மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

30.4.10

ஆணவத்திற்கு விழுந்த அடி!++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஆணவத்திற்கு விழுந்த அடி!

ஒரு சாமியார் இருந்தார். வேண்டாம் ...ஒரு சந்நியாசி இருந்தார். ..அதுவும் வேண்டாம்...ஒரு துறவி இருந்தார்.

நல்ல விஷய ஞானம் உள்ளவர். எல்லா விஷயங்களையும் அறிந்தவர். எல்லா நாடுகளுக்கும் சென்று வந்தவர். அவருக்கு ஏராளமான தொண்டர்கள், சீடர்கள், பின்பற்றுபவர்கள் இருந்தார்கள்.

மைக்கைப் பிடித்தால் மணிக்கணக்கில் பேசுவார். சுவாரசியமாகப் பேசுவதில் கில்லாடி. சபையை நிறைக்கும் கூட்டமும், மெய்மறந்து அவருடைய
உரையைக் கேட்கும்.

இறைவனைப் பற்றியும் பேசுவார். இயல்பு வாழ்க்கையைப் பற்றியும் பேசுவார்.

பிரதான சீடன் ஒருவன் கூடவே இருப்பான்.

அவர் நல்லவர். வல்லவர்.ஆனாலும் பேச்சில் கொஞ்சம் அகராதி இருக்கும். சில சமயங்களில் ஆணவம் தலைதூக்கும்.

ஒரு சமயம் மேடையில் பேசும்போது இப்படி சொன்னார்:

“இந்த உலகில் நான் பார்க்காத இடமே இல்லை. என் கண்படாத இடமே இல்லை!”

அவருக்குப் பின்புறம் மிக அருகில் அமர்ந்திருந்த பிரதான சீடன், குறுக்கிட்டு மெல்லிய குரலில் சொன்னான்:

“ஒரு இடம் இருக்கிறது சுவாமிஜி!”

மைக்கைச் சட்டென்று தன் கைகளால் மூடிக்கொண்டு, அவனை நோக்கித் திரும்பிய சுவாமிஜி, கோபத்துடன், அதே நேரத்தில் மெல்லிய குரலில், உறுமும் தொனியுடன் கேட்டார்:

“எந்த இடம்?”

சீடன் பதில் சொன்னான்:
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
“உங்கள் முதுகு!”
--------------------------------------------------------------------
அன்புடன்,
வாத்தியார்
வாழ்க வளமுடன்!

29.4.10

கண்ணதாசனும் தில்லைக்கூத்தனும்!++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கண்ணதாசனும் தில்லைக்கூத்தனும்!

பஞ்ச பூதங்களின் வடிவாக நிற்கும் தில்லைக் கூத்தனைப் பற்றிக் கவியரசர் கண்ணதாசன் பல பாடல்களைச் சிறப்பாக எழுதியுயுள்ளார். அவற்றில் இரண்டு பாடல்களை உங்கள் பார்வைக்காக இன்று கொடுத்துள்ளேன்.
------------------------------
"ஆதிசிவன் தாள் பணிந்து அருள்பெறுவோமே - எங்கள்
ஆதிசக்தி நாயகியின் துணை பெறுவோமே!

(ஆதிசக்தி )

வேதங்களின் தத்துவத்தை நாடிடுவோமே - திரு
வெண்ணீரும் குங்குமமும் சூடிடுவோமே
அஞ்செழுத்தைக் காலமெல்லாம் நெஞ்சில் வைப்போமே -
அவன்
அடியவர்க்கும் அன்பருக்கும் தொண்டு செய்வோமே!

(ஆதிசக்தி )

நாவுக்கரசர் பாடிப்புகழும் நாதனல்லவா - அந்த
நாதத்திற்கே பெருமை தந்த ஜீவனல்லவா
பேசும் தமிழ்ப் பாட்டுக்கெல்லாம் தந்தையல்லவா - அதைப்
பிள்ளைத் தமிழ் என்று சொன்ன அன்னையல்லவா..."

(ஆதிசக்தி )

படம்: திருவருட் செல்வர் (வருடம் 1967)
------------------------------------------------
மேலும் ஒரு பாடல் - இந்தப் பாடல் ஒரு மேதைக்கு இன்னொரு மேதை எழுதிக் கொடுத்த பாடல். ஆமாம்! இயக்குனர் திரு.ஏ.பி. நாகராஜன் அவர்களுக்கு கவியரசர் எழுதிக் கொடுத்த சிறந்த பாடல்களில் ஒன்று!

"வெள்ளிமலை மன்னவா! வேதம் நீ அல்லவா!
முன்னோர்க்கும் முன்னவா! மூண்ட கதை சொல்லவா!

(வெள்ளிமலை)

அஞ்செழுத்தும் எங்கள் நெஞ்செழுத்தல்லவா!
ஐம்புலனும் எங்கள் அடைக்கல மல்லவா?
அஞ்சுமென் நெஞ்சுக்கு ஆறுதல் சொல்லவா!
அபாயம் நீங்கவரும் சிவாயமல்லவா!

(வெள்ளிமலை)

வானுலகம் விழுவதென்ன வானவர்தாம் அழுவதென்ன!
சேனை அசுரர் குல ஜெயக்கொடிதான் சொல்வதென்ன!
தேவர் குரல் கேட்டு உன் திருவடியைக் காட்டு!
அபயக்கரம் நீட்டு! உன அருள் வடிவைக் காட்டு!"

(வெள்ளிமலை)

படம் - கந்தன் கருணை - வருடம் 1967

இந்தப் பாடல் திருமதி எஸ்.வரலெட்சுமி அவர்கள் தன்னுடைய கணீர்க் குரலால், உணர்வுபூர்வமாகப் பாடி கவியரசரின் வரிகளாலும் படத்தில் இடம் பெற்ற காட்சி அமைப்புக்களாலும், தமிழ் நாட்டையே ஒரு கலக்குக் கலக்கிய பாடல் என்றால் அது மிகையல்ல!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

28.4.10

நவக்கிரகக் கோவில்கள் - பகுதி ஒன்று!


---------------------------------------------------------------------
நவக்கிரகக் கோவில்கள் - பகுதி ஒன்று!

நமது வகுப்பறைக்கு வரும் வாசக அன்பர் ஒருவர், நவக்கிரகக் கோவில்கலைப் பற்றி எழுதும்படி பணித்திருந்தார்.

இந்தவாரம், துவக்கப்பகுதி. சூரியனுக்கு உரிய கோவிலைப் பற்றி இன்று எழுதியுள்ளேன். வாரம் ஒரு கோவில். இதன் அடுத்த பகுதி அடுத்தவாரம் வரும். பொறுத்திருந்து படியுங்கள்.
-------------------------------------------------------------------
நவக்கிரகக் கோவில்கள் அனைத்தும் தஞ்சை மாவட்டத்திலே உள்ளன.

ஏன் தஞ்சை மாவட்டத்திலேயே உள்ளன?

சோழ மன்னர்கள் காலத்தில் கட்டப்பெற்ற கோவில்கள் அவைகள். அதனால் தஞ்சை மாவட்டத்திலேயே அவைகள் இடம் பெற்றுள்ளன. சோழ மன்னர்கள் காலத்தில் குடந்தையில் (தற்போதைய கும்பகோணம்) நிறைய ஜோதிட விற்பன்னர்கள் (experts) இருந்ததாகவும், அவர்களின் ஆலோசனைப்படியும், ஆகம விதிகளின் படியும், மன்னர்கள் கோவில்களை அமைத்ததாக வரலாறு.

நூறுக்கணக்கான ஆண்டுகளாக, பல லட்சக்கணக்கான மக்கள் சென்று வந்ததாலும், பல லட்சம் முறைகள் கோள்களுக்கான மந்திரங்கள் உரக்க ஒலிக்கப்பெற்றதாலும், அக்கோவில்களுக்கு, ஒரு சக்தி உள்ளது.

அசட்டுக் கேள்விகளைத் தவிர்த்து, நம்பிக்கையோடு அத்தலங்களுக்குச் சென்று அங்கே உறையும் கிரகங்களை வழிபட்டு வாருங்கள், உங்கள் துன்பங்கள் நீங்கும். வாழ்க்கையில் மாறுதல்கள் உண்டாகும். மறுமலர்ச்சி உண்டாகும்!
---------------------------------------------------------------------
சூரியனார் கோவில்

நவக் கிரகங்களில் முதன்மைக் கிரகமான சூரியனுக்கான கோவில்

குலோத்துங்க சோழனால், 1100ஆம் ஆண்டு கட்டப்பெற்றது.

கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில், திருமங்கலக்குடி என்னும் கிராமத்தின் அருகில் உள்ளது.

ஸ்தல மூர்த்தியின் பெயர் ஸ்ரீசூரியநாராயணமூர்த்தி. உடன் ஸ்ரீஉஷா தேவியும், ஸ்ரீபிரத்யுஷ தேவியும் உள்ளார்கள். மற்ற எட்டு கிரகங்களும் சூரியனை நோக்கி இருக்கும் வண்ணம் அமையப்பெற்றுள்ளது.

கோவிலுக்குள் காசிவிஸ்வநாதருக்கும், விசாலாட்சி அம்மனுக்கும் கருவறைகள் உள்ளன. (அவர்கள் இல்லாமல் கோவில் ஏது?) கோள்தீர்த்த விநாயகருக்கும் கருவறை உள்ளது.

சூரிய பகவான், உடல்காரகன் (உடல் ஆரோக்கியத்திற்கு அதிபதி) வெற்றிக்கும், வளர்ச்சிக்கும் அதிபதி.

யார், யார் போகலாம்?

யார் வேண்டுமென்றாலும் போகலாம். போய் வரலாம். இறைவனையும், கோள்களையும் வணங்கக் கட்டுப்பாடுகள் எதுவுமில்லை.

ஜாதகத்தில் சூரியன் நீசமடைந்திருந்தாலும், சூரியனுடைய திசை நடைபெற்றாலும், அல்லது அடிக்கடி உடற்கோளாறுகள் ஏற்பட்டாலும், அவர்கள் தவறாமல் ஒருமுறையாவது போய் வரவேண்டும். அதுபோல கோச்சாரத்தில் ஜன்மச் சனி, அஷ்டமச்சனி நடைபெறும் காலங்களில் ஜாதகர் சென்று வரலாம். சனியின் தாக்கங்களைத் தாக்குப்பிடிக்கும் சக்தியை சூரியபகவான் கொடுப்பார்.

கோதுமை, செந்தாமரை மலர் (சிவப்புத் தாமரை மலர்) மற்றும் எருக்கம்பூ ஆகியவைகள் இங்கே பூஜைக்கு உகந்தவையாகும்

கோவிலின் கருவறையும், அர்த்தமண்டபமும், கருங்கற்களால் கட்டப்பெற்றதாகும். சூரியக் கதிர்கள் முழு வீச்சில் கோவிலுக்குள் வரும்படி கோவில் அமைந்திருப்பது குறிப்பிட வேண்டிய ஒன்றாகும். மூன்று நிலைகளைக் கொண்ட கோபுரமும் உள்ளது.

சூர்ய புஷ்கரணி என்னும் ஸ்தல தீர்த்தமும் அருகில் உள்ளது. அதாவது ஊருணியும் உள்ளது. ராஜகோபுரத்தின் வடக்குப் பகுதியில் உள்ளது. பக்தர்கள் இங்கே புனித நீராடலாம்.

கோவிலின் பலிபீடத்திற்கு அருகே குதிரை வாகனமும் உள்ளது. அது சூரியனுக்கான வாகனம் என்பதும் குறிப்பிடத்தகுந்தது.

இங்கே செல்பவர்கள் முதலில் கோள்தீர்த்த விநாயகரை முதலில் வணங்கிவிட்டுப் பிறகு சூரிய பகவானை வணங்க வேண்டும் என்பது ஐதீகம்.

கோவிலின் விழாக்காலங்கள்

தை மாதம் சப்தமி திதி. ஆவணி மற்றும் கார்த்திகை மாதங்களில் முதல் ஞாயிற்றுக்கிழமை. விஜயதசமி ஆகிய தினங்களில் கோவில் விழாக்கோலத்துடன் இருக்கும்.

சூரியனுக்கு உகந்த நாள் ஞாயிற்றுக்கிழமை. ஆகவே அந்த தினத்தில் செல்வது சிறப்பாக இருக்கும். கோவிலின் நடை திறந்திருக்கும் நேரம் காலை 6:00 மணி முதல் 12:30 மணி வரை. மாலை 4:00 மணி முதல் 8:00 மணிவரை

கும்பகோணத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தூரம். மயிலாடுதுறையில் இருந்து 20 கிலோ மீட்டர் தூரம். பேருந்துகள் அதிக அளவில் உள்ளன.

நம்பிக்கை உள்ளவர்கள் சென்று வரலாம். நலன்களைப் பெற்று வரலாம்!

மேலதிகத் தகவல்கள்:

சூரியனார் கோவிலில் மற்ற கிரஹ‌ங்கள் 8க்கும் சன்னதிகள் உள்ளன. 9 கிரஹங்கள், வினாயகர், சுவாமி, அம்பாள் ஆகிய சன்னதிகள் 12க்கும் அர்ச்ச‌னை செய்ய 12 தேங்காய் உள்ள தட்டு வாங்கச் சொல்லியும் அதற்கு உண்டான அர்ச்சனைச் சீட்டு, தட்சணை எல்லாம் சேர்த்து இன்ரையத் தேதிக்கு ரூ500/= வரை செலவாகும். தேவையான அளவு கையில் பணத்தோடு செல்ல வெண்டும். திருமங்கலக்குடி திருமண தாமதத்தை நிவர்த்தி செய்ய தரிசிக்க வேண்டிய தலம்

சூரிய பகவானுக்கு நேர் எதிராக குரு பகவான் உள்ளார். அதாவது இருவரும் ஒருவருக்கொருவர் பார்வையில். சூரிய பகவான் பூஜைக்கு அடுத்து குருவுக்கும் பூஜை நடத்தப்படும். இது மற்ற கோவில்களில் கிடைக்காத சிறப்பு!
------------------------------------------------------------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

27.4.10

குழந்தை பாக்கியத்திற்கான அஷ்டகவர்க்க ஃபார்முலா என்ன?+++++++++++++++++++++++++++++++++++++++++++++
"வெள்ளிமலை மன்னவா
வேதம் நீயல்லவா!"
-கவியரசர் கண்ணதாசன்

குழந்தை பாக்கியத்திற்கான அஷ்டகவர்க்க ஃபார்முலா என்ன?

குழந்தை பாக்கியத்திற்கான அஷ்டகவர்க்க ஃபார்முலா இதுதான்.

5ஆம் வீடு, 5ஆம் அதிபதி இருக்கும் இடம், காரகன் குரு இருக்கும் இடம் ஆகிய மூன்று வீடுகளும், 28 பரல் களுக்கு மேல் இருக்கவேண்டும். இருந்தால் உடனே (திருமணமான மறு வருடமே) குழந்தை பிறக்கும்.

இல்லையென்றால்?

அந்த மூன்று வீடுகளில் ஒரு வீட்டிலாவது 28ற்கு மேற்பட்ட பரல்கல்கள் இருக்க வேண்டும். அப்படியிருந்தால் தாமதமாகக் குழந்தை பிறக்கும்!

எப்போது பிறக்கும்?

ஐந்தாம் அதிபதி அல்லது காரகன் அல்லது லக்கினாதிபதி ஆகியவர்களின் தசாபுத்தியில் பிறக்கும்.

மூன்று வீடுகளிலுமே நீங்கள் சொல்லும் 28 பரல்கள் இல்லையென்றால்?

அவசரப்படவேண்டாம். 25 முதல் 28 பரல்களுக்குள் இருக்கலாம். சற்றுத்தாமதமாகப் பிறக்கும்.

மூன்று வீடுகளுலும் 25 பரல்கள் இல்லை - அதற்குக் கீழான பரல்கள்தான் உள்ளன என்றால்?

கணவன் அல்லது மனைவி இருவரில் ஒருவருக்கு அந்த வீடுகள் நன்றாக இருந்தால் போதும். அவரை வைத்து - அவருக்காகப் பிறக்கும்!

இருவருக்குமே அப்படியில்லையென்றால்?

கஷ்டம்தான். இறைவனை வழிபடுவதைத் தவிர வேறு வழியில்லை! பூர்வ புண்ணியத்தைச் சொல்லும் திறமை எந்த ஜோதிடனுக்கும் இல்லை. பூர்வ புண்ணியப் பலனால் (மேலும் இறைவழிபாட்டால்) எல்லாவற்றையும் பொய்யாக்கி விட்டுக் குழந்தை பிறக்கும்.

காசில்லாத பரிகாரஸ்தலம் எது?

ராமேஸ்வரம்!

Okayயா?

நட்புடன்
வாத்தியார்

(திருமணமாகாதவர்கள் இந்தப் பாடத்தைப் படித்துவிட்டுக் குழம்ப வேண்டாம். பெண் பார்க்கும்போது மகேந்திரப் பொருத்தம் பார்த்து, அது பொருந்துகின்ற பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளுங்கள்.)


வாழ்க வளமுடன்!

26.4.10

நீங்களும் முதல்நிலை சுபக்கிரகமும்!


++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நீங்களும் முதல்நிலை சுபக்கிரகமும்!

"இறைவன் வருவான் - அவன்
என்றும் நல்வழி தருவான்
அறிவோம் அவனை - அவன்
அன்பே நாம் பெறும் கருணை!"
- கவியரசர் கண்ணதாசன்
------------------------------------------------------------------
ஒரு ஜாதகத்தைக் கையில் எடுத்தவுடன் என்ன செய்ய வேண்டும் என்று முதல் இரண்டு பாடங்களில் கோடிட்டுக் காட்டியிருந்தேன்.

அடுத்து என்ன செய்ய வேண்டும்?

முதல்நிலை (first rated benefic) சுபக்கிரகமான குரு ஜாதகத்தில் எங்கே இருக்கிறது என்று பார்க்க வேண்டும்!

குரு 1, 5, 9 ஆம் விடுகளில் இருந்தால் உத்தமம்.

லக்கினத்தில் குரு இருந்தால் அதி உத்தமம். ஜாதகன் ஆசீர்வதிக்கப்பட்டவன். Yes, the native of the horoscope is a blessed person. அவனுக்கு ஜாதகத்தைப் பார்த்துப் பலன் சொல்ல வேண்டாம். ஜாதகத்தைத் திருப்பிக் கொடுத்துவிடலாம். நல்லதும் கெட்டதும் கலந்ததுதான் வாழ்க்கை. அவனுடைய வாழ்வில் அது இரண்டும் இருக்கும்.அந்த இரண்டு சூழ்நிலைகளிலும், குரு அவனுக்குக் கை கொடுப்பார்.

நல்லதிற்குக் கை கொடுக்க யாரும் வேண்டியதில்லை. ஆனால் கெட்ட சூழ்நிலையில் நமக்குக் கை கொடுக்க ஒருவராவது வேண்டும். அந்த ஒருவராகக் குரு பகவானே வந்து நிற்பார் எனும்போது வேறு என்ன வேண்டும்?

வந்து நிற்பார் என்றால் என்ன பொருள்?

The native is self equipped to stand in any situation!

அது முக்கியம்.

அதேபோல 7ல் குரு இருந்தாலும் நல்ல பலன். இரண்டு விதமான பலன். அவர் லக்கினத்தைத் தன் கண் பார்வையில் வைத்திருப்பதோடு, ஜாதகனுக்கு அல்லது ஜாதகிக்கு நல்ல வாழ்க்கைத் துணையைத் தேடிக் கொடுப்பார்.

”நீ பாதி; நான் பாதி கண்ணே” என்று ஜாதகன் பாடிக் கொண்டிருப்பான் (திருமணத்திற்குப் பிறகுதான்)

அதேபோல 5ஆம், வீடு அல்லது 9ஆம் வீடுகளில் குரு இருந்தாலும் சிறப்புத்தான். 5ல் இருந்து தனது விஷேச பார்வையான 9ஆம் பார்வையாக லக்கினத்தை அவர் தன் கண்ணில் வைத்திருப்பார். 9ஆம் வீட்டில் இருந்தாலும், தனது 5ஆம் பார்வையால், அவர் லக்கினத்தைத் தன் கண்ணில் வைத்திருப்பார்.

9ல் குரு இருந்தால் ஜாதகனுக்கு நல்ல தந்தை கிடைப்பார். பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்கும். 5ல் குரு இருந்தால் ஜாதகன் அறிவு ஜீவியாக இருப்பான். (Guru is the authority for keen intelligence).

கல்வி நான்காம் வீடு; அறிவு ஐந்தாம் வீடு. அதனால்தான் படித்த முட்டாளூம் இருக்கிறான். படிக்காத மேதையும் இருக்கிறான்.

அதுபோல 4, 7, 10ஆம் வீடுகளில் குரு இருந்தாலும் நல்லதே! நன்மையான பலன்கள் கிடைக்கும். அதற்கு அடுத்ததாக 2,11 ஆம் வீடுகளில் குரு இருந்தாலும் நன்மையே!

குரு உச்சம் பெற்று இருந்தால் அதிக நன்மைகளைச் செய்வார். அவருடைய தசா, புத்திகளில் அந்த நன்மை களைக் கொடுப்பார்.

சரி, குரு எங்கே இருக்கக் கூடாது?

3,6,8,12 ஆம் வீடுகளில் குரு இருக்ககூடாது. அதோடு அவர் ஜாதகத்தில் நீசமாகி அடிபட்டிருக்கக்கூடாது. அப்படி இருந்தால், ஜாதகத்தில் வேறு நல்ல அம்சங்கள் இல்லையென்றால் ஜாதகனின் வாழ்க்கை போராட்டங்கள் நிறைந்ததாக இருக்கும்.

அதை எதிர்நீச்சல் ஜாதகம் என்பார்கள். எதிர்நீச்சல் என்றால் என்னவென்று தெரியுமல்லவா?

மற்றவை அடுத்த பாடத்தில்,

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

24.4.10

வாத்தியாரின் விபரீத ஆசை!++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாத்தியாரின் விபரீத ஆசை!

சிறுகதை, மனவளக்கட்டுரை, ஆன்மிகம், ஜோதிடம், நகைச்சுவை, குட்டிக்கதைகள் என்று எழுதிக்கொண்டிருந்த வாத்தியாருக்கு, கவிதை,
வசன கவிதை எழுதும் விபரீத ஆசைவந்து தொலைத்தது. அப்படியொரு
விபரீத ஆசைவந்தபோது வாத்தியார் எழுதியவைகள், பத்திரிக்கையில் வெளிவந்தவைகள் என்று சில ஆக்கங்கள் உள்ளன. இன்று ஒன்றைப் பதிவில் ஏற்றி உள்ளேன். உங்கள் விருப்பம் அறிந்து மற்றவையும் வாரம் ஒன்றாகப்
பின்னால் வரும்.

இது வகுப்பறையின் 550ஆவது பதிவு!
------------------------------------------------------------------------------------------------------
தலைப்பு:
அதுவும் பேதமைதான்!

சிவலோகம் சென்றுவிட்டார்
சீனா தானா
கூடவே சென்றுவிட்டது
குடும்பத்தின் ஒற்றுமை!

ஆப்பிள் ஐந்து
அறுவருக்குப் பங்கென்றால்
சாறாகப் பிழிந்து
சமமாகக் கொடுத்திடலாம்
சொத்தைப் பங்குவைக்கும்
இயந்திர சாதனங்கள்
இன்னும் வரவில்லை
எடிசன் மீண்டும்பிறந்தால்
எதிர்காலத்தில் சாத்தியப்படலாம்

மகன்கள் நால்வர்
மாப்பிள்ளைகள் நால்வர்
ஒற்றுமை உடைந்ததில்
கட்சிகள் இரண்டாயின
காட்சிகள் பலவாயின

நூற்பாலையை மட்டும்
ஏற்பாரில்லை
மற்ற சொத்துக்களுக்கு
மல்லுக்கட்டு

வங்கிக் கணக்கும்
வைப்புத் தொகையும்
முடக்கப் பட்டன
அசையாச் சொத்துக்கள்
நீதிமன்றத் தீர்வாளரிடம்
அடங்கி விட்டன

அசையும் சொத்துக்களில்
ஆத்தாளைத் தவிர
மற்றதை எல்லாம்
பங்கு வைத்தார்கள்
ஆத்தாளை வைத்துக்கொள்ள
மாதங்களைப்
பங்கு வைத்தார்கள்

பத்தில் சகோதரன்
இருபதில் பங்காளி
நாற்பதில் பிரதிவாதி
என்கின்ற
சீமான்வீட்டுச் சட்டங்கள்
சிறப்பாக அரங்கேறின

பகைமை முற்றியபின்பு
பழைய படங்கள் எல்லாம்
சட்டங்களை விட்டிறங்கி
பெட்டிக்குள் போயின

எத்தனை பட்டினத்தார்
மண்ணில் பிறந்தாலும்
காதறுந்த ஊசிமட்டும் - அவர்கள்
கண்ணில் படாது!

கண்களை விற்றுச்
சித்திரம் வாங்குவது
மட்டும்தான் பேதமையா?
அப்பச்சியின் சொத்திற்காக
அன்பையும், பாசத்தையும்
அறுத்து எறிவதும்
பேதமைதான்! அறிக!
-------------------------------------------------------
எந்த வரி நன்றாக உள்ளது. சொல்லுங்கள்

அன்புடன்
வாத்தியார்!

வாழ்க வளமுடன்!

23.4.10

வாசல் கதவை யார் மூடுவதில்லை?


..............................................................................................................................


.............................................................................................................................
வாசல் கதவை யார் மூடுவதில்லை?

கவியரசர் கண்ணதாசனின் மத நல்லிணக்கம்!

ஒரு கவிஞன் எப்போழுது புகழ்பெற்ற கவிஞனாகிறான்?

அவனுடைய எழுத்துக்கள் எல்லா இனமக்களையும் சென்றடைந்து, அவர்கள் அவனை ஒட்டு மொத்தமாக நேசிக்கும் பொழுதுதான் அவன் புகழ்பெற்ற கவிஞனாக முடியும். இல்லை என்றால் பத்தோடு பதினொன்றாக
அவனும் ஒரு சராசரிக் கவிஞனின் நிலைக்குத் தள்ளப்பட்டு விடுவான்.

கவியரசர் கண்ணதாசன் அவர்களின் உயர்விற்கும், புகழிற்கும் காரணம் அவர் அனைத்து மதங்களையும், அதனதன் கோட்பாடுகளையும் நேசித்ததோடு அந்தந்த மதங்களைச் சேர்ந்த மக்களையும் மதித்ததுப் போற்றிப் பாடினார், எழுதினார்.

ஒரு கவிஞன் எப்படி மதநல்லிணக்கம் கொண்டிருக்க வேண்டும் என்பதற்கு அவர்தான் சிறந்த உதாரணம்.

அர்த்தமுள்ள இந்துமதம் என்ற நூலையும் எழுதினார்.அதோடு யேசுகாவியம் என்ற கிறிஸ்துவமதத்தின் உயர்வைப் பற்றிய அரியதொரு நூலையும் எழுதினார். அதுபோல குரானுக்கும் அவர் விளக்கம் எழுதி ஒரு நூலைத் தயாரிக்க முனைந்தபோது, சில காரணங்களுக்காக, சிலர் எழுப்பிய கேள்விகளுக்காக அவர் அதைக் கைவிட நேர்ந்தது.

இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மத ஒற்றுமைக்காகவும், நல்லிணக்கத்திற் காகவும் பல பாடல்களை எழுதினார்.

இடம், பதிவின் நீளம், உங்களுடைய பொறுமை, மற்றும் நேரம், இவை கருதி இரண்டு பாடல்களை மட்டும் உங்கள் பார்வைக்காகத் தருகின்றேன்.
-------------------------------
"அல்லாஹூ அக்பர் அல்லாஹூ அக்பர்
அல்லாஹூ அக்பர் அல்லாஹூ அக்பர்
அஜா ஹிலாஹி இல்லல்லா
அஜா ஹிலாஹி இல்லல்லா

எல்லோரும் கொண்டாடுவோம்;
அல்லாவின் பெயரைச் சொல்லி
நல்லோர்கள் வாழ்வை எண்ணி

(எல்லோரும்)

கல்லாகப் படுத்திருந்து களித்தவர் யாருமில்லே
கைகால்கள் ஓய்ந்த பின்னே துடிப்பதில் லாபமில்லே
வந்ததை வரவில் வைப்போம் செய்வதைச் செலவில் வைப்போம்
இன்றுபோல் என்றும் இங்கே ஒன்றாய்க் கூடுவோம்!

(எல்லோரும்)

நூறுவகைப் பறவை வரும், கோடிவகைப் பூமலரும்
ஆடவரும் அத்தனையும் ஆண்டவனின் பிள்ளையடா
கறுப்புமில்லே வெளுப்புமில்லே, கனவுக்கு உருவமில்லே
கடலுக்குள் பிரிவுமில்லே, கடவுளில் பேதமில்லே
முதலுக்கு அன்னை என்போம் முடிவுக்குத் தந்தை என்போம்
மண்ணிலே விண்ணைக் கண்டு ஒன்றாய்க்கூடுவோம்

(எல்லோரும்)

ஆடையின்றிப் பிறந்தோமே ஆசையின்றிப் பிறந்தோமா
ஆடிமுடிக்கையிலே அள்ளிச் சென்றோர் யாருமுண்டோ?
படைத்தவன் சேர்த்துத் தந்தான் வளர்த்தவன் பிரித்து வைத்தான்

எடுத்தவன் மறைத்துக் கொண்டான்
கொடுத்தவன் தெருவில் நின்றான்
எடுத்தவன் கொடுக்க வைப்போம்
கொடுத்தவன் எடுக்க வைப்போம்

இன்றுபோல் என்றும் இங்கே ஒன்றாய்க் கூடுவோம்"

(எல்லோரும்)

படம்: பாவ மன்னிப்பு (வருடம் 1961)

கருத்துக்களோடு, என்னதொரு சொல் விளையாட்டையும் நடத்தியிருக்கிறார் பாருங்கள்!

”நூறுவகைப் பறவை வரும், கோடிவகைப் பூமலரும், ஆடவரும் அத்தனையும் ஆண்டவனின் பிள்ளையடா” என்று எழுதினார் பாருங்கள் - அதுதான் இந்தப் பாடலின் முத்தாய்ப்பான வரி!
---------------------------------------------------
மற்றுமொரு பாடல்

"சத்திய முத்திரை கட்டளை இட்டது
நாயகன் ஏசுவின் வேதம்
கட்டளை கேட்டவர் தொட்டிலில் கேட்பது
பாலகன் ஏசுவின் கீதம்

அது வானகம் பாடிய முதல் பாடல்
அந்த தூதுவன் ஆடிய விளையாடல்
மெர்ரி மெர்ரி கிறிஸ்துமஸ்.....
ஹாப்பி ஹாப்பி கிறிஸ்துமஸ்...........

மேய்ப்பன் அவனே ஆடுகள் எல்லாம் குழந்தை வடிவத்தில்
மன்னவன் அவனே மக்கள் எல்லாம் மழலை வடிவத்தில்
மேரி மாதா தேவ மகனைக் காப்பது எப்படியோ
தேவ தூதன் நம்மை எல்லாம் காப்பது அப்படியே
அவன் ஆலயம் என்பது நம் வீடு
மணி ஓசையைக் கேட்பது பண்பாடு

வாசல் கதவை மூடுவதில்லை தேவன் அரசாங்கம்
வந்தவர் வீட்டில் கண்டவர் நெஞ்சில் கருணை ஒளி பொங்கும்
ராஜ வாழ்வு தேவ அமைதி தோன்றும் சிலுவையிலே
நாளை அல்ல தேவனின் கருணை இன்றே கைகளிலே
அவன் பாதங்கள் கண்டால் அன்போடு
ஒரு பாவமும் நம்மை அணுகாது"

(சத்திய)
படம் : கண்ணே பாப்பா (வருடம் 1969)
குரல் : பி.சுசீலா

”வாசல் கதவை மூடுவதில்லை தேவன் அரசாங்கம்: வந்தவர் வீட்டில் கண்டவர் நெஞ்சில் கருணை ஒளி பொங்கும்” என்று எழுதினார் பாருங்கள் - அதுதான் இந்தப் பாடலின் முத்தாய்ப்பான வரி!

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!

22.4.10

எப்போதும் பெண்களின் நினைவாகவே இருப்பது யார்?+++++++++++++++++++++++++++++++++++++++++++++
எப்போதும் பெண்களின் நினைவாகவே இருப்பது யார்?

"மாபெரும் சபையினில் நீ நடந்தால் பல மாலைகள் விழவேண்டும் - ஒரு
மாற்றுக்குறையாத மன்னவன் இவனென்று பலர் போற்றிப் புகழவேண்டும்!"
- கவியரசர் கண்ணதாசன்

-------------------------------------------------------------------------
பாடம் 3

இரண்டாம் பாடத்தை (இதற்கு முந்தைய பாடத்தைப்) படித்துவிட்டு, அதற்கு தங்கள் ஜாதகத்தின் கிரக நிலையைக் குறிப்பிட்டு நிறையக் கேள்விகள் வந்ததால், அவற்றிற்குப் பதில் சொல்லும் முகமாக, மூன்றாம் பாடத்தை
உடனே வலையேற்றுகிறேன்.

லக்கின அதிபதி சென்று அமரும் இடங்களுக்கான பலன்கள்.

லக்கின அதிபதி லக்கினத்திலேயே இருந்தால் நன்று. உதாரணத்திற்கு நீங்கள் மேஷ லக்கினக்காரராக இருந்து அதன் அதிபதி செவ்வாய் மேஷத்திலேயே இருந்தால், அது அவருக்குச் சொந்த வீடு. ஆட்சி வீடு. அது நன்மை பயக்கும்.

இல்லை அந்த வீட்டை விட்டு வேறு இடங்களில் அமர்ந்திருந்தால் அதன் பலன் மாறுபடும். அவர் சென்று அமரும் வீடு, அவருக்குப் பகை வீடு என்றால் பலன்கள் பாதியாகக் குறைந்துவிடும்.

அதேபோல அவர் சென்று அமரும் வீடு, லக்கினத்தில் இருந்து 6ஆம் வீடாகவோ அல்லது 8அம் வீடாகவோ அல்லது 12ஆம் வீடாகவோ இருந்தால் எதிர்மறையான பலன்களே கிடைக்கும். வாழ்க்கை போராட்டம்
மிகுந்ததாக இருக்கும். எதிர் நீச்சல் போட வேண்டியதிருக்கும்.

அப்படியிருந்தால், பார்த்துவிட்டுக் கவலைப் படாதீர்கள். கன்னத்தில் கையை முட்டுக் கொடுத்துக்கொண்டு உட்கார்ந்து விடாதீர்கள். அதற்கான நஷ்ட ஈடு வேறு இடங்களில் வழங்கப்பெற்றிருக்கும். ஏனென்றால் யாராக
இருந்தாலும் ஜாதகத்தின் மொத்த மதிப்பெண் 337 மட்டுமே.அதை நினைவில் வையுங்கள்.

லக்கின நாதன் வேறு இடங்களில் அமர்ந்தாலும், அது லக்கினத்திற்கு கேந்திரம் அல்லது திரிகோண இடங்களாக இருந்து, அங்கே அமர்பவர் அங்கிருந்து லக்கினத்தைப் பார்த்தாலும் நன்மையாக இருக்கும்.

லக்கினத்தைப் பகைக் கிரகங்களோ அல்லது நீசக் கிரகங்களோ பார்க்காமலும் லக்கினத்தில் இல்லாமலும், லக்கினாதிபதியுடன் சேராமல் இருந்தாலும் நன்மை உடையதாக இருக்கும்

அதேபோல லக்கினாதிபதி உச்சம் பெற்றிருந்தாலும் அதிக நன்மையான பலன்கள் கிடைக்கும். அதேபோல லக்கினம் சுபக் கிரகங்களின் பார்வையில் இருந்தாலும் நன்மைகள் உடையதாக இருக்கும்.

ஆகவே அனைத்தையும் அலசிப் பாருங்கள்
-------------------------------------------------------------------------------------------------
லக்கினாதிபதி 1ஆம் வீட்டில் அதாவது லக்கினத்தில் இருந்தால்:

ஜாதகன் சுதந்திர மனப்பான்மையுடன் தன்னிச்சையாக வாழ்பவனாக இருப்பான். யார் சொன்னாலும், அவர்கள் பேச்சைக் கேட்கமாட்டான். தன் எண்ணப்படி, நோக்கப்படி வாழ்பவனாக இருப்பான். ஜாதகன் தீர்க்க ஆயுளை உடையவனாக இருப்பான். சொத்துக்களை உடையவனாக இருப்பான். பெருமைகள், புகழை உடையவனாக வளர்வான். வாழ்க்கையில் ஜீவனம் நல்லமுறையில் நடைபெறும். மகிழ்ச்சி நிறைந்தவனாக இருப்பான்.
தெய்வ நம்பிக்கை, தெய்வ வழிபாடுகள் மிகுந்தவனாக இருப்பான். உறவினர்களுடன் பிரச்சினைகள் இன்றி ஒற்றுமையுடன் வாழ்வான். தனது ஊரில், அல்லது தனது மாவட்டத்தில் அல்லது தனது இனத்தில்
அல்லது தனது நாட்டில் செல்வாக்கும், புகழும் பெற்றவனாகத் திகழ்வான்.

மேற்கூறிய பலன்கள் எல்லாம் லக்கினமும், லக்கினாதிபதியும் நன்றாக இருந்தால் மட்டுமே. இல்லையென்றால் அவற்றிற்கு நேர் மாறான பலன்களே நடைபெறும்
------------------------------------------------------------------------------------------------
லக்கினாதிபதி 2ஆம் வீட்டில் வலிமையுடன் இருந்தால்:

ஜாதகன் உயர்ந்த பண்புகள் உள்ள குடும்பத்தில் பிறந்தவனாக இருப்பான். அவனுடைய குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும். வாக்கு வன்மை நிறந்தவனாக இருப்பான். அவன் சொற்கள் எல்லா இடங்களிலும் எடுபடும்.

தனது குடும்பத்திற்காக பல தியாகங்களைச் செய்பவனாக இருப்பான். தன் குடும்பத்திற்கான தன்னுடைய கடமைகளை நிறைவேற்றுபவனாக இருப்பான். செல்வமும், செல்வாக்கும் மிகுந்தவனாக இருப்பான். மன

அமைதியும், மகிழ்ச்சியும் நிறைந்தவனாக இருப்பான்,
-----------------------------------------------------------------------------------------------
லக்கினாதிபதி 3ஆம் வீட்டில் வலிமையுடன் இருந்தால்:

ஜாதகன் அதீத துணிச்சல் உள்ளவனாக இருப்பான். அதிர்ஷ்டமுள்ளவனாக இருப்பான். எல்லா நலன்களும் அவனைத் தேடி வரும். மரியதைக்குரியவனாகவும், புத்திசாலியாகவும் இருப்பான். சிலருக்கு இரண்டு மனைவிகள் இருப்பார்கள். ஜாதகன் சகோதரர்கள், சகோதரிகளின் அன்பைப் பெற்றவனாக இருப்பான், அவர்களுடன் ஒற்றுமையாக வாழ்வான். நுண்கலைகளில் தேர்ச்சி பெற்றவனாக இருப்பான்.
செல்வம், செல்வாக்கு, அந்தஸ்துடன் வாழ்பவனாக இருப்பான்.
----------------------------------------------------------------------------------------------
லக்கினாதிபதி 4ஆம் வீட்டில் வலிமையுடன் இருந்தால்:

ஜாதகன் தன் பெற்றோர்களால் மிகுந்த மகிழ்ச்சிக்கு ஆளாகுவான் அனேக உடன் பிறப்புக்கள் இருக்கும். அழகான தோற்றத்தை உடையவனாகவும், நற்பண்புகளை உடையவனாகவும் ஜாதகன் இருப்பான். ஜாதகன் நிலபுன்கள், வீடு வாசல்களைப் பெற்றவனாக இருப்பான். நல்ல குடும்ப உறுப்பினர்களைப் பெற்றவனாக
இருப்பான். ரோட்டி, கப்டா, மக்கான் என்னும் உண்ண உணவு, உடுக்க உடைகள்,
இருக்க இடம் என்னும் அடிப்படைத் தேவைகளுக்குக் குறைவில்லாத வாழ்க்கையைப் பெற்றவனாக இருப்பான்.தாயின் அன்பையும், அரவணைப்பையும் பெற்றவனாக இருப்பான். தாய்வழி உறவினர்களின் அன்பைப் பெற்றவனாக இருப்பான். கல்வி கேள்விகளில் தேர்ச்சி பெற்றவனாக இருப்பான். சுகவாசியாக இருப்பான். வண்டி, வாகனங்களை உடையவனாக இருப்பான். இத்துடன், ஜாதகத்தில் 4ஆம் வீட்டிற்கு உரிய கிரகமும்

வலிமை பெற்றிருந்தால் மேற்கூரிய பலன்கள் இரட்டிப்பாகக் கிடைக்கும்.
-----------------------------------------------------------------------------------------------
லக்கினாதிபதி 5ஆம் வீட்டில் வலிமையுடன் இருந்தால்:

ஜாதகன் புத்திர பாக்கியங்களைப் பெற்றவனாக இருப்பான். அதாவது நிறைய மக்களைப் பெற்றவனாக இருப்பான். அதோடு தன்னுடைய குழந்தைகளின் அன்பையும், ஆதரவையும் பெற்றவனாக இருப்பான்.
ஜாதகன் பெருந்தன்மை உடையவனாகவும், சேவைமனப்பான்மை உடையவனாகவும் இருப்பான்.

மொத்தத்தில் வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். சிலருக்கு அரசியல் செல்வாக்கும், ஆட்சியாளர்களின் ஆதரவும் இருக்கும்
------------------------------------------------------------------------
லக்கினாதிபதி 6ஆம் வீட்டில் வலிமையுடன் இருந்தால்:

******** ஜாதகன் நோய் நொடிகள் நிறைந்து அவதிப்படுபவனாக இருப்பான். எதிரிகள் நிறைந்தவனாக இருப்பான். பல அவதூறுகளுக்கு ஆளாக நேரிடும். பலவிதங்களில் கடன் ஏற்பட்டுப் படுத்தி எடுக்கும். மொத்தத்தில் மன அமைதி இல்லாத வாழ்க்கை வாழ நேரிடும். லக்கினாதிபதியின் தசை அல்லது புத்திக்
காலங்களில் கடன் மற்றும் நோய்களுக்குத் தீர்வு கிடைக்கும். லக்கினாதிபதி வலுவாக உள்ளவர்கள் ராணுவத்தில் பணிபுரிந்து சிறப்பைப் பெறுவார்கள். சிலர் மருத்துவத்துறையில் பணிபுரிந்து பெருமை யடைவார்கள்
--------------------------------------------------------------------------
லக்கினாதிபதி ஏழாம் வீட்டில் அமர்ந்தால் ஏற்படும் பலன்:

சிலருக்கு ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம் நடைபெறும். சிலர் வாழ்க்கையின் பின் பகுதியில் சந்நியாசியாகி விடுவார்கள். மற்ற கிரகங்களின் அமைப்பை வைத்து ஜாதகன் செல்வந்தனாக இருப்பான் அல்லது ஏழையாக இருப்பான். ஜாதகன் 'தான்' என்னும் குணமுடையவனாக இருப்பான். மனைவியால் சொத்துக்கள் கிடைக்கும். சிலருக்கு மனைவியின் வருமானத்தால் சொத்துக்கள் கிடைக்கும். சிலர் பெண்ணாசை மிகுந்தவர்களாக

இருப்பார்கள். எப்போதும் பெண்களின் நினைவாகவே இருப்பார்கள். எந்தத் தொழிலிலும் அக்கறையில்லாமல் இருப்பார்கள். இந்த அமைப்பை சுபக்கிரகங்கள் பார்த்தால் ஜாதகன் வெளிநாடு சென்று, பெரும்பொருள் ஈட்டி
மகிழ்வுடன் வாழ்வான்.
===========================================
லக்கினாதிபதி எட்டாம் வீட்டில் அமர்ந்தால் ஏற்படும் பலன்:

ஜாதகன் கல்வியில் சிறந்தவனாக இருப்பான். சூதாட்ட மனப்பான்மை மிகுந்திருக்கும். ஒழுக்கக் குறைவு ஏற்படும். சிலருக்கு மரணம் - அது வரும் நேரத்தில் அமைதியானதாகவும், ஒரு நொடியில் ஏற்படுவதாகவும் அமையும்.

இந்த அமைப்பை சுபகிரகம் பார்த்தால், ஜாதகன் நீண்ட ஆயுளை உடையவன். ஆனால் வாழ்க்கை சிரமத்துடன் நடக்கும். ஜாதகன் பலரின் மனக்கசப்பிற்கு ஆளாக நேரிடும். சிலருக்கு உடலில் அங்கக் குறைபாடுகள் இருக்கும்.

சிலருக்கு குழந்தை பாக்கியம் இருக்காது. தத்துப் பிள்ளையை எடுத்து வளர்க்க நேரிடும். இந்த அமைப்பை பாபக்கிரகம் பார்த்தால், ஜாதகன் மத்திம ஆயுளை உடையவன். வாழ்க்கையில் வறுமை

ஏற்பட்டுப் படுத்தி எடுக்கும். சிலருக்குப் பலவிதங்களில் அவப்பெயர் உண்டாகும்.
=============================================
லக்கினாதிபதி ஒன்பதாம் வீட்டில் அமர்ந்தால் ஏற்படும் பலன்:

பொதுவாக இந்த அமைப்பு மிகவும் அதிர்ஷ்டகரமானதாகும். ஜாதகன் பலருக்கும் உதவுபவனாக இருப்பான். நல்ல மனைவி, குழந்தைகள் கிடைக்கும் அமைப்பு இது. இது பாக்கியஸ்தானம் அதை மனதில் கொள்க! ஜாதகனுக்கு எல்லா பாக்கியங்களும் கிடைக்கும். இந்த அமைப்பை சுபகிரகம் பார்த்தால், ஜாதகனுக்கு நல்ல தந்தை கிடைப்பார். அவரால் ஏற்படும் சகல பாக்கியங்களும் ஜாதகனுக்குக் கிடைக்கும். முன்னோர் சொத்துக்கள் கிடைக்கும். ஜாதகன் பெரியவர்களை மதிக்கும் குணம் உடையவனாக இருப்பான்.சிறந்த பக்திமானாக விளங்குவான். தர்மத்தைக் கடைப்பிடிப்பவனாக இருப்பான், நேர்மையாளனாக இருப்பான்.
வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்து இருக்கும்.

இந்த அமைப்பை பாபக்கிரகம் பார்த்தால், மேற்சொன்ன பலன்கள் எதுவும் இருக்காது.
=================================================
லக்கினாதிபதி பத்தாம் வீட்டில் அமர்ந்தால் ஏற்படும் பலன்:

தொழிலில் அல்லது வேலையில் பல வெற்றிகளைப் பெறுவதற்கான அமைப்பு இது. பத்தாம் அதிபதிக்கும், லக்கின அதிபதிக்கும் சம்பந்தப்பட்ட தொழிலைச் ஜாதகன் செய்து அதில் மேன்மையடைவான். இந்த அமைப்பை

சுபகிரகம் பார்த்தால், ஜாதகனுக்கு நல்ல தொழில் அல்லது நல்ல வேலை அமையும். கை நிறையச் சம்பாதிப்பான். நற்பெயரையும், செல்வாக்கையும் உடையவனாக இருப்பான். தொழிலில் மேன்மை அடைவான்.
அதிகாரமும், பதவிகளும் தேடிவரும். அரசியல் செல்வாக்கு அல்லது அரசாங்க செல்வாக்கு இருக்கும். சிலர் தலைமைப் பதவிவரை உயர்வார்கள். நிலபுலன்கள், பெரிய வீடு, வண்டி, வாகன வசதிகளுடனான வாழ்க்கை ஏற்படும்.
==================================================
லக்கினாதிபதி பதினொன்றாம் வீட்டில் அமர்ந்தால் ஏற்படும் பலன்:

இந்த அமைப்பை சுபகிரகம் பார்த்தால், ஜாதகன் லாபகரமான தொழிலைச் செய்வான். நற்பெயரும், செல்வாக்கும் தேடிவரும். மூத்த சகோதர, சகோதரிகளின் ஆதரவு இருக்கும். இந்த அமைப்பை சுபக்கிரகங்கள் பார்த்தாலும்,
அல்லது இந்த பதினொன்றாம் இடத்து அதிபதி உச்சம் அல்லது ஆட்சி பெற்று
இருந்தாலும், ஜாதகனுக்கு நீண்ட ஆயுள். ஜாதகனுக்கு, அவனுடைய 2ஆம் வீட்டினால் ஏற்படும் பயன்களுடன் இந்த அமைப்பும் சேர்ந்து மேலும்

பலவிதமான நன்மைகளைச் செய்யும். Gains; Gains: Gains - அவ்வளவுதான். ஜாதகனுக்குப் பணக்கஷ்டமே இல்லாத வாழ்க்கை அமையும்.

இந்த அமைப்பைப் பாபக்கிரகம் பார்த்தால், ஜாதகனுக்கு மேற்கூறிய நன்மைகள் இருக்காது. ஜாதகனுக்குப் பலவிதமான கஷ்டங்கள், நஷ்டங்கள் உண்டாகும்
==================================================
லக்கினாதிபதி பன்னிரெண்டாம் வீட்டில் அமர்ந்தால் ஏற்படும் பலன்:

எவ்வளவு பணம் இருந்தாலும், அல்லது வந்தாலும் அது கரைந்து கொண்டே இருக்கும். எட்டாம் வீட்டினால் ஏற்படும் கஷ்டங்களுடன், இந்த அமைப்பின் கஷ்டங்களும் சேர்ந்து கொண்டு படுத்தி எடுக்கும்.

வியாபாரம் செய்தால் லாபமே இருக்காது. நஷ்டம்தான் ஏற்படும். வாழ்க்கையில் நிறையப் பொருள் இழப்புக்களைச் சந்திக்க நேரிடும்.

இந்த அமைப்பே சரியில்லாதது. அதிலும் இந்த அமைப்பைத் தீய கிரகங்கள் பார்த்தால், ஜாதகன் வேளா வேளைக்குச் சரிவர போஜனம் செய்யாதவனாகவும், நித்திரை இல்லாதவனாகவும், மன அமைதி இல்லாதவனாகவும் இருப்பான்.

அலைச்சல் இருக்கும். குடும்பத்தை அடிக்கடி இடம் மாற்றம் அல்லது ஊர் மாற்றம் செய்ய நேரிடும். திறமையற்றவன், சோம்பேறி என்று அவப்பெயர் கிடைக்கும். வம்புகளும், வழக்குகளும் ஏற்பட்டுப் படுத்தி எடுக்கும்

சிலர் பொது சேவைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு மன நிறைவு, மன அமைதி பெறுவார்கள்
====================================================

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

21.4.10

தொட்டிலும், காலில்லாக் கட்டிலும்!


++++++++++++++++++++++++++++++++++++++++++++
தொட்டிலும், காலில்லாக் கட்டிலும்!

”முதலில் நமக்கெல்லாம் தொட்டிலடா
கண்மூடினால் காலில்லா கட்டிலடா
பிறந்தோம் என்பதே முகவுரையாம்
பேசினோம் என்பதே தாய்மொழியாம்
மறந்தோம் என்பதே நித்திரையாம்
மரணம் என்பதே முடிவுரையாம்.

இருப்போம் என்றே நினைப்பவர் கண்களை
இறந்தவன் அல்லவோ திறக்கின்றான்.”
- கவியரசர் கண்ணதாசன்
------------------------------------------------------------------
ஒரு ஜாதகத்தைக் கையில் எடுத்தவுடன் என்ன செய்ய வேண்டும்?

முக்கியமான விவரங்கள் அதில் உள்ளதா? என்று பார்க்க வேண்டும்.

ராசிச் சக்கரம், நவாம்ச சக்கரம், தசா/புத்தி விவரங்கள், கர்ப்பச்செல் இருப்பு (That is the balance dasa of the birth star at the time of the birth) அஷ்டகவர்க்கக் கட்டங்கள் ஆகியவை உள்ளனவா என்று பார்க்க வேண்டும்.

அவைகள் இருந்தால் மட்டுமே, கையில் வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் உங்களிடம் காட்டியவரிடம் திருப்பிக் கொடுத்துவிடலாம்.

”கணினியில் கணித்துப் பிரதி ஒன்றைக் கொண்டு வாருங்கள்” என்று சொல்லிவிட வேண்டும்!
-------------------------------------------------------------------
சரி, எல்லாம் சரியாக இருக்கிறது என்றால் முதலில் என்ன செய்ய வேண்டும்?

கதாநாயகன் எப்படியிருக்கிறான் என்று பார்க்க வேண்டும்.

ஒரு திரைப்படத்திற்கு எப்படி நாயகன் பிரதானமோ, அப்படி ஒருவரின் சொந்த வாழ்க்கைப் படத்திற்கு, லக்கினாதிபதி எனும் கதாநாயகன் பிரதானம்!

அவன் சரியாக இல்லையென்றால், வாழ்க்கைப் படம் சரியாக ஓடாது! ரசிக்காது! நீண்ட நாட்கள் படம் ஓடினாலும் படத்தைப் பார்க்க ஆளிருக்காது.

பாதிப்பேர்களுடைய வாழ்க்கைப் படம் அப்படித்தான் இருக்கும்.

எல்லாம் வாங்கி வந்த வரம்! முன்வினைப் பலன்!
--------------------------------------------------------------------
லக்கினாதிபதி 12ஆம் வீட்டில் இருக்கக்கூடாது.

12ஆம் வீடு விரைய ஸ்தானம். 12th house is the house of loss! அங்கே இருந்தால் ஜாதகனுடைய வாழ்க்கை சோபிக்காது. சின்ன வயதில் பல கஷ்டங்களை அல்லது துன்பங்களை அனுபவிக்க நேரிடும். 21 வயதிற்கு மேலும், இறுதிவரை அந்நிலைமை தொடரும். அவன் வாழ்க்கை அவனுக்குப் பயன்படாது. ஜாதகத்தில் மற்ற வீடுகள் நன்றாக இருந்து, அவன் அதீதமாகப் பொருள் ஈட்டினாலும், அது அவனுக்குப் பயன்படாது. அவனைச் சுற்றியுள்ளவர்களுக்குப் பயன் படும்.
In short, his life will be useful to others; Not for him!

லக்கினாதிபதி 6ல் இருந்தாலும் அல்லது 8ல் இருந்தாலும் இதே பலன்தான்

6 8, 12 ஆகிய மூன்று வீடுகளும் மறைவிடங்கள் (Hidden Houses)

லக்கினாதிபதி நீசமடைந்திருந்து, சுப கிரங்களின் பார்வை அல்லது சேர்க்கை இன்றி இருந்தாலும் இதே பலன்தான்

லக்கினாதிபதி தனது சுயவர்க்கத்தில் 3 பரல்களையோ அல்லது அதற்குக் குறைவான பரல்களையோ பெற்றி ருந்தாலும் இதே பலன்தான்

That is no use!
---------------------------------------------------------------------
சரி, எங்கே இருக்க வேண்டும்?

First Choice: 11ஆம் வீட்டில்!

Result: குறைந்த முயற்சி; அதிகப் பலன். Minimum efforts; Maximum benefits! அல்லது லாபாதிபதியுடன் (associated with 11th lord) சேர்ந்து இருக்க வேண்டும். இந்த சேர்க்கை கேந்திர வீடுகளில் அல்லது திரிகோண வீடுகளில் என்றால் உத்தமம். அந்த இருவருடைய திசைகளிலும் ஜாதகனின் வாழ்க்கை அசுர வளர்ச்சியைக்
காணும்

Second Choice: 9ஆம் வீட்டில்!

பாக்கியஸ்தானத்தில் இருக்க வேண்டும். (That is in the ninth house) He should be in the ninth house from his own house! அல்லது பாக்கியாதிபதியுடன் (associated with 9th lord) சேர்ந்து இருக்க வேண்டும். இந்த சேர்க்கை கேந்திர வீடுகளில் அல்லது திரிகோண வீடுகளில் என்றால் மிகவும் நன்மையளிக்கக்கூடியது.

Result: ஜாதகனுக்கு நல்ல தந்தை கிடைப்பார். பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்கும். எல்லா பாக்கியங்களும் அவனைத் தேடி வரும். சம்பந்தப்பட்ட இரண்டு கிரகங்களின் தசா/புத்திகளில் அவைகள் தேடி வரும். மகிழ்ச்சியான நிறைவான வாழ்க்கை உண்டு1

லக்கினாதிபதி 5ஆம் வீட்டில் இருந்தாலும் நல்ல பலன்கள் உண்டு. அது திரிகோண வீடாகும்

அதுபோல 4ல் அல்லது 7ல் இருந்தாலும் நல்லது. ஆனால் அந்த அமைப்பு மேற்சொன்ன பலன்களுக்கெல்லாம் அடுத்தபடிதான்

அதுபோல லக்கினாதிபதி உச்சம் பெற்றிருந்தாலும் அல்லது தனது சுயவர்க்கத்தில் ஆறு பரல்கள் அல்லது அதற்கு மேற்பட்ட பரல்கள் பெற்றிருந்தாலும் நன்மையான பலன்களே கிடைக்கும்
-----------------------------------------------------------------------------
ஜோதிடம் கடல். கடலின் ஒரு பகுதியை, அதாவது மெரினாவிற்கு அல்லது சாந்தோம் பீச்சிற்கு எதிரில் உள்ள கடலைக் காட்டியிருக்கிறேன். அவ்வளவுதான்

மேற் சொன்ன பலன்கள் எல்லாம் பொதுப்பலன்கள். தனிப்பட்ட ஜாதகங்களுக்கு இந்தப் பலன்கள் மாறுபடும். கூடலாம் அல்லது குறையலாம். ஆகவே உங்கள் ஜாதகத்தை இந்த விதிகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது சற்றுக் கவனமாக அலசவும். அது முக்கியம்!

நன்றாக இருந்தால் காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ளவும் வேண்டாம்; கெட்டுப்போயிருந்தால் தலையில் கைவைத்துச் சாய்ந்து கொள்ள வேண்டாம். வாழ்க்கையில் அனைவரும் சமம். ஜாதகமும் அப்படியே!

அதனால்தான் அனைவருக்குமே 337 பரல்கள். உங்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்பெற்றிருக்கும். அது என்ன என்பதை முடிவில் நீங்களே தெரிந்து கொள்வீர்கள். பொறுமையாகவும், கவனமாகவும் பாடங்களைப் படித்து வாருங்கள். அது ஒன்றை மட்டும் நீங்கள் தொடர்ந்து செய்தால்தான் நான் இங்கே எழுதுவதன் நோக்கம் நிறைவேறும்!
--------------------------------------------------------------
பின் குறிப்பு: “வாத்தியார், இந்தப் பாடத்தை நான் முன்பே படித்திருக்கிறேனே” என்று யாரும் சொல்ல வேண்டாம். படித்திருந்தால் என்ன? மறு ஒலிபரப்பு என்று நினைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பாடங்கள் மின்னஞ்சல் வகுப்பில் நடத்தப் பெற்றது. இது மட்டுமல்ல! அடுத்துவரவுள்ள 10 பாடங்களும் மின்னஞ்சல்
வகுப்பில் வந்தவைதான். மின்னஞ்சல் வகுப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கை சுமார் 700 மட்டுமே. ஆனால் வகுப்பறையின் வருகைப்பதிவேட்டில் சுமார் 1,437 பேர்கள் உள்ளதாகக் கணக்கு காட்டுகிறது. அதாவது சரிபாதிப்பேர்களுக்கு இந்தப் பாடங்கள் தெரியாது. அதோடு புதிதாக வருகிறவர்களும் தெரிந்துகொள்ள
வேண்டும். அதனால்தான் வகுப்பறையில் அவற்றைப் பதிவிடுகிறேன். படித்து அனைவரும் பயன் பெறுங்கள்!


அன்புடன்
வாத்தியார்வாழ்க வளமுடன்!

20.4.10

ஜோதிடத்தின் முதல் பாடம்!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஜோதிடத்தின் முதல் பாடம்!

"அதுஇருந்தா இதுஇல்லே
இதுஇருந்தா அதுஇல்லே
அதுவும்இதுவும் சேர்ந்திருந்தா
அவனுக்கிங்கே இடமில்லே!"
- கவியரசர் கண்ணதாசன்
------------------------------------
ஜோதிடம் தெரிந்தோ அல்லது தெரியாமலோ கவியரசர் எழுதிய இந்த வரிகள்தான் ஜோதிடத்தின் முதல் பாடம்.

ஒரு மனிதக்கு அல்லது மங்கைக்கு எல்லா பாக்கியங்களுமிருக்காது! அப்படியிருந்தால் ஆயுள் பாவம் அடிபட்டிருக்கும். சின்ன வயசிலோ அல்லது மத்திம வயசிலோ (32 to 50) போய்ச் சேர்ந்துவிடுவான்.

ஆகவே நமக்கு எல்லா பாக்கியங்களும் கிடைக்காது!

எங்கே சொத்து இருக்கிறதோ அங்கே சுகம் (நிம்மதி) இருக்காது; எங்கே சொத்து இல்லையோ அங்கே பிரச்சினை இருக்காது!

எங்கே ஹெல்த் (Health) இருக்கிறதோ அங்கே வெல்த் இருக்காது: எங்கே வெல்த் (Wealth) இருக்கிறதோ அங்கே ஹெல்த் இருக்காது!

ஒரு கை வண்டி இழுக்கும் தொழிலாளி பத்து ஜிலேபி கொடுத்தாலும் ஒரு வெட்டு வெட்டுவான்: பெரிய செல்வந்தரால் இரண்டு ஜிலேபிகளைச் சேர்ந்தாற்போல விரும்பி உண்ண முடியாது.

இரத்த அழுத்தம் (Blood Pressure), சர்க்கரை (Sugar, Diabetic), உப்பு, கசப்பு என்று எந்த நோயும் கைவண்டிக் காரனுக்கு இருக்காது.

இறைவனின் படைப்பு அப்படி!

உங்களுக்கு ஒன்று இல்லையென்றால், வேறு ஒன்று இருக்கும்.இல்லாததற்குக் கவலைப் படாமல், இருப்பதற்குச் சந்தோஷப்படுங்கள்

அதற்கு உதாரணம்: ஆடு, மாடு, மான் போன்றவற்றிற்குக் கொம்பைக் கொடுத்த இறைவன், குதிரைக்குக் கொம்பைக் கொடுக்கவில்லை!

கொடுத்திருந்தால் என்ன ஆகும்? யோசித்துப் பாருங்கள்!

இதைக் கேட்ட நண்பர் ஒருவர் சொன்னார்,”கழுதைக்கும் கூடத்தான் கொம்பில்லை!”

நான் சொன்னேன், “கழுதையின் பலம் அதன் கால்களிலே உள்ளது. உதை வாங்கிப் பார் தெரியும்!”

பலம், பலவீனம் இரண்டும் கலந்துதான் இருக்கும்.

இரவு பகலைப் போல, இன்பம்,துன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை!

9 கிரகங்கள், 12 ராசிகள் என்று ஜாதகங்களும், அவற்றின் அமைப்பும், அதானால் கிடைக்கும் பலன்களும் விதம் விதமாக இருந்தாலும், மொத்த மதிப்பெண், உலகில் அத்தனை பேர்களுக்கும் 337 தான். அஷ்டகவர்க்கக் கட்டத்தில் உள்ள எண்களைக் கூட்டிப் பாருங்கள் தெரியவரும்.

மன்மோகன் சிங்கிற்கும் 337 தான். அவருடைய P.A விற்கும் 337 தான்
முகேஷ் அம்பானிக்கும் 337 தான். அவருடைய வாகன ஓட்டிக்கும் 337 தான்.
முகேஷ் அம்பானியின் பெண்ட்லி காரை ஓட்டி அனுபவிப்பவன் அவருடைய வாகன ஓட்டிதான்!
பிரதமர் அலுவலகத்தில் உள்ள எல்லா வசதிகளையும் அனுபவிப்பவன் பிதமருடைய P.A தான்!

இந்த இருவருக்குமே மரண பயம், தீவிரவாதிகளின் தாக்குதல் பயம் எதுவும் இருக்காது. வேலை முடிந்தால் ஹாயாகத் தெருவில் தனியாக நடந்து தங்கள் வீட்டிற்குப் போக அவர்களால் முடியும். ஆனால் அவர்களின் Boss களால் அப்படி செய்ய முடியாது.

பிரபலங்களுக்கு லக்கினம், ஒன்பது, பத்து, பதினொன்றாம் வீடுகள் நன்றாக இருக்கும் அவர்களுடைய \உ தவியாளர்களுக்கு நான்காம் வீடும் நன்றாக இருக்கும்.

உங்களைவிடத் தாழ்ந்தவர்கள் யாருமில்லை; உங்களைவிட உயர்ந்தவர்கள் யாருமில்லை!

அனைவரும் சமம்! அதை மனதில் வையுங்கள்!
-------------------------------------------------
ஜோதிட விதிகளளைப் படிக்கும் போது, நமது மனம், அதன் படி நமது ஜாதகத்திலும் இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள முனையும். ஒவ்வொரு முறையும் ஜாதகத்தைக் கையில் அல்லது பையில் வைத்துக் கொண்டு கிடைக்கும் செய்திகளுடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது.

ஆகவே முதலில் உங்கள் ஜாதகத்தை நீங்கள் மனப்பாடம் செய்து வையுங்கள்.எப்படி மனப்பாடம் செய்ய வேண்டு மென்றால், தூக்கத்தில் எழுப்பிக் கேட்டால் கூட நீங்கள் தயக்கமின்றிப் பதில் சொல்ல வேண்டும்

உடனே அதைச் செய்யுங்கள்.

லக்கினத்தின் பெயர், ராசியின் பெயர், நட்சத்திரம், ஒன்பது கிரகங்களும் உங்கள் ஜாதகத்தில் உட்கார்ந்து இருக்கும் ராசியின் பெயர், அது லக்கினத்தில் இருந்து எண்ணிக்கையில் என்ன இடம்? அவன் எதற்க்குக் காரகன் என்னும் அடிப்படை விஷயங்களை அடக்கி உங்கள் ஜாதகத்தை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். மனதில் ஆணித் தரமாகப் பதிவு செய்து வைத்திருக்க வேண்டும்.

எனக்கு என் உறவினர்கள் பலருடைய ஜாதகங்கள் மனப்பாடம். நீங்கள் அட்லீஸ்ட் உங்கள் ஜாதகத்தையாவது மனப்பாடம் செய்து வையுங்கள்.மூன்று நாட்களுக்குள் நீங்கள் அதைச் செய்ய வேண்டும்!

செய்வீர்களா? முடியும் என்று நம்பிக்கை உள்ளவர்கள் பதில் சொல்லுங்கள்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

17.4.10

ச்சும்மா சிரிப்பதற்கு மட்டுமே! வேறு எதற்காகவும் இல்லை!+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ச்சும்மா சிரிப்பதற்கு மட்டுமே! வேறு எதற்காகவும் இல்லை!

தலைப்பிலேயே எச்சரித்துவிட்டேன். இன்றையப் பதிவு ச்ச்சும்மா சிரிப்பதற்கு மட்டுமே வேறு எதற்காகவும் இல்லை.

உம்மன்னா மூஞ்சி ஆசாமிகள் பதிவிட்டு விலகவும். அதுபோல ஆணாதிக்கம், பெண்ணாதிக்கம் என்று கொடி பிடிக்கும் ஆசாமிகளும் பதிவை விட்டு விலகவும்.

ஜஸ்ட் ஒரு பத்து நிமிடம் தங்களை மறந்து சிரிக்கத் தெரிந்தவர்கள் மட்டும் உள்ளே வரவும்!
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
1
முதலில் வகுப்பறை மாணவர்களுக்கு:

வாத்தியார் உற்சாகமாகச் சொன்னார்: எனது அருமைக் கண்மணிகளே உங்களில் யாராவது ஒருவர் சொல்லுங்கள். ”கோழி என்ன கொடுக்கும்?”

ஒருவன் எழுந்து பதில் சொன்னான்: ”முட்டை கொடுக்கும் சார்”

“அடுத்து வேறு யாராவது சொல்லுங்கள். ஆடு என்ன கொடுக்கும்?”

“ஆட்டுப்பால் கிடைக்கும் சார்”

“சரி, இப்போது சொல்லுங்கள். பசு என்ன கொடுக்கும்?”

கடைசிப் பெஞ்சில் இருந்து சட்டென்று பதில் வந்தது.

“"Homework and lessons.!"
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
2
A Spanish teacher was explaining to her class that in Spanish, unlike English, nouns are designated as either masculine or feminine. - "House" for instance, is feminine: "la casa". "Pencil", however, is masculine: "el lapiz."

A student asked what gender is 'computer?

Instead of giving the answer, the teacher split the class into two groups, male and female, and asked them to decide for themselves whether "computer" should be a masculine or a feminine noun. Each group was asked to give four reasons for its recommendation.

The men's group decided that "computer" should definitely be of the feminine gender ("la computadora"), because:

1. No one but their creator understands their internal logic;
2. The native language they use to communicate with other computers is incomprehensible to everyone else;
3. Even the smallest mistakes are stored in long term memory for possible later retrieval; and
4. As soon as you make a commitment to one, you find yourself spending half your paycheck on accessories for it.

The woman's group, however, concluded that computers should be Masculine ("el computador"), because:

1. In order to do anything with them, you have to turn them on;
2. They have a lot of data but still can't think for themselves;
3. They are supposed to help you solve problems, but half the time they ARE the problem; and
4. As soon as you commit to one, you realize that if you had waited a little longer, you could have gotten a better model.

The women won.
----------------------------------------------------------------------------------------------------------------
3
இரண்டு காவல்துறைக்காரர்கள் வேலைக்குப் புறப்படுகிறார்கள்

முதல் ஆள்: “எப்படிப்போவது? பஸ்ஸிலா? அல்லது நடந்தா?

இரண்டாவது ஆள்: “அவசரப்படாதே. முதலில் என்ன வருகிறது என்று பார்ப்போம்!”
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அடுத்து பதிவிற்கு வந்து செல்லும் நண்பர்களுக்காக!
V
V
V
V
V
V
V
4

சில கணவன்மார்களுக்கு மனைவியைவிட வீட்டு நாயை அதிகம் பிடிக்குமாம். அதற்கான காரணத்தை, மனைவியால் நொந்து நூலாகிப்போன ஆசாமி ஒருவர் பட்டியல் இட்டிருக்கிறார்:

1. The later you are home, the more excited your dogs are to see you.

2. Dogs don't notice if you call them by another dog's name.

3. Dogs like it if you leave a lot of things on the floor.

4. A dog's parents never visit.

5. Dogs agree that you have to raise your voice to get your point across.

6. You never have to wait for a dog; they're ready to go 24 hours a day.

7. Dogs find you amusing when you're drunk..

8. Dogs like to go hunting and fishing.

9. A dog will not wake you up at night to ask, "If I died, would you
get another dog?"

10. If a dog has babies, you can put an ad in the paper and give them away.

11. A dog will let you put a studded collar on it without calling you a pervert.

12. If a dog smells another dog on you, they don't get mad. They just
think it's interesting.

13. Dogs like to ride in the back of a pickup truck.

14. If a dog leaves, it won't take half of your stuff
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

இரண்டு வாசக அன்பர்கள் சுட்டிக்காட்டியற்கு இணங்க, கடைசியாக இருந்த இரண்டு ஜோக்குகளும் நீக்கப்பட்டுள்ளன. சுட்டிக்காட்டிய அந்த அன்பர்களுக்கு நன்றி!

அன்புடன்
SP.VR.சுப்பையா
-----------------------------------------------------------------------
வாத்தியார் வெளியூர் செல்வதால், 19.4.2010 திங்களன்று வகுப்பறைக்கு விடுமுறை. அடுத்த ஜோதிடப்பாடம் புதிய தலைப்புடன் 20.4.2010 அன்று துவங்கும். மாணவக் கண்மணிகள் பொறுத்துக்கொள்ளவும்
----------------------------------------------------------------------------வாழ்க வளமுடன்!

16.4.10

ருத்திராட்சமும் அதன் மகிமையும்!


ருத்திராட்சம், ருத்திராட்ச மாலை, ருத்திராட்ச மரம்
==========================================================
ருத்திராட்சமும் அதன் மகிமையும்!

ருத்திராட்சம் அணிவது பற்றி பல்வேறு கருத்துகள் உள்ளன!

நேற்றைய பின்னூட்டத்தில் அன்பர் ஒருவர் அது பற்றி எழுதும்படி பணித்திருந்தார்.

நான் சின்ன வயதில் கழுத்தில் ருத்திராட்சம் அணிந்திருந்தேன். அது நடுநிலைப் பள்ளியில் படித்த காலம் வரைதான். அதற்குப் பிறகு பிரச்சாரக் கூட்டங்களுக்கெல்லாம் போகின்றகால கட்டத்தில் (என்ன பிரச்சாரக்
கூட்டம் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன்) அவிழ்த்து வைத்துவிட்டேன்.

வீட்டில் பெற்றோர்களும் கட்டாயப் படுத்தவில்லை!

செட்டிநாட்டில் (அந்தக் காலத்தில்) சின்னக்குழந்தைகளின் கழுத்தில் இரண்டு பக்கமும் தங்கப் பட்டி போட்ட ருத்திராட்சம் இருக்கும். செல்வந்தர் வீட்டுக் குழந்தைகளுக்கு தங்கச் சங்கிலியிலேயே ருத்திராட்சத்தைக் கோர்த்து
அணிந்திருப்பார்கள்.

மூன்று மாதம் முடிந்த பிறகு, குலதெய்வக்கோவிலிலோ அல்லது உள்ளூர் அம்மன் கோவிலிலோ அல்லது பழநிக் கோவிலிலோ குழந்தைக்கு முடியிறக்கிவிட்டு, முதல் வேலையாகக் கழுத்தில் ருத்திராட்சத்தைக் கட்டிவிட்டு விடுவார்கள். ஆண் குழந்தைகளுக்கு மட்டும்தான் அது! குழந்தைகளுக்கு அணிவதற்கென்றே சிறிய அள்வில் ருத்திராட்சங்கள் கிடைக்கும். சில வீடுகளில் கொட்டான் நிறைய உத்திராட்சங்கள் வைத்திருப்பார்கள். வாரணாசிக்குச் சென்று திரும்புபவர்கள் நிறையக் கொண்டுவந்து உறவினர்களுக்கெல்லாம் கொடுப்பார்கள்.

ருத்திராட்சத்திற்கும் தங்கத்திற்கும் பஞ்சமில்லாத காலம் அது!

நாற்பது வயது தாண்டியவர்கள் அனைவரும் ருத்திராட்சம் அணிந்திருப்பார்கள்.(அந்தக்காலக் கதை என்பதை நினைவுபடுத்திக்கொண்டே இவற்றைப் படிக்கவும்) வசதியானவர்கள் என்று இல்லாமல் பலரும் ருத்திராட்ச மாலை அணிந் திருப்பார்கள். சின்ன ருத்திரட்சமாக இருந்தால் 108 ருத்திராட்சங்கள் மாலையில் இருக்கும். அதை இரண்டு சுற்றுக்களாக்கி கழுத்தில் அணிந்து கொண்டிருப்பார்கள். பெரிய ருத்திரட்சமாக இருந்தால் மாலையில்
54 ருத்திராட்சங்கள் இருக்கும். வசதியானவர்களின் ருத்திராட்ச மாலை தங்கத்தில் இணைக்கப்பட்டதாக இருக்கும். அல்ல வென்றால் செம்புக்கம்பிகளால் இணைக்கப்பட்டதாக இருக்கும்.

சிலர் வயதான காலத்தில் தீவிர சிவபக்தர்களாக மாறி, மொட்டை, பட்டை, கொட்டை, கட்டையுடன் இருப்பார்கள்.

அதாவது தலை மொட்டை. நெற்றியில் விபூதிப்பட்டை, கழுத்தில் (ருத்திராட்சக்) கொட்டை. காலில் கட்டை (மரக் கட்டையால் செய்த செருப்பு). மாட்டுத் தோலினால் செருப்புக்கள் செய்யப்படுவதால் தோல் செருப்பை அணிய மாட்டார்கள். அப்படியொரு பக்தி.

உபதேசம் கேட்டுக்கொள்வார்கள். அதற்கென்று செட்டிநாட்டில் இரு ஊர்களில் குருமார்கள் இருந்தார்கள். இப்போதும் இருக்கிறார்கள். அதற்கென்று அறக்கட்டளைகளும், விடுதிகளும் சொத்துக்களும் இருக்கின்றன.
வழிவழியாக வந்த குருமார்களும் இருக்கின்றார்கள்.

அந்த ஊர்களின் பெயர்கள்: பாதரக்குடி, துலாவூர். அந்த இரண்டு கிராமங்களும் குன்றக்குடிக்கு அருகே உள்ளது. நீங்கள் சென்றால் பார்க்கலாம்.

இந்த உபதேசம் கேட்டுக் கொண்டவர்கள், காலை, மாலை என இருவேளைகளும், குளித்து, சந்தியாவந்தனம் செய்வார்கள். 108 முறை சிவன் நாமத்தைச் சொல்லி - பஞ்சாட்சரத்தைச் சொல்லி (அதாவது நமச்சிவாயா என்று சொல்லி) சிவனை வணங்குவார்கள். அதற்கு அவர்களுக்கு நேரமும் இருந்தது. அந்த 108 எண்ணிக்கை தவறாமல் இருப்பதற்கு ருத்திராட்ச மாலையும் இருந்தது. மாலையின் மேல் பகுதிக் கொக்கியில் ஆரம்பித்தால், மறுபக்கக் கொக்கி வருவதற்குள் 108 முறைகள் பஞ்சாட்சரம் சொல்லி முடிக்கப்பெற்றிருக்கும். ஒவ்வொரு முறை சொல்லும்போதும் ஒரு ருத்திராட்சம் கைவிரல்களைக் கடந்திருக்கும்.

இன்றையத் தலைமுறையினர் (என்னையும் சேர்த்து) அப்படிச் செய்வதாகத் தெரியவில்லை. விட்டகுறை தொட்டகுறையாக ஒரு 20% அல்லது 25% அதைத் தொடர்கிறார்கள் (சரியான எண்ணிக்கையில்லை. உத்தேசம்தான்)

அப்படி அணிந்தவர்களுக்கும், பூஜை அல்லது ஜெபம் செய்தவர்களுக்கெல்லாம், ப்ளட் பிரஷ்சர், சுகர், ஹார்ட் அட்டாக் எல்லாம் இருந்ததில்லை. ஆரோக்கியமாக இருந்தார்கள். அது நிதர்சனமான உண்மை!

நமக்கெல்லாம் ஆரோக்கியத்தைவிட பணமே பிரதானமாகப் போய்விட்டது. பணத்தேடலிலேயே வாழ்க்கையின் பெரும்பகுதி கழன்று கொண்டிருக்கிறது. யாருக்கும் எதற்கும் நேரம் இல்லை!

நேரம் கிடைத்தாலும் பலர் அதை டாஸ்மாக்கில் அல்லது தொலைகாட்சி அழ்வாச்சி சீரியல்களில் அல்லது ஐ.பி.எல் ட்வென்டி ட்வெண்டி போட்டிகளில் செலவழித்துவிடுகிறார்கள். கலியுகம். வேறென்னத்தைச் சொல்வது?

ஒரு ஆறுதலான செய்தி: மெடிக்ளைம் இன்சூரன்ஸ் இருக்கிறது. ஆகவே அவன் பார்த்துக் கொள்வான்!:-))))
---------------------------------------------------------------------------------------------------------------------
“வாத்தி (யார்) ருத்திராட்சத்தைப்பற்றிய செய்தி அதிகமில்லாமல் எல்லாம் உங்கள் கதையாகவே இருக்கிறதே? ருத்திராட்சத்தைப்பற்றிய முக்கியமான செய்திகள் எங்கே?”

“நீ கேட்பாய் என்று தெரியும் கண்ணா! கீழே கொடுத்துள்ளேன். படித்துப்பார்!”
______________________________________________________________________

ருத்திராட்சத்தைப் பற்றி நான் சொல்ல வந்ததைவிட ஒரு இஸ்லாமிய அன்பர் சிறப்பாகச் சொல்லியிருக்கிறார். விடாமல் அவருடைய கட்டுரை முழுவதையும் படியுங்கள். அதற்குப் பிறகு அதை அணிவதா அல்லது வேண்டாமா? என்பதை உங்கள் விருப்பப்படி முடிவு செய்யுங்கள்.

அந்தக் கட்டுரைக்கான சுட்டி இங்கே உள்ளது:

மேலதிகத் தகவல்களைக் கீழே கொடுத்துள்ளேன்.

1. நல்ல ருத்திராட்சமாக இருந்தால், அதைத் தண்ணீரில் போட்டால், அது நீருக்குள் மூழ்கிவிட வேண்டும்

2. ஐந்து முகம், ஆறுமுக முகம் கொண்ட ருத்திராட்சங்கள் அதிகமாகக் கிடைக்கும். எங்கும் கிடைக்கும். திருவண்ணாமலைக் கோபுரவாசலில் உள்ள கடைகளில் விற்கிறார்கள். விலை பத்து ரூபாய்தான்.

3. ஆறுமுகத்திற்கு மேல் ஏறுமுகம் என்பார்கள். அதாவது அதிக முகங்களைக் கொண்ட ருத்திராட்சம் நல்ல பலனைத் தரும் என்பார்கள். விலை 300 ரூபாய் முதல் 500 ரூபாய்வரை அதன் தன்மையைவைத்தும் முகங்களை வைத்தும் மாறுபடும்.

4. ஒரு கடினமான நிபந்தனை உண்டு. ருத்திராட்சம் அணிந்தவர்கள் புலால் அருந்தக் கூடாது. அதாவது நான் வெஜ்ஜிற்குத் தடா போட்டுவிட வேண்டும்.

5. ருத்திராட்ச மரத்தைப் பற்றிய செய்திகளுக்கான சுட்டி இங்கே உள்ளது!

நட்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

15.4.10

படிப்பது வேறு, படித்துத் தெளிவது வேறு!

---------------------------------------------------------------------
படிப்பது வேறு, படித்துத் தெளிவது வேறு!

கவியரசருக்கிருந்த அதீத ஞானம்!

உள்ளத்திலிருந்து வெளிப்படுவது கவிதை! உள்ளத்திலிருந்து அது வந்தாலும் அதைச் சிறந்த முறையில் எழுத்தில் வெளிப்படுத்துவதற்கு மொழியாற்றல் வேண்டும்.

ஆனால் சினிமாவிற்கு பாட்டெழுதுவது என்பது சற்று வித்தியாசமானது. மேற்கூறிய இரண்டோடு மேலும் ஒன்று கூடுதலாக வேண்டும்.

அதுதான் ஞானம்!

விஷயஞானம் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

சினிமா பாடல்களைப் பொதுவாக பக்திப்பாட்டு, தாலாட்டுப் பாட்டு, காதல் பாட்டு, தத்துவப் பாட்டு, பல்சுவைப் பாட்டு என்று ஐந்து விதமாகப் பிரிக்கலாம்.

ஒரு திரைப்படக் கவிஞருக்கு கற்றுணர்ந்த அனுபவமும், பட்டுத்தெளிந்த அல்லது பட்டுத்தேறிய அனுபவமும், மக்களின் நாடியைப் படித்துப் பார்த்த அனுபவமும் வேண்டும்.

அந்தக் கற்றுணர்ந்த அறிவும், பட்டுத்தேறிய அனுபவமும் கவியரசருக்கு அதீதமாக இருந்தது.

எப்படி இருந்தது என்று பார்ப்போம்.

கவியரசர் ஆன்மிகத்தில் மிகவும் ஈடுபாடு உள்ள ஒரு சமூகத்தில் பிறந்தவர். அதோடு பல புராணங்களும், இதிகாசங்களும் அவருக்குப் படித்துணர்வதற்கு இளம் வயதிலேயே கிடைத்தது.

அதேபோல அவர் பிறந்த மாவட்டத்தில் தாலாட்டுப் பாட்டிற்கும் பஞ்சமில்லை. அந்தக் காலத்து - அதாவது கவியரசர் காலத்துத் தாய்மார்களெல்லாம், தாய்ப்பாலோடு தமிழையும் சேர்த்து ஊட்டினார்கள். தங்கள் குழந்தைகளைத் தாலாட்டுப் பாடித்தான் தூங்கவைத்தார்கள்.

கவியரசர் இளைஞராக இருந்தபோது ஒரு பெண்ணைக் காதலித்து, அது கைகூடாமற்போய் சோகத்தில் மிதந்தவர்.

அந்த காதலிக்காக அவர் ஒரு நோட்டுப்புத்தகத்தில் எழுதி வைத்திருந்த எண்ணற்ற பாடல்களில் சில பாடல்கள்

பின்னாளில் திரையில் ஒலித்தன.

உதாரணத்திற்கு சில பாடல் வரிகள்:

"நான்பேச நினைப்பதெல்லாம் நீபேச வேண்டும்
நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும்"

"பாலும் பழமும் கைகளில் ஏந்தி
பவளவாயில் புன்னகை சிந்தி
கோலமயில் போல் நீ வருவாயே
கொஞ்சும் கிளியே அமைதி பெறுவாயே!"

"உன்னைச் சொல்லிக் குற்றமில்லை
என்னைச் சொல்லிக் குற்றமில்லை
காலம் செய்த கோலமடி
கடவுள் செய்த குற்றமடி!"

அதேபோல அவர் சிறு வயதிலும், இளைஞராக இருந்தபோதும், கேட்ட, படித்த தாலாட்டுப் பாடல்கள் எண்ணற்றவை!

அந்தப் பகுதியில் மிகவும் பிரபலமான தாலாட்டுப் பாடல்களில் ஒன்றின் வரிகளை உங்களுக்காகக் கீழே கொடுத்துள்ளேன்

"வாரும்வாரும் தெய்வவடிவேல் முருகரே வரும்
வள்ளிமணாளரே வாரும், புள்ளிமயிலோரே வாரும்
சங்கும் ஒலித்தது, தாழ்கடல் விம்மிற்று
சண்முகநாதரே வாரும், உண்மைவினோதரே வாரும்"

இப்படி அசத்தலாக 24 வரிகளோடு கூடிய பாடல் அது! தாய் ராகம் போட்டுப் பாடுகையில் குழந்தை பத்தாவது வரியிலேயே தூங்கிவிடும்.

அதே போல சிறுவயதில், தன் பெற்றோர்களுக்கு எட்டாவது குழந்தையாகப் பிறந்தமையாலும், தங்கள் குடும்பத்தில் நிலவிய வறுமையாலும், பல அனுபவங்களைப் பெற்று வாழ்க்கையின், ஏற்றத்தாழ்வுகளையும், தத்துவங் களையும் அப்போதே புரிந்து கொண்டு விட்டவர் அவர். அதனால்தான் எல்லாவிதமான பாடல்களையும் அவரால் எழுத முடிந்தது.

கவியரசர் திரைத்துறையில் நுழைந்த காலத்தில் (1952 - 1960) பிரபலமாக இருந்த கவிஞர் ஒருவர் பக்திப்பாட்டு அல்லது தாலாட்டுப் பாட்டு என்றால், என்னால் முடியாது, நீங்கள் கண்ணதாசனிடம் வாங்கிக் கொள்ளுங்கள் என்று பெருந்தன்மையோடு இயக்குனர்களிடமும், இசையமைப்பாளர்களிடமும் கூறிவிடுவாராம்.

அந்த நிகழ்வுகளெல்லாம் அடுத்து வரும் பதிவுகளில் விவரமாக வரும்.

இப்போது சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன். கீழே உள்ள பாட்டைப் பாருங்கள்.
-------------------------------------------------
"ராமன் எத்தனை ராமனடி - அவன்
நல்லவர் வணங்கும் தேவனடி
ராமன் எத்தனை ராமனடி!

கல்யாணக் கோலம் கொண்ட கல்யாணராமன்
காதலுக்கு தெய்வம் அந்த சீதாராமன்
அரசாள வந்த மன்னன் ராஜாராமன்
அலங்கார ரூபன் அந்த சுந்தரராமன்
தாயே என்தெய்வம் என்ற கோசலராமன்
தந்தைமீது பாசம் கொண்ட தசரதராமன்,
வீரன்என்னும் வில்லை ஏந்தும் கோதண்டராமன்
வெற்றி என்று போர்முடிக்கும் ஸ்ரீஜெயராமன்

வம்சத்திற்கு ஒருவன் ரகுராமன்
மதங்களை இணைப்பவன் சிவராமன்
மூர்த்திக்கு ஒருவன் ஸ்ரீராமன்
முடிவில்லாதவன் அனந்தராமன்.

ராமஜெயம் ஸ்ரீராமஜெயம்
நம்பியபேருக்கு ஏது பயம்?
ராமஜெயம் ஸ்ரீராமஜெயம்
ராமனின் கைகளில் நான் அபயம்!

ராம், ராம், ராம்
ராம், ராம், ராம்

ராமன் எத்தனை ராமனடி!

படம் -லஷ்மி கல்யாணம்
பாடியவர்: பி..சுசீலா அவர்கள்
வருடம்: 1968
--------------------------------------------
இன்னொரு பாடல்:

"அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான்
கீதையிலே கண்ணன்.
பார்ப்பவர் கண்ணுக்குத் தெரிவேன் என்றான்
பாரதத்தில் கண்ணன்.

காற்றடித்தால் அவன் வீடாவான்
கடுமழையில் அவன் குடையாவான்
அற்றாதழுதால் அழுத கண்ணீரை
அங்கே துடைக்கும் கையாவான்!

சிறையினிலேதான் அவன் பிறந்தான்
மழையினிலே வேறு மனைபுகுந்தான்
உறவறியாத குழந்தைக் கெல்லாம்
உறவினனாக அவன் வருவான்!

அடையாக் கதவு அவன் வீடு
அஞ்சேல் என்பது அவன் ஏடு
அடைக்கலம் தருவான் நடப்பது நடக்கும்
அமைதியுடன் நீ நடமாடு!

படம்: அனாதை ஆனந்தன் (வருடம் 1970)
பாடியவர்: சீர்காழி. எஸ்.கோவிந்தரஜன் அவர்கள்
-------------------------------------------
இப்படிப் பல பாடல்களைச் சொல்லாம் இடமும், நேரமும், கட்டுரையின் நீளமும் கருதி இரண்டோடு நிறைவு செய்கிறேன்.

இப்போது சொல்லுங்கள் இது போன்ற பாடல்களை எழுதுவதற்கு, ராமாயணமும், மகாபாரதமும் கற்றுணர்ந்திருக்க வேண்டாமா?

படிப்பது வேறு, படித்துத் தெளிவது வேறு!
அதுதான் ஞானம்!

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!

14.4.10

ஒரு கல்லின் விலை 28 கோடி ரூபாய்!

-----------------------------------------------------------------------------
ஒரு கல்லின் விலை 28 கோடி ரூபாய்!

இன்று புதிய தமிழ் வருடம் பிறக்கிறது! பிறக்கும்போதே பெயருடன் பிறக்கிறது. அதன் பெயர் விக்ருதி! மனிதனுக்குத்தான் பிறந்தவுடன் பெயர். ஆண்டுகள் பெயருடனே பிறக்கின்றன. ஆங்கில வருடங்களுக்கு எண் மட்டுமே. பெயர் கிடையாது. நமது ஆண்டுமுறைகளின் சிறப்பு ஒவ்வொரு ஆண்டிற்கும் பெயர் உண்டு. அதற்கு ஒரு அர்த்தமும் உண்டு!

வகுப்பறை மாணவர்களுக்கும், சக பதிவர்களுக்கும், நண்பர்களுக்கும் தமிழ்மணம் நிர்வாகிகளுக்கும் என்னுடைய புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

பிறக்கும் புது ஆண்டின் பெயர்: விக்ருதி.

விக்ருதி என்றால் மாறுதல் என்று பொருளாம். நமக்கு மாறுதலைத் தரவேண்டும் என்றால் நிறையப் பணம் வர வேண்டும். இந்த ஆண்டு அனைவருக்கும் நிறையப் பணம் வரட்டும். வாழ்த்துகிறேன். செல்வத்திற்கு அதிபதியான மகாலெட்சுமியை அனைவரும் வணங்கி இந்த ஆண்டு முழுவதும் அமோகமாக இருங்கள்

இந்த ஆண்டு நம்மை ஆதிக்கம் செய்யப்போகும் கிரகம் செவ்வாய். செவ்வாய்க்கு அதிபதியான முருகப் பெருமானை வணங்கி அனைவரும் நலம்பெற வேண்டுகிறேன்.

ராசிவாரியாக எழுதப்பெறும் பொதுப்பலன்களில் எனக்கு ஈடுபாடு இல்லை. ஆகவே எழுதவில்லை.

ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய ஜாதகம்தான் தனிப்பட்டு வேலை செய்து உரிய பலன்களைத் தரும் அதை மனதில் வையுங்கள்.

ஓமக்குச்சி நரசிம்மனுக்கும், பயில்வான் ரங்கநாதனுக்கும் ஒரே சட்டை எப்படிப்பொருந்தும்? மதிப்பிற்குரிய மன்மோகன் சிங்கிற்கும் சரத்பாவருக்கும் ஒரே சட்டை எப்படிப்பொருந்தும்? நயந்தாராவிற்கும் எம்.என்.ராஜம் அம்மையாருக்கும் ஒரே ரவிக்கை எப்படிப் பொருந்தும்?

அதுபோல பொதுப்பலன்கள் பொருந்தாது. ஆகவே அதைத் தரவில்லை!

அதற்குப் பதிலாக வேறு ஒரு சுவையான செய்தியைக் கொடுத்துள்ளேன். படித்துப்பருங்கள்.

ஒரு அரியவகை நீலக்கல் 28 கோடி ரூபாய்க்கு விலை போயிருக்கிறது. வாங்கிய புண்ணியவான் அதன் அருமை தெரியாமலா இத்தனை கோடிகளை அள்ளிக் கொடுத்து வாங்கியிருப்பான்?

செய்தி: நன்றி, தினமலர்!

தொடர்ந்து பத்து மணி நேரம் மின்தடை! முன் இரவு பன்னிரெண்டு மணி அளவில் தடைபட்ட மின்சாரம் இன்று காலை 9 மணிக்குத்தான் மீண்டும் உயிர் பெற்றது. அதனால் என்னுடைய இந்தப் பதிவும் அதிகாலையில் வலை ஏறாமல் இப்போதுதான் வலை ஏறுகிறது. தாமதத்திற்குப் பொறுத்துக்கொள்ளவும்!

அன்புடன்
வாத்தியார்


________________________________________________________________

வாழ்க வளமுடன்!

13.4.10

எல்லா நோய்களுக்கும் ஒரே மருந்து!

...........................................................................................................................
எல்லா நோய்களுக்கும் ஒரே மருந்து!

கடவுளால் படைக்கப்பெற்ற மனித உடம்பிற்கு இன்று பலவிதமான டாக்டர்கள் இருக்கிறார்கள். மூளைக்கு ஒரு மருத்துவர். கண்ணிற்கு ஒரு மருத்துவர். பல்லிற்கு ஒரு மருத்துவர். காது, மூக்கு, தொண்டைக்கு ஒருவர் என்று உடம்பின் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு விஷேச மருத்துவர் இருக்கிறார்.

மருத்துவத்துறை அத்தனை விரிவடைந்து விட்டது. அதற்காக நாம் மகிழ்ச்சி அடையலாம். அதே போல மனிதனின் நோய்களும் பலவிதமாக விரிவடைந்து விட்டன. சரக்கடிப்பதில் இருந்து, சந்தில் சிந்து பாடுவதுவரை மனிதனின் வக்கிர விவகாரங்களும் விரிவடைந்துவிட்டன.

ஒரு காலத்தில், அதாவது 100 ஆண்டுகளுக்கு முன்பு, இவை அத்தனை பிரிவுகளூக்கும் ஒரு மருத்துவர் தனியாக நின்று வைத்தியம் செய்திருக்கிறார். அவர் பெயர் டாக்டர் ரங்காச்சாரி. சென்னை அரசு வைத்தியக்கல்லூரி மருத்துவமனையில் அவருக்கு சிலை உள்ளது. அடுத்தமுறை அங்கே சென்றால், அதைப் பாருங்கள்.

இது பற்றி சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்கள் ஒருமுறை தனது சொற்பொழிவில் இப்படிச் சொன்னார்:

”கடவுளால் உருவாக்கப்பெற்ற இந்த உடம்பிற்கு இன்று பல டாக்டர்கள் இருக்கிறார்கள். எமன் வந்தால் பிராணன் மட்டும் போகும். டாக்டர் வந்தால் பிராணனுடன், பணமும் சேர்ந்து போகும்!”

"For a body manifested by God we are having a society of doctors. If yama comes, only the prana will go.If a doctor comes, prana and money will go!"

நிலைமை இவ்வாறு இருக்க, எல்லா நோய்களுக்கும் ஒரே மருந்து எனபது எப்படி சாத்தியம்?

அன்று சாத்தியப்பட்டிருக்கிறது. காலம் 5,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம் என்பதால், அதைக் காணும் வாய்ப்பு உங்களுக்கும், எனக்கும் இல்லாமல் போய்விட்டது.

ஆமாம் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மருத்துவர் இருந்தார். அதுவும் அடர்ந்த காட்டில் இருந்தார். 4448 அரியவகை மூலிகைகள் அக்காட்டில் இருந்தனவாம். அத்தனை மூலிகைகளும் அவருக்குப் பரீட்சயமானவை.

அந்த மூலிகைகளை வைத்து அவர் ஒரு பொது மருந்து தாயாரித்தாராம்.

பிற்காலத்தில் மக்கள் எல்லாம் பலவிதமான நோய்களால் அவதிப்படப் போகிறார்கள் என்று எதிர்பார்த்தவர் அதற்குத் தன்னாலான தீர்வாக ஒரு பொது மருந்தை உண்டாக்க நினைத்தாராம்.

முதலில் மூலிகைகளால் ஒன்பது வகையான விஷங்களைத் (Poison) தயாரித்தாராம். பிறகு அந்த ஒன்பதுவகை விஷங்களையும் சில குறிப்பிட்ட அளவுகளில் ஒன்றோடு ஒன்றாகச் சேர்த்துக் கடைசியில் மொத்தமாக அவற்றை ஒரே விஷமாக மாற்றி சர்வரோக நிவாரணியாக மாற்றினாராம்.

பிறகு நீராக இருந்த மருந்தைக் கெட்டிப் படுத்தி மூன்றடி உயரச் சிலை வடிவில் வடிவமைத்தாராம். அதன், அதாவது சிலையின் தலை மீது பாலை ஊற்றினால், அது வடிந்து, சிலையில் கால் பகுதிக்கு வரும்போது மருந்தாகி விடும். அதில் ஒரு ஸ்பூன் அளவு அல்லது ஒரு கரண்டி அளவு சாப்பிட்டால், உடலில் உள்ள நோய்கள் அனைத்தும் குணமாகிவிடுமாம்.

பால் என்று இல்லை, பழங்களைக் கரைத்து ஊற்றினாலும், சிலை மீது வடிந்து கீழே வரும்போது அது மருந்தாகிவிடுமாம்.

மருந்து வேண்டும் எனும்போது பாலை ஊற்றி மருந்தாக்கிக் கொள்ளலாம். சிலை அப்படியே இருக்கும்.

மருந்தை அரைக்கும் இயந்திரங்கள், காய்ச்சும் இயந்திரங்கள், வடிகட்டும் இயந்திரங்கள், கெட்டியாகச் செய்யும் இயந்திரங்கள் எதுவும் இன்றி அவர் அதை எப்படிச் செய்தார் என்பது ஆச்சரியமான விஷயம்.

அவர் சித்தர் என்பதால் - அதாவது சித்திகள் நிறைந்தவர் என்பதால் அவருக்கு இது சாத்தியம் ஆகியிருக்கலாம். தமிழ் நாடறிந்த 18 சித்தர்களில் அவரும் ஒருவர்.

அவருடைய பெயரை இப்போது சொல்கிறேன். உங்களில் பலருக்கு அவருடைய பெயர் தெரிந்த பெயராக அல்லது அறிந்த பெயராக இருக்கலாம்.

அறியாதவர்களுக்கு? அதற்கு கவலைப்பட வேண்டாம். விக்கி மகராஜாவிற்கு அவரைத் தெரியும். விக்கி மகராஜாவும், கூகுள் ஆண்டவரும் சொன்னால் போதும் நமக்கு! நம்புவோம்! ஆகவே அதையும் பிடித்து வைத்திருக்கிறேன். பதிவின் கடைசியில் அந்த விவரங்கள் உள்ளன.

சரி, சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன். அவருடைய பெயர் போகர்!

அவர் செய்த சிலைக்கும் பெயர் உண்டு. அந்தச் சிலையின் தண்டபாணி. நவபாஷாணத்தில் ( made out of 9 poisons) செய்யப்பெற்ற சிலை அது!

ஆமாம் கையில் தண்டத்துடன் (தடியுடன்) பழநிமலை மீது இருக்கிறானே தண்டபாணி - அவன்தான் அவர் வடிவமைத்த சிலை.

பழத்திற்காக முருகன் வந்து நின்றுபோன மலையின்மீது, அவனுக்காக ஒரு சிலையைச் செய்து, அங்கே வைத்தவரும் போகர்தான். போகர் அவனுடைய பக்தர்.

இன்று தமிழ் நாட்டிலேயே அதிக அளவு பக்தர்கள் வந்துபோகும் பழநிக் கோவிலின் ஸ்தாபகரும் அவர்தான்.

.........................................................................................................................
காலம் காலமாகத் தண்டபாணி மீது பாலையும், பஞ்சாமிர்தத்தையும் ஊற்றி மருந்தை எடுத்து மக்களுக்குக் கொடுத்துவந்தவர்கள், பிற்காலத்தில் அழுத்தித் தேய்த்து அதிகமாக எடுத்து, அந்தச் சிலையையே பலவீனமடையச் செய்துவிட்டார்கள். பக்தர்கள் சிலர் போட்ட கேஸில், அரசு சிலைக்கு அபிசேகம் செய்வதைத் தடை செய்து விட்டது. இப்பொது வேறு ஒரு கற்சிலையை அந்த சிலைக்கு முன்னால் வைத்து, அதற்குத்தான் அபிஷேகம் செய்கிறார்கள்.

போகர் நாடறிந்த சித்தர். பல சித்திகளை உடையவராக விளங்கியவர். அவருடைய குருவின் பெயரைக் கேட்டால் இன்னும் ஆச்சரியப்படுவீர்கள். ஆமாம், அவருடைய குருவின் பெயர் காலங்கி நாதர். அந்தக் காலங்கி நாதர் சீன மண்ணில் பிறந்து, தமிழ் மண்ணில் குடியேறி, வாழ்ந்து, மறைந்தவர். அவரும் ஒரு சித்தர். தன் வாழ்நாளின் பெரும்பகுதிய அவர் தமிழ் மண்ணில் கழித்ததால், அவரும் பதினெட்டு சித்தர்களில் ஒருவராகத் தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பெற்றார்.

அவரின் பிரதான சீடரின் பெயரைக் கேட்டால் மற்றுமொறு ஆச்சரியம் ஏற்படும். ஆமாம், அவர் பெயர் புலிப்பாணி.

அரிய ஜோதிட நூலை நமக்குத் தந்துவிட்டுப்போனாரே அதே புலிப்பாணிதான் அவர்.

நாம் யமாஹா, பல்சர் வண்டிகளில் பயணிப்பதைபோல, அவர் அன்றையத் தேதியில், தான் இருந்த அடர்ந்த வனப் பகுதியில் புலிகளின் மீதுதான் பயணிப்பாராம். அதனால்தான் அவருக்குப் புலிப்பாணி என்ற பெயர் ஏற்பட்டதாக வரலாறு.(இதற்குப் புகைப்படச் சான்று கேட்காதீர்கள். இல்லை...கிடைக்காது!)போகர் வாழ்ந்த காலத்தில் புலிப்பாணி இளைஞன். அவரைப் போகர், பாலகன் என்றுதான் அழைப்பாராம்.

இந்தச் செய்திகள் எல்லாம், சப்தகாண்டம்’ எனும் நூலில் ஆவணப்படுத்தப் பெற்றுள்ளதாம்.

Bogar anticipating that in due course of period, human beings will suffer from large number of disease. As an expert in medicine he used 4448 rare herbs and made 9 poisonous medicine, mixing these 9 poisons into one needs great knowledege and skill, to make a Master Medicine ( One medicine to cure all disease ). என்ற செய்திதான் இக்கட்டுரையின் முக்கியமான செய்தி. அதை மனதில் கொள்ளுங்கள்.

இதே மருந்தைப் பற்றித் திருமூலர் எழுதிய திருமந்திர நூலிலும் தகவல்கள் உள்ளதாம். ஆயுர்வேதத்தின் தந்தை என்று புகழ்பெற்ற அகத்திய முனிவரின் ஆலோசனையுடன் தான் திருமூலர் தனது நூலில் அது பற்றி எழுதியுள்ளாராம்.

Bogar mixed the 9 poisons ( Nava Bashanam ) and made the Master Medicine in the form of Lord Murugan which is currently worshiped at Palani Murugan temple. There is a place near Palani Hill called Thanasiappan Temple which is the place were Bogar mixed the Nava Bashanam and made the Murugan idol.

இப்படி எழுதிக்கொண்டே போகலாம். உங்களின் பொறுமை கருதியும், கட்டுரையின் நீளம் கருதியும் இத்துடன் நிறைவு செய்கிறேன். மேலதிகத் தகவல் வேண்டுவோர், இங்கே உள்ள சுட்டியைக் (Link URL) கிளிக்கிப் படித்துக் கொள்ளலாம்

போகர் கடைசியில் என்னவானார் என்னும் சுவாரசியமான செய்தி அக்கட்டுரையில் உள்ளது.

இன்னும் அதிகப்படியான தகவல்கள் வேண்டுவோர் இதையும் க்ளிக்கிப் படிக்கலாம்!

அன்புடன்
வாத்தியார்வாழ்க வளமுடன்!

12.4.10

மைக்ரோசாஃப்ட், நோக்கியா, சாம்சங், பெப்சி எல்லாம் இல்லாத காலம்!

-----------------------------------------------------------------
மைக்ரோசாஃப்ட், நோக்கியா, சாம்சங், பெப்சி எல்லாம் இல்லாத காலம்!

இடம். நாளந்தா பல்கலைகழகம்.

தெரியாத பெயராக இருக்கிறதா?

ஆண்டைச் சொன்னால் நினைவிற்கு வரும்.

ஆமாம், அது கி.பி.499 ஆம் ஆண்டு.

அம்மாடியோவ்...இன்றைக்கு 1,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலமா?

ஆமாம், மைக்ரோசாஃப்ட், நோக்கியா, சாம்சங், பெப்சி, பானிபூரி, பேல்பூரி, ஏ.கே 47கள் எல்லாம் இல்லாத காலம்

இயேசு கிறிஸ்துவின் பிறப்பிற்குப் பிறகு சுமார் 500 ஆண்டுகள் முடிந்துவிட்ட காலம். பாட்னா அருகே குசுமபுரா என்னும் ஊரில் இருந்த நளந்தா பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமான கோளரங்கம். அங்கேதான் அந்த அரிய நிகழ்ச்சி நடைபெற்றது.

அந்த ஆண்டில் மார்ச் மாதம் 21ஆம் தேதி மதியம் சரியாகப் பன்னிரெண்டு மணி.

பல்கலைகழகத்தின் மணி ஒலிக்கிறது. மாணவர்களின் வேத பாடல்கள் ஓங்கி ஒலித்து காற்றை நிரப்புகின்றன. சாஸ்திர விற்பன்னர்களின் பிரார்த்தனை துவங்கி சற்று நேரத்தில் முடிவடைகின்றன.

23 வயது இளைஞன் மேடையில் ஏறுகிறான், அவன்தான் அன்றைய நாயகன். அவன் பலகலைக்கழகத்தில் வானவியல் துறையில் பயின்று படிப்பை முடித்துவிட்ட மாணவன். கணிதத் துறையிலும் மேதை அவன்!

எங்கும் அமைதி நிலவுகிறது. அங்கே மேடையின் மேல் இருக்கும் மேஜையின் மீதும், ஓலைகள், எழுத்தாணிகள் மீதும் கும்ப நீரைத் தெளிக்கிறான். தன் தலையை உயர்த்தி வானத்தில் இருக்கும் சூரியனையும் அவன் வணங்குகிறான். பிறகு தான் எழுதவிருக்கும் தொடர் ஆராய்ச்சிக் கட்டுரையின் முதல் சொல்லை ஒரு ஓலையின் மீது பக்தியுடன் எழுதுகிறான். அருகில் இருக்கும் அந்த பல்கலைக்கழகத்தின் பேராசான்கள் அவன் மீது மலர்களைச் சொறிகின்றார்கள்.

அந்த வானவியல் வல்லுனன், இளைஞன் வேறு யாருமில்லை. அவன்தான் ஆர்யபட்டா! அவன் அன்று துவங்கி எழுதிய நூலின் பெயர் ஆர்யபட்டியா!

ஆர்யபட்டா கி.பி 476 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தவர். துவக்கத்தில் தனது மாநிலத்தில் படித்தவர், மேல் படிப்பிற்காக நளந்தா பல்கலைக் கழகத்தில் சேர்ந்து படித்தார். அன்றைய காலகட்டத்தில் அதுதான் நாட்டின் உயர்ந்த கல்விக்கூடம். அவன் எழுதிய அந்த ஒப்பற்ற நூலை, அனைவரும் பாராட்டினார்கள். அதன் அருமை, பெருமைகளை உணர்ந்த புத்தகுப்தா என்னும் அன்றைய மன்னன், அவனை, அப்பல்கலைகழகத்தின் தலைமைப் பதவியில் அமர வைத்தான்.

உலகம் உருண்டை. அது தன்னுடைய சொந்த அச்சிலேயே, ஒரு ஒழுங்கு முறையிலேயே சுழல்கிறது என்று உலகிற்கு முதன் முதலில் சொன்னவர் ஆர்யபட்டா! சுழலும் பூமியினால்தான் இரவு, பகல் உண்டாகிறது என்றும் முதன் முதலில் சொன்னவரும் அவர்தான். சந்திரன் இருளானது. சூரிய ஒளியால்தான் அது ஒளிர்கிறது என்று சொன்னவரும் அவர்தான்.

வானவியலிலும், கணிதத்ததிலும் எண்ணற்ற சாதனைகளைச் செய்து அனைத்திற்கும் முன்னோடியாக இருந்தவர் அவர்

ஆர்யபாட்டவின் வானவியல் குறிப்புக்களையும், கணக்குகளையும், சூத்திரங்களையும் வைத்துத்தான் பஞ்சாங்கங்கள் எழுதப்பெறுகின்றன. இந்துக்களின் நாட்காட்டிக்கும் (Hindu calendars) அவர்தான் தந்தை!

அந்த மகானைப் பற்றிய மேலதிகத் தகவல்களுக்கு இங்கே க்ளிக்கிப் பாருங்கள்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!