மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

31.10.11

உன் கேள்விக்கு இதுதான்(டா) பதில்!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
உன் கேள்விக்கு இதுதான்(டா) பதில்!

மத்திய பொதுத்துறைத் தேர்வாணயம் கேட்ட கேள்விகளுக்கு, கிடைத்த அசத்தலான பதில்கள் சிலவற்றைக் கொடுத்துள்ளேன். படித்துப் பாருங்கள்:

முதலில் கேள்விகள்:

1. How can you drop a raw egg onto a concrete floor without cracking it?
2. If it took eight men ten hours to build a wall,how long would it take four men to build it?
3. If you had 3 apples and 4 oranges in one hand and four apples and three oranges in the other hand, what would you have?
4. How can you lift an elephant with one hand?
5. How can a man go eight days without sleep?
6. If you throw a red stone into the blue sea what it will become?
7. What looks like half apple?
8.  Bay of Bengal is in which state?

இவற்றிற்கு உங்கள் பதில் என்ன? ஒரு காகிதத்தில் குறித்துக்கொள்ளுங்கள். சரியான (சிறந்த விடை) கீழே உள்ளது.  சரிபார்த்த்துக்கொள்ளுங்கள்
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V

1
Q.How can you drop a raw egg onto a concrete floor without cracking it?
A.Concrete floors are very hard to crack! (UPSC Topper)
2
Q.If it took eight men ten hours to build a wall,how long would it take four men to build it?
A. No time at all it is already built. (UPSC 23 Rank Opted for IFS)
3
Q.If you had 3 apples and 4 oranges in one hand and four apples and three oranges in the other hand, what would you have?
A. Very large hands.(Good one) (UPSC 11 Rank Opted for IPS)
4
Q. How can you lift an elephant with one hand?
A It is not a problem, since you will never find an
elephant with one hand. (UPSC Rank 14 Opted for IES)
5
Q. How can a man go eight days without sleep?
A. No Problem , He sleeps at night. (UPSC IAS Rank 98)
6.
Q. If you throw a red stone into the blue sea what it will become?
A. It will Wet or Sink as simple as that. (UPSC IAS Rank 2)
7.
Q. What looks like half apple ?
A : The other half. (UPSC - IAS Topper )
8
Q. Bay of Bengal is in which state?
A : Liquid (UPSC 33Rank )
----------------------------------------
சொந்த சரக்கல்ல. முன்பு மின்னஞ்சலில் வந்தது.
எத்தனை கேள்விகளுக்கு நீங்கள் சரியான பதிலைச் சொன்னீர்கள்?
அன்புடன்
வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

30.10.11

எப்போதும் உயிரோடு இருக்க என்ன செய்ய வேண்டும்?

மாணவர் மலர்
இன்றைய மாணவர் மலரை நால்வரின் ஆக்கங்கள் அலங்கரிக்கின்றன. படித்து, பார்த்து மகிழுங்கள்!
 --------------------------------------------------------------------------------------
1
பாட்டி எழுதிய நாட்குறிப்பு!
Article by KMRK

நாட் குறிப்பு எழுதுவது ஒரு நல்ல பழக்கம். நான் செய்வதில்லை. என்ன காரணம் என்றால் நாம் என்ன ஏதாவது உல‌கம் போற்றும் செயல் புரிந்து புகழ் பெற்றவர்களா?தினமும் 'சாப்பிட்டேன், தூங்கினேன்' என்பதைத்தவிர வேறு என்ன எழுத முடியும் நம்மால் என்ற அல‌ட்சிய மனப்பான்மையே காரணம்.அல்லது சோம்பேறித்தனம்.அல்லது நாம் எழுதுவதை யாராவது படித்துவிட்டால் நம் ரகசியம், பலவீனம் எல்லாம் எல்லோருக்கும் தெரிந்துவிடுமே என்ற பயம்.

புதுச்சேரியில் பிரெஞ்ச் ஆட்சி நடந்தபோது ஆனந்தரெங்க‌ம் பிள்ளை என்று இருந்தார். அவ‌ர் துவிபாஷி. அதாவது மொழிபெயர்பாளார். இரண்டு மொழி தெரிந்ததால் ஆட்சியாளருக்கு மொழிபெயர்ப்பாளராக இருந்தார். தினமும் நாட்குறிப்பு எழுதி வைத்தார்.அவ‌ர் அரசுக்கு இனக்கமாக இருந்ததால் அன்றைய பாண்டிச்சேரி அரசியல் முழுவதும் அவருடைய நாட்குறிப்பில் காணலாம். பிரான்ஸ் நாட்டு சரித்திரத்திற்கு ஆனந்தரெங்கம் பிள்ளை டயரி முக்கிய சான்றாக ஆகிவிட்டது. அதனால் அதனை அவர்கள் மொழிபெயர்த்து  வைத்துக்கொண்டார்கள். தமிழ் உரைநடைக்கு பிள்ளையின் டயரி ஒரு முன்னோடி.இணையத்தில் கூடக் கிடைக்கும். விருப்பம் இருப்போர் படிக்கலாம்.

சரி.குறைந்த படிப்பும், மொழி ஆற்றலும் இல்லாத ஒரு வீட்டுக் குடித்தனப் பெண்மணி தன் நினைவுகளை எழுதினால் எப்படி இருக்கும்? "இன்று கத்திரிக்காய் எண்ணெய் வதக்கல், வெந்தயக் குழம்பு, சீரக ரசம் சமைத்தேன்" என்றுதானே எழுதுவாள்?

அப்படியில்லாமல் தன் குடும்பத்தில் நடந்த அத்தனை நிகழ்வுகளையும் ஒரு தன் வரலாறாக ஒரு மூதாட்டி எழுதியுள்ளாள்.அந்த வரலாற்றை அவருடைய 80 வயது மகன் இப்போது எடுத்து வெளியிட்டுள்ளார். 'மின்தமிழ்' என்ற கூகிள் குழுமத்தில் "அம்மாவின் சொற்படி ராஜு" என்று 65 பாகமாக வெளியிட்டுள்ளார்.

மகனின் புனைப்பெயர் இன்ன‌ம்பூரான். இன்னம்பூர் குடந்தைக்கு அருகில் சுவாமிமலைக்கு அருகில் உள்ளது.பெரியவர் இன்னம்பூரான் Additional Comptroller and Auditor General   (CAG)ஆகப் பணி செய்து ஓய்வு பெற்றவர். அந்தப் பதவி பற்றி இப்போது இந்தியாவில் உள்ள கிராம மக்கள் கூட அறிவார்கள்.ஸ்பெக்ட்ரம் என்றல் மூளை சி ஏ ஜி யுடன் உடனே முடிச்சுப் போடும்.

அந்தத் தாய் எழுதிய நினைவுக்குறிப்பில் அதி முக்கியமான குறிப்பினை உங்களுக்கு அளிக்கிறேன். அவருடைய இறை நம்பிக்கையால் அவருக்கு மன நிறைவு கிடைத்ததைப் பார்க்கிறோம். நாமும் அப்படிப்பட்ட உறுதியான‌ அசையாத‌ இறை நம்பிக்கையை அடையப் பாட்டியின் சொல்லைத் தட்டாமல் கேட்போம்.

இறுதியில் பாட்டி தன் இரண்டாவது பிள்ளைக்கு 'க்ரிணி' ஆபரேஷன் (kidney operation)பற்றி சொல்கிறார். மூத்த பிள்ளை கிட்னி கொடுத்ததைச் சொல்கிறார். அந்த மூத்த பிள்ளை நமது சி ஏ ஜி இன்ன்பூரார்தான். பெரியவர் இன்னம்பூரார் தற்போது இலண்டனில் இருக்கிறார்.நான் இலண்டனில் இருந்தபோது அவருடன் தொலைபேசியில் உரையாடினேன். நேரில் சந்திக்காமல் வந்துவிட்டோமே என்று மனம் இன்னும் கிடந்து அடித்துக்கொள்கிறது.

Over to Grandma!               
---------------------------------------------------------
*அற்புதம்!அற்புதம்! அற்புதமே!: அம்மா சொல்படி ராஜூ: பகுதி 34: 24 11 2009*

*உ*

*ஸ்ரீ:*

*எல்லாம் அவன் செயல்*

*கதை சுருக்கம்*

*எனக்குத் தெரிந்த வரையில் இந்த உலகம் ஒரு மாயை. சினிமா. இப்படியிருக்கையில் கலியுகம் முடியும் போது க்ருண் (கிருஷ்ண) பகவான் ஆலிலையில் துயில் கொள்கிறான். கடல் பொங்கி அமர்ந்த பிறகு ஸ்ரீராப்தி (க்ஷீராப்தி) நாராயணனாக அவதரிக்கிறார் என்று கேள்வி. அப்போது நாரயணன் ப்ரம்மாவை வரவழைக்கிறார். உடனே இருவரும் யோஜனையில் ஆழ்ந்து எப்படி உல(க)த்தை உண்டாக்குவது என்று நினைக்கிறார்கள். உடனே நாராயணன்' நான் உலகத்தைப் படைத்து முடிக்கிறேன். நீ உலகத்தில் புல், பூண்டு, விலங்கினங்கள், மனிதன், ஆண், பெண் என்று பாகுபாடில்லாமல் படைத்து விடு' என்று நாராயணன் ப்ரம்மவிற்கு சொல்லி விடுகிறார்.

அதே போல் நாராயணன் படைத்து விடுகிறான். ப்ரம்மா சிருஷ்டி செய்து விடுகிறார். பிறகு அவர்களுடைய செயல் கொண்டு, உலகப் ப்ரபஞ்சம் ஆகி மனிதர்கள், விலங்கினங்கள் எல்லாம் நன்றாக வாழ்ந்து வருகிறார்கள். விலங்குகளும் எல்லாம் நன்றாக இருக்கிறது. இதர்(ற்)கிடையில் வருண பகவான் வந்து மழை பெய்து உலகம் செழிப்பாகவும் வைக்கிறான். நன்றாக ஜனங்கள் வாழ்கிறார்கள். அப்படி வாழ்ந்து குடும்பம் நடத்துகிறார்கள். அவர்களுக்குக் கதம்பமாக குழந்தை பிறந்து சந்தோஷமாக இருக்கிறார்கள்.

அந்த சந்தோஷத்தை யார் கொடுக்கிறான்?. 'எல்லாம் அவன் தான் கொடுக்கி றான்' என்று அவர்கள் நினைப்பதில்லை. அது வந்து அவன் தான் கொடுக் கிறான் என்று அவர்களுக்குத் தெரியாது. ஏதோ நமக்கு குழந்தை பிறக்கிறது. நல்லது என்று சந்தோஷப்படுவார்கள். அதனால் அவர்கள் பகவானை மறந்து விடுவார்கள்.

அதையும் பகவான் அவர்கள் என்னை நினைக்கிறார்களா என்று பார்த்துக்கொண்டு, சிரித்துக்கொள்வார். ஆனால் அவர்கள் மேல் கோபப் படமாட்டார்.

மாயையாகப்பட்டது அவர்களை மறக்க வைத்து விடும். ஆனால் பகவானை வந்து நினைக்கும் அளவுக்கு உலகத்தில் எல்லா இடத்திலும் கோவில் கொண்டிருக்கிறான். அதனால் ஜனங்கள் எப்போது அவன் நினைவு வருகிறதோ அப்போது அவர்கள் கோவிலுக்கு வந்து  வழி படுகிறார்கள். அதுவும் அவன் அவர்கள் மனதில் புகுந்து ஒரு தரமாவது என்னை வந்து பார் என்று நினைவு படும்படி செய்கிறார். அது போல் அவர்கள் மனதில் தோன்றினதும் உடனே அவர்கள் கோவிலுக்குப் போகிறார்கள்.

எப்பவும் நாம் நினைத்த காரியம் நன்றாக நடக்கவேண்டும் என்றால் அவனை ஒரு நிமிஷமாவது நினைக்க வேண்டும். அது மாதுரி எவ்வளவோ காரியம் என் கண் முன்னே நடந்திருக்கிறது. அதனால் தான் அவன் செயல் என்று சொல்வது உண்டு.

அது போல் எனக்கு(ம்), ஆழ்வார்களுக்கு(ம்) பகவான் தெரிசனம் தருகிறான்.

அது மாதுரி எனக்கும் கனவில் பகவான் சேவை தருகிறான். அப்போது நான் தூங்குகிறேனா, விழித்திருக்கிறேனா என்று தெரியவில்லை. அப்படி பகவானைப் பார்த்துக்கொண்டிருப்பது மனதிற்கு ஆனந்தமாக இருக்கிறது. நான் மெய் மறந்து போய் திடீரென்று விழித்துக்கொள்வேன். என்னடா விடிந்தது தெரியாமல் இருப்பேன். பிறகு நினைப்பேன். மறுபடியும் பகவான் கனவில் வரமாட்டாரா என்று ஏங்கிக்கொண்டே இருப்பேன். ஆனால் ஆழ்வார் மூன்று பேருக்கு பகவான் தெரிசனம்  கொடுத்தான். அதை நினைத்து நாம் என்ன வெரு(று)ம் ஒன்றும் தெரியாத எனக்குக் கனவில் பகவான் வந்தால் எனக்கே ஆச்சரியமாக இருக்கும்.

நமக்கு என்ன கவலை யிருந்தாலும் நாம் அவனை நினைக்க வேண்டும். அது என்னுடைய கொள்கை. அதே போல் ஏழுமலையானும் எனக்கு கனவில் வருவார். இதை நான் யாரிடமும் சொல்லமாட்டேன். ஏன் என்றால், நான் சொல்லலாம்; கேட்பவர்கள் நம்பவேண்டுமே. அதனால் தான் யாரிடமும் சொல்வதில்லை. ஆனால் எனக்கு நிச்சியமாக் கனவில் வந்து' நீ கவலைப்படாதே. நான் உன் குழந்தைகள், குடும்பம் எல்லாவற் றையும் காப்பாத்துகிறேன்' என்கிற மாதுரி கையைக் காண்பிப்பார். நான் அவனை நினைத்தால் எனக்கு பலன் கிடைக்கிறது. நானும் மாயையில்
சிக்கி எழுந்து, இப்போது பகவானைப் பார்க்கிறேன். அதனால் எனக்கு அவனுடைய செயல்பட்டு பலன் இரு(க்)கிறது.

நான் கோவிலுக்குப் போகவேண்டும் என்று நினைப்பேன்.யார் அழைத்துப்போவார்கள். எனக்கோ வயதாகி விட்டது. கவலைப்பட்டுக்கொண்டு பகவானை நினைப்பேன். அவர் உடனே கனவில் வந்து கோவிலுக்கு அழைத்துப் போகிற மாதிரி வருவார். எனக்கு அதனால் கோவிலுக்குப் போகவேண்டும் என்று நினைக்க மாட்டேன். இருந்தாலும் பகவான் என்ன சொல்கிறார் என்றால், 'நான் உன்னுடைய ஹ்ருதயத்தில் கோவில் கொண்டுள்ளேன். அதனால், நீ என்னை ஹ்ருதயத்திலேயே பார்த்துக்கொள் 'என்று சொல்கிறார். அதனால் மனதுக்குள் நினைத்துக் கொள்வேன். இப்போது அவன் செயல் என்று நினைத்து எந்தக்காரியத்தையும் நடத்தவேண்டும்.

இன்னும் ஒரு அதிசயம் என்னஎன்றால், நான் சனிக்கிழமை தோறும் வெங்கடாசலபதிப் பெருமாளுக்கு துளசிமாலை சாத்தி வந்தேன். எதற்கு என்றால், , என் பேரன் பேத்திகளுக்கு நல்ல ரோஜாப்பூ மாலை போடு என்றும், கல்யாணம் ஆகவேண்டும் என்று வேண்டிக்கொண்டே, துளஸி மாலையை சனிக்கிழமையில் சாத்தி வருகிறேன். அதனுடைய பலன் எனக்கு கிடைத்து, பேரனுக்குக் கல்யாணம் ஆகிவிட்டது. இப்போது இரண்டாவது பிள்ளையோட பெண்ணுக்குக் கல்யாணம் ஆகப்போகிறது. நான் வந்து என் பெண், பிள்ளை, பேரன், பேத்தி உள்பட நன்றாக இருக்கவேண்டும் என்று திருவேங்கட முடையானை வேண்டிக்கொள்வேன். என்னது போல், அவனும் எனக்கு பலன் கொடுக்கிறான். இருந்தாலும் அவன் செயல் தான் என்று நினைத்துக் கொள்வேன்.

எனக்குகனவில் கிழவர் போல் என் கண்ணில் படுவார். அந்த மாதுரி கனவில் வருவதும், போவதுமாக இருப்பதால், எனக்கு உடம்பு என்று வந்தால் கூட சரியாகி விடுகிறது.

மறந்து போய் துளசி மாலை போடவில்லை என்றால், கனவில் ஏன் போடவில்லை என்று கேட்பார். அவர் சொல்வது போல் என் ஹ்ருதயத்திலே இருக்கிறார். அதனால் தான் நான் என் ஆத்மாவை சுத்தமாக வைத்துக் கொள்ளவேண்டும் என்று இருக்கிறேன்.

ஆனால், இன்னும் ஒரு ஆச்சரியம் என்னவென்றால், எனக்கு மூன்று பிள்ளை. அவர்களில் இரண்டாவது பிள்ளைக்கு கிட்னி ட்(ர)பில் வந்து ரொம்பவும் 2 வருஷம் கஷ்டப்பட்டான். டாக்டர்கள் பார்த்து ஆப்ரேஷன் செய்யவேண்டும். இல்லாத போனால் உயிருக்கு ஆபத்து  என்று சொல்லி விட்டார். நாங்கள் ரொம்ப பயந்து போனோம். அவனுக்கு மூன்று பெண்கள் கல்யாணத்திற்கு இருக்கிறார்கள். என்ன செய்வது. கடவுள் தான் துணை என்று இருந்தோம்.

அப்படியிருக்கும் போது டாக்டர் சீக்கிரமே ஆப்ரேஷன் செய்யவேண்டும். ஆனால் எனக்கு நாலு பெண்கள். அதனால் நான் பெண்கள் எல்லாரையும் டெஸ்ட் செய்து ஒருவருதும் சரியில்லாமல் இருந்து, என் பெரிய பிள்ளையுடைய க்ர்னி(கிட்னி) சரியாக இருக்கிறது என்று சொல்லி, அவன் தான் தம்பிக்குக் கொடுத்தான். என்ன செய்வது. என் பெரிய  மாட்டுப் பெண்ணுக்கும் உடம்பு சரியில்லாதவள். அவளும் சம்மதப்பட்டுத்தான் க்ர்னி தம்பிக்குக் கொடுத்தான். க்ர்ணி கொடுத்து மூன்று வருஷம் ஆகிறது. இருவரும் செளக்யமாக இருக்கிறார்கள்.

நானும் என் குலதெய்வத்தை வேண்டி வெளக்கு ஏத்தி வைத்தேன். இரண்டாவது பிள்ளை க்ர்ணி அண்ணாவிடம் வாங்கிக்கொண்டு நல்லபடியாக
இருக்கிறான். அவன் இருப்பது நெய்வேலியில் இருக்கிறான். நானும் நெய்வேலி ஸ்ரீனிவாஸப்பெருமாளுக்கு வெளக்கு ஏத்தி வைத்தேன். ஆனால் சின்னப்பிள்ளை நெய்வேலிக்கு வந்து 30 வருஷத்துக்கு மேல் ஆகிறது. இப்படி என் குழந்தைகள் கஷ்டப்படுவதைப் பார்த்துப் பகவானுக்கு மனம் இறங்கி, இரண்டு பிள்ளையையும் நல்லபடியாக, அவர்கள் இருக்கும் இடத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறான். அவன் செயலில் தான் எல்லாம் நடக்கிறது. அதை நான் என் வயதுக்கு நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அப்படியிருக்க, இரண்டாவது பிள்ளையும் இரண்டு பெண்களுக்குக்கல்யாணம் செய்து விட்டான். பெரிய பிள்ளையும் தன் பிள்ளைக்கும் கல்யாணம் செய்து விட்டான். எல்லாரும் நல்லபடியாக இருப்பதை அவன் செயலில் பார்த்துக்கொண்டிருக்கிறேன். *
---------------------------------------------------------------
ஆக்கம்:
கே. முத்துராம கிருஷ்ணன், லால்குடி

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
2

எந்த இந்தியப் பிரபலத்தின் ஜாதகத்தை நீங்கள் அறிய விரும்புகிறீர்கள்?
Article by Themozhi

வகுப்பில் ஒரு பாடத்தின் தலைப்பு "அம்மாடியோவ் எனச் சொல்லவைக்கும் எண் 34290!," அதன் சுட்டி - http://classroom2007.blogspot.com/2008/11/34290.html

இந்தப் பாடத்தில், ஜாதகங்களின்  தொகுப்பாக விளங்கும் (ஜாதகக் களஞ்சியம் என அழைப்பது பொருத்தமாக இருக்குமோ?) ஒரு இணைய தளத்தை ஆசிரியர் அறிமுகப் படுத்தினார். அதன் சுட்டி - http://www.astrotheme.com/  இன்றைய நிலவரப்படி 40,463 ஜாதகங்களின் குறிப்புக்கள் உள்ளன இத்தளத்தில்.

பாடத்தில் அன்றைய "தேதியில் அதிகம் ஹிட் வாங்கிய ஜாதகத்தையும் கொடுத்துள்ளார்கள்" எனக் குறிப்பிட்டு ஒபாமா ஜாதக குறிப்பினையும் அவரது படங்களின் தொகுப்பையும் வழங்கியிருந்தார் ஆசிரியர்.  அன்றுவரை அதிக ஹிட் (அதிக அடி, உதை) வாங்கியது என் ஜாதகமே என்ற என் இறுமாப்பிலும் மண் விழுந்தது.  அத்துடன் அதிகம் தேடப்பட்ட இந்தியரான மகாத்மா காந்தியின் ஜாதகம் என புள்ளி விபரமும் கொடுக்கப் பட்டிருந்தது.

இன்றைய தேதி நிலவரப்படி இந்த புகழ் தரவரிசை புள்ளிவிபர பட்டியலில் எந்த ஒரு மாறுதலும் இல்லை.  ஆனால் வழக்கமான என் மூளையின் தேடல் பகுதி என்னைப் படுத்தி எடுத்து மேலும் தேடு ...மேலும், மேலும் தேடு ...என்று தூபம் போட்டுப்  பாடியது.  எனவே அத்தளத்தின் மற்றுமொரு பக்கத்தில் கொடுத்துள்ள தேடல் படிவத்தில் சுட்டி: http://www.astrotheme.com/celestar/filters.php இதையும், அதையும், இங்கே, அங்கே  கிளிக் செய்து, தேடல் வேட்டையை தொடர்ந்து நான் கண்டு கொண்டது என்ன?

முடிவுகள்:
ஜாதகத்திற்காக அதிகம் தேடப்பட்ட 12 இந்திய குடிமக்கள் அட்டவணை:1


வழக்கம் போல் நம் தாத்தாவிற்கே முதலிடம், இந்தியாவின் முதல் குடிமகன். உலக அளவில் அதிகம் தேடப்பட்ட ஆண்கள் வரிசையில் 11 ஆம் இடம்,  உலக அளவில் ஆண் பெண் இருபாலருக்கும் உள்ள வரிசையில் 24 வது இடம். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு அவருடைய ஜாதகத்தை  தெரிந்து கொள்ள ஆவல். 


ஜாதகத்திற்காக அதிகம் தேடப்பட்ட 13 உலக பிரபலங்கள் அட்டவணை: 2அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா உலக அளவிலும், ஆண்கள் வரிசையிலும் முதலிடம், அவர் மனைவி மிட்ஷெல் உலக அளவில் மூன்றாம் இடம், ஆனால் அதிகம் தேடப்பட்ட பெண்மணி இவரே.  இந்த பிரபலங்களில்  இருவரை யார் என எனக்குத் தெரியவில்லை.  ஆனால் வித்தியாசமான ஒருவர் பிறந்து 2000 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. ஏசு கிறிஸ்துவை இந்த பட்டியலில் நான் எதிர் பார்க்கவில்லை.  அது என்ன baker's dozen போல் 13 என்று ஒரு எண், உனக்கு ராசியான எண்ணா என்று யோசிக்கிறீர்களா? இல்லை, அது நம்  ஸ்ரீஷோபனா வுக்காக ...ஸ்பெஷல்.  

இத்துடன் பிரபலங்கள் எந்தத்துறையில் பிரபலம் என்றும் ஒரு வரிசைப்படுதியுள்ளர்கள். இந்த வகைப் படுத்தப்பட்ட துறை வாரியான முடிவுகள் என்னைப் பொறுத்தவரை திருப்திகரமாக இல்லை.  உதாரணத்திற்கு ஒரு அட்டவணை கீழே உள்ளது.  இந்திய திரைப்பட துறையின் முன்னணி பிரபலங்கள் ஐஸ்வர்யா ராயும், ஷாரூக்கும் என இப்படி போகிறது முடிவுகள். அட்டவணை 3

 இத்துடன் மகர லக்கின பிரபலங்கள் யார், யாருக்கு 9 இல் குரு, சிம்ம ராசிக்காரர் யார்  என விதம் விதமாக ஆராயும்  வாய்ப்பும் உள்ளது.
  
இது பொழுதிருப்பவர்களுக்கு அதைப் போக்க வழி சொல்லும் இன்னுமொரு இணையதளம். அவர்கள் பணிக்கு நன்றிகள் பல.
அன்புடன்
தேமொழி
(அம்மணியின் ஊர் தெரியவில்லை)

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
3

எப்போதும் உயிரோடு இருக்க என்ன செய்ய வேண்டும்?
Aricle by Thanusurasikkaaran, Brunei

மரணம்  வேண்டாம் என்று விரும்புபவர்கள் இதைப் படிக்கவும். இதைப் படித்து இதன் பிரகாரம் நடந்து கொண்டால் நிச்சயம் மரணம் நம்மை  அணுகாது 100 சதவிகிதம் சத்தியம்.

8 ஆம் இடம், 8 அதிபதி, சனிஸ்வரன் ஆகிய அனைத்தையும் ஓரம் கட்டிவிடுவதோடு , ஜோதிடம், ஜாதகம் அனைத்தையும் ‘வேஸ்ட்’ என்று
சொல்ல வைத்து விடும்.

எந்த உயிர் தான் மரணத்தை விரும்புகிறது. நவீன மருத்துவத்தின் காரணமாக மனிதனின் சராசரி ஆயுள் நீடித்து கொண்டு இருக்கிறது.  இருந்தும் இன்னும் வாழ்நாள் மீது ஆசைப் படும் மனிதன், அதனை மேலும் நீடிக்க , யோகா, உடற் பயிற்சி ,லேகியம், உணவு கட்டுப்பாடு  என்று என்னென்னமோ செய்து கொண்டு இருக்கிறான். அதன் மூலம் சிறிதளவு பயனும் அடைந்து கொண்டும் இருக்கிறான்.ஆனால் முழுப் பயனும் கிடைத்ததா? என்றால், இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

முழுப் பயனும் கிடைக்க மேலே படியுங்கள்.

ஒரு மாபெரும் ஆத்மா சொன்னதைச் சொல்கிறேன்.

எகிப்து பிரமீடுகளின் மலை அடிவாரத்தில் தோன்றிய மகா முனிவர் அவர். முக்காலமும் அறிந்தவர். எது சொன்னாலும் பலிக்கும்.மக்கள்  அவரிடம் வந்து தங்களின் வேதனைகளையும், சோதனைகளையும் சொல்லி நிம்மதி கேட்பார்கள். ஒவ்வொருவருக்கும் பரிகாரம் சொல்லி  அனுப்புவார். நன்மைகள் பயக்கும், நல்லதே நடக்கும். இப்படி நடக்க நடக்க மக்களின் சிறு சிறு சங்கடங்களும் நீங்கி நிமதியாக இருந்தனர்.

ஆசை யாரை விட்டது?

பெற்றெடுத்த தாய் மரணம், வளர்த்து விட்ட  தந்தை மரணம் , தான் பெற்ற பிள்ளை மரணம் என்று நடக்கையில்.மரணத்தை நிறுத்த முடியாதா?
இதற்கு ஒரு வழி கிடையாதா? நம்மை நிம்மதியாக வாழவைக்கும் முனிவரிடமே கேட்கலாம் என்று முடிவு செய்து ஊர் மக்கள் ஒன்று கூடி
முனிவர் இடம்  சென்றனர்.

ஊரார் ஒன்று கூடி வருவதை பார்த்த முனிவர், என்ன  விசயம் எல்லோரும் ஒன்று கூடி வருகிறார்களே என்று இருப்பிடம் விட்டு  வெளியில்  வந்தார். வாட்டமான முகங்களை பார்த்தார். எல்லோருக்கும் ஒரேவிதமான கஷ்டம் இதனை நாம் கண்டிப்பாக போக்க வேண்டும் என்று  முடிவெடுத்தார்.

மக்கள் எல்லோரும் ஒன்று கூடி, “அய்யா நீங்கள் எங்களுக்கு கடவுளுக்கும் மேலானவர். எங்களின் வேதனைகளைப் போக்கி சொர்க்கத்தில் இருப்பது போல் வாழவைத்துக் கொண்டு இருக்கிறீர்கள். இன்னும் ஒரு குறை இருக்கிறது அதனையும் நீங்கள்தான் தீர்த்து வைக்க வேண்டும்”
என்றார்கள்.

“சரி, சொல்லுங்கள்” என்றார் முனிவர்.

ஒருவரை ஒருவர் பார்த்து தயங்கித் தயங்கி நின்றனர். ம்.... சொல்லுங்கள் - என்றார் மீண்டும். அது வந்து என்று இழுத்தனர் - மஹா முனிவர் அல்லவா நோக்கத்தையும் கேள்வியையும் அனுமானித்து விட்டார். அதனை அவர்கள் வாயாலேயே வரவழைக்க வேண்டும் என்று நினைத்தார்.

ம்.... சொலுங்கள் இல்லை என்றால் நான் உள்ளே போகிறேன் .என்றார்.

மெல்லச் சொல்ல ஆரம்பித்தார்கள். “அய்யா...எங்கள் யாருக்கும் மரணம் வேண்டாம், மரணத்தின் பிரிவு மகா வேதனையாக இருக்கிறது,அந்த
வேதனையும் கஷ்டத்தையும் எங்கள் குடும்பத்தாருக்கும் தர நாங்கள் விரும்பவில்லை ,எங்களின் நல் வாழ்வுக்கு வழி சொன்ன நீங்கள் இதற்கும்
ஒரு வழி சொல்லுங்கள்" என்றனர்  .

லேசாக புன்சிரிப்பு சிரித்தார் முனிவர். "அதாவது மரணம் உங்களில் யாருக்கும் வேண்டாம். அதுதானே?

“ஆமாம், ஆமாம்” என்று ஒருமித்த குரலில் ஊர்மக்கள் சொன்னார்கள். மீண்டும் லேசாக சிரித்தார் முனிவர். "வரும் பௌர்ணமி இரவு வாருங்கள் சொல்கிறேன்" என்று சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டார்.

பௌர்ணமி தினம்!

அக்கம் பக்கத்துக்கு  ஊர் எல்லைகளைக் கடந்து மக்கள் கூட்டம் கூட்டமாக கூடத் தொடங்கினார்கள். மரணத்தின் மீது பயம் இல்லாதவர்  யார்? சாகாமல் இருக்க வழி தெரிய போகிறது, இனி இந்த பூமி நமக்கே சொந்தம், என பலவிதமான எண்ணங்கள் பலரின் மனதில் ஓடத்  தொடங்கியது. புது பிரபஞ்சத்தை பார்க்க போகிற ஆவலில் குவிய தொடங்கினர். மாலை முடிந்து இரவு தொடங்கியது முழு நிலவும்  முழுவதுமாக வெளியில் வந்தது .மக்களிடம் ஆரவாரம் தொடங்கியது முனிவர் எப்போது நம் முன் வருவார் என்று எதிர்பார்த்தனர் .ஒரு  வழியாக முனிவர் இருப்பிடம் விட்டு வெளியில் வந்தார். மக்கள் ஆரவாரம் அதிகமானது. எங்கும் ஆர்பரிப்பு குரலோடு மக்கள் சந்தோசமாக  காணப்பட்டனர். முனிவர் அந்த சந்தோசத்தை ரசித்தார். அவர் ரசிக்க ரசிக்க இன்னும் ஆரவாரம் விண்ணை தொட்டது. முனிவர் இரு
கைகளையும் உயர்த்தி அமைதி அமைதி என சைகை காட்டினார்.ஆரவாரம் மெல்ல அடங்கியது .மெதுவாக பேச தொடங்கினார்:

"மஹா ஜனங்களே...." என்றார். மக்கள் அமைதியாயினர்.

"உங்கள் ஆசையை பூர்த்தி செய்யவே நான் வந்துள்ளேன்" என்று சுருக்கமாக பேசினார். "மரணத்தை வெல்ல ஒரு வழி சொல்கிறேன் கவனமாகக் கேளுங்கள்" என்றார்.ஆர்பிரித்த கூட்டத்திடம் அமைதி. மீண்டும் பேச துவங்கினார் "நீங்கள் யாரும் சாகாமல் இருக்க வேண்டும்  என்றால்".... கூட்டத்தின் சப்தநாடியும் அடங்கியது. ஒவ்வொருவரும் தங்களின் காதுகளை கூர்மையாக்கினர்.ஒருவர் விடும் மூச்சு காற்று  அடுத்தவர்க்கு கேட்கும் அளவுக்கு நிசப்தமாக இருந்தது.

முனிவர் தொடர்ந்தார் , "நீங்கள் யாரும் சாகாமல் இருக்க வேண்டு மென்றால் யாரும் பிறக்காமல் இருங்கள்" என்று கூறி முடித்தார்.

நீதி ; ஜனனம் இருந்தால் மரணம் நிச்சயம்

   “சாகாமல் இருக்கவேண்டும் என்றால் பிறக்காமல் இருக்க வேண்டும்” என்ற பாரசிகப் பழமொழியை வைத்து எழுதப்பெற்ற ஆக்கம்.
ஆக்கியோன்: தனூர் ராசிக்காரன், Brunei
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
4

கீழ் உள்ள 6 நகை(ச்சுவை)களையும் அனுப்பியவர்: S.சபரிநாராயணன். சென்னை
1
The only man in this world, who likes a women fully- covered is...
a Life insurance agent.
Think Good!
----------------------
2
Always Remember There’s A ‘HELL’ In Every H E L L 0 … Be Careful.
There’s A ‘GOOD’ In Every G O O D B Y E … Be Grateful.
--------------------------
3.
A young and foolish pilot wanted to sound cool and show who was boss on the aviation frequencies. So, this was his first time approaching a field during the nighttime. Instead of making any official requests to the tower, he said: "Guess who?"

The controller switched the field lights off and replied: "Guess where!"
-------------------------------
4
*Best excuse by a female employee* !

This incident, is supposed to have happened in real life.

My friend, who is a the head of Human Resources at a very large bank, says that the best excuse for absenteeism, that he had ever received in his career of almost 22 years, was from a female Indian employee, at their bank's head quarters at Mumbai, India, in July, 2010. He says when the lady, was questioned on why she remained absent the previous day, she simply replied .......

*" But sir, I had no option. My husband was on casual leave yesterday and was at home. By mistake he took pills from the wrong bottle in our medicine cabinet and ended up consuming an over-dose of Viagra ! Now how could I have left him, all alone at home, with the house-maid ? "*
------------------------------------
5
We indians work on the
"Principle of rockets''
It doesn't mean we aim for the sky,
It means that, we don't start working unless our tail is on fire.
---------------------------------
6
Wife to drunk husband: From now on, if your lips touch liquor, you will never touch mine. What are you thinking?

Husband: Deciding, 18 year old scotch or 36 year old lips
+++++++++++++++++++++++++++++++++++++++++
5
காணோளி..?
இருக்கிறது!
இந்தவாரக் காணொளியை அனுப்பியவர் கே.முத்துராமகிருஷ்ணன், லால்குடி. பார்த்து மகிழுங்கள்
 ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
தங்கள் நேரத்தைச் செலவழித்து ஆக்கங்களை எழுதியவர்களை ஊக்குவிப்பது நல்லது. அது அவர்களுக்கு ‘டானிக்’ உங்கள் விமர்சனத்தைப் பதிவு செய்யுங்கள்.
அன்புடன்
வாத்தியார்

 +++++++++++++++++++++++++++++++++++++++++======

வாழ்க வளமுடன்!

28.10.11

Astrology எப்போது(டா) திருமணம் நடக்கும்?

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Astrology எப்போது(டா) திருமணம் நடக்கும்?

சிலபேர் நொந்துபோய் இருப்பார்கள். எத்தனையோ பிரயத்தனம் செய்தும் திருமணம் மட்டும் இன்னும் கூடிவராமல் இருக்கும். கடைசி நேரத்தில் தட்டிக்கொண்டு போய்விடும்.

நண்பர்கள் வேறு பிய்த்துக்கொண்டிருப்பார்கள்: “எப்போதுடா திருமணம்? நம்ம செட்டில எல்லாப் பசங்களுக்கும் ஆயிடுச்சு. உனக்கு மட்டும்தாண்டா பாக்கி!”

என்ன செய்வது? தர்ம சங்கடமாக இருக்கும்!

நான்கைந்து வருடமாக இதே கதை. ஆண்கள் என்றில்லை, பெண்களுக்கும் திருமணம் கூடி வராமல் தள்ளிக்கொண்டே போகும்.

ஏழாம் வீடு அல்லது ஏழாம் வீட்டுக்காரன் அல்லது களத்திரகாரன் சுக்கிரனுடன் தீய கிரகங்கள் கூட்டாக இருந்தால் திருமணம் தாமதமாகும்.

இத்தகைய தாமதம், தடைகள் எல்லாம் நீங்கி இறையருளால் ஒருவருக்குத் திருமணம் நடைபெற ஒரு சிவஸ்தலம் உள்ளது. அனைவருக்கும் தெரிந்த ஸ்தலம்தான். தெரியாதவர்கள் தெரிந்து கொள்வதற்காக இன்று பதிவிட்டுள்ளேன்
--------------------------------------------------------------------------------------------------------------
சிவஸ்தலத்தின் பெயர்: திருமணஞ்சேரி
அங்கே உறையும் இறைவனின் பெயர்    அருள் வள்ளல் நாதர், உத்வாக நாதர்
இறைவியின் பெயர்    கோகிலாம்பாள்
திருநாவுக்கரசர் மற்றும் திருஞானசம்பந்தர் ஆகியோர்களால் பதிகம் பாடப்பெற்ற ஸ்தலம்.

மயிலாடுதுறை - கும்பகோணம் சாலையில், வழியில் உள்ள குத்தாலம் என்ற ஊரில் இருந்து 6 கி.மி. தொலைவில் திருமணஞ்சேரி இருக்கிறது. மயிலாடுதுறையில் இருந்து நகரப் பேருந்து வசதியும், குத்தாலத்தில் இருந்து ஆட்டோ, வாடகைக் கார் வசதிகளும் உள்ளது.

முகவரி   
அருள்மிகு அருள் வள்ளல் நாதர் திருக்கோவில்
கீழைத்திருமணஞ்சேரி
திருமணஞ்சேரி அஞ்சல்
குத்தாலம் S.O.
மயிலாடுதுறை வட்டம்
நாகப்பட்டிணம் மாவட்டம்
PIN - 609813


காலை 7 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 3-30 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் கோவில் திறந்திருக்கும்.

திருமணம் கைகூடாது தடைபட்டு நிற்பவர்கள் திருமணஞ்சேரியில் உள்ள கல்யாணசுந்தரப் பெருமானுக்கு மாலை சாற்றி அர்ச்சனையும் செய்து வழிபட்டால் வெகு விரைவில் திருமணம் ஆகும் என்பது இத்தலத்தின் மகிமையாகும். மேலும் இராகு தோஷ நிவர்த்திக்கும் இத்தலம் மிக சிறப்புடையதாகும்.

இராகு தோஷத்தினால் பீடிக்கப்பட்டு, புத்திர பாக்கியம் கிட்டாத தம்பதியர் இத்தலத்திலுள்ள சப்த சாகர தீர்த்தத்தில் நீராடி இங்கு கோவில் கொண்டுள்ள இராகு பகவானுக்கு பால் அபிஷேகமும், பால் பொங்கல் நிவேதனமும் செய்து சாப்பிட்டு வந்தால் தமது இராகு தோஷம் நீங்கப் பெற்று புத்திரப் பேறு பெறுவார்கள் என்பதும் தல வரலாறாகும்.

திருமணப் பிரார்த்தனை விபரம்: திருமண தடை உள்ளவர்கள் இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ கோகிலாம்பாள் சமேத ஸ்ரீ கல்யாண சுந்தரர் சுவாமிக்கு மாலை சாற்றி வழிபாடு செய்தால், விரைவில் திருமணம் கைகூடும். ஆலயத்தில் பூஜை சாமான்கள், நெய்தீபம், அர்ச்சனை சீட்டு பெற்றுக் கொண்டு ஸ்ரீ செல்வ கணபதியை வழிபாடு செய்த பின் நெய்தீப மேடையில் 5 தீபம் ஏற்றிவிட்டு எதிரில் உள்ள திருமண பிரார்த்தனை மண்டபத்தில் வழிபாடு செய்ய வேண்டும். திருமண பிரார்த்தனை செய்து கொள்பவர்கள் வீட்டிற்குச் சென்றதும் ஒரு தீபம் ஏற்றி ஆலயத்தில் வழங்கப்பட்ட மாலையை கழுத்தில் அணிந்து கொண்டு சுவாமியை நினைத்து வணங்க வேண்டும். பினபு மாலையை ஒரு துணிப்பையில் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். மறுநாளில் இருந்து விபூதி, மஞ்சள், குங்குமம் தினமும் உபயோகிக்க வேண்டும்.

திருமணம் கைகூடியவுடன். ஆலயத்தில் வழங்கப்பட்ட மாலையை, தம்பதி சமேதராக ஆலயத்திற்குச் சென்று அதை ஆலயத்தில் செலுத்திப் பிரார்த்தனையை நல்லபடியாக முடித்துக் கொள்ளல் வேண்டும்.

தல வரலாறு: பார்வதி தேவியார் ஒருதடவை கைலையில் சிவபெருமானை வணங்கி மற்றொருமுறை சிவபெருமானை பூவுலகில் மணந்து கொள்ள வேண்டும் என்ற தனது விருப்பத்தைத் தெரிவித்தார். சிவபெருமானும் கருணை கொண்டு அதற்குச் சம்மதித்தார். அதன்பிறகு ஒருமுறை பார்வதி தேவியார் சிவனிடம் சற்று அலட்சியமாக நடக்க, அதனால் சிவபெருமான் சினங்கொண்டு உமாதேவியாரைப் பூவுலகில் பசுவாகி வாழக் கட்டளை யிட்டார். பசு உருக்கொண்ட பார்வதி தேவியார் தன் செயலை நினைத்து வருந்தி சிவனிடம் சாப விமோசனம் கேட்க, தக்க சமயம் வரும்போது தோன்றி மணம் செய்து கொள்வேன் என்று வரமளித்தார்.

உமாதேவியாருடன் திருமகள், கலைமகள், இந்திராணி ஆகியோரும் பசு உருக்கொண்டு பூவுலகில் உலவி வந்தனர். திருமால் பசு மேய்ப்பவராக உருவெடுத்து அப்பசுக்களை பராமரித்து வந்தார். அம்பிகை உமாதேவி பொழிந்த பாலால் திருமேனி குளிரப்பெற்ற சிவபெருமான் அம்பிகைக்கு சுய உருவம் கொடுத்தருளினார். சுய உருவம் பெற்ற உமாதேவி பரத முனிவரிடம் வளர்ந்து வரும் வேளையில் அம்பிகை விரும்பியவாறு திருமணம் புரிந்துகொள்ள சிவபெருமான் தீர்மானித்தார். பரத மகரிஷி நடத்திய
யாக வேள்விக் குண்டத்தில் சிவபெருமான் தோன்றி பசு உருவில் இருந்த உமாதேவிக்கு சுய உருவம் கொடுத்து இத்தலத்தில் திருமணம் புரிந்து கொண்டார் என்று தல வரலாறு கூறுகிறது. சிவபெருமான் உமாதேவி திருமணம் நடைபெற்ற இத்தலம் திருமணஞ்சேரி என்று பெயர் பெற்றது.

நம்பிக்கையோடு பிரார்த்தனை செய்வதுதான் முக்கியம். இடக்கு மடக்காகக் கேள்விகள் கேட்கும் ஆசாமிகள் எல்லாம் அங்கே செல்லாமல் இருப்பது அவர்களுக்கும் நல்லது. மற்ற பக்தர்களுக்கும் நல்லது. ஆலயத்திற்கும் நல்லது.

அன்புடன்
வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++++++++++=========
வாழ்க வளமுடன்!

26.10.11

செட்டிநாட்டு விருந்தோம்பலின் சிறப்பு!

--------------------------------------------------------------------------------------------
செட்டிநாட்டு விருந்தோம்பலின் சிறப்பு!

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் கவிஞர் திரு. அரு.நாகப்பன் அவர்கள் கவியரங்கம் ஒன்றில் வாசித்த கவிதை. அதை உங்களுக்காக இன்று வலை ஏற்றியுள்ளேன். மக்கள் கவிஞர் திரு.அரு.நாகப்பன் அவர்களைக் காரைக்குடி வட்டத்தில் அனைவருக்கும் தெரியும். சிறந்த கவிஞர். கவியரசர் கண்ணதாசன் இருந்த காலத்தில் அவருடைய முதன்மைச் சீடர். கவியரசர் காரைக்குடிக்கு வந்தால், அவருடன் திரு. அரு.நாகப்பன் அவர்களும் எல்லா இடங்களுக்கும் செல்வார். கவியரசரும் தான் பேசும் மேடைகள் தோறும் திரு,நாகப்பனையும் பேசச் சொல்வார்

இவருக்கு சொந்த ஊர் காரைக்குடியில் இருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் உ.சிறுவயல் என்னும் கிராமம். ஆனால் காரை நகரில் ஒரு பள்ளியில் தமிழாசிரியராகப் பணி செய்தார். 15.6.1944 ஆம் ஆண்டு பிறந்தவர்

தன்னைப் பற்றிச் சொல்லும்போது இப்படிச் சொல்வார்:

”ஊனாச் சிறுவயலில் உரம்போட்டு வளர்க்காமல்
தானாக வளர்ந்த தமிழ்சொரியும் வாழைமரம்

கம்பன் அடிப்பொடியின் கவிசமைக்கும் அடுப்படியில்
அம்பிப் பயலாகி ஆளாகி வந்தகவி”


கம்பன் அடிப்பொடி திரு.சா.கணேசன் அவர்களுக்கும் இவர் சீடராக விளங்கியவர்.

எதையும் நச்’சென்று சொல்வார். புரட்சித்தலைவருக்கும் மிகவும் பிடித்த கவிஞர். அவருடன் பல இலக்கிய மேடைகளில் பேசியிருக்கிறார். மரபுக் கவிஞர். எதுகை, மோனை, சீர் என்று அவருடைய கவிதைகள் எல்லாம் அசத்தலாக இருக்கும்.

கவிதையின் நீளம் கருதியும், உங்களின் பொறுமையையும் கருதியும் கவிதையின் துவக்க வரிகள் 26ஐ வெட்டியுள்ளேன். மன்னிக்கவும்.

கவிஞர் எனக்கு நன்கு பரீட்சயமானவர். என் சிறுகதைகளின் இரசிகர். இரண்டு மூன்று மேடைகளில் என்னுடைய சிறுகதைகளைப் பற்றி சிலாகித்துப் பேசி அனைவரையும் அவற்றைப் படிக்கும்படி கேட்டுக்கொண்டவர்.

அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------------------------------
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

25.10.11

வாத்தியாரின் தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

 ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாத்தியாரின்  தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

வகுப்பறைக் கண்மணிகள், நண்பர்கள், மற்றும் பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் வாத்தியாரின் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------------------------------------------------------------
மகிழ்ச்சியைக் கொண்டாடும் விதமாக வகுப்பறைக்கு இன்று மட்டும் விடுமுறை. அடுத்த வகுப்பு நாளை உண்டு!
வாழ்க வளமுடன்!

Short Story சான்றோனாக்குதல் மட்டுமே பெற்றோரின் கடன்!

------------------------------------------------------------------------------
Short Story சான்றோனாக்குதல் மட்டுமே பெற்றோரின் கடன்!       

மீனாட்சி ஆச்சி பிரதானக் கதவைத் திறந்து கொண்டு வீட்டு வாசலுக்குள் அடியெடுத்து வைத்தார். காதைக் கிழிக்கும் ஓசையுடன் அவர்கள் வீட்டு மாடியில் ஒலிக்கும் பாடல் அதிரடியாய் வரவேற்றது.

    "டாடி மம்மி வீட்டில் இல்லை
    தடை போட யாருமில்லை
    விளையாடுவோமா உள்ளே வில்லாளா"


உட்கதவையும் திறந்து கொண்டு மெல்லப் படிகளில் ஏறினார். பாடலின் ஓசை மேலும் அதிகரித்துக் கேட்டது.

வீட்டில் கேட்கக்கூடிய பாடலா அது?

ஆச்சியின் மகன்கள் இருவரில் ஒருவர்தான் அதைத் தொலைக்காட்சியில் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும். ஆச்சி இல்லாத நேரத்தில் எப்போதுமே மியூஸிக் சேனல்தான். ஆட்டம் போடும் பாடல்கள்தான் அதிகமாக ஒளிபரப்பாகும். பார்க்கப்படும்.

குத்தாட்டப்பாடல்கள் எனும் வகைப் பாடல்களுடன், இப்போது 'அயிட்டம் சாங்' எனும் புதுவகைப் பாடல்களும் கை கோர்த்திருக்கின்றன.

என்ன அயிட்டமோ? என்ன சாங்கோ? கலி முற்றிக் கொண்டிருக்கிறது.

இப்போது பல்லவியில் இருந்து சரணத்துக்குத் தாவியிருந்தார் பாடகி.

    "ஹேய் மைதானம் தேவை இல்லை
    Umpire-ம் தேவை இல்லை
    யாருக்கும் தோல்வி இல்லை வில்லாளா

    ஏய் கேளேன்டா மாமூ இது indoor game-ம்மு
    தெரியாம நின்னா அது ரொம்ப shame-மு
    விளையாட்டு rule-லு நீ மீறாட்டி foul-லு
    எல்லைகள் தாண்டு அது தாண்டா goal-லு"


வந்த கோபத்தை அடக்கிக் கொண்டார் ஆச்சி. வீட்டிற்குள் நுழைந்தவுடன் முதல் வேலையாகத் தொலைக் காட்சிப் பெட்டியை ஸ்விட்ச் ஆஃப்' செய்தார்.

பார்த்துக் கொண்டிருந்த பதினான்கு வயது மகன் விரைப்பாகப் பார்த்தான்.

"எத்தனை முறை சொல்லியிருக்கிறேன். இது டி.வி பார்க்கும் நேரமல்ல. கை, கால் முகத்தைக் கழுவிட்டு பாடத்தைப் படி. வீட்டுப் பாடங்களைச் செய்து முடி. ஏழரை மணி முதல் எட்டரை மணிவரைதான் டி.வி பார்க்க வேண்டும்."

பையன் எழுந்து போய்விட்டான்.

வேலைக்குச் செல்லும் பெண்களுக்குப் பெரும் தொல்லையே, இரண்டும் கெட்டான் வயதில் இப்படி இருக்கும் பிள்ளைகள்தான்.

அடுத்தவன் என்ன செய்கிறான்? அவனுக்கு வயது பன்னிரெண்டு. படுக்கையறையில் எட்டிப் பார்த்தார்கள். அவன் கவுந்தடித்துப் படுத்துக் கொண்டிருந்தான்.

உள்ளே சென்றார்கள். அவனை வாஞ்சையுடன் தட்டி எழுப்பினர்கள்.

"ஏன்டா படுத்திருக்கே?"

"அண்ணன் டி.வி யைத் தரமாட்டேங்கிறான். கார்ட்டூன் சேனல் பார்க்கிறதுக்கு விடமாட்டேங்கிறான். எனக்குத் தனியா ஒரு டி.வி வாங்கித் தாங்க மம்மி!"

"அதைவிடச் சுலபமான வழியிருக்கிறது. உங்கள் இருவரையும் ஹாஸ்டலில் கொண்டுபோய் விட்டு விடுகிறேன். அங்கே தங்கிப் படியுங்கள். அப்போதுதான் சரியாக வரும்!"

"அண்ணனைக் கொண்டுபோய் விட்டுடுங்க மம்மி. அவன்தான் தினமும் தகராறு பண்றான்"

"அப்படியெல்லாம் சொல்லக்கூடாது. அவனும் நம்ம வீட்டுப் பிள்ளை!"

"இரண்டு நாளைக்கு முன்னால புது வீடு பார்க்கப் போனோமில்ல, அங்க வந்து சண்டை போட்டான். அந்த வீடு அவனுக்காம். நீ பழைய வீட்டை வச்சுக்கடா என்கிறான்."

"அப்படியா சொன்னான்?"

"அவன் பெரியவனாம். அதனால புது வீடு அவனுக்காம். பழைய வீடு உனக்குங்கிறான்"

இந்த இடத்தில் மீனாட்சி ஆச்சி குறுகுறுப்புடன் கேட்டார்கள்," நீ என்ன சொன்னே?"

"டாடிக்கும், மம்மிக்கும் என்னடா பண்றதுன்னு கேட்டேன். அவங்க ஊர்ல இருக்கிற வீட்டுக்குப் போயிடுவாங்கடா என்கிறான். அங்க நம்ம ஐயா இருக்காங்களேன்னேன். அதுக்கு, ஐயாவுக்கு வசயாயிருச்சுடா, இன்னும் ரெண்டு மூனு வருஷத்துல புட்டுக்கிருவாருங்கிறான்."

மீனாட்சி ஆச்சிக்கு சுரீரென்றது. 440 வாட்ஸ் மின்சாரம் தாக்கியதைப் போலிருந்தது.

மெல்லக் கேட்டார்கள்," நீங்கள் வீட்டிற்காகச் சண்டை போட்டது அப்பாவுக்குத் தெரியுமா?"

"ஓ தெரியும். வீட்டுக்கு வந்ததும், அண்ணன் இல்லாத சமயத்தில அப்பாவிடம் சொல்லிட்டேன்"

இரண்டு நாட்களாகப் பிடிபடாமல் இருந்த ஒரு விஷயம் மீனாட்சி ஆச்சிக்கு மெல்லப் பிடிபட ஆரம்பித்தது.

+++++++++++++++++++++++++++++++++++++++++++

மீனாட்சி ஆச்சிக்கு தேசிய வங்கி ஒன்றில் வேலை. ஆச்சி என்பது ஒரு விகுதிக்காகத்தான். மரியாதைக்காகத்தான். ஆச்சி என்றவுடன் சின்னாளப்பட்டி சேலையில் வலம் வரும் வயதான ஆச்சியை நினைத்துக்கொள்ளாதீர்கள். நமது கதையின் நாயகி மீனாட்சி ஆச்சிக்கு வயது  முப்பத்தெட்டுத்தான். வணிகவியல் முதுகலையில் தங்க மெடலுடன் பட்டம் வாங்கியவர். படித்து முடித்த வருடமே வேலையும் கிடைத்தது. திருமணமும் கூடிவந்தது. கணவர் சொந்த அத்தை மகன். அதனால் தேடுதல் இன்றி வாடுதல் இன்றித் திருமணம் கூடி வந்தது.

ஆச்சியின் கணவர் சொக்கலிங்கத்திற்கும் வங்கியில்தான் வேலை. ஆனால் அது வேறு வங்கி. அவர்கள் வேலை பார்க்கும் வங்கிகளுக்குக் கோவையில் நிறையக் கிளைகள் இருப்பதால் இருவருமே கோவையிலேயே குப்பை கொட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

மகிழ்ச்சியான தாம்பத்திய வாழ்விற்குப் பரிசாக இரண்டு ஆண் குழந்தைகள். எப்படியோ கஷ்டப்பட்டு வேலைக்குச் சென்று கொண்டே, வீட்டோடு வேலைக்காரிகளை வைத்துக் குழந்தைகள் இருவரையும் சிறுபிராயத்தைத் தாண்டி வளர்த்துவிட்டார்கள்.

மாறுதல் உத்தரவுடன் ஊர் ஊராகப் பெட்டி தூக்க முடியாது என்பதால் குமாஸ்தா வேலையே உத்தமம் என்று பதவி உயர்வுகளுக்கு நோ சொல்லிவிட்டார்கள். அப்படி இருந்தும் ஒரே கிளையில் பத்து வருடத்திற்கு மேல் இருக்கக்கூடாது என்ற புதிய விதிகள் தலை காட்டியபோது, சொக்கலிங்கம் கோவையின் புறநகர்ப் பகுதியில் இருந்த கிளைக்கு மாறுதல் வாங்கிக் கொண்டு விட்டார்.

விவேகானந்தா சாலையில் கே.எம்.சி.ஹெச் சிட்டி சென்ட்டர் அருகே பதினைந்து சென்ட் இடத்தில் சொந்த வீடு இருக்கிறது. கீழ்தளம் மேல்தளம் என்று மொத்தம் நான்காயிரம் சதுர அடி வீடு. கீழ்தளத்தை ஒரு நிறுவனத்திற்கு வாடகைக்கு விட்டிருக்கிறார்கள். மாதம் இருபதாயிரம் ரூபாய் வாடகை வருகிறது. நிறுவனத்தின் காவல்காரர்களால் இவர்களுக்கும் செலவில்லாமல் பாதுகாப்பு கிடைத்துக் கொண்டிருக்கிறது.

ஆச்சியின் மாமனார் சின்னைய்யா செட்டியார் அவர்கள் காலத்து வீடு அது. அவர் கோவை காட்டூரில் இருந்த நூற்பாலையொன்றில் வேலை செய்த காலத்தில் வாங்கியது. சிறிய ஓட்டு வீடு. அதை இடித்துவிட்டுச் செட்டியாரின் மகன் சொக்கலிங்கம்தான் இப்போது இருக்கும். பெரிய வீட்டைக் கட்டினார். திருணமாகி வந்த புதிதில் வங்கியில் வீட்டுக் கடன் வாங்கி, பெரிய செட்டியாரின் மேற்பார்வையில் கட்டிய வீடு அது. வங்கிக் கடனையெல்லாம் கட்டித் தீர்த்தாகி விட்டது.

பெரிய செட்டியாருக்கு இப்போது அறுபத்தைந்து வயசு. பத்தாண்டுகளுக்கு முன்பு விருப்ப ஓய்வில் வேலையை விட்டு வந்தவர், தம் சொந்த ஊரான காரைக்குடிக்குப் போய் செட்டிலாகி விட்டார். ஒரே ஒரு சோகம் அவருடைய மனைவி சிகப்பியாச்சி குடல் புற்று நோயில் காலமாகிவிட்டார்கள். அது நடந்து இரண்டாண்டுகள் ஆகிறது. இவர்கள் எங்களோடு வந்து இருங்கள் என்று அழைத்தும் வர மறுத்துவிட்டார்.

பையன்கள் இருவரையும் கவனித்துப் பார்த்துக்கொள்ள வீட்டில் பெரியவர்கள் எவரும் உடன் இல்லை என்பதைத் தவிர வேறு ஒன்றும் பிரச்சினை இல்லை. 

பழநியப்பன் அருளால் அதற்கு ஒரு வழிபிறக்க இருக்கிறது என்பது ஆச்சிக்கு அப்போது தெரியாது
     
+++++++++++++++++++++++++++++++++++++++++++
தன் கணவர் சொக்கலிங்கம் வரும்வரை காத்திருந்த ஆச்சி, அவர் வந்தவுடன் கேட்டார்கள்

"முல்லை நகரில் பார்த்த புது வீடு. அம்சமாக இருக்கிறது. வாஸ்து சாஸ்திரப்படியும் கட்டப் பெற்றிருக்கிறது. வேறு யாராவது அதைக் கொத்திக் கொண்டு போவதற்குள் ஒரு முடிவெடுங்களேன்."

"அதுதான் நேற்றே சொல்லிவிட்டேனே. இருக்கும் வீடு போதும். இனிமேல் வாங்கினால் இடமாகத்தான் வாங்க வேண்டும்."

"காலி இடத்திற்கு வங்கியில் எப்படிப் பணம் கிடைக்கும்?"

"வாங்கும்போது முழுப் பணத்தையும் கொடுத்து வாங்குவோம்!"

"அது நடக்கிறகாரியமா?"

"மனசு வைத்தால் நடக்கும். பொறுமையாக இரு."

"இல்லை, நீங்கள் எதையோ மறைக்கிறீர்கள். இரண்டு நாட்களுக்கு முன்னால், அந்த வீட்டை நீங்கள்தானே கூட்டிக்கொண்டுபோய்க் காட்டினீர்கள். இப்போது நறுவுசாக வேண்டாம் என்கிறீர்களே? பையன்கள் இருவரும் பேசிக் கொண்டதை நானும் கேள்விப்பட்டேன். அதானால்தான் வேண்டா மென்கிறீர்களா?"

"அதுவும் ஒரு காரணம். இன்னும் ஒரு காரணமும் இருக்கிறது! வருகிற அனைத்தையும் சொத்துக்களாகமாற்றி வைத்துக் கொண்டே போகாமல், ராஜா செட்டியார் சொன்னதுபோல செய்வது என்று முடிவு செய்திருக்கிறேன்"

"இப்ப இருக்கிற ராஜாவா?"

"இல்லை அவருடைய ஐயா!"

"அண்ணாமலை அரசரா?"

"ஆமாம்"

"என்ன சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்?"

"நன்றாகச் சம்பாதி. அடிப்படைத் தேவைகளுக்குப் போக மீதியைச் சேமித்துவை. சேமிப்பதை யெல்லாம் ஒரே கூடையில் போட்டுவைக்காமல். நான்கு பகுதியாகப் பிரித்து ஒரு பகுதியை இடத்திலும், ஒரு பகுதியை நிறுவனப் பங்குகளிலும், ஒரு பகுதியைத் தங்கத்திலும் போட்டுவை.
மீதியுள்ள ஒரு பகுதியை நீ அனுபவித்துவிடு. இல்லையென்றால் உனக்கு அனுபவ பாத்தியமே இல்லாமல் போய்விடும் என்றாராம்.ஆகவே இனிமேல் நாமும் அனுபவிப்பது என்று முடிவு செய்திருக்கிறேன். இன்னும் இரண்டு நாட்களில் மாருதி ஸ்விப்ட் டிசையர் கார் ஒன்றை வாங்கப் போகிறேன். ஆறு லட்ச ரூபாய் விலை. உனக்கும் வேண்டுமென்றால் சொல் மாருதி ஜென் கார் ஒன்றை வாங்கி விடுவோம்."

"அய்யோ வேண்டாம் சாமி. எனக்கு, இருக்கிற ஸ்கூட்டியே போதும்."

"ஆதோடு மூன்று அறைகளுக்கு ஸ்பிளிட் ஏர்கண்டிஷனர் மாட்டப்போகிறேன்"

"நமக்கொன்று, பசங்களுக்கு ஒன்று என்று இரண்டு போதுமே. மூன்றாவது எதற்கு?"

"அப்பச்சியையும் இங்கே கூட்டிக் கொண்டு வந்து உடன் வைத்துக் கொள்ளலாம் என்று இருக்கிறேன்"

"அதைச் செய்யுங்கள். மிகவும் நல்ல காரியம். பிள்ளைகளைப் பார்த்துக்கொள்வார்கள். ஆனால் எத்தனையோ முறைகள் கூப்பிட்டு விட்டோம். வரமாட்டேன் என்கிறார்களே! என்ன செய்யப்போகிறீர்கள்?"

"இல்லை, வரச் சம்மதித்துவிட்டார்கள். அதிரடியாகப் போனில் பேசினேன். நீங்கள் வாருங்கள். இல்லையென்றால் வங்கி வேலையை உதறி விட்டுக் குடும்பத்தோடு நான் அங்கே வந்து விடுகிறேன். இருப்பதுபோதும். எல்லோரும் ஒன்றாக இருப்போம் என்றேன். வருவதற்குச் சம்மதித்துவிட்டார்கள்"

"எல்லாம் சரிதான் வருமானவரிப் பிரச்சினைக்கு என்ன செய்யப்போகிறீர்கள்?"

"அதற்குத்தான் புதுக்கார் வாங்குகிறேன். வருடத்திற்கு ஒன்றரை லட்ச ரூபாய் தள்ளுபடி கிடைக்கும்"

"வீடு வாங்கினாலும், வட்டியால் தள்ளுபடி கிடைக்குமே!"

"இல்லை பணத்தைச் சேர்த்து வைத்துப் பையன்கள் இருவரையும் நன்றாகப் படிக்க வைக்கலாம் என்று இருக்கிறேன். மேல் படிப்பிற்கு அமெரிக்கா அல்லது ஆஸ்திரேலியாவிற்கு அனுப்பிப் படிக்க வைப்போம். இல்லை பணம் கட்டி இங்கேயே பிலானியில் படிக்க வைப்போம். பையன்களுக்குச் சொத்துக்களை விடப் படிப்புதான் முக்கியம்."

"ஏன் இந்த முடிவு?."

"ஒவ்வொருவரும் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தமிழில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே எழுதி வைத்திருக்கிறான். நாம்தான் எதையும் படிப்பதில்லை. எங்கள் வங்கிக்கு வரும் வாடிக்கையாளர் ஒருவர் பழைய பாடல் ஒன்றைச் சொல்லி என் கண்களைத் திறந்து விட்டுப்போனார். தெரிந்த பாடல்தான். அவர் அதைச் சற்று மாற்றிச் சொல்லிவிட்டுப்போனார். அதுவும் நன்றாகத்தான் உள்ளது."

"................................."

"ஈன்று புறந்தருதல் எந்தலைக் கடனே, சான்றோன் ஆக்குதல் தந்தைக்கு கடனே, வேல் வடித்து கொடுத்தல் கொல்லர்க்கு கடனே, ஒளிர்வாள் அருஞ்சமம் முறுக்கி களிறு எறிந்து பெயர்தல் காளைக்கு கடனே எனும் தமிழிப் பாடலை, இந்த நூற்றாண்டுக்காக சிறிது மாற்ற வேண்டும் என்று சொல்லி, ஈன்று புறந்தருதல் பெற்றோரின் கடனே, சான்றோர் ஆக்குதல் சமூகத்தின் கடனே, வேல் வடித்துக் கொடுத்தல் வேந்தரின் கடனே, நாட்டை மேம்படுத்தி நல்வழிப் படுத்தல் காளையர் கடனே என்று சொன்னார்."

"சமூகம் எப்படிச் சன்றோனாக்கும்? சன்மானம் இல்லாமல் அதாவது பணம் இல்லாமல் எதுவும் நடக்காதே!"

"இல்லை, சமூகத்தில் பலர் படிப்பிற்காக உதவிகள் செய்யத் துவங்கி யிருக்கிறார்கள். அது தற்சமயம் நலிந்த பிரிவினருக்கு மட்டுமே  கிடைக்கிறது. நாம்தான் நன்றாகச் சம்பாதித்துக் கொண்டிருக்கிறோமே. அதனால் நமது பிள்ளைகளை நாம் படிக்க வைப்போம். படிக்கவைத்துச் சான்றோனாக்குவது மட்டுமே நமது கடன் சொத்து சேர்த்து வைப்பது பெற்றோரின் கடன் என்று எவனும் சொல்லவில்லை. அதை நீ உணர்ந்து கொள்."

அற்புதமான இந்தப் பதிலால் ஆச்சி அதிர்ந்துபோய் நின்றார். மேற்கொண்டு அவரால் எதுவும் பேச முடியவில்லை!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அடியவன் எழுதி ஏப்ரல் 2009ஆம் ஆண்டு மாத இதழ் ஒன்றில் வெளிவந்த சிறுகதை. நீங்களும் படித்து மகிழ அதை இன்று பதிவில் ஏற்றியுள்ளேன்.
அன்புடன்
வாத்தியார்

             ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!

24.10.11

Astrology என் கேள்விக்கென்ன பதில்? அவன் பார்வைக்கென்ன பொருள்?

-------------------------------------------------------------------------------------
Astrology என் கேள்விக்கென்ன பதில்? அவன் பார்வைக்கென்ன பொருள்?

எனக்கு நம் மாணவக் கண்மணிகளிடம் இருந்து வரும் மின்னஞ்சல்களைவிட, வழிப்போக்கர்களிடமிருந்து, அதாவது யாராவது சொல்லி நம் வகுப்பறைக்குள் நுழைபவர்களிடமிருந்து வரும் மின்னஞ்சல்களே அதிகம்!

ஜோதிட வகுப்பறை என்று தெரிந்தவுடன், செய்கின்ற முதல் காரியம் தங்கள் ஜாதத்தைப் பார்க்க வேண்டி மின்னஞ்சல் கொடுத்துவிடுவார்கள்.
நேரமில்லை என்று ஒதுக்கி வைத்தால், விடமாட்டார்கள். தொடர்ந்து நினைவூட்டல்கள் (ரிமைண்டர்கள்) வந்து கொண்டிருக்கும்.

“ஜோதிடம் என் தொழிலல்ல, என்னுடைய போதாத நேரம் பதிவில் எழுதிக்கொண்டிருக்கிறேன். எனக்குத் தெரிந்த ஜோதிடத்தை அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு செல்வது மட்டும்தான் எனது நோக்கம். எனக்கு இதற்கெல்லாம் நேரமில்லை. உங்களைப் போலவே எனக்கும் நாள் ஒன்றிற்கு 24 மணி நேரம்தான். கூடுதல் நேரத்தைக் கடவுள் அளிக்கவில்லை” என்றாலும் விடமாட்டார்கள்.

குறைந்தது தினமும் ஐந்து மின்னஞ்சல்களாவது வரும். அவை அனைத்திற்கும் எப்படி நான் பதில் எழுதுவது?

எல்லாம் - அதாவது 90 சதவிகிதம் இப்படித்தான் இருக்கும்.
-------------------------------------------------------------------------------------------
“சார், என்னுடைய பிறந்த தேதியையும், நேரத்தையும் கீழே கொடுத்துள்ளேன். என் எதிர்காலம் (Future) எப்படி இருக்கும் என்று பார்த்துச் சொல்லுங்கள்”

பிறந்த ஊரைக் குறிப்பிட்டிருக்க மாட்டார்கள். அத்துடன் தங்களுடைய ஜாதகத்தை இணைத்து அனுப்பியிருக்கவும் மாட்டார்கள். ஆனால் 108 தடவை..Please help me..என்று தவறாமல் குறிப்பிட்டிருப்பார்கள்.

அதில் இரண்டு விஷயம். பிறந்த ஊர் முக்கியமில்லையா? அது இல்லாமல் எப்படிச் ஜாதகத்தைக் கணித்துப் பார்ப்பது?
இரண்டாவது விஷயம் ‘எதிர்காலம்’ (Future) என்றால் என்ன?

எதிர்காலம் என்பது நூற்றுக் கணக்கான கேள்விகளை உள்ளடக்கியது.

ஜாதகருக்கு இப்போது 25 அல்லது 30 வயதென்றும் அவர் 75 முதல் 80 ஆண்டுகள் காலம்வரை உயிர் வாழக்கூடியவர் என்றும் வைத்துக் கொண்டால், இடைப்பட்ட அந்த 50 ஆண்டு காலத்திலும் அவர் வாழ்க்கை எப்படி இருக்கும், எங்கெங்கே முடிச்சு உள்ளது, எங்கெங்கே திருப்புமுனை உள்ளது, எங்கெங்கே மாத்து வாங்குவார் என்றேல்லாம், நாசா கழகத்தில் ஆராய்ச்சி செய்வது போல ஆராய்ந்து அவருக்குப் பதில் சொல்ல வேண்டும். அதற்கு அவருடைய ஜாதகத்தில் உள்ள லக்கினம், மற்றும் ஒன்பது கிரகங்களையும், 12 வீடுகளையும் அலசுவதோடு, எதிர் கொள்ளவிருக்கும் மகாதிசைகள் மற்றும் புத்திகள், 50 ஆண்டுகளுக்கான குரு, மற்றும் சனியின் கோள்சாரமாற்றங்களையும் பார்த்துப் பலன்களைச் சொல்ல வேண்டும்.

பன்னிரெண்டு வீடுகள். ஒருவீட்டிற்கு மூன்று காரகத்துவங்கள். ஆகமொத்தம் குறைந்தது அவருடைய 36 துணிகளையாவது சோப்புப் போட்டு அலசிப் பிழிந்து காயவைத்து, அயர்ன் செய்து, மடித்துப் பார்சல் செய்து தரவேண்டும்

அதெல்லாம் சாத்தியமா?

சாத்தியம்தான்!!! சாத்தியமில்லாதது எதுவுமே இல்லை!

ஒரு நாள் முழுக்க குறைந்தது எட்டு மணி நேரம் சிரத்தையாக அமர்ந்தால் அலசிவிடலாம். அதற்கு அடுத்ததாக அலசியதை எல்லாம் ஒரு 40 பக்க நோட்டுப் புத்தகத்தில் வரிசையாகப் பதிவு செய்ய வேண்டும். அதற்கு மேலும் ஒரு நாள் பிடிக்கும்

அந்தச் செயலுக்கு, ‘ஆயுள்காலப் பலன்’ என்று பெயர். அந்தக் காலத்தில், ஜோதிடர்கள், கஞ்சி வெள்ளம் + அச்சு வெல்லத்தைச் சாப்பிட்டுவிட்டுப் பொறுமையாகத் தங்களுடைய முக்கியமான வாடிக்கையாளர்களுக்கு அதைச் செய்து கொடுத்தார்கள். என் தந்தையாருக்கு, அவருடைய ஜோதிட நண்பர் திரு. ஆசான் என்பவர் செய்து கொடுத்தார். அது நடந்து அறுபது ஆண்டுகள் இருக்கும். கணினி வசதி இல்லாத காலம். அஷ்டவர்கத்தையெல்லாம் மனதால் கணக்கிட்டு எழுத வேண்டும். அதற்காக என் தந்தையார் அவருக்கு ஐநூறு ரூபாய் காணிக்கை யாகக் கொடுத்தாராம். அன்றைய காலகட்டத்தில் இந்தியன் வங்கியில் (அன்றையத் தேதியில் அது தனியார் வங்கி) குமாஸ்தாவின் மாத சம்பளம் வேறும் ரூ.125:00. என் தந்தையார் கொடுத்த பணத்தின் அன்றைய மதிப்பை நீங்களே கணக்கிட்டுக்கொள்ளுங்கள்.

ஆசான் எழுதிக் கொடுத்த பலன்கள் மிகத் துல்லியமாக இருந்தன. ஆயுள் 74 வயது என்று எழுதிக்கொடுத்திருந்தார். என் தந்தையாரும் அதை அடிக்கடி சொல்வார். அதன்படியே என் தந்தையாரும் 74ஆவது வயது முடிந்த நிலையில் இறந்துவிட்டார். மாஸிவ் ஹார்ட் அட்டாக். பத்து நிமிடத்தில் உயிர் பிரிந்துவிட்டது.

இன்றையத் தேதியில் எந்த ஜோதிடரும் ஆயுள்காலப் பலனைக் கணித்து எழுதிக் கொடுப்பதாகத் தெரியவில்லை.

ஆகவே எந்த ஜோதிடரிடம் சென்றாலும் என்னுடைய எதிர்காலம் எப்படி என்று அசட்டுத்தனமாக யாரும் கேட்காதீர்கள்.

உங்களுடைய பிரச்சினையைக் குறிப்பிட்டு அதற்கு மட்டும் தீர்வைக் கேளுங்கள்.

மூன்று உதாரணங்களைக் கொடுத்துள்ளேன்.

1. “பொறியாளர் படிப்பைப் படித்து முடித்துவிட்டேன். ஒரு ஆண்டாகிறது. இன்னும் வேலை கிடைக்கவில்லை. எப்போது கிடைக்கும்?”
2. “வீட்டில் கடந்த 3 ஆண்டுகளாக எனக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்கள். திருமணம் முடியமாட்டேன் என்கிறது. எப்போது திருமணம் நடைபெறும்?”
3. “எனக்குத் தொழிலில் பிரச்சினை. நிறையக் கடன் உள்ளது. எப்போது பிரச்சினை (கடன்) தீரும்?

Your question should be specific with a little narration of the prevailing problem and also you should produce your full horoscope

அதற்கு அடுத்து, வேறு ஒரு தொடர் பிர்ச்சினை இருக்கிறது. அதென்ன தொடர் பிரச்சினை?

“சார், என் பெண்ணின் பிறப்பு விபரத்தையும், அவளுக்குப் பார்த்திருக்கும் வரனின் பிறப்பு விபரத்தையும் அனுப்பியுள்ளேன். இருவருக்கும் ஜாதகம் பொருந்துகிறதா? திருமணம் செய்யலாமா? என்று சொல்லுங்கள். நேரமில்லை என்று ஒதுக்கிவிடாதீர்கள். என் பெண்ணின் வாழ்வே உங்கள் கையில்தான் இருக்கிறது” என்ற வேண்டுகோளுடன் மின்னஞ்சல்கள் வரும்.

பொருத்தம் பார்க்கும்போது நட்சத்திரப் பொருத்தம் (பத்துப் பொருத்தங்கள்), தோஷப் பொருத்தம், தசா சந்திப்பு இன்மை போன்றவற்றை அலசிப் பதில் சொல்ல வேண்டும். பாவம் போனால் போகிறது என்று பார்த்து, பொருந்தாத நிலையில், பொருந்தவில்லை. வேண்டாம் என்று சொன்னால், பிரச்சினை அத்துடன் தீர்ந்துவிடாது. நீங்கள் மாட்டிக்கொண்டு விடுவீர்கள். தொடர்ந்து திருமண மையங்களில் வாங்கிய வேறு ஐந்து வரன்களின் விபரத்தை அனுப்பி, அவற்றுள் எது பொருந்துகிறது சொல்லுங்கள் என்று அடுத்த தினமே வேறு ஒரு மின்னஞ்சல் வரும்.

கதை எப்படி இருக்கிறது பார்த்தீர்களா?

இதைத்தான் கவியரசர் கண்ணதாசன் இப்படிச் சொன்னார் போலும்:

“சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் முடிவே இல்லாததது”

அதை நான் மாற்றி இப்படிச் சொல்வது வழக்கம்: “துன்பம் எப்போதும் தொடர்கதைதான் முடிவே இல்லாததது”
-------------------------------------------------------------------------------
பன்னாட்டு நிறுவனங்களில் வேலைபார்க்கும் பெண்களிடமிருந்து வரும் மின்னஞ்சல்கள் கலக்கலாக இருக்கும்.

“சார், நான் ஒருவரைத் தீவிரமாகக் காதலிக்கிறேன். மூன்று ஆண்டுகளாகக் காதலிக்கிறேன். எங்கள் இருவரின் ஜாதகங்களையும் அனுப்பியுள்ளேன். எங்கள் காதல் நிறைவேறுமா? தயவு செய்து பார்த்துச் சொல்லுங்கள்”

காதல் என்று வந்தாகிவிட்டது. அதற்குப் பிறகு எதற்கு ஜாதகம்? பார்க்க வேண்டும் என்று ஆசையிருந்தால், காதலிக்கும் முன்பு அல்லவா அதைப் பார்த்திருக்க வேண்டும்?

இப்போது பார்த்துப் பொருந்தவில்லை என்று சொன்னால், என்ன செய்வீர்கள்? அவனை வேண்டாம் என்று சொல்லிவிடுவீர்களா? சொன்னால் அவன் சும்மா விட்டுவிடுவானா? காதலுக்கு எத்தனை ஆதாரங்கள் அவனிடம் சிக்கி உள்ளதோ - பிரச்சினை செய்ய மாட்டானா?

“காதல் புனிதமானது. அவனுடன் அல்லது அவளுடன் ஒரு மாதம் வாழ்ந்தாலும் போதும். அதுதான் காதல். ஜாதகத்தை எல்லாம் பார்க்காதீர்கள். காதலித்தவனையே மணந்து கொள்ளுங்கள்.” என்று அறிவுறுத்தி எழுதினால், விட மாட்டார்கள்.

“சார், அவனைப் பொறுத்தவரை எந்தப் பிரச்சினையும் வராது. வந்தாலும், மகளிர் காவல் நிலையத்தில் அவனைக் கொண்டுபோய் நிறுத்தி, முட்டிக்கு முட்டி தட்டி சரி பண்ணிவிடுவேன். அதில் எனக்குத் தில் இருக்கிறது. என் பிரச்சினை எல்லாம் வேறு விதமானது. அவன் வேறு மதத்தைச் சேர்ந்தவன். எங்களுடைய காதல் தெரிந்தால் என் பெற்றோர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அவர்களை எப்படி ஒப்புக்கொள்ளச் செய்வது? ஜாதகத்தில் அதற்கான சான்ஸ் இருக்கிறதா? அதை மட்டும் பார்த்துச் சொல்லுங்கள். இல்லை அதற்கு ஒரு உபாயத்தையாவது சொல்லுங்கள்.”

என் கேள்விக்கென்ன பதில்?
அவன் பார்வைக்கென்ன பொருள்?


அதாவது ஜாதகத்தில் உள்ள ஏழாம் இடத்தான் அல்லது களத்திரகாரன் சுக்கிரனின் பார்வையைத்தான் பார்வைக்கென்ன பொருள் என்று சொல்லியிருக்கிறேன்.

பல பக்கங்கள் எழுதலாம். எழுதியிருக்கிறேன். பழைய பாடங்களில் உள்ளது. படித்துப் பாருங்கள்.

பதிவில் பாடங்களை எழுதுவது மட்டுமே என்னுடைய பிரதான வேலை. மற்றதற்கெல்லாம் எனக்கு நேரமிருக்காது என்பதை அனைவரும் உணரும்படி கேட்டுக்கொள்கிறேன்.
---------------------------------------------------------------------------------------------------------
சரி, இவர்களையெல்லாம் எப்படி சமாளிக்கிறீர்கள்?

ஸிம்ப்பிள். நேரமில்லை. மன்னிக்கவும் என்று பதில் எழுதிவிடுவேன்.

எல்லோருக்குமா?

இல்லை. இரண்டொருவருக்குப் பார்த்துச்சொல்வேன். அவர்கள் கொடுத்திருக்கும் விவரங்களும், கேள்வியும் சரியாக இருந்தால்! அது மனிதாபிமான அடிப்படையில். அதுவும் வகுப்பறை உறுப்பினர்களுக்கு மட்டும்தான்.

வகுப்பறை உறுப்பினர் என்பதை எப்படிக் கண்டுபிடிப்பீர்கள்?

அதற்கு ஒரு வழி இருக்கிறது. ஆனால் இங்கே அதைச் சொல்ல முடியாது. ஆகவே அது ரகசியம்!:-)))))

நன்றி, வணக்கத்துடன்,
மற்றும் அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!

23.10.11

சங்கே முழங்கு; நல்ல தமிழை வழங்கு!

சங்கே முழங்கு; நல்ல தமிழை வழங்கு!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
உட்தலைப்பு: கண்மணி கையைவைத்தால் கலக்காமல் போனதில்லை!

மாணவர் மலர் (பிரதி ஞாயிறு தோறும்)
மலர் எண். ஒன்று
தேதி 23.11.2011
-------------------------------------
 வரவேற்புக் கவிதை!

கொடியில்பூக்காத வாசமலர்
கொள்ளைகொள்ளும் செய்திமலர்
தோள்கொடுப்போம் வாருங்கள்
துவங்கிவிட்டது மாணவர்மலர்!

தஞ்சாவூரார் - எங்கள்
தலைவர், வழிகாட்டி!
மாணவர் மலருக்கு
அவர்தான் ஒளிகாட்டி!

அலசலில் விடுபடும்
கிரகச்  சாரங்களை
ஆனந்தமாய் எடுத்துரைப்பார்
மலேசிய ஆனந்த்!

தமிழுக்கு பெயர் செம்மொழி
ஜாதக அலசலுக்கு தேமொழி!
மாண்புமிகு மைனர்வாள்
வகுப்பிற்கு அவரே போர்வாள்!

பொறுப்பான பகர்வுகளைத் தரும்
பொன்னான கே.எம்.ஆர்.கே.
என்றும் தொடரட்டும்
அவரது ஆக்கம்!

எல்லோரும் வாருங்கள்;
எல்லாம் நன்மைக்கே!
விடுபட்டோரும் வாருங்கள்
விருப்பமுள்ளோரும் வாருங்கள்

நோக்கத்தை மாற்றாமல்
நேர்கொண்டு செல்லும்
ஆசானின் மனம் வாழ்க/
அவர்தம் சேவை வளர்க //
---ஆக்கம் தனூர்ராசிக்காரன், Brunei         


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

சந்தனு மகராஜா - மீனவப் பெண்ணுடன் இருக்கும் காட்சி
படத்தை வரைந்தவர் - 
இந்தியாவில் அனைவராலும் அறியப்பட்ட ஓவியர் 
ராஜா ரவிவர்மா!

நியாயம் எது?  தர்மம் எது?

பொதுவாக நாட்டில் அவரவரும் ஏதாவதொரு வகையில் தங்களுக்குள் சிலவற்றை நியாயம் என்றும், மற்றவற்றை அநியாயம் என்றும் நினைக்கிறார்கள். அரசியல் கட்சிகள் பல இருக்கின்றன. அவற்றைச் சேர்ந்தவர்கள், தங்கள் கட்சி சொல்வதுதான் நியாயம், மற்றவை அநியாயம் என்று நினைக்கின்றனர். எனக்கு நியாயமாகத் தோன்றுவது மற்றவருக்கு அநியாயமாகத் தோன்றுகிறது. இது எதனால்?

நியாயம் என்பது வேறு, தர்மம் என்பது வேறு. நியாயம் என்பது நம்மளவில், நம் பார்வையில், நம் அனுபவத்தில் உணர்ந்து சொல்வது; தர்மம் என்பது எல்லோருக்கும், எல்லா நிலைகளிலும், எப்போதும் சரியாக இருப்பது. என்னை அடித்தவனை நான் திரும்ப அடிப்பதுதான் நியாயம் என்று நான் நினைக்கிறேன். இல்லை! யாரையும், எவரையும், எதற்காகவும் தண்டிப்பது என்பது எனது தர்மமல்ல என்று பிறர் நினைக்கின்றனர். தர்மத்தை நிலைநாட்டுவதற்கென்று ஆண்டவன் இருக்கிறான்; தர்மம் உணர்ந்த பெரியோர்கள் இருக்கின்றனர். தனி மனிதனைப் பொறுத்தவரை அவரவர்க்கு நியாயமாகப் படுவதைச் செய்வதுதான் சரி.

மகாபாரதம் அனைவரும் அறிந்த கதை. அதில் சந்தனு மகாராஜாவின் வாரிசுகள் ராஜ்யபாரத்தை நிர்வகித்து வருகிறார்கள். சந்தனுவின் காதலை அங்கீகரித்து, ஒரு மீனவப் பெண்ணின் தந்தைக்குக் கொடுத்த வாக்கை நிலைநாட்ட, தர்மத்தைக் காக்க, சந்தனுவின் மகன் தேவவிரதன் (பீஷ்மன்) ராஜ்யத்தை அந்த மீனவப் பெண்ணின் வாரிசுகளுக்கு விட்டுக் கொடுத்து விட்டான். தன் வாக்கைக் காப்பாற்றுவதற்காகத் தான் திருமணம் செய்து கொள்ளாமல் நைஷ்டிக பிரம்மச்சரியத்தை மேற்கொள்ளுகிறான்.

அந்த மீனவப் பெண்ணான சத்தியவதிக்கும் சந்தனுவுக்கும் சித்திராங்கதன், விசித்திரவீரியன் என இரு பிள்ளைகள் பிறந்தனர். சந்தனு இறந்தபின் தான் கொடுத்த வாக்குறுதிப்படி தேவவிரதன் தன் தம்பியான சித்திராங்கதனை அரசனாக்கினான். அவன் சீக்கிரத்தில் இறந்து போனான். அதன்பின், அவனுடைய தம்பி விசித்திர வீரியனை சிம்மாசனம் ஏற்றினான்.

அப்போது காசியை ஆண்ட அரசனுக்கு மூன்று பெண்கள் இருந்தனர். அவர்கள் அம்பா, அம்பிகா, அம்பாலிகா. இவர்களுக்குத் திருமணத்துக்காகச் சுயம்வரம் நடந்தது. தன் தம்பிகளுக்காக தேவவிரதன் தம்பிகளோடு சுயம்வரத்துக்குச் சென்றார். அங்கு வந்திருந்த ராஜகுமாரர்களுக்கும் தேவவிரதனுக்கும் சண்டை மூண்டது. தேவவிரதன் வெற்றி பெற்றார். அந்தப் பெண்கள் மூவரில் இருவரைத் தன் தம்பிகளுக்கு மணமுடித்தார். அதில் பிறந்த மக்களில் ஒருவன் கண்தெரியாத திருதராஷ்டிரன். மற்றவன் பாண்டு. தாதி ஒருவள் மூலம் பிறந்தவர் விதுரன்.

முறைப்படி, நியாயப்படி, வம்சத்தில் மூத்தமகனான திருதராஷ்டிரன் நாட்டை ஆளவேண்டும். ஆனால், பாவம் அவனுக்குக் கண் தெரியாது. ஆகையால் நியாயப்படி அவனுக்கு ஆட்சி இல்லை. அவன் தம்பி பாண்டு அரசனாக ஆனான். மூத்தவனும், கண் தெரியாதவனும், ஆட்சிக்கு உரிமையுடைய வனுமான திருதராஷ்டிரனுக்கு துரியோதனாதியர் நூறு பேரும், ஒரு பெண் குழந்தையும் உண்டு. இளையவன் பாண்டுவுக்கு ஆட்சி அதிகாரம் கிடைத்தது, அவனுக்கு ஐந்து பிள்ளைகள் உண்டு.

பாண்டு இறந்த பிறகு ஆட்சி யாருக்கு? மூத்த மகனான திருதராஷ்டிரனுடைய பிள்ளைகளான துரியோதனனுக்கா? ஆட்சியில் இருந்து இறந்து போன பாண்டுவின் மூத்த மகன் தர்மனுக்கா? எது நியாயம்? எது தர்மம்?

இந்தச் சிக்கல் கடைச்சோழர்களான விஜயாலயன் பரம்பரையிலும் தோன்றியது. கண்டராதித்த சோழன் இறந்த போது சுந்தர சோழன் ஆட்சிக்கு வந்தார். அவர் இறந்த பிறகு அவருடைய மகனான அருண்மொழி வர்மன் என்கிற ராஜராஜசோழன் பதவிக்கு வந்திருக்க வேண்டும். ஆனால், அவருடைய சித்தப்பா உத்தம சோழன் இருந்ததால், அவரே பதவிக்கு வரட்டும் என்று அருண்மொழித்தேவன் விலகிக் கொண்டு சித்தப்பாவை ஆட்சிக் கட்டிலில் அமரவைத்தார்.

தஞ்சையை ஆண்ட மராத்திய மன்னர்களில் துளஜேந்திர ராஜாவுக்குப் பிள்ளைகள் பிறந்து தங்கவில்லை. அனைத்தும் இறந்து போயின. என்ன செய்வது? மராட்டியத்துக்குச் சென்று சரபோஜியை வாரிசாகத் தத்து எடுத்துக் கொண்டு வந்தார். அந்தப் பையன் சரபோஜிதான் அரசனாவான் என்று நினைத்த போது, துளஜேந்திரனின் தம்பி முறையில் அமரசிம்மன் (அமர்சிங்) என்பவர் இருப்பது தெரிந்தது. அப்படியானால் அவர்தானே ஆட்சிக்கு வரவேண்டும். ஆங்கில கம்பெனியார் அமரசிம்மனை அரசனாக்கினார்கள். சரபோஜி ஆட்சிக்கு வரும்வரை அமர்சிங்தான் காபந்து அரசை நடத்தினான். இது நியாயம், தர்மம் இதில் எந்த வகையைச் சேர்ந்தது?

இது நியாயம் மட்டுமல்ல, தர்மமும் கூட. இப்படி நியாயமும் தர்மமும் ஒன்றுக்கொன்று மோதிக் கொள்ளவும் சில நேரங்களில் சந்தர்ப்பம் அமைந்து விடுகிறது. ஆகவே நியாயமாக நடந்து கொள்வதாக நினைத்து சில நேரங்களில் தர்மத்துக்கு எதிராகவும் போய்விட நேர்ந்து விடுகிறது. தரமம் என்று சொல்லும்போது சில நேரங்களில் நியாயத்துக்குப் புறம்பாகவும் போகும்படி ஆகிறது.

ஆகவே நியாயமும், தர்மமும் அவரவர்க்கு நேரும் சந்தர்ப்பங்களை யொட்டி எதையாவது ஒன்றைக் கடைப்பிடிப்பதுதான் நியாயம், அல்ல அல்ல, தர்மம். என்ன குழப்பமாக இருக்கிறதா? இதைத்தான் ஆங்கிலத்தில் Subjective consideration என்பர். இந்தக் கட்டுரையின் நீதி என்னவென்றால், நியாயவான் முழுவதும் தர்மவானாக முடியாது; தர்மவான் முழுவதும் நியாயவானாக முடியாது. எதையோ மனதில் வைத்துக் கொண்டு இதை நான் எழுதவில்லை. நியாயம் சில நேரங்களிலும், தர்மம் சில நேரங்களிலும் வெற்றி பெற்று விடுகிறது. இவ்விரண்டுக்கும் மோதல் ஏற்படும் போதுதான் பிரச்சினை தொடங்குகிறது. அதனால் இவ்விரண்டின் மாறுபாட்டை இங்கே விளக்கிச் சொன்னேன்.

ஆக்கம்: மாணவர் மலரின் ஆலோசகர், மதிப்பிற்குரிய பெரியவர். 
V. கோபாலன், தஞ்சாவூர்
---------------------------------------------------------------------------------------------------------------------
பெண்கள் முதலில் (Ladies First) 

முதல் ஆக்கத்தைத் தருகிறார் மாணவி தேமொழி

இணையத்தின் எதிர்காலம்

இணையத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும்?  ... இணையத்தின் ஜாதகம் அதைப் பற்றி என்ன சொல்கிறது?(இணையத்தின் எதிர்காலமா? இணையத்திற்கு ஜாதகமா? என்ன உளறுகிறாய்?  என்று கேட்கும் வகுப்பறைக் கண்மணிகள்  இப்பொழுதே பதிவை  விட்டு விலகிக் கொள்ளலாம்.......ஹி. ஹி. ஹீ....சும்மா ...சும்மா.... வாத்தியார் மாதிரி நினைச்சுக்கிட்டு......ஒரு சின்ன அலம்பல்  ஹிஹி. ஹீ   :))))))

ஸ்டீபன்  ஸ்டேநெட்டைப்  (Stefan Stenudd) பற்றி உங்களுக்குத் தெரியும்.  வகுப்பறையில் ஆசிரியர் அவரை அறிமுகப் படுத்தியுள்ளார்.  "அமெரிக்க நிதிநிலைச் சிக்கல் என்ன ஆகும்?" என்று தலைப்பிடப்பட்ட வகுப்பில் (http://classroom2007.blogspot.com/2008/10/blog-post_19.html) அமெரிக்க பொருளாதாரச் சீர் குலைவு பற்றிய அவரது ஆய்வைப் படித்து விவாதித்தது ஞாபகம் இருக்கும் என நினைக்கிறேன்.  எதேச்சையாக ஒரு வகுப்பறை பாடத்தை தேடியபொழுது, நம் ஆசாமி புன்னகையுடன் எதிர்பட்டார்.  சரி, அவர் சொன்னது நடந்ததா? மேற்கொண்டு நிதிநிலை சிக்கலைப் பற்றி என்ன கருத்து சொல்கிறார் என்று ஆவலுடன் அவர் இணைய தளத்தை எட்டிப் பார்த்த பொழுது, அவர் சமீபத்தில்...சென்ற மாதம்... இணையத்தின் எதிர்காலத்தைப்  பற்றி எழுதியுள்ளதைப் படிக்க நேர்ந்தது.  இணையத்தின் எதிர்காலம்

http://www.horoscoper.net/horoscopes/future-internet-world-wide-web-horoscope.htm

இந்தப் பதிவின் தலைப்பிற்கு ஏற்ப, இணையத்தின் எதிர்காலம் பற்றிய கணிப்புப் பகுதி மட்டுமே இங்கே மொழியாக்கம் செய்து கொடுக்கப் பட்டுள்ளது.  ஸ்டீபன்  ஸ்டேநெட்  தன் பதிவில் இணையத்தின் ஜாதக அலசவும் செய்கிறார்.  அதை முழுவதுமாக அறிய விரும்புபவர்கள் மூலக்கட்டுரையைப் படிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  இந்த அலசல் சூரிய ராசிகளின் அடிப்படையில் கணிக்கப் பட்டிருப்பதாகத் தெரிகிறது.

Event: Origin of the Internet
Birth Time: born on August 6, 1991 at 4:37 PM CEST (Central European Summer Time)
Time Zone: UTC/GMT +1 hour
Daylight Saving Time: Yes
Birth Place, Geneva, Switzerland  
Latitude: 46.14' North
Longitude: 6.04' East

இணையத்தின் எதிர்காலம்
கணித்தவர், ஸ்டீபன்  ஸ்டேநெட்
-----------------------------------------------------------------
இணையத்தின் எதிர்காலம் அது நமக்கு எவற்றை அளித்தது, எவற்றை வழங்கத் தவறியது என்பதைப் பொருத்தே அமையும்.  அடுத்த ஆண்டின் தொடக்கம் முதல் தொடர்ந்து வரும் ஐந்தாண்டுகளில்  (2012  முதல் 2017)   இணையம் வெகு வேகமான மாறுதலை அடையும். பிறகு 2015 ம் ஆண்டு  முதல் அழிவுப் பாதையை நோக்கி செல்லும் இணையத்தின் முடிவு 2040க்குள்  முற்றுப்பெறும்.

ஜெனீவா நகரில் உள்ள "செர்ன்"/CERN (Conseil European pour la Recherche Nuclaire (as it called in French), or European Council for Nuclear Research (in English) குழுவைச் சேர்ந்த கணினி விஞ்ஞானி "டிம் பெர்னர்ஸ்-லீ" (Tim Berners-Lee) ஆகஸ்ட்  6, 1991 அன்று  மாலை 4:37 PM  மணிக்கு, அவர் உறுப்பினராக இருந்த தகவல் பரிமாற்ற குழுவில் ஒரு செய்தியைத் தன் சக வாசகர்களுடன் பகிர்ந்து கொண்ட்டார்.  இணையத்தின் ஆதாரமான "hypertext" ஐ அறிமுகப்படுத்தி அதை அனைவரையும் முயன்று பார்க்க வெளியிட்ட அந்தக் கோரிக்கையே இணையத்தின் பிறப்பு நேரமாக அணைவராலும் கருதப்படுகிறது.

உலகின் மிகச் சில நிகழ்வுகளே அந்த நிகழ்வுகளைப் பற்றிய நேரத்தை ஆதாரபூர்வமாக  பதிவு செய்யப்பட்டு, அவற்றை பற்றிய ஜாதகம் எழுத உதவியாக இருந்துள்ளது.  ஆனால், உலகத்தையே நம் கணிணிக்குள் கொண்டுவரும் சக்தி வாய்ந்த இணையத்தின் பிறப்பு நேரம் மிக மிகத்  துல்லியமாக பதிவு செய்யப்பட்டு அதன் ஜாதகம் நமக்கு கிடைத்துள்ளது.  பொதுவாக எந்த ஒரு நிகழ்வுக்கும் பல நேரங்களை ஆரம்பமாக குறிப்பிட வாய்ப்பிருந்தாலும், இணையம் மக்களை இணைக்கும் ஒரு தகவல் பரிமாற்ற ஊடகமாக பயன்படுத்தப்படும் முறையினைக் கருதி மேலேக் குறிப்பிட்ட நிகழ்வின் நேரத்தை இணையத்தின் பிறந்த நேரமாக கொள்வது பொருத்தமாக இருக்கும்.

நிகழப் போகும் மாறுதல்களின் சாராம்சம்:

நாம் இணையத்தின் ஆற்றலையும் அதை சிறப்பாக எப்படி உபயோகப் படுத்துவது என்பதையும் இப்பொழுது அறிந்துவிட்டதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம்.  ஆனால் வரும் சில ஆண்டுகளில் இதுவரை இருந்திராத அளவு இணையத்திற்கான ஆதாரங்களும் அமைப்பும் புரட்சிகரமாக மாறப்போகிறது.

கடந்த சில ஆண்டுகளாக, இணையத்தின் ராசியில் மூன்று, நான்கு மற்றும் ஐந்தாம் வீடுகளின் வழியாக உள்ள கோள்களின் சாரம் இணையம் நட்புக்காகவும், குடும்பத்திற்காகவும், பொழுதுபோக்கு, பெரும்பாலும் உல்லாசங்களுக்காக உபயோகப் படுவதுபோல் தோற்றம் தந்தாலும், அது தற்காலிகமான தவறான மாயத்தோற்றமாகும்.  இணையத்தின் முக்கிய பயனும் பங்கும் என இணையத்தின் ஜாதகம் குறிப்பிடுவது உத்தியோகத் திற்காக பயன்படுத்தப்படும் தொலை தொடர்பு; இது சற்றும் மாறப் போவதில்லை.

விரைவில் வியக்கத்தகு மாற்றங்களை இணையம் சந்திக்கப் போகிறது.  அவைகளில் சில ஆக்கபூர்வமான மாறுதல்களாகவும், சில அதற்கு எதிர்மறையாகவும்  இருக்கும்.   இந்த மாற்றம் மெதுவாக, தொடர்ந்து பல ஆண்டுகளாகவும் நிகழும், ஆனால் இந்த மாற்றத்தின் முடிவு இணையத்தை முற்றிலுமாக மாற்றிவிடும்.

ஜனவரி 2012 ல்  ஆரம்பிக்கும் இந்த மாற்றம் பலரும் அறியமுடியாத அளவிற்கும் ஒரு சிலராலேயே உணரப்படுவதாகவும் இருக்கும். அத்துடன் செப்டம்பர் மாதத்தில் அதுவரை ஏற்பட்ட மாற்றமும் மறைந்து முன்பிருந்த நிலைக்கு திரும்பியது போன்ற தோற்றத்தையும் அளிக்கும். ஆனால் அதைத் தொடர்ந்து வரும் மாதங்கள் உண்மையில் புதிதாக தோன்றிய மாறுதல்கள் நிரந்தரமாகவும், அந்த மாறுதல்களின் ஆதிக்கம் இணையத்தின் மாற்றத்தை  அதிகரிக்கவும் செய்யும்.

2013 ம் ஆண்டின் தொடக்கத்தில், இணையத்தை முழுமையான உபயோகத்தை அடையக்கூடிய வகையில் எப்படி இணையம் பயன் படுத்தப்படும், எப்படி மேம்படுத்தப்படும் என்பது தெளிவாகும்.   பிப்ரவரி 2015 க்குப் பின்,  நாம் இதுவரை கற்பனை செய்து வைத்ததிலிருந்து இணையம் முற்றிலுமாக மாறுபட்டிருக்கும். இணையத்தின் வளர்ச்சியும் தொடர்ந்து இந்த மாறுதலுக்கு பிறகும் தொடர்ந்து கொண்டிருக்கும். இணையத்தின் வளர்ச்சி 2017 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து அதன் பிறகு முற்றுப் பெற்றுவிடும்.   அப்பொழுது இணையத்தின் முக்கியப்  பயனாக கருதப்படும், இணைந்து பணியாற்ற உதவும் பங்கினையும் தகவல் தொலைத்தொடர்பு உபயோகத்தின் பயனைப் பற்றிய கருத்தில்  சர்ச்சைக்கும் ஏதும் இடம் இருக்காது. இணையத்தை எப்படியெல்லாம் பயன் படுத்தலாம் என்ற கனவுகள் குறைவதுடன், இணையத்தைப் பற்றிய ஆர்வமும் எதிர் பார்ப்புகளும் குறைந்துவிடும்.

இறுதி மாற்றம்:  ஆனால் இந்த தடங்கலைப் பொய்ப்பிக்கும் வண்ணம் மற்றுமொரு பெரிய மாற்றம் 2023 ஆம் ஆண்டு வசந்த காலத்தில்  தோன்ற ஆரம்பிக்கும். ஆனால் முழுமையான மாற்றம் அதைத் தொடர்ந்து வரும் இரண்டு ஆண்டிகளில் ஏற்படும்.  2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இணையம் பயிலுவதற்கான இடமாக, ஆதாரமான கருவியாகக் கருதப்படும் (என் இடைச்செருகல்: வகுப்பாசிரியர் தீர்க்கதரிசி என்பது இதன் மூலம் புலப்படுகிறது). இணையம் பெரும்பாலும் ஒரு கலைக் களஞ்சியமாக உபயோகப் படுத்தப்படும்.   அறிஞர்களின் ஆக்கங்கள் முழுமையாக இணையத்தில் சேகரிக்கப்படுவதுடன், இணையத்தின் முக்கிய பங்கே கலைக்களஞ்சியம் எனும் உபயோகம் எனக் கருதப்பட்டு, இணையத்தினை மற்றவற்றிற்காக பயன்படுத்துவது இணையத்தின் மதிப்பை குறைப்பதாக கருதி இகழ்ச்சியாகவும் எண்ணப்படும்.

இந்த மாறுதல் ஏற்பட ஓராண்டு காலம் ஆகும், அத்துடன் இதுதான் இணையத்தின் இறுதி மாறுதலாகவும் இருக்கும். இதன் பிறகு, இணையம் அனைவராலும் உபயோகப்படுத்தப்படும் அறிவுக்களஞ்சிய நூலகமாகவே கருதப்படும்.  இதுதான் இணையத்தின் எதிர்கால நிலை. 

இதைத் தவிர வரும் நூற்றாண்டில் இணையத்தின் வளர்ச்சியில் எந்த ஒரு பிரமிக்கவைக்கும் மாற்றமும் இருக்காது.  அதனால் 2026 க்குப்  பிறகு இணையம் புதுமை என்ற தகுதியை இழப்பதால் உலகம் புதுமை எனக்கருதும் மற்றவைகள் மக்களை ஆக்கிரமித்து கொள்ளக்கூடும் .  அப்படியே  2040 களில் இணையம் இருந்தாலும் அதன் கதை முடிக்கப்பட்டுவிடும். தொடர்து 15 ஆண்டுகளுக்கு மேலாக  இணையம் பற்றிய எந்த செய்தியும் பேசப்படாமல் போகப் போவதால், இணையம் முயக்கியத்துவம் இழந்தது மக்கள் கவனத்தைக் கவராது.

அன்புடன்
தேமொழி

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


அடைக்க வேண்டியதும், திறக்க வேண்டியதும்!
Article by KMRK, Lalgudi

'ஓட்டை' என்ற சொல்லைப் பற்றிச் சிந்திக்கும் போது, எதிர் வீட்டுக் குழந்தைகள் பலூனை வைத்து விளையாடிக்கொண்டு இருந்ததைப் பார்த்தேன்.

ஒரு சிறுமி வைத்து இருந்த பலூனை இன்னொரு மூத்த சிறுமி கையால் அழுத்தி உடைத்து விட்டாள்.இளையவள் பலூன் உடைந்து விட்டதே என்று அழத் துவங்கினாள்.பார்த்துக் கொண்டு இருந்த அண்ணன்காரன் உடைந்த பலூனை வாங்கி வாயில் வைத்து உள் பக்கமாக உறிஞ்சினான். ஒரு முட்டை அளவு பலூன் உப்பிவிட்டது.அத‌னை மீண்டும் கயிற்றால் சுற்றி தங்கை கையில் கொடுத்து 'பலூன் உடையவில்லை பார்'என்றான்.அடடா! அந்தப் பையனுடைய attitude- வளர்ந்த நமக்கு இல்லையே என்று எண்ணினேன்.

ஒரு வேளை அந்தக் குழந்தை மனது நமக்கும் இருந்தால்.....? சுகம். பரம சுகம்.

சிந்தித்துக் கொண்டே அண்ணாந்து பார்த்தேன். புல்லாங்குழலுடன் கண்ணபரமாத்மா அழகாக நின்றுகொண்டு இருந்தான் ஓவியத்தில்.அவன் அழகிய அதரத்தில் புல்லாங்குழல்.அத‌னை ஊத வேண்டி லேசாக உப்பிய கன்னம். தன் இசையில் தானே மயங்கியது போல கிறங்கிய கண்கள்.காற்றில் அசையும் மயிற்பீலி!அடடா! என்ன அற்புத் தோற்றம்! புல்லாங்குழல் மீது கோபியருக்கெல்லாம் பொறமையாம்! ஏனென்று சொல்லுங்கள் பார்ப்போம். ஆம்! புல்லாங்குழலுக்கு எப்போதும் கண்ணனின் அதர(உதடு) சம்பந்தம் கிடைக்கிறதே!தங்களுக்குக் கிடைக்கவில்லையே என்று பொறாமையாம்.

புல்லாங்குழலில் 7 ஓட்டைகள் என்று கண்ணன் ஊத மாட்டேன் என்றா சொன்னான்?தூக்கியா வீசிவிட்டான்? அந்த ஓட்டைகளில் அடைக்க வேண்டியதை அடைத்து,திறக்க வேண்டியதைத் திறந்து அமுத கானம் அல்லவா பொழிகிறான்?அவன் கானத்தை கேட்டு இந்த புவனமே சொக்கி நிற்கிறதே.

நாமும் கண்ணனைப் போல ஓட்டைகளையும் செவ்வனே பயன்படுத்த முடியாதா? முயன்றால் முடியும்.

தொலைக் காட்சியைத் திறந்தேன். தில்லானா மோகனாம்பாள் படத்திலிருந்து 'நலந்தானா நலந்தானா உடலும் உள்ள‌மும் நலந்தானா' என்று பாடல் ஒலித்துக்கொண்டு இருந்தது. மதுரை எம் பி என் பொன்னுசாமி, சேதுராமனின் நாகஸ்வரம்.அந்த நாயனக் கருவிகள் அனைத்திலும் ஓட்டைகள்.அந்த 'ஓட்டைக் கருவி'யினை வைத்து என்ன அற்புத இசை.ஓட்டைகளுக்கும் பலன் உண்டு என்று அறிந்தேன்.அந்த இசையால் உடலும் உள்ளமும் நலம் பெறமுடியும் என்று அறிந்தேன்.

வீட்டில் பணியாற்றும் வேலையாள் மாவு சலித்துக் கொண்டு இருந்தார். சல்லடை அவர் கையில் அசைந்து கொண்டிருந்தது. அதனுட‌ன் நான் பேசினேன்.இல்லை இல்லை என்னுடன் அது பேசிற்று."என்ன ஓய்! என்னையே உற்று உற்றுப் பார்க்கிறீர்? என் உடல் முழுதும் ஓட்டையாக இருக்கிறதே என்றா? அந்த ஓட்டைகள் இல்லை என்றால் எப்ப‌டி மாவில் உள்ள கசடினை நீக்க முடியும்? ஓட்டையாக இருப்பதுதான் எனக்கு இயல்பு. அப்போதுதான் என்னுடைய பயன் ஊருக்குக் கிடைக்கும்.

இந்த உடம்பைப் பற்றி 9 ஓட்டைகள் உள்ள வீடு என்பதாக சித்தர்களும் முனிவர்களூம் கூறியுள்ளனர்.

'மலம் சோரும் ஒன்பது வாயிற்குடில்...'என்பது உடலைப் பற்றி திருவாசகம் சொல்லும் கருத்து.

இந்த 9 உடல் ஓட்டைகளும் எப்போதும் திறந்தே இருக்க வேண்டும்.ஒன்று மூடப்பட்டாலும் உடல் வேலை செய்ய மறுக்கிறது.உடலுக்கு எவ்வளவு துன்பம் ஏற்படுகிறது!. உடலில் ஓட்டையாக இருப்பது அப்படியே தான் இருக்க வேண்டும். அடைக்க முயற்சிக்கக்கூடாது. அடைத்தால் விளைவுகள் விபரீதமாகும்.

கோவிலுக்குள் சென்றேன்.துவார பாலகர்களை முதலில் தரிசித்தேன்.துவாரம் என்றால் சமஸ்கிருதத்தில் ஓட்டை! ஓட்டையைக் காக்கும் உருவங்கள் துவார பாலகர்கள்.பாருங்கள் ஓட்டைகள் காக்கப்படவேண்டும் என்று அதற்கு ஆள் போட்டிருக்கிறார் எம் பெருமான். அதுவும் தஞ்சைப் பெரிய கோவிலில் துவாரபாலகர்கள் சுமார் 10 ஜோடிகள் உண்டு. ஒவ்வொன்றின் பிரமாண்டமும் சொற்களால் விவரிக்க முடியாது.

"தோசையைத் திங்கச் சொன்னாளா, தொளையை எண்ணச் சொன்னாளா?" என்பது பிராமணர் வீடுகளில் சொல்லும் சொல்லடை.மற்ற வகுப்பார் இதனையே "வடையைத் தின்னுடான்னா தொளை சரியில்லைங்கறான்" என்று சொல்லுவார்கள்.என்ன பொருள்? 'நடைமுறைக்கு உதவாத வீண் ஆராய்ச்சியைத் தவிர்' என்பதுதான்.மேலும் 'பிறரின் குறைகளைப்பெரிது படுத்தாதே' என்றும் கொள்ளலாம்.

இந்தப் பிரபஞ்சம் பெரு வெடிப்பால்(big bang) உருவானதாம். மீண்டும் இது ஒரு பெரிய ஓட்டைக்குள்(big hole) சென்று ஒடுங்கிவிடுமாம். அறிவியல் சொல்கிறது. அதைத்தான் 'அண்ட யோனியின் உண்டைப் பெருக்கம்'என்று சுந்தரம் பிள்ளை (இவர்தான் அரசின் தமிழ் வாழ்த்தை எழுதியவர்)சொல்லுவார்.அந்த அண்ட யோனியும் பெரிய ஓட்டைதான்.

எந்த உப்பிய பலூனிலும் ஓட்டை போடாதீர்கள். பலூனை ஓட்டை ஆக்குவது சிறு பிள்ளை விளையாட்டு. பெரியவர்கள் அந்த விளையாட்டைச் செய்யக் கூடாது,

சரிதானே?

வாழ்க வளமுடன்!
ஆக்கியோன்:
கே.முத்துராமகிருஷ்ணன்(லால்குடி)

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கலக்கலான கானொளி. காண்ட்ரெக்ஸ்’ என்ற பெயரில் மினரல் வாட்டரை உற்பத்தி செய்து விற்கும் அமெரிக்கக் கம்பெனிக்காரர்களின் விளம்பர வீடியோ கிளிப்பிங். பார்த்து மகிழுங்கள். அனுப்பியவர்: எஸ். சபரி நாராயணன், சென்னை


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மலரில் உள்ள ஆக்கங்களைப் பற்றிய உங்கள் கருத்தை, விமர்சனதைப் பின்னூட்டமிடுங்கள். எழுதுபவர்களுக்கு அதுதான்  'டானிக்’
அன்புடன்
வாத்தியார்

23.10.11

வாழ்க வளமுடன்!

21.10.11

Astrology: புத்திரபாக்கியம் இல்லையா?

 -----------------------------------------------------------------------------
Astrology: புத்திரபாக்கியம் இல்லையா?
ஜோதிடம் cum ஆன்மீகக் கட்டுரை
--------------------------------------------------
புத்திரபாக்கியம் இல்லையா? கவலைகளை எல்லாம் மூட்டை கட்டி வையுங்கள். இந்தப் பதிவைப் படியுங்கள். உங்களுக்காக எழுதப்பெற்றது.

“சார், பார்க்காத ஜோதிடர்கள் இல்லை. போகாத நவக்கிரக ஸ்தலங்கள் பாக்கியில்லை. எங்களுக்கு எப்போது குழுந்தை பிறக்கும் என்று  உங்கள்  அஷ்டகவர்க்கம் மூலம் பார்த்துச் சொல்லுங்கள்” என்று எனக்குச் சிலர் கடிதம் எழுதுகிறார்கள்.

ஐந்தாம் வீடு, அதன் அதிபதி, காரகன் குருபகவான் ஆகிய மூவரும் அமர்ந்திருக்கும் வீடுகளின் பரல்கள் 28ற்கும் குறைவாக இருந்தால்,
(கணவன் அல்லது மனைவியின் ஜாதகத்தில்) குழந்தை பிறப்பது
தாமதமாகும். அதுவே பரல்கள் அவர்கள் இருவரின் ஜாதகத்திலும் 25 ற்கும்  குறைவாக (அம் மூன்று இடங்களிலும்) இருந்தால் குழந்தை பாக்கியம் இல்லை என்பது பொது விதி.

ஆனால் அதை எல்லாம் மீறி சிலருக்குக் குழந்தை பிறக்கும். அதுதான் இறையருள். தொடர் பிரார்த்தனையின் பலன். மனம் உருகிய உண்மையான பக்திக்குக் கிடைக்கும் பரிசு. எப்படி வேண்டுமென்றாலும் வைத்துக் கொள்ளுங்கள்.

எது எப்படியிருந்தாலும், ஜாதகத்தை எல்லாம் மூட்டைகட்டிப் பரண்மேல் போடுங்கள். இறைவனைப் பிரார்த்தனை செய்யுங்கள்.

இறையருளுக்குள் எல்லாம் அடக்கம். அதை நம்புங்கள். ஜோதிடம் எல்லாம் அதற்குக் கீழேதான்!

குழந்தைபேறுக்கான ஸ்தலத்தைப் பற்றிய விபரத்தைக் கீழே
கொடுத் துள்ளேன்!   ஒருமுறை சென்று வாருங்கள். நம்பிக்கையோடு வழிபட்டுவாருங்கள். நடப்பதைப் பாருங்கள்.

நடந்த பிறகு ஒருவரி எழுதுங்கள்.
-----------------------------------------------------------------------------------
     “வாத்தி (யார்) ஒரு சின்ன குழப்பம்!”

     “என்ன ராசா?”

      “ஜோதிடப் பாடம் நடத்தும் நீங்கள், ஜாதகத்தைத் தூக்கிப் பரணில் போட்டு விட்டுக் கோவிலுக்குப் போ என்கிறீர்களே? கோவிலுக்குப்  போவதால் மட்டும் எப்படிக் குழந்தை பிறக்கும்? ஜாதகம் பொய்யாகிவிடாதா?”

        “ராசா, அதே ஐந்தாம் வீடுதான் பூர்வபுண்ணிய வீடு. பூர்வ புண்ணியத்தைக் கணித்துச் சொல்ல யாருக்கும் பவர் (சக்தி) கிடையாது.  இறைவழிபாட்டால், பூர்வபுண்ணிய தர்மம் மேன்மைப் பட்டு குழந்தை பிறக்கும். புரிகிறதா? சில விஷயங்கள் ஜாதகத்தையும் மீறி நடப்பதற்கு  அதுதான் காரணம்.”
------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------

நவநீதகிருஷ்ணன் கோவில், Dodda mallur, Near Chennapatna, Karnataka

பெங்களூர் மைசூர் நெடுஞ்சாலையில், பெங்களூரில் இருந்து அறுபத்தி யிரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இப்புண்ணிய ஸ்தலம்.
நெடுஞ்சாலையில் செல்கையில் 60ஆவது கிலோமீட்டரில், இடது பக்கம் (சென்னபட்னா நகரைத் தாண்டிய பிறகு) மிகப் பெரிய அலங்கார வளைவு  (Arch) உங்களை வரவேற்கும். அதுதான் அக்கோவிலின் நுழைவாயில். சென்னபட்னா நகரில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவுதான். ஆட்டோ ரிக்‌ஷா வசதி உண்டு.

அக்கோவில் கி.பி.1,117ஆம் ஆண்டு விஷ்ணுவர்த்தன் என்னும் மன்னனால் கட்டபெற்ற புராதனக் கோவில் ஆகும். அங்கே உறையும் நவநீதகிருஷ்ணர் பல அதிசயங்களை நிகழ்த்திக் காட்டியவர். புத்திர தோஷம் உடையவர்களும், சயன தோஷம் உடையவர்களும், இக்கோவிலுக்குச் சென்று மனம் உருகி வழிபட அக்குறைகள் நிவர்த்தியாகும் என்பது வழிவழியான நம்பிக்கை.

அதற்கு ஆதாரம் கேட்டு யாரும் பிறாண்ட வேண்டாம். பின்னூட்டம் இட வேண்டாம். பன்னாட்டு நிறுவனங்களில் வேலை தேடி அலையும்போது தூக்கிக் கொண்டு செல்லும் உங்கள் பல்கலைக் கழகச் சான்றிதழ்களுக் கெல்லாம் அப்பாற்பட்ட விஷயங்கள் எத்தனையோஉள்ளன, அதில் இதுவும் ஒன்று!

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------------------------------------------
How to reach Dodda Mallur
From Bangalore 62 kms
From DHQ Ramanagara 12 kms
Route :
1.Bangalore-Ramanagara-Channapatna-Dodda Mallur.(SH 17)
2.Mysore-Srirangapatna-Mandya-Maddur-Dodda Mallur(SH 17)
Road :
Travelling on State Highway 17 which connects Bangalore - Mysore, you need to take a diversion just after two kms after Channapatna heading towards Maddur. You can find the temple Gopura visible to the main highway.
Rail :
Nearest Railway station is Channapatna and from there on, you can head by road either in Auto or in a taxi.
Airport :
The nearest Airport being Bangalore International Airport, heading either by Road or Rail from there on.
------------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!