திறந்தவெளியில் குளிப்பது யார் தவறு?
சக மனிதர்களில் 60% பேர்கள் நல்லவர்கள் இல்லை. இன்றையத்தேதியில் இந்த சதவிகிதம் மாறுபடலாம்.
எல்லாம் கலியுகம். சனி, ராகு அல்லது கேதுவால் லக்கினம் அல்லது லக்கினகாரகன் பாதிக்கப்பெற்றவர்களே அதிகம். அல்லது சுபகிரகங்களின் பார்வை இல்லாது வக்கிரமாகிப் போய்விட்டவர்கள் என்றும் கொள்ளலாம்.
இணையத்தில் உலாவருபவர்களிலும், எழுதுபவர்களிலும் அவர்களுடைய ஆதிக்கம் உள்ளது.
தாங்கள் எழுதுவதைவிட, அடுத்தவன் எழுதுவதைத் திருடிப் பதிவிடுபவர்களே அதிகம். நீங்கள் உங்கள் பதிவைப் பிரதி எடுப்பதைத் தடுக்க என்ன உபாயம் செய்தாலும், அதை உடைத்துவிட்டு நொடியில் பிரதி எடுக்க இன்றைய கணினி தொழில் நுட்பம் அசாத்திய உதவி செய்யும்.
அதுபோல் எடுப்பவர்களைத் தடுக்க முடியாது.
இணையத்தில் எழுதுவது என்பது ஒரு பெண் திறந்தவெளியில் குளிப்பதற்குச் சமமானது. சில நொடிகளில் அந்தப் பெண்ணை ஜூம் போட்டு விதவிதமான கோணங்களில் படம் எடுத்துக்கொண்டு போய் விடுவார்கள். காணொளிகளும் எடுத்துக்கொண்டுபோய் தங்கள் பதிவுகளில் அல்லது தங்களுடைய சமூக வலைத்தளங்களில் போட்டு மகிழ்வார்கள். அதைத் தடுக்க எந்தக் கொம்பனாலும் முடியாது.
அது அனைவரும் அறிந்ததே! நம்முடைய வகுப்பறைப் பதிவுகள் பல திருட்டுப்போய்க்கொண்டிருக்கின்றன. நம்முடைய வாசகர்கள் மற்றும் கண்மணிகள் அவற்றைப் பார்த்து எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிப்பார்கள்.
சம்பந்தப்பட்ட ஆசாமி எந்தப் பொந்திற்குள் இருக்கிறான் என்று நமக்கு எப்படித் தெரியும்? பழநிஅப்பன் பார்த்துக்கொள்ளட்டும் என்று விட்டுவிடுவேன்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக இது அதிகமாகி விட்டது. அதனால்தான் மேல்நிலைப் பாடங்களைத் தனி இணையதளத்தில் எழுதிக் கொண்டிருக் கிறேன். திருட்டுப் போகக்கூடாது என்பதுதான் அதன் தலையாய நோக்கம். குறிப்பிட்ட சிலர் மட்டுமே அந்த தளத்திற்கு அனுமதிக்கப் பெற்றுள்ளார்கள். அஷ்டகவர்க்கத் தொடர் பாடத்தைக்கூட அதில்தான் எழுதுவதாக உள்ளேன். பிறகு ஒரு நாள் அவைகள் எல்லாம் காப்புரிமையுடன் புத்தக வடிவாக வரவுள்ளது. அப்போது நீங்கள் அனைவரும் படித்துப் பயனடையலாம். அதுவரை பொறுத்திருங்கள்
அத்துடன் முன்பு நான் எழுதிக்கொண்டிருந்த “பல்சுவை” என்னும் வலைப்பூவைப் பூட்டி வைத்திருந்தேன். இப்போது அதைத் திறந்து விட்டுள்ளேன்.
அதில் சுமார் 424 பதிவுகள் உள்ளன
அதற்கான சுட்டி That is URL link : http://devakottai.blogspot.com/
23.12.2005 முதல்17.08.2009 வரை சுமார் 3 ஆண்டுகள் எட்டு மாத காலத்தில் எழுதப்பெற்றவைகள் அவைகள். பதிவுகள் குறிச்சொற்களுடன் உள்ளன.
பல பிரிவுகளில் / தலைப்புக்களில் எழுதப்பெற்ற சுவையான பதிவுகள் அதில் உள்ளன.
2005 டிசம்பரில் 10 பதிவுகள்
2006ல் 106 பதிவுகள்
2007ல் 78 பதிவுகள்
2008ல் 194 பதிவுகள்
2009ல் 36 பதிவுகள்
---------------------------
மொத்தம் 424 பதிவுகள்
--------------------------------------
வகுப்பறை சூடு பிடித்தவுடன் அதில் எழுதுவதைக் குறைத்துக்கொண்டேன். அத்துடன் இரண்டு குதிரைகளை ஒரே சமயத்தில் ஓட்ட முடியாது என்பதற்காக
கடந்த இரண்டரை ஆண்டுகளாக அதில் எழுதுவதை நிறுத்தி வைத்துள்ளேன். அத்துடன் அதில் உள்ளவைகள் புதிதாக இணையத்தில் நுழையும் சமூக வளத்தளத்தளக் கோமான்களால் திருட்டிற்கு உள்ளாகக்கூடாது என்று பூட்டி வத்திருந்தேன்.
இப்போது அதைத் திறந்து விட்டுள்ளேன். நீங்கள் அனைவரும் அவற்றை, அதில் உள்ள சுவையான ஆக்கங்களைப் படித்து மகிழலாம்.
--------------------------------------------------------------------------
வாத்தி (யார்) எதற்கு இந்த திடீர் கரிசனம்?
வாத்தியார் பத்து நாட்கள் வடக்கே பயணம். சொந்த மற்றும் வியாபார அலுவல்கள் காரணமாகத் தொலைதூரப் பயணம். பத்து நாட்கள் வகுப்பறைக்கு விடுமுறை, உங்களுக்கு போரடிக்கக்கூடாது என்பதற்காக இந்தக் கரிசனம்.
--------------------------------------------------------------------------
ஒவ்வொரு ஞாயிறன்றும் மாணவர் மலர் மட்டும் வெளிவரும். அதற்கு நீங்கள் எழுதும் பின்னூட்டங்களும் வெளி வரும்! ஆகவே மாணவர் மலருக்கு எழுதுபவர்கள் எழுதியனுப்பலாம்.
அடுத்த பாடம், புத்தாண்டில் 5.1.2012 அன்று வெளியாகும். வாய்ப்பிருந்தால், அதாவது இசைந்தால் அதற்கு முன்பே வகுப்பு விடுமுறை முடிந்து மீண்டும் துவங்கும்.
அடுத்த பாடம் நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் இந்தியாவின் ஜாதகம். விரிவான அலசலுடன் அது பதிவிடப்பெறும்!
-------------------------------------------------------------------------
இன்னும் ஒரு முக்கியமான செய்தி: இன்றையப் பதிவு வகுப்பறையின் ஆயிரமாவது பதிவு. (Posting Number 1,000)
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!

ஆயிரம் பதிவுகள் இட்ட ஆசிரியர் அய்யா போற்றி
ReplyDeleteஅருள் பொங்கும் வார்த்தை கூறி துயர்நீக்கும் அய்யா போற்றி
தாயினும் பரிந்து மாணவர்தனை அணைப்பாய் போற்றி
அழைக்கும் ஓர் மாணவர்க்கெல்லாம் துணைக்கரம் கொடுப்பாய் போற்றி
தூயவர் இதயம் போலத் துலங்கிடும் ஒளியே போற்றி
பாடத்தை பதிவாய் இட்டு அறிவு தானத்தை தருவாய் போற்றி
ஞாயிறே நலமே வாழ்க நாயகன் வடிவே போற்றி
நானிலம் உள்ள நாள் மட்டும் போற்றுவோம் போற்றி போற்றி
(கர்ணன் படத்தில் வரும் "ஆயிரம் கரங்கள் நீட்டி" பாடலுக்கு நன்றி. இளவல்கள் தனுசு, தமிழ்விரும்பி மாணவர்கள் மாதிரி சொந்தமா கவிதை எழுத தெரியாவிட்டாலும், மண்டபத்தில் அடுத்தவர்கள் எழுதிய கவிதையை எடுத்து வந்து, வார்த்தைகளை மாற்றிப் போட்டு சிறப்பா வாழ்த்துப் பாட்டெல்லாம் பாடிடுவோம்ல.ஹி..ஹி..ஹீ )
Guru Vanakkam,
ReplyDeleteI wanted to be the first to wish you on the 1000th post. With God's grace this should multiply in 1000's
Enjoy your holdiays and see you in 2012. Happy New year.
RAMADU
1000 பிறை கண்டது போல் ஆயிரம் பதிவுகண்ட வகுப்பறைக்கு என் வாழ்த்துக்கள். இது 10000 பதிவையும் காணும்.ஐயமில்லை.வலையுலகில் அதிகபட்சப் பின் தொடர்வோர் இங்கேயே உள்ளனர். அதுவும் மகிழ்ச்சியே.
ReplyDeleteஐயாவின் பதிவுகளுக்குப் பின்னூட்டம் இடும் சிலர், 'மாணவர் மலரு'க்குப் பின்னூட்டம் இடுவதில்லை.
இவ்வளவு பேர் பின் தொடர்வோர் இருந்தும் ஒரு 100 பேர்கூட பின்னூட்டம் இடுவதில்லை என்பது மனதிற்கு ஆறுதலாக இல்லை.இந்த 1000 ஆவது பதிவிலிருந்த்தாவது பலரும் பின்னூட்டம் இடுவார்கள் என்று எதிர் பார்கிறேன்.
தங்களுடைய பல்சுவை வலைப்பூவையும் படிக்கிறேன்.
நன்றி! வணக்கம்.!
ஆயிரம் மலர்களே, மலருங்கள்!
ReplyDeleteஅறிவு கீதம் பாடுங்கள்!
இனிவரும் நாட்களில்
இதமாய் மணம் வீசுங்கள்!
பத்தாயிரம் பதிப்பு காண வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன், நன்றி ஆய்யாப், தங்கள் பணி மேலும் தொடர வேண்டும்!!!
ReplyDeleteCongrats on your 1000th post!
ReplyDeleteI wish you for 1000 post. Praying for more and more post in future.
ReplyDeleteThank You.
Congratulations Sir...
ReplyDelete1000 பதிவுகள் மூலம் வகுப்பறையை ஒரு அறிவுப்பெட்டகமாக அலங்கரித்து வைத்திருக்கும் வாத்தியார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteபல்சுவை பெட்டகத்தை திறந்து அனுமதி அளித்தமைக்கு மிக்க நன்றி. எல்லாம் வல்ல பழனியப்பன் தங்களுக்கு எல்லா நலன்களையும் அளித்தருளட்டும்!!! வாத்தியார் அவர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ஆயிரம் பிறை கண்டதுபோல் ஆயிரம் பதிவிட்ட பெருமானுக்கு ஆயிரம் நல்வாழ்த்துக்கள்!!!
ReplyDeleteஇன்னும் பல்லாயிரம் பதிவுகள் பல்லாயிரத்து ஆண்டுகளுக்கு பதிவிட்டு
பல்லாயிரம் மாணவச்செல்வங்களை உருவாக்க பழநியெம்பெருமனை வணங்கி வாழ்த்துகிறோம்!!!
நன்றி!!!
Dear Guruji,
ReplyDeleteHearty congratulations for attaining the fleet of 1000th post.
Iam sure , this is just a begining only.... we are opt to meet millions of post in forthcoming days with your
gracious blessings & lively writings !!!
Vaazhga guru !!! Guruve saranam !!!
yours truly
Kannan
Dear Guruji,
ReplyDeleteAdvance HAPPY NEW YEAR 2012 !!!
yours truly
Kannan
வாத்தியார் ஐயா வணக்கங்கள்,
ReplyDeleteஆயிரம் பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்.பல்லாயிரமாக தொடரட்டும்.
சுதன்.க
கனடா.
பதிவுகளை நாங்கள் இங்கே படித்துவிட்டோமா? நன்றி ஆசிரியரே. உங்கள் மேல் நிலை பாடங்களை படிக்க நான் என்ன செய்ய வேண்டும். தயவு செய்து என்னையும் அனுமதியுங்க சார்.
ReplyDeleteநன்றியுடன்
அய்யா இன்னும் பல ஆயிரம் பதிவுகள் தங்கள் தர அருளுமாரு இறைவனை வேண்டுகிறேன்....!
ReplyDelete"Sometimes our ambitions get flop..
ReplyDeleteSometimes our assumptions go wrong..
But our Goal is still waiting for us..
Be positive & be active !
congrats!!!yours 1000 goals.like famous football player"pele".
Happy New Year Sir. We eagerly waiting for the analysis of 'India's Horoscope'.
ReplyDeletePeople who change after change, will survive.
ReplyDeletePeople who change with the change, will succeed.
People who cause the change, will lead.you are the Good "lead"er and guruji,for me.
ஆயிரம் கட்டுரைகளைக் கண்ட வகுப்பறைக்கு
ReplyDeleteபாயிரம் பாடும் வகையறியேன்.
வாழ்த்துக்கள்.
ஆயிரம் பதிவுகள் இட்ட வாத்தியார் அவர்களுக்கு வாழ்த்துகளும், நன்றிகளையும் உரித்தாக்குகிறேன்.
ReplyDeleteநான் மேல்நிலை பாடங்களை படிக்க விரும்புகிறேன்.எனக்கும் அனுமதி கொடுங்கள் ஐயா.
அய்யா,உள்ளிட்ட அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
ReplyDelete1000 பதிவுகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா
ReplyDeleteNaan puthithaga serntha maanavan aiyya...great writings...I will read your lessons during this period...
ReplyDeletewish you a great 2012 ayya..
///இன்றையப் பதிவு வகுப்பறையின் ஆயிரமாவது பதிவு///
ReplyDeleteதங்களின் ஆயிரம் பதிவுகள் பல்லாயிரம் புத்தக பிரதிகளாக பெருகி சுபம் உண்டாக இறைவனை வேண்டுகிறேன்.
அன்புள்ள ஆசிரியருக்கு 1000 பதிவு பூர்த்தி செய்தமைக்கு எமது வாழ்த்துக்கள். தங்களது பணி தொடரவும் வேண்டிக்கொள்கிறேன். மேல்நிலை பாடத்திற்க்கு அனுமதி எனக்கு கிடைக்குமா
ReplyDelete1000 பதிவு கண்ட வாத்தியாருக்கு எனது வாழ்த்துகள். அடுத்து 2000ஆவது பதிவில் சந்திப்போம் என்கிற நம்பிக்கை இருக்கிறது.
ReplyDeleteநானும் ஞாயிறு மலரில் பின்னூட்டம் இடுவதில்லை. காரணம் நான் வெள்ளிக் கிழமை இரவு ஆரம்பித்து ஞாயிறு இரவு வரை நீண்ட உறக்கத்தில் ஆழ்ந்து விடுவேன். திங்கள் காலைதான் துயிலெழுவேன்.
Seriously, சனி ஞாயிறு கிழமைகளில் கணினியை அவ்வளாக பயன்படுத்துவதில்லை. பெரும்பாலான நேரத்தை குடும்பத்தினருடன் கழிப்பேன்.
mikka nandri
ReplyDeleteCongrats and best wishes sir, for your 1000th pathivu...
ReplyDeleteThanks
Amuthan Sekar
வணக்கம் ஐயா,
ReplyDeleteஆயிரம் மலர்கள் பூத்துக் குளுங்கும் வகுப்பறை பிருந்தாவனத்தில் மேன்மேலும் பல்லாயிரம் வாடா மலர்கள் மலர வேண்டி இறைவனை பிரார்த்திக்கிறேன்...இது போன்ற சாதனைகளை எங்கள் வாத்தியார் ஐயாவால் மட்டுமே முடியும்!
பள்ளி விடுமுறை எப்பொழுது முடியும் என்று ஆவலாய் காத்திருக்கிறேன்...
//(கர்ணன் படத்தில் வரும் "ஆயிரம் கரங்கள் நீட்டி" பாடலுக்கு நன்றி. இளவல்கள் தனுசு, தமிழ்விரும்பி மாணவர்கள் மாதிரி சொந்தமா கவிதை எழுத தெரியாவிட்டாலும், மண்டபத்தில் அடுத்தவர்கள் எழுதிய கவிதையை எடுத்து வந்து, வார்த்தைகளை மாற்றிப் போட்டு சிறப்பா வாழ்த்துப் பாட்டெல்லாம் பாடிடுவோம்ல.ஹி..ஹி..ஹீ//
சனி பகவானின் பெயர்ச்சி தேமொழி சகோதரியை பெண் "புலவராக" மாற்றி விடப் போகிறது என்று நினைக்கின்றேன்...வரும் மாணவர் மலரில் உங்கள் கவிதையை நான் நிச்சயம் எதிர்ப்பார்ப்பேன்...
//இவ்வளவு பேர் பின் தொடர்வோர் இருந்தும் ஒரு 100 பேர்கூட பின்னூட்டம் இடுவதில்லை என்பது மனதிற்கு ஆறுதலாக இல்லை.இந்த 1000 ஆவது பதிவிலிருந்த்தாவது பலரும் பின்னூட்டம் இடுவார்கள் என்று எதிர் பார்கிறேன்//
ReplyDeleteஐயாவின் கருத்தை நானும் ஆமோதிக்கிறேன்...புத்தாண்டில் புதுபொலிவுடன் மாணவர்களும் நிச்சயம் பொலிவு பெறுவார்கள் என்று நம்புகின்றேன்...
ஜோதிட பாடம் பகுதி 1 என புத்தகம் இது வரை வந்த பாடம் வரை புக் வருமா அய்யா
ReplyDeleteUma S umas1234@gmail.com
ReplyDeleteto "SP.VR.SUBBIAH"
date 22 December 2011 16:02
subject comment
வேலை டென்ஷனின் போது வீட்டுக்கு போன் பேசி டென்ஷனை குறைக்கிறது போய் டென்ஷனைக் குறைக்க இங்க வர்றது தான் இப்போ அதிகமாகிக்கிட்டு இருக்கு எனக்கு.//
சரி சரி நீங்க அலுவலகத்துல வேலை பார்க்கறீங்கன்னு நாங்க எல்லாரும் நம்பிட்டோம்.
S. உமா, தில்லி
தஙகல் 1000 பதிவிர்கு மிக்க நன்றீ .இன்னும் பல 100 பதிவிகள் வெளீவர அந்த ஆண்டவர் அருள் புரியட்டும். உஙகள் நலம் நாடும்
ReplyDeleteபாலா
Sir,
ReplyDeleteCould you please permit to ready your advanced level of classes on astrology.
Thks
Gayathri Magesh
//நானும் ஞாயிறு மலரில் பின்னூட்டம் இடுவதில்லை. காரணம் நான் வெள்ளிக் கிழமை இரவு ஆரம்பித்து ஞாயிறு இரவு வரை நீண்ட உறக்கத்தில் ஆழ்ந்து விடுவேன். திங்கள் காலைதான் துயிலெழுவேன்.//
ReplyDeleteதிரு அனந்த், இப்படி வாரம் இரண்டு நாட்களைத் தூக்கத்தில் கழித்தீர்களானால் ஆயுட்காலத்தில் தூக்கத்தில் கழிந்திடும் நாட்களைக் கணக்கிடுங்கள். உங்களைப் போன்ற திறமையும், உழைக்கும் ஆர்வமும் (வெளிநாடு சென்று உழைப்பதால்) ஜோசியக் கலையில் உள்ள ஆர்வமும் என்ன ஆகும்? ஆகவே தேவைக்குத் தூங்குங்கள், போதிய நேரம் குடும்பத்துடன் செலவழியுங்கள். வெளியுலகமும் உங்களுக்காகக் காத்திருக்கிறது என்பதையும் நினைவில் வையுங்கள். இது தேவையற்ற ஹிதோபதேசம் அல்ல, மனதில் பட்ட கருத்து. நல்லதானால் ஏற்பீர், தவறு என்றால் மறந்து விடுங்கள்.
ஆயிரம் போஸ்ட் போட்ட அபூர்வ சிந்தாமணியே...
ReplyDeleteவாழ்க நீ எம்மான்..இந்த வையத்து கணிணியிலெல்லாம்...
வடக்கே என்றால் அஹமதாபாத்தா? எதுவா இருந்தாலும் வென்று வர வாழ்த்துக்கள்..
தஞ்சாவூர் ஐயா அவர்களே. வாரத்தில் இரண்டு நாட்கள் தூக்கத்தில் கழிப்பேன் என்று சும்மா தமாஷுக்கு சொன்னேன். அந்த அளவுக்கு தூங்க நான் என்ன கும்பகர்ணனா. உண்மையில் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இவர்களுடன் இந்த இரண்டு நாள் பொழுது கழியும். அவர்களுடன் உரையாடுவது, ஒன்றாக சேர்ந்து எங்காவது போய் வருவது போன்றவை. அதிகம் நேரம் கணினி முன் உட்கார்ந்திருந்தால் என் மனைவி வேறு ஒரு பக்கம் முறைத்துக் கொண்டு நிற்பார். மனைவியான தன்னை விட கணினியை நான் அதிகாமாக நேசிப்பதாக நினைத்துக் கொள்ளும் possessiveness.
ReplyDeleteஇன்னொன்று, நான் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து வருவது இத்திருநாட்டில்தான். எனது முன்னோர்கள்தான் தமிழ் நாட்டைச் சேர்ந்தாவர்கள். ஐயா அவர்கள் நான் தமிழ் நாட்டில் பிறந்து பொருளீட்டுவதற்காக இந்த நாட்டிற்கு வந்ததாக தவறாக நினைத்து விட்டார் போலிருக்கிறது. நான் எதையும் தவறாக எடுத்துக் கொள்வதில்லை. என் மேல் உள்ள அக்கறையில் சொன்னதாக எடுத்துக் கொண்டு விட்டேன்.
ReplyDeleteதிறந்த வெளியில் குளிப்பது
ReplyDeleteதிகைப்பாக இருக்கிறதா இல்லை..
நீச்சல் குளத்தில் குளிப்பதில்லை
நீந்துவதாக பயிற்சி செய்தாலும்
அதுவும் குளியல் தானே
அப்படி குளிப்பதும் தைரியம் தானே
வலையேற்றுவதும் அந்த
வகையில் தானே அதற்கு வாழ்த்து ஏன்
பாண்டிய நாட்டு மன்னர் நீவிர்
பாட்டால் சொல்ல வேண்டாமா வாழ்த்து
(தேவகோட்டை பாண்டிய நாட்டில் வருவது தானே கோட்டையாரே)
எழுத்துக்களுக்கு மட்டுல்ல
எண்ணங்களுக்கும் என எண்ணிய நாம்
அன்பிற்கும் கோவித்தாலும்
அரவனைக்கு நேசத்திற்கும்..
வாழ்க வாழ்க என
வாழ்த்துவதால் நாங்கள் வாழ்கிறோம்.
காட்சியிலும் ...(குளியல் காட்சி) நல்ல
கருத்தை சொல்லும் இந்த பாடலினை
இவ் வகுப்பின் சூழலிற்கு ஏற்ப
இருக்கட்டுமே என சுழல விடுகிறோம்..
இப்பாடலின் பொருள்
இன்றைய வகுப்பில் பதிவான
கருத்துக்களை பிழிந்து
கனிய வைக்கிறது சுவையை..
பொதிகை மலை உச்சியிலே
புறப்படும் தென்றல் ஆடை
பூட்டி வைத்த மேனியிலும்
தவழ்ந்திடும் தென்றல்
பதி மதுரை வீதியிலே
வலம் வரும் தென்றல் இந்தப்
பாண்டியனார் பைங்கிளியைத்
தீண்டிடும் தென்றல்
கார்குழலை நீராட்டி
கண்ணிரண்டைத் தாலாட்டி
தேனிதழில் முத்தமிட்டு
சிரித்திடும் தென்றல் - வண்ண
தேகமெங்கும் நீரெடுத்துத்
தெளித்திடும் தென்றல்
வான் பறக்கும் கொடியினிலே
மீன் பறக்கும் மதுரையிலே
தான் பறந்து ஆட்சி செய்து
தளிர்மணித் தென்றல் - அது
வான் பிறந்த போது வந்த
வாலிபத் தென்றல்
இந்த பாடலுக்கு
ReplyDeleteஇப்படி பொருள் சொல்லித்தான்
ஆகவேண்டும் என்பதினால் ஒரு
"ஆஹா" தருவீர்கள் என்ற உரிமையில்
பொதிகை மலை உச்சியிலே
புறப்படும் தென்றல் ஆடை
(பாண்டி நாட்டு மன்னவர் அல்லவா வாத்தியார் அங்கிருந்து வரும் அவரது எழுத்துக்களின் இனிமையை தென்றலாக வர்ணித்தது)
பூட்டி வைத்த மேனியிலும்
தவழ்ந்திடும் தென்றல்
(எழுத்துக்களும் பதிவுகளும் பூட்டி வைத்த மனத்தினையும் தட்டி எழுப்பி உற்சாகம் தரும் "தென்றல்" என்பது வாத்தியாரின் பதிவுகள்)
பதி மதுரை வீதியிலே
வலம் வரும் தென்றல் இந்தப்
(மதுரை வீதி என குறிப்பிட்டது மதுரையில் வீதி நீளமானது பெரியது அது போல இந்த வலை உலகத்தில் நீள அகலங்கள் பெரியது அந்த வலை உலகத்தில் வலம் வரும் "தென்றல்" தென்றல் என்பது வாத்தியாரின் பதிவுகள்)
பாண்டியனார் பைங்கிளியைத்
தீண்டிடும் தென்றல்
(இங்கு பாண்டியனாரை வாத்தியாராகவும் (அவர் பாண்டிய நாட்டை சேர்ந்தவர் தானே அதனால் அப்படி சொல்வது மெத்த பொருந்தும்..)
மாணவர்களை பைங்கிளிகளாகவும் உருவக்ம் செய்தது)
கார்குழலை நீராட்டி
கண்ணிரண்டைத் தாலாட்டி
(வாத்தியாரின் பதிவுகள் அறிவை சீராக்கி (சீராட்டி) கண் இரண்டினையும் தாலாட்டும் காண் ஒளிகளையும் தந்து )
தேனிதழில் முத்தமிட்டு
சிரித்திடும் தென்றல் - வண்ண
(சிரிக்க நகைச்சுவைடன் எளிமையாக மனதில் பதிய வைக்கும் கருத்துக்களை தரும் "தென்றல்" தென்றல் என்பது வாத்தியாரின் பதிவுகள்)
தேகமெங்கும் நீரெடுத்துத்
தெளித்திடும் தென்றல்
(பதிவுகள் ஒவ்வொன்றும்
அறிவை தெளிக்கும் ஆனந்தத்தை பெருக்கும் என்றது)
வான் பறக்கும் கொடியினிலே
மீன் பறக்கும் மதுரையிலே
தான் பறந்து ஆட்சி செய்து
தளிர்மணித் தென்றல் - அது
(வலை உலகத்தை வான் பறக்கும் கொடி என்றது. தான் பறந்து ஆட்சி செய்து என்பது வாத்தியாரின் வகுப்பறையையும் அதில் பதிவாகும் பதிவுகளையும் கருத்துக்களையும் என்றது)
வான் பிறந்த போது வந்த
வாலிபத் தென்றல்
(வாலிபத் தென்றல் என்றது வாலிபர்களுக்கு பிடித்தாற்போல் அரிய நல்ல நன்னடைத்தையை தரும் கருத்துக்களை தந்து நம்பிக்கை ஊட்டும் தென்றல் என்றது , தென்றல் என்பது வாத்தியாரின் பதிவுகளை கொண்டது).
இப்படி சொல்வது மனமகிழ்ச்சியை வெளிப்படுத்தவே..
கோவியார் என்ன சொல்கிறார் பார்ப்போம். மாசில்லா அன்போடு
வணக்கமும்
வாழ்த்துக்களும்
உமது பிற மாநில பயணம்
ReplyDeleteஉள்ளபடியே வெற்றியடைய
ஆடலரசன் தாழ் வணங்கி
அன்போடு வாழ்த்துகிறோம்.. இந்த
திருமுறை பாடலுடன்..
"திரு" சேரட்டும் என்ற பேராவாவில்
பேருமோர் ஆயிரம் பேருடை
யார்பெண்ணோ டாணுமல்லர்
ஊரும தொற்றியூர் மற்றையூர்
பெற்றவா நாமறியோம்
காருங் கருங்கடல் நஞ்சமு
துண்டுகண் டங்கறுத்தார்க்
காரம்பாம் பாவ தறிந்தோமேல்
நாம்இவர்க் காட்படோமே.
அய்யா,
ReplyDeleteஆயிரமாவதை இன்னும் இலட்சங்களாகும் லட்சியம்
தங்கள் மனதில் ஆண்டவன் அளிக்கவேண்டுமென வேண்டுகிறேன்.
அந்த "சிறப்பு வலைதளத்தில்" எனக்கு அனுமதி உண்டா?
யாருக்கெல்லாம் அனுமதி? அறிந்து கொள்ளலாமா !
இரண்டு தினங்கள் வகுப்பறைக்கு வர முடியவில்லை இபோது வந்து பார்த்தல் என்னென்னமோ நடந்திருக்கிறது .
ReplyDeleteஆசிரியரின் பயணம் வெற்றிபெற எல்லாம் வல்லவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.
ஆயிரமாவது பதிவு ,உங்களுக்கு வாழ்த்து சொல்ல வயதில்லை .வணங்குகிறோம் . இது ஒன்றும் பெரியது இல்லை அய்யா .தாங்கள் இன்னும் இதுபோல் பல்லாயிரம் பதிவுகள் எழுதுவீர்கள் அதனை நாமும் படிக்கதான் போகிறோம்.
இந்த ஆக்கத்திற்கு வெளியிட்டுள்ள செட்டிநாட்டு இல்லத்துப் புகைப்படத்தினைக்
ReplyDeleteகூர்ந்து பார்த்தேன்.அவற்றில் ஒரு படம் ஸ்ரீ சங்கராச்சாரியார் படம்.பெரும்பாலும் அது சிருங்கேரி மடத்து சங்கராச்சாரியார், முன்னர் பீடத்தை அலங்கரித்த மகாசன்னிதானம் அபினவ வித்யாதீர்த்த மஹாசுவாமிகள்
அவர்களுடையதாக இருக்கலாம்.
ஆயிரம் பதிவு போட்ட வாத்தியாருக்கு வாழ்த்துகள். இன்னும் பல நூறு பதிவுகள் போட ஆண்டவன் உங்களை ஆசீர்வதிக்கட்டும். உங்கள் பதிவுகள் பல முறை எனது இக்கட்டான கட்டத்தில் ஆறுதல் கொடுத்து உள்ளது. அதற்கு இக்கணத்தில் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
ReplyDeleteஇன்று ஆயிரம் பதிவு கண்ட வகுப்பறையும் ஆசிரியரும் இன்னமும் ஆயிரமாயிரம் பதிவுகள் காண இறைவனை பிரார்த்திக்கிறேன். எங்களை போன்றவர்களுக்கு வழிகாட்டியாய் அமைந்துள்ள வகுப்பறைக்கு ஆயிரம் நன்றிகள்.
ReplyDelete