

அவயோகங்கள் - பகுதி 1


===================================================
அவயோகங்கள் - பகுதி 1

ஆங்கில வினைச்சொற்களின் முன்பாக ‘dis' என்னும் சொல்லைச்
சேர்த்தால், அது, அந்த வினைச் சொல்லின் பொருளை எதிர் மறையாக
மாற்றிவிடும்.

உதாரணம்:

appear - disappear,
allow - disallow,
arm - disarm,
connect - disconnect,
continue - discontinue

If you add the suffix 'dis' in front of a verb it will reverses the
meaning of the verb!
example: disappear, disallow, disarm, disconnect, discontinue

அதுபோல தமிழில் ‘அவ’ என்னும் குறியை ஒரு சொல்லின்
முன் சேர்த்தால், அதுவும் பொருளை எதிர்மறையாக்கிவிடும்

உதாரணம்
லட்சணம் - அவலட்சணம்
மானம் - அவமானம்
மதிப்பு - அவமதிப்பு
யோகம் - அவயோகம்
-----------------------------------------------------------------
ஆகவே ஒருவரது ஜாதகத்தில் யோகங்கள் இருப்பதைப் போலவே
அவயோகங்களும் இருக்கும்.

This yoga lesson is shifted to the yoga class for obvious reason.
Sorry for the inconvenience.
Please contact Vaaththiyar for further information about this lesson.
mail ID classroom2007@gmail.com

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

5.10.09

யோகங்கள் ஒரு விளக்கம்!


மன்னர் ஸ்வாதித் திருநாள், கேரளா.
இந்திய மன்னர்களின் படத்தில் இந்தப் படம்தான் கிடைத்தது மக்களே!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
யோகங்கள் ஒரு விளக்கம்!

யோகா எனும் சொல் யுஜ் என்னும் வடமொழிச் சொல்லின் விரிவாக்கம்.
யுஜ் என்பதற்கு கூட்டு (unite) - கூட்டாக என்னும் பொருள் வரும்.
ராஜா என்பதற்கு அரசன் என்று பொருள்.
ராஜயோகம் என்றால் அரசனுக்கு நிகரான யோகம் என்று பொருள்

ராஜயோகம் என்பதற்கு, ஜாதகனுக்கு அந்தஸ்தைத் தரக்கூடிய
கிரகங்களின் கூட்டணி என்று எடுத்துக் கொள்ளலாம்.

அதற்கு எதிர் மாறாக அவ யோகம், அரிஷ்ட யோகம்,
தரித்திர யோகம் என்று மூன்று விதமான - ஜாதகனுக்கு
தீமையைச் செய்யக்கூடிய யோகங்களும் உண்டு!
-----------------------------------------------------------------
இந்தப் பாடத்தின் மற்ற பகுதிகள் சில காரணங்களுக்காக நீக்கப்பட்டுள்ளன
அத்துடன் இந்தப் பாடம் முழுமையாக யோகா வகுப்பிற்கு மாற்றப் பெற்றுள்ளது.மேல் விவரங்களுக்கு வாத்தியாரைத் தொடர்பு கொள்ளுங்கள்!
வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
+++++++++++++++++++++++++++++++++++++++++வாழ்க வளமுடன்!

4.10.09

சிறுகதை: மாமியாரின் மறுபக்கம்!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சிறுகதை: மாமியாரின் மறுபக்கம்!

மீனாட்சி அரசாளும் மதுரை. கோவிலுக்குக் குடமுழுக்கு முடிந்து
பத்து தினங்களே ஆகியிருந்தன. பளபளப்பு அத்தனை இடங்களிலும்
குடமுழுக்கைச் சிறப்பாக நடத்தியவர்களின் பெயரைச் சொல்லிக்
கொண்டிருந்தது.

தரிசனத்தை முடித்துக்கொண்டு திரும்பிய சாலா, பொற்றாமரைக்
குளத்தின் வடக்குப்படிக்கட்டில் வந்து அமர்ந்தாள். தனது இரண்டு
வயதுக் குழந்தையை மடியில் அமர்த்திக் கொண்டாள். குழந்தை
சமர்த்தாக வருகிற போகிற ஜனங்களைப் பார்த்தவாறும், தன்
தாயின் கையைக் கெட்டியாகப் பிடித்தவாறும் அமர்ந்திருந்தது.

சாமி சன்னதியின் வெளிப்பிரகாரத்தில் இருந்த விற்பனைக் கடையில்
இருந்து, லட்டு பிரசாதத்தை விலைக்கு வாங்கிக் கொண்டு திரும்பிய
அவளுடைய கணவன் குமரப்பனும் அவளருகே வந்து அமர்ந்து
கொண்டான்.

அமர்ந்தவன் மெல்லக் கேட்டான், "சொக்கநாதர் சன்னதியில்
அரைமணி நேரத்திற்கும் மேலாக அமர்ந்து பிரார்த்தனை செய்தாயே
- என்ன வேண்டிக்கொண்டாய்?"

புன்னகைத்த அவள், மெல்லிய குரலில் பதில் சொன்னாள்.

"எத்தனை ஜென்மம் எடுத்தாலும், நீங்கள்தான் எனக்குக் கணவராக
வரவேண்டும் என்று வேண்டிக் கொண்டேன்"

"ஏன் இந்த ஒரு ஒரு ஜென்மம் பத்தாதா? அடுத்த பிறவி எதற்கு?"

"இல்லை, உங்களோடு திகட்டும் வரைக்கும் வாழவேண்டும். அதற்கு
எத்தனை பிறவிகள் வேண்டுமோ எனக்குத் தெரியவில்லை!"

"ஓகோ!"

"நீங்கள் என்ன வேண்டிக்கொண்டீர்கள்?"

"நான் அம்பாளிடம் வேண்டிக்கொண்டேன்!"

"அதுதான் என்ன வேண்டிக்கொண்டீர்கள்?"

"எத்தனை பிறவி என்றாலும் என் ஆத்தாதான் எனக்கு மீண்டும் மீண்டும்
ஆத்தாவாக வந்து அமைய வேண்டும் என்று வேண்டிக்கொண்டேன்."

"என்னவொரு ஆத்தா பாசம்? ஏன் இதுவரை பட்டது போதாதா?"

"என் ஆத்தாவால்தான் உன்னுடைய அபரிதமான அன்பு எனக்குப்
புலப்பட்டது. உன்னுடைய அன்பால்தான் நீ என்னைக் கட்டிப் போட்டு
வைத்திருக்கிறாய்!"

"உங்கள் தாயாருக்கு ஊரில் என்ன பெயர் தெரியுமா?"

"தெரியும். அலறுவாய் அலமேலு ஆச்சி!"

"பெண்ணிற்கு நாவடக்கம் வேண்டும். அது இல்லாததால்தான் அவர்கள்
அவஸ்தைப் பட்டுக்கொண்டிருக்கிறார்கள். என்னை விடுங்கள். உங்கள்
தாயபிள்ளைகள் யாரிடமாவது அவர்களுக்கு சுமூகமான உறவு இருக்கிறதா?"

"ஆண், பெண் என்ற பேதம் எதற்கு? எல்லோருக்குமே நாவடக்கம் வேண்டும்.
என் தாயாரிடம் அது இல்லை. முன்கோபம் மிக்கவர்கள். கோபத்தில்
என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பேசி விடுவார்கள். அத்தனை
பிரச்சினைக்கும் அதுதான் காரணம். கோபத்தோடு எழுகிறவன்,
நஷ்டத்தோடு உட்காருவான் என்பார்கள். அந்தக் கோபத்தால் என்
தாயார் இழந்தது அதிகம். "

"இத்தனை வயதாகியும் அவர்கள் ஏன் இன்னும் அதை உணரவில்லை?"

"அது அவர்களுடைய சுபாவம். சுபாவத்தை மாற்றிகொள்வது இயலாத
காரியம். பாகற்காய் பாகற்காய்தான். என்ன சர்க்கரை போட்டு சமைத்தாலும்
அதன் கசப்பு நீங்காது! பாகற்காயில் கசப்பும் உண்டு. அதோடு அற்புதமான
மருத்துவத் தன்மையும் உண்டு.பலருக்கும் அதன் கசப்பு மட்டுமே கண்ணில்
படும். மருத்துவக் குணத்தை அறிந்தவர்கள் வெகு சிலரே!"

"உங்கள் அத்தாவிடம் உள்ள அந்த மருத்துவக்குணம் என்னவென்று
சொல்லுங்களேன்"

"நேரம் வரும்போது நீயே தெரிந்து கொள்வாய்" என்று சொன்னவன் எழுந்து
விட்டான்.

அவர்கள் பேச்சு அத்துடன் தடைப்பட்டது.

+++++++++++++++++++++++++++++++++++++++++
அதே நேரம் சாலாவின் மாமியார் அலமேலு ஆச்சி அவர்கள் தன் இளைய
சகோதரன் சாத்தப்பனுன் பேசிக் கொண்டிருந்தார்கள்.

"விளக்கமாற்றிற்குப் பட்டுக் குஞ்சம் கட்டின மாதிரி உடம்பு. சோறு வடிக்கிற
குண்டான் மாதிரி முகம். தோல் மட்டும்தான் கொஞ்சம் சிவப்பு. இவளைப்
போய் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுகிறானே - இவனுக்கு
நடிகை நயன்தாரா மாதிரி ஒரு அழகான பெண்ணைக் கல்யாணம் பண்ணி
வச்சிருந்தா - என்ன ஆகியிருக்கும்?" என்று ஆச்சி தன் மருமகள்
புராணத்தைப் பாட ஆரம்பித்து விட்டார்கள்.

ஆச்சி திரைப் படங்கள், சின்னத்திரைத் தொடர்கள் என்று நிறையவே
பார்த்துக் கரை கண்டவர்கள்.வார்த்தைகள் எல்லாம் உதாரணங்களுடன்
வசனங்களாகவே வரும்.

"என்ன ஆகியிருக்கும் - நீங்களே சொல்லுங்கள்," என்று தம்பி
குறுக்கிட்டவுடன், ஆச்சி தொடர்ந்து சொன்னார்கள்.

“நாகபட்டிணத்தில் அடிச்ச சுனாமி எங்க வீட்டுக்குள்ள அடிச்சிருக்கும்.
அப்படியே என்னைக் கொண்டுபோயிருக்கும். உன்னோடு பேச நான்
உயிரோடு இருந்திருக்க மாட்டேன்”

“அப்படியெல்லாம் சொல்லாதீர்கள் ஆச்சி. ஆயிரம் இருந்தாலும், அவள்
உங்கள் வீட்டிற்கு வாழவந்திருக்கும் பெண். விளக்கேற்றி வைக்க வந்தவள்.
நல்ல வார்த்தையாகச் சொல்லுங்கள் ஆச்சி!”

இந்த இடத்தில், மனம் உடைந்த ஆச்சி, உணர்ச்சி மேலிட, அழுக
ஆரம்பித்து விட்டார்கள்.

“தம்பி, நான் என்ன வேண்டுமென்றா சொல்லுகிறேன்? உள்ளதைத்
தானே சொல்லுகிறேன். தேளிற்குக் கொடுக்கில் மட்டும்தான் விஷம்.
என் மருமகளுக்கு உடம்பெல்லாம் விஷம். அவளோடு இருக்க முடியாது.
அதனால்தான் வந்துவிட்டேன்.”

தன் மூத்த சகோதரியின் ஆளுமை உணர்வையும், கோப உணர்வையும்
நன்கு அறிந்த சாத்தப்பன், இந்த இடத்தில் பொறுமையாக எடுத்துச்
சொன்னான்.

"ஆச்சி ஒன்று மட்டும் சொல்ல ஆசைப்படுகிறேன். எந்த வீட்டில்தான்
மாமியார் மருமகள் சண்டை இல்லை? ஒருவருக்கொருவர் விட்டுக்
கொடுத்துப் போகாததினால்தான் பிரச்சினைகள் உண்டாகின்றன.
உங்கள் மருமகள் சாலாவையும் நான் அறிவேன். நீங்கள் சொல்லுகிற
மாதிரியான பெண்ணல்ல அவள். உங்கள் மகன் குமரப்பன் எவ்வளவு
கெட்டிக்காரன்? நீங்கள் சொல்லுகிற மாதிரி அவளுக்கு உடம்பெல்லாம்
விஷம் என்றால், அவன் அதை உணராமலா அவளுடன் குடும்பம் நடத்திக்
கொண்டிருக்கிறான்? எல்லா ஆத்தாக்களுக்குமே மகன் தனக்கு மட்டும்தான்
பாத்தியப்பட்டவன் என்னும் உணர்வு அதிகம். தன்னுடையது என்னும்
பொசசிவ்னெஸ் அதிகம். திருமணத்திற்குப் பிறகு உரிமைப் பத்திரம்
மாறிவிடும். வருபவளுக்கு மகன் சொந்தமாகிவிடுவான் என்பதை ஏற்றுக்
கொண்டு யதார்த்தமாக இருந்தால் எந்தப் பிரச்சினையும் வராது!”

”சொந்தத்தில், உள்ளூரில் நிறையப் பெண் பார்த்தேன். ஒன்றுகூட
அமையவில்லை. அவன் இவளை வெளியூரில் இருந்து பிடித்துக் கொண்டு
வந்தான். உள்ளுர்ப் பெண் என்றால் நமது குடும்பத்தின் அருமை பெருமை
தெரிந்தவளாக இருப்பாள். தெரியாவிட்டாலும் பெற்றவர்கள் சொல்லி
யனுப்பி வைப்பார்கள். அது எதுவும் தெரியாமல் வந்தவள் என்பதால்தான்,
என் கையை விட்டு என் மகன் போய்விட்டான். நானும் ஊருக்கு வந்து
இப்படித்தனியாய் இருந்து இழுபடும்படியாகி விட்டது.”

பேச்சை மேலும் வளர்க்க விரும்பாத சாத்தப்பன்,” சரி, விடுங்க
ஆச்சி! சின்னஞ்சிறுசுகள்! ஒரு நாள் உங்கள் அருமை, பெருமை
தெரியாமலா போய்விடும்? அப்போது வருவார்கள். அதுவரை
பொறுமையாக இருங்கள்!” என்று சொன்னான்.

அந்த அருமை, பெருமைகளை, அனைவரையும் உணரவைத்தான்
பழநியம்பதியில் உறையும் பழநிஅப்பன்!

**********************
இளம் வயதிலேயே கணவனைப் பறிகொடுத்தவர் அலமேலு ஆச்சி.
அவருடைய கணவர் அண்ணாமலை செட்டியார் சாலை விபத்தொன்றில்
காலமாகிவிட்டார். ஆச்சியின் மகன் குமரப்பனுக்கு அப்போது ஐந்து
வயதுதான்.செட்டியார் வேலை பார்த்த வங்கியில் ஆச்சிக்கு
மனிதபிமான அடிப்படையில் வேலை தருகிறேன் என்றார்கள்.
ஆனால் ஆச்சிக்கு, உரிய கல்வித்தகுதி இல்லாததனால், கடை நிலை
ஊழியர் வேலை மட்டுமே கொடுக்க முடியும் என்றார்கள். ஆச்சி
மறுத்து விட்டார்கள்.

வங்கியிலிருந்து,பி.எஃப், கிராஜுட்டி, காப்பீட்டுப்பணம், ஊழியர்கள்
சங்க உதவிப்பணம் என்று நிறையப் பணம் கிடைத்தது. அதோடு
செட்டியாரை வைகுண்டத்திற்கு அனுப்பிய லாரிக் கம்பெனிக்காரர்களும்
நீதிமன்ற உத்தரவின்படி நிறையப் பணம் கொடுத்தார்கள். வந்த
பணத்தையெல்லாம், ஆச்சியின் அப்பச்சியும், மாமனாருமாகப் பேசி,
பத்திரப்படுத்தி வைத்தார்கள். ஆச்சியின் மாத வருமானத்திற்கு
வழிபண்ணி வைத்தார்கள். முதல் இரண்டு வருடம் தன் தாய்
வீட்டிலிருந்த ஆச்சி, பிறகு செஞ்சியில் இருந்த தங்கள் வீட்டிற்கே
வந்து விட்டார்கள்.

ஆச்சியின் ஆழ்மனதில் ஒரு கோபம் உண்டு. விதி தன்னை இளம்
வயதிலேயே இப்படி விதவையாக்கிவிட்டதே என்ற கோபம் அது.
தன் வயதையொத்த பெண்கள் ஜிகுஜிகுவென்று பட்டில் போகும்
போதும், வைரத்தாலி மின்ன சிரிக்கும்போதும், ஆச்சியின் மனம்
அடித்துப்போட்டது போல வலியால் துவளும். போகப் போக அது
உளவியல் ரீதியாக ஆச்சியின் மனதை, செயலை மிகவும் மாற்றி
விட்டது. அவர்களுடைய நல்ல குணமெல்லாம் மங்கிப் போய்,
எரிந்து விழும் தன்மையே மேலோங்கி நின்றது. யாருடனும் ஒட்ட
முடியாமல் போய்விட்டது.

பலர் அவர் வீட்டில் பெண் கொடுக்கத் தயங்கியபோது, அதற்கு
இடமில்லாமல், குமரப்பனே, தன்னுடன் பொறியியற் கல்லூரியில்
படித்த சாலாவையே திருமணம் செய்து கொண்டுவிட்டான்.

நிறைய வாங்கி, தன் மகனின் திருமணத்தை தடபுடலாகச் செய்ய
வேண்டும் எனும் ஆச்சியின் ஆசை, நிறை வேறாமல் போய்விட்டது.
அதில் ஆச்சிக்கு மிகுந்த வருத்தம்.

சாலாவீட்டில், வரதட்சனை வேண்டாம் என்று இவன் சொல்லிவிட்டான்.
வலுக்கட்டயமாக அவர்கள் கொடுத்த ஐந்து லட்ச ரூபாய்களைக்கூட,
சாலா பேரிலேயே வைப்பு நிதியாகப் போடச் சொல்லிவிட்டான்.

அதே நேரத்தில் தன் தாயார் நஷ்டப்படக்கூடாது என்று, தன்
திருமணத்தால் கிடைக்கக்கூடிய ஆதாய வரவு என்ன இருக்கும் என்பதை,
தன் சிறிய தந்தையாரிடம் விசாரித்துத் தெரிந்து கொண்டு, தன்
தாயாரின் கையில் மூன்று லட்ச ரூபாய் ரொக்கத்தையும் கொடுத்து
விட்டான். அதோடு திருமணம் நடந்த போது, செலவுகளுக்கு, தன்னுடைய
வங்கி டெபிட் கார்டைக் கையில் கொடுத்து வேணும் என்கிற பணத்தை
எடுத்துக் கொள்ளவும் சொல்லிவிட்டான்.

தன் மகன் படித்து முடித்து புனே’யில் மிகப் பெரிய நிறுவனத்தில்
வேலைக்குச் சேர்ந்தபோது, என் மகனுக்கு நல்ல சாப்பாடு கிடைக்காது,
நான் வடித்துப் போடுகிறேன் என்று சொல்லி ஆச்சி அவர்களும் உடன்
வந்து விட்டார்கள். புனேயில் சிவாஜி நகரில் வீடு. தனாஜிவாடி
பகுதியில் அவன் வேலைபார்க்கும் அலுவலகம் இருந்தது.

மொழிப்பிரச்சினையால் ஆச்சி எங்கும் செல்லாமல் வீட்டிற்குள்ளே
இருப்பார்கள். வார விடுமுறை நாட்களில் மகன் கூட்டிக் கொண்டு
போனால்தான் உண்டு.

குன்யா முரளிதர் கோவில், ஓம் கரேஷ்வரர் கோவில் என்று துவங்கி
புனேயில் அத்தனை கோவில்களையும். கேல்கர் அருங்காட்சியகம்,
பால கந்தர்வ அரங்கு, சனிவார்வாடா அரண்மனை, சரஸ் பூங்கா,
பேஷ்வா பூங்கா என்று அத்தனை சுற்றுலாத் தளங்களையும்
ஒன்றுவிடாமல் பார்த்துவிட்டார்கள்.

குமரப்பனுக்குத் திருமணம் நிச்சயமானவுடன், ஆச்சி அவர்களின்
புனே வாழ்வு முடிவிற்கு வந்துவிட்டது. சாலா பெங்களூரில் வேலை
பார்த்ததால், குமரப்பனும் பெங்களூருக்கு வேலையை மாற்றிக்
கொண்டு வந்துவிட்டான்.

அவனுடைய திருமணத்திற்குப் பிறகு, ஆச்சி, அவர்களுடன்
பெங்களூருக்கு வந்து இருந்தார்கள். அவனுக்கு அவுட்டர் ரிங்
ரோட்டில் அலுவலகம். அவளுக்கு ஒயிட்ஃபீல்ட் ரோட்டில்
அலுவலகம். மாதவபுரா ஏரியாவில் வீடு. சாலா மாருதி ஜென்கார்
வைத்திருந்தாள். பெங்களூரில் எல்லா இடங்களும் அத்துபடி.
அதோடு நன்றாகக் கார் ஓட்டுவாள். தன் கணவனைக் காலையில்
அவனுடைய அலுவலகத்தில் இறக்கிவிடுவதோடு, மாலையில்
திரும்ப வீட்டிற்குத் திரும்ப அழைத்து வருவதையும் அவள்தான்
செய்வாள்.

ஆச்சிக்கு தன் மருமகள் கார் ஓட்டுவதே முதலில் எரிச்சலைத்
தந்தது. பெண் பெண்ணாக இல்லாமல் ஆண்களைப் போல எல்லா
வேலைகளையும் செய்கிறாளே என்ற பத்தாம்பசலி எண்ணங்களால்
தொடர்ந்து பல எரிச்சல்கள். பிரச்சினைகள், சச்சரவுகள்.
மனத்தாங்கல்கள். பொறுத்துக் கொள்ள முடியாமல், காரைக்குடி
பெரிய வீட்டிற்கே திரும்பி வந்து விட்டார்கள். பிறகு நடந்த
தெல்லாம் கதைக்கு முக்கியமில்லை.

+++++++++++++++++++++++++++++++++++++++++++
குமரப்பன் தனது ஐந்தாவது திருமண நாளை, தன் மனைவி
மகளுடன், பெங்களூர் தாஜ் ரெஸிடென்ஸி ஹோட்டலில்
கொண்டாடிக் கொண்டிருந்தபோது, ஊரில் இருந்து தகவல் வந்தது.

அவனுடைய தாயார், குளியலறையில் வழுக்கி விழுந்துவிட்டார்
களாம். துவைக்கிற கல்லில் தலை அடிபட்டதால் பின்மண்டையில்
பலமான அடியாம். உடனே புறப்பட்டுப் போனான்.

காரைக்குடியில் இருந்த தனியார் மருத்துவ மனைக்காரர்கள்,
முதலுதவி செய்து, ஆச்சியின் மயக்கத்தைப் போக்கி உயிர்
பிழைக்க வைத்திருந்தார்கள். உதவிக்கு, வளவில் இருந்த மற்ற
பங்குதாரர்களும் இருந்தார்கள். தலையின் பின்பகுதியில் ரத்தம்
கசிவது நின்று விட்டாலும், மதுரை அல்லது திருச்சிக்குச் சென்று
மேற்சிகிச்சை செய்யுங்கள் என்று சொல்லிவிட்டார்கள்.

குமரப்பனும், திருச்சியில் வைத்து சிகிச்சை செய்தான். ஒன்றும்
பலனிக்கவில்லை. ஆச்சி அவர்கள் திருச்சி வந்த நான்காம் நாள்
காலையில் சிவபதவி அடைந்துவிட்டார்கள்.

ஆனால் இறக்கும் முன்பு, தன் மகனின் கைகளைக் கெட்டியாகப்
பிடித்துக் கொண்டு, கலங்கிய கண்களுடன் தன் கடைசி விருப்பத்தைச்
சொல்லி விட்டுத்தான் இறந்து போனார்கள்.

அதுதான், குமரப்பனை மட்டுமல்ல, சாலாவையும் அதிர வைப்பதாக
இருந்தது. ஆச்சியின் முழு உணர்வும் அதில் வெளிப்பட்டது.

“அப்பச்சி, நான் பிழைக்க மாட்டேன் என் உள்மனது சொல்கிறது.
பணத்தை வீணாகச் செலவழித்து என்னைக் காப்பாற்ற முயற்சிக்காதே.
என் காலம் முடியப் போகிறது. நான் வாழ்ந்த வாழ்க்கை போதும்.
இளம் வயதில் விதவையாகி, ஒரு குழந்தையுடன் வாழ்வதுதான்
உலகிலேயே மிகவும் கஷ்டமான வாழ்க்கை. நான் பட்ட கஷ்டங்கள்
போதும். இளம் விதவை இந்த சமூகத்தின் கோரப்பிடியிலிருந்து
தன்னையும் காத்துக் கொண்டு, தன் பிள்ளையையும் ஆளாக்குவது
என்பது சவாலான செயல். ஒரு போராளியின் மனநிலை இருந்தால்
மட்டுமே அதை வெற்றிகரமாகச் செய்ய முடியும். நான் அப்படித்தான்
அதைச் செய்தேன். குன்றக்குடி முருகன் எனக்குத் துணையாக
இருந்தான். நான் சேர்த்து வைத்திருக்கும் பணம், எனது நகைகள்,
என் அப்பச்சி செக்காலைத் தெருவில் எனக்குக் கொடுத்த இடம்
எல்லாவற்றையும் சேர்த்தால், இன்றைய மதிப்பில் அது ஒரு கோடி
தேறும். அந்தப் பணம், இன்று இளம் வயதில் விதைவையாகிக்
குழந்தையுடன் இருக்கும் தாய்மார்களுக்கு உதவுவதாக இருக்க
வேண்டும். அதை நீ செய்வாயா? நான் சொன்னால் செய்வாய் என்று
தெரியும். இருந்தாலும், எனக்கு வாக்குக்கொடு. அப்போதுதான் நான்
மன நிம்மதியோடு போய்ச் சேருவேன்!”

கலங்கிய கண்களோடு, நிச்சயம் செய்வதாகக் குமரப்பன் தன்
தாய்க்கு வாக்குக் கொடுத்தான்.

பிறகு அதைச் செயல் படுத்தவும் செய்தான்.

தன் கணவன் சொன்ன பாகற்காயின் மருத்துவ குணம் சாலாவிற்கு
அப்போதுதான் புரிந்தது.

எல்லா மனிதர்களுமே நல்லது கெட்டது எனும் இரண்டு குணங்களையும்
உடையவர்கள்தான். நல்ல குணம் அற்புதமாக வெளிப்படும்போதுதான்
மனிதன் தெய்வமாகிவிடுகிறான்.

சாலாவிற்கு, கவியரசரின் வைரவரிகள் அவ்வப்போது நினைவிற்கு
வந்ததோடு, அவளுடைய மாமியாரின் முகத்தையும் அவள் கண்
முன் நிறுத்தத் தொடங்கின! மாமியாரின் மறுபக்கத்தை சாலவும்
உணர்ந்தாள்

”வாரி வாரி வழங்கும் போது வள்ளலாகலாம்
வாழை போல தன்னை தந்து தியாகியாகலாம்
உறுதியோடு மெழுகு போல ஒளியை வீசலாம்
துணிந்துவிட்டால் தலையில் எந்த சுமையும் தாங்கலாம்
குணம்! குணம்! அது கோவிலாகலாம்...
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்!”

அலமேலு ஆச்சி அவர்கள் தெவத்திரு மட்டுமல்ல, தெய்வமாகவும்
ஆகிவிட்டார்கள்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

3.10.09

நகைச்சுவை: கண்ணாடி தம்ளரை வைத்துக் கிடைத்த காட்சிகள்!

++++++++++++++++++++++++++++++++++++++++++++
கண்ணாடி தம்ளரை வைத்துக் கிடைத்த காட்சிகள்!

பாதி அளவு தண்ணீருடன் இருக்கும் கண்ணாடி தம்ளர்.
அதைப் பார்த்துவிட்டு, சமுதாயத்தின் வெவ்வேறு நிலையில்
இருப்பவர்கள் சொன்ன கருத்துக்கள் கோர்வையாகக்
கொடுக்கப்பட்டுள்ளது!
+++++++++++++++++++++++++++++++++++++++++++
1
எதையும் நல்ல கண்ணோட்டத்துடன் பார்க்கும் மனிதன்:
தம்ளரில் பாதி அளவு தண்ணீர் என்றாலும் ததும்பி நிற்கிறது.
இந்த அளவாவது தண்ணீர் கிடைதததை எண்ணி மகிழ்வோம்!
2
எதையும் குறை சொல்லிப் பேசும் மனிதன்:
பாதி அளவு தம்ளர் காலியாக உள்ளது வருத்தமான விஷயம்
3
வங்கி அதிகாரி: The glass has just under 50% of its net worth in liquid assets.
4
அரசு: கண்ணாடி தம்ளரில் இருக்கும் தண்ணீர், எதிர்கட்சி ஆட்சி
செய்த காலத்தில் இருந்ததைவிட அதிகமாக உள்ளது. அதுதான்
கவனிக்கப்பட வேண்டியதும் கூட!
5
எதிர்கட்சி: இது கோளாறான அறிவிப்பு. உண்மையான புள்ளி
விவரங்களை மறைத்துவிட்டு, தங்களுக்குச் சாதகமாகப் பேசுகிறார்கள்
பதவியில் இருப்பவர்கள்.
6
பொருளாதார மேதை: உண்மையைச் சொன்னால், சென்ற ஆண்டு
இதே கண்ணாடி தம்ளரில் இருந்ததைவிடத் தண்ணீர் இப்போது 25%
சதவிகிதம் அதிகமாக உள்ளது!
7
தத்துவமேதை: இதே கண்ணாடி தம்ளர் ஒரு அத்துவானக் காட்டில்
இருந்தால், அதோடு யாருடைய பார்வையிலும் படாத இடத்தில்
இருந்தால், இதில் தண்ணீர் எந்த அளவு இருந்தாலும் அது ஒன்றுதான்!
8
மனோ தத்துவ மருத்துவர்: உங்கள் அம்மாவிடம் காட்டுங்கள்.
அவர் என்ன சொல்கிறார் என்று பாருங்கள்!
9
பெளதீக விஞ்ஞானி: The volume of this cylinder is divided into
two equal parts; one a colorless, odorless liquid,
the other a colorless, odorless gas.
Thus the cylinder is neither full nor empty. Rather, each half of
the cylinder is full, one with a gas, one with a liquid.
10
குடிமகன்: தண்ணீருக்குப் பதிலாக, இந்த அளவிற்கு, சரக்கை
ஊற்றி, கொஞ்சம் ஐஸ் கட்டிகளையும் போட்டால் தம்ளர்
நிறைவாகத் தெரியும்!

இது புதுச் சேர்க்கை:
11
வகுப்பறை வாத்தியார்: இருக்கிற தண்ணியைக் குடிச்சிட்டு,
பாடத்தைக் கவனிங்கடா கண்மணிகளா!
+++++++++++++++++++++++++++++++++++++++
உங்கள் கருத்து என்ன?
அதாவது எது நன்றாக உள்ளது?

வாரத்தில் ஐந்து நாள் பாடம்
சனிக்கிழமை week end கலக்கல்!

அன்புடன்,
வாத்தியார்
வாழ்க வளமுடன்!

2.10.09

கிரகமாலிகா யோகம் (மாலை யோகம்)

+++++++++++++++++++++++++++++++++++++++++++++
Lesson on Yoga

This yoga lesson is shifted to the yoga class for obvious reason.
Sorry for the inconvenience.
Please contact Vaaththiyar for further information about this lesson.
mail ID classroom2007@gmail.com


+++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

1.10.09

அனபா யோகம்!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++
அனபா யோகம்!

அனபா யோகம் என்றால் என்ன?

சந்திரன் இருக்கும் இடத்தில் அதற்குப் பன்னிரெண்டாம் வீட்டில்,
அதாவது உங்கள் சந்திர ராசிக்குப் பன்னிரெண்டில்,
சூரியனைத் தவிர, மற்ற கிரகங்களில் ஒன்று இருந்தால்
அதற்கு அனபா யோகம் என்று பெயர்.

ராகு & கேதுவிற்கு முழு கிரக அந்தஸ்து இல்லை.
இருந்தாலும் இந்த யோகத்திற்கு அவற்றைக் கணக்கில் எடுத்துக்
கொள்ள வேண்டும்.
+++++++++++++++++++++++++++++++++++
அதன் பலன் என்ன?

1
அந்த இடத்தில் செவ்வாய் இருந்தால்:
ஆசாமி வலிமையானவன். சுய கட்டுப்பாடு உள்ளவன்.
விரும்பத்தகாத வேலைகளைச் செய்பவனாகவும், அதுபோன்ற
செயல்களில் ஈடுபடுபவர்களுக்குத் தலைமை ஏற்பவனாகவும்
இருப்பான்
..........................
2
அந்த இடத்தில் புதன் இருந்தால்:
ஆசாமி எல்லா வித்தைகளும் தெரிந்தவனாகவும்,
மிகச் சிறந்த பேச்சாளனாகவும் இருப்பான்.
யாரையும் கவரக்கூடிய வகையில் பேசும் திறமையைப்
பெற்றிருப்பான்
.........................
3.
அந்த இடத்தில் குரு இருந்தால்:
ஜாதகன் எதையும் விளையாட்டாக எடுத்துக் கொள்பவன் அல்ல!
சீரியசான ஆசாமி. அறவழியில் செல்லக்கூடியவன். தன்
செல்வத்தை அல்லது வருமானத்தில் ஒரு பகுதியை தர்ம
காரியங்களுக்காகச் செலவிடக்கூடியவன்.
.............................
4.
அந்த இடத்தில் சுக்கிரன் இருந்தால்:
ஆசாமி பெண்களிடத்தில் வழியக்கூடியவன். அல்லது
பெண்களிடம் கரையக்கூடியவன். அல்லது உருகக்கூடியவன்
எப்படி வேண்டுமென்றாலும் வைத்துக் கொள்ளுங்கள்.
மொத்தத்தில் பெண்பித்தன் (womanizer)
ஆனால் அதிகாரமுடையவர்களின் நன் மதிப்பைப் பெற்றவன்
...................................................
5.
அந்த இடத்தில் சனி இருந்தால்:
ஜாதகன் தவறான நம்பிக்கைகளுக்கு எதிரானவன்.
மாயை’களில் இருந்து விடுபடக்கூடியவன்.
மொத்தத்தில் முற்போக்குவாதி!
................................................
6
ராகு அல்லது கேது இருந்தால்:
ஆசாமி அதிரடியானவன்.
யாருக்கும் கட்டுப்படாதவன்
எந்த விதிகளுக்கும், ஒழுங்கு முறைகளுக்கும் கட்டுப்படமாட்டான்.
மொத்ததில் அடங்காதவன்!
..............................................
மொத்ததில் இந்த யோகம்
ஜாதகனுக்கு நல்ல உடல் அமைப்பையும்,
நல்ல பண்புகளையும்,
சுய மரியாதையையும் கொடுக்கும்
-----------------------------------
அடுத்த பாடம் நாளை!

அன்புடன்,
வாத்தியார்வாழ்க வளமுடன்!