++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அதிகமான போதை எதில் உள்ளது?
முதலில் போதை என்னும் சொல்லிற்கு என்ன பொருள் என்று பார்ப்போம்.
மது, கஞ்சா முதலியவற்றை அதிகமாக உட்கொண்டதும் ஏற்படும் நிலை. புலன் செயல்படுவதில் தெளிவற்ற நிலை. சுயக்கட்டுபாடு குறைந்த நிலை. அதுதான் போதை.
எவை எவை போதையைத் தரும்?
அன்னபூர்னா காப்பி - ஒரு கோப்பை பதினெட்டு ரூபாய் என்றாலும், இரண்டு மடக்குக் குடித்துவிட்டு வந்து, வாசலில் உள்ள பெட்டிக்கடையில் ஒரு வில்ஸ் ஃபில்டர் சிகரெட்டை வாங்கி இழுப்பவனிடம் சென்று கேளுங்கள். அந்த ஷணத்தில் கோவைக்கே நான்தான் ராஜா என்பான். அந்த போதை ஒரு அரை மணி நேரம் நீடிக்கும்.
ஹேவர்ட்ஸ் 5000 ஸ்ட்ராங் பியர் - ஜில்லென்ற பியர் 2 பாட்டில்
அல்லது சீவாஸ் ரீகல் விஸ்கி 4 லார்ஜ் குடித்துவிட்டு
அமர்ந்திருப்பவன், அந்த நிலைதான் சொர்க்கம் என்பான். அது
ஒரு நான்கு மணி நேரம் நீடிக்கும். அதையே ஒரு அளவின்றி
குடித்தவன், துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்ற
நிலையில் துவண்டு கிடப்பான்.
கஞ்சா, அபின், ப்ரவுன் சுகர் என்று தடை செய்யப்பட்ட போதை வஸ்துக்களைத் தேடி அலையும் ஆசாமிகள் உண்டு. அவை எல்லாமே நிரந்தமற்றவை. வந்த போதை சிலமணி நேரத்தில் நீங்கி விடும்.
சில பெண் போதை ஆசாமிகள் இருக்கிறார்கள். எந்த பெண்ணைப் பார்த்தாலும் தேவதைபோல இருக்கிறாள் என்பான். தூணுக்கு சேலை கட்டி விட்டால் கூட, எதிரில் உட்கார்ந்து ரசித்துக் கொண்டிருப்பான்.
பதவி போதை, புகழ் போதை, செல்வாக்கு போதை என்று போதையில் பல உட்பிரிவுகளும் உள்ளன!
இப்படிப் போதை பலவகைப்படும்.
உண்மையான போதை எதில் உள்ளது?
உண்மையான போதை உங்கள் வங்கி இருப்பில் உள்ளது. உங்கள் வங்கி இருப்பில் ஒரு பத்து லட்ச ரூபாய் இருக்கிறது. அது என்றும் குறையாத அளவிற்கு உங்களுக்கு வருமானம் வந்து கொண்டிருக்கிறது என்று
வைத்துக்கொள்ளுங்கள். அது தரும் போதைக்கு நிகரானது எதுவுமே இல்லை. முயன்று பாருங்கள். முயன்று பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்
மேலே குறிப்பிட்டுள்ள போதைகள் எல்லாம் ஒரு காலகட்டம் வரைதான். அதாவது 50 வயதுவரை அல்லது 60 வயதுவரைதான். அதற்குப் பிறகு?
போதையற்ற நிலைதான் போதையானது. போதையை ஒதுக்கும் நிலைதான் போதையானது. நிலையாமைதான் நிலையானது என்பதை உணரும் நிலை. அல்லது உணர்ந்த நிலை.
பொருள் தேடுவதற்காக நாம் செய்த முயற்சிகள், செய்த வேலைகள்
எல்லாம் வீண் என்று உணரும் நிலை.சேர்த்த பொருட்கள், குவித்த செல்வங்கள், வாங்கிபோட்ட இடங்கள் எல்லாம் நமக்குப் பயன்
படாமற் போகும் அல்லதுபோகப் போகிறது என்பதை உணரும்
அல்லது உணர்ந்த நிலை.
அது எப்போது ஏற்படும்?
நமக்கு ஞானம் வரும்போது ஏற்படும்.
“நன்றிகெட்ட மாந்தரடா
நானறிந்த பாடமடா
பிள்ளையாய் இருந்துவிட்டால்
இல்லையொரு தொல்லையடா”
என்று கவியரசர் சொன்ன வரிகளின் அர்த்தத்தை உணரும்போது, ஒவ்வொரு மனிதனுக்கும், அது ஏற்படும். ஏற்படாவிட்டால், அதை, கேது ஏற்படுத்திக் கொடுப்பான். அவன் ஞானகாரகன் அல்லவா? அதை ஏற்படுத்துவதுதான் அவனுடைய முக்கியமான வேலை. கேது மகா திசையின் முடிவில் அனைவருக்கும் அது ஏற்பட்டிருக்கும். அல்லது கிடைத்திருக்கும்.
கிடைக்காவிட்டால்? ஜாதகன் இன்னும் கஷ்டப்பட வேண்டியது பாக்கி உள்ளது என்று பொருள்:-))))
+++++++++++++++++++++++++++++++++++++
கேது மகாதிசையில் கேதுவின் சுய புத்திக்குப் பிறகு வருவது கேதுவில் சுக்கிரபுத்தி, சுக்கிரனால் ஒரு சில சந்தோஷங்கள் இருந்தாலும், புத்திக்காலம் பாங்கில்லாமல் இருக்கும். பாங்கில்லாமல் என்பதற்கு முறையில்லாமல் என்று பொருள். பாடலைக் கொடுத்துள்ளேன். படித்துப் பாருங்கள்
2
பகையான கேதுதிசை சுக்கிர புத்தி
பாங்கில்லா மாதமது பதினாலாகும்
தகையான அதன் பலனை சாற்றக்கேளு
தாழ்வில்லா சத்துருவால் விலங்குண்டாகும்
நகையான பூஷணங்கள் சிலவதாகும்
நாரிழையாள் தன்னுடனே அபமிருந்துகாணும்
வகையான ராசாவால் மனமகிழ்ச்சியாகி
மனைவி மக்கள் தன்னுடனே வாழ்வான் காணே!
சரி, சுக்கிர திசையில் கேதுவின் புத்தி எப்படி இருக்கும்? கேதுவின் கை ஓங்கி இருக்கும். எல்லாம் கேடான பலன்களாக இருக்கும். பாடலைக் கொடுத்துள்ளேன். படித்துப் பாருங்கள்.
ஆளலாம் சுக்கிரனில் கேது புத்தி
ஆகாத மாதமது யீரேழாகும்
வாழலாம் அதன்பலனை வகுத்துச் சொல்வேன்
வளர்கொடியாள் தான்சாவாள் வான்பொருளும் போகும்
தாழ்வான தன்னரசு ராச்சியங்கள் போகும்
சம்பத்துதான் போகும் தாய்தந்தை மரணம்
கோளலாம் சத்துருவால் குடிகேடாகும்
கோதையரும்தான் போவாள் குடிகேடாமே!
(தொடரும்)
அன்புடன்
வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!