மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

29.9.22

Lesson No.50 கிரக சேர்க்கைகள் பற்றிய பாடம்!

Star Lessons

Lesson no 50

Date 7-9-2022

New Lessons

பாடம் எண் 50 

இன்று கிரக சேர்க்கைகள் பற்றிய பாடம்! 

ராகு அல்லது கேதுவுடன் வேறு ஒரு கிரகம் சேரும்போது, அந்தக் கிரகம் இருக்கும் வீட்டின் பலாபலன்கள் கெட்டுப்போகும். உடன் சேரும் கிரகம் தன்னுடைய உண்மையான தன்மையை இழந்து விடும். அதுபோல ராகுவும், கேதுவும் தாங்கள் குடியிருக்கும் வீட்டின் தன்மையையும்கெடுத்துவிடக்கூடிய வல்லமை பெற்றவை. 

ஆகவே அவர்களின் இருப்பு (presence)  வரவேற்கக்கூடியதல்ல. அது எந்த வீடாக இருந்தாலும் சரி! அதுதான் பலன்.மேலும் அவைகள் தங்கள் சேர்க்கையாலும், பார்வையாலும் அழிவை ஏற்படுத்தக்கூடியவை. அதுபோல தாங்கள் குடியிருக்கும் வீட்டையும், தாக்கி அழிக்கக்கூடியவை. 

சமயங்களில் அவைகள் சேரும் கிரகங்களின் இயற்கைத் தன்மையைப் பொறுத்து அது நன்மையாகவும் அல்லது தீமையாகவும் முடியலாம்.மாறுபடலாம். வேறு படலாம். எப்படி வேண்டுமென்றாலும் வைத்துக்கொள்ளுங்கள். 

In short, these 2 planets (nodes) exhibit their own qualities modified  for good or bad depending upon the planets which they associate. 

இந்த இரண்டு கிரகங்களும், ஜாதகத்தில் 6ம் வீடு, 8ம் வீடு அல்லது 12ம் வீடு போன்ற தீய இடங்களில் (மறைவு ஸ்தானங்களில்) இருக்கும் என்றால்

தீய பலன்கள் அதிகரித்தே காணப்படும். 

1. சூரிய சண்டாள யோகம்.

சூரியனோடு ராகு அல்லது கேது சேரும்போது, ஜாதகனின் தந்தைக்கு உடல் உபாதைகள் மற்றும் உடற்கோளாறுகளை ஏற்படுத்தும். ஜாதகனை முன்கோபக்காரனாக்கும். மகிழ்ச்சியில்லாத வாழ்க்கை அமையும். 

2. சந்திர சண்டாள யோகம்.

சந்திரனோடு, ராகு அல்லது கேது சேரும்போது, அவர்களுடைய சந்திர ஆதிக்கம் கேடானது ஆகும். எப்போதுமே விரும்பத்தகாதது ஆகும். ஜாதகனின் தாயாரின் உடல் நலத்திற்து கேடானது ஆகும். அத்துடன் ஜாதகனின் உடல் நலத்திற்கும், மன நலத்திற்கும்  கேடானது ஆகும். 

உடலும் உள்ளமும் நலம்தானா?” என்று கேட்கும் நிலையில் ஜாதகன் இருப்பான். 

ஜாதகனை ஏழையாக்கும். மற்றவர்களுக்கு கீழே ஜாதகன் வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்படும் (அடிமைத் தொழில்) தகாத காரியங்களை ஜாதகன் செய்வான். அவைகள் செய்ய வைக்கும். 

இவைகள் பொதுப் பலன்கள். ஜாதகத்தின் மற்ற அமைப்புக்களை வைத்து இவைகள் மாறுபடலாம் குறையலாம் அல்லது கூடலாம் அல்லது இல்லாமல் போகலாம் 

அன்புடன்,

வாத்தியார்

---------------------------------- 

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

Lesson 48 and 49 Lesson on Kochcharam

✴️✴️✴️✴️✴️
Star Lessons
Lesson no 48
New Lessons
பாடம் எண் 48

இன்று கோச்சாரம் பற்றிய பாடம்

கோள்களின் சஞ்சாரம் என்பதுதான் கோள்களின் சாரம் 
என்று மாறி கடைசியில் கோச்சாரம் என்று சுருங்கி விட்டது 
Transit of Planets

கோச்சாரத்தின் மூலம்  நவக்கிரகங்கள் அளிக்கும் பலன்களைப் பார்ப்போம்
 
இந்த வருடம், மாதம், தேதியில் ஒரு குறிபிட்ட கிரகம் எந்த ராசியில் சஞ்சரிகின்றார் என்பதை பஞ்சாங்கத்தை கொண்டு அறியலாம். 

அவ்வாறு அந்த கிரகம் சஞ்சரிக்கும் ராசியானது சந்திர லக்கினம் (சந்திரன் நிற்கும் வீடு) முதல் எத்தனையாவது வீடு என்பதை எண்ணிப் பார்த்து அந்த எண்ணிக்கைக்கு தக்கபடி பலன்களை அறியலாம் 

கோச்சாரத்தில் 9 கிரகங்களும் 9 வகையான பலன்களை கொடுக்கும். அவற்றுள் சுப பலன் எவை அசுப பலன் எவை என இனம் பிரித்து கோசாரப் பலன்களைப் பார்க்க வேண்டும்   

கோச்சாரம் ஒருவருக்கு நல்ல காலமாக இருந்தாலும் அவரது தசா புத்திகள் அசுபமானதாக இருந்தால் ஜாதகருக்கு சுப பலன்கள் நடைபெறாது. அதுபோல கோச்சாரம் ஒருவருக்கு கெட்ட காலமாய் இருந்தாலும், தசா புத்திகள் சுபமானவைகளாக இருந்தால் ஜாதகருக்கு அசுப பலன்கள் நடைபெறாது. கோச்சாரம்,தசா புத்தி இவற்றில் தசா புத்திகளே பலம் வாய்ந்தது.

அதை மனதில் கொள்க!!!!

சூரியன் ஒரு ராசியில் 1 மாத காலம் சஞ்சரிப்பார்
சந்திரன் ஒரு ராசியில் 2¼ நாள் காலம் சஞ்சரிப்பார்
செவ்வாய் ஒரு ராசியில் 1½ மாத காலம் சஞ்சரிப்பார்
புதன் ஒரு ராசியில் 1 மாத காலம் சஞ்சரிப்பார்
குரு ஒரு ராசியில் 1 வருட காலம் சஞ்சரிப்பார்
சுக்கிரன் ஒரு ராசியில் 1 மாத காலம் சஞ்சரிப்பார்
சனி ஒரு ராசியில் 2½ வருட காலம் சஞ்சரிப்பார்
ராகு / கேது ஒரு ராசியில் 1½ காலம் சஞ்சரிப்பார்


ஒரு வருஷத்தின் பொதுவான பலன்களை சனி, ராகு, கேது, குரு இவர்களின் சஞ்சாரங்களை கொண்டும், ஒரு மாதத்தின் பொதுவான பலன்களை சூரியன், செவ்வாய், சுக்கிரன், புதன் இவர்களின் சஞ்சாரங்களை கொண்டும், ஒரு நாளின் பொதுவான பலன்களை சந்திரனின் சஞ்சாரத்தை கொண்டும் தெரிந்து கொள்ளலாம். 

சூரியன், செவ்வாய்,  சந்திரன், குரு ஆகிய நான்கு கிரகங்களும் சஞ்சாரத்தின்  முற்பகுதியில் சஞ்சாரம் செய்யும் பொழுதே  கொடுக்க வேண்டிய பலன்களை கொடுத்து விடுவார்கள்.
சனி, ராகு, கேது ஆகிய கிரகங்கள் சஞ்சாரம் செய்யும் காலத்தில் பிற்பகுதியில்  தாம் கொடுக்க வேண்டிய பலன்களை கொடுப்பார்கள்.
புதனும், சுக்கிரனும் ஒரு ராசியின் நடுப் குதியில் சஞ்சாரம் செய்யும் பொழுது  தாம் கொடுக்க வேண்டிய பலன்களை கொடுப்பார்கள்.

கிரகங்களின் கோச்சாரப் பலன்கள் என்ன என்பதை நாளை (அடுத்த பதிவில்) பார்க்கலாம் பொறுத்திருந்து பாருங்கள் ( படியுங்கள்)

அன்புடன்
வாத்தியார்
00000000000000000000000000000000000000000000
✴️✴️✴️✴️✴️
Star Lessons
Lesson no 49
New Lessons
பாடம் எண் 49

இன்று கோச்சாரம் பற்றிய பாடம் - பகுதி 2

சூரியனின் கோசாரப் பலன் 
சந்திர லக்னத்தில் இருந்து 3, 6, 10, 11, ஆகிய இடங்களில் இருக்கும்போது நன்மையான பலன்கள் உண்டாகும்

சந்திரனின் கோசாரப் பலன் 
ந்திரன், சந்திர லக்னத்தில் இருந்து 1,3, 6, 7, 10,11 ஆகிய இடங்களில் இருக்கும்போது நன்மையான பலன்கள் உண்டாகும்

செவ்வாய் கோசாரப் பலன் 
சந்திர லக்னத்தில் இருந்து 3, 6, 11 ஆகிய இடங்களில் இருக்கும்போது நன்மையான பலன்கள் உண்டாகும்

புதனின் கோசாரப் பலன் 
சந்திர லக்னத்தில் இருந்து 4, 6, 8, 10, 11 ஆகிய இடங்களில் இருக்கும்போது நன்மையான பலன்கள் உண்டாகும்

குருவின் கோசாரப் பலன் 
சந்திர லக்னத்தில் இருந்து 2, 5, 7,9, 11 ஆகிய இடங்களில் இருக்கும்போது நன்மையான பலன்கள் உண்டாகும்

சுக்ரனின் கோசாரப் பலன் 
சந்திர லக்னத்தில் இருந்து 1, 2, 3, 4, 5, 8,9, 11 ஆகிய இடங்களில் இருக்கும்போது நன்மையான பலன்கள் உண்டாகும்

சனியின் கோள்சாரப் பலன்: 
சனி 3 மற்ரும் 10ம் இடங்களில் இருக்கும்போது நன்மையான பலன்கள் உண்டாகும்

இராகு - கேதுகளின் கோசாரப் பலன் 
சனியை போலவே ராகுவும், செவ்வாயைப் போல கேதுவும் பலன் வழங்குAவார்கள் ஆகவே ராகுவின் கோசாரப் பலன்களை சனியின் கோசாரப் பலன்களை கொண்டும், கேதுவின் கோசாரப் பலன்களை செவ்வாயின் கோசாரப் பலன்களை கொண்டும் அறிந்து கொள்க.

அன்புடன் 
வாத்தியார்
=======================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

22.9.22

Lesson 47 Lesson on Ketu Dasa✴️✴️✴️✴️✴️
Star Lessons
Lesson number 47
New Lessons
Date 22-9-2022
பாடம் எண் 47

திசை/ புத்திகள் பாடம் - பகுதி 9

திசைகள் பாடத்தில் ஒவ்வொரு திசையாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்

இன்று கேது மகா திசையைப் பற்றிய  பாடம்

அஸ்விணி, மகம், மூலம் ஆகிய 3 நட்சத்திரங்களின் அதிபதி கேது 
ஆகவே இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கேது மகா திசைதான் முதல் திசை

கேது மகா திசையில் மற்ற கிரகங்களுக்கான பங்குக் காலம் எத்தனை மாதங்கள் மற்றும் நாட்கள் எவ்வளவு என்பதையும்,  அவற்றில் நன்மையான காலம் எவை எவை என்பதையும் இன்று பார்ப்போம்..

கேது மகா திசையில் முதலில் வருவது அதன் சுய புத்தி (Own Sub Period)

அதறகுப் பிறகு மற்ற கிரகங்களின் புத்திகளும் வரிசையாக ஒவ்வொன்றாக வரும்  அவற்றை இங்கே கொடுத்துள்ள  பி் டி் எப் (PDF) கோப்பைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்

புத்திகளில் சுக்கிர புத்தி, குரு புத்தி, புதன் புத்தி ஆகிய 3 கிரகங்களின் புத்திகள் மட்டுமே நன்மை செய்யக்கூடும் மற்ற 6 கிரகங்களின் புத்திக் காலம் நன்மையானதாக இல்லை

கேது மகா திசையின் 84 மாத காலங்களில் சுமார்  37 மாத காலமே நன்மை நல்குவதாக உள்ளது்

அதை மனதில் கொள்க

மகாதிசைகளைப் பற்ரிய பாடங்கள் நிரைவுறுகின்றன
 
அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

20.9.22

Lessson no45 and 46 Saturn Dasa and Rahu dasa


✴️✴️✴️✴️✴️
Star Lessons
Lesson number 45
New Lessons
பாடம் எண் 45

திசை/ புத்திகள் பாடம் - பகுதி 7

திசைகள் பாடத்தில் ஒவ்வொரு திசையாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்

இன்று சனி மகா திசையைப் பற்றிய  பாடம்

பூசம், அனுஷம், உத்திரட்டாதி  ஆகிய 3 நட்சத்திரங்களின் அதிபதி சனீஷ்வரன் 
ஆகவே இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சனி மகா திசைதான் முதல் திசை

சனி மகா திசையில் மற்ற கிரகங்களுக்கான பங்குக் காலம் எத்தனை மாதங்கள் மற்றும் நாட்கள் எவ்வளவு என்பதையும்,  அவற்றில் நன்மையான காலம் எவை எவை என்பதையும் இன்று பார்ப்போம்..

சனி மகா திசையில் முதலில் வருவது அதன் சுய புத்தி (Own Sub Period)

அதற்குப் பிறகு மற்ற கிரகங்களின் புத்திகளும் வரிசையாக ஒவ்வொன்றாக வரும்  அவற்றை இங்கே கொடுத்துள்ள  பி் டி் எப் (PDF) கோப்பைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்

புத்திகளில் புதன் புத்தி, சுக்கிர புத்தி, மற்றும் குரு புத்தி  ஆகிய 3 புத்திகள் மட்டுமே நன்மை செய்யக்கூடும் மற்ற 6 பிரகங்களின் புத்திக் காலம் நன்மையானதாக இல்லை

சனி மகா திசையின் 228 மாத காலங்களில் சுமார்  100 மாத காலங்களே நன்மை நல்குவதாக உள்ளது்
அதை மனதில் கொள்க
 
அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------------
Post No 2

✴️✴️✴️✴️✴️
Star Lessons
Lesson number 46
New Lessons
பாடம் எண் 46

திசை/ புத்திகள் பாடம் - பகுதி 8

திசைகள் பாடத்தில் ஒவ்வொரு திசையாகப் பார்த்துக் கொண்டு வருகிறோம்

இன்று ராகு மகா திசையைப் பற்றிய  பாடம்

திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய 3 நட்சத்திரங்களின் அதிபதி ராகு 
ஆகவே இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ராகு மகா திசைதான் முதல் திசை

ராகு மகா திசையில் மற்ற கிரகங்களுக்கான பங்குக் காலம் எத்தனை மாதங்கள் மற்றும் நாட்கள் எவ்வளவு என்பதையும்,  அவற்றில் நன்மையான காலம் எவை எவை என்பதையும் இன்று பார்ப்போம்..

ராகு மகா திசையில் முதலில் வருவது அதன் சுய புத்தி (Own Sub Period)

அதற்குப் பிறகு மற்ற கிரகங்களின் புத்திகளும் வரிசையாக ஒவ்வொன்றாக வரும்  அவற்றை இங்கே கொடுத்துள்ள  பி் டி் எப் (PDF) கோப்பைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்

புத்திகளில் குரு புத்தி, புதன் புத்தி, சுக்கிர புத்தி ஆகிய 3 புத்திகள் மட்டுமே நன்மை செய்யக்கூடும் மற்ற 6 கிரகங்களின் புத்திக் காலம் நன்மையானதாக இல்லை

ராகு மகா திசையின் 216 மாத காலங்களில் சுமார் 95 மாத காலமே நன்மை நல்குவதாக உள்ளது்
அதை மனதில் கொள்க
 
அன்புடன்
வாத்தியார்
===================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

19.9.22

Lesson 44 Lesson on Venus dasa

✴️✴️✴️✴️✴️
Star Lessons
Lesson number 44
New Lessons
Date 31-8-2022
பாடம் எண் 44

திசை/ புத்திகள் பாடம் - பகுதி 6

திசைகள் பாடத்தில் ஒவ்வொரு திசையாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்

இன்று சுக்கிர மகா திசையைப் பற்றிய  பாடம்

பரணி, பூரம், பூராடம் ஆகிய 3 நட்சத்திரங்களின் அதிபதி சுக்கிரன் 
ஆகவே இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிர மகா திசைதான் முதல் திசை

சுக்கிர மகா திசையில் மற்ற கிரகங்களுக்கான பங்குக் காலம் எத்தனை மாதங்கள் மற்றும் நாட்கள் எவ்வளவு என்பதையும்,  அவற்றில் நன்மையான காலம் எவை எவை என்பதையும் இன்று பார்ப்போம்..

சுக்கிர மகா திசையில் முதலில் வருவது அதன் சுய புத்தி (Own Sub Period)

அதற்குப் பிறகு மற்ற கிரகங்களின் புத்திகளும் வரிசையாக ஒவ்வொன்றாக வரும்  அவற்றை இங்கே கொடுத்துள்ள  பி் டி் எப் (PDF) கோப்பைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்

புத்திகளில் சுக்கிரனின் சுயபுக்தி, குரு புத்தி, சனி புத்தி, புதன் புத்தி  ஆகிய 4 புத்திகள் மட்டுமே நன்மை செய்யக்கூடும் மற்ற 5 கிரகங்களின் புத்திக் காலம் நன்மையானதாக இல்லை

சுக்கிர மகா திசையின் 240  மாத காலங்களில் சுமார்  144 மாத காலமே நன்மை நல்குவதாக உள்ளது்

சுக்கிரனும் சுபக் கிரகம் ஆகவே அவரது மகா திசையில் பாதிக்கு மேற்பட்ட காலம் நன்மைகள் உடையதாக உள்ளது.
அதை மனதில் கொள்க
 
அன்புடன்
வாத்தியார்
========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

16.9.22

Lesson 43 Lesson on Jupiter Dasa
✴️✴️✴️✴️✴️
Star Lessons
Lesson number 43
New Lessons
Date 30-8-2022
பாடம் எண் 43

திசை/ புத்திகள் பாடம் - பகுதி 5

திசைகள் பாடத்தில் ஒவ்வொரு திசையாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்

இன்று குரு மகா திசையைப் பற்றிய  பாடம்

புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய 3 நட்சத்திரங்களின் அதிபதி குரு 
ஆகவே இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குரு மகா திசைதான் முதல் திசை

குரு மகா திசையில் மற்ற கிரகங்களுக்கான பங்குக் காலம் எத்தனை மாதங்கள் மற்றும் நாட்கள் எவ்வளவு என்பதையும்,  அவற்றில் நன்மையான காலம் எவை எவை என்பதையும் இன்று பார்ப்போம்..

குரு மகா திசையில் முதலில் வருவது அதன் சுய புத்தி (Own Sub Period)

அதற்குப் பிறகு மற்ற கிரகங்களின் புத்திகளும் வரிசையாக ஒவ்வொன்றாக வரும்  அவற்றை இங்கே கொடுத்துள்ள  பி் டி் எப் (PDF) கோப்பைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்

புத்திகளில் குருவின் சுய புத்தி, சனி புத்தி, புதன் புத்தி, சுக்கிர புத்தி, சந்திர புத்தி ஆகிய 5 கிரகங்களின் புத்திகள் மட்டுமே நன்மை செய்யக்கூடும் மற்ற 4 கிரகங்களின் புத்திக் காலம் நன்மையானதாக இல்லை

குரு மகா திசையின் 192 மாத காலங்களில் சுமார்  131 மாத காலமே நன்மை நல்குவதாக உள்ளது்

குரு முதல் நிலை சுபக் கிரகம் அதனால் தன்னுடைய மகா திசையில் 3ல் 2 பங்கு காலம் நன்மைகளை வாஎஇ வழங்குகிறது
அதை மனதில் கொள்க
 
அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

14.9.22

Lesson 42 Lesson on Mercury Dasa


✴️✴️✴️✴️✴️
Star Lessons
Lesson number 42
New Lessons
பாடம் எண் 42

திசை/ புத்திகள் பாடம் - பகுதி 4

திசைகள் பாடத்தில் ஒவ்வொரு திசையாகப் பார்ப்போம்

இன்று புதன் மகா திசையைப் பற்றிய  பாடம்

ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகிய 3 நட்சத்திரங்களின் அதிபதி புதன் 
ஆகவே இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதன் மகா திசைதான் முதல் திசை

புதன் மகா திசையில் மற்ற கிரகங்களுக்கான பங்குக் காலம் எத்தனை மாதங்கள் மற்றும் நாட்கள் எவ்வளவு என்பதையும்,  அவற்றில் நன்மையான காலம் எவை எவை என்பதையும் இன்று பார்ப்போம்..

புதன் மகா திசையில் முதலில் வருவது அதன் சுய புத்தி (Own Sub Period)

அதற்குப் பிறகு மற்ற கிரகங்களின் புத்திகளும் வரிசையாக ஒவ்வொன்றாக வரும்  அவற்றை இங்கே கொடுத்துள்ள  பி் டி் எப் (PDF) கோப்பைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்

புத்திகளில் புதனின் சுய புத்தி, சுக்கிர புத்தி, குரு புத்தி, ஆகிய 3 கிரகங்களின் புத்திகள் மட்டுமே நன்மை செய்யக்கூடும் மற்ற 6 கிரகங்களின் புத்திக் காலம் நன்மையானதாக இல்லை

புதன் மகா திசையின் 204 மாத காலங்களில் சுமார்  95 மாத காலமே நன்மை நல்குவதாக உள்ளது்

அதை மனதில் கொள்க
 
அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

12.9.22

Lesson no 41 Lesson on Mars Dasa


✴️✴️✴️✴️✴️
Star Lessons
Lesson number 41
New Lessons
Date 27-8-2022
பாடம் எண் 41

திசை/ புத்திகள் பாடம் - பகுதி 4

திசைகள் பாடத்தில் ஒவ்வொரு திசையாகப் பார்ப்போம்

இன்று செவ்வாய் மகா திசையைப் பற்றிய  பாடம்

மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய 3 நட்சத்திரங்களின் அதிபதி செவ்வாய் 
ஆகவே இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் மகா திசைதான் முதல் திசை

செவ்வாய் மகா திசையில் மற்ற கிரகங்களுக்கான பங்குக் காலம் எத்தனை மாதங்கள் மற்றும் நாட்கள் எவ்வளவு என்பதையும்,  அவற்றில் நன்மையான காலம் எவை எவை என்பதையும் இன்று பார்ப்போம்..

செவ்வாய் மகா திசையில் முதலில் வருவது அதன் சுய புத்தி (Own Sub Period)

அதறகுப் பிறகு மற்ற கிரகங்களின் புத்திகளும் வரிசையாக ஒவ்வொன்றாக வரும்  அவற்றை இங்கே கொடுத்துள்ள  பி் டி் எப் (PDF) கோப்பைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்

புத்திகளில் செவ்வாயின், குரு புத்தி, சூரிய புத்தி, சந்திர புத்தி ஆகிய 3 கிரகங்களின் புத்திகள் மட்டுமே நன்மை செய்யக்கூடும் மற்ற 6 பிரகங்களின் புத்திக் காலம் நன்மையானதாக இல்லை

செவ்வாய் மகா திசையின் 84 மாத காலங்களில் சுமார்  22 மாத காலமே நன்மை நல்குவதாக உள்ளது்
அதை மனதில் கொள்க
 
அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

9.9.22

Lesson 39 and 40 Dasa Bhukthi Lessons


✴️✴️✴️✴️✴️
Star Lessons
Lesson number 39
New Lessons
பாடம் எண் 39

திசை/ புத்திகள் பாடம் - பகுதி 2

திசைகள் பாடத்தில் ஒவ்வொரு திசையாகப் பார்ப்போம்

இன்று சூரிய மகா திசையைப் பற்றிய  பாடம்

சூரிய மகா திசையில் மற்ற கிரகங்களுக்கான பங்குக் காலம் எத்தனை மாதங்கள் மற்றும் நாட்கள் எவ்வளவு என்பதையும்,  அவற்றில் நன்மையான காலம் எவை எவை என்பதையும் இன்று பார்ப்போம்..

சூரிய மகா திசையில் முதலில் வருவது அதன் சுய புத்தி (Own Sub Period)

அதறகுப் பிறகு மற்ற கிரகங்களின் புத்திகளும் வரிசையாக ஒவ்வொன்றாக வரும்  அவற்றை இங்கே கொடுத்துள்ள  பி் டி் எப் (PDF) கோப்பைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்

புத்திகளில் சந்திரன், செவ்வாய், குரு ஆகிய 3 கிரகங்களின் புத்திகள் மட்டுமே நன்மை செய்யக்கூடும் மற்ற 6 பிரகங்களின் புத்திக் காலம் நன்மையானதாக இல்லை

சூரிய மகா திசையின் 72 மாத காலங்களில் சுமார்  20 மாத காலமே நன்மை நல்குவதாக உள்ளது்
அதை மனதில் கொள்க
 
அன்புடன்
வாத்தியார்
-----------------------------------
Post 2

✴️✴️✴️✴️✴️
Star Lessons
Lesson number 40
New Lessons
பாடம் எண் 40

திசை/ புத்திகள் பாடம் - பகுதி 2

திசைகள் பாடத்தில் ஒவ்வொரு திசையாகப் பார்ப்போம்

இன்று சூரிய மகா திசையைப் பற்றிய  பாடம்

கார்த்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய 3 நட்சத்திரங்களின் அதிபதி சூரியன் 
ஆகவே இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சூரிய மகா திசைதான் முதல் திசை

சூரிய மகா திசையில் மற்ற கிரகங்களுக்கான பங்குக் காலம் எத்தனை மாதங்கள் மற்றும் நாட்கள் எவ்வளவு என்பதையும்,  அவற்றில் நன்மையான காலம் எவை எவை என்பதையும் இன்று பார்ப்போம்..

சூரிய மகா திசையில் முதலில் வருவது அதன் சுய புத்தி (Own Sub Period)

அதறகுப் பிறகு மற்ற கிரகங்களின் புத்திகளும் வரிசையாக ஒவ்வொன்றாக வரும்  அவற்றை இங்கே கொடுத்துள்ள  பி் டி் எப் (PDF) கோப்பைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்

புத்திகளில் சந்திரன், செவ்வாய், குரு ஆகிய 3 கிரகங்களின் புத்திகள் மட்டுமே நன்மை செய்யக்கூடும் மற்ற 6 பிரகங்களின் புத்திக் காலம் நன்மையானதாக இல்லை

சூரிய மகா திசையின் 72 மாத காலங்களில் சுமார்  20 மாத காலமே நன்மை நல்குவதாக உள்ளது்
அதை மனதில் கொள்க
 
அன்புடன்
வாத்தியார்
============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

5.9.22

Star Lessons Lesson எண் 38 திசைகள் மற்றும் புத்திகளைப் பற்றி இன்று பார்ப்போம்


✴️✴️✴️✴️✴️
Star Lessons 
Lesson number 38
Date 24-8-2022
New Lessons
பாடம் எண் 38

திசைகள் மற்றும் புத்திகளைப் பற்றி இன்று  பார்ப்போம்

மகா திசைகள் விபரம்
1. சூரிய மகா திசை - 6 ஆண்டுகள் 
2. சந்திர மகா திசை -10 ஆண்டுகள்
3. செவ்வாய். மகா திசை - 7 ஆண்டுகள்
4. ராகு மகா திசை - 18 ஆண்டுகள்
5. குரு மகா திசை - 16 ஆண்டுகள் 
6. சனி மகா திசை - 19 ஆண்டுகள்
7. புதன் மகா திசை - 17 ஆண்டுகள்
8. கேது மகா திசை - 7 ஆண்டுகள்
9. சுக்கிர மகா திசை - 20 ஆண்டுகள்

ஆக மொத்தம் 120 ஆண்டுகள்

ஒவ்வொரு மகா திசையிலும் மற்ற கிரகங்களுக்கும் இடம் உண்டு
அவற்றை புத்தி என்போம்
We used to call it as Sub petiod

ஒரு மகா திசையில் இன்னொரு மகா திசையின் புத்திக்கு உரிய காலம் தெரிய வேண்டும் என்றால் இரண்டின் ஆண்டுகளின் எண்ணிக்கையை பெருக்க வேண்டும்

உதாரணத்திற்கு ராகு திசையில் குரு புத்தி எவ்வளவு நாள்?
18 x  16 = 288  
இது போன்று வரும் மூன்று டிஜிட்  எண்ணில் முதல் 2 எண்கள் மாதங்களைக் குறிக்கும் கடைசி எண்ணை 3 ஆல் பெருக்க வரும் எண். நாட்களைக் குறிக்கும்
அதாவது 2 ஆண்டுகள் 4 மாதங்கள் 24 நாட்கள் எனபது விடை

அவற்றை - அதாவது புத்திகளின் காலத்தை தெரிந்து கொள்ள ஒரு சூத்திரம் உண்டு (Formula)

அதை இப்போது உங்களுக்கு சொல்லித் தருகிறேன்

One more example
சனி மகா திசையில் புதன் புத்தி எத்தனை காலம்? 
சனிக்கு எண்  19
புதனுக்கு 17
19X 17= 323

ஜாதகத்தின் பலன்களை திசாபுத்திகள்தான் நமக்குக் கொடுக்கும். அதை மனதில் வையுங்கள்
323 =
32  மாதங்கள் ,மற்றும 3X3= 9 நாட்கள்
அதாவது 2வ - 8 மா-  9 நாட்கள்

நீங்கள் பஞ.சாங்கத்தை வைத்து இவற்றை பரிசோதித்துக் கொள்ளலாம்
.பஞ்சாங்கம. இல்லாமல் திசா புத்திகளைக கணக்கிடும் முறையைத்தான் நான் உங்களுக்கு சொல்லிக் கொடுத்துள்ளேன்

இந்த பாடத்தின் மற்ற பகுதிகள் நாளை வெளி வரும் பொறுத்திருந்து படிக்க வேண்டுகிறேன்

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

2.9.22

Star Lessons Lesson number 37 ---12ம் வீட்டைப் பற்றிய பாடம்

✴️✴️✴️✴️✴️
Star Lessons
Lesson number 37
New Lessons
பாடம் எண் 37

இன்று 12ம் வீட்டைப் பற்றிய பாடம்

12ம. வீட்டிற்கு விரைய வீடு என்ற பெயர் (House of Loss)

 வாழ்க்கையில் ஜாதகன் சந்திக்கப் போகும் இழப்புக்களைப் பற்றிய வீடு

இந்த வீட்டில் எந்த கிரகம் வந்து அமர்ந்தாலும் வந்த அந்த கிரகத்தின் வீட்டின் காரகத்துவம் (Work)  அடிபட்டுப் போகும்

உதாரணத்திற்கு 2,ம் வீட்டு அதிபதி இங்கே வந்து அமர்ந்தால், ஜாதகனுக்கு எப்போதும் பணத் தட்டுப்பாடாக இருக்கும் கையில் காசே தங்காது

 லக்கினாதிபதி இங்கே வந்து அமர்ந்தால் ஜாதகன் வாழ்க்கை விரையமாகி விடும்  ஜாதகனுக்கு பயன் படாமல் போய்விடும்

இங்கே மாந்தி வந்து அமர்ந்தால் Sudden Loss ஏற்படும்
12ம்  வீட்டுக்காரன் 3,6,8 ஆகிய வீடுகள் ஒன்றில் அமர்ந்தால் அந்த வீடுகளின் பலன்கள்  மோசமாகி விடும்
கள் குடித்த குரங்கின் கையில் கத்தி கிடைத்ததைப் போல் ஆகிவிடும்
அதை மனதில் வையுங்கள்

பன்னிரெண்டாம் வீடும் அதன் அதிபதி அமர்ந்த இடத்திற்கான பலன்களும்

12th House and placement benefit of its lord

கிரகங்களின் அமரும் இடத்தைவைத்துப் பலன்கள் வேறுபடும். அவற்றைப் பார்ப்போம்!

பன்னிரெண்டாம் வீட்டையும், அதன் அதிபதி அமரும் இடத்திற்கான பலன்களையும் பார்ப்போம்!

கிரகங்கள் அவ்வாறு அமரும் இடமானது அவற்றின் உச்ச வீடாக அல்லது ஆட்சி வீடாக இருந்தால் சுபமான பலன்கள் உண்டாகும். இதை மனதில் வையுங்கள்!

1
பன்னிரெண்டாம் அதிபதி இலக்கினத்தில் இருந்தால், வேளா வேளைக்கு தவறாத போஜனம், நித்திரை, சுகம் உடையவனாக ஜாதகன் இருப்பான். செலவு செய்து வசதிகளைப் பெறுவான்.
2
பன்னிரெண்டிற்குரியவர் இரண்டில் இருந்தால், தன விரையம் உண்டாகும். வாய் சாமர்த்தியம், வீண் பேச்சு, மதிப்பில்லாத வாக்கு, ஊக்க மின்மை, ஊர் சுற்றும் சுபாவம் உள்ளவனாக ஜாதகன் இருப்பான்.
3
பன்னிரெண்டிற்குரியவர் மூன்றில் இருந்தால், இளைய சகோதரகளால் பண விரையம், உண்டாகும். பிதுr சொத்துக்கள் நாசமாகும். வீரிய நாசமுடையவனாக இருப்பான்.
4
பன்னிரெண்டாம் வீட்டுக்குரியவன் நான்கில் இருந்தால், ஜாதகன், அயன, சயன, சுக நாசமுடையவன். வீடு, மனை, வாகன விரையம் உண்டாகும். அதிகமான குடும்பச் செலவு, விருந்தினர்களால், நண்பர்களால், உறவினர்களால் அதிக செலவு உடையவனாக ஜாதகன் இருப்பான்.
5
பன்னிரெண்டாம் வீட்டுக்குரியவன் ஐந்தில் இருந்தால், புண்ணிய யாத்திரை, திருப்பணி சம்பந்தமான செலவுகள், பெரிய மனிதர்களின் தயவு வேண்டி செலவுகள் ஆகியவைகள் உண்டாகும். மூத்த சகோதரர்களால் விரையம் உண்டகும்.
6
பன்னிரெண்டிற்கு உரியவன் ஆறில் இருந்தல், தகாத வழியில் ஈடுபடுதல், கண் நோய், குறியில் நோய், வியாதிகள், பொருள் நஷ்டம், ஆகியவை ஏற்படும். ஜாதகன் அயன, சயன, சுகங்கள் நாசமடையும்.
7
பன்னிரெண்டிற்கு உரியவன் ஏழில் இருந்தால், அயன, சயன, சுக வழிகளில் மற்றும் பெண்கள் வழியில் அதிக செலவுகள் உண்டாகும். காமத்திற்காக செலவுகள், அதை வைத்து அலைச்சல் உடையவனாக ஜாதகன் இருப்பான்.
8
பன்னிரெண்டிற்கு உரியவன் எட்டில் இருந்தால், கெட்ட காரியங்களில் செலவு, வழக்குகள் உடையவனாக இருப்பான். உடல் நலம் நாசமடையும். சாப்பாடு, படுக்கை சுகங்கள் கேடாக இருக்கும். அதாவது அவை கிடைப்பதில் சிரமங்கள் இருக்கும்.
9
பன்னிரெண்டிற்கு உரியவன் ஒன்பதில் இருந்தால், படுக்கை, சாப்பாடு, சுகம், பிதுர் சொத்துக்கள் ஆகியவைகள் விரையம் ஆகும். சகோதரர்களால் கடன் தொல்லை, கஷ்டங்கள் ஏற்படும்.
10
பன்னிரெண்டிற்கு உரியவன், பத்தில் இருந்தால், செய்தொழில் முடக்கம், வருமானம் இல்லாத நிலை ஏற்படும். தொழிலை விட்டு விலகுதல், சுற்றித்திரிய நேர்தல், பொருள் நஷ்டங்கள் ஆகியவைகள் ஏற்படும். அயன, சயன சுகம் உடையவனாக ஜாதகன் இருப்பான்.
11
பன்னிரெண்டிற்கு உரியவன், பதினொன்றில் இருந்தால், ஓரளவு வரவு இருப்பினும், மிஞ்சிய செலவு உண்டாகும். தான தருமம், தரிசன வழிபாடுகள் உடையவனாக இருப்பான். மூத்த சகோதரர்களால் நஷ்டம்,  பிள்ளைகளால் செலவு உடையவனாக ஜாதகன் இருப்பான்.
12
பன்னிரெண்டிற்கு உரியவன் பன்னிரெண்டில் ஆட்சி பலத்துடன் இருந்தால்,சாப்பாடு சுகம், படுக்கை சுகம் நித்திரை சுகம் உடையவனாக ஜாதகன் இருப்பான். உடல் நலக்குறைவு ஏற்படும். விரையங்கள் அதிகமாக இருக்கும்.

12ம் வீட்டைப்   பற்றிய பாடம் முற்றும்

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

1.9.22

Star Lessons Lesson number 36 11ம் வீட்டைப் பற்றிய பாடம்


✴️✴️✴️✴️✴️
Star Lessons
Lesson number 36
New Lesson
பாடம் எண் 36

இன்று 11ம் வீட்டைப் பற்றிய பாடம்

இந்த வீட்டிற்கு லாப ஸ்தானம் என்று பெயர்
(House of Profit)
நீங்கள் செய்யும் தொழில் அல்லது வேலையில் கிடைக்கும் ஆதாயம், வெகுமதி, நன்மைகள் ஆகியவற்றைக் கொடுப்பது இந்த வீடுதான்

இந்த வீடும் அதன் அதிபதியும் வலிமையாக இருந்தால் எல்லா லாபங்களும் தேடி வரும்

இந்த வீட்டு அதிபதி 6,8,12ல் மறையக்கூடாது்  நீசமாக்க்கூடாது.
அத்துடன் தீய கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வையைப் பெறக்கூடாது

தவறி பெற்றால  லாபத்திற்குப் பதில் ஏமாற்றமே அதிகமாக இருக்கும்
தொட்டது துலங்காது

பதினொன்றாம் வீடும் அதன் அதிபதி அமர்ந்த இடத்திற்கான பலன்களும்

11th House and placement benefit of its lord

கிரகங்களின் அமரும் இடத்தைவைத்துப் பலன்கள் வேறுபடும். அவற்றைப் பார்ப்போம்!

கிரகங்கள் அவ்வாறு அமரும் இடமானது அவற்றின் உச்ச வீடாக அல்லது ஆட்சி வீடாக இருந்தால் சுபமான பலன்கள் உண்டாகும். இதை மனதில் வையுங்கள்!

1
பதினொன்றாம் வீட்டுக்கு உரியவன் இலக்கினத்தில் இருந்தால், ஜாதகன் அதிகம் படித்தவன். வாக்கு வன்மை, சாதுர்யமாகப் பேசும் தன்மை உடையவன். நல்ல லாபம் பெறக்கூடியவன். அயன, சயன, சுக பாக்கியங்களை உடையவன். மூத்த சகோதரருடன் நட்பாக உள்ளவன்
2
பதினொன்றுக்கு உரியவன் இரண்டில் இருந்தால், வழக்கறிஞர்களைப் போல பேசக்கூடியவன். நல்ல உடலமைப்பு, வருமனம், கெளரவம் மிக்கவனாக இருப்பான். அதிகாரம் உடையவனாக இருப்பான்.
3
பதினொன்றிற்கு உரியவன் மூன்றில் இருந்தால், மூத்த சகோதரர்களுக்கு ஜாதகனால் நன்மை உண்டாகும். அவர்களின் மேலான ஆதரவு இவனுக்கு இருக்கும்.
4
பதினொன்றிற்கு உடையவன் நான்கில் இருந்தால்,  நல்ல குடும்பம், வீடு, மனை, வாகன வசதிகள் உடையவனாக ஜாதகன் இருப்பான். செல்வாக்கு, தெய்வ வழிபாடு, தாய்வழி ஆதரவு உடையவனாக ஜாதகன் இருப்பான்.
5
பதினொன்றிற்கு உரியவன் ஐந்தில் இருந்தால்,புத்திரர்களால் முன்னேற்றம், தந்தையின் தொழிலை பிள்ளைகள் மேற்கொள்ளுதல் ஆகியவை நடக்கும். அந்தஸ்து, அரசு அனுகூலம், பெரிய மனிதர்களின்நட்பு ஆகியவை உடையவனாக ஜாதகன் இருப்பான்.
6
பதினொன்றிகு உரியவன் ஆறில் இருந்தால்,குறையாத கடன் சுமை, செய்தொழிலில் வஞ்சகர்கள்,போட்டியாளர்கள் இருப்பார்கள்.காது, கண் நோய், குரல் நோய், அயன, சயன, சுக நாசம் உடையவனாக ஜாதகன் இருப்பான்.
7.
பதினொன்றிற்கு உரியவன் ஏழில் இருந்தால், மனைவியினால் அதிர்ஷ்டம், புத்திரர்களால் சுகம், முன்னேற்றம் உடையவனாக இருப்பான். தெய்வ வழிபாடு பொதுப்பணி உடையவனாக இருப்பான். தனச் செலவுகள் அதிகம் இருக்கும்.
8
பதினொன்றிற்கு உரியவன் எட்டில் இருந்தால்,  தீய காரியங்களால் பணச் செலவுகள் உண்டாகும். படுக்கை, சாப்பாடு, சுகம் நாசமாகும். பலவித தொழில் செய்யும் விருப்பமும் முயற்சியும் இருக்கும். ஆனால் எதிலும் போதிய லாபம் இல்லாமல் இருக்கும்!
9.
பதினொன்றிற்கு உரியவன் ஒன்பதில் இருந்தால்,தந்தை செய்து வந்த தொழிலை எடுத்துச் செய்து விரிவடையச் செய்வான். சொத்து, வாகனம், உயர் பதவி, அதிகாரம் உடையவனாக ஜாதகன் இருப்பான். படுக்கை, சாப்பாடு சுகம் மிக்கவனாக ஜாதகன் இருப்பான்.
10
பதினொன்றிற்கு உரியவன் பத்தில் இருந்தால், கெளரவமன தொழில் அல்லது உத்தியோகம், அடக்கமான, அமைதியான  குடும்பம் இருக்கும். செளகர்யங்கள், தெய்வீக வழிபாடு, நல்ல வருமானம் உடையவனாக ஜாதகன் இருப்பான்.
11.
பதினொன்றுக்கு உரியவன் பதினொன்றில் ஆட்சி பலத்துடன் இருந்தால், சாதாரண லாபம். சமபலன்கள் உண்டாகும். தெய்வீக வழிபாடு, கெளரவமான குடும்பம் உடையவனாக ஜாதகன் இருப்பான். பிற்கலத்தில் செல்வத்துடன் இருப்பான். மூத்த சகோதரர்கள் நலமாக இருப்பதுடன், ஜாதகனுடன் நல்ல உறவோடு இருப்பார்கள்.
12
பதினொன்றிற்கு உரியவன் பன்னிரெண்டில் இருந்தால், பொருள் விரையம், கடன் தொல்லைகள், வியாதிகள், அமைதிக்குறைவு உடையவனாக ஜாதகன் இருப்பான். அயன, சயன சுகங்கள் உடையவனாக இருப்பான்.

11ம் வீட்டைப் பற்றிய பாடம் நிறைவுறுகிறது

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!