மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

25.3.21

நேர்மறை எண்ணங்களின் மகிமை!


நேர்மறை எண்ணங்களின் மகிமை!

நாம் வாழ்த்தும் அனைத்தும் நமக்கே திரும்பி வரும்.

வாழ்த்தும் பயனும்...

பல வியாபாரங்கள் செய்து தோற்றுவிட்ட ஒருவன் கடைசியில் என்ன வியாபாரம் செய்வதென்றே தெரியாத நிலையில் அந்த ஊருக்கு வந்த சந்நியாசி ஒருவரை சென்று சந்தித்து தனது நிலைமையை சொல்லி புலம்பினான்.
 
நீ வியாபாரம் செய்யவேண்டும் என்று முடிவு செய்தது தவறல்ல. என்ன வியாபாரம் செய்யவேண்டும் என்று முடிவு செய்ததில் தான் தவறு. 
மக்களுக்கு எது அன்றாடம் தேவைப்படுகிறதோ எது வாங்க வாங்க தீர்ந்துபோகிறதோ அதை நீ வியாபாரம் செய் உன் பிரச்சனை முடிவுக்கு வரும். 

நான்வடக்கே யாத்திரை செல்கிறேன். இரண்டொரு மாதங்களில் திரும்ப வருவேன். அப்போது வந்து என்னை மீண்டும் பார்" என்று ஆசி கூறிவிட்டு சென்றார்.

இவனுக்கு அப்போது தான் உண்மை புரிந்தது. மக்களின் தேவையை அறிந்து கொள்ளாமல் நமக்கு சுலபமாக இருக்கிறதே என்று நாம் முடிவு செய்து இத்தனை நாள் வியாபாரம் செய்துவந்தோம் அதனால் தான் தோல்வி ஏற்பட்டது என்று உணர்ந்துகொண்டான்.

தொடர்ந்து தனது மனைவி மற்றும் நலம் விரும்பிகளுடன் ஆலோசித்து, அந்த ஊரில் ஒரு காய்கறி கடையை திறந்தான். 

பக்கத்துஊர்களுக்கு சென்று காய், கனி வகைகளைவாங்கி வந்து தனது கடையில் நியாயமானவிலைக்கு விற்றான்.

இதைத் தொடர்ந்துவியாபாரம் சூடு பிடிக்க ஆரம்பித்தது.

அவனுக்கு வாடிக்கையாளர்கள் பெருகினர். துறவியின் வாக்கு பலித்ததை எண்ணி அகமகிழ்ந்தவன் அவருக்கு மானசீகமாக நன்றி சொன்னான்.

இந்நிலையில், இவனது வியாபாரத்தை பற்றி கேள்விப்பட்ட பக்கத்து ஊர் செல்வந்தர் ஒருவர், இவனது கடைக்கு எதிரே இருந்த ஒரு காலி நிலத்தை வாங்கி அந்த இடத்தில் மிக பிரமாண்டமான கட்டிடம் ஒன்றை கட்ட ஆரம்பித்தார். 

தனது கடைக்குஎதிரே புதிய கட்டிடம் ஒன்று கட்டப்படுவதைபார்த்த இவன் என்ன ஏது என்றுவிசாரித்தபோது, மிகப் பெரிய பல சரக்குகடை ஒன்று அங்கு வரப்போவதாகவும், அங்கு காய்கறி முதல் மளிகை சாமான்கள், வீட்டு உபயோக வரை அனைத்தும் கிடைக்கும் என்றும் கூறினார்கள்.

அதைக் கேட்ட இவனுக்கு அடிவயிறு கலக்கியது. இத்தனை ஆண்டுகள் நஷ்டத்தில் வணிகம் செய்து வந்தோம். இப்போது தான் ஓரளவு வியாபாரம் ஆகிறது. இந்நிலையில் இப்படி ஒரு போட்டியா? இந்த கடை கட்டி முடிக்கப்பட்டால், எல்லோரும் இதற்கு செல்லவே விரும்புவார்கள்... என் கடையை யார் எட்டிப் பார்ப்பார்கள்? இறைவா இது என்ன சோதனை என்று கலங்கித் தவித்தான்.

இந்நிலையில், அந்த சந்நியாசியும் தனது யாத்திரை முடிந்து திரும்பினார். அவரிடம் சென்று நடந்ததை விளக்கி, "நான் இப்போது என்ன செய்யவேண்டும்?" என்றான்.

ஒன்றும் வேண்டாம். நான் சொல்வதைப் போல செய். தினமும் காலை உன் கடையை திறக்கும்போது, "இன்று எனக்கு வியாபாரம் நன்றாக நடக்கவேண்டும்' என்று கடவுளை பிரார்த்தனை செய். 

அப்படியே எதிர்புறமும்திரும்பி "அந்த புதிய கடையிலும் நன்றாக வியாபாரம் நடக்க வேண்டும்" என்றுபிரார்த்தனை செய். ஒப்புக்காகபிரார்த்திக்காமல் மானசீகமாக அதைவிரும்பு. நல்லதே நடக்கும்" என்றார்.

என்னது எனது போட்டியாளரும் நன்றாக இருக்கவேண்டும்? அவருக்கும் நன்கு வியாபாரம் நன்கு நடக்கவேண்டும் என்று பிரார்த்திப்பதா?"

ஆமாம்... நீ அவருக்கு கூறும் ஒவ்வொரு வாழ்த்தும் நல்லெண்ணமும் உனக்கே பன்மடங்கு திரும்ப வரும். அதே போல அதே போல அவருக்கு தீமை நினைத்தால் அதுவும் உனக்கே திரும்ப வரும்" என்றார்.

அருட்தந்தையின் வாழ்த்தும் பயனும் பயின்றவர்களுக்கு இந்த Concept புரியும்.

அதே போல அவரை எங்கேனும் சந்திக்க நேர்ந்தால், ஒரு போட்டியாளரை பார்ப்பதுபோல பார்க்காது, ஒரு நண்பரை நலம்- விரும்பியை பார்ப்பது போல பார்த்து ஒரு புன்னகை செய்." என்றார்.

அந்த சந்நியாசி மீதும் அவரதுவார்த்தைகள் மீதும் இவனுக்கு பெரு மதிப்புஉண்டு என்பதால் அவர் கூறியதைப்போலவே தினமும் முழு மனதுடன்தனக்காகவும் அந்த எதிர்கடைக்காரருக்காகவும் பிரார்த்தனை செய்து வந்தான். 

அந்த எதிர்கடைக்காரரைபார்க்கும் போதெல்லாம் புன்னகை செய்தும் வந்தான்.

இதன் பயனாக நாளடைவில் இருவரிடமும் ஒரு வித நட்பு ஏற்பட்டுவிட, தனது கடைக்கு காய்கறிகளை கொள்முதல் செய்யும் பொறுப்பை இவரிடம் விட்டுவிட்டார் அவர்.

விளைவு இவனுக்கு பன்மடங்கு Business கிடைத்தது.

நாளடைவில் இவன் கடையும் வளர்ந்து ஒரு மிகப் பெரிய காய்கறி சந்தையாக மாறிவிட்டது. மெல்ல மெல்ல அந்த பகுதி முழுக்க வளர்ந்து அந்த பகுதியே ஒரு மிகப் பெரிய வணிக சந்தையாக மாறிவிட்டது.

ஒரு நேர்மறையான அணுகுமுறை, மனோபாவம் எந்தளவு அவரது வாழ்க்கையை மாற்றியிருக்கிறது.

நாம் இந்த உலகத்தில் தனியாக இல்லை .ஒவ்வொரு விஷயமும் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்தவை.

நமதுஎண்ணங்கள் தான் நமது எதிர்காலத்தைதீர்மானிப்பதில் மிகப் பெரிய பணியைசெய்கின்றன. 

ஒருவரைப் பற்றி நமக்கு ஏற்படும் நல்ல சிந்தனையோ கெட்ட சிந்தனையோ அவரை தீர்மானிப்பதில்லை நம்மையே தீர்மானிக்கின்றன.

எனவேவாழ்க்கையில் வெற்றி பெற விரும்புகிறவர்என்றும் எப்போது நல்ல நேர்மறையானசிந்தனையையே வளர்த்துக்கொள்ள வேண்டும்.

அருட்தந்தையின் எண்ணம் ஆராய்தலின் அடிப்படை தத்துவம் இது.
-------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
===============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

2 comments:

  1. 100% correct. Good article. If you feel competition is growing, business will give you obstacles and never grow. In this world every one has the share.
    உனக்கொரு பங்கும் எனக்கொரு பங்கும் உலகில் நிச்சயம் உண்டு
    ஒவ்வொரு மனிதன் உழைப்பினாலும் உலகம் செழிப்பதுண்டு

    ReplyDelete
  2. why no post for the four weeks what happened sir due to covid r what
    thanks your wellwisher

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com