மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label ஜோதிடம். Show all posts
Showing posts with label ஜோதிடம். Show all posts

4.5.21

Astrology: ஏன் திருமணம் கூடி வரவில்லை?


Astrology: ஏன் திருமணம் கூடி வரவில்லை? 

ஒரு சகோதரியின் ஜாதகம் கீழே உள்ளது. உத்திர நட்சத்திரக்காரர். 40 வயதாகியும் திருமணம் கூடிவரவில்லை. ஜாதகத்தைப் பார்த்த பெரிய ஜோதிடர் ஒருவர், இது திருமணம் மறுக்கப்பெற்ற ஜாதகம். ஆகவே திருமணமாகக் கூடிய வாய்ப்பு சுத்தமாக இல்லை என்று கூறிவிட்டார். அது போலவே அவருக்கு கடைசிவரை திருமணமாகவில்லை

திருமணம் ஆகாத நிலைமைக்கு ஜாதகப்படி என்ன காரணம்

ஜாதகத்தை அலசுவோம் வாருங்கள்!!! 

ஜாதகி ரிஷப லக்கினக்காரர். உத்திர நட்சத்திரம். திருமண பாக்கியத்திற்கு உரிய எல்லா வீடுகளுமே கெட்டுப்போய் உள்ளன, லக்கினத்திற்கு 7ம் வீட்டில் சனி வக்கிர நிலைமையில் உள்ளது. களத்திரகாரகன் சுக்கிரனுக்கும் சனீஷ்வரனால் அதே நிலைப்பாடுதான், பூர்வ புண்ணியாதிபதி (5th Lord) புதன் 12ம் வீட்டில் போய் அமர்ந்துள்ளார், 2ம் வீட்டில் (குடும்பஸ்தானத்தில்) விரையாதிபதி செவ்வாயின் ஆதிக்கம். மேலும் சுக்கிரன் பாபகர்த்தாரி யோகத்தில் சிக்கி இருக்கிறார், ஒரு பக்கம் கேது மறுபக்கம் செவ்வாய். இக்காரணங்களால் அந்த சகோதரிக்கு திருமணம் கூடிவரவில்லை.  

அன்புடன்

வாத்தியார்

http://classroom2007.blogspot.com/

---------------------------------------------

கேள்விக்கு உரிய ஜாதகம்:

--------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

3.5.21

Astrology: ராஜா கைய வச்சா அது ராங்கா போனதில்லை!!!


Astrology: ராஜா கைய வச்சா அது ராங்கா போனதில்லை!!! 

ஒரு அன்பரின் ஜாதகம் கீழே உள்ளது. பெரிய தொழிலதிபர். அவர் ஆரம்பித்த தொழில்கள் நன்றாக நடந்தன. செல்வம் மேலும் மேலும் பெருகியது. கூரையைப் பிய்த்துக் கொண்டு பணம் கொட்டியது. சுற்றியுள்ளவர்கள் எல்லாம் ஆச்சரியப்படும் அளவிற்கு அவர் நன்றாக இருந்தார்

அவருடைய தொழில் மேன்மைக்கும், செல்வச் செழிப்பிற்கும் அவருடைய ஜாதகப்படி என்ன காரணம்

ஜாதகத்தை அலசுவோம் வாருங்கள்!! 

ஜாதகர் விருச்சிக லக்கினக்காரர். கேட்டை நட்சத்திரக்காரர். ராசியும் அதுவே. 9ம் அதிபதி - பாக்கியாதிபதி - சந்திரன் லக்கினத்திலேயே உள்ளார், 9th Lord in the Lagna will confer huge wealth. அதீதமான பண வரவிற்கு அதுவே காரணம். அத்துடன் லக்கினாதிபதி செவ்வாய் 10ம் வீட்டில் (தொழில் ஸ்தானத்தில்) உடன் குரு பகவான். தொழில் மேன்மைக்கு அதுவே காரணம். அவர் தொழில் செய்து பணம் ஈட்டுவதற்கு இந்த அமைப்பே உதவியது. அத்துடன் குரு பகவான் தன்னுடைய விசேட பார்வையால் இரண்டாம் வீட்டைப் பார்க்கிறார். அத் அவருடைய சொந்த வீடு மட்டுமல்ல, தன ஸ்தானமும் ஆகும். செல்வம் சேர்ந்தமைக்கு இந்த அமைப்பும் காரணமாகும் 

அன்புடன்

வாத்தியார்

---------------------------------------------

கேள்விக்கு உரிய ஜாதகம்


வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
==============================================

22.4.21

Astrology: ஆசைப் பட்டது நடக்கவில்லை ஏனடா கண்ணா!!!


Astrology: ஆசைப் பட்டது நடக்கவில்லை ஏனடா கண்ணா!!! 

ஒரு அன்பரின் ஜாதகம் கீழே உள்ளது. மூல நட்சத்திரக்காரர். வீட்டாரின் கட்டாயப்படி ஜாதகர் கனரக வாகனங்களை வைத்து தொழில் செய்து பெரும்பொருள் ஈட்டினார். பத்தாம் வீட்டுக்காரன் சந்திரனின் பார்வை 9ம் வீட்டிலுள்ள சுக்கிரன் மேல் விழுவதைப் பாருங்கள். அது பாக்கிய ஸ்தானம். அத்துடன் சுக்கிரன் லக்கினத்திற்கு அதிபதி. மேலும் சுக்கிரன் வாகனங்களுக்குக் காரகன். லக்கின அதிபதியும் தொழில்காரகனும் கூட்டணி சேர்ந்தால் பலனுக்குக் கேட்கவா வேண்டும். அதுதான் வீட்டார்கள் அவருடைய ஜாதகத்தை வைத்து குடும்பத் தொழிலான வாகனத் தொழிலுக்கு அவரை இழுத்துக்கொண்டு போனது. ஆரம்பத்தில் பாதி மனதுடன் அவர் ஈடுபட்டாலும், போகப் போக சூழ்நிலை காரணமாக அவர் அதில் முழு ஈடுபாடு கொள்ளும்படி ஆகிவிட்டது

ஆனால் அவர் உள் மனதில் இருந்த ஜோதிட ஆசை - அதாவது ஜோதிடம் கற்றுக் கொண்டு ஜோதிடராகும் ஆசை  கடைசிவரை நிறைவேறவில்லைகேள்வி இதுதான் - அவருடைய ஜோதிட ஆசை நிறைவேறாமல் போனதற்கு ஜாதகப்படி என்ன காரணம்? அதை மட்டும் அலசி பதில் சொல்லுங்கள்!!!!! 

ஜாதகத்தை அலசுவோம் வாருங்கள்! 

பதில்: ஜாதகர் துலா லக்கினக்காரர். புதன் தான் ஜோதிடக் கலைக்குக் காரகன். அன்பரின் ஜாதகத்தில் புதன் 8ம் வீட்டில் அமர்ந்து வலுவிழந்துவிட்டார். (Mercury is the karaka for Astrology and in his horoscope Mercury is placed in the adverse 8th. Success in Astrology is not indicated ) ஜாதகரின் ஜோதிடர் கனவு நிறைவேறாமல் போனதற்கு அதுதான் முக்கியமான காரணம், அதை மட்டும் இங்கே குறிப்பிட்டுள்ளேன்

அன்புடன்

வாத்தியார்

---------------------------------------------

கேள்விக்கு உரிய ஜாதகம்:


===========================================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

21.4.21

Astrology: இடம் பார்த்து எனைச் சேர்க்க மறந்தாய் கண்ணா!!!



Astrology: இடம் பார்த்து எனைச் சேர்க்க மறந்தாய் கண்ணா!!! 

ஒரு அன்பரின் ஜாதகம் கீழே உள்ளது. சதய நட்சத்திரக்காரர். ஜாதகத்தில் ராஜ யோகம், கஜகேசரி யோகம், நீசபங்க ராஜயோகம் போன்ற பல யோகங்கள் உள்ளன. அத்துடன் பத்தாம் வீட்டதிபதி லக்கினத்தில் வந்து அமர்ந்திருந்தால் ஜாககருக்கு அவர் செய்யும் வேலையில் தொடர்ந்து பல ஏற்றங்களைக் கொடுப்பார் என்பது ஜோதிட விதி. (If the lord of the 10th is powerful and is in lagna, the native will be successful in profession or business) ஆனால் ஜாதகருக்கு அவர் வேலைக்குச் சேர்ந்த நிறுவனத்தில் தொடர்ந்து 25 ஆண்டுகள் வேலை பார்த்தாரே தவிர எந்தவித முன்னேற்றமும் கிடைக்கவில்லை

அடுத்து வந்த புதன் திசையில் சொந்தத் தொழிலைச் செய்யத்துவங்கி பெரும் பொருள் குவித்தார் என்பது தனிக்கதைஅந்தக்கதை நமக்கு வேண்டாம். துவக்கத்தில், அதாவது அவருடைய 46வது வயது வரை ஏன் அவர் வாழ்க்கை அவர் அப்போது பார்த்த வேலையால் செழுமை (ஏற்றம்) அடையவில்லை

ஜாதகத்தை அலசுவோம் வாருங்கள்!

ஜாதகர் கடக லக்கினக்காரர். அந்த கால கட்டத்தில் ஜாதகருக்கு 19 ஆண்டுகள் சனி மகா திசை காலமாகும். அதாவது அவர் வேலை பார்த்த நாட்களில் நடந்தது. சனி மகா திசை காலமாகும். சனீஷ்வரன் இந்த ஜாதகத்திற்கு 7 மற்றும் 8ம் வீடுகளுக்கு உரியவன். லக்கினாதிபதி சந்திரன் எட்டாம் வீட்டில். அதுவும் சனீஷ்வரனுடன் பரிவர்த்தனை யோகத்தில். சனீஷ்வரன் எட்டாம் வீட்டிற்கு உரிய கஷ்டங்களையே பலனாகக் கொடுத்தார். அதற்கு முன் நடந்த குரு திசையின் கடைசி ஆண்டுகளும் அவருக்கு சாதமாக இருக்கவில்லை. குரு ஆறாம் இடத்திற்கு உரியவர். மேலும் கேதுவின் சேர்க்கையால் பாதிக்கப்பட்டுள்ளார்

ஜாதகரின் மத்திம வயதுக்காலம் ஏற்றங்கள் இன்றி கழிந்ததற்கு மேலே குறிப்பிட்டுள்ளதுதான் முக்கியமான காரணம், அதை மட்டும் குறிப்பிட்டுள்ளேன்

அன்புடன்

வாத்தியார்

---------------------------------------------

கேள்விக்கு உரிய ஜாதகம்:

========================================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

20.4.21

Astrology: ஆளாமல், அனுபவிக்காமல் இளம் வயதிலேயே ஜாதகர் மேலே போனது ஏன்?


Astrology: ஆளாமல், அனுபவிக்காமல் இளம் வயதிலேயே ஜாதகர் மேலே போனது ஏன்

ஒரு அன்பரின் ஜாதகம் கீழே உள்ளது. கேட்டை  நட்சத்திரக்காரர். நல்ல மனிதர். ஆனால் ஆளாமல், அனுபவிக்காமல் இளம் வயதிலேயே (26 வயதில்) இறைவனடி சேர்ந்து விட்டார். அல்ப ஆயுளில் அவர் போய்ச் சேர்ந்தமைக்கு என்ன காரணம்

ஜாதகத்தை அலசுவோம் வாருங்கள்! 

ஜாதகர் விருச்சிக லக்கினக்காரர். கடுமையான மாரக திசை நடந்ததுதான் காரணம். ஜாதகர்  இளம் வயதிலேயே இறைவனடி சேர்ந்துவிட்டார். 2ம் வீடும், 7ம் வீடும் மாரக ஸ்தானங்கள் என்பது தெரியும். அதில் 2ம் வீடுதான் 7ம் வீட்டை விட அதீதமான வலிமை உடையது. ஏழாம் வீட்டதிபதி சுக்கிரன் 2ம் வீட்டில் வந்து அமர்ந்திருப்பதைப் பாருங்கள்

சுக்கிர மகா திசையில் குரு புக்தி நடக்கும்போது ஜாதகர் ஒரு விபத்தில் சிக்கி ஸ்தலத்திலேயே மாண்டு போனார். தசா நாதனும் புக்தி நாதனும் அஷ்டம சஷ்டமத்தில் (8/6 Position) இருப்பதைப் பாருங்கள்

அன்புடன்

வாத்தியார்

---------------------------------------------

கேள்விக்கு உரிய ஜாதகம்:


=======================================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

19.4.21

Astrology: என்னதான் ரகசியமோ ஜாதகத்திலே?



Astrology: என்னதான் ரகசியமோ ஜாதகத்திலே

ஒரு அம்மணியின் ஜாதகம் கீழே உள்ளது. சுவாதி நட்சத்திரக்காரர். அவரின் 25வது வயது வரை அவர் தன்னிச்சையாகவே வளர்ந்து வந்தார். எவரையும் மதிப்பதில்லை. பெற்றோர்களின் பேச்சைக் கேட்பதுமில்லை. தன் வயதை உடைய பெண்களுடன் சேர்ந்து ஊரைச் சுற்றிக் கொண்டிருந்தார். திருமணமும் கூடிவரவில்லை. ஆரம்பத்தில் திருமணம் பேசும் சமயத்தில் கோள்சாரச் சனி மேஷத்தில். சந்திரனுக்கு ஏழில் அதனால் திருமணம் கூடிவரவில்லை. ஆனால் குரு பகவான் தன்னுடைய மகா திசை முடியும் நேரத்தில் அம்மணிக்கு ஒரு நல்ல கணவனைப் பிடித்துக்கொடுத்து அவர் வாழ்க்கையை நல் வழிப் படுத்தினார்.

கேள்வி இதுதான் இளம் வயதில் அவருடைய குணக் கேடான நடத்தைக்கு ஜாதகப்படி காரணம் என்னஜாதகத்தை அலசுவோம் வாருங்கள். 

ஜாதகி ரிஷப லக்கினக்காரர். லக்கினாதிபதி சுக்கிரன் 12ல். விரைய ஸ்தானத்தில். உடன் 4ம் அதிபதி சூரியனும், 7 & 12ற்குரிய செவ்வாயும் கூட்டாக உள்ளார்கள். அத்துடன் சூரியனுடன் மோதி சுக்கிரனும் செவ்வாயும் அஸ்தமணமாகியுள்ளார்கள். லக்கினாதிபதி 12ல் விரையத்தில் அமர்ந்ததால் ஜாதகியின் வாழ்க்கை இளமையில் அவருக்குப் பயன்படும்படி உருப்படியாக இல்லாமல் போய்விட்டது. ஆனால் 5ல் திரிகோணத்தில் அமர்ந்து லக்கினத்தைத் தன் பார்வையில் வைத்திருக்கும் குரு பகவான் தன் மகா திசை துவங்கியவுடன் ஜாதகிக்கு நல்வழியைக் காட்டி நல்வழிப்படுத்தினார். 

அன்புடன்

வாத்தியார்

---------------------------------------------

கேள்விக்கு உரிய ஜாதகம்:

========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

9.4.21

Astrology: கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று ஜாதகர் இருந்தமைக்குக் காரணம் என்ன ?


Astrology: கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று ஜாதகர் இருந்தமைக்குக் காரணம் என்ன

ஒரு அன்பரின் ஜாதகம் கீழே உள்ளது. திருவோண  நட்சத்திரக்காரர். 30 வயது வரை அவர் கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று தன் நண்பர்களுடன் சேர்ந்து ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தார், முறையான கல்வியும் இல்லை. முறைப்படி ஒரு வேலையிலும் நிலைத்து இருக்கவில்லை. ஆனால் 31 வயதிற்கு மேல் எல்லாம் சரியானது. அது வேற கதை. ஆனால் இளம் வயதில் அவர் தன் பெற்றோர்களுக்கு பிரச்சினையாக இருந்த நிலைமைக்கு ஜாதகப்படி என்ன காரணம்

ஜாதகத்தை அலசுவோம் வாருங்கள்! 

ஜாதகர் சிம்ம லக்கினக்காரர். 13 வயது முதல் 31 வயது வரை அவருக்கு ராகு மகா திசை நடந்தது. அந்த தசா காலத்தில் ஸ்திரமான வாழக்கை இருக்காதே சாமி. லக்கினத்திலும் 7ம் வீட்டிலும் ராகு மற்றும் கேதுவின் ஆதிக்கம்.

தறுதலையான மனப் பாங்கிற்கும் ஒரு வேலையிலும் நிலைத்து நில்லாமல் போனதற்கும் இது தான் காரணம்

ஆனால் அடுத்து 32வது வயதில் துவங்கிய குரு மகா திசை அவருக்கு நல்ல வேலை ஒன்றை ஏற்படுத்திக் கொடுத்ததுடன் ரிப்பேராக இருந்த அவருடைய பெயரையும் பழுது பார்த்துக்கொடுத்தது. 3ம் வீட்டில் குரு பகவானும் 10ம் அதிபதி சுக்கிரனும் ஒன்றாக இருப்பதைப் பாருங்கள். அவரை நல்வழிப் படுத்தியதில் இந்த இருவருக்குமே சம பங்கு உண்டு

அன்புடன்

வாத்தியார்

---------------------------------------------

கேள்விக்கு உரிய ஜாதகம்:


================================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

8.4.21

Astrology: ஜாதகரின் ஆசை நிறைவேறாமல் போனதற்கு என்ன காரணம் ?


Astrology: ஜாதகரின் ஆசை நிறைவேறாமல் போனதற்கு என்ன காரணம் ? 

ஒரு அன்பரின் ஜாதகம் கீழே உள்ளது. கார்த்திகை நட்சத்திரக்காரர். அவருக்கு 44 வயது நடக்கும்போது தொடர்ந்து 2 ஆண்டு காலம் சொந்த வீடு வாங்குவதற்காக பாடுபட்டார். ஆனால் ஒரு வீட்டை வாங்க முடியவில்லை. ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்? க்ளூ வேண்டுமா? அவருக்கு அப்போது குரு மகா திசையில் சுக்கிரபுத்தி நடந்து கொண்டிருந்தது 

ஜாதகத்தை அலசுவோம் வாருங்கள்! 

ஜாதகர் மிதுன லக்கினக்காரர். தசா நாதன் குரு பகவானும், புத்தி நாதன் சுக்கிரனும் ஒருவருக்கொருவர் 6/8 நிலைப்பாட்டில் (அஷ்டம சஷ்டம நிலைப்பாட்டில்) இருப்பதைப் பாருங்கள், அவ்வாறு இருக்கும்போது நன்மையானது எதுவும் நடக்காது. அந்த தசா புத்தியில் ஜாதகரின் ஆசை நிறைவேறாமல் போனதற்கு அதுதான் காரணம்

ஆனால் அதற்கு அடுத்து வந்த குரு மகா திசை சூரிய புத்தியில் ஜாதகரின் ஆசி நிறைவேறியது. ஒரு வீட்டை வாங்கினார் குரு பகவானின் பார்வை சூரியனின் மேல் விழுவதைப் பாருங்கள் 

அன்புடன்

வாத்தியார்

---------------------------------------------

கேள்விக்கு உரிய ஜாதகம்:


========================================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!