மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label மனவளக்கட்டுரைகள். Show all posts
Showing posts with label மனவளக்கட்டுரைகள். Show all posts

8.4.22

நமக்குள்ளே இருக்கும் அச்சம்


நமக்குள்ளே இருக்கும் அச்சம்

எனக்கும் அடிக்கடி தோன்றும் அச்சம்* .

#கணவன் 😢😢😢

கணவன் இறந்த பின் பெண்கள் எப்படியோ தான் பெற்ற மக்களை
அனுசரித்து வாழ்ந்து விடுகின்றனர்.

ஆனால் மனைவி போன பின் கணவன் படும் துயர் இருக்கிறதே

* 😴😴😴கொடுமை 😴😴😴*

தானாகவே காப்பி கூட போடத் தெரியாத கணவன், தண்ணீரைக்
கூடத் தானே மொண்டு குடிக்காத கணவன் மனைவியின் மறைவுக்குப்
பின் ஏனென்று கேட்க ஆளில்லாமல் போகிறான்.

ஒரு ஆணுக்கு நன்றாகவே சமைக்கத் தெரிந்தாலும் கூட மருமகளோ, 
மகளோ சமைலறையில் ஆளும் போது அங்கே இந்த ஆணால் 
தன்னிச்சையாக நுழைய முடியாது.

வேண்டுவனவற்றை தானே சமைத்துக் கொள்ளவோ எடுத்துக் கொள்ளவோ
கூசுகிறார்கள்.

என்ன கொடுத்தார்களோ எப்போது கொடுத்தார்களோ கொடுத்ததை
கொடுத்த போது சாப்பிட்டுக் கொள்ளணும்.

ரெண்டாவது காபி கூட கேட்க முடியாது.

தலைவலியில் ஆரம்பித்து எப்பேர்ப்பப்ட்ட சுகக்கேடு வந்தாலும் ஆதரவாகப்
பேசக் கூட ஆளிருக்காது.

இதெல்லாம் என் உறவுக்குள்ளே, நட்பு வட்டத்திற்குள்ளே கண்ட உண்மை.
துளியும் அதிகப்படியில்லை.

என் கணவர் காலை எட்டரை மணிப் போலசும்மா கிச்சனில் வந்து எதானும் பேச ஆரம்பித்தால் காபி வேணும்னு அர்த்தம். காபி குடித்தால் காலை உணவின் அளவு அவருக்குக் குறைவதால் கொடுக்க யோசிப்பார்கள்.

இப்போதெல்லாம் காலையில் என் கணவர் கேட்காமலேயே ரெண்டாவது
காபி கொடுத்துடுவேன்.

எனக்குப் பின் அவருக்கு யார் கொடுப்பாங்க?

இந்த நினைவு வந்தால் மனசு ரொம்ப பாரமாகிடுது.

மனைவி இல்லாத கணவன் உயிரற்ற உடல் போலே!!

சகோதரிகளே!!
யாருக்கு விதி எப்போன்னு தெரியாது!
உங்கள் கணவர் உங்களுக்குப் பின் வாயில்லாப் பூச்சிதான்!

முடிந்தவரை கணவனிடம் அனுசரணையாக இருங்கள்!!

ஒரு குடும்பத்தலைவியின் ஆதங்கம்.
-------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

7.5.21

கலங்காதே மனமே.!


Harichandra

கலங்காதே மனமே.!

❗தகப்பனே கொலை செய்ய முயற்சித்த போதும் *ப்ரஹ்லாதன்* மனம் கலங்கவில்லை...

❗சுடுகாட்டு வெட்டியானுக்கு 
அடிமையாக்கிய போதும்
*ராஜா அரிச்சந்திரன்* மனம் கலங்கவில்லை...

❗பெற்ற பிள்ளையே
கேவலப்படுத்திய போதிலும் *கைகேயி* மனம் கலங்கவில்லை...

❗உறவினர்களே சபை நடுவே அசிங்கப்படுத்திய போதும் *விதுரர்* மனம் கலங்கவில்லை...

❗அம்புப்படுக்கையில்
வீழ்ந்த போதிலும்
*பீஷ்மர்* மனம் கலங்கவில்லை...

❗இளம் விதவையான
சமயத்திலும் *குந்திதேவி* மனம் கலங்கவில்லை...

❗தரித்ரனாக வாழ்ந்த
சமயத்திலும் *குசேலர்*
மனம் கலங்கவில்லை...

❗ஊனமாகப் பிறந்து
ஊர்ந்த போதிலும்
*கூர்மதாஸர்* மனம் கலங்கவில்லை...

❗பிறவிக் குருடனாக 
இருந்தபோதிலும்
*சூர்தாஸர்* மனம் கலங்கவில்லை...

❗மனைவி அவமானப்படுத்திய போதிலும் *சந்த் துகாராம்* மனம் கலங்கவில்லை...

❗கணவன்
கஷ்டப்படுத்திய போதும்
*குணவதிபாய்* மனம் கலங்கவில்லை...

❗இருகைகளையும்
வெட்டிய நிலையிலும்
*சாருகாதாஸர்* மனம் கலங்கவில்லை...

❗கைகால்களை வெட்டிப்
பாழுங்கிணற்றில் தள்ளியபோதும்
*ஜயதேவர்* மனம் கலங்கவில்லை...

❗மஹா பாபியினிடத்தில்
வேலை செய்த போதும்
*சஞ்சயன்* மனம் கலங்கவில்லை...

❗பெற்ற பிள்ளையை
பறிகொடுத்த போதும்
*பூந்தானம்* மனம் கலங்கவில்லை...

❗கூடப்பிறந்த சகோதரனே
படாதபாடு படுத்தியபோதும்
*தியாகராஜர்* மனம் கலங்கவில்லை...

❗நரசிம்மர் சன்னிதியில்
விஷ தீர்த்தம் தந்த போதும்
*மஹாராஜா ஸ்வாதித் திருநாள்* மனம் கலங்கவில்லை...

❗சோழ ராஜனின் சபையில் கண்ணை இழந்த பின்பும்
*கூரத்தாழ்வான்* மனம் கலங்கவில்லை...

*எப்படி முடிந்தது இவர்களால்..?*

ரகசியம்...

*தங்களோடு இறைவன் எப்பொழுதும் இருக்கின்றான் என்று உணர்ந்ததால்...*

கடவுள் எப்பொழுதும் கூடவே இருக்கிறான் என்று உணர வழி?

*ஆழ்ந்த நம்பிக்கை...*

அந்த நம்பிக்கை ஏற்பட வழி..?

*முதல் வழி...*
(சொல்லறிவு)

அறிஞர்கள், ஞானிகள் மற்றும் 
சான்றோர்களின் கூற்றை மனபூர்வமாக ஏற்று கொள்ளுதல்...

*இரண்டாம் வழி...*
(சுய அறிவு)

மன அமைதியுடன், 
நடுநிலை உணர்வுடன், ஆழ்ந்த சிந்தனையில் புத்தி பல வகைகளில் ஆய்வு செய்து, உண்மை விளங்கும் போது மனம் தெளிவடைந்து... அப்போது ஏற்படுவது...

நம்பிக்கை ஏற்பட்ட பின்...

மனம் செல்ல வேண்டிய பாதையில் சரியாக சென்று, உடல் மற்றும் மன ஆற்றலை பெருக்கி கொள்ளும் பயிற்சியாக...

தொடந்து செய்யப்படும் பிரார்த்தனை முறைகள்...

அந்த பிரார்த்தனைகள்...

*மந்திரமாக இருக்கலாம்...*

*கீர்த்தனைகளாக இருக்கலாம்...*

மேலும், அனைத்திற்கும் அடிப்படையாக விளங்கும் *"அன்பும், அறநெறியும், உண்மையும், சத்தியமும், நியாய தர்மங்களை காக்கும் பண்புகளாகவும்..."* இருக்கலாம்.

இவற்றை மாறாமல் கடைபிடித்தால்...
வாழ்வில் தோன்றும் எந்த சங்கடங்களையும் எளிதில் கடக்கலாம்...

என்ன நடத்தாலும்,
எதை இழந்தாலும்,
*"ஆத்ம திருப்தியுடன் செய்யும் செயல்களே ஆத்ம பலத்தை தரும்..."*

அந்த ஆத்ம பலமே...
எதையும் தாங்கும் சக்தி...

ஆதலால் ...

*விடாது நாம ஜபம் செய்வோம்...*

*திடமாக பகவானை வழிபடுவோம்...*

*அன்பே கடவுள் என போற்றுவோம்...*

*உறுதியுடன் உண்மையாக இருப்போம்...*

இதனால் 
மனஅமைதியும், அர்த்தமுள்ள வாழ்க்கையையும் பெற்றிடுவோம்.             
********ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்********
---------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

25.3.21

நேர்மறை எண்ணங்களின் மகிமை!


நேர்மறை எண்ணங்களின் மகிமை!

நாம் வாழ்த்தும் அனைத்தும் நமக்கே திரும்பி வரும்.

வாழ்த்தும் பயனும்...

பல வியாபாரங்கள் செய்து தோற்றுவிட்ட ஒருவன் கடைசியில் என்ன வியாபாரம் செய்வதென்றே தெரியாத நிலையில் அந்த ஊருக்கு வந்த சந்நியாசி ஒருவரை சென்று சந்தித்து தனது நிலைமையை சொல்லி புலம்பினான்.
 
நீ வியாபாரம் செய்யவேண்டும் என்று முடிவு செய்தது தவறல்ல. என்ன வியாபாரம் செய்யவேண்டும் என்று முடிவு செய்ததில் தான் தவறு. 
மக்களுக்கு எது அன்றாடம் தேவைப்படுகிறதோ எது வாங்க வாங்க தீர்ந்துபோகிறதோ அதை நீ வியாபாரம் செய் உன் பிரச்சனை முடிவுக்கு வரும். 

நான்வடக்கே யாத்திரை செல்கிறேன். இரண்டொரு மாதங்களில் திரும்ப வருவேன். அப்போது வந்து என்னை மீண்டும் பார்" என்று ஆசி கூறிவிட்டு சென்றார்.

இவனுக்கு அப்போது தான் உண்மை புரிந்தது. மக்களின் தேவையை அறிந்து கொள்ளாமல் நமக்கு சுலபமாக இருக்கிறதே என்று நாம் முடிவு செய்து இத்தனை நாள் வியாபாரம் செய்துவந்தோம் அதனால் தான் தோல்வி ஏற்பட்டது என்று உணர்ந்துகொண்டான்.

தொடர்ந்து தனது மனைவி மற்றும் நலம் விரும்பிகளுடன் ஆலோசித்து, அந்த ஊரில் ஒரு காய்கறி கடையை திறந்தான். 

பக்கத்துஊர்களுக்கு சென்று காய், கனி வகைகளைவாங்கி வந்து தனது கடையில் நியாயமானவிலைக்கு விற்றான்.

இதைத் தொடர்ந்துவியாபாரம் சூடு பிடிக்க ஆரம்பித்தது.

அவனுக்கு வாடிக்கையாளர்கள் பெருகினர். துறவியின் வாக்கு பலித்ததை எண்ணி அகமகிழ்ந்தவன் அவருக்கு மானசீகமாக நன்றி சொன்னான்.

இந்நிலையில், இவனது வியாபாரத்தை பற்றி கேள்விப்பட்ட பக்கத்து ஊர் செல்வந்தர் ஒருவர், இவனது கடைக்கு எதிரே இருந்த ஒரு காலி நிலத்தை வாங்கி அந்த இடத்தில் மிக பிரமாண்டமான கட்டிடம் ஒன்றை கட்ட ஆரம்பித்தார். 

தனது கடைக்குஎதிரே புதிய கட்டிடம் ஒன்று கட்டப்படுவதைபார்த்த இவன் என்ன ஏது என்றுவிசாரித்தபோது, மிகப் பெரிய பல சரக்குகடை ஒன்று அங்கு வரப்போவதாகவும், அங்கு காய்கறி முதல் மளிகை சாமான்கள், வீட்டு உபயோக வரை அனைத்தும் கிடைக்கும் என்றும் கூறினார்கள்.

அதைக் கேட்ட இவனுக்கு அடிவயிறு கலக்கியது. இத்தனை ஆண்டுகள் நஷ்டத்தில் வணிகம் செய்து வந்தோம். இப்போது தான் ஓரளவு வியாபாரம் ஆகிறது. இந்நிலையில் இப்படி ஒரு போட்டியா? இந்த கடை கட்டி முடிக்கப்பட்டால், எல்லோரும் இதற்கு செல்லவே விரும்புவார்கள்... என் கடையை யார் எட்டிப் பார்ப்பார்கள்? இறைவா இது என்ன சோதனை என்று கலங்கித் தவித்தான்.

இந்நிலையில், அந்த சந்நியாசியும் தனது யாத்திரை முடிந்து திரும்பினார். அவரிடம் சென்று நடந்ததை விளக்கி, "நான் இப்போது என்ன செய்யவேண்டும்?" என்றான்.

ஒன்றும் வேண்டாம். நான் சொல்வதைப் போல செய். தினமும் காலை உன் கடையை திறக்கும்போது, "இன்று எனக்கு வியாபாரம் நன்றாக நடக்கவேண்டும்' என்று கடவுளை பிரார்த்தனை செய். 

அப்படியே எதிர்புறமும்திரும்பி "அந்த புதிய கடையிலும் நன்றாக வியாபாரம் நடக்க வேண்டும்" என்றுபிரார்த்தனை செய். ஒப்புக்காகபிரார்த்திக்காமல் மானசீகமாக அதைவிரும்பு. நல்லதே நடக்கும்" என்றார்.

என்னது எனது போட்டியாளரும் நன்றாக இருக்கவேண்டும்? அவருக்கும் நன்கு வியாபாரம் நன்கு நடக்கவேண்டும் என்று பிரார்த்திப்பதா?"

ஆமாம்... நீ அவருக்கு கூறும் ஒவ்வொரு வாழ்த்தும் நல்லெண்ணமும் உனக்கே பன்மடங்கு திரும்ப வரும். அதே போல அதே போல அவருக்கு தீமை நினைத்தால் அதுவும் உனக்கே திரும்ப வரும்" என்றார்.

அருட்தந்தையின் வாழ்த்தும் பயனும் பயின்றவர்களுக்கு இந்த Concept புரியும்.

அதே போல அவரை எங்கேனும் சந்திக்க நேர்ந்தால், ஒரு போட்டியாளரை பார்ப்பதுபோல பார்க்காது, ஒரு நண்பரை நலம்- விரும்பியை பார்ப்பது போல பார்த்து ஒரு புன்னகை செய்." என்றார்.

அந்த சந்நியாசி மீதும் அவரதுவார்த்தைகள் மீதும் இவனுக்கு பெரு மதிப்புஉண்டு என்பதால் அவர் கூறியதைப்போலவே தினமும் முழு மனதுடன்தனக்காகவும் அந்த எதிர்கடைக்காரருக்காகவும் பிரார்த்தனை செய்து வந்தான். 

அந்த எதிர்கடைக்காரரைபார்க்கும் போதெல்லாம் புன்னகை செய்தும் வந்தான்.

இதன் பயனாக நாளடைவில் இருவரிடமும் ஒரு வித நட்பு ஏற்பட்டுவிட, தனது கடைக்கு காய்கறிகளை கொள்முதல் செய்யும் பொறுப்பை இவரிடம் விட்டுவிட்டார் அவர்.

விளைவு இவனுக்கு பன்மடங்கு Business கிடைத்தது.

நாளடைவில் இவன் கடையும் வளர்ந்து ஒரு மிகப் பெரிய காய்கறி சந்தையாக மாறிவிட்டது. மெல்ல மெல்ல அந்த பகுதி முழுக்க வளர்ந்து அந்த பகுதியே ஒரு மிகப் பெரிய வணிக சந்தையாக மாறிவிட்டது.

ஒரு நேர்மறையான அணுகுமுறை, மனோபாவம் எந்தளவு அவரது வாழ்க்கையை மாற்றியிருக்கிறது.

நாம் இந்த உலகத்தில் தனியாக இல்லை .ஒவ்வொரு விஷயமும் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்தவை.

நமதுஎண்ணங்கள் தான் நமது எதிர்காலத்தைதீர்மானிப்பதில் மிகப் பெரிய பணியைசெய்கின்றன. 

ஒருவரைப் பற்றி நமக்கு ஏற்படும் நல்ல சிந்தனையோ கெட்ட சிந்தனையோ அவரை தீர்மானிப்பதில்லை நம்மையே தீர்மானிக்கின்றன.

எனவேவாழ்க்கையில் வெற்றி பெற விரும்புகிறவர்என்றும் எப்போது நல்ல நேர்மறையானசிந்தனையையே வளர்த்துக்கொள்ள வேண்டும்.

அருட்தந்தையின் எண்ணம் ஆராய்தலின் அடிப்படை தத்துவம் இது.
-------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
===============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

7.12.20

நில், கவனி, முடிவு செய்!


நில், கவனி, முடிவு செய்!

உங்களுக்குப் பலாப்பழம் பிடிக்குமா?நல்ல மஞ்சள் நிறத்தில் சிறிதாக இருக்கும் சுளை இனிக்குமா, அல்லது கொஞ்சம் வெளிர் மஞ்சளில் பெரிதாய் இருக்கும் சுளை சுவைக்குமா? கடையில் நின்று குழம்பியதுண்டா?

எனது நண்பர் ஒருவர் இவ்வகையில் கில்லாடி. இதில் ஒன்று அதில் ஒன்று என்று கேட்டுச் சாப்பிட்டுப் பார்த்து விட்டுத் தான் வாங்குவார்!

வெண்டைக்காயின் முனையை ஒடித்துப் பார்த்து வாங்குவது போல பீர்க்கங்காய் வாழைத்தண்டு என ஒவ்வொன்றிற்கும் ஒரு பரிசோதனை வைத்திருப்பார்!

ஆனால் நம்மில் பலரும் சோம்பேறித்தனம் காரணமாகவோ பழக்கம் காரணமாகவோ இதற்கெல்லாம் நேரம் செலவிடுவதில்லை!வாங்கிய பொருள்  சரியில்லை எனத் தெரிந்த பின் நொந்து போவோம்.அல்லது சண்டைக்குப் போவோம்.

அண்ணே, இதையெல்லாம் விடுங்கள். வாழ்க்கையில் வீடு, நிலம் வாங்குவது, விற்பது போன்ற முக்கியமான முடிவுகளைக் கூடச் சிலர் நிதானமாக யோசிக்காமல் செய்யது விடுகின்றார்களே!

உங்களுக்கு அரிய பதவி உயர்வு கிடைப்பதாக வைத்துக் கொள்ளுங்கள்.ஆனால் வெகு தொலைவுக்கு இடமாற்றத்தில் செல்ல வேண்டும்.ஏற்றுக் கொள்வதா இல்லையா  என்று எப்படி முடிவு செய்வீர்கள்?

எதையும் எதிர்பார்காதீர்கள் ; சந்தேகப்படுங்கள் (Don't expect;suspect) என்று  கேள்விப் பட்டு இருப்பீர்கள்.யோசிப்பதற்கு அதிக நேரம் வேண்டுமா என்ன? காய்கறி மளிகைக் கடை என்றால் சில மணித்துளிகள்.மற்ற முக்கியமான முடிவுகள் என்றால் சில மணி நேரமோ சில நாட்களோ!

தற்காலிகமான உணர்வுகளால் உந்தப்பட்டு நிரந்தரமாய் பாதிக்கக் கூடிய முடிவுகளை எடுக்கலாமா?

உணர்ச்சி வசப்படாமல் நன்மை தீமைகளை ஆராய்ந்து முடிவெடுப்பது என்பது ஒரு கலை என்பார்கள் சிலர்.இல்லை அது அறிவியல் சார்ந்தது, தர்க்கரீதியானது என்பர் பலர்.

இதற்கு வல்லுநர்கள் சொல்லும் ஓர் எளிய வழி உண்டு.ஒரு வெள்ளைத் தாளை எடுங்கள்.ஒரு குறிப்பிட்ட முடிவெடுத்தால் நடக்கக் கூடிய நல்லவை கெட்டவைகளைப் பட்டியலிடுங்கள். ஏற்படக் கூடிய பாதிப்புக்களை எல்லாம்  எழுதி ஆராய்ந்து பாருங்கள்.

2008ல் ஆந்திராவில் கொடிகட்டிப் பறந்த மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் விவசாயிகளின் தற்கொலைகளையும் அரசின் புதிய சட்டத்தையும் ஏன் எதிர்பார்க்க வில்லை?

உலகெங்கும் 25000 பணியாளர்களும் சுமார் 60,000 கோடி அமெரிக்க டாலர் சொத்துக்களும் இருந்த லேமென் பிரதர்ஸ் திவாலானது ஏன்?

வணிகத்தில் வெற்றி் கிடைக்கும் பொழுதும்,நல்லது நடக்கும் பொழுதும், தொடர்ந்து நல்லதே நடக்கும் என்கிற இருமாப்பு , அலட்சியம் வந்து விடுகிறதோ?

Risk management என்பது தற்பொழுது பிரபல்யம்.அதாவது வரக்கூடிய நிகழக்கூடிய அபாயங்களை முன்கூட்டியே சிந்தித்து அவற்றைத் தடுப்பது அல்லது எதிர் கொள்வதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து செயல்படுத்துவது.

நாம் எந்த முடிவும் எடுக்கும் முன்பு இந்த அணுகுமுறையை மேற்கொள்வது நல்லது!

வரக்கூடிய துன்பங்களை முன்னதாக அறிந்து காக்காமல் அலட்சியப்படுத்துபவன்  பிறகு  வருந்துவான் என்கிறார் வள்ளுவர்.

முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை
பின்னூறு இரங்கி விடும்
                             ( குறள் 535)
ஆக்கம் சோம.வீரப்பன்
---------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
===============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

3.12.20

உறவுகளின் முக்கியத்துவம்!

உறவுகளின் முக்கியத்துவம்!

கொஞ்சம் நேரம் ஒதுக்கி  அனைவரும்  அவசியம் கண்டிப்பா இதை முழுமையா படிக்கவும். வந்த வாட்ஸ்அப் பார்வர்டில் உபயோகமான ஒன்று..

படிக்க  படிக்க கண்களில் நீர் வழியும்.  
கண்டிப்பா வழியனும். 

நான் இருக்கின்றேன் பயப்படாதே,  
என ஆறுதல், 
தைரியம் கூறும் உறவுகள்,
அவர்களின் அன்பு ஆதரவு, 
அவர்கள் காட்டும் பாசம்,
அவர்களின் அருமையை தினம்,தினம், நீங்களும் உணரனும். 

உறவுகள், 
அது ஒரு தொடர்கதை. 

உறவுகளை நான் பெருசா நினைக்கிறதில்ல, 
மதிக்கிறதில்ல. 
பெரிய என் உறவு வட்டத்தை விட்டு, கொஞ்சம் கொஞ்சமா விலகிட்டே வந்தேன். 
அதை 
‘மாடர்ன் லைஃப் ஸ்டைல்'னு 
நான் நினைச்சேன்.

சமீபத்தில், என் தோழி ஒருத்தியோட வீட்டு கிரகப் பிரவேச விழாவுக்குப் போயிருந்தேன். 

அவளோட மூன்று தலைமுறை உறவுகளோடும் அவ அரவணைப்பிலேயே இருந்ததோட, 
விழாவுக்கு அத்தனை பேரையும் வரவழைச்சிருந்தா. 
அவங்களோட சந்தோஷம், 
நல விசாரிப்புகள், 
கேலி, 
கிண்டல், 
உரிமை, 
கடமைனு விழாவே அமர்க்களப்பட்டுப் போனது.

‘உங்க தாத்தாவும் நானும் பெரியப்பா மகன் - சித்தப்பா மகன்’னு 
தாத்தா ஒருவர் பேரனுக்கு உறவு முறையை விளக்கிக் கொண்டிருக்கிரார்.

‘வாட்ஸ்அப்ல இருக்கியா? 
இனி லெட்ஸ் ஸ்டே இன் டச்!’னு ஒருவருக்கொருவர் அலைபேசி எண்கள் பரிமாறிட்டு இருந்தாங்க, 
இந்தத் தலைமுறை இளைஞர்களும், இளம் பெண்களும்!

‘நீ மெக்கானிக்கல் இன்ஜீனியரிங் முடிச்சிருக்கேனு ஏன்ப்பா எங்கிட்ட சொல்லல? 
நான் ஆட்டோ மொபைல் கம்பெனி ஹெச்.ஆர்ல இருக்கேன். 
உன் ரெஸ்யூம் ஃபார்வேர்டு பண்ணு!’னு தன் தூரத்து தங்கையோட மகனுக்கு வேலையை உறுதி செய்துட்டு இருந்தார் ஒருத்தர்.

‘நாம தாயில்லாப் பொண்ணாச்சேனு எல்லாம் கவலைப்படாதே. 
உன் டெலிவரி அப்போ சித்தி, நான்  ஹெல்ப்புக்கு வர்றேன். 
பெயின் வந்ததும் எனக்கும் ஒரு போன் பண்ணிடு!’னு வளைகாப்பு முடிந்திருந்த ஒரு இளம் பெண்ணோட கை பிடித்துச் சொல்லிட்டிருந்தார் ஒரு பெண்மணி.

இப்படி எல்லா வகையிலும் ஒருத்தருக்கு ஒருத்தர் பலமா இருக்கக்கூடிய உறவுச் சங்கிலியை நான் தொலைத்ததை உணர வெச்சது அந்த விழா.

இப்போ என் சொந்தங்களோட கான்டாக்ட் நம்பர் எல்லாம் சேகரிக்க ஆரம்பிச்சிருக்கேன்’’

 - நீண்ட கடிதம் அனுப்பியிருந்தார் சென்னை வாசகி ஒருவர்.

இந்த அவசர உலகத்தில், 
பரபரப்பான வேலைச் சூழலில், சொந்தங்களை எல்லாம் அரவணைத்துச் செல்ல பலருக்கும் நேரமிருப்பதில்லை என்பதை, 
உறவுகளைத் தொலைப்பதற்கான காரணமாக ஏற்க முடியாது.

திருமண அழைப்பிதழ் தந்த உறவினர் வீட்டுக் கல்யாணத்துக்குச் செல்ல முடியவில்லை, 
வெளியூர் பயணம், 
அலுவலக மீட்டிங், 
பிள்ளைகளின் டேர்ம் எக்ஸாம் 
என்று பல காரணங்கள்.

சரி,

ஆனால், திருமணம் முடிந்த பின்னும்கூட ஒரு வார இறுதி நாளில் அவர்கள் வீட்டுக்குச் சென்று, 
திருமணத்துக்கு வர இயலாத நிலையைச் சொல்லி, 
உறவைப் பலப்படுத்தும் வாய்ப்பை ஏன் பலரும் முன்னெடுப்பதில்லை?

அட்லீஸ்ட், 
‘கல்யாணம் நல்லபடியா முடிஞ்சதா! ஸாரி, வர முடியலை. 
நிச்சயம் அடுத்த முறை ஊருக்கு வரும்போது வீட்டுக்கு வந்து பார்க்கிறோம்!’ 
என்ற தொலைபேசி விசாரிப்பைக் கூட செய்வதில்லை.

 ‘அதுக்கெல்லாம் நேரமில்ல’, 
‘மெட்ரோ லைஃப்ல நாங்களே பரபரனு ஓடிட்டிருக்கோம்’, 
‘வேலை டென்ஷன்ல கல்யாணம் மறந்தே போச்சு’ 
- இவையெல்லாம் சப்பைக் காரணங்கள்.

உண்மையான காரணம், 
அந்த உறவைப் பேணுவதில் ஆழ் மனதில் பிடிப்பு இல்லை. 

‘அப்பாவோட தாய்மாமன் பையன். 
இனி, இந்த சொந்தத்தை எல்லாம் கன்டின்யூ பண்ண முடியுமா? 
கன்டின்யூ பண்ணணுமா என்ன?’ 
என்று கேட்கலாம் பலர்.

இங்கு ஒரு பெரிய உண்மையைச் சொல்ல வேண்டும். 
சமூக வலை தளங்களில், 
முன் பின் தெரியாத, 
முகம் தெரியாத நபர்களுடன் எல்லாம் நாள் தவறாத தொடர்பில் இருப்பதும், நெதர்லாந்தில் இருக்கும் ஒரு நண்பன்/தோழிக்கு பிறந்த நாள் வாழ்த்து அனுப்புவதும், 

வெளிமாநிலத்தில் இருக்கும் ஒரு தமிழனுக்கு உதவி என்றதும், ‘நம்மாளு’ என்று ரத்தம் துடிக்க இணையப் புரட்சியில் இறங்குவதும், 
‘ஃப்ரெண்ட் ஆஃப் ஃப்ரெண்ட்’ என்று அறிமுகமான ஒருவருடன் உயிர் நட்பு வளர்ப்பதும், 
என, யார் யாருடனோ இணைய முடிகிறது இந்தத் தலைமுறைக்கு. 

ஆனால், 
உறவுகளைத் தொடர முடியவில்லை என்பது எவ்வளவு முரண்?!

வேர்களை அறுத்துக்கொண்டு, 
கிளைகள் பரப்ப துடிக்கிற இம் மனநிலையை என்னவென்று சொல்வது?

சமூக வலைதளங்களின் வெற்றிக்கு அடிப்படை என்ன என்று தெரியுமா?! 

சொந்தங்கள் ஒன்றுகூடி பேசி மகிழும் வீட்டு விசேஷங்கள்தான். 
கல்யாணத்தில், 
காதுகுத்தில், 
சடங்கில், 
ஊர்த் திருவிழாவில், 
என அடிக்கடி உறவுகள் அனைத்தும் ஓரிடத்தில் கூடி, 
பேசி, 
சிரித்து, 
அழுது, 
கோபம்கொண்டு, 
விருந்து உண்டு, 
கலைந்து சென்ற நம் முந்தைய தலைமுறையினரின் சந்தோஷம் இந்தத் தலைமுறைக்குக் கிடைக்கவில்லை.

உறவினர் விசேஷங்களையும், 
ஊர்த் திருவிழாவையும், 
‘மாடர்ன் வாழ்வில்’ தவிர்த்ததால், 
கூடி மகிழ, 
பேசிச் சிரிக்க, 
வழியற்றுப் போன இந்தத் தலைமுறை, இணைய வீதியெங்கும் ஜனத்திரள் பார்க்க உற்சாகமாகிப் போனது.

யார் யாரிடமோ 
அறிமுகமாக, 
பேச, 
சிரிக்க, 
கோபம் கொள்ள, 
வம்பு வளர்க்க, 
வெளியேற, 
என பொழுது போக்கித் திரிகிறது.

அதில் தன் சந்தோஷம் இருப்பதாக நம்புகிறது. 

எனவே, 
பிள்ளைகளை ஆபத்துகள் நிறைந்த இணைய வெளியில் இருந்து உறவு வட்டத்துக்கு மடை மாற்றுங்கள்.

அதற்கு, ‘உறவுகள் வேண்டும்’ என்ற உணர்வு முதலில் வர வேண்டும்.

‘எதுக்கு உறவு? பொறாமை, பகை, புறணி பேசுறதுன்னு, ரொம்ப வெறுத்துட்டேன்!’ என்ற அனுபவம் சிலருக்கு இருக்கலாம்.

உறவுகள் அனைத்துமே அப்படி அல்ல. 

அது தனி மனித குணத்தின் வெளிப்பாடு. நல்லது, தீயது எங்கும், எதிலும் உண்டு என்பது போல, 
உறவுகளிலும் நல்லவர்கள், தீயவர்கள், குணம் கெட்டவர்கள் இருப்பார்கள்தானே? 
அதற்காக ஒட்டுமொத்த உறவுகளும் வேண்டாம் என்று விலக்கத் தேவையில்லை.

‘உங்கப்பாதான் தகப்பன் ஸ்தானத்துல இருந்து என் கல்யாண வேலைகள் எல்லாம் செஞ்சாரு. 
நீ எங்கே இருக்க, 
எத்தனை பிள்ளைங்க?’ 
என்று கண்கள் மல்க விசாரித்து, 
‘எங்க இருந்தாலும் நல்லா இருக்கணும்!’ என்று உளமாற வாழ்த்தும் ஓர் அத்தையின் ஆசீர்வாதம், 
உலகின் மிகத் தூய்மையான அன்பு.

‘நல்லது கெட்டதுனா கூப்பிடுடா, ஒருத்தருக்கு ஒருத்தர் ஒத்தாசையா இருக்கணும்!’ 
என்று உரிமையும், 
கடமையுமாகப் பேசும் சித்தப்பாவின் பிரியத்தை, 
சித்தியின் சிடுசிடுப்பை, சகித்துக்கொண்டாவது 
சுவீகரிக்கத்தான் வேண்டும்.

உங்களுக்கு ஒரு பிரச்னை எனில், உங்களுக்கு முன்பாகவே,
‘எங்க அண்ணனை பேசினது யாருடா..?’ என்று கோபம் கக்கிச் செல்லும், தம்பியுடையோனாக இருப்பதன் பலத்துக்கு, 
இந்த உலகில் ஈடு இணை இல்லை.

வீடு, 
பேங்க் பேலன்ஸ், 
போர்டிகோவில் பெரிய கார், 
ஆடம்பர வாழ்க்கை 
என எல்லாம் இருந்தும், 
உறவுகள் இல்லை எனில், 
ஒருநாள் இல்லையென்றால், 
ஒருநாள் அந்த பலவீனத்தை உணரத்தான் வேண்டும். 
ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். 

உறவுகளுக்கு எப்போதும் முற்றுப்புள்ளி வேண்டாம். 
அது ஓர் அழகிய தொடர்கதை!

உறவுகளைப் பரிசளியுங்கள்,
அடுத்த சந்ததிக்கு!!!
அடுத்த தலைமுறைக்கு. !!!

குழந்தைகளை உறவினர் வீட்டு விஷேசங்களுக்கும், 
ஊர்த் பொது நிகழ்ச்சிகளுக்கும், அழைத்துச் செல்லுங்கள். 

அங்கு உறவினர்கள் அனைவரையும் அறிமுகப்படுத்துங்கள். 

அவர்களுடனான உங்களின் பால்ய வயது நினைவுகளைப் பிள்ளைகளுடன் பகிருங்கள். 

அவர்கள் உங்கள் வாழ்வில் முக்கியமானவர்கள் என்பதை குழந்தைகளுக்கு உணர்த்துங்கள்.

‘உங்க அத்தை இருக்காளே, 
பொறாமை பிடிச்சவ' 
என்று நெகட்டிவாக எந்த உறவுகளையும் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்காதீர்கள். 

அவர்களைப் பற்றி எதுவும் சொல்லாமலே விட்டுவிடலாம். 
அதுதான் மிக மிகச் சிறந்தது. 

‘உங்க அப்பா வீட்டு சொந்தம் இருக்காங்களே' என்று, 
உறவுகள் என்றாலே உளம் வெறுக்கும் அளவுக்கு குழந்தைகளிடம் எதையும் பேசாதீர்கள்.

உங்கள் வீட்டு இளம் பிள்ளைகளையும், உறவினர் வீட்டு இளம் பிள்ளைகளையும் பரஸ்பரம் அறிமுகப்படுத்தி, 
இணைய யுகத்தில் உறவைப் புதுப்பித்துக்கொள்ளவும், 
தொடர்ந்து செழிக்க வைக்கவும் வழி ஏற்படுத்திக் கொடுங்கள்.

மாமன் முறை என்றால், 
செய்ய வேண்டிய கடமைகள் என்ன, 
அத்தை முறை என்றால், 
செய்ய வேண்டிய சடங்குகள் என்ன 
என்பது பற்றி அவர்களுக்கு கற்றுக்கொடுங்கள். 

நாளை உங்கள் மகனும், மகளும் ஒருவருக்கொருவர் அந்த முறை செய்ய வேண்டியவர்களே என்பதையும் சேர்த்துச் சொல்லி குழந்தைகளை வளர்த்தெடுங்கள்.

‘ஃப்ரெண்ட்ஸ் போதும் நமக்கு, ரிலேட்டிவ்ஸ் எல்லாம் வேணாம்’ 
என்று இன்று பல நகரத்துக் குடும்பங்களில் ஊறிக் கிடக்கும் மனநிலையை மாற்றுங்கள்; 

உறவுகள் பேணுங்கள்!!! 

உறவுகளைப் பரிசளியுங்கள்,
அடுத்த சந்ததிக்கு. 
அடுத்த தலைமுறைக்கு.

நான்,
என் குடும்பம்,
என் கொள்கை,
என இருந்துவிடாதீர்கள்.
========================================
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
============================================