மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

27.12.11

Star Postings by VaaththiyarStar Postings by Vaaththiyar


ஹீப்ளியில் ராணி சென்னம்மாவின் சிலை முன்பாக வாத்தியார். கர்நாடகாவின் நட்சத்திரப் பெண்மணி அவர்! அவரைப் பற்றிய கட்டுரை படங்களுடன் பின்பு வெளியாகும்!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எதைப் படிக்கலாம்?

பல்சுவை வலைப்பதிவைத் திறந்துவிட்டுள்ளேன். அதில் மொத்தம் 424 பதிவுகள் உள்ளன. எதை எதை முதலில் படிக்கலாம் என்ற குழப்பம் வரலாம். அதைத் தவிர்ப்பதற்கு நானே உங்களுக்கு வழிகாட்டி உதவ முன் வந்துள்ளேன்.

தமிழ்மண (வலைப்பதிவர்களின் ஒருங்கிணைப்புத் தளம்) அமைப்பாளர்கள் என்னை நட்சத்திரப்பதிவராகத் தேர்ந்தெடுத்து ஒரு வாரம் என்னைப் பதிவுகள் எழுதப் பணித்தார்கள். நானும் ஒப்புக்கொண்டு 24.03.2008 முதல் 30.03.2008 வரை அந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டேன். நடத்திரப்பதிவரின் பதிவுகள், அதாவது அந்த வாரம் அவர் எழுதும் ஆக்கங்கள் அனைத்தும் அவருடைய புகைப்படத்துடன் முகப்பின் தலைப் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும். பலவாசகர்களின் அறிமுகம் கிடைக்கும்.அதன் மூலம் ஒரு பதிவருக்கு நல்ல விளம்பரம் கிடைக்கும்.

சாதரணமாக அப்படி வரும் பதிவர்கள் 10 முதல் 15 பதிவுகள் வரை எழுதிப் பதிவிடுவார்கள். அடியேன் உற்சகத்துடன் 33 பதிவுகளை எழுதிப் பதிவிட்டேன். அவை அனைத்துமே சுவையாக இருக்கும். அத்துடன் விதம் விதமாகவும் இருக்கும். அவற்றை நீங்களும் படித்துமகிழ அவற்றிற்கான சுட்டிகளைக் கீழே கொடுத்துள்ளேன். அனைவரையும் படித்து மகிழ வேண்டுகிறேன்

அவைகள் சுமார் 3 ஆண்டுகள் 9 மாதங்களுக்கு முன்பு வெளிவந்தவை என்பதை மனதில் கொள்ளுங்கள்!

அன்புடன்
வாத்தியார்
Camp: Hubli
27.12.2011
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அந்த நட்சத்திரப் பதிவுகளுக்கான சுட்டிகள் (URL Links):
1
தமிழ்மணத்தை வாழ்த்தி ஒரு பாடல்
http://devakottai.blogspot.com/2008/03/star-posting.html

2
நட்சத்திரப்பதிவுகள் - ஒரு சிறு குறிப்பு
http://devakottai.blogspot.com/2008/03/blog-post_5220.html

3
இறைவணக்கம்
http://devakottai.blogspot.com/2008/03/blog-post_24.html

4
கவிஞர் வாலி
http://devakottai.blogspot.com/2008/03/star-posting_24.html

5
கர்மவீரர் காமராஜர்
http://devakottai.blogspot.com/2008/03/star-posting_6298.html

6
அறிஞர் அண்ணா
http://devakottai.blogspot.com/2008/03/star-posting_25.html
7
எடிட்டர் எஸ்.ஏ.பி. அண்ணாமலை
http://devakottai.blogspot.com/2008/03/star-posting_6936.html

8
பேராசிரியர் கல்கி
http://devakottai.blogspot.com/2008/03/star-posting_8939.html

9
செட்டிநாட்டு வீடுகள்
http://devakottai.blogspot.com/2008/03/star-posting_26.html

10
பதிவர் ரத்னா விருது
http://devakottai.blogspot.com/2008/03/star-posting_5502.html

11
தமிழ்நாட்டையே அசத்திய ஜோடி
http://devakottai.blogspot.com/2008/03/star-posting_8851.html

12
பதிவர்ரத்னா விருது - பகுதி 2
http://devakottai.blogspot.com/2008/03/star-posting-2.html

13
அசத்தலான வரைபடங்கள் (ஓவியர் ஜெயராஜ்)
http://devakottai.blogspot.com/2008/03/star-posting_27.html

14
பட்டினத்தார்
http://devakottai.blogspot.com/2008/03/star-posting_5939.html

15
உறவிற்கு இல்லை சட்டம் - சிறுகதை
http://devakottai.blogspot.com/2008/03/star-posting-short-story.html

16
அதுவும் பேதமைதான் - புதுக்கவிதை
http://devakottai.blogspot.com/2008/03/star-posting_4480.html

17
அழகு தமிழ் மறந்ததேன்? -  புதுக்கவிதை
http://devakottai.blogspot.com/2008/03/star-posting_3792.html

18
வாரியார் சுவாமிகள்
http://devakottai.blogspot.com/2008/03/star-posting_28.html

19
காஃப்பி இல்லாத மீட்டிங்கா?
http://devakottai.blogspot.com/2008/03/star-posting_6542.html

20
எழுத்தாளர் சுஜாதா
http://devakottai.blogspot.com/2008/03/star-posting_1977.html

21
கவியரசர் கண்ணதான்
http://devakottai.blogspot.com/2008/03/star-posting_3721.html

22
20 x 20 Matches Post one
http://devakottai.blogspot.com/2008/03/star-posting-twenty-x-twenty-matches.html

23
நிலவு எப்போது அமுதாகப் பொழியும்?
http://devakottai.blogspot.com/2008/03/star-posting_29.html

24
கவிஞர் வைரமுத்து
http://devakottai.blogspot.com/2008/03/star-posting_9268.html

25
சாத்தான் குளத்தில் சடுகுடு
http://devakottai.blogspot.com/2008/03/star-posting_9125.html

26
கலைஞர் மு.கருணாநிதி
http://devakottai.blogspot.com/2008/03/star-posting_6853.html

27
அப்புசாமி சீதாப்பாட்டி
http://devakottai.blogspot.com/2008/03/star-posting_1369.html

28
எழுத்தாளர் பாலகுமாரன்
http://devakottai.blogspot.com/2008/03/star-posting_7709.html

29
கலியுகத்தின் முதல் தீர்ப்பு - சிறுகதை
http://devakottai.blogspot.com/2008/03/star-posting_30.html

30
நடிகர் ஜே.பி.சந்திரபாபு
http://devakottai.blogspot.com/2008/03/star-posting_910.html

31
தடக் தடக் கதைகள்
http://devakottai.blogspot.com/2008/03/star-posting_8336.html

32
விடுபட்டவை
http://devakottai.blogspot.com/2008/03/star-posting_4659.html

33
மீண்டும் சந்திப்போம்
http://devakottai.blogspot.com/2008/03/star-posting_2253.html

பதிவில் எழுதுவதால் கிடைக்கும் நன்மைகள்
http://devakottai.blogspot.com/2008/04/blog-post_02.html
+++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

25.12.11

எதில் சந்தோஷம்?


 மாணவக் கண்மணிகள், வாசகர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் வாத்தியாரின் மனமுவந்த கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மாணவர் மலர்

இன்றைய மாணவ மலரை 5 ஆக்கங்கள் அலங்கரிக்கின்றன! படித்து மகிழுங்கள்
அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++
எதில்  சந்தோஷம்?

ஆக்கம்: எஸ்.சந்திரசேகரன், பென்சில்வேனியா, யு.எஸ்.ஏ

எல்லா மனிதர்களும் விரும்புவது சந்தோஷமே .அந்த சந்தோஷத்தை அடைவதற்கு பல வழி முறைகளை முயற்சி செய்து பார்க்கிறான். ஆனால், முழு பலன் தான் கிடைக்க மாட்டேன்கிறது .என்ன செய்வது?. என்று மகள் உமா தன்னுடைய தந்தையை பார்த்து கேட்க,  தந்தை தனக்கே உரிய வழக்கமான புன்னகையுடன் பதில் கூற ஆரம்பித்துவிட்டார்.

"என்  செல்வமே  உமா!~நீ, எதை சந்தோஷம் என்று கூறுகிறாய்?

"அப்பா, ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு சந்தோஷம். மனிதனுக்கு மனிதன்  சந்தோஷம் மாறுபடும். எதை என்று கூறுவது ". என்று உமா பதில் கூறினாள்.

"எப்பொழுதும்  போல குழப்பமான பதில் சொல்வது என்று தீர்மானம் பண்ணிவிட்டாய். நேரடியாக என்றைக்கு பதில் கூறியுள்ளாய்? சரி  போகட்டும் . நானே விளக்குகிறேன்", என்று தந்தை முடிவு எடுத்து பதில் கூறுவதற்கு முன் மகளின் முகத்தை பார்த்தார்.

நக்கலான  நமட்டு  சிரிப்பு சிரிக்கும் மகளின் முகத்தை பார்த்ததும் உள்ளுக்குள் பொய் கோபம் வந்தாலும் வெளியில் காட்டிகொள்ளாமல்  அதை அடக்கிகொண்டு மேலும் கூற ஆரம்பித்தார்.

சந்தோஷம், துக்கம் அகிய இரண்டுமே நம் எண்ணத்தில்தான் உள்ளது. அது  கடையில் வாங்க கூடிய பொருள் அல்ல. அது இரண்டுமே நாம் செய்யும் நடவடிக்கைகளின் பலன்.  ஒரு செய்கைக்கு காரணம் நம்முடைய எண்ணம்.  நம் எண்ணத்தில் உருவாவதற்கு காரணம் சுற்றுப்புறமும், சூழ்நிலையும்,நம்முடைய ஐம்புலன்களும் தான்.  இதில் ஐம்புலன்களை மட்டும் தான் நம்மால் கட்டு படுத்தமுடியும். அதுதான் கடினமானது .
ஒரு வேலை செய்யும் பொழுது முழுவதுமாக சிந்திக்காமல், அந்த வேலையை அரைகுறையாக செய்துவிட்டு , பலனை அடையும் பொழுது  நாம்  சிந்திக்கிறோம். மகளே, கீதையில்  கூறியுள்ளபடி  நான் உனக்கு மேலும் விளக்குகிறேன் . "த்ருஷ்ட்டம், அதிருஷ்ட்டம், துர்திருஷ்ட்டம்," என்று மூன்று  வகை உண்டு. த்ருஷ்ட்டம் - (Visible- both actions & results) , அதிருஷ்ட்டம் - ( Invisible - either actions or results will be invisible),  துர்திருஷ்ட்டம் - (Invisible - either bad actions or bad results will be invisible)  த்ருஷ்ட்டம் என்றால் நாம் செய்கின்ற வேலையும் அதன் பலனும் காலதாமதமின்றி கிடைக்கபெறுவது. உதாரணமாக, முப்பது நாட்கள் ஆபீஸ் வேலைக்கு சென்று முதல் தேதி அன்று சம்பளம் வாங்குகிறோமே அதுதான் த்ருஷ்ட்டம். அதிருஷ்டம் என்றால், பலனை எதிர்பார்க்காமல் மற்றவர்களுக்காக ஒரு செய்கின்ற வேலை, அதனால் ஏற்படுகின்ற பலன், காலதாமத்தினால் ஒரு இன்ப அதிர்ச்சியை கொடுக்கும். அந்தப்பலன் கிடைக்கும் காலத்தை தீர்மானம் செய்வது இறைவன் மட்டுமே. இந்தப் பிறவியில் கிடைக்கலாம் அல்லது அடுத்த பிறவியில் கிடைக்கலாம். அதனால், நாம் செய்கின்ற செயல் தான் முக்கியம்.  அன்னதானம் வழங்குவது , அநாதை குழந்தைகளுக்கு அடிப்படைவசதி செய்து கொடுப்பது ,  வயதான முதியோர்களுக்கு உதவுவது போன்ற செயல்களைச் தொடர்ந்து செய்து கொண்டு இருக்கவேண்டும். அதனால் தான் நம்முடைய முன்னோர்கள் எப்பொழுதும்  தானம், தர்மம்  செய்து கொண்டு இருக்கவேண்டும் என்று கூறினார்கள். அதைத்தான் அன்று  "தர்மம் தலை காக்கும் " என்று கூறினார்கள்.  செய்த தர்மம் ஆபத்தான காலத்தில் வந்து உதவி செய்யும். தக்க சமயத்தில் உயிரையும் காக்கும்.

“அப்பா, " தானம்,  தர்மம்  இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் என்ன?."  என்று உமா கேட்டாள்.

“சரியாகக் கேள்வி கேட்டாய், மகளே! என்று பதில் சொல்லிவிட்டு மேற்கொண்டு தொடந்தார். தானம் என்பது ஒருவர் கேட்டு நாம் கொடுப்பது.  இல்லை என்று சொல்லாமல் உடனே அந்த நேரத்தில் கொடுப்பது. தர்மம் என்பது  ஒருவருடைய தேவையை உணர்ந்து நாமாக தொடர்ந்து செய்து கொண்டு வருவது. கோவில்களுக்கு தேவையான பொருள்களை கொடுப்பது,  ஏழை குழந்தைகளுக்கு பாட புத்தங்கங்களை வழங்குவது,  அன்னதானம் செய்பவர்களுக்கு தேவையானதை கொடுப்பது போன்ற பல செயல்களைச் செய்வது. இதுதான் உண்மையான சந்தோஷம். தானம், தர்மம் செய்வதும் மனிதனுடைய கடமை என்று  ஸ்முருதி என்ற வடநாட்டு நூல் கூறுகிறது. (ஸ்முருதி - மனிதனுடைய வாழ்க்கை முறையை விவரித்து கூறுவது) முதல் முதலில் கற்காலம் என்று சொல்வார்களே, ஒரு மனிதன் ஒரு மனிதனை சந்தித்த முதல் சந்திப்பில் மனிதன் பயந்தான்.  அந்த பயத்தை போக்குவதற்கு தன்னிடம் உள்ள உணவை கொடுத்து அன்பை பெற்றுகொண்டான் என்று சரித்திர நூல் கூறுகிறது.முதல் தர்மம் எப்பொழுது உருவானது என்று கேள்வி கேட்டால் இதை நாம் உதாரனமாக எடுத்து கொள்ளலாம்.        உண்மை என்ன வென்றால் பேச்சும், மொழியும் உருவாவதற்கு முன்னால் தானம், தர்மம் உருவானது என்று கூறுவார்கள். காலப்போக்கில்,  இந்த தானம், தர்மம் வியாபாரமாக மாறிவிட்டதற்கு நாம் கட்டாயம் வருந்த வேண்டும். இப்பொழுதும் தானம், தர்மம் சிறப்பாகத்தான் நடந்துகொண்டு இருக்கிறது. வாத்தியார் காசிக்கு சென்று அங்கு நெடு நாட்களாக நடந்துகொண்டு இருக்கின்ற தர்மச் செயல்களை போட்டோ முலம் நமக்கு காண்பித்தார். தென்நாட்டில் இருந்து வட நாட்டிற்கு சென்று துவங்கிய தர்மம், வடநாட்டில் சிறப்பாக நடந்து கொண்டு இருக்கிறது என்பதற்கு சிறந்த உதாரணம் வேறு எதுவாக இருக்கமுடியும்? துர்திருஷ்ட்டம் என்றால் நாம் செய்கின்ற தவறான வேலை, அதனுடைய பலன் நமக்கு காலதாமதமாகி,  நமக்கு  எதிரானதாக அமையும்.  ஜாதகத்தில் ராகுவும் , சனியும், அந்த தசை வரும் பொழுது  பூர்வ கர்மபலன் சரியில்லை என்றால்  ஜாதகனை தொங்கவிட்டு அடிப்பார்கள் என்று வாத்தியார் பாடத்தில் கூறினார்களே , இதற்கு பெயர் தான்  துர்திருஷ்ட்டம்.  இங்கு " தவறான" என்ற சொல்லுக்கு மற்றவர்களுக்கு வேதனை தரக்கூடிய செயல் செய்வது என்று பொருள் கொள்ள வேண்டும்” என்று மகளுக்குத்  தந்தை கூறிமுடித்தார்.
                                                                                    
அப்பா என்றால் அப்பா தான் என்று தந்தைக்கு ஐஸ் வைக்க முயற்சி செய்தாள் உமா.அதற்குள் அம்மாவிடமிருந்து குரல் வந்தது , உமா அப்பாவை அழைத்துக்கொண்டு சாப்பிட வா.

ஆக்கம்: எஸ்.சந்திரசேகரன், பென்சில்வேனியா, யு.எஸ்.ஏ
Csekar2930

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சின்ன வயதில் படித்த கதை!

அறிவுரைகள் நன்மை தருபவை.  தீய செயலுக்குத் தூண்டும் ஆலோசனைகளுக்கு அறிவுரைகள் என்ற தகுதியை நாம் வழங்குவதில்லை.  கூனி, சகுனி ஆகியோர்  கூறியவற்றை, அந்த ஆலோசனைகளை, உலக மக்கள் போற்றபடவேண்டிய நல்ல அறிவுரைகள் என நம் முன்னோர்கள் நமக்கு போதித்ததில்லை.  அறிவுரைகளைப் பலரும் கொடுத்தவண்ணமே இருப்பார்கள்.  அது மிகவும் சுலபம், அறிவுரைகளை கடைபிடிப்பதே சிரமம்.  அறிவுரை கொடுப்பவர்களே அதைக் கடைபிடிக்க மறந்தும் விடுவார்கள்.  “சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்”, என்கிறது திருக்குறள்.  அனைத்து அறிவுரைகளுமே மறுக்கமுடியாத (கசப்பான) உண்மைகள்.  அவை மருத்துக்கு சமம்.  அதனால் அறிவுரைகளை மருந்தை தேனில் குழைத்துக் கொடுப்பதுபோல் கொடுக்கவேண்டும்.

- பேசும்பொழுது எல்லோருக்கும் பிடிக்கும் விதமாக, எல்லோரையும் திருப்தி படுத்தும் விதமாகப் பேசமுடியாது என்பது ஒரு அடிப்படை விதியினைப் போன்றது.  எந்த ஒரு உள்நோக்கமும் இல்லாமல், பொதுவாக பேசும் சொற்கள் என நாம் நினைப்பவைகூட எதிர்பாராதவிதமாக ஒரு சிலருக்கு மனவருத்தத்தைக் கொடுத்துவிடக்கூடும்.- ஒருவரின் வெளித்தோற்றத்தை வைத்து அவர்களை நல்லவர் என்றோ அல்லது கெட்டவர் என்றோ ஒரு முடிவுக்கு நாம் வரக்கூடாது. - எக்காரணத்தைக் கொண்டும் பெற்றோர்களிடம் உண்மையை மறைக்கக் கூடாது.

இப்படிப் பல அறிவுரைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.  ஆனால் அவை என்றும் நினைவில் நிற்பதுபோல் சொல்வது எப்படி?  ஒரு உதாரணத்துடன் சொன்னால் நினைவில் தங்கும்.  பெரும்பாலும் நன்னெறிகள் நமக்கு கதைகளின் வழியே போதிக்கப்படும் -தேனில் குழைத்துக் கொடுக்கும் மருந்து போல.  அதன் காரணம் அறிவுரைகளைவிட கதைகள் மனதில் நீண்ட நாட்கள் நிலைத்திருக்கும்.  நம் நாடு கதைகேட்டு கதைகேட்டு வளர்ந்த நாடு.  வளரும்பொழுது  தன் தாய் சொன்ன கதைகளைக் கேட்டவர்கள் மகாத்மாக்களாக, மாவீரர்களாக உருவெடுத்த வரலாற்றை நாமும் சிறுவயதிலேயே படித்திருக்கிறோம்.

பாட்டி வடை சுட்ட கதையில் ஆரம்பித்து நம் அனைவருக்கும் சிறுவயதில் படித்த அல்லது கேட்ட எத்தனையோ கதைகளில் ஒரு சில கதைகள் மற்ற கதைகளைவிடவும் மிகவும் பிடித்துவிடும்.  இன்றுவரை நினைவில் பசுமையாக இருக்கும்.  அதை நம் குழந்தைகளிடம், நண்பர்களிடமும் பகிர்ந்துகொள்வதும் வழக்கம்.  அதுபோல நான் படித்த சிறுவயது கதைகளில் எனக்கு பிடித்த ஒன்றை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விருப்பம்.

சோவியத் ரஷ்யாவின் பதிப்பகம் வெளியிட்ட சிறுவர்களுக்கான புத்தகங்களில் ஒன்றின் தலைப்பு "மறைந்த தந்தி".  தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட இந்தக் கதையின் புத்தகம், சாம்பல் வண்ண அட்டையில் பச்சை வண்ணப்  பைன் மரங்களும், பொழியும் வெள்ளைப் பனியும் படமாக சித்தரிக்கப்பட்டு உள்ளேயும் பல சித்திரங்களுடன் இருக்கும்.  மாஸ்கோவில் தன் தாயுடன் வசித்த  "சுக்" "கெக்" என்ற இரு சிறுவர்களைப் பற்றிய கதை இது.  என் பள்ளி நூலகத்தில் இருந்து படிப்பதற்காக நான் கொண்டுவந்த இந்தக் கதைப்புத்தகம் என் தம்பிக்கும் தங்கைக்கும் மிகவும் பிடித்துவிட்டது.  சிலநாட்கள் கழித்து ஊருக்கு வந்த சோவியத் ரஷ்யா புத்தகக் கண்காட்சியில் அந்த புத்தகமும் இருந்ததது.  அம்மாவிடம் கேட்டு வாங்கிகொண்டு வந்துவிட்டேன்.  எத்தனையோ முறை திரும்ப திரும்ப படித்து ஒரு காலத்தில் எனக்கும் என் தம்பி தங்கைக்கும் கதையின் வரிகள்கூட மனப்பாடமாகிவிட்டது.  வீட்டிற்கு சென்றால் புத்தக அலமாரியில் தேடி மீண்டும் படிக்க வேண்டும் என்று நினைத்தாலும் மறந்துவிடுகிறேன்.  கதையின் சாரத்தை என் நினைவிலிருந்து கீழே கொடுத்துள்ளேன்.

------------------------
மறைந்த தந்தி
------------------------

மாஸ்கோவில் வசிக்கும் ஒரு சிறு குடும்பம், அதில் உள்ளவர்கள் சிறுவர்கள் சுக், கெக் மற்றும் இவர்களின் பெற்றோர்கள்.  அப்பா சைபீரியாக் காட்டில், பனிப் பிரதேசத்தில், தொலை தூரத்தில் உள்ள ஊருக்கு ஏதோ ஒரு வேலை காரணமாகப் போய் விடுவார்.  வரும் கிறிஸ்த்மஸ்கு அப்பாவைப் போய் பார்த்து அவருடன் கொண்டாடலாம் என்று திட்டம் போடுவார்கள்.  அம்மா சிறுவர்களை வீட்டில் விட்டுவிட்டு ரயில் பயணச் சீட்டு வாங்க சென்றுவிடுவாள்.  சிறுவர்கள் அம்மாவுக்கு சற்றும் பிடிக்காத சண்டையில் இறங்கி ஒருவரை  ஒருவர் அடித்துக் கொள்வார்கள்.  அப்பொழுது வீட்டிற்கு தபால் வரும்.  அதை வாங்கி கையில் வைத்துக்கொண்டு மீண்டு சண்டையைத் தொடர்வார்கள்.  ஒருவர் பொருளை ஒருவர் ஜன்னல் வழியே வீசியெறிய, வந்த தந்தியும் வெளியே பனிக்குவியலில் விழுந்து காணமல் போய்விடும்.

சிறுவர்கள் எவ்வளவு தேடியும் தந்தி கிடைக்காது.  பயம் பிடித்துக்கொள்ள அம்மாவிடம் என்ன சொல்வது என யோசிப்பார்கள்.  உண்மையைச் சொன்னால் தண்டனை கிடைக்கும் என்பதால் உண்மையைச் சொல்லவேண்டாம் என்று முடிவெடுப்பார்கள்.  அம்மாவிடம் பொய்யும் சொல்லக்கூடாதே. அதனால் அம்மா வீட்டிற்கு வந்ததும் இன்று கடிதம் ஏதும் வந்ததா என்று கேட்டால் சொல்லலாம், கேட்காவிட்டால் பேசாமல் இருந்துவிடலாம் என்று முடிவுக்கு வருவார்கள்.  அப்படி செய்வது பொய் சொல்வதாகாது என்பது அவர்கள் எண்ணம்.  பயணச்சீட்டுடன், மேலே உள்ள சால்வையில் உள்ள பனித்துளிகளை நீக்கியவாறு வீட்டின் உள்ளே வரும் அம்மா, குழந்தைகள் நல்ல பிள்ளைகளாக அமைதியாய் இருப்பதைப் பார்த்தும், கணவருடன் கிறிஸ்த்மஸ் கொண்டாடட்டும் உற்சாகத்திலும் ஏதும் கேட்கமாட்டாள்.

பயணநாளில் புறப்பட்டு, நெடுந்தூரம் ரயிலில் பயணம் செய்து, ஆள் அரவமற்ற, அத்துவானக் காட்டில் எங்கும் பனியைத்தவிர வேறு எதுவும் இல்லாத அப்பாவின் ஊருக்கு வந்து சேருவார்கள்.  அப்பாவின் இருப்பிடத்தில் யாரும் இல்லாமல் அந்த இடத்தின் காவல்காரர் மட்டுமே  இருப்பார்.  இவர்களைப் பார்த்து அதிர்ச்சியும் ஆச்சரியமுமாக ஏன் வந்தீர்கள், இங்கு யாரும் இல்லை என்பது உங்களுக்குத் தெரியாதா என்பார்.  அந்த ஆள் முரட்டு சுபாவத்துடன், சரியான கோபக்கார முசுடான ஆள்.

அம்மாவோ அவர் சொல்வது ஒன்றும் புரியாமல் விழிப்பாள்.  அங்கு வேலை செய்பவர்களுக்கு வேலையில் ஏதோ திடீர் மாற்றம் வந்து மேலும் தொலைவான ஒரு ஊருக்கு போய்விட நேர்ந்திருக்கும்.  அதனால், திட்டம் மாறிவிட்டது, நீங்கள்  கிறிஸ்த்மஸ்க்கு வரவேண்டாம் என அப்பா கடிதம் எழுதி காவல்காரரிடம் கொடுத்து தபாலில் சேர்க்க சொல்லியிருப்பார்.  காவல்காரர் அம்மாவிடம், நீங்கள் வரத் தேவையில்லை என்று சொல்லப்பட்ட கடிதத்தை நான்தான் தபாலில் சேர்த்தேன் உங்களுக்கு கிடைக்கவில்லை, ஏன் வந்தீர்கள், எதற்காக வந்தீர்கள் என அதட்டுவார்.

அம்மாவிற்கு உண்மை புரிய வெகு நேரம் ஆகாது.  "ஏண்டா, படுபாவிகளா என்னடா செய்தீர்கள் அந்தக் கடிதத்தை?" என்று சிறுவர்களைப் பார்த்து கத்துவாள்.  பையன்கள் வெட்கமிலாமல் ஒருவர் மீது ஒருவர் பழிபோட்டு, கோள் சொல்லி அழுவார்கள்.  யாருக்கும் என்ன செய்வது எனப் புரியாது.  திரும்பிப் போவதும் நடக்கும் காரியமில்லை.  காவல்காரர் அழும் இரு சிறுவர்களையும் நோட்டமிடுவார்.  இந்த புஸு புஸுவென இருக்கும் பையன் அவன் அப்பாவின் சாயலில் இருக்கிறான் என்பார்.  இதைக் கேட்ட இரு சிறுவர்களுமே வருத்தப் படுவார்கள்.  ஒருவன் தன்னை புஸு புஸுவென குண்டாக இருப்பதாக சொன்னதற்கு வருந்துவான், மற்றொருவன் தனக்கு அப்பாவின் சாயல் இல்லை என்று சொன்னதற்காக வருந்துவான்.

காவல்காரர் தன் வீட்டில் அவர்கள் தங்குவதற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்துவிட்டு, உங்களால் முடிந்தவரை காலத்தை ஓட்டுங்கள், உங்களுக்குப் பணிவிடை செய்ய எனக்கு நேரமுமில்லை, அதற்கு அவசியமும் இல்லை என்று கடுப்புடன் சொல்லிவிட்டு, குளிரிலும், பனியிலும் அவர்கள் மூவரையும் தனியே தவிக்க விட்டுவிட்டு தன் பனிச்சறுக்கு வண்டியில் கிளம்பிப் போய்விடுவார்.  அம்மாவும் பிள்ளைகளும் தனிமையில் கிறிஸ்த்மஸ் கொண்டாடுவார்கள்.  புத்தாண்டு ஆரம்பிப்பதற்கு முதல்நாள் வெளியில் ஒரே சத்தமாக, கூச்சலும் குழப்பமுமாக இருக்கும்.  அம்மாவும் பிள்ளைகளும் வெளியில் ஓடிப்போய்ப் பார்த்தால் காவல்காரரும், அப்பாவும், அவர் தோழர்களும் பனிச்சறுக்கு வண்டியில் வருவார்கள்.

முசுடான காவல்காரர்தான் அந்தக் கடுமையான பனிப்பொழிவில் அவ்வளவு தூரம் பயணம் செய்து, அப்பாவிடம் போய் நடந்ததைக் கூறி, அவரையும் அவர் குழுவினரையும் கையோடு அழைத்து வந்திருப்பார்.  ஆனால், இப்பொழுது வந்த பிறகோ அவர் இல்லாத நேரத்தில் அவர் வீட்டை அம்மாவும் பிள்ளைகளும் களேபரம் செய்துவிட்டார்கள் எனக் கோபத்துடன் முணுமுணுத்த வண்ணம் இருப்பார்.  அந்தக் கோபக்கார முசுடர் தனக்காக செய்த உதவியை நினைத்து அம்மா கண்களில் நன்றியுடனும், கண்ணீருடனும் அவரை அணைத்துக் கொள்வாள்.

சிறுவர்கள் இருவரும் அப்பாவின் ஆளுக்கொரு காலாக ஏறி, அவர் தோளில் தொங்கியவாறு உற்சாகத்துடன் விளையாடுவார்கள்.  அன்று இரவு புத்தாண்டு ஆரம்பிக்கும் பொழுது மாஸ்கோவின் தேவாலய மணியோசையை வானொலியில் ஒலிபரப்புவதைக் கேட்டவாறு அனைவரும் மகிழ்ச்சியுடன் புத்தாண்டைக் கொண்டாடுவார்கள்.
- ஆக்கம் தேமொழி
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஏன்  கரைகிறது எனது உயிர்?   

 காதல் வளர்த்த தேவியே!
என்மதி கொஞ்சிய  மதியே!- இன்று
விதிமுடித்து  வந்தாயோ?
விடைபெற வந்தாயோ ?

செந்தாமரை போல் சிரித்த
உன்சிவந்தமுகம்
காய்ந்து  கல்லாய் கருத்திருப்பது ஏன்?

மீன்போல் பவனித்த
உன் கண்கள்
மீனற்ற குளமாய் கலங்குவது  ஏன்?.

யாழ்போல் இசைந்த
உன்குரல்
நரம்பறுந்து உடைந்து போனது ஏன்?.

மது ரசம் பொழிந்த
உன் உதடுகள்
புதுவிஷம் கொட்டி புண்ணாகி போனது  ஏன்?

கைதட்டி   விளையாடிய
உன் வளைகரங்கள்
கைகட்டி விலங்கு பூட்டி நிற்பது ஏன்?

நாட்டியமாய் நடந்து வந்த
உன் கால்கள்
வாதம் கொண்டு வளைந்து நிற்பது ஏன்?

ஒய்யார நளினங்கள் நிறைந்த
உன் மேனி
கூனி  குருகி சருகாய் சாய்ந்திருப்பது ஏன்?

புள்ளி மான்போல்
துள்ளி வந்த நீ
வேடனிடம் வீழ்ந்ததுபோல் மருள்வது ஏன்?.

மனமுவந்து  அணிந்த
என் கொலுசுகளை  விலக்கியே
விருப்பமில்லா  புதுமெட்டிகள்  போட்டதாலா?

உயிர்நீயே  என்றுரைத்த
என்னுயிரே - இன்று
உயிரற்று வந்தாயோ
உயிரின்றி  நிற்கும் எனைப்பார்க்க.
---தனுசுராசிக்காரன்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

ராஜாஜி என்ற மாமனிதர்!

இன்று கிறிஸ்துமஸ் நன்னாள். சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியாரின் நினைவு தினமும் இன்று. இந்தத் தலைமுறையினருக்கு அறிமுகமாகாத ஒரு தலைவர் அவர். அவரை அந்தக் காலத்தில் 'ராஜாஜி' என்று அழைப்பார்கள்.

அவருடைய வாழ்க்கைச் சுருக்கத்தைக் கேட்டால் விக்கிப்பீடியா அளிக்கும். அல்லது நமது தஞ்சைப் பெரியவரின் வலைப்பூவில் வாழ்க்கைச் சுருக்கத்தைக்
காணலாம்.

http://en.wikipedia.org/wiki/C._Rajagopalachari
http://www.bharathipayilagam.blogspot.com

குலக்கல்வித் திட்டத்தைப் புகுத்தி  பிராமணர்களின் மேட்டிமைத் தனத்தை நாட்டில் புகுத்தப் பார்த்தார் என்ற அவப்பெயர் அவர் மீது சுமத்தப்பட்டு
ஓரங்கட்டப் பட்டவர்.

Please read the draft resolution here and find there was no such
attempt to reintroduce Varna System

http://www.education.nic.in/cd50years/g/12/28/12280V01.htm
http://www.education.nic.in/cd50years/g/12/28/12281301.htm
ஆனால் அவர் த‌ன் 94 வயதுவரை அரசியலின் மையத்தில் இருந்து மக்களாட்ச்சிக்குத் தொண்டாற்றி விட்டே போனார்.(1878=1972)

புகழுக்காக, கும்பலின் கைத்தட்டலுக்காகப் பேசாத ஒரே தலைவர். கசப்பு மருந்தை நோயாளியின் வாயை முரட்டுத்தனமாகத் திறந்து ஊற்றும் வைத்தியர் போன்றவர். ஆங்கிலத்தில் 'சாரிஸ்மா' என்று சொல்லப்படும் கவர்ச்சி சற்றும் இல்லாத தலைவர்.

ஒருமுறை இந்தியா டுடேயில் எழுத்தாளர் அசோகமித்திரனின் 1700 பக்கக் கட்டுரைகளின் தொகுப்பு நூலின் விமர்சனக் கட்டுரையில் திரு பி ஏ கிருஷ்ணன் என்பவர் இவ்வாறு கூறியிருந்தார்:

"இவற்றில் எனக்கு மிகப் பிடித்தது ராஜாஜி சினிமாவிற்குப் போனார் (பக்கம் 690-700, தொகுதி 2)  என்ற கட்டுரைதான்.  கட்டுரை ராஜ் மோகன் காந்தி ராஜாஜி பற்றி எழுதிய வாழ்க்கை வரலாறு பற்றிய செய்தியுடன் தொடங்குகிறது. அதில் ராஜாஜியின் டைரிக் குறிப்புகளைப் பற்றிய செய்தி.

ஒரு குறிப்பு 'ஜெமினியின் ஔவையார் படம் பார்த்தேன்'  என்று தொடங்குகிறது. எப்படி முடிகிறது என்பதை அசோக மித்திரன் உடனே நமக்குச் சொல்வதில்லை. கட்டுரை ஜெமினியின் சம்சாரம்  படத்திற்குத் தாவுகிறது. அதன் வெற்றியைப் பற்றி சொல்லி விட்டு அடுத்த ஜெமினி படமான மூன்று பிள்ளைகள் ( ஆர். கே நாராயண் வசனம் எழுதியது!) அடைந்த தோல்வியைப் பற்றி விரிவாகப் பேசுகிறது. இந்தத் தோல்வி ஜெமினி அதிபர் வாசனை அவர் ஏழு எட்டு ஆண்டுகள் கிடப்பில் போட்டிருந்த ஔவையார் படத்தை வெளிக் கொணரத் தூண்டியது. ஔவையாருக்கு வசனம் எழுதிய பலரில் புதுமைப் பித்தனும் ஒருவர்.  ஏகப் பட்ட ரீல்கள் ஏற்கனவே எடுத்து முடித்தாகி விட்டது. படம் அப்படியே ஓடினால் ஒரு நாள் முழுவதும் ஓடும். ....  வாசனின் தீவிர முயற்சியால் படம் மனிதர்கள் பார்க்கும் அளவிற்கு சுருக்கப் பட்டது. சில காட்சிகள் சேர்க்கப் பட்டன.  படத்தின் முன்னோட்டக் காட்சிக்கு  ராஜாஜி அழைக்கப் பட்டார்.  ராஜாஜிக்கும் சினிமாவிற்கும் உள்ள உறவைப் பற்றி அசோக மித்திரன் சொல்கிறார்: ராஜாஜி போன்ற ஒரு நபரை ..அழைப்பது என்பது ..மொரார்ஜி தேசாயை சிகரட் பிடிக்கும் தம்பதியருக்கான போட்டிக்குத் தலைமை தாங்க வைப்பதைப் போன்றதாகும்.

ராஜாஜி படம் பார்த்தார். மௌனமாகப் பார்த்தார். ஒன்றும் கூறாமலே சென்று விட்டார். மறுபடியும் படம் திரைப்பட அரங்கில் ஓடிய போது டிக்கட் எடுத்துப் பார்த்தார்.  ராஜாஜி ஔவையார் படத்தை இருமுறை பார்த்தார் என்பதே செய்தியாகி விட்டது.  ஆனல் ராஜாஜி படத்தைப் பற்றி என்ன நினைத்தார்? அசோக மித்திரன் அதை கட்டுரையின் கடைசியில் சொல்கிறார்:

"ஔவையார் பார்த்தேன். டி.கே.சண்முகத்தின் நாடகம் இதைவிட நூறுபங்கு மேலானது.  இடி, மின்னல் புயல், வெள்ளம் போன்று ஸ்டாக் சீன்கள். யானைகள்
அணிவகுக்கின்றன. அட்டைக் கோட்டை விழுகிறது. ..படம் ரொம்ப சாதாரணமானது.ஆனால் இவ்வளவு பணம் செலவழித்துத் துணிச்சலாக எடுத்திருக்கும்போது ஒருவரால் எப்படி அதைக் கண்டனம் செய்ய முடியும்?"/ "

இதுதான் ராஜாஜி. எல்லாவற்றையுமே வித்தியாசமாக சிந்தித்த‌வர்.

22 வயது இளைஞனாக என் தந்தை ராஜாஜியின் திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தில் ஊழியராகச் சேர்ந்து தன் 60 வயதுவரை அங்கேயே சேவை செய்தார். அங்கே கிடைத்த சொற்ப வருமானத்தில்தான் எங்களுக்கான உணவையும்,  கல்வியையும் கொடுத்தார்.என‌வே மற்றவர்களைக் காட்டிலும் எங்கள் குடும்பம் ராஜாஜிக்குக் கடன் பட்டது. எங்களுக்கு உப்பிட்டவ‌ர் அல்லவா? உள்ளளவும் நினைக்க வேண்டாமா?

Please read here:  http://gandhiashramkrishnan.blogspot.com/

நான் முதல் முதலில் நினைவு தெரிந்து ராஜாஜியைச் சந்தித்தது என்னுடைய 10 வயதில் நடந்தது.அப்போது அவர் சேலம் சிவசாமிபுரம் விரிவாக்கத்தில் அவர் பெயராலேயே அமைந்துள்ள 'சேர்மன் ராஜகோபாலாச்சாரி சாலை'யில், டாக்டர் சுந்தரம் அவர்களின் இல்லத்தில் தங்கியிருந்தார்.அந்த வீட்டு மனை ராஜாஜி சேலத்தில் சொந்தமாக‌ வாங்கி வீடு கட்டி வாழ்ந்தது. அதனை டாக்டர் சுந்தரம் ராஜாஜியிடமிருந்து வாங்கி ஒரு பகுதியில் மருத்துவமனையும், ஒரு பகுதியில் தன் குடியிருப்புமாக மாற்றியிருந்தார். எப்போது சேல‌ம் வந்தாலும் தன்னுடந்தான் தங்க வேண்டும் என்று டாக்டர் ராஜாஜியைக் கேட்டுக் கொண்டிருந்ததை நினைவு கூர்ந்து அவருடன் ராஜாஜி தங்கியிருந்தார்.

குடும்பத்துடன் ராஜாஜியைக் காண அப்பாவுடன் சென்றோம்.கதர் சிட்டத்தால் ஆன நூல் மாலை எடுத்துச் சென்று இருந்தோம்.அதனைப் பிரித்தால் அது மீண்டும் மீண்டும் சுருண்டு கொள்ளும்.அதனை நன்கு இழுத்துப் பிடித்துக் கொண்டு கழுத்தில் அணிவிக்க வேண்டும் . சிறுவனான எனக்கு அந்த 'டெக்னிக்' தெரியவில்லை. சுருண்ட மாலையை அவர் தலை மேல் கொண்டு சென்றால் அது தலைக்குள் நுழைய மறுத்தது.தலை மீதே உட்கார்ந்து கொண்டது.

என் கன்னத்தைத் தட்டிய ராஜாஜி," மாலை போடச் சொன்னா கிரீடம் வைப்பது போலத் தலையில் வைத்துவிட்டாயே!"என்றார்.

பார்த்துக் கொண்டு இருந்த டாகடர் சுந்தரம்,"அவன் சரியாகத்தான் செய்துள்ளான். சக்ரவர்த்திக்குக் கிரீடம் சூட்டியுள்ளான்"என்றார்.

எல்லோரும் சிரித்தார்கள்.ராஜாஜி சிரிக்கவில்லை.

"எங்க தோப்பனார் பேரு சக்ரவர்த்தி ஐயங்கார்! அப்படித்தான் நான் சக்ரவர்த்தியானேன்.இப்பதான் ராஜாவெல்லாம் போயாச்சே..." என்றார் ராஜாஜி.

என் தந்தையாரைப் பார்த்து, "இன்னும் காந்தி ஆசிரமத்தில்தானே இருக்கே?" என்றார்.

அப்பா "ஆமாம் ஆமாம்! இப்போ ஆசிரமத்தின் சேலம் மெயின் டெப்பொவில் நிர்வாகியா இருக்கேன்" என்றார்.

பேசிக் கொண்டு இருந்த போதே அவருக்கு வந்து இருந்த நூல் சிட்ட மாலைகள் எல்லாவற்றையும் தன் வலக்கால் கட்டை விரலில் மாட்டிக் கொண்டு மீண்டும்
சிட்டமாக்கினார்.அம்மா தான் முறுக்கித் தருவதாக கூறிய போது 'வேண்டாம்' என்று தடுத்துத் தானே முறைப்படி முறுக்கினார்.

அன்றும் மறு நாளும் அவருக்கு சுமார் 300 சிட்ட மாலைகள் வந்திருக்கும். அவற்றை நூலின் மொத்தததினை வைத்து மெல்லியது, தடிமன் என்று நம்பர்
கணக்குப்படி பிரித்து எதை வேட்டியாக நெய்ய வேண்டும், எதை சட்டைத் துணியாக நெய்ய வேண்டும், எதை அங்கவஸ்திரமாக நெய்ய வேண்டும் என்று
தெளிவான விளக்கத்துடன் அப்பாவிடம் ஒப்படைத்தார் ராஜாஜி. எல்லோரும் வணங்கினோம். "நன்றாக இருங்கள்" என்று வாழ்த்தினார் ராஜாஜி.

குழந்தைகளை 'நன்னாப் படிக்கணும்'என்று கூறி ஆசீர்வதித்தார் பின்னர் நாங்கள் விடை பெற்றோம்.

நாங்கள் வீட்டிற்குத் திரும்பிய பின் தன்னை 'ஆசிரமத்தில்தானே இருக்கிறாய்' என்று ராஜாஜி கேட்டது தனக்கு ஒரு குட்டு என்று அப்பா சொன்னார்.

இள‌ வயதில் ஆசிரமத்தில் சேர்ந்த அப்பா அரசியலில் ராஜாஜியின் நிலைப்பாட்டை எதிர்த்துப் பேசி ஓரிரு முறை முர‌ண்பட்டு வெளியேறியிருக்கிறார். அதனை நினைவில் வைத்து அப்படி ஒரு கேள்வியைக் கேட்டதாக அப்பா விளக்கம் கொடுத்தார்.

மீண்டும் ராஜாஜியை அவர் காந்தி ஆசிரமத்திற்கு வருகை புரிந்த போது சந்தித்து உள்ளேன்.மிகவும் சூடான காப்பியைத் தன் கெட்டியான கதர் அங்க வஸ்திரத்தால் டம்பளரைச் சுற்றிப் பிடித்துக் கொண்டு அருந்துவதைப் பார்த்துள்ளேன்.அவரிடமே போய்,"தாத்தா, கை சூடு தாங்க முடியாமல் அங்க வஸ்திரத்தால் டம்பளரைப் பிடித்திருக்கிறீர்கள்.ஆனால் உங்கள் நாக்கு அந்த சூட்டைத் தாங்கிக் கொள்கிறதே!" என்று வியப்புட்ன் கேட்டுள்ளேன்.

"அதுதான் பயிற்சி என்பது நமக்குச் செய்யும் உபகாரம்" என்றார்

ஏற்கனவே "கிடைக்காமல் போன ஆங்கிலப் பேராசிரியர்" என்ற தலைப்பில் நான் வகுப்பறையில் எழுதிய ஆக்கத்தில் ராஜாஜி பற்றி இப்படி வருகிறது.

 "முத்த‌ண்ணாவின் திரும‌ண‌ நாள் அன்று மாலை மூத‌றிஞ‌ர் ராஜாஜியின் ஆசிக‌ளைப் பெற‌ அப்பா ம‌ண‌ம‌க்க‌ளைக் க‌ல்கி கார்ட‌னுக்கு அழைத்துச்
சென்றார்க‌ள்.வ‌ண‌ங்கி எழுந்த‌ அண்ண‌னைப் பார்த்து ராஜாஜி கேட்டார்:

"என்ன‌ ச‌ம்ப‌ள‌‌ம் வாங்க‌ற‌‌?"

அண்ண‌ன்: "500 ரூபா‌ய்".

ராஜாஜி :"மெட்ராஸ் ஊரில‌ இருக்க‌ற‌ விலை வாசியில‌ எப்ப‌டி குடித்த‌ன‌ம் ந‌ட‌த்துவ‌? வாட‌கைக் கொடுத்து, சாப்பாட்டுக்கு உன் ச‌ம்ப‌ள‌ம் ப‌த்தாது"

என்ன‌டா இப்ப‌டி ப‌ய‌ம் காட்டுகிறாரே என்று அண்ண‌னும் உட‌ன் சென்ற‌வ‌ர்க‌ளும் திகைத்துவிட்டார்க‌ள்.சிறிது நேர‌ மெள‌ன‌த்துக்குக்ப் பின்ன‌ர் ராஜாஜியே பேசினார்:" ந‌டைபாதை‌யில் குடும்ப‌ம் ந‌ட‌த்துப‌வ‌ர்க‌ளைப் பார்!அவ‌ர்க‌ளுக்கு ச‌ரியான‌ ஆடை, உணவு,இருப்பிட‌ம்,வ‌ச‌தி இல்லை.ஆனால் அவ‌ர்க‌ள் ஆணும் பெண்ணும் எவ்வ‌ள‌வு காத‌லுட‌ன் ப‌ழ‌குகிறார்க‌ள்! என‌வே உங்க‌ள் இருவ‌ருக்கும் இடையில் அன்பு ம‌ல‌ர‌வும் நிலைக்க‌வும்,ப‌ண‌ம், ச‌ம்ப‌ள‌ம்ஒரு த‌டையாக‌ இருக்காம‌ல் பார்த்துக் கொள்ளுங்க‌ள். காத‌லுக்குப் ப‌ண‌ம் தேவையே இல்லை."

அறிவுரை சொல்வ‌தையும் ஓர் அதிர்ச்சி வைத்திய‌ம் செய்து சொன்னார் பாருங்க‌ள், அதுதான் ராஜாஜி!

1967ல் காங்கிரசை அகில இந்திய அளவில் தோற்கடிக்க வியூகம் அமைத்தார் ராஜாஜி. தமிழகத்தில் அறிஞர் அண்ணாவுடன் கூட்டணி அமைத்து தனது சுதந்திரக் கட்சிக்காகவும், திமுக கூட்டணிக்காகவும் வாக்குக் கேட்டு 89 வயதில் தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்து ஊர் ஊராகச் சென்றார். அவருக்கு கூட்டம் சேராது என்று நினைத்து சினிமா கவர்ச்சிக்காக நடிகர் எஸ் எஸ் ராஜேந்திரனை திமுக அவருடன் அனுப்பியது.அப்போது சேலத்தில் அவர் உரையைக் கேட்டேன். 'காங்கிரஸுக்கு த‌ன்னைவிட்டால் யாரும் ஆள முடியாது என்ற எண்ணம் வந்துவிட்டது. இது ஜனநாயகத்துக்கு ஆபத்து. எனவே காங்கிரசுக்குப் பாடம் புகட்டுங்கள் "என்பது போல ஆணித்தரமாகப் பேசினார்.

1971 என்று நினைக்கிறேன். சென்னையில் தாசப்பிரகாஷ் ஓட்டலில் சுதந்திரக்கட்சியின் சென்னை மாவட்ட மகாநாடு நடந்தது. மினு மசானி, பிலு மோடி, என் ஜி ரங்கா, இறுதியாக ராஜாஜியும் பேசினார். அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டேன்."என்னை 'ரியாக்ஷனரி' என்று இடதுசாரிகள் அழைக்கிறார்கள். அவர்களுக்கு அது என்ன பொருள் தருகிறதோ எனக்குத் தெரியாது.என்னைப் பொருத்த வரை நான் அவ்வப் போது நடக்கும் சம்பவங்களுக்கு மறு வினை ஆற்றுகிறேன்.எனவே 'ரியாக்ஷனரி' என்ற பெயரை ஏற்கிறேன்.நான் அடிக்கடி மாறிவிடுவதாகவும் கூறுகிறார்கள். கொள்கைகளில் மாற்றம் இல்லாமல் வாழ்க்கையைத் தள்ளிக்கொண்டு போக நான் என்ன கழுதையா? 0nly asses are consitent in this everchanging world" என்று பேசினார்.

அதன்பின்னர்1972 டிசம்பர் 26 ஆம் நாள் அவருடைய பூத உடலை ஊர்வலமாக எடுத்து வநத போது கிருஷ்ணாம்பேட்டை மயானத்தின் வாயிலில்  நின்று அப்பாவுடன் தரிசித்தேன்.

எம்ஜியார் கால்நடையாக ஊர்வலத்தின் முன்னால் நடந்து வந்தார். பெரியார் தன்னுடைய வேனின் மேலே அமர்ந்து எல்லோரும் காண  வந்தார்.மயானத்தில் எரியூட்டப்பட்ட ராஜாஜியின் உடலைப் பார்த்து பெரியார் கதறி அழுதாராம்.

27 டிசம்பர் 1972 அன்று காந்திசிலை அருகில் அவருடைய அஸ்தியை வைத்துக்கொண்டு எதிரில் இருக்கும் அகில இந்திய வானொலி நிலையக்காரார்கள் வருகைக்காகக் காத்திருக்க வேண்டி இருந்தது. எம் எஸ் அம்மா, கல்கி ராஜேந்திரன், ராஜாஜியின் மக‌ன் சி ஆர் நரசிம்மன், பிலு மோடி ஆகியவர்களுடன் நானும் அப்பாவும். ராஜாஜியின் அஸ்திக்கு வெயில் அடிக்கிறது என்று அவருக்கு நிழல் கொடுக்க அப்பாவின் அங்க‌வஸ்திரத்தை விரித்துப் பிடித்தோம். நான் ஒரு பக்கம் பிடிக்க அந்தப் பக்கம்
பிடித்தவர் கோபாலகிருஷ்ண காந்தி. அவர் ராஜாஜி, மஹாத்மாஜி இருவருக்கும் பேரன். சமீபத்தில் மேற்கு வங்க கவர்னராக இருந்தவர்.

ராஜாஜியைப் பற்றிய வரலாற்றுத் தகவல்கள் உங்களுக்கு மற்ற இடங்களில் கிடைக்கலாம். நான் என் அனுபவங்களை மட்டும் எழுதியுள்ளேன்.

வாழ்க வளமுடன்!
ஆக்கம்:கே.முத்துராமகிருஷ்ணன்(லால்குடி)
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Why shout?

A theology professor was teaching about proverbs 15:1. He asked his students, *"Why do we shout in anger?* Why do people shout at each other when they are upset?

The students thought for a while. One of them said, because we lose our calm, we shout for that. "But why shout when the other person is just next to you?" asked the professor.

"Isn't it possible to speak to him or her with a soft voice? Why do you shout at a person when you are angry?"

The students gave some other answers but none satisfied the professor. Finally he explained, *"When two people are angry at each other, their hearts psychologically distance themselves.* To cover the distance, they must shout to be able to hear each other. *The angrier they are, the stronger they will shout to hear each other through that great distance.*

Then the professor asked, *"What happens when two people fall in love? *They don't shout at each other but talk softly, why? *Because their hearts are psychologically very close.* The distance between them is very small. The professor continued, "When they love each other even more, what happens? They do not speak, only whisper and they even get even closer to each other in their love. Finally they even need not whisper, they only look at each other and that's all....

*So next time you shout to a loved one, know that you are creating distance between your heart and that person's heart. *

*Proverbs - A gentle answer turns away wrath, but a harsh word stirs up anger.

அனுப்பியவர்: S. சபரி நாராயணன், சென்னை
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

22.12.11

திறந்தவெளியில் குளிப்பது யார் தவறு?

 திறந்தவெளியில் குளிப்பது யார் தவறு?

சக மனிதர்களில் 60% பேர்கள் நல்லவர்கள் இல்லை. இன்றையத்தேதியில் இந்த சதவிகிதம் மாறுபடலாம்.

எல்லாம் கலியுகம். சனி, ராகு அல்லது கேதுவால் லக்கினம் அல்லது லக்கினகாரகன் பாதிக்கப்பெற்றவர்களே அதிகம். அல்லது சுபகிரகங்களின் பார்வை இல்லாது வக்கிரமாகிப் போய்விட்டவர்கள் என்றும் கொள்ளலாம்.

இணையத்தில் உலாவருபவர்களிலும், எழுதுபவர்களிலும் அவர்களுடைய ஆதிக்கம் உள்ளது.

தாங்கள் எழுதுவதைவிட, அடுத்தவன் எழுதுவதைத் திருடிப் பதிவிடுபவர்களே அதிகம். நீங்கள் உங்கள் பதிவைப் பிரதி எடுப்பதைத் தடுக்க என்ன உபாயம் செய்தாலும், அதை உடைத்துவிட்டு நொடியில் பிரதி எடுக்க இன்றைய கணினி தொழில் நுட்பம் அசாத்திய உதவி செய்யும்.

அதுபோல் எடுப்பவர்களைத் தடுக்க முடியாது.

இணையத்தில் எழுதுவது என்பது ஒரு பெண் திறந்தவெளியில் குளிப்பதற்குச் சமமானது. சில நொடிகளில் அந்தப் பெண்ணை ஜூம் போட்டு விதவிதமான கோணங்களில் படம் எடுத்துக்கொண்டு போய் விடுவார்கள். காணொளிகளும் எடுத்துக்கொண்டுபோய் தங்கள் பதிவுகளில் அல்லது தங்களுடைய சமூக வலைத்தளங்களில் போட்டு மகிழ்வார்கள். அதைத் தடுக்க எந்தக் கொம்பனாலும் முடியாது.

அது அனைவரும் அறிந்ததே! நம்முடைய வகுப்பறைப் பதிவுகள் பல திருட்டுப்போய்க்கொண்டிருக்கின்றன. நம்முடைய வாசகர்கள் மற்றும் கண்மணிகள் அவற்றைப் பார்த்து எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிப்பார்கள்.

சம்பந்தப்பட்ட ஆசாமி எந்தப் பொந்திற்குள் இருக்கிறான் என்று நமக்கு எப்படித் தெரியும்? பழநிஅப்பன் பார்த்துக்கொள்ளட்டும் என்று விட்டுவிடுவேன்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக இது அதிகமாகி விட்டது. அதனால்தான் மேல்நிலைப் பாடங்களைத் தனி இணையதளத்தில் எழுதிக் கொண்டிருக் கிறேன். திருட்டுப் போகக்கூடாது என்பதுதான் அதன் தலையாய நோக்கம். குறிப்பிட்ட சிலர் மட்டுமே அந்த தளத்திற்கு அனுமதிக்கப் பெற்றுள்ளார்கள். அஷ்டகவர்க்கத் தொடர் பாடத்தைக்கூட அதில்தான் எழுதுவதாக உள்ளேன். பிறகு ஒரு நாள் அவைகள் எல்லாம் காப்புரிமையுடன் புத்தக வடிவாக வரவுள்ளது. அப்போது நீங்கள் அனைவரும் படித்துப் பயனடையலாம். அதுவரை பொறுத்திருங்கள்

அத்துடன் முன்பு நான் எழுதிக்கொண்டிருந்த “பல்சுவை” என்னும் வலைப்பூவைப் பூட்டி வைத்திருந்தேன். இப்போது அதைத் திறந்து விட்டுள்ளேன்.

அதில் சுமார் 424 பதிவுகள் உள்ளன

அதற்கான சுட்டி That is URL link : http://devakottai.blogspot.com/

23.12.2005 முதல்17.08.2009 வரை சுமார் 3 ஆண்டுகள் எட்டு மாத காலத்தில் எழுதப்பெற்றவைகள் அவைகள். பதிவுகள் குறிச்சொற்களுடன் உள்ளன.
பல பிரிவுகளில் / தலைப்புக்களில் எழுதப்பெற்ற சுவையான பதிவுகள் அதில் உள்ளன.

2005 டிசம்பரில் 10 பதிவுகள்
2006ல் 106 பதிவுகள்
2007ல் 78 பதிவுகள்
2008ல் 194 பதிவுகள்
2009ல் 36 பதிவுகள்
---------------------------
மொத்தம் 424 பதிவுகள்
--------------------------------------

வகுப்பறை சூடு பிடித்தவுடன் அதில் எழுதுவதைக் குறைத்துக்கொண்டேன். அத்துடன் இரண்டு குதிரைகளை ஒரே சமயத்தில் ஓட்ட முடியாது என்பதற்காக
கடந்த இரண்டரை ஆண்டுகளாக அதில் எழுதுவதை நிறுத்தி வைத்துள்ளேன். அத்துடன் அதில் உள்ளவைகள் புதிதாக இணையத்தில் நுழையும் சமூக வளத்தளத்தளக் கோமான்களால் திருட்டிற்கு உள்ளாகக்கூடாது என்று பூட்டி வத்திருந்தேன்.

இப்போது அதைத் திறந்து விட்டுள்ளேன். நீங்கள் அனைவரும் அவற்றை, அதில் உள்ள சுவையான ஆக்கங்களைப் படித்து மகிழலாம்.
--------------------------------------------------------------------------
வாத்தி (யார்) எதற்கு இந்த திடீர் கரிசனம்?

வாத்தியார் பத்து நாட்கள் வடக்கே பயணம். சொந்த மற்றும் வியாபார அலுவல்கள் காரணமாகத் தொலைதூரப் பயணம். பத்து நாட்கள் வகுப்பறைக்கு விடுமுறை, உங்களுக்கு போரடிக்கக்கூடாது என்பதற்காக இந்தக் கரிசனம்.
--------------------------------------------------------------------------
ஒவ்வொரு ஞாயிறன்றும் மாணவர் மலர் மட்டும் வெளிவரும். அதற்கு நீங்கள் எழுதும் பின்னூட்டங்களும் வெளி வரும்! ஆகவே மாணவர் மலருக்கு எழுதுபவர்கள் எழுதியனுப்பலாம்.

அடுத்த பாடம், புத்தாண்டில் 5.1.2012 அன்று வெளியாகும். வாய்ப்பிருந்தால், அதாவது இசைந்தால் அதற்கு முன்பே வகுப்பு விடுமுறை முடிந்து மீண்டும் துவங்கும்.

அடுத்த பாடம் நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் இந்தியாவின் ஜாதகம். விரிவான அலசலுடன் அது பதிவிடப்பெறும்!
-------------------------------------------------------------------------


இன்னும் ஒரு முக்கியமான செய்தி: இன்றையப் பதிவு வகுப்பறையின் ஆயிரமாவது பதிவு. (Posting Number 1,000)

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

21.12.11

Astrology உலகம் அழிந்தால் அழியட்டும் போடா!

Astrology உலகம் அழிந்தால் அழியட்டும் போடா!

நிறைய மின்னஞ்சல்கள். அத்துடன் இணையத்தைத் திறந்தால் நிறையக் கட்டுரைகள். நம் நிம்மதியைக் குலைக்கும் கட்டுரைகள்.

உலகம் இந்த ஆண்டின் இறுதியில் அழியப்போகிறதாம்!

இயற்கைச் சீரழிவுகளால் மனிதகுலம் அழியப்போகிறதாம்.

பூச்சாண்டி காட்டும் பதிவுகள். எண்ணற்ற பதிவுகள், ஆயிரக் கணக்கான பதிவுகள்.

கூகுள் ஆண்டவரிடம் Mayan calender என்று தேடித் தரும்படி கேட்டால், சுமார் 55 லட்சம் கட்டுரைகள் இருப்பதாகச் சொல்லி, அதற்கான சுட்டிகளைத்
தருகிறார். அவை அனைத்தையும் படித்து முடிப்பதற்குள் நம் ஆயுள் தீர்ந்துவிடும்.

ஆகவே விஷயம் என்னவென்று தெரிந்து கொள்ள இரண்டே இரண்டு சுட்டிகளை உங்களுக்காகக் கிழே கொடுத்துள்ளேன். அவற்றைப் பொறுமையாகப் படித்துப்பாருங்கள். நேரம் இல்லையென்றால், படிப்பதைத் தவிர்த்து விட்டு, உங்களுக்கு ஆறுதலான செய்திகள் சிலவற்றைப் பதிவின் இறுதியில் கொடுத்துள்ளேன். அதற்குத் தாவி வந்து விடுங்கள்

அன்புடன்
வாத்தியார்

------------------------------------------------------------------------------------------

இதற்கான சுட்டி: http://www.whatwillhappenin2012now.com/category/mayan-prophecies/Yahoo News இதற்கான சுட்டி: http://in.lifestyle.yahoo.com/reasons-world-end-2012-160356171.html

------------------------------------------------------------------------------------------
சரி, வந்துவிட்டீர்களா?

உலகவெப்பம் அதிகமாகிக் கொண்டே போகிறது. துருவப் பனிப் பாறைகள் உருகிக்கொண்டே இருக்கின்றன. கடல் மட்டம் உயரலாம். சுனாமி, சூறாவளி
போன்றவைகள் ஏற்படலாம். அதில் கடலோரம் உள்ள நகரங்கள் பாதிப்பிற்கு உள்ளாகலாம். அதையெல்லாம் மறுப்பதற்கில்லை

ஆனால் உலகம் அழிந்துவிடும் என்பதை மட்டும் ஏற்பதற்கில்லை.

நம்  பாரதப் பூமி புண்ணிய பூமி. பல மகான்கள் அவதரித்த நாடு. பல சித்தர்கள் இன்னும் அருவ வடிவத்தில் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கும் நாடு.
அத்துடன் நம்நாடு சூப்பர் பவராகப் போகிறது. அந்தக் கனவோடு நாம் இருக்கிறோம், நமது கனவுகள் எல்லாம் நனவாவது தூரம் வெகு தூரத்தில் இல்லை.

அதை நாம் மட்டும் பார்த்து இரசிக்காமல் உடன் இரசிப்பதற்கு மற்ற நாடுகளும் இருக்க வேண்டும். நாம் ஆடப்போகும் ஆட்டங்களைப் பார்ப்பதற்குப்
பார்வையாளர்கள் வேண்டாமா?

மற்ற நாடுகள்தான் பார்வையாளர்கள்!

ஆகவே துணிவோடு இருங்கள். இத்தகைய கட்டுரைகளை எல்லாம் படித்து மனதைக் குழப்பிக்கொள்ளாதீர்கள்.

அந்தக் கட்டுரைகள் சிலவற்றில் நாஸ்டர்டாமஸை வம்பிற்கு துணை சேர்த்துள்ளார்கள். அதே நாஸ்டர்டாமஸ்தான் இந்தியா சூப்பர் பவராகும் என்று கணித்து எழுதிவைத்துள்ளார். அதை மறக்க வேண்டாம்!

என் கருத்திற்கு வலு சேர்க்கும் விதமாக நாசாவின் கட்டுரை ஒன்றைக் கீழே கொடுத்துள்ளேன். அதைப் படியுங்கள். குறிப்பாக நாஸா விஞ்ஞானிகளின்
நேர்காணல் பதில்களில் உள்ள கடைசி வரிகளை ஒன்றிற்கு இரண்டு முறையாவது படியுங்கள்


இதற்கான சுட்டி: http://www.nasa.gov/topics/earth/features/2012.html
-------------------------------------------------------------------------------

வாழ்க வளமுடன்!

20.12.11

Astrology மூட்டை முடிச்சுக்களுடன் கர்மகாரகன் வீடு மாறுகின்றார்!

அருள்மிகு சனீஷ்வரர்

Astrology மூட்டை முடிச்சுக்களுடன் கர்மகாரகன் வீடு மாறுகின்றார்!           

சனிப்பெயர்ச்சிப் பலன்கள்
                    
நவக்கிரகங்களில் ஈஸ்வரன் என்னும் பெயருடன் சேர்த்து அழைக்கப்பெறுபவர் சனீஸ்வரன். அதுவே அவருடைய முக்கியத்துவத்தை உணர்த்தும்.

கர ஆண்டு மார்கழித் திங்கள் 5ஆம் தேதி புதன்கிழமையன்று (21.12. 2011) அதிகாலையில் சனீஸ்வரன் கன்னி ராசியில் இருந்து, தனது உச்ச வீடான துலாம் ராசிக்குள் பிரவேசிக்கின்றார். அதாவது தனது மூட்டை முடிச்சுக் களுடன் வீடு மாறுகின்றார்

வாசகர்கள் சிலரின் வேண்டுகோளிற்காகவும், வகுப்பறைக் கண்மணிகளின் அறிந்து கொள்ள வேண்டியதற்காகவும் சனிப்பெயர்ச்சிப் பலன்களை
எழுதியுள்ளேன்.

கீழே கொடுக்கப்பெற்றுள்ளவை அனைத்தும் பொதுப்பலன்கள், இந்திய மக்கள் 121 கோடிப் பேர்களுக்குமான பொதுப்பலன்கள். உங்களுடைய  ஜாதகத்தில் சனீஸ்வரன் நல்ல ஆதிக்கப் பலனுடன் இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால், நல்ல தொழிலையும் அல்லது வேலையையும் கொடுத்து, வருமானத்திற்கு எந்தக் குறையும் இல்லாமல்  பார்த்துக் கொள்வார். நீண்ட ஆயுளையும் கொடுப்பார்.

தனிப்பட்ட ஜாதகர்களுக்கு, கோள்சாரத்தில் சனீஷ்வரன் கடந்து செல்லும் ராசிகளில் சர்வாஷ்டகவர்க்கப்படி, 30 அல்லது அதற்கு மேற்பட்ட
பரல்கள் இருந்தால், அவர்களுக்கு எந்த பாதிப்பு இருக்காது. இதை முக்கியமாக மனதில் கொள்ளவும்.

இறைவழிபாடும், சனீஷ்வர வழிபாடும் நன்மையளிக்கும். இந்தத் துன்பங்கள் இருக்காதா என்றால், இருக்கும். வருவதை, விதிக்கப்பட்டதை நீங்கள் அனுபவித்துத்தான் ஆக வேண்டும். ஆனால் வழிபாடுகள் தாக்குப் பிடிக்கும் சக்தியை உங்களுக்கு வழங்கும் (It will give you standing power in miserable or unwanted situation).

எந்த சூழ்நிலையிலும், தாக்குப் பிடிக்கும் சக்தி முக்கியம். அதை மனதில் கொள்ள வேண்டுகிறேன்.

அன்புடன்,
வாத்தியார்

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++=
ஏழரை ஆண்டுகளாக ஏழரைச் சனியின் பிடியில் சிரமப் பட்டுக்கொண்டிருந்த சிம்ம ராசிக்காரகளும், சென்ற இரண்டரை ஆண்டுகளாக அஷ்டமச் சனியால் (8ஆம் இடத்துச் சனியால்) சிரமப்பட்டுக்கொண்டிருந்த கும்ப ராசிக்காரர்களும் மகிழ்ச்சி கொள்ளலாம். அவர்களுக்குப்  பூரண நிம்மதி கிடைக்கும்.

அந்தச் சிரமங்களை இனி விருச்சிக ராசிக்காரர்களும் (ஏழரைச் சனியில் விரயச் சனி - 12ஆம் இடம்), மீன ராசிக்காரர்களும் (அஷ்டமச் சனி - 8ஆம் இடச் சனி) சந்திக்க நேரிடும்.

ரிஷப ராசிக்கார்கள் (ஆறாம் இடம்), மிதுன ராசிக்காரர்கள் (ஐந்தாம் இடம்), சிம்ம ராசிக்காரர்கள் (3ஆம் இடம்) தனுசு ராசிக்கார்கள் (11ஆம் இடம்), கும்ப ராசிக்காரகள் (9ஆம் இடம்) ஆகியோர்கள் இந்தப் பெயர்ச்சியால் நன்மையடைவார்கள் அவர்களும் மகிழ்ச்சி கொள்ளலாம்.

கடக ராசிக்காரர்கள் (4ல் சனி), கன்னி ராசிக்கார்கள் (பாதச் சனி - 2ஆம் இடம்), மகர ராசிக்காரர்கள் (ஜீவன ஸ்தானம் - 10ஆம் இடம்), மேஷ ராசிக்காரர்கள் (கண்டச் சனி - 7ஆம் இடம்) துலா ராசிக்காரர்கள் (ஜென்மச்சனி - ஒன்றாம் இடம்) ஆகியோர்கள் சிறிதளவு  பாதிக்கப்பெறுவார்கள்.

12 ராசிகளுக்கும் உரிய பொதுப்பலன்கள்:

1. மேஷம்: மனதில் கலக்கம் ஏற்படும். எடுத்துச் செய்யும் செயல்களில் தாமதம் உண்டாகும். பல வேலைகள் இழுத்துதடிக்கும். சட்டென்று  முடியாது. நண்பர்கள், உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். எதிலும் நிதானமாக இருப்பது நல்லது.

2. ரிஷபம்: சாதகமான ஆறாம் இடத்தில் சனி. முன்பிருந்த சிரமங்கள் எல்லாம் நீங்கிவிடும். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும்.  உறவினர்களும், நண்பர்களும் உங்களைப் போற்றத்துவங்குவார்கள். விரும்பிய செயல்களைச் செய்யும் அளவிற்குப் பணவரவும் உண்டாகும்.

3. மிதுனம்: புதிய, விரும்பத் தகுந்த மாற்றங்கள் உண்டாகும். இடம், பொருள் சேர்க்கை உண்டாகும். சிலருக்குப் புதிய வீடு கட்டும் யோகம்  உண்டாகும். இரண்டரை ஆண்டு காலத்தில் சிக்கனமாக இருந்து, வாழ்வின் அடுத்த நிலைக்குச் செல்வது புத்திசாலித்தனமாகும்.

4. கடகம்: சுகக்கேடு, அலைச்சல் உண்டாகும். சிலருக்கு உடல் நலம் பாதிக்கும். செயல்களில் உங்களை அறியாமல் தவறுகள் ஏற்படலாம்.  கவனத்துடன் செயல்படுவது நல்லது. சிலருக்கு அவர்களது அன்னையின் உடல் நலம் பாதிக்கப்படலாம்.

5. சிம்மம்: இதுவரை உங்களை ஒருகை பார்த்துக்கொண்டிருந்த, வாட்டி, வதக்கிக்கொண்டிருந்த ஏழரைச் சனி முற்றிலுமாக விலகுகிறது. இனி
எல்லாம் நன்மையே. உற்சாகம் பொங்கி வழியும். முனைப்புடன் செயல் பட்டு வெற்றிக் கனிகளைப் பறிப்பீர்கள். செய்யும் வேலைகளுக்கான
பலன்கள் அதிகரிக்கும்

6. கன்னி: ஏழரைச்சனியின் கடைசிக் கட்டத்திற்கு வந்துள்ளீர்கள். அடை மழை இல்லை என்றாலும் தூறல் நிற்கவில்லை. பேச்சில், வாக்குக் கொடுப்பதில்  எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சிலருக்கு வழக்குகள் ஏற்படலாம். பணம் அதுவாக வராது. அலைந்து திரிந்துதான் பெற வேண்டியதாக இருக்கும். அத்துடன் எதிர்பார்க்காத செலவுகளும் ஏற்படும்.

7. துலாம்: ஏழரைச் சனிக்கு உரிய மூன்று கட்டங்களில் சனீஷ்வரன் இரண்டாவது கட்டத்திற்கு வந்துள்ளார். ஜென்மச் சனி என்று அதற்குப்
பெயர். வேலை செய்வதற்கே சலிப்பாக இருக்கும். மனதில் மந்தமான சூழ்நிலை நிலவும். சம்பந்தமில்லாத காரியங்களில் தலையிடாதீர்கள்.
அவப்பெயர் உண்டாகலாம். குடும்பஸ்தர்களுக்கு மனைவியுடன் கருத்து வேறு பாடுகள் உண்டாகலாம். அன்பு மனைவியை அனுசரித்துப்  போவது நல்லது.

8. விருச்சிகம்: ஏழரைச் சனி துவக்கம். ராசிக்குப் 12ல் சனி. பணத் தட்டுப்பாடு ஏற்படும். வரவுக்கு மேல் செலவு ஏற்படும். ஒருமுறைக்கு இருமுறை யோசித்துச் செலவு செய்வது நல்லது. புதிய முயற்சிகள், புதிய முதலீடுகள் ஆகியவற்றைத் தவிர்ப்பது நல்லது. நீங்கள் விரும்பும்  பலன்கள் கிடைக்காது. இறைவழிபாடு அவசியம். நன்மை பயக்கும்.

9. தனுசு: முன்னேற்றப் பாதையில் செல்வீர்கள். எந்தச் செயலிலும் முன்பிருந்த தாமதம், தடை இருக்காது. பணவரவு அதிகரிக்கும். சமூக  அந்தஸ்து அதிகரிக்கும். உத்தியோகத்தில், தொழிலில் மேன்மை உண்டாகும். புகழ், செல்வாக்கு என்று எல்லாவிதமான நன்மைகளும் ஏற்படும்

10. மகரம்: வேலையில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் ஏற்படும். சனீஸ்வரன் ராசிநாதன். அத்துடன் தன்னுடைய உச்ச வீட்டில் இருப்பதால்.  இடமாற்றம் என்பது சிலருக்குப் பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றமாக இருக்கும்.

11. கும்பம்: அஷ்டமச் சனியால் இதுவரை நீங்கள் அனுபவித்த துன்பங்கள் எல்லாம் நீங்கி, வாழ்க்கை வளம் பெறும். மகிழ்ச்சி நிலவும். வீட்டில்  சுப காரியங்களைச் செய்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.

12. மீனம்: சென்ற இரண்டரை ஆண்டுகளாக அனுபவித்த சிரமங்களை விடக் கூடுதலான சிரமங்களை அனுபவிக்க நேரிடும். காரணம் 8ஆம்  இடத்துச் சனி. சோதனைகள் அதிகரிக்கும். எது இருந்தாலும் தாக்குப் பிடித்து, இரண்டரை ஆண்டுகால முடிவில் நீங்கள் மனத்திடம் உள்ள  மனிதராக மாறிவிடுவீர்கள்.

செய்திச் சுருக்கம் (News in brief)

பலனடையப்போகின்றவர்கள்: ரிஷபம், சிம்மம், தனுசு ஆகிய 3 ராசிக்காரர்கள்

குறைந்த அளவு - அதாவது சில்லறைப் பலன்கள்: மேஷம், மிதுனம், மகரம், கும்பம் ஆகிய 4 ராசிக்காரர்கள்

பரிகாரம் தேட வேண்டியவர்கள்: கஷ்டங்கள் வாராமலிருக்க சனீஷ்வரனை வணங்க வேண்டிய ராசிக்காரர்கள்: கடகம், கன்னி, துலாம், விருச்சிகம், மீனம் ஆகிய 5 ராசிக்கார்ரகள்

ஏழரைச் சனி: கன்னி ராசிக்காரர்கள் (கடைசி இரண்டரை ஆண்டுகள் - பாதச் சனி என்பார்கள்.அல்லது கழிவுச்சனி என்று கொள்ளுங்கள்)
துலாம் ராசிக்காரர்கள்: இரண்டாம் இடம் ஜென்மச்சனி
விருச்சிக ராசிக்காரர்கள்: ஏழரைச் சனி ஆரம்பம்.

அஷ்டமச் சனி ( எட்டாம் இடத்துச் சனி): ஏழரைச் சனிக்கு நிகரான கஷடங்களையும் துன்பங்களையும் தரக்கூடிய அமைப்பு. அது மீன
ராசிக்காரர்களுக்கு ஏற்படும்!
----------------------------------------------------------
இரண்டாவது முறையாக, முக்கியமான தகவல்களை மீண்டும் ஒருமுறை கொடுத்துள்ளேன்

மேலே கொடுக்கப்பெற்றுள்ளவை அனைத்தும் பொதுப்பலன்கள், இந்திய மக்கள் 121 கோடிப் பேர்களுக்குமான பொதுப்பலன்கள். உங்களுடைய
ஜாதகத்தில் சனீஸ்வரன் நல்ல ஆதிக்கப் பலனுடன் இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால், நல்ல தொழிலையும் அல்லது வேலையையும்
கொடுத்து, வருமானத்திற்கு எந்தக் குறையும் இல்லாமல்  பார்த்துக் கொள்வார். நீண்ட ஆயுளையும் கொடுப்பார்.

தனிப்பட்ட ஜாதகர்களுக்கு, கோள்சாரத்தில் சனீஷ்வரன் கடந்து செல்லும் ராசிகளில் சர்வாஷ்டகவர்க்கப்படி, 30 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்கள் இருந்தால், அவர்களுக்கு எந்த பாதிப்பு இருக்காது. இதை முக்கியமாக மனதில் கொள்ளவும்.

இறைவழிபாடும், சனீஷ்வர வழிபாடும் நன்மையளிக்கும். இந்தத் துன்பங்கள் இருக்காதா என்றால், இருக்கும். வருவதை, விதிக்கப்பட்டதை நீங்கள் அனுபவித்துத்தான் ஆக வேண்டும். ஆனால் வழிபாடுகள் தாக்குப் பிடிக்கும் சக்தியை உங்களுக்கு வழங்கும் (It will give you standing power in miserable or unwanted situation).

எந்த சூழ்நிலையிலும், தாக்குப் பிடிக்கும் சக்தி முக்கியம். அதை மனதில் கொள்ள வேண்டுகிறேன்.

அன்புடன்,
வாத்தியார்

+++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

18.12.11

என்ன நடந்தது லிமோ காரில்?

 மாணவர் மலர்
இன்றைய மாணவர் மலரை நான்கு பேர்களின் ஆக்கங்கள் அலங்கரிக்கின்றன. படித்து மகிழுங்கள்
அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++


 மார்கழியில் சொக்கவைக்கும்  மகராசி
+++++++++++++++++++++++++++++++++++

சில்லென்ற  வாசம்
சுவாசத்தோடு நேசம்
குளிரும் பனிமழையைப்
பொழியும் மார்கழியே!

பொங்கும் நுரையோடு
கரையில் புரண்டோடும்
நிறைந்த நீர் நிலையை
தந்திடும் மார்கழியே!

பயிர்களும்  பூக்களும்
கனிகளும் கொடிகளும்
செழித்திடும் பசுமையைக்  
கொடுத்திடும்  மார்கழியே!

கல்யாண வைபோகம்  
கைகூடி  வந்துசேர
நோன்பிருந்து கன்னியர்  
தொழுதிடும் மார்கழியே!

எண்ணங்கள் அனைத்தையும்
வண்ணங்களில் விளக்க
கைகொடுக்கும் கோலங்கள்
காட்சிதரும் மார்கழியே!  

சுட்டெரிக்கும் வெயிலை
சுட்டெரித்து  விட்டு
இளந் தென்றலைங்காலம்
ஏந்திவரும் மார்கழியே!

சுழற்றடிக்கும்  மழையை
சுழற்றி அடித்துவிட்டு
தளிர்காலம் தனதாக்கி
தாலாட்டும்  மார்கழியே!

தமிழென்ற மகளுக்கு
சீர்செய்யும் தாயே!
மாதங்களின் அரசியே!
வருவாய் மகராசியே!!.

--தனூர் ராசிக்காரன்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
2அவனும் நானும்!

'அவன்' தன்னைக் காலால் உதைப்பான் என்று சரவணன் எதிர் பார்க்கவே யில்லை.

'அவன்' கால் அடியில் அமர்ந்து கொண்டு அவன் முழங்காலைத் தொட்டுத் தொட்டு 'ஏய்!விஷப்பூச்சி. ஏய் விஷப் பூச்சி' என்று நச்சுப்பண்ணிக் கொண்டே இருந்தான் சரவணன்.

மும்முரமாக மாதிரித் தேர்வு  எழுதிக் கொண்டு இருந்த 'அவன்' சட்டென்று ஏற்பட்ட உணர்ச்சிப் பிரவாகத்தில் சரவணனைக் காலால் அழுத்தமாக ஒரு  உதை விட்டான்.

எதிர் பார்க்காமல் கிடைத்த உதையால் சரவணன் நிலை குலைந்து பெஞ்சு இடுக்கிலிருந்து தூக்கி எறியப்பட்டு ஆசிரியர் மேடை அருகில் போய் விழுந்தான்.

"என்ன என்ன..?"என்று ஓடி வந்தார் வகுப்புக் கோடியில் நின்று தேர்வு எழுது பவர்களைக் கண்காணித்துக் கொண்டு இருந்த என் எஸ் சார்.அவர்தான் பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியர்.

சமாளித்து எழுந்த சரவணன் "என்னை உதைச்சுத் தள்ளி விட்டான் சார்!"என்று புகார் படித்தான்.

"யாருடா?"

"இவன்தான் சார்!" என்று அவனைச் சுட்டினான்.அவனோ குனிந்த தலை நிமிராமல் தேர்வு எழுதுவதிலேயே கவனமாக இருந்தான்.

அவனருகில் என் எஸ் சார் வந்தார். அவன் சட்டைக் காலரைக் கொத்தாகப் பிடித்து அலாக்காகத் தூக்கினார்.

"வாடா!ஹெச் எம் ரூமூக்கு" என்று தரதர வென்று இழுத்துச் சென்றார். அவன் எந்த எதிர்ப்பும் காட்டாமல் அவர் பின்னே சென்றான். தேர்வின் மேல் இருந்த கவனம் சிதறி மாணவர்கள் எல்லோரும் நடப்பதையெல்லாம் ஒரு நாடகம் என்பதைப் போல பார்க்கத் துவங்கினர்.
======================================
அந்தப் பள்ளி  ஊர்க்கோடியில், சுடுகாட்டுக்கு அருகில் இருந்தது. அப்போது 11ஆவது வரை உள்ள உயர்நிலைப் பள்ளி ஆகும். பள்ளியைத் தாண்டிப் போனால் சுடுகாடு. அப்புறம் இஸ்லாமிய மக்களுக்கான புதைகாடு. அப்புறம் கிறித்துவர்களுக்கான புதைகாடு.இந்துக்களிண் சுடுகாட்டுப் பிண வாடையுடன் ஸெர்த்துதான் பாடங்களும் மண்டைக்குள் புக வேண்டும்.

அதன் பின் பகுதியில், ஜான்சன் பேட்டை என்ற குடியிருப்பு. முழுவதும் கிறித்துவ மதத்தினைத் த‌ழுவிய  தலித் சமூகத்தவர் வாழும் பகுதி.

இப்புறம் மூன்று அக்கிரஹாரங்கள். கோட்டை மாரியம்மன் கோவில் அருகில் ஹென்றி அண்டு உல்சி ரொட்டிக்கடை அருகில் முதல் அக்கிரஹாரம் துவங்கிவிடும். ஒரு காலத்தில் அங்கே மாத்வ பிராமணர்கள் (ராவ்ஜிக்கள்) வாழ்ந்த இடம். இரண்டாவது அக்கிரஹாரம் ஸ்ரீலட்சுமி நாராயணப் பெருமாள் கோவில் அருகில் துவங்கி ஆத்தூர் திருப்பம் வரை. அங்கே பெரும்பாலும் ஸ்மார்த்த பிராமணர்கள்(ஐயர்) வசித்துள்ளனர். அதற்கடுத்து செளராஷ்டிரா தெருவரை இருப்பது மூன்றாவது அக்கிரஹாரம். அதில் வைஷ்ணவர்கள் (அய்யங்கார்) வசித்துள்ளனர். அவன் இர‌ண்டாவது அக்கிரஹாரத்தில் பிறந்து வளர்ந்தபோதே அக்கிரஹாரத்தில் பல சாதியினரும் வீடுகள் வாங்கிக் கொண்டோ, வாடகைக்கோ வந்து குடியேறிவிட்டனர்.

பள்ளிக்கூடம் மறவன் ஏரி அருகில் அமைந்து இருந்தது. ஏரிக்குப்பெயர் கொடுத்த மறவன் யார்? அவருடைய சிறப்புக்கள் என்ன என்பது ஆராய வேண்டிய ஒன்று.

தஞ்சை மாவட்டத்தில் எங்கு சென்றாலும் ஐயன் வாய்க்கால், ஐயன் குளம், ஐயன் படித்துறை,ஐயன் பொதுக்கிணறு என்று பெயர் காதில் படும் அந்த ஐயன் கோவிந்த தீட்சதர் என்ற மகான். நாயக்க மன்னர்களின் பிரதம அமைச்சராகப் பதவி வகிததவர்.

அதுபோல மறவனேரிக்குப்பெயர் கொடுத்த வீர மறவர் யார்? தெரியவில்லை.

பள்ளிக்கூடம் ஜானசன் பேட்டைக்கு அருகாமையில் இருந்தது. அக்கிரஹாரத்துப் பையன்கள் பள்ளிக்குச் செல்ல மணிமுத்தாறு குட்டைப் பாலத்தினைத் தாண்டித்தான் செல்ல வேண்டும்.மழை பெய்தால் பாலத்தின் மீது இடுப்பளவு தண்ணீர் ஓடும்.தடுப்பணை பொங்கி வ‌ழிந்து அருவி போலக் கொட்டும்.அப்போதெல்லாம் ரயில்வே பாலத்தின்மீது ஆற்றைக் கடந்து போக வேண்டும். தூரத்தில் டவுன் ஸ்டேஷனில் 'இதோ கிளம்பிவந்து உன்னை நசுக்குகிறேன் பார்' என்று சவால் விட்டு நிற்கும் தொடர் வண்டியைப் பார்த்துக் கொண்டே பாலத்தின் மீது தடத‌டவென்று மகாப் பெரிய புத்தக மூட்டையைத் தூக்கிக்கொண்டு ஓட வேண்டும். உயிர்வதை என்பது என்ன வென்று அப்போது புரியும்.

அந்தப் பள்ளி மாணவர் எண்ணிக்கைக்கு அக்கிரஹாரத்தையும் ஜான்சன் பேட்டையையுமே நம்பி இருந்தது. மற்ற இடைநிலை சாதி மாணவர்கள் குறைவான எண்ணிக்கையிலேயே சேருவார்கள்.

1965ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டம் தீவிரமாக இருந்தது. அவனும் போராட்ட்த்தில் கலந்து கொண்டான்."தமிழ் தாய், இந்தி நாய்" "தமிழ் தாய், இந்தி பேய்"என்ற வாசகங்கள் அவனுடைய பேனாவின் மசியால்தான் எழுதப்பட்டது. அது பின்னர் தமிழகம் எங்கும் பரவியது. பல நாட்கள்,வாரங்கள் பள்ளி கல்லூரிகள் மூடிக் கிடந்தும்,எந்த ஒரு முடிவும் வரவில்லை.

ஒரு நாள் காலைப் பத்திரிகையில், போராட்டக்காரரகள் திருப்பூரில் (ஈரோட்டிலோ?) ஒரு உதவிப்போலீசு அதிகாரியை வண்டிச் சக்கரத்தில்  கட்டி தீயிட்டுக்கொளுத்திய கொடூரச் செயல் வெளியானது. அவர் மூளை மழுங்கிய போராட்டக் கும்பல்காரார்களிடம் தனியாக மாட்டிக் கொண்டார். வண்டிச் சக்கரத்தில் அவரைக் கட்டி, சக்கரத்தை உருட்டி விளையாடியது கூட்டம். அவர் தண்ணீர், தண்ணீர் என்று கதறிய போது வாயில் பெட்ரோல் ஊற்றப்பட்டு கொளுத்தப்பட்டார். 

அரசு தன் பிடியை இறுக்கத் துவங்கியது.

போராட்டம் மாணவர்கள் கையில் இருந்து ச‌மூக விரோதிகளிடம் போய்விட்டது என்பதை நன்றாகவே உணரமுடிந்தது.

அவன் போராட்டத்திலிருந்து விலக முடிவு செய்தான். காரணங்களை எழுதிச் சமர்ப்பித்து விட்டு விடுபட விரும்பினான்.ஆனால் யாரிடம்  சமர்பிப்ப‌து?  தலைமையே இல்லாமல் இயக்கம் பாதை மாறிப் போவது நன்றாகத் தெரிந்தது.

அந்த சமயத்தில் தனி ஆளாகப் பள்ளியில் எல்லோர் முன்னிலையிலும் போராட்டத்தை நிறுத்தக் கூறியவாறு வகுப்புக்குத் திரும்பினான்.

முதலில் அவனுக்கு ஜான்சன் பேட்டை ஆதரவு அளித்தது.

அவர்களில் மூத்த மாணவன் ஒரு 10 இளையவர்களைக் கூட்டிக் கொண்டு உள்ளே வந்தான்.

"ஆமாண்டா! எவனோ போலீசக் கொளுத்த‌றான். நாம கைது கிய்துன்னு அவஸ்தைப் படணுமா? இந்தக் கொடுமைக்கு இந்திக் கொடுமையே தேவலாம்டா"

மறு நாள் பள்ளிக்கு வந்த மாணவர் எண்ணிக்கை கூடியது. தமிழகம் முழுவதும் இதே போல மாணவர்கள் போராட்டத்தைப் புறக்கணிப்பது செய்தியாக வரத் துவங்கியது.போராட்டம் பிசு பிசுத்தது.

அந்தப் பள்ளியில் மைனாரிடிகளான இடைநிலை சாதி மாணவர்களுக்கும், அக்கிரஹார மாணவர்களுக்கும் இடையே ஒரு பனிப்போர் துவங்கியது. ஒரு சில ஜானசன் பேட்டை மாணவர்களும் அவர்களுடன் சேர்ந்துகொண்டனர்.

அப்போது 'அவனு'க்குக் கொடுக்கப்பட்ட பட்டப் பெயர்தான் 'விஷப்பூச்சி'

பள்ளியில் நுழைந்தவுடன் எந்த‌ ஒரு மூலையில் இருந்தாவது 'விஷப்பூச்சி’ வருது உஷார்!' என்று குரல் கேட்கும். அவன் அதையெல்லாம் பெரிது படுத்தமாட்டான்.

சரவணன் என்பவன் பள்ளிக்குப் புதியவன். பள்ளி ஆண்டின் நடுவில்தான் வேறு ஊரில் இருந்து வந்து சேர்ந்தான்.

சரவணனின் தந்தை மாவட்டக் கல்வி அதிகாரி. அவரே தன் அலுவல‌க ஜீப்பில் சரவணனுடன் வந்து இறங்கி, ஆகஸ்டு மாதம் முடிந்து சேர்க்கை அறிக்கை கல்வித்துறைக்கு அனுப்பிய பின்னர், விதிகளைத் தளர்த்தி சரவணனைச் சேர்த்து விட்டார். மீண்டும் சரவணன் பெயரையும் சேர்த்துப் புதிய அறிக்கை, 'சப்பிளிமென்டரி' அறிக்கை, அனுப்பப் ப‌ட்டதாம்.

படிப்பில் ஞானசூன்யம் என்பது ஒருசில நாட்களிலேயே தெரிந்துவிட்டது. பலரும் பேச்சுக் கொடுத்து சரவணன் ஒவ்வொரு வகுப்பிலும் பல ஆண்டுகள் இருந்து நல்ல உறுதியான அஸ்திவாரத்துடன் வந்துள்ளதை அவனிடம் வந்து சொன்னார்கள்.

சரவணனோ சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் அரசியல், ஆட்சி அதிகாரங்களை அடைவதில் கவனம் செலுத்திய அரசியல், குடும்பப் பின்னணியில் வந்தவன்.

அவனோ காந்திய வழியில் சுதந்திரத்திற்குப் பாடுபட்ட குடும்பத்தில் வந்தவன்.

முதல்நாளே அவனுக்கும், சரவணனுக்கும் முட்டிக் கொண்டு விட்டது.

கண‌க்கு நோட்டை அவனிடம் கேட்காமலேயே எடுத்து காப்பி பண்ணத் துவங்கினான் சரவணன. தட்டிக் கேட்ட அவனுக்கு முறைப்புத்தான் பதிலாகக் கிடைத்தது.

"நான் யார் தெரியுமில்ல? எங்க‌ அப்பா என்ன போஸ்டு தெரியுமில்ல?.. ஆமா..யாராவது வாலை ஆட்டினா நடக்கிறதே வேற..எவ்வளவு நல்லா படிச்சாலும் எஸ் எஸ் எல் ஸி மார்க் புக்கு எங்க அப்பாவைத் தாண்டித் தாண்டி வரணும்.. அதை நியாபகத்தில் வையுங்கடா கூமுட்டைகளா.."

இதெல்லாம் அக்கிரஹார மாணவர் மத்தியில் ஒரு பயத்தைக்கொடுத்தது. கோபத்தையும் வளர்த்தது. ஆனால் அதை எப்படிச் சொல்வது என்றுதான் தெரியவில்லை.ஆசிரியர்கள் 10க்கு 6 அக்கிரஹாரத்தைச் சார்ந்தவர்களே. அவர்களிடம் சொன்னால் "மோதாதே. மோதினால் அதிகாரி எங்கள் பிழைப்பில் கை வைத்து விடுவான். கிரான்டில் கை வைத்தால் எஙக பிழைப்பு நாறிடும்.ஆகவே பொறுமை. துஷ்டனைக் கண்டால் தூர விலகு.."

இந்தப் பின்னணியில்தான் சரவணன் அவனிடம் உதை வாங்கியது.
===========================
தலைமை ஆசிரியர் அறை வாசலில் அவனை நிறுத்திவிட்டு, என் எஸ் சார் உள்ளே சென்று 10 நிமிடம் சென்று அவன் அழைக்கப்பட்டான்.

"சரவண‌னைக் காலால் உதைத்தாயா?"

"ஆமாம்"

"அவன் யார் என்று தெரியுமல்லவா?"

"தெரியும்"

"நீ செய்த செயலால் நமது மொத்தப் பள்ளியுமே கஷ்டப்படப் போகிறது. உன்னை சஸ்பெண்ட் பண்ணுகிறேன்."

"தேங்ஸ் சார்!"

விறு விறு என்று வெளியேறி வகுப்புக்குச் சென்று தன் பொருட்களை அள்ளிக் கொண்டு வெளியேறினான்.

'என்னடா, என்னாடா நடந்தது?' என்று அவன் பின்னால் ஓடி வந்து மறித்த மாண்வர்களை மீறிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தான்.

அவன் அப்பாவும் தலைமை ஆசிரியரும் நல்ல நண்பர்கள். அவன் செயலால் த‌னக்கு ஏற்பட்ட தர்ம சங்கடத்தினை அப்பாவிடம் அவர் சொன்னார். அப்பா அதனைச் சரியான கோண‌த்தில் புரிந்து கொண்டார். இறுதித் தேர்வு எழுத அனுமதிப்பதில் எந்தச் சங்கடமும் இல்லை என்றும் தலைமை ஆசிரியர் சொன்னாராம்

இரண்டாவது மாடல் டெஸ்டு நடக்கும் போது இந்த சம்பவம் நடந்தது. மேலும் இரண்டு மாதிரித் தேர்வுகளுக்கு சஸ்பென்ஷன் காரணத்தால் அவன் போகவில்லை. போயிருந்தால் அவன் மாவட்ட அளவிலாவது முதல் மார்க் வாங்கியிருப்பான். இப்போது அவன் மார்க் 404/600 என்ற அளவில் முடங்கியது. அக்காலத்தில்  400 தாண்டுவதே பெரிய வெற்றிதான்.

அந்த அவன் அடியேன்தான் என்பதைப் பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்!

வாழ்க வளமுடன்!
ஆக்கியோன்: கே.முத்துரமகிருஷ்ணன் (லால்குடி)
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
3

என்ன நடந்தது லிமோ காரில்?

S. சபரி நாராயணன், சென்னை. மொழியாக்கம் மட்டும் அடியேனுடையது
A limousine (or limo) is a luxury sedan or saloon car, especially one with a lengthened wheelbase or driven by a chauffeur. Few stretch limousines are sold new to private individuals. In addition to luxuries, security features such as armoring and bulletproof glass are available. மேலே படத்தில் உள்ளதுதான் லிமோ கார்.
-----------------------------------------------------------------------------------
என்ன நடந்தது லிமோ காரில்?

அதிக தூரம் பயணிக்க இருந்த போப்பாண்டவரின் உடைமைகளை (luggage) லிமோ காரில் ஏற்றிய ஓட்டுனர், அப்போதுதான் கவனித்தார், போப்பாண்டவர் காரின் முன் கதவருகே இன்னும் நின்று கொண்டிருந்தார்.

பதறி அடித்து ஓடிவந்த ஓட்டுனர், “மன்னிக்க வேண்டும் புனிதரே! உங்கள் சீட்டில் நீங்கள் அமர்ந்தால், நாம் புறப்படலாம்”

“ஒரு உண்மையைச் சொல்கிறேன். கார் ஓட்டுவது என்றால், எனக்குக் கொள்ளை பிரியம். நன்றாகவும் ஓட்டுவேன். ஆனால் என் பதவி கருதி கடந்த பத்தாண்டுகளாக என்னை யாரும் விடுவதில்லை. அதனால் இன்று காரை நானே ஓட்டுவதாக உள்ளேன்.

“மன்னிக்கவும் புனிதரே, உங்களுக்கு ஏதாவது நேர்ந்தால் அல்லது நீங்கள் வாகனம் ஓட்டியது தெரிந்தால், என் உத்தியோகத்தைக் காலி செய்து விடுவார்கள்.”

“கவலைப் படாதே, அதை நான் பார்த்துக்கொள்கிறேன்!” என்று சொல்லிக்கொண்டே அவனிடம் சாவியை வாங்கிய போப்பாண்டவர் வண்டியின் ஓட்டுனர் இருக்கையில் ஏறி அமர்ந்து விட்டார்.

வேறு வழியில்லாமல் ஓட்டுனர் ஏறி பின் இருக்கையில், அதாவது போப்பாண்டவர் எப்போதும் அமரும் இருக்கையில் அமர்ந்து விட்டார்.

வண்டி கிளம்பியது. சற்று தூரம் சென்று வண்டி நெடுஞ்சாலையை அடைந்த பிறகுதான் அது நடந்தது. ஓட்டுனரின் முகத்தில் வருத்தமும் பயமும் ஒரு சேரவந்து குடிகொண்டது.

வண்டியை 200 கிலோ மீட்டர் வேகத்தில் போப்பாண்டவர் ஓட்டத் துவங்கினார்

ஓட்டுனர் சற்றுப் பதறி, “ஐயா புனிதமானவரே.....இத்தனை வேகம் வேண்டாம். மெதுவாகச் செல்லுங்கள். 100 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் செல்லவே கூடாது.

போப்பாண்டவர், அவனுடைய பேச்சைக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. தொடந்து அதே வேகத்திலேயே சென்று கொண்டிருந்தார்.

அதீத சங்கு ஒலியுடன் ஒரு காவல்துறை வாகனம் துரத்திக்கொண்டு வருவது தெரிந்தவுடன், போப்பாண்டவர் வண்டியின் வேகத்தை உடனே குறைத்து, சற்று தூரம் சென்று வண்டியை நிறுத்தினார்.

“கடவுளே, இன்று என் ஓட்டுனர் உரிமமும் உத்தியோகமும் ஒன்றாகக் காலியாகப் போகிறது.” என்று ஓட்டுனர் தன் மனதிற்குள் பதைபதைத்தார்.

அருகே வந்த போலீஸ்காரர், ஓட்டுனரையும் வண்டிக்குள் அமர்ந்திருப்பவரையும் ஒருமூறை பார்த்துவிட்டு, அருகில் நின்று கொண்டிருந்த தனது மோட்டார் சைக்கிளிற்குச் சென்று, ஓயர்லெஸ் கருவியின் மூலம் தனது அலுவலகத்தைத் தொடர்பு கொண்டார். எடுத்த ஆப்பரேட்டரிடம், தலைமை அதிகாரிக்கு (Police Chief) இணைப்புக் கொடுக்கச் சொன்னார்.

கொடுக்கப் பெற்றது.

“அய்யா, இருநூறு கிலோ மீட்டர் வேகத்தில் பறந்த வாகனத்தைப் பிடித்து நிறுத்தி வைத்திருக்கிறேன்.”

“ஆசாமியை, இங்கே பிடித்துக் கொண்டு வா!”

“நாம் அப்படிச் செய்ய முடியாது அய்யா! அவர் மிகவும் முக்கியமானவர்”

“என்ன சொல்கிறாய் நீ?”

போலீஸ்காரரின் குரலில் சற்று நடுக்கம் தெரிந்தது. “உண்மையைத்தான் சொல்கிறேன். அவர் நம் அனைவருக்கும் அதி முக்கியமானவர்!

“யார் மேயரா?”
“இல்லை அவரையும் விடப் பெரியவர்!”

“அமைச்சரா?”
“இல்லை அவரையும் விடப் பெரியவர்!”

“செனேட் அவை உறுப்பினரா?”
“இல்லை அவரையும் விடப் பெரியவர்!”

“பிரதமாரா?”
“அவரையும் விடப் பெரியவர்!”

“யாரய்யா, சொல்லித்தொலை!”

“கடவுள் என்று தோன்றுகிறது”

“எதை வைத்துச் சொல்கிறாய்?”

“போப் ஆண்டவரே டிரைவர் சீட்டில் ஆமர்ந்து வண்டியை ஓட்டிக் கொண்டி ருக்கிறார்!”
--------------------------------
அனுப்பியது: S. சபரி நாராயணன், சென்னை. மொழியாக்கம் மட்டும் அடியேனுடையது
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
 4
  காணொளி
திருப்பாவைப் பாசுரங்கள் மூன்று. அனுப்பி வைத்தவர்   “கண்ணா 79 ”


--------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!

17.12.11

Astrology: ஒரு மாணவியின் பொதுநல கோரிக்கையும் - வாத்தியாரின் பதிலும்


Astrology: ஒரு மாணவியின் பொதுநல கோரிக்கையும் - வாத்தியாரின் பதிலும்

from    xxxxxxxxxx@gmail.com
to    classroom2007@gmail.com
date    17 December 2011 05:35
subject    ஆசிரியரிடம் ஒரு கோரிக்கை
  
அய்யா அவர்களுக்கு வணக்கம்.

கொஞ்ச நாளாவே மனசுக்குள் ஒரு விதமான  சங்கடம். இது என்னுடைய தனிப்பட்ட பிரச்சனை இல்லை. நீங்களும் பார்க்கின்ற, படிக்கின்ற,  நம் நாட்டு நடப்புக்கள்தான் காரணம்.

ஒரு பக்கம் முல்லைப் பெரியார், மறுபக்கம் கூடங்குளம். ஒரு பக்கம் விலை வாசி உயர்வு , தங்கம் , டாலர் உயர்வு, மறுபக்கம் ரூபாய் மதிப்பு இறங்கு முகம் . எங்கே பார்த்தாலும் தமிழ் மக்கள் ஏதோ ஒரு சோர்வோடு , அது எந்த நாடாக இருந்தாலும். யார் கூடவும் ஓட்டமுடியாமல். ஏன் , தமிழ் மக்கள் தங்களுக்குள்ளே ஓட்ட முடியாத, ஒரு மித்த கருத்து இல்லாத வாழ்க்கை நிலை!

கோவைத் தமிழ்மக்களுக்கு சென்னை பிடிக்கவில்லை. சென்னைத் தமிழ் மக்களுக்கு மற்ற ஊர்களைப் பிடிக்கவில்லை. பிடிக்கவில்லையோ என்னவோ ஓட்டுதல் இல்லை. என்னவென்று புரியாத நிலை. இது ஒரு உதாரணம்தான். ஆக மொத்தம் தமிழர்களுக்குப் பலவிதத்திலும் நிம்மதி இல்லை.

ஒரு தனிக் குடும்பத்தை எடுத்துக்கொண்டாலும், குடும்பப் பொருளாதாரம் வளமாக இல்லை. ஒரு படி மேலே செல்வதற்கும், நாடு விட்டு நாடு செல்வதற்கும் போலித்தனமான சந்தோஷத்தோடு இருக்கின்ற, செல்கின்ற நிலைமை.

என்னைக்கோ ஒரு நாள் நாமும் நம் ஊருக்குப் போய் நன்றாக வாழ்வோம் என்று கனவோடு இருக்கிறோம்.

எதை பத்தியும் கவலைப் படாத ஆட்சியாளர்கள் நம் கனவுகளில் மண்ணை அள்ளிப் போட்டுவிடுவார்களோ என்னும் பயம் மட்டுமே தற்போது மிஞ்சி இருக்கிறது!

எதிர் கட்சிகளும் மக்களைப்பற்றி, மக்களின் மேன்மையைப் பற்றிக் கவலைப்படாமல் தங்கள் கட்சியைப் பற்றியே கவலைப்படும் நிலைமை. ஆட்சியைப் பிடிக்க மாற்றி மாற்றி வேறு கட்சிகளுடன் அணி சேரும் நிலைமை.

எனக்கு தூக்கம் வரமாட்டேன் என்கிறது. மன அழுத்தமாகவும் இருக்கிறது.

இது நம் நாட்டின் தலை எழுத்தா? நாட்டு மக்களின் தலை எழுத்தா? புரியவில்லை!

உங்களுடைய கட்டுரைகளை வரிசையாகப் படித்துக் கொண்டு இருக்கிறேன்.

நம்ம நாட்டின் ஜாதகத்தைக் கொஞ்சம் அலசுங்களேன். நீங்கள் ஏற்கனேவே போட்டு இருக்கும் பதிவைப் படித்து இருக்கிறேன். இருந்தாலும் இப்போது நடக்கிறன்றவற்றைப் பார்த்தால் இது எங்கே போய் முடியுமோ என்ற பயம் வாட்டுகிறது!

தயவு செய்து நாட்டின் ஜாதகத்தை  நீங்கள் கொஞ்சம் அலசி ஆராய்ந்து உங்கள் பதிவில் எழுதுங்கள்!

இந்த நிலைமை மாறுமா? நிம்மதி கிடைக்குமா? ஆட்சியாளர்களின் மனம் மாறுமா? இத்தனை பேர்களின் போராட்டங்கள் வெற்றி பெறுமா? மக்கள் தன்னிறைவு பெறுவார்களா?
 
விவரமாக எழுதுங்கள்.

எனது கோரிக்கை தவறு  என்றால் மன்னிக்கவும். உங்கள் பதிவுகளைப் படிக்கும் உரிமையில், உங்களுக்கு இருக்கும் சமுதாய மற்றும் ஆன்மீக ஜோதிட பற்றைப் பற்றிப் புரிந்தவள் என்ற முறையில் உங்களிடம் இந்தக் கோரிக்கையை வைக்கிறேன்

இப்படிக்கு
உங்கள் மாணவி
கலை

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாத்தியாரின் பதில்:

சபாஷ்! அருமையாக எழுதியுள்ளீர்கள் சகோதரி. உங்களின் பொது நல சிந்தனைக்கும் கோரிக்கைக்கும் நன்றி உரித்தாகுக. நாட்டின் ஜாதகத்தை அலசி எழுதுகிறேன். இரண்டு அல்லது மூன்று தினங்கள் பொறுத்துக்கொள்ளுங்கள்

அன்புடன்
வாத்தியார்

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

16.12.11

பள்ளியெழுந்து எப்போது வருவார்?

 பள்ளியெழுந்து எப்போது வருவார்?

நாளை மார்கழித் திங்கள் துவங்குகிறது. இறையுணர்வு மேலோங்குவதற்காக உள்ள மாதம். அனுதினமும் ஒரு ஐந்து மணித்துளிகளாவது  இறைவனைப் பிரார்த்தனை செய்து அவன் அருளைப் பெறுவோம். இறைப் பாடல்களை மனனம் செய்வோம்!

கவியரசர் கண்ணதாசன் அவர்கள் எழுதிய அற்புதப் பாடல் ஒன்றை உங்களுக்காக இன்று வலை ஏற்றியிருக்கிறேன்.
இந்தப் பாடல் தஞ்சாவூர் பெரியவருக்கு சமர்ப்பணம்!

அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------------------------------------
சரி, பள்ளியெழுந்து எப்போது வருவார்?
நீங்கள் அழைத்தால் எப்போது வேண்டுமென்றாலும் வருவார்! மனம் உருக பக்தியோடு அழைக்க வேண்டும்!

மனம் உருகவா - அதெப்படி?

அதுதானே கஷ்டம்!
அனுஷ்கா சர்மாவிற்காக உருகுவோம்.
போயஸ் தோட்டத்து வீடுகள் என்றால் உருகுவோம்.
இன்னோவா வாகனத்திற்கு உருகுவோம்.
வேலைபார்க்கும் நிறுவனத்தில் மேலாளர் பதவி கிடைக்க உருகுவோம்.
ஆனால் இறைவனுக்காக உருகுவதா?
கஷ்டம்(டா) சாமி!
-----------------------------------------------------------------------------------------------


                                                       பாடலின் காணொளி வடிவம்
                                                               --------------------------------------------------------------------------------------------
பாடலின் வரி வடிவம்

திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே
ஸ்ரீமந் நாராயணா - அன்பு
திருமகள் துணையில் அமைதி கொண்டாயே
ஸ்ரீமந் நாராயணா
திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே
ஸ்ரீமந் நாராயணா - அன்பு
திருமகள் துணையில் அமைதி கொண்டாயே
ஸ்ரீமந் நாராயணா

உலகினைப் பாய் போல் கொண்டவன் நீயே
ஸ்ரீமந் நாராயணா - அன்று
உரலுடன் நடந்த கண்ணனும் நீயே
ஸ்ரீமந் நாராயணா
இரணியன் அகந்தை அழித்தவன் நீயே
ஸ்ரீமந் நாராயணா - அன்று
இந்திர வில்லை முறித்தவன் நீயே
ஸ்ரீமந் நாராயணா

திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே
ஸ்ரீமந் நாராயணா - அன்பு
திருமகள் துணையில் அமைதி கொண்டாயே
ஸ்ரீமந் நாராயணா

கொடியவள் மகிஷி கொலை புரிந்தாளே
அறியாயோ நீயே? - அவள்
கொடுமையை ஒழிக்க மறந்து விட்டாயோ?
ஸ்ரீமந் நாராயணா
தேவர்கள் உன்தன் குழந்தைகளன்றோ
மறந்தாயோ நீயே? - உன்
தெய்வ முனிவரைக் காப்பத்தற்கென்றே
வருவாயோ நீயே?

திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே
ஸ்ரீமந் நாராயணா - அன்பு
திருமகள் துணையில் அமைதி கொண்டாயே
ஸ்ரீமந் நாராயணா

தோளிலந்த சாரங்கம் எடுத்து வரவேண்டும் நீயே - கணை
தொடுத்திட வேண்டும் அரக்கியின் வாழ்வை
அழித்திடுவாய் நீயே
அநந்த சயனத்தில் பள்ளியெழுந்து வாராய் திருமாலே உன்
அன்பரை யெல்லாம் துன்பத்திலிருந்து
காப்பாய் பெருமாளே

திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே
ஸ்ரீமந் நாராயணா அன்பு
திருமகள் துணையில் அமைதி கொண்டாயே
ஸ்ரீமந் நாராயணா

சதங்கு படைகளென
எழுந்து எழுந்து இன்று வீறுடன் வாருங்கள்
நாரயாணன் என் தலைவனின் துணையால்
போர்க்களம் வாருங்கள்
வானம் இடிபடவும் பூமி பொடி படவும்
வேல் கொண்டு வாருங்கள் - இனி
வருவது வரட்டும் முடிவினைப் பாரிப்போம்
தேவர்கள் வாருங்கள்
ஸ்ரீமந் நாராயணா ஸ்ரீபதி ஜெகந்நாதா
வருவாய் திருமாலே துணை தருவாய் பெருமாளே!


பாடல்: திருப்பாற் கடலில்
திரைப்படம்: ஸ்வாமி ஐயப்பன்
பாடியவர்: கே.ஜே. ஜேசுதாஸ்
இயற்றியவர்: கவியரசர் கண்ணதாசன்
இசை: தேவராஜன்
ஆண்டு: 1975

வாழ்க வளமுடன்!

15.12.11

Astrology தேவி ஆடிய கண்ணாம்பூச்சி ஆட்டம்!


Astrology  தேவி ஆடிய கண்ணாம்பூச்சி ஆட்டம்!

தேவி என்றால் அரிதாரம் பூசிக்கொண்டு திரைப்படங்களில் தலை காட்டும் தேவியல்ல! உண்மையான தேவி. அன்னை உமையவள் என்பது அவரின் திருப்பெயர்களில் ஒன்று. மதுரைக்காரர்கள் அவரை மீனாட்சி என்பார்கள். காஞ்சியில் காமாட்சி. காசியில் விசாலாட்சி!

சிவபெருமானின் இயக்க ரகசியத்தை அறிந்து கொள்ள விரும்பிய அன்னை உமையவள், அதுபற்றி இறையனாரிடமே வினவ, அவர் வழக்கம்போல ஒரு திருவிளையாடலை நிகழ்த்தினார். நாம் விளையாடினால், அது வெறும் விளையாட்டு. இறைவன் நிகழ்த்தினால் அது திருவிளையாட்டு. அதற்கு விதிமுறைகள் எல்லாம் கிடையாது. கேள்வி கேட்டால், அவர் நெற்றிக் கண்ணைத் திறந்து நம்மை எரித்துவிடும் அபாயமும் உண்டு. ஆகவே கேள்வி கேட்காமல் இப்போது விளையாட்டை மட்டும் பார்ப்போம்.

கட்டணம் எதுவும் கிடையாது. செலவும் இல்லை. ஆகவே இணையத்தில் இலவசமாக மென்பொருட்களைத் தரவிறக்கம் செய்யும் போது நமக்கு ஏற்படும் மகிழ்ச்சியோடு இதையும் பார்த்து வைப்போம்.

உமையவள் தன்னை மறந்து இறையனாரின் கண்களைப் பொத்தினார். கண்ணாம்பூச்சி விளையாட்டில் நாம் செய்வதைப்போல தேவியார் இறைவனின் கண்களைத் தன் திருக்கரங்களால் மூடினார். ஒரு நொடிதான் மூடினார். அந்த ஷணத்தில் உலக இயக்கம் நின்று விட்டது. தவறை உணர்ந்த தேவி மன்னிப்புக் கோர இறையனார் வருத்தம் மேலிடச் சொன்னார்:

“என் கண்களை மூடி இந்த பிரபஞ்சத்தை இருளடையச் செய்து விட்டாய். என் கரத்தில் இருக்கும் ஜோதியில் நான் மறையப் போகிறேன்.
நீ பசுவாக உருவெடுத்து அலைந்து திரிந்து, அந்த ஜோதி இருக்கும் இடத்தைக் கண்டு பிடித்து என்னை வந்து சேர்க!” என்று கூறிவிட்டு மறைந்து விட்டார்.

பசுவாக மாறிய உமையவள், தன் சகோதரன் திருமாலின் உதவியோடு அந்த ஜோதியைத் தேடி அலைய நேரிட்டது. பூமி எங்கும் வலம் வந்தார். ஒரு திறமையான தொலைகாட்சி இயக்குனர் என்றால் அந்த அலைச்சலை 100 எஃபிசோடுகளாக்கி நம்மைப் பரவசப் படுத்தியிருப்பார், ஆனால் அந்தக் காலத்தில் அதெல்லாம் நடக்கவில்லை.

அம்மையின் அலைச்சலைக் கண்டு மனம் கனிந்த சிவன் ஒரு அஸ்த நட்சத்திர நன்னாளில் தன்னுடைய ஜோதியைக் காட்சியாக்கி அருளினார்.
உமையவளும் மனம் மகிழ்ந்து அந்த ஜோதியில் ஐக்கியமானார். ஐக்கியமாதல் என்றால் என்ன வென்று தெரியாதவர்கள் எல்லாம் பின்னூட்டத்தில் கேட்கலாம். லால்குடிக்காரர் விரிவாகப் பதில் சொல்வார்.

உமையவளுக்கு, சிவனார் கிருபை (கருணை) செய்த இடம் கோமல் என்ற ஸ்தலம். அந்த ஸ்தலத்தில், அதாவது அந்த இடத்தில் சிவனாருக்காகக் கோவில் எழுப்பப்பெற்றது. சிவனாருக்கு கிருபா குபரேஸ்வரர் என்னும் பெயரும் சூட்டப்பெற்றது. அம்மைக்கு அன்னபூரணி என்னும் பெயரும் சூட்டப்பெற்றது. இதுதான் அக்கோவிலின் தல வரலாறு.

வரலாற்றை எல்லாம் படிப்பதோடு நிறுத்திக் கொள்ளுங்கள். ஆராய்ச்சி எல்லாம் செய்ய வேண்டாம். அதற்கெல்லாம் ஜோல்னாபை ஆசாமிகள் இருக்கிறார்கள். அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்
---------------------------------------------------------------------------------------------------
சந்திரனுக்குரிய மூன்று நட்சத்திரங்களில் ஒன்றான ரோகினியைப் பற்றி முன் பதிவில் தெரிந்து கொண்டோம். அடுத்த நட்சத்திரம் அஸ்தம் (Hastham) தசாபுத்திப் பலன்கள் ரோகினிக்கு உள்ளதைப் போலவே இம்மி பிசகாமல் இதற்கும் உண்டு.

அஸ்தம் நட்சத்திரக்காரர்கள் அலங்காரப் பிரியர்கள். கற்பதில் ஆர்வம் உடையவர்கள். தாமாக வலியச் சென்று பிறருடன் பழகுபவர்கள்.
இரசிகத்தன்மை மிகுந்தவர்கள். அகட விகடமாகப் பேசும் தன்மை உடையவர்கள். தங்கள் தாயின் மேல் மிகுந்த அன்பு உடையவர்கள்.

Those born in the star Hasta are stable bodied, bear excellent character and warriors. They are givers, independent, famous, interested in the worshiping of god. They are learned, handsome, wealthy, daring, helpful to others and all knowledgeable. interested in music, happy with their relatives and friends, respected by kings (rulers)
-----------------------------------------------------------------------------------------------


அஸ்த நட்சத்திரத்திற்கான கோவில் கோமல் என்னும் கிராமத்தில் உள்ளது. இந்தக் கோமல் கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறைக்குச் செல்லும் சாலையில் குத்தாலம் என்னும் சிற்றூரில் இருந்து பிரியும் சாலையில் ஆறு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. பேருந்து வசதி உண்டு.
குலுக்கல் வண்டி வசதியும் உண்டு (அதாங்க நம்ம ஆட்டோ ரிக்சா)

கோவிலின் பெயர்: அருள்மிகு கிரிபா குபரேஸ்வரர் ஆலயம்
மூலவரின் திருப்பெயர்: கிரிபா குபரேஸ்வரர்
அம்மையின் பெயர்: அன்னபூரணி
தலவிருட்சம்: வில்வ மரம்
காலம்: ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கோவில்
உங்களின் தரிசனத்திற்காக கோவிலின் நடை திறந்திருக்கும் நேரம்: காலை 7 முதல் மதியம் 12 மணிவரை. அதுபோல மாலையில் 5.30 மணி முதல் இரவு 7.30 மணிவரை
இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கின்றார் என்பது சிறப்பு!.
மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை, திருக்கார்த்திகை ஆகிய நாட்களில் கோவில் திருவிழாக் கோலம் பூண்டிருக்கும்!

கடைந்த மோரில் வெண்ணெய் எடுத்துப் பொட்டலம் போடக்கூடிய திறமையான அன்பர்களுக்காக கோவிலின் முழு முகவரியைக் கீழே கொடுத்துள்ளேன். வெளி நாட்டில் இருப்பவர்களும், வெளி மாநிலங்களில் இருப்பவர்களும் தங்கள் ஜென்ம நட்சத்திரத தினத்தன்று, தங்களால் முடிந்த சிறு தொகையைக் கோவிலுக்கு அனுப்பி இறைவனுக்கு அர்ச்சனை, ஆபிஷேகம், ஆராதனை ஆகியவற்றை செய்யலாம். அவர்களுக்காவும்தான் முழு முகவரியைக் கொடுத்துள்ளேன்,

அருள்மிகு கிருபாகூபாரேச்வரர் திருக்கோயில்
கோமல்-609 805
குத்தாலம் தாலுக்கா,
நாகப்பட்டினம் மாவட்டம்     
தொலைபேசி எண்: +91 95002 84866    


அஸ்தம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தலத்திற்கு வந்து இறைவனை வணங்கிச் செல்லலாம். திருமணத்தில் தடை உள்ளவர்களும், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்களும் அதிக அளவில்  இங்கேவந்து பிரார்த்தனை செய்கிறார்கள். அதையும் மனதில் கொள்க

கிருபா குபரேஸ்வரர் மன்னிக்கும் குணமுடையவர். சித்தர்களும், முனிவர்களும், மகான்களும் அஸ்த நட்சத்திர நாளில் அரூப வடிவில் இத்தல இறைவனை வணங்க வருவதாக இன்றும் நம்பப்படுகிறது. அஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் பிரச்சினைகள் தீர இத்தலத்திற்குச் சென்று அப்பனையும் அம்மையையும் வழிபட்டு வரலாம். நல்ல பலன் கிடைக்கும்,

அன்புடன்
வாத்தியார்

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!