மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

2.12.11

சரவணப் பொய்கையில் நீராடியவள் எதைக் கேட்டாள்?

இந்தப் படத்தின் சிறப்பு: இதை வரைந்தவர் ராஜா ரவிவர்மா!



சரவணப் பொய்கையில் நீராடியவள் எதைக் கேட்டாள்?

சரவண பொய்கையில் நீராடி
துணை தந்தருள் என்றேன் முருகனிடம்
சரவண பொய்கையில் நீராடி
துணை தந்தருள் என்றேன் முருகனிடம்
இரு கரம் நீட்டி வரம் கேட்டேன்
அந்த மன்னவன் இன்னருள் மலர் தந்தான்
சரவண பொய்கையில் நீராடி
துணை தந்தருள் என்றேன் முருகனிடம்

அவனிடம் சொன்னேன் என் அஞ்சுதலை
அந்த அண்ணலே தந்து வைத்தான் ஆறுதலை
இவ்விடம் இவர் தந்த இன்ப நிலை
கண்டு என்னிடம் நான் கண்டேன் மாறுதலை
ஓ.ஓ..ஓ.ஓ....ஓ.ஓ...

சரவண பொய்கையில் நீராடி
துணை தந்தருள் என்றேன் முருகனிடம்

நல்லவர் என்றும் நல்லவரே
உள்ளம் உள்ளவர் யாவரும் உள்ளவரே
நல்லவர் என்றும் நல்லவரே
உள்ளம் உள்ளவர் யாவரும் உள்ளவரே
நல்ல இடம் நான் தேடி வந்தேன்
அந்த நாயகன் என்னுடன் கூட வந்தான்

சரவண பொய்கையில் நீராடி
துணை தந்தருள் என்றேன் முருகனிடம்
இரு கரம் நீட்டி வரம் கேட்டேன்
அந்த மன்னவன் இன்னருள் மலர் தந்தான்
சரவண பொய்கையில் நீராடி
துணை தந்தருள் என்றேன் முருகனிடம்
"

இது சத்தியம் என்னும் திரைப்படத்திற்காக (1963) கவியரசர் கண்ணதாசன் அவர்கள் எழுதிய அற்புதமான பாடல் இது. அஞ்சுதலைத் சொன்னேன் அவன் எனக்கு ஆறுதலைத் தந்தான் என்று சொன்னவர், நல்லவர் என்றும் நல்லவரே உள்ளம் உள்ளவர் யாவரும் உள்ளவரே என்று சொன்னார் பாருங்கள் அதுதான் இந்தப் பாடலின் முத்தாய்ப்பான வரிகள். இசை : விஸ்வநாதன் – ராமமூர்த்தி பாடியவர் : பி.சுசீலா

19 comments:

  1. "அவனிடம் சொன்னேன் என் அஞ்சுதலை
    அந்த அண்ணலே தந்தான் ஆறுதலை"

    இந்த வரிகள் அப்பாடலில் அக்ஷர லட்சம் பெறும்.

    அஞ்சுதல் என்பது பயம் என்ற பொருள் படும்.அஞ்சு என்பது பேச்சு வழக்கு. ஐந்து என்பது அதன் எழுத்து வடிவம்.நம்முடைய தீவினைகளைத் தூண்டி நம்மை பாவத்திற்கு ஆளாக்குவது நம்முடைய ஐம்புலன்கள்தாம்."அப்பா இந்த ஐம்புலன்கள் என்னைப் பாடாய்ப் படுத்துகின்றன.அவ‌ற்றை நான் அஞ்சுகிறேன் என்று முருகனிடம் சொன்னேன்"

    ஆறுதல் என்றால் நமக்கு மனதிற்கு இதமாகிப் பேசி சமாதானத்தைத தருவது.
    ஆறு என்றால் எண்ணிக்கை.ஆறுதலை என்றால் ஆறு எண்ணிக்கையுள்ள
    தலைகள் என்றும் பொருளாகும்.முருகப்பெருமானுக்கு ஆறுதலையல்லாவா?
    அவன் தன் ஆறு வாயினாலும் விதவிதமாகப்பேசி எனக்கு மனச் சமாதானதை அளித்தான்.தன் ஆறுதலைகளை எனக்குக் கொடுத்தான் என்றால் எனக்கு ஆறு அறிவினையும் கொடுத்தான்.

    எனக்குத் தெரிந்த மந்திரமான ஐந்து எழுத்தினை(நமசிவாய) நான் சொன்னேன். அவன் ஆறெழுத்து மந்திரம்(சரவணபவ) எனக்குத் தந்தான்.

    நல்ல பாடல். அளித்த ஐயாவுக்கு முருகன் அருள் கேட்காமலேயே கிடைக்கும்.நன்றி

    ReplyDelete
  2. ஐயா, சுசீலாவின் இனிய குரலை யாரால் ரசிக்காமல் இருக்கமுடியும். பாடலுக்கு கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகள் என்பதை நம்பவே முடியவில்லை. அஞ்சுதலை, ஆறுதலை என்ற சொல் விளையாட்டு எனக்கும் மிகவும் பிடித்தது.
    இந்த வரிகள் காலமேகத்தின்,
    சங்கரற்கும் ஆறுதலை சண்முகற்கும் ஆறுதலை
    ஐங்கரற்கும் ஆறுதலை ஆனதே -சங்கைப்
    பிடித்தோர்க்கும் ஆறுதலை பித்தாநின் பாதம்
    படித்தாற்கும் ஆறுதலைப் பார்!
    என்ற பாடல் வரிகளை தவறாமல் நினைவுக்கு கொண்டுவரும்.

    "நல்லவர் என்றும் நல்லவரே
    உள்ளம் உள்ளவர் யாவரும் உள்ளவரே
    நல்ல இடம் நான் தேடி வந்தேன்"
    என்று வரிகளின் மூலம் நம் வகுப்பறையை நான் நினைத்துக் கொள்கிறேன்.

    ஐயா, குரு அலுங்காமல் கொண்டுபோய் உள்ளே வைத்தால், சனி அலேக்காக அம்மணியை வெளியே கொண்டு வந்து விட்டது. முன்பு யாரவது இது கோள்களின் பெயர்ச்சியினால் என்று சொன்னால், காக்கை உட்கார்ந்து பனம் பழம்விழுந்தது ... ஹி..ஹி. ஹீ , என்று சொல்லும் நான், இப்பொழுது எல்லோருக்கும் முன் அதை சொல்ல ஆரம்பித்துவிட்டேன். எங்கே அப்படியே துணிக்கடைக்கும் போய், எந்த வண்ணத்தில் ஆடை வாங்கினால் வரும் காலத்தை சுலபமாக மாற்றலாம் என்று பொடிநடையாய் கிளம்பிவிடுவேனோ? எனக்கு மிகவும் முற்றிய நிலையோ? என்ற கவலையாய் இருக்கிறது.
    நல்ல பாடலை நினைவு படுத்திய பதிவிற்காக நன்றிகள்.

    ReplyDelete
  3. //குரு அலுங்காமல் கொண்டுபோய் உள்ளே வைத்தால், சனி அலேக்காக அம்மணியை வெளியே கொண்டு வந்து விட்டது. முன்பு யாரவது இது கோள்களின் பெயர்ச்சியினால் என்று சொன்னால், காக்கை உட்கார்ந்து பனம் பழம்விழுந்தது ... ஹி..ஹி. ஹீ , என்று சொல்லும் நான், இப்பொழுது எல்லோருக்கும் முன் அதை சொல்ல ஆரம்பித்துவிட்டேன்.//

    சூப்பெர் தேமொழி!.உங்கள் பெய‌ரில் பாதியையும், பழத்தையும் வைத்துள்ள அந்த அம்மணியின் ஜாதகத்தை மேலும் அலசி ஏன் அந்த 192 நாள் காராகிரஹப் பிரவேசம் என்று யாராவது எந்த தளத்திலாவது சொல்லியிருக்கிறார்களா? பகிர்ந்துகொள்ளவும்.

    அர்தாஷ்டம சனிக்கு என்ன ஆடை அணிய வேண்டும்?

    ReplyDelete
  4. நல்ல பாடல். பாடல் & க்ருஷ்ண்ன் சார் விளக்கவுரை இரண்டிற்கும் நன்றி.

    ReplyDelete
  5. நன்றிகள் ஐயா. சுசீலா அம்மாவின் குரல் என்றும் மாறாத இனிமையான உன்னதமான குரல்.
    நல்ல விளக்கம் கிருஷ்ணன் சார். நன்றி.

    ReplyDelete
  6. @kmr.krishnan,

    ஹா ஹா....கடக ராசி...அர்த்தாஷ்டம சனி.....
    எனக்கு தெரிந்தவரை பச்சை பதிகம் அல்லது சனி வஜ்ர பஞ்சர கவசம். இரண்டும் தமிழில் கூக்குள் தேடலில் கிடைக்கும்.
    சனி நீல நீறத்தவர்....ஆகையால் கரு நீல துண்டு போட்டுக்கொள்ளலாம் ஆனால் அதுவும் ஒரு கட்சி துண்டு என்று நினைக்கிறேன். ஆகையால் கவனம் தேவை.

    ReplyDelete
  7. //ஹா ஹா....கடக ராசி...அர்த்தாஷ்டம சனி.....//


    ஹி ஹி ஆமாம்!ஆவணிப் பூசம். அதனால் கடகராசியே தான்.கடகலக்னமும் கூட. ஹி ஹி ஹி ஹி என்ன கலர் துண்டு போட்டாலும்,கிடைக்கிற அர்ச்சனைகள் கிடைத்துக்கொண்டே தான் இருக்கும்.

    ReplyDelete
  8. வாத்தியார் ஐயா வணக்கம்.

    ஐயோ எப்படி சொல்லுவேன்!
    சொல்லு வதற்க்கிர்க்கு வாக்கே இல்லை அப்படி ஒரு சிறப்பு மிக்க அருமையான பாடலை வலையில் இன்றைய பாடமாக ஏற்றியமைக்கு கோடான கோடி நன்றி வாத்தியார் ஐயா.

    ReplyDelete
  9. அய்யா வணக்கம் , இனிமையான சுசீலா அம்மாவின் குரலை மீண்டும் கேட்பதுக்கு வாய்ப்பளித்த அய்யா அவர்களுக்கு நன்றி

    ReplyDelete
  10. ///Blogger kmr.krishnan said...
    "அவனிடம் சொன்னேன் என் அஞ்சுதலை
    அந்த அண்ணலே தந்தான் ஆறுதலை"
    இந்த வரிகள் அப்பாடலில் அக்ஷர லட்சம் பெறும்.
    அஞ்சுதல் என்பது பயம் என்ற பொருள் படும். அஞ்சு என்பது பேச்சு வழக்கு. ஐந்து என்பது அதன் எழுத்து வடிவம்.நம்முடைய தீவினைகளைத் தூண்டி நம்மை பாவத்திற்கு ஆளாக்குவது நம்முடைய ஐம்புலன்கள்தாம்."அப்பா இந்த ஐம்புலன்கள் என்னைப் பாடாய்ப் படுத்துகின்றன.அவ‌ற்றை நான் அஞ்சுகிறேன் என்று முருகனிடம் சொன்னேன்"
    ஆறுதல் என்றால் நமக்கு மனதிற்கு இதமாகிப் பேசி சமாதானத்தைத தருவது.
    ஆறு என்றால் எண்ணிக்கை.ஆறுதலை என்றால் ஆறு எண்ணிக்கையுள்ள
    தலைகள் என்றும் பொருளாகும்.முருகப்பெருமானுக்கு ஆறுதலையல்லாவா?
    அவன் தன் ஆறு வாயினாலும் விதவிதமாகப்பேசி எனக்கு மனச் சமாதானதை அளித்தான்.தன் ஆறுதலைகளை எனக்குக் கொடுத்தான் என்றால் எனக்கு ஆறு அறிவினையும் கொடுத்தான்.
    எனக்குத் தெரிந்த மந்திரமான ஐந்து எழுத்தினை(நமசிவாய) நான் சொன்னேன். அவன் ஆறெழுத்து மந்திரம்(சரவணபவ) எனக்குத் தந்தான்.
    நல்ல பாடல். அளித்த ஐயாவுக்கு முருகன் அருள் கேட்காமலேயே கிடைக்கும்.நன்றி/////

    அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்’ என்றார் அருணகிரியார். பயம் தொற்றிக்கொண்ட முகத்தைக் கண்டால், அங்கே ஆறுமுகத்தான் வந்து அணைத்துக்கொள்வான் என்றார். இங்கேயும் அதே பொருள்தான். நன்றி!

    ReplyDelete
  11. Blogger தேமொழி said...
    ஐயா, சுசீலாவின் இனிய குரலை யாரால் ரசிக்காமல் இருக்கமுடியும். பாடலுக்கு கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகள் என்பதை நம்பவே முடியவில்லை. அஞ்சுதலை, ஆறுதலை என்ற சொல் விளையாட்டு எனக்கும் மிகவும் பிடித்தது.
    இந்த வரிகள் காலமேகத்தின்,
    சங்கரற்கும் ஆறுதலை சண்முகற்கும் ஆறுதலை
    ஐங்கரற்கும் ஆறுதலை ஆனதே -சங்கைப்
    பிடித்தோர்க்கும் ஆறுதலை பித்தாநின் பாதம்
    படித்தாற்கும் ஆறுதலைப் பார்!
    என்ற பாடல் வரிகளை தவறாமல் நினைவுக்கு கொண்டுவரும்.
    "நல்லவர் என்றும் நல்லவரே
    உள்ளம் உள்ளவர் யாவரும் உள்ளவரே
    நல்ல இடம் நான் தேடி வந்தேன்"
    என்று வரிகளின் மூலம் நம் வகுப்பறையை நான் நினைத்துக் கொள்கிறேன்.
    ஐயா, குரு அலுங்காமல் கொண்டுபோய் உள்ளே வைத்தால், சனி அலேக்காக அம்மணியை வெளியே கொண்டு வந்து விட்டது. முன்பு யாரவது இது கோள்களின் பெயர்ச்சியினால் என்று சொன்னால், காக்கை உட்கார்ந்து பனம் பழம்விழுந்தது ... ஹி..ஹி. ஹீ , என்று சொல்லும் நான், இப்பொழுது எல்லோருக்கும் முன் அதை சொல்ல ஆரம்பித்துவிட்டேன். எங்கே அப்படியே துணிக்கடைக்கும் போய், எந்த வண்ணத்தில் ஆடை வாங்கினால் வரும் காலத்தை சுலபமாக மாற்றலாம் என்று பொடிநடையாய் கிளம்பிவிடுவேனோ? எனக்கு மிகவும் முற்றிய நிலையோ? என்ற கவலையாய் இருக்கிறது.
    நல்ல பாடலை நினைவு படுத்திய பதிவிற்காக நன்றிகள்.//////

    உங்களின் மனம் திறந்த பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  12. ///Blogger kmr.krishnan said...
    //குரு அலுங்காமல் கொண்டுபோய் உள்ளே வைத்தால், சனி அலேக்காக அம்மணியை வெளியே கொண்டு வந்து விட்டது. முன்பு யாரவது இது கோள்களின் பெயர்ச்சியினால் என்று சொன்னால், காக்கை உட்கார்ந்து பனம் பழம்விழுந்தது ... ஹி..ஹி. ஹீ , என்று சொல்லும் நான், இப்பொழுது எல்லோருக்கும் முன் அதை சொல்ல ஆரம்பித்துவிட்டேன்.//
    சூப்பெர் தேமொழி!.உங்கள் பெய‌ரில் பாதியையும், பழத்தையும் வைத்துள்ள அந்த அம்மணியின் ஜாதகத்தை மேலும் அலசி ஏன் அந்த 192 நாள் காராகிரஹப் பிரவேசம் என்று யாராவது எந்த தளத்திலாவது சொல்லியிருக்கிறார்களா? பகிர்ந்துகொள்ளவும்.
    அர்தாஷ்டம சனிக்கு என்ன ஆடை அணிய வேண்டும்?//////

    என்ன கலரில் ஆடை கட்டினாலும், சனி விடமாட்டான். தருவதைத் தந்தே தீர்வான்:-)))

    ReplyDelete
  13. /////Blogger sriganeshh said...
    நல்ல பாடல். பாடல் & கிருஷ்ணன் சார் விளக்கவுரை இரண்டிற்கும் நன்றி./////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  14. /////Blogger Sathish K said...
    நன்றிகள் ஐயா. சுசீலா அம்மாவின் குரல் என்றும் மாறாத இனிமையான உன்னதமான குரல்.
    நல்ல விளக்கம் கிருஷ்ணன் சார். நன்றி./////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  15. /////Blogger sriganeshh said...
    @kmr.krishnan,
    ஹா ஹா....கடக ராசி...அர்த்தாஷ்டம சனி.....
    எனக்கு தெரிந்தவரை பச்சை பதிகம் அல்லது சனி வஜ்ர பஞ்சர கவசம். இரண்டும் தமிழில் கூக்குள் தேடலில் கிடைக்கும்.
    சனி நீல நீறத்தவர்....ஆகையால் கரு நீல துண்டு போட்டுக்கொள்ளலாம் ஆனால் அதுவும் ஒரு கட்சி துண்டு என்று நினைக்கிறேன். ஆகையால் கவனம் தேவை./////

    என்ன கலரில் துண்டு போட்டாலும், சனி விடமாட்டான். தருவதைத் தந்தே தீர்வான்:-)))

    ReplyDelete
  16. ////Blogger kmr.krishnan said..
    //ஹா ஹா....கடக ராசி...அர்த்தாஷ்டம சனி.....//
    ஹி ஹி ஆமாம்!ஆவணிப் பூசம். அதனால் கடகராசியே தான்.கடகலக்னமும் கூட. ஹி ஹி ஹி ஹி என்ன கலர் துண்டு போட்டாலும்,கிடைக்கிற அர்ச்சனைகள் கிடைத்துக்கொண்டே தான் இருக்கும்.////

    வீட்டில் மட்டுமல்ல! வெளியிலும் கிடைக்கும்!:-)))

    ReplyDelete
  17. /////Blogger kannan said...
    வாத்தியார் ஐயா வணக்கம்.
    ஐயோ எப்படி சொல்லுவேன்!
    சொல்லுவதற்கு வாக்கே இல்லை அப்படி ஒரு சிறப்பு மிக்க அருமையான பாடலை வலையில் இன்றைய பாடமாக ஏற்றியமைக்கு கோடான கோடி நன்றி வாத்தியார் ஐயா.//////

    நன்றிகளை வீணாக்காதீர்கள். ஒரு நன்றி தந்தால் போதும்!

    ReplyDelete
  18. ////Blogger sekar said...
    அய்யா வணக்கம் , இனிமையான சுசீலா அம்மாவின் குரலை மீண்டும் கேட்பதுக்கு வாய்ப்பளித்த அய்யா அவர்களுக்கு நன்றி/////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  19. Guru Vanakkam,

    Superb Song. Evergreen in memory.
    ******
    Applying for 2 days leave.

    Leaving for UK, will connect from there.

    RAMADU.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com