மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label Key points. Show all posts
Showing posts with label Key points. Show all posts

14.3.25

Astrology: பாபகர்த்தாரி யோகத்தின் பலன்

Astrology: பாபகர்த்தாரி யோகத்தின் பலன் 

பாபகர்த்தாரி யோகத்தால் பாதிக்கப்பெறும் வீடுகளுக்கான பொதுப்பலன்கள்

இது ஒரு அவயோகம். அதை முதலில் நினைவில் வையுங்கள்.

ஒரு வீட்டின் இருபுறமும் தீய கிரகங்கள் நின்றால் அதாவது இருந்தால், அந்த வீடு இந்த பாப கர்த்தாரி யோகத்தால் பாதிக்கப்படும்.

1
ஒன்றாம் வீடு - அதாவது லக்கினம் பாபகர்த்தாரி யோகத்தால் பாதிக்கப்பெற்றிருந்தால், அந்த ஜாதகன் அடிக்கடி நோய்வாய்ப்படுவான். விபத்துக்கள் நேரிடும். எப்போதும் ஏதாவது ஒரு மன அழுத்தம் (Tension) இருக்கும்.
2.
இரண்டாம் வீடு: இழப்புக்கள் ஏற்படும். அது பெரும்பாலும் பணம் சம்பந்தப்பட்டதாக இருக்கும். (2nd house is the house of finance and family affairs) குடும்ப வாழ்க்கையில் பிரச்சினைகள் உண்டாகும். குடும்பத்தைவிட்டுப் பிரிந்திருக்க நேரிடும். குடும்பத்தை வைத்து மன அழுத்தங்கள் உண்டாகும்
3.
மூன்றாம் வீடு: மரியாதைக்கு பங்கம் ஏற்படும். உடன்பிறப்புக்களை இழக்க நேரிடும் (Loss of siblings) உடன்பிறப்புக்கள், மற்றும் நண்பர்களுடன் தேவையில்லாத விரோதங்கள் ஏற்படும்.
4.
நான்காம் வீடு: பெற்றோர்களை இழக்க நேரிடும். வாழ்க்கையில் சுகங்களை இழக்க நேரிடும். அமைதியை இழக்க நேரிடும். தண்ணீரில் கண்டங்கள் ஏற்படும்.
5.
ஐந்தாம் வீடு: குழந்தைகளுக்கு, குழந்தைகளை வைத்து ஜாதகனுக்கு சிரமங்கள், கஷ்டங்கள், துன்பங்கள் ஏற்படும். எப்போதும் மன நிம்மதி இருக்காது.
6.
ஆறாம் வீடு: தொழிலில், வேலையில் கஷ்டங்கள் உண்டாகும். விரோதிகளால், விரோதங்களால் அடிக்கடி மனதில் பய உணர்வு மேலோங்கி இருக்கும்.
7.
ஏழாம் வீடு: மனைவி அல்லது கணவன் அடிக்கடி நோய்வாய்ப்படுவான். அவர்களால் சிரமப்பட நேரிடும். அவர்களால் விரையங்கள் ஏற்படும்.
8.
எட்டாம் வீடு: வறுமை நிலவும். கடன்கள் உண்டாகும். நோய்கள் உண்டாகும். சிரமமான வழ்க்கை வாழ நேரிடும். பயணங்கள் அலுப்பை ஏற்படுத்தும்.
9.
ஒன்பதாம் வீடு: தந்தையை இழக்க நேரிடும். வறுமையான சூழல்கள் உண்டாகும். வறுமை வாட்டி எடுக்கும்.
10.
பத்தாம் வீடு: வேலையில், தொழிலில் பல பின்னடைவுகள் ஏற்படும் (There will be set backs in career)
11.
பதினொன்றாம் வீடு: காதுகளில் பிரச்சினைகள் ஏற்படும். கேட்கும் தன்மையில் குறைபாடுகள் உண்டாகும். வீட்டு மாப்பிள்ளையைப் பறிகொடுக்க நேரிடும்.
12
பன்னிரெண்டாம் வீடு: தூக்கமின்மையால் அவதிப்பட நேரிடும். ஆரோக்கியம் கெட்டு மருத்துவமனைக்கு அலைய நேரிடும். பலவிதமான பணச் செலவுகள் ஏற்பட்டு படுத்தி எடுக்கும்.

எல்லாமே பொதுப்பலன்கள். அவரவர்களின் ஜாதகத்தின் தன்மையைப் பொறுத்து இது கூடலாம் அல்லது குறையலாம் அல்லது இல்லாமல் போகலாம். அதையும் மனதில் கொள்ளவும்

என்ன பாடம் பயன் உள்ளதாக இருக்கிறதா?

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

12.3.25

Astrology அமலா யோகம்! Amala Yoga

Astrology அமலா யோகம்! Amala Yoga 

கோவையில் இருந்து சென்னைக்குப் பயணிக்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். கோவையிலிருந்து சேலம் வரை ஒரு பேருந்திலும், பிறகு சேலத்திலிருந்து கள்ளக்குறிச்சிவரை ஒரு பேருந்திலும், பிறகு கள்ளக்குறிச்சியிலிருந்து விழுப்புரம்வரை ஒரு பேருந்திலும், பிறகு விழுப்புரத்திலிருந்து செங்கல்பட்டுவரை ஒரு பேருந்திலும், அதற்குப்பிறகு அங்கேயிருந்து சென்னைவரை வேறு ஒரு பேருந்திலும் பயணித்தால் பயணம் எப்படியிருக்கும்? அலுத்துவிடாதா?

முறையான பயணம் எப்படி இருக்க வேண்டும்? ஒரு நவீன குளிரூட்டப்பெற்ற வோல்வோ பேருந்தில், இரவு ஒன்பது மணிக்குக் கோவையில் ஏறி, காலை 6 மணிக்குச் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்குச் சென்று இறங்கினால் பயணம் சுகமாக இருக்கும்.

அதைப்போல ஏகப்பட்ட நிபந்தனைகளுடன் உள்ள யோகங்களைவிட, சுருக்கமாக ஒரு வரியில் உள்ள யோகங்கள், ஜோதிடத்தைக் கற்றுக் கொண்டிருப்பவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

இன்று, உங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுப்பதற்காக ஒரு வரி விளக்கத்துடன் உள்ள யோகம் ஒன்றைக் கொடுத்துள்ளேன்.

அந்த யோகம் இருப்பவர்களுக்கு, இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைக்கும்
---------------------------------------------------------------------
யோகத்தின் பெயர்: அமலா யோகம். அமலா எனும் வடமொழிச்சொல்லிற்கு சுத்தமானது (pure) என்று பொருள்.

யோகத்தின் அமைப்பு: லக்கினத்திலிருந்து பத்தாம் வீட்டில் சுபக்கிரகம் இருக்க வேண்டும். சந்திரராசிக்குப் பத்தாம் வீட்டில் சுபக்கிரகம் இருந்தாலும் இந்த யோகம் உண்டு

பலன்: ஜாதகனின் வாழ்க்கை வளமாக இருக்கும். ஜாதகன் பெயர், புகழுடன் இருப்பான். நிறைய பொருள் ஈட்டுவான். நல்ல ஆண் வாரிசுகளை உடையவனாக இருப்பான்.

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

9.3.25

Astrology: அரிஷ்ட யோகம் (படுக்கவைக்கும் யோகம்)

Astrology: அரிஷ்ட யோகம் (படுக்கவைக்கும் யோகம்) 

அரிஷ்ட யோகம்
(படுக்கவைக்கும் யோகம்)

நாமாகப் படுத்தால் அதற்கு அர்த்தம் வேறு. வேறு யாராவது அல்லது வேறு ஏதாவது சூழ்நிலையில் நாம் படுக்க நேர்ந்தால் அதன் பொருள் வேறு.

நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நம்மைப் படுக்க வைக்கும் யோகங்கள் உள்ளன. அவற்றைப் பற்றிய பாடம் கீழே உள்ளது.

இவைகள் பொது விதிகள். தனிப்பட்டவர்களின் ஜாதகங்களுக்கு, சுபக்கிரகங்களின் அமைப்பை வைத்துப் பலன்கள் மாறுபடும். ஆகவே அவசரப்பட்டு முடிவிற்கு வராதீர்கள். அதேபோல ஹோம் ஒர்க் நோட்டு புத்தகத்தைத் தூக்கிக் கொண்டு வந்து, என்னுடைய ஜாதகத்தை வைத்து இதற்கு விளக்கத்தை எழுதிக்கொடுங்கள் சார் என்று யாரும் கேட்காதீர்கள். உங்களுக்கு நீங்களே
பாருங்கள். இவை எல்லாம் மேல் நிலைப் பாடங்கள். அதை நினைவில் வையுங்கள்!
----------------------------------------------------------
அரிஷ்ட என்பது வடமொழிச்சொல். அது தீங்கு (evil) என்று பொருள்படும்.

அரிஷ்டயோகம் என்பது தீங்கை விளைவிக்கக்கூடிய தன்மையையுடைய யோகம் என்று பொருள்படும். அதேபோல ஆபத்தானது என்றும் பொருள் படும்.

உதாரணத்திற்குப் ‘பாலஅரிஷ்டம்’ என்பது பால + அரிஷ்ட = குழந்தைக்கு ஆபத்தை விளவிக்கக்கூடிய என்று பொருள்படும்
+++++++++++++++++++++++++++++++++++++++++
அரிஷ்ட யோகம் 1
(அவயோகம்தான்)
தீங்கை விளைவிக்கக்கூடிய கிரக அமைப்பு!

1
லக்கின அதிபதி, 6, 8, அல்லது 12ஆம் அதிபதிகள் எவரேனும் ஒருவருடன் கூட்டணி போட்டிருந்தாலும் அல்லது பார்வையில் இருக்க நேர்ந்தாலும், ஜாதகனுக்கு இந்த யோகம் உண்டு.

பலன்: ஜாதகன் தன்னுடைய உடல் ஆரோக்கியம் கெட்டு அவதிப்படுவான்.

Arishta Yoga:
The Lagna lord is in conjunction or mutual aspect with the 6th, or the 8th, or the 12th house lords (If the lords of the 2nd and 7th houses are involved the effects are more severe).

Result : The person will suffer from bad health (the planets that constitute this Yoga will give more specific information)
-----------------------------------------------------------------
2.
எட்டாம் வீட்டு அதிபதி 12ஆம் வீட்டுக்காரனுடன் கூட்டணி போட்டிருந்தாலும் அல்லது அவனுடைய பார்வையைப் பெற்றிருந்தாலும், ஜாதகனுக்கு இந்த யோகம் உண்டு.

பலன்: ஜாதகன் தன்னுடைய உடல் ஆரோக்கியம் கெட்டு அவதிப்படுவான்.

Arishta Yoga The 8th house lord is conjunct or in mutual aspect with the lord of the 12th house lord (If the lords of the 2nd and 7th houses are involved the effects are more severe).

Result : The person will suffer from bad health (the planets that constitute this Yoga will give more specific information).
--------------------------------------------------
அன்புடன்,
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!