மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

28.4.17

“சந்திரமங்கள’ யோகம்”


“சந்திரமங்கள’ யோகம்”

யோகங்களைப் பற்றிய ஜோதிடப்பாடம்!

ஒரு ராசியில் சந்திரனும், செவ்வாயும் கூட்டணி போட்டு ஒன்றாக இருந்தால் நன்றாகக் கவனியுங்கள் - ஒன்றாக இருந்தால் அது ’சந்திரமங்கள’ யோகம் எனப்படும்.

சிலர் அதைச் ”சசிமங்கள” யோகம் என்றும் சொல்வார்கள். இரண்டும் ஒன்றுதான்

If Mars conjoins the Moon, this yoga is formed.
Sasi Mangala Yoga:  When mars and moon placed in same house.
The native's finance never gets drain. He will get finance help when ever he needs.
--------------------------------------------------------------------------------
யோகத்தின் பலன் என்ன?

இந்த யோகத்திற்குப் பலனும் உண்டு. பக்க விளைவும் உண்டு.

பலன் எந்த அளவிற்குக் கிடைக்குமோ, அந்த அளவிற்குப் பக்க விளைவும் உண்டு.

ஜாதகனின் நிதி நிலைமை என்றும் வற்றாமல் இருக்கும். எந்த வழியிலாவது பண வரவு இருக்கும். ஜாதகன் வசதியானவன். செல்வந்தன்.அதே நேரத்தில் மனகாரகன் சந்திரனுடன், தீய கிரகமான செவ்வாய் சேருவதால் ஜாதகனுக்குப் பலவிதமான மனப்போராட்டங்களும் கூடவே  இருக்கும். அதுதான் பக்க விளைவு.

That is called as the side effects of this yoga

Chandra Mangala Yoga acts as a powerful factor in establishing one's financial worth and at the same time the native will suffer with mental worries

The combination is good if it occurs in the 2nd, 9th, 10th or 11th house.
------------------------------------------------------------------------
இது உபரிச் செய்தி:

சந்திரன் ரிஷபத்தில் இருந்து (அங்கே அவர் உச்சம்) செவ்வாய் விருச்சிகத்தில் இருந்தாலும் (அது அவருக்கு ஆட்சி வீடு) அதுபோல மகரத்தில் செவ்வாய்  இருந்து (அங்கே அவர் உச்சம்) கடகத்தில் சந்திரன் இருந்தாலும் (அது அவருக்கு ஆட்சி வீடு) அந்த அமைப்பு உன்னதமானது. இந்த அமைப்பில்

சேர்க்கையில் அல்லாமல் பார்வையில் இந்த இரண்டு கிரகங்களும் ஜாதகனுக்கு மிக நல்ல பலன்களைக் கொடுக்கும். ஜாதகனின் நிதி நிலைமை வற்றாமல் ஊற்றாக இருக்கும்! அதாவது சசி மங்கள யோகத்திற்கு ஈடான பலன் அதில் உண்டு!

The Moon in Taurus and Mars in Scorpio - The Moon in Cancer and Mars in Capricorn are excellent positions for the native of a horoscope!
--------------------------------------------------------------------
சந்திரனும், செவ்வாயும் ஒன்றாகச் சேர்ந்து எந்த வீட்டில் இருந்தாலும் அது சந்திரமங்கள யோகம் தான்.

சந்திரன் சாத்வீகமான கிரகம். அதனுடன் சேரும் தீய கிரகம் கீழ்க்கண்ட பாதிப்புக்களை உண்டாக்கும்:

1. ஜாதகனின் மனநிலையைப் பாதிக்கும்.

2. குணத்தை மாற்றும். உணர்ச்சிவசப்படச் செய்யும். தன் நிலையை மறக்க வைக்கும். செவ்வாய் மனதில் ஒருவித அலையை ஏற்படுத்தும்

Mars will create the tide within the mind, and influence the mental and emotional aptitude. Fighting mind and spirit, self  protective, desire to rule and influence others, irritated and aggressive

3. ஜாதகனின் இந்தக் குண மாற்றங்களால், அவனுடைய
மனைவி, குடும்பம், மற்றும் உறவுகள் எல்லாமும் பாதிப்படையும்.
சந்திரன் சுபக்கிரகம். நல்லவற்றை வழங்கக்கூடிய கிரகம். நான்காம் இடத்திற்குக் காரகன். செவ்வாயும் ஒருவிதத்தில் வழங்கக்கூடியவன். நான்காம் இடத்திற்கான, இடம், சொத்துக்களை (Landed Properties) வழங்கக்கூடியவன் அவன்தான் சாமிகளா! இருவருமே வழங்கக்கூடிய வள்ளல்கள்.
ஆகவே ஜாதகனுக்குச் செல்வத்தை நிச்சயம் வழங்குவார்கள்.

அதே நேரத்தில் சில தீமைகளும், அவர்களின் சேர்க்கையால் உண்டாகும். அதுதான் அந்தப் பக்க விளைவு (side effects) 
Chandra Mangala Yoga gives wealth and also troubles to the native of the horoscope!

எப்போது வழங்குவார்கள்?

இருவரும் தங்கள் தசை/புத்திகளில்/அந்தர தசைகளில் வழங்குவார்கள்
------------------------------------------------------------------
அந்த யோகமும், பாதிப்பும் எந்த அளவிற்கு இருக்கும்?

இருவரும் அமரும் வீட்டைப் பொறுத்துப் பலன்களும் வித்தியாசப்படும்!

The main difference lies in the house where chandra and mangala are placed. There are different influences on the houses:

1,3,5,6,8,9,10 ஆம் வீடுகளில் செவ்வாய்க்கு வலிமை அதிகம். 2,4,7,11, 12ஆம் வீடுகளில் சந்திரனுக்கு வலிமை அதிகம்

ஆகவே அந்த இரண்டு கிரகங்கள் சேரும்போது இயற்கையாகவே அது எந்த வீடோ,  அந்த வீட்டை,  அதாவது முதல் வரியில் குறிப்பிட்டுள்ள வீடுகளில் செவ்வாயின் அதிகாரம் மேலோங்கி இருக்கும். இரண்டாவது வரியில் குறிப்பிட்டுள்ள வீடுகளில் சந்திரனின் அதிகாரம் மிகுந்து இருக்கும். சந்திரனின்
அதிகாரம் உள்ள வீட்டை உடைய ஜாதகனுக்குத் தீய பலன்கள் குறைவாக இருக்கும்.

இது பொது விதி! உச்சம், நீசம், வக்கிரம், அஸ்தமனம், அஷ்டகவர்க்கப் பரல்கள் 6, 8, 12ஆம் இடங்கள் ஆகியவற்றை வைத்துப் பலன்கள் மாறுபடும்.

ஆகவே பொறுமையாக அலசுங்கள். அலசுகிற வேகத்தில் துணியைக் கிழித்து விடாதீர்கள்:-))))))

Therefore, each house will decide which planet among two, Moon or Mars dominates the Yoga. IF Moon is stronger, satvic qualities dominate the Yoga, and bad shades of Yogas are lesser. Mars turns calms down due to the blessings of Benefic Moon

If Mars dominates the Yoga, Mars is very angry and can create serious problems (apart from other good effects given by this Yoga)
-----------------------------------------------------------------------
வீடுகள் வாரியாகப் பலன்கள் கீழே கொடுக்கப்பாட்டுள்ளன!

கீழே உள்ளது அனைத்தும் பொதுப் பலன்கள்!
கீழே உள்ளது அனைத்தும் பொதுப் பலன்கள்!
கீழே உள்ளது அனைத்தும் பொதுப் பலன்கள்!
---------------------------------------------------
1. லக்கினத்தில் இந்தக் கிரக அமைப்பு இருந்தால், அது மேஷ லக்கினம், விருச்சிக லக்கினமாக இருந்தால் அல்லது கடக லக்கினமாக இருந்தால் நல்லது. ஜாதகனுக்கு எல்லாம் நன்மையே. இல்லையென்றால் ஜாதகனுக்கு சுகக் கேடு. ஆரோக்கியக் கேடு.

2. இரண்டாம் வீட்டில் இந்தக் கிரக அமைப்பு இருந்தால், ஜாதகனின் வாழ்க்கை வளமாகவும் செல்வம் மிக்கதாகவும் இருக்கும். அதோடு இதய நோய் உடையவனாகவும், அடிக்கடி விபத்துக்களில் சிக்கிக் கொள்பவனாகவும் இருப்பான்.

3. மூன்றாம் வீட்டில் இந்த அமைப்பு இருந்தால், ஜாதகன் அம்சமாக இருப்பான். அம்சம் என்றால் என்ன வென்று தெரியுமல்லவா? எதையும்  ரசிப்பவனாக இருப்பான். வாழ்க்கை ரசனைகள் மிகுந்து இருக்கும். அதே நேரத்தில் மனதில் கவலைகளுக்கும், பிரச்சினைகளுக்கும் குறைவிருக்காது.

சிலரது (நன்றாகக் கவனிக்கவும்) சிலர் தனது துணையை இளம் வயதிலேயே பறிகொடுக்க நேரிடும்!

4. நான்காம் இடத்தில் இந்த அமைப்பு இருந்தால், ஜாதகன் மிகுந்த அதிர்ஷ்டசாலி! ஜாதகனுக்கு எதையும் மோதிப் பார்க்கும் குணம் இருக்காது. வருவது  வரட்டும் என்று மேலோட்டமாக இருப்பான். வலிமையான மனம் உடையவனாக இருப்பான். இளைய உடன் பிறப்புக்களுடனான உறவு சுகமாக  இருக்காது!

5. ஐந்தாம் இடத்தில் இந்தக் கிரக அமைப்பு இருந்தால்,
ஜாதகனைப் பரபரப்பான ஆசாமியாகவும், தகறாறு செய்யும் மனப்பான்மையுடையவனாகவும் மாற்றிவிடும். ஆனால் ஜாதகன் அதிகாரமுள்ளவனாக இருப்பான்.

6. ஆறாம் இடத்தில் இந்தக் கிரக அமைப்பு, ஜாதகனுக்குப் பலவிதமான பிரச்சினைகளைக் கொடுக்கும். எதிரிகளை ஏற்படுத்திக் கொடுக்கும். சிலருக்கு அடிக்கடி விபத்துக்கள் ஏற்படும்.

7. ஏழாம் இடத்தில் இந்தக் கிரக அமைப்பு செல்வம், புகழ் இரண்டையும் கொடுக்கும். அதே நேரத்தில் திருமண வாழ்வில் கசப்பை உண்டாக்கி விடும். கசப்பு எந்த அளவு வேண்டுமென்றாலும் இருக்கலாம். உறவுகளை ஓரங்கட்டிவிடும். சிலருக்கு இதயநோய்கள் உண்டாகும். ஒரு ஆறுதல்
ஜாதகன் எதிரிகளைத் துவம்சம் செய்து விடுவான். சிலருக்கு இரண்டு தடவைகள் திருமணம் நடக்கலாம்.

8. எட்டாம் இடத்தில் இந்தக் கிரக அமைப்பு மிகவும் மோசமானது. அழிவை ஏற்படுத்தக் கூடியது. திருமண வாழ்வில் முறிவை ஏற்படுத்தும். அல்லது கணவன்/மனைவி இருவரில் ஒருவரைக் காலி செய்துவிடும்.சிலருக்கு முதல் திருமணம் ரத்தாகி, இரண்டாவது திருமணம் நடக்கலாம். சிலருக்கு அதீதமான பணத்தைக் கொடுக்கும். அதே நேரத்தில் ஆயுளைக் குறைத்து விடும்
அபாயமும் உண்டு!

9. ஒன்பதாம் இடத்தில் இந்தக் கிரக அமைப்பு சக்தி, அதிகாரம், வலிமை, வளமை என்று எல்லாவற்றையும் கொடுக்கும், அதே நேரத்தில் ஜாதகனின்  ஆயுளைக் குறைத்து விடும் அபாயமும் உண்டு! அல்லது ஜாதகன் விபத்தில் சிக்கிக்கொள்ளும் அபாயமும் உண்டு!

10. பத்தாம் இடத்தில் இந்தக் கிரக அமைப்பு இருந்தால் ஜாதகனுக்கு அதீத வருமானம் உடைய வேலை அல்லது தொழில் அமையும். சிலருக்கு உடல் வலிமை இருக்கும். மன வலிமை இருக்காது.

11. பதினொன்றாம் இடத்தில் இந்தக் கிரக அமைப்பு இருந்தால் ஜாதகனுக்கு நிறைய நண்பர்கள் கிடைப்பார்கள். சமூக சேவையில் ஜாதகன் பெயர் எடுப்பான். ”காசுமேல காசு வந்து கொட்டுகிற நேரம் இது; ராஜலக்ஷ்மி வந்து கதவைத் தட்டுகிற நேரம் இது” என்று பாடிக் கொண்டிருப்பான்.பணம் கொட்டும். சிலரின் ஜாதகத்தில் செவ்வாய்க்கு இந்த இடம் உகந்த இடம் இல்லையென்றால்,
ஜாதகன் ஆர்வக்குறைவாக இருப்பான்.
ஆனால் பணம் மட்டும் மழையாகக் கொட்டும்!

12. பன்னிரெண்டாம் இடத்தில் இந்தக் கிரக அமைப்பு இருந்தால் தீமைகளே அதிகம். இடம் என்ன சாதாரணமான இடமா என்ன? விரைய ஸ்தானம்  (House of Loss) உடல் உபத்திரவம், மன உபத்திரவம், கடன், அதிர்ஷ்டமின்மை, உறவுகளின் இழப்பு, நண்பர்களின் பிரிவு என்று எல்லாமுமே படுத்துவதாக இருக்கும்.

கவலைப் படாதீர்கள், இந்த அமைப்பு உங்களுக்கு இருந்தால், நீங்கள் ஞானியாகி விடலாம். ஞானியாகிவிட்டால் அதைவிட மேன்மையான நிலை

எதுவும் இல்லை! திருவண்ணாமலைக்கெல்லாம் போக வேண்டாம். வீட்டில் இருந்தபடியே ஞானியாகிவிடலாம்!:-)))))
----------------------------------------------------------------------
வேண்டுகோள்: பாடத்தில் ஏற்படும் பொதுவான சந்தேகங்களை மட்டுமே கேளுங்கள். உங்கள் ஜாதகத்தை வைத்துக் கேள்விகளைக் கேட்காதீர்கள்!

யோகம் இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன? அனைவருடைய ஜாதகமும் சமமானதுதான் அனைவருக்கும் மொத்தப் பரல்கள் 337 தானே? அதை  மனதில் வையுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்
--------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

27.4.17

ஏன் நீங்கள் எதையும் உரிமை கொண்டாட முடியாது?


ஏன் நீங்கள் எதையும் உரிமை கொண்டாட முடியாது?

ஒரு நல்ல இடத்தில் FLAT வாங்க குறைந்தபட்சம் ஒரு கோடியாவது ஆகும்.

அந்த ஒரு கோடிக்கு என்னென்ன கிடைக்கிறது?

நமது FLAT ன் தரைப்பகுதியை நம்முடையது என்று சொல்லமுடியுமா?!  முடியாது.

காரணம், அது, கீழ் மாடியில் இருப்பவனுடைய கூரை;
ஆகவே, அவனுக்கும் சொந்தம்!

நம் தலைக்கு மேலிருக்கும் கூரையை நம்முடையது என்று சொல்லமுடியுமா? அதுவும் முடியாது; அது, மேல் மாடியில் இருப்பவனுடைய தரை.

ஆகவே, அவனுக்கும் சொந்தமானது!

சரி... வலது பக்க சுவரை நம்முடையது என்று சொல்ல முடியுமா? முடியவே முடியாது... அது அந்தப்பக்கம் இருப்பவனுக்கும் சொந்தமானது!

சரி, இடது பக்க சுவர்?! அதுவும் இடதுப்பக்கம் இருப்பவனுக்கும் சொந்தமானது!

நாம் பயன்படுத்துகின்ற படிக்கட்டுகள், லிப்ட் ?! அவையெல்லாம் மொத்த அபார்ட்மென்டுக்கும் சொந்தமானது!

சரி, நமக்கென்று அபார்ட்மென்ட் வளாகத்தில் ஒரு பத்து சதுரடி இடமாவது கொடுத்திருக்கிறார்களா?

நிச்சயமாக இல்லை... இடம் எல்லோருக்குமே பொதுவானது! அப்படியென்றால், *அந்த ஒரு கோடிக்கு நமக்கு கொடுக்கப்பட்டது என்ன?!*

1500 சதுர அடி கொண்ட காலியான அந்த SPACE தான் நமக்கு கொடுக்கப்பட்டது!

சுற்றி இருக்கும் சுவர்களோ, கூரையோ, தரையோ நம்முடையது அல்ல, அந்த சுவர்களுக்கு இடையே உள்ள SPACE மட்டுமே நமக்கு கொடுக்கப்பட்டது!

அபார்ட்மென்ட் வளாகத்தில் உள்ள அத்தனை வசதிகளையும் பயன்படுத்தலாம், அனுபவிக்கலாம், ஆனால், என்னுடையது என்று உரிமை கொண்டாட முடியாது!

கடவுள் நமக்கு கொடுத்ததும் அதுதான்.

இந்த பூமியில் வாழ்வதற்கான SPACE மட்டும்தான் கொடுத்திருக்கிறார்;

அந்த SPACE ல் இருந்துகொண்டு, உலகத்தில் உள்ள அத்தனை சந்தோஷங்களையும் ரசித்து அனுபவிக்கலாம்,

மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளலாம்!

ஆனால், இங்கு இருக்கின்ற எதையும் உரிமை கொண்டாட முடியாது.

கொண்டுசெல்லவும் முடியாது!

என்னுடைய அம்மா எனக்கு தானே சொந்தம் என்று சொல்லலாம், ஆனால், அவர் அப்பாவின் மனைவி, அவருக்கு தான் சொந்தம்.

அதன் பின்புதான் குழந்தைகள் வந்தது!

சரி... அம்மா, அப்பாவுக்காவது சொந்தமா என்றால் அதுவும் இல்லை.

அவர் இன்னொருவரின் மகள்; தாத்தாவுக்கு தான் சொந்தம்!

தாத்தாவும் தனியாக சொந்தம் கொண்டாட முடியாது, காரணம் பாட்டிக்கும் அதில் சம பங்கு இருக்கிறது!

இப்படி இந்த பூமியில் இருக்கின்ற ஒரு துரும்பு கூட நமக்கு சொந்தமானது இல்லை!

நாம் இங்கு நிரந்தரமாக இருக்கப் போவதுமில்லை...

பிறகு ஏன் பிற மனிதர்கள் மீது கோபம், போட்டி, பொறாமை, வெறுப்பு, வஞ்சம், சுயநலம் எல்லாம்!?

நமக்கு கொடுக்கப்பட்ட SPACEல் சந்தோஷமாக இருப்போம்.

சக மனிதர்களையும் நேசிப்போம்.

*முடிந்தால், பிறர் சந்தோஷப்படும்படி எதாவது செய்வோம்!*

👉 *படித்தில் பிடித்தது...*
அன்புடன்
வாத்தியார்
--------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

26.4.17

இரு வீட்டாரின் அழைப்பு !!!!


இரு வீட்டாரின் அழைப்பு !!!!

பந்த கால் நட்டாச்சு .....இனி சொந்த பந்தத்துக்களாம் சொல்லிவிட வேண்டியதுதான்.......

சொக்கநாத சொந்தங்கள் மற்றும் மீனாட்சி அம்மையின் பந்தங்கள் என அனைவரும் மதுரையில் ஒன்னுகூடிடுங்கள் சாமிகளா!

வருகின்ற 28.04.2017 அன்னைக்கு கொடி ஏற்றபட்டு......7.05.2017 அன்று மீனாட்சி திருக்கல்யாணம் நடக்கவிருக்கிறது!.

விண்அதிர மண் அதிர.....அடடா தேவாதி தேவர்களும் தேரோடும் வீதியிலே விளையாட.....நம் விணை தீர பார் புகலும் ஈசன் பத்து நாளும் பவனி

வருகிறார்.......

எங்கே இருந்தாலும் மதுரையம்பதி வந்து சேருங்க....

இருவீட்டார் அழைப்பு....

********இது ஆலவாயரின் அழைப்பு *********

* மதுரை சித்திரைத் திருவிழா, 2017 *

ஏப்ரல் 28, 2017 - வெள்ளிக்கிழமை - சித்திரையில் திருவிழா Kodiyetram (கொடியேற்றத்துடன்) - கற்பக Vriksha, சிம்ம வாகனம்

ஏப்ரல் 29, 2017 - சனிக்கிழமை - Bootha, அண்ணா வாகனம்

ஏப்ரல் 30, 2017- ஞாயிறு - கைலாச Parvadham, காமதேனு வாகனம்

மே 1, 2017 - திங்கட்கிழமை - தங்கத் Pallakku

மே 2, 2017 - செவ்வாய்க்கிழமை - Vedar பாரி Leelai - தங்கத் Guthirai வாகனம்

மே 3, 2017 - புதன்கிழமை - சைவ Samaya Sthabitha Varalatru Leelai - ரிஷப வாகனம்

மே 4, 2017 - வியாழக்கிழமை - Nantheekeshwarar, Yaali வாகனம்

மே 5, 2017 - வெள்ளிக்கிழமை - ஸ்ரீ மீனாட்சி Pattabhishekam - வெள்ளித் ஸிம்ஹாஸன உலா

மே 6, 2017 - சனிக்கிழமை - ஸ்ரீ மீனாட்சி Digvijayam - இந்திரன் விமானத்தின் உலா

* மே 7, 2017 - ஞாயிறு - ஸ்ரீ மீனாட்சி Sundareshwarar Thirukalyanam (வான திருமண) * யானை வாகனம், புஷ்பா Pallakku

* மே 8, 2017 - திங்கட்கிழமை - திரு தெர் - Therottam * (ரத உற்சவம், தேர், தேர் திருவிழா) - Sapthavarna Chapram

மே 9, 2017 - செவ்வாய்க்கிழமை - தீர்த்தம்; வெள்ளித் Virutchaba Sevai

* கள்ளழகர் (Kallalagar) *

மே 9, 2017 - செவ்வாய்க்கிழமை - Thallakulathil Edhir Sevai

மே 10, 2017 - புதன்கிழமை - ஸ்ரீ கள்ளழகர் வைகை Aatril Ezhuntharural * - 1000 Ponsaprathudan - இரவு Saithyobacharam வண்டியூர் மணிக்கு

மே 11, 2017 - வியாழக்கிழமை - Thirumalirunsolai ஸ்ரீ கள்ளழகர் - வண்டியூர் Thenur மண்டபம் - சேஷ வாகனம் மார்னிங் - மதியம் கருடன் வாகனம் -
Manduga மகரிஷி க்கான மோட்சத்தை - இரவு Ramarayar மண்டபம் Dasavathara கட்சி

மே 12, 2017 - வெள்ளிக்கிழமை - காலை Mohanaavatharam - இரவு கள்ளழகர் புஷ்பா Pallakku மைசூர் மண்டபம் Thirukollam

மே 13, 2017 - சனிக்கிழமை - ஸ்ரீ கள்ளழகர் திருமலை Eluntharura
-----------------------------------------
படித்தேன்; பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
=========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

25.4.17

நோய்களைக் குணப்படுத்தும் காய்கறிகள்!!!


நோய்களைக் குணப்படுத்தும் காய்கறிகள்!!!

Health Tips

*12 காய்கறிகளை* கொண்டு அனைத்து நோய்களையும் குணப்படுத்தமுடியும்

Kidney Failure : *கத்திரிக்காய்*
Paralysis : *கொத்தவரங்காய்*
Insomnia : *புடலங்காய்*
Hernia : *அரசாணிக்காய்*
Cholesterol : *கோவைக்காய்*
Asthma : *முருங்கைக்காய்*
Diabetes : *பீர்கங்காய்*
Arthritis : *தேங்காய்*
Thyroid : *எலுமிச்சை*
High BP : *வெண்டைக்காய்*
Heart Failure : *வாழைக்காய்*
Cancer : *வெண்பூசணிக்காய்*

உணவு பழக்கம்" பழமொழி வடிவில்🎀*

*💎காட்டுலே புலியும் , வீட்டுலே புளியும் ஆளைக் கொல்லும்.*
*💎போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே*💚
*💎பொங்குற காலத்தில் புளி.. மங்குற காலம் மாங்கா*💚
*💎சீரகம் இல்லா உணவும் , சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது.*💚
*💎 எண்னை குடத்தை சுற்றிய எறும்பு போல*💚
*💎 தன் காயம் காக்க வெங்காயம் போதும்*💚
*💎வாழை வாழ வைக்கும்*💚
*💎அவசர சோறு ஆபத்து*💚
*💎ஆறிய உணவு மூட்டு வலி உண்டாக்கும்*💚
*💎இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு*💚
*💎ரத்த கொதிப்புக்கு அகத்திக் கீரை*💚
*💎இருமலை போக்கும் வெந்தயக் கீரை*💚
*💎உஷ்ணம் தவிர்க்க கம்பங் களி*💚
*💎கல்லீரல் பலம் பெற கொய்யாப் பழம்*💚
*💎குடல் புண் நலம் பெற அகத்திக்கீரை*💚
*💎கொலஸ்ட்ரால் குறைக்க பன்னீர் திராச்சை*💚
*💎சித்தம் தெளிய வில்வம்*💚
*💎 சிறுநீர் கடுப்புக்கு அன்னாசி*💚
*💎சூட்டை தணிக்க கருணை கிழங்கு*💚
*💎ஜீரண சக்திக்கு சுண்டக்காய்*💚
*💎தலை வலி நீங்க முள்ளங்கி சாறு*💚
*💎தேனுடன் இஞ்சி ரத்தத் தூய்மை*💚
*💎பூண்டில் இருக்கு பென்சிலின் சக்தி*💚
*💎மூல நோய் தீர வாழைப்பூ கூட்டு*💚
*💎வாந்திக்கு மருந்து மணத்தக்காளி*💚
*💎வாத நோய் தடுக்க அரைக் கீரை*💚
*💎வாய் துர்நாற்றம் தீர்க்க ஏலக்காய்*💚
*💎பருமன் குறைய முட்டைக்கோஸ்*💚
*💎பித்தம் தணிக்க நெல்லிக்காய்*💚
*உணவு மருந்தாக இருக்க வேண்டும் இல்லாவிட்டால் மருந்தே நமக்கு உணவாகும் நிலைமை உருவாகும்”*💚
*🎀நலம் உடன் வாழ்வோம்...
=============================================================
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

24.4.17

இறந்துகொண்டிருக்கும் தன் அப்பாவைப் பற்றி எழுத்தாளர் சுஜாதா எழுதியது!!!!


இறந்துகொண்டிருக்கும் தன் அப்பாவைப் பற்றி எழுத்தாளர் 
சுஜாதா எழுதியது!!!!

அப்பா, அன்புள்ள அப்பா”

இறந்துகொண்டிருக்கும் தன் அப்பாவைப் பற்றி எழுத்தாளர் சுஜாதா எழுதி இருப்பது ஒரு அற்புதம்!

செய்தி வந்த உடனே பஸ் பிடித்து சேலம் போய்ப் பார்த்தால் அப்பா படுக்கையில் உட்கார்ந்திருந்தார். “எங்கே வந்தே?” என்றார்.

“உனக்கு உடம்பு சரியில்லைன்னு” என்று மழுப்பினேன். “நேற்று வரை சரியில்லாமல்தான் இருந்தது. டாக்டர்கள் என்னமோ பண்ணி உட்கார வைத்து விட்டார்கள். சாப்ட்டியா?” என்றார். “எனக்கு என்ன வாங்கிண்டு வந்தே?”

“என்னப்பா வேணும் உனக்கு?”

“உப்பு பிஸ்கட். கொஞ்சம் பாதாம் அல்வா. அப்பறம் ஒரு சட்டை வாங்கிக் கொடுத்து விட்டுப் போ.”

சட்டையைப் போட்டுவிட்டதும் “எப்படி இருக்கேன்?” என்றார்.

பல்லில்லாத சிரிப்பில் சின்னக் குழந்தை போலத்தான் இருந்தார்.

நர்ஸ் வந்து “தாத்தா உங்க மகன் கதைகள் எல்லாம் படிச்சேன். ரொம்ப இன்டெலிஜெண்ட்” என்றதற்கு “நான் அவனை விட இன்டெலிஜெண்ட்” என்றார்.

பேப்பர் பேனா எடுத்து வரச் சொல்லி “உன் முன்னோர் யார் என்று அபபுறம் தெரியாமல் போய் விடும்” என்று வம்சாவழியைச் சொல்லி எழுதிக் கொள்ளச் செய்தார். ஞாபகம் தெளிவாக இருந்தது. முதன் முதன் முதல் திருவாரூரில் நூறு ரூபாய் சம்பளத்தில் பதவியேற்ற தேதி சொன்னார். கணக்கம்பாளையம் பின்கோடு நம்பர் சொன்னார். “பழைய விஷயங்கள் எல்லாம் ஞாபகம் இருக்கிறது. சமீப ஞாபகம்தான் தவறிப்போகிறது. நீ வந்தால் கேட்கவேண்டும் என்று ஏதோ ஒன்று. என்ன என்று ஞாபகம் இல்லை. ஞாபகம் வந்ததும் ஒரு காகிதத்தில் குறித்து வைக்கிறேன்”

“அப்பா உனக்கு எத்தனை பென்ஷன் வருகிறது தெரியுமோ?”

“தெரியும். ஆனால் பணத்தில் சுவாரஸ்யம் போயவிட்டது. எத்தனை இருந்தால் என்ன? நீங்கள் எல்லாம் என்னைக் காப்பாற்றாமலா போவீர்கள்?”

“ஏதாவது படித்துக்க காட்டட்டுமா அப்பா?”

“வேண்டாம். நிறையப் படித்தாயிற்று. இப்போது அதெல்லாம் எதற்கு என்று ஒரு அலுப்பு வந்து விட்டது. நீ போ. உனக்கு எத்தனையோ சோலி இருக்கும். அமமாவின் வருஷாப்திகம் ஏப்ரல் ஒண்ணாம் தேதி வருகிறது. அப்போது வநதால் போதும். நான் படுத்துக் கொள்ளட்டுமா? களைப்பாக இருக்கிறது. காலையில் போவதற்குள் ஒரு முறை சொல்லிவிட்டுப் போ” என்றார்.

காலை புறப்படும்போது தூங்கிக் கொண்டிருந்தார்.

பெங்களூர் திரும்பி வந்து ஒரு வாரத்துககுள் மறுபடி சீரியஸ் என்று தந்தி வந்தது. என்.எஸ் பஸ்ஸில் “என்ன ஸார் அடிக்கடி சேலம் வர்றிங்க?”

“எங்கப்பா சீரியஸா இருக்கார்ப்பா.”

“ஓஹோ அப்படிங்களா? டேய் அந்த மல்லி மூட்டையை பாத்து இறக்குங்கடா.”

ஸ்பெஷல் வார்டில் அவரைப் பார்த்து திடுக்கிட்டேன். படுக்கையில் கண் மூடிப் படுத்திருந்த முகத்தில் தாடி. காலில் பட்டர்ஃப்ளை ஊசி போட்டு சொட்சொட்டென்று ஐவி க்ளுக்கோஸ் உள்ளே போய்க்கொண்டிருந்தது. சுவாச மூக்கில் ஆக்ஸிஜனும் ஆஸ்பத்திரி வாசனையும் வயிற்றைக் கவ்வியது.

கண்ணைக் கொட்டிக் கொட்டிக் கண்ணீரை அடக்கிக் கொண்டு “அப்பா அப்பா” என்கிறேன். கண்ணைத் திறக்கிறார் பேசவில்லை. “நான்தான் வந்திருக்கிறேன்” என்று கையைப் பற்றுகிறேன். பேசும் விருப்பம் உதடுகளில் தவிக்கிறது. கையை மெல்லத் தூக்கி மூக்கில் இருக்கும் குழாய்களை அகற்றப் பார்க்கிறார். தோற்கிறார்.

“நீ போனப்புறம் ஒரு நாளைக்கு சரியா இருந்தார் அதுக்கப்புறம் இப்படி மறுபடி…”

படுக்கையில் பூஞ்சையாக நெற்றியைச் சுருக்கிகொண்டிருக்கும் அப்பாவைப் பார்க்கிறேன். இவரா ஆயிரம் மைல் தனியாகக் கார் ஓட்டிக் கொண்டு சென்றவர்? இவரா மின் வாரியத்தை தன் டிஸிப்ளினால் கலக்கியவர் “நல்ல ஆபிஸர்தான் ஆனா கொஞ்சம் முன்கோபிங்க” இவரா அணைக்கட்டின் பாரப்பெட் சுவரின் மேல் ஏறிக் கொண்டு விளிம்பில் ஒரு ஃபர்லாங் நடந்தவர்? “என் வில் பவரை டெஸ்ட் பண்ணிப் பார்ககணும் போலிருந்தது” இன்ஜினியரிங் படிப்பையும் இளம் மனைவியையும் விட்டுவிட்டு காஙகிரசில் சேருகிறேன் என்று காணமால் போனவர் இவரா? “ஐ வாஸ் கிரேஸி தட் டைம்”

மேல் நர்ஸ் வந்து அவரை உருட்டி முதுகெல்லாம் யுடிகொலோனும் பேபி பவுடரும் போடுகிறார்.- “பெட்ஸோர் வந்துரும் பாருங்க.”

ஸ்டாஃப் வந்து பக்கத்துககு ஒரு ஊசி கொடுத்து “நீங்கதான் ரைட்டர்ங்களா?” என்கிறார். நான் ஆஸ்பத்திரியைத் திகைத்துப் போய்ப் பார்க்கிறேன்.

ஆஸ்பத்திரியிலிருந்து தப்பிப்பதைப் பற்றி ஸர்வைவல் புத்தகங்கள் ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார்கள். டாக்டர்கள் எல்லோரும் நல்லவர்கள். ஆனால் ஸ்பெஷலிஸ்டுகள்.

“ஒரு ஸிடி ஸ்கான் எடுத்துரலாமே டாக்?”

“முழுங்கறதுக்கு ரொம்ப கஷ்டப்படறார். ஒரு பேரியம் மீல் கொடுத்துப் பார்த்துரலாம். அப்றம் ஒரு ஆன்ஜியோ.” “ஃப்ளுயிட் ரொம்ப கலெகட் ஆயிருச்சு. புட் ஹிம் ஆன் ஹெவி டோஸ் ஆஃப் லாஸிக்ஸ்!”

எல்லா டாக்டர்களுமே திறமைசாலிகள்தான், நல்ல நோக்கமுள்ளவர்கள்தான், ஆனால்…

ராத்திரி முழுக்க அவர் அருகில் கீழே படுத்திருக்கிறேன். தூக்கமில்லை. கொஞ்ச நேரம் வராந்தாவில் உட்கார்ந்து காற்று வாங்குகிறேன். கான்க்ரீட் மேடையில் வேப்ப மரம் முளைத்திருக்கிறது. காகங்கள் ஸோடியம் விளக்குகளைச் சூரியன் என்று குழம்பிப் போய் இரை தேடச் செல்கின்றன. இங்கிருந்து அப்பா தெரிகிறார். அசையாமல் படுத்திருக்கிறார். முகத்தில் வேதனை எழுதியிருக்கிறது. கூப்பிடுகிறாரா? கிட்டப் போய்க் கேட்கிறேன்.

“என்னப்பா?”

“போதும்ப்பா என்னை விட்டுருப்பா” என்று மெல்லச் சொல்கிறார். வில்லியம் ஹண்ட்டரின் கட்டுரை ஞாபகம் வருகிறது.

If I had strength enough to hold a pen, I would write how easy and pleasant it is to die.

பொய்!

ஆனால் இவர் அவஸ்தைப்பட்டால் எனக்கு அபத்தமாகத்தான் படுகிறது. இவர் செய்த பாவம் என்ன? ப்ராவிடணட் பண்டில் கடன் வாங்கி பையன்களைப் படிக்கவைத்ததா? அவர்களுக்கு வரதட்சணை வாங்காமல் கல்யாணம் செய்து வைத்ததா? ஏழை உறவினர்களுக்கும் ஆசிரியருக்கும் மாசாமாசம் பென்ஷனிலிருந்து பணம் அனுப்பியதா? குடும்ப ஒற்றுமைக்காகப் பாடுபட்டதா? பிரபந்தத்தில் ஒரு வரி விடாமல் மனப்பாடமாக அறிந்ததா?

காலை ஐந்து மணிக்கு பக்கத்தில் இருக்கும் சர்ச் எழுந்து ஒலி பெருக்கி மூலம் ஏசுநாதரைப் பேசுகிறது. அப்பாவுக்கு இது கேட்குமா? ரேடியோ சிலோனில் சுவிசேஷத்தை தவறாத ஆர்வததுடன் கேட்கும் தீவிர வைஷ்ணவர் “பைபிளில் பல இடஙகளில் நம்ம சரணாகதி தத்துவம் சொல்லியிருக்கு தெரியுமோ? சில இடஙகளில் ஆழ்வார் பாடல்களுக்கும் அதற்கும் வித்தியாசமே தெரிவதில்லை” பங்களூரில் குரான் முழுவதையும் படிக்கச் சொல்லிக் கேட்டது நினைவுக்கு வருகிறது.

ஆஸ்பத்திரி புது தினத்துக்குத் தயாராகிறது.மணி அடித்துவிட்டு சில்லறை கொடுக்காதவர்களை எல்லாம் விரட்டுகிறார்கள்.
 டாக்டர் ரவுண்ட்ஸ் வருகிறார். “இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி இருப்பார்னு சொல்லமுடியாது. இன்னிக்கு கொஞ்சம் இம்ப்ருவ்மெண்ட் தெரிகிறது. கன்னத்தைத் தட்டி “நாக்கை நீட்டுங்கோ.” மெல்ல நாக்கை நீட்டுகிறார்.

“பேர் சொல்லுங்கோ”

“சீனிவாசரா..”

“அஃபேஸியா ஆர்ட்டீரியோ ஸ்கிலிரோஸிஸ். ஹி இஸ் மச்
பெட்டர் நௌ. டோண்ட் ஒர்ரி!” புதுசாக பல்மனரி இடீமா
(pulmonary oedema) என்று ஒன்று சேர்ந்துகொண்டு அவரை வீழ்த்தியது.

சென்ற மாதம் இருபத்திரண்டாம் தேதி பிற்பகல் மூன்று மணிக்கு இறந்து போனார். உடன் அப்போது இருந்த சித்தி “கண் வழியா உசிர் போச்சு “என்றாள். பம்பாயிலிருந்து தம்பி வரக் காத்திருந்து மூன்று பிள்ளைகளும் அவரைச் சுற்றி நின்று கொண்டு அவர் மார்பைக் கண்ணீரால் நனைத்தோம். வீட்டுக்குக் கொண்டு வந்ததும் வாசலில் நெருப்புக் கொண்டு வைத்தார்கள். நண்பர்கள் வந்தார்கள். ஆஸபத்திரி வண்டியில் எடுத்துக் கொண்டு போய் “வீட்டில் ஒருவரில்லை வெட்டவெளியாச்சுதடி காட்டில் எரித்த நிலா கனவாச்சே கண்டதெல்லாம்” என்று முழுமையாக எரித்தோம்.

காலை எலும்புகளைப் பொறுக்கிச் சென்று பவானி போய்க் கரைத்தோம். இந்து பேப்பரில் இன்ஸர்ஷன் கொடுத்தோம்.
“மாலை மலர்ல செய்தி வந்திருந்ததே பார்த்திங்களோ?”

உறவுக்காரர்கள் வந்தார்கள். சினிமாவுக்குப் போனார்கள். வாத்தியார் கருட புராணத்தின் பிரதியை என்னிடம் கொடுத்தார். பிராமண போஜனம் செய்விக்காதவர்களை எல்லாம் சிரித்துக்கொண்டே கொடுமைப்படுத்திக் கொண்டிருந்தார்கள். ஏதோ ஒரு நதியைக் கடப்பதற்கு கோதானம் இல்லையென்றால்
ஒரு தேங்காய் கிஞ்சித்து ஹிரண்யம்! அப்பா மரணத்தைப் பற்றி
ஒரு முறை சொன்னது ஞாபகம் வருகிறது “அது ஒரு முற்றுப் பள்ளி. We cease to exist. எபிக்யுரஸ் சொன்னதை மறுபடி படி!”

“Death is nothing to us since so long as we exist death is not with us but when death comes, we do not exist”.

ஒன்பதாம் நாள்… பத்தாம் நாள்… பதினோராம் நாள்… பிரேதத்தின் தாகமும் தாபமும் தீருவதற்காக அதன் ரெப்ரசெண்டேடிவ்வாக வந்த “ஒத்தன்” என்னைப் பார்த்து சிரித்து “நீங்க எழுதின ரத்தத்தின் நிறம் சிவப்பு குங்குமத்தில நன்னா இருக்கு ஸார் அடுத்த தடவை ஒரு ஸோஷல் தீமா எடுததுண்டு எழுதுங்களேன்!”

சேலம் கடைத் தெருவில் பத்தாறு வேஷ்டிகளுக்கும சொம்புகளுக்கும் அலைந்தோம். ஸ்ரீரங்கத்திலிருந்து ப்ரபந்த கோஷ்டி வந்து எங்கள் தலையில் பரிவட்டம் கட்டி நாலாயிரமும் ராமானுஜ நூற்றந்தாதியும் சரம ஸ்லோகமும் சொல்லிவிட்டு – “எனக்கினி வருத்தமில்லை” – இரண்டு மணி பஸ் பிடித்துப் போனார்கள்.

“அவ்வளவுதாம்பா பிள்ளைகள்ளாம் சேர்ந்துண்டு அவரை பரமபதத்தில ஆசார்யன் திருவடி சேர்த்துட்டேள். இனி அந்த ஆத்மாவுக்கு ஒரு குறையும் இல்லை! மாசிய சோதம்பத்தை மட்டும் ஒழுங்கா பண்ணிடுஙகோ”.

சுபஸ்வீகாரம். எல்லோரும் பந்தி பந்தியாக சாப்பிடுகிறோம். எட்டணா தட்சணைக்காக வாசல் திண்ணையில் ஒன்பது பேர் காலையிலிருந்து காத்திருக்கிறார்கள். காஷுவாலிடியில் எனக்கு ட்ரங்க் டெலிபோன் வருகிறது.தொடர்கதைக்கு டைட்டில் கேட்டு. பங்களுர் திரும்பி வருவதற்கு முன் அப்பாவின் அந்த கடைசிக் குறிப்பைப் பார்க்கிறேன்.

Ask Rangarajan about Bionics!

ஓவர்சீஸ் பாங்கில் மீசையில்லாத என்னைப் பார்த்து சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்கிக் கொள்கிறார்கள். அப்பாவின் ‘எய்தர் ஆர் சர்வைவர்’ அக்கவுண்டில் அவர் தகனத்துககு ஆன செலவு முழுவதும் இருக்கிறது!

சுஜாதா
------------------------------------------
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

21.4.17

Astrology Lesson: நீங்களும் கஜகேசரி யோகமும்


Astrology Lesson: நீங்களும் கஜகேசரி யோகமும்

எனக்கு வரும் மின்னஞ்சல்களில், சிலர்.,சார், யோகங்களைப்
பற்றி எழுதுங்கள் என்று கேட்டுகொண்டேயுள்ளார்கள். அவர்கள் எல்லாம் புதிதாக  வகுப்பறைக்கு வந்தவர்கள். ஐந்தாண்டுகளுக்கு முன்பே யோகங்களைப் பற்றி நிறைய எழுதியுள்ளேன். பிறகு சிலகாரணங்களுக்காக அவற்றை நீக்கி மேல் வகுப்பிற்கு
கொண்டு சென்றேன்.

அந்த அன்பர்களுக்காக முக்கியமான சில யோகங்களை இங்கே பதிவிட உள்ளேன்.

ஆரம்பப் பதிவாக கஜகேசரி யோகத்தைப் பற்றி இன்று பதிவிட்டுள்ளேன்!
------------------------------------------------------------------
மிகச்சிறந்த யோகங்களில் கஜகேசரி யோகமும் ஒன்று. கஜம் என்றால் யானை. கேசரி என்றால் சிங்கம். யானையின் தோற்றத்தையும், சிங்கத்தின் பலத்தையும் கொடுக்கக்கூடிய யோகம் கஜகேசரி யோகம்.

பெருந்தன்மை, புத்திசாலித்தனம். கெளரவம், பெயர், புகழ், செல்வாக்கு, சொல்வாக்கு, ஆகியவற்றை ஜாதகனுக்கு இந்த
யோகம் கொடுக்கும்.

This yoga gives the native, qualities of a both animals - magnanimous and intelligent 
as an elephant and majestic as a lion. Such people would earn a lot of name and fame in life. A quality of generosity would also be associated with them.


மொத்தம் உள்ள மூன்று சுபக்கிரகங்களில் இரண்டு சுபக்கிரகங்கள் குரு’வும், சந்திரனும் சம்பந்தப்பட்டு ஏற்படுவதால் இந்த யோகத்திற்கு அந்தப் பெயர் வழங்கப்பட்டிருக்கலாம்.

இந்த யோகம் எப்போது உண்டாகும்?

குரு பகவானும், சந்திரனும் ஒருவருடைய ஜாதகத்தில் அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் 1, 4, 7, 10 ஆகிய கேந்திர வீடுகளில் அமர்ந்திருந்தால் இந்த யோகம் உண்டாகும்.

Gaja Kesari Yoga is caused by Moon and Jupiter coming together in a chart by being in 
Kendras (1st, 4th, 7th, or 10th) from each  other.

இந்த யோகம் உள்ள அனைவருக்கும் ஒரே மாதிரிப் பலன் உண்டா?

இல்லை!

அந்த இரு கிரகங்களும் ஜாதகத்தில் அமைந்திருக்கும்
தன்மையைப் பொறுத்துப் பலன் மாறுபடும்.

அவைகள் நீசம் பெறாமலும், பகை வீட்டில் இல்லாமலும்,
வக்கிரம் பெறாமலும், அஸ்தமனமாகாமலும், தீய கிரகங்களின் கூட்டணி மற்றும் பார்வை  பெறாமலும் இருக்க வேண்டும்.
அதோடு அவைகளில் இரண்டில் ஒன்று ஜாதகத்தில் 6, 8,12 ஆம் வீடுகளில் உட்கார்ந்திருக்கக்கூடாது.

This yoga depends on the strength, position and house lordship of the two planets involved - Moon and Jupiter.

The yoga would also be best shown in life if both these planets are in their exaltation 
sign and are at an angle not just from each other but from Lagna as well. 
Neechabhanga Chandra and Guru would be considered good. The two planets 
would need to be benefic in the charts and suitably disposed to the lord of Lagna 
as well. They themselves should be free from any negative aspect, particularly Rahu 
and Saturn should not be associated with Moon.

This yoga would not work if Jupiter is in regression - as benefic planets become considerably weaker when they are retrograde. Moon and Jupiter should not be in 
neech awastha or in combust state. If that is the case, the effects of this yoga are nullified and the person would lead a fairly ordinary life.

அப்படி இருந்தால் என்ன அளவில் (ratio) பலன்?

அப்படி இருந்தால் என்ன அளவில் (ratio) பலன் என்பதைத் தருமியிடம்தான் கேட்கவேண்டும்! அவர்தான் திருவிளையாடல் தருமி!

எப்போது பலன் கிடைக்கும்?

குரு மற்றும் சந்திரனின் மகா தசைகளிலும், புத்திகளிலும் பலன்கள் கிடைக்கும்.

உங்கள் ஜாதகத்தில் உங்களுக்கு கஜகேசரி யோகம் உள்ளதா என்று பாருங்கள்!

அடுத்த யோகப் பாடம் எப்போது?

28-4-2017 வெள்ளிக்கிழமையன்று. அதுவரை பொறுத்திருங்கள்!!!!

அன்புடன்
வாத்தியார்
========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

20.4.17

தெளிவு எப்போது வரும்?

தெளிவு எப்போது வரும்?

“பக்குவம்” என்னும் தலைப்பில் கவியரசர் கவியரசு கண்ணதாசன் அவர்கள் எழுதியது!!!

🌼கல்லூரியில் படிக்கும்போது, ஒரு இளைஞனுக்கு எல்லாமே வேடிக்கையாகத் தெரிகிறது.

🌼கல்யாணமாகிக் குழந்தை குட்டிகளோடு அவன் வாழ்க்கை நடத்தும்போது, ஒவ்வொரு வேடிக்கைக்குள்ளும் வேதனை இருப்பது அவனுக்குப் புரிகிறது.

🌼இளமைக் காலத்து ஆரவாரம், முதுமை அடைய அடையக் குறைந்து வருகிறது.

🌼ஒவ்வொரு துறையிலும், நிதானம் வருகிறது.

🌼இளம் பருவத்தில் இறைவனைப்பற்றிய சிந்தனை அர்த்த புஷ்டியற்றதாகத் தோன்றும்.

🌼வாழ்வில் அடிபட்டு வெந்து, நொந்து ஆண்டவனைச் சரணடைய வரும்போது, அவனது மாபெரும் இயக்கம் ஒன்று பூமியில் நடைபெறுவது புத்தியில் படும்.

🌼பக்குவமற்றவனுக்கு நாத்திகம், அராஜகம் எல்லாமே குஷியான தத்துவங்கள்.

🌼பக்குவம் வர வர, ரத்தம் வற்ற வற்ற இந்தத் தத்துவங்கள் எல்லாம் மறுபரிசீலனைக்கு வரும்.

🌼நடைமுறைக்கு ஒத்த சிந்தனை, பக்குவப்பட்ட பிறகே தோன்றும்.

🌼இருபது வயது இளைஞனைப் பெண் பார்க்கச் சொன்னால் எல்லாப் பெண்களுமே அவன் கண்களுக்கு அழகாய்த்தான் தெரிவார்கள்.

🌼நாற்பது வயதிற்கு மேலேதான், நல்ல பெண்ணைத் தேர்ந்தெடுக்கும் தெளிவு அவனுக்கு வரும்.

🌼கல்லூரி மாணவனைப் படிக்கச் சொன்னால் காதல் கதையையும், மர்மக் கதையையும் படிப்பதில்தான் அவன் கவனம் செலுத்துவான்.

🌼காதலித்துத் தோற்றபின்தான், அவனுக்குப் பகவத் கீதையைப் படிக்கும் எண்ணம் வரும்.

🌼விளையாட்டுத்தனமான மனோபாவம் பிடிவாதத்திற்குப் பெயர் போனது.

🌼எதையும் சுலபத்தில் ஏற்றுக்கொண்டு `அதைவிட உலகமே கிடையாது’ என்று வாதாடும்.

🌼எதிர்த்தால் வேரோடு பிடுங்க முயலும்.

🌼பக்குவமற்ற நிலை என்பது இரண்டு `எக்ஸ்ட்ரீம்’ நிலை.

🌼ஒன்று, இந்த மூலையில் நின்று குதிக்கும், அல்லது அந்த மூலையில் இருந்து குதிக்கும்.

🌼பக்குவ நிலைக்குப் பெயரே நடு நிலை.

🌼மேலை நாட்டில் ஒரு பழமொழி உண்டு.

🌼`இருபது வயதிற்குள் ஒருவன் கம்யூனிஸ்ட் ஆகவில்லை என்றால் அவன் அப்பாவி; முப்பது வயதிற்கு மேலும் அவன் கம்யூனிஸ்டாக இருந்தால் அவன் மடையன்!’

🌼இதுதான் அந்தப் பழமொழி.

🌼பரபரப்பான பருவ காலத்தில் கோயிலுக்குப் போனால் தெய்வம் தெரியாது என்பது மட்டுமல்ல, அங்கே சிலையில் இருக்கும் அழகுகூடத் தெரியாது.

🌼ஐம்பது வயதில் கோயிலுக்குப் போனால், சிலையில் இருக்கும் ஜீவனும் தெரியும்.

🌼இதில் வெறும் பருவங்களின் வித்தியாசம் மட்டுமில்லை.

🌼பக்குவத்தின் பரிணாம வளர்ச்சியும் அடங்கியிருக்கிறது.

🌼ஏன், உடம்பேகூட இருபது வயதில் எந்த உணவையும் ஜீரணிக்கிறது.

🌼நாற்பதிற்கு மேலேதானே `இது வாய்வு’, `இது பித்தம்’, என்கிற
புத்தி வருகிறது.

🌼`டென்ஷன்’ என்ற ஆங்கில வார்த்தைக்குச் சரியான தமிழ் வார்த்தை எனக்குப் புரியவில்லை.

🌼`முறுக்கான நிலை’ என்று அதைக் கூறலாம்.

🌼அந்த நிலையில் `எதையும் செய்யலாம், எப்படியும் செய்யலாம்’ என்கிற `திமிர்’ வருகிறது.

🌼அதில் நன்கு அனுபவப்பட்ட பிறகு, `இதைத்தான் செய்யலாம்’, `இப்படித்தான் செய்யலாம்’ என்ற புத்தி வருகிறது.

🌼இனி விஷயத்திற்கு வருகிறேன்.

🌼`ஞான மார்க்கப் பக்குவமும் அப்படிப்பட்டது தான்’ என்பதைக் கூறவே இவற்றைக் கூறினேன்.

🌼உள்ளம் உடலுக்குத் தாவி, உடல் ஆன்மாவுக்குத் தாவிய நிலையே, பக்குவப்பட்ட நிலை.

🌼தேளைப் பிடிக்கப் போகும் குழந்தை, அதையே அடிக்கப் போகும் மனிதனாக வளர்ச்சியடைகிறது.

🌼அதற்குப் பிறகு, அந்தத் தேளிடமேகூட அனுதாபம் காட்டும் ஞானியாக அந்த மனிதன் மாறி விடுகிறான்.

🌼இன்றைய பக்குவம் இருபதாண்டுகளுக்கு முன் எனக்கு இருந்திருந்தால், எனது அரசியலில்கூட முரண்பாடு தோன்றியிருக்காது.

🌼வெறும் உணர்ச்சிக் கொந்தளிப்பில், நன்மை தீமைகளை
உணரும் நிதானம் அடிபட்டுப் போகிறது.

🌼ஆரம்பத்தில் `இதுதான் சரி’ என்று ஒன்றை முடிவு கட்டிவிட்டு, பின்னால் `இது தவறு’ என நாமே சொல்ல வேண்டிய நிலை வருகிறது.

🌼சரியாகக் கணக்கிட்டால், மனித வாழ்க்கைக்கு மூன்று கட்டங்கள்.

🌼முதற் கட்டம் ஒன்றுமே புரியாத உணர்ச்சிக் கூத்து.

🌼இரண்டாவது கட்டம் ஏதோ இருப்பதாக, ஆனால் தெளிவாகத் தெரியாத, மயங்கிய நிலை.

🌼மூன்றாவது கட்டம் பிரபஞ்சம் எவ்வளவு பெரியது என்றும், நமக்கும் மேலே ஒரு நாயகன் இருக்கிறான் என்றும் முழு
நம்பிக்கை கொண்ட ஞானநிலை.

🌼இந்த மூன்றாவது நிலையை முதற் கட்டத்திலேயே
எய்தியவர்கள் பலர் உண்டு.

🌼சுவாமி விவேகானந்தரைப் போல, வளைந்து கொண்டே
வளர்ந்த மரங்கள் உண்டு.

🌼அவர்கள் எல்லாம் பூர்வ ஜென்ம புண்ணியத்தால் அந்த
நிலையை எய்தியவர்கள்.

🌼மற்றவர்கள், அனுபவத்தின் மூலமாகத்தானே பக்குவ
நிலையை அடைய வேண்டியிருக்கிறது!

🌼எகிப்து மன்னன் பாரூக், பட்டம் துறந்து பாரிஸ் நகரில் சீரழிந்த போதுதான் `மனிதாபிமானம்’ என்றால் என்ன என்பதை உணர முடிந்தது.

🌼ஆனால், அரண்மனை வாசத்திலேயே அதனை உணர்ந்து கொண்ட சித்தார்த்தன், கெளதம புத்தரான வரலாறும்
நம்முடைய நாட்டிலே உண்டு.

🌼தூக்கத்திற்கும் விழிப்பிற்கும் நடுவே தடுமாறும் மனிதர்கள் நம்முடைய நாட்டிலே மிக அதிகம்.

🌼ஒன்று, தூங்குவதென்றால் நிம்மதியாகத் தூங்கி விடவேண்டும்.

🌼விழிப்பதென்றால் சுறுசுறுப்பாக விழித்துக் கொள்ள வேண்டும்.

🌼தூக்கமும் விழிப்புமாக இருப்பதால் தூக்கத்தின் பலனும்
கிட்டாது, விழிப்பின் பலனும் கிட்டாது.

🌼`மனப்பக்குவம்’ என்பது அனுபவங்கள் முற்றிப் பழுத்த நிலை.

🌼அந்த நிலையில் எதையுமே `இல்லை’ என்று மறுக்கின்ற
எண்ணம் வராது.

🌼`இருக்கக்கூடும்’ என்றே சொல்லத் தோன்றும்.

🌼எனது நண்பரும் முன்னாள் அமைச்சருமான தோழர் நெடுஞ்செழியன் அவர்கள், ஒரு கட்டுரையில் “நாஸ்திகன் தன் கொள்கையில் தெளிவாகவே இருக்கிறான்” என்றும், “ஆஸ்திகன் தான் தடுமாறுகிறான்” என்றும், “கடவுள் இல்லை என்பதை நாஸ்திகன் உறுதியாகச் சொல்லுகிறான்” என்றும், “உண்டு என்பதற்கு ஆஸ்திகன் ஒழுங்காக விளக்கம் தர முடியவில்லை” என்றும் எழுதியிருக்கிறார்.

🌼`இல்லை’ என்று சொல்பவனுக்கு எந்தப் புத்தியும் தேவையில்லை.

🌼எதைக் கேட்டாலும் `இல்லை’ என்று சொல்ல முட்டாளாலும் முடியும்.

🌼ஆனால் `உண்டு’ என்று சொல்பவனுக்குத்தான் அதை நிலைநாட்டப் போதுமான அறிவு தேவைப்படும்.

🌼“பூமிக்குக் கீழே என்ன இருக்கிறது” என்று கேட்டால் எதுவுமே இல்லை, என்று குழந்தைகூடப் பதில் சொல்லிவிட முடியும்.

🌼ஆனால், “அடியிலே நீர்; அதன் கீழே நெருப்பு” என்று சொல்ல விஞ்ஞான அறிவு வேண்டும்.

🌼பாத்திரம் செய்பவனுக்குப் பல நாள் வேலை; போட்டு உடைப்பவனுக்கு ஒரு நாள் வேலை.

🌼நாஸ்திகன் எப்போதுமே தெளிவாக இருக்க முடியும்.

🌼காரணம் எதைக் கேட்டாலும், எந்திரம் போல் `இல்லை
இல்லை’ என்று மட்டுமே அவன் பதில் சொல்லப் போகிறான்.

🌼நன்றாகத் தலையாட்டத் தெரிந்த அழகர் கோயில் மாட்டை
விடவா அவன் உயர்ந்து விட்டான்.

🌼ஆனால், ஆஸ்திகனோ, விபூதிக்கு ஒரு காரணம், குங்குமத்திற்கு ஒரு காரணம், திருமண்ணுக்கு ஒரு காரணம் சொல்லியாக வேண்டும்.

🌼சொல்வது மட்டுமல்ல, எதிரியையும் ஒப்புக் கொள்ள வைக்க வேண்டும்.

🌼ஒன்றை ஒப்புக்கொண்டு, அதன் உட்கீற்றுகளை விவரிப்பதற்குத் தகுந்த பக்குவம் தேவை.

🌼ஆஸ்திகன், பிரபஞ்சத்தின் தோற்றம் முதல் இயக்கம் வரையில் கண்டுபிடிக்க முயலுகிறான்.

🌼ஜனனம், மரணம் இரண்டையும் அவன்தான் ஆராய்கிறான்.

🌼அப்படி ஆராய்ந்து, இந்து வேதாந்திகள் செய்த முடிவை
இதுவரை விஞ்ஞானம் தாண்டியதில்லை.

🌼வேதங்களின் முடிவையே, விஞ்ஞானம் தன் முடிவாக ஏற்றுக் கொண்டிருக்கிறது.

🌼ஆனால், விஞ்ஞானமும் அறியாமல், மெய்ஞ்ஞானமும் அறியாமல், அஞ்ஞானத்தைக் கொண்டு உழலும் நாஸ்திகனுக்கு, எல்லாம் இயற்கையாக நடக்கின்றன’ என்று சொல்லத் தெரிகிறதே தவிர, அந்த இயற்கை என்பது என்னவென்று சொல்லத் தெரியவில்லை.

🌼பக்குவ நிலைக்கும், பக்குவமற்ற நிலைக்கும் வேறுபாடு இதுதான்.

🌼“கோயிலுக்குப் போய் ஏன் தேங்காய் உடைக்க வேண்டும்?”

🌼“அப்படிக் கோயிலிலே என்ன இருக்கிறது?” என்று நாஸ்திகன் கேட்கிறான்.

🌼அந்தத் தேங்காயை உடைக்கும் வரையில், `அந்தத் தேங்காய்க்குள் என்ன இருக்கிறது?’ என்பது அவனுக்குத் தெரியுமா?

🌼அதில் வழுக்கையும் இருக்கலாம், முற்றிய காயும் இருக்கலாம்.

🌼ஆகவே, உடைத்த பின்பே காயைக் கண்டு கொள்ளும் மனிதன், உணர்ந்த பின்பு தெய்வத்தைக் காண முடியும் என்பது உறுதி.

🌼`கடவுளே இல்லை’ என்று வாதாடியவன் எவனும் `எனக்கு
மரணமே இல்லை’ என்று வாதாட முடியவில்லையே!

🌼`மரணம்’ என்று உணரப்படும்போதே சிலருக்குப் பக்குவம் வருகிறது.

🌼எனக்குத் தெரிந்த மிகப் பெரிய நாஸ்திகர் கூட தமது அந்திம காலத்தில் யார் கொடுத்த விபூதிகளையும் பூசிக் கொண்டார்கள்.

🌼மரணத்தின் பின் எங்கே போகப் போகிறோம் என்று நிச்சயமாகத் தெரியும் வரை ஈசுவரன் ஒருவன் இருப்பது உறுதி.

🌼நன்கு பக்குவப்பட்டவர்கள், தம் வாழ்நாளிலேயே காணமுடிகிறது.

🌼இப்போதெல்லாம், `போலித்தனம் எது? பொய் எது?’ என்பதைக் கண்டுகொள்ளக்கூடிய தெளிவு எனக்கு வந்து விட்டது.

🌼காரணம், வயது மட்டுமல்ல, பக்குவம்.

🌼செருப்புப் போடாத காலத்தில், மலத்தை மிதித்திருக்கிறேன். அதனால், இப்போது செருப்புப் போடுகிறேன்.

🌼கடலை மாவில் செய்த பலகாரத்தைச் சிறுவயதில் விரும்பிச் சாப்பிட்டேன். இப்போது அது தவறு என்பதை உணருகிறேன்.

🌼என் முன்னால் ஒரு வாதியையும், பிரதிவாதியையும் கொண்டு வந்து நிறுத்தி, `யார் நிரபராதி’ என்று சொல்லச் சொன்னால் அவர்களது வாக்குமூலங்கள் இல்லாமலேயே, நான் அவர்களைக் கண்டுபிடிப்பேன்.

🌼என்னுடைய தீர்க்கதரிசனத்துக்கு முதல் அடிப்படை அறிவல்ல; அனுபவம்.

🌼தலைப்பை மீண்டும் நினைவுபடுத்தினால், அதன் பெயரே `பக்குவம்’.

படித்ததில் கவர்ந்தது. பதிவிட்டுள்ளேன்
அன்புடன்
வாத்தியார்
=====================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

19.4.17

உங்கள் துயரங்களுக்கெல்லாம் மூல காரணம் எது?


உங்கள் துயரங்களுக்கெல்லாம் மூல காரணம் எது?

*ஆசை*

வாழ்க்கை எதிலே ஓடிக் கொண்டிருக்கிறது?

ஆசையிலும் நம்பிக்கையிலுமே ஓடிக் கொண்டிருக்கிறது.

சராசரி மனிதனை ஆசை தான் இழுத்துச் செல்கிறது.

அவன் துக்கத்துக்கெல்லாம் அதுவே காரணமாகிறது. ‘வேண்டும் என்கிற உள்ளம் விரிவடைந்து கொண்டே போகிறது. ‘போதும்’ என்ற மனம் சாகும் வரை வருவதில்லை.

ஐநூறு ரூபாய் நோட்டு பூமியில் கிடந்து, ஒருவன் கைக்கு அது கிடைத்து விட்டால், வழி நெடுக பணம் கிடைக்கும் என்று தேடிக் கொண்டே போகிறான்.

ஒரு விஷயம் கைக்குக் கிடைத்து விட்டால் நூறு விஷயங்களை மனது வளர்த்துக் கொள்கிறது.

ஆசை எந்தக் கட்டத்தில் நின்று விடுகிறதோ, அந்தக் கட்டத்தில் மகிழ்ச்சி ஆரம்பமாகிறது.

சுயதரிசனம் பூர்த்தியானவுடன், ஆண்டவன் தரிசனம் கண்ணுக்கு தெரிகிறது.

ஆனால் எல்லோராலும் அது முடிகிறதா?

லட்சத்தில் ஒருவருக்கே ஆசையை அடக்கும் அல்லது ஒழிக்கும் மனப் பக்குவம் இருக்கிறது.

என் ஆசை எப்படி வளர்ந்தது என்று எனக்கே நன்றாகத் தெரிகிறது.

சிறுவயதில் வேலையின்றி அலைந்த போது “மாதம் ஐயாயிரம் ரூபாயாவது கிடைக்கக் கூடிய வேலை கிடைக்காதா” என்று ஏங்கினேன்.

கொஞ்ச நாளில் கிடைத்தது.

மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பளத்திலே ஒரு பத்திரிகையில் வேலை கிடைத்தது.

ஆறு மாதம் தான் அந்த நிம்மதி.

“மாதம் இருபதாயிரம் ரூபாய் கிடைக்காதா?” என்று மனம் ஏங்கிற்று.

அதுவும் கிடைத்தது. வேறொரு பத்திரகையில் பிறகு மாதம் முப்பதாயிரம் ரூபாயை மனது அவாவிற்று.

அதுவும் கிடைத்தது. மனது ஐம்பதாயிரம் ரூபாய்க்கு தாவிற்று. அது  வளர்ந்தது. பெருகிற்று. யாவும் கிடைத்தன.

இப்பொழுது நோட்டடிக்கும் உரிமையையே மனது கேட்கும் போலிருக்கிறது!

எந்தக் கட்டத்திலும் ஆசை பூர்த்தி அடையவில்லை.

‘இவ்வளவு போதும்’ என்று எண்ணுகின்ற நெஞ்சு, ‘அவ்வளவு’ கிடைத்ததும், அடுத்த கட்டத்திற்குத் தாண்டுகிறதே, ஏன்?

அது தான் இறைவனின் லீலை!

ஆசைகள் அற்ற இடத்தில், குற்றங்கள் அற்றுப் போகின்றன.

குற்றங்களும், பாபங்களும் அற்றுப்போய் விட்டால் மனிதனுக்கு அனுபவங்கள் இல்லாமற் போய் விடுகின்றன.

அனுபவங்கள் இல்லையென்றால், நன்மை தீமைகளைக் கண்டு பிடிக்க முடியாது.

ஆகவே தவறுகளின் மூலமே மனிதன் உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, இறைவன் ஆசையைத் தூண்டி விடுகிறான்.

ஆசையை மூன்று விதமாகப் பிரிக்கிறது இந்து மதம்.

மண்ணாசை!
பொன்னாசை!
பெண்ணாசை!

மண்ணாசை வளர்ந்து விட்டால், கொலை விழுகிறது.

பொன்னாசை வளர்ந்து விட்டால், களவு நடக்கிறது.

பெண்ணாசை வளர்ந்து விட்டால், பாபம் நிகழ்கிறது.

இந்த மூன்றில் ஓர் ஆசை கூட இல்லாத மனிதர்கள் மிகவும் குறைவு.

ஆகவே தான், பற்றற்ற வாழ்க்கையை இந்து மதம் போதித்தது.

பற்றற்று வாழ்வதென்றால், எல்லாவற்றையும் விட்டு விட்டு ஓடிப் போய் சந்நியாசி ஆவதல்ல!

“இருப்பது போதும்; வருவது வரட்டும்: போவது போகட்டும்: மிஞ்சுவது மிஞ்சட்டும்” என்று சலனங்களுக்கு ஆட் படாமலிருப்பதே பற்றற்ற வாழ்க்கையாகும்.

ஆசை, தீமைக்கு அடிப்படையாக இல்லாதவரை, அந்த ஆசை வாழ்வில் இருக்கலாம் என்கிறது இந்து மதம்.

நான் சிறைச்சாலையில் இருந்த போது கவனித்தேன்.

அங்கே இருந்த குற்றவாளிகளில் பெரும்பாலோர் ஆசைக் குற்றாளிகளே.

மூன்று ஆசைகளில் ஒன்று அவனைக் குற்றவாளியாக்கி இருக்கிறது.

சிறைச்சாலையில் இருந்து கொண்டு, அவன் “முருகா, முருகா!” என்று கதறுகிறான்.

ஆம், அவன் அனுபவம் அவனுக்கு உண்மையை உணர்த்துகிறது.

அதனால் தான் “பரம் பொருள் மீது பற்று வை: நிலையற்ற பொருள்களின் மீது ஆசை வராது” என்கிறது இந்துமதம்.

“பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பறைப்
பற்றுக பற்று விடற்கு” - என்பது திருக்குறள்.

ஆசைகளை அறவே ஒழிக்க வேண்டியதில்லை.
அப்படி ஒழித்து விட்டால் வாழ்க்கையில் என்ன சுகம்?

அதனால் தான் ‘தாமரை இலைத் தண்ணீர் போல் என்று போதித்தது இந்து மதம்.

நேரிய வழியில் ஆசைகள் வளரலாம்.

ஆனால் அதில் லாபமும் குறைவு. பாபமும் குறைவு.

ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்று எதிர்பார்த்து ஐநூறு ரூபாய் மட்டுமே கிடைத்தால், நிம்மதி வந்து விடுகிறது.

எதிர் பார்ப்பதைக் குறைத்துக் கொள்: வருவது மனதை நிறைய வைக்கிறது” என்பதே இந்துக்கள் தத்துவம்.

எவ்வளவு அழகான மனைவியைப் பெற்றவனும், இன்னொரு பெண்ணை ஆசையோடு பார்க்கிறானே, ஏன்?

லட்சக்கணக்கான ரூபாய் சொத்துக்களைப் பெற்றவன் மேலும் ஓர் ஆயிரம் ரூபாய் கிடைக்கிற தென்றால் ஓடுகிறானே, ஏன்?

அது ஆசை போட்ட சாலை.

அவன் பயணம் அவன் கையில் இல்லை; ஆசையின் கையில் இருக்கிறது.

போகின்ற வேகத்தில் அடி விழுந்தால் நின்று யோசிக்கிறான் அப்போது அவனுக்கு தெய்வ ஞாபகம் வருகிறது.

அனுபவங்கள் இல்லாமல, அறிவின் மூலமே, தெய்வத்தைக் கண்டு கொள்ளும் படி போதிப்பது தான் இந்து மதத் தத்துவம்.

‘பொறாமை, கோபம்’ எல்லாமே ஆசை பெற்றெடுத்த குழந்தைகள் தான்.

வாழ்க்கைத் துயரங்களுக்கெல்லாம் மூல காரணம் எது வென்று தேடிப் பார்.

ஆசை தான் என்பது உனக்குப் புரிய வரும்!!!!
---------------------------------------------
படித்தேன்: பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
===================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

18.4.17

காக்கா முட்டை கதைக்கு புது விளக்கம்காக்கா முட்டை கதைக்கு புது விளக்கம்

காக்கா முட்டை

இக்காலத்தில் சில குழந்தைகளின், 'ஐக்யூ' பிரமிக்க வைக்கும்படி இருக்கிறது.

சிறு பிள்ளைகளுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியை ஒருவரை அறிமுகம் செய்து வைத்தார் நண்பர் ஒருவர்.

சென்னை, திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், ஆசிரியையாகப் பணி புரியும், அவர் சொன்னது:

சாதாரணமா தனியார் பள்ளிகளில், தமிழை தீண்டத்தகாத மொழியாகப் பார்த்து, ஒதுக்கி வைப்பாங்க.

ஆனா, நான் பணிபுரியும் பள்ளி கொஞ்சம் வித்தியாசமானது; இங்கே, தமிழுக்கும் முக்கியத்துவம் கொடுப்பாங்க.

சமீபத்தில், யூ.கே.ஜி., குழந்தைகளுக்கு, படம் பார்த்து கதை சொல்லும் வகுப்பு எடுத்துட்டு இருந்தேன்.

அதில் ஒரு கதையில், ஆலமரத்தில் கூடுகட்டி, முட்டையிட்டிருக்கும் காக்கையின் முட்டைகளை, அதே மரத்தின் பொந்தில் வசிக்கும் பாம்பு, 'ஸ்வாகா' செய்து வருவதையும், பாம்பை பழிவாங்க நினைக்கும் காகம், ராணியின் முத்து மாலையை, காவலர்கள் கண்முன்னே கவர்ந்து வந்து, அதை பாம்பு வசிக்கும் பொந்தில் போட, பாம்பை கொன்று, முத்து மாலையை, காவலர்கள் எடுத்துச் சென்று, காகத்தை அதன் பிரச்னையில் இருந்து விடுவிப்பதையும் குழந்தைகளுக்கு விளக்கினேன்.

தலையைத் தலையை ஆட்டியபடி எல்லா குழந்தைகளும்
கதையை ரசிக்க, ஒரேயொரு குழந்தை மட்டும் எழுந்து நின்று,
'இது என்ன கதை மிஸ்?' என்றாள்.

'இது தான் நீதிக்கதை...' என்றேன்.

'இந்தக் கதையில என்ன நீதி இருக்கு?' எனக் கேட்டாள்.

'தன்னைவிட பலசாலியான எதிரிகளை, தன்னோட புத்தி சாமர்த்தியத்தினால வீழ்த்தி வெற்றி பெறணும்ங்கிறது
தான் நீதி...' என்றேன்.

'அதுக்காக காகம் என்ன செஞ்சது?' என்றாள்.

'ராணியோட முத்து மாலையை எடுத்துட்டு வந்து பாம்போட பொந்துக்குள்ள போட்டது...' என்றேன்.

உடனே, அக்குழந்தை, 'ஒருத்தருக்கு சொந்தமான பொருளை, அவங்களுக்கு தெரியாம எடுத்துட்டு வந்தா, அது திருட்டு தானே...
அப்போ இந்தக் கதையில திருடறதுக்குத் தானே சொல்லித்
தந்தீங்க மிஸ்... திருடறது தப்பு இல்லயா?' எனக் கேட்டாள்.

குழந்தையின் அந்த கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை.

 'திருதிரு' வென்று விழித்தேன். குழந்தை மேலும் தொடர்ந்தாள்...

'என்ன தான் காக்காவோட முட்டைகளை பாம்பு சாப்பிட்டாலும், அதுக்காக பாம்பை கொலை செய்றது தப்பில்லயா மிஸ்... பாம்பும் ஒரு உயிர் தானே...' என்றாள்.

நானும், 'தப்பு தான்!' என்றேன்.

உடனே, 'இந்தக் கதையில திருடுறதையும், கொலை
செய்றதையும் தானே எங்களுக்கு சொல்லித் தந்திருக்கீங்க;
இது நீதிக் கதையா?' எனக் கேட்டாள்.

வயசுக்கு மீறி பேசும் குழந்தைகளை அதுவரை திரைப்படங்கள்ல மட்டும் தான், பார்த்திருக்கிறேன்; அன்று நேரிலேயே பாத்தேன்.

இதே கதையை தான், நம் பெற்றோரும், நாமும் படித்துள்ளோம். யாராவது இது குறித்து, இந்தக் கோணத்தில் சிந்தித்துப் பார்த்துள்ளோமா?

அக்குழந்தை, 'காக்காவோட முட்டைகளும் பத்திரமா இருக்கணும்; பாம்பும் சாகக் கூடாது. அதுக்கு வேற வழி தோணலியா மிஸ்?' எனக் கேட்டாள்.

'தோணலியே கண்ணு...' என்று, என் தோல்வியை கவுரவமாக ஒப்புக் கொண்டேன்.

ஆனாலும், உள்ளுக்குள் குறுகுறுப்பு! குறை கூறத் தெரிந்த குழந்தைக்கு, அதற்கு வழி கூறும் ஐடியா தெரிந்திருக்குமோ
என நினைத்து, 'குட்டிமா... இதுக்கு வேற ஏதாவது வழி இருக்குதா செல்லம்...' என்றேன்.

உடனே அது, 'இருக்கே!' என்று கூறி, 'காகம் சாது; பாம்பு துஷ்டன். 'துஷ்டனை கண்டா தூர விலகு'ன்னு நீங்க தானே சொல்லி இருக்கீங்க...

அதனால, பொந்து இல்லாத வேற ஒரு மரத்துல போய் காக்கா
கூடு கட்டி, முட்டை போடலாம்ல்லே மிஸ்...அப்ப, முட்டையும் பத்திரமாக இருக்கும்; பாம்பும் சாகாதுல்ல...' என்றாள்.

இதைக் கேட்டதும், உறைந்து போனேன்.

இப்படியொரு கோணத்தில், நாம் ஏன் இதுவரை சிந்தித்து பார்த்ததில்லை என, நினைச்சேன் எனக் கூறி முடித்தார்
அந்த இளம் ஆசிரியை.

நம்முடைய தலைமுறை வரை கேள்வி கேட்காமல் பெரியவர்கள் சொல்வதை, 'பிளைண்ட்' டாக நம்பிக் கொண்டிருந்தோம்;

இக்காலத்து பிள்ளைகள், துணிந்து கேள்வி கேட்டு சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்கின்றனர். வரவேற்கத்தக்க முன்னேற்றம் தான் என எண்ணினேன்!
--------------------------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

17.4.17

தெருவில் திரியும் ரோமியோக்களுக்கான தீர்வு!


தெருவில் திரியும் ரோமியோக்களுக்கான தீர்வு!

 *உத்திரபிரதேசத்தில் பள்ளி, கல்லூரி அருகே பெண்களை தொந்தரவு தெய்யும் ரோட் சைடு ரோமியோக்களை "கவனிக்க" , சிறப்பு படையை முதல்வர் யோகி ஆதித்யநாத் அமைத்தார்**

*அந்த சிறப்பு படை , பெண்களை தொந்தரவு செய்தவர்களை "கவனித்த" காணொளியை உங்களுக்காக இன்று பதிவு செய்துள்ளேன். பாருங்கள்!

*ம்ம்.. நமக்கு இப்படி ஒரு முதல்வர் கிடைப்பாரா*.


---------------------------------------------------
2.
 மைசூர் நகரப் போக்குவரத்தை - குறிப்பாக நகரப் பேருந்துகளை எப்படி சீரமைத்துள்ளார்கள் என்பதை காணொளி மூலம் பதிவு செய்துள்ளேன்
பாருங்கள்!பார்த்து வியந்தவை!
அன்புடன்
வாத்தியார்
==============================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

14.4.17

மனவலிமை எப்படி உண்டாகும்?


மனவலிமை எப்படி உண்டாகும்?

‘உனக்கு ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி. எதை முதலில் சொல்லட்டும்’ என்றான் மகன்.

‘நல்ல செய்தியை முதலில் சொல்லு’ – அம்மா

‘உன் பொண்ணுகிட்ட அடிக்கடி சொல்லுவியே, எப்படியாவது தனிக்குடித்தனம் போயிடுன்னு’ – அதே மாதிரி தனிக்குடித்தனம் போயிட்டாளாம்.

‘ரொம்ப மகிழ்ச்சி. இப்ப தான் மனச்சுமை குறைஞ்சது. ஏதோ கெட்ட செய்தினு சொன்னியே, அது என்ன?’

‘நானும் என் மனைவியும் தனிக்குடித்தனம் போறதுன்னு முடிவு எடுத்திட்டோம்’

அம்மாவிற்கு அதிர்ச்சி. மனச் சுமை கூடியது. முகம் இறுகியது. நடந்தது ஒரே வகை சம்பவம். ஆனால் மனம் ஒன்றை விரும்புகிறது. மற்றதை
சுமையாக பார்க்கிறது.

1. மனிதனை ஆட்டுவிப்பது மற்றவர்களோ சம்பவங்களோ என்பதை விட அவரவர் மனமே என்பது தான். தனக்கொரு நியதி; பிறருக்கு வேறு நியதி –
என்ற மனநிலையே. மன அழுத்தத்தின் அடிப்படை நடுநிலை மனமே மகிழ்ச்சியைத் தரும்.

2. மனிதநேயம்: பிறரையும் தன்னைப் போல நேசிப்பதே மனித நேயம். பிறர் துன்பத்தின் பங்கு கொண்டு பகிர்ந்து கொள்வது மனதை வளப் படுத்தும்.

3. கோப உணர்வு மன அழுத்தத்தை உண்டாக்கும். கோபத்தினால் மனக் குழப்பமும், தவறான முடிவுகளும், அதைத் தொடர்ந்து இழப்புகளும்
ஏற்படும். கோபத்தின் போது உடல் உறுப்புகள் அனைத்தும் பாதிக்கப் படுகின்றன. *கோபத்தை வெல்வதே மன அழுத்தத்தை வெல்லும் வழி*.

4. தாழ்வு மனப்பான்மை வந்து விட்டால் மனிதனின் வாழ்க்கையும் தாழ்ந்து விடும். ஒவ்வொரு மனிதனுக்கு தனித் தன்மை உண்டு. யாரும் யாருக்கும்
தாழ்ந்தவரல்ல. ஒருவரின் உடந்தையில்லாமல் அவரை யாரும் தாழ்த்த முடியாது. தாழ்ந்தவன் என்று மனம் ஏற்கும் வகையில் தாழ்வு உண்டாகாது.

5. பிரச்சனைகள் வாழ்வின் அங்கம். பிரச்சனை இல்லா வாழ்க்கை வெறுமனான வாழ்க்கையாகி விடும். பிரச்சினைகளை எதிர்கொள்வதும் ஏற்றுக் கொள்வதும், சமாளிப்பதும் மன வலிமையைத் தரும்.

6. பொறுமை இல்லாதவர்கள் எளிதில் மன அழுத்தம் அடைவர். பொறுமையுடன் பேசுகின்ற, செயல்படுகின்ற , மனநிலை உண்டாகி
விட்டால் பெரும்பாலான சிக்கல்கள் தீர்ந்து விடும்.

7. “நகைச்சுவை உணர்வு மட்டும் இல்லாவிட்டால் என்றோ எனக்கு சித்தபிரமை பிடித்திருக்கும்” என்றார் காந்தி. கலகலவென வாய்விட்டு சிரித்தால்  மனம் மென்மையாகும்.

8. மனமும் உடலும் ஒன்றோடு ஒன்று இணைபிரியாத்து. மனம் வளமானால் உடல் வளமாகும். உடல் வளமானால் மனம் வளமாகும்.

9. உழைப்பு, ஓய்வு, உறக்கம், உணவு போன்ற அனைத்தும் சரியான அளவில் இருந்தால் மன அழுத்தம் வராது.

10. வேலைகளை தாமதப்படுத்துதல், பிரச்சனைகளை அதிகமாக்கி மன அழுத்தத்தை உண்டாக்கும். அவ்வப்போது செயல்படுகின்ற மனநிலை
மகிழ்ச்சியை பெருக்கும்.

11. பய உணர்வுகளை பலருடைய மன அழுத்தத்தின் காரணம். நாம் பயப்படுகின்ற பெரும்பாலான அம்சங்கள் நடப்பதில்லை. பயத்தை
எதிர்கொள்வதே அதை வெல்ல உதவும்.

12. மனதில் ஒருநாளைக்கு 50 ஆயிரம் வரை சிந்தனைகள் உண்டாகும். அவற்றை எந்த அளவிற்கு குறைத்து கொள்கிறோமோ அதற்கேற்ப மன
அமைதி கிடைக்கும். ஒரு நேரத்தில் ஒரு செயலில் மட்டும் கவனம் செலுத்துதல் மனதை ஒருமுகப்படுத்தும் வழி.

13. பிறரைப் பற்றிய வெறுப்பான மனநிலையே பலரை மன அழுத்தத்திற்கு ஆளாக்குகின்றன. ஒரே கருவில் உருவாகிய இரட்டை குழந்தைகளுக்கு
கூட ஒருமித்த கருத்துதான் இருக்கும் என்பது சாத்தியமில்லை. ஆகையால், மனிதனுக்கு மனிதன் விருப்பு வெறுப்புகள் இருப்பது நியதி. அதை
ஏற்றுக் கொண்டு அவரவரை அவரவர் மனவீட்டில் வாழ விடுவதே சிறந்த அணுகுமுறை.

14. கடமையை சரியாக செய்பவருக்கு மன அழுத்தம் குறைவு.

15. சரியான நேர நிர்வாகம் இல்லாதவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றார்கள். எது முக்கியம், எது அவசரம் என்பதை அறிந்து அதற்கு
முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டால் சிறந்த முறையில் நிர்வாகம் செய்ய முடியும். மன உளைச்சல் அடைந்தவர்கள் அதற்கான காரணங்கள் மற்றும் தடுக்கும் வழிகளை ஆய்ந்து செய்தல் அவசியம்.

16. நோய்கள் வரக் கூடாது என்பது நம் விருப்பம். ஆனால் நோய்களுக்கு
நம் மீது விருப்பமுண்டு. ஆகவே நோய் வராமல் தடுக்கும் வழிகளை
கடைபிடித்து, அப்படியே நோய் வந்து விட்டால், கலங்கி விடாமல் அதை குணப்படுத்தும் வழிகளில் இறங்கி விட வேண்டும்.

17. நல்ல புத்தகம் நல்ல நண்பனை விடவும் உயர்ந்தது. நல்ல நூல்களை படிப்பதன் மூலம் அறிந்திராத பல விசயங்களை அறிந்து மகிழ்வுடன் வாழ
முடியும்.வாழ்வியல் நூல்கள் மன அழுத்தத்தை வெல்ல உதவும்.

18. உடற்பயிற்சி ஒவ்வொருவருக்கும் அவசியமான ஒன்று. நாள் தோறும் தவறாது 30 நிமிடங்களாவது உடற் பயிற்சி செய்தால் எண்டார்பின் என்ற
ஹோர்மோன் சுரந்து இரத்தத்தில் கலந்து உடலின் ஆற்றலைப் பெருக்கும்.

19. யோகாசனம்: தினமும் சுமார் 30 நிமிடங்கள் செய்கின்ற பிராணயாமம் உள்ளிட்ட யோக பயிற்சிகள் சுவாசத்தை சீராக்குவது மட்டுமல்லாமல்
இதயத் துடிப்பையும் இரத்த அழுத்தத்தையும் உடலின் எல்லா உறுப்புகளையும் சீராக செயல் பட உதவும்.

20. மனதின் தீய சிந்தனைகள், பல தீய சூழ்நிலைகள், பிற மனிதர்களின் தவறான தாக்கங்கள் மன அமைதியை குறைக்கும். சுமார் 15 நிமிடங்களுக்கு
செய்கின்ற தியானம் மனதை சுத்தப் படுத்த உதவும். மனத்தினை நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வோம். இன்பம் துன்பம் ஆகியவற்றை
சரிசமமாக உணர்ந்து செயல் படுவோம்.

*மன அமைதியுடன் வாழப் பழகிக் கொள்வோம்*.

அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

13.4.17

கரிநாள் என்பது என்ன?

கரிநாள் என்பது என்ன?

ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் கரிநாள் என்பது “சூரியனின் தீட்சண்யம் அதிகமாக இருக்கின்ற நாள்” என்பதே.

அதாவது, அன்றைய தேதியில் சூரிய கதிர்வீச்சின் தாக்கம், பொதுவாக
அந்த மாதத்தில் இருக்க வேண்டிய சராசரியை விட அதிகமாக இருக்கும்.
நமது முன்னோர்கள் ஆண்டாண்டு காலமாக ஆராய்ந்து முடிவு செய்து வைத்திருக்கும் நாட்கள் இவை.

இந்நாட்கள் வருடத்திற்கு வருடம் மாறுபடாதவை (Constant ). தமிழ் மாத தேதிகளின் அடிப்படையில் இந்நாட்களைத் துல்லியமாகக் கணக்கிட்டு
வைத்திருக்கிறார்கள். உதாரணமாக  தை மாதம் 1, 2, 3 ஆகிய நாட்கள் கரிநாட்கள். மாறாக, இது ‘அஷ்டமி, நவமி’ போன்றோ அல்லது ‘பரணி,
கிருத்திகை’ போன்றோ திதிகள் அல்லது  நட்சத்திரங்களின்
அடிப்படையில் அமைந்தது அல்ல.

சூரியனின் தீட்சண்யம் அதிகமாக இருக்கும் பொழுது, நமது உடலில்
உள்ள அனைத்து சுரப்பிகளும், ஹார்மோன்களும் சராசரிக்கும் சற்று கூடுதலாக அதிக அளவில் தூண்டப்படுகின்றன. இதனால் எளிதில் உணர்ச்சிவசப்படுதல், ஆராயாமல் உடனுக்குடன் முடிவெடுத்தல்
போன்ற வாய்ப்புகள்  அதிகம் உண்டாகும். இது போன்ற காரணங்களால் கரிநாட்களில் சுபகாரியங்கள் செய்வதைத் தவிர்த்திருக்கிறார்கள்.

இது வானவியல் ரீதியாக அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து நிர்ணயம் செய்யப்பட்ட நாட்களேயன்றி ஜோதிட  ரீதியாக கடைபிடித்து வரும்
விஷயம்  அல்ல.

ஒவ்வொரு தமிழ் வருடமும் கரிநாட்களின் விவரம் : 
சித்திரை-6, 15,
வைகாசி- 7, 16, 17,
ஆனி- 1, 6,
ஆடி-2, 10, 20,
ஆவணி-2, 9, 28,
புரட்டாசி- 16, 29,
ஐப்பசி-6, 20,
கார்த்திகை-1, 10, 17,
மார்கழி-6, 9, 11,
தை-1, 2, 3, 11, 17,
மாசி-15, 16, 17,
பங்குனி-6, 15, 19.

கரிநாட்களில் சுபநிகழ்ச்சிகளை மேற்கொள்ளாமல் தவிர்ப்பது நல்லது.

அன்புடன்
வாத்தியார்
=====================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

12.4.17

எதை அடக்க வேண்டாம்?


எதை அடக்க வேண்டாம்?

"சிறுநீரை அடக்க வேண்டாம்.."

ஒரு உண்மை சம்பவம்...

15 வயது சிறுமிக்கு காய்ச்சல் என்று சில நாட்கள் முன்னதாக அந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்திருந்தனர்.

அன்று மருத்துவரின் அறிவுரைப்படி அச்சிறுமிக்கு இரத்தப் பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.

அன்று தான் ஒரு அதிர்ச்சிகரமான விஷயத்தை மருத்துவரும் அச்சிறுமியின் பெற்றோரும் அறிய வந்தனர்.

என்னவெனில் அச்சிறுமியின் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டது என்பது.

அச்சிறுமியின் பெற்றோர் கலங்கி விட்டனர்.

எவ்வாறு இந்த பெரிய சங்கடம் உருவானது என்று மருத்துவர் அறிய அச்சிறுமியிடம் விசாரித்தபோது தான் தெரிந்தது அச்சிறுமி பள்ளி செல்லும்
பொதெல்லாம் சிறுநீரை கழிக்கவே மாட்டாராம்.

ஏனெனில் சிறுநீர் கழிக்க அச்சிறுமிக்கு இருந்த தயக்கமும் அப்பள்ளியில் அதற்கான வசதி வாய்ப்புகள் குறைவாக இருந்ததுமே இதற்கு முக்கிய
காரணமாக இருந்துள்ளது.

சிறுநீரை அடக்கும் இந்த  பழக்கத்தால் அச்சிறுமியின் சிறுநீர்ப்பாதையில் தொற்று ஏற்பட்டு இறுதியில் சிறுநீரகமே செயலிழந்து போனது தான்
கொடூரத்தின் உச்சம்.

அதைவிட கொடூரம் என்னவெனில் நான் சந்தித்த இரண்டாவது நாள் அச்சிறுமி மரணத்தையும் தழுவி விட்டாள் என்பது மிகுந்த மன
வேதனைக்குள்ளாக்கி விட்டது.

பல கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள கழிவறைகளை கண்டீர்களானால் நம் வயிற்றுக்குள் உணவு செல்லாது.
அவ்வளவு கொடூரமாக இருக்கிறது கழிவறைகள்.

அது மட்டுமில்லாமல் பல அரசு மற்றும் தனியார் பள்ளிகள் சிறுநீர் கழிக்கும் இடைவெளியை வெறும் 10 நிமிடத்திற்கு ஒதுக்கி 400 மாணவர்களை
அங்கு தள்ளுகின்றனர்.

இதனால் பல மாணவர்கள் கூச்சப்பட்டுக் கொண்டு இயற்கை உபாதைகளை கழிக்காமலே அடக்கிக் கொள்கின்றனர். இதனால் குழந்தைகள் சிறுநீர் தொற்றிற்கு உள்ளாகி உயிரை இழக்கும் அபாயத்திற்கு தள்ளப்படுகின்றனர்.

அன்பர்களே தயவு செய்து இந்த பதிவை முடிந்த அளவு உங்கள் நண்பர்கள் மற்றும் குழுக்களுக்கு பகிர்ந்து பெற்றோர்களுக்கு விழிப்புணர்வை
ஏற்படுத்த உதவுங்கள்.

மேலும் அரசிற்கும், பள்ளி கல்வித்துறைக்கும், அனைத்து பள்ளிகளுக்கும் மற்றும் பெற்றோர்களுக்கும் மாணாக்கர்களுக்கும் இப்பதிவின் மூலம்
கோரும் வேண்டுகோள் என்னவெனில்

1. ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் மாணவர்கள் சிறுநீர் கழிப்பதை முறையாக கொண்டுள்ளனரா என்பதை அக்கறையுடன் வினவ வேண்டும்.

2. ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களை தங்கள் குழந்தை போல் பாவித்து இம்மாதிரியான அபாயத்திற்குள் சென்று விடாமல் பாதுகாக்க முனைய
வேண்டும்.

3. அரசு இவ்விஷயத்தில் உடனடியாக தலையிட்டு பள்ளிக் கல்வித்துறை மூலம் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை விட்டு கழிப்பறை இல்லாத
பள்ளிகளின் கல்லூரிகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்க ஆவண செய்ய வேண்டும். மேலும் இயற்கை உபாதைகளை கழிக்க வேண்டிய நேரத்தை
மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஒதுக்கவும் ஆணையிட வேண்டும்.

4, பெற்றோர்கள் தவறாது குழந்தைகள் இயற்கை உபாதைகளை சரியான நேரத்தில் கழிக்கின்றனரா என்பதை தீர ஆராய வேண்டும்.

5. பெற்றோர்கள் இவ்விஷயத்தை பற்றி பள்ளிகளிடமும் கலந்து ஆலோசிக்க வேண்டும்.நமது நாடு மற்றம் வீட்டின் வருங்காலத் தூண்களை

சிறுநீரகமற்ற தூண்களாக மாற்றி வளரும் பயிர்களை முளையிலேயே கருகவிட்டு விடாதீர்கள்.

*"சிறுநீர் மட்டுமல்லாமல் இயற்கை உபாதைகள் (மலம், தும்மல், இருமல், தாகம், பசி, விக்கல், அபான வாயு...) எதையும் அடக்கக் கூடாது."*

தயவுசெய்து நண்பர்களே இப்பதிவை சாதாரண பதிவாக எண்ணிவிடாமல் அனைவரும் முக்கியத்துவத்துடன் பகிருமாறும் நம் குழந்தைகளையும் தீர
கவனிக்குமாறும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.🙏🏻

படித்ததில் உறைத்தது!!!

அன்புடன்
வாத்தியார்
==============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

11.4.17

Humour:நகைச்சுவை: கணவனும் கனவில் வந்த பெண்ணும்!


Humour:நகைச்சுவை: கணவனும் கனவில் வந்த பெண்ணும்!

நகைச்சுவையை நகைச்சுவையாக மட்டும் பாருங்கள். வேறு விவகாரம் வேண்டாம்
..................................................
1

கணவன்: நேத்து ராத்திரி ஒரு அழகான பொண்ணு என் கனவுல வந்தா

மனைவி: தனியா வந்துருப்பாளே

கணவன்: அது உனக்கு எப்படி தெரியும்

மனைவி: அவ புருசன் தான் என் கனவுல வந்தானே

-இனி கணவன் பேசுவானா என்ன?
____________________________
2
கணவன் : எதை பார்த்தாலும் உன் முகம்தான் தெரியுது டார்லிங்,

மனைவி : அப்படியா எங்க இருக்கிங்க..?

கணவன் : "Zoo"ல இருக்கேன்..ma

மனைவி : 👊👊👊👊👊
____________________________
3
மனைவி:உங்களை பார்க்காமலே கல்யாணத்துக்கு OK சொன்னேன்.  நான் தான் தியாகி...!!

கணவர்: உன்னை பார்த்த பின்னாலும், கல்யாணத்துக்கு OK சொன்னேன். நான் தானே பெரிய தியாகி....!!!😄😄😄
____________________________
4
மனைவி: நேத்திக்கு நான் வைரத் தோடு கேட்டப்ப முடியவே முடியாதுன்னு தலையை அங்கிட்டும் இங்கிட்டுமா ஆட்டுனீங்க.. இப்ப மட்டும் வாங்கி

வந்திருக்கீங்க...?

கணவன்: ஓ அதுவா... பொண்டாட்டி ஆசைப்பட்டதை வாங்கித் தராட்டி, அடுத்த ஜென்மத்திலேயும் அவளே பொண்டாட்டியா வருவானு பெரியவங்க

சொன்னாங்க.. அதான், எதுக்கு வம்புன்னுதான் .. !

மனைவி: !!!!!!!!!!!!!!!
___________________________
5
மனைவி: ஏங்க இறந்து போனதுக்கு அப்புறம் பெண்கள் எல்லாம் சொர்க்கத்துக்கு போவாங்களாமே? அப்படியா?

கணவன்: அப்படித்தான் சொல்றாங்க..

மனைவி: அப்ப நீங்க எங்கே போவிங்க?

கணவன்: நீங்க எல்லோரும் அங்கே போயிட்டா இங்க எங்களுக்கு சொர்க்கம்தானே?
____________________________
6
☔மழை,  💃மனைவி  - இரண்டிற்கும் என்ன ஒற்றுமை???

 ரெண்டுமே இல்லாதப்போ எப்ப வரும்ன்னு ஏங்குவோம்.. வந்தா ஏன்டா வந்ததுதுன்னு புலம்புவோம்.
____________________________
7
மின்சாரம் இல்லாதபோது ஃப்ரிஜில் இருக்கிற பொருள்களுக்கு குளிர்விட்டு போயிடுது...!!
😜😜
சம்சாரம் இல்லாதபோது வீட்டில் இருக்கிற கணவனுக்கு குளிர்விட்டு போயிடுது,,!
😜😜
----------------------------------------------
8
*டாக்டர்* :- வாங்க , உட்காருங்க , சட்டைய கழட்டுங்க , வாயைத் திறங்க , திரும்பி உட்காருங்க , இழுத்து மூச்சி விடுங்கள் ....இப்பசொல்லுங்க

என்ன செய்கிறது ?

*வந்தவர்*:- ஒண்ணுமில்லை டாக்டர் , என் மகள் திருமணத்துக்கு கல்யாண பத்திரிகை கொடுக்க வந்தேன் .....!!!😛😂

*#பகவானே.*......😂😂😂😂😜😜😜😜
========================================================
இந்த எட்டில் எது மிகவும் நன்றாக உள்ளது?

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

10.4.17

நீங்கள் காண வேண்டிய காட்சிகள்!

நீங்கள் காண வேண்டிய காட்சிகள்!

நீங்கள் காண வேண்டிய காணொளிக் காட்சிகள்!

இன்று இரண்டு காணொளிகளைப் பதிவிட்டுள்ளேன். அவசியம் பாருங்கள்!

1
மும்பையில் வேலைக்குச் சென்று திரும்பும் பெண்களின் புறநகர் ரயில் பயணம் எப்படி உள்ளது என்று பாருங்கள். இது அன்றாடம் பெண்களுக்கான தனி புறநகர் ரயிலில் நடக்கும் காட்சி.

என்னவொரு அவதி? என்னவொரு தள்ளுமுள்ளு பாருங்கள். இதைவிடவா உங்கள் வீட்டுப் பெண்கள் அனுதினமும் அவதிக்கு ஆளாகிறார்கள்?


2
தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள என்னவொரு போராட்டம் பாருங்கள்!
இதை விடவா நமது வாழ்க்கை போராட்டம் நிறைந்தது?அன்புடன்
வாத்தியார்!
---------------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

7.4.17

Astrology ஜோதிடம்: அலசல் பாடம்: யாரைப் போட்டுத்தள்ள வேண்டும்?


Astrology ஜோதிடம்: அலசல் பாடம்: யாரைப் போட்டுத்தள்ள வேண்டும்?

அஷ்டகவர்க்கப் பாடம்

ஆங்கில ஏகாதிபத்தியம் இந்தியாவை ஆட்சி செய்துகொண்டிருந்தபோது, இங்கே சுதந்திரப் போராட்ட எழுச்சி மக்களிடையே அதிகமாகி, நாடே
கொந்தளிப்பில் இருந்த சமயம். (ஆண்டு ஆகஸ்ட் 1942)

காந்திஜி அவர்களின் வெள்ளையனே வெளியேறு' போராட்டம் உச்சகட்டத்தை எட்டியது. அத்துடன் அடுத்துவந்த ஐந்தாவது ஆண்டில் நமக்கு
சுதந்திரமும் கிடைத்தது.

The Quit India Movement (Bharat Chhodo Andolan or the August Movement (August Kranti)) was a civil disobedience movement launched in India in August 1942 in response to Mohandas Gandhi's call for immediate independence. Gandhi hoped to bring the British government to the negotiating table. Almost the entire Indian National Congress leadership, and not just at the national level, was put into confinement less than twenty-four hours after Gandhi's speech, and the greater number of the Congress leaders were to spend the rest of World War II in jail.

அதுசமயம் (போராட்டம் உச்ச கட்டத்தில் இருந்த சமயம்), அப்போதைய பிரிட்டீஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் அவர்களிடம், அவருடைய நண்பர்
சொன்னாராம்:

“காந்தி ஒரு பக்கிரியைப் போல காணப்படுகிறார். நமது அரசுக்குத் தீராத தலைவலியாக இருக்கிறார். என்ன தயக்கம்? ஆசாமியை என்கவுன்ட்டரில்
போட்டுத் தள்ள வேண்டியதுதானே?”

அதற்கு சர்ச்சில் அசத்தலாக இப்படிப் பதில் சொன்னார். “அந்த மனிதனின் கையில் ஆயுதம் எதுவும் இல்லை.அஹிம்சை என்னும் கொள்கை மட்டுமே இருக்கிறது. ஆயுதம் ஏந்தாதவனை எப்படி ஆயுதத்தால் போட்டுத் தள்ளுவது? அதனால்தான் முழித்துக் கொண்டிருக்கிறோம்! ”

என்னவொரு தர்மமான பதில் பாருங்கள்.

அதைவிட, தர்மமான முறையில் ஒரு மிகப் பெரிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடிய நமது தேசத்தந்தை, காந்திஜி அவர்களின்
துணைச்சலையும், மனவுறுதியையும் எண்ணிப்பாருங்கள்.

அதற்கு என்ன காரணம்? அவருடைய ஜாதகம் என்ன சொல்கிறது?

அஷ்டகவர்க்கத்தை வைத்து அதை இன்று அலசுவோம்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

அஷ்டகவர்க்க அட்டவணை!

1. அவருடைய ஜாதகத்தில், ஆறாம் வீட்டில் 36 பரல்களும், அதிலிருந்து ஆறாம் வீட்டில் 37 பரல்களும் இருப்பதைப் பாருங்கள். ஆறாம் வீடு
எதிரிகளுக்கான இடம். அதில் இருந்த மிக அதிகப்படியான பரல்கள் எதிரிகளுடன் போராடும் சக்தியை அவருக்குக் கொடுத்தது. பதினொன்றாம்
இடம் வெற்றிக்கான இடம். அதில் இருந்த அதிகப்படியான பரல்கள், அவருடைய போராட்டத்தில், அவருக்கு வெற்றியைத் தேடித்தந்தன!

2. அவருடைய ஜாதகத்தில் கர்மகாரகன் சனிக்கு அவனுடைய சுயவர்க்கத்தில் பரல்கள் எதுவும் இல்லை. சைபர். ஜீரோ. கோழி முட்டை. அதனால்தான் லண்டனில் தான் படித்த சட்டப் படிப்பை வைத்து வழக்குரைஞர் தொழிலை அவர் செய்யவில்லை. வேறு எந்தத் தொழிலையும் செய்யவில்லை. தேச நலனுக்காகப் போராடியதைத் தவிர.

3. அதே காரணத்தால்தான், தேசம் சுதந்திரம் அடைந்த பிறகும், அவர்
எந்தப் பதவியிலும் அமரவில்லை. அவருக்கு அந்த மன
நிலைமையையும் சனி கொடுக்கவில்லை.

4. தந்தைக்குக் காரகனான சூரியன் 12ஆம் வீட்டில் அமர்ந்ததால், அவர் தன்னுடைய தந்தையைச் சிறு வயதிலேயே இழக்க நேரிட்டாலும்,
அதே சூரியன் தன்னுடைய சுயவர்க்கத்தில் 6 பரல்களுடன் இருந்ததால்
நல்ல ஆரோக்கியமான உடல் அமைப்பைக் கொடுத்தான்.

5. சூரியன் 12ல் இருந்தால் அரசுக்கு எதிரான வேலைகளைச் செய்ய
நேரிடும். சிறை செல்ல நேரிடும். பரல்கள் இல்லாமல் இருந்தால்
கிரிமினல் வேலையைச் செய்து விட்டுச் சிறை செல்ல நேரிடும்.
ஆனால் சுயவர்க்கத்தில் 6 பரல்களுடன் இருந்த சூரியன் ஒரு
உன்னதமான காரியத்திற்காக அவரை அடிக்கடி சிறைக்குச் செல்ல வைத்தான்.

6. இரண்டாம் வீட்டில் 22 பரல்கள் மட்டுமே. 337 வகுத்தல் 12 வீடுகள்
என்னும் போது வரும் சராசரி மதிப்பான 28 பரல்களை விட 6 பரல்கள்
குறைவு. ஜாதகனுக்கு செல்வம் இருக்காது. வந்தாலும் தங்காது.
ஓட்டை அண்டா. 11ஆம் வீட்டில் இருந்த 37 பரல்கள் அவருக்குப்
பணத்தை அள்ளும் வாய்ப்பைக் கொடுத்தன. பணம் வரும் பைப்
நன்றாக இருந்தது. ஆனால் கிஞ்சித்தும் காந்திஜிக்குப் பணத்தின்
மேல் ஆசையில்லாமல் போய்விட்டது. தனகாரகன் குரு தனது சுயவர்க்கத்தில் 3 பரல்களுடன் பலவீனமாக இருப்பதைக் கவனியுங்கள்.
12ல் இருந்த சூரியனால் அவர் துறவியைப்போல வாழ்ந்தார்.

7. சுயவர்க்கத்தில் 6 பரல்களுடன் இருந்த சந்திரன், அதுவும்
பதினொன்றாம் வீட்டில் இருந்த சந்திரன், அவருக்கு மன உறுதியையும்,
 நல்ல சிந்தனைகளையும், நல்ல கொள்கைகளையும் கொடுத்தது.
அத்துடன் லட்சக்கணக்கான மக்களின் ஆதரவையும், செல்வாக்கையும் பெற்றுத்தந்தது. அதன் சிறப்பால்தான் அவர் தேசியத்தலைவரானர்.
மக்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தார்.

8. தனது சுயவர்க்கத்தில் 5 பரல்களுடன் இருக்கும் புதன், அதுவும் லக்கினத்திலேயே இருக்கும் புதன் அவருக்கு, நல்ல
பேச்சுத்திறமையையும், ஏராளமான நண்பர்களையும் பெற்றுத்தந்தது. அத்துடன் அனைவரையும் புரிந்துகொள்ளும் தன்மையையும் தந்தது.

9. துலாலக்கினத்திற்கு 2 மற்றும் 7ஆம் இடங்களுக்கு அதிபதியான
செவ்வாய், தனது சுயவர்க்கத்தில் 4 பரல்களுடன் சராசரி நிலைமையில்
இருந்ததால்,  அவருடைய குடும்ப வாழ்வில் அவருக்கு நல்லதும்
கெட்டதும் சம அளவிலேயே கலந்து கிடைத்தன!

10. லக்கினாதிபதி சுக்கிரன் தனது சுயவர்க்கத்தில் 3 பரல்களுடன் இருந்ததாலும், அவருடைய லக்கினத்திற்குப் பாபகர்த்தாரி யோகம் இருந்ததாலும்

(லக்கினத்தின் இரு புறமும் தீய கிரகங்கள்) அவருடைய வாழ்க்கை அவருக்குப் பயன்படவில்லை. தேசமக்களுக்கு, அதுவும் ஒரு உயரிய செயலுக்குப் பயன்பட்டது. சந்திர ராசியின் இருபக்கமும் தீய கிரகங்கள்.
சந்திர ராசியும் பாபகர்த்தாரி யோகத்தில். அதன் காரணமாகத் தனக்குக் கிடைத்த பெரும் செல்வாக்கை வைத்து அவர் செல்வம் சேர்க்கவில்லை. செல்வம் சேரவில்லை. அல்லது காசு பண்ணும் மனப்பான்மை அவருக்கு இல்லை. எப்படி வேண்டுமென்றாலும் வைத்துக்கொள்ளுங்கள்.
---------------------------------------------------------
அஷ்டகவர்க்கத்தை வைத்து ஒரு ஜாதகத்தை எப்படி அலசுவது என்பதை உங்களுக்குச் சொல்லித்தரும் முகமாக இன்று இந்தப் பதிவை வலை
ஏற்றியுள்ளேன்.

இது பயிற்சி வகுப்பு மாணவர்களுக்காக எழுதப்பெற்ற பாடம். பயிற்சி
வகுப்புப் பாடங்கள், வகுப்பறையில், சில காரணங்களுக்காக இடம் பெறாது.
பல பொது மனிதர்களின் ஜாதகங்களை, அதுவும் அரசியல்வாதிகளின் ஜாதகங்களையும் சேர்த்து வைத்து அவைகள் எழுதப் படுவதால், இங்கே
பதிவிடும்போது பல எதிர்வினைகளச் சந்திக்க நேரிடும். அவற்றைத் தவிர்க்கும் பொருட்டு பதிவில் அவைகள் வராது. பிரச்சினைகள் வேண்டாம்
என்பதுதான் அதன் நோக்கம். அதையும் மனதில் கொள்க!

அஷ்டகவர்க்கத்தை வைத்துப் பலாபலன்களை அறியும் பாடங்களைத் தொடர்ந்து அஷ்டகவர்க்க வகுப்பில் எழுதியுள்ளேன். அவைகள் பிறகு
புத்தகமாக வரவுள்ளது, வரும்போது அனைவரும் படிக்கலாம். பயனடையலாம்.

அன்புடன்
வாத்தியார்
==============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

6.4.17

முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழர்களை சிரிக்க வைத்த மனிதர்!!!


முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழர்களை சிரிக்க வைத்த மனிதர்!!!

நாகேஷ்... மாறும் உடல் மொழி... ஏறி இறங்கும் குரல் ஜாலம்... தமிழர்களின் 40 ஆண்டு கால சாயங்காலச் சந்தோஷம். ஈர்க்குச்சி உடம்பால், சிரிப்புத் தீக்குச்சி கிழித்தவர்!...

* பூர்வீகம் மைசூர். ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டரான தந்தை ஊர் ஊராகப் பணியாற்ற, குடும்பம் மட்டும் தமிழ்நாட்டில் தாராபுரத்தில் இருந்தது.

தாராபுரம் பீமராய அக்ரஹாரம்தான் நாகேஷ் வளர்ந்த தொட்டில்!

* பெற்றோர் கிருஷ்ணராவ் - ருக்மணி வைத்த பெயர் நாகேஸ்வரன். பின்னாளில் நாகேஷ் ஆனது. வீட்டுச் செல்லப் பெயர் - குண்டப்பா!

* பள்ளி நாடகத்தில் நாகேஷுக்கு எமன் வேஷம். வசனம் பேசிக்கொண்டே பாசக் கயிற்றினை வீச வேண்டும். இவர் வீசிய பாசக் கயிறு எசகுபிசகாக ஒருவர் கழுத்தில் போய் விழுந்தது. பள்ளித் தலைமை ஆசிரியரின் கழுத்து அது!

* இளம் வயதில் வீட்டில் கோபித்துக்கொண்டு ஹைதராபாத்துக்கு வந்தவர். ரேடியோ கடை, ஊறுகாய் கம்பெனி எடுபிடி, மில்லில் கூலி வேலை என்று பல வேலைகள் பார்த்திருக்கிறார்!

* முதன்முதலில் நாடகத்தில் வயிற்று வலி நோயாளியாக நடித்தார். அன்று அவரதுநடிப்பைப் பாராட்டி, முதல் பரிசை வழங்கியவர் எம்.ஜி.ஆர்!

* கோயம்புத்தூரில் பி.எஸ்.ஜி. ஆர்ட்ஸ் காலேஜில் படித்தபோது, அடுத்தடுத்து மூன்று தடவை அம்மை போட்டது. முகம் முழுக்க அம்மைத் தழும்புகளை வைத்துக்கொண்டு பலரது முகத்தை மலரவைத்தது அவரது நடிப்பின் வெளிச்சம்!

* ஹோட்டலில் தங்கியிருந்த நாகேஷை அவரது நாடக நடிப்பின் மீது கொண்ட காதலால்... தன் வீட்டில் தங்குவதற்கு ஏற்பாடு செய்து தந்தவர் நடிகர் பாலாஜி!

* இவர் மனைவி பெயர் ரெஜினா. ஆனந்த் பாபு, ரமேஷ் பாபு, ராஜேஷ் பாபு என்று மூன்று மகன்கள். மூன்று மகன்களும் வெவ்வேறு மதங்களில் திருமணம் செய்துகொண்டபோது மனமார ஆசி வழங்கியவர்!

* முதல் படம் 'தாமரைக்குளம்' ஷூட்டிங்கின்போது, சரியாக நடிக்கவில்லை என்று உதவி இயக்குநர்கள் நாகேஷைக் கடிந்தனர். உடன் நடிக்க வந்த எம்.ஆர்.ராதாவிடம் மனம் வெதும்பி நடந்ததைச் சொன்னார் இவர். 'மத்தவன் எல்லாம் நடிகன், நீ கலைஞன்... கவலைப்படாம நடி' என்றாராம் ராதா!

* 'அபூர்வ ராகங்கள்' படத்தில் கண்ணதாசனுக்கு வைத்தியம் பார்க்க டாக்டராக வருவார் நாகேஷ். கண்ணதாசனிடம் ஒரு கவிதை சொல்லச் சொல்வார் இவர். கவிதை சொன்ன கண்ணதாசனிடம் பீஸ் கேட்பார் இவர். 'இதுதான்யா ஃபீஸ்' என்பார் அவர்!

* முறைப்படி யாரிடமும் நடனம் கற்றுக்கொண்டது இல்லை. யாரையும் காப்பி அடித்ததும் இல்லை. ஆனால், நடனத்தில் 'நாகேஷ் பாணி' என்கிற தனி முத்திரையைக் கொண்டுவந்தார்!

* எம்.ஜி.ஆருடன் 45 படங்களில் நடித்த நகைச்சுவை நடிகர் இவர்தான். அதில், 19 படங்களில் இவருக்கு ஜோடி மனோரமா!

* 'திருவிளையாடல்' படத்தின் காட்சிகளை ரஷ் பார்த்த சிவாஜி, 'நாகேஷின் நடிப்பு பிரமாதம். தயவுசெய்து எதையும் கட் பண்ணிடாதீங்க' என்று டைரக்டர் ஏ.பி.நாகராஜனிடம் கேட்டுக்கொண்டாராம்!

* நகைச்சுவையில் மட்டுமல்ல; 'நீர்க் குமிழி' குணச்சித்திரம், 'சர்வர் சுந்தரம்' ஹீரோ, 'அபூர்வ சகோதரர்கள்'ல் வில்லன், 'மகளிர் மட்டும்' பிணம் என்று வெளுத்துக்கட்டியவர்!

* 'அபூர்வ ராகங்கள்' ஷூட்டிங். பாலசந்தர் ஆக்ஷன் சொல்லிவிட்டார். நாகேஷ், கோப்பையைக் கையில் எடுத்து சுவரில் தெரிந்த தன் நிழலைப் பார்த்து, 'சியர்ஸ்' என்று சொல்ல... படம் பார்த்தவர்கள் பாராட்டினார்கள். நாகேஷின் டைமிங் சென்ஸுக்கு இது ஒரு சாம்பிள்!

* இவரை எப்போதும் 'டேய் ராவுஜி' என்று செல்லமாக அழைப்பார் பாலசந்தர்!

* டைரக்ஷன் துறையையும் விட்டுவைக்கவில்லை இவர். 'பார்த்த ஞாபகம் இல்லையோ' இவரது டைரக்ஷனில் வெளிவந்த திரைப்படம்!

* பணம் விஷயத்தில் நாகேஷ் கறார் பேர்வழி என்று சினிமா உலகில் ஒரு பேச்சு உண்டு. ஆனால், 'எவ்வளவு பணம் இருந்தாலும் சாப்பிட ஒரு வயிறு தானே' என்று சொன்ன எளிமையான கலைஞன் என்பதுதான் நிஜம்!

* 'சீட்டாட்டம், டேபிள் டென்னிஸ், தத்துவம், நடனம், நடிப்பு என்று எதைச் செய்தாலும் உச்சம் தொட்ட மகா கலைஞன்' என்று இவரைப் புகழ்ந்தவர் கவிஞர் வாலி!

* 'நாகேஷ் என் வாழ்வில் நட்சத் திரமாக, மூத்த அண்ணனாக, அறிவுரை சொல்லும் நண்பனாக, அறிவுரை கேட்கும் அப்பாவியாக, சொல்லிக்கொடுத்த ஆசானாக, சொல் பேச்சுக் கேட்கும் மாணவனாகப் பல பொறுப்புகளை ஏற்றிருக்கிறார்' என்று சொன்னவர் கமல்ஹாசன்!

* 'பஞ்சதந்திரம்' ஷூட்டிங். உணவு இடைவேளையில் கமல் சிக்கனை முள் கரண்டியால் குத்திக்கொண்டு இருந்தார். அருகில் இருந்த நாகேஷ் கேட்டார், 'கோழி இன்னும் சாகலையாப்பா?'

* 'தசாவதாரம்' கடைசி நாள் ஷூட்டிங் குக்கு வந்து நடித்துக் கொடுத்தவர் கடைசியாகச் சொன்ன வாக்கியம், 'என் கடைசிப் படம் நல்ல படம். I am honoured-டா கமல்!'

* தாம் வாங்கிய பரிசுகள், ஷீல்டுகள் எதையும் வீட்டு ஷோகேஸில் வைக்கும் பழக்கம் இல்லாதவர்!

* இந்தியாவின் ஜெர்ரி லூயிஸ் என்று அழைக்கப்பட்ட நாகேஷ் பிறந்தது - செப்டம்பர் 27, 1933-ல். மறைந்தது ஜனவரி 31, 2009-ல்!

ஜனவரி.31 - நாகேஷ் நினைவு தினம்

* 30 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழர்களைச் சிரிக்கவைத்த இந்தக் கலைஞனுக்கு 'நம்மவர்' படத்துக்காக மட்டும் தேசிய விருது கிடைத்தது
======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

5.4.17

நீங்களும் நானும் கலியுகமும்!!!


நீங்களும் நானும் கலியுகமும்!!!

இந்த குதிரை விற்பனைக்கு அல்ல...

பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருந்தது அந்த சந்தை.

பொருட்களை விற்பவர்களும், வாங்குபவர்களுமாக ஏராளமானவர்கள் கூடி இருந்தார்கள்.
மேற்கு திசையில் சூரியன் மறையக்கூடிய நேரம் நெருங்கிய நேரத்தில்.....

குட்டையான கருத்த உருவத்தோடு ஒருவர் ஒரு குதிரையுடன் சந்தைக்குள் நுழைந்தார்.

அவர் கொண்டு வந்த குதிரையின் அழகு அனைவரையும் கவர்ந்தது.

பளபளவென கருத்த உடம்பு, மினுமினுப்பான வால், நெற்றியின் நடுவில் நட்சத்திர வடிவில் வெள்ளையாக மச்சம், கம்பீரமான நடை
 என்று ஒரு குதிரை, சந்தைக்கு வந்தால் யார்தான் பார்க்க மாட்டார்கள்!

எல்லோரும் அந்த குதிரையின் அழகில் மயங்கி, "எவ்வளவு அழகான குதிரை, இதன் விலையும் அதிகமாகத்தான் இருக்கும்" என்று சொல்லி ஒதுங்கி விட்டார்கள்.

அப்போது.....

பஞ்சபாண்டவர்களில் ஒருவரான சஹாதேவன் சந்தைக்குள் நுழைந்தான். அழகான குதிரையை அவனும் பார்த்தான். உடனே குதிரையின் உரிமையாளரை நெருங்கி, "குதிரை என்ன விலை? என்று கேட்டான்.

குதிரையின் உரிமையாளரோ, "ஐயா! இந்த குதிரை விற்பனைக்கு அல்ல. நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொன்னால், குதிரையை இலவசமாகவே கொடுப்பேன்" என்றார். சகாதேவன் உடனே, "சரி கேள்வியைச் சொல்லுங்கள்" என்றான்.

குதிரையின் உரிமையாளர், "நன்றாகக் கவனியுங்கள்! பிறகு பதில் சொல்லுங்கள்!

ஒரு பெரிய கிணறு. அதில் உள்ள தண்ணீரைக் கொண்டு ஏழு சிறிய கிணறுகளை நிரப்பலாம். ஆனால், அந்த ஏழு கிணறுகளில் இருக்கும் தண்ணீரை எடுத்து, மறுபடியும் அந்த பெரிய கிணற்றில் ஊற்றினால், பெரிய கிணறு நிரம்பவில்லை. இது ஏன்? நன்றாக யோசித்து பதில் சொல்லுங்கள்" என்றார். சஹாதேவனால் பதில் சொல்ல முடியவில்லை. அங்கேயே சந்தையில் உட்கார்ந்து விட்டான்.

சற்று நேரத்தில்.... சகாதேவனை தேடிக்கொண்டு நகுலனும் சந்தைக்கு வந்து விட்டான். அவனும் குதிரையைப் பார்த்து, அதன் அழகில் மயங்கிப் போய் விலை கேட்டான்.

குதிரையின் உரிமையாளர், நகுலனிடம் ஒரு கேள்வி கேட்டார். "ஐயா! நான் ஒரு கேள்வி கேட்கிறேன். பதில் சொல்லிவிட்டு, குதிரையை இலவசமாகவே பெற்றுக்கொள்ளுங்கள்.

துணி தைக்கும் ஊசி இருக்கிறது அல்லவா? அதன் ஓட்டையின் வழியாக ஒரு யானை புகுந்து, அடுத்த பக்கம் போய்விட்டது. ஆனால் யானையின் வால் மட்டும் அந்த ஓட்டையின் வழியாகப் போக முடியவில்லை. ஏன்?" என்றார்.

நகுலனால் பதில் சொல்ல முடியவில்லை. அவனும் சந்தையில் உட்கார்ந்திருந்த சஹாதேவனுடன் சேர்ந்து உட்கார்ந்துவிட்டான்.

அதன் பிறகு ஒரு சில நிமிடங்களில், அர்ஜுனனும் அங்கு வந்தான். அவனும், குதிரையைப் பார்த்து, அதன் அழகில் மயங்கிப் போய் விலை கேட்டான். குதிரையின் உரிமையாளர், அர்ஜுனனிடமும் கேள்வி கேட்டார்.

"ஐயா! ஒரு வயல் காட்டில் நன்றாக விளைந்து இருந்தது. அதற்கு வேலியெல்லாம் போட்டு பாதுகாப்பாக வைத்து இருந்தார்கள். ஆனால் அறுவடை காலத்தில், அந்த வயல் காட்டில் எதுவுமே இல்லை. வேலியெல்லாம் அப்படியே இருந்தது. அப்படி இருந்தும் விளைந்த தானியங்களை எல்லாம் யார் எடுத்தார்கள்? பதில் சொல்லிவிட்டு, குதிரையை கொண்டு செல்லுங்கள்" என்றார். அர்ஜுனனால் பதில் சொல்ல முடியவில்லை. அவனும் ஆலோசனை செய்தபடி அங்கேயே உட்கார்ந்து விட்டான்.

சகோதரர்கள் மூவரும் இப்படியே உட்கார்ந்திருக்க, அரண்மனையில் அவர்களைக் காணாமல், தர்மர் திகைத்தார். பீமனைக் கூப்பிட்டு, "தம்பி! நம் தம்பிகள் மூவரையும் நீண்ட நேரமாக காணவில்லை. நீ போய், அவர்கள் எங்கு இருந்தாலும் தேடி அழைத்து வா!" என்றார்.

பீமனும் போய் தேடிப்பிடித்து, அர்ஜுனன், நகுலன், சஹாதேவன் மூவரையும் அழைத்து வந்தான். பாஞ்சாலியோடு அரியணையில் அமர்ந்திருந்த தர்மர், அவர்களைப் பார்த்ததும், "அர்ஜுனா! நீண்ட நேரமாக நீயும் உன் தம்பிகளும் இங்கு இல்லை. எங்கே போய் இருந்தீர்கள்?" எனக் கேட்டார்.

அதற்குப் பதிலாக அர்ஜுனன், நடந்ததை எல்லாம் சொல்லி, குதிரை உரிமையாளர் கேட்ட மூன்று கேள்விகளையும் சொன்னான்.

அதைக் கேட்டதும் தர்மர் நடுங்கினார். அதைப் பார்த்த தம்பிகள்  எல்லாரும் திகைத்தார்கள்.

"அண்ணா! நீங்கள் நடுங்கும்படியாக என்ன நடந்தது?" எனக் கேட்டார்கள்.

தர்மர் பதில் சொல்லத் தொடங்கினார்.....

"தம்பிகளே! எதிர்காலத்தில் நடக்கப்போகும் விபரீதங்களை, அந்த மூன்று கேள்விகளும் சொல்கின்றன. அதை நினைத்துத்தான் நடுங்கினேன். ஒவ்வொன்றாகச் சொல்கிறேன் கேளுங்கள்....." என்று விரிவாகக் கூறினார்.

"உங்களிடம் கேள்வி கேட்டவன் கலி புருஷன். அவன் கேட்ட முதல் கேள்வியில் பெரிய கிணறு என்பது பெற்றோர்கள். ஏழு சிறிய கிணறு என்பது அவர்களது பிள்ளைகள். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை, அவர்கள் எவ்வளவு பேர்களாக இருந்தாலும் சரி! அவ்வளவு பிள்ளைகளையும் காப்பாற்றுவார்கள். இதைத்தான் பெரிய கிணற்றின் தண்ணீரைக் கொண்டு சிறிய கிணற்றை நிரப்பினார்கள் என்றது குறிக்கிறது. ஆனால் அந்த பிள்ளைகளோ, அவ்வளவு பேர்களும் சேர்ந்தால் கூட, தங்கள் பெற்றோரை காப்பாற்ற மாட்டார்கள். இதைத்தான் ஏழு சிறிய கிணறுகளில் உள்ள தண்ணீரைக் கொண்டு, பெரிய கிணற்றை நிரப்ப முடியவில்லை என்பது குறித்தது.

அடுத்து இரண்டாவது கேள்விப்படி, இனி வருங்காலங்களில் அக்கிரமங்கள், முறைகேடான செயல்கள் ஏராளமாக நடைபெறும். ஆனால் நல்ல செயல்கள் நடைபெறுவது மிகவும் கடினமாக இருக்கும். இதைக்த்தான் யானையே போன வழியில், அதன் வால் போக முடியவில்லை என்று சொல்லி இருக்கிறார்.

அடுத்து மூன்றாவது கேள்வியில் பயிர்கள் என்பது மக்களைக் குறிக்கும், பாதுகாக்கும் வேலி என்பது அதிகாரிகளைக் குறிக்கும். அதாவது மக்களைப் பாதுகாக்க வேண்டிய அதிகாரிகளே அவர்களை அழித்து விடுவார்கள். மக்கள்தான் வறுமையில் வாடுவார்களே தவிர, அதிகாரிகள் செழிப்பாகத்தான் இருப்பார்கள். இதைத்தான், வேலி அப்படியே இருக்க,  பயிர்கள் எப்படி அழிந்தன என்ற கேள்வி குறிப்பிடுகிறது என்று சொல்லி முடித்தார் தர்மர்...

கலியின் ஆரம்பம் பற்றிய நிலைமை இதுதான். கலி முற்ற முற்ற இந்தக் கேடுகளும் அதிகமாகும்.
----------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
=======================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

4.4.17

மகிழ்ச்சி தரும் வயது எது - இருபதா அல்லது அறுபதா?


மகிழ்ச்சி தரும் வயது எது - இருபதா அல்லது அறுபதா?

20-களில் இருக்கும் இளைஞர்களை விட, தாத்தாக்களும் பாட்டிகளும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். ’இப்படிச் சொன்னால் நம்ப முடிகிறதா? `ஆனால், அது தான் உண்மை’ என்கிறது சமீபத்தில் வெளி வந்திருக்கும் ஓர் ஆய்வு.

முதுமை என்பது சாபம். சித்தார்த்தன் புத்தனானதற்கு முக்கியக் காரணங்கள் மூன்று... முதுமை, நோய், மரணம். அவற்றில் முக்கியமான ஒன்றான முதுமைப் பருவத்தில் இருப்பவர்கள், இளைஞர்களை விட மனதளவில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதை ஏற்றுக் கொள்ள, கொஞ்சம் கஷ்டமாகத் தான் இருக்கிறது. இருந்தாலும், அது நிஜம் தான் என நிரூபித்திருக்கிறது, `தி ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் சைக்கியாட்ரி’ (The Journal of Clinical Psychiatry) இதழில் வெளி வந்திருக்கும் ஆய்வு முடிவு. கலிஃபோர்னியாவில் இருக்கும் சான் டியாகோவில், 21- 99 வயதுக்கு உட்பட்டவர்கள் 1,546 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப் பட்டது. அவர்களின் உடல் நலம், புரிதல் திறன், மன நலம் தொடர்பான பல கேள்விகளை முன் வைத்திருக்கிறார்கள், ஆய்வு நடத்தியவர்கள்.

வாழ்க்கையில் அவர்கள் சந்தோஷமாகவும் திருப்தியாகவும் இருக்கிறார்களா, மனஅழுத்தம், கவலை, பதற்றம் இவற்றுக்கு ஆளாகிறார்களா என்றெல்லாம் கேள்விகள் கேட்கப் பட்டன.

இந்த ஆய்வின் தலைவர், டாக்டர் திலிப் வி.ஜெஸ்டே (Dilip V.Jeste), முதுமை மற்றும் மனநோய் மருத்துவர் (Geriatric psychiatry); சான் டியாகோவில் இருக்கும் கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தில், சென்டர் ஆன் ஹெல்த்தி ஏஜிங் மையத்தின் இயக்குநர். அவர் இப்படிக் குறிப்பிடுகிறார்...

`முதுமைப் பருவம் என்பது மிக மோசமானது, வயதானவர்களிடம் மனச் சோர்வு, மன அழுத்தம், சிடு சிடுப்பு இவை தான் இருக்கும் என்கிற ஒரு கருத்து நிலவுகிறது. அதன் உண்மைத் தன்மையை ஆராய்வதற்காகவே இந்த ஆய்வை நடத்தினோம்.’

`உடலளவில் தளர்ச்சி, புரிந்து கொள்ளும் உணர்வில் குறை பாடு இவையெல்லாம் இளைஞர்களை விட முதியவர்களுக்கு அதிகமாக இருக்கிறது. இவை முதுமை காரணமாக இயற்கையாக ஏற்படும் குறைபாடுகள். ஆனால், மன நலத்தைப் பொறுத்த வரை இளைஞர்களை விட ஆரோக்கியமாக இருப்பவர்கள் முதியோரே. 20-கள், 30-களில் இருக்கும் இளைஞர்களிடம் பதற்றம், மன அழுத்தம், கவலை ஆகியவை அதிக அளவில் காணப் படுகின்றன. மகிழ்ச்சி, திருப்தி, நிறைவான வாழ்க்கை இவை குறைவாகக் காணப் படுகின்றன. ஆக, மகிழ்ச்சியாக இருப்பது முதியோரே’ என்கிறது ஆய்வு.

வயதாகி விட்டது என்கிற எண்ணம் வரும் போது, அவர்களுக்கு ஒரு முதிர்ச்சி வந்து விடுகிறது. இனி எல்லாம் நல்ல விதமாக நடக்கும் என்கிற எதிர் பார்ப்பும், அவர்களின் மன நலமும் முன்னேற்றம் அடைகிறது. ஆனால், இளைஞர்களுக்கோ மனதளவில் குழப்பம் தான் மிஞ்சுகிறது. பணம், கல்வி, காதல், வேலை என வாழ்க்கைக்கு அத்தியாவசியமான பல தேவைகளும் அந்த வயதில் தான் எழுகின்றன. கூடவே, மற்றவர்களோடு தம்மை ஒப்பிட்டுப் பார்க்கச் சொல்லும், `நாம் அவர்களைப் போல வெற்றி பெறவில்லையோ, நமக்கு எத்தனையோ வாய்ப்புகள் கிடைத்தும் அதையெல்லாம் சரியாகப் பயன் படுத்திக் கொள்ளவில்லையோ’ என்றெல்லாம் இளைஞர்களை யோசிக்க வைக்கும் பருவம் அது. முதியவர்களால் சின்னச் சின்ன மனஅழுத்தம் தரும் விஷயங்களை எளிதாக உதறித் தள்ளி விட முடியும். காரணம், அவர்களுக்குக் கிடைத்திருக்கும் அனுபவமும் முதிர்ச்சியும். அதோடு எதற்கும் உணர்ச்சி வசப்படாதவர்களாக, சிறந்த முடிவுகளை எடுப்பவர்களாகவும் இருப்பார்கள்.

`முதியவர்களுக்கு இன்றைய வாழ்க்கை எளிதானதாக இருக்கிறது. 1998-ம் ஆண்டிலிருந்து 2008-ம் ஆண்டுக்குள், முதியவர்களுக்கு மன அழுத்தம் தரக் கூடிய அறி குறிகள் வெகுவாகக் குறைந்திருக்கின்றன’ என்கிறது ஓர் ஆய்வு. வேறு சில ஆய்வுகளோ, `கடந்த சில பத்தாண்டுகளில் இளைஞர்களிடையே கவலையும் மன அழுத்தமும் அதிகமாகக் காணப் படுகின்றன’ எனக் குறிப்பிடுகின்றன. உலக மயமாக்கல், தொழில் நுட்ப வளர்ச்சி, உயர் கல்வி பயில்வதில் அதிகரித்து வரும் போட்டி, கணிசமான சம்பளம் வேண்டும் என்கிற எண்ணம், சமுதாயத்தில் மாறி வரும் பெண்களின் பங்கு என பல காரணிகள் முதியோர்களை விட, இளம் பெண்களையும் இளைஞர்களையும் அதிகம் பாதிக்கின்றன. இந்த மன அழுத்தம் முதியோருக்கு இல்லை என்பது தான் ஆய்வின் முடிவாக இருக்கிறது.

இந்தியாவிலும் பிள்ளைகள், பெற்றோர்களைக் கண்டு கொள்ளாமல் விடுவது நடக்கத் தான் செய்கிறது. உள்நாட்டிலேயே வசித்தாலும், பெற்றவர்களை முதியோர் இல்லத்தில் சேர்ப்பதும் இருக்கிறது. ஆனால், சில பத்தாண்டுகளுக்கு முன்னர் முதியோர் இல்லம் என்பதே இங்கே நடை முறையில் இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இன்றைய பரபரப்பான நகர, சிறு நகர வாழ்க்கைச் சூழலில், பெற்றோரை, முதியவர்களை வீட்டில் வைத்து பராமரிப்பது என்பது அனைவருக்கும் சாத்தியமில்லை என்பதை ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும். அதே நேரம் இன்றைய இளைய தலைமுறையினர் அளவுக்கு முதியோருக்கு மனஅழுத்தம் அதிகம் இல்லை என்பதையும் ஒப்புக் கொள்ளத் தான் வேண்டும்.

படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
=====================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!